All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இதயம் போதுமா கதை திரி..

Status
Not open for further replies.

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்...

நான் தான் உங்க no 32...

இதயம் போதுமா கதையோட பதிவுகள் புதன், வெள்ளி, மற்றும் ஞாயிறு நைட் 10 மணிக்கு டிங் டாங்ன்னு வந்துடும்ம்...



நீங்களும் டிங் டாங்ன்னு 10 .05 கே படிச்சிடனும்

சரி சரி. முறைக்காதீங்க... மன்னிப்பு மன்னிப்பு..டைம் கிடைக்கும் போது படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..

பர்ஸ்ட் எபிக்கு கமெண்ட்ஸ் போட்டா எல்லோருக்கும் என் நன்றிகள்...

சைலண்ட் ரீடர்ஸ்...உங்களுக்கும் என் நன்றிகள்...

உங்கள் ஒவ்வொரு கமென்டஷும் எனக்கு 10 எனர்ஜி ட்ரிங் குடிச்சதுக்கு சமம்...

இன்னைக்கு முதல் நாள் அப்படிங்குறதுனால இன்னைக்கு இன்னொரு எபி😘😘😘😍😍...பிரீ இனி அடுத்த எபி புதன் கிழமை... செல்லம்ஸ்..

இப்படிக்கு உங்கள்

32...
ஸ்ரீகலா தமிழ் நாவல்
கூகுள் போஸ்ட்
தமிழ் நாடு..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 2 :

அக்னி முறைத்த முறைப்பில் வாயை மூடிக்கொண்டாள் ஷாம்னி.வாயை மூடினாலும் கண்கள் சிரிக்க

அவர்கள் அமர்ந்து இருந்த டீக்கடை பெஞ்சில் இரண்டு டீ கிளாஸை வைத்த அங்கு வேலை பார்க்கும் சிறுவன் “ஷாமு அக்கா இதோட 454 ,பிலிங்கி அக்கா லவ்வ சொல்றேன் லவ்வ சொல்றேன்னு விழுந்து வாருனது," என்று விழுந்து விழுந்து சிரிக்க

முறைக்க முயன்று தோற்ற அக்னியும் வாய் விட்டு சிரித்தாள் அவள் இப்படியாக சிரிப்பது அரிதே அதுவும் இந்த டீக்கடையில் தான் அதிகம்.

அந்த சிறுவனின் மண்டையில் ஒரு கொட்டு கொட்டி அவனை விரட்டிவிட்டு

“ துசர்க்கு முன்ன விழுகிறதா இருந்தா நான் எத்தனை தட வேணும்னாலும் விழுவேன் ஷாமு,அவன்கிட்ட மட்டுமே என் வெட்கத்தைய்யும், நடுக்கத்தையும் உணர்வேன் ,

நான் என் காதலை சொன்னால் இந்த பரவசம் இந்த அலைபாயும் மனசு, படபடப்பு எல்லாம் கம்மி ஆகிடுமோ என்னவோ ,,

அதனால எனக்கு அலுக்குற வரை இதை ,இந்த உணர்வை என்ஜாய் பண்ணிட்டு அப்புறம்தான் என் காதலை சொல்லுவேன் ,என்றாள் கண்களில் காதலோடு....

ஷாம்னிக்கும் தெரியுமே எப்பொழுதும் தீர்க்கமாக ,சுட்டெரிக்கும் அவளின் பார்வை துசரின் விழிகளை பார்க்கும் போது மட்டும் பட படவென்று பட்டாம்பூச்சி மாதிரி அடித்துக்கொள்வதை,

அதற்காக தானே அவளுக்கு ப்லிங்கி என்று பெயரே வைத்துள்ளாள்.

அதன்பின் துசர் மதிய தரிசனம் தரும்வரை அங்கே இருந்து அவனை பார்த்துவிட்டு , 2 மணி நேரம் அவர்கள் தினமும் செல்லும் கோச்சிங் கிளாஷை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

ஏற்கனவே வேலை இருக்குறவளுக்கு எதுக்கு கோச்சிங் கிளாஸ் ,எக்ஸாம் எல்லாம் ,என்று கேட்டால் அக்னி அதை காதில் ஒரு போதும் வாங்கி கொள்வதில்லை.

அவள் அப்பாவிற்கு PA வ இருக்குறதுக்கு இவளுக்கு PAவ இருக்கலாம் பாதி நாள் இவளோட சுத்திக்கிட்டுதான் சம்பளம் வாங்குறேன் என்று புலம்பி கொண்டே அக்னியின் வீட்டில் உள்ள தனது ஸ்கூட்டியை எடுத்து கொண்டு வெளியே வந்தவள்,

வீட்டிற்கு சில மளிகை பொருட்கள் வாங்குவதற்காக அங்கு உள்ள சின்ன சூப்பர் மார்க்கெட்டில் பைக்கை நிறுத்த அவள் முன்னே டங்கென்று குதித்தது ஒரு வால் இல்லாத குரங்கு.
ஒரு பழைய கருப்பு கலர் ஜீன்ஸ் அதே கலரில் சாயம் போன ஒரு சட்டை ,

அப்பறம் நல்லா வெத்தளை பாக்கை போட்டு தலையில துப்புன மாறி ஒரு ஹேர் கலர், ப்ர்ங்கி ஹேர்க்கட் ( fringe haircut ) காதில் ஒரு கடுக்கண் என முன்நெற்றி முடி கண்ணை மறைக்க பிரசித்தம் ஆனான் அந்த பிரகஸ்பதி.

அவனை பார்க்கும் எல்லாருக்கும் முதலில் தோன்றுவது” எந்த கிரகத்துலேந்து தப்பிச்சி வந்து இருப்பான்”, இல்லை “எந்த ஜூல(zoo) உள்ள பிராணி இது”, அதுவும் இல்லை என்றால் “பொறுக்கி பையனா இருப்பான் போல” என்பதே.

அவன் பெயர் கண்ணா அவன் வீட்டின், இல்லை குடும்பத்தின் கடைசி செல்ல பையன் அவனை செல்லமாக அழைப்பது குட்டி.


( கண்ணான்ற பேரே செல்லமா தானடா இருக்கு இதுல குட்டி வேறைய)

கண்ணாவை கண்டுகொள்ளாமல் ஷாம்னி அவனை கடந்து செல்ல வேகமாக அவள் முன் வந்து முட்டி போட்டவன்

ஒற்றை ரோஜாவை அவள் புறம் நீட்டி “ ஷாமுக்குட்டி ஐ லவ் யூ “ என்றான்.

அந்த ரோஜாவை வாங்கி தூக்கி போட்டவள் “ ஐ ஹேட் யூ”என்று சொல்லிவிட்டு கடையினுள் சென்றுவிட்டாள்.

கீழே விழுந்த ரோஜாவை பார்த்து “ சாரி ரோஸி இன்னைக்கும் என் செல்லகுட்டி கைல இருக்க உனக்கு கொடுத்து வைக்கல”என்றவன் அவளை தொடர்ந்து பின்னே சென்றான்.

“ ஏய் ஜிங்கிலி எதுக்கு அத்தான் மேல கோபமா இருக்க “

( அவ என்னைக்குடா உன் மேல பாசமா இருந்தா....?)

“ ஏய் ஏய் என்று அவள் கோபமாக சொல்ல அதற்கும் அவன் “ஏய் ஏய் இல்ல செல்லம் ஐ..ஐ.. ஐ லவ் யூ.. “என்று அவளை வெறுபேத்த

அவனை முறைத்தவள் ட்ரெயில் பொருட்களை எடுத்து போட்டுக்கொண்டே நகர்ந்தாள்.

“ஆமா , எங்க உன் பிரென்ட் நாச்சியார் IPS என்றவனிடம்,

“டேய் என் பிரண்ட எதும் சொன்ன அவ்வளோதான் “ என்று அவள் கத்த

“ம்ம்ம்ம் அப்படித்தான் சொல்லுவேன் பார்க்க நல்லா மாவு உருண்டை மாறி இருந்துகிட்டு எப்ப பாரு நாச்சியர் படத்துல வர ஜோதிகா மாறி முறைச்சிகிட்டே திரிஞ்சா "

என்றவனின் போன் அலற அதை அட்டன் செய்தவன் காதில் வைத்துக் கொண்டே“ ம்ம்ம் பேபிமா இதோ அரை மணிநேரதில வந்துறேன் “

என்று போனை அணைத்து தன் பாக்கெட்டில் போட்டுகொண்டே “ ஓகே ஜிங்கிலி பேபி காலிங் சோ நான் நாளைக்கு வந்து உன்னை மீட் பன்றேன் “ என்று விலகி செல்ல

செல்லும் அவள் முதுகையே வெறித்து பார்த்தவள் “ இவன் தோற்றமும் நம்பும் படி இல்லை,இவன் பேச்சும் நம்பும் படி இல்லை எல்லா வற்றிற்க்கும் மேலாக தன்னை விட வயதில் சிறியவன்

எதன் அடிப்படையில் இவனிடம் மனதை பறிகொடுத்தோம் என்று புரியாமல் கலங்கி நின்றாள்.

சிட்டிக்கு கொஞ்சம் வெளியில் உள்ள அந்த வீட்டின் வாசலில் தன் Yemaha RX 100 பைக்கை நிறுத்தினான் கண்ணா.

அந்த வீடு புதிதாக கட்டிய பழமை வாய்ந்த வீடாக இருந்தது .அந்த காலத்தில் கட்டும் மச்சி வீடே இந்த காலத்திற்கு ஏற்ப கலை நயத்தோடு இருந்தது.

மெயின் கேட்டிருக்கும் வாசல் இருக்கும் இடத்திற்கும் 50 அடி தூரம் இருக்கும் ,நடுவில் ஒரு கார் செல்லும் அளவிற்கு இடம்விட்டு இரு புறமும் அழகிற்கு வைக்கும் பூச்செடிகளால் அழகுபடுத்த பட்டிருந்தது .

காமோண்டின் வலப்புற மூலையில் காடு போல் துளசி செடி வளர்ந்து இருக்க அதன் அருகே சுவற்றின் மேல் தூதுவளை கொடி படர்ந்து இருந்தது.
அங்கே தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு தூதுவளை பறித்து கொண்டிருந்தார் ராமசாமி.

“ mr. ராமசாமி முத்து அண்ணன் ட சொல்லி ஒரு இளநீர் பறிச்சிட்டு உள்ளே வாரும்” என்று அவரை நோக்கி கத்தியவனை ஒரு புழுவை பார்ப்பது போல பார்த்தவர் தன் வேலையை தொடர்ந்தார் .

அந்த பார்வையை அசால்டாக புறம் தள்ளியவன் தன்னுடைய ஒரு ஷூவை வாசலில் உள்ள கோலத்தின் மீது போட்டுவிட்டு மறு ஷூவை நடு வாசல் கதவில் போட்டு விட்டு உள்ளே சென்றான்.

“ பேபி பேபி குழி பணியாரம் எடுத்துகிட்டு ஹாலுக்கு வா ,என்று ஹாலில் உள்ள சோஃபாவில் பப்பரப்பா என்று படுத்துவிட்டான்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த விசாலாட்சி வாசலில் அவன் ஷூவை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு “ இந்த வெட்டி தண்டதுக்கு வீட்டில உள்ள 12 பேரும் சேவகம் பார்க்கணும் என்று முணு முணுத்துக்கொண்டே உள்ளே செல்ல

அங்கே அவளின் மாமன் மகன் அவள் பாட்டி பருவதம் மடியில் படுத்துக்கொண்டே குழி பணியாரத்தை மொக்கி கொண்டிருந்தான்.

“ பேபி உன் புருஷர் தோட்டத்துல என்ன தேவை இல்லாத ஆணியை புடிங்கிட்டு இருக்காரு” என பருவதத்திடம் வளக்காடிக்கொண்டிருக்க

( அடப்பாவி பயலே உன் தாத்தாவ அவரு...நாங்க தோட்டக்காரன்ல நினைச்சோம்...)

அவனை முறைத்து கொண்டே சோபாவில் அமர்ந்தவள்“ அம்மாயி எதுக்கு இந்த வெட்டி பயலுக்கு ஊட்டி ஊட்டி வளர்க்குற இப்போ”என்று கடுப்படிக்க

“ பேபி இவள் இப்படி மரியாதை இல்லாமல் பேசுனா நான் இவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்
....ஆமா சொல்லிட்டேன் “ என்க

“ வெட்டியா இருக்க உன்னை கல்யாணம் பண்ணிக்கதான் இப்ப அலையிறாங்க போட தண்டம் “ என்று விசலாட்சியும் அவனிடம் எகிற

வாய் சண்டை எப்பொழுது கை சண்டை ஆனது என்று தெரியவில்லை விசாலி அவன் பரட்டை தலையை பற்றி இருக்க கண்ணா அவளின் கழுத்தை நெரித்து கொண்டிருந்தான்.

