All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் காதல் தீரா.... - கதை திரி

Status
Not open for further replies.

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻 13
வெளியே விசில் சத்தம் கேட்க கிச்சின் அருகே இருந்த சிசிடிவி டிஸ்பிலேயை திரும்பி பார்த்தாள் ஸ்ரீனிகா. கௌதம்தான் காரிலிருந்து இறங்கி கொண்டிருந்தான்.

உள்ளே வரும் போதே வாசம் அவனை ஈர்க்க பார்த்தால் டைனிங் டேபிள் மீது ஆவி பறக்க சாப்பாடு தயாராக இருந்தது. விபத்தினால் ஏற்பட்ட வேலைகளுடன் ஏற்றுமதி செய்ய வேண்டிய மேலதிக ஷிபிட் வேலையும் நடக்கவே அதை பார்ப்பது என்று அங்கும் இங்கும் பறக்கவே அவனுக்கு நேரம் சரியாக இருக்க இந்த இரு வாரமும் இரவில் டைனிங் டேபிள் மீது இருக்கும் உணவு தான் அவனுக்கு எனர்ஜி கொடுத்த கொண்டிருந்தது.

சுற்றி பார்த்தான், கிச்சினுள்ளும் எட்டி பார்த்தான். ஒருவரையும் காணவில்லை. ஸ்ரீனியா தனக்குள் யோசித்தவன் கை கடிகாரத்தை கழட்டியவாறே வேகமாக மாடியேறி அவள் அறையை தள்ளி பார்த்தான் இன்றும் பூட்டியிருந்தது.

மெல்ல சினமேற வாஷ்ரூம் போய் பிரஷ் ஆகி வந்தான். வேலன் போன் செய்து கூறிவிட்டான் இன்று சின்னம்மா சாப்பிடவே இல்லை என்று. இப்போதெல்லாம் வேலன் தான் ஸ்பை. ஸ்ரீனிகா வீட்டில் செய்வது அனைத்தையும் கூறிவிடுவான். கடந்த இரு வாரமாக நான்கு மணி நேரம் உறங்குவதற்காக மட்டுமே வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தான். கேரளாவில் இருந்து வந்ததில் இருந்து நின்று பேசக்கூட நேரமின்றி ஓடி கொண்டிருக்க இவளின் கண்ணாமூச்சி அவனை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அம்மாவும் அப்பாவும் அவர்கள் இன்னொரு நிறுவனமான கார்மெண்ர்ஸ் சார்பில் பாரிஸ் போயிருந்தார்கள். அண்ணா ராகவனும் அண்ணி சீதாவும் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் ஆட்டோ மொபைல் நிறுவனத்திற்கு இயந்திரங்கள் கொள்வனவு செய்ய ஜெர்மனிக்கு சென்றிருந்தார்கள். தங்கை நதியா அமெரிக்காவில் இருக்கும் கணவன் சுரேஷின் அப்பாவுக்கு ஒரு அறுவை சிகிச்சை என்று நிலாகுட்டி என்று அழைக்கும் மகள் அனுஷாவை இங்கேயே விட்டு சென்றுவிட்டாள்.

இப்போது வீட்டில் இருப்பது நிலாக்குட்டியும் அண்ணாவின் மகன் அனுதீப்பும் அவளும் மட்டுமே. அவர்கள் அறை 'ட' வடிவில் அமைந்திருந்தது. அவனது தனியறைக்கு அருகே சிறு தோட்டம் போல் அமைத்து மேலே கண்ணாடி கூரை போட்டு ஊஞ்சலும் போடப்பட்டிருக்க அதன் மீதி ட வடிவில் வளைந்து இரு அறைகளுக்கும் பல்கனியாக அமைந்திருந்தது. தோட்டம் அமைத்த வேலை அனைத்தும் ஸ்ரீனிகாவின் வேலை தான். பிரென்ச் விண்டோ வழியாக உள்ளே சென்று பார்த்தான். உள்ளே யாருமில்லை உள்ளிருந்து கதவின் கொண்டியை திறந்தவன் தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

எங்கே போயிருப்பாள் யோசனையுடன் காரிடரில் நடக்க குழந்தைகள் இருவரினதும் அறையிலிருந்து சத்தம் வந்தது. உள்ளே செல்ல "த்தை பாப்பா யானா தொத்திச்சு...." அழுதவாறே ஸ்ரீனிகாவின் மேல் தவளை போல் அப்பியிருந்தாள் நிலா.

"என் தங்க கட்டி பாப்பாவா யானா தொத்திச்சா? நாம யானையை அடிச்சுறலாம் ஹ்ம்" தோளில் போட்டு தட்டி கொடுத்தாள். "பாப்பாக்கு பசிக்குதா..... பூஸ்ட் குடிப்போமா?" இரவு சாப்பிடவில்லை பசியில் படுத்ததே கனவும் உறக்கமின்மையும் புரிந்தே கேட்டாள்.

கதவை திறந்து உள்ளே வந்தவன் மருமகளை பார்த்ததும் புன்னகைத்தான். ஸ்ரீனிகாவின் பின்னாலிருந்து நிலாவின் பின்னந்தலையை வருடியவாறு கேட்டான் "நிலப்பொண்ணு ஏன் அழுறாங்க... மாமாட்ட வாரீங்களா?"

"ஹ்ம் வேனாம் த்தை வ்வ்னும்..." என்றவாறு ஸ்ரீனிகா கழுத்தை கட்டி கொண்டாள். கௌதமனுக்கு ஆச்சரியமாய் இருந்தது நிலா தானா இது. இவர்கள் குரலில் அனுதீப்பும் விழித்து "சித்தப்பா... என்று வந்த அவன் இடையை கட்டிக் கொண்டான் "இப்பெல்லாம் என்னோட வெள்ளைடவே வர்றதில்ல.... க்ராண்ட்மா நீங்க வெள்ளத்தில் சிக்கினதாக சொன்னார்கள் யூ ஓகே" பெரிய மனிதனாய் விசாரித்தான். அவன் சித்தப்பாவின் வாரிசு குணத்திலும் சரி உருவத்திலும் சரி.

"ஹ்ம் அங்கேயே இருந்திருந்தா உன் சித்தி என்னை இன்னும் நல்ல கவனிச்சிருப்பா, நமக்கு எங்கே அதுக்கு எல்லாம் கொடுப்பினை" அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் போலியாய் பெரு மூச்சு விட்டு அலுத்து கொண்டான். திரும்பி களைத்துச் சோர்ந்திருந்த அவன் முகம் பார்த்தவளுக்கு நொடியில் புரிந்தது அவன் இன்னும் சாப்பிடவில்லை.

"தீப் இன்னும் சித்தப்பா சாப்பிடவில்லை நான் சொன்னேன் இல்லையா இந்த வாரம் முழுவதும் வேலை அதிகம் என்று. இப்ப என்ன சாப்பிடும் போது பேசினால் போச்சு அழைத்து போவோம் சரியா" அவள் கேட்க சமர்த்தாய் தலையாட்டினான் தீப் என்று அழைக்கப்படும் அனுதீப். கௌதமுக்கோ சிறு சிறு விடயத்திற்கும் பிடிவாதம் பிடிக்கும் தீப்பும் நிலாவுமா இது என்றிருந்தது.

"நிலா பாப்பா சாப்பிடாமல் படுத்தா இல்லையா அதான் யாணை வந்திச்சு இனி சமத்தா சாப்பிடுவீங்க தானே" செல்லம் கொஞ்சினாலும் குரலில் மெல்லிய கண்டிப்பு கலந்தே இருந்தது.

நிலவை டைனிங் டேபிளில் இருத்தி விட்டு பூஸ்ட் கரைக்க உள்ளே செல்ல இருக்கையிலிருந்து வழுக்கி கொண்டு கீழே இறங்கி ஸ்ரீனிகா பின்னால் சென்றாள் நிலா. நிலாவை பார்த்து சிரித்தவன் "நாமும் போவோமா?" தீப்பிடம் கேட்க "போவோம்" என்று தலையை உருட்டினான் தீப்.

ஸ்ரீனிகாவின் த்ரீ குவாட்டரின் முனையை பிடித்து கொண்டிருந்த நிலாவையும் தூக்கி கொண்டு கிச்சின் இருந்த மேடை மீது ஏறி அமர்ந்தவன் ஒரு கையால் தீப்பை தூக்கி மேடையில் இருத்த அவன் சித்தப்பாவின் கையை தொட்டு பார்தான். உடனே கையை மடித்து தசையை முறுக்கி காட்டினான் கௌதம். அதை தொட்டு பார்த்து விட்டு தானும் அது போல் செய்து காட்ட இவர்களின் விளையாட்டை கண்டும் காணாமலும் பார்த்து கொண்டே தன் வேலையை செய்தாள் ஸ்ரீனிகா.

அவன் மடியில் அமர்ந்து நெஞ்சில் சாய்ந்திருந்த நிலா அவள் அத்தையை வம்புக்கிழுத்தாள். "த்தை ..த்தை" மூவரையும் பார்த்தவள் சிரித்தவாறே "வாறன் இப்ப விளையாட்டு" செல்லமாய் மிரட்டினாள். கௌதம் நெஞ்சில் சாய்ந்திருந்த நிலா தன் சிறு கைகளை நீட்டி அழைத்தாள் "த்தை வா..." அருகே செல்ல கழுத்தை சுற்றி கைகளை போட்டு அழுத்தமாய் கன்னத்தில் முத்தமிட்டாள்.

உடனே அருகே இருந்த தீப் "ஸ்ரீம்மா நானும்.." என்று அவனும் முத்தமிட சிறு முறுவலுடன் பார்த்திருந்த கௌதம் "அப்ப நானும்" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அப்பாவி போல் இறங்கி டைனிங் டேபிளை நோக்கி நடந்தான். கன்னத்தை பிடித்தபடி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க இரண்டு வாண்டுகளும் வாயை பொத்தி கொண்டு சிரித்தார்கள்.

தீப்புக்கு கையில் கொடுத்து விட்டு டைனிங் டேபிளில் அருகே நின்றாவாறே நிலாவுக்கு பூஸ்ட்டை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து கொண்டிருந்தவளை கையை கட்டி கொண்டு அமர்ந்து பார்த்திருந்தான் கௌதம்.

"சாப்பிடல...." அவனையும் மேசையில் இருந்த உணவையும் பார்த்தவள் "உங்களுக்கு பிடிக்கலையா...? வேறு ஏதாவது நான்.... செய்.... தர....?” பாதியில் விழுங்கி “வள்ளியை வர சொல்லவா?" தயக்கத்துடன் தான் கேட்டாள். திரும்பவும் எதையாவது போட்டு உடைப்பானோ!

அவளின் தயக்கத்தையே யோசனையுடன் பார்த்தவன் "பசிக்குது நல்லா பசிக்குது சாப்பாடும் பிரச்சனை இல்லை"

"பின்னே..." மலையாள வாடையுடன் கேள்வியாய் நோக்கினாள்.

"நீ சாப்பிட்டியா..." கேட்டவனுக்கு "ஓ... சாப்பிட்டேனே இதோ இந்த டேபிளில் இருந்து தான்" கூசாமல் புளுகினாள். சினமேற தலையாட்டியவன் எழுந்து சிசிடிவி டிஸ்பிலே அருகே சென்றான். அதை விரல்களால் தொட்டு இயக்கியவாறே கேட்டான் "எத்தனை மணிக்கு..."

"ஹான்..."

"எத்தனை மணிக்கு சாப்பிட்டாய் என்று கேட்டேன்" சிசிடிவியில் செக் செய்ய கேட்கின்றான் என்பது புரிய சட்டென எழுந்து நின்றாள். அவள் சாப்பிட்டால் தானே நேரத்தை சொல்ல முடியும். விழித்து கொண்டு நின்றவள் மனம் கவுண்டர் கொடுத்தது ‘எதை எதை சிசிடிவியில் செக் செய்வது என்று விவஸ்தை இல்லை’

சிசிடிவியில் அவன் உள்ளே வரும் நேரம் அவசரமாக டைனிங் டேபிளில் இருந்து எழுந்து சென்ற காட்சி படமாக ஓடிக் கொண்டிருந்தது. அதை பார்க்கும் அவனை பார்த்தவாறே கையை பிசைந்து கொண்டு நின்றவளை நோக்கி மீண்டும் கேட்டான் "என்ன நேரம்..."

"நேரமெல்லாம் பார்த்தா சாப்பிடுவார்கள்..." சமாளிக்க ஏதோ சொன்னாள்.

ஒரு கணம் ஆழ்ந்து நோக்கியவன் "சரி ஈவினிங் பைவ்ல இருந்து பார்ப்போம்..." என்றவனை பார்த்து விழித்தாள் ஸ்ரீனிகா. அவன் நாற்காலியை திருப்பி போட்டு அமர அருகே சென்று இரு கையையும் சேர்த்து பிசைந்தவாறே இழுத்தாள் "அது வந்து....."

"நானும் நீயும் வந்து ரெம்ப நேரம் விஷயத்தை சொல்" என்றான்.

"நான் சாப்பிடல..." சிறு குரலில் கூறினாள். நெற்றியில் சிறிதாய் வியர்வை முத்துகள்.

"தெரியும்" என்றவனை அதிர்ச்சியுடன் நோக்க எழுந்து "வா வந்து சாப்பிடு" சாவதானமாக அழைத்தான். "நான் அப்புறம் சாப்பிடுறேன். இப்ப நீங்க சாப்பிடுங்க" என்றவளை "இப்பவே மணி ஒன்று பிறகு என்றால் எப்ப" என்றவாறு நெற்றி சுருக்கி பார்த்தான். எதற்கோ பயந்து தயங்குவது போல் தோன்ற அவனுக்கு அது ஞாபகம் வந்தது.


🎻🎻🎻🎻🎻

கல்யாணமான சில நாட்கள் கழித்து அது நடந்தது. அதி காலையிலேயே எழுந்து சமைத்து வைத்து அவனுடன் சேர்ந்து உணவுண்ணும் ஆர்வத்தில் டைனிங் டேபிளில் அவனருகே அமர டேபிளில் இருந்த அத்தனை கண்ணாடி பொருட்களும் அவள் செய்த உணவுடன் சேர்ந்து தரையில் விழுந்து சிதறியது. சினந்து நின்றவன் மீதியாய் இருந்த கண்ணாடி ஜக்கையும் தரையில் ஓங்கி அடித்தான்.

"ஏமாத்தி கல்யாணம் செய்தவளுக்கு எல்லாம் என் அருகே இருந்து சாப்பிடும் அருகதை இல்லை. இன்னொரு தரம் உன்னை டைனிங் டேபிளில் பார்த்தேன்...." ருத்தரானாய் சிவந்த கண்களுடன் நின்றவனை பார்க்க அதிரிலின் சுரப்பி அவள் கட்டளையின்றி சுரந்து வேலையை காட்ட நடுக்கத்துடன் நின்றவள் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

அப்போதும் மனம் கவுண்டர் கொடுத்தது 'இவனுக்கெல்லாம் யாரும்மா கௌதம் என்று பெயர் வைத்தது பேசாம ருத்ரன் என்று வைச்சிருக்கலாம், கோபகுலனயாக' அவன் கோபத்தையும் ரசித்தாள்.


🎻🎻🎻🎻🎻

"கீ...." என்று கத்தியவாறே ஓடிய நிலாவின் சத்தம் இருவரையும் நிகழ் காலத்திற்கு இழுத்து வர பூஸ்ட்டை எடுத்துக் கொண்டு அவள் பின்னே ஓடினாள் "சாப்பிடுங்கள் வருகின்றேன்" என்ற வார்தையோடு.

அவனுக்கு அவ்வளவு நேரமிருந்த பசி பறந்துவிட்டிருந்தது. கலங்கி சிவந்த கண்களுடன் திரும்பி பார்க்க ஹாலில் நிலாவை பிடித்து வைத்து பூஸ்ட் கொடுக்க தீப் அவளது தோளில் சாய்ந்து நின்றிருந்தான். குடித்ததும் தீப்பை வர சொல்லியவாறே நிலாவை தூக்கி சென்றாள். தீப் சோபாவிலேயே படுக்க அவனை தூக்கி கொண்டு பின்னே சென்றான் கௌதம்.

இருவரையும் படுக்க வைக்க நிலா அவள் அருகே படுத்த மாமன் நெஞ்சில் ஏறி படுத்தாள். அவனோ தலைக்கு கீழ் கை கொடுத்து விட்டத்தை வெறித்தவாறு படுத்திருந்தான் உண்ணவில்லை என்பது புரிய இதயத்தில் ஏதோ செய்தது. பசியோடு தான் வந்தான் இப்போது வெறும் வயிற்றோடு படுத்ததை பார்க்க ஸ்ரீனிகாவிற்கு மனம் பொறுக்கவில்லை.

