All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இதயம் போதுமா கதை திரி..

Status
Not open for further replies.

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 7 :

ஒரு வாரமாக தன்னவனை பார்க்காமல் இன்று பார்க்கிறோம் என்ற சந்தோஷத்தை அவனிடம் பகிர முடியாத இயலாமையில் அது கோபமாக மாற “ அவனின் கன்னத்தில் கோபமாக அறைந்தவள்

விறு விறுவென்று வெளியே சென்று மேனஜரிடம் சத்தம் போட்டாள் “ இப்படித்தான் லேடி கஷ்டமர பையனவிட்டு அட்டன் பண்ண வைப்பீங்களா..அவன் மேல இப்ப ஆக்சன் எடுக்கலான கன்சியூமர் கோர்ட்ல கேஸ் போடுவேன்,மேனேஜமெண்ட்ல கம்பிளைன்ட் பண்ணுவேன்” என்று சத்தம் போட்டாள்.

( ஆமா இங்க இப்படி காச் மூச்சுன்னு கத்து அன்னைக்கு ஒருத்தன் கை புடிச்சி கலாட்டா பண்ணுனவன்ட மட்டும் பயப்படு எங்க குட்டினா உங்க எல்லாருக்கும் எலக்காரமா...)

மேனேஜரும் இதுதான் சாக்கு என்று அவன் மேல் உள்ள பழைய காண்டில் “ சாரி மேடம் அவனை இப்பவே வேலையைவிட்டு துக்குறேன் “ என்றவன் “ கண்ணா உங்களுக்கு இனி இங்க வேலை இல்லை “ என்க ஷாம்னிக்கு பாவமாக போய்விட்டது .

“ இல்லை ...வேலையைவிட்டு எல்லாம் எடுக்க வேணாம் ஜஸ்ட் ஒரு வார்ன் மட்டும் பண்ணுங்க “ என்க

அதுவரை அவள் அடித்த கன்னத்தை முத்தம் கொடுத்தது போல தடவி கொண்டிருந்தவன் ஷாம்னியின் குரலில்

“ அய்யோ ஜிங்ஸ் எனக்கு இந்த வேலை வேணாம்,வா நாம போகலாம் என்று அவள் கையை பிடித்து கொண்டு வெளியே செல்ல அங்கு உள்ளவர்கள் எல்லாம் அவளை வித்யாசமாக பார்த்தார்கள் .

கண்ணாவின் கையிலிருந்து தன் கையை உருவ முயன்று தோற்றவள் “ விடு டா பே பண்ணிட்டு வரேன் “ என கடுகடுக்க

“அதெல்லாம் வேணாம் என் ஒரு மாச சம்பளம் அவங்களிடம் இருக்கு அதில கழிச்சுபாங்க” என்றவன் வெளியே வந்தே அவள் கையைவிட்டான்.

“ அப்பறம் ஜிங்ஸ் அத்தான ஒரு வாரம பார்க்காம கொஞ்சம் ஒல்லியான மாறி இருக்க “ என்க..

“சாரி வேலையை விட்டு தூக்குவாங்கன்னு நினைக்கல “ என்று அவள் நிஜமாகவே வருத்தப்பட

“ ஏய் ஜிங்கிலி நோ ஒரிஸ் ,இது என் 10வது வேலை “ என்றான் கூலாக அதில கடுப்பாகியவள் “ ஏன் அங்கையும் இப்படித்தான் யாருக்கும்....ம....புடுங்குனத்துக்காக அனுப்பிட்டாங்களா” என பைக்கை எடுத்துக்கொண்டே கேட்டாள்

அவள் கேள்வியில் “வர வர என்னிடம் ரொம்ப கேட்ட வார்த்தை பேசுற ஜிங்ஸ்” என்றான் சிரித்துக்கொண்டே

அவளும் அதை உணர்ந்தே இருந்தாள் அப்பா முதல் அனைவரிடமும் சொன்ன சொல்லிற்கு தலை யை ஆட்டிவிட்டு வருபவள் இவனிடம் மட்டும் நன்றாக வாய் அடிப்போதோடு அனைத்து கெட்ட வார்த்தைகளும் சொல்லி பேசுவது என இருந்தாள்.

“ஜிங்ஸ் உன் போன் நம்பர் தாயேன் உன்னை ஒரு நாள் பாக்குறதுக்கு காலையிலிருந்து உன் வீட்லேர்ந்து பாலோ பண்ண வேண்டியதா இருக்கு,அதுவும் முக்கால்வாசி நேரம் அந்த நாச்சியார் IPS கூட தான் சுத்திக்கிட்டு இருக்க ,

4 நாளை நீ எப்போ கிளம்புற எப்போ வரேன்னு தெரியாம உன் வீட்டு வாசல்லையும்,ஆபிஸ் வாசல்லையும் நின்னு நின்னு வெறுத்து போய்ட்டேன் “ என்றான் பாவமாக..

“ உன்னை யாரு வெயிட் பண்ண சொன்னா, இங்க பாரு கண்ணா நான் விட 2 வயசு பெரியவ” என்று கூறியவனின் ஊடே புகுந்தவன் “ சின்ன திருத்தம் 1 இயர் 11 மந்த்ஸ் தான் பெரியவள்” என்றான்

( அட கோணங்கி மண்டயனுக்கு கொழுப்ப பார்த்தீங்களா ,டேய் குட்டி பூவ பூன்னு சொல்லலாம் புய்ப்பம்னு சொல்லலாம் நீ சொல்ற மாதிரியும் சொல்லலாம் அவள் சொல்ற மாதிரியும் சொல்லலாம்...)

அவன் வார்த்தையில் கடுப்பின் உச்சத்திற்கு சென்றவள் “அடேய்ய்...”என்று இரு கைகளால் அவன் கழுத்தை நெறிக்க போகும் போது அவள் இரு கைகளையும் தன் இரு கைகளால் சேர்த்து பிடித்தவன்

“பாரு ஜிங்கிலி நீ ஆளுதான் வளர்ந்து இருக்க ,மத்த படி நீ எல்லா விஷயத்துலையும் ரொம்ப வீக்... அத்தான் ரொம்ப ஷ்ட்ராங் அதுல, உனக்கு சொல்லிதரேன், அதனால நீ உன்னை பெரிய பொண்ணுனேல்லாம் சொல்லிக்காத “ என்றவனின் பார்வை ஷாம்னியின் உதட்டின் மீது படிய அதில் முகம் சிவந்தவளின் முகத்திற்கு அருகே தன் முகத்தை கொண்டு சென்றான்,

அதில் பாவை அவளின் கண்கள் தானாக மூட குட்டி அவளின் இமைகளுக்கு பின்னே அலைபாயும் அவள் கருவிழிகள் கண்ணாடி போல தெரிய நமட்டு சிரிப்புடன் ரசனையாக பார்த்தான்

அந்த மறைவான இடம் அவனுக்கு வசதியாக போக தன் மூச்சு காற்று அவள் முகத்தில் விரவும் நெருக்கத்தில் தன் முகத்தை வைத்து கண்கள் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

ஷாம்னிக்கோ நிலைமை மோசமாக இருந்தது “எதையாவது செய்யேன் ,செய்து இந்த தவிப்பை கொஞ்சம் குறையேன், ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடேன்” என உள்மனதில் உரக்க கத்திக்கொண்டிருந்தாள்.

காதலை வெளிப்படையாக காட்டும் அவனின் தவிப்பை விட உள்ளுக்குள் கழுத்து வரை காதலை வைத்துக்கொண்டு அதை மறைக்கும் அவளின் தவிப்பு அதிகம் அல்லவா..மூச்சு முட்டும் அவஸ்தை அல்லவா...

“ குட்டி பிளீஸ்...ஏன் இப்படி பண்ற” அவனின் மூச்சுக்காற்று முகத்தில் பரவுவதால் உண்டான உடல் நடுக்கத்தோடு கேட்க

குட்டி தன் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஹஸ்கி குரலில் “ எப்படி பண்றேன் ஜிங்ஸ்” என்றான்

“ இது நம்ப சமூக அமைப்புக்கு எதிரானது கண்ணா, நம்மையோ ,நம்ப கல்யாணத்தையோ யாரும் ஏத்துக்க மாட்டாங்க..” என்றவளின் குரலில் அவ்வளவு வருத்தம்...

குட்டிக்குதான் அவளின் மனம் ஏற்கனவே தெரியுமே அவள் தனக்கும் அவளுக்கும் உள்ள வயது வித்யாசத்தால்தான் தன்னை மறுக்கிறாள் என்று,

அவளின் வருத்த குரல் அவனை வருத்த ஷாம்னியை இயல்பாக்கும் பொருட்டு அவள் கையைவிட்டு அவளின் கன்னத்தை தாக்கியவன் “ ஜிங்ஸ் உன்ன யாரு கல்யாணம்லாம் பண்ண சொன்னா,லவ் அப்பறம் பலானது பலானது மட்டும்தான் என் கூட மத்தபடி நீ உங்க வீட்ல பார்க்குற என்னைவிட பெரிய பையனையோ கல்யாணம் பண்ணிக்கோ பிராப்ளம் சாலவ்ட்” என்றான்...

அதில் தன் மாய வலை அருந்தவள் அவனின் கையை வெடுக்கென்று தட்டிவிட்டு குளம் கட்டிய கண்ணீரை உள்ளே இழுத்துக்கொண்டு “ சீ...நீ எல்லாம் ஒரு மனுசனா “ என்றவள் கலங்கிய மனதுடன் பைக்கை விருட்டென்று கிளப்பி கொண்டு சென்றுவிட்டாள்.

தான் காரணத்தை சொன்னதும் “ அதையெல்லாம் நான் பார்த்துகிறேன்” , ஊருகாககெல்லாம் வாழ முடியாத ஜிங்ஸ்” , “ எனக்கு உன் சம்மதம் போதும் வேற யாரு என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை”, என்ற வார்த்தைகளைதான் அவள் எதிர்பார்த்தாள்.

ஆனால் அவனோ.. ..,என்ன முயன்றும் பைக்கில் செல்பவளின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வடிந்தது.அவனின் குணம் தெரிந்தும் தான் மயங்கியது தன் தப்புதான் என தன்னையே திட்டி கொண்டவள் இனி அவனிடம் பேச கூடாது என முடிவெடுத்துக்கொண்டாள்...

கண்ணாவும் அவளின் வெளிறி சுருங்கிய முகத்தை பார்த்ததும் தன் விளையாட்டு தனத்தை கைவிட்டவனாய் அடுத்த முறை கண்டிப்பாக அவளிடம் சரியாக பேச வேண்டும் தன் மனதின் காதலை அவளுக்கு உணர்த்த வேண்டும் என நினைத்துக்கொண்டான்.

பாவம் அவனுக்கு தெரியவில்லை நாளைக்கே ஒரு பெரிய கேஸில் பைல் ஆகி அவளிடம் மாட்டிக்கொண்டு முழிக்க போகிறான் என்று..

********÷÷÷÷
மறுநாள் காலையில் அக்னியின் வீட்டின் ஹாலில் மிகுந்த சத்தத்துடன் நியூஸ் ஓடிக்கொண்டு இருந்தது
அதன் பிரதான செய்தி இதுதான் “ மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான ***** ன் நிர்வாகியும் பிரபல தொழில்திபருமான சாக்கோ ஜோஸ்குட்டி கடந்த ஒரு 3 நாட்களாக காணவில்லை ,தொழில் ஒப்பந்தத்திற்காக தனது சொந்த ஊரான கேரளாவிற்கு சென்றவர் எங்கே சென்றார் என தெரியவில்லை என்பதே..

இதை பார்த்துக்கொண்டு இருந்த அக்னியின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தது மேலும் அவளின் நினைவுகள் துசர் அவளை கண்டுகொண்டு தன் காதலை சொன்ன நாளிலிருந்து இரண்டு நாட்கள் முன்னாடி பயணப்பட்டது..

அன்று காலையில் அவளிற்கு வந்த தொலைபேசியில் வந்த உறுதியின்படி தனியாக கேரளா சென்றாள். தானும் வருகிறேன் என்று கூறிய ஷாம்னியை கட்டாயபடுத்தி வேண்டாம் என்று சொன்னவள் புறப்பட்டுவிட்டாள்.

அன்றைய இரவு அந்த நட்சத்திர ஓட்டலில் தனக்கான வேலையை முடித்து விட்டு தனது காரில் சென்று கொண்டிருந்தான் சாக்கோ.

நேர்மையான தொழிலை விட அவன் செய்யும் பல தொழில்கள் சட்டத்துக்கு புறம்பானது
அதனால் யாரையும் இதுபோல ரகசிய ஒப்பந்தத்திற்கு செல்லும் போது அழைத்து வருவதில்லை.காலையில் தான் கையெழுத்து இட்ட ஒப்பந்தம் சும்மா கண் துடைப்பிற்காக.

இதோ இப்பொழுது நடந்தது அவனின் பலகோடி பணத்திற்கான அஸ்திவார சந்திப்பு ,பின்னே இருக்காதா இன்னும் ஒரு வருடத்திற்கு இந்தியாவில் விற்கப்படும் அனைத்து போதைப் பொருட்களுக்கும் இவன்தானே டீலர் .

ஒவ்வொரு கிலோவிற்கும் 25 % லாபம் அல்லவா அந்த சந்தோஷத்தில் சென்று கொண்டிருந்தான் .

அநியாயம் செய்வதற்கு சம்பளமும் ,சந்தோஷமும் அதிகம் அதே போல தண்டனையும் அதிகம் என்பதை இவன் போல அயோக்கியர்களுக்கு யார் சொல்வார்கள்..

ஒரு 10 நிமிட ம் சென்ற பின் காரின் முன் வீல் பஞ்சர் ஆகி நிற்க கடுப்புடன் கீழே இறங்கினான்.கேரளா சாதாரணமாகவே மரங்கள் அடர்ந்த பகுதி.

அதுவும் அவன் நிற்பது இரண்டு புறம் காடு நடுவில் ரோடு மட்டும் உள்ள இடம்.அங்கே சில இடங்களில் நெட்வோர்க் கிடைப்பதும் அரிதே
தன் போனில் முயற்சி செய்து செய்து தோற்றவன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு நின்றான்.

ஒரு 5 நிமிடம் கழித்து தனது வலப்புறம் யாரோ வருவது போல தோன்ற அவன் திரும்பிய அடுத்த நொடி அக்னி அவன் முகத்தில் மயக்க மருந்தை அடிக்க அப்படியே மயங்கி சரிந்தான்.

மணி 11 இருக்க அவனை இழுத்து மறைவாக நின்று இருந்த தன் கார் டிக்கியில் போட்டவள் ,

அவளிடம் உள்ள கயிற்றால் சாக்கோவின் காரை தன் காரின் பின்னே கட்டியவள்.அவனின் காரை டௌ(tow) செய்து இழுத்த படி சென்னை நோக்கி பயணமானாள்.

ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகு அவனின் காரை அங்கு உள்ள பெரிய ஏரியில் தள்ளிவிட்டவளின் கார் அதிவேகத்தில் பயணமானது.

முகம் எல்லாம் ஏதோ பிசு பிசுவென்று இருக்க கை , கால்கள் எல்லாம் அசைக்க முடியாமல் கடினமாக இருக்க கண்களை திறந்தான் சாக்கோ .

ஒரு ஆள் உயர பெட்டியில் அவனின் தலை மட்டும் வெளியே தெரியும் படி அடைக்க பட்டிருக்க ,பெட்டியின் உள்ளே அவனின் உடல்பகுதி கயிரால் நகர முடியாத படி அவனை நிற்க வைத்து கட்டப்பட்டிருந்தது .

அவனின் முகம் முழுவதும் தேன், சக்கரைப்பாகு, சுகர் , கூலாக அரைத்த பழச்சாறு என அனைத்து இனிப்பு பண்டங்களால் அபிஷேகம் செய்ய பட்டிருந்தது.

இது என்ன இடம், யார் தன்னை இப்படி செய்தது என தெரியாமல் அவன் முழிக்க அப்பொழுது அங்கே தன் வழக்கமான கனமான ஜீன்ஸ், முழுக்கை சட்டையுடன் வந்தாள் அக்னி அந்த பத்ரகாளியின் அவதாரமாய்.

