All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இதயம் போதுமா கதை திரி..

Status
Not open for further replies.

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்...
பிரண்ட்ஸ்..

நான் தான் உங்க நம்பர் 32..
என்னடா நம்பர் 32ன்னு சொல்றாள்ன்னு பாக்குறீங்களா...
ஸ்ரீ அக்கா ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க...கதையை வச்சிதான் வாசகர்கள் வோட் பண்ணனும்..ஆத்தரோட (auther) பெயரைவச்சி கண்டிப்பா கூடாதுன்னு..

அப்படியே எழுத்தாளர் பெயரைவச்சி வோட் பண்ற அளவுக்கு நீ பெரிய அப்பாடக்கரா இருக்க மாட்டன்னு நீங்க துப்புறது இங்க வர கேட்குது...

ஏன்னா அதுதான் உண்மை...

அதனால இந்த கதை முடியுற வரை நீங்க என்ன 32 ன்னே கூப்பிடலாம்... ஏன்னா ஸ்டோரி திரட்ல என் ஸ்டோரி 32 வது இடத்துலதான் இருக்கு...

என்ன ஒரு அறிவு...ஹா ஹா..

ரொம்ப புகழாதிங்க எனக்கு மூளை கொஞ்சம் அதிகம் அதான் இப்படி எல்லாம் அறிவு பூர்வமா...

சரி விஷயத்துக்கு வரேன்...ஸ்ரீ அக்கா கதை போட்டி அறிவிச்சிருக்குறது எனக்கு இப்ப ஒரு 10 டேஸ் முன்னதான் தெரிஞ்சது .. சரி நாமளும் எழுதி பார்ப்போம் ன்னு களத்துல குதிச்சு கண்ணு முழிச்சு கதை எழுதிகிட்டு இருக்கேன்..

கதையோட பெயர் "இதயம் போதுமா..."

நாயகி : அக்னி
நாயகன் : துசர்

ஒரு சாதரண காதல் கதைதான் ஒரு சின்ன மேசேஜோட...

முதல் அத்தியாயம் தமிழ் புத்தாண்டு அன்னைக்கு போடுறேன்..

வழக்கம்போல உங்களோட ஆதரவை தாங்க எனக்கு மட்டும் இல்லை போட்டியில் இருக்கும் அத்தனை எழுத்தாளர் உடன்பிறப்புள்களுக்கும்

முக்கியமா சைலண்ட் ரீடர்ஸ் ,போட்டி கதைகளுக்கு உங்களோட அடையாளம் ரொம்ப முக்கியம் உங்களோட கருத்தை ஒரே ஒரு கமென்டா கொடுங்க ப்ளீஸ்....

இப்படிக்கு

உங்கள் 32...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் போதுமா..

முன்னோட்டம்:

அவன் கொடுத்த பணத்திற்கான வேலை முடிந்ததும் அந்த பருத்த உடம்பை நகர்த்த முடியாமல் நகர்த்திவிட்டு வெளியே வரும்போது அவளுக்கும் நெஞ்சம் கொஞ்சம் சுருக்கென்றே இருந்தது.,

இருந்து என்ன பயன் அந்த எண்ணம் அவளுக்கு எந்த வகையிலும் உதவ போவதில்லை என தெரிந்த அடுத்த நொடி தோளை குலுக்குக் கொண்டு நகர்ந்துவிட்டாள்.

ஒரு சாமானியனின் ஒரு மாத உழைப்பிற்கு உண்டான பணத்தை தன் அரைமணி நேர இச்சைக்கு செலவழித்துவிட்டு தள்ளாடிய படியே தன் காரை நோக்கி நகர்ந்தது அந்த ஆறறிவு ஜந்து..

தன் காரில் ஏறி கதவை சாத்தும் போது மறுபுறம் கதவை திறந்து கொண்டு ஒரு மச மச உருவம் ஏறி அமர்ந்தது.
என்ன கண்ணை கசக்கி கொண்டு பார்த்த போதும் அடித்த சரக்கு அந்த உருவத்தை தெளிவாக காட்டவில்லை..

“யாரது” என்றான் குளரியபடி

“ அந்த குரல் தனது தனித்தன்மையில் எந்த மாற்றமும் இல்லாமல் இயல்பாகவே உள்ள கம்பீரத்தோடு “ நான்தான் அக்னி “ என்று ஒலிக்க

பெண் குரல் என்றதும் ரங்கநாதன் இழித்தபடி அருகில் செல்ல அவன் அருகாமையில் இருந்து அக்னி சிறிது விலக வெளியில் உள்ள லைட்டின் வெளிச்சத்தில் அவள் முகம் தெரிந்தது.
பால் நிலா போன்ற மாசு மருவில்லா அழகியமுகம் வாகு இல்லாமல் நன்றாக தூக்கி போட்ட போனிடையில் ஹேர் ஷ்டலில் ,ஓசன் ப்ளூ ஜீன்ஸ் அதே நிறத்தில் ஜீன் துணியில் உள்ள ஒரு முழுக்கை சட்டை காதில் வெள்ளை நிற கல் வைத்த சிறு தோடு.

எந்த அலங்காரமும் இல்லாமல் துலக்கி வைத்த வெண்கல விளக்கு போல இருந்தாள் அக்னி.

