All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இதயம் போதுமா கதை திரி..

Status
Not open for further replies.

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 24:

77957796







மறுநாள் அந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை ஆதாரமாக கொண்டு ரங்கநாதன், கமலகர் ரெட்டி, ஜாக்கோ,அமித் குமார்,சதீஸ் ஜஸ்வால்,சமித்,டேவிட் ஆகியோரின் மீது வழக்கு பதியப்பட்டது...

அந்த வீடியோவை வெளியிட்ட குற்றத்திற்காக ஜிந்தாவின் மீதும் வழக்கு போடப்பட்டது..சாட்சியாக மாறன், தியா, சேர்க்கப்பட்டனர்,

இன்னும் 3 நாட்களில் ஹியரிங் என நீதிமன்றம் சொல்லவே
ஜிந்தா இந்நேரம் கல்யாணம் நின்று இருக்கும்
, அடங்கி ஓடிங்கி இருப்பாள் இல்லை அவள் குடும்பத்தில் யாராவது இறந்து இருப்பார்கள்,என அவளை விட்டில் பூச்சியாய் நினைத்து ஜிந்தா இருமாந்து போய் இருக்க ,

அந்த வீனஸ் பறவையின் இந்த செயலை அவன் எதிர் பார்க்கவில்லை.. அவளை வேரோடு அழிக்கும் வெறி இருந்தும் இப்பொழுது எது செய்தாலும் அது தனக்கு தானே வைத்துக்கொள்ளும் ஆப்பு என அறிந்தே இருந்தான்...

அப்படி எதும் செய்தால் அவள் கொடுத்திற்கும் கேஸின் தன்மை உறுதி ஆகிவிடும் என அமைதியாக இருந்தான்..

இந்த வன்புணர்வு வழக்கு அக்னி முன் வேலைபார்த்த தொலைக்காட்சியில் முதன்மை பொருளாக விவாதிக்கப்பட்டது,அக்னியின் அந்த புகைப்படம்,வீடியோ எதும் போடப்படாமல் அவளின் சாதரண போட்டோவோடு..

அக்னியின் தொலைக்காட்சி நிறுவனம் நியாயம் கிடைக்க பேசினால் ,மத்த தொலைக்காட்சிகள் trp காக இதே விவாதம் நடந்தப்பட்டது..

அதுவும் அக்னி தமிழ்நாட்டின் விரல்விட்டு எண்ணக்கூடிய தொழிலதிபர், மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தம்பதிகளின் வாரிசு என்பதால் ஒரே நாளில் தமிழ்நாட்டின் ஹாட் டாபிக் ஆனது அக்னியின் கற்பழிப்பு வழக்கு..

தன் மேல் கேஸ் போட பட்டிருக்கிறது என்று தெரிந்த அன்றைய இரவே ஜிந்தா ,சமித்துடன் வெளிநாட்டு வெக்கேசன் செல்ல முடிவெடுத்து ஏர்போர்ட் சென்றான்...

அவர்களை ஏர்போட்டின் வாயிலிலையே மடக்கினார்கள் போலிஸ்,”டேய் என்னையே அரேஸ்ட் பண்ணுரியா உன்னை கொன்னுடுவேன் டா” என ஜிந்தா துப்பாக்கியால் சுடப்போக ,அவனிடம் முன்னமே கிம்பளம் அதிகம் வாங்கிய அந்த போலிஸ் “ சார் உங்க இரண்டு பேரோட சேர்த்து மொத்தம் 8 பேரு மேல ஆட்கொணர்வு மனு போட்டு இருக்காங்க சார்,

அதுல உங்க 2 பேர தவிர 4 பேரு டெத், ஒருத்தர் மிஷ்ஷிங் அப்பறம் ஒருத்தர் கோமாவுல இருக்காரு சார்...இன்னும் 2 நாள்ல உங்க 2 பேரையும் நாங்க கோர்ட்ல ஒப்படைக்கல எங்களை நெட்டு கழட்டிடுவாங்க”

சமித் “ ஆட்கொணர்வு மனு
, என் குடும்பத்துல இல்ல ஜிந்தா குடும்பத்துல உள்ள யாரும் தான கொடுக்க முடியும் “என கேட்க அதற்கு அந்த போலீஷ் “ ஆமா சார்,உங்க மனைவியும், சாரோட தம்பியும் தான் கொடுத்து இருக்காங்க “ என்றார்..

இப்படி தன்னை லாக் செய்து இருக்கும் போது கூட அக்னியின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை ஜிந்தாவால்...

மனு கொடுத்தது போலி டாகுமெண்ட்ஸ்,போலி மனைவி, மற்றும் தம்பி என்பதை நாம் நிரூபிப்பதற்குள் கேஸின் கியரிங் வந்துவிடும்...

பின் அவர்களின் பாஸ்போர்ட்டை சீஸ் செய்து அவர்களை அழைத்துக்கொண்டு சென்றனர்..இன்னும் ஒரு நாளே ஹியரிங் இருக்க அக்னியின் கேஷ் விஸ்வரூபம் எடுத்து அனைவருக்கும் அதிக அழுத்தத்தைக்கொடுத்தது...

நாளை வழக்கு என்று நிலையில் ராமன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்..கல்யாணம் முடிந்து மறுவீடு,சடங்கு ,என எந்த ஒரு நிகழ்வும் துசரும் அக்னியும் அலைந்து கொண்டு இருந்தனர்..

ஆட்கொணர்வு மனுவின் படி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டனர் ஜிந்தா ,மற்றும் சமித். அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த நீதிபதி போலி ஆவணங்கள் கொடுத்து பொய்யாக வழக்கு பதிந்ததால் அக்னியின் மீது அதிகபட்ச அவதாரம் விதிக்கப்பட்டது...

மேலும் சமித் மற்றும் ஜிந்தா தமிழ்நாடே அதிகம் விவாதிக்கும் கேஸின் சஸ்பெக்ட்டுகளாக இருப்பதால் அவர்கள் கேஷ் முடியும் வரை எங்கேயும் போக கூடாது,அதை காவல் துறை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையோடு முடித்தது...

மறுநாள் காலையில் ஹியரிங் என்று இருக்க ஜிந்தா மற்றும், சமித்,சார்பாக ரங்கநாதன்,கமலகர், அமித், ஆகியோரின் மரணம் மற்றும் அமித்தின் கோமா ஜாக்கோ காணாமல் போனது என அனைத்திற்கும் காரணம் அக்னி மற்றும் அவர்களை சார்ந்தவர்கள்தான் காரணம் என்று ஜிந்தாவின் மிரட்டலால் இறந்தவர்களின் குடும்பத்தின் சார்பில் கேஸ் பைல் செய்யப்பட்டது...

கேஸ் ஆரம்பிக்கப்பட்டு அக்னியின் தரப்பில் ஆஜர் ஆன அவர்களின் வக்கீலாள் கேஸின் தன்மையை விளக்கபட்டு அதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டன...

(அந்த நீதிமன்றத்தில் நடந்த உரையாடல் நாடக வடிவில்)

அக்னியின் வக்கீல் : எனது கட்சிகாரரை வன்கொடுமை செய்து ,அதை காணொளியாக எடுத்து சமூக வலைத்தளங்களில் ஏற்றி அவரை மனதளவிலும் ,உடல் அளவிலும் துன்புறுத்தியதால் அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா.

{அதற்கான ஆதரங்களை கொடுத்து }

ஜிந்தாதவின் வக்கீல் : நீதிபதி அவர்களே என கட்சிகாரர் மீது பொய் வழக்கு போட்ட திருமதி அக்னிதுசரை சில கேள்விகள் கேட்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...

நீதிபதி: கிரான்டெட்...

துசர் அக்னியின் கையை அழுத்திப்பிடித்து அனுப்பினான்...அவளும் தைரியமாக வந்து விசாரணை கூண்டில் நிற்க,எதிர்புறமாக ஜிந்தாவும் ,சமித்தும் நின்றனர்..

ஜி.வக்கீல் : அக்னி உங்களை எப்பொழுது எனது கட்சிக்காரர்கள் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளீர்கள்..

அக்னி : இரண்டு வருடத்திற்கு முன்பு மார்ச் மாதம்...

ஜி.வக்கீல் : இரண்டு வருடம் கழிச்சு இப்ப கேஸ் கொடுத்தத்துக்கு காரணம்...

அக்னி : அப்ப எனக்கு போதிய ஆதரம் இல்லை,ரொம்ப மனசு உடைஞ்சி போய் இருந்தேன் அதனால கொடுக்கல...

ஜி.வக்கீல் : அன்னைக்கு என்ன நடந்ததுன்னு கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா

அக்னி
:அன்று இரவு 10 மணிக்கு நான் வேலை முடிச்சிட்டு போகும் போது ஒரு பெண்ணை டேவிட்டும் அவனின் ஆளுங்களும் கடத்த போகும் போது, அதை தடுத்து காப்பாத்த முயற்சி பண்ணும் போது என்னை கடத்திட்டாங்க.....

ஜி.வக்கீல் : அந்த பெண் யாருன்னு தெரியுமா...

அக்னி : (ஒரு நிமிடம் தயங்கிய பின் ) தெரியாது ..

ஜி.வக்கீல் : அப்ப யாருனே தெரியாத ஒரு பெண்ணுக்காக அந்த இரவு நேரத்துல நீங்க உதவி செஞ்சீங்க...

நம்பிட்டேன்.சரி ..மேலே சொல்லுங்க...

அக்னி : நான் அப்பறம் மயக்கம் ஆயிட்டேன் ஒரு வீட்டுக்கு என்னை தூக்கிட்டு போய் அவங்க எல்லோரும் என்னை பலாத்காரம் செஞ்சாங்க......