சாக்கோவை நோக்கி ஏளனமான குரலில் “ ரங்கநாதன் ,ரெட்டியோட கம்பேர் பண்ணும்போது உன்னோட சாவு கொஞ்சம் பயங்கரமானதுதான்”என்றாள்

“ என்னது ரெட்டி,ரங்கநாதனை கொன்றது இவளா” என்று அவன் யோசிக்கும் முன்னே சாக்கோவின் முகத்தில் ஒரு பாட்டில் ஈ, ஒரு பாட்டில் எறும்பு , ஒரு பாட்டில் தேனி என அனைத்தையும் கொட்டினாள்.

அவைகளும் கரும்புகாட்டில் புகுந்த யானை போல அவனின் முகத்தில் உள்ள இனிப்பை நீயா நானா என்று போட்டி போட்டு கடித்துக்கொண்டு எடுத்ததுகள்..

ஒரு இன்ச் கூட அசைய முடியாமல் அவன் அடைக்கப்பட்டிருக்க “ காப்பாத்து, காப்பாத்து “ என்று அவன் அடிவயிற்றால் கத்தவே முடிந்தது.அப்பொழுது அவன் வாயிலும் எல்லாம் நுழைந்துவிட்டது
அந்த பாழடைந்த இடத்தில் அவனின் குரலுக்கு செவி சாய்க்க யாரும் இல்லை அக்னி உட்பட .

கடைசியில் அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஓரறிவு ஜீவன்களிடம் சிதைந்து உயிரை விட்டது..

தன் வீட்டின் கடிகார சத்தத்தில் நிகழ்காலம் உரைத்த அக்னியின் முகம் நெருப்பு கங்காக சிவந்து கிடந்தது 3 கொலை செய்தும் அவளின் அந்த கோபம் குறையவில்லை , அவர்களுக்கு இன்னொரு பிறப்பு கொடுத்த கொல்ல சொன்னாலும் இதை விட கொடூரமாக கொலை செய்வாள்.அவ்வளவு வெறி அவளுக்கு...

போதுமா.....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 8 :

அன்று அக்னி துசரை ஷாம்னிக்கு அறிமுகபடுத்தி வைப்பதற்காக ஷாம்னியை அழைத்துக்கொண்டு அவனை பார்க்க செல்ல சோனமுத்தும் அவர்களோடு சேர்ந்து கொண்டான்.

அக்னி எவ்வளவு சொல்லியும் அவளும் துசரும் காதலை பகிர்ந்து கொண்டதை ஷாம்னியோ , சோனமுத்தோ நம்பவில்லை

“ அக்கா சும்மா வேடிக்கை பார்த்துட்டி வந்துட்டு நான் கலாய்ப்பன்னு அடிச்சு விடாத “ என்க,

ஷாம்னியோ “ ப்லிங்கி நேத்து அண்ணனை பார்த்து பிரேக் டான்ஸா இல்லை , குச்சுபுடியா” என கலாய்த்தாள்.

( அச்சோ அவன் உனக்கு அண்ணன் முறை இல்லை மாமா முறை வருது.....)

அவர்கள் இருவரையும் முறைத்தவள் பேசாமல் காரை ஓட்டிக்கொண்டு அந்த காபி ஷாப்பின் முன்னே நிறுத்தினாள்.

உள்ளே சென்று அமர்ந்தவுடன் “ அக்கா எனக்கு ஒரு கூல் காபி, அப்பறம் ஐஸ் கிரீம் “ என்றான் சோனமுத்து..

“உனக்கு செலவு பண்ணி,செலவு பண்ணிதான் டா நான் பார்ட் டைம் பார்த்து சம்பாதிக்குர பணம் எல்லாம் போகுது “ என அவள் திட்ட

“ ஹலோ அக்கா தத்து எடுத்து வளர்க்குறதுன்னா சும்மாவா , அத்தோட நான் டீக்கட்டையில வாங்குற சம்பள பணத்த உன்னிடம் தானே கொடுக்குறேன்” என அவன் ரூல் பேச

ஷாமு அவன் பதிலில் சிரித்துக்கொண்டே “ டேய் சோனு உன் சம்பள பணம் உன் ஒரு டேர்ம் பீஸுக்கு கூட பத்தாதுடா “ என்றாள்.

மூவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்க அப்பொழுது கடையின் உள்ளே நுழைந்த தன்னவனை அக்னியின் விழிகள் கண்டுகொண்டது.இன்று சண்டே என்பதால் ப்ளூ கலர் ஜீன்ஸ் வெள்ளை நிற முழுக்கை சட்டையில் அடர்ந்த தன் தலை முடியை இரு கைகளால் சரி செய்து கொண்டே வந்தான்.

எல்லா பெண்களை விட உயரத்தில் சற்று அதிகமாக இருக்கும் அக்னியின் உயரத்திற்கு அட்டகாசமான பொருத்தமாக இருப்பான் துசர்.

கழுத்தில் கருப்பு கயிரில் கோர்த்த ருத்ராட்சம் ,கையில் ஒரு சில்வர் காப்பு அணிந்து கொண்டு அய்யனாராய் நடந்துவந்தான் அவளவன்...

சொன்ன நேரத்தை சற்று நேரம் பிடித்ததால் நடையில் சற்று வேகம் இருந்தது அவன் கண்கள் இட வலமாக அவர்கள் இருக்கும் இடத்தை தேடியது.....

அக்னி “ துசர்” என்றதும் அவள் குரல் வந்த திசையை நோக்கி மலர்ந்த முகத்துடன் வந்தவனின் கையினூடே தன் கையை விட்டு அவன் முழங்கையை பிடித்தவள் “ மீட் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் துசர் “ என்றாள் பெருமையுடனும் வெட்கத்துடனும்

அதை பார்த்த ஷாம்னிக்கு கண்கள் கரித்தது “அப்பப்பா இந்த காதலுக்குதான் எவ்வளவு இடர்களை தாண்டி இருக்கிறாள், இன்னும் எவ்வளவு தாண்ட போகிறாள்,துசர்க்கு தெரியாத ரகசியங்கள் கூட அவள் வாழ்க்கையில்அவ்வளவு இருக்கிறதே... அத்தனையும் அவனுக்காக மட்டுமே..

அவள் செய்யும் அத்தனை விஷயங்களுக்கும் அடிப்படை அவள் காதலே..

அவை எல்லாவற்றிக்கும் ஈடாக அவளின் துசர் கிடைத்துவிட்டான்.

ஷாம்னி கண்கலங்க
பார்த்து கொண்டிருக்க சோனமுத்துவோ நம்ப முடியாமல் “ மாமா உண்மைய சொல்லுங்க அக்காதான் உங்கள்ட சொன்னிச்சா ,இல்லை நீங்க போய் லாக் பண்ணிடீங்களா என “ சரியாக கேட்க..

அக்னி அசடு வழிந்து நிற்க துசர் அவளை தோளோடு அணைத்து கொண்டு சிரித்தான்.

ஷாம்னி “ ப்லிங்கி அப்ப சோனு சொல்றதுதான் நிஜமா “ என கேட்டாள்.

“ஆமா மா நான் மட்டும் இவளை கண்டுபிடிச்சு லாக் பண்ணல ,உன் பிரண்ட் இன்னும் எவளோ நாள் கண்ணா மூச்சிதான் ஆடிருப்பாளோ “ என்றான்

அனைவரும் சிறுது நேரம் பேசிக்கொண்டிருக்க கிளம்பும் நேரம் ஷாம்னி துசரிடம் “ அண்ணா அக்னி ரொம்ப ரொம்ப தைரியமான பொண்ணு,எதுக்கும் யார்க்கும் பயப்பட மாட்டாள், அவளோட குணத்துலேர்ந்து வித்தியாசப்படுறது உங்கள பார்க்கும் போது மட்டும்தான்,அவளோட காதலை நான் சொல்றதவிட நீங்களா ஒரு நாள் உணர்வீங்க,

அவளுக்கு இருக்குற வசதிக்கு ஈஸியா ஒரு வேலைய வாங்கிருக்காலாம் ,ஆனால் அவள் என் துசருக்கு நான் எதுவா இருந்தாலும் நேர்மையான வழியில்தான் பண்ணுவேன்னு இன்னைக்கு வர கஷ்டப்பட்டுட்டு இருக்காள் ,

அவள் நிறைய சிக்கல்ல மாட்டி இருக்கா, எல்லா சூழ்நிலையிலும் நீங்க அவள் கூட சப்போர்டா இருக்கணும், அவள் செய்றது எல்லாம் திமிரா தெரியும் ஆனால் கண்டிப்பா அதுக்கு பின்னால ஒரு நியாயமான காரணம் இருக்கும் “ என உருக்கமாக சொல்ல

துசரோ “ நானும் அவளும் இனி வேறு இல்லமா,அவளோட எல்லாமே என்னோடது , எனக்கு அவள் மேலே 100% நம்பிக்கை இருக்கு ,என்னை வாழ்க்கை துணையா செலக்ட் பண்ணதுக்காக அவள் வருத்த படுற மாறி நான் என்னைக்குமே நடந்துக்க மாட்டேன்..” என்றான் உறுதியாக

அக்னி சந்தோசத்துடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் .தன் காதலுக்காக பட்ட கஷ்டங்கள் எல்லாம் தகுதியானவனுக்கே என்பதில் அவ்வளவு நிறைவு அவளுக்கு...
துசரும் அவளின் முன் நெற்றியில் இதழ் பதித்து தன்னுள் அழுத்தி புதைத்து கொண்டான்
*****
அக்னியின் முன் சோகமாக இருந்தால் இனம் கண்டுகொள்வாள் என்பதால் நார்மலாக இருப்பது போல காட்டிக்கொண்டு ,மனதின் உள்ள காதலை அவனிடம் காட்டிக்கொள்ளமல் அவனிடம் முறைத்துக்கொண்டும் இரவில் தூக்கம் தொலைத்து சோர்ந்து போனாள் ஷாம்னி.அவள் இயல்பையே தொலைத்து திரிந்தாள்.

கோவிலுக்கு சென்றாள் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என்று வடபழனி முருகன் கோவிலுக்கு செல்லலாம் என்று கிளம்ப

ஆனால்அங்கே ஏற்கனவே அவளுக்குக்கான கொடுமை தைய தக்கா என்று ஆடிக்கொன்டு நிற்கப்போவதை அவள் அறியவில்லை...

“ஒருத்தன் வீட்ல வேலை இல்லாமா இருந்தா இப்படித்தான் வேலை வச்சிட்டே இருப்பீங்களா,இந்த மகாராணி கோவிலுக்கு தனியா போக மாட்டாளா, இவளுக்கு துணைக்கு ஒரு ஆளா, அதுவும் இந்த பட்ட பகல்ல...

ஒரு ஊர ஒண்ணா முழுங்கும் இது தனியா போக பயபடுத்துன்னு நான் நம்பனுமா “ என கண்ணா கத்திக்கொண்டே கிளம்பி கொண்டிருக்க அவனுக்கு பதில் சொல்ல யாரும் இல்லை..

ராமசாமியும், பருவதமும் தர்ஷிகா ( துசரின் தங்கை) ஹாஸ்டலில் தங்கி படிப்பாதால் அவளுடன் போனில் பேசிக்கொண்டிருக்க மற்றவர்கள் வேலைக்கு கிளம்ப விசாலி கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.

“நான் நேத்து கேட்ட புக்க ஒழுங்கா வாங்கி கொடுத்த உனக்கு இன்னைக்கு இந்த நிலைமை வந்துருக்குமா” என பைக்கில் போகும் போது குட்டியை வம்பு வளர்த்தாள்.

குட்டி எதுவும் பேசாமல் கண்ணாடி வழியே அவளை முறைத்து கொண்டே சென்றான்.

துசர் சொன்ன ஒரே காரணத்திற்காக அவளை அழைத்துக்கொண்டு அதே வடபழனி கோவிலுக்கு சென்றான்.அன்று கிருத்திகை என்பதால் கோவில் கூட்டமாக இருந்தது..

குட்டியும்,விசாலியும் முன்னே வரிசையில் நிற்க ஷாம்னி அவர்களுக்கு 5 பேர்கள் தள்ளி நின்றாள்.

விசாலிக்கு முன்னே உள்ள ஒருவன் அவன் மேலே வேண்டும் என்றே உரசி உரசி கொண்டு நிற்க,அவனின் உடல் முழுவதும் இவள் மேல் உரசிக்கொண்டு இருப்பது போல சாய்ந்து நிற்க ,விசாலி நிற்க முடியாமல் அவஸ்தையுடன் நிற்பதை உணர்ந்த குட்டி என்னவென்று பார்க்க அவன் செய்யவதை உணர்ந்து கோவில் சன்னிதானத்தில் எதும் செய்ய முடியாமல் அவனை முறைத்து பார்த்தவன்..,

விசாலியை தன் கை வளைவில் நிற்க வைத்து பிடித்து கொள்ள விசாலியும் அவனுடன் ஒன்றி நின்று கொண்டாள்..

அந்தகாட்சி தப்பாமல் ஷாம்னியின் கண்ணில் விழுந்து இதயத்தை பிளக்க செய்தது...

தன் தங்கையை,தன் அக்காவை,தாயை யாரையாக இருந்தாலும் பாதுகாப்பது ஒரு ஆணின் கடமை அது தெரியாமல் சரியாக தவறாக நினைத்தாள் ஷாம்னி.

ஆக அவன் தன்னிடம் பழகியது பொழுது போக்கிற்காகதான் என்ற முடிவுக்கு வந்தவள் இன்னும் தன்னுள் நொறுங்கி போய் வெளியில் வர
அங்கே அந்த பொறுக்கியை கண்ணா அடித்து கொண்டிருக்க விசாலி “வேணாம் அத்தான்,வேணாம் அத்தான் “ என அவன் கையை பிடித்து தடுக்க அதை பார்த்து கேவளை அடக்க முடியாமல் சத்தமாக கேவியவள் அவ்விடம் விட்டு ஓடினாள்.

இந்த காதலில் தான் எவ்வளவு பொஸஸிவ்.... ஒரு தீண்டல் கூட உயிரை அறுக்கிறதே...

( ந்தாம்மா... விசாலி வீட்ல எல்லாம் வெட்டி தண்டம்,வீணா போன முண்டம்னு சொல்லி திட்ட வேண்டியது.. இப்ப என்ன அத்தான் பொத்தான்.. பாரு புள்ள எப்படி அழுகுதுன்னு...)

அந்த ரூமில் 3 பெரும் 3 மூலையில் அமர்ந்து அரண்ட முகத்துடன் யோசித்து கொண்டிருந்தனர் .
அந்த யோசனைஅவர்களின் நிழல் உலக நண்பர்கள் 2 பேரின் மரணம் மற்றும் ஒருவர் காணாமல் போனதை பற்றியே.

அந்த சம்பவங்கள் அனைத்தும் சாதரணமாக நடந்தது போல இருந்தாலும் ஒன்றுக்கு ஒன்று ஏதோ தொடர்பு உள்ளதாகவே அவர்களுக்கு தோன்றியது ,ஏன் என்றால் ரங்கநாதன்,ரெட்டி, மற்றும் சாக்கோ ஆகிய மூவருக்கும் தொழில் முறை தொடர்பு என்பது ஏதும் இல்லை,அவர்களின் ஒரே தொடர்பு அவர்கள் நண்பர்கள் என்பதுதான் .

என்ன யோசித்தும் தங்கள் 6 பேருக்கும் பலம் பொருந்திய ஒரே எதிரி என யாரும் இல்லை என்றே தோன்றியது.

உயிர் பயம் வர என்ன செய்ய யாரிடம் உதவி கேட்க என புரியாமல் முழித்து கொண்டிருந்தனர்.

அவர்கள்தான் அமித்குமார்,சதீஸ் ஜஸ்வால், சந்தீப் அக்னியின் அடுத்த மரண தண்டனை பட்டியலில் இருப்பவர்கள்.

என்ன முயன்றாலும் இவர்களின் வாத்து மூளையால் அவளை கண்டுகொள்ள முடியாது என்பதும் அவர்களின் மரணம் உறுதி என்பதையும் அவர்கள் உணரவில்லை...

அக்னியும் அவர்களுக்கு சிறிய அளவு சந்தேகம் வந்ததை உணர்ந்தே இருந்தாள்.. அதற்காக எல்லாம் அவள் இந்த வேட்டையை
நிறுத்துவதாக இல்லை...இது போன்ற விஷங்களை வேர் இல்லாமல் அழிக்கவே அவளும் விரும்புகிறாள்.

