All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
eed364d6f96ec49a090003e1297ebb78.jpg

அதிர்ந்து போன ஆல்வின் ,"சார் !...........உங்களுக்கு எப்படி சார் ....தெரியும் ?என்றான் திகைப்புடன் .

"சில்லி கொஸ்டின் ஆல்வின் .....டூ யூ திங்க் ஐ ஆம் இடியட் ?????ஆல்ரெடி சுமனோடு சேர்ந்து ஐந்து பேர் என் வாட்ச்லிஸ்ட்ல இருகாங்க .....அவங்க தும்பினா கூட எனக்கு நியூஸ் வந்துடும் ......வாயை மூடிட்டு இருந்தா கையால் ஆகாதவன் என்று நினைத்து விட்டாயா ...ஏற்கனவே ரெண்டு உயிரை எடுத்தாச்சு ...எடுத்த பிறகு தான் தெரிந்தது ரித்திகா மரணத்திற்கு அவங்க காரணம் இல்லை என்று ....எல்லாம் வெறும் அம்பு ...எய்தவன் வேறு யாரோ .....சின்ன clue கிடைக்கட்டும் ....மரணமே மேல் என்று கதற வைக்கிறேன் "என்றவனை கண்டு ஆல்வின் மிடறு விழுங்கினான் .

சூர்யா குரலை உயர்த்தவில்லை .சத்தம் போட்டு கத்தவில்லை ,நரம்புகள் புடைக்க கர்ஜிக்கவில்லை .ஆனால் இவை அனைத்தும் அவன் அமைதியின் பின் இருந்தன .கண்களில் பல நூறு எரிமலையின் கோபம் மின்னியது .முகம் கற்பாறையாக இறுகி போனது .
"சார் ....சார் ...அப்போ நேத்து அங்கே ...அங்கே ...."என்றான் ஆல்வின்

"ஹ்ம்ம்ம் ...உத்தம் அங்கே தான் இருந்தான் .....சுமனை கருணா புரட்டி எடுத்தது எல்லாம் லைவ் ஷோவ்வா பார்த்துட்டேன் ......சுந்தர்பன் சதுப்புநில காடு கான்செப்ட் நல்லா தான் இருந்தது ......ஆமாம் உங்களுக்கு எல்லாம் என் நினைவே வராதா ?????கருணா சிஸ்டர் marriage அப்போ நான் இந்தியாவிலேயே இல்லை தான் .ஆனா அதற்காக என்னிடம் ஒரு ஹெல்ப் கேட்க கூட உங்களுக்கு எல்லாம் தோணலியா .....விஷயமே தெரியாது ...இல்லைன்னா அந்த திவாகரை எப்பொழுதோ தூக்கிட்டு ரூபிணிக்கு திருமணம் செய்து வைத்து இருப்பேன் ......கருணாவும் இப்படி சோனா கிட்டே மாட்டி இருக்க மாட்டான் .....இப்போ அந்த பேய் சுமனோடு சேர்ந்து ஆடிட்டு இருக்கு ....இவனும் 'எங்கு இருந்தாலும் வாழ்க ,உன் இதயம் அமைதியில் வாழ்க ...மஞ்சள் வளத்துடன் வாழ்க 'என்று பாடிட்டு இருக்க மாட்டான் ....எந்த காலத்துல இருக்கான் அவன் ......ஸ்டுபிட் ....அவனவன் காதலுக்காக எது எதையோ தியாகம் செஞ்சுட்டு இருக்காங்க .....இவன் தான் காதலித்த பெண்ணையே அடுத்தவனுக்கு தியாகம் செய்கிறான் ......அப்படியே சோனவை திருத்தி மறுவாழ்வூ கொடுக்க போகிறானா என்ன .....மதுரா எவ்வளவூ precious தெரியும் தானே ....இடியட் .......மத்தவனுக்கு தாரை வார்க்கிறானாம் .....

சார் !அப்போ மதுரா ....."என்றான் ஆல்வின்

"மதுரா !இனி என் பொறுப்பு ஆல்வின் ....என்னை தாண்டி தான் எந்தவித ஆபத்தும் அவளை நெருங்க முடியும் .....ஆல்ரெடி அதற்கான வேலைகளை நான் ஸ்டார்ட் செய்து விட்டேன் ........கருணாவிடம் சொல்லிவிடு ....இனி கஜா இண்டஸ்ட்ரிஸ்ல ராசி வேலை பார்க்க மாட்டா ....சோனா ,சுமனால் அவளுக்கு வரும் ஆபத்தை தடுக்க நான் இருக்கேன் ......நீ கிளம்பலாம் ஆல்வின் ...."என்றான் சூர்யா .

சூர்யாவின் இந்த அதிரடியை ஆல்வின் சுத்தமாக எதிர் பார்க்கவில்லை .....கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இருக்கிறதே என்று மண்டையை பிய்த்து கொண்டான் .சூர்யா நினைத்ததை நடத்தி பழக்க பட்டவன் .....அவன் செயல்கள் எல்லாமே அதிரடியாக தான் இருக்கும் .....எதிராளி சிந்திக்க அவகாசமே கொடுக்க மாட்டான் ....எதிலும் ஜெயிப்பது சூர்யாவாக தான் இருக்கும் .அவன் தோல்வியை சந்தித்த இரண்டாவது இடம் ரித்திகாவிடம் மரணத்தில் மட்டுமே ...முதல் தோல்வி மதுராவிடம் .

ஆல்வின் கிளம்பிய உடன் அவன் சூர்யா எதிரே வந்து நின்றான் உத்தம் புன்னகையுடன் ."அடுத்த திருமணம் சீக்கிரம் எதிர் பார்க்கலாமா ஜீ ?"என்றான் அவன் ஹிந்தியில்

"உத்தம் !......."என்றான் சூர்யா புன்னகையுடன் ஒரு விரலை ஆட்டி

"சிரித்து மழுப்பதே ஜீ ......காலேஜ் டைம்லேயே நீ மதுரா மேடம் பற்றி விசாரிக்க சொன்னது என்னிடம் தான் ஜீ ....எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காத உன்னை இம்ப்ரெஸ் செய்த முதல் பெண் மதுரா மேடம் தான் என்று எனக்கு தெரியும் .....என்னிடம் ஏன் பொய் சொல்ல ட்ரை பண்றே ......ஒரு தடவை மிஸ் ஆகிட்டாங்க ...உனக்கும் ரித்திகா மேடம் கூட உங்க பாரெண்ட்ஸ் மேரேஜ் முடிச்சுட்டாங்க .....நீ கருணா இல்லை ஜீ .....தியாகின்னு பட்டம் வாங்க .....உன்னுடையது உனக்கே என்று இருப்பவன் ....இந்த தடவை மிஸ் மிஸ்ஸாக மாட்டாங்க ...மிஸஸ் ஆவாங்க ......ஐ நோ மை ஜீ .....என்ஜோய் ..."என்றான் உத்தம் புன்னகையுடன் .

"எல்லா ஏற்பாடும் செய்து விட்டாயா உத்தம் .....?"என்றான் சூர்யா

"ஈவினிங் கிளம்பிடலாம் ஜீ .....சோனாவை பாலோ செய்து சுஷ்மிதா போய் இருக்கா .....எங்கே இருந்தாலும் சோனவை பேக் செய்து நம்ம இடத்திற்கு தூக்கி வந்துடுவாங்க .....ஜீ ...."என்றான் உத்தம் .

உத்தம் போனவுடன் தன் சேப்டி லாக்கரை திறந்த சூர்யா அதில் இருந்த பென்டிரைவ் ஒன்றை வெளியே எடுத்து லேப்டாப் உடன் இணைத்தான் .ஒரு வீடியோ ஓட ஆரம்பித்தது .அதில் மேடையில் பாடி கொண்டு இருந்தது மதுரக்ஷியே தான் .அந்த வீடியோவை ஓட விட்டவன் அதை ரசிக்க ஆரம்பித்தான் .

PENANCE WILL CONTINUE................... தவம் தொடரும்..................
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 24
உத்தம் போனவுடன் தன் சேப்டி லாக்கரை திறந்த சூர்யா அதில் இருந்த பென்டிரைவ் ஒன்றை வெளியே எடுத்து லேப்டாப் உடன் இணைத்தான் .ஒரு வீடியோ ஓட ஆரம்பித்தது .அதில் மேடையில் பாடி கொண்டு இருந்தது மதுரக்ஷியே தான் .அந்த வீடியோவை ஓட விட்டவன் அதை ரசிக்க ஆரம்பித்தான் .
samantha-tweets-that-she-will-not-sign-films-for-a-while-photos-pictures-stills.jpg


பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்


நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு... ஆ....
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு


வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு
கலைஞன் ஆகினான் கலைஞன் ஆகினான்


நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு


சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்
மயக்கம் கொண்டதேன்


நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு..ஆ...
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு


என்று மதுரா பாடி கொண்டு இருந்ததை திரும்ப திரும்ப ஓட விட்டு ரசித்து கொண்டு இருந்தான் .உன்னை ஒரு தடவை மிஸ் பண்ணிட்டேன் ராசி .இந்த தடவை மிஸ் ஆக மாட்டே ......ஐ வில் மேக் யூ மைன் டியர் ....."என்றான் கண்களில் காதலோடு

(அடேய் என்னங்கடா நடக்குது இங்கே ......சூர்யா கருத்து படி விஜய் மதுராவை லவ் செய்து இருக்கான் .உத்தம் பேசியதை பார்த்தால் மதுராவல் சூர்யாவும் இம்ப்ரெஸ் ஆகி அவளை பற்றி விசாரிக்க சொல்லி இருக்கான் ....ஆனா ரெண்டு பேருமே மதுரா கிட்டே ப்ரொபோஸ் செய்தார்களா ......செய்தார்கள் என்றால் சூர்யா ஏன் ரித்திகாவை மணக்க வேண்டும் ????விஜய் சோனாவிடம் மாட்ட வேண்டும் ...விஜய் கூட தங்கைக்காக காதலை தியாகம் செய்தான் என்று எடுத்து கொண்டாலும் சூர்யா இது போன்ற தளைகளுக்கு கட்டு படாதவன் ஆயிற்றே.அவனும் தன் காதலை மதுராவிடம் சொன்னது போலெ தெரியலையே ...இப்படி அவள் வீடியோவிடம் டயலாக் விட்டுட்டு இருக்கான் ....யாராவது ப்ரொபோஸ் செய்து இருந்தால் .....இந்நேரம் இவர்கள் இருவரில் ஒருவருக்கு மனைவியாகி இருக்க வேண்டியவள்,சோனாவிடம் ஏன் மாட்டி தவிக்கிறாள் ????எங்கு விதி விளையாடி இவர்களின் பாதைகளை சேர விடாமல் செய்தது ?????)

