All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாணி கார்த்திகனின் "நீ வேண்டும் நான் வாழ" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
~ நீ வேண்டும் நான் வாழ ~


அத்தியாயம் 1


சென்னையில் முக்கியமாக ஒரு மீடிங் ஒன்றை தமிழ்நாட்டில் முதல் பத்து இடங்களைப் கைப்பற்றியுள்ள பத்து கம்பனிகளும் ஏற்பாடு செய்து இருந்தது. இவர்களின் கீழேயே ஏனைய கம்பனிகள் வேலை செய்கினறன. இவர்களின் உதவி இல்லாமல் நிச்சயாக மற்றைய கம்பனிகளுக்கு எந்தவித தயாரிப்புகளும்


உற்பத்தியாகப்படமாட்டாது. அது விதிக்கப்படாத நியதியாதியாக இருந்து.


இந்தப் பத்து பேர்களிலேயே போட்டிகள் அதிகம்; யார் முதல் இடத்தைப் பிடிப்பது என்று.


நிச்சயமாக அதில் ஒருவர் மாற்றி ஒருவரே பத்து இடங்களைப் பெறுவர். ஆனால் இம்முறை அனைவரையும் தன் பின்னே தள்ளிவிட்டு எஸ்.பி இன்டஸ்ட்ரீஸ் முதலாம் இடத்தைப் பிடித்து இருந்தது. இதை எவருமே எதிர்பார்க்கவில்லை. இதில் முதலாம் இடத்தைப் பிடிப்பவர்களே பிஸ்னஸ் அஷோஷியேஷனில் அவ்வருடத்தின் தலைவராக இருப்பார் என்பது எழுதப்படாத ஒரு சட்டம்.


எஸ்.பி இன்டஸ்ட்ரீஸைப் பற்றிக் கூற வேண்டுமானால் புதிதாக துவங்கப்பட்ட ஒரு நிறுவனம். ஆம் மற்றைய கம்பனிகள் அனைத்துமே ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு பழைமை வாய்ந்ததாக அமைந்து இருந்தது. ஆனால் இவ் நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்டு இரண்டு வருடங்களே பூர்த்தியாகின்றன.


ஆனாலும் எவரும் எதிர்ப்பாராத ஆபூர்வ வளர்ச்சியைக் கண்டது அவ் நிறுவனம். அவுஸ்திரேலியாவில் இருக்கும் பிரபலமான ஒரு கம்பனியே எஸ்.பி இன்டஸ்ட்ரீஸ்.


அங்கே ஆரம்பித்து உச்சம் தொட்ட கம்பனி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட, அவர்களுக்கான ஆதரவு பல்கிப் பெருகியது. எஸ்.பி இன்டஸ்ட்ரீஸ் கால் பதிகாத துறையே இல்லை. உணவு தொடக்கம், பெண்களின் அழகுசாதனப் பொருட்கள், கட்டிடம் வரையில் அனைத்துமே அவர்களினால் செய்யப்படுகின்றது. இதில் ஆச்சரியம் யாதெனில் இந்தியாவில் கட்டத் துறையும், பெண்களுக்கான அழகு சாதனங்கள் மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டு இதோ இரண்டிலுமே முதலிடத்தைப் பெற்று உள்ளது.


அடுத்து நிச்சயமாக உணவு மற்றும் ஏனைய துறைகளில் கால் பதித்து உச்சத்தை தொடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இன்று அஷோஷியேஷன் தலைவர் பதவியை வழங்கவே இம் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆகவே இங்கு ஆரம்பத்தில் பத்து இடங்களைப் பெற்றவர்களும் தற்போது அனைவரையும் முந்திக் கொண்டு முதலாம் இடத்தைப் பெற்ற எஸ்.பி. இன்டஸ்ட்ரீஸின் சி.ஈ.ஓ. மற்றும் எம்.டி யும் வருகைத் தர இருந்தனர். ஆகவே மொத்தமாக இப்போது பதினொரு பேர் வருவதாக இருந்தது.


ஒவ்வொரு விலையுயர்ந்த காரில் ஒவ்வொருவராக வந்திறங்கினர். அதில் மீடிங் ஆரம்பிக்க பத்து நிமிடத்திற்கு முன்னே வந்திறங்கினான். யங்கஸ்ட் பூஸ்ட் மேன் எனச் செல்லமாக மற்ற பிஸ்னஸ் மேன்களினால் அழைக்கப்படும் கார்த்திக் ஆர்யன். அவனைப் பற்றிக் கூற வேண்டுமானால் கே.பி(B) குரூப்ஸ் என்ட் கம்பனியின் எம்.டி. பதினைந்து ஆண்டிற்கு பழைமையான கம்பனியாக இருந்தாலும் இன்னும் மக்களால் விரும்பப்படும் கம்பனியாக மாற்றியவன்.


தந்தையை இழந்த போது தனியாக நின்று அனைத்தையும் அவருடைய இடத்தில் நின்று கல்வியைப் பயின்றுக் கொண்டு தொழிலையும் கவனித்து வந்து கடந்த ஆறு வருடங்களாக முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவன் இவனே. இந்த வருடம் அவனை ஓவர் டேக் செய்து அவனுடைய முதல் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது எஸ்.பி இன்டஸ்ட்ரீஸ். இருந்தும் அதைப் பற்றிக் கவலைக் கொண்டதாக அவன் தெரியவில்லை.


ஆறடி உயரத்தில் மஞ்சள் நிறத்தில் பியர்ட் செய்யப்பட்ட முகத்துடன் புன்னகையுடன் உள்ளே நுழைந்தான். அவனது கட்டுக் கோப்பான உடல் வாகு அவனது தொடர்ச்சியான உடற் பயிற்சியினால் உருவாகி உள்ளது என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம். கறுப்பு நிற கோர்ட் சூட் அவனது நிறத்தை இன்னும் எடுப்பாகக் காட்டியது. அவன் முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை இருக்கும். எந்த வித சூழ்நிலையிலும் கோபத்தைக் குறைத்து புன்னகையுடன் அனைத்தையுமே கையாளுவான். இவனே எமது கதையின் இரண்டாம் நாயகன்.


அவனது கடந்தகாலத்தில் அவனது முன் கோபத்தினால் நடந்த சம்பவங்களால் அனுபவித்தது பல. இன்னும் சில குற்ற உணர்ச்சிகளில் இருந்து அவன் வெளியேறவில்லை. அதனால் எப்போதும் எதையும் நிதானமாக பொறுமையுடன் அனைத்தையுமே கையாளுவான். அதுவே அவனது இயல்பு. இப்பேர் பட்ட ஒருவனை தனது வீட்டு மருமகனாக மாற்றிக் கொள்ள வேண்டும் என பல தொழிலதிபர்கள் அனைவருமே போட்டியிட்டுக் கொண்டு இருக்கின்றனர்.


அனைவரிற்கும் பிடி கொடுக்காமல் வலம் வந்துக் கொண்டு இருக்கும் இருபத்தி எட்டு வயது வாலிபன். ஆனால் அவன் மனதிலே முன்னே ஒருவள் சிம்மாசனமிட்டு இதய அரசியாக வலம் வருகின்றதை எவருமே அறியவில்லை. அவனும் தன்னக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர,


"என்ன கார்த்திக் இப்படி ஆயிருச்சு? அந்த எஸ்.பி இன்டஸ்ட்ரிஸ் பர்ஸ்ட் பிளேஸ் வந்துட்டாங்களே" என சிலர் கவலையாகக் கூறினர்.


இதில் சிலருக்கு உண்மையாகவே கவலையாகவே இருந்தாலும் அவன் மீது பொறாமையில் இருந்த சிலர் துக்கம் விசாரிப்பது போன்று விசாரித்து அவன் பின்னே நின்று அவனைப் பற்றி புரளி பேச ஆரம்பசத்தனர்.


அவனோ புன்னகையுடன் அனைவரிற்கும்,


"நமக்கு எது கிடைக்கனும்னு கடவுள் நம்ம தலையில் எழுதி வச்சிருக்காரோ அது தான் கிடைக்கும். நாம ஃபீல் பண்றதுக்கு எதுவுமே இல்லை" என்றான் தன் ஆளுமைக் குரலில்.


அதன் பிறகு எவருமே அதைப் பற்றி பேசவில்லை. மீடிங் ஆரம்பிக்கும் நேரம் எஸ்.பி இன்டஸ்ட்ரீசின் எம்.டியின் கார் அவ் ஹோட்டலிற்குள் நுழைந்தது. மீடிங் ஹோலில் அனைவருமே எஸ். பி இன்டஸ்ட்ரீஸின் எம்.டியை எதிர்பார்க்க உள்ளே நுழைந்ததோ அவரின் பி.ஏ. அனைவரும் அவனை கேள்வியாய் நோக்க, "சேர் வந்திட்டு இருக்காரு" என்றான்.


'தட் தட்' என்ற ஷூவின் சத்தத்துடன் உள்ளே நுழைந்தான். அவனின் ஷூவின் சத்தத்தை தவிர அங்கே எதுவுமே எதிரொலிக்கவில்லை. அனைவருமே நிமிர்ந்துப் பார்க்க அதிர்ச்சியானார்கள் என்பது உண்மையே.


சாத்விக் ப்ரவீன் ஆறடியுடைய கம்பீரமான தோற்றமுடைய இருபத்தி எட்டு வயது இளைஞன். மாநிறத்தை விட சற்று கூடிய நிறத்தில் எரிக்கும் விழிகளையும், கூரிய நாசி உடையவன். அவனது பார்வை கழுகை விட கூரியது. அவனது கடந்த காலமே அவனுடைய கூரிய பார்வையிற்கு காரணமாக மாறியது. ஷேவ் செய்யப்பட்ட முகத்தில் கரிய மீசை அவனுடைய கம்பீரத்தை அதிகரித்துக் காட்டியது.


உடற் பயிற்சியினால் உருவான கட்டுக்கோப்பான உடலை அவன் அணிந்து இருந்த வெள்ளை நிற ஷேர்ட் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்க அதை மறைக்கும் வகையில் சாம்பல் நிற கோர்ட்டை அணிந்து இருந்தான். சாம்பல் நிற ஜீன்சும், கறுப்பு நிற உயர் ரக கூலர்ஸ், இடக்கையில் பிரேன்டட் கைக்கடிகாரமும் அவனுக்கு நன்றாகப் பொருந்தியது. தன் கூலர்சைக் கழற்றி பார்வையை சுழற்றினான். இவனே நம் முதலாம் கதாநாயகன்.


அதிர்ச்சியை அவர்களின் முகம் தெளிவாய் காட்ட அவர்களைப் பார்க்கும் போது ஏளனப் புன்னகையொன்று இதழில் பூத்த அடுத்த நொடி அதுவும் காணாமல் சென்றது.


முகம் கடுமையாக மாறி செயற்கைப் புன்னகையொன்று அவன் இதழ்களைச் சூழ்ந்துக் கொண்டது. அவனைப் பார்த்த கார்த்திக்கின் கண்களில் அத்தனை அதிர்ச்சி. உடனே தன் முகத்தை மாற்றி கண்களினாலேயே சிரித்தான். கார்த்திக்கைப் பார்த்தவாறே அவனும் வந்தமர்ந்தான். அவன் கண்களில் என்ன உணர்ச்சி தென்படுகின்றது என்பதை கார்த்திக்கால் உணர முடியவில்லை.


அங்கிருந்த அனைவருமே எதிர்பார்த்தது எஸ்.பி இன்டஸ்ட்ரீசின் எம்.டி நிச்சயமாக ஐம்பதைக் கடந்தவராக இருப்பார் என்று. ஏனென்றால் இச்சிறிய கால இடைவெளியில் கம்பனியின் வளர்ச்சி அபாரியது அல்லவா? நிச்சயம் அவருக்கு அனுபவம் அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் இருபதுகளில் இருப்பான் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை.


"ஹலோ பிரன்ஸ். ஐம் சாத்விக் பிரவீன். ஃபுரொம் ஒஸ்ட்ரேலியா. இனிமேல் இங்கே தான் இருக்க போறேன். இந்தியாவில் தான் பிறந்து, வளர்ந்து படிச்சேன். பட் என் சிடுவேஷனினால் ஒஸ்ட்ரேலியா போக வேண்டி இருந்தது. அங்கே போய் என் கம்பனியை ஆரம்பிச்சு அங்கே கொடி கட்டி பறக்குறேன்.


பட் என்ன இருந்தாலும் நம்ம நாடு போல இருக்காது இல்லையா? சோ, நம்ம நாட்டிலும் என் கம்பனியை உருவாக்கி மக்களுக்கு நல்லது செய்யனும்னு நினைச்சேன். இங்கே ஆரம்பிச்சேன். என் புரொடெக்டிற்கு பொதுவாக எல்லா நாட்டிலும் மார்கட் அதிகம். இங்கேயும் எனக்கு ஆதரவு கிடைச்சு இன்னைக்கு முதல் இடம் கிடைச்சு இருக்கு. இங்கே நான் செடில் ஆகனும்னு நினைக்கும் போதே இப்படி ஒரு குட் நியூஸ் கிடைக்கும்னு எதிர்பார்க்க இல்லை.


அதே போல இந்த இடத்தை யாரிற்கும் விட்டுக் கொடுக்குறதாகவும் இல்லை. எனக்கு கிடைக்குற எதையுமே நான் அவளோ ஈசியா கொடுக்க மாட்டேன். எனிவேஸ் இந்த அஷோஷியேஷனிற்கு என்னை ஹெட்டாக நியமிக்க ஏற்பாடு பண்ணி இருக்கிங்க. தெட்ஸ் நைஸ். பட், அதுக்கு முன்னாடி உங்க எல்லோரோட மனப்பூர்வமான ஒப்புதலும் வேணும்" என்றான்.


'அதே போல இந்த இடத்தை யாரிற்கும் விட்டுக் கொடுக்குறதா இல்லை' எனக் கூறும் போது அவனது பார்வை முழுவதும் கார்த்திக்கின் மீதே இருந்தது. இதை கார்த்திக் எதிர்பார்த்தான் என்பதை அவன் முகம் கூறியது சாத்விக்கிற்கு. பின் மீடிங்கில் அனைவரும் மனப் பூர்வமாக தங்கள் ஒப்புதலை வழங்க சாத்விக் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டான்.


அவனிடம் சிறிது நேரம் பேசியவர்கள் லஞ்ச் ஏற்பாடு செய்து இருந்தமையால் அங்கிருந்து நகர கார்த்திக் சாத்விக்கை நோக்கிச் சென்றான்.


"கங்கிராஜூலேஷன்ஸ் சாத்விக் ப்ரவீன்" என்று கைக் கொடுக்க, "தேங்கியூ சோ மச் கார்த்திக். சொரி ஆர்யன்" என்றான் ஏளனமாக.


சாத்விக், "உன்னோட முதல் இடத்தை பிஸ்னசில் பிடிச்சிட்டேன் ஆர்யன். மறுபடியும் உன் லைஃபில் என்னை எதிர்பார்த்து இருந்து இருக்க மாட்ட. இதற்கு அப்பொறமா நிறைய விஷயங்களில் என்னை பார்ப்ப. உனக்கு சொந்தமானது, உயிரானதுன்னு நினைக்குறதை எனக்கு சொந்தமானதா ஆக்குறேன் ஆர்யன். குட் லக். என் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்னு முயற்சி பண்ணு" என்று தன் கூலரை ஸ்டைலாக மாற்றி வெளியே சென்றான்.


'உன்னை நான் எதிர்பார்க்க இல்லை ப்ரவீன். எனக்கு சொந்தமானதை எதையும் உனக்கு சொந்தமானதாக மாத்திக்க முடியாது' என தன்னுள் பெருமையாய் நினைத்து மற்றவர்களிடம் கூறி வெளியேறினான். விதி வலியது என்பதை அந்நேரத்தில் மறந்து போனான் கார்த்திக்.


கார்த்திக் அங்கிருந்து நேரடியாக தனது அலுவலகத்திற்குச் சென்றான். சாத்விக் கூறியதை ஒரு மனம் மறக்குமாறு கூறினாலும் இன்னொரு மனமோ அதை மறக்காதே, கவனமாகவே இரு என எச்சரிக்க தலை வலிப்பது போல் இருந்தது. உடனடியாக தன் பி.ஏ விடம் ஒரு ஸ்ட்ரோங் காபியை வழங்குமாறு கூறி தன் மேசையைப் பார்க்க, இரண்டு ரோஜா மலர்களைப் போன்ற இரு பெண்கள் அவனோடு போஸ் கொடுத்து இருந்தனர் ஒரு புகைப்படத்தில்.


ஒருவள் அவன் தோளில் உரிமையாய் சாய்ந்து அவன் புஜத்தைப் பிடித்து அமர்ந்துக் கொண்டும் இன்னொருவள் அவன் மடியில் தலை வைத்து அவனது மற்றைய கையைப் பிடித்து அவனைப் பார்த்து புன்னகைப்பது போன்றும் இருந்தது அப்புகைப்படம்.


'உங்க இரண்டு பேரையும் பார்த்தால் என் மனசுக்கு எப்போவுமே தெளிவு கிடைக்குது பியூடிஸ்' என நினைக்க அவன் முன்னே ஒரு கப்பைக் கொடுத்தான் பி.ஏ. தன் மனதை ஒரு நிலைப்படுத்தி தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.


ஆனால் கார்த்திக்கின் நிம்மதியைப் பறிக்க முதலாவது அடியை எடுத்து வைப்பதற்காக, "$$$$" கோலேஜை நோக்கி சீறிப் பாய்ந்தது சாத்விக்கின் கார். அவன் இதழ்கள் ஏளனமாய் அவன் அருகில் இருந்த இருக்கையில் உள்ள புகைப்படத்தைப் பார்த்து வளைந்தது. அதில் புன்னகையுடன் ஒரு பெண் சிரித்துக் கொண்டு இருந்தாள். அவள் அடர் கருங்கூந்தலை தன் முன்னால் பின்னலிட்டு விட்டிருக்க இடையை அப்பின்னல் தொட்டுக் கொண்டு இருந்தது. அவள் அணிந்திருந்த பச்சை நிற அனார்கலி அவளிற்கு நன்றாகப் பொருந்தி எடுப்பாக இருந்தது.


அத்தனை கலையான முகம். அதோடு அருகில் இன்னும் இரண்டு புகைப்படங்கள் இருந்தன. அதில் கார்த்திக்கின் அறையில் இருந்த புகைப்பமும், மற்றையது கார்த்திக்கும் இன்னொரு பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலாக பார்த்துக் கொண்டு இருக்கும் புகைப்படமே அது. கோலேஜில் காரை நிறுத்தியவன் சிரித்துக் கொண்டு இருந்த அப்பெண்ணின் புகைப்படத்தை கையில் எடுத்தான்.


அதை கைகளால் வருடி, 'ஐம் கமிங் திசன்ஜனா பேபி' என அலட்சியமாய் அப்புகைப்படத்தைப் பார்த்தான். ஆனால் அவன் இதழ்கள் 'நைஸ் நேம்' என உதிர்க்கவும் தவறவில்லை. அவள் பெயரிற்கேற்ப அவனுடைய வாழ்க்கையில் சரியான திசையைக் காட்டப் போகின்றவள் என அறியாமல் வன்மத்துடன் அவளை சந்திக்கச் சென்றான். கார் கதவைத் திறந்து ஸ்டலாக இறங்கியவன், தன் கூலரை மாட்டியவாறு பிளேசரை கழற்றி கையில் எடுத்து, கம்பீர நடையுடன் நடக்க ஆரம்பித்தான்.


அவன் வன்மத்துடன் காணச் சென்றவளோ, கையைப் பிசைந்துக் கொண்டு தன் உற்ற தோழி, சகோதரி, இன்னொரு தாயான அபிநயாவின் முன் நின்று தலைக் குனிந்துக் கொண்டு இருந்தாள்.


"இப்போ எதுக்கு தலை குனிஞ்சிட்டு இருக்க சனா?" எனக் கேட்டாள் அபி.


"அது நான் பெயின்ட் பண்ணில் தண்ணீர் கொட்டி ஸ்மஜ் ஆகிருச்சு டி. பயமா இருக்கு. இதுல உன் உழைப்பும் இருக்கே"


"அடியேய் நான் தூங்காமல் இருந்தது ஒரு உழைப்பாடி?"


"ஆமா எனக்காக தானே நீ தூங்காமல் இருந்த?"


"நீயும் ரொம்ப அநியாயத்திற்கு உன் அண்ணாவைப் போல நல்லவளா இருக்க" என சலித்துக் கொள்ள,


"என் அண்ணா உனக்கு யாரு அபி?"


"புருஷன்" என கண்ணடித்து சொன்னாலும் அவள் கன்னங்கள் செவ்வானமாய் சிவக்கமால் இருக்கவில்லை.


ஆம், அபிநயா கார்த்திக் ஆர்யனின் மனதின் அரசி. அபிநயா பெயரிற்கு ஏற்ப அத்தனை அபிநயங்களையும் கார்த்திக்கைப் பார்த்தால் முகத்தில் வரவழைப்பாள். வட்டமுகத்தில் வில் வடிவ இரண்டு புருவங்கள், அதற்பு நடுவில் ஒரு சிறிய பொட்டு. கண்களுக்கு சிறிதளவு மையிட்டிட்டு இருந்தாள். துள்ளிக்குதிக்கும் மீன்களா இவை? என நினைக்க வைக்கும் நயனங்கள்.


பிறை நெற்றி, சிறிய மூக்கு, தோடைச் சுளைப் போன்ற இரண்டு இதழ்கள், சற்று பூசிய உடல்வாகுடன் அளவான உயரத்தில் கார்த்திக் தேவதையாய் வலம் வருபவளே அபிநயா. அபிநாயாவின் தந்தை இறந்த பிறகு அவளுக்கும், அவள் தாயிற்கும் குடும்பத்தில் எவருமே ஆதரவாய் இருக்கவில்லை. தந்தை இருந்த வீட்டைத் தவிர மற்றைய அனைத்தையுமே இழந்து நின்ற போது அத்தை மகனாக அவள் தாயிற்கும், அவளிற்கும் கைக்கொடுத்தான் கார்த்திக்.


கார்த்திக்கின் தந்தையின் உடன் பிறந்த சகோதரியே அபிநயாவின் தாய். சிறு வயதில் அபி பிறந்த போது அபியிற்கு, கார்த்திக் என்றே முடிவானது. கார்த்திக்கிற்கும், அபியிற்கும் 8 வருடங்கள் வித்தியாசம் இருந்தது. அபி பிறந்த சிறிது நாட்களிலேயே சனாவும் பிறந்தாள். கார்த்திக்கிற்கு சனா ஒரு கண் என்றால், அபி மற்றைய கண்.


இருவரிற்குமே பெயரிட்டது கார்த்திக்கே. அபிநயா என அவள் பெயர் வைக்கக் காரணம் பிறந்த போது ஒரு வரையும் பார்க்காத அபி, கார்த்திக்கைப் பார்த்து அழுதது மட்டுமின்றி சிரிக்கவும் செய்தாள். அபிநயங்களை முகத்தில் காட்டினாள் என்று அபிநயா என பெயரிட்டான். தன் தங்கை அனைவரிற்கும் சரியான வாழ்க்கையின் திசையைக் காட்ட வேண்டும் என திசன்ஜனா எனப் பெயரிட்டான்.


நாட்களும் இறக்கைக் கட்டிப் பறக்க கார்த்திக்கிற்கு இருவருமே உயிரானார்கள். தங்கையின் மீது உயிரையே வைத்திருந்தான் கார்த்திக். அபி, கார்த்திகிற்கு இடையே அதீதி ஒரு அன்பிலான ஒரு பிணைப்பு உருவாகி இருந்தது. வருடங்களுக்கும் கடக்க இருவருக்கும் இடையே இனம் புரியா ஒரு ஈர்ப்பு உருவாக அதுவே காதலாக மாறியது. இருந்தும் கார்த்திக் அவளின் படிப்பு தன்னால் கெடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான்.


அதனால் அவளிடம் தன் காதலைத் தெரிவிக்கவில்லை. ஆனால் அவள் தந்தையை இழந்து, தந்தையின் குடும்பத்தினரால் ஏமாற்றப்பட்டு யாருமற்ற அநாதையாய் அபியும், அவள் தாயும் நின்றபோது தன் வீட்டிற்கு அழைக்க ஊரைக் காரணம் காட்டி வர மறுக்க 'நீ என் மனைவி' என்று அனைவரின் முன்னிலையிலையும் கூறி அவளை அழைத்து வந்தான்.


கார்த்திக் தன் பதினெட்டு வயதில் தாய், தந்தை இருவரையுமே இழந்தான். தந்தையிற்கு அக்சிடென்ட் என்று கேள்வியுற்ற போது அனைவருமே ஹொஸ்பிடலை அடைந்தனர். அங்கே தந்தையை காப்பற்ற முடியவில்லை எனக்கூறியதைக் கேட்டு இத்தனை வருடங்களில் ஒரு நாளாவது தன் கணவனை பிரிந்திராத மனைவி தன் கணவனோடு சேர்ந்து உயிரைத் துறந்தார்.


அவர்கள் இருவரின் காதலிற்கும் அத்தாட்சியாகப் பிறந்த கார்த்திக், சனா என்ற இரு பரிசுகளை விட்டு விட்டு பிரிந்து சென்றனர் அக்காதல் ஜோடிகள். பத்து வயது தன் தங்கையை வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருந்த போது அவர்களை தங்கள் பிள்ளைகள் போன்று பார்த்துக் கொண்டனர் அபியின் பெற்றோர்கள். சில நாட்கள் அங்கே தங்கியிருந்தவன் அனைத்திற்கும் தயாராக வேண்டும் என அனைவரையும் மீறி சனாவை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தான்.


அபியின் தந்தையின் உதவியுடன் தொழிலை நடத்த, தன் அத்தையின் உதவியுடன் தன் தங்கைக்கு தாயுமானவனாகவும், தந்தையுமாவனாகவும் மாறி வாழ்ந்தான். அதோடு தன் கல்வியிலும் கவனத்தைச் செலுத்தினான். சிறு வயதில் இருந்தே தாய், தந்தை, அண்ணனின் கைக்குள்ளேயே வளர்ந்த சனாவால் பெற்றோரின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாத ஒவ்வொரு சந்தர்பத்திலும் கார்த்திக்கிற்கு அபி உறுதுணையாக இருந்து சனாவை அதிலிருந்து வெளிக் கொணர்ந்தாள்.


இவ்வாறு அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் அபியே கலந்து இருந்தாள். தன் பதினாறாவது வயதில் அபி தன் தந்தையை இழந்த போது அனைவரின் முன்னிலையிலுமே 'தன் மனைவி' என அத்தையையும், அவளையும் அழைத்து வந்தான். இதோ நான்கு வருடங்களும் கடந்து சென்று விட்டன. அபி, சனா இருவருமே நெருங்கிய தோழிகள். சனா தாயின் நினைவுகளில் துவளும் போதும் அபியே அவளிற்கு இன்னொரு தாயாக மாறுவாள்.


சனாவின் திருமணம் முடிந்த பிறகே அபி, கார்த்திக்கின் திருமணம் என பெரியவர்கள் முடிவு எடுக்க அபியும் முழு மனதுடன் ஒத்துக் கொண்டாள். இதோ இவர்களும் இருபது வயதை அடைந்து விட்டனர். கார்த்திக்கும் தன் அத்தை, காதலி, தங்கையுடன் சந்தோஷமாக வாழ அவனின் சந்தோஷத்தை அழிக்க வந்துவிட்டான் சாத்விக். அவனுடைய வாழ்வில் நடந்த இழப்புகளிற்கு கார்த்திக்கும் ஒரு காரணம் அல்லவா?


அபி தைரியமான பெண்ணாக அனைத்து சூழ்நிலைகளை சரியாக கையாளுபவளாக வளர, தன் அண்ணனின் கைக்குள்ளே வளர்ந்த சனாவால் அந்த அளவிற்கு தைரியமானவாளாக வளர முடியவில்லை. அனைத்திற்குமே பயந்தவளாகவும், மென்மையானவளாகவும் வளர்ந்தாள். அவளுடைய குணத்தை கார்த்திக்கும், அபியும் மாற்ற எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் பலன் பூச்சியமாக இருந்தது.


சிறிய ரோஜாவின் முள் கையில் குத்தினாலும் சனாவால் தாங்க முடியாது. வலியில் தாரை தாரையாக கண்ணீரை வடிப்பாள். சற்று குரலை உயர்த்தியோ, கோபமாகப் பேசினாலோ நடுங்க ஆரம்பித்து அழுதும் விடுவாள். அதிகமான கோபத்தை வெளிக் காட்டினால் அங்கேயே மயங்கி விழுந்து விடுவாள். கார்த்திக் இவளை நினைத்து வருந்ததாத நாள் இல்லை. ஆனால் அபி எப்போதும் அவளுடன் இருப்பதால் அவன் மனம் ஓரளவும் சமாதானமாகும்.


அவளின் பாதுகாப்பு, கார்த்திக்கும், அபியுமே. இவ்வாறு மென்மையானவளாக இருந்தாள் சனா. அதே போல் அவளுடைய அமைதியான குணமும் அவளிற்கு இன்னும் மென்மையை வழங்கியது. எவரிடமும் இது வரையில் கோபப்பட்டது இல்லை. அனைத்தையுமே புன்னகையுடன் கடந்து செல்வாள். அனைவரையுமே பாவம் பார்க்கும் நல்லவளாக இருக்கும் வெள்ளந்தியான குணமுடையவளே சனா. இவளிற்கு சரியான ஒரு வாழ்க்கைத் துணை கிடைக்க வேண்டும் என்பதே குடும்பத்தார் அனைவரினதும் வேண்டுகோள். அதனை இறைவனே அறிவான்...


"இப்போ என்ன பண்றது அபி? மறுபடியும் உட்கார்ந்து வரையவா? இப்போ இந்த கோலேஜோட புது நிரவாகி வராறாம். அவங்களுக்கு என் பெயின்டிங்கை காட்டனும்னு பிரின்சிபல் கேட்டாரு. அதுக்கு டிரோ பண்ணி பெயின்ட் பண்ணேன். இப்போ பாரேன் என் கையாலேயே ஸ்மஞ் ஆகிருச்சு. இப்போ என்ன பண்றது? பயமா இருக்கு" என்று கையை மறுபடியும் பிசைய அவள் கையை ஆதரவாக அபி பிடித்தாள்.


"ரிலேக்ஸ் சனா. ஒன்னும் இல்லை டா. நீ பிரின்சிபல் கூப்பிட்டா நிலமையை எடுத்து சொல்லு. நீ இதையும் எடுத்து போ" என வழங்க,


"இல்லை சேர் திட்டுவாரு" என முகம் சுருக்கி அமர்ந்தாள் சனா.


"திட்ட மாட்டாரு சனா. நீ தைரியமா சொல்லு. அவரு கேட்பாரு"


"நெஜமா?"


"நெஜமா" என அவள் கையில் அழுத்தம் கொடுத்தாள் அபி.


அதே நேரம் பிரின்சிபல் சனாவை அழைப்பதாகக் கூற பயந்தவாறே டிரோயிங்கையும் எடுத்துக் கொண்டு சனா பிரின்சிபல் அறைக்குச் சென்றாள்.


"எக்ஸ்கியூஸ் மீ சேர்.. நான்....." என கூறி முடியும் முன் "அவருக்கு வேற ரூம் இருக்கு சனா. அங்கே போ" என அவளை அனுப்பி வைத்தார் சனா என்ன கூற வருகிறாள் எனக் கேட்காமல்.


அவளும் பயந்துக் கொண்டே அவர் கூறிய அறைக்குச் சென்றாள். ஏனோ அவள் இதயம் வேகமாக துடித்தது. அவளிற்கே அவள் இதயத் துடிப்பு கேட்குமளவிற்கு இருந்தது.


"எக்ஸ்கியூஸ் மீ சேர்" என அவள் கதவைத் திறக்க தன் பி.ஏ வுடன் மொபைலில் பேசிக் கொண்டு இருந்த சாத்விக் ஒரு மெல்லிய குரல் கேட்க அப்புறம் திரும்பினான். சனாவைப் பார்த்தவனின் இதழ்கள் வெற்றிப் புன்னகையை சிந்தின.


"யெஸ் கமின்" என தன் பேச்சை அவளை அளவிட்டவாறே தொடர்ந்தான்.


ஐந்தடி உயரத்தில் பிங்க் நிற சுடிதாரும், ஜீன்சும், துப்பட்டாவும் இள நீல நிறத்தில் அணிந்து இருந்தாள். தன் இடை தாண்டிய கருங் கூந்தலை தளர்வாக சிறிதளவு பின்னலிட்டு தன் வலது பக்க முன்புறமாக இட்டு இருந்தாள். பிறை நெற்றியில் இரண்டு வானவில் போன்ற புருவங்கள். இரு மலைகளுக்கு நடுவே நிலா தென்படுவது போன்று அப் புருவங்களுக்கு நடுவே சிகப்பு நிற பொட்டு வைத்து இருந்தாள்.


கயல்விழிகள் என்பது அவள் விழிகளோ என்ற அளவிற்கு மையிடப்படாத இரண்டு விழிகளும் இருந்தது. கிளியின் சொண்டைப் போன்று ஒரு சிறிய மூக்கு. ரோஜா இதழ்களைப் போன்று மென்மையான பிங்க் நிற உதடுகளின் விளிம்பில் சிறிது சாம்பல் நிறத்தில் ஓரங்கள் இருந்தன. பஞ்சுமிட்டாய் கன்னங்கள், காதில் தங்க சிறிய தோடு. கழுத்தில் ஒரு மெல்லிய தங்க செயின் அணிந்து இருந்தாள்.


மூக்கில் சிறிய மூக்குத்தி அவளிற்கு எடுப்பாக இருந்தது. கைநகங்களும், கால் நகங்களும் சீராக வெட்டப்பட்ட கடலின் காய்ந்த மண்ணின் மஞ்சள் நிறத்தில் அளவான உடலுடன் கூடிய இருபது வயது நிரம்பிய பெண்ணாக அவன் முன் வந்து நின்றாள். செல்வந்த வீட்டுப் பிள்ளை என்பதிற்கான எவ்வித அடையாளமும் அவளிடம் இல்லை. அத்தனை எளிமையாக இருந்தாள். அவன் பேசி முடியும் போது இவன் அவளை அளவெடுத்து முடித்து இருந்தான்.


"ஒகே நான் அப்பொறமா பேசுறேன்" என அழைப்பைத் துண்டித்து, "நீங்க?" என தெரியாதவன் போல் கேட்டான் சாத்விக்.


"நான் திசன்ஜனா" என்றாள் மெல்லிய குரலில்.


'உன் ஜாதகமே என் கையில்' என உள்ளே அரக்கனாய் சிரித்தவன், 'இன்னைக்கு நாளை உன் வாழ்க்கையில் மறக்க மாட்ட பேபி. யேன்னா என் டார்கட்டே நீ தான்' என நினைத்தவன் எழுந்து நின்று அவளே மேசைக்கருகில் அழைத்தான்


தொடரும்...



