All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் காதல் தீரா.... - கதை திரி

Status
Not open for further replies.

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் காதல் தீரன் அத்தியாயம் - 06, வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 
Last edited:

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻 07


அழகின் புகலிடமாய் இருந்த கேரளாவின் கோவளம் பீச்.......

அதன் அருகே அமைந்திருந்தது அந்த கெஸ்ட் ஹவுஸ்.

கடலுக்கு மிக அருகில் அமைந்திருந்த அந்த வீட்டின் முன்னே நீச்சல் குளம் அதன் பின் புல்வெளி, புல்வெளியை தாண்டி கடற்கரை பின் கடல் என்று, வீட்டிலிருந்து பார்த்தாலே கடல் தெரியும்.

தலை முழுகி ஈர தலையை துடைத்தவாறே வந்த ஸ்ரீனிகா வெளியே எட்டிப் பார்த்தாள். அதே இடத்தில் அசையாத சிலை போல் நின்று கொண்டிருந்தான் கௌதம்.

கட்டியிருந்த வேஷ்டி கடற்கரை காற்றில் படபடக்க சால்வையினை உயர்த்தி தோளினை சுற்றி போர்த்தி மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கடலின் அலைகளை வெறித்து பார்த்தவாறு நின்றான் அவன், கெளதம். கடற்கரையில் கடமை முடித்து வந்ததில் இருந்து அங்கேதான் நிற்கின்றான். சிறிது நேரத்திக்கு முன் நடந்தது கண் முன் நிழலாடியது.

🎻 🎻 🎻 🎻 🎻

மயக்கம் தெளிந்து எழுந்தவள் கடலை பார்க்க, அவள் அம்மா அங்கே நிற்பது போல் தோன்ற "அம்மா...." என்று கடலை நோக்கி ஓட முயல, இழுத்து பிடித்தான் கௌதம் "ஸ்ரீனி சொல்வதை கேள், அங்கே யாருமில்லை....". அவளுக்கோ தன் அன்னை அங்கு பூரண அழகுடன் கடலின் மேல் நின்றவாறு கை நீட்டி அழைப்பதை போல் இருக்கவே இவனை உதறி அன்னையிடம் செல்ல துடித்தாள்.

திடீரென இருட்டி கொண்டு வந்த கடலை பார்த்தவனுக்கு இன்று தாழ் அமுக்கம் என்று காலையில் ஏதோ செய்தியில் கேட்ட ஞாபகம் வந்தது. அவள் கண்களை பார்த்த கௌதமிற்கு புரிந்தது சுயநிலையில் இல்லை. எப்படி சொல்லியும் அழைத்தும் சுயத்திற்கு திரும்பாமல் இருக்க ஓங்கி கன்னத்தில் ஓர் அறைவிட்டான்.

விழி விரித்து பார்த்தபடி நின்றவளை பார்க்க மனம் சுட்டது "என்னடா.... ஏன்... அங்கு யாருமில்லை....." கையை உயர்த்த ஓரடி பின்னால் சென்றவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

சற்று முன் அவன் அவளருகே வந்து அமர்ந்ததிலிருந்து அவள் அவளாக இல்லை, அவள் வாணாளில் இது போல் அழுததும் இல்லை. ஏற்கனவே தெரிந்தது தான் அவனருகில்தான் உடைக்கின்றாள், தன் உணர்வுகளை கொட்டுகின்றாள். அவனிடம் அனைத்தையும் சொல்லி அழத்தான் உள்ளம் ஆசை கொண்டது. ஆனால் அவன் விட்ட அறையில் விழித்து கொண்ட மூளை இதற்கு முன் சொன்ன போது என்ன நடந்தது என்று ஞாபகப்படுத்தி கொள் என்றது.

வராத புன்னகையை வலிந்து வரவைத்தவள் "சாரி" மெல்லிய குரலில் வாய்க்குள் மன்னிப்பு கேட்டாள். அவனுக்கு புரிந்தது மீண்டும் தன் கூட்டுக்குள் நத்தையாய் சுருண்டுவிட்டாள். ஆயாசத்துடன் மூச்சுவிட்டான்.

திரும்பி ஐயரை பார்த்தவள் "மன்னித்து கொள்ளுங்கள்" உதட்டில் மட்டுமே ஒரு மன்னிப்பு வேண்டும் மெல்லிய முறுவல் கோடாய் "வாங்க..." இருவரையும் அழைத்தவள் ஈர சேலை இடங் கொடுத்த வரை வேகமாக நடந்தாள்.

ஐயருக்கோ ஆச்சரியமாய் இருந்தது சற்று முன் அருகே வருபவன் கைகளில் சிறு குழந்தையாய் அழுதவள் இவள்தானா என்று, சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.

பன்னிரண்டு ஐயர் வந்திருக்க அனைவருக்கும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த தாம்பாளத்தை எடுத்து கொடுத்தாள். அதில் மேலதிகமாக ஒரு செட் உடையும் ஒரு பணக்கட்டும் அதிகமாக இருக்கவே கணவனை பார்த்தாள். அவன் முகம் உணர்வுகளை தொலைத்து இறுகியிருந்தது.

அனைத்தும் முடியவும் இருவர் உள்ளத்திலும் அடித்து கொண்டிருந்த புயலை போல் வெளியிலும் அடிக்க தொடங்கியது. ஏற்கனவே சூழலில் ஏற்பட்ட மாற்றம் பார்த்து தான் அவள் அழுவதை தடுக்க முயற்சித்தான். அடித்த காற்று ஆளையே தூக்கி செல்லும் போலிருந்தது. அதோடு ஈர உடை வேறு, ஊதல் காற்று வீசியது போல் நடுங்கத் தொடங்கியது.

