All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாணி கார்த்திகனின் "நீ வேண்டும் நான் வாழ" - கதை திரி

Status
Not open for further replies.

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23481


அத்தியாயம் 30 (இறுதி அத்தியாயம் பகுதி ஒன்றில்)






அபியும், சனாவும் உள்ளே நுழைய சாத்விக், கார்த்திக் இருவருமே ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு இருந்தனர். இருவரையும் பார்த்து பெருமூச்சு விட்ட சனாவும், அபியும் தத்தம் கணவர்களின் அருகில் சென்று அமர்ந்தனர். சனா, "நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா இரண்டு பேரும் கேட்கனும். ஆச்சு பூச்சுன்னு கத்த கூடாது" என்று அர்த்தமாய் இருவரையும் பார்த்தாள்.


'சொல்லு' என்று இருவருமே சனாவைப் பார்க்க, சனா, "உங்க பிளேஷ் பெக்கை மறுபடியும் சொல்லுங்க இப்போ" என்றாள். சாத்விக், "உன் கிட்ட சொல்லிட்டேனே மறுபடியும் எதுக்கு?" என்று புரியாமல் கேட்க, கார்த்திக், "அதானே?" என்று ஒத்து ஊதினான். அபி, "இரண்டு பேருமே நாங்க சொல்றதை கேட்க கூடாதுன்னு முடிவு பண்ணி இருக்கிங்களா? சொல்றதை செய்ய முடியாதா?" என்று எகிறினாள்.


அபி, சனா இருவருமே உணர்ந்த ஒருவிடயம் சாத்விக், கார்த்திக் இருவரும் மனம் விட்டு பேசினால் ஒழிய இவர்களின் பிரச்சனை தீராது. அதனாலேயே இருவரையும் அமர வைத்து பேச நினைத்தனர். தற்போது இருவரும் ஒத்துழைக்காமல் இருக்கு கடுப்பாகி விட்டாள் அபி.


கார்த்திக், "எதுக்கு நயா டென்ஷன் ஆகுற?" என்று சமாதானம் செய்ய முனைய, "என்னை கோபடுத்தாமல் ஒழுங்காக சொல்றிங்க" என்றாள் மிரட்டலாய். கார்த்திக்கை அபி மிரட்டுவதைப் பார்த்து சாத்விக் கேலியாய் சிரிக்க, சனா அதைப் பார்த்து, "உங்களுக்கு தனியா என்ன சிரிப்பு? என்னை கோபடுத்தாமல் ஒழுங்க நீங்களும் சொல்றிங்க" என்று ஆணையிட்டாள்.


இப்போது சாத்விக்கை பார்த்து சிரிப்பது கார்த்திக்கின் முறையானது. "இப்போ சொல்ல முடியுமா? முடியாதா?" என்று அபி, சனா இருவருமே குரலை உயர்த்தி கோபமாக எழுந்து நிற்க "ஹே இதுக்கு டென்ஷன் ஆகாதிங்க கேர்ள்ஸ். நாங்க சொல்றோம்" என்று ஒருமித்துக் கூறினர் நாயகர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தவாறே.


அவர்கள் கூறக் கூற இரண்டாம் ஆண்டு வரை கேட்டவர்கள் தங்கள் இருவருமே கிரிகெட் போட்டி, மற்றைய போட்டிகளை தாங்களே செய்ததை ஒப்புக் கொள்ள அடுத்து மாணவத் தலைவர் தெரிவு செய்யும் இடம் வர சாத்விக்கிற்கு தக்காளியால் அடித்தது கார்த்திக்கின் ஆலனசணை என்றே சாத்விக் கூறினான். அதைக் கேட்ட கார்த்திக், "லூசாடா நீ? நான் எதுக்கு உன்னை அப்படி பண்ணனும்? நான எதையுமே உன் கிட்ட நேரடியா மோதி இருக்கேன்" என்றான் கோபமாக.


சாத்விக், "நாங்க விசாரிக்கும் போது நீ தான் இதை பண்ணதா நியூஸ் கிடைச்சது. அதனால நீ பேசும் போது மைக் வயரை பிடுங்கி உன்னை நான் அவமானப்படுத்தினேன். நீ இதை செய்ய இல்லைன்னா யார் இதை பண்ணது?" என்று யோசிக்க, அபி, "அதை அப்புறமா யோசிங்க. மீதியை கன்டினியூ பண்ணுங்க" என்றாள்.


ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தே பெண்கள் இருவரும் தங்களை பேச வைக்கின்கின்றனர் என்பதைப் புரிந்துக் கொண்டவர்கள் இத்தனை நேரமாக இருந்த போட்டி மனப்பான்மையை முதன்முறையாக விட்டு விட்டு தீவிரமாக பேச ஆரம்பித்தனர்.


கார்த்திக், சாத்விக் தன் புகைப்படத்தை மாஃபிங் செய்ததையும், அன்று பதவி ஏற்கும் போது ஏளனமாக சிரித்ததையும் கூறினான். சாத்விக், "உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? உன்னை முதுகுல குத்தி ஜெயிக்கனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. உன் மாஃபிங் போடோவைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. நீ பிரின்சிபல் கிட்ட திட்டு வாங்குறதா பசங்க சொன்னாங்க. அதோட நான் உன்னை தோக்கடிச்சி ஜெயிச்சதுல சந்தோஷம். அதுக்கு தான் சிரிச்சேன் முட்டாள்" என்றான்.


