All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இதயம் போதுமா கதை திரி..

Status
Not open for further replies.

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 14:

இன்னும் கொஞ்ச நேரத்தில் பங்க்ஷன் ஆரம்பிக்க இருக்க அக்னி தனது நிச்சய புடவையை வெறித்து கொண்டு அமர்ந்து இருந்தாள்..

இதுவரை அவள் இது மாதிரி புடவை எல்லாம் அணிந்ததே இல்லை, ஆனால் இன்று அந்த அணிந்ததே ஆகவேண்டும் வேறு வழி இல்லை....

அக்னி அமர்ந்து இருப்பதை பார்த்த ஷாம்னி சிரித்துக்கொண்டே “பிலிங்கி நீ ஸ்கெர்ட் பிளவுஸ் எல்லாம் போட்டுகிட்டு ரெடியா இரு நான் அம்மா கூப்பிட்டாங்க என்னன்னு கேட்டுட்டு வந்து கட்டி விடுறேன்..” என்று வெளியே செல்ல

அந்நேரம் தர்ஷிகா உள்ளே வர அக்னியை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்
..

அவள் அழுகை ஓயும் வரை அமைதியாக இருந்த அக்னி கதவை தாழ் போட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தாள்...
தர்ஷிகா “ அக்கா அப்ப அன்னைக்கு நான் துசர் அண்ணாவோட தங்கச்சின்னு தெரியுமா”..என அழுது கொண்டே கேட்க..

ஆம் “ என்பது போல அக்னி தலையை ஆட்ட
அக்கா நீங்க மட்டும் அன்னைக்கு வரலனா நான் செத்த இடத்துல இன்னைக்கு இநேரம் புல்லு முளச்சிருக்கும்...,” என அவளை கை எடுத்து கும்பிட

அவள் கையை கிழே இறக்கிய அக்னி ” அக்கா இல்லை அண்ணி
, அப்பறம் அந்த இடத்தில் யாரா இருந்தாலும் நான் அதைதான் பண்ணி இருப்பேன்,இன்னும் நீ என் துசரோட தங்கைன்றதால கொஞ்சம் கூடுதல் , என்றவள் அன்றிலிருந்து இன்று வரை நடந்தது அனைத்தையும் சொல்ல..

தர்ஷிகா வியப்பு,ஆச்சரியம் என வியப்பின் உச்சிக்கே சென்றாள் , ஒரு சாதரண காதலுக்கு ஒரு பெண்ணால் இவ்வளவு செய்ய முடியுமா...,

அய்யோ இவளின் காதலை எப்படி சாதரண காதல் என்று சொல்ல முடியும் அது அசாதரணமானது என்றே தர்ஷிகாக்கு தோன்றியது...

காதல் சில சமயங்களில் உண்மையாக இருக்கும் பட்சத்தில் கள்ளக்காதலை கூட நியாயப்படுத்தி விடுமே..

காதலன் உடன் சேர்த்து வைக்க மறுத்த தன் தாயை தன் காதலனுடன் சேர்ந்து கொன்று புதைத்த செய்தியை நாம் அறிவோம், கல்யாணம் ஆகி இரண்டி குழந்தைகளுக்கு தாய் ஆன பெண் தன் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்கு தன் கரு சுமந்த பச்சை குழந்தைகளை கொன்ற கொடூரத்தை கூட நம் நூற்றாண்டில் பார்த்து இருக்கிறோம்..

இது போன்ற இச்சை காதலே இவ்வளவு தைரியம் கொடுக்க ,ஒரு தீண்டலில் உயிர் தொலைத்த அக்னி போன்ற அசாதரண பெண்களின் காதல் எவ்வளவு பலத்தை கொடுக்கும்....

முகம் தொலைத்து..
முகவரி தொலைத்து..
முன்னுரை ஏதும் இன்றி..
முடிவுரை எழுத தூண்டும்...
முரண்பாடு மிக்க முரண் அல்லவா அந்த காதல்..


வாய் அடைத்து போய் நின்ற தர்ஷிகா “அண்ணி வீட்ல எல்லார்ட்டையும் உண்மைய சொல்லலாம் “ என்றவளை தடுத்த அக்னி

அது தெரியவேண்டாம் தர்ஷி என் துசர் ஏற்கனவே என்னால உடைஞ்சி போய் இருக்கான்
,

அவனுக்கு இது தெரிஞ்சா அவனால தாங்க முடியாது, அதை என்னாலையும் தாங்க முடியாது “ என்றாள்..

அண்ணி “ கண்கலங்க தர்ஷிகா நிற்க நிர்மலமான முகத்துடன் தலையை மென்மையாக இடம் வலமாக ஆட்டினாள்..

அந்நேரம் ரூமின் கதவு அடிக்க ஷாம்னியாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டே கதவை திறக்க போனாள் ...

ஆனால் அங்கே நின்றது துசர்..
கரு நீல நிற சட்டை சந்தன கலரில் பாரமல் பேண்ட் போட்டுக்கொண்டு , நெற்றியில் சிறு குங்கும,வீபூதி போட்டுடன் அட்டகாசமாக நின்று இருந்தான் அவளின் மாப்பிள்ளை
அவனை பார்த்ததும் அக்னி முகம் மலர்ந்து இமைகளை பட படவென்று அடிக்க
..அவளின் விழி மொழியில் தன்னிச்சையாக அவளின் இமையில் முத்தம் பதிக்க செல்ல...


அண்ணா..நான் இங்கதான் இருக்கேன் “ என்ற தர்ஷிகாவின் குரலில் அவள் புறம் திரும்பியவன் ...

துசர் “நீ இருந்தா என்ன கண்ணை மூடிக்கோ,” என்றவள் அக்னியின் இரு இமைகளில் முத்தம் இட்டே விலகினான்..

எப்பொழுது நிமிடத்திற்கு நூறு முறை அடிக்கும் அக்னியின் இமைகள் இப்பொழுது ,அவளின் புருவங்களை ஆயிரம் முறை தொட்டு மீள மருதாணி போல சிவந்து போனது அவள் முகம்..
அவளின் சிவந்த முகத்தை ஆச்சர்யமாக தர்ஷிகா பார்த்துக்கொண்டிருக்க அவளின் தோள் மேல் கை போட்டு கொண்டு உள்ளே அழைத்து வந்தான்..


உனக்கு புடவை கட்ட கஷ்டமா இருந்தா நீ எப்பொழுது போல பேண்ட் சேர்ட்டே போட்டுக்கா டா, எந்த ட்ரெஸ்ஸா இருந்தா என்ன நாகரிகமா , யாரை கண்ணையுமுறுத்தாம இருந்தா போதும்” என்றான்..

அக்னிக்கு தெரியும் புடவை கட்டுவது துசருக்கு எவ்வளவு பிடிக்கும் என்று இருந்தும் தனக்காக பார்த்து சொல்லும் துசர் மீண்டும் அவளின் மீதான காதலை வேறு வகையில் நிரூபித்து கொண்டே இருந்தான்..

இல்லை துசர் நான் புடவை கட்டிக்கிறேன் , ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றாள் சிரிப்புடன்..

தர்பூஸ் எனக்கு உன் காதல் மட்டும் போதும் இந்த சமூக அமைப்போட நியாயமான சம்பரதாயங்களை கேட்டா மட்டும் போதும், நீ உன் விருப்ப படி இரு ,அது நியாயமா இருக்கும்னு 100 % நியாயமா இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு “ என்றவன் சென்று விட்டான்..

பின் ஷாம்னி, தர்ஷிகா சத்யாவின் உதவியுடன் புடவையை கட்டியவள் மேடைக்கு சென்றாள்..

செல்லும் போது பேண்ட் ,சட்டை, அணிந்து நடந்து செல்வதை போல வேக வேகமாக நடந்து செல்ல..
சத்யா “பாப்பு கொஞ்சம் அடக்கமா போடி “ என கெஞ்ச “ எனக்கு அதெல்லாம் வரலம்மா விடுங்க”
என்று புயல் வேகத்தில் யாரு உதவியும் இல்லாமல் செல்ல


அம்மா வாயெல்லாம் நம்மகிட்டதான்..இப்ப பாருங்க உங்க சீமந்த புத்திரியை “என அவளை புரிந்து கொண்டு ஷாம்னி சொல்ல
அவள் கூறியது போலவே மேடையில் நிற்கும் துசரின் விழிகள் தன் மேல் படர்வதை உணர்ந்ததும் பார்வை நிலம் நோக்க
, நடையில் தானாகவே ஒரு நிதானம் வர படப்படப்புடன் நின்று விட்டாள்..

பின் சிரித்துக்கொண்டே அருகில் வந்த ஷாம்னியும், சத்யாவும் அவளை மன மேடைக்கு அழைத்து சென்றனர்..

ஆம் தலை குனிய வேண்டியவர்களிடம் தலைக்கு குனிந்தால் போதும் , மரியாதையாக இருக்க வேண்டிய இடத்தில் மரியாதை வந்தால் போதும் ..எதற்கு எல்லாரிடமும் எல்லா உணர்வும் வர வேண்டும்..

யார் யாரிடம் எந்த எந்த உணர்வுகள் தூண்டப்படவேண்டுமோ ,அவர்களிடம் அது வந்தால் போதுமானது...

மேடையிலிருந்து தன் விழி மொழியாலை பார்த்து உறைந்து விட்டான்.. முதல் முறையாக புடவையில் பார்க்கிறான் தன் சட்டை நிறத்திற்கு பொருத்தமாக அடர் நீல நிறத்தில் உடல் முழுவதும் தங்க நிற பூக்களை கொட்டியது போல, தங்க சரிகையால் வேலை பாடு செய்து இருக்க , அதற்குரிய ஆபரணங்களுடன் அழகாக நடந்து வந்தாள்..


எப்பொழுதும் அவளின் முகத்தையும் , விழியையும் மட்டும் பார்க்கும் துசரின் கண்கள் சற்று இறங்கி அவளின் பெண்மை பிரதேசத்தில் படர புடவையில் தெரிந்த அந்த பூக்குவியல் ஆணவனின் உணர்ச்சியை எரிமலையென வெடித்து கொண்டிருந்தது..

கடின பட்டு பார்வை கீழிறக்க 20 அடி தூரத்திலும் அவளின் தும்பை நிற இடுப்பு பளிச்சென தெரிய..இன்றே கல்யாணம் நடந்தால் என்ன என்ற தோன்றி பெருமூச்சு எழும்ப
அவனின் அந்த பெருமூச்சு அக்னியை இங்கே நெருப்பென தகிக்க ஷாம்னியின் கையை இறுக்கி பிடித்தவள் தன் கண்களால் அவனிடம் கெஞ்ச அவளின் விழி மொழியை புரிந்தவன் சிரித்து கொண்டு தலைய சொரிந்து கொண்டே தலையை திருப்பினான்
..


பின் இருவரும் ஒன்றாக மேடை ஏறி நிற்க இருவரின் ஜோடி பொருத்தம் கண்களுக்கு நிறைவாக இருக்க இரு விட்டாருக்கும் அவ்வளவு சந்தோஷம்..

அக்னி மாறனையும் நிகழ்ச்சிக்கு அழைத்து இருந்தாள்..

இன்னும் ஷாம்னி ,குட்டியின் விஷயம் அக்னியை தவிர யாருக்கும் தெரியாததால்..
குட்டி சத்யாவின் அருகில் நிற்கும் ஷாம்னியை “ ஷாம்னி மாமா.., நிச்சயத்துக்கு வந்தவர்களுக்கு அன்பளிப்பா கொடுக்க வேண்டிய வெள்ளி விளக்கு இருக்குற இடம் உங்களுக்கு தான் தெரியுமாமே உங்களிடம் கேட்க சொன்னாங்க “ என்றவனை

...ஆமா என்னோட வாங்க” என்று அழைத்து செல்ல
அங்கே உள்ள ஸ்டோர் ரூமிற்கு அழைத்து சென்றாள்
,உள்ளே சென்றதும் அவன் தாள் போட்டு அவள் ஒல்லி தேகத்துக்கு பொருத்தமான காக்ரா ஜோலியில் கையை தூக்கும் போதெல்லாம் தெரிந்த அந்த இடுப்பை அழுத்தி பிடிக்க..


அதில் கூச்சம் வந்தாலும் முயன்று அடக்கியவள் “குட்டி கண்ணு இதுக்குதான் தனியா அழைச்சிகிட்டு வந்து இருக்கா என்ற நினைத்தவள் அவனின் இன்னொரு கையும் எடுத்து இடுப்பில் வைத்து அவன் கன்னங்களில் வைக்க...

அய்யா ஜாலி..என்று குட்டி கண்களை மூடிக்கொள்ள நமட்டு சிரிப்புடன் அவன் முகம் நோக்கி சென்று அவனின் மூக்கை தன் கூர் பற்களால் அவனின் மூக்கை வலிக்க கடித்தவள் அவன் சுதாரிக்கும் முன் அங்கிருந்து ஓடிவிட்டாள்..

(பயபுள்ள எதும் ரொமான்சா பண்ணுன்னு பார்த்தா...மூக்கை கடிக்குது..ஏற்கனவே குட்டிக்கு மூக்கு கொஞ்சம் ஓவர் சைஸ்...பாவம்...)

அங்கே மரம் அறுத்து அதை மர சாமன்களாக மற்றும் அந்த பெரிய அளவில் இயங்கும் அந்த பிளே வுட்ஸ் கம்பெனியில் .

அந்த மரத்தை அறுக்கும் ராட்சச மிஷினில் மரத்திற்கு பதில் ஒரு அதிகாரியின் கை இருக்க
அங்கே அந்த ஜிந்தா இருந்தான்
.

பசங்க கை எழுத்து போட சொன்னனத்துக்கு டாகுமெண்ட்ஸ்ல பொய்யா இருக்குன்னு...மாட்டேன்னு சொன்னியாம்..., அதனால இனி நீ யாருக்கும் கை எழுத்து போட வேண்டாம் கீப் ரெஸ்ட்” என்றவன் தன் ஆளை நோக்கி கண்ணை காட்டா
சைன் பண்றேன் “
, சைன் பண்றேன் என்று அந்த அதிகாரி சொன்னதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவனின் இரு கை விரலும் வெட்டி எடுக்கப்பட்டது..

வலியில் துடிக்கும் அவனை பார்த்த ஜிந்தா நீ போடுற மூடுல இருந்தாலும்...நான் வாங்குற மூடுல இல்லை “ என கூறிவிட்டு தன்அடியாளை நோக்கி இவனை தூக்கி அவன் வேலை செய்ற ஆபிஸ் வாசல்ல போடுங்க,

இவனை என்ன காரணத்துக்காக இப்படி செஞ்சோம்னு நம்ம எதுக்கு இவனை இப்படி பண்ணனும்னு நம்ம ஆளை விட்டே நம்ம சர்கில் ,நமக்கு தேவை படுற சைனிங் ஆத்தாரிட்டி உள்ளவர்களுக்கு சொல்ல சொல்லு..,

ஜிந்தா கேட்ட உயிரையே இருந்தாலும் இங்க உள்ளவங்க கொடுக்கணும்..ம்ம்..போ..” என்றான்..

பின் சதீஸ் மற்றும் சமித்தின் புறம் திரும்பியவன் “ உங்க 4 பிரண்ட்ஸ்சோடா சாவுக்கு காரணம் ஒரு பொண்ணு..

செத்த 3 பேரோட சுத்தி உள்ளவங்களை என்குவரி பண்ணும் போது எதுவும் கிடைக்கலை ஆனால் அமித் செத்த அன்னைக்கு ஒரு பொண்ணு வந்து அமித்தோட பொண்ணு தியாவை அலைச்சிக்கிட்டு போய் இருக்கா...

அமித் இறக்குற செய்தி அமித் வீட்டுக்கு தெரியுற அரை மணி நேரத்துக்கு முன்ன சரியா தியா வீட்டுக்கு போய் இருக்க..

தியா காலேஜ்லேந்து அந்த பொண்ணோட போன 2 மணி நேரத்துல தான் அமித் இறந்து இருக்கான்..

தியா அவங்க அப்பாவை கொல்றதுகான வாய்ப்புகள் கம்மி..கண்டிப்பா தியாவை அழைச்சிக்கிட்டு போன பொண்ணுக்கு கொலையில கண்டிப்பா பங்கு இருக்கும்..
இல்லை அந்த பொண்ணு மட்டும்தான் காரணமா இருப்பாள்..ஏன்னா உங்க 4 பேருக்கும் பொதுவான விஷயம் பெண்கள் தான்...

இன்னும் ஒரு வாரத்துல அது யாரு என்னன்னு கண்டு பிடிச்சு சொல்றேன்..

பேசுன படி அந்த பெண்ணை யாருன்னு கண்டு பிடிச்சு சொல்லவும் ,உங்க 2 பேரோட உயிரை காப்பத்தவும் 10 கோடியை பணமா கொடுத்துடுங்க... “ என்றவன் வேலை முடிந்தது என்பது போல எழுந்து சென்றுவிட்டான் ..

தன்னை நோக்கி ஒரு பலமான எதிரி நெருங்கி வருவதை அறிந்தாலும் தன் இலக்கில் எந்த மாறுதலும் இல்லாமல் தனது அடுத்த காவிற்கான நாளுக்காக கண் கொத்தி பாம்பாக காத்துக்கொண்டிருந்தாள் அக்னி...


போதுமா.....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 15 :

இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம், அதுமட்டும் இல்லாமல் , அவர்களின் கல்யாணநாள் அன்னைக்கு தான் அக்னியையும் வேலையில் ஜாயின் பண்ண சொல்லிஇருப்பதால் கொஞ்சம் கடினமாவேஇருந்தது...

கல்யாண தேதியை மாற்றலாம் என்றுயோசித்தால் எல்லா ஏற்படும்செய்தாயிற்று..

அக்னியிடம் சொல்லி ஜாயினிங் டேட்டைமாற்றலாம் என்றால்..அவள் அறவேமுடியாது என்று மறுத்து விட்டாள்..

துசரும் அதற்கு ஏற்றார் போலஎல்லாவற்றையும் நான்பார்த்துக்கொள்கிறேன் என்று விட்டான்..

துசரின் குடும்பத்தில் அவன் அக்னிக்குஅளவுக்கு அதிகமாக சப்போர்ட் செய்வதுபோல தோன்றினாலும் அவன் செய்தால்அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் அப்படியே விட்டனர்...

அன்று மதியம் தன் தந்தையின்அலுவலகம் பக்கமாக சென்றவள்இன்விடேசன் கொஞ்சம் எடுத்துசெல்லலாம் என்று தந்தையின் அறைநோக்கி சென்றாள்..

கதவை திறந்தவளுக்கு அதிர்ச்சி,ஆனந்தம் எல்லாமே ஒரே சேர வந்துவழக்கம் போல தன் பட்டாம்பூச்சிஇமைகளை படபட வென்றுபறக்கவிட்டாள்..

ஏன் என்றால் அலுவலக அறையில் அவள்அப்பாவின் சீட்டில் அமர்ந்து பைலைபார்த்துக்கொண்ண்டு இருந்தது அவளின்அவன்...துசர்..துசர் வேதநாயகம்..

அவள் கதவை திறக்கும் சத்தத்தில் தலையை நிமிர்த்தியவன் அங்கே தன்புறா முட்டை கண்ணழகியின் பார்வையில் மயங்கினான்..

இவளை இப்படி பட படக்க செய்யவேதினம் இவளுக்கு எதும் அதிர்ச்சிகொடுக்கலாம் போல என தோன்றியது..

பின் சீட்டில் இருந்து எழுந்தவன் அவளைஅழைத்து வந்து சீட்டில் அமர வைத்து..இருகை பிடியிலும் கையை கொடுத்தவன் அவள் தலையை தன் தலையால் முட்டினான்..

அப்பொழுதுதான் தன்னிலைஅடைந்தவள் அவனின் செயலிற்க்கானஅர்த்தத்தை ஓரளவு உணர்ந்தவள் “ஏன்துசர்”என்றாள்..

எனக்காக இவ்வளவு பண்ணும்போதுநான் உனக்காக இதெல்லாம் பண்ணமாட்டேனா....?

நீ கவேர்ட்மெண்ட் வேலைகவர்மெண்ட் வேலைன்னு சுத்திக்கிட்டு இருக்க, அத்தை ,மாமா எவ்வளோ தான் பார்ப்பாங்க, அதை நான் பார்த்த்துக்குறேன் அப்படின்னுசொல்லிட்டேன்” என்றான்...
துசர் உங்களுக்கு வேலை இருக்குமே,எப்படி நேரம் இருக்கும் “
என்னால சமாளிக்க முடியும் தர்பூஸ்...9.30டூ 5 தான் எனக்கு ஒர்க், அப்பறம் சனி,ஞாயிறு லீவ் தான் ,ஒன்னும் பிரச்சனைஇல்லை “ என்றான்

இருந்தாலும் துசர்...என்று ஏதோ சொல்லவர அவளின் வாயை மூடியவன்..
என் கண்ணம்மா அவளோடநிலையிலுருந்து இந்த சமானியனுக்காகஇறங்கி வரும் போது நான் இந்த சின்ன உதவி கூட செய்ய மாட்டேனா.
,..என்னை மாமனார் சொத்துக்கு ஆசைபடுறான்,

பணக்காரின்னு தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சரின்னு சொல்லி இருக்கேன்,,அப்படின்னு எது வேனும்னாலும் சொல்லட்டும் எனக்கு அதை பற்றி கவலைஇல்லை.

.அதை விட ,நீயே எனக்கு தாலிகட்டினாலும் சந்தோஷம் , “ என்றான் சிரித்துக்கொண்டே அவளின் மனதை படித்தவனாய்..

சந்தோஷத்தால் வார்த்தைகள் வராமல்சம்மதமாக தலைய ஆட்டினாள் அக்னி...

அவளும் அம்மா, அப்பா கஷ்டபடுகிறார்கள் தனக்கு ஒரு வேலைகிடைத்தவுடன், கொஞ்சம்சப்போர்ட்டாவது அவர்களுக்கு பண்ணவேண்டும் என்று நினைத்ததை துசர் சரிசெய்துவிட்டான்..

அவளின் உள்ளங்கையில் முத்தம்வைத்தவன் நான் என் பொண்டாட்டிக்குபுடவை இல்லை இல்லை பேண்ட் சட்டைகூட துவைச்சி போடுவேன்..யாரு என்னகேட்க “ என்றான்..