ஸ்ரீனிகா நிற்க முடியாமல் நடுங்க சட்டென மனைவியை கைகளுக்குள் கொண்டு வந்தவன் "அஜா..." அவன் அழைப்பில் அருகே வந்தவன் "ரெடி பாஸ்" என்றான். தானம் பெற்ற ஐயர் அனைவருக்கும் ஏற்பாடு செய்திருந்த டாக்ஸியை கை காட்டினான் அஜா.

ஏற்கனவே புயல் அறிவித்தல் விடப்பட்டதினாலும் நன்பகலாய் இருக்கவும் கடற்கரையில் பெரிதாக கூட்டம் இருக்கவில்லை. வேகமாக காரை நோக்கி நடக்க அவன் வேகத்திற்கு ஈர சேலையுடன் நடக்க முடியாமல் தடுமாறினாள் ஸ்ரீனிகா. திரும்பி பார்த்தவன் அவளை கைகளில் அள்ளி கொண்டான்.

அவளை காரில் விட்டவன் சால்வையை கழட்டி பிழிந்து உதறி உள்ளே இருந்தவளிடம் கொடுத்தான் "இப்போதைக்கு இதனால் துடை". அவனும் உள்ளே ஏறினான். டிரைவிங் சீட்டில் வந்து அமர்ந்த அஜா திரும்பி நடுங்கி கொண்டிருந்த ஸ்ரீனிகாவை பார்த்தவன் "நாங்க அங்கே போக முடியாது பாஸ், மரம் முறிந்து விழுந்து ட்ராபிக் எப்படியும் மூன்று நான்கு மணித்தியாலம் எடுக்கும்" என்றான்.

"கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்க்கு விடு" என்றான் கௌதம்.

"உ உ உடைகள்" ஸ்ரீனிகாவுக்கு குளிரில் வார்தை தந்தியடித்தது.

திரும்பி பார்த்தவன் "ஏற்பாடு செய்கின்றேன்" என்றான்.

"பாஸ் ஜோனும் மனைவியும் அங்கே தான் நிற்கின்றார்கள் விஜியிடம் அனுப்பி விட சொல்லவா?" கேட்டான் அஜா.

"ம்ம் சரி, இன்று அங்கேயே நின்று நாளை அவர்களை வரச்சொல்" போனை எடுத்து "நான் லிஸ்ட் ஒன்று அனுப்பி இருக்கின்றேன், அதில் இருப்பது அனைத்தும் இன்னும் பத்து நிமிடத்தில் கெஸ்ட் ஹவுஸ்க்கு வரனும்" அழைப்பை துண்டித்தான்.

அப்போதும் நடுங்கியவளை பார்த்து "அஜா ஏசியை ஆப் பன்னு" என்றவன் காரில் கழட்டி வைத்திருந்த தன் ஷர்ட்டை எடுத்து அவள் தோளின் மேல் போர்த்தி விட்டவன் அருகே நெருங்கி அமர்ந்து தன்னோடு அணைத்து கொண்டான். அவன் முடி நிறைந்த வெற்று மார்பில் கன்னம் பதிய கூச்சத்துடன் நெளிந்து விலக முயன்றாள். அசைய முடியாது பிடித்தவன் அழுத்தமாய் பார்த்து வைக்க அதற்கு மேல் அமைதியாய் இருந்தாள்.

நிமிடங்கள் கழிய ஏதோ வித்தியாசமாய் இருக்கே என்று அவளுள் யோசித்து கொண்டிருந்தவளுக்கு அது உறைத்தது. அவன் உடல் அனலாய் கொதித்தது. சட்டென விலகி கழுத்தை தொட்டு பார்த்தவள் சூடாக இருந்தது. ஒரு கையை அவன் நெற்றியிலும் மறு கையை தன் நெற்றியிலும் வைத்து பார்க்க அவன் உடல் தன்னை விட பலமடங்கு சூடாக இருப்பது புரிந்தது.

அவசர அவசரமாக கையிலிருந்த சால்வையால் அவன் தலையில் உள்ள ஈரத்தை துவட்டினாள்.

அவள் அலப்பறையை பார்த்தவன் முகம் சற்றே இளகியது. "ஏட்டா, பார்மசி கிளினிக் எதிலாவது நிறுத்துங்கள் மருந்து எடுத்து செல்வோம்" என்றவளை தடுத்து கூறினான் "இல்லை முதல்ல கெஸ்ட் ஹவுஸ் போவோம்".

"இல்லை பார்மசி போவோம்" அவனை எரிச்சலுடன் பார்த்தாள். என்றாவது சொல்வழி கேட்கும் பழக்கம் இருக்கா மனம் தாளித்தது.

"கெஸ்ட் ஹவுஸ் பக்கத்திலேயே பார்மசி இருக்கு அங்கேயே வேண்டுவோம்" அஜா முடித்து வைத்தான்.

கெஸ்ட் ஹவுசில் போய் இறங்க ஏற்கனவே ஒருவன் கையில் பெரிய பையுடன் மோட்டார் பைக்குடன் காத்திருந்தான். அவர்களை இறக்கிய அதே வேகத்தில் அஜா காரை திருப்பி சென்றான். அவனிடமிருந்து வாங்கிய பையை ஸ்ரீனிகாவிடம் கொடுத்தவன் "மாடியில் வலது புறமுள்ள முதலாவது அறை, ஹீட்டர் போட்டு குளி, சீக்கிரம்" விரட்டினான்.