 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
~ நீ வேண்டும் நான் வாழ ~


அத்தியாயம் 2



சனா, அக்கல்லூரியில் இருக்கும் சிறிந்த ஓவியம் வரையும் மாணவர்களில் ஒருவள். பல முறை ஓவியப் போட்டிகளில் பங்கு பெற்று தனது கோலேஜிற்கு முதல் பரிசை வழங்கிக் கொடுத்தாள். அதை நன்றாகவே சாத்விக் அறிந்து வைத்து இருந்தான். தான் முதலில் அவுஸ்திரேலியாவிற்கு சென்றவன் அங்கே தனது திறமையால் கொடிக்கட்டிப் பறக்க தனது பழிவாங்கும் படலத்திற்கு முதல் படியாக இந்தியாவில் தனது நிறுவனத்தை நிறுவினான்.


இரண்டு வருடங்களிற்கு முன் சாதவவிக் இந்தியாவிற்கு வருகை தந்தான். அப்போதே கார்த்திக் முதலாவது இடத்தில் இருப்பதைப் பார்த்தவனிற்கு அது தன் மன நிம்மதியைப் பறித்தது. தான் இன்று அநாதையாய் நிற்பதற்கு ஒரு காரணமும் அவனே. அன்று அத்தனை பேரின் முன்னிலையில் அவமானப்பட்டு நிற்க ஒரு காரணம் கார்த்திக் என்பதை அவனும் நன்றாக அறிவானே. அவனைப் பற்றிய முழு தகவல்களையும் இரண்டு நாட்களில் தருமாறு டிடெக்டிவிடம் கூறி அதே போல் எடுத்தும் கொண்டான்.


அப்போதே அவனுக்கு காதலியாய் ஒருவளும், தங்கையாய் ஒருவளும் இருப்பதைத் தெரிந்துக் கொண்டான். அதில் அவன் சிறு வயதில் இருந்தே தங்கை என்றால் உயிர் என்பதைத் அறிந்தவன் உடனே தனது பி.ஏ விடம் சனாவைக் கவனிக்க டிடெக்டிவை நியமிக்குமாறும் அவளுடைய ஒவ்வொரு அசைவும் தனக்கு தேவை என்றும் கூறி மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குச் சென்றான்.


அதே போல் தினமும் சனாவின் நடவடிக்கைகள் அவனிற்கு புகைப் படங்களோடு தெரிந்தது. அவளுடைய ஒவ்வொரு அசைவுமே அவனிற்கு அத்துப்படி. அவள் விரும்பி உண்ணும் உணவு முதல் வெள்ளிக் கிழமைகளில் நகம் வெட்டுவது வரை அவன் அறிந்து இருந்தான். அவளுடைய திறமைகள்,பலங்கள், பலவீனங்கள் அனைத்துமே அவனின் கையில் அடக்கம். அவளுடைய வீட்டில் அவளை ஆரம்பத்தில் கவனிக்க முடியவில்லை.


அதனால் அவள் வீட்டில் ஏசி ரிபேயாராக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னுடைய ஆட்களின் மூலம் அவளின் வீட்டில் தோட்டத்திலும் அவளுடைய அறையின் பல்கனியிலும் மைக்ரோ கமெராவை பூட்டினான். இதை எவருமே அறியமால் செய்ததில் சாத்விக்கிற்கு மாபெரும் வெற்றி. தன்னுடைய லெப்டொப்பில் சனாவிற்கு என்றே தனிப் பகுதி உள்ளது. அதில் அவளுடைய மென்மையை அடிக்கடி பார்த்தவனுக்கு ஆச்சரியமே.


இத்தனை மென்மையானவளா என்று? அதில் அவளுடைய உறுதிகளில் தன் தமையனை எப்போதும் தலைகுனிய வைக்கக்கூடாது என்பது ஒன்றாக இருந்தது. ஒழுக்கம் என்பது அவளிற்கு உயிர் போன்றது. எக்காரணத்தாலும் அதை இழக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள். அவள் குடும்பம் அவளுடைய பலவீனம் என்பதையும் நன்றாக அறிந்து வைத்து இருந்தான்.


இன்னும் தன் தமையனை மீறி எதையும் செய்ய மாட்டாள் என்பது அவனிற்கு நூற்றிற்கு ஆயிரம் சதவீதம் உறுதியானது. அதனால் அவளை எவ்வாறு டீல் செய்ய வேண்டும் என்பதை முடிவெடுத்து இருந்தான். அவளை தன் திட்டத்திற்கு இணைய வைக்க நிச்சயமாய் அவள் தன் கண் பார்வையில் இருக்க வேண்டும். அதனாலேயே அவள் படிக்கும் கல்லூரியை பல கோடிகள் வாரி வழங்கி தன் பெயரிற்கு மாற்றிக் கொண்டான். இதை அதிகார பூர்வமாக அறிவிக்க வேண்டாம் என்பதை அதிபரிடம் கூறி இருந்தான்.


அதனாலேயே அவர் கூறவில்லை. மற்றும் இங்கே பல திறமை ஓவியத் திறமை வாய்ந்த பல மாணவர்கள் இருப்பதால், அதில் சிறந்த ஒருவரின் மூலம் தனக்கு ஏதாவது உயிர்ப்பு நிறைந்த ஒரு ஓவியம் வேண்டும் என வரையுமாறு அதிபரிடம் கூற, அவரிற்கு சனாவின் நியாபகமே உடானாக வர, சனாவை வரையுமாறு பணித்தார். சனாவும் அன்று இரவு கண் விழித்து வரைந்தாள். அவள் வரைந்த ஓவியம் அவள் மனதில் ஆழமாக பதிந்த முகம். அம்முகத்தை இறுதியாக பார்த்த போது அவள் மனதில் பதிந்து விட்டது. அதையே வரைந்திருக்க இன்று நீர் கொட்டி ஸ்மஞ் ஆகி விட்டது.


சாத்விக், "எதுக்கு மிஸ்.திசன்ஜனா அங்கேயே நிற்குறிங்க? டேக் யுவர் சீட்" என்றான்.


"தேங்கியூ சேர்" என்று வந்தமர்ந்தாள்.


"நீங்க தான் டிரொயிங் பண்ணதா?"


"ஆமா சேர். அதில் ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு" என கூறி முடியும் முன்னே அவன் மொபைல் ஒலிற பேசிக் கொண்டே அவனுக்கு அலுவலக அறையோடு ஒட்டி இருந்த ஓய்வு அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.


அவனுடைய அறை முழுவதும் ஏசி பூட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதனால் யன்னல்களும் மூடப்பட்டு கர்டன்களும் போடப்பட்டு இருந்தன. அத்தனையும் கலைநயம் மிக்கவையாக இருந்தது. சிறந்த இரசணைக்குரியவற்றை இரசிக்கும் ஓவியயையான சனா அனைத்தையுமை இரசித்தாள். அவனது அறைக்கு மின்விளக்குகள் மட்டும் ஒளியை வழங்கின. அம்மின்விளக்குகளும் மற்றவர்களின் கண்களைக் கூசும் வகையில் இருக்கவில்லை.


திடீரென்று மின்விளக்குகள் அணைந்து அறையை இருள் தத்தெடுத்தது. அவளிற்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்து, கைகளும், கால்களும் நடுங்க ஆரம்பித்தன. கண்களை இறுக்க மூடி,


"சேர்" என்று அழைத்தாள். எவ்வித சத்தமும் அங்கே கேட்கவில்லை. திடீரென்று பூட்ஸ் சத்தம் கேட்க சாத்விக் வந்துவிட்டான் என மகிழ்ந்தாள். அவள் கண்களை திறக்கமாலேயே எழுந்து நிற்க, அவள் இடையில் கைவைத்து தன் புறம் இழுத்தது ஒரு கரம். ஆம் அது சாத்விக்கே. அவளிற்கோ ஒரு முறை இதயம் நின்று துடித்தது. அவளை இறுக்கி அணைத்தவாறு நின்றான் சாத்விக்.


அவனின் ஒரு கை வயிற்றிலும் மறைய கை கழுத்தோடு இருக்க அவளது இடது கழுத்துப் பகுதியுடன் இருக்க கூந்தலில் தன் முகத்தைப் புதைத்து இருந்தான். இத்தனைக்கும் அவளை தன்னுயரத்திற்கு தூக்கி இருந்தான்.


அவளிற்கு இதயம் உடுக்கை அடிப்பது போன்று வேகமாக துடித்தது. பயத்தில் அவளிற்கு பேச்செழவில்லை. எச்சில் வற்றி நா உரண்டது போன்ற ஒரு உணர்வு. அவனுடைய மீசையின் உராய்வில் அவள் முழு உடலும் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.


"நான் உன் பக்கத்துல தான் பேபி இருக்கேன். டோன்ட் வொரி" என்று தன் அணைப்பை இறுக்கினான். அவளுடைய கொடியிடையை அவன் உள்ளங்கை அழுந்த பற்றி இருந்தது. பஞ்சு போன்ற போன்ற அவள் தேகத்தின் மென்மையில் அவன் மூளையும் சற்று வேலையை நிறுத்தியது. இதுவே அவனுக்கும் முதல் பெண் வாசம் அல்லவா? அவளிற்கோ இருளின் பயத்திலும், அவனுடைய அதிரடி தாக்கத்திலும் தன்னை நிதானப்படுத்த முடியாமல் அவன் மேலேயே மயங்கிச் சரிந்தாள்.


அதை எதிர்ப்பார்க்காத சாத்விக் அவனுடைய ஓய்வறைக்குச் சென்று கட்டிலில் கிடத்தி, அவன் சென்று பியூசை இட மீண்டும் மின் வந்தது. அவள் இருளைப் பார்த்து பயந்து தன்னருகில் வர வேண்டும் என நினைக்க அதோ போல் நடந்தது. ஆனால் அவனுக்கு அவளுடைய நெருக்கமும், அவள் வாசமும் அவனை மயக்கியது என்றால் பொய்யாகாது. அவளுடைய அருகாமை அவனை நன்றாகவே அவனைப் பாதித்து பாடாய் படுத்தவே அவன் அணைப்பை இறுக்கினான்.


ஆனால் அவளோ பயத்தில் மயங்கி அவன் மேலே சரிய ஏனோ அவனறியாமலேயே அவன் மனம் பதற ஆரம்பித்தது. அவள் முகத்தில் தண்ணீரை துளித்துளியாகத் தெரிக்க மெதுவாக கண்களைத் திறந்தாள். அவள் எழுந்த உடனேயே கண்களைச் சுழற்றிப் பார்த்தவள் மிரட்சியுடன் வேகமாக எழுந்து நடக்க எத்தணிக்க மீண்டும் சிறிதளவு மயக்கம் இருந்ததால் தடுக்கி விழ இத்தனை நேரமாக மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு இருந்தவன் இடை தாங்கி பிடித்தான்.


"உனக்கு எதுக்கு இவளோ அவசரம் பேபி?" என அவளை சோபாவில் அமர வைத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.


"சேர் என்னை விடுங்க நான் போகனும்" என அவன் பிடியில் இருந்து வெளிவர முயலே சிறிதளவேனும் அசைய முடியாது இருந்தது.


"நான் விட்டா மட்டும் தான் உன்னால் இங்கே இருந்து போக முடியும் பேபி" என தன்னோடு மேலும் இறுக்க அவள் இயலாமையுடன் முகம் சுளித்து வேறு புறம் திரும்பினாள்.


அவள் முகத்தை தன் புறம் திருப்பி தன் முகம் பார்க்க வைத்தான்.


"இனிமேல் இதெல்லாம் பழகிக்கோ பேபி" எனக் கூறி அவள் கன்னத்தில் இதழ் பதிக்க அவளோ அதிர்ந்து அவன் இதழ்களை தன் கையால் மூடினாள்.


"இதெல்லாம் தப்பு சேர். ஒரு பொண்ணோட அனுமதி இல்லாமல் அவளை தொட கூடாது சேர். என்னை நீங்க தொட்டு பேசுறது எனக்கு பிடிக்கவே இலவலை. என்னை விடுங்க சேர்." என அவனிடம் இருந்து விலக முயன்றாள்.


கோபத்தில் அவன் முகம் சிவந்தது. அவளிற்கு வலிக்கும் படி அவன் பற்றலை இறுக்கி, "அது எல்லாம் எனக்கு தெரியாது. நீ எனக்கு வேணும் பேபி. எனக்கு மட்டுமே வேணும் பேபி. யாருக்கும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன்" என அவள் இதழில் அழுந்த முத்தமிட்டான். அவளிடம் இருந்து விலக அவனிற்கு துளியளவேனும் விருப்பம் இல்லை. ஆனால் சனா கூறியது அவன் காதுகளில் எதிரொலிக்க தன்னிடம் இருந்து அவளைப் பிரித்ததுத் தள்ளினான்.


"இங்கே பாரு பேபி, என்னால் மறுபடியும் சொல்லிட்டு இருக்க முடியாது. நான் உன்னை இங்கே கூப்பிடும் போது நீ கண்டிப்பா இங்கே வர வேணும். இதை உன் அண்ணன் கிட்ட சொல்லனும்னு நினைச்சாலும் பராவால்லை சொல்லு. அதை எப்படி ஹென்டில் பண்ணனும்னு எனக்கு தெரியும். இப்போ இங்கிருந்து போ" என கோபமாக கத்தி தன் கேசத்தை அழுந்த கோதினான்.


அவளோ அதிர்ச்சியில் இருந்து விலகவே இல்லை. தன்னுடைய குடும்பத்தைப் பற்றி தெரிந்து வைத்துக் கொண்ட பின்னுமா அவன் தன்னிடம் இவ்வாறு நடந்துக் கொள்கிறான் என நினைக்கும் போது உள்ளுக்குள் எழுந்த அச்சத்தை தவிர்க்க முடியவில்லை. மெதுவாக எழுந்து நடக்க அவளை மீண்டும் இழுத்து ஒரு முறை அனைத்து அவள் இதழில் மென்மையாக இதழொற்றி அனுப்பி வைத்தான்.


அவளும் எத்தனை அதிர்ச்சிகளை தாங்குவாள்? அவனுடைய அறையில் இருந்து வெளியே வந்தவள் கழியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவினாள். யாரென்று தெரியாத ஒருவன் முத்தமிட்டு விட்டானே என நினைக்க அழுகை முட்டிக் கொண்டு வந்தது அவளிற்கு. அவன் கோபமாக பேசிய போது பயம் எழுந்தாலும் இறுதியாக அவன் முத்தமிட்டதில் பயம் சென்று அதிர்ச்சியே மிஞ்சியது.


தன் உதட்டை தண்ணீரைக் கொண்டு நன்றாக தேய்த்தாள். பின் துப்பட்டாவால் துடைத்தாள். அழுகையை அடக்கி நன்றாக முகத்தைக் கழுவி அபியைப் பார்க்கச் சென்றாள். இவை அனைத்தையையுமே சிசிடிவி கமெராவின் மூலம் சாத்விக் பார்த்தான். அவனுக்கு கோபத்திற்கு பதிலாக சிரிப்பே வந்தது. சிறு குழந்தை போன்ற அவள் நடத்தையில் பல முறை ஈர்க்கப்பட்டவன் அல்லவா? கார்த்திக்கை கருத்தில் கொண்டு ஒதுக்கி வைத்தான்.


ஆனால் அவள் அருகாமையும், அவள் வாசமும் அவன் கட்டுப்பாட்டை உடைத்து எறிந்தது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனாலும் கார்த்திக்கை பழிவாங்க சனாவை ஒரு பகடைக் காயாக பயன்படுத்தும் திட்டத்தை அவனால் ஒதுக்கி வைக்க முடியவில்லை. தனது சீட்டில் அமர்ந்து தன் நெற்றியை சுட்டு விரலால் நீவிக் கொண்டு சிறிது நேரம் அதே இடத்தில் அமர்ந்து இருந்தான்.


அவள் வரைந்த ஓவியத்தை எடுத்து தனது கபோர்டில் மூடி வைத்தான். ஒரு முறையாவது அதை உற்று கவனித்து இருந்தால் அவனுடைய பல கேள்விகளுக்கு விடை தெரிந்து இருக்குமோ.


சனா வகுப்பிற்கு வருகைத் தர அதைப் பார்த்த அபி, "என்னாச்சு சனா? எதுக்கு உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?" என்று கேள்வியை வினவ, "அப்படியேதும் இல்லை அபி. டிரொயிங்கை கொடுக்கும் போது சேர் முகம் ஒரு மாதிரியாக போச்சு. அதைப் பார்த்து எனக்கு கஷ்டமாச்சு" என்றாள் சனா.


"அதானே யாரு கஷ்டபட்டாலும் உனக்கும் கஷ்டமாகும். நல்ல பொண்ணு நீ" என சிரித்துக் கொண்டாள்.


ஏனோ இதைப்பற்றி அபியிடம் கூற அவள் மனம் அனுமதிக்கவில்லை. அவனால் இன்று தன்னுடைய உற்ற தோழியிடம் பொய் கூறி இருக்கிறாளே என்று உள்ளுக்குள் வருந்தினாள் சனா.


மாலை நேரம் கோலேஜ் முடித்தவுடன் அபி, "சனா நான் பாட்டு கிளாசிற்கு போயிட்டு வரேன். பத்துரமா வீட்டுக்கு போ" என அனுப்பி வைத்தாள். அவளும், "சரி அபி. நீ டென்ஷனாகாத. நான் பார்த்துக்குறேன்" என்று தன் வீட்டை நோக்கி செல்ல அவளை அவள் அறியாமல் சாத்விக்கின் கார் பின் தொடர்ந்தது. அவள் வீட்டிற்குள் சென்ற அடுத்த நொடி தன் வீட்டை நோக்கி பறந்தான் சாத்விக்.


அவனது வீட்டிற்குள் நுழைய வீட்டுக் காவளர் நுழைவாயிலைத் திறந்தார். அவனது கார் வேகமாக உள்ளே நுழைந்து கார் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்தினான். அதிலிருந்து இறங்கியவன் வேகமாக வீட்டிற்குள் நுழைய வெறுமை நிறைந்த வீடே அவனை வரவேற்றது. இரண்டு மாடிகளைக் கொண்டு அதி நவீனமானதாக அமைக்கப்பட்டு இருந்தது அவ்வீடு.


வீட்டைச் சுற்றி பலமரங்கள் இருந்தன. வெளியே இருந்து பார்க்கும் போது இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட வசதி படைத்த வீடாகத் தெரிந்தாலும் உள்ளே நுழையும் போதே வீட்டில் உள்ளே நவீனத்துவத்தைப் பார்க்கலாம். ஆனாலும் வீட்டில் சில இடங்கள் மாத்திரமே நவீனத்துவம் இருக்க சில இடங்கள் அதே போல் இருந்தன. அதற்கான காரணம் என்ன என்று அவன் மட்டுமே அறிவான்.


வசிதகள் படைத்த எத்தனை பெரிய செல்லவந்தனாக இருந்தாலும் தனிமை நிறைந்த வாழ்வு கொடுமையானதே என வாழ்வபர்கள் மட்டுமே அறிவார்கள். அதே போலேயே அவனும் தனிமைக் கொடுமையை அனுபவிக்கிறான். வெற்றுப் புன்னகையை சிந்தியவன் நேரடியாக தனது அறைக்குள் நுழைந்தான். குளித்து பல்கனியில் சென்று நின்றுக் கொண்டான்.


சாப்பிட்டாயா? உறங்கினாயா? உடல் வலி இருக்கிறதா? உணவை எடுத்து வரட்டுமா என அன்பாகக் கேட்க ஓர் ஆளின்றி தனியாக நின்றான். பசி அவனது வயிற்றைக் கிள்ள தன் நிலையை எண்ணி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டப்படி கீழே சென்றான். கிச்சனிற்குள் நுழைய வேலைக்காரர்கள் ஒதுங்கி நின்றனர். அது அவனுடைய பழக்க வழக்கங்களில் ஒன்று.


அவனுக்காக அவன் மொழிகின்ற நேரத்தில் மாத்திரமே உணவை சமைக்கக் கூறி உள்ளான். அவன் சமையறைக்குள் நுழைந்தால் அவனாகவே சமைத்து உண்பான். அப்போது வேலை செய்பவர்கள் வெளியேறி மற்றைய வேலையை கவனித்துக் கொள்வர். மனது சரியில்லாத நேரங்களில் மாத்திரமே சமையலறைக்குள் நுழைவான். இன்றும் அதே போல் ஒரு நிலையில் இருந்ததால் சமையலறைக்குள் நுழைந்தான். மற்றைய நேரங்களில் உணவை சமைக்கக் கூறிவிடுவான்.


தனக்கு தேவையான உணவை தயாரித்து அதை எடுத்துக் கொண்டு தனது அறைக்குள் சென்றான். இருந்தும் அதை உட்கொள்ள மனம் ஒப்பவில்லை. ஏனோ சனாவின் நியாபகங்கள் அவனைத் தாக்கியது. உணவுத் தட்டில் விரல்களால் கோலமிட்டாவாறு இன்றைய அனுபவங்களை மீட்டிப் பார்த்தான். முதலில் அவள் அறைக்குள் வருகைத் தந்தது; அழகாகப் பேசியது; இருள் பயத்தினால் தன்னை அழைத்தது; அவனுடைய இறுகிய அணைப்பு; மயங்கிய பின் மீண்டும் எழுந்த போது சிறு குழந்தை என பயந்தது; அவனிடம் இருந்து விலக முயற்சி முடியாமல் இருந்த போது பாவமாய் அவன் முகம் பார்த்தது அனைத்துமே கண்கள் முன் தோன்ற அழகாய் சிரித்துக் கொண்டான்.


அதே நேரம் அவனது கையடக்கத் தொலைப்பேசி நானும் உன்னுடன் இருக்கிறேன் என்று அவனிடம் கூறுவதற்காக, 'தீமை தான் வெல்லும் எவன் தடுத்தாலும்' என்ற ஹிபொப் ஆதியின் குரலில் தனி ஒருவன் திரைப்படத்தில் இருக்கும் பாடலை ஒலிறவிட்டது.


அதைக் கேட்டு தன் நினைவுகளில் இருந்து மீண்ட சாத்விக் அவ் அழைப்பை ஏற்றான்.


"மச்சான்" என்று குரலில் தன் மொத்த தவிப்பையும் ஒன்று திரட்டிக் ஒரே சொல்லில் தெரிவித்தான் அழைத்தவன். "எப்படி முகேஷ் இருக்க?" என்றான் சாத்விக் அதே தவிப்புக் குரலில்."உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் டா. இன்னைக்கு டே எப்படி போச்சி?" என்று ஆர்வமாக வினவ,"அவளை தான் பார்த்தேன்டா" என்றான் சாத்விக் விட்டேறியாக.


முகேஷ், "யாரை டா?" என்று புரியாமல் வினவ,"என் எதிரியோட தங்கச்சை" என்றான் கடுப்பாக. ஆர்வமாக, "சனா பொண்ணையா? என்ன சொன்னா?" என்று அவன் பதிலை கேட்க அமைதியானான் முகேஷ். "அவ என்ன சொல்ல? நான் ரொம்ப சொதப்புறேன் டா. அவ பக்கதுல வந்தாலே என்னால என்னை கட்டுபடுத்த முடியல்லை" என்றான் இயாலாமையுடன்.


"ப்ரவீன், மறுபடியும் சொல்றேன், சனா பாவம் டா. அவ மத்த பொண்ணுங்களை விட வித்தியாசமான அப்பாவி பொண்ணு டா. உன் பழிவாங்கும் படலத்துல அவளை இழுக்காத விட்ரு டா. அவ உனக்கு ஒன்னுமே பண்ண இல்லையே! எதுக்கு அவளை இதுல கொண்டு வர? பாவம் டா அந்த பொண்ணு" என்ற தன்னுடைய நீண்ட சொற்பொழிவை நிகழ்த்த, அதைக் கேட்ட சாத்விக்கின் முகமோ இறுகிக் கறுத்து இருந்தது.


எதிர்ப்புறம் அமைதியை உணர்ந்த முகேஷ், "மச்சான் பழசை நியாபகப்படுத்திட்டேனாடா?" என்றான் கலங்கிய குரலில். அதற்கும் அமைதியே நிலவ, "ப்ரவீன் பிளீஸ் டா கடைசியா ஒரு முறை யோசிடா. சனாவை அதுக்குள்ள இழுக்கனுமான்னு" என்று கூறி முடிய, "இனாஃப் முகேஷ்" என்று கர்ஜித்தான்.


கடல்தாண்டி முகேஷ் இருந்தாலும் சாத்விக்கின் ஒற்றை கர்ஜனையில் அரண்டு விட்டான்.


"பழைசை மறக்க சொல்றியாடா? நான் என்ன டா பாவம் பண்ணேன்? ஒருத்தியை உண்மையாக காதலிச்சேன். அது தப்பா? சொல்லுடா அது தப்பா? ஆனால் அந்த காதல் என் கிட்ட இருக்கிற அத்தனையையுமே பறிச்சிருச்சே. நான் அநாதையா இருக்கேன் டா. எனக்குன்னு யாருமே இல்லைடா? காதலிச்சதுக்கு தண்டனையா தனிமரமா இருக்கேன் டா.


கார்த்திக் பண்ணது எதையுமே நான் மறக்கவும் மாட்டேன். மன்னிக்கவும் மாட்டேன். நான் இழந்த எல்லாத்தையும் அவனால் திருப்பி தர முடியுமா? சொல்லுடா? என் சந்தோஷம், என் நிம்மதி என்னோட நல்ல பெயர். எல்லாத்தையும் விட என்னோட......" என நிறுத்தினான். அதற்கு மேலே பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது.


"ப்ரவீன்" என்ற முகேஷனின் குரலும் கலங்கி இருந்தது.


"முடியாது முடியாது முடியாது. என்னால் அவனை சும்மா விட முடியாது. நீ கேட்டல்ல, சனா என்ன பாவம் பண்ணான்னு? அவ அண்ணனுக்கு தங்கச்சியா பொறந்ததே பாவம் டா. அதுக்கான தண்டனையை அவ அனுபவிச்சே ஆகனும். கார்த்திக்கும் தண்டனையை அனுபவிப்பான். அவன் பண்ண தப்பை அவன் உணரனும். அதே வலியை அவன் அனுபவிக்கனும். அதே அவமானத்தை படனும். அது வரைக்கும் நான் விட மாட்டேன்" என்று அங்கிருந்த மேசையை ஓங்கி அடிக்க துகள் துகளாக சிதறியது மேசை.


கோபத்தில் கண்கள் சிவந்து, கண்களில் கண்ணீர் தேக்க, நரம்புகள் புடைக்கப்பட்டு கைமுஷ்டியை இறுக்கி வன்மத்துடன் எழுந்து நின்று இருந்தான் சாத்விக். எதிர்ப்புறமோ, "அண்ணா" , "ப்ரவீன்" என்ற அழைப்புகள் கேட்க சற்று தன்னை நிதானப்படுத்தினான்.


"அண்ணா பீளீஸ் கோபடாதிங்க. அது உங்களுக்கு நல்லது இல்லை அண்ணா. கொஞ்சம் நிதானமாக இருங்க. உங்க கோபம் உங்களையும் உங்களை சுத்தி இருக்கிறவங்களையும் அழிச்சிறும்" என்ற பெண்ணின் குரலில் கோபத்தை குறைத்து சாதாரண நிலைக்கு வந்தான் சாத்விக்.


"எப்படி தியா மா இருக்க?" என்றவனின் குரலில் இருந்த மென்மை இத்தனை நேரமாக புயலாக இருந்தவனின் குரலா என்று ஆச்சரியப்பட வைத்தது இருவரையும்.


தியா, "நான் நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க என்ன பண்றிங்க? சாப்பிட்டிங்களா? ஓபீஸ் வேர்க் எல்லாம் முடிஞ்சுதா?" என வினவ, "ஒபீஸிற்கு இன்னைக்கு போக இல்லை மா. கோலேஜூக்கு தான் போனேன். சாப்பிட ஆரம்பிக்கும் போது உன் புருஷன் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டான்" என்று பொய்யாய் சலித்துக் கொண்டான்.


"அவரை விடுங்க அண்ணா. நான் ஒன்னு சொல்றேன் கேட்பிங்களா?" என தியா பொடிவைத்து கேட்க, "என் முடிவு மாத்த சொல்றதுன்னா நிச்சயமா கேட்க மாட்டேன் தியா" என்றான் உறுதிக் குரலில்.


"ஒரு முடிவை எடுத்தால் நீங்க மாற மாட்டிங்கன்னு எனக்கு தெரியும் அண்ணா. அதை மாத்துங்கன்னு சொல்ல மாட்டேன். சனாவும் என்னைப் போல ஒரு பொண்ணு தான். அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. உங்க பழிவாங்குற படலத்துல அவளோட வாழ்க்கையை நாசமாக்காதிங்க. இன்னொரு வீட்டுக்கு வாழ வேண்டிய பொண்ணு" என தைரியமாக கூற, சாத்விக்கோ அமைதியாய் இருந்தான்.


"அவளுக்கு புருஷன்னு ஒருத்தன் வர இருக்கான். அவன் உங்களால சனாவை கஷ்டபடுத்தக் கூடாது" என்று தீர்க்கமாக கூற, "அவளை என்னை தவிர வேறு யாரும் கஷ்டபடுத்த முடியாது. கஷ்டபடுத்த விடவும் மாட்டேன். இது நான் உனக்கு கொடுக்குற வாக்கு" என்றான் சாத்விக் முடிவு எடுத்தவனாக. தியாவும், முகேஷூம் இதைக் கேட்டு உள்ளுக்குள் சிரித்தனர்.


அவர்கள் தான் அறிவார்களே சனாவின் மேல் சாத்விக் அறியாமலேயே ஒரு ஈடுபாடு எப்போதோ வந்து விட்டது என்பதை. சனாவால் அவனுடைய இருண்ட வாழ்க்கையிற்கு முற்றுப் புள்ளி வைத்து சிறு ஒளியை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேண்டுவது உண்டு. அதனை இறைவான் பார்த்துக் கொள்வான் என்று மனதாற நம்புகின்றனர்.


பாவமான குரலில், "மச்சான் உன் தங்கச்சி கூட பேசினால் என்னை மறந்து போற. என்னையும் அடிக்கடி ஞாபகப்படுத்திக்கோ டா" என்றான் முகேஷ்.


"அட ஆமா முகேஷ்னு ஒரு ஜீவன் இங்கே இருக்கே" என ஞாபகம் இல்லாதவன் போல் கூற, "டேய் டேய் இதெல்லாம் ஓவர் டா. என்னை ஒரு மனிஷனா கூட மதிக்க மாட்டேங்குறானே!!! சே எல்லாம் என் நிலமை" என்று புலம்ப தியாவும், சாத்விக்கும் சிரித்தனர்.


"பிந்து அவன் கூட சேர்ந்து நீயும் என்னை மதிக்க மாட்டேங்குற. புருஷன்னு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்கா உனக்கு?" என கடுப்பாகக் கூற, "என்ன டா என் தங்கச்சி கூட சண்டை போடுறியா?" என்று சாத்விக் எகிறினான். "யப்பா சாமி தெரியாமல் பேசிட்டேன். உன் தங்கச்சி கிட்ட நான் சண்டை போடவே இல்லை. நீ அவ கிட்டையே கேளேன்" எனக் கூற, "ஆமா அண்ணா அவரு சும்மா பேசிட்டு இருக்காரு" என்றாள் பிந்தியா.


"என் தங்கச்சி கிட்ட சண்டை போட்டன்னு தெரிஞ்சது, தோளை உரிச்சு தொங்க போட்டுருவேன்" என சாத்விக் கூற, "கொலைகாரக் குடும்பத்துல வாக்கப்படுட்டேனே" என முணக, "என்ன சத்தம்" என்றான் சாத்விக. "ஆளை விடுங்கடா" என்று அங்கிருந்து ஓடி விட்டான் முகேஷ். அவனை துரத்தி வந்தது சாத்விக், பிந்தியா இருவரினதும் சிரிப்பின் சத்தம்.


அவுஸ்திரேலியாவிற்கு சென்ற போது அங்கே சாத்விற்கு முழுமையாக உதவியது முகநூலின் மூலம் தங்கை உறவாய் கிடைத்த பிந்தியாவும், அவளது கணவன் முகேஷூம். அங்கே சென்ற பின் சாத்விக், முகேஷ் இருவருக்கும் இடையில் அழகான நட்பு துளிர்விட ஆரம்பித்து தற்போது விழுதுகளை தோற்றுவித்த ஆலமரத்தைப் போன்று அவர்களின் நட்பும் வளர்ந்துவிட்டது. நட்பின் மீது நம்பிக்கையை இழந்த சாத்விக்கிற்கு இப்படியொரு உன்னதமான நட்பு கிடைக்குமென அவன் எதிர்பார்க்கவே இல்லை.


அனைத்து உறவுகளையும் இழந்த சாத்விக்கிற்கு பிந்தியா உற்ற தோழியாக, அரவணைக்கும் தாயாக, தோள்கொடுக்கும் தங்கையாக மாறிப் போனாள். முகேஷ் நல்ல நண்பனாகவும் சாத்விக் துவளும் சந்தரப்பங்களில் ஒரு தந்தையாகவும், உடன் பிறந்தவனாகவும் மாறி அவனோடு துணை இருந்தான். பிந்தியா, முகேஷ் இருவரின் குருவிக் கூட்டில் ஒரு அங்கத்தவனாக மாறினான் சாத்விக். தற்போது அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் முகேஷ், பிந்தியா இருவர் மாத்திரமே.


சிறிது நேரம் பிந்தியாவுடன் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தவன், காய்ந்து, ஆறிப்போயிருந்த உணவை உண்டான். தனது லெப்டொப்பை எடுத்து வேலையை ஆரம்பிக்க அறை மேசை உடைத்ததால் அசுத்தமாக மாறி இருந்தது. அதனை அவனே சுத்தம் செய்துவிட்டு முகம் கழுவ குளியலறைக்குள் செல்ல இன்று அணிந்த சர்ட் இருந்தது. அதை எடுத்து வொஷின் மெஷினுள் இட கையில் எடுத்தான்.


அதில் சனாவின் வாசணை அவனைத் தாக்க இப்போதே அவள் மடி வேண்டும் தான் இளைப்பாற என மனம் கூற, "ரொம்ப படுத்துற பேபி" என முணுமுணுத்தவாறே அதை ஒரு முறை அணைத்துக் கொண்டான். அவன் மனதில் இருந்த இறுக்கங்கள் அணைத்துமே பறந்து போனது போல் ஓர் மாயை அவனுக்கு. கண்கள் மூடி அதை மனமாற இரசித்தவன் மீண்டும் ஒரு முறை அதை நுகர்ந்து விட்டு தன் வேலைகளை நிம்மதியாக கவனிக்க ஆரம்பித்தான்.


