All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் காதல் தீரா.... - கதை திரி

Status
Not open for further replies.

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


தீரா 01
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ...............



திணையில் தேனை குழைத்தெடுத்தது போல் ஒரு மதுரமான குரல் அந்த மழை பெய்து ஓய்ந்த மாலையில் காற்றில் பரவியது.



காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றை தேடுதே

காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றை தேடுதே




தேனீர் கோப்பையுடன் மாடி பல்கனியில் இருந்த அசோகன். தேனீர் கோப்பையை வைத்துவிட்டு சுவற்றில் சாய்ந்து கண்மூடி பாடலை ரசிக்க மனைவி யசோதா அருகே இருந்த இருக்கையில் கண் மூடி அமர்ந்தார்.



அலைபோல நினைவாக…

சில்லென்று வீசும் மாலை நேர

காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றை தேடுதே




அந்த மெட்டாலிக் சம்பல் வண்ண ப்ரோடோ சத்தமின்றி வழுக்கி கொண்டு வந்து அந்த வீட்டின் முன் வாசலில் நிற்க, அதிலிருந்து இறங்கியவன் உள்ளே செல்லாமல் அந்த வாகனத்தின் மேல் தலை சாய்த்து கண் மூடி பாடலை ரசித்தான்.



அந்த வீட்டில் வேலை செய்பவர்களும் அவரவர் வேலையை விட்டு அவள் பாடலை ரசித்து கொண்டிருந்தனர் .



அந்த குரலில் ஏதோ சோகம் இழையோட கையிலிருந்த வீணையை மீட்டி இடையில் சுருதி சேர்த்தாள் அவள்.



எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட

என்னுள்ளே ஒரு வீணை ராகம் தேட

அன்புள்ள நெஞ்சை காணாதோ

ஆனந்த ராகம் பாடதோ

கண்கள் எங்கும் நெஞ்சின் பாவம் மேலும் ஏற்றும்




கையில் வீணையுடன் திருமகளே கலைமகளாய் வந்து அமர்ந்தது போல் இருந்தவள் கண்களில் கண்ணீர் வழிந்து கன்னத்தை தாண்டி நாடியில் தற்கொலை செய்ததது.



காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றை தேடுதே



நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்

நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்

மௌனத்தின் ராகம் கேளாதோ

மௌனத்தில் தாளம் போடதோ

வாழும்..... காலம்.... யாவும்.... இங்கே நெஞ்சம் தேடும்



காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றை தேடுதே

அலைபோல நினைவாக…

சில்லென்று வீசும் மாலை நேர



காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றை தேடுதே......




பாடல் முடிந்தும் அதன் தாக்கம் என்னில் முடியவில்லை என்பது போல் வீணை இசை ரீங்காரமாய் ஒலிக்க, அனைவரும் அவரவர் வேலையை பார்க்க செல்ல அவன் மட்டும் அசையாது நின்றிருந்தான். ஆறரை அடி உயரத்தில் ஒற்றை நாடி சரீரம் உடல் பயிற்சியில் இறுகி இருக்க தலை கலைந்து முகம் சோர்வையும் களைப்பையும் குத்தகைக்கு எடுத்திருந்தது. அவனுடன் சேர்ந்து தூசி படிந்திருந்த அவன் வாகனமும் கூறியது இருவரும் நெடுந்தூர பயணத்தில் இருந்து வந்திருக்கின்றோம் என்று. அவன் தாமரை வடிவ அழகான கண்கள் மூடியிருக்க ப்ளாக் பாண்ட்டும் மஸ்கட் நிற டீ ஷர்ட் அணிந்து நின்றவன் கம்பீரம் அப்போதும் குறையாமல் இருந்தது.



சில நிமிடங்கள் கழிந்து கண் திறந்தவன் திரும்பி பார்க்க அவன் கண்களில் தென்பட்டாள் அவள். வீட்டுக்கு வெளியே அமர்ந்து பேசுவதற்கு சில நேரம் தேனீர் அருந்த என கூடாரம் போல் நான்கு புறமும் திறந்த மண்டபம் கட்டியிருக்க அதில் வீணையுடன் அமர்ந்திருந்தாள்.



விரிந்திருந்த கூந்தல் நிலத்தில் புரள நீண்ட விரல்கள் வீணையின் தந்திகளுடன் விளையாட அப்போதும் அவள் குரலை போலவே இனிமையான இசை தவழ அமர்ந்திருந்தவள் முகம் சிரிப்பு என்பதையே மறந்திருந்தது. கடந்த இரண்டு வாரங்களாக இப்படி தான் இருக்கின்றாள். சரியாக சொல்ல போனால் கேரளா போய் வந்ததிலிருந்து. முதலில் அலட்சியமாக விட்டுவிட்டான். ஆனால் இந்த பயணத்தின் போது அறிந்த சில செய்திகளின் பின்னர் அவ்வாறு விட்டு விட முடியவில்லை.



பெருமூச்சு ஒன்றினை சத்தமின்றி விட்டவனுக்கு கேரளா போவதற்கு முன்னர் அவள் தன்னிடம் வந்து பேசியது நினைவிலாடியது.

🎻🎻🎻🎻🎻

அவர்கள் அறை மூன்றாக பிரிக்கப்பட்டு ஒருபுறம் அவளும் இன்னொரு புறம் அவள் பயன்படுத்தும் வகையில் இருக்க நடுவில் இருவருக்கும் பொதுவாக கட்டிலும் போடப்பட்டிருந்தது. கல்யாணமாகி இந்த பத்து மாதங்களில் அவளை இருவருக்கும் பொதுவான அறையில் பார்த்ததே இல்லை. அன்று மடி கணனியில் அடுத்த நாள் மீட்டிங்கிற்கான தகவல்களை சரி பார்த்து கொண்டிருந்தவனிடம் வந்தவள் தயங்கி நின்றாள்.

என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தான்.

"இல்லை என்னுடன் நாளைக்கு மட்டும் கேரளா வரமுடியுமா? நடுங்கும் உதடுகளை கட்டுப்படுத்தியவாறே கேட்டாள். ஏனோ அன்று அவள் கலக்கம் சுமந்த முகமும் கண்களும் அவன் கண்ணில் படவேயில்லை. இல்லை இத்தனை நாளில் எதுவும் கேட்காதவள் இன்று ஏன் கேட்கின்றாள் என்றும் யோசிக்கவில்லை. அவன் உதடு ஏளனமாக வளைய "ஏன் இப்போது என்ன தேனிலவு போக வேண்டுமா?" கிண்டலாக கேட்டான்.



அன்று காலை தான் அவன் அம்மா யசோதா பிடித்து வைத்து வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார் "அவள் தனியாகவே இருக்கின்றாள் எங்காவது கூட்டி போ" என்று இவள் தான் ஊமைகோட்டான் போல் இருந்து கொண்டு அம்மாவிடம் போட்டு கொடுத்துவிட்டாள் என்றே எண்ணினான். இப்போது வந்து கேரளா எனவும் விஷம் நிறைந்த குளவியாய் கொட்டிவிட்டான்.



"தேனிலவா..." மெலிதாய் விரக்தி நிறைந்த குரலில் முணுமுணுத்தாள். அதற்கு மேல் அவனிடம் என்ன பேச என்று கேட்ட மனதிற்கு மூளை மௌனத்தையே பதிலாக கொடுக்க எதுவும் வேறு பேசாமல் திரும்பிவிட்டாள். தன் அறைக்கு சென்றவள் பிரெஞ் விண்டோ வழியே வெளியே தெரிந்த வானத்து நிலவை வெறித்தவாறு நிலத்தில் அமர்ந்திருந்தாள்.



சிறு வயதிலிருந்தே எத்தனையோ கஷ்டங்களில் வளர்ந்தவள் தான் ஆனால் இன்றைய நாளை தனியாக சமாளிக்க முடியாதது போல் தோன்றவே போய் கேட்டுவிட்டாள். அருகருகே இருந்தது ஏதோ ஒரு விதத்தில் அவன் உதவுவான் என்று இந்த மட மனம் நம்பிவிட்டது.

ஆனால் இது நாள் வரை யார் தூணையும் இன்றி வாழ்கையை கடந்தது போல் இனியும் கடக்க வேண்டும். இல்லாவிட்டால் மூழ்கி போக வேண்டும். கண்களில் நீர் நிற்காமல் வழிய மிக மிக மெல்லிதாய் விசும்பினாள். சிறு வயதிலிருந்தே அவள் அழுதாள் சத்தம் கேட்காது மெல்லிய விசும்பல் அதுவும் கூட எல்லை கடந்த சோகத்தின் போது மட்டுமே இதுவரை ஒரே ஒரு தடவை தான் அப்படி அழுதாள்.


வேலையை முடித்து படுத்தவனுக்கு உறக்கம் வர மறுத்தது. வேலையின் மும்முரத்தில் கவனிக்க மறந்த அவளின் தோற்றம் இப்போது கண் முன்னே வர எரிச்சலுடன் எழுந்தவன் அவள் அறைக்கு சென்றான். அவள் வந்த பின்னர் அந்த அறைக்கு சென்றதே இல்லை அதற்கு முன் ஜிம்மாக பயன்படுத்தினான்.



திறந்து பார்க்க இருட்டாக இருக்க ஸ்விட்சை தட்டி வெளிச்சத்தை ஒளிரவிட்டான். சோபாவில் தலை சாய்த்துக் கீழே அமர்ந்திருந்தாள்.



"ஏன் கீழே இருக்கின்றாய்?" கேள்விக்கு பதிலின்றி போகவே கோபத்துடன் "கேட்டால் பதில் சொல்ல மாட்டாய்? அவளை திருப்ப போன கை பாதியில் நின்றது. கன்னத்தில் கண்ணீர் கோடுகளுடன் உறக்கத்திலும் விசும்பி கொண்டிருந்தாள்.



கன்னத்தில் தட்ட விசும்பல் அதிகமாகியது கைகளில் ஏந்தியவன் படுக்க வைக்க சுற்றும் முற்றும் பார்த்தான் எதுவும் இல்லை கட்டில் மெட்ரஸ் பாய் தலையணை கூட இல்லை. இவ்வளவு நாளும் எங்கே படுக்கின்றாள் கேள்வி மனதில் எழ குனிந்து கையில் இருப்பவளை பார்த்தன்.



"இம்சை" வாய்க்குள் முனகியவன் அப்படியே விட்டு செல்ல மனமின்றி வெளியே அவன் படுக்கும் கட்டிலில் படுக்க வைத்தான். கன்னத்தின் ஈரத்தை துடைக்க மீண்டும் ஈரமாகியது. நெற்றி சுளித்து பார்த்தவன் கண்களில் பட்டது நீர் ஊற்றுபட்டது போல் நனைந்திருந்த முன் பக்கம். நம்ப முடியாமல் தொட்டு பார்க்க அது நான் ஈரம்தான் என்றது. இப்படி ஈரமென்றால் எவ்வளவு நேரம் இப்படி அழுதாள் வெறுமே கேரளாவுக்கு போகவில்லை என்ற ஒரு காரணத்திற்காக இப்படியா அழுவது கோபம் தான் வந்தது அழுது சாதிக்க நினைக்கின்றாளா? அல்லது வேறு ஏதாவதா? எழுப்பி கேட்டாலும் பதில் சொல்லவாளா என்பது கேள்விக்குறிதான்.



சற்று பொறுத்து பார்த்தவன் அவள் விசும்பல் நிற்பது போல் தெரியவில்லை என்றதும் அவளை இழுத்து மார்பில் போட்டு தலையை வருடி கொடுத்தான். அதன் பிறகு கண்ணீர் சற்று மட்டுப்பட்டது நிற்கவில்லை. அப்படியே அவனும் அயர்ந்துவிட்டான்.



அடுத்த நாள் எழுந்து சோம்பல் முறித்தவனுக்கு ஏதோ குறைவது போல் தோன்றவே புருவம் சுழித்து யோசித்தவனுக்கு இரவு அவள் அழுதது நினைவில் வந்தது. சுற்றும் முற்றும் பார்க்க இல்லை. குளியலறை, மாடி தோட்டம், வீணை வாசிக்கும் மண்டபம் ஒரு இடத்திலும் இல்லை.



கடைசியாய் அவள் அறைக்கு சென்று பார்க்க வெறுமையாய் இருந்தது. ஏதோ தோன்ற அவளின் கபோர்டை திறந்து பார்த்தான். அதில் அவன் இத்தனை நாளும் வாங்கி கொடுத்த பொருட்கள் பத்திரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க அவள் வழமையாக அணியும் ஆடைகளில் சிலது மட்டும் குறைந்தது போல் இருந்தது. நேற்றைய அவள் நிலை கண்முன் வந்து செல்ல பதற்றம் தன்னாலே வந்து ஒட்டிக் கொண்டது.