"நீங்கள்..." தயங்கவே "நீ வந்ததும் நான் போகிறேன்" முற்று புள்ளி வைத்தான் கௌதம்.

அவள் சென்றதும் அங்கே நின்றவனிடம் "ஏன் பைக்" வினவினான்.

"இல்ல சார் அஜாதான் பைக் வேணும் என்றான். புயல் மழை காரை விட பைக்கில் போவது ஈசி"

மாடிக்கு சென்றவள் பல்கனி வழியே அருகே உள்ள பார்மசியில் அஜா மருந்து வேண்டுவதை பார்த்தவள் பையை அப்படியே வைத்துவிட்டு கீழே வந்தாள். திறந்த கிச்சின் ஹால் ஒரு அறை மட்டுமே கீழே இருந்தது. கிச்சின் சென்றவள் மெல்லிய சூட்டில் நீர் எடுத்து வரவும் அஜா மருந்துடன் வரவும் சரியாக இருக்கவே மருந்தை வேண்டி கொண்டு கௌதம் எங்கே என்று தேடினாள்.

நீச்சல் குளத்தின் அருகே இருந்த புல்வெளியில் நின்று கடலை வெறித்து பார்த்து கொண்டிருந்தன். முன்னே சென்று நின்றவள் உள்ளங்கையை நீட்டினாள். 'என்ன' என்பது போல் பார்த்தவன் அவள் இன்னும் ஈர உடையுடன் நிற்கவே முறைத்தான். அவள் கையிலிருந்த மருந்து அஜாவின் வேலை என்பது புரிய எங்கே அவன் என்று தேட அவனோ புதிதாய் வந்தவன் பைக்கில் எஸ்கேப் ஆகியிருந்தான்.

அடிக்கும் காற்றில் நடுங்கியவளை பார்த்தவன் மறு பேச்சின்றி விழுங்கினான். “இப்ப போய் குளி” குரலுடன் சேர்ந்து அவனும் ஏனோ இறுகி இருக்க திரும்பி திரும்பி பார்த்தவாறே சென்றாள்.

குளித்து வந்து பையை திறந்து பார்த்தாள். அவளுக்கு தேவையான அனைத்து உடைகளும் ஐந்து செட் இருந்தது. ஒரு த்ரீ குவாட்டரை எடுத்து அணிந்தவள் தலையை துவட்டியவாறு வெளியே வந்து கௌதமை தேடினாள்.

வீட்டினுள் இல்லை, வெளியே பார்க்க அடிக்கும் காற்றில் அசையாமல் மரம் போல் நின்றிருந்தான்.

🎻 🎻 🎻 🎻 🎻

லேசாக மலை வேறு தூற தொடங்க உள்ளே வரும் சிந்தையின்றி நின்றவனை கவலையுடன் நோக்கினாள் ஸ்ரீனிகா. இடையில் யாரோ உணவையும் கொண்டு வந்து வைத்திருந்தனர்.

சற்றும் முற்றும் பார்க்க குடை இருந்தது. அதை எடுத்துட்டு விரித்து பிடித்தவள் அவனருகே மீண்டும் சென்றாள். மேலே போர்த்தியிருந்த சால்வை நுனியை பிடித்து இழுத்தாள் "உள்ளே வாருங்கள், ப்ளீஸ்".

அவள் கையையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன் இறுகிய குரலில் "நான் கோபத்தில் இருக்கின்றேன் இங்கிருந்து போயிரு....." என்றான்.

"சரி உள்ளே வந்து கோபப்படுங்கள், ஜுரம் மழை வேறு துறுது" பயமும் கவலையுமாய் வானத்தை பார்த்தாள்.

"நீ அழைத்தால் நான் எதுக்கு வரணும்" சட்டென திரும்பி அவனை பார்த்தாள். அந்த குரல்... அதில் இருந்தது என்ன வலியா... ஆனால் அதைப்பற்றி யோசிக்க முடியாமல் மழை... "ப்ளீஸ் சொன்னால் கேளுங்கள், உடம்பு கொதிக்குது" கெஞ்சினாள்.

அவள் கழுத்தை பிடித்துவிட்டான் "பொண்ணாடி நீ... இப்ப வந்து இப்படி கெஞ்சற, அன்று ஒரு வார்தை.... ஒரு வார்தை சொன்னியாடி.. எல்லாத்தையும் தனிய வந்து செய்தவ தானே நீ, இப்ப என்ன வந்திச்சு... நான் எப்படி போன உனக்கு என்ன போடி இங்கிருந்து..." அவளை உதறி அவனுக்கு உயர்த்தி பிடித்திருந்த குடையையும் தட்டிவிட்டான்.

"என்னை புருஷனா இல்லை மனுஷனா கூட மதிக்கல இல்ல நீ... யாரோ ஒருத்தருக்கு இப்படி நடந்தாலே விட்டுட்டு போக மாட்டேன். ஆனா நீ... போடி" என்றான் கலங்கிய குரலில்.

விக்கித்து போய் நின்றாள் ஸ்ரீனிகா.

சொல்லவில்லை என்பதற்காகவா இவ்வளவு கோபம். என்னை இரண்டு அடி அடித்தாலும் பரவாயில்லை இந்த மழையிலும் ஊதல் காற்றிலும் நின்று ஏன் தன்னை தானே வருத்தி கொள்கின்றான். இவன்தானே நான் நெருங்கும் போதெல்லாம் வார்தைகளால் விலக்கியது. அன்றும் இப்படித் தானே.. ஆனால் அதை பற்றி பேசும் தருணம் இதுவல்ல...