ஆனால் துசரின் மீதான காதல் அதை செய்ய விடாமல் இவர்கள் மூவருடன் முடித்துக்கொள்ள வற்புறுத்துகிறது..
அவளுக்கும் அவனுடன் ஒரு சராசரி வாழ்க்கை வாழ வேண்டும் என்று கொள்ளை ஆசை ஏற்கனவே இவளின் கோட்பாடுகள் பாதி அதுக்கு தடையாக இருக்க இன்னும் சிக்கல் படுத்திக்கொள்ள அவள் விரும்பவில்லை..
**
ஒரு வாரமாக ஷாம்னியை காணாததால் குட்டி கவலையாக அவள் ஆபிஸ் வாசலிலும் அவளின் வீட்டு வாசலிலும் காத்துக்கிடக்கிறான் ஆனால் அவளின் ஜிங்ஷை கண்ணில் காணவில்லை.

அவளோ கண்ணாவை காண கூடாத என்பதற்காக காலையில் சீக்கிரம் அலுவலக காரில் ஆபிஸ் செல்பவள் நைட் நேரம் கழித்தே வீட்டிற்கு வருகிறாள்.எங்கே அவனை பார்த்தால் தன் காதலை யாசகம் கேட்டு விடுவோமோ என்று ஓடி ஒழிந்து கொண்டு திரிகிறாள்.

அன்று காலையில் ஷாம்னியும் அக்னியும் 1000 லைட் பகுதியில் ஹெல்மெட் கொடுத்து கொண்டிருந்தார்கள் .அது அவளின் வழக்கம் ,மாதம் ஒரு முறை சில பகுதிகளை தேர்வுசெய்து இலவசமாக ஹெல்மட் கொடுப்பது..

மிகுந்த தேடுதல் வேட்டையின் பின் ஷாம்னியை கண்டு பிடித்தவன் தூரத்தில் நின்று அவளை பார்த்து கொண்டிருந்தான்.

ஷாம்னி அக்னியுடன் இருப்பதால் அவன் அருகில் செல்வதற்கு யோசித்துக்கொண்டிருந்தான் ,அக்னியை நாச்சியார் ,முசுடு மூஞ்சி என்று சொன்னாலும் அவளின் தைரியம், அவளின் ஆளுமை எல்லாவற்றிற்கும் அவன் மிகப்பெரிய ரசிகை , அவளின் மேல் அவனுக்கு தனி மரியாதை கலந்த பயமே உள்ளது ...
சிறுது நேரம் யோசித்தவன் இன்றுவிட்டாள் அவளை பார்க்க முடியாது என்று தோன்ற ஷாம்னியின் அருகில் செல்ல

ஷாம்னி அங்கு வருப்பவரின் லைசென்ஸை செக் செய்து ஹெல்மட்டை கொடுத்து கொண்டிருந்தாள்

அவளின் அருகில் வந்து தன் லைசென்ஸை தர அதை பார்த்தவளின் விழி ஒரு நொடி சுருங்க பின் நிமிராமல் ஹெல்மட்டை எடுத்து கொடுத்தாள்.

“ ஜிங்ஸ் முகத்தை கூட பார்க்க மாட்டிய” என்க அவள் நிமிரவே இல்லை “ ஜிங்கிலி என்ன டி” என அவள் கையை பிடிக்க

அப்பொழுது போன் பேசி வைத்த அக்னி “ கண்ணா நீ இங்க என்ன பண்ற “ என்க அதில் பதறி அடித்து இருவரும் விலகினார்கள்.

“ப்லிங்கிக்கு எப்படி குட்டியை தெரியும் “ என ஷாம்னியும் ,இவங்களுக்கு எப்படி நம்மல தெரியும் “என கண்ணாவும் அதிர்ந்து நிற்க

பதில் சொல் என்பது போல அக்னி பார்த்துக்கொண்டு நிற்க , கண்ணா “இல்லை ஹெல்மெட் வாங்க” என்று பம்ம

“ ஏன் உன் அண்ணன் உனக்கு ஹெல்மெட் வாங்கி தரலையா” என்றவளின் கேள்வியில் அனிச்சை செயலாய் அவர்கள் இருவரிடம் இருந்து 5 அடி தள்ளி நின்றவன் “ என்னது அண்ணாவை உங்களுக்கு தெரியுமா “ என 5 அடி தூரத்திலிருந்தே சற்று பீதியாக கேட்ட

அவன் பயத்தை கண்டு மனதில் சிரித்தவள் “ ஆமா நான் உனக்கு அண்ணினா உன் அண்ணனை எனக்கு எப்படி தெரியாம இருக்கும் “ என்க

அதில் இன்னும் பீதியாகி 10 அடி தள்ளி போனவன் “ என்னது நீங்க எனக்கு அண்ணியா.... , அண்ணியா ,அண்ணியா ....என எக்கோ வாய்ஸில் கேட்க

அதற்கும் அக்னி கையை கட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டே தலையை ஒரு புறம் சாய்த்து “நாங்க 2 பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்ட நான் உனக்கு அண்ணிதானே டா” என்க..

அடுத்த நொடி அந்த 15 அடியை அரை நொடியில் கடந்தவன் ரோடு என்றும் பாராமல் அக்னியின் காலில் விழுந்து விட்டான்...

( பாவி பயலுக்கு கொஞ்சம் கூட வெட்கமாவே இருக்காது போல எப்படி விழுந்து கிடக்கிறான்....)

போதுமா....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்...செல்லம்ஸ்..

நான்தான் உங்க 32...

இதோ உங்களுக்கு இதயம் போதுமா வின் அடுத்த ஒரு அப்டேட்..

படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க லாஸ்ட் எபிக்கு லைக் ,கமெண்ட் போட்ட எல்லோருக்கும் என் நன்றிகள்...

சைலண்ட் ரீடர்ஸ் உங்களுக்கும் என் நன்றிகள்...

இப்படிக்கு

நான் உங்கள் 32...

மன்ந்தலி ரிவியூவில் ஆபிஷில் மிதி வாங்கிவிட்டு ,கடுப்புடன் ஏரியா டீக்கடையில் இருந்து..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 9:

ஷாம்னி “ துசர் அண்ணாவோட தம்பியா” என அதிர்ந்து நிற்க...

அக்னிக்கோ காலை பிடித்துக்கொண்டிருக்கும் குட்டியை பார்க்க ஒரே சிரிப்பு....

காலில் விழுந்த குட்டியோ” அண்ணி இந்த பன்னி அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ,சொரிந்தும் சொரியாமலும் செய்த அனைத்து பாவங்களை அண்ணனிடம் சொல்லாமல் என்னை காத்தருளும் “ என கூற..

அவன் இப்படி கெஞ்சுவதை பார்த்த ஷாம்னிக்கு வாய் கொள்ளாத சிரிப்பு எவ்வளோ கோபமாக இருந்தாலும் ஏதாவது குரங்கு சேட்டை பண்ணி குறைத்து விடுகிறான் ,அதனால் தானே இவன் கண்ணில் படாமல் சுத்திக்கொண்டிருந்தது...

அக்னிக்கு சிரிப்பு வந்தாலும் “ சிரிப்பு வரல, தூர்வார்னது போதும் கொஞ்சம் எழுந்துகிறியா” என்க...

இந்த ரிவால்வர் ரீட்டாட்ட இனி தப்பிக்க முடியாது என எழுந்து பாவம் போல நிற்க..

“உன்னை இங்க என்ன பண்றன்னுதான கேட்டேன் அதுக்கு ஏன் நீ இவளோ ஓவர் ரியாக்ட் பண்ற, அறிந்தும் அறியாமல் என்ன தப்பு பண்ண “ என்று ஓரக்கண்ணால ஷாம்னியை பார்த்து கொண்டே கேட்க அவளோ திரு திருவென்று முழித்து கொண்டே நிற்க..

“டேய் குட்டி. உனக்கு வாய்தான்டா வில்லங்கம்” என மனசுக்குள் தன்னையே திட்டிக்கொண்டவன்

( மாட்னடா கோமட்டி தலையா...)

நான்...நான் ஷாமுவ லவ் பண்றேன் “ என்றான் ...

” ஓ...”, அவளுக்கும் உனக்கு 2 வயசு வித்தியாசம் இருக்கு , தெரியுமா...”

“ ம்ம்ம்ம் தெரியும்...,

“ம்ம்ம், உங்க வீட்ல உள்ளவங்க ,அவங்க வீட்ல உள்வங்க எ ல்லாம் ஒத்துபாங்கன்னு நினைக்கிறியா...”

“அவங்க ஏன் அண்ணி ஒத்துக்கனும்,எனக்கு பிடிச்சிருக்கு..அவளுக்கும் பிடிக்கும்”

“ ம்ம்ம்ம் அந்த அளவுக்கு தெளிவா இருக்கியா...ஆனா இப்படி வெட்டியா இருக்க உனக்கு எப்படி பொண்ணு கொடுபாங்கன்னு நம்புற...”

அதில் அவன் காதல் மனம் அடிபட” அண்ணி..,எனக்கு கவர்மெண்ட் ஜாப்லா செட் ஆகாது,வீட்ல சொன்ன கேட்க மாட்றாங்க..துசர் அண்ணன் கூட, நான் ஹோட்டல் இல்லை பார்லர் சொந்தமா ஓபன் பண்ணலாம்னு இருக்கேன்..

இவள் ஓகே சொன்னாள்தான் நான் வீட்ல பேச முடியும் ,இவளுக்கு என்ன பிடிச்சாலும்,ஒத்துக்க மாட்றாள் ,இவள் சரி சொன்ன உடனே நான் வீட்ல பேசி பிஸினஸ்ல கொஞ்சம் டெவலப் ஆகவும் துசர் அண்ணனுக்கு, விசாலிக்கு கல்யாணம் ஆகவும் சரியா இருக்கும்.. .” என்றான் நீண்ட விளக்கமாக....

ஷாம்னி மனதில் உள்ள அத்தனை கேள்விகளுக்கும் அவள் தோழி ஒலி வடிவம் கொடுக்க அவளின் கிப்பி மண்டையன் அவளின் மனம் குளிரும் பதிலை சொல்லி கொண்டிருந்தான்.

இது தானே அவள் எதிர்பார்த்தது இருந்தாலும் ,இது போன்ற பொறுப்பான பதிலை குட்டி அவளிடம் சொன்னது இல்லை,எப்பொழுதும் கிண்டல்தான்

இருந்தும் அன்று கோவிலில் நடந்த சம்பவம் அவளின் மனதை குடைய அவளின் மலர்ந்த முகம் உடனே சுருங்கி அவனை முறைத்தது...

“ அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது குட்டி ,ஆனால் ஷாம்னி ஒத்துக்கும் பட்சத்தில் துசர் கிட்ட பேசு கண்டிப்பா அவங்க புரிஞ்சிப்பாங்க “ என்றவள்..

ஷாம்னியின் அருகில் சென்றவள் “ஷாமு பார்க்கத்தான் கொஞ்சம் லூசு மாறி இருப்பான் ,மத்த படி ரொம்ப நல்லவன் ,துசர் கூட எப்பயாவது ஸ்மோக், இல்லை ட்ரிங்க்ஸ் பண்ணுவாங்க,ஆனால் இவன் அதெல்லாம் பார்த்தாலே மயக்கம் போட்டு விழுந்துடுவான், பொண்ணுங்க விஷயத்துல துசர் ராமன்னா, இவன் லட்சுமணன்..

மத்தபடி உன் மனசுல நீ நினைக்குற கேள்விக்கெல்லாம், என்னாலேயே ,அவனாலையோ பதில் சொல்ல முடியாது, நீ வாய் திறந்து கேட்டாதான் பதில் கிடைக்கும்...

இல்ல எல்லாத்தையும் தாண்டி அவன் உனக்கு வேணாம்ன்னா ,கண்டிப்பா உனக்கு சப்போட்டா நான் இருப்பேன் “என்றவள் காரில வைட் பண்றேன் என்று சென்றுவிட்டாள்..

தன்னை விட, தன்னை பற்றி அதிகமாக புட்டு புட்டு வைத்தவிட்டு செல்லும் அக்னியே ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தான் கண்ணா..
இவங்க சீன் போடுறதுல தப்பே இல்லை, அண்ணனுக்கு ஏத்தவங்கதான் , அப்பா எனன ஒரு ஷார்ப்பான பேச்சி.. என வியந்து நின்றவன்

சிறுது நேரத்திற்கு பின்தான் தன் ஜிங்ஸ் புறம் திரும்பியவன் அவளை காணாமல் சுற்றி பார்க்க அவளோ வேகமாக நடந்து தூரமாக சென்று கொண்டிருந்தாள்.

வேகமாக சென்று அவள் கையை பிடித்தவன் “ஏய் நில்லுடி படுத்தாம...,என்னதான் உனக்கு பிரச்சனை ,சொன்னாதான் தெரியும்..நீயும் என்னை லவ் பன்றேன்னு எனக்கு தெரியும் “என்க..

அக்னி அவனை பற்றி நல்ல விதமாக சொன்னவுடன் அவளுக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது ,இருந்தும் அவன் பண்ணிய அட்டூழியங்களை கண்கூடாக பார்த்தவள் ஆயிற்றே ,இருதலை கொல்லி எரும்பாக குழப்பிகொண்டு ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல்

சிறிது தனிமை வேண்டி நடந்து வர குட்டி கையை பிடித்ததும் அவன் வார்த்தையும் கேட்டவள் கோபத்துடன் “ஆமா லவ் பண்றேன். உன்னைத்தான் உன்னை மட்டும்தான்...இந்த கிப்பி மண்டையும் இந்த கேவலமான ட்ரஸிங்கையும் பார்த்ததுலேர்ந்து பைத்தியமா லவ் பன்றேன்....

அதுக்கு இப்ப என்ன பண்ணனும் , உன் பேபி,உன் விசாலி செல்லம் ,இவங்க கூட 2 பேரோட 3 வதா நான் இருக்கனுமா”...என அவன் சட்டையை பிடித்துக்கொண்டு கேட்க

அவளின் கோபத்துக்கான காரணத்தின் முனையை பிடித்தவன் சிரித்துக்கொண்டே “ஏய் லூசு பேபின்றது என் பாட்டி.. அப்பாவோட அம்மா , அப்பறம் அந்த விசாலி என் அத்தை பொண்ணு, அந்த ராங்கி ரங்கமாவை எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது, ஒரே வீட்லேர்ந்து வளர்ந்ததால எங்க இரண்டு பேருக்கும் அந்த மாறி எண்ணம் வந்ததும் கிடையாது..

என் பியார், பிரேமா, காதல் எல்லாம் உன் மேல மட்டும்தான் ,

என் தலை,என் ட்ரெஸ் போல என காதல் கலாமுலானு இருக்காது , அது அழகா இருக்கும்.., ரொம்ப அழகா..
நான் ஒரு வெட்டி பையன் ,உன்னை விட சின்னவன், என்னை கல்யாணம் பண்ணி என்னை பத்திரமா பார்த்துக்குவியா ஜிங்கிலி..”என்றான்.

அவனின் பதிலில் உவகையின் உச்சம் வந்தவள் கண்களில் நீர் துளிர்த்ததால் எதிரில் உள்ள அவன் முகம் மறைய “ம்ம்ம் , என சந்தோசமாக தலைய ஆட்ட அப்படியே அவளை தூக்கி தட்டாமலை சுற்ற

அதை நிறைவுடன் காரிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தாள் அக்னி..
நாட்கள் அதன் போக்கில் செல்ல துசர் அக்னி காதல்,ஷாம்னி, கண்ணாவின் காதல் வளர்ந்து கொண்டே சென்றது வீட்டில் சொல்கிறேன் என்ற துசரிடம் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள் அக்னி...

தனக்கு ஏதாவது ஒரு அரசாங்க வேலை கிடைத்தவுடன் சொல்லி கொள்ளலாம் என்றுவிட்டாள்..
இப்பொழுது ஷாம்னியும் அவளுடன் சேர்ந்து தீவிரமாக பரிட்சை எழுத ஆரம்பத்திருக்கிறாள்

வேண்டாம் என்ற சொன்ன குட்டியிடம் “ நீயும் ஒரு வெட்டிதண்டம், நானும் ஒரு வெட்டி தண்டம்னா உங்க வீட்ல வெளக்கமாத்தல தான் அடிப்பாங்க,நீ வேணுன்னா வீட்டுக்கு கெட்ட பிள்ளையா இரு , நான் நல்ல மருமகளா , மகளா,பேத்தியா அண்ணியா சமத்தா இருப்பேன் “ என்று அவன் வாயை அடைத்துவிட்டாள்.