இன்னும் கல்யாணதிற்கு ஒரு வாரம்மட்டுமே இருப்பதால் தர்ஷிகாவீட்டிலையே இருந்துவிட்டாள்..

அக்னியை பார்த்தத்திலிருந்து தர்ஷிகாகொஞ்சம் தன் கூட்டிலிருந்து வெளியேவந்தாள் ...

அக்னியும் , துசர், தர்ஷிகா, விசாலி,ஷாம்னி , கண்ணா, என எல்லா இளைஞர் பட்டாளமும் கல்யாணத்துக்கு ஒரே மாதிரி ஆடை வாங்க செல்ல அந்ததி நகரில் உள்ள கடை இரண்டு துண்டானது..
இவர்களுடன் நம் சோனுவும் அடக்கம் ...

துசர் அலுவலக வேலை முடித்துவிட்டுஅக்னியின் ஆபிஷிற்கு சென்று சிலவேலைகளை முடித்து விட்டு லேட்டாகஜாயின் பண்ணிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான்...


அதனால் குட்டி குரங்கு அவனிடம் உள்ளஎல்லா வாலையும் அவிழ்த்துவிட்டுசுற்றிக்கொண்டு இருந்தது..
அக்னி எப்பொழுதும் ஆரோக்கியமான சந்தோஷிற்கோ, என்ஜாய்மெண்ட்டிற்கோ என்றும் தடை சொன்னது கிடையாது,அதனால் கலை கட்டியது..

ஷாம்னி,தர்ஷிகா,விசாலி எல்லோரும்அவனுடன் சேர்ந்து கொண்டனர்..அக்னி எப்பொழுதும் ரிசர்வ்டாக இருப்பதால் இந்த கலகலப்பான பட்டாளத்தை நிரம்பபிடித்துவிட்டது ஷாம்னிக்கு..

4 குழந்தைகளை தீபாவளி ஷாப்பிங் அழைத்து செல்வது போல ஆனது அக்னியின் நிலை ஆனது..

அக்னி போனை எடுத்துக்கொண்டுஓரமாக அமர்ந்தவள் நான் துசர் வந்ததும்எடுத்துக்கொள்கிறேன் என்றுவிட்டாள்..

கடைசியாக அரக்கு நிறத்தில் தங்கசரிகை இட்ட பட்டுப்புடவை பெண்கள் மூவருக்கும்,

அதே அரக்கு நிறத்தில் பட்டுசட்டை மற்றும் பட்டு வேஷ்டி இருஆண்களுக்கும் எடுத்துக்கொண்டனர்..

(எது எது. அந்த சோனு நண்டுபய ...எப்பஆம்பள ஆனான்...ரைட்டர் அக்கா இருக்கட்டும்..இருக்கட்டும்)

புடவையிலும், பட்டு வேஷ்டி சட்டையிலும்ஒரு ஜோடி இவர்களின் சார்பில் அக்னிமட்டும் துசருக்கு அன்பளிப்பாகவழங்கப்பட்டது..

அக்னியின் பணத்தில்..

(இது பேரு அன்பளிப்பா பக்கிகூட்டங்களா...)

சரியாக பில் போடும் சமயம் துசர் உள்ளேவந்தான் ..இன்னவரை தாயாய் வழிநடத்தியவள் தன்னவனின் வருகையால் சேயாகி அது வேண்டும், இது வேண்டும்என்று துசரிடம் அடம் பிடிக்க

அவனும் அவளுக்கு அனைத்தையும் வாங்கி கொடுத்து வந்தான்...

எல்லாபர்சேஸும் முடிந்து அனைவரும் கிளம்ப கூட்டம் அதிகமாக இருப்பதால் குட்டிஅக்னியையும் ,விசாலியையும் தன்கைவளைவுக்குள் அழைத்து செல்ல,தர்ஷிகாவை துசர் அழைத்து சென்றான்...

நம் பெண் சிங்கம் எப்பொழுதும் போல தனியாக கெத்தாக வந்தது..கீழே பார்க்கிங் வந்தும் அக்னி காரை எடுக்கபோகும் போது ஒருவன் புகையை இழுத்து வேண்டும் என்று அவள் முகத்தில் படும்படி ஊத அவனை திரும்பி முறைத்தாள்..

அவனோ “ மேலபடுதுன்னு தெரியுதுலநகர்ந்து போக வேண்டியது தான” என மறுபடி வாயில் வைத்து ஊத போக.....

அங்கே 10 அடி தூரத்தில் ஷாம்னி ஒன்றுஇரண்டு என்ற எண்ண ஆரம்பிக்க,விசாலி, குட்டி, தர்ஷிகா எல்லாம் குழப்பமாக ஷாம்னியை பார்க்க,


துசர் தன் குழந்தையின் செயலை ரசிக்கும் மனநிலையுடன் நின்று அக்னியை பார்த்துக்கொண்டு நின்று இருந்தான்..சரியா ஷாம்னி 3 என்று எண்ணி முடிக்கும் போது அக்னிகொடுத்த அறையில் அந்த சிக்ரெட்பிடித்தவன் காதில் பொறி பறக்க கீழே விழுந்துகிடந்தான்...
ராஸ்கல் பொது இடத்துல சிகிரெட்குடிக்கிறதே தப்பு, இதுல மூஞ்சிமேலஊதுவியா..தொலைச்சிருவேன் ராஸ்கல்“என நகர..

இப்பொழுது குட்டி, விசாலி, தர்ஷிகா எல்லோரும் துசரை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க குழப்பமாக பார்ப்பதுஷாம்னியின் முறை ஆயிற்று...

தர்ஷிகா” அண்ணா நீ சிகிரெட் குடிக்கிறது அண்ணிக்கு தெரிஞ்சது காது 2 உம் பஞ்சர் தான் “ என்றாள் சிரிப்புனுடே

துசர் அமைதியாக நிற்க காரை எடுத்துக்கொண்டு அவர்கள் அருகில்வந்த அக்னி காரைவிட்டு இறங்கி “அதுக்கு அவசியம் இல்லை தர்ஷி உங்க அண்ணன் என்னைக்கு என்ன லவ்பண்ண ஆரம்பிச்சாங்களோ அப்பவே சிகிரெட்ட விட்டுடாங்க” என்றாள்.

அவர்கள் மூவரையும் பார்த்து கேவலமாக பார்த்து கோணல் சிரிப்பு சிரித்த துசர் அவர்கள் அனைவரையும் காரில் அனுப்பிவிட்டு அக்னியை தன்னோடு பைக்கில் அழைத்து சென்றான்..

குட்டியிடம் ஷாம்னியை வீட்டில் பத்திரமாக சேர்க்கும் படி சொல்லிஇருந்தான்...

( அந்த அரமண்டையன அந்த புள்ளையவிட சொன்னா போய் வீட்டோட தங்கிடுவானே...)

துசர் அக்னியை கொண்டுவந்து வீட்டில் விட பைக்கைவிட்டு இறங்கியவள் அவன்சட்டையை பிடித்து “ துசரர்ர்” என்றாள்....

என் செல்ல தர்பூஸ்க்கு என்ன வேணும் “என்றான்,

பைக்கை டபுள் ஷ்டான்ட் போட்டு அவள் புறம் திரும்பி பைக்கில் சாய்ந்துகொண்டு தன் இரு கைகளையும்கட்டிக்கொண்டு...

துசர் நான் உங்களுக்கு ஒரு லிப் கிஸ்தரவா “” என்றாள் கண்களை சுருக்கிக்கொண்டு கை அளவை சிறியதாக காட்டிஒரு புறம் தலைய சரித்த படி முகம் முழுவதும் வெக்கத்தால் சிவந்து கிடக்க..

அவனுக்கா கசக்கும் அன்று அவள்கொடுத்த இதழ் முத்தத்தில் அடித்து செல்லப்பட்டு கரை தெரியாமல்திண்டாடியனாயிற்றே...

காதல் கலந்த கமாத்திலே, இல்லை காமம் கலந்த காதலிலோ பெண்களின் அழைப்புமிக அரிதே .. அப்படி அந்த அழைப்பில் கிடைக்கும் நிறைவு, உச்சம் அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்..

காதலிப்பதை விட காதலிக்கபடுவது எத்தனை அழகோ அத்தனை அழகை கொண்டது இந்த அழகியள்...
ஆனால் அதை பல ஆண்கள் விரும்புவது இல்லை,
ஒரு முறை மண்டியிட்டுபாருங்கள்..அடிபணிவது நீங்களாக இருந்தாலும் பெண்களின் தூய்மையானஅன்பில் ஆள்வதும் நீங்களாக இருப்பீர்கள்..
துசர் கண்களை மூடிக்கொண்டு “ with my pleasure திம்சு..பிலீஸ் “என்றான்...கிறக்காமான குரலில்..

மெதுவாக அவன் அருகில் சென்று அவனின் சட்டைக் காலரை பிடித்துக்கொண்டு அவனின் கீழ் உதட்டை மெதுவாக கவ்விக் கடித்து சுவைக்க..

கடிப்பது கூட இவ்வளவு மென்மையாக இருக்குமா என் விழி மூடிக்கிடந்தான் துசர்...

உள்ளே நாக்குகள் இரண்டும் கத்திசண்டை நடத்தினாலும் இதழ்கள் மட்டும் பிரியாமல் இசை படித்தன..

ஒரு கட்டத்தில் மூச்சி வாங்க அக்னி விலகி அவன் காலரை விட சட்டென்று அவள் கையை தன் காலரோடு இறுக்கி பிடித்தவன்..” ப்ளீஸ் டி, dont stop “என்றவன்..

அவளை வளைத்து அங்கு அழகுக்குவளர்த்து வைத்திருந்த புல்லின் மேலே சாய்தவன்...

அவளின் நடு கழுத்தில் முத்தம் மிட அவன்மீசை குரு குறுப்பின் கூச்சத்தில் அவனை விலக்குவதற்கு பதில் அவனை தன் கழுத்தோடு வைத்து அழுத்த துசரின்பொத்தி வைத்த உணர்வுகளை கட்டு அவிழ்த்து விட்டாள்...

தன்னவனின் தீண்டல் மட்டும் நினைவில் இருக்க இனி என்ன என துசர் எனும் பனி மழையில் விழி மூடிக்கிடந்தது அந்த அக்னி பிளம்பு..

அவளின் முகம் முழுவதும் முத்தம்விட்டவன் அவள் இதழ்களுக்கு புதைந்தபடி அவளின் சட்டையின் முதல் பட்டனை கழட்ட போனவன் பின் சுதாரித்துகொண்டு அவளை விட்டு விலகி அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்...

அவனின் மார்பில் கிடந்த அக்னிக்கு நிறைவு மட்டுமே..

கல்யாணத்திற்கான எல்லா வேலையும் சரூராக நடக்க தன் ஒரே பெண்ணின் கல்யாணத்தை ஊரே அசத்தும் படி ஏற்பாடு செய்து இருந்தார் ராமன்..

ஆனால் அந்த கல்யாண நாள் யாருக்கும் சந்தோஷமாக இருக்க போவதில்லை எனயாரும் அறியவில்லை..

அக்னி என்னும் நெருப்பின் இன்னொருபக்கம் அன்று தான் எல்லோருக்கும் தெரிய போகிறது ..அந்த சூறாவாளியில் யார் பிழைப்பார்கள்,யார் வேரோடு சாயபோகிறார்கள் என்று அந்த விடியும் அந்த நாள் தான் சொல்ல போகிறது...

எந்த சூறாவளிக்கும் எந்த புயலுக்கும் எரிமைலைகள் அணைவது இல்லை..மாறாக அது கொழுந்து விட்டுத்தான் எரியும்...
அதே போலதான் அக்னியும்...அவள் பெண்களின்அடையாளத்திற்கான அவதாரம்..அது கீர்ப்பிள்ளைகளின் கீச்சு குரலுக்குஎன்றும் அடி பணியாது

விடியும் பொழுது எல்லோருக்கும் துக்கமாக இருந்தாலும் புரிதல் உள்ள காதலனால் அக்னிக்கு அது மேலும் பலம்சேர்க்கும் என்பதில் ஐயம் இல்லை
..

போதுமா...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 16 :
இன்னும் இரண்டு நாட்களில் கல்யாணம் என்று இருக்க ,ரிசப்ஷன் வைக்கும் பழக்கம் துசர் மற்றும் அக்னி இரு குடும்பத்திற்கும் வழக்கம் இல்லை என்பதால்..

நேரடியாக 7.30 டோ 9 கல்யாணம் என முடிவு ஆகி இருந்தது...

சமித் மற்றும் சதீஷ் ஜஸ்வால் இருவரும் ஜிந்தாவின் கண் காணிப்பில் மிகுந்த பாதுகாப்புடன் இருந்தனர்..

அவர்களை நெருங்குவது ரொம்பஇயலாத காரியமாக இருந்தது, தூங்குவது முதல் பாத்ரூம் செல்வது வரை அனைத்தும் ஜிந்தாவின் ஆளோடுதான்..

ஏதோ ஒருவர் இருவர் என்றால் சமாளிக்கலாம் அதற்கு மேல் கண்டிப்பாக முடியாது அக்னியால் ..

அவள் செய்யும் செய்த அனைத்து பல வருஷம் காத்திருந்த செய்த செயல்கள்தான்...

தன் கல்யாணத்துக்கு முன் எல்லாவற்றையும் முடித்து கல்யாணத்திற்கு பிறகு எந்த ஓட்டமும்,எந்த பிரச்சனையும் இல்லை..இல்லாமல்இருக்க வேண்டும் என்று நினைத்து இருக்க

துசரின் அதிரடி திருமண ஏற்பட்டால்அவளது பிளானில் கொஞ்சம் சொதப்பல் ஏற்பட்டு விட்டது,மேலும் ஜிந்தாவின் தலையீடு அவளே எதிர்பார்க்காதது..அவனின் பலமும் இவளின் பலதிற்கு பல மடங்கு அதிகமானது...

எப்படியாவது இன்று யார்ஒருவரையாவது தீர்க்க வேண்டும் என்றுமுடிவெடுத்தவள் மாறன் மற்றும் துசரின்உதவியோடு அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டாள்...

மாறனும் ,ஷாம்னியும் எவ்வளவுசொல்லியும் அவள் கேட்கவில்லை..
அண்ணா நீங்களாவது சொல்லகூடாதா,இன்னும் 2 நாள்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு இவள் இப்படி கிளம்புறாளே”என துசரிடம் புலம்ப..

துசரோ “அவள் என்ன செஞ்சாலும் நான்அவள் கூட இருப்பேன் மா..அவளுக்குஎதும் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்..அப்படி எதும் நடந்தா அன்னைக்கு நான்எழ முடியாம பிணமா கிடக்கிற நாளாதான்இருக்கும்”

அக்னி அனுமதிச்சா அவங்க 2 பேரையும் பகிரங்கமா கொலை பண்ணிட்டு நான்ஜெயிலுக்கு கூட போய் சந்தோசமாஇருப்பேன்..,


ஆனால் அக்னிதான் “ அவங்க சாகவேண்டியவங்கதான் ஆனால் அதுக்காகநானே தண்டனை அனுபவிக்ககூடாதுன்னு மறைமுகமா செய்யும் போது,உங்களை எப்படி ஜெயிலுக்கு போக நான் எப்படி சம்மதிப்பேன்னு சொல்லிட்டா”என்றான்..

அவனை முறைத்த ஷாம்னி “ நல்ல பொண்டாட்டிக்கு ஏத்த புருஷன் “ என திட்ட

துசர் “ இத்தனை நாள் நீ ஏன் மா என்ன செஞ்சாலும் அக்னிக்கு சப்போர்ட்டா இருந்த” என கேட்க அசடு வழிவதுஷாம்னி.

இருந்தும் கெத்து குறையாமல் “ என்உயிர் தோழிக்கு நான் செய்யாமல் வேறுயார் செய்யவா “ என்றாள்..
அதே போல “ என் தர்ப்பூஷ்க்கு நான்செய்யாமல் யார் செய்யவா “என்றான்..

அவர்கள் இருவரும் பேசுவதை கையில்ட்ரிலிங் மிசனை வைத்துக்கொண்டு,அதை சரி பார்த்து கொண்டு சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள் அக்னி..

( ஆத்தி... ட்ரிலிங் மிசினா...தண்டனைபெருசா இருக்கும் போல....)

அவர்கள் திட்டத்தின் படி மாறன் குரலை மாற்றி ஜிந்தாவின் வலது கை ஒருவனுக்கு கால் செய்து “ உன் முதலாளிக்கு சொந்தமான அனைத்து இடம்,வீடு ,

பேக்ட்ரின்னு எல்லாத்துலையும் பாம் வைச்சி இருக்காங்க இன்னும் ஒருமணி நேரத்துல ஒண்ணு ஒண்ணா வெடிக்கும் “ என்க

இது மாதிரியான அழைப்புகள் சாதரணம் என்பதால் அவன் அதை அலட்சியம் செய்துவிட்டு தூங்க..அடுத்த கால் மணிநேரத்தில் ஜிந்தாவின் போர்ட்டிகோவில் நின்று இருந்த அவனின்அக்கிரமங்களின் பரிசான விலை உயர்ந்த ஜாக்குவார் கார் அதிவேகத்துடன் வெடித்து சிதற அந்த வீடே அல்லோலப்பட்டது .

தன் உடமைகளின் மேலே கை வைக்க யாருக்கு தைரியம் வரும் என்று ஜிந்தா கொதித்து கிடக்க மாறன் மறுபடியும் ஜிந்தாவின் அல்லக்கைக்கு போன் செய்து“ இன்னும் அரைமணி நேரத்தில் ஒவ்வொன்னா வெடித்து சிதறும் என போனை வைக்க அடுத்த கார் மறுபடிவெடித்தது...”

உண்மை தன்மையை ஆராய எல்லாம் நேரம் இல்லாமலும் ,சரியாக கார் மட்டுமே வெடிக்கிறதே என எந்த யோசனையும் இல்லாமல் மீதி உடமையை காப்பாற்ற ஜிந்தாவின் ஆட்கள் திசைக்கு ஒருவராக ஓட..

சதீஸ், மற்றும் சமித்துக்கு காவலாகஇருந்தவர்களையும் அழைக்க,, அந்தஇரவு தூங்க இரவாகி போனது...

மணி 2 ஆகி இருக்க இதற்கு மேல் என்ன ஆகும் என ஜூந்தாவின் ஆட்கள் இல்லாமல் இருந்தாலும் பயம் இல்லாமல் தூக்கிக்கொண்டு இருந்தான் சதீஸ்..

மாறன் கால் செய்து செய்தியை உறுதி படுத்தியவுடன் ஜாமரின் உதவியுடன் எல்லாவற்றையும் செயலிழக்க செய்துவிட்டு துசரும் ,
அக்னியும் உள்ளே சென்றனர்...

துசர் வாசல் புறமாக சென்று அங்குகாவலுக்கு நின்ற ஜிந்தாவின் ஆட்கள் இல்லாததால் தூங்கி வழிந்து கொண்டே காவல் செய்து கொண்டிருந்த சதிஷின் அடியாட்களை மறைந்து மறைந்து எல்லாருக்கும் குளோரோபார்ம் கொடுத்து மயக்கம் அடைய செய்தான்..

அதே நேரம் சதிஷின் அறைக்கு வந்த அக்னி தூங்கிக் கொண்டிருக்கும் அவனைகொலை வெறியுடன் பார்த்தாள்..

பின் தன் கண் மட்டும் தெரியும் படிதுணியால் தன் முகத்தை கட்டியவள்

அவன் தூக்கம் கலையாதவாறு அவன்கையை கட்டியவள் பின் அவன் தோளைதட்டி வேகமாக எழுப்பி அவன் “ யார்,”என்று வாயை திறந்து கேட்கும் முன்அவன் அடி தொண்டை வரை துணியை வைத்து அடைத்து அவனை பேசமுடியாமல் செய்தவள்

பின் தன் பேக்கில் உள்ள ட்ரிலிங் மிசினைஎடுத்து அவன் இரு கண் கலையும்வெளியே பிதுக்கி மறுப்பாக தலையை அசைத்து கண்களில் கண்ணீருடன்கெஞ்ச,

அவள் எதையும் கண்டு கொள்ளாமல்அவன் ஆணுறுப்பை தன் கைகளாலேஅறுத்து எறிந்தவள்...

( அட்டரா சக்கா...நானா.....அது...)

அவனின் மொபைலிலிருந்து பக்கத்தில் ரூமில் தூங்கும் அவளின் மனைவிக்குகால் செய்தவள்,ரிங் போய் கொண்டுஇருக்கும் போதே அவ்விடம் விட்டு நகர்ந்தாள்..

பாதி தூக்கத்தில் தன் கணவனின் அழைப்பை எடுத்த சதிஷின் மனைவி கால் எடுத்தும் எந்த பதிலும் இல்லாததால் என்னவென்று பார்க்கலாம் என்று அவன் தூங்கும் ரூம் வரவே ,ரத்த வெள்ளத்தில் மிதக்கும் தன் கணவனைப் பார்த்தவள்அலறி அடித்துக்கொண்டு தன்பிள்ளைகளின் உதவியுடன் அருகில்உள்ள ஹாஸ்பிடலில் சேர்த்தாள்..

அங்கே ஜிந்தாவின் உடமைகள்அனைத்தையும் பாம் ஸ்குவார்ட் , அவனின்ஆட்கள் என பிரித்துபோட்டுக்கொண்டிருந்தனர்...

கையை இறுக்கிக் கட்டுக்கொண்டவன் கடினமான முகத்துடன் அமர்ந்து இருந்தான்..
பின்னே எத்தனை பெயரின் சமாதியில் எழுப்பிய அரண்மனை, எத்தனை பேரின் ரத்தத்தில் உருவாக்கிய நந்தவனம்...எத்தனை பேரின் கதறல் ஒலியில் உருவாக்கிய அஸ்திவாரம் எல்லாம்ஆட்டம் காணும் எனில்...

ஆனால் 12 மணியிலிருந்து விடியற்காலை 4 மணி வரை தேடியும் ஒருஇடத்தில் கூட பாம் இருக்கும் செய்திஅவன் காதில் எட்டவில்லை..
மாறாக சதீஸ் உயிருக்கு போராடிக்கொண்டு மருத்துவமனையில் இருப்பதாக போன் வந்தது...