மணி இரண்டிலிருந்து மூன்றிக்குள் தான் இருக்கும் ஆனால் பின்னேரம் ஆறு மணி போல் இருட்ட, இதுவரை லேசாக தூறி கொண்டிருந்த மழை திடிரென்று பெரிதாக கொட்ட தொடங்கியது. அதை கவனித்தவள் "சரி அதற்கு உள்ளே வந்து உங்கள் சண்டையை போடுங்கள். ஏன் உங்களை நீங்களே இப்படி வருத்துகிறீர்கள்...?" அழுகை வரும் போல் இருந்தது. அதோடு மழை, இருட்டு வேறு பயமாகவும் இருந்தது.

அடித்த காற்றில் குடை கையில் நிற்பேனா என்று மல்லு கட்ட, மழை துளி காற்றோடு சுழன்றடிக்க, குடை பிடித்தாலும் பயனில்லை என்பது போல் இருந்தது.

அவன் கண்களில் வழிந்த நீர் துளிகள் மழை துளிகளோடு கலக்கவே ஸ்ரீனிகாவிற்கு அவன் அழுததே தெரியவில்லை.

கடைசி போராட்டமாக குடை வெற்றிகரமாக அவள் கையை விட்டு பறக்கவே "நீ உள்ளே போ" என்றான். அடித்து கொண்டிருந்த காற்றில் 'ஊ' என்ற சத்தமே பெரிதாய் கேட்க பேசும் சத்தம் கேட்கவே முடியவில்லை. இருந்தும் அவன் உதட்டசைவில் புரிந்து கொண்டவள் உறுதியாய் மறுத்து தலையசைத்தாள்.

"நீங்கள் வந்தால் தான் போவேன்"

கடலோடு மழை பொழிய காற்று சுழன்றடிக்க இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தவாறு நின்றனர்.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் காதல் தீரன் அத்தியாயம் - 07, வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻 08


வெளியே அடித்த புயலை விட அவன் மனதில் அடித்த புயலே அதிகமாக இருந்தது. அவனுக்கு கடற்கரையிலிருந்து வந்ததிலிருந்து மனசு ஆறவே இல்லை.

இப்படி செய்துவிட்டாலே கடைசியில் என்னை வெறுத்தேவிட்டாளா.......

அது தான் ஒரு வார்தை சொல்லவில்லையா...

என்னை விட ஏழு எட்டு வருடம் இளையவள் சிறு பெண்... எப்படி இதை தனியாக செய்ய துணிந்தால்.... ஐயர் வாய் தவறி சொல்லியிருக்கவிட்டால் இந்த ஜென்மத்தில் வாய் திறந்திருக்க மாட்டாள்.

சொல்லாததில் அவனுக்கு அவள் மேல் கோபம் தான் ஆனால் அதைவிட அதிக கோபமும் வெறுப்பும் தன் மீதே வந்தது. வசந்த் கேட்ட கேள்வியில் அடி வாங்கிய மனம் இன்னும் குற்ற உணர்ச்சியில் குறுகியது. உண்மைதானோ அவள் சொல்லும்படி நான் நடக்கவில்லை தானே...

முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டி கொள்ளவில்லை. ஆனால் அவள் தனியாக அவள் அம்மாவிற்கு இறுதி கிரியை அனைத்தையும் செய்தாள் என்ற செய்தி அவனை உள்ளிருந்து கொன்றது. எல்லாவற்றையும் விட அவள் அன்று தன்னுடன் வர சொல்லி கேட்டதும் அதற்கு தான் சொன்ன பதிலும் நினைவுக்கு வரும் போதெல்லாம் அவனுக்கு தன்னை நினைத்தே வெறுப்பாக இருந்தது.

அவள் முகத்தை பார்க்க பார்க்க அவன் மனசாட்சி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் உள்ளே நெருப்பாய் கனன்றான். வெளியே பெய்த மழையால் கூட அதை அணைக்க முடியவில்லை. அதுதான் உள்ளே செல்லாமல் வெளியே நின்றுவிட்டான்.

கடைசி போராட்டமாக குடை வெற்றிகரமாக அவள் கையை விட்டு பறக்கவே "நீ உள்ளே போ" என்றான்.

அடித்து கொண்டிருந்த காற்றின் 'ஊஊ' என்ற சத்தமும் கடலின் இரைச்சலும்மே பெரிதாய் கேட்க அருகே இருந்து பேசும் சத்தம் கூட கேட்க முடியவில்லை. இருந்தும் அவன் உதட்டசைவில் புரிந்து கொண்டவள் உறுதியாய் மறுத்து தலையசைத்தாள்.

"நீங்கள் வந்தால் தான் போவேன்"

கடலோடு மழை பொழிய காற்று சுழன்றடிக்க இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தவாறு நின்றனர்.

ஓர் ஐந்து நிமிடத்திற்கு மேல் ஸ்ரீனிகாவினால் தாக்கு பிடிக்க முடியவில்லை. மழை என்றாலே பயம் அவளுக்கு போதாக்குறைக்கு புயல் இருள் வேறு. அப்படியே குந்தி அமர்ந்தவள் முழங்காலை சுற்றி கையை கட்டி கொண்டாள்.

இப்போது தான் குளித்து வந்திருந்தாள் திரும்பவும் முழுதுமாக நனைந்துவிட்டாள்.

சற்று நேரம் பொறுத்து பார்த்தான் கௌதம் மழையின் மீதான அவள் பயம் அவன் அறிந்தது தானே. சிறிது நேரம் கழித்து போய் விடுவாள் என்றுதான் நினைத்தான். பயத்தில் நடுங்க தொடங்கியவள் முகத்தை முழங்காலில் புதைத்து நடுங்கிய கரங்களை கெட்டியாக கட்டி கொண்டாள்.