ஜி.வக்கீல் : நீங்க கம்பிளைன்ட் கொடுத்த 7 பேரில 3 பேர் உயிரோட இல்லை, ஒருத்தர் காணாம போயிட்டார், ஒருத்தர் கோமாவுல இருக்கார் உங்களுக்கு தெரியுமா..

அக்னி : தெரியாது..

ஜி.வக்கீல் : அதுல அவர்களின் குடும்பத்தார் நீங்கதான் அவங்க நிலைமைக்கு காரணம்னு கேஷ் போட்டுருக்காங்க அது தெரியுமா..

அக்னி : தெரியும்,காலையில கேள்விபட்டேன்...

ஜி.வக்கீல் : அதுக்கும் உங்களுக்கும் எதும் சம்மந்தம் இருக்கா..

அக்னி : என்னை வன்புணர்வு செய்தவர்களில் அவர்களும் ஒருவர் அதை தவிர வேறு ஏதும் இல்லை..

ஜி.வக்கீல் : ( கோணல் சிரிப்புடன்)அவங்க எல்லோரும் கெடுத்ததா சொல்றீங்க....அது எப்படின்னு கொஞ்சம் சொல்றீங்களா...( அக்னி அவனை முறைத்து பார்க்க ) இல்லை வாயால யார் வேணுநாளும் என்ன வேணுநாளும் சொல்லலாம் ,நீங்க விவரிக்கும் போது அது பொய்யா உண்மையானு கண்டுபிடிச்சிடலாம்..அதான்..


இது ஒரு கேவலமான புத்தி அதிக பட்ச பலாத்கார வழக்குகள் திசைதிருப்ப படும் ஒரே இடம்...

சில பெண்கள் சொல்ல அசிங்கப்பட்டு கேஸை திருப்பி வாங்கி விடுவார்கள்...இல்லை சொல்வதற்கு சங்கடப்பட்டு தெளிவில்லாமல் சொல்வார்கள்..

அதில் ஏதேனும் ஒரு பாயின்டை பிடித்து கேஸின் போக்கை மாற்றிவிடுவார்கள்..

துசரின் குடும்பம் அக்னியின் குடும்பம் என அனைவரும் அங்கு கோபத்தாலும் இயலாமையாலும் நிற்க ,துசர் பல்லை கடித்துகொண்டு அமைதியாக நின்றான்..

அக்னி அக்னி தனக்கு முன் உள்ள கம்பியை பிடித்தபடி பிசறு இல்லாமல்) சமித் முதலில் என் முகத்தை நோக்கி குனிந்தான், அப்பொழுது என் கைகள் கட்டப்பட்டு இருந்ததால் அவனோட காதை கடிச்சிட்டேன் அதற்கான
ஆதரம் அவனின் காதில் உள்ள தழும்பு
, ஒருவன் என் ......... நசுகினான் ,ஒருவன் என்......காயப்படுத்தினான்,

இன்னொருவன் என் கையை கடித்தான் அதற்கான தழும்பு இது ( என தனது வலது கையை காட்டினாள், பின் அன்று நடந்தது ஒன்று விடாமல் எந்த இடத்தையும்,எந்த வார்தையும் மாற்றாமல் அத்தனையும் கூறினாள், நீதிபதி என அனைவரும் தர்மசங்கடபடும்படி..)

ஜி.வக்கீல்: நீதிபதி அவர்களே இந்த பெண் சொன்னது அத்தனையும் உண்மை சிலவற்றை தவிர ,அதாவது இந்த பெண் ஒரு பெண்ணை ,காப்பாற்றியது கடத்தப்பட்டது என்பதெல்லாம் பொய்,, யார் என்றே தெரியாத பெண்ணிற்கு இந்த காலத்தில் உதவி செய்தது அதுவும் இவ்வளவு பெரிய உதவி என்பது நம்பக்கூடியாதக இல்லை என்பது தாங்கள் அறிந்ததே...

மேலும் தன் ஆபாச புகைப்படத்தையும் ,வீடியோவையும் ,கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இத்தனை பேர் பார்க்க கொடுப்பதும், இத்தனை பேர் கேட்கும் படி இந்தப்பெண் அன்று நடந்ததாக காது கூச கூறும்போதே இந்த பெண்ணின் லட்சனம் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என நினைக்குறேன்..

அக்னி அமைதியாக நிற்க, துசர் கோபமாக உள்ளே வர வந்தவன் அக்னியின் பார்வையில் அமைதியாக நிற்க, மற்றவர் யாவரும் உள்ளே நிற்க முடியாமல் அழுதுகொண்டே வெளியில் சென்றுவிட்டனர்...

அக்னியின் வக்கீல் : இது கேஸிற்கு தேவை இல்லாத விவாதம்

ஜி
.வக்கீல் : எல்லாம் தேவையானது தான்,இப்படி கூச்சம் இல்லாமல் சொல்லும் இந்த பெண் குடும்ப பெண்ணாக எப்படி இருக்க முடியும்,இவள் ஒரு விபச்சாரி, அன்று எனது கட்சிக்காரர்களோடு இருந்தது உண்மை,ஆனால் அது அந்த பெண்ணின் முழு விருப்பத்தோடு..
அதற்கான பணம் இந்த பெண்ணின் பெயரில் டெபாசிட் செய்தற்கான ஆதராம் இதோ,மேலும் இந்த பெண் நிறைய பேருடன் முறை தவறி இருந்தற்கான சாட்சிகள் என்னிடம் இருக்கின்றன தேவை பட்டால் அழைக்கிறேன்...

என்னதான் இந்த பெண் பணக்கார வீட்டு பெண் என்றாலும்,பேண்டசி, மற்றும் எல்லாவற்றியும் சீக்கிரம் அறிந்து கொள்ளவேண்டும் என்ற இளமையின் வேகம்,மேலைநாட்டு கலாச்சாரம் என எல்லாம் இவளை மாற்ற அவளின்
வீட்டிற்கே தெரியாமல் இப்படி இருந்து இருக்கிறாள்
..

அந்த வீடியோ கூட இந்த பெண்ணின் விருப்பதோடுதான் எங்கேயாவது எடுக்கப்பட்டு இருக்கும்..

எனது கட்சிக்காரர்களின் வளர்ச்சி பிடிக்காமல் அவர்களின் எதிரிகள் இவர்களில் சிலரை கொன்றதோடு மட்டும் அல்லாமல் இந்த பெண்ணை பயன்படுத்தி அவர்களின் புகழை சரிய செய்ய பார்க்கிறார்கள்.

எனது கட்சிகாரர்களின் கொலைக்கும் இந்த பெண்ணுக்கும் உள்ள சம்மந்தத்தை கண்டுபிடித்து எனது தரப்பினரை விடுதலை செய்து இவர்களை தண்டிக்க வேண்டும்..என கேட்டுக்கொள்கிறேன்

நீதிபதி
: வெறும் அக்னி மட்டுமிருக்கும் அந்த புகைப்படம் ,காணொளியை வைத்து எந்த தீர்ப்பும் சொல்ல முடியாது, அதே போல இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்பதற்கும் போதிய சாட்சிகள் இல்லை, விலைமாது ,சாதரண பெண் யாரை விருப்பம் இல்லாமல் பலவந்த படுத்தினாலும் குற்றமே...

எனவே இருபுறமும் தகுந்த ஆதரங்களை சேர்க்கும்படி கூறி வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கிறேன்..

மேலும் குற்றம் சுமத்த பட்டிருக்கும் இருவரையும் காவலில் வைத்து விசாரிக்கும் படியும்,இறந்தவர்களின் மரணத்திற்கான காரணத்தை ஆய்வு செய்யும் படி காவல் துறைக்கு ஆணை இடுகிறேன்...

துசர் ஓடிவந்து அக்னியை தோளோடு அணைத்துக்கொள்ள கலங்கிய கண்களை உள் இழுத்த படி அவனோடு ஒட்டிய படி நடந்தாள்.

இன்னும் ஒருவாரம் டைம் இருக்கு என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்று ஜிந்தா மிதப்பாக நினைத்து கொண்டு இருக்க..

மறுவாரம் வந்த ஹியர்ங்கிலும் கேஸ் கொஞ்சம் வலுவிழக்க ,கேஸின் நிலை இழுபறி ஆகி 3 மாதமாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது..

அடுத்து வரும் ஹியரிங்கில் கண்டிப்பாக சாதகமான தீர்ப்பு வர அக்னி தரப்பினர் ஆதரங்களை முடிந்த அளவு திரட்டினர்...அக்னியை தூங்க வைத்துவிட்டு துசர்தான் முழு மூச்சாக அதில் ஈடுபட்டான்..அப்பொழுது அந்த அக்னியின் வீடியோவில் ஒரு விஷயம் கண்டுபிடிக்கபட்டது...


இன்னும் ஆராய மாறனின் உதவியுடன் இரண்டு வருடத்திற்கு முன்னே அக்னி கடத்தப்பட்ட அன்று அந்த ரோட்டில் உள்ள cctv கேமராவை ஆராய்ந்தபோது அக்னி அவர்களிடம் மாட்டிய புட்டேஜ் இருந்தது..

தியா அக்னிக்கு ஆதரவாக சாட்சி சொல்வதாக சொல்லி தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு கேட்டு துசரிடம் வர..இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது துசருக்கு ...


போதுமா...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 25 :

7836
7835

அடுத்த ஹியரிங் நாளை என்று இருக்க, காலை 8 மணிக்கே துசர் குடும்பம்,அக்னிகுடும்பம் என ஒவ்வொருவராககடத்தப்பட்டனர்..

இன்னும் அரைமணிநேரத்தில் கோர்ட்டில் ரீச் ஆக இருக்க ,அக்னியின் போனிற்குபோன் வந்தது ஜிந்தாவின் ஆளிடமிருந்து...