இப்பொழுது ஜிந்தாவிற்கு மெதுவாக எல்லாம் விளங்கியது எதற்காக இந்த பாம்வெடிக்கும் நாடகம் என்று...

தனது கார் எங்கோ வெளியில் செல்லும்நேரம் அதில் மட்டும் அவர்களால் பாம்வைக்கபட்டுள்ளது என்பதை தாமதமாகஉணர்ந்தான்..தங்கள் கவனத்தை திசைதிருப்பவே இது என்று புரிந்தது..

மாறாக 8 அடுக்கு பாதுகாப்புடன்இருக்கும் தன் உடமையை எப்படி கைவைக்க முடியும், உள்ளே நுழைய முடியும்என சுயம் திரும்ப

இருப்பினும் தன்னையும் இத்தனை மணிநேரம் முட்டாளாக்கிய அந்த பெண்ணிற்கு சபாஷ் போட தோன்றியது..ஜிந்தாவிற்கு...

இருந்தும் ஆண்கள், பண பலம், படை பலம் உள்ளவர்கள் கூட தன்னிடம் அடிபணியும் போது ஒரு பெண் தன்னை ஏமாற்றி தன் பாதுகாப்பில் உள்ளவனை தாக்கிசெல்வதா ...?

கொதித்துகிடந்தான் ஜிந்தா,இதுவரைபணத்திற்க்காக எதிரியாய் இருந்த அந்தமுகம் தெரியாத பெண்...அவளின் இந்த செயலால் நேரடி எதிரி ஆனாள்...

இதுவரை தன் ஆட்களிடம் அவளை பற்றிவிசாரிக்க சொல்லியவன் , இப்பொழுதுநேரடியாக களத்தில் இறங்கினான்...

இத்தனை நாள் தியாவிடம் (அமித்தின்மகள்) சாப்டாக அந்த பெண்ணை பற்றிகேட்க சொல்லி இருந்தான், சமித் , மற்றும் சதிஷின் வற்புறுத்தலால்..
ஆனால் இப்பொழுது வெறி கொண்ட காட்டானையாய் மாறி தியாவின் தாயையும்,அவள் தம்பியையும் கடத்திஅவளை மிரட்ட தொடங்கிவிட்டான் அத்தனையும் அந்த இரவிலே....

பணத்தை கோடி கோடியாக கொட்டுகிறேன் என்று சொன்னாலும் சதிஷின் உயர் மட்டுமே காப்பற்றபட்டது...முக்கியமான நரம்புகள் அனைத்தும் செயல் இழந்ததால்...
உயிர் இருந்தாலும் பிணமே என்றுகை விரித்துவிட்டனர் டாக்டர்கள் ...

குடும்ப கௌரவம் ,அதுவும் இல்லாமல்தன் கணவனின் நிலையை என்னவென்று கம்பிளைன்ட் கொடுப்பது,

அதன் உண்மை தன்மை தன் கணவனின் ஆண்மைக்கு இலுக்கு, அதுவும் இல்லாமல் தொழில் வட்டாரம்,
குழந்தைகளின் எதிர்காலம் என்று அனைத்தையும் மனத்தில் கொண்டு போலீஷ் கம்பிளைன்ட் கொடுக்காமல் மறைந்துவிட்டாள் சமித்தின் மனைவி..

வெளி உலகத்திற்கு தலையில் அடிபட்டு கோமாவிற்கு சென்றுவிட்டார் என்று ஜோடிக்க பட்டது...

பண உள்ளவர்களின் ஜோடிப்புதான் கடவுளை கூட நம்பவைத்துவிடுமோ...சுண்டக்கா சொசைட்டிஎன்ன..
எல்லா மர்மங்களும் சேர்ந்து சமித்தைமரண பயத்தின் உச்சியில் அமர வைத்து இருந்தது...

சதிஷிர்க்கு நடந்தது சமித்தை நூறு மடங்கு நம்ப வைத்தது தன் உயிரை காவு வாங்க காத்து இருப்பது ஒரு பெண் என்று..

தங்களால் பாதிக்க பட்டவர்கள் எத்தனைபெண்கள் ,யாரென்று கண்டுபிடிப்பது,பெண்ணால் இவ்வளவுசெயல்களை செய்ய முடியமா என உயிர் பயத்தில் உறைந்து நின்றான்

விடிந்தால் கல்யாணம் கையில்மருதானியுடன் கல்யாண நடக்க போகும் மண்டபத்தின் மாடியில் ,அங்குஉட்காருவதற்காக கட்டப்பட்ட சிமெண்ட் மேடையில் அமர்ந்து நிலவை தனியாக வெறித்து கொண்டிருந்தாள் அக்னி...

முகம் எப்பொழுதும் போல நிர்மலமாகஇருக்க கண்கள் மட்டும் நாளைக்கு தனக்கும் ,துசருக்கும் நடக்க போகும் கல்யாணத்தை நினைத்து சந்தோஷத்தில் படபடத்து கிடந்தது...
அப்பொழுது தன் அருகில் ஆள் அமரும்அரவம் கேட்க திரும்பி பார்க்க அங்கே அவளின் துசர் வந்து அமர்ந்தான்..

ரெட் கலர் காலர் வைத்த டீசேர்ட்போட்டுக்கொண்டு , காட்டன் வேஷ்டி அணிந்து முட்டி வரை மடக்கிகட்டிக்கொண்டு..

மொட்டை மாடியில் காற்று அதிகமாக அடிப்பதால் அவளின் முடி அவள் வாயிற்குள் போக அதை வெளியே எடுத்துவிட்டவன் “ ஏன் பாப்பா இங்க உட்கார்ந்து இருக்கு “என்றான்..

அவன் தோளில் சாய்ந்து கொண்டவள் அமைதியாக இருக்க ,சிறிது நேரத்தில் அவளின் மௌனக் கண்ணீர் அவன்டிசேர்ட்டை நனைக்க பதறி அவள் முகத்தை நிமிர்த்து “ என்ன டா” என்றான் கனிவோடு..

அன்று தன் காதலை சொல்லும் போது அவளின் கடந்த காலத்தை சொல்லிகேட்டாளே ஒரு கேள்வி அதே கேள்வி இன்றும் அவன் கண்ணைப்பார்த்து கேட்க

அவளை நெஞ்சோடு இறுக்கியவன் “இந்த கேள்வியை கேட்டு கேட்டு கொல்லாத டி” என்றான் அவனும்அழுதபடி..


போதுமா.
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 17 :

அவளை அணைத்து கொண்டு துசரும் கண்ணீர்விட்டான்...
ஏன் துசர் எனக்கும் மட்டும் இந்த போரட்டம்,ஒரு காலத்துல பெருமையா நினைச்சா என் குணமும் ,தைரியமும் ஏன் டா எனக்கு இது வந்ததுன்னு இப்ப இருக்கு,

நானும் எல்லா பெண்கள் போலபயந்துகிட்டு சாதரணமா இருந்தா நல்லா இருந்து இருக்கும்ல “என கலங்க.

இல்லை டா...உன்னை மாதிரி எல்லா பெண்களும் இருக்கணும்னு நான் ஆசைபடுறேன்.....,
இது எல்லாத்துக்கும் ஒரு நாள் ஒரு முடிவு வரும்...”
என்ற அவளை அணைத்து கொண்டான்...

பின் விடியல் காலை அவர்கள் வீட்டினர் வந்து அவர்களை அழைக்கும் வரைஅங்கேயே இருவரும் அணைத்த படியே அமர்ந்து இருந்தனர்..

அதன் பின் எல்லாமே கொஞ்சம்பரபரப்பாகவே நடந்தது.. 7 அரண்மனைகளை சொந்தமாக கொண்ட அந்த கல்யாண மஹாலை மொத்தமாக வாடகைக்கு எடுத்து இருந்தார்...ராமன்...

பெண், மாப்பிளை ,எல்லாம் பக்கத்து மண்டபத்தில் இருக்க ,அங்கிருந்து இங்கு அழைத்து வரும் நடைபாதை முழுவதும் . .

கீழே வெள்ளை நிற பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்க ,
ஒரு பேலசிலிருந்து மற்றொன்றுக்கு ,மேல்கூரை வண்ண வண்ண துணிக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க அந்த நுழைவாயிலே பிரமாண்டமாக இருந்தது

மண்டபத்தின் உள் பகுதி அந்த கால அரண்மனையின் அழகை ஒத்துஇருந்தது..வான் உயர்ந்த தூண்களாலும் ,வண்ணம் கொட்டும் அலங்காரத்தாலும்..

ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள்அமைக்கப்பட்டிருக்க vip கள்,சொந்தக்காரர்கள் ,தொழில் வட்டார நண்பர்கள்,

அவரின் கம்பெனியில் வேலைக்கு பார்க்கும் தொழிலாளிகள்,

மேலும் அக்னி நடத்தும் அனாதைஇல்லத்தின் குழந்தைகள்,பெரியவர்கள் நிர்வாகிகள் என அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வரிசையாகஅமர வைக்கப்பட்டு இருந்தனர்...

மேடையின் அருகே 4 சேர்கள் போடப்பட்டு துசரின்,தாத்தா,பாட்டி ,அக்னியின் தாத்தா,பாட்டி அமர்ந்து இருக்க..

வலது குல்பி, ஐஸ் கிரீம், எனகுழந்தைளுக்கு கொடுத்து கொண்டிருக்க,

மேலும் இளம்பெண்களுக்கு இலவசமாகமெஹந்தி போட்டுக்கொண்டு இருந்தனர்,

இடது புறம் காதையும்,
கண்ணையும் உறுத்தாத மெல்லிய திரை இசை கச்சேரி நடந்து கொண்டிருந்தது..

அங்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் கேமரா மூலம் அங்கு தெரியும் அனைத்து LED டிவியில் ஒளிப்பரப்பாகி கொண்டுஇருந்தது எல்லாரும் தெளிவாகதிருமணத்தை காண...

எல்லா வேலையும் முடிக்க ஆட்கள்இருப்பதால் வரவேற்கும் வேலையைமட்டும் இரு வீட்டினாரும் செய்துகொண்டிருந்தனர்.

முகூர்த்த நேரம் நெருங்க துசர் பட்டு வேஷ்டி சட்டையில் சாரட் வண்டியில் வந்துஇறங்கினான்...ஆண்மையின் ஓட்டுமொத்த இலக்கணமாக முறுக்கு மீசைதாடியுடன் ,நெற்றில் கொஞ்சம் இழுப்பலாக வீற்றிற்கும் குங்குமம்அவனின் சந்தன நிறத்தை இன்னும் பளிச்சென காட்ட,

கழுத்தில் எப்பொழுதும் போல ஒருருத்திராட்சம் அணிந்த கருப்பு கயிறு,அதனூடே கல்யாணத்தின் பொருட்டு பின்னி பிணைந்து இருக்கும்ஒரு தங்க ஜெயின்,

கையில் தங்கத்தால் ஆனா வளையம் அணிந்து வலதுகையால் தனது மீசையை முறுக்கிய படிசிரித்து கொண்டு,

முன்னுச்சி முடிகாற்றில் பறக்க கம்பீரமாக மேடையை நோக்கி நடந்து வந்தான்..

அப்பொழுது கச்சேரி நடக்கும் இடத்தில்
தென் மதுரை மாமனுக்கு, என்னுடையவீரனுக்கு தேக்கு மர தேக மடி யம்மாயம்மா...
என்றும் ,

கண்னே என் முன்னே கடலும் துள்ளாது..
பெண்னே நான் தூண்டில் போட்டால்விண்மீனும் தப்பாது...

என்ற பாடல்களைபாட
அந்த வரிகள் துசரை இன்னும் அழகாககாட்டியது...மேடையில் வந்து அமர்ந்த துசர் அய்யர் சொன்ன மந்திரங்களை சொல்லிக்கொண்டிருக்க....

அப்பொழுது மண்டபத்தின் உள்ளேவந்தாள் அக்னி...,தக்காளி நிற பட்டுபுடவையில் தங்க சரிகையில் உடல் எங்கும் மினு மினுக்க,

அதற்கு தகுந்தகாண்ட்ரஸ்ட் கலரில் கை வேலைபாடுகள் உள்ள பிளவுஸுடன் ,..

ஆன்டிக் நகைகள்அணிந்து ,
மண்டபத்தின் உள்ள அனைவரின்கருத்தையும் கவர்ந்த படி பேரழகியாக அன்ன நடை...இல்லை இல்லைராணியின் கம்பீரத்துடன் ராஜ நடை நடந்து வந்தாள்..

துசரின் பார்வை படும்வரை,
அவன் விழிகள் அவள் மேனியோடுகலந்து அவளின் அழகை திங்கும் போது அவள் இமை குடைகள் பட படவென்று அடித்து கொண்டு குனிந்துகொள்ள..,நடையில் கொஞ்சம் நளினம் வந்தது..

துசர் பார்வையை விலக்காமல் மந்திரம் சொல்ல மறந்து அக்னியையே பார்த்து கொண்டிட்டுந்தான்...

அந்நேரம் கச்சேரியில்..
தேனூறும் இதழ் சுகமா....
நான் தீண்டாத இடம் சுகமா ...
நீ எனக்காக செய்கின்ற வெட்கங்கள் சுகமா..சுகமா..

நான் கடித்த நடு விரலில் நகக்கனுவும்சுகம் தானே..

இடைவெளிகள் தாண்டிவிட்டால்இம்சைகளும் சுகம் தானே..

.என பாட
அந்த பாடலும், துசரின் பார்வையும்இன்னும் பாவை அவளை நிலத்தில்புதைக்க சொன்னது...

மலை தூக்கும் பலம் சுகமா...
என் மடி சாயும் தலை சுகமா..
நான் கேட்டாலும் கேட்காத பிடிவாதம்சுகமா சுகமா...

என்ற அந்த பாடலின் அர்த்தம் பொதிந்த வரிகள் மண்டபத்தையே. நிறைத்தது...

அக்னி துசரின் அருகில் அமர இருவர் மனதிலும் நிம்மதியை தாண்டி ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு..
இருவரின் கைகளும் மற்றவரின் கையை ஒரே நேரத்தில் ஆறுதலாகபற்றிக்கொண்டது.

மேடையில் குறுக்கும் நெடுக்குமாகஷாம்னி ஓடிக்கொண்டு இருக்க அவளின் அழகினை கீழே உட்கார்ந்து நம் கிப்பிமண்டையன் சைட் அடித்து கொண்டிருந்தான்,இன்று அவனின்தோற்றம் சற்று நாகரிகமாக இருந்தது,எந்த ஹேர் கலர், ஹேர் ஸ்டைலும் இல்லாமல் ஏற்றி சீவிய தலையுடன் வேஷ்டி சட்டையில் அழகாக இருந்தான்...

இங்கு கல்யாண ஏற்பாடு விமர்சையாக நடந்து கொண்டிருக்க ,தான் ஏமாற்றபட்டுவிட்டோம் என்று அடுத்த அரைமணி நேரத்தில் ஜிந்தா தியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டான்..

அவளும் தன் அன்னை, தம்பியின் உயிரைகாக்க அக்னியை அடையாளம் சொல்ல அவனுடன் வந்துவிட்டாள்...

வேறுவழி இல்லையே சமானியர்களுக்கு இதை தவிர....

தியாவிற்கும் அவளின் பேர் மட்டுமே தெரியும் என்பதால் சென்னையில் தெருதெருவாக சுத்துக்கொண்டிருக்க கூடவே ஜிந்தா மற்றும் சமித் இருந்தனர்..

அப்பொழுது அங்கே ரோட்டின் ஓரமாக 100அடியில் அக்னி மற்றும் துசரின் கல்யாண கட்டவுட் இருக்க அதை பார்த்து இதுதான்அந்த பெண் என்று சொல்லிவிட்டாள்..

சமித்திற்கு மங்கலாக அக்னியை எங்கேயோ பார்த்த நியாபகம் வர யோசித்தம் முடியாததால் வேகமாக தன் மொபைலை எடுத்து நோண்ட அவளின் தேடுதலுக்கான பதில் கிடைத்தது...
தை ஜிந்தாவிடம் காட்ட அவனின் கண்கள் பழிவெறியில் மின்னியது..
பின் தான் செய்ய வேண்டியதை தன்ஆட்களிடம் சொன்னவன் சாவகாசமாக வீட்டிற்கு சென்றுவிட்டான்..
பெண்ணான தியாவிற்கு அக்னியின் நிலையை நினைத்து இதயம் கனத்தது...இருந்தும் தன்னால் ஒன்னும் ஆகப்போவதில்லை ,இந்த ராட்சர்கள்அதற்கு விடுப்போவதும் இல்லை எனதெரிந்து வீடு திரும்பினால் மனம் முழுக்க குற்ற உணர்வுடன்...

இதோ இன்னும் 5 நிமிடத்தில் முகூர்த்தம்வரப்போக ,தாலியையும்,அர்ச்சனை அரிசியையும் தாங்கிய தட்டு ஆசிர்வாதத்திற்க்காக பெரியவர்களிடம் எடுத்து செல்லப்பட்டது...

இரு குடும்பத்தில் உள்ளவர்கள்,ஷாம்னியின் குடும்பம் என அனைவரும்மேடையில் நின்று இருந்தனர்

அக்னி துசரின் பெற்றோருக்கு பாத பூஜைசெய்வது, துசர் ராமனுக்கும், சத்யாவிற்குபாத செய்து முடிக்க மாங்கல்யம்மேடைக்கு வரவும் சரியாக இருக்க...

துசர் தாலியை எடுத்து கட்டப்போககழுத்தில் வைக்கும் நேரம் ,மண்டபமே மிகுந்த சல சலப்புடன் இருக்க மேடையில் உள்ளவர்கள் என அனைவரும் என்னவென்று பார்க்க அங்கே அந்த கல்யாணத்தை ஒலி பரப்பிக்கொண்ட இருந்த தொலைக்காட்சி காட்டிய காணொளியில் பலரின் இதயம் துடிக்கிறதா நின்றுவிட்டதா என்றுதெரியவிலை..

ராமன் நெஞ்சில் கை வைத்து லேசான முனுக்கென்ற வலியுடன் இடிந்து போய் நிற்க..

சத்யாவிற்கோ மயக்கம் வரும்நிலை...ஆண்கள் பலர் அதை ஆர்வமாகபார்க்க ,சிலர் தலையை குனிந்து கொள்ள,பெண்கள் எல்லாம் வேதனை,இயலாமை,பெண் இனத்திற்கே இதுதான் சாபமாஎன்று பார்த்துக்கொண்டிருந்தனர்...

துசர் முதல் இரண்டு முடிச்சியை போட்டுவிட்டு கடைசி முடிச்சி போட தர்ஷிகாவை பார்க்க அவள் கண்களில் நீருடன் எங்கேயோ வெறிக்க அவள் பார்வைசென்ற பக்கம் பார்க்க ஆணவனின் சர்வமும் அடங்கியது..

இன்னும் என்னவளுக்கு என்னவைக்கத்தான் காத்து இருக்கிறது இந்தகடவுள்” என கலங்கி நிற்க..

ரொம்ப நேரம் கழுத்திலிருந்து துசர்கையை எடுக்காததால் நிமிர, நிமிர்ந்த அக்னியின் கண்களிலும் அந்த தொலைக்காட்சியும் அந்த காணொளியும் விழுந்தது..

அவளுக்கும் இது அதிர்ச்சிதான் ஆனா மற்றவர்களை போல அல்லாமல் கொஞ்சம் கம்மியாகதான் இருந்தது அவள் இதை பார்க்கவில்லை என்பதாக மட்டுமே அந்த அதிர்ச்சியின் ஹெக்டர்அளவீடு.....

அவள் எந்த சலனமும் இல்லாமல்கண்களில் மட்டும் ஒரு கேள்வியைதேக்கி துசரை நோக்க அந்த கேள்வியின்அர்த்தத்தை படித்தவன் “ அய்யோ போதும் டி“ என்று மனதில் கதறியவன் மூன்றாவது முடிச்சியையும் அவனே போட்டான்..

அக்னியின் விழிகளில் இருந்து ஒருசொட்டு கண்ணீர் துசரின் கைகளில் விழுந்து தெறித்தது...கண்டிப்பாக அது ஆனந்த கண்ணீர் மட்டுமே..

தாலி கட்டியவன் அக்னியை கையில் பிடித்து கொண்டு எழுந்து “ குட்டிடி டி....... “என கர்ஜிக்க..

மண்டபமே அவன் சத்ததில்நிசப்தம் ஆனது...

குட்டி தலையை குனிந்து கொண்டே வேகமாக மேடையை விட்டு இறங்கியவன் அந்த தொலைக்காட்சியின் தெரியும் காணொளிக்கான கனெக்ஷனை அறுத்து எறிந்தான்....
தர்ஷிகா தலையில் அடித்து கொண்டே “என்னாலதான்...,

என்னால....தான் எல்லாம் என்னாலதான் “ என கதறி அழ..

எல்லோருக்கும் இருக்கும் உச்ச அதிர்ச்சியில் அவள் சொல்வதை காதில் வாங்கும் மன நிலையில் இல்லை...

துசரின் வீட்டு ஆண்கள் கண்களை நிலம்தாழ்த்திய படி நிற்க,பெண்களோ கலவையான மன நிலையில் நின்றுஇருந்தனர்..

ஷாம்னிக்கும் இந்த விஷயம் புதிதுஎன்பதால் அழுது மடிந்தாள்..

ராமன் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழேவிழ....,
சத்யா மயங்கி சரிந்து மூர்ச்சை ஆனார்..

ராமனின் அருகில் சென்ற அக்னி” துசர்அப்பாவை ஹாஸ்பிடல் கொண்டபோகணும் “ என்க..

துசர் வேகமாக அருகில் சென்று ராமனை கைகளில் தூக்கி கொண்டு காரைநோக்கி செல்ல..

மயக்கம் தெளிந்த சத்யா தன்பெண்ணின் வாழ்க்கைய நினைத்துஅழுவதா இல்லை நெஞ்சை பிடித்துக்கொண்டு விழுந்த தன் கணவனை நினைத்து அழுவதா எனவெம்பி வெடித்தார்...

இரு குடும்பமும் துசரின் பின்னேஓடியது..குட்டி மட்டும் அந்த காணொளியார் மூலம் வந்தது என மண்டபத்தில் விசாரித்து கொண்டு இருந்தான்...

கோலாகலமாக ஆரம்பித்த கல்யாணம்சோகம், கோபம் பழிவாங்கல், வெறுப்பு,பாவம் ,என கலவையானஉணர்வுகளோடு முடிந்தது..