இன்னும் விட்டால் கைகால் வெட்டி இழுக்கும் போலிருக்கவே "இம்சைடி நீ..." சட்டென குனிந்து அவளை தூக்கி கொண்டு உள்ளே சென்றான். கடற்கரை என்பதாலும் புயலும் மழையும் சேரவும் முன்னால் இரண்டடி தூரத்துக்கு மேல் பாதை தெரியவேயில்லை.

திடீரென அந்தரத்தில் எழும்ப பயத்தில் கத்த போனவள் கணவன் தான் தூக்கினான் என்று அறிந்ததும் நிம்மதியாக மூச்சுவிட்டாள்.

அடை மழையாக பெய்த மழையில் இருவருமே தொப்பலாக நனைந்துவிட்டிருந்தனர். அவன் கழுத்தை சுற்றி கை போட்டவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். வழமையாக காற்றில் அலையும் சிகை நெற்றியில் ஒட்டி அவனுக்கு தனி அழகை கொடுத்தது. மழையினுடே கூர்ந்து பார்த்த கண்களின் அழகில் என்றும் போல் இன்றும் வீழ்ந்தாள். அனாசயமாக அவளை தூக்கி வைத்திருந்த கரங்களின் உறுதியும் தோளை சுற்றியிருந்த கையின் கீழ் உணர்ந்த அவன் தோளின் வலுவும் அவன் ஜிம்மில் செலவழிக்கும் நேரம் வீணல்ல என்பதை அவளுக்கு புரிய வைத்தது.

அவன் கையில் தூக்கி வைத்திருக்க தீடிரென மழையின் மேல் பயம் போய்விட்டது போல் இருந்தது. அந்த நொடியை ரசித்து அனுபவித்தாள்.

'என்ன பட்பட்டென்று தூக்குறான் அவ்வளவு வெயிட் இல்லாமலா இருக்கிறோம்' மைண்ட் வாய்ஸ் கேட்டு வைத்தது. அவள் மனதுள் பேசியது அவனுக்கு கேட்டது போல் "என்ன?" என்றான்.

"இல்ல நான் பாரமில்லையா... நினைத்ததும் பட்பட்டென்று தூக்குறீங்க" இரு கால்களையும் ஆட்டியவாறே கேட்டாள்.

ஓர் தரம் அவளை பார்த்தவன் அவளை நிலத்தில் இறக்கிவிட்டான்.

"பரவல்ல... தூக்கிட்டே வாங்க... நல்ல இருக்கு" குஷியில் சொல்லிவிட்டாள்.

"ஹ்ம்ம்" புருவத்தை தூக்கினான்.

"ல்ல நான்... ஐயோ மானம் போச்சு" வாய்க்குள் முனங்கி சிவந்த முகத்தை திருப்பினாள்.

"கையை தா.." என்றான் காற்றை மீறி சத்தமாக. கையை கொடுத்தவாறே என்னவென்று பார்க்க குரோட்டன் பூச்செடிகள் வளர்ப்பதற்காக கட்டியிருந்த சிறு மதிலை தாண்டி கொண்டிருந்தான். மழையால் தண்ணீர் வெள்ளம் போல் ஓட நீச்சல் குளம் எது தரை எது என்று புரியவில்லை. அது தான் அந்த பாதையை தவிர்த்து இந்த பக்கமாக வந்தான்.

ஈர வேட்டியுடன் அவளையும் தூக்கி கொண்டு தாண்ட முடியவில்லை. முதலில் அவளை இறக்கியவன் பின் வேட்டியை முட்டி வரை மடித்து கட்டிக் கொண்டு தாண்டி வந்தான்.

கை அவன் பிடியில் இருக்க சுற்றி பெய்த மழையையே தீவிரமாக ரசிப்பது போல் நடித்தவளை பார்த்து மெல்ல சிரித்தவன் கையை கழுத்தை சுற்றி போட்டு அப்படியே மீண்டும் தூக்கிவிட்டான்.

"இல்லை, வேண்டாம்..."

"பரவாயில்லை நல்லாதானே இருக்கு" அவளை போலவே சொல்லி காட்டினான். இருவருக்கும் இடையேயான நெருக்கத்தில் திடீரென இருவரின் மனநிலையும் மாறியிருந்தது.

அருகே இருந்த மின்விளக்கின் வெளிச்சத்தில் குறும்பு மின்னிய அவன் கண்களும் முகமும் தெரிய "அச்சோ மானம் போச்சு" என்று அவன் தோளிலேயே முகம் புதைத்தாள். அவன் உடல் சிரிப்பில் குலுங்க நிமிர்ந்து முறைத்தவள் கண்கள் மலர்ந்தது.

கேட்டில் இருந்து வீட்டை நோக்கி கார் செல்லும் பாதையில் அவன் நடந்து கொண்டிருந்தான். ஐந்தடிக்கு ஒரு மின்விளக்கு இருக்க ஓரளவு வெளிச்சம் இருக்கவே அவன் சிரித்த கோபத்தில் நிமிர்ந்தவளுக்கு சிரிப்பில் மலர்ந்த அவன் முகம் தெரிய அதை கண்கள் மலர நோக்கினாள்.

எத்தனை காலமாயிற்று இவன் என்னிடம் இப்படி சிரித்து.

அவள் பார்வையில் நெற்றியில் நெற்றி வைத்தவன் "என்னடி" என்றான்.