கீழே சென்று இருவருக்கும் உணவும் பாலும் எடுத்தது வர அவள் மூளை அவளை திட்டி தீர்த்தது. 'உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடி அவன் பட்டினி கிடந்த என்ன இல்லாட்டி உனக்கென்ன இப்ப என்ன ஹேர்க்கு போற' என்று காய்ந்த மூளைக்கு மனம் காரமாக திருப்பி கொடுத்தது 'உன் யோசனைப்படி தான் இங்கிருந்து போகப் போறோம். அதுவரை என்னை டிஸ்டர்ப் பண்ணாத உனக்கு காதல் என்றால் என்னவென்று எப்போதுமே புரியாது.... இங்கிருந்து போகும் முடிவில் எந்த மாற்றமும் வராது பிறகு என்ன'

'யாரு நீ இதை ஒரு நூறு தரம் சொல்லியிருப்பியா?' ஏளனம் செய்தது மூளை. இரண்டு தட்டுகளில் சாப்பாடும் பாலும் எடுத்து வந்தவள் கட்டிலருகே வந்து நின்று மெதுவாய் கேட்டாள் "சாப்பிட்டு படுங்கள். காலையில் இருந்து வேலை.... களைத்திருப்பீர்கள்"

கண்விழியை மட்டும் திருப்பி அவனை பார்த்தான். இரு கையிலும் தட்டுடன் நின்றவளை மறுக்க மனமின்றி குனிந்து மார்பில் படுத்திருந்த நிலாவின் உச்சியில் முத்தமிட்டவன் "மாமா மில்க் குடிச்சிட்டு வாரேன்" என்று எழுந்து வந்தான்.

பால் கிளாசை எடுத்து தன் அருகே வைத்தவள் "சாப்பிட்டால் தான் பால்" என்றாள். அவளுடன் சண்டை போடும் மனநிலையிலும் இல்லை உண்ணும் மனநிலையிலும் இல்லை. இடியப்பமும் தேங்காய் பாலும் கறியும் இருந்தது. இரவு நேரம் பாரமில்லாத உணவாக இருக்கவே ஐந்து என்று ஆரம்பித்தவனுக்கு பசி புரிய இருப்பதில் நிறுத்தினான். கீழே சென்று கைகழுவி வந்தவன் சிறிது நேரம் பல்கனியில் நின்று வானத்தைப் பார்த்து கொண்டிருந்தான்.

திரும்பி வந்த ஸ்ரீனிகா இரண்டு வண்டுகளும் உறங்குவதற்கு பதிலாக தலைமுடியை இழுத்து விளையாடி கொண்டிருப்பதை பார்த்தது நெற்றியில் தட்டிக் கொண்டாள். நடுவில் படுத்து இருவரையும் பிரித்து தன் மேல் போட்டு கொண்டு அவர்களுக்காக தான் வழமையாக பாடும் தாலாட்டை பாட தொடங்கினாள்.

சோஜா சந்த ராஜா சோஜா
ஜல் ஸப்னோமே ஜல்
நீந் கி பரியான் பேகென்கி ஆயீ பைரோன் மைன் பயல்|
துஜுக்கோ ஆபநே நரம் பரோன் பர் லேக்கர் ஜயங்கி
சோனே காய்க் தேஸ் ஹை ஜிஸ்கி சாய் கரயேகி


வெளியே நின்றவனுக்கு மெல்லிய சத்தத்தில் அவள் கீதம் கேட்க அவன் ஆழ்மனம் அன்று நடந்த நிகழ்வுகளை மீட்டெடுக்க முயன்றது. ஏதேதோ கற்பனைகள் கண்முன் தோன்றி மறைய வியர்த்து விறுவிறுத்து போனான். குறு வியர்வை படிந்த நெற்றியுடன் சேர்த்து முகத்தையும் அழுத்தி துடைத்து நிதானத்துக்கு வரவும் அவளின் தாலாட்டு முடியவும் சரியாக இருந்தது.

உள்ளே வந்தவன் கட்டிலருகே நின்று உறங்கும் அவளையே நெடுநேரம் பார்த்திருந்தான்.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் காதல் தீரன் அத்தியாயம் - 12, 13 வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்.


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா🎻14
அடுத்த நாள் அதிகாலையே சமயலறையில் அவசர அவசரமாக சமையலை செய்து கொண்டிருந்தாள் ஸ்ரீனிகா. நேற்று அவன் போய்விட்டதாக நினைத்து குழந்தைகளுடன் படுத்தால் இன்றைய பொழுது விடிந்தது அவன் கைகளில்.

எழுந்ததும் விழுந்தடித்துக் கொண்டு கீழே வந்து விட்டாள். வாண்டுகள் இருவருக்கும் அவளது புட்டும் பயறும் செய்து வெல்லம் சேர்த்து கொடுத்தால் காலை உணவு சத்தாகவும் பிரச்சனை இன்றியும் போய் விடும். அதோடு நேற்றே இருவரும் உத்தரவு போட்டுவிட்டார்கள் புட்டும் பயறும் தான் வேண்டும் என்று.

சமையலை முடித்தவள் இருவருக்கும் பாலில் பூஸ்ட் கலந்து ஆத்தியவாறே “எங்கே இன்னும் காணோம்” வாசலை எட்டி பார்த்தாள், வள்ளி வருகின்றாரா என்று.

பின்னால் ஏதோ சத்தம் கேட்க "வள்ளி சாருக்கு இந்த காபி..... என்றவாறு திரும்பிய ஸ்ரீனிகா கிச்சன் சுவரில் சாய்ந்து கையை மார்புக்கு குறுக்கே கட்டியவாறு நின்ற கௌதமை கண்டு விழித்தாள்.

அப்போது தான் உறக்கத்திலிருந்து எழும்பியிருக்க கலைந்த தலையும் தூக்கம் வழிந்த கண்களுமாய் நின்றான். “வள்ளி இன்று லேட்டாய் பத்து மணிக்கு பிறகு தான் வருவாள்” என்றான் கள்வன். அவன் தானே இப்போது வந்த வள்ளியை திருப்பி அனுப்பியது.

"என்னிடம் எதுவும் சொல்லவில்லையே" வாய்க்குள் முனங்கினாள் ஸ்ரீனிகா. காபி போடுவதற்கு தேவையான பாத்திரங்களையும் பாலையும் அவன் புறம் நகர்த்தினாள்.

அவளையும் பாத்திரத்தையும் ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன் "நீ போட்டு தர மாட்டாயா?" கேட்டான். அவள் காபியை குடித்தே மாதக் கணக்கு ஆகிவிட்டது. இன்னும் சரியாக சொல்வதானால் காபி குடித்தே மாதக் கணக்கு. குடித்தால் அவள் போடும் காபி, இல்லையா காபியே வேண்டாம் என்ற முடிவில் இருந்தான்.

சுட்டு விரலால் தன்னைத் தானே சுட்டிக்காட்டி "நான்" என்று உறுதிப்படுத்திக் கொண்டாள்.
அவள் பாவனையில் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு ஆமோதிப்பாய் தலையாட்டினான் கௌதம்.
"அழகான கப் இதையும் உடைக்க வேண்டுமா?" வாய்க்குள் முணுமுணுத்தாள்.

கௌதம் ஏதோ சொல்ல வாய் எடுப்பதற்குள் "த்தை.... சித்தி.... என்ற இளங் குரல்களுடன் தனது டெடி பியரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு கண்ணை கசக்கி கொண்டு நிலாவும் அவள் பின்னாலேயே தீப்பும் இறங்கி வந்தார்கள்.

"ரெண்டு பேரும் எழுந்து விட்டீர்களா குட்மார்னிங்" இருவருக்கும் காலை வணக்கம் வைத்தாள் ஸ்ரீனிகா. அவள் அருகே வந்தவர்களிடம் குனிந்து ஆளுக்கு ஒரு கப்பை கையில் கொடுத்தாள்.
அவர்களுக்கு என்று போடப்பட்டிருந்த குட்டி மேஜையில் போய் இருந்த நிலா சிணுங்கினாள் "த்தை பீதிங் பத்தில் வனும்"

குட்டி மேஜை அருகே அமர்ந்த ஸ்ரீனிகா பீடிங் பத்தலை கொடுத்து விட்டு கண்டிப்புடன் கேட்டாள் "நான் என்ன சொல்லி இருக்கின்றேன் மார்னிங்கில் அழக்கூடாது எங்கே குட் மோர்னிங் சொல்லுங்கள் இருவரும்"

இருவரும் அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டு கோரசாக "குட் மார்னிங் ஸ்ரீம்மா" என்றனர். பதிலுக்கு அவர்கள் குண்டு கன்னங்களில் முத்தமிட்டவள் "குட் மார்னிங்" என்றாள்.

பாரத்துக் கொண்டிருந்த கௌதம் புருவத்தை நெற்றிக்கு உயர்த்தி இறக்கி "ஸ்ரீனி" அவனுக்கு காபி போடப் போனவளை ஒற்றை விரல் காட்டி அழைத்தான். "இங்கே வா" அருகே வந்தவளின் கன்னத்தில் முத்தமிட்டு "குட் மார்னிங்...." என்றான்.

முத்தமிட்ட கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியில் நின்ற ஸ்ரீனிகாவை பார்த்து குறும்பாய் புன்னகைத்து "காபி..... கிடைக்குமா?" ராகமாய் கேட்க வேகமாக தலையை உருட்டி விட்டு காபி போட போனவளை பார்த்து "எங்களுக்கு எல்லாம் குட் மார்னிங் கிடையாதா?" என்று குறும்பாக கேட்டான்.
"குட் மார்னிங் குட் மார்னிங்" என இருதரம் அவசரமாக பதில் அளித்தவள் கைகள் காபியை கலந்தது.
அவள் அருகில் இருந்த மேடையில் ஏறி இருந்தவன் "அப்படியானால் எங்களுக்கு இங்கே கிடையாதா?" என்று கன்னத்தை காட்டி கேட்டான். ஸ்ரீனிகா கையில் இருந்த கரண்டி நழுவி கீழே விழுந்து 'னாங்' என்று ஒலியெழுப்பியது. அவளுக்கோ மூச்சடைத்து போனது.

ஓடி வந்து மாமாவின் காலை தட்டி "தூக்கு தூக்கு" என்ற நிலவை தூக்கி மடியில் இருத்தி அவளை பார்த்தான். நிலா அவன் கழுத்தை கட்டிக் கொண்டு தோளில் சாய்ந்தாள்.

"காபி" நடுங்கும் கரங்களுடன் தந்தவளை சிறு ஏமாற்றத்துடனும் வேதனையுடனும் பார்த்தவன் வேறு எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டான்.

அவள் தனது காபியை எடுத்துக் கொண்டு தீப்புடன் சிறு மேஜை அருகே நிலத்தில் அமர்ந்தாள். கௌதமும் சென்று அவள் அருகே அமர "நிலம்.... குளிர்... டைனிங்..." என வாய்க்குள் முனங்கினாள். சிறுவர்களுக்கு சிறு நாற்காலி இருந்தது.

"ஹ்ம்ம்" என்றவனிடம் ஒன்றுமில்லை என்பது போல் வேகமாக தலை அசைத்தவள் இரு வாண்டுகளும் “ஸ்ரீம்மா” என்று ஆரம்பிக்க இருவரையும் பார்த்து "கொஞ்சம் தான் தருவேன்" என்ற நிபந்தனையுடன் தனது தேநீரில் இருவருக்கும் இரண்டு வாய் கொடுத்து தான் குடிக்க போக "எனக்கு கிடையாதா?" கேட்டவன் குரல் ஏதோ போல் இருந்தது.

விழி விரித்துப் பார்த்தவளிடம் "பரவாயில்லை ஒவ்வொன்றாக போவோம் ஆனால் குட் மார்னிங் ஒவ்வொரு நாளும் வேண்டும்" என்று நிபந்தனை விதித்தவனையே 'பே' என்று பார்த்தாள் ஸ்ரீனிகா.
அதன் பின் குழந்தைகளின் சத்தத்தை தவிர அமைதியே நிலவியது. குழந்தைகளை கவனிக்கும் ஆயாவிடம் அவர்களை ஒப்படைத்து பள்ளிக்கு தயார்படுத்த சொன்னாள். "உங்களுடன் தான் குளிப்போம்" என அடம் பிடித்த இருவரையும் "அத்தைக்கு இன்று வேலை இருக்குடா தங்கம்" எனக் கூறி சமாளித்தாள்.

கௌதமுக்கு ஒரு அதிகாலை பொழுது இத்தனை அழகாக விடிய கூடும் என்பது இன்று தான் புரிந்தது. செல்லும் குழந்தைகளே பார்த்திருந்து "எத்தனை நாளாக நடக்கிறது?" கேட்டவனை ஸ்ரீனிகா குழப்பத்துடன் பார்க்க "இதுபோல் காலை தேநீர் அருந்துவது எத்தனை நாளாக நடக்கிறது" என்று திருப்பி தெளிவாகக் கேட்டான்.

"வந்த நாளிலிருந்து" வாய்க்குள் முனங்கினாள் ஸ்ரீனிகா.

"நிறைய மிஸ் பண்ணிட்டேன் இல்ல" குரலில் வருத்தத்தமே நிறைந்திருந்தது.

அவளோ மன்னிப்பை இரைஞ்சும் அவன் கண்களை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவள் குனிந்திருந்த தலையையே மனமுடைந்து பார்த்தவன் "சரி அதற்கும் சேர்த்து ஈடு கட்டி சரி செய்து விடுவோம்" என்றான்.

🎻🎻🎻🎻🎻

பிளாக் ஜீன்ஸ் வைட் ஷர்ட் கையில் கோட் சகிதம் வெளியில் செல்ல தயாராகி வந்தவளை ஆச்சரியத்துடனும் சிறிது ஏமாற்றத்துடனும் பார்த்தான் கௌதம். அவள் இன்று வீட்டில் இருப்பாள் என நினைத்தான்.

கைப்பையை எடுத்தவாறே சாதாரண ஜீன்ஸ் டி-ஷர்ட் உடன் வந்த கௌதமை பார்த்து ஏதோ கேட்க வாயெடுத்தவள் விழுங்கினாள்.

"தூரமா... நான் ட்ராப் பண்ணவா?" கௌதம் கேட்க வெடுக்கென்று தலையை திருப்பி பார்த்து ரகசிய குரலில் கேட்டாள் "உங்கள் அம்மா அப்பா வந்துட்டாங்களா?" இல்லை என்று சொல்ல வந்தவன் ஆம் என்று தலையாட்டி வைத்தான். 'உங்கள் அம்மா அப்பாவா ரொம்ப கஷ்டப்படனும் போல இருக்கே ஜிகே' மனதினுள் நினைத்து கொண்டான்.

கேரளாவில் இருக்கும் போதே முடிவு எடுத்துவிட்டான் அவளுடன் நேரம் செலவழிக்க வேண்டும் அவள் வாய் மொழியாகவே உண்மையை அறிய வேண்டமென்றும். ஆனால் அவன் கஷ்டகாலம் கம்பெனி விபத்து பின் அது தொடர்பான வேலை என்று இழுத்துவிட்டது.

காலை தரையில் உதைத்து "ச்சு.. இவர்களை யார் இப்போது வர சொன்னது" எரிச்சலுடன் மொழிந்தவள் அவன் கேட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்து திருதிருவென மிரண்டு விழித்தாள். அவனோ கையை கட்டி தலை சாய்த்து பார்த்து கொண்டிருந்தான்.

அசடு வழிய சிரித்து சமாளித்தாள் "இன்று கம்பெனி போகவில்லை".

"உன் அத்தை மாமா வருகின்றார்கள். உன்னை ஏர்போர்ட் அழைத்து வர சொன்னாங்க வா" என்றான். வருகின்றாயா என்று கூட கேட்கவில்லை அவனுக்கு தெரியும் வரமாட்டாள் வரும் விதமாக அவன் நடந்து கொள்ளவில்லையே.

கௌதம் அழைப்பான் என்று எதிர்பார்க்காத ஸ்ரீனிகா "இல்லை இன்று லேண்ட் ஆபீசில் வேலை இருக்கிறது. அதோடு காலேஜ் போகணும் அண்ணாவிடமும் போக வேண்டும் இன்று இல்லாவிட்டால் ஒரு மாதம் கழித்து தான் அவனிடம் பேச முடியும்" என்று தயங்கினாள்.

"இப்போது எங்கே போகிறாய்?"

"அண்ணா வீட்டுக்கு..."

"சரி வா" என்று முன்னே நடந்தவனை பார்த்து 'பே' என்று விழித்தாள். தோளில் வழிந்து விழுந்த கைப்பையை மாட்டியவாறே ஓடிச் சென்று முன்னே நின்றவளை கண்டு குறுநகை கொண்டான்.

"இப்போது என்ன"

"உங்களுக்கு ஏர்போர்ட் போகனுமே..."