கல்யாணத்திற்கு வந்தவர்கள் யாருக்கும்எதையும் விளக்கி சொல்லவும் ,அவர்களைஉபசரிக்கவும் யாரும் இல்லை ,எப்படியோஇன்னும் ஒரு வாரத்திற்கு அழுகையாகவோ,ஆறுதலாகவோ,எப்படியோ பேச ஒரு விவாதம் கிடைத்தாகிவிட்டது ,,,அது தானே காலம்காலமாக அவர்கள் செய்யும் தலையாயவேலை..

ஆனால் ஜிந்தா எதிர்பார்ப்பின் படி எதுவும் நடக்கவில்லை , அக்னியை அந்த காணொளி எந்த விதத்திலும் பாதிக்கவில்லை அவளின் தந்தைக்கு இப்படி ஆனதற்கான கவலையை தவிர..

அக்னியையும் சாதரண பெண் என்று நினைத்துவிட்டான் ,ஆனால் அந்த அக்னி அக்னிதேவியின் மனித அவதராம் என்று தெரியவில்லை..
அந்த நெருப்பு,காதல்,அன்பு ,பாசம்,உண்மை என்ற நீரால் மட்டுமே அணையுமே அன்றி

மீதி அதை நோக்கி எது வீசப்பட்டாலும் அது நெருப்புக்கு இரையாகி சாம்பல் சாம்பலாக போகும் என்பதை அவன் அறியவில்லை...

அவன் தொடுத்த அம்பு 1000 மடங்கு வலிமையோடு அவனை நோக்கிவரப்போகிறது என்பதை ஜிந்தாஅறியவில்லை...

ஆம் அந்த காணொளியில் இருந்ததுஅக்னியின் துணி இல்லாத நிர்வாண கோலம்தான்.

எது நிர்வாணம் உடை இன்றிஇருப்பதா..இல்லை உணர்வின்றிஇருப்பதா...

எது நிர்வாணம்...உடல் உறுப்புகள்வெளியே தெரிவதா..

இல்லை..
இரண்டு வயது குழந்தையிடம் இச்சையைதீர்க்கும் வெறிநாய்களின் மறைத்துவைக்கப்பட்ட மனதா...
எது நிர்வாணம்....?
கோழைகளின் குணம்நிர்வாணம்...
தாய் நாட்டை காட்டிக்கொடுக்கும்கல்நெஞ்சர்களின் கயமை நிர்வாணம்...
பணத்திற்க்காக பாவத்தை செய்வோரின் பலம் நிர்வாணம்..
முதியோர் இல்ல பிள்ளைகளின் மூளை நிர்வாணம்..
அரை நொடி இச்சைக்காக ஆயிரம்அனாதை குழந்தைகளை அலையவிட்ட பெற்றோர்களின் பிறப்பு நிர்வாணம்...

இப்படி ஆயிரம் நிர்வாணங்கள் இருக்க...
என் உடல் உறுப்புகளுக்கும்..சதைப்பிண்டங்களுக்கு நீ வைக்கும் பெயர் நிர்வாணம் என்றால் எனக்கு அது தேவை இல்லை...


போதுமா....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 18


மூன்று வருடங்களுக்கு முன்..

அக்னி வயது 24 MA ஜார்னலிசம் முடித்துவிட்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில் 6 மாதகாலமாக ஜூனியர் ரிப்போர்ட்டராக வேலை செய்கிறாள்.

ஆனால் செய்வது எல்லாம் ஜுனியர் போல அல்லாமல் சீனியரை தாண்டித்தான் இருக்கும்.வந்த கொஞ்ச நாளிலையே MD யிடம் நல்ல பேரை வாங்கியவள் ...

அக்னியும் ஷாம்னியும் பள்ளியில் ஒரே வகுப்பு ஆனால் ஒரே கல்லூரி வேறு வேறு பிரிவு, ஷாம்னி படித்தது MBA,

நீயும் ஜார்னலிசம் படி ஷாமு “ என்ற அக்னியிடம் “அய்யோ அந்த டிடக்டிவ் வேலை எல்லாம் என்னால பார்க்க முடியாது, என் உயிர் எனக்கு சக்கரை கட்டி” என்று மறுத்துவிட்டாள்

ராமன்தான் “அக்னிதான் ஆபிஸ் பக்கம் வர முடியாதுன்னு சொல்லறா நீயாவது வந்து கொஞ்சம் அப்பாவுக்கு சப்போர்ட் பண்ண கூடாதா “ ன்னு ரொம்ப வற்புறுத்த கூப்பிட அக்னியின் அலுவலகத்தில் பேரோல் மற்றும் ராமனுக்கு
PA வாக வேலைக்கு சேர்ந்துவிட்டாள் ஷாம்னி...

அக்னி, ஷாமு இருவரும் ஒரு நாளைக்கு ஒரு நாளாவது கண்டிப்பாக பார்த்துக்கொள்வார்கள், பார்க்காமல் இருந்ததே இல்லை..அக்னி ஷாம்ணியின் குடும்பத்தில் ஒருத்தி, அவ்வளவு நெருக்கம்..

கல்லூரி இளநிலை முதல் வருடம் படிக்கும் போதுலிருந்து தான் சோனமுத்துவை அக்னி தன் பாதுகாப்பில் வளர்த்து வருகிறாள்..

அதன் பிறகு ஆரம்பித்ததுதான் அவளின் அனாதை ஆசிரமம் , அவள் அதற்கென்று தனியாக யாரையும் மொத்தமாக அழைத்து வரவில்லை..அவள் ஷாப்பிங் செல்லும் போதோ, இல்லை கல்லூரி செல்லும் போதோ...யாராவது ரோட்டில் தென்பட்டாலோ அவளிடம் உதவி கேட்டாலோ இங்கே அழைத்து வந்துவிடுவாள்..

அவர்களை என்றுமே அனாதை என்ற நினைப்பை அவள் வரவிட்டதில்லை...ஒரு நடுத்தர குடும்பத்தில் ஒருவனுக்கு என்னென்ன கிடைக்குமோ அது எல்லாம் அவர்களுக்கு செய்வாள்..

சோனுவின் செலவை தவிர மற்ற எல்லாவற்றிக்கும் அவள் கையை வைப்பது ராமனின் பர்ஸிலும்,சத்தியாவின் பர்ஸிலும்தான் ,

தன் ஒரே செல்ல மகள் வெட்டியாக செலவு செய்ய கேட்டாலும் அள்ளி அள்ளி கொடுப்பார்கள், அவள் செய்யும் நல்ல காரியத்திற்கா தர மாட்டேன் என்று சொல்ல போகிறார்கள் தரளாமாக கொடுத்தார்கள்...

அந்த குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் செய்யும் செலவுகளில் 50 சதவிகிதம் இலவசம் ,மீதி 50 சதவிகிதம் தனி தனியாக பிரிக்கப்ப்பட்டு அவர்களின் பெயரில் கடனாக ஏறும்..

அவர்கள் ஹோமிலையே செய்யும் சிறு தொழில் , அல்லாத அவர்களின் உடல் வலிமையை பொறுத்து வெளியில் செய்யும் பகுதி நேர வேலை மூலம் கிடைக்கும் வருமானம் 1 ரூபாயாக இருந்தாலும் அதை அவர்களின் கடன் தொகையிலிருந்து கழிக்கப்படும்..

இது அவர்களை உற்சாகபடுத்தவும், அவர்களை பக்குவ படுத்தவே தவிர பெரிதாக வேறு எதுவும் இருந்தது இல்லை...

சென்னையின் முக்கியமான காய்கறி மார்க்கெட் அது... தடுப்பு தடுப்பாக கட்டப்பட்டு மொத்தமாக வியாபாரம் நடக்கும் இடம்...காய்கறி, பழம், பூ,இறைச்சி,கோழிக்கறி என அனைத்தும் ஒரே இடத்தில் மொத்தமாக கிடைக்கும்...

அந்த இடத்திலிருந்து வலப்புறமாக 100 அடி உள்ளே போனால் ஒரு குகை போன்ற அமைப்பில் கீழே செல்லும்மாறு படி அமைக்க பட்டிருந்தது...

தனக்கு கிடைத்த இன்பர்மேஷன் படி அக்னி அங்கு யாருக்கும் தெரியாமல் மறைந்து அங்கே நடப்பதை தனது குட்டி டிஜி கேமில் வீடியோ எடுத்து கொண்டிருந்தாள்..

அந்த இடம் நன்கு விசாலமாக இருக்க அங்காங்கே அனைத்து காய்கறிகள், பழங்கள், இறைச்சி, கோழி என அனைத்தும் குவித்து வைக்கப்பட்டிருந்தன...

அங்கே காய்கறிகள் ஒரு விதமான கலர் தண்ணியில் அரைமணிநேரம் ஊற வைக்கப்பட்டு ட்ரேக்களில் விற்பனைக்கு அனுப்பப்பட்டது..

பார்த்த அக்னிக்கு புரிந்து போனது ஏதோ ரசாயன கலவை என்று , அங்கே பேசி இருப்பதை கேட்ட வரை அந்த காய்கள் எல்லாம் 15 ,20 நாட்களுக்கு முன்னே வந்த காய்கள் எனவும் அவை ரசாயனத்தில் ஊற வைக்கும் போது அப்பொழுது பறித்தது போல பிரஸாக இருக்கும் எனவும் தெரிந்து கொண்டாள்,

இன்னும் கொஞ்சம் உட்புறமாக பழ வகைகள் எல்லாவற்றிற்க்கும் ஒரு சிரன்ஜி மூலம் ஏதோ இன்ஜெக்ட் செய்து கொண்டிருந்தனர்...

ஏதோ காய்கறிகளும் பழங்களும் கெடாமல் இருப்பதற்கு இதுமாதிரி செய்வது இயல்பு , ஆனால் இங்கே இவர்கள் செய்வது அளவிற்கு அதிகமாக இருந்தது..

சாதரணமாக 2 நாட்கள் அந்த காய்கறி பழங்கள் அழுகாமல் இருக்கும் ஆனால் இப்படி செய்வதன் மூலம் அவை 1 மாதத்திற்கு கூட எதுவும் ஆகுவது இல்லை...

இன்னும் வலப்புறமாக பார்த்தால் அங்கே நான்கு கால் உள்ள கோழிகளின் கால்களில் மருந்து இன்ஜெக்ட் செய்ய கோழிகளின் கால்கள் நன்கு சதைப்பற்றுடன் உடனே ஆனது...

அங்கே புதிதாக வேலைக்கு சேர்ந்த ஒருவன் “ அண்ணா, என்ன அண்ணன், கோழிக்கு நாலு காலு என்க”

அதுக்கு மற்றொருவன் “ ஆமா சாப்பிட்ட கடைக்கு போறவன் எல்லாம்
, லெக் பீஸ், லெக் பீஸ்ன்னு கேட்டா, அதான் வெள்ளைக்காரன் மரபணு மாற்றம் செய்யது கோழிக்கு நாலு காலு வர மாதிரி செஞ்சிருக்கான் “ என்றான்...

( அட கொன்னியான்...கோழி காலுக்கு பின்னாடி இவளோ விஷயம் இருக்கா, இனி கோழி கால் கேட்ப....)

மேலும் அவன்” இது ரொம்ப ஈஸியா கிடைக்கிறது, நம்ம இந்தியா மார்க்கெட் லதான்,மத்த நாட்டுலல ரொம்ப கஷ்டம் உள்ளே கொண்டு போறது ,அதனால் பணம் அதிகம் கொடுத்து இங்க அனுப்புறாங்க.

நம்ம அய்யா, அதனால் இதெல்லாம் சாப்பிட மாட்டார், அவரு தோட்டத்துல வளரத மட்டும்தான் சாப்பிடுவாறு” என்று இங்கே வேலை செய்தால் கண்டிப்பாக நம்பிக்கைக்கு உரியவனாகத்தான் அய்யா எடுப்பார்,அதனால் வெளியில் எங்கும் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் கூறினான்...

புற்றுப்போல் எங்கு திரும்பினாலும் ஹைபிரிட் செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகள், எல்லா சீசனிலும் எல்லாமும் உங்களுக்கு ஈஸியாக கிடைக்கும் இந்த கேடுகெட்ட நாட்டில்,நாமும் எப்படி என்றே தெரியாமல் அவற்றை நம் வாழ்வின் நடைமுறை ஆக்கிக்கொண்டோம்...

இவைகள் எல்லாம் ஆண்களின் ஆண்மை தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக மலுங்கடிக்கும்..

இன்னும் கொஞ்ச நாட்களில் அடுத்த தலைமுறையே இல்லாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது..

அப்படியே செயற்கை முறையில் கருதரித்தாலும் ,முண்டி அடித்துக்கொண்டு போய் உட்காரும் உயிர் அணுவிற்கும், சொகுசாக டாக்டர்களால் வளர்த்து உட்கார வைக்கும் உயிர் அணுவிற்கும் உள்ள வித்தியாசம் நமக்கே தெரிந்தது..

இவை எல்லாம் போர் இல்லாமல், பொருட் சேதம் இல்லாமல், பண செலவு இல்லாமல், இந்தியாவின் மீது தொடுக்கப்படும் போர் என்று சொன்னால் நம்புவதற்கு கடினமாகவும், கொஞ்சம் சிரிப்பாகவும் தான் இருக்கும், ஆனால் அதுதான் உண்மை..

அதை எல்லாம் அக்னியின் கேமரா ஒன்று விடாமல் பதிவு செய்து கொண்டிருந்தது..,இன்னும் கொஞ்சம் உட்புறமாக பார்க்கும் போது நிறைய ஆடுகள் தோல் உரித்து தொங்கவிடப்பட்டிருந்தது...

பாதி ஆடுகள் மீதியை பார்த்தால் ஆடுகள் போல தெரியவில்லை.. வேறு.. அவைகள் நாய்கள்.அவைகள் எல்லாம் நன்கு அறுத்து பிரிசர் பாக்ஷில் வைத்து ஆட்டு கரியுடன் கலந்து சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்கு டேலிவரிக்காக தயாராக இருந்தது..
( அட ஆத்தி...இவனுகள நம்பி ஒன்னும் ஹோட்டெல்ல சாப்பிட முடியாது போலவே...அதான் கொஞ்சம் நாளா ஒரு இடத்துல கூட நாய் நிற்க்கிறது இல்லையா...)
அதை எல்லாவற்றையும் ஒண்ணு விடாமல் படம் பிடித்தவள், எப்படி வந்தாளோ , அப்படியே வெளியே சென்றாள்..கோபம் என்றால் கோபம் அக்னிக்கு தாங்க முடியாத கோபம்..



அதன் உண்மை தன்மை கொஞ்சமும் மாறாமல் தான் தொகுத்து வழங்கும் “ உண்மையின் மறுபக்கம்” என்ற நிகழ்ச்சியில் அதற்கு காரணமானவர்கள் அதன் உரிமையாளற்கள் என அனைவரையும் கிழி கிழி என்று கிழித்ததோடு மட்டும் இல்லாமல் அதன் உரிமையாளரான சிவக்ருஷ்ணனின் கடை உரிமையை ரத்து செய்யபட்டதே மட்டும் இல்லாமல், 25 லட்சம் அபராதமும் கட்ட வைத்துவிட்டாள்.

நாய் இறைச்சிகளை விநியோகம் செய்த ஹோட்டல்களும் மறு பரிசீலனை இன்றி இழுத்து மூடி சீழ் வைக்கப்பட்டது..

இன்னும் நியாயம் சாகாத சில நல்ல மனிதர்களால் நியாயம் காப்பற்றப்பட்டது...

(இதெல்லாம் இப்ப கனவுல கூட நடக்குறது இல்ல...ரைட்டர்...)

சிவ கிருஷ்ணன் அவளை முறைத்தபடி “ உன் சாவு என் கையில தாண்டி “ என கர்ஜிக்க

அவளை பார்த்த கேவலமாக சிரித்த அக்னி “ போடா
.... பொ..” என்று சொல்ல வந்தவள் இருக்கும் இடம் கருதி வாயை மூடியவள் “ பொட்டட்டோ... “ என்று மாத்தி சொல்லிவிட்டு அவன் கொதித்ததற்கு மாறாக அக்னி கூலாக சென்றாள்..

மறுநாள் காலை அக்னியின் வீட்டில் ராமனின் அம்மா அஞ்சுகம் அக்னியிடம் திட்டிக்கொண்டிருந்தார்....

ஏய் ஏன் டி உனக்கு ஊரு வம்பெல்லாம்,
உன் அப்பனும் ,ஆத்தாலும் கடந்து கஷ்டப்படுறாங்க, அவங்களுக்கு உத்தாசையா இல்லாம நீ என்னனா இந்த கிழவனோட சேர்ந்து ஆம்பிள பிள்ளை கத்துக்க வேண்டிய கம்பு சண்டை, கத்தி சண்டை ,குத்து சண்டை,கரத்தேன்னு கத்துகிட்டு திரிதண்டி காளை மாதிரி சுத்திக்கிட்டு இருக்க,

உன் அப்பனையும் உன் ஐயனையும் பத்தி தெரிஞ்ச வாசித்தான் நீ பண்ற உரண்டைக்கெல்லாம் சும்மா இருக்கானுவ எல்லாரும்” என அவரின் புருஷன் ஜெகநாதனையும் சேர்த்து திட்டினார்...

ஏய் யாரை பார்த்து கிழவன் சொல்ற, இப்ப வந்தாலும் பத்து பேரை வேரோட சாய்க்குற தாட்டியம் எனக்கு இருக்கு டி, 2 கிளாஸ் படிச்ச உனக்கு என்ன டி தெரியும்,

பொண்ணுங்க தைரியமா இருக்குறதும், வீரமா இருக்குறதும் இந்த காலத்துல எவ்வளோ முக்கியம்னு, உன் புள்ளையும், மருமகளும் தொழிலையே கட்டிக்கிட்டு அழுகுறாங்கன்னா, என் பேத்தி அதெல்லாம் பண்ணா மாட்டாள்” என்றார்..

அக்னி எல்லோரையும் விட ஜெகநாதனுக்கு தான் அதிக செல்லம்...அவரை எதிர்த்து ராமன்,சத்யா இருவரும் எதும் பேச மாட்டார்கள்,

அஞ்சுகம் மட்டுமே இப்படி எதையாவது பேசி வாங்கி கட்டிக்கொள்வார்...

ஆமா சாமி, நான் 2 கிளாஸ்த்தான்..இந்த 2 கிளாஷ்தான், உங்களோட 50 வருஷமா குப்பை கொட்டிக்கிட்டு இருக்கு” என்றார் நொடித்த படி...
இவ்வளவு பேசியும் எள்ளளவும் காதில் வாங்காமல் மொபைலில் எதையோ நொண்டி கொண்டிருந்த அக்னியை நோக்கி “ ஏன் டி இப்படியே ஆம்பிள பிள்ளை மாதிரி இருந்தா யாருக்குதான் உன்னை கட்டிக்க பிடிக்கும்” என சத்தம் போட

அய்யோ ஆச்சி எனக்கும் யாரையும் பிடிக்க வேணாம், யாருக்கும் என்னையும் பிடிக்க வேண்டாம்,இந்த அக்னி யாருக்கும் அணைஞ்சி போக மாட்டாள்,

அப்பறம் எனக்கு யாரோட அடையாளமும் ,நிழலும் தேவை இல்லை ஆச்சி ,எல்லாத்தையும் தனியா எதிர்க்குற துணிவு, தைரியம் எனக்கு இருக்கு” என்றாள்..

அஞ்சுகம்..” பாக்குறேன் டி பாக்குறேன், இந்த மாட்டையும் அடக்கி மூக்கானங்கயிறு போட ஒருத்தன் வருவான் அப்ப இருக்கு உனக்கு,அப்ப வந்து நீ சொன்னதுதான் சரி ஆச்சி , பேச்சின்னுட்டு வா உனக்கு இருக்கு” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்..

ஆனால் அடக்கியெல்லாம் மூக்கணங்கயிரு போடும் அவசியம் இல்லாமல் , இவளே போய் அடங்கி அவனுக்குள் சுரண்டு போக போகிறாள் என்று இப்பொழுது யாரேனும் அக்னியிடம் சொன்னாலும் சொல்பவர்களை பார்த்து கேவலமாக சிரிப்பாள்...

மறுநாள் இன்னொரு சீகிரெட் அசைன்மெண்ட் இருப்பதால் அதற்கான பிளானிங் செய்ய தன் அறைக்குள் சென்று மறைந்துவிட்டாள்..

போதுமா...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 19:


அக்னி இந்த தொலைக்காட்சியில் வந்து சேர்ந்த பிறகுதான் அந்த சேனலின் TRP ஏறியது என்பதை அங்கு ஹவுஸ் கீப்பிங் பார்க்கும் அக்கா முதல் அனைவரும் அறிந்ததே...

அது இந்த சிவ கிருஷ்னின் கேஸ் அதை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றது அதற்கான பார்ட்டி இன்று அவளின் அலுவலகத்தில் நடந்தது..

அதை முடித்துக்கொண்டு வர இரவு 11 மணிக்கு மேல் ஆக பஸ்க்காக நின்று கொண்டிருந்தாள்...

இதமான காற்று, காதலுக்கும் காமத்துக்கும் உள்ள மெல்லிய திரையை அவர்களே அறியாமல் கலைக்கும் காரிருள்.. அந்த இருள் சரி ,தவறு என்ற கோட்பாடு எதுவும் இன்றி எல்லோர் செய்வதையும் தன் இருட்டுக்குள் மறைத்துக்கொள்ளும் இளகிய மனம் கொண்ட இனியகுணம் கொண்டது...

கண்ணில் பார்க்கும் அனைத்தையும் அவள் கேமராவின் கண்களும் பார்த்துவிடும் என்பதால் இயல்பாக பிரச்சனைகளை அருகிலிருந்து தெரிந்து கொள்ள அவள் எப்பொழுதும் பயணம் செய்வது பஸ்சில்தான்.

( ஆபிஷ்க்கு பஸுல போவ...அதானே..வாயை மூடிக்கிட்டி கதையை சொல்லு..☺😊☺😊)

மணி 11 கடந்து இருப்பதால் பாலியல் தொழிலாளிகள் தங்கள் இரவு நேர பணியை செய்ய அங்கு உள்ள பஸ்ஸ்டாண்டில் நின்று இருந்தனர்..