அவர்களை சமாதானம் செய்ய முடியாமல் பருவதம் முழித்துக்கொண்டிருக்க அங்கே வந்த துசரின் அம்மா ஜானகி பிரிக்க முடியாமல் பிரித்துவிட்டார்

(ஓ இவங்கெல்லாம் துசர் குடும்பமா எதுக்குடா இந்த அரை மண்டயனுக்கு இவளோ அறிமுகம்னு பார்த்தேன்)

“ அத்தை அவனை என்ட பேச வேணாம் சொல்லுங்க “ என்று விசாலி சத்தம் போட

“ இவள்ட பேச யாரும் இங்க யாரும் குயூல நிற்கலன்னு சொல்லுங்க பெரியம்மா “என்று அவனும் எகிற வீட்டில் உள்ள அனைவரும் சமாதான படுத்த முடியாமல் திணறி கொண்டிருக்கும் போது

“கண்ணா,விசாலி” என்ற துசரின் அதட்டலில் இருவரும் கப் சிப் என்று ஆகினர்

கண்ணா வீட்டில் பயப்படும் ஒரே ஆள் துசர்தான் .தவிர தன் தந்தை,பெரியப்பா,தாத்தா ,மாமா என அவன் யாரையும் மதிப்பதில்லை.

அவர்கள் குரல்களிலெல்லாம் ஒரு கட்டளை இல்லை அலட்சியம் இருக்கும் ஆனால் துசர் சொல்லும் எதிலும் கட்டளையும் இருக்காது ,கெஞ்சல், கொஞ்சல் என எதுவும் இருக்காது ,

மாறாக அவன் வார்த்தைகள் எல்லாம் அவன் செய்ய சொல்லும் விஷயத்தின் முக்கியதுவத்தை தாங்கியே இருக்கும்.

கண்ணா மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ள அனைவருக்கும் துசரின் மேல் ஒரு மரியாதை கலந்த அன்பு இருக்கும். எதையும் செய் என்று மட்டும் சொல்லாமல் அதன் காரண காரியங்களோடு விலக்கி சொல்பவன் .

அந்த வீட்டில் ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டுமே அவன் தாத்தா மற்றும் தந்தையின் தலையீடு இருக்கும் மற்ற எல்லாம் துசரின் வழிகாட்டாலே.

விசாலி” அத்தான் அவனை இனி வம்பு பண்ண வேணாம் சொல்லுங்கள்” என்று மெதுவாக கூறியவள் தன் அறைக்குள் சென்று மறைந்துவிட்டாள் .
துசர் “ பொம்பள பிள்ளைக்கிட்ட வம்பு பண்ணாத சொல்லி இருக்கேன்ல குட்டி,

கண்ணா “சாரி அண்ணா” என்றவன் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை”

அதை பார்த்த அனைவரும் உள்ளுக்குள் சிரித்து கொண்டே விலக பருவதம் மட்டும் “ ஏன் குட்டி கண்ணு தலையில கொஞ்சம் எண்ணெய் வச்சி வழிச்சி சீவின என்ன, பாரு தலை வறண்டு போய் செம்பட்டை கலருல மாறிடிச்சி “ என்றார்.

“ பேபி இது ப்ரிங்கி ஹேர் கட் , அப்பறம் கலரிங் பண்ணி இருக்கேன் மானத்தை வாங்காத,என்னதான் puc படிச்சி நீ வேலை எல்லாம் வேற பார்த்தியோ என்று கிசு கிசுக்க

தன் அறையின் உள்ளே சென்று கொண்டிருந்த துசரின் காதில் விழ சிரித்துக்கொண்டே கதவடைத்தான்.

ராமசாமி பருவதம் அந்த வீட்டின் மூத்த குடிமக்கள் அந்த காலத்திலையே இருவரும் PUC முடித்து அரசாங்க பணியில் இருந்தவர்கள் ராமசாமி ரிட்டையர்ட் போஸ்ட் மேன், பருவதம் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் .

அந்த தம்பதியினர்கள் தங்கள் மூன்று புதல்வர்கள் மற்றும் பேரபிள்ளைகளோடு ஒரே வீட்டில் வசிக்கின்றனர்,

முதல் இரண்டு பிள்ளைகள் வேத நாயகம், ஈஸ்வரி ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள்

வேதநாயகம் மத்திய அரசாங்க வேலை, ரயில்வே துறையில்,ஈஸ்வரி மிடில் ஸ்கூல் ஹெட் மாஸ்டர்.

இருவரின் கல்யாணமும் ஒரே மேடையில்தான் நடந்தது வேதநாயகத்தின் மனைவி ஜானகி அரசாங்க மருத்துவ மனையில் தலைமை செவிலியர்

இவர்களின் புதல்வர்கள் மூத்தவன் துசர்,இரண்டாவது தர்ஷிகா வெளியூரில் தங்கி போஸ்ட் கிராஜுவேட் கடைசி வருடம் படித்துக்கொண்டே அரசாங்க வேலைக்கு தகுதி தேர்வுகளை எழுதிக்கொண்டுருப்பவள்.

ஈஸ்வரியின் கணவன் கபிலன் அவரும் உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ,அவர்களின் ஒரே மகள் விசாலாட்சி எம்.காம், எம்.எட் படித்துவிட்டு அவளும் அரசாங்க பள்ளியில் ஆசிரியராக பணி புரிகிறாள்.

ராமசாமி,பருவதம் அவர்களின் கடைசி பிள்ளை விஸ்வநாயகம் கல்லூரி விரிவுரையாளர், அரசாங்க கல்லூரியில்தான்

( அதானே பார்த்தேன் என்னடா இன்னும் சொல்லலையேன்னு)


விஸ்வநாதனின் மனைவி அபிராமி வங்கி அலுவலர் ,விஸ்வநாதன் அபிராமி தம்பதியரின் மகன் தான் கண்ணா அந்த வீட்டின் கடைக்குட்டி ,அவர்கள் அனைவரின் செல்ல பிள்ளை.


விசாலட்சியால் வெட்டிதண்டம் வீணா போன முண்டம் என்று அழைக்கபடுபவன் .

இப்பொழுது தெரிந்திருக்கும் அக்னி ஏன் அரசாங்க வேலைக்கு விழுந்து விழுந்து படிக்கிறாள் என்று

( ஓ புறாமுட்டை கண்ணு அதுக்குதான் கொட்ட கொட்ட முழிச்சிட்டு படிச்சிட்டு இருக்காளா.... )

ஆம் அவள் வீட்டில் உள்ள அனைவரும் அரசாங்க வேலையில் உள்ளவர்கள்தான் ராமசாமியும்,வேதநாயகமும் அதை எதோ குலப்பெருமை போல சொல்லி கொள்பவர்கள்

அதனால்தான் துசர் ,விசாலாட்சிக்கு கூட அரசாங்க வேலையில் உள்ள வரன்களை தான் பார்ப்போம் என்று கருத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள்

அதில் கண்ணா மட்டும் விதிவிலக்கு அவனை ஏதாவது தேர்வு எழுதவே முயற்சிக்கவோ சொன்னால்
உங்க காலத்துலயெல்லாம் 10வது படிச்சி இருந்தா போதும்

கவெர்ட்மெண்ட் ஜாப்பை கூவி கூவி கொடுத்தானுங்க இப்ப அப்படியா எக்ஸாம் எழுதணும் ,லட்ச லட்சமா பணம் கட்டணும் என்னால முடியாதுப்பா

அண்ணன் ,விசாலி மாதிரி மூளையெல்லாம் எனக்கு இல்ல மெரிட்ல பாஸ் ஆகுறதுக்கு,

என்பதோடு இல்லாமல் எங்கே எதும் நல்ல படிப்பாக படித்தால் வேலைக்கு முயற்சி செய்ய சொல்லிவிடுவர்களோ என்று கேட்டரிங், பியூட்டிசியன் கோர்ஸ் என படித்துவிட்டு ஊரை சுற்றிக்கொண்டிருக்கிறான் .

எல்லாவற்றிலும் அவனுக்கு உதவும் துசர் கூட இதில் “ கண்ணா எவ்வளோ வேணுனாலும் என்ஜாய் பண்ணு கடைசில ஒரு பியூன் வேலைக்குயாவது போய் சேர்ந்துவிடு,

அப்பாடையும்,தாத்தாடையும் என்னால பேச முடியாது” என்று விடுவான்.

அந்த அளவிற்கு அரசாங்க வேலை என்பது அந்த வீட்டின் கலாச்சாரங்களில் ஒன்றாக சேர்ந்துவிட்டது .



( ஸ்ஸ்ஸ்... இதுக குடும்ப வரலாறு சொல்றதுக்குல்ல எனக்கு நாக்கு தள்ளுது....)

தன்னை சுத்தபடுத்திக்கொண்டு படுத்த துசரின்
கனவுகளை அவனின் வேல்விழியால் அழகாக ஆக்கிரமித்துக்கொண்டாள்.

அங்கே அந்த மாளிகையில் படித்து கொண்டிருந்த அக்னியின் அப்டிடூயூட் புத்தகம் முழுவதும் துசரின் முகமே.

நாளை அவள் எழுதிய “குரூப் 2 “ தேர்விற்கான தேர்வு முடிவுகள் வரவிருக்க

“இதிலாயாவது பாஸ் பண்ணிடுவேனா துசர்” என்று துசரின் முகத்தை பார்த்து ஏக்கமாக பேசிக்கொண்டிருந்தாள்.

அநேரம் அவளின் செல்லின் சத்தத்தில் தன் கவனம் திரும்பியவள் அதை உயிர்ப்பிக்க அந்த புறம் இருந்த வந்த அனைத்து

செய்திகளுக்கும் “ம்ம்ம்ம்” ம்ம்ம்” என்று கூறிக்கொண்டே கடைசியாக “ சரி நான் பார்த்துகிறேன்” என்று போனை அணைத்தவள்

நாளை செய்யும் போகும் விசயங்களை மனதுக்குள் ஒரு முறை ஓட்டி பார்த்தவிட்டு உறங்கிவிட்டாள்.

போதுமா....?
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 3:

மறுநாள் காலையில் ஷாம்னி அக்னியின் தேர்வு முடிவுகள் இன்று வர இருப்பதாலும்,ராமன் இல்லாததால் அவளும் இன்று ஆபிஸ் வரவேண்டும் என்பதால் அவளை அழைத்துக்கொண்டு ஆபிஸ் செல்லலாம் என்று அவள் வீட்டிற்கு சென்றாள்.


அங்கே ஹாலில் உள்ள சத்யாவிடமும்,அவளின் பாட்டி, தாத்தாவிடமும் அவள் எங்கே என்று கேட்டுக்கொண்டு மேலே செல்ல அங்கே பால்கெனி வாசலில் கோபம் சோகம் என இரு உணர்வுகளின் கலவையாக அமர்ந்து இருக்க அவளை பார்த்ததுமே தேர்வு முடிவுகள் சாதகமாக இல்லை என்று.

பாவம் அவளும் என்னதான் செய்வாள் , துசரின் வீட்டின் எதிர்பார்ப்பு தெரிந்ததுலிருந்து அனைத்து தகுதி தேர்வுகளையும் எழுதுகிறாள்தான் அதில் அவள் நல்ல மதிப்பெண்கள் எடுத்த போதும் அவளை விட அதிகம் எடுத்தவர்கள் அதிகம் இருப்பதால் இவளின் வாய்ப்பு வருவதற்குள் காலி இடங்கள் நிரம்பிவிடுகின்றனர்.

வெளியே வேடிக்கை பரர்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தவளின் தோளை ஷாமு தொட்டு “ என்ன ஆச்சு அக்னி “ என்றாள்.

“ 4 மார்குல போயிடுச்சு ஷாமு “என கண் கலங்க பார்த்த தோழியை பார்க்கும் ஷாம்னிக்குமே கண் கலங்கி விட்டது,

அதை மறைத்து கொண்டு” ஏய் ப்லிங்கி எதுக்கு இப்ப அழுகுற ,எவளோ கஷ்டமான சூழ்நிலையெல்லாம் தைரியமா தாண்டி வந்து இருக்க? , இதெல்லாம் சின்ன விஷயம் விடு,அடுத்த எக்ஸாம்ல பார்த்துக்கலாம்”

“ இல்ல ஷாமு எல்லா விஷயத்திலையும் தைரியமா இருக்குற நான் துசர் விஷயத்துல ரொம்ப பலகீனமா சராசரி பெண்கள் போல மாறிடுறேன்,


என் காதல் ஒரு வேளை அந்த அளவுக்கு உறுதியா இல்லையா நானும் இரண்டு வருஷமா ஒரு எக்ஸாம் விடாம எழுதுறேன் ஆனால் எப்பொழுதும் இப்படியே ஆகுதே "
என்க...

“ ஏய் அக்னி நீ கஜினி முகமதோட கசின் சிஸ்டர்ன்னு நினைச்சேன் நீ ஏன் இப்படி இருக்க , அப்படி எந்த எக்ஸாம்ளையும் பாஸ் ஆகலனா அந்த வீட்ல உள்ள 3 பெருசையும் போட்டு தள்ளிட்டு துசர தூக்கிட்டு வந்துறலாம் ,u dont worry baby “ என்றாள்

துசரை கடத்தி கொண்டு செல்வதை தன் மனக்கன்னில் நினைத்து பார்த்தவள் தன் கவலை மறந்து சிரித்துக்கொண்டே ட்ரெஸ்ஸிங் ரூமில் சென்று மறைந்துவிட்டாள் அக்னி.