**********

“ டேவிட் நான் தான் அமித் பேசுறேன்...நல்ல இளசா , ம்ம்ம்ம்...காலேஜ் 2 இயர், 3rd இயர் படிச்சா ஓகே , பட் கண்டிப்பா பிரஷ் பீஸா இருக்கனும் , என்று கூறி போனை வைத்தான்..

அந்த போன் காலை ட்ரேஸ் செய்து கேட்டுக்கொண்டிருந்த மாறனுக்கு இதயமே பிளந்து விட்டது..எதையோ பொருட்களை செய்ய சொல்வது போல இது இப்படி வேண்டும் அது அப்படி வேண்டும் என்று என்று கேட்கும் இந்த வெறி பிடித்த நாய்களை எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் தன் நிலையை அறவே வெறுத்தான் ..


விரக்தியில் குனிந்து தன் காலை பார்த்தான் ..அங்கே தன் இரு காலிற்கு பதிலாக செயற்கைகால் பொருத்தப்பட்டு இருந்தது..

அதை பார்க்கும் போதே தன் மனைவியின் மதி முகம் நியாபகம் வர கண்களில் கண்ணீர் துளிர்த்தது..

எவ்வளவு அழகாக ஆரம்பித்த கல்யாண வாழ்க்கை ,கல்யாணம் ஆன ஒரு வாரத்தில் முடிய காரணம் இந்த மாதிரி மிருகங்கள் தானே ..
தன்னால் முடியாததை அக்னி செய்வதில் அவனுக்கு சந்தோஷம்..

இந்த பெண்ணை போல ஏன் தன் மனைவி தைரியம் இல்லாமல் போனாள் என்று பெருமூச்சி விட்டவன்

அக்னிக்கு கால் செய்தான் “ சிஸ்டர் மாறன் பேசுறேன் என்று விசயத்தை சொல்ல

“ok ப்ரோ நான் பார்த்துக்குறேன் ,அமித்தோட பொண்ணு படிக்கிற காலேஜ், நேம் அண்ட் டீடைல்ஸ் மட்டும் எனக்கு பிங் பண்ணிடுங்க “ என்றவள் ஷான்னியுடன் கிளம்பிவிட்டாள்.

போகும் போது துசருக்கு கால் செய்து விஷயத்தை சொல்ல, “ நான் வருகிறேன்” என்று கட்டாயப்படுத்தியவனை

“ வேணாம் துசர் நான் பார்த்துக்குறேன், அப்படி முடியலனா மாமோய்னு ஒரு கால்பன்றேன் நீங்க பறந்து வந்து என்னை காப்பாத்திடுங்க...” என்று சிரித்து கொண்டே போனை வைத்தாள்..

அவளின் துணிச்சலின் மேல் நம்பிக்கை இருந்தாலும் அவளை தனியே விட முடியாமல் அவளுக்கு தெரியாமல் அவளை பின் தொடர்ந்தான் துசர்..

டேவிட் என்பவன் நேராக அந்த கல்லூரி வாசலில் நின்று அங்கு வந்த பெண்களை எடை போட்டான்..
காரில் செல்லும் பெண்களை விட்டுவிட்டான்,அதன் பின் பைக்கில் செல்பவர்கள் ,தங்கள் பாய் பிரண்ட்ஸுடன் செல்பவர்களை விட்டுவிட்டான்..

கண்களை அசால்ட்டாக சுழல விட்டவனின் கண்களில் அங்கே அப்பாவியாக தனியாக நடந்து செல்லும் ஒரு பெண் கண்ணில் பட வேகமாக அந்த பெண்ணின்
அருகில் சென்று காரை நிறுத்தியவன்

அந்த பெண் யார் என்று நிமிர்ந்து பார்க்கும் போதே
அந்த பெண்ணை இழுத்து உள்ளே போட்டவன் அவளின் முகத்தில் ஷஃபிரே அடிக்க அந்த இளங்குருத்து அப்படியே மயங்கி போனது..

கனவோடு படிக்க அனுப்பிய தாய்,கஷ்டப்பட்டு பணம் கட்டிய அப்பா, படித்து எதையாவது சாதிக்கலாம் என்று யோசித்த அந்த பிஞ்சின் ஆசை எல்லாவற்றையும் பொசுக்க கடத்தி கொண்டு செல்கிறான் அந்த கயவன்..

வேடிக்கையா,வேதனையா தெரியவில்லை இதை பார்க்கும் போது எங்கேயோ படித்த ஒரு சிறிய கதை நியாபகம் வருகிறது..

ரொம்ப நாளாக பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு தண்டவாளத்தில் ஒரு சிறுவனும், புழக்கத்தில் உள்ள ஒரு தண்டவாளத்தில் 10 சிறுவர்களும் விளையாடிக்கொண்டிருக்க

தண்டவாளத்தில் இன்னும் நிமிடங்களில் ட்ரெயின் வந்துவிடும் என்ற அறிவிப்பு வந்தவுடன் ,இன்னும் நிமிட நேரமே இருப்பதால் புத்திசாலி தனமாக அந்த ஒரு சிறுவன் விளையாடும் தண்டவாளத்தில் ட்ராக்கை திருப்பினார்கள் அங்கு உள்ளவர்கள்..

ட்ரெயின் வரும் என தெரிந்தே விளையாண்ட 10 சிறுவர்கள் காப்பாற்றபட்டார்கள் ..ட்ரெயின் வாராது என்ற தெரிந்து சரியாக விளையாண்ட அந்த சிறுவன் கொலை செய்ய்யப்பட்டான்......
ஆக இதுதான் இன்றைய நியாயம்..

அதே போலதான் இந்த சமூகம் பணம் இருப்பதால் தவறு செய்தாலும் அவர்கள் காப்பாற்றுகிறது.

பணம் இல்லாத ஒரே காரணத்திற்காக தவறு செய்யாமலே ஏழைகள் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் தண்டிக்கபடுகிறார்கள்..

டேவிட் ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு வந்த ஒரு விருந்தினர் மாளிகையில் காரை நிறுத்தியவன் மயங்கி கிடந்த அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு உள்ளே ஒரு அறையில் போட்டுவிட்டு வெளியே கிளம்ப

அவனுக்கு தெரியாமல் பைக்கில் வந்த அக்னி வெளியில் அவனுக்கு தெரியாமல் காத்திருக்க,

அக்னிக்கு தெரியாமல் துசர் அவளின் பின் காவலாக நின்றான்..

சிறுது நேரத்தில் அமித் அந்த வீட்டிற்கு சென்று அந்த பெண் இருக்கும் அறைக்கு செல்ல அந்த பெண் சுவர் புறமாக அமர்ந்து இருந்தாள்

அமித் பின்புறமாக சென்று அந்த பெண்ணின் தோளில் கையை வைத்தான்..

அந்த பெண் திரும்பவே தீ சுட்டார் போல கையையெடுத்தவன் அப்படியே பின்னே உள்ள லாக்கரில் அதிர்ச்சியாக சாய்ந்தான் நீயா என்பது போல..

அமித் கூறிய அதே இளசான பெண்..அதே காலேஜ் இரண்டாம் அல்லாத மூன்றாவது வருடம் படிக்கும் பெண்.. அவன் சொன்னது போல பிரஸான பொண்ணு..

ஆனால் ஒன்று அது டேவிட் கடத்திய பெண் அல்ல ,அது அமித்தின் உயிர் அணுவில் இருந்து வந்த ,அவளின் மனைவி 10 மாதம் சுமந்த அமித்தின் செல்ல மகள் தியா..

அவள் அவனை அற்பபதரை , ஒரு அசிங்கத்தை பார்ப்பது போல பார்த்தாள்...

போதுமா...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்,

நான் தான் உங்கள் 32,

லாஸ்ட் சண்டே அப்டேட் போடாம போனதுக்கு சாரி...மன்னிச்சு..

இதோ இதயம் போதுமா அடுத்த 2 அப்டேட் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..

லாஸ்ட் எபிக்கு நீங்க போட்ட கமெண்ட்ஸ் கொடுத்த சப்போர்ட் எல்லாம் எனக்கு கண்ணு வேர்த்துடுச்சு..


எல்லோருக்கும் என் நன்றிகள் தொடர்ந்து உங்கள் ஆதரவை எனக்கு தாருங்கள்...

சைலன்ட் ரீடர்ஸ் உங்களுக்கும் என் நன்றிகள்..போட்ட எபி வரை கதையோட நூலை யாராலும் கெஸ் பண்ண முடிஞ்சதா...ஷேர் பண்ணுங்க

இப்படிக்கு

நான் உங்கள் 32
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 10

அமித் அதிர்ந்து நின்று “பேட்டி....நீ எப்படி இங்கே...” என என கேட்க..

அவனை நோக்கி கேவலமாக ஒருபார்வை பார்த்தவள் எழுந்து ”இளசா...கேட்டீங்களேமா,பிரஷ்பீஸா...வாங்க நான் பிரஸ் பீஸ்த்தான்... நான் எப்படி இருக்கேன்னு பார்த்துஅடுத்த மாசம் என்னை கல்யாணம்பண்ணிக்க போற உங்க மாப்பிள்ளைக்கு சொல்லுங்க “ என்று

ஆக்ரோஷமாக கூறியவள் தன்துப்பட்டாவை எடுத்து கீழே போட்டு தன் சுடிதாரின் கையை கிழித்துக்கொண்டு “ வா வா “ என்றுவெறி பிடித்தவள் போல அமித்தின்அருகில் செல்ல

“அய்யோ பேபி...ஏன் இப்படி பண்ற” என்று சுவர் பக்கமாக திரும்பி நிற்க

“ஓ..என்ன ஆச்சு உன் பொண்ணுஅப்படிங்கிறதாலயா.....இப்பதான்உனக்கு கண்ணு கூசுதா...நீ சீரழிச்ச அத்தனை பெண்களும் யாரு ஒருஅப்பாவோட செல்லபெண்தானடா...உன் பெண்ணுக்கு இருக்க அங்கங்கள்தானேஅவளுக்கும் இருக்கும்....

அவளை அப்படி பார்க்கும் போது உனக்கு என் நியாபகம்வரல...பெண்ணா பிறந்தது ஒருகுத்தமா..அந்த காலத்தில் பொண்ணாஏன் வீட்டுக்குள்ளையே அடைச்சிவச்சாங்கன்னு இப்பதான் புரியுது..

உன்னை மாறி வெறிபிடிச்சநாய்களிடமிருந்து காப்பாத்ததான்...

இனப்பெருக்கத்தில் சுகத்தைகொடுத்தது பெண்களோட தப்பா....? உன்னை மாறி கேவலமானவனுக்குமகளா பிறந்ததுக்கு நான்அசிங்கபடுறேன்...

அப்படி உங்களுக்கு வெறி பிடிச்சா.. உங்க ஆணுறுப்பை அருத்துகிட்டுசாகுங்க டா. “ என கத்த....

அவளின் ஒவ்வொரு கேள்வியிலும்கூனி குறுகி நின்றது மனித மிருகம்..தன் செல்ல மகளின் முன் நிற்கவேண்டிய கோலமா இது...தன்னைஹீரோவா நினைத்து வளர்ந்தமகளின் இந்த கேவலமானபார்வையை அவனால் தாங்கமுடியவில்லை...

எல்லா மிருக்கத்திடமும் ஒருநல்லவன் முகம் இருக்கும்..அதேபோல நல்லவர்க்குள்ளும் ஒருகெட்டகுணம் இருக்கும் அதைதூண்டிவிட்டு நல்லவர்காளாகவாழ்வதும் கெட்டவர்களாக வாழ்வதும்அவர்கள் கையிலும் ,அவர்களைசுற்றியுள்ள மனிதர்களின் கையிலும்உள்ளது..

அமித்தின் நல்லவன் உள்ளம்அவனின் மகள் கேட்ட கேள்வியில் மெல்ல தூண்டப்பட அவள் காலில்விழுந்தவன் “பேட்டி என்னைமன்னிச்சிடு..நான் பாவி...நான் பாவி என கதற...

கல் போல நின்றாள் அந்த பெண் “ இப்படி தான அப்பா அந்தபொண்ணுங்களும் உங்களிடம்கெஞ்சி இருக்கும் ...நீங்க வாழ்றதகுதியை இழந்திட்டீங்க....எல்லா தவறுகளுக்கும் மன்னிப்பு தீர்வு கிடையாது..தண்டனைதான் அதுவும் கொடூரமான தண்டனை..

ஒண்ணு நீங்க இந்த விஷத்தைகுடிச்சிட்டு செத்துடுங்க..என கையில்உள்ள விஷத்தை காட்டியவள்,இல்லைவீட்டுக்குபோயி நான் அம்மா தம்பிமூணு பேரும் இதே விஷத்தைகுடிச்சிட்டு செத்துடுவோம்..” என்றவளின் முகத்தை அதிர்ந்துநோக்கிய அமித்..

அவளின் கல் போன்ற முகத்தில் தன் மன்னிக்க முடியாத தவறை உணர்ந்தான்... இனி தான் உயிருடன் வாழ்ந்தாலும் தன் பிள்ளைகள்முகத்தையோ,தன் மனைவியின் முகத்தையோ...பார்த்து வாழ முடியாதுஎன்றே தோன்ற அந்த விஷத்தைவாங்கு கட கடவென குடித்தான்..

அவன் மயங்கி விழுவதை எந்த ஒரு சலனமும் இல்லாமல் பார்த்தவள் தன் தந்தையால் பாதிக்க பட்டவர்களுக்கு ஏதோ நியாயம் செய்தவள் போலநிறைவுடன் வெளியே சென்றாள்..

வேகமாக வெளியே வர அப்பொழுதுஅக்னி மறைவிலிருந்து வெளியே வந்தாள்..

அக்னியின் அருகில் சென்ற தியா “ என் அப்பா இந்நேரம் செத்துருப்பார்,அவரை கொல்லவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை ,அவரின் உண்மையான முகத்தை அடையாளம் காட்டியதற்கு ரொம்ப நன்றி...

தயவுசெய்து எங்க அப்பா இறந்த காரணம் வெளியே தெரிய வேணாம் என் அம்மாவால அதை தாங்கமுடியாது,நானும் இங்க நடந்ததையோ உங்களை பற்றியோ யாரிடமும் சொல்ல மாட்டேன்” என்றவள்
அக்னி தலையை சம்மதமாக ஆட்டியவுடன் அங்கிருந்துசென்றுவிட்டாள்.

மாறனிடம் அமித் பெண்ணின் விவரங்களை கேட்டவள் நேராகசென்றது தியா படிக்கும் காலேஜிற்குதான் சென்று அவளை பார்த்து விஷயத்தை சொல்ல அவளை சாதரணமாக நம்ப வைக்கமுடியவில்லை.

பின் அமித்தும் டேவிட்டும் பேசியஆடியோ கேட்ட தியாவிற்கு அது தன்தந்தையின் குரல்தான் என்றுஉறுதியானது.. இருந்தும் அந்த அன்புமகளின் மனம் அதை நம்ப மறுத்தது .

அது மட்டும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவர் சாகவேண்டும் இல்லை அவரை சந்தேகப்பட்டபாவத்திற்கு தான் சாகவேண்டும் என்று விஷத்தை வாங்கிக்கொண்டு அக்னியுடன் சென்றாள்..

அக்னி அவளை காரில்அழைத்துக்கொண்டு டேவிட்டை பின்தொடர..
டேவிட்டை பார்த்தவுடன் தெரிந்ததுஅவன் யார் என்று, தியா அவனைஅப்பாவோடு பார்த்திருக்கிறாளே..இதயம் வெடிக்க அவளுடன் சென்றாள்..

டேவிட் அங்கே சென்று அந்தபெண்ணை கடத்திக்கொண்டுசெல்ல சிறிது நேரத்தில் அவன் காரை நிறுத்திவிட்டு பாரை நோக்கி சென்றான் கடத்திய பெண்மயக்கத்தில் இருப்பதாலும் ,கார் லாக்செய்து இருப்பதாலும் அவன் தைரியமாக உள்ளே சென்றான்..