"அது ஒரு மணிக்கு"

"எனக்கு இன்று வேறு வேலையும் இருக்கே"

"எனக்கு இன்று வேறு எந்த வேலையும் இல்லை"

"ஓ... வீட்டிற்க்கு சொல்லனும் இல்லையா திடிரென்று போய் நின்றால் எப்படி"

"நான் சாரதா அத்தையிடம் சொல்லிவிட்டேன்"

இப்போது என்ன சொல்ல போகிறாய் என்பது போல் பார்த்திருந்தான்.

இமை தட்டி விழித்தாள் ஸ்ரீனிகா. என்ன எந்த பக்கம் போனாலும் கேட் போடுறான் இப்ப என்ன செய்ய நகத்தை கடித்து துப்பினாள். 'சாரிடி ஸ்ரீனி விட்டால் நீ நத்தை போல் சுருண்டு விடுவாய் எனக்கு வேற வழி தெரியல' மனதில் மன்னிப்பு கேட்டான். வெளிப்படையாகவே கேட்க ஆசைதான் மன்னிக்க முடியாது போடா என்றுவிட்டால் என்ன செய்வது. அதுதான் சிறிது சிறிதாக அவளை நெருங்க முயற்சிக்கின்றான். அவள் அப்பா அம்மாவை ஏமாற்றிவிட்டார் என்பதற்காக அப்பாவின் பெயரை இனிஷியலாக கூட பயன்படுத்தாதவள் மன்னிப்பாளா.....

மன்னிக்கும் வரை விடவும் மாட்டேன்....

இன்னும் மூன்று நாளில் அவள் பற்றி ஆதியோடந்தமாக கூறுவதாக வசந்த் சொல்லியிருந்தார். இதுவரை அறிந்ததிலேயே அவன் தலை சுற்றி போய் இருந்தான். இனி என்னன்னே வருமோ...

"அண்ணா மெசேஜ் பண்ணியிருந்தான். இன்று சந்திக்க முடியாதாம். மறந்தே போய்ட்டேன் ஹையோ ஹையோ" அவன் தோளில் தட்டி சிரித்தவள் அவன் அசையாத பார்வையில் நிறுத்தினாள்.
"பேசு" என்று அவன் போனை கொடுக்க "ஹலோ மாப்பிள்ளை" என்று அண்ணனின் குரல் ஸ்பீக்கரில் கேட்க திருடனுக்கு தேள் கொட்டியது போல் முழித்தாள். மாப்பிள்ளையா? ‘இவர்கள் எப்போது அறிமுகம் ஆனார்கள்’ மூளை கேட்க ‘நீ மூளையா நான் மூளையா மனம் சண்டைக்கு வந்தது’
'பேசு' கண்ணால் காட்டினான்.

அப்படியே பரத நாட்டிய திலகம் மனதினுள் கரித்து கொட்டியவள் ஸ்பீக்கரை ஆப் செய்து "அண்ணன் தங்கைக்குள் ஆயிரம் இருக்கும் அதையெல்லாம் உங்கள் முன் பேசமுடியாது" கெத்தாக சொல்லி அவனிடமிருந்து தள்ளி சென்று பேசிவிட்டு திருப்பி கொண்டு வந்து கொடுத்தாள். "அண்ணாவுக்கு வேலை இருக்காம் எப்போது நேரம் கிடைக்கும் என்று பிறகு சொல்கின்றானாம் நான் வருகின்றேன்" கிட்ட தட்ட ஓடினாள்.

அதே வேகத்தில் திரும்பி அவன் நெஞ்சில் மோதி நின்றவளுக்கு நடந்தது புரிய சில நொடிகள் எடுத்தது. கையை பிடித்து நிறுத்திய வேகத்தில் அவன் மேலேயே வந்து மோதியிருந்தாள்.
"உனக்கு என்ன பிரச்சனை அண்ணா நிற்கமாட்டானா, இல்லை நான் வருவது விருப்பமில்லையா?" கிடுக்கு பிடி போட்டான்.

பெரிய டீலா நோடீல அங்கர் எப்ப பாரு இரண்டில் ஒன்று கேட்பது "இரண்டும் இல்லை" என்றாள் எரிச்சலுடன். "எனக்கு அங்கே செல்ல விருப்பம் இல்லை".

அவனோ எரிந்து விழும் அவளை புன்னகையுடன் பார்த்திருந்தான். அவனுக்கு வேண்டியதும் அதுதானே. கூட்டு புழுபோல் தன்னை சுற்றி கூடு கட்டி உள்ளுக்குள் இறுகி போய் இருக்கும் உணர்வுகளை அவளிடமிருந்து வெளிக் கொணர வேண்டும். வெளியே அனைவரிடமும் நடிக்கும் இந்த முகம் அவனுக்கு வேண்டாம். அவனுக்கு வேண்டியது உள்ளே பாதுகாப்புணர்வின்றி இன்றி தவிக்கும் அந்த குழந்தை. அன்று கடற்கரையில் அழுத போதுதான் புரிந்தது. அனைவரிடமும் நடித்து கொண்டிருக்கின்றாள். எத்தனை நாளைக்கு முடியும். ஒரேடியாக அமுக்கி வைத்து ஒருநாள் வெடித்து விடும்.

''சரி நீ போய் வேலைகளை முடித்து வா" சந்தோசமாய் ஓட போனவள் முடியாமல் பிடித்திருந்த அவன் கைகளை பார்க்க "நான் காரில் வைட் பண்ணுறன்" உதட்டை இழுத்து பிடித்து சிரித்து வைத்தான்.
தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள் ஒரு தரம் சுற்றி பார்த்தவள் "அண்ணா அண்ணி வந்துட்டாங்களா?" ரகசிய குரலில் கேட்டாள். உதட்டை கடித்து அவளையே பார்த்தவன் மெதுவே தலையசைத்தான் இல்லை என்பது போல். "அப்ப நதியா சுரேஷ் அண்ணா வந்திட்டாங்களா? அவரின் அப்பாவிற்கு இப்போது பரவாயில்லையா?".

அடுத்து வருவதை பூரணமாக அறிந்தவன் தொண்டையில் அடைத்ததை விழுங்கி கொண்டு அதற்கும் இல்லை என்று தலையசைத்தான். "ஒருவரும் தான் இல்லையே பின் ஏன் நடிக்க வேண்டும்?" கேள்வி இதயத்தில் ஈட்டியாய் பாய்ந்தது.

அவள் முகம் பார்க்க முடியாமல் வேறு புறம் திரும்பியவன் "வா, சொல்கின்றேன்" என்றவாறு முன்னே நடந்தவன் பின்னே சென்றவளுக்கு இன்றைக்கு திட்டமிட்ட எந்த வேலையையும் செய்ய முடியும் போல் தோன்றவில்லை.

மேலே பார்த்து "முருகா என்னடா இது" வாய்க்குள் முருகனை திட்டியவாறே பலியாடு போல் சென்றாள். காரில் ஏற யோசித்தவளை கை முட்டிக்கு மேல் பிடித்து முன் சீட்டில் அமர வைத்து காரை எடுத்தான்.

"சோ இன்று என்ன என்ன வேலைகள்?"

"அதுதான் இப்பொழுது சொன்னனே"

"அதைவிட வேறு ஏதாவது..."

"இப்போதைக்கு அதே முடியாது போலிருக்கு" வாய்க்குள் முனகினாள்.

வீதியில் முன் சென்ற காரை முந்தி லாவகமாக ஸ்ட்யரிங்கை திருப்பியவாறே அவளை பார்த்து "சோ என்னை முதலில் எங்கே சந்தித்தாய்?" என்றான்.

'பைத்தியம்மாடா நீ' என்பது போல் பார்த்து வைத்தாள் ஸ்ரீனிகா. அவள் பார்வை புரிந்தவன் "பார்ப்பதற்கும் சந்திப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை சட்டத்தரணி அம்மாவிற்கு நான் சொல்ல தேவையில்லை" கேலியாகவே கூறினான்.

லேசாய் அதிர்ந்து போனது தவிர அவளில் எந்த மாற்றமும் இல்லை.

காரை ஓரம் கட்டி நிறுத்த "இதுக்கு நான் ஸ்கூட்டியிலேயே போய் இருப்பன் ஆட்டோ செலவு தண்டம்" முனகியவாறு காரை திறக்க முயல 'டக்' என்ற மெல்லிய ஒலியுடன் சேப் லாக் விழுந்தது.
நேர் எதிரே வெறித்திருந்த அவன் முகம் பார்த்தவள் பயத்தை விழுங்கி "என்ன" என்றாள்.
"என்னை முதலில் எங்கே பார்த்தாய்?" அதே கேள்வியை திருப்பி கேட்டான்.

அவள் அமைதியை தொடர "எனக்கு உன்னுடன் இந்த காரினுள் எவ்வளவு நேரமானாலும் இருக்க சம்மதம்" பதில் வரும் வரை விடமாட்டான் என்பது புரிந்தது.

"என் சீனியர் அலுவலகத்திற்கு நீங்கள் வந்த போது" வாய்க்குள் முனகினாள்.

அவன் கை நீள அடிக்க போகின்றானா? என்பது போல் சற்று பின்னே சென்று என்னவென்று பார்க்க கையில் அவன் போன் இருந்தது. டிஸ்பிலேயில் அவள் படத்துடன். கையில் வாங்கி பார்க்க அது அவள் படம் தான் கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கு முன் எடுத்தது.

வாயை மூடி திறந்தவளுக்கு சத்தமே வரவில்லை. நெரித்த புருவமும் நேர் எதிரே பார்த்த முகமுமாய் அசைவின்றி அதே போல் இருந்தவன் கேட்டான் "இப்போது சொல் என்னை முதன் முதலில் எங்கே பார்த்தாய்?"

தலை குனிந்தவள் மெதுவே கூறினாள் "உங்கள் வீட்டில்"

இருவருக்குமே நினைவு பின்னோக்கி சென்றது.

 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻15
ஸ்ரீனிகாவும் அவள் அம்மா ஸ்ரீமதியுமாய் அவ்வீட்டினுள் நுழைந்தார்கள். ஸ்ரீமதிக்கு இங்கு வருவதில் பெரும் தயக்கம் என்னவென்று சொல்லி கொண்டு வருவார். வெறும் சில நாள் பழக்கம் மட்டுமே.
அசோகனின் அப்பா சந்திரனும் ஸ்ரீமதியின் அப்பா மித்திரனும் அண்ணன் தம்பி. அசோகன் வெளிநாடு சென்றிருந்த நேரம் மித்திரன் வேறு மாநில பெண்ணை திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்கள். அசோகன் திரும்பி வந்து நடந்ததை அறிந்து மித்திரனை தேடிய போது அவர் தமிழ்நாட்டை விட்டே வெளியேறி இருந்தார்.

சந்திரனும் விடமால் தேடிக் கொண்டே இருந்தார். ஆனால் பலன் தான் பூஜ்யமாக இருந்தது. வட நாட்டிற்கு குடும்பமாக சுற்றுலா சென்றிருந்த போது அங்கு தேயிலை ஏற்றுமதி மாநாட்டிற்கு வந்திருந்த மித்திரனாய் பார்த்து பாய்ந்து கட்டிக் கொண்டார். சொல்லாமல் விட்டு சென்றதற்காக கோபித்தும் கொண்டார்.

தன் மகன் அசோகனை அறிமுகப்படுத்தி அப்போது பதினேழு வயதின் விளிம்பில் இருந்த ஸ்ரீமதியை தங்கை என மகனுக்கு அறிமுகப்படுத்தினார். அசோகனுக்கு அப்போது தான் இரண்டாவது மகன் கௌதம் பிறந்து இருந்தான். தனிப்பிள்ளையாக இருந்த அசோகனுக்கு குறும்பும் அன்பும் நிறைந்த ஸ்ரீமதியை பிடித்து போக தன்னுடன் அழைத்து செல்லவே தயாராய் இருந்தார்.

"சித்தப்பா" என்று வாய் நிறைய அழைத்து உறவு கொண்டாடிய அசோகனை அவருக்கும் பிடித்து போகவே படிப்பு முடிந்ததும் அழைத்து வருகின்றேன் என்று மித்திரன் வாக்கு கொடுத்தார். அதன் பின்னரே தமிழ்நாடு திரும்பினார் அசோகன். ஸ்ரீமதியின் படிப்பு காரணமாக தமிழ்நாடு வராத போதும் சந்திரனும் மித்திரனும் வருடத்திற்கு ஒரு முறையாவது டில்லியில் சந்தித்தது கொண்டார்கள்.
ஆனால் ஸ்ரீமதியின் வாழ்கையில் யாரும் எதிர்பாராத வண்ணம் ராஜாராம் என்ற பெயரில் திருப்பத்தை ஏற்படுத்தியது விதி.

தேயிலை கொள்வனவு செய்ய வந்த இடத்தில் ஸ்ரீமதியின் குறும்பிலும் அழகிலும் மயங்கி அவளை திருமணம் செய்து கொண்டார் ராஜாராம். அவரின் தேவை தீர்ந்ததும் தமிழ்நாடு சென்று வீட்டில் பேசி அழைத்து வருவதாக கூறி சென்றார். மித்திரனுக்கும் பிறக்கும் போதே தாயை இழந்த தன் பெண் தமிழ்நாட்டில் வாழ செல்வது ஆழ்மனதில் திருப்தியாக இருக்கவே அதிகளவில் சந்தேகமின்றி ராஜாராமை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு திரும்பிய ராஜாராம் போன் சிம்மை மாற்றியதோடு ஸ்ரீமதியையும் மறந்து போனார்.
சில மாதங்களாகியும் வராத ராஜாராமை பற்றி விசாரிக்க அவர் கொடுத்த அனைத்து விபரங்களும் போலி. அதற்குள் எல்லாம் கைமீறி ஸ்ரீமதி ஸ்ரீனிகாவை வயிற்றில் ஐந்து மாத கருவாக சுமந்து கொண்டிருந்தாள். குழந்தையும் பிறந்து ஸ்ரீனிகாவின் ஆறாவது பிறந்த நாளின் பின்தான் ராஜாராமை பற்றிய அனைத்து விபரங்களையும் அறிந்து கொண்டார்.

ஒருவாறு தமிழ்நாடு வந்து ராஜாராமை பற்றி விசாரித்த மித்திரன் அவருக்கு மணமாகி குழந்தைகளும் உண்டு என்பதை அறிந்து நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்தவர் சந்திரனை அழைக்க அந்நேரம் பார்த்து அவர் ஊரில் இல்லை அசோகன் தான் வந்தார். ஸ்ரீமதி, ஸ்ரீ உன் பொறுப்பு" என்று அதற்காவே உயிரை பிடித்து வைத்தது போல் உயிரை விட்டிருந்தார்.

மித்திரனின் மரணம் சந்திரனையும் பாதிக்க வெளிநாட்டிலிருந்து வந்தவர் சில நாட்களில் தம்பியை தேடி அவரும் விண்ணுலகம் போய்விட ஸ்ரீமதியை எங்கே எப்படி தேட என்று புரியாமல் நின்றார் அசோகன்.

ஏனெனில் மித்திரனை அசோகன் சந்தித்தது எல்லாம் டெல்லியில் மட்டுமே ஏனோ மித்திரன் அவர்களை அசாமிற்கு அழைக்கவும் இல்லை. அவர்களும் அங்கு போவதில் ஆர்வம் காட்டவில்லை. அதோடு சீக்கிரம் அனைத்தையும் விற்றுவிட்டு தமிழ் நாட்டோடு வந்து விடும் யோசனையில் இருந்தார். அதுவே அவர்களுக்கு எதிராய் நிற்க என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார் அசோகன்.

ஒரு புறம் தீடிரென அப்பா இறந்ததில் வளர்ந்து வந்த கம்பெனியின் வேலைகள் மறுபுறம் அசாமில் எங்கிருந்து எப்படி வந்தார் என்றே தெரியாமல் மித்திரனின் வேண்டுகோள். ஆனாலும் விடாது ஸ்ரீமதியை தேடி கொண்டே இருந்தார். இன்றைய அளவுக்கு தொலை தொடர்பாடல் வளர்ந்திராத காலம். தன் மகன்களிடமும் கூற கௌதம் வாக்கே கொடுத்திருந்தான். "எப்படியாவது அத்தையை தேடி கண்டு பிடித்து உங்கள் முன் நிறுத்துகின்றேன்" என்று.

கௌதமும் தேடிக் கொண்டுதான் இருந்தான். ஸ்ரீனிகாவின் அம்மாவின் படத்தை கடற்கரையில் பார்க்கும் வரை.....

ஸ்ரீனிகாவை வாசல் வரை அழைத்து வந்த ஸ்ரீமதி அவள் தயங்கியதை பார்த்து அங்கேயே நிற்க கூறி தான் மட்டுமாக உள்ளே சென்றார்.

