All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாணி கார்த்திகனின் "நீ வேண்டும் நான் வாழ" - கதை திரி

Status
Not open for further replies.

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23187


அத்தியாயம் 20



சனா வரைய வேண்டியதை யோசித்து முடிக்க அவள் இதழ்களோ 'காட்டுப் பையலே' என்று முணுமுணுத்தது. அவள் வரைய வேண்டியதை நினைக்கும் போது அவள் இதழ்கள் குறும்புப் புன்னகையைச் சிந்தின. இறுதியாக கற்பனைக்கு வழங்கிய நேரம் முடிவடைய போட்டி ஆரம்பிக்கப்பட்டது. சனாவும் வரைய ஆரம்பித்தாள். இடையிடையே அவள் இதழ்கள் குறும்புப் புன்னகையை சிந்த மறக்கவில்லை. தூரத்தில் இருந்தே சாத்விக் அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.


அவள் முகத்தில் இடையிடையே தோன்றும் புன்னகையில் ஏதோ ஒரு விஷயம் இருப்பதாகத் தோன்றியது. வரைந்து முடித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அவளையே இரசித்துக் கொண்டு இருந்தான். கூலர்ஸ் அணிந்து இருந்ததால் சாத்விக் யாரைப் பார்க்கிறான் என்பதை எவராலும் கண்டுபிடிக்க முடியாதபடி இருந்தது. நேரமும் கடக்க இறுதி நேரத்தை அனைவருமே நெருங்கிக் கொண்டு இருந்தனர்.


அனைத்து போட்டியாளர்களும் தங்கள் ஓவியங்களை வரைவதில் மூழ்கிப்போய் இருந்தனர். சனா வரைந்துக் கொண்டு, 'ஆனாலும் காட்டுப்பையல் அழகு தான் என் டிரோயிங்ல. சோ ஸ்வீட் காட்டுப் பையலே. உன்னால தான் எனக்கு இந்த ஐடியா கிடைச்சது. கிருஷ்ணா இந்த விஷயத்துக்காக காட்டுப் பையலுக்கு இப்படி மச்சத்தையும், உடம்பையும் கொடுத்ததுக்கு உன்னை பாராட்டனும் கிருஷ்ணா' என்று மானசீகமாக கிருஷ்ணனோடு உரையாடினாள்.


"ஹப்பா... இந்த பொண்ணு இன்னைக்கு தான் என்னை பாராட்டி இருக்கா. சாத்விக் சம்பந்தமா என்னை எப்போவுமே திட்றவ இன்னைக்கு பாராட்டினது நல்லா இருக்கே. நானும் கொஞ்சம் நல்ல கடவுள் தான்" என்று கிருஷ்ணனும் பெருமைப்பட்டுக் கொண்டார். அவரும் எத்தனை நாட்கள் தான் சனா சாத்விக்கை படைத்ததில் குறைக் கூறியும், திட்டியும், புலம்பியும் இருக்கிறாள். இன்று அல்லவா பாராட்டி இருக்கிறாள். தன் பக்தை வெகு நாட்களிற்குப் பிறகு அவரை பாராட்டியதில் கர்வமைடைந்தார்.


கவுன்ட் டவுன் ஆரம்பிக்க அவசரமாக அனைவருமே ஓவியத்தை நிறம் தீட்டி முடிப்பதில் மும்முரமானார்கள். முப்பதிலிருந்து ஆரம்பித்து ஒன்று முடியும் போது சனாவும் ஓவியத்தில் இருந்து கையெடுத்தாள். ஒரு முறை ஓவியத்தைப் பார்த்து நிறைவாகப் புன்னகைத்து, 'காட்டுப் பையலே சூப்பரா இருக்கியே' என்று கொஞ்சி சாத்விக்கை நினைத்து மற்றவர்களை ஈர்க்காமல் சிரித்தாள்.


அனைத்து ஓவியங்களையும் ஏற்பாட்டாளர்கள் சேகரித்து ஓவியர் கமலேஷிடம் எடுத்துச் செல்லப்பட்டது. கமலேஷ் அரை௱மணி நேரத்தில் ஓவியங்களை தெரிவு செய்தார். முதல் ஐந்து இடங்களைப் பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். ஐந்தாவது இடமும், நான்காவது இடமும் மும்பையில் உள்ள இரண்டு கல்லூரிகளுக்கும், மூன்றாம் இடம் பெங்களூரில் இருந்த கல்லூரிக்கும் இரண்டாம் இடம் மதுரையில் உள்ள கல்லூரிக்கும் வழங்கப்பட்டதோடு முதலாம் இடம் சனாவிற்கு வழங்கப்பட ஐவருக்குமான கரகோஷங்கள் விண்ணைப் பிளந்தன.


கமேலஷ் ஒவ்வொருவரையும் மேடைக்கு அழைத்தார். ஐவரும் சென்ற பிறகு அவர்களுடைய ஓவியங்கள் அவர்களிடமே வழங்கப்பட்டது. கமலேஷ், "இந்த டிரோயிங்சை பத்தி நான் சொல்றதை விட நீங்களே சொல்லுங்க" என்றார். நான்கு மாணவர்களும் முடித்த பிறகு சனாவிற்கான வாய்ப்பு கிடைத்தது.


"இதுல நான் வரைஞ்சி இருக்கிற முதலாவது படம் அடர்ந்த நடுக் காட்டில் இருக்கிற ஒரு நபர் சூரிய ஒளிபடும் போது அவர் பார்க்கும் போது உள்ள வியூவும், அதே ஆள் வெளியே தூரமா இருந்து பார்க்கும் போது கிடைக்கிற இரண்டு வியூவையும் ஒரே படத்துல வரைஞ்சி இருக்கேன். இரண்டாவது இந்த ஒட்டுமொத்த படத்தையும் சேர்த்தால் ஒரு காட்டுவாசி தன் கையை மார்புக்கு குறுக்காக கையைக் கட்டி இருக்கிற படம்" என்றாள்.


"காட்டுவாசியோட டிரஸ்ஸை இரண்டு வியூவிலும் உள்ள காடாகவும், அவரோட மார்புப் பகுதியை மாலைநேர வானமாகவும், ஒரு புஜத்தில் இருக்கிற மணியை மலையாகவும் வரைஞ்சி இருக்கேன். கழுத்துப் பகுதியில் இருக்கிற அந்த குழிவு சூரியனாகவும் வரைஞ்சி இருக்கேன். மற்றைய புஜத்துல இருக்கிற மச்சம் ஒரு கறுப்பு நிற பறவைக் கூட்டமாகவும் வரைஞ்சி இருக்கேன். முகத்தை வரைய எனக்கு பிடிக்க இல்லை. அதனால் தொடைப் பகுதியிலிருந்து கழுத்துப் பகுதி வரைக்கும் வரைஞ்சு இருக்கேன்" என்றாள் விளக்கமாக.


"வட் அ கிரியேடிவிடி. சூப்பரப் திங்கிக்!!" என அனைவரும் சிலாகிக்க சனா, 'ஐயோ இதை கிரயேடிவிடின்னு சொல்லிட்டாங்களே.. ஐயோ நான் காட்டுப்பையலை இல்லையா யோசிஞ்சு வரைஞ்சேன். இவங்க தப்பா நினைச்சிட்டாங்களே. ஆனாலும் கிருஷ்ணா இதுவும் நல்லா இருக்கே' என தன்னுள்ளே நினைத்தவள் வெளியே சிரித்து வைத்தாள்.


இவற்றைப் பார்த்துக் கொண்டு இருந்த சாத்விக், "கண்ணுல தெரியிற நக்கலுக்கும், வெளியில சிரிக்கிற சிரிப்புக்கும் சம்பந்தம் இல்லையே" என்று யோசிக்க அவள் புஜத்தில் கூறிய மச்சம் நினைவு வந்தது. "நானும் அப்படி மச்சத்தை எங்கேயோ பார்த்து இருக்கேனே. எங்கே??" என்று யோசிக்க அவனுக்கு உடனே ஞாபகத்திற்கு வரவில்லை. 'சரி மாட்டாமலா போயிரும் அப்போ பாத்துக்குறேன்' என்று சனாவைப் பார்த்தான்.


வந்ததில் இருந்து தனக்கு நெருக்கமான ஒருவர் இங்கே இருப்பதாக உணர்த்தினாலும் கண்களுக்கு தெரியும் வரையில் எவரும் இருக்கவில்லை. சாத்விக் மேடையில் பின்னே இருந்ததால் சனாவிற்கு பார்க்க முடியவில்லை. அவளை மேடைக்கு அழைக்கும் போது எங்கும் பார்க்காமல் கமலேஷ் வரக் கூறிய இடத்தை மாத்திரமே பார்த்து சென்றதால், செல்லும் வழியில் இடப்புறமாக திரும்பியும் பார்க்காமல் சென்றதால் அவளால் பார்க்க முடியவில்லை.


முதல் ஐந்து மாணவிகளுக்கும் சாத்விக்கை பரிசைக் கொடுக்க அழைத்தனர். அப்போதே சாத்விக் பின்னிருந்து எழுந்து சனாவின் அருகில் நின்றான். இருவருக்கும் இடையில் இரண்டடி இடைவெளியே இருந்தது. சனா சாத்விக்கை அதிர்ந்து பார்க்க தனது கூலரை கழற்றி சேர்டில் மாற்றும் போது அவளைப் பார்த்து கண்சிமிட்டி ஒன்றுமே நடவாதது போல நின்றுக் கொண்டான்.


சனா அதிர்ச்சி தாங்காமல் இன்னும் தன் முட்டைக் கண்களை விரித்து சற்று நகர்ந்து நின்று வேறு புறம் திரும்பிக் கொண்டாள். 'காட்டுப் பையலே பப்ளிக் பிளேசுல எப்படி நடந்துக்குறான் பாரு. உன் தலையை பிடிச்சு அந்த சுவத்துல மோதினா தான் என்ன? காட்டுவாசி!!! காட்டுவாசி!!!' என்று திட்டித் தீர்த்தாள்.


மனசாட்சி, 'இரண்டாவது தடவை நீ வைலன்சுல இறங்குற சனா' என ஞாபகப்படுத்த, 'அச்சோ கிருஷ்ணா!! என்னால முடியல்லை. இவன் கூட சேர்ந்தால் நான் கெட்ட பொண்ணாகிருவேன். இந்த காட்டுப் பையல் கிட்ட இருந்து காப்பாத்தேன்' மறுபுடியும் புலம்ப ஆரம்பிக்க, "ஐயோ மறுபடியும் நானா " என்று அலறி கிருஷ்ணா ஓடிவிட்டார் அங்கிருந்து.


சனாவை அழைக்க தன்னை சமன்படுத்தி சாத்விக்கின் முன்னே நிற்க அவளுக்கான சர்டிஃபிகேர்ட்டையும், டிரோஃபியையும் பரிசையும் வழங்கினான். பின் தங்கப்பதக்கம் கொடுக்கப்பட்ட அதையும் அவனே அணிவிக்கும் போது, "இன்னும் கொஞ்ச நாள்ல இதே போல தாலியை உன் கழுத்துல கட்டுறேன்" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் கூறி அவளிடம் இருந்து விலகி நின்றான்.


சனா அதைக் கேட்டு மீண்டும் அதிர, (அட போமா... கொஞ்சமாச்சும் உன் ரியெக்ஷனை மாத்துமா) சாத்விக் நமட்டுப் புன்னகையுடன் அவளை ஏறிட்டான். மாணவர்கள் கீழிறிங்க சனாவும் சாவி கொடுத்த பொம்மை கீழிறங்கினாள். மேடையில் அனைவரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்தே அனுப்பி வைத்தனர். ஒருவர் மாற்றி ஒருவர் கீழேயும் வாழ்த்தை தெரிவிக்க அவள் முனையாமலேயே சாத்விக்கின் நினைவுகள் ஒதுங்கியது.


அநேகமானோரின் வாழ்த்துக்களைப் பெற்ற பின் சாத்விக் இல்லாமல் அவனுடைய காரை அழைத்துச் செல்ல டிரைவரை அனுப்பி வைத்திருந்தான். பிரதம அதிதியாக சென்று இருந்தமையால் சாத்விக்கால் உடனடியாக செல்ல முடியாமல் இருந்தது. அதனாலேயே சனாவை ஹோட்டலிற்கு அழைத்துச் செல்ல டிரைவரை அனுப்பி வைத்திருந்தான்.


சனா தனது கல்லூரியிலிருந்து போட்டியில் பங்கு பெற்ற மற்ற இருவரும் பேரிசிரியரும் இருந்த இடத்திற்குச் சென்றாள். ஸ்டாஃப், "வாழ்த்துக்கள் சனா" என்று கூற "தேங்கியூ சேர்" என்று புன்னகைத்து, "சேர் நான் இப்போவே சென்னை போயாகனும். அண்ணா கல்யாணம் நாளான்னைக்கு. சாத்விக் சேர் டிகெட் புக் பண்ணி இருக்காரு. அவருக்கும் மீடிங் இருக்குன்னு சென்னை போகனும்னு சொன்னாரு. இன்னைக்கு ஈவீனிங் டிகெட் புக் பண்ணி இருக்காரு. அண்ணாவும் வர சொன்னான். சோ நான் போறேன் சேர்" என்றாள்.


ஸ்டாஃப், "சாத்விக் சேர் என் கிட்ட காலையில சொன்னாரு மா. அவருக்கும் வேலை இருக்கிறதால போறாராம். உன்னையும் பத்துரமா கூட்டிட்டு போறதா சொன்னாரு. பயப்படாத. அவரு நல்ல மனிஷன். தைரியமா போ. அண்ணாவுக்கு விஷ் பண்ணதா சொல்லு" என்று புன்னகைக்க, "நம்ம அபி தான் பொண்ணு சேர். அவசரமா கல்யாணத்தை வைக்குற சிடுவேஷன் சேர். அதான் பெரிசா கல்யாணத்தை வைக்க இல்லை. ரிசப்ஷனை கிரேன்டா செய்வோம். கண்டிப்பா வந்துருங்க" என்று கூறி மற்றவர் இருவரிடமும் கூறி விடைப் பெற்றாள்.


டிரைவரோடு தனது அறையை அடைந்தவள் குளித்து அனைத்தையும் எடுத்து வைத்து சென்னைக்குச் செல்ல தயாராகி விசாலாட்சிக்கு அழைத்தாள். "சனா மா எப்படி டா இருக்க? சாப்பிட்டியா? கம்படிஷன்ல என்னாச்சு?" என்று அடுக்கடுக்காக கேள்விக் கனைகளைத் தொடுக்க, "அத்தை பொறுமை. ஒவ்வொரு கேள்வியா கேளுங்க" என்று சிரித்து, "நான் இப்போ சென்னைக்கு வர ரெடியாகிட்டு இருக்கேன். கம்படிஷன்ல ஃபர்ஸ்ட் பிரைஸ் எடுத்துட்டேன் அத்தை" என்றாள் குதூகலத்துடன்.


"வாழ்த்துக்கள் சனா மா. பாதுகாப்போட வரியா?" என்று தாயின் பரிதவிப்புடன் வினவ, "நான் யார் கூட வந்தேனோ அவங்க கூடவே வரேன். சேரோட லேடி ஸ்டாஃபும் வராங்க. மத்தவங்க நாளைக்கு மும்பையை சுத்தி பார்த்துட்டு நாளான்னைக்கு வந்து சேருவாங்க" என்று விளக்கமளிக்க அப்போதே நிம்மதியாய் மூச்சு விட்டார். அதன் பின் அபியும் பேசினாள். கார்த்திக்கிற்கு அழைத்து அவனிடமும் பேசிவிட்டு கண்களை மூடி சோஃபாவில் அமர்ந்து கண்களை மூடினாள்.


அப்போதே வயிற்றில் இரயில் ஓட இன்னும் உண்ணவில்லை என்பது அவளிற்கு நினைவு வந்தது. 'அச்சோ பசிக்குதே. என்ன பண்றது? கிருஷ்ணா!!!' என்று அதற்கும் அவரை அழைக்க, கடுப்பாகியவர், 'இதுக்கு அப்புறம் என்னை கூப்பிடாத. உன் கூட இருந்து நான் ரொம்ப டயடாகிட்டேன். அதனால நான் கொஞ்ச நாளைக்கு லீவ் எடுக்க போறேன். குட் பாய்' என்று சென்று விட்டார்.


அவர் கூறியது சனாவின் காதிற்கு எட்டவில்லை. அதனாலேயே இனிமேல் சென்னைக்கு சென்ற பிறகு வருகிற சம்பவங்கள் அனைத்துமே அவள் கையை மீறி உதவிக்கு கிருஷ்ணன் இல்லாமல் தத்தளிக்க போகிறாள் என்பதை அப்பேதை அறியவில்லை. தான் கனவிலும் நினைத்துப் பார்க்காத பல சம்பவங்கள் அங்கே நடந்தேற உள்ளன எனத் தெரியாமல் இருக்க விதியோ கைக் கொட்டி அவளைப் பார்த்துச் சிரித்தது.


சனா அறையில் அனைத்து இடங்களிலும் ஏதாவது சாப்பிட உள்ளதா என்று தேட, இடைக் கதவை திறந்து, "என்ன பேபி தேடுற?" என்று உள்ளே வந்தான் சாத்விக். "சாப்பிட ஏதாவது கிடைக்குமான்னு பார்க்குறேன் சேர்" என்று குளிர்சாதனப் பெட்டியினுள் தலையைச் செலுத்தி திரும்பிப் பாராமலேயே கூறினாள். அவளை நெருங்கியவன், பின்னிருந்து அவளை இழுத்து கையில் ஏந்தினான்.


சனா, "ஐயோ சேர் என்ன பண்றிங்க? விடுங்கசேர். ஐயோ விடுங்க சேர்" என்று திமிறிக் கொண்டே கத்த அதை எதையுமே பொருட்படுத்தாமல் அவளை சோஃபாவில் அமர வைத்தான். சாத்விக், "நீ சாப்பிடாததை நானும் பார்த்துட்டு இருந்தேன் பேபி. அதான் சாப்பிட வாங்கிட்டு வந்தேன். லைட் ஃபுட் தான். அதனால டிரெவலிங் நேரம் பயப்பட தேவையில்லை. நானும் சாப்பிட இல்லை பேபி. சீக்கிரம் சாப்பிட்டு ஸ்டேஷனுக்கு போலாம்" என்றான்.


இருவரும் அமர்ந்து சாப்பிட்டு இன்னும் தேவையான சில உணவுப் பொருட்களையும், தண்ணீர் போத்தலையும் வாங்கி புகையிரத நிலையத்திற்குச் சென்று அவர்களது இருக்கைக்குச் சென்று அமர்ந்தனர். சனாவிற்கு இன்று ஏற்பட்ட களைப்பு, சற்று நேரத்திற்கு முன் உண்டது அனைத்துமே ஒரு வித மயக்கத்தைத் தர யன்னல் சீட்டில் அமர்ந்தவாறே கண்ணயர்ந்தாள்.


சாத்விக் தன் மடிக் கணனியில் வேலையில் மூழ்கியதில் இவளைப் பார்க்கவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு திடீரென்று ஏதோ ஒரு பாரம் அவன் இடது தோளை அதிகரிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. அப்புறமாகத் திரும்பிப் பார்க்க சனா அவனது தோளில் சாய்ந்து நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்தாள்.


அதைப் பார்த்து அவனது இதழ்கள் விரிய தனது வேலையை நிறுத்தியவன் அவளை தன் நெஞ்சோடு அணைத்து சீட்டில் சாய்ந்தான். சென்னைக்கு சென்றால் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டுக் கொண்டான். புகையிரதம் சென்னையை நோக்கி தன் பயணத்தை ஆரம்பிக்க இருவரின் வாழ்விலும் பல தரமான சம்பவங்களை நிகழ்த்த சென்னை காத்துக் கொண்டு இருந்தது.


சாத்விக், சனா இருவரையும் தேவைக்கு அதிகமாகவே புகைப் படங்களை எடுத்தவன் அதன் பின் இன்று மேடையில் வைத்து புகைப்படங்களை எடுத்து மர்ம நபரிற்கு அனுப்பி வைத்தான். அவற்றைப் பார்த்த மர்ம நபர் தனக்குத் தேவையான வகையில் புகைப்படங்கள் இருப்பதைப் பார்த்து திருப்தி உற்று உடனேயே அங்கிருந்து செல்லக் கூறிவிட்டான்.


மர்மநபர், "சும்மா சொல்லக் கூடாது ப்ரவீன். நல்ல ஸ்மார்டா தான் இருக்க. அதான் கோலேஜே உன் பின்னாடி சுத்திச்சே. உனக்குள்ள இருக்கிற ரெமோவை நான் இப்போ தான் கண்கூடாவே பார்க்குறேன். முன்னால் காதலிகிட்ட கிடைச்ச எக்ஸ்பீரியன்ஸ்ல இங்க போட் ஓட்ற. கொடுத்து வச்சவன் டா நீ. எங்க போனாலும் ஒரு ஃபிகர் மாட்டுது.


என்ன பண்றது? இந்த ஃபோடோவை வச்சு தானே அடுத்த விளையாட்டை விளையாட போறேன். அதுல கார்த்திக் உன்னை அடிக்கிறதுல நீ திரும்ப எழ கூடாது. இதெல்லாம் யாரு பண்றாங்கன்னு தெரியாமல் நீ தலையை பிச்சிகிட்டு பைத்தியமாகனும்டா நீ. தேவையில்லாமல் என் மேலே கையை வச்சி உன் வாழ்க்கையை நீயே அழிச்சிகிட்ட ப்ரவீன்" என்று கோபத்தில் கத்தினான்.


சில நினைவுகள் அவன் கண்முன் தோன்ற, "உன்னை இந்த முறை மீடியாவை வச்சு அவமானபடுத்தாமல் விட மாட்டேன் டா. அப்புறமா நீ வெளியில தலை காட்ட முடியாமல் இங்கிருந்து மறுபடியும் போகனும்" என்று கொக்கரித்து அங்கிருந்த மேசையில் ஓங்கிக் குத்தினான் அந்த மர்ம நபர். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் கடவுள் ஒருவன் எதற்கு???


வெகுநேரத்திற்குப் பிறகு சனா கண் விழிக்க சாத்விக் கையணைப்பில் இருந்து அவன் நெஞ்சில் சுகமாய் உறங்கி இருப்பதை உணர்ந்தாள். பதறி அவனிடம் இருந்து விலக முயற்சிக்க முயற்சியாய் மட்டுமே அது இருந்தது. அவளது திமிறலில் சாத்விக்கின் உறக்கமும் கலைந்தது. சனா அவன் முகத்தை பார்த்து விட்டு அவள் இடையைச் சுற்றி இருந்த அவனது வலிமையான கையை பாவமாய்ப் பார்த்தாள்.


அவனுக்கு அவளைப் பார்த்து சிரிப்பு வந்தாலும் இதழுக்குள் மறைத்து புரியாதது போல், "என்ன பேபி?" என்றான். "சேர் கையை கொஞ்சம் எடுக்குறிங்களா? நான் போய் பிரஷ்ஷாகிட்டு வரேன்" என்று தயங்கிக் கூற அவளை ஊன்றி ஒரு முறைக் கவனித்தவன், "சரி போ" என்று அனுப்பி வைத்தான். 'ஹப்பா!!' என்று பெருமூச்சை வெளியிட்டு தன் வேலைகளை முடித்து முகம் கழுவி வந்தாள்.


அதற்கு இடையில் சாத்விக்கும் சென்று தன்னைச் சுத்தப்படுத்தி வந்தான். இருவருக்கும் லேசான உணவுகளை வாங்கி இருந்ததால் அதை எடுத்து சாப்பிட்டனர். "பேபி எனக்கு உன் கிட்ட இருந்து ஒரு பதில் வேணுமே" என்று சாப்பிட்டவாறே அவளைப் பார்த்தான். 'இப்போ என்ன கலகம் வர போகுதோ. கிருஷ்ணா காப்பித்துப்பா' என்று வயிற்றில் புளியைக் கரைத்த உணர்வுடன் அவனைப் பார்த்தாள் சனா.


"எனக்கும் உனக்கும் கல்யாணம் ஆகிருச்சு. அப்புறமா எனக்கும் உன் அண்ணனுக்கும் சண்டை வருது. உன் அண்ணன் உன்னை அவன் கூட வர சொல்றான். நீ என்ன பண்ணுவ?" என்று கூர்மையாய் பார்த்தான். 'போச்சு போச்சு. இன்னைக்கு டேமேஜ் இல்லாமல் வீடு போய் சேர மாட்டேன் போல இருக்கே' என்று பீதியுடன் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். சாத்விக், "என்ன பேபி யோசிக்கிறியா?" என்று அவளை உலுக்க தலையை எல்லாப் புறமும் சுற்றினாள்.


"ஒன்னு 'ஆமான்னு' தலையை ஆட்டு. இல்லை, 'இல்லைன்னு' தலையை ஆட்டு" என்று கண்டிப்புடன் கூற முதலில் 'ஆம்' என்று தலையாட்டியவள், அடுத்து 'இல்லை' என்று தலையை ஆட்டினாள். சாத்விக் இதைப் பார்த்து கடுமையாய் அவளை முறைக்க சனா மிரண்டு அவனைப் பார்த்தாள்.


சாத்விக், "நான் கேள்வி கேட்டு நீ பதிலை சொல்லாமல் அமைதியா இருந்தால் எனக்கு கெட்ட கோபம் வரும்னு உனக்கு தெரியும் பேபி. என்னை கோபப்படுத்தாமல் பதிலை சொல்லு" என்றான் கடுமையான குரலில். 'எனக்கு மட்டும் வெராய்டி வெராய்டியா குவஷ்ஷன்ஸ் கேட்குறாரு. இவரையெல்லாம் பெத்தாங்களா? இல்லை செஞ்சாங்களா?' என்று அதி முக்கிய கேள்வி மனதில் எழுந்தது.


மனசாட்சி, 'சனா இப்போ மட்டும் நீ பதில் சொல்ல இல்லை, இந்த காட்டுப் பையல் உன்னை கடிச்சு குதறிடுவான்' என்று எச்சரித்தது. சனா, "கல்யாணம் பண்ணா புகுந்த வீடும், பொறந்த வீடு இரண்டுமே அந்த பொண்ணுக்கு ஒன்னு தான் சேர். இரண்டுமே இரண்டு கண்ணைப் போல ஒன்னை இழந்தாலும் ரொம்ப வலிக்கும். ஆனால் அதுக்கும் மேலே அந்த பொண்ணுக்கு புருஷன் தான் ஃபர்ஸ்ட். ஹார்ட் மாதிரி. இதயம் இல்லைன்னா ஒன்னுமே பண்ண முடியாது" என்று கூறி வெளியில் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.


'இப்போ இவ என்ன சொல்ல வரா?' என்று யோசிக்க அப்போதே அவனுக்கு பல்ப் எரிந்தது. இதயம் இல்லாமல் ஒரு மனிதனுக்கு உயிர் வாழ முடியாது. ஆனால் கண்களை இழந்தாலும் உயிரோடு வாழலாம். அதே போல் கணவன் இன்றி இருக்க முடியாது. அவனுக்கே தன் வாழ்வில் முதலிடம் என்பதை மறைமுகமாக கூறி இருக்கிறாள் என்பதில் மனதில் பல வண்ண மத்தாப்பூ பூக்கள் பூத்துக் குலுங்கின


அதன் பிறகு சாத்விக் சனாவை தொந்தரவு செய்யவில்லை. அவள் வழியிலேயே விட்டான். சாத்விக்கும் தன் வேலையில் மூழ்கிப் போனான். இடையிடையே இருவரும் உறங்கியும், வேடிக்கைப் பார்த்தும், ஏதாவது ஒன்று பேசிக் கொண்டும் தங்கள் நேரத்தினைக் கடத்தினர். சனா சென்னையை நெருங்கும் போது உறங்கிக் கொண்டு இருக்க சாத்விக்கே அவளை எழுப்பினான்.


சனாவிற்கு சென்னையை நெருங்க மனம் ஏதோ நெருடிக் கொண்டு இருந்தது. இத்தனை நாட்களாக இல்லாத ஒரு தவிப்பு; ஏதோ தவறாக நடக்க உள்ளது என்பதை அச்சுறுத்தியது. சென்னையை நினைக்கும் போதே மனம் ஒரு நிலையில் இல்லாதது போன்று இருந்தது. அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து நேரத்தைப் பார்க்க அடுத்தநாளில் மாலை நான்கு ஐம்பதாக இருந்தது.


கார்த்திக்கிற்கு சனா அழைக்க, "சொல்லு பட்டு. எங்கே இருக்க?" என்று வினவ, "இன்னும் வன் ஹவர்ல சென்னை சென்டிரல் ரெயில்வே ஸ்டேஷனை ரீச் பண்ணிருவோம் அண்ணா. நீயா வருவ பிக்கப் பண்ண? இல்லை டிரைவர் வருவாரா?" என்றாள். "நான் வருவேன் பட்டு. நீ ரெடியா இரு" என்று சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.


கார்த்திக்கிற்கு இன்று இரவு நடக்க இருக்கும் பார்டியில் சாத்விக் கலந்துக் கொள்வதாக அவனுடைய பி.ஏ ராகவிடம் இருந்து தகவல் வந்திருந்தது. இன்றே சாத்விக் மும்பையிலிருந்து வருவதாகவும் தகவல் கிடைக்க சனாவுடன் சாத்விக் வருவானோ என்று நினைக்க ஒரு நிமிடம் மனம் பதறியது. சனாவை பழிவாங்கும் படலத்தில் இன்னும் இழுத்துவிடுவானோ என்ற ஒரு பயமும் அவன் மனதை அழுத்திக் கொண்டு இருந்தது.


இன்று சாத்விக் சனாவை தொந்தரவு செய்திருந்தால் அங்கேயே இரண்டு கன்னமும் பழுக்கும் வகையில் அடிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தான். அதனாலேயே தானே சென்று அவளை அழைத்து வர நினைத்து இருந்தான். தன் உயிர்த் தங்கையை பாதுகாக்க வேண்டும் என்று ஒரு அண்ணனாக முடிவு எடுத்து இருந்தான். சாத்விக் ஏதாவது செய்தால் சனா தன்னிடம் மறைக்காது கூறியிருப்பாள்; இது வரை அவ்வாறு எதுவும் கூறவில்லை என்பதால் சாத்விக் சனாவை சந்திக்கவில்லை என்று தவறாகவே யூகித்தான்.


சென்டரல் புகையிரத நிலையத்தில் புகையிரதம் நிற்க சனா தனது பொருட்களை எடுத்துக் கொண்டு முன்னே செல்ல சாத்விக் அவளை பின் தொடர்ந்தான். சனா புகையிரதத்தின் கதவில் இருந்து இறங்க கார்த்திக் அவ்விடம் நோக்கி வருகை தந்தான். சாத்விக்கோ சனாவின் பின்னே நின்று இருந்தான்.




 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23221


அத்தியாயம் 21



கார்த்திக் சனா இருக்குமிடத்தை நெருங்க சனா இறங்கி வந்தாள். கார்த்திக்கைப் பார்த்த பிறகே சாத்விக்கை நினைவு வர பின்னால் திரும்பிப் பார்த்தாள் அங்கே அவன் இருக்கவில்லை. 'இந்த காட்டுப் பையல் எங்க போனான்? என் பின்னாடி தானே இருந்தான்?' என்று தேட, அவளை நெருங்கிய கார்த்திக், "யாரை தேடுற பட்டு?" என்றான். கார்த்திக் பேசியதில் பயத்தில் இரண்டடி பின் நகர்ந்தாள்.


கார்த்திக் பயந்து, "என்னாச்சு பட்டு?" என்று அவள் முகத்தைக் கையிலேந்தி கேட்க, "நான் வேற யோசணையில இருந்தேன். திடீர்னு பேசும் போது பக்குன்னு ஆகிருச்சு" என்றாள் அதே குரலில். "நீ திரும்பி யாரையோ தேடிட்டு இருந்தியா அதைக் கேட்டேன்" என்று அவனும் பின் திரும்பிப் பார்த்தான். சனாவிற்கு பயத்தில் முத்துமுத்தாக வியர்வை பூத்து இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.


அங்கே எவரும் இல்லாததால் சனாவின் புறம் திரும்பினான். சனா அவசரமாக, "நீ யாரை அண்ணா தேடுற?" என்று வினவ, கார்த்திக் அவள் தடுமாற்றத்தைப் பார்த்தவாறு, "யாரையும் இல்லை பட்டு. வீட்டுக்கு போலாமா?" என்றான். "ஒகே அண்ணா. போலாம். எனக்கும் டயர்டா இருக்கு. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு பார்ட்டிக்கு போக ரெடியாகனும்" என்றாள்.


அவள் முகத்தில் தெரிந்த அதீத களைப்பை பார்த்தவன் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கார் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான். காரில் செல்லும் போது களைப்பில் சனா கண்களை மூடியே சென்றாள். சாத்விக் சனாவின் பின்னே நின்று இருக்க அவன் தனது பிளேசரை தேட அது இருக்கவில்லை. அப்போதே உள்ளே கழற்றி வைத்தது ஞாபகம் வர அதை எடுக்கச் சென்றான். அதனால் கார்த்திக், சனா இருவருமே சாத்விக்கைப் பார்க்கவில்லை.


சனாவை சாத்விக் வெளியேறியவுடன் தேட கார்த்திக் வருவதாகக் கூறியது நினைவு வர அவன் அழைத்துச் சென்று இருப்பான் என்று சரியாக யூகித்து நடக்க அவனது உதவியாளர் அவனது டிரொலியையும், லெப்டொப் பேர்கையும் வாங்கி் கௌ்ள, தன்னை அழைத்துச் செல்ல வந்திருந்த காரில் அமர்ந்துக் கொண்டான். களைப்பாக இருக்க இருக்கையில் சாய்ந்தான்.


சனாவை வீட்டிற்கு வரும் போது விசாலாட்சியும், அபியும் ஆரத்தி எடுத்து ஆர்ப்படமாக வரவேற்றனர். சனா, "அத்தை, அபி போதும். இன்னைக்கு அபிக்கும், அண்ணாவுக்கும் முக்கியமான நாள். சோ, அவங்களுக்குரிய நாளை என்ஜோய் பண்ணலாம். நான் பார்ட்டியிற்கு வர ரெடியாகுறேன். நீங்களும் ரெடியாகுங்க" என்று அணைத்து விடுவித்து அனுப்பி வைக்க மற்ற மூவரும் சிரித்து பார்டியிற்குச் செல்ல தயாராகினர்.


சனா அதீத களைப்பில் இருந்ததால் முப்பது நிமிடம் உறங்கலாம் என்று முப்பது நிமிடத்தில் அலார்ம் வைத்து உறங்கினாள். அதே போல முப்பது நிமிடத்தில் எழுந்து குளித்து பார்டியிற்காக அன்று வாங்கிய ஆடையை அணிந்துக் கொண்டாள். தன்னைச் சுற்றி ஒரு முறைப் பார்த்து ஒழுக்கமானதாக இருப்பதைப் பார்த்து திருப்திபட்டுக் கொண்டாள். வைர நகைகளை அணிந்து, இலகுவான சிகையலங்காரத்தையும், எளிமையாக ஒப்பனையை ஒப்பனையாளரை வைத்து செய்துக் கொண்டாள்.


அவள் கீழிறங்கி வந்து தனது கிருஷணனை பார்க்க தோட்டத்திற்குச் சென்றாள். அபி, கார்த்திக் இருவருமே ஜோடியாக வந்திறங்கினர். மெரூன் நிற லோங் ஃபுரொக் அணிந்து, கழுத்தில் பிளெடினம் ஆரம் ஒன்றும் அதற்கேற்ற பெரிய காதணிகளும் ஒப்பனையாளர்கள் மூலம் சிகையலங்காரமும் ஒப்பனையும் செய்யப்பட்டு அப்சரசாக நடந்து வந்தாள்.


கார்த்திக் கறுப்பு நிற கோர்ட் சூட் அணிந்து கம்பீரமாக நடந்து வந்தான். அவனது நிறத்திற்கு கறுப்பு நிறம் எடுப்பாக இருக்க அவனது நிறத்தை இன்னும் அதிகரித்துக் காட்டியது. அவனது நடையில் இருந்த மிடுக்கும், ஆளுமையும் அங்கிருந்தோரை ஈர்க்கும் வகையில் இருந்தது என்றால் மிகையாகது.


இருவரையும் பார்த்து ஒன்றாக விசாலாட்சி நிற்க வைத்து இருவருக்கும் சுற்றிப் போட்டார். அபி, "சனா இன்னும் வர இல்லையா?" என்று வினவ, "அவ வெளியே கிருஷணனை கும்பிட போனா. இப்போ வருவா" என்று கூறி முடியும் முன்னே தன்னது இளம் பிங்க் நிற லோங் ஃபுரொக்கை தூக்கியவாறு உள்ளே நடந்து வந்தாள். சனாவைப் பார்த்த மூவருக்கும் அவளை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை. பேரழகியாக நின்று இருந்தாள்.


கார்த்திக் அவளிடம் வந்தவன், "ரொம்ப ரொம்ப அழகா இருக்க பட்டு. இன்னைக்கு உன்னை பார்த்து எத்தனை பேர் பொண்ணு கேட்க போறாங்களோ தெரியல்லை. தேவதை போல இருக்க" என்று நெற்றியில் இதழ் பதிக்க, "நீங்களும் சூப்பரா இருக்கிங்க அண்ணா. அவளோ அழகா இரண்டு இருக்கிங்க. செம ஜோடி" என்று சனாவும் இருவரையும் மென்மையாக அணைத்து விடுவித்தாள்.


கார்த்திக் கூறியதைக் கேட்டு மனம் திக் என்றது. சாத்விக்கின் நினைவுகள் அழையா விருந்தினராக வருகைத்தர, 'காட்டுப் பையல் சும்மா இருந்தாலும் அண்ணா சும்மா இருக்க மாட்டான் போல இருக்கே' என்று உள்ளுக்குள் புலம்பினாள். நால்வரும் சேர்ந்து பார்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டலிற்குச் சென்றனர்.


இன்றைய விழாவின் நாயகனையும், நாயகையும் ரோஜா பூவிதழ் தூவி உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். சனா அவற்றை பின்னிருந்து இரசித்து அவர்களை விசாலாட்சியுடன் சென்றாள். அனைவரும் தத்தமது இடங்களில் அமர்ந்துக் கொண்டனர். ஒரு டேபளில் சனா விசாலாட்சி அமர்ந்து இருக்க இன்னொருவருக்கு அங்கே இடம் இருந்தது. விழா நாயகர்களுக்கு மேடையில் அழகான இருக்கை காத்திருந்தது.


சிறிது நேரத்தில் கார்த்திக் அங்கே எழுந்து, "ஹாய் பிரன்ஸ்..எதுக்காக இந்த பார்டின்னா நாளைக்கு கல்யாணம். திடீர்னு ஏற்பாடு பண்ணோம். சோ உங்களை இன்வைட் பண்ண முடியல்லை. ரிசப்ஷனுக்கு இன்வைட் பண்றேன். என் ஃபியான்சியை உங்க எல்லாருக்கும் இன்ட்ரோ கொடுக்குறேன்" என்று அபியின் அருகில் சென்றவன் அவள் கைபிடித்து எழ வைத்தோ இடையோடு அணைத்துக் கொண்டான்.


"மீட் மை ஃபியான்சி அபிநயா. இவ என்னோட அத்தை பொண்ணு; காதலி. நாளைக்கு என்னோட வைஃப்" என்று அவளைப் பெருமையாக அறிமுகப்படுத்தி வைத்தான். அபியும் அவர்களுடன் பேசி விட்டு கீழிறங்க ஒவ்வொருவராக அவர்களுடன் பேசினர். சனா அவர்களை போடோ எடுத்தாள். சாத்விக் வந்திருக்கிறானா என்று அங்குமிங்கும் கண்களை அலைப்பாய விட்டாள்.