வேகமாக கீழே இறங்கி வந்தவனிடம் அவன் அம்மா "ஆ... உன்னைத்தான் பார்த்து கொண்டிருந்தேன். நண்பி ஒருத்திக்கு விபத்து அதனால் கேரளா போவதாகவும் ஹாஸ்பிடலில் நிற்க வேண்டி இருக்கும் நேரம் கிடைக்கும் தானே அழைப்பதாகவும் கூறினாள்" தகவலை சொன்னவர் அவசரமாக தன் செயளாலருடன் சென்றுவிட்டார். .



🎻🎻🎻🎻🎻

அங்கிருந்து வந்த பின் அம்மாவிடம் என்ன பேசினாலோ தெரியவில்லை வந்த நாளில் இருந்து பின்னால் உள்ள தோட்ட வீட்டில் தான் தாங்கியிருந்தாள். அம்மாவிடம் கேட்டதற்கு "வேண்டுமானால் நீ போய் அவளுடன் இருந்து கொள், அவளை வர சொல்லி கஷ்டப்படுத்ததே " என்றுவிட்டார்



அவள் இருந்த இடத்தை நோக்கி நடந்தவன் அருகே சென்றதும் காலணியை கழட்டி உள்ளே சென்றான். அவனை கண்டதும் திரும்பி கண்ணீரை துடைத்தவள் "வேலங்கில் இருக்க நாற்காலி" என்று அழைக்க வேண்டாம் என்று தலையசைத்தவன் அவளருகே கீழே இருந்தான். இதயம் ஏனோ மெலிதாய் வலித்தது என்னிடம் கண்ணீரை மறைக்கின்றாள். ஏன்...





அதற்குள் "அம்மணி" என்று வேலன் வர அவன் முகத்தை பார்த்தவள் அதிலிருந்த களைப்பையும் சோர்வையும் பார்த்து விட்டு கூறினாள் "யூசும் சான்விச்சும் எடுத்திட்டு வாங்க அங்கிள்" என்றாள்.



"இரண்டு" என்றவன் தன் நீண்ட விரலினால் அவள் வீணையின் நரம்பை சுண்டிவிட்டான்.



"எனக்கு வேண்டாம்" உடனடியாக பதில் வந்தது.



நிமிர்ந்து அவளை பார்த்தவன் கோபத்துடன் கேட்டான் "சாப்பிடுறீயா இல்லையா?"



ஒரு அசைவும் இன்றி குனிந்தவாறு அமர்ந்திருந்தவளை பார்த்து எழுந்த பெருமூச்சை சத்தமின்றி விட்டான். அவள் சிந்தனை மீண்டும் எங்கோ சென்றதை உணர்ந்தவன் "இதை எப்படி வாசிப்பது" அவள் மனதை திசை திருப்ப கேட்டான்.



ஒவ்வொரு தந்தியாக தட்டி சொன்னாள் "இது ஸ இது ரி, இதை மீட்டும் போது இங்கே அமத்தினால் இந்த சத்தம் வரும்...." வீணையை தூக்க "ஏன்" என்றவனிடம் தலைகீழாக வாசிக்க முடியாது இல்லை அதான்" என்றாள். வேலன் வரும் வரை அதை சொல்லி கொடுக்க வாசிக்கின்றேன் என்ற பெயரில் ஸ்வரம் அபஸ்வரமாய் வர "அதென்ன நீ வாசித்தால் மட்டும் நன்றாய் வருது" என்ற அவனின் சிறுபிள்ளைதனத்தில் அவள் இதழில் கீற்றாய் ஒரு முறுவலும் வந்தது



வேலன் யூஸை கொண்டு வர அவன் கையிலிருந்து வீணையை வாங்கியவள் தன் மடியில் வைத்து குடம் இருந்த இடத்தில் கையை வைத்து அதன் மீது கன்னம் வைத்து அதில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். முதல் தடவையாக அவள் அழகு அவன் உள்ளத்தை கொள்ளையிட அவள் தலையில் கை வைத்தான்.



ஆச்சரியத்துடன் கண் விரித்து பார்த்தவளிடம் "இது உனக்கு" சாப்பிடு என்று கண்ணாலேயே உத்தரவிட "இல்லை எனக்கு வேண்டாம் பசியில்லை" மறுத்தாள்.



"மேலே மாடியிலிருந்து அம்மாவும் அப்பாவும் பார்த்து கொண்டிருக்கின்றார்கள் இப்போது நீ சாப்பிடாவிட்டால் எனக்கு தான் மங்களம் விழும் என்னை காப்பாற்றவாவது சாப்பிடு" அவளோ விழித்தாள் 'நான் சாப்பிடவில்லை என்றால் இவனுக்கு ஏன் பேச்சு விழனும்' அதற்கும் மேல் எப்போதிருந்து என்னிடம் இப்படியெல்லாம் பேச ஆரம்பித்தான். அவன் முகமே சொன்னது சாப்பிடாமல் விடமாட்டான். சோர்வுடன் கூப்பிடு தூரத்தில் நின்ற வேலனை அழைத்தவள் வீணையை வணங்கி கூறினாள் "அங்கிள் இதை உள்ளே வைத்து விடுங்கள்".



அவர் எடுத்து சென்றதும் இருவரும் அமைதியாக உண்டு முடித்தனர். யூஸ் கிளாசை உள்ளங்கைகளில் வைத்து உருட்டியவாறே "நான் நாளைக்கு திரும்ப கேரளா போறேன்" சிறிய குரலில் கூறினாள். அவனருகே தன் துன்பம் குறைவதை உணர்ந்தவளுக்கு தவிப்பாய் இருந்தது. அவன் அருகாமை அவளுக்கு என்றும் நிரந்தரமில்லை. அதற்காக ஏங்குவது மடத்தனம் அவன் வந்தால் நன்றாக இருக்கு தான் ஆனால்.... மறுபடியும் மறுத்தால் தாங்கி கொள்ள முடியுமா தெரியவில்லை.



"ஹ்ம்" அதை தவிர எதுவும் சொல்லவில்லை குனிந்திருந்த முகத்தை ஆழ்ந்து பார்த்திருந்தான் வேறு எதுவும் சொல்கின்றாளா என்பது போல்.



அவனின் அமைதி அவளுக்கு அவன் வர விரும்பவில்லை என்பது போல் புரிந்தது. வழமையாக விருப்பமின்மையை இது போல் அமைதியாக இருந்து தானே புரிய வைப்பான். எழுந்த பெருமூச்சை சத்தமற்று விட்டாள்.



"நீங்கள் களைத்து போய் இருப்பீர்கள் உள்ளே போய் ப்ரஷ் ஆகுங்கள்"



ஒரு பக்க உதட்டால் மட்டும் சிரித்தவன் "வரும் போது இருந்தது இப்போது இல்லை" என்றவன் அப்படியே தலைக்கு கீழே கை கொடுத்து கால் மேல் கால் போட்டு படுத்துவிட்டான். அவளுக்கு மிக மிக அருகில்



"ஹா..." விழித்தாள். சும்மாவே மனம் அவனுக்காக ஏங்கி கொண்டிருக்க அவனின் இந்த நடவடிக்கையில் கிறுகிறுத்துவிட சட்டென எழுந்து நின்றவள் கையை பிடித்து இழுத்தான்.



அப்படியே அவன் மார்பில் மலர் கொடியாய் விழுந்தாள் அவள்.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

அடுத்த கதையுடன் வந்துவிட்டேன் இதற்கும் உங்கள் ஆதரவை வேண்டுகின்றேன். இரண்டாவதாய் முடிக்கும் கதை என்பதால் கொஞ்சம் சலனம், முதல் கதைக்கு கிடைத்த அளவு ரெஸ்போன்ஸ் ஆவது கிடைக்குமா? இல்லை ஊத்திக்குமா என்று.

ஒவ்வொரு நாளும் கலையில் எபி வரும் குறைந்தது அடுத்த முப்பது நாட்களுக்கு. ;)😜;) ஏனென்றால் முப்பது எபியும் எழுதிட்டேன்.

மறக்கமால் உங்கள் கருத்துகளை சொல்லிச் செல்லுங்கள்.


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா🎻02

வாகனத்தின் ஏர் பிரெஷ்னேர் வாசத்துடன் அவனுக்கே உரித்தான வாசம் அவள் நாசியை நெருட, அவன் மேல் விழுந்த வேகத்தில் அவன் மார்பின் திண்மையை அவள் உணர அவள் மேனியின் மென்மையை அவன் உணர்ந்தான். அவசரமாக எழ முயன்றவளை அசையவிடாமல் இறுக்கியது அவன் வலுவான கரம். அவள் அவனிடமிருந்து விடுபட நெளிய அப்படியே கீழே தள்ளி அவள் மேல் கவிழ்ந்தவன் "சும்மா நெளியாம இருடி என்னென்னமோ செய்யுது"

"என்ன செய்யுது கௌதம்" கண்ணில் குழப்பம் படர கேட்டாள்.

"இப்படியே குழந்தை மாதிரி விழி, கடிச்சு வைக்கிறேன்" அவள் உதட்டை கடிப்பது போல் பாவ்லா செய்தான்.

"ஐயே... அது எச்சி" சிறு குழந்தையாய் முகம் சுளித்தாள்.

அவள் குழந்தைதனத்தில் சிரித்தவன் "உன் பாடு கஷ்டம்டா கௌதம்" தன்னை தானே ஆறுதல்படுத்தினான். அதற்கும் விழித்து கொண்டிருந்தவள் நெற்றியில் தன் நெற்றியால் முட்ட அவளோ அவனை வேற்று கிரகவாசியை போல் பார்த்து வைத்தாள். "என்ன இது எல்லோரும் பார்ப்பாங்க போகனும் விடுங்க" விடுபட நெளிந்தாள்.

ஒரு கால் மடித்து மல்லாந்து படுத்தவன் அவளை இழுத்து தன்மேல் போட்டு "ஒருவரும் நம்மை பார்க்கவும் முடியாது நாமும் எங்கேயும் போகவும் முடியாது சுற்றி பார்" என்றான். இருதரம் அவன மார்பில் புரண்டு திரும்பி திரும்பி பார்க்க துடித்த கைகளை அடக்கி தலையின் பின்னே கோர்த்தான்.

அவள் பாடும் போதே மாலை மயங்கி கொண்டிருந்தது இப்போது பார்க்க சுற்றிலும் இருள் பரவி தூரத்தில் அந்தி வானத்தில் சின்னஞ் சிறிதாய் சிகப்பு மட்டும் மிச்சம் இருந்தது. மீதி இடம் இருளில் மூழ்கி இருக்க லைட் கூட ஒளிரவில்லை. சத்தத்தை வைத்து மழை பெய்ததை உணர்ந்தவள் உடல் இறுக அவன் டீ ஷர்டை இறுக பிடித்தாள். அவர்கள் இருவருமே நிழலுருவமாய் தெரிந்தனர்.

சிறு வயதிலிருந்தே மழையும் இருளும் என்றால் பயம். அவள் வாழ்வில் நடந்த சில விரும்பாத நிகழ்வுகளின் போதெல்லாம் மழை தன் பங்களிப்பை செய்ய அவளுக்கு அது நிரந்தர பயமாகவே ஆகிவிட்டது. யாரும் 'பயப்படாதே' என ஆறுதல் கூறவும் இல்லை 'நானிருக்கின்றேன்' என்று அணைக்கவும் இல்லை எனவே இத்தனை காலம் தனியாகவே வாழ்ந்த போதும் பயம் மட்டும் மட்டுப்படவில்லை மாறாக அதிகரித்துவிட்டது. அது போன்ற சமயங்களில் கைகளால் உடலை இறுக கட்டிக் கொண்டு மூலையில் அமர்ந்துவிடுவாள். இது போன்ற நேரங்களில் விடிய விடிய உறங்காமல் விழித்து வெளிச்சம் வந்த பின் உறங்கிய நாட்கள் தான் அதிகம்.

அருகே ஒருவன் இருந்தாலும் பழகிய பழக்கம் மாறாது என்பது போல அவனை விட்டு விலகி கைகளை கட்டி தன்னை தானே குறுக்கி கொண்டாள்.

தன் மீதிருந்த அவளின் மலர் பாரம் குறைய சற்று எம்பி குனிந்து பார்த்தான். அருகே அவள் குறுகி படுத்திருப்பது வரி வடிவமாய் தெரிய "என்னாச்சு" என்றவனுக்கு பதிலில்லை. ஆனால் அவள் நடுங்குவது புரிய வேகமாக போன் லைட்டை ஒளிர செய்து பார்த்தான்.