போர்டிகோவிற்கு வந்திருக்க சட்டென துள்ளி இறங்கினாள். அவன் கையை பிடித்து வேகமாக இழுத்து செல்ல "பார்த்து மாபிள் தரை வழுக்கும்" என்றான் எரிச்சலுடன். அவனுக்கோ அழகான தருணத்தை கெடுத்துவிட்டாளே என்று இருந்தது.

நேரே மேலிருந்த அறைக்கு இழுத்துச் சென்றவள் வாஷ் ரூமை கைகாட்டி "போங்கள்" என்றாள்.

"இல்லை நீ போ" பதிலுக்கு கூறவே முறைத்தவள் "சொல்ல சொல்ல கேட்காமல் மழைக்குள் நின்று உடம்பு தனாலாய் சுடுது, போய் தலை முழுகுங்கள் சீக்கிரம்" துரத்திவிட்டாள்.

உள்ளே சென்றதும் தான் அவன் நிலை அவனுக்கே உறைத்தது. இதுவரையும் மனைவியின் நினைவு மனதை அலைக்கழிக்க தன்னிலை உணராது நின்றவனுக்கு மனம் மட்டுமில்லாமல் உடலும் கொதி நிலையில் இருப்பது புரிந்தது அதோடு நடுக்கமும் சேர்ந்து கொண்டது. எப்படியோ சமாளித்து முழுகி வெளியே வந்தான்.

அவன் உடைகளை எடுத்து வைத்தவள் அருகே இருந்த அறையில் குட்டியாய் ஒரு குளியல் போட்டு உடை மாற்றி தலையை துடைத்தாவாறே கீழே சென்று கிச்சினுள் பார்த்தாள் சூடாக கொடுக்க ஏதாவது உள்ளதா என்று.

வெளியே வந்தவன் கட்டிலில் இருந்த உடைகளை அணிந்து தலையை துவட்டினால் உடலில் சத்தே இல்லாதது போல் கை நடுங்கியது. ஸ்ரீனிகா எங்கே தேட வேண்டுமென்று மனம் சொன்னாலும் இப்போது உடல் ஒத்துழைக்க மறுத்தது.

சில வேளை வேறு அறையில் உறங்க சென்றுவிட்டாளோ....

உடல் அடித்தது போட்டது போல் வலித்தது. தன்னை சமாளித்து வெளியே வந்தவன் கீழே சத்தம் கேட்கவே எட்டி பார்த்தான். அவள்தான் கீழே கிச்சனில் ஏதோ உருட்டிக் கொண்டிருந்தாள். மெதுவே மாடியில் இறங்கி வந்து, கிச்சனில் நின்றவளை பார்க்கும் வகையில் சோபாவில் அமர்ந்தான். முன் வாசல் கதவு திறந்திருக்க அது வழியே வந்த ஊதல் காற்றில் தேகம் இன்னும் நடுங்கியது.

அவன் வந்ததை பார்த்தவள் வேகமாக அருகே வந்தாள் "இப்ப எப்படி இருக்கு" நெற்றியில் கை வைத்தவள் தலை காயாது ஈரமாக இருக்கவே கையில் இருந்த டவலை வாங்கி வேகமாக துடைத்தாள் "பால் சுட வைச்சிருக்கேன் அதோட புளி கஞ்சியும் ரெடியாகுது." அவனிடம் சொன்னவள் "அஜாண்ணா அந்த ஹேர் ட்ரையார் எங்க இருக்கு" கேட்டாள்.

வாய் கசந்து வழிய சிறு குழந்தையாய் "எனக்கு பால் வேண்டாம்" என்றவன் "அஜா எப்ப வந்தான்" விசாரித்தான்

"சற்று முன்தான்... ஏன் பால் வேண்டாம்."

"வாய் கசக்குது" அப்படியே அவள் வயிற்றில் சோர்வாய் தலை சாய்த்தான். ஒரு கணம் அசையாது நின்றவள் "தங்கச்சி ஹேர் ட்ரையர்" என்ற அஜாவின் குரலில் தன்னை மீட்டெடுத்தத்தாள்.

ஹேர் ட்ரையரை அஜாவிடமிருந்து வாங்கியவள் அவனை சோபாவில் சாய்ந்த வாக்கில் இருத்தி விட்டு அதை பிளாக்கில் மாட்டினாள். "அஜாண்ணா, மைக்ரோவேவில் பால் இருக்கு, அதை பாருங்கள். அப்படியே காஸ் அடுப்பை கொஞ்சம் குறைச்சு விடுங்கோ ப்ளீஸ்" என்றாள்.

பாஸ் நிலையை பார்த்த அஜாவுக்கு கவலையாக தான் இருந்தது. ஆனால் பேச்சுக்கு கூட டாக்டரை அழைத்து வரவா என்று கேட்கவில்லை ஏனெனில் வெளியே அடித்த புயல் அப்படி இருந்தது. காற்றே நூறு கிலோமீட்டரில் வீசிக் கொண்டிருந்தது. புயல் கரை கடக்கும் வரை யாரையும் கடற்கரை பக்கம் செல்லவோ அல்லது வீட்டை விட்டு வெளியேறவே வேண்டாம் என்று கேரளா அரசு அறிவித்து இருந்தது.

அவசரம் என்று அம்புலன்ஸ்க்கு அழைக்கலாம் ஆனாலும் வீட்டிலிருப்பது பாதுகாப்பு. எப்போது எங்கே மரம் முறியும் எங்கே மண் சரிவு ஏற்படும் என்று தெரியாது. கிட்டத்தட்ட மத்தியானம் ஆரம்பித்த மழை இப்போது பின்னேரம் ஆகியும் இதுவரை நிற்காததோடு இன்னும் அதிகமாகி இருந்தது.