வாசலுக்கு அருகே இருந்த மல்லிகை பந்தலின் அருகே நின்ற ஸ்ரீனிகா தன் குண்டு கண்களால் சுற்றிப் பார்த்தாள். அழகான வீடு என நினைத்தவள் சிந்தையை கலைத்தது அருகே கேட்ட குரல்கள்.
"அண்ணா வேணாம்..... தலை சுத்துது" சிறுமியை கைகளில் ஏந்தி சுற்றிக் கொண்டிருந்தான் அவன்.
அவளைவிட ஓரிரண்டு வயது சிரியவளாய் இருக்க கூடிய குமரி பருவத்தை எட்டி பிடித்த கொண்டிருந்த சிறுமி அவன் இறக்கிவிட்டதும் தலையை பிடித்து கொண்டு தள்ளாடினாள். தன் மேல் சாய்த்து கொண்டவன் "யூ ஓகே" அன்புடன் தலையை வருடிவிட்டான். அவளோ மாங்காயை காட்டி "அண்ணா... வேணும்" மெல்லிய சிணுங்கலாய் கேட்க ஒல்லியாய் நெடுநெடுவென்று வளர்ந்திருந்த அவன் ஒரே ஜம்பில் ஆய்ந்து கொடுத்தான்.

கையில் வாங்கி கொண்டு கிளுக்கி சிரித்தவாறே உள்ளே ஓடினாள் உப்பு தூள் போட்டு சாப்பிட. “பார்த்து கவனம் தியா விழுந்து விட போகிறாய்” அவள் பின்னால் வந்தவன் மல்லி கொடியின் கீழ் பூத்த தாமரையாய் நின்ற அவளை பார்த்தான்.

பதினாறு வயதின் விளிம்பில் நின்றவள் பயண களைப்பிலும் இடையில் நடந்த சில நிகழ்வுகளாலும் சற்றே வாடி தெரிந்தாள் மற்றபடிக்கு வயதுக்குரிய செழுமையுடன் ஒரு தடவை பார்த்தால் கண்டிப்பாக கன்னத்தை கிள்ளி பார்க்க தூண்டும் அழகுடன் இருந்தாள். குண்டு கன்னங்களும் வட இந்தியர்களுக்கு உரிய மா நிறத்துடன் தமிழ் நாட்டின் சிவப்பு நிறமும் கலந்து தமாரை வண்ணத்தில் இருந்தாள். இடை வரை நீண்டு வளர்ந்த சுருள் முடியுடன் பிறைநிலா நெற்றி நீண்ட விழிகள் கூர் நாசி இரண்டு பன்களுக்கு நடுவே ரோஜா இதழை ஓட்ட வைத்தது போல் இதழ்கள் வட்ட முகம் என அழகின் இருப்பிடமாக இருந்தாள்.

அவனையுமறியாமல் அவளை ஆர்வத்துடன் நோக்கினான் கௌதம். இத்தனை காலம் பெண்களை தூசு போல் தட்டி கடந்து சென்றவனுக்கு அவளை அப்படி கடந்து செல்ல முடியவில்லை. அருகே சென்றவன் "யார் நீ.. ஐ மீன் நீங்கள்".

அவள் குண்டு கண்களை இன்னும் விரித்து அவனை பார்த்தாள். அவளுக்கு தமிழ் புரியும் ஆனால் பேச வராது. தன்னை யார் என்று கேட்கிறான் என்பது புரிந்தது. ஆனால் எப்படி பதில் சொல்வது என புரியாமல் வீட்டை கைகாட்டி "அம்மா..." என்றாள்.

"ஓ... அம்மா உள்ளே இருக்கின்றார்களா?" என்று கேட்க வேகமாக ஆமோதித்து தலையாட்டினாள். "சரி அப்படியானால் உள்ளே வா" புன்னகையுடன் அழைத்தான். உடனே மறுத்து தலையாட்டினாள். "அம்மா...". சிறு சிரிப்புடன் ஒருபுறம் தலை சாய்த்து பார்த்தவன் "உனக்கு அம்மாவை தவிர வேறு எதுவும் தெரியாதா?" கை நீட்டி "கௌதம்" தன்னை தானே அறிமுகப்படுத்தினான்.

தன் பெயரை சொல்லி கை கொடுத்தாள் "ஸ்ரீனி...." முழுதாக சொல்வதற்குள் அவளின் கையை பிடித்து இழுத்து சென்றார் ஸ்ரீமதி. அவர் இழுத்த இழுப்புக்கு சென்றவள் திரும்பி பார்த்து அவனை பார்த்து சிரித்து கையாட்டி விடைபெற்றாள்.

அவன் தனக்குள் சொல்லி பார்த்தான் “ஸ்ரீனி...” முழுப்பெயர் அதுவல்ல என்று புரிந்தது.


🎻🎻🎻🎻🎻
"உனக்கு எத்தனை நாளாக தெரியும்?"

"உங்களை திரும்ப என் சீனியர் அலுவலகத்தில் பார்த்த நாளில் இருந்து"

"ஏன் சொல்லவில்லை?" தவித்து போய் கேட்டான்.

கசந்த முறுவலுடன் "சொல்லியிருந்தால்...." நிறுத்தி இடைவெளி விட்டு கேட்டாள் "நம்பியிருப்பீர்களா?"

ஓங்கி முகத்தில் அடி வாங்கியது போல் பார்த்தன் கௌதம்.

அவன் கேள்வி உள்ளத்தின் அடிவாரத்தில் புதைத்த நினைவுகளை தட்டி எழுப்ப சட்டென குனிந்து இறுக தலையை பிடித்து கொண்டவள் நடுங்கும் கரங்களால் அவசர அவசரமாக கைப் பையிலிருந்து மருந்தினை எடுத்து தண்ணீருடன் வாயில் போட்டாள்.

"தலை வலிக்குது வீட்டிற்கு போவோம்" வலியுடன் முனக சட்டென அருகே சரிந்து அவள் தலையை கையால் தங்கி "யூ ஓகே... என்னாச்சுடி..." பதறினான். அவனின் ப்ரடோ சர்வீஸ் கொடுத்திருக்க இன்று வீட்டில் நின்ற அல்டோவை எடுத்து வந்தது நல்லதாய் போக தலைவலியில் புழுவாய் துடித்தவளை இழுத்து மடிமேல் போட்டு அவள் தலையை வயிற்றோடு அழுத்திக் கொண்டான்.

"டாக்டரிடம் போவோமா..?" பதற்றமாய் கேட்டான். அவள் துடிப்பதை பார்க்க கௌதமிற்கு கை, கை விரல், குரல் கூட நடுங்கியது.

"வேண்டா வீ.....ட்......" சொல்ல முடியாமல் புழுவாய் துடித்தாள்.

"சொன்ன கேளு ஸ்ரீனி..." அவன் கையை இறுக பிடித்து மறுப்பாய் தலையாட்டினாள் "ல்ல வழ.. வரு..."
ஒரு கையால் அவள் தலையை வயிற்றோடு அழுத்தி வருடியவாறே மறு கையால் ஸ்டேரிங் வீலை லாவகமாய் சுற்றி காரை வீட்டை நோக்கி செலுத்தினான். வீட்டை அடைந்த போது அவன் கை அழுத்தத்திலும் வருடலிலும் அனத்தால் குறைந்து அரை மயக்கத்தில் இருந்தாள் ஸ்ரீனிகா.

அப்படியே தூக்கி சென்று கட்டிலில் கிடத்த அவளோ தலைவலியில் இன்னும் அனத்தி கொண்டே இருந்தாள். கௌதமிற்கு இது சாதாரண தலைவலி போல் தோன்றவில்லை. அவர்களுக்கு வழமையாக வரும் மருத்துவரும் அவன் நண்பனுமான சரணுக்கு தொடர்பு கொண்டு "டேய் எங்கே நிற்கின்றாய் உடனே வரமுடியுமா? இங்கே ஸ்ரீனி தலைவலியில் துடிக்கிறாள்" கேட்டவனுக்கு பதிலாக "உன் வீட்டிற்கு முன் தான் நிற்கின்றேன் உள்ளே வாரேன்” என்றான் சரண். "தங் காட் சீக்கிரம் வா"

சரண் வந்ததும் அவனை பரிசோதிக்க விட்டு குறுக்கும் நெடுக்குமாக அறையை அளந்து கொண்டிருந்தான் கௌதம். பிரஷர் ஹார்ட் பீட் அனைத்தும் பரிசோதித்தவன் ஸ்ரீனிகாவின் கன்னம் தட்டி எழுப்பினான் "ஸ்ரீனிகா... ஸ்ரீனிகா... நான் பேசுறது கேட்குதா?" மீண்டும் தட்டினான்.
பெருவிரலால் நெற்றி கீறியவன் "என்னாச்சுடா?" என்றவாறு மறுபுறம் அமர்ந்தான்.

"ஸ்ரீனி..." அவன் ஒரு அழைப்பில் பதிலத்தாள் "ஹ்ம்ம்..." அவள் பதிலில் நிமிர்ந்து நண்பன் முகம் பார்க்க "ஏதாவது மருந்து போட்டாளா? ஷி இஸ் ஆல்ரைட் நொவ்" என்று நண்பன் தோள் தட்டினான்.

"தலைவலி வந்த உடனே ஏதோ ஒரு மருந்து போட்டாள். என்ன மருந்து என்று தெரியல" ஏனோ டென்ஸனாக தென்பட்டான்.

"பயப்பட ஒன்றுமில்லை அந்த மருந்தால் தான் உறக்கம். மற்றபடி எதுவும் பிரச்சனை இல்லை. ஹஸ்பிடல் அழைத்து வா ஒரு சிடிஸ்கேன் செய்து பார்த்திருவோம்" என்று புன்னகைக்க வள்ளி இருவருக்கும் காபியுடன் உள்ளே வந்தாள். திரும்பி சென்றவளிடம் "பூஸ்ட் கலந்து ஒரு கப் பாலும் வேண்டும்" என்றான் கௌதம்.

அவனையே கூர்ந்து பார்த்த சரண் "எப்போது" என்றான்.

ஆயாசமாய் தலையசைத்தவன் "எட்டு மாதம் இப்போது என்னை எதுவும் கேட்காதே" என்றான். நண்பன் சென்றதும் அவள் அருகே அமர்ந்து பாலை குடிக்க வைத்தவன் நினைவுகள் மீண்டும் அவளை சந்தித்த தினத்தை நோக்கிச் சென்றது.


🎻🎻🎻🎻🎻
ஸ்ரீனிகாவின் கையை இழுத்து செல்வதை பார்த்து கொண்டிருந்த கெளதம் அவர்கள் கண்ணை விட்டு மறையவும் அருகேயிருந்த பைக்கை உதைத்து கிளப்பி வெளியே வந்தவன் அவர்கள் ஆட்டோவை மறித்து ஏறி செல்வதை பார்த்து அவர்களை பின் தொடர்ந்தான். சிக்னலில் ஆட்டோவை தவறவிட்டவன் மீண்டும் பின்தொடர்ந்தான். அவள் ஒரு மாலில் இறங்கவே அந்த மாலினை புன்னகையுடன் பார்த்தான்.

பைக்கை விட்டு உள்ளே செல்வதற்குள் மீண்டும் மயமாய் மறைந்தவளை தேடிக் கொண்டு உள்ளே செல்ல வழியில் ஓரிருவர் வணக்கம் வைக்க சிறு கையசைவில் ஏற்றவன் கண்கள் அவளையே தேடிச் சலித்தது. லிப்டில் ஏறுவதைப் கவனித்தவன் வெளியே தெரிந்த இலக்கத்தைப் பார்த்து அந்த தளத்திற்கு விரைந்தான்.

யாரையோ தேடியவாறே பின் பக்கமாய் நடந்தவளின் பின் புன்னகையுடன் நின்றான் கௌதம்.
யார் மீதோ மோதி நிற்க திரும்பி தோளுக்கு மேலாக பார்த்தவள் முகம் பூவாய் மலர்ந்தது. பூங்கொத்தாய் தன் மீது மோதியவளின் தோள்களைப் பற்றி நிறுத்தி கண்களில் சந்தோஷம் மின்ன அவளையே பார்த்தான்.

அப்படியே அவளை அருகே இருந்த தூணோடு சேர்த்து நிறுத்தி அவள் உயரத்துக்கு குனிந்தவன் "என்ன பாதியில் விட்டு வந்துவிட்டாய்?" குறும்பு மின்ன கேட்டவன் மனமோ அவள் இன்னும் குழந்தை என்பதை கண்டு கொண்டு சற்றே சுணங்கியது.

அவளோ யாரையோ தீவிரமாய் தேடினாள். "வேறு யாரும் வந்தார்களா?" அவளுடன் சேர்ந்து அவனும் தேட ‘இல்லை’ என்று வேகமாக மறுத்தவள் முன்னே இருந்தவனிடம் கவனத்தை செலுத்தினாள்.
அவனோ புருவத்தை உயர்த்தி முகத்தையும் மேல் நோக்கி அசைக்க குண்டு கண்களை இன்னும் பெரிதாக்கி அவனை பார்த்தாள். "ஓ உனக்கு தமிழ் தெரியாது இல்ல" என்றவனை தடுத்து கூறினாள் "ஐ கன் அண்டர்ஸ்டன்ட் தமிழ், பட் கன்ட் டாக் ஃபுளுவன்லி"

"ஓ... அப்ப சீக்கிரம் தமிழ்ல பேச பழகிடு" என்றவனை 'ஏன்' என்பது போல் பார்த்து வைக்க "அப்போது தானே இருவரும் பேசலாம்" கண்ணடிக்க என்ன உணர்வு என்று புரியாத போதும் பிடித்து தொலைக்க மேலும் கீழுமாக தலையை ஆட்டி வைத்தாள்.

"சீக்கிரம் வளர்ந்துரடி" அவன் சொல்ல, அவன் நெஞ்சிற்கும் கீழே நின்ற தன் உயரத்தை பார்த்து உதட்டை பிதுக்க அவள் கன்னம் கிள்ளினான். சட்டென கையை தட்டிவிட்டாள் ஸ்ரீனிகா.

"ஒகே ஒகே தொடல" என்றவன் கைகளை உயர்த்தி "சோ எங்கே படிக்கின்றாய்? உன் முழு பெயர் என்ன? வீடு எங்கே?" வேகமாய் கேட்டவனுக்கு பதில் சொல்ல வாயெடுத்தவளுக்கு 'உன்னை பற்றிய விபரங்களை அறிமுகமில்லாத யாருக்கும் சொல்ல கூடாது' அம்மாவின் எச்சரிக்கை ஞாபகம் வர மறுத்து தலையாட்டியவள் திரும்பி உடைகளை ஆராய்ந்தாள்.

சொல்வதற்கு வந்து திரும்பியவளை யோசனையுடன் பார்த்தவன் "ஏன் என்னிடம் சொல்ல கூடாதா?" சிறு மனதங்காலகவே கேட்கவே சிறிது யோசித்து "யூ ஆர் எ ஸ்ரேஞ்சர்" குழந்தைத்தனமாக கூறியவளை புன்னகையுடன் பார்த்து "என்னை பார்த்தால் பயமாக இருக்கிறதா?" கேட்டவனுக்கு பதிலாக இல்லை என்று தலையசைத்தாள்.

உண்மையில் அவனருகே அவள் பயம் எங்கே போனது என்றே தெரியவில்லை. புன்னகையுடன் ஏறெடுத்து அவனை பார்க்க "எல்லாத்துக்கும் சூரனை போல் தலையாட்டு" அவள் தலையை பிடித்து ஆட்டி விட்டான். அவன் பார்வை ஏதோ மாற்றங்களை மனதிலும் உடலிலும் ஏற்படுத்த அவனிடமிருந்து பார்வையை பிரித்து அருகே இருந்த உடைகளில் செலுத்தினாள். கரடி பொம்மை போட்ட டீ ஷர்ட் கண்ணில் பட அதை எடுத்து மேலே வைத்து அப்படியும் இப்படியும் திருப்பி கண்ணாடியில் பார்த்தவள் கண்ணாடியில் தெரிந்த அவனையும் பார்த்தாள்.

இரு விரல் சேர்த்து சூப்பர் என்று கை காட்டியவன் ஃபோன் அடிக்க ஒரு நிமிடம் என்று கண்ணாடியில் சைகை செய்தவன் அவளை கண்ணாடியில் பார்த்தவாறே அதற்கு காது கொடுத்தான். அவன் அப்பாதான் அழைத்திருந்தார். "உன் அத்தை ஸ்ரீமதி பற்றி ஒரு தகவல் கிடைத்து இருக்கு உடனே வா"என்றார்.