குறுகி படுத்திருந்தவள் முகம் பயத்தை பிரதிபலிக்க நெற்றி சுருக்கியவன் 'மடையா இதை எப்படி மறந்தாய்?' தன்னை தானே திட்டியவாறே எழுந்து அமர்ந்து சிறிதும் யோசிக்காமல் சட்டென இழுத்து மடியில் போட்டு நெஞ்சோடு அணைத்து கொண்டான்.

"ஷ் பயப்பட கூடாது நான் இருக்கிறேன் இல்ல" ஒரு குழந்தைக்கு சொல்வது போல் சொல்ல அவளோ அவனுள் புதைந்து விடுவாள் போல் அவனுடன் ஒன்றினாள்.

"ஸ்ரீனிகா..." மென்மையாய் அவள் பெயரை காதுக்குள் அழைத்தான் "ஸ்ரீனி.."

"ஹ்ம்ம்"

"ஸ்ரீனி... நல்ல பொண்ணு தானே" குழந்தையிடம் பேசுவது போல் பேசினான்.

"ஹ்ம்ம்..."

"என்னிடம் பேசுவாங்க தானே.."

"எ எ என்ன பே பேச" பயத்தில் நாக்கு இறுகி போனது போல் வார்தை இடறியது.

"ஸ்ரீனி எப்ப கேரளா போக போறா?"

"நா நா நாளைக்கு" நடுங்கினாள்.

"சரி சரி நான் இங்கே தான் இருக்கிறன்" என்றவன் தலை தோள் கை என்று மென்மையாக வருடி கொடுத்தான். "எத்தனை மணிக்கு"

"நாலு.... மோர்னிங் நாலு மணிக்கு"

"ஹ்ம்ம் கேரளாவில் எங்கே போறா"

"ஹ்ம்ம் திருவனந்தபுரம்.." அவன் குரலில் என்ன மாயமோ அவனுடன் பேசப்பேச மெதுவே பயம் குறைந்தது. அவன் வருடலில் உடலில் ஏற்பட்ட இறுக்கம் தளர அவன் மென்மையான தொடுகையில் பயம் மாயமாவதை என்றும் போல் ஆச்சரியத்துடன் உணர்ந்தாள். அவன் இதய துடிப்பின் ஓசை மெல்லிய சங்கீதமாய் அவள் காதருகே ஒலிக்க பல நாட்களாக அவளை வெறுத்து நின்ற நித்திராதேவி அணைத்து கொள்ள மெதுவே உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

"எதுக்கு...."

பதிலின்றி போக குனிந்து பார்க்க சிப்பி இமைகள் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அந்த குளிரிலும் பயத்தில் குறு வியர்வை பூத்த நெற்றியை அவள் சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து துடைத்து விட்டான். குளிருக்கு இதமாக அவனோடு இன்னும் ஒன்றினாள். அவள் செய்கையில் புன்முறுவல் எழ சுற்றி பார்த்தவனுக்கு மழை விட சற்று நேரமாகும் போல் தோன்றவே அவளை எழுப்பி அழைத்து செல்ல கன்னத்தை தட்ட போனவன் கை பாதியில் நின்றது. போன் வெளிச்சத்தில் குழந்தை போல் உதடு பிதுக்கி உறங்கியவளை எழுப்ப மனம் வரவில்லை.

அவன் ஐ போனை எடுத்து பார்த்தான் அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மழை என்று போட்டிருக்க சிறிது யோசித்தவன் முழுதாக அவளை தூக்கி தன் மேல் போட்டு கொண்டான்.

அவளுக்கு மெத்தை மேல் படுத்து போல் குளிருக்கு இதமாக இருக்க புரள பார்க்க ஒரு கையால் விழுந்து விடாமல் பிடித்து கொண்டான். 'நான் சும்மா இருந்தாலும் இவள் இருக்க விட மாட்டாள் போலயே' மனதோடு புலம்பியவன் "சும்மா இருடி இம்சை... இல்ல நிலத்தில் தள்ளிவிடுவேன்" செல்லமாய் மிரட்டினான்.

🎻🎻🎻🎻🎻

அடுத்த நாள் காலை குருவியின் கீச்கீச் சத்தத்தில் எழுந்தவள் உதடுகளில் நீண்ட நாட்களின் பின்னர் புன்னகை பூத்திருந்தது. குளிருக்கு இதமாய் இருந்த கம்பளியை விட்டு வெளிவர மனமின்றி தலையணையை கட்டிக் கொண்டாள். ஆனால் வழமை போல் இல்லாமல் தலையணை திண்னெண்று இதமான கததப்புடன் இருக்க கண் திறக்க மனமின்றி தடவி பார்க்க முடி அகப்பட்டது. "ஐ கரடி பொம்மை" என்று சிரித்தாள். உன்னிடம் எப்போது கரடி பொம்மை இருந்தது அதுவும் இந்த சைசில் அப்பொழுது தான் விழித்த மூளை கேட்க சட்டென எழுந்து அமர்ந்தாள்.

கெளதம் சிரிப்பை அடக்கியபடி அவளையே பார்த்திருந்தான். உறங்கும் அவளை பார்த்தவன் எழுப்ப மனமின்றி படுத்திருந்தான் எத்தனை நாள் உறக்கமின்றி ஒரு ஆறுதல் வார்த்தைக்கு ஏங்கியிருந்தால் அப்படி சில கணங்களில் அடித்து போட்டது போல் உறங்கியிருப்பாள். அவள் தலையை வருடியவனுக்கு நேற்று அவளை கைகளில் அள்ளி வந்தது நினைவில் வந்தது.

🎻🎻🎻🎻🎻

சற்று நேரத்தில் மழை நிற்க ஷாலை அவள் தலையை சுற்றிப் போட்டவன் பூ போல கைகளில் அள்ளிக் கொண்டு தூறலில் நனையாமல் குழந்தையை தோளில் தூக்குவது போல் தன் கழுத்து வளைவில் அவள் முகத்தை வைத்து அங்கிருந்து சில நிமிட நடையில் இருந்த தோட்ட வீட்டிற்கு சென்றான். பின்னாலேயே வேலன் குடையையும் பிடித்து வந்தார்.

பெட்டில் விட்டு குளிக்க சென்றவன் சட்டையை இறுக பிடித்து "போக வேண்டாம்" சிணுங்கினாள். "பிரஷாகி வரேன்" என்றவன் மடியில் கன்னம் பிதுங்க இன்னும் ஒட்டிக் கொண்டாள். ஒருவாறு அவளிடமிருந்து விடுபட்டு குளித்து வந்தவன் கதவு தட்டும் சத்தம் கேட்கவே போய் திறந்தான்.

வேலன் தான் பால் கோப்பையுடன் நின்றார் "தம்பி பாப்பா காலையிலிருந்து எதுவும் சாப்பிட குடிக்கல... இன்று பார்த்து வள்ளியும் இல்லை... அவளாவது ஏதோ மிரட்டி ஒரு வாய் உள்ளே போகும் இதையாவது குடிக்க வையுங்கள்"

கௌதமன் இமை வெட்டாமல் அவரையே பார்த்திருந்தான்.

"நான் வயசானவன் ஏதோ எனக்கு சரி என்று பட்டதை சொல்றன். நேற்று தலைக்கு ஊத்தின பிள்ளை மூன்று நாளாக பச்சை பட்டினி உடம்பு என்னத்துக்கு ஆகும். வந்த பத்து மாதத்தில் பாதி உடம்பு தான் இருக்கு... அதுவும் இந்த பத்து நாளும் அழுதே கரையுது இந்த பெண்... " புலம்பியவாறே உள்ளே வந்து பாலை உள்ளே வைத்தவர் அவள் அறையை எட்டி பார்க்க அவள் உறங்குவதை பார்த்து "ஏதோ இன்றாவது தூங்குது இல்லாட்டி பேய் மாதிரில்ல தோட்டம் முழுக்க திரியும்" வாய்க்குள் புலம்பியபடி வெளியே சென்றார்.

பாலை எடுத்து வந்து உள்ளே வைத்தவன் சிலைபோல் உணர்ச்சியற்று கட்டிலில் அமர்ந்தான். மெத்தையில் அமர்ந்தால் கட்டிலின் சட்டத்தில் அமர்ந்ததை போல் இருந்தது. அவன் வீட்டின் வேலைக்காரர்களுக்கு கூட நல்ல மெத்தை உண்டு.

அசைவில் அவள் திரும்பி படுக்க அவளை பார்த்தான் முதன் முறை அவளை பார்த்த நினைவு வந்தது. குழந்தைத்தனமான சிரிப்புடன் புசுபுசுவென்று கன்னங்களும் கனவு நிறைந்த விழிகளுமாய் சற்று பூசினால் போல் இருந்தவள் இப்போது வெறும் எலும்பு கூடு மட்டும் தான் மிச்சம். கட்டிலருகே இருந்த சிறு மேசையில் இருந்த பாலை பார்த்ததும் அவள் குடிக்க வேண்டுமென்று நினைவு வர அவளை எழுப்பினான். எழுந்தவள் அவன் மேல் விழுந்து விட்ட உறக்கத்தை தொடர்ந்தாள்.

"இந்த பாலை குடிம்மா.. ஸ்ரீனி" கன்னத்தை தட்டி எழுப்பினான்.

உறக்கத்தில் அரைக்கண் விழித்து பார்த்தவள் "ஐ நல்ல கனவு" சிரிப்புடன் மீண்டும் விழி மூடினாள்.

"எதும்மா நல்ல கனவு" பதில் தன் இதயத்தை குத்தி கிழிக்கும் என்று தெரிந்தே கேட்டான்.

"அதுவா கௌதம் என்னை காதலித்த கெளதம்" வேகமாக மறுத்து தலையாட்டி திருத்தினாள் "என்னை காதலித்தது போல் பொய்யாய் நடித்த கௌதம்.... இல்லையே அதுவும் இல்லை இல்லையா? அதுவும் என்னோட கற்பனைதானே" சிரித்தாள் அதில் உயிர்ப்பில்லை.

அவன் கண்களில் இருந்து வழிந்த ஒரு துளி கண்ணீர் அவள் கன்னத்தில் விழ "ஈரம்...." துடைத்தாள்.

சட்டென சுதாரித்தவன் "முதலில் இந்த பாலை குடி" அவளுடன் போராடி ஒரு கிளாஸ் பாலை அவள் வயிற்றினுள் அனுப்பி வைக்க அவளோ அரைகுறை உறக்கத்தில் கனவு என்று அவன் முகத்தையே ஆசையாய் பார்த்திருந்தாள்.

அவள் பார்வையை தாங்க முடியாமால் "இந்த கௌதம் நிஜமாகவே உன்னை காதலிக்கின்றான் தெரியுமா உனக்கு" இரு கன்னங்களையும் இறுக பிடித்து கேட்டான்.

சோபையாய் புன்னகைத்தவள் ஒற்றை வார்தையில் மறுத்தாள் "பொய்..." பின் அவளே தொடர்ந்தாள் "அவனுக்கு தேவையான ஏதோ என்னிடம் இருக்கு அன்று கூட சொன்னான்.... நான் தான் அதிர்ச்சியில் சரியா கவனிக்கல.... ஞாபகம் வரவே மாட்டேங்குது... ஏதோ மில் சம்பந்தமான சொத்து... பச்... நினைவில் இல்லை என்னிடம் தான் எதுவுமில்லையே... பின் எதுக்கு கல்யாணம்... நீ கேட்டு என் கனவில் வந்து சொல்லு.... என்னிடம் இருந்தால் அவனுக்கு கொடுத்துறான்" கொஞ்சலாய் கூறியவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"எதை கேட்டாலும் கொடுப்பாயா.....?" தொண்டை அடைக்க கேட்டான்.

"ஹ்ம் தெரிந்தால் கொடுத்துட்டு போயிறலாம்" ஆயாசத்துடன் கூறினாள்.

"கொடுத்தால் போய் விடுவாயா....?" ஏனோ அவன் குரல் கரகரத்தது.

"இல்லாவிட்டாலும் போக தானே வேனும்" வெறுமையாய் கூறினாள்.

சற்று நேரம் எதுவும் பேசாமல் அவள் தலையை வருடிக் கொண்டிருந்தான்.

கௌதமனுக்கு ஏதோ தோன்ற "இது உன் கனவு தானே அப்ப நீ எது வேண்டும் என்றாலும் நினைக்கலாம் தானே, இந்த கௌதம் நிஜமாகவே உன்னை காதலிக்கின்றான் தெரியுமா?" அவள் ஆழ் மனதில் பதியவைக்க முயன்றான்.