~ உன்னை எதிரியின்
தமக்கையாய் நினைத்தேனடி

பெண்ணே
என்னை அறியாது என் மனதின்
அரசியாய் நுழைந்தாயடி
பெண்ணே
நான் வீழ்ந்த மாயம் என்னவோ? ~



அவனுக்கு நிம்மதியை வழங்கியவளோ அங்கே நிம்மதி இல்லாமல் பல்கனியில் சாய்ந்தவாறு நின்று இருந்தாள். செல்வந்தர்கள் என்பதை பறைச்சாற்றும் வகையிலேயே மாளிகையின் சாயலில் வீடு இருந்தது. எப்போதும் போல் வீட்டைச் சுற௲றி வீட்டுத்தோட்டம், சிறிய குளம் அழகிற்காக கட்டப்பட்டு இருந்தது. அபி, சனா இருவரின் விருப்பிற்கேற்பவே வீட்டுத்தோட்டத்தில் பூக்கள் நடப்பட்டு இருந்தன.


மனம் நிம்மதியைடையக் கூடிய வகையில் அத்தனை அழகாகப் பராமரிக்கப்பட்டு இருந்தது அத்தோட்டம். அதே போல பணத்தின் சாயல் வீட்டில் அநேகமான இடங்களில் தென்பட்டாலும் அங்கிருக்கும் நபர்களின் மனதில் எப்போதும் செல்வந்தத்தனம் இருந்ததில்லை. அங்கு வேலை செய்யும் அனைவரையும் உறவாகவே மரியாதையுடன் நடத்துவர். அன்பின் மறு உருவாய் விசாலாட்சி இருப்பார். அபியின் தாயே அவர். அத்தனை அமைதியான குணம்.


அதே போல் அபி, கார்த்திக், சனா மூவருமே அதே போலேயே இருப்பர். அழகான ஒற்றுமையான குடும்பம். குணம் படைத்தவர்கள் இவர்கள் என நற் பெயரைப் பெற்று இருந்தனர் அங்கிருப்போர். எப்போதுமே அவர்களில் ஒரு எளிமை தென்படும். அதுவே அனைவருக்கும் தனியழகு. அபி தன் சங்கீத வகுப்பை முடித்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.


"அம்மா" என்று அழைத்து சோபாவில் அமர்ந்தாள்.


"வா அபி. போய் குளிச்சிட்டு அப்படியே சனாவையும் அழைச்சிட்டு வா. நான் இரண்டு பேருக்கும் ஸ்நெக்ஸையும், காபியை ரெடி பண்றேன். கோலேஜ் விட்டு மேல போனவ கீழே வரவே இல்லை. சாப்பிட கூப்பிட்டும் வேணான்னு சொல்லிட்டா" என விசாலாட்சி கவலை தோய்ந்த குரலில் கூற புருவங்கள் முடிச்சிட சனாவைத் தேடிச் சென்றாள் அபி.



தொடரும்...


~ ஹாணி கார்திகன் ~


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
21770அத்தியாயம் 3



சனா வீட்டிற்கு வந்ததில் இருந்து சாத்விக் நடந்துக் கொண்ட முறையே அவள் கண்ணுள் தோன்றியது. 'பேபி இதை பழகிக்கோ' எனக் கூறியதும் அவள் காதில் எதிரொலிக்க இதயமும் பயத்தில் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

'எதுக்காக சேர் இப்படி பண்றாரு? நான் என்ன பண்ணேன்? ஒரு வேளை நமளை காதலிக்கிறாரோ? இல்லையே. காதல் ரொம்ப,அழகா இருக்குமே. அண்ணா, அபி இரண்டு பேரும் எப்படி இருக்காங்கன்னு நான் கண்ணால் பார்க்குறேனே? அப்போ என்னவா இருக்கும்?' என யோசித்தவாறே இருக்க அவள் தோளில் கை வைத்தாள் அபி. அவ் உணர்வில் தன்னை சுயமடையச் செய்து அபியின் புறம் திரும்பினாள் சனா.

"என்ன சனா ஒரு மாதிரி இருக்க?" என அபி கேட்க, "இல்லையே நல்லா தானே இருக்கேன்?" என்றாள் சனா.

"பொய் சொல்லாத சனா. இன்னைக்கு நீ வித்தியாசமா நடந்துக்குற. கோலேஜ்ல வச்சி கேட்கும் போது கூட ஒன்னும் இல்லைன்னு சமாளிச்ச. பட் இப்போ அப்படி இல்லை. ஏதோ ஒன்னு இருக்கு"

"நீ தேவையில்லாமல் யோசிக்குற அபி. நான் நோர்மலா இருக்கேன். என் டிரோயிங் ஸ்மஞ் ஆனது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அதை விடு. நானே சரியாகிருவேன். என்ன நீ குளிக்காமல் வந்திருக்க? அண்ணா வர நேரமாச்சே. இப்போ நீ அழகா இருப்பியே" என நமட்டுப் புன்னகையுடன் கேட்க, "நீ ஒரு மாதிரி இருக்கன்னு அம்மா சொன்னாங்க. அதை பார்க்க வந்தேன். இப்போ போய் குளிச்சால் போச்சு" என அறைக்கு ஓடினாள் அபி.

அபி எப்போதும் கார்த்திக் வரும் போது குளித்து புதுப் பூவாக மங்கலகரமாகவே இருப்பாள். அதையே சனா இவ்வாறு கூறினாள்.
சனா சிரித்து, தன்னுடைய புத்தகப் பையை எடுத்து இன்று படித்த பாடங்களை எடுத்து வைத்தாள். சிறிது நேரம் அதைப் படித்து தன் மனதை படிப்பின் புறம் திருப்பி சாத்விக்கின் நடவடிக்கைகளை மறக்கும் விடயத்தில் வெற்றியும் கண்டாள்.

கார்த்திக்கின் கார் ஓபீசிலிருந்து தனது வீட்டை நோக்கி பயணித்தது. வீட்டிற்கு வந்தவுடன் எப்போதும் புன்னகை முகமாக தன்னை வரவேற்கும் தன் காதலியையும், தங்கையையும் காணாமல் ஏதோ போல் இருந்தது அவனுக்கு. அவன் உள்ளே நுழைய அவன் முகத்தை வைத்தே என்ன நினைக்கிறான் என கண்டுகொண்ட விசாலாட்சி, "இரண்டு பேரும் ரூம்ல இருக்காங்க கார்த்திக். வரும் போது அவங்களையும் அழைச்சிட்டு வா" எனக் கூறி புன்னகையுடன் சமையலறைக்குள் நுழைந்துக் கொண்டார்.

அவனும் வேகமாக படிகளில் தாவி தங்கையின் அறையை அடைந்தான். சனாவைத் தேட பல்கனியில் அமர்ந்து படிப்பதைப் பார்த்தவன், "பட்டு" என்று அழைத்து உள்ளே வந்தான்.

"அண்ணா" என்று வேகமாக எழுந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

இவை அனைத்தையுமே தனது லெப்டொப்பில் பார்த்துக் கொண்டு இருந்த சாத்விக்கிற்கே ஆச்சரியமாய் இருந்தது. அபி பேசி செல்லும் வரையில் அவள் முகத்தில் எந்தவொரு புன்னகையும் இருக்கவில்லை. படிக்கும் போதும் வருத்த ரேகைகள் அவள் முகத்தில் தென்பட்டன. ஆனால் அவளா இவள் என்ற அளவில் தன் தமையனைப் பார்த்தவுடன் பூவாய் மலர்ந்தது சனாவின் முகம்.

"என்ன இரண்டு பேரும் கீழே வராமல் இருக்கிங்க?" எனக் கேட்க, "அது உங்க தங்கச்சியால தான்" என்று அங்கே புதுப் பூவாய் வந்தாள் அபி.

அபியைப் பார்த்தவனின் கண்கள் அவன் அனுமதியின்றி அவளை இரசிக்க அதை உணர்ந்த பெண்ணவளின் முகம் நாணத்தால் சிவந்தது.


~ வாடி வதங்கி வந்த
என் முன்னே
புத்தம் புது மலராய்
வருகைத் தந்து
என் கண்களை கட்டிப்போட
உன் நாணச்சிவப்பும்
உன் புறம்
என்னை சுண்டி இழுக்கும்
வித்தை என்னவோ??? ~


இங்கே நடைபெறும் காதல் நாடகத்தைப் பார்த்த சனா தொண்டையைச் செருமி அவர்கள் நிலையை உணர்த்தி கேலிச் சிரிப்பை உதிர்த்தாள். இருவருக்குமே வெட்கம் அவர்களை சூழ்ந்துக் கொண்டது. ஒரே நேரத்தில் ஒரு பெண்ணும், ஆணும் வெட்கப்படுவதை பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைப்பது அரிது மட்டுமின்றி அழகானதும் கூட.

இவ் அழகான தருணத்தைப் பார்த்த சனா உடனே தன் மொபைலில் அவசரமாக அதை புகைபடமாக எடுத்துக் கொண்டாள். இதைப் பார்த்த சாத்விகின் உதடுகளும் புன்னகையைச் சிந்தின.

"அண்ணா, அபி" என்ற அழைப்பில் இருவருமே தங்கள் நிலைகளை அடைந்துக் கொண்டனர். இருவரும் சனாவைப் பார்த்து அசட்டுச் சிரிப்பை உதிர்க்க அவளும் "ஒரு சின்ன பொண்ணை வச்சிட்டு ரொம்ப நல்லாவே பண்றிங்க" எனக் கூறி அங்கிருந்து ஓடியே விட்டாள்.

கார்த்திக் அபியை ஒரு முறை பார்த்து விட்டு தனது அறைக்குச் செல்ல அபியோ கீழே சென்றாள். சனா வேகமாக அங்கிருந்து ஓடி வந்தவள் தோட்டத்திற்கு சென்றாள். அவள் ஓடி வந்த காரணம் அவள் மட்டுமே அறிவாள். தன் தமையனிடம் அபி தான் இன்று வித்தியாசமாக நடந்துக் கொண்டதைக் கூறி தமையன் அதைப் பற்றி விசாரித்தால் நிச்சயமாக அவனிடம் பொய்யைக் கூற இயலாது. ஏதோ ஒன்று சாத்விக்கைப் பற்றி வீட்டினரிடம் கூற தடுத்தது. அது என்ன என்று அவளால் அறிய முடியவில்லை.

அங்கிருந்து நேராக தோட்டத்திலே வைக்கப்பட்டுள்ள சிறிய கிருஷ்ணன் சிலையிடம் சென்றாள். அவளுடைய இஷ்ட தெயவம் காரிகைகளை மயக்கும் மாயக் கண்ணனே. அவன் முன்னே நின்றவள், "கிருஷ்ணா எனக்கு எதுவுமே சரியா தோணல்லை. எனக்கு சரியான வழியைக் காட்டிடு" என மனமுருகி வேண்டியவள் மேலும் கேள்வியிற்கு ஆளாகாமல் வீட்டினுள்ளே சென்றாள்...

கார்த்திக்கும் குளித்து வர அனைவருக்கும் சேர்த்து விசாலாட்சி தேநீரை தயாரித்து வைத்து இருந்தார். அதை எடுத்து இன்றைய நாளைப் பற்றி கதையளந்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர். இன்றைய நாளில் சாத்விக்கைப் பற்றி கூறாமல் அவனை சந்தித்தேன் என்று மாத்திரமே கூறினாள். இன்று அவள் ஓவியச் சிதைவே முகச் சோர்விற்கு காரணம் என்று பொய்யைக் கூற சனாவின் மனம் உறுதித்தியது. இருந்தும் மானசீகமாக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு அமைதியாய் இருந்தாள்.

கார்த்திக், "இன்னைக்கு தலைவர் பதவியை எஸ்.பி இன்டஸ்ட்ரீஸ் எம்.டி ப்ரவீனுக்கு கொடுத்தாங்க" எனக் கூற அதற்கு அபி, "அப்போ அவரு தான் பர்ஸ்ட் பிளேஸா மாமா?" என்றாள். "ஆமா டா. நான் செகன்ட் பிளேஸ்" என்று புன்னகையுடன் கூற, சனா "உனக்கு கஷ்டமா இல்லையா அண்ணா? இத்தனை வருஷமா நீ இருந்த இடம் இன்னொருத்தருக்கு போயிருக்கு" என வினவினாள்.

"இதுல கஷ்டபட ஏதும் இல்லை பட்டு. ப்ரவீனோட திறமைக்கு அவனுக்கு கிடைக்க வேண்டியது கிடைச்சிருக்கு. அவளோதான். இதையெல்லாம் மைன்டுல போட்டு குழப்பினால் நம்மளோட அடுத்தடுத்த வேலைகளை பார்க்க முடியாம போயிருக்கும்" என்றான் தெளிவாக. சனாவிற்கு ப்ரவீனும், சாத்விக்கும் ஒரே நபர் என்று அறியாதது அதோ பரிதாபம்.

"கடவுள் எது பண்ணாலும் அதுல ஒரு நல்லது இருக்கும். நம்ம வாழ்க்கையில் நடக்குற ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு காரணம் இருக்கும் மா. அதை புரிஞ்சு நடந்துக்கனும். நமளுக்கு என்ன கொடுக்கனும்னு கடவுள் நினைக்கிறாரோ அதை நாம தடுத்தாலும் நமளுக்கு கொடுக்க தான் போறாரு. அதனால எதையும் ஏத்துக்குற பக்குவத்தை வளர்த்துக்கனும்" என்று ஒரு விளக்கத்தை விசாலாட்சி கூற மூவரின் மனதிலும் அச்சொற்கள் ஆழமாய் சென்று பதிந்தது.

"சரி ஒகே என்ன இருந்தாலும் நான் வரும் போது உங்க இரண்டு பேரோட முகத்தையும் பார்க்காதது எனக்கு ரொம்ப அப்சட்டாக இருக்கு. அதனால் கண்டிப்பா அதுக்கு பனிஷ்மன்ட் உண்டு. என்ன பனிஷ்மன்ட்டுன்னு நீங்களே சொல்லுங்க" என கார்த்திக் தன் இரு தேவதைகளிடமே வினவ, "நாங்க இன்னைக்கு டினர் பண்றோம் மாமா" என்றாள் அபி.

கார்த்திக் பதறி, "ஐயய்யோ அது உங்களுக்கு பனிஷ்மன்ட்டு இல்லை செல்லமா எங்களுக்கு பனிஷ்மன்ட். சோ அதை மறக்கலாம். வேற ஏதாவது யோசிக்கலாம்" என்று எழுந்து நின்று யோசிக்க ஆரம்பித்தான்.

"நோ நோ நாங்க தான் டினர் பண்ண போறோம். நீங்க இரண்டு பேரும் அமைதியா வேடிக்கை மட்டும் பார்த்துட்டு நல்லா சாப்பிட்டு தூங்குங்க" என்ற பெரிய மனதுடன் அபி கூற சனா என்ன கூறுவது என தெரியாமல் கண்களை மட்டுமே நன்றாக விழித்து விழித்து பார்த்தாள்.

தன் தோழியைப் பற்றி அக்கு வேர் ஆணிவேராக அவள் தான் அறிவாளே. சீரகத்தூளிற்கும், மல்லித் தூளிற்குமே வித்தியாசம் அறியாதவள் இரவுணவை சமைக்கப் போகிறாள் என நினைக்கவே அடிவயிறு கலங்கியது சனாவிற்கு.

'எங்க தூங்குறது? இன்னைக்கு நைட் பூரா பாத்ரூம்ல சிவராத்ரி கணக்கா இருக்க வேண்டியது தான்' என உள்ளுக்குள் புலம்பி தன் நிலமையை கற்பனை செய்துப் பார்த்தான்.

வலது கையில் தொடைவரை தூக்கிய லுங்கியைப் பிடித்தும், இடது கையில் ஒரு தண்ணீர் வாளியும் வியர்வை வழிய சோர்வு ததும்பிய உடலுடன் பெருமூச்சை விட்டபடி கழியலறையின் வாசலில் நிற்கும் கோலம் தோன்ற, 'சே' என தலையைச் சிலுப்பிக் கொண்டான்.

எவரோ கார்த்திக்கின் தோளைச் சுரண்டுவதை உணர்ந்தவன், 'இது யாரு' என திரும்ப நக்கல் சிரிப்புடன் அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள் அவன் ஆருயிர் தங்கை. "இமேஜினேஷன் போயிட்டு வந்தியா அண்ணா?" என புருவமுயர்த்திக் கேட்க, "ஆமா பட்டு நிலமை படு மோசம்" என கிசுகிசுத்தான். "அதை விட ஒரு போஸ்ல நின்ன பாரு, செம்ம" என வாய்க்குள் சிரித்தாள்.

"அடியேய் நயா, என்னை பார்த்தாலே அவன் அவன் பயப்படுவான், இன்னைக்கு என்னையே உன் சமையலுக்காக பயப்பட வச்சிட்டியே" என முணகினான். 'இதுக்கு மேலே சமைக்க விட்டோம். நம்ம பாடு திண்டாட்டம்' என எண்ணியவன் உடனடியாக சமாதானக் கொடியை பறக்க விட முடிவெடுத்தான்.

கார்த்திக், "செல்லம்மா, நீ ஏதாவது ஒரு டிஷ் ரெடி பண்ணு. அத்தை மத்ததை பாத்துக்கட்டும்" எனக் கூற, "இல்லை இல்லை முடியாது. நானே என் கையாலேயே எல்லாத்தையும் ரெடி பண்றேன்" என்றாள் பிடிவாதமாக. அதற்கு அவள் மன்னவன், "என் தங்கம், என் செல்லம், என் மாணிக்கம், என் வைரம், என் வைடூரியமில்லை நீ? சமத்தா நான் சொல்றதை கேட்பியாம்" எனக் கொஞ்சி சமாதானம் செய்து இந்த திட்டத்திற்கு ஒப்புதலைப் பெற்றான்.

"அண்ணா இன்னைக்கு பெரிய கண்டத்துல இருந்து எங்களை காப்பாத்தி இருக்க" என சனா கிசுகிசுக்க, "அது கண்டம் இல்லை பட்டு, கொலை முயற்சி" என்றான். "அங்க என்ன கிசுகிசுப்பு?" என அபி முறைக்க, "என்ன டிஷ் பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணோம்" என்றான் கார்த்திக் அப்பாவியாக.

"சாம்பார் தான் குகிங்ல பேசிக் டிஷ். அதையே பண்ணலாம்னு முடிவு எடுத்து இருக்கேன்" என சமையறைக்குள் அபி நுழைய மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் பீதியுடன் பார்த்துக் கொண்டனர்.

"அண்ணா கண்டிப்பா நாளைக்கு நாம ஹொஸ்பிடல்ல நீ அட்மிட்டாகுறே பிச்சிகிட்டு போறன்னு. பிரஸ் உன் முன்னாடி நிக்கிறதும் கன்போர்ம்" என்றாள் சனா அடக்கப்பட்ட சிரிப்பிடன். அவன் சனாவைப் பார்த்து மிரண்டு விழிக்க, மீண்டும் தன் கற்பனையை ஓட விட்டான். அதே போஸில் அவன் நிற்க அவன் முன்னே பிரஸ் நிற்பது போல் தோன்ற 'அடக்கருமமே' என பதறியடித்து கற்பனையில் இருந்து வெளியே வந்தான்.

அவனைப் பார்த்த விசாலாட்சியும், சனாவும் விழுந்து விழுந்து சிரிக்க, "இது என்னடா கார்த்திக் ஆர்யனுக்கு வந்த சோதனை" என வேகமாக கிச்சனிற்குள் ஓடினான். "கல்யாணத்துக்கு முன்னாடியே பொன்டாட்டியை சமாளிக்க கத்துக்குட்டான். கண்டிப்பா பொழச்சிப்பான் உன் அண்ணன்" என விசாலாட்சி கூறி சிரிக்க, "ஆமா அத்தை, பாருங்க இப்போவே பொன்டாட்டிக்கு உதவி பண்ண கிச்சனுக்குள்ள போயிட்டான்" என்றாள் சனா.

கார்த்திக், "செல்லமா என்ன சாம்பார் பண்ண போற?" என அவள் பின்னால் செல்ல, "முருங்கக்கா சாம்பார் மாமா" என குளிர்சாதனப் பெட்டியில் ஏதோ முன் நின்று ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள். "என்ன செல்லம்மா யோசிக்குற", "இல்லை முருங்கக்காய் சாம்பாருல தண்ணீரா இருக்க தண்ணீர் போடுவோம். மஞ்சளா இருக்க மஞ்சள் வேணும், அப்பொறம் உப்பும் வேணும், அது திக்கா வர என்ன போடுறதுன்னு யோசிக்கிறேன்?" என்று கூற அதைக் கேட்ட கார்த்திக்கின் சின்ன இதயம் வெடித்தது போன்ற ஒரு உணர்வு.

"இது என்னடி வித்தியாசமா சொல்ற?" என நெஞ்சைப் பிடித்தபடி கேட்க, "நீ என்னை டிஸ்டர்ப் பண்ணாமல் சும்மா இரு மாமா" என மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்தாள். 'கார்த்திக் இவ சமைக்குறதைப் பார்த்தால் கற்பனை நிஜமாகும் போல இருக்கே. ஏதாவது பண்ணுடா' என மனசாட்சி அவசரமாகக் கூற அவனும் அதை ஏற்று "செல்லமா முதலில் நான் சொல்றேன். அதை கேட்டு கேட்டு நீ சமைச்சிக்கோ" என அவளை பிண்ணிருந்து அணைத்துக் கொண்டே காதில் இரகசியம் போல் கூற அதில் மயங்கிய அபி, "ம்ம்ம்" என்றாள்.

பின் அவளை முத்தமொன்று வழங்கிய பின்னரே விடுவிடுத்து சாம்பார் செய்முறையை விளக்கினான். "ஓஓஓ அப்போ திக்னசுக்கு பருப்பு தான் ரீசனா? நான் கூட என்னமோன்னு நினைச்சேன்" என்று முருங்கக்காயை வெட்ட ஆரம்பிக்க, "நீ என்ன நினைச்ச?" என அவளைப் பார்த்தான்.. "தண்ணீர் கொஞ்சமா வச்சால் அப்படி வரும்னு நினைச்சேன்" என்றாள் கூலாக. "ஆத்தி இவ சமைச்சதை சாப்பிட்டால் கண்டிப்மா மேலே போறது உறுதி" என தன்னுள் கதறிக் கொண்டான்.

இருவரும் சேர்ந்தே அணைத்து வேலைகளையும் பார்த்தனர். கார்த்திக் கூற அதைக் கேட்டு நல்ல பிள்ளையாக அவன் கூறுவதை செய்தாள் அபி. இறுதியாக உப்பின் அளவை பார்க்கக் கூற, கரண்டியால் சிறிதளவு எடுத்து தன் கையிலும் அவன் கையிலும் சிறிதளவு ஊற்றினாள். இருவரும் சுவைக்க கார்த்திக், "உப்பு கொஞ்சமாக கம்மியா இருக்கு" என்றான். "நானும் அதை தான் நினைச்சேன்" என்று சிறிதளவு கை விரலால் உப்பை எடுத்து அவன் கையில் சிறிதளவு மறுபடியும் கொடுத்து அதற்குள் இட்டாள்.

"இப்போ சரியா இருக்கான்னு பாரு" என காட்ட அதைச் சுவைத்தவன் "சரியா இருக்கு செல்லம்மா" என்று கைகழுவ, ஏதோ நினைவு வந்தவனாக, "அடியேய் உப்பு என் கைக்கு போடுறது இல்லை டி. அடுப்புல இருக்க சாம்பாருக்கு போடு" என தலையில் அடிக்க, "ஹிஹிஹி மறந்தே போயிட்டேன் மாமா" என சாம்பார் பாத்திரத்திற்குள் உப்பை இட்டாள். அப்போதே சமையலறையினுள் நுழைந்த சனாவும், விசாலாட்சியும் இதைப் பார்த்து சத்தமாக சிரிக்க ஆரம்பிக்க அபி அசடு வழிந்தாள்.

'இவ கூட சேர்ந்து சமைச்ச உனக்கு தெரிஞ்ச சமையலையும் இவ மறக்க வச்சிடுவா' என கார்த்திக்கின் மனசாட்சி எச்சரிக்க அதை அவசரமாக ஆமோதித்தான் கார்த்திக். 'ஒரு சமையல்ல இவளோ பிரச்சனையா? முடியல்லை' என பெருமூச்சு விட்டபடி அனைவரையும் பார்த்தான். மற்றவர்களோ இவனைப் பார்க்காது சிரித்துக் கொண்டு இருந்தனர்.

இவை அணைத்தையும் சமையலறையின் ஜன்னல் வழியே நேரடியாக தோட்டத்தில் வைத்திருந்த இரகிசிய கமெரா மூலமாக பார்த்த சாத்விக்கிற்கு ஒரு புறம் ஏக்கமாக இருந்தாலும் அவர்களின் சந்தோஷத்தை அழிக்க வேண்டும் என்ற வெறியும் அதிகமாகியது.... நாளை என்ன செய்ய வேண்டும் என்பதையும் முடிவு எடுத்துக் கொண்டான்.

~ உன் உடன்பிறப்பைப் பார்க்கும்
வரையில்
தேவதையாய் தெரிகிறாய்
என் கண்ணிற்கு
எதிரியைப் பார்க்கும் போது
விரோதியாய் தெரிகிறாய்
என் மனம் இருதலைக் கொள்ளியாய்
தவிப்பதை உணர்வாயா பெண்ணே?~



தொடரும்....


~ ஹாணி கார்திகன் ~



 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
21800


அத்தியாயம் 4



கார்த்திக், அபி இருவரின் அக்கப்போறை பார்த்து அவர்களை வெளியே அனுப்பிய விசாலாட்சி தோசையும், காரச் சட்னியையும் செய்தார். கார்த்திக்கும், அபியும் சேர்ந்து சமைத்ததை எடுத்துக் கொண்டு மேசையில் வைக்க, அதற்கு சனா, "அண்ணா ரொம்ப நாள் ஆச்சு நாம நிலா சோறு சாப்பிட்டு வெளியில போலாமா?" என ஆசையாக வினவ, அதை மறுக்க எவருக்கும் தோணவில்லை. "சரி பட்டு போலாம்" என புன்னகைத்தவன் சமைத்ததை எடுத்து வெளியே சென்றனர்..

புல்தரையில் வட்டமாக அமர, அபி "இந்திய வரலாற்றில் இல்லை இல்லை, உலக வரலாற்றில் முதன்முறையாக நிலாச்சோறு சாப்பிட தோசையை எடுத்த முதல் குடும்பம் நாம" என்றாள். கார்த்திக், "அவன் அவன் ஏதோ முதல் இடத்துக்கு வரான். ஆனால் நாம சோறு விஷயத்துல அதுவும் நிலாச்சோறு விஷயத்துல முதல் இடத்தை பிடிச்சிருக்கோம். அதை நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு" என நேர்முக அலையில் பேசுவது போல் பேசினான்.

சனா, "இதையாவது சாதிச்சோம்னு சந்தோஷப்படு அண்ணா" எனக் கூறி விசாலாட்சி ஊட்டியதை வாங்கிக் கொண்டாள். விசாலாட்சியும் புன்னகையுடன் மூவருக்குமே ஊட்டிவிட்டார். இவ்வாறு வளவளத்துக் கொண்டே சாப்பிட்டு முடிக்க விசாலாட்சிக்கு மூவரும் சேர்ந்தே ஊட்டி விட்டனர். அவரிற்கு அன்பு மழையில் நனைந்து கண்களும் பனித்தன.

இவ்வாறு பல கதைகளுக்குப் பிறகு அனைவருமே தங்கள் அறைகளை நோக்கிச் சென்றனர். அபி சிறிது நேரம் படித்தாள். உறங்க முன் அவளை சந்திக்க கார்த்திக் வந்தான். "நீ இன்னும் தூங்க இல்லையா அபி?" என கார்த்திக் வினவ, "தூக்கம் வர இல்லை மாமா" என்றாள். "நீ இன்னும் நான் செகன்ட் பிளேசுக்கு போனதைப் பத்தியே யோசிச்சுட்டு இருந்தியா?" எனக் கேட்க, "ஆமா மாமா. நீங்க இத்தனை வருஷமா இருந்த இடம். திடீர்னு உங்களை விட்டு போயிருச்சுன்னு சொன்னதை என்னால் ஜீரணிக்க கஷ்டமா இருக்கு. நாளைக்கு ஒகேயாகிருவேன்" என்றாள் புன்னகைத்தபடி.

அப்போதே இன்று சாத்விக் கூறிய வார்த்தைகள் அவன் காதில் எதிரொலித்தன. 'உனக்கு சொந்தமானது, உயிரானதுன்னு நினைக்குறதை எனக்கு சொந்தமானதா ஆக்குறேன் ஆர்யன்' இவ்வார்த்தகைள் மீண்டும் காதில் எதிரொலித்தன.. ஆரம்பத்தில் புன்னகையுடன் இருந்த முகத்தில் திடீரென்று குழப்பை ரேகைகள் சூழ்ந்து இருப்பதைப் பார்த்த அபி, "என்னாச்சு மாமா?" என்றாள். "நதிங் செல்லம்மா. நான் ஏதாவது முக்கியம்னா சொல்றேன். இப்போ நீ எதையும் நினைக்காம தூங்கு" என அவளை அழைத்து வந்து உறங்க வைத்தான்.

அபி அவன் மடியில் படுக்க அவன் மடியின் கதகதப்பு கொடுத்த சுகத்தில் சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள். மெதுவாக அவளை தலையணையில் உறங்கவைத்தவன் போர்வையை போர்த்தி விட்டு நெற்றியில் இதழ்பதித்து அங்கிருந்து அவன் தங்கை அறைக்குச் சென்றான். அவளோ தன் நெஞ்சில் புத்தகத்தை வைத்தவாறே கட்டிலில் உறங்கி இருக்க கார்த்திக்கின் உதடுகளும் இதைப் பார்த்து புன்னகையை சிந்தின.

அவள் வைத்திருந்த புத்தகத்தை எடுத்தவன் அருகில் இருந்த மேசையில் வைத்து விட்டு போர்வையை போர்த்தி விட்டு, "குட்நைட் பட்டு" என முணுமுணுத்து நெற்றியில் இதழ்பதித்து விளக்கை அணைத்து இரவு விளக்கை ஏற்றி தனது அறைக்குச் சென்று கட்டிலில் விழுந்து விட்டத்தை வெறித்தான். 'என் மேலே இருக்கிற கோபத்துல அபியையோ, இல்லை சனாவையோ ஏதாவது பண்ணிருவானோ' என நினைக்கும் போதே மனம் பதறியது.
'அபி எதையும் சமாளிச்சிட்டு தப்பிச்சு வந்துருவா. பட் சனா அப்படியில்லையே. பயத்துல எதையுமே யோசிக்கமாட்டாளே' என புலம்ப, 'நீ தேவையில்லாமல் யோசிக்குற கார்த்திக்' என்றது அவன் மனசாட்சி. 'அபி ஏதாவதுன்னா தனியாக அவளே சமாளிக்க முயற்சி பண்ணுவா. அது தான் சில வேளைகளில் பிரச்சனையில் முடியும். சனா எதையுமே என் கிட்ட மறைக்க மாட்டா. அதனால் அவளை நினைச்சு பயப்பட தேவையில்லை. அபியை தான் கொஞ்சம் பார்த்துக்கனும்' என முடிவெடுத்தவாறு உறக்கத்தை தழுவினான்.

முதன் முறையாக அவன் எடுத்த முடிவு தவறப்போகின்றது என்பதை அறியாமல் நித்ரா தேவியின் பிடியில் நிம்மதியாக உறங்கினான் கார்த்திக். ஆனால் சாத்விக்கோ இப்போதே நாளை செய்வதற்கான வேலையை ஆரம்பித்தான். அனைவருமே உறங்கி விட்டனர் என்பதை விளக்குகள் அணைக்கப்பட்டு இருப்பதைக் கொண்டு உறுதி செய்த சாத்விக், ஒரு எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தினான்.
தன் மொபைல் தன்னிருப்பை உறுதிபடுத்தும் முகமாக "மழைவரும் அறிகுறி" என்ற பாடலை ஒலிற விட கைகளால் துளாவிக் கொண்டே மொபைலைத் தேடினாள் சனா.

தூக்கக் கலக்கத்தில் எழுந்தவள் சுற்றி கண்களை பார்வையால் அலச அருகில் இருந்த மேசையில் இருந்தது அவள் கையடக்கத் தொலைபேசி. திரையை யாரென்று பார்க்காமல் அழைப்பை ஏற்றாள்.

"பேபி" என்ற உருகும் குரலைக் கேட்டவள் தூக்கத்தின் பிடியிலிருந்து முற்றாக வெளிவந்தவள் அவசரமாக எழுந்து நின்றாள். பதட்டமாக, "சார்" என்ற அழைக்க, "எதுக்கு இப்போ பதட்டப்படுற? ரிலேக்ஸ் பேபி" என்றான் கூலாக. "எ...து..க்...கு போன் பண்ணிங்க? என் நம்பர் எப்படி கிடைச்சது?" என திணறிக் கேட்க, "உன்னைப் பத்தி அத்தனையுமே எனக்கு தெரியும் பேபி. நாளைக்கு ஈவீனிங் நாம வெளியே போகனும். சோ ரெடியா இரு" என்றான். "என்னது வெளியே போகனுமா? விளையாடாதிங்க சேர்" என்று மீண்டும் பதற, "நான் முடிவு பண்ணிட்டேன். நீ வர" என இதுவே இறுதி முடிவு என அழைப்பைத் துண்டித்தான்.

'ஐயோ' என தலையில் கைவைத்து கட்டிலில் அமர பயம் அவளை சூழந்துக் கொண்டது. ' நான் எப்படி வெளியே அவர் கூட போக முடியும்? சேர் கிட்ட பேசலாம்' என முடிவெடுத்து மீண்டும் அவனிற்கு பல்கனியிற்குச் சென்று அழைத்தாள். புதிய இலக்கமே இறுதியாக அழைக்கப்பட்டு இருக்க அதைப் பார்த்து சாத்விக்கின் இலக்கம் என முடிவு செய்து அழைத்தாள்.