.அவனை டிஸ்டர்ப் செய்யாமல் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிவகாமி பாட்டி வீட்டுக்கு ஒரு விசிட் அடிப்போம் .அங்கேயும் பிளான் போடறாங்க என்னனு தான் பார்த்துட்டு வருவோம் .
(பிளான் ப்ளனா போடுறாங்க பா ....எப்படியோ மதுரா safe பா இருந்தா ஓகே தான் ....)

நுங்கம்பாக்கத்தில் இருந்தது 'வெற்றி இல்லம் '.முன் பரந்து விரிந்த தோட்டம் .அதன் நடுவே செயற்கை நீரூற்று .அந்த நீர் ஊற்றின் நடுவே பளிங்கு கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதியவாறு நின்று இருந்தார் .மூன்று அடுக்கு மாளிகையில் கீழ் தளத்தில் அமைந்து இருந்தது சிவகாமி பாட்டியின் அலுவலகம் .மரகத்திடம் பேசிய பின் அவர் உள்ளம் உலைக்களமாக கொதித்து கொண்டு இருந்தது .ஒரு நாட்டினை ஆளும் ராணியின் கம்பீரத்தோடு இருந்த அவர் யோசனையில் இருந்தார் .கை எடுத்து கும்பிட தோன்றும் தெய்வீக அழகு .

ஏதோதோ மனக்கணக்கு போட்டவர் இண்டர்காம் எடுத்தார் ,"வெற்றி !ருத்ராவை கூட்டிட்டு ஆபீஸ் ரூமுக்கு வா "என்றார் .

ஐந்தே நிமிடங்களில் பேரனும் மகனும் உள்ளே நுழைய அவரின் கண்களில் இருவரையும் கண்டு கர்வம் தோன்றியது .
"சொல்லுங்கம்மா ..."என்றார் வெற்றி தாயின் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்த படி .

ருத்ரா பாட்டியின் நாற்காலி ஹண்டேல் மேல் அமர்ந்து கொண்டு ,பாட்டியின் தலை மேல் தன் தலையை வைத்து கொண்டான் .

வெற்றி பார்ப்பதற்கு அந்த கால நடிகர் பிரபு போலவும் ,அவர் மகன் வெற்றி விக்ரம் பிரபு போலவும் இருந்தனர் .
30275382.jpg

"அக்கா !போன் செய்து இருந்தாங்க ..."என்றார் உணர்ச்சி அற்ற குரலில் .

ருத்ராவின் கை பாட்டியின் தோளில் அழுத்தமாக பதிய ,வெற்றியின் முகம் கோபத்தால் சிவந்தது .

"இந்த தடவை என்ன செய்து வைத்தான் அந்த ஆளு ....."என்றார் வெற்றி நரம்புகள் புடைக்க

"இந்த தடவை அந்த ஆள் கிடையாது .....சோனா ...."என்றார் சிவகாமி

அந்த ஆளும் அவர் பொண்ணும் வளர்த்த விஷப்பாம்பு அது ...ஏதாவது செய்யலைன்னா தான் புதுசு .....வேறு வேலை வெட்டி எதுவும் இல்லாமல் மத்தவங்க வாழ்கையை அழிப்பதே குறிக்கோள் என்றும் அலையும் பிசாசு கூட்டம் வேறு என்ன தான் செய்யும் ?"என்றார் வெற்றி ஏளனமாக .

"மதுரா .....சேதுவின் தம்பி சங்கரனின் மகளும் கூட.உனக்கு தெரியுமா கண்ணா ? "என்றார் சிவகாமி

"கருணாவின் உறவூ என்று தெரியாது .....தொழில் முறை மீட்டிங்கில் அவனுடன் பார்த்து இருக்கிறேன் ....வெரி கிளேவ்ர் கேர்ள் ....ஹார்ட் worker .....ஜெம் of அ person ....நிறைய சாரிடி (charity ) நிகழ்ச்சிகளில் பார்த்து இருக்கேன் ......"என்றான் ருத்ரா .

"யார் பாட்டி சோனாவிடம் மாட்டியது மதுரா தானே ?விடியற்காலை கருணா போன் செய்து இருந்தான் ....ரகு மதுரா பிரதர் நம்முடைய பெங்களூரு சாப்ட்வேர் கம்பெனியில் தானே வேலை செய்யறான் .....அவனை சென்னை ப்ராஞ்சுக்கு மாத்திட்டேன் ..."என்றான் ருத்ரா .
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
(அடங்க ...இந்த புள்ள இந்த மாதிரி நல்ல வேலை எல்லாம் செய்யுதா .....குட் குட் ....நான் கூட சாப்பிட தெரியும் ,தூங்க தெரியும் தான்னு நெனச்சேன் ....குழந்தை ரொம்ப நல்லவளா தான்பா இருக்கு )

"அவளை தான் சுமனோடு சேர்ந்து நாசம் செய்ய முதல் அட்டெம்ப்ட் நேத்து ட்ரை செய்து இருக்கா ..."என்றவர் மரகதம் தன்னிடம் கூறியவற்றை அவர்களிடம் கூறினார்.

"ப்ளடி பிட்ச் ....பெண்ணா இவ .....கருணா ஏன் இன்னும் இரண்டு பேரையும் உயிரோடு விட்டு வச்சு இருக்கான் .....அவனை அங்கேயே பொலி போடுவதை விட்டு .....இடியட் ...இடியட் .....டாம் இடியட் ..."என்று ஹை பிட்சில் கத்தினான் ருத்ரா .

தன் பாட்டிக்கு கஜாவால் நடந்த கொடுமைகளுக்கு பிறகு பெண்களிடம் யாராவது தவறாக நடந்தால் ருத்ராவின் கோபம் எல்லை மீறி விடும் .

"ருத்ரா !காம் டவுன் மை பாய் .....கொலை தான் எல்லாவற்றிக்கும் தீர்வூ என்றால் நாட்டில் மிஞ்சுபவர்கள் வெகு சிலர் மட்டுமே இருப்பார்கள் .....அதுக்குன்னு புத்தர் ,இயேசு பிரான் ரேஞ்சுக்கு கருணை காட்ட சொல்லலை ....நாம அடிப்பது ஒரே ஒரு அடியா இருக்கனும் ....ஆனா எதிராளி என்னைக்குமே திரும்ப எழ கூடாது ருத்ரா .....இப்போதைக்கு சுமன் அவுட் ஆப் தி picture ....அவன் திரும்ப வந்தா பார்த்துக்கலாம் .....நாளை காலைக்குள் நாலு கோடி ரெடி செஞ்சு,அதை அந்த சோனாவின் முகத்தில் விட்டு எறிஞ்சுட்டு மதுராவை நம்ம ஆபீஸ்க்கு கூட்டி வந்துடு ....."என்றார் சிவகாமி .

(பாட்டி செம்ம தான் போங்க நீங்க ...என்னமா பேசறீங்க ....ஒரே அடி ...ஆனா எதிராளி எழுந்துக்க கூடாது .....கஜா உமக்கு சங்கு ரெடிலே)

"சரிங்க பாட்டி "என்றான் ருத்ரா பணிவாக

"அப்புறம் அந்த கஜா இண்டஸ்ட்ரீஸ் 'சீனா 'டீல் எந்த நிலைமையில் இருக்காம் ?"என்றார் சிவகாமி

"கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் ப்ராஜெக்ட் மா ....எல்லாம் ஹை எண்டு ,ஹை காஸ்ட் உடைகள்.கருணாவை ஒத்துக்கிட்டு இந்த தடவை அந்த ஆளே நேரிடையாக களத்தில் இறங்குவான் போலெ இருக்கு .....ஏற்கனவே மத்த எல்லா தொழிலும் கடனில் தான் இருக்கு ....மூல பொருள் ,சம்பளம் ,புது மெஷின் என்று 60-70 கோடி கடன் வாங்குவான் என்று கருணா சொன்னான் . .....2 கோடி ப்ரோபிட் எதிர்பார்க்கிறான் .......60-70 கோடிக்கு அந்த 'கஜா போர்ட் ',அந்த ஆளின் ரிசார்ட் பிலேட்ஜ் செய்வான் போலெ இருக்கு ...."என்ற வெற்றி சிவகாமியிடம் ஒரு பைலை கொடுத்தார் .

"கடன் தொகைக்கு இது போதாது ....கஜா இண்டஸ்ட்ரீஸ் தொழில் பங்குகளை நிச்சயம் விற்பான் ....."என்றார் பைலை புரட்டியவாறு .

"நிச்சயமா ....100 கோடி புரட்டுவது சுலபம் இல்லையே ......கடன் பலரிடம் கேட்டு இருக்கான் ....நாம சொல்லியதால் யாரும் தர தயாராக இல்லை ......ஆடும் வரை ஆடி விட்டான் .....இப்போ உதவின்னு கேட்டா அவனவன் செய்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள் ....."என்றான் ருத்ரா ஏளனமாக .

"நம்மிடையே உள்ள இந்தேர் இண்டஸ்ட்ரீஸ் சேர்ஸ் எவ்வளவூ "என்றார் சிவகாமி

"இருபத்தி ஐந்து %"என்றார் வெற்றி .

"நோ வெற்றி ...ஐம்பத்து ஐந்து % சேர்ஸ் நம்முடையது வெற்றி ...."என்றார் சிவகாமி புன்னகையுடன் .

"எப்படி பாட்டி நாம எதுவும் வாங்கலையே ...."என்றான் ருத்ரா குழப்பத்துடன் .

"நமக்காக அந்த ஆளே கொடுத்து இருக்கான் ..மரகதம் ,கனகா ,பூரணி சேர்களை மறந்து விட்பீர்களா ????மூன்று பேரின் சேர் 30% நம்முடையது இருபத்தி ஐந்து .....சோ ஐம்பத்தி ஐந்து ....இப்போ காசிலிங்கம் எங்கே இருக்கான் ....???"என்றார் சிவகாமி .

"நீங்க சொன்னது போலெ நம்ம சிங்கப்பூர் பிரான்ச்க்கு அனுப்பிவிட்டோம் பாட்டி ...."என்றான் ருத்ரா .

"இனி அந்த ஆள் சேர் விற்றால் வேறு யார் வாங்கினாலும் அது நம்மிடையே வந்து சேர வேண்டும் ....அதற்கான ஏற்பாடுகளை செய்து விடுங்க ...."என்றார் சிவகாமி .

"டேக் ஓவர் செய்ய போறீங்களா பாட்டி ...????"என்றான் ருத்ரா ஆர்வமாக ...

"நோ ருத்ரா ...இந்தர் இண்டஸ்ட்ரிஸ்சை மண்ணோடு மண் ஆக்க போறேன் ....அந்த ஆளோட பெயர் ,பதவி ,பிரெஸ்டிஜ் எல்லாம் போய் நடு ரோட்டில் நான் நின்றது போலெ அந்த ஆளும் நிற்கணும் ....நான் கேட்ட டாக்ஸ் ரிப்போர்ட் வந்துடுச்சா ...????"என்றார் சிவகாமி கண்களில் எரிமலை மின்ன .