ஒழுங்கா உன்னிடம் இருக்குற ப்ரூபெல்லாம் கொடுத்துட்டு, நான் யாராவது சொல்லித்தான் பொய் கம்பிளைன்ட் கொடுத்தேன்னு கோர்ட்ல சொல்லிட்டு வர..., இல்லை உன் குடும்பத்துல,உன் புருஷன் குடும்பத்துல உள்ள ஒருத்தவங்க கூட உயிரோட இருக்கமாட்டாங்க “என்று சொன்னவன் போனை கட் செய்ய போனைபேசிக்கொண்டிருந்த அக்னியின் கண்கள் கறித்தது....

ஜிந்தாவின் பாதுகாப்பில் இருந்தாலும் சமித்தை கொஞ்சம் காத்திருந்து சரியான நேரத்தில் கொலை செய்து இருக்கலாம்தான்...

ஆனால் அவள் சிறிது நாட்களாகயோசித்துக்கொண்டிருந்தது இவர்களைஅழித்துவிட்டால் இந்த கொடுமை ஒழியபோவது இல்லை எப்படியாவது சமித்தின் தண்டனையாவது உலகறிய வேண்டும் அவனின் தண்டனையை பார்த்து இனி அதுபோல் தப்பு செய்பவர்கள்பயப்படவேண்டும் என யோசித்து கொண்டு இருந்தவள் சரியான ஆதராம் இல்லாமல் எதுவும் செய்யாமல் இருந்தாள்...

அவளின் வீடியோ மற்றும் புகைப்படத்தைபார்த்து அன்று துசரிடம் அழுகும்போதுதான் அவளுக்கு இந்த யோசனை வந்தது இவ்வளவு அழகான வாழ்க்கை துணையிருக்கும் போது எதையும் சாதிக்கலாம் என்றுதான் இந்த முடிவெடுத்தாள்..

ஆனால் கோர்ட்டில் வீடியோவை சரியானஆதரமாக ஏற்றுக்கொள்ளவில்லைஎன்பதால் கொஞ்சம் மனசு உடைந்தாள்...

ஆனால் நேற்று இரவிலிருந்து துசர் கண்டிப்பாக கேஸ் நம்ம பக்கம் ஜெயிக்கும் என சொல்ல ,எப்படி என்று அவள் கேட்கும் கேள்விக்கும் மட்டும் அவனிடம் பதில் இல்லை.

ஆனால் துசரின் பார்வை அக்னியின் மீது பரவுவதில் நேற்று இரவிலிருந்து சிறிது வேறுபாடு இருக்கிறது...எப்பொழுதும் காதலாய், ரசனையாய்,பெருமையாய் பார்க்கும் துசரின் விழிகளில் பிரதிபலிக்கும் உணர்வை அக்னியால் இனம் கண்டு கொள்ள முடியவில்லை...

துசர் மட்டும் இல்லை அவன் குடும்பத்தில் உள்ளவர்களும் அப்படித்தான் பார்க்கிறார்கள் ஆனால் இந்த கேஸ் டென்ஷனில் துசரின் மாறுபாட்டை தவிர மற்றவரின் மாறுதல் அவளை பாதிக்கவில்லை..

எதுவாக இருந்தாலும் ஹியரிங் முடிந்ததும் கேட்கலாம் என்று நினைத்துகொண்டிருக்க இப்படி ஒரு போன் காலை அவள் எதிர்பார்க்கவில்லை...

தன்னை சார்ந்தவர்கள் அல்லது தான் என இருக்கும் போது அவள் எதையும் துணிந்து முடிவெடுத்துவிடுவாள் ஆனால் துசர்,துசரின் குடும்பத்தில் உள்ளவர்களின் உயிர் எனும் போது அவளுக்கு என்னசெய்வது என்று தெரியவில்லை...

காதில் உள்ள போன் கட் ஆன போனை கூட எடுக்காமல் எதையோ யோசித்து கொண்டிருக்கும் அக்னியை கையைதொட்டு நிகழ்காலத்திற்கு அழைத்துவந்தவன் “ என்ன டா”என கேட்க..

துசர் நம்ம 2 குடும்பத்தையும் ஜிந்தாவோட ஆளுங்க கடத்திட்டாங்க...அவங்க சொல்றபடி கேட்டாதான் உயிரோட விடுவாங்கலாம் “என முடிக்க

துசரின் கைகளில் கார் சடாரென்று பிரேக்போட்டு நின்று அதிர்ந்த முகத்தோடு அக்னியை பார்த்தது..

அவனின் அதிர்ந்தமுகத்தை பார்த்த அக்னி “ துசர் நான் வேணுன்னா அவங்க சொன்னபடி கோர்ட்ல சொல்லிடுறேன்,நம்ம குடும்பத்துக்கு ஒன்னும் ஆகாது ,நீங்க கவலை படாதீங்க” என அவனை சமாதானபடுத்த...

அக்னியை பார்த்த துசருக்கு பாவமாகபோய்விட்டது ...இந்த நாளுக்காக தான் எவ்வளவு போராட்டம் ...

கேஸும் மூன்று மாதமாக நடந்துகொண்டு இருக்கிறது வக்கீலும் ஒவ்வொரு நாளும் அவளை கேட்க கூடாத கேள்வியை கேட்டு கொண்டிருக்க மரத்துபோன மனதுடன் அக்னியும் சொன்னதையே சொல்லி கொண்டுஇருக்கிறாள்..

ஆனால் கேஸின் நிலை நாளுக்கு நாள்மோசமாக்தான் போய் கொண்டிருக்க, இதோ கடந்த ஒருவாரமாகத்தான் கேஸின் போக்கு கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது...

அதாவது அக்னி முன் வேலை பார்த்த தொலைகாட்சியின் தொடர்விழிப்புணர்வால் அக்னி கேஸ் கொடுத்த அதே 6 பேரின் மீதும் சென்னையில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட கேஸ்கள் பதிவாகியிருக்கிறது..

இருந்தும் அத்தனை கேஸிற்கும் ஆதராம் இல்லை ,அக்னியின் கேஸின் ஆதராம் கிடைக்கும் பட்சம் அந்த கேஸ்களும் உயிர்பெரும்...

எல்லாம் ஓரளவு சரியாக ஒரு புள்ளிக்குவர எல்லாவற்றிற்கும் மேலாக நேற்று அவள் தங்கை தர்ஷிகா சொன்ன விஷயம் அவனையும் அவனின் குடும்பத்தையும் விவரிக்க முடியாத ஒரு உணர்வில் சிக்கு தவித்தது....

ஆக என் செல்லாம்மாவின் இத்தனைபோராட்டங்களுக்கும் அடித்தளம் என் மேல் உள்ள காதல்தானா...

என் தங்கையை காப்பாற்ற போய்தான் என்னவள் இப்படி மாட்டிக்கொண்டதா...?

கண்ணீர் விட்டு கதறி தலையில் அடித்துக்கொண்டு அழுதான் தான் ஆண்பிள்ளை என்பதையும் மறந்து....

அக்னி உள்ளே உறங்கி கொண்டுஇருப்பதால் அவளுக்கு தெரியவில்லை..தர்ஷிகா சொன்னஅடுத்த நொடி அவளின் கன்னத்தில்துசரின் 5 விரல்களும் பதிந்தது ,இதை ஏன் இத்தனை நாட்களாகசொல்லவில்லை என்று...



துசரின் வீட்டினரும் தர்ஷிகாவை நன்றாக திட்ட செய்தனர்..ஏற்கனவே அக்னியின் தைரியத்தை பார்த்து பெருமைபட்டுக்கொண்டு இருந்தவர்கள்...இந்த விஷயம் தெரிந்தும் அன்பு,மரியாதை,நன்றி கடன் என அனைத்து உணர்வுகளும் அதிகமாகி போனது அவர்களுக்கு...

இவ்வளவு பெரிய விஷயம் செய்து அதை ஒருமுறை கூட வெளி காட்டிக்கொண்டது இல்லை எனும் போது அவள் மேலான வியப்பு நிமிடத்திற்கு நிமிடம்அதிகமானது...

தர்ஷிகாவின் சாட்சி, தியாவின் சாட்சி,ரோட்டில் அக்னியை கடத்திய பதிவு,இன்னும் அன்று அக்னியை வீடியோ எடுக்கும் போது அவர்களுக்கு நேர் எதிரில்உள்ள கண்ணாடியில் அவர்கள் 6 பேரின்பிம்பம் தெரிவது , அந்த 20 பேரின் வழக்குபதிவு, எல்லாவற்றுக்கும் மேலாக டேவிட்டின் மெம்மரி கார்ட் என அனைத்தும் சாதகமாக இருக்க

இப்பொழுது இப்படி குடும்பதார்கள் கடத்தப்பட்டுவிட்டார்கள். எனும் போது என்ன செய்ய..எப்பொழுதும் தன்னால்...,தன் காதலால் மட்டுமே அக்னி தோற்றுபோகிறாள் என நினைக்கும்போது துசருக்கு வேதனையாகஇருந்தது.ஏன் தன்மேல் இப்படி ஒரு காதல்கொண்டாள் என்று...

ஆனால் இம்முறை அவனின் தர்பூசை தோற்கவிடமாட்டான்...தன் உயிரைகொடுத்தாவது அவளை வெற்றி பெறசெய்து காப்பாற்றுவான்...

ஒரு பெருமூச்சியை விட்டு தன்னை சமன்படுத்தியவன் அக்னியின் கையை ஆறுதலாக பிடித்து “ இல்லை பாப்பா நாமகோர்ட்க்கு போறோம்” என காரை மின்னல் வேகத்தில் செலுத்தினான்...

அக்னியின் மறுப்புகளை புறம் தள்ளி...நியாயம்ன்னு ஒண்ணு இருந்தா இன்னைக்கு தீர்ப்பு சாதகமாக வரும்...கடவுள்ன்னு ஒருத்தன் இருந்தா எங்க குடும்பத்திற்கு எதுவும் ஆகாது என விதியின் மீது பழியை போட்டுவிட்டுசென்றான்....

