All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிவிஷன் மிகவும் தங்கமானவர். தன்மனைவியை வாக்கிங் கூட்டிச் செல்லவே எரிச்சல்படும் ஆண்களுக்கு மத்தியில் அவர் இரண்டு பெண்களையும் வாக்கிங் அழைத்துக்கொண்டு வந்துள்ளாரே,

இப்போது ரஞ்சனிக்கு பிரசவ நேரம் நெருங்கிவிட்டது. நந்தினிக்கோ இது ஐந்தாம் மாதம். நந்தினி ஒரு கையில் கணவணை இறுகப் பிடித்திருந்தாள், அவளது ஆதரவிற்காக. மற்றொரு கையால் ரஞ்சனியைப் பிடித்திருந்தாள், ரஞ்சனியின் பானை வயிற்றை பார்த்து, ரஞ்சனியின் பாதுகாப்பிற்காக.

நந்தினி நீ இப்படி என்ன இருக்கப்பிடிச்சிருந்தா நா எப்படி நடப்பது, என்ன பாதுகாக்குறேன்ற போர்ல என்ன படுத்தி எடுக்குற டி என்றாள் ரஞ்சனி.

அதைக்கேட்டு நிவிஷன் சிரித்துவிட, நந்தினி தன் முழங்கையால் அவரது விலாவில் இடித்தாள். பாருங்க ரஞ்சனி, உங்க பிரண்டு உங்கமுன்னாடியே என்ன அடிக்கிறா!! என நிவிஷன் ரஞ்சனியிடம் முறையிட்டார்.

அப்படியா! என் தோழி அடிக்க வாய்ப்பிள்ளையே!, அடிச்சது உங்க மனைவியாத்தான் இருக்கணும் என்றவள் நைசாக நந்தினியை முன்னே விட்டு பின்னே நடந்தாள்.

நந்தினி, ஆமா அடிச்சாங்க, தையல்போடுவோமா என கணவனுடன் இணைந்து முன்னே செல்ல, முகத்தில் தோன்றிய புன்னகையுடன் ரஞ்சனி இரண்டடி பின்னால் நடந்தாள்.

அடுத்த இரண்டடிகளில் அவளது கால்கள் லேசாக தடுமாறியது. லேசான வலிபோல உணர்ந்தாள்.

அது அடுத்த சில நிமிடங்களில் பிரசவ வலியாக மாற, ரஞ்சனியால் நிற்க முடியவில்லை. இன்னும் பத்து நாட்கள் இருக்கிறதே என நினைத்தாள். அடுத்த ஒரெட்டும் எடுத்து வைக்க முடியாமல் போக நந்தினி என அழைத்தவண்ணம் கீழே சரிய ஆரம்பித்தாள். அப்போது சட்டென அவள் பக்கம் சென்ற கார் நின்றது. அவள் கீழேவிழும் முன் இரண்டு வலிய கரங்கள் அவளை தாங்கிப்பிடித்தது.

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 
நந்தினி ரஞ்சனி வாழ்க்கையை பற்றி கூறுவதல்லாம் எதார்த்தத்தை எடுத்துக் காட்டுவதாக இருக்கு சகோ
ரஞ்சனியை தாங்கிபிடித்த கைக்கு சொந்தமான புது ஹீரோ யார் சகோ
😄😄😄😄😄
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருபத்தி எட்டாம் பகுதி..

ரஞ்சனியை, காரில் ஏற்ற நிவிஷனும், நந்தினியும் உதவினார்கள்.

நந்தினி காரின் முன் பகுதியில் ஏறிக்கொண்டாள். காரின் பின்பகுதியில் இருந்த இரண்டு ஆண்களுக்கும் சரிமாரியாக உதை விழுந்தது.

நந்தினிக்கு கண்களை முன்னால் திருப்ப முடியவில்லை. ரஞ்சனி பொறுத்துக்கோ என ஓயாமல் சொன்னவள் கண்கள், அந்த புதியவன் மீதே நிலைத்திருந்தது.