"கருணா அனுப்பி இருக்கான் ....பத்து வருடமாய் மற்ற கம்பெனிகளில் வரி ஏய்ப்பு நிறைய நடந்து இருக்கு ....கம்பெனி லாஸ் என்று காரணம் காட்டி இருக்கார் ...முக்கால்வாசி சொத்து பினாமி பேரில் இருக்கு ....வீட்டில் உள்ள நகை ,பணம் எதற்குமே சௌர்ஸ் கிடையாது ....அந்த ஆளோட பீச் ரிசார்ட் பலவற்றில் ட்ரக்ஸ் சேல்ஸ் ,சூதாட்டம் ,மாபியா ,பெண்கள் கடத்தல் ,பாலியல் தொழில் எல்லாம் நடக்குது ....பணம் வந்தால் போதும் என்று இந்த ஆளும் எதையும் கண்டுப்பது இல்லை ....அந்த ஆள் புத்தி தான் தெரியுமே ....பணத்தை மட்டும் வாங்கிட்டு எது நடந்தாலும் ,யார் செத்தாலும் கண்டு கொள்வதே இல்லையாம் ....சூர்யா பிரதாப் தெரியும் தானே ...அவர் மனைவி கூட இப்படி ஒரு ரெசார்ட்டில் இருந்து இருக்கிறார் ....கருணாவும் ஆல்வினும் தான் அவங்க உயிரை காக்க ட்ரை செய்து இருகாங்க ....ஆனா காப்பாற்ற முடியவில்லை ...."என்றான் ருத்ரா .

"ரித்திகா ஆக்ஸிடெண்டில் இறந்ததாக தானே ருத்ரா டிவியில் சொன்னார்கள் ....நீ வேறு ஏதோ சொல்றே ...."என்றார் சிவகாமி அதிர்ச்சியுடன் .

"இந்த உண்மை சிலருக்கு தான் தெரியும் பாட்டி .....சூர்யா தங்கை சந்திராவை கடத்த தான் முயன்று இருக்கிறார்கள் ....ஆனா சந்திராவிற்கு பதில் அன்று அவர்களிடம் மாட்டியது ரித்திகா ....ரித்திகாவை ஏன் எதற்கு கடத்த முயன்றார்கள் என்பது தான் சூர்யாவிற்கு தெரியலை ...."என்றான் ருத்ரா .

"ஏதாவது ஹெல்ப் தேவை பட்டால் செய்வதாக சூர்யாவுக்கு சொல்லிடு ருத்ரா ...இந்த டாக்ஸ் பைலை நான் சொல்லும் போது சி .பி.ஐ ,சென்ட்ரல் இன்காம் டாக்ஸ் டிபார்ட்மென்ட் ,விஜிலென்ஸ் கமிசின் ,அந்த ரிசார்ட் பற்றி மினிஸ்ட்ரி ஒப்பி வுமன் ,நார்க்கோடிக்ஸ் எல்லாத்துக்கும் போட்டோ வீடியோ ஆதாரத்துடன் அனுப்பிவிடு .....அந்த காபியாய் அப்படியே republic டீவிக்கும் அனுப்பிவிடு ...அவங்க தான் நடுநிலைமையாக இருப்பாங்க ...ஆல் இந்திய காவேரஜ் கிடைக்கும் ....நான் சொல்லலும் போது இதை செய் ....நாளைக்கு முதலில் மதுராவை மீட்போம் ...."என்றார் சிவகாமி

(பாட்டி கிடைக்கும் கேப் எல்லாம் நல்லா ஆப்பு வைக்கறீங்க .....ஆக்டர் சூர்யா 'வேல் 'படத்தில் கலாபவன் மணிக்கு இப்படித்தான் ஆல் பக்கம் செக்மேட் வைப்பார் ...அதை விட செமையா இருக்கு பாட்டி உங்க பிளான் .)

இவர்கள் இப்படி பிளான் செய்து கொண்டு இருந்த வேளையில் இவர்கள் காக்க போராடும் மதுராவை தோட்டத்தில் விட்டுவிட்டு வந்துட்டோம் ....அங்கே ஒரு விசிட் அடிப்போம் .அவ்வளவூ தைரியமா மதுரா பாப்பா தோள் மேல் கை வைக்கும் துணிவூ யாருக்கு உண்டு

தோட்டத்தில் விஜய் பற்றிய எண்ணங்களில் மூழ்கி இருந்தவளின் தோளில் ஒரு ஆண் கை விழ திகைத்து போய் எழுந்தாள் மதுரா .அங்கு நின்று இருந்தான் ரகு கோபத்துடன் .

"ரகு !...நீ எப்படிடா இங்கே ..."என்றவளுக்கு பதில் கூறாத ரகு அவளை இழுத்து வைத்து கன்னம் கண்ணமாய் அறைந்து தள்ளினான் .

"உன்னை எல்லாம் வெட்டி பொலி போடணும்னுடீ .....இத்தனை பேர் சொன்னோமே வேண்டாம் வேண்டாம் என்று பெரிய இவளாட்டம் கிளம்பி வந்துட்டே ....நேத்து அந்த சுமன் கிட்டே மாட்டி ஒண்ணு கிடக்க ஒன்று நடந்து இருந்தால் குடும்பமே தற்கொலை தான் செய்து கொண்டு இருக்க வேண்டும் .....பைத்தியக்காரி .....பெருசா பாசம் வைக்கறாளாம் .....அந்த சனியன் புத்தி தான் தெரியுது இல்லை ....நம்ம அப்பா ,அம்மா வாழ்க்கையில் விளையாடிய போதே தெரியலை அது எவ்வளவூ கேவலமானவேலை எல்லாம் செய்யும் என்று ....என் முதலாளி ருத்ரா
என் பாஸ் விடியற்காலை நாலு மணிக்கு போன் செய்து சோனா செய்து வைத்த வேலையை சொல்றார் ...இதயமே நின்னு போச்சுடீ பாவி ......மனசுக்குள்ள பெரிய இவன்னு நினைப்பு ....இங்கே வந்து சேரும் வரை,உன்னை முழுசா பார்க்கும் வரை என் உயிர் என்னிடம் இல்லை .....போ போய் கிளம்பு ....நீ வேலை பார்த்து கிழித்தது போதும் ....ஊருக்கு முதலில் கிளம்பு .......அடுத்த முகுர்த்தத்தில் உனக்கும் கார்திக்க்கும் திருமணம்.அவன் ஏதோ டான்ஸ் ஆடிட்டானாம்......ஏதோ பிரிஎண்ட்லியாய் டான்ஸ் ஆடியதை பெருசாக்கிட்டு ....இது எல்லாம் பெரிய விஷயம் ன்னு .....கிளம்புடீ ....கிளம்புன்னு சொல்றேன் ....கையை கட்டிட்டு போஸ் கொடுக்கறே .....வாங்கினா அறை பத்தாலியா ....கிளம்புடீ எருமை மாடே ...."என்றான் ரகு கோபத்துடன் .

PENANCE WILL CONTINUE.............
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 24(2)

ரகு கோபமாக கத்தி விட்டு நிற்க "பிரதர் !பேச வேண்டியது எல்லாம் பேசி முடிச்சுடீயா .....ரிலாக்ஸ் ஆகிக்கோ .....இப்போ நான் பேசலாமா ????வாயை மூடிட்டு கேக்கறீயா ....என்னை இத்தனை அடி அடிச்சியே இந்த அடியை நம்ம அப்பா சங்கரனுக்கோ ,அம்மா பவானிக்கோ ,இல்லை உன் உயிர் நட்பு கார்திக்க்கோ ,இல்லை அந்த சோனா பிசாசுகோ கொடுக்க உன்னால் முடியுமா ????அந்த தில் உனக்கு இருக்கா பிரதர் ?????என்ன அப்படி பேய் அறைந்தது போலெ லுக் விடறே ......என்ன இவங்க யார் மேலயும் கை வைக்க முடியலை ,முடியாது அப்படி தானே ????பாச பயிரை ....ம......ரை வளர்க்கறேன்னு கிளம்பியது நம்ம அப்பா ......சோனா இல்லாத குழந்தை செத்து போச்சுன்னு ட்ராமா செய்த போது மறுபடியும் இட்டு வந்து இவளிடம் விட்டது அப்பா .....அவ தான் ட்ராமா செய்யறான்னு தெரிஞ்ச உடன் என்னை கூட்டிட்டு அவங்க அப்பா வீட்டுக்கு கிளம்பி இருக்கனும் நம்ம அம்மா .....புருஷன் உயிர் முக்கியம் ,இத்தனை வருடம் வாழ்ந்த வாழ்க்கை முக்கியம் என்று புத்த தத்துவம் சொல்ல தெரிந்த அம்மாவிற்கு என் வாழ்க்கை கண்ணுக்கு தெரியலை .....அவங்க பாட்டுக்கு ரூமில் தர்ணா நடத்தறாங்க .....ஒரு வார்த்தை எனக்காக பேசலை .....சரி இது எல்லாம் நடக்கும் போது எவ்வளவூ இப்போ பொங்கரியே நீயும் பிடிச்சு வைத்த புள்ளையார் மாதிரி அங்கே தானே நின்னே .....ஒரு வார்த்தை ரெண்டு பேரிடமும் பேசினையா .....இல்லைதானே ......சரி அதை விடு ....சின்ன வயது முதல் கார்திக்க்குக்கு நான் ,எனக்கு அவன் என்று பேசினார்களா இல்லையா .......பிரென்ட்லி ....அப்போ எங்க ஆபீஸ்ல பார்ட்டி நடக்கும் ...நானும் பிரின்ட்லி யா ட்ரின்க் பண்ணறேன் ,பிரிட்ன்லி யா எவன் கூடாவது ஆடுறேன் ,பிரிஎண்ட்லி யா கட்டி பிடித்து முத்தம் தர சொல்றேன் ...என்ன பிரதர் முகம் மாறுது .....நீ தானே சொன்னே கார்த்திக் செய்தது பிரின்ட்லி என்று .....போட்டோ எடுத்து காண்பிக்கிறேன் .....அதை ஏற்று கொள்ளும் பெரிய மனசு உனக்கும் அவனுக்கும் இருக்குமா ......முடியாது இல்லை ....உங்க வீட்டு பொண்ணுங்க தலை முதல் கால் வரை மூடிட்டு இருக்கனும் .....நீங்க எவ கூட வேண்டும் னாலும் ஆடிட்டு வருவீங்க .....நான் அதை பிரிஎண்ட்லி என்று ஏத்துக்கனும் ...அப்படி ஏற்று கொண்டால் தான் குடும்ப குத்து விளக்கு ஆஸ் பெர் யுவர் லாஜிக் ???? ....எந்த ஊர் நியாயம் .....எனக்கு வரவன் கோடீஸ்வரான இருக்கனும் என்று நான் கேட்கலை .....பாரதியார் சொன்ன கற்பு என்பதை ஆண் பெண் இருவருக்கும் சமமாய் வைப்போம் என்று இருபவனாக கேட்கிறேன் ...அது தப்பு என்பாயா .....அப்புறம் என்ன சுமன் ஏதாவது செய்து இருந்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்துக்கணுமா .....எந்த ம ....துக்கு நான் தற்கொலை செய்துக்கனும் ????ஒரு பெண்ணிடம் வன்முறை செய்பவன் உண்மையான ஆண் இல்லை .....கற்பு என்பது உடல் சம்பந்த பட்டது இல்லை பிரதர் ...அது மனது சம்பந்தப்பட்டது ......சாக்கடையில் இருக்கும் பன்றி நம் மேல் இடித்து விட்டால் அதற்காக நம்மையே எரித்து கொள்ளவா முடியும் ......என்னை மீறி அவனால் எதுவும் செய்து இருக்க முடியாது ....அப்படியே நடந்து இருந்தாலும் அவன் ஈன செயல்களுக்கு நான் ஏன் தற்கொலை செய்துக்கனும் ....ஒரு அண்ணனாய் அவன் தலையை வெட்டி இருப்பேன் என்று சொல்லி இருந்தால் கூட சந்தோச பட்டு இருப்பேன் ....அதை விட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்யணுமாம் .....புத்தியை என்ன அடகு வைச்சு இருக்கியா ?????என் கேரக்டர் பற்றி உனக்கே தெரியும் .....ராணி பத்மாவதி படம் பார்க்கும் போதே உன்னிடம் என்ன சொன்னேன் ......ராணியுடன் சேர்ந்து அந்த 60,000 லேடீஸ் வாள்,வில்,அம்பு கொண்டு கில்ஜியை எதிர்த்து போராடி உயிர் விட்டு இருக்கணும் என்று சொன்னேனா இல்லையா ?????ஒரு பெண்ணின் உயிர் போகும் முன் அவளின் அந்த நிலைமைக்கு யார் காரணமோ அவனின் உயிர் முதலில் போய் இருக்கனும் .....அதை விட்டு ...ச்சே ச்சே ....":oops::oops::oops:என்று பொரிந்து விட்டு திரும்பியவள் திகைத்தாள் .அங்கு நின்று இருந்த தன் தாய் ,கார்த்திக் ,சுபா ,பாலாஜியை கண்டு