"யா அப்பா" என்றவன் அவசரமாக அவளை தோளில் பிடித்து தன் பக்கமாய் திருப்பினான். "அப்பா கூப்பிடுறார் அவசரமாய் போக வேண்டும்" அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே முகம் அந்தி தமரையாய் கூம்பிவிட்டது. அவன் டீ ஷிர்டை கொத்தாக பிடித்தவள் கையை அழுத்தி கொடுத்தான்.
"பிளீஸ் நானே உன்னை தேடி வருவேன் ஒகே" அவள் கையிலிருந்த டீ ஷர்ட்டின் விலையை பார்த்தவன் தன் வல்லட்டை திறந்து பணத்தை எடுத்து கையில் வைக்க வேண்டாம் என்பது போல் மறுத்து தலையாட்ட அவள் உதட்டில் கை வைத்து "இது என் முதல் கிஃப்ட் மறுத்து எதுவும் சொல்ல கூடாது" அழுத்தமாய் கூறியவன் வாடியிருந்த அவள் முகத்தை கையில் ஏந்தி "நான்..." ஏதோ சொல்ல வந்து முடியாமல் தடுமாறி "என்னை மன்னிச்சிடு" என்றவாறே அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் பதித்து அங்கிருந்து வேகமாய் வந்துவிட்டான்.

கடை வாசலைத் தாண்டும் முன் திரும்பிப் பார்க்க, அவள் நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டிருந்தார் சாரதா. புன்னகையுடன் இருவரையும் மனதில் பதிய வைத்துக் கொண்டவன் வேகமாக அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

அத்தை தென்பட்டதாக கூறிய இடத்திற்கு சென்று தேடித் பார்த்த போது அவர் அங்கிருந்து சென்றிருந்தார். அதன் பின் என்ன முயற்சித்தும் ட்றேஸ் செய்ய முடியவில்லை. அன்று அவன் வீட்டில் வைத்து ஸ்ரீமதி வந்த வேகத்தில் ஸ்ரீனிகாவை இழுத்துச் சென்றதில் அவனால் அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அன்றே பார்த்திருந்தால் எத்தனையோ விபரீதங்களைத் தடுத்திருப்பானே.

 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் காதல் தீரன் அத்தியாயம் - 15 வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்.


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻16
சோபாவில் அமர்ந்து ஸ்ரீனிகாவையே பார்த்துக் கொண்டு இருந்தவன் நினைவுகளை கலைத்தது போன் சத்தம். எடுத்துப் பார்க்க யாதவ் தான் அழைத்திருந்தான்.

“யாதவ், நாளை, நாளை மறுநாள் இரண்டு நாளும் உள்ள மீட்டிங் கன்சல் பண்ணிடு, நான் அலுவலகம் வர மாட்டேன். அப்படியே அஜாவை அப்பா அம்மாவை கூட்டி வர அனுப்பிவிடு” என்றவன் பதிலுக்காக கூட காத்திராமல் போனை கட் செய்து விட்டு அவள் அருகே வந்தான்.

அப்போதும் வலியில் முனகியவள் தலையை இதமாய் பிடித்துவிட அவனை நெருங்கிப் படுத்தாள். அவன் நினைவுகளோ கிட்டத்தட்ட பத்து வருடம் கழித்து மீண்டும் அவளை சந்திக்க நேர்ந்ததை நோக்கிச் சென்றது.

🎻🎻🎻🎻🎻

அண்ணா..... என்று துள்ளி குதித்தவாறு வந்து நின்றாள் வீட்டின் கடைக்குட்டி, அவனது அருமை தங்கை நதியா. மீட்டிங் முடிந்து அப்போதுதான் உள்ளே வந்தவன் அவளை ஒரு தரம் தூக்கிச் சுற்றிவிட்டு அழைத்தான் "தியா.." அழைப்பிலேயே பாசம் சொட்டியது. "வா வா உள்ளே வா இரு" என்று இருக்கையை காட்டியவாறு தன் நாற்காலியில் அமார்ந்தவன் "என்ன அம்மையார் இன்று இந்த பக்கம் என்ன விசேஷம் என்று" கேட்டான் கௌதம்.

நேரடியாகவே விடயத்துக்கு வந்தாள் "எனக்கு ஒரு டீல் முடிக்க முடியல" கன்னத்தில் கை வைத்தாள் நதியா.

அவள் அலப்பறையில் புன்னகைத்தான். "முடிச்சிட்டா போச்சு என்னவென்று சொல்லு செய்திடுவோம்" குரலிலேயே அவனிடம் அவளுக்கான சலுகை தெரிந்தது. "கோயமுத்தூரில் சுரேஷின் இரண்டு மில்லுக்கும் நடுவில் ஒரு மில் உள்ளது அந்த மில்லை விலைக்கு வாங்க வேண்டும்" என்றாள் நதியா.

"வேண்டிடுவோம்..... பண பிரச்சனையா? அல்லது ஏதாவது பேங்கில் லோன் பிரச்சனையா?" என்று கேட்டான் கௌதம். "அதெல்லாம் பிரச்சனை இல்லை அந்த மில் ஒரு பெண்ணின் பெயரில் உள்ளது. அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகும் முன் மில்லை விற்க முடியாது அதுதான் பிரச்சனை" என்றாள்.

"சரி அப்படியானால் கல்யாணம் செய்து வைத்தால் சரிதானே" இலகுவாக சொன்னான் கௌதம் ஏதோ எதிரில் இருக்கும் கடையில் லட்டு வாங்கி வா என்பது போல்.

"அது அத்தனை எளிதாக இல்லையே அண்ணா" என்று கன்னத்தில் கை வைத்தாள் நதியா.

"உன் அண்ணன் வாழ்வில் முடியாது என்ற வார்தை இருக்கின்றதா என்ன?" ஒற்றை புருவம் தூக்கி கேட்டான். "எப்படியோ அந்த மில்லை வாங்கினால் போதும். சுரேஷின் தொழில் போட்டியாளர் மிஸ்டர் ஆலன் அதை வாங்க முயசிக்கின்றார். இல்லாவிட்டால் இந்த மில் இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை" என்ற தங்கையின் அருகே வந்து தலையில் கை வைத்தவன் "வாங்கி விட்டாய் என்று நினைத்துக் கொள்" என்றான்.

"ஏதாவது எக்கு தப்பாக பண்ணி வைக்காதே" என்று செல்லமாக மிரட்டி விட்டே சென்றாள்.

அசிஸ்டன்ட் யாதவை அழைத்து "யாதவ் நதியாவிடம் கேட்டு அவள் சொன்ன அந்த மில் தொடர்பான அனைத்து தகவல்களும் இன்னும் ஐந்து மணி நேரத்தில் எனக்கு வேண்டும்" என்றான். நான்கு மணி நேரத்திலேயே அனைத்து தகவல்களுடன் வந்து நின்றான் யாதவ். மூச்சை பிடித்து கொண்டு விபரத்தை கொட்டினான்.

"இந்த மில் ஸ்ரீனிகா என்ற பெண்ணின் பெயரில் உள்ளது பிரபல தொழிலதிபர் ராஜாராமின் மகள். அந்த பெண்ணிற்கும் தந்தைக்கும் ஏதோ ஒத்து வரவில்லை அதனால் அந்தப் பெண் கேரளாவில் படித்து அங்கேயே இருக்கிறாள். வீட்டிற்கு வருவதே இல்லை வந்தாலும் உடனே சென்றுவிடுவாள். திருவனந்தபுறத்தில் பிரபல சட்டத்தரணியான கேசவன் நாயரிடம் ஜூனியராக பணி புரிகிறாள்”.

கௌதம் ஒரு புருவம் உயர்த்தி பார்க்க "அவரே தான்" என்றவன் தொடர்ந்தான்.

"இது தொழிலதிபர் ராஜராமின் அப்பாவின் சொத்து இதை வாங்குவது என்றால் அவரது மற்ற பிள்ளைகளின் கையெழுத்தும் இருக்க வேண்டும். அவருக்கு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஆக இன்னும் இரண்டு பிள்ளைகள். அவரது தாத்தா பாட்டி ஏன் இந்த சொத்தை இந்த ஒரு பெண்ணுக்கு மட்டும் எழுதினார்கள் என்று தெரியவில்லை" என்றான்.

"அந்தப் பெண் சொத்தை விற்க மறுக்கிறாளா?" யோசனையோடு கேட்டான் கெளதம்.

"விசாரித்தவரையில் அப்படி எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்த பெண்ணே நினைத்தாலும் விற்க முடியாத சூழ்நிலை அந்த சொத்தை விற்பதற்கு அவள் திருமணமாகி இருக்க வேண்டும் என அவர்களது தாத்தா பாட்டி உயில் எழுதி வைத்திருக்கின்றார்கள். உயில் பற்றிய மீதி விபரங்கள் நாளை வரும்" என்றான்.

சிறிது நேரம் மூடி யோசித்தவன் "ஒரு மேட்ரிமோனி சைட் பெயர் சொல்லு" என்று கேட்ட பாசை பார்த்து கோழி முழுங்கிய திருடன் போல் விழித்த யாதவ் "அதிலும் ஒரு சிக்கல் உள்ளது" என்று தயங்க 'என்ன' என்பது போல் பார்த்தவனுக்கு "அந்த பெண்ணிற்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அதை விட அந்த எண்ணத்தில் வரும் ஆண்களை இலகுவில் அருகில் விடுவதும் இல்லை" என்று பதிலளித்தான்.

"இன்ட்ரஸ்டிங்" என்றவன் "யாரையாவது அனுப்பி அவளை லவ் பண்ண வைக்க ஏற்பாடு செய்" என்றான். இதுக்கு ஏண்டா நான் எம்பிஏ படிச்சேன் மனத்துக்குள் புலம்பியவாறே சென்றான் யாதவ். மகராசி எப்ப வந்தாலும் இந்த மாதிரி வேலைக்குள் மாட்டி விடுறதே இவளுக்கு வேலை.

அடுத்த நாள் கன்பிரன்ஷ் மீட்டிங்கில் இருந்த கௌதமிடம் "பாஸ்...." கத்தியவாறே வந்த யாதவை கண்டிப்புடன் நோக்கினான் கெளதம். "அதை விடுங்கள் பாஸ் அந்த பெண் ஸ்ரீனிகா திருமணம் செய்ய போகிறாள்" என்று அந்த முழு அலுவலகத்துக்கும் கேட்கும் வண்ணம் அறிவித்தான்.

அழைப்பை துண்டித்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்து முன்னும் பின்னுமாய் லேசாக ஆடியவன் "நல்லது தானே"என்றான்.

"அது சுரேஷின் போட்டி கம்பனி அல்பேர்ட் ஆலன் ஏற்பாடு செய்த ஆள்" பரிதாபமாக கூறினான். "அதோடு ஆள் யார் என்ன என்பது அந்த பெண் ஸ்ரீனிகாவிற்கும் தெரியாது. அந்த பெண்ணிற்கு இந்த மில் கையை விட்டு போனால் போதும் என்ற எண்ணம் கேட்டால் சும்மாவே தந்துவிடுவாள் போல் இருக்கு."

சுழல் நாற்காலியில் அமர்ந்து பின் சாய்ந்து கண் மூடி சிந்தனையில் ஆழ்ந்தவன் "அந்த ஆளை மடக்கு அதற்கு பதிலாக நம்மால் ஒருவனை அந்த இடத்திற்கு தயார் செய்" என்றான்.

"அது முடியாது சார்" என்றான் யாதவ்.

கேட்டு கேள்வி இல்லமால் மறுத்தவனை 'ஏன்' என்பது போல் பார்த்ததற்கு "ஆலன் தான் அந்த நபர்" சங்கடமாய் கூறினான்.

"ஆலன் இப்போது எங்கே?""சுவிஸ் போய் இருக்கின்றார்"

"எப்போது ரிட்டன்?"

“இன்னும் பதினான்கு நாட்களில்...”

‘இன்ரஸ்டிங்... அப்படி என்ன அந்த பெண் ஸ்பெஷல் கல்யாணமே செய்ய மாட்டேன் என்றவன் இப்படி ஒரு திருமணத்திற்கு சம்மதித்தான்' தனக்குள் எண்ணி கொண்டவன் "கேரளாவிற்கு டிக்கெட் புக் செய்" என்றான் கெளதம்.

🎻🎻🎻🎻🎻
அழகிய கேரளா....

ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்த கெளதம், கருப்பு காற்சட்டை வெள்ளை நிற போலோ நெக் டீஷர்ட், கூலர் சகிதம் ஒரு தடவை சுற்றி பார்க்க வந்து சேர்ந்தான் அஜா ஒரு "குட் மார்னிங் பாஸ்" உடன்

"ஏண்டா எப்ப பாரு காங் லீடர் மாதிரி பாஸ் பாஸ்" மெலிதாய் எரிந்து விழுந்தான்.

"அப்படியே பழகிட்டு பாஸ்" லக்கேஜை வாங்கியவன் பார்க் செய்திருந்த காரை நோக்கி நடக்க குறுக்கே தலையாட்டி விட்டு பின்னே சென்றான் கௌதம்.

முன் இருக்கையில் அமர்ந்தவன் "திருவனந்தபுரம் கேசவன் நாயர் ஆபீஸ்" என்றான்.

இவனின் நல்ல காலம் கேரளாவில் இவர்கள் கம்பனி சம்மந்தமான லீகல் வேலைகள் அனைத்தும் பார்ப்பது அவர்தான். இத்தனை நாளில் அவரது அலுவலகத்தில் சந்தித்ததில்லை. இருவரும் வெளியிடத்திலேயே சந்தித்துக் கொண்டார்கள்.

அவர் அலுவலகத்திற்கு சென்றால் அன்று பார்த்து அலுவலகத்தில் கேசவன் நாயர் இல்லை ஏதோ வேலை விடயமாக வெளியில் சென்று இருந்தார். அவனுக்கும் அது வசதியாகவே இருந்தது. அவன்தான் கேசவன் நாயரை சந்திக்க வரவில்லையே. அவனை அறிந்த கேசவன் நாயரின் உதவியாளர் கேசவன் நாயரின் அறையிலேயே அமர வைத்து விட்டு அவனுக்கு சாய் வாங்குவதாக கூறி வெளியே சென்றிருந்தான்.

வாஸ்துக்கோ அல்லது அழகுக்கோ தெரியவில்லை. அவர் அலுவலக அறையில் அவர் இருக்கைக்கு பின்னால் ஒரு பெரிய கண்ணாடி ஒன்று பொருத்தி இருந்தார். அவர் மேஜையில் அமர்ந்து போனை பார்த்து கொண்டிருந்தவன் பின்னால் கதவு திறக்கும் சத்தத்தை கேட்டு நிமிர கண்ணாடியில் தெரிந்த உருவத்தை பார்த்து மயங்கி போய் நின்றான

அவன் கண்ணில் முதலில் பட்டது அவளது அந்த குண்டு கண்கள் தான்.

அன்று ஏதோ விசேஷம் போல் கரும்பச்சை நிற அனார்கலி சுடிதார் அணிந்து முழுகிய தலையை விரித்து அதன் நடுவில் மல்லிகை சரத்தை சிறிதாய் வைத்திருக்க அவளது நீண்ட கூந்தல் இடையையும் தாண்டி முழங்காலை தொட்டு விடும் போல் இருந்தது. அவளது நிறம் வெள்ளையையும் சிவப்பையும் கலந்து செய்தது போல் ஒரு வித தாமரை வண்ணதில் இருக்க அந்த கரும்பச்சை நிற சுடிதார் அவள் நிறத்தை தூக்கி காட்டியது. கழுத்தில் மிகமிக மெல்லிய சங்கிலி, கையில் தோல் கடிகாரம் நெற்றியில் திலகத்தின் கீழ் கேரளா மக்களுக்கு உரிய மஞ்சளில் ஒரு கீற்று என மிகமிக சாதாரணமாக இருந்தவள் அவன் மனதை நொடியில் கொள்ளை கொண்டு விட்டாள். அவன் இதயம் சொன்னது நான் இத்தனை நாள் காத்திருந்தது இவளுக்காக தான் என்று.

அவன் மேற்கொண்டு என்ன செய்திருப்பானோ அதற்குள் உள்ளே வந்த கேசவன் நாயரின் உதவியாளர் "ஸ்ரீனிகா சாரினை கானான் வன்னிட்டுண்டு, தமிழனானு" என மலையாளத்தில் கூறினார்.

"ஸ்ரீனிகா" என்ற அந்த அழைப்பில் அவள் யார் என புரிய நொடியில் அவன் உணர்வுகள் அத்தனையும் இதயத்துள் பூட்டியவன் கண்ணாடியில் அவளை அளந்தான்.

ஐந்தரை அடி உயரத்தில் சற்றே மெலிந்த தேகத்துடன் நின்றவள் குண்டு கண்கள் மட்டுமே பத்து வருடத்திற்கு முன் தேடி களைத்த ஒரு முகத்தை ஞாபகப்படுத்த இதயத்தோடு மூளையும் குழம்பியது.

இந்த பத்து வருடங்களில் முதல் ஓரு வருடம் அவன் போகும் இடமெல்லாம் அவளை தேடினான். அந்த குண்டு கண்களும் கன்னங்களும் அதில் விழும் குழியும் எங்காவது தென்படுமா என்று மனம் ரகசியமாக அவளை தேடி கொண்டே இருக்கும்.