அவளின் கண்களில் மட்டும் எப்பொழுதும் ஒரு துணிச்சல், ஒரு அலட்சியம் அது அவளுக்கு கூடுதல் அழகை கொடுக்கும்..

அந்த துணிச்சல் அந்த அலட்சியம் எல்லாம் கண்டிப்பாக ஆரோக்கியமானதாகத்தான் இருக்குமே தவிர அகந்தையாக இருக்காது.....

அக்னி அவனை நோக்கி ஒரு வரிதான் ஒரே வரிதான் கூறினாள்.” நாளைக்கு நீ உயிரோட இருக்க மாட்ட அதான் கடைசியா பார்க்கலாம்னு வந்தேன் “ என்று கூறியவள் அடுத்த நொடி காரைவிட்டு இறங்கிவிட்டாள்.

முழு போதையில் இருக்கும் அவனுக்கு அவள் சொல்லும் எதும் புரியவும் இல்லை, புரிய அவன் முயற்சியும் செய்யவில்லை

காரை எடுத்து கொண்டு அதிவேகத்தில் வளைத்து வளைத்து ஒட்டிக்கொண்டு நகரத்திற்கு வெகு தொலைவில் உள்ள விடுதியில் இருந்து வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

அந்த கார் செல்லும் திசையையே பார்த்து கொண்டிருக்கும் அக்னியின் கண்களில் எந்த ஒரு மாறுபாடு, எதையும் சாதித்த உணர்வு என்று எதும் இல்லை மாறாக அது சாதரணமாகவே இருந்தது.

அப்பொழுது தனது அருகில் வந்து நிற்கும் ஸ்கூட்டி சத்தத்தில் திரும்பி பார்த்தாள் அங்கே அவள் தோழி ஷாம்னி கண்களில் மிரட்சியுடன் அருகில் வந்து நின்றாள்.

அவளை பார்த்து லேசாக சிரிக்க ,ஷாம்னி“ பிலிங்கி இது உனக்கு தேவைதானா,ஏன் தேவை இல்லாத பிரச்சனை” என்று படபடப்போடு கேட்க

“ கண்டிப்பா தேவைதான் ஷாமு , வண்டியை எடு” என்றவள் பின்னே ஏறிக்கொண்டாள்.
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ஸ்...

நான்தான் உங்க 32...

ஸ்ரீ அக்கா இப்பதான் டீசர் போட்டுக்குகலாம்ன்னு பெர்மிசின் கொடுத்தாங்க...

அதான் குடு குடுன்னு ஓடி வந்துட்டேன் டீசரோட...படிச்சிட்டு எப்படி இருக்குன்னு கமெண்ட்ஸ்ல ஒரு வார்த்தை சொல்லுங்க..

சைலண்ட் ரிடர்ஸ் ப்ளீஸ் ஹெல்ப் மீ..

மீ பாவம்....

கழுதை குடிசையா இருந்தாலும் பரவாயில்லை..

கமெண்ட்ஸ்ல வந்து கட்டிட்டு போங்க...

திட்டுவது...காறி துப்புவது.. இப்படி நல்ல விஷயங்கள கூட நீங்க பண்ணலாம்

நான் கோப படமாட்டேன்

:love::love:

இப்படிக்கு

உங்கள் 32
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் போதுமா...

முன்னோட்டம் : 2

அவள் அப்பாவிற்கு PA வ இருக்குறதுக்கு இவளுக்கு PAவ இருக்கலாம் பாதி நாள் இவளோட சுத்திக்கிட்டுதான் சம்பளம் வாங்குறேன் என்று புலம்பி கொண்டே அக்னியின் வீட்டில் உள்ள தனது ஸ்கூட்டியை எடுத்து கொண்டு வெளியே வந்த ஷாம்னி

வீட்டிற்கு சில மளிகை பொருட்கள் வாங்குவதற்காக அங்கு உள்ள சின்ன சூப்பர் மார்க்கெட்டில் பைக்கை நிறுத்த அவள் முன்னே டங்கென்று குதித்தது ஒரு வால் இல்லாத குரங்கு.
ஒரு பழைய கருப்பு கலர் ஜீன்ஸ் அதே கலரில் சாயம் போன ஒரு சட்டை ,

அப்பறம் நல்லா வெத்தளை பாக்கை போட்டு தலையில துப்புன மாறி ஒரு ஹேர் கலர், ப்ர்ங்கி ஹேர்க்கட் ( fringe haircut ) காதில் ஒரு கடுக்கன் என முன்நெற்றி முடி கண்ணை வரை மறைக்க பிரசித்தம் ஆனான் அந்த பிரகஸ்பதி.

அவனை பார்க்கும் எல்லாருக்கும் முதலில் தோன்றுவது” எந்த கிரகத்துலேந்து தப்பிச்சி வந்து இருப்பான்”, இல்லை “எந்த ஜூல(zoo) உள்ள பிராணி இது”, அதுவும் இல்லை என்றால் “பொறுக்கி பையனா இருப்பான் போல” என்பதே.


அவன் பெயர் கண்ணா அவன் வீட்டின், இல்லை குடும்பத்தின் கடைசி செல்ல பையன் அவனை செல்லமாக அழைப்பது குட்டி.