இதற்காக காத்திருந்த சாத்விக் இதழ்கள் வெற்றியில் சிரித்தன. அழைப்பை மூன்று ரிங்கிற்கு பிறகு ஏற்க, "சேர் பிளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்களேன்" என்றாள் கெஞ்சும் குரலில். "சொல்லு பேபி" என நிதானமாகப் பேச, "நான் எப்படி சேர் உங்க கூட வெளியே வர முடியும்? இதெல்லாம் தப்பு சேர். வீட்டுல என்ன பொய் சொல்ல முடியாது. நான்..." என்று அவள் அடுத்து என்ன கூறுவது என தெரியாமல் திணறினாள்.
"அப்போ நீ என் கூட வெளியே வர ஒரு ரீசன் கேட்குற அப்படியா?" என குறும்புக் குரலில் கேட்க, "சேர் ஏன் எல்லாத்தையுமே தப்பாவே புரிஞ்சிக்கிறிங்க? நான் எப்போ அப்படி சொன்னேன்?" என அவசரமாக மறுத்தவள் உடனே, "எதுக்கு சேர் இப்படி எல்லாம் பண்றிங்க?" என இயலாமையுடன் கேட்டாள். "உனக்கு அதுக்கான பதில் தெரியனும்னா நாளைக்கு என் கூட வெளியே வா" என்றான் முடிவாக.
"என் நிலமையையும் புரிஞ்சிக்கொங்களேன். நான் எங்க வீட்டு ஆளுங்களை தவிற வேறு யார் கூடவும் வெளியில போனது இல்லை. எப்படி உங்க கூட வர முடியும்? பிளீஸ் சேர்" என்று உட்சென்ற குரலில் கெஞ்ச, அதை அவன் சாட்டை செய்யவே இல்லை.

"அது உன் பிரச்சனை பேபி. ஆனாலும் நீ இதெல்லாம் பழகிக்கோ. இவளோ நீ சொல்றதால ஒன்னு பண்றேன்" என்று முடிச்சுடன் கூற, 'தன்னை வர வேண்டாம்' என்று கூறுவானோ எனும் ஆவலில், "என்ன சேர்?" என வினவினாள்.

"நாளைக்கு நீ ஒரு டிரோயிங் வரைஞ்சு எடுத்துட்டு வா. நீ எனக்கு கொடுத்தது ஸ்மஞ் ஆகிருச்சுன்னு சொன்னியே. சோ நான் இன்னொன்னு வரைஞ்சு கேட்டேன்னு சொல்லி வரைஞ்சி எடுத்து என்னைப் பார்க்க வா. யாருக்கும் டவுட் வராது" என ஒரு மார்க்கத்தைக் கூற, "சேர்" என்று அதிர்ந்தாள். "பாரு பேபி நானே என்னைப் பார்க்குறதுக்கு ஒரு வழி அமைச்சி கொடுத்துட்டேன். நீ வராமல் இருந்தால் விளைவுகள் ரொம்ப பலமாக இருக்கும்" என்றவனின் குரலில் இத்தனை நேரமாக இருந்த மென்மை சென்று கடுமை குடியேறி இருந்தது.

"சேர் இப்போ டிரோ பண்ணி, பெயின்ட் பண்ணி நாளைக்கு எடுத்துட்டு வர நேரம் இல்லையே" என்றாள் கவலை தோய்ந்த குரலில். "என்ன பேபி சின்னப்புள்ளயாவே இருக்க? கொஞ்சமாச்சும் யோசி பேபி. டிரோயிங்ல பெயின்டிங் மட்டுமில்லையே. பென்சில் ஆர்ட்டும் இருக்கே. பென்சில் ஆர்ட் பண்ணி கொடு" என்று அவனே அவளது பிரச்சனைக்கு தீர்வையும் வழங்கினான். "சேர் நான் இப்போ என்ன வரையிறது?" என்று பாவமாக கேட்பவளைப் பார்த்தவனுக்கு ஏகத்துக்கும் கடுப்பேறியது.

"இப்போ தான் சின்ன புள்ளை போல பிகேவ் பண்ணாதன்னு சொன்னேன் சனா. மறுபடியும் அதையே பண்ணுற. ஒரு டிரோயிங் உன்னால வரைய முடியாதா?" என குரலை உயர்த்தி கடுகடுக்க அவள் மொபைலிலேயே மிரண்டுவிட்டாள். சிறிது நேர அமைதி நிலவ, "என்ன பேச்சையே காணோம்" என்றான் அதே குரலில்.

"சேர் நாளைக்கு காலையிலே இதை வேணூன்னு சொல்றிங்க. டிரோயிங் வரையும் போது மைன்ட் ரிலேக்சா இருக்கனும். அந்த பிக்சர் நம்ம மனசுல ஆழமா பதியனும் சேர். இப்போ வரைக்கும் எனக்கு அப்படி எந்த ஒரு விஷயமும் தோண இல்லை. திடீர்னு சொல்லும் போது என்ன பண்றதுன்னும் புரியல்லை" என்று மெல்லிய குரலில் கூறினால் முகத்தில் அப்பாட்டமான பயம் தென்பட்டது. இதை லெப்டொப்பில் பார்த்தவனின் முகத்தில் உணர்வுகள் துடைக்கப்பட்டு இறுகியது.
பெருமூச்சை இழுத்துவிட்டவன், "இன்னைக்கு என்னை காலையில் பார்த்த இல்லையா? அதுல ஏதாவது ஒரு விஷயம் உன் மனசுல உன்னை அறியாமல் பதிஞ்சு இருக்கும். அதை டிரோ பண்ணு. முதலில் கண்ணை மூடி யோசி"என அவ்வளவு தான் என்ற வகையில் அழைப்பைத் துண்டித்தான். அவன் குரலில் கடுமை இல்லாவிட்டாலும் கட்டளை இருந்தது.

இது வரையில் தன்னை யாருமே அதிர்ந்து பேசியது இல்லை. இன்று தன்னை ஒருவன் திட்டிவிட்டான் என நினைக்கையிலேயே கண்ணை கரித்துக் கொண்டு வந்தது கண்ணீர்.
சிறிது நேரம் வெளியே வெறித்தவள் ஆழ மூச்செடுத்து விட்டு கண்களை மூடினாள். இன்று சாத்விக்கை சந்தித்தது முதல் நடந்த ஒவ்வொன்றையும் நினைக்க அதில் ஓர் இடத்தில் மாத்திரம் அத்தனை தெளிவு இருந்தது. உடனே முகத்தை கழுவி வந்து வரைவதற்கு தேவையான அனைத்தையும் எடுத்து வந்தாள். மரத்தாலான ஓவியப் பலகையை வைத்து வரைய ஆரம்பித்தாள். இத்தனை நேரமாக அவள் முகத்தில் இல்லாத தெளிவும், சுவாரசியமும் ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டு வெளியே வந்தது.
இரண்டு மணி நேரமாக அனைத்தையும் வரைந்து முடிக்க அந்த இரண்டு மணி நேரமும் அவளையும், அவள் முக பாவங்களையுமே இரசித்துக் கொண்டு இருந்தான் சாத்விக். அவள் முகத்தில் இருந்த சந்தோஷத்தைப் பார்த்து அவன் முகமும் ஆனந்தத்தில் மின்னியது.

அவள் எந்த புகைப்படத்தை வரைந்தாள் என்பதை அவன் பார்க்கவே இல்லை. வரைந்து முடித்தவள் உடலை நெளித்து முறுக்கினாள். இதைப் பார்த்த சாத்விக்கிற்குள் ஏதேதோ உணர்வுகள் தோன்ற உடனிடியாக மடிக்கணனியை மூடினான்.

சனாவும் ஓவியத்தை நாளைக் கொண்டு செல்லும் புத்தகங்களுக்கு அருகில் வைத்தவள் குளியலறைக்குள் புகுந்துக் கொள்ள அப்போதே இரவு உடையை இன்னும் மாற்றவே இல்லை என்பதை கண்டு கொண்டாள். உடனே வெளியே வந்தவள் தனது இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்று ஆடை மாற்றி வந்து கட்டிலில் விழுந்தாள்.
'இன்னும் நீ மொபைலை சார்ஜ் பண்ணவே இல்லை' என மூளைக் கூற 'ஐயோ' என்றவாறே அதை எடுத்து சார்ஜில் இட்டாள்.

அப்போதே சாத்விக்கின் இலக்கத்தை இன்னும் பதிவு செய்யவில்லை என நினைவு வர, 'என்ன பேர் வைக்கலாம்' என யோசிக்க உறக்கம் அவளை வா வா என்று அழைத்தது. அவளும் அதை விடுத்து தலையணையில் முகம் புதைத்து, போர்வையை இழுத்துப் போர்த்தி உறக்கத்தைத் தொடர்ந்தாள். சாத்விக் தன்னை நிதானப்படுத்தி மடிக் கணனியை திறக்க சனாவோ அங்கே இருக்கவில்லை. அவள் உறங்கி இருப்பாள் என்பதை உணர்ந்தவன் அப்படியே கட்டிலில் விழுந்தான்.
கண்களை மூட அவனையும் சிறிது நேரத்தில் நித்திராதேவி ஆட்கொண்டாள். மதியானவள் தன் வேலையை முடித்து தன் இருப்பிடம் நோக்கிச் செல்ல ஆதவன் தன் வேலையைக் கவனிக்க வந்தான். சனாவின் வீட்டில் அனைவரும் காலையில் எழுந்து வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தனர். கார்த்திக், அபியோடு ஜோகிங் செல்ல சனாவோ சாமியறையில் தன் பெற்றோரின் முன்னே நின்று விளக்கை ஏற்ற, விசாலாட்சி சமையலறையில் அனைவருக்கும் உணவு தயாரிக்க சென்று இருந்தார்.
கார்த்திக், அபி உள்ளே வர சனாவும் அங்கே வந்தாள். அனைவருக்கும் காபியோடு விசாலாட்சி வர அனைவருமே சிரித்துப் பேசினார்கள் சிறிது நேரம். பின் அனைவருமே தங்கள் அறைகளுக்குச் சென்றனர். சனா குளித்து வந்து இன்று சாத்விக் வெளியே அழைத்துச் செல்வதாகக் கூறியதால் தனக்கு திருப்தியான ஒரு சுடிதாரை தேர்ந்து எடுத்து அதை அணிந்து கீழே வந்து உணவை உண்டாள்.

விசாலாட்சி, "சனா மா இன்னைக்கு குளிச்சிருக்க. பின்னல் போட்டு சடை போடாத மா. விரிச்சு விடு இல்லைன்னா தலை வலிக்க ஆரம்பிக்கும்" எனக் கூற கார்த்திக்கும், அபியுமே அதையே கூற சரி என்று தலையாட்டி அறைக்குச் சென்று சிறிய கிளிப்பில் தன் கூந்தலை அடக்கிக் கொண்டாள். அபியும் தயாராகி வர இருவரும் காரில் கோலேஜை நோக்கி சென்றனர். அப்போது கையில் இருந்த ஓவியத்தைப் பார்த்த அபி, "இது என்ன டிரோயிங் சனா" எனக் கேட்டாள்.
"நேத்து சேர் தான் இன்னொரு டிரொயிங் வரைய சொன்னாரு. அதான் இது" என்று எங்கோ பார்த்துக் கூற, "நேத்து நீ என் கிட்ட சொல்லவே இல்லையே" என்றாள் புருவங்கள் முடிச்சிட. 'கடவுளே என்ன இது? இந்த அபி இவளோ கேள்வி கேட்குறாளே' என உள்ளுக்குள் புழுங்கியவள் எச்சிலை விழுங்கி, "நீ அண்ணாவை பார்த்து பிளெட் ஆயிட்ட. அது நான் எங்கே சொல்றது? அப்பொறம் உன் சமையலைப் பார்த்துட்டு மறந்தே போயிட்டேன்" என சொற்களைக் கோர்த்து ஒருவாறு கூறி முடித்தாள்.
"என்னமோ சொல்ற போ" எனக் கூறி அபி வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க, சனாவும் தப்பித்தோம் என்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். கோலேஜை வந்தடைந்தவர்கள் காரிலிருந்து இறங்கி நடந்துச் செல்ல சனாவின் மூக்கில் இருந்த மூக்குத்தி சூரிய ஒளியில் பட்டு மின்ன முகத்தை மறுபுறம் திருப்பினாள்.

இக்காட்சியைப் தனது அறையில் இருந்து பார்த்த சாத்விக்கிற்கு ரவிவர்மாவின் ஓவியத்தை நேரில் பார்த்தது போன்ற ஓர் உணர்வு தோன்றியது. அவளை இப்போதே சென்று அள்ளி அணைக்க துடித்த மனதை சிரமத்துடன் கட்டுப்படுத்தி பியூன் மூலம் சனாவை அழைத்து வரக் கூறினான்.

சனா வகுப்பிற்குள் நுழைய பியூன், 'அவளை நிர்வாகி அழைத்து வருமாறு கூறினார்' என்று உரைக்க, சனா அபியைப் பாரத்தாள்.

"போயிட்டு வா சனா" என அவள் புத்தகப்பையை வாங்கி விட்டு அனுப்பி வைத்தாள். சனாவும் ஓவியத்தை எடுத்துக் கொண்டு சாத்விக்கின் அறைக்குள் நுழைந்தாள். அங்கே எவருமே இருக்கவில்லை. அவள் திரும்பி வெளியே செல்ல எத்தணிக்க அவள் கைப்பிடித்து இழுத்தான் சாத்விக். அவளோ சாத்விக்கோடு முட்டி மோதி நின்றாள். இவ்வாறு ஒரு தாக்குதலை அவள் எதிர்பார்க்கவில்லை என்பதை அவள் முகமே காட்டிக் கொடுத்தது.

இடையோடு கைசேர்த்து அணைத்தவன் அவன் கண்ணைப் பறித்த மூக்குத்தியின் மேலே இதழ்பதித்தான். "சேர்" என்று பதறி விலக எத்தணிக்க, அவளை மேலும் தன்னோடு சேர்த்து அணைத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து கூந்தலின் வாசம் பிடிக்க ஆரம்பிக்க பாவையவள் தவித்துப் போனாள் செய்வது அறியாது. "சேர்" என்று மெல்லிய குரலில் அழைக்க, "கொஞ்ச நேரம் அமைதியா இரு பேபி" என அவள் காதுமடலில் தன் உதடுகளை உரசியவாறே கூறி மீண்டும் தன்னவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

~ உன் மூக்கில் மின்னும்
மூக்குத்தியை பார்க்கும் போது
எனை அறியாது
கோபம் கொள்கிறேனடி
எனை விட அதுவே உன்னோடு
வெகுநேரம்
இருப்பதைப் பார்த்து ~






 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5


சாத்விக் சனாவை தனது அணைப்புக்குள்ளேயே வைத்திருந்தான். நொடிக்கு நொடி அவனது அணைப்பு இறுகிக் கொண்டே சென்றது. அவளுள் தோன்றும் உணர்வுகளை அறியமுடியாமல் தவித்துப் போனாள் பெண்ணவள். அவன் அணைப்பினால் அவள் உடலில் வலி உருவாக சனா மெதுவாக முணகினாள். அதை உணர்ந்த சாத்விக் தன் பிடியைத் தளர்த்தினானே தவிற தன்னிலையில் இருந்து மாறவே இல்லை. "பேபி" என அவன் உருகும் குரலில் சனாவை அழைக்க அக்குரல் அவள் இதயத்தின் அடிவரை சென்று தொட்டது.

மீண்டும் "பேபி" என்று அழைக்க "ம்ம்" என்ற பதில் கிடைக்க "என்னை கொல்ற பேபி" என அவளை நிமிர்ந்து பார்த்தான். தன் கண்களோடு அவன் கண்களை கலக்க விட்டு விழி வழியே ஏதோ ஒன்றை அறிய முற்பட ஊடுருவி அவனை நோக்கினாள். அதை தடுக்கும் முகமாக அவள் கண்களில் முத்தமிட கண்களை மூடிக் கொண்டாள். அவள் கன்னம், நெற்றி, காது என்று அவன் உதடுகள் வலம் வந்து இறுதியில் அவள் இதழ்களில் சற்று நேரம் இளைப்பாறியது. சனா சுயநினைவடைந்து அவனை தன்னிடம் இருந்து விலக்க முற்பட அவள் இடையில் அழுத்தம் கூடியது.

சிறிது நேரத்தில் அவனே விலகி அவன் பொறாமையைத் தூண்டும் மூக்குத்தியின் மேலே அழுந்த முத்தமிட்டான். அவள் மறுபடியும் அவனிடம் இருந்து விலகப் போராட "உன் மூக்குத்தியைப் பார்க்கும் போது எனக்கு கோபமா வருது பேபி. பாரேன் எனக்கு சொந்தமான இடத்துல எப்படி ஒய்யாரமா உட்கார்ந்து இருக்குன்னு" என அதை வருடி விட அவள் முகத்தை திருப்பினாள். புன்னகையுடன், "என் கண்ணுக்கு அழகா தெரியுற பேபி. அப்படியே உன்னை கடிச்சு சாப்பிடனும் போல இருக்கு" எனக் கூற அவன் பேச்சில் முகம் சுழித்தாள் சனா.

"நேத்தே சொன்னேன் பேபி. இதெல்லாம் பழகிக்கோன்னு" எனக் கூறி அவள் முகத்தை அவன் முகம் நோக்கி திருப்பி நெற்றியில் முத்தமிட்டான். அவள் மூக்கோடு மூக்கை உரசியவன், "இதுக்கு மேலே நீ இங்க நின்னன்னா உனக்கு தான் சேதாரம் அதிகம். என்னால என்னை கன்ட்ரோல் பண்ண முடியல்லை டி" என்றான் இறுக அணைத்து. அவனது 'டி' என்ற அழைப்பு அவளை ஏதோ செய்தது. அவனிடம் இருந்து விலக எத்தணிக்க, அதே நேரம் அவனது தொலைப்பைசியும் அழைத்தது. அதை ஏற்று பேச, சனா விலக முயற்சித்தாள்.

மாலை சந்திக்கலாம் என அவள் மூக்குத்தியின் மேலே இதழொற்றி விலக்கினான். 'இந்த பத்து நிமிஷத்தையே நமளால தாங்க முடியல்லை. மறுபடியும் ஈவீனிங்கா !!!' என நினைக்க பயபந்து அவள் அடிவயிற்றில் கால்பந்து விளையிட ஆரம்பித்தது. அவனை விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓவியத்தை எடுத்து ஓட ஆரம்பித்தாள். இதைப் பார்த்த சாத்விக் சிரித்து தன் பேச்சை தொடர்ந்தான். பேசி முடித்தவன் தனது அலுவலகத்திற்குச் சென்றான். அங்கே அவனுக்கு இருந்த கோப்புகளை ஒரு முறை சரிபார்த்து கையொப்பம் இட்டான்.

சனா வேகமாக வகுப்பிற்குள் நுழைய அபி அவள் அமர இடத்தை வழங்கினாள். அங்கே அமர்ந்தவள் வேக மூச்சுக்களை வெளியிட, "எதுக்கு டி ஓடி வந்த?" என்றாள். 'ஐயோ கேள்வி கேட்க ஆரம்பச்சிட்டாளே!! சனா சமாளிடி சமாளி' என தன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொண்டு "கிளாசுக்கு மேம் வந்துருவாங்களோன்னு பயத்துல ஓடி வந்தேன்" என்றாள். அபி, "ரிலேக்ஸ் சனா" என்றவள் அவள் கையிலிருந்த ஓவியைத்தை புரியாமல் பார்த்து, "டிரோயிங்கை கொடுக்க இல்லையா?"எஏ வினவ, 'இதுக்கு என்ன பதில் சொல்றது? கடவுளே எனக்குன்னு டிசைன் டிசைனா சோதனையை தேடித்தேடி ரெடி பண்ணி அனுப்புவியா? எல்லாம் அந்த ஆளால் வந்தது' என உள்ளுக்குள் புலம்பி சாத்விக்கையும் திட்டித் தீர்த்தாள்.

"அது அபி, நான் சேருக்கு டிரோயிங்கை கொடுக்க போனேனா, அப்போ சேருக்கு கோல் வந்தது. அவரு பேசிட்டு இருந்தாரு. சீக்கிரமா முடிச்சிருவாருன்னு பார்த்தால் முடியவே இல்லை. எனக்கும் நேரமாகுதுன்னு ஈவீனிங் ஓஃபிசுக்கு வந்து டிரோயிங்கை வந்து கொடுக்க சொன்னாரு. இப்போ கிளாசுக்கு போன்னு அனுப்பி வச்சாரு" என உண்மை பாதி, பொய் பாதியாகக் கூற அபி அதை ஏற்றுக் கொண்டாள்.
அபி, "உண்மை சனா, அவங்களுக்கும் வேலை இருக்கும். நாமளும் டிஸ்டர்ப் பண்றது நல்லா இருக்காது" என்று கூற சனா புன்னகைத்தாள்.

"ஈவீனிங் எப்படி சனா போவ? எனக்கும் கிளாஸ் இருக்கே" என அபி கேட்க, "நான் போய் டிரோயிங்கை கொடுத்துட்டு வரது மட்டும் தானே! அது புரோப்ளம் இல்லை டி. அந்த வேலையை முடிச்சிட்டு சீக்கிரமாவே வீட்டுக்கு வந்திருவேன்" என்றாள் அவசரமாக. அபி சந்தேகமாக சனாவைப் பார்த்தாள்.
இது வரையில் யார் துணையின்றி அவள் வெளியே சென்றது இல்லை. மற்றவர்கள் செல் என்று வற்பறுத்தினாலும் 'முடியாது' பிடிவாதத்துடன் மறுத்து விடுவாள். இன்று 'நான் தனியாகவே செல்கிறேன்' எனக் கூறியதே அவளிற்கு யோசணையை கொடுத்தது.

சாத்விக் என்பவன் அவளுக்கு துணையாக செல்கிறான் என்பதை அபி அறியமாட்டாளே. சனா, "அபி நான் டிரொயிங்கை கொடுத்துட்டு வரது தானே? சீக்கிரமாவே என்னால வர முடியும். தைரியத்தை வளர்த்துக்கனும்னு நீ தானே சொன்ன? இது ஒரு சின்ன வேலை தானே.....சரியா முடிச்சிடுவேன்" என்று அபியின் பார்வையைப் புரிந்துக் கொண்டபடி பேசினாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது.
'எல்லாம் இந்த ராட்சசனால வந்தது. பொய் மேலே பொய் சொல்றேன். சொரி அபி' என சாத்விக்கிற்கு திட்டித் தீர்த்ததோடு, அபியிடம் மானசீகமாக மன்னிப்பை வேண்டினாள்.

"சரி சனா. கவனமாக இரு. நான் உன் அண்ணன் கிட்ட பேசிக்கிறேன்" என்று புன்னகைக்க, சனாவும் புன்னகைத்தாள். வகுப்பிற்கு பேராசியர் வருகைத் தந்து பாடத்தை ஆரம்பிக்க இருவருமே அதில் கவனத்தைச் செலுத்தினர்.

சாத்விக் தன் வேலையில் மூழ்கி இருக்க அவனிடம் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தான் அவனது பி.ஏ ராகவ். "சேர்.." என அவன் அழைக்க, "சொல்லு ராகவ்" என்றான் சாத்விக். அவனது குரலே அவன் சாந்தத்தைத் தெரிவிக்க, 'இதை நான் சொன்னேன்னா என் மண்டை போயிருமே. பிள்ளையாரே என் மண்டை பத்துரமா இருந்தால் உனக்கு பத்து தேங்காய் உடைக்கிறேன்' என வேண்டியவாறே இருந்தான்.

"அமைதியா இருந்தால் என்ன அர்த்தம்? என் டைமை வேஸ்ட் பண்ணாமல் சொல்லித் தொலை டா" என்று அழுத்தமாக சாத்விக்கின் குரல் ஒலிக்க, "சேர் நீங்க கேட்ட டீடெய்லசை டிடெக்டிவ்ஸ் கொடுத்து இருக்காங்க" என்று பயத்தில் எச்சிலை விழுங்கினான்.

ஆர்வத்துடன், "அப்போ கண்டுபிடிச்சாச்சா?" என வினவ, "இல்லை சேர் அவங்க எங்கே தேடியும் அந்த பொண்ணைப் பத்தி டீடெய்ல்ஸ் கிடைக்கவே இல்லை சேர்" என்று கூறி பயத்துடனேயே அவன் முகம் பார்த்தான்.

சாத்விக்கின் முகமோ இறுகி இருந்தது. "சிசிடிவி புடேஜை பார்க்கலாமே..." என புருவமுயர்த்தி வினவ, "அது வந்து அன்னைக்கு ஹொஸ்பிடலில் கரன்ட் இல்லை சேர்" என்றான் அவசரமாக.
"அப்போ ஜெனரேட்டரும் வேர்க் பண்ண இல்லையா?" என்று நக்கல் தொனியில் வினவிக் கொண்டே அங்கிருந்த பேப்பர் வெயிட்டை ஒரு கையால் சுழற்றி ராகவைப் பார்த்தான்.

'ஐயோ இந்த மனுஷன் நேர்ல பார்த்தது போல சொல்றாரே... இது தான் உண்மை. அடி வாங்கனும்னு விதி இருந்தால் யாரால மாத்த முடியும்!!!' என மூச்சை இழுத்து விட்டு, "ஆமா சேர் ஜெனரேட்டர் வேர்க் பண்ணவே இல்லை. அதனால் அங்கே யாரு வந்தாங்கன்னு யாருக்கும் தெரியல்லை. யாரு யாரு வந்தாங்கன்னும் ஹொஸ்பிடல் ஸ்டாப்சுக்கும் நியாபகம் இல்லை சேர். அந்த பொண்ணு யாருன்னு கண்டு பிடிக்க முடியல்லை சேர்" என கண்களை மூடி கடகட என ஒப்புவித்தான்.

"ஒரு பொண்ணோட டீடெய்ல்சை கண்டு பிடிக்க முடியல்லை. அப்போ என்ன மயிருக்கு அவனுங்க டிடெக்டிவ் ஏஜென்சி நடத்துறாங்கலாம்?" என கர்ஜித்தவன் பேப்பர் வெயிட்டை கதவை நோக்கி வீச, கதவில் பொருத்தப்பட்ட கண்ணாடி துகள் துகளாக சிதறியது.
கோபத்தில் அங்கு இருந்த அத்தனைப் பொருட்களையும் உடைத்தான். இருந்தும் அவன் ஆத்திரம் அடங்கவில்லை. அவனது சுழல் நாற்காலியில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.

இத்தனை கலோபரங்கள் நடக்கும் போதும் ராகவ் கண்களை இறுக மூடியே இருந்தான். அங்கே நிலவும் அமைதியை உணர்ந்து கண்களைத் திறந்தான்.

'அய்யா, எனக்கு அடிபடவே இல்லையா? பிள்ளையாரப்பா உனக்கு தேங்காய் கன்ஃபோர்ம்' என நிம்மதி மூச்சு விட்டு சாத்விக்கைப் பார்க்க அவன் அமைதியைப் பார்த்து நெஞ்சம் பதறியது. 'இது புயலுக்கு முன் அமைதியா? இல்லை பின் அமைதியா?' என முழிக்க, 'இவளோ நேரம் நடந்தது புயல் போல உனக்கு தெரியல்லையா?' என அவனைப் பார்த்து மனசாட்சி எள்ளிநகையாட, 'உனக்கு எங்க சேரைப் பத்தி என்ன தெரியும்? இவரு தலையைப் பிடிச்சி கோபத்தை கட்டுப்படுத்தறாரு. நீ முதல்ல இங்கிருந்து போ' என மனசாட்சியை விரட்டியடித்தான் ராகவ்.

ராகவ் "சேர்..." என அழைக்க, "என்ன?" என்று சீறினான் சாத்விக். "அது ஈவீனிங் ரெஸ்டூரன்டுல ஒரு டேபள் புக் பண்ண சொன்னிங்களே....." என நிறுத்த, "அதையாவது உறுப்படியா பண்ணியா இல்லையா?" என்று கத்தினான் சாத்விக். "ஒரு ரூமே டெகரேட் பண்ண சொல்லி புக் பண்ணிட்டேன் சேர்.உங்க பிரைவசிக்கு அங்கே எந்த பிரச்சனையும் வராது சேர்" என்றான் நல்ல பிள்ளை போல். "தெட்ஸ் குட். இப்போ வேலையைப் போய் பாரு. ரூமை கிளீன் பண்ண யாரையாவது அனுப்பி வை" என தனக்கு அங்கிருக்கும் ஓய்வறைக்குள் சென்றான்.

சோபாவில் அமர்ந்து மேசையில் காலை நீட்டி, தலையை பின்னால் சாய்க்க அழையா விருந்தினராக சனாவின் நினைவுகள் வந்தது. இத்தனை நேரமாக அவனில் இருந்த எரிச்சல் உணர்வுகள் எங்கே பறந்து சென்றது என்று அவனே அறியான். 'ஏதோ மெஜிக் பண்ற பேபி' என உதடுகள் முணுமுணுத்து புன்னகைக்க அவள் நெருக்கத்தின் நினைவுகளும் அவனை இம்சித்தது. "உன் வாசமும், நீயும் எனக்கு வேணும் பேபி" என புலம்பியவாறு கண்களை மூடினான்.

~ உன் வாசமும்
உன் குழந்தை முகமும்
என்னை உன்னில்
தொலைக்கும்
காரணம் என்னவோ ~


கார்த்திக் அலுவலகத்தில் தன் வேலையில் மூழ்கி இருந்தான். அப்போது அவன் மொபைல் ஒலிற, திரையைப் பார்த்தான். அதில், 'நகுலன்' என்ற பெயரைப் பார்த்தவன் புன்னகையுடன் அழைப்பை ஏற்றான். "மாமா" என்று அழைக்க, "எப்படி இருக்க கார்த்திக்?" என்றான் நகுல். "நான் நல்லா இருக்கேன் மாமா. நீங்க எப்படி இருக்கிங்க?" என உற்சாகமாகக் கேட்க, "ஏதோ இருக்கேன் டா" என்றான் சுருதியே இல்லாத குரலில்.

"என்னாச்சு மாமா?" அவனும் கவலையாய் கேட்க, "உனக்கு தெரியாததா கார்த்திக்?
எனக்கும் அஞ்சலிக்கும் கல்யாணமாகி ஐந்து வருஷமாச்சு. இன்னும் குழந்தை இல்லை. அதான் கோயில் கோயிலா அலைஞ்சிட்டு இருக்கோம். இப்போவும் சென்னை பக்கத்துல ஒரு கோயிலுக்கு வந்திருக்கோம்" என்ற நகுலின் குரலில் வருத்தம் இழையோடியது.

கார்த்திக்கிற்கும் நகுலை நினைத்து அவன் மனம் கவலை கொண்டது. நகுல் யாரின் மனதையும் புண்படுத்தாத நல்ல மனிதன். கார்த்திக்கிற்கு அவனிடம் பிடித்ததே இனிமையான பேச்சே. பேச்சில் மட்டுமல்ல குணத்திலும் இனிமையானவனே. ஆனால் குழந்தை பாக்கியத்தை மட்டும் இறைவன் அவர்களுக்கு இன்னும் அளிக்கவில்லை.

இறைவனின் ஒவ்வொரு செயலிலும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு என்பதை உணர்ந்த கார்த்திக் மேலும் நகுலை வருத்த வைக்காமல், "கடவுள் எப்போவுமே நல்லவங்களை கைவிடமாட்டாரு மாமா. சீக்கிரமாவே எல்லாமே சரியாகிரும்" என ஆறுதல் வார்த்தைகளை வழங்கினான்..
"நானும் அந்த நம்பிக்கையில தான் இருக்கேன். நான் போன் பண்ணது நாளைக்கு நாங்க உன் வீட்டுக்கு வரட்டுமா? நீ வீட்ல இருப்பியான்னு பார்க்க தான் டா" என்று நகுல் வினவ, "நாங்க வீட்ல தான் இருக்கோம். நாளைக்கு நம்ம வீட்டுல தங்கிட்டு நாளான்னைக்கு ஊருக்கு கிளம்புங்க" என்றான் உற்சாகக் குரலில்.

"இல்லை கார்த்திக் ஊர்ல வேலை இருக்கு. ரைஸ் மில்லில் வேலை அதிகமாவே இருக்கு. அதனால நாளைக்கே ஊருக்கு கிளம்பனும்" என்றான். "அப்போ லஞ்சுக்கு ஏற்பாடு பண்றேன். அஞ்சலியும், நீங்களும் வீட்டுக்கு வந்து சேருங்க" என கூறி சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அதே போல் அபியைக் கவனிக்க கார்த்திக் ஆட்களை நியமித்தாலும், தன் ஆருயிர்த் தங்கையை கவனிக்காமல் தவறு இழைத்தான். அவனுக்கு நேற்று அபி தனக்காக வருந்தியது நினைவிற்கு வர இன்று அவளிற்கு பிடித்தது வாங்கிச் சென்று சமாதானம் செய்ய வேண்டும் என முடிவெடுத்து தனது வேலைகளில் மூழ்கினான்.

கார்த்திக்கை விட அதிகளவான பணத்தை கிரமாத்தில் கொண்டவனே நகுல். பரம்பரை பணக்காரர்களில் நகுலின் குடும்பமும் ஒன்று. ஆனால் எப்போதுமே தன் பணச்செழுமையை நகுல் வெளிக்காட்டியது இல்லை. அதே ஊரைச் சேர்ந்த அஞ்சலியை காதல் திருமணம் செய்துக் கொண்டான் நகல்.

அஞ்சலி கார்த்திக்கின் நெருங்கிய தோழன் ஒருவனின் தங்கை. கார்த்திக்கிற்கும் தங்கை போன்றவளே. அஞ்சலி அழகை மொத்தமும் குத்தகைக்கு எடுத்த பெண்..அத்தனை அழகானவள். பலர் அவளை திருமணம் செய்துக் கொள்ள நினைத்தாலும் நகுலையே திருமணம் செய்தாள்.

இருவரும் திருமணம் முடிந்து மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்தாலும் குழந்தை என்ற ஒரு பரிசை இறைவன் அவர்களுக்கு வழங்கவில்லை. அதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் கிளம்பியது. அனைவரிடம் இருந்து அவளைக் காக்கும் அன்புக் கணவனாக இருந்தான் நகுல். இறைவனிடமே பதிலைப் பெற வேண்டும் என்று கோயில் கோயிலாக இருவரும் சுற்றுகின்றனர்.

இத்தனை பிரச்சனைகள் இருந்தால் நகுல் அஞ்சலியின் மீது கொண்ட காதலும், அன்பும் துளியளவும் குறையவில்லை. அஞ்சலி தற்போது பணச் செழுமையில் வாழ்வதால் தனக்கே அனைத்திலும் முன்னுரிமை வழங்க வேண்டும், என்றும் சிறிதளவு கர்வத்தை உடையவள்.அதற்காக நகுலின் மீது அன்பில்லை எனக் கூற முடியாது..கணவனின் மீது அதீத அன்பு கொண்டவள்.

சனாவும், அபியும் கல்லூரி முடிந்தவுடன் அங்கிருந்து கிளம்பினர். இருவரும் நுழைவாயிலை அடைந்த போது அபி, "சனா பார்த்து பத்துரமா போயிட்டு வா. என்ன தேவையாக இருந்தாலும் எனக்கோ இல்லை மாமாக்கோ போன் பண்ணு. தைரியமா இரு ஒகே வா?" என பல அறிவுரைகளைக் கூறி அரை மனதுடன் அவளை அனுப்பி வைத்தாள் அபி.