"நீ தான் பண்ணன்னு என் ஃபிரன்ஸ் விசாரிக்கும் போது தெரிய வந்தது. என் போடோவை மாஃபிங் பண்ணி அவமானப்படுத்தினதுக்கு உன்னை பழிவாங்கனும் காத்துக்குட்டு இருக்கும் போது நீ வொலன்டியரா வந்து அஞ்சலி கையை பிடிச்சி இழுத்து மாட்டி கிட்ட" என்றான் கார்த்திக் அன்று அஞ்சலியின் கைபிடித்து இழுத்ததை நினைத்து கோபமாக.


சாத்விக் ஒன்றும் பேசாமல் இறுகிய முகத்துடன் அமர்ந்து இருக்க சனாவே தன் கணவின் நிலையை உணர்ந்து அவன் கையை அழுந்தப் பற்றியவாறு தமையனிடம் பைச ஆரம்பித்தாள். "அண்ணா அவங்க அந்த அஞ்சலி கையை பிடிச்சி இழுத்து அவங்களை ஃபோஸ் பண்ணவே இல்லை" என்றாள். கார்த்திக், "உன் புருஷனுக்கு சபோர்ட் பண்றியா பட்டு" என்றான் ஏளனமாக.


அபி, "அந்த அஞ்சலியா?" என்று ஆச்சரியமாய் புருவமுயர்த்தினாள். ஏனெனில் சனா வயதில் மூத்தவர்களுக்கு எப்போதுமே மரியாதை வழங்குவாள். ஆனால் இன்று அவள் மரியாதையின்றி அஞ்சலியை பேசியது அபியை மட்டுமின்றி கார்த்திக்கையும் ஆச்சரியப்படுத்தியது.


அபியைப் பார்த்து சனா, "அவளுக்கு இந்த அளவு மரியாதை போதும்" என்றவள் கார்த்திக்கின் புறம் திரும்பினாள். "என் புருஷனுக்கு சபோர்ட் பண்ண வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அன்னைக்கு பண்ண அதே தப்பை இன்னைக்கும் பண்ணாதிங்க. என்ன நடந்ததுன்னு பேச ஒரு வாய்ப்பை இவருக்கும் கொடுங்க அண்ணா" என்றாள் வேண்டு கோளுடன்.


சாத்விக் சனாவைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தவன், "எனக்கு உலகத்துலேயே ரொம்ப முக்கியமானவங்க இரண்டு பேர். ஒன்னு என் அம்மா. அவங்க இப்போ உயிரோட இல்லை. அடுத்து என் மனைவி ஜானு. அவ மேலே சத்தியமா சொல்றேன். நான் உன் வளர்ப்பு தங்கச்சி கிட்ட தப்பா நடக்க நினைக்கவே இல்லை" என்றான்.


சாத்விக்கின் கூற்றில் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் அபி, சனா இருவருமே புன்னைகையுடனேயே அவனைப் பார்த்தனர். ஏனெனில் அஞ்சலி யார் என்பது இருவருமே அறிவர். அபி, "இப்போவாவது என்ன நடந்ததுன்னு கேளுங்க மாமா" என்று ஆதரவாக அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். கார்த்திக் அதிர்ச்சி மாறாமலேயே நடுங்கிய குரலில், "என்ன நடந்தது?" என்று வினவினான்.


ஏனெனில் மனமோ அடித்துக் கூறியது நீ பார்த்தது அனைத்துமே தவறு என்று. அவன் சில வருடங்களாகவே குற்ற உணர்ச்சியில் தவிக்க இப்போது அன்று அவன் நடந்ததை தவறாக பார்த்து இருந்தால் நிச்சயமாக கார்த்திக் உடைந்து விடுவான்.


"நானும் அஞ்சலியும் காதலிச்சோம். எனக்கு அவ உன் தங்கச்சின்னே தெரியாது" என்று ஆரம்பித்து அவள் கல்லூரியில் சேர்ந்தது முதல் அனைத்தையுமே கூறினான். இதைக் கேட்ட கார்த்திக் உடைந்து தலையில் கைவைத்து நின்று விட்டான். முகமோ கறுத்து இயலாமையுடன் அபியைப் பார்க்க, அவள் உதடு கடித்து கார்த்திக் கலங்கி இருப்பதைப் பார்த்து தன் அழுகையை அடக்கி ஆம் என்று தலை அசைத்தாள்.


கண்கள் கலங்கி சாத்விக்கை பார்த்து கையெடுத்து கும்பிட்டு, "நான் அஞ்சலியையும், சனாவையும் எப்போவுமே வேற வேறையா பார்த்தது இல்லை. அவ அழுததும் என்னால எதையுமே எனக்கு யோசிக்க முடியல்லை ப்ரவீன். மன்னிப்பு கேட்குற தகுதி கூட எனக்கு இல்லை. முன்னாடியே உன் அம்மாவை கஷ்டபடுத்திட்டேன்னு கவலையில இருந்தேன். ஆனால் அன்னைக்கு என்னால முடிஞ்ச உதவியை பண்ணேன்" என்றான்.


சாத்விக் அவசரமாக அவன் பேச்சில் இடைப்குந்து, "இப்போ என்ன சொன்ன? காப்பாத்த உதவி பண்ணியா?" என்று பரிதவிப்புடன் கேட்டான். சனா, "நான் சொல்றேன் சவீன். ஆமா உங்க அம்மாவை காப்பாத்த அவன் உதவி பண்ணான். அன்னைக்கு அஞ்சலிக்கா பிரச்சனை வரும் போது நானும் அங்கே இருந்தேன்" என்று அன்று நடந்தகைக் கூற ஆரம்பித்தாள்.