அக்னி தியாவிடம் கண்ணை காட்ட இருவரும் இறங்கி யார் கண்ணையும் கவராமல் அந்த காரின் அருகேசெல்ல

அக்னி தன்னிடம் உள்ள டூப்ளிகேட்கீயின் மூலம் காரை திறக்க அக்னிஅந்த மயங்கி கிடந்த பெண்ணை கைதாங்களாக பிடித்துக்கொண்டுதியாவை அங்கே விட்டு சென்றாள்..

தியா மயக்கம் போட்டு விழுந்தவள்போல படுத்துக்கொள்ள,அரைமணிநேரம் கழித்து வந்த டேவிட் நன்றாக குடித்துவிட்டு,கையிலும் வாங்கிக்கொண்டும் வந்தான்..

காரை திறந்து ஏறியவன் பெண் இருக்கிறாளா என்று மட்டும் பார்த்தவன் மீண்டும் குடித்துக்கொண்டே காரை ஓட்டிசென்றான்.

அக்னி அந்த பெண்ணை ஷாம்னியிடம் ஒப்படைத்தவள் பைக்கில் அவர்களை பின்தொடர்ந்தாள்.
அதன் பின் அக்னி எதிர்பார்த்ததேநடந்தது ஆனால் அவள்எதிர்பார்க்காதது தியா அமித்திற்கு விஷம் கொடுத்தது..தன் மகளை அந்த இடத்தில் பார்த்தும் அவமானம் தாங்காமல் அவன் தற்கொலை செய்து கொள்வான், இல்லை அவனை கொன்று அதை தற்கொலைபோல மாற்றிவிடலாம் என்று நினைத்தாள்.

தியா அப்படி செய்தது அக்னியே எதிர்பார்க்காதது.இப்படி ஒரு அப்பாவுக்கு இவ்வளவு அருமையான பெண்ணா என்று ஆச்சர்யமாக பார்த்தாள்அக்னி...

அதன் பின் ஒருவாரம் இருக்கும் அமித்தின் இறுதி காரியங்கள் முடிந்ததும் தன் தம்பியையும், தாயையும் அழைத்துக்கொண்டு தியா ஊரைவிட்டு சென்றதாகவும்,தியாவை கல்யாணம் செய்துகொள்ளும் பையன் நல்ல மாதிரி என்றும் மாறனின் மூலம்கேள்விப்பட்டாள்..

தங்கள் நண்பர்களின் தொடர்மரணங்களால் நிலைகுழைந்துபோனார்கள் சமித் மற்றும் ஜஸ்வால்..

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது சாதரணமாக தெரிந்தாலும் அவர்கள் இருவரும் 100 சதவிகிதம்நமக்கும் மரணம் உறுதி என்று நம்பினார்கள்...

அமித்தின் மரணம் அன்றே டேவிட்டின்தலைமறைவு வேறு அவர்களைபீதியாக்கியது

குறைந்த பட்சம் இன்னும் கொஞ்சநாளைக்கு தகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று முடிவுசெய்தவர்கள்.. சென்று நின்றது ஜிந்தா முன்...
ஜிந்தா அவன்தான் இந்தியாவின்தலைசிறந்த ரௌடி, கொலைக்காரன், கொள்ளைக்காரன் என ஆஸ்கார்விருது கொடுக்கும் அளவிற்குஅத்தனை மோசமானஅம்சங்களையும் ஒருங்கே பெற்றவன்...

எமனின் நேரடி ஏஜென்ட் என்பதை விட எமன் இவன் வடிவில்தான் இருக்கிறான் என்று சொல்லிவிடலாம்அந்த அளவிற்கு கொடூரங்களின்மொத்த உருவம்..

தன்னை முறைத்தவர்களை கூட எரித்து சாம்பலாக்கிவிடுவான்...
இவன் கையில் மாட்டி அக்னி இன்னும்நெருப்பு பிழம்பே சற்று திணரத்தான்போகிறது...

“அண்ணி இந்த பன்னிக்கு கொஞ்சம்உதவ கூடாதா” என குட்டி அக்னியின்கையை பிடித்துக்கொண்டு கெஞ்ச..

ஷாம்னி சிரித்துக்கொண்டே நிற்கஅக்னியோ லாப்டாப்பை நோண்டிக்கொண்டே “ நோ குட்டி உன்காதலை நீ தான் துசர்ட சொல்லணும்,அவங்க எதாவது ஒப்பினியன் கேட்டாமட்டும் நான் சொல்றேன்...” அவ்ளோதான் என்றவள் முடித்து விட
குட்டி சிரித்துக்கொண்டிருந்த ஷாம்னியை நோக்கி “ அக்கா எதுக்கு இப்ப சிரிக்கிறீங்க...” என அவளைவெறுபேத்த “ டேய் அக்கா சொல்லாதடா “ என அவனை அடிக்க போக

“நீதான டி லவ் பண்ணும்போது நான் உன்னைவிட 2 வயசு பெரியவ,பெரியவன்னு ஏலம் போடுவ அதான் பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கிறேன்... “
ஷாம்னி அவனை துரத்த அவன் ஓட அக்னியை சுத்தி சுத்தி விளையாடினர்..

அங்கிருந்து கிளம்பிய அக்னி “ நீங்கரெண்டு பேரும் விளையாண்டுமுடிச்சிட்டு வாங்க எனக்கு ஷிப்ட்க்கு டைம் ஆயிடுச்சி.”..என்று கிளம்வ..

அவள் சென்றவுடன் கண்ணா “ ஜிங்கிலி இவங்க ரொம்ப வித்தியாசமா இருக்காங்க..அவங்களை புரிஞ்சிக்கவே முடியல..கோடிக்கணக்கு சொத்துக்கு ஒரே வாரிசு , ஆபிஸ்க்கு போகமாட்றாங்க...

ஆனால் கஷ்டப்பட்டு நைட் ஷிப்ட்வேலைக்கு போறாங்க...ரொம்ப அளவா..சரியா பேசுறாங்க,சில டைம்எதையோ ரொம்ப யோசிக்கிறாங்க”... என்க
“அவள் அப்படித்தான்பூசா(boosa),ஸ்கூல் இருந்தே நான்அவள் கூட படிக்கிறேன்..என்னால் கூட அவளை சில டைம் புரிஞ்சுக்க முடியாது.
ஒரு டைம் நாங்க காலேஜ் பர்ஸ்ட் இயர் படிக்கும் போது மெரினா பீச்ல ஒரு 5 வயசு பையன் பக்கத்துல அவங்க அம்மா பிணமா கிடைந்தாங்க அவங்களை பார்த்துட்டு போனஎல்லாருமே சில்லறை காசை அவங்க முன்னாடி போட்டாங்க, இன்னும் சிலபேரு போலீஸ்க்கு போன் பண்ணி சொன்னாங்க,சில பேர் அனாதைஆசர்மத்துக்கு....

ஆன அக்னி அங்க போனவுடன் அந்தபையனை தூக்கி சாப்பாடு வாங்கி கொடுத்தவள்..உடனே அவங்கஅப்பாக்கு போன் பண்ணி அந்தபொண்ணோட இறுதி சடங்கை பண்ணுனாள்..அந்த பையனை இப்ப அவதான் வளர்க்குறாள்.. அந்தபையன் தான் நம்ப சோனு...

அந்த பீச்ல உள்ள எல்லோரும் ஏதோ ஒரு வகையில அந்த குழந்தைக்கு உதவி செய்றோம் அப்படின்தான் நினைச்சாங்க ஆனா அவங்களுக்கு தேவையான உதவியை செய்தது அக்னிதான்..

அதுக்கு கூட அங்க உள்ளவங்க எல்லாம் நீ பணக்கார பொண்னு எல்லாம் செய்யலாம்னு சொன்னதாலஅதை இல்ல மனசு இருந்த யாருயாருக்கு வேணுன்னா உதவிசெய்யலாம்னு இன்னைக்கு வர சோனுவோட எல்லா செலவும் அக்னியோட சொந்த சம்பாத்தியம்தான்...
சோனுவும் ரொம்ப சமத்து.. 9த் படிக்கிறான் காலையில துசர் அண்ணா ஆபிஷ்க்கு எதிரில் உள்ள டீக்கடையில் வேலைபார்ப்பான், அப்பறம் ஸ்கூல்முடிச்சிட்டு ஈவ்னிங் பிசா கார்னருக்குவேலைக்கு போய் சம்பளம் வாங்கிஅக்னிட கொடுத்துடுவான்..

அவளை எந்தவிளக்கத்துக்குள்ளையும் அடக்கிடமுடியாது” என்றாள்..

“என் அண்ணான கட்டிக்க இவங்ககொடுத்து வச்சிருக்கனும்னு நினைச்சேன் ஆனால் இவங்களகட்டிக்க என் அண்ணன் ரொம்ப கொடுத்தவச்சிருக்கணும்...என்றான்..உணர்வு பூர்வமாக..

இரண்டு நாட்கள் சென்று இருக்கஅக்னி அன்று துசரின் அலுவலகம் சென்றவள்.

அலுவலகம் என்றும் பாராமல் “துசர்” என்று ஓடியவள் அவனை இறுக்குகட்டிக்கொண்டு அழுதாள்..

ஏன் அழுகிறாள்,எதுக்கு அழுகிறாள்என்று தெரியவில்லை அவள்அழுகிறாள் என்றாள் கண்டிப்பாக அது அவனுக்காகதான் என்பது திண்ணம்...இருந்தும் எதற்கு என்று புரியவில்லை..

“ஏய் திம்சு எதுக்கு டி அழுகுற...என்னா ஆச்சி டா...எல்லாரும் பாக்குறாங்கடா.”என எப்படி எப்படியோ கெஞ்ச..
ம்ஹூம்..அவள் சொன்னபாடகவும்இல்லை...அவனை விட்டா பாடகவும் இல்லை

(என்னவா இருக்கும்ம்ம்...ஒரு வேலை அதுவா...இருக்குமோ...இல்லைஇதுவா இருக்குமோ...ம்ம்ம் .... அதுவும் இல்லாம இதுவும் இல்லாம வேறு எதுமா இருக்குமோ..)



போதுமா..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 11:

அவளை விலக்க முடியாமல் அவளை அணைத்த படி அவனுக்கென்று இருக்கும் ரூமிற்கு அழைத்து வந்தான்..

சிறுது நேரம் அழுது முடித்தவள் அன்னாந்து அவன் முகம் நோக்கி அழுததில் கண் சிவக்க , அதற்கு மாறாக இதழ் முழுக்க புன்னகையை பூசி.. மூக்கு சிவக்க அவனை நோக்கி

“ துசர் im qualified..கவேர்ட்மெண்ட் காலேஜ்ல உள்ள ஆபிஸ்ல அக்கவுண்டன்ட் ,18000 சம்பளம் ,எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு..” என்று துள்ளி குதித்தவளை அதூரத்துடன் பார்த்தவன்

“ மா....நீ எப்படி இருந்தாலும் நீ தான் எனக்கு பொண்டாட்டி ,ஏன் டா இப்படி என்னை எம்பாரஸிங்க பீல் பண்ண வைக்குற...நீ எனக்காக எவ்வளோ கஷ்டப்படுற நான் உனக்கு எதுமே பண்ணலையே”...என்று வருத்த பட..

கோடீஸ்வரி 18000 ஆயிரம் சம்பளத்துக்கு இப்படி துள்ளி குதிக்கிறாளே அதுவும் தனக்காக..தனக்காக என்று பெருமையாக இருந்தாலும் ,அவன் மனமும் கொஞ்சம் குறுகுறுக்கவே செய்தது ..

இன்னும் அவனுக்காக அவள் செய்ததெல்லாம் அவனுக்கு தெரியும் போது அவனின் நிலை எப்படியோ....

“ அதான் நீங்க இருக்கீங்க, உங்க காதல் இருக்கு, இதோ உங்க கை குள்ள நான் இருக்கேன் இதை விட எனக்கு என்ன வேணும் துசர்,இந்த அணைப்பு போதும் துசர் நான் உங்களுக்காக ஆயுள் முழுக்க வாழ்ந்துவிடுவேன்,” என்று ஆழ்ந்து சொல்ல..

அப்படி என்ன தான் உயர்ந்தவன் என என்ன யோசித்தும் அவனுக்கு புரியவில்லை.

ஆனால் காதலுக்கு காதல் என்ற ஒருத்தகுதி போதும் அவனை உயரத்தில் வைக்க என அவனுக்கு தெரியவில்லை..


“ அது... ஏன்...? பாப்பா என்கிட்ட மட்டும் இப்படி நடத்துக்குது” என அவள் மூக்கை பிடித்து திருக

அக்னி மூக்கை சுருக்கிக் கொண்டே “ தெரியலையே” என்றாள்..

அவனுக்கு தெரியும் அவள் எப்பொழுது இந்த கேள்வி கேட்டாலும் அவளின் பதில் இதுதான் என்று..
அவளை அழைத்துக்கொண்டு

அருகில் உள்ள பார்க்கிற்கு வந்தான்.
“அப்ப செல்லம்மா...நான் வீட்ல பேசுவா “என்று கேட்க..

“ ம்ம்ம்ம் எல்லாத்தையும் சொல்லியே பேசுங்க துசர்”

“ இதுக்கு ஏற்கனவே நான் பதில் சொன்னதா நியாபகம் அக்னி “ என்றான் குரலில் இறுக்கத்தோடு..

அவன் முக இறுக்கம் அவளை கலவரப்படுத்த“ ஏன் துசர் என்னை பற்றி சொல்ல உங்களுக்கு அசிங்கமா இருக்கா” என இமைகள் பட படக்க கேட்டாள்.

தன்னிடம் மட்டும் நவரசத்தையும் காட்டும் தன் விழி மொழியாளின் விழியில் மயங்கியவன் சிரிப்புடன் அவள் விழியில் முத்தமிட்டு அவளை அங்கு உள்ள பார்க் பெஞ்சில் அமர வைத்தவன் அவளின் முன் முட்டிபோட்டு அமர்ந்து அவள் மடியின் மீது தன் இரு கையையும் கட்டிய படி வைத்தவன்..

“ என் செல்ல கண்ணம்மா...ஏன் இப்படி பேசுற..நீ எப்போவுமே எனக்கு பெருமையானவள்...

நான் தூக்கி வச்சி கொண்டாடுற என் குலசாமி..,ஆனால் உன்னை யாரும் மரியாதை இல்லாம பார்க்கவோ,இல்லை தப்பா நினைக்கவோ என்னால அனுமதிக்க முடியாது, அது என் குடும்பத்துல உள்ளவர்களா இருந்தாலும் “

அவன் பதிலில் சிரித்தவள் “ இதனால நான் அசிங்கமாவோ, அருவருப்பாவோ, இல்லை மரியாதை இல்லாமலே உணர்ந்து இல்லை துசர்..உங்களோட பார்வையை தவிர யாரோட பார்வையும் என்னை சலனப்படுத்தவோ பாதிக்கவோ, கஷ்டப்படுத்தவோ செய்யாது...

அதுகாக எல்லாம் உண்மையை மறைக்குறது தப்பு துசர் நீங்க உண்மையை சொல்லியே பேசுங்க துசர் “ என்றாள் வற்புறுத்தலாக

“உன்னை மாறி திடமான மனசு எனக்கு கிடையாதுடா உன்னை யாரும் எதும் சொன்னா என்னால தாங்க முடியாது “என்றான் துசர் கண்கலங்க

அதை பார்த்து பதறியவள் “சரி துசர் உங்க இஷ்டப்படியே பண்ணுங்க, நீங்க வருத்தபடாதீங்க “ என்றவள்

அவன் கையை அழுத்தி அமைதிப்படுத்த துசர் சம்மதமாக தலையை ஆட்ட அவன் கன்னத்தை தாங்கி பிடித்தவள்”துசர் நாமா நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாமா, இந்த இரண்டரை வருஷமா நான் இதுக்காக ஏங்குறேன் துசர் , உங்களோட அந்த பெரிய குடும்பத்துல நிற்க கூட நேரமில்லாமல் ,காலையில உங்களை ஆபிஷ்க்கு அனுப்பிட்டு , அப்பறம் வீட்ல உள்ள எல்லோருக்கும் வேலை செய்து கொடுத்துட்டு ,அவசர அவசரமா ஆபிஸ் கிளம்பி போகணும்.அந்த பரபரப்பு வாழ்க்கைக்கு எனக்கு வேணும்

நான் ஒரே பெண்னு எனக்கு எதுமே கட்டாயம் கிடையாது இஷ்டத்துக்கு இருப்பேன்..என்னோட செய்கைக்கு எந்த விளக்கமும் சொல்லமாட்டேன், ஆனால் உங்களை பார்த்துலேர்ந்து ரொம்ப கமிட்டெட் வாழ்க்கை வாழணும்னு ஏக்கமா இருக்கு..”..