புயல் நாளை காலை பத்து மணிக்கு பின்புதான் கரை கடக்கும் அதுவரை பலத்த காற்று வீசும் என்றும் அறிவித்தல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆப்பிரிக்காவின் மலைகளில் இருந்து வீசும் காற்று அராபிய கடலின் வெப்பத்தை பெரிதும் தனித்து விடுவதால் வங்களா விரிகுடா அளவிற்கு இங்கு புயல் உருவாவதில்லை. ஆனலும் புயலும் மழையும் தமிழ்நாட்டில் வீசுவதை விட இங்கே வீசுவது ஆபத்து அதிகம். பெரும்பாலும் மலை பகுதி என்பதால் காற்று மலையில் மோதி வீரியம் குறைந்தாலும் மழையினால் மண் சரிவிற்கும் மரம் விழுவதற்குமான அபாயம் அதிகம்.

அவன் நடுங்குவதை பார்த்து முன் கதவை சாற்றியவள் ஹேர் ட்ரையரால் தலையை காய வைத்தாள். அவள் விரல்கள் அவன் கேசத்தினுள் கோதி கொடுக்க விண்ணென்று தெறித்த தலை வலிக்கு இதமாக இருந்தது. கண் மூடி அந்த இதத்தை அனுபவித்தான்.



வேகமாய் மேலே சென்று தலையனை ஒன்றையும் கம்பளி ஒன்றையும் எடுத்து வந்து தலைக்கு அணைவாக வைத்து கம்பளியை அவன் மேல் போட்டு போர்த்திவிட்டாள். பாலை எடுத்து வர "வேண்டாம்” முகத்தை திருப்பினான்.

"சிறு குழந்தையா நீங்கள், மஞ்சள் பேப்பர் பச்சை கற்பூரம் எல்லாம் போட்டிருக்கன் குமட்டாது குடியுங்கள்" கண்டித்தாள். கசந்த வாய்க்கு குடிக்க பரவயில்லமல் இருக்கவே எப்படியோ ஓரு டம்ளர் பாலை முழுவதுமாக குடித்து முடித்துவிட்டான்.

சோபாவில் சாய்ந்து படுக்க "மேலே போய் படுங்களேன்" என்றவளிடம் "நீயும் வா' என்றான் அவன்.

"ச்சு.. சின்ன குழந்தையா நீங்கள் கஞ்சி வைக்கனும் இங்கே ஹீட்டரரும் இல்லை"

"கஞ்சி வேணாம்"

"அப்ப மருந்து எப்படி போடுறது"

"மருந்து ஏது....."

அனைத்துக்கும் எதிர் பேச்சு.... இவனை...

"உங்கள் பேமிலி டாக்டருடன் போனில் பேசினேன். மருந்தை போனில் அனுப்பினார். நான் அஜாண்ணாவுக்கு அனுப்பினேன். அஜாண்ணா பார்மசியில் வாங்கி வந்தார். தகவல் போதுமா..?"

"ஹ்ம் போதும் போதும்" என்றவன் நன்றாக சாய்ந்து படுத்தான். மனமோ 'உங்கள் பேமிலி டாக்டர்' என்றதில் சுற்றியது.



இதற்கு என்ன அர்த்தம் இவள் என் குடும்பத்தில் ஒருத்தி இல்லையா.....



பேசியதை பார்த்தல் வேண்டுமென்று சொல்லி காட்டியதை போல் இல்லை. வெகு இயல்பாக மூன்றாம் நபர் போல்......



நீ வேறு நான் வேறு என்று புரிந்தது போல்....



இல்லை ஒரு தடவை கூட குடும்பத்தில் ஒருத்தியாக உணரவில்லையா....



இல்லை நான் உணர விடவில்லையா...... புருவ சுழிப்புடன் கண் மூடி சாய்ந்தான்.



அவன் அருகே அமர்ந்தவள் எலக்ட்ரிக் தெர்மா மீட்டர் வைத்து பார்த்தாள். வெப்ப நிலை நூற்றியிரண்டு என்றது. கவலையுடன் பார்த்தவாறே சென்று கஞ்சியை தயார் செய்தாள்.



கஞ்சி வைத்து முடித்து பார்க்க அசதியில் அவன் சோபாவிலேயே உறங்கி விட்டிருந்தான். எழுப்புவோமா என்று யோசித்தவள் பின் வேண்டாம் என்று விட்டுவிட்டாள். நேரம் ஆறு முப்பது என்று போன் காட்ட அவனுக்கு எதிரே உள்ள சோபாவில் அமர்ந்தாள்.



மீண்டும் மழையும் தனிமையும் இத்தனை நேரம் எங்கோ போயிருந்த பயம் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது.




 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻09

இதுவரை நேரமும் அவனை பார்ப்பதில் நேரம் ஓட மழையை பற்றி சற்று மறந்திருந்தாள். பயம் அருகே கூட வரவில்லை. இப்போது அனைத்தும் முடித்து சும்மா இருக்க பயமும் வந்து ஒட்டிக் கொண்டது. மெல்ல எழுந்து சென்று ஜன்னல் வழியே எட்டி பார்க்க எரிந்து கொண்டிருந்த மின் விளக்கின் உதவியில் தரை முழுதும் வெள்ளக்காடாக இருந்தது தெரிந்தது. மின்விளக்கின் அருகே மட்டும் வட்டமாய் மழை துளிகள் தென்பட அது அடர்த்தியாகவும் இருக்கவே இப்போதைக்கு விடாது போல் இருந்தது. கடல் தென்பட்ட இடத்தில் அந்தகாரமாக கருப்பு மட்டுமே தெரிந்தது. மின்விளக்கின் கம்பம் சாமியாடுவது போல் ஆடிக்கொண்டிருந்தது எப்போது மலையேறி கீழே விழுமோ தெரியவில்லை. சிலவேளை அப்படி விழுந்தால் மின்சாரம் தடைப்படவும் வாய்ப்பு உள்ளது.