அதன் பின் லண்டனில் எம்பிஏ படித்து வந்த பின்னர் முன்பு போல் தேடவில்லை என்றாலும் எந்த பெண்ணிலும் ஏனோ ஈர்ப்பு தோன்றவில்லை. அவன் அம்மா திருமண பேச்சை எடுக்கும் போதெல்லாம் அன்று அவள் தன்னை பார்த்து சிரித்ததும் கன்னத்தில் விழுந்த அந்த குழியும் அம்மாவுடன் செல்லும் போது திரும்பி கையாட்டிவிட்டு சென்றதுமே கண் முன் நிழலாட ஏதேதோ சொல்லி கல்யாண பேச்சை இத்தனை காலமும் சற்று தள்ளி போட்டிருந்தான். ஒரு தொழிலதிபனாக, அவனுக்கே அவன் செயல் சிறுபிள்ளைதனமாக தான்பட்டது. ஒரே ஒரு நாள் சந்தித்து பெயர் கூட முழுமையாக தெரியாத ஒருத்தி எங்கே இருக்கின்றாள் என்பது கூட தெரியாது. அவளை நினைத்து திருமணத்தை தள்ளி போடுவது விடலை பையன் போல் நடப்பது புரிந்தாலும் அவனால் அதை முற்று முழுதாக தவிர்க்க முடியவில்லை.

எந்த பெண்ணை பார்க்கும் போதும் இது போல் மனம் தடுமாறவும்மில்லை... அந்த ஸ்ரீனி நினைவு வரவில்லை. அதே நேரம் பெயரில் உள்ள பொருத்தத்தையும் மூளை குறிப்பெடுக்க லேசாக நெற்றியில் வியர்த்தது.

வந்தவள் இன்னும் அவனை சரியாக கவனிக்காமல் உதவியாளரிடம் விசாரிக்க இவனோ அவளையே வைத்த விழி எடுக்காது கூலரின் மறைவில் பார்த்திருந்தான் “சாரே இன்னு எவ்விடையானு” என அவரிடம் விசாரித்தாள்.

"இங்கிருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு ஊரில் காணி பிரச்சினை, ஏக்கர் கணக்கில் காணி ஏதோ அளக்க வேண்டுமாம் சேவியர் உடன் போயிருக்கின்றார்" என மலையாளத்தில் பதிலளித்த உதவியாளன் "ஸ்ரீ குட்டி இன்னு வளர சுந்தரமாயிட்டு உண்டு என்னை விவாஹம் களிக்கமோ?" மெல்லிய கிண்டலுடன் அவளை பார்வையால் விழுங்கியவாறே கேட்டு வெளியே செல்ல ஏன் என்னவென்றே தெரியாமல் இங்கே ஒருவன் நெருப்பின்றி எரிமலையாய் கொதித்தான்.

அவன் கேள்விக்கு அழுத்தமான மெல்லிய புன்னகையை பதிலாய் தந்தவளை பார்க்க இவனுக்கு இதயம் லயம் தப்பியது.

இன்று கேசவன் நாயர் வெளியே சென்று விட அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஜூனியர்ஸ் நீதிமன்றம் சென்றுவிட்டனர். அலுவலகத்தில் இன்று அவள் மட்டும் தான் அவனை கவனிக்க வேண்டிய பொறுப்பும் அவளிடம் தான்.

"சார் இன்று கேசவன் ஐயா தூர இடம் போய் இருக்கின்றார். மற்ற சீனியார் கோர்ட்ஸ் போய்ட்டாங்க, என்ன விடயம் என்று சொன்னால் முடிந்தால் நான் செய்து தருவேன் இல்லையா கேசவன் சாரிடம் கேட்டு என்ன செய்யலாம் என்று சொல்கின்றேன்" தான் கொண்டு வந்திருந்த பைல்களை அருகில் இருந்த கப்போர்டில் அடுக்கியவாறே மலையாள வாடையுடன் கடகடவென பேசியவளை கூலரின் பின் ரசித்திருந்த கெளதம் தன்னை மறந்து "நீதான் தான் வேணும்" என்றிருந்தான்.

கோபத்துடன் திரும்ப 'அய்யய்யோ இவளுக்கு தமிழ் தெரியுமில்லை' என்று மூளை எச்சரிக்க சட்டென ஃபோனை எடுத்து காதில் வைத்து யாரிடமோ பேசுவது போல "இல்ல நீ தான் வேணும் என்று சொல்லி ஏதாவது சமாளி" லைனே இல்லாத ஃபோனில் டீ ஆத்தினான்.

கோபத்துடன் திரும்பிய ஸ்ரீனிகாவின் கண்கள் அவன் முகத்தை கண்டதும் மகிழ்ச்சியில் இன்னும் பெரிதாய் விரிந்தது. செவ்விதழ் சத்தமின்றி உச்சரித்தது "சேட்டா.."
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் காதல் தீரன் அத்தியாயம் - 16 வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்.
இன்னும் ஒரு மூன்று கிழமைகளுக்கு ரெகுலர் அப்டேட் கொடுப்பது கொஞ்சம் சிரமம் அதனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போடுவேன் ப்ளீஸ்...


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻 17
கூலரின் பின் அவளின் மாற்றங்களை கணக்கெடுத்தவன் கண்கள் விரிந்து சுருங்கின. அவளின் முகத்தில் வந்து போன உணர்வுகளை படித்தவன். இவளை நான் மடக்குவது சற்று சுலபம் போல இருக்கே என சிந்தித்தது அவன் மனம்.

அவளுக்கு அவன் போல் குழப்பம் எதுவுமில்லை. எந்த துன்பமான பொழுதிலும் அவன் முகம்தான் நெஞ்சில் ஒட்டி வைத்தது போல் அவள் நினைவை விட்டு நீங்கவே இல்லையே. அப்போது ஒல்லியாய் இருந்தவன் இந்த பத்து வருடத்தில் இறுகிய தசைக்கோளங்களுடன் படிய வாரிய தலையுடன் முழுமையான ஆண்மகனாய் நின்றான்.

அங்கிருந்து வந்த பின் அவனை தேடி செல்லத்தான் ஆசை கொண்டாள். ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் எதிராக அமைந்திருக்க அவனுடனான தன் வாழ்வு எட்டாக்கனி என்பதும் புரிந்தது. "சாரே.... எந்தா பறயனு" தயக்கத்துடன் கேட்டாள் ஸ்ரீனிகா. அவனை சுற்றியிருந்த மயாவலை அறுந்து விழ "எனக்கு மலையாளம் தெரியாது" பட்டென்று தமிழில் சொன்னான்.

"ஓஹ் பரவாயில்லை எனக்கு தமிழ் குறைச்சு குறைச்சு அறியும்" மம்முட்டி தமிழ் பேசியதை போல் அழகு அள்ளியது. அவனையும் அறியாமல் இதழ்கள் புன்னகைக்க "ஏதாவது தப்பா பறஞ்சா ஐ மீன் கதைக்கான" இல்லை என்பது போல் தலையாட்டி வைத்தான் கௌதம்.

"இது சாறின்ட அறை ஞிங்கள் என்னோட அறைக்கு வருமோ"? நிதானமாக யோசித்து கேட்க "வருமே" சிரிக்காமல் சொன்னான்.

அவன் உதட்டுக்குள் ஒளித்து வைத்த சிரிப்பை கண்டு கொண்டவள் அவனை சந்தேகத்துடன் பார்த்தவாறே வழி காட்டினாள். அவள் அறைக்கு அழைத்து சென்றவள் அருகே இருந்த மேஜையில் நொடியில் தேனீர் தயாரித்து அவனிடம் ஒன்றை கொடுத்தவள் இன்னொன்றை கதவை திறந்து "ஏட்டா" என்று அழைக்க வந்த அஜாவிடம் மற்றதை கொடுத்தாள். அப்படியே ஒரு வயப்பனையும் கொடுக்க புருவத்தை உயர்த்தினான் "இன்னு என்ர அம்மை..." மலையாளத்தில் தொடங்கியவள் கண்மூடி நிறுத்தி "டுடே மை மதர் பர்த்டே" என்றாள்.

உதட்டை சி வடிவில் பிதுக்கி தேனீரை அருந்தியவன் கண்கள் அதன் சுவையில் மின்னியது.

அவன் தேநீரில் அருந்தும் இடைவெளியில் கேசவன் நாயருக்கு அழைத்தவள் "ஆஹ் சாரே யான் ஸ்ரீனிகா, மிஸ்டர் கௌதம்....." என்று தொடங்கியவளை இடை மறித்து "இன்னு அவன்ட கூடி போயி பனி தீர்க்குகனும் ஸ்ரீகுட்டி (இன்று அவருடன் நீ சென்று வேலைகளை முடித்து கொடு)" என்று கூறியவரிடம் "அவருக்கு ஓகேயா என்று தெரியலையே" தயங்கினாள்.

போனை அவரிடம் கொடு என போனை ஷோலில் துடைத்து விட்டு நீட்டினாள். கையில் வாங்கியவனுக்கு போனில் அவள் வாசம் வரவே மெதுவாய் உள்ளிழுத்து "ஹலோ" என்றான். "மிஸ்டர் கௌதம் கிருஷ்ணா ஐ யாம் சொரி டு சே டுடே ஐ ஸ்ராக் ஹியர், ஐ டிடின் நோ தட் யு வில் கம் டுடே இஸ் தேர் எனிதிங் ஐ கேன் டூ பிரேம் ஹியர்."

"நோ நோ இட்ஸ் ஆல்ரைட் ஐ நீட் எ பேர்சன் டு வேரிபாஃய் சம் டீட்ஸ்"

"ஸ்ரீனிகா இஸ் கிளவர் கேர்ள், இப் யூ ஆர் ஓகே வித் ஹேர்..." என இழுத்தார்.

"ஐ திங்க் ஷி இஸ் பெட்டெர் சாய்ஸ்" என்று முடித்து வைத்தான்.

"சொல்லுங்கள் கௌதம் சார்" ஆர்வத்துடன் அவனை நோக்கினாள் ஸ்ரீனிகா. இவளிடம் எப்போது என் பெயரை சொன்னேன் என்று யோசித்தான் கெளதம். பொதுவாக தொழில் வட்டத்தில் அவனை ஜிகே அல்லது கிருஷ்ணா என்றே அனைவரும் அழைக்க அவளின் கெளதம் என்ற அழைப்பு அவனுக்கே வித்தியாசமாக கேட்டது.

"கேன் யு கம் வித் மீ, மிஸ் ஸ்ரீனிகா," உறுதிபடுத்தி கொள்ள கேட்டான். "மிஸ் தானே"

ஆமோதிப்பாய் தலையசைத்தவள் "வருமே சார், ஆனா மதியம் ஒன்றிலிருந்து இரண்டு என்னை விட்டுறனும்." என்றாள். ஏன் என்ற யோசனையுடன் ஓர் கணம் பார்த்தவன் வேறு எதுவும் கேளாமல் "யா டன்" என்றான்.

கௌதமிற்கே புரியவில்லை அவளை ஏன் எங்கே அழைத்து செல்கின்றான் என்று.

கேரளாவில் இருந்த அவர்கள் அலுவலகதிற்கு அழைத்துச் சென்றவன் கைவசமிருந்த ஒரு சில காணி உறுதிகள் ஒப்பந்தங்களை கொடுத்து "மிஸ் ஸ்ரீனிகா இவற்றை பார்த்து வாங்கலாமா ஒப்பந்தம் செய்தால் வர கூடிய சட்ட சிக்கல்கள் என்ன என்ற விபரங்கள் வேண்டும்" என்றான்.

அவள் வேளையில் ஆழ்ந்து விட லப்பை இரு விரலால் தட்டியபடி வேலையை விட அவளை தான் கவனித்துக் கொண்டிருந்தான்.

அவற்றை சரி பார்த்து அவனுக்கு விளக்கிய விதத்திலேயே புரிந்து வேலையில் கெட்டிக்காரி. ஒப்பந்தத்தை படித்தவள் அதில் ஒரு பிரதி எடுத்து அதில் பென்சிலால் சில வட்டங்களை போட்டு "இவற்றினால் இவை உங்கள் கம்பெனிக்கு நாஸ்டத்தை ஏற்படுத்தக் கூடிய வாசகங்கள் இவற்றை எவ்வாறு மாற்ற வேண்டும்" என அதில் ஒரு ஸ்டிக்கர் நோட் ஒட்டி குறித்து காட்டி இருந்தாள்.

அவள் விளக்கிக் கூறிய பின்பு அதில் உள்ள சில சட்ட சிக்கல்கள் அவனுக்கு புரிய தமிழ் நாட்டில் உள்ள சில ஒப்பந்தங்களையும் எடுத்து அவளுடன் கலந்தாலோசித்தான்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே ஸ்ரீனிகாவின் ஃபோன் அடிக்க அவள் அதை சைலண்டில் போட்டாள். மீண்டும் இரண்டு மூன்று தரம் தொடர்ந்து அடிக்க அதைப் பார்த்தவன் "பரவாயில்லை எடுத்துப் பேசுங்கள், ஏதாவது எமர்ஜென்சிய இருக்கலாம்" என்றான்.

தயங்கியவள் போனை எடுத்து பதில் அளித்தாள் "ஹலோ..."

"வணக்கம் ஸ்ரீனிகா... நான் அலன்" என மறுபுறம் ஆல்பர்ட் அலன் குரல் கெளதமிற்கும் கேட்டது.

அவனை தயக்கத்துடன் பார்த்தவள் சற்று தள்ளி போய் நின்று "நான்தான் உங்களிடம் சொன்னேனே சாரே அந்த மில்லை விற்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தாத்தா பாட்டி இப்படி ஒரு உயிலை எழுதியிருப்பார்கள் என்று எனக்கு தெரியாது. இதற்காகவெல்லாம் திருமணம் செய்து கொள்ள முடியாது. கொஞ்சம் பொறுங்கள் வேறு வழி இருக்கிறதா என்று பார்க்கின்றேன்" சற்று சினத்துடன் பதிலளித்தாள்.

மறுபுறம் என்ன கூறினாரோ "இன்று ஒரு அவசர வேலை வெளியே வந்துவிட்டேன். அப்படியே நான் திருமணம் செய்தாலும் அதை சீதனம் போல் அல்லவா எழுதி வைத்திருக்கிறார்கள். ஓரு ரூபா இரண்டு ரூபா இல்லையே கிட்டத்தட்ட நூறு கோடி..... வருபவன் மனம் மாறி ஏமாற்ற மாட்டான் என்பதில் என்ன நிச்சயம் சாரே..."

அவள் பேசுவதை காதைத் தீட்டிக் கேட்டவன் மனம் அவள் திருமனத்தை மறுத்ததில் திடீரென மனது லேசானது போல் இருக்க பெரு விரலால் நெற்றி கீறினான். இவள் அருகில் தனக்கு ஏதோ நடக்கின்றது அது என்ன என்பது லேசாக புரிந்தாலும் புரிந்த வரையில் பிடித்தமானதாகவும் இருக்கவில்லை.

தொலைபேசியை அணைத்து முன்னே வந்து அமர்ந்தவளை கண்டு அழுத்தமாக உதட்டை கடித்தவன் தொண்டையை செருமினான் "என்ன மில்" மெதுவே தெரியாதது போல் விசாரிக்க "அது இந்த தாத்தா பாட்டி செய்த வேண்டாத வேலை" உதட்டை சுழிக்க பின் கழுத்தை அழுத்தமாக தடவி அவள் உதட்டில் படிந்த பார்வையை பலவந்தமாக வேறுபுறம் திருப்பினான்.

"பூர்வீக சொத்து ஒன்றினை என் பெயரில் எழுதி வைத்திருக்கின்றார்கள். அதை விற்க வேண்டுமானால் என் கணவரின் சம்மதம் வேண்டும். கடந்த சில மாதங்களாக இது ஒரு தலைவலி" அலுப்புடன் கூறினாள்.

"ஏன் உங்களுக்கு அந்த சொத்து வேண்டாமா?" விசாரித்தான் கெளதம்.

"ஆளை விட்டால் போதும்" அலுப்புடன் கூறினாள் ஸ்ரீனிகா.

இன்டர்ஸ்டிங்... தனக்குள் சொல்லி கொண்டவன் "பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்து... இருக்க இருக்க இன்னும் பல மடங்காக மாறக்கூடும் அதை விற்பதற்கு உண்மையாகவே விரும்புகின்றீர்களா?" அவள் எண்ணத்தை அறிய நூல் விட்டு பார்த்தான்.

"எல்லா நேரமும் பணம் உதவாது சாரே" அனுபவரீதியாய் உணர்ந்து சொன்னாள். "அதோடு வேண்டாதவர்களிடம் இருந்து சில கோடி இல்ல அது நூறு கோடியே என்றாலும் வேண்டாம்" அதைச் சொன்னபோது அவள் முகத்தில் இருந்த கசப்பின் அளவை பார்த்து கௌதமனே ஒரு கணம் திடுக்கிட்டான்.