“சரி வா “என்றவன் அவள் கையை பிடித்துக்கொண்டு பைக்கை நோக்கி அழைத்து செல்ல தனக்கு பதில் சொல்லாமல் போகும் அவனை புரியாமல் பார்த்தாள்...

பைக்கில் அருகில் சென்றவன்” உன் கார அப்பறமா எடுத்துக்கலாம்..என அவளை அழைத்துக்கொண்டு நேராக சென்று நின்றது அக்னியின் வீட்டில்தான்

தன் வீட்டிற்கு அழைத்து வந்தவனை ஆச்சர்யமாக பார்த்தவள் “ துசர் உங்களுக்கு என் வீடு தெரியுமா...” என விழிவிரிக்க

அவள் இமைகளில் முத்தம் கொடுக்க தூண்டிய தன் மனதை முயன்று அடக்கியவன் இதழோர சிரிப்புடன் அவள் கையை பிடித்துக்கொண்டு உள்ளே சென்றான்..

உள்ளே சென்றதும் காலில் அமர்ந்து இருந்த ராமன் உள்ளே குரல் கொடுத்தார் “ சத்யா அம்மா அப்பா மாப்பிள்ளை வந்துட்டாங்க சீக்கிரம் வாங்க” என

அக்னியை கண்டுகொள்ளாமல் “வாங்க மாப்பிள்ளை..வாங்க...உள்ளே வாங்க” என வரவேற்று அமர வைக்க..


உள்ளே இருந்து வந்த ஜெகநாதனும், அஞ்சுகமும் வரவேற்றவர்,சத்யாவும் துசரை வரவேற்று “ஜூஸ் குடிங்க மாப்பிளை” என்று கிளாஸை கொடுத்துவிட்டு

“ மாப்பிள்ளை வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க...சம்மந்தி அம்மா எப்படி இருக்காங்க , என்று விசாரிக்க

அக்னி “ ங்கே...” என்று முழிக்க துசரோ அவர்களிடம் நெடுநாள் பழகியவன் போல மாமா, அத்தை என்று முறை சொல்லி பேசிக்கொண்டிருக்க இது எப்பொழுது நடந்தது என்று தெரியாமல் முழித்தாள்..

ராமன் “ மாப்பிள்ளை நீங்க சொன்ன மாதிரி அடுத்த வாரம் நிச்சயதார்தத்திற்கு மண்டபம் புக் பண்ணிட்டேன், எங்க சைட்ல சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்ல ஆரம்பிச்சிட்டோம், சம்மந்திகிட்டையும் சொல்ல சொல்லிவிட்டேன்..

நிச்சய புடவையும் , அப்பறம் உங்களுக்கு மட்டும் ட்ரஸ் எடுக்கணும், நிச்சயம் முடிஞ்சி அடுத்த ஒரு வாரத்துல கல்யாணம் பிக்ஸ் பண்ணிருக்கேன்..அதுக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு “ என்றார்.

இவ்வளவு நேரம் அக்னியின் கை துசரின் கைகளில்தான் இருந்தது ராமன் அனைத்தும் சொல்லி முடித்ததும் அக்னி அவள் கையை உருவ மென்மையாக அதை விடுவித்தான்

அதற்கு மேல் தாங்காமல் “ அம்மா..அப்பா..”என்று அவர்களை சந்தோசமாக கட்டிக்கொண்டாள்..
அவர்களும் பாசமாக அணைத்துக்கொண்டு..”மண்டு நீ சொல்லலன்னா என்ன மாப்பிள்ளை சொல்லிட்டார்”..

உன்கிட்ட காதலை சொன்ன அன்னைக்கே என்னையும் அம்மாவையும் வந்து மீட் பண்ணினார்..

ஆதி அந்தமா எல்லாம் சொன்னார்..அவர் சொன்னதுக்கு அப்பறம் தான் நீ ஏன் விடிய விடிய எக்ஸாமுக்கு படிச்சேன்னு எங்களுக்கு புரிஞ்சது..

உன் சந்தோஷம் மட்டும்தான்டா எங்களுக்கு முக்கியம் உன்னோட தேர்வு என்னைக்குமே தப்பாகாது அதை மாப்பிள்ளையும் நிரூபிச்சிட்டார்.. உன்னிடம் காதல் சொன்ன அன்னைக்கே வந்து எங்களிடம் பேசி...” என்றார்


ஜெகநாதன் சந்தோசமாக அவளின் தலையை வருட,பருவதமோ “நான் அன்னைக்கே சொன்னேன்ல உன்னை அடக்க ஒருத்தன்வருவான்னு,இதோ என் பேரன் வந்துட்டான்” என்றார்..

சத்யாவும் அவளின் தலையை வருடிய படி “ ஒரே ஒரு பொண்ணு பெத்தோம் ,அதுவும் இப்படி ஆம்பள பிள்ளை மாறி நடந்துகிறாளே, இவளுக்கு எப்படி கல்யாணம் பண்ணி வைக்க போறோம்.., பிடி கொடுக்கவும் மாட்டேன்கிறாளேன்னு ரொம்ப கவலைபட்டன் டா.. எனக்கு இப்பதான் சந்தோசமா இருக்கு”என்றார்

அவரின் பதிலில் தெத்துபல் தெரிய சிரித்தவள் துசரிடம் “துசர் நம்ம வீட்ல எப்படி ஒத்துகிட்டாங்க” என்றாள்..

அவளின் நம்ம வீட்டு அவனுக்கு எப்பொழுதுமே நிறைவை தரும் வார்த்தை துசரின் வீட்டை பற்றி எப்பொழுது பேசினாலும் அவள் சொல்லும் வார்த்தை நம்ம வீடு..

“ மாமாட அத்தை 2 பேரிடமும் பேசிட்டு நேரா நம்ம வீட்டுக்குத்தான் போனேன் பர்ஸ்ட் யாரும் ஒத்துகல என்றவன் அன்று நடந்ததை கூறலானான்...

“ உன்னிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கல”, எல்லாம் உன் விருப்பம்தானே.. இது மட்டும்தானே எங்கள் விருப்பத்திற்கு உன்னிடம் கேட்டோம்”என்றும்,நீயே இப்படி பண்ணா உனக்கு பின்னால் இருக்கவங்க என்ன பண்ணுவாங்ககன்னு”” ஒரே கேள்வியாக கேட்க

அவனாலும் எடுத்து எறிஞ்சி டக்குனா பேச முடியாமல் பொறுமையா பேசினான் “ நானே இந்த மாறி முடிவு எடுத்து இருக்கேனா அவளோட காதலை பற்றி யோசிச்சி பாருங்க தாத்தா, இப்ப கூட நான் உங்களிடம் பேசுறது அவளுக்கு தெரியாது , நம்ம வீட்டோட கண்டீசன் தெரிந்ததுலேர்ந்து அவள் ஒரு வேலை கிடைக்க ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சிகிட்டு இருக்காள்,

இப்ப நீங்க கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா கூட அவள் ஒத்துக்க மாட்டாள்,அவ வேலை வாங்குனதுக்கு அப்பறம்தான் சரி சொல்லுவா.., நீங்க வேண்டாம் சொன்னாலும் அவள் என்னைக்கும் என் காதலியா மட்டும் தான் இருப்பாள்” என கூற துசரின் வார்த்தையில் எப்பொழுதும் அவர்களுக்கு நம்பிக்கையும் மரியாதையும் உள்ளது..

ஓரளவு அவனின் முடிவிற்கு சரி சொல்லலாம் என ராமசாமி “ சரிப்பா துசர் உன் சந்தோஷம்தான் எங்களுக்கு முக்கியம், ஆனால் ரொம்ப நாளா, நாங்க பதியவச்ச விஷயம் , பல வருஷமா அன்றாட பழக்க வழக்கமா பழகுன விஷயம் இதை மாற்றிக்கிறது எங்களுக்கு ரொம்ப கஷ்டம்..

அது எங்களுக்கு பகலெல்லாம் தூங்கிட்டு நைட் வேலை பாக்குற மாறி இருக்கும், அதனால நிச்சயம் பண்ணிக்கலாம் , ஆனால் கல்யாணம் வேலை கிடைசதுக்கு அப்பறம்தான் என்க..

வீட்டிற்கு மூத்த பிள்ளையாய் இதுவே போதும் என சம்மதமாய் துசர் தலைய ஆட்ட அப்பொழுது ராமனும் ,சத்யாவும் உள்ளே வர அவர்களை பார்த்த வேதநாயகம் ( துசரின் அப்பா), விஸ்வநாயகம்( குட்டியின் அப்பா), கபிலன் ( விஷாலியின் அப்பா ) என அனைவரும் வாசலை நோக்கி ஒரு மித்த குரலில் “வாங்க மிஸ்டர் ராமன், அண்ட் மிஸ்சஸ் ராமன் என வரவேற்று அமர வைக்க அங்கே பெரும் பரப்பரப்பானது..

வேதநாயகம் “ என்ன ராமன் சார் இவ்வளோ தூரம் சொல்லி இருந்தா நேரில வந்து பார்த்திருப்பேனே”
என்க

ராமன் “ இது நாங்க வந்து பேச வேண்டிய விஷயம் “ என்று துசரை பார்த்த்துக்கொண்டே சொல்ல..

“நீங்க வந்து பேசுற அளவுக்கு....புரியலையே சார் “ என கபிலன் கேட்க வீட்ல உள்ள பெண்கள் எல்லாம் புரியாமல் நின்றனர்..
விசாலி, கண்ணா ,இருவரும் வீட்டில் இல்லை வெளியில் சென்று இருந்தனர்

( ஓ..குட்டி இல்லையா ...என்னா டா கான்வெர்சேசன் இவ்வளோ டல்லா போகுதேன்னு பார்த்தேன்... குட்டி இருந்தா செகண்ட்டுக்கு ஓர் கவுண்டர் கொடுத்து ராமசாமி அண்ட் கோவை காலி பண்ணிருப்பானே..)

ராமன் “எங்க வீட்டு பொண்ணுக்கு உங்க வீட்டு பையன் துசரை கேட்டு வந்து இருக்கோம் “ என்க..

ஆண்கள் அனைவரும் இவர்களின் பெண்தானா “என்பதை போல துசரை பார்க்க அவன் ஆம் என தலையை ஆட்டினான்..

வேதநாயகம் ஏதோ சொல்ல வர மறுப்பாக அதை தடுத்த ராமன் ராமசாமியின் புறம் திரும்பி அவர் கையை பிடித்தவர் “உங்க குடும்ப கண்டீசன் பற்றி எனக்கு தெரியும், கண்டிப்பா அவள் அதை செஞ்சி முடிச்சிடுவா அதுல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு..

அவள் பெருசா எதுக்கும் ஆசை பட்டது இல்லை, பணக்கார பொண்ணுங்க எல்லாம் ரொம்ப திமிரா தான் இருப்பாங்கன்னு சொல்லுவாங்க இவளும் அப்படித்தான் இருப்பா, ஆனால் அதுல ஒரு நியாயம் இருக்கும் , இன்னைக்கும் நாங்க அவமானம்படுற மாதிரி நடந்துக்க மாட்டாள் ,

30 அனாதை பசங்களை வச்சி ஒரு ஹோம் நடத்துறா , ஒரு பையனை சொந்தமா வேலை பார்த்து படிக்க வைக்கிறா, கோடி கோடியா பணம் கொட்டுற ஆபிஷ விட்டுட்டு ராப்பகல உட்கார்ந்து கவர்மெண்ட் எக்ஸாம்க்கு படிக்கிறா உங்க பையனுக்காக , உங்க வீட்டு மருமகளா அவளை ஏத்துக்கோங்க , உங்க குடும்பத்துக்கு ஏத்த மாதிரி நடந்துப்பா “” என்றார்..

அவரை சிரிப்புடன் பார்த்த ராமசாமி “ கண்டிப்பா உன் பொண்ணுதான் எங்க வீட்டு மருமகள், ஆனால் அது உங்க பணத்துக்கு இல்லை, என் பேத்தியோட உண்மையான காதலுக்கு, எங்க எல்லாருக்கும் சம்மதம் , முடிஞ்சா அவளை வேலை வாங்க பார்க்க சொல்லுங்க இல்லை வேணாம் “என்றார்..
அதன் பின் வேலைகள் மள மளவென்று நடக்க அதை சொல்லி முடித்ததும் அக்னிக்கு அவ்வளவு நிறைவு..

தன்னை கண்டு கொள்ளாமல் இரண்டரை வருடமாக சுத்திக்கொண்டிருந்த துசர் தன்னை தெரிந்ததும் எல்லாவற்றையும் முடித்து இதோ அடுத்த வாரம் நிச்சயம், அதற்கு அடுத்த வாரம் கல்யாணம் என கொண்டு வந்து நிறுத்திவிட்டானே...என்று..

சந்தோசமாக துசரின் தோளில் சாய்ந்து கொண்டவள் “ அம்மா நான் எங்க வீட்டுக்கு போய்ட்டு வரவா”என்க

சத்யா “சந்தோஷமா போய்ட்டு வாடா” என்று சொல்லி அனுப்ப இருவரும் ஒன்றாக ஜெகநாதன், அஞ்சுகம் ராமன் சத்யாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வெளியேறினார்...

துசரின் பைக்கில் இருவரும் செல்ல துசர் அவனின் வீட்டிற்கு செல்லாமல் வேறு எங்கோ செல்ல அக்னி யோசனையாக அமர்ந்து இருந்தாள்..

துசர் அவளை அழைத்துக்கொண்டு ஒரு தண்டவாளம் அருகில் செல்ல அங்கே தலை தனியாக , உடல் தனியாக சிதறிக்கிடந்தான் டேவிட்...

அதை பார்த்ததும் அக்னிக்கு அதிர்ச்சி எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் அக்னிக்கே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக கொடுத்தான் அவளின் துசர்...

போதுமா....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 12 :


துண்டித்து கிடந்த டேவிட்டின் பிணத்தை பார்க்கும் போது இரத்தத்தை பார்த்து வரும் அருவருப்போ..
இல்லை சிதறிகிடக்கும் அவனின் மண்டையை பார்த்து ஒவ்வாமையோ அக்னிக்கு வரவில்லை..

மாறாக இலக்கின் அடுத்த குறியின் அழிவின் வெற்றியே தெரிந்தது...இன்னும் இந்த மனித மிருகங்களின் இரத்தத்தை எடுத்து அபிஷேகம் செய்து கொண்டாள் கூட அவளுக்கு அடங்காது..

அப்படி ஒரு வெறி..அவள் கண்களில்..தன்னை போல காதலன் அனைவருக்கும் கிடைக்க வில்லை என்றாள் என்னா ஆவது என கொதித்துகிடந்தாள் அந்த பூலாந்தேவி...


துசரை நோக்கி “ துசர் உங்களுக்கு எப்படி இவனை தெரியும் “ என்றாள்

“நான்தான் சொன்னேன்ல ரோஸ் உன் எல்லாமும் இனி நான், உனக்கான துக்கம், கோபம், வெறி, பழி இதுவும் என்னோடதுதான்”
அன்னைக்கு அமித் சாகுறப்ப உன்னை பின் தொடர்ந்து வந்தேன், என்றவனை “ துசர்” என்றாள் கலவரத்துடன்


“ உன்னை எப்படிடா நான் தனியாவிடுவேன்..உன்னை நெருப்பில நிற்க சொல்லிட்டு நான் எப்படி...அதான் பின்ன வந்த போது இவன் அந்த பொண்னை அந்த வீட்ல விட்டுட்டு திரும்பி போகும்போது இவனை பாலோ பண்ணி போனேன்..

இந்த பொறுக்கிய பத்திதான் நீ என்கிட்ட சொல்லி இருக்கியே பேர சொன்னப்ப இவன்தான்னு தெரிஞ்சது..

கார நிறுத்திட்டு போதையில அதுலையே படுத்து தூங்கிட்டு இருந்தான்..