( கண்ணான்ற பேரே செல்லமா தானடா இருக்கு இதுல குட்டி வேறைய)

கண்ணாவை கண்டுகொள்ளாமல் ஷாம்னி அவனை கடந்து செல்ல வேகமாக அவள் முன் வந்து முட்டி போட்டவன்
ஒற்றை ரோஜாவை அவள் புறம் நீட்டி “ ஷாமுக்குட்டி ஐ லவ் யூ “ என்றான்.

அந்த ரோஜாவை வாங்கி தூக்கி போட்டவள் “ ஐ ஹேட் யூ”என்று சொல்லிவிட்டு கடையினுள் சென்றுவிட்டாள்.

கீழே விழுந்த ரோஜாவை பார்த்து “ சாரி ரோஸி இன்னைக்கும் என் செல்லகுட்டி கைல இருக்க உனக்கு கொடுத்து வைக்கல”என்றவன் அவளை தொடர்ந்து பின்னே சென்றான்.
“ ஏய் ஜிங்கிலி எதுக்கு அத்தான் மேல கோபமா இருக்க “

( அவ என்னைக்குடா உன் மேல பாசமா இருந்தா....?)

“ ஏய் ஏய் என்று அவள் கோபமாக சொல்ல அதற்கும் அவன் “ஏய் ஏய் இல்ல செல்லம் ஐ..ஐ.. ஐ லவ் யூ.. “என்று அவளை வெறுபேத்தினான்
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்...

நான்தான் நம்பர் 32....

நான் ஏன் இப்ப வந்தேனா..

சொல்லிதொலைன்னு கேவலமா திடறீங்க எனக்கு காதுல விழுகுது...

சொல்லிடுறேன்...

முன்னோட்டம் 2 போட்டுருக்கேன் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு படிச்சிட்டு சொல்லுங்க

ஒரு கிப்பி மண்டையன பத்தி சொல்லிருக்கேன்....எப்படி இருக்கு சொல்லுங்க..

முன்னோட்டம் 1 க்கு கமெண்ட்ஸ் லைக் கொடுத்த எல்லோரும் என் நன்றிகள்..

சைலண்ட் ரீடர்ஸ்..நீங்களும் ஒரு கமெண்ட் பிலிக்..

இப்படிக்கு

உங்கள் 32....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் : அக்கு..

ஸ்ரீ அக்கா : சொல்லு...

நான்: அக்குகு.....

ஸ்ரீ அக்கா : ஏலம் போடமா விஷயத்தை சொல்லு டி..

நான் : நான் இன்னொரு டீசர் போட்டுக்கவா...பிலிக்..

ஸ்ரீ அக்கா :ஏய் ஏதோ போன போகுதுன்னு உங்களை எல்லாம் ஒரு டீசர் போட சொன்ன... விட்டா tesar லேயே கதையை முடிச்சிடுவீங்க போல...

நான் & my writters :( ஆக கண்டுபிடிச்சிட்டாங்களே.. )..
No அக்கு..ஒரே ஒரு டீசர்..பிலிக்..

ஸ்ரீ அக்கு : உனக்கு இதான் லாஸ்ட் இனி டீசர் அது இதுன்னு வந்து அக்கு கொக்குன்ன அவ்ளோதான்...போ..போய்.. போட்டுக்க.

நான் : ( நாளைக்கு கதை நாளைக்கு ) சரி அக்கு சமத்து குட்டி உங்க தங்கை...

டியர்ஸ்... நெக்ஸ்ட் டீசர் போட்டுட்டேன் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் போதுமா...

முன்னோட்டம் 3 :

அக்னியுடன் இருப்பது இரு பெண்களா ...? அல்ல ஒருத்தி பெண் மற்றவள் உடையும் அவள் நடையும் மட்டுமே பெண் போல் இருக்க அவள் உடல்வாகு ஒரு ஆணை ஒத்து இருந்தது ஓ.. அவள் ஒரு திருநங்கை போல தனக்குள்ளே கேள்வி பதில் இரண்டையும் சொல்லிக்கொண்டான் துசர் ..

ஷாம்னியும், அந்த பெண்ணும் அங்கே வெளியிலே நிற்க பக்கத்தில் உள்ள கடைக்கு ஏதோ வாங்க சென்றாள் அக்னி.

அந்நேரம் அருகில் நின்று இருந்த பொறுக்கி பசங்க அந்த திருநங்கை பெண்ணை சுற்றி வளைத்து அவளை கேலி செய்தனர்...

இல்லாதவர்களையும் ,இயலாதவர்களை பார்க்கும் போது வாய் இல்லாத பூச்சிக்கு கூட கொடுக்கு முளைத்து விடுகிறது நம் நாட்டில்

“ ஏய் எப்படி இருக்க,” ... என்றும்..” இந்த மீசை இன்னும் 30 டேஸ்ல இ கொட்டிடும்னு டாக்டர் சொன்னிச்சா”, என்றும் சொல்லி அவளை சுற்றி மேலையும் கீழேயும் கைகளால் தட்டிக்கொண்டு சுற்றி சுற்றி வர.. .

என்னதான் பிறப்பிலே தான் ஒரு ஆண்பிள்ளை என்றாலும் இந்த சமூகம் புறக்கணிப்பு, தீண்டாமை,மரியாதையின்மை என அவளின் முதுகெலும்பை முற்றிலும் உடைத்து வைத்து இருக்க அமைதியாக கூனி குறுகி நின்று இருந்தாள் கோபி...