பார்ப்பதற்கு சாதாரணமாக இருப்பது போல் இருக்கும் இவள் வாழ்வில் இவ்வளவு கசப்புணர்ச்சி வரும் அளவிற்கு என்ன நடந்திருக்கும் என மனம் சிந்தனையில் ஆழ, அதை அவளே கலைத்தாள் "விடுங்கள் சார் இதைப் பற்றி பேசினாலே கோபமும் வருத்தமும் தான் மிஞ்சும்" என்றவள் “நம் வேலையைப் பார்ப்போம்” சொல்லி முடிக்கவில்லை அவள் போன் திரும்பவும் அழைத்தது.

யார் என்று பார்க்க இந்த தடவை சுரேஷ். ஆலன் அழைத்த போது போல் தயங்காமல் எழுந்து போகமால் அவன் அழைப்புக்கு பதில் அளித்தாள் "நீங்கள் இருவரும் இப்படியே டார்ச்சர் பண்ணுங்க ஏட்டா... நான் பேசாமல் மூன்றாம் நபர் ஒருவருக்கு மில்லை விற்று விடுவேன்” என்றாள் ஸ்ரீனிகா.

அவள் கோபத்தில் மறுபுறம் மென்மையாய் சிரித்த சுரேஷின் குரல் இங்கே கெளதமிற்கும் கேட்டது. "அப்படியில்லம்மா, இந்த மில்லை விற்பதற்காக கல்யாணம் செய்ய போகிறாய் என்று கேள்விப்பட்டேன், உண்மையா?".

"ஏன்.. மிஸ்டர் அலனை போல் நீங்களும் மாப்பிள்ளை பார்க்க போகின்றீர்களா?" கேலி போல் இருந்தாலும் எரிச்சலை உள்ளடக்கி இருந்தது தெளிவாகவே புரிய உதட்டின் மேல் கை வைத்து புன்னகையை மறைத்தபடி பார்த்திருந்தான் கெளதம்.

மறுபுறம் சுரேஷ் "கல்யாணம் இது போல் மில் பணம் என்பதற்காக எல்லாம் செய்ய கூடாதும்மா" மெல்லிய கண்டிப்புடன் கூறியவன் "உன்னை போன்ற ஒரு நல்ல பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்ப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. என் மச்சான் ஒருவன் உன்னை போலவே பிடி கொடுக்காமல் இருக்கின்றான். பேசவா..." சுரேஷ் கேட்க கெளதம் விழிகள் தெறித்து விடும் போல் இருந்தால் ஸ்ரீனிகாவின் முட்டை கண் இந்த பேச்சில் இன்னும் பெரிதாக விரிய அதற்குள் விழுந்தே விடுவான் போல் பார்த்திருந்தான் கெளதம்.

"அம்மா... நீ சின்ன பெண் மணவாழ்கை நன்றாக அமைய வேண்டும். அவசரத்தில் கல்யாணம் செய்து அவகாசத்தில் அழு என்பார்களே அது போல் கல்யாணம் செய்ய கூடதும்மா. எனக்கு தொழிலை விரிவுபடுத்த வேண்டும் தான் அதற்காக ஒரு சிறு பெண்ணின் வாழ்கையை அடகு வைத்து ஆரம்பிக்க முடியாது. நான் இந்த மில்லை வாங்க நினைத்ததால் தான் உனக்கு இத்தனை பிரச்சனையும். அந்த மில்லை எனக்கு விற்க வேண்டாம். அலனுக்கு விற்காமல் விட்டாலே போதும். அவனால் தொழிலில் நிறைய பிராப்ளம் நேர்மையாக மோதினால் சமாளிக்கலாம். பின்னாலிருந்து முதுகில் குத்துபவனை என்ன செய்வது. அதனால் தான் எச்சரிக்கின்றேன். அவன் அத்தனை நல்லவன் இல்லை". நீளமாய் பேசி முடித்தவன் "அப்படியே என் மச்சான் வந்தால் பார்த்து விட்டு சம்மதம் சொல். இந் நேரத்திற்குள் நிச்சயம் உன்னை சந்தித்து இருப்பான்." அதோடு போனை வைத்து விட்டான்.

கெளதமிற்கு நிஜமாகவே பெருமையாக இருந்தது. அவன் தங்கை கணவன் நிஜமாகவே ஒரு ஜெம். தேடி பிடித்து திருமணம் செய்தது வீண் போகவில்லை. இந்த மச்சானுக்காக இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதோடு இந்நேரம் தான் தலை போடுவேன் என்று தன்னையும் அறிந்து வைத்து இருக்கின்றான். தான் கூட ஒரு பெண்ணின் வாழ்க்கை என்ற ஒரு காரணத்திற்காக கோடி ரூபாய் பெறுமதியான புராஜக்டை கிடப்பில் போட மாட்டேன். அந்த பெண்ணிற்கு பாதிப்பை குறைய வைக்கும் வழி தேடுவனே தவிர முழுமையாக பாதிபற்ற வழியை யோசித்து ப்ரொஜெக்ட்டை கை விடவே மாட்டான்.

போனை தொம்மென்று மேசையில் வைத்து உதட்டை சுழிக்க 'இம்சைடி நீ' என்று மனதினுள் நினைத்தவன் "என்ன..." என்றான். "ஏட்டனுக்கு பெரிய நினைப்பு அவர் மச்சான் டாடா அம்பானி பார்த்தாலே தெரிய, வாருவான் பார் என்றுறார்"

"ஏன் அவர் மச்சானை பார்க்க வேண்டுமா என்ன?" என்னவென்றே அறியாமல் இதயத்தில் எழுந்த குறுகுறுப்புடன் கேட்டான்.

"என்ர குருவாய்யூரப்பா... இன்னும் ஒருவான என்னால் முடியாது. இவர்கள் இருவரையும் சமளிப்பதற்கே நாக்கு தள்ளுது." கன்னத்தில் கை வைத்து அழாத குறையாக புலம்பியவள் அழகு பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.

"போதாகுறைக்கு இந்த குமரன் வேற இவ்வளவு நாளும் நல்லாத்தானே இருந்தான். இப்ப பாத்து இவன் வேற படுத்துறான்" என்னால முடியல" அவள் தலையைப் பிடித்துக் கொண்டாள். அவள் கண்களில் மெல்லிய பயம்.

அவள் கண்களில் பயத்தை கண்டவன் சட்டென உடல் எஃகாய் விறைக்க மேசையில் தட்டென்று ஓங்கி அடித்தவன் "யார் குமரன்" சினத்தில் சிம்மமாய் நின்றவனை பார்த்து பயத்துடன் இருக்கையோடு ஒட்டிக்கொண்டாள் ஸ்ரீனிகா.

"குமரன் யார்?, அவன் என்ன செய்தான்" இறுகி போய் ஒலித்த அவன் குரலில் பயத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

பயத்தில் இருக்கையோடு ஒட்டி இருந்தவளை அதட்டியது அவன் குரல் "சொல்லு அவன் என்ன செய்தான்?" இத்தனை நேரமிருந்த இலகு தன்மை போய் பாறை போல் இருகியிருந்த முகம் பாரத்தவளுக்கு வார்தைகள் வாயை விட்டு வெளியே வர மல்லுக் கட்டின "சாரின்ற ம ம மருமகன், இ இ இன்று ஆபீசில் கூட பா பார்தீர்களே"

"சரிஇ... அவன் என்ன செய்தான்" பொறுமையற்று கேட்டான்.

"அவன் பிரந்தனாயனு" எரிச்சலுடன் சொல்ல "ஆஹ்" என்று விழித்தான் கௌதம்.

ஒரு கணம் கண்மூடி "அவனுக்கு பைத்தியம் முத்திரிச்சு" என்றாள் தமிழில்.

"என்ன நடந்தது" அதட்டலாய் ஒலித்தது அவன் குரல்.

"அவனுக்கு என்னை கல்யாணம் கழிக்கணுமாம் ஐ மீன் திருமணம் செய்யணுமாம்"

உச்சி வரை ஏறிய கோபத்தின் காரணம் முழுதாக புரியாமல் ஒரு கணம் கண்மூடி கோபத்தை கட்டுப்படுத்தியவன் நேரத்தை பார்க்க அவன் கடிகாரம் மணி பன்னிரண்டரை என்றது. அவளை ஒரு மணிக்கு விடுவதாக சொன்னது ஞாபகம் வர "நீ ஒரு மணிக்கு போக வேண்டும் என்று சொன்னாய் அல்லவா வா போவோம்" என்றவன் மறு பேச்சின்றி எழுந்து சென்றான்.

காரில் ஏறியவன் "எங்கே....?" சுருக்கமாய் கேட்டான். ஒரு பிரபல மருத்துவமனையின் பெயர் கூற அஜா வண்டியை செலுத்தினான்.

அவன் கோபத்தின் காரணம் புரியவுமில்லை. அதே நேரம் அப்படி கோபமாக இருப்பது பிடிக்கவுமில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அவனையே பார்த்திருந்தாள் ஸ்ரீனிகா.

ஹாஸ்பிடல் அருகில் நிறுத்தியவன் இறங்கப் போனவளின் கையைப் பிடித்து "நான் பார்த்துக் கொள்கிறேன்...." சற்று இடைவெளி விட்டு "அனைத்தையும்" என்றவன் அவள் புதிரான முகத்தை பார்த்து "குமரன் நாயரை பற்றி இனி கவலைப்படாதே நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான். அவளோ அவன் கோபத்தை பார்த்ததில் பயந்திருந்தவள் வெறுமனவே தலையை மட்டும் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

அவளுக்கு குமரன் நாயரின் திடீர் காதலை விட அவன் கோபம் தான் அதீத பயத்தை கொடுத்தது.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் காதல் தீரன் அத்தியாயம் - 17 வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்.

இன்னும் ஒரு மூன்று கிழமைகளுக்கு ரெகுலர் அப்டேட் கொடுப்பது கொஞ்சம் சிரமம் அதனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போடுவேன் ப்ளீஸ்...


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா🎻18
'ஹாஸ்பிடலில் யாரை சந்திக்க போகின்றாய்?' என்று கேட்க ஆசைதான் இருந்தாலும் முதல் நாளே ஓரளவுக்கு மேல் போவது நல்லது இல்லை என்று தோன்றவே விட்டு விட்டான்.

அங்கே நின்று அவன் விதிதேவன் சிரித்தான். அன்றே கேட்டிருந்தால் பல உண்மைகளை எப்போதோ அறிந்திருப்பான். பின்னொரு நாள் மருத்துவமனையில் ஸ்ரீனிகா உயிரை எப்படி காப்பது என்று தெரியாமல் நின்றிக்க மாட்டான்.

இறங்க போனவள் தன் கை இன்னும் அவன் கையில் இருக்க சங்கடமாய் பார்த்தாள். ஏனோ அவளின் பயம் அவனுக்கு வருத்தத்தை கொடுக்க தன் கைக்குள் இருந்த அவள் கையை தட்டிக் கொடுத்தவன் கண் மூடி திறந்து மென்னகையுடன் "நான் பார்த்துக் கொள்கின்றேன்" என்றான். அவன் புன்னகையில் உதட்டில் தானாக மலர்ந்த சிறு புன்னகையுடன் இறங்கிச் சென்றவளை ஹாஸ்பிடல் கட்டிடத்தினுல் மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவள் கண் மறைந்ததும் யாதவிற்கு அழைத்தவன் "அவன் பெயர் என்ன?" அடியும் நுனியும் இல்லமால் கேட்க "யார் பெயர் பாஸ்? குழம்பி போய் கேட்டான் யாதவ். தீடீரென அகமஸ்தாக போன் செய்து அவன் பெயர் என்ன என்றால் யார் பெயரை சொல்வான்

“ஸ்ரீனிகாவை காதலிக்க யாரையாவது ஏற்பாடு செய்தாயா?” குரலில் அனல் எழ கேட்க அங்கே போனை கீழே போட்டு விழும் முன் மீண்டும் பிடித்தவன் “பாஸ்... நீங்கதானே ஏற்பாடு செய்ய சொன்னீங்க” அழுவது போல் கேட்டான்.

பொறுமையற்ற பெருமூச்சை விட்டவன் "ஸ்ரீனிகாவை காதலிக்க ஏற்பாடு செய்தவன் பெயர் என்ன?" பல்லை கடித்து கொண்டு கேட்டான்.

"குமரன் நாயர்"

"இனி நான் பார்த்துக் கொள்கின்றேன் அவன் தேவையில்லை அவனை சும்மா இருக்கச் சொல்லு இல்லை பாலுத்த வேண்டி வரும்" என்றவன் அப்படியே சீட்டில் சரிந்து அமர்ந்தான். பாசை முன் பக்க கண்ணாடி வழியே ஆச்சரியமாய் பார்த்து கொண்டிருந்தான் அஜா. முதல் முறையாக ஒரு பெண்ணுக்காக தவிக்கின்றான்.

அவன் என்ன செய்து கொண்டிருக்கின்றான் என்பது அவனுக்கே புரியவில்லை. அவன் இங்கு வந்த காரணம் என்ன செய்து கொண்டிருக்கும் வேலை என்ன. இங்கு வந்தது அவளிடம் பேசி எப்படியாவது அந்த மில்லினை தான் வாங்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தவன் அதை தவிர அனைத்தையும் செய்து கொண்டிருந்தான்.

அங்கே யாதவ் புலம்பி தள்ளியவாறே குமரனுக்கு ஃபோன் போட்டான். “இவரே ஆள் ஏற்பாடு செய் என்று சொல்லுவாராம் பின் வேண்டாம் என்பாராம் நான் கேட்பேன் அவளை காதலிக்கிறவன் கேட்பானா?”

🎻🎻🎻🎻🎻

அடுத்த நாள் வேக நடையுடன் அலுவலகம் வந்தவன் அவளிடம் ஒரு அறிமுகப் புன்னகையை சிந்தி விட்டு நேரடியாக கேசவன் நாயரை சந்தித்தான். "ஸ்ரீனிகாவை இன்னும் சில நாட்களுக்கு என்னுடன் அனுப்பி வைக்க முடியுமா? இன்னும் சில ஒப்பந்தங்களை பற்றி ஆராய வேண்டும்" என நேரடியாகவே அவரிடமே கேட்டான்.

பதிலாய் இன்டர்கமில் ஸ்ரீனிகாவை உள்ளே அழைத்தவர் "மிஸ்டர் கௌதம் கிருஷ்ணாவுக்கு இன்னும் சில ஒப்பந்தங்களை சரி பார்க்க வேண்டுமாம். அவை தமிழில் இருப்பதால் உன்னை அழைக்கிறார் போய் வருகிறாயா? மலையாளத்தில் கேட்டார்.

அவள் தயங்கவே "நம்பகமான ஆள்தான்" மலையாளத்தில் சொல்லவே மறுத்து தலையசைத்தாள்

"அதில்லை சாறே இவருடன் போவதில் பிரச்சனை இல்லை. நான் சென்னை போகனும் ஒரு வாரம் லீவு" என்றவளை யோசனையாக பார்த்தார். இவள் இது போல் அடிக்கடி விடுமுறை எடுப்பவள் இல்லை. கெளதம் புரியாமல் பார்த்து கொண்டிருந்தான்.

கெளதமிடம் திரும்பி கேட்டார் "ஷி இஸ் இன் லீவ் ஃபார் எ வீக். ஷால் ஐ அரென்ஜ் சம்வன் எல்ஸ்"

"ஏன் என்னாச்சு" ஸ்ரீனிகாவிடம் கேட்டவன் குரலே ஒரு மாதிரி இருந்தது.

அவள் மௌனமாய் நிற்க "ஏன் என்னாச்சும்மா நேற்று கூட ஓகேயதனே இருந்தாய்? ஏன் திடீரென்று சென்னை பயணம்" அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு தொண்டை அடைத்து கொண்டது. அவள் அமைதியில் எழுந்த பெருமூச்சை சத்தமின்றி விட்டவன் "சரி இன்று வர முடியும் தானே" கேட்டான். அவளிடம் தனியாகத்தான் பேச வேண்டும்.

எது வித தயக்கம் இன்றி சம்மதித்தவளை சிறு குறுகுறுப்புடன் நோக்கினாலும் புன்னகையுடனே அனுப்பி வைத்தார். அவள் வேலையில் கெட்டிக்காரி என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இது போல வேற்று ஆண்களுடன் வெளியே செல்வதற்கு இதுவரை சம்மதித்ததே இல்லை எதையாவது சொல்லி மாட்டேன் என்று சாதித்து விடுவாள். ஆனால் இன்று கௌதமுடன் போவதற்கு எதுவித தயக்கமும் இன்றி சம்மதித்தது அவருள் ஏதோ எண்ணங்களை உருவாக்க எதுவரை போகின்றது என்று பார்ப்போம் என அமைதியாக இருந்தார்.