கார்த்திக் சந்தனாவுடன் பேச ஆரம்பிக்க முன்னேயே சந்தனாவை சாமி கும்பிடும் போது சனா பார்த்து விட்டாள். அவரிடம் இருந்த ஏதோ ஒன்று சனாவை ஈர்த்துக் கொண்டு இருக்க அவர் பின்னேயே சென்றாள். தன் பின்னே ஒருவர் வருவதை உணர்ந்த சந்தனா பின்னால் திரும்ப பாவாடை, சட்டை அணிந்து கூந்தலை இரட்டை ஜடையாகப் பிண்ணி ஒரு பக்கமாக மல்லிகை வைத்து குட்டி தேவதையாக நின்று இருந்தாள் சனா.


சந்தனா புன்னகையுடன் சனா அளவிற்கு குனிந்து, "என்னடா?" என்று கன்னம் வருடிக் கேட்க யாரிடமும் அத்தனை வேகத்தில் ஒட்டாத சனா அவருடன் பேசினாள். "நீங்க ரொம்பபபபப அழகா இருக்கிங்க" என்றாள் அவரை இரசித்துக் கொண்டே. அவரும் சிரித்து, "நீயும் தேவதை போல இருக்க. இப்படி தனியா யாரும் இல்லாமல் தெரியாதவங்களோ ஃபோலோ பண்ணி வர கூடாது. ஒகேயா? அது பொண்ணுங்களுக்கு சேஃப் இல்லை" என்று கூற சமத்துப் பெண்ணாக தலை ஆட்டி அவர் கன்னத்தில் இதழ்பதித்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.


"ஏஞ்சல்" என்று புன்னகை முகத்துடன் அங்கிருந்து நகர அஞ்சலியைக் கண்டுக் கொள்ள அதன் பின்னே நடந்த அனைத்தும். அவருக்கு திட்டும் போது கூட சனாவிற்கு என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை. அவர்களின் பேச்சும் புரியவில்லை. ஆனால் சந்தனாவிடம் இருந்து பார்வையை அகற்ற முடியவில்லை. அக்கோலபரத்திலும் அவர் முகத்தை இரசித்தாள். அவர் நிமிரந்து நின்ற கம்பீரத்தை இரசித்தாள்.


திடீரென்று அவர் நெஞ்சைப் பிடித்து விழ, சனா அவசரமாக "ஆன்டி" என்று அவரிடம் வந்தாள். கார்த்திக்கும் இவ்வாறு நடக்கும் என்பதை எதிர்பார்க்க இல்லை. அவரை தன் மடியில் படுக்க வைத்து, "ஆன்டி. கண்ணை திறங்க" என்று கன்னம் தட்டினாள். அவரோ கண்திறக்காமல் இருக்க காரணம் இன்றி பயத்தில் சனாவிற்கு கண்கள் கலங்கி விட்டன. "அண்ணா தண்ணீர் கொண்டு வாங்க. அம்பியூலன்சை கூப்பிடுங்க" என்று பிதற்ற கார்த்திக்கும் நிலமை உணர்ந்து அனைத்தையூம் செய்தான்.


முகத்தில் தண்ணீர் தெளித்து கன்னம் தட்ட மெதுவாக நெஞ்சைப் பிடித்தவாறே கண்விழிக்க கலங்கிய கண்களுடனும், முகத்துடனும் அவரையே பார்த்தவாறு அமர்ந்து இருந்த சனாவைப் பார்த்தவர், "எனக்கு ஒன்னும் இல்லை டா" என்று அவளுடைய கண்ணீரை மறு கையால் துடைத்து விட அம்பியூலன்சும் வந்து சேர்ந்தது. அவரை அதில் ஏற்ற சனாவும் அவருடன் செல்வேன் என்று அடம் பிடித்தாள்.


அவளுடைய பிடிவாதத்திற்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் கார்த்திக், "சரி பட்டு நான் தான் உன்னை காருல கூட்டிட்டு போறேன்னு சொல்றேனே" என்க, "முடியாது நான் ஆன்டி கூட போறேன்" என்று அடம்பிடிக்க கார்த்திக்கும் சனாவுடன் அம்பியூலன்சிலேயே ஏறிக் கொண்டான். போகும் வழியெல்லாம், "உங்களுக்கு எதுவும் ஆகாது ஆன்டி" என்று தன் பிஞ்சு விரல்களால் நீவி விட்டாள். அவரோ தன் மற்றைய கையால் அவள் தலையை வருடி, "நல்லா இருமா" என்று வருடியவர் அதோடு கண்களை மூடிக் கொண்டார்.


கார்த்திக் மன்னிப்பு கேட்க வாய் திறக்க அவர் கண்களை மூடவும் நேரம் சரியாக இருந்தது. அதுவே அவனுக்கு குற்ற உணர்ச்சி ஆரம்பிக்கும் தருணமாக இருந்தது. அவரை வைத்தியசாலையில் அட்மிட் செய்து சாத்விக்கிற்கும் வேறு நபர் மூலமாக தகவலை வழங்கி சனாவை அழைத்துக்கு கொண்டு வேகமாக வீட்டிற்குச் சென்றான். ஏனெனில் அஞ்சலி அங்கே தற்கொலை நாடகத்தை அரங்கேற்றி இருந்தாள்.


சாத்விக்கின் மீதே முழுத்தவறும் என்று கார்த்திக்கின் ஆழ் மனதில் இச்சம்பவத்தால் ஆழப் பதிந்தது. அஞ்சலியோ மீண்டும் சாத்விக் தன்னை தொல்லை செய்வானோ என்ற பயத்தில் செய்ததாகக் கூற அதன் பிறகு அஞ்சலியை சாத்விக்கிடம் இருந்து காப்பாற்ற எண்ணி அஞ்சலி - நகுல் திருமணமும் வேகமாக நடந்ததால் கார்த்திக் சந்தனா, சாத்விக் இருவரையுமே மறந்து இருந்தான்.