"கனவுக்கும் ஒரு எல்லையுண்டு இல்லையா... இதுவும் அவன் தான்..." அவள் குரல் மெதுவே தேய்ந்தது. 'கனவுக்கும் ஒரு எல்லையுண்டு மிஸ் ஸ்ரீனிகா' அவனது அதே வார்தை அவன் இதயத்தையே சில்லு சில்லாக நொறுக்கிவிட்டது.

இதயத்தின் வலியில் அவளை இறுக அணைத்து கன்னத்தில் முத்தமிட "இந்த கனவும் வேண்டாம் நிஜத்தில் கஷ்டம்" சிணுங்கி விலகி படுத்தாள்.

கனவிற்கு கூட இறுகி போய் இருப்பவளை என்ன செய்ய என்று தெரியாமால் விழித்தான் கௌதம். தான் செய்த தவற்றின் பரிமாணம் எழுந்து நின்ற உயரத்தில் எப்படி சரி செய்ய என புரியாமல் கௌதம் அயர்ந்துவிட்டான். அதன்பின் அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட கௌதம் சோர்ந்து போன அவள் முகத்தையே பார்த்திருந்தான்.

அவனருகே இருந்தவளை அணைத்துக் கொண்ட நித்திராதேவி அவனை திரும்பியும் பார்க்கமாட்டேன் என்று விட்டாள்.

🎻🎻🎻🎻🎻

அவளோ பயத்துடன் அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு பழக்கம் உறக்கத்தில் யார் எதை கேட்டாலும் உளறி விடுவாள். இரவு உறக்கத்தில் அவன் என்னவெல்லாம் கேட்டானோ எதையெல்லாம் உளறித் தொலைத்தாயோ என்று தெரியலையே அவள் மூளை கூற கௌதமை பார்த்து விழித்தாள்.

"என்ன பார்வை, அழகா இருக்கேனா?" கண்ணடித்தான் அவன். அவள் உறைந்து போய் நிற்க அவனே கேலியாக கேட்டான் "இது தான் நீ நாலு மணிக்கு போகும் இலட்சணமா?" அதற்கும் விழித்து கொண்டு நின்றவளை பார்த்து "பன்னிரண்டு மணிக்கு பிளைட் இப்பவே நேரம் எட்டு முப்பது, சீக்கிரம் தயாராகு" விரட்டினான்.

அவளோ திரும்பி திரும்பி பார்த்தவாறு குளியலறைக்குச் சென்றாள்.

அடுத்த நாள் திருவனந்தபுரம் கடற்கரையில் இன்று உருகிய அவனே இறுகி மீண்டும் ருத்ரரூபம் கொள்ள வைத்த செயலை செய்தாள். அவள் செய்த செயலில் அதிர்ச்சியாகி ஓங்கி கன்னத்தில் அடித்தவன் அவனையும் மீறி கண்ணில் நீர் சுரக்க கேட்டான் "பொண்ணாடி நீ...." மேற்கொண்டு பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ அடுத்த அத்தியாயம், வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻03
அவள் உறைந்து போய் நிற்க அவனே கேலியாக கேட்டான் "இது தான் நீ நாலு மணிக்கு போகும் இலட்சணமா" அதற்கும் விழித்து கொண்டு நின்றவளை பார்த்து "பன்னிரண்டு மணிக்கு பிளைட் இப்பவே நேரம் எட்டு முப்பது, சீக்கிரம் தயாராகு" விரட்டினான்.

அவளோ திரும்பி திரும்பி பார்த்தவாறு குளியலறைக்குச் சென்றாள். இவனுக்கு பேய் கீய் ஏதாவது பிடித்திருக்குமோ....

குளித்து சாதாரண ஜீன்ஸ் குர்தி அணிந்து வந்தவளை பார்த்து நெற்றி சுருக்கினான். ‘அவன் ஒன்றும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரன் இல்லை. ஆனால் தமிழ் நாட்டில் பெயர் குறித்து சொல்ல கூடியவர்களில் ஒருவன். அவன் மனைவிக்கு இந்த உடை பொருத்தமற்றதே. ஒரு நாளில் எதையும் மாற்ற முடியாது. ஆனால் அவளும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவள் தான். பின் ஏன்... இப்படி’ அவன் நினைவுகளை கலைத்தது தொலைபேசி.

"ஹலோ, ஆஹ் இரண்டு டிக்கெட் வேண்டும் கேரளா திருவனந்தபுரம் வீட்டுக்கு கொண்டு வந்திரு" மறு பக்கம் ஏதோ கேட்க "இல்ல மீட்டிங் கேன்சல் பண்ணிடு"

அருகே வந்து கையை பிசைந்தவாறு நின்ற ஸ்ரீனிகாவை பார்த்தவாறே "டிக்கெட்ஸ் வீட்டிற்கு கொண்டு வந்து தந்திரு" போனில் பேசி முடித்தவன் 'என்ன' என்பது போல் பார்த்தான்.

"இல்லை வந்து... அது... வந்து" இழுத்தாள்.

கையை காட்டியவாறு பார்த்திருந்தான் சொல்லி முடி என்பது போல்.

"அது வந்து நான் பஸ் இல்லாட்டி ட்ரைன்ல வரானே..."

"ஏன்" ஒற்றை சொல்லாக கேட்டான்.

‘நீ புக் பண்ற பிலைட்க்கு என்னோட ஒரு மாச சம்பளமே போயிருமே' மனம் புலம்ப 'பொய் சொல்லாதே அரை மாச சம்பளம்' மூளை திருத்தியது. 'ரெம்ப முக்கியம் தப்ப வழி சொல்லுவியா அத விட்டு' மனம் மூளையை திருப்பி திட்ட கௌதமின் குரல் இரண்டையும் அடக்கியது.

"ஏன் என்று கேட்டேன்"

"அ.. அது பயம் ஆஹ் பயம் தான் பயம்" காரணம் கண்டு பிடித்த சந்தோசத்தில் கூறினாள்.

"பயமா..." இழுத்தவன் சிறிது யோசனையின் பின் சொன்னான் "பஸ் சரி வராது ட்ரெயின் டிக்கெட் கிடைக்காது சரி காரில் போவோம்" முடிவாய் கூறினான்.

"எது காரா..." விழித்தாள் ஸ்ரீனிகா. 'இன்று உனக்கு சங்கு தாண்டி' மனம் கேலி செய்து சிரித்தது.

"இப்ப என்ன..." சிறு சலிப்புடன் கேட்டவனிடம் "இல்ல உங்களுக்கு மீட்டிங் இருக்கு... சொன்னீங்க இல்ல.." என்றாள்.

"அதை தள்ளி போட வேண்டியது தான்" சாதாரணாமாக பதிலளித்தான்.

"இல்ல நீங்க பிலைட்ல.... இல்ல மீட்டிங் போங்க நான் ஆறுதலா பஸ்ல வாரானே"

அவளை ஊன்றி பார்த்தவன் "பிளைட் பயமா இல்லை.... என்னுடன் வர விருப்பமில்லையா" நேரடியாகவே கேட்டான்.

வேகமாக தலையசைத்தாள் "இல்ல அப்படி இல்ல....." என்னவென்று சொல்லுவாள் எனது சம்பளத்திற்கு பஸ் அல்லது ட்ரைனில் போவது தான் கட்டுப்படியாகும் என்று. விழித்து கொண்டு நின்றவளை பார்த்து "சீக்கிரம் தயாராகு" என்றவன் குளிக்க சென்றான்.

🎻🎻🎻🎻🎻

விமானத்தில் ஏறி சிறிது நேரத்திலேயே அவன் மேல் சாய்ந்து உறங்கிவிட்டாள். திரும்பி பார்த்தவன் சிறுமுறுவலுடன் அவள் உறங்க வசதியாக சரிந்து கொடுக்க அவன் தோளின் பின்புறத்தில் கன்னம் பதித்து உறங்க புன்னகையுடன் கையில் இருந்த கோப்பை ஆராய்ந்தான். அங்கும் இங்கும் சென்ற விமான பணிப்பெண் பார்வையாலேயே ஸ்ரீனிகாவை பஸ்பமாக்கி கொண்டிருந்தாள்.

உறக்கம் கலைந்தவள் சுற்றி பார்க்க அவன் தோளில் சாய்ந்திருப்பது புரிய சட்டென நிமிர்ந்து நேராய் அமர்ந்தாள். அவள் அருகே அமர்ந்து கையிலிருந்த பைலை கவனமாக பார்த்து கொண்டிருந்தவனை பார்த்தவளுக்கு செல்லும் காரியம் நினைவு வர கண்ணில் நீர் வழிந்தது. இவன் அருகே இருந்தால் எந்த தாங்க முடியாத துன்பமும் தூசாய் போகிறது. ஆனால் இது நிரந்தரமற்றது. அவன் தோளில் சாய்ந்து கொள்ள ஏங்கிய மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவள் கண்களை வேகமாக துடைத்தாள்.

கடைக் கண்ணால் அனைத்தையும் அவதானித்தவன் "எழும்பிவிட்டாயா? சரியான கும்பகர்ணிதான் திருவனந்தபுரத்தில் எங்கு போகின்றாய்? எதையும் கவனிக்காதது போல் சாதாரணமாக கேட்டான்.

"அம்மா இருந்த..." அவள் பதிலளித்து முடிப்பதற்குள் விமான தரையிறங்கும் அறிவிப்பு வரவும் சரியாக இருக்கவே சீட் பெல்ட் போட்டு இறங்க தாயாரானார்கள். தன் லக்கேஜை எடுத்து அவளை பார்க்க முதுகில் மாட்டும் சிறு தோள் பையுடன் மட்டும் நின்றவள் போனில் எதையோ பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் தோளுக்கு மேலாக பார்த்தவன் சினத்தில் சிவந்து பல்லை கடித்தான். "நீ என்னை என்ன நினைத்து கொண்டிருக்கின்றாய்?" சினத்தை அடக்கிய குரலில் கேட்டவனை பார்த்து விழித்தாள்.

அவனை பற்றி என்னன்னாவோ நினைத்தாள் ஆரம்பத்தில் காதலன், பின் கணவன் இப்போதோ....

"என்ன செய்து கொண்டிருக்கின்றாய்?"

"கேப் புக் பண்ணுறன்" என்றாள்.

"எதற்கு.."

"எல்லோரும் எதற்கு புக் பண்ணுவார்கள் போகத்தான்"

"அது தான் ஏன் என்கின்றேன் கூட்டி வந்தவனுக்கு கார் அரேஞ் பண்ண தெரியாதா?"

அவளோ விழித்தாள். மூளை மனதிடம் விசாரித்தது ‘உன் முன் நிற்பவன் உன் கணவன் தானே,’ மனமோ ‘அவன் மாறிவிட்டானா? என்னை நேசிக்கின்றானா?’ என ஆவலுடன் நோக்க மூளையோ ‘அவன் மாறவில்லை இது ஆள் மாறாட்டம் யாரென்று விசாரி!’ என்றது.

நீண்ட மூச்சை வெளியேற்றி தன்னை நிதானித்தவன் "நீ ஓர் ஆணியும் புடுங்க வேணாம் பேசாமல் என்னுடன் வா" முன்னே செல்ல முயல தயங்கி நின்றாள். இப்போது என்ன என்பது போல் பார்த்தான்.

"அ அது ப பணம் இப்போ தர முடியாது... கொஞ்சம் இறுக்கம்..." தயங்க பர்ஸை எடுத்து பேங்க் கார்டை அவளிடம் நீட்ட சட்டென இரண்டடி பின்னே சென்றாள்.

"இல்ல என்னிடம் இருக்கு ஆனால் சில காரியங்களுக்கு பணம் தேவைப்படுது. அதான் நெக்ஸ்ட் மான்ந் கண்டிப்பா தந்திருவன்" வேகமாக யாரோ மூன்றாம் நபரிடம் கூறுவது போல் கூறினாள். அதற்குள் அவள் முகம் கன்றிவிட்டது பேசாமல் அன்று போல் நான்கு மணிக்கே எழுந்திருந்தால் இந்த பிரச்சனையே இல்லை.

அவள் கூற்றின் காரணத்தை புரிந்து கொண்டவன் அவள் கன்றிய முகத்தை பார்த்து உதட்டை கடித்து வேறுபுறம் திரும்பினான். சிறுகுரலில் "நீ பணம் எதுவும் தர தேவையில்லை வா" என்றவன் கையிலிருந்த பேங்க் கார்டை அவள் கையை பிடித்து உள்ளங்கையில் அழுத்தி வைத்தவன் "இதை நீயே வைத்திரு" அழுத்தமான மறுக்க முடியாத குரலில் கூறினான். அந்த குரல் அவளுக்கு தெரியும் மறுக்க முடியாதது. மறுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

பட்டாம்பூச்சியாய் இமை தட்டி விழித்தாள் ஸ்ரீனிகா. இப்போது மூளை சொல்வதை அவள் நம்ப தொடங்கினாள். முன்னே நிற்பவன் அவள் கணவன் இல்லை… இருக்கவே முடியாது.