இன்று காரை கௌதமே எடுத்து வந்திருக்க அவன் அருகில் அமர்ந்திருந்தவள் போன் அடிக்க அதை அனைத்து மடியில் போட்டவள் தலையை பிடித்தாள்.

திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன் காரை ஓரமாக நிறுத்தினான் சிறிது நேரம் கழித்து தான் கார் நின்றதை உணர்ந்தவள் சுற்றிப் பார்க்க கையை கட்டிக் கொண்டு அவளையே பார்த்திருந்தான் கௌதம். அவனை 'என்ன' என்பது போல் பார்க்க "அதைத்தான் நானும் கேட்கிறேன் என்ன?" என்று கேட்டான் கௌதம்.

அவனருகே வாய் திறந்தால் அழுது விடுவோம் என்று பயந்தவள் அவனையே வைத்த விழி அகலாது பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு நேற்றே புரிந்துவிட்டது இவன் அருகில் தன் மனம் கலங்கி தடுமாறுகின்றது. காரணம் அவளுக்கு தெரிந்தே இருந்தாலும் எதிர் காலமே இல்லாத இந்த காதலை மனதில் வளர்ப்பது சரியாக படவில்லை. வாழ்கை இன்னும் எவ்வளவு தூரமோ.... என்னன்ன துன்பமோ யாரறிவார்? அத்தனைக்கும் அருகில் இருப்பவன் வரவா முடியுமா? மனம் யாரையாவது எதிர் பார்த்து சாய தொடங்கினால் பின் அதை நேராக நிறுத்தி வைப்பது கடினம். அதைதான் அவள் அனுபவத்தில் தெரிந்து வைத்திருக்கின்றாளே.

"பெரிதாக ஒன்றுமில்லை வேலை டென்டின் அவ்வளவு தான்" முயன்று சாதாரண குரலில் கூறிவிட்டாள்.

இன்று ஒரு நாள் கிடைக்கும் ஆறுதலுக்காக நிதமும் ஏங்க வேண்டியிருக்கும் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டாள். கௌதமும் ஒரே ஒரு நாள் பழக்கத்தில் அவள் மனதில் உள்ளது அனைத்தையும் சொல்வாள் என்று நினைக்கவில்லை. ஆனாலும் இப்படி ஒதுக்குவாள் என்பதையும் அவன் எதிர் பார்க்கவில்லை.

‘இன்டர்ஸ்டிங்’ மனதினுள் நினைத்தவன் காரை ஸ்டார்ட் செய்தவாறு "என்ன திடீர் சென்னை பயணம். ஆலன் பார்த்த மாப்பிள்ளை பிடித்துவிட்டதா?" ஏனோ அவளின் சென்னை பயணம் பற்றி தெரிந்தே ஆக வேண்டும் போல் ஓர் உந்துதல்.

ஒரு கணம் அவள் முட்டை கண்ணை விரித்து ஏன் இந்த கொலை வெறி என்ப போல் பார்த்தவள் "அதெல்லாம் ஒன்றுமில்லை" என்றாள்.

"அப்படியானால் வீட்டில் வரன் பார்த்திருக்கின்றார்களா?" ஏனோ அவனால் அவள் விடயத்தில் நாகரீகம் கருதி ஒதுங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது. "இன்று அனைவருக்கும் என்ன நடந்தது? எல்லோரும் ஏன் திருமணத்தைப் பற்றி பேசுகின்றீர்கள்?" எரிச்சலுடன் கேட்டாள் ஸ்ரீனிகா.

"வேறு யார் பேசியது?

"கேசவன் ஐயா"

"என்ன கேட்டார்?"

"கல்யா.... இப்போ அதை தெரிந்து என்ன செய்ய போகின்றீர்கள்?"

"ஒன்றுமில்லை" என்றவன் காரை நிறுத்த திரும்பி பார்த்தவள் கண்களில்பட்டது கஃபே.

"வா.." ஒற்றை சொல்லோடு இறங்கினான்.

அவளுக்குமே தலைவலியில் ஒரு காஃபி குடித்தாள் நன்றாயிருக்கும் போல் தோன்றவே இறங்கினாள். உள்ள சென்றவன் அவளுக்காக கதவை பிடித்து வைத்திருக்க, சங்கடமான சிறு புன்னகையுடன் ஏற்று உள்ளே சென்றவள் உள்ளங்கை வியர்த்தது. இது எங்கே போய் முடிய போகின்றதோ?

மூன்றாவது மாடியில் வெளியே வேடிக்கை பார்க்க கூடிய இடத்தில் ரூம் போல் அமைந்திருந்த ஒரு இடத்தை நோக்கி கையால் சைகை செய்தான். ஒரு தரம் விழியால் மட்டுமாக அந்த இடத்தை அளந்தவள் ‘நைஸ் பிளேஸ்’ மனதினுள் நினைத்து கொண்டாள்.

சோபா போன்ற இருக்கை, நடுவே காபி டேபிள் என நட்சத்திர தரத்தில் இருந்தது. இருக்கையை கை காட்டி அவள் அமர்ந்ததும் முன்னால் அமர்ந்தான். தலை சாய்த்து பார்த்து "நீங்கள் லண்டனிலா படித்தீர்கள்?" அவள் கேட்பதன் காரணம் புரிந்து உதடு பிரியாமல் முறுவலித்தவன் வந்த வெயிட்டரிடம் "டூ காஃபி" என்றான்.

வெளியே வேடிக்கை பார்த்த அவளையே சற்று நேரம் மௌனமாய் பார்த்திருந்தவன் "சோ..." என்ற வார்தையில் அவனை கேள்வியாய் நோக்க "கொஞ்சம் பேசுவோமா?" கேட்டான்.

"எதைப்பற்றி" இவனும் திருமணத்தை பற்றி பேச போகின்றானா.. என்ற எண்ணம் எழ அது ஆலனோ சுரேஷே பேசிய போது எழுந்த எரிச்சல் போல் இல்லாமல் இனம் புரியாத உணர்வில் இதயம் மெல்லிதாய் படபடத்தது.

"உனக்கு..." ஒரு கணம் இடைவெளி விட்டு "என்னை விட சிறியவள் உன்னை என்று அழைப்பதில் ஆட்சேபனை இல்லை தானே" சற்று முன்புறமாக குனிந்து கேட்க இல்லை என்பது போல் தலையாட்டி வைத்தாள்.

"உனக்கு இந்த மில் தலையிடி இல்லையா?" அவள் முன்னே அனைத்து வைத்திருந்த போனை கண்கள் பார்க்க கேட்டான். சட்டென உதட்டை பிதுக்கி முகம் சோகமாக மாற ஆமோதித்தவளை பார்க்க பூனை குட்டி போல் இருக்க அவன் முகத்தில் முறுவல் அரும்பியது.

"அதை யாருக்கு விற்பதாக முடிவு செய்து இருக்கின்றாய்?" பரிதாபமாய் பார்த்தாள். அவள் அமைதியாகவே இருக்க "விற்கதானே போகின்றாய்?" ஒற்றை புருவம் உயர்த்தினான் "ஏன் ஆலனுக்குத்தான் விற்க வேண்டும் என்று ஏதாவது எண்ணமா?" அவன் குரலை அவளால் இனம் பிரிக்க முடியவில்லை.

"இப்போது பிரச்சனை யாருக்கு விற்பது என்பது இல்லை. யாரை கல்யா....." இடையில் நிறுத்தி "யாருக்கு விற்பதாய் இருந்தாலும் உயிலின்படி நான் கல்யாணம் செய்து கணவரும் கையெழுத்து போட வேண்டும்" ஆயாசமாய் சொன்னாள். கடந்த இரண்டு மாதத்தில் எத்தனை பேரிடம் எத்தனை தரம் கூறினாள் என்ற கணக்கே மறந்துவிட்டது.

"எப்போதுவது திருமணம் செய்து தானே ஆக வேண்டும்" கேட்டவனிடம் "எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை" என்றாள் வறண்ட குரலில். நிமிர்ந்து பார்க்க அவள் முகமும் உணர்ச்சிகளை தொலைத்து வறண்டு இருந்தது நொடியில். தலையை குலுக்கி தன்னை மீட்டு வந்தவள் "இதற்கு ஒருவழி இருக்கு அது சரி வருமா என்று தெரியவில்லை. சென்னை போனால் தான் தெரியும்" யோசனையுடன் கூறினாள்.

"சரி விற்பதாய் இருந்தால் யாருக்கு விற்பதாக யோசனை" கேட்டவனுக்கு பதிலாய் "சுரேஷ் ஏட்டவிற்குத் தான்" தயக்கமின்றி பதிலளித்திருந்தாள். பயந்தவள் தான் ஆனாலும் அவள் சட்டத்தரணி. பயத்தை வெளிகாட்டி கொள்வது மிகமிக குறைவு. ஏனென்றால் இந்த உலகம் பயப்படுவது தெரிந்தால் இன்னும் ஏறி மிதிக்கும் என்பதை அனுபவபூர்வமாக அறிந்து வைத்திருந்தாள். எப்படியோ தில்லாக சமாளித்து வீட்டினுள் சென்று அழுது தீர்க்கும் ரகம். தினமும் நீதிமன்றில் குற்றவாளிகள் நடுவே சுற்றுபவள். ஓர் வாரத்திற்கு முன் சந்தித்த ஆலனை முதல் பார்வையிலேயே இனம் கண்டுவிட்டாள். எப்படி வெட்டி விடுவது என்று தெரியாமல் தான் விழித்து கொண்டிருந்தாள்.

"கொஞ்சம் பெர்சோனலாய் பேசுவோமா?" என்றவனை புரியாமல் பார்க்க "முதலில் நான் சொல்வதை முழுதாய் கேள். அதன் பின்பு யோசித்து முடிவு சொல்" அவள் கண்களையே பார்த்து கொண்டு கூறினான். வெயிட்டர் காஃபி கொண்டு வர ஒன்றை அவனுக்கு நகர்த்தியவள் 'சொல்லுங்கள்' என்பது போல் பார்த்தாள்.

"கல்யாண ஒப்பந்தம் ஒன்று செய்வோமா?" ஏதோ பிக்னிக் போவோமா என்பதை போல் கேட்க அவள் வாயில் இருந்த காஃபி ஒரு பக்கத்தால் வழிந்தது.

"யாருக்கும் யாருக்கும்" என வினவ சிரிப்பை அடக்கியபடி "எனக்கும் உனக்கும் தான்" என்றான். இவன் சொன்னதைதான் நான் கேட்டேனா என்ற சந்தேகத்துடன் பார்க்க "சந்தேகப்படாதே நீ சரியாக தான் கேட்டாய்" என்றான் மெல்லிய கேலியோடு.

அவள் ஏதோ சொல்ல வாயெடுக்க "பொறு சிலது நான் சொல்லி விடுகின்றேன். அதன்பின் நீ உன் முடிவை சொல்லலாம்" என்றவனை இன்னும் அதிர்ச்சி மாறாமல் பார்த்திருக்க "பத்து வருடத்திற்கு முன் நான் ஒரு பெண்ணை சந்தித்தேன். அவள் முழுப்பெயர் தெரியாது. உன் பெயரில் பாதி ஸ்ரீனி.. அதை சொல்லும் போதே அவன் முகத்தில் அப்படி ஒரு பரவசம்.

ஸ்ரீனிகாவின் கண்கள் இன்னும் விரிந்து அவனையே உள்ளித்து விடும் போல் இருந்தது. அவள் கண்களில் விழ துடித்த மனதை கட்டி வைத்தவன் "அவளை இன்னும் தேடி கொண்டிருக்கின்றேன். கிடைக்கவில்லை ஒரு நாள் கண்டு கொள்வேன் என்று ஒரு நம்பிக்கை" நிறுத்தி மூச்சு விட அப்படியானால் என்னை ஏன் ஒப்பந்த அடிப்படையில் மணக்க கேட்கின்றான். நான் தானே அது..... சிந்தனை சிதறல்களாலகா யோசனை ஓட அவனே அதற்கு பதிலையும் கூறினான்.

"எனக்கு அந்த ஸ்ரீனியை தவிர வேறு யாரையும் மணக்க இஷ்டமில்லை. வீட்டில் அம்மா என் பேச்சை கேளாமலே பெண் பார்க்க தொடங்கிவிட்டார். இப்படியே விட்டால் அம்மா என் கையை காலை கட்டியாவது திருமணம் செய்து வைத்துவிடுவார்" என்ற அவன் பேச்சில் அவன் கை கால் கட்டப்பட்டு மணவறையில் இருப்பது போல் கற்பனை வர சட்டென சிரித்துவிட்டாள்.

அவள் கண்ணிலிருந்தே எண்ணத்தை படித்தவன் "உன்னை" என்று அவள் தலையை பிடித்து ஆட்டியவன் "உனக்கு அவசரமாக திருமணம் என்ற ஒரு பெயர் வேண்டும். எனக்கு அம்மாவிடமிருந்து தப்பிக்க வேண்டும். இது ஒர நல்ல வழி என்பது என் எண்ணம்" நிறுத்தி அவன் முகம் பார்த்தவன் "நன்றாக யோசி அதன் பின் முடிவெடு அவசரம் இல்லை. இப்போதே சொல்ல வேண்டும் என்பதும் இல்லை." என்றான்.

அவன் சொல்லவும் கண்களை மூடியவள் தன் உணர்வுகளை தானே வகை பிரிக்க முடியாமல் தடுமாறினாள். இத்தனை வருடங்களாக என்னை தான் நினைத்து கொண்டிருக்கின்றானா? இதயத்தில் ஊற்றாய் மகிழ்ச்சி பொங்கியது. அதே நேரம் செல்லமாய் சுனங்கியது. இவனை பார்த்ததும் நான் அடையாளம் கண்டுவிட்டேன் இவனுக்கு என்னை தெரியவில்லையா? ஸ்ரீனி என்ற பெயரில் கூட சந்தேகம் வரவில்லையா? ஒப்பந்த திருமணமா வேணும்? இருங்கள் காதை முறுக்கி வைக்கின்றேன் என மனதினுள் நினைத்தவள் அது வேறு ஒரு ஸ்ரீனியாக இருந்ததால் தன் சந்தேகத்தை கேட்டாள்.

"ரொம்ப நாள் பழக்கமோ...?" அவன் பார்வையில் காதோரம் முடி ஒதுக்கி பார்வை ஒரு புறம் சாய "இல்லை பெர்சனலா பேசலாம் என்று சொன்னீர்களா....?" இழுத்தாள்.

தலை சாய்த்து சுவாரசியமாக பார்த்தவன் "இல்லை ரொம்ப நாள் பழக்கம் எல்லாம் இல்லை ஒரே ஒரு நாள் தான் பார்த்தேன் ஆனால் இன்று வரை மறக்க முடியவில்லை" என்றான்.

"அவளை பார்த்தல் எப்படி அடையாளம் தெரிந்து கொள்வீர்கள்?" இதயம் படபடக்க ஆர்வமாய் கேட்டாள்.

முகம் மிக மென்மையுற "தெரியல..... அவளுக்கு நிலா போல் வட்ட முகம்.... அவள் கன்னத்தில் இங்கே" அவன் கன்னத்தின் மேற் புறத்தை சுட்டு விரலால் தொட்டு காட்டியவன் "அவளுக்கு கன்னக்குழி விழும்....” அவன் சொல்ல கடந்த இரண்டு வருடமாய் எங்கோ தொலைந்து விட்ட அந்த குழியை விரல் நுனியால் தேடினாள்.

அவன் சொல்லிக் கொண்டிருந்தான் “அவளை பார்த்ததும்.. அது..... அவள்தான் என்று தெரியும் என்று நினைக்கின்றேன். உனக்கு தேவைபட்டால் எப்போது வேண்டுமானாலும் மீசுவல் டிவோர்ஸ்க்கு தருவேன். எனக்கு அவசரமில்லை அவளை தேடி பிடித்த பின்னர் எனக்கு டிவோர்ஸ் தந்தால் போதும்" என்றான்.

அப்படியானால் என்னை தெரியவில்லையா? என்றால் என்னை காதலிக்கவில்லை என்று அர்த்தமா? எப்படி அடையாளம் தெரியாமல் போகும் பிளாஸ்டிக் சர்ஜரியா செய்து வைத்திருக்கிறேன். திடீரெனெ ஏமாற்றம் ஊசியாய் இதயத்தை குத்த சட்டென எழுந்தாள் "வாஷ்ரூம் போக வேண்டும்" தெளிவில்லாமல் முணுமுணுத்து விட்டு வேகமாய் வெளியே சென்றாள். அவனோ தன் ஸ்ரீனியின் நினைவில் அவள் முகமாற்றங்களை கூட கவனிக்க மறந்து மூழ்கியிருந்தான்.
 
Status
Not open for further replies.
Top