அந்த கடவுளும் போதும் சித்து விளையாட்டு என்று நினைத்தவன்அவர்களின் மீது தன் கருணை கண்களை செலுத்தினான்...

அக்னியையும் துசரையும் முன்னேஅனுப்பிய குட்டி கோர்ட்டுக்கு ஷாம்னியை அழைத்து செல்லலாம் என்று அவளின் வீடு இருக்கும் அபார்ட்மெண்ட் நோக்கிசென்றான்...

ஆனால் அதற்குள்ளாகவே அக்னியின் குடும்பத்தையும்,துசரின் குடும்பத்தையும் கடத்தி குட்டியை துப்பாக்கி முனையில் வளைத்துவிட்டனர் ஜிந்தாவின் ஆட்கள்..

பின் அவனிடம் உள்ள செல்போனை பறித்து கொண்டனர்...

குட்டியை ஏற்றிக்கொண்டு காரில் சென்றுகொண்டு இருக்கும்போது அவனில் ஒருவன் யாருக்கோ கால் செய்து இரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் கடத்திவிட்டோம் என்று கூற குட்டிக்கு பக்கென்று ஆகிவிட்டது...

என்ன செய்வது ஏது செய்வது என்று யோசித்தவனின் கண்களில் அவனின் கைகளில் உள்ள அவனின் அப்பா பரிசளித்த வாட்ச் பட்டது...

அது ஹை டேக்னாலஜி உள்ள வாட்ச்..கால்செய்வது, gbrs, நெட், 10gb இன்டெர்னல் மெம்மரி என அனைத்து வசதிகளையும் உள்ள நவீன கை கடிகாரம்...

அவர்களின் கருத்தை கவராத வண்ணம் மாறனுக்கு அவனின் gbrs மூலம் லொக்கேசனை சேர் செய்து, பின்அவனுக்கு போன் செய்தவன் மாறன்போனை எடுத்ததும் இங்கே இந்தரௌடிகளிடம் “ நீங்க எல்லாம்ஜிந்தாவோட ஆளுங்கதான ,எங்க 2 குடும்பத்தையும் கடத்தி இன்னைக்கு கேஸை உங்க பக்கம் திருப்பதானஇதெல்லாம் பண்றீங்க எங்க உயிரே போனாலும் இன்னைக்கு உங்களுக்கு சாதகமாக எதும் நடக்காது “ என கூற...

அவனின் கத்தலில் கடுப்பாகிய அவர்களில் ஒருவன் துப்பாக்கியைஎடுத்து அவன் நெற்றி பொட்டில் வைத்து “ஷ்ஷ்...” என்க..

சொல்லவேண்டிய விஷயத்தை சொல்லிமுடித்ததால் அமைதியானன்...

அடிப்பதற்கும், கொலை செய்வதற்கு மட்டுமே பழக்கப்பட்ட அந்த ரோபோக்களுக்கு அவனின் வாட்சைபற்றி தெரியவில்லை

குட்டி கூறியதன் மூலம் விஷயத்தைஅறிந்த மாறன் துரிதமாக செயல்பட்டுபோலீஸ் படையுடன் அவர்கள் இருக்கும் இடம் நோக்கி சென்றான்...

அதேநேரம் இங்கு அக்னியின் வக்கீல்துசர் சேமித்த ஆதாரங்களை ஒவ்வொன்றாக நிரூபித்துகொண்டிருந்தார்..

தியாவின் சாட்சி, அவளின் அப்பா மட்டும் செய்த இருப்பார் என்ற கோணத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது...அக்னியை கடத்திய வீடியோ கூட டேவிட்டோடு முடிய,

அந்த 20 வது கேசுகளும் சாட்சி இல்லாமல்ஊசாலிடிக்கொண்டிருக்க அக்னி,அக்னியின் அந்த ஆபாச வீடியோவில்உள்ள அவர்கள் 6 பேரின் புகைப்படம் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டது,

மேலும் டேவிட்டை கொன்ற போதுஅவனிடம் இருந்து கைப்பற்றிய போனில்உள்ள மெம்மரி கார்ட் மிக முக்கிய சாட்சியாக கருதப்பட்டது...

அது டேவிட் அவர்கள் 5 பேருக்கும் தெரியாமல் அவர்கள் மற்ற பெண்களுடன் தவறாக இருக்கும் போது,அவர்கள் வன்புணர்வு செய்யும் போதும் எடுக்கப்பட்டது அவர்களிடம் எப்போதாவது பணம் புடுங்க...

அதில் நிறைய காணொளிகளில்அவர்கள் 5 பேரின் முகமும் நன்றாக தெரிய குற்றம் உறுதி செய்யப்பட்டது...

ஜிந்தாவும்,சமித்தும் இவ்வளவு ஆதாரங்களை எதிர்பார்க்கவில்லை.இருந்தும் அக்னியின் குடும்பம் தன் வசம் இருப்பதால் அக்னி கண்டிப்பாக வந்து“இது பொய் தகவல்கள் அனைத்தும் ஜோடிக்கபட்டது “என கூறுவாள் என்று மமதையுடன் அமர்ந்து இருக்க ...

அது நடந்த பாடாக இல்லை, அங்கே அமர்ந்து இருக்கும் அக்னியும் துசரின் பிடியில் இருந்து திமிறி கொண்ட ஜிந்தாநினைத்தது போல சொல்ல முயற்சி செய்ய துசர் அதற்கு அனுமதிக்கவில்லை...

அம்மு இத்தனை நாளா நீ சொன்னத நான் கேட்டேன்ல இன்னைக்கு நான்சொல்றத நீ கேளு” என்றவன் கேசின் போக்கை கவனிக்க ஆரம்பித்துவிட்டான்...

அக்னியின் இறஞ்சும் பார்வையில் “பாப்பா ப்ளீஸ் இப்படி பார்க்காத ,என் அக்னி எப்பொழுதும் நெருப்பு மாறித்தான் இருக்கணும் “ என்றான்..

அக்னிக்கு அவன் என்ன சொன்னாலும் மனசு சமன்படவில்லை..அவனின் கைகளிலிருந்தும் விடுபட முடியாமல் அமர்ந்து இருந்தாள்...

எல்லாவற்றையும் ஆராய்ந்த நீதிபதிகுற்றம் நிரூபிக்க படவே பெண்களைகொடூரமாக கற்பழித்தகுற்றத்திற்காக,அதில் உள்ள மற்றவர்கள்யாரும் உயிருடன் இல்லாததாலும் மேலும் ஒருவர் கோமாவில் இருப்பதாலும் சமித்திற்கு மட்டும் மரண தண்டனை வழங்க சட்டத்தில் இல்லாததால் மேல்முறையீடு இன்றி சாகும் வரை சிறைதண்டனை எனவும் ,

அக்னியின் வீடியோவை வெளியிட்ட குற்றத்துக்காகவும் ஜிந்தாவிற்கு மேல்முறையீடு இன்றி 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது...

மேலும் இதை போன்ற ஈன செயல்ளை செய்வோருக்கு உடன் தூக்கிலிடும் தண்டனை வழங்குவதற்கு சட்டம் அமைக்கும் படியும்

மேலும் தன்னை வன்புணர்வு செய்வதில் இருந்து காப்பாற்றிக்கொள்ள தற்காப்பு முயற்சி செய்யும் போது அச்செயல் எதிரில் உள்ளவர்களை மரணிக்க செய்தாலும் அது குறைந்த பட்ச தண்டனையாக கருத சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்ட வல்லுனர்களுக்கு பரிந்துரை செய்கிறேன் என்றும்

அக்னியின் மேல் சுமத்தப்பட்ட கொலை வழக்குகள் போதிய ஆதராம் இல்லாமல் தள்ளுபடி செய்வதாகவும்அந்த தீர்ப்பு முடிந்தது...

எத்தனை எத்தனையோ கொலைகொள்ளைகளை அசால்ட்டாக செய்த தன்னை கேவலம் ஒரு விடியோவிற்காக சிறைத்தண்டனை அனுபவிக்க வைத்துவிட்டாளே என்று கோபம் மேலோங்க போலீஸும் கைகளில் திமிறியபடி “இன்னும் கொஞ்ச நேரத்துல உன் குடும்பமே ஒண்ணுமே இல்லாமல்போக போகுது டி” என கர்ஜிக்க..

மனதில் கொஞ்சம் திடுக்கிட்டாலும் அக்னி அவனை அலட்சியமாக பார்த்தாள்..

அப்பொழுது அக்னி,துசர் இருவரின் குடும்பமும் கோர்ட்டின் உள்ளே வர ஜிந்தாவிற்கு அதிர்ச்சி என்றால்,அக்னிக்கும் துசருக்கும் ஆனந்தம்...

மாறன் குட்டி சொன்னதை வைத்து jbrsமூலம் அவனை பின்பற்றி அவனின் குடும்பத்தை மீட்டினான்..

அவர்களை முறைத்து கொண்டேகண்களில் கொலை வெறியை தாங்கி கொண்டு போலீஸும் இழுப்பிற்குசென்றனர் ஜிந்தா மற்றும் சமித்..

அவனின் கோபம் என்றாவது தன்னை நோக்கி திரும்பும் என்று தெரிந்தாலும் அக்னி அதை அலட்சியமாக புறம்தள்ளினாள்....



போதுமா.....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 26 :

802480258026


j8027

எல்லா பிரச்சனையும் முடிந்து இன்றுதான் வீட்டிற்கு வருவதால் ஆளம் சுற்றி வரவேற்கலாம் என்று அக்னியையும் ,துசரையும் வெளியே நிற்க வைத்து எல்லாரும் உள்ளே சென்றனர்..