ஷாம்னி பயத்துடன் “விடுங்கடா அவளை..விடுங்க” என பயந்து கொண்டே அவர்களை அடிக்க போக
அவள் கையை பிடித்த ஒருவன் “ ஓ... நீயும் வரியா” என்று அவள் கையை பிடிக்க அவன் கைகளிலிருந்து தன்னை விடுவிக்க முடியாமல்

ஷாம்னி பயந்து கொண்டே அக்னி சென்ற கடையின் வாயிலை பார்த்து கொண்டு இருந்தாள்.

ரோட்டின் மறுபுறத்தில் நின்ற துசரும் இதை பார்த்தவுடன் இங்கே வர முயற்சிக்க ஆனால் அந்த 100 அடி ரோட்டில் விடாமல் காரும் பைக்கும் சென்று கொண்டிருக்க போலீசிற்கு போன் செய்து ரோட்டை கிராஸ் செய்ய முயற்சி செய்தான்.

அங்கே வந்த அக்னி அதை பார்த்ததும் வேகமாக அருகில் சென்றவள் ஒருவனின் சட்டையை பிடித்து திருப்பி தன் கையை மடக்கி அவன் மூக்கில் ஒரு குத்துவிட அடுத்த நொடி தன் முழு பலத்தையும் திரட்டி தன் இரு கைகளையும் அவன் இரு காதிலும் சேர்த்த மாதிரி அறைந்தாள்.

அவன் காதிலும் ,மூக்கிலும் ரத்தம் வந்து சரிய,இன்னொருவனின் பிறப்புறுப்பை தான் கால் முட்டியால் பலம் கொண்டு முட்டியவள் அடுத்து உள்ளவனை தன் கையில் உள்ள லத்தியம் மற்றும் நிக்கலால் ஆன போனை செங்குத்தாக வைத்து அவனின் அடித்தொண்டையில் போர்ஸாக இறக்கினாள்.

மீதம் உள்ள ஒருவனை பக்கத்தில் உள்ள பெட்டி கடையில் உள்ள 7up பாட்டிலை எடுத்து அவன் தலையில் உடைக்க ரத்தம் சரிந்து கீழே விழுந்தான்.

இது அனைத்தும் 2 நிமிட இடைவெளியில் அவர்கள் சுதாரிக்கும் முன் நடந்து முடிந்தது .அவளின் இந்த உயிர் தாக்குதலில் அந்த 4 ஆண்களும் சுரண்டு கிடக்க,கோபியை நோக்கி கத்தினாள்.
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்...

நான் தான் நம்பர் 32....

இன்னும் வயதே கண்டறிய முடியாமல் ஆராட்சியாளர்களையே திணற வைத்துக்கொண்டிருக்கும் என் தாய்மொழி தமிழ் என்பதில் எனக்கு அவ்வளவு பெருமை..

தமிழ் வாழ்க... வளர்க

அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..



எப்படா மணி 10 ஆகும்னு இன்ன வர வாட்சியையே பார்த்துக்கொண்டிருந்ததேன்..

ஏன்னா அதான் நல்ல நேரம்னு ஸ்ரீ அக்கு சொன்னாங்க...

இதோ உங்களுக்காக இதயம் போதுமா முதல் அத்தியாயம்..

படிச்சிட்டி எப்படி இருக்குன்னு நிறை குறைகளை சொல்லுங்க..

சைலண்ட் ரீடர்ஸ் மறுபடியும் சொல்றேன்..உங்களோட ஒவ்வொரு கமென்டஷும் எழுத்தாளர்களின் வெற்றிக்கான படிகள்..

படிப்பதோடு நில்லாமல் ஒரு கமெண்ட் பிலிக்....

இப்படிக்கு

கருத்து திரியில் கண்ணை வைத்து காத்திருக்கும்...உங்கள் 32..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 1:

அந்த இரவுநேர கேளிக்கை விடுதி அதற்குரிய கோட்பாடுகளுடன் உலகில் உள்ள அத்தனை தீயதுகளின் அடையாளங்களோடு முன்பகல் 12 மணிக்கு கூட காலை 9 மணி மணி ரயில் நிலையம் போல காட்சி அளித்துக்கொண்டிருந்தது.

பருவ வயசில் ஆரம்பித்து காதலர்கள் ,கல்யாணமானவர்கள் , பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆனவர்கள் ,ஏன் தாத்தா ஆனவர்கள் கூட வயது வித்தியாசம் இன்றி மது மற்றும் மாதுவுடன் லயித்து கொண்டிருந்தனர்.

அந்த விடுதியின் குறைந்த பட்ச நிபந்தனை பணம் என்பதோடு நின்றுவிட்டது.

அந்த பெரிய ரூமின் மூலையில் உள்ள சோபாஃவில் ஒரு அழகி தன்வசம் உள்ள செயற்கை அழகு சாதன பொருட்களால் பேரழகியாக தன்னை மாற்றி அங்கே அமர்ந்து கொண்டிருந்தாள்.

பாவம் தன்னை அழகுபடுத்தி கொள்ளவே அதிகம் செலவு செய்திருப்பாள் போல உடையில் கொஞ்சம் இல்லை, அதிகமாகவே வறுமை தெரிகிறது.
அந்த உடை மார்பு பகுதியில் ஆரம்பித்து தொடையை தாண்டி ஒரு இஞ்சி கூட இறங்கவில்லை.