கீழே வந்து ஷாம்னி அவளுக்காக காத்திருக்க வந்து சேர்ந்தாள் அக்னி ,சற்று முன்பு தன்னிடம் கலங்கியதற்கான அடையாளம் ஏதும் இன்றி நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையுமாக வந்து கொண்டிருந்தாள்.

அக்னிக்கு ஒல்லியும் அல்லாத அதீத குண்டும் இல்லாத சற்று பூசினார் போன்ற உடல்வாகு.அதற்கு தகுந்தாற் போல அவள் அணிந்து கொண்டுவரும் உடை அவ்வளவு பாந்தமாக இருந்தது.

( ஓ திம்சு கட்டன்னு சொல்லுங்க...)

பிளாக் கலர் லைன்ட் பார்மல் பேண்ட் ,வெய்ட் கலர் புல் ஹாண்ட் சேர்ட் ,அதே பிளாக் கலர் லைன்ட் கோர்ட் ,கழுத்தில் ஒரு மெலிதாக ஆங்கர்( anchor) டாலர் வைத்த செயின் ,காதில் ஒற்றைக் கல் பதித்த தோடு போட்டுக்கொண்டு மாடிபடியிலிருந்து இறங்கி கொண்டிருந்தாள்.

அக்னியின் நிலமையில் தான் இருந்து இருந்தால் இந்நேரம் என்ன செய்து இருப்போம் என்று எப்பொழுதும் போல யோசித்துக்கொண்டே அவளை வியப்பாக பார்த்துக்கொண்டு இருந்தாள் ஷாம்னி.

பின் இருவரும் காலை உணவை முடித்துக்கொண்டு பேக்டரி கிளம்பினார்கள்.

பைல் பார்ப்பது, ரேவேன்யூ செக் செய்வது , செக்கில் சைன் செய்வது , புரொடக்ஷன் மேனஜர், அக்கவுண்ட்ஸ் மேனஜருடனான மீட்டிங் என காலை வேலைகளை பார்த்துவிட்டு மதியம் போல புரடக்ஷன் நடக்கும் இடத்திற்கு ரவுண்ட்ஸ் சென்று இருந்தனர் இருவரும் .

அங்கே ஒரு பகுதியில் ஏற்கனவே மக்களுக்கு வினியோகிக்கப்பட்ட பால்,தயிர் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டு வெறும் கவர்கள் மட்டும் மறு சுழற்சிக்காக அங்கே பெரிய மலை போல குவிந்துகிடக்க அதை அள்ளி மிஷினுக்கு அருகில் எடுத்து செல்ல தினக்கூலிக்காக சில பெண்கள் அங்கே வேலை செய்து கொண்டிருக்க ,

அதை சூப்பர்வைஷ் செய்யும் ஒருவன் அங்கே வேலை செய்யும் ஒரு பெண்ணின் தொடக்கூடாத இடங்களை தொட்டுக்கொண்டு “ இப்படி செய் அப்படி செய் “ என்று அந்த பெண்ணை வேலை ஏவிக்கொண்டு இருக்க அந்த பெண்ணும் இவனிடம் கோபத்தை காட்டினால் தன் வேலை போய் விடும் என்பதால் எதும் சொல்லாமல் இருக்க அதை சதாகமாக எடுத்துக்கொண்டு மற்றவர்கள் பார்வையை உறுத்தாத வண்ணம் அந்த பெண்ணிடம் அத்து மீறி நடந்து கொண்டிருந்தான் அந்த கயவன்.

அதை பார்த்த அக்னியின் கோபம் உச்சத்தில் சென்றது.

அவனின் பின்புறம் அக்னி வருவதால் அவனுக்கு தெரியவில்லை.வேகமாக வந்தவள் அவன் பின்புறம் தன் வலது காலை அவனின் முதுகுவரை வரை தூக்கி முதுகில் விட்டாள்

ஒரு உதை நான்கு அடி தள்ளி போய் விழுந்தவன் தடுமாறி எழுந்து நிற்க , நின்றவனின் காலரை பிடித்து கன்னம் கன்னமாக அறைந்தவள் ஷாம்னியை நோக்கி “ செண்ட் ஹிம் அவுட் அந்த வேலையை இந்த பொண்ணுக்கு கொடுங்கள் “என்று பெண்ணை கண்களால் காட்டியவள் அந்த இடத்தைவிட்டு அகன்றாள்.

ஏன் அவன் அடிவங்கினான் என்று அந்த பெண்ணிற்கும் அவனுக்கும் தவிர வேறுயாருக்கும் தெரியாது ,மற்றவர்களுக்கெல்லாம் இது ஒரு அடக்குமுறையாகதான் தெரியும் .

அங்கு வேலை செய்பவர்களுக்கு அவள் மேல் மரியாதையை விட பயமே அதிகம் இருக்கும்.

ஆண்கள் பெண்கள் என யாருக்கும் பரிந்து போகுபவள் அல்ல அவள்.

அதை போல சில மாதங்களுக்கு முன்னே அவள் அலுவலகத்தில் ஒரு பெண் அங்கு உள்ள பையனை காதலிக்க சொல்லி வற்புறுத்த அவன் மசியவில்லை என்றதும் அவன் தன்னை பாலியல் ரீதியாக தொல்லை செய்வதாக HR டிபார்ட்மென்டில் புகார் செய்ய அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த அக்னி

“ உனக்கு ரீசார்ஜ் செய்யறதுக்கு ,பணம் செலவு பண்ண ,ட்ரெஸ் எடுத்து கொடுக்க,உன்னை கூட்டிகிட்டு ஊர் சுத்த ஆள் தேடுனா அதுக்கான இடம் இது இல்லை , நீ போகலாம் “ என்று அவளை அனுப்பிவிட்டாள் .

அந்த பெண்ணும் சத்தம் போடாமல் சென்றுவிட்டாள்.ஏனென்றால் அக்னி சொன்னது போல டைம் பாஸீர்க்கும்,பணதேவைக்குமே அவனை காதலிப்பதாக கூறியது.

அவள் கண்களில் உண்மை காதலை கண்டாள் அக்னியே அவனிடம் பேசி சம்மதிக்க சொல்லி இருப்பாள் என்பது வேறு கதை.

(ஹா ஹா ஆமா ஆமாம்)

அதே போல தவறுகள் எல்லோருமே செய்வார்கள் என்பது அவளின் எண்ணம் மட்டும் இல்லை உண்மை கூட .

சில வருடங்களுக்கு முன் ஏதோ பொருட்களை டெலிவரி செய்ய சென்ற டெலிவரி பாயை (boy) அந்த வீட்டில் உள்ள நான்கு பெண்கள் கற்பழித்து கொன்றதாக செய்தியை படித்தேன்.

அதை மையப்படுத்து ஒரு திரைப்படம் வந்ததாக கூட நியாபகம்.

அதேபோன்று ஒரு கல்லூரி பேருந்தில் நான்கு ஆண்கள் தன்னை பாலியல் தொல்லை செய்வதாக ஒரு பெண் புகார் கொடுக்க சில வருடங்கள் கோர்ட்டில் நடந்த விசாரணையின் முடிவில் அந்த பெண்கள் பொய் சொன்னார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் பாவம் அந்த நான்கு பசங்களுக்கும் கேஸ் நடந்து கொண்டு இருந்ததால் ராணுவத்தில் சேர்வதற்கான வயது கடந்து அவர்களின் கனவு அழிந்துவிட்டது.

எனவே உண்மை என்பது எங்கு வேண்டுமானாலும் இருக்கும் .அது ஏற்றுக்கொள்ள முடியாத இடத்தில் இருந்தாலும் நாம் அதை அலசுவது அவசியம்

( ...ஷ்....போதும்...இந்தாம்மா ரைட்டரு வாயை மூடிக்கிட்டு கதையை சொல்லு... கருத்தெல்லாம் கடைசி 5 எபில சொல்லு...)

அதனால் ராமன் கூட ஆபிசில் எதும் பிரச்சனை என்றாள் அக்னியை தான் கூப்பிடுவார்.அவள் ஒரு சில நாட்கள் வந்தாள் கூட அவரின் கண்களில் படாத தவறுகள் கூட அவளின் கண்களுக்கு தெரிந்துவிடும்.

எனவே அவளை நிரந்தரமாக நிர்வாக பொறுப்பை எடுத்துக்கொள்ள சொல்கிறார்.அவள் தான் அதற்கு பிடி கொடுப்பதில்லை.

அன்றைய அலுவல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவள் சிறிதுநேரம் தூங்கிவிட்டு 8 மணி போல கருப்பு கலர் ஜீன்ஸ்,கருப்பு மற்றும் வெள்ளையில் பெரிய கட்டங்கள் போட்ட முழுக்கை சட்டை ,சட்டையின் கை முழங்கைவரை ஏற்றி இருந்தது.

சட்டையின் இரு பட்டன்கள் திறந்து இருக்க உள்ளே அவள் அணிந்து இருந்த ரவுண்ட் நெக் வைத்த கருப்பு நிற டிசேர்ட் வெளியே தெரிந்தது.
கையில் ஒரு சிறிய பையுடன் வெளியேறியவள் சத்யாவிடம் ஷாம்னியுடன் நைட் ஷோ படதிற்கு செல்வதாக சொன்னவள் வெளியில் உள்ள ஷாம்னியுடன் பைக்கில் பறந்து சென்றாள்.

அங்கே மாளிகை மாறி உள்ள பெரிய வீட்டின் பின்புறம் உள்ள காமோன்டிற்கு பின் பைக்கை நிறுத்தியவள் முதல் வேலையாக தன் பேக்கில் உள்ள ஜாமரை எடுத்து ஆன் செய்தாள்.குறிப்பிட்ட தூரத்தில் உள்ள போன்கள், கேமராக்கள் வேலை செய்யாமல் இருப்பதற்காக.

“சரியா 1.30 மணிநேரம் கழிச்சி இங்க வா “ என்றவள் காமோன்டின் அருகில் செல்ல

ஷாம்னி” ப்லிங்கி “ என்று ஆரம்பிக்க

“ ஷ் ஷாமு பேச நேரம் இல்லை, கிளம்பு” என்றவள் அந்த ஒன்றரை ஆள் உயரம் உள்ள காமோன்ட் சுவரை அரை நிமிடத்தில் அசால்ட்டாக தாண்டி அந்த புறம் குதித்து மறைந்தாள்.

நேரம் 11 மணியை தாண்டி இருக்க வீட்டில் மனைவி ,மக்கள் என யாரும் இல்லாததால் தன் குடி, குட்டி எல்லாவற்றையும் பார்த்து முடித்துவிட்டு தன் அறையில் நுழைந்தான் 45 வயது மதிக்கத்தக்க கமலகர் ரெட்டி

ஹைத்ராபாத்தை பூர்வீகமாக கொண்டு சென்னையில் தொழில் நடத்துபவன்.

இவனின் பிரதான அக்கிரமங்களில் ஒன்று தான் தொழிலில் அடுத்த அடுத்த எல்லைகளுக்கு செல்ல பெண்களை அதும் ஒன்றும் தெரியாத அப்பாவி பெண்களை அவனின் சக தொழிலதிபர்களுக்கு இறை ஆக்குவது.

தன் அறையை திறந்து உள்ளே வர அவனின் கட்டிலில் அக்னி கால் மேல் கால் போட்டுக்கொண்டு தன் இரு கைகளையும் பின்னே ஊன்றி ரெட்டியை முறைத்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.

“ ஏய் யார் நீ ,நீ எப்படி இங்க வந்த” என அவன் கத்த
அக்னி எந்த அலட்டலும் இல்லாமல் பின்னே ஊன்றி இருந்த கைகளை எடுத்து இல்லாத தூசியை தட்டியவள் அன்று ரங்கநாதனை நோக்கி சொல்லிய அதே வார்த்தைகள் கொஞ்சம் மாற்றி கூறினாள்.

"இன்னும் கொஞ்ச நேரத்துல

நீ சாக போற அதான் நீ துடி துடிச்சி சாகுறத பார்க்காலாம்னு வந்தேன் “என்றாள் அலட்சியமாக

அதை கேட்டு சத்தமாக சிரித்த ரெட்டி “நீ...நீ நான் சாகுறதா பார்க்க போறியா “என்று அவளை கேலி பேசியவன் “ செக்யுரிட்டி” என்று குரல் கொடுக்க

அதற்கு அவள் அமர்ந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை அவளின் அலட்சிய பார்வையும் மாறவில்லை மீண்டும் ஒரே ஒரு வார்த்தை “ அவன் இன்னைக்கு லீவு” என்றாள் அறிவிப்பாக


அதன் பின்னே தன் காவலாளி இன்று விடுப்பு எடுத்தது நியாபகம் வர லேசாக பயம் எட்டி பார்க்க இருந்தும் ஒரு பெண் தன்னை என்ன செய்தவிட முடியும் என்று பயத்தை புறம் தள்ளியவன் “ அவன் இல்லனா என்ன “ என்றவன் அவன் பிஸ்டல் வைத்து இருக்கும் ட்ராயரை நோக்கி சென்றான் .