அங்கு ரொம்ப நேரமாக ஒரு பெண்ணிடம் இரு ஆண்கள் வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுப்பதும் அந்த பெண் மறுப்பதுமாக இருக்க..

கொஞ்சம் நேர பொறுத்த பார்த்த நம் பெண் புலி, அவனின் அருகில் சென்று “அவங்கதான் வரலைன்னு சொல்றாங்கல நீங்க வேற யாரையாவது கூப்பிடுங்க “ என கோபத்தை அடக்கிக்கொண்டு சொல்ல..

உடனே அதில் ஒருவன் “ நீ போய் உன் வேலையை பாருமா, உன்னையா கூப்பிடுறோம்”என்று சொல்ல..

( கூப்பிட்டுத்தான் பாரேன்...உன் வாயில உள்ள பல்லெல்லாம் உடைச்சி , உன் மூஞ்ச ஒரு பக்கம் திருப்பி வச்சிடுவா...)

அதற்குள் அந்த பெண் “ எங்களுக்கும் எந்த வேலையும் செய்ய வக்கு இல்லாமல்தான் இந்த வேலையை செய்றோம்,ஆனால் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் மிருகம் மாதிரி நடந்துகிறாங்க மேடம் இவனுங்க,

ஏற்கெனவே ஒரு முறை இவனுங்க 2 பேரும் கூடவும்தான் போனேன் ,அவங்க பண்ணி வச்சு இருக்குறத பாருங்க என்று அந்த பெண் அவளின் அந்தரங்காமான இடத்தை காண்பிக்க அங்கு 3 தையில் போடும் அளவிற்கு காயம் இருந்தது

அதை காணும் போதே தன் கை முட்டியை மடக்கி தன் கோபத்தை கன்ட்ரோல் செய்தாள் அக்னி
, அதற்கு மற்றொருவன் “ அப்பறம் உங்களை அழைச்சிட்டு போய் பூ போட்டு ஆராதிப்பாங்களா...அதுக்கு தான வாங்குற காசு ரொக்கமா, பெரிய பத்தினி மாதிரி பேசுற “ என்றவன்

அக்னியை நோக்கி

ந்தாம்மா ஏதோ நல்ல குடும்பத்து பொண்ணு மாதிரி இருக்க,ஒழுங்கா வீடு போய் சேறு” என்பதற்குள் இரண்டு பேரின் மூக்கையும் உடைத்து ரத்தம் வர வைத்தவள்

ராஸ்கல் பிச்சிடுவேன்...நீ பேசுறதெல்லாம் அய்யோ இவரு ரொம்ப நல்லவரு.. நம்மலிடம் ஒழுங்காத்தான் பேசுறாரு, அந்த மாதிரி பொண்ணுங்கட மட்டும் தான் அப்படி நடந்துபார் போல, அப்படின்னு நினைக்கனுமா..

பொண்டாட்டியை தவிர வேற பொண்னு.. அவள் விபச்சாரிய இருந்தாலும் அவளிடம் போறவன் கேவலமான ஆம்பிளைதான், நீ காசு கொடுத்த அப்படிங்குறதானால அவங்களை உயிர் இல்லாத மிசினா நினைப்பீங்களா”

என்றவளை அடிக்க வந்த இருவரையும் அசால்ட்டாக தடுத்த அக்னி “
I’m sub inspecter of police ......this area” என்க அவளின் இந்த வார்த்தை போதுமானதாக இருந்தது அவர்களின் வாயையும் , கையையும் அடக்க...

இன்னும் 5 நிமிஷத்துல இந்த இடத்தை விட்டு நீங்க 2 பேரும் போகல, பெண்டிங் இருக்குற எல்லா கொலை கேஸும் உங்க மேல போட்டு ஆயுசுக்கும் களி திண்ண வச்சிடுவேன் “என்க.. அடித்து பிடித்து கொண்டு இருவரும் ஓடி விட்டனர்...

பின் அந்த பெண் பயந்துகொண்டே “ மேடம் என்னை ஜெயில போட்டுடாதீங்க, ஏதோ வயித்து பொழப்புக்கு “என கெஞ்ச..
அக்னி “நான் போலிஸ் இல்லை..அப்பறம் நீங்க இந்த தொழிலை செய்றத, அசிங்கமாவோ , அருவருப்பாவோ சொல்லல, ஆனால் இந்த தொழில் உங்க மனசு, உடம்பு 2 க்குமே நல்லது இல்லை,

உங்களுக்கு விருப்பம்மிருந்த இந்த அட்ட்ரஸுக்கு வாங்க உங்களுக்கு வேலை இருக்கும்” என்றவள் தன் விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு வந்த பஸ்சில் ஏறி வீடு வந்துவிட்டாள்..

நாளை அவளின் நிகழ்ச்சியில் முக்கிய வாதமாக இதன் நியாயங்களையும் அநியாயங்களையும் பேசுவாள் என்பதில் ஐயம் இல்லை..

அந்த பெண்ணிற்கு சந்தோஷம் இனி ஏன் அந்த பெண் அந்த வேலையை பார்க்க போகிறாள்...

ஊரார்களின் அவமானத்திற்கு உட்பட்டு இந்த வேலையை பார்க்க இந்த மாதிரி பெண்களுக்கு எல்லாம் என்ன தலையெழுத்தா..இல்லை சமுதாய திணிப்பு ..

ஒரு பெண், அதுவும் பார்க்க கொஞ்சம் அழகாக இருந்து வேலை கேட்டுவந்துவிட்டால் போதும் அவளின் முதல் தகுதி தேர்வே அந்த முதலாளியின் படுக்கையரையில் என்றாகிவிட்டது இந்த காலத்தில்..

இப்படி இவர்காளக எல்லாவற்றையும் உருவாக்கிவிட்டு மற்றவர்களை குறை சொல்வதுதான் இவர்களின் தலையாய வேலை..

பத்து நாள் ஆக வேண்டிய வேலையை ஒரே நாளில் முடிக்க சொல்லி லஞ்சம் கொடுத்துவிட்டு ,லஞ்சம் வாங்குகிறார்கள் என்று குறை சொல்வது போல..

எந்த ஒரு தனிமனிதனின் மாற்றத்திற்கும் காரணம் அந்த ஒரு தனிமனிதனாக கண்டிப்பாக இருக்க மாட்டான்..

இதை செய் பணம் தருகிறேன்,அதை செய் கார் வாங்கி தருகிறேன், அவன் இதையெல்லாம் செய்ததால்தான் இன்று நன்றாக இருக்கிறான் என்ற தூண்டுதலே..

******

குட்டி தலைய குனிந்து கொண்டு நிற்க ,தர்ஷிகா தெனவட்டாக துசரை பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள்..

வீட்டில் எல்லாருக்கும் ஏன் துசர்க்கும் கூட பயப்படாத ஒரே ஆள் நம்ம தர்ஷிதான்...

“,குட்டி,தர்ஷி எதுக்கு பிரின்சிப்பல் மண்டையை ஓடைசீங்க “என துசர் கேட்க

குட்டி எதும் சொல்லாமல் குனிந்து கொண்டே நிற்க
..தர்ஷி “ அவன் கிளாஸ் எடுக்கும் போது “என ஆரம்பித்தவள் துசரின் முறைப்பில்
அவர் கிளாஸ் எடுக்கும் போது நான் கவனிக்காம தூங்கிட்டு இருந்தேன் ,அதனால டேஸ்டரால தலையில அடிச்சிட்டாரு , எனக்கு ஒரே அசிங்கமா போச்சி,அதான் சாயங்காலமா குட்டியை அழைச்சிட்டு போய் அவரு மண்டைய ஓடைச்சிட்டேன் என்க.. “

நீ கிளாஸ் நடக்கும் போது தூங்குனது தப்புதானா” என துசர் கூற

அதுக்காக அவரு அடிச்சது சரி கிடையாது, “ என அவள் வீம்பாக சொல்ல..

கிளாஸுல தூங்கி அதற்கான ஆரம்ப புள்ளி வச்சது நீதான்.அப்படி அது தப்புனா நீ என்கிட்ட இல்லை, அப்பா ,சித்தப்பாட்ட சொல்லி இருக்கனும்,அதைவிட்டுட்டு இப்படி பண்ணுவியா பாரு உன்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க ,

இதோ இவன் அந்த காலேஜே இல்லாததால இவன் மேல கேஷ் கொடுத்துட்டாங்க..

நானும் மாமவும் போய் கெஞ்சி கேஸ வாபஸ் வாங்கி இருக்கோம், இனி இப்படி பண்ண பனிஷ்மெண்ட் இதை விட பயங்கரமா இருக்கும்” என்றான்..

குட்டி “சரி அண்ணா” என்றான் உண்மையாக ,ஆனால் தர்ஷி “ம்ம்”என்றாள்.. அவளின் உம்மே சொல்லாமல் சொன்னது அவள் அதை கேட்கமாட்டாள் என்று....

அவர்களின் தண்டனை அந்த பெரிய வீடு ,மற்றும் அதை ஒட்டிய தோட்டத்தை இன்றுக்குள் சுத்தம் செய்ய வேண்டும் என்பதே..

இப்படியாக தர்ஷியும் அக்னியை போல தைரியமாக இருந்தாலும் அதில் எதுவும் நியாயமாக இருக்காது , மாறாக அதில் ஒரு திமிரும் ,கொஞ்சம் அசட்டையும்தான் இருக்கும்...அதுவே அவளுக்கு பிரச்னையாகி போகும் என்பதை அவள் அந்நேரம் அறியவில்லை...

அய்யா அந்த வீரமங்கை வேலு நாச்சியார் கதை சொல்லுங்க”என்று ஜெகநாதனின் மடியில் படுத்துக்கொண்டு கேட்க...

இன்னும் எத்தனை தட கண்ணு அந்த கதையையே கேட்ப “ என்றவர் காதையை கூறினார்..

ஒவ்வொரு முறையும் வேலு நாச்சியார் தன் 10 மாத குழந்தையை பின்னே கட்டிக்கொண்டு போரில் எதிரிகளை எதிர்த்து சண்டைபோட்டார் என்று சொல்லும் போதெல்லாம் அக்னியின் உடம்பு ஒரு சிலிர்த்து அடங்கும்...

எத்தனை முறை கேட்டாலும் அவளுக்கு அழுக்கவே அழுக்காது..
வேலுநாச்சியார், சென்னம்மா,ஜல்காரி பாய், ராணி லட்சுமி பாய்,ஜானகி ஆதி நாகப்பன்,நளினி என வீர மிக்க பெண்களின் கதைகளே கேட்டே வளர்ந்தவள் என்பதால் என்னவோ..அவர்களை போலவே இவளும் நவீன போராளியாக இருந்தாள்..

பெண்களை அடுப்படியில் பூட்டி வைத்த அந்த காலத்திலையே அவர்களின் சாதனைகளில் அலப்பரியது என்பதில் பெண்ணாக பிறந்த அக்னிக்கு அவ்வளவு பெருமை..

மறுநாள் இரவு 8 மணி இருக்கும் ஷாம்னியை பார்த்துவிட்டு பஸ்டாண்டில் நிற்க எதிர் புறமாக போலிஷ் இருவர் நின்று கொண்டு பைக்கில் வரும் அனைவரையும் செக் செய்து கொண்டிருந்தார்கள்.
.
அக்னி தன் போனை எடுத்து பார்த்தவள்..”ஓ மாச கடைசியா பிச்சை எடுத்துக்கிட்டு இருகானுங்களா இருங்கடா உங்களுக்கு இருக்கு ”என்று தனக்குள்ளே பேசிக்கொண்டவள் தன் கேண்டியை எடுத்து அங்கே நடப்பதை சூட் செய்தாள்..

அவர்கள் வரும் எல்லோரிடமும் அது இல்லை இது இல்லை என்று பணம் புடுங்கி கொண்டிருக்க..

அப்பொழுது ஒரு கணவன் மனைவி அவர்களிடம் வர அவர்களிடம் எல்லா டாக்குமெண்ட்ஸும் சரியாக இருக்க ,

அதில் ஓரு போலிஸ்காரர் அந்த ஆணின் ஹெல்மட்டை பிடிங்கி வைத்துக்கொண்டு “ ஹெல்மெட் போடாம வந்து இருக்க 500 பணம் கட்டு” என்றான் நக்கலாக..

அவன் எல்லாம் என்னிடம் சரியாக இருக்கு முடியவே முடியாது என்று மறுத்து தன் ஹெல்மட்டை வாங்க போக அந்த போக,போலீஸ் அவனை அந்த ஹெல்மட்டாலையே அடிக்க ஆரம்பித்துவிட்டான்..

அவனால் திருப்பி அடிக்க முடியும் என்றாலும் நம் சட்டத்தின் கோட்பாடுகள் சரியாக இயலாதவர்களிடம் தானே பாயும், போலீஷை அடித்தால் பெரிய பிரச்சனை ஆகும் என்று அவன் அமைதியாக அடிவாங்க அவள் மனைவி தடுத்து கொண்டிருந்தாள்..

அதை பார்த்து கொண்டிருந்த அக்னி தன் பேக்கில் உள்ள ஸ்டோலை எடுத்து கண் மட்டும் தெரியுமாறு முகத்தை கட்டினாள்...
பின்னே அவளும் போலீஷை நேரடியாக அடிக்க முடியாதே, அது அவளுக்கு எதும் என்றாள் சமாளித்து கொள்வாள்
ஆனால் வேலை பார்க்கும் தொலைகாட்சி நிறுவனத்திற்கும் தேவை இல்லாத பிரச்சனை அல்லவா
..

முகத்தை கட்டிக்கொண்டு வேகமாக அவர்கள் அருகில் சென்றவள் அந்த போலீஸ் கையில் வைத்து இருந்த ஹெல்மட்டை பிடிங்கி இருவர் மண்டையிலும் மொத்தியவள் ஹெல்மட்டோடு ஓட அவளை துரத்திக்கொண்டு அந்த இரு போலீஸும் ஓட..

அந்த தம்பதியினர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தனர்..

அன்று கொஞ்சம் அதிகம் வேலை இருப்பதால் முடித்துக்கொண்டு துசர் அந்த வழியாக வர அங்கே 30 அடி தூரம் உள்ள நகராட்சியின் அந்த பெரிய குப்பை தொட்டியின் பின்னே யாரோ மறைந்து இருப்பது போல தோன்றியது அவனுக்கு.
அந்த குறை வெளிச்சத்தில் அக்னி பேண்ட் ,சட்டை போட்டு இருப்பதால் இருட்டில் அவளின் நிழல் உருவம் ஆண் போலவே இருந்தது..

துசர் சற்று சுற்றி பார்க்க அங்கே இரண்டு போலிஸ் யாரையோ தோடுவது தெரிய...

அங்கு ஒளிந்து இருப்பவனைத்தான் தேடுகிறார்கள் என நினைத்தவன் ,

அங்கேயே பைக்கை நிறுத்திவ்விட்டு பிடித்து கொடுக்கலாம் என சத்தம் செய்யாமல் அக்னியின் பின்னே வந்தான்...

( அவளை மாட்ட வைக்குறேன்னு நீதாண்டா மாட்ட போற மட்டி....🤣🤣🤣)

பின்னே சத்தம் செய்யாமல் வந்து அவள் இடுப்போடு பிடிக்க ,பிடிக்கும்பபோதே தெரிந்துவிட்டது அது பெண் என்று ..

அக்னிக்கோ யாரோ தன்னை பின்னே இருந்து கட்டிபிடிக்க..உடல் தூக்கி போட.. கோபம், பயம் என எதுவும் வராமல் அடிவயிற்றில் இருந்து ஏதோ சுரீர் என சாக் அடித்ததைபோன்ற ஒரு சுகம் உடல் முழுவதும் பரவ விக்கித்து போனாள்...

(அது... துசர் EB ல வேலை பாக்குறான்ல அதான் சாக் அடிச்சிருக்கு..அப்படி உத்து பார்க்காதீங்க ரைட்டர் அக்கா...வெட்கமா இருக்கு..(


போதுமா.....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 20 :


துசர் இடுப்பை பிடித்த நொடி தூக்கி வாரி அக்னி திரும்ப அவள் உடல் உதறியதில் அவன் இடுப்பிலிருந்து கையை எடுக்க அதில் பேலன்ஸ் தவறியவள் வலபக்கமாக சரிய அவளின் இடுப்பில் ஒரு கையும், மற்றொரு கையால் அவளின் இடது கையும் பிடித்தான்...

அக்னிக்கு இமைகள் பட படவென்று அடித்துக்கொண்டது..துசர் பிடித்திருக்கும் அவளின் கை வேர்த்து நடுங்க ஆரம்பித்துவிட்டது..

துசர் அவளின் துடிக்கும் விழிகளுக்குள் மூழ்கிவிட்டான்..அனைத்தும் மறந்த தவ நிலைக்கு சென்றான்..

மேல் புருவத்தை நொடிக்கு நூறுமுறை தொட்டு தொட்டு செல்லும் அவளின் இமை முடிகளையே ஏதோ அதிசயத்தை காண்பது போல பார்த்தான்..

இவ்வளவு நீளமாக இமை முடிகள் இருக்குமா என்று...

இருவரும் சிலை என சமைந்து போயினர்..அக்னிக்கு வாயை திறந்து திட்டு அவன் கைகளிலிருந்து விலகு என்று மூளை நொடிக்கு ஆயிரம் தற்காப்பு கட்டளைகளை இட்டாலும் பாழாய் போன ஏதோ ஒன்று அப்படியே இருக்க சொன்னது..

அவளின் விழிகளில் துசர் மூழ்க மூழ்க அவளின் இடுப்பில் பதிந்து இருக்கும் அவனின் கையின் அழுத்தம் கூடிக்கொண்டே போக..

இருவரின் முகத்திற்கு இருக்கும் இடைவெளி குறைந்து கொண்டே போனது...அக்னியின் இடுப்பில் ஏற்படும் குறுகுறுப்பு வேறு அவளை உடல் தளர்ந்து தொய்ய செய்தது..

முதல் தடவை பார்க்கும் பெண்ணை இப்படி செய்வது தவறு ,தன் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்ற எந்த எண்ணமும் துசருக்கு தோன்றவில்லை..

ஏனென்றால் மூளை என்று ஒன்று வேலை செய்தால் தானே அது எல்லாம் தோன்றும்..அது கோமா ஷ்டேஜிற்கு போகி வெகுநேரம் ஆனது..

அவனின் மனம் வேறு அவள் உன்னவள் ,வேறு எந்த பெண்ணிடமும் இதோ போன்ற உணர்வு உனக்கு வருமா, நீ என்ன பெண்ணை பார்க்காதவனா.. இல்லை இச்சை உணர்வுகளுக்கு இடம் கொடுப்பவனா...

இல்லை இது போல் யாரிடமாவது தோன்றியது உண்டா, பார் அவள் விழிகளை பார் அது பேசும் மொழியை போல் யாராவது பேசியது உண்டா...இல்லை அப்படி பேசினாலும் உனக்கு புரிந்தது உண்டா”... என்று முழு மூச்சாக அவனின் உள் உணர்ச்சிக்கு உயிர் கொடுத்தது...

அவளின் இமைகள் ஒவ்வொரு முறை அடிக்கும் போதே துசர்க்கு “ எடுத்துக்கொள்” , “அணைத்துக்கொள்” என பேசுவது போலவே இருந்தது...

அவளின் இமைகள் மட்டுமே துடித்துக்கொண்டு இருந்தது.. மாறாக துசரின் இமைகள் இமைக்க மறந்து அவளை இல்லை அவளின் விழிகளை மட்டும் பார்த்து அதில் தன்னை தொலைத்து மீட்டுக்கொண்டு இருந்து...

ஏய் மட்டி மூஞ்சில உள்ள ஸ்டோலை கழட்டு...இல்லை இன்னும் இரண்டரை வருஷம் அப்பறம்தான் பார்க்கலாம்” என விதி தொண்டை தண்ணீர் வற்ற மிரட்டியது கூட அவன் காதில் விழ வில்லை...

அவனின் பார்வையில் பாவையவள் உடலில் உள்ள ரத்தம் எல்லாம் அவளின் கண்களுக்கு வர ரத்தம் என ஆனது அவள் விழி...

அவனின் கை அழுதத்தில் அக்னியின் உடல் முழுவதும் தொய்ந்து துசரின் கரங்களின் பாரத்தை அதிகரித்தது...

அவளின் கையை பிடித்துக்கொண்டு இருந்த கையை விடுத்து அவளின் இடுப்பை இரு கைகளால் பிடித்தவன் அக்னியை நேராக நிறுத்தினான்..

( ஸ்ஸ்ஸ்....அப்ப ஒரு வழியா நிமித்தீட்டிங்க..எவளோ நேரம் கற்பனையில சாஞ்ச மாறியே வச்சி இருக்குறது....எங்க கையும் கழுத்தும் வலிக்குது...)

அவளின் இடுப்பை இறுக்கி பிடித்தவன் அவளின் விழி மொழியை ஏற்று அவளின் துடிக்கும் இரு இமைகளில் முத்தம் இட்டான் ...

முதல் முத்தம் அந்த கர்ஜிக்கும் பெண் சிங்கத்தை பேச்சிலக்க செய்து கண்களை மூடி அவனின் சட்டை காலரை இறுக்கி பிடிக்க செய்ய அவனின் மார்பில் பூனை குட்டியாய் சுரள செய்தது...அவனும் அவளை இறுக்கமாக இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.....

இருவர் மனதிலும் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை.. அது ஏன் என்று அவர்களுக்கே தெரியவில்லை.. முதல் முறை பார்க்கும் ஆணிடம் இப்படி சுருண்டு கிடக்கிறாளே என்று துசருக்கோ, ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொள்கிறானே என்று அக்னிக்கு எதுவும் தோன்றவில்லை...

அந்த மரத்தின் உச்சியில் அமர்ந்து இருந்த குயூபேட் “காதல் அம்பை குத்துனது யாரு ஐயாவாச்சே எப்படி தோணும்” என பெருமை பட்டுக்கொண்டு அடுத்த ஜோடியை தேடி பறந்தது குயூபேட்(cubid..)

(து...மானகெட்ட பயலே நீதான் கொல்ல பேத்த குழியில தள்ளுனதா....)

அவர்களின் அணைப்பு 2 நிமிடத்தில் அங்கே பேசிக்கொண்டிருந்த போலீஸ்காரர்களின் சத்தத்தில் கலைய..