இதுவரையில் அவளை தனியாக அனுப்பியது இல்லை என்பதால் மனம் அடித்துக் கொண்டது. இதை கார்த்திக்கிடம் கூறினால் நிச்சயமாக அனுமதித்து இருக்கமாட்டான். ஆனால் இன்று முதன் முறையாக தைரியத்துடன் சனாவே 'நான் தனியாக செல்கிறேன்' எனக் கூறும் போது அவளால் மறுக்கவும் முடியவில்லை.

'தைரியமாக சென்று வீட்டிற்கு வந்தவுடன் இதை மாமாவிடம் கூற வேண்டும்' என முடிவெடுத்து தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு சங்கீத வகுப்பிற்குச் சென்றாள் அபி எனும் அபிநயா.

சனா 'இங்கிருந்து எங்கே? எப்படி செல்வது? இன்றாவது காரணத்தைக் கூறுவானா?' என யோசித்தவள் தனது மொபைலிற்கு அழைத்தோ, தகவல் ஏதாவது கூறி இருக்கிறானா எனப் பார்த்தாள். எதையுமே கூறவில்லை.

ஐந்தடி நடக்கும் போதே அவள் மனதை பயம் சூழ்ந்துக் கொண்டது. மெதுமெதுவாக மொபைலைப் பார்த்தவாறு நடக்க அவளிடம் வேகமாக வந்து நின்றது ஒரு ஆடிக்கார்..

அவள் பயத்தில் இரண்டி வேகமாக பின் நகர்ந்து, தன் நெஞ்சில் கைவைத்து மூச்சை வெளியிட்டாள். கார் கண்ணாடியை கார் ஓட்டியவன் இறக்க புன்சிரிப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான் சாத்விக். "பயந்துட்டியா?" என வினவ, 'இவன் என்ன லூசா? இப்படி பண்ணால் மனிஷன் பயப்படாமல் இருப்பானா?' என்ற ரீதியில் அவனைப் பார்க்க, "நான் லூசா இல்லையான்னு அப்பொறம் பார்க்கலாம்.இப்போ வா" என்றான்.
சனாவோ எவ்வாறு தான் நினைத்ததை கண்டுபிடித்தான் என அதிர்ந்து விழித்தாள்.

"கம் பார்ஸ்ட்" என குரலை உயர்த்த, பயத்துடன் வேகமாக பின்னிருக்கையை நோக்கி நகர்ந்தாள்.."முன்னாடி வந்து உட்காரு" என்று அதே குரலுடன் கூறினான். மிரட்சியுடன் முன்னிருக்கையில் சுவரில் ஒட்டியிருக்கும் பல்லியைப் போல் அமர அவனே சீட்பெல்டேயும் மாட்டி விட்டான்.

சில நொடிகள் அவள் முகத்தை உற்று நோக்கியவன், தண்ணீர் போத்தலை வழங்க மறுக்காமல் அதை வாங்கிக் குடித்தாள். தேவையான அளவு குடித்து முடித்து அவனிடம் வழங்க அவனுக்கும் அவசியமாக இருந்ததால் அவனும் குடித்து பின் காரை இயக்கினான். அவ் ரெஸ்ட்டூரன்டை நோக்கி சாத்விக்கின் கார் சீறிப் பாய்ந்தது.




 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
22128

அத்தியாயம் 6


சாத்விக்கும், சனாவும் ஒரு ரெஸ்டூரன்டிற்குச் சென்றனர். அவன் பார்க்கிங்கில் காரை நிறுத்தி இறங்க சனாவும் கையோடு ஓவியத்தை எடுத்துக் கொண்டு இறங்கினாள். அவளை தோளோடு அணைக்க சனாவிற்கு சங்கோஜமாக இருந்தது. வெளியில் அனைவரிற்கும் காட்சிப்பொருளாக இருக்க சனா எப்போதுமே விரும்ப மாட்டாள். இன்று மற்றவர்களே தன்னை குறைக்கூறும் அளவிற்கு தானே நடந்துக் கொள்வது அவளுக்கே அவளைப் பார்த்து எரிச்சலாக இருந்தது. அவள் மெதுவாக விலக எத்தணிக்க, சாத்விக் பற்றுதலின் அழுத்தத்தை அதிகரித்தான்.


அத்றகு மேல் அவனோடு போராடுவது என்பது இயலாத காரியம் என்பதை உணர்ந்தவள் அமைதியாக வந்தாள். இருவரும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வருகைத்தர அவளை அமர வைத்தவன், தானும் அருகில் அமர்ந்தான். இயற்கையாகவே ரசிக்கும் குணமுள்ள சனாவிற்கு அங்கே அலங்கரிக்கப்பட்ட அறை கவனத்தை ஈர்த்தது. வெள்ளை நிற ரோஜா பூக்கள் வாடாமல் இருக்க மேசையில் தண்ணீர் வைக்கப்பட்ட கண்ணாடி பூச்சாடியில் இருந்தது. அவர்களைச் சுற்றி ஆங்காங்கே மெழுகுத்திரிகளும், சிகப்பு ரோஜா இதழ்களும் தென்பட்டன.


லாவன்டர் மலர் வாசணை இருவரையும் சுண்டி இழுக்க ஆழந்த மூச்சை எடுத்து விட்டனர். சனா மறுபடியும் ரசிக்க ஆரம்பிக்க, சாத்விக் அவளை இரசிக்க ஆரம்பித்தான். அவள் பார்வை செல்லும் திசை பார்க்க அங்கே நீர்வீழ்ச்சியின் ஒரு ஓவியம் தத்ரூபமாக வரையப்பட்டு இருந்தது. அதைப் பார்த்தவளின் கண்கள் சிரிக்க அவன் அவள் கண்கள் செய்யும் மாயங்களைப் பார்த்தான். எத்தனை அழகு அவள் கண்கள்? ஒவ்வொரு பாவனையும் முகத்தில் தெரிகின்றதோ இல்லையோ அவள் கண்கள் நன்றாவே தெரிவிக்கின்றதே!!!! அடுத்து அவன் மனம் கவர்ந்த மூக்குத்தி.....அவனை எள்ளி நகையாடும் வகையில் அல்லவா மின்னுகின்றது???


அவன் பார்வை சற்று கீழிறங்க அவள் இதழ்கள் வரண்டு இருக்க அவன் மனதோ அதை ஈரமாக்க போ என்றது.... அவளை நெருங்க முன்னே அவளுடைய நா செவ்வென அதன் வேலையைச் செய்துவிட பொறாமையாக அதைப் பார்த்தான். ஒரு கை காதிற்கு பின்னே முடிக்கற்றைகளை ஒதுக்கி விட உள்ளங்கை அவளது சிறிய ஜிமிக்கியை அசைக்க அதுவோ நர்த்தனமாடி அவளுடைய பஞ்சுக் கன்னத்தைத் தொட்டுத்தொட்டுச் செல்ல அவன் மனமோ தனக்கு இவ்வாறு ஒரு வரம் கிடைக்கவில்லையே என எண்ணி ஏங்கியது.


அவள் கழுத்தில் இருக்கும் சிறிய தங்கச் சங்கிலி ஒரு புறமாக சுருண்டு இருந்தது. அவள் கழுத்தில் தங்கத்தாலி எப்போது அணிவிப்பது? என அவன் மனம் ஏங்க அவன் மூளை ஏதோ ஒன்றை அவனுக்கு உணர்த்த முன்வர அவனோ சனாவை மனைவியாக பார்க்கிறேனா? என்பதில் அதிர்ச்சியாகி இருந்தான். மூளைக் கூற வந்ததை உணரவே இல்லை. அவசரமாக தன்னை சமன்செய்தவன், "சாப்பிட்டியா பேபி?" என அவளையும், தன்னையும் அவரவர் எண்ணங்களில் இருந்து விடுபட வைத்தான். சனா, "ஆமா நான் சாப்பிட்டேன்" என அமைதியானவள், ஏதோ ஒரு உந்துதலில், "நீங்க சாப்பிட்டிங்களா சேர்" என வினவினாள்.


அதைக் கேட்டவனுக்கு கூடை கூடையாக ஐஸ் கட்டி தலையில் கொட்ட, மனதில் சாரல் காற்று வீச ஆரம்பித்தது. அவன் சாப்பிட்டானா? உறங்கினானா? எனக் கேட்க இதுவரையில் முகேஷ், தியாவைத் தவிற எவருமே இல்லை. ஆனால் இன்று சனா கேட்டுவிட்டாள். அதற்காகவே அவனிற்கு இவ்வாறு ஒரு நிலை. "சேர் என்னாச்சு?" எனக் கேட்க, "இன்னும் இல்லை பேபி" என்றான். "நேரத்துக்கு சாப்பிடுங்க சேர். இல்லைன்னா அல்சர் வரும். என்ன வேலை இருந்தாலும் முதல்ல அதை சாப்பிடுங்க. அப்புறமா மத்ததை பாருங்க" என உரிமையாக கடிந்துக் கொள்ள வேகமாக அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் சாத்விக்.


அவளோ அதிர்ச்சியில் கண்களை விரிக்க, (உனக்கு வேற ரியெக்ஷனே இல்லையாமா?) அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தான். எங்கிருந்தோ வந்த நிம்மதி அவனைச் சூழ சிறிது நேரம் அவ்வாறே இருந்தான். அவள் தன்னிலை உணர்ந்து "சேர்" என்று அழைக்க, "பேசாமல் இரு பேபி. இன்னைக்கு ரொம்பவுமே எரிச்சலான வேலை. இப்படியே இருந்தால் நான் சரியாகிருவேன். அமைதியா இரேன்" என்ற குரலில் கட்டளையா? இல்லை கெஞ்சலா என்பதை அச்சிறு பெண்ணால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.


அவள் நெளிய ஆரம்பிக்க அவளிடம் இருந்து விலகியவன் அவள் மூக்குத்தியில் இதழ்பதித்து பேரரை அழைக்க இருவருக்கும் சேர்த்தே இரண்டு காபி ஆடர் செய்தான். சனா, "சேர் நீங்க சாப்பிடாமல் காபி குடிக்கிறிங்க?" என வினவ, "அது பழகி போச்சு பேபி. எனக்கு ஈவீனிங் கண்டிப்பா காபி வேணும்" என்றான். "சேர் நீங்க எதுக்காக இப்படி பண்றிங்கன்னு சொல்லவே இல்லையே" என வினவ, "பழிவாங்குறதுக்காக" எனக் கூற அதிர்ச்சியின் உச்சத்தைத் தொட்டாள் சனா....அவள் நிலையை உணர்ந்தவன் தோளோடு அணைத்துக் கொண்டான்.....அவன் ஸ்பரிசத்தில் அதிர்ச்சியில் இருந்து வெளியானவள், "எதுக்காக பழிவாங்கனும்? யாரப் பழிவாங்கனும்" என வினவினாள்.


பேரரும் காபியை வழங்க வர இருவரும் அமைதியாக விலகி அமர்ந்தனர். பேரர் சென்றதோடு அவன், ஒரு காபியை அவள் புறம் வைத்தவன் மற்றையதை குடிக்க ஆரம்பித்தான். நிதானமான குரலில், "இப்போவே எல்லாத்தையும் சொன்னால் கதையோட சுவாரிஷியமே போயிருமே பேபி..நீ ஒவ்வொரு முறை வெளிய வரும் போது உன்னோட ஒவ்வொரு கேள்விக்கா பதிலை சொல்றேன். நான் சொன்னதை கேட்டு இப்போவே உனக்கு தலை வலிச்சு இருக்கும். சோ காபியை குடி" என்றான்.


இன்னும் பல முறை அவன் சொற்களுக்கு அடிமையாக வேண்டுமா? அபி, அண்ணாவிடம் மறுபடியும் பொய்யுரைக்க வேண்டுமா? என நினைக்கும் போதே மனம் அடித்துக் கொண்டது அவளிற்கு. அவள் முகபாவங்களின் மாற்றங்களைக் கொண்டே அவள் மனநிலையை அறிந்தவன், "இப்போ காபியை குடி பேபி" என்று குரலை உயர்த்தினான். அதற்கு கட்டுப்பட்டவள், காபியை மனமே இல்லாமல் பருகினாள். சாத்விக், "ஆமா, நீ நைட் டிரோயிங் பண்ணியே அதைப் பார்க்கனும்" என்றான் ஒய்யாரமாய் அமர்ந்து.


ஈடுபாடு இல்லாமலேயே ஓவியத்தைப் பிரித்து அவனிடம் காட்டினாள். அவன் கண்களாலேயே நம்ப முடியவில்லை. அச்சு அசலாக அவனை வரைந்து இருந்தாள். நேற்று சனா மயங்கி விழுந்து மறுபடியும் கண்விழிக்கும் போது கதவில் சாய்ந்து மார்பிற்கு குறுக்காக கையைக் கட்டி கண்களில் சிரிப்புடன் சனாவைப் பார்த்துக் கொண்டு இருந்த போது உள்ள தருணத்தை தத்ரூபமாக வரைந்து இருந்தாள். அதில் அவனது கண்களின் சுருக்கம், சர்டில் இருந்த சுருக்கங்கள், ஒரு காலை சற்று மடித்து முன்னகர்த்தி இருந்த விதம், இதழ்களில் இருந்த கோடுகள் எதையும் மாறாமல் வரைந்து இருந்தாள்.


இவ்வாறான ஒரு ஓவியத்தை சனாவிடம் இருந்து நிச்சயமாக அவன் எதிர்பார்க்கவில்லை. அவள் அனைத்தையுமே கவனித்து தன்னை மனதில் பதிய வைத்து வரைந்து இருக்கிறாள் என்பதை உணர்ந்த அவன் மனமானது 'லுங்கி டான்ஸ்' என்ற பாடலிற்கு குத்தாட்டம் போட்டது. அவள் மனதில் தான் பதிந்தால் என்ன என்ற காரணத்தை அறிய அவன் நினைக்கவோ முற்படவோ இல்லை. "சூப்பர் பேபி. இப்படியொரு ஆர்ட்டை நான் எதிர்பார்க்கவே இல்லை. நிறைய பேர் என்னை வரைஞ்சி இருக்காங்க. என்னை கோபி பண்ணது போலவே இருக்கும். பட் அதுல உயிர்ப்பு இருக்காது. என் ஆழ் மனசையும் தொட்டது இல்லை. பட் உன் ஓவியம் என் ஆழ்மனசை தொட்டிருச்சு பேபி. அவளோ உயிர்ப்பா இருக்கு. உனக்கு கண்டிப்பா ஒரு கிப்ட் கொடுப்பேன்" எனக் கூறி புன்னகைத்தான்.


அவனது பார்வையோ ஓவியத்தை விட்டு அகலவே இல்லை. அவன் கூறியதைக் கேட்டவளின் இதழ்கள் புன்னகையை பூத்தன. "தேங்கி யூ சேர்" என்றாள் மனப் பூர்வமாக. "உனக்கு இப்போ ஏதாவது கிப்ட் கொடுத்தாகனுமே" என்றவனின் பார்வை அவளது இதழ்களை மொய்க்க அவளிற்கு அடிவயிற்றில் கிலி உண்டானது. அவளை நெருங்கியவன் மென்மையான இதழ்களை தன் முரட்டு இதழ்களுக்குள் அடக்கினான். தேனி பூவிலிருந்து தேனை உறிஞ்ச எவ்வாறு பூவை நாடுமோ அதே போல் அவள் இதழ்களில் இருந்து தேனை உறிஞ்சினான். அவள் முதுகுத் தண்டு சில்லிட அவனை விட்டு விலக எத்தணிக்க அதுவோ முடியாமல் போனது.


பயத்தில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய அவன் நா உப்புச் சுவையை உணரும் போதே சனா அழுகிறாள் என்பதை உணர்ந்தவன் மயக்கத்தில் இருந்து வெளி வந்து அவளை விலக்கி முகம் பார்த்தான். பெயரோ, ஊரோ ஏன் எதையுமே தெரியாத ஒருவனிடம் நெருக்கமாக இருக்கிறோம் என்பதை நினைக்க அவமானமாக உணர்ந்தாள். அதனாலேயே கண்களில் இருந்து கண்ணீர் வெளிவந்தன. "பேபி பிடிக்க இல்லையா?" என அவனது குரல் உணர்வில்லாமல் ஒலிக்க, "இல்லை" என இடம் வலமாக தலையாட்ட அவன் உடலோ இறுகியது.


அவள் இடையில் இருந்த கையில் அழுத்தத்தை அதிகரித்து, அவள் கையைப் பிடித்து இருந்த மற்றைய கையிலும் அழுத்தத்தை அதிகரித்தான். அவள் வலியில் முகம் சுருக்க, "உனக்கு பிடிக்குதோ இல்லையோ அது எனக்கு கவலையில்லை. இனிமேல் பழகிக்கோ" என்றவனின் குரல் கடுமையாக இருந்தது. அவள் வலியில் இன்னும் முகம் சுருக்க பிடியைத் தளர்த்தி அவள் கைப் பிடித்து இழுத்துச் சென்றான் வெளியே. ஒரு கையில் அவள் கையும், மற்றைய கையில் அவளது ஓவியமும் இருக்க காரில் அவளை தள்ளியவன் அனைத்திற்கும் சேர்த்து பணத்தை வழங்கி காரினுள் அமர்ந்தான்.


இத்தனை நேரமாக இருந்த இனிமை சென்று ஒரு இறுக்கமான சூழல் அங்கே உருவாகி இருந்தது. சாத்விக்கைப் பார்க்க அவளிற்கே பயமாக இருந்தது. கோபத்தில் கண்கள் சிவக்க ஸ்டியரிங்கை வேகமாக திருப்பி காரை இயக்கி அதிகமான வேகத்தில் பறந்தான். அவனது யோசணையோ சனாவின் மீது இருந்தது.


'எத்தனையோ பேரழகிகள், அழகிகள் என்னைக் கடந்து சென்று இருக்கின்றனர். அவர்களின் ஆடைகள் எப்போதும் என்னை மயக்கவே அணிந்தாலும் யாரிடமும் மயங்காத, சபலப்படாத என் மனம் சனாவிடம் மயங்க காரணம் என்ன?


நான் சந்தித்தவர்களின் அழகிற்கும் இவளுடைய அழகிற்கும் எப்போதும் ஒரு ஏற்றத்தாழ்வு இருக்கும். அவர்களோடு ஒப்பிடுகையில் சனாவின் அழகு ஒன்றும் இல்லை. ஆனால் இவளின் அழகே தன்னை சபலப்படுத்துகிறதே? யாரிடமும் தடுமாறாத நான் சனாவின் நெருக்கத்தில் தடுமாறுவது ஏன்? நான் கடுப்பாட்டை முழுதாக இழக்கக் காரணம் என்ன? அதுவும் இருபது வயதில் இருக்கும் இப்பெண்ணிடம். துணிவோடு இருக்கும் பெண்களை பிடித்த எனக்கு அனைத்திற்கும் பயந்தவள் நெருக்கம் என்னை பாதிப்பது ஏன்?


இவளுடைய மென்மையை ஆரம்பத்தில் பார்த்த நான் எள்ளிநகையாடி இருக்கிறேனே.....ஆனால் இப்போது அவளது மென்மையும் என்னை அவள் புறம் இழுக்கின்றதே...நான் மனதால் உறுதியற்றவனா?....' எனத் தன் போக்கில் யோசித்தவன் சனாவின் புறம் திரும்பினான். அவளோ சிறு பிள்ளை போல் அவன் அழுந்தப் பற்றியதால் உருவான சிகப்பைப் பார்த்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள். அதைப் பார்த்தவனின் மனம் வலிக்க காரை ஓரமாக நிறுத்தினான். அவள் மிரட்சியுடனே புரியாமல் அவனைப் பார்த்தாள்.


அவள் கையை எடுத்து தன் மடியில் வைத்தவன் அதை மென்மையாக வருடிவிட்டான். அதை உணர்ந்த சனாவிற்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு. இவனுக்கு இவ்வளவு மென்மையும் தெரியுமா? என ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள். "ரியலி சொரி பேபி. என் கோபத்தால உன்னை காயப்படுத்திட்டேன். சொரி பேபி" என தன் இதழ்களால் மருந்திட என்னவென்று கூற முடியா உணர்வுடன் சாத்விக்கையே வெறித்துக் கொண்டு இருந்தாள் சனா.


~ உன்னைக் காயப்படுத்தும்
அரக்கனாய் இருக்கிறேன்
நானடி
அதைப் பார்த்து வலியை உணரும்
உன் அன்பிற்குரியவனாகவும் இருப்பவனும்
நானடி
சிறு பெண்ணான உன்னிடமே
தோற்கிறதடி என் மனம் ~



சாத்விக் தன் செயலை எண்ணி மிகவும் நொந்துக் கொண்டான். அவளைப் பார்க்கவே அவனுக்கு சங்கடமாக இருந்தது. இதழொற்றலை முடித்து சனாவைப் பார்க்க அவளோ அவன் முகத்தையே வெறித்திருப்பதை உணர்ந்தவன், "எனக்கு கோபம் வந்தால் உன்னை ரொம்ப காயப்படுத்துறேன் பேபி. நீ கஷ்டபட்டால் எனக்கே கஷ்டமா இருக்கு. தயவு பண்ணி இனி என்னை கோபப்படுத்துறது போல நடந்துக்காத" என்று மென்மையாக அவளை அணைத்துக் கொண்டான். அவளோ யாருக்கு விருந்தோ என்ற வகையில் அமர்ந்து இருந்தாள்.

சாத்விக், "பேபி" என்று அவள் பூமுகத்தை கையிலேந்தியவன், "உனக்கு நான் தொடுறது பிடிக்க இல்லையா? இல்லை அறுவெறுப்பா இருக்கா?" என அவள் கண்கள் பார்த்துக் கேட்க, 'இல்லை' என இடம் வலது புறமாக அவன் கண்களைப் பார்த்தவாறே கேட்டான். "புரியல்லை பேபி" என அவன் கரகரத்த குரலில் வினவ, "அறுவெறுப்பா இல்லை. பட் இப்படி பேசுறது பிடிக்க இல்லை. எந்த பொண்ணும் தன்னோட அனுமதி இல்லாமல் தன்னை தொட்டு பேசுறதை விரும்ப மாட்டா. அதே போல தான் எனக்கும். நீங்க என்னமோ உங்க கேல்பிரன்டை போல என்னை டிரீட் பண்றது பிடிக்க இல்லை" என அவன் நயனத்தைப் பார்த்து வரவழைத்த தைரியத்துடன் பேசினாள்.

சாத்விக், "உன் நிலமை எனக்கு புரியிது பேபி. பட் என்னால் உன்னை தொட்டு பேசாமல் இருக்க முடியல்லை" என்றவன் தலையை அழுந்த கோதி சீட்டில் சாய்ந்தான். சனா நேரமாவதை உணர்ந்தவள், "வீட்டுக்கு போலாமா சேர்? அண்ணாவும், அபியும் வந்துருவாங்க" என்று தயக்கதுடன் அவன் முகம் பார்த்தாள்.
"ஒகே பேபி" என்றவன் காரை இயக்கி சனாவின் வீட்டிற்கு காரைச் செலுத்தி, அவள் வீடு அமைந்துள்ள வீதியின் ஆரம்பத்தில் நிறுத்தினான்.

'எங்க வீடு இங்கே இருக்கிறது அவருக்கு எப்படி தெரியும்' என அவள் யோசிக்க அதை கண்டு கொண்டவன், "உன்னை பத்தி அத்தனையும் எனக்கு தெரியும்னு முன்னாடியே சொன்னேனே பேபி" என்று புன்னகைத்தான்.

"நான் வரேன் சேர்" என்று சனா கார் கதவை திறந்து வெளியே சென்று அவள் நடக்க எத்தணிக்க, சாத்விக், "பேபி ஒரு நிமிஷம். உன் கிட்ட ஒன்னு சொல்லனும்" என்று நிதானமாக அவள் முகத்தைப் பார்த்தான். "என்ன சேர்?" என்றவள் அமைதியாக நிற்க, "நீ சொன்னியே அனுமதி கேட்காமல் தொட கூடாதுன்னு. அதுக்கு ஒரு சின்ன சொலியூஷன். நீ எனக்கு சொந்தமானவ பேபி. எனக்கு மட்டுமே சொந்தமானவ. உன்னை யாருக்குமே விட்டுக் கொடுக்க மாட்டேன். சொ இப்போ உன்னை உரிமையானவன்ற அடிப்படையில தொட்டு பேசலாம்னு நினைக்குறேன்" என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்திக் கூறி குறும்பாக கண்ணடித்து அவளிடம் இருந்து விடைப்பெற்றான்.

சனா அதிர்ச்சியில் நின்ற இடத்திலேயே நின்றாள். வெகுநேரம் அதே இடத்தில் சிலையாய் நிற்க தூரத்தில் ஒரு வாகனத்தின் ஹார்ன் ஒலி கேட்க, அதில் உயிர்த்தெழுந்தவள் வேகமாக தனது வீட்டை நோக்கி அவன் கூறியதை மனதில் அசைப்போட்டவாறே நடக்க ஆரம்பித்தாள். வீட்டினுள் மந்திரித்து விட்டவள் போல ஹாலில் இருந்த அவள் அத்தையைப் பார்க்காமல் தனது அறைக்குள் நுழைந்து கதவை அடைத்து கட்டிலில் விழுந்தாள்.

விசாலாட்சி அழைத்ததோ அவளை பார்வையால் தொடர்ந்ததையோ அவள் உணரவில்லை. விசாலாட்சி, 'இந்த பொண்ணுக்கு என்னாச்சு? ஒரு தினுசாவே சுத்துறாளே. முதல்ல கார்த்திக் கிட்ட சொல்லி மந்திரிச்சு விட சொல்லனும்' என புலம்பியவாறே தோட்டத்திற்கு சென்றார்.

சனா கட்டிலில் விழுந்தவள் அவன் கூறியதை நினைத்துப் பார்த்தாள். 'நீ சொன்னியே அனுமதி கேட்காமல் தொட கூடாதுன்னு. அதுக்கு ஒரு சின்ன சொலியூஷன். நீ எனக்கு சொந்தமானவ பேபி. எனக்கு மட்டுமே சொந்தமானவ. உன்னை யாருக்குமே விட்டுக் கொடுக்க மாட்டேன். சொ இப்போ உன்னை உரிமையானவன்ற அடிப்படையில தொட்டு பேசலாம்னு நினைக்குறேன்' என்பது அவள் காதலில் எதிரொலித்தது.

"இந்த மனுஷன் என்ன தான் சொல்ல வருது? எதையுமே நேரடியாவே சொல்லாமல் குதர்க்கமா பேசுறது. இங்க நான் தலையை பிச்சிக்கிட்டு இருக்க வேண்டியது" என திட்டி குளியலறைக்குள் சென்று குளித்து வந்தாள்.

அப்போது அவள் மொபைல் ஒலிற திரையைப் பார்த்தாள். அதில் "அண்ணா" என்று இருந்தது. உடனே அழைப்பை ஏற்றவள், "சொல்லு அண்ணா" என்று சந்தோஷமாய் பேசினாள். வீட்டில் இருக்கும் போது அவன் அழைத்தான் எனில் நிச்சயமாக வெளியே அழைத்துச் செல்வதற்காக என்பதை நன்கறிவாள். வெளியே சென்று வேடிக்கைப் பார்ப்பதில் சனாவிற்கு அலாதிப் பிரியம். அதற்காகவே அவளுக்கு இச் சந்தோஷம். இதில் சாத்விக்கை மறந்தே போனாள்.

"பட்டு குட்டி நீயும், அத்தையும் ரெடியாகி இருங்க. இன்னைக்கு நைட் வெளிய சாப்பிட்டு கொஞ்சம் திங்ஸ் வாங்க இருக்கு. அதை பர்சர்ஸ் பண்ணலாம். சீக்கிரம் ரெடியாகுங்க. டிரைவர் காரோட வந்துருவாரு. நான் அபியை கூட்டிட்டு ஷொபிங் மோலுக்கு போறேன்" என்று இன்முகத்துடன் கூற "ஒகே அண்ணா" என்று அழைப்பைத் துண்டித்தாள்.
சிறு குழந்தையென மாடியில் இருந்து துள்ளிக்குதித்து "அத்தை அத்தை" என்று கத்தியவாறே ஓடி வந்தாள்.

"என்ன சனா?" என்று விசாலாட்சி தோட்டத்தில் இருந்து வீட்டினுள் நுழைய, "அண்ணன் இப்போ ஷொபிங் பண்ணலாம்னு எங்க இரண்டு பேரையும் ரெடியாக சொன்னான். டினரையும் முடிச்சிட்டு வீட்டுக்கு வரலாம்னு சொன்னான். அபியை அண்ணாவே ஷொபிங் மோலுக்கு கூட்டிட்டு வரானாம். நமளோ டிரவைர் கூட வரட்டுமாம். வாங்க சீக்கிரம் ரெடியாகலாம்" என்று ஆர்வமாகக் கூற, "சரி மா. நான் போய் ரெடியாகுறேன்" என்று அவள் தலையை வாஞ்சையாய் தடவியபடி தனது அறைக்குள் நுழைந்தார்.

தன் அண்ணனும் அண்ணியும் இறந்த போது சனா எந்நிலமையில் இருந்தாள் என்பதை அவரும் கண்ணிற்கூடாகப் பார்த்தாரே. தந்தையின் அன்பிற்காக ஏங்குவதும், தாயின் அணைப்பிற்காக மருகியதையும் எவராலும் மறக்க முடியாதே. எத்தனை முறை தாய், தந்தையர் வேண்டும் என சண்டையிட்டு அழுது இருக்கிறாள்?

பாடசாலையில் பார்தர்ஸ் டே, மதர்ஸ் டே என்பவற்றிற்கு தனக்காக வர யாரும் இல்லையே என அழுத போது தானும் அழமுடியாமல் அவளையும் சமாதானப்படுத்த வழியில்லாது எத்தனை முறை திணறியிருக்கிறான் கார்த்திக்.. தன்னை நிலைப்படுத்திய பிறகே தங்கையை கவனிக்க ஆரம்பித்தானே.

தங்கையை அநாதை என்று கூற முடியாத வகையில் நடந்துக் கொண்டானே. தாயாகவும், தந்தையாகவும் மாறி அவளை துக்கத்தில் இருந்து வெளிக்கொணர்ந்தானே. தன் தங்கை கவலையுறக் கூடாது என்று அவள் கேட்கும் அனைத்தையும் செய்தாலும் அவள் வளர்ப்பை தவறவிடவில்லை. அதிக செல்லம் கொடுத்து அவளை தவறான பாதைக்கு வழியமைக்கவும் இல்லை.

ஒழுக்கம், விட்டுக்கொடுத்தல், அனைவரையும் மதிக்க வேண்டும் போன்ற நற்பண்புகளையும் ஆசானாக மாறி பயின்றுக் கொடுத்தானே. இவ்வாறு ஒருவன் தன் மகளிற்கு கணவனாக கிடைக்க கடவுளிடம் எப்போதும் நன்றி கூறுவதோடு சனாவிற்கும் நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டும் என்று பிராத்தித்தவாறே பழைய நினைவுகளில் இருந்து மீண்டு தயாராகச் சென்றார் விசாலாட்சி.

சனா நேரடியாக அறைக்குள் நுழைந்தவள் இன்பமாக கறுப்பு, ஆரெஞ்ச் நிற குருத்தி அணிந்து பொனிடேல் இட்டு தயாராகி வர விசாலாட்சியும் தயாராகி வெளியே வந்தார். அதே நேரம் காரும் வருகைத்தர அவர்கள் காரிலேறி ஷொபிங் மோலை நோக்கிச் சென்றனர். சாத்விக் நேராக தன் வீட்டிற்குச் செல்லாமல் கடற்கரைக்குச் சென்றான்.

அவனுக்கு மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் போது இவ்வாறான மனதிற்கு இனிமையான சூழலில் தன் மனதை அமைதிப்படுத்தி அடுத்து செய்ய வேண்டியவைகளை சரிவர திட்டமிடுவான். அதே போலவே இன்றும் சனாவைப் பற்றி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தான்.
கடற்கரையின் தென்றல் காற்று அவனைத் தழுவிச் செல்ல கண்கள் மூடி அதை அனுபவித்தான். சற்று நேரம் அதே போல் இருந்தவன் தன்னைச் சமன்படுத்தி ஒரு நிலைக்கு வந்தவன் சனாவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

அவளைப் பற்றி தெரிந்து கொண்டது முதல் அவளைப் பார்த்து இன்று நடந்தவற்றையும் எண்ணினான்.
காரில் அவனுள் அவன் கேட்டுக் கொண்ட அத்தனை கேள்விகளுக்கும் பதிலைத் தேடினான். இறுதியாக அவள் காரை விட்டு இறங்கிய போது அவளிடம் பேசியதையும் நினைத்தான்.

அப்போது அவன் மனம் கூறியதை மட்டுமே கேட்டான். தற்போது அவன் அதை மீள்பரிசோதனைக்கு உட்படுத்த அம்முடிவு தனது மனமும், மூளையும் ஒருமித்தே எடுத்த முடிவு என்பதில் அவனுக்கு ஐமில்லை.
அனைத்து பதிலிலும் இறுதியாக அவனுக்குத் தோன்றியது, 'சனாவை யாரிற்கும் விட்டுக்கொடுக்க முடியாது. அவள் தனக்கு மட்டுமே சொந்தமானவள். அவளை தன்னோடு தக்க வைக்க அவன் எல்லா வித தடைகளைக் கடக்க உடலாலும் மனதாலும் தயார்'என்பது. இம்முடிவில் அவன் மனம் நிம்மதி அடைந்து உள்ளது என்பதை அவனால் உணர முடிந்தது. இத்தனை நாட்களாக இல்லாமல் இனிமேல் தனக்கு மட்டுமே சொந்தமான ஒரு உறவு வரப் போகின்றது என்பதை நினைக்க நினைக்க சந்தோஷம் பீரிட்டு வழிந்தது அவனுக்கு.

"பேபி ஃபைனலி ஐம் கிளியர்... உன்னை யாரிற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது பேபி. நீ எனக்கு சொந்தமானவ. எனக்கு மட்டுமே மட்டும் சொந்தமானவ. நீ தான் என் மனைவி. மிஸஸ் சாத்விக் பர்வீன். அதுல மாற்றமே இல்லை. அதுக்காக உன்னை நான் காதலிக்கிறேனான்னு கேட்டால் பதில் தெரியாது. நீ எனக்கு வேணும்.
தெட்ஸ் இட். பட், உன்னை வச்சு உன் அண்ணனை பழிவாங்கனும்னு நினைச்சதை நான் மாத்திக்க மாட்டேன். அதுக்காக உன்னை நான் காயப்படுத்தப் போறதும் இல்லை. பிகோஸ் நீ காயப்பட்டால் உனக்கு வலிக்குதோ இல்லையோ எனக்கு ரொம்பவே வலிக்கும் பேபி.