பிரீஸ் ஆகி நின்றவள் நெற்றியில் சுண்டியவன் "என்ன?" என்றவனிடம் "நீங்கள்.... நீங்கள் தானே" சந்தேகத்துடன் கேட்க கன்றிய முகத்துடன் "நான் நானே தான் வா" என்று அவள் போலவே சொல்லி காட்டியவன் முன்னே நடந்தான்.

மீண்டும் முன்னே ஓடி வந்து நின்றவளை பார்த்து "இப்போது என்ன?" என்றான்.

"இல்ல எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு திங்ஸ் வாங்கனும்"

"சரி வாங்குவோம். வா ஹோட்டல் போய் பிரெஷ் ஆகி போவோம்" என்றவனிடம் தயக்கத்துடன் மறுத்து தலையசைத்தாள். "நான் முன்பு இங்கேயிருந்த வீட்டிற்கு போகின்றேன்" மெதுவாய் ஆனால் உறுதியாய் கூறினாள்.

அவளையே ஆழ்ந்து பார்த்தான் கௌதம்.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ அத்தியாயம் - 03, வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தீரா 🎻 04

சிறிது நேரம் அவளையே ஆழ்ந்து பார்த்த கௌதம் "சரி வா போவோம்" என்றான்.

வெளியே சென்று காத்திருந்த காரில் ஏறியவன் திரும்பி பார்த்தான் 'போக வேண்டிய இடத்தை சொல்லு' என்பது போல். திருவனந்தபுரம் நகரினை விட்டு சற்று தூரத்தில் இருந்த விலாசத்தை கூறினாள்.

ஒரு மணி நேர பயணத்தில் இடத்தை அடைய நன்றி சொல்லி இறங்கியவளுடன் அவனும் இறங்கினான்.

"இது தான் என் வீடு" அவள் என் வீடு என்று சொன்னதில் திரும்பி பார்த்தவன் அவள் கண்களில் தென்பட்ட சோகத்தை கண்டு நெற்றி சுருக்கினான் 'அப்படி என்ன நடந்திருக்கும்...' சில நாட்களுக்கு முன்னே தான் அவளை பற்றி ஆராய தொடங்கி இருக்க கிடைத்த தகவல்கள் எல்லாம் புதிராகவே இருந்தன. அவள் வெளியுலகிற்கு உருவாக்கி வைத்திருக்கும் மாய பிம்பத்திற்கும் அவளது உண்மையான நிலைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

நேற்று தான் அவன் ஏற்பாடு செய்திருந்த டிடெக்ட்டிவ் அடுத்தாக கேரளாவில் படித்தது பற்றி ஆராய்வதாக கூறி இருந்தார். பார்த்தால் அவளே இங்கே அழைத்து வந்ததும் இல்லமால் என் வீடு என்று சொல்வதில் இருந்த உரிமையும் அதில் இழையோடி இருந்த சோகமும் அவனை என்னவோ செய்தது. அவர்கள் சென்னையில் இருக்கும் வீட்டினை இவ்வாறு உரிமையுடன் ஒரு தரம் கூட சொல்லவில்லையே.

அவன் கண்கள் வீட்டை அளவெடுத்தது. கேரள பாணியில் அமைந்த நாற்சார மாடி வீடு, சுற்றிலும் வாழை மா பலா தென்னை என சோலைகள் நடுவே அமைந்திருந்தது. சற்று நகரத்தை விட்டு தொலைவில் இருந்ததால் காணியும் பெரிதாகவே இருக்க மொட்டை மாடியின் மேலே கூரை அமைக்கப்பட்டு அதன் கீழ் ஊஞ்சல் இருந்தது. அதோடு முன்னே நின்ற மா மரத்திலும் ஒரு ஊஞ்சல் கட்டப்பட்டிருந்தது. என் உரிமைக்காரன் அருகே இல்லை என்பதை கூறுவது போல் குறிப்பிட்ட இடத்தை தவிர மீதி இடங்களில் சருகுகள் சேர்ந்து குப்பையாக இருந்தது.

"அழகான வீடு, எனக்கு பிடித்திருக்கு" சிறுமுறுவலுடன் கூறினான் கௌதம். அவள் புன்னகையுடன் பார்க்க காரிலிருந்து அவனது லக்கேஜையும் இறக்கினான் கௌதம். "காரை இங்கேயே பார்க் பண்ணலாம் தானே" அவன் கேட்க இவள் விழித்தாள்.

"நீங்கள் இங்கேயா தங்க போறீங்க?"

"ஹ்ம் ஏன் இவ்வளவு பெரிய வீட்டில் எனக்கு ஒரு இடம் தர மாட்டாயா?"

"அப்படியில்லை உங்களுக்கு ஹொட்டேல் போல வசதி இருக்காது..." இழுத்தாள்.

"அதை நானல்லவா சொல்ல வேண்டும்" என்று திரும்பி தன்னுடன் வந்திருந்த செக்யூரிட்டி அஜானை பார்த்து "அஜான் நீ.." என்றவனை இடைமறித்தாள் ஸ்ரீனிகா "அவரும் இங்கேயே இருக்கலாம் இடம் இருக்கு".

"குட்" என்றவன் கேட்டை பார்க்க, அது பூட்டி இருந்தது. "திறப்பு" என்று கையை நீட்டவும் "மோளே" குரலில் மூவரும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார்கள்.

"எப்போலா மகளே வந்தது" அவர் கேட்டவாறு அருகே வர "சௌபர்ணிகா அம்மாயி, கேசவ அத்தேரையில்லு சுகமானு" அவள் பக்கத்து வீட்டு ஆண்டியும் அவரது மகனையும் சுகம் விசாரித்தாள்.

"அஜா... அத்தேரையில்லு என்றால் என்ன அர்த்தம்" தீவிரமாக கேட்டான்.

"எனக்கு மலையாளம் அவ்வளவா தெரியாது பாஸ்" கழன்று கொண்டான். அவனுக்கு தெரிந்த வரையில் அத்தை, அத்தான் என அழைக்கிறாள் என்பது புரிய விளக்கி கூறி யார் வாங்கி கட்டி கொள்வது அதுதான் தெரியாது என்று கழன்று கொண்டான்.

கௌதம் கேசவனை மேலிருந்து கீழாக அளவெடுக்க அருகே வந்த கேசவன் "ஞான் கேசவன், சேட்டா ஞிங்களுடே பேரு..." கை கொடுக்க நீட்டினான். கௌதமோ பாக்கெட்டினுள் விட்ட கையை எடுக்காமல் எதிரி போல் அவனை முறைத்தவாறு "கிருஷ்ணா கௌதம் கிருஷ்ணா" பெயரை மட்டும் கூறினான். அதற்குள் ஸ்ரீனிகாவே கேசவன் கையை பிடித்தவாறு இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

"கேசவன் இவர் என் கணவர் கௌதம் கிருஷ்ணா, கௌதம் இது கேசவன், தமிழ் தெரியும், என்னோடோ பிராண்ட் காலேஜ் மேட்" கேசவன் புஜத்தை பிடித்த அவள் கையையே பார்த்து கொண்டிருந்தான் கௌதம். என்னவென்றே புரியாமல் உள்ளே எதுவோ எரிந்தது.

"ஸ்ரீகுட்டியோட பறையவே ஞான் தமிழ் படித்தது" மலையாள வாடை கலந்த அவன் தமிழ் அழகாகவே இருந்தது. ஆனால் கௌதமிற்கோ அது நாராசமாக இருந்தது. "குட்டி கிட்டி என்றா பல்லை தட்டி கையில் கொடுத்துருவன் ராஸ்கல்" அடி குரலில் வாய்க்குள் முணுமுணுத்தான்.

அதற்குள் அந்த அம்மாள் "ஞிங்கள் ஸ்ரீகுட்டியோட பார்த்தவோ(கணவன்)..." என்று ஆரம்பிக்க ஸ்ரீனிகா "அம்மாயி தக்கோள் (திறப்பு) எவிடே" கேட்கவே அவள் கையில் கேட் திறப்பை கொடுத்தார் அவர்.

பாஸின் நிலை தெளிவாக அஜாவுக்கு புரிய "மேடம் இது மட்டும் தானா உங்கள் பாக், திறப்பு எங்கே?" என்று கேட்டு ஸ்ரீனிகாவை தன் பக்கம் அழைத்தான். திறப்பை அவனிடம் கொடுத்தவள் "காரை உள்ளே விடுங்கள் அஜா...." என்றாள். அவர்கள் இருவரிடமும் திரும்பி "குளித்து பிரஷ் ஆகி வந்து சந்திக்கிறேன்" விடைபெற்றாள்.

வீட்டு கதவையும் திறந்து உள்ளே செல்ல உள்ளே தரையில் மாபிள் பதித்து பளிச்சென துடைக்கப்பட்டு இருக்கவே "யார் இங்கே பராமரிப்பது" கேட்டான்.

"அம்மாயி, கேசவ அத்தேரையில்லு தான், முதல்ல ஒரு தமிழ் குடும்பம் இருந்தது. சில நாட்களுக்கு முன் இட மாற்றம் கிடைத்து போய் விட்டார்கள்" எழுந்த பெருமூச்சை சத்தமற்று விட்டவள் உள்ளே செல்ல அவள் கையை பிடித்தவாறு வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தான் கௌதம்.

நன்றி நிறைந்த கண்களால் நோக்கினாள் அவனை, தனியாக இந்த வெறுமையைச் சந்தித்திருக்க முடியாது அவளால். குனிந்து பார்த்தவன் "என்னம்மா..." என்றதுதான் தாமதம். மீண்டும் கண்ணீர் உடைப்பெடுக்க மார்போடு அணைத்து கொண்டான். "ஏன்டாம்மா... ஏன் என்றுதான் சொல்லேன் மனம் கொஞ்சம் ஆறும்..." எந்த கேள்விக்கும் பதிலில்லை. சத்தமின்றி கண்ணீர் மட்டும் வழிந்தது.

தலையையும் முதுகையும் வருடி கொடுத்தவாறு இருந்தான். கொஞ்சம் அழுது ஓய்வாள் என்று ஆனால் அவன் சட்டை மேலும் நனைந்து கொண்டே இருக்க உதடு கடித்தவன் "நேற்றிலிருந்து உன்னுடன் சேர்ந்து நானும் கொலை பட்டினி இங்கே ஏதாவது சாப்பிட கிடைக்குமா?" பாவம் போல் கேட்டான். அவன் யோசனை வேலை செய்ய தன்னை சமாளித்து "சாரி... உங்களையும் டிஸ்டர்ப் பண்ணிட்டேன். இங்கே சமைக்க முடியாது. அம்மாயி கொண்டு வருவாங்க நீங்க பிரஷ் ஆகி வாங்க" மெல்லிய குரலில் கூறியவள் முகம் கன்றி போய் இருந்தது.

சில கணங்கள் அவளை பார்த்தவன், சட்டென கன்றி சிவந்த அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான். அதிர்ந்து கண்கள் வட்டமாய் விரிய மென்மையாக இருந்த அவன் கண்களையும் முகத்தையும் பார்த்தவளிடம் "இன்னொரு தரம் என்னிடம் சாரி கேட்டால் இது தான் தண்டனை" என்று மென்னகை புரிந்தவன் அப்போதும் கன்னத்தில் படிந்திருந்த நீரை பெருவிரலால் துடைத்து "முதலில் நீ போய் பிரஷ் ஆகி வா" என்று அனுப்பி வைத்தான்.

அவள் செல்லவே அவன் முகம் தீவிரத்தை தத்தெடுக்க போனை எடுத்து ஒரு இலக்கத்தை அழுத்தினான் "இன்னும் எவ்வளவு நாள் எடுப்பீர்கள்? ஒரு சாதாரண பொண்ணை பற்றிய தகவல்கள் சேகரிக்க இவ்வளவு நேரமா?"

"இல்ல சார் அவங்க பாஸ்ட்ல ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு அதான் நன்றாக தகவல் தெரிந்த ஒருவரும் மேடத்தை பற்றி சொல்றங்க இல்லை" என்றார் அந்த டிடக்டிவ் வசந்த்.