அவளின் கையை பிடித்து அங்கே ஒழிய வைத்தவன் “ பயப்படாம இரு , நான் அவங்களை போய் அனுப்பிட்டு வந்துறேன் “ என்றவன் இன்னும் துடிக்கும் அவளின் இமையின் மேல் கட்டுப்படுத்த முடியாமல் முத்தம் இட்டவன் அவளைவிட்டு அகன்றான்..

அவளுக்கு எதுவும் புரியவில்லை ராட்சச உயரத்தில் முகம் முழுக்க தாடியுடன் தன்னை மொத்தமாக கொள்ளை கொண்ட அவனின் முகமே நிறைத்து இருந்தது...

துசர் அவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டு இருக்க அந்த போலீஸ்காரர்கள் பைக்கில் தங்களை தங்கள் ஜீப் உள்ள இடத்தில் இறக்கி விடுமாறு கேட்க மறுக்க முடியாமல் அக்னி மறைந்து இருக்கும் இடத்தை பார்த்துக்கொண்டே பைக்கை நோக்கி சென்றான்...

அவனின் பைக்கின் சத்தத்தில் தன்னிலை அடைந்தவள் “பயப்படாம இரு “ என்ற துசரின் குரல் தன்னுள் கேட்க “அக்னிக்கு பயமா” என்று தனக்குள் சிரித்துக்கொண்டு அவன் செல்லும் திசையை பார்த்துக்கொண்டிருந்தாள்...

கவனமாக அவனின் பைக் நம்பரை குறித்துக்கொண்டாள்..

இவன்தான் தனக்கானவன் என்று அவன் கைகளில் உருகி கரையும் போதே கண்டு கொண்டாள்...

இல்லாது என்றால் தன்னை காதல் பார்வை பார்ப்பவர்களினால் ஏற்படும் அருவருப்ப தாங்க முடியாமல் மூக்கை பஞ்சராக்கியது போல் மூக்கை அல்லவா உடைத்து இருப்பாள்...

அதன் பின் அவளுக்கு ஒரு முக்கியமான கால் அலுவலக சம்மந்தமாக வர அவள் உடனே அவ்விடம் விட்டு அகன்றாள்...பத்திரிகை துறையில் இருப்பவளுக்கு துசரின் பைக் நம்பர் ஒன்று போதுமானதாக இருந்தது அவனின் அனைத்தையும் தெரிந்து கொள்ள..

போலீஸார்களை விட்டுவந்த துசருக்கோ மிகுந்த ஏமாற்றம் முகத்தை பார்க்க முடியவில்லையே என்று...

அவளை முத்தம் இட்ட இடத்திலையே அமர்ந்து அந்த குப்பை தொட்டியில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான் கவலையாக..

அவனின் விழிகளுக்குள் வந்த அவனின் விழிமொழியாளின் விழியும், அவளின் ஸ்பரிஷமும் அவனை சமன் செய்து சாந்த படுத்தியது...

அக்னிகாவது அவனை தெரிந்து கொள்ள ஒரு வழி இருக்க மேலும் அவனின் முகதையும் முழுதாக பார்த்து இருக்க,

துசருக்கு எதுவும் இல்லாமல் போனது பாவம்..

அவனின் குடும்பத்தில் உள்ள அனைவரின் புகைப்படம் ஆரம்பித்து அவர்கள் இப்பொழுது செய்யும் வேலை என அனைத்தும் அவள் கைகளில் இருந்தது..

அவர்களின் குடும்ப போட்டோ ஒன்றை தன் மொபைலில் படம் பிடித்து கொண்டவள்..அதை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எடுத்து பார்த்துக்கொள்வாள்..

தான் எப்பொழுது இந்த குடும்பத்தில் ஒருத்தி ஆக போகிறோம் என்ற ஏக்கத்தோடு...

துசரை பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்ட அக்னியின் காதல் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தது...அவனிடம் தான் காதலை சொல்லும் போது அவன் தன்னை நிராகரிக்க எந்த காரணமும் இருக்க கூடாது என்று அன்றிலிருந்து அரசாங்க வேலைக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டாள்...

தன் காதலை பற்றி ஷாம்னியிடம் பகிர்ந்து கொண்டாள் அதே இமைகளின் படப்படப்போடு..

மறுநாள் அக்னி ஷாம்னியை துசரை காண்பிக்க அழைத்து சென்றாள்.. துசரின் ஆபிஷிற்கு எதிரில் உள்ள டிக்கடையில் அமர “ அக்கா காபியா டீயா “ என்ற குரலில் அக்னி திரும்ப அங்கே சோனமுத்து நின்று கொண்டிருந்தான்..

ஏய் நீ எப்படி டா” இங்க என்று ஷாம்னியை முறைத்து கொண்டே கேட்க ஷாம்னி இஇ....என இளித்து வைத்தாள்..

ஷாமு அக்கா சொன்னிச்சு அக்கா அதான் மாமாவை பத்தி தெரிஞ்சிக்கலாம்னு இங்க வேலைக்கு சேர்ந்துட்டேன்” என்றான்...

6 மாதம் அதன் போக்கில் சென்றது...

அன்று ஷாம்னி சற்று ஓய்வாக இருக்க எங்கையாவது வெளியில் செல்லலாம் என்று அக்னியை கேட்க அவளோ தனக்கு வேறு ஒரு அசைன்மெண்ட் இருப்பதாக சொல்ல அவளை திட்டிக்கொண்டே பக்கத்தில் உள்ள பார்க்கில் நடந்து கொண்டு இருந்தாள்

கொஞ்ச தூரம் நடந்த பின் அவள் அருகில் உள்ள ஒரு நாய் தன் கோரைப்பற்களை காட்டி உரும ஷாம்னி பயந்து கொண்டே அருகில் வருப்பவனின் கையை பிடிக்க

அங்கே மஞ்சள் கலர் டெசேர்ட்
, பச்சை கலர் பேண்ட் என பின்னே குடுமி கட்டிக்கொண்டு நம் குட்டி நின்றான்..

உடைத்தால் ஒடிந்து விடும் உடம்புடன் ,சற்று உயரமாக இருக்கும் அந்த பெண்ணை பார்த்தான் கிப்பி மண்டையன்..

எப்பொழுதும் எல்லா பெண்களிடமும் பேசுவது போல
அவளை பிளர்ட் செய்யும் நோக்கத்துடன் அவளிடம் பேசினான் நாய் சென்றதும் குட்டியின் கையை விட்டவள் “ தேங்கஸ் பார் யுவர் ஹெல்ப்” என்றவள் அவனை முறைத்துக்கொண்டே சென்றுவிட்டாள்
..

பின் அவளை பார்க்கும் போதெல்லாம் அவளை கோபப்படுத்தவே வம்பு வளர்ப்பவன் பின் ஒரு கட்டத்தில் அவனை அறியாமலே காதலில் விழுந்தான்..அவனின் தொடர் டார்ச்சலில் ஷாம்னிக்கும் அவனை பிடித்து இருந்தாலும் அவனின் தோற்றமும், அவனின் வயதும் அதை வெளிபடுத்தாமல் மறைத்தது..

தர்ஷி எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டியா, இன்னைக்கு நைட் ஷோ போக வேண்டாம்,எனக்கு இன்னைக்கு ஒரு வேலை இருக்கு நான் நாளைக்கு அழைச்சிகிட்டு போறேன் “என குட்டி தர்ஷிகாவிடம் கேட்டு கொண்டிருந்தான்..

போ குட்டி...நான் இன்னக்குத்தான் போவேன்... என் பிரன்ட்ஷெல்லாம் வராங்க , எனக்கு என்ன பயம், சும்மா குழந்தை மாதிரி ட்ரீட் பண்ணாதீங்க வீட்ல உள்ள எல்லாம் எனக்கு இரிடேட் ஆகுது,என்ன பார்த்துக்க எனக்கு தெரியும்..” என சிடு சிடுக்க..

ஏதோ சொல்ல வந்த குட்டியை தடுத்தவள் “குட்டி கண்ணா என் செல்ல தம்பில ப்ளீஸ் டா, நீ என்னை பாப்பாவா..? எப்ப பார்த்தாலும் துணைக்கு ஆள் அழைச்சிட்டு வரேன்னு என்னை கிண்டல் பண்றாங்கடா என் பிரன்ட்ஸெல்லாம்..” எங்க

நீ என்ன சொன்னாலும் பொம்பள பிள்ளைய தனியா அனுப்ப முடியாது, ஈவ்னிங் ஷோன்னா கூட பரவாயில்லை , நைட் ஷோ எல்லாம் முடியாது “என்று மறுக்க..

அவனிடம் ஒப்புக்கு “ம்ம்ம்” கொட்டியவள் தன் அறையில் சென்று தாழ் இட்டவள் ஜன்னலின் வழியே எஸ் ஆகி விட்டாள்..

தர்ஷிகா எப்பொழுதும் பெண் மேலான திணிப்புகளை எதிர்ப்பவள் ,பெண்கள் இதை செய்யக்கூடாது என்றாள் அதை முதல் வேலையாக செய்பவள்..
ஆனால் அது ஆரோக்கியமான விஷயத்திற்கா, இல்லை சரியான பாதுகாப்போடா என்றால் பதில் கேள்வி குறித்தான்...

அவள் வீட்டிலிருந்து கிளம்பி ஒரு 10 நிமிடம் இருக்கும் வழியில் மறிப்பதை போல இரு கார் நிற்க இறங்கி அருகில் பார்க்கலாம் என செல்ல

அருகில் வந்தாள் கதவை திறந்து உள்ளே இழுத்து போடலாம் என்று உள்ளே கதவருகில் ஒருவன் அமர்ந்து இருக்க முன்னே இரு ஆண்கள் அமர்ந்து இருந்தனர்
..

சரியாக காரை தர்ஷிகா நெருங்கும் நேரம் 20 அடி தூரத்தில் இருந்து “ தர்ஷி...” என்ற குரலில் தன் நடையை நிறுத்தியவள் திரும்பி பார்க்க

அங்கே அக்னி நின்று கொண்டிருந்தாள்
..

போதுமா
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
7559
7560
7561இதயம் 21

மணி இரவு 9.30 இருக்கும் அக்னி வேலையை முடித்துக்கொண்டு துசரை அவனின் வீட்டு வாசலில் நின்று சைட் அடித்துவிட்டு கிளம்பினாள்...

அப்பொழுதுதான் தர்ஷியும் துசரின் வீட்டில் இருந்து இருந்து வெளியே வந்தாள்.ஒரே இரண்டு கிலோ மீட்டர் வந்துதான் வலப்புறமாக திரும்பிதான் அக்னி தன் வீட்டிற்கு செல்ல வேண்டும்..

எதார்த்தமாக அக்னி தர்ஷியின் பின்னே வண்டியில் சென்றாள்.. இன்று துசரை பார்க்க வேண்டும் என்பதால் அக்னியும் பைக்கில் தான்வந்து இருந்தாள்...

தர்ஷி கொஞ்ச நேரத்தில் இறங்கி ஏதோ காரை நோக்கி செல்வதை பார்த்தவள் அவளின் பத்தரிக்கை மூளை ஏதோ தவறு என்று அவளை தூண்ட அங்கேயே 30 அடி தூரத்தில் பைக்கில் நின்றபடியே காலை ஊன்றி “தர்ஷி”.. என குரல் கொடுத்தாள்...

யாரோ குரல் கொடுக்க திரும்பி பார்த்தவள் யாரோ புது முகம் யார் என்று தெரியாததால் அருகில் சென்று பார்க்க அக்னியின் பைக்கை நோக்கி நடந்தாள் தர்ஷி...

அதற்குள் காரில் உள்ள டேவிட் கிழே இறங்கி தர்ஷியை நோக்கி வர, அவன் அவளின் பின்னே வருவதால் தர்ஷிகாவிற்கு தெரியவில்லை...

அதை பார்த்த அக்னி “ தர்ஷி ரன்.....” என்று கத்தியவள் பைக்கை வளைத்து திருப்பி நின்றாள்...
அவனுக்கும் தர்ஷிக்கும் 10 அடி இருக்க, தர்ஷிகாவிற்கும் அக்னிக்கும் 30 அடி இருக்க, தர்ஷிகாவின் பைக்கிற்கும் அவளுக்கும் 4 அடி இருந்தது

30 அடி தூரம் என்பதால் அவளை அலர்ட் செய்து அவள் பைக்கை எடுப்பதற்குள் அவன் நெருங்கிவிடுவான் என்பதால் , அவள் ஓடிவந்தாள் தன் பைக்கில் அழைத்து கொண்டு தப்பித்துவிடலாம் என நினைத்தவள் அவளிடம் குரல் கொடுத்து கொண்டே பைக்கை வளைத்து திருப்பி நின்றாள்..

தர்ஷிக்கோ ஒன்றும் புரியவில்லை..யார் இந்த பெண், ஏன் இப்படி ஸ்ட்ரேஞ்சர் போல நடந்து கொள்கிறாள், என்ன..?
தனக்கு பின்னே பார்க்கிறாள் என்று அவள் திரும்பி பார்க்க அவளை நோக்கி ஒருவன் நடந்து வந்து கொண்டிருந்தான்..

அவனின் தோற்றம் பார்த்ததுமே சரி இல்லை என்று தோன்றியது துரிதமாக மூளை வேலை செய்யாமல் மரத்து போய் அப்படியே நிற்க..

அக்னியின் “ரன் தர்ஷிஷு.. “ என்ற அழுத்தமான குரலில் சுயம் திரும்பி அவளை நோக்கி ஓடினாள் ...
தர்ஷிகா ஓட,டேவிட்டும் அவளின் பின்னே ஓட ஆரம்பித்தான்...

சரியாக தர்ஷிகா அக்னியின் பைக்கில் ஏறி அமர அவளின் முடியை பிடித்தான் டேவிட்..


அதனால் தர்ஷிகாவை பின் நோக்கி சரியா, அதில் பேலன்ஸ் தவறிய அக்னியும் பைக்கோடு சரிந்தாள்....

இரண்டு பெண்கள் இரண்டு பேமண்ட் என்ற சந்தோஷத்தில் இருந்தான் டேவிட்
தர்ஷிகாவின் முடி டேவிட்டின் கையில் இருக்க வேகமாக எழுந்த அக்னி டேவிட்டின் பக்கம் சென்று அவனின் கால் முட்டியில் பின் புறமாக ஒரு உதை உதைக்க
...

டேவிட்டின் கால் முட்டி மடிந்து அவன் சரிய, முடியை பிடித்து இருக்கும் அவனின் கையிலும் தன் கையை செங்குத்தாக வைத்துக்கொண்டு இரண்டு அடி அடிக்க அவனின் கைப்பிடி தளர அதிலிருந்து விடு பட்ட தர்ஷி அழுதுக்கொண்டே அக்னியின் பின் வந்தாள்..

பின்னே அவனை நோக்கி சில தற்காப்பு கைவரிசையை காட்ட ரத்த கொட்ட கீழே அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்தினான்..

ஒரு பெண் தன்னை அடித்துவிட்டாள் என்ற கோபம் தலைக்கேற “ என்னய்யா டி அடிச்ச உன்னை நாசமாக்கல” என்று வலியில் அமர்ந்து கொண்டே கர்ஜித்தவன் தன் காரை நோக்கி குரல் கொடுத்தான் “ வாங்க டா...டா...... “ என குரல் கொடுக்க காரில் இருந்த 2 தடியர்கள் இறங்கினர்..

ஒருவன், இருவர் என்றால் அக்னியால் சமாளிக்க முடியும், இது போல 3 தடியர்களை கண்டிப்பாக சமாளிக்க முடியாது என்று தோன்ற தர்ஷிகாவின் கைய இழுத்து கொண்டு ஓட ஆரம்பித்துவிட்டாள்..

அக்னிக்கும்மே நிலைமை சற்று நிதானம் தவற வைக்க, சற்று பதட்டம் ஆனாள், இருந்தும் இந்த நிதானமும் ,விவேகமும் அவசியம் என்று தன்னுள்
சொல்லிக்கொண்டவள் ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தினாள்
...

வெறும் வாய் அளவில் மட்டுமே தைரியம் உள்ள தர்ஷிகாவினால் அக்னியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை,பயத்தில் கை கால்கள் எல்லாம் உதற ஆரம்பித்துவிட்டது..

அவர்கள் ஓடியது தெரிந்ததும் காரில் ஏறி துரத்த ஆரம்பித்துவிட்டனர் டேவிட்டின் கும்பல்..

நேராக ஓடிக்கொண்டே இருந்தால் கண்டிப்பாக மாட்டிக்கொள்வோம் என்று உணர்ந்த அக்னி பக்கத்தில் உள்ள பெரிய பார்க்கில் தர்ஷிகாவை இழுத்து கொண்டு நுழைந்தாள்..

அக்கா...”, “அக்கா..” என தர்ஷி வேற ஒரு புறம் அழுக அக்னிக்கு கோபம் தலைக்கு ஏறியது “வாயை மூடு தர்ஷி .. என்னை கொஞ்ச யோசிக்கவிடு...” என கத்தினாள்..

பின் சிறிது நேரம் யோசித்தவள் “நீ இங்க ஒளிஞ்சிக்கோ நான் வெளிய போய் அவனுங்கள டைவேர்ட் பண்ணி ஒடுறேன்,நீ அப்பறமா இங்கே இருந்து தப்பிச்சிடு” என்க..

அக்கா வேணாம் நீங்களும் இங்கேயே ஒளிஞ்சிக்கோங்க, அவனுங்க போன அப்பறம் , நாம போய்க்கலாம் “ என சொல்ல..

லூசு மாதிரி பேசாத கண்டிப்பா அவனுங்க நாம இதுக்குள்ள வந்தத பார்த்து இருப்பானுங்க, உன்னாலையும் வேகமா ஓட முடியல , எல்லாத்துக்கும் மேல ,அவனை நான் அடிச்சதால என் மேல தான் கோபமா இருப்பாங்க, அதனால என்னைதான் டார்கெட் பண்ணுவாங்க மாக்ஷிமம் “ என்றாள்..

அக்கா “என மீண்டும் ஆரம்பிக்க “ஷ்ஷ் தர்ஷி என்னால சமாளிக்க முடியும் , நீ பைக் இருக்க இடதுக்கு போகாத அங்க யாரும் இருந்தாலும் இருப்பாங்க, பஸ் பிடிச்சு வீட்டுக்கு போ”...

என்றவள் அங்கு பார்க்கில் அழகுக்கு வைத்து இருந்த ஒரு செடியின் பின்னே அவளை மறைத்தவள் வெளியே சென்றாள்..

போனை வேறு பைக்கில் விட்டுவிட்டதால் யாரிடமும் உதவி கேட்க முடியாது.

அவளுக்கும் பதட்டமே இன்னும் கொஞ்சம் யோசித்து இருந்தாள் ஏதோ ஒரு மாற்று வழி கிடைத்து இருக்கும்.. ஆனால் விதி சரியாக அங்கே தன் வேலையை செய்தது .
ஒரு அசட்டு தைரியத்தில் முடிவெடுத்து விட்டாள் எல்லாவற்றையும், தன்னால் கொஞ்சம் சமாளிக்க முடியும் தர்ஷியால் முடியவே முடியாது என்று தோன்ற..

தன்னவனின் தங்கைக்காக எதுவும் செய்ய அவளின் காதல் மனம் நினைத்துவிட்டது.. அவள் பார்க்கை விட்டு வெளியே வரவும் டேவிட்டின் கும்பல் காரை விட்டு இறங்கவும் சரியா இருக்க ஓட்டம் எடுத்தாள் ..

அவர்களும் அவளை துரத்த மின்னல் வேகத்தில் ஓடி தான் ஒரு அத்தலேட் என நிரூப்பித்தாள்...

என்னதான் பலம் கொண்டு ஓடினாலும் அந்த மாட்டு கரி தின்னும் மாமிச மலைகளிடம் இருந்த தப்பிக்க முடியவில்லை..

மூன்று பேரும் சுற்றி வலைக்க ஒருவன் கையை பிடிக்க ,டேவிட் அலட்சியமாக சிரித்துக்கொண்டு வேடிக்கை பார்க்க ,மற்றொருவன் இன்னொரு கையை பிடிக்க வருவதற்குள் ஏதோ நியாபகம் வந்த அக்னி தன் பாக்கெட்டில் உள்ள பேனாவை எடுத்து பின் உறையை கழட்ட அதில் முனை கூர்மையாக ஒரு சிறிய கத்தி இருக்க அதை தன் கையை பிடிக்க வந்தவனின் தொண்டை குழியில் இறக்கினாள்...

4 இஞ்சி உள்ளே போக அவ்விடமே ரத்தம் கொட்ட மயங்கி சரிந்தான், குத்திய வேகத்தில் அந்த பேனாவை பிடிங்கி இன்னொருவனின் கழுத்தில் குத்தவும் டேவிட் அவள் முகத்தல் மயக்க மருந்தை வைக்கவும் சரியா இருக்க அக்னி அப்படியே மயங்கி சரிந்தாள்...

கத்தி குத்த பட்ட இருவரின் உயிர் போவது உறுதி அந்த அளவிற்கு ரத்தம் வழிந்தது...

மயங்கி கிடந்த அக்னியின் வயிற்றிலே உதைத்த டேவிட் “பொட்ட நாயி நீ நீ என்னை அடிக்கிறியா...” என அவள் முகத்தில் காரி உமிழ்ந்தான்...

தன் ஆட்களுக்கு போன் செய்தவன் அந்த இடத்தை கிளியர் செய்து அக்னியை தூக்கிக் கொண்டு சென்றான்..

உச்ச பட்ச கோபத்தில் அவன் தர்ஷிகா என்ற பெண்ணையே சுத்தமாக மறந்துவிட்டான்...அப்படியே நியாபகம் வந்தாலும் அவளால் என்ன செய்துவிட முடியும் என கண்டிப்பாக அலட்சியமாக தான் நினைப்பான்..

டேவிட் பணக்காரர்களுக்கு பெண்களை சப்பிலே செய்யும் புரோக்கர்.