கட்டிய மஞ்சள் கயிறுதான் அதை பிரித்து கோர்க்கும சூழ்நிலையும் ,நிம்மதியும் இல்லாததால் மூன்று மாதம் ஆகியும் அதை மாற்றவில்லை...

அந்த தாலியின் பொலிவும்,இப்பொழுது தான் கட்டியது போல இருக்கும் அதன் நிறமும் சொல்லாமல் சொன்னது அந்த தாலியை கட்டியவன் மீது அவள் கொண்டிருக்கும் காதலை....

தாலி அன்றி வேறு நகைகள் எதும் இன்று துசரின் கையை கோர்த்துக்கொண்டு நிறைவாக நின்றாள் அக்னி...உள்ளே இருந்து வந்த விசாலாட்சி இருவருக்கும் ஆலத்தி சுற்றி உள்ளே வரவேற்றாள்...

உள்ளே துசரின் குடும்பம் முழுவதும் வரிசையாக நிற்க அக்னியின் கையை விலக்கி கொண்டு துசரும் அவர்களோடு நின்றான்...அக்னி என்ன என்பது போல பார்க்க

துசரின் குடும்பம் முழுவதும் கண்களில் கண்ணீருடன் அவளை கை எடுத்து கும்பிட அக்னிக்கு விஷயம் புரிந்தது தர்ஷிகா உண்மை சொல்லிவிட்டாள் என்று...

“அய்யோ துசர் ஏன் இப்படி பண்றீங்க” என அவர்களுக்கு எதிரில் நின்றவள் அவர்களுக்கு பக்கமாக சென்று நின்று கேட்க...

துசரின் அம்மாவும் அப்பாவும் அவளின் இரு கைகளை பிடித்துக்கொண்டு “ எவ்வளவு பெரிய விஷயமா பண்ணி இருக்க, உன் கால்ல விழுந்தா கூட தப்பு இல்லை,

அன்னைக்கு தர்ஷிகாவுக்கு மட்டும் இது மாதிரி எதும் ஆகி இருந்தா கண்டிப்பா நாங்க குடும்பத்தோடு தற்கொலைபண்ணி இருந்து இருப்போம், இல்லை துசர்,குட்டி யாராவது அவனுங்களா கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போய் இருப்பாங்க...

எது நடந்தாலும் என் குடும்பம் நிம்மதியை தொலைச்சி இருக்கும் ,” என உருக மேலும் ராமசாமியும் பருவதமும் “ என்னைக்கோ முடிஞ்சு போக இருந்த எங்கள் நிம்மதியை காப்பாற்றி கொடுத்த உனக்கு இன்னைக்கு எங்க குடும்பத்தோடு உயிர் போனாலும் பரவாயில்லைன்னு உன்னை கேஸில ஜெயிக்க வைக்க துசர் எடுத்த முடிவு நினைச்சி எனக்கு பெருமையா இருக்கு, ரொம்ப நன்றிமா “ என இரு பெரியவர்களும் கண்கலங்க...

அக்னியின் தாத்தா,பாட்டி,ராமன் ,சத்யா எனஅனைவரும் கண்கலங்க பெருமையாக அக்னியை பார்த்தனர்..

அவர்கள் மனம் உருக சொல்ல அக்னிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை...

அவர்களை சமாதனப்படுத்தியவள் “ அத்தை நாம இது இப்படி அவமானம நினைக்க போய்தான்...அந்த மாதிரி நாய்ங்களுக்கு எல்லாம் துளிர் விட்டு போய்டுது,இவங்களாள என்ன செய்ய முடியும்ன்ற அலட்சியம் வந்துடுது...

என் கன்னித்தன்மை என்பது என் கன்னித்திரை கிளியறது இல்லை,அது காதல் கணவனோடு புரிதல்ல இருக்கு,

இந்த மாதிரி ஒரு ஒரு விஷயங்கள நாம ஒதுங்க போய்தான் நம் நாட்டுல அக்கிரமம் தலைவிரித்தாடுது....

நமம்லாள முடிஞ்ச வரை எதிர்த்து போராடனும் , தர்ஷிகா இல்லை அந்த இடத்துல எந்த பெண் இருந்தாலும் நான் இதை செஞ்சு இருப்பேன்..இதை ரொம்ப பெருசா நினைச்சி என்னை எம்பரசிங்கா பீல் பண்ண வைக்காதீங்க...” என்றாள்..

இன்னமும் வணங்கிய கையை இறக்காமல் துசர் அக்னியை பார்த்து கொண்டு இருக்க வேகமாக அவன் அருகில் சென்றவள் அவன் கையை இறக்கி கண்களை துடைத்துவிட அவளை அணைத்துக்கொண்டான்...

கோர்ட்டுக்கு செல்ல குட்டிக்காக ஷாம்னி காத்துக்கொண்டிருக்க நெடுநேரம் ஆகியும் வரவில்லை,அப்பொழுது சரியாக ஆபிஸிலிருந்து கால் வந்தது புரொடக்ஷன் யூனிட்டில் ஒரு சின்ன பையர் ஆக்சிடண்ட் என்று...அக்னி,துசர்,ராமன் எல்லாம் கேஸின் விஷயத்திற்காக அலைந்து கொண்டு இருப்பதால்,

ஷாம்னிதான் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்..நான் நேராக கோர்டிற்கு வருகிறேன் என்று மேசேஜ் அனுப்பியவள் பாக்ட்ரிக்கு சென்றாள்...

அங்கே வேலை முடியவே ரொம்ப நேரம் ஆனதால் கேசின் நிலையை அறிய குட்டிக்கு கால் செய்ய அது அணைத்து இருக்க,அக்னி,துசரின் கால்களும் பதில் இல்லாமல் போக..

மாறனுக்கு கால் செய்தால் விஷயம் அறிந்து கொண்டாள், எல்லோரும் கடத்தப்பட்டார்கள் என தெரிந்தாலும் அதில் முதன்மையாகிப்போனது குட்டிதான்...அதிலும் அவனுக்கு லேசான அடிகூட என்றதும் அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டு வேகமாக பைக்கை துசரின் வீட்டை நோக்கி செலுத்தினாள்...

உள்ளே சென்றதும் அவளின் விழிகள் எல்லோரையும் ஒரு முறை அலசி ஆராய எல்லோரும் நலமாக இருக்க அடுத்து அவளின் கண்கள் குட்டியை தேடியது...

கையில் சிறு கட்டுடன் அவனை கண்டதும் “ பூசா” என பாய்ந்து சென்று அவனை கட்டிக்கொண்டாள்...

என்னதான் குழந்தைக்கு அப்பாவை பிடித்தாலும் அதிக பிடித்தம் அம்மாவிடம் தானே..அவளின் காதலுக்கு முன் நட்பு,அன்பு எல்லாம் பின்னுக்கு போனது கொஞ்சம் நியாமும்தான் ..

அவள் குட்டியை அணைத்து அழுது கொண்டிருக்க மொத்த குடும்பமுன் குட்டியை பார்த்து கொண்டிருந்தது..அக்னி துசரின் அணைப்பில் இருந்த படியே நமட்டு சிரிப்புடன் பார்த்து கொண்டிருக்க...
துசர்க்கு ஆச்சர்யம் “இது எப்போது நடந்தது என்று ...ராமசாமி போலியாக அவனை முறையோ ,முறை என்று முறைத்து கொண்டிருக்க..

குட்டி அசடு வழிய அவளை அணைப்பிலிருந்து விலக்கிக் கொண்டு இருந்தான்...” ஜிங்ஸ் எல்லாரும் ஹால்லதான் இருக்காங்க,” என்றான்..

அவள் அதை எல்லாம் காதில் விழவில்லை.. அவளை பிரிக்கும் பொருட்டு “ ஏய் அக்கா வீட்ல எல்லாம் என்னை மொறைக்குறாங்க டி, கொஞ்சம் கருணை காட்டுடி, தனியா இருக்கும் போது 100 அடி தள்ளி நிற்ப ,இப்ப இப்படி படுத்துரியே “ என்க...

“ எது வேலை செய்ததோ இல்லையோ அவனின் அக்கா அவளுக்கு கடுப்பை உண்டாக்க அவனை விட்டு விலகியவள் குனிந்து கொண்டு நின்றாள்...

என்னையா அக்கா சொல்ற எல்லாம் இப்ப கேள்வி கேட்பாங்க நல்லா கேள்வி கேட்பாங்க நல்லா மாட்டிக்கிட்டு முழிடா கோமட்டி மண்டையா என அவனுக்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுத்து அமைதியாக நின்றாள்...

விசாலிட்சி உடனே “டேய் குட்டி அவங்களை அக்கா அக்கான்னுல டா கூப்பிடுவா,என்ன டா இது...”என கேட்க

எல்லாருக்கும் அதே சந்தேகம் தான் அவர்களின் அனைவருக்கும் முன் ஷாம்னியை நிறைய முறை அக்கா என அழைத்து இருக்கிறான்...

ஷாம்ணியும் அவர்கள் முன் எதுவும் சொல்லமுடியாமல் பல்லை கடித்துக்கொண்டு அமைதியாக சென்றுவிடுவாள்....

ஈஈ.... என அத்தனை பல்லையும் காட்டிய குட்டி “ அது சும்மா அவளை வெறுபேத்த” என்றவன் அக்னியை “ அண்ணி கொஞ்சம் இந்த பன்னிக்கு உதவி செய்ய கூடாத” என்பதை போல பார்க்க

அவளோ “முடியவே முடியாது” என கண்களால் சொல்ல அதை பார்த்த துசர் “ நம்ம திம்சுக்கும் இது தெரியுமா..” என நினைத்தான்...


அக்னி உதவமாட்டாள் என அறிந்த குட்டி ராமசாமியின் அருகே சென்றவன் “ தாத்தா அந்த ஓமகுச்சி நாராயணிய எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தாத்தா, எனக்கு அவளை கட்டி வைக்குறியா.....