ஆனால் சனாவிற்கோ சந்தனாவும், அவரது முகமும்; நினைவுகளும் அவள் மனதில் ஆழப்பதிந்து இருந்தது. கார்த்திக் திருமண வேலையில் ஓடியாடித் திரிந்ததால் அவனிடம் சந்தனா பற்றி விசாரிக்கக் கூறவும் அவளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சந்தனா பற்றி பல நாட்கள் கழித்து விசாரிக்க எவ்வித தகவலும் அவனுக்கு கிடைக்கவில்லை. சாத்விக்கும் வைத்தாயர்களிடமும் எதையும் யாரிற்கும் கூற வேண்டாம் என்பதால் எதுவுமே தெரியாமல் போனது இருவருக்கும்.


சனா இவற்றைக் கூறி முடித்து சாத்விக்கிடம், "உங்களுக்கு நான் கோலேஜில் டிரோயிங் வரைஞ்சி கொடுத்தேனே. அது உங்க அம்மாவை வரைஞ்சேன். நீங்க பார்க்காமலேயே கபோர்டுக்குள்ள வச்சிட்டிங்க" என்றாள். சாத்விக்கிற்கும் கண்கள் கலங்கி விட்டன தன் தாயின் நினைவுகளில். தன் தாயிற்கு பிடித்த பெண்ணே அவரிற்கு மருமகளாக வந்திருக்கிறாள் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை.


கார்த்திக், "நீ நல்லவனா இருந்தால் எதுக்கு இவ ஃபோடோஸை லீக் பண்ண ப்ரவீன்?" என்று வினவ, சாத்விக், "உன் கேள்விக்கு அடுத்து பதில் சொல்றேன். அதுக்கு முன்னாடி உன் தங்கச்சி கிட்ட ஒரு கேள்வி இருக்கு" என்று சனாவின் புறம் திரும்பினான். "இதை நீ ஏன் அம்மா போடோ பார்த்த போதே சொல்ல இல்லை?" என்று வினவ, "அப்போ நான் சொல்லி இருந்தாலும் கேட்குற நிலமையில நீங்க இருக்க இல்லை. அதான் இப்போ சொன்னேன்" என்றாள்.


அவள் கூறியதும் உண்மை என்பதால் அமைதியை தத்தெடுத்தவன், கார்த்திக்கின் கேள்விக்கு பதில் அளிக்க ஆரம்பித்தான். "நீ முட்டாள் ஆர்யன். அவ என் பொன்டாட்டி. அவளை நான் அசிங்கபடுத்தினால் என்னை அசிங்கபடுத்துறதுக்கு சமன். நான் விசாரிக்கும் போது என் பேர்ல வேற யாரோ பண்ணி இருக்காங்கன்னு தெரிஞ்சது. அது யாருன்னு கண்டு பிடிச்சு சொல்றேன்னு ராகவ் சொல்லி இருக்கான். அதுக்கான முழு வேலையும் நடந்துட்டு இருக்கு" என்றான்.


"அப்போ உனக்கும் எனக்கும் இடையில யாரோ இருந்து பிளேன் பண்ணி கேம் விளையாடி இருக்காங்க. எங்கே அடிச்சா எப்படி அடி விழும்னு அவங்களுக்கு நல்லா தெரிஞ்சி இருக்கு. சோ கோலேஜிலும் அதான் நடந்து இருக்கு. யாரது?" என்று கார்த்திக் கூறி யோசிக்க அபியும் தீவிர யோசணையில் இருப்பதைப் பார்த்தான் சாத்விக்.


"நாங்க யோசிக்கிறதுல அர்த்தம் இருக்கு. நீ என்ன யோசிக்குற?" என்றான். "நீங்க எங்க கோலேஜூக்கு எப்போ வந்திங்கன்னு யோசிச்சேன்" என்று கூற சாத்விக், சனா இருவருமே சத்தமாக சிரிக்க அபி, கார்த்திக் இருவருமே யோசணையில் இருந்து கலைந்து அவர்களை புரியாமல் குழம்பிப் பார்த்தனர். சனா சிரிப்புடன், "அந்த கோலேஜே இவரோடது தான். அங்கே கரஸ்பன்ட் இவரு தான்" என்றாள்.


"என்ன?" என்று இருவருமே அதிர, "என் பொன்டாட்டி கோலேஜ் விட்டா வீடு. வீடை விட்டா கோலேஜ் இதை தவிற தனியா வெளியே போக மாட்டா. இவளை கரெக்ட் பண்ணனும்னா நான் கோலேஜூக்கு வரனும். சோ வாங்கிட்டு ஓஃபீசியலா இன்ஃபோர்ம் பண்ண வேணான்னு சொன்னேன்; ஆர்யன் காதுக்கு போகாமல் இருக்க" என்று கண்ணடிக்க, கார்த்திக், "அப்போ பிளேன் பண்ணி தான் எல்லாம் பண்ணி இருக்க?" என்றான்.


"ஆமா. உன் மேலே கையை வைக்க ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து பண்ணேன். அந்த அளவுக்கு கோபம் வெறி உன் மேலே. பட் என் அம்மாவுக்கு உதவி பண்ணது நீ தான்னு தெரிஞ்சதும் உன்னை மன்னிச்சிட்டேன். நிறைய விஷயம் நம்மளை எங்களுக்கே தெரியாமல் கேம் பிளேன் பண்ணி எங்களை பண்ண வச்சிருக்கிறாங்க" என்று சிரித்து, "எல்லாத்துக்கும் சொரி" என்று கை நீட்ட கார்த்திக்கும் கை நீட்டி அவனும் மன்னிப்பை வேண்டி ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டனர்.