அவள் பெயர் நமக்கு தேவை இல்லை.ஆனால் அவளுக்கு அருகில் இருப்பவனின் வர்ணனை கொஞ்சம் தேவை படுகிறது.அந்த யுவதியின் தொட கூடாத இடங்களை எல்லாம் தொட்டுக்கொண்டும் பார்க்க கூடாத இடங்களை பார்த்துக்கொண்டும் இருக்கும் அவர்தான் இல்லை இல்லை அவன் தான் தி கிரேட் ரங்கநாதன் தமிழ் நாட்டின் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவன்.

பின் 50 களில் இருக்கும் போல அவன் வயது அதன் அடியாளமாய் பள பளவென்று முன் வழுக்கையுடனும் நன்கு சரிந்த தொப்பையுடனும் இருந்தான்.

அந்த யுவதியின் வயதில் கண்டிப்பாக அவனுக்கு ஒரு பெண்ணே பையனோ இருக்க வாய்ப்புண்டு..

அதன் பிரதிபலிப்பு , குற்ற உணர்வு எதும் இல்லாமல் தள்ளாட முடியாத போதையில் அவளை இழுத்துக்கொண்டு அந்த அறையில் நுழைந்தான்.

அவன் கொடுத்த பணத்திற்கான வேலை முடிந்ததும் அந்த பருத்த உடம்பை நகர்த்த முடியாமல் நகர்த்திவிட்டு வெளியே வரும்போது அவளுக்கும் நெஞ்சம் கொஞ்சம் சுருக்கென்றே இருந்தது.,

இருந்து என்ன பயன் அந்த எண்ணம் அவளுக்கு எந்த வகையிலும் உதவ போவதில்லை என தெரிந்த அடுத்த நொடி தோளை குலுக்கிக் கொண்டு நகர்ந்துவிட்டாள்.

ஒரு சாமானியனின் ஒரு மாத உழைப்பிற்கு உண்டான பணத்தை தன் அரைமணி நேர இச்சைக்கு செலவழித்துவிட்டு தள்ளாடிய படியே தன் காரை நோக்கி நகர்ந்தது அந்த ஆறறிவு ஜந்து..

தன் காரில் ஏறி கதவை சாத்தும் போது மறுபுறம் கதவை திறந்து கொண்டு ஒரு மச மச உருவம் ஏறி அமர்ந்தது.

என்ன கண்ணை கசக்கி கொண்டு பார்த்த போதும் அடித்த சரக்கு அந்த உருவத்தை தெளிவாக காட்டவில்லை..

“யாரது” என்றான் குளரியபடி

“ அந்த குரல் தனது தனித்தன்மையில் எந்த மாற்றமும் இல்லாமல் இயல்பாகவே உள்ள கம்பீரத்தோடு “ நான்தான் அக்னி “ என்று ஒலிக்க

பெண் குரல் என்றதும் ரங்கநாதன் இழித்தபடி அருகில் செல்ல அவன் அருகாமையில் இருந்து அக்னி சிறிது விலக வெளியில் உள்ள லைட்டின் வெளிச்சத்தில் அவள் முகம் தெரிந்தது.

பால் நிலா போன்ற மாசு மருவில்லா அழகியமுகம் வாகு இல்லாமல் நன்றாக தூக்கி போட்ட போனிடையில் ஹேர் ஷ்டலில் ,ஓசன் ப்ளூ ஜீன்ஸ் அதே நிறத்தில் ஜீன் துணியில் உள்ள ஒரு முழுக்கை சட்டை காதில் வெள்ளை நிற கல் வைத்த சிறு தோடு.

எந்த அலங்காரமும் இல்லாமல் துலக்கி வைத்த வெண்கல விளக்கு போல இருந்தாள் அக்னி.

அவளின் கண்களில் மட்டும் எப்பொழுதும் ஒரு துணிச்சல், ஒரு அலட்சியம் அது அவளுக்கு கூடுதல் அழகை கொடுக்கும்..

அந்த துணிச்சல் அந்த அலட்சியம் எல்லாம் கண்டிப்பாக ஆரோக்கியமானதாகத்தான் இருக்குமே தவிர அகந்தையாக இருக்காது.....

அக்னி அவனை நோக்கி ஒரு வரிதான் ஒரே வரிதான் கூறினாள்.” நாளைக்கு நீ உயிரோட இருக்க மாட்ட அதான் கடைசியா பார்க்கலாம்னு வந்தேன் “ என்று கூறியவள் அடுத்த நொடி காரைவிட்டு இறங்கிவிட்டாள்.

முழு போதையில் இருக்கும் அவனுக்கு அவள் சொல்லும் எதும் புரியவும் இல்லை, புரிய அவன் முயற்சியும் செய்யவில்லை

காரை எடுத்து கொண்டு அதிவேகத்தில் வளைத்து வளைத்து ஒட்டிக்கொண்டு நகரத்திற்கு வெகு தொலைவில் உள்ள விடுதியில் இருந்து வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

அந்த கார் செல்லும் திசையையே பார்த்து கொண்டிருக்கும் அக்னியின் கண்களில் எந்த ஒரு மாறுபாடு, எதையும் சாதித்த உணர்வு என்று எதும் இல்லை மாறாக அது சாதரணமாகவே இருந்தது.