இப்ப இல்ல தர்ஷி,விஷாலி கல்யாணம் முடிந்த அப்பறம் .பிளீஸ்.. அது மாதிரி எனக்கு ஏதாவது பிஸினஸ் பண்றதுக்கு பர்மிஷன் கொடு தாத்தா எனக்கு அரசாங்க வேலை எல்லாம் வேணாம்.....”

என அவர் தாடையை பிடித்து கொஞ்சியவன் பின் “அவள் மூஞ்சி மட்டும்தான் கொஞ்சம் வல்லுன்னு இருக்கும் மத்த படி நல்ல பொன்னு “என்க..

அவளின் கடைசி வார்த்தையில் சிரித்த ராமசாமி “ வடபா..என் பேத்தியவா வல்லுன்னு இருக்கான்னு சொல்ற,என அவனை காதை திருக போனவர் பின் அவன் தலையை செல்லமாக கலைத்து “ உன் இஷ்டப்படி இரு டா”என்றார்..

பின் வீட்டில் எவ்வளவு ரகளை செய்ந்தாலும் வீட்டை எப்போதும் உயிர்பாக வைத்துக்கொள்பவன் குட்டி, நேரே திட்டினாலும் அவனின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவன் செல்லமோ செல்லம்தான்...

ராமசாமியின் அருகில் சென்ற ஷாம்னி “ தாத்தா நான் அக்னி வயசு , குட்டியை விட 2 வயசு பெரியவள் உங்களுக்கு சரிதானா” என்றாள் எங்கே மறுத்து விடுவாரோ என்ற பயத்தில்...

அவளை பார்த்து இதமாக சிரித்தவர்” தெரியும் டா கண்ணு, உங்க 2 பேருக்கு மனசு புரிதல் இருந்தா இதெல்லாம் ஒரு விஷயம் இல்லை, அவனின் குழந்தை தனத்துக்கு உன்னோட பக்குவமான அணுகுமுறை சரியான பொருத்தம்தான்,எனக்கு இல்லை எங்க எல்லாருக்கும் மனப்பூர்வ சம்மதம் “என்றார்...

ராமசாமியின் பேச்சுக்கு எப்பொழுதும் அந்த வீட்டில் எதிர்பேச்சு இல்லை அனைவருக்கும் நிறைவுதான் குட்டி ஷாம்னியின் பொருத்தம்..

பின் துசரின் அருகில் வந்த ஷாம்னி “ அண்ணா உங்களுக்கு சம்மதமா ,உங்கள்ட இத்தனை நாள் சொல்லாமல் மறைத்து தப்புதான் மன்னிச்சிடுங்க “ என்றாள்..

அதற்கு விசாலட்சியின் அம்மா ஈஸ்வரி ஷாம்னியிடம் “ஷாமு துசர் உனக்கு மாமா முறைவரும் “, என திருத்த..

அதற்கு துசர் “இல்லை அத்தை அவளுக்கு எது வருதோ அதையே கூப்பிடட்டும், வார்த்தையில என்ன இருக்கு மனசுதான், அவளும் எனக்கு தங்கச்சி மாதிரிதான்..

வடநாட்டுல புருசனோட அண்ணன் தம்பிய ,சகோதரனாதான் பார்ப்பாங்க ,நம்ம சைடு கட்டிக்கிற முறை இருக்கும்,ஏன் விசாலி கூட எனக்கு அத்தை மகளா இருந்தாலும் எனக்கு அவ தர்ஷிகா மாதிரிதான் “என்றவன்..

ஷாம்னியின் புறம் திரும்பி “ எனக்கு ரொம்ப சந்தோசம் ,எனக்கு இதுல சம்மதம் டா,என்னை இந்த வாலு பையனா மேய்க்குறது கொஞ்சம் கஷ்டம் உனக்கு” என்றான்..

எல்லாவற்றையும் நிறைவுடன் பார்த்து கொண்டு இருந்தாள் அக்னி ,தானாக போராடி கிடைக்கும் ஒரு விஷயம் எவ்வளவு சந்தோசம் தரும் எனபதை குட்டியின் முகத்தில் பார்த்தாள்..

அதை உணர்ந்த குட்டியும் அக்னியை நோக்கி “தேங்க்ஸ் அண்ணி” என்றான் மனமார..எல்லாரும் சந்தோசமாக இருக்க இன்று நாள் சரியாக இல்லாததால் நாளை அக்னி,துசரின் முதல் இரவை வைத்துக்கொள்ளலாம் என் பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டது அக்னி துசர்க்கு தெரியாமல்....

கேஷ் கேஷ் என்று சுற்றியதால் அக்னியின் ஆபிஸ்,துசரின் ஆபிஸ் என நாளை நிறைய வேலைகாத்து கொண்டு இருக்க,இருவரும் சீக்கிரம் உறங்க சென்றனர்..

துசர் குளித்துவிட்டு வருவதற்குள் சிறிதுநேரம் படுக்கலாம் என்று படுத்தவள் அப்படியே தூங்கிப்போனாள்..

வெளியே வந்து பார்த்த துசர் தூங்கும் அவளை மென்மையாக பார்த்தான்..புடவை கொஞ்சம் இல்லை ரொம்ப அவளைபடுத்தினாலும் , தனக்கு புடவை பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக வாரத்தில் 4 முறை புடவை கட்டிக்கொண்டு அவதி படுகிறாள்..இவன் சொன்னாலும் அவள் கேட்பதில்லை..

இதோ இப்பொழுது கூட புடவை கட்டிக்கொண்டு அசௌகர்யமாக ரோபோ போல படுத்து இருக்க அவள் காலடியில் கட்டிலில் அமர்ந்தவன்...

அவள் காலை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டவன்..அவள் முகத்தை பார்த்து “என் பாப்பாக்கு நான்னா அவளோ இஷ்டமா “என்று கேட்டான்..

பின் குனிந்து அவளின் கொலுசு பிணைந்த காலில் முத்தம் இட மீசையின் குருகுருப்பில் கண் முழித்த அக்னி தன் காலில் முகம் புதைத்து இருக்கும் துசரை பார்த்தவள் “துசர் என்ன பண்றீங்க”என காலை உருவ..

அதை விடாமல் இறுக்கு பிடித்தவன் “ஸ்ஸ்ஸ்....” என்றவன் அவள் காலை கிழே வைத்துவிட்டு அப்படியே அவளின் வயிற்றை நோக்கி குனிந்தவன் புடைவை விலகி வெண்ணெய் போல தெரிந்த அவளின் வயிற்றில் முத்தும் வைக்க...

10 அடுக்கு மாடியில் உள்ள மொட்டை மாடியில் வெளியே காலை தொங்கபோட்டு இருக்கும் போது வருமே ஒரு உணர்வு அதுபோல அக்னியின் உடல் எங்கும் பரவ அதை தாங்க முடியாமல் அப்படியே அவனின் முடியை கொத்தாக பிடித்து தூக்க ...ம்ஹூம்..அவன் இன்னும் ஆழமாக புதைத்தான் அங்கே ..

( அடேய் துசர் நாளைக்கு தான் டா நல்லநாளு இப்பவே எதும் பண்ணிடாதா.....டா...)

போதுமா
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 27 :

அங்கேயே வீழ்ந்து புதைந்து போனான்துசர்...அக்னியும் அவன் நடத்தும் உணர்ச்சியாகத்தை தடுக்கும் பலம் இல்லாமல் உடல்பலம் இழந்து கண்கள் கிரக்கம் கொள்ளமயங்கி கிடந்தாள்... எங்கேயோ யாரோ டோப்டோப் என்று அடிக்கும் சத்தம் கேட்க,



இருவரும் தங்கள் சஞ்சரித்து கொண்டு கனவுலகத்திலிருந்து வெளியே வர “ துசர் யாரோ டோர் தட்டுறாங்க “ என அவனைஉலுக்க..



தன்னை நிலை படுத்திக்கொண்டவன் எழுந்து கதவை திறக்க செல்ல அக்னி உடையை சரி செய்தாள் அதற்குள்...



கதவை திறக்க அங்கே குட்டி, தர்ஷி,விசாலி 3பேரும் கையில் ஒரு பில்லோ பெட்ஷீட்டுடன் நிற்க துசர் அவர்களை கொலை வெறியில் நோக்கினான்...



குட்டி “ அண்ணா ரூம்ல ஏசி ஒர்க் ஆகலஇன்னைக்கு மட்டும் இங்க தூங்குறோம் “என்க..



துசர் “3 ரூம்லையுமா” என யோசனையாக கேட்க.. குட்டி நன்றாக முட்டை கண்ணை முழித்து முழித்து கொண்டு நின்றான் என்ன சொல்வது என்று தெரியாமல் “ பேபி உன்னை“என பருவதத்தை மனதில் திட்டிக்கொண்டு....



பருவதம் அரைமணி நேரம் முன்புதான் 3 பேரிடம் நாளைதான் நல்ல நாள் இன்றுஅவர்கள் சேர்ந்துவிடுவார்கள் என தோன்ற மூவரையும் அங்கே தூங்கும் படி சொன்னார்..



கடுப்பாகிய குட்டி “ பேபி அதெல்லாம் அவங்க பர்சனல் நீ என் இப்படி நடந்துக்குற அது அண்ணன்கிட்ட நான் எப்படி” என்க....



“ குட்டி கண்ணு எல்லாத்துக்கும் ஒரே காரணம்இருக்கு”, என்று ஏன் எல்லாம் நல்ல நேரத்தில் செய்யவேண்டும் என்ற அறிவியல் பூர்வமான காரணங்களை அவர் விளக்க...



( சத்தியமா எனக்கு என்ன காரணம்முன்னுதெரியல மக்களே....அதான் பூசிமொழிகிட்டேன்...ஆனால் ரீசன் கண்டிப்பாஇருக்கு....)