கார்த்திக், "பட் நமக்கு இடையில இருக்கிற போட்டி எப்போவுமே இருக்கட்டும் ப்ரவீன்" என்று உரைக்க, "யெஸ் இட் இஸ் அ ஹெல்தி கம்படிஷன். என்னால உன்னை உடனே ஏத்துக்க முடியல்லை ஆர்யன். ஜானு அண்ணனா பார்க்குறேன். எப்போவாவது ஃபிரன்டா ஏத்துக்க தோனுச்சுன்னா சொல்றேன்" என்றான் தன் தரப்பு கருத்தை. "நானும் இதையே சொல்ல நினைச்சேன்" என்று புன்னகைத்தான் கார்த்திக்.


இருவரும் இந்த அளவிற்கு பேசிக் கொண்டதே போதும் என்று இருந்தது நாயகிகள் இருவருக்கும். அடுத்த நாளே சாத்விக் - சனாவை அழைத்துக் கொண்டு கார்த்திக்கும், அபியும் சென்னையை நோக்கி பயணமானார்கள்..நால்வரும் சிரித்துப் பேசிக் கொண்டே பயணத்தை இரசித்து அனுபவித்தனர். ஆண்கள் இருவரும் இங்கே சிரித்துக் கொண்டாலம் தங்கள் பலத்தை பயன்படுத்தி சாத்விக்கின் பெயரில் அனைத்தையுமே செய்தது யார் என்பதையும் தீவிரமாக தேடினர்.


விசாலாட்சியும் சாத்விக்கை மன்னித்து ஏற்றுக் கொண்டார் சனாவின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சியில். நல்ல நாள் ஒன்றில் அவர்கள் இருவரையும் சாத்விக்கின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இரு ஜோடிகளுக்கும் நாட்கள் சந்தோஷமாகவும், காதலுடனும் பறந்து சென்றன. சாத்விக்-சனாவிற்கு இடையில் புரிதலும், காதலும் பலமடங்குப் பெருகி வழிந்தன.


அதற்கு இடையில் சாத்விக்கின் பெயரில் சிம் வாங்கியவன் யார் என்று கண்டுபிடித்து விட்டதாகவும் அவனை வெகு சீக்கிரமாக கண்டு பிடித்துக் கொடுப்பதாகவும் கூறினான் குரு. அதே நேரம் போடவை லீக் செய்த நபரின் இமேயில் கிடைத்து விட்டதாக சாத்விக்கிற்கும் தகவல் கிடைத்தது.


இதே நிலையில் நகுலனின் ஊரில் இருந்து மித்ரனுக்கும் அவனது அத்தைப் பெண்ணிற்கும் நிச்சயம் என்று கார்த்திக்கின் குடும்பத்தினரை அழைத்தார் நகுலின் தந்தை. சாத்விக் நல்லவன் என்றும் கார்த்திக்கின் மீதுள்ள தவறாலேயே இவ்வாறு சாத்விக் நடந்துக் கொண்டதாகக் கூற சாத்விக்கை அவர்கள் வெறுக்கவில்லை எனினும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.


மித்ரனின் நிச்சயத்திற்கு அவனின் நண்பர்களும் வருவதால் சனா, அபி, கார்த்திக் மூவரும் வற்புறுத்தி அவனை அழைத்துக் கொண்டு நகுலனின் ஊரிற்குச் சென்றனர். ஐவருக்கும் நகுலனின் குடும்பத்தினர் அமோக வரவேற்பைக் கொடுத்தனர். சாத்விக்கிடம் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் ஒதுங்கி இருந்தனர்.


வரவேற்பரையில் சாத்விக் அமர்ந்து தன் மொபைலை நோண்ட சனா கோபமாக வந்தவள் வேகமாக மொபைலைப் பறித்து இடுப்பில் கை வைத்து முறைத்தாள். "இப்போ எதுக்கு ஜானு மொபைலை பறிச்ச?" என்று கோபாக கேட்க நினைக்க அதற்கு மாறாக குழைந்தே அவன் குரல் வெளியானது. "இங்கே மித்து அண்ணா நிச்சய வேலை தலைக்கு மேலே இருக்கு. நீங்க மொபைலை நோண்டிட்டு இருக்கிங்க" என்றாள். "என்ன வேலை பண்ணனும்னே எனக்கு தெரியாதுடி. எல்லாரும் அவங்க அவங்க வேலை பார்த்தால் நான் என்ன பண்ண முடியும்?" என்றான் பரிதாபமாக.


"சோ ஸ்வீட் காட்டுப்பையா" என்று இரு கன்னத்தில் அவசர முத்தம் வைத்து சத்தமாக தன் தமையனை அழைத்தாள். கார்த்திக்கும் சில கணங்களிளேயே வந்ததால் சாத்விக்கிற்கு முத்தம் வழங்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. "அண்ணா உங்க மச்சானுக்கு வேலை இல்லையாம். ஏதாவது வேலை கொடுங்க" என்று கூறியவள் சாத்விக்கைப் பார்த்து கண்டித்து விட்டு அங்கிருந்து மறைய சாத்விக்கின் இதழ்கள் புன்னைகயில் அழகாய் விரிந்தன.