பவானி கண் கலங்கி நின்று இருந்தார் .

"சாரி மா .....என் பக்க நியாயத்தை சொன்னேன் ...உங்களை குறை சொல்லணும் என்று இல்லை ....சாரி "என்றாள் தாயை அணைத்து .

"தவறு உன் மேல் இல்லைம்மா ....அவர் என்னை புரிஞ்சுக்கலை என்ற கோபத்தில் உன் வாழ்வூ பற்றி நான் யோசிக்கவே இல்லை .....புருஷன் கூட வாழாத அந்த பிசாசு எல்லாம் என் இல்லறத்தை நாசம் செய்து விட்டாளே என்ற கோபம் .....சாரி மதுரா ....மன்னிச்சுடுமா .......அம்மா ...உன் பக்கம் நிற்கலை ....விஷயம் கேள்வி பட்டதில் இருந்து உன் மேல் கோபமாய் இருந்தேனே தவிர உன் பக்கம் நியாயம் இருக்கும் என்று நினைக்கவே இல்லை ....சாரி ...நாங்க எல்லோரும் சேர்ந்து தான் உன்னை இந்த சிக்கலில் மாட்டி விட்டு இருக்கோம் ."என்றார் பவானி மதுராவை அணைத்து .

இரவூ உணவூ உண்ணும் வரை ரகு ,பவானியின் புலம்பல் நிற்கவே இல்லை ....அவர்களை சமாதான படுத்தி உறங்க செல்வதற்குள் மதுராவிற்கு மூச்சு மூட்டி விட்டது .ரகுவும் ,கார்திக்க்கும் மேல் மாடியில் தங்கி கொள்ள ,பவானி கீழ் கெஸ்ட் ரூமில் தங்கி கொண்டார் .சூர்யா போன் செய்து ரகுவை கிளம்ப சொல்ல ,ரகு பவானியை வரவழைத்து விட்டான்.என்ன நடந்தது என்று புரியாமல் ,பவானி கலவர குரலில் மகனிடம் பேசுவதை அதிர்ந்து போய் பார்ப்பதை தவிர சங்கரனால் வேறு எதுவும் கேட்க முடியவில்லை .பவானியும் சென்னை போகிறேன் என்று ஒரு துண்டு சீட்டில் எழுதி விட்டு கிளம்பி விட்டார் ,எதற்காக போகிறேன் என்று கூட சொல்லவில்லை .

அனைவரும் உறங்கிய உடன் ,தூக்கம் வராத மதுரா தன் லேப்டாப் உடன் மொட்டை மாடிக்கு சென்றாள் .மெல்லிய ராகங்களை இசைக்க விட்டவள் ,அங்கு இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து வானத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டாள் .மெல்லிய காற்று ,மனதை வருடும் இசை ,பால் நிலா ,யாரும் இல்லா ஏகாந்தம் அவளுக்கு மிகவும் பிடிக்கும் .கண்ணை மூடி இளையராஜாவின் மெல்லிசையில் தன்னை தொலைத்து கொண்டு இருந்தவள் அருகே கேட்ட சத்தம் கேட்டு கண் விழித்தாள் .அங்கு இருந்து வெகு வேகமாக விலகி சென்று கொண்டு இருந்தான் கார்த்திக் .

"தூங்கலையா .....கார்த்திக் ?"என்றாள் மதுரா சாய்வு நாற்காலியை விட்டு எழுந்து .

வேகமாக திரும்பி சென்று கொண்டு இருந்தவன் ,அவள் குரலில் தேங்கி நின்றான் ."தூக்கம் வரலை ....."என்றான் திரும்பாமலே .

"படுத்த உடன் கும்பகரணன் கசின் பிரதர் மாதிரி தூங்கிடுவே ...இன்னைக்கு என்ன ஆச்சு ....."என்றாள் மதுரா .

எதுவும் பேசாதவன் சட்டென்று மதுராவை இழுத்து அணைத்தான்."சாரி டீ ....பப்பு .....ரொம்ப சாரி .......உன்னை ரொம்ப படுத்திட்டேனா .....சாரி ....சாரி ...என்னால தானே உனக்கு இந்த நிலைமை .......அந்த போட்டோ ,வீடியோ காட்டாம இருந்து இருந்தா இந்நேரம் அந்த பொறுக்கி எல்லாம் உன் மேல் கை வைக்க முயல்வானா ......சாரி பப்பு .....அடுத்த முகூர்த்தத்தில் நம்ம திருமணம் நடத்த சொல்ல போறேன் .....நீ எதையும் மறுத்து பேசாதே ......"என்று அவளை அணைத்தவாறு பேசியவனின் உடல் மௌன அழுகையில் குலுங்கியது .
(என்ன நடக்குது இங்கே .....டேய் ........:oops::oops::oops::oops:விஜய்க்கும் சூர்யாவுக்கும் சப்போர்ட் குரூப் நிறைய இருக்கு ....உன்னை தூக்கி போட்டு மிதிப்பாங்க ....முதலில் நகர்ந்து நில்லுடா ......ரத்த ஆறு ஓடும் மவனே ....மூவ் )

எதையும் பேசாத மதுரா அவன் முதுகை தட்டி கொடுத்தாள் .சிறிது நேரத்தில் தன்னை சமாளித்து கொண்டவன் ,"காலையில் ரெடியா இரு .....வடபழனி முருகர் கோயிலில் மேரேஜ் முடிச்சிடலாம் ....நான் அங்கிள் ,என் ப்ரெண்ட்ஸ் வர சொல்லிடறேன் .."என்றவன் விலகி செல்ல மதுராவின் குரல் அவனை தடை செய்தது

"சார் !உங்க ஊரில் எல்லாம் தங்கையை தான் திருமணம் செய்வீர்களா ....இது மேரேஜ் சட்டம் ,நம்ம கலாச்சாரம் ,பண்பாடு அதற்கு ஒதுக்காதே ......"என்றாள் தன் கைகளை கட்டி ,அங்கு இருந்த சுவரில் சாய்ந்து .

(என்னது ....தங்கையா .....:eek::eek::eek::eek::oops::oops::oops:o_Oo_Oo_Oஇது என்ன ட்விஸ்ட் ?????அப்போ கார்த்திக் ரேஸ்யில் இல்லவே இல்லையா )

"என்ன உளறிட்டு இருக்கே "என்றான் கார்த்திக் திகைப்புடன் .

"சும்மா சலம்பாதே கார்த்திக் ....ஆல் டீடெயில்ஸ் ஐ நோ ........நான் 12th படிக்கும் போது உன் பாரெண்ட்ஸ் உனக்கும் எனக்கும் திருமணம் செய்ய பேச வந்த போது அதை நிறுத்த நீ உன் கையை உடைத்து கொண்டு வந்த கதையை உன் உளறு வாய் நண்பன் ரவி சொல்லிட்டான் .....நானும் கொஞ்சம் மிளகாய் பொடி காபி ,பேதி மாத்திரை கலந்த ஜூஸ் என்று பயமுறுத்தி விஷயத்தை கறந்துட்டேன் .....'நீ எப்படி தங்கை மாதிரி நினைப்பவளை மேரேஜ் செய்வது என்று கண்ணு வேர்த்து டயலாக் விட்டது எல்லாம் எனக்கு தெரியும் மகனே ....அதான் ரெண்டாவது தடவை உன் பாரெண்ட்ஸ் பேச வந்த போது இல்லாத மைனா என்ற தோழியை உருவாக்கி அவளை படிக்க விடாம மேரேஜ்ன்னு தொல்லை தராங்க என்று அழுது ட்ராமா செய்து ,போலீஸ்க்கு போவேன் என்று மறைமுக எச்சரிக்கை விட்டு ,உன்னை எஸ்கேப் பண்ணி விட்டு நான் ரெண்டு வாரம் excursion போனேன் .......நீயா வந்து பேசுவேன்னு பார்த்தா ....என்னவூ ஓவர் built up பன்னிட்டு சுத்திட்டு இருந்தே ....கத்திரிக்காய் முத்தினா கடை தெருக்கு வர தானே போகுதுன்னு நானும் அமைதியா இருந்தேன் ....உனக்கே தெரியாம மூன்றாவது தடவை 'சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் வேதாளம் பிடிக்க போன கதையாய் உன் பாரெண்ட்ஸ் பேச வந்துட்டாங்க .....அப்பவாவது பேசுவேன்னு பார்த்தா போட்டோ ,வீடியோ காட்டி வெறுப்பு ஏத்துறீங்களோ .......மொச பிடிக்கற டாக் முகம் பார்த்தா தெரியாது ......வாயை திறந்து உண்மையை என் கிட்டே சொல்ற அளவூக்கு கூட என்னை நீ தோழியா நினைக்கலை என்ற கோபத்தில் தான் பெருசுங்க கிட்டே உன்னை போட்டு கொடுத்தேன் ........இது அனுமார் வால் மாதிரி நீல கூடாது இல்லை ...அதான் சங்கு அப்பா மூலம் சங்கு ஊதிட்டேன் ........இப்போ சொல்லு என்னை மேரேஜ் செய்ய போறியா ....இது தெரியாம நெறைய பேர் உனக்கும் எனக்கும் ஜோடி சேர்த்தே தீருவது என்று சபதம் போடாத குறையாய் அலையறாங்க ......."என்றாள் மதுரா நக்கலாக

(இது மட்டும் விஜய்க்கு தெரிஞ்சுது நிச்சயம் ஹார்ட் அட்டாக் அவனுக்கு வந்துடும் .....:sneaky::sneaky::sneaky:.விஜய் கண்ணா இப்போ என்ன செய்ய போறே .....நீ விழுந்து விழுந்து பிளான் போட்டு building எல்லாம் கட்டிட்டே , இதுங்க ரெண்டும் சேர்த்து basementடையே தகர்த்துட்டாங்க .....;););).)

அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் பேந்த பேந்த முழித்தான் கார்த்திக் ."அடி பாவி ......எல்லாம் தெரிஞ்சுட்டு வழக்கம் போல் அமைதியா இருந்துட்டு உன் வேலையை காட்டிட்டே இல்லை .....எருமை மாடே .....ஆறு மாசம் அந்த பெருசுங்க அடிச்ச வேப்பிலையால் எனக்கு பைத்தியமே பிடிக்காத குறை ...அதுவும் உங்க அப்பா இருக்காரே .......கடவுளே ! ...........பவானி சத்தியமா சொல்றேன் பாவம் ......வாயை திறந்து சொல்லி இருக்க வேண்டியது தானேடீ ......அந்த போட்டோவை ,வீடீயோவை கட்டிட்டு நான் பட்ட வருத்தம் எனக்கு தாண்டீ தெரியும் .....ஒரு வேலை நீ என்னை லவ் செய்துட்டு இருந்து ,உன் விருப்பம் தெரியும் ......அது நான் இல்லை என்று உனக்கு உணர்த்த தான் அப்படி ...."என்றான் கார்த்திக் அவள் தோளில் தலை வைத்து .

"தெரியும் டா உன் குள்ளநரித்தனம் ......நீ என்னை வம்பு இழுத்த போதே நான் உஷார் ஆகிட்டேன் ....பயபுள்ள ஏதோ பிளான் போடுதுன்னு ......அப்பாவது வாயை திறந்து உண்மை சொல்வேன்னு சான்ஸ் கொடுத்தேன் ......பெரிய இவனாட்டம் ஆடுனாய் .....என்னைக்காவது உன்னை லவ் செய்றேன் சொல்லி இருக்கேனா இல்லை அப்படி தான் நடந்து இருக்கேனா ......பிசாசு .....பிரண்ட் பிரண்ட்ன்னு சொல்லிட்டு நம்பாத கூமுட்டை ....வேணும் டா உனக்கு ....."என்றாள் மதுரா .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓகே ...ஓகே .....சாரி டா ......லூசு மாதிரி பீஹாவ் பண்ணிட்டேன் இல்லை .....சாரி .....ரொம்ப சாரி ....."என்றான் கார்த்திக் .

"சரி சரி போனா போகுதுன்னு விடறேன் .....பொழச்சி போ .....இன்னும் வச்சு செய்யலாம்னு தான் நினைச்சேன்.......அதான் மணமேடை வரை கொண்டு போலாம்னு நெனச்சேன் .......விளக்கெண்ணெய் குடிச்சா மாதிரி முகத்தை வைத்து சுத்திட்டு இருந்தியா பார்க்கவே சகிக்கலை .....அதான் ......உண்மையை சொல்லிட்டேன் .......ரகு எப்படியோ அது தான் நீயும் ......அவன் கிட்டே ஷேர் செய்ததை விட உன்னிடம் தானேடா நான் எல்லாத்தையும் ஷேர் செய்வேன் ........உன் மனசு எனக்கு தெரியாத பைத்தியக்காரா ..... "என்றாள் மதுரா புன்னகையுடன் .

"அடி ஆத்தி .......பசு மாதிரி அமைதியா இருந்துட்டு ,புலி போலெ பாயாரே ......ஆன சான்ஸ்சே இல்லடீ .....வாயை திறந்து எதையும் பேசறது கிடையாது ......அமைதியா இருந்துட்டு எல்லாத்தையும் நோட் செய்ய வேண்டியது ......அதன் பின் ஆடினா ருத்ரதாண்டவம் தான் ...."என்றான் கார்த்திக் ஆற்றாமையோடு .

"என்ன பிரதர் ...வஞ்சப்புகழ்ச்சி அணியா ......ஆப்பு பெருசா வச்சுடுவேன் .....சரி போனா போகுதே ....இந்த மூஞ்சியையும் ஒருத்தி விழுந்து விழுந்து லவ் செய்யறாளே என்று விடறேன் ......மவனே ஒழுங்கா நடந்துக்கோ ....நாத்தனார் முடிச்சி நான் தான் போடணும் ......"என்றாள் மதுரா .

"என்னடி உளறல் மறுபடியும் .....அது யார் புது கேரக்டர் என்னை லவ்ஸ் விடறது ......அதுவும் எனக்கே தெரியாமல் ."என்றான் திகைப்புடன் .

"அந்த கதையை பிறகு சொல்றேன் ....முதலில் இந்த drawings பாரு ."என்றவள் தன் லேப்டாப்பில் இருந்த சில ஓவியங்களை கார்திக்க்குக்கு காட்டினாள் .அதில் இருந்தது அவன் தான் .திருமண கோலத்தில் ,பார்க்கில் ,பீச்சில் ,குடும்பத்தோடு ,இன்னும் வருங்கால மகன் ,மகளோடு என்று அனைத்து ஓவியங்களிலும் இருந்தது அவன் தான் .நிழல் முகத்தின் பாவம் ,அதில் தெரிந்த காதல் நிஜத்தை உலுக்கி விட்டது .

"212.jpgimages (40).jpgbest-beautiful-drawing-sketch-love-couple-art-in-pencil-art-pencil-sketch-love-couple-best.jpg
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
arabian-clipart-hindu-wedding-13.pngcool-love-drawings.jpg

என்னடி உளறல் மறுபடியும் .....அது யார் புது கேரக்டர் என்னை லவ்ஸ் விடறது ......அதுவும் எனக்கே தெரியாமல் ."என்றான் திகைப்புடன் .

"அந்த கதையை பிறகு சொல்றேன் ....முதலில் இந்த drawings பாரு ."என்றவள் தன் லேப்டாப்பில் இருந்த சில ஓவியங்களை கார்திக்க்குக்கு காட்டினாள் .அதில் இருந்தது அவன் தான் .திருமண கோலத்தில் ,பார்க்கில் ,பீச்சில் ,குடும்பத்தோடு ,இன்னும் வருங்கால மகன் ,மகளோடு என்று அனைத்து ஓவியங்களிலும் இருந்தது அவன் தான் .நிழல் முகத்தின் பாவம் ,அதில் தெரிந்த காதல் நிஜத்தை உலுக்கி விட்டது .

"டி தாண்டா ஷாக் ஆனேன் .....முகத்தில் உள்ள expression சான்ஸ் சே இல்லை ......marvellous ......இந்த அளவுக்கு ஒருத்தி மனதில் பதிஞ்சு இருக்கே கார்த்திக் ....."என்றாள் மதுரா பெருமையுடன் .

"யாருடீ ....யார் ..."என்றான் கார்த்திக் பரிதவிப்புடன் .

"நாலு வருஷத்திற்கு முன் உன் நண்பர்களுடன் ஊட்டி நிலச்சரிவூ rescue கேம்ப் போனே இல்லை ....அங்கே நீ காப்பாற்றிய பெண் .....வழி தவறி சென்று விட்ட அவளை கண்டுபிடித்து ,காப்பாற்றி ,நைட் புல்லா அவளுக்கு துணையாக இருந்தாய் .....மறந்து போச்சா ....."என்றாள் மதுரா .

"ஏய் சாத்தியமா நினைவூ இல்லடீ ....நீ தானே சொல்லி இருக்கே .....உதவின்னு செஞ்சுட்டு அமைதியா போயிட்டே இருக்கனும் .....செய்யும் உதவி நாம் தான் செய்தோம் என்று சொல்லக்கூடாது என்று உன் அளவுக்கு இல்லை என்றாலும் .....நீ எல்லாம் பத்தாவது படிக்கும் போதே ....ஏன் அதற்கு முன்னரே உதவுவதை ஆரம்பித்து விட்டே ..........உன்னை பின்பற்றி நானும் இது போலெ செய்துட்டு வரேன் .....100 கணக்கான பேருக்கு உதவி இருக்கேன் .....இதுல யாருன்னு ......தெரிலடீ "என்றான் கார்த்திக் நெற்றியை தேய்த்தவாறு .

கார்த்திக் கூறிய உதவிகள் மனதில் வலம் வர ,ஒரு கணம் ,ரத்த வெள்ளத்தில் இருந்த ஒரு முகம் கண் முன்னே தோன்ற மதுராவிற்கு பயத்தில் உடல் சிலிர்த்தது .தன்னை மீட்டு கொண்டவள் ,"இந்த மெயில் படித்து பாரு ."என்று தன் g-மெயில் ஓபன் செய்து கொடுத்தாள் .

"உயர்திரு கார்த்திக் அவர்களுக்கு ...."என்று ஆரம்பித்து இருந்த மெயில் வாசகத்தை பார்த்தவன் ,"ஏய் இது எனக்கு அனுப்பி இருகாங்க ....ஆனா உன் மெயில் அக்கௌன்ட்இல் இருக்கு ...."என்றான் வியப்புடன் .

"ஏய் லூசு ....உன் மெயில் id ,எனதும் ஒரு நம்பர் தான் வித்தியாசம் .மறந்து போச்சா ....ஒரு 1 அதிகமா போட்டா உன் மெயில் id ....ஒன்னு நீ எழுதும் போதே விட்டு இருக்கனும் ...இல்லை அழிஞ்சி போய் இருக்கனும் ...இல்லை இவங்க சரியா பார்க்காம ,இல்லைனா type செய்யும் போது தவறுதலாக அடிச்சு இருக்கனும் .....கேள்விக்கு பிறந்தவனே ....மெயில் படிடா ...."என்றாள் மதுரா அவன் தலையில் தட்டி .