அவனை இவ்வளவு பக்கத்தில் பார்த்தது அதிர்ச்சி என்றால், அதை விட அதிர்வு, தன்னை யார் காப்பாற்றுகிறார்கள் என தெரியாமல் அவனை, வலிதாங்காமல் சரமாரியாக உதைக்கும் தோழி.

கணவன் ஒருபுறம் தோழியிடம் உதை வாங்குகிறார். இதில் யாரைப் பொறுத்துக்கொள்ளச் சொல்வது என தெரியாமல், ஓயாமல் அந்த வார்த்தையை பயன்படுத்தினாள், பொதுவாக.

அவன், அந்த புதியவன் லண்டன் அரச குடும்பத்தின் இளையவாரிசு, ஜார்ஜ். வலிதாங்காமல் ரஞ்சனி அவன் தோளிலும், மார்பிலும் உதைக்க, அவன் கடும் கோபத்தில் அமர்ந்திருந்தான்.

ஜார்ஜ் ரஞ்சனியை தடுக்கவும் இல்லை. இப்படி ஒரு பெண், யாரென்றே தெரியாதவள் தன்னை உதைப்பதை ஏற்க்கவும் முடியவில்லை.

நிவிஷன்தான், ரஞ்சனி ஜார்ஜை உதைப்பதை கைநீட்டி தடுத்துக்கொண்டிருந்தார். இடைஇடையே அவர் ஜார்ஜிடம் மன்னிப்பு வேண்டிக் கொண்டே ரஞ்சனியின் உதையை சமாளித்தார்.

ஒரு கட்டத்தில் ரஞ்சனி உதைப்பதை நிறுத்தி அமைதியாகிவிட, நிவிஷனுக்கும் , நந்தினிக்கும் அப்பாடா!! என இருந்தது.

மருத்துவமனை பக்கத்துல வந்துடுச்சு ரஞ்சனி!!, என நந்தினி, ரஞ்சனியின் கையை தட்டிக்கொடுத்தாள்.

கண்ணைத்திறக்காத ரஞ்சனி, காற்றில் நந்தினி கைகளைத்தேடி தன்கையை தூக்க, அதே நேரத்தில் குழந்தை வயிற்றுக்குள் இடமிருந்து வலம் நகர, வலிதாங்காமல், ஆ... ஆஆஆ வென கைகளை பிடித்துக்கொண்டு கத்தினாள்.

ரஞ்சனி பிடித்திருந்தது, ஜார்ஜின் கைகளை, அவள் ஜார்ஜின் கைகளை பிடித்துக்கொண்டு கத்தியது. அவன் உயிர்வரை ஊடுருவியது.

அவனுக்கு தன் அன்னையும் இவ்வாறு வலி அனுபவித்துதான் உயிரை விட்டார்களோ என ஞாயபகம்வர, இதுவரை, ஏதோ ஒரு பெண்ணாக தெரிந்த ரஞ்சனி, இப்போது, வலியை ஜீரணித்து, மகவைபிரசவிக்கும், தாயாக தெரிந்தாள்.

அவனும் ரஞ்சனியின் கையை ஆதரவாக பிடித்துக்கொண்டான்.

மருத்துவமனையில் ரஞ்சனியை சேர்பித்துவிட்டு, நந்தினி லதாவிற்கும், ராஜனுக்கும் போனில் விசயத்தை தெரிவித்தாள்.

ஜார்ஜை சுற்றி மொத்த மருத்துவமனையும் இருந்தது. நிவிஷனால் நன்றி கூட தெரிவிக்க முடியவில்லை.

பெண்கள் ஒருபுறம் செல்ஃபி எடுத்துக்கொள்ள போட்டிபோட , இளையவர்கள் அவனிடம் கைகுலுக்க ஆர்பரிக்க, அவனது, மெய்காப்பாளர்கள் அவனை பாதுகாத்து காரில் ஏற்றி புறப்பட்டுச் சென்றனர்.
 
Top