இதைப் பார்த்த அஞ்சலியிற்கு வயிறு பற்றி எரிந்தது என்றால் நகுலின் தந்தை ஒரு கீற்றுப் புன்னகையுடன் அவ்விடத்தைக் கடந்தார். அதன் பின் நிச்சய வேலைகளும் மும்முரமாக நடந்தன. நிச்சயத்திற்கான நாளும் அழகாய் விடிந்தது. மாப்பிள்ளை வீட்டினர் அனைவருமே நிச்சயத்திற்கு மண்டபத்திற்கு கிளம்ப, பெண் வீட்டினரும் வருகை தந்தனர். நிச்சய நாயகனாக மித்ரன் அமர வைக்கப்பட நாயகியாக வசுமதி அமர வைக்கப்பட்டாள்.


வசுமதியின் முகத்தில் காதலும், வெட்கமும், நாணமும் போட்டி போட தலையைக் குனிந்து அமர்ந்து இருக்க மித்ரன் கம்பீரமாக தன் அக்மார்க் புன்னகையுடன் அமர்ந்து இருந்தான். மித்தரனின் நணபர்களும் ஒவ்வொருவராக வருகைத் தர அங்கே கார்த்திக்கும், சாத்விக்கும் அருகருகே புன்னகை முகத்துடன் தங்கள் மனைவியுடன் நின்று இருப்பதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.


அதே நேரம் நிச்சயம் ஆரம்பிக்கப்பட குருவிடம் இருந்து அந்த நபரைப் பிடித்துவிட்டதாக தகவல் கிடைக்க கார்த்திக் குருவுடன் பேச வெளியே சென்று விட்டான். "தல இன்னும் பத்து நிமிஷத்து இவன் யார் சொல்லி இதை பண்ணான்னு கேட்டு உனக்கு போன் பண்றேன்" என்று அழைப்பைத் துண்டிக்க கார்த்திக் பதட்டத்துடன் அங்குமிங்கும் நடந்துக் கொண்டு இருந்தான்.


அதே நேரம் லக்ன பத்திரிகை வாசிக்க ஆரம்பிக்க சாத்விக்கின் மொபைலிற்கு கார்த்திக் அழைத்து வெளியே வருமாறு கூறினான். அவன் வெளியேற நினைக்க சனா 'எங்க போறிங்க?' என கண்ணால் கேட்க, 'போயிட்டு வரேன்' என௧் கெஞ்சிக் கூறி விட்டு வெளியே சென்றான். சனாவும், அபியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் கலக்கத்துடன்.


கார்த்திக் குரு கூறியதைக் கூற சாத்விக்கிற்கும் டென்ஷன் ஏற கார்த்திக்கோடு சேர்ந்து நடை பயின்றான் மனைவியின் பிரசவத்திற்கு காத்திருக்கும் கணவர்களைப் போல். குரு கூறியது போலவே பதினைந்து நிமடத்தில் அழைக்க கார்த்திக் அவசரமாக அழைப்பை ஏற்று மொபைலை ஸ்பீகரில் போட்டான். குரு, "அவன் யாருன்னு தெரிஞ்சிருச்சு" என்று பெயரைக் கூற அதிர்ச்சியில் உறைந்து நின்றனர் இரு நாயகர்களும்.


ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு நிச்சயத்தில் கலந்துக் கொண்டனர். அதன் பின் மணமகன், மணமகள் குடும்பத்தினர் செல்ல கார்த்திக்கும், சாத்விக்கும் மர்ம நபரை ஒருவரும் அறியாமல் தனியாக தூக்கிக் கொண்டு மண்டபத்திற்கு பின்புறமாக அழைத்து வந்தனர். "நான் தான் இதை பண்ணேன்னு கண்டு பிடிச்சிட்டிங்க போல" என்று தனது சேர்ட்டை நீவியவாறே கேட்டான் மர்ம நபரான மித்ரன்.


சாத்விக் கண்கள் சிவக்க கோபத்தை அடக்கிக் கொண்டு கைமுஷ்டியை இறுக்கி நின்று இருக்கே அதே நிலையில் நின்று இருந்தான் கார்த்திக். சாத்விக், "எதுக்காகடா இப்படியெல்லாம் பண்ண?" என்று சனாவை அவமானப்படுத்த நினைத்தது கண்முன் தோன்ற மூக்கில் அடித்து விட்டான். தாக்குதலை எதிர்பார்க்காத மித்ரனுக்ககு மூக்கில் இருந்து இரத்தம் வழிந்தாலும் அடுத்த அடியை சமாளித்துக் கொண்டான்.


கார்த்திக்கும் சாத்விக்கோடு கோபத்தில் அடிக்க மித்ரன் இருவருக்கும் சளைத்தவன் அல்ல; நான் கிராகத்தில் வளர்ந்தவன் என்று அவனும் தாக்கினான் இருவரையும். மூவருக்கும் அடி பலமாக விழ கார்த்திக், "எதுக்குடா இப்படி பண்ண?" என்று கர்ஜிக்க, "நான் அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி அவமானப்பட்டது போல இவனும் அவமானப்படனும்னு நினைச்சேன்" என்று அதே குரலில் கர்ஜித்தான்.


சாத்விக், "நீ அந்த பொண்ணை போர்ஸ் பண்ணிட்டு இருந்த. அந்த பொண்ணை காப்பாத்த நான் அடிச்சேன். அதுக்கு பழிவாங்குவியா?" என்று அறுவெறுப்பில் முகம் சுழிக்க, "ஹார்ஷா பிகேவ் பண்ணேன் பட் நான் அந்த பொண்ணை தப்பா நந்துக்க முனையவோ ஃபோர்ஸ் பண்ணவோ இல்லை. தப்பே பண்ணாமல் எனக்கு அத்தனை பேர் முன்னாடி தண்டனை கொடுத்த" என்று உறுமினான்.