நீ கஷ்டபட்டால் என்னால சந்தோஷமா இருக்க முடியாது. நீ சந்தோஷமாக இருந்தால் நான் சந்தோஷமாக இருப்பேன்னு என்னால் உணர முடியுது. சோ ஆட்டத்தை மாத்தலாம். ஆரம்பத்துல உன்னை ரொம்ப கஷ்டபடுத்தி உன் அண்ணனை துடிக்க வைக்கனும்.
உன்னை வச்சே உன் அண்ணனை அவமானப்படுத்தனும், கெஞ்ச வைக்கனும்னு பிளேன் பண்ணேன். இப்போ சேன்ஜ் பண்ணிட்டேன் பேபி. உன்னை கஷ்டபடுத்த கூடாதுன்னு நினைக்கிறேன். பட் உன் அண்ணனை நான் துடிக்க வைக்கனும்,பதற வைக்கனும், கெஞ்ச வைக்க போறேன். பண்ணிக் காட்டுறேன்.... அதுக்கு முதல்ல உன்னை கல்யாணம் பண்ணனும். அப்புறமா தான் இதை ஆரம்பிக்கனும். புதிய ஆட்டத்தோட நாளைக்கு உன்னை மீட் பண்றேன் பேபி" என முடிவெடுத்தான்.

மீண்டும் கடலன்னையைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகையைச் சிந்தியவன் காரை நோக்கி நடந்து காரை எடுத்தான். அவன் செல்வதைப் பார்த்த அங்கிருந்த ஒரு ஜோடிக் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. உடனடியாக தன் கையடக்கத் தொலைபேசியை எடுத்து ஒரு இலக்கத்திற்கு அழைத்தான்.

அப்புறம் அழைப்பை ஏற்க அழைத்தவன், "மச்சான் எங்கே இருக்க?" என்று குரலில் பதற்றத்தை வைத்துக் கேட்க, "இது என்ன புது கேள்வி? நான் எங்கே எப்போவும் இருப்பேனோ அங்கே தான் இருப்பேன்" என்றான் சகஜமாக. "மச்சான் நான் ப்ரவீனைப் பார்த்தேன்" என்று தன் முகத்தில் படிந்த வியர்வையைத் துடைத்துக் கூறினான்.

"எந்த ப்ரவீன்?" என்று எதிர்ப்புறம் அழைத்தவன் தேநீரை ஒரு மிடறு குடித்தவாறே கேட்க, "சாத்விக் ப்ரவீன்" என்றான் அழைத்தவன். அழைப்பை ஏற்றவனுக்கும் அதிர்ச்சியில் சிலையானான்.



 
Last edited by a moderator:

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
22188


அத்தியாயம் 7


சிறிது நேரம் இருபுறமுமே அமைதி நிலவ, இருந்தும் தன்னை சமன்படுத்திய அழைப்பை ஏற்றவன், "எங்கே பார்த்த அவனை?" என்றான் உணர்ச்சி துடைத்த குரலில்.


"மெரினா பீச்சுல.. அவன் ரொம்ப மாறி இருக்கான்..எப்போவுமே அவன் முகத்துல இருக்கிற துடுக்குத்தனம் இல்லை. அவனே மாறி இருக்கான். என்னை நெருங்காதேன்னு சொல்ற கண்ணு, என்னை பத்தி ஒழுங்காக உனக்கு தெரியல்லைன்னு சொல்ற அவன் திமிரு, முக்கியமா அலட்சியம் அவன் கிட்ட இருக்கு. அந்த ப்ரவீன் இல்லை இவன். இவன்.வேற டா" என்றான் பயந்த குரலில்.


"ஹாஹாஹா... அவனுக்கு பயபடுறியா?" என்று நக்கலாக எதிர்ப்புறம் இருந்தவன் சிரிக்க, "எனக்கு என்னமோ இவன் உண்மையை தெரிஞ்சுகிட்டு நம்மளை பழிவாங்க வந்திருக்கானோன்னு தோணுது. இத்தனை வருஷமா இல்லாமல் எதுக்கு இப்போ வரனும்" என்று அழைத்தவனும் விடாமல் கூற, "மறுபடியும் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு இங்கிருந்து ஓடனும்னு விதி இருந்தால் நாம என்னாடா பண்ண முடியும்? என் கையால் சாவுன்னு எழுதி வச்சிருக்கோ" என்று அழைப்பை ஏற்றவன் எகத்தாளமாய் சிரிக்க, "இவன் அடிப்பட்ட புலி டா. அடிச்சவன் கையில மாட்டினால் குதறி எடுத்துடுவான். நாம ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது" என்றான் எச்சரிக்கையாக அழைத்தவன்.


"ரொம்ப பயபடாத அவனால ஒரு மண்ணும் புடுங்க முடியாது. எங்களை நெருங்கவும் விட மாட்டேன். அவன் என்னை நெருங்க முன்னாடி அவனை மறுபடியும் அவமானப்படுத்தி இந்த நாட்டை விட்டே துரத்திக் காட்டுறேன்டா.. என்ன மறுபடியும் ப்ரவீன், ஆர்யன் யுத்தம் பார்க்க வேண்டி இருக்கும்" என்று வஞ்சமாய் பேசி நண்பனுக்கு ஆறுதல் அளித்து அழைப்பைத் துண்டித்தான் மர்மநபர். தற்போதைய சாத்விக்கைப் பற்றி அறியாமல்.


'வெல்கம் பெக் ப்ரவீன். உன்னை எதிர்பார்க்கவே இல்லை. சரி விடு உன் வாழ்க்கை பூரா அவமானத்துலேயே முடியனும்னு விதி இருந்தால் நாம என்ன பண்ண முடியும்?' என்று எள்ளலாய் சிரித்தவன் அடுத்த நொடி அவன் முகம் கொடூரமாய் மாறியது. "என் கிட்ட மோதி ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட ப்ரவீன். உன்னை அழிக்காமல் விடமாட்டேன் டா. என் ஆட்டத்தை பார்க்க தயாராக இரு. இவளோவே பண்ணிட்டேன். இதுக்கு மேலேயும் பண்ண மாட்டேனா" என குரூரமாய் சிரித்தான்.


இவர்களின் திட்டத்தின் விளைவால் அதிகமாக பாதிக்கப்படப்போவது சனா என்பதை அவளை நேசிக்கும் கார்த்திக்கோ, சாத்விக்கோ அறியவில்லை. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதை அந்த மர்மநபரும் மறந்து போனார். விதியின் கோரமான விளையாட்டு இனிமேல் ஆரம்பிக்க இருக்கின்றதை எவருமே அறியாமல் கார்த்திக் அபியைப் பார்க்கவும், சனா ஷொபிங் மோலை நோக்கிச் செல்வதோடு, சாத்விக் தெளிவான முடிவுடன் அடுத்து செய்ய வேண்டியதை திட்டமிட்டு வீட்டை நோக்கியும் சென்றான்..


அபியை அழைத்து வருவதற்காக நேரடியாக கார்த்திக்கே சென்றான். காரில் இருந்து இறங்கி ஸ்டைலாக அதிலேயே சாய்ந்து நின்று இருந்தான். சங்கீத வகுப்பை முடித்து சோர்வாக வெளியே வந்த அபி தன்னவனை முதலில் பார்த்து இன்பமாக அதிர்ந்தாள். அவனை நிச்சயமாக அவள் எதிர்பார்க்க இல்லை என்பதை அவளுடைய அதிர்ந்த முகமே அவனுக்கு உணர்த்தியது. "மாமா" என்று சந்தோஷமாக அவனை நெருங்க, "போலாமா?" என்றான் கண்களில் குறும்பு மின்ன. அபி, "எங்கே மாமா? ஆமா டிரவைர் எங்கே? அவரு தானே வராரு? ஏதாவது முக்கியமா வெளிய போறோமா?" என்று ஆர்வமாய் கேட்க, சிரிப்புடன் ஆம் என்று தலை அசைத்தான்.


"சூப்பர் ரொம்ப நாளாச்சு எல்லாரும் சேர்ந்து வெளியில போய். நல்லா என்ஜோய் பண்றோம்..செம்ம பிளேன் மாமா" என்று சந்தோஷ மிகுதியில் அவனை அணைத்துக் கொள்ள அவனோ அசையாது அமைதியாய் நின்றான். அவனிடம் எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லாமல் இருக்க கார்த்திக்கின் முகம் பார்த்தாள் அவன் செல்லம்மா. அப்போதே அவன் முகத்தில் மயக்கமும், கிறக்கமும் போட்டியிடுவதைக் கண்டவள் வேகமாக விலக நினைக்க அவள் கையை இறுக பிடித்து காதோரம், "நாம வெளிய இருக்கோம் செல்லம்மா. அதை மறக்காத" என்று கண்ணடித்து காரிற்குள் அழைத்துச் சென்றான்.


அவன் மீசை காதுமடலில் உரசியதால் உண்டான குறுகுறுப்பு இன்னும் தங்கியிருக்க அவள் முகமோ வெட்கத்தால் தக்காளிப் பழம் போல் சிவந்து இருந்தது. அவள் முன்னிருக்கையில் அமர்ந்து வெட்கப்படுவதைப் பார்த்த கார்த்திக் அவள் நாடியை விரல் கொண்டு நிமிர வைத்து அவளுடைய முகம் பார்த்தான். "இப்படியெல்லாம் வெட்கப்படாதடி" என்று முன் நெற்றியில் இதழ்பதிக்க இதுவே இருவரின் காதலிற்கும் போதுமானதாய் இருந்தது. அதற்கும் அவள் முகம் செம்மைப் பூச அவன் மார்பில் தஞ்சம் அடைந்தாள். "அடியேய் என்னை ரொம்ப படுத்துற செல்லம்மா. சீக்கிரமா கல்யாணம் பண்ணலாம்" என்று அணைப்பை இறுக்கினான்.


அவன் கூற்றில் கிறக்கத்தில் இருந்து தெளிந்தவள், "முதல்ல சனா கல்யாணம் முடிஞ்ச அப்புறமா தான் எங்க கல்யாணம்னு முடிவு பண்ணிருக்கோமே மாமா. அது வரைக்கும் பொறுத்துக்கொங்க" என்று அன்பாய் கூறியவளைப் பார்த்து மந்தகாசமாய் சிரித்து வைத்தான். தன் மனதில் காதல் பீறிட்டு வழிந்து காதலனின் மேல் கொள்ளை ஆசை இருந்தாலும் அவனுடைய குடும்பத்திற்காக தங்கள் சந்தோஷத்தை ஒதுக்கி வைக்கும் இந்த தேவதை தனக்கு கிடைக்க இறைவன் வரமளித்து இருக்க வேண்டும் என பெருமை பொங்க பார்த்தான்.


அபி, "என்ன மாமா அப்படி பார்க்குறிங்க?" என்று அவனை விட்டு விலகாமலேயே அவனைப் பார்க்க, "நதிங் செல்லம்மா. நீ சொன்னதை நினைச்சுப் பார்த்தேன். சனா கல்யாணம் முடிஞ்ச அப்பொறமாவே நாம கல்யாணம் பண்ணலாம்" என்று நெற்றியில் இதழ் பதித்து விலகினான். நாளையே அவர்களின் திருமணத்திற்கான முதல் படி நடவடிக்கை எடுக்க இருக்கும் சம்பவம் நடைபெறுவது தெரியாமல் தங்கள் கணக்குகளிலேயே மூழ்கி இருந்தனர். "இப்போ போலாமா? இல்லை வீட்டுக்கு போய் பிரஷ்ஷாகி போலாமா?" என்று அபி கார்த்திக்கின் முகத்தில் தெரிந்த களைப்பைப் பார்த்துக் கேட்டாள்.


"உனக்கு கஷ்டமா இருக்கா செல்லம்மா?" என்று அவன் தன் துணையை எண்ணி கூற, சிரிப்புடன் அபி, "நாம போய் பிரஷ்ஷாகிட்டு போலாம். நான் சனாவுக்கு இன்போர்ம் பண்ணிடுறேன்" என்று அவனுக்காக உடனே சனாவிற்கு அழைத்து வீட்டிற்குச் சென்று பிரஷ்ஷாகி வருவதாகக் கூற இருவரின் நிலையையும் எண்ணியவள் உடனே சம்மதத்தையும் கூறினாள். அபி, கார்த்திக் இருவருமே வீட்டை நோக்கி பயணிக்க, சனாவும், விசாலாட்சியும் ஷொபிங் மோலை சுற்றினர். அங்கே இருந்த பூக்கடைக்குச் சென்றவள் ஒவ்வொரு பூவையுமே இரசித்தாள். அப்போது தான் அபி அவளிற்கு அழைத்தது. இதை விசாலாட்சியிடமும் கூறினாள்.


சனா, "அத்தை அபி, அண்ணா இரண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல எங்க ஸ்டடீஸ் முடிஞ்சுறும். அடுத்து வர்ர முதல் முகூர்தத்துலேயே அவங்க கல்யாணத்தை வச்சுக்கலாமா?" என்று தன் எண்ணத்தை வெளியிட, "வயசுப் பொண்ணு உன்னை வச்சிக்கிட்டு அண்ணாவுக்கு கல்யாணம் பண்றது நல்லா இருக்காதுடா தங்கம். உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து பிரம்மாண்டமா கல்யாணத்தை நடத்தி வச்சிட்டு அபி, கார்த்திக் கல்யாணத்தை பார்க்கலாம். நீயும், உன் புருஷனும் சேர்ந்தே அவங்க கல்யாணத்தை முன்னின்னு நடத்துங்க" என்றார் அவ்வயதான பெண்மனி.


இவர் கூறியது போல் சனாவின் திருமணம் நடைப் பெறப் போவது இல்லையென்று ஒருவன் அவளை வற்புறுத்தி அவள் விருப்பம் இல்லாமலேயே திருமணம் செய்துக் கொள்வான் என்றோ அறியாமல் பேச அவர்களைப் பார்த்த விதி கைக் கொட்டிச் சிரித்தது. விசாலாட்சி தன் கனவைக் கூற அவளுடைய திருமணம் என்ற போது அவள் கண்முன்னே அனுமதியின்றி சாத்விக் தோன்றி மறைந்தான். அவள் எண்ணத்தை உணர்ந்தவள் மிரண்டு விழித்து, 'இது என்ன அபத்தமான எண்ணம்?' என்று தன்னையே கடிந்துக் கொண்டவள் மேற்கொண்டு யோசிக்காமல் தன் அத்தையை அழைத்துக் கொண்டு அடுத்த கடைக்குள் நுழைந்தாள்.


சாத்விக் தன் வீட்டிற்குச் சென்று குளித்து வந்தவன் தனக்கான உணவை தயாரித்து அறைக்கு வந்தான். சனா தன் மனைவி என்று நினைக்கவே தித்திப்பாய் உணர்ந்தான். உணவை முடிக்க அவனை ஒரு டிடெக்டிவ் அழைத்தார். அதை அவன் ஏற்க எதிர்முனையில், "சேர் சனா மேடம் ஷொபிங் மோல் வந்திருக்காங்க. அவங்களும், அவங்க அத்தையும் மட்டும் தான் இருக்காங்க. அபி மேடமோ, கார்த்திக் சேரோ இல்லை" என்று சனாவை விட இரண்டடி தள்ளி நின்று அவளைப் நோட்டமிட்டவாறே செய்தியை தெரிவிக்க, "ஒகே. அவளை பத்துரமா பார்த்துக்க. தப்பான எண்ணத்தோட யாரும் அவளை நெருங்க கூடாது. நான் ஏற்பாடு பண்ண கார்ட்ஸ் அவங்க பாதுகாப்புக்காக இன்னும் பத்து நிமிஷத்துல அங்க வந்துருவாங்க" என்று அழைப்பைத் துண்டித்து உடனடியாக பாதுகாவளர் சிலரை அனுப்பி வைத்தான்.


'ஆர்யன் எந்த பாதுகாப்பும் இல்லாமல் அவனும் வராமல் எதுக்கு சனாவை வெளியே அனுப்பி வச்சிருக்கான்' என்ற யோசணையுடன் லெப்டொப்பை திறந்த சனாவின் வீட்டில் பூட்டப்பட்டு இருந்த கமெரா மூலமாக அவ்விடத்தை நோட்டம் விட்டான். அப்போது கார்த்திக்கின் கார் வீட்டினுள் நுழைவதைக் கண்டு கொண்டான். அபியும், கார்த்திக்கும் காரிலிருந்து இறங்கி சிரித்தவாறே வீட்டினுள் நுழைந்தனர். சுமாராக முப்பது நிமிடங்கள் கடந்த பின் மீண்டும் கார்த்திக், அபி இருவரும் செல்வதைப் பார்த்தான். 'பிரஷ்ஷாக வந்திருக்காங்களா?....ஆனாலும் என் பொன்டாட்டியை கவனிக்காமல் விட்டியே ஆர்யன்' என்று உள்ளுக்குள் திட்டினான்.


மறுபடியும் டிடெக்டிவிற்கு அழைத்தவன், "சனா என்ன பண்றா?" என்று ஆர்வம் மோலோங்கக் கேட்க, "கொலுசு பார்த்துட்டு இருக்காங்க சேர். நிறைய டிசைன்ல எதை வாங்குறதுன்னு குழம்பிட்டு இருக்காங்க" என்றவன், "நான் மேமை போடோ எடுத்து உங்க வட்சப்புக்கு அனுப்பிட்டேன் சேர்" என்றான். அதை சாத்விக்கும் பார்க்க அவள் கையில் இருந்த ஒரு கால் கொலுசில் இரண்டாவதாக இருந்தது ஏனோ அவன் மனதிற்கு பிடித்துப் போனது. அவள் உள்ளங்கையில் வைத்திருக்கும் போதே அது அத்தனை அழகாக இருக்க நிச்சயமாக அவள் வாழைத் தண்டு காலிற்கும் எடுப்பாக இருக்கும் என்று உறுதியாக நினைத்தான்.


உடனடியாக தன் தனிப்பட்ட பிரத்யோக எண்ணிலிருந்து தன் பேபியிற்கு அழைப்பை விடுத்தான். சனாவின் மொபைல் ஒலிற புது எண்ணாக இருந்தது. சாத்விக்கின் என்னை சேமிக்காததால் இது சாத்விக்கின் எண் என்று அவளால் தெரிந்துக் கொள்ள முடியவில்லை. அவள் புருவம் சுருக்கி யோசிக்க, அதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டது. திடீரென்று மெசேஜ் வர, அதை திறந்து பார்த்தாள். அது தற்போது அழைக்கப்பட்ட எண்ணில் இருந்து வந்ததை கண்டுகொண்டாள்.


'நான் வேண்டாம் என்று
தவிர்க்கிறாயா?
இல்லை
என் மீதுள்ள பிடித்தமின்மையால்
தவிர்க்கிறாயா?
எதுவானாலும் உன்னை
கவர்ந்து செல்பவன்
நானடி'

இப்படிக்கு
உன்னை கவர்ந்து செல்ல நினைக்கும் உன் அரக்கன் " என்று இருந்தது.


அவளுடைய ரோஜா இதழ்கள், "சேர்" என்று முணுமுணுத்தன. 'இவர் நம்பரை முதல்ல சேவ் பண்ணனும். ஆமா இவரு பேர் என்ன?' என யோசிக்க, 'அடிப் பாவி பேர் தெரியாமலா உன்னை கிஸ் பண்ண எல்லாம் விட்ட?' என்று அவள் மனசாட்சி அவளைப் பார்த்து காரி துப்பியது. "இவங்க கிட்ட முதல்ல பேரை கேட்கனும்" என நினைத்துக் கொண்டாள். 'நீயே அவனுக்கு ஒரு பேர் வைக்கலாமே' என மனசாட்சி முன் வந்து ஒரு யோசணை கூற 'இது கூட நல்லா இருக்கே' என்று தானே முடிவெடுத்தாள்.


'என்ன பேர் வைக்குறது?' என்று தீவிரமாக யோசிக்க அவள் சிந்தனையை கலைத்தது அவள் மொபைல் ஒலி. விசாலாட்சி தீவிரமாக அனைத்து டிசைன்களையும் பார்த்ததால் சனாவை கவனிக்கவில்லை. சனா அழைப்பை ஏற்று, "சேர்" என்று அழைக்க, "எந்த கொலுசு வாங்குறதுன்னு குழப்பமா இருக்கா பேபி" என்று குழைவாகக் கேட்க, அக்குரல் இவளை ஏதோ செய்தது. அவ் உணர்வை மறைத்து, 'அவங்களுக்கு எப்படி தெரியும்?' என்று தலையை அசைத்து சுற்றும் முற்றும் சாத்விக்கைத் தேடினாள் சனா. "என்னை தேடுறியா பேபி? நான் அங்கே இல்லை. பட் உன் ஒவ்வொரு அக்டிவிடியும் எனக்கு தெரிய வந்துரும் பேபி" என்றான் பெருமிதமாக.


பெருமூச்சை இழுத்து விட்டவள், "இப்போ என்ன பண்ணனும் சேர்? எதுக்கு போன் பண்ணிங்க?" என்று விசாலாட்சிக்கு கேட்காமல் மெல்லிய குரலில் வினவ, "உன் குழப்பத்தை தீர்க்க உதவி பண்ண நினைச்சேன்" என்றான் உற்சாகமாக. "எப்படி?" என்று அதே போல் மெல்லிய குரலில் கேட்க, "என் பேபிக்கு எது பொருத்தமா இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். சோ, நானே உனக்கான கொலுசை சிலெக்ட் பண்ணிட்டேன். உன் கையில லெப்ட் டு ரைட் பார்க்கும் போது செகன்டா சிம்பளான டிசைன்ல ஒரு கொலுசு வச்சிருக்கியே, அது உனக்கு சூப்பரா இருக்கும்" என்றான் இரசிக்கும் குரலில்.


அவன் கூறியதை பார்த்தாள். அவளுக்குமே அது பிடித்திருக்க, 'அவன் சொன்னா நான் கேட்கனுமா?' என்று நினைக்க அவள் எண்ண ஓட்டத்தை புரிந்த அவள் நாயகனோ, "உனக்கு அதை தவிற வேற சொயிஸ் இல்லை பேபி. நீ வேற வாங்கினாலும் அதை போட முடியாது. நான் போடவும் விட மாட்டேன் பேபி. என்னை பத்தி உனக்கு நல்லா தெரியும். சோ என்ன பண்ணலாம்னு நினைக்குற?" என்று நிதானமாக ஆனால் ஒரு வித அழுத்தமான குரலில் கேட்க, "அதையே சிலெக்ட் பண்றேன்" என்று ஒப்புக் கொண்டு காதிலிருந்து தொலைப் பேசியை எடுத்து திரையைப் பார்த்து நாக்கை துருத்திக் காட்டி அவன் கூறியதை பெக் செய்யக் கூறினாள்.


"எடுத்துட்டேன் சேர்" என்று சனா தன் கடுப்பை மறைத்துக் கூற "நீ பழிப்பு காட்டினதையும் நான் பார்த்துட்டேன் பேபி" என்று அட்டகாசமாய் சிரித்தான். "நீ இப்படி சேட்டை பண்ணுவேன்னு எனக்கு தெரியாம போச்சே" என்று டிடெக்டிவ் அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்தவாறே போலியாய் வியக்க, 'தன்னைக் கண்டுகொண்டானே' என்று மொபைலைக் கொண்டே தன் தலையில் அடித்துக் கொண்டாள். "தலையில அடிச்சுக்காத பேபி. அப்புறமா உன் நெத்தி வீங்கி வந்துரும். உன்னால அந்த வலியை கூட தாங்க முடியாது" என்று கிண்டலும் அக்கறையுமாய் கூறினான்.


தூரத்தில் அபி, கார்த்திக் இருவரும் வருவதைப் பார்த்த சனா, "நான் அப்புறமா பேசுறேன் சேர். அண்ணா வந்துட்டான்" என்று அழைப்பைத் துண்டித்தாள். 'ஆர்யன் ஒரு பத்து நிமிஷம் என்னை மனசு நிறைஞ்சு சிரிக்க விடமாட்டியா? இருக்குடா உனக்கு. முதல்ல சனாவை கல்யாணம் பண்றேன். அடுத்து உன்னை வச்சு செய்றேன்' என்று பல்லைக் கடித்தான் சாத்விக். இவனுக்கு மர்ம நபரால் காத்துக் கொண்டிருக்கும் ஆப்பு தெரியாமல். அபி, கார்த்திக் இருவருமே விசாலாட்சி, சனாவுடன் இணைந்துக் கொண்டனர். அபியிற்கு கொலுசை கார்த்திக்கே தெரிவு செய்தான்.


நால்வரும் நடக்க கார்த்திக், "நாளைக்கு நம்ம வீட்டுக்கு நகுல் மாமாவும், அஞ்சலியும் வர்றாங்க. அத்தை லஞ்ச் ஏற்பாடு பண்ணனும். தேவையான திங்கசை வாங்கிட்டு. உங்க எல்லாருக்கும் தேவையானதையும் வாங்கிட்டு டினரை முடிச்சிட்டு வீட்டுக்கு போலாம்" என்றான். அஞ்சலி வருவதாகக் கூறவும் சனா, அபி இருவரின் முகங்களும் சுருங்கி விட்டது. அவர்கள் அஞ்சலியின் கர்வத்தையும், குத்திக் காட்டலையும் பற்றி நன்கு அறிவார்களே. கார்த்திக்கிற்காக இருவருமே அமைதி காத்தனர்.


விசாலாட்சி, கார்த்திக் இருவரும் விருந்திற்கு தேவையானதை வாங்கச் செல்ல மற்ற இருவரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். சனா, "அபி அஞ்சலி அக்கா என்ன சொன்னாலும் கொஞ்சம் பொறுத்துக்கோ. அண்ணாவுக்காக பிளீஸ்" என்று தோழியிற்கு நாளைய கலக்கத்தை மறைத்து கூற, "லூசு, நான் எதையும் பெரிசா எடுத்துக்க மாட்டேன். நீ ஃபீரியா விடு" என்று ஆதரவாகப் பேசினாள். ஏனோ இருவருக்குமே மனதில் ஒரு நெருடல் இருந்துக் கொண்டே இருந்தது. கார்த்திக், விசாலாட்சி வேலையை முடித்து வர வேறு சில பொருட்களையும் வாங்கி, இரவு உணவையும் முடித்துக் கொண்டு தங்கள் இல்லத்திற்கு சென்றனர்.


அதன் பிறகு இருவருமே அந் நெருடலை மறந்து போயினர். அனைவரும் தங்கள் அறைக்குள் தஞ்சம் புக சனா அறைக் கதவை தாழ்பாழிட்டு சோர்வுடன் சொகுசு மெத்தையில் விழுந்தாள். அவளிற்கு அழையா விருந்தினராக சாத்விக் கண் முன் தோன்ற 'இவன் வேற' என எழுந்தாள். அப்போதே அவனுக்கு தான் இன்னும் ஒரு பெயரையும் வைக்கவில்லை என்பதை உணர்ந்தாள். 'என்ன பெயர் வைக்கலாம்?' என்று தீவிரமாக யோசிக்க அவள் மண்டையில் பல்ப் எரிந்தது.


"காட்டுப் பையலே" இது கரெக்டா இருக்கும். காட்டுல இருக்கிற மனிஷங்களுக்கு வெட்கம் இருக்காதாம். சில இடங்களை மனிஷனுக்கு தொந்தரவு கொடுக்குற காட்டுவாசிகளும் இருக்காங்க. சோ அந்த வகையில என்னை தொந்தரவு கொடுக்குற காரணத்தால காட்டுப் பையலேன்னு அழைக்கிறேன்" என்று தன்னுள்ளே பேசிக் கொண்டவள் கற்பனையில் காட்டு வாசியின் ஆடையில் சாத்விக்கை நினைக்க, சிரிப்பு பீரிட்டு வர சத்தமாகவே சிரித்தாள்.


இன்றே இது போன்ற மனநிறைவான சிரிப்பிற்கு இறுதி தினம் என்று அறியாமல் சந்தோஷமாக இருந்தாள் அப்பேதை. நாளை முதல் அனைவரின் வாழ்விலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் முதல் நாளாக இருக்க விதி அடுத்த நாள் விடியலை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தது.


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
22234





அத்தியாயம் 8



கதிரவன் தன் செந்நிறக் கதிர்களை உலகிற்கு பரவச் செய்ய அதில் வெட்கமுற்ற நிலாமகள் அவளை தன்னை மேகங்களிற்குள் மறைத்துக் கொண்டாள். அவ் காலை வேளையில் தனது கையடக்கத் தொலைப் பேசியின் அலார்ம் ஒலியில் கண்விழித்தாள் சனா. 'அவளோ சீக்கிரமா விடிஞ்சிருச்சா?' என்று எழுந்து பல்கனிக் கதவைத் திறந்து தன்னை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தும் கதிரவைனைப் பார்த்து, இந்த சூரியனுக்கு இது அநியாயமா தெரியல்லியா? ஐ ஹேட் யூ சூர்யா' என்று முகத்தை சுருக்கி திட்டினாள். விடிந்தும் விடியாமல் இருக்கும் வேளையில் இத்தருணத்தில் இலை, பூக்களில் இருக்கும் பனி துளிகள் தொட்டும் தொடாமல் இருந்தன.


அதைத் தொட்டுப் பார்க்கும் ஆவல் ஏற்பட வேகமாக குளியலறைக்குள் புகுந்து தன்னைச் சுத்தப்படுத்தி வேகமாக தோட்டத்திற்கு சென்றாள். இவள் எழுந்ததில் இருந்து சூரியனை திட்டி மீண்டும் அறைக்குள் சென்றது வரை தனது லெப்டொப்பில் ஜிம்மில் வேர்கவ்ட் செய்துக் கொண்டே பார்த்தவனின் இதழ்கள் புன்னகையைப் பூத்தன. 'பேபி, நான் உன்னை பேபின்னு சொல்றதுல தப்பே இல்லை' என்று தன்னுள்ளே பேசி தன் வியர்வையை துவாயால் துடைத்துக் கொண்டான். தோட்டத்திற்கு சென்ற சனா ஒவ்வொரு துளி பனி துளியாய் தொட்டுத் தொட்டு இரசித்தாள். சற்று வெளிச்சம் நன்றாகவே எட்டிப் பார்க்க தனது மாயக்கண்ணன் இருந்த இடத்திற்கு சென்றாள்.


"கிருஷ்ணா என் கண்ணுக்கு இன்னைக்கு நீ அழகா தெரியுற. இன்னைக்கு நகுல் மாமா, அஞ்சலி அக்கா இரண்டு பேரும் வீட்டுக்கு வராங்க. எந்த பிரச்சனையும் வரக் கூடாது. பிளீஸ் கிருஷ்ணா உன் பக்தைக்காக பார்த்து பண்ணு. ஐ லவ் யூ கிருஷ்ணா" என்று கைக் கூப்பி வணங்கியவள் இறுதியில் தன் வலது கையை குவித்து அதில் இதழ் பதித்து அதை கிருஷ்ணனின் சிலையின் கன்னத்தில் ஒற்றினாள். இதையும் பார்த்த சாத்விக், 'எனக்கு இது வரைக்கும் ஒரு தடவையாவது முத்தம் கொடுத்து இருக்காளா இந்த பேபி? கிருஷ்ணா நீ கொடுத்து வச்சவன். என் பேபி நீ கேட்காமலேயே முத்தம் கொடுக்குறா' என்று மாயக் கண்ணனின் மீது பொறாமை கொண்டான்.


சனா தன் வேண்டுதலை முடித்து விட்டு திரும்ப அங்கே புன்னகையுடன் ஜொகிங் முடித்து விட்டு மார்பிற்கு குறுக்காக கையை கட்டி அவளை பார்த்தான் கார்த்திக். சனா, "என்ன அண்ணா புதுசா பார்க்குற?" என்று புருவமுயர்த்தி வினவ, "என் தங்கச்சி ரொம்ப பெரிய பொண்ணா ஆகிட்டாளே, ரொம்ப பெரிசா வேண்டுதலும் வைக்குறா. அதான் என்னன்னு விசாரிக்கலாம்னு வந்தேன்" என்றான். "அது ஒன்னும் இல்லை அண்ணா. எப்போவும் போல தான். இன்னைக்கு அஞ்சலி அக்கா, நகுல் மாமா வராங்களே அண்ணா. எல்லா அரேன்ஞ்ச்மன்ட்சும் சரியா இருக்கா?" என்று தன் பேச்சை திருப்பினாள்.


"ஆமா டா. எல்லாம் கரெக்டா இருக்கு. இன்னைக்கு சீக்கிரமா வந்திரு. அபிக்கும் கிளாஸ் இல்லை. இரண்டு பேருக்கும் கார் அரென்ச் பண்ணிடுறேன் வந்துருங்க" என்று தலையை வருட "ஒகே அண்ணா" என்று அவனை அணைத்துக் கொண்டாள். அபி, "உங்க இரண்டு பேரோட பாசமலர் படம் முடிஞ்சிருச்சுன்னா வாங்க சாப்பிடலாம்" என்று சிரிப்புடன் அழைக்க, அண்ணனும், தங்கையும் புன்னகையுடன் உள்ளே சென்றனர். சாப்பிட்டு முடித்தவர்கள் தங்கள் வேலைகளை கவனிக்கச் சென்றனர். சனா குளித்து முடித்தவள் கோலேஜிற்கு தயாராக அவள் கையடக்கத் தொலைபேசி ஒலித்தது.


அதன் திரையைப் பார்த்தவள் 'காட்டுப் பையலே' என்று இருந்தது. 'இந்த ஆள் இப்போ எதுக்கு போன் பண்றாரு?' என்று யோசணையுடன் அழைப்பை ஏற்க, "குட் மோர்னிங் பேபி" என்ற சாத்விக்கின் உற்சகக் குரல் எதிர்ப்புறம் கேட்டது. "குட் மோர்னிங் சேர்" என்று இவளும் பதில் அளித்தாள். "இன்னைக்கு நீ என் ரூமுக்கு கண்டிப்பா வருவ. நேத்து நீ வாங்கின கொலுசை எடுத்து வா. நானே போட்டு விடுறேன்" என்று அவன் சந்தோஷமாகக் கூற, "சேர் நான் அடிக்கடி வந்தால் மத்தவங்க தப்பா பார்ப்பாங்க சேர்" என்று பதறயபடி கூற, "கூல் பேபி. நீ மட்டும் இல்லை. இன்னும் சில பேர் வருவாங்க. அதனால பயபடாத" என்று ஆறுதல் அளித்து அழைப்பைத் துண்டித்தான்.


சனா யோசணையுடன் கீழே தயாராகி வர அபியும் தயாராகி வந்தாள். கார்த்திக், விசாலாட்சி இருவரிடமும் கூறி விடைப் பெற்றனர் தோழிகள் இருவரும். கல்லூரிக்குள் நுழைய அவர்களை நேற்று போல் கண்ணாடிச் சாரளம் வழியாக வெளியே பார்த்துக் கொண்டு இருந்தான் சாத்விக். தோழிகள் இருவரும் வகுப்பிற்குள் நுழைய சிறிது நேரத்தில் வகுப்புக்கள் ஆரம்பித்தன. இடைவேளையின் போது ஒரு பேராசிரியர் வகுப்பிற்குள் நுழைய வகுப்பில் சலசலப்பு ஏற்பட்டது.