"மிஸ்டர் வசந்த், உங்களால முடியும் என்றுதான் இந்த ப்ரொஜெக்ட்ட உங்களிடம் தந்தேன் கொஞ்சம் அவசரம் குறைந்தது பதினைந்து நாட்களுக்கு முன் என்ன நடந்தது என்ற தகவலாவது வேண்டும். நாளை பத்து மணி வரை தான் உங்களுக்கு நேரம்" உத்தரவாய் இட்டவன் போனை அருகே போட்டுவிட்டு கால்முட்டியில் கைமுட்டியை ஊன்றி கரங்களை கோர்த்தவன் அமைதியின்றி அலைந்த இதயத்தை நிலைப்படுத்த முயன்றான்.

எதையோ மறைக்கின்றாள்.... போன தடவை கேரளா போய் வந்ததிலிருந்து அழுதே கரைகின்றாள். கேட்டால் பதிலில்லை. அவன் பாணியில் அவர்கள் நிறுவனத்திற்கு வேலை செய்யும் டிடக்டிவ்வை வைத்து அறிய முயன்றால் அது கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போல் வெளிவரும் உண்மைகளில் விதிர் விதிர்த்து போனான். கட்டிய மனைவியை டிடக்டிவ் வைத்து விசாரிப்பதை அவமரியாதையாக தான் நினைத்தான் ஆனால் அதற்காக அவளை அப்படியே அழுது சாக விடமுடியாதே.

சட்டென ஞாபகம் வர வசந்திற்கு அழைத்து "வசந்த இங்கே" என்று அவர்கள் இருந்த வீட்டு விலாசத்தை கொடுத்தவன் "சௌபர்ணிகா கேசவன் என்று அம்மாவும் மகனும் அவர்களிடம் சற்று விசாரியுங்கள் ஏதாவது கிடைக்கும்". என்றான். எதிர் முனையின் அமைதியில் "ஏன் என்னாச்சு..." விசாரித்தான்.

"இல்ல சார் மேடத்தோட எந்த ஆவணத்திலும் இந்த இடமே இல்லை, ஏதோ ஒரு இடம் எனக்கு தொடர்பு படுத்த முடியாமல் ப்ளாங்கா இருக்குன்னு யோசிச்சன் அதான்" என்றவர் சிறு இடைவெளி விட்டு தொடர்ந்தார் "இப்போ நான் நிற்கும் இடத்திலிருந்து அங்கே வருவதற்குள் இருட்டிடும் சார். மோர்னிங் முதல் வேலையா இதை விசாரிக்கின்றேன் சார்" அதோடு தொடர்பை துண்டித்த கௌதம் அப்படியே சாய்ந்து கண்மூடி அமர்ந்திருக்க முகத்தில் நீர் துளிகள் விழுந்து அவன் சிந்தையை கலைத்தது.

கண் திறந்து பார்க்க மனையாள் தான் குளித்து முழங்கால் வரை த்ரீ குவாட்டரும் மேலே டீ ஷிர்ட்டும் அணிந்து தலையை துவட்டி கொண்டிருந்தாள். அவன் மேல் தண்ணீர் பட்டதை பார்த்ததும் அவளையறியாமலே "சாரி கவனிக்கவில்லை" என்று விட்டு அருகேயிருந்த சோபாவில் அமர போனவளை தன் மடியில் இழுத்து போட்டான் கௌதமன்.

"என்.. என்ன.." என்று விழித்தவள் கழுத்தில் ஒட்டியிருந்த முடிகளை நுனிவிரலால் பட்டும்படாமலும் நீக்கி அவளுள் மின்சாரத்தை ஓடவிட்டுக் கேட்டான் "நான் என்ன சொன்னேன்?"

'முருகா இவனுக்கு இதுவே தொழிலாக போயிட்டு, எப்ப பாரு எதையாவது எக்கு தப்பா கேட்பது இவன் ஆயிரம் சொன்னான் இதில் நான் எதை சொல்ல' மனதில் அவள் முருகனிடம் முறையிட கண்கள் வழமையான தன் பணியை செய்து வைத்தது. விழி விரித்து பார்த்தாள்.

அவன் அருகே நெருங்க "குளிக்கலை..." ஏதோ ஒரு காரணத்தை சொல்லி வைக்க மனம் மூளையை காறி துப்பியது 'ச்சீ இதெல்லாம் ஒரு ரீசன்'.

அவளை பார்த்தவன் "தென் குளித்து வந்தால் அனைத்துக்கும் ஓகே தானே" என்று குறும்பாக கேட்க, என்ன கேட்கிறான் என்று புரியாவிட்டாலும் எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தாள். உள்ளே கிளர்ந்த உணர்ச்சியில் கண்கள் நிறம் மாற அவளை எழுப்பியவன் எழுப்பிய வேகத்திலேயே கன்னத்தில் முத்தமிட்டு உள்ளே சென்றுவிட கையை கன்னத்தில் வைத்து ப்ரீஸ் ஆகி நின்றாள்.

குளித்து முடித்து ட்ராக் பாண்ட் டீஷிர்ட் அணிந்து ஒருகையால் தலை ஈரத்தை துவட்டியாவாறே மறுகையில் போனுமாய் வந்தவன் "ஸ்ரீனி போன் சார்ஜ் போடனும் எங்கே..." எனவும் கதவின் அழைப்பு மணி அடிக்கவும் சரியாக இருக்கவே போன் சார்ஜ் செய்யும் இடத்தை கை காட்டியவள் கதவை திறந்தாள்.

"அம்மாயி... அதில் வாங்குக (உள்ளே வாங்க, எதாவது பிழை இருந்தால் மன்னிச்ச்சு)" உள்ளே அழைத்தாள். அவருடன் வந்த வேலையாளிடம் கையோடு கொண்டு வந்திருந்த உணவை உள்ளே வைக்குமாறு பணித்தவர் கௌதமை முறைத்து கொண்டே இருந்தார்.

வரவேற்பாக கரம் குவித்த கௌதம் 'என்ன' என்பது போல் ஸ்ரீனிகாவை பார்த்து வைத்தான். சங்கடமாய் சிரித்தவள் அம்மாயியை தள்ளிக் கொண்டு சென்றுவிட்டாள். ‘இவர்கள் ஏன் என்னை முறைக்கிறார்கள்?’ கௌதம் யோசித்துக் கொண்டிருந்தான்.

அவரை அனுப்பிவிட்டு திரும்பி வந்த ஸ்ரீனிகா சாப்பாட்டு மேஜையை காட்டி "சாப்பிடுங்கள்" என்றவள் உள்ளே செல்ல முயல "நீ சாப்பிடவில்லை?." குழப்பமாய் கேட்டான்.

அவளோ அவனை விட குழப்பமாய் பார்த்தாள். அவனிருக்கும் போது டைனிங் டேபிள் பக்கத்தில் போனாலே சாமியாடுவான். இன்றானால் சாப்பிடவில்லையா என்று கேட்கிறான். விமானநிலையத்தில் வைத்தும்... ஆனால் இங்கேதான் நடிப்பதைப் பார்க்க யாருமே இல்லையே, ஆளில்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆத்துறான் யோசனையுடன் அவன் முகத்தைப் பார்க்க அவன் முகம் காது மடல் வரை சிவந்துவிட்டிருந்தது.

அவள் முகத்தை பாராதது போல் "நீயும் வா" என்று அவளை இழுத்து சென்று இருத்த “பரவாயில்ல நான் அப்புறம்...” என்றவளை கணக்கிலேயே எடுக்காமல் உணவை ஆராய வழமையான சோறு கறியுடன் புட்டு, பயறு பலாப்பழமும் இருந்தது. அவளை திரும்பி பார்க்க "எனக்கு புட்டு பலாப்பழம் பிடிக்கும்" பதிலளித்தாள்.

"நானும் ட்ரை பண்ணவா?" கேட்டான்.

"உங்களுக்கு ஆஸ்மா எதுவும் இல்லையே..." சிறிது யோசித்தவள் "சாப்பிடலாம்" எடுத்து வைத்தாள், அப்போதும் தயங்கவே அவனும் உணவைத் தொடாது கையை கட்டி கொண்டு அமர்ந்தான். வேறு வழியின்றி அவளும் தனக்கான உணவை எடுத்தாள். நன்றாகவே இருக்க இருவரும் சேர்ந்து ஒரு பிடி பிடித்தார்கள்.

சாப்பிட்டு விட்டு வரவும் சூரியன் அஸ்தமிக்கும் பொழுது வர வெளியே மா மரத்தில் கட்டிய ஊஞ்சலில் வந்து அமர்ந்தவள் அருகே வண்டு நின்றான் கௌதம். ‘என்ன’ என்பது போல் பார்க்க அவளருகே இருந்த இடத்தைக் கண்ணால் காட்டினான். சிறிது தயங்கினாலும் அவனுக்கும் இடம் விட அருகே அமர்ந்து அவளிடம் மெதுவாய் பேச்சு கொடுத்தான்.

சிறுவயதில் நடந்த சம்பவங்களை கூற கேட்டு சிரித்தான் அவன். ஒரு தடவை தோழியின் ஸ்கூல் பாக்கை இன்னொருத்தியின் பெரிய ஸ்கூல் பாக்கினுள் ஒழித்து வைத்து தேட விட்ட கதையை சுவைபட கூறினாள். அதன் பின் காலேஜில் கேசவன் முதுகில் ‘என்னை பார் என் அழகை பார்’ என்று கழுதை படத்தை ஒட்டியது என்று அவளிடம் சொல்வதற்கு ஒரு தொகை இருந்தது.

இருவர் தாராளமாக அமர கூடிய கதிரை போன்ற அமைப்புடைய அந்த ஊஞ்சலில் ஒரு காலை மடித்து அவள் பின்னால் கையை ஊன்றி பக்கவாட்டில் அவளை பார்த்தவாறு அமர்ந்திருந்தான் கௌதம். மறு காலை ஊன்றி அவ்வப்போது ஊஞ்சலை ஆட்டிக் கொண்டிருந்தான். மணமான புதுதில் சில காலம் இப்படி அவளை சிரித்து பார்த்திருக்கின்றான். அதன் பின்...

பேசியவாறே மெதுவே அவன் மார்பில் சாய்ந்து பாதி உறக்கத்திற்கு சென்றவளிடம் கேட்டான். "உன் அம்மாவை பற்றி எதுவும் சொல்லவில்லையே?"

பனி நீரை முகத்தில் வீசியடித்தது போல் எழுந்தாள்.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ அத்தியாயம் - 04, வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻 05
பேசியவாறே மெதுவே அவன் மார்பில் சாய்ந்து அரை உறக்கத்திற்கு சென்றவளிடம் கேட்டான் "உன் அம்மாவை பற்றி எதுவும் சொல்லவில்லையே?" பனி நீரை முகத்தில் விசிறி அடித்தது போல் எழும்பி நின்றாள்.

அவளை பற்றி அவன் அறியாதது ஒன்று அது அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது எழுப்பி யார் எதை பற்றி கேட்டாலும் உளறிவிடுவாள். அவள் முழுமையான உறக்கத்திற்கு சென்றிருந்தாள் அன்றே அனைத்தும் சொல்லியிருப்பாள். பின்னாளில் வந்த எந்த பிரச்சனையும் இல்லாமலே போயிருக்கும் ஆனால் அந்த கேள்வியே அவளை அத்தனை நேர கனவிலிருந்து எழுப்பியிருந்தது.
"என்ன" எழுந்தவளை கேள்வியுடன் பார்த்தான் கௌதம்.

"இல்லை இரவு நேரம் பனி விழும் உள்ளே செல்வோம்" அவனைப் பார்க்காமல் நிலத்தை பார்த்தவாறு கூறினாள்.

உதட்டை கடித்தவாறு அவளைப் பார்த்தவன் "சரி" மறு பேச்சின்றி சென்றான்.
அவனுக்கு படுக்க அறையை காட்டியவள் மெத்தையை சரி செய்து போர்வையையும் கொடுத்து ஏசியை அளவாகவிட்டாள். அவன் விடும் அதே அளவுக்கு. தண்ணீர் கூஜாவில் நீர் உள்ளதா என சரி பார்தாள். அனைத்தையும் அமைதியாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கை கட்டி வேடிக்கை பார்த்திருந்தவன், அவள் வெளியே செல்லவே கேட்டான் "எங்கே போகின்றாய்?"
"வெளியே சோபாவில்.... உறக்கம் வரவில்லை அது தான்..."

"புது இடம் தனியாக படுத்தால் எனக்கு உறக்கம் வராது" அப்பாவியாய் கூறினான்.
அவளோ விழித்தாள். சின்ன குழந்தையா என்ன இவன்... தனியாக படுக்க பயப்படுவதற்கு. என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றவளை பார்த்து புன்னகையை அடக்கியவன் "சொல்லு ஸ்ரீனி எங்கே உறங்க போகிறாய்?" கேட்டான்.