"உயர்திரு கார்த்திக் அவர்களுக்கு ....என்னை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ....என் பெயர் ஊர்வசி ....ஊட்டி நிலச்சரிவில் நீங்க காப்பாற்றிய பலருள் நானும் என் தோழியரும் அடக்கம் ....வெறும் வாய் வார்த்தையாக நன்றி சொன்னால் கூட அதற்கு ஈடு ஆகாது ......அது தெரிந்தோ என்னவோ என் தோழி தன் மனதையே உங்களுக்கு காணிக்கை ஆக்கி கொண்டு இருக்கிறாள் .ஒரே நாளில் கண்டதும் காதலா என்ற என் கேள்விக்கு அவளின் பதிலை அப்படியே தருகிறேன் .'ஒரு நாள் தான் ....ஆனால் அந்த ஒரு நாளில் அவர் எனக்கு தாயுமானவனாக இருந்து பாதுகாப்பையும் ,அன்பையும் ,பாசத்தையும் காட்டினார் .ஒரு தோழனாக இருந்து மடி தாங்கினார் .....ஒரு பாதுகாவலனாக இருந்து ஒரு ஆண்மகனாய் என் பெண்மையை காப்பாற்றினார் .....இதை விட வேறு என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு ....ஒரே நாளில் எனக்கு எல்லாமுமாக இருந்து விட்டார் ....அவரை என் கணவராக ஏற்று கொண்டு விட்டேன் ...இந்த ஜென்மத்தில் மட்டும் அல்ல வரும் எல்லா ஜென்மத்திலும் அவர் தான் என் வாழ்க்கை ,என் உலகம் ,என் எல்லாமும் ....'.....நீங்கள் தான் உலகம் என்று நாலு வருடமாய் உங்கள் சட்டையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் ....உங்களுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு என்று கேள்வி பட்டதில் இருந்து இவளை கண்காணிப்பதே எனக்கு வெளியாகி விட்டது .....ஏதாவது தவறான முடிவு எடுத்து விடுவாளோ என்று தினமும் கலக்கமாக உள்ளது ....அதனால் தான் உங்கள் மெயில் id வாங்கி விஷயத்தை தெரிவிக்கிறேன் ......தவறாக நினைக்க வேண்டாம் பிரதர் .....நல்ல முடிவாக எடுங்கள் .....சகோதரி ஊர்வசி "என்று இருந்தது மெயில் .

"என்னடீ இது ......நாலு வருசமா என்னை லவ் செய்யறான்னு இருக்கு ....."என்றான் கார்த்திக் அதிர்த்தவனாய் .

"எனக்கும் அதே யோசனையாய் தான் டா இருக்கு ...ஒரு வேலை அவ பைத்தியமோ என்னவோ ....உன்னை எல்லாம் விழுந்து விழுந்து நாலு வருடம் லவ்ஸ் பன்றாளே ....'என்றவள் ஓட அவளை அடிக்க துரத்தினான்

PENANCE WILL CONTINUE.........
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 24(3)
nature-and-love-drawing-natural-romantic-pencil-drawing-best-simple-pen-sketch-love.jpg


கையில் சிக்கியவளை நாலு மொத்து முதுகில் மொத்தியவன் ,"டீ அந்த ஊர்வசி அந்த பொண்ணு யாருன்னு சொல்லவே இல்லையேடீ ...யாருன்னு கேட்டு பார்ப்போமா ....."என்றான் ரொம்ப தயங்கியபடி .

"என்ன யாருன்னு தெரிஞ்சுக்கணுமா பிரதர் ....ரொம்ப அவசரமோ ?"ஏன்றாள் மதுரா

"ச்சே ச்சே ....அப்படி எல்லாம் இல்லை ."என்று தலை அசைத்தவன் ,"ஆமாம் "என்றான் வெட்கத்துடன் ...ஆண்களின் வெட்கமும் அழகு தான் என்று நினைத்து கொண்டாள் மதுரா .

"பிரதர் நீ ரொம்ப slow ....ஏற்கனவே full டீடெயில்ஸ் கலெக்ட் செய்துட்டேன் ....அந்த மெயில் கீழே போட்டோ இருக்கு பாரு ..."என்றவளின் வார்த்தை கேட்டு போட்டோவை பார்த்தவன் பிளாட் .ஏற்கனவே முகம் அறியா பெண் வரைந்து இருந்த drawing,தோழியின் வாக்குமூலம் ,அவளின் வார்த்தைகள் கேட்டு மனம் தடுமாறி நின்றவன்,தன்னை காதலிக்கும் பெண்ணின் போட்டோவை கண்டதும் அவளிடம் தன் இதயத்தை பறி கொடுத்து விட்டான் .
hansika-motwani-photos-in-churidar-dress-06.jpg

அவளின் அழகு அவனை மொத்தமாய் வீழ்த்திவிட கண்களால் அவளை விழுங்கி கொண்டு இருந்தான் .எவ்வளவூ நேரம் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தானோ ,சட்டென்று சுதாரித்தவன் முகம் திகைப்பை காட்டியது .

"மதுரா !....இது ...இது ...இவ ...இவ ......"என்று தந்தி அடித்தான் .

"கண்டுபிடிச்சுட்டியா .....சேது பெரியப்பா ரெண்டாவது பெண் அன்னபூரணி தான் இது ...நாலு வருசமாய் உனக்காக தவம் இருப்பவள் ..."என்றாள் மதுரா .

"ச்சே ச்சே ...இது ஒத்து வராது மதுரா ...."என்றான் கார்த்திக் தலையை பிடித்து கொண்டு .
"ஏன் பாஸ் ....என்ன ப்ரோப்லேம் ?"என்றாள் மதுரா அவனை தன் புறம் திருப்பி

"ஏய் ...அவ சோனா தங்கச்சிடீ .....அந்த பிசாசு கூட்டத்தில் இருப்பவ ....உன் வாழ்வை ,அங்கிள் ,ஆன்ட்டி வாழ்வை நாசம் செய்து கொண்டு இருப்பவ ....."என்றான் கார்த்திக் வேதனையோடு ...

"தம்பி !.....இந்த வேலை செய்வது சோனா ....பூரணி இல்லை கண்ணா .....அந்த பிசாசுங்க இருக்குற அதே குடும்பத்தில் தான் சேது பெரியப்பா ,கனகா பெரியம்மா ,பாட்டி ,விஜய் எல்லாரும் இருக்காங்க ....அவங்க எல்லாம் கெட்டவங்க என்று சொல்லிவிடுவாயா ?????...நீ கட்டப்போவது பூரணியை சோனாவை அல்ல ....அவளை கட்டிய விஜய்யே இரும்பு மனிதனாய் தான் இருக்கார் ......பூரணி ரொம்ப நல்லவடா ....யோசிக்காதே ...."என்றாள் மதுரா

"இல்லை மதுரா ...ஒத்து வாரத்துமா ....அவ கோடீஸ்வரி ....மாளிகையில் வாழ்பவ .....ஏணி வைத்தா கூட எட்டாது .....நான் சாதாரண மிடில் கிளாஸ் ....அந்தளவூ வசதி எல்லாம் என்னால் கொடுக்க முடியாது .....சேது சார் மாதிரி ,கருணா மாதிரி வீட்டோடு மாப்பிள்ளை எல்லாம் எனக்கு ஒத்து வராது ....தவிர சோனா ,கஜேந்திரன் ,சொர்ணா என்று ஒரு ஸ்டேட்டஸ் வெறி பிடித்த கூட்டம் உண்டு ......நான் சினிமா ஹீரோவோ ,கதையில் வரும் ஹீரோவோ கிடையாது .....அடி தடி வெட்டு குத்து எல்லாம் சினிமாவுக்கு ,கதைக்கு நல்லா இருக்கும் .ரியல் லைப்க்கு ஒத்து வராது மா ....அவங்க ஒத்துக்க மாட்டாங்க ...."என்றான் கார்த்திக் .

"இங்க பாரு இந்த abcd கதை எல்லாம் வேண்டாம் .....உனக்கு பூரணியை பிடிச்சு இருக்கா ...அதை மட்டும் சொல்லு ...மத்த ஈர வெங்காயம் எல்லாம் நான் பார்த்துகிறேன் .....உன்னை எதுக்கு கேக்கணும் .....அந்த புள்ளைக்கு உன்ன பிடிச்சி போச்சு ....உன் கையை காலை கட்டி மண மேடைக்கு ஏத்திடுவேன் ....நாளை காலை ரெடியா இரு .....ஊர்வசி வீட்டில் அவ அண்ணிக்கு வளைகாப்புன்னு உன் ஆளை கூட்டிட்டு வர சொல்லி இருக்கிறேன் .....பட்சி ஈவினிங் லேண்ட் ஆகி இருக்கும் ....நாளை போறோம் ....அவ லவ் accept பண்றே ...சொல்லும் நாளில் அவ கழுத்தில் தாலியை கட்டறே ....நடுவுல ஏதாவது கோல் மால் பண்ணலாம்ன்னு நெனைச்சே ....என்னை தெரியும் ல .....போ போய் தூங்கி ரெஸ்ட் எடு ...."என்றாள் மதுரா கடுப்பாக

அவனை அறைக்கு அனுப்பி விட்டு ,தன் அறைக்கு சென்றவள் பல் பல நினைவுகளுடன் கண்ணை மூடி உறங்க ஆரம்பித்தாள் .

மதுரா அங்கே கண்ணை மூடிய உடன் நகரின் வேறு ஒரு மூலையில் இருந்த ஒரு வீட்டின் அறையில் தன் கண்களை திறந்தாள் சோனா .கண்ணை திறந்தவளுக்கு தான் எங்கு இருக்கிறோம் என்று புரியவே வெகு கணங்கள் ஆனது .கை ,கால் ,வாய் கட்டப்பட்ட நிலையில் ஒரு பழைய சேரில் தான் அமர வைக்க பட்டு இருப்பதையும் ,மாமிச மலை போலெ ஒரு பெண் பௌன்சர் சற்று தொலைவில் அமர்ந்து தன் போனில் ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாடி கொண்டு இருந்தாள் .அதாவது இவளை கொஞ்சம் கூட மதிக்கவில்லை.சோனா தன்னை விடுவிக்க முயல ,அது முடியாமல் வாய் கட்டையும் மீறி கத்த முயன்று கொண்டு இருந்தாள் .