அதிலும் மெயினாக செய்வது அமித் ,கமலகர் ரெட்டி, சமித் ஜஸ்வால் , ரங்கநாதன்,சாக்கோ ஜோஷுக்குட்டி, போன்ற நட்சத்திர அந்தஸ்தை பெற்ற 40 வயது மேலாக உள்ள அந்த கேடுகெட்ட பொம்பளை பொறுக்கிகளுக்குத்தான் அதிகம் செய்வது

அவன் அதற்காகவெல்லாம் மெனக்கெட மாட்டான்
.. நேராக வந்து ரோட்டில் நிற்பவன் மிடில் கிளாஸ், அல்லது லோயர் மிடில் கிளாஸ் என பார்த்ததும் எடை போடுபவன் அந்த பெண்கள் பார்க்க கொஞ்சம் அழகாக இருந்தாள் அப்படியே கடத்திவிடுவான்...

அவன் தேவை முடிந்தும் அவர்களை வீடியோ எடுத்து வைத்து கொள்பவன் யாரிடமும் சொன்னால் இதை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவான் சில பெண்கள் சமூகத்திற்கு பயந்து வாயை திறப்பதில்லை,

சில பெண்கள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வார்கள்... அது எது நடந்தாலும் அவனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை...

என்னதான் அக்னியின் உடல் மயங்கி கிடந்தாலும் அவள் மூளை முழித்துக்கொண்டுதான் இருந்தது...

அக்னி பயப்படாத, கிவ் ஆப் ஆகாத, உன்னால தப்பிக்க முடியும் ,தப்பிக்க முடியும் என தொடர்ந்து அவளுக்கு செய்து அனுப்பி கொண்டே இருந்தது...

அக்னியை கொண்டு அந்த விருந்தினர் மாளிகையின் ஒரு ரூமில் போட்டவன் அவளின் கைகள் இரண்டையும் கட்டிவிட்டான்...

பின் அங்கிருந்து சென்றுவிட்டான்..பின் உள்ளே 5 நாய்களும் அவளை சுற்றி அமர்ந்து கொண்டனர்..

5 பேரும் எல்லா போதை வஸ்துகளையும் போட்டுக்கொண்டு உச்ச போதையில் இருந்தனர்..மேலிறியா அக்னியின் சட்டை வழியே தெரிந்த அவளின் இடுப்பு பகுதி வேறு அந்த வெறிநாய்களின் இச்சையை அதிக படுத்தியது...

சமித் மயங்கி கிடந்த அக்னியின் முகம் நோக்கி குனிய தன் மூளையின் தொடர் கட்டளையினால் மயக்கம் தெளிந்த அக்னி அருகில் தெரிந்த சமித்தின் முகத்தில் கோபம் கொண்டவள் அவன் மேல் வலப்பக்க காதை பலம் கொண்ட வரை கடித்து வாயோடு எடுத்துவிட்டாள் பின் அனைவரையும் முடிந்த வரை காலால் தாக்கினாள்...

அக்னி அந்த சூழ்நிலையிலும் அவளின் தன்னம்பிக்கையை மட்டும் கொஞ்சம் கூட இழக்கவில்லை..

காதில் ரத்தம் கொட்ட அடிச்ச போதை கொஞ்சம் இறங்க அக்னியை கன்னம் கன்னமாக அடித்து விட்டான் ஆத்திரத்தில்..

கைய காலை உதறிய அக்னி அவன் அடித்த அடியில் மீண்டும் அறை மயக்கநிலையில் சென்றாள்..என்னதான் வலிமையான பெண்ணாக இருந்தாலும் அந்த ஓநாய்களின் தாக்குதலில் பலம் இழந்தாள்..

ஒருவன் அவனின் பேண்டை உருவ ,ஒருவன் அவளின் சட்டையை உருவ , ஒருவன் அவளின் உள்ளாடைகளை உருவ என அந்த பொன்னுடல் கொண்டவளை புண்ணாக்க தொடங்கினார்கள்..


அக்னி முடிந்த வரை அந்த அறை மயக்க நிலையிலும் அவர்களிடம் போராடினாள்...விடுங்கடா ,விடுங்க டா “ என கர்ஜனையாக..

மாறாக அவள் வார்த்தையில் கொஞ்சம் பயம்,இல்லை கெஞ்சல் என எதுவும் இல்லை, அந்த பெண் சிங்கம் கடைசி வரை அந்த ஒநாய்களிடம் வீரமாகவே தோல்வியை சந்தித்து கொண்டு இருந்தது..

அவளின் வயிற்றை நோக்கி ஒருவன் பாய, அவளின் மார்பை நோக்கி ஒருவன் பாய, அவளின் முகத்தை நோக்கி ஒருவன் பாய என தெருநாய்களிடம் அகப்பட்ட எச்சில் இலையையாய் போனது அந்த பூவுடல்...

தன் பெண்மை பறிப்போகிறது, ஒரு கட்டத்திற்கு மேல் தன் அன்னையிடம் கூட பகிறாத அவள் உடல் பாகங்கள் அனைத்தும் அயோக்கியர்களின் கையில் அகப்பட்டு சிதைந்து போனது....

தன்னவனுக்காக பொத்தி பொத்தி வளர்த்த அவள் பெண்மை கலங்கப்பட்டு போனது..அக்னியின் கண்களில் ஒரே ஒரு துளிர் கண்ணீர் துசரை நினைத்து..
தன்னவனுக்கு கொடுக்கும் பிரத்யோக பரிசு அல்லவா அழிந்து கொண்டு இருக்கிறது.என்னதான் காதலை அள்ளி அள்ளி கொடுத்தாலும் இந்த பரிசிற்கு ஈடாகுமா...

அந்த ஒரு துளி நீர் சற்று நேரத்தில் அமைதியாக பெய்யும் அடை மழை ஆனது.

கொஞ்சம் நேரத்தில்
தன்னை நிதானப்படுத்தியவள்
,
இது நீ அழும் நேரம் இல்லை, உன்னை நிலைப்படுத்து உன் உயிர் என்ற ஒன்று இருந்தால் இவனில் ஒருத்தன் கூட உயிர் வாழ கூடாது..

அவர்களின் முகங்களை மூளையில் பதிய வை, பதிய வை என தனக்குள்ளே சொல்லிக்கொண்டவள் கட்டினப்பட்டு முகங்களை பதிய வைத்ள்.

தன் உயிர் போகவேண்டும் என்றோ ,தான் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்றே அவள் எண்ணம் இம்மியும் போகவில்லை,அவள் பெண்மைக்காக வருத்தபட்ட ஒரே இடம் அவளின் துசர்க்காக மட்டுமே..

இப்பிறவி முடிந்தாலும் அவளின் வைராக்கியம் அடுத்த பிறப்பெடுத்தாவது அவர்களை கொல்லும் என்பதில் ஐயம் இல்லை..

அந்த 5 பேரும் ஆடிய வெறி ஆட்டத்தில் உடல் எங்கும் நீங்காத காயங்களுடன் ,முகங்களை பதிய வைத்த திருப்தியுடன் ஆழ் மயக்கத்திற்கு சென்றாள்..

அப்பொழுது அவளை எடுக்கப்பட்ட வீடியோவும் , போட்டாக்களும் அவள் மூளையில் சென்று பதியவில்லை... பின் டேவிட் வந்தவன் அவளை தூக்கிக்கொண்டு சென்று ரோட்டின் ஓரம் உள்ள குப்பை தொட்டியில் போட்டு சென்றான்..
உயிரோடு இருந்தால், இருக்கட்டும், செத்தால் சாகட்டும் என்று அலட்சியமாக..

இயலாதவர்களின் மேல் இவர்கள் காட்டும் அலட்சியமே பின் 1000 மடங்கு பலத்துடன் இவர்களை அழிக்கும் என்பதை அறியவில்லை...

பெண் தானே என்று அலட்சிய படுத்திய நளினி தற்கொலை படையாய் மாறி ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கை அழித்தது போல..

பெண் தானே என்று அலட்சியபடுத்தி சட்ட மன்றத்தில் முடியை பிய்த்து, அவமானப்படுத்த பட்ட ஜெயலலிதா 1000 ஆண்களை காலில் விழ செய்தது போல...

பெண் தானே என்று அலட்சிய படுத்த பட்ட கல்பனா ஜாவ்லா விண்வெளியில் கால் பதித்த முதல் பெண்மணி ஆனது போல..

.
போதுமா...
 
Last edited:

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
7680


இதயம் 22 :

அந்த விடிகாலை வேளையில் குப்பையோடு குப்பையாக கிழிந்து கிடந்தது அந்த பட்டித்துணி...,


ஓரமாக இருப்பதால் அவள் இருந்ததால் யாருக்கும் தெரியவில்லை.. தூக்கம் இல்லாமல் அந்த காலையிலையே தன் ஊன்றுகோலின் உதவியோடு அங்கே நடந்து வந்து கொண்டிருந்தான் மாறன்...

யாரும் இல்லாத அனாதை தன்னை விரும்பி காதலித்த வந்த பெண்ணை கல்யாணம் பண்ணி ஒரு வாரம் ஆவதற்குள் அவளையும் தன் கால்களையும் இழந்தவன்..

நேர்மையான போலீஷ்காரன் ஆன அவனுக்கு கிடைத்த பரிசு ,6 மாதத்திற்கு முன்பு அவனின் காரை விட்டு ஏற்றி காலை உடைத்து அவனின் கண்ணின் முன்னே கற்பழித்தார்கள்...

அவன் மனைவியும் அவமானம் தாங்காமல் , தூக்கி மாட்டி இறந்துவிட்டாள்.அவள் மனைவியின் இழப்பும் ,உடலின் ஊனமும் அவனின் தைரியத்தை இழக்க செய்து இருந்தது சுத்தமாக,

தற்பொழுது ஒரு தனியார் டிடக்டிவ் நிறுவனம் வைத்து கொண்டு இருக்கிறான் ...

ஏதோ முணு முணுக்கம் சத்தம் கேட்க அந்த குப்பையின் ஓரத்தில் சென்று பார்க்க,அங்கே அக்னி அனத்தி கொண்டு கிடந்தாள்..

வேகமாக அவள் அருகில் சென்றவன் அவன் கன்னத்தை தட்டி எழுப்ப டேவிட் கொண்டுவந்து போட்டு இரண்டு மணிநேரம் ஆனதால் லேசாக மயக்கம் தெளிந்தவள் “ போன் “ கேட்டாள்...

போனை வாங்கியவள் ஷாமினிக்கு கால் செய்து மாறனிடம் இருக்கும் இடத்தை கேட்டு அவளிடம் கூறியவள் ,பின் தன் வீட்டிற்கு போன் செய்து தெரிந்தவர்களுக்கு சின்ன ஆக்சிடெண்ட் என்று சொல்லி கட் செய்தாள்..

அக்னியின் வீட்டிலும் அவள் அடிக்கடி இதோ போலஆசிரமத்தில் இருக்கிறேன்,இல்லை யாருக்கும் உதவி செய்கிறேன் என்று இரவு தாமதமாக வரும் பழக்கம் உள்ளதால் அவர்கள் பயம் இல்லாமல் இருந்தனர்..

இருந்தும் விடியல் நெருங்க நெருங்க ஒரே பெண் பிள்ளையை பெற்றவர்களின் வயிறு கொஞ்சம் கலங்கவே செய்தது..

அஞ்சுகம்தான் மிகவும் தவித்து போனார் பேத்தியை நினைத்து , அவர்கள் ஷாம்னி அல்லது ஆசிரமத்திற்கு போன் செய்யலாம் என்று நினைக்கும் போது அக்னி போன் செய்யவே கொஞ்சம் சமாதானம் ஆக்கினார்கள்..

இருந்தும் அஞ்சுகம் பேத்தியை காண வேண்டும் என குதித்து கொண்டே இருந்தார் .

எழ முடியாத ,உடல் முழுதும் ரணத்துடன் இருந்தாலும் அவளின் குரல் இம்மியும் பிசறு இல்லாமல் ஒலித்தது...ஓர் அரை மணி நேரத்தில் ஷாம்னி வந்ததும் அவள் நிலையை பார்த்து ஷாம்னி துடித்து அழுதுவிட்டாள்...

பின் மாறனின் உதவியுடன் அவளை அக்னி சொன்ன ஹாஸ்பிடலில் சேர்த்தனர்,அக்னியை பார்த்ததும் மாறன் ,ஷாம்னி இருவருக்கும் அவளின் நிலை தெரிந்துவிட்டது..

அக்னிக்கு உடல் ரணமாய் வலித்த போதும்,அந்த வெறிநாய்கள் தொட்ட இடம் தீயாய் தகித்து அருவருக்கும் போதும் அவள் திடமாய்தான் இருந்தாள்...

பின்னே பிழைத்தாகிவிட்டது...இனி இன்னொரு பிறவி தேவை இல்லை, இப்பிறவியிலையே அவர்களை கருவருக்கும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து சந்தோசப்பட்டாள்..

அந்த ஹாஸ்பிடலில் அக்னிக்கு தெரிந்த டாக்டர் என்பதால் அவளின் வற்புறுத்தலின்படி அவளின் கேஸ் சீட்டில் ஆக்சிடெண்ட் என்று எழுதப்பட்டு அவளின் கை ,கால்கள் அடிப்பட்டது போல கட்டு போடப்பட்டது..

அடுத்த ஒரு மணி நேரத்தில் அஞ்சுகத்தின் பிடிவாதத்தின் பெயரில் ஷாம்னியிடம் ஹாஸ்பிடலின் முகவரியை கேட்டு வந்துவிட்டனர்..

வந்து பார்த்ததும் அங்கே அடிபட்டு கிடந்த அக்னியை பார்த்ததும் அவர்களின் அனைவரின் உயிரும் போய் வந்தது...

அவளின் விபத்திற்க்கான அடியாளங்கள் யாவும் அவளின் அந்தரங்களில் புதைக்கப்பட்டதால் ஜோடித்த கை கால்களின் கட்டுகள் மட்டுமே அவளின் குடும்பத்தார்க்கு தெரிந்து அவர்களை நம்ப வைத்தது..

இருந்தும் உதட்டிலும், கழுத்திலும் இருக்கும் காயங்கள் எப்படி என்று கேட்க ஏதோ சமாளித்து முடித்தாள்..

இதன் உண்மை தன்மை கண்டிப்பாக பெரிய அளவு அவர்களை பாதிக்கும் என அக்னி 100 சதவிகிதம் நம்பினாள்..தன்னால் தாங்கி கொண்டதை போல அவர்களால் முடியாது... விஷயம் தெரிந்த ஷாமினியே இன்னும் அழுகையை ஓய்ந்த பாடில்லை.இருக்க எப்படி தன் குடும்பத்திடம் சொல்ல முடியும்..என மறைத்து விட்டாள். .

அக்னியின் குடும்பத்தை பொறுத்த வரை அவள் பத்தரிக்கையில் எழுதிய யாரோதான் இப்படி செய்ததாக நம்பினார்கள்,அதனால் இனி அந்த வேலைக்கு செல்ல கூடாது என்று அறவே மறுத்தனர் ..அஞ்சுகம் “ நீ நம்ம ஆபிஷ்க்கு போகலனாலும் பரவாயில்லை , அந்த வேலைக்கு போக கூடாது” என்று மறுத்துவிட்டார்..

அக்னியும் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் அதிகம் இருப்பதால் சரி என்று சொல்லிவிட்டாள்..

சம்பவம் நடந்து முடிந்து நான்கு நாட்கள் இருக்க அக்னியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்..அவள் ஓவ்வொரு முறை குளிக்கும்போதும் டிரஸ் செய்யும் போது அவளின் உடல் காயங்களை பார்க்கும் ஷாமினிக்கு இதயமே வெடித்துவிடும் போல இருந்தது.

“இனி நீ இப்படி அழுகுறதா இருந்தா நானே என்னை பார்த்துக்கிறேன் ஷாமு, நீ என்னை பலவீனப்படுத்தாதா “என கூற ஷாம்னி கடினப்பட்டு அழுகையை முழுங்கினாள்..


மாறன் அன்று அக்னியை பார்க்க வந்து இருந்தான்..அன்று மருத்துவமனையில் சேர்ததிலிருந்து மறுபடி இன்றுதான் வந்தான்..

ஷாம்னி,அக்னி,மாறன் மூவரும் அவள் வீட்டின் சிட் அவுட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்..
மாறன் “ சிஸ்டர் நாம போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்கலாம் “ என்க.

அக்னி “சிறை தண்டனை தெரியாம தப்பு செஞ்சவங்களுக்கு திருந்துறதுக்கு கொடுக்குற வாய்ப்பு ப்ரோ ,இவனுங்க தெரிஞ்சே தப்பு பண்ணுனவங்க..மேலும் சிறை தண்டனை அவனுங்களுக்கு எல்லாம் சாதரணம் ஈஸியா வெளில வந்துடுவானுங்க...,

அவனுங்களுக்கெல்லாம் மரணம் மட்டும் தான் சரியான முடிவு” என்றாள்..

“பிலிங்கி நீ எதும் பண்ண வேண்டாம் ,இதோட விடு, அவனுங்க ரொம்ப மோசமானவங்க இன்னும் எதும் பண்ணப்போறங்க” என பயந்து கூற
“அவங்களை இப்படியே விட்டா இன்னும் எத்தனை பெண்களோட வாழ்க்கை அழியுமோ,அன்னைக்கு நான் மட்டும் போகாம இருந்து இருந்தா அந்த பொண்ணோட நிலைமை” என தர்ஷிகாவை நினைத்து மனம் கொதித்தாள்..

“அக்னி அதுக்கு நீ அவனுங்களை கொன்னுட்டு ஜெயிலுக்கு போகப்போறியா” என ஷாம்னி கோபப்பட,மெலிதாக சிரித்த அக்னி
“ தப்பு செஞ்சது அவனுங்க தண்டனை அனுபவிக்க வேண்டியது அவனுங்க நான் இல்லை.., அவனுங்க எல்லாரும் என் கையால துடிக்க துடிக்க சாவனுங்க , எனக்கு எந்த தண்டனையும் இல்லாம” என கர்ஜித்தாள்..

“துசர் என்ற அத்தியாயம் என் வாழ்க்கையில் இல்லனா அவனுங்களை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போக கூட தயங்கி இருக்க மாட்டேன்,நான் என் துசர் கூட வாழணும்,திகட்ட திகட்ட “ என காதலாக பேசிய அக்னி....

மாறன்,ஷாம்னி இருவர் கண்ணுக்கும் பிரமிப்பாக தெரிந்தனர்.. இந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கும் ஒரு சாதரண பெண் நினைப்பது தற்கொலையை பற்றி, கொஞ்சம் தைரியமான பெண் நினைப்பது போலிஷ் கம்பிளைன்ட் கொடுக்கலாம் என்று, மேலாக காதலித்தால் தான் அவனுக்கு பொருத்தம் இல்லாதவள் என்று அவனிடம் இருந்து விலகுவது இதுவே அவர்கள் அதிகபட்சம் எதிர்பார்த்தது...


ஆனால் அக்னி அவர்களின் கற்பனை, யோசனை என எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டு தனித்து நின்று அக்னி அக்னிதான் என்று நிரூபித்தாள்..

மாறனிற்கு அவனின் செய்கைகள் சபாஷ் போட வைத்தது.அக்னிக்கு உதவி செய்ய முடிவெடுத்தான்..

“ சிஸ்டர் உங்களுக்கு என்ன உதவியாய் இருந்தாலும் நான் செய்கிறேன்” என கூறி தன் வாழ்க்கையை பற்றி கூற
கேட்ட அக்னிக்கும் ஷாம்னிக்கும் அவ்வளவு வருத்தம் ஷாமினிக்கு அக்னி செய்ய போவதை நினைத்து பயம் வந்தாலும் அவள் கூட கண்டிப்பாக இருப்பதாக முடிவெடுத்துவிட்டாள்...இருந்தும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவளை கன்வென்ஸ் செய்து கொண்டே இருப்பாள்..


ஆனால் அக்னி அதை உடனே செயல்படுத்தவில்லை...விஷயத்தை ஆரப்போட்டு தன் பலத்தையும்,எதிரியின் பலவீனத்தையும் ஆராய்ந்தாள்..மாறனின் உதவியோடு அவர்களை நெருக்கமாக கண்காணித்து அவர்களின் எல்லாவற்றையும் அறிந்துகொண்டாள்.. அந்த கொக்கு தன் இறைக்காக 2 வருடம் கடும்தவம் இருந்தது..முடிந்த வரை அவர்கள் கைகளிலிருந்து பெண்களை காப்பற்றினாள்,


அதே நேரத்தில் அவள் துசரை பார்ப்பது ,தேர்விற்கு படிப்பது,அவனின் ஒரு விழி பார்வையில் உயிர் கசிவது என அனைத்தும் செய்து கொண்டிருந்தாள்..

என்னதான் என் கற்பு என் மனம் ,என் இதயம் சம்மந்த பட்டது என்று சொல்லிக்கொண்டாலும் அவள் மனமும் சில சமயம் வெம்மி வெடித்து அழவே செய்தது..அப்பொழுதெல்லாம் அவள் மனம் துசரை அதிகம் நாடும்,முதல் முறை அவன் தீண்டலுக்கு சுருண்டது போல சுருண்டு போக விரும்பும்..


துசரும் அவள் விழி மொழியை தவிர வேற எந்த அடையாளமும் தெரியாமல் போகும் இடங்களில் எல்லாம் அங்கு உள்ள பெண்களின் கண்களை ஆராய்ந்து கொண்டு இருந்தான்...ஒரு கட்டத்தில் சோர்ந்தவன் அந்த விழியும் அந்த இரவும் , அந்த ஸ்பரிஷமும், ஆயுள் முழுமைக்கும் போதும் என்று அதில் சுகம் கொள்ள பழகிக்கொண்டான்...

அதே போல இரண்டு வருடம் வரை காத்திருந்து ஒருவர் ஒருவராக பலி தீர்த்தாள் அக்னி சந்தேகம் வராதபடி...


அன்று அனைவரும் முழு போதையில் இருந்ததால் அக்னியை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை...அப்படியே இல்லை என்றாலும் 100ல் ஒரு பெண்ணான அக்னியை நியாபகம் வைத்து இருப்பது கடினம்தான்...

அனைவரின் கதையை முடித்துவிட்டுத்தான் தன் காதலை துசரிடம் சொல்லலாம் என்று இருந்தாள்.. அதற்கு முன் துசரே அவளை அறிந்து அவளிடம் காதலை சொல்ல அக்னியும் தன்னைப்பற்றி எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள்...

ஒரே ஒரு விஷயம் தவிர அன்று ஏதோ ஒரு பெண்ணை காப்பாற்றினேன் என்று சொன்னாலே தவிர அது தர்ஷிகா என்று மட்டும்...