"ஹலோ ஸ்டூடன்ட்ஸ். இன்னும் நாலு நாளில் மும்பைல ஆர்ட் கம்படிஷன் நடக்குது. சோ நம்ம கோலேஜ் சார்பா மூன்று பேர் பார்டிசிபேர்ட் பண்ணனும். இங்கே இருந்து சனா பார்ட்சிபேர்ட் பண்ணுவா. நீ பிரின்சிபல் ரூமுக்கு போமா. வேறு யாராவதுக்கும் அதுல பார்டிசிபேர்ட் பண்ணனும்னு இருந்தால் என்னை வந்து சந்திச்சுக்கொங்க" என்று மற்ற மூவரையும் அழைக்கச் சென்று விட்டார். சனா தன்னுடைய பேர்கிலிருந்து அபி அறியாமல் தான் வாங்கிய கொலுசை எடுத்து பர்சுடன் எடுத்துச் சென்றாள். அவள் மனம் முழுவதும் குற்ற உணர்ச்சியில் தவித்தது.


சனாவுக்கு தைரியம் அளித்தே அபி அனுப்பி வைத்தாள். அவள் சென்ற சிறிது நேரத்தில் மற்ற இருவருமே வந்தனர். அவர்கள் இருவரும் ஆண்களாக இருந்தனர். மூவரும் பிரின்சிபலுடன் பேசிய பிறகு அவர்களை சாத்விக்கின் அறைக்கு அழைத்துச் சென்றார். சாத்விக் மூவரையும் பார்த்து வாழ்த்துக்களைக் கூறினான். பின் சனாவிடம், "மிஸ் சனா, எனக்கு இன்னொரு டிரொயிங் வேணும். கேன் யூ டரோ இட்? அது எப்படி வரையனும்னு நான் எக்ஸ்பிளைன் பண்றேன். அதை தத்ரூபமா வரைய வேணும்" என்றவன் பிரின்சிபலை நோக்கி, "மிஸ் சனா கிட்ட இதை பத்தி பேசலாம் இல்லையா சேர்?" என்று வினவ, "யா சுயர் சேர்" என்று மற்ற இருவரையும் அழைத்துச் சென்றார்.


அவர்கள் சென்றவுடன் சாத்விக், "பேபி" என்று அணைத்துக் கொண்டு மூக்குத்தியில் இதழ் பதித்தான். "சேர்" என்று அவனை விலக்க போராட, "உனக்கு இதே வேலையா போச்சு. எப்போ பாரு இதே டயலோக். இதே அக்ஷன்" என்று சலித்துக் கொண்டாலும் அவளை விட்டு விலகவில்லை. அவன் கூறியதைக் கேட்டு சனாவின் இதழ்கள் புன்னகைத்தன. "சேர் நான் போகனும். எப்படி டிரோயிங்கை வரையனும்னு சொன்னா நானும் வரைவேன்" என்று அவசரப்படுத்த, "நான் அதை நைட்டுக்கு மொபைல்ல சொல்றேன். இப்போ கொலுசை போட்டு விடுறேன்" என்று அவளை விலக்கி ஒரு காலை மடித்து தரையில் அமர்ந்தான்.


"சேர்., என்ன பண்றிங்க? எந்திரிங்க" என்று பதறி எழுப்ப முயல அவனோ தன் வேலையை சிரமென செய்தான். அவள் வலது காலில் இருந்த செருப்பை கழற்றி வைத்து அதை தன் வலது உள்ளங்கையில் தாங்கினான். அவள் காலின் மென்மையை உணர்ந்தவன் மற்றைய கையால் மெதுவாக வருடினான். அவள் கூச்சத்தில் காலை எடுக்க முயல அவன் விடாமல் தன் இதழைப் பதித்தான் அவள் காலில். பின்னர் அவள் காலை தன் தொடை மேல் வைத்தவன், அவளது ஜீன்சை உயர்த்தி அவன் கைநீட்டி அவள் முகம் பார்க்க சனா தன் பேர்சிலிருந்து கொலுசை எடுத்து கொடுத்தாள்.


அதை எடுத்தவன் அவள் காலில் மாட்டி விட்டு மீண்டும் இதழ்பதித்தான். சனா, அவசரமாக அவனிடம் இருந்து காலை எடுத்தவள் அவசரமாக செருப்பை எடுத்து மாட்டினாள். சாத்விக், "எதுக்கு பேபி அவசரபடுற?" என்று நிதானமாக எழுந்து நின்றான். "நான் போறேன் சேர். லேட் ஆச்சு" என்று அங்கிருந்து செல்ல, "பேபி ஒரு நிமிஷம்" என்ற அவனின் குரல் அவளை நிறுத்த, 'என்ன என்று?' அவனைப் பார்த்தாள். "நேத்து ரொம்ம அழகா இருந்த. ஐ மீன் நீ எப்போவுமே அழகு தான். பட் நேத்து நாக்கை துருத்தினியே அப்போ அவளோ அழகா இருந்த. சோ கியூட்" என்று முகத்தில் நேற்றைய உணர்வுகள் பிரதிபலிக்கக் கூற சனா அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டுச் சென்றாள்.


~ உன் சிறுபிள்ளைத் தனத்திலும்
உன் ஒற்றைப் புன்னகையிலும்
விழுந்தவன் நானடி
மீளமுடியா ஆழத்தில் ~



கோலேஜ் முடித்து அபி, சனா இருவரும் வெளியே வர அவர்களுக்காக கார் காத்துக் கொண்டு இருந்தது. அதில் ஏறியவுடன் அபி, "உன் அஞ்சலி அக்கா வந்திருப்பாங்க" என்று நமட்டு புன்னகையுடன் கூற "அவங்க ஒன்னும் என் அக்கா இல்லை அபி. நகுல் மாமாவோட மனைவி. தெட்ஸ் இட். என் அக்கான்னு சொன்ன எனக்கு கெட்ட கோபம் வந்துரும்" என்று உதட்டைச் சுழிக்க, "இன்னைக்கு என்ன எல்லாம் பேச போறாங்களோ !!!!! அவங்க ஏதாவது சொன்னால் பதிலடி கொடுத்தால் கொஞ்சம் அமைதியா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்றாள் அபி யோசணையுடன்.


"அவங்க அதுக்கெல்லாம் அடங்க மாட்டாங்க அபி. விடு பார்த்துக்கலாம்" என்று சனா வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். இருவரும் வீடு சேர்ந்தவுடன் அஞ்சலி அவர்களைப் பார்த்து, "இவளோ நேரமாவா ஆச்சு வீடு வந்து சேர?...,நாங்க எவளோ நேரமா காத்துட்டு இருக்கோம்" என்று அஞ்சலி குத்திப் பேச, அபி, "ஆரம்பிச்சுட்டாங்க பா" என்று சனாவின் காதைக் கடித்தாள். சனா அவளைப் பார்த்து புன்னகைக்க அஞ்சலி, "அங்கே என்ன குசுகுசுன்னு பேசுறிங்க?" என்றாள் கடுகடுத்துக் கொண்டே. அபி, "அது ஒன்னும் இல்லை அண்ணி. கடைசி முறையா பார்த்ததை விட இப்போ ரொம்ப அழகா இருக்கிங்கன்னு பேசிகிட்டோம்" என்றாள் நக்கல் தொனியில்.


அந்த நக்கலைப் புரிந்துக் கொள்ளாத அளவிற்கு அஞ்சலி முட்டாள் பெண் இல்லையே. அவர்களை உக்கிரமாக முறைக்க அவர்கள் இருவரும் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டனர். நகுல் அவர்களிடம் சகோதரத் தன்மையுடன் பேச, அதில் கார்த்திக்கும் கலந்துக் கொண்டான். அஞ்சலி, "கார்த்திக் அண்ணா உங்களுக்கும் உங்க அத்தை இருக்கிறது எல்லா விஷயத்துலும் உதவியா இருக்குமே. அவங்களே எல்லா வேலையையும் பார்த்துப்பாங்க போல இருக்கே" என்று சம்பளமில்லாத வேலைக்காரி என்று மட்டம் தட்டினாள்.


நகுல், "அஞ்சலி" என்று அதட்ட, அபியோ பேச வாயெடுக்க சனா அவள் கைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள். விசாலாட்சிக்கு கண்கள் கலங்கி விட்டன.. இத்தனை நாட்களாக சனாவையும், கார்த்திக்கையும் பெற்ற பிள்ளைகளாகவே பார்த்தார். அவர்களும் இன்னொரு தாயைப் போலவே பார்த்தனர். ஆனால் இன்று அஞ்சலி கூறியதைக் கேட்டு மனம் வலித்தது அவருக்கு. கார்த்திக் விருந்தினரை காயப்படுத்தக் கூடாது என்று பல்லைக் கடித்து அமைதியாக, "அவங்க எனக்கு இன்னொரு அம்மா" என்றான். கோபத்தில் அவன் கை முஷ்டிகள் இறுகி இருந்தன. நிமடங்கள் அமைதியாக இருக்க அடுதடுத்து அஞ்சலி கூறியதில் கார்த்திக்கின் பொறுமை பறக்க "நிறுத்துங்க" என்ற குரல் கேட்டது.


உறவுகளில் மிகப் பெரிய பலம் நம்பிக்கை. அது அற்றுப் போயின் பல கழகங்கள் தோன்றி அனைவருக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்த வல்லது. அந்த வகையில் சனாவின் குடும்பத்தில் ஒரு பிரச்சனையை உருவாக்கவே அஞ்சலி முனைந்தாள்.


"கார்த்திக் அண்ணா நீங்க சொல்றதும் சரி. ஆனால் எப்போவுமே அவதானமா இருங்க. இந்த காலத்துல யாரையுமே நம்ப முடியாது" என்று நிறுத்தி அனைவரின் முகம் பார்த்தாள். 'இப்போது எதற்காக இதைக் கூறுகிறாள்?' என்று புரியாமல் மற்றவர்கள் குழம்பி அவளைப் பார்த்தனர்.


"அது வந்து அண்ணா, என் பிரன்டோட புருஷன் அவரோட மாமா இறந்துட்டாங்கன்னு அத்தையையும், அத்தை பொண்ணையும் தன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்காரு. சின்ன வயசிலிருந்தே இரண்டு குடும்பமும் நல்ல ஒத்துமையா இருந்திருக்காங்க. அத்தையை விட இவங்க நல்ல வசதி. இங்கே வந்ததும் அத்தை பொண்ணு என் பிரன்டோட புருஷனை மயக்கி கைக்குள்ள போட்டுக்குட்டா. என் பிரன்டை வீட்டை விட்டு துரத்திட்டு இரண்டாம் தாரமா அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு சொத்து எல்லாத்தையும் தான் பேருக்கு மாத்திட்டு அவரை குடிக்கு அடிமையாக்கி இருக்கா.


அப்பொறமா அவரை சொத்தை எடுத்துட்டு அத்தை பொண்ணு டிவோர்ஸ் பண்ணி நடுத்தெருவுக்கு அனுப்பிருச்சு. இத்தனைக்கு அவரோட அத்தையும் உடந்தையாம். அவரு மனசொடஞ்சி போய் தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்றப்போ என் பிரன்டு அவரை காப்பாத்தி மறுபடியும் கல்யாணம் பண்ணிட்டு ஒன்னா வாழுறாங்க. அவரு மேலே வச்ச காதல் எப்போவுமே அவளுக்கு மாற இல்லை. இப்போ புதுசா வாழ ஆரம்பிச்சி இருக்காங்க" என்று அபிநயாவின் குடும்பமும் இது போல இருக்கும் என பொடி வைத்துப் பேசினாள்.


இதைக் கேட்டுக் கொண்டு இருந்த விசாலாட்சியிற்கு நெஞ்சே வெடித்து விட்டது. அவர் ஒரு போதும் பணத்தை முன்னிறுத்தியது இல்லை. அன்பு, பாசம், உறவே உலகத்தில் முக்கியமானது ஒன்று என தன் பெற்றோரினால் வளர்க்கப்பட்டவர். அவருள் இத் தீய எண்ணங்கள் இருக்கின்றது என்பதை ஜாடைமாடையாக அஞ்சலி கூறும் போது முழுவதும் உடைந்து விட்டார். சிறு வயதில் இருந்தே அவர்களை வளர்த்தவர். கார்த்திக்கின் தந்தையும், தாயும் இறந்த போதே சொத்து முக்கியம் என நினைத்து இருந்தால் தன் பெயரிற்கு மாற்றி இருக்க முடியுமே.


ஆனால் பெற்றோர் இழந்தவர்களை அன்பு, பாசத்தை ஊட்டியல்லவா அவர் வளர்த்தார்? தாயைப் போல் செய் என்று கூறுவார்கள். அதே போலேயல்லவா தன் மகளையும் வளர்த்தார். இன்று பணத்திற்காக இருவரும் இருக்கின்றனர் என்று கூறும் போது அவர் மனம் வெதும்பியது. இன்னொரு புறம் கார்த்திக்கும் தங்களை தவறாக நினைத்து விடுவானோ என்ற சிறிய பயமும் எழ இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அபியோ கொந்தளித்துக் கொண்டு இருந்தாள். கார்த்திக்கின் ஒரு கண்ணசைவிற்காக மாத்திரமே அவள் அடங்கியிருக்கிறாள்.


நகுல் தன் மனைவி இவ்வாறு கூறுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. அஞ்சலியிற்குள் இவ்வாறு ஒரு முகம் உள்ளதா? அவனுக்குத் தெரிந்த அஞ்சலியிற்கு குத்திப் பேசத் தெரியும். ஆனால் இந்த அளவிற்கு கீழ்த்தரமாக எண்ணியது இல்லை..அவன் அஞ்சலி பேசிய அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. கார்த்திக் விருந்தினரை உபசரிக்கும் தமிழர்களின் பண்பாடு ஒன்றிற்காகவே தன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தான். கார்த்திக் இறுகிய குரலில், "இப்போ என்ன சொல்ல வர அஞ்சலி?" என்றான்.


அஞ்சலி, "அதே போல இவங்களும்...." முடியும் முன்னே, "நிறுத்துங்க" என்ற கத்தலில் அனைவரும் அதிர்ச்சியாய் பார்க்க கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, முகமே சிவந்து நின்று இருந்தாள் சனா என்கிற திஸன்ஜனா. சனா, "என்ன அப்படி பார்க்குறிங்க? என் அபியைப் பத்தியோ இல்லை என் அத்தையை பத்தியோ தப்பா ஒரு வார்த்தை பேசுனிங்க. கன்னம் பழுத்துரும். என்னை விட வயசுல பெரியவங்கன்னு பொறுமையா இருக்கேன். என் அபியைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அவ எனக்கு அண்ணி மட்டுமில்லை. நல்ல பிரன்டு, என்சிஸ்டர் என்ட் என்னோட அம்மா" என்று அபியின் தோளில் ஆதரவாக கைவைத்து அழுத்தினாள்.


அப்போதே அபி என்ற சிலையிற்கு உயிர் வந்தது. சனா, "அடுத்து என்ன என் அத்தையைப் பத்தி தப்பா சொல்றிங்களே. உங்களுக்கே நாக்கு கூசல்லை. இங்கே இருந்து தானே படிச்சிங்க? அவங்க கையால் சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டிங்கள்ள? அந்த உப்பு கூடாவா தெரியல்லை? கொஞ்சமாச்சும் நன்றி இருக்கா? எனக்கும் அபிக்கும் என்ன செய்வாங்களோ அதே தானே உங்களுக்கும் செஞ்சாங்க. உங்க துணியை துவக்கறதிலிருந்து காய வச்சு எடுத்து மடிச்சு வைக்குற வரைக்கும் அவங்க தானே பண்ணி குடுத்தாங்க.


அம்மா பக்கத்துல இல்லாத குறை தெரிய கூடாதுன்னு அவளோ பாசம் காட்டினாங்க. அது கூட உங்க புத்திக்கு ஏற இல்லை? அது சரி நீங்க கோலேஜ் படிக்க இங்கே வந்த நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் அவங்க பாசத்தை புரிஞ்சிக்கவும் இல்லை. அவங்களுக்கு மரியாதை கொடுத்ததும் இல்லை. உங்களையெல்லாம்.... " என்று நிறுத்தி, "நாக்கு அழுகி போயிரும் தப்பா பேசாதிங்க. நகுல் மாமா முகத்துக்காக தான் நான் இதோட நிறுத்துறேன். இல்லை !!!!! " என்று அஞ்சலியை எரிக்கும் பார்வை பார்த்தாள் சனா.


சனா இந்த அளவிற்கு கோபமுறுவாள் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. சனா மென்மையானவள் என்றே அனைவரும் அறிந்து இருந்தனர். இன்று தென்றலாய் இருந்தவள் தன் அபியிற்காகவும், அத்தைக்காகவும் சூறாவளியாய் மாறி புரட்டி எடுத்தாள். நாளை தன் கணவனிற்காகவும் மீண்டும் சூறவளியாய் மாறுவாள் என்பது இறைவனின் கட்டளையாக இருந்தது. அதிர்ச்சியில் இருந்து ஒவ்வொருவராய் மீண்டு வந்தனர். அஞ்சலியோ சனாவிடம் இவ்வாறு ஒரு பரிமாணத்தை எதிர்பார்க்கவே இல்லை. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.


அஞ்சலியின் முன் சொடக்கிட திமிராய் அவள் முன் அமர்ந்தவள், "அபி எங்களை ஏமாத்திருவாங்கன்னு தானே சொன்னிங்க? எங்க அபியைப் பத்தி தெரிஞ்சுக்க பிரக்டிகலாவே நடவடிக்கை எடுப்போம். எங்க அபியும் அத்தையும் எங்களை எப்படி பார்த்துக்கிற போறாங்கன்னு நீங்க கண்ணால நேர்ல பார்த்து தெரிஞ்சிக்கொங்க" என்றவள் அங்கிருந்த தொலைப்பேசி இலக்க டயரியைத் திறந்து ஜோசியரை உடனே வீட்டிற்கு வருமாறு அழைத்தாள். அவரும் சனாவின் குரலில் நிறைந்த ஆளுமையில் அடித்துப் பிடித்து ஓடி வந்தார் இருபது நிமிடங்களில்.


சனா, "அடுத்த முகூர்த்தம் எப்போ இருக்கு ஜோசியரே?" என்று வினவ, அவரோ கார்த்திக்கையும், விசாலாட்சியையும் பார்க்க, "கேள்வி கேட்டது நான்.... அங்கே என்ன பார்வை?" என்றாள் அழுத்தமான குரலில். அதில் தெரிந்து அழுத்ததால் அவரின் பார்வை நாட்காட்டியில் பதிக்கப்பட, கைவிரல்கள் நாட்களை வருடி கடந்து சென்றது. உட்சென்ற குரலில், "இன்னும் பத்து நாளில் இருக்கு மா. காலையில 7.35-8.30 ஒரு முகூர்த்தமும் இரவு 9-10.00 ஒரு முகூர்த்தமும் இருக்கு" என்றார். "அந்த நாளில் அண்ணாவுக்கும், அபிக்கும் கல்யாணம்" என்றாள்.


அனைவரும் அதிர்ந்து சனாவைப் பார்க்க அவளோ ஜோசியரிடம், "அதுக்கான வேலைகளைப் பாருங்க ஜோசியரே" என்றவர் மற்றவர்கள் புறம் திரும்பினாள். "இது தான் என் கடைசி முடிவு. எனக்கும் இந்த குடும்பம் சம்பந்தமா முடிவு எடுக்க உரிமை இருக்குன்னு நினைக்குறேன்" என்றவள், கார்த்திக்கையும், விசாலாட்சியையும் பார்த்து, "இருக்கு இல்லை?" என்றாள். அவர்களின் தலையும் தானாகவே ஆம் என்று ஆடியது. "நீங்க வேலையை ஆரம்பிங்க ஜோசியரே" என்று காணிக்கை வழங்கி அனுப்பி வைத்தாள். அஞ்சலியை நேராக பார்த்தவள், "எங்க வீட்டுல நல்ல விஷயம் நடக்க காரணமா நீங்க இருக்கிங்க. அதுக்காக ரொம்ப நன்றி" என்றவள் வேகமாக தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.


நமக்குப் பிரியமானவர்களை பார்த்து ஒருவர் தவறாகக் கூறினால் நிச்சயமாக எம்மை அறியாமலேயே தவறாகப் பேசுபவர்கள் மீது கோபம் எழும். அது இயற்கையான ஒரு விடயம். அதற்கு சனா விதி விலக்கு அல்லவே? விசாலாட்சி, அபி இருவருமே அவளுடைய உயிரிற்கு நிகரானவர்கள். அவ்வாறு இருக்கும் உறவைப் பற்றி தவறாகக் கூறும் போது எழுந்த கோபத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்தவள் வார்த்தையாலும், செய்கையாலும் பதில் அளித்தாள். அத்தோடு தன் நீண்ட நாள் கனவான அபி, கார்த்திக் திருமணத்தை நடத்த இதை பயன்படுத்தி அழகாக காய் நகர்த்திக் கொண்டாள்.


அபி, கார்த்திக் இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதை பலர் தவறாகக் கூறியும், சித்தரித்தும் உள்ளனர். இதை அவள் காது படவே பலர் பேசியும் உள்ளனர். தன் அபியைப் பற்றியோ, அண்ணனைப் பற்றியோ அவதூறூ கூறுவதை ஏற்க முடியாமலேயே நேற்று விசாலாட்சியிடம் பேசிப் பார்க்க அவரோ சனாவின் திருமணத்திற்கு பிறகே அவர்களின் திருமணம் என்பதில் உறுதியாய் இருந்தார். ஆகவே இவ்வாறு ஒரு வாய்ப்பை இழக்காமல் அதை பயன் படுத்திக் கொண்டாள். அபி, அண்ணன் மீது ஏற்பட்டுள்ள அவதூறிற்காகவே இவ்வாறு பயப்படுவள் ஒரு நாள் சாத்விக், இவள் சம்பந்தமான அவதூறைப் பற்றி அனைவரும் பேசினால் சனாவின் நிலை?????


கீழே அனைவரும் வெளியே கருமேகங்கள் சூழ்ந்து இடி இடிக்க அதன் ஒலியிலேயே தன்னிலை அடைந்தனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள மீண்டும் அங்கே நடந்தது கற்பனையில் ஓட இறுதியில் திருமண முடிவு திகைக்க வைத்தது. சனாவின் முடிவை ஏற்கவும் முடியாமல் மீறவும் முடியாமல் தத்தளிக்க நகுல் அனைவரிடமும், "தயவு பண்ணி மன்னிச்சிருங்க. அஞ்சலி இப்படி பேசுவான்னு நானே எதிர்பார்க்க இல்லை. இதை போல இனியொரு சங்கடம் வராமல் நான் பார்த்துக்குறேன்" என்று பொறுப்பாகக் கூறினான்.


அதன் பின் அவர்கள் அங்கே நிற்கவில்லை. அஞ்சலியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல அஞ்சலியோ அபியை முறைத்துக் கொண்டே சென்றாள். அபி, அஞ்சலி இருவரிற்கும் எப்போதும் ஒத்துப் போவது இல்லை. அபி என்றாளே அஞ்சலியிற்கு வேப்பங்காயாய் கசக்கும். இங்கே தங்கி இருந்து படிக்கும் போது அஞ்சலியின் பெற்றோர்கள் பார்க்க வரும் போது அபி தன் குறும்பினாலும், சனா அழகான அமைதியினாலும் அவர்களை ஈர்த்தார்கள். சனாவை விட அபியும், அஞ்சலியும் சிவந்த நிறமானவர்கள். சனா மஞ்சள் நிறம் என்றால் மற்ற இருவரும் பால் வண்ண நிறம்.


அஞ்சலியிற்கு சனா நிறத்தில் குறைவு அழகிலும் குறைவு என்று தனிக் கர்வம் உண்டு. ஆனால் அவளுக்கு போட்டியாக அழகில் தனக்கு இணையாக அபி இருப்பதை அவளால் ஏற்க முடியவில்லை. சிறு பிள்ளைகளோடு அழகில் போட்டியிட்டுக் கொண்டாள் அஞ்சலி. ஆனால் அவ் இருவரையும் விட அனைவரின் மனதையும் அதிகமாக ஈர்ப்பது ஆர்பாட்டம் இல்லாத கலையான அழைகை உடைய சனாவே. அதை அபி உணர்ந்து பெருமைக் கொண்டாலும் இன்று வரை அஞ்சலி அதை உணரவில்லை. அவளைப் பொறுத்த வரை அழகு இருப்பது சருமத்தின் நிறத்திலேயே.


அஞ்சலி சனாவை தனக்கு கீழ் என்று ஒதுக்கியே வைத்ததால் அவளிடம் பெரியதளவு பகை இல்லை. ஆனால் தனக்கு இருக்கும் வசதியை விட பணத்தில் அவளுக்கு வசதி அதிகமாக இருப்பதில் அவளுக்கு எப்போதும் பொறாமை உண்டு. அஞ்சலியின் குறும்போடு, அபியின் குறும்பை ஒப்பிடும் போது அபியின் குறும்பே அங்கே வெல்லும். அதற்கு ஒரு காரணம் அவளின் வெள்ளந்தியான மனம். அபியை தன்னோடு ஒப்பிட்டு கூறுவதில் ஆரம்பமான அபியின் மீதான வெறுப்பு இன்று வரை வளர்ந்து விருட்சமாகி இருந்தது அஞ்சலியிற்கு. அதனால் அவளை எப்போதும் மட்டம் தட்டுவதிலேயே குறியாய் இருப்பாள் அஞ்சலி.


எந்தவொரு வாய்ப்பை தவற விடுவது இல்லை. வாய்ப்பு இல்லாவிடினும் அவளாகவே உருவாக்கி அபியை காயப்படுத்துவாள். இத்தனை வருடங்களா அபி, அஞ்சலி இருவருக்கும் இடையே நடக்கும் பனிப்போரில் சனா பொறுமையாக இருந்தாலும் இன்று அஞ்சலி அதிகபடியாகப் பேசியதால் பொங்கி எழுந்துவிட்டாள். அதனாலேயே இவ்வாறு ஒரு புயல் வீசியது. அஞ்சலி, நகுல் இருவரும் சென்று விட மற்றவர்கள் சனாவின் திருமண முடிவை எண்ணி அடுத்து என்ன செய்வது என்று யோசணையாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்........


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
22319

அத்தியாயம் 9




தனது அறைக்குள் நுழைந்த சனா வேகவேகமாக மூச்சுக்களை வெளியிட்டாள். 'ஐயோ !!!! கோபமா பேசுறது எவளோ கஷ்டம்? அதுலையும் இந்த நடிப்பு இருக்கே. முடியல்லை. கிருஷ்ணா தேங்க்கியூ. நான் சிரிச்சிருவேனோ இல்லை யாராவது எதிர்த்து கேள்வி கேட்பாங்களோன்னு பயந்துட்டே இருந்தேன். நல்ல வேளை அப்படியேதும் நடக்க இல்லை. யாராவது கேள்வி கேட்டு இருந்தாங்க பேச நினைச்சதை மறந்துட்டு திரு திருன்னு முழிச்சு காரியத்தையே சொதப்பி விட்டு இருப்பேன்.



ஆரம்பத்துல எனக்கு கோபம் வந்துதான் கத்துனேன். அடுத்து என்ன பேசனும்னு டக்குன்னு வர இல்லை. அப்புறமா கோபத்தை இழுத்து பிடிச்சிட்டு இத்தனை வருஷமா மனசுல வச்சிருந்ததை எல்லாம் கொட்டிட்டேன். ஆனாலும் முகத்தை நான் கோபமா வச்சிருக்கிறதுக்கு நான் பட்ட பாடு எனக்கு தானே தெரியும். வெறுத்து போச்சு. இந்த காட்டுபையல், அண்ணா எல்லோரும் எப்படி கோபடுறாங்க?



நான் எல்லாம் டிரெயினிங் எடுக்கனும் போல இருக்கே. இந்த ஜோசியர் வேற உத்து உத்து பார்க்கும் போது எங்க நான் சிரிச்சிருவேனோன்னு ரொம்ப பயந்துட்டே இருந்தேன். அவளோ டெரராவா இருந்தோம். ஒருத்தரும் எதிர்த்து ஒரு வார்த்தை நமளை பேசவே இல்லையே" என்று எண்ணியவள் தளவாடியின் முன் சென்று நின்றாள். 'உன் முகத்துக்கு இது செட்டே ஆகல்ல' என்று மனசாட்சி காரிதுப்ப, 'நான் கோபமா இருக்க பட்ட பாடு எனக்கு தான் தெரியும்' என்று இவளும் முறுக்கிக் கொண்டாள்.



சனா பல்கனியிற்கு வருகைத் தந்து ஆசுவாசமாக மூச்சை வெளியிட அந்த நேரமே சாத்விக்கு லெப்டொப்பில் சனாவைப் பார்த்தான். அது வரையில் அவனை அவனுடைய அலுவலக வேலைகள் இழுத்துக் கொள்ள அதை முடித்து சனாவைப் பார்க்க அவளும் பல்கனியிற்கு வந்து சேர்ந்தாள்.



அதனால் சனா பேசியதோ, அஞ்சலி, நகுலின் வருகையோ அவனுக்குத் தெரியவில்லை. சாத்விக், "என்ன இவ பெரூமூச்சு எல்லாம் பலமா இருக்கே!!!! என்னமோ திருட்டுத் தனம் பண்ணி இருக்கா போல இருக்கே" என்று யோசிக்க புடேஜை பார்க்கலாம் என்று நினைக்க அதற்குள் தியா அழைத்து இருந்தாள்.



"ஹாய் அண்ணா" என்று அவள் குரல் உற்சாகமாய் எதிரொலிக்க, "ஹாய் தியா மா" என்றான் அவள் உற்சாகம் இவனைத் தொற்றிக் கொண்டு. "என்ன உங்க குரலில் வித்தியாசம் தெரியுதே" என்று சாத்விக்கின் தங்கை என நிரூபிக்க, "எனக்கு கூட உன் வொய்ஸ்ல ஏதோ சேன்ஜஸ் தெரியுதே தியாமா" என்று தமையனும் அவளிற்கு சளைத்தவன் என்பதை நிறுவினான். எதிர்புறம் அமைதியைத் தத்தெடுக்க அதை சாத்விக்கே களைத்தான். "தியா என் கிட்ட ஏதாவது சொல்லனுமா?" என்று நிறுத்த, "அது வந்து அண்ணா..." என்று வெகுவாய் தயங்கினாள்.



முகேஷ், "அம்மா தாயே வெட்கங்குற பேருல என்னை பயமுறுத்தாத. பச்சை குழந்தை பயந்துரும்ல..." என்று சிறு குழந்தைப் போல் கூறியவன் "அது ஒன்னும் இல்லைடா நீ மாமா ஆக போற. அதை சொல்ல தான் இத்தனை போராட்டம்" என்றான் அவசரமாக. அதற்குள் பிந்து அவனை அடித்துக் கொண்டிருந்தாள். 'நான் உன்னை பயம் காட்டுறேனா? என் வெட்கத்தை கேவலமா பேசுறியே' என்று சொல்லி அடிக்கும் சத்தம் கேட்க, இங்கே சாத்விக்கின் கண்களை பொங்கி மறைத்தது கண்ணீர். அதற்கு மாறாக இதழ்களோ அழகாய் புன்னகையை பூத்திருந்தன.



"எருமை மாடே" என்று சாத்விக் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு திட்ட, "நீ எதுக்கு மச்சான் திட்ற?" என்று பாவமாய் முழித்தான் முகேஷ். "அவ எவளோ அழகா அம்மாவாக போறத சொல்ல வந்தா? நீ சொதப்பிட்டியே...!!!" என்று திட்டியவன், "மச்சான் இயர் ஃபோனை போட்டுக்கயேன்" என்று சாத்விக்கிடம் இருந்து அன்பாய் சொற்கள் ஒலிக்க, "எதுக்கு மச்சான்?" என்றான் முகேஷும் விடாமல். "போடேன்டா" என்று குரல் தாழந்து ஒலிக்க, 'இவன் பேசுற மோடிலேஷனே சரியில்லியே' என்று இயர் ஃபோனை எடுத்துக் கொண்டான்.



மனைவியை சமாளித்து இயர் போனை அணிந்துக் கொள்ள சாத்விக், "ஒகே யா மச்சான்" என்று வினவ, "ஆமாடா" என்று முகேஷ் கூறியவுடன் சாத்விக் அவனுக்கு தெரிந்த பீப் சொற்களை பறக்க விட முகேஷின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது. இயர் ஃபோனை கழற்றவும் முடியாமல் தொடர்ந்து கேட்கவும் முடியாமல் தவித்தான் அவன் தோழன். முகேஷ் கண்ணில் கண்ணீரைப் பார்த்தவள், "என்னங்க ஆச்சு" என்று பதறினாள் பிந்தியா. "மச்சான் உன் தங்கச்சி வந்துட்டாடா" என்று உரைக்க சாத்விக் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி நின்றான்.



"உன் அண்ணன் எனக்கு ரொம்ப நல்லா வாழ்த்தினான். அதுல என் கண்ணே கலங்கிருச்சுன்னா பார்த்துக்கோயேன்" என்று அவசரமாக மொபைலை அவளிடம் வழங்கிவிட்டு எழுந்தான். 'நீ வேண்ணா பாருடா.ஆசையா ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு பர்ஸ்ட் நைட் கொண்டாட முடியாமல் உனக்கு போகபோகுது. இது அப்பாவி மச்சான் உனக்கு கொடுக்குற சாபம்டா' என்று கருவிக் கொண்டே அவன் திட்டியதை நினைத்து முகம் கழுவ சென்றான்.



தியாவிற்கு மனதாற வாழ்த்துக்களை தெரிவித்தவன் அவனுக்குத் தெரிந்த சில ஆலோசணைகளையும் இலவசமாக வழங்கினான். அவளும் தமையனின் அன்பில் நெகிழந்துப் போனாள். தனக்காக சிந்திக்க தன் கணவனைத் தவிற ஒரு உயிரேனும் உள்ளதே என்று நினைக்க பொங்கி வழிந்தது பாசம் அவன் மேல். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட உறவு இரத்த உறவு அல்ல. ஆனால் இழையோடும் அண்ணன் தங்கை உறவு அதை விட மகத்துவமானதாக இருக்கும்.



அவளுடைய உடன் பிறந்தவர்கள் இருந்து இருந்தால் தன் மேல் இத்தனை அக்கறை கொண்டு இருந்து இருப்பார்களா என்ற வினாவை பிந்தியா எழுப்பினால் நிச்சயமாக அதற்கு பதில் இல்லை. எத்தனை அன்பு அவள் மேல் என்று நினைக்கவே உடலே சிலிர்த்தது. அவளைப் பற்றி பேசிய பின் தியா ஆரம்பித்தாள். "உங்க குரலோட மாற்றத்தை சொல்லவே இல்லையே அண்ணா" என்று சந்தேகத்துடன் நிறுத்த ஒற்றை வார்த்தையாய் "சனா" என்று பதில் வந்தது.