'தான் எப்படி இங்கு வந்தோம் ?இது யாரின் வேலை ....'என்று யோசித்தவள் ,தான் கடைசியாக ஒரு பப்பில் ஆடி கொண்டு இருந்த சமயம் ,இதே பெண் தன்னை 'சுமன் அழைக்கிறான் 'என்று கூறி கார் பார்க்கிங்க்கு அழைத்து சென்றதையும் ,காரின் உள் எட்டி பார்த்த தன்னை உள் இருந்தவன் இழுக்கவும் ,வெளியே இருந்து இவள் தள்ளவும் ,உள்ளே விழுந்த தனக்கு choloroform கொடுக்க பட்டத்தையும் நினைவூ படுத்தியவள் ,'யார் இந்த வேலையை செய்தது ?'என்ற கேள்விக்கான பதில் பலமணி நேரத்திற்கு அவளுக்கு கிடைக்கவே இல்லை .
'சுமன் ஒரு வேளை மதுராவை கை நழுவ விட்ட கோபத்தில் இப்படி செய்து இருக்கிறானா ????சும்மாவே அவன் torture செய்து ரசிப்பான் .....இப்போ ஒரு பெண்ணிடம் தோற்று போய் இருக்கிறான் .....அவ மேல் உள்ள கோபத்தில் என்னை கொல்ல போகின்றன ....'பயபந்து வயிற்றில் உருள முகம் வெளிறி அமர்ந்து இருந்தாள் .

நீண்ட ,நெடிய மணி நேரத்திற்கு பிறகு ,அந்த அறையின் வாயில் கதவூ திறக்க ,அது வரை அமர்ந்து போனில் விளையாடி கொண்டு இருந்த அந்த பௌன்சர் பெண் விறைப்பாக எழுந்து அன்டன்டின் போஸ்இல் நின்றாள் .கதவூ திறக்க பாடி கார்ட் முதலில் உள்ளே நுழைய பின்னால் வந்த சூர்யாவை கண்டு பேய் அடித்தது போல் ஆனாள் சோனா .சுமனே torture செய்வதில் இரக்கம் காட்டுவான் ,இவனுக்கு எதிராளி ஆனவன் மரணமே மேல் என்று நினைப்பானாம் ...அந்த அளவூ தன் எதிராளிக்கு இவன் கொடூரன் என்று கேள்வி பட்டு இருந்த சோனா எதற்கு இவன் தன்னை தூக்கி இருக்கிறான் என்று புரியாமல் வாழ்க்கையில் முதல் முறையாக மரண பயத்தை அனுபவித்து கொண்டு இருந்தாள் .

அவள் எதிரே இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு ஒரு அரசனின் கம்பீரத்தோடு அமர்ந்த சூர்யா கண் காட்ட அந்த பௌன்சர் பெண் சோனாவின் வாய் கட்டை மட்டும் அவித்து விட்டு சோனாவின் பின் புறமே நின்று கொண்டாள் .

"லுக் ...இ டோன்ட் வாண்ட் டு வேஸ்ட் மை ப்ரேஸியஸ் டைம் .....understand ????"என்ற சூர்யா மீண்டும் கண் காட்ட ஒரு பெரிய சூட்கேசை சோனாவின் அருகே அவனின் பாடிகார்ட் இழுத்து நிறுத்தினான் ."இதில் 4 கோடி இருக்கு ....எடுத்துட்டு இந்த அக்ரீமெண்ட் சைன் போட்டுட்டு போயிட்டே இரு ....."என்றவன் அவள் முன் சில அக்ரீமெண்ட்களை உடன் வந்த லாயர் ஒருவர் சோனாவின் முன் வைத்தார் .

படித்து பார்த்த சோனாவிற்கு கண்ணை இருட்டியது .மதுராவிற்காக சூர்யா நாலு கோடி பணம் தருகிறான் என்றதும் இது என்ன புது கதை என்று சோனாவின் இதயம் அதிர்ந்தது (இதுக்கு இதயம் ஒன்று இருக்கா ...அது அதிர்வதற்கு ?"

"நீ ஏன் அந்த நாய் மதுராவிற்கு நாலு கோடி தாரே ?????உனக்கும் அவளுக்கும் என்ன affair ?"என்றாள் சோனா

(நீ அடங்கவே மாட்டியா .....வாயா இது ....)

எதையும் பேசாத சூர்யா அந்த பெண்ணை ஒரு பார்வை பார்க்க ,அந்த பௌன்சர் பெண்ணின் கரம் இடியாய் சோனாவின் கன்னத்தை பல முறை பதம் பார்த்தது .சோனாவை துவைத்து காயா வைத்தாள் அந்த பெண் .

"வாய் இருக்குன்னு எதை வேண்டும் என்றாலும் பேச கூடாது .......மைண்ட் இட் .....உனக்கு எல்லாம் மதுரா பற்றி பேச கூட தகுதி இல்லை .....அவ முன்னாடி நீ பிக் லூசர் ....எ ஸிரோ .....affair என்ன ....மதுரா ஒரு வார்த்தை சொன்னால் என் ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்திற்கும் ,என் வீட்டுக்கும் என் இதயத்திற்கும் கூட அவ தான் ராணி ......ஐ வில் பி ஹாப்பி டு மேக் ஹர் மை குயின் .....சோ அவளை பத்தி இனி ஒரு வார்த்தை தப்பா நீ எங்கே பேசினாலும் உன் வாய் உடைக்க படும் .....எங்கேயும் ,எல்லார் முன்னாடியும் இதே டிரீட்மென்ட் தான் கிடைக்கும் .......சோ உடம்பு புண்ணாக கூடாது என்றால் கிளோஸ் யுவர் டர்ட்டி மௌத் ....சைன் தி பேப்பர்ஸ் ..."என்று உறுமினான் சூர்யா .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"இது எனக்கும் அவளுக்கும் சொந்த விஷயம் .....நீ எதுக்கு இன்வோல்வ் அகுரே ..."என்றாள் சோனா விடாமல் .

"எதுடீ சொந்த விஷயம் ....ஒரு பெண்ணோட மானத்தோடு விளையாடுறதா .....நீ செய்யும் டர்ட்டி ஒர்க் தெரியாதுன்னு நினைக்காதே .....சுமனை மதுரா பின்னாடி அனுப்பின போதே உன்னை வெட்டி இருப்பேன் .....மனசுக்குள்ளே உனக்கும் அவனுக்கும் என்ன கடவுள் என்று நினைப்போ ....மதுராவை காப்பாற்ற அவளை சுற்றி எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியாம விளையாடாதே ....ஒழுங்கு மரியாதையா உடம்பு புண் ஆகும் முன் சைன் போட்டுட்டு கிளம்பு ....."என்றான் சூர்யா .

"முடியாது .......எவ்வளவூ பிளான் போட்டு அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து இருக்கேன் ......சுலபமா எஸ்கேப் ஆக விட்டுடுவேனா .......நோ ....ஐ ஒண்ட் சைன் ..."என்றாள் சோனா திமிர் அடங்காமல் .

"சாகர நிலையில் இருப்பவங்க கடைசி நொடியில் ஏதாவது நல்லது செய்யணும்னு நினைப்பாங்க ......உன் மொத்த திமிர் ,கர்வம் ,ஆணவம் எல்லாத்துக்கும் அந்த கடவுளே ஆப்பு வைச்ச பிறகும் அடங்க மாட்டேங்குறீயே சோனா .....என்ன பார்குரே ......உனக்கு ஸ்டேஜ் 4 பிளட் கான்செர்ன்னு தெரியும் ....நீ ஆடுன ஆட்டத்துக்கு,உனக்கு கடவுள் கொடுத்து இருக்கும் டைம் 2-3 மன்த்ஸ் அதிகபட்சம் .அதற்குள் மதுரவையும் ,கருணாவையும் எவ்வளவூ முடியுமோ அவ்வளவூ torture செய்யணும் .....அதானே உன் பிளான் .....கருணா தன் காலேஜ் டைம்மில் ஒரு பெண்ணை உயிர்க்கு உயிராய் லவ் செய்த விஷயம் உனக்கு தெரிய வந்து இருக்கு ....காசு கொடுத்து உன் மரணத்தை தள்ளி போட கடவுள் ஒன்றும் உன் வீட்டு வேலைக்காரன் இல்லையே ...ரொம்ப நியாயவாதி ......நீ சீக்கரம் சாக போற நியூஸ் முதல் அதிர்ச்சி .....உன்னை உயிர் உள்ள விலங்காய் கூட மதிக்காத கருணாவின் வாழ்கையில் உனக்கு முன்னே ஒரு பெண் அவன் மனதை கவர்ந்து விட்டாள் ,அவள் நினைவோடு தான் அவன் வாழ்கிறான் என்ற இன்னொரு நியூஸ் 2nd அதிர்ச்சி.அதனால் தான் அவன் தங்கை ரூபிணி வாழ்வில் நீ கத்தியை வைத்து அவனை மணந்த பிறகும் உன்னை விட்டு தள்ளி நிற்கிறான் என்ற கடுப்பு ,வயித்து எரிச்சல் .....அதான் அவன் காதலித்த பெண் யார் என்று சரியாக தெரியாமல் மூன்று பெண்களை ஷார்ட்லிஸ்ட் செய்தே ....அதில் ஒருத்தி செத்தே போய்ட்டா...accident என்று கேஸ் கிளோஸ் ஆகி இருக்கு ....இன்னொருத்தி மெண்டல் ஹாஸ்பிடலில் இருக்கா ....மூன்றாவது மதுரா ...அவளுக்கு சுமன் மூலம் முடிவூ கட்ட நினைக்கிறே ....சாக போற சமயத்துல கூட எப்படி வெறித்தனமா பிளான் போடுறேனா நீ எந்த அளவூ .சைக்கோவா இருக்கனும் .....உன் பிளான் மதுரா விசயத்துல ஜெயிக்காது ....ஜெயிக்கவூம் விட மாட்டோம் ..........உனக்கு பணம் கூட எதுக்கு தர முயன்றேன் என்று நினைக்கிறாயா .....சும்மா விளையாடி பார்த்தேன் .....அது empty பாக் .....உள்ளே உன்னை போலெ ஒன்றுமே இல்லை ......சுஷ்மிதா .....இந்த அக்ரீமெண்ட்டில் இவ சைன் போட ஒத்துக்கொள்ளும் வரை விடாதே ....வெளி காயம் எதுவும் இருக்க கூடாது .....இவ சைன் செய்துட்டா பேப்பர் கொடுத்து அனுப்பு ...."என்ற சூர்யா கிளம்பி விட அந்த சுஷ்மிதா என்று அழைக்க பட்ட பௌன்சர் சோனாவை மீண்டும் மீண்டும் புரட்டி எடுத்தாள் .

ஒரு கட்டத்திற்கு மேல் அடி தாங்க முடியாத அந்த சொகுசு உடம்பு சோனா ,"போடறேன் ...போடறேன் ....நான் சைன் போடறேன் ..."என்று நீட்டிய இடத்தில் எல்லாம் சைன் போட்டு கொடுத்தாள்.