அவளை சுட்டுவிடலாம் இல்லை துப்பாக்கி முனையில் போலீசில் பிடித்து கொடுக்கலாம் என்று.

பாவம் அவனுக்கு தெரியவில்லை எமன் அவனின் உயிரை காவு வாங்க அங்கேதான் பல்லை இழுத்து கொண்டு அமர்ந்து இருப்பதை.

அக்னி உள்ளே வந்ததும் அவளின் அனுமானத்தின் படி மூன்று நான்கு இடங்களில் கரண்ட் சப்ளையை கொடுத்து இருந்தாள். அதில் முதல் அனுமானம் தான் அந்த ட்ராயர்

,கண்டிப்பாக அவன் அவனின் பாதுகாப்பிற்காக அதை எடுப்பான் என்று நினைத்தாள்.

அவனும் அதே போல் அங்கு செல்ல அவளின் அலட்சிய பார்வையுடன் வெற்றி களிப்பும் சேர்ந்து கொண்டது .

ரெட்டி அதை திறப்பதற்காக அதை தொட்ட அடுத்த நொடி உயர் மின்னழுத்தம் அவன் உடலை தாக்க அக்னி சொன்னது போலவே அவளின் முன் துடி துடித்து செத்து போனான்.

பின் இறந்த அவன் உடலை இழுத்துக்கொண்டு பாத்ரூமில் வாகாக போட்டவள் அங்கு உள்ள ஹீட்டரை ஆன் செய்து சில வேலைகளை செய்தவள் பின் தான் வந்ததற்கான அடியாளங்கள் எதும் இருக்கிறதா என்று பார்த்து,

அதை அழித்து அந்த ரூமை பழைய படி மாற்றிவிட்டு தான் வந்த வழியே வெளியே சென்றவள் ஷாம்னியுடன் தன் வீட்டிற்கு சென்று நிம்மதியாக படுத்து தூங்கிவிட்டாள்.

நாளை வந்து ரெட்டியின் நிலையை பார்ப்பவர்கள் “ ஹீட்டரை ஆன் செய்யும் போது ஏற்பட்ட மின்சார கசிவின் காரணமாக ஷாக் அடித்து இறந்துவிட்டான் என்பதே..அந்த அளவு கச்சிதமாக வேலையை முடித்து இருந்தாள் அக்னி..

கொலை செய்கிறோமே என்ற பயமோ , மாட்டிக்கொள்வோமே என்ற பதட்டமோ அவளிடம் கண்டிப்பாக இல்லை , அப்படியே மாட்டிக்கொண்டாளும் எப்படி சமாளிப்பது என்பதில் தெளிவாக இருந்தாள்.

மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து இன்று ஒரு எக்ஸாம் இருப்பதால் படித்து கொண்டிருந்தாள்.

மதியம் 11 மணிக்கு பரிட்சை என்பதால் துசரை பார்த்துவிட்டு ஷாம்னியை அழைத்துக்கொண்டு செல்லலாம் என்று வெளுத்த கலரில் ப்ளூ ஜீன் ,ரெட் அண்ட் பிளாக் செக்ட் புல் ஹாண்ட் சேர்ட்டில் காரை எடுத்துக்கொண்டு மின்வாரியத்தை நோக்கி விரைந்தாள்.

அங்கே ஒரு இஞ்சி டீ சொல்லிவிட்டு தன் கூலரை எடுத்து போட்டுக் கொண்டு அலுவலக வாயிலை வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள்.

டீயை டேபிள் மேல் வைத்த அங்கு வேலை பார்க்கும் சிறுவன் “சோலை “ ஷாம்னி மற்றும் அக்னியால் “சோனமுத்தா” என்று அழைக்கப்படுபவன் “ அக்கா இன்னைக்கும் வேடிக்கை பார்க்க தான போற “ என்று கலாய்க்க

“போடா பன்னி “ என்று அவனை திட்டியவள் டீயை உறிஞ்சி கொண்டே வாசலை பார்த்து கொண்டிருந்தாள்.

“ அக்கா நீ மெதுவா வேடிக்கை பார்த்துட்டு கிளம்பு ,எனக்கு இன்னைக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும் பணத்தை கொடு” என்றான்.

அக்னி அவனை முறைத்து கொண்டே தன்
டேபிட் கார்டை எடுத்து கொடுக்க தான் கலாய்ப்பதால் தான் அக்கா முறைக்குது என்று தெரிந்தும் “சும்மா முறைக்காத அக்கா படிச்சி முடிச்சி வேலைக்கு போனதுக்கு அப்பறம் எல்லா பணமும் திருப்பி தந்துறேன் “ என்று அவளை வம்புவளத்து கொண்டே சென்றான்.

“போடா இவனே “ என்று அவனை மீண்டும் திட்டியவள் தன்னவன் தரிசனத்திற்காக காத்துக்கொண்டிருந்தாள்.

சரியாக 9.25 க்கு பைக்கை அலுவலக வாயிலில் நிறுத்தியவன் இறங்கி ஒரு டீ குடிக்கலாம் என்று டீக்கடையை நோக்கி செல்ல அங்கு அக்னி கண்ணில் கூலருடன் அமர்ந்து இருந்தாள்.

“நல்லா கொலு பொம்மை மாறி இருக்கா தினம் இங்க யாரை பார்க்க வருவா” என்று யோசித்து கொண்டே செல்ல

( உன்னை பார்க்கத்தான் ராசா...)

துசர் கடையை நோக்கி வரும்போதே அவனை பார்த்துவிட்டவள் கை கால்கள் நடுங்க கூலருக்கு பின் உள்ள கருவிழிகள் பட பட வென்று அடித்து கொள்ள ,உள்ளங்கை வேர்க்க வேகமாக எழுந்தவள் கடையிலிருந்து வெளியே சென்று மறைந்து நின்று கொண்டாள்.

இவனை பார்த்ததும் ஜர்க் ஆகி வெளியே சென்றவளை வித்யாசமாக பார்த்தவன் ஒன்றும் செல்லாமல் சென்று அமர்ந்துவிட்டான்..

( ஏய்..முடிக்காதிங்க முடிக்காதீங்க முடிச்சிடீங்களா ...இனி எப்போ அடுத்த எபியோ...,,🤔🤔🤔😣😣)

போதுமா....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்...

நான்தான் உங்க 32...

நல்ல வேலை சைட் ஒர்க் ஆகுது..

வோட் போட ஊருக்கு போகலாம்னு டிக்கெட் பார்த்தேன்..

டிக்கெட் கிடைக்கல..அதனால அன்ரிசர்வேஷன்ல 120 டிக்கெட் எடுத்துட்டு..

பாத்ரூம் பக்கத்துல குத்த வச்சி உட்கார்ந்து பேசிட்டு இருக்கேன்...

இங்க ஒரு அக்கா வேறு என்ன இடிச்சி இடிச்சி பாத்ரூம்ல தள்ளிவிட்டுரும் போல..

அதுக்குள்ள மேட்டருக்கு வரேன்...

வந்த தொலைன்னு நீங்க திட்றது எனக்கு கேட்குது...வந்துட்டேன்..

இதயம் போதுமா அடுத்த எபி போட்டுட்டேன் எப்படி இருக்குன்னு வந்து கமெண்ட்ஸ் ல சொல்லிட்டு போங்க..

சைலண்ட் ரீடர்ஸ் நீங்களும்தான்..

கடைசி எபிக்கு லைக்ஸ் ,கமெண்ட் போட்ட எல்லோருக்கும் என் நன்றிகள்...

உங்க சப்போர்ட் மட்டுமே எழுதாளர்கலான எங்களுக்கு 10 சப்போட்டா பழம், 5 ஆப்பிள் பழம், 4 ஆரஞ்சு பழம் எல்லாம்...

ப்ளிக் சப்போர்ட்..

அப்பறம் ஒரே ஒரு கருத்து நான் நான் பாத்ரூம்ல குத்த வச்சி ஊருக்கு போகும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் தேர்தலின் முக்கியத்துவம்..வோட் போடுறத விட யாருக்கு போடுறோம் என்பது முக்கியம் கடந்த 5 வருசத்த மனசுல வச்சி போடுங்க.

இப்படிக்கு
நான் உங்கள் 32...
மத்திய அரசின் மட்டமான ட்ரைனிலிருந்து...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லோஸ்...

நான் தான் உங்கள் 32...

ஆபிஷின் ஒரு மூலையிலிருந்து...

ஒரே நாளில் ஊருக்கு போய்ட்டு நைட்டே ரிட்டர்ன் ஆனதலா...

பஞ்சர் ஆன பலுனாக ஆகிவிட்டேன்...அதனால சீக்கிரம் ud போட்டுட்டு 8 மணிக்கே பப்பரப்பா என்று தூங்கலாம் என்று...வந்தேன்.....

பிரேக் போயிருக்க என் மேனஜர் வாரத்துக்குள்ள ud போடுறேன் படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க...

லாஸ்ட் ud க்கு,லைக் கமெண்ட் போட்ட எல்லோருக்கும் என் நன்றிகள்..

சைலண்ட் ரீடர்ஸ் உங்களுக்கும் என் நன்றிகள்...

அடுத்த எபி சண்டே 12 மணிக்கு



இப்படிக்கு

உங்கள் 32...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 4 :


செல்லும் அவளை வித்யாசமாக பார்த்தபடி அமர்ந்தான் துசர். டீ வந்ததும் டீயைக் குடித்துக்கொண்டே அன்றைய செய்தி தாளை புரட்டி கொண்டிருந்தான்,

என்னதான் விரல் நுனியில் செய்திகள் வந்தாலும் செய்தி தாளில் படிக்கும் சுகமே அலாதிதான்.

அங்கே மறைவில் ஒழிந்து கொண்டு துசரை சைட் அடுத்து கொண்டிருந்த அக்னிக்கு துசரின் பின் மண்டையே தெரிந்தது .

அந்த டீக்கடையின் பக்கவாட்டு பகுதியில் உள்ள ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள்.துசர் அவள் நின்று இருக்கும் பகுதிக்கு எதிர் பகுதியை பார்த்தபடி அமர்ந்து இருப்பதால் அவனின் முகம் தெரியவில்லை.

முன் வழியே சென்று பார்க்கலாம் என்றாலும் அவளின் நாணம் கொண்ட மனம் விடுவேனா என்றது.

அந்த ஜன்னலின் வழியே தலை உள்ளே நுழைவதாய் இருந்திருந்தால் அக்னியின் தலை உள்ளே சென்று இருக்கும்.அந்த அளவிற்கு தலையை ஜன்னலின் மேல் முட்டி வைத்துக்கொண்டு பார்த்தாள்.

தன் தலைக்கு பின்னே யாரோ தன்னை பார்ப்பது போல அவனின் உள்ளுணர்வு சொல்ல சடாரென்று அவளின் புறம் திரும்ப வசமாக மாட்டிக்கொண்டாள் அக்னி.

இரு ஜன்னல் கம்பிகளின் இடையில் தெரிந்த தன் விழி மொழியாளின் விழி வீச்சில் செயல் இழந்து போனான் துசர்.


(மாட்டிக்கிட்டாள் ..பயபுள்ள கூலரை கலடிட்டியா...அதான்.?)

திடீரென்று துசர் திரும்பியதால் படபடப்பு அதிகமாக வழக்கத்திற்கு மாறாக இமைகள் இரண்டும் மின்னல் வேகத்தில் பட படவென்று அடித்துக்கொள்ள இந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள் இந்த உணர்வு குறையும் என்ற எண்ணம் கூட மறந்து ,

பாழாய் போன கை ,கால்கள் வேறு பிரேக் டான்ஸ் போல அதன் வேகத்தை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து ஆடிக்கொண்டு இருக்க

நெற்றியில் பூத்த வேர்வை அவளின் மூக்கை தாண்டி வாயில் பட்டுவரும் வரும் உவர்ப்பு சுவையை கூட அறியாமல் நின்று இருந்தாள் அக்னி..

அப்பப்பா... காதல் ஒரு பெண்ணை இந்த அளவு மாற்றுமா , உலகத்திலையே தைரியமான பெண் யார் என்று அக்னியை தெரிந்தவர்களிடம் கேட்டாள் கண்ணை மூடிக்கொண்டு அக்னியின் பெயரை டிக் செய்வார்கள் அந்த அளவிற்கு அவளின் தைரியத்தின் அளவை பார்த்தவர்களாக இருப்பார்கள் .

காதல் அவளின் முழு பலகீனமாய் ஆனது,காதல் மட்டும் இல்லை எந்த ஒரு உண்மையான அன்பும்,நேசமும் ஒருவரின் முழு பலமாய்,பலகீனமாய் மாறுவது திண்ணமான உண்மை..

அது நட்பாக இருக்கலாம்,காதலாக இருக்கலாம்,தாரமாக இருக்கலாம்,தாயாக இருக்கலாம் .
எத்தனையோ கொலை கொள்ளைகளை அசால்ட்டாக செய்பவன் கூட தன் ஆசை மனைவியின் இறப்பிலோ ,தன் உதிரம் தந்த குழந்தையிடமோ உருகி துடிப்பது ஏற்றுக்கொள்ளப்படும் உண்மை.