அதற்கு அரைகுறையாய் தலையை ஆட்டியகுட்டி தர்ஷி மற்றும் விசாலியை அழைத்துக்கொண்டு போனான்...



அன்பை விட மரியாதை அதிகம் உள்ள துசரின் அறைக்கு இந்த காரணத்தை சொல்லிக்கொண்டு எப்படி போவது என்று ஏதோ வாய்க்கு வந்த காரணத்தைசொன்னான்...



“3 ரூம்லையும் ஒன்னாவா “ என்ற துசரின் கேள்விக்கு தர்ஷி “ அண்ணிக்கு துணைக்கு படுத்ததுக்க சொன்னாங்க அண்ணா பாட்டி “



“உன் அண்ணியே 10 பேருக்கு துணையாஇருப்பா,கூடாதத்துக்கு நான் வேற இருக்கேன்”என சொல்லி முடிப்பதற்குள்..விசாலி “நீங்க இருக்கிறதுதான் முக்கியமான பயமாஅத்தான் “என்ற கூறியவள்


“ நாளைக்குதான் நல்ல நாளாம்” என்ற கூடுதல் தகவலையும் கூறியபடி அக்னியின்இருபுறமும் படுத்து கொண்டனர் விசாலியும் தர்ஷியும்...



,கதவை தாழ்போட்டு வந்த துசர்க்கு மூஞ்சை எங்கே கொண்டு வைத்துக்கொள்வது என தெரியவில்லை..அக்னிக்கும் லேசான வெட்கம் அய்யோ என ...



துசர் தீண்டும் போது அவளுக்கு அந்த நாய்கள் தீண்டியது நியாபகம் வரவில்லை ,,ஏன் வரவேண்டும்…?எதற்காக வரவேண்டும்..?.பூவில் மென்மையாக தேனை உறிஞ்சும் என்னவனும்,கடப்பாறையால் என் பாகங்களை பழுதாக்கிய அந்த காட்டு எருமைகளும் ஒண்ணா... ?



செல்லெல்லாம் பூக்கள் பூக்க வைக்கும் என்கணவனின் அணைப்பும்..

அருவருப்பை மட்டுமே வர வைத்த அவர்களின் அணைப்பும் எப்படி ஒன்றாக முடியும்..



இல்லவே இல்லை.. என் பெண்மை என்னவனிடம் மட்டுமே முதல் முறைபூக்கும்,என 1000 முறை உணர்ந்தவள்,நம்பியவள்...



சில நேரங்களில் நம் சமுதாய அமைப்புகள்அவளை தளர்வடைய செய்தாலும் அவளவன்அவளை எப்பொழுதும் அப்படி உணரவிடுவதில்லை...



துசரும் , குட்டியும் கீழேபடுத்துக்கொள்ள தர்ஷியும், விசாலியும் காலை ,கைய அக்னி மீது போட்டுக்கொண்டு தூங்கி போனார்கள்...

ஒரே பிள்ளையாய் வளர்ந்த பிள்ளைக்கு இது எல்லாம் புதிதாகவும் பிடித்தமாகவும்,இருந்தது....



தன்னை விட ஒரு வயது, இரு வயதுதான் குறைவு என்றாலும் அவர்கள் மூவரையும்அவளுக்கு குழந்தையாகதான் தெரிந்தார்கள்...

அனைவரும் அந்த இரவு நிம்மதியாக தூங்கிபோயினர்...ஜெயிலில் உள்ள ஜிந்தாவை தவிர...



மறுநாள் பகல்நேரம் நிமிடத்தில் கரைய ஆதவன் தன் கரங்களைசுருக்கி இரவு ,நிலவுமகளைகாவலுக்கு அனுப்பிவைத்தான்...

அக்னி 5 மணிக்கே வேலை முடித்து வர துசர் ஷாம்னியின் வேலை பழுவை குறைக்க அங்கு சென்று இரவு வர தாமதம் ஆனது.....



வீட்டில் உள்ள மூன்று வானரங்களும் அக்னியை அவளின் அறைக்குள் விடவேஇல்லை... அனைவரின் தூங்க செல்ல அக்னி துசருக்காக ஹாலில் காத்துக்கொண்டிருந்தாள்...



துசர் கால் செய்து அவளை தூங்க செல்ல“அவங்க மூணு பேரும் ரூமை டெக்கரேட் பண்றாங்க போல துசர் உள்ளவே விடவில்லை” என்றவளிடம் அரைமணி நேரத்தில் வருவதாக கூறி அபோனை கட் செய்தான்..

2 மணிநேரம் கழித்து வேர்த்து விருவிருத்து 3பேரும் வெளியே வர அப்பொழுதும் அக்னியைஉள்ளே விடவில்லை அக்னியை பிடித்துகாலிலையே அமர்ந்து விட்டனர் 3 வரும்...



10.30 மணி அளவில் துசர் உள்ளே வரஅக்னியை தவிர அவர்கள் மூவரும் தூங்கிபோயினர்..விசாலி அக்னியின் வலது தோளிலும் ,தர்ஷி இடது தோளிலும்,அவளின் தோள் மீது குட்டியும்...



துசர் வந்ததும் அவர்களை எழுப்பி ரூம்க்குஅனுப்பியவள் துசர் வெளியவே சாப்பிட்டுவந்ததால் நேராக இருவரும் அறைக்குசென்றனர்...



அக்னி ,துசர் இருவரும் மிகுந்த ஆவளுடன்அறையின் அலங்காரத்தை பார்க்க செல்லஉள்ளே நுழைந்தவர்கள் அதிர்ந்துபோனார்கள் அங்கே அந்த குரங்குகள் செய்துவைத்த வேளையில்...



துசரின் ரூம் எந்த மாறுபாடும் இல்லாமல் அலங்காரங்கள் எதுவும் இல்லாமல் அப்படியே இருந்தது.. இரண்டு பையில் உள்ள பூக்கள் அப்படியே மெத்தை மீது இருக்க,அங்கே தாம்பளத்தில் உள்ள பழம், ஸ்வீட் மட்டும் காலியாக இருந்தது..



இருவருக்கும் பார்த்ததும் கொள்ளை சிரிப்புஅவளை அணைத்து பிடித்துகொண்டேகட்டிலில் அமர்ந்தவன் “ மூணும் சரியான பப்ஜி வெறியர்கள் தர்ப்பூஸ்,தாத்தாக்கு அது பிடிக்காது பார்த்த போனை பிடிங்கிவச்சுப்பாரு...அதான் இங்க வந்து நல்லா தின்னுட்டு கேம் விளையாடிட்டு போய் இருக்காங்க...



3 ஒண்ணு சேர்ந்த சமாளிக்குறது ரொம்ப கஷ்டம் டா “ என்றான் சிரிப்பினூடே



அக்னிக்கும் வாய் கொள்ளாத சிரிப்பு அவள் நன்றாக வாய்விட்டு சிரிக்கும் போது மட்டுமே தெரிய தெத்துபல் அதை ரசனையுடன் பார்த்தவன் அவளின் கன்னங்களை தாங்க,வழக்கம் போல அவள் இமைகள் படபடவென்று அடித்து கொள்ள எத்தனை முத்தம் கொடுத்தாலும் அவள் இமைகளின் மேலே இருக்கும் போதை குறையவே குறையாது போல துசருக்கு..அந்த இமைகளின் மீது கண்ணே உள்ளே புதையும்அளவு அழுத்தமாக எண்ணிலடங்கா முத்தம்கொடுத்தான்....



அப்படியே இடைவெளி இல்லாமல் உதடு முகத்திலிருந்து பிரியாமல் ஒரு நீண்ட சிக்குகோலம் போட்டான் துசர்..



எங்கு எங்கோ பின்னி பிணைந்து வந்த அந்தகோலம் இறுதியாக ஆரம்பித்த இடத்திலையே வந்து முடிந்தது..ஆனால் விலக வில்லை

அவன் விட வேண்டும் என நினைத்தாலும் அவனின் பின் கழுத்தில் அழுத்தமாக பதிந்த அக்னியின் கைகள் அவனை விலக அனுமதிக்கவில்லை...



வலுக்கட்டாயமாக அவளிடம் இருந்துபிரித்தவன் “ பாப்பா 2 மின்ட்ஸ் டா குளிச்சிட்டுவந்துறேன்”..என்க..



மறுப்பாக தலையை அசைத்தவள் அவனை தன்னுள் புதைத்து கொண்டாள்...கரும்பு தின்ன கூலியா.... காதல் காமமாக மாறிய புள்ளி தெரியாமல் எலும்பு நொறுங்க இழுத்து அணைத்துக்கொண்டான் துசர் அக்னியை...



அவளின் மென்மையான பாகங்கள்யாவும் மன்னவனின் பார்வையிலையே சிவந்து சிலிர்த்து போனது...முத்தம் என்னும் ஒரே சாவியை கொண்டு உடலின் அனைத்து பாகங்களையும் திறந்தான் அந்த காதல் திருடன்...



அவனின் அணுகுமுறை மென்மையிலும் மென்மையாக இருந்தது. பூவிதழால் பூட்டை திறப்பது போல..யார் யாரை அதிகம் நாடினார்கள் என கேட்டால் இருவருக்கும் தெரியவில்லை



அந்த முடிவில்லா தேடல் முடிவுக்கு வந்தது...அதிகாலை 4 மணிக்கு கூடலின் போதே அவன் நெஞ்சுக்குள் அவளைஅறியாமலே அசதியால் அக்னி தூங்கும்போதே..

சின்ன சிரிப்புடன் அவளின் நெற்றியில் முத்தம் இட்டு அவனும் தூங்கிப்போனான் ...