அவள் சைன் போட்டு கொடுத்ததும் சோனாவின் கண்கள் மீண்டும் கட்டப்பட்டு காரில் ஏற்றி சென்று நடு இரவில் ,நடு வழியில் இறக்கி விட்டு சென்றனர் ....மதுராவை எப்படி நடு இரவில் தனியே நடக்க வைத்தாளோ அதே போலெ ஏறக்குறைய நடு தோப்பில் ...எந்த ஊர் ,எந்த இடம் என்று புரியாமல் ,உடல் வலி உயிரை எடுக்க ,நடந்தே பழக்கம் இல்லாதவள் பல மணி நேரம் கால் ஓய நடந்தாள்.நடந்தவள் தன் கைப்பையில் இருந்த போதை மருந்தினை அடிக்கடி எடுத்து கொண்டாள் .. .
அவளின் கெட்ட நேரம் patrol சுற்றிய போலீஸ் கண்ணில் அவள் பட்டது ....அதுவும் இரவூ ரோந்தில் இருந்த A .C .P .ராஜேஸ்வரி கண்ணில் பட்டது .மிகவும் நேர்மையான பெண் ஆஃபீசர் .என்கவுண்டர் specialist .பணக்கார திமிரில் ஆடுபவர்களுக்கு பெண் சிங்கம் .

சோனா மரியாதையுடன் உதவி கேட்டு இருந்தால் செய்து இருப்பார் .குடி ,சூர்யாவின் பேச்சு ,பௌன்சர் கொடுத்த அடி ,மதுராவிடம் தோல்வி,போதை மருந்தின் வீரியம் என்று கோபத்தில் ,வெறியில் இருந்த சோனா அவரிடமும் வாயை விட ...நாலு காட்டு காட்டியவர் ...சோனாவை தூக்கி லாக்அப்பில் வைத்தார் ....அவள் பர்சில் இருந்த போனை மட்டும் எடுத்து இருந்த சூர்யாவின் ஆட்கள் ,அதில் மீதம் இருந்த எந்த பொருட்களையும் எடுக்கவில்லை .மொத்த கைப்பையும் கொடுக்காமல் விட்டு இருந்தார்கள் என்றால் கூட தப்பித்து இருப்பாள் ...ஆனால் அவள் கை பையில் ஒரு கிலோ போதை மருந்து ,எக்ஸ்டஸி MDMA ,G H B போன்ற தடை செய்யப்பட்ட போதை மருந்துகளும் அவள் பையில் அளவுக்கு மிக அதிகமாகவே இருக்க Narcotic Drugs and Psychotropic Substances Act, 2014, படி FIR பதிவூ செய்ய பட்டு உள்ளே தள்ள பட்டாள் சோனா .non bailable ---பெயில் எடுக்க முடியாத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு ஆனது. இந்த தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் வைத்து இருந்தால் குறைந்தது 10 வருடம் கடுங்காவல் தண்டனை உண்டு .1-2 லட்சம் வரை அபராதம் விதிக்க படும் .வாங்கி விற்பதாக வழக்கு பதிவூ செய்யபட்டால் மேலும் 30 வருடம் சிறை தண்டனை உண்டு .

ராஜேஸ்வரி சோனாவை பார்த்தது முதல் லாக் அப்பில் அடைக்கும் வரை ,அவள் பாக் சோதனை செய்யும் வரை அனைத்தையும் பக்காவாக வீடியோ ஆதாரத்துடன் செய்து கொண்டு இருந்தார் .அவர் கார்இல் இருந்த கேமரா ,போலீஸ் ஸ்டேஷனில் இருந்த கேமரா என அனைத்திலும் ஆதாரம் பதிவூ ஆனது .வீட்டுக்கு அழைக்க வேண்டும் என்ற நினைப்பூ கூட எழாமல் , மயக்கத்தில் இருந்தாள் சோனா

பெண் கான்ஸ்டாபெல் ஒருவர் ராஜேஸ்வரி இடம் ,"மேடம் !...அந்த பொண்ணை பார்த்தா பெரிய இடத்து பெண் போல இருக்கு .....ஏதாவது மினிஸ்டர் பொண்ணா இருக்க போகுது ......"என்றார் .

ராஜேஸ்வரிக்கும் அந்த சந்தேகம் இருந்தது .ஆடை என்ற பெயரில் ஒரு துண்டு துணியை அவள் அணிந்து இருந்தாலும் அதன் விலை சில பல ஆயிரங்கள் என்பது புரிந்தது .மயக்கத்தில் இருந்தவளை கவனிக்க ஒரு பெண் டாக்டரை வரவழைத்தவர் ,சோனாவின் போட்டோவை எடுத்து விசாரிக்க சொல்லி பல போலீஸ் ஸ்டேஷன்னுக்கு அனுப்பி வைத்தார் .

டாக்டர் வந்து சோதித்து விட்டு ,"மேடம் !ஹேவீ டோஸேஜ் போதை மருந்து எடுத்துட்டு இருக்காங்க ....ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து விடுவது நல்லது .....ரிஸ்க் எடுக்க வேண்டாம் ...."என்று சொல்லிவிட காவலுடன் சோனா ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய பட்டாள் .

அந்த இரவில் நகரின் மற்றொரு இடத்தில இருந்த பார் ஒன்றில் அமர்ந்து அவன் மூச்சு முட்ட குடித்து கொண்டு இருந்தான் .குடித்தே நெஞ்சில் இருக்கும் நெருப்பை அணைக்க நினைத்தானோ என்னவோ ....ஆனால் அது அணையா தீ என்று அவனுக்கு விளங்கவில்லை .....எந்த இடத்தில வாழ்கையை ,கையில் கிடைத்த சொர்க்கத்தை தான் இழந்தோம் என்று அவனுக்கு புரியவில்லை .யாருக்குமே கிடைக்காதா நற்குணவதி ,அழகி மனைவியாக கிடைத்தும் கூட அவன் வாழ்வூ நான்கு வருடங்களாக பாலைவனமாக தான் இருக்கிறது .தன்மானத்தை இழந்தான் ,மனைவியின் நம்பிக்கையை ,காதலை இழந்தான் .தன் மனைவி வயிற்றில் உதித்த அந்த குடும்பத்தின் முதல் வாரிசையும் பிறக்கும் முன்னே இழந்து விட்டான் .இனி இழப்பதற்கு அவனிடம் மீதம் இருப்பது உயிர் மட்டுமே ...

அவனை விற்று அவன் பெற்றோர் ,சகோதரி ,தம்பி எல்லோரும் பெங்களூருவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர் ....ஆனால் அவர்களுக்காக பலியான அவனின் காதலோ ,வாழ்க்கையோ ,அவர்களின் கண்ணுக்கு தெரிவதில்லை என்னும் போது தன்மானம் ,கெளரவம் ,ரோசம் இல்லாத விலை போன பொருளாக தான் அவன் கண்களுக்கு அவனே தெரிந்தான் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'எப்படி இருந்து இருக்க வேண்டிய வாழ்வூ .....பெற்றோரின் சுயநலம் ,பேராசை தெரிந்த பிறகும் ,அவர்களால் யாருக்கும் என்று நன்மை ஏற்பட்டது இல்லை என்று பல முறை உணர்ந்த பிறகும் ,அவர்களின் திட்டத்திற்கு துணை போய் வாழ்க்கையை இழந்து தவிப்பது தான் மட்டும் தான் இல்லை தன்னால் மற்றொருவனும் என்று நினைக்கும் போது அவன் இதயத்தில் ரத்தம் கசிந்தது .

'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போலெ எல்லாம் இழந்து நின்ற பிறகு உண்மை கொடூரமாக தெரிகிறது .தன்னால் பாதிக்க பட்டவன் கூட ஏதோ வாழ்ந்து கொண்டு இருக்கிறான் ...ஆனால் அவன் போட்ட வாழ்க்கை பிச்சையில் வாழும் தன் நிலைமை தான் வெகு மோசம் .

"ஒரு முறைதான் ஒருமுறை தான்
மனிதனின் வாழ்க்கை ஒருமுறைதான்
ஒருமுறை தான் ஒருமுறை தான்
வாழ்க்கையில் திருமணம் ஒருமுறை தான்
.......................................................
ஒரு சில மகிழ்ச்சிகள் ஒருமுறை தான்
................................................................
உடைந்த உறவூ வருமா ??????
இழந்த மானம் வருமா ??????
இனியும் வசந்தம் வருமா ?????
காலம் திருப்பி தருமா ?????
வெறுமை நெஞ்சை அறுக்க வலிக்கிறதே
....................................................................
ஒருமுறை தான் ஒருமுறை தான்
ஒரு சில தவறுகள் ஒருமுறை தான்
ஒருமுறை தான் தவறியதால்
அடைகின்ற வேதனை பலமுறை தான் .
யார் விழியன் நீரை
யார் துடைக்க என்று
உறவுகளின் நினைவுகள் வரவே
வெந்து எரிகின்றோம்
ஆதரவும் இல்லை ...ஆறுதலும் இல்லை .....
இருவருமே இடியை தாங்கி
இறந்து வாழ்கின்றோம் ....


எங்கோ ஒலித்த தவமாய் தவமிருந்து பாடல் இவனுக்கும் இவன் மனைவிக்கும் எழுத பட்டது போலெ இருக்க அவனையும் அறியாமல் கண்ணில் நீர் வழிய தன் வீட்டை நோக்கி தள்ளாட்டத்துடன் நடந்தான் .ஊரே இரவு விளக்குகளால் மின்னி கொண்டு இருக்க அவன் வீடு இருளில் மூழுகி கிடந்தது .

'என் வாழ்வூ போலவே 'என்று நினைத்தவனின் உதட்டில் கசந்த புன்முறுவல் வர ,வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான் பலமுறை .

பத்து தடவை அழுத்திய பிறகே கதவை திறந்தாள் அவள் .கதவை திறந்தவள் கணவனின் குடியையோ ,தள்ளாட்டத்தையோ கவனிக்கும் நிலையில் இல்லை.அவள் கண்களில் உணர்ச்சி,உயிர்ப்பு இல்லை.
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
honey sis....evlo twist and turns.... semma.....

antha bar la solo va feel pannathu vijay sister husband i think...

ella twist um semma, and connecting all people together superb.... sona health status semma shock knowing her status then she planed to tourture plans extreme....

மரணத்தில் சில கோபங்கள் தீரும்
மரணத்தில் சில பாவங்களும் சாபங்களும் தீரும்
வேதம் உணர்த்தாத நீதியையும் மரணபயம் உணர்த்தும்
உணர்பவர் அடுத்த பிரிவியிலாவது மனிதனாகலாம்
இல்லையேல் மண்ணும் அவர்களை உரமாக ஏர்க்காது


thanks author satyavani sister for this wonderful comment and review.highly honoured.kannu verthuduchu.its a mass recognition.:love::love::love::D:D:D(y)(y)
 
Last edited:
Status
Not open for further replies.
Top