அந்த உணர்வு மட்டும் இந்த உலகத்தில் இல்லை என்றால் என்றோ சுடுகாடு ஆகி இருக்கும் இந்த உலகம்.
ஆதி காலத்திலையே அடிப்படையாக உள்ளதல்லவா காதல்.

நாகரிகம் இல்லாத காலத்தில் கூட வீசிய பலமான காற்று அல்லவா காதல்.

அக்னியை கண்ட துசருமே ஆனந்தத்தின் உச்சியில் இருந்தான். பின்னே 2 நிமிட பார்வையில் இதயம்,இளமை,காதல்,களவி என அனைத்தையும் தூண்டி விட்டு சென்ற சொப்பன சுந்தரி அல்லவோ..அவனவள்.

ஆக தான் இத்தனை நாளை தேடிய தன் செல்லம்மா இவள்தானா....?

இவளேதான்..! எப்படி மறக்க முடியும் மேல் இமை முடிகள் மை தீட்டாமலே,ஐ லாஸ் வைக்காமலே நீளமாக, கீழேருந்து மேலாக வளைந்து அவள் புருவ முடியை தொட்டுக்கொண்டல்லவா இருக்கும்.

தனித்தன்மை கொண்ட இமை முடிகள் அல்லவோ அக்னிக்கு..

ஒரு நிமிடத்திற்கு 60 வினாடிகளே ஆனால் அவள் இமைகளோ அதைவிட அதிகமாக அல்லவா அடித்துக்கொள்ளும்.. இதோ இப்பொழுதும் கூட பட்டாம்பூச்சியை தோற்கடிக்கும் வேகம் அவளின் இமைகளுக்கு

இத்தனை நாளாக அவனின் பொக்கிஷத்தை அவனுக்கான அவளின் அடையாளத்தை கூலருக்கு பின் மறைத்து வைத்த அக்னியின் மேல் அவனுக்கு செல்ல கோபம் கூட வந்தது.

அன்று நடந்தது போல் இன்றும் நடக்க வேண்டும் என அவன் இளமை அடம் பிடிக்க வேக எட்டுகள் வைத்து அவள் அருகே சென்றான்.

துசர் தனக்கு இரண்டடி இடைவேளையில் இருக்கும் போதுதான் அக்னி என்னும் மனித மரத்திற்கு உணர்வு வர தன் அனைத்து புலன்களையும் கடினபட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவள் ஒரே பாய்ச்சலில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தவள் தன் காரில் ஏறிவிட்டாள்.

“ஏய் திம்சு....திம்சு” என்று பின்னே கத்திய துசரின் குரல் காதில் விழுந்தாலும் காரை எடுத்து க்கொண்டு கிளம்பிவிட்டாள் அக்னி..


துசர் தனக்குள் சிரித்து கொண்டான் “ நீ யாருன்னு இத்தனை நாள் தெரியாம இருந்ததால தப்பிச்ச இனி இருக்குடி உனக்கு திம்சுகட்ட”

அவளும் தன்னை போல தன் மேல் காதல் கொண்டு தன்னை காண வருகிறாள் என்பதே அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி,

தான் ஒரே சந்திப்பில் அவளிடம் காதல் கொண்டது போல அவளும் தன்னை நேசிக்கிறாள் என்று உணர்ந்த துசர் தன் நிலை மறந்து, தன் பதவி மறந்து அலுவலக வாயிலிலேயே ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டான் எல்லோரும் வேடிக்கை பார்க்க.

“ எனக்கு எதுக்கு எக்ஸாம்.., என் உயிரை வாங்கவே இந்த ஜென்மத்துல பிறந்து இருப்பா போல , வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்னவள் 10 நிமிஷத்துக்கு முன்ன மேசேஜ் பண்ணி சென்டருக்கு வந்துடு சொல்றா, இவளை என்ன பண்றது ” என்று எப்பொழுதும் போல தன்னோடையும் தன் பைக்கோடயும் பேசிக்கொண்டு சென்றாள் அக்னி.

( ஓ பையத்தியமா இவள்....😊😊)

ஒரு 10 நிமிட பயணத்திற்கு பிறகு பைக்கின் 4 அடி இடைவெளியில் டங் என்று குதித்தது அதே வால் இல்லாத குரங்கு..

தீடீரென்று கண்ணா முன்னே வந்து குதித்த உடன் பேலன்ஸ் செய்ய முடியாமல் இடப்பக்கமாக ஒடித்து திருப்பி நிறுத்தி இருந்தாள் பைக்கை.

அவன் மேல் கொண்டு மோதி அவனுக்கும் எதும் ஆகி இருந்தாள் என்ன ஆவது என்ற நினைப்பே அவளை பட படக்க செய்ய “ ஏய் அறிவில்ல உனக்கு மேல மோதி இருந்தா என்ன ஆகும் “ எனமுகம் சிவக்க கோபபட்டு கத்த

அவனோ சவாகாசமா பைக் காண்பரின் மேல் இரு கைகளையும் ஊன்றி தன் கன்னத்தை தாங்கியவன் “ உன்னை லவ் பண்ற என்னிடம் அறிவெல்லாம் நீ எதிர் பார்க்கலாமா செல்லோ “ என கொஞ்ச , கொஞ்சியவனின் தோற்றம் இன்று கொஞ்சம் வித்தியாசபட்டிருந்தது ..

அவனின் ஹேர் ஸ்டைல் டெம்பில் டக் ( temple tag)காக மாறி இருந்தது .அது பார்ப்பதற்கு வில்லு படத்தில் உள்ள வடிவேலுவின் தலைய போல இருந்தது...

(ஹா ஹா...பேசிட்டே இருக்கும் போது ஏன் டா மலையை பாக்குற_ வடிவேலு டயலாக்...)

பேண்டா கலர் பேண்ட் அதற்கு சம்மந்தமே இல்லாத பச்சை கலர் சட்டை அதுவும் நான்கு பட்டன்கள் மட்டுமே போட்டு இருக்க

தன் பைக்கில் உள்ள காலி பிளவரை எடுத்து அவளிடம் நீட்டியவன் “ ஜிங்கிலி ஐ லவ் யூ” என்றான்.

ஷாம்னி பைக்கில் அமர்ந்த படியே தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவனையும் அவன் கையில் உள்ள காலி பிளவரையும் மாற்றி மாற்றி முறைக்க..

அதை பார்த்தவன் “ அதுவா ஜிங்கிலி பாரு என் பேபி பூவெல்லாம் வைக்க மாட்டாள்.ஸீ இஸ் சோ மாடர்ன் ( she is so modern),

( யாரு அந்த பல்லு போனா கிழவி உனக்கு மாடர்ன்..நீ இப்படியே பண்ணு அவளை இந்த ஜென்மத்துல கரெக்ட் பண்ண முடியாது)

அப்பறம் விசாலிட்ட கொடுத்தா “ அத்தான் எனக்கு ரோஜாப்பூ வேண்டாம் மல்லிப்பூ வாங்கித்தாங்க” அப்படின்னு கொஞ்சினாள்.

அப்பொழுது கண்ணாவின் தலையில் முட்டை முட்டையாக வந்து கடைசி முறை ஷாம்னி தூக்கி போட்ட ரோஜாவை விசாலியிடம் கொடுக்கும் போது அவள் , அந்த ரோஜாவை பிய்த்து அவன் தலையில் போட்டுவிட்டு அந்த காம்பை அவன் காதில் சொருகியது நியாபகம் வர

( அவள் அன்னைக்கு உன் முடிய பிய்க்கும் போதே எங்களுக்கு தெரியும் டா அம்மன்சல்லிக்கு நீ பிரயோஜனம் இல்லன்னு...)

அதை உதறி தள்ளியவன் “ அதான் இதை நீ தூக்கி போட்டாலும் அதை எடுத்து உன் அத்தைகிட்ட கொடுத்த கூட்டு செய்வாங்கள ” என்றான் இளித்த படி

அவ்வளவுதான் அவனின் பேபியை பற்றியும் மேலும் ஒரு பெண்ணை பற்றி சொன்னதும் பற்றிக்கொண்டு வர “ ஓ......டாஸ்...டாஸ்... என்று மெட்ராஸ் பாஷையில் கேவலமாக கிழித்து தள்ளியவள் மூச்சு வாங்கி நிற்க

அவனோ “ ஒகே செல்லோ இன்னைக்கு கோட்டா ஓவர் அத்தான் 2 நாளைக்கு பேபி கூடவும், mr.ராமசாமி கூடவும் அவுட்டிங் போறேன் , அதனால பார்க்க முடியாது அதனால சமத்தா குச்சி மிட்டாய் ,குருவி ரொட்டி சாப்பிட்டுட்டு என்னை எப்படி எப்படி திட்டலாம்னு யோசிச்சி வை” என்றவன்

அவள் தாடையை பிடித்து கொஞ்ச வர அவன் கையை வெடுக்கென்று தட்டிவிட்டாள். பாவம் அவள் கோபம் அவளுக்கு தன்னிடம் காதலை சொல்லிவிட்டு இத்தனை பெண்களுடன் சுற்றுகிறானே என்று ,இதில் அவுட்டிங் வேறு என வயிறு கருகி நிற்க

அவனோ அவள் தட்டி விட்ட கைய பார்த்து

என்னை தீண்டி விட்டாய்..
உயர் தூண்டி விட்டாய்...
நெஞ்சை ஏதோ செய்தாயே...

என்று சிம்பு பாடலை இருவரிகள் பாடியவன் விளையாட்டை கைவிட்டு கண்களில் காதலோடு “ லவ் யூ ஜிங்கிலி சீக்கிரம் ஒத்துக்கோ டி பிலீஸ் “ என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

அதே பார்வையோடும் அதே உள்ளார்ந்த குரலோடும் ஒரு வார்த்தை இன்னும் ஒரு வார்த்தை பேசினாலும் அவனிடம் விழுந்திருப்பாள் ,

அவ்வளவு காதல் அந்த குரலிலும் அந்த கண்களிலும்

ஒரு 5 நிமிடம் அங்கேயே நின்றவள் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு எக்ஸாம் சென்டரை நோக்கி சென்றாள் .

கடைசி நேரத்தில் சென்றதால் அக்னியை கூட பார்க்காமல் தேர்வு எழுத அமர்ந்து விட்டாள் ஷாம்னி.

இங்கு அக்னியின் நிலையோ அதற்கு மேல் முழு கவனத்ததோடு எழுதினாலே கஷ்டம் இப்பொழுதோ துசரை பார்த்த படபடப்பு குறையாமல் ஏதோ எழுதி வைத்துவிட்டு வந்தாள்.
இருவரும் அன்று மதியத்திற்கு மேல் அலுவலகம் சென்று அன்றைய வேலையை முடித்தார்கள்.

வீட்டிற்க்கு வந்த கண்ணா “ பேபி ஏதோ நீ போற அப்படின்னுதான் கோவிலுக்கு துணைக்கு வரேன் , உன் புருஷன் ராமசாமிக்காக எல்லாம் இல்லை சொல்லி வை... ரொம்ப மிதப்ப திரியுறாரு..உனக்காக என் ரெண்டு நாள் பிளானை எல்லாம் கேன்சல் பண்ணி இருக்கேன் தெரியுமா,உனக்காக மட்டும் “
என்று அங்கு அமர்ந்து இருந்த ராமசாமியை பார்த்து கொண்டே செல்ல

ராமசாமி அவனை முறைத்து கொண்டே அமர்ந்து இருந்தார் ,
பெண்கள் எல்லாம் சமையல் அறையில் இருக்க அப்பொழுது அலுவலகம் முடிந்து வந்த வேதநாயகம் குட்டி சொல்வதை காதில் வாங்க

“ வெட்டி நாய்க்கு என்னடா இத்து போன பிளான் , என்னடா இது ட்ரெஸ் கம்மங்க்கூத்தாடி மாறி ,ராமசாமி குடும்பத்து பையன் மாறியா டா இருக்க” என்று திட்ட

அப்பொழுது அந்த புறமாக வந்த விசாலி “ மாமா அப்படியே அவன் மண்டைய பாருங்க பழைய பெயிண்ட் அடிக்கிற பிரஷ் மாறியே இருக்கு” என்று எடுத்த கொடுக்க ,

“ ஆமா என்ன டா இது மண்டை.. எல்லாம் துசரை சொல்லணும் அவன் இஷ்டத்துக்கு இருக்கட்டும்ன்னு செல்லம் கொடுத்து வச்சி இருக்கான் .பிளா பிளா ...என்று திட்ட ஆரம்பிக்க

கொஞ்ச நேரத்தில் கண்ணாவின் தந்தை விஸ்வநாயகம் ,விசாலியின் அப்பா கபிலன் என எல்லோரும் 1 மணி நேரம் அவனை காய்ச்ச அவனோ விசாலிய முறைத்து கொண்டு அமர்ந்து இருந்தான்.

(ஷ் அப்பா..காது கொய்ங்குது...இப்ப தான் டா தெரியுது குட்டி ஷாம்னி எவளோ திட்னாலும் உனக்கு ஏன் தண்டவே மாட்டேங்குதுன்னு...என்னா அடி..)