எதை நிரூபிக்க இதை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு , உன் மேல் காதலால்தான் உன் தங்கச்சியை காப்பாற்றினேன் என நிரூபிக்கவா..?” அது தேவை இல்லை அக்னிக்கு..

அங்கு யாரை இருந்தாலும் தான் காப்பாற்றி இருப்போம் என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்..

யாராய் இருந்தாலும் உதவுவாள்தான் ஆனால் இந்த அளவிற்கா என்றாள் கொஞ்சம் யோசனைக்கு உள்ள கேள்விதான்...

ஷாம்னியிடம் கூட அவள் தர்ஷிகாதான் என்று சொல்லவில்லை எங்கே அவளிடம் சொன்னாள் அவள் துசரிடம் சொல்லி அதனால் தன்னை காதலிக்கிறேன் என்று சொல்லிவிடுவானோ என...

தன்மேலான காதல் தன் மேல் உள்ள காதலுக்காக மட்டும்தான் வர வேண்டுமே அன்றி நன்றி உணர்ச்சிக்காகவெல்லாம் வர கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்...

பின் துசரும் அவளும் காதலை பகிர்ந்து கொண்ட பிறகுதான் ஷாம்னியிடம் உண்மையை சொன்னாள்.. அந்த பெண் தர்ஷிகா என்றும் அந்த உண்மையை யாரிடம் சொல்ல கூடாது என்றும்..

துசரும் அவளின் காதலுக்கு நியாயம் செய்தான் தன் தூய்மையான காதலால்.. அவளை அவளின் கடந்த காலத்தோடு ஏற்றுக்கொண்டது மட்டும் அல்லாமல் அவளின் எதிர்காலத்திலும் ,அவளின் பழி வாங்களிலும் டேவிட்டை கொன்று ஏற்றுக்கொண்டு அக்னியின் சரிபாதி ஆனான்...

அக்னியை அவர்கள் கடத்தி கொண்டு போன அரை மணி நேரத்தில் வெளியே வந்த தர்ஷி ஆட்டோ பிடித்து வீடுவந்துவிட்டாள்..

பைக் எங்கே என்று கேட்டதற்கு காணாமல் போய்விட்டது என்று சொன்னவள் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக சென்று ரூமில் சென்று அடைத்துவிட்டாள்..


அவள் வீட்டினரும் பைக் தொலைந்து போனதற்கு துசர் திட்டுவான் என்பதால் ஆக்டிங்கை போடுகிறாள் என சிரித்து கொண்டே சென்றுவிட்டனர்..

உள்ளே சென்ற தர்ஷிகாவிர்க்கோ இன்னும் நடுக்கம் குறையவில்லை..வெறும் வாய் பேச்சு வீராங்கனை நிஜப்போரை கண்டதில் நடு நடுங்கி போனாள்...

மறுநாள் தன் தோழியுடன் சென்று அவள் பைக்கை விட்ட இடத்தை சென்று பார்க்க டேவிட் அதை எல்லாம் எடுத்துவிட்டு சுத்தம் செய்ததால் அந்த இடம் எதுவும் இல்லாமல் வெறும் ரோடாக இருந்தது..

யாரோ ஒரு தனக்காக எவ்வளவு பெரிய உதவி செய்து ,அந்த இடத்தில் தான் இருந்தால் என யோசிக்க யோசிக்க தன் இயல்பை தொலைத்தாள் தர்ஷிகா... அதனால் தன் பெயர் அவளுக்கு எப்படி தெரியும் என்ற யோசனிகளுக்கெல்லாம் அவள் மூளை அவளை இட்டுச்செல்லவில்லை..

அக்னி தைரியமான பெண் அவளுக்கு ஒண்ணும் ஆகி இருக்காது என தன்னை தைரிய படுத்திக்கொண்டாலும் அந்த அக்காவுக்கு என்னவாயிற்றே என்ற பயம் அவளுக்கு மூச்சு முட்ட,வீட்டின் உள்ள கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் வற்புறுத்தி கல்லூரி மாற்றி வெளியூரில் தங்கி படிக்க ஆரம்பித்துவிட்டாள்..

அதன் பின் அவள் ஊருக்கு வருவதும் அவளின் கலகலப்பும் குறைந்துபோனது... நிச்சயத்தில் அக்னியை பார்த்ததும் ,அவள் சொன்னதை கேட்டதும் தர்ஷிகாவினாள் ஆச்சரியபடாமல் இருக்க முடியவில்லை..

காதல் இவ்வளவு செய்யுமா என..என காதல் மட்டும் அல்ல அக்னியின் அணையாத தைரியமும் அதன் காரணம்...

அதன் பின் தியாவினால் அக்னி அடையாளம் காட்டப்பட சமித்திற்கு நியாபகம் வந்தது.. அவனின் காதை கடித்து தையல் போடவைத்தவள் ஆயிற்றே...,அவன் அக்னியின் காணொளியை எடுத்து ஜிந்தாவிடம் கொடுக்க

அதை ஜிந்தா கோணல் சிரிப்புடன் வங்கியவன் ஒரு இரவு முழுவதும் தன்னை முட்டாளாகிய அவளின் குடும்பமே அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து சாக வேண்டும் என்று அவளின் நிர்வாண வீடியோவை அவளின் கல்யாணத்தில் ஒளிபரப்பியதோடு மட்டும் அல்லாமல் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ஏற்றிவிட்டான்....


போதுமா...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
7681
7682





இதயம் : 23

அந்த மருத்துவமனை ICU வாசலில் இரு குடும்பத்தாரும் சோகமாக அமர்ந்து இருக்க அக்னி,துசர்,ஷாம்னி, தர்ஷிகா அனைவரும் தங்களது கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தனர்...

அனைவருக்கும் நடந்தது ஓரளவு புரிந்தது...

அக்னி அவள் அம்மாவின் அருகில் ஆறுதலாக அமர்ந்து இருக்க துசர் அக்னியின் பாட்டி தாத்தா அருகில் அமர்ந்து இருந்தான்...

துசரின் நெஞ்சம் உலைகலமாய் கொதிக்க , குட்டி தன் செல்ல அண்ணிக்கா இந்த நிலை என்று இன்னும் கண்கள் கூச மூடிய கண்ணை திறக்காமல் அமர்ந்து இருந்தான் நரம்பு புடைக்க...

தர்ஷிகா ,ஷாம்னி இருவரும் அழுது அழுது மயங்கிய நிலையில் இருக்க மற்றவர்கள் எல்லாரும் ஒருவிதமான தர்மசங்கடத்தில் அமர்ந்து இருந்தனர்..

ஆனால் அக்னிக்கோ தன் தந்தையின் நினைவைத்தவிர வேறு எதும் இல்லை...இன்னும் தாலியின் ஈரத்தன்மை கூட மாறவில்லை தாங்குகிறேன் என்பதற்காக இவ்வளவு வலியை தருவாயா என்று மனதுக்குள் இறுகி போய் அமர்ந்து இருந்தாள்...

ஒரு ஒருமணிநேரம் கழித்து வெளியே வந்த டாக்டர் பர்ஸ்ட் அட்டாக் , 50 % பிளாக் இருக்கு, ஒருஆஞ்சியோ பண்ணா சரி ஆகிடும், “ he is out of risk “ என்றதும் தான் சத்யா கொஞ்சம் தன்னிலை அடையும் போதே தன் எதிரில் தெரிந்த அக்னியின் முகத்தை நினைத்து கவலை கொண்டார்..

துசர் என்ன சொல்வான்,துசரின் வீட்டுல் என்ன செய்வார்கள் என பயந்து கொண்டு அமர்ந்து இருந்தார்...

ஷாம்னியை அழைத்து சத்யாவின் அருகில் அமர வைத்தவள் நேராக துசரிடம் சென்றவள் துசர் அமர்ந்து இருக்கும் சேருக்கு கீழே அமர்ந்தவள்

“ துசர் இன்னைக்கு எனக்கு ஜாயினிங் இருக்குல்ல 11 ஓ கிளாக் வர சொல்லி இருந்தாங்க, டைம் 10.45 ஆகிடுச்சு...,நான் கிளம்புறேன் நீங்க இங்க கொஞ்சம் பார்த்துகிறீங்ககளா “என்றாள்..

அவள் சொல்லி முடிக்கும் முன் அனைவரின் முகமும் அக்னியை நோக்கி ஆச்சர்யமாக பார்த்தது...எல்லோருக்கும் ரோமங்கள் சிலிர்த்து கொண்டு நின்றது..

“ என்ன பெண் இவள் “ ,இரும்பா “,” இல்லை அதைவிட கடினமானவளா” ,எப்படி இவலாள் கொஞ்சம் கூட பிசராமல் இருக்க முடிகிறது என்று...

இந்த திடம், இந்த தெளிவு,அப்பப்பா யாருக்கு வரும், அப்பா மரணப்படுக்கையில் , எதிர்காலம் கேள்விக்குறி என எதும் அவளை பாதிக்கவில்லையே என்று..

ஆனால் துசருக்கு மட்டும் தான் தெரியும் அந்த எரிமலை உள்ளே அழுது கொண்டு இருப்பதும் ,அது தன்னிடம் மட்டுமே வெடிக்கும் என்பதும்...

“இல்லை டா வேணாம் ,டைம் கேட்கலாம் இல்லை வேற பார்த்துக்கலாம்” ,அவள் முகத்தில் வழிந்த முடியை ஒதுக்கி கொண்டு கூற அக்னியிடம் கூற..

வாயில் எதுவும் பதில் கூறாமல் மறுப்பாக தலையை அசைத்தவள் “இந்த நாளைக்குதான் 2 வருஷமா நான் கஷ்டப்பட்டேன் துசர்” என்றாள்...
“ சரி வா, நான் விடுறேன்,இங்க குட்டி பார்த்துப்பான்,என்றவன் அவளுடன் கிளம்ப..

ஷாம்னி,குட்டி ,தர்ஷிகா மட்டும் ,சத்யாவோடு இருக்க மற்றவர்கள் எல்லோரும் வீட்டிற்கு கிளம்பினர்...
ஜெகநாதன் , அஞ்சுகம் இருவரும் வயதின் காரணமாக மருத்துவமனையில் இருக்ககூடாது என்று வற்புறுத்தி துசரின் வீட்டினார் அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்...

துசரும் அக்னியை அழைத்து கொண்டு அக்னியின் வீட்டிற்கு சென்றான் அவளின் சில டாகுமெண்ட் எடுப்பதற்காக...

அக்னி அறைக்குள் நுழைந்ததும் அப்படியே மடங்கி தரையில் அமர்ந்தாள்...துசர் அதை எதிர்பார்த்தவன் போல ஓடி சென்று அவள் அருகில் அமர்ந்து அவளை தன்னுள் சுருட்டி கொண்டான் ஆக்டொபஸ் போல..

“துசர் நான் என்னை தப்பு பண்ணேன் , எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது....” என வெடித்து சிதறிய கேவல்களுக்கு இடையே கேட்டாள்...
அவளை அணைத்து கொண்டு இருந்தவனுக்கு அந்த அணைப்பை தவிர வேறுபதில் தெரியவில்லை ,எனவே அதையே அழுத்தமாக கொடுத்தான்...

என்ன ஆனாலும் நானும் என் காதலும் உன்னோடு இருக்கும் என்பது போல...பின் தன் அழுகையை நிறுத்தியவள் அவன் கன்னங்களை தாங்கியவள் முகம் முழுவதும் முத்தம் கொடுத்து கொண்டே “எல்லோருக்கும் ,எல்லாத்துக்கும் நியாயம் செய்த நான் உங்களுக்கு உங்க காதலுக்கும் நியாயம் செய்யாம போய்ட்டேனே துசர்...

என்னதான் நான் அவங்களை பழி வாங்கினாலும் உங்களுக்கு நான் தரவேண்டிய பரிசுத்தமான பெண்மையை அந்த நாய்ங்க கோதறி போட்டுடாங்களே துசர்,”என கதற
என் இதயம் முழுக்க உங்களுக்கான காதல் மட்டும்தான் இருக்கு, என் இதயம் போதுமா துசர் என்று மூக்குவிடைக்க உதடு துடிக்க கேட்டாள்....

அன்று காரில் தன் காதலை சொல்லிய போது கேட்ட அதே கேள்வி, கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு மாடியில் கேட்ட அதே கேள்வி,காலை காலையில் தாலிகட்டும் போது கூட கண்களால் கேட்ட அதே கேள்வி இப்பொழுதும் கேட்கிறாள்...

இதயம் போதுமா,இதயம் போதுமா என அவள் ஓவ்வொரு முறை இறஞ்சும் போதும் துசரின் இதயம் இரண்டு துண்டாகிவிடுகிறது தன் தேவதை பெண்ணின் நிலையை பார்த்து....

அவளை அணைத்து சமாதான படுத்தியவன் “ இல்ல செல்லம்மா,அதெல்லாம் எதுமே இல்லை உன் மனசும் உன் காதலும் எனக்கு போதும்...

அதோட இல்லாமல் என் பாப்பா யார்கிட்டையும் இப்படி சுருண்டு போறது இல்லை, இப்படி முத்தம் கொடுக்கும் போது சிவந்து நின்னது இல்லை, நான் நெருங்கும் போது இப்படி .இமை பட படன்னு அடிச்சுகிறது இல்லை,” என ஒவ்வொன்றாய் செய்தவன்,

இதெல்லாம் எனக்கே எனக்கானது,என்கிட்ட மட்டுமே வரக்கூடியது...இதுல நான் இழந்தது எதும் இல்லடா” என அவளை சமாதானபடுத்த
அவன் முகத்தை ஆர்வமாக பார்த்தவள் நிஜமாவ என்றாள்

குழந்தை போல “ம்ம்”என தலைய ஆட்டியவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்து “போய் பிரஷ் ஆயிட்டுவா நேரம் ஆயிடிச்சி போகலாம் “ என்று கூறியவன் வெளியில் வந்து தன் நண்பனுக்கு கால் செய்து சமூக வலைதளங்களில் இருக்கும் அவளின் வீடியோ மற்றும் போட்டாவை அழிக்கும் வேலையை செய்தான்...

இனி சமூக வலைதளங்களில் இருக்காது என்றும் ,ஆனால் டவுன்லோட் செய்ததை எதுவும் பண்ண முடியாது என துசரின் நண்பன் கூறினான்...

அவன் பேசி முடிக்கும் போது அக்னி வந்தாள் புடவையை மாற்றாமல் சிகை அலங்காரத்தையும், முக அலங்காரத்தையும் களைத்தவள் ஒரு க்ளிப்பில் முடியை அடக்கியவள், துசர் கட்டிய தாலி மற்றும் காதில் ஒரு ஜிமிக்கியுடன் வந்தாள்..

எல்லா உடைகளிலும் பேரழகியாக தெரியும் தன்னவளை இமைக்காமல் பார்த்தவன் அவளை அழைத்து கொண்டு அவள் வேலை செய்ய போகும் காலேஜ் வாசலில் இறக்கிவிட்டவன் “ ஜாயினிங் பார்மாலிட்டி மட்டும் முடிச்சிட்டு,4 மணிக்கு வந்துடு டா,நான் போய் மாமாவை பார்த்துட்டு ஈவ்னிங் உன்னை வந்து அழைச்சிகிறேன் “ என்றான்..

“ம்ம்ம்” என்று தலையை ஆட்டியவள் “துசர் ஈவ்னிங் ஒரு முக்கியமான வேலை இருக்கு, என்கிட்ட சொல்லாம எதும் செய்யாதிங்க ,இது என் மேல சத்யம் “ என்றாள்..

தன்னை கண்டுகொண்டாளே என நினைத்தான் துசர் ,அவன் இவளை விட்டுவிட்டு சமித்தையும் வீடியோ வெளியே வந்ததற்கான காரணமானவர்களையும் கொன்று புதைத்து 10, 15 வருஷம் ஜெயிலுக்காவது சென்று வந்து தன்னவளோடு வாழ்ந்து கொள்ளலாம் என்று நினைத்தான்
அதை புரிந்த கொண்ட அக்னியை நினைத்த அவன் மெல்லிதாக சிரித்தவன் ,அவளின் பேச்சை மீற முடியாமல் அவளிடம் சம்மதாக தலையை ஆட்டியவன் மருத்துவமனையை நோக்கி சென்றான்..


துசருக்கு தன்னைவிட அக்னியின் மேல் நம்பிக்கை இருந்தது ,இந்த விஷயத்தை சும்மா விடமாட்டாள், தன்னை விட எதும் ஆக்கப்பூர்வமாக யோசிப்பாள் என்று...

மறுபடி மாலையில் அக்னி வருவதற்குள் ராமனுக்கு ஆஞ்சியோ செய்துமுடிக்க பட்டு இருந்தது,ஒருஇரண்டு மணி நேரம் கழித்து கண் முழித்த ராமன் முதலில் தேடியது அக்னியைதான்...

அவளை கை நீட்டி அருகில் அழைத்தவர் அவள் கைகளை பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டார்...
அதை பார்த்த சத்யாவிற்கும் கண்ணீர் வந்தது, பெட்டில் அமர்ந்து தன் தாயின் கையையும் பிடித்து கொண்டவள்

அவர்களை நோக்கி “ நான் உங்க பொண்ணு அக்னி, இந்த மாறி புயல் காற்றுக்கெல்லாம் அணையிற கற்பூரம் அல்ல, எரிமலை அந்த புயல் இன்னும் என் வேகத்தை ,என் பலத்தைத்தான் அதிகப்படுத்தும், இதில் நான் செய்த தவறு என்ன, எதுக்காக நான், நாமா கவலைப்படனும், வருத்தப்படனும்,தண்டனை அனுபவிக்க வேண்டியவங்க அந்த நாய்ங்க அப்பா... நாம இல்லை...


நான் உடைஞ்சி போகல,எதுக்காக நீங்க உடையனும் ,இத்தனை நாள் தனியா போராட்டுனேன்,அப்பறம் , என் துசர் வந்தாங்க ,இப்ப நீங்க,அம்மா எல்லோரும் இருக்கீங்க..
எனக்கு வேறு என்ன வேணும் “ எனக்கு என் கூட போராட அக்னியோட அப்பா வேணாம் , தொழிலதிபர் ராமன் ஜெகநாதன்தான் வேணும், “ என்றாள்..

அவளுக்கு அவர்களின் துணை தேவை இல்லை தனியே சமாளிக்க முடிந்தாலும், தன் பெண்ணிற்கு தன் உதவி தேவைபடுகிறது என்ற எண்ணம் அவர்களை தைரியமாக்கும் என்ற அவ்வாறு கூறினாள்..

காலையில் தன்னிடம் அழுத அழுமூஞ்சியா இவ்வளோ தெளிவா பேசுவது என ஆச்சர்யமாக பார்த்தான் துசர் ...

ராமனும் தன் மகளின் துணிவு,தெளிவுகண்டு சற்று தெம்பாகியவர் ”உனக்கு எதுவாக இருந்தாலும் நான் செய்றேண்டா பாப்பு “ என்றவர்..

துசரை நோக்கி “ மாப்பிளை “ என ஆரம்பிக்க அவரை தடித்தவன் “மாமா நீங்க ஷ்டேயின் பண்ணிகாதிங்க, அக்னி எல்லாம் என்கிட்ட சொல்லிட்டா ,இந்த ஜென்மம் இல்லை இன்னும் எத்தனை ஜென்மம் வந்தாலும் அக்னிதான் எனக்கு மனைவியா வரனும்னு நான் கடவுளை வேண்டுகிறேன் ,” என்றான்..

ராமன் சந்தோசமாக கண்களை மூடிக்கொள்ள ,சத்யாவும் கையை எடுத்து கும்பிட்டு நன்றி கூறினார்....அவர் கையை இறக்கி விட்டவன் “ வேணாம் அத்தை பிளீஸ் “என்று தர்ம சங்கடமாக கூறினான்..

அந்த நேரம் குட்டி,ஷாம்னி,தர்ஷிகாவை என அனைவரும் உள்ளே வந்தனர்,காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்தால் வழு கட்டாயமாக அவர்களை அழைத்து சாப்பிடவைத்து சத்யாவிற்கும் வாங்கிவந்தான்..

உள்ளே அக்னியை பார்த்ததும் வேகமாக வந்தவர்கள் ஷாம்னி வலப்புறமாகவும்,குட்டி இடபுறமாகவும், தர்ஷிகா நேரடியாகவும் கட்டிக்கொண்டு அவளை சமாதான படுத்துவதாக எண்ணி தன்னை சமாதானப்படுத்தி கொண்டார்கள்..

அக்னி பரிதாபமாக முழிக்க துசர் “ ஏய் என் பொண்டாட்டி தைரியமாகதான் இருக்காள், நீங்க இப்படி கட்டிபிடிச்சிக்கிட்டா நான் எங்க பிடிக்கிறது “ என சிரித்துக்கொண்டே கேட்டான்...

குட்டியும் ,ஷாமினியும் சிரித்து கொண்டே விலக தர்ஷிகா மட்டும் அப்படியே இருந்தாள்... அவளை வலுக்கட்டாயமாக பிரித்த அக்னி அவளை சமாதானபடுத்தினாள்...

பெண்களே எது நடந்தாலும் தைரியமாக உங்களை நம்பகமானவருக்களுக்கு தெரியப்படுத்துங்கள்..எல்லாம் மான அவமானங்களும் நம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது,

பெற்றோர்களே நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு தைரியம் செல்லுங்கள் இன்னும் நியாயம்,நீதியை காப்பாற்றும் நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் உங்களுக்கு உதவ ,உங்களுக்கு சரியென பட்டாள் அக்னியை போல அவர்களை களை எடுக்கவும் தயங்காதீர்கள்...அது உங்கள் அடுத்த தலைமுறை தவறுகளை எச்சரிக்கும்....

பின் கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு துசர் மற்றும் மாறனை அழைத்துக்கொண்டு நீதிபதியாக இருக்கும் தன் தாத்தாவின் நண்பனின் பையனை பார்க்க சென்றாள்...

அங்கே அமர்ந்து அவர் தன் விடியோவை பார்க்க இவள் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்து இருந்தாள்..அவர் தான் அந்த விடியோவை ஒரே நிமிடம் பார்த்து மூடிவைத்தவர்...

என்ன செய்யலாம் என்பதை பற்றி அனைவரும் விவாதித்தனர்...

போதுமா...
 
Status
Not open for further replies.
Top