அப்போதும் அமைதியாக நின்றவள், கையை பிடித்து இழுக்க அவனருகில் வந்து விழுந்தாள்.
"பேசாமல் உறங்கு" என்றவன் முதல் நாள் உறக்கமின்மையோடு சேர்த்து முந்தைய நாள் பயணத்தின் அலுப்பு மிச்சமிருக்க அருகே படுத்ததுமே உறங்கி விட்டான். இன்று அவளுக்குதான் ஏதோதோ நினைவுகள் அலைக்கழிக்க உறக்கம் கண்ணாமூச்சி விளையாடியது.


🎻🎻🎻🎻🎻
கௌதம் அடுத்த நாள் காலை எழும்பிய போது ஸ்ரீனிகா அருகில் இல்லை. எங்கே என்று தேட ஜீன்ஸ் டாப் அணிந்து வெளியில் செல்ல தயாராக நின்றாள். மணிகூட்டினை பார்க்க அது நேரம் ஐந்து என்றது.

"இந்த நேரம் எங்கே போகிறாய்?" உள்ளங்கையால் முகத்தை அழுத்தி துடைத்தவாறே கேட்டான்.
தீடிரென கேட்ட அவன் குரலில் துள்ளி திரும்பியவள், அவனை கண்டது நெஞ்சில் ஆசுவாசமாய் கைவைத்தாள். "சந்தைக்கு போகனும்" பதிலளித்தாள்.

"இந்நேரமா... திறந்திருக்குமா..... " என்றார் கேள்விக்கு பதிலாய் தலையசைத்தவளிடம் "ஓர் பத்து நிமிடம் நானும் வருகிறேன்" அவள் பதிலை எதிர்பாரமால் குளிக்க சென்றான்.

அவன் குளித்து ட்ராக் பாண்ட் டிஷிர்ட் ஷூ சகிதம் உடை மாற்றி வர கையில் பூஸ்டுடன் நின்றாள். "சாரி பூஸ்ட் தான் இருக்கு குடித்துவிட்டே வாருங்கள்" கையில் கொடுத்துவிட்டு வெளியே செல்ல மறித்து கேட்டான் "நீ எங்கே போகிறாய்...?"

"ஊஞ்சலுக்கு..." என்றவளிடம் "நானும் வருகின்றேன்" என்று அவளுடன் செல்ல அவன் நெற்றியில் கைவைத்து பார்த்தாள். ஏதாவது காய்ச்சல் வந்திருக்குமோ... அவள் கைகளின் கீழ் கண்களை மட்டும் தாழ்த்தி அவளை பார்த்தவன் "போவோம் வா" என்றான்.

இருள் பிரிந்தும் பிரியாத அமைதி நிறைந்த அதிகாலையில் குளித்த பிரஷ்னன்ஸுடன் சிலுசிலுவென்ற காற்றில் சூடான பானம் அருந்தும் சுகமே தனி அதை அனுபவித்தால் மட்டுமே புரியும். கௌதமுக்கு ஒவ்வொரு நாளும் இது போல் அவளுடன் அருந்த ஆசை வந்தது. திரும்பி மனையாளை பார்த்தான். ஏனோ இன்று எப்படியும் அவளை பற்றிய சில மர்ம முடிச்சுகளாவது அவிழும் என்று தோன்றியது.

சந்தைக்குள் காலடி வைக்க அவன் கண் முன் விரித்தது இன்னொரு உலகம், அந்த சந்தை முழுதும் ஆட்கள் நிறைந்திருக்க வருவோரும் போவோருமாக சுறுசுறுப்பையே குத்தகைக்கு எடுத்தது போல் இருந்தது. அந்த அதிகாலையிலேயே இப்படி ஒரு சுறுசுறுப்புடன் சந்தை இருக்கும் என அவன் நினைக்கவே இல்லை. ஒரு நாளும் அதி காலையில் போனதும் இல்லை. அவன் முகத்தை பார்த்துவிட்டு "இப்போ கொஞ்சம் கூட்டம் குறைஞ்சிட்டு இல்லாவிட்டால் இங்கு நடக்கவே முடியாது" என்றாள்.
"இது கூட்டம் குறைவா....." சுற்றி பார்த்தான். ஒரு பக்கம் வண்டியில் சமான் ஏற்றுவதும் அதற்கு கூலி பேசுவதும் என்றால் மறு பக்கம் இறக்குவதற்கு பேரம் பேசினார்கள். பார்கிங்கிலிருந்து ஒருவன் வாகனத்தை எடுக்க இன்னொருவன் அதற்கு குறுக்கேவிட்டான். அவன் ஹிந்தியில் திட்டினான் இவன் மராத்தியில் பேசினான். அந்த உழைக்கும் கூட்டத்தின் நடுவிலும் ஒருவன் அதிஷ்ட லாப சீட்டு விற்றான். இன்னொருவன் புத்திசாலித்தனமாய் தேநீர் விற்றான். நிலத்தில் காலின் கீழ் மரக்கறி பழங்கள் நசுங்கி கிடந்தன.

மகளிர் காதணி கழட்டி பறவை விரட்டியதாக பா எழுதிய புலவர் இதை பார்த்தால் என்னவென்று எழுதியிருப்பாரே....

அந்த சத்தத்தில் ஒருவருடன் ஒருவர் எப்படி பேசி கொள்கின்றார்கள் என்று யோசித்தான். திரும்பி மனைவியை பார்க்க அவன் பார்வை உணர்ந்து கண்ணால் கேட்டாள் 'என்ன'.

அருகே குனிந்து "ல்ல சத்தமா இருக்கே எப்படி பேசி கொள்கின்றார்கள்." என்றவனிடம் "நாம் எப்படி பேசி கொள்கின்றோம் அப்படியே தான் அவர்களும்" என்று பதிலளிக்க பேசுவதற்கு வசதியாக அவனை நெருங்கி நின்ற மனைவியை பார்த்து "நாம் அடிக்கடி இங்கே வந்து பேசி கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்" என்றான்.

அவன் கூறியது புரியாமல் "என்ன" என்றவளிடம் அப்பாவியாய் "ஒன்றுமில்லை" என்றான்.
அவள் வாங்கிய காய்கறி வகைகளை பார்த்து அந்த கடைக்காரர் "யாரு குழந்தை..." என்றார். மெல்லிய சோகம் கலந்த புன்னகையுடன் "அம்மா..." என்றாள்.

அந்த இடத்திற்கே ஒட்டாமல் வருவோர் போவோர் மேல் இடிபடாமல் நெளிந்து விலகி கொண்டு கால் ஷூவில் ஒட்டியிருந்த கழிவுகளை காலை தூக்கி பார்த்தவனை பார்த்து "பார்த்தாவா குட்டி..." என கேட்க ஆமோதித்தவாறே திரும்பி அவன் அலப்பறையை பார்த்த ஸ்ரீனிக்கும் சிரிப்புக்கு வந்தது.
நீண்ட நாளிற்கு பின் மனைவியின் உண்மையான சிரிப்பை பார்த்து அவள் கணவனும் புன்னகைத்தான்.

இடையில் அஜா அவர்கள் பையை வாங்கி கொண்டு போய் காரில் வைத்து வர அப்படியே பாத்திர கடையில் சில தாம்பளங்களும் வாங்கி கொண்டு வெளியே வந்தார்கள்.

காரில் வந்து அமர்ந்தவன் கேட்டான் "இனி எங்கே...?" ஒரு டெக்ஸ்ட்டைல் பெயரையும் தெருவின் பெயரையும் கூறி அங்கே விட சொன்னாள். சாதாரண மக்கள் வந்து போவது போன்ற அளவான கடை அது மணி எட்டு முப்பது என்று காட்ட அப்போது தான் கடை திறப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

அவர்களை காரிலேயே விட்டுவிட்டு அவள் மட்டும் செல்ல முதலாளி அறிமுகம் ஆனவர் போல் அவளிடம் பேசியவர் ஒரு பெரிய பையை எடுத்து அவள் கையில் கொடுக்க அதற்கான பணத்தை கொடுத்து வாங்கினாள்.

அடுத்ததாக ஆசிரமத்திற்கு விட சொன்னாள். அங்கும் போய் பணம் மட்டும் செலுத்தி வந்தவளையே சிறிது நேரம் பார்த்திருந்தவன் கேட்டான் "என்ன விஷேசம் இன்று...". ஓர் கணம் ரத்தமின்றி முகம் வெளுத்தவள் ஒன்றுமில்லை என்பது போல் தலையை அசைத்து வைத்தாள்.
"அடுத்தது எங்கே" ஏனோ அவன் குரல் வெறுமையாக இருப்பது போல் தோன்ற "வீட்டிற்கு" மெல்லிய குரலில் கூறினாள்.

அஜா மறு பேச்சின்றி காரை ஸ்டார்ட் செய்தான். அதற்குள் கௌதம் போன் இசைக்க எடுத்து காதில் வைத்தவன் "குட் மோர்னிங் வசந்த் சொல்லுங்கள்" மறு புறம் என்ன சொன்னார்களோ "சரி வீட்டிற்கு அருகே உள்ள கஃபே ஷாப்பில் காத்திருங்கள் வருகின்றேன்" அழைப்பை துண்டித்தான்.

"அஜா வீட்டிற்கு அருகே உள்ள கஃபே அருகே நிறுத்து ஒரு அவசர மீட்டிங் முடித்து வருகின்றேன்" அவனுக்கு ஏதோ நெருடலாக இருந்தது.

வீட்டின் உள்ளே அஹாமஸ்த்தாய் எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கு....

இன்று வாங்கிய பொருட்கள்....

தாம்பாள தட்டு...

உடைகள்.... ஏதோ சரியில்லை.

பெருவிரலால் நெற்றி கிறியவன் "ஸ்ரீனிகா...." காவை சற்று இழுத்து அழைத்த விதமே அலாதியாய் இருந்தது, கிட்டத்தட்ட பத்து நாட்களின் பின் அவள் முழுபெயர் சொல்லி அழைத்தான் "அந்த இல்லத்துக்கு மதிய உணவா ஏற்பாடு செய்து இருக்கிறாய்?"

ஆச்சரியத்துடன் பார்த்தாள் "உங்களுக்கு எப்படி தெரியும்" கார் நிற்கவே நெற்றியை தேய்த்தவன் கேட்டான் "நீ என்னிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?" பெரிய கண்களை விரித்து பார்த்தவளின் அமைதியே பதிலாக இருக்க இறங்கினான். மறு பக்கத்தால் அவளும் இறங்கியவள் தயங்கி நின்றாள். 'என்ன' என்பது போல் பார்த்தவனிடம் "ல்ல நீங்க வர முடியு...... ஒன்றுமில்லை" அவள் கண்களில் ஏதோ ஓர் எதிர்பார்ப்பு.

கௌதமை கண்டுவிட்டு அருகே வந்த அந்த டிடக்டிவ் வசந்த் அவளையே பார்த்தார். அவள் கண்ணில் என்ன கண்டரோ "இன்னும் ஒரு மணி நேரத்தில் வருவார் போய் தயாராகுங்கள்" என்றார். அவளோ திரும்பி கணவனை பார்க்க அவனோ வெறுமே 'போ' என்பது போல் தலையசைத்தான்.

டிடக்டிவ் வசந்த் காரில் ஏறிய அவளையே கண்வெட்டாமல் பார்த்தார்.

அனைத்தையும் தயார் செய்தவள் நேரத்தை பார்க்க மணி ஒன்பது முப்பது என்றது. இப்போது கிளம்பினால் தான் அங்கே குறைந்தது பத்து பதினொன்றுக்கு முன் போய் சேர முடியும்.

பொருட்களை அவள் எடுத்து வைத்திருந்த விதத்தை பார்க்க அஜாவுக்கு அடிவயிறு கலங்கியது. அவள் மொபைலில் இருந்து அழைக்க பிசி என்று வரவே அழைப்பை துண்டிக்கின்றான் என்பது புரிந்தது. அஜாவும் எடுக்க அதே தான் பலன். இதற்கு முன்னும் இப்படி தானே இருந்தான்.

கடந்த சில தினங்களாக இருந்த மாற்றம் கண்டு அவனும் சந்தோஷப்பட்டான். ஓர் நல்ல பெண்ணின் வாழ்கை சரியாகிவிட்டது என்று ஆனால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது போலும்.
"போவோம்" என்றவள் நீண்ட மூச்சை வெளியிட்டாள். அவன் இங்கு வந்தது எதிர்பாராத ஒன்று அவனுக்காக ஏங்குவது மடத்தனம் என்று மூளை சொன்னாலும் மனம் ஏற்க மறுத்தது. அவன் வந்திருக்கவிட்டால் தனியாக தானே அனைத்தையும் செய்திருக்க வேண்டும் தனக்கு தானே சமாதானம் செய்தவள் உள்ளே சென்று எடுத்து வந்ததை பார்த்த அஜாவின் முகம் விழுந்துவிட்டது.