இரவில் தன் அறையில் துசர் தூங்கி கொண்டிருக்க யாரோ தன் கண் முன்னே நிழல் ஆடுவது போல கண்களை திறக்க அங்கே ஆகாய வண்ண சரிகை இட்ட பட்டு புடவையில் தலை நிறைய மல்லிப்பூ வைத்து கொலு கொலு குண்டு கன்னங்கள் கொண்டு ஆளை அசத்தும் அழகுடன் அவனின் விழி மொழியாள் அமர்ந்து இருந்தாள்.

அவளின் கன்னங்களை தன் இரு கைகளால் தாங்க அவளின் விழிகள் எப்பொழுதும் போல “ பட பட வென்று அடித்துக்கொள்ள
அவளின் கண்களை பார்த்துக்கொண்டே

வேணா வேணா விழுந்துடுவேணா....
கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா..
ஒரு முறை சிரிக்கிறாய் என் உயிரினை பறிக்கிறாய்...
கண்கள் ரெண்டும் அணுகுண்டா...
கத்தி உள்ள பூச்சென்டா....

இன்பமான சிறை உண்டா...
ஈர விழியில் இடம் உண்டா ...
கடவுள் பூமி வந்தாள் உன் கண்ணை பார்க்க வேண்டும்...
மனிதர் பாவம் என்று அவன் மறைந்து போக வேண்டும்...
என்று பாடினான்.

( நம்ப அக்னி புடவையிலையா...வாய்பில்லையே...ஏய் ரைட்டரு உண்மைய சொல்லு...ஓ முடிச்சிட்டியா....ஓகே... ரைட்டு..)

போதுமா..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செல்லம்ஸ்...

நானே 32...

இதோ இதயம் போதுமா. அடுத்த .எபி..... இல்லை இல்லை அடுத்த 2 எபி...😍😍😍😍😊😘

ஏன்னா இந்த எபில வர 2 சீன் நான் உங்களுக்கு டீசரா முன்னாடியே கொடுத்துட்டேன் அதான்...

2 லட்டையும் சாப்பிட்டுட்டு எப்படி இருக்கேன்னு காமென்ட் பண்ணுங்க..

லாஸ்ட் எபிக்கு கமெண்ட்ஸ், லைக் போட்ட எல்லோருக்கும் என் நன்றிகள்...

முடிந்த வரை எல்லா கமென்ட்ஸுக்கும் பதில் சொல்லி இருப்பேன்.எதும் பண்ணாம இருந்தா...மன்னிச்சு தெரியாம நடந்து இருக்கும்...

சில பேரோட காமென்ட்ஸ் என் கண்ணே வேர்த்துடுச்சி..நன்றி செல்லங்களா...யாருன்னு தெரியாம நீங்க கொடுக்குற சப்போர்ட்க்கு...

சைலண்ட் ரீடர்ஸ் உங்களுக்கும் என் நன்றிகள்.

இப்படிக்கு
நான் உங்களை 32..
என் ஏரியாவில் உள்ள பார்க்கிலிருந்து...☺☺
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 5 :

அவளின் பட படக்கும் விழிகளை பார்த்துக்கொண்டே பாடியவன் அவள் விழிகளில் முத்தமிட துசர் நெருங்க

தீடீரென்று அவளின் கன்னங்ளை தாங்கிய துசரின் கைகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொள்ள அவனின் நெற்றி காற்றில் மோதியது...

( பயபுள்ள கனவா கண்டு இருக்கு...அதானே நம்ப அக்னியாவது புடவையாது...கட்டுவவாவது...)

கனவு என்றதும் தன் தலையை தட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டான் துசர்...

இத்தனை நாட்களாக அவளின் விழியிலும், அவளின் ஸ்பரிசத்தலும் கனவுலகில் சஞ்சரித்தவன் இன்று அவளை கண்டு கொண்டதும் அவள் உருவத்தோடும் கனவில் வாழ ஆரம்பித்துவிட்டான்.

நாளைக்கு எப்படியும் அவளுடன் பேச வேண்டும் என்று முடிவெடுத்தவன் நிம்மதியாக தூங்க சென்றான்.

அடுத்த வந்த இரண்டு நாட்கள் கண்ணா அவனின் பாட்டி ,தாத்தாவோடு சமயபுரம் கோவில் செல்ல ,ஷாம்னி அவனை காணாமல் கொஞ்சம் அரை மெண்டலாக சுற்றி கொண்டிருந்தாள்.

துசருமே 2 நாட்களாக 9 மணிகெல்லாம் டீக்கடையில் தேவுடு காக்க அவனின் விழி மொழியாள் கண்ணில் படவே இல்லை..

பாவம் அவனுக்கு தெரியவில்லை அவள் ஒரு கேடி..இரண்டு நாட்களாக காலையிலையே துசரின் வீட்டின் முன் வந்து, பர்தா போன்ற பல முன் ஏற்பாடுகளுடன் அவனை பங்கமாக சைட் அடித்ததை...

துசர் என்று தன்னை பார்த்தானோ அன்றே தன் காதலை சொல்லி அவனிடம் சரணடையத்தான் அக்னியுமே ஆசைபடுகிறாள்.

ஆனால் அவள் காதலை சொல்லும் போது அவளை பற்றிய எல்லா ரகசியமும் அவனிடம் சொல்ல வேண்டும்,அவனுக்கு தெரிய வேண்டியது மிக அவசியம் என நினைத்தாள்.

..அவளை பற்றிய உண்மை தெரிந்த உடன் அவனின் பிரதிபலிப்பு எப்படி இருக்கும் என்ற நினைப்பு அவளை இந்த 2 நாட்களாய் வதைக்கிறது.

என்னதான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் அவளும் காதல் கொண்டவனிடம் உருகி கரையும் பேதை தானே

அவள் மனதை அதற்க்காக தயார் படுத்தவே 2 நாட்களாய் அவனிடம் கண்ணில் படாமல் கண்ணா மூச்சி ஆடுகிறாள்.

அப்படியும் துசரை பார்க்காமல் இருக்க முடியாததால் அவனை மறைந்து இருந்து பார்த்து வந்தாள்..

3 ஆம் நாள் காண்டின் உச்சத்தில் துசர் பைக்கில் அலுவலகம் சென்று கொண்டிருந்தான்.

அப்பொழுது அந்த ஒரு வழிப்பாதையின் மறுபகுதியில் அவனின் திம்சுகட்ட 2 பெண்களோடு நடந்து சென்று கொண்டிருதாள்.

அப்படியே பைக்கை ஓரமாக நிறுத்தியவன் இறங்கி மறுபுறம் சாலையை கடக்க நின்று முயற்சி செய்ய.

காலை நேரம் அதிக ட்ராபிக்காக இருக்க கிராஷ் செய்ய முடியாமல் அந்த புறமே 5 நிமிடங்களாக நின்று இருந்தான்.

டிராபிக் சற்று குறையும் வரை அவளை சைட்டாவது அடிக்கலாம் என்று அவளை வேடிக்கை பார்த்துக்கொண்டே

“கடைசி இருமுறை தன்னை பார்க்கும் போது பட படத்தாலே அதே போல இன்றும் பட படத்து சிவந்து நிற்பாளா,கைகள் நடுங்குமா,வெட்க கொள்வாளா... என்று தன்னுள் ஆயிரம் கேள்வியை கேட்டுக்கொண்டே அக்னியை பார்த்து கொண்டிருந்தான்.

( சிவந்து தானா நல்லா நிற்பா பாரு பாரு...)

ப்ளூ ஜீனில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த முழுக்கை சட்டை போட்டு ஒரு கை மட்டும் முழங்கை வரை மடக்கி இருக்க மற்றொரு கை மடித்துவிடாமல் இருக்க நேர் பார்வையுடன் நடந்து சென்றாள்.


அக்னியுடம் இருப்பது இரு பெண்களா ...? அல்ல ஒருத்தி பெண் மற்றவள் உடையும் அவள் நடையும் மட்டுமே பெண் போல் இருக்க அவள் உடல்வாகு ஒரு ஆணை ஒத்து இருந்தது ஓ.. அவள் ஒரு திருநங்கை போல தனக்குள்ளே கேள்வி பதில் இரண்டையும் சொல்லிக்கொண்டான் ..

ஷாம்னியும், அந்த பெண்ணும் அங்கே வெளியிலே நிற்க பக்கத்தில் உள்ள கடைக்கு ஏதோ வாங்க சென்றாள் அக்னி.

அந்நேரம் அருகில் நின்று இருந்த பொறுக்கி பசங்கள் அந்த திருநங்கை பெண்ணை சுற்றி வளைத்து அவளை கேலி செய்தனர்...
இல்லாதவர்களையும் ,இயலாதவர்களை பார்க்கும் போது வாய் இல்லாத பூச்சிக்கு கூட கொடுக்கு முளைத்து விடுகிறது நம் நாட்டில்

“ ஏய் எப்படி இருக்க,” ... என்றும்..” இந்த மீசை இன்னும் 30 டேஸ்ல கொட்டிடும்னு டாக்டர் சொன்னிச்சா”, என்றும் சொல்லி அவளை சுற்றி மேலையும் கீழேயும் கைகளால் தட்டிக்கொண்டு சுற்றி சுற்றி வர.. .

என்னதான் பிறப்பிலே தான் ஒரு ஆண்பிள்ளை என்றாலும் இந்த சமூகம் புறக்கணிப்பு, தீண்டாமை,மரியாதையின்மை என அவளின் முதுகெலும்பை முற்றிலும் உடைத்து வைத்து இருக்க அமைதியாக கூனி குறுகி நின்று இருந்தாள் கோபி...

ஷாம்னி பயத்துடன் “விடுங்கடா அவளை..விடுங்க” என பயந்து கொண்டே அவர்களை அடிக்க போக
அவள் கையை பிடித்த ஒருவன் “ ஓ... நீயும் வரியா” என்று அவள் கையை பிடிக்க அவன் கைகளிலிருந்து தன்னை விடுவிக்க முடியாமல்

ஷாம்னி பயந்து கொண்டே அக்னி சென்ற கடையின் வாயிலை பார்த்து கொண்டு இருந்தாள்.

ரோட்டின் மறுபுறத்தில் நின்ற துசரும் இதை பார்த்தவுடன் இங்கே வர முயற்சிக்க ஆனால் அந்த 100 அடி ரோட்டில் விடாமல் காரும் பைக்கும் சென்று கொண்டிருக்க போலீசிற்கு போன் செய்து ரோட்டை கிராஸ் செய்ய முயற்சி செய்தான்.

அங்கே வந்த அக்னி அதை பார்த்ததும் வேகமாக அருகில் சென்றவள் ஒருவனின் சட்டையை பிடித்து திருப்பி தன் கையை மடக்கி அவன் மூக்கில் ஒரு குத்துவிட அடுத்த நொடி தன் முழு பலத்தையும் திரட்டி தன் இரு கைகளையும் அவன் இரு காதிலும் சேர்த்த மாதிரி அறைந்தாள்.

அவன் காதிலும் ,மூக்கிலும் ரத்தம் வந்து சரிய,இன்னொருவனின் பிறப்புறுப்பை தான் கால் முட்டியால் பலம் கொண்டு முட்டியவள் அடுத்து உள்ளவனை தன் கையில் உள்ள லத்தியம் மற்றும் நிக்கலால் ஆன போனை செங்குத்தாக வைத்து அவனின் அடித்தொண்டையில் போர்ஸாக இறக்கினாள்.

மீதம் உள்ள ஒருவனை பக்கத்தில் உள்ள பெட்டி கடையில் உள்ள 7up பாட்டிலை எடுத்து அவன் தலையில் உடைக்க ரத்தம் சரிந்து கீழே விழுந்தான்.

இது அனைத்தும் 2 நிமிட இடைவெளியில் அவர்கள் சுதாரிக்கும் முன் நடந்து முடிந்தது .அவளின் இந்த உயிர் தாக்குதலில் அந்த 4 ஆண்களும் சுரண்டு கிடக்க,கோபியை நோக்கி கத்தினாள்.

“உனக்கெல்லாம் அர்தனாதீஸ்வரரோட அற்புதமான பிறப்பை கொடுத்தது இப்படி மண்ணு மாறி நிற்கவா...உன்னையெல்லாம் தேர்ந்தெடுத்து ஆணோட உடல் பலத்தையும், பெண்ணோட மனப்பலத்தையும் கொடுத்த அந்த கடவுளை சொல்லணும்,

உன்னோட அடையாளம் ,உன்னோட அவமானம் எல்லாம் நீயும்,உன்னை உயிரா நினைச்சி உனக்காக வாழ் ரவங்களும் முடிவு பண்றது ,இந்த களுசடைங்க இல்லை, குனிச்சிட்டே இருந்தா கொட்டிட்டே தான் இருப்பாங்க கோபி அது அவங்க தப்பு இல்லை குனிஞ்சி இருக்க உன் தப்பு “ என்று கோபியையும் அவளை பெருமை, பிரமிப்பு கலந்து பார்த்து கொண்டு நின்ற ஷாம்னியையும் இழுத்துக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றாள்.