எங்கு தேடியும் சாத்விக் அவள் கண்களுக்கு தெரியவில்லை. மனதின் ஓரத்தில் ஏதோ ஏமாற்றம் அவளைச் சூழ்ந்தது. 'நீ எதுக்கு இப்போ அவனை தேடுற?' என்று மனசாட்சி அவளிடம் வினவ, 'வந்திருந்தால் என்னை டென்ஷன் பண்ணிட்டே இருப்பான் அந்த காட்டுப்பையல். அதனால அவன் வராதது நிம்மதியா இருக்கு' என்றாள். 'அவன் வராதது நிம்மதியா இருக்கு அப்படி தானே?' என்று வினவ, 'ஆமா அதுல உனக்கு என்ன டவுட்?' என்றாள்.


'எனக்கு எந்த டவுட்டும் இல்லை. நான் தெளிவா தான் இருக்கேன். நீ குழப்பிக்காமல் இரு' என்று எச்சரித்து அங்கிருந்து சென்றது மனசாட்சி. அப்போது பார்டி ஹாலுக்குள் சாத்விக் உள் நுழைய அவனைப் பார்த்த அபி ஹாய் என்று கையசைத்து, "எக்ஸ்கியூஸ் மீ" என்று விலகி அவனை நோக்கி செல்ல கார்த்திக் இவள் யாரைப் பார்க்கச் செல்கிறாள் என்று பார்த்தான்.


சாத்விக்கைப் பார்க்க அவனுக்கு அவன் செய்த குழறுபடிகள் ஞாபகத்திற்கு வர முகம் கடினமாக மாறியது. அடுத்த நிமிடம் இருக்கும் இடம், இன்றைய தினத்தின் முக்கியத்துவம், அபி என்பவற்றிற்காக அமைதிகாக்க முடிவெடுத்தான். சாத்விக்கை நெருங்கிய அபி, "என்ன அண்ணா? இவளோ லேட்டா வரிங்க? ரொம்ப நேரமா எதிர்பார்த்தேன்" என்று செல்லச் சண்டையிட அதைப் பார்த்து புன்னகைத்தவன், "அதான் இப்போ வந்துட்டேனே" என்று பாசத்துடன் தலையை வருடிவிட்டான்.


"ரொம்ப அழகா இருக்க அபி. என் கண்ணே என் தங்கச்சிக்கு பட்டுடும். வீட்டுக்கு போய் மறக்காமல் சுத்தி போட சொல்லு" என்றான். அபி, "உங்களை நான் அம்மாக்கு இன்ட்ரோ கொடுக்கனும் வாங்க" என்று கைபிடித்து அழைத்துச் செல்ள இருவரையும் மற்றவர்கள் அதிர்ச்சியாகப் பார்த்தனர். கார்த்திக் புன் சிரிப்புடன் அவர்களை நோக்கி வருகை தந்தான்.


சாத்விக், கார்த்திக் இருவருமே ஒருவரை ஒருவர் அலட்சியமாக பார்த்துக் கொண்டனர். சாத்விக்கை எதிர்பாராதவிதமாக அபி அழைத்து வருவதைப் பார்த்த சனா முட்டைக் கண்களை விரித்து உடனடியாக தலையைக் குனித்துக் கொண்டாள். சாத்விக், 'எவளோ நேரத்துக்கு டையில்ஸ் கலரை பார்க்குறன்னு நானும் பார்க்குறேன் பேபி' என்று உள்ளுக்குள் நினைத்து விசாலாட்சியை பார்த்தான்.


அபி, "அம்மா இவங்க தான் சாத்விக் அண்ணா. எனக்கு புதுசா கிடைச்சிருக்கிற அண்ணா" என்றாள் பெருமையாய். சாத்விக், "வணக்கம் அம்மா. உங்களை பாராட்டியே ஆகனும். இந்த மூனு பேரையுமே சமாளிக்கிறிங்களே. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டிசைன். அதையெல்லம் பொறுத்துக்குறதுக்காக உங்களுக்காக அவோர்ட் கொடுக்கவே வேணும்" என்று மூவரையும் கிண்டலாக பார்க்க மூவருமே ஒன்றாக அவனை முறைத்தனர்.


அபி செல்லமாக முறைக்க மற்ற இருவரும் உக்கிரமாக முறைத்தனர். 'அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் எது ஒத்துபோகுதோ இல்லையோ இது நல்லாவே ஒத்து போகுது' என்று அவர்களை சிரிப்புடன் பார்த்தான் சாத்விக். அவனது சிரிப்பு இன்னும் அவர்களை எரிய வைக்க கார்த்திக் பேச முன், சனா, 'வந்ததே லேட் இதுல சீண்டுறதை பாரேன்' என உள்ளுக்குள் நினைத்து வெளியே பேசினாள்.


"என்ன பார்த்தால் எப்படி தெரியிது உங்களுக்கு? சிவனேன்னு இருந்த என்னை எதுக்கு இப்போ வம்புக்கு இழுக்கிறிங்க?' என்று அவன் தாமதமான வருகைக்காக சண்டையிட்டாள் அவள் அறியாமலேயே. மற்ற மூவரும் அதிர்ந்து சனாவைப் பார்த்தனர். சாத்விக் நக்கலாக அவளைப் பார்த்து சிரித்து மற்ற மூவரைக் கண்களால் காட்ட, 'சனா உனக்கு புத்தி எங்கே போச்சு? எதுக்கு அவசரபட்டு இப்படி பண்ண?' என்று தன் மடமையை எண்ணி தலையில் அடித்துக் கொண்டாள் மானசீகமாக.


சனா இதுவரையில் வெளிப்படையாக தன் உணர்வுகளை வெளிக்காட்டிட மாட்டாள். அதே போலவே கோபத்தையும் வெளிக்காட்டாமல் புன் சிரிப்புடன் கடந்துவிடுவாள். ஆனால் இன்று சாத்விக்கிடம் உரிமையாக சண்டையிட்டது அவர்களுக்கு அதிர்ச்சியை வழங்கியது. மற்ற மூவரைப் பொருத்த வரையில் சனா சாதவிக்கை இது இரண்டாம் முறையாக பார்க்கிறாள் என்பதே.


சனா உடனே சுதாகரித்து, "சொரி சேர்" என்று அமைதியானாள். சாத்விக் சிரிப்பை இதழுக்குள் மறைத்து, "அபி, உன் கொழுந்தி இவளோ பேசுவாங்களா? நான் கூட இன்னைக்கும் மௌன விரதம் இருக்காங்களோன்னு நினைச்சேன். பரவால்ல கொஞ்சமா ஃபோரம்ல இருக்காங்க" என்றான் அவளைப் பார்த்தவாறு. 'அடேய் காட்டுப் பையலே. உனக்கு எவளோ கொழுப்பு இருந்தா இப்பிடி பேசுவ? கிருஷ்ணா இவன் வாயை கொஞ்சம் மூட வையேன்' என மாசீகமாக கிருஷ்ணனோடு பேசினாள்.


ஆனால் அவளது விழியோ அவனுக்கு முறைப்பை வழங்கிக் கொண்டு இருந்தது. கார்த்திக் இருவரையுமே பார்த்துக் கொண்டு இருந்தான். சனா முறைப்பதும், சாத்விக் அதைப் பார்த்து நக்கலாக சிரிப்பது என்பதையும். முதன் முறையாக இருவருமே இதற்கு முன் சந்தித்திருக்கிறார்களோ என்று சந்தேகமுற்றான். (இப்போவாச்சும் உனக்கு மூளை வந்ததே) சனா தன்னிடம் எதையும் மறைக்க மாட்டாள் என்ற வாதத்தை மனம் முன் வைக்க அவன் சந்தேகம் பின் தள்ளி வைக்கப்பட்டது. (இது தேறாத கேஸ்)


அபி, "அண்ணா உங்களுக்கான சீட் தான் இது" என்று சனாவிற்கு அருகில் இருந்த இருக்கையை காட்டினாள். சாத்விக், 'ஓஓஓ' என்று சனாவை ஓரக் கண்ணால் பார்த்தவாறே அமர்ந்தான். குடும்பத்தினர் முன் ஏதாவது செய்து வைப்பானோ என்று இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. 'கிருஷ்ணா பிளீஸ் என்னை காப்பாத்து' என்று மறுபடியும் கிருஷ்ணனை அழைத்தாள்.


சாத்விக் நல்ல பிள்ளையாக அவள் அருகில் அமர்ந்தான். கார்த்திக் சனாவை அழைத்துக் கொண்டு மேடை ஏறியவன் சாத்விக்கை பார்த்தவாறே, "இவ என் சிஸ்டர் திசன்ஜனா. இதே போல சீக்கிரமா அவளோட கல்யாண அனௌன்ஸ்மன்டோட அடுத்த பார்டியில சந்திக்கிறேன்" என்று கூற சாத்விக்கிடம் இருந்து எந்தவித பிரதிபலிப்பும் இருக்கவில்லை. ஆனால் அவன் எதிர்பார்த்த பிரதிபலிப்பு சனாவிடம் இருந்து கிடைக்க குழம்பிப் போனான்..


சனா அதிர்ந்து தவிப்புடன் தமையனை பார்த்தாள். சாத்விக்கின் முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. இத்தனை நேரமாக இருந்த அதே புன்சிரிப்புடனேயே இருந்தான். சனா ஏதும் பேசாமல் பொய்யாய் புன்னகைத்து கார்த்திக்கோடு தனது இருக்கையை வந்தடைந்தாள். சாத்விக்குடன் சிலர் பேச சாத்விக் அவர்களின் பேச்சில் ஆழந்தான். சனா அடுத்து சாத்விக் என்ன செய்வானோ என்ற யோசணையுடனேயே தவிப்புடன் அமர்ந்து இருந்தாள்.


சாத்விக்கிற்கு அதே நேரம் தியா அழைக்க, அழைப்பை ஏற்று பேசியவாறு பார்டி ஹோலில் இருந்து வெளியே சென்று பேசினான். சனா பயத்துடன் அங்கிருந்து முகம் கழுவ விசாலாட்சியிடம் கூறி கழியலறை இருக்கும் இடத்திற்குச் சென்றாள். வெகு நேரத்திற்குப் பிறகு காரத்திக்; சனாவை பார்க்கத் திரும்ப அங்கே சாத்விக், சனா இருவருமே இருக்கவில்லை. அவசரமாக அவ்விடம் வந்தவன் சனாவைப் பற்றி விசாரிக்க அவள் கழியலறைக்குச் சென்றதாகக் கூறினார்.


அங்கிருந்து வேகமாக கழியலறை இருக்கும் திசைக்கு ஓடினான். அங்கே கண்ட காட்சியில் முதலில் அதிர்ந்தவன் பின் கோபம் சுறுசுறு என்று ஏற வேகமாக அங்கே நடந்தான். சாத்விக் சனாவை அணைத்தவாறு இருக்க அவள் அவனிடம் அழுதுக் கொண்டு இருந்தாள். கார்த்திக் உள்ளே வேகமாக வந்தவன், "எவளோ தைரியம் இருந்தால் என் தங்கச்சை தொட்டு இருப்ப?" என்று அடிக்கக் கை ஓங்க ஒரு கையால் அவன் கையைப் பிடித்து தடுத்தவன் மறுகையில் இருந்து சனாவை விடுவிக்காமல் கோபமாக கார்த்திக்கை முறைத்தான்.


சனா பயத்தில் நடுங்க கார்த்திக்கை தள்ளிவிட்டு, "இங்கே பாரு சனா. பயப்படாத" என்று அவளை ஆறுதல்படுத்தியவன் கார்த்திக்கின் புறம் திரும்பி அவளை ஒப்படைத்து, "நாம பார்க்குறது எல்லாமே உண்மை இல்லை. முதல்ல உன் அவசரபுத்தியை விடு. சுத்தி வர என்ன நடக்குதுன்னு பாரு" என்று அங்கிருந்து விலக மூக்கிலிருந்து இரத்தம் வழிய ஒருவன் விழுந்து இருந்தான். குடிபோதையில் முழுகி இருப்பது அவனது முணகலில் தெரிந்தது.


சனா பயத்துடன் கார்த்திக்கை இன்னும் ஒன்ற சாத்விக், "தங்கச்சி தங்கச்சின்னு வாய் பேசினால் மட்டும் போதாது. ஒழுங்காக பார்த்துக்க தெரியனும்" என்றான். கார்த்திக்கின் முகமோ இறுகிக் கறுக்க சனாவை அணைத்தவாறு, "என்ன நடந்திச்சு பட்டு?" என்று தலை வருடிக் கேட்டான். அழுகையோடு, "நான் பாத்ரூம் வந்தேன் அண்ணா. அப்போ இவன் குடிச்சிட்டு வந்து என் கையைப் பிடிச்சு இழுத்து எனக்கு..." என்று முடிக்காமல் கேவ, "கிஸ் பண்ண பார்த்தான்" என்றான் சாத்விக் ஆத்திரத்தை அடக்கிய குரலில்.


சனா, "அப்போ சேர் தான் இந்த பக்கம் வரும் போது என்னை காப்பாத்தினாங்க. இவனை அடிச்சிட்டு அவங்க கூட பக்கத்துல நிறுத்தினாங்க. நான் தான் பயம் விலகாமல் அவங்களை ஹக் பண்ணிட்டேன்" என்றாள் விளக்கமாக. கார்த்திக், "தேங்ஸ். என்ட் சொரி" என்று கூற சாத்வக், "உன் தேங்சுக்காகவும் சொரிக்காகவும் நான் இதை பண்ண இல்லை. இந்த இடத்துல யாரு இருந்தாலும் இதையே பண்ணி இருப்பேன்" என்றான் அலட்சியமாக.


இத்தனை நேரம் அடக்கி வைத்த கோபம் மீண்டும் எழ, "உன் கிட்ட மனிஷன்னு பேசினேன் பாரு. என்னை சொல்லனும்.." என்று முறைக்க, "உன்னை பத்தி அப்புறமா பேசலாம். முதல்ல உன் அத்தையை கூட்டி வந்து சனாவை வீட்டுக்கு அனுப்பு. அவங்கிட்ட பக்குவமா சொல்லு இல்லை பயந்துருவாங்க. அபி கிட்ட சொல்லாத. நான் அது வரைக்கும் வெயிட் பண்றேன். போ.. இதுக்கு மேலேயும் இவ இங்க இருக்கிறது சரிவராது" என்று கூற கார்த்திக்கும் ஆமோதித்து, "அவளை பார்த்துக்க" என்றான்.


"உன்னை விட நல்லா பார்த்துப்பேன். வெட்டி கதை பேசாமல் உன் அத்தையை கூட்டிட்டு வா" என்றான் இடக்காக. கார்த்திக் அவனை அனல் கக்க முறைத்து அங்கிருந்து சென்றான். அடுத்த நொடி சனா சாத்விக்கின் கைவளைவுக்குள் அடங்கி இருந்தாள். என்ன நினைத்தாளோ ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருந்தாள். "பயப்படாத பேபி. உன் மேலே ஒருத்தன் கையும் படாது. என்னை மீறி தான் அது நடக்கனும். நான் விடவும் மாட்டேன்" என்று நெற்றியில் இதழ்பதித்தான்.


அவள் இன்னும் அதே நினைவில் இருக்க அவள் முகத்தை கையில் ஏந்தியவன், "இன்னைக்கு ரொம்ப ரொம்ப அழகா இருக்க. அப்படியே என்னை கட்டி இழுக்குற பேபி" என்றவன் முகத்தில் முத்த ஊர்வலம் நடத்தி அவள் மனநிலையை மாற்றினான். சனா அதன் பிறகே தான் இன்னும் அவன் கைவளைவில் இருப்பதை புரிந்து அவனை நெஞ்சில் கை வைத்து தள்ளி விலகி நின்றாள்.


அவனை முறைத்து நிற்க சாத்விக் கண்சிமிட்டி குறும்பாகப் புன்னகைத்தான். அதே நேரம் விசாலாட்சியும், கார்த்திக்கும் அங்கே வந்தனர். விசாலாட்சி ஏதும் பேசி சங்கடத்தை வழங்காமல் அங்கிருந்து சனாவை அழைத்துக் கொண்டு வீடு நோக்கிச் சென்றார். அங்கே கார்த்திக், சாத்விக் கீழே விழுந்து இருந்தவன் மாத்திரமே இருந்தனர். கார்த்திக், "நீ இங்கிருந்து போ ப்ரவீன். இதை நான் பார்த்துக்குறேன்" என்று வற்புறுத்தி அனுப்ப அவனும் அபியிடம் வேலை இருப்பதாகக் கூறி வீட்டிற்குச் சென்றான்.


கார்த்திக் இவனை குருவிடம் என்ன செய்ய வேண்டும் என்று கூறி அவனை குருவிடம் ஒப்படைத்து பார்டியில் கலந்துக் கொண்டான். சனா வீட்டிற்கு வந்தவுடன் தனது அறைக்குச் சென்று உடனடியாக குளித்தாள். அதன் பிறகே அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அவள் உறங்கலாம் என்று கட்டிலில் விழ அக்கயவன் அவளைக் கைப்பிடித்து இழுத்தே கண்முன் தோன்ற அவசரமாக எழுந்து அமர்ந்தாள். அதே நேரம் அவள் மொபைல் அழைக்க திரையைப் பார்த்தாள்.


சாத்விக்கே அவள் உறங்கி இருக்க மாட்டாள் என்று யூகித்து அழைத்து இருந்தான். சனா அழைப்பை ஏற்க, "இன்னும் தூங்க இல்லையா பேபி?" என்று வினவினான். அவள் மௌனத்தை பதிலாக வழங்க, "உன் மைன்டை சேன்ஜ் பண்ண ஒரு ஐடியா சொல்லட்டுமா?" என்று வினவ அவளும் சுரத்தே இல்லாதக் குரலில், "சொல்லுங்க சேர்" என்றாள்.


"ஏதாவது மனசுக்கு தோணினதை டிரோ பண்ணு. உன் மைன்ட் சேன்ஜ் ஆகிரும்" என்று கூற, "அட இது எனக்கு ஞாபகம் வராமல் போச்சே. தேங்கியூ சேர்" என்று அழைப்பைத் துண்டித்தாள். "அடிப்பாவி வேலை முடிஞ்ச உடனே கழட்டி விட்டாளே" என்று சிரிப்புடன் கூறியவன் நிம்மதியாக உறங்கச் சென்றான் நாளை திருமணத்திற்கு செல்வதற்காக.


சனா நாளை கார்த்திக், அபியின் திருமணத்திற்கு பரிசாக வழங்குவதற்காக வரைய ஆரம்பித்தாள். அவள் எதிர்பார்த்தது போல படத்தை வரைந்து முடித்ததோடு விசாலாட்சியைப் பார்க்கச் சென்றாள். அவர் சனாவிற்காக உணவு சமைத்திருக்க இருவரும் சேர்ந்தே உண்டனர். இன்றைய அதிக களைப்பு அவளை உறக்கத்திற்கு அழைக்க விசாலாட்சியிடம் கூறி உறங்கச் சென்றாள்.


பதினொரு மணியளவில் அபியும், கார்த்திக்கும் வருகை தந்தனர். அவர்கள் இருவரும் வரும் வரையில் விசாலாட்சி விழித்துக் கொண்டு இருந்தார். விசாலாட்சியிடம், "சொரிஅத்தை. லேட் ஆயிருச்சு. பட்டு என்ன பண்றா? சாப்பிட்டாளா? ஏதாவது முணகினாளா?" என்று அடுக்கடுக்கடுக்காக கேட்க, "அவ சாப்பிட்டு டயரடா இருக்குன்னு தூங்கிட்டா" என்றார் கார்த்திக் உடனே சனாவைப் பார்க்கச் சென்றான்.


அபி, "அம்மா உண்மையை சொல்லுங்க. சனா தலைவலின்னா வீட்டுக்கு வந்தா?" என்று சந்தேகமாய் வினவ, அவளிடம் கார்த்திக் தன்னிடம் கூறியதை மறைக்காது "ஒரு பையன் நம்ம சனா கையை பிடிச்சு இழுக்க பார்த்து இருக்கான். சாத்விக் தம்பி சரியான நேரத்துக்கு போய் காப்பாத்திருச்சு" என்றார். மனதில் மானசீகமாக சாத்விக்கிற்கு ஒரு தாயாய் நன்றியை கூற மறக்கவில்லை. அவர் இருந்த நிலையில் சாத்விக்கிற்கு அங்கே வைத்து நன்றி கூற முடியாமல் சென்றது.


அபி அதைக் கேட்டு அதிர்ந்தவள் சனாவைப் பார்க்க மேலே ஓடினாள். கார்த்திக் சனாவின் அறைக்குள் சென்று அவளைப் பார்க்க அவள் அங்கே நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்தாள். அவள் நெற்றியில் இதழ் பதித்து போர்வையைப் போர்த்தி அங்கிருந்து வெளியேற கதவின் அருகே அபி நின்று இருந்தாள். கார்த்திக், "என் ரூமுக்கு போய் பேசலாம் செல்லம்மா" என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றான்..


அபி, "மாமா மறைக்காமல் உண்மையை சொல்லுங்க. என்ன நடந்தது?" என்று வினவ கார்த்திக் எதையும் மறைக்காமல் கூறினான். அபி, "நீங்க அவசரப்பட்டுங்க மாமா. பார்க்குறதை வச்சி மட்டும் எதிலேயும் முடிவு பண்ண கூடாது. நேரடியா விசாரிக்கனும்" என்று தீர்க்கமாக அவனைப் பார்த்தாள். அவள் கூறியது போல் தானும் பிழை செய்துவிட்டோம் என்று வருந்தினான்.


அபி, "அந்த பொறுக்கி ராஸ்கல்லை என்ன பண்ண போறிங்க?" என்று வினவ, "அதை நாளைக்கு பாரு செல்லம்மா. இப்போ போய் தூங்கு. அப்போ தான் அழகா இருப்ப" என்று அவள் நெற்றியில் இதழ் பதித்து அவளுடைய அறைக்கு அனுப்பி வைத்தான். அபி, கார்த்திக் இருவரும் குளித்து தற்போதைய பிரச்சனைகளை ஒதுக்கி வைத்து திருமண நாளை எண்ணி கனவுகளோடு கண்ணயர்ந்தனர்....





கருத்துக்களை பகிர,


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23273

அத்தியாயம் 22



காலை என்ற வாசமான மலர் மலர்ந்து வெளிச்சம் என்ற மகிழ்ச்சி வர காத்திருகக்கும் இனிய நாளான கார்த்திக், அபி இருவரின் திருமண நாளும் அழகாயப் புலர்ந்தது. காலையில் எழுந்தவுடனேயே மணமக்களுக்கு நலங்கு வைக்க ஆரம்பித்தனர். சனாவும் இருவருக்கு நலங்கு வைத்து மேலதிகமாக மஞ்சளை இருவரின் முகத்தில் பூசிய பின் அங்கிருந்து ஓட்டம் எடுத்தாள். அபியும், கார்த்திக்கும் அவளை ஏதும் செய்ய முடியாதவாறு மற்றவர்கள் அவர்களை சூழ்ந்துக் கொண்டனர்.


அதிகாலேயிலேயே நகுலின் குடும்பத்தினர் அனைவருமே கார்த்திக்கின் வீட்டிற்கு வருகை தந்ததால் அவர்களும் நலங்கில் கலந்துக் கொண்டனர். நேரமாகுவதை உணர்ந்து மணமக்களை தயாராக்கச் சென்றனர். அபியும், கார்த்திக்கும் தயாரிகிய பிறகு கார்த்திக்கை அழைத்துக் கொண்டு சனாவும் நகுலின் குடும்பத்தில் சிலரும் முன்னால் கோயிலுக்குச் செல்ல அவர்களின் பின்னால் அபியை அழைத்துக் கொண்டு விசாலாட்சியும் மற்றவர்களும் சென்றனர்.


அவர்கள் கோயிலை அடைந்தவுடன் அங்கே திருமணத்திற்கு அனைத்துமே தயாராகி இருந்தது. சனா, அபியின் தோழிகளில் சிலர் அங்கே வருகை தந்து இருந்தனர். அதில் வைஷ்ணவி (இந்த கதையோட இரண்டாம் பகுதியின் கதாநாயகி) முக்கியமான ஒரு தோழி. சனாவுடன் அதிக நெருக்கம் இல்லாவிடினும் அபியுடன் நெருங்கிய தோழியாக இருந்தாள். அவளுக்கு முக்கியமாக ஒரு உறவினரின் திருமணத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால் வருகை தர முடியவில்லை.


அபியிடம் அதை மற்ற தோழிகள் கூறிக் கொண்டிருக்க சனா, "அவ வரமுடியுமா இருந்தால் கண்டிப்பா வந்திருப்பா அபி. நீ ஃபீல் பண்ணாத" என்று கூற அபியும் புன்னகைத்தாள். அபி, "சனா அண்ணா வந்திருக்காங்களான்னு பாரேன். அண்ணாவை ஒரு முறை பார்க்கனும் போல இருக்கு" என்று கூற, "இரு போய் பார்த்துட்டு வரேன். இன்னைக்கு நீ சந்தோஷமா இருக்கனும். அதுக்காக என்ன வேணூன்னாலும் பண்ணலாம்" என்று அங்கிருந்து வெளியே சென்றாள்.


சனா அங்குமிங்கும் தேட விசாலாட்சி அவள் அருகில் வந்தார். "என்னாச்சு சனாமா?" என்று வினவ, "அபி சாத்விக் சேரை பார்க்கனும்னு சொன்னா. அதான் அவரை தேடுறேன்" என்றாள். விசாலாட்சி, "தம்பி இன்னும் வர இல்லை மா" என்றார். "சரிங்க அத்தை. நான் போய் அண்ணனை பார்த்துட்டு வரேன்" என்று கார்த்திக்கை தேடிச் செல்ல அவனோ அங்கே நகுல், மித்ரனோடு பேசிக் கொண்டு இருந்தான்.


கார்த்திக், "உள்ள வா பட்டு" என்று அழைக்க வேஷ்டி, சட்டையில் கம்பீரமாக நின்று இருந்த கார்த்திக்கை பார்த்தவள், "அண்ணா ரொம்ப அழகா இருக்க. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு" என்று நெட்டி முறித்தாள். அவளை தன் அருகில் அழைத்த கார்த்திக் அவள் கண்ணில் இட்ட மையை தன் சீனிவிரலால் தொட்டு, "என் பட்டுவும் தேவதை போல இருக்கா" என்று அவள் காதின் பின்னே வைத்து விட்டான்.


"உனக்கு இன்னைக்கு கல்யாணம் இல்லை? இதுக்கு அப்புறம் நீ எனக்கு மட்டும் சொந்தம் இல்லை அண்ணா. அபிக்கும் சொந்தமானவ. இதுக்கு அப்புறமா நீ பர்ஸ்ட் பிரோயிரிடி அபிக்கு தான் கொடுக்கனும். ஏன் தெரியுமா? அவ அவளோட லைஃப் பூராவே உன் கையில ஒப்படைக்க போறா. அவளை சந்தோஷமா பார்த்துக்கோ. எந்த இடத்திலேயும் நீ அவளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது.


ஒருநாள் அபியா? நானான்னு? வரும் போது நீ கண்டிப்பா கண்ணை மூடி அபியை தான் சிலெக்ட் பண்ணனும். கண்டிப்பா அப்பிடி ஒரு நிலமை வராது. வரவும் விட மாட்டேன். ஆனாலும் நீ எனக்கு நான் சொன்னதை அத்தனையையும் செய்வேன்னு சத்தியம் பண்ணி கொடு" என்று கை நீட்டினாள். அவள் உள்ளுக்குள் அழுவதை வெளிக் காட்டாமல் புன்னகையுடன் நின்று இருந்தாள்.


கார்த்திக்கும், மற்ற இருவரும் இவள் பேச ஆரம்பித்ததில் சுவாரசியமாக கேட்க ஆரம்பிக்க அவள் பேசப் பேச அசந்துவிட்டனர். எந்தவொரு வீட்டிலும் இவ்வாறு ஒரு தங்கை இருப்பது மிகவும் அரிதான ஒன்று. இவ்வாறு ஒரு கொழுந்தி கிடைக்க அபி அதிஷ்டம் செய்தவள் என்றே நினைத்தனர். கார்த்திக்கிற்கு சனா அவனை விட்டு வெகுதூரம் செல்வது போன்ற ஒரு மாயை தோன்றியது. எதிர்காலத்தில் நடப்பதை சிறிதளவு யூகித்து இருப்பானோ????


"கோயிலில் கடவுளுக்கு முன்னாடி சத்தியம் பண்றேன் பட்டு. நீ சொன்னதை செய்வேன். அதே போல நீயும் எனக்கு முக்கியம். அதையும் மறக்கமாட்டேன்" என்றான் கண்கலங்கள் கலங்க. அவனை ஒரு முறை அணைத்து வெளியேற இதை வெளியே இருந்து கேட்ட இரண்டு ஜோடிக் காதுகளில் ஒன்று சனாவைப் பின்தொடர்ந்தும் இன்னொரு ஜோடி காதுக்கு சொந்தமானவரான விசாலாட்சி வழிந்த கண்ணீரைத் துடைத்து அங்கிருந்து வெளியேறினார்.


சாத்விக் கோயிலுக்குள் நுழைந்தவுடன் சனாவைத் தேட பீகொக் புளூ, ரெட் நிற தாவணியில் தேவதையென தூரத்தில் தன் நீண்ட கூந்தல் காற்றிலாட செல்லும் தன்னவளைக் கண்டவன் அவள் செல்லுமிடத்திற்கு அவளை பின் தொடர அவள் சென்றதோ கார்த்திக் இருந்த இடத்திற்கு. அவன் நெருங்க முன் அவள் பேசியவை காதில் விழ அவள் நிச்சயமாயவ உடைவாள் என்று அறிந்து அவ்விடத்திலேயே நின்றான்.


சனா கோயிலில் இருந்த குளக்கரைக்கு ஓடினாள். அவளைப் பின் தொடர்ந்த வந்த நபரும் அங்கே செல்ல அவள் கீழே அமர்ந்து அழ அவளை இழுத்து தன்னுள் புதைத்துக் கொண்டது இரு வலிய கரங்கள். அக்கரங்களிற்குச் சொந்தக்காரன் சாத்விக் என்பதை உணர்ந்தவள் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கேவி கேவி அழ சாத்விக், "நீ இப்படியே அழ போறியா பேபி? உன் அண்ணன் கல்யாண நாள் நீ அழுதன்னு சொன்னால் நாளைக்கு வரலாறு தப்பா பேசும்" என்றான் கிண்டலாக.


'இந்த காட்டுப்பையலுக்கு கொழுப்பை பாரேன். நான் சீரியாச அழும் போது கிண்டலடிக்கிறான்' என்று உள்ளுக்குள் நினைத்து வெளியே அவனை தள்ளி நிறுத்தி முறைக்க, "ரொம்ப முறைக்காத பேபி கண்ணு வெளியே தெரிச்சு வந்துரும்" என்று மறுபடியும் அவளை சீண்ட, "போடா" என்று சத்தமாகக் கூறி அங்கிருந்து ஓடினாள். "அடிப்பாவி இவளோ நாள் சைலன்டா மனசுக்குள்ள பேசிட்டு இப்போ 'டா' ன்னு பேசுறாளே. பேபி உனக்கு வாய் கூடி போயிருச்சு" என்று சிரித்து அங்கிருந்து வர சனா மீண்டும் அவள் முன்னே வந்து நின்றாள்.


சனா, "உங்களை அபி பார்க்கனும்னு சொன்னா. வாங்க போலாம்" என்று முன்னே நடக்க, "ஒரு நிமிஷம் பேபி. முகத்துல கண்ணீர் வழிஞ்சது தெரியிது. இதால தொடச்சிக்கோ" என்று தன்னுடைய கர்சீஃபை வழங்க மறுக்காமல் அதை வாங்கி துடைத்தவள் அவன் சர்டில் இருந்த மையையும் துடைத்து விட்டாள். சனா முன்னே செல்ல நினைக்க அவள் கைப்பிடித்து நிறுத்திய சாத்விக் ஒரு தூணின் ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற௲றியில் சிறு கோடாக விபூதிக்கு மேலே வைத்து விட்டான்.


சனா அதிர்ந்து அவனைப் பார்க்க, "நீ ஷொக்காக எதுவும் இல்லை பேபி. நான் தானே என்னைக்கா இருந்தாலும் வச்சி விடனும்" என்று தோளை உலுக்கி முன்னே நடக்க அதிர்ச்சி மாறாமல் பின் தொடர்ந்தாள். சாத்விக் ஓரிடத்தில் தயங்கி சனாவைப் பார்த்து, "லேடிஸ் நிறைய பேர் இருப்பாங்க. நீ முன்னாடி போ" என்றான். அவனைப் பார்த்து நமட்டுப் புன்னகையுடன் முன்னே நடக்க, 'அசிங்கபட்டுட்டியே சாத்விக்' என்று மனசாட்சி அவனைப் பார்த்து சிரித்து ஓடியது.


சனா, "அபி, உன் அண்ணன் வந்தாச்சு" என்று அங்கே வர சாத்விக் அவள் பின்னால் வந்தான். அபி, "அண்ணா" என்று அணைத்துக் கொள்ள, "ரொம்ப அழகா இருக்க அபி. இன்னைக்கு கல்யாணம் முடிஞ்சதும் மறக்காமல் சுத்தி போடனும்" என்று நெட்டி முறித்தான். அபியின் தோழிகள் சாத்விக் யாரென்று தெரியாமல் விழிக்க அபி, "இவரு என் தத்து அண்ணன்" என்றாள் சிரிப்புடன். ஒரு தோழி, "நான் சனாவோட ஃபியான்சின்னு நினைச்சேன்" என்று கூற அபியும், சனாவும் அதிர்ந்து சாத்விக்கைப் பார்க்க அவனோ புன்சிரிப்புடன் இருவரையும் பார்த்து நின்றான்.


அப்போது அங்கே வந்த அஞ்சலி, "மாப்பிள்ளையை ஐயர் வர சொல்லிட்டாங்க. பொண்ணை ரெடியா இருக்க சொன்னாங்க" என்று கூற, "அப்படியா மிஸஸ் அஞ்சலி. நான் என் தங்கச்சியை அழைச்சிட்டு வரேன்" என்று சாத்விக் தன் கைகளை கட்டி அவளை உறுத்து விழித்தான். சாத்விக்கைப் பார்த்த அஞ்சலி உறைந்து நின்றாள். அபி, "இவங்களை உங்களுக்கு தெரியுமா அண்ணா?" என்று வினவ, "தெரியாமல் இருக்குமா அபி? உன் புருஷன் தங்கச்சின்னு எல்லாருக்குமே கோலேஜ்ல தெரியுமே. நம்ம கோலேஜ்ல படிச்சவங்களை தெரியாமல் இருக்குமா?" என்று புருவமுயர்த்தினான்.


சனா அவனை குறுகுறு என பார்க்க, "என்ன மேடம் அப்படி பார்க்கிறிங்க?" என்று அவளை உற்று நோக்க, "அது ஒன்னும் இல்லை" என்று அவசரமாக அபியின் அருகில் சென்று நின்றுக் கொண்டாள். அனைவரின் முன்னிலையிலும் தண்டனை என்று ஏதாவது செய்துவிடுவானோ என்கிற பயமே அதற்கு காரணம். சாத்விக் அவளை குறும்புப் புன்னகையுடன் பார்த்து அஞ்சலியைப் பார்க்க அவளோ அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்திருக்கவில்லை.


அஞ்சலி சாத்விக்கையே பார்த்தவாறு நினறு இருப்பது சனாவிற்கு ஏனோ எரிச்சலாக இருந்தது. அஞ்சலியின் அருகில் வந்தவள், "அஞ்சலி அக்கா" என்று உலுக்க தன்னிலை அடைந்து படபடப்பானாள் அஞ்சலி. அவளின் செய்கைகள் சனாவிற்கும், அபியிற்கும் வித்தியாசமாகத் தெரிந்தது. சாத்விக் சாதாரணமாக நின்று இருந்தான். அபியிடம் வந்தவன், "நான் வெளியில போய் நிற்கிறேன்" என்று தலை வருடி விட்டு சனாவை ஒருவரும் அறியாமல் பார்த்துவிட்டுச் சென்றான்.


சாத்விக்கையே அஞ்சலி கவனித்ததால் அவள் பார்வையில் சாத்விக் சனாவை இறுதியாக பார்த்ததும் சனா அவனை பார்த்து முறைத்ததும் நன்றாகவே தெரிந்தது. அஞ்சலியிற்கோ தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை புரிந்துக் கொள்ள முடியாமல் இருந்தது. சாத்விக் அங்கிருந்த இருக்கையில் அமர அங்கே வந்திருந்த மித்ரனுக்கு சாத்விக்கைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. நிச்சயமாக அவனை இங்கே எதிர்பார்க்கவில்லை.


மித்ரன் மேடையிலிருந்து இறங்கி சாத்விக் அருகில் சென்று, "ப்ரவீன்" என்று அழைக்க மித்ரனைப் பார்த்து ஏளனப்புன்னகையைச் சிந்தி அதை உடனே மறைத்து சாதாரணமாக புன்னகைத்தான் சாத்விக். "நீ எப்படி இங்கே?" அதிர்ச்சி மாறாமல் இன்பமாய் வினவ, "அபி கல்யாணத்துக்கு வந்தேன்" என்றான் சாதாரணமாக. "அங்கே வாயேன்" என்று மேடைக்கு அழைக்க, "இல்லை நான் இங்கேயே இருக்கேன்" என்றான்.


அதன் பின் மித்ரனும் வற்புறுத்தாமல் அங்கிருந்து சென்றான். அபியை அழைத்து வந்த பின் மந்திரங்கள் ஓத, மேளச் சத்தத்துடன் முக்கோடி தேவர்களினதும், அவன் பெற்றோர்களினதும் ஆசிர்வாதத்துடன் அக்னி சாட்சியாக மங்கலநாணை அணிவிக்க மூன்றாம் முடிச்சை சனா போட்டு விட்டாள். மங்கல நாணை அணிவித்து அபியை தன் சரிபாதியாக்கிக் கொண்டான் கார்த்திக்.


சனாவின் கனவு போல் தன் தமையனின் திருமணத்தை கண் கூடாக பார்த்த திருப்தி இருந்தது. சந்தோஷத்தில் இரு சொட்டு கண்ணீர் வர அதை அவசரமாக துடைத்துக் கொண்டாள். இத்தனை நாட்களாக தனக்கு அனைத்துமாக இருந்தவனுக்கு அனுத்துமாக இருக்க ஒருவளை அமைத்துக் கொடுத்துவிட்டாள் அவ் அன்புத் தங்கை. சனா திருமணத்தை முடித்து கர்வத்துடன் அஞ்சலியைப் பார்த்தாள்.


அஞ்சலியோ அவள் முகத்தில் தெரிந்த கர்வத்தில் கடுகடு என மாற்றிக் கொண்டாள். அதை அலட்சியப்படுத்திய சனா அடுத்தடுத்த சடங்குகளை கவனிக்க ஆரம்பித்தாள். விசாலாட்சியுடன் சனாவும் தமையனின் திருமணத்தில் ஓடியாடி வேலை செய்தாள். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அவள் தாமரைப் பாதங்களைப் பிடித்து மெட்டியை அணிவித்தான்.


அதன் பின்னே அங்கே வேறு சடங்குகளை முடித்து வெளியேறும் போது அங்கே சாத்விக் வருகை தந்தான். தன் கையில் இருந்து பரிசுப்பொருளை எடுத்து அபியிடமும், கார்த்திக்கிடமும் வழங்கி, "ஹேப்பி மெரிட் லைஃப்" என்று மனமார வாழ்த்தியவன், கார்த்திக்கிடம் திரும்பினான். "என் தங்கச்ச ஒழுங்கா பார்த்துக்கோ" என்றவன் அபியிடம், "அவன் ஏதாவது டோசர் பண்ணான்னா சொல்லு நான் வந்து அவன் தோலை உரிக்கிறேன்" என்றான்.