அப்பொழுது தனது அருகில் வந்து நிற்கும் ஸ்கூட்டி சத்தத்தில் திரும்பி பார்த்தாள் அங்கே அவள் தோழி ஷாம்னி கண்களில் மிரட்சியுடன் அருகில் வந்து நின்றாள்.

அவளை பார்த்து லேசாக சிரிக்க ,ஷாம்னி“ பிலிங்கி இது உனக்கு தேவைதானா,ஏன் தேவை இல்லாத பிரச்சனை” என்று படபடப்போடு கேட்க

“ கண்டிப்பா தேவைதான் ஷாமு , வண்டியை எடு” என்றவள் பின்னே ஏறிக்கொண்டாள்.



அந்த இரவு அவள் கொடுத்து வந்த வேலையை சரியாக செய்தது.

இரவு வீட்டிற்கு வரவே 1 மணிக்கு மேல் ஆனதால் அக்னி நன்கு அசந்து தூக்கிக் கொண்டிருக்க அதிகாலை நான்கு மணிக்கே அக்னியின் செல் இரவு வைத்த
அலாரத்தின் பலனாக விடாமல் அடித்துக்கொண்டே இருந்தது.

அதை அணைத்து வைத்துவிட்டு மீண்டும் தூக்கத்தை தொடர நினைக்கும் போது அடுத்த நொடி அந்த கணீர் குரல் அந்த வாக்கியத்தை அவளின் காதருகே உரைக்க உடனே எழுந்தவள் குளித்து விட்டு தூங்கி விழுந்ததின் அடையாளங்கள் ஏதும் இன்றி புத்துணர்ச்சியுடன் கையில் தடிமனான TNPSC புத்தகமும் அருகில் ஒரு ஆப்டியூட் புத்தகமும் இருக்க படிக்க ஆரம்பித்துவிட்டாள் .

7 மணிக்கு கீழே இறங்கி வரும் போது அங்கே அவளின் அன்னையும் தந்தையும் அவள் நடந்து வரும் அழகை பார்த்து கொண்டிருந்தனர்.

அவள் தந்தையோ பெருமையாக அவள் அன்னையோ பெண் பிள்ளை இப்படி இருக்கிறாளே என்று வருத்தத்துடனும்.


ஆம் அவளிடம் எத்தனை உடை இருந்தாலும் அத்தனையும் ஜீன்ஸ் மட்டுமே, அதே போல் சட்டையும் எல்லாம் முழுக்கையில் ஆண்பிள்ளைகள் போடும் சட்டைகள் போலத்தான் .

இப்பவும் கூட ப்ளூ ஜீன் ,.கருப்பு நிற முழுக்கை சட்டையுடன் இறங்கி வந்து கொண்டு இருந்தாள்

“ அப்பா” என்று கூவிக்கொண்டே அவரின் கழுத்தை தொங்கிக்கொண்டும் அவளின் அன்னையின் கன்னத்தில் முத்தமும் ஒரே நேரத்தில் கொடுக்க


அவளின் தந்தை ராமன் “ என் செல்லம் “என கொஞ்ச அவளின் அன்னை சத்யாவோ“ ஏய் கோட்டான் அடங்கி உட்காரு” என்று அதட்டல் போட்டார்.

அக்னி ,ராமன் சத்யா தம்பதியரின் ஒரே செல்வ மகள் தாய் வழி சொத்தான தென்னிந்தியாவின் முன்னணி சிமெண்ட் பேக்டரிக்கும் தந்தை வழி சொத்தான இந்தியாவின் தலை சிறந்த ஆக்ரோ (agro) கம்பெனிக்கும் ஏக போக வாரிசு

ராமனும் சத்யாவும் வேறு வேறு இனத்தவர் இருவரும் வீட்டிற்கு ஒரே பிள்ளைகள் ,இருவரும் ஒருவரை ஒருவர் விரும்ப

சத்யாவின் வீட்டில் அதிக எதிர்ப்பின் காரணமாக சத்யா வெளியே வந்து ராமன் வீட்டின் முழு சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் அவர்களது.

அக்னி பிறந்த கொஞ்ச நாளில் சத்யாவின் பெற்றோர்கள் இறக்கவே வாரிசான சத்யாவிற்கு நிர்வாக பொறுப்புகள் வந்து சேர்ந்தது. ராமன் சத்யா இருவரும் திறமையாக வளர்த்து தங்கள் தொழிலை என்றும் ஏறு முகத்திலையே வைத்து உள்ளனர் .

நம் அக்னிக்கு அந்த மாறி தொழிலை பார்க்கும் எண்ணங்கள் எதுவும் இல்லை அவள் அதிகபட்ச எண்ணம் கனவு எல்லாம் குறைந்தது ஒரு நாளில் ஒருவருகாவது உதவி செய்ய வேண்டும் என்பதே...