போகும் போது அங்கு உள்ள பொது மக்களை நோக்கி “இப்படியே சிலை மாறி நில்லுங்க நாடு இன்னும் நாசமா தான் போகும்” என அவர்களையும் திட்டி விட்டே சென்றாள். அங்கே மறைவாக நின்ற துசரை அவள் கவனிக்காமல் சென்று விட்டாள்

அக்னியும் அங்கே வருவதை பார்த்த துசர் வேகமாக ரோடை கிராஸ் செய்து அங்கே வர அதற்குள்ளே அவர்களை அடித்துவிட்டு கோபியிடம் பேசிக்கொண்டிருந்தாள் அக்னி..

“ஆ என்று அவளை பார்த்த துசர் கொஞ்சம் மிரண்டுதான் போனான்..

( சொன்னபடி முகம் சிவந்துச்சா தம்பி...ஆனா என்ன வெட்கத்துல சிவக்குறதுக்கு கோபத்துல சிவந்துட்டு... வேற ஒன்னும் இல்ல.)

இது அவனின் திம்சுகட்டைதான என்ற சந்தேகமே வந்துவிட்டது துசர்க்கு ஆனால் அவள் இமைகளின் தனித்துவம் அவளை அவனவள் தான் என அடையாளம் காட்டியது

அப்பா.. என்ன ஆளுமை...என்ன ஒரு சாதுரியம் என வாயடைத்து போனான்.

அவளின் ஓவ்வொரு அடியும் அவ்வளவு நேர்த்தி அவ்வளவு போர்ஸ்.இந்த எரிமலையா அன்று தன்னிடம் பூனை குட்டியாய் சுருண்டது..

நினைக்க நினைக்க துசரின் காதல் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடியது...

அவளிடம் பேச வந்ததை மறந்து அவள் செல்லும் திசையை பார்த்து கொண்டிருந்தான்.

போலீஸ் அந்த பொறுக்கி பசங்களை அடிக்கும் சத்தத்தில் தன்னிலை அடைந்தவன் போலீஸிடம் அவர்கள் செய்ததை சொல்லி புகார் செய்தவன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

அக்னியை பார்க்கும் ஆவல் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்க அவளை பற்றி எதுவும் தெரியாது குழம்பி நின்றான்.

சோனமுத்தும் பரீட்சைக்கு லீவில் இருப்பதால் டீக்கடையை வெறித்து வெறித்து பார்க்கும் துசர்க்கு பதில் சொல்ல அங்கு யாரும் இல்லை..

அதே போல் நான்கு நாட்கள் செல்ல 4 வது நாள் காலையில் ஷார்ட்ஸ் கை இல்லாத டீசேர்ட் போட்டுக்கொண்டு வீட்டின் வாயிலில் உள்ள பூச்செடிகளுக்கு துசர் தண்ணீர் ஊத்திக்கொண்டு இருக்க அங்கே வாசலில் உள்ள கார் அவனின் கண்ணை உறுத்தியது....

யாருடையது என தனது நியாபக அடிக்கில் தேடியவனிற்கு அவனின் மூளை “ஏய் மக்கு மண்டாரம் அது உன் திம்சுகட்டையோட காரு “ என்று நியாபக படுத்த குஷியாகிப்போனான்.

“ திம்சுக்கு என் வீடெல்லாம் தெரியுமா ,ஆனா உன் பெயர் கூட எனக்கு தெரியாதே டி.. இன்னைக்கு முடிவு கட்டுறேன் எல்லாத்தையும்” என்று தனக்குள் பேசிக்கொண்டவன்

நேராக சென்றால் கண்டிப்பாக ஓடி விடுவாள் என்பதால் வீட்டின் உள்ளே சென்று பின் பக்கமாக சுற்றிக்கொண்டு அவளின் காரின் பின்னே வந்தான்.

தோட்டத்தில் நின்றவனை அரைமணி நேரமாக சைட் அடித்து கொண்டிருந்தவள் அவன் உள்ளே சென்றதும் கடுப்பாகி கிளம்ப போக மறுபுறம் கார் கதவை திறந்து ஏறி அமர்ந்தான் துசர்

அவ்வளவு தான் அக்னியின் கண்கள், கைகள், கால்கள் என அனைத்தும் வழக்கம் போல அதன் டைப் அடிக்கும் வேலையை பார்க்க

அவள் வாயோ “ து...து..துசர்... என தந்தி அடிக்க.. ..

அன்று ரோட்டில் 4 ஆண்களை புரட்டி எடுத்த தன் வீரதமிழச்சியா இது என்று துசருக்கு சிரிப்பு வந்தது..

பெண்கள் சாதரணமாக வெட்கப்பட்டாலே ஆண்களுக்கு அவ்வளவு கர்வம் தான்...
அதிலும் அக்னியின் வெட்கம் துசருக்கு இரட்டை கர்வத்தை கொடுத்தது..

அவள் கன்னத்தை தன் கைகளால் தாங்கியவன் அவள் கன்னங்களை நிமிண்டிய படி “ ஏய் தர்பூஸ் என்னை கல்யாணம் கட்டிக்கிரியா “ என்றான்

கன்னத்தில் கை வைத்த போது கண்கள் சொருக கண்களை மூடியவள் அவனின் கேள்வியில் நொடி தயக்கமின்றி சம்மதமாக தலையை ஆட்டினாள்.

பெயரை கேட்கவில்லை ஊரை கேட்கவில்லை ,குளம், கோத்திரம் என எதையும் கேட்கவில்லை அது அவனுக்கு தேவையும் இல்லாதது...

அவனுக்கு தேவை எல்லாம் அவள் வாய் மொழியாக அவள் சம்மதம் அது கிடைத்தாகி விட்டது.அது போதும் துசருக்கு

அவளின் எல்லாமும் தெரிந்தும் இப்படியே சொல்வானா துசர்..?காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..

அவள் கழுத்தை ஒரு கையால் வருடியவன் அவள் நெற்றியில் மென்மையாக தன் வாயால் ஊதி பின் முத்தம் கொடுக்க..

அதில் பாவையவள் உணர்ச்சி மிகுதியில் “ துசர்ர்.... என்று கைகளால் அவன் டீசேர்ட்டை இறுக்கி பிடித்தாள்
அவளின் செய்கையில் இன்னும் கவரப்பட்டவன் அன்று போல இன்றும் அவளின் மூடி இருந்த இரு விழிகளிலும் முத்தம் இட்டான் அழுத்தத்தில் மென்மையை ஏற்றி.

அவ்வளவு தான் “துசர்ரர் “..என்று உதடு துடிக்க ரோமங்கள் குத்தீட்டியாக நிற்க அவனை கட்டிப்பிடித்து அவனின் நெஞ்சுக்குள் சுரண்டுவிட்டாள்...முயல் குட்டி போல..

( ஜொள்ளு ஊத்த படிச்சிட்டு இருக்கோம்....முடிச்சிட்டு போய்டாதீங்க..ஓ முடிச்சாச்சா...குட் வெரி குட்...போய் தொலையும்)....

போதுமா....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 6 :

அவளை தன்னுள் புதைத்து கொண்ட துசர் அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.பின் அவளை தன்னில் இருந்து பிரித்து எடுத்தவன் அவளின் சிவப்பேரிய இதழ்களை முற்றுகை இட்டான்.

தேடிய புதையல் கிடைத்த போதும் விடாத தேடலாக இருந்தது அவனின் தேடல், சேரும் இடம் வந்த போதும் அந்த இடத்தில் அவனின் அடுத்த பயணத்திற்கான அஷ்திவாரம் போடப்பட்டது போல ஆனது அவனின் முற்றுகை..

பதில் கிடைத்தும் பதிலில் இருந்து ஒரு புது கேள்வியை உருவாக்கி அதற்கான விடையை அவளுள் தேடுகிறான் தொடர் சங்கலியாக.

அவலாள் தூண்டப்பட்ட தன் இளமையின் இரண்டரை வருட காத்திருப்பின் பட்டாபிஷேகம் இன்றுதான் என்பது போல நீண்டுகொண்டே போன அவனின் முத்தம்.

அது எப்பொழுது எந்த நொடி அவளின் செய்கை ஆனது என்பது அவன் அவள் யாருக்கும் தெரியவில்லை.

அவனே மூர்க்கத்தனமாய் முத்தம் இட்டான் என்றாள் அவள் காட்டுத்தனமாய் முத்தம் கொடுத்தாள்.

சீட்டை பின்னே நகர்த்தி அவனை சாய்த்தவள் அவனின் கழுத்து ,காது,மூக்கு ,அவனின் தாடை என்று கோடி கோடி முத்தங்களால் அவனை மூர்ச்சை ஆக்கினாள்.

அவனின் அடாவடி ரங்கம்மாவின் தாக்குதலில் அவன் உடல் தளர நிராயுதபாணி ஆனான்.

பாவம் அவளின் நிலை அவனுக்கு எங்கே தெரிய போகிறது ,
அக்னியே இந்த அணைப்பிலையே உயிர் போனாள் கூட சரிதான்.இல்லை இப்படியே உறைந்தால் கூட பரவாயில்லை என்ற நிலையில் இருந்தாள்..

ஏன் என்றாள் அடுத்து அவள் சொல்ல போகும் விஷயம் அப்படி,
அவனின் குணம் எப்படி அவன் எப்படிபட்டவன் என்று எதுவும் தெரியாமல் தான் அவள் அவனை மேல் பார்த்த மாத்திரம் காதல் கொண்டது ,காதல் நல்லவன் ,கெட்டவன் பார்த்தா வரும்

அவனின் அலுவலகம் , அவனின் குடும்பம் என்று அவளுக்கு தெரிந்த வரை அவன் நல்லவனே, இருந்தும் அவனின் தனித்தன்மை என்று ஒன்று இருக்கிறதே..

தனக்கு வரப்போகும் பெண்ணிற்கான அடிப்படை எதிர்பார்ப்புகள் அவனுக்கும் இருக்குமே,

நல்லவர்களுக்கே தன் நிலையை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை இருப்பது சந்தேகமே...?

இருக்க தன்னை பற்றி முழுவதும் அவனிடம் சொல்லும் போது அவனின் முகம் சின்ன முகச்சுழிப்பையோ ,இல்லை விருப்ப மின்மையே காட்டினால் அவள் காதல் உணர்வை தொலைத்து நடைபிணம் ஆகிவிடுமே அந்த பயம் அவளுக்கு....

தன்னிலை ,எதிரில் உள்ளவரின் நிலை என காரண காரியங்களை ஆராய்ந்தா வரும் அந்த அற்புதமான காதல் உணர்வு,வந்தாகிவிட்டது.. கோடைகால கொட்டும் மழையாய்..

அவனின் பதில் எதுவாக இருந்தாலும் அவள் தாங்கி கொண்டு கண்டிப்பாக அவனை விட்டு விலகுவாள்..

அப்பொழுது இதுவே அவனை பார்ப்பது கடைசி முறை என்றாகிவிடுமே அதற்கே இந்த ஆளைக்கொள்ளும் அணைப்பு ,முடிந்தால் அவனை இந்நேரம் மலைப்பாம்பு போல முழுங்கி இருப்பாள்,அவ்வளவு இறுக்கம் அவளின் அணைப்பில் , முடியாததால் அணைத்து மட்டும் கொண்டாள்

அக்னி இப்பொழுது விட மாட்டாள் ,விடவும் வேண்டாம் என்பதே துசரின் எண்ணம்.அந்த அளவிற்கு தன்னை அவளிடம் அர்ப்பணித்துவிட்டு மயங்கிகிடந்தான் துசர்..

சிறிது நேரத்தில் அவளின் கண்ணீரும் ,முத்தமும் தன் முகத்தை நனைப்பதை உணர்ந்தவன் பதறி அவளை விலக்க எங்கே அவள் விட்டப்பாடாய் இல்லை.

இந்த அணைப்பு முடிந்தால் தான் உண்மையை சொல்ல வேண்டும் என்ற நினைப்பே அவனை விலக அனுமதிக்கவில்லை .

உலகத்திற்கே மேடை போட்டு ,தன்னை தன் செயலை நியாயப்படுத்தும் திண்ணம் கொண்டவள்,அது மட்டும் அல்லாமல் அவர்களை ஏற்றுக்கொள்ளவும் வைத்து விடுவாள் தான் செய்வது சரி என்று..

ஆனால் துசர் முன் இப்படி கோழையாகிப்போனது காதலில் மட்டுமே சாத்தியம்.

முயன்று அவளை தன்னிலிருந்து பிரித்தவன் கண்ணீர் முகம் முழுவதும் பரவியதால் அவள் முன்னெற்றி முடி ஈரத்தோடு முகம் முழுவதும் விரவி இருப்பதை ஒதுக்கியவன் “ என்ன டா” என கண்களில் கனிவோடு கேட்டான்.

அந்த குரலில் தன்னவன் மீது நம்பிக்கை வந்து தன் மறுபக்கத்தை அவனிடம் சொல்ல தொடங்கினாள் அவன் கண்களை கவனமாக பார்த்தபடி அதன் மாறுதல்களை அனுமானிக்கும் படி..