அவள் ஆனந்த அதிர்ச்சியாய், "சனாவா? புரியல்லை அண்ணா. தெளிவா சொல்லுங்களேன்" என்று ஆர்வமாக வினவ, "ஆமா மா. சனாவை என் மனைவியா பார்க்குறேன். ஷி இஸ் மிஸஸ் திஸன்ஜனா சாத்விக் ப்ரவீன் னு முடிவு பண்ணிட்டேன். அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்கப்போறதும் இல்லை. கஷ்டபடுத்த போறதும் இல்லை" என்றான் உறுதியான குரலில் ஆனால் நிதானமாக. "ஒ மை கோட். ஐம் ரியலீ ஹேபி. அண்ணா ஒரு வழியா அவளை காதலிக்கிறிங்கன்னு கண்டு பிடிச்சிட்டிங்களே. சோ சோ ஹேப்பி" என்று துள்ளிக் குதித்தாள்.



அவள் குதிப்பதைப் முகம் கழுவி வந்தவன் பார்த்து, "பிந்து பார்த்து இரு" என்று அதட்டி சாத்விக்குடன் பேச ஆரம்பித்தான். சாத்விக் தெளிவாக, "நான் அவளை காதலிக்க இல்லை தியா. பட் அவ எனக்கு வேணும். எனக்கு மட்டுமே வேணும்" என்று நிறுத்தினான். மற்ற இருவரும் புரியாமல் குழம்ப, "ஒரு முறை நான் காதலால் பட்ட அனுபவங்களே போதும். எனக்கு காதல் இல்லை. சனாவை நான் காதலிக்க இல்லை" என்று அவன் மனதுக்குமே சேர்த்துக் கூற, இதைப் பற்றி பேசினால் தற்போது நிச்சயமாய் ஒத்துக் கொள்ள மாட்டான் என்று இருவரும் அமைதியாகினர்.



பின் சாத்விக் மெல்ல கதையை மாற்ற அதை புரிந்துக் கொண்ட மற்ற இருவரும் இனி சனாவைப் பற்றிய கவலை இல்லை என்று அடுத்தடுத்த வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர். சனாவின் வீட்டிலோ மூவரும் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பிப் போய் அமர்ந்து இருக்க, விசாலாட்சி, "சனா முதன் முதலா ஒரு விஷயத்தை முடிவு எடுத்து இருக்கா. அதை தடை சொல்றது நல்லா இருக்காது" என்று தன் மனதில் பட்டதைக் கூற, கார்த்திக், "இன்னும் பத்து நாளில் கல்யாணம் சாத்தியமா? அதுக்கான வேலைகள் நிறைய இருக்கே" என்றான் கவலையாய்.



அபி, "மாமா அவ ஆசைப்பட்ட படி கல்யாணத்தை நடத்தலாம். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருப்போம் மாமா. கோயிலில் சிம்பளா தாலி கட்டி கல்யாணத்தை நடத்திட்டு ரிசப்ஷனை இன்னும் ஒரு மாசத்துக்கு அப்பொறமா ரொம்ப கிரேன்டா வைக்கலாம்" என்று யோசணை கூற அனைவருமே அதை ஆமோதித்தனர். கார்த்திக், சனாவிடம் இதைக் கூறுவதற்காக இன்டர்கிரேமில் சனாவை அழைத்து கீழே வருமாறு கூறினான். அவளும் மறுபேச்சு இன்றி கீழே வந்தாள்.



அவர்கள் எடுத்து இருக்கும் முடிவைக் கூற அவளும் சந்தோஷமாக தலையை ஆட்டினாள். சனா, "அண்ணா கல்யாணத்தை கோயில்ல வச்சிக்கலாம். நாங்க பிரன்சை கூப்பிடுறோம். நம்ம பேமிலியில நிறைய பேர் இல்லை. கண்டிப்பா நகுல் மாமா குடும்பத்தை கூப்பிடனும்" என்று தான் நினைத்ததைக் கூற அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். கார்த்திக், "சனா இன்னைக்கு நீ கோபப்பட்டது ரொம்ப ஆச்சரியமா இருக்குடா" என்று அவள் முகம் பார்த்தான்.



'ஆத்தி கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்களே. நான் கோபப்பட இல்லைன்னு தெரிஞ்சது உடனே கல்யாணத்தை அண்ணா நிறுத்திருவான் சனா. பார்த்து சூதானமா பதில் சொல்லு' என தன்னைத் தானே ஊக்கப்படுத்தி தைரியத்தையும் வழங்கிக் கொண்டாள். "அண்ணா இதைப் பத்தி இனிமேல் பேச வேணான்னு நினைக்குறேன்" என்று எழுந்து சமையலறைக்குள் புகுந்து அனைவருக்கும் காபியைத் தயாரித்து வந்தாள். மற்றவர்கள் இவளது பதிலில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



காபியை எடுத்து, "நாளையில் இருந்து வேலையை ஆரம்பிக்கலாம் அண்ணா. அப்போ தான் பத்து நாளில் வேலைகளை முடிக்க முடியும்" என்று சீரயசாகப் பேச திருமணத்திற்கான வேலைகளைப் பற்றி பைச ஆரம்பித்தனர். ஆடை, நகை வாங்குதல், வீட்டு அலங்காரம், மற்றைய வேலைகள் ஒவ்வொன்றாய் நால்வரும் சேர்ந்து திட்டமிட்டு முடிய நேரம் ஆறானது.
அனைவரும் திட்டமிடலிலேயே பெரிய விடயம் முடிந்தது என்று நிம்மதியாக தங்கள் அறைகளுக்குச் சென்று தங்களை சுத்தப்படுத்திக் கொண்டனர். சனா குளித்து தோட்டத்திற்கு சென்று கிருஷ்ணனை வேண்டியவள் சாமி அறையில் தாய், தந்தையரின் புகைப்படத்திற்கு விளக்கை ஏற்றி அறைக்குள் நுழைந்தாள்.

~ கண்மூடினாலும் தோன்றும்
விம்பம் உனதடி
நிஜத்திலும் என் கைசேரும்
நாள் எப்போதடி ~


சனா தன் தமையனின் திருமணத்தை எண்ணி உவகையோடு சுற்றித் திரிந்தாள். அதே சந்தோஷத்துடன் தனது அறைக்கு வந்தவள் குளித்து அவசரமாகச் சென்று விளக்கு ஏற்றியதால் கூந்தலை ஒழுங்காக துவட்டவில்லை. அதனால் தன் கூந்தலை துவட்ட ஆரம்பிக்க அவள் மொபைல் தன்னிருப்பை அவளுக்கு உணர்த்தியது.

'இந்த மொபைலை கண்டுபிடிச்சவன் எனக்கு கிடைச்சான், கிருஷ்ணா உன் புல்லாங்குலாலேயே அவன் கண்ணுல குத்துவேன். எப்போ பாரு நொய்யி நொய்யினுட்டு' என்று புலம்பியவாறே அதன் திரையைப் பார்க்க, "காட்டுப் பையலே" என்ற பெயர் மின்னியது.

'ஆத்தி யாருன்னு தெரியாமல் வாயைக் கொடுத்துட்டேனே. கிருஷ்ணா நல்ல வேளை அவருக்கு நான் பேசினது கேட்க இல்லை' என்று மேலே பார்த்து தன் கண்ணனுக்கு நன்றி கூறியவள், மொபைலை எடுத்து பல்கனியில் சென்று நின்றாள். தன்னை சமன்படுத்தி தொண்டையை ஒரு முறை சரிசெய்து அழைப்பை ஏற்றாள்.

"ஹலோ சேர்" என்று அழைக்க, "நீ என்ன தப்பு பண்ண?" என்று அவளை லெப்டொப்பின் திரையில் குறுகுறு என பார்த்தவாறே வினவினான்.
அவள் அதிர்ந்து திருட்டு முழி முழிக்க, "என்ன திருட்டு முழி முழிக்கிற? ஏதோ சரி இல்லையே" என்று தாடையில் கை வைத்து பேச, அவள் கீழே மேலே என்று தன் தலையைச் சுழற்றி அவன் எங்கே இருக்கிறான் என்று தேடினாள். 'நான் கொடுக்குற ரியெக்ஷனை எப்படி கண்டு பிடிச்சாரு?' என்று யோசித்தவாறே தேட, "நான் அங்கே இல்லை பேபி. என்னை தேடி கழுத்துல சுளுக்கு வராமல் பார்த்துக்கோ" என்று நக்கல் தொனியில் மொழிந்தான்.

"அப்போ நான் கொடுக்குற ரியெக்ஷனை எப்படி கண்டுபிடிச்சிங்க?" என்று சிறு குழந்தைப் போல் ஆர்வமாய் கேட்க, "ம்ம்... கமெரா செட் பண்ணி இருக்கேன்" என்று கிண்டல் தொனியில் கூற, "விளையாடாமல் சொல்லுங்க சேர்" என்று அடம்பிடிக்க, "நான் பொய் சொல்ல மாட்டேன் பேபி. உன்னோட ஒவ்வொரு அசைவுமே எனக்கு தெரியனும். அதுக்காக தான் இந்த ஏற்பாடு" என்றான் அமர்த்தலாக. "என்னாது?..." என்று திடுக்கிட்டவள் அறைக்குள் ஓடி துப்பட்டாவை எடுத்து தன் மேல் போட்டவள் மீண்டும் கமெரா எங்கே என்று தேடியவாறே வெளியே வந்தாள்.

"பேபி பயப்படாத. எனக்கும் சில நல்ல பழக்கங்கள் இருக்கு. அதனால் உன் ரூம்ல வைக்க இல்லை. சோ தைரியமா இரு. என்ட், உன் துப்பட்டாக்கும், உன் குருத்திக்கும் ஒரு சம்பந்தமுமே இல்லை. மஞ்சள் குருத்திக்கு பச்சை கலர்ல துப்பட்டா போட்டு இருக்க? ஹம்.. நீ எப்படியான இரசிகைன்னு எனக்கு நல்லாவே புரியிது" என்று நமட்டுச் சிரிப்புடன் கூற தன் மொபைலைக் கொண்டே தலையில் அடித்துக் கொண்டாள்.

கமெரா பூட்டி இருப்பதாகக் கூறியவுடனே தோன்றிய படபடப்பில் ஹென்கரில் மாட்டி வைத்திருந்த துப்பட்டாவை அவசரமாக எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டாள். அதற்காக இவன் கிண்டல் அடிப்பான் என்று இவள் கனவு காணவில்லையே. "சேர் நான் அவசரத்துக்கு கைல எடுத்ததை போட்டுகிட்டேன். அதுக்காக என்னை கிண்டல் பண்ணாதிங்க. நான் நெஜமாவே நல்ல இரசிகை தான். நீங்க என் இரசணையை தப்பா சொல்லாதிங்க சேர். எனக்கு கோபம் வரும்" என்று தன் கீச்சுக் குரலில் எச்சரித்தாள்.

"பேபி நீ இப்பிடியெல்லாம் பேசாத. உனக்கு செட் ஆக இல்லை. பாரு மூக்கு நுனி சிவந்து போயிருச்சு" என்று திரையில் அவள் மூக்கை வருடியவன், "ஒரு வருஷ குழந்தைக்கு மிட்டாய் கொடுத்துட்டு அதை பறிச்செடுத்தா ஒரு ரியெகஷனை கொடுக்கும் பாரு அந்த குழந்தை; அதே போல இருக்க. அப்படியே கட்டி புடிச்சி கன்னத்தை கடிக்கனும் போல இருக்கு" என்று இரசணையாய் குறும்புடன் கூற பதட்டத்தில் மொபைல் அவள் கையிலிருந்து வழுக்கி கீழே விழ முன் மீண்டும் பிடித்துக் கொண்டாள்.

"இப்படியெல்லாம் பேசாதிங்க சேர். நான் சின்ன பொண்ணு. அதுவும் எனக்கு ஒரு மாதிரி...." என்று தன் உணர்வுகளை கூற முடியாமல் என்பதை விட தெரியாமல் திணற எதிர்ப்புறம் அவளைப் பார்த்து அட்டகாசமாய் சிரித்தான் சாத்விக். ஆயாசமாய், "சேர் இப்போ எதுக்கு சிரிக்கிறிங்க? நான் ... நான்..." என்று மறுடியும் என்ன கூறுவது தெரியாமல் திணறி அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அவளை புரிந்துக் கொண்டவன், "கூல் பேபி கூல்" என்று குறுஞ்சிரிப்புடன் திரையில் அவளைப் பார்த்தான்.
"சரி பேபி. நான் உன்னை ரொம்ப சோதிக்க இல்லை. நான் போன் பண்ண விஷயத்தையே மறந்துட்டேன். ஆர்ட் கம்படிஷன் ஞாபகம் இருக்குல்ல? அதுக்கு பிரிபெயாராகு. எனக்கு நீ எந்த டிரோயிங்கும் வரைஞ்சு தர தேவையில்லை" என்று பெரியமனதுடன் கூற, 'இவரு என்னமோ அவரோட டியோயிங் வரைய சொல்லி கிழிச்சிட்டாரு. கூப்பிட்டு முத்தம் கொடுத்துட்டு இந்த காட்டுப் பையல் பேசுற பேச்சப் பாரு' என்று தன்னுள்ளே அவனுக்கு கவுன்டர் கொடுத்தாள்.

அவளுக்கே இது ஆச்சரியம்!!!! தன் நெருங்கிய சொந்தங்களிடம் கூட இத்தனை வாயாடாதவள் இவனிடம் மட்டும் எவ்வாறு இலகுவாக அவனது பேச்சிற்கு பதில் பேசுகிறாள் என எண்ணியவள் தலையை மேலும் கீழும் ஆட்டினாள். அதன்பிறகே தமையனின் திருமணம் நினைவிற்கு வர தலையில் கை வைத்துக் கொண்டாள்.

"என்னாச்சு பேபி" என்று சாத்விக் வருந்தும் குரலில் வினவ, "அது வந்து சேர் அண்ணாவுக்கு இன்னும் பத்து நாளில் கல்யாணம். திடீர் முடிவு. இப்போ கம்படிஷனுக்கு எப்படி போறது?" என்று தன்னிலையை விளக்கி அவனிடமே பதிலைக் கேட்க சிறிது நேரம் எதிர்ப்புறம் அமைதி நிலவியது. "கம்படிஷனுல நீ பார்டிசிபேர்ட் பண்ணியே ஆகனும் பேபி. எங்க கோலேஜோட ப்ளசே நீ தான். பட் உன் கல்யாணத்துக்கு முன்னாடி இங்கே அழைச்சிட்டு வர வேண்டியது என் பொறுப்பு. அது வரைக்கு ஆர்யன் கல்யாண வேலைகளை பார்த்துப்போம்" என்றான் தீவிரக் குரலில்.

"சேர் நீங்க எங்களுக்கு உதவி..." என்று அவள் தயங்க, "என் மனைவியோட அண்ணா கல்யாணத்துக்கு உதவி பண்றதுல தப்பில்லை பேபி. உனக்காக மட்டும் தான் இந்த முடிவு. நீ கஷ்டபடுறதே என்னால பார்க்க முடியாது. இதை மனசுல வச்சிக்க" என்று அழுத்தம் திருத்தமாய் கூறி அழைப்பைத் துண்டித்தான் சாத்விக். 'என்ன நான் அவரோட மனைவியா? கடவுளே இது என்ன எனக்கு வந்த சோதனை. அவரை எப்படி நான் கல்யாணம் பண்ணிப்பேன்!!" என்று விதவிதர்த்துப் போனாள்.

'எப்படி கல்யாணம் பண்றதுன்னா என்ன அர்த்தம்? அவரு உனக்கு தாலி கட்டி கல்யாணம் பண்ணிப்பிரு' என்று மனசாட்சி கடுப்படிக்க, 'ஐயோ கொஞ்சம் அமைதியா போ. இப்போ அண்ணன் கல்யாண நேரம் எனக்கு ஒரு கம்படிஷன் இருக்குன்னா? இந்த காட்டுப் பையன் வேற மனைவி, துணைவின்னு உழறிட்டு இருக்காரு' என்று முணகியவாறே ஆதுரமாய் தலை சாய்த்துக் கொண்டாள். அவள் பிரச்சனை அவளுக்கு அல்லவா?
தன் அண்ணனின் திருமணத்தை ஆவலாக எதிர்கொண்டு இருக்க இப்போது ஓவியப் போட்டியும் அவளிற்கு சாத்விக் நினைவுறுத்தினான். அவளும் அறிவாளே..!!! இத்தனை நாட்களாக கலந்துக் கொண்ட போட்டிகளை விட இது முக்கியமான ஒரு போட்டி. அதாவது பல கல்லூரிகள் போட்டியிட்டாலும் இதில் வெற்றி பெறும் கல்லூரியின் மதிப்பும், கௌரவமும் நிச்சயமாக அதிகரிக்கும். ஆகவே அனைத்து கல்லூரிகளில் இருந்தும் மாணவ மாணவிகள் இதில் கலந்துக் கொள்வர்.

அதனாலேயே, முக்கியமாக சில மாணவர்களை கல்லூரியின் ஆசிரியக் குழாமே தெரிவு செய்தது. அதில் சனாவை தெரிவு செய்தமைக்கான காரணம் அவளுடைய ஓவியங்களில் எப்போதும் ஒரு உயிர்ப்புத் தன்மை இருக்கும். அதிலும் அவள் உணர்வுகளை ஓவியத்தில் வெளிப்படுத்தும் விதமே தனியழகு. அவளுடைய ஓவியத்தைப் பார்த்தவர்கள் நிச்சயமாக ஐந்து நிமிடத்திற்கு குறையாது பார்வையை அதில் பதிந்திருப்பர். அந்த அளவிற்கு அவள் ஓவியங்கள் பார்ப்பவரை ஈர்த்துக் கொள்ளும்.
சனாவும் தன்னுடைய குழப்பங்களையும், பிரச்சனைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு சாத்விக் கூறியது போல நடக்க வேண்டும் என்று முடிவு எடுத்தவளாக அபியைப் பார்க்கச் சென்றாள். சனா முதலில் குழம்பியவள் அடுத்து அவள் முகம் தெளிவானது என்று அனைத்தையும் பார்த்த சாத்விக்கின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன.

~ நீ குழம்பித் தவிக்கையில்
சிறு குழந்தையென தெரிகிறாய்
முகம் சுருக்கிப் பேசுகையில்
குமரியென தெரிகிறாய்
இருவருக்கும் அடிமையாகிப்
போனவன் நானடி ~


'ஆர்யன் உன்னை அசிங்கபடுத்த உன் கல்யாணம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. பட் நான் அதை பயன்படுத்தப் போறது இல்லை. என் பேபி ஆசையாக உன் கல்யாணத்தை எதிர்பார்த்து காத்துட்டு இருக்கா. அவளையோ அபியையோ நான் கஷ்டபடுத்த முடியாது. ஆனால் இதுக்கு எல்லாம் சேர்த்து உன்னை துடிக்க வைக்கிறேன்' என்று தன்னுள்ளே சவால் விட்டுக் கொண்டவன் தனது அருகில் வைத்திருந்த அலுவலகக் கோப்பில் மூழ்கிப் போனான்.

சனா அபியின் கதவைத் தட்ட அபி திறந்தாள். அவளும் குளித்து இருந்தால் போலும்..கையில் துவாயுடன் கதவைத் திறந்து சனாவை கேள்வியாய்ப் பார்த்தாள். "உள்ள வரட்டுமா? கொஞ்சம் பேசனும்" என்று அனுமதி கேட்க, "லூசாடி நீ? என்ன புதுசா பேர்மிஷன் கேட்குற?" என்று திட்டியவாறே அவளை இழுத்து சென்றாள். சனா, "இன்னும் கொஞ்ச நாளில் இப்படி தட்டி தானே உன் ரூமுக்கு வரனும்? அதான் இப்போவே பழக ஆரம்பிக்கிறேன்" என்று கண்சிமிட்ட அபியின் கன்னங்கள் நாணத்தில் சிவந்தன.

"சும்மா போடி" என்று சிணுங்கிய அபி, தன் முகத்தை சரி செய்துக் கொண்டாள். "எனக்கு ஒரு சத்தியம் பண்ணனும் அபி. உன் பிரன்டுக்காக" என்று பீடிகையுடன் சனா பேச ஆரம்பிக்க, "தெளிவா பேசு சனா" என்று அபி சனாவை உற்று நோக்கினாள். 'இவ ஆரம்பமே சரி இல்லையே' என்று எண்ணிக் கொண்டாள்.

"என்ன காரணமா இருந்தாலும் கல்யாணம் நடக்கனும். அதுக்கு நீ எனக்கு சத்தியம் பண்ணனும். முதல்ல சத்தியம் பண்ணு" என்று சனா தனது வலது கையை நீட்ட, "எதுக்கு இந்த சத்தியம் எல்லாம்? எனக்கு புரியல்லைடி" என்று முகம் சுருக்கி அபி அமர்ந்தாள். " நீ முதல்ல சத்தியம் பண்ணு அபி அப்புறமா தெளிவா சொல்லுறேன்" என்று கண்களால் தன் கையைக் காட்ட, "உன்னோட பெரிய ரோதனையா போச்சு சனா" என்று முணகியவாறே சத்தியம் செய்தாள். "இப்போவாவது சொல்லித் தொலையேன்டி. டென்ஷன் பண்ணாமல்" என்று ஆற்றாமையோடு கேட்டாள்.

"அபி இன்னும் கல்யாணத்துக்கு பத்து நாள் தான் இருக்கு. அதே போல எனக்கு ஆர்ட் கம்படிஷனும் இன்னும் நாலு நாள்ல இருக்கு. அதுவும் மும்பைல ஆர்ட் கம்படிஷன் நடக்குது. அதுக்கு நான் போகனும். எப்படியும் அங்கே ஒரு திரீ டேய்ஸ் சரி ஸ்டே பண்ண வேண்டி வழி வரும். நான் போறேன்னு சொன்னாலே அண்ணா குதிப்பான். இப்போ நீயும் இல்லாமல் அண்ணா கூடவும் போகாமல் தனியா போறதுன்னா வானத்துக்கும் பூமிக்குமே குதிக்க ஆரம்பிச்சிருவான். ஸ்டே பண்றதை சொன்னேன் கல்யாணத்தை கென்சல் பண்ணிருவான்.
சோ அண்ணனை சமளாக்க வேண்டி இருக்கு. கல்யாணம் வேணான்னு ஒத்த கால்ல நிச்சயமா நிப்பான். நீ தான் அவனை என் கூட சேர்ந்து சமாதானப்படுத்தி கல்யாணத்தை நடத்த உதவி பண்ணனும்.. அவன் தாம் தூம்னு குதிக்கும் போது உன்னால தான் சமாளிக்க முடியும். சோ ஹெல்ப் பண்ணு அபி குட்டி. இந்த ஆர்ட் கம்படிஷன் எங்க கோலேஜை பொறுத்தவரைக்கும் எவளோ முக்கியம்னு உனக்கே தெரியும். சோ அதையும் விட முடியாது. இப்போ நீ தான் ஹெல்ப் பண்ணனும்" என்று அபியின் நாடியைப் பிடித்துக் கெஞ்சினாள் சனா.

அபி, "இதை என் கிட்ட சொன்னால் நானும் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவேன்னு தெரிஞ்சு அதுக்கு பாதுகாப்பா கல்யாணம் நடக்கனும்னு சத்தியத்தை வேற வாங்கிட்டு ரீசனை சொல்ற? இல்லையா?" என்று அழுத்தமாக அவளைப் பார்க்க, "ஈஈஈ.. ஆமா அபி குட்டி. உன் பிரன்டு இல்லையா? அதான்" என்று அசட்டுச் சிரிப்பை உதிர்க்க, "கேடி டி நீ... தயவு பண்ணி இப்படி பாவமாக முகத்தை வச்சுக்காத" என்று தலையிலடித்து அமர்ந்தாள்.

"உன் அண்ணனை சமாளிக்கிறது சின்ன விஷயம் இல்லை சனா. எனக்கே பயமா இருக்கு" என்று கலங்க, ஆதரவாக அவள் கையைப் பிடித்தவள், "உங்க இரண்டு பேரோட கல்யாணம் என் கனவு டி. புரிஞ்சிக்கோ. நான் கம்படிஷனுக்கு போறதுக்கு முன்னாடி என்னால முடிஞ்சதை செஞ்சிருவேன். கண்டிப்பா கல்யாணத்துக்கு முன்னாடியே வீட்டுக்கு வந்திருவேன். புரொமிஸ்" என்று சாத்விக்கின் மேல் இருந்த நம்பிக்கையில் கூறினாள்.

"என்னை பலி ஆடாக்க முடிவு பண்ணிட்ட. இப்போவே போய் சொல்லுவோமா?" என்று அபி வினவ, "இப்போ வேணா. நான் போறதுக்கு முன்னைய நாள் சொல்லலாம். அப்போ தான் என்னை அனுப்புவான்" என்று யோசணையுடன் கூற, அபி இதயத்தில் கை வைத்து அமர்ந்து விட்டாள். "அபி என்னடி ஆச்சு?" என்று பதற, "நீ என்ன விளையாடுறியா? உன் அண்ணன் இப்போ சொன்னாலே ஆடுவான். நீ சலங்கையை வேற கட்ட நாள் பார்க்குற" என்று பயந்தாள்.

"அபி என் செல்லம் தானே நீ? தங்கம், புஜ்ஜிக் குட்டி, ஜாங்ரி, பூந்தி, உசிரு, வெள்ளி..." என்று நாடியைப் பிடித்துக் கொஞ்ச, "என் கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுத்துடாதடி" என்று முடியும் முன் அவளை இத்தனை நேரமாக கொஞ்சிய சனா வாயில் பட்டென்று அடித்தாள். "அபசகுணமா நல்ல விஷயம் ஆரம்பிக்க முன்னாடி பேசாத" என்று முறைத்தாள். "வேற எப்படி பேச சொல்ற? உன் அண்ணன் என் கிட்ட முன்னாடியே தெரியுமான்னு முறைச்சு பார்த்தாலே எனக்கு ஹார்ட் எடேக்கே வந்துரும். என் பிஞ்சு இதயம் தாங்காதுடி" என்று நெஞ்சை பிடித்துக் கொண்டாள் அபி.

"உனக்கு அண்ணாவுக்கும் இடையில சண்டை வர விட்ருவேனா நான்? ஆரம்பத்துலேயே லொக் பண்ணிட மாட்டேன் அவனை? உன்னை லொக் பண்ணது போல" என்று கண் சிமிட்ட, "என்னடி புதுசா தைரியம் வந்திருக்கு; புதுசா இப்படி பேசியே லொக் பண்ற; எல்லாம் வித்தியாசமா இருக்கே" என்று சந்தேகமாக அபி புருவம் சுருக்க, "நான் மட்டுமில்லை யாரா இருந்தாலும் இந்த சிடிவேஷனுல இதை தான் பண்ணுவாங்க" என்றாள் சனா சலித்தவாறு.

"ஹ்ங்...." என்று பெருமூச்சை விட்ட அபி, "அடுத்து என்ன பண்றது?" என்றாள். "இப்போ நீ கொஞ்சம் அமைதியா இரு. வீட்டை கிளீன் பண்ற வேலையை இன்னைக்கே ஆரம்பிக்கலாம் அபி. கல்யாண நாள் நெருங்கினால் உன்னாலயும் வேலை செய்ய முடியாது. நானும் இருக்க மாட்டேன். அத்தை மட்டும் கஷ்டபடுவாங்க.. அதனால கிளீனிங்கை ஆரம்பிக்கலாம்" என்று யோசணையுடன் கூற, "நீ சொல்றது சரி தான் சனா. வா போலாம்" என்று எழுந்த அபி தளவாடியின் முன் நின்றவள் அங்கிருந்த பொட்டை நெற்றியில் வைத்தவாறே சனாவுடன் கீழே சென்றாள்.

இருவரும் பேசிக் கொண்டே கீழிறங்க விசாலாட்சி, "நைட்டுக்கு குருமாவும், சபாதியும் ரெடி பண்ணட்டுமா?" என்று வினவ; சனா, "ஒகே அத்தை நீங்க சமையலை பார்த்துகங்க. நானும், அபியும் வீட்டை கிளீன் பண்ண ஆரம்பிக்கிறோம். பத்து நாளில் முடிக்க வேணும். இன்னும் நிறைய வேலை இருக்கு. அதனால சீக்கிரமா இந்த சின்ன சின்ன வேலைகளை முடிக்கலாம்" என்க, அதற்கு அபியும் ஒத்து ஊதினாள்.

"அதுவும் சரி. இன்னும் நிறைய நாள் நமக்கு இல்லையே. இன்னைக்கு நீங்க சாமி ரூமையும், உங்க ரூமையும் கிளீன் பண்ணுங்க. நாளைக்கு வேலைக்கு ஆளுங்களை வரவழைச்சி மத்த அத்தனை ரூமையும், வீட்டுக்கு வெளியேயும் கிளீன் பண்றேன். கிளீனிங் வேலையை நாளைக்கு முடிச்சா மத்த வேலைகளை நிம்மதியா ஆரம்பிக்கலாம்" என்றார் அந்த வெள்ளந்திப் பெண் இவர்களின் காரணம் தெரியாமல். சனாவும், அபியும் விசாலாட்சி கூறியது போல நல்ல விடயத்தை சாமி அறையில் இருந்து ஆரம்பிக்கலாம் என இருவரும் சாமி அறைக்குள் நுழைந்தனர்.

சாமிப் படங்களையும், குத்து விளக்குகள் அனைத்தையுமே துடைக்க சனா மூலையில் இருந்த ஒரு மரப் பெட்டியைப் பார்த்தாள். அதனை நெருங்கியவள் வெளியே படிந்திருந்த தூசியைத் துடைத்து விட்டு அதைத் திறக்க அங்கே கறுப்பு வெள்ளை நிற படங்கள் சிலவும், சில பழைய பொருட்களும் இருக்க அவள் ஒவ்வொன்றாக துடைக்க வேளியே எடுத்து வைத்தாள். சில காகிதங்கள் இருக்க தூசியைத் தட்டி வைத்தாள். அடுத்து புகைப் படங்கள் இருக்க அதையும் துடைத்தாள்.

அதில் சனாவின் தந்தையின் வாலிப நேர புகைப்படம்..அத்தனை கம்பீரமாக இருந்தார். அடுத்து சில புகைப்படங்கள் அவள் தாய் மற்றும் தந்தையின் கல்லூரி காலத்து புகைப்படங்கள். இருவர் மட்டுமே இருந்தனர். அடுத்து இரண்டு புகைப் படங்கள் இருக்க, அவள் துடைக்கச் செல்லும் போது கார்த்திக், "இங்கே இந்த நேரத்துல எதுக்கு கிளீன் பண்றிங்க?" என்று வந்தான். சனா படபடப்பில் எழ அவள் கையிலிருந்த ஒரு புகைப்படம் கீழே விழுந்து துடைத்து வைக்கப்பட்ட பகவத் கீதை வைத்திருந்த புத்தக தாங்கியின் அடியில் சென்றது.

அபி சட்டென விசாலாட்சியிடம் கூறிய காரணத்தையே இவனிடம் கூற இவனும் நம்பினான். அப்போதே சனாவின் கையில் இருந்த புகைப்படத்தைப் பார்க்க, "இது இங்கே மூலையில ஒரு மரப்பெட்டி இருந்தது அண்ணா. அதை எடுத்து கிளீன் பண்ணும் போது கிடைச்சது" என்று கையில் இருந்த புகைப் படத்தை கார்த்திக்கிடம் காட்டினாள். "இது யாரு அண்ணா? அப்பா கூட நல்ல ஸ்மார்டா ஒருத்தர் இருக்காரு?" என்ற கேள்வியை எழுப்ப, "அப்பா பிரன்டா இருக்கலாம் சனா" என்றான் புகைப்படத்தைப் பார்த்தபடி.

"இது வரைக்கு அப்பா இவரைப் பத்தி சொன்னதே இல்லையே. நான் பார்த்ததும் இல்லை" என்று சனா தோளை உழுக்க, "நானும் பார்த்தது இல்லைடா" என்று அதை எடுத்து பார்த்தப்படி அனைத்தையுமே அதே மரப் பெட்டியில் வைத்து அபி, சனா இருவருக்குமே உதவ ஆரம்பித்தான். பின் அறைகளுக்குச் சென்று தத்தம் அறைகளை சுத்தப்படுத்தி நாளை வேலைக் காரர்களிடம் கூற ஒட்டறை அடிக்கலாம் என்று முடிவு எடுத்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு சாப்பிட அமர்ந்தனர்.

அன்றைய தினம் அவ்வாறு கழிய அடுத்த நாள் காலையில் கல்லூரிக்கும், அலுவலகத்திற்கும் செல்ல மூவரும் தயாராகி வந்தனர். கார்த்திக், "அபி இன்னைக்கு கோலேஜ் முடிச்சிட்டு வெயிட் பண்ணு நாம போய் இன்விடேஷனை சிலெக்ட் பண்ணலாம்" என்றான். அபி, "ஒகே மாமா..சனா நீயும் வருவல்ல?" என்று புருவமுயர்த்த, "இது உங்க கல்யாணம் சோ, நீங்க இரண்டு பேருமே அதை பார்த்துகங்க" என்று புன்னகைத்துக் கூறி பையை எடுக்க, அபியும், கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் புன்னகைத்து பார்த்துக் கொண்டனர்.

கார்த்திக், "அத்தை நீங்க ரொம்ப உங்களை வருத்திகாதிங்க.. வேலைக்கு ஆள் வருவாங்க. நீங்க என்ன செய்யனும்னு மட்டும் சொல்லுங்க. மத்ததை அவங்க பெர்பெக்டா பண்ணிடுவாங்க" என்று அக்கறையாகக் கூற அபியிற்கு தன் அன்னையின் மீது கார்த்திக் வைத்துள்ள அன்பையும், அக்கறையையும் பார்த்து நெகிழ்ந்துப் போனாள்.
சனா, "அண்ணா, நான் விந்தியா அக்கா கிட்ட ஹோம் டெகரேஷனை பூரா ஒப்படைக்கிறேன். நான் ஈவினிங் டிரைவர் அண்ணா கூட அவங்களை பார்க்க போறேன். நீங்க போன் பண்ணி அக்கா கிட்ட சொல்லிருங்கள்" என்றாள் தீவிரமாக.

"சரி மா நான் சொல்றேன். பத்துரமா பார்த்து போ" என்றவன் மூவரிடமும் விடைப் பெற்று தனது காரை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு செல்ல மற்ற இருவரும் கல்லூரியை நோக்கிச் சென்றனர். இன்றைய மாலை வேளையில் அந்த மர்ப நபரிற்கு சனாவை வைத்து திட்டம் திட்டுவதற்கான காரணத்தை சாத்விக் அவன் அறியாமலேயே ஏற்படுத்திக் கொடுத்தான்.




 
Status
Not open for further replies.
Top