இப்பொழுது இரண்டு வருடங்களாக இன்னும் 2 விஷயம் அதனுடன் சேர்ந்து இருக்கிறது அவ்வளவுதான்.வேறு எந்த மாற்றமும் இல்லை

“ ஏன் பாப்பு ஒரு சுடிதார் இல்லை புடவையை ஒருதட கூட கட்ட கூடாதா எப்பொழுதும் இப்படி ஜீன்ஸ், ஷர்ட் போட்டுக்கிட்டு சுத்துரியே “ என சத்யா கூற

“ அம்மா பிலீஸ் எனக்கு இதான் பிடிச்சிருக்கு தொல்லை பண்ணாத.. உனக்காகதான் பாய் கட் வச்சிருந்த ஹார் ஸ்டையில இப்படி முதுகு வர வளர்த்து இருக்கேன் இதுவே எனக்கு அவ்வளோ தொல்லை பண்ணுது “ என்று முகம் சுழிக்க.

இதற்கு மேல் பேசினால் காலை உணவு சாப்பிட மாட்டாள் என அறிந்த சத்யா வாயை மூடிக்கொண்டார்..

இருந்தும் இவ்வளவு அடர்த்தியான முடி இடுப்பிற்கு கீழ் வளர்ந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்ற எண்ணம் எழாமல் இல்லை.

மூவரும் காலை உணவை சாப்பிட்டு கொண்டே அன்றைய தினசரிகளை அலசினர்.

ராமன் “ பாப்புகுட்டி இண்டஷரியலிஸ்ட் ரங்கநாதன் நேத்து நைட் கார் ஆக்சிடெண்ட்ல செத்துட்டாராம் டா இன்னைக்கு நியூஸ் ஹைலைட் அதான் “என்க .

( கொன்னதே உங்க பொண்னுதான்...அங்கிள்...)..

அந்த ரங்கநாதன் யார் என்றே தெரியாதது போல ராமனிடம் அரைமணிநேரம் விசாரணையை முடித்து கொண்டு தன் அப்புச்சி ,ஆச்சியை ( ராமனின் பெற்றோர்) பார்த்துவிட்டு தன் தந்தையிடம் வந்து

“ அப்பா உங்க PA க்கு இன்னைக்கு கொஞ்சம் லீவ் கொடுங்க அவளோட எனக்கும் கொஞ்சம் வெளில வேலை இருக்கு..

( எங்க EB ஆபீஸ் வாசல்ல தான ok ok )

சத்யா “ இன்னைக்கு எங்க.. ஹெல்மட் விற்க போறீங்களா பாப்பு”என்க அதற்கு அக்னி பார்த்த பார்வையில் பஸ்பம் ஆகாமல் தப்பித்துவிட்டார் .

அதை பார்த்து சிரித்து கொண்டே ராமன் “ ஏன் டா உன் பிரண்ட் ஷாம்னி இல்லையா அது என்ன என் PA” என்க

"அவள் இன்னைக்கு லீவு போட மாட்டேன் சொல்லிட்டா அப்பா அதான் கோபம் “ என்றாள்.

ராமன் “ சரி டா அப்பறம் அப்பா நாளைக்கு பெங்களூர் போறேன் திரும்பி வர ஒரு வாரம் ஆகும் அம்மா பிஸின்றதால நீ தான் ஒரு வாரம் பார்த்துக்கணும் என்க “

அக்னி“அப்பா ஒருவாரம்லாம் முடியாது மாக்சிமம் 3 நாள்தான் நான் கவேர்ட்மெண்ட் எக்ஸாம்க்கு படிக்கணும்”

சத்யா “ பாப்பு நாமளே தினமும் 1000 பேருக்கு வேலை கொடுக்குற இடத்தில இருக்கும் போது நீ ஏன் இப்படி ராப்பகலா படிச்சு கஷ்டப்படுற,நாளைக்கே வந்து பொறுப்பை எடுத்துக்கோ “ ..

அக்னி “ எனக்கு அதெல்லாம் வேணாம் அம்மா.. எனக்கு 15000 சம்பளத்துல ஒரு அரசாங்க வேலை மட்டும்தான் “ என்றவள் அடுத்த நொடி வெளியேறிவிட்டாள்..

எப்பொழுதும் ஏன் என்று கேட்க அவள் இருப்பதும் இல்லை அப்படி கேட்டாலும் பதிலும் வருவது இல்லை. சத்யா பாவமாக ராமனை பார்க்க அவர் ஆறுதலாக கண்களை மூடி திறந்தார்.

அக்னி அவள்தோழி ஷாமுவை அழைத்துக்கொண்டு நேராக சென்றது அந்த மத்திய சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு .

அவளின் ஸ்கோடா காரின் டிக்கியில் ஏறி உட்கார்ந்து ஒரு காலை மடக்கி ஒரு காலை கீழே தொங்கவிட்டுக்கொண்டு கைகள் இரண்டையும் பின்னே காரின் மேல் ஊன்றிக்கொண்டு அந்த மின்வாரிய அலுவலகத்தின் வாயிலையே தன் கூலிங் கிளாசிற்கு பின்னே உள்ள கண்களின் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள் ஆவலோடு.

ஒரு இரண்டரை வருடமாக அவளின் இரவுகளும் பகலும் இங்கே வந்து ஒரு அரை மணி நேரமாவது நிற்காமல் முடிவதும் இல்லை ஆரம்பிப்பதும் இல்லை.

தீப்பிளம்பு போல இருக்கும் நம் நாயகி இங்கே வந்தால் மட்டும் எப்பொழுதும் உருகி கரைந்து விடுவாள் அவளின் செல்ல பனிகட்டியால்.