கார்த்திக், "என் பொன்டாட்டியை எனக்கு நல்லா பார்த்துக்க தெரியும்" என்று முறைத்தவாறே கூற, "இந்த டயலோகை எப்போவுமே மறக்காத. மறுபடியும் தேவைபடும்" என்று அவனைக் குழப்பி நகர மித்ரன் சாத்விக்கின் பின்னால் சென்றான். கார்த்திக் அவன் கூறியது புரியாது விழிக்க சனா, "அண்ணா போலாம்" என்றாள் அவனை சரிசெய்யும் பொருட்டு. மித்ரன் சாத்விக்கிடம் வந்தவன், "பழசை மறந்துட்டியா? ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீயும் கார்த்திக்கும் ஒன்னா இருக்கிறதைப் பார்த்து" என்றான் மனமாற.


"நான் எப்போ சொன்னேன பழசை மறந்துட்டேன்னு? அவனை பழிவாங்காமல் இருக்க போறது இல்லை. அவனைப் பழிவாங்க நான் எந்த எல்லைக்கு வேணூன்னாலும் போவேன்" என்று பழிவெறி கண்களில் மின்ன கூறியவன் அங்கிருந்து விருட்டென்று நகர்ந்தான். இதை சாத்விக்கிடம் அவனுடைய கர்சீஃபை வழங்க வந்த சனாவும் கேட்டுக் கொண்டு இருந்தாள். மனப்பாரத்துடன் அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.


சனாவின் வீட்டிற்கு மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். அபியை அழைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்ற வைத்து சாமி கும்பிட்டனர். மணமக்களுக்கு அடுத்தடுத்த சடங்குகளும் நடைப் பெற்று ஓய்வெடுக்க அனுப்பி வைக்கப்பட்டனர். சனா அவர்களுக்காக கொடுக்க இருந்த பரிசை எடுத்து வைத்து குளிக்கச் சென்றாள். குளித்தவள் நேரடியாக தன் கிருஷ்ணனிடம் சென்றாள்.


'கிருஷ்ணா. எனக்கு எதுவோ தப்பா நடக்க போறது போல இருக்கு. அண்ணாவோட ரிசப்ஷனை சீக்கிரமா வைக்க நினைக்குறேன். என்னமோ தெரியல்லை. அண்ணா ரிசப்ஷனை பார்க்க முடியாமல் போயிருமோன்னு பயமா இருக்கு. எந்த பிரச்சனையும் வராமல் நீ தான் பார்த்துக்கனும்' என்று தன் வேண்டுதலை முன் வைத்து சமையலறைக்குள் நுழைந்து அனைவருக்கும் சேர்த்து காபி தயாரிக்க தயாரானாள்.


ஓய்வெடுத்தவர்கள் ஒவ்வொருவராக எழுந்து வர காபியை வழங்கனாள். விசாலாட்சி, "எதுக்கு சனமா நீ இதெல்லாம் பண்ற? கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே" என்று ஆதூரமாய் அவள் தலை வருட, "எனக்கு எந்த கஷ்டமும் இல்லை அத்தை. சோ, நீங்க ஃபீல் பண்ணாதிங்க. காலையிலிருந்தே நீங்க வேலை பார்க்குறிங்க. நீங்க ரெஸ்ட் எடுங்க" என்று அவருக்கும் காபியை வழங்கி விட்டு கார்த்திக், அபி இருவருக்கும் காபி எடுத்துச் சென்றாள்.


அபியை எழுப்பி காபியை வழங்கி விட்டு கார்த்திக்கையும் எழுப்பி காபியை வழங்கிச் சென்றாள். கார்த்திக் எழுந்து காபியை குடித்தவாறே குருவிற்கு அழைத்தான். "சொல்லு தல" என்று ஆர்பாட்டமாய் கூற, "இன்னைக்கு வேலையை முடிச்சிடு. நான் என் வேலையை பார்க்குறேன்" என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். குருவும் அன்றிரவு தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஆள் வைத்து சரிவர முடித்தான்.


கார்த்திக்கும் தேவையான ஆட்களிடம் பேசி விட்டு அழைப்பை துண்டித்தான். "நம்ம பிரச்சனையில நீ தேவையில்லாமல் சனாவை இழுத்து விட்ட ப்ரவீன். இந்த பிரச்சனையில இருந்து நீ வெளி வர முன்னாடி நான் சனாவிற்கு நல்ல இடத்துல மாப்பிள்ளை பார்த்துருவேன். கல்யாணத்தையும் முடிச்சிருவேன்" என்று கூறி தூரத் தெரியும் வானத்தை வெறிக்க ஆரம்பித்தான்.


அன்றைய இரவில் கார்த்திக்கின் அறை அலங்கரிக்கப்பட்டு அபியை அலங்கரித்து அவனின் அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டாள். கார்த்திக்கை வெகு வருடங்களாக பழக்கம் உள்ளது எனினும் பெண்களுக்கே உண்டான தயக்கம் அவளைத் தாக்க ஒருவித பதட்டத்துடனேயே உள்ளே நுழைந்தாள். அபியின் தயக்கத்தைப் பார்த்தவன் அவள் கைப்பிடித்து கட்டிலில் தன்னருகே அமர வைத்தான்.


கார்திக், "எதுக்கு செல்லம்மா டென்ஷனா இருக்க? நான் உன் மாமா தானே?" என் அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான். அவள் வெட்கத்தில் தலைக்குனிந்து 'ஆம்' என்று அசைக்க அவள் நெற்றியில் புன்னகைத்து இதழ் பதித்தான். "உனக்கு டைம் தேவையா மா?" என்று தன் எதிர்ப்பார்ப்பை மறைத்து அவள் உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்க அவள் கார்த்திக்கை நிமிர்ந்துப் பார்த்தாள்.


அவள் கண்களில் தெரிந்த ஆவலில் அவன் நெஞ்சில் சாய்ந்து, 'இல்லை' என்று தலையாட்ட அவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தவன் அவள் முகத்தில் முத்த ஊர்வலத்தை ஆரம்பித்து இதழில் இளைப்பாறினான். மென்மையாய் அவளை ஆட் கொள்ள ஆரம்பித்து வன்மை எப்போது நுழைந்தது என்று அறியாமல் இருவரும் தங்களில் மூழ்க கார்த்திக்கோ தன்னவளினுள் மூழ்கி மீண்டும் மீண்டும் முத்தெடுக்க ஆரம்பித்தான். அதிகாலை வரையில் அவர்கள் தேடல் இருந்தது.


சாத்விக் அதிகாலையில் எழுந்து அலுவலகத்திற்குச் செல்லத் தயாராக அவனுடைய மொபைல் அழைத்தது. அவன் அழைப்பை ஏற்க, "சேர் இன்னைக்கு உங்க ஓபீசில சி.பி.ஐ ரைட் நடக்க போகுதுன்னு இன்ஃபோர்மேஷன் கிடைச்சி இருக்கு" என்று அவன் பதட்டமாகக் கூற சாத்விக் கூலாக, "அப்படியா? ஒகே" என்று அழைப்பைத் துண்டித்தான். எதிர்ப்புறம் அழைத்தவனோ, "சேருக்கு என்னாச்சு? கூலா இருக்காரு" என்று தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாக அமர்ந்து இருந்தான்.


ஆனால் சாத்விக் எதிர்பாராத பல விடயங்கள் இன்று தன் தொழிற்சாலையில் நடக்க இருப்பதை அவன் அறியவில்லை. சாத்விக் எப்போதும் போல் தன் கல்லூரிக்குச் சென்றான். அபியும், சனாவும் திருமணத்தின் காரணமாக விடுமுறை எடுத்ததால் இன்று அதிக நேரம் அங்கிருக்காமல் தன் வேலையை அங்கே முடித்து விட்டு தன் அலுவலகத்திற்குச் சென்று அடைந்த சிறுது நேரத்தில் சி.பி.ஐ ரைட் நடைப்பெற்றது.


தன் பணபலத்தைக் கொண்டு இச்செய்தி மீடியாவிற்குச் செல்லாமல் காக்க அடுத்து நடைப் பெற்ற சம்பவத்தினால் மீடியா முழுவதுமே அவனது தொழிற்சாலைக்கு முன்னே குழுமி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


அபி காலையில் கண்விழிக்க தன்னவனின் கைவளைவில் கண் விழித்தாள். இத்தனை வருடங்களில் இன்றைய தினமே இனிய தினமாக அமைந்தது அவளுக்கு. தன்னவனின் நெற்றியில் இதழ்பதித்து அவன் உறக்கம் கலையாமல் அவனிடம் இருந்து விலகி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள். குளித்து புது ஷிபான் புடவை ஒன்றை அணிந்து நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து கூந்தலை விரித்து சிறிய கிளிப்பில் அடக்கிக் கொண்டு கீழே சென்றாள்.


அபி கீழே வரவும் அவள் முகத்தில் தெரியும் புதுப் பொலிவில் மனம் திருப்தியடைந்த விசாலாட்சி, "விளக்கேத்திட்டு போய் மாப்பிள்ளைக்கு காபி எடுத்துட்டு போ அபி" என்றார். அபியும் வெட்கம் மாறாமல் தலையசைக்க அபியின் உணர்வுகளை புரிந்துக் கொண்ட சனா அவளை எதுவும் சீண்டாமல் அவளுக்கும், தமையனுக்கும் காபியை வழங்கி விட்டு தன்னுடைய பரிசுப் பொருளை எடுக்க தனது அறைக்குச் சென்றாள்.


கார்த்திக்கை எழுப்பி அவனுக்கு காபியை வழங்கி கீழே அழைத்து வருவதற்குள் ஒரு வழியாகிவிட்டாள் அபி. இன்னுமொரு புடவையை மாற்றி கணவனை முறைத்தவாறே அழைத்து வர அவனோ கண்களில் குறும்புடன் அவளைப் பார்த்து கண்சிமிட்டினான். இவர்களின் காதல் லீலைகளை கண்டும் காணாமல் இருந்தனர் மற்றவர்கள். இருவரும் உண்டு முடித்து சோஃபாவில் அமர சனா தன்னுடைய பரிசுப் பொருளை எடுத்து அவர்களின் முன்னே வந்தாள்.


சனா, "இது என்னால முடிஞ்ச சின்ன கிஃப்ட்" என்று வழங்க நகுலின் குடும்பத்தினரும், மற்றவர்களும் ஆர்வமாய் அவளுடைய பரிசைப் பார்க்க இருந்தனர். ஏனென்றால் நேற்றில் இருந்து சனா தமையனின் திருமணத்தில் நடந்துக் கொண்ட முறை அனைவரையுமே ஈர்த்தது. அது மட்டுமல்லாது அவளது ஓவியத் திறமையைப் பற்றியும், அவளது குணத்திலும் இன்னும் அதிகமாக அவர்கள் ஈர்க்கப்பட்டனர்.


கார்த்திக், அபி இருவருமே அவளது பரிசை சுற்றியிருந்த ரெபிங் பேப்பரை கழற்றிப் பார்க்க இருவருமே கண்கள் விரிய அதைப் பார்த்தனர். அன்றொரு நாள் கார்த்திக் அபியை ரசிக்க அபி வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைக்கும் போது தனது மொபைலில் எடுத்த புகைப்படத்தை தத்ரூபமாக வரைந்திருந்தாள். இருவரின் முக உணர்வுகளை அழகாய் தெரிவித்தது அச்சித்திரம்.


சனாவின் திறமையைப் பார்த்த மற்றவர்கள் ஆச்சரியமாய் பார்த்தனர். இத்தனை உயிரோட்டமாய் வரைந்து இருப்பாள் என்று அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்களின் முகமே காட்டிக் கொடுத்தது. நகுல், "ரொம்ப நல்லா வரைஞ்சி இருக்க மா. அவளோ உயிர்ப்பா இருக்கு" என்றான். "தேங்கியூ மாமா" என்று புன்னகைத்தாள். அனைவரும் அவளைப் பாராட்ட ஏனோ அஞ்சலிக்கு அது பொறாமையாக இருந்தது.


கார்த்திக்கிற்கு குரு அழைத்து சாத்விக்கின் தற்போதைய நிலையை காண்பிக்க அவன் இதழ்கள் வெற்றிக் களிப்பில் புன்னகையை சிந்தியது. அங்கிருந்த சாத்விக்கோ, 'நான் யாருன்னு தெரியாமல் என் கிட்ட மோதிட்டான். அவன் யாரா இருந்தாலும் கண்டுபிடிச்சு இதை மோசமான விளைவை கொடுக்க இல்லை என் பேரை மாத்திக்கிறேன்" என்று மனதில் இறுகிய முகத்துடன் சூல் உரைத்துக் கொண்டான்.


இவர்கள் இருவரும் இவ்வாறு மோத மர்ம நபர் அவனது ஆட்டத்தில் அடுத்த காயாக சனா, சாத்விக் இருவரின் புகைப்படத்தையும் அவனது பிஸ்னஸ் வட்டாரத்தில் சாத்விக்கின் பெயரில் வெளியிட்டு இருந்தான்....




கருத்துக்களை பகிர,


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23319


அத்தியாயம் 23




சாத்விக்கின் அத்தனை உடைமகளின் மீது சி.பி.ஐ ரைட் நடத்தப்பட அவனோ கூலாக கூல் காபி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். சாத்விக் தவறாக எதையும் செய்யவில்லை என்பதை அவன் அறிவானே. அதனாலேயே சாந்தமாக இருந்தான் தனது அலுவலகத்தில். அதே போல் அவனுடைய தொழிற்சிலையில் இயந்திரங்களை பரிசோதிப்பதற்காக அதற்கான அதிகாரிகளும் வருகை தந்தனர்.


அப்போது இயந்திரத்தை ஒரு தொழிலாளி இயக்க இயந்திரத்தில் இலக்ட்ரிக் ஷொர்ட் ஏற்பட்டு அவ்வியந்திரமும் அங்கிருந்த இடங்களும் தீ பிடிக்க ஆரம்பித்தது. இதை எதிர்பாராத தொழிலாளர்களும், அங்கிருந்த அதிகாரிகளும் தீயின் நடுவில் மாட்டிக் கொண்டனர். அதே நேரம் தீயணைப்பு படையின் வருகையையும் அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.


இவ்விடயம் சாத்விக்கின் காதுகளுக்கு செல்ல முன் மீடியாவிற்கு சென்று சாத்விக்கின் தொழிற்சாலை முன் குழுமியது மீடியா. சாத்விக் அவசரமாக அங்கிருந்து தொழிற்சாலைக்கு வரும் போது தீயணைப்பு படையினர் அவர்களை காப்பாற்றியதோடு உடனே வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். இதுவே பிரேகிங் நியூசாக அனைவருக்கும் ஒளிபரப்பப்படுக் கொண்டு இருந்தது.


சனாவின் வீட்டில் அனைவரும் சந்தோஷமாக இருக்க பெரியவர்கள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது பிரேகிங் நியூசாக இது ஒளிப்பரப்பப்பட மாடியிலிருந்து அதைப் பார்த்த சனா உறைந்து நின்றாள். அபி அதிர்ந்து பார்த்தவள் உடனடியாக கார்த்திக்கிடம், "மாமா அண்ணாக்கு ஃபோன் போடுங்க. தனியா கஷ்டபடுவாங்க" என்று அவசரப்படுத்த உடனடியாக தன் ஏளனப் புன்னகையை மறைத்து அவளுக்காக அவனுக்கு அழைத்தான்.


மற்றவர்கள் அதிர்ந்து இருக்க அஞ்சலி அவனுடைய சொத்துக்களைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தாள். அவள் பார்க்கும் போது இத்தனை பெரிய பணக்காரன் இல்லையே என்பதாக இருந்தது அவள் எண்ணம். சாத்விகின் மொபைல் சி.பி.ஐ இடம் இருக்க இந்தப் பிரச்சனைக்குப் பிறகு மீண்டும் அவனிடமே வழங்கப்பட்டது. சாத்விக்கிற்கு கார்த்திக் அழைக்க யோசணையுடன் அழைப்பை ஏற்றான்.


சாத்விக், "ஹலோ" என்க, அபி, "என்னாச்சு அண்ணா? இதெல்லாம் எப்படி நடந்தது?" என்று படபடப்புடன் வினவ, "தெரியல்லை டா. புதுசா தான் மெஷின் ரிபெயார் பார்த்தேன். அப்போ நல்லா இருந்தது. என்ன நடந்ததுன்னும் எனக்கும் புரியல்லை. நான் பார்த்துக்குறேன். நீ கல்யாண பொண்ணு. அதை என்ஜோய் பண்ணுடா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதைப் பார்த்துட்டு அப்புறமா ஃபோன் பண்றேன்" என்று அழைப்பை துண்டித்து காயப்பட்டவர்களை பார்க்க வைத்தியசாலைக்குச் சென்றான்.


அங்கே சென்று அனைவரையும் பார்க்க எவருக்கும் பெரியளவில் காயமோ, உயிரிழப்புகளோ இருக்கவில்லை. அவர்களோடு பேசியவன் உடனடியாக உயர் அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்தான். ஏனென்றால் அவனுடைய கம்பனியை மூட வேண்டும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றே ரிபோர்ட் வழங்குவதாக இருந்தனர்.


அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்த போது அவனுக்கு தெரிந்த அமைச்சர் வரவேண்டுமா என்று அவர் கேட்க சாத்விக்கோ தானே இதைப் பார்த்துக் கொள்வதாகக் கூறி அவரை தவிர்த்துவிட்டான். அவர்கள் அனைவருமே ஒன்றாக ஃபவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து இருக்க பிளேசரை கழற்றி கையில் எடுத்து, கூலரை கழற்றி சேர்ட்டில் மாட்டியவாறு கம்பீரமாக நடந்து வந்தவன் அவர்களுக்கு வணகத்தைத் தெரிவித்து அவர்கள் முன்னே அமர்ந்தான்.


"நான் உங்களை வர சொன்னதுக்கு ரீசன் என்னன்னா என் ஃபெக்டரியில் நடந்த விபத்தை பத்தி பேசதான். இங்கே நடந்த ஷோர்ட் நிச்சயமா பிளேன் பண்ணி நடந்தது. பிகோஸ் வன் மன்துக்கு முன்னாடி தான் மெஷின்சை ரெபயார் பண்ணி, சேவிரஸ் பண்ணேன். அதுக்கான டொகியூமன்ட். இங்கே நடந்ததுக்கு யாரு காரணம்னு கண்டு பிடிக்கிறேன் சேர். நஷ்ட ஈடு காயம்பட்டவங்களுக்கு கொடுக்க நான் தயாரா இருக்கேன். நீங்க முடிவு பண்ணுங்க" என்று தோளை உலுக்கிக் கொண்டான்.


அவன் வழங்கிய பத்திரங்களைப் பார்த்தவர்கள் ஒரு லட்சம் அபராதம் கட்டுமாறு கூறி மீண்டும் இத்தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு கூறினர். அவனும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டான். உடனடியாக இதுவே சதி என்று கூறாமல் மறைத்து அத்தனையையும் கூறி மீடியாவிற்கு தகவல் கூறப்பட்டு இத்தோடு இவ்விடயம் மூடி வைக்கப்பட்டது.


தனது வீட்டிற்கு வந்தவன் கோபமாக அங்கிருந்த பொருட்களை உடைக்க ஆரம்பித்தான். "டேமிட் யாருன்னு தெரியாமல் என் மேலே கைவச்சிட்டான். என் கையால உனக்கு தண்டனை கொடுக்கனும்டா. எதுக்குடா இந்த எஸ்.பியை பகைச்சிக்கிட்டோம்னு ஃபீல் பண்ண வைக்கிறேன்டா" என்று தனது கையிலிருந்த கண்ணாடிக் குவளையை நசுக்க அவை துகள்களாகி உள்ளங்கையை பதம் பார்த்தன.


இரத்தம் வழியும் கைகளைப் பொருட்படுத்தாமல் பஞ்சிங் பேர்கில் தனது ஆக்ரோஷத்தைக் காட்ட ஆரம்பித்தான். அவன் மனதில் இருந்து கோபத்தையும், வெறியையும் அவன் உடலில் இருந்து வழியும் வியர்வை அதை தணிக்கவில்லை. ஒரு கட்டத்திற்கு அவனுக்கு எரிச்சலாக இருக்க தனது பி.ஏ விற்கு அழைத்தான். ராகவ் அழைப்பை ஏற்று, "சேர் நீங்க கூலா இருங்க சேர். நைட்டுக்குள்ள இதை யாரு பண்ணாங்கன்னு சொல்றேன்" என்று கூறினான்.


"ஒகே" என்று ஒற்றைச் சொல்லில் பதில் அளித்து மொபைலை வைக்க ராகவை நினைத்து அவன் உதடுகள் கர்வமாய் புன்னகைத்தாலும் மனமோ மெச்சுதலாய் அவனை பாராட்டியது. தனது கைக்கு முதலுதவி ஏதும் செய்யாமல் அங்கிருந்த சோஃபிவில் கை, கால்களை விரித்து மேலே இருந்த விட்டத்தை வெறிக்க அவனது மொபைல் ஒலித்தது. திரையைப் பார்க்க 'ஆர்யன்' என்று ஒளிர்ந்தது பெயர்.


புருவங்கள் முடிச்சிட அழைப்பை ஏற்றான். "என் பதிலடி எப்படி இருந்தது ப்ரவீன்? இதை நான் பண்ணன்னு எதிர்பார்த்து இருக்கமாட்டியே. நான் அமைதியா உன் கிட்ட இருக்கிறதுக்கு காரணம் குற்ற உணர்ச்சி தான். அதுவும் ஓரளவுக்கு எனக்கு பொறுமையை கொடுக்கும். ஆனால் நீ என் தங்கச்சி பேரையே கெடுக்க நினைக்கும் போது நானும் ஆர்யனா மாறாமல் இருந்தால் நல்லா இருக்காது.


இதுக்கு அப்புறமா என் தங்கச்சி இருக்கிற திசை பக்கம் வர நினைக்கக் கூடாது. உன்னோடு போட்டி போட எனக்கு நேரம் இல்லை. நீ கேட்க இல்லைன்னா இதை விட அதிகமா விளைவுகள் இருக்கும்" என்றான். அதற்கு மேல் அவன் பேசுவதை கேட்கும் அளவிற்கு சாத்விக்கிற்கு பொறுமை இல்லாமல் அழைப்பைத் துண்டித்தான். ஆனால் அவன் மனநிலைக்கு மாறாக அவன் இதழ்களோ மர்மப் புன்னகையை சிந்தியது.


"என்னை மறுபடியும் சீண்டிட்ட ஆர்யன். நான் உன் தங்கச்சிக்காக பொறுமையா இருக்கனும்னு நினைச்சேன். ஆனால் நீயே அதை உடைச்சிட்ட. எப்போவும் போல உன் அவசரபுத்தி இந்த வேலையை பண்ண வச்சிருச்சு. அதுக்கு தக்க பதிலடி கொடுக்காமல் இருந்தால் நான் எஸ்.பி இல்லையே" என்று தன்னுள் எள்ளலாக நினைத்தவன் தனது பி.ஏவிற்கு அழைத்தான்.


ராகவ் யோசணையுடன் அழைப்பை ஏற்க, "இதை யாரு பண்ணான்னு எனக்கு தெரிஞ்சிரிச்சு ராகவ். நீ என்ன பண்றன்னா.." தனது முழுத்திட்டத்தையும் கூறி, "இன்னும் வன் வீக்ல இது நடக்கனும். எவளோ வேணூன்னாலும் செலவு பண்ணிக்கோ. நான் இந்த வன் வீகல பழைய நிலைக்கு என் கம்பனியை மாத்திருவேன்" என்று அழைப்பை துண்டித்தான். அவனுடைய பேச்சில் இருந்தது இதைச் செய்தது கார்த்திக் என்று புரிந்துக் கொண்டான்.


சாத்விக் அதன் பிறகே தன் கைக்கு முதலதுவி செய்துக் கொண்டான். அங்கிருந்து வேலைக்காரர்களிடம் அறையை சுத்தம் செய்யுமாறு பணித்துவிட்டு வைத்தியசாலைக்கு டிரைவருடன் சென்று சிகிச்சைப் பெற்று வந்தான். இரவு அவன் கட்டிலில் விழ அவனது மொபைலுக்கு சனாவே அதிசயமாக அழைத்தாள். காலையில் செய்தியை பார்த்ததில் இருந்து அவளால் நிலைக் கொள்ளவில்லை.


அவன் வேலையில் இருப்பான் என்று அழைக்காமல் இருந்து இரவானதும் நிச்சயமாக ஓய்வாக இருப்பான் என்று நினைத்து அழைப்பை ஏற்றாள். காலையில் இருந்து சனாவின் குரலையும், ஆறுதலையும் எதிர்பார்த்தவனுக்கு அதீத கோபமே அவள் மீது ஏற்பட்டது. அத்தோடு கார்த்திக்கே இதைச் செய்தது என்ற தகவலை அறிந்து கோபத்தை கட்டுப்படுத்தியவனுக்கு தற்போது சனாவின் தாமதமான அழைப்பில் அவள் மீதே மொத்த கோபமும் திரும்பியது.


அழைப்பை அவன் ஏற்க சனாவின் குரலை கேட்க ஏக்கமாக இருந்தது. அதனால் அமைதியாய் இருக்க, "சேர்" பரிதவிப்புடன் அழைக்க அடக்கி வைத்திருந்த மொத்த கோபமும் அவள் மீது திரும்பியது. "என்னடி என் மேலே அக்கறை இருக்கிறது போல நடிக்கிறியா? இந்த அக்கறை காலையில நியூஸ் கேள்வி பட்ட உடனே வந்திருக்கனும். அப்போ வர இல்லை இவளோ நேரம் கழிச்சி வந்திச்சா?" என்று கத்த, "சேர் நான் சொல்றதை..." என்று முடிக்க முன், "வாயை மூடுடி" என்று உறுமினான்.


அவன் கோபத்தினால் ஏற்பட்ட பயத்திலும், அவன் சொற்களாலும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. "நான் பைத்தியக்காரன் போல சுத்தினேன்டி. வெளியில காட்டிக்காட்டியும் ரொம்ப உடைஞ்சி போயிட்டேன்.ஏன் தெரியுமா? ஒருத்தர் எனக்கு ஆறுதல் சொல்ல இல்லை. மத்தவங்க எனக்கு தேவையில்லை. நீ என் பொன்டாட்டி தானே? உன்னால பேச முடியாதா? நானும் உணர்வுள்ள மனுஷன் தான்.


அது சரி உனக்கு என்னை பிடிக்கிதே எனக்கு ஏதாவது தப்பால் நடந்தால் முதல்ல சந்தோஷபட போறது நீ தானே? இப்போவும் அதானே பண்ண. அண்ணனுக்கு தங்கச்சின்னு புரூவ் பண்ணுற. நான் தான் எனக்கு சொந்தமானவளா உன்னை பார்க்குறேன்.நீ என்னை மூணாவது மனுஷனா தானே பார்க்குற? நான் செத்த பிறகாவது பார்ப்பியா?" என்று கூற எதிர்ப்புறம் சத்தமாக, "சேர்" என்ற கேவல் மட்டுமே வந்தது.


கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் மனதில் உள்ளவற்றைக் கொட்டி மனதின் கோபத்தை தணித்தான். ஆனால் எதிர்ப்புறம் இருந்தவளின் இதயத்தை வார்த்தையால் குத்திக் கிழிக்கிறோம் என்று அறியாமல் பேசிக் கொண்டு செல்ல அவளுடைய கேவலில் தன்னிலை அடைந்தான். அப்போதே தான் செய்த முட்டாள் செய்கைகள் நினைவு வந்தது.


தணிந்த குரலில், "பேபி" என்று அழைக்க, "போதும் சேர் என்னால முடியல்லை..நானும் உணர்வுள்ள மனிஷி. நீங்க அதை மறக்காதிங்க. உடம்பை பார்த்துக்கொங்க. நான் கிருஷ்ணா கிட்ட உங்களுக்காக வேண்டிக்கிறேன்" என்று அழுகுரலில் கூறியவாறே அழைப்பைத் துண்டித்து குளியலறைக்குள் புகுந்து கதறி அழுதாள்.


'என்ன வார்த்தை கூறிவிட்டான்? அவனுக்கு பிரச்சனை என்றால் முதலில் துடித்தது நான் அல்லவா? எந்த உணர்வையும் வெளிக்காட்ட முடியாத சூழலில் உள்ளதை ஏன் அவன் புரிந்துக் கொள்ளவில்லை? அவன் மீது என்னை அறியாமலேயே உரிமை எடுத்துக் கொண்டு இப்போது அவன் மனதில் நிறைந்திருப்பதையும் கூற முடியாதவாறு இருக்கிறேனே.


அவன் மீது நான் கொண்ட பாசம் நடிப்பு என்று அவன் எவ்வாறு கூறலாம்? எப்போது மனதில் நுழைந்தான் என்று தெரியாமல் பைத்தியக்காரியைப் போல் சுத்தியவள் நான் அல்லவா? அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் தன்னால் தாங்கவே முடியாதே. ஏன் அவன் தன்னை புரிந்துக் கொள்ளவில்லை?' என்று அழுதுக் கரைந்தாள்.


தலைவலி என்று அனைவரிடமும் கூறி எதுவும் உண்ணாமல் கட்டிலில் படுத்தாலும் அவள் குமுறல்கள் கண்ணீராய் வெளியேறி தலையணையை நனைத்தது. அவனுடன் பேசிய உடனேயே மொபைலை சைலன்டில் வைத்துவிட்டாள். அன்று இரவு தூங்கா இரவானது இவளுக்கு.


சனா பேசிய பிறகு சாத்விக் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான். இன்று அவளுடைய தாய்மை உணர்வையும் மறந்து அவளை வருத்தி விட்டான் என்று அறிந்து அவனும் கலங்கி அமர்ந்து விட்டான். அவளுக்கு மீண்டும் அழைக்க அவளோ மொபைலை சைலன்டில் வைத்ததால் அழைப்பை ஏற்கவில்லை. கார்த்திக் மீதிருந்த கோபத்தை தவறுதலாக அவளிடம் காட்டியதை எண்ணி தன்மீதே கோபம் கொண்டான்.


கார்த்திக்கிற்கு உடனே அழைப்பை ஏற்படுத்த கார்த்திக்கும் அழைப்பை ஏற்றான். "நான் அமைதியா இருந்ததுக்கு காரணம் நான் கோழை இல்லை ஆர்யன். உன்னால இன்னைக்கு ரொம்ப டென்ஷன் ஆகி என்ன பண்றேன்னு தெரியாமல் நடந்துக்கிட்டேன். கண்டிப்பா பதிலடி கொடுக்க போறேன். கெட் ரெடி ஃபொர் தெட். நீ அடுத்து என்ன செய்றதுன்னு தெரியாமல் தலையை பிடிச்சிட்டு இருக்க தான் போற" என்ற அழைப்பை துண்டித்தான் சாத்விக்.


இருவரும் அறியாத ஒன்று மர்மநபர் செய்யப்போகும் அடுத்த விடயம் சாத்விக் இன்று கூறிய கூற்றில் இருந்து அவனே செய்தான் என்று ஊர்ஜிதப்படுத்துவதாக அமையப் போகின்றது என்பதை அறியாமல் சாத்விக் பேச கார்த்திக் கேட்டுக் கொண்டு இருந்தான்.


கார்த்திக்கும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான். அபி அறைக்கு வந்தவள், "மாமா சாத்விக் அண்ணா பாவம் இல்லையா? உங்களுக்கு ஏதாவது பிரச்சனைன்னா நாங்க ஆறுதலா துணையா இருக்கோம். அவருக்கு யாரு இருக்கா?" என்று கார்த்திக்கின் மனநிலை தெரியாமல் பேசிக் கொண்டே சென்றாள்.


கார்த்திக், "கொஞ்ச நேரம் தொணதொணன்னு பேசாமல் மூடிட்டு இருக்கியா? அவன் என்னமோ உன் சொந்த அண்ணன் போல பேசிட்டு இருக்க? அவனைப் பத்தி சும்மா என் கிட்ட பேசிட்டு இருக்காத" என்று சாத்விக்கின் மேல் உள்ள கோபத்தை இவளிடம் காட்டி விட்டு முதுகு காட்டி படுத்து யோசிக்க ஆரம்பித்தான்.


அபியோ அவனது கோபத்தை நிச்சயமாக இங்கே எதிர்பார்க்கவில்லை. திருமணமான இரண்டாம் நாளே மனைவியைக் காயப்படுத்தியது அறியாது வேறு யோசணையில் இருந்தான். அபியோ அவனுக்குக் கேட்காது வாயை மூடி அழ ஆரம்பித்தாள். இன்றைய இரவு தூங்கா இரவாக நால்வருக்கும் சென்றது.


ஆண்கள் வெளியில் காட்ட முடியாத கோபத்தை தங்கள் மனைவிகளிடம் கொட்டிவிடுகின்றனர். அவர்களின் மனதை புண்படுத்துகிறோம் என்று அறியாமல். அவர்களைப் போலவே மனைவிகளும் உயிருள்ள ஒரு மனிதன் என்பதை அந்நிமிடத்தில் மறந்துவிடுகின்றனர். அதன் பின் உணர்ந்து மன்னிப்புக் கேட்பவர்கள் மிகக் குறைவு. அம் மன்னிப்பு என்ற ஒரு சொல் அவர்கள் உதிர்த்த பல சொற்களால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாக அமையும் என்பதையும் அறியாது இருந்தனர்.


அடுத்த நாள் காலையில் சனா குளித்து வந்தவள் எப்போதும் போல் கிரஷ்ணனிடம் சென்று சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு நகுல் மற்றும் அவன் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து காபி குடித்துக் கொண்டு இருந்த இடத்திற்கு வந்தாள். மித்ரனைப் பார்த்தவள், "மித்து அண்ணா, அண்ணாவோட ரிசப்ஷனையும் இன்னும் பத்து நாளில் வச்சிக்கலாமா?" என்றாள். அவளுடைய இப்பேச்சை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதை அனைவரினதும் திகைத்த முகங்களே காட்டியது.


மித்ரன், "ஏன் மா?" என்று புரியாமல் வினவ, "அடுத்த மாசம் வைக்கும் போது எல்லாருக்கும் வர முடியுமா இருக்குமான்னு தெரியல்லை. அன்ட், உங்க எல்லோரையும் என் குடும்பமா பார்க்குறறேன். நீங்களும் எங்க கூட இருந்து அண்ணாவோட ரிசப்ஷன்ல கலந்துக்கிட்ட பிறகே போறிங்களா? நீங்க எல்லாரும் இருக்கும் போது சந்தோஷமா இருக்கு. இதே சந்தோஷத்தோட அண்ணா ரிசப்ஷனையும் வைக்கலாம்னு நினைக்கிறேன்.


கண்டிப்பா கிரேன்டா பண்ணியே ஆகனும். பிஸ்னஸ் ஆளுங்க, ஃபிரன்ஸ், ஸ்டா்ஃப் என்ட் இ.டி.சி. நீங்களும் இருக்கும் போது நிறைய பேர் இருக்கிங்க. அப்போ இன்னும் உதவியா இருக்கும். அது மட்டுமில்லை. இந்த மாசமும் டயர்டாகி அடுத்த மாசமும் டயரடாகுறதுக்கு இந்த களைப்போடவே அதையும் முடிச்சிடுறது நல்லது அண்ணா" என்றாள் தெளிவாக.


கார்த்திக், "இப்போ ரிசப்ஷனுக்கு அவசரம் என்ன சனா?" என்று வினவ, "இவளோ நேரமா பந்தி பந்தியா அதுக்கான பதிலை சொன்னேன் அண்ணா. உனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா அண்ணா ரிசப்ஷன் வைக்கிறதுல?" என்று கைகளைக் கட்டி புருவமுயர்த்த அவள் தோரணையில் தானாக 'இல்லை' என தலையாடியது. அபியிடம் திரும்ப, "எனக்கு எந்த வித புரொப்ளமும் இல்லை டி" என்றாள் அபி.


நகுலிடம் திரும்பியவள், "நீங்க என்ன மாமா சொல்றிங்க?" என்று நகுலிடம் கேட்க,நகுல், "நீ சொல்றது சரி தான் மா" என்றான். நகுலின் பெற்றோரின் முன்னே சென்று நிலத்தில் அமர்ந்தவள், "உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கா அப்பா ஊர்ல?" என்று வினவ, "முக்கியமான வேலை இல்லை மா. பத்து நாள் தானே? சமாளிச்சிடலாம்" என்றார் நகுலின் தந்தை. "அப்போ எங்க அப்பா, அம்மா ஸ்தானத்துல இருந்து பெரியவங்களா ரிசப்ஷனை முன் நின்னு நடத்துறிங்களா?" என்று ஏக்கமாய் வினவ மற்றவர்ளுக்கு கண்கள் கலங்கியது.


"கண்டிப்பா மா. நீயும், உன் அண்ணனும் என் பசங்க தான்" என்று வாஞ்சையாய் அவள் தலையை வருடிவிட்டார்.அவளும் கலங்கிய கண்களை மறைத்து தனக்குரிய காபி கப்பை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் செல்ல அபி யோசணையுடன் அவள் பின்னே சென்றாள். அபி, "சனா ஒரு நிமிஷம். என் கிட்ட மறைக்காமல் உண்மையை சொல்லு. என்னாச்சு?" என்று வினவ, "உன் கண்ணைப் பார்த்து எனக்கு பொய் சொல்ல முடியாது அபி.


மனசுக்கு ஏதோ மாதிரி இருக்கு. தப்பு நடக்க போறதா ஃபீல் ஆகுதுடி. அதான் கண்குளிரை உங்க ரிசப்ஷனை பார்க்கனும்னு தோணுது. என்னமோ உங்க எல்லாரையும் விட்டு நான் தூர போக போறேன்னு உள் மனசு சொல்லிட்டே இருக்கு. அது என்னன்னு தெரியல்லை" என்று தன் நெஞ்சை நீவ அபி அவளை அணைத்து, "லூசு மாதிரி யோசிக்காத இடியட்" என்றாள்..


சனா சிரித்து அவளை விலக்கி, "நீ என்னை கட்டிபிடிக்காமல் அண்ணாவை போய் கட்டிபிடி" என்று அனுப்பி வைக்க பொலிவில்லா புன்னகையுடன் அங்கிருந்து சென்றாள். சனா கிருஷ்ணாவின் புறம் திரும்பியதால் அவளுடைய முகமாற்றத்தைக் கவனிக்கவில்லை. இன்று காலையில் எழுந்ததில் இருந்து அபி கார்த்திக்கின் முகத்தைப் பார்க்கவில்லை. அவனைப் பார்த்தால் அழுதுவிடுவோமோ என்று பயந்து இருந்தாள்.


இவ்வாறு கார்த்திக், அபி ரிசப்ஷன் முடிவு செய்யப்பட்டவுடன் அடுத்தடுத்த காரியங்களும் வேகமாக நடந்தேறின. சனா, அபி இருவரும் கல்லூரி அதிபரிடம் ரிசப்ஷன் இன்னும் பத்து நாட்களில் இருப்பதால் ரிசப்ஷன் முடிந்த பிறகே கல்லூரிக்கு வருவதாகக் கூறிவிட்டனர். இதனால் சனா, சாத்விக்கிற்கு இடையிலான பிணக்கு தீரவில்லை. அவன் அழைத்தாலும் அழைப்பை ஏற்பாளே தவிர ஒரு வார்த்தையேனும் பேச மாட்டாள்.


'கொழுப்புடி உனக்கு. என் வேலைகளை முடிச்சிட்டு உன்னை கவனிச்சிக்கிறேன்' என்று மனதில் கருவிக் கொண்டு தன் தொழிற்சாலையில் சீர்பணிகளை செய்தான். கார்த்திக்கோ சாத்விக் என்ன செய்யப்போகிறான் என்ற நினைப்பில் அபி தன்னுடன் பேசாமல் இருப்பதை காணத் தவறியது அதோ பரிதாபம். அவனுடைய அத்தனை வேலைகளையும் அபி செய்து வைத்து இருப்பதால் அவன் கண்டுகொள்ளவில்லை.