🎻🎻🎻🎻🎻
அசைவின்றி இறுகி போய் அமர்ந்திருந்தான் கௌதம். அவன் போன் கடந்த பத்து நிமிடமாக அடித்து அடித்து ஓய்ந்துவிட்டது.
ஒரு போட்டவை மேஜையில் வைத்து ஒரு விரலால் அவன் பக்கம் நகர்த்திய வசந்த் "இது மேடத்தோட உண்மையான அம்மா... இப்போது..." என்று நிறுத்த கேட்டான் "அப்படியானால் என் சந்தேகம்... சரியா?" அவர் பார்வை சொன்ன சேதி அவனை தூக்கிவாரி போட்டது போல் ஆனது.
"பாவி..." அவன் உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.
"இப்போது அவர்களுக்கு நீங்கள் தேவை முதலில் அங்கே போங்கள்" என்றார் வசந்த். அப்போதும் அசையாமல் இருக்க "அவர்கள் உங்களிடம் செல்லும்படியும் நீங்கள் நடந்து கொள்ளவில்லை இல்லையா?" அவர் கேள்வியில் அடி வாங்கியது போல் பார்த்தான்.
"மை பாய்... எந்த கோபத்தையும் சாதிக்கும் தருணம் இதுவல்ல சீக்கிரம் புறப்பட்டு மேன்" கையில் ஒரு பார்சலையும் திணித்தார்.


🎻🎻🎻🎻🎻
பூணூலை ஐயர் கையிலிருந்து ஒரு கரம் வாங்கிக் கொள்ள யாரென பார்க்க குனிந்து பூணுலை வலது புற தோளில் போட்டு கொண்டிருந்தான் கௌதம் கிருஷ்ணா.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻 06

வர்கல பாபநாசம் கடற்கரை....

கடற்கரை தனியாக இருந்தாலே அழகு மனதை கொள்ளை கொள்ளும் செங்குத்தான மலைகளுக்கு அருகே இருந்தால் சொல்லவா வேண்டும்.

கேரளாவின் இந்த பீச் இந்துக்களின் இறுதி கிரியைகளுக்கு பெயர் போனது. அதோடு இங்கே உள்ள கடலில் குளித்தால் பாவங்கள் அற்று போகும் என்பது நம்பிக்கை. அருகில் உள்ள குன்றின் மீது ஜனர்தனனாக கோவில் கொண்டுள்ளார். எம் பெருமான் அரங்கநாதன்.

அப்போது நேரம் பத்து பத்தரையாக இருக்கவே காலை பூசைக்கு வந்த அடியார்கள் சென்று விட, மதிய பூசைக்கு இன்னும் நேரமிருக்க கூட்டம் குறைவாகவே இருந்தது. அதோடு தாழ் அமுக்கம் காரணமாக புயல் எச்சரிக்கை விட பட்டிருக்க கடல் அலையும் சிறிது உக்கிரமாகவே இருந்தது.

அந்த பீச்சின் கரையில் சேலை முந்தானை காற்றில் பறக்க போனை பார்த்து கொண்டிருந்தாள் ஸ்ரீனிகா வேண்டாம் வரமாட்டன் என்ற தன் மூளையிடம் கெஞ்சி மன்றாடி கடைசியாக ஒரே ஒரு தரம் என்று கௌதமுக்கு அழைத்தாள் ஸ்ரீனிகா. ரிங் போனதே தவிர பதிலில்லை. இனியும் தாமதிக்க முடியாது. வறண்ட புன்னகையின் பின் துக்கத்துடன் அவமானத்தையும் சேர்த்து விழுங்கயவளாய் போனை அஜாவிடம் கொடுத்து விட்டு ஐயரை நோக்கி சென்றாள்.

"குழந்த தனியாவா வந்தே பெரியவா யாரும் வரலையா..." அவர் கேள்விக்கும் வறண்ட புன்னகையே அவளிடம் பதிலாக இருந்தது. அஜாவுக்கு அதற்கு மேல் பொறுக்க முடியாமல் 'நான் செய்கின்றேன்' என்று அருகே செல்ல முயல ஸ்ரீனிகாவின் போன் அடித்தது. கௌதம் தான் "பாஸ் இப்பதான் போன் தந்துட்டு ஐயரிடம் போறாங்க" என்றான்.

"வந்துவிட்டேன் நீ எங்கே?" இரத்தின சுருக்கமாக கேட்டான். இடத்தை சொல்ல ஐம்பதடி தொலைவில் நின்றான்.
"நாம் தொடங்குவோம்...." அவருடன் பீச் மணலில் அமர்ந்தாள். பொருட்களை எல்லாம் சரி பார்த்து தண்ணீர் தெளித்து ஏதோ மந்திரங்கள் சொன்னவர் தர்ப்பையையும் பூணுலையும் எடுத்தார். குனிந்திருந்த ஸ்ரீனிகா கண்ணை துடைத்து விட்டு வாங்குவதற்குள் பூணூலை ஐயர் கையிலிருந்து ஒரு கரம் வாங்கிக் கொள்ள யாரென நிமிர்ந்து பார்க்க சற்று குனிந்து நின்று பூணுலை வலது புற தோளில் போட்டு கொண்டிருந்தான் கௌதம் கிருஷ்ணா.

கண்ணை வட்டமாய் விரித்து அவனையே பார்த்திருக்க வேட்டி கட்டி வெறும் மேலுடன் பூணுலையும் அணிந்து அவளருகே அமர்ந்தான் கௌதம். முன்னே ஸ்ரீனிகாவையே அச்சு வார்த்தது போல் ஒரு பெண்மணி ஒருவரின் படம், அதன் அருகே வெள்ளை துணி சுற்றி கட்டப்பட்ட செம்பு என அனைத்தும் தயாராக இருக்க கிரியைகளை ஆரம்பித்தார் ஐயர்.

படத்திலிருந்து பெண்மணியை ஒரு கணம் அதிர்ச்சியில் கண்கள் விரிய பார்த்தவன் ஐயர் சொல்வதை செய்ய தொடங்கினான். தந்தையின் பெயரை சொல்லவும் மறுத்துவிட்டாள். அனைத்து காரியங்களும் முடிய சாம்பலை கொண்டு போய் கடலில் கரைத்து முழுக்கு போட்டு வர சொல்லவே இருவரும் எழுந்தனர்.

அவள் செம்பையும் அவன் தாம்பாளத்தையும் எடுத்துச் சென்று இடைவரை உள்ள நீரில் நின்று முதலில் தாம்பாளத்தில் உள்ளதை கடலில் விட்டு பின்னர் சாம்பலை இருவரும் சேர்ந்து சிறிது சிறிதாக கடலில் கொட்டினார்கள்.

கடைசியாக கையிலிருந்து நழுவிய செம்பு தொப் என கடலில் விழுந்து அலையில் மிதந்து சென்றது. அவள் அம்மாவின் கடைசி அடையாளமும் காற்றிலும் நீரிலும் கலந்து மறைந்தது.

கண்களில் நீர் வழிய அலைகளில் மிதந்து சென்ற செம்பையே பார்த்து இருந்தவள் உடைந்து போய் இரு கைகளாலும் வாய் பொத்தி அழ திரும்பி பார்த்த அவன் கண்களிலும் நீர் நிரம்பியிருந்தது. அவளை இழுத்து நெஞ்சோடு அணைத்து கொண்டான்.

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க


முதல் முறை துன்பத்தில் சாய்ந்து கொள்ள தோள் கிடைத்ததோ இல்லை அனைத்தும் தனியாக தாங்கி தாங்கி கடைசியாக அன்னையின் இழப்பை தாங்க திடம் போனதோ... வாழ்கையில் முதல் முறையாக வாய்விட்டு அழுதாள். "அம்மா...." தாய்ப் பசு தேடும் கன்றின் கதறலாய் ஒலித்தது. "ஸ்ரீனி...." அவளை இன்னும் தன்னோடு இறுக்கி கொண்டான் அவன்.

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை

கடல் தொடு ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன !


அண்ணாந்து வானத்தை பார்த்து வாய் வழி காற்றினை ஊதி தன் சோகத்தை அடக்கியவன் மனைவியை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தினான்.

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்


அவன் நெஞ்சில் கை பதித்து நிமிர்ந்து அவன் கண்களினை நோக்கியவள் அவன் கண்ணில் தேங்கி நின்ற நீரில் இன்னும் உடைந்தாள். "கெளதம் அம்மா...." உதட்டை கடித்து தன் அழுகையை விழுங்கி மேலும் கீழுமாக தலையாட்டி கைகளில் அவள் முகத்தை ஏந்தியவன் பெருவிரலால் கண்ணீரை துடைத்தான்.

திரும்பி கடலில் மூழ்கி கொண்டிருந்த செம்பை பார்த்தவள் அழுகை பொங்கி உடல் குலுங்க அவன் கழுத்தில் நெற்றி பதித்து விசும்பினாள்.

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

உதட்டை கடித்து தன்னை சமாளித்தவன், அவள் இருக்கும் நிலையில் தனியாக கடலில் முழுகவிட்டால் கடலுடனே மூழ்கி போய்விடுவாள் என்பது புரிய அவள் முதுகை தன் நெஞ்சோடு வைத்து பின்னிருந்து அணைத்தவன் "முழுகு ஸ்ரீனி” அவள் முக்கை பொத்தி பிடித்தவன் தன்னோடு சேர்த்து கொண்டு கடலினுள் மூழ்கினான். பொம்மையை போல் அவன் நெஞ்சில் சாய்ந்தவாறு அரைவாசி மூழ்கியிருந்த செம்பை பார்த்தவாறே உள்ளே சென்றவள் வெளியே வந்த போது செம்பு முழுவதுமாக மூழ்கி கண்ணில் இருந்து மறைந்திருந்தது.

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்


மூன்று தரம் மூழ்கியவன் அவளையும் அழைத்து கொண்டு கடலை விட்டு வெளியே வந்தான்.

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க !
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க !
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!


கரையில் மண்டியிட்டு அமர்ந்தவள் கடற்கரையின் ஈர மண்ணை கைகளால் இறுக பிடித்தாள். அம்மாவை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டாள். முழுதுமாக நிறைவேற முன் பறித்து கொண் விதியை நோவாளா? இல்லை இந்த நிலையில் நிறுத்திய சொந்தங்களை நோவாளா?

நெற்றி மண்ணில் பட அப்படியே முன்னால் விழுந்தாள். தன் தாய்க்கு செய்யும் கடைசி மாரியதை போல...
ஐயரை பார்த்த கெளதம் "ஸ்ரீனி...." எழுப்ப முயல "வேண்டாம் அம்பி குழந்த கொஞ்சம் அழட்டும் விடுங்கோ... நான் வைட் பன்றன். அன்று அம்மாவுக்கு கொள்ளி வைக்கிறப்போ பார்த்தேன் கல்லு மாதிரில்ல நின்னாள், இந்த பொண்ணுக்கு ஏதாவது ஆகிருமோ என்று பயந்தேன் நல்லதா போச்சு இந்த வாட்டி நீங்களும் வந்தேள்"

ஐயர் சொன்ன தகவலில் மொத்தமும் அதிர்ந்து போய் அவளை வெறித்து பார்த்தான் கெளதம். பாதகத்தி ஒரு வார்தை.... ஒரு வார்தை சொல்ல முடியாத அளவுக்கு அன்னியமாகி விட்டேனா....

அன்று வந்து என்னுடன் வர முடியுமா? என்று கேட்டதும் தான் கூறிய பதிலும் அசந்தர்ப்பமாய் ஞாபகம் வந்து தொலைத்தது.
இதயத்தில் கத்தியால் குத்தியது போல் வலித்தது. அவனே இழுத்து கொண்ட நிலைமை தான் இருந்தும் மனம் பொறுக்கமால் வலித்தது. எதுவும் பேசாமல் முதுகை வருடிக் கொடுக்க அப்படியே அவன் புறம் சாய புரிந்தது மயங்கிவிட்டாள்.

அஜா அதற்குள் நீர் எடுத்து வர வாங்கி தெளித்து கன்னத்தில் தட்டினான். இமை திறந்தவள் எழும்பிய வேகத்தில் கடலை நோக்கி ஓட போக இழுத்து ஓங்கி அறைவிட்டான் கெளதமன்.
 
Status
Not open for further replies.
Top