சரியாக 9.25 க்கு கருப்பு நிற பல்சர் பைக் வந்து நிற்க அதில் 6 அடிக்கும் அதிகமான உயரத்துடன் ஒரு ஆண்மகன் இறங்கி ஹெல்மட்டை கழட்ட அவனை அப்படியே அக்னியின் விழிகள் விழுங்கி கொண்டிருந்து.

அடர்த்தியாக முன் நெற்றியில் விழும் முடி, ஹேர் ஜெல்லில் அடங்க மறுத்து திமிறிக்கொண்டிருக்க ..அளவான புருவத்துடன் ஆளை விழுங்கும் தீர்க்கமான அதே நேரம் சாந்தமான கண்களோடு, வேலையின் பொருட்டு தாடி,மீசை ட்ரிம் செய்து அளவோடு இருக்க ,

நல்ல சந்தன நிறத்தில், ஏதே ஒரு நாளைக்கு 1 அல்லது 2 சிகிரெட் வரை குடிக்கும் லேசான மிக லேசான கருத்த உதடுகளுடன் அந்த கருப்பும் உத்து பார்த்தால் மட்டுமே..

( ஆக இது நம்ம கண்ணழகி தெ ரியாது போலவே மாட்டுனடா மாப்ள...)

எதிராளி 10 வார்த்தைகள் பேசினால் ஒரு வார்த்தையில் பதிலை சொல்லும் அமைதியான ஆளுமையும் , கண்களில் கட்டளை பிறப்பிக்கும் புத்தி கூர்மையும் கொண்ட அவளின் அவன் ,துசர்...

துசர் வேதநாயகம் சீப் என்ஜினீர் ஆப் சென்ட்ரல் சென்னை _ EB டிபார்ட்மெண்ட் ( cheif enginer of central chennai).

இந்த இரண்டரை வருடங்களாக தினமும் தன் காதலை சொல்ல வருகிறாள்தான் ஆனால் ஒரு முறை கூட சொல்ல முடியவில்லை அவனின் ஒரு பார்வைக்கு விழுந்துவிடுகிறாள் எப்பொழுதும் .

இப்பொழுது கூட துசர் ஏதோ உறுத்த கண்களை அந்த பகுதியில் சுழல விட அவனின் விழி வட்டத்தில் அவளும் அவள் காரும் அரை நொடி பதிய அதற்கே கார் டிக்கியில் இருந்து உடல் உதற வழுக்கி கொண்டு கீழே விழுந்துவிட்டாள் அக்னி.

துசரை பார்க்கும் போதும் மட்டும் அவன் கண்கள் தன் மேனியோடு கலக்கும் போது மட்டுமே தன் உடம்பில் உணரும் பெண்மையின் அடையாளங்கள் எப்பொழுதுமே அவளுக்கு பெருமைதான்.

இந்த அக்னி என்னும் நெருப்பை அணைக்கும் பனியாக இருந்தான் நம் துசர்..

அவனும் அவளை சில மாதங்களாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் 30 அடி இடைவெளியில் ஆனால் அதை தாண்டி அவன் அவளை ஆராய முற்படுவது இல்லை.ஏன் என்றால் அவனின் இரவுகளையும் கனவுகளையும் ,அவனின் இளமையும் அவனின் ஆராட்சியையும் அந்த இரு விழிக்கு சொந்தகாரி அல்லவா திருடிவிட்டாள்.

கீழே விழுந்த கிடந்த அக்னியை பார்த்த ஷாமினிக்கு வாய் கொள்ளாத சிரிப்பு.

அக்னி பெயருக்கு தகுந்தாற் போல நெருப்பாக இருப்பவள் தன் தோழி, எத்தனை கடுமையான சூழ்நிலைகளை கூட எளிதாக துளி கடினம் இல்லாமல் கடந்தவள்,கடப்பவள்..

இத்தனை ஏன் நேற்று இரவு ஒரு பெரிய தொழிலதிபரை திட்டமிட்டு சுவடுகள் ஏதும் இன்றி கொலை செய்தவள் ஒரு ஆணவனின் அரை நொடி பார்வையில் இப்படி விழுந்துகிடக்கிறாளே என்று .

இதைதான் காதல் என்பார்கள் போல என்று யோசித்தவளின் நினைவுகளில் ஒரு கோணங்கியின் முகம் வந்து போனது.

ஷாமினுக்கும் அக்னிக்கும் ஒரு வயதுதான் என்றாலும் அவளிடம் பிரமிப்பாக பார்க்கும் விஷயங்கள் ஷாமினிக்கு நிறைய உள்ளன.

“ ஷாமு “ என்ற அக்னியின் குரலில் அவளின் சிந்தனை அறுபட “சாரி பிலிங்கி எதோ யோசனையில் என்று அவளை நோக்கியவள்

“ என்ன பிலிங்கி இன்னைக்கும் அவுட்டா “என்று சிரிக்க அவளை முறைத்து கொண்டே அமர்ந்து இருந்தாள் அக்னி

அவளின் செய்கைகள் அனைத்தும் முன்னுக்கு பின் நிறைய முரண்பாடுகளோடு இருக்க காரணம் அவளுக்கே வெளிச்சம்...


போதுமா....
 
Status
Not open for further replies.
Top