மீண்டும் கிச்சினுள் சென்று தீப்பெட்டியும் மெழுகுதிரியையும் தேடி எடுத்து வந்தாள். சோபாவில் காலை தூக்கி வைத்து முட்டியை கைகளால் கட்டி அதில் கன்னம் பதித்து எவ்வளவு நேரம் இருந்தாளோ கணவனின் "ஸ்ரீனி.." என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தாள்.

கௌதம் எழும்பியிருந்தான் "இங்கே வா" என்றான். அவன் உறங்குவதற்காக டிம்மாக போட்டிருந்த மின்விளக்கை உயிர்ப்பித்தவள் அருகே செல்ல சோபாவில் இடம் விட்டு எழுந்து அமர்ந்து அவளையும் கம்பளிக்குள் இழுத்து கொண்டான்.

அவன் மேல் விழுந்தவள் விலக முடியாதபடி பிடித்திருக்கவே டீ ஷர்ட் பட்டனை இரு விரலால் திருகியவாறே விழித்தாள். அவன் கண்களில் தென்பட்ட சோர்விலும் காய்ச்சலிலும் "கஞ்சி குடிப்போமே..." கெஞ்சலாய் கேட்டாள்.

அவளையே சிறிது நேரம் பார்த்தவன் "சரி" என்றான்.

புளிப்பாக இருந்த புளிக்கஞ்சி காய்ச்சல் வாய்க்கு இதமாக இருக்கவே இரண்டாம் தரம் கொடுத்ததையும் குடித்துவிட்டான். மருந்தையும் குடித்தவன் மீண்டும் சோபாவில் அமர 'என்ன' என்பது போல் பார்த்தாள்.

"நீ சாப்பிடவில்லை..." சுட்டி காட்டினான்.

"நீங்க போங்க அஜாண்ணாக்கு கொடுத்துட்டு வாரான்..." இழுத்தாள்.

"பரவாயில்ல வெயிட் பண்ணுறன்" என்றவன் போனை எடுத்து பார்த்தான். ஒரு மணி நேரம் உறங்கி எழுந்து சாப்பிட்டதில் எனர்ஜி கிடைத்தது போல் இருந்தது. தொழில் தொடர்பாக சில அழைப்புகளை மேற்கொண்டவன் அஜாவுக்கு கொடுத்து விட்டு விழித்தபடி இருந்தவளை பார்த்து போனில் "ஒரு நிமிடம்" என்று மியூட்டில் போட்டவன் கேட்டான் "சாப்பிடவில்லை..."

"இதோ" என்று எழுந்து உள்ளே சென்றவளை நெற்றி சுருக்கி பார்த்தவன் "ஐ வில் கால் யூ லேட்டர்" என்றவாறே பின்னால் சென்றான்.

தேநீரை கொதிக்க வைத்து பிஸ்கட் பாக்கெட்டை எடுத்தவள் ஏதோ தோன்ற திரும்பி பார்த்தாள். கௌதம் மார்புக்கு குறுக்கே கை கட்டி அவளை முறைத்தபடி நின்றான். கையும் களவுமாய் பிடிபட்ட குழந்தையாய் விழித்து கொண்டு நின்ற ஸ்ரீனிகா அசடு வழிய சிரித்தாள்.

அதிகாலை ஐந்து மணிக்கு குடித்த பூஸ்ட், அதன் பிறகு நடந்தவற்றில் மதிய உணவும் இல்லை தண்ணீர் கூட அருந்தவில்லை.

'என்ன இது' என்பது போல் அழுத்தமாய் பார்த்து வைத்தான்.

"அது... எனக்கு புளிக்கஞ்சி பிடிக்காது.... ஒரே புளி" மூக்கை சுருக்கி வாய்க்குள் முனகினாள்.

அவள் வேறு எதுவும் செய்ய நேரமில்லை என்பது புரிந்தது "பரவாயில்ல இன்று மட்டும் குடி" அழுத்தமாய் சொன்னான்.

"உனக்கு நல்லா வேணும் ஸ்ரீகுட்டி, இவனுக்கு பாவம் பார்த்து காய்ச்சல் வாய்க்கு புளிக்கஞ்சி வைச்ச இல்ல, நல்ல இனிப்பு போட்டு கொடுத்திருக்கனும்.... அப்ப தெரியும்" மீண்டும் வாய்க்குள் முனகினாள்.

அவள் கூறியது தெளிவாக கேட்டும் கேட்காதது போல் வினவினான் "என்ன...?"

"ஒன்றுமில்லையே" தலையை உருட்டினாள்.

"குடி" என்றான்.

"சரி குடிக்....கிறேன் நீங்க போங்க" என்றாள். அவனோ அசையும் வழியை காணோம். முன்னால் மாபிள் கிண்ணத்தில் இருந்த கஞ்சியை எடுத்தவள் ஒரே மூச்சில் குடித்து ‘தொப்’ என்று கீழே வைத்தவள் "ஸாத்யாகாரன் விட்டுக் கொடுக்கில்லா" திரும்பி நின்று மலையாளத்தில் வாய்க்குள் திட்டினாள்.

“ஸ்ரீ குட்டி எந்தா பறைஞ்சு..” காதருகே கேட்ட அவன் குரலில் துள்ளி திரும்பியவள் “மலையாளம் அறியுமோ?” ஆச்சரியத