மறந்தும் அவள் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லவில்லை...

அவள் சொல்லி முடித்த அடுத்த நொடி அவளை காற்று கூட புகாத அளவு இறுக்கி கொண்டு
தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டான்.

“ இவள் என்னவள்” என்ற பெருமை, “ ஐயோ என்னவள்” என்ற தாய் பறவையின் தவிப்பு என கலவையான மன நிலையில் இருந்தான் துசர்.

அவன் அணைப்பின் அர்த்தம் உணர்ந்த அக்னி அவன் முதுகை சமாதானமாக தடவி கொடுத்தாள் “துசர் எனக்கு ஒன்னும் ஆகாது , ரிலாக்ஸ்”என்றாள்.

கழுகுகள் சுத்தும் இந்த காட்டில் தன்னவளை இனியும் விடுவதா என்று நினைத்தவன் அவளின் அணைப்பிலிருந்து விலகியன் “தர்பூஸ் இனி உன் எல்லாமும் என்னோடது ,எல்லாத்தயும் நான் பார்த்துகிறேன், நீ சுதந்திரமா சந்தோசமா இருக்கணும் சரியா,” என்றாள்.

தன்னவன் தன்னை இந்த அளவிற்கு புரிந்து வைத்துக்கொண்டதில் அக்னிக்கு அவ்வளவு சந்தோஷம் “ துசர் அதெல்லாம் நான் செய்தால்தான் எனக்கு சந்தோஷம் ,நியாயமும் கூட,அதெல்லாம் நான் பார்த்துப்பேன், உங்க தர்பூஸ் உங்களிடம் உருகுற மாறி வெளியே இருக்க மாட்டாள்.” என்ற நிமிர்வோடு சொல்ல

துசருக்குமே அவள் சொன்னதும் சற்று இறுக்கம் தளர அன்று அவள் ரோட்டில் 4 பேரை புரட்டி எடுத்தது நியாபகம் வர சிரிப்பு வந்தது .

“ அதான் அன்னைக்கு பார்த்தேன் ,என்று அன்று நடந்ததை கூறினான்.

“ ஓ..பார்த்தீங்களா” என அசடு வழிந்து தலையை சொறிந்தவள் “ அதெல்லாம் எனக்கு ஈஸியாதான் இருக்கு துசர் ,தனிச்சு நிற்பது,தனியா போராடுறது இது எல்லாம், அதுக்காக வருத்தப்படுறதோ , கவலைபடுறதோ இல்லை அது எனக்கு வரவும் வராது..

ஆனால் எனக்கு இந்த 2 வருஷமா ரொம்ப கொடச்சல் கொடுக்குறது இந்த கவேர்ட்மெண்ட் எக்ஸாம்ஸ்தான் , எப்படி புரண்டு புரண்டு படிச்சி எழுதினாலும் “ ஐ காண்ட் பிளேஸ்ட் துசர் “ என வருத்த பட

துசர் வியந்தே போனான் தன்னை பற்றி,தான் வேலை செய்யும் அலுவலகம் பற்றி ,தன் வீடு பற்றி ,எல்லாவற்றிக்கும் மேலாக தன் குடும்பத்தின் எதிர்பார்ப்பு என எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறாளே என,

மேலும் அதோடு நிற்காமல் தான் வேண்டும் என்பதற்காக எக்ஸாம்லா எழுதி கொண்டு இருக்கிறாளே என்று.

அவளை தான் என்று பார்த்தோமோ அன்று தான் அவளும் தன்னை பார்த்திருப்பாள் அவளை போல தான் அவளை பற்றி தேடாமல் அவள் பெயரை கூட தெரிந்து கொள்ளாமல் அவள் விழி வீச்சிலையே இந்த இரண்டரை வருடங்களாக சுகம் கண்டிருக்கிறமே “ என தன்னை கடிந்து கொண்டவன் அவளை நோக்கி

( துசர்குட்டி y u worry, அன்னைக்கு அந்த பக்கி முகத்தை மூடிக்கிட்டு வந்தது ,நீயாவது உன் முகத்தை நல்ல காட்டுன,பாவம் குழந்தை நீ என்ன பண்ணுவ...இப்படிக்கு அழகான ஆண்கள் வருத்த பட்டாள் ஆறுதல் சொல்வோர் சங்கம்....)

“ ஏய் தர்பூஸ் ,உன் பெயர் என்ன” என்றான்.

“ அப்பா இப்பயாவது கேட்டீங்களே என்று சிரித்தவள் “ அக்னி” தாத்தா வைச்சது என்றாள்.

எப்பொழுதும் அவனை பார்க்கும் போது வரும் படபடப்பு ப்ரிட்ஜில் வைத்த கொதிக்க வைத்த தண்ணீர் போல படப்படப்பு, வெட்கம், சுகம் என ஒவ்வொரு நிலையாய் மாறி இப்பொழுது சம நிலையில் ஆனது.

ஆனால் அந்த இமை துடிப்பு மட்டும் துசரை விடாமல் காதல் யுத்தம் செய்ய அழைத்தது.

துடிக்கும் அவளின் மேல் இமையின் மேல் முத்தம் வைத்தவன் “ நீ பிறக்கும் போதே உன் தாத்தா,அம்மா அப்பாக்கு உன் குணம் தெரிஞ்சிருக்கும் போல” என்றான்..

அவளும் கண்களை மூடிய படியே “ இருக்கும் ,இல்லை அந்த பெயரோட தாக்கம் என் பிஹெவியரை வளர வளர மாத்திருக்காலாம் “ என்றாள்.
துசர் “ அதுவும் சரிதான்” என்றவன் “ மா... நீ எக்ஸாம்ல எழுதி கஷ்டப்படவேண்டாம் ,தாத்தாட ,அப்பாடல்லாம் நான் பேசிக்கிறேன் “ என்றான் அவளின் நிலை அறிந்து.

என்னதான் அவன் அக்னியிடம் அப்படி சொன்னாலும் வீட்டிற்கு மூத்த பிள்ளை தானே சென்று எப்படி இதை சொல்வது ,அரசாங்க வேலை என்பது நம் குடும்பத்தில் எவ்வளவு பாரம்பரியமாக பார்ப்பார்கள் என்று அவனுக்கு தெரியுமே.” என்று சிந்தித்தவன் தன்னை காதலோடு பார்த்துக்கொண்டிருக்கும் அவளின் கண்களை பார்த்தவன்

தனக்காக, தன் சுண்டுவிரலை கூட அசைக்காத தன் காதலுக்காக அவள் இவ்வளவு செய்ததே அதிகம் , ,அதற்கு மேலும் அவள் பட்ட கஷ்டங்கள், படப்போகும் கஷ்டங்கள் அவை எல்லாவற்றையும் முன் நிறுத்தி பார்க்கையில் இது மிக சொற்பமான விஷயமாகவே தெரிந்தது..

அதற்கு நியாயம் செய்ய எதுவாக இருந்தாலும் சமாளித்து கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டான்.

ஆனால் அக்னியோ “ வேணாம் துசர் எனக்கு இது பிடிச்சிருக்கு, உங்களுக்காக எதும் செய்றதும் எனக்கு பிடிக்கும்,எனக்கு இன்னும் 6 மாசம் டைம் கொடுங்க நான் கண்டிப்பா ஒரு கிளர்க் எக்ஸாம்லையாவது பாஸ் பண்ணிடுறேன் என்று கண்களை சுருக்கி அழகாக கேட்டாள்.

அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டியவன் “ பாப்பா எவ்வளவு பெரிய பெரிய வேலை எல்லாம் அசால்ட்டா செய்யுது ,ஆனால் என்னிடம் மட்டும் இப்படி பம்புதே “ என்றான்.

அவன் சொன்னதும் முகம் சிவந்தவள் “ அது... அது உங்கள்ட மட்டும் தான் துசர் அப்படி ,நான் வேணும்ன்னு பண்ணல தானேவே வந்துடுது” என்றாள் குனிந்து கொண்டே.

“ஹா... ஹா... எனக்கு 2 அக்னியுமே ரொம்ப பிடிச்சிருக்கு ....” என்றான்

பின் இருவரும் பேசினார்கள் பேசினார்கள் காலையில் ஆரம்பித்த அவர்களின் பேச்சி முடிய மதியம் 2 ஆனது.

கிளம்பும்போது போது அவள் கையை பிடித்தவன் “ நீ இவளோ கஷ்டப்படுத்திக்காதடா , நீ யார் யாருன்னு சொல்லு ,நான் பார்த்துக்குறேன் “ என்க

“ இல்ல துசர் இது என்னால முடியும் நான்தான் பண்ணனும் , நான் இதை கஷ்டமாவோ ,இல்லை பயமாவோ நினைச்சா அப்பவே அப்பாவோட இன்புலியன்ஸ யூஸ் பன்னிருப்பேன், என்னால முடியலான கண்டிப்பா உங்கள்ட்டதான் சொல்லுவேன்” என்று சொன்னவள் அவனிடம் விடைபெற்று சென்றாள்.

அவள் செல்லும் திசையை பார்த்து கொண்டிருந்தவனின் எண்ணம் எல்லாம் அவள் விழி மொழியாளே..

இந்த அசாதரண பெண்ணின் காதல் கிடைக்க தான் என்ன தவம் செய்தோம் , எவ்வளவு உயரத்தில் உள்ள பெண் தன்னை போல் சாமானியனின் காதலுக்காக இறங்கி வேலை செய்வதும் , அப்பாவின் பலத்தால் அரை நிமிடத்தில் ஒன்றும் இல்லாமல் ஆக்க வேண்டிய விஷயங்களை தன்னிச்சையாக தைரியமாக செயல்பட்டு முடிப்பதும் அப்பப்பா முடியவில்லை.

அவளை போல ஒரு பெண் தன் வீட்டில் இருந்தாலே தங்களின் தன்னம்பிக்கை , பலம் எல்லாம் உடைந்துவிடும்...


ஆனால் அக்னியோ வீறு கொண்ட சிங்கம் போல கர்ஜித்து நிற்கிறாளே..
அவளின் கடந்த காலத்தை சொல்லிவிட்டு கேட்டாளே ஒரு கேள்வி கண்களால் யாசித்து அதை பார்க்க முடியாமல் தானே அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.

வருட கடைசி என்பதால் ஆடிட்டிங் வேலையில் மிகவும் பிஸியாகி இருந்தாள் ஷாம்னி.ராமன் ,அக்னிக்கு அடுத்து அந்த அலுவலகத்தில் அனைத்தும் தெரிந்தவள் இவள்தான்.ராமன் பெங்களூரு போனவர் அங்கே உள்ள பேக்டிரியில் இன்ஸ்பெக்க்ஷன் நடப்பதால் அங்கேயே தங்கிவிட்டார் ,அக்னியும் முதல் இரண்டு மட்டுமே வந்ததால் ஷாம்னிக்கு வேலை நெட்டு கலண்டது...

மேலும் ஒரு வாரத்திற்கு மேலாக கண்ணா தன்னை பார்க்க வராதது மிகுந்த மன உளைச்சலை தர சோர்ந்து போனாள். இன்றுதான் சற்று வேலை குறைய கொஞ்சம் நேரமாக வீட்டிற்கு சென்றாள்.

செல்லும் வழியில் திரட்டிங் செய்வதற்காக அருகில் உள்ள பார்லர் சென்றாள்.

உள்ளே சென்றவள் திரட்டிங் என்று சொல்லிவிட்டு அங்கு உள்ள சாய்வு நாற்காலியில் கண்களை மூடி அப்படியே சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.
அந்த ac ரூமும் அந்த குஷன் சீட்டும் அவளின் வேலை பளுவிற்கு கத கத என இருந்து..

யாரோ வந்து வேலையை ஆரம்பிக்க அவள் கண்களை திறக்கவே இல்லை.. திரட்டிங் முடித்ததும் கிரீமை எடுத்த மாசாஜ் செய்த அந்த கைகளின் மாயத்தில் அப்படியே தூங்கிவிட்டாள்.

சிறுது நேரத்தில் “ மேம் பினிஸ்ட் “ என்ற பரிச்சய குரலில் கண்ணை வேகமாக திறந்து பார்க்க அங்கே அவளின் கிப்பி மண்டையன் டிஸ்கிரைப்பே( describe) பண்ண முடியாத ஒரே கேவலமான கேர் ஸ்டைலில். நின்றான்..

( ஓ நம்ம கோமட்டி தலையன்....1st எபிலையே ப்யூட்டிசியன்னு சொன்னீங்களா நியாபகம் இருக்கு...)

போதுமா..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லோஸ்....

நான்தான் உங்கள் 32...

இதோ இதயம் போதுமா இதோ அடுத்த இரு அத்தியாயங்கள் 7 மட்டும் 8 படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

லாஸ்ட் எபிக்கு லைக் ,கமெனட்ஸ் கொடுத்த எல்லோருக்கும் 32ன் நன்றிகள்...

சைலண்ட் ரீடர்ஸ் உங்களுக்கும் என் நன்றிகள்....

தொடர்ந்து உங்க ஆதரவை தாருங்கள்

இப்படிக்கு

உங்கள் 32 ..
 
Status
Not open for further replies.
Top