ஒரு முறை கல்லூரியில் மித்ரன் சேர்ந்து சில மாதங்களில் ஒரு பெண்ணின் கையை மடக்கி அவன் முகம் நோக்கி குனிய அப்பெண்ணோ வேறு புறம் திரும்பி கத்த எத்தணிக்க மித்ரன் தன்.மறுகையால் அவள் வாயை மூடினான். அப்புறமாக வருகை தந்த சாத்விக் மித்ரனிடம் இருந்து அவளைக் காப்பாற்றி அனுப்பி விட்டு மித்ரனை அடிக்க கார்த்திக்கிற்கும் விடயம் தெரிந்து அவனும் கேவலமாக மித்ரனை திட்டி விட்டு சென்று விட்டான்.


அத்தனைப் பேரின் முன்னே அடிக்க சில மாதங்களாக அக்கதையே ஹெட்லைன்சாக இருக்க இரும்பு மனதுடன் அதைக் கடந்து விட்டான். அப் பெண்ணோ அதில் இருந்து கல்லூரி வருவதையே நிறுத்தி விட்டாள். மித்ரன் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு சாத்விக், கார்த்திக் பிரச்சனையை தனக்கு சாதகமாக ஒவ்வொன்றையும் அவனே செய்து இருவருக்கும் சண்டையை உருவாக்கி பழிவாங்கிக் கொண்டான்.


அன்று அவமானப்பட்டதை இன்றும் அவன் மறக்கவில்லை. தானே தவறை செய்து இரு குழுவினரிடமும் எதிரணியினரே செய்ததாக மாற்றி செய்து விட்டதாக தகவல்களைப் பரப்பி விட்டான். அதனால் பிரச்சனைகளும் வெடித்தது. தக்காளி வீசியது; புகைப்படத்தை மாஃபிங் செய்தது; சாத்விக் அஞ்சலியுடன் பேசும் போது மற்றவர்களை அங்கே வர வைத்தது அனைத்துமே அவனே செய்தான்.


சாத்விக் மறுபடியும் இந்தியா வந்தவுடன் தன் வேலையை மறுபடியும் ஆரம்பித்தான். இருவருக்கும் இடையில் பிரச்சனைகளை ஆரம்பித்து வைத்து அதில் குளிர்காய்ந்தான்.


மித்ரன், "அன்னைக்கு மட்டும் நீ வராமல் இருந்தால் நான் நினைச்சதே நடந்து இருக்கும்" என்று இயலாமையில் கத்தி ஓங்கி சுவரில் தன் கையைக் குத்தினான். கார்த்திக், "அவளோ பெரிய காமுகனா நீ?" என்று வெறுப்புடன் கேட்க, மித்ரன் ஒரு பார்வை இருவரையும் பார்த்தான். அதில் என்ன இருந்தது என்று இருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.


சாத்விக், "உன் குடும்பத்திலேயும் பொண்ணுங்க இருக்காங்களே. அப்போ சனாவை இதுல கஷ்டபடுத்தும் போது உனக்கு மனசு வலிக்க இல்லையா?" என்று வினவ, "நான் இருந்த வெறியில எதுவுமே எனக்கு தோண இல்லை. ஆனால் அன்னைக்கு சனா, அவளுக்கு வேற ஒருத்தனோட கல்யாணம்னு தெரிஞ்சதும் பல்கனியில் நின்னு வெளியே வெறிச்சு பார்க்கும் போது அப்படி ஒரு வலி.


என் பழி வாங்குறதுல இவ அதிகமா கஷ்டபட்டுட்டாளேன்னு. மித்து அண்ணான்னு பேசும் போது எனக்கு அவளோ கஷ்டமா இருக்கும். அவ உன்னை இந்த அளவுக்கு காதலிப்பான்னு நான் எதிர்பார்க்க இல்லை ப்ரவீன். நான் உங்க இரண்டு பேரையும் பழிவாங்கினதுல எனக்கு எந்த வருத்ததமும் இல்லை. இதுல பாதிக்கப்பட்டது சனா. அவ எந்த தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன்" என்று நெஞ்சை நிமிர்த்து தன் தவறை ஒத்துக் கொண்டான்.


அதே நேரம் சற்று தூரத்தில் சத்தம் கேட்க, மூவரும் திரும்பிப் பார்த்தனர். மொத்தக் குடும்பமும் இவற்றைக் கேட்டுக் கொண்டு இருந்தது. மித்ரனின் தாயே அவன் கூறுவதைக் கேட்க முடியாமல் அருகில் தூணைப் பிடிக்கச் செல்ல அவரின் கைப்பட்டு ஒரு விறகு கீழே விழுந்தது. மித்ரனின் தந்தை அவமானத்திலும், கோபத்திலும் வந்தவர் அவனை மாறி மாறி கன்னத்தில் அறைந்தார்.


அவனோ மறுக்காமல் வாங்கிக் கொண்டான். "சாத்விக்கும், கார்த்திக்கும் உன்னை தூக்கிட்டு போறதை பார்த்து நான் பயந்து வந்தேன்டா. என்னைப் பார்த்து பயந்து இவங்க வந்தாங்க. சாத்விக்கை கொலை பண்ற அளவு கோபத்துல இருந்தேன். ஆனால் நீ பேசினதை கேட்டதும் உன் மேலே வச்ச நம்பிக்கை மொத்தமா போயிருச்சு. உன்னை பெத்ததுக்கு அவளோ அசிங்கமா இருக்கு" என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.