ஊன், உறக்கம், உலகம் மறந்து உணர்ச்சிகடலில் மூழ்கி திளைக்க வைக்கும் தாம்பத்தியம் புனிதமானதுதான்,அந்தரங்கமானதுதான்,போற்றி பாதுகாக்க வேண்டியதுதான் ஆனால் அது தன்னவனுடன்,தன் காதல் கணவனுடன்கூடும் போது மட்டுமே...



கசாப்பு கடைக்காரன் உறுப்பைகளைஉருகுலைக்கும் போது அதை பொத்தி வைக்கவேண்டிய அவசியம் இல்லை,அந்தரங்கமாக, நினைக்க தேவை இல்லை........



*********************



ஒன்றரை வருடம் கழித்து...



அந்த மாலை நேரம் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது...ஏற்கனவே திருவிழா போலகாட்சி அளிக்கும் துசரின் வீடு இன்று குட்டி,ஷாமுவின் கல்யாணம் என்பதால் துசரின்உறவினர்,அக்னியின் குடும்பம், இன்னும் இன்னும் அதிகமாக மாலை நேர மெரினா கடற்கரை போல காட்சிஅளித்தது...



10 நாட்களுக்கு முன்தான் விசாலி, குமரன் கல்யாணமும் ,தர்ஷிகா , அருணின் கல்யாணம் முடிந்தாலும் கூட்டத்திற்கு பஞ்சம்இல்லை ...

குமரன் விசாலி வேலை செய்யும் பள்ளியிலேயே வேலை பார்ப்பவன்,



விசாலியை பிடித்து போய் பெண் கேட்க,துசரின் குடும்பத்தினருக்கும் பிடித்து போக,தர்ஷிக்கும் ஒரு மாப்பிள்ளை பார்த்து முடித்துவிட்டனர் ஒரே மேடையில்....



இதோ அடுத்த பத்து நாளில் குட்டிக்கும் ஷாம்னிக்கும் கல்யாணம் முடிந்தது..எளிமையாய் சிறிய கோவிலில் வைத்து நெருங்கிய சொந்தங்கள் வைத்துமட்டும்...காலையில் தாலி கட்டும் போது கூடகுட்டி “ அக்கா என்னை பத்திரமா பார்த்துக்குவியா “என கேட்டு ஷாம்னியிடம்தொடையில் கிள்ளு வாங்கியபடியே தாலிகட்டினான்...



இப்பொழுது பொண்ணும், மாப்பிள்ளையும் ஷாம்னியின் வீட்டிற்கு செல்ல துசரின் வீட்டில் இரவு விருந்திற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தது...



இப்பொழுது குட்டி நவீன வசதிகளுடன் உள்ளஒரு பூயூட்டிவ் பார்லர் பெரிய அளவில் நடத்திவருகிறான்.....



சோனுவை சட்ட ரீதியாக துசர் மற்றும் அக்னி தத்து எடுத்துக்கொள்ள ,ராமன் வீட்டில் நால்வரும் தனியாக இருப்பதால் சோனுவை வற்புறுத்தி தங்களோடு அழைத்து சென்றார்..



என்னதான் ராமன் குடும்பத்தார் சொந்த பிள்ளை போல பார்த்துக்கொண்டாலும் ஒருபோதும் அவன் அளவிற்க்கு அதிகமான சலுகையை எடுத்துக்கொள்ள மாட்டான்



தன் உயிர் தோழி, தன் செல்ல கொழுந்தன் கல்யாணம் என்பதால் அக்னி நேரம் இல்லாமல் சுழன்று கொண்டு இருந்தாள்.தன் 5 மாத கர்பத்தோடு...



துசரின் குடும்பம்,கற்பழிக்கப்பட்டபெண்ணிற்கு வாழ்க்கை கொடுத்ததுபோலவும் நடந்துகொள்ளவில்லை...அக்னியின் தனக்கு வாழ்க்கைக்கு கொடுத்த துசர் ,அவரின் குடும்பம் என அவர்களை கடவுளோடு ஒப்பிடவும் இல்லை.. மாறாக அது முழுக்ககாதல் ,அன்பு, உறவு என்ற உயிர்ப்பு உள்ள விசாயங்களால் நிரம்பி வழிந்தது...



மாலை மயங்கி இரவுவரை...தர்ஷியும்,விசாலியும் தங்கள் கணவர்களை அம்போவென விட்டுவிட்டு அவர்களின் மொபைலை பிடிங்கி கொண்டு குட்டியின் அறையில் நுழைந்தனர் ..



( ஏய் பிசாசுங்களா கல்யாணம் ஆகி போய்புருஷன் கூட விளையாடாம பப்ஜியா விளையாடுறீங்க...)



அதே 2 நேரம் கழித்து இருவரும் வெளியே வரகுட்டி அவர்கள் செய்யும் வேலையை அறிந்தவன் ஆதலால் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உள்ளே நுழைந்தான் ...



ஆனால் அவனின் எண்ணத்தை பொய்யாக்கியபடி அறை முழு அலங்காரத்துடன் இருக்க குட்டிக்கு ஆச்சர்யம் ,” அவளுங்க 2 பேரும் அவ்வளோ நல்லவங்கஇல்லையே “ என யோசித்தவன் வேகமாகசென்று கட்டிலின் ஸ்குரூ எல்லாம் சரியா இருக்கிறதா என்று பார்த்தான்...எல்லாம் சரியா இருக்க...



யோசனையாக குட்டி அமர்ந்து இருக்கஅவனின் பார்பி டால் உள்ளே வந்து அவனின் யோசனையை கலைத்தது..



உடைந்து விழும் உடம்புடன் உள்ளே வர அவளை கை தாங்களாக அழைத்து கொண்டுவந்து கட்டிலில் அமர்ந்தான்...



“ ஏய் ஜிங்ஸ்....we made it de “ என்றான் நிறைவாக..அவளுக்கும் சந்தோசம் தன் கிப்பிமண்டையனே தனக்கு கணவனாய் வாய்க்க பெற்றதில்...



குட்டி அவளின் உதட்டை முற்று கை இடும்நேரம் குறுக்காக கையை வைத்தவள்“கொஞ்சம் நேரம் பேசலாம் பூஸா “என்க..



“போடி இவளே” அவளின் கையை விலக்கியவன் அவளின் உதட்டை நெருங்கும்நேரம் நன்றாக சைரன் சத்தம் அவனின்ரூமையே நிறைக்க...



குட்டிக்கு தெரிந்து போனது விசாலியும்,தர்ஷியும் செய்த வேலை...” பிசாசு குட்டிங்களா” என எழுந்தவன் காதை அடைக்கும் அந்த சத்தத்தை நிறுத்த தன் அறையை அலசினான்..



அங்கே கட்டிலுக்கு கீழே தர்ஷிகாவின் மொபைலுடன் ஒரு குட்டி ஸ்பீக்கர் இணைக்கப்பட்டு சத்தமாக அலாரம் அடித்துக்கொண்டு இருந்தது..



கடுப்புடன் அதை அணைத்து வைத்தவன்அவர்கள் இருவரையும் மனதில் திட்டியபடி ஷாம்னியின் அருகே வர அடுத்த 5 நிமிஷத்தில் அடுத்த அலாரம் அடிக்க கடுப்பாகியவன் அதையும் தேடப்போக அங்கே வாட்ரோப்பின் மேலே விசாலியின் போன் அதே போல் ஸ்பீக்கருடன் பல்லை இழிக்க



“ விசாலி..”..என பல்லைகடித்தவன் அதை அணைக்க..ஷாம்னி சிரிப்புடன் அவர்களின் சேட்டையை பார்த்து கொண்டிருந்தாள்..



இரண்டு பேரின் போனும் அணைக்கபட்டு விட்டதால் இனி தொல்லை இல்லை என ஷாமுவை நெருங்க ...



அடுத்த விசாலியின் கணவன் குமரனின் மொபைல் அலாரம் அடிக்க ,காண்டின் உச்சிற்கு சென்றவன் பஞ்சை எடுத்து இருவரின் காதில் அடைத்தவன் பெட்ஷீட்டை போர்த்தி அவளுள் புதைந்து போனான்...ஷாம்னியும் “மெதுவா டா மெதுவா டா “என சிரிப்புடன் அவனை அணைத்து கொண்டாள்..



இந்த கதையை விசாலியும் ,தர்ஷிகாவும் தங்கள் கணவன்மார்களிடம் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தனர்..



******



அங்கே துசரின் அறையில் அக்னி “ வேணும்துசர் “ என்க...



“வேணாம் தர்பூஸ் உள்ளே பாப்பாக்கு எதும்ஆகிடும்ல “என வருத்தமாக
சொல்ல “போங்கதுசர் உங்க பாப்பா வந்த நாளே இதே சொல்லி என்னை ஏமாத்துரீங்க எனக்கு இப்பவேவேணும் “ என அடம்பிடித்து அவன் இதழை சிறை செய்ய...



என்றுமே தன்னவளின் காதலுக்கு விரும்பியே அடிமை .ஆகும் அந்த ஆண் சிங்கம் இன்றும் தன் பிடரியுடன் முற்றும் முதலுமாய் அடங்கிபோனது...



ஏற்கனவே மென்மையாக அவளை திறப்பவன் இன்று அதையும் விட மென்மையாக அவளை, அவள் ஆசையை தனதாக்கினான்....



இன்று போல என்றும் அவர்கள் வாழ்வு நிறைவாக இருக்கும் என நாமும்வாழ்த்துவோம்..



இவர்கள் மிச்சம் வைத்த எதிரிகளின் பகை என்றாவது ஒரு நாள் திரும்பி வரும் அன்று அது,அக்னி , துசரின் காதலாலும் ,அவர்களின் புத்தி கூர்மையாலும், ஆலமரம் போன்ற உறவுகலாலும் கருவருக்கப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை...



அவள் கொடுத்த இதயம் அவனுக்குபோதுமாகிபோனது..உண்மையானகாதலால்....





முற்றும்...
 
Status
Not open for further replies.
Top