அப்படியே இழுத்துகிட்டு வந்து கதையை முடிச்சிட்டேன் ஒரு வாரமா மறைச்சு வச்சிருந்தேன் நேத்து நைட்தான் வந்து இங்க தண்டவாளத்துல கட்டிபோட்டேன்” என்றான்..

துசரின் செயலில் அக்னிக்கு மகிழ்ச்சியே இருந்தும் “துசர் என்னோட முழு பலவீனம் நீங்க , நீங்க என் பக்கத்துல இருக்கும் போது என்னால சரியா யோசிக்க முடியாது, செயல்படுத்த முடியாது ,
உங்களுக்கு எது ஒண்ணுன்னா என் உலகம் முடிஞ்சிடும் துசர்,

பிலீஸ் நீங்க இதுல வர வேண்டாம் நீங்க இருக்குர இடத்துல நான் என் இயல்ப தொலைச்சி எதிரியை வீழ்த்த முடியாம போயிடும்..“ என வலியோடு கூற..

அவள் கண்ணீரை துடைத்துவிட்டவன் “ கண்டிப்பா டி... ஆனால் உனக்கு நான் எப்படியோ ,அது மாதிரிதான் நீ எனக்கு...உன்னை போராட விட்டுட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாது...
உன்னாலா முடியாது போது..உனக்கு தேவை ஏற்படும் போது கண்டிப்பா நான் உன் நிழலா நிற்பேன், நீயே வேண்டாம் என்று சொன்னாலும் , வா வீட்டிற்கு போகலாம் “ என்று அழைத்துக்கொண்டு சென்றான்..


அங்கே துசரின் வீட்டில் நுழையும் போதே சண்டை நெருதுளி ஆனது
நடு ஹாலில் விசாலியும் , குட்டியும் உருண்டு பிரண்டு சண்டைபோட்டு கொண்டிருந்தனர்..

வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்று இருக்க ராமசாமியும் , பருவதமும் மட்டுமே இருக்க விசாலி குட்டியின் அனுமதி இல்லாமல் அவன் போனை பார்த்ததே இந்த குழாய் அடி சண்டைக்கு காரணம்..

“ நீயே ஒரு வெட்டி தண்டம் யாருடா அது பூசா பூசா ன்னு உன்னை கொஞ்சிறது..


(இதுஎன்ன...பூசா...ஜிங்கிலி...மம்ம்ம்ம்...ஓ..சினேகிதனை...சிநேகிதனை...விவேக் கோவை சரளாவா.... கக்கருவா புடிஞ்சவனே..நான் கூட ரொம்ப ரொமான்ட்டிக்கா நினைச்சிட்டேன்...)

“ நீ ஏன் டி என் மொபைல் எடுத்த..அறிவு இல்லை...எனக்கு 1000 பேரு மேசேஜ் அனுப்புவாங்க அய்யா பர்ஸ்னாலிட்டி அப்படி..உன்னை மாதிரி கோண மூஞ்சா எனக்கு” என்று அவள் கையை வலிக்க பிடித்து முறுக்க


அவள் கையை நறுக்கென்று கடித்தவள் “ உன்னை விட பெரியவங்க வீட்ல நாங்க 3 பேரு இருக்கோம் அதுக்குள்ள உனக்கு , டாவு , லவ்வெல்லாம் கேட்குதா “என்றவள் அவன் கையிலிருந்து தப்பித்து ஓட..


( அட போம்மா அவன் டாவு அடிக்கிற பொண்னே உன்னைவிட பெரியவள்..அவன்ட போய் வயசை பற்றி எல்லாம் பேசிக்கிட்டு இருக்க..)

வீட்டின் வாசலில் அக்னியும் , துசரும் இதை பார்த்துக்கொண்டு நிற்பதை பார்த்த ராமசாமி “ டேய் துசர் வந்துட்டான் பாரு “என சொல்ல

“ பேபி..உன் புருசன சும்மா இருக்க சொல்லு இப்படி பொய் சொல்லி அவளை காப்பாத்த பாக்குறாரா...? , இன்னிக்கு அவள் ஒரு சடையை அருக்காம விட மாட்டேன் “ என அவளை துரத்த..

( அட சண்டாள நிஜமா..உன் அண்ணன் வந்துட்டான் டா..திரும்பி பாரு..)

துசர் அவனை அதட்ட வாயை திறக்கும் முன் அக்னி “ குட்டி அவளை துரத்தாத நில்லு “” என்க..
“ஐயோ அண்ணி , என்று அதிர்ந்து திரும்பியவன் பக்கத்தில் உள்ள அண்ணனை பார்த்ததும் பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு நிற்க அதை பார்த்த எல்லோருக்கும் ஒரே சிரிப்பு..

துசர் கோபமாக “ குட்டி..” கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை ,எப்ப பாரு இவளை அடிச்சிகிட்டும், வம்பு வளர்த்துகிட்டு இருக்குற,” என அதட்ட

“அவள்தான் அண்ணா என்னை கடிச்சிட்டா “ என்று கையை காட்ட
“விசாலி” என்று அவள் புறம் திரும்ப “அத்தான் அவனை நான் கடிக்கிறதுக்கு முன்னாடியே அவன் என் கையை முறுக்கிட்டான் இங்க பாருங்க “

அவள் கையை நான் முருக்குறதுக்கு முன்ன என்னை இங்க பிராண்டி வச்சிட்டாள் அண்ணா “ என்று அவன் கழுத்தை காட்ட..

அதுக்கு முன்னாடி என்று ஆரம்பித்த விசாலியை “ஸ்ஸ்ஸ்” என்று அடக்கிய துசர்
“ நீ அவனை விட பெரியவள்தான நீ கொஞ்சம் அவனிடம் தனிஞ்சி போக கூடாதா..., அந்த தர்ஷிகா இல்லை ,இல்லை உங்க 3 பேரையும் என்னால சமாளிக்க முடியாது” என்றான்.

தர்ஷிகா என்றதும் வீட்டில உள்ள அனைவரின் முகமும் சோகத்தை கடன் வாங்கியது..

இதுவரை அவர்கள் பேசுவதை சிரிப்புடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அக்னி, தர்ஷிகா என்ற பெயரில் ஒரு நிமிடம் விழிகளை சுருக்கியவள் அப்பறம் இயல்பானாள்..

ராமசாமி குட்டியை இடித்துக்கொண்டு சென்று அக்னியின் கையை பிடித்தவர் “வாடா தங்கம் முதல் தரம் வீட்டுக்கு வர , வலது காலை எடுத்து வச்சி வா” என்று உள்ளே அழைத்துச்சென்றார்.

குட்டி முறைக்க அவர் உப்புக்கு கூட அவனை கண்டு கொள்ளவில்லை..

இன்றும் டார்க் ப்ளூ ஜீன்ஸ், நேவி ப்ளூ முழுக்கை சட்டையே அணிந்து இருக்க உள்ளே சென்றாள்..
அவளின் கன்னத்தை வழித்து திஷ்டி சுற்றிய பருவதம் “ஏன் கண்ணு , ஒரு புடவை கட்டிக்கிட்டு வர கூடாது “ என்க..

“இல்லை அம்மாயி எனக்கு இந்த ட்ரேஷ்த்தான் கம்பர்டபிள இருக்கும் “ என சொல்ல
அந்த சொல்லில் எந்த திமிரும் இல்லை, அலட்சியமும் இல்லை, நீ சொல்ல நான் என்ன கேட்கணும் என்ற பாவமும் இல்லை,

அந்த குரல் வெறும் உண்மையை தாங்கி ஒலித்தது அது அந்த அனுபவசாலிக்கு சரியாக புரிய “சரிடா, உன் இஷ்டம் “ என்றவர் அவளிடம் பேசிக்கொண்டிருந்தார்..

பின் வேலை முடிந்து அனைவரும் ஒவ்வொருவராக வர எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தாள் ஒரு கலவையான மன நிலையுடன்
உண்மையை மறைத்துக்கொண்டு அவர்களிடம் பேசிகொண்டு இருப்பது அவளுக்கு முள் மேல் அமர்வது போல இருக்க அவளின் இயல்பிற்கு மாறாக அவஸ்தையாக இருந்தது..

அது உண்மையாக பேசி நேர்மையாக வாழ்பவர்களுக்கே தெரியும் அவஸ்தை. அவளின் பெற்றோருக்கு தெரியாமல் மறைக்கிறாள் என்றாள் அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்ற காரணம் இருக்கிறது...

ஆனால் துசரின் குடும்பத்திலிருந்து மறைப்பது அப்படி இல்லையே..என்னதான் அவர்களுக்காக அவள் அனைத்தும் செய்தாலும் மறைப்பது முறையன்று..

அவர்களின் குடும்ப அமைப்பில் நான் நினைப்பது போலவோ, துசர் நினைப்பது போலவோ இருக்க வேண்டும் என்று நினைக்க முடியாது அல்லவே..

அவர்களின் எண்ணம் எப்படியோ அக்னிக்கு கவலை இல்லை...ஆனால் அது துசருடனான காதல் வாழ்க்கையை எந்த விதத்திலாவது பாதித்தால் அவளால் தாங்க முடியாதே.

அவளின் தவிப்பை உணர்ந்த துசர் “ அம்மா நான் அக்னிக்கு பின்னடி தோட்டத்தை காட்டுறேன் “ என்று வீட்டின் பின்னே அழைத்து வந்தான்..

பின்னடி பந்தல் போட்டு ஒரு புறம் சந்தன மல்லியும், மறுபுறம் முழுவதும் மல்லிப்பூ போட்டு இருக்க பின் வாசலை தாண்டியதும் கலவையான பூவின் வாசம் அக்னியை சமன் செய்ய அங்கு உள்ள பெஞ்சில் அமர்ந்தாள்...

அருகில் துசர் அமைதியாக அமர கண்களை மூடி அப்படியே அவனின் தோளில் சாய்ந்து விட்டாள்..

அவன் பின் புறமாக கைவிட்டு அவளின் இடுப்பை பிடிக்க அவளின் உடல் ஒரு நொடி சிலிர்த்து அடங்க அவளின் இதய துடிப்பு எகிரியது...

“ பட்டுமா நீ ஏன் என்னை பார்த்தன்னு எனக்கு வருத்தமா இருக்குடா “ என்றான்..

அவனின் தீண்டலில் தன்னை மறந்து கண்களை மூடி இருந்தவள் அவனின் வார்த்தையில் விழுக்கென்று நிமிர
மீண்டும் அவளின் தலையை தன் நெஞ்சில் அழுத்தியவன் அவளின் தலையின் மீது தன் கன்னத்தை வைத்து “ என் காதல் உன்னை ரொம்ப பலவீன படுத்துது...காதல் எப்பொழுதும் பலமாதான் இருக்கனும், என் காதலும் அப்படி இருக்கத்தான் என் ஆசை,
எங்கு நீ என்னால உன் தைரியத்தை வேண்டாம்னு ஒதுக்கி வைச்சிடுவியோன்னு எனக்கு பயமா இருக்கு டா,

நூற்றுல,ஆயிரத்துல இல்லை லட்சத்துல ஒருத்தி நீ... நீ லட்சம் பெண்களுக்கு முன் உதரணமா இருக்கனும்..” ,

என்னைக்குமே நீ நீயா இருக்கணும் அதுதான் எனக்கு பெருமை சரியா“ என அவளை கேள்வியாக பார்க்க
அவள் மனம் அப்படி வேண்டும் என்றா செய்கிறது....இருந்தும் துசர்க்காக அவளும் “ம்ம்ம்ம்” என்று அவன் வயிற்றில் ஒரு கைவிட்டு, முதுகில் ஒரு கை இட்டு அவனை இறுக்கி பிடித்துக்கொண்டாள்...

அப்பொழுது அங்கு வந்த குட்டி அந்த காட்சியை பார்த்தும் தன் ஜிங்கிலியின் நியாபகம் வர “நம்ம அக்கா நம்ம பக்கத்துல கூட வீட்டாமாட்றா...” என்றவன் “ம்க்கும்” என்று குரல் கொடுக்க

அக்னி “ குட்டி போய்ட்டு அப்பறம் வா டா” என்றாள் துசரை அணைத்த படி.. அதற்கு துசர் சிரிக்க

“அது எப்படி எங்க அண்ணனை நீங்க மட்டும் கட்டி பிடிக்கலாம் நானும் கட்டி பிடிப்பேன்” என இடதுபுறமாக குட்டியும் அக்னியை போல கட்டிக்கொள்ள ,

விசாலியும் வந்து..”.நீ உங்க அண்ணனை கட்டி பிடிச்சிகோ நான் என் அக்காவை கட்டி பிடிச்சுகிறேன்” என அக்னியை வலப்புறமாக கட்டிக்கொண்டாள்.

( அடச்சே கட்டிபிடி வைத்தியமா பண்ணிக்கிட்டு இருக்கீங்க தள்ளிபோங்க....)

அதன் பின் சிறிது .நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அக்னி கிளம்ப துசர் அவளைவிட்டு வர வெளியே வந்தான்.அனைவரும் வாசல் வரை வந்து வழி அனுப்பினர்..

அக்னியும் ,துசரும், பைக் வரை வர துசர் போனை வீட்டில் மறந்து வைத்துவிட்டதால் மீண்டும் எடுக்க உள்ளே வர அக்னி அங்கு உள்ள சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்துக்கொண்டு நின்றாள்..

அப்பொழுது அந்த பக்கம் வந்த ஒரு பைக் அங்கு பேட் செய்து கொண்டிருந்த 9 வயது பையனை வாயை மூடி தூக்கி நடுவில் வைத்துக்கொண்டு வேகமாக செல்ல மீதம் உள்ள சிறுவர்கள் என்ன செய்வதென்று புரியாமல் நிற்க அதை பார்த்த அக்னி தன்னிலிருந்து 15 அடி தொலைவில் உள்ள துசரிடம் “ துசர் கீ..” என கத்த


துசரும் தன் கீயை தூக்கி போட அதை கேட்ச் பிடித்த அக்னி துசரின் பல்சர் பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்து ஒரு காலை கீழே ஊன்றி கொண்டு பைக்கை வட்டமாக புழுதி பறக்க திருப்பியவள் மின்னல் வேகத்தில் அந்த பைக்கை பாலோ செய்தாள்..


அக்னியின் குரலில் வெளியே வந்த துசரின் குடும்பத்தினர் அவள் பைக்கில் செல்வதை ஆ என்று பார்க்க துசரும்,குட்டியும் பெருமையாக பார்த்தனர்...


போதுமா......
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 13 :

அவர்களை மின்னல் வேகத்தில் துரத்திகொண்டு சென்றாள்.. ஏற்கனவே நிறையகடத்தல்களை அசால்ட்டாக செய்ததால்அனுபவம்மிக்க அந்த கடத்தல் கும்பல்அவளை விட வேகமாக சென்றனர்..

சந்து, பொந்து என்று அசால்ட்டாகவண்டியை ஓட்டியவள் 80 கிலோ மீட்டர் ஸ்பீடிலையே ஹீயரை மாற்றி வேகமாகஅந்த ஹைவேயில் அவர்களை தாண்டி 20அடி தூரத்தில் வண்டியை குறுக்காகநிறுத்தினாள்..



பின்னே நடந்து நெருங்கி அவர்களைநோக்கி முன்னேற
“பெண் தானே அடித்துவிட்டு போகலாம்” , “இல்லை அவளையும் கடத்திக்கொண்டுபோகலாம்”என உடல் உறுப்பை திருடும்அந்த விஷங்கள் அவள் அருகில் வந்ததும்மயக்க மருந்து அடித்து விடலாம் என நினைத்து பைக்கை ஓடிவந்தவன் அவனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்துமயக்க மருந்தை எடுக்க கையை விட..


அனைத்தையும் கவனித்து கொண்டேஅவர்கள் அருகில் வந்தவள் பைக் ஓட்டிக்கொண்டு இருந்தவனை அவன்பேண்ட் பாக்கெட்டில் விட்ட கையைவெளியே எடுக்க முடியாமல் ஒரு கையால்இறுக்கி பிடித்தவள்


பின் அவன் பின் தலையை பிடித்துபெட்ரோல் டேங்கில் விடாமல் முட்ட அதேநேரம் அவளை தடுக்கும் பொருட்டு பின்னே உள்ளவன் பின் அமர்ந்த படியேஅவளின் முடியை பிடிக்க.. வலித்தாலும் அக்னி அவனின் தலையையும் விடவில்லை,அடிப்பதையும் நிறுத்தவில்லை..