"அப்பா" என்று அவன் பாய்ந்து அருகில் நெருங்க, "என்னை அப்படி கூப்பிடாத" என்று கீழே அமர நகுல் தண்ணீரை எடுத்து அவருக்கு குடிக்க வைத்தான். நகுல், "உனக்குள்ள இவளோ கெட்ட எண்ணம் இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. சே" என்று அறுவெறுக்க அவன் தாயோ முகத்தை திருப்பிக் கொண்டார். அவன் அடிமனது சம்மட்டியால் அடி வாங்கிய உணர்வை கொடுத்தது.


மீண்டும் தன்னை ஆசுவாசப்படுத்தி எழுந்த நகுலின் தந்தை அவனுடைய சேர்ட் கொலரை பிடித்து, "எங்களுக்கும் உனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை" என்று இழுத்தவாறே வெளியே சென்றார். வசுமதி அழுதவாறே அவனைப் பார்த்து தலைக்கவிழ்ந்தாள். இருந்தும் அனைத்தையுமே நெஞ்சை நிமிர்த்தியே தன் தவறை ஏற்றுக் கொண்டான். தன் தவறை ஏற்பதில் அவனுக்கு எந்தவித அசௌகரியமோ, அதைரியமோ இல்லை மித்ரனுக்கு.


அதே நேரம் மண்டபத்திற்கு தாமதமாக வருகைத் தந்த வசுமதியின் தங்கை அனைவரும் திட்டுவார்களோ என்று பயத்தில் ஓடி வரவும் மித்ரனை திட்டி வெளியே தள்ளவும் சரியாக இருந்தது. மித்ரன் கீழே விழும் போது அவனோடு சேர்ந்து உள் நுழைந்த வசுமதியின் தங்கையும் கீழே விழுந்தாள். "சேர்" என்று சிலர் அங்கே ஓடி வந்து இருவரையும் தூக்கி விட அப்போதே விழுந்த பெண்ணை அனைவரும் பார்த்தனர்.


"வைஷூ" என்று அபி, வசு, சனா என அனைவரும் வர என்ன நடந்தது என்று புரியாமல் திருதிரு என திருவிழாவில் தொலைந்த குழந்தைப் போல் அனைவரையும் பார்த்தாள். அத்தோடு மித்ரனை சிலர் பிடித்து தூக்கியதைப் பார்த்து அவர்கள் யாரென்று பார்க்க சாத்விக்கும், கார்த்திக்கும் கூர்ந்து அவனைப் பார்த்தனர். வைஷூ, "கிருஷ்ணா என்ன நடக்குது இங்கே?" என்று நினைக்க, "என்ன மறுபடியும் நானா???" என்று அதைப் பார்த்துக் கொண்டு இருந்த மாயக் கண்ணன் அங்கிருந்தும் ஓட்டம் எடுத்தான்.


"நான் ஏ.ஐ.ஜி. யாதவ் மித்ரன். இவங்க என்னோட டீம் மெம்பர்ஸ்" என்றவன் வசுமதியை ஒரு முறைக் கூர்ந்து பார்த்தவன் அவனுக்கு வழங்கப்பட்ட டிசீயூ மூலம் முகத்தை துடைத்தவன் அவனுக்கு கூலரை வழங்க அதை மாட்டிக் கொண்டு, "நான் வரேன்" என்று ஒரு அடி வைத்தவன் சனாவை நோக்கி, "ஐம் சொரி டா" என்று அவள் தலையை ஆதூரமாய் வருடிவிட்டு கம்பீரத்தை மீட்டு மிடுக்குடன் அங்கே அவனை அழைத்துச் செல்ல வந்த ஜீப்பில் ஏறினான். அங்கிருந்த அனைவருமே வாயைப் பிளந்து அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.





முற்றும்..




கானல் நீராக இருக்கிற இந்த கதையோட காணும் நீராக பார்க்கும் சந்தர்ப்பம் உங்களுக்கு பகுதி 2 ல் கிடைக்கும். உங்களுக்கு மித்ரன் சம்பந்தமான கேள்விக்கான விடை பகுதி இரண்டில். என்ட் அஞ்சலிக்கான தண்டனையும் அங்கே தான். சாமி அறையில் அன்று சனா, அபி இருவரும் பார்த்த புகைப்படங்களுக்கான விடையும் அங்கே காத்து இருக்கின்றது.


கண்சிமிட்டும் தென்றலே கதையில் சந்திக்கின்றேன்....




கருத்துக்களை பகிர,


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரன்ஸ்,


என்னோட முதல் கதையை வெற்றிகரமா முடிச்சிட்டேன். கதையோட இரண்டாம் பகுதியோட ஜனவரி முதலாம் திகதி சந்திக்கிறேன்.

அதுக்கு முன்னாடி தொடர்ந்து கமென்ட் பண்ணி ஊக்குவிச்ச அத்தனை பேருக்கும் என்னோட மனமார்ந்ந நன்றிகள். அதே போல சைலன்ட் ரீடர்சுக்கும் என்னோட நன்றிகளை தெரிவிக்கிறேன்.

இதுல நிறைகளும் இருக்கும். குறைகளும் இருக்கும். அதை எல்லாம் சொல்லுங்க. அப்போ தான் இனி எழுதும் கதைகளில் திருத்திக்க முடியும்.

ஏதோ என்னால முடிஞ்சதை கொடுத்து இருக்கேன். சபோர்ட் பண்ணுங்க ஃபிரன்ஸ். உங்க கருத்துகளுக்காக காத்துட்டு இருக்கேன்.

ஹேப்பி.... 😍😍😍😍

கண்சிமிட்டும் தென்றலே டீசரோட சந்திக்கிறேன்...
 
Status
Not open for further replies.
Top