இவ்வாறே ஐந்து நாட்கள் நகர அன்று மறுபடியும் தொழின்முறை ரீதியான ஒரு மீடிங் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கு கார்த்திக், சாத்விக் இருவருமே வருகை தர இருந்தனர். கார்த்திக் சற்று முன்னே செல்ல அங்கிருந்த தொழிலார்கள் மற்றும் கார்த்திக்கிற்கு சனா, சாத்விக் இருவரும் மும்பை சென்றபோது ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நின்று இருந்த புகைபடமும், கடற்கரைக்குச் சென்ற போது ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து நின்று இருந்த புகைப்படங்களும் சாத்விக்கின் பெயரில் வெளியாகின.


கார்த்திக்கோ அதைப் பார்த்து கொதித்து இருக்க, மற்றவர்களோ சனாவைப் பற்றி அவதூறாக பேச ஆரம்பித்தனர். இதை எதையும் அறியாத சாத்விக் மீடிங் ஹோலிற்கு வர அனைவரின் முன்னிலையிலும் கார்த்திக் சாத்விக்கின் சட்டைக் கொலரை பிடித்து இருந்தான். "இதை தான் அன்னைக்கு சொன்னியாடா ராஸ்கல்" என்று உறும, "இடியட் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் சொல்லிட்டு என் சேர்ட்டை பிடிக்க உனக்கு எவளோ தைரியம் இருக்கனும்?" என்று சாத்விக்கும் எகிறினான்.


இருவரையும் மற்றவர்கள் கடினப்பட்டு பிரித்து நிறுத்தினர். வயதில் மூத்தவர் ஒருவர், "இனாஃப். வந்த வேலையை கவனிக்கலாம். உங்க பேர்சனல் பிரச்சனைகளை இங்கே கொண்டு வராதிங்க" என்றார். அதன் பிறகே சுற்றுப் புறம் மறந்து நடந்துக் கொண்டதை எண்ணி இருவருமே நொந்துக் கொண்டனர். அதன் பின்னர் மீடிங் ஆரம்பித்து நல்லபடியாக மூன்று மணி நேரத்தில் நிறைவடைந்தது.


அத்தோடு பிரச்சனையை பார்த்த ராகவ் பதினைந்து நிமிடத்தில் தகவல் அனைத்தையும் திரட்டி மீடிங் முடியும் வரைக்கும் காத்திருந்தான். மீடிங் முடிந்ததும் புகைப்படங்களை காட்டியவன் சாத்விக் பெயரில் அனுப்பப்பட்டு இருப்பதைப் பார்த்து சாத்விக் அதிர்ந்து நின்றான். அப்போதே கார்த்திக் கூறியதிற்கான அர்த்தம் புரிந்தது. சாத்விக் கோபமாக, "ராகவ் இதை யாரு பண்ணான்னு எனக்கு தெரிஞ்சே ஆகனும்" என்று கூறி மற்றவர்கள் இருக்கும் இடத்திற்கு நகர்ந்து சென்றான்.


அன்று சனாவை அவதூறாக பேசியவர், "என்ன கார்த்திக் அன்னைக்கு உன் தங்கச்ச பத்தி தப்பா பேசின்னு சண்டை போட்ட. இன்னைக்கு நிரூபனம் ஆகிருக்கு. இதுக்கு என்ன சொல்ற?" என்று இளக்காரமாய் வினவ கார்த்திக் கோபத்தை கடினப்பட்டு அடக்கிக் கொண்டான். இன்னொரு கேடு கெட்டவனோ, "அவளை ஒவ்வொருத்தர் கூட அனுப்பி விட்டு தான் இந்த நிலமையில இருக்க போல" என்று முடிக்க முன்னே இரண்டடி பின் சென்று விழுந்தான்.


அனைவரும் யார் அடித்தது என்று பார்க்க கோபத்தில் கழுத்து நரம்புகள் புடைக்க சிவந்த விழிகளுடன் கை முஷ்டி இறுக நின்று இருந்தான் சாத்விக். சாத்விக் அடிப்பான் என்று கார்த்திக் உட்பட மற்றவர்கள் எதிர்பார்க்கவில்லை. கோபமாக அவனை நெருங்கியவன், "யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற? அவ என் பொன்டாட்டி டா. மிஸஸ் திசன்ஜனா சாத்விக் ப்ரவீன். அவளைப் பத்தி பேச உனக்கு அவளோ தைரியமா?" என்று மூக்கில் குத்த பொலபொல என இரத்தம் வழிந்தது.


"இதுக்கு மேலே அவளைப் பத்தி யாராவது ஒரு வார்த்தை பேசினிங்க உயிரோட இருக்க மாட்டிங்க. எஸ். பியை பகைச்சிகிட்டவன் உயிரோட நடமாட முடியாது ஜாக்கிரதை. எங்க பேர்சனல் விஷயத்துல தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. இதை நானும், என் பொன்டாட்டியும், என் மச்சானும் பார்த்துக்குறோம். ஒருத்தனும் தலையிடக் கூடாது" என்று விரல் நீட்டி எச்சரித்தவனின் சொற்களில் அத்தனை உறுதி தெரிந்தது.


அவனுடைய தோரணையில் அங்கிருந்தவர்களின் முதுகுத் தண்டுகள் பயத்தில் சில்லிட்டு இருக்க கார்த்திக்கை ஆழமாய் ஒரு முறைப் பார்த்து அங்கிருந்து சென்றான். கார்த்திக்கும் ஆழமூச்சிழுத்து சமன்படுத்தியவன் அங்கிருந்து அனைவரையும் ஒரு முறை முறைத்துவிட்டு வெளியாகினான்.


இவர்களின் பிரச்சனையின் விளைவாக சனாவிற்கு தனது ரிசப்ஷன் அன்று மாப்பிள்ளையை அறிமுகப்படுத்தி அடுத்த நாள் நிச்சயம் செய்ய வேண்டும் என்ற அளவிற்கு முடிவு எடுத்து அதை குடும்பத்திற்கு அறிவித்து இருந்தான்...




கருத்துக்களை பகிர,


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23331


அத்தியாயம் 24





கார்த்திக் மீடிங் ஹாலில் இருந்து வெளியேறி தனது காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து பறந்தான். அவனுடைய காதுகளில் 'அவ என் பொன்டாட்டி டா. மிஸஸ் திசன்ஜனா சாத்விக் ப்ரவீன். அவளைப் பத்தி பேச உனக்கு அவளோ தைரியமா?'


'இதுக்கு மேலே அவளைப் பத்தி யாராவது ஒரு வார்த்தை பேசினிங்க உயிரோட இருக்க மாட்டிங்க. எஸ். பியை பகைச்சிகிட்டவன் உயிரோட நடமாட முடியாது ஜாக்கிரதை. எங்க பேர்சனல் விஷயத்துல தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. இதை நானும், என் பொன்டாட்டியும், என் மச்சானும் பார்த்துக்குறோம். ஒருத்தனும் தலையிடக் கூடாது'


என்ற சாத்விக்கின் வாசகங்களே எதிரொலித்தன.


கார்த்திக், "என் தங்கச்சி உன் பொன்டாட்டியா? அதை நடக்க விடவே மாட்டேன் டா. அவளுக்கு முதல்ல ஒரு கல்யாணத்தை பண்றேன்" என்று தீவிரமாய் நினைத்தவன் மாப்பிள்ளைப் பார்ப்பதற்கு ஆயுத்தமானான். சாத்விக் இதைச் செய்திருந்தால் முதலில் புரியாமல் குழம்பி இருக்கவோ, இல்லை தவறாக சனாவை பேசியவனை அடித்து இருக்கமாட்டான் என்பதை யோசிக்க மறந்தான்.


அதே போல் அவ்விடத்தில் தன் மனைவி என்று கூற அவசியம் இல்லை என்பதையும் சிந்திக்க மறந்துவிட்டான். கார்த்திக்கிற்கு தங்கைப் பாசம் கண்ணை மறைத்தது மட்டுமின்றி அறிவையும் இழக்க வைத்தது. அவன் அறிந்துக் கொள்ளும் போது சனா அவன் அருகில் இருப்பது கேள்விக்குறியே.


சாத்விக்கோ கோபத்தின் உச்சியில் இருந்தான். "யார்ரா இதை பண்ணது? எவளோ தைரியம் இருக்கனும் இதை பண்ண?" என்று குமுறியவன் தலேயைப் பிடித்து நாற்காலியில் அமர்ந்தான். சனாவுடன் அவனுக்கு தற்போதே பேச வேண்டும் போல் இருக்க அவளுக்கே அழைப்பை ஏற்படுத்தினான். அவள் அப்போது தான் குளித்து தலையை துவட்டிக் கொண்டு இருந்தாள். மொபைல் ஒலிற திரையைப் பார்த்து விட்டு அழைப்பை ஏற்றாள். இன்றும் சனா அமைதியாய் இருக்க சாத்விக், "பிளீஸ் பேசுடி. இன்னைக்கு முடியல்லை" என்றும் இல்லாத குரலில் வினவ புருவ முடிச்சிட யோசித்தாளே தவிர எதுவும் பேசவில்லை.


'இப்போ நான் சொல்றதை கேட்டு நீ பேச வேணுமே. இருடி பார்த்துக்குறேன்' என்று மனதில் திட்டியவன், "உன் அண்ணா கிட்ட நீ தான் என் பொன்டாட்டின்னு சொல்லிட்டேன்" என்றான். சனா அதிர்ந்து, "என்ன சேர் சொல்றிங்க?" என்று பரிதவிப்புடன் வினவ, "ஆமா சொல்லிட்டேன். அதை சொல்லும் போது உன் அண்ணா ரியெக்ஷனை பார்க்கனுமே. சான்ஸ்லஸ்" என்று வாய்விட்டு சிரித்தான்.


சனா, 'தப்பு பண்ணிட்ட காட்டுப் பையா, அண்ணா இதுக்கு அப்புறமா சும்மா இருக்கமாட்டானே. என் மனசுல இருக்கிறதையே நான் இன்னும் சொல்ல இல்லை. அதுக்குள்ள இந்த பிரச்சனை' என்று கண்கள் கலங்க அமைதியாய் தோட்டத்தில் இருந்த கிருஷ்ணன் சிலையை தன் அறையின் பல்கனியில் நின்று வெறித்தாள். சாத்விக், "என்ன பேபி அமைதியா இருக்க?" என்று வினவினான்.


பெருமூச்சை வெளிவிட்டவள், "ஒன்னும் இல்லை சேர்" என்றாள். அவள் முகத்தை தன் லெப்டொப்பில் கமெரா மூலம் பார்த்தவன், "நீ எஸ்.பியோட பொன்டாட்டி. அதுல எந்தவித மாற்றமும் இல்லை. உன் கழுத்துல என் கையால மட்டும் தான் தாலி ஏறும்" என்று உறுதியாகக் கூறினான். சனா, "உங்க இரண்டு பேருக்கும் இடையில பிரச்சனை கூடிட்டே போகுது. எதுவுமே குறைய இல்லை" என்றாள் கலங்கிய குரலில்.


சாத்விக், "நான் அமைதியா இருந்தால் உன் அண்ணன் என்னை சீண்டிட்டான். என்னை சீண்டுறவங்களுக்கு பதில் கொடுக்காமல் நான் இருந்ததே இல்லை பேபி. கண்டிப்பா பதில் கொடுப்பேன்" என்று கடினமான குரலில் கூறியவன், "இதுக்கு அப்புறமாவும் பேசாமல் இருக்காத" என்று கூறி அழைப்பைத் துண்டிக்க தலைவலிக்க நெற்றியை நீவி விட்டுக் கொண்டாள்.


கார்த்திக் தனது பி.ஏ விடம் புகைப்படங்கள் மாஃபிங்கா? என விசாரிக்கக் கூறி இருந்தான். அவன் அலுவலகத்தில் யோசணையாய் அமர்ந்து இருக்க அவனது யோசணையை அவன் பி.ஏ கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததில் கலைத்தான். பி.ஏ, "சேர்" என்று தயங்கி நிற்க, "விஷயத்தை சொல்லு" என்று தீர்க்கமாக அவனைப் பார்த்தான் கார்த்திக். பி.ஏ, "சேர் இது மாஃபிங் இல்லை. ஒர்ஜினல் போடோ" என்றான் தயங்கி.


பி.ஏ வை "போ" என்று அனுப்பி வைத்து தலையில் கைவைத்து அமர்ந்த கார்த்திக், 'என்னை ஏமாத்திட்டியே பட்டு. என் வளர்ப்பு தப்பாகிருச்சே' என்று மனது கலங்க அவன் மனசாட்சியோ, 'சனா தப்பு பண்ண மாட்டா. அவ கிட்ட என்ன நடந்ததுன்னு விசாரி' என்று கூற, 'அவ பதில் சொல்ல மாட்டா' என்றான் கார்த்திக் தங்கையைப் புரிந்து. 'அவ உன் பேச்சை தட்ட மாட்டா. உன்னை மீறி எதையுமே பண்ண மாட்டா' என்று மனசாட்சி சனாவிற்கு பரிந்து பேச, 'அதையும் பார்க்கலாம்' கசந்த முறுவலைச் சிந்தினான்.


இதற்கு மேல் எதையும் சிந்திக்க முடியாமல் எழுந்தான். இப்போதே அபியின் ஆறுதல் தனக்கு வேண்டும் என்று நினைத்து அங்கிருந்து வேகமாக வீட்டிற்குச் செல்ல அங்கே ரிசப்ஷனிற்கு அடுத்தடுத்த வேலைகளை் நடந்துக் கொண்டு இருந்தன. வரவேற்பரையில் இருந்த விசாலாட்சியிடம், "அபியை காபி எடுத்துட்டு என் ரூமுக்கு வர சொல்லுங்க" என்று அறைக்குள் சென்று நேரடியாக குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.


கார்த்திக் குளித்து வர அபி காபியை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அவனுக்கு காபியை வழங்கி விட்டு வெளியே செல்ல எத்தணிக்க அப்போதே இத்தனை நாட்களாக அபி தன்னுடன் பேசவே இல்லை அவனது மங்கிய மூளைக்குப் புரிந்தது. கார்த்திக், "செல்லம்மா" என்று அழைக்க அதே இடத்தில் வேரூன்றி நின்று பொங்கி வந்த அழுகையை இதழ்கடித்து நிறுத்திக் கொண்டாள் அபி.


"நீ என் கூட பேசவே இல்லை" என்றான். அபியோ அமைதியாய் இருக்க காபியை அங்கிருந்த மேசைக்கு மேலே வைத்தவன் அவள் பின்னிருந்து அணைத்துக் கொண்டான். அபி அதற்கும் மறுப்பு தெரிவிக்காது இருக்க, "என் மேலே கோபமா இருக்கியா செல்லம்மா" என்றான் பாவமாய். "அப்படி ஏதும் இல்லை மாமா" என்று கமறிய குரலில் கூற அவள் குரல் மாற்றத்தை உணர்ந்தவன் அவளை தன் புறம் திருப்பினான்.


அவள் அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்துச் சிதறியது. கார்த்திக், "என்னடி ஆச்சு?" என்று பதறி வினவ, "ஒன்னும் இல்லை மாமா. நான் தான் லூசு மாதிரி நடந்துக்குறேன்" என்று தன் கண்ணீரைத் துடைத்து வெளியே செல்ல நினைக்க கார்த்திக் அவள் கைபிடித்து நிறுத்தினான். "உண்மையை சொல்லு அபி" என்று அழுத்தமாய் வினவ அதற்கு மேல் மறைக்க முடியாமல் திருமணமான இரண்டாவது நாள் நடந்ததைக் கூறினாள்.


அபி, "என்னை நீங்க தேடவே இல்லை மாமா. நான் ஒருத்தி இருக்கேன்னே உங்களுக்கு ஞாபகம் இல்லை. ரொம்ப மனசு வலிச்சது. அதான் இதுக்கு அப்புறமா தொணதொணன்னு பேச கூடாதுன்னு முடிவு எடுத்து இருக்கேன்" என்று நகர அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். "சொரிடி. நான் வேற டென்ஷன்ல இருந்ததால பார்க்கவே இல்லை. ஒரு முறை மன்னிச்சிரு கண்ணம்மா. இதுக்கு அப்புறமா இப்படி நடக்காமல் பார்த்துக்குறேன்" என்று கெஞ்சி கொஞ்சி தன் பாணியில் அவளை சமாதானம் செய்தான்.


அபியும் தன் கணவனை மன்னித்து அவனோடு ஒன்றிக் கொண்டாள். இவர்கள் காதலில் மிதக்க சனாவோ பயத்தில் அமர்ந்து இருந்தாள். அடுத்து தன் வாழ்க்கையில் என்ன நடக்குமோ என்று தெரியாமல் அதைப் பற்றியே யோசித்து குழப்பமாக வலம் வந்தாள். கார்த்திக் சனா தன் மீது கொண்ட பாசத்தை சோதனை செய்ய அடுத்த நாள் மாலையை தெரிவு செய்தான்.


நகுலின் குடும்பத்தினர் அனைவரும் நகுலின் நண்பனைப் பார்த்து வருவதாகக் கூறி செல்ல சனா, அபி, விசாலாட்சி மூவருமே வீட்டில் இருந்தனர். கார்த்திக் வேலையை முடித்து வந்தவன் குளித்து மூவரையும் தனது அறைக்கு அழைத்தான். கார்த்திக், "நான் முக்கியமான ஒரு விஷயத்தைப் பத்தி பேசனும்னு நினைக்கிறேன். பேசலாமா?" என்று பார்க்க புரியாமல் மூவரும் கார்த்திக்கைப் பார்த்தனர்.


"என் பட்டு மேலே எனக்கு உரிமை இருக்கு. அந்த உரிமையில நான் அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சு இருக்கேன். அந்த பையன் பேரு கௌதம். எங்க கல்யாண கார்ட் ரெடி பண்ணி கொடுத்த துரையப்பனோட பையன் அவன். இப்போ ஃபோரின்ல ஃபிரன்டோட சேர்ந்து கம்பனி நடத்திட்டு இருக்கான். கூடிய சீக்கிரமா பொண்ணு பார்த்துட்டு நிச்சயம் பண்ண வருவாங்க.


பொண்ணு பார்க்க வர போறது சப்ரைஸ். பட் நிச்சயம், நகுல் மாமா குடும்பம் போறதுக்கு முன்னாடி என் ரிசப்ஷனுக்கு அடுத்த நாள் நடக்கும். என்ன சனா உனக்கு எப்படி? ஒகேவா?" என்று தன் பயத்தை உள்ளே மறைத்து வெளியே சாதாரணமாக முகத்தை வைத்துக் கேட்டான். சனா முதலில் உறைந்து இருந்தவள் பின் தன்னை சமன்படுத்தி வரவழைத்த புன்னகையுடன், "எனக்கு பிரச்சனை இல்லை அண்ணா" என்றாள்.


அந்நிமிடமும் சாத்விக்கின் நினைவுகள் அவளைத் தாக்கினாலும் தமையனை மீறி எந்த முடிவும் அவளால் எடுக்க முடியவில்லை. கார்த்திக்கிற்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது. தன் வளர்ப்பு வீண் போகவில்லை என எண்ணி. அபி, "இப்போ சனாவுக்கு கல்யாணம் அவசரமா மாமா?" என்றாள யோசணையாக. கார்த்திக், "இப்போ நிச்சயம் மட்டும் டா. கலயாணத்தை அவ படிப்பு முடிச்ச பிறகு வச்சுக்கலாம்" என்று சமாதானம் செய்தான்.


அபி, "அப்போ ஒகே மாமா. நான் எதுக்கு சொல்றேன்னா? எனக்கு உங்களை சின்ன வயசுல இருந்தே தெரியும். அதனால் திடீர்னு கல்யாணம் முடிஞ்சாலும் சமாளிக்க முடியுமா இருந்தது. சனாவுக்கு அப்படி இல்லையே. அந்த உறவையும், மாப்பிள்ளையையும் ஏத்துக்க அவளுக்கு டைம் கொடுக்கனும் இல்லை?" என்றாள் விளக்கமாக. விசாலாட்சி, "ஆமா மாப்பிள்ளை. சனாவும், அந்த பையனும் பழக டைம் வேணுமே" என்றார்.


கார்த்திக், "புரியிது அத்தை. அதான், நிச்சயத்தை மட்டும் இப்போ வச்சிக்கலாம்னு முடிவு பண்ணேன். அண்ணன் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கான். தங்கச்சிக்கு ஒரு கல்யாணம் கூட பண்ணி வைக்க இல்லையேன்னு ஊர் உலகம் தப்பா பேச கூடாது அத்தை" என்று அவனே காரணத்தையும் கூற அபி, "மாப்பிள்ளையை பத்தி நல்லா விசாரிச்சிங்களா மாமா?" என்றாள் தோழியின் மீது அக்கறை உள்ளவளாய்.


கார்த்திக், "ஆமா அபி. ரொம்ப நல்ல பையன். எந்த வித கெட்டபழக்கமும் இல்லை. ரொம்ப நல்ல பையன். நான் விசாரிக்காமல் என் பட்டுவுக்கு மாப்பிள்ளை பார்ப்பேனா?" என்று சனாவின் தலைறை ஆதூரமாய் வருடிவிட தலையைக் குனிந்துக் கொண்டாள் சாத்விக்கின் பேபி. தன் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள புயலை வெளிக்காட்டாது அமைதியாய் அமர்ந்து இருந்தாள். இவர்களின் பேச்சுக்கள் முள்ளின் மேல் நிற்பது போன்று இருந்தது.


கார்த்திக், "இந்த விஷயம் எங்க நாலு பேரை தவிர யாருக்கும் தெரியாமல் இருக்கிறது நல்லது. அதை சப்ரைசா நானே சொல்றேன்" என்று தீர்க்கமாய் தன் தங்கையைப் பார்க்க, "நான் ரொம்ப பாசம் வச்சி இருக்கிறது உன் மேலே அண்ணா. உன் மேலே சத்தியமா இந்த விஷயம் என் மூலமா வெளியே போகாது" என்றாள். நிச்சயமாக இவ்வாறு ஒரு பதிலை சனாவிடம் இருந்து அவன் எதிர்பார்க்கவில்லை. அபியிற்கு இவர்களின் சம்பாஷனைகளைப் பார்த்து வேறு ஏதோ ஒரு விடயம் உள்ளது என்பதை யூகித்துக் கொண்டாள்.


சனா அதன் பிறகு எழுந்து தனது அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டு தலையணைக்குள் முகம் புதைத்து கதறி அழுதாள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என அவளால் யோசிக்க முடியவில்லை. விதி எவ்வாறு இருக்கின்றதோ அதற்கேற்ப நடக்க வேண்டும் என்று நினைத்தவள் தன் வாழ்வை எண்ணி விரக்தி அடைந்தாள். இவ்வாறு ஒரு மனநிலையில் அடுத்த நாளும் புலர கார்த்திக்கிற்கு கிடைத்த செய்தியோ, "தொழிற்சாலையில் ஏற்றுமதிக்கு தயாரித்து வைக்கப்பட்டு இருந்த தயாரிப்புகள் அனைத்துமே தீயிற்கு இரையாகிவிட்டன" என்பதாகும்.


அவசரமாக தொழிற்சாலைக்கு சென்று பார்க்க சேமிப்பிடம் அனைத்துமே தீயிற்கு இரையாகி இருந்தன. அதே நேரம் சாத்விக் அவனுக்கு அழைப்பை ஏற்படுத்தினான். கார்த்திக் அழைப்பை ஏற்க, "சோ சேட், உன்னோட கம்பனிக்கு ஒரு மாசத்துக்கு வச்சிருந்த புரொடெக்ட்ஸ் தீக்கு இரையாகி போச்சாமே.


அச்சோ அடுத்த என்ன பண்ண போற? கிட்டத்தட்ட ஒரு நாளையில ஒரு கோடி நஷ்டமாச்சே. மறுடியும் அந்த புளொக்கை சரி பண்ண இருபது லட்சம் வேணூம். ஒரு நாளையில நெருப்பு வந்ததுக்கு ஒரு கோடியே இருபது லட்சம் நஷ்டமாக இருக்கே. பாவம் நீ" என்று உச்சு கொட்ட, "ரொம்ப பண்ற ப்ரவீன். இதுக்கு நீ அனுபவிப்படா" என்று கர்ஜிக்க, "ஒரு முறை என்னை சீண்டினதுக்கே இவளோ நஷ்டம். மறுபடியும் முட்டாளா ஏதாவது பண்ணி என் கிட்ட மாட்டிக்காத.


நான் பழைய ப்ரவீன் இல்லை. அவன் மனிஷன். நான் ராட்சசன். ராட்சசன் கூட மோதி உன்னை நீயே அழிச்சிக்காத. அழகா புது மாப்பிள்ளையா இன்னும் நாலு நாளில் நடக்க இருக்கிற ரிசப்ஷனுக்கு ரெடியாகு. மறுபடியும் சொல்றேன் என்னை சீண்டிப் பார்க்காத" என்று கோபத்தில் உறுமி விட்டு அழைப்பைத் துண்டித்தான். இவற்றைக் கேள்வியுற்ற மர்ம நபர் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான்.


அவன் எதிர்ப்பார்த்தது போன்றே அனைத்துமே நடைப்பெறுகின்றது. அடுத்து என்ன என்று நீங்கள் மட்டுமல்ல அவனும் சுவாரிசியமாக எதிர்பார்த்துக் காத்திருந்தான். அபி அன்று கார்த்திக் சனாவின் உரையாடலை கவனித்த பிறகு சனாவுடன் இதைப்பற்றி பேச முயற்சிக்க அவளோ பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டே இருந்தாள். அபியும் மேலும் முயற்சிக்க பலனோ பூச்சியம்.


கார்த்திக்கிடம் சத்தியம் செய்ததில் இருந்து சனா சாத்விக்கிடம் பேசவும் இல்லை. அழைப்புகளை ஏற்கவும் இல்லை. முழுமையாகவே அவனைத் தவிர்த்து இருந்தாள். இதனால் உச்சக் கோபத்தில் இருந்தவன் அவள் மீதுள்ள கோபத்தில் கார்த்திக்கை வறுத்து எடுத்தான். கார்த்திக்கோ அடுத்து கவனிக்க வேண்டிய வேலைகளை பார்க்க ஆரம்பித்தான். கட்டடத்திற்கு இன்சூரன்ஸ் செய்து இருந்ததால் பெரிய பாரம் குறைந்ததாக இருந்தது.


தீயிற்கு இரையாகிய பொருட்களை அப்புறப்படுத்தியவன் அடுத்த வாரத்தில் இருந்து தொழிலாளர்களின் உழைப்பை இருமடங்காக்கி இழந்ததை ஈடு செய்யும் வகையில் வேலைகளை அதிகபடுத்தியதோடு அவர்களுக்கான சம்பளத்தையும் இருமடங்காக்க முடிவு செய்தான்.
இப்பிரச்சனைகளை முடித்து வரும் போது இவர்களுடைய ரிசப்ஷனும் அடுத்த நாள் என்கின்ற நிலைக்கு வந்திருந்தது.


இதோ ரிசப்ஷனுக்குரிய நாளும் அழகாய்ப் புலர்ந்தது. மாலை ஏழு மணியளவிலேயே ரிசப்ஷன் ஆரம்பமாக இருந்ததால் வீட்டில் மற்றைய மும்முரமான வேலைகள் நடந்தேறின. இத்தனை நாட்களாக தொடர்ந்து அழுததும், இன்று அதிகாலையில் எழுந்து குளித்ததுமே அன்று காலையிலேயே சனாவிற்கு தலைவலிக்க ஆரம்பித்தது.


அதே தலைவலியுடன் அவள் நடமாட சிவந்த கண்களையும், களைப்பான தோற்றத்தையும் பார்த்த கார்த்திக் அவளிடம் வந்தான். அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்து விட்டு, "என்னாச்சு பட்டு?" என்றான். சனா, "ரொம்ப தலைவலியா இருக்கு" என்று தலையைப் பிடித்துக் கொள்ள, "டேப்ளட் போட்டியாடா?" என்றான் பரிவாய். "ஆமா அண்ணா போட்டேன்" என்று புன்னகைக்க, கார்த்திக், "கொஞ்சம் ரெஸ்ட் எடு டா. ஈவீனிங் உன்னை எழுப்புறேன்" என்று அவளை சாப்பிட வைத்தே அனுப்பினான்.


அஞ்சிலி இதைப் பார்ப்பதை அறிந்த கார்த்திக் அவளிடம், "கிஷோர் எப்போ வரேன்னு சொன்னான்? இன்னைக்காவது வருவானா?" எனக் கேட்க, "ஆமா இன்னைக்கு அண்ணன் வரேன்னு சொன்னான். இப்போ தான் மெசேஜ் போட்டான்" என்றாள். "அப்போ ஒகே" என்று புன்னகைத்து அபியைத் தேடிச் சென்றான் கார்த்திக்.


அங்கு சாத்விக்கோ, "இன்னைக்கு நீ என்னை எப்படி அவோய்ட் பண்றன்னு பார்க்குறேன் பேபி" என்று தன்னுள் நினைத்தவன், மாலை ரிசப்ஷனுக்குச் செல்ல தயாராகினான். அனைவரும் எதிர்பார்த்த தருணமும் அழகாய் வந்தது.


அவ் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வண்ண நிறங்களினால் வானுலோக மாளிகைகளைப் போல மின்னிக் கொண்டு இருந்தன. பொலிஸாரும், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையினரும் அங்கிருந்தோரின் பாதுகாப்பை அதிகரித்து இருந்தனர். இன்று இவ் வைபவத்திற்கு முதலமைச்சர் வருகை தர இருப்பதாலும் பாதுகாப்பும் கெடுபிடியாக இருந்தது.


உற்றார் உறவினர்கள், தொழின் முறை நண்பர்கள், அவர்களின் குடும்பங்கள், அபியின் பள்ளி, கல்லூரித் தோழி தோழர்கள், தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர், அலுவலக உறுப்பினர்களும், குடும்பத்தினர், கார்த்திக்கின் தோழர்கள், இன்னும் பல முக்கிய அரசியல்வாதிகள், முக்கிய புள்ளிகளும் அவ் ரிசப்ஷனில் கலந்துக் கொண்டு இருந்தனர்.


சனாவிற்கு காலையில் இருந்த தலைவலி இன்னும் குறையவில்லை. இருந்தும் தனக்குரிய வேலைகளை செய்துக் கொண்டு இருந்தாள். தங்கம் மற்றும் பிங்க் நிற லெகெங்காவில் தேவதையாய் வலம் வந்தாள் சனா. அவளை விழாவிற்கு வருகைத தந்ததில் இருந்து அவளை பார்வையால் மற்றவர்கள் அறியா வண்ணம் விழுங்கிக் கொண்டு இருந்தான் சாத்விக்.


மணமக்களுக்கு ஒவ்வொருவராக தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து கீழிறங்கினர். அதே போல் சாத்விக்கும் வாழ்த்தை தெரிவிக்க மேடை ஏறினான். அதே நேரம் சனாவை அபி அழைத்ததாக கூறியதால் மேடையேறும் போது சாத்விக், சனா இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து தங்களுக்குள் மற்றவரின் விம்பத்தை நிரப்பி பார்வையை திருப்பிக் கொண்டனர்.


"வாழ்த்துக்கள் ஆர்யன் என்ட் அபி. சந்தோஷமா கடைசி வரைக்கும் ஒருத்ருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து வாழுங்க" என்று மனமாற வாழ்த்தைத் தெரிவித்து பரிசை வழங்கி விட்டு நகர கார்த்திக் அவன் கைப்பிடித்து, "தேங்கியூ. உனக்கும் வாழ்த்துக்கள். இதைப் போல ஒரு சந்தோஷமான உனக்கு பிடிச்ச வாழ்க்கை கிடைக்க" என்று கூறி நக்கலாக சிரித்தான். அவன் கூற்றில் எள்ளல் தெரிந்ததை உணர்ந்த சாத்விக் தனக்குரிய வசீகரப் புன்னகையுடன் அங்கிருந்து சென்றான்.


ஆனால் கார்த்திக்கின் எள்ளலுக்குப் பின் ஏதோ ஒரு விஷயம் மறைந்து இருப்பதாய் மனது உறுத்த அதே சிந்தையுடன் இறங்கிச் சென்றான். அவன் அமைதியாக அமர்ந்து யோசணையில் இருக்க சனா கீழிறங்கி வழிந்த கண்ணீரைத் துடைப்பது அவன் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அதன் பின் மணமக்களை அழைத்து நடனமாடுமாறுக் கூறி முழு அரங்கத்தையும் இருட்டில் மூழ்க் வைத்தனர்.


மணமக்கள் "இணையே என் உயிர் துணையே" என்ற பாடலுக்கு நடனமாட ஆரம்பித்தார்கள். இருவருமே கண்களால் தங்கள் காதலை துணைக்கு உணர்த்தி அவர்கள் தன் தனி உலகில் மூழ்கி இருக்க இறுதியில் வந்திருப்போரின் கைதட்டல்களே அவர்களை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது. அதன் பின் ஏற்பாடு செய்து இருந்த நாட்டியக் குழு தங்கள் நடனத்தை ஆரம்பிக்க, அங்கே கரகோஷங்களும், குதூகலமும் நிரம்பி வழிந்தன.


அரங்கம் இருளாக்கப்பட்ட உடனேயே சனா இருந்த இடத்திற்கு வருகை தந்த சாத்விக் அவளை கைபிடித்து தனியாப ஓரிடத்திற்கு அழைத்து வந்தான். சனா இரண்டு, மூன்று நாட்களாக வித்தியாசமாக நடந்துக் கொள்வதைப் பார்த்த அஞ்சலி அவளையே எப்போதும் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தாள். சாத்விக் அவளை தனியாக இழுத்துச் செல்வதைப் பார்த்தவள் அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்தாள்.


ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்திற்கு அழைத்து வந்தவன் மார்பிற்கு குறுக்காக கைகளைக் கட்டி அவளையே உற்று நோக்க கீழே குனிந்த தலையை சனா நிமிர்த்தவே இல்லை. சாத்விக், "அப்போ மேடம் என் கூட பேசமாட்டிங்க. அப்படி தானே?" என்று வினவ அதற்கும் அமைதியாய் இருந்தாள். "அப்போ நான் பண்ண புரொமிசோ பிரேக் பண்ண வேண்டியது தான்" என்று அவள் இடையோடு கையிட்டு ஒரே இழுப்பில் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.


அவள் பதறி, "ஐயோ என்ன பண்றிங்க?" என்று சுற்றும் முற்றும் பார்க்க, "லிப் கிஸ் பண்ண போறேன்" என்று அவள் இதழ்கள் நோக்கி குனிய இருவரின் இதழ்களுக்கு நடுவில் தன் கையை கொண்டு சென்று மறைத்தாள். "வேணாங்க" என்று பரிதவிப்புடன் அவனைப் பார்க்க, "சரி கிஸ் பண்ண மாட்டேன். உனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லு. உன்னை பார்த்த உடனே கண்டுபிடிச்சிட்டேன். ஏதோ பிரச்சனைன்னு" என்று அவள் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான்.


சனா அவசரமாக, "ஒன்றும் இல்லை" என்க, "என் கிட்ட பொய் சொல்லாத பேபி. உன் கண்ணே காட்டிக் கொடுக்குது" என்று கூற அவனை இறுக அணைத்து கேவிக் கேவி அழுதாள் சனா. "பேபி" என்று அவள் முகம் பார்க்க முனைய, "வேணாமே" என்றாள் அவன் மார்பில் முகம் புதைத்து. "சரி நான் இதைப் பத்தி கேட்க மாட்டேன். ஒகேவா? நீ அழாத. எனக்கு கஷ்டமா இருக்கு" என்று அவள் கூந்தலை வருடிவிட, 'சரி' என்று தலையாட்டினாள்.


எப்போதும் சாத்விக் அவளை நெருங்கினாலும் ஒரு போதும் சனா நெருங்க மாட்டாள். ஆனால் இன்று அவளே சாத்விக்கை அணைத்ததும், இன்று ஒரு வாரத்தையேனும் சேர் என்று அழைக்காததும், ஏதோ ஒன்றை கூற முடியாது தவித்து மார்பில் முகம் புதைத்து அழுவதும் முக்கியமான ஒரு விடயம் ஒன்று உள்ளது என்பதை மூளை அவனுக்கு உணர்த்தியது.


வெகுநேரம் அவன் அணைப்பில் இருந்தவள், "என்னை தேடுவாங்க நான் போறேன்" என்று விலக, அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தவன், "காய்ச்சல் இல்லையே. தலைவலி இருக்கா பேபி" என்றான் பாசமாக. "ஆமா அண்ணா கிட்ட சொல்லிட்டு நான் வீட்டுக்கு போக போறேன்" என்று புன்னகைத்து அவனிடம் இருந்து விடைப்பெற, அவளை மென்மையாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன், "எதுக்கும் கவலைபடாத. உனக்கு நான் இருக்கேன்" என்று அனுப்பி வைத்தான்....


அதன் பின் சாத்விக் ரிசப்ஷனில் இருந்து வெளியாகும் முன் சனாவிற்கு மாப்பிள்ளை பார்த்து இருப்பதாகவும், நாளை நிச்சயம் என்ற தகவலும் ஒரு அன்னோன் நம்பரில் இருந்து வர அதிர்ந்தான். அதன் பின் இத்தகவல் உண்மை என உறுதி செய்யப்பட அடுத்தநாளே சாத்விக்கால் சனா கடத்தப்பட்டாள்.




கருத்துக்களை பகிர,


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23372

அத்தியாயம் 25





சாத்விக் சனாவைப் அனுப்பியவன் யோசணையுடன் அமர்ந்தவன் சனாவின் நடத்தைகளை இன்று நினைவு கூற நிச்சயமாக அவளது நடவடிக்கைப் படி அவள் ஏதோ ஒரு இக்கட்டில் மாட்டி இருக்கிறாள் யூகித்தான். தனது நெற்றியைத் தேய்த்து விட்டப்படி பார்வையை சுழற்ற தூரத்தில் அவனை வெறித்து பார்த்தவாறு நின்ற அஞ்சலியை பார்த்தவன், "இந்த லூசு என்ன பண்ணுது இங்கே?" என்று அவள் இருக்குமிடம் சென்றான்.


அஞ்சலி அங்கே நடந்தவற்றைப் பார்த்தவாறே நின்ரு இருந்தாள். சனா, சாத்விக் இடையிலான அன்னியோன்யத்தைப் பார்த்தவளுக்கு ஒரு புறம் அதிர்ச்சியாகவும் இன்னொரு புறம் எரிச்சலாகவும் இருந்தது. அதே சிந்தையுடன் இருந்ததால் சாத்விக் அவளை நெருங்கி வருவதை கவனிக்கவில்லை. அவளை நெருங்கும் போது அவனது மொபைலிற்கு அன்னோன் இலக்கத்தில் இருந்து அழைப்பு வந்தது.


அவன் புருவ முடிச்சுடன் அழைப்பை ஏற்க, "உன் காதலி கூட அவன் அண்ணன் கல்யாணத்துல ரொமேன்ஸ் பண்றது நல்லா கிக்கா இருக்குமே" என்று புதிய குரலில் ஒருவன் நக்கலாகக் கேட்க, "யாருடா நீ?" என்று கோபத்தை அடக்கி அழுத்தமான குரலில் வினவ, "நான் யாருங்குறது முக்கியமில்லை பாஸ். நான் சொல்ல போறது தான் முக்கியம்" என்றான்.


சாத்விக் மௌனமாக இருக்க, "நாளைக்கு உன் காதலிக்கு நிச்சயம் நடக்க போகுது. ஆனால் பாரேன். இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி உன் கூட ரொமேன்ஸ் பண்ணிட்டு இருந்தா. அண்ணன் பேச்சை கேட்டு அண்ணன் சொல்றவனை கல்யாணம் பண்ண போறாளா? இல்லை உன்னை கல்யாணம் பண்ண போறாளா?" என்று சத்தமாக சிரித்து அழைப்பைத் துண்டித்தான்.


சாத்விக்கிற்கு சனாவின் நிச்சயம் பற்றி கேள்வியுற்ற போது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இன்றைய சனாவின் நடவடிக்கைகளைப் பார்த்து ஓரளவு ஒத்துக் கொள்ளக் கூடியதாக இருக்க அஞ்சலி இருக்குமிடம் உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்துடன் சென்றான். சாத்விக், "என்னை வேவு பார்க்குறியா?" என்று அழுத்தமான குரலில் கேட்க, "சனாவுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?" என்றாள்.


கேலியாக உதட்டைச் சுழித்து, "உனக்கு தெரியாது இல்லையா? எனக்கு அவ யாருன்னு. அவ என் பொன்டாட்டி. மிஸஸ். திசன்ஜனா சாத்விக் ப்ரவீன்" என்றான். அஞ்சலியும் எள்ளலாக பார்த்து, "உங்க பொன்டாட்டி அவன் அண்ணனுக்காக வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க ஒகே சொல்லிட்டா. நாளைக்கு நிச்சயம். தெரியுமா?" என்று வினவ அவனோ முகத்தில் உணர்ச்சிகளை வெளிப் படுத்தாமல்,"தெரியும்" என்றான் இறுகிய குரலில்.


அஞ்சலி, "தெரிஞ்சும் எதுக்கு உங்க கூட இழைஞ்சிட்டு இருக்காளாம்?" என்று நக்கலாக கேட்க, அவனும் அதே நக்கலில் , "ஏன்னா அவ கழுத்துல நான் மட்டும் தான் தாலி கட்டுவேங்குற நம்பிக்கையில. அவ எனக்கு மட்டும் சொந்தமானவ. வேற ஒருத்தன் அவளை பார்த்தாளே தொலைச்சிருவேன். அவளோ சீக்கரம் அவளை கல்யாணம் பண்ண விட்ருவேனா? என் வைஃப் கூட உங்களை சந்திக்கிறேன். மிஸஸ் அஞ்சலி" என்று ஏளனமாக அவளைப் பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.


அஞ்சலி, "உன் ஆசை நிறைவேறாது சாத்விக். அவ அண்ணனை மீறி ஒரு அடி எடுத்து வைக்க மாட்டா" என்று உறுதியாக நம்பியவள் உள்ளே சென்றாள். சாத்விக்கோ கோபத்துடன் அங்கிருந்து நகர்ந்து சனாவைத் தேடினான். அவளோ ரிசப்ஷனில் மேடையில் இருந்த கார்த்திக்கிடம் தலைவலிப்பதாகக் கூறி வீட்டிற்குச் செல்வதற்காக அனுமதி வாங்க அவனும் சனாவின் தலைவலியை இன்று காலையில் இருந்து பார்த்ததால் சரியென்று அனுப்ப சம்மதித்தான்.


சனா அங்கிருந்து கீழே இறங்குவதைப் பார்த்த சாத்விக் தனது பி.ஏ விற்கு அழைத்து ஏதோ கட்டளைகளைப் பிறப்பிக்க அதைக் கேட்டவனோ அதிர்ச்சியில் நின்று இருந்தான். ராகவ், "சேர்" என்று இழுக்க, "டூ வட் ஐ சே ராகவ்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி அழைப்பைத் துண்டித்தான். சனாவைப் பார்க்கப் பார்க்க அவனது கோபம் சுர்ரென ஏறிக் கொண்டே சென்றது.


சனா வெளியாகுவதைப் பார்த்தவன் அவன் அமர்ந்து இருந்த இடத்திலேயே அமர்ந்தான். சரியாக முப்பது நிமிடங்களில், "டன் சேர்" என்று மெசேஜ் வர ஏளனப் புன்னகையுடன் பார்த்தவன் மேடையில் நின்று இருந்த கார்த்திக்கை வன்மமாய் பார்த்து உணவை முடித்து விட்டு கார்த்திக், அபி இருவரும் இருந்த இடத்திற்கு வந்தவன், "நான் வரேன் அபி. மறுபடியும் எப்போ மீட் பண்ண வேணூமோ தெரியாது" என்று அர்த்தப் புன்னகையை சிந்தினான்.


அபி, "ஏன் அண்ணா? நாளைக்கு சனாவுக்கு என்கேன்ஜ்மன்ட். நீங்களும் வந்தால் நல்லா இருக்கும்" என்று கூற, "அப்படியா? நல்ல விஷயமாச்சே. நான் விஷ் பண்ணாத சொல்லு டா. எனக்கு வேலை தலைக்கு மேலே இருக்கு" என்று அங்கிருந்து நகரந்து வாயில் வரை செல்ல அவன் பேச்சில் எப்போதும் போல் கார்த்திக் குழம்பியவாறே பார்வையால் அவனைப் பின்தொடர, வாயிலுக்கு வந்தவன் முதல் மூன்று விரல்களையும் துப்பாக்கி போல் வைத்து கார்த்திக்கை சுடுவதைப் போல் பாவனை செய்து கண்சிமிட்டிச் சென்றான்.


கார்த்திக் அவனுடைய செய்கைகளுக்கு அர்த்தம் தெரியாமல் குழம்பி நிற்க, அடுத்தடுத்து ஒவ்வொருவராக வருகை தந்து விடைப் பெற்றுச் செல்ல அவனும் அவர்களை வழியனுப்பி வைப்பதில் பிசியானான். இரவு பன்னிரெண்டு மணியானாலும் கூட்டம் அங்கே நிரம்பி வழிந்தது. அதன் பின்னே ஒவ்வொருவராக விடைப்பெற்றுச் செல்ல ஆரம்பித்தனர். இரண்டு மணியளவில் ரிசப்ஷன் நிறைவடைய கார்த்திக்கையும், அபியையும் ஹோட்டலிலேயே தங்க வைத்தனர்.


சனா மாத்திரம் வீட்டிற்கு சென்று இருந்ததால் விசாலாட்சியும், நகுலின் குடும்பத்தினரும் வீட்டிற்கு சென்று விட்டனர். சனாவின் அறையில் மின் விளக்கு அணைக்கப்பட்டு இருந்ததால் சனா உறங்கிவிட்டாள் என்றே நினைத்தனர். அனைவருமே தங்கள் அறைகளுக்குச் சென்று உறங்க அடுத்த நாளும் இனிதாய் புலர்ந்தது.


விசாலாட்சி குளித்து சாமியறைக்குள் சென்று பூஜையை முடித்து வெளியே வர ஒவ்வொருவராக தங்கள் அறைகளில் இருந்து வெளியேறி கீழே வர ஒன்பது மணி போல் கார்த்திக், அபி ஜோடியும் ஹோட்டலில் இருந்து வந்தனர். அபி, "இன்னும் சனா எந்திரிக்க இல்லையா அம்மா?" என்றாள்.


அவரும், "இல்லை மா. நேத்து ரொம்ப டயர்டா தெரிஞ்சா. அதான் நானும் எழுப்பிவிட இல்லை" என்றார் நேற்று அவள் முகத்தில் தெரிந்த சோர்வை நினைத்து. கார்த்திக், "நானே போய் அவளை எழுப்புறேன்" என்று சனாவின் அறைக்குச் சென்று கதவைத் திறந்தான். கட்டிலைப் பார்க்க ஒருவர் உறங்கியதிற்கான எவ்வித அடையாளமும் அங்கே தெரியவில்லை.


குளியலறையில் சத்தம் கேட்கின்றதா என்று பார்க்க அங்கேயும் சத்தமில்லை. பல்கனிக்குச் சென்று பார்க்க அங்கேயும் அவள் இருக்கவில்லை. பதட்டத்துடன் ஒவ்வொரு அறையாக சென்று பார்க்க எங்கேயுமே இருக்கவில்லை. உடனடியாக தோட்டத்திற்குச் சென்றவன் சனாவை அங்கேயும் தேட அவள் அங்கே இருக்கவில்லை.


கார்த்திக்கின் பதட்டத்தைப் பார்த்த மற்றவர்களுக்கும் ஏனோ மனம் பதறியது. அனைவருமே அங்கே வர கார்த்திக் விசாலாட்சியிடம், "அத்தை சனா கிச்சனுக்கு வரவே இல்லையா?" என்று வலியை மறைத்த குரலில் வினவ, "இல்லை மாப்பிள்ளை. நான் தான் இன்னைக்கு பூஜை பண்ணேன்" என்றார்.


அபி, "மாமா என்னாச்சு?" என்று பரிதவிப்புடன் வினவ, "சனாவை காணோம் நயா" என்றான். "என்ன உழர்றிங்க?" என்று அவள் பயத்தைக் கோபமாக வெளிப்படுத்த, "நான் உழற இல்லை அபி. உண்மையை சொன்னேன். சனாவை காணோம். எல்லா இடத்திலேயும் தேடி பார்த்துட்டேன்" என்று தலையைப் பிடித்து வருந்தியக் குரலில் கூறினான். அபி, "சனாவை நேத்து வீட்டுக்கு வந்து பார்த்தியா அம்மா?" என்று அவசரமாக வினவினாள்.


அஞ்சலி நேரம் காலம் தெரியாமல், "நான் சொன்னேனே இவ கல்யாணம் பண்ணி வந்த உடனே நாத்தனாரை வெளியே அனுப்பிட்டாளே" என்று அபியை வசைப்பாட, "நீ சும்மா அவளை திட்டா அஞ்சலி. இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசுன நான் என்ன பண்ணுவேன்னே எனக்கு தெரியாது" என்று கோபமாக உறுமினான் நகுல். அதன் பிறகு அஞ்சலி வாயைத் திறக்கவில்லை.


கார்த்திக், "அத்தை கடைசியா சனாவை எப்போ பார்த்திங்க?" என்று இயலாமையுடன் வினவ, "நேத்து உங்க ரிசப்ஷன்ல தான் மாப்பிள்ளை. வீட்டுக்கு வரும் போது அவ வந்த காரும் நின்னுட்டு இருந்தது. ரூம் லைட்டும் ஓஃப் பண்ணி இருந்தது. அதான் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு இருந்துட்டேன்" என்று குற்ற உணர்ச்சியால் கண்கள் கலங்க கூறினார்.


கார்த்திக், "விடுங்க அத்தை யாரையும் இங்கே குறை சொல்ல முடியாது. நம்ம மேலே தான் தப்பு. இப்போ அவளை எங்கே போய் தேடுவேன்?" என்று கலங்கிய குரலில் வினவ, அபி, "அவ எங்கே போய் இருப்பா? நமகிட்ட சொல்லாமல் அவ வெளியே போக மாட்டாளே. அவளோ தைரியமும் அவளுக்கு இல்லை மாமா" என்றாள் அவளும் கலங்கியக் குரலில்.


அஞ்சலி, "இந்த நிச்சயம் பிடிக்க இல்லைன்னு ஓடிபோயிருப்பாளோ என்னவோ?" என்று கூற, அபி, "நீங்க இவளோ நேரம் பேசினதை கேட்டு பொறுமையா இருந்தேன். ஆனால் இப்போ என் சனாவைப் பத்தி ஒரு வார்த்தை தப்பா சொன்னிங்க; நான் மனிஷியா இருக்க மாட்டேன் ஜாக்கிரதை" என்று கை விரல் நீட்டி ஆக்கரோஷத்துடன் கத்த, மற்றவர்கள் ஒரு நிமிடம் அபியின் புதிய அவதாரத்தில் அரண்டனர்.


இருந்தும் அஞ்சலி அடங்காமல் தைரியத்தை வரவழைத்து, "அவளுக்கு ஒரு காதலன் இருக்கானா? இல்லையான்னு உன் புருஷன் கிட்ட கேளு" என்று நொடிக்க அபி அவசரமாக கார்த்திக்கின் புறம் திரும்ப அவன் மறுக்காமல் அமைதியாய் இருந்தான். கார்த்திக்கின் அமைதியைப் பார்த்து அபியிற்கு கோபம் வந்தாலும் சனா நிச்சயமாய் வேறு ஒருவனை காதலித்து வீட்டை விட்டு ஓடி இருக்க மாட்டாள் என்று நம்பினாள்.


சிறு வயதில் அவளோடு வளர்ந்து, ஒன்றாக இருந்தவள் அல்லவா? இதைக் கூட புரிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு அவள் முட்டாள் இல்லையே. அபி கேலியாய் உதட்டைச் சுழித்து அஞ்சலியைப் பார்த்து, "யார் அந்த காதலனாம்?" என்று வினவ அஞ்சலியும் அதே கேலிக் குரலில், "உன் அண்ணன் சாத்விக்" என்க தற்போது அபியோ அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.


இவர்களின் பேச்சிற்கு காரணமான சனாவோ அதிவேக பாதையில் ஒரு மகிழுந்தில் சாத்விக்கின் மடியில் மயக்க நிலையில் தலை வைத்து படுத்து இருந்தாள். இங்கே நடக்கும் எதையுமே அறிய முடியாது ஆழந்த மயக்கத்தில் இருக்க சாத்விக்கோ சனா என்ற பூ ஏற்படுத்த இருக்கும் புயலை எவ்வாறு சமாளிப்பது என்ற யோசணையில் ஒரு புறம் இருந்தான்.


அவன் நிச்சயம் அறிவான்; அவளைக் கடத்தியதிற்காக நிச்சயமாய் அவள் செல்லுமிடத்தில் அமைதியாய் இருக்கப் போவதில்லை. அவனோடு அவள் இயல்பை மீறி சண்டையிடுவாள். அதே போல் சனா நிச்சயத்திற்கு சம்மதம் வழங்கியது இன்னொரு புறம் அவன் மனமோ கோபத்தில் கனன்றுக் கொண்டு இருந்தது. இரு வெவ்வேறு மனநிலைகளில் இருந்தாலும் அவன் கைகளோ அவள் கூந்தலை வருடிக் கொண்டு இருந்தது.


அடுத்து அவன் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொண்டே அமர்ந்து இருக்க நித்திரா தேவியும் அவனை தன் பிடிக்குள் வைத்துக் கொண்டான். நேற்று இரவு பதினொரு மணிபோல் ஆரம்பித்த இவர்களின் பயணம் இன்னும் தொடர்ந்துக் கொண்டு இருந்தது. சனாவிற்கு விழிப்புத் தட்ட மெதுவாக கண்களைத் திறந்தாள்.


நேற்று இரவு காரில் செல்லும் போது தலையை இருக்கையில் சாய்ந்தவாறு இருக்க டிரவைர் அவளை அழைக்க வித்தியாசமான குரலில் அவள் திடுக்கிட்டு பார்க்க முன்னே டிரைவர் அவள் முகத்தில் மயக்க மருந்து ஸ்ப்ரேயை அடிக்க அவ்வாறே மயங்கிவாட்டாள். அதன் பின் இப்போதே கண்விழிக்கிறாள். தலையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர அவளின் அசைவிலேயே சாத்விக்கும் விழித்துவிட்டான்.


சாத்விக்கைப் பார்த்தவள், 'இவன் இங்கே எப்படி?' என்று புரியாமல் யோசிக்க நேற்று இரவு நடந்தவைகள் ஒன்றின் பின் ஒன்றாக ஞாபகத்திற்பு வந்தது. சனா அப்போதும் புரியாமல் குழம்ப, "சேர் நேத்து என் காருல வந்தது எங்க டிரைவர் இல்லை. வேற யாரோ. அவன் முகத்துல ஸ்ப்ரே ஏதோ அடிச்சிட்டான். நான் மயங்கிட்டேன் சேர். அப்புறமா???" என்று சிறு குழந்தைப் போலவே ஒன்றின் பின் ஒன்றாகக் கூறி தலையைப் பிடித்தாள்.


"நான் ஏற்பாடு பண்ண ஆள் தான் அப்படி பண்ணான்" என்று இறுகிய குரலில் கூற, "சேர்" என்று அதிர்ந்தாள். "இதே அதிர்ச்சியோட கொஞ்ச நேரம் இரு" என்று தன் கைக்குட்டையில் அவள் மூக்கில் வைத்து அழுத்த திமிறிக் கொண்டே அவள் சுவாசித்ததில் மீண்டும் மயங்கிவிட்டாள். "சொரி ஜானு" என்று அவளை தன் கைவளைவில் வைத்துக் கொண்டான்.


நேற்று இரவே மீண்டும் மயக்க மருந்து வழங்குவதைப் பற்றி வைத்தியரிடம் ஆலோசணைப் பெற்று இருந்தான். அதனால் கவலை இல்லாமல் மீண்டும் அவளை மயக்கத்தில் ஆழத்தியவன் நேரத்தைப் பார்க்க மாலை ஐந்து பதினாங்கு என்று இருந்தது. ஓட்டுனரைப் பார்த்தவன், "எப்போ போய் சேரலாம்?" என்று வினவ, "நாளைக்கு ஈவீனிங்குள்ள போய் சேரலாம் சேர்" என்றான்.


மறுபடியும் சனா இரவு பத்து மணி போல் விழிக்க அவளுக்காக உணவை வாங்கி வைத்திருந்ததை வழங்கினான். சனா அவனை கோபமாக முறைக்க, "நம்ம ஆர்கியூமன்ட்டை வீட்டுக்கு போய் வச்சிக்கலாம்..இப்போ அமைதியா சாப்பிட்டு அமைதியா வா" என்று இறுகிய முகத்துடன் கடினக் குரலில் கூற மறுப்பேதும் கூறாமல் உணவை சாப்பிட்டாள்.


அப்போதும் அவளுக்கு மயக்கம் தெளியாமல் இருக்க சாத்விக்கின் தோள்களிலேயே மறுபடியும் உறங்க அடுத்த நாள் காலையில் மறுபடியும் கண்விழிக்க அவளுக்கு வழங்கிய நீரில் மயக்க மருந்தை கலக்கி மீண்டும் பருகவைத்தான் எங்கே செல்கிறோம் என்று அறியாமல் இருக்க. அப்போது மயங்கியவள் மறுபடியும் கண்விழிக்க இரவு பத்து மணியளவில் கண்விழித்தாள்.


அப்போதே தான் ஒரு அறையில் இருப்பதை உணர்ந்து அவசரமாக எழ அவளுடைய மிகுதி இருந்த மயக்கம் அவள் நிமிர்ந்து நிற்க இடம் கொடுக்காமல் இருக்க தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலின் மேல் பகுதியை தன் துணைக்குப் பிடித்து நிற்க அப்போது கதவைத் திறந்து உள்ளே நுழைந்த சாத்விக், "இதுக்கே இப்படி தலையை பிடிக்கிறியே திசன்ஜனா. இனிமேல் நடக்க போறதுக்கு என்ன பண்ண போற?" என்றவனின் குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்து நிமிர்ந்து சனா அவனைப் பார்த்து அதிர்ந்து நின்றாள்.



கருத்துக்களை பகிர,


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23425


அத்தியாயம் 26




அபி அதிர்ச்சியை விழுங்கி கார்த்திக்கைப் பார்த்தாள். அவன் நிலையில் எவ்வித மாற்றங்களும் இல்லாமல் இருக்க, "மாமா" என்று கோபத்தில் கத்த கார்த்திக் அபியின் குரலில் உள்ள வேறுபாட்டை உணர்ந்து எழும்பி நின்றான். அபி, "இவ என்னென்னமோ சொல்றா ! என்ன நடக்குது இங்கே? சாத்விக் அண்ணாவும் சனாவும் காதலிக்கிறாங்களா?" என்று அழுத்தமான குரலில் வினவினாள்.


கார்த்திக் ஆம் என்று தலை அசைக்க, "மாமா கொஞ்சமாவது அறிவிருக்கா உங்களுக்கு?" என்று அவள் கோபமாகக் கேட்க, "ஏய்" என்று எகிறினான் கார்த்திக். "சும்மமா கத்தாதிங்க மாமா. இவங்க தான் அறிவு கெட்டதனமா பேசுறாங்கன்னா நீங்களும் ஆமாம் சாமி போடுறிங்க" என்று விடாமல் கூற, "சனாவும், சாத்விக்கும் காதலிக்கிறாங்க. இது பொய்யில்லை" என்று இயலாமையில் கத்தினான்.


அபி கேலியாய் சிரித்து, "உங்க வளர்ப்பு மேலே உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா நான் என்ன பண்ண முடியும்? ஆனால் எனக்கு என் ஃபிரன்டு மேலே நம்பிக்கை இருக்கு. அவ காதலிச்சு இருந்தால் எங்க கிட்ட சொல்லி இருப்பா. அவ சொல்ல இல்லைன்னே வச்சிக்கலாம், கண்டிப்பா வீட்டை விட்டு போயிருக்க மாட்டா. இதை சூடம் அடிச்சு சத்தியம் பண்ணி சொல்ல முடியும்" என்றாள் உறுதியாக.


அஞ்சலி, "இல்லை அவ சாத்விக் கூட போயிட்டா" என்று விடாமல் கூற, "உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று புருவமுடிச்சிடுன் அபி வினவ, "அது அது..." என்று தடுமாறியவள், "எனக்கு தெரியும். அது எப்படின்னு உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்றாள் அஞ்சலி. அவளை ஏளனமாக பார்த்த அபி கார்த்திக்கின் புறம் திரும்பினாள்.


அபி, "உங்களுக்கு உங்க வளர்ப்பு மேலே நம்பிக்கை இருக்கா?" என்று வினவ கார்த்திக் பதில் சொல்லாமல் ஆம் என்று தலை அசைத்தான். "உங்க கிட்ட சொன்னாளா? அவ காதலிக்கிறான்னு? சாத்விக் அண்ணா காதலிச்சு இருக்கட்டுமே. ஏன் சனாவும் காதலிச்சு இருக்கட்டுமே. உங்களை ஏமாத்தி இன்னைக்கு வீட்டை விட்டு போவான்னு நம்புறிங்களா?" என்று கேட்க, அப்போதே கார்த்திக்கும் அக்கோணத்தில் யோசித்தான்.


சிறிது நேரமாக அதையே யோசித்தவன், "என் தங்கச்சி நிச்சயமா என்னை மீறியோ என்னை ஏமாத்திட்டோ போக மாட்டா. இந்த நிச்சயத்துல மீற முடியாமல் இருந்தாலும்; அவனை காதலிச்சு இருந்தாலும்; யாருக்கும் துரோகம் பண்ணாமல் அவளையே அழிச்சு கிட்டு இருப்பாளே தவிர இந்த மாதிரி கேடு கெட்ட வேலையை பண்ணி இருக்க மாட்டா" என்று தீர்க்கமாக மொழிந்தான்.


அபி, "முதல்ல இந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்துங்க. அவங்களுக்கும் சனா கேலிப் பொருளா மாறிடக் கூடாது" என்றவள் தொடர்ந்து, "சனாவை தேட ஆரம்பிங்க மாமா. நேத்து இராத்திரி கடைசியா சனாவை எல்லாருமே பார்த்தோம். தலைவலின்னு வீட்டுக்கு வரும் போது தான் ஏதோ நடந்து இருக்கு. முதல்ல சனாவை அழைச்சிட்டு வந்த டிரைவரை தேடுங்க" என்றாள்.


அதன் பின் கார்த்திக் துரையப்பனிடம் பேசி நிச்சயத்தை நிறுத்த அவரோ சற்று எகிறி வந்தார். ஆனால் கார்த்திக் தன் பலத்தை அங்கே பயன்படுத்த அவனுடன் பகைமையை பாராட்ட முடியாமல் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். ஆனால் அடிபட்ட பாம்பாக கார்த்திக்கைக் கொத்தும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தார்.


கார்த்திக்கும், மித்ரனும் கார் ஓட்டுனரைத் தேட அவன் இருக்கும் இடமே தெரியவில்லை. உடனே வீட்டில் உள்ள சி.சி.டிவி புடேஜைப் பார்க்க, சனா வரும் கார் உள்ளே நுழைந்து எப்போதும் நிறுத்தப்படும் இடத்தில் நிறுத்திய பிறகு ஓட்டுனர் பக்கத்தில் இருந்து புதியவன் ஒருவன் இறங்கினான். அவன் கார்த்திக் வீட்டின் ஓட்டுனரின் ஆடையை அணிந்து முகத்தை மறைத்து இருந்தான்.


சுற்றும் முற்றும் அங்குமிங்கும் பார்த்த புதியவன் தோட்டத்தின் பின் புறம் சென்று அங்கிருந்து மதில் மேல் ஏறி வெளியே குதித்தான். வொச்மேனுக்கு சந்தேகம் வரவே இல்லை. ஏனெனில் தோட்டத்திற்கு பின் புறம் இருந்த சிறிய வீட்டிலேயே உண்மையான ஓட்டுனர் தங்கி இருந்தான். அவனின் குடும்பமோ அவனுடைய சொந்த ஊரில் தங்கி இருந்தனர்.


மித்ரன் ஒரு புறம் தேட கார்த்திக்கோ கமிஷ்னரை சந்திக்க நேரடியாகச் சென்றான். அவனை வரவேற்றவர், "சொல்லுங்க கார்த்திக் சேர். என்ன விஷயம்?" என்று வினவ, "நேத்து நைட்டிலிருந்து என் தங்கச்சி சனாவை காணோம் சேர். இந்த விஷயம் வெளியே தெரியாமல் பார்த்துக்கனும் சேர்" என்று நேற்று நடந்ததைக் கூறியதோடு சி.சி.டிவியில் பார்த்தவற்றையும் கூறினான்.


கமிஷ்னர், "புரியிது கார்த்திக் சேர் நாங்க பார்த்துக்குறோம். ஒரு வேலை உங்க தங்கச்சியை கிட்னாப் பண௲ணி இருந்தாங்கன்னா?" என்று அவர் நிறுத்த, "சேர்" என்று கார்த்திக் அதிர்ந்து விட்டான். பணம் எவளோ கேட்டாலும் நான் கொடுக்க தயாரா இருக்கேன் சேர். பட் என் தங்கச்சி எனக்கு வேணூம்" என்றான் தவிப்புடன்.


"இது ஒரு யூகம் கார்த்திக் சேர். உறுதி இல்லை. அவங்களுக்கு பணம் வேணூன்னா இந்த நேரம் உங்களுக்கு ஃபோன் பண்ணி இருப்பாங்களே. அவங்க இன்னும் ஃபோன் பண்ண இல்லையே. சோ, கவலைபடாதிங்க" என்ற கமிஷனர் சற்று நிறுத்தி அவனைப் பார்த்தார். கார்த்திக், "நீங்க ஏதோ சொல்ல நினைக்குறிங்கன்னு புரியிது சேர். சொல்லுங்க நான் என் மனசை தேத்திக்கிறேன்" என்றான் பரிதவிப்பான குரலில்.


கமிஷனர் பெருமூச்சை ஒன்றை இழுத்து விட்டு, "உங்க தங்கச்சி மட்டும் இல்லை. இதே வயசுல பல பொண்ணுங்க காணாமல் போய் இருக்காங்க. இதுக்கு ஸ்பெஷலாக ஏ.ஐ.ஜி யாதவ் (பாகம் இரண்டின் பிரதான நாயகன். நாயகி வைஷ்ணவி. மற்றைய இரு ஜோடிகளுமே இருப்பர். மொத்தமாக மூன்று ஜோடி) தலமையில ஒரு டீம் ஃபோர்ம் பண்ணி இருக்கோம். அவங்க அத்தனை பேரும் அன்டர்கிரவுனவடுல வேர்க் பண்ணிட்டு இருக்காங்க. (பாகம் இரண்டின் முக்கிய விடயங்கள்) அவங்களுக்கும் உங்க தங்கச்சி பத்தின டீடெய்ல்சை அனுப்பி வைக்கலாம். அப்படி இருக்காதுன்னு நினைக்குறேன்" என்றார்.


கார்த்திக்கு உறைந்த நிலையில் அவரைப் பார்த்தவன் கண்கள் கலங்க, "சேர் அவ எனக்கு தங்கச்சி மட்டுமில்லை; என் குழந்தை; என் அம்மா சேர். அவ ரொம்ப சொஃப்டான பொண்ணு சேர். அதிர்ந்து கூட பேசமாட்டா. அதான் கொஞ்சம் பயமா இருக்கு. கைக்குள்ளயே பொத்தி பொத்தி வச்சி வளர்த்தேன். இப்போ அவளை தொலைச்சிட்டு நிக்கிறேன்" என்றான்.


கம்பீரமான ஆண்மகன் கண்கள் கலங்குவதைப் பார்த்த கமிஷனர் அவன் கைபிடித்து அழுத்தம் வழங்கி ஆறுதல் அளித்தார். ஆண்களுக்கு கண்ணீர் உயிருக்கு உயிரான காதலின் வலியின் போது மட்டுமே தோன்றுவது என்ற கூற்றை துகள்துகளாக்கினான் கார்த்திக். உடன் பிறந்தவளை குழந்தையென பார்த்து அவளைத் தொலைத்து நின்று இருக்கும் போது அவள் எவ்வாறு இருக்கிறாளோ என்று நினைத்து கண்கலங்கினான் அப் பாசமான தமையன்.


அதன் பின்னர் கார்த்திக் அங்கிருந்து வந்தவன் தன் பண பலத்தையும் பயன்படுத்தி தேடிப்பார்த்தான் தன் தங்கையை. ஆனால் பலனோ பூச்சியமாக இருக்க இன்றோடு சனா காணாமல் சென்று இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கார்த்திக்கின் குடும்பத்தினர் விக்கித்து நின்றனர்.


சாத்விக் அவனது இடத்திற்கு வருகை தந்ததும் சனா இன்னும் மயக்கத்தில் இருப்பதைப் பார்த்து அவளைக் கையிலேந்தி அறையில் விட்டவன் தானும் தனக்குரிய அறைக்குச் சென்று குளித்து உணவை சமைக்க ஆரம்பித்தான் இருவருக்காகவும். தற்போது நேரத்தைப் பார்க்க நேரம் இரவு ஏழு முப்பதைக் காட்டியது. சிறிது நேரம் ஓய்விற்காக கண்ணயர்ந்தான்.


ஆழந்த உறக்கத்தினில் இருந்தாலும் சனாவின் நினைவு அவனை நிம்மதியில்லாமல் அலைக்கழிக்க விழிக்கும் போது நேரம் பத்து மணியைக் கடந்து இருந்தது. முகத்தைக் கழுவியவன் சனாவின் அறைக்குச் செல்ல அப்போதே அவளும் எழுந்து இருந்தாள். முதலில் அவள் விழ எத்தணிக்கும் போது பிடிக்க வேண்டும் என்று நினைத்தான்.


ஆனால் அன்று புகையிரதத்தில் செல்லும் போது அவ்வளவு கூறியும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டு நிச்சயத்திற்கு தயாராகி இருக்கிறாளே என்ற கோபம் அவன் கண்ணை மறைக்க தனது ஜானுவாக அவளைப் பார்க்காமல் கார்த்திக்கின் தங்கையாக பார்த்தான். அவனது கண்களில் தெரிந்த அக்கினிப் பிழம்பிலும், இறுகிய முகத்தையும் பார்த்தே சனா அதிர்ச்சி அடைந்தாள்.


"என்ன இப்போவும் மேடம் அமைதியா இருக்கிங்க?" என்று நக்கல் தெரிக்கும் குரலில் வினவ சனா அவனது குரலில் தெரிந்த வேறுபாட்டில் துணுக்குற்று அவனையே பார்த்தாள். "நீ அப்பாவியா பார்குறதுல எந்தவித மாற்றமும் வர போறது இல்லை. பசிக்கும் வா வந்து சாப்பிடு" என்று அழைத்து விட்டு விருட்டென்று வெளியே சென்றான். அவனது செய்கையில் மனம் வலிக்கத்தான் செய்தது.


சென்னையில் பார்த்த சாத்விக் இவன் இல்லை. இவன் வேறு ஒருவனாகவே தெரிந்தான் சனாவின் கண்களிற்கு. இரண்டடி வைத்தவள் நடக்க முடியாமல் திண்டாட, சாத்விக் மீண்டும் அறைக்குள் நுழைந்தவன் அவளைப் பார்த்துவிட்டு, "அங்கேயே உட்காரு. நான் போய் சாப்பாட்டை எடுத்துட்டு வரேன். இல்லைன்னா உன்னை அங்கே தூக்கிட்டு போக வேண்டி இருக்கும். அந்த சீனெல்லாம் வர வைக்க என்னால் முடியாது" என்று வார்த்தைகளை கடித்துத் துப்பி விட்டு அங்கிருந்து சென்றான்.


சனாவிற்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தன. இருந்து அவன் முன்னிலையில் அழுது அதற்கும் திட்டு வாங்க முடியாது. அதற்கு அவள் மனதளவிலும்; உடலளவிலும் மிகம் சோர்வாக உணர்ந்தான். அவன் அறைக்கு வருவதற்கு முன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு தரையில் அமர சாத்விக் அவளுக்கான உணவை எடுத்து வந்தான்.


அவன் வழங்கிய உணவை அமைதியாக உட்கொள்ள சாத்விக்கும் அங்கேயே உண்டான். சனா உணவை முடித்து தட்டை கழுவுவதற்காக எழ சாத்விக் அவள் கையிலுள்ள தட்டை எடுத்து பறித்துக் கொண்டு அங்கிருந்து நகர சனா உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டாள். அவன் கீழே சென்று தட்டைக் கழுவி, சமையலறையை சுத்தம் செய்து விட்டு சனாவின் அறைக்கு வந்தான்.


"நாளையில இருந்து உனக்கு தேவையானதை நீயே சமைச்சிக்க. உனக்கு தேவையான டிரெஸ் அதோ அங்கிருக்கிற டிரொலியில இருக்கு போட்டுக்க. வீட்டை சுத்தம் பண்ணிக்கோ. என்னை எதுக்காகவும் தேடாத. மறுபடியும் நான் உன் முன்னாடி நம்ம கல்யாணத்துக்கு தான் வருவேன். சோ தனியா இரு. எனக்கு வேலை இருக்கு நான் போயிருவேன்" என்று நகர சனாவோ அவன் கூறிய செய்திகளின் தாக்கத்தில் இருந்து வெளியே வரவில்லை.


சாத்விக்கிற்கு சனாவின் அமைதி எரிச்சலை வழங்க, "ஏதாவது பேசுடி" என்று கத்த, "நீங்க என்னை கடத்திட்டு வந்திருக்கிங்களா?" என்றாள். "பார்ரா இதையே இப்போவா கண்டு பிடிச்ச?" நக்கலாகக் கூறி உதட்டைச் சுழிக்க, "ஏன் சேர் இப்படி பண்ணிங்க? எவளோ உங்க மேலே நம்பிக்கை வச்சிருந்தேன். மொத தமா உடைச்சிட்டிங்களே" என்று வேகமாய் வந்தவள் அவனது டீசர்ட்டை பிடித்து இழுத்தாள்.


அவளது கையை வலிக்கும் படி அழுத்திப் பிடித்தவன், "என்னைப் பார.த்தால் உனக்கு ஏமாளியைப் போல இருக்கா? உனக்கு நான் சொன்னது எதுவுமே ஞாபகம் இல்லையா? பொண்ணு பார்க்கக் கூட போக கூடாதுன்னு சொல்லி இருக்கேன். நீ என்னடான்னா சத்தமே இல்லாமல் நிச்சயத்துக்கு ஒத்துகிட்டு இருக்க.முன்னாடி நாள் என் கூட ஹோட்டல்ல இழைஞ்சிட்டு நின்னுட்டு இருந்த" என்று அவளைக் காயப்படுத்தும் நோக்கிலேயே கூறினான்.


"போதும் சேர்" என்று கத்தியவள் தனது இரு காதுகளையும் தன் கைகளைக் கொண்டு இறுக மூடிக் கொண்டாள். சாத்விக், "நீ காதைப் பொத்தினால் இதெல்லாம் பொய்யாகாது சனா" என்றான் அதே கோபத்துடன். சனா, "நீங்க என்ன சொன்னாலும் சரி சேர். என்னை கடத்திட்டு வந்தது தப்பு. என்னை கொண்டு போய் வீட்டுல விடுங்க. அண்ணா ரொம்ப கஷ்டபடுவான் என்னை தேடி" என்றாள் அதே குரலில்.


"நீ எங்க இருக்கன்னு உனக்கே தெரியாது. இதுல உன்னை கொண்டு போய் விடனுமா? போடி. உன்னால ஒரு அடி இங்கிருந்து நகர முடியாது. இந்த நேரம் உன் நிச்சயமும் நின்னு உன்னை உன் அண்ணன்காரன் தேடிட்டு இருப்பான். என்னை சீண்டினதுக்கு அவன் அனுபவிக்கட்டும்" என்றான் உறுமலாய். "என் அண்ணனை அசிங்கபடுத்த நிச்சயத்துக்கு முன்னாடியே கடத்தி இருக்கிங்க. வெட்கமா இல்லையா உங்களுக்கு?" என்று கோபம் மாறாமல் வினவினாள்.


அவனுடைய கோபத்திற்கு பயந்து நடுங்கிய சனா இவள் இல்லை. கார்த்திக்கின் தங்கையாக முன் நின்று இருந்தாள். 'வெட்கம் இல்லையா?' என்று அவனுடைய ஈகோவை அவள் அறியாமலேயே தூண்டிவிட்டாள் சனா. "என்ன சொன்ன? எனக்கு வெட்கம் இல்லையாவா? இல்லைடி. எனக்கு வெட்கம் இல்லை. உன் அண்ணன் மேலே இருக்கிற கோபத்துக்கு முன்னாடி இதெல்லாம் தூசு" என்று அவள் கழுத்தை சுவரோடு அழுத்தினான்.


"இதோ பாரு. நீ என்ன சொன்னாலும் இங்கிருந்து உன்னால போக முடியாது. என்னை மீறி உன்னால எதுவும் பண்ண முடியாது. நீ இனிமேல் இங்கே இருந்தே ஆகனும். என் பொன்டாட்டியா. என்னை சீண்டி பார்க்காத. உன் அண்ணனால நான் இழந்ததுக்கு முன்னாடி உன்னை அவன் இழந்தது ஒன்னுமே இல்லை.


இனிமேல் ஒரு வார்த்தை அவனைப் பத்தி பேசுன கொன்னு போட்டுடுவேன். உன்னை கொன்னு புதைச்சாலும் கேட்க எவனுமே இல்லை. ஒழுங்காக இங்கே அமைதாயா இருக்க பாரு. கண்ணு முன்னாடி வந்துராத. என் கிட்ட பேசும் போது பார்த்து பேசு. இல்லை கஷ்டபட போறதும் நீ தான்" என்று அவளைத் தள்ளி விட்டு நகர்ந்தவன், மீண்டும் அவள் முன்னே வந்து நின்றான்.


"என் மேலே இருக்கிற கோபத்துல உன்னை நீயே காயப்படுத்திகிட்ட உன் அண்ணன் தான் அங்கே கஷ்டபடுவான் ஜாக்கிரதை" என்று விரல் நீட்டி எச்சரித்து கோபமாக கதவை சாத்தி அறைந்து வெளியே சென்றான் சாத்விக். சனாவிற்கு அவளைக் காயப்படுத்தும் சாத்விக்கை கிஞ்சித்திற்கும் நம்ப முடியவில்லை. அவன் கழுத்தை இறுக்கியதால் இருமல் ஏற்பட இருமியவாறே அங்கிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.


அவன் அழுத்திப் பிடித்ததில் கழுத்திலும், கைகளிலும் அவன் விரல் அச்சுகள் தெரிந்து சிகப்பு நிறத்தில் கன்றிச் சிவந்து இருந்தன. இதற்கு மேலும் அவளால் அவனோடு போராட முடியாமமாலும், எதையுமே அவனை மீறி செய்ய முடியாது என்பதால் ஏற்பட்ட விரக்தியில் உடையை எடுத்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள். அன்று தமையனின் ரிசப்ஷனின் போது அணிந்த உடை. அதன் பிறகு மாற்றவே இல்லை.


குளித்து வந்த போதும் சாத்விக் தன்னுடன் நடந்துக் கொண்ட முறையை ஏற்க முடியாமல் வழிந்த கண்ணீர் நிற்கவில்லை. கண்ணீரைத் துடைத்தவாறே கட்டிலில் அமர்ந்தாள். ஏனோ முள்ளின் மேலே அமர்ந்த உணர்வு. உடனே வெறும் தரையில் அமர்ந்து சுவரில் சாய்ந்துக் கொள்ள உறக்கமும் அவளை தழுவிக் கொண்டது.


ஆனால் உறங்கும் வரையில் அவள் மனமோ, 'ஏன் காட்டுப்பையா? இப்படி பண்ண? என்னால இதை ஏத்துக்க முடியல்லை டா. எனக்கு உன்னை ரொம்ப புடிக்கும். அது ஏன்? எப்போ இருந்துன்னு சத்தியமா எனக்கு தெரியாது. எனக்கு சின்ன காயம்னாலும் நீ கஷ்டபடுவ. என்னை முன்னாடி காயபடுத்திட்டு அதிகமா வருத்தபடுறதும் நீ தான்.
இன்னைக்கும் என்னை காயப்படுத்தும் போது என் மனசு, உடம்பு இரண்டுமே எனக்கு வலிக்கும்னு ஏன் உனக்கு தோண இல்லை?


அண்ணாவோட பழிவாங்குதலுக்கு என்னை ஏன் மறுபடியும் உள்ள இழுக்குற? நீ தானே சொன்ன? நான் உன் பேபி மட்டும்னு. அன்னைக்கும் என்னை குத்திக்கிழிக்கிறன்னு தெரியாமல் ரொம்ப பேசி காயப்படுத்தின. இன்னைக்கும் அதே தான். நான் உன் பேபி காட்டுப் பையா" என்று மானசீகமாய் அவனோடு உரையாடியவாறே கண் அயர்ந்து இருந்தாள்.


சாத்விக் கோபமாக வெளியே வந்தவன் தனது அறைக்குச் சென்று அத்தனை பொருட்களையும் உடைத்தான். அவனது அறையே தலைகீழாக மாறி இருந்தது. பஞ்சுகளும், பலகைத்துகள்களும், கண்ணாடி துகள்களும் வீட்டின் முன்னே இடப்படும் கோலத்தைப் போல் அறைக்கு காட்சியைக் கொடுத்து இருந்தன. சாத்விக் அவ் அறையிலிருந்து வெளியே வந்தவன் வரவேற்பரையில் இருந்த சோஃபாவில் அமர்ந்தான்.


அங்கு நடந்த காட்சிகள் ஒன்றின் பின் ஒன்றாக அவன் கண்முன் தோன்ற அவளைக் காயப்படுத்தியதை உணர்ந்த சாத்விக் அவசரமாக அவளது அறைக்கு ஓடினான். சுவரில் சாய்ந்து கலைந்த ஓவியமாய் உறங்கிக் கொண்டு இருப்பவளைப் பார்க்க எவரோ அவனது இதயத்தை கத்தியால் குத்திக் கிழிப்பதைப் போன்று இருக்க அவளை நெருங்கி அமர்ந்தான்.


அவளது கழுத்திலும, கையிலும் கன்றிச் சிவந்து இருந்த பகுதியைப் பார்த்தவன் தனது நெடிய விரல் கொண்டு வருட, "ஸ்ஸ்" என்று எரிவிலும் வலியிலும் முணகினாள். அவள் முகத்தில் தெரிந்த காய்ந்த கண்ணீர் தடங்களைப் பார்த்தவனின் கண்கள் கலங்கின. அவ் அறையில் இருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்தவன், அதில் உள்ள ஒரு மருந்தை எடுத்து மென்மையாக பூசிவிட அவளும் முணகினாள்.


கைவிரல்கள் பூசிவிட உதடுகள், "சொரி பேபி" என்ற சொற்களை தாரக மந்திரமாக முணுமுணுத்தன. இடையிடேயே "உஃப்" என்று ஊதியும் விட்டான். அவள் எழா வண்ணம் அவளைக் கையிலேந்தி கட்டிலில் கிடத்தியவன் அவளை அணைத்துக் கொண்டு ஒரு புறமாக சரிந்து படுத்து அவள் முகம் பார்த்தான். "உன் பக்கத்துல வேற ஒருத்தனை கூட வச்சி பார்க்க முடியல்லை டி. அப்படி இருக்கும் போது நீ வேறு ஒருத்தனை நிச்சயம் பண்ண ஒத்துக்கிட்டேன்னு கேள்விபட்ட போது ரொம்ப வலிச்சுது.


அதை ஏன்டி புரிஞ்சிக்க மாட்டேங்குற? உலகத்துல எனக்குன்னு எனக்கு சொந்தமான ஒரு உறவு நீ மட்டும் தான் டி. தியா, முகேஷ் உறவா இருந்தாலும் எனக்கு மட்டுமே சொந்தம் இல்லை டி. என் வாழ்க்கைக்கு நீ முக்கியம் டி. என் அம்மாவோட நிறைய குணங்களை உன் கிட்ட பார்த்து இருக்கேன். அப்புறமாவும் எப்படிடி உன்னை விட்டு வர முடியும்?


நான் பொண்ணு கேட்ட உடனே தூக்கிக் கொடுக்க உன் அண்ணன் அந்த அளவுக்கு நல்லவன் இல்லை. நீ எனக்கு மட்டும் சொந்தமானவ. உன்னை ரொம்ப ஹேர்ட் பண்ணிட்டேன் டி. சொரி ஜானு. சொரி ஜானு" என்று காயப்படுத்திய இடங்களில் கண்ணீர் வழிய முத்தம் கொடுக்க சனா உறக்கக் கலக்கத்தில், "விடு காட்டுப்பையா. நான் இருக்கேன் உனக்கு" என்று உழற அதைக் கேட்டு அவளை இறுக அணைத்துக் கொண்டான்.


சிறிது நேரம் அவள் வாசத்தில் இருந்தவன், எழுந்து வெளியே சென்று வரவேற்பரையில் உறங்கினான். சனா கண்விழிக்க கட்டிலில் இருப்பதை பார்த்தவள் சாத்விக்கே இங்கே தன்னை படுக்க வைத்திருப்பான் என்று உணர்ந்து கீழே செல்ல மாளிகை போன்ற வீட்டில் ஒருவருமே இருக்கவில்லை.


வீட்டை சுற்றிப் பார்த்து வரும் போது அவனது அறைக்குச் செல்ல கோபத்தில் உடைத்த பொருட்களைப் பார்த்தாள். அதைப் பார்த்து பெருமூச்சு விட்டவாறே அனைத்தையுமே சரி செய்து சுத்தம் செய்தாள். வெளியே செல்வதற்கான பிரதான கதவு பூட்டப்பட்டு இருக்க வீட்டிற்குள்ளேயே நடமாடினாள்.


அவன் கூறியது போல் அனைத்து வேலைகளையும் செய்து தனிமையை போக்கிக் கொண்டாள்.
ஒரு முறையே உணவை சமைத்தாள். பகல் நேரங்களில் உண்ணாமல் இரவு சாத்விக்கிற்கும் வைத்து விட்டு சிறிதளவு உண்டு விட்டு உறங்கினாள். உண்ணவும் நினைக்காமல் தன் வீட்டைப் பற்றியும், சாத்விக்கைப் பற்றியும் யோசிக்க ஆரம்பித்தாள்.


சாத்விக் வீட்டிற்கு வரும் போது சனா உறங்கி இருப்பாள். தரையில் உறங்குபவளை அவனே கட்டிலில் கிடத்த அடுத்த நாள் அறைக்கு தாழ்ப்பாள் இட்டு இருந்தாள். இன்றும் தரையில் உறங்கி இருப்பாள் என்று யூகித்து அவனது அறையில் அவனும் தரையில் உறங்கினான்.


இவ்வாறு நான்கு நாட்கள் கடக்க அன்று சனாவிற்கு அதீத களைப்பு, சோர்வினால் காய்ச்சலில் சிரமப்பட செய்திகளில் சாத்விக், சனா இருவரும் கடற்கரையில் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாக்கப்பட்டன.





கருத்துக்களை பகிர,


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 27




வான வெளியில் தன் வேலையை முடித்து விட்டு மதியவள் செல்ல அடுத்து தான் எடுத்த பொறுப்பை ஏற்று வந்தான் சூரியன். சாத்விக் காலையில் எழும்போதே ஏனோ சனாவை இன்று பார்க்குமாறு உந்த எழுந்து சனாவின் கதவைப் பார்க்க இன்னும் பூட்டியே இருந்தது. அவளது கதவில் கையை வைத்து தட்ட கை வைத்தவன் கையை எடுத்துக் கொண்டான். மீண்டும் கதவைத் தட்ட கொண்டு செல்ல மறுபடியும் எடுத்தான்.


இவ்வாறு பதினைந்து நிமிடங்களாக தடுமாறிக் கொண்டு இருந்தவன் தன்னிடம் இருந்த இன்னொரு சாவியைக் கொண்டு திறந்து சத்தம் வராமல் உள்ளே நுழைந்தான். அவளை ஒரு முறை பார்த்து விட்டு அமைதியாக வெளியேறி விடுவோம் என்று நினைத்து உள்ளே வந்தவன் அவள் மதி முகத்தை ஒரு முறைப் பார்த்தான். வழமைக்கு மாறாக மூக்கின் நுனியும், கன்னங்களும் சிவந்து இருப்பதைப் பார்த்தவன் அவள் அருகில் நெருங்கிச் சென்றான்.


அவளை நெருங்கிய போதே அனலாக கொதித்துக் கொண்டு இருந்தது உடம்பு. அவசரமாக அவளைக் கையிலேந்தி கட்டிலில் கிடத்தி அவசரமாக வைத்தியருக்கு அழைத்தான். அவரும் சிறிது நேரத்தில் வருவதாகக் கூறி அழைப்பை துண்டித்தார். சனாவின் நிலைமையைப் பார்த்தவனுக்கு ஒரு புறம் அவனை குற்ற உணர்வு கொன்றுக் கொண்டு இருக்க மறுபுறமோ பதட்டத்தில் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.


அவள் தலையை வருத்தத்துடன் வருட சனா அவனது மடியில் படுத்து அவனை இடையோடு கட்டிக் கொண்டாள். வைத்தியர் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்துவிட்டதாக தகவல் வழங்க, "பேபி. கொஞ்சம் தள்ளி படு. இதோ வந்துடுறேன்" என்று கூறி எழுப்ப முயல, "என்னை விட்டு போகாத சவீன். ரொம்ப குளிரா இருக்கு" என்று முணகினாள்.


'யாரிந்த சவீன்?' என்று முதலில் புரியாமல் குழம்ப அடுத்து மனசாட்சி அவனது முழுப்பெயரையும் கூறி அதை சுருக்கமாக இப்பெயரை உனக்காக வைத்திருக்கிறாள் என்று எடுத்துரைக்கவும் அவனது முகமோ சந்தோஷத்தில் பளிச்சிட்டது. அவசர முத்தமொன்றை நெற்றியில் பதித்தவன் அவளை கெஞ்சி, கொஞ்சி விலக்கிவிட்டு கீழே வந்தான். கதவைத் திறந்து வைத்தியரை உள்ளே அழைத்து வர அவரும் சனாவைப் பரிசோதித்தார்.


"ரொம்ப டயர்டாகி இருக்காங்க. தொடர்ந்து வந்த நாட்களில் ஒழுங்காக தூக்கமில்லாமல் ஸ்ட்ரெஸ்ஸாக இருந்து இருக்காங்க. குளிரும் அவற்றோடு சேர்த்து காய்ச்சலை கொடுத்து இருக்கு. சில டெப்ளட்ஸ் கொடுக்குறேன் அதை ஃபோலோ பண்ணுங்க. அடிக்கடி ஈரத்துணியால உடம்பை துடைங்க. இன்ஜெக்ஷன் போடுறேன். பயப்படத் தேவையில்லை" என்று கூறி ஊசியை ஏற்றி விட்டு சாத்விக்கிடம் இருந்து விடைப்பெற்றார்.


சாத்விக் சனாவிற்காக கஞ்சைத் தயாரித்து எடுத்து வந்தான் அறைக்கு. அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டு கஞ்சை ஊட்டி விட, "வேணாமே. கசப்பா இருக்கு" என்று முணக, "கொஞ்சமா குடி ஜானு. ரொம்ப வீக்கா இருக்க. எனக்காக கொஞ்சமா குடி" என்று ஊட்டிவிட்டான். அவளும் சிறிது குடித்தது மறுபடியும் அவன் மடியில் படுத்துக் கொண்டாள்.


அவள் கூந்தலை வருடியவன், "என்னை உனக்கு பிடிக்குமா ஜானு?" என்று வினவ, "ரொம்ப ரொம்ப பிடிக்கும். எதுக்காக என்னை கடத்திட்டு வந்திங்க?" என்று அரை மயக்க நிலையில் கேட்க, "எப்படடி உன்னை வேறு ஒருத்தனுக்கு விட்டுக் கொடுக்க முடியும்?" என்று நெற்றியில் முத்தமிட்டு அவள் அருகிலேயே படுத்துக் கொண்டு இறுக்கி அணைத்தான்.


அவளும் சிறிதாக கண்விழித்து அவனைப் பார்த்தவள் அவன் நெஞ்சில் படுத்துக கொண்டாள். "உங்களை மனசுல நினைச்சுட்டு இருக்கும் போது எப்படி வேறு ஒருத்தனை கல்யாணம் பண்ணுவேன்னு எதிர்பார்த்திங்க. எப்படி என் மனசுக்குள்ள நுழைஞ்சிங்கன்னு எனக்கு தெரியவே இல்லை. அன்னைக்கு நீங்க கோபத்துல செத்தான்னு சொன்னிங்களே எனக்கு உயிரே போயிருச்சு.


எப்படி எனக்கு வலிச்சது தெரியுமா? நான் தான் உங்க பொன்டாட்டின்னு நீங்க சொல்லி சொல்லியே அதை என் ஆழ்மனசுல பதிய வச்சிட்டிங்க. எவளோ உங்களை பிடிக்கும் தெரியுமா? என்னை காயப்படுத்துறிங்கன்னு தெரியாமலே என்னை கஷ்டபடுத்துனிங்க. நீங்க என்னை எவளோ ஹேர்ட் பண்ணாலும் என்னால உங்களை வெறுக்கவே முடியல்லை.


உன்னை ரொம்ப மைன்ட் வொயிசுல திட்டுவேன் காட்டுப்பையா. உன்னை செல்லமா டா போட்டு கூப்பிடுவேன். உனக்கு நான் வச்ச பேர் என்னை தெரியுமா? சவீன் நல்லா இருக்கா?சாத்விக்ல 'ச' வையும், ப்ரவீன்ல 'வீன்' ஐயும் சேர்த்து சவீன்னு பேர் வச்சேன். உன்னை சவீன்னு கூப்பிடனும்னு ரொம்ப நாள் ஆசை தெரியுமா?


என்னை எப்போவுமே உன் கைக்குள்ள வச்சிறிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பாதுகாப்பா இருக்கிறது போல ஃபீல் பண்ணுவேன். பட் பெண்மைக்கே உரிய குணத்துல நான் விலக முயற்சிப்பேன். இன்னொரு விஷயம் தெரியுமா? யாருக்கும் சொல்ல கூடாது ஒகேயா? நான் என் புருஷனை அவனுக்கே தெரியாமல் நிறைய முறை சைட் அடிச்சு இருக்கேன்" என்று அவன் மார்பினுள் புதைந்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தாள்.


"என் சவீன் எவளோ அழகு தெரியுமா? அப்பிள் போல இருப்பான். அப்படியே கடிச்சி சாப்பிடனும் போல இருக்கும். அவளோ கியூட்; ஸ்வீட்;ஹென்ட்சம். நான் இதெல்லாம் அவன் கிட்ட சொன்னதே இல்லை. அண்ணா கல்யாணம் முடிஞ்சதும் அவனைப் பத்தி சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். என் பேச்சை அண்ணா நிச்சயமா மீறி இருக்க மாட்டான். நான் ஆசைப்படதுக்கு அண்ணா கண்டிப்பா வேணான்னு சொல்ல மாட்டான்.


அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. ஆனால் இந்த காட்டுப்பையன் யோசிக்காமல் பேச போய் அண்ணா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டான். மாப்பிள்ளை பார்த்து நிச்சயமும் பண்ண முடிவு பண்ணதும் நானும் இதை வெளியில சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டேன். அதனால் இதை சவீன் கிட்ட சொல்ல முடியாது. யார் கிட்டேயும் என் மனசை திறக்க முடியுமா எவளோ கஷ்டபட்டேன் தெரியுமா?


காட்டுப்பையன் என் மேலே ரொம்ப பாசம் வச்சிருக்கான்னு எனக்கு தெரியும். இதை சொன்னால் அதிரடியா ஏதாவது முடிவு பண்ணுவான்னு நினைச்சு எந்த விதத்திலேயும் சொல்ல முன் வர இல்லை. அதனால தான் அவனை அவோய்ட் பண்ணேன். அண்ணன் ரிசப்ஷன்ல அவனை பார்ததும் ஓடிப் போய் கட்டிப்பிடிச்சி அழுதுருவேனோன்னு அவன் பக்கம் போகவே இல்லை.


ஆனால் என் காட்டுப் பையன் கண்டு பிடிச்சி என் கிட்ட வந்தான். எனக்கும் அவனை பிடிக்கும்னு வாயால சொல்ல எனக்கு தைரியம் இல்லை. அதான் அவனை விட்டு விலக முடியாமல் அவன் கூடவே இருந்தேன். அவன் சொன்னான் 'நான் உன் கூடவே இருப்பேன்னு' அதை கேட்ட போது எவளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா?


என் புருஷனை மனசுல வச்சிட்டு இன்னொருத்தன் முன்னாடி எனக்கு காட்சிபொருளா இருக்க விருப்பம் இல்லை. சோ சூசைட் பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்தேன். அண்ணாவை எதிர்த்தும் எதுவும் பண்ண முடியாது. சவீன் கூடவும் வர முடியாது. என் அண்ணன் வளர்ப்பை பொய்யாக்க முடியாதுன்னு இப்படி ஒரு முடிவை எடுத்தேன்.


அப்படி இருக்கிற என்னை பார்த்து இந்த காட்டுப்பையன் எப்படி தப்பா பேசலாம்? என்னை நிறைய முறை இங்கே ஹேர்ட் பண்ணி இருக்கான். நான் கஷ்டபட்டா என்னை விட அவன் தான் அதிகமாக கஷ்டபடுவான். அன்னைக்கு அவன் ரூம் பூரா கோபத்துல உடைச்சி இருக்கான். இவனை என்ன பண்ணலாம்? எனக்கு என் சவீனை ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஐ திங்க் ஐம் இன் லவ் வித் ஹிம். எனக்கு அவன் மேலே இருக்கிற கோபத்துக்கு அடிக்கனும்" என்று மனதில் உள்ளதை கொட்டிவிட்டு அவனை அணைத்தவாறே கண்ணயர்ந்தாள்.


அவன் முகத்திலோ சந்தோஷம், அதிர்ச்சி, பயம், குதூகலம், சிரிப்பு, கவலை ஏக்கம் என்ற பல வகை உணர்வுகள் வந்துபோயின. ஆயினும் இறுதியாக அவள் இறப்பைப் பற்றி பேசும் போது பயத்தில் அவன் உடலும் நடுங்க அவளை மேலும் இறுக அணைத்துக் கொண்டான். அவள் மனதில் தான் இருக்கிறேன் என்ற உணர்வே அவனை வானத்தில் பறக்க வைத்தது. அதே போல் அவளை துன்புறுத்தி இருக்கிறோம் என்று நினைக்க மனம் கணமானது.


அவளை இறுக அணைத்தவாறே ஒரு மோன நிலையில் இருக்க தன் மொபைல் அதன் இருப்பைக் காட்டியது. அழைப்பை ஏற்க எதிர்ப்புறம் தியா பேசியிருந்தாள். "தியா சொல்லுடா" என்க, "முதல்ல போய் டிவியை போட்டு பாரு. அப்புறமா என் கூட பேசு. நான் இப்போ வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்" என்று அழைப்பைத் துண்டித்தாள்.


சாத்விக் யோசணையுடன் அறையில் இருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான். அதில்


'இந்தியாவின் பிரபலமான கம்பனியான எஸ்.பி இன்டஸ்ட்ரீஸின் சி.இ.ஓவான சாத்விக் ப்ரவீன் மற்றும் அவர்களது போட்டி நிறுவனமான கே.பி குரூப்ஸ் என்ட் கம்பனியின் சி.இ.ஓ கார்த்திக் ஆர்யனது தங்கை மற்றும் அதே கம்பனியின் ஷெயார் ஹோல்டர் திசன்ஜனாவிற்கு இடையில் காதல் நிலவுவதாகவும் தற்போது இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.'


என்ற செய்தியோடு மும்பையில் இருவரும் கடற்கரையில் நெருக்கமாக நின்ற போது எடுக்கப்பட்ட புகைபடமும் வெளியாக்கப்பட்டு இருந்தது. அதைப் பார்த்தவனுக்கு அத்தனை அதிர்ச்சி. சனா இதைப் பார்த்தால் அவளால் தாங்க இயலாது. நாளை ஏற்பாடு செய்து இருந்த திருமணத்தை இன்றே நிகழ்த்த முடிவு எடுத்தான். உடனடியாக தனது பலத்தை பயன்படுத்தி வீட்டில் திருமணத்தை தடல்புடலாக ஏற்பாடு செய்ததோடு திருமணப் பதிவாளரை அழைப்பித்து இருந்தான்.


தியா, முகேஷ் இருவருமே ஒரு மணி நேரத்தில் வருகை தந்தனர். இன்றும் நல்ல நேரம் இரடந்ததால் தியா, முகேஷின் முன்பு நிச்சய மோதிரத்தை மாற்றிக் கொள்ளலாம் என நேற்றே அவர்களை இந்தியாவிற்கு அழைத்து இருந்தான். திடீரென்று சாத்விக் தனக்கு சனாவுடன் திருமணம் என்று கூறியதால் அவர்களும் உடனடியாகக் கிளம்பி இந்தியாவை அடைந்தனர்.


அவர்கள் வரும் வழியிலேயே டிரென்டிங் நியூசாக இது பேசப்பட உடனடியாக சாத்விக்கிற்கு அழைத்து விடயத்தைக் கூறினாள். இதே செய்தியை கார்த்திக் வீட்டினரும் பார்க்க அவர்களும் குழம்பி நின்றனர். இப்போதும் கார்த்திக் சாத்விக்கையே இதை செய்ததாக சந்தேகப்பட்டான். இவர்கள் குழம்பியது மட்டுமல்லாது மர்மநபரும் குழம்பினான். யார் இதைச் செய்தது என.


உடனே மர்ம நபர் தன் நண்பனுக்கு அழைக்க அவனும் அழைப்பை ஏற்றான். "நீ தான் இதை அனுப்பினியா?" என்று எகிற, "ஆமா டா. இதை தான் நீ அடுத்து பண்ணுவன்னு எதிர்பார்த்தேன். அதான் நானே பண்ணேன்" என்றான். "இடியட் எதுக்குடா இப்படி பண்ணி தொலைச்ச? அனுப்பி இருக்கிற போடோஸ் எல்லாமே அவங்களோட நெருக்கத்தை காட்டுது" என்று சாராமாரியாக திட்டி அழைப்பைத் துண்டித்து கீழே அமர்ந்தான்.


இவ்வாறு இருக்கையில் சாத்விக் சனாவைச் சென்று பார்க்க ஓரளவுக்கு அவளுக்கும் காய்ச்சல் குறைவாக இருந்தது. சனாவை அவன் எழுப்ப அவளும் கண் விழித்தாள். "ஜானு" என்று அவளை தோளோடு அணைத்துக் கொள்ள, "சேர்" என்று புரியாமல் குழம்பி இருந்தாள். "ஜானு உனக்கு காய்ச்சலா இருந்தது. அதான் டேப்ளட் கொடுத்து, இன்ஜெக்ஷன் போடவும் நீ தூங்கிட்ட" என்று சுருக்கமாக முடித்தான்.


சாத்விக், "ஜானு இன்னும் வன் ஹவர்ல நமக்கு கல்யாணம்" என்று கூற அவளோ அதிர்ந்து அவனைப் பார்த்தாள். "பேபி புரிஞ்சிக்கோ. இப்போ கல்யாணம் பண்ண வேண்டிய கட்டாயத்துல இருக்கோம். உன் காட்டுப்பையன் பாவம் இல்லையா? உன் சவீனுக்காக கல்யாணத்துக்கு ஒகே சொல்லு பேபி. பிளீஸ். என்னை புரிஞ்சிக்கோ ஜானு" என்று தவிப்புடன் கூற, அவளோ அவன் கூறிய பெயர்களில் திருதிருத்தாள்.


"இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு கேட்காத. அதை இப்போ சொல்லவும் எனக்கு டைம் இல்லை. பட், இன்னைக்கு நைட்டுக்கு கண்டிப்பா சொல்லுவேன். இப்போ போய் ரெடியாகிட்டு வாடா" என்று கெஞ்சும் குரலில் கூற, "நான் இருக்கிற நிலமையில கல்யாணம் தேவையா? அண்ணா..." என்று அடுத்து சொல்லாமல் பயந்து அவனைப் பார்க்க அவன் முகத்திலோ எந்த வித மாற்றமும் இருக்கவில்லை.


"பிளீஸ் பேபி. ரெடியாகிட்டு வாயேன்" என்றான் திருமணத்திற்கு முன்னேயே மனைவிக்கு பணியும் கணவனாக. 'சரி' என்று தலையாட்டி ஆடைகளை எடுத்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள். ஏனெனில் நிச்சயமாய் ஏதோ காரணத்திற்காகவே அவசரப்படுத்துகிறான் என அவளும் உணர்ந்துக் கொண்டாள்.


அவளும் பிரஷ்ஷாகி சேலையைக் கட்டிக் கொண்டு வெளியே வர கட்டிலில் நகைகளை வைத்து இருந்தான். அதை அணிந்தவள் தன் நீண்ட கூந்தலைப் பின்னலிட்டு அங்கே வைத்திருந்த மல்லிகைச் சரத்தை சூடிக் கொண்டாள்.


சிறிதளவு ஒப்பனை செய்தவள் மெதுவாக நடந்து வெளியே வர பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக நின்று இருந்தான் சாத்விக். இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து கண்களால் களவாடிக் கொண்டு இருந்தனர். பின் சனாவின் சோர்வைப் பார்த்தவன் அவளை தோளோடு அணைத்துக் கொண்டு நடக்க வைத்து கீழே இறங்கி வந்தான். இருவரும் இறங்கி வர தியா, முகேஷ் இருவரும் அவனுடைய வீட்டை அடையவும் நேரம் சரியாக இருந்தது.


தியா, முகேஷ் இருவரும் சனா, சாத்விக்கை திருமணகோலத்தில் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர். சனா அவர்களை யாரென்று புரியாமல் பார்க்க, "எனக்குன்னு இப்போ இருக்கிறது இவங்க தான். இவ தியா, இவன் முகேஷ். தியா எனக்கு ஃபேஸ் புக் மூலமா கிடைச்ச குட்டி தங்கச்சி. இவன் அவளோட புருஷன். என் தற்போதைய ஒரே ஃபிரன்டு" என்று அறிமுகம் செய்து வைத்தான்.


சனா புன்னகை்க அவள் புன்னகையில் உயிர்ப்பு இல்லாததை மூவருமே கண்டு கொண்டனர். அவளை அழைத்துக் கொண்டு கிருஷ்ணர் சிலைக்கு முன்னே சென்று நின்றான். அங்கேயே ஏற்பாடு செய்து இருந்த ஐயர் மந்திரம் ஓத அங்கே தங்கத்தால் செய்து வைத்திருந்த தாலியை எடுத்து அவள் கழுத்தருகில் கொண்டு செல்ல சனா பரிதவிப்புடன் அவனைப் பார்க்க அவன் கண்மூடித் திறந்து ஆறுதல் கூற தலையைக் குனிந்தாள்.


தாலியை அணிவித்தவன் நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்தவன் அங்கிருந்த மாலை மாட்டி வைக்கப்பட்டு இருந்த தாய், தந்தையரின் திருமண புகைப்படத்திற்கு முன்னே சென்று ஆசிர்வாதத்தைப் பெற்றான். அதே போல் தியா - முகேஷ் நின்று இருந்த இடத்திற்கு பக்கமாக ஒரு நாற்கிலியில் அவளது குடும்ப புகைப்படமும் வைத்திருக்க அவர்கள் இவளை ஆசிர்வதித்தது போன்று உணர்ந்தாள்.


தியா இருவரையும் கட்டியணைத்து வாழ்த்தைத் தெரிவித்தாள். அதே போல் முகேஷ் சனாவிற்கு வாய் மொழியாக மாத்திரம் வாழ்த்தைக் கூற, சாத்விக்கை ஆரத்தழுவி வாழ்த்தை தெரிவித்தான். இவர்களின் திருமணமும் பதிவு செய்யப்பட்டது. புகைப்படக்காரர் வந்திருக்க இருவரையும் தம்பதியினராக சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டான்.


சனா அமைதியாக தனியே இருப்பதைப் பார்த்த தியா தன் கருவைச் சுமந்த வயிற்றை பிடித்தவாறே அவளிடம் சென்றாள். தியா, "சனா" என்று அழைக்க கலங்கிய கண்களை துடைத்து அவளைப் பார்த்தாள். "எனக்கு உன் நிலமை புரியிது. ஆனால் நீ கண்டிப்பா இப்போ கல்யாணம் பண்ணியே ஆகனும். அப்படியொரு சிடிவேஷன்ல இருக்க. புரிஞ்சிக்கோ. உன் குடும்பத்தை அண்ணா கண்டிப்பா சமாளிச்சிருவாங்க.


அதை பத்தி ஃபீல் பண்ணாத. உன் அண்ணனுக்கும், சாத்விக் அண்ணாவுக்கும் எப்போவுமே ஒத்து போனது இல்லை. அது உண்மை ஆனால் அண்ணா கஷ்டத்தை அனுபவிக்கும் போது பக்கத்தில் இருந்து பார்த்தவ நான். அவளோ வலியை அனுபவிச்சி இருக்கான். உன் கிட்ட அதை மறைக்க மாட்டான். கண்டிப்பா சொல்லுவான். அண்ணாவை விட்டு எந்த சூழ்நிலை வந்தாலும் போகாத. ரொம்ப கஷ்டபட்டுட்டான்.


உன் துணை இனிமேல் அவனுக்கு ரொம்ப அவசியம். அவனுக்கு உன்னை ரொம்ப ரொம்ப புடிக்கும். இன்னைக்கு நான் சொல்றதை ஞாபகம் வச்சிக்கோ அண்ணா உனக்காக என்ன வேணூன்னாலும் செய்வான். எந்த அளவுக்கும் இறங்கி போவான்" என்று தலை வருட அவளை அணைத்துக் கொண்டு கலங்கிய சனா, "சவீனை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அவரை இனி பார்த்துக்குறேன். நீங்க பேசினதுக்கு அப்புறமா எனக்கும் ஒரு நம்பிக்கை இருக்கு" என்றாள் உறுதியாக.


சாத்விக் தனது பணபலத்தை பயன்படுத்தி ஒரு வாரத்திற்கு முன்னேயே திருமணம் செய்ததாக பதிவு செய்து திருமண புகைப்படம், திருமண பத்திரம் என்பவற்றை செய்திகளுக்கு தனது பி.ஏ மூலமாக அனுப்பி வைத்து அவர்களது தவறான உறவை அழித்து விட்டான். அடுத்த இரண்டு மணி நேரத்தில் சாத்விக், சனாவின் திருமணம் முக்கிய செய்தியாக பரவியது. கார்த்திக் உட்பட மற்றவர்கள் அனைவரும் இம்முறையும் அதிர்ந்தனர்.


இவ்வாறு ஒரு திருப்பத்தை எவருமே எதிர்பார்க்கவில்லை. அபியே அனைவரையும் சமாளித்து விட்டு கார்த்திக்கின் மொபைலில் இருந்து சாத்விக்கிற்கு அழைத்தாள். கார்த்திக்கின் அழைப்பை வெகு நேரமாகவே சாத்விக் எதிர்பார்த்து இருந்தான். அழைப் பார்த்தவன் நக்கல் புன்னகையுடன் ஏற்றான்.


"சொல்லு ஆர்யன்" என்று கூற, "அண்ணா நான் அபி பேசுறேன்" என்றாள் அபி. குரலை மாற்றியவன், "சொல்லு அபி" என்று கூற, "சனா உங்க கூட இருக்காளா? சனா நிச்சயமா உங்க கூட வந்திருக்க மாட்டா. நீங்க தான் அவளுக்கு தெரியாமல் கூட்டிட்டு போயிருக்கனும். எதுக்கு இப்படி பண்ணிங்க அண்ணா? இப்போ எங்க இருக்கிங்க? சனா எப்படி இருக்கா?


அவ முகம் என் டல்லா இருக்கு? உங்களுக்கு சனாவை பிடிச்சி இருந்தால் சொல்ல வேண்டியது தனே? ஏன் சொல்ல இல்லை?" என்று கேள்விகளை அடுக்க, சாத்விக் நிதனமாக, "நான் சொல்ல இல்லைன்னு யார் சொன்னது? உன் புருஷன் கிட்ட எனக்கு அவன் தங்கச்சியை கல்யாணம் பண்ணி வைப்பானான்னு கேளு. அப்புறமா என்னை கேள்வி கேளு. மொபைலை ஸ்பீக்கர்ல போடு" என்றான் இறுகிய குரலில்.


அவளும் அதே போல் செய்ய, "என்ன ஆர்யன் ஷொக்ல பேச்சு வராமல் இருக்க போல.நான் அன்னைக்கே சொன்னேனே சனா என் பொன்டாட்டின்னு. அது தெரிஞ்சும் அவளுக்கு கல்யாண ஏற்பாட்டை பண்ணினது நீ. அப்புறமாவும் நான் சும்மா இருந்தேன்னா நான் ஆம்பளையே இல்லையே. என்னை ஆரம்பத்துல இருந்து சீண்டுறது நீ. அதான் பலனை அனுபவிக்கிற.


இதுக்கு அப்புறமா உன் தங்கச்சை பார்க்க முடியாது. நானா சொல்லும் வரையில் நான் எங்க இருக்கேன்னு கண்டுபிடிக்க முடியாது. நான் எப்படி உன்னால துடிச்சேனோ அதே போல நீயும் துடி. பட் உனக்காக அவளை கஷ்டபடுத்த மாட்டேன். நான் ஒன்னும் முட்டாள் கிடையாது. தப்பு பண்ணவனுக்கு தண்டனை கொடுக்காமல் என் பொன்டாட்டிக்கு தண்டனை கொடுக்கு.


உன் கல்யாணம் நேரம் சொன்னேனே ஒரு டயலோகை ஞாபகம் வச்சிக்கோன்னு. அதை இப்போ சொல்றேன். என் பொன்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியும். நீ அவளை நினைச்சு கஷ்டபடனும். அவளை பார்க்கவே முடியாதான்னு ஏங்கனும். அவ குரலை கேட்க தவிக்கனும். அதான் நான் உனக்கு கொடுக்குற தண்டனை" என்று அழைப்பைத் துண்டித்தான்.


அங்கிருந்தவர்கள் அனைவருமே சாத்விக்கின் பேச்சில் அதிர்ந்து இருந்தனர். கார்த்திக்கை அழைத்துக் கொண்டு அறைக்குச் செல்ல அபி, "மாமா" என்று தோள் தொட உடைந்து ஆண்மகன் என்பதையும் மறந்து கதறி அழுதான். சனா அவனின் இன்னொரு கண் அல்லவா? அதை சாத்விக் அன்று கூறியது போல் பிடுங்கிக் கொண்டு அவனை துடிக்க வைத்து விட்டானே.
அபியை அணைத்து சிறு பிள்ளைப் போல் அழ அவனை சமாளிக்க பெரும் பாடு பட்டாள்.


இரவு நேரம் நெருங்க ஒருவருமே உண்ணவில்லை. அனைவரையும் வற்புறுத்தி உண்ண வைத்தாள். கார்த்திக்கையும் கடினப்பட்டு உண்ண வைத்து உறங்க வைத்து விசாலாட்சியை பார்க்கச் சென்றாள். அவரையும் சமாளித்து உறங்க வைத்தாள். அபி நகுலின் குடும்பத்தை சமாளித்து அடுத்த நாளே ஊரிற்கு அனுப்பி வைத்தாள். அனைவரையும் சமாளித்தவளால் தன்னுடைய அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாள். தனியாகச் சென்று சனாவை எண்ணி அழுது தீர்த்தாள்.


தியா, முகேஷ் இருவரும் இன்னொரு அறையில் தங்க சனா இரவு சாதாரண சுடிதார் அணிந்தே அறைக்குள் நுழைந்தாள். அவளைப் பார்த்தவன் அவளை தன்னருகில் அழைக்க தயங்கியவாறே அவன் அருகில் அமர்ந்தாள். அவள் நெற்றி, கழுத்தைத் தொட்டு காய்ச்சலா என்று பார்த்து மருந்தை வழங்க அவன் அக்கறையில் மனநிறைவாக புன்னகைத்தாள். அவளும் மறுக்காமல் அனைத்து மருந்துகளையும் குடித்தாள்.


"ஜானு" என்று அழைத்தவன் அவளை இழுத்து தன் மேல் போட்டவன், "இந்த நிமசஷம் எனக்கு உலகத்தையே ஜெயிச்ச உணர்வு டி. அவளோ சந்தோஷமா இருக்கேன். நம்ம கல்யாணத்தை உன் அண்ணா வீடியோ கோல்ல பார்க்குறது போல ஏற்பாடு பண்ண இருந்தேன். பட் அவசர சிடுவேஷன்னால முடியல்லை. அதான் உன் ஃபேமிலி போடோவை அங்கே வச்சேன்" என்றான்.


"இப்படி ஏதாவது பண்ணுவிங்கன்னு எதிர்பார்த்தேன்" என்றவள் அவன் மார்பில் நாடியைப் பதித்து அவன் முகத்தை எக்கிப் பார்த்து, "சவீன், காட்டுப் பையா இது உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?" என்று வினவ, "அதை நீயே தான் சொன்ன" என்று காலையில் நடந்தவற்றை சிரிப்புடன் கூறினான். "ஆனால் எதுக்குடி சூசைட் பண்ண முடிவு பண்ண? உனக்கு என் மேலே நம்பிக்கை இல்லையா?" என்று ஆதங்கத்துடன் கேட்க, "எனக்கு அப்போ வேறு எதுவுமே தோண இல்லை. பட் புரொமிஸ் இதுக்கு அப்புறமா இதெல்லாம் யோசிக்க மாட்டேன்" என்றாள் உறுதியாக.


"நம்புறேன். எனக்கு உயிரே போறது போல இருந்தது. இதைப் பத்தி இனிமேல் பேச வேணாம்" என்று நெற்றியில் முத்தமிட மனநிறைவுடன் மீண்டும் புன்னகைத்தாள் சனா.


"என்னை எப்படி கிட்னாப் பண்ணிங்க?" என்று புரியாமல் வினவ, "உனக்கு நிச்சயம்னு கேள்வி பட்ட உடனே உன்னை தூக்க பிளேன் போட்டு என் பி.ஏ கிட்ட சொன்னேன். அவன௲ தான் ஆள் செட் பண்ணி உங்க டிரைவரை மயக்கி கடத்தி வச்சிட்டு, அவன் டிரச்சை அந்த ஆள் போட்டுகிட்டான். உன்னை சி.சி.டிவி இல்லாத இடத்தைப் பார்த்து நிறுத்தி ஸ்ரே பண்ணி உன்னை வேற காருக்கு மாத்தினோம். அப்போ எனக்கு மெசேஜ் வந்தது.


டவுட் வராமல் இருக்க உங்க காரை உங்க வீட்டுல கொண்டு போய் நிறுத்தினோம். பொலிஸ் எவளோ தேடினாலும் ஒரு துரும்பும் கண்டு பிடிச்சி இருக்க முடியாது. உங்க டிரைவர் நாளைக்கு அவன் வீட்டுக்கு போய் சேந்துருவான்" என்று கூறி வசீகரமாகச் சிரித்து கண்சிமிட்ட சனா, "கேடி" என்று முணுமுணுத்து அவனை அணைத்துக் கொண்டாள்.


நாட்கள் நகர அபி, சனா இருவருமே கார்த்திக், சாத்விக் இருவரின் பகைமைக்கான காரணம் அறியும் தினமும் வந்தது. அதில் அதிர்சியான தகவலாக சாத்விக்கின் தாய் இறப்பதற்கு கார்த்திக் காரணம் என்று கூறியதில் சனா அதிர்ச்சியில் உறைந்தாள்....



அடுத்து பிளேஷ்பெக் மக்களே...



கருத்துக்களை பகிர,


 

Attachments

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23458


அத்தியாயம் 28





கார்த்திக், அபி இருவரிடம் மட்டுமின்றி விசாலாட்சியிடம் உயிர்ப்பே இல்லை. அவர்களின் வீடே கலையிழந்து இருக்க மூவரும் ஏனோ தானோ என்று வாழ்ந்தனர். இதோ சனா, சாத்விக்கின் திருமணம் முடிந்து இன்றோடு இருபது நாட்களாகிவிட்டது. சாத்விக் கூறியது போல கார்த்திக்கை துடிக்கை வைத்தான்; தவிக்க வைத்தான். துவள வைத்தான்; ஏங்க வைத்தான். அவன் கொண்ட சபதத்தையும் நிறைவேற்றினான்.


கார்த்திக்கும் தங்கையைத் தேடி அத்தனை முயற்சிகள் எடுத்தாலும் அவள் எங்கே இருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. தங்கையின் குரலைக் கேட்க ஏங்கி இருந்தான். அனைத்து கவலைகளையும் மனதில் பூட்டி வைத்து தனக்குள் இறுகி நடமாட அபியோ கணவனையும், நண்பியையும் எண்ணி சோர்ந்து இருந்தாள். விசாலாட்சிக்கும் அனைவரையும் முன் இருந்ததைப் போல் சந்தோஷமாக நடமாட வைக்க என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை.


அன்று கார்த்திக்கிற்கு சனா, சாத்விக் இருவரின் நினைவாகவே இருக்க அலுவலகத்திற்குச் செல்லாம் இருந்தான். அபியிற்கு ஒரு மாத கால கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்தாள். தனது அறையில் உள்ள பல்கனியில் நின்று வெளியே இலக்கின்றிய பார்வையை பதிந்திருத்தான். சவரம் செய்யப்படாத முகத்தோடு, கண்களில் கருவளையம் சூழ வேறு எவரோ போல் இருக்க அவனை அறைக் கதவில் சாய்ந்து பார்த்த அபியின் கண்கள் கலங்கியது.


இன்று எவ்வாறாவது அவளுடைய கேள்விக்களுக்கான பதிலைப் பெற வேண்டும் என நினைத்தவள் அவனை நெருங்கி, "மாமா" என்று தோளில் கைவைத்தாள். அவளைப் பார்த்த கார்த்திக்கிற்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. தங்கையின் நினைவில் மனைவியை கவனிக்கவில்லையே என. அவளை இறுக அணைத்து அபியின் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.


"சொரி செல்லம்மா. சனாவை நினைச்சு உன்னை ஒழுங்கா பார்த்துக்கவே இல்லையே. சொரிடா. இனிமேல் இப்படி பண்ணமாட்டேன். ஆனால் என்னால என் சனாவை நினைக்காமல் இருக்க முடியல்லை டி. அவ என் குழந்தை டி. ஒரு அப்பாவால குழந்தையை எப்படி பிரிஞ்சு இருக்க முடியும்?" என்று புலம்ப, "என்னால உங்களை புரிஞ்சிக்க முடியிது மாமா. எனக்கும் சனாவை நினைச்சு கவலை இருக்கு. அதுல உங்களை நானும் ஒழுங்காக பார்த்துக்க இல்லை" என்று முதுகை வருடி ஆறுதல் கூறினாள்.


அபி, "மாமா எனக்கு சில கேள்விகள் இருக்கு பதில் சொல்றிங்களா?" என்று வினவ, "கேளு நயா" என்றான். "உங்களுக்கும் சாத்விக் அண்ணாவுக்கும் என்ன பிரச்சனை? எதுக்கு அவரு உங்களை பழிவாங்கனும்? சனாவை அவரு கல்யாணம் பண்ணி கேட்டும் எதுக்கு நீங்க ஒத்துக்க இல்லை?" என்று வினவ, "நான் சொல்றேன் கேட்டுக்கோ நயா" என்க அங்கே சாத்விக்கும் சனாவிடம் அதையே கூறினான்.


சனா, சாத்விக்கின் வாழ்வு தெளிந்த நீரோடைப் போலவே சென்றது. அவர்களின் உறவில் எவ்வித முன்னேற்றமோ, பின்னடைவோ இல்லை. எப்போதும் போல் இருந்தனர். சனா அன்று காலையில் எழ, எப்போதும் தன்னை அணைத்தும் உறங்கும் தன் கணவனைக் காணாமல் இருக்க அவசரமாக குளித்தவள் அவனைத் தேடிச் சென்றாள். கீழே வருகை தந்தவள் அணைத்து இடங்களிலும் தேட தியா, முகேஷ் மட்டுமே இருந்தனர்.


அவர்களிடம் சென்றவள், "அண்ணா, அண்ணி அவரு எங்கே?" என்று தயங்கிக் கேட்க, தியா, "இன்னைக்கு அண்ணாவோட; அம்மாவோட இறந்த நாள். அவரு மேலே இருக்கிற கடைசி ரூம்ல இருப்பாரு. அங்கே போய் பாரு" என்றாள். சனாவும் அங்கே சென்று கதவைத் திறக்க அறையே இருளிள் இருந்தது. அவள் கண்களுக்கு எதுவுமே தெரியாமல் இருக்க, ஸ்விச்சை தேடி மின்குமிழை ஒளிரச் செய்தாள்.


ஒளி அறையில் பாய்ந்தவுடனே, "யாரது?" என்று கோபமாக சாத்விக் கர்ஜிக்க சனா பயந்து இரண்டடி பின் நகர்ந்து அவனைப் பார்க்க தரையில் குழந்தை போல் கால், கைகளை சுருக்கி படுத்திருக்க அவனைப் பார்க்க அநாதரவற்ற குழந்தைப் போல் சனாவின் கண்களுக்குத் தெரிந்தாள். அவசரமாக, "சவீன்" என்று அவனை நெருங்கி அவனை தன் மடியில் தலை சாய வைத்தாள்.


அவள் மடியில் படுத்தவன் அவளை இடுப்போடு கட்டிக் கொண்டான். "சவீன்" என்று தலைக்கோத, "இன்னைக்கு என் அம்மா இறந்த நாள். இன்னைக்கு தான் யாருமே ஒரு வார்த்தை ஆறுதல் சொல்ல முடியாமல் தனி மரமா நின்னேன். எப்படி வலிச்சது தெரியுமா எனக்கு?" என்று அன்றைய நினைவில் அழுதான். "அழாத காட்டுப்பையா எனக்கும் அழுகையா வருது" என்று அவனை மேலும் தன்னோடு இறுக்கிக் கொண்டாள்.


"என் அம்மா சாவுக்கு காரணம் யாரு தெரியுமா? உன் அண்ணா. அவன் மட்டும் பொறுமையா இருந்து இருந்தால் இன்னைக்கு நான் அநாதையா இருந்திருக்க மாட்டேன்" என்று அவளை தள்ளிவிட்டு ஆவேசமாக மொழிந்தான். சனா அதிர்ந்து அவனைப் பார்க்க, ஆளுயர புகைப்படம் மாட்டிய திசையில் அவளை தோள் தொட்டு திருப்பியவன், "அவங்க என் அம்மா. ரொம்ப அழகா இருக்காங்க இல்லை? அவங்களுக்கு அழகு மட்டுமில்ல கம்பீரமும் இருக்கு" என்று தாயின் புகைப்படத்தைப் பார்த்து சிலாகித்தான்.


சனாவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. அப் புகைப்படத்தில் இருந்த பெண்மனியை எவ்வாறு அவளுக்கு மறக்க முடியும்? ஆழமாய் அவள் மனதில் பதிந்த முகம் அல்லவா? கம்பீரமான அழகுத்தோற்றத்தை அக்கலோபரத்திலும் இரசித்தாளே!!! அவரோடு சில மணி நேரம் இருந்தாலும் அவருடைய அன்பான குணத்தையும், பாசத்தையும் மறக்க முடியாதல்லவா? முதன் முதலாக சாத்விக்கிற்கு வரைந்து கொடுத்த வரைபடமும் இவர் முகம் அல்லவா?


அன்று இவன் அப்படத்தையும் பார்க்காமல் அவனது அலுமாரியில் மூடி வைத்தானே. நிச்சயாமாக இத் திருப்பத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. அவர் தன்னுடைய கணவனின் தாயாக இருப்பார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்தது இல்லை. சனாவிற்கு சாத்விக்கின் கூற்று குழப்பத்தைக் கொடுத்தது. அன்று நடந்தவகைகளை அவளும் அறாவாளே. தன் அதிர்ச்சியை மறைத்தவள், "கீழே இருக்கிற அவங்க கல்யாண போடோவுக்கும், இதுக்கும் சம்பந்தமே இல்லை" என்றாள்.


"ஹ்ம்ம.. அப்பா இருக்கும் வரைக்கும் அம்மாவும் எல்லோரையும் போல இருந்தாங்க. அப்பா போனதுக்கு அப்புறமா தனி மனிஷியா அப்பாவோட பொறுப்பை கையிலெடுத்து இரும்பு மனிஷா மாறினாங்க. எதுக்குமே கலங்க இல்லை. வெளியில எவளோ உறுதியா, கம்பீரமா, ஒரு பெரிய பிஸ்னஸ் வுமனா இருக்காங்களோ எனக்கு அதைவிட அதிகமா வீட்ல ஒரு நல்ல அம்மாவா இருந்தாங்க" என்றான்.


"உங்களுக்கும், அண்ணாவுக்கும் என்ன பிரச்சனை?" என்று வினவ, சாத்விக்கும் பழைய நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தான். சாத்விக், கார்த்திக் இருவரும் கல்லூரிக்குச் செல்லும் முதல் நாள் அது. "அம்மா என் ஷூஸ் எங்கே?" என்று கத்தியவாறே கீழே இறங்க அலுவலகத்திற்குச் செல்ல தயாராகி வந்த சாத்விக்கின் தாய் சந்தனா இடுப்பில் கைவைத்து முறைத்தார். மொத்த அழகையும், கம்பீரத்தையும் குத்தகைக்கு எடுத்தவர் போன்று சாதாரண காட்டன் புடவையிலேயே அத்தனை அழகாய் தெரிந்தார்.


நெற்றியில் சிறிய பொட்டு, காதில் சிறிய தோடு, கழுத்தில் சிறிய மாலை தன் கூந்தலை பொனிடேல் இட்டவாறு கறுப்பு, சாம்பல் நிற காட்டன் புடவையில் நின்று இருந்தார். வலது கையில் பிளெடின பிரேஸ்லட், இடது கையில் தங்கத்தில் கைக்கடிகாரம் ஒன்றைக் கட்டி அவனை முறைத்தார். "நீ இருக்கியான்னு செக் பண்ணி பார்த்தேன்" என்று கேவலமாக இளித்து வாசலில் துடைத்து வைத்திருந்த ஷூவை பார்த்தான்.


"சாப்பிட்டுப் போ விகி" என்று அழைத்து டயனிங் டேபளிற்குச் செல்ல அவனும் பின் தொடர்ந்தான் அவரை. அவனை அமர வைத்தவர் அவனுக்கு தட்டில் உணவை வைத்து ஊட்டி விட ஆரம்பித்தார். அப்போது சந்தனாவின் பி.ஏ வருகை தர, "பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க தனசேகர்" என்றவர் அவனுக்கு ஊட்டி முடித்து தனது புடவையின் தலைப்பாகத்தில் அவன் வாயைத் துடைத்து விட்டு, "ஒழுங்கா போய் படி. நான் அட்வைஸ் பண்ற அளவுக்கு எனக்கு வழி வைக்க மாட்டன்னு நினைக்குறேன்" என்று அவன் நெற்றியில் முத்தமிட்டு அனுப்பி வைத்து தானும் அலுவலகத்திற்குச் சென்றார்.


அதே போல் விசாலாட்சி, அவரது கணவனிடம் ஆசிர்வாதத்தைப் பெற்று கார்த்திக்கும் கல்லூரிக்குச் சென்றான். இருவருமே தங்கள் பைக்கிலேயே செல்ல இருவருமே ஒரே இடத்தில் பைக்கை நிறுத்த வர ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனரே தவிற இருவரும் விட்டுக் கொடுக்கவில்லை. நான் அசையப்போவதில்லை என்று நிற்க கார்த்திக்கின் நண்பர்கள் அழைப்பதைப் பார்த்தவன் நேரமாவதை உணர்ந்தவன் வேறு இடத்திற்குச் சென்று நிறுத்தினான்.


சாத்விக் கேலிப் புன்னகையுடன் அதே இடத்தில் நிறுத்தி விட்டு கல்லூரிக்குள் நுழைய அவனுடைய நண்பர்களோடு கலந்துக் கொண்டான். இருவரின் குழுவும் ஒன்றாக நுழைய சாத்விக், கார்த்திக் மீண்டும் ஒரே மேசையில் அமர முன் வந்தனர். நண்பர்கள் "நாம தான் பர்ஸ்ட் வந்தோம். விட்டுக் கொடுக்காத" என்று ஆர்பரிக்க, 'நீ எனக்கு பார்க்கிங்கல விட்டுக் கொடுத்ததுக்காக மட்டும்' என்ற பார்வையை செலுத்தி சாத்விக், "வாங்கடா வேற இடத்துக்கு போலாம்" என்று நண்பர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.


அன்றிலிருந்து இருவருக்கும் இடையில் பனிப்போர் ஆரம்பமானது. நண்பர்களும் அவர்களை ஊக்குவிப்பதால் இருவருக்கும் அதில் ஒரு போதை ஏற்பட்டது. இருவரும் மோதிவிட்டு அதில் யார் வெற்றி பெறுவது என்ற போட்டி ஒவ்வொன்றிலும் தொடர்ந்தது. படிப்பிலும் அதே போட்டி நடைபெற வகுப்பு இரண்டாக பிளவுபட்டது. கல்லூரியைப் பொறுத்தவரையில் அவர்கள் ப்ரவீன், ஆர்யன்.


கல்லூரி முழுவதுமே இருவரின் அழகும், கெத்தும் பரவி இருந்தது. இப்படி பனிப்போராக நடந்தப் போட்டிகள் அடிதடியாக மாறவும் ஒரு நாள் விதி வழிவிட்டது. கல்லூரியில் கிரிகெட் போட்டி நடைப்பெற கார்த்திக், சாத்விக் இருவரும் வெவ்வேறு அணிகளில் தெரிவு செய்யப்பட்டனர். இருவரின் அணியுமே இறுதி ஆட்டத்திற்கு தயாராக கல்லூரியே ஆர்யன், ப்ரவீன் என்று பிளவுபட்டு கத்தி ஆர்பரித்தனர்.


இதை போட்டியாக மட்டும் பார்க்காது கல்லூரியில் தமக்கான மரியாதையாகப் பார்த்து இருவருமே தவறிழைத்தனர். சாத்விக் அணி பெடிங்கை முடித்து கார்த்திக்கின் அணி பெடிங்கைப் பெற்றுக் கொண்டது. போட்டி சுவாரஷியமாக நடைப்பெற்றுக் கொண்டு இருக்க கார்த்திக் பெடிங் செய்ய சாத்விக் போலிங் பண்ண ஆரம்பித்தான். முதல் பந்தில் எவ்வித ஓட்டத்தையும் பெறவில்லை. இரண்டாவது பந்தில் நான்கு ஓட்டத்தைப் பெற்றான் கார்த்திக்.


மூன்றாவது பந்தை அதிவேகத்தில் சாத்விக் அவனைக் காயப்படுத்தும் வகையில் வீச அப்பந்து அவன் தலைக்கவசம் அணியாததால் கன்னத்தை பதம்பார்த்தது. அனைவரும் கத்திக் கூச்சலிட அம்பெயார் கடினப்பட்டு அனைவரையும் அடக்கினார். அடுத்து கார்த்திக் அவனைக் காயப்படுத்திய வெறியில் வேகமாக சாத்விக்கை நோக்கியே பந்தை திருப்பி அடிக்க பந்து சாத்விக்கின் கன்னத்தைப் பதம் பார்த்தது.


அடங்கி இருந்த நண்பர்கூட்டம் கத்திக் கூச்சலிட்டு இரு அணிகளாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்க ஆரம்பிக்க டூனமன்ட் எந்தவித வெற்றி தோல்வி இன்றி அவ்வாறே நிறுத்தப்பட்டது. இரு அணிகளுமே பலத்த காயத்திற்கு உற்பட்டு அடுத்த நாள் அதிபரின் அறைக்கு அழைத்துச் சென்று சஸ்பென்ட் செய்யப்பட்டனர். அதன் பின்னர் இது போல் நடக்காது என்று அனைவரிடமும் கடிதம் ஒன்றை வாங்கியே வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.


இவை கல்லூரியில் முதலாமாண்டு இறுதியிலேயே நடைப்பெற்றது. நேரடியாக மோதிக் கொள்ள முடியாத கார்த்திக், சாத்விக் இருவருமே அதை படிப்பில் காண்பித்தனர். ஒரு பாடத்தில் சாத்விக் உயர்புள்ளியைப் பெற்றால், அடுத்த பாடத்தில் கார்த்திக் பெற்றான். ஒவ்வொரு இடத்திலேயும் போட்டியே. கன்டீனில் ஒரு மேசையில் அமரவும் போட்டி; நடைப்பாதையில் நடக்கவும் போட்டி, வழிவிடவும் போட்டி; உணவை யார் வாங்குவது என்பதில் போட்டி; அதை யார் முதலில் உண்பது என்பதிலும் போட்டி.


இருவருப் வெற்றி, தோல்வி இரண்டையுமே சுகித்தே இருந்தனர். இவ்வாறு முதலாமாண்டு நிறைவடைய அக்கல்லூரிக்கு மித்ரன் வருகை தந்தான். மித்ரனும், கார்த்திக்கின் நெருங்கிய தோழன் கிஷோரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அத்தோடு கிஷோர் அஞ்சலியின் தமையன். மித்ரன் தன் ஊரில் பயின்றவன் இரண்டாம் ஆண்டில் சென்னையில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னையில் இதே கல்லூரியில் சேர்ந்தான்.


மித்ரன், கிஷோர், சாத்விக், கார்த்திக், ஆகாஷ் (சாத்விக்கின் நெருங்கிய தோழன்) என அனைவருமே ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள். இரண்டாம் ஆண்டு வருகைத் தந்ததும் அவர்களின் போட்டியும் அதிகமானது. காரணம் கல்லூரிக்கு வருகைத் தரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு இடையிலும் இவர்கள் இருவரும் இருவரின் போட்டியும் பிரசித்தமாக இருக்க அங்கேயும் ஆர்யன், ப்ரவீன் என்று வகுப்புகளும் பிரிவடைந்தன.


இவ்வாறு இருக்கும் போது இரண்டாம் ஆண்டின் ஆறு மாதங்கள் செல்ல கல்லூரியில் மறுபடியும் டூனமன்ட் ஆரம்பிக்க அதற்கு பொறுப்பாளராக சாத்விக், ஆர்யன் இருவரையுமே அதிபர் பிரச்சனைகள் வரக் கூடாது என்பதற்காக நியமித்தார். இதற்கிடையில் சீனியர், ஜீனியர் பிரச்சனைகள் இவர்களுக்கும் இவர்களது சீனியர்களுக்கு இடையிலும் ஏற்பட ஆரம்பித்தது.


ஏனென்றால் பொறுப்பை தங்களிடம் வழங்காமல் தங்களை விட சிறியவர்களிடம் அதிபர் கொடுத்தது சீனியர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அனைத்திலும் குறை கண்டுபிடித்தனர். அத்தோடு நிறுத்தாமல் ஜூனியர் ஒருவனை ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அனைவரின் முன்னிலையில் சீனியர் ஒருவன் தள்ளிவிட இது பெரும் பிரச்சனைக்கு வழி வகுத்தது.


ஜூனியர்கள் சீனியர்களிடம் சென்று தள்ளிவிட்டவன் தங்கள் நண்பனிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூற அவர்களோ மறுத்து விட்டனர். சாத்விக், "ஒரு பெட் வச்சுக்கலாம். இங்கே எங்களுக்கும் உங்களுக்கும் ஃபைனல் மெச் முடிஞ்ச பிறகு மேச் வைக்கலாம். அதுல நீங்க ஜெயிச்சா நாங்க அத்தனை பேரும் இனிமேல் நீங்க சொல்றபடி நடக்குறோம். நாங்க ஜெயிச்சா பெரிசா ஒன்னும் பண்ண வேணாம்.." என்று நிறுத்தி கார்த்திக்கைப் பார்த்தான்.


கார்த்திக், "எங்க ஃபிரன்டை தள்ளி விட்ட சீனியர் அவன் கிட்ட மன்னிப்பு கேட்கனும்" என்றான். இதுவே இவர்களிடையே உள்ள உறவு. எந்த மாதிரி பகை இருந்தாலும் தங்களுக்கு இடையில் வேறு நபர்களை வர விடமாட்டார்கள். தங்களோடு கற்பவனுக்காக இரு துருவங்களும் முதன் முதலாக ஒரே பாதையில் பயணிக்கத் தயாரானார்கள்.


ஃபைனல் மேச் முடித்தவுடன் சாத்விக் கூறியது போல் போட்டியை ஆரம்பிக்க ஜுனியர்களும், சீனியர்கள் வெற்றிக் கனியைப் பறிக்க வெறித்தனமாக விளையாடினர்கள். இருவரைப் பொருத்தவரையிலும் இருவருக்கும் மரியாதை பிரச்சனை. யாரும் யாருக்கும் வெற்றியை விட்டுக் கொடுக்கப்போவதில்லை. முதலாவதாக சீனியர்கள் பெடிங்கை தேர்ந்தெடுக்க 10 ஓவருக்கு 140 ஓட்டங்களை பெற்றதோடு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.


அதே போல் பத்து ஓவர்களில் ஆறு ஓவராகும் போது 53 ஓட்டங்களோடு எட்டு விகெட்டுகளைப் பெற்றனர். இறுதியா கார்த்திக், சாத்விக் இருவரும் பாட்னர்ஷிப்பைப் பெற்று விளையாட நான்கு ஓவர்களில் 88 ஒட்டங்களைப் பெற்று வெற்றி வாகையைச் சூடி மன்னிப்பையும் கேட்க வைத்தனர். இப்போட்டியையே இறுதிப் போட்டியை விட சுவாரசியமாக கண்டு களித்தனர். அதன் பிறகும் இருவரும் போட்டியிட, இருவரும் ஒன்றானால் நன்றாக இருக்குமென்று மற்றவர்களுக்குத் தோன்ற ஆரம்பித்தது.


இவ்வாறு இரண்டாம் ஆண்டும் கடக்க மூண்றாம் ஆண்டில் அனைவரும் காலடி எடுத்து வைத்தனர். இதற்கிடையில் கார்த்திக் நண்பர்களோடு சாத்விக்கும், சாத்விக்கின் நண்பர்களோடு கார்த்திக்கும் ஓரளவு நன்றாக பேச ஆரம்பித்தனர். கிஷோருக்கு ஸ்கொலர்ஷிப் ஒன்று ஃபோரினில் படிக்க வாய்ப்பு கிடைக்க அவனும் சென்று விட்டான்.


இந் நேரத்திலே அஞ்சலி இக் கலூரியில் பயில கார்த்திக்கின் வீட்டிற்கு வந்தாள். அங்கேயே தங்கி படிக்க ஆரம்பித்தாள். கார்த்திக்கிடம் அவனினதும், கிஷோரினதும் தங்கை எனக் கூற வேண்டாம் என்று அஞ்சலி வேண்டியதால் அவனும் சரி என்று விட்டான். இதைத் தெரிந்தால் அவளுக்கு சலுகைகள் கிடைக்கும் அதே நேரம் சாத்விக்கின் விசிறிகளால் பிரச்சனைகளும் வரலாம் என்று அமைதியாக இருந்தான்.


முதன் முதலாக கல்லூரியில் பயந்தவாறே செல்லும் போது சாத்விக்கின் கண்களில் விழுந்தாள் அஞ்சலி. பயந்து பயந்து மிரண்ட பார்வையுடன் நடந்து வருபவளைப் பார்த்த முதலில் அவனுக்குத் தோன்றியது சிறு குழந்தை அவள் என்றே. அவள் ரெகிங்கிற்கு பயந்து நடந்து செல்ல அவசரமாக அவள் முன்னே வந்து நின்றான் சாத்விக்.


"ரெகிங்கிற்கு பயந்து ஓடுற போல இருக்கே" என்று புருவமுயர்த்த திருதிரு என விழிக்க ஆரம்பித்தாள். சாத்விக் புன்னகையை இதழுக்குள் மறைத்தவன், "உன் பேர் என்ன?" என்றான். "அஞ்சலி" என்று கூற, "ஃபர்ஸ்ட் இயரா?" என்று வினவ அவளும் ஆம் என தலை அசைத்தாள். "உன்னை யாரும் ரெக் பண்ண மாட்டாங்க. நீ தைரியமா போ" என்று அனுப்பி வைத்து திரும்ப அவனுடைய நண்பர்கள் அங்கே குறுஞ் சிரிப்புடன் நின்றார்கள்.


அதை வைத்து அவனுக்கு ஓட்டித் தள்ள, "இனாஃப் காய்ஸ். அவ அழகா இருக்கா. அவ குழந்தை தனம் எனக்கு பிடிச்சிருக்கு. தெட்ஸ் இட்" என்று கூறிவிட்டான். அதன் பின் அஞ்சலியும் கல்லூரிக்குச் செல்லும் போது சாத்விக்கைத் தேட ஆரம்பிக்க சாத்விக் சில நாட்களில் அவள் முன் காட்சியளிப்பான். சில நாட்களில் மறைந்து அவள் தன்னைத் தேடு்தை இரசிப்பான். அதே போல் அவள் நண்பர்களுடன் இருக்கும் போது அவளுடைய குறும்புகளையும் அவள் அறியாமல் இரசித்தது உண்டு.


இவ்வாறு இருக்கும் போது ஒரு முறை அஞ்சலி தனியாக கல்லூரிக்குச் செல்லும் போது சில ஆண்களால் டீஸ் செய்யப்பட சாத்விக் அவளை அவர்களிடம் இருந்து காப்பாற்றினான். அதன் பிறகு அஞ்சலியும் தைரியமாக அவனுடன் பேச ஆரம்பித்தாள். கல்லூரியில் இருக்கும் போது புன்னகையுடன் கடப்பவர்கள் மாலை நேரங்களில் பேசுவார்கள். அஞ்சலியின் அழகின் மேல் முதலில் ஏற்பட்ட ஈர்ப்பு அவ்வாறே இருக்க தனக்கு காதலாக இன்னும் அவ் உணர்வு மாறவில்லை என்பதையும் உணர்ந்தே இருந்தான்.


பெப்ரவரி மாதத்தில் காதலர் தினமன்று அஞ்சலி மோதிரத்தைப் பரிசளித்து காதலைத் தெரிவிக்க சாத்விக்கும் அதன் பிறகு தன் மனதில் இருந்த ஈர்ப்பைப் பற்றிக் கூறினான். அதன் பிறகு இருவருடைய நெருக்கமும் அதிகமாக சாத்விக்கும் அவளுடைய குழந்தைத்தனத்திலும், காதலிலும் ஈர்க்கப்பட்டு காதலிக்க ஆரம்பித்தான். அவனுக்கு அஞ்சலி கார்த்திக்கின் தங்கை என்பது தெரியாமல் இருந்தது விதியின் செயலோ.


கல்லூரியின் மாணவர்களுக்கு இடையில் மாணவர் தலைவராவதற்கு தேர்தல் நடைபெற கார்த்திக்கும், சாத்விக்கும் எதிரணியில் போட்டியிட்டனர். இவ்வருடம் இறுதி ஆண்டு மாணவர்கள், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்ட போட்டியிட ஆரம்பித்தனர். பிரச்சாரங்கள் ஆரம்பிக்க ஒரு முறை சாத்விக் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒருவன் தக்காளியை வீச அது பிரச்சனையாக மாறி அடிதடியில் முடிய அதிபர் வோர்னிங்கோடு முடிந்தது.


இதை கார்த்திக்கின் ஆலோசணையில் அவன் நண்பன் செய்தான் என்று அறிந்து கார்த்திக்குடன் சண்டைக்குச் செல்ல சாத்விக் அதே போல் அவன் பேசும் போது மைக்கின் வயரைப் பிடிங்கி விட்டு அனைவரின் முன்னிலையிலும் அவமானப்படுத்தினான். அதற்கும் சண்டை உருவாக பிரச்சாரங்கள் எதுவும் தேவையில்லை என அதிபர் உறுதியாக கூறிவிட்டார்.


வாக்களிப்பு தினத்தில் கார்த்திக் நண்பர்களோடு அமர்ந்து இருக்க மற்றவர்கள் சிகரெட் பிடிக்க கார்த்திக் பென்சிலை வைத்து அவர்களைப் போல் பென்சிலை வைத்து சிகரெட் பிடிப்பது போல் பாவனை செய்ய அது புகைப்படமாக்கப்பட்டு உண்மையாகவே சிகரெட் பிடிப்பது போல் அப்படம் மாஃபிங் செய்யப்பட்டு வாக்களிப்பு பெட்டியில் போடப்பட்டது.


வாக்குகளை எண்ணும் போது அது அதிபரின் கைகளுக்குச் செல்ல கார்த்திக்கான் மீது அதிருப்தி அடைந்த அதிபர் அடுத்த நாள் அவனுக்கு திட்டித் தீர்க்க அங்கே தலைவராக வெற்றிப் பெற்ற சாத்விக் அவனைப் பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டுச் சென்றான். அவனது சிரிப்பிற்கு பின் அவனது நிலைமைக்கு சாத்விக்கே காரணம் என்று உணர்ந்த கார்த்திக் அவனுக்கான சந்தர்ப்பத்திற்காக காத்து இருந்தான்.


அஞ்சலி, சாத்விக்கின் காதலும் அழகாய் சென்று கொண்டு இருக்க தன் தாய் சந்தனாவிடம் அஞ்சலி என்ற பெண்ணை காதலிப்பதாகக் கூறி அவளுடைய புகைப்படத்தையும் காட்ட மகனின் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று அவளை ஏற்றுக் கொண்டார். அது மட்டுமல்லாது சாத்விக்கிற்கு தங்களது கம்பனியைப் பற்றியும் சிறிது கூறி அவனை பொறுப்பை எடுக்க வைக்கத் தயாரானார்.


இவ்வாறு இரணகலத்துடன் மூன்றாம் ஆண்டும் நிறைவடைய இறுதி ஆண்டில் கால் பதித்தனர் நாயகர்கள் இருவரும். சாத்விக்கின் காதலைப் பற்றி அறிந்தவர்கள் இரு நபர்கள். ஒரு நபர் தன் தாய். மற்றையவர் தன் நெருங்கிய நண்பன் ஆகாஷ். ஒரு முறை வீட்டில் இருக்கும் போது கார்த்திக் கீழே விழுந்து கால் ஃபிரக்சரானது. அதே நேரம் மற்றைய கல்லூரிகளுடன் நடைபெற இருந்த கிரிகெட் போட்டியில் அவனால் கலந்துக் கொள்ள முடியவில்லை.


டெல்லியின் கல்லூரியுடன் நடைப்பெற இருந்த இறுதிச் சுற்றுக்கு சாத்விக்கின் அணி தெரிவாக இருபது நாள் டெல்லியிற்கு பயணத்தை மேற் கொண்டான். அஞ்சலியிடமும், தாயிடமும் கூறிச் சென்று விட்டான். அவன் திரும்பி வரும் போது தன் காதலி இன்னொருவருக்கு நிச்சயக்கப்பட்டு இருப்பாள் என்பதை அவன் அறியவில்லை.


நகுலிற்கு பெண் பார்க்கும் படலம் நடைப்பெற அஞ்சலியின் புகைப்படம் அவர்களுக்குச் சென்றது. அவளைப் பார்த்தவுடன் நகுலிற்குப் பிடித்துப்போக அவளை பெண்கேட்டு சென்றனர் நகுலின் குடும்பத்தினர். அஞ்சலி முதலில் மறுக்க பின் அவனுடைய அழகும், ஆளுமையும், சாத்விக்கை விட அதிகமாக இருப்பதோடு பணவசதியும் அதிகமாக இருப்பதைப் பார்த்தாள். இருவரையும் ஒப்பிட்டுப் பாரக்க அனைத்திலுமே நகுலின் தராசு சற்று கீழிறங்க கணத்தை அதிகரிக்க திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள்.


தன் காதலைப் பற்றி யாருமே அறியாமல் இருந்தது நல்லது என்றே நினைத்தவள் எவ்வாறாவது சாத்விக்கை கழற்றிவிட வேண்டும் என முடிவு எடுத்துக் கொண்டாள். அதே போல் பூ வைத்து நகுல், அஞ்சலி இருவருக்கும் நிச்சயத்தை பெரியவர்கள் முடித்தனர். சனா, அபி, கார்த்திக்கின் குடுமபத்தினர் அனைவருமே அவர்களின் நிச்சயத்தில் கலந்துக் கொண்டனர். அவளக்கு நிச்சயமான விடயம் கல்லூரியில் இருப்பவர்களுக்கும் அரசல் புரசலாக கேள்வியுற்றது.


சாத்விக்கும், அவனது அணியும் வெற்றியைப் பெற்று டெல்லியில் இருந்து திரும்ப ஆகாஷ் இங்கே இருக்கும் தன் பெரியம்மாவின் வீட்டில் நான்கு நாட்கள் தங்கி விட்டு சென்னை வருவதாகக் கூறிவிட்டான். ஏனெனில் அவனின் பெரியம்மாவின் மகளுக்கு திருமணம் நெருங்கி வருவதால் அவனது குடும்பத்தாரும் அங்கேயே இருந்தனர்.


சாத்விக் சென்னைக்கு வந்தவன் அன்றைய தினம் தாயோடும் கொஞ்சியும் களைப்பிலும் கழித்தான். அடுத்தநாள் அவன் கல்லூரிக்குச் செல்ல அஞ்சலியின் நிச்சயம் பற்றி கேள்வியுற்றவனுக்கு திக்கென்று இருந்தது. இன்று ஏதோ தவறு நடக்கப் போவதாக மனது உறுத்த அதையும் மீறி அஞ்சலி இடைவேளையின் போது இருக்கும் இடத்திற்குச் சென்றான். அஞ்சலி தனியாக இருப்பதைப் பார்த்தவன் அவள் அருகில் சென்றான்.


சாத்விக், "என்ன அஞ்சலி, உனக்கு கல்யாணம்னு ஏதோ பேசிக்குறாங்க. நிச்சயமாச்சாமே. பொய் தானே எல்லாம்? நீ நம்ம காதலிக்கிறதை சொல்ல இல்லையா?" என்று பரிதவிப்புடன் வினவ, "எதை சொல்ல சொல்றிங்க? எந்த வேலையும் இல்லாம் இன்னும் படிக்கிற ஒருத்தனை விரும்புறேன்னா? என்னால கஷ்டபட முடியாது ப்ரவீன். நாம பிரிஞ்சிரலாம். நமக்கு செட்டாகாது" என்று எழுந்தாள்.


"இவளோ நாளா இல்லாமல் இப்போ என்னடி இது? நம்ம உறவுக்கு என்ன அர்த்தம்?" என்று கோபமாகக் கேட்க, "உங்களை விட எல்லாத்திலேயும் அவர் பெட்டர்னு அர்த்தம். உங்க கூட என்னால வாழ முடியாதுன்னு அர்த்தம்" என்றாள். அவன் கோபமாக அவள் கைபிடிக்க அதே நேரம் கார்த்திக்கும் அவனது நண்பர்கவும், சாத்விக்கின் நண்பர்களும் அங்கே வந்தனர்.


அஞ்சலியின் கைப்பிடித்து சாத்விக் இழுப்பதைப் பார்த்த அனைவருக்கும் அத்தனை அதிர்ச்சி. அஞ்சலியை தன் தங்கையாகவே பார்த்த கார்த்திக்கால் சாத்விக்கின் செயலை ஏற்க முடியவில்லை. அன்றைய கோபமும் இதோடு சேர்த்து அஞ்சலியை நெருங்கி தன் புறம் இழுத்தான். அவள் அமைதியாக கார்த்திக்கின் புறம் நிற்க இப்போது அதிர்ச்சியாவது சாத்விக்கின் முறையானது.


கார்த்திக், "என் தங்கச்சியோட கைபிடிச்சு இழுக்க உனக்கோ எவளோ தைரியம்?" என்று அவனது டீசர்ட்டைப் பற்ற சாத்விக் அவன் கையைப்பிடித்தவாறே, "இவ உன் தங்கச்சா?" என்று அதிர்ச்சியானான். "ஆமா என் தங்கச்சி தான். அவளுக்கு தான் இன்னொருத்தனோட நிச்சயம் பண்ணிட்டாங்கன்னு தெரியிதில்லை. அப்புறம் கையைப் பிடிச்சு இழுக்குற" என்று அடிக்க சாத்விக், "நான் சொல்றதை கேளு ஆர்யன்" என்று அவன் பேச முயற்சிக்க உண்மையைக் கூறி விடுவானோ என்ற பயத்தில் அஞ்சலி பேசினாள்.


"அண்ணா நான் கோலேஜூக்கு வந்ததில் இருந்து என் பின்னாடி காதலிக்கிறேன்னு சொல்லி சுத்தி டாச்சர் பண்றாரு. அதுக்கு பயந்து, நகுலையும் பிடிச்சு போய் தான் கல்யாணத்து ஒகே சொன்னேன். இப்போ இவரை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு கையைபிடிச்சு இழுக்குறாரு. இவருக்கு பயந்தே எதையும் சொல்ல இல்லை" என்று நீலிக் கண்ணீர் வடித்து தேம்பித்தேம்பி அழ கார்த்திக் மட்டுமின்றி அங்கிருந்தோர் அனைவருமே அஞ்சலியின் பயந்த சுபாவத்தை அறிந்ததால் அவள் கூறியதை அனைவருமே நம்பினர்.


அதன் பின் சாத்விக்கின் மேலுள்ள கோபத்தில் அனைவரும் அவனை அடிக்க அவனுடைய நண்பர்களும் அஞ்சலியின் கண்ணீரில் சாத்விக்கை யாரும் நம்பவில்லை. இவர்கள் கண்ணால் பார்த்ததும் உண்மையான சம்பவம் அல்லவா? சாத்விக்கு எத்தனை முறைக் கெஞ்சியும் அவனுடைய பக்க நியாயத்தைக் கேட்க முன்வரவில்லை.


பெண்களின் கண்ணீரிற்கே வலு அதிகம்; முதலிடம் என்பது சாத்விக்கின் விடயத்தில் உறுதியானது. ஆனால் தவறாக பயன்படுத்தப்பட்டு நல்லவர்களும் அதனால் காயம் அடைவதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.


கல்லூரியே அதே இடத்தில் கூடி விட பிரச்சனையை அறிந்த பிரின்சிபல் அங்கே விரைந்தார். இரத்தம் வழிய சாத்விக் அடிவாங்குவதைப் பார்த்தவர் சத்தமிட்டு அனைவரையும் நிறுத்தினார். என்ன விடயம் என்று விசாரிக்க கார்த்திக் சாத்விக்கை முறைத்தவாறே அனைத்தையும் கூறி முடித்தான். சாத்விக் அதை ஏற்கவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை. அமைதியாக நின்றான். அவர்கள் பேசப்பேச உள்ளுக்குள் தன்னை இறுக்கிக் கொண்டான்.


சாத்விக்கிடம் விசாரிக்க அவன் பதில் அளிக்காமையால் அவனை கல்லூரியில் இருந்து சஸ்பன்ட் செய்யப்பட்டான். ஆங்காங்கே கன்றிச் சிவந்து காலில் மிதித்ததால் ஒரு காலை நொண்டியவாறு இரத்தம் வழிய மிகுந்த அவமானத்துடன் கல்லூரியை விட்டு வெளியேறினான். நேரடியாக வைத்தியசாலைக்குச் சென்றான். தன் தாயிடம் இதை மறைத்து அங்கேயே இருந்தான்.


சாத்விக் செல்வதைப் பார்த்த கார்த்திக்கிற்கு ஏதோ போல் இருந்தது. அது என்று கூற முடியாத உணர்வு. அங்கே ஒரு ஜோடிக் கண்கள் வஞ்சம் நிறைந்த விழிகளுடன் சாத்விக்கைப் பார்க்க, மற்றைய ஜோடி விழிக் கண்ணோ உணர்வற்று அவனைப் பார்த்தது. இங்கே நடந்ததை வீட்டில் கூற வேண்டாம் என்று கார்த்திக் அஞ்சலியை அழைத்துச் சென்றான்.


அஞ்சலிக்கோ எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லை. அவன் சென்றதும் தப்பித்த உணர்வே நிம்மதியைத் தந்தது. வீட்டிற்குச் சென்ற போது அஞ்சலியைப் பார்க்க நாளை நகுலின் குடும்பத்தினர் வருகை தருவதாகக் கூற அவளும் அடுத்த நாள் அழகாகத் தயாராகினாள். அவளை அடுத்த நாள் அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் செல்ல அங்கே சாத்விக்கின் தாய் சந்தனா அஞ்சலியைப் பார்த்தார்.


அவர் அவளை நெருங்கி, "அஞ்சலி" என்று அழைக்க மற்றவர்கள் புரியாமல் அவரைப் பார்க்க அஞ்சலியும் யாரென்று தெரியாமல் அவளைப் பார்த்தாள்.."நான் சாத்விக்கோட அம்மா. உன்னை பொண்ணு கேட்கனும்னு நினைச்சேன். நீயே உன் குடும்பத்தோடு இருக்க. சந்தோஷமா இருக்கு" என்று கூற கார்த்திக் நக்கலாக, "அடுத்தவன் பொன்டாட்டியை நீங்க பொண்ணு கேட்பிங்களா?" என்றான் கார்த்திக்.


"இவங்க காதலிக்குறாங்களே" என்று புரியாமல் கேட்க, "இவ காதலிக்க இல்லை. உங்க புள்ளை காதலிக்குறான். இவளை காதலிக்க சொல்லி டாச்சர் பண்றான். இதே உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து இன்னொருத்தன் இப்படி பண்ணா சும்மா இருப்பிங்களா? இவளுக்கு நிச்சயம்னு தெரிஞ்சதும் அவ கையைப் பிடிச்சு இழுத்து மிஸ்மிகேவ் பண்ண பார்க்குறான். சே ஆம்பளையா அவன்?" என்று முகம் சுருக்கினான்.


கார்த்திக் பேசப் பேச அவர் நெஞ்சில் சுருக்சுருக்கென்று ஒரு வலி மேலே எழும்பியது. அங்கிருந்த ஒருவர், "ஆம்பளை பிள்ளையை ஒழுங்கா வளர்க்க துப்பில்லை. இதுல பொண்ணு கேட்குறாங்க. என்ன பெத்தவளோ" என்றார் ஒருவர். "சே என்ன ஜென்மம். இதைப் போல ஒரு பையனை பெத்ததுக்கு நாக்கைப் பிடுங்கிட்டு சாகலாம்" என்றார்.


ஒருவர் மாற்றி ஒருவர் சாத்விக்கையும், சந்தனாவையும் பற்றி தவறாகப் பேசினர். அஞ்சலியின் நீலிக் கண்ணீரும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் இருக்க மென்மேலும் அவரை அவமானப்படுத்தினர். கோயிலில் இருப்போரும் அவரை அருவெருத்துப் பார்த்தார். கார்த்திக், "இதுக்கு அப்புறமா ஒழுங்காக உங்க புள்ளையை வளர சொல்லுங்க. நேத்து கோலேஜே அவனை அடிச்சி வெளியே துரத்திட்டோம். அவனை பிரின்சிபலும் சஸ்பென்ட் பண்ணிட்டாரு" என்று இறுதியாகக் கூற அவன் இறுதியாகக் கூறியதில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தார்.


அதன் பிறகு சாத்விக்கிற்கு அவனது தாயை வைத்தியசாலையில் அனுமதித்து இருப்பதாகத் தகவல் வந்தது. அவனும் காயங்களோடு வருகை தர டிரைவரை வைத்து வேறு ஒருவர் மூலம் கோயிலில் நடந்த அனைத்தையுமே கூற கார்த்திக்கின் மீதிருந்த கோபம் பல் மடங்குப் பெறுகியது. நேற்று தனக்கு வாய்பளிக்காமல் இருந்தது இன்று தாயின் இந்நிலமைக்கு அவனே காரணம். தன் மேல் உள்ள கோபத்தை வெளிக்காட்டாது பொறுமையாக அவன் பேசியிருந்தால் தாய்க்கு இவ்வாறு ஒரு நிலை வந்திருக்காதே என்று உள்ளுக்குள் மருகி வன்மத்தை வளர்த்துக் கொண்டான்.


அன்று இரவு முழுவதும் அவசரபிரிவு சிகிச்சையிலேயே இருக்க அதிகாலையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று டாக்டர்கள் கைவிரிக்க தாய் தன்னைப் பேச இறுதியாக அழைப்பதால் அங்கே சென்றான். "என்னை ஒரு குட்டி பொண்ணு பார்த்துகிட்டா. ரொம்ப நல்ல பொண்ணு விகி. அவளை கண்டுபிடிச்சி கல்..." என்றதோடு வேகமூச்சுகள் எடுக்க அவர் உயிர் பிரிந்தது.


"அம்மா" என்ற கதறலில் ஹொஸ்பிடலே அதிர்ந்தது. தனக்கு தாயாய் மட்டுமில்லாது தோழியாய், தந்தையாய் இருந்து வழிநடத்தியவர் சந்தனா. தனக்காக வேறு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் அவனுக்காகவே வாழ்ந்தார். ஒற்றை ஆளாய் நின்று தன்னை தொழில் நிரூபித்தார். அவனுக்கென்று உலகில் இருந்தே ஜீவன் அவன் தாய்.


வைத்தியசாலையில் வைத்து மாத்திரமே அழுதவன் அதன் பிறகு அழவில்லை. தனக்குள் இறுகிக் கொண்டான். கார்த்திக்கை பழி வாங்க வேண்டும் என்ற வெறி அவனை இறுக வைத்தது. இறுதி பரீட்சையை கல்லூரியில் அதிபரிடம் கூறி தனி வகுப்பறையில் எழுதி வந்தவன், நண்பர்களைப் பார்க்காமல் தாயின் பி.ஏவின் மூலம் பீச் ஹவுசையும், தாயும் அவனும் வாழ்ந்த வீட்டையும் மட்டும் விட்டு கம்பனி முதல் அனைத்தையும் விற்றான்.


அப்பணத்தை எடுத்து அவுஸ்திரேலியாவிற்குச் சென்று தொழிலை ஆரம்பித்தான். அங்கே அவனுக்கு பக்கபலமாக தியா, முகேஷ் இருவரும் இருந்தனர். அன்று வளர்ப்புத் தங்கைக்காக தனக்கு பேச ஒரு வாய்ப்பளிக்காமல் இருந்தானோ, தன் தாயை அனைவரின் முன் அவமானப்படுத்தினானோ அதே போல் அவன் உடன் பிறந்த தங்கைப் பாசத்தை வைத்தே அவனை பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்தான். அஞ்சலிக்கான தண்டனையை கார்த்திக்கிற்கான தண்டனையை முடித்த பிறகு வழங்க வேண்டும் என வெறி கொண்டான்.


தாய்க் கூறிய அச்சிறுப்பெண்ணைத் தேட அவளைப் பற்றிய எந்த ஒரு தகவலும் இன்று வரை அவனுக்குக் கிடைக்கவில்லை. அவன் சனாவை வைத்து பழிவாங்க நினைக்க அவனோ சனாவினுள் அவன் அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி அவளே தன் வாழ்வுக்கான அர்த்தம் என்று உணர்ந்து அவளை தக்க வைத்துக் கொண்டான்...






கருத்துக்களை பகிர,


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23469


அத்தியாயம் 29






தங்கள் கல்லூரியில் நடந்த கசப்பான நாட்களை இருவரும் தத்தம் துணைகளிடம் கூறினர். சாத்விக்கிற்கு தன் தாயை நினைத்தும், தனக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைத்தும் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டு இருந்தான். இன்னும் அவனுக்கு மனம் அமைதியடையவில்லை. சனாவிற்கு சாத்விக் கூறியதைக் கேட்டதும் அவன் அனுபவித்த கஷ்டங்களை எண்ணி அழுகை வந்தது.


சாத்விக்கை தன் நெஞ்சில் சாய்த்தபடி கேவிக் கேவி அழுதாள். அவன் தாய் இறந்த போது எதிர்பார்த்த ஆறுதலையும், பாதுகாப்பையும் அவனை தன்னோடு சேர்த்து அணைத்து அதன் மூலம் வழங்கினாள். அன்றைய கணவனின் நிலை அவளுடைய மனதை அதிகமாகவே பாதித்து இருந்தது. உனக்கு நான் இருக்கிறேன் என்றே அவ் அணைப்பு அவனுக்கு உணர்த்தியது.


வெகு நேரம் அதே நிலையில் இருக்க கண்ணீரைத் துடைத்தவன் சனாவை எழுப்பி தன் மடியில் அமர்த்திக் கொண்டான். அவள் கண்களில் இருந்து வழியும் கண்ணீரை துடைத்தவன், "இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு ஜானு" என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தான். சனா, "என்ன சவீன்?" என்று கேட்க, "ஒரு மகனுக்கு வாழ்க்கையில வரக் கூடாத ஒரு நிலை தான் எனக்கு" என்று கூற துக்கம் அவன் தொண்டையை அடைத்தது.


சனா அவனை புரியாமல் பார்க்க, "என் பிறந்த நாள் இன்னைக்கு. என் அம்மா என் பிறந்த நாளன்னைக்கு தான் இறந்தாங்க. எந்த பிள்ளக்காவது இதை தாங்க முடியுமா? கடவுள் அதையும் எனக்கு தான் கொடுத்து இருக்காரு. அவங்கவங்க பிறந்த நாளைக்கு அவங்க சந்தோஷமா இருந்தால் நான் மட்டும் இறுகிப் போய் இருப்பேன். அழவும் மாட்டேன். என் ஃபீலிங்சை மத்தவங்களுக்கு காட்ட பிடிக்காது.


இத்தனை வருஷமா தனியா போய் இருந்தேன். பட் இன்னைக்கு உன் முன்னாடி என் இறுக்கம் தகர்ந்து போயிருச்சு பேபி. ஏனோ இன்னைக்கு அத்தனையையும் உன் கிட்ட சொல்லி கத்தி அழனும் போல இருக்கு. நான் அழுதா நீயும் அழற. அது எனக்கு பிடிக்க இல்லை" என்று அவள் நெற்றியில் மோதிய முடியை காதிற்கு பின்னே எடுத்து சொருகி விட்டான்.


"என் சவீன் இன்னையோட கடைசியா அழுது முடியட்டும். மறுபடியும் இதை நினைச்சு அழ கூடாது. என் அத்தையும் அதை விரும்ப மாட்டாங்க" என்று அவன் முகத்தைக் கையிலேந்தி அவனுடைய நெற்றியில் இதழ்பதிக்க கண்களை இறுக மூடிக் கொண்டான். "ஹ்ம்.. நான் அழ மாட்டேன் ஜானு. என் ஜானுவை கஷ்டபடுத்துற எதையும் என்னால பண்ண முடியாது" என்று புன்னகைத்தான்.


"எனக்கும் அம்மாவும் இல்லை. அப்பாவும் இல்லை. அந்த மொத்த பாசத்தையுமே எனக்கு கொடுத்தது என் அண்ணா. அவன் இதையெல்லாம் பண்ணதுன்னு சொல்லும் போது என்னால நம்ப முடியல்லை. ஆனால்.." என்று அவனுடைய முகத்தைப் பார்க்க சாத்விக்கின் முகமோ இறுகி இருந்தது. "உன் அண்ணா செய்ய இல்லைன்னா நான் பொய் சொல்றேனா?" என்றான் ஒரு மாதிரிக் குரலில்.


சனா, "இல்லைங்க" என்று அவசரமாக மறுக்க, "உன் அண்ணனைப் பத்தி பேசும் போது என் அம்மாவோட இறப்பு என் கண்ணு முன்னாடி வருது. சோ இதைப் பத்தி பேசாத. என்னால கேட்கவும் முடியாது" என்று கடுமையுடன் கூறியவன், "அஞ்சலி எனக்கு பண்ண துரோகத்தையும் மறக்க முடியாது. உன் அண்ணா என்னை அவமானப்படுத்தியதையும், அம்மா சாவுக்கு காரணமானதையும் மறக்க முடியாது" என்றான்.


அவன் முகத்தை மீண்டும் தன் புறம் திருப்பி கையிலேந்தியவள், "நான் பேச மாட்டேன் சவீன்" என்றவள் தயங்கித் தயங்கி, "நீங்க அஞ்சலி அக்காவை காதலிச்சி இருக்கிங்களே. இப்போ காதலையும் உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு புரியிது. அன்னைக்கு என் கிட்ட என்னை காதலிக்க இல்லை. பட் நான் வேணூன்னு சொன்னிங்க. ஒரு கணவன் மனைவிக்கு இடையில காதல் இல்லைன்னா அந்த வாழ்க்கை நரகமாயிடும்" என்று கூறி பயத்தில் எச்சிலை விழுங்கினாள்.


சாத்விக், "இப்போ நீ என்ன கேட்க வர்ர? அந்த காதல் இன்னும் என் மனசுல ஒரு ஓரத்துல இருக்கான்னா? இல்லை உன்னை காதலிக்காம வாழ முடியாதுன்னா?" என்று புருவமுயர்த்த இக்கேள்விக்கு என்ன பதில் கூறுவது எனத் தெரியாமல் விழித்தாள். அவள் முகப் பாவனையைப் பார்த்து சிரிப்புன் அவள் நெற்றியை முட்டியவன், "என்னால உன் கிட்ட பொய் சொல்ல முடியாது" என்றான்.


"ஆரம்பத்துல எனக்கு அவ மேலே ஈர்ப்பு இருந்தது உண்மை. அப்புறமா அது காதலா மாறினதும் உண்மை. அவ உயிரா நேசிச்சதும் உண்மை. எப்போ அவ ஒரு பச்சத் துரோகின்னு தெரிஞ்சதோ முழுமையாக அவளை மனசுல இருந்து தூக்கி வீசிட்டேன். அவ மேலே வெறுப்பு வெறுப்பு மட்டுமே இருக்கு. அவ என் முன்னாடி வந்து நின்னு, ஏன் என்னை தொட்டாலும் எனக்கு எந்தவித ஃபீலிங்சும் வராது.


ஏன்னா என் உணர்வுகள் எல்லாமே ஜானுன்னு ஒரு பொண்ணு கிட்ட அடிமையாகி இருக்கு. இப்போவும் சொல்றேன் நான் உன்னை காதலிக்க இல்லை. காதல்னு சொன்னாலே எனக்கு அந்த துரோகம் கண்ணு முன்னாடி வருது. காதலிச்சவ இல்லாமல் எல்லோர் முன்னாடியும் வாழ்ந்து காட்டினேன். பட் நீ இல்லாமல் ஒரு நிமிஷம் கூட என்னால கடக்க முடியாது.


உன் மேலே இருக்கிற உணர்வுக்கு பெயர் என்னன்னு எனக்கு தெரியாது. அது காதலுக்கும் மேலே. அதை எப்படி உன் கிட்ட விளக்குறதுன்னோ, உருவகப்படுத்துறதுன்னோ தெரியல்லை ஜானு. நீ இல்லைன்னா நான் இல்லை. நான் வாழனும்னா கண்டிப்பா நீ வேணூம். இதுக்கு மேலே நான் என்ன சொல்றது?" என்று அவள் கண்களை தவிப்புடன் 'புரிஞ்சிக்கோயேன்' எனப் பார்த்தான்.


காதல் என்றால் அவன் மனதில் ஆழமாய் கீறப்பட்டு இருந்த காயத்தை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அவ் வடு நிச்சயமாக இந்த ஜென்மத்தில் மறையாது என்பதையும் உணர்ந்துக் கொண்டாள். காதலை விட மேலான உணர்வு உன் மீது உள்ளது என்பதை விட ஒரு பெண்ணிற்கு ஒரு ஆணின் வாழ்வில் அவளுடைய இடம் என்ன என்பதை விளக்க முடியாது.


மனதில் பூரிப்புடனும், அதீத சந்தோஷத்துடன் அவனுடைய முகம் முழுவதும் தன்னுடைய இதழ்பதிக்க ஆரம்பித்தாள். இவ்வாறு ஒரு தாக்குதலை சாத்விக் சனாவிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை. முதலில் திணறியவன், "பேபி கொல்றடி" என்று முணகினான். அவன் இதழில் வந்து நின்று தயங்கி அவனைப் பாவமாய்ப் பார்க்க கண்மூடி அவ் இனிமையை இரசித்து இருந்தவன் அவள் தயக்கத்தில் கண்களைத் திறந்தான்.


அவள் தன் இதழைப் பார்த்து தயங்குவதைப் பார்த்து தற்போது அவள் முத்த தாக்குதலை அவளுடைய இதழலில் தனதாக்கிக் கொண்டான். அவளுடைய இதழை முழுமையாக தன் முரட்டு இதழ்களுக்குள் அடக்கிக் கொண்டு சப்பித் திண்றான். வெகுநேரமாக இதழ் யுத்தத்தைத் தொடர்ந்தான் கள்ளுண்ட வண்டைப் போல்.


அவள் மூச்சிற்கு சிரமப்பட அவளுக்கு சற்று அவகாசத்தை வழங்கியவன் மீண்டும் இதழில் யுத்தத்தை ஆரம்பித்தான். இருவரின் காதலின் வெளிப்பாட்டிற்கு இடையில் மோகமும், தாபமும், காமும் எப்போது குடியேறியது என்று அவர்களே அறியவில்லை. அவளை தனது அறைக்கு அழைத்து வந்தவன் மோகமும், தாபமும் மேலிட்டு, "ஐ நீட் யு பேட்லி ஜானு" என்று அவள் காதில் கிசுகிசுக்க நாணத்தில் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.


அவள் சம்மதத்தை உணர்ந்தவன் அவள் மனதிலும், தனக்கு அவள் எவ்வளவு முக்கியம் என்பதையும் காதலும், காமும், தாபமும், மோகமும் போட்டியிட அவளுக்கு தன் செய்கையால் மென்மையாகவும், வன்மையாகவும் காட்டினான். அவள் மென்மையில் மயங்கி அவளில் பித்தானவன் மீண்டும், மீண்டும் அவளை நாடி இல்லறத்தில் தங்கள் முதல் காலடியை எடுத்து வைத்தனர் சாத்விக்-சனா தம்பதியினர்.


அங்கே கார்த்திக்கும், அபியும் என்ன பேசுவது என்று தெரியாமலேயே அமைதியாய் நின்று இருந்தனர். கார்த்திக், "அவன் அஞ்சலிக் கிட்ட தப்பா நடந்தததால என்னால சனாவை அவனுக்கு கட்டிக் கொடுக்க முடியல்லை" என்று தோட்டத்தை வெறிக்க, பெரு மூச்சை விட்ட அபி, "அண்ணா தப்பு பண்ணி இருப்பிங்கான்னு நினைக்குறிங்களா?" என்று வினவினாள்.


கார்த்திக், "அப்போ கண்ணால பார்த்தது பொய்யாகுமா? அஞ்சலியோட பயமும் கண்ணீரும் பொய்யா?" என்று கோபமாய் கேட்டான். அபி, "கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். இந்த வாசகத்தை கேட்டதில்லையா மாமா?" என்றாள் கையை மார்பிற்கு குறுக்காக கையைக் கட்டிக் கொண்டு.


கார்த்திக், "இப்போ நீ என்ன சொல்ல வர அபி? நான் பண்ணது தப்புன்னா? அஞ்சலி, சனா இரண்டு பேருமே எனக்கு தங்கச்சிங்க. அந்த இடத்துல சனா இருந்தாலும் நான் இதை தான் பண்ணி இருப்பேன். சனாவை அந்த இடத்துல வச்சிப்பாரு ஒரு அண்ணனா என்னோட உணர்வு உனக்கு புரியலாம்" என்றான் கோபமாக.


அபி, "நான் இல்லைன்னு சொல்லவே இல்லையே மாமா. அண்ணாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவே இல்லையே. தூக்கு தண்டனை கைதிக்கு கூட ஒரு வாய்ப்பு பேச கொடுப்பாங்க. நீங்க அவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவே இல்லை. அதே போல அவங்களை கேட்காமல் நீங்க அடிச்சதும் தப்பு. அண்ணாவோட அம்மாவைப் பார்த்து பொறுமையா பேசாததும் தப்பு தான்" என்றாள் உறுதியாக.


கார்த்திக், "எனக்கு சாத்விக் அம்மாவை பேசினது தப்புன்னு எனக்கும் தெரியும். எனக்கு குற்ற உணர்ச்சி அதிகமாவே இருக்கு. அவங்க நெஞ்சைப் பிடிச்சு விழுந்ததும் எனக்கும் கஷ்டமாயிருச்சு. அன்னையிலிருந்து நான் எதையும் பொறுமையா கையாளனும்னு நினைச்சேன். பட் தங்கச்சின்னு வரும் போது என் கொள்கை எல்லாமே பறந்துருது" என்றான் கவலை தோய்ந்த குரலில் கண்களை இறுக மூடி பல்கனிக் கம்பியை இறுகப் பற்றியவாறே.


அவன் கையை ஆதரவாகப் பற்றிய அபி, "ஃபீல் பண்ணாதிங்க மாமா. அண்ணா கோலேஜ் விட்டு போனதும் ஆகாஷ் அண்ணா ஒன்னும் சொல்ல இல்லையா?" என்று ஆகாஷ், சாத்விக் இருவரின் நட்பை நினைத்துக் கேட்க, கார்த்திக், "பேசினான். இந்த விஷயத்தை முதலில் கேள்வி பட்டு எங்க அத்தனை பேர் கூடவும் சண்டை போட்டு சாத்விக் தப்பு பண்ணி இருக்க மாட்டான்னு சொன்னான்" என்றான்.


தொடர்ந்த கார்த்திக், "நாங்க நம்ப இல்லை. அவன் ஃபிரன்ஸ் கூடவும் சண்டை போட்டவன் நம்பிக்கை இல்லாத நட்பு தேவையே இல்லைன்னு எக்சேம் முடிச்ச உடனே அவனும் டெல்லிக்கு போயிட்டான். இன்னைக்கு வரைக்கும் மீட் பண்ண இல்லை. யார் கூடவும் கன்டெக்ட்ல இல்லை. மித்ரன் தான் கஷ்டபட்டு அவனை தேடி கண்டு பிடிச்சான். சாத்விக் ஊரூக்கு வந்திருக்கிறது மித்ரன் மூலமா அவனுக்கு தெரிஞ்சிருக்கு.


ஜனவரி ஃபர்ஸ்ட் செலிப்ரேஷனுக்கு வரேன்னு சொல்லி இருக்கான். (பகுதி 2 ல் வரும் - கண்சிமிட்டும் தென்றலே ) சாத்விக்கையும் அப்போ மீட் பண்றேன்னும் அவன் எங்க கூட பேசினால் அவனும் பேசுறேன்னும் சொல்லி இருக்கான். இப்போ அவனுக்கு ஆறு மாசம் ஒரு பெண் குழந்தை இருக்காம் கல்யாணம் பண்ணி. அவங்க இரண்டு பேரோட நட்பை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு" என்று சிலாகித்தான்.


அபி, "எனக்கு அவங்க நட்பை பார்க்கும் போது புல்லரிக்குது மாமா. இரண்டு பேரும் இன்னும் பார்த்துக்கவே இல்லை. பட் ஒருத்தர் மேலே ஒருத்தர் எவளோ அன்பு வச்சிருக்கிறாங்க" என்று புளாங்கிதமுற்றாள். "ஹ்ம்ம். நாங்க அத்தனை பேரும் சாத்விக்கை நம்ப இல்லை. அவன் நம்பினான். கடைசி வரைக்கும் அவன் போராடினான்" என்றான். அதில் சிறு பொறாமையும் ஒளிந்து இருந்தது.


அபி, "இப்போவும் கண்டிப்பா உங்க இரண்டு பேருக்கும் இடையில எங்களுக்குத் தெரியாமல் மோதல் நடந்து இருக்கும். என்ன நடந்தது?" என்று வினவ, கார்த்திக்கும் இருவருக்கும் இடையில் நடந்த அனைத்தையுமே கூறினான். "அப்போ நீங்க உங்க பேர்சனலையும், பிஸ்னசையும் ஒன்னா கலந்து அண்ணாவை சீண்டி இருக்கிங்க ரைட்?" என்று ஒற்றைப் புருவமுயர்த்த, "சனா மேலே இருக்கிற பாசம் என்னை யோசிக்க விட இல்லை. அவனுக்கு ஏதாவது பண்ணனும்னு தோணுச்சு" என்றான் தலைக்கவிழ்ந்து.


'இனிமேல் நான் உங்களுக்கு புரிய வைக்க தேவையில்லை மாமா. ஏன்னா நீங்க புரிஞ்சிக்கிற மனநிலமையிலும் இல்லை. சாத்விக் அண்ணா சனாவை நிச்சயமா இந்த அளவுக்கு அசிங்கபடுத்த நினைச்சு இருக்க மாட்டாரு. எனக்கே எங்கேயோ தப்பு நடக்குதுன்னு புரிஞ்சி இருக்கு. நீங்களும் புரிஞ்சிக்கனும். அதுக்கு ஒரே வழி தான்" என்று நினைத்தவள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என முடிவு எடுத்தாள்.


கார்த்திக், "செல்லம்மா" என்று தோள் தொட யோசணையில் இருந்து வெளியே வந்தாள் அபி. "என்ன நயா?" என்று வினவ 'ஒன்றும் இல்லை' எனத் தலையாட்டினாள். "என் மேலே கோபமா?" என்று பரிதாபமாக வினவ, "கோபம் இல்லை மாமா வருத்தம். சனா மேலே இருக்கிற கண்மூடித்தனமான பாசம் உங்க கண்ணையும், அறிவையும் மறைக்கிறதுல வருத்தம். நீங்க ஃபீல் பண்ணாதிங்க. நான எல்லாத்தையும் பார்த்துக்குறேன்" என்று அவனை அணைத்துக் கொண்டாள்.


கார்த்திக்கும் அபியை அணைத்துக் கொண்டவன், "எனக்கு மனசு ரொம்ப வலிக்கிது செல்லம்மா. நான் தப்பு பண்ணால் எனக்கு திட்டி சரி பக்கத்துல இருந்தே சொல்லி கொடு. என்னை விட்டு தூர போகாத. பக்கத்துலேயே இரு" என்று சிறு குழந்தையென புலம்பித் தள்ளினான்.


அபி, "நான் எதுக்கு மாமா உங்களை விட்டு போக போறேன். தப்பு பண்ணா ஒரு அம்மாவா உங்களை கண்டிப்பேன். அம்மாவால தன் குழந்தையை தப்பு பண்ணதுக்காக வெறுக்க முடியாது. மன்னிச்சு அவங்களை திருத்துவாங்க" என்று அவன் நெற்றியில் இதழ்பதித்தாள்.


இருவரும் ஒருவர் அணைப்பில் ஒருவர் வெகு நேரம் இருக்க அபியின் வாசணை அவன் உணர்வுகளைத் தூண்ட அங்கே மோகமும், தாபமும் மேலிட எப்போது மஞ்சத்திற்குச் சென்றனர் என்பதை அறியாது ஒருவருள் ஒருவர் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பித்தனர். இனிமையான இல்லறம் அங்கே நடந்தேறியது.


சாத்விக் மாலை நேரம் கண்களைத் திறக்க தன் நெஞ்சில் முகம் புதைத்து சுகமாய் உறங்கும் தன்னவளையே பார்த்தான். "பாரு எப்படி குட்டி பொண்ணா இருக்கான்னு? முதல்ல இவளுக்கு சாப்பிட கொடுத்து வளர்த்து எடுக்கனும்" என்று சிரித்து தலையின் உச்சியில் இதழ்பதிக்க, "ச்ச்" என்று தலையை தடவி விட்டு மீண்டும் சனா உறங்க, "ஜானு எந்திரிடி சாப்பிட போலாம்" என்று காதுமடலில் மீசை உரசினான்.


"எனக்கு தூக்கம் வருது. சும்மா டிஸ்டர்ப் பண்ணாம போங்க" என்று மீண்டும் அவனையே அணைத்து உறங்க, 'என்னை போக சொல்லிட்டு இவளே என்னை கட்டிபிடிச்சால் நான் எப்படி போறதாம்?' என்று வாய்க்குள்ளேயே முணகி விட்டு தன் ஜானு எழும் வரையில் மீண்டும் உறங்கினான். சில மணி நேரத்தில் மீண்டும் கண்விழிக்க அருகில் சனா இருக்கவில்லை.


'எங்க போனா?' என்று எழுந்து குளித்து வெளியே தேட சாமியறையில் குளித்து அவனது பெற்றோரின் படத்திற்கு முன்னே விளக்கேற்றி விட்டு அங்கே நின்று சாமி கும்பிட்டுக் கொண்டு இருக்க சாத்விக்கும் அமைதியாக அவள் அருகே நின்று சாமி கும்பிட்டான். அவள் கண்கள் திறக்க அருகில் இருந்த கணவைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைய இன்றைய தினம் நினைவிற்கு வர வெட்கத்தில் நாணித் தலைக் குனிந்துக் கொண்டாள்.


சாத்விக் அங்கிருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி வகுட்டில் வைத்தவன், "குங்குமத்துக்கு போட்டியா உன் கன்னமும் ரெட்டா இருக்கு பேபி" என்று கிசுகிசுக்க, அவனை தள்ளி விட்டு அங்கிருந்து வெளியே வர தியாவும், முகேஷூம் இருவரையும் பார்த்து கிண்டலாக சிரிக்க சாத்விக்கின் பின்னே ஒளிந்துக் கொண்டாள் சனா.


முகேஷூம், தியாவும் இருவரையும் கிண்லடிக்க சனா சமைக்கிறேன் என்ற பெயரில் சமையலறைக்குள் ஓட அங்கே இருவரிடமும் மாட்டிக் கொண்டான் சாத்விக். "சமைக்க முன்னாடி இரண்டு பேரும் சாப்பிடுங்க" என்ற தியாவின் குரல் கேட்க சமையல் அறையில் இருந்த சனா நாக்கை கடித்துக் கொண்டாள். பின் இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.


இவ்வாறு இருஜோடிளினதும் இல்லற வாழ்க்கை சந்தோஷமாகவும், நிம்மதியாகச் சென்றாலும் சாத்விக் கொடுத்த தண்டனையில் இருந்த மீள முடியாமல் திணறினான் கார்த்திக். அவன் நிலையயைப் புரிந்துக் கொண்ட அபி சாத்விக்கை மொபைல் மூலமாகத் தொடர்பு கொண்டாள்.


முகேஷ், தியா இருவருமே மீண்டும் அவுஸ்திரேலியா சென்று விட்டதால் சாத்விக் சனா தனிமையில் இருப்பதால் அவளுடனேயே நேரத்தைக் கழிக்க விரும்பினான். சனாவின் மடியில் சாத்விக் படுத்து அவர் விரல்களை ஆராய்ச்சி செய்தவாறே கதைகள் பேச சனாவின் மற்றைய கையோ அவனுடைய தலையைக் கோதிக் கொண்டு இருந்தது.


அப்போதே அபி அழைக்க சனாவைப் பார்த்தவாறே அழைப்பை ஏற்றான். சனாவின் கண்களில் தெரிந்த ஆர்வத்தையும் அவன் குறித்துக் கொண்டான். "சொல்லுமா அபி" என்று அழைப்பை ஏற்றவுடனேயே கூற, "அண்ணா உங்க கிட்ட பேர்சனலா பேசனும். பிளீஸ்" என்றாள். சாத்விக், "எதுக்கு பிளீஸ்? நீ பேசினால் நான் கேட்க போறேன். அதை விட்டுட்டு" என்று உரிமையாய் கடிந்துக் கொண்டான்.


அபி, "உங்க தங்கச்சிக்கா ஒரு உதவி பண்ணுங்க அண்ணா. மாமாவை சத்தியமா பார்க்க முடியல்லை. சந்தோஷமா இருக்கிறது போல இருக்காரு. ஆனால் எதையோ தொலைச்ச ஃபீலிங் அவருக்குள்ள தெரியிது. சனா இல்லைன்னா அவரோட லைஃப் கம்ப்ளீட் ஆகாது. பிளீஸ் அண்ணா எனக்காக ஒரு முறை அவரை சனாவை பார்க்க விடுங்களேன். அவரு செஞ்ச தப்பை நீங்களும் செய்யாதிங்க. அவரு எல்லாமே அவரோட அவசர புத்தியால செஞ்சி இப்போ கஷ்டபடுறாரு. நீங்களும் அதையே பண்ணாதிங்க" என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.


சாத்விக்கும் தனது ஆட்களின் மூலம் கார்த்திக்கைப் பற்றி அறிந்தே இருந்தான். சனாவின் ஆர்வமான பார்வையும், அபியின் கெஞ்சலும் அவனை அசைத்துப் பார்த்தது. சனாவின் மடியில் இருந்து எழுந்தவன் அவள் அருகில் அமர்ந்து அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன், "என் அம்மாவோட பையன் இன்னும் உள்ளுக்குள்ள இருக்கான் அபி. அவன் மத்தவங்க உணர்வுகளை புரிஞ்சிக்கக் கூடியவன்" என்று நிறுத்தினான்.


"என் மனைவிக்காகவும், உனக்காகவும் மட்டுமே சொல்றேன். உன் புருஷனை மன்னிக்க முடியுமான்னு கேட்டால் எனக்கு பதில் தெரியாது. பட் உங்க இரண்டு பேரோட சந்தோஷமும் எனக்கு முக்கியம். அதனால நான் எங்கே இருக்கேன்னு சொல்றேன்.நாங்க டாஸ்லிங்ல இருக்கோம். அட்ரஸ் அனுப்புறேன் உன் புருஷனை கூட்டிட்டு வந்து சேரு" என்று அழைப்பைத் துண்டித்தான்.


இரண்டு நாட்களின் முடிவில் அவர்களின் வீட்டின் முன்னே வந்து நின்றனர் அபியும், கார்த்திக்கும். சாத்விக் கதவைத் திறந்து இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான். மாளிகைப் போன்று இருந்த வீட்டில் மகாராணியைப் போன்று முகத்தில் பொலிவுடனும், பூரிப்புடனும் சாத்விக்கின் மனைவியாய் கீழே ஓடி வந்தாள்.


தோற்றத்தில் அவன் மனைவியாக இருந்தாலும் நான் இன்னும் உனது தங்கையாகவும் இருக்கிறேன் என்று கார்த்திக்கை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் சனா. இருவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தன. இருவருக்கும் பேச நா எழவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. "ஜானு முதல்ல உன் அண்ணனை உட்கார சொல்லு. அப்புறமா பாசமலர் படத்தை ஓட்டுங்க" என்று இருவரின் நிலையையும் உணர்ந்து கிண்டலடித்தான்.


அபி அதற்கு சத்தமாக சிரிக்க, சனா சாத்விக்கை முறைத்து, "உங்களுக் பொறாமை. உங்க தங்கச்சி இருக்காளே !! நீங்களும் அவ கூட பாசமலர் படத்தை ஓட்டுங்க. யாரு வேணான்னு சொன்னது?" என்று நாக்கை துருத்திக் காட்டினாள். "ஒகே" என்று தோளை உழுக்பியவன் சிவாஜி கணேஷன் போன்று, "தங்கச்சி" என்று இழுக்க அபி, "அண்ணா" என்றாள். "தங்கச்சி" "அண்ணா" என்று இழுத்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு வராத கண்ணீரை ஒருவரை ஒருவர் மாற்றி கண்ணீரை துடைத்துக் கொண்டனர்.


இருவரையும் பார்த்து சிரித்த சனா கார்த்திக்கின் தோள் சாய்ந்துக் கொண்டாள். அவன் வருகையில் இருந்தே சனாவின் மாற்றங்களைக் கவனித்தான். அதிகமாகப் பேசாதவள் இன்று சாத்விக்குடன் ஒன்றுக்கொன்று பேசியது; அவள் தோற்றத்தில் ஏற்பட்ட பொலிவு; முகத்தில் தோன்றியுள்ள சந்தோஷத்துடன் கூடிய பூரிப்பு என்பவற்றைப் பார்க்க தங்கையின் விருப்பம் இல்லாமல் திருமணம் ஏற்பாடு செய்ததை நினைத்து குற்ற உணர்ச்சியில் தத்தளித்தான்.


அவன் முகமாற்றத்தை உணர்ந்த சனா, "அண்ணா பழசை விடு. இப்போ நடக்க போறதை பார்க்கலாம்" என்று சமாதானம் செய்தாள். சாத்விக், கார்த்திக் இருவரும் பேசாவிடினும் சண்டை இடவும் இல்லை. அன்றை தினம் அபி-கார்த்திக் இருவரும் பயணக் களைப்பு தீர கழிய சனா அண்ணனின் வருகைக்காக சந்தோஷத்துடன் வலம் வந்தாள்.


அடுத்த நாள் காலையில் சனாவும், அபியும் தோட்டத்தில் அமர்ந்து இத்தனை நாட்கள் பேச முடியாத கதைகளைப் பேச, சாத்விக் சோஃபாவில் அமர்ந்து வேலையைப் பார்க்க கார்த்திக் சாத்விக்கை பார்த்தவாறே சிந்ததித்தான். "ரொம்ப நேரமா என்னை பார்த்து சைட் அடிக்காத ஆர்யன். நான் அழகுன்னு எனக்கும் தெரியும்; என் பொன்டாட்டிக்கும் தெரியும். அவ இதைப் பார்த்தால் துடைப்பை கட்டையால சாத்துவா உன்னை" என்று சிரியாமல் மடிகணனியில் பார்வையை பதித்தவாறே பேசினான்.


"உனக்கு அந்த நினைப்பு இருக்கா? மூடிட்டு வேலையை பாரு" என்றான் கடுப்பாக. அப்போது இருவரையும் மனம் திறந்து பேச வைக்கும் திட்டத்துடன் அங்கே வருகை தந்த அபியும், சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் அவர்களைப் பேசிப்பேசியே தங்கள் வழிக்குக்குக் கொண்டு வந்தவர்கள் இருவரையும் பேச வைத்தனர்.


அதில் பல அதிர்ச்சியான தகவல் தெரிய இருவருக்கு இடையிலும் வேறு ஒருவன் இருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டனர். அதன் பின் அன்று சாத்விக்கின் பெயரில் வெளியான மெசேஜ், போடோ என்பவற்றை அனுப்பி வைத்த மர்மநபர் பற்றி அறிந்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர் இருவரும்.







கருத்துக்களை பகிர,


 
Status
Not open for further replies.
Top