அவன் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரியும்வரை முட்டி முடித்தவள்
அதே வேகத்தில் அவளின் இடது கையால்தன் முடியை பிடித்திருக்கும் அவனின்வலது கையை முறுக்கியவள் தன் வலதுகையால் அவனின் கழுத்து பகுதியில்கையை வெட்டுவது போல ஓங்கி குத்தவலி தாங்காமல் அவனும் இடது புறமாகசரிய வண்டி பேலன்ஸ் இல்லாமல்அவனின் மேலேயே சரிந்தது..

வண்டி விழும்போது அந்த குழந்தைவிழாமல் தாங்கி பிடித்தாள்..

இவ்வளவு நேரம் வாயை பொத்தியதால்அந்த சிறுவன் மயங்க அந்த சிறுவனைகையில் தூக்கியவள் பைக்கை நோக்கிமுன்னேற அந்நேரம் துசரும், கண்ணாவும்வர அவர்களிடம் கொண்ட அந்த பையனைஒப்படைத்தாள் துசர் அந்த பையனுக்குமுதலுதவி செய்து முழிக்க வைத்தான்..


பெண் எப்பொழுது தன்னை பலவீனமாககுறைத்து எடை போடுகிறாளோஅப்பொழுது பெண் ஆணின் முன்தோற்கிறாள்,எப்பொழுது ஆண் பெண்ணை பலம் இல்லாதவளாகநினைக்கிறானோ அப்பொழுது ஆண் பெண்னிடம் கேவலமாக தோற்கிறான்..

பலம் என்பது மனம் சார்ந்து..உடல்சார்ந்தது என மூளை போதிக்கும் பொய்பிரச்சாரத்தை ஒதுக்கி தள்ளி மனதால் போராடினால் வெற்றி நிச்சயம்...

தன்னால் முடிந்த வரை போராடவேண்டும்கடமைகள் இருக்கட்டும், தன்னை நம்பிவாழ்பவர்கள் இருக்கட்டும் உன்னால் முடிந்தவரை உன் மேலான அடுத்தவரின்ஆதிக்கத்தை தடுத்து போராடு..

முடியவில்லையேல் உன்னை காப்பற்றிகொள் ஓடி ஒழிய அல்ல பாய்ந்து அடிக்க..

கண்டிப்பாக உனக்கான வாய்ப்பு,விதியாலையோ..சூழ்நிலையாலையோ,இல்லை கடவுளாலையோஉருவாக்கப்படும்..

கண்னா அக்னியின் அதிரடியை பார்த்துமிரண்டு நின்றுவிட்டான், ஏதோ தைரியமான பெண் என்றுதான் நினைத்தான்..

ஆனால் இருவர் மயங்கி சரிந்ததைபார்த்தவன் எச்சில் முழுங்கி கொண்டு அல்லு கலட நின்றான்..

எங்கே தன்னவளின் தனித்தன்மை மாறிவிடுமோ என்று பயந்த துசருக்குநான் உன்னிடம் மட்டுமே அப்படி என்றுநிரூபித்துவிட்டாள் அவனின் தர்பூஸ்..

பின் போலிஸ்,மற்றும் அந்த குழந்தையின்பெற்றோர் வரும் வரை அங்கேயேநின்றனர்..

குட்டி மெதுவாக சென்று அக்னியின்கையை பிடித்துக்கொண்டு” அண்ணிஇந்த பன்னி ஏதாவது உங்களுக்குபிடிக்காதது பண்ணா அடிக்காம திட்டாமகுணமா, வாயால சொல்லணும்” என்றுஅங்கே மயங்கி கிடந்தவர்களைபார்த்துக்கொண்டே சொல்ல

“முயற்சி செய்றேன் குட்டி “ என்றவளைபார்த்து பேந்த பேந்த முழிக்க துசர் “உனக்கு சரியான ஆளுதான் டா என்செல்லம் “ என்றான்..

பின் அந்த குழந்தையின் பெற்றோர்கள்வந்து நன்றி சொல்ல அவர்களின்நன்றியை ஏற்றுக்கொண்டவள் “சம்மர்லதான் இந்த கும்பல் அதிகமா இருப்பாங்க ,குழந்தையை கவனமா பார்த்துகங்க”என்றவள் ,

போலீசிடம் அவர்களை ஒப்படைத்துவிட்டு கிளம்ப
துசரின் குடும்பத்தில் உள்ள எல்லாஆண்களும் பெருமையாக நினைத்தார்கள் என்றால்,

பெண்கள் எப்பொழுதும் போல மிகவும் பயந்தனர்...என்ன ஆகுமோ..எதாகுமோ எதிர்காலத்தில் என்று..

அந்த நள்ளிரவு நேரம் தெருவிளக்கைதாண்டி கருமை நிறம் எங்கும் பூத்திருக்க தூரத்தில் எங்கோ பாடும் பாடலின் வரிகள்கூட ஆச்சரம் பிசகாமல் காதில் விழ ..

அந்த நடுத்தர மனிதர்கள் வசிக்கும்அப்பார்ட்மென்டில் இரவு நேர காவலாளியையும் ஏமாற்றிவிட்டு அந்த மச மச உருவம் 6 வது மாடியை நோக்கிஉள்ளே சென்றது..


6த் அபார்ட்மென்டின் வாசலில் ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருந்த டூப்ளிகேட்கீயால் கதவை திறந்து அந்த உருவம்வலப்பக்கம் உள்ள ரூமை நோக்கி செல்ல


அங்கே ஒல்லியான ஒடிசலானதேகத்துடன், நல்ல மஞ்சள் நிறத்துடன், பார்த்தால் பசக்கென்று ஒட்டிக் கொள்ளும்கலையான முக அமைப்போடு ஒரு பெண் தூங்கிக் கொண்டிருந்தாள்.

அவளின் அருகில் சென்று அமர்ந்துஅவளின் கைகளை பிடித்து கொண்டு “ஜிங்கிலி” என்றது உருவம்..
ஏன்னா தூங்குனது நம்ம ஷாம்னி வந்ததுநம்ம கிப்பி மண்டையன் குட்டி


(ஹா... ஹா.. தொப்பி .தொப்பி...எல்லோருக்கும்.. எல்லாநேரமுமா கொலை சீனா வைப்பாங்க “is time for romance “.🤣🤣🤣..)


அவள் அசையாமல் தூங்க “ஏய் ஜிங்ஸ்”என்க..., எங்கே அந்த தூங்கு மூஞ்சிவிழித்த பாடாய் இல்லை..
கடுப்பாகிய குட்டி பக்கத்தில் உள்ளதண்ணியை எடுத்து அவள் தலையில்ஊத்தியவன் “ஏய் அக்கா எழுந்தறி டி” என கத்த

அதில் அடித்து பிடித்து கொண்டுஎழுந்தவள் குட்டியை பார்த்ததும்“கு...கு...குட்டி நீ எங்கடா இங்க “ என சாத்திஇருந்த. ரூம் கதவை பார்க்க


“ 2 நாளைக்கு முன்னடி உன் வீட்டு சாவிகாணாமல் போய்ட்டுல ஆட்டையைபோட்டது அடியவனே “ என காலரைதூக்கிக் கொண்டான்..


“பிராடு..வெளிய போடா வீட்ல அம்மா அப்பா இல்ல.. சொந்தகாரங்ககல்யாணத்துக்கு போய் இருக்காங்க..நீவந்தத யாராவது பார்த்தா தப்பாயிடும்.”என அவனை துரத்த..


“அதுவும் யாம் அறிவோம்...” என அவளைநெருங்க ..” பிலீஸ் கிப்பி போய்டு டா” என குட்டியின் தாடையை பிடித்துக்கொண்டு அவனை கெஞ்ச

அவள் இரு கையையும் ஒன்றாகபிடித்தவன் “ நொய் நொய்ங்காதஜிங்கிலி இன்னைக்கு அத்தானுக்குபர்த்டே விஸ் மீ” என்றான்

ஷாம்னியின் காதில் எங்கே அதெல்லாம் விழுந்தது அவன் அவள் அருகில்நெருங்க நெருங்க தன்னிலை மறந்து கொஞ்சம் கொஞ்சமாக மெத்தையில் சாய அவனும் அவளுடன் சரிய ..

ஒரு கட்டத்தில் ஷாம்னி நன்றாகமெத்தையில் படுத்து இருக்க குட்டி அவள்இரண்டு கையும் பிடித்துக்கொண்டு அவள் முகத்தருகே இருந்தான்..

நைட் டீயூட்டியில் இருக்கும் இந்திரன் அவர்களுள் கொளுத்த வேண்டியதை கொளுத்தி விட்டு வெட்கமே இல்லாமல்பக்கத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கஆரம்பித்துவிட்டான்

( அட வீணா போனா இந்திராஎழுந்துபபோட..சின்ன சிறுசுகரொமான்ஸ் பண்றது பார்த்துகிட்டு....)


இதழுக்கும் இதழுக்கும் அரை இன்ச் தூரம் இருக்க இருவரின் தேகமும்நெருப்பாய் கொதிக்க அவனின்கைகளிலிருந்து கையை உருவியவள்மெத்தை விரிப்பை கெட்டியாகபிடித்துக்கொண்டாள்..


அந்த அரை இன்ச் தூரத்தை குட்டி கடக்கும்வரை கூட தாங்க முடியாமல் தொண்டைகுழி ஏறி இறங்க தவித்தாள் ஷாம்னி..

குட்டி அவள் நெத்தியில் ஒரு முத்தம் அல்லஒரு உரசல் அந்த தீக்கே அந்த இலவம்பஞ்சி பற்றி எரிய கண்களை இறுகமூடிக்கொண்டு வாயை திறந்து திணறியபடி மூச்சைவிட்டது..

அடுத்து அவளின் வலது கன்னத்தில் ஒருமுத்தம் இப்பொழுது ஷாம்னி “ குட்டி இதுதப்பில்லையா...” என உணர்வின் பிடியில் பிதற்ற

அவன் இன்னொரு கன்னத்தையும்இப்பொழுது ஒரு முத்தத்தோடு சின்னகடியும் கடித்தவன் “ தப்புதான் ஆனால்வேணுமே..” என்றான் கரகரத்த குரலில்..

“ம்ம்ம் “ என்றவள் சம்மதம் சொல்லிஅவனின் இதழ் தீண்டலை எதிர் பார்த்துகண் மூடி கிடக்க...

மெத்தை விரிப்பை இறுக்கியாகபிடித்துக்கொண்ட அவளின் கையைபிடித்து மெல்ல விரித்து சமன் செய்தவன்அதில் ஒரு முத்தம் கொடுத்து..”ஆனா இப்பஇல்லை ஜிங்ஸ் கல்யாணத்துக்குஅப்பறம் “ என்றான்..

அதற்கும் “ம்ம்” என்றவள் மயங்கி கிடக்கஅவளை இயல்பாக்கும் விதமாக “அக்கா எழுந்து தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துசொல்லுங்க “என சீண்ட..

அவனின் அக்காவில் கடுப்பாகியவள்அவனின் மண்டையை பிடித்து நாளாபுறமும் ஆட்டியவள் “ டேய் அக்கா சொல்லாத “என 10 அடி அடித்தவள்


பின் அவன் தலையை முடியை சரி செய்துகொண்டே “ என் செல்ல கிப்பி மண்டயனுக்கு இனிய பிறந்தநாள்நல்வாழ்த்துக்கள் ,இன்னைக்கு மாதிரி என்னைக்கும் இதே வாலுத்தனத்துடன் ,எல்லார்கிட்டையும் திட்டு வாங்கிட்டு சந்தோஷமா இருக்கணும்” என்று அவன் முன் நெற்றியில் முத்தம் இட்டாள்,


பின் அவனுக்கு அவள் வாங்கி இருந்தவாட்ச் மற்றும் பிளாட்டினம் செயினைகொடுத்தாள்..

எவ்வளவு அட்டகாசம் பண்ணினாலும் குணத்தில் குறை ஏதும் சொல்ல முடியாதசொக்க தங்கம் அவளின் கிப்பி மண்டையன் என்ற பெருமையில் விசகசித்து இருந்தாள்..


பின் கொஞ்ச நேரம் பேசி இருந்துவிட்டுஅவன் கிளம்பினான்.
குட்டியின் பிறந்த நாள் எல்லோரின் அன்பு பரிசோடு கோலாகலமாய் செல்ல எப்பொழுதும் எதிரும் புதிருமாய் இருக்கும் ராமசாமி கூட அவனை ஆசிர்வதித்து அவனுக்காக அவன் ரொம்ப நாளாககேட்டு கொண்டிருந்த பைக்கை வாங்கி கொடுத்தார்..


அவனும் சமத்தாய் வாங்கிக்கொண்டான்..


இன்னமும் 2 நாளே அக்னி துசரின்நிச்சயம் இருக்க இருவருக்கும் ட்ரெஸ் எடுக்க , நகை வாங்க என இரு வீட்டினரும்மிகவும் வேலையாக இருந்தனர்..

இதே அதோ என்று இருந்த நிச்சயமும்இன்று மாலை என்று வந்து நிற்க..

அந்த நட்சத்திர அந்தஸ்து பெற்ற மஹால்செயற்கை வெளிச்சங்களால்வானுலகத்தை ஒத்து இருந்தது..
மேடை முழுவதும் இந்தியாவில் உள்ளஅனைத்து வகை மலர்களாலும் அலங்கரித்து இருக்க இரு வீட்டினரும் உபசரித்தே ஓய்ந்து போயினர்..

இரு வீட்டிற்கும் முதல் விசேஷம் என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது..

பரிட்சை அது இது என்று ஊருக்கு வாரமல்ஏமாத்தி கொண்டிருந்த தர்ஷிகா,துசரின் தங்கை இப்பொழுதுதான் வந்துஇறங்கினாள் நேரடியாக மண்டபத்திற்கு
எப்பொழுதும் துரு துருவென்று குட்டியைபோல இருப்பவளின் முகம் இன்று பொலிவிழந்து கிடக்க அவளை பார்த்தவீட்டினர் அவ்வளவு வேளையிலும் தனிதனியாக அவளுடன் அமர்ந்து பேசிசென்றனர்..


பின்னே எப்பொழுதாவது வருபவள்,அப்படி வந்தாலும் ஒரு நாளுக்கு மேலேதங்குவதில்லை அந்த ஏக்கம்அனைவருக்கும்..

சிறுது நேரம் பேசிக்கொண்டு இருந்தவள்அண்ணியை பார்த்து வருகிறேன் மணமகள் அறையை நோக்கி சென்றாள்..

கதவை திறந்து கொண்டு தர்ஷிகாஉள்ளே செல்ல அங்கே அக்னியை எதிர்பார்க்காததால் ஒரு நிமிடம் அதிர்ச்சிஆனவள்..

பின் “அக்கா” என்ற கூவளுடன் அவளைகட்டிக்கொண்டு அடை மழையை போலஅழுது தீர்த்தாள்...

அக்னி அவளை ஆதரவாககட்டிக்கொண்டாள்..


அதே நேரம் அங்கே அந்த ராட்சசன் ஜிந்தா“உங்க பிரண்ட் 4 பேரோட மரணத்துக்குகாரணம் ஒரு பெண்தான்” என்று அந்தஇரு வெறிநாய்களிடம்சொல்லிக்கொண்டிருந்தான்...




போதுமா....





படிச்சிட்டு உங்க கருத்தை இங்கே சொல்லிட்டு போங்க செல்லோ...

 
Last edited:

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.... டியர்ஸ்..

நான் தான் உங்கள் 32...

இதோ இதயம் போதுமா அடுத்த 2 யூடி படிச்சிட்டு எப்படி இருக்குன்னு...கமெண்ட்ஸ்ல ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க....

சின்ன ஸ்டோரி தான் வீக்லி 4 அப்டேட் போட்ட ஜூன் பஸ்ட் வீக்குள்ள முடிஞ்சிடும்.... கடைசி வரை சப்போர்ட் பண்ணுங்க செல்லங்களா....

லாஸ்ட் எபிக்கு லைக் ,கமென்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் என்னோட நன்றிகள்.

சைலண்ட் உங்களுக்கும் என் நன்றிகள்...

இப்படிக்கு
நான் உங்கள் 32...
 
Status
Not open for further replies.
Top