All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாணி கார்த்திகனின் "நீ வேண்டும் நான் வாழ" - கதை திரி

Status
Not open for further replies.

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
22377

அத்தியாயம் 10



சாத்விக் காலையிலேயே கல்லூரிக்குச் செல்லாமல் நேரடியாகவே தனது அலுவலகத்திற்குச் சென்றான். காரணம் இன்று மாலை சனாவை வெளியே அழைத்துச் செல்வது என முடிவெடுத்து இருந்தான். அவளோடு செலவளிக்கும் நேரத்தை எண்ணும் போதே மனதில் வர்ண மத்தாப்பூக்கள் பூத்துக் குலுங்கின. கோலேஜ் முடிந்தவுடன் சனா, அபி இருவரும் வருகைத் தர அங்கே கார்த்திக் வந்திருந்தான். இருவருமே புன்னகையுடன் அவனை நெருங்கினார்கள்.

கார்த்திக், "நான் அபியை கூட்டிட்டு வீட்டுக்கு போறேன் பட்டு. இன்விடேஷன் எடுக்க போகும் முன்ன சாமி கும்பிட சொன்னாங்க அத்தை..நாங்க பிரஷ்ஷாகிட்டு சாமி கும்பிட்டு இன்விடேஷன் எடுக்க போறோம். இப்போ டிரைவர் வருவாரு. நீ போய் விந்தியாவை மீட் பண்ணு" என்றவன் தங்கை தனியாகச் செல்ல பயப்படுவாளோ என்று எண்ணி, "உன்னால தனியா போக முடியுமா பட்டு?" என்று தீவிரக் குரலில் வினவினான். "ஆமா அண்ணா. என்னால முடியும்" என தனக்கும் சேர்த்தே தைரியத்தை வருவித்துக் கூறினாள்.

அதே நேரம் சனாவை அழைத்துச் செல்ல காரும் வருகைத்தர சனா இருவரிடமும் கூறி காரிலேற கார்த்திக்கும் ஆயிரம் பத்திரம் கூறி தங்கள் காரில் ஏறி வீட்டை நோக்கி பயணிக்க சனா திருமண கன்ட்ரெக்ட் எடுத்து நடத்தும் விந்தியாவைப் பார்க்கச் சென்றாள். மாலை சனாவை அழைத்துச் செல்ல கல்லூரி வளாகத்திற்குள் சாத்விக்கின் கார் நுழைந்த போதே கார்த்திக்கை பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்து சாத்விக்கின் கண்களில் பழிவெறி தாண்டவமாடியது.
சிறிது நேரத்தில் சனாவும், அபியும் வருகைத்தர அவர்களுடன் ஏதோ பேசினான். பின் சனா வேறு காரில் ஏற கார்த்திக் தனது காரில் அபியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லும் பாதையில் பயணிக்க, சனாவின் கார் எதிர் பாதையில் பயணித்தது. ஏதோ ஒரு திருமண வேலை என்பதை யூகித்தவன் சனா செல்லும் காரைப் பின்தொடர்ந்தான். அத்தோடு சனாவிற்கும் தனது மொபைலில் இருந்து அழைப்பை விடுத்தான்.

சாத்விக்கின் அழைப்பைப் பார்த்தவள், அதை ஏற்றாள். சனா, "ஹலோ" என்க, "எங்கே போயிட்டு இருக்க பேபி?" என்றான் சாத்விக். "கன்ட்ரெக்டர் விந்தியாவை பார்க்க போறேன்சேர்" என்று உடனடியாக பதிலளிக்க, "நான் உன்னை போலோ பண்ணி தான் வரேன். நீ அவங்களை மீட் பண்ண உள்ள போகும் போது கொஞ்ச நேரம் லேட் ஆகும்னு சொல்லி டிரைவரை வீட்டுக்கு அனுப்பு. மறுபடியும் போன் பண்ணும் போது வாங்கன்னும் மறக்காமல் சொல்லு" என்றவன் அவள் பேச இடமளிக்காது அழைப்பைத் துண்டித்தான்.

'இந்த காட்டுபையலை!!!!...' என சாத்விக்கை நினைத்து பல்லைக் கடித்தாள். அவன் கூறுவதை செய்யா விட்டால் நிச்சயமாக ஏடாகூடமாக ஏதாவது செய்து வைப்பான் என்று அறிந்தவள் அவன் கூறியது போலவே கூற வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள். விந்தியாவின் அலுவலகத்திற்குள் கார் நுழைய காரில் இருந்து இறங்கிய சனா சாத்விக் கூறியது போன்றே அச்சிப்பிசகாமல் கூற டிரைவரும், 'சரி மா' என்று சென்று விட்டார்.

அவள் பயந்தவாறே உள்ளே நுழைய சாத்விக்கின் கை அவளது கையோடு கோர்க்கப்பட்டு அழுத்தத்தை வழங்குவதன் மூலம் ஆறுதல் கூறியது. அவள் அதிர்ந்து பார்க்க குறும்பாகச் சிரித்து கண்சிமிட்டினான். அவள் நாணத்தில் வேறு புறம் திரும்பிக் கொண்டே இருவருமே நடந்தனர். விந்தியாவைப் பார்க்க வேண்டும் என்று கூற விந்தியா அவசர வேலை ஒன்றிற்காக வெளியே சென்று இருப்பதாகவும் வேலை முடித்து வர சில மணித்துளிகளாகும் என விந்தியாவின் உதவியாளர் மொழிந்தார்.

பின் அவரிடமே சனா அனைத்தையும் கூறி என்ன செய்ய வேண்டும்? என விளக்க விந்தியாவின் உதவியாளர் அனைத்தையுமே குறிப்பெடுத்தார். அனைத்துமே முடிந்ததும் நாளை விந்தியாவை சந்திப்பதாகக் கூறி சாத்விக், சனா இருவருமே விடைப் பெற்றனர். விந்தியாவிற்கு சனாவை கார்த்திக்கின் தங்கை என்ற ரீதியில் நன்றாக அறிவாள். அதனாலேயே சனாவும் தைரியமாக அவளை சந்திக்க வருகைத்தர அவளது கெட்ட நேரமோ அவள் இருக்கவில்லை. பயத்துடன் இருந்தவளை சாத்விக் அழைத்து வந்து நல்ல நேரமாக மாற்றினான்.

நல்ல நேரம் என்பதற்கான காரணம் சாத்விக்குடன் சனா வந்ததைப் பார்த்து இருந்தால் நிச்சயமாக கார்த்திக்கிடம் கூறியிருப்பாள். அதிலிருந்து சாத்விக்கும் தப்பிக் கொண்டான். இருவரும் வெளியேற, "நான் டிரைவரை கூப்பிடட்டுமா?" என்று அவனிடம் அனுமதி வேண்ட, "இல்லை வேணாம் பேபி. நீ என் கூட ஒரு இடத்துக்கு வா" என்று அவளை தன் காரிற்குள் அழைத்துச் செல்ல சாத்விக்கின் கார் அங்கிருந்து பறந்து சென்றது.

'எங்கே கூட்டிட்டு போறான் இந்த காட்டுப் பையன்' என அவனைப் பார்ப்பதும் வெளியே வேடிக்கைப் பார்ப்பதுமாக வர, "பேபி என்ன கேட்கனுமா இருந்தாலும் நேரடியாக கேளு. கழுத்தை திருப்பி திருப்பி இருக்காத" என்றான் சிரிப்புடன். அவளும் தைரியத்துடன், "இப்போ எங்க போறோம்" என்று வினவ, "அது போனதுக்கு அப்பொறமா தெரிஞ்சுப்ப" என்று சாலையில் கவனத்தைப் பதித்தான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் அழைத்து வந்த இடத்தைப் பார்த்து அதிர்ந்து விட்டாள். இது அவனுடைய பீச் ஹவுஸ். காரை நிறுத்தியவன் அவளை அழைக்க மிரட்சியாக அவனைப் பார்த்தாள். சுற்றுப் புறம் இருந்த அழகு அவள் கண்களை ஈர்க்கவில்லை. அவள் கண்களை முழுமையாக பயமே சூழ்ந்து மற்றையதை மறைத்து இருந்தது. அவள் பயத்தை உணர்ந்தவனின் மனதில் தன்னை தவறாக உணர்ந்துக் கொண்டாளே என்ற வலி சுருக்கென தைத்தது.
முகம் இறுகியவன் "நான் தப்பானவன் இல்லை பேபி. உன்னை கிஸ் பண்ணுவேன். கட்டிபிடிப்பேன். பட் உன் அனுமதி இல்லாமலோ உன் கழுத்துல தாலி ஏறாமலோ நான் உன்னை எடுத்துக்க மாட்டேன். அந்த அளவுக்கு கேடு கெட்ட பொறுக்கி இல்லை நான்" என்றான் உஷ்ணக் குரலில். அவன் முகம் இறுகியதையும், அவன் குரலில் தென்பட்ட அடக்கப்பட்ட கோபத்தையும் பார்த்தவள் தன் மடமையை எண்ணி நொந்துக் கொண்டாள். தேவையே இல்லாமல் அவனை தானே சீண்டி விட்டதாகவே நினைத்தாள்.
"அது நான் அப்படி நினைக்க இல்லை..." எனத் தட்டுத்தடுமாறிக் கூற, "எனக்கு பொய் சொன்னா பிடிக்காது சனா" என்று குரலை உயர்த்த மருண்ட பார்வையுடன் வாயை மூடிக் கொண்டாள். தன் கோபத்தை சிகையை அழுந்த கோதி அடக்கியவன், அவள் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் செல்ல சிறிதாக அவன் மனநிலை மாறியது; சனாவின் வீட்டை இரசிக்கும் பார்வையில். "இது என் அம்மாவுக்காக அப்பா கட்டின வீடு. அப்பா இறக்கும் போது கம்ப்ளீட் பண்ணி இருக்க இல்லை. அம்மாவுக்கு ரொம்ப கவலை" என்றான்.

அவன் கூறும் போதே குரல் கமர ஆரம்பிக்க, சனா என்ன நினைத்தாளோ அவன் கையை ஆதரவாகப் பற்றினாள். அவனும் அவள் கையை இறுகப் பற்றியவாறே தொடர்ந்தான். "அம்மா என் கிட்ட படிக்கும் போதே சொன்னாங்க. நீ தான் இந்த வீட்டை கம்பளீட் பண்ணனும். நீ கல்யாணம் பண்ணி உன் குழந்தைகளை என் புருஷன் நினைவுகளோட இந்த வீட்ல கொஞ்சனும்னு சொன்னாங்க. அவங்க சொன்னது போலவே இந்த வீட்டை கம்பளீட் பண்ணேன். ஆனால் அதைப் பார்க்க இப்போ அம்மா இல்லை" என்று கூறும் போதே குரல் தழுதழுத்தது.

அவன் உடைந்து அமர சனாவும் அவன் அருகில் அமர்ந்துக் கொள்ள அவளை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தான். அவள் முதுகில் ஈரம் படர்வதை உணர்ந்தவள், "அழாதிங்க சேர். நீங்க அழறதை பார்த்தா மேலிருந்து உங்களை பார்க்குற அம்மாவும், அப்பாவும் ரொம்ப பீல் பண்ணுவாங்க" என்று முதுகை வருடியவாறே ஆறுதல் கூற அவனும் புரிந்து அவளிடம் இருந்து விலகி சனாவிற்கு முகம் காட்டாமலேயே கண்ணீரை அழுந்த துடைத்தான்.

தன் பெரூமிச்சில் தன்னை சமன்படுத்தியவன், "இந்த வீட்டுக்கு என் மனைவியை பர்ஸ்டா அழைச்சிட்டு வந்தேன். எப்படி இருக்கு இந்த வீடு? அப்பா கட்டினது, அம்மாவோட இரசணைக்கு போல. நீ வீட்டை சுத்தி பாரு நான் கார்ல சில திங்ஸ் வச்சிருக்கேன் அதை எடுத்துட்டு வரேன்" என்று வெளியே சென்றான். அவன் மீண்டும் உள்ளே நுழையும் போது சனா மரத்தாலான வேலைப் பாடுகள் கொண்ட கதவுகளை வருடிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
"கிச்சனுக்குள்ள இருக்கேன் பேபி. ஏதாவது தேவைன்னா பேசு" என்று பொருட்களை அடுக்கி வைத்தவன் இருவருக்கும் காபி போட தயாரானான். சனா அனைத்தையும் பார்த்துக் கொண்டு கிச்சனிற்குள் நுழைய சாத்விக் இருவருக்கும் இரண்டு கப்பில் காபியை ஊற்றிக் கொண்டு இருந்தான். "காபி போட தெரியுமா சேர் உங்களுக்கு?" என்று உற்சாகமாய் வினவ, "எனக்கு சமைக்கவும் நல்லா தெரியும் பேபி. உனக்கு ருசியா சமைச்சி தரேன் என் வீட்டுக்கு வந்ததிற்கு அப்புறமா" என்றான் குறும்புடன்.
அதை கவனிக்காதது போல் பாவனை செய்தவள், "என் அண்ணாவும் நல்லா சமைப்பான் சேர். நான் அவன் சமையலுக்கு ரொம்ப பெரிய விசிறி" என்று தமையனின் சமையலை எண்ணி சிலாகித்துக் கூற சாத்விக் அமைதியாக ஒரு கப்பை அவளிடம் வழங்கினான். அவளும் அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள். ஒரு மிடறு அருந்தியவன், "நான் பழிவாங்குறதுக்கு தான் இப்படியெல்லாம் பண்றேன்னு சொன்னேனே உனக்கு ஞாபகம் இருக்கா பேபி?" என்று நிதானக் குரலில் வினவினான்.

அவள் சாத்விக்கின் முகத்தையே கலவையான உணர்வுகளோடு பார்க்க, "நான் யாரை பழிவாங்கனும்னு நினைக்குறேன் தெரியுமா?" என்று அவன் புருவமுயர்த்த பெண்ணவளின் இதயம் தரிகெட்டு வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவன் அழுத்தமான குரலில் அவள் கண்களைப் பார்த்தவாறே, "உன் அண்ணனை தான் பழிவாங்கனும்னு நினைக்கிறேன். அதுக்கான காரணத்தை இன்னொரு நாள் சொல்றேன்" என்க சனாவிற்கோ உலகே இருண்டது போல் ஒர் எண்ணம்.

அவள் சமநிலையற்று தடுமாற சாத்விக் அவளை தாங்கி சமையல் அறையில் இருந்த திட்டில் அமர வைத்தான். ஒரு இயலாமையுடன் சாத்விக்கைப் பார்த்தவள், "எங்க அண்ணன் நிச்சயமா தப்பு பண்ணி இருக்க மாட்டான் சேர். அதை என்னால உறுதியா சொல்ல முடியும். நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கிங்கன்னு நினைக்கிறேன்" என்று கலங்கிய குரலில் கூற கண்களும் கலங்கி விட்டன.

"ஆமா ஆமா உன் அண்ணன் ரொம்ப நல்லவன். நான் தான் கேடு கெட்டவன். அப்படி தானே?" என்று கொதித்து எழுந்தான். "நான் அப்படி சொல்ல வர இல்லை சேர்?" என்று அவசரமாக பதிலளிக்க, "வேற எப்படி?" என்றான் எள்ளளுடன். "சேர் என் அம்மா, அப்பா இறந்தப்போ எனக்கு என்னை சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம இருந்தேன் சேர். சாப்பிடனும், படிக்கனும், தூங்கனும்,விளையாடனும் எதுவுமே எனக்கு தெரியல்லை..
எனக்கு ஞாபகத்துல இருந்தது எல்லாமே என் அப்பா, அம்மா தான். அண்ணாவுக்கும் ரொம்ப கவலை. ஆனால் எனக்காக அதையெல்லாம் மறைச்சிட்டு என்னை தேத்துவான். அவன் தனியா போய் அழுவான். எனக்கு ஆறுதல்படுத்த அவன் இருந்தான். அவனுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இருக்க மாட்டாங்க சேர். அவன் அழறதை பார்த்ததில் இருந்து தான் நான் அழறதை நிறுத்தினேன். அத்தை வீட்ல தான் கொஞ்ச நாள் இருந்தோம்.

ஆனால் என்னால் அங்க சுதந்திரமா இருக்க முடியாதுன்னு மறுபடியும் வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டான். என்னை ஸ்கூலுக்கு அனுப்ப அவன் காலையிலேயே எந்திரிப்பான். அம்மா, அப்பா இருந்த வரைக்கும் அவன் காலையில எந்திரிச்சி நான் பார்த்ததே இல்லை. எனக்காக எந்திரிச்சி நான் ஸ்கூல் போக அத்தனையையும் ரெடி பண்ணி தருவான். அவனுக்கு சமைக்கவே தெரியாது. கஷ்டபட்டு சமைப்பான். கையை கூட வெட்டி கிருவான். சூடும் பட்டிருக்கு.

அதையெல்லாம் பெரிசுபடுத்தமாட்டான். தோசை செஞ்சால் முதல் இரண்டு கருகி இருக்கும். அவன் அதை எடுத்துட்டு நல்லதை எனக்கு கொடுப்பான். சில நாளைக்கு எனக்கு மட்டும் சாப்பிடுற அளவு தான் சாப்பாடு நல்லா இருக்கும். அதை என்னை சாப்பிட வச்சுட்டு அவன் பட்டினியில இருப்பான்" என்று கூறும் போதே குரல் கரகரக்க, தாரை தாரையாக கண்ணீர் வழிய மேலும் தொடர்ந்தாள். "என்னை அநாதைன்னு யாருமே சொல்ல விடமால் பார்த்துகிட்டான். என் ஸ்கூல் மீடிங்கை அவன் கோலேஜை கட் பண்ணிட்டு அடென்ட் பண்ண வருவான்.

அதுக்கு திட்டும் வாங்குறாத அத்தை சொன்னாங்க. எனக்கு யாரும் இல்லைன்னு நினைக்க ஓரு நிமிஷம் கூட விடமாட்டான். முழுநாளும் வேலை. நான் ரொம்ப நாளா அம்மா, அப்பா பாதிப்புல இருந்து வெளி வரவே இல்லை. அதனால எந்த வேலையுமே பண்ண மாட்டேன். அதுக்காக ஒரு நாள் கூட அண்ணா கோபப்பட்டது கிடையாது. நான் பெரியவளானப்போ என் அண்ணன் தான் அம்மா மாதிரி பார்த்துகிட்டான். அதில் இருந்து தான் நான் நோர்மலானேன்.
அப்புறமா அண்ணாக்கு உதவி செய்ய ஆரம்பிச்சேன். அவன் காலையில எனக்கு வேலை செஞ்சிட்டு கோலேஜ் போவான்.

ஈவீனிங் என்னை டியூஷனுக்கு அனுப்பி வச்சிட்டு ஓபிஸ் போய் கம்பனியை பாரத்துட்டு நைட் சமைச்சி என்னை படிக்க வச்சு தூங்க வைப்பான். அப்புறமா தான் அவன் படிக்கிறதே. ரொம்ப நேரம் கழிச்சி தூங்கி சீக்கிரமாவே எந்திரிச்சிருவான். இதான் அவன் டெய்லி வேர்க்.

அண்ணா கஷ்டபடுறதை பார்த்து நான் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிச்சேன். அத்தையை வீக்கென்டுல வர சொல்லி இரண்டு பேருமே சமையலை கத்துகிட்டோம். இப்படி எங்க வாழ்க்கை போச்சு. மாமா இறந்த பின்னாடி அபியையும், அத்தையையும் இங்கே கூட்டிட்டு வந்தான். அத்தை எங்களை ரொம்ப பாசமா பார்த்துபாங்க. அத்தை நமக்கு இன்னொரு அம்மான்னு சொல்லுவான்.

யாருக்குமே கெட்டது நினைச்சதே இல்லை. எல்லோருக்குமே நல்லது தான் பண்ணுவான். எல்லோருக்குமே மரியாதை கொடுப்பான். இப்படி பட்ட அண்ணனை பழிவாங்கனும்னு சொல்றிங்க சேர். நீங்க பழிவாங்க நினைக்கிறிங்கன்னா கண்டிப்பா அண்ணா ஏதாவதூ தப்பு பண்ணி நீங்க அதனால பாதிக்கப்பட்டு இருக்கனும். இவளோ நல்லவன் உங்க விஷயத்துல மட்டும் எப்படி சேர் தப்பு பண்ணி இருப்பான்" என்று நீண்ட விளகத்தைக் கூறி சாத்விக்கை கெஞ்சலாகப் பார்த்தாள்.

"உன் அண்ணனுக்கும் எனக்கும் எப்போவுமே ஒத்துபோகாது சனா. உன் அண்ணன் உனக்கும் உன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கும் ரொம்ப நல்லவன் தான். ஆனால் எனக்கு இல்லையே. என் இடத்துல இருந்து ஐந்து நிமஷம் அவன் யோசிச்சு பார்த்து பண்ணி இருக்கலாம்..ஆனால் அவன்..." என்று நினைக்கும் போதே கண்கள் சிவந்து நரம்புகள் புடைக்க நின்று இருந்தான். "என்னோட பிரன்ஸ் யாருமே என்னை நம்ப இல்லை. உன் அண்ணன் சொல்றான்னா கண்டிப்பா சரியா இருக்கும்னு அத்தனை பேரும் நம்பினாங்க.
அந்த நம்பிக்கை அவன் உடைச்சிட்டான் என் விஷயத்துல. செய்யாத ஒரு தப்புக்காக நான் அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு எனக்குன்னு இருந்த எல்லாத்தையுமே இழந்துட்டு நிற்க காரணம் உன் அண்ணன் தான். உன் அண்ணன் நான் சொல்றதை கேட்டு இருக்கலாமே. பழைய பகையை மனசுல வச்சிட்டு நான் கெஞ்சுறதை கூட கேட்காமல் என்னை அடிச்சான். அப்போ எல்லாம் நான் துடுக்கான பையன். இப்போ நான் அரக்கனா மாறி இருக்க காரணமே உன் அண்ணன் தான்..." என்று கோபமாக சுவரில் கைமுஷ்டியால் குத்தினான் கோபம் குறையும் வரையில்.

சனா மிரண்டு அவனைப் பார்க்க இரத்தம் வழியும் கைகளுடன் அரக்கனைப் போலவே நின்று இருந்தான். "உன் அண்ணனை பழிவாங்கனும்னு தான் நான் இந்தியா வந்தேன். அவனைப் பத்தி தேடினேன். அப்போ தான் அவனுக்கு உயிரே நீதான்னு தெரிஞ்சிது. உன்னை இரண்டு வருஷமா வொச் பண்ணி என் பிஸ்னஸ் பூரா இந்தியாவுக்கு மாத்தி உன்னை வச்சு கேம் பிளே பண்ணனும். உன் அண்ணை அவமானப்படுத்தனும்னு நினைச்சேன்.

உன்னை தேடி வந்து உன்னை என் வலையில விழ வைக்கனும்னு நினைச்சேன். உன்னை கஷ்டபடுத்தினால் உன் அண்ணன் துடிப்பான்னு ஒரு சின்ன கணக்கு போட்டேன். அதனால் உன்னை எப்பாடு பட்டாவது என் கன்ட்ரோலுக்கு கொண்டு வந்து உன் அண்ணனை தவிக்க வைக்கனும்னு நினைச்சேன். ஆனால் நடந்தது வேற. உன்னை என் வலையில விழவைக்கிறேன்னு உனக்குள்ள நானே விழுந்துட்டேன்.

உன்னை கஷ்டபடுத்த என்னால முடியாதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா பிளேனையே சேன்ஜ் பண்ணேன். உன்னை என் மனைவியா மாத்தி உன் அண்ணனை துடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்" என்று கூறியவன் அலட்சியப் பாவனையுடன் அமர்ந்து காபியைப் பருகினான். சனா அதிர்ந்து அவனைப் பார்த்தவள், அவனை தானே மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில், "என் அண்ணா இஷ்டம் இல்லாமல் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்றாள் நிமிர்வாக.

"ஹாஹாஹா...." என்று சத்தமாக சிரித்தவன், அடுத்த நொடி உக்கிரமாக மாறி அவள் பின் கழுத்தில் கூந்தலுடன் சேர்ந்து பிடித்தவன் தன் முகம் நோக்கி இழுத்தான். அவளது முகம் வலியில் சுருங்க அதைக்கூட இப்போது இருக்கும் அரக்கனால் உணரமுடியவில்லை. சனாவின் சாத்விக்கை முழுமையாக அடக்கி முழுமையாக அவன் பழி வெறி கொண்ட அரக்கன் ப்ரவீனாக மாறி இருந்தான்.

"எனக்கு உன் அனுமதியோ இஷ்டமோ தேவையில்லை. இதுல உன் அண்ணன் இஷ்டத்தை நான் எதிர்பார்ப்பேன்னு நீ எப்படி நினைச்ச?" என்று உறுமியவன் அலட்சியமாய் உதட்டைச் சுழித்தான். சனாவின் உடல் பயத்தில் நடுங்க அதைப் பொருட்படுத்தாதவன், "நீ என் பொன்டாட்டி தான். நான் எப்போவோ பிக்ஸ் ஆயிட்டேன். என் கிட்ட இருந்து உன்னாலேயும் தப்பிக்க முடியாது. உன் அண்ணனாலேயும் தப்பிக்க முடியாதுடி" என்று கர்ஜித்தவன் வேகமாக அவளை தள்ளவிட்டான்.

அவள் கீழே விழுந்து தன்னை சமாளித்துக் கொண்டாள் அடியேதும் படாமல். அவள் அதே நடுக்கத்துடன் சாத்விக்கைப் பார்த்து, "சேர்.." என்று மெல்லிய குரலில் அழைத்தாள். அவன் உஷ்ணப் பார்வைப் பார்க்க, "என் அண்ணனை விட்டுடுங்களேன். பிளீஸ்.. அவன் பாவம் சேர். என்னால என் அண்ணனை கஷ்டபடுத்த முடியாது. அதுக்கு நான் என்ன வேணூன்னாலும் பண்ணுவேன்" என்றாள் மெல்லிய குரலில் ஆனால் தீர்க்கமாக. "சோ என்னை மறைமுகமா பிளெக்மெயில் பண்ற. நான் ஏதாவது பண்ணா உன்னை நீயே அழிச்சிக்குவன்னு" என்று நக்கலாய் உதிர்த்தான்.

மறுபடியூம் கொடூரமாக மாறி அவள் மணிக்கட்டைக் கொண்டு இழுத்து நிற்க வைத்தவன், "நீ எனக்கு சொந்தமானவ. உன் உயிர் மூச்சுக்கித்தும் எனக்கு சொந்தம். என் பர்மிஷன் இல்லாமல் உன்னால மூச்சு கூட விட முடியாது. அப்படி இருக்கும் போது எந்த தைரியத்துல உன்னை நீயே அழிச்சிப்பன்னு சொல்லுவ?" என்று கர்ஜித்தவன் அவள் கழுத்தை நெருக்க சனாவின் கண்கள் சொருக ஆரம்பித்தது. உடனியாக அவளை விட்டு கையெடுத்தான்.

தன் கோபத்தை பின் கழுத்தில் உள்ளங்கையால் தேய்த்தவாறு சற்று மட்டுப்படுத்தியவன், "உனக்கு ஒரு சின்ன கீறல்னாலும் உனக்கு வலிக்குதோ இல்லையோ எனக்கு ரொம்ப வலிக்கும் சனா. நீ உன்னை காயப்படுத்தி கிட்டா அதை விட பல மடங்கு காயத்தை உன் அண்ணனுக்கு கொடுப்பேன். பார்த்து நடந்துக்க... நான் சொன்னதை செய்றவன். அதே போல இப்போ நான் உன் கிட்ட ரூடா பிகேவ் பண்ண காரணம் என்ன தெரியுமா?" என புருவமுயர்த்தினான்.

அவள் தெரியாது என அழுத முகத்துடன் தலையசைக்க, "இப்போ நீ என் பேபியா இல்லை. அந்த ஆர்யனோட தங்கச்சியா வந்து நிக்கிற. என் பேபி தான் எனக்கு வேணும். ஆர்யன் தங்கச்சியா என்னை எப்போவுமே நெருங்க முயற்சி பண்ணாத. அது உனக்கு ஆபத்து" என்றான் உறுதியான அழுத்தக் குரலில். "போய் முகத்தை கழுவிட்டு வா" என ஆணையிட வேகமாக முகத்தை கழுவினாள் சமையலறையில் இருந்த தண்ணீர் குழாய் மூலம்.

அவள் முகம் கழுவி வர அவள் முகத்தை தன் கையில் ஏந்தியவன், "மறுபடியும் சொல்றேன் பேபி. என் பக்கத்துல இருக்கும் போது என் பேபியா மட்டும் இரு. எனக்கும், உன் அண்ணனுக்கும் இடையில எப்போவுமே வராத. புரியுதா?" என்று தன் கண்களை அவள் கண்களில் கலக்க விட்டு கேட்க, அவளும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் ஆம் என தலையாட்டினாள். அவள் மூக்குத்தியிலும், நெற்றியிலும் இதழ் பதித்தவன், அவள் கை விரல்களோடு தன் கை விரல்களை கோர்த்துக் கொண்டான்.
அவளை அழைத்துக் கொண்டு கடற்கரையில் சற்று நேரம் நடந்தான்.

இருவருக்குமே மன அமைதிக்கு இந்த நடைப் பயிற்சி அவசியமாக இருந்ததால் அமைதியாக நடந்தார்கள். இருவரின் மனமும் ஒரு நிலை அடைய சனாவை அழைத்துக் கொண்டு சென்று விந்தியாவின் அலுவலக வீதியில் இறங்க வைத்து டிரைவருக்கு அழைக்க வைத்து சற்று தள்ளி நின்றுக் கொண்டான். டிரைவர் வரவும் சனா தனது காரில் பயணமானாள்.

இவை அனைத்தையுமே பார்த்த மர்ம நபரின் நண்பர் இருவரையும் புகைப்படம் எடுத்து அந்ந மர்ம நபரிற்கு அனுப்பி வைத்தான். அதைப் பார்த்த மர்ம நபர், "ஓஓ இப்படி ஒரு ரூட் இருக்கா? ஆர்யன் பாவம் நீ சாத்விக்கை இந்த முறையும் எதிர்க்க போற அதுவும் உன் தங்கச்சியால. அச்சோ சின்ன பொண்ணே நீ அநியாயத்துக்கு வந்திருக்க. சரி ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்" என்று குரூரமாக சிரித்து சாத்விக், கார்த்திக், சனா மூவரின் புகைப்படத்தைப் பார்த்து கண்சிமிட்டினான்..



 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
22649

அத்தியாயம் 11


கார்த்திக், அபி இருவரும் வீட்டிற்கு வருகைத் தந்து தங்களைச் சுத்தப்படுத்தி சாமியறைக்கு இருவருமே ஒன்றாகச் சென்றனர். கைக்கூப்பி, கண்களை மூடிக் கொள்ள; கார்த்திக், "கடவுளே எங்க வாழ்க்கையோட முக்கியமான நாளுக்கான முக்கியமான ஒரு வேலையை பண்ண போறோம். அதுல எந்த வித சங்கடத்தையும் கொடுக்காமல் நீ பார்த்துக்க. கல்யாணமும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் நடந்து சந்தோஷமான ஒரு வாழ்க்கையை இரண்டு பேருமே வாழனும். என் பட்டுக்கும் நல்ல வாழ்க்கை அமையனும்" என்று வேண்டினான்.


அபி, "அப்பா இறந்த பிறகு எனக்கு எல்லாமாகவுமே மாறி என்னை பார்த்து கிட்ட என் மாமாவே எனக்கு புருஷனாக போறாரு. அவருக்கு எந்தவொரு பிரச்சனையும் வராமல் பார்த்துக்க. நானும் அவரை நல்லா பார்த்துப்பேன். எங்க கல்யாணம் சமூகமா முடியனும். இன்னைக்கு இன்விடேஷன் எடுக்க போறோம். நீ தான் ஆசிர்வாதம் பண்ணனும். அது மட்டுமில்லை சனாவோட குணத்துக்கு தகுந்தது போல அவளை பார்த்துக்கக் கூடிய ஒரு நல்ல புருஷன் அவளுக்கு கிடைக்கனும்" என மனமாற இறைவனிடம் குடும்பத்தின் மருமகளாகவும் வேண்டிக் கொண்டாள்.


இருவரும் கண்களைத் திறந்து ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து விசாலாட்சியிடம் ஆசிர்வாதம் வாங்கி அழைப்பிதழை தெரிவு செய்வதற்கு பயணமானார்கள். நேரடியாக அழைப்பிதலை தெரிவு செய்ய கடைக்கு வந்தவர்களை கார்த்திக்கின் மேல் இருந்த மரியாதையில் முதலாளியே வாயெல்லாம் பல்லாக இளித்து வரவேற்றார். தலையாட்டி புன்னகைத்து கார்த்திக் அபியை அழைத்து உள்ளே நடந்தான்.


ஒவ்வொரு அழைப்பிதலாக இருவரும் பார்க்க கடை முதலாளி, "சரசு போய் இரண்டு பேருக்கும் ஜூஸ் வாங்கிட்டு வா" என்று ஒரு வேலையாளை ஏவி கார்த்திக்கிடம் திரும்பினார். "எந்த மாதிரி இன்விடேஷன் வேணும்?" என பவ்யமாய் கேட்க, "வெடிங் இன்விடேஷன் பார்க்கனும்" என்றான். "உங்க தங்கச்சிக்கா கல்யாணம் சேர்?" என்று அவர் தூண்டில் விட, "இல்லை எனக்கு கல்யாணம்" என்றவன் அபியை தோளோடு அணைத்தவன், "இவ தான் பொண்ணு" என்று அபியைப் பார்த்தான் காதலுடன்.


அபி கைக் கூப்பி வணக்கத்தை தெரிவிக்க முதலாளியும் வணகத்தை தெரிவித்தார். அவர் முதலில் பயந்தது சனாவிற்கு திருமணம் என்றே. அதற்கு காரணம் தனது மகனை சனாவிற்கு திருமணம் செய்து வைத்து கார்த்திக், சனாவின் சொத்தை அபகரிக்கவே நினைத்து இருந்தார். இவரே துரையப்பன். பிரபலமான மோல்கள் இரண்டு, நகைக் கடை, சென்னையில் பிரசித்தமான அழைப்பிதழ்களை அச்சடிக்கும் நிறுவனத்தையும் சொந்தமாக வைத்திருந்தார்.


அழைப்பிதழ் அச்சடிக்கும் இந்நிறுவனம் அவர்களின் குடும்பத்தின் தொழில் என்பதாலேயே அவர் பல லட்சங்கள் இலாபம் பெறும் நிறுவனங்களை வைத்திருந்தாலும் இதைக் கைவிடாமல் பார்க்கிறார். தங்கைக்காக எதையும் செய்யும் தமையன் கார்த்திக் என்பதை அறிந்து வைத்திருந்தவர் தன் மகனுக்கு அவளை மணமுடித்து வைத்து சனாவைக் கொண்டு அத்தனை சொத்தையும் தங்கள் பெயரிற்கு மாற்ற வேண்டும் என நினைத்தார்.


தங்கைக்காக எதையும் செய்யும் தமையன் ஆனாலும் அவளுக்கான வாழ்க்கையை துணையை தேடும் போது சலித்து தேர்ந்து எடுப்பான் கார்த்திக் என்பதையோ, சனாவின் மீது வேறு ஆண்களின் பார்வை பட்டாலே அவர்களைத் துளைத்தெடுக்க சாத்விக் என்ற ஒருவன் இருக்கிறான் என்பதையோ அறியாதவறாக இருந்தார் துரையப்பன்.


அபி, கார்த்திக் இருவரும் சிறிது நேர தேடலிற்குப் பிறகு இருவருமே மனமொத்து ஒரு அழைப்பிதழைத் தெரிவு செய்து அச்சிடக் கூறி இருவரும் அங்கிருந்து சென்றனர். அபி, "மாமா வெளியே போயிட்டு போலாமா?" என்று கண்களில் ஆர்வத்தைத் தேக்கி வினவ, "பீச்சுக்கு போலாம்" என்று மறுக்க முடியாமல் அழைத்துச் சென்றான் கார்த்திக்.


இருவரும் காரிலிருந்து இறங்க கடற்கரை மண்ணில் கைக்கோர்த்து நடைப் பயில ஆரம்பித்தனர். அந்திசாயும் வேலையில், கடற்கரையில் உவர் நிறைந்த குளிர் காற்று உடைலைத் தழுவ மனம் நிறைந்தவருடன் கைக் கோர்த்து நடப்பது சுவர்க்கம் அல்லவா? அவ ஏகாந்த சூழலையே இருவரும் அனுபவித்து நடந்தனர். இந்த நிமிடம் இவர்களுக்கு மட்டுமே சொந்தமானதாக தனது நினைவுப் பெட்டகங்களில் சேர்த்து வைத்துக் கொண்டனர்.


"கால் நனைக்கலாமா மாமா?" என்று வினவ, "ஓகே" என்று அவளை தோளோடு அணைத்துக் கொண்டு நகர்ந்தான். இருவரும் சிரித்து கடலலைகளோடு கால் நனைத்து விளையாடினர். இவர்களை வேவு பார்ப்பதற்காக வருகைத் தந்த ஒருவன் இருவரையும் புகைப்படம் எடுத்து அந்த மர்ம நபரிற்கு அனுப்பி வைத்தான். அவன் சனா, சாத்விக் இருவரின் புகைப் படத்தையும் பார்த்துக் கொண்டு இருக்க அபி, கார்த்திக்கின் புகைப்படமும் வட்சப் மூலமாக கிடைத்தது அவனுக்கு.


அதைப் பார்த்தவன், "பார்ரா இரண்டு பேருமே ஜோடியா ஒரே நேரத்துல இருக்கானுங்க. ஹம்ம்.... இப்படி சந்தோஷமா இருக்க விட கூடாதே" என்று யோசித்தவன், "சரி ஒரு நாள் வச்சு செய்ய கிடைக்காமலா போகப் போகுது?" என்று தன்னுள்ளே கருவியபடி , குரூரமாக நால்வரையும் பார்த்தான்.


சனா வீட்டிற்கு வந்தவள் யாருடனும் பேசாமல் நேரடியாக அறைக்குச் சென்றாள். விசாலாட்சி வேலையில் மூழ்கி இருந்ததால் சனாவைப் பார்க்கவில்லை. அறைக்குள் வந்தவள் கதவைத் தாழிட்டு கட்டிலில் விழுந்து சாத்விக் கூறியவற்றை நினைத்து கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள். தன் அண்ணனை பழிவாங்கவே அனைத்தையும் செய்கிறான் என்பதை நினைத்து அவள் நெஞ்சம் அடித்துக் கொண்டது.


தூசி துரும்பேனும் தன் மேல் விழாமல் பாதுகாத்த தமையனை துடிக்க வைக்கப் போகிறான் என்று அறிந்தும் ஏதும் செய்ய முடியா நிலையில் இருக்கும் தன்னையே நினைத்து வெறுத்தாள் சனா. இன்னும் ஒன்பது நாட்களில் திருமணம். அதில் எந்தவித பிரச்சனைகளையும் அவன் செய்யப் போவது இல்லை என்பது நிச்சயமாயிற்று. ஆனால் அதன் பிறகு !! என்று நினைக்க உடலே அதிர்ந்தது.


தலையணையில் முகம் புதைத்து கதறி அழுதாள். ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அழுதவள் தன் கவலையை உள்ளுக்குள் மறைத்து சந்தோஷமாக இருப்பது போலாவது நடிக்க வேண்டும் என முடிவெடுத்து குளியலறைக்குள் புகுந்தாள். அவளுடைய இந்த முடிவும் தன் தமையனுக்கு தானே துரோகம் இழைப்பதைப் போன்ற ஒரு உணர்வை வழங்க என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துப் போனாள் பெண்ணவள்.


குளித்து வந்தவள் நேரடியாக தனது மனக் கவலைகளைத் தீர்க்கும் கிருஷ்ணனிடம் சென்றாள். கண்மூடி மனமுருக வேண்டினாள். 'கண்ணா காட்டுப்பையலோட மனசை எப்படியாவது மாத்திரு. அவரு ஏதோ தப்பா புரிஞ்சிருக்காரு. நீ தான் அந்த தெளிவை அவருக்கு கொடுக்கனும். அண்ணனும், அபியும் எந்த குறையும் இல்லாமல் சந்தோஷமாக வாழனும். அதுக்கு நீ தான் உதவி பண்ண வேணும்" என்று மனமுருகி வேண்டிக் கொண்டாள்.


அவள் பிராத்தனையை கிருஷணன் ஏற்றுக் கொண்டானா? இல்லையா? என்பதை அவன் மட்டுமே அறிவான். சனா; கார்த்திக், அபி இருவரும் வருகைத் தர முன்னே சாப்பிட்டு உறங்கி இருந்தாள். மற்றவர்களும் அதிக சோர்வின் காரணமாகவே உறங்குகிறாள் என நினைத்தனர். சாத்விக்கும் சனாவிற்கு இன்று அதிகமான அதிர்ச்சிகளை வழங்கியதோடு அவளை அதிகமாகவே மிரள வைத்திருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியில் அவளைத் தொல்லை செய்யவில்லை.


அடுத்த நாள் காலையில் வெய்யோன் தன் மதியைத் தேடி பாரில் உதிக்க உலக மக்கள் அனைவரும் விழித்துக் கொள்ள ஆரம்பித்தனர். சனா இரவு நேரத்துடன் உறங்கியதால் அவள் அழுததற்கான எந்தத் தடமும் காலையில் தெரியவில்லை. நிம்மதியுடன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு கீழிறங்க அபி, கார்த்திக்கும் "குட் மோர்னிங்" என்று கீழிறங்கினார்கள். இன்று கல்லூரியிற்கு விடுமுறை என்பதால் கார்த்திக்கும் அவர்களோடு நேரம் செலவலிக்க விடுமுறையைப் பெற்றான்.


குடும்பத்தில் உள்ள நால்வரும் அமர்ந்து தேனீர் பருக கார்த்திக், "இன்னைக்கு போய் டிரஸ் பேர்சஸ் பண்ணலாமா அத்தை? இன்னைக்கு நல்ல நாளா?" என்றான். விசாலாட்சியும் எழுந்து நாட்காட்டியைப் பார்த்து, "ஆமா கார்த்திக் நல்லா நாள் தான். நாம இன்னைக்கு முகூர்த்த புடைவையும் தாலியும் வாங்கலாம்" என்றார் நிறைவுடன். "இன்னைக்கு டிரஸ் எடுக்குறதுன்னா புள்டே போயிடுமே அத்தை.. சோ நல்ல நேரத்துக்கு முகூர்த்த புடவை, தாலி வாங்கலாம். இன்னொரு நாள் அபிக்கு தேவையான நகையை வாங்குவோம்" என்று ஆலோசணைக் கூறினாள் சனா.


மற்றவர்களும் ஆமோதிக்க கார்த்திக், "நிச்சயத்துக்கு, மருதாணி ஃபங்ஷனுக்கு, கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்குறதோடு ஒரு பார்டி அரேஞ்ச் பண்ணுவேன் பிஸ்னஸ் பிரன்சுக்காக. அதுக்கும் சேர்த்தே பர்சஸ் பண்ணுங்க" என்றான் யோசணையுடன். "ஒகே மாமா. பிரேக் ஃபர்ஸ்ட் எடுத்த அப்பொறமா ஷொபிங் பண்ண போலாம்" என்றாள் அபி. நால்வரும் தங்கள் வேலைகளை முடித்து விட்டு காலை உணவை எடுத்துக் கொண்டனர். அதை முடித்து ஆடைகள் வாங்குவதற்காக அனைவரும் போதிஸை நோக்கி பயணித்தனர்.


கடல் போல் பரந்து விரிந்த கடைக்குள் நுழைந்தனர். நல்ல நேரத்திற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்ததால் திருமணத்திற்குப் பிறகு அபி அணிவதற்காக ஆடைகளைத் தெரிவு செய்யலாம் என்று அங்கே சென்றனர். சனா, அபி இருவரும் ஒவ்வொரு சுடிதாராகப் பார்க்க கார்த்திக்கும் தன்னவளிற்குப் பொருத்தமான நிறங்களைப் பார்க்க ஆரம்பித்தான். சில நிறங்களை அவன் அபியிற்கு எடுத்துரைத்தான்.


அவர்கள் இருவரும் தங்கள் உலகில் இருக்க விசாலாட்சி சனாவிடம் கண்களால் காட்ட, சனா சிரிப்புடன் அவர்களுக்குத் தனிமையை வழங்கி விட்டு பார்ட்டியிற்கு அணிவதற்காக உடைகளைத் தெரிவு செய்யலாம் என விசாலாட்சியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல அவளை இரசித்து பார்த்துக் கொண்டு இருந்தது ஒரு ஜோடிக் கண்கள். அவள் செல்ல அவளை பின் தொடர்ந்து சென்றது அவ் ஜோடிக் கண்களிற்கு சொந்தக்காரர்.


பார்ட்டியில் அணிய சில ஆடைகளைப் பார்த்தவள் இறுதியாக லோங் ஃபுரொக் ஒன்றை தெரிவு செய்தாள். சனா, "அத்தை இதை நான் எனக்கு சிலெக்ட் பண்ணேன். எப்படி இருக்கு?" என்று ஆர்வமாய் வினவ, "ரொம்ப நல்லா இருக்கு சனா மா" என்று கன்னத்தை பாசமாக வருடி விட்டார். சனாவே விசாலாட்சியிற்கும் பட்டுச் சேலையை தெரிவு செய்ய அபியும், கார்த்திக்கும் சில ஆடைகளை வாங்கி வந்தார்கள். பின் முகூர்த்திற்காக பட்டுச் சேலையை தெரிவு செய்ய அனைவரும் சென்றனர்.


மாம்பழ நிறத்தில் ஒரு பட்டுச் சேலையை இறுதியாக தெரிவு செய்தனர் திருமண நாயகியும், நாயகனும். சனா தனக்கு சிகப்பு, வெள்ளை நிற தாவணியைத் தெரிவு செய்ததோடு விசாலாட்சி, கார்த்திக் இருவருக்கும் வேறாகச் சென்று ஆடைகளை எடுத்து முகூர்த்தம் முடிய முன் அதை எடுத்தனர். பின் சனாவின் குடும்ப வழக்கப்படி தாலி எடுக்கச் செல்ல விசாலாட்சி மறுத்து விட்டார். அவர்கள் மூவரும் வற்புறுத்தியும் அவர் வரவில்லை.


அவருடைய உணர்விற்கு மதிப்பளித்து மற்ற மூவரும் சென்று தாலியை எடுத்து வந்தனர். மீண்டும் ஆடைகள் தெரிவு செய்ய ஆரம்பிக்க விசாலாட்சியிற்கு சோர்வாக இருந்ததால் கார்த்திக் அவரையும் இதுவரையில் வாங்கிய பொருட்களையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான். சனா, அபி இருவரும் வரவேற்பிற்குத் தேவையான ஆடைகளையும் தெரிவு செய்யலாம் என முடிவெடுத்தனர்.


முதலில் இருவருக்கும் சில சுடி, மிடி, ஸ்கேர்ட் என்பவற்றை வாங்கியவர்கள் வரவேற்பிற்குத் தேவையான ஆடைகளையும் வாங்கி பில் கவுன்டரிற்குச் சென்றனர். அவர்கள் பில்லைக் கொடுக்க அப்போதே சனாவின் பர்ஸ் முன்னேயே எடுத்த பைக்குள்ளும், அபியின் பர்ஸ் காரிலேயே இருப்பதும் நினைவு வந்தது. கார்த்திக் வரும் வரையில் நிச்சயமாக இவர்கள் பொறுக்க மாட்டார்களே என்று பதறி விட்டனர் இருவரும்.


எப்போதும் தங்களை தாமே ஒவ்வொரு இடத்திலும் எச்சரிக்கையாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இன்று சனா, அபி இருவரும் பணப் பையை மறந்தது அவர்களின் தவறே. ஷொபிங் செய்தவற்றிற்கு கொடுப்பதற்கு பணம் இல்லாமல் இருவரும் விழிக்க, அங்கே ஒரு நீண்ட கரம் தன் ஏ.டி.எம் கார்டை நீட்டி, "இந்த கார்டுல இருந்து பணத்தை எடுங்க" என்ற குரல் கேட்க, இருவருமே பின் திரும்பிப் பார்க்க சனாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.


தன் வசீகரப் புன்னகையுடன் அவர்களைப் பார்த்தவாறே நின்று இருந்தான் சாத்விக் ப்ரவீன். அபி, "சேர் நீங்க யாரு? எதுக்கு... !!!!!!" என்று அடுத்து என்ன பேசுவது எனத் தெரியாமல் தடுமாற, "நீ மிஸ்டர் கார்த்திக் ஆர்யனோட பியான்சி தானே? கார்த்திக்கிற்கு நான் ரொம்ப வேண்டப்பட்டவன். அதனால தைரியமா நீங்க என் ஏ.டி.எம் கார்டை யூஸ் பண்ணுங்க. நான் கார்த்திக் கிட்ட அதை வசூல் பண்ணிக்குறேன்" என்றான் சாத்விக்.


அபி இன்னும் யோசிக்க சாத்விக், "ஆபத்துக்கு தப்பில்லை தங்கச்சி. என்னை உன் கூட பிறந்த அண்ணனா நினைச்சு ஏத்துக்கோ" என்று உரிமையாய் அவன் இனிக்கப் பேச அதில் சனாவே கரைந்து விட்டாள். அபியும் புன்னகைத்து, "தேங்கியூ அண்ணா" என்று ஏ.டி.எம் கார்டை வாங்கி கவுன்டரில் இருந்த நபரிடம் வழங்கினாள். சனா அதிர்ச்சி மாறாமல் சாத்விக்கையே பார்க்க குறும்புப் புன்னகையுடன் கண்சிமிட்டினான் சாத்விக்.


சனா படபடப்புடன் வேறு புறம் திரும்பி 'காட்டுப் பையலே' என்று வசைப் பாட ஆரம்பித்தாள் மனதுக்குள். சாத்விக் புன் சிரிப்புடன் அவளையே பார்க்க அபி பொருட்களை வாங்கி கையில் பைகளை எடுக்க சனாவும் சில பைகளை எடுத்தாள். இன்னும் சில பைகள் இருக்கு சாத்விக் அவற்றை எடுக்க அபி, "ஐயோ அண்ணா, உங்களுக்கு எதுக்கு சிரமம்?" என்று தயங்க, "எனக்கு எந்த சிரமமும் இல்லை அபி. அண்ணான்னு உரிமையா பேசிட்டு இதை கூட பண்ண விட இல்லைன்னா என்ன அர்த்தம்?" என்று செல்லமாய் கோபித்துக் கொண்டான்.


சாத்விக்கிற்கு அபியுடன் எந்த பகையும் இல்லை. அவளைப் பற்றி விசாரிக்கும் போதே அவளுடைய சுட்டித்தனம் அவனுக்கு பிடித்து விட்டது. தனக்கு ஒரு தங்கை இருந்தால் நிச்சயமாக இவளைப் போலவே இருப்பாள் என்ற எண்ணமும் பதிய உரிமையாகவே அபியுடன் இன்று பேசிப் பழக ஆரம்பித்தான். அவனுக்கு அங்கே அபியைக் கவரும் வகையில் நடிக்க வேண்டிய அவசியம் ஏதும் இருக்கவில்லை.


ஆரம்பத்தில் இருந்து சனாவை இரசித்தவன், கார்த்திக் சென்றவுடன் இருவரையும் கவனமாக பார்த்துக் கொள்ள ஆரம்பித்தான். அப்போதே இருவரும் பணம் இல்லாமல் தடுமாற தானாகவே முன் வந்து உதவ நினைத்தான். அதன் பின்னே அனைத்தும் நடந்தேறி சாத்விக்கும் செல்லமாக கோபித்துக் கொண்டான்.


அபி, "அச்சோ அண்ணா நான் மனசாற உணர்ந்து தான் அண்ணான்னு சொல்றேன். ஏனோ உங்களை வேற ஆளா பார்க்க தோண இல்லை. என் அண்ணனாவே பார்க்க தோணுது" என தன் மனதில் இருந்ததை மறவாமல் கூற சனா, 'நீ ரொம்ப அறிவாளியா இருக்கியே அபி. இவன் என் அண்ணனை பழிவாங்க நினைக்குறான். இதை தெரியாமல் பாசமலர் படத்தை ஓட்டுறியே' என அவளை பரிதாபமாகப் பார்த்தாள்.


சனாவின் எண்ணத்தைப் புரிந்துக் கொண்டவனுக்கு அவன் இதழ்கள் புன்னகையை பரிசாக வழங்கி, "சரி மா உன் பியான்சி வரும் வரைக்கும் வெயிட் பண்ணலாமா? இல்லை என் காருல போலாமா?" என்றான். அபி, "மாமா வரட்டும் அண்ணா. உங்களை இன்ட்ரோ கொடுக்குறேன்" என்று நிறுத்தியவள் சிறிது யோசித்து, "உங்க பெயர் என்னன்னு சொல்லவே இல்லையே அண்ணா" என்றாள்.


சனா, 'அட ஆமா, இத்தனை நாள் இவரு கூட பேசிட்டு நாம கூட பெயரை கேட்கவே இல்லையே. இந்த காட்டுப் பையலேவோட பெயர் என்ன?' என அவனைக் கேள்வியாய்ப் பார்க்க இருவரையும் பார்த்து புன்னகைத்து, "சாத்விக்" என்றான். 'பரவால்லை நல்ல பேர் தான்' என சனா தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டாள். அபி, "அழகா இருக்கு அண்ணா உங்க பெயர்" என்றாள்.


"தேங்கியூ அபி" என்றவன், "உன் நாத்தனார் பேச மாட்டாங்களோ?" என சனாவை சீண்ட, 'டேய் ரொம்ப ஓவரா போற. இவனுக்கு தெரியாத மாதிரயே பச்சை பிள்ளையாட்டம் முகத்தை வச்சி கிட்டு பேசுறதை பாரு... காட்டுப் பையலே' என்று வசைப் பாடி அவனை முறைத்து வைத்தாள். 'பார்ரா நம்ம ஆளுக்கு முறைக்கக் கூட தெரியுது' என்று கிண்டலாய் பார்த்தான் சாத்விக்.


"இவ திசன்ஜனா. ரொம்ப சைலன்ட். அதிகமா யார் கூடவும் பழகவும் மாட்டா, பேசவும் மாட்டா" என்று சனாவைப் பார்த்து அபி கூறி அவளை அறிமுகப் படுத்த, 'அப்படியா?' என்று ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான். சனா பதில் சொல்ல முடியாமல் இளித்து வைக்க சாத்விக்கிற்கு அவள் நிலையைப் பார்த்து சிரிப்பு பீரீட்டு வந்தது. அதை தன் உதடுகளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.


சனா அமைதியாக இருவரையும் வேறு வழியில்லாமல் வேடிக்கைப் பார்க்க அபியும், சாத்விக்கும் நன்றாகவே பேசிக் கொண்டு இருந்தனர். மூவரும் ஒன்றாகவே காபி ஷொப்பினுள் அமர்ந்து இருந்தனர் கார்த்திக் வருகை தரும் வரையில். கார்த்திக் இருவரிடமும் பணம் கையில் இல்லை என்பதை அறிந்துக் கொண்டவன் வேகமாக வந்தான். காரை நிறுத்தி விட்டு உடனே அழைப்பை ஏற்படுத்தினான் அபியிற்கு.


அபி அழைப்பை ஏற்க, "மாமா நாங்க போதிசிற்கு எதிருல இருக்கிற காபி ஷொப்ல இருக்கோம். அங்கே வாங்க" என்று அவன் பதிலைக் கேட்காமல் அழைப்பை துண்டித்தாள்.அவள் தான் அறிவாளே, அவன் பேச சிறிது நேரம் கொடுத்து இருந்தாலும் இருவரினதும் அஜாக்கிரதை தனத்திற்கு திட்டித் தீர்ப்பான் என்று. கார்த்திக் யோசணையுடன் அபி கூறிய இடத்திற்கு சென்றான்.


தூரத்தில் ஒரு ஆணுடன் மற்ற இருவரும் அமர்ந்து இருப்பதைப் பார்த்து அவனின் புருவங்கள் யோசணையில் முடிச்சிட்டது. சனா எவருடனுமே பேச மாட்டாள். அபி தனக்கு ஒருவர் மீது நம்பிக்கை வரும் வரையில் ஒரு அடி தள்ளியே இருப்பாள். ஆனால் இருவரும் அமர்ந்து பேசும் அளவிற்கு நெருக்கமானவன் யார்? யாரந்த புதிய நபர்? என தெரியாமல் அவர்கள் மேசைக்குச் செல்ல சாத்விக்கைப் பார்த்து அதிர்ச்சியின் உச்சத்தையே தொட்டான்.


நிச்சயமாக அவன் சாத்விக்கை இங்கே அதுவும் தன் வீட்டுப் பெண்களுடன் எதிர்பார்க்கவே இல்லை. அவன் அதிர்ந்து விழிப்பதைப் பார்த்த சாத்விக் கேலியாக மற்ற இருவரும் அறியா வண்ணம் உதட்டைச் சுழித்தான். அபி, " மாமா சாத்விக் அண்ணா தான். அங்கே பணம் இல்லாதப்போ எங்களுக்கு உதவி பண்ணாரு. எனக்கு அவரை ஒரு அண்ணனா ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரு அண்ணன் எனக்கு இருந்தால் இவரைப் போல தான் இருப்பாரு" என்று துள்ளளுடன் கூறினாள்.


கார்த்திக் இரு பெண்களின் முன்னிலையில் சாத்விக்கை எதுவும் கூற முடியாமல் தடுமாற அதைப் புரிந்த சாத்விக், "என்னை உனக்கு நல்லா தெரியும்னு சொன்னேன் கார்த்திக். எனக்கும் உனக்கும் ரொம்ப நல்ல பழக்கம் இருக்கு இல்லையா? அவங்க கிட்ட சொல்லு" என்றான் சாதாரண குரலில். ஆனால் அதிலிருந்த எள்ளலை கார்த்திக் மட்டுமே அறிவான்.


கார்த்திக், "ஆமா எனக்கு நல்லா தெரியும் அபி" என்றவன் சாத்விக்கையே பார்த்தான். இருவரையும் சனா ஆராய்ச்சிப் பார்வையே பார்த்து இருந்தாள். ஆரம்பத்தில் கார்த்திக்கின் அதிர்ச்சி, அதை சமாளிக்கும் விதமாக சாத்விக் பேசியது. அதற்கு கார்த்திக்கின் பதில் என்பவற்றையே பார்த்தாள். தற்போது இருவரும் ஒருவரை ஒருவர் ஊடுருவும் பார்வை பார்ப்பதையும் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.


'இதுங்க என்ன கண்ணாலேயே ரொமேன்ஸ் பண்ணுதுங்களோ' என்று சனாவின் மனசாட்சி எடுத்துறைக்க, 'நீ கொஞ்சம் கம்முன்னு போ' என மனசாட்சியை விரட்டி அடித்தவள் அபியைப் பார்த்தாள். அபியோ இருவரின் அமைதியைக் குழப்பிப் போய்ப் பார்க்க சனா அபியைப் பார்த்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள். 'இவ எதுக்குமே இல்லாம முழிக்குறாளே' என்று.


அபி, "மாமா; அண்ணா" என்று இருவரையும் அழைத்து தன்னிலை அடையச் செய்தாள். கார்த்திக், "தேங்கியூ சாத்விக் உதவி பண்ணதிற்கு. உன் பணத்தை நான் இப்போவே எடுத்து தரேன்" என்று நகர எத்தணிக்க சாத்விக் அவன் கையைப் பிடித்து நிறுத்தினான்.


"எனக்கு அழகான துருதுருன்னு ஒரு தங்கச்சி கிடைச்சு இருக்கா. என் தங்கச்சிக்கு ஒரு அண்ணனா நான் வாங்கி கொடுத்தேன்னு நினைச்சிக்கோ. எனக்கு பணம் எல்லாம் தேவையில்லை" என்று கறாரான குரலில் கூற கார்த்திக் பதில் என்ன கூறுவது எனத் தெரியாமல் விழித்தான்.


அபி, "மாமா எனக்கும் சாத்விக் அண்ணாவை வேற ஆளா பாக்க தோணுது இல்லை. என் கூட பிறந்த அண்ணனா தான் பார்க்குறேன்" என்று அவள் தன் தமையன் என்று உறுதிபடுத்த கார்த்திக் அபியைப் பார்த்து சற்று அதிர்ந்தவன் பின், "இட்ஸ் ஒகே சாத்விக்" என்றான்.


அன்றொரு நாள், "உன்னோட முதல் இடத்தை பிஸ்னசில் பிடிச்சிட்டேன் ஆர்யன். மறுபடியும் உன் லைபில் என்னை எதிர்பார்த்து இருந்து இருக்க மாட்ட. இதற்கு அப்பொறமா நிறைய விஷயங்களில் என்னை பார்ப்ப. உனக்கு சொந்தமானது, உயிரானதுன்னு நினைக்குறதை எனக்கு சொந்தமானதா ஆக்குறேன் ஆர்யன். குட் லக். என் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம்னு முயற்சி பண்ணு" என்றது காதில் எதிரொலித்தது.


ஏனோ மனம் சாத்விக் கூறியது போல் நடந்து விடுமோ என்று பதபதைக்க, சனா தமையனின் கலக்கத்தைக் கண்டு அவன் கையை பற்றி அழுத்தம் கொடுத்து ஆறுதலளித்தாள். சனா கலக்கத்துடன் சாத்விக்கைப் பார்க்க அவன் முகத்தில் இவள் எதிர்ப்பார்த்த கோபம் இல்லாமல் புன்னகையே இருந்தது. சாத்விக்கைப் புரிந்துக் கொள்ள முடியாமல் தடுமாறினாள் அப்பேதை.


அப்போது அந்த காபி ஷொப்பிலேயே சிவப்பு;மச்சள்;பச்சை திரைப்படத்திலிருந்து பின்வரும் பாடல் ஒலித்தது.


ஆழி சூழ்ந்த உலகிலே யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே சிறு கவிதை உருவாச்சே
விரலினை தாண்டிடும் நகமென இவன் பாசமே கிரீடமா பாரமா புரியுமா சில நேரமே




 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
22684

அத்தியாயம் 12


உலகத்தில் மிகப் பெரிய பொக்கிஷம் யாதெனில், ஒருவரின் மேல் ஒருவர் வைத்திருக்கும் மாசுமருவற்ற அன்பு. அவ் அன்பு எளிதில் எவருக்கும் கிடைப்பது இல்லை. கிடைத்தவர்கள் அதை துச்சமாக மதிப்பதே அதிகம். ஆனால் சனா, கார்த்திக்கிற்கு இடையிலான அன்பு தமையன்; தங்கை உறவைக் கடந்து தந்தை மகள் உறவையும் சேர்த்த உன்னதமான உறவு. இருவரும் ஒருவரின் மேல் ஒருவர் வைத்துள்ள அன்பிற்கு இங்கே ஈடு இணை எதுவும் இல்லை.


சாத்விக்கின் சொற்கள் மனதை புயல் எனத் தாக்க, 'நான் இருக்கிறேன்' என கையில் அழுத்தம் வழங்கி ஆறுதல் அளித்தாள் அவன் அன்புத் தங்கை திசன்ஜனா. சாத்விக்கிற்கு இருவரையும் பார்த்து புன்னகைக்கத் தோன்றியது; இத் தூய்மையான அன்பை எண்ணி. தனக்கு தியா அனைத்து துன்பத்திலும் தன்னோடு இருந்து அன்பை வாரி வழங்கியவள் என நினைக்கும் போது ஒரு புறம் பெருமையாக இருந்தது. தனக்கு தியா என்றால் ஆர்யனிற்கு சனா என்று.


கார்த்திக், "என் நயா அவளோ சீக்கிரமா யாரையும் நம்பமாட்டா. அவ நம்பினால் நிச்சயமாக அவங்க நல்லவங்களா இருப்பாங்க. அவ நம்பிக்கையை நீ ஒரு அண்ணனா உடைக்க மாட்டன்னு தெரியும். அவ அண்ணனா நீ எங்க கல்யாணத்துல கலந்துக்கோ. அது தான் அவளோட ஆசையாகவும் இருக்கும்" என்று தன் செல்லம்மாவைப் புரிந்துக் கொண்டு கூற அபி அவனைப் பெருமையாகப் பாரத்தாள்.


இத்தனைக்கும் கார்த்திக் சனாவின் கைகளை விடவில்லை.இது அவள் மேல் நான் கொண்ட நம்பிக்கை என்பதை கார்த்திக் சொல்லாமல் செயலில் காட்ட சாத்விக் தன் வசீகரச் சிரிப்பை சிந்தினான். அதன் அர்த்தத்தை அவன் மட்டுமே அறிவான். சாத்விக், "அபி என் தங்கச்சி கண்டிப்பா ஒரு நல்ல அண்ணனா நான் இருப்பேன் என்ட் என்னைப் பத்தி உனக்கு நல்லாவே தெரியும். சோ என் வேலை என்னவோ அதை கரெக்டா பண்ணுவேன். அதையும் நீ மறக்காத" என்று பழி உணர்ச்சி கண்களில் மின்னியது.


கார்த்திக் கண்களால் சாத்விக்கை எரிக்க ஒரு நிமிடம் விட்டாலும் நிச்சயமாக ஒருவரை ஒருவர் தாக்கி இருப்பர். சூழ்நிலையை உணர்ந்து சனா, "அண்ணா ரொம்ப லேட் ஆச்சு. அத்தை நமளை தேடிட்டு இருப்பாங்க போலாமா?" என்று அவசரப்படுத்த, அபியும் அதை ஆமோதித்தாள். சனா பேச ஆரம்பித்த உடனேயே இருவரும் தங்கள் முக பாவனைகளை மாற்றிக் கொண்டனர்.


"ஒகே டா நானும் மறந்துட்டேன். போலாம்" என்று கார்த்திக் சாத்விக்கை முறைக்க, அபி, "அண்ணா என்னோட ஒவ்வொரு பங்கஷனுக்கும் உங்களை எதிபார்ப்பேன். மறக்காமல் வந்துருங்க" என்று விடைப் பெற கார்த்திக்கை சாத்விக் இழுத்து அணைத்துக் கொண்டான் தோழமை அணைப்பு எனும் வகையில். கார்த்திக்கும் அணைத்துக் கொள்ள சாத்விக் அவன் காதில், "அபியோட நம்பிக்கையை எப்போவுமே உடைக்க மாட்டேன். அதே சமயம் உன்னை கண்டிப்பா துடிக்க வைக்க தான் போறேன்" எனக் கிசுகிசுத்தான்.


"பார்க்கலாம்" என்று கார்த்திக்கும் நக்கலாகக் கூறி அணைப்பில் இருந்து வெளி வந்து, "ஆல் த பெஸ்ட் சாத்விக் எல்லாத்துக்கும்" என்று கர்வமாக புன்னகையைச் சிந்தி தன் இரு தேவதைகளையும் அழைத்துச் செல்ல சாத்விக் தன் இரு கைகளையும் பொக்கெட்டுக்குள் செலுத்தி இகழ்ச்சியாக புன்னகைத்து, "நீ பிடிச்சி இருக்கிற இரண்டு கையில் ஒரு கையை நான் எடுத்துக்க போறேன் உன் அனுமதி இல்லாமல். முடிஞ்சா தடுத்துக்கோ" என்று உதட்டைச் சுழித்தான்.


வீட்டிற்கு வந்தவுடன் சனா தனது அறைக்குச் செல்ல கார்த்திக் யோசணையுடன் அவனது அறைக்குச் சென்றான். அபி நேரடியாக தனது அறைக்குச் சென்றவள் தன்னைச் சுத்தப்படுத்தி சாதாரண காட்டன் சுடிதாருக்கு மாறியவள், கார்த்திக்குடன் பேசுவதற்கு அவன் அறைக்குச் சென்றாள். கார்த்திக் கட்டிலில் சாய்ந்து கண்மூடி அமர்ந்து இருக்க, அவன் அருகில் அமர்ந்த அபி, "மாமா" என்று மெல்லிய குரலில் அழைத்தாள்.


கண்களைத் திறந்தவன், "சொல்லு செல்லம்மா" என்று கால்களை மடக்க, "நான் சாத்விக் அண்ணாவுக்கு சபோர்டா பேசினது உன்னை ஹேர்ட் பண்ணிருச்சா மாமா? ரியலி சொரி மாமா" என்றாள் உண்மையான வருந்தும் குரலில். "அதெல்லாம் ஒன்னும் இல்லை டா. திடீர்னு நீ சாத்விக்கு சபோர்ட் பண்ணவும் ஷொக் ஆகிட்டேன். ஹேர்டிங் ஏதும் இல்லை செல்லம்மா" என்று கன்னம் வருட கண்களை மூடிக் கொண்டாள் அபி.


அபி, "எனக்கு அவங்களை வேற ஆளா பார்க்க முடியல்லை. எனக்கு ஒரு அண்ணன் இருந்தால் எப்படி இருப்பானோ அப்படி இருந்தான். அதான் அப்படி பேசினேன்" என்று தன்னிலை விளக்கம் கொடுக்க, "ஒகே டா. உன் பீலிங்சை என்னால புரிஞ்சிக்க முடியுது. சின்ன வயசுல இருந்தே நான் சனா மேலே காட்டுற பாசத்தைப் பார்த்து உனக்கு அண்ணா இல்லையேங்குற ஏக்கம் இருக்கிறது எனக்கு தெரியும். சாத்விக் சொன்ன சொல்லை காப்பாத்துவான். உனக்கு ஒரு நல்ல அண்ணனா இருப்பான் நிச்சயமா" என்றான் உறுதியான குரலில்.


இருவரும் பேசினாலும் கார்த்திக் அவள் கன்னத்தில் கோலமிடுவதையோ அபி கண்களை திறக்கவோ இல்லை. "உங்களுக்கு எப்படி சாத்விக் அண்ணாவை தெரியும் மாமா?" என்று சந்தேகமாய் வினவ, "இரண்டு பேரும் ஒன்னா கோலேஜில் படிச்சோம்" என்று வேறு கேள்விகள் அவள் கேட்க முடியாதவாறு மோகம் மேலிட அவள் இடைப் பற்றி தன்னருகில் இழுத்தான்.


அபியின் முகத்தில் விரல்களால் இட்ட கோலத்தை தன் இதழ் கொண்டு அதற்கு வர்ணமிட கண்களை மூடியவாறே அவ் ஏகாந்த நிலையை அனுபவித்தாள் அபி. நெற்றியில் ஆரம்பித்த இதழ் ஊர் வலத்தை முகமெங்கும் நகர்ந்து சென்று இறுதியாக அவள் இதழில் இளைப்பு ஆறினான். வெகுநேரம் நீடித்தது அவ் இதழ்யுத்தம். தன்னவள் மூச்சிற்கு சிரமப்படுவதை உணர்ந்தவன் அவளை விடுவித்து இறுக அணைத்துக் கொண்டான்.


"ஐ லவ் யூ செல்லம்மா" என்று முணகியவாறே அவன் அணைப்பை இறுக்கி அவள் கழுத்து வளைவில் முத்தமிட, "லவ் யூ டூ மாமா" என அவனோடு ஒன்றி அவனை அணைத்துக் கொண்டாள். கார்த்திக்கிற்கு தற்போது இவ் அணைப்பு தேவையாக இருந்தது. அவளும் இவ் மோன நிலையைக் கலைக்காது அவன் நெஞ்சில் தலை சாய்ந்து கண்மூடிக் கொள்ள கார்த்திக்கும் அவளை அணைத்தவாறே கண்மூடினான்.


சனாவும் தன்னைச் சுத்தப்படுத்தி சாதாரண சுடிதாரிற்கு மாறியவள் அப்போதே கட்டிலில் விழுந்தாள். அதே நேரம் அவள் மொபைல் ஒலிற, 'நான் ஒரு நிமிஷம் சும்மா இருந்தா பொறுக்காதே..கண்டிப்பா இது அந்த காட்டுப்பைலா தான் இருப்பான். எப்படி தான் மூக்கு வேர்க்குதோ' எனத் திட்டியவள் திரையைப் பார்க்க அவள் நினைத்தது போலவே 'காட்டுப பையலே' என்று ஒளிர்ந்தது.


'உஃப்' என்றவள் அழைப்பை ஏற்றாள். "ஹலோ சேர் சொல்லுங்க" என்றாள் மெல்லிய குரலில், "அண்ணனுக்கு மேடம் ரொம்ப சபோர்ட் பண்றிங்க போல இருக்கே. பப்பாஹ்.. என்னா பாசம்.. அப்படியே புல்லரிச்சு போயிருச்சு" என்று நக்கலாக கூற சனா அமைதியாக இருந்தாள். அவனின் திட்டையோ, மிரட்டலையோ இல்லை நக்கலையோ எதிர்பார்த்து இருந்தாள் சனா. அதே போல் அவனும் நக்கலாக வினவினான்.


"அமைதியா இருந்தால் என்ன அர்த்தம்?" என்று அழுத்தமான குரலில் வினவ, "சேர், நான் அன்னைக்கு சொன்னேன் என் அண்ணனை விட்டுக் கொடுக்க முடியாதுன்னு. அதே போல நான் அவனை என்னைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அதே போல உங்க இரண்டு பேருக்கு இடையில நீங்க சொன்னது போல நான் வரமாட்டேன்" என்றாள் மெல்லிய குரலில் ஆனால் உறுதியாக.


எதிர்ப்புறம் அவன் இதழ்கள் புன்னகையைச் சிந்தின. இரு புறமும் அமைதி நிலவ "ஜானு" என்று உருகும் குரலில் அழைக்க அவள் உயிரைத் தீண்டிச் சென்றது அவ்அழைப்பு. ஒரு முறை இதயம் நின்று துடித்தது போல் ஓர் பிரம்மை. வேகமூச்சுக்களை வெளியிட ஏனோ கைகளும், கால்களும் நடுங்க ஆரம்பித்தன. தன்னுள்ளே ஏதோ ஏதோ மாற்றங்களை அவனின் 'ஜானு' என்ற அழைப்பு ஏற்படுத்துவதை உணர்ந்தாள். அவனின் குரலின் உருக்கம் இதயத்தில் பனிச்சாரலை வீசியது போன்ற ஓர் எண்ணம்.


அவள் மூச்சு விடுவதை மொபைல் மூலமே உணர அவனுள்ளேயும் பல மாற்றங்கள் நிகழந்தன. மோகம் அவனைச் சூழ, "நீ இப்போவே எனக்கு வேணும் ஜானு. ஐ வோன்டு கிஸ் யூ" என தாபம் பீறிட்டு பிதற்ற சனாவின் உடல் வெளிப்படையாகவே நடுங்க அவள் மொபைல் கைநழுவி கீழே விழுந்தது. அழைப்பும் துண்டிக்கப்பட தன் உணர்ச்சிப் பிடியில் இருந்து வெளியேற முடியாது தவித்தாள் பெண்ணவள்.


அவசரமாக குளியலறைக்குள் நுழைய முனைய கால்கள் பின்னிட்டது போன்ற பிரம்மை. கண்களை மூடி ஆழ மூச்சை வெளியிட்டவள் தன்னை ஓரளவு சமன்படுத்தி, முகம் கழுவி வந்தாள். மொபைலை எடுக்காமல் பல்கனியில் நின்றவள் தோட்டத்தை வெறித்துப் பார்த்தாள். மீண்டும் மீண்டும் அவள் காதுகளில், 'ஜானு' என்ற அழைப்பு கேட்டது. "ஐயோ கிருஷ்ணா இந்த பெயரை எதுக்கு அவரு எனக்கு வச்சாரு? அந்த பெயர் எனக்குள்ள என்னமோ பண்ணுது" என்று புலம்பியவாறே தோட்டத்தில் தென்பட்ட கிருஷ்ணனை பார்த்தாள்.


~ பாவையின் மனதைக் கவர
ஒற்றைக் கவிதை போதுமென
நான் அறிவேன்
இருந்தும் அதில் எனக்கு நம்பிக்கை
இல்லை
ஆனால் இன்று
உன் ஒற்றை வார்த்தை
என் மனதைக் கவர்ந்தது
விந்தையிலும் விந்தை
என்பது அபார உண்மையடா
என்னவனே..... ~



சாத்விக்கும் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன், சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். சனா பல்கனியில் நிற்பதை தனது மடிக்கணினி மூலமாக பார்த்தவன் பத்து நிமிடம் கழித்து அவளுக்கு அழைத்தான். உள்ளே சென்று மொபைலை எடுத்து சிறிது நேரம் திரையை வெறித்தவள் பின் ஒரு முடிவு எடுத்தவளாக அழைப்பை ஏற்றாள்.


"எதுக்கு ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க பேபி?" என்று ஒன்றுமே நடவாதவன் போல் வினவ, தான் எடுத்திருக்கும் முடிவை கூற முடியாமல் திணறினாள் சனா. "நீ என் கிட்ட பிரீயா பேசலாம் பேபி" என்று ஊக்கம் வழங்க, சில நிமிடங்களில் தன்னை ஒரு நிலைப்படுத்தி கண்களை இறுக மூடியவாறு, "இதுக்கு அப்புறமா என்னை ஜானூன்னு கூப்பிடாதிங்க சேர். எனக்கு என்னவோ போல இருக்கு. பிளீஸ்" என்று கடகட என கூறி முடித்தாள்.


எதிர்ப்புறம் அட்டகாசமான ஒரு சிரிப்பு ஒலி கேட்க சனாவிற்கு எரிச்சலாக இருந்தது. 'நான் என்ன சொன்னேன்னு இந்த காட்டுப் பையல் பூதம் மாதிரி சிரிக்கிறான். எல்லாம் என் நேரம்' என வசைப் பாடி தன் தலையில் மானசீகமாக அடித்துக் கொண்டாள். தன் சிரிப்பை நிறுத்தியவன், "கோவமா இருக்கியா பேபி" என சாதாரண குரலில் கேட்க அதற்கும் அமைதியையே பதிலாக வழங்கினாள். "மௌனம் சம்மதம்னு எடுத்துக்கட்டுமா?" என வம்பிழுக்க, "சேர் பிளீஸ் என் பீலிங்சை புரிஞ்சிக் கொங்களேன்" என்று ஆதுரத்துடன் கெஞ்சினாள்.


"புரியிது பேபி. நான் சும்மா உன்னை வம்பிழுத்தேன் அவளோ தான். நீ எப்போ என் மனைவியா என் கிட்ட வரியோ அப்போ, உன்னை ஜானுன்னு கூப்பிடுறேன் ஒகேயா? நீ பீல் பண்ணாத" என்று சமாதானக் கொடியை பறக்க விட சனாவும் தன் சமாதானக் கொடியை பறக்கவிட்டாள். சனா, "எதாவது முக்கியமான விஷயம் இருக்கா சேர்?" என தன்மையாய் வினவ, "உன்னை திட்ட தான் போன் பண்ணேன். பட் என்னால் உன்னை திட்ட முடியல்லை விட்டுட்டேன்" என்றான் உட் சென்ற குரலில்.


"நீங்க திட்றதுக்கு மட்டும் போன் பண்ணி இருந்தால் இரண்டாவது தடவை போன் பண்ணி இருக்க மாட்டிங்க சேர்" என நான் உன்னை அறிந்து வைத்துள்ளேன் என்ற வகையில் பேச, "என்னைப் பத்தி நல்லா புரிஞ்சி வச்சிருக்கியே பேபி. ஐ லைக் யூ. இதே புரிதல் காலம் பூரா இருந்தால் நாம இரண்டு பேரும் நிம்மதியா சந்தோஷமா வாழலாம்" என்று நிறுத்தியவன் மேலும் தொடர்ந்தான்.


"உன் அண்ணன் இன்னைக்கு பேசினதைப் பார்த்தால் நீ இன்னும் ஒரு நாளில் மும்பை போகனுங்குறதை சொல்லவே இல்லை போல இருக்கே. நீ சொன்னியா? இல்லையா?" என்று சந்தேகத்துடன் வினவ, "இன்னும் சொல்ல இல்லை சேர். நான் கம்படிஷனைப் பத்தி பேசினால் என்னை அழைச்சிட்டு போகனும்னு காரணம் சொல்லி கல்யாணத்தையே கென்சல் பண்ணிருவான். அதான் மறைச்சேன். கண்டிப்பா நாளைக்கு சொல்லிருவேன். அதே போல சமாதானமும் பண்ணிருவேன் சேர்" என்றாள் தீவிரமாக.


"பேபி நாளைக்கு ஒரு நாள் மட்டும் தான் டைம் இருக்கு. அதுக்கு அடுத்த நாள் காலையில போகனும். சோ உன் அண்ணனை சீக்கிரமா சமாதானம் பண்ணு" என்று யோசணையுடன் கூற, "ஒகே சேர் நான் கண்டிப்பா அண்ணா கூட பேசிருவேன்" என்றாள் உறுதியாக. "எனக்கு கொஞ்சம் வேர்க் இருக்கு பேபி. நான் அப்புறமா பேசுறேன். எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத பேபி. உன் அண்ணன் கூட பேசிரு" என்று அறிவுரை வழங்கி அழைப்பைத் துண்டித்தான்.


மொபைலை தன்னருகில் வைத்தவள் நாளை தமையனுடன் பேச வேண்டும் என்று முடிவெடுத்து கீழே செல்ல அனைவரும் இரவு உணவிற்காக அங்கே தயாராக அமர்ந்து இருந்தனர். சனாவும் அவர்களோடு அமர்ந்து இன்றைய தினத்தைப் பற்றி பேசியபடியே உணவை உட்கொண்டாள். களைப்பின் காரணமாக அனைவருமே வெகு நேரத்துடன் உறக்கத்தின் பிடிக்குள் சென்றனர்.


அடுத்த நாள் காலையில் கார்த்திக் மும்முரமாக தயாராகிக் கொண்டு இருந்தான். சனா குளித்து எப்போதும் போல் கிருஷணாவை வேண்டி விட்டு சாமியறையில் இருந்த பெற்றோரின் புகைப்படத்திற்கு விளக்கேற்றி தமையனைத் தேடிச் சென்றாள். "அண்ணா பிசியா இருக்கியா?" என்று தயங்க, "இன்னைக்கு பிஸ்னஸ் அசோஷியேஷன்ல ஒரு மீடிங் இருக்கு பட்டு. சோ என் ஓபீஸ் போயிட்டு சைன் பண்ண வேண்டியதை முடிச்சிட்டு நேரத்துக்கு மீடிங்கிற்கு போக இருக்கு டா. ஈவீனிங் எதுன்னாலும் பேசலாமா?" என்று டையை கட்டியவாறே கேட்டான்.


"ஒகே அண்ணா. பட் நீ எனக்கு ஒரு புரொமிஸ் பண்ணனும்" என்று தூண்டில் விட, "ஒகே என்ன புரொமிஸ் பண்றேன். முதல்ல என்னன்னு சொல்லு" என்று அவசரப்படுத்த, "நான் சொல்றதை நீ கேட்கனும். எதையும் மறுக்கக் கூடாது" என்று பொடி வைத்துப் பேச, பெரியதாக எதுவும் கேட்காமல் சிறு பிள்ளைளத் தனமாக கேட்பாள் என நினைத்து "புரொமிஸ்" என்றான். அவளோ தனக்கு தமையன் வேலையை இலகுவாக்கி விட்டான் என உள்ளுக்குள் துள்ளிக் குதித்தாள்.


"சரி வா சாப்பிடலாம்" என கார்த்திக்கை அழைத்து வர அபி சந்தேக முடிச்சுடன் சனாவைப் பார்த்தாள். அவளோ அபியைப் பார்த்து கண்சிமிட்டி குறும்புடன் சிரித்தாள். 'ஆஹா ஏதோ காரியத்தை சாதிச்சிட்டா. என்னவா இருக்கும்?' என்று யோசித்தவாறே சாப்பிட அமர்ந்தாள். மூவரும் உணவை முடிக்க விசாலாட்சியிடம் ஆசிர்வாத்ததைப் பெற்று கார்த்திக் இவர்கள் இருவரிற்கு முன்னே கிளம்பிச் சென்றான்.


அபியும், சனாவும் கல்லூரிக்கு தங்களது காரில் செல்ல அபி, " என்ன மேடத்தோட முகத்துல தவுசன்ட் வோல்ட்ஸ் பல்பு எரியிது" என்று புருவமுடிச்சுடன் வினவ, "நாளைக்கு காலையில போக இருக்கிற கம்படிஷனுக்காக அண்ணாவை லொக் பண்ணிட்டேன். நான் என்ன சொன்னாலும் செய்றேன்னு மறுக்காமல் இருப்பேன்னும் என் கிட்ட புரொமிஸ் பண்ணி இருக்கான். அவனுக்கு புரொமிசை பிரேக் பண்றது பிடிக்காது. ஆக, நான் சொல்றதுக்கு ஒத்துகிட்டே ஆகனுங்குற வகையில லொக் பண்ணி வச்சுட்டேன்" என்றாள்.


"அடிப்பாவி, என்னமா கேடி வேலை பார்க்குற நீ? நீ இந்த மாதிரி வேலை பார்ப்பன்னு நான் சொன்னேன்னா யாருமே ஒத்துக்க மாட்டாங்க..சூடம் அடிச்சி சத்தாயம் பண்ணாலும் நம்ப மாட்டாங்க" என்று வாயில் கை வைக்க, "நான் அமைதியான பொண்ணு தான். பட் கார்த்திக் ஆர்யனோட தங்கச்சிங்குறதை அடிக்கடி மறந்து போற நீ" என செல்லமாய் அலுத்தாள் சனா.


"உன் அண்ணன் புத்தி உனக்கும் இருக்கு. பரவால்லை...நீ பொழச்சிக்குவ. சூப்பர்" என்று பாராட்ட, சனா அழகானதொரு புன்னகையைச் சிந்தி விட்டு வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். அபி தனது மொபைலில் பாடல் கேட்க ஆரம்பித்தாள். இவர்கள் இவ்வாறு இருக்க சாத்விக், கார்த்திக் இருவரும் அவசரமாக தங்கள் வேலைகளை முடித்து மீடிங்கிற்கு போக ஆயுத்தமானார்கள் இன்று அங்கே பரவியிருக்கும் கிசுகிசுக்களை அறியாமல்.


காலை பத்து மணியளவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிஸ்னஸ் அசோசியேஷன் சார்பான மீடிங்கிற்கு முதல் பதினொரு இடங்களில் இருந்த கம்பனிகள் அனைத்துமே அதில் பங்கு கொண்டு இருந்தன. கோர்ட் சூட் சகிதம் அனைவருமே அங்கே அமர்ந்து இருக்க கார்த்திக், சாத்விக் இருவருமே ஒன்றாக காரில் இறங்கினர். ஒருவரை ஒருவர் முறைத்தவாறே மீடிங் ஹோலிற்குள் நுழைந்தனர்.


அவர்களைப் பார்க்கும் போது சிவன், விஷ்ணு இருவரும் ஒன்றாக வருகைத் தருவது போன்ற பிரம்மையே அனைவரையும் ஆட்கொண்டது. இருவரும் தத்தமது ஆசனங்களில் அமர மீடிங்கும் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு விடயங்களைப் பற்றியும் தர்க்கம், விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு பெரும்பாலானோர்களின் ஆதரவின் பெயரில் சில முடிவுகளும் எடுக்ப்பட்டது. அதில் அநேகமான முடிவுகள் கார்த்திக் கூற அதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டு இறுதியாக தலைவர் என்ற வகையில் சாத்விக் அவற்றை ஆமோதித்தான்.


லஞ்ச் ஏற்பாடு செய்திருக்க சாத்விக் உடனடியாக ஒரு மீடிங் இருப்பதாகக் கூறி அனைவரிடம் இருந்தும் விடைப் பெற்றுச் சென்றான். கார்த்திக், சாத்விக் மேல் பொறாமை கொண்டோர் கார்த்திக்கின் காதுபடவே, "பார்த்தியா தங்கச்சை காட்டி எஸ்.பியை மயக்கி அவன் கைக்குள்ள போட்டுகிட்டான். இப்போ இவன் சொல்றதுக்கு அவனும் ஆமா சாமி போடுறான்" என்றார் நா கூசாமல்.


கார்த்திக் அதைக் கேட்டு கொதித்து எழுந்தவன் சண்டையை பெரிதாக்காமல் அவர்களிடம் சென்று, "வாய் இருக்குன்னு எதுவும் பேச கூடாது சேர்" என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன், "அப்போ நான் பொய் சொல்றேனா? இங்கே இருக்கிற எல்லாத்துக்குமே உன் தங்கச்சி, அந்த சாத்விக் வண்டவாளம் தெரியும்" என்று எகிறினார் அவர். "இவளோ தான் உங்களுக்கு மரியாதை. என் தங்கச்சப் பத்தி எனக்கு தெரியும்" என்றான் அழுத்தமான குரலில்.


சனாவைப் பற்றி பேசிய இருவரும் சத்தமாகப் பேச ஏனையோரும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டனர். "வாயை மூடுங்க. உங்களுக்கு யாரு இந்த நியூஸை கொடுத்தா?" என்று உறும, அவர்களின் முதுகுத்தண்டு அனைவருக்கும் சில்லிட்டது. ஒருவர் தனது மொபைலில் பிரைவட் நம்பரில் இருந்த ஒரு மெசேஜைக் காட்டினான். அங்கிருந்த அத்தனை பேருக்கும் அம் மெசேஜ் சென்று அடைந்து இருந்தது.


அதைப் பார்த்த கார்த்திக் தன் பி.ஏ வை உடனடியாக அழைத்தவன், "இந்த நம்பர் யாரோடதுன்னு கண்டிபிடிச்சு சொல்லு" என்று சீறியவன் மற்றவர்களின் புறம் திரும்பினான். "என் தங்கச்சைப் பத்தி எனக்கு தெரியும். இனி ஒரு வார்த்தை அவளைப் பத்தி தப்பா பேசினிங்க பேச நாக்கு இருக்காது" என்று தன் சிம்மக் குரலில் உறும, ஒருவர் தைரியமாக, "என்ன மிரட்டுறியா கார்த்திக். நீ பொடுசு. மறந்துறாத" என்று எச்சரித்தார் அவர்.


"ஹாஹாஹா" என அரக்கனைப் போல் சிரித்தவன், "கடுகு சிறிதானாலும் காரம் பெரிது. இந்த பழமொழியை கேள்வி பட்டு இருக்கிங்களா சேர். அதைப் போல தான் நானும். இது வரைக்கும் பார்க்காத கார்த்திக்கை காட்ட வச்சிறாதிங்க. அவன் கூட மோதினால் சாம்பல் கூட மிஞ்சாது. ஜாக்கிரதை" என்று கர்ஜித்து இறுதியாக அனைவரையும் விரல் நீட்டி எச்சரித்து அவ்விடம் விட்டு அகன்றான்.


இதை எதையுமே அறியாமல் சனா, சாத்விக் இருவரும் தங்கள் வேலைகளில் மூழ்கி இருந்தனர். ஆனால் அந்த மர்ம நபரிற்கோ ஒரு அழைப்பு வர அதை ஏற்று பேசினான். "சொல்லுடா. எந்த அளவு போயிட்டு இருக்கு?" என்று வினவ, "சாத்விக் சேர் மீடிங் முடிஞ்ச உடனே போயிட்டாரு. கார்த்திக் சேர் ஒரு ஆட்டம் ஆடினாரு பாருங்க. என் ஹார்ட்டே வெளியில வந்துரும் போல இருந்தது. அந்த அளவுக்கு கோபமா இருந்தாரு" என்றவனின் குரலில் அப்பாட்டமாக பயம் தெரிந்தது.


"சரி விடு. அடுத்து செய்ய வேண்டியது ரெடியா இருக்கா?" என்று மர்ம நபர் அவனிடம் வினவ, "நீங்க சொன்னது போல தான் சேர் செஞ்சேன்" என்றான் தெளிவாக. "ஒகே மீதி அதுவாகவே நடக்கும்" என்றான் மர்மநபர். "சேர் சொல்றேன்னு தப்பா எடுத்துகாதிங்க. இது யாரு செஞ்சதுன்னோ இல்லை பின்னாடி யாரு இருக்காங்கன்னோ கார்த்திக் சேர் கண்டுபிடிச்சாருன்னா உயிரோட விட மாட்டாரு. ஜாக்கிரதையாக இருங்க" என்றான் வேலையாள்.


"உனக்கு பணம் கொடுத்தது என் கிட்ட வேலை பார்க்க. அவனுக்கு ஜால்ரா அடிக்க இல்லை" என்று சீறியவன் அழைப்பைத் துண்டித்தான். 'மறுபடியும் அடிச்சி கிட்டு சாவுங்கடா. என்னை உங்களால கண்டுபிடிக்கவே முடியாது' என்று தன்னுள்ளே நினைத்துக் கொண்டு வஞ்சமாகச் சிரித்தான் மர்ம நபர்.


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
22770



அத்தியாயம் 13



கார்த்திக் கோபமாக தனது காரை செலுத்திக் கொண்டு இருந்தான். அவன் மனமோ உலைக்கலமாக கொதித்துக் கொண்டு இருந்தது. 'என்ன தைரியம் இருந்தால் என் தங்கச்சைப் பத்தி அவதூறா பேசுவாங்க. அவ ரொம்ப சின்ன பொண்ணு, அவ அதிர்ந்து பேசவே பயப்படுவா இதுல அவனை மயக்கி கைக்குள்ள போடுறாளாம்' என்று பல்லைக் கடித்தான். 'மவனே என் கிட்ட மாட்டு அப்போ தோளை உரிச்சி உப்பு கண்டம் போடுறேன் டா' என்று கருவியவன் தன் வேகத்தை மேலும் அதிகரித்து நேரடியாக தன் வீட்டிற்கே வந்தான்.


தன் அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்வதற்கு இன்றைய நிலமை அவனுக்கு ஒத்துழைப்பை வழங்கவில்லை. காரை நிறுத்தி வேக எட்டுக்களுடன் தனது அறைக்குள் நுழைந்து கதவை வேகமாக அடைக்க அதன் சத்தத்தில் வேலையில் இருந்து வெளியே வந்த விசாலாட்சி அதைப் பார்த்து, 'ரொம்ப கோவமா இருக்கான் போல இருக்கே. பிஸ்னஸ்ல ஏதாவது பிரச்சனையா இருக்கும். அவனே கீழே வரட்டும் காபி கொடுக்கலாம்' என்று தனக்குள்ளேயே பேசி தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.


கார்த்திக் தனது லெப்டொப் பேர்கை கட்டிலில் வீசி எறிந்தவன் நேரடியாக கோபம் தணியும் வரையில் ஷவரில் நின்று இருந்தான். குளிர் நீர் அவன் உடலில் வழிந்தோடி உடலை குளிர்வித்தாலும் அவன் மனதை குளிர்விக்கவில்லை. இதைப் பற்றி சனாவிடம் பேசி அவள் மனதைக் காயப்படுத்த அவன் விரும்பவில்லை. அதனால் தனக்குள்ளேயே இதை மறைக்க வேண்டும் என முடிவெடுத்தான்.


கல்லூரி முடியும் தருவாயில் நாளை போட்டியிற்காக மும்பாய் செல்லும் மாணவர்களை அதிபர் அழைத்துக் கொண்டு சாத்விக்கின் அறைக்குச் சென்றார். சாத்விக், "வாங்க காய்ஸ்" என்றவன் மடிக் கணினியில் இருந்து பார்வையை திருப்பி அவர்களைப் பார்த்தான். சனா அனைவரின் பின்னாலும் அவன் பார்க்க முடியாதவாறு ஒளிந்திருக்க அவளது சிறு பிள்ளைத் தனத்தில் அவன் உதடுகள் சிரிக்க துடிக்க அதை பற்களால் கடித்து வெளித் தெரியாமல் நிறுத்தினான்.


"நாளைக்கு காலையில இங்கே இருந்து டிரெயின்ல போறோம். சோ ஏர்லி மோர்னிங் ஃபைவ்க்கு ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்துருங்க. ஒரே ஒரு பொண்ணு இருக்கிறதால் என் ஸ்டாஃப் ஒருத்தரும் அவங்க கூட போக வருவாங்க. சோ பயப்பட அவசியம் இல்லை. நாளைக்கு ஃபுள் டே ரெஸ்ட் எடுங்க. நாளான்னைக்கு கம்படிஷன் ஆரம்பமாகும். தொடர்ந்து மூனு நாள் கம்படிஷன் நடக்கும். அதுக்கு அடுத்து இரண்டு நாள் ஊரை சுத்தி பார்த்துட்டு இங்கே வரலாம்.


முக்கியமான விஷயம் கம்படிஷனுக்கு பார்டிசிபேர் பண்றவங்க கம்படிஷன் நடக்கும் போது கண்டிப்பா பிளெக் என்ட் வைட் டிரஸ்ஸை தவிற வேறு எதுவுமே போட கூடாதுன்னு ரூல்ஸ்ல இருக்கு. சோ, மூனு டிரஸ் எடுங்க. பெயின்ட் பிரஷ், பென்சில் உங்களுக்கு நீங்களே எடுத்துட்டு வாங்க. வைட் ஷீட், ஸ்டேன்ட் அவங்க கொடுப்பாங்க. இதையெல்லாம் மறக்காதிங்க ஸ்டூடன்ஸ். என்ட் உங்க கூட நானும், என் ஸ்டாஃபும் வருவோம்" என்றான்.


'இவனை நம்ப முடியாதே. ஏதோ பிளேன் பண்ணி இருக்கான். கடவுளே காப்பாத்து. இந்த காட்டுப்பையன் எனக்காக ஒரு லேடி ஸ்டாஃபை வர வைக்க இருக்கானா? இதுல ஏதாவது வில்லங்கம் இருக்கனுமே' என்று யோசிக்க ஆரம்பிக்க அடுத்து இரண்டு நாள் மும்பையை சுற்றி பார்க்கச் செல்வதாகக் கூற, 'இவன் என்ன லூசா? என் அண்ணன் கல்யாணம் இருக்கு. இதுல நான் சுத்தி பார்க்குறதா? இவனை...' என்று கோபமாக பல்லைக் கடித்தாள்.


சனாவின் ஒவ்வொரு முகப் பாவனையையும் கீழே பளபளப்பாக பதிக்கப்பட்டு இருந்த வெள்ளை மாபிள் மூலம் பார்த்தவன், 'ஓஓ என்னை இன்னும் திட்டி முடிய இல்லையா?' என்று தனக்குள் சிரித்துக் கொண்டான். "ஒகே யா ஸ்டூடன்ஸ்?" என்று கேள்வியாய் புருவம் உயர்த்த அனைவரும் "ஒகே சேர்" என்றனர். அதிபர் வெளியெற அவர் பின்னே ஆண் மாணவர்களும் சென்றனர். அதனால் சனா சற்று ஒதுங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


அவர்கள் வெளியேறியவுடன் சனா வெளியேற எத்தணிக்க அவள் கையைப் பிடித்து சாத்விக் அவளை தன் புறம் வேகமாக இழுத்தான். ஒவ்வொருவராக வெளியேறும் போதே சாத்விக் தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்துவிட்டான். சனாவும் வெளியேற எத்தணிக்கும் போதே இழுத்தான் அவள் வெளியே செல்லாமல் இருக்க. அவன் கைப் பிடித்து இழுப்பான் என்பதை எதிர்பார்க்காத சனா அவன் இழுத்த இழுப்பிற்கு சென்று அவன் மேலேயே மோதி சமநிலை இல்லாமல் விழப் பார்க்க சாத்விக் அவளை இடைப் பிடித்து தாங்கினான்.


சனா அதிர்ந்து சாத்விக்கின் முகம் பார்க்க; சாத்விக், "என்ன பார்வை? ரொம்ப ஓவரா மேடம் என்னை திட்றிங்களே மனசுக்குள்ள. அதுக்கு தண்டனை கொடுத்தாகனுமே" என்றவன் அடுத்த நொடி அவள் பவளஇதழ்களை தன் முரட்டு இதழ்களால் வன்மையாக சிறை செய்தான். வன்மையாக ஆரம்பித்த முத்தம் மென்மையாக மாறி சில நொடிகளில் வன்மையாக மாறி முடிவுக்கு வந்தது. சனா தீடீர் தாக்குதில் மீண்டும் நிலைக் குழைய சாத்விக் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.


"நாளைக்கு காலையில ரெடியாகி இரு. உன் அண்ணாவை சமாதானப்படுத்து பேபி. டைமே இல்லை" என்று காது மடலில் மீசை உரச உரைத்தவன் அவள் நாசியில் இருந்த மூக்குத்தியில் அழுந்த முத்தமிட்டு விடுவித்தான். ஆரம்பத்தில் அவன் அணைப்பில் ஓரளவு தன்னை சமன்படுத்திக் கொண்டவள் அவன் மீசை காது மடலில் உரச உடல் சிலிர்க்க மென்மையாக நடுங்கினாள். அதற்குள் அவன் மூக்குத்தியின் மீது இதழ் பதிக்க, நடுக்கத்துடன் பயத்தில் வேகமாக மூச்சை வெளியிட்டாள்.


கால்கள் வலுவிழந்து பின்னப்பட்டது போன்று இருக்க அவன் சர்ட் கொலரை பிடித்து தன்னை நிலைப் படுத்தி ஆழமாக மூச்சை வெளியிட்டாள். முழுமையாக தன்னை சமன்படுத்த அவளிற்கு ஓரிரு நிமிடங்கள் அவகாசம் தேவைப்பட்டது. அவனை முறைத்தவள்; மார்பில் கைவைத்து அவனைத் தள்ளி விட்டு கதவைத் திறந்து வேகமாக வெளியேறினாள். சாத்விக்கும் அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் பார்த்துக் கொண்டே இருந்தான். இல்லை இல்லை இரசரசித்துக் கொண்டு இருந்தான்.



~ உன் மூச்சுக் காற்றும்
எனைத் தீண்ட
என் மூச்சு வேக எட்டுக்களை
வைக்கிறதே
உன் முத்தம் என்னை கிறங்கச்
செய்ய
என் உடல் மொத்தமும் உனக்காக
உருகுவது
ஏனடா என்னவனே???? ~



இறுதியாக தன்னை அவள் தள்ளி விடுவாள் என்று அவனே எதிர்பார்க்கவே இல்லை. அதனால் அவள் தள்ளிவிட்டவுடன் இரண்டி பின் நகர்ந்தது உண்மையே. "ஜானு, என்னை கொல்றடி" என்று தன் பின் தலையின் கேசத்தை கலைக்க, அவன் இதழ்கள் புன்னகையில் விரிந்து இருந்தன. சனா வேகமாக ஓடி வந்தவள் வகுப்பறையை நெருங்கும் போது தன் முகத்தை கழுவிக் கொண்டு நுழைந்தாள். அபி 'என்ன?' என வினவ, அனைவரின் முன்னிலையிலும் சாத்விக் கூறியவற்றை மாத்திரம் கூறினாள்.


"ஆமா எதுக்கு டென்ஷனா இருக்க? உன் கையெல்லாம் எதுக்குடி நடுங்குது?" என்று அபி தன் விசாரணையை ஆரம்பிக்க, "நாளைக்கு போகனும் அபி. இன்னைக்கு அண்ணனை சமாளிச்சே ஆகனும். என்ட் வைட் என்ட் பிளெக் தான் வியர் பண்ணனுமாம். என் கிட்ட ஃபுள் வைட், ஃபுள் பிளேக் தனிதனியாதான் டிரெஸ் இருக்கு. இன்னைக்கு ஈவீனிங் நாம போகும் போது டிரெஸ் வாங்கிட்டு போலாமா? நைட்டுக்கு அண்ணனை சமாதானப்படுத்தி அவனை ஷொபிங் அழைச்சிட்டு போறது நடக்காது. அதான் சொல்றேன்" என்று கதையை மெதுவாக அவள் அறியாதவாறு மாற்றினாள்.


"நீ சொல்றதும் உண்மை தான். உன் அண்ணனை சமாதானப்படுத்தவே போதும் போதும்னு ஆகிரும்" என்று அலுத்துக் கொண்டாள் அபி. "அது எனக்கு ஒரு பெரிய டாஸ்க் அபி. நீயும் கொஞ்சம் உதவி பண்ணு. தனியா அம்போன்னு விட்றாத" என்று பாவமாய் முகத்தை வைக்க அபி சிரித்தாள். மாலை கல்லூரி முடிந்து இருவரும் வீட்டிற்குச் செல்ல வரவேற்பரையில் சோபாவில் அமர்ந்து கார்த்திக் வேலை செய்துக் கொண்டு இருந்தான்.


அவனை எதிர்பார்க்காத இருவரும் முதலில் அதிர சனா மெதுவாக தான் வாங்கிய ஆடைகளை எடுத்து நகர, "எதுக்கு இரண்டு பேரும் திருதிருன்னு முழிக்கிறிங்க? என்ன தப்பு பண்ணிங்க இரண்டு பேரும்?" என்று மடிக் கணினியை பார்த்தவாறே வினவியவன் இருவரினதும் திருட்டு முழியையைப் பார்த்தவன் சந்தேகமாக இருவரையும் கூர்ந்து பார்க்க சனாவின் கையில் இருந்த பேர்கைப் பார்த்தான்.


"கையில என்ன பேர்க் சனா?" என்று புருவமுயர்த்தி வினவ, "அது வந்து அண்ணா எனக்கு கம்படிஷனுக்கு தேவையான சில டிரசஸை வாங்கினேன்" என்று தலை குனிந்துக் கொள்ள, "என்ன கம்படிஷன் சனா? என் கிட்ட சொல்லவே இல்லையே" என்று புருவம் சுருக்கிப் பார்த்தான். "அண்ணா அது சம்பந்தமா நான் உன் கிட்ட பேசனும். பிரஷ்ஷப்பாகிட்டு வரட்டுமா?" என்றாள் மெதுவான குரலில்.


கார்த்திக்கும் யோசணையுடன் சரி என்று தலையசைக்க அபி, சனா இருவரும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று தங்கள் அறைகளுக்கு ஓடினர். சனா குளித்து வந்தவள் தளவாடியின் முன் நின்று தன் தமையனிடம் எவ்வாறு பேச வேண்டும் என ஒத்திகைப் பார்த்து கீழே சென்றாள். கார்த்திக்கின் பார்வை அவளைத் தொடர்ந்தாலும் அதை பார்க்காதவாறு தனது கிருஷ்ணனைத் தேடிச் சென்றாள்.


'கிருஷ்ணா நான் பாவம் இல்லையா!!!! எனக்கு உதவி பண்ணு. உன்னை நம்பி காரியத்துல இறங்குறேன். கழட்டி விட்றாத. பிளீஸ்' என்று கைக் கூப்பி வேண்டியவள் கார்த்திக்கின் முன் சென்று அமர்ந்தாள். அபி குளித்து வந்தவள் நல்லப் பிள்ளைப் போன்று சாமியறையில் விளக்கு ஏற்றச் சென்றாள். 'அண்ணியாரே வாயேன்டி சாபோர்ட்டுக்கு' என்று மானசீகமாக அழைக்க, அவளை கார்த்திக்குன் குரல் அவன் புறம் திருப்பியது.


"என்ன யோசிச்சிட்டு இருக்க சனா?" என சந்தேகமாய் அவளைப் பார்க்க, "அது அபி வரும் வரைக்கும் இருக்கேன்" என்றாள் அவசரமாக. "குந்தானி என்னை மாட்டி விட்டாளே" என்று அபி சாமியறையில் இருந்தே சனாவிற்கு திட்டித் தீர்த்தாள். கார்த்திக் சத்தமாக, "நயா இங்கே வா" என்று அழைத்தான். அபியும் இனிமேலும் தாமதிக்க முடியாது என்று அங்கே சனாவை முறைத்து வர அசட்டுச் சிரிப்பை உதிர்த்தாள் சனா. கார்த்திக், "நயா வந்துட்டா சனா. மேலே சொல்லு" என்று காலிற்கு மேலே கால் வைத்து அமர்ந்து தீர்க்கமாக இருவரையும் பார்த்தான்.


"இன்னைக்கு காலையில நான் என்ன சொன்னாலும் பண்றேன்னு ஒரு புரொமிஸ் பண்ண. ஞாபகம் இருக்கா?" என்று சனா நிறுத்த, "ஆமா. அதுக்கு என்ன இப்போ?" என்றான். "எனக்கு நாளான்னைக்கு மும்பைல ஒரு ஆர்ட் கம்படிஷன் நடக்குது. அதுக்கு எங்க கோலேஜூல மூனு பேர் போறோம். அதுல நானும் ஒரு ஆள். நாளைக்கு காலையில இங்கிருந்து கிளம்பனும். கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நான் வந்துருவேன். அதுக்கு நீ ஒகே சொல்லனும்" என்றாள் தலை குனிந்தவாறே.


"வாட்??" என்று அதிர்ந்து எழுந்து நின்றான். "அண்ணா பிளீஸ் எனக்கு உன் கல்யாணம் ரொம்ப நாள் ஆசை. நான் இதை ஆரம்பத்துலேயே சொல்லி இருந்தால் நீ கல்யாணமே வர வேணான்னு சொல்லி இருப்ப. என்னால அதை ஏத்துக்க முடியாது" என்று அவன் முகம் பார்க்க கார்த்திக்கோ அபியை முறைக்க, "அவளை முறைக்காத அண்ணா. நான் தான் இதை உன் கிட்ட சொல்ல வேணான்னு சொன்னேன். பிளீஸ் புரிஞ்சிக்கோ அண்ணா. எனக்கு அந்த கம்படிஷன் ரொம்ப முக்கியம் அண்ணா. அதே போல உங்க கல்யாணமும் எனக்கு முக்கியம்" என்றாள்.


கார்த்திக் செய்வது அறியாது சோபாவில் 'தொப்' என அமர அவன் முன் மண்டியிட்டு சனா அமர்ந்து, "அண்ணா என் ஆசையை நிறைவேத்துவன்னும் தெரியும். கொடுத்த வாக்கை காப்பாத்துவன்னும் தெரியும். உன் கல்யாணம் நான் இல்லாமல் நடக்குமா? என்ட் நான் என்னை நல்லா பார்த்துப்பேன் அண்ணா. அபியாலும், உன்னாலேயும் வர முடியாது. நீங்க இரண்டு பேரும் கண்டிப்பா இங்கே இருக்கனும். பிளீஸ் ஒகே சொல்லு அண்ணா" என்று அவன் கையை பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.


"சனா மா இது வரைக்கும் நான் உன்னை விட்டு தனியா இருந்ததே இல்லை. நான் எப்படிடா இருப்பேன். அதுவும் நம்ம வீட்டுல ஒரு விசேஷம் வச்சிருக்கும் போது.." என்று பரிதவிப்புடன் அவள் முகத்தைக் கையிலேந்தினான். இன்னும் சில நாட்களில் அவளைப் பார்க்கவே முடியாதவாறு துடிப்பதை அறியாமல் பேசினான் கார்த்திக். "புரியிது அண்ணா. நான் என்னை நல்லா பார்த்துப்பேனா? இல்லையான்னு பார்க்க ஒரு வாய்ப்பா இருக்குமே" என்றாள் சனா. "உன்னை விட்டு எனக்கு இருக்க முடியுமான்னு தெரியல்லை டா" என்றான் தவிப்புடன்.


"நானும் இது வரைக்கும் உன்னை விட்டு இருந்ததே இல்லையே அண்ணா. பட், இப்போ அப்படி ஒரு சிடிவேஷன் வந்திருக்கே. நான் கம்படிஷன்ல பார்டிசிபேர்ட் பண்ணாமல் இருக்க முடியாது. எனக்கு மனசுக்குள்ள பயம் ஓடிட்டே இருக்கு அண்ணா. நீயோ அபியோ இல்லாமல் தனியா போக போறேன்" என்றாள் அவன் மடியில் படுத்தவாறே, "எத்தனை நாள் கம்படிஷன் நடக்கும் மா?" என்றான் விரும்பாத குரலில். "மூனு நாள் அண்ணா. நாளைக்கு கிளம்பனும்" என்றாள்.


"பார்த்து பத்துரமா போ. நான் பிரின்சிபல் கூட பேசுறேன் ஒரு முறை" என்றான் தீவிரமாக. "ஒகே அண்ணா. நீ பேசு" என்றவள் அவன் அருகில் அமர்ந்து தோளில் சாய கார்த்திக் பிரின்சிபலுடன் பேசினான். நிர்வாகியின் பெயரை ஒருவருக்கும் அறிவிக்க வேண்டாம் என்று இதற்கு முன்னேயே சாத்விக் கூறி இருந்ததால் இவரும் கூறாமல் நிர்வாகி என்றே கூறி இருந்தார். சனாவிற்காக ஒரு லேடி ஸ்டாஃபை வரவழைத்து இருப்பதாக அதிபர் கூறியது கார்த்திக்கிற்கு நிர்வாகியின் மீது நன் மதிப்பு உருவானது.


அனைத்து தகவலும் திருப்திகரமாக இருக்க முழு மனதுடன் சனாவை அனுப்ப முடிவு செய்தான். "ஒகே டா. சந்தோஷமா போய் பார்டிசிபேர்ட் பண்ணு. ஜெயிச்சிட்டு வா" என்று நெற்றியில் முத்தமிட, "தேங்ஸ் அண்ணா" என்று அவனை அணைத்துக் கொள்ள இத்தனை நேரமாக பார்வையாளராக இருந்த அபியை இன்னொரு கையை நீட்டி அழைத்தான் கார்த்திக். அவளும் வேகமாக வந்து அவனுள் புகுந்துக் கொண்டாள்.


பல அறிவுரைகளை வழங்க ஆரம்பித்து சனாவிற்கு தேவையானதை எடுத்து வைக்க உதவி செய்தான். கார்த்திக், "கல்யாணத்துக்கு முந்தைய நாள் பார்டி அரேன்ஞ் பண்ணி இருக்கேன் சனா. அதுக்கு வர முடியுமா?" என்று வினவ, "முடியும் அண்ணா. நான் சீக்கிரமா வரேன். எப்படியாவது அதுல கலந்துக்குவேன்" என்றாள். அன்றைய தினம் இவ்வாறு அனைவருக்கும் கழிய அதிகாலை நான்கு மணிளவில் சாத்விக் சனாவிற்கு அழைத்தான்.


"ஹலோ சேர் சொல்லுங்க" என்று சனா தன் முகத்தை துவாயினால் துடைத்துக் கொண்டே கேட்க, "எழுந்திட்டியா பேபி? அதை பார்க்க தான் நான் போன் பண்ணேன். நான் இன்னும் ஹாஃப் என்ர்ல அங்கே போய் சேந்திருவேன். நீ பத்துரமா வந்துரு. உன் திங்ஸ் எல்லாமே எடுத்துகிட்டியா? எதையும் மிஸ் பண்ண இல்லையே. எதுக்கும் கடைசியா ஒரு முறை பார்த்துக்கோ" என்றான். "ஒகே சேர். நான் இன்னொரு முறை பார்த்துக்குறேன்.. சேர் அத்தை வந்திருக்காங்க. நான் அப்புறமா பேசுறேன்" என்று அவசரமாக அழைப்பை துண்டித்து கதவைத் திறந்தாள்.


காலை உணவை தயார் டிஃபன் பொக்சில் கொண்டு வந்திருந்தார் விசாலாட்சி. "இதை டைமுக்கு சாப்பிடு. லன்சுக்கும் ரெடி பண்ணலாம். உனக்கு டிரவெலிங் நேரம் ஹெவி ஃபுட் ஒத்துக்காதுன்னு பண்ண இல்லை. ஸ்நேக்ஸ் கொஞ்சம் வச்சிருக்கேன். வோடர் போட்டுலை எடுத்தியா?" என்று கேள்விக் கணைகளைத் தொடுக்க சனா அவரை புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


"அத்தை ரிலெக்ஸ். நான் எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன். நீங்க டென்ஷன் ஆகாமல் இருங்க" என்க, "சனா" என்றவாறே கையில் உணவுடன் வந்தான் கார்த்திக். "பிரெக் ஃபெர்ஸ்ட் எத்தனை மணிக்கு சாப்பிடுவியோ தெரியல்லை. இப்போ கொஞ்சமா சாப்பிடு. நீ கிளம்புறதுக்குள்ள செறிச்சிடும்" என்று ஊட்டி விட மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.


அபி, "போதும் போதும் அவளை பாசத்தால திணறடிச்சது. அவ மூச்சி விடட்டும். இப்போவே நாலு பத்து. இன்னும் ஃபிஃப்டி மினிட்ஸ்ல கிளம்பனும். சனா நீ ரெடியாகு" என்று மற்ற இருவரையும் இழுத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியே சென்றாள். சனா ஊதா நிறம், பிங்க் நிறத்தில் சுடிதார் அணிந்து குளித்து இருந்ததால் தன் கூந்தலை விரித்து சிறிய கிளிப்பில் அடக்கி இருந்தாள். நெற்றியில் சிறிய வட்ட கறுப்பு நிற பொட்டு; இடது கையில் வொச், வலது கையில் இரண்டு கண்ணாடி வளையல்கள்; கழுத்தில் தங்க சிறிய மாலை. ஆடையின் நிறத்திற்கு ஏற்ப சிறிய ஜிமிக்கி அணிந்து வந்தாள்.


சாத்விக் தனது வீட்டிலிருந்து காரில் வெளியாக அவனை அவதானிப்பதற்காக மர்பநபர் வைத்திருந்தவன் உடனடியாக மர்மநபரிற்கு அழைத்தான் சாத்விக்கை பின் தொடர்ந்தவாறே. கட்டிலில் இருந்து துளாவியவாறே தன் மொபைலை, 'மிட் நைட்டுல எவன் போன் பண்றது?' என்ற கடுப்பில் அழைப்பை ஏற்றான். "சேர் சாத்விக் சேர் வீட்டை விட்டு வெளியில போறாரு டிரைவர் கூட சேர்" என்றான். "அவன் எங்கே போனா எனக்கு என்னடா?" எரிந்து விழுந்தவன், "அவன் பிஸ்னஸ் விஷயமா வெளியில போலாம். அதுக்கு எதுக்கு போன் பண்ற?" என்றான் கடுப்பாக.


"சேர் அவரு ஏயார் போர்டுக்கு போக இல்லை. வேற ரோட்ல போறாரு. இவரு போற ரோட்டை பார்த்தால் ரெயிலவே ஸ்டேஷனுக்கு போறது போல இருக்கு" என்றான் தீவிரமாக. "சரி அவனை போலோ பண்ணு. உன்னால முடியும்னா டிரெயின்லேயே அவனை போலோ பண்ணு. இல்லைன்னா அவன் எந்த டிரெயின்ல ஏறுறான்னு பார்த்து உன் ஆள் யாராவது இருந்தால் இடையில ஏறி அவனை போலோ பண்ண சொல்லு. மீதியை நான் பார்த்துக்குறேன்" என்று அழைப்பைத் துண்டித்தான்.


கார்த்திக்கும் சனாவை அழைத்துக் கொண்டு புகையிரத நிலையத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தான்.....



 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
22806


அத்தியாயம் 14



கதிரவன் இன்னும் பாரினை பார்க்காத அவ் அதிகாலைப் பொழுதில் காரில் இருந்த சாரளத்தின் வழியே வேடிக்கைப் பார்த்தாள் சனா. குளிரினால் பனி மூட்டங்கள் கண்ணாடியில் படிய அதைப் பார்த்தவளுக்கு தானும் அக்குளிரை உணர வேண்டும் என உந்ததுதல் ஏற்பட காரின் யன்னலைத் திறந்து குளிர்க் காற்றை அனுபவிக்க ஆரம்பித்தாள். அதிகாலையில் வீசப்படும் காற்றில் எந்த வித தூசுத் துணிக்கைகளோ, மாசுக்களோ இல்லாத அதிகமான அளவு ஆக்சிஜன் (oxygen) நிறைந்த காற்றே இருக்கும்.


அத்தகைய வளியை சுவாசிப்பது உடலிற்கு சாலச் சிறந்தது. கார்த்திக் தன் தங்கை ஆழ்ந்து வெளிச் சூழலின் குளிரை அனுபவிப்பதைப் பார்த்தவனுக்கு நேற்று அவர்கள் பேசியது காதில் எதிரொலித்தது. 'சே என்ன மாதிரி மனிஷங்க இவங்க? இவளைப் போய் அப்படி பேசிட்டாங்களே!! இவனுங்களை ஏதும் பண்ண முடியல்லையே. இதை யாரு பண்ணான்னும் இன்னும் தெரியல்லை. தெரியட்டும் அப்புறம் இருக்கு' என்று கோபத்தில் பல்லை நற நற எனக் கடித்தான். சனா தமையனின் நிலை அறியாது அவ் ஏகாந்த சூழலில் மூழ்கி இருந்தாள்.


கார்த்திக்கின் கார் புகையிரத நிலையத்தை நெருங்கியது. கார்த்திக், "பட்டு உனக்கு சாப்பிட ஏதாவது வேணுமாடா? இன்னும் ஏதாவது வாங்கி தரட்டா?" என்று பாசமாய் வினவ, "அண்ணா என் கிட்ட இருக்கிறதையே என்னால சாப்பிட முடியுமான்னு தெரியல்லை. இன்னும் வாங்கி தந்தா நான் வாந்தி எடுத்து மயங்கியே இருக்கனும்" என்றாள் சிரிப்புடன். "நான் மென்டோஸ் வாங்கி தரேன். அது கொஞ்சம் காரமா இருக்கும். வாந்தி வரது போல இருந்தால் அதை சாப்பிடு" என்று அக்கறையாய் கூற அவளால் மறுக்க முடியவில்லை.


இருவரும் அங்கே சென்று அடைந்த உடன், சனாவின் ட்ரொலியை எடுத்து கார்த்திக் நடக்க சனா கார்த்திக் உடன் நடந்து சென்றான். அவளுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த அப்பெட்டியில் அமர வைக்க சனாவுடன் செல்ல இருந்த பெண்ணும் தன் டிரொலியுடன் உள்ளே நுழைந்தாள். அவளைப் பார்த்து சினேகமாக புன்னகைத்தவன் இறங்கி மென்டோஸை வாங்கி சனாவிடம் கொடுத்தான். அவளுக்கு சில அறிவுரைகளை வழங்கி புகையிரதம் கிளம்பும் வரையில் இருந்தான்.


புகையிரதம் கிளம்ப சனாவிற்கு அரை மனதுடன் விடைக் கொடுத்தான் கார்த்திக். அவன் மனமோ ஏதோ ஒரு காரணத்தினால் நெருடிக் கொண்டே இருந்தது. அதை ஒதுக்கி வைத்தவன் புகையிரதம் கண்ணில் இருந்து மறையும் வரை அங்கே நின்றவன் அங்கிருந்து சென்றான். கார்த்திக், சனா இருவரது வருகையையும் பார்த்த மர்மநபரின் ஆள் உடனடியாக அவ் விடயத்தையும் அவனிற்கு தெரியப்படுத்தினான்.


"ரொம்ப நல்ல விஷயம் சொல்லி இருக்க. அவங்க ரெண்டு பேரோட போடோஸூம் எனக்கு வேணூம். கண்டிப்பா இரண்டு பேரும் தனியா வெளியே போவாங்க. அவங்க இரண்டு பேரோட முகமும் கிளியரா இருக்கிறது போல எனக்கு போடோஸ் வேணும். அதுக்கு தேவையான ஆளுங்களை ஏற்பாடு பண்ணு" என்று அவசரக் கட்டளைகளைப் பிறப்பித்து அழைப்பைத் துண்டித்த மர்ம நபர், "ப்ரவீன்; ஆர்யனை எதிர்க்க ரெடியா இரு" என்று வஞ்சமாக உதட்டைச் சுழித்து தன் அன்றாட வேலைகளில் மூழ்கினான்.


சனா அமர்ந்து கண்மூடி இருக்க அவளது சிந்தனையை சாத்விக் ஆட் கொண்டு இருந்தான். 'இந்த காட்டுப் பையல் நான் வர முன்னாடியே இங்கே வந்திருக்கான்னு சொன்னான். டிரெயினும் கிளம்பிருச்சு இன்னும் ஆளைக் காணோமே. என்னாச்சு இவனுக்கு?' என்று யோசிக்க அவள் காதோரம் மீசையின் உரசலுடன், "என்ன பத்தி தானே யோசிச்சிட்டு இருக்க பேபி" என்ற குரல் கேட்டது. அவள் பதறி கண் இமைகளைத் திறக்க அவளுடன் தோள் உரசி அமர்ந்து இருந்தான் சாத்விக்.


சனா கண்மூடி அமரந்த போதே சாத்விக் மெதுவாக உள் நுழைய அங்கிருந்த பெண் சாத்விக்கிற்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குச் சென்றாள். சாத்விக் அப் பெண்ணிடம் வேலையொன்றை ஒப்படைத்து விட்டு, தான் அப் பெண்ணுடன் அங்கே இருப்பதாகவும் அவள் தான் மணப் புரிய இருக்கும் பெண் என்றும் கூறி இங்கே வந்தான். தனக்கு நம்பிக்கைக்கு உரிய ஒரு தொழிலாளி என்பதனால் இதை தைரியமாகக் கூறினான். அவளும் ஒத்துக் கொண்டு அங்கே சென்றாள்.


அவன் உள் நுழைந்த போது சனா கண்மூடி இருக்க, முதலில் அவள் உறங்குகிறாள் என்றே நினைத்தான். ஆனால் அவள் மூடிய இமைகளுக்குள் கண்மணி அங்குமிங்கும் ஓடித் திரிந்து சனா உறங்கவில்லை என்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டது. சிறிது நேரம் அவளை அங்குலம் அங்குலமாக இரசித்தவன் அதற்கு மேல் முடியாமலேயே அவளை நெருங்கிச் சென்று பேசினான்.


தான் அமர்ந்து இருந்த இடத்தில் இன்னொரு பெண்ணும் இருக்கிறாளே விவஸ்தை இல்லாமல் ஒட்டி உரசுகிறானே இந்தக் காட்டுப்பையல் என்று திட்டியவாறே பதட்டத்துடன் அப் பெண்ணைத் தேட, அவள் தேடல் என்ன என்பதைப் புரிந்துக் கொண்டவன், "அவ பக்கத்து போர்த்ல இருக்கா. இங்கே வர மாட்டா. நானும், நீயும் மட்டும் தான் இங்கே" என்று அவள் மூக்குத்தியில் முத்தமிட்டான்.


"அந்த பொண்ணும், நீயும் இங்கே இருப்பிங்கன்னு நினைச்சு மத்தவங்க யாரும் உங்களை டிஸ்டரப் பண்ண மாட்டாங்க. என் இடத்துல நான் இருப்பேன்னு அங்கே யாரும் வர மாட்டாங்க. என்ட் நான் முன்னாடியே சொல்லிட்டேன்; என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு. சோ இரண்டு இடத்தையுமே யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க" என்று அவள் முகவடிவை கைவிரலால் அளவிட சனா அவன் விரலைப் பிடித்தாள்.


அவன் 'என்ன?' எனப் புருவமுயர்த்த, "என்னை நம்பி இங்கே அனுப்பி இருக்காங்க சேர். அதனால தள்ளியே இருங்க" என்றவள் தள்ளி அமர அவள் கூறியதைக் கேட்ட சாத்விக்கிற்கு சுர்ரென்று கோபம் ஏறியது. அவள் தோள்பட்டையைப் பிடித்து இழுத்தவன், அவள் முகம் பார்த்து, "அப்போ என்னைப் பார்த்தா உனக்கு காமுகன் போல இருக்கா? உன்னை நான் ரேப் பண்ணிடுவேங்குற ரேஞ்சுக்கு பேசுற" என அடிக்குரலில் உறும பயத்தில் அவள் உடல் வெடவெடத்தது.


"பதிலை சொல்லுடி" எனச் சீற, அவளது நாக்கு பயத்தில் மேல் அண்ணத்தோடு ஒட்டிக் கொண்டது. "பதிலை சொல்லுடி" என்று மேலும் உறும , எச்சிலை விழுங்கியபடி, "நான் அப்படி சொல்ல இல்லை சேர். நான் வந்து..." என்று அவள் தடுமாற, "நீ வந்து..." என்று கோபத்தில் தோள்பட்டையை அழுத்த பயம் அதிகரித்து அவன் நெஞ்சிலேயே மயங்கி விழுந்தாள். உடனே தன் கோபத்தை ஓரளவு தணித்துக் கொண்டவன், "பேபி, பேபி" எனக் கன்னம் தட்டினான்.


அவள் விழிக்காமல் இருக்க அவனுக்கும் பதட்டம் வந்தது. அருகில் இருந்த அவளது தண்ணீர் போத்தலை எடுத்து அவள் முகத்தில் தெரிக்க கண் மணிகள் அங்குமிங்கும் ஓடின. மறுபடியும், "பேபி" என்று அவள் கன்னம் தட்ட, அவள் அப்போதும் கண்மணிகளை மட்டுமே அசைத்தாள். அவளை அணைத்தவன் அவள் காதில், "ஜானு" என்று தன் ஒட்டு மொத்த தவிப்பையும் கூறி அழைக்க மெதுவாக கண்விழித்தாள் சனா. அவள் முகம் பார்த்தவன் தன் தவிப்பை அவள் இதழ் மூலம் அவளுக்கு உணர்த்த சனா கண்களை மூடிக் கொண்டாள்.


வெகுநேரம் அவள் இதழிலேயே குடியிருந்தவன் மெதுவாக அவளை விடுவித்து, "மயங்கி என்னை ரொம்ப பயமுறுத்திட்ட டி" என்று தன்னுள்ளே அவளைப் புதைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவிற்கு இறுக அணைத்தான். சனா "வலிக்குது சேர்" என்று ஈனக் குரலில் முணக, அவன் பிடியைத் தளர்த்தி மென்மையாக அணைத்துக் கொண்டான். அவள் விலக முற்பட, "பேசாமல் இருடி" என்று அதட்டி தன் கைகளுக்குள்ளேயே வைத்துக் கொண்டான்.


அவளை தன் மடியில் அமர்த்தியவன் தன் நெஞ்சில் அவளை படுக்கை வைத்து ஒரு கையால் தலையை வருட மறுகையால் அவளை இடையோடு அணைத்துக் கொண்டான். அவன் தந்த சுகத்தில் கண்களை மூட நித்ராதேவியும் அவளை ஆட் கொள்ள அவ்வாறே கண்ணயர்ந்தாள். சாத்விக் தன் கோபத்தினால் செய்த முட்டாள் தனத்தை எண்ணி தன்னையே நொந்துக் கொண்டான். "ரியலி சொரி பேபி. நீ என்னை தப்பா நினைக்குறதை என்னால தாங்க முடியல்லை டி. அதான் இப்படி முட்டாள் தனமா நடந்துக்குறேன். சொரி பேபி" என்று அவள் கன்னத்தில் இதழ்பதித்து மன்னிப்பு வேண்டினான்.


அவளோ சற்று முணகி விட்டு மீண்டும், தன் உறக்கத்தைத் தொடர சாத்விக்கும் அவள் அருகில் இருக்கும் நிம்மதியில் உறங்கினான். பத்து மணியளவில் கார்த்திக்கின் அழைப்பில் சாத்விக், சனா இருவருமே கண் விழிக்க முதலில் தான் எங்கு இருக்கிறோம் என்பதை உணராது சனா மலங்க மலங்க விழிக்க, அதில் தொலைந்து போனான் சாத்விக். பின் நடந்தவை நியாபகத்திற்கு வர அவனை விட்டு விலகி அமர்ந்தவள் தண்ணீரைக் குடித்தாள். கார்த்திக்கின் அழைப்பை முதலில் ஏற்க முடியவில்லை.


மீண்டும் கார்த்திக் அழைக்க அழைப்பை ஏற்றவள், அவனுடன் சிறிது நேரம் பேசி அழைப்பைத் துண்டிக்க, அடுத்து அபி அழைத்தாள். அவளுடனும் பேசி முடித்து வெளியே வேடிக்கைப் பார்க்க விசாலாட்சி அழைத்து விசாரித்தவர் அவளை உண்ணுமாறி கூறி அழைப்பை துண்டித்தார். சாத்விக் அனைத்தையும் பார்த்வனுக்கு, 'இவளுக்கு பேசி வாயே வலிக்காதா?' எனப் பார்க்க, அவன் மனதில் ஒரு ஓரம் தனக்கு இவ்வாறு அழைத்துப் பேச யாருமே இல்லையே என்ற எண்ணம் உதிக்க மனம் வலித்தது.


சனா உணவை எடுத்து கைகழுவ சாத்விக்கைப் பார்த்தாள். அவனோ தனது மடிக் கணனியில் ஏதோ மும்முரமா வேலை செய்ய, "சேர் சாப்பிட இல்லையா?" என்றாள். இத்தனை நேரமாக அவன் மனதில் இருந்த வலிக்கு சனா அவள் அறியாமலேயே இவ் இரண்டு வார்த்தைகள் மூலம் மருந்திட்டாள். அவன் காயத்திற்கு மயிலிறகால் மருந்து இட்டதைப் போன்ற ஒரு உணர்வு மறவாமல் எழுந்தது சாத்விக்கிற்கு.


"இல்லை பேபி. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு சாப்பிடனும். நீ சாப்பிடு" என்றான் மென்மையாக. "முதல்ல சாப்பிடுங்க சேர். அப்புறமா மத்ததை பார்த்துக்கலாம். என்ன சாப்பாடு கொண்டு வந்து இருக்கிங்க" என்று அவள் கேட்க, "பிரட் என்ட் ஜேம்" என்றான். "அது பிரேக் பர்ஸ்டுக்கு போதுமா சேர்? அதை வச்சிட்டு என் கூட செயார் பண்ணி கொங்க சேர். முதல்லை கையை கழுவிட்டு வாங்க" என்றாள் அக்கறையாக.


"சோ, சொரி பேபி. எனக்கு இந்த வர்க்கை கண்டிப்பா முடிச்சே ஆகனும். சோ, நான் அப்புறமா சாப்பிடுறேன். நீ இப்போ சாப்பிடு" என்றான் நிலைமையை உணர்த்தி. "இந்த வேலையை செய்யவும் சக்தி வேணும் சேர். அதுக்கு கண்டிப்பா சாப்பிடனும். சாப்பிடுங்க சேர்" என்றாள் சற்று கெஞ்சல் குரலில். எதற்காக இவ் அக்கறை என்றால் அது அவளுக்கே தெரியாது. ஆனால் சாத்விக் உடம்பை வருத்தி வேலை செய்வதில் அவளுக்கு துளியளவும் விருப்பம் இல்லை.


"நீ ஊட்டி விடுறியா பேபி? நான் என் வேர்கை பார்த்துக்குறேன்" என்று உரிமையுடன் வினவ, சனா என்ன கூறுவது எனத் தயங்கினாள். "உனக்கு இஷ்டம் இல்லைன்னா விடு பேபி. நான் தனியா சாப்பிடுறேன். நீ இப்போ சாப்பிடு" என தன் ஏக்கத்தை மறைத்து தன் பார்வையை மடிக்கணனியின் புறம் திருப்பினான். சிறிது நேரத்தில் அவன் முகத்தருகே உணவுடன் கரம் நீண்டு இருக்க, அவன் நிமிரந்து சனாவைப் பார்த்தான்.


அவள் அவனைப் பாராது அவனது மடிக் கணனியைப் பார்த்தவாறே "நான் ஊட்டுறேன். நீங்க சாப்பிட்டுட்டே வேலையை பார்த்துகொங்க" என்று மெல்லிய குரலில் கூற புன்னகையுடன் வாங்கிக் கொண்டான். அவன் கண்களோ அவன் அனுமதியின்றி கண்ணீரை சுரக்க, வேலையை நிறுத்தி சனாவையே பார்த்தான் சாத்விக். அவனது மடிக் கணனியை பார்த்தவாறே இருந்ததால் சனாவிற்கு அவன் வேலை செய்யாமல் இருப்பது புரிய அவசரமாக நிமிரந்து அவனைப் பார்த்தாள்.


அவன் கண்கள் கலங்க தன்னை வெறிப்பதைப் பார்த்தவள், "என்னாச்சு சேர்? காரமா இருக்கா? எங்க வீட்டுல எல்லோரும் காராமா தான் சாப்பிடுவோம். நீங்க காரம் சாப்பிட மாட்டிங்களா? எனக்கு தெரியாதே" என்று அவளே கேள்வியைக் கேட்டு அவளே அவசரமாக பதிலையும் அளிக்க சாத்விக் சிரித்து தனது மடிக் கணனியை அருகில் வைத்தவன், அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தான். சனா அதிர்ந்து விழிக்க, "நான் அப்படி சொல்லவே இல்லையே பேபி" என்று மூக்கோடு மூக்கை உரசினான்.


'அப்போ எதுக்கு?' என்ற கேள்வி அவள் கண்களில் தொக்கி நிற்பதைப் பார்த்தவன், தன் கண்ணீரை அவள் பார்க்கக் கூடாது என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, " எனக்கு வாழ்கையில இது வரைக்கும் இரண்டு பேர் தான் ஊட்டி விட்டு இருக்காங்க. ஒன்னு அம்மா. இரண்டாவது நீ. அதான் அம்மா நியாபகம் வந்து கண்ணு கலங்கிருச்சு" என்று சிறிது நேரம் அவ்வாறே இருந்தான். தன்னை சமன் படுத்திக் கொண்டவன், "ஆனாலும் பேபி, நீ வேற லெவல். நீயே கேள்வியும் கேட்டு அதுக்கு நீயே விடையும் சொன்ன பாரு அங்க இருக்க நீ" என்று தன் வெள்ளைப் பற்கள் மின்னச் சிரித்தான்.


இவன் சிரித்தால் இவ்வளவு அழகானவனா? என்று கண்கள் விரிய அவனையே பார்த்தாள் சனா. அவனது சிரிப்பிற்கு இத்தனை ஈர்ப்புத் தன்மை இருக்கும் என்பதை அவள் எதிர்பார்க்க இல்லை. "என்ன சைட் அடிச்சது போதும் பேபி" என்றவன் கன்னத்தில் இதழ்பதித்து மீண்டும் அவளை அருகில் அமர வைத்தவன்," எனக்கு ஊட்டு பேபி. உன் கையால ஒரு வாய் சாப்பிட்ட உடனே பசியும் வருது" என தன் வேலையைத் தொடர, சனா அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள். அவளுக்கு வழங்கிய அனைத்து உணவையும் வயிராற உண்டான்.


அவள் தண்ணீரை அவனுக்கு வழங்கி கைகளை கழுவ அப்போதே சனா இன்னும் உண்ணவில்லை என்பதை உணர்ந்தான். "நீ சாப்பிட இல்லையே பேபி. நான் ஃபுள்ளா சாப்பிட்டு உனக்கு கொடுக்கவே இல்லையே" என்று கவலையாய் கூற, "ஐயோ சேர், நீங்க கவலைபடாதிங்க. எனக்கு டிரெவலிங் நேரம் சாப்பிட்டா ஒத்துக்காது. அதனால நொறுக்கு தீணி இருக்கு. அதை சாப்பிடுறேன். நீங்க தேவையில்லாமல் யோசிச்சு மனசை குழப்பிக்காதிங்க" என்று முறுக்கை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.


தனக்காகவே அவள் கூறுகிறாள் என்பதை உணர்ந்தவன் அவள் தன்னவள் என்று கர்வமாக பார்த்தான். "அப்போ மும்பை போன அப்புறமா நானே உன்னை வெளியில கூட்டிட்டு போய் சாப்பாடு வாங்கி தரேன். நீ சாப்பிடு" என்று அவன் தன் முடிவைக் கூற, "ஒகே சேர்" என்றவள் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். தனது வேலைகளை முடித்து சாத்விக் நேரத்தைப் பார்க்க நேரம் மதியம் இரண்டு மணி எனக் காட்டியது. அவன் சனாவைப் பார்க்க அவள் வேடிக்கைப் பார்த்தவாறே கண்ணயர்ந்து இருந்தாள்.


அவளை உறக்கம் கலையா வண்ணம் தன் நெஞ்சில் சாய்த்து தோளோடு அணைத்துக் கொண்டான். தனது கையடக்கத் தொலைப்பேசியை எடுத்தவன், அனைவருக்கும் ரூம் ஏற்பாடு செய்ததைப் பற்றி விசாரித்து தெரிந்துக் கொண்டான். தன்னவள் தன் நெஞ்சில் சாய்ந்து இருக்க தென்றல் காற்று இருவரையும் தழுவ அவ் ஏகாந்த நிமிடங்களை இரசித்தான் சாத்விக். தன் மொபைலை எடுத்தவன், "அக்கம் பக்கம் யாரும் இல்லா, பூலோகம் வேண்டும்" என்ற பாடலை சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒலிவித்து அதில் லயித்தான்.



~ உன்னில் கண்டேன்
என் தாயின் அன்பை
நீ அறியா கண்டேன்
நீ என் மேல் வைத்த காதலை
எப்போது காண்பேன்
என் மனைவியாய் உன்னை
என்னவளே !!!! ~




தனது அலுவலகத்திற்குச் சென்றவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. கார்த்திக் அங்கும் இங்கும் நடந்து திரிந்தவன் தனது பி.ஏ ன் வரவிற்காக காத்து இருந்தான். அவனை வெகு நேரம் காக்க வைக்காது அவனது பி.ஏ ம் வந்து சேர, "எக்ஸ்கியூஸ் மீ சேர்" என்று உள் நுழைந்தான். "உள்ள வா. நேத்து நான் விசாரிக்க சொன்னதை விசாரிச்சியா? யாரு அந்த ஃபேக் மெசேஜை அனுப்பியது?" என்று வினவ, "சேர் அந்த நம்பர் இப்போ ஸ்விச் ஒஃப்ல இருக்கு. இன்னைக்கு ஈவீனிங்குள்ள அந்த சிம் யார் பெயர்ல வாங்கிருக்குன்னு தெரிஞ்சிரும் சேர்" என்றான்.


"கண்டிப்பா இன்னைக்கு ஈவீனிங்குள்ள தெரிஞ்சே ஆகனும். அவனை நான் அடிக்கிற அடியில இனிமேல் மொபைல் யூஸ் பண்ணவே பயப்படனும்" என்று உறுமியவன், தண்ணீரைக் குடித்து தன்னை சமன்படுத்தினான். "இன்னைக்கு வேலைகளை பார்க்கலாம்" என்று தன் வேலைகளிலும் மூழ்கினான். மாலை நேரம் அவனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சியைப் பற்றி அவன் அறியவே இல்லை.


கார்த்திக் தன் வேலைகளை முடித்து தன் மதிய உணவிற்கு எழுந்து செல்ல அவனைக் காண அவனது கல்லூரி நண்பன் மித்ரன் வருகை தந்தான். அவனைப் பார்த்த கார்த்திக், "வாடா மித்ரா. வட் அ பிளசன்ட் சப்ரைஸ்" என்று சந்தோஷத்துடன் உள்ளே அழைத்துச் சென்றான். மித்ரன், "எப்படி இருக்க ஆர்யன்?" என்று மித்ரனும் ஆர்வமாக வினவ, "எனக்கு என்னடா சூப்பரா இருக்கேன். இன்னும் ஐந்து நாள்ல கல்யாணம் டா எனக்கும் அபிக்கும். நகுல் அண்ணனையும், உன் வீட்டு ஆளீங்களுக்கும் வீட்டுக்கு வந்து கூப்பிடலாம்னு நினைச்சேன் நீ வந்துட்டு நேர்ல" என்று சிரித்தான் கார்த்திக்.


மித்ரன், நகுலனின் உடன் பிறந்தவன். அவனுடைய குடும்பத்திற்கு இரண்டாம் வாரிசு இவனே. விவசாயத்தையும், தந்தையின் ஏற்றுமதித் தொழிலையும் கவனித்துக் கொண்டு இன்னும் சில வருடங்களில் திருமணம் செய்வதாக முடிவு எடுத்து இருக்கிறான். மித்ரன், கார்த்திக் இருவருமே கல்லூரியில் இருந்தே நல்ல நண்பர்கள். அஞ்சலி மூலமாக நகுலனை அறியும் முன் மித்ரன் மூலமாக நகுலனை அறிந்து வைத்திருந்தான். இருந்தும் நகுலனோடு பெரியளவில் ஒட்டுதல் இருக்கவில்லை.


அஞ்சலியை தன் தங்கையாகப் பார்த்த கார்த்திக்கினால் நகுலன் அவள் மணாளனாக வருகைத் தந்தவுடன் இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகமாகவே இருந்தது. மித்ரனும் தனக்கு தெரிந்த பெண்ணே தன் அண்ணியாக வருகைத் தரப் போகிறாள் என்பதில் மிகவும் சந்தோஷம் அடைந்தான். வெகுநாட்களுக்குப் பிறகு இரு நண்பர்களும் சந்தித்ததால் இருவருமே அதிகமாகவே பேசினர். பின் மித்ரன், "மத்த பிரன்ஸ் பேசினாங்க ஆர்யன். நம்ம கோலேஜ்ல நெக்ஸ் இயர் நம்ம பெச்சுக்கு ஒரு கெட்டுகெதர் வைக்கலாமான்னு பேசினானுங்க. அதான், கேட்டு போலாம்னு வந்தேன்" என்றான்.


"நெக்ஸ்ட் இயருக்கு எதுக்குடா இப்போவே பிளேனிங்?" என்று கார்த்திக் சிரிக்க, "நீங்க எல்லாம் பெரிய பிஸ்னஸ் மேன் டா. நெக்ஸ் மன்துக்கே உனக்கு டைம் இருக்காது. என்ட், ஜனவரி பர்ஸ்ட் அங்கே செலிப்ரேட் பண்ணலாம்னு பிளேன் பண்ணோம். அவங்க அவங்க ஃபெமிலியை கண்டிப்பா கூட்டிட்டு வரதா இருக்கோம். சோ, நீ ஜனவரி பர்ஸ்ட் எந்த ஒரு கமிட்மன்டும் வச்சிக்காத மச்சான். இன்னும் ஆறு மாசம் இருக்கு. சோ பார்த்து பண்ணுடா" என்றான் மித்ரன்.


"ஷூயர் டா. நானும் என் ஃபெமிலியும் கண்டிப்பா வரோம்" என்று உறுதி அளித்தான் கார்த்திக். "எங்க ஃபிரன்ஸ் எல்லாருமே வருவாங்க. பழைய படி சண்டையில்லாமல் இருந்தாலே சந்தோஷம்டா. ப்ரவீனைப் பார்த்தே பல வருஷம் ஆச்சுடா. அவனையும் வர சொல்ல வேணும். அவன் எங்க இருக்கான்னே தெரிரயல்லை. இன்னும் பழசை நினைச்சுட்டு இருக்கானோ தெரியாதுடா" என்று வருந்திய குரலில் கூற, "அவன் கிட்ட இன்ஃபோர்ம் பண்ண வேண்டியது என் பொறுப்பு" என்றான் கார்த்திக். "அவன் எங்கே இருக்கான்னு உனக்கு தெரியுமா? அவன் கூட நீ பேசுறதா? பழசை இரண்டு பேரும் மறந்துட்டிங்க தானே டா?" என்று சந்தோஷமாய் வினவ ஒற்றைப் புன்னகையை பதிலாக அளித்தான்.


மித்ரன் உடனே தன் நண்பனுக்கு அழைத்தான். அழைப்பை ஏற்ற ஆகாஷ் மற்ற நண்பர்களையும் கன்பிரன்சில் அழைத்தான். அனைவருக்கும் ப்ரவீன் கிடைத்து விட்டான் என்ற செய்தியைக் கூற அவர்கள் அனைவருமே அகமகிழ்நதனர் என்பது உண்மையே. இரு துருவங்களாக இருந்தவர்கள் ஒரு பாதையில் ஒன்று சேருகிறார்கள் என்றால் அதை விட சந்தோஷம் ஏதும் இல்லையே!!! வெகு நேரம் பேசியவர்கள் அரட்டை அடித்து முடித்து மித்ரனும் குடும்பத்துடன் திருமணத்திற்கு வருவதாக உறுதி கூறி அங்கிருந்து விடைப் பெற்றான்.


மாலை நேரம் நண்பர்களுடன் பேசி விட்டு சந்தோஷமான மனநிலையில் இருந்த கார்த்திக்கின் அறைக்கு அவனது பி.ஏ உள்ளே நுழைந்தான். "சேர்" என்று அவன் தயங்கி அழைக்க, 'என்ன?' என்று கார்த்திக் பார்க்க, "அந்த சிம் ஓட ஓனர் யாருன்னு தெரிஞ்சிரிச்சு" என்றான் பி.ஏ எச்சில் விழுங்கியபடி. இறுகிய குரலில், "யாரு?" என வினவ, "சாத்விக் ப்ரவீன்" என்றான் பி.ஏ.


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
22846
அத்தியாயம் 15

தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்த கார்த்திக்கிற்கு உள்ளம் கொதித்தது. இது வரையில் சாத்விக் கூறியதை பெரிதாக எடுக்காதவன், இன்று சாத்விக் செய்த வேலையை அவனால் ஜீரணிக்க முடியாமல் இருந்தது. என்ன நடந்தாலும் வீட்டுப் பெண்களின் மேலும், அவர்களின் கௌரவத்திலும் கைவைக்க மாட்டான் என்றே நம்பியிருக்க இன்றோ அவன் அந் நம்பிக்கையை தவிடுபொடியாக உடைத்ததாகவே நம்பினான்.


அன்று பகல் உணவிற்கும் நிற்காமல் சென்றதும் தான் அவமானப்பட வேண்டும் என்பதற்காவே என்று கார்த்திக்கே ஒரு காரணத்தை உருவாக்கிக் கொண்டு சாத்விக்கின் மேல் இன்னும் பகையை வளர்த்துக் கொண்டான். அவனுக்கு அந்நேரம் மூளை சாத்விக் தன் நம்பிக்கையை உடைத்தது வேறு எதைப் பற்றியும் அலசி ஆராய விடவில்லை. அன்றொரு நாள் கார்த்திக் செய்த அதே தவறை இன்றும் கார்த்திக் செய்தான்.


அன்று கார்த்திக் செய்த தவறினால் சாத்விக் இழந்தது பல. அதற்காகவே பலி தீர்க்க இன்று அவதிரித்து இருக்கிறான். இன்றும் அதே தவறை கார்த்திக் செய்தால் சாத்விக் எதையாவது இழப்பானா? இல்லை தன்னை சுற்றி நடப்பவற்றை அறிந்து காத்துக் கொள்வானா என்பதை காலமே பதில் கூறும். கார்த்திக்கின் கோபத்தை அதிகரிக்கும் வகையில் இனி நடக்க இருக்கும் சம்பவங்கள் மூலம் அவன் இழக்கப்போவது அவன் ஆருயிர் தங்கையின் நல் வாழ்வே என்பதை அவன் அறிந்து இருக்கவில்லை.
இன்று சாத்விக் ப்ரவீனின் பெயரிலேயை சிம் வாங்கப்பட்டு உள்ளது என்பதை அறிந்தவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நிச்சயமாக அவன் இதை எதிர் பார்க்கவும் இல்லை. 'என் நம்பிக்கையை உடைச்சிட்ட ப்ரவீன். என் தங்கச்சை எதுக்குடா உன் பழிவாங்கும் படலத்துல இழுத்து விட்ட? அவளால இதெல்லாம் தாங்க முடியாதுடா. சின்ன பொண்ணுடா அவ. ஒழுக்கத்தை முதன்மையா பார்ப்பாடா. அவளுக்கு இப்படியொரு பெயரை எடுத்து கொடுத்திட்டியேடா' என்று மனதில் கதறினான்.


இவை எதையுமே அறியாமல் சாத்விக் தன்னவள் அருகில் இருக்க நிம்மதியாக கண்மூடி அச்சூழலலை அனுபவித்துக் கொண்டு இருந்தான். அவன் ஏகாந்த நிலையைக் கலைக்கவே அவன் மொபைல் அலற சனா எழாமல் இருக்க அவசரமாக அழைப்பை ஏற்றான். "தியா மா" என்று பாசமாய் அழைக்க, "எப்படி அண்ணா இருக்கிங்க? என் கூட பேசவே இல்லை நீங்க" என்று செல்லமாய் கோபித்துக் கொள்ள, "கொஞ்சம் பிசிடா" என்றான் வருத்தமாக.


"பிஸ்னஸ் விஷயமா பிசியா இருக்கிங்களா? இல்லை, உங்க பொன்டாட்டி விஷயமா,பிசியா இருக்கிங்களா?" என்று கிண்டலாகக் கேட்க, "ஹாஹா... என் தங்கச்சி ஸ்மார்ட்னு எனக்கு தெரியும். அதுக்குன்னு இப்படி கிண்டல் பண்ண கூணடாது" என்றான் சாதாரணமான குரலில். ஆனாலும் அதிலிருந்த பூரிப்பை தியாவால் உணர முடியுமாக இருந்தது. "என்ன அண்ணா சத்தம்? வித்தியாசமா இருக்கே" என்று அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் கேட்டாள்.


"ஆமாடா. நானும், என் பொன்டாட்டியும் ஓடி போறோம். அதான் யாருமே கண்டு பிடிக்க முடியாதது போல டிரெயின்ல கூட்டிட்டு போறேன்" நம்பும் வகையில் குரலை வைத்துக் கூற, "அண்ணா, சூரியன் மேற்குல உதிச்சாலும் சனா உங்க கூட ஓடி வருவாங்குறதை நான் நம்ப மாட்டேன்" என்றாள் உறுதியாக. "அப்போ என்னை நம்பி அவ வரமாட்டாங்குறியா?" என்று ஒரு மாதிரி குரலில் வினவ, "இல்லை. அவ அண்ணன் பேச்சை தட்ட மாட்டா அண்ணா. நீங்க போய் தான் அவளை கல்யாணம் பண்ண கேட்கனும்" என்றாள் தீர்க்கமாக.
தொடர்ந்தவள், "உங்க மேலே சனா நம்பிக்கை வச்சி இருக்கிறது நூத்துக்கு இருநூறு சதவீதம் உண்மை. ஏன் தெரியுமா? நீங்க சனா கூட பழகுறதை இது வரைக்கும் அவ அண்ணன் கிட்ட அவ சொல்லவே இல்லை. உங்க மேலே அவளுக்கு நம்பிக்கை இல்லைன்னா அவ எப்போவோ சொல்லி இருப்பா. சொ, அதுக்கும் இதுக்கும் முடிச்சி போடாதிங்க அண்ணா" என்றவளின் குரலில் அத்தனை உறுதி. மறைமுகமாக கட்டளையும் இருந்ததோ !!!!


"புரிஞ்சது டா. பட், சனா என் கூட டிரெயின்ல வந்திருக்காங்குறது உண்மை. இத்தனைக்கும் அவ என் கைக்குள்ள இருக்கா" என்று சிரிக்க, "நெஜமாவா அண்ணா? என்னால நம்ப முடியல்லை" என்றவளின் குரலில் அத்தனை ஆச்சரியம் நிரம்பி இருந்தது. "இரு..." என்றவன் சனாவையும், அவனையும் சேர்த்து ஒரு போடவை எடுத்து அனுப்பி, "உனக்கு ஒரு போடோ அனுப்பி இருக்கேன். அதை பாரேன்" என்றான் சாத்விக் குஷியாக.


அதைப் பார்த்த தியா, "மனசார சொல்றேன் அண்ணா, இரண்டு பேருமே அவ்வளோ நல்லா இருக்கிங்க. பொருத்தமான ஜோடி தான் அண்ணா. ஒரு ரோஜாப்பூ ரொம்ப சொப்டா இருக்கும். ஆனால் அதை பாதுகாக்குற புல்லி வட்டம் கரடுமுரடா இருக்கிறதோட அதில இருக்கிற முள்ளும் அந்த ரோஜா பூவை பாதுகாக்கும். அந்த வகையில இரண்டு பேருமே சூப்பர் ஜோடி. குழந்தை மாதிரி அவ இருக்கா அண்ணா. நல்லா பார்த்துகொங்க" என்று அடிமனதில் இருந்து கூற, "கண்டிப்பா தியா மா" என்று மெதுவாக சனாவின் தலையின் உச்சியில் இதழ்பதித்து விலகினான்.
அவனே அவளை இன்னும் சில நாட்களில் கஷ்டபடுத்தப் போவதை அறியாமல் தன் தங்கையிடம் வாக்குக் கொடுத்தான். இதைத் தான் விதியின் விளைமயாட்டு என்பதோ. நாம் நினைப்பதனைத்தும் நடந்து விட்டால் நிச்சயமாக கடவுளை மறந்து விடுவோம். அதனாலேயே நமக்கு அதிகமான சோதனைகளை வழங்குகிறான். சனா, சாத்விக் இருவருக்கும் கடவுள் வழங்க இருக்கும் சோதனைகளை அறியாது இருந்தனர்.


சாத்விக், "குட்டி பாப்பா என்ன சொல்லுது? ஆமா, உன் புருஷன்னு ஒருத்தன் இருந்தானே அவன் எங்கே? ஆளையே காணோம்" என்று தன் நண்பனையும், குழந்தையையும் வினவ, "அவருக்கு ஒரே வர்க் அண்ணா. அதான் என் கூட டெலிவரி டைம், நேரம் செலவளிக்கனும்னு இப்போவே வர்க்கை பார்த்துக்குறாரு. இவளோ நேரமா என் கூட இருந்துட்டு போனாரு. எனக்கு சோம்பலா இருந்ததா? அதான், உங்க கூட பேசலாம்னு போன் பண்ணேன்" என்றாள் நீண்ட விளக்கத்துடன்.


"சரி மா. அவனும் இந்த நேரத்துல முடியுமான வரைக்கும் உன் கூட இருக்கனும்னு பார்க்குறான். அவன் வேலையை முடிச்சிட்டா டெலிவரி நெருங்கும் போது உனக்கு இன்னும் ஈசியா இருக்கும். அவனும் பயப்படாமல் முழுநேரமும் உன் கூடவே இருப்பான். கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்கோ டா" என்றான் தங்கைக்காக. "எனக்கும் புரியிது அண்ணா. ஒவ்வொரு பொண்ணும் தான் புருஷன் தான் கர்பகாலம் பூரா தன்னை பார்த்துக்கனும், அரவணைக்கனும்னு விரும்புவா. அது அவளோட சின்ன எதிர்பார்ப்பு. அவளோ தான். லொன்லியா பீல் பண்ணும் போது உங்க கூட போன் பண்ணி பேசுறேன் அண்ணா" என்றாள் கவலையைத் தேக்கி.


"சரி டா மா. அண்ணாவை எப்போ வேணூன்னாலும் கூப்பிடு. நான் உன் கூட பேசுறேன். எனக்கு புதுசா ஒரு தங்கச்சி கிடைச்சிருக்கா தியா. கார்த்திக்கோட வைஃப் அபி. அவளை உன் கூட ஃபிரன்ட் பிடிக்க வைக்குறேன். அவ கூட பேசிட்டு இருந்தால் நேரம் போறதே தெரியாமல் இருக்கும். சனாவை உன் கூட பேச வைக்கலாம். அவ அதிகமா பேச மாட்டா. உன் கூட ஃபிரன்ட் பிடிக்க அவளுக்கு மாச கணக்குல டைம் வேணும். நீ இந்தியா வந்த பிறகு அவ கூட பேசி ஃபிரண்டாகு" என்று அறிவுறுத்தினான்.


"சரி அண்ணா எனக்கும் தூக்கும் கண்ணை சுழட்டுது. நான் அப்புறமா பேசுறேன். சனாவை பத்துரமா பார்த்துகொங்க" என்று கூற, "சரி தியா மா. நீ ரெஸ்ட் எடு. ஏதாவது தேவைன்னா பேசு" என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். சனா அது வரையில் விழிக்கவில்லை. வெகுநேரத்திற்குப் பிறகு அவள் கண்விழிக்க, சாத்விக்கின் நெஞ்சில் சாய்ந்து அவன் அணைப்பிற்குள் தூங்க ஒரு புறம் பாதுகாப்பாக எண்ணினாலும், மறுபுறம் வெட்கமாகவும், அவமானமாகவும் இருந்தது.

'தன்னை தீண்டாதே' என்று கூறிவிட்டு இவ்வாறு அணைப்பில் சுகமாக உறங்குவதைப் பார்த்தால் தன்னைப் பற்றி என்ன நினைப்பான என எண்ணி அவமானமாக உணர்ந்தாள். அவனிடம் இருந்து அவன் உறக்கம் கலையா வண்ணம் எழுந்து வெளியே சென்றாள். தண்ணீர் போத்தலை எடுத்துச் சென்றதால், அதில் இருந்து முகம் கழுவி விட்டு கதவில் சாய்ந்து நின்று வெளிச் சூழலை பார்க்க ஆரம்பித்தாள்.


சில நிமிடங்கள் அவ்வாறு நின்று இருந்தவள் வாயிலை அடைத்தவாறு இரு கதவுகளில் இரு கைகளையும் வைத்து ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விட, அவள் இடையில் இரு வலிய கரங்கள் பின்னிருந்து அணைத்து தன்னோடு இறுக்க சனா பயந்து தடுமாறி விலக எத்தணித்தாள். "நான் பேபி. பயப்படாத. என்னை தவிற வேற யாருக்கு உன்னை தொட முடியும்? நீ எஸ்.பி பொன்டாட்டி. எவனுக்கும் உன்னை பார்க்கவோ, தொடவோ தைரியம் இருக்காது" என்று அவள் காதில் மீசை உரசக் கூறினான்.
அக்குரலில் அத்தனை தீவிரம் தென்பட அவளுள் குளிர் பரவியது.


"சேர் விடுங்க. யாராவது வரப் போறாங்க" என்று அவள் பயத்தில் தடுமாற, "யாரும் வர மாட்டாங்க பேபி" என்றவன் அவளை அணைத்தவாறே வெளியில் வேடிக்கைப் பார்க்க ஆரம்பிக்க, சனாவும் விலக முயற்சிப்பது வீண் என்று அமைதியாக இருந்தாள். "பேபி நான் உன் கிட்ட ஒன்னு கேட்கனும்?" என்று பீடிகை போட, 'ஐயோ இந்த காட்டுப்பையல் என்ன கேள்வி கேட்க போறான்னு தெரியல்லியே. கிருஷ்ணா உன் பக்தையை காப்பாத்து' என்று வேண்டிக் கொண்டாள்.


"நான் உன்னை தொட்டா, உனக்கு அறுவெறுப்பா இருக்கா?" என்று அவளை தன் புறம் அணைத்தவாறே திருப்பி கேட்க, 'ஆத்தி ஏதோ வில்லங்கமா கேட்க போறான்னு நினைச்சேன் கேட்டுட்டான். பதில் சொன்னாலும் திட்டுவான். பதில் சொல்லாட்டியும் திட்டு்வான். இந்த கேள்வியில ஆரம்பிச்சு கண்டிப்பா அவனை நான் கோபடுத்துறது போலவே ஒரு கேள்வி கேட்பான். நமக்கும் அரிச்சந்திரன் தங்கச்ச்சி மாதிரி நாக்கு அவன் கூட பேசும் போது மட்டும் நல்லாவே குழப்பும். கிருஷ்ணா நீயே காப்பாத்து என்னை' என்று தன்னுள்ளே பேசிக் கொண்டாள்.


சாத்விக், "அமைதியா இருந்தால் என்ன அர்த்தம் பேபி?" என்று புருவம் உயர்த்த, (அவ உன் கேள்விக்கு மனசுக்குள்ள புட்டு புட்டுன்னு ஆன்சரை வைக்குறா. அதான் நீ இப்படி நினைச்சு இருக்க. சோ சேட்) அதற்கும் பதில் அளிக்காது கழுத்தை உயர்த்தி அவன் கண்களைப் பார்த்தாள். "உன் மனசை தொட்டு சொல்லு பேபி" என்க, சிறிது நேரம் கண்மூடி அமைதியாய் இருந்தவள், "அருவெருப்பா எல்லாம் இல்லை சேர். ஏதோ ஒரு பயம். வீட்டுக்கு துரோகம் பண்றேன்னோன்னு ஒரு நினைப்பு வந்து உங்களை விட்டு தூர போக சொல்லுது" என்று மெல்லிய குரலில் கூறி தலையைக் குனிந்துக் கொண்டாள்.


~ உன் அணைப்பில் நான்
உணர்வது பாதுகாப்பை
உன் முத்தத்தில் நான்
உணர்வது காதலை
இறுதி வரை வேண்டும் இவை
இரண்டும் எனக்கு
என் மணாளனே ~



அவன் முகம் கோபமடைவதற்குப் பதிலாக புன்னகையையே சிந்தி இருந்தது. எந்த ஒரு ஒழுக்கமான நல்ல வளர்ப்புடைய பெண்களின் மனதும், காரணமும் இதுவாகவே இருக்கும் என்பதை அவன் எண்ணி இருந்தான். அதே போன்ற ஒரு பதிலையே அவளும் கூற உண்மையில் கார்த்திக்கை எண்ணி சாத்விக்கின் மனம் கர்வம் கொண்டது. தாய், தந்தையர் இல்லா விட்டாலும் தங்கையை நன் முறையில் வளர்த்து இருக்கிறானே என்று கார்த்திக்கிற்கு பாராட்டை உள்ளுக்குள் வழங்கினான் சாத்விக்.


அவள் பயத்துடனேயே நிமிர்ந்து சாத்விக்கின் முகம் பார்க்க அவன் முகமோ புன்னகையை சிந்தி இருப்பதைப் பார்த்தவள், 'இந்த காட்டுப் பையலுக்கு என்னாச்சு? எதுக்கு இவன் சிரிக்கிறான்? கிருஷ்ணா!!!! இவன் எதுக்கு கோபப்படுறான், எதுக்கு கோப்படாமல் இருப்பானே தெரியல்லையே. இவனை புரிஞ்சிக்க ஒரு என்சைக்லோபீடியா ஒன்னை எனக்கு கொடேன். நான் பாவம் இல்லையா? இவனை வச்சி வாழ்க்கை முழுசும் எப்படி காலம் கழிக்க போறேன்னே தெரியல்லை' என்க, அவளது மனசாட்சி அடித்துப் பிடித்து அவள் முன் ஓடி வந்தது.
மனசாட்சி, 'அப்போ முடிவே பண்ணிட்டியா இவன் கூட தான் கடைசி வரைக்கும் வாழனும்னு?' என்று வினவ, 'அடி ஆத்தி இந்த எண்ணம் எனக்கு எப்போ வந்தது?' என்று அதிர்ந்து விழிக்க, 'பதிலை சொல்லிட்டு அதிர்ச்சியாகுடி' என்று அவள் முன் கைக் கட்டி நிற்க, சாத்விக்கின் இதழ்கள் கன்னத்தில் பதிந்ததில் திடுக்கிட்டு அவனைப் பார்க்க ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி குறும்பாகப் புன்னகைத்தான்.


சாத்விக்கும் அவள் முகத்தில் தோன்றும் கலவையான உணர்ச்சிகளை பார்த்துக் கொண்டே இருக்க இறுதியாக அதிர்சியை அவள் முகம் தத்தெடுக்க தன்னைக் கட்டுப்படுத்த முடியாமலேயே அவள் கன்னத்தில் இதழைப் பதித்தான். "இன்னொரு கேள்வி இருக்கு" என்று மீண்டும் பீடிகை போட, 'ஐயோ இது எப்படி பட்ட வில்லங்கத்தை கொண்டு வர போகுதோன்னே தெரியல்லையே' என்று கலக்கமாகவே அவன் முகம் பார்த்தாள்.


"உன் அண்ணன் வேற ஒருத்தனை கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணனும்னு சொன்னா என்ன பண்ணுவ?" என்று ஒரு தீவிரக் குரலில் கேட்டான். அவன் கண்களோ, 'உன் மனசுல இருக்கிறதை சொல்லு' என்று ஈட்டியாய் தாக்கியது. 'நான் எதிர்ப்பார்த்தது போல கேட்டுகட்டானே. கிருஷ்ணா இவன் எங்கிருந்து டிசைன் டிசைனா கேள்வியை கண்டு பிடிக்கிறான்? இதுக்கு நான் பதில் சொல்றது? உஃப்.." என்றவள் அவனைப் பாவமாகப் பார்த்தாள். அவனோ சிறிதும் இரக்கமின்றி 'நீ சொல்லியே ஆக வேண்டும்' எனத் துளைக்கும் பார்வை பார்த்தான்.


அதற்கு பதில் கூறாமல், "நீங்க அந்த அளவுக்கு விட்டுடுவிங்களா சேர்?" என்று இன்னொரு கேள்வியைக் கேட்டாள். "நீ ரொம்ப ஸ்மார்டா கேட்டுட்டேன்னு நினைக்காத பேபி. அந்த அளவுக்கு விட மாட்டேன். இருந்தாலும் உன் அண்ணனை நம்ப முடியாது. என்னைப் பத்தி கொஞ்சமா கண்டு பிடிச்சாலும் உன் அண்ணன் இதைப் பண்ணுவான். சோ இந்த கேள்விக்கு அவசியம் இருக்கு" என்று நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்திக் கூறினான்.


'என்ன பதில் சொல்றது? கிருஷ்ணா எந்த டிசைன்ல இவனை படைச்ச? டேய் காட்டுப் பையலே எனக்கு ஒரு காலம் வரும் டா. பார்த்துக்குறேன்' என்று மனதில் கருவியவள், "அண்ணன் மானம் போகுறது போல எந்த வேலையையும் பண்ண மாட்டேன்" என்று கூறி நகர்ந்து செல்ல எத்தணிக்க அவன் கையைப் பிடித்து நிறுத்தி இறுக்கினான். அவளது கை வலிக்க, "வலிக்குது சேர்" என்று கூற இம்முறை அவன் பிடியைத் தளர்த்தாமல் இன்னும் இறுக்கினான். அதில் அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அதைப் பொருட்படுத்தாமல் அவளையே பார்த்தான் சாத்விக்.


"சோ, அண்ணன் சொல்றவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு மறை முகமா சொல்ற அதானே?" என்று உறும, அவன் குரலில் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் சனா. கண்கள் இரண்டும் கோவைப் பழமென சிவந்து கழுத்து நரம்புகள் புடைக்க முகம் முழுவதும் இரத்த நிறமாக காட்சியளிக்க அவன் தோற்றத்தைப் பார்த்தவளுக்போ முதுகுத் தண்டு சில்லிட்டு வெளிப்படையாகவே உடல் நடுங்க ஆரம்பித்தது. "சே யெஸ் ஒர் நோ" என்று ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாய் வெளி வந்து விழுந்தது.
"சேர் வலிக்குது" என்று அவனிடம் இருந்து விலகத் திமிற, "பதில் சொல்லிட்டுப் போடி" என்று கர்ஜிக்க சர்வமும் அடங்கியது சனாவிற்கு.

"சேர் என்னையும் புரிஞ்சிக்கொங்களேன். பிளீஸ்...." என்று நிறுத்தி தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்க அப்போதும் அவளை அழுத்தமாகவே பார்த்தான். அவன் முகத்தைப் பார்த்தவள் அவன் கண்களைப் பார்க்க அதில் என்ன தெரிந்ததோ அவள் அறியாமலேயே, "எனக்கு நீங்க இரண்டு பேருமே முக்கியம் சேர்" என்று அழுகுரலிலேயே கூற முடிக்க அவளை விடுவித்து முகமெங்கும் முத்தமழை பொழிந்து முடித்தவன் அவளை இறுக்கி அணைத்தான்.


கார்த்திக் யோசணையுடனேயே நேரத்தைக் கடத்த தன் பி.ஏவை அழைத்தவன், "ப்ரவீன் எங்கே இருக்கான்னு எனக்கு தெரியனும். அவன் கூட மீடிங்கை அரேன்ச் பண்ணுங்க" என்று கூறி முடித்து இதற்கு மேலும் தன்னால் இங்கே கவனத்தை செலுத்த முடியாது என்பதை உணர்ந்து வேகமாக வீட்டிற்குச் சென்றான். அவன் வீட்டிற்கு வரும் போது அபியும் வருகை தந்தாள். கல்யாண வேலைகள் வீட்டில் நடப்பதால் அங்கே ஆட்கள் அதிகமாகவே இருந்தனர்.


கார்த்திக் எவருடனுமே பேசாமல் தனது அறைக்குச் செல்ல அவன் முகத்தை வைத்தே ஏதோ பிரச்சனை என்று கண்டு கொண்டாள் அவன் உயிரானவள் அபி. அவளும் தன்னைச் சுத்தப்படுத்தி கார்த்திக்கின் அறைக்குச் சென்றாள். கதவைத் தாழ்ப்பாள் இடாமல் வைத்து இருந்ததால், அவள் கார்த்திக்கை அழைக்காமலேயே நுழைந்தாள். கார்த்திக் குளித்து பல்கனியில் நின்றவாறே வெளியே தோட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தான்.


அவனை பின்னிருந்து அணைத்து அவன் முதுகில் முகம் புதைத்தவள், "என்னாச்சு மாமா?" என வினவ, "இன்னைக்கு என் மூட் ஸ்பொயில் ஆகிருச்சு செல்லம்மா" என்று அவள் கைகளை தன்னோடு இன்னும் இறுக்கிக் கொண்டான். "எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதிங்க மாமா. கடவுள் என்ன செஞ்சாலும் அதுல ஒரு நல்லது இருக்கும்" என்று ஆறுதல் அளிக்க, "இன்னைக்கு நடந்ததுல எந்த நல்லது இருக்கும்னும் எனக்கு தோண இல்லை நயா" என்றான் எரிச்சலுடன்.


"மாமா அது நல்லதா? இல்லையான்னு உடனே எப்படி தெரியும்? பொறுமையா இருக்கனும்" என்று மூக்கால் அவன் முதுகில் உரச, கூச்சத்தில் நெளிந்தவன் அவள் கைபிடித்து தன்முன்னால் இழுக்க, அவள் செல்லமால் அவனோடு ஒன்றிக் கொள்ள சிறி நொடிகளிலேயே தன் வலிய கரத்தால் கார்த்திக் அவளை இழுக்க தன் முன்னால் வந்து நின்றாள். வெட்கத்தில் தலைக் குனிந்துக் கொள்ள அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

"பார்க்கலாம். நமக்கு நல்லாதா? இல்லையான்னு போக போக தெரிஞ்சிரும்" என்றவன், "நயா, உனக்கு இந்த அவசர கல்யாணத்துல ஏதாவது பிரச்சனை இருக்கா? நீ நம்ம கல்யாணத்தைப் பத்தி ஏதாவது யோசிச்சு நவச்சிருக்கியா?" என்று தன் மனதில் இத்தனை நாட்களாக நெருடியதை கேட்க, "பொய் சொல்ல விருப்பம் இல்லை மாமா. எனக்கு நம்ம கல்யாணத்தை பத்தி ஒரு கனவு இருந்தது உண்மை. பட், நிலமைக்கு ஏத்தது போல என்னை நான் மாத்திப்பேன்" என்றாள்.


"ரியலி சொரி செல்லம்மா. சனா முடிவா பேசும் போது என்னால மறுத்து பேச முடியல்லை. அதான் விட்டுட்டேன். நீ ரிசப்ஷனை எப்படி வைக்கனும்னு ஆசைபடுறியோ அப்படியே வைக்கலாம்" என்றான் அவள் முகத்தைக் கையிலேந்தி. "கண்டிப்பா மாமா. நீ கவலைபடாமல் இருந்தாலே எனக்கு அது போதும்" என்று அவன் காலில் ஏறி எக்கி கார்த்திக்கின் கன்னத்தில் முத்தம் இட்டாள். "மத்த கன்னம் என்ன பாவம் பண்ணிச்சாம்?" என்று குறும்பாய் வினவ, மற்றைய கன்னத்திலும் இதழ்பதித்தாள்.


"எனக்கு நான் கேட்காமலேயே கிஃப்ட் கொடுத்து இருக்க. அப்போ நானும் உனக்கு கிஃப்ட் கொடுக்குறது தானே முறை?" என்று அவள் புரிந்துக் கொள்ளக் கூட அவகாசம் வழங்காமல் அவள் இதழைச் சிறைச் செய்து தனது பரிசை அவளுக்கு கவிதையாய் வழங்க ஆரம்பித்தான்.
இரு ஜோடிகளும் இங்கே சந்தோஷமாய் இருக்க, மர்ம நபர் ஏற்பாடு செய்த ஆள் சாத்விக்- சனா இருவரும் உள்ள புகையிரதத்தில் ஏறியிருந்தான்.​



 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
22867


அத்தியாயம் 16



சாத்விக், சனா 'எனக்கு நீங்க இரண்டு பேருமே முக்கியம் சேர்' எனக் கூறியதைக் கேட்டு அவளை தன்னுள் புதைத்துக் கொள்ளும் அளவுடன் இறுகி அணைத்தான். "தேங்கியூ பேபி" என்று அவள் முகத்தில் முத்த மழையை பொழிந்து மீண்டும் அவளை இறுக அணைத்துக் கொண்டான். "சேர் மூச்சு விட முடியல்லை" என்று முணக அவன் பிடியைத் தளரத்தினாலும், அவளை விட வில்லை. "ஒகே பேபி. நான் சொல்றதை எப்போவுமே நல்லா ஞாபகம் வச்சிக்கோ" என்று நிறுத்தி அவள் முகம் பார்த்தான்.


அவளும் 'அடுத்து என்ன?' என்ற கலக்கத்துடனேயே அவனை நோக்க, "உங்க அண்ணா வேற யாரையும் கல்யாணம் பண்ண சொன்னா பண்ண கூடாது. கண்டிப்பா நான் வந்து உன்னை கூட்டிட்டு போவேன். எவன் முன்னாடியாவது நீ காட்சிப் பொருளா இருக்கிறதோ வேறு ஒருத்தன் உன்னை இரசிக்கிறதையோ நான் அனுமதிக்க மாட்டேன். அதனால் அண்ணா சொன்னான், ஆட்டுக் குட்டி சொன்னான்னு பொண்ணு பார்க்க வந்தாங்க நிச்சயம் பண்ண வந்தாங்கன்னு நீ முன்னாடி போயும் நிக்க கூடாது. என்னை மீறி ஏதாவது செஞ்ச வேற சாத்விக்கை பார்க்க வேண்டி இருக்கும்" என்று உறுமல் குரலிலேயே முடித்தான்.


பின் தன் இதழ்களை நக்கலாக சுழித்து, " வேற சாத்விக்கை நீ மட்டுமில்லை உன் அண்ணனும் பார்ப்பான். ஜாக்கிரதை" என்று அவள் உதட்டை வருடியவாறே கூறியவன் இறுதியில் வலிக்குமாறு இழுத்து விடுக்க சனாவின் கண்களில் இருந்து 'பொல பொல' என கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது. அவள் கண்ணீரை அவனே துடைத்து, "என்னால உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது பேபி. புரிஞ்சிக்கோ" என்று அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.


"ரொம்ப வலிக்குதா?" என்றவன் தன் இதழை அவள் இதழ்களில் பொருத்தி அவளுக்க மருந்திட சனாவோ முற்றிலும் குழம்பிய நிலையில் அவன் கை அணைப்பிலேயே நின்று இருந்தாள். 'இந்த காட்டுப் பையலுக்கு என்னாச்சு? அவனே என்னை கஷ்டபடுத்துறான். அப்புறமா அவனே என்னை சமன்படுத்துறான். இவனுக்கு என்ன பிரச்சனை?' என்று தீவிரமாக தன்னுள் யோசித்து உழன்றுக் கொண்டு இருக்க சாத்விக், அவள் கன்னங்களைத் தட்டி, "உள்ள போலாம் பேபி" என்று அழைத்துச் சென்றான்.


அன்பிற்காக ஏங்கும் ஒரு குழந்தை அவன் என்பதை சனா எனும் இருபது வயதுக் குழந்தைப் பெண்ணோ அறிய முடியாமல் இருந்தாள். அறியும் போது அவளுள்ளே இருக்கும் தாய்மை உணர்வும் நிச்சயமாக வெளிக் கொட்டத் துவங்க அவளின் குழந்தையாகவே மாறிப்போவானோ அக் கட்டிளங் காளையவன்.


உள்ளே வந்து இருவரும் அமர்ந்தாலும் இருவருடைய எண்ணங்களும் ஒருவரிடையேயே இருந்தன. ஆம் கார்த்திக்கிடமே இருவரின் எண்ணங்களும் சுழன்றன. சாத்விக், 'என் மனசு சொல்லுதே கார்த்திக் எங்களை பத்தி இந்த மும்பாய் டிரிப் முடியும் போது கண்டு பிடிச்சிடுவான்னு. ஏதாவது கோல்மால் வேலை பண்ணி சனாவை என் கிட்ட இருந்து நிச்சயமா பிரிக்க பார்ப்பான். அடுத்து என்ன பண்ணலாம்?' என்று அவன் சிந்தையில் மூழ்கினான்.


சனா, 'நான் அண்ணாவுக்கு துரோகம் பண்ணுவேனா? அதை பண்ண முடியுமா என்னால? இல்லை இல்லை என்னால முடியவே முடியாது. ஆனால் இந்த காட்டுப் பையல் வேற என்னை மிரட்டுறானே? நான் என்ன பண்ண போறேன்? கிருஷ்ணா என்னை நீயே காப்பாத்தேன். என்னால அண்ணன் பேச்சை மீற முடியாதே' என்று தன்னுள் புழுங்கிக் கொண்டு இருந்தாள்.


இருவரின் சிந்தனைகளுக்கும் சொந்தமானவனான கார்த்திக் அங்கே சாத்விக் எங்கே என தேட முயன்றுக் கொண்டு இருந்தான். நிச்சயமாக இவனுக்கு ஒரு தண்டனையை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தவன் அதற்காக என்ன செய்ய வேண்டும் என யோசிக்க ஆரம்பித்தான். 'நிச்சயமா உன்னை நான் விட போறது இல்லை ப்ரவீன். என் தங்கச்சையை இதுக்குள்ள இழுத்துட்ட. விடவே மாட்டேன்டா' என்று தனக்குள்ளேயே கர்ஜித்துக் கொண்டான்.


அன்றைய தினம் இவ்வாறு கழிய நள்ளிரவிலேயே மும்பையை அனைவரும் வந்தடைந்தனர். சாத்விக் முன்னேயே ஏற்பாடு செய்து இருந்த ஹோட்டலை அனைவரும் மிகுந்த களைப்புடனேயே அடைந்தனர். ஐந்தாம் தளத்தில் ஆண்களுக்கும் ஆறாம் தளத்தில் சாத்விக் அவனுக்கும், தன் ஸ்டாஃபிற்கும், சனாவிற்கு புக் செய்து இருந்தான். அவரவர்களுக்கு திறப்பை வழங்கியவன், அனைவரையும் அறைக்களுக்குச் செல்லுமாறு கட்டளையிட அனைவருமே தங்கள் அறைககளுக்குச் சென்றனர்.


ஆறாம் தளத்தில் கடைசியாக இருந்த அறையை சாத்விக்கும் அதற்கு அடுத்து இருந்த அறையை சனாவும், சனாவின் அறைக்கு எதிர் முன்னே இருந்த அறையில் சாத்விக்கின் ஸ்டாஃபும் தங்கிக் கொண்டனர். இவர்களைப் பின் தொடர்ந்து வருகைத் தந்த மர்ம நபரின் ஆளோ ஆதே ஹோட்டலின் இரண்டாம் தளத்தில் தங்கிக் கொண்டான். வேறு தளங்களில் அறை அனைத்துமே பதிவு செய்யப்பட்டு இருந்ததால் இவ்வாறு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது அவனுக்கு.


சாத்விக், சனா இருவரையுமே அவன் புகையிரதத்தில் இருந்து இறங்கும் போதே பார்த்தான். அவர்களை தனியாக புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பம் அவனுக்கு வழங்கப்படவில்லை. ஏனெனில் அனைவருமே ஒன்றாக இருந்ததாலும் சாத்விக் சனாவுடன் தனியாக இருக்காமல் அவர்களோடு பொறுப்பாக வந்திருந்த ஸ்டாஃபோடே பேசிக் கொண்டிருந்தான். அதன் பின்னே இவர்களைத் தொடர்ந்து இங்கே வருகைத் தந்து ஒரு அறையை பதிவு செய்து தங்கிக் கொண்டான்.


சனா தனது அறையில் நுழைந்தவள் உடனே வீட்டிற்கு இங்கே வந்து சேர்ந்ததாக தகவலை வழங்கி விட்டு, தனது பர்கை எடுத்து சோபாவில் வீசி விட்டு கட்டிலில் விழ, கசகச என்று இருந்தது உடை. சோம்பலுடன் இரவு உடைக்காக ஒரு டீசரட், நைட் பேன்டை எடுத்துக் கொண்டவள் குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். அவள் குளித்து வந்தவுடன் கூந்தலைத் துவட்டியவாறே கதவைத் திறந்து பல்கனியில் சென்று நின்று வெளியே பார்த்தாள்.


நள்ளிரவில் வானில் மின்னி மின்னி இருக்கும் நட்சத்திரங்களைப் போல் மும்பை நகரை இருள் மூழ்கடித்து இருந்தாலும் வீடுகளினும், கடைகளினதும் மின்விளக்குகள் வானத்து நட்சத்திரங்களைப் போல் ஜொலிக்க கண்களுக்கு ஒரு இரசணைப் பார்வையாகத் தோன்றியது இவ் ஓவியப் பாவைக்கு. அதை இரசித்து இருக்க அவள் கழுத்தில் சூடான மூச்சுக் காற்று உரச அதிர்ந்து பின் திரும்ப அவளோடு ஒட்டும் நிலையில் தன் வசீகரப் புன்னகையுடன் நின்று இருந்தான் சாத்விக்.


"சேர்.." என்று அவள் அதிர்ந்து தன் முட்டைக் கண்களைப் பெரிதாக விரிக்க, "ரொம்ப கண்ணை விரிக்காத பேபி. முதல்ல வந்து சாப்பிடு. அப்புறமா வந்து மறுபடியும் ஷொக்காகு" என்று அவளை தூக்காத குறையாக அழைத்துச் செல்ல அப்போதே அவள் இருக்கும் உடை நினைவு வந்தவளாக அவசரமாக அவனிடம் இருந்து விலகி தன் துணிப் பையினுள் துப்பட்டாவை எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டாள்.


இவளது செய்கையில் அவனக்கு மாலையில் மட்டுப்பட்டு இருந்த கோபம் அதிவிவேக கதியில் ஏற கைமுஷ்டியை இறுக்கி கோபத்துடன் அவளை உறுத்து விழித்தான். 'ஏன் இந்த கோபம்?' எனப் புரியாமல் அவள் மலங்க மலங்க விழிக்க, "என்னைப் பார்த்தா தேர்ட் கிளாஸ் பொறுக்கி போல இருக்கா?" என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்ப உடல் நடுங்க அவனைப் பார்த்தாள் சனா.


அவனுக்குப் புரியவே இல்லை இது பெண்களின் ஒரு அடிப்படைப் பாதுகாப்புச் செய்கை என. அவனைப் பொருத்த வரை சனா தன்னை நம்பாமல் இவ்வாறு செய்தாள் என்றே நினைத்தான். "பதிலை சொல்லுடி" என்று சீற, அவள் திணறியவாறு, "இல்லை சேர்.. நான்... நா... எப்போவுமே துப்பட்டாவை போடுவேன் சேர்" என்று முடித்தாள்.


அவளை சந்தேகமாய் கூர்ந்துப் பார்க்க, "நம்புங்க சேர். நீங்க திடுதிப்புன்னு இங்கே வந்து நின்னுட்டிங்க. நான் எப்போவுமே துப்பட்டா இல்லாமல் யார் முன்னாலேயும் போனது இல்லை சேர்" என்று தலைக் குனிந்தவாறே மெல்லிய குரலில் மொழிந்தாள். "சொரி பேபி என் மனசுக்கு ஏதோ தப்பாவே படுது பேபி. உன் அண்ணன் என் கிட்ட இருந்து உன்னை பிரிச்சிடுவானோன்னு ஒரு பயம் எனக்குள்ள வருது. என்னால உன்னை விட்டுக் கொடுக்க முடியல்லை" என்று தலையில் இருந்த சிகையை கோதி தன் அலைப்புறுதலை தன்னுள் அடக்க நினைத்தான்.


"அதான் அந்த டென்ஷன்ல இருக்கும். உன்னை தேடி ஆறுதலுக்கு வந்தால் நீ என்னை பார்த்த உடனே துப்பட்டாவை எடுத்து போட்டுக்குற. நான் என்ன பண்ணட்டும்? நீ என்னை நம்பாமல் தான் இப்படி போட்ட. உன் அண்ணன் சொன்னா என் மேலே நம்பிக்கை வைக்காத நீ என்னையும் சந்தேகபட்டு விட்டுட்டுப் போயிடுவியோன்னு ஒரு பயம். அதை கோபமா வெளிப்படுத்திட்டேன். ரியலி சொரி பேபி" என்று தன்னிலை விளக்கம் கொடுத்து அவளை அணைத்துக் கொண்டான் சாத்விக்.


'என்ன மனிதன் இவன்?' என்றே தோன்றியது சனாவிற்கு. ஒரு குழந்தையிடம் இருக்கும் பொம்மையை மற்றவர்கள் பிடுங்கி விடுவார்களோ என்ற பயத்தில் அதைத் தன்னோடு வைத்துக்கொள்ள அக்குழந்தை செய்யும் செயல்களைப் போலவே இருந்தன அவனது செய்கைகள்.


ஏனோ அவளுக்கு சிரிப்பு வர, "ஏன் சேர்? என் அண்ணன் சொல்லி நான் நம்பினாலும், என்னை விட்டு கொடுத்துடுவிங்களா?" என்று அவனிடம் இருந்து விலகி முகம் பார்த்தாள். அக்குரலில் கிணடல் சிறிது ஊரியிருந்ததோ. (பார்ரா!! நம்ம சனாவுக்கு தைரியம் வந்திருக்கு!!!) "நிச்சயமா மாட்டேன். உன்னை கடத்திட்டு போயாவாது தாலி கட்டி என் கூட வச்சுப்பேன்" என்று சீரியசாகக் கூற , 'என்ன கடத்தலா?' என்று அதிர்ந்தாள் சனா.


அவள் எண்ணப்போக்கை யூகித்தவன், "பயப்படாத, அப்படி ஒரு நிலை வராது. உன் அண்ணை எதிர்த்து அவன் கண்ணு முன்னாடி கல்யாணம் பண்ணுவேனே தவிற இப்படி ரௌடீசம் எல்லாம் பண்ண மாட்டேன்" என்று பெரிய மனதுடன் கூறினான். இவ்வாறு ஒரு நிலை வந்தால்????


அப்போதும் அவள் முகம் தெளியாமல் இருக்க சாத்விக், "உனக்கு பசிக்கும் பேபி. சாப்பிட்டுட்டு மீதியை பேசலாம்" என்று அவளை அமர வைத்து ஓடர் செய்த உணவை எடுத்து வைக்க, சனா ஆச்சர்யத்துடன் பார்த்தாள். "என்ன பார்க்குற பேபி?" என உணவுப் பொட்டலங்களை பிரித்தவாறே வினவ, "எனக்கு பிடிச்சது எல்லாமே வாங்கி இருக்கிங்க சேர். எப்படி?" என்று ஆர்வமாய் கேட்டாள். அதற்கு நான்கே வார்த்தைகளில் "உன்னைப் பத்தி எல்லாமே தெரியும்" என்று பதிலளித்து தன் வேலையைத் தொடர்ந்தான்.


அவனை வியப்புடன் பார்த்தவள் சுற்றி பார்வையை சுழற்ற இவள் தாழ்ப்பாள் இட்டவாறு அறையின் கதவு அதே போல் இருக்க திடுக்கிட்டு நிமிர்ந்து சாத்விக்கைப் பார்த்தாள். அவனோ புன் சிரிப்புடன் அவளை நோக்க சனா, "நான் கதவை அடைச்சி இருக்கேனே சேர். எப்படி உள்ள வந்திங்க?" என்றாள் அதிர்ச்சி மாறாமலேயே. "அது சீக்ரட். பட், நீ எப்போவுமே என் கண்காணிப்புளேயே இருப்பன்னு சொன்னேனே. அதே போல தான் இதுவும்" என்று தன் வசீகரப் புன்னகையை சிந்தினான்.


'ஆத்தி இவன் எந்த நேரம் எப்படி வருவான்னே தெரியல்லை. இனி பத்துரமாவே இருக்கனும். சனா நீ இனி ஒவ்வொரு நிமிஷமும் பயந்துட்டே இருக்கனும் போல இருக்கே' என்று தனக்குள்ளேயே பேச, அவள் பாவனைகளைக் கவனித்த சாத்விக், "ரொம்ப யோசிக்காத சனா பேபி. நீ ஃபீரியாகி குளிச்சி முடிக்க டைம் கொடுத்துட்டு தான் நான் உன் ரூமுக்கு வருவேன். சோ, பயப்படாத. பட் நீ என் பக்கத்துல எப்போவுமே வேணும்" என்று அவளை உரசியவாறே அமர்ந்துக் கொண்டான்.


அவளோ விழிவிரித்து அவனையே பார்க்க, "நீ ஒழுங்கா சாப்பிடவே இல்லை பேபி. சாப்பிடு. எனக்கும் பசிக்குது. நாளைக்கு கம்படிஷன்ல பார்டிசிபேர் பண்ண இருக்கு. சோ, தூங்கி எந்திரிச்சு ரெஸ்ட் எடு" என்று அக்கறையாய் கூறி உண்ணுமாறு கண்களால் காண்பிக்க, அவளும் மறுபேச்சு பேசாமல் உண்ண ஆரம்பித்தாள்.சாத்விக்கும் சாப்பிட்டு முடிக்க இருவரும் சேர்ந்தே அவ்விடத்தை சுத்தம் செய்தார்கள்.


தனக்கு பிடித்த உணவை இப்போது பசிக்கும் என்று தெரிந்தே ஓடர் செய்து எடுத்து வந்தவனை நினைக்கும் போது சனாவிற்கு நெகிழந்துப் போனது மனது. "ஒகே பேபி குட் நைட். தேவையில்லாமல் எதையும் யோசிக்காமல் தூங்கு" என்று நெற்றியில் இதழ்பதித்து அவளிடம் இருந்து விலகி நிற்க சனா குளியலறைக்குள் சென்று கைகழுவி வர சாத்விக் அங்கிருந்து சென்று இருந்தான்.


'இந்த காட்டுப்பையலுக்கு மாய மந்திரம் ஏதாவது தெரிஞ்சிருக்குமோ? எப்படி வாராரு? எப்படி போறாருன்னே தெரியல்லை... ஹ்ம்ம்.... ஷப்பா முடியல்லை' என பெருமூச்சு விட்டபடி கட்டிலில் விழுந்தாள். அன்றைய தினத்தில் முழுக் களைப்புமே அவளே ஆட் கொள் போர்வையை எடுத்து தன்னை மறைத்துக் கொண்டு நித்திரா தேவியின் பிடிக்குள் தன்னை விரும்பியே ஒப்படைத்தாள்.


அடுத்த நாள் காலையில் விழிக்க அவள் அலார்ம் வைத்திருக்க மொபைல் ஒலிறியது. அதைக் கைகளால் எடுத்து பத்து நிமிடத்திற்கு ஸ்நூசை டச் செய்தவள் மீண்டும் உறங்க, ஒரு வித்தியாசமான அனுபவம் நிறைந்த ஒரு வாசணையை அவள் மூக்கு நுகர்ந்தது. தன் பஞ்சுத் தலையணையில் முகம் புதைக்க நினைக்க கல்லு போல் இருந்தது தலையணை. அதே நேரம் அவள் மூளையைச் சென்றடைந்த வாசணை அது யாரிற்குரியது எனத் தெளிவாகத் தெரிவிக்க, அதிர்ந்து எழுந்து பக்கமாக திரும்பினாள் சனா.


அவள் கண்களோ இனி விரியவே முடியாது என்ற வகையில் விரிந்துக் கொடுக்க கண்இமைக்க மறந்து தன்னை இடையோடு அணைத்தவாறு நிம்மதியாக உறங்கும் சாத்விக்கைப் பார்த்தாள். 'அடேய் காட்டுப் பையலே என்னடா பண்ணி வச்சிருக்க?' என உள்ளுக்குள் அலறி, பதட்டமாகவே, "சேர் எந்திரிங்க" என்று அவள் கன்னத்தில் தட்டுவதாக நினைத்து அடிக்க, அவனோ எறும்புக் கடிப்பதாக எண்ணி, அவள் கையை தட்டி விட்டான்.


'அடேய் கிரதாகா, கடன்காரா எழேன் டா' எனறு பதறி அவனை எழுப்ப அவனோ அசையவே இல்லை. 'கும்பகர்ணனோட வம்சத்துலேயாடா பொறந்த?' என்று திட்டித் தீர்த்தவாறே அவனை எழுப்ப அவனோ கிஞ்சித்திற்கும் அசையவில்லை. "சேர் எந்திரிங்க? எதுக்கு இங்கே படுத்திருக்கிங்க?" என்று கோபமாகவே எழுப்ப, "சும்மா இரு பேபி" என்று மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான். "டேய் காட்டுப்பையலே மரியாதையா எந்திரிடா. டேய் கும்பகர்ணா எந்திரி" என்று மீண்டும் அவனைப் போட்டு உலுக்க வேகமாக எழுந்து அமர்ந்தான்.


'அடியாத்தி நான் திட்டினது கேட்டு இருக்குமோ? சனா உனக்கு நாக்குல சனி பகவான் குடியிருக்காருன்னு நினைக்கிறேன். இவளோ நேரமா மனசுக்குள்ள தானே திட்டின? இப்போ என்ன எளவுக்கு தைரியமா வெளியில திட்டின?' என மானசாட்சி அவளை கிழிகிழி என்று கிழித்தது. அவள் திரு திரு என விழிக்க சாத்விக் அவளை கூரந்து பார்த்தான். 'ஐயோ பாக்குறானே பாக்குறானே!!' என உள்ளம் பதறியது அவளுக்கு.


"என்னை திட்டினியா?" என்று அவளை பார்த்தபடி கேட்க, 'போச்சு போச்சு கண்டு பிடிச்சிட்டான். கிருஷ்ணா என்னை காப்பாத்து' என்று உள்ளுக்குள் அலறினாலும் தலையோ வேகமாக 'ஆம், இல்லை' என்று எல்லா புறமும் ஆடியது. "எதுக்கு திட்டின?" என சட்டமாக அமர்ந்து வினவ, 'டேய் காட்டுப் பையலே நீ பண்ணி இருக்கிற வேலைக்கு உன்னை திட்டாமல் கொஞ்சுவாங்களா?' என்று கடுப்படித்தாள். "நீ எதுக்கு சேர் என் ரூமுக்கு வந்திருக்கிங்க?" என்று அவனிடம் இருந்து பிரிந்து கட்டிலில் இருந்து சற்று கறாராகவே வினவினாள்.


"எனக்கு அங்க தூக்கம் வரவே இல்லை. உன் ரூமுக்கு வந்தால் நீ நிம்மதியா தூங்குற. அதான் உன் பக்கத்துல வந்து கொஞ்ச நேரம் படுத்த மாதிரியே உன்னை பார்த்துட்டு இருந்தேன். எப்போ தூங்கினேன்னே தெரியல்லை. ஒரு விஷயம் உறுதியா சொல்ல முடியும். ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா இன்னைக்கு சுத்தி எல்லாத்தையுமே மறந்து நிம்மதியா தூங்கினேன். அதுக்கு காரணம் நீ தான் பேபி" என்று சாதாரணமாகக் கூறி எழுந்து உடலை முறுக்கினான்.


'உன் மண்டையில ஒரு பெரிய கல்லை போட்டு உடைச்சா தான் என்ன?' என்று விபரீதமாக யோசாக்க, 'ஐயோ எப்படி இருந்த பொண்ணை எப்படியா மாத்தி வச்சிருக்க ராட்சசா' என்று மனதினுள்ளே புலம்பித் தள்ளினாள் சனா. ஆனால் அவள் முகமோ கோபத்தைக் காட்டியது. "எதுக்கு பேபி இப்போ என்னை லவ்வா பார்க்குற?" எனச் சீண்ட, "சேர் போதும். இதுக்கு அப்புறமா இப்படி நைட்டுக்கு என் ரூமுக்க வரவோ என் பெட்ல என் பக்கத்துல படுக்கவோ கூடாது" என்ற குரலில் அத்தனை உறுதி இருந்தது.


"நான் இங்கே இருக்கிற வரைக்கும் உன் ரூமுக்கு வந்து உன் பெட்ல உன் பக்கத்துல வந்து உன்னை கட்டி பிடிச்சிட்டு தான் தூங்குவேன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ" என்று அவனும் கோபமாகவே பேசினான்.


தன்னை அவள் அருகில் வரக் கூடாது என்று சொல்லி விட்டாளே என்ற ஒரு ஆற்றாமை அதில் இருந்தது. அவனுக்கு அவன் செய்த தவறு புரியவே இல்லை.


"சேர் எதுக்கு இப்படி படுத்திறிங்க?" என்று இயலாமையுடன் அமர, அவளை நெருங்கியவன் அருகில் அமர்ந்து அவளை தோளோடு அணைத்து, "என்னால நீ இல்லாமல் இருக்க முடியல்லை டி. நீ என் பக்கத்துல இருந்தாலே என்னை என்னால கன்ட்ரோல் பண்ண முடியல்லை. நீ நம்பினாலும் ஒகே நம்பல்லன்னாலும் ஒகே. நான் கிட்டதட்ட ஐந்து வருஷத்துக்கு அப்புறமா நிம்மதியா உன் அருகாமையில தூங்கி இருக்கேன்" என்று நிறுத்தியவன் இத்தனை வருட துக்கம் இன்மையைப் பற்றி யோசிக்க அவன் முகம் இறுகிக் கொண்டே சென்றது.


"ஒரு பொண்ணு, நம்பிக்கை இருக்கிற ஒரு ஆணுக்கு பக்கத்துல இருக்கும் போது தான் ஒரு பாதுகாப்பு உணர்வு தோணும். அதே போல தான் ஒரு ஆணுக்கும். நம்பிக்கை, தூய்மையான பாசம் இருக்கிற ஒரு பொண்ணுக்கு பக்கத்துல இருக்கும் போது ஒரு பாதுகாப்பு உணர்வு தோணும். அது என்ன தெரியுமா? இவ என் கூட கடைசி வரைக்கும் இருப்பா. சந்தோஷமோ துக்கமோ என் கூட இருந்து தோள் கொடுத்து என்னை ஒரு குழந்தையா பார்த்துப்பாங்குற உணர்வு அது. என் அம்மாவுக்கு அப்புறமா அதை நான் உன் கிட்ட ஃபீல் பண்ணேன். அதான் உன் பக்கத்துல தூங்கினேன்" என்றான் ஆழ மூச்செடுத்தவாறே.



~ பெண்ணாய் என்னிடம்
பாதுகாப்பு தேடும் குழந்தை நீயடி
ஆணாய் உன்னிடம்
சரணடையத் துடிக்கும் உன்னவன் நானடி
நான் உயிர் வாழ
என் இறுதி மூச்சு வரை
நீ வேண்டும் ~




"இப்போ எனக்கு பேச மூட் இல்லை சனா. நான் போய் ரிலேக்ஸ் ஆகிட்டு கம்படிஷனுக்கு போக ரெடியாகுறேன். நீயும் ரெடியாகு" என்று நடக்க சனா எங்கும் அசையாமல் அவனையே பார்ப்பதை உணர்ந்தவன் அவளை நெருங்கி வந்தவன் ஒன்றும் பேசாமல் அவளை தன் கைகளில் ஏந்தி குளியலறைக்குள் விட்டு கதவை அடைத்து விட்டு நேற்று இரவு வந்த வழியிலேயே தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.


சனாவோ அவன் பேசியதில் அதிர்ச்சி மீளாமல் இருக்க, அவன் கையிலேந்தி குளியலறைக்குள் விட்டதில் இன்னும் அதிர்ந்தாள். அவன் இவ்வாறு செய்வான் என்பதை நிச்சயமாக அவள் எதிர்பார்க்கவில்லை. 'கிருஷ்ணா' என்று பெருமூச்சு விட்டவள் தன் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள்.


கார்த்திக் அங்கே அலுவலகத்திற்குச் செல்ல தயாராக அவன் பி.ஏ அழைத்து இருந்தான். "குட் மோர்னிங் சேர்" என்று அவன் கூற "குட்மோர்னிங்" என்றான். "சேர் சாத்விக் சேர் இங்கே இல்லை. அவர் மும்பை போயிருக்கிறதா அவங்க ஓஃபீசிலிருந்து சொன்னாங்க. அதனால இப்போ அவரை மீட் பண்ண முடியாதாம்" என்று கூற கார்த்திக் சிலையாய் நின்று விட்டான்.



 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 17



கார்த்திக் நேற்று இரவே சாத்விக்கை பழிவாங்குவதற்காக என்ன செய்ய வேண்டும் என வெகுநேரமாக யோசித்து ஒரு முடிவை எடுத்தான். தங்கையை இதில் இழுத்து விட்டமைக்கான தண்டனையை வழங்கப் போகிறேன் என்ற பிறகே ஒரு அண்ணனாய் நிம்மதியாக இருக்க முடிந்தது. அதன் பிறகே அவன் மனமும் அமைதி அடைந்தது.


முதலில் சாத்விக் எங்கே இருக்கிறான்? அவனை சந்திக்க வேண்டும் என்ற ஆவலும் அதிகமாய் இருக்க, அதை எண்ணிக் கொண்டே டையைக் கட்டினான். அப்போது அவனது மொபைல் தன்னிருப்பை அவனுக்கு தெரிவிக்க, திரையில் அவனது பி.ஏ வின் பெயரே ஒளிர்ந்தது. அழைப்பை ஏற்க, "சேர் சாத்விக் சேரை இப்போ மீட் பண்ண முடியாது. அவரு மும்பை போயிருக்காரு" என்றான்.


அதைக் கேட்ட கார்த்திக்கோ சிலையாய் நின்றான். அவன் மனதின் சிறு ஓரத்தில் அவன் செய்து இருக்க மாட்டான் என்ற நம்பி்கை இருக்கத்தான் செய்தது. ஆனால் இப்போது முழுமையாக நம்பிக்கைச் சிதற தான் செய்ய வேண்டியவைகளை அவசரமாக மனதில் கணக்கிட்டான். "குருவை என்னை வந்து பார்க்க சொல்லு" என்று அழைப்பைத் துண்டித்து இறுகிய முகத்துடன் கீழிறங்கிச் சென்றான்.


அவனைப் பார்த்த விசாலாட்சியும், அபியும் ஏதோ பிரச்சனை என்பதைப் புரிந்துக் கொண்டவர்கள் ஒன்றும் பேசாமல் அமைதியாய் அவனைப் பார்க்க; கார்த்திக், "எனக்கு பசி இல்லை. நீங்க சாப்பிடுங்க. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு" என்று அங்கிருந்து வேகமாக வெளியேறினான். அவனால் அபியின் முகத்தை நிச்சயமாக பார்க்க முடியாது. தான் செய்ய இருக்கும் காரியம் அத்தகையது.


உடன் பிறவா தமையனாக அவள் சாத்விக்கைப் பார்க்கிறாள். அவனுக்கு தீங்கிழைத்தால் நிச்சயமாக அது அபியையும் ஒரு வகையில் பாதிக்கும். அவள் முகத்தை பார்த்தால், நிச்சயமாக இவ்வாறு ஒரு காரியத்தைச் செய்ய முடியாது. அதனாலேயே அவளைப் பாராது வெளியேறினான். நேராக தனவனுடைய ஓஃபீசிற்கு வேகமாக காரைச் செலுத்தினான்.


சாத்விக் தனது அறையில் தயாராகி வெளியே வர சனாவும் குளித்து வெளியே வந்தாள். அவள் அணிந்து இருந்த கறுப்பு நிற லோங் ஸ்கர்டும், கறுப்பு நிற மேல் லோங் ஸ்லீவ் டீசர்டும் வெள்ளை நிற நிற துப்பட்டாவை கழுத்தோடு இரு முறை சுற்றி விட்டு இருந்த தோற்றம் தேவதையாக சாத்விக்கின் கண்களுக்கு காட்டியது. குளித்து இருந்ததால் தன் இடை தாண்டிய நீளக் கூந்தலை விரித்து ஒரு சிறிய கிளிப்பில் அடக்கி இருந்தால்.


கூந்தலின் அடிப் பகுதிக்கு சற்று மேலே பூலபேன்ட்டை இட்டு இருந்தாள். காதில் எப்போதும் போல் சிறிய சாம்பல் நிற ஜிமிக்கி, நெற்றியில் சிறிய கறுப்பு நிற பொட்டு, எப்போதும் போல் அவள் மூக்குத்தி பளிச்சென்று மின்னி அவனை சுண்டி இழுத்தது. சிறியதளவு ஒப்பனையில் சாத்விக்கின் கண்களுக்கு விருந்து வழங்கினாள் அவனின் ஜானு.


சாத்விக் அவளையே பார்க்க, அவனை நெருங்கியவள் "சேர் போலாமா? இப்போ போனால் தான் எனக்கும் கொஞ்சம் ரிலேக்ஸ் பண்ண நேரம் கிடைக்கும்" என்று தன்னிலையை உரைக்க அவனும் தலையாட்டி பொம்மைப் போல் சரியென்று அவளோடு நடந்தான். அவன் பார்வை முழுவதும் அவள் மூக்குத்தி மேலேயே இருந்தது. இருவரும் லிஃப்டிற்குள் ஏற வெறுமையான லிஃப்டே அவர்களை வரவேற்றது.


உள்ளே நுழைந்தவுடன் கதவை மூடிக் கொண்ட அடுத்த நொடி அவளை இழுத்து தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தவன் அவள் மூக்குத்தியில் அழுந்த முத்தமிட்டு அவளை தள்ளி நிறுத்தி இருந்தான். நடந்ததை கிரகிக்கவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது சனாவிற்கு. அவள் நிலையைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்து அவளையே பார்த்தான். அதற்குள் மற்ற மாணவர்களும் லிஃப்டிற்குள் ஏறிக் கொண்டனர்.


சனா தன்னை நிதானப்படுத்தி நடந்ததை உணர்ந்தவள் மற்றவர்கள் அறியாது சாத்விக்கை முறைக்க, அவனும் குறும்பாக சிரித்து ஒற்றைக் கண்ணைச் சிமிட்டினான். அதைப் பார்த்தவள் அவசரமாக வேறு புறம் திரும்ப இதயயோ உடுக்கைப் போன்று வேகமாகத் துடித்தது. 'காட்டுப் பையலே!! என்ன கேடி வேலை பார்க்குறான். அந்த சின்ன கேப்புக்குள்ள முத்தம் கொடுத்துட்டு; இப்போ ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரி முளிக்கிறதை பாரு' என்று உள்ளுக்கள் வசைப் பாடினாள்.


மனசாட்சி, 'அது மட்டுமா பண்ணான்?' என்று எடுத்து உரைக்க, 'எல்லார் முன்னாடியும் கண் அடிக்கிறான். காட்டுப் பையலே !!!! உன் பெயருக்கும் உனக்கும் பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு. காட்டுப் பையலே!!.... ம்ம்.... இங்கே காட்டு வாசி டிரஸ்ஸூல இருந்தால் எப்படி இருப்பான்?' என்று கற்பனைக்குச் செல்ல இலைக்குலை ஆடையோடு முகத்தில் இரு புறமும் கறுப்பு மையால் மூன்று கோடுகள் மூன்று இட்டு, கையில் வேலை வைத்துக் கொள்ளும் தோற்றம் கண் முன் தோன்ற அவளுக்கு சிரிப்பு பீரிட்டு வந்தது.


கடினப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டவள் அரைக் கண்ணால் அவனைப் பார்க்க அவனோ இவளை குறுகுறு என பார்ப்பது நன்றாகவே தெரிந்தது. 'ஹாஹா உனக்கு சூப்பர் டிரஸ் காட்டுப் பையா' என்று இதழ் கடித்து சிரிப்பை அடக்கினாள். சாத்விக்கின் பார்வை தன்னைத் துளைப்பதை உணர்ந்த சனா அவன் புறமே திரும்பவில்லை. கிரவுன்ட் ஃபுளோரிற்கு வருகைத் தர அனைவரும் செல்வதற்கு கார் வந்திருந்தது.


ஒரு காரில் ஆண்கள் இருக்க சனா அதில் செல்ல சங்கோஜப்படுவாள் என்பதை உணர்ந்த சாத்விக் அவளை தன்னோடு தன்னுடைய காரில் அழைத்துச் சென்றான். அரை மணித்தியாலத்திற்குப் பிறகு போட்டி நடைபெறும் இடத்தை வந்து அடைந்தனர். அங்கே வந்த பிறகே இத்தனை நேரமாக இல்லாத ஒரு பதட்டம் சனாவை ஒட்டிக் கொண்டது. சாதவிக் அவள் முகமாற்றத்தைக் கண்டு கொண்டவன் அவள் கைகளை தன் கையோடு பிணைத்துக் கொண்டான்.


அவள் கையோ பயத்தில் வியர்வையில் முக்குளித்து இருக்க தன் இறுகிய பிணைப்பில் 'நான் உன்னுடன் இருக்கிறேன்' என்பதை உணர்த்த அவன் முகத்தை ஏறிட்டாள். அவன், "பயப்படாத பேபி. சில்... உன்னால முடியும். ஒகே. யூ ஆர் த பெஸ்ட். இதை மனசுக்குள்ள வச்சிக்கோ" என்று புன்னகைக்க அவளும் புன்னகைத்தாள். அதில் உயிர்ப்பு இல்லை என்பதை அவனும் அறிந்துக் கொண்டான்.


சாத்விக் பேசிய பிறகு அவள் முகத்தில் ஓரளவு தெளிவு பிறந்து இருந்தது. மூன்று நாட்களுக்குள் ஆறு தேர்வுகளை கடக்க வேண்டி இருந்தது. ஒரு நாளைக்கு இரண்டு தேர்வுகள் நடைபெற இருந்தன. முதல் தேர்வை போட்டியை நடத்துபவர்களில் இருபது பேர் தெரிவு செய்வர். இறுதி கட்ட தேர்வை சிறந்த ஓவியரான கமலேஷ் என்பவர் தெரிவு செய்வதாக இருந்தது.


சனாவை இறக்கிய போது அவளோடு மற்ற மாணவர்களும் அங்கே வந்து சேர்ந்துக் கொண்டனர். சாத்விக், "ஆல் த பெஸ்ட். டிரோ பண்றவங்க டென்ஷன் ஆனால் ஒன்னும் பண்ண முடியாது. சோ தைரியமா இருந்து நல்லா வரைஞ்சு கோலேஜூக்கு பிளேஸ் எடுத்து கொடுத்துருங்க. ஒகே வா? எனக்கு முக்கியமான வேலை இருக்கு. சோ நான் ஈவீனிங் வரேன். பாய்.." என அனைவருக்கும் பொதுவாகக் கூறி தனது காரை நோக்கிச் சென்றான்.


சனா மற்ற இரு மாணவர்களுடன் இருக்க இவர்களுக்கு பொறுப்பாக வருகை தந்திருந்த ஸ்டாஃப் அவர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டு இருந்தார். சனாவோ அதை கவனத்தில் கொள்ளாது காரில் ஏறும் சாத்விக்கையே பார்க்க அவனும் அவளை காரின் முன் கண்ணாடியில் பார்த்து புன்னகைத்துக் கொண்டான். சாத்விக்கின் கார் அங்கிருந்து மறையும் வரையில் அவள் பார்வை அங்கேயே இருந்தது.


ஸ்டாஃப், "புரிஞ்சுதா சனா?" என்று வினவ திடீரென்று தன் பெயர் கூறியதில் திடுக்கிட்டு அவரைப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள். "நான் பேசினது எதையுமே நீ கேட்க இல்லையா? என்ன யோசணை உனக்கு?" என்று திட்ட ஆரம்பிக்க அவளின் பதட்டமும் அதிகரித்தது. அதைப் புரிந்துக் கொண்ட மற்ற இருவரும், "நாங்க சொல்றோம் சேர். அதோ அங்கே ஸ்டாஃப்ஸ் கிட்ட நம்பர்ஸ் கொடுக்குறாங்களாம்" என்று அவரை அனுப்பி வைத்தான்.


"டென்ஷனாகாத சனா. சாத்விக் சேர் சொன்னதை இவரு ரொம்ம்பபபப லென்தா சொன்னாரு. அவளோ தான்" என்று மற்றையவன் கூற "தேங்ஸ் அண்ணா" என்று இருவரையும் பார்த்து புன்னகைத்தாள். "பரவால்லை மா. இன்னைக்கு தான் உன் குரலை கேட்குறோம்" என்றனர் இருவரும். அவள் பதில் கூறாது புன்னகைத்து வேறு புறம் திரும்ப, அபி அவளை மொபைலில் அழைத்து இருந்தாள்.


"குட் மோர்னிங் அபி" என்று கூற, "என்னை உனக்கு ஞாபகம் இருக்காடி? நேத்து நைட் அங்கே போய் சேர்ந்துட்டன்னு மெசேஜ் போட்டு இருந்த. அதுக்கு அப்புறம் பேசவே இல்லை" என்று பொரிந்துத் தள்ள, "ரிலேக்ஸ் அபி. எதுக்கு டென்ஷன் ஆகுற? நான் காலையில இருந்தே கம்படிஷனைப் பத்தி யோசிச்சு டென்ஷனா இருந்தேன். அதான் பேச கிடைக்க இல்லை. சொரிடி" என்றாள் பாவமாக.


"கம்படிஷனுங்குறதால பொழைச்சிப் போ" என்று பெரிய மனதுடன் மன்னிப்பை வழங்க சனா சிரித்தாள் அபி, "எங்கே இருக்க?" என்று கேட்க, "கம்படிஷன் நடக்குற இடத்துக்கு வந்துட்டோம். இன்னும் வன் ஹவர்ல ஆரம்பிப்பாங்க. இப்போ போய் என் இடத்தை தேடி பிடிக்கனும்" என்று பெருமூச்சு விட, அபி, "சரிடி நீ வேலையைப் பாரு. நான் ஈவீனிங் கூப்பிடுறேன்" என்று அழைப்பை துண்டித்தாள்.


'ஹப்பா இவளை சமாளிக்க தனியா சாப்பிட வேண்டி இருக்கும். அண்ணன் ரொம்ப பாவம்' என்று தன்போக்கில் சிந்திக்க அவ் இரண்டு மாணவர்களில் ஒருவன், "சனா நம்ம இடத்துக்கு போலாமா?" என்றான். "அண்ணா நம்பர்ஸ் இல்லாமல் போக முடியுமா?" என சந்தேகமாய் வினவ, "சேர் நம்பர்சை எடுத்துட்டு பின்னாடி வரேன்னாரு. நாங்க முன்னாடி போலாம்" என்றான் மற்றொருவன்.


மூவரும் சேர்ந்து சிறிது தூரம் நடக்கும் போதே அவ் ஸ்டாஃப் வந்து விட மூவருக்கும் நம்பரை வழங்கி அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்றார். அதே போல் மற்ற மூவரும் தங்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட இடத்திற்குச் செல்ல சனா அங்கிருந்த அனைத்தையுமே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். நேரம் கடக்க முதல் சுற்று ஆரம்பிக்கும் நேரமும் நெருங்கியது.


அனைவரும் தங்கள் இடத்தில் நிற்க மேடையில் புரொஜெக்டர் மூலமாக, ஒரு படத்தை ஒளிபரப்பி இருக்க அதை அனைவரும் ரேகைச் சித்திரமாக வரைய வேண்டும் என்பதே முதல் சுற்று. அப்படத்தை அனைவருமே பார்த்து வரைய ஆரம்பித்தனர். இரண்டு மணித்தியாலங்கள் இறக்கை கட்டி பறக்க, இன்னும் ஒன்றரை மணித்தியாலங்களே நேரம் மிகுதியாக இருந்தது. சனா ஒவ்வொரு நிமிடத்தையும் வீண் செய்யாமல் போட்டி நேரம் முடிவடைய ஐந்து நிமிடத்திற்கு முன் முடித்தாள்.


அதே போல் அநேகமானோர் வரைந்து முடிக்க போட்டி நடாத்தப்படும் குழுவினரால் அனைத்து சித்திரங்களும் சேகரிக்கப்பட்டது. இடைவேளை முடிந்த பிறகு அதில் இருந்து இருபது பேரை முதல் கட்டத்தில் விலக்கி இருக்க சனாவின் கல்லூரியில் இருந்த மூவருமே அடுத்த சுற்றுத் தேர்வுக்கு தேர்வாகியிருந்தனர். அடுத்த சுற்றிலும் மூவருமே நன்றாக வரைந்து இரண்டாம் நாள் நடைபெற இருக்கும் போட்டியிற்கு தெரிவு செய்யப்பட்டனர்.


சாத்விக்கிற்கு வேலைப் பழு காரணமாக போட்டி நடைப் பெற்ற இடத்திற்கு வருகை தர முடியவில்லை. அதனால் மாணவர்கள் அனைவருமே டெக்சி புக் செய்து வர எத்தணிக்க சனாவை அழைத்துச் செல்ல சாத்விக் தன் காரை அனுப்பி வைத்திருந்தான். அங்கிருந்த எவருக்குமே இது தவறான செயலாக தோன்றவில்லை. அவனுடைய பொறுப்புணர்வையே காட்டியது. (ஐயோ அறிவாளிங்களா, அவன் ஆளுக்கு அவன் காரை அனுப்பி இருக்கான். அதை கூட புரிஞ்சிக்க முடியாத பச்ச மண்ணா இருக்கிங்களே)


சனாவும் ஹோட்டலுக்கு வந்தவுடன் குளித்து வீட்டினருக்கு அழைத்து இன்று நடந்த அனைத்தையும் (சாத்விக்கை மறைத்துக்) கூறினாள். அவர்களும் சனாவிற்கு வாழ்த்தைத் தெரிவித்து நேரத்திற்கு உண்ணுமாறு அறிவுரைகளையும் வழங்கிய பின்னரே அழைப்பைத் துண்டித்தனர்.


கார்த்திக் நேரடியாக அலுவலகத்திற்குச் செல்ல அங்கே அவனைக் காண குரு என்பவன் வந்திருந்தான். "வா குரு" என்று அலுவலகத்திற்குச் செல்லாமல் வாகன நிறுத்துமிடத்தில் உள்ள தனது தனிப்பட்ட அறைக்குச் குருவை அழைத்துச் சென்றான். கார்த்திக் இருக்கையில் அமர அவன் முன்னே நின்று இருந்தான் குரு. "உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகனும் குரு" என்று தன் நெற்றியை சுட்டு விரால் தேய்த்தான்.


"சொல்லு தல என்னவா இருந்தாலும் ஜமாய்ச்சிடலாம்" என்று பெருமையாய் கூற, தன் திட்டம் முழுவதையும் கூறி முடித்தான் கார்த்திக். "இந்த விஷயத்துல எந்த காரணம் கொண்டும் என் பெயர் வந்துர கூடாது. வேலையை கச்சிதமா முடி. எந்த ஒரு தப்பும் நடக்காமல் பார்த்துக்கோ" என்றான் கார்த்திக் கடுமையாக.


"சரி தான் தல. எத்தனை நாளையில உன் ஜோலியை முடிக்கனும்னு சொல்லு தல.நான் கச்சிதமா முடிக்கிறேன்" என்று குரு தீர்க்கமாக கூற, "அந்த ப்ரவீன் என் கல்யாணத்துக்கு தான் சென்னை வருவான். அது வரைக்கும் உனக்கு டைம் தரேன். என் கல்யாணம் முடிஞ்சதும் நிம்மதியாவே இருக்க கூடாது. இருக்க விட மாட்டேன்" என்று எழுந்து கர்ஜித்தான்.


"அவன் என்னை என்ன பண்ணி இருந்தாலும் நான் பேசாமல் இருந்து இருப்பேன். ஆனால் அவன் கை வச்சது என் உயிரு மேலே டா. அவ எனக்கு அம்மா. என் குழந்தை எல்லாமே அவ தான். அவ சின்ன குழந்தை மாதிரி. அவளை போய், சே!!! அவனை விடவே கூடாது" என்று உறும கார்த்திக்கின் இவ் அவதாரத்தில் ஒரு நிமிடம் குருவே அரண்டு விட்டான்.


"நான் பாத்துக்குறேன் தல. நீ விடு தல. கல்யாண வேலையை கவனி" என்று குரு கூறிவிட்டுச் செல்ல கார்த்திக்கின் நினைவை முழுவதும் சாத்விக், சனா இருவருமே ஆக்கிரமித்து இருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிந்தைகளில் மூழ்கி இருந்தாலும் கல்யாண வேலைகள் எவ்விதத் தடங்களும் இன்றி விசாலாட்சியின் தலைமையில் ஜெகஜோதியாக நடந்துக் கொண்டு இருந்தது.


சனா அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு பல்கனிக்குச் சென்று வேடிக்கைப் பார்த்தாள். சாத்விக்கை வெகு நேரமாக அவள் மனது அவள் அறியாமலேயே எதிர்பார்க்க, அவன் அவளறைக்கு வரவேயில்லை. ஆனால் அவளுக்குத் தேவையான சிற்றுண்டியும், தேனீரும் நேரத்திற்கு அவள் அறைக்கு வந்து சேர்ந்தது. நேற்று அழகாய் தென்பட்ட மும்பை நகரம் இன்று அவள் கண்களிற்கு இரசிக்கும் படியாக இருக்கவில்லை.


வெளியே வெறித்திருந்தவள் சாத்விக்கின் அறையின் பல்கனியைப் பார்க்க அங்கே நின்று அவனும் வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். சற்று நேரத்திற்கு முன்னேயே குளித்திருந்தான் போலும் தலை மயிரில் நீர்த்துளிகள் சொட்டச் சொட்ட ஆரம்கட் டீசர்ட், நைட் நைட் பேன்ட் அணிந்து தலையைக் கூட துவட்டாது பல்கனியின் கம்பியைப் பிடித்தவாறு வெறித்து இருந்தான்.


தொடர் உடற்பயிற்சியினால் உருவான புஜங்களும்,அகன்று விரிந்த தோள்களும் கட்டுடலையும் இருக்கிப் பிடித்து இருந்தது அவன் அணிந்து இருந்த ஆரம்கட் டீசர்ட். அவன் உடல் இத்தனை கவர்ச்சியாக இருந்தாலும் அவன் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லை. கண்களும் கலங்கி இருந்ததோ. சனா அவனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்தாள்.


முழுவதுமாக ஒரு முறை அவனை ஆராய்ந்த அவள் கண்கள் அதன் பிறகு இமியளவும் அவனுடை முகத்தை விட்டு அசையவே இல்லை. தன்னை எவரோ உற்று நோக்குவதை உணர்ந்தவன் அப்புறமாகத் திரும்ப பல்கனியில் சாய்ந்தவாறு காட்டன் சுடிதாரில் தன் இரு கைகளையும் மார்பிற்கு குறுக்காக கட்டியவாறு அவனையே சனா பார்ப்பதை உணர்ந்தவன் இன்பமாக அதிர்ந்தான்.


தன்னை இவ்வளவு நேரமாக சனா பார்ப்பாள் என்பதை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அங்கிருந்து குறும்புப் புன்னகையுடன் அவன் கண்சிமிட்டும் போதே தன்னிலை அடைந்தாள் சனா. அதன் பிறகு ஏனோ அவன் முகம் பார்க்க வெட்கம் தடையாக இருக்க, உள்ளே ஓடி வந்து விட்டாள் தன் சிவந்த முகத்தை மறைப்பதற்காக. அவனும் உடனே அறைக்குள் நுழைந்தான்.


சனாவின் அறைக்குள் அவன் நுழைய அவன் நுழைந்த வழியைப் பார்த்து அதிர்ந்தே விட்டாள். அங்கே ஆளுயரத்திற்கு வரைந்து மாட்டப்பட்டு இருந்த ஓவியம் ஒரு கதவு. நிச்சயமாக அதை அவள் எதிர்பார்க்கவில்லை. கண்களை விரித்து சற்று வாயைப் பிளந்தவாறே சனா அவன் உள் நுழைந்ததைப் பார்த்தாள். சாத்விக், "வாயை மூடு பேபி. உள்ளே கொசு போயிரும்" என்று நமட்டுப் புன்னகையுடன், உதடுகளை தன் விரல்களைக் கொண்டே மூடி விட்டான்.


அவனை முறைத்தவள், "இது எப்படி சாத்தியம் சேர்?" என்று அவள் அதிர்ந்த குரல் மாறாமலேயே வினவினாள். "இது என் ஹோட்டல் பேபி. எங்க ஃபேமிலி இங்க வந்தால் இந்த இரண்டு ரூம்ல தான் தங்குவோம். அதனால இரண்டு ரூமுக்கு இடையிலும் ஒரு டோர் இருக்கு. நாங்க இல்லாதப்போ இந்த டோரை லொக் பண்ணிட்டு செபரேட் ரூமா சேன்ஜ் பண்ணிருவாங்க. இந்த டோரோட கீ என் கிட்ட மட்டும் தான் இருக்கும்" என்றான் விரிவாக.


"அப்போ காரியத்தோட தான் என்னை இந்த ரூமுக்கு வர வச்சிருக்கிங்க இல்லையா?" என்று தன் கீச்சுக் குரலில் கோபமாய் வினவ, அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன், "ஆமா பேபி. என் பொன்டாட்டியை என் பக்கத்துல வச்சிறிக்குறதுல தப்பில்லையே. நீ எப்போவும் என் பக்கத்துலேயே இருக்கனும். உன் அண்ணன் கல்யாணத்துக்காக மட்டும் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். அதுவும் உன் ஆசைக்காக மட்டும் பொறுத்துட்டு இருக்கேன்" என்று நெற்றியில் முத்தமிட்டான்.


அவள் ஒன்றுமே பேசாமல் கண் மூடி இருக்க தன் உயரத்திற்கு அவளை உயர்த்தியவன், "ரொம்ப நேரமா என் பேபி என்னை சைட் அடிச்சிட்டு இருந்தா போல இருக்கே" என்று அவள் மூக்கோடு மூக்கை உரசினான். "நான் சைட் அடிக்க இல்லை. சும்மா பார்த்தேன். குளிச்சிட்டு ஒழுங்கா தலையை துவட்டக் கூட முடியாத அளவுக்கு சேருக்கு என்ன வேலைன்னு யோசிச்சிட்டு இருந்தேன்" என்று வேறு புறம் முகத்தைத் திருப்பினாள்.


அவளை தரையில் விட்டவன், அவளை இழுத்துக் கொண்டு கட்டிலின் அருகே சென்று அமர்ந்து அவன் முன்னே அவளை நிற்க வைத்தான். "என் தலையை துவட்டி விடு பேபி" என்று அவள் முகம் பார்த்தவன், "உன் துப்பட்டாவால துவட்டி விடு. எனக்கு முந்தானை, துப்பட்டாவால தலையை துவட்டி விடுறது ரொம்ப ரொம்ப புடிக்கும்" என்றவனின் குரலில் ஏக்கம் வழிந்தோடியது.


அவன் கண்களைப் பார்த்தவாறே இருந்தவள் அவன் தலையை தன் துப்பட்டா கொண்டே துடைத்து அவன் ஆசையை நிறைவேற்றினாள். அவனோ அவள் இடுப்பை வளைத்து வயிற்றில் முகம் புதைத்துக் கொள்ள, "சேர் இது தான் சந்துல சிந்து பாடுறங்குறது. தள்ளி நில்லுங்க சேர். தலையை துவட்டவா வேணாமா?" என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டலாய் கேட்க அதில் உருகி வழிந்தான் சாத்விக். அடுத்து அவன் கேட்ட கேள்வியில் அவள் இதயமோ பந்தைய குதிரிகளைப் போன்று வேகமாக துடித்தது.


~ என் தாரமாய் நீ வந்து
தாங்கிடு என்னை
என் ஒரு தாயாய்
என்னவளே ~


 

Attachments

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
22951


அத்தியாயம் 18



சாத்விக்கை சனா மிரட்டினலும் அவனுக்கு கோபம் வரவில்லை. அதற்கு மாறாக ஒரு நிம்மதியே தோன்றியது. எத்தனையோ வருடங்களிற்குப் பிறகு தன்னை மிரட்டி எச்சரிக்க ஒரு நபர் வந்து விட்டார் என்ற உண்மை உறைக்க அவனுக்கு தித்திப்பாய் இருந்தது. அதிகமான நாட்களாக இருந்த ஏக்கம் இன்று நிறைவேறியதாய் இருந்தது.


சிறிது நேரம் அவளையே உற்று நோக்கியவன், "இன்னைக்கு லிஃப்டுல எதுக்கு சிரிச்ச? என்னை பார்த்து சிரிச்சது போல இருந்ததே" என்று புருவமுயர்த்த, அவன் கேட்ட கேள்வியில் அதிர்ந்து அவனைப் பார்த்தாள் சனா. அவளின் முழியை வைத்து கண்டு கொண்டவன், "சோ, என்னைப் பத்தி தான் ஏதோ நினைச்சு இருக்க ரைட்? அதை உன் திருட்டு முழியே உன்னை காட்டி கொடுத்திறிச்சு. உண்மையை சொல்லு பேபி" என்றான்.


'ஐயோ இந்த மனிஷனுக்கு இவளோ கண்பார்வை இருந்திருக்கக் கூடாது. கிருஷ்ணா எதுக்கு இந்த காட்டுப் பையலுக்கு இவளோ மூளையை கொடுத்த? கொஞ்சமாச்சும் கம்மி பண்ணி இருக்கக் கூடாதா? பாரு இப்போ கஷ்டபடுறது நான். எல்லாம் உன்னால தான்' என்று கிருஷ்ணனோடு முறுக்கிக் கொண்டாள்.


"என்ன மேடம் அமைதியா இருக்கிங்க?" என்று அவள் அமைதியை சாத்விக் கலைக்க, "அது... அது.. அப்படி ஒன்னும் இல்லை சேர்.. நான்.. அப்படி" என்று அவள் தடுமாற அவளை கடவுள் போல் காப்பாற்றியது மொபைலின் அழைப்பு. "சேர் ஃபோன் வந்திருக்கு" என்று அவசரமாக அழைப்பை ஏற்க எதிர்முனையில் கார்த்திக் பேசினான்.


"பட்டு என்ன டா இன்னும் நீ தூங்க இல்லையா? ஃபர்ஸ்ட் ரிங்லயே எடுத்துட்ட?" என்று பாசமாய் வினவ, "சும்மா அண்ணா. நீ எதுக்கு தூங்காமல் இருக்க?" என்றாள் யோசணையாக. "நாளைக்கு நகுல் மாமா ஊருக்கு போய் அவங்களே இன்வைட் பண்ணலாம்னு இருக்கோம். உன் கிட்ட சொல்லவும் இல்லை மறந்துட்டேன் டா. நீ இல்லாமல் ரொம்ப கஷ்டமா இருக்கு பட்டு. அங்க நெஜமாவே எந்த பிரச்சனையும் இல்லையே" என்று தவிப்புடனேயே வினவினான்.


சாத்விக் மும்பையில் இருக்கின்றான் எனக் கேள்வி உற்றதிலிருந்து அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சாத்விக்கால் சனாவிற்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயம் அவனை அரித்துக் கொண்டே இருந்தது. சாத்விக் அவள் நிழலாகவே இருக்கிறான் என்பதை அறியாமல் இருந்தான் அப்பாசக்கார அண்ணன்.


"அண்ணா நீ டென்ஷன் ஆகாத எனக்கு எந்த ஒரு பிரச்சனையுமே இல்லை. கல்யாண வேலைகள் எப்படி போகுது?" என்று அவள் கதை மாற்ற, அவள் எண்ணம் புரிந்துக் கொண்ட தமையனும் உள்ளுக்குள் சிரித்து, "நிறைய வேலைகள் முடிஞ்சதுடா. நீ இல்லாதது பெரிய குறையா இருக்கு. அதை விடு, உன் கம்படிஷன் எப்படி போகுது?" என்றான் கார்த்திக்.


"அது சூப்பரா போகுது அண்ணா. இன்னைக்கு பர்ஸ்ட் ரவுன்ட் முடிஞ்சது. நாளைக்கு செகன்ட் ரவுன்ட் ஸ்டார்ட் பண்றாங்க" என்று சந்தோஷமாக கூற, "சரி டா உன்னை நம்பி உன் கோலேஜ் உன்னை அனுப்பி இருக்கு. பார்த்து நடந்துக்கோடா" என்றான் தமையன். "சரி அண்ணா என்னைப் பத்தி கவலைபடாமல் அபி கூட டூயெட் பாடுங்க அண்ணா" என்று கிண்டலாகக் கூற, "அவ கூட நான் டூயெட் ஆடுறதை பார்க்குறேன். நீ கவனமா இருக்க பாருடா" என்றான் பாசத்துடன் கார்த்திக்.


"ஒகே அண்ணா. நீங்க என்னைப் பத்தி பவலைபடாமல் சந்தோஷமா அபி கூட இந்த தருணங்களை என்ஜோய் பண்ணுங்க அண்ணா. இந்த சான்ஸ் மறுபடியும் கிடைக்காது. அபி இதை வெளியில சொல்லாட்டியும் மனசுல ஒரு ஓரத்துல கொஞ்சமாச்சும் ஃபீல் பண்ணுவா. என்னை விட்டுட்டு அவளை பார்த்துக்கொங்க அண்ணா. அவ பாவம். நானும் இல்லாமல் ரொம்ப ஃபீல் பண்ணுவா" என்று தங்கை தாயாய் மாறி கார்த்திக்கிற்கு அறிவுரை வழங்கினாள்.


"நான் பார்த்துக்குறேன். நீ பத்துரமா இரு. பாய்" என்று அழைப்பைத் துண்டிக்க, சனாவும் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தாள். சாத்விக் கண் சிமிட்டாமல் வெகுநேரமாக அவளையே பார்க்க, தன்னை சாத்விக் பார்ப்பதை உணர்ந்தவள், "என்னாச்சு சேர்?" என்று வினவினாள். "நீ இவளோ பேசுவியான்னு பார்த்தேன். நான் ஏதாவது கேள்வி கேட்டால் திக்கித் திக்கி ஒரு பதினஞ்சு வேர்ட்ஸ் பேசுவியா? உன் அண்ணன் கூட டேமை திறந்து விட்டது போல எவளோ பேசுற?" எனப் பொய்யாய் ஆச்சரியப்பட்டான்.


"அது வந்து..." என்று 'என்ன காரணம் கூறுவது?' எனத் தெரியாமல் தடுமாற, "நான் சொன்னதை இப்போ நீயே உண்மையாக்கிட்ட. பாரு எவளோ தடுமாறுறன்னு" என்று குற்றம் சாட்டினான் அக்கள்வன். "சேர் நான் உங்க கூட கொஞ்ச நாளா தான் பழகுறேன். என்னால சீக்கிரமா யார் கூடவும் ஒட்டிக்க முடியாது. இத்தனை வருஷத்துல கொஞ்ச நாள் பழகி அதிகமா பேசுறது உங்க கூடதான்" என்றாள் விளக்கமாக.


"இதை என்னை நம்ப சொல்றியா?" என்று அவளை சீண்டும் விதமாகக் கேட்க, "உண்மையை சொல்றேன் சேர். நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்" என்று அமைதியானாள். "சரி பேபி. நான் உன்னை நம்புறேன். இதுக்கு முன்னாடி நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்ல இல்லையே" என்று நினைவுபடுத்த சனா விரிவிரித்து சாத்விக்கை பார்த்தாள்.


'அடி ஆத்தி இந்த மனுஷன் பொல்லாத ஆளா இருக்கானே. காட்டுப்பயலுக்கு ஞாபகசக்தியும் ஜாஸ்தியா இருக்கே. கிருஷ்ணா இதையாவது நீ கொஞ்சம் கம்மி பண்ணி இருக்கக் கூடாதா? இந்த காட்டுப் பயலுக்கு எல்லாமே அதிகமா இருக்கு. கொஞ்சமாச்சும் உதவி பண்ணலாமே' என மானசீகமாக கிருஷ்ணனனுடன் உரையாடலை நடத்த, "என்ன பேச்சையே காணோம்" என்று அமைதியை கலைத்தான் சனாவின் காட்டுப் பையல்.


"அதை விடலாமே சேர் பிளீஸ்" என்றாள் கண்களைச் சுருக்கி. அதன் அழகில் மயங்கியவன், "விடலாம்" என்று அவளையே பார்த்துக் கூறி அவள் மூக்குத்தியில் இதழ்பதித்து விலகி நின்றான். "நாளைக்கு கம்படிஷனில் வின் பண்ண என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்போ தூங்கி நல்லா ரெஸ்ட் எடு" என்று அங்கிருந்து விலகி தன்னுடைய அறையை நோக்கிச் சென்றான்.


சனாவும் அவன் சென்றபின் கட்டிலில் விழுந்த இன்றைய களைப்பைப் போக்க உறங்கினாள். சில நிமிடத் துளிகளிலேயே நித்திரையில் ஆழ்ந்தாள். சாத்விக் அறைக்குச் சென்றவன் கார்த்திக்கைப் பற்றிய சிந்தையில் ஆழந்தான். சனாவிற்கு இரவு நேரத்தில் அழைத்து அவள் கவனமாக இருக்கிறானா? என இவன் கேட்கின்றான் என்றால் நிச்சயமாக தான் மும்பை வந்துள்ளை தெரிந்துக் கொண்டுள்ளான் என்பதை அறிந்துக் கொண்டான்.


இரவு நேரம் என்பதையும் பாராமல் சாத்விக் உடனடியாக தன் பி.ஏ ராகவிற்கு அழைப்பை ஏற்படுத்தினான். 'இந்த ராத்திரி நேரத்துல யாரு தொல்லை பண்றது' என முணகியவாறே அழைப்பை திரையில் பெயரைப் பார்க்காமல் ஏற்றான். "ஹலோ யாருங்க இந்த ராத்திரியில பேசுறது?" என்று உறக்கத்தின் பிடியில் பேச, "ம்ம... செத்துப்போன உங்க ஆயா" என்றான் சாத்விக் கோபமாக.


"என்னது" என்று அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தவன், "செத்துப்போன ஆயா நீ எதுக்கு என் பொஸ்ஸோட வொயிசுல பேசுற?" என்று அதி முக்கிய கேள்வியைக் கேட்க, "ம்ம்.. மிமிகிரி பண்ண பிரெக்டிஸ் பண்றேன்..." என்று கடுப்படித்த சாத்விக் உடனே, "எடு செருப்பை" என்று சீற அதன் பிறகே முற்றிலும் உறக்கத்தை கலைத்து ராகவ் உடனடியாக கையடக்கத் தொலைப்பேசியின் திரையைப் பார்த்தான்.


"சேர்..." என்று அவனது பரிதாபக் குரல் ஒலிக்க, "என்னடா சேர்? யாரு கிட்ட பேசுறோம்னு பாக்குறது இல்லையா இடியட்? தூங்கினா உலகத்தையே மறந்துருவியா? நீ எஸ்.பி ஓட பி.ஏ. ஒவ்வொரு நிமிஷமும் நீ எச்சரிக்கையா இருக்கனும். என்னோட எதிரிகள் எப்போ வேணூன்னாலும் உன்னை தாக்கலாம். கொஞ்சமாஞ்சும் சூதானமா இருக்க மாட்டியா யூஸ்லஸ் ஃபொளொவ்" என்று திட்டித் தீர்த்து விட்டான் சாத்விக்.


அங்கே ராகவோ பாவமாய் தன் கன்னத்தில் கையை வைத்து அமர்ந்து இருந்தான். 'இந்த மனிஷனுக்கு பி.ஏ வா இருந்துட்டு நிம்மதியா தூங்க கூட வேணாங்குறாரே. யப்பா முடியல்லை டா சாமி' என்று மனதில் புலம்ப, 'அப்போ வேலையை விட்டு நின்னுடு' என்று மனசாட்சி கூறியது யோசணை ஒன்று. 'இந்த மாதிரி ஒரு நல்ல மனிஷன் கிட்ட வேலையில் இருந்து நிற்கிறதும் ஒன்னு பழாங் கிணத்துல குதிக்கிறதும் ஒன்னு. மரியாதையா இங்கிருந்து ஓடிப்போயிடு' என்று அடித்து விரட்டாத குறையாக இங்காருந்து மனசாட்சியை அனுப்பி வைத்தான் ராகவ்.


"எதுக்கு இடியட் இன்னும் அமைதியா இருக்க?" என்று சாத்விக் எரிந்து விழ, "நீங்க திட்றதை கேட்டுட்டு இருந்தேன் சேர்" என்றான் பாவமாய். "இதை பேசி என்னால டைமை வேஸ்ட் பண்ண முடியாது" என்றவன், "கார்த்திக் ஆர்யன் என்னை கன்டெக்ட் பண்ணானா?" என்று வெகு சிரத்தையாய் தனது கேள்வியை முன்வைக்க, "ஆமா சேர். கார்த்திக் சேரோட பி.ஏ உங்களை அவரு அவசியமா மீட் பண்ண வேணூன்னு சொன்னாராம்" என்றான்.


"அது மட்டும் இல்லை சேர் அவரு முந்தாநாள் இராத்திரில இருந்து உங்களை மீட் பண்ண டிரை பண்ணிட்டு இருக்காறாம்" என்று தான் சேகரித்த மேலதிக தகவலையும் சேர்த்து வழங்கினான் ராகவ். இதுவே அவனது விசேடக் குணம். முக்கியமாக சாத்விக் தன்னிடம் கேட்பவற்றை கணித்து அது சம்பந்தமான மேலும் சில தகவலையும் சேர்த்து வைப்பான். இதனாலேயே சாத்விக்கிற்கு ஆரம்பத்திலிருந்தே ராகவை மிகவும் பிடித்தது.


"சோ அவன் என்னை மீட் பண்ணியே ஆகனும்னு துடிக்கிறான் அப்படிதானே?" என்று வினவ, "ஆமா சேர்" என்று ஒத்து ஊதினான் ராகவ். "சனா சம்பந்தமா என்னைப் பத்தி தெரிஞ்சு இருந்தால் அவன் மீடிங்ல வச்சே என் கிட்ட சண்டை போட்டு இருப்பான். ஆனால் அவன் சண்டை போட இல்லை. சோ, மீடிங்கிற்கு அப்புறமா ஏதோ நடந்திருக்கு. அதனால தான் இப்போ வரைக்கும் என்னை மீட் பண்ணனும்னு துடிக்கிறான். இதையும் கண்டு பிடிச்சு இருப்பியே ராகவ். அதையும் சொல்லிரு" என்றான் சாத்விக்.


"அது சேர்.." என்று இழுத்தவன் பின், "சனா மேடத்தையும், உங்களை இணைச்சு வச்சு தப்பா ஒரு மெசேஜ் மீடிங்கிற்கு வந்த அத்தனை பேருக்கும் போயிருக்கு. அதுல முக்கியமான விஷயம் என்னான்னா?? அது உங்களுக்கோ இல்லை எனக்கோ கார்த்திக் சேருக்கோ, அவரோட பி.ஏவுக்கோ தெரியல்லை. நம்ம நாலு பேரை தவிற அத்தனை பேருக்கும் வந்திருக்கு" என்றான் தெளிவாக.


ராகவ் கூறக் கூற அவனது நரம்புகள் புடைத்து தசைகள் இறுகி, கண்கள் சிவக்க,"இது யாரு பண்ணாங்க ராகவ்?" என்று உறுமினான். "தெரியல்லை சேர். நான் விசாரிச்ச வரைக்கும் இவளோ தான் தகவல் கிடைச்சிருக்கு. அதுவும் இதெல்லாம் ரொம்ப கஷ்டபட்டு கிடைச்சது" என்றான். "நான் சென்னை வரதுக்குள்ள இந்த வேலையை யாரு பண்ணாங்கன்னு கண்டு பிடி" என்று உறுமி மொபைலை தூண்டித்து கோபமாக வீசி அடிக்க மொபைல் துகள்களானது.


அவன் அறியாத ஒன்று அங்கு சென்ற பின் இதைப் பற்றி நினைக்கக் கூட நேரமில்லாமல் அங்கே முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளில் தவிக்கப் போகிறான் என்பது.


"இதை யாரு பண்ணது? எதுக்காக பண்ணி இருப்பாங்க? நானும், பேபியும் சந்திக்கிறது யாருக்கு தெரியும்? ராகவை தவிற வேறு யாருக்கும் தெரியாதே. அவனும் மூச்சு விட மாட்டான். அப்போ எப்படி இந்த மெசேஜ் போயிருக்கும்" என்பதைப் பற்றி யோசிக்க அவனுக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போன்று இருந்தது. அதில் இவர்கள் சனாவை தவறாக சித்தரித்துள்ளது அவனது கொதிப்பை அதிகரிக்பும் வகையில் இருந்தது.


நீண்ட நேரமாக அறையினுள்ளே நடந்துத் திரிந்தவன் பல்கனிக்குச் சென்று வெளியே வெறிக்க ஆரம்பித்தான். தங்கள் இருவரையும் பின் தொடர்ந்து வந்துள்ளனர் என்பதை அவன் சிறிதும் யோசிக்கவில்லை. ஏனெனில் எஸ்.பி ஐப் பற்றி அறியாதவர்கள் எவரும் இல்லை. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவன். அதனால் இதைப் போன்று தைரியமான வேலைகளை அவன் எதிரிகள் செய்ய மாட்டார்கள் என்பதிலும் உறுதியாய் இருந்தான்.


வெகு நேரம் யோசித்தவன் தன்னறைக்குச் சென்று கட்டிலில் விழுந்து இதை நினைத்தவாறே இருக்க எப்போது உறங்கினான் என்பதை அவனே அறியான். காலை வேளையில் நேற்றைய தினம் போலவே சனாவை அழைத்துக் கொண்டு அவளை போட்டி நடைபெறும் இடத்தில் விட்டவன் அங்கிருந்து சென்றான். அன்றைய தினத்தில் போட்டிகளும் சுவாரசியமாகவே நடைப்பெற்றது.


நேற்றை தினத்தைப் போல் இன்று இல்லாமல், இரண்டு கைகளையும் பயன்படுத்த முடியாது என்று கூறிவிட்டனர். முதலாவது சுற்றில் ஒரு கையை மடித்து வைக்க, ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு உதவியாக இன்னொருவர் அழைத்து வைக்கப் பட்டு இருந்தார். போட்டியாளர் ஒரு கையை வைத்து மாத்திரம் வரைய உதவியாளர் போட்டியாளரின் இன்னொரு கையாக மாறி போட்டியாளர் கூறுவதைச் செய்தார்.


அதில் புரொஜெக்டரில் ஒளிபரப்பப்பட்டு இருந்த ஓவியத்தை அனைவரும் குறிப்பிட நேரத்தில் வரைந்து முடிக்க வேண்டும். அங்கே இருந்த ஓவியமும், வரையப்பட்ட ஓவியமும் 70% மேல் ஒத்துப் போகுமேயானால் அவர் அன்றைய தினத்தில் இரண்டாவது சுற்றிற்கு தெரிவு செய்யப்படுவார். போட்டி ஆரம்பிக்க அனைவருமே ஓவியத்தில் ஆழ்ந்தனர்.


குறிப்பிட்ட நேரம் முடிவடைய ஓவியங்களும் நடுவர்களிடம் கொண்டு செல்லப்பட்டது. இச்சுற்றில் 50% போட்டியாளர்கள் குறைக்கப்பட்டு போட்டியிலிருந்து நீக்ப்படனர். அதில் சனாவின் கல்லூரியில் இருந்து வருகைத் தந்த இரு ஆண்களில் ஒருவர் அடக்கம். சனாவும், மற்றையவனும் அடுத்த சுற்றிற்கு தெரிவாகி இருந்தனர்.


இடைவேளையின் பின் மீண்டும் அடுத்த சுற்று ஆரம்பிக்கப்பட்டது. அச்சுற்றில் முன்னைய போட்டியில் வழங்கப்பட்ட அதே நேர அளவில் ஒரு காட்சி நிறந்தீட்டப்பட்ட ஒரு ஓவியமாகவும், ரேகைச் சித்திரமாகவும் வரையப்பட வேண்டும் என்பதே அடுத்த போட்டியாக இருந்தது. அதற்கு இரு கைகளையும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.


போட்டியாளர்கள் முதலில் பதட்டப்பட ஆரம்பித்து பின் திட்டமிட்டு வரைய ஆரம்பித்தனர். காட்சி என்பது ஒரு இயற்கையை சுற்றி அமைய வேண்டும் என்பது முக்கிய கட்டளையாக இருந்தது. சனா ரேகைச் சித்திரத்தை அவசரமாக சிறிதொரு நேரத்தில் தனக்கு வரைய முடியும் என்பதால் முதலில் ரேகைச் சித்திரத்தை வரைந்து முடித்தாள். அடுத்து அதே சித்திரத்தை வரைந்து அவசரமாக நிறந்தீட்ட ஆரம்பித்தாள்.


அவர்கள் கவுன்ட் டவுன் பத்திலிருந்து ஆரம்பித்து ஒன்று முடியும் போது சனாவும் தன் ஓவியத்திற்கு நிறந்தீட்டி முடித்தாள். பின் ஓவியங்கள் சேகரிக்கப்பட்டு நடுவர்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது. நீண்ட நேர விவாதங்களிற்குப் பிறகு போட்டி முடிகள் அறிவிக்கப்படு முதல் ஐம்பது போட்டியாளர்கள் நாளைய தினத்தில் நடைபெற இருக்கும் இறுதி சுற்றுக்கு தெரிவானார்கள்.


அதில் சனாவும் அவள் கல்லூரியில் இருந்து வந்த மற்றையவனும் அடக்கமாக இருந்தனர். சனா தன் கையில் இருந்த வண்ணங்களை கழுவச் செல்ல அவள் அருகில் வந்து நின்றான் ஒருவன். தன் அருகில் நிழல் ஆடுவதை உணர்ந்து சனா திரும்பிப் பார்க்க, சாத்விக் புன்னகையுடன் கைகளைக் கட்டியவாறு நின்று இருந்தான்.


"நீங்க எப்படி சேர் இங்கே?" என்று ஆச்சரியமாய் வினவ, "ஒரு பொண்ணுக்கு டிரைவர் வேலை பார்க்க வேண்டிய நிலமைல இருக்கேன். அந்த பொண்ணை இன்னைக்கு கடைசி டிரோயிங் வரையும் போதே தூரத்துல இருந்தே பார்த்தேன். சின்ன குழந்தை மாதிரி இரண்டு கையிலும் பெயின்டை பூசி இருந்தா. ஒவ்வொரு விரலும் வேற வேற கலர் இருந்தாலும் அதே விரல்ல இன்னைரு கலரை பூசி பெயின்ட் பண்ணா.


அப்படி என்னதான் அவ வரைஞ்சான்னு பார்த்தால் நான் பிரம்மிச்சு போயிட்டேன். ஒரு ஈவீனிங் டைம்ல சூரியன் மறைய அங்கே கடற்கரேயில் இருந்து ஒரு ஜோடி உட்கார்ந்து தூரத்து சூரியனை ஒருத்தர் மேலே ஒருத்தர் சாய்ஞ்சிட்டு இரசிக்கிறது போல வரைஞ்சி இருந்தா. அவளோட கலர்ஸ் சூசிங் செம்மைய இருந்தது.


அவங்களுக்கு நிழல் குடுக்குறது போல இருந்த தென்னை மரம், காத்துக்கு ஆடுற அவளோட கூந்தல் அந்த பையனோட முடி, நான் உன்னை விட்டு போக மாட்டேன்னு சொல்றது போல இருந்த அவனோட அணைப்பு. அவங்களை தொட்டு பார்க்க ஆசைபடுறது போல ஒன்னுக்கு முன்னாடி ஒன்னு வரனும்னு போட்டி போட்டிருந்த கடல் அலைகள்னு சொல்லிட்டே போலாம்...


அவளோ அழகா இருந்தது. அத்தனை உயிர்ப்பு அந்த டியோயிங்ல. ஆனால் அதுல இருந்த பொண்ணும் பையனும் அந்த பொண்ணோட அண்ணனும், அண்ணியும் தான்னு எனக்கு புரிஞ்சது. அவங்களை அந்த பொண்ணு ரொம்ப மிஸ் பண்றா போல" என்று அவள் முகம் பார்த்தே கூறி முடிக்க, சனா ஆனந்த அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.


ஆம் அவள் வரைந்த அனைத்தையுமே வார்த்தையால் கூறி இருந்தான் சாதவவிக். அதுவும் அங்கே வரைந்த கார்த்திக், அபி இருவரையும் சனா அவர்கள் காதலை நினைத்து பெருமையாக வரைந்தாள்..இதை நிச்சயமாக எவருமே கண்டுபிடித்து இருக்க முடியாது. ஏனெனில் அவள் வரைந்த ஓவியத்தில் அவர்களின் முதுகுப் புறத் தோற்றத்தையே வரைந்து இருந்தாள். அதை சாத்விக் கண்டுபிடிப்பான் என்பதை அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.


"என்ன மெடம் ஸ்டெசியூ ஆ நிற்கிறிங்க?" என்று சீண்ட, சனா அவனைப் பார்த்து புன்னகைத்து, "நான் கையை கழுவிட்டு வரேன் சேர்" என்று கைகளைக் கழுவி வந்தாள்.. "சேர் என் பேர்கை அண்ணா கிட்ட கொடுத்து இருந்தேன். நான் போய் அதை எடுத்துட்டு வரேன்" என்று நகர எத்தணிக்க அவள் கைப்பிடித்து நிறுத்தினான் சாத்விக். அவள் என்ன என்று பார்க்க அவங்க போயிட்டாங்க. உன் பேர்க்கை என் டிரைவர் கிட்ட கொடுத்தாங்க. என் காருல பத்துரமா இருக்கும். வா நீ போலாம்" என்று தன் கூலரை வலது கையால் மாட்டி தன் இடது கையை அவள் வலது கையோடு கோர்த்து கம்பீரமாக நடந்தான்.


அவனோடு சனா சங்கோஜமாக நடந்தாள். இவர்கள் அறியாத ஒன்று இவர்களை மர்மநபரின் பின் தொடர்கிறான் என்று. சனாவை அழைத்துக் கொண்டு சாத்விக் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் செல்லாமல் கடற்கரைக்கு அழைத்துச் சென்றான். அதற்கு முன் ஷொபிங் அழைத்துச் சென்று அவளுக்குத் தேவையான ஆடைகள், நகைகள், காதணிகள், வளையளகள் அனைத்தையுமே அள்ளிக் குவித்தான்.


"இதெல்லாம் இப்மோ எதுக்கு சேர்?" என்று முழுமையாக மறுக்க, "நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா நீ போட போகிற டிரஸ், நகை எல்லாமே என் செலவுல இருக்கனும். கல்யாணத்துக்கு அப்புறமா உன்னை மும்பைக்கு அழைச்சிட்டு வர முடியோ முடியாதோ தெரியாது பேபி. சோ இப்போவே வாங்கலாம் பேபி" என்று அனைத்தையும் வாங்கிக் குவித்தான்.


சனா மறுபடியும் மறுக்க எப்போதும் போல் அதட்டி வாங்க வைத்து அங்கே உள்ள விசேட உணவுகளை வாங்கி உண்ணக் கொடுத்தான். இவர்களின் ஒவ்வொரு செயல்களும் புகைப்படமாக்கப்படுகின்றது என்பதை தெரியாமல் இருந்தது விதியே. அனைத்தையும் முடித்து கடற்கரைக்கு அழைத்துச் சென்றான். உவர்ப்பு கலந்த கடற்கரைக் காற்று இவர்களை தழுவிச் செல்ல அதை சுகமாக அனுபவித்தனர்.


கடல் அலைகளில் இருவருமே கால் நனைக்க வேகமாக வருகைத் தந்த அலையொன்று சனாவை மோதியது. அவள் தடுமாறி விழ முன் சாத்விக் அவளைத் இடையைப் பிடித்து தாங்கினான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க ஒருவர் கண்ணை மற்றவர் ஊடுருவினர். இவர்கள் அறியாமல் இத்தருணம் அழகாக புகைப்படமாக்கப்பட்டது...




 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23088


அத்தியாயம் 19



சனா, சாத்விக் இருவருமே தனி உலகில் இருக்க இன்னொரு கடலலை அவர்களை தன்னிலை அடையச் செய்தது. "இப்போ எதுக்கு சேர் இங்கே எல்லாம் அழைச்சிட்டு வந்திங்க சேர்?" என்றாள் தன் வெட்கத்தை மறைத்து வேறு புறம் திரும்பி. "நாளைக்கு கம்படிஷன் முடிஞ்ச உடனே இங்கிருந்து போயிடுவோம். மத்தவங்க இங்க இருக்கிற இடங்களை சுத்தி பார்த்துட்டு வருவாங்க. உனக்கு அந்த சான்ஸ் இல்லை. அதான் பீச்சுக்கு கூட்டிட்டு வந்தேன்" என்றான்.


"ஆமா சேர் அண்ணா எனக்காக காத்துட்டு இருப்பாங்க. சோ போகனும்" என்றாள் சந்தோஷமாய். "பேபி அந்த டிரோயிங்ல இருந்தது நீ தான்னு நான் எப்படி கண்டு பிடிச்சேன்னு நீ கேட்கவே இல்லையே" என்று புருவமுயர்த்த, "எப்படி?" என்றாள் ஆர்வமாய். ஏனென்றால் அவன் உடனே அந்த ஜோடி அபி, கார்த்திக் தான் என்பதை எவ்வாறு உறுதியாய் கூறினான் என்றதில் ஒரு ஓரம் மனதில் சிறு சந்தேகம் இருந்துக் கொண்டே இருந்தது.


சாத்விக், "உன் அண்ணன் எப்போவுமே வொச் இல்லாமல் வெளியில போக மாட்டான். அதையே நீ அபியை ஹக் பண்ணி இருக்கிறது போல வரையும் போது வரைஞ்சி இருக்க மறக்காமல். அதை வச்சு தான். இன்னொரு ரீசனும் இருக்கு. உனக்கு ஜோடியா தெரியிரது ஒன்னும் உன் அண்ணன். இரண்டாவது நான். கண்டிப்பா நீ எங்களை வரைய மாட்ட. பிகோஸ் நீ இன்னும் மனசால என்னை ஏத்துக்க இல்லை. வித் நோ டவுட் அது உன் அண்ணன் தான்னு கன்ஃபோரம் ஆயிருச்சு" என்றான் தோளை உலுக்கி.


முதலில் கலகலப்பாக ஆரம்பத்து, இறுதியில் தூரத்தில் கடலை வெறித்தே பதில் கூறினான். அவன் முகத்தை பார்த்தே அவன் முகமாற்றங்களைக் கண்டு கொண்டவள் அவன் மனநிலையை மாறும் பொருட்டு, "சேர் நாளைக்கு எத்தனை மணிக்கு நாம இங்கிருந்து போறோம்" என்று வினா தொடுத்தாள். "உன் கம்படிஷன் முடிஞ்சால் ஈவீனிங் போலாம் பேபி. அப்படி போனாலும் வீட்டுக்கு போய் சேரும் போது நாளான்னைக்கு ஈவீனிங் ஆகிரும்" என்றான்.


"அப்படின்னா அண்ணா ஏற்பாடு பண்ணி இருக்கிற பார்டிக்கு போகலாம் இல்லையா? அன்னைக்கு கண்டிப்பா நான் வரனும்னு சொன்னான். உங்களையும் இன்வைட் பண்ணி இருப்பானே சேர். நீங்களும் வருவிங்களா சேர்?" என்று வினவ, "ஆமா இன்வைட் பண்ணி இருக்கான் உன் அண்ணன். நான் மட்டும் வராமல் இருந்தால் நல்லாவும் இருக்காது. ஆனாலும் எனக்கு பெரிய இன்ட்ரஸ்ட் இல்லை" என்றான் விட்டேறியாக.


"அபிக்காக வரலாமே சேர். அவ உங்களை ரொம்ப எதிர்பார்ப்பா" என்று தயக்கமாய் நிறுத்தி அவன் முகம் பார்த்தான். அவனோ புன்னகையுடன் அவளைப் பார்த்து இருந்தான். 'இந்த காட்டுப் பையல் எதுக்கு இப்போ சிரிக்கிறான்?' என்று புரியாமல் குழம்ப, "கண்டிப்பா அபிக்காகவும், உனக்காகவும் வருவேன். ஃபீல் பண்ணாத பேபி" என்று மூக்கை நிமிண்ட, "நான் ஒன்னும் நீங்க வர இல்லைன்னு ஃபீல் பண்ண இல்லை. அபிக்காக சொன்னேன்" என்று உதட்டைச் சுழித்து, தலையை சிலுப்பிக் கொண்டு சற்று நகர்ந்து நின்றாள்.


"பார்ரா என் பேபிக்கு கோபம் எல்லாம் வருது. இது தப்பாச்சே" என்று தாடையைத் தடவி யோசிக்க என்ன செய்யப் போகிறான் என்று பீதியுடன் அவனைப் பார்த்தாள் சனா. அவள் இடையில் கையிட்டு அவனோடு சேர்த்து அணைத்தவன், "நீ கோபப்படும் போது இந்த சின்ன மூக்கு சிவக்குது" என்று அவள் மூக்குத்தியில் இதழ் பதித்தான். "இந்த லிப்சை சுழிக்குற" என்று தனது கைவிரலால் இதழை வருட சனாவிற்கு பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது.


அவள் மூகம் திகிலடைந்து இருப்பதைப் பார்த்தவன் உள்ளுக்குள் சிரித்து அவள் முகம் நோக்கி குனிய, சனா தன் முட்டைக் கண்களை விரித்து அதிர்ந்து அவனையே பார்த்தாள். அவனோ நமட்டுப் புன்னகையுடன் குனிந்து அவள் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். "நம்ம கல்யாணம் முடியுற வரைக்கும் லிப் கிஸ் பண்ண மாட்டேன் பேபி. ஐ புரொமிஸ் யூ" என்று கழுத்தில் இதழ் பதிக்க உடலில் மின்சாரம் தாக்கியது அவளுக்கு.


அவனிடம் இருந்து விலகத் திமிற, "இப்போ தனே ஒன்னும் பண்ண மாட்டேன்னு சொன்னேன். மறுபடியும் இப்படி பண்றியே சனா" எரிச்சலாக அவள் முகம் பார்க்க அவளோ கூம்பிய முகத்துடன், "நாம இருக்கிறது பப்ளிக் பிளேஸ்ல சேர். அதனால தள்ளி நிற்கலாமே" என்றாள் பாவமாய். அவனும் அவள் முகத்தில் என்ன கண்டு கொண்டானோ அவளை விட்டு தள்ளி நின்றான்; மூக்குத்தியில் இதழ் பதித்து பிறகே விலகினான் என்பதில் ஐமில்லை.


அவள் கையோடு தன் கைக் கோர்த்து சிறிது நேரம் நடந்தவன் நேரமாகுவதை உணர்ந்து, அவளை அழைத்துக் கொண்டு ஹோட்டலிற்குச் சென்றான். செல்லும் வழியில் இரவு உணவையும் ஓடர் செய்து அறைக்கு எடுத்து வரும் படி பணித்து இருந்தான். இங்கே நடந்த அனைத்துமே புகைப்படங்களாக்கப்பட்டு உள்ளது என்பதை அறியாத இருவருமே களைப்பில் ஹோட்டலிற்கு சென்றனர்.


கார்த்திக் அதிகாலையில் எழுந்த உடனேயே முகம் கழுவி வெளியே செல்ல தயாராகி கீழே செல்ல விசாலாட்சி நகுலனின் வீட்டிற்குச் செல்ல தயாராகி நின்று இருந்தார். கார்த்திக் காபியை எடுத்துக் கொண்டு, "அத்தை நயாவை இன்னும் காணோம்? அவ எங்க? இன்னும் எந்திரிக்க இல்லையா?" என்று வினவ, "அவ ரெடியாகிட்டு இருக்கா கார்த்திக்" என்று அபியின் காபி கப்பை அருகில் எடுத்து வைக்க அபியும் அறையில் இருந்து வெளியே வந்தாள்.


நீல நிற மென் பட்டுச்சேலை, அதற்கு ஏற்ற சிறிய நகைகள் அணிந்து கூந்தலைத் தளரதளரப் பிண்ணி மல்லிகைச் சூடி, சிறிதளவு ஒப்பனையில் தேவதையென அங்கே வந்தாள். அவளைப் பார்த்த கார்த்திக்கிற்கு அவளை விட்டு கண்களை விலக்கவே முடியவில்லை. கார்த்திக்கின் விழுங்கும் பார்வையில் அவள் உடலும், முகமும் சிவந்து இருந்தது.


விசாலாட்சி அவர்களின் நிலையை உணர்ந்து, "அபி நீ காபி குடிச்சிட்டு வந்தால் போலாம் டா" என்றார். இருவரும் தங்கள் மோனநிலையில் இருந்து வெளியே வந்தவர்கள் உடனடியாக தங்களை சமன்படுத்திக் கொண்டனர். கார்த்திக் மொபைலை எடுத்து வெளியே செல்ல அபி காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள். அனைத்தையும் கழுவி விட்டு விசாலாட்சி, அபி இருவரும் வீட்டை மூடி வெளியே சென்றனர்.


கார்த்திக் தன் வாகனத்தை எடுத்து தயாராகி நிற்க, இருவரும் காரில் ஏறிக் கொண்டனர். மூவரும் அடங்கிய கார் நகுலனின் கிராமத்தை நோக்கிச் சென்றது. ஆறு மணி நேர பயணத்திற்குப் பிறகு அவர்கள் கிராமத்தை அடைந்தனர். பச்சைப் பசேலன பச்சைக் கம்பளத்தைப் விரித்தாற் போன்று இருந்த வயல் வெளிகளும், இடையிடையே இருக்கும் பெரிய மரங்களும் கண்ணைக் கவர்ந்தன.


வீட்டைத் தேடி இவர்கள் செல்ல இடைப்பட்டோரிடம் வழியைக் கேட்க அவர்களும் வழி கூறு பெரிய வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடை கிராமத்து வெள்ளந்திப் பேச்சு மூவருக்குமே இனித்தது. அதிலும் வெவ்வேறு நிற தாவணிகளில் அங்கிருந்த கிராமத்துப் பைங்களிகள் இவ் நகரத்து ஆட்களை ஈர்த்தனர் என்றால் மிகையாகாது. இவ்வாறு ஒரு வழியாக நகுலனின் வீட்டை அடைந்தது கார்த்திக்கின் கார்.


வெளித்தோற்றம் புராண அரசகாலத்து மாளிகையாக தென்பட்டது. பார்ப்பதற்கு அத்தனை குளுமையாக இருந்தது கண்களுக்கு. சுற்றிவர நிழல் தரக் கூடிய மரங்கள்; மூலிகைச் செடிகள்; பலவிதமான பூச்செடிகள்; சிறிய நீர்த்தடாகம்; புல்தரை என்று மனதை கட்டி இழுக்கும் அழகுடன் இருந்தது அவ்வீடு. வாகனத்தை நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு வாகனத்தில் இருந்து இறங்க அவர்களை வரவேற்க மொத்தக் குடும்பமும் அங்கே நின்று இருந்தது.


நகுலனின் தாத்தா, பாட்டி, தாய் தந்தை, சித்தி, சித்தப்பா தம்பிகள், அவர்களின் மனைவிகள், தங்கை என அனைவருமே நின்று இருக்க கைக் கூப்பி வணக்கத்தை தெரிவித்து வந்தனர். நகுலன், "திடீர்னு வந்திருக்க. இன்ஃபோர்ம் பண்ணி இருந்தால் பிரேக் பர்ஸ், லன்ச் ஏற்பாட பண்ண இருந்தது" என்று வருத்தமுற்றான். மித்ரன், "அதுக்கு என்ன அண்ணா இப்போ லன்ச் ரெடி பண்ணிட்டால் போச்சு" என்றான். பாட்டி, "கண்டிப்பா. முதல்ல உள்ள வாங்க எல்லாரும்" என்று அழைத்துச் சென்றனர்.


அனைவரும் அமர மூத்தமருமகள் என்ற அடிப்படையில் அஞ்சலி உள்ளே சென்று வேலை செய்கிறேன் என பால்வா செய்ய அதை அறிந்த நகுலனின் தாய், அவரே சென்று அனைவருக்கும் ஜூஸ் தயாரித்து வந்தார். மூவரும் குடித்து முடிக்க கார்த்திக் கல்யாண பத்திரிகையை கையில் வைத்து பேச ஆரம்பித்தான். "தாத்தா, பாட்டி இன்னும் எனக்கு மூனு நாளில் கல்யாணம் கண்டிப்பா வந்துருங்க. பத்து நாள் முன்னாடி தான் கல்யாணம் பண்ணலாம்னு முடிவுக்கு வந்தோம்.


அதான் அவசரமா முக்கியமானவங்களுக்கு நேர்ல நாங்களே போய் பத்திரிகை வச்சிட்டு வரோம். தப்பா எடுத்துகாதிங்க முனவனாடியே சொல்ல இல்லைன்னு. கண்டிப்பா குடும்பத்தோட வரனும். என்ட் இவங்க என் அத்தை விசாலாட்சி. உங்களுக்கு தெரியும்னு நினைக்குறேன். அவங்க பொண்ணு அபிநயா இவ. இவளை தான் கல்யாணம் பண்ண போறேன்" என்றதும் அபி அவர்களின் காலில் விழ, அவர்களும் பூரிப்புடன் ஆசிர்வதித்தனர்.


நகுலன், கார்த்திக் அவனுடைய திருமணத்தைப் பற்றி பேசும் போது தூரத்தில் இருந்த மனைவியை முறைக்க அவள் மனதில் குளிர் எடுத்தாலும் அதை வெளிக்காட்டாது அவன் பார்வையை அலட்சியப்படுத்தினாள். நகுலனிற்கு மனைவியின் நடவடிக்கையில் கோபம் வந்தாலும் இருக்கும் சூழ்நிலைக் கருதி பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியானான்.


பாட்டி, "உன் பொஞ்சாதி ரொம்ப அழகா இருக்கா" என்று கன்னம் வருட வெட்கத்தில் தலைக் குனிந்துக் கொண்டாள் அபி. அபி, கார்த்திக் இருவரும் சேர்ந்தே அழைப்பிதலை தாத்தா, பாட்டியிடம் அழைப்பிதலை வழங்கி காலில் விழுந்து ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டனர். அவர்களும் ஆசிரவாதம் வழங்கினர் மனதாற. அங்கேயே அனைவரும் அவர்கள் மூவரையும் வற்புறுத்தி பகல் உணவிற்கு இருக்க வைத்தனர்.


தடல்புடலாக உணவு தயாராக, அபி மற்றவர்களுடன் நன்றாகவே பேசி ஒட்டிக் கொண்டனர். நகுலனின் தங்கை, "நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க அக்கா" என்று அவள் அழகைக் கூறி புகழ் பாட, "தேங்கியூ மா" என்று புன்னகைத்தாள். "கார்த்திக் அண்ணாவுக்கு தங்கச்சி இருக்காங்கன்னு சொன்னாங்க. அவங்க வர இல்லையா?" என்று வினவ, "அவ கோலேஜ் சார்பா ஆர்ட் கம்படிஷனுக்கு மும்பை போயிருக்கா. அதான் வர இல்லை" என்றாள்.


"உங்க கல்யாணம் மூனு நாளில் இருக்கே" என்று கவலைப்பட, "கல்யாணத்துக்கு முன்னைய நாள் வந்துருவா" என்றாள். நகுலனின் சித்தி மகனின் மனைவி, "அவங்களை நான் பார்த்ததே இல்லை. போடோ ஏதாவது இருக்கா?" என்று வினவ அபி "ஆமா இருக்கு. இருங்க காட்டுறேன்" என்று தன் மொபைலை எடுத்து அவர்களிடம் சனாவின் புகைப்படத்தைக் காட்டினாள்.


"ரொம்ப அழகா இருக்காங்க" என்று உணர்வு பூர்வமாய் கூற, "ஆமா அவ ரொம்ப அழகு" என்றாள் அபி பெருமையுடன். "அவங்க பேர் என்ன?" என நகுலனின் தங்கை வினவ, "திசன்ஜனா" என்றாள் அபி. "அவங்களைப் போலவே அவங்க பேரும் அழகா இருக்கு" என்றனர். சனாவைப் பற்றி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறினாள். மதியம் உணவை முடித்துக் கொண்டு அனைவரும் கண்டிப்பாக வர வேண்டும் என்ற அன்புக் கட்டளையிட்டு அவர்களிடம் இருந்து விடைப்பெற்று மீண்டும் இன்னும் ஒரு முறை வருகிறோம் என்று விடைப்பெற்றுச் சென்றனர்.


அவர்கள் வீட்டிற்கு வரும் போது அன்று இரவானது. அன்று வெளாயிலேயே இரவு உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவர்கள் சனாவுடன் சிறிது நேரம் பேசிவிட்டு களைப்பின் காரணமாக உறங்கச் சென்றனர். அன்றைய தினம் பயணக் களைப்பிலும், அலுப்பிலுமே இவர்களுக்கு கழிந்தது..


சனா அறைக்கு வந்தவுடன் அலுப்பு தீர குளித்து இரவு உடைக்கு மாறி கட்டிலில் சாய்ந்தவாறு இருக்க சாத்விக் இடைக் கதவை திறக்கும் சத்தம் கேட்க அவசரமாக ஒரு துப்பட்டாவை எடுத்து தன் மேல் போர்த்திக் கொண்டாள். சாத்விக் இரவு உணவை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான். அங்கிருந்த மேசையில் உணவை எடுத்து வைத்தவன், "வா பேபி சாப்பிடலாம். பசிக்குது" என்று அழைக்க சனாவும் அவனுக்கு எதிராக வந்தமர்ந்தாள்.


அவளே சாத்விக்கிற்கும் சேர்த்து பரிமாற, அவன் இன்பமாக அதிர்ந்தான். இத்தனை நாட்களில் அவளாக யோசித்து தனக்காக எதுவும் செய்தது இல்லை. இன்றே முதன் முதலாக இவ்வாறு நடந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தான். சனா தனக்கு சிறியதளவு உணவை எடுத்து உட் கொண்டு அவன் உண்டு முடியும் முன் கைகழுவி வந்திருந்தாள்.


சாத்விக், "நீ சாப்பிட்டது போதாது பேபி" என்று கூற, "இன்னைக்கு ஈவீனிங் சாப்பிட்டதே எனக்கு போதும் சேர். இப்போ உங்க மனசு கஷ்டபட கூடாதுன்னு தான் கொஞ்சமா சாப்பிட்டேன்" என்றாள். அவன் புன்னகைத்து, "ஒகே பேபி. நாளைக்கு ஈவீனிங் ஃபைவ் தேர்டிக்கு டிரைன் இருக்கு. சோ நைட்டே திங்சை பெக் பண்ணிரு. அப்போ தான் கம்படிஷன் முடிஞ்ய உடனே ரூமை வெகெட் பண்ணிறலாம்" என்று கைகழுவச் சென்றான்.


அவன் கைகழுவி வர, "நாளைக்கு கம்படிஷன்ல பைனல்ஸ்ல ஃபர்ஸ்ட் பிரைஸ் எடுக்குறதுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் பேபி. நல்லா டிரோ பண்ணு" என்று எப்போதும் போல் மூக்குத்தியில் இதழ்பதித்து, "குட் நைட் பேபி. ஸ்வீட் டிரீம்ஸ்" என்று புன்னகைத்து தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டான். சனாவும் இன்றைய களைப்பினால் படுத்தவுடன் உறக்கத்தைத் தழுவினாள்.


வான வெளியில் மதி தன்னை ஆதவன் பார்க்காதவாறு மேகத்தினுள் நுழைந்து அங்கிருந்து மறைந்து செல்ல ஆதவனோ தன் மதியைத் தேடி மீண்டும் உலகத்திற்கு வந்தான். அன்றைய காலை வேளையில் சனா தயாராகி வெளியேற சாத்விக்கும் வெளியேறினான். எப்போதும் போல் அவளின் எளிமையான அழகில் தன்னை பறி கொடுத்தவன், அடுத்த நிமிடம் தன்னை சமன்படுத்தி அவளை அழைத்துக் கொண்டு போட்டி நடக்கும் இடத்திற்குச் சென்றான்.


அவள் தன்னுடைய இடத்திற்குச் சென்றவுடன் அவளுடைய கல்லூரியில் இறுதி போட்டிக்கு தெரிவாகியவன் அவளுக்கு வாழ்த்தை தெரிவித்தான். அவளும் வாழ்த்தை தெரிவித்து பதட்டமாக இருந்த தன் மனதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டாள். இன்றைய தினத்தில் இறுதி சுற்றில் வெற்றி பெரும் நபரை சிறந்த ஓவியரான கமலேஷ் தெரிவு செய்வதாக இருந்தார். அத்தோடு சிறப்பு விருந்தினராக எஸ்.பி கலந்துக் கொள்வதாவும் அறிவுப்பு வழங்கப்பட்டது.


சனாவோ அதை எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. அவள் முழு எண்ணமும் இன்று தடுமாறாமல் வரைய வேண்டும் என்பதிலேயே இருந்தது. நேரம் கடக்க இறுதிச் சுற்றில் முதல் சுற்று ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஒரு ஓவியம் அனைவருக்கும் புரொஜெக்டர் மூலமாக காட்டப்பட்டது. அதை நன்றாக கவனிக்க,பதினைந்து நிமிடம் வழங்கப்பட்டதோடு அது முடிவடைந்தவுடன் நேற்றைய தினம் போல் உதவியாளர்கள் அமைக்பபட்டு அவர்கள் மூலம் தங்கள் கண்கள் கட்டப்பட்டன.


அதன் பிறகு தாங்கள் கவனித்தவற்றை ஓவியமாக வரைய வேண்டும். உதவியாளர்கள் ஓவியர்கள் கேட்கும் நிறங்களைத் தூரிகையில் எடுத்து வழங்கி ஓவியர் கூறும் இடத்தில் கையைக் கொண்டு சென்று நிறுத்துவர். என்று கடினமான ஒரு போட்டியாக வழங்கப்பட்டது. அதில் 85% மேல் ஒத்துப் போகும் ஓவியங்களுக்கான ஓவியர்கள் அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்படுவர். அதில் சலுகையாக இறுதி பதினைந்து நிமிடங்கள் கண் கட்டு அவிழ்க்கப்பட்டு ஃபிலிங்சை நிரப்பி இறுதியாக ஓவியத்தை சரி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.


போட்டியாளர்கள் அனைவரும் முதலில் இதைக் கேட்டவுடன் அதிர்ந்து விழித்தனர். சில நிமிடங்கள் கடக்க கடவுள் விட்ட வழி என்று வரைய ஆரம்பித்தனர். சனா தனக்கு தூரிகை வேண்டாம் எனவும் தன் விரல் நிறுத்தும் இடங்களில் கைவிரலில் கூறும் நிறத்தை மாத்திரம் அதில் பூசுமாறு உதவியாளரிடம் கூறி கண்களை வரைய ஆரம்பித்தாள். அவள் கை ஓவியக் காகிதத்தில் இருந்து எடுக்கப்படவே இல்லை.


ஒரு மூலையில் இருந்து சனா வரைய ஆரம்பித்தாள். தன் மனக் கண்ணில் இருந்ததால் அவள் வரையும் அதே மூலையில் இருப்பவற்றில் முக்கியமானதை முதலில் பென்சிலால் வரைய ஆரம்பித்தாள். அதன் பின் மறுபடியும் ஆரம்பித்த மூளையில் இருந்து வரைந்த அனைத்திற்குமே அதன் நடுப்பகுதிகளில் நிறம் கொடுத்தாள். மறுபடியும் ஒரு மூலையில் இருந்து சிறிது சிறிதாக இடைவெளிகளை நிரப்ப இறுதி பதினைந்து நிமடமும் வந்தது.


அதில் அவசரமாக கண்கட்டை அவிழ்த்தவள் மிகுதியாக இருந்த ஃபிலிங்சை நிரப்ப ஆரம்பித்தாள். சரியான நேரத்தில் அனைத்தையும் முடித்த பிறகே அவளால் நிம்மதியாக மூச்சை விட முடியுமாக இருந்தது. மறபடியும் ஒரு முறை பார்தவள் இதழ் கடித்து அனைத்தையுமே நோட்டம் விட தனக்கு திருப்தி இல்லாத இடங்களில் மாத்திரம் சில மாற்றங்களைச் செய்தாள். இவை அனைத்தையுமே மேடையில் இருந்த சாத்விக்கின் கண்கள் இரசித்தது.


அவர்கள் வரைய ஆரம்பித்த பல நிமிடங்களிற்குப் பிறகு சாத்விக்கும், கமலேஷூம் உள் நுழைந்து தங்களுக்கு உரிய இடங்களில் அமர்ந்தனர். ஐம்பதிற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் இருந்த இடத்தில் அவனின் கண்களுக்கு தன்னவள் மாத்திரமே தெரிந்தாள். ஏதோ ஒன்று அவளை நோக்கி ஈர்த்துக் கொண்டு இருந்தது. அவள் வரையும் போது பயன்படுத்தும் யுக்திகள், இதழ்கடித்து யோசித்தல், விரல்கள் காகிதத்தில் நர்த்தனமாடுவது; அவள் தலையசைப்பிற்கேற்ப அவளது ஜிமிக்களும் அசைந்தாடியது அனைத்துமே கவிதையாக இருந்தது.


ஓவியங்கள் சேகரிக்கப்பட்டு இடைவேளை வழங்கப்பட்டது. சனாவோ உண்ணாமல் முடிவுகளுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். அவளைப் பார்த்த சாத்விக் அவள் இன்னும் உண்ணாமல் இருப்பதைப் பார்த்து அவளை உண்ண வைக்க நேரடியாக செல்ல முடியாத நிலையில் இருப்பதை உணர்ந்து அவளை மொபைல் மூலம் அழைக்க அதோ பரிதாபம் அவள் மொபைல் சைலன்டில் வைத்திருந்ததால் சத்தம் கேட்கவில்லை.


அவளைப் பார்த்தவாறே இருந்தவனும் உண்ணவில்லை. இறுதி கட்ட இறுதிச் சுற்றுக்கு முதல் இருபத்து ஐந்து நபர்கள் தெரிவானார்கள். அதில் சனா ஒருவள் என்பதை அறிந்த பின்னே அவளால் நிம்மதியாக மூச்சை விட முடியுமாக இருந்தது. அடுத்த போட்டி ஆரம்பிக்க இருப்பதால் அவசரமாக தண்ணீர் போத்தலில் இருந்த தண்ணீர் முழுவதையும் குடித்து முடித்தவள் தன் மனதை அடுத்த பகுதிக்கு தயாராக்கிக் கொண்டு இருந்தாள்.


அவள் கல்லூரியில் இருந்து இறுதி கட்டச் சுற்றுக்கு சனா மாத்திரமே தெரிவு செய்யப்பட மற்ற இருவரும் பொறாமை கொள்ளாமல் சனாவிற்காக வேண்ட ஆரம்பித்தனர். சாத்விக்கும் சனாவின் கண்களில் தெரிந்த அச்சம், கலக்கத்தையும் உணர்ந்தே இருந்தான். அவள் அழைப்பை ஏற்றால் சிறிதளவு பேச முடியும். அவளோ அதை சைலன்ட்டில் வைத்திருப்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் அவளை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.


இறுதி கட்டச் சுற்றாக ஒரு காகிதத்திள் ஒரே ஓவியம். அதில் இரண்டு விதமான படங்கள் இருக்க வேண்டும். சாதாரணமாக பார்க்கும் போது ஒரு படமும் உற்று நோக்கும் போது இன்னொரு படமும் வரைய வேண்டும் என்றனர். உதாரணத்திற்கு ஒரு படத்தை ஒளிபரப்பிக் காட்டினர். நிச்சயமாக அவை ஓவியர்களின் கற்பனையாக இருக்க வேண்டுமே தவிற வேறு ஒருவரின் ஓவியத்தை வரைய முடியாது என்றும் கூறியிருந்தனர்.


அதனால் வேறு ஒரு அரை மணி நேரம் அவர்கள் சிந்திக்க நேரம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியாளர்களும் யோசிக்க சனாவும் யோசிக்க ஆரம்பித்தாள். சனா அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடி யோசிக்க ஆரம்பிக்க அவள் கண் முன்னே தோன்றியதில் அவள் இதழ்கள் அழகாய் புன்னகையை சிந்தின. அவள் உதடுகளோ 'காட்டுப் பையலே' என்று முணுமுணுத்தன.



 
Status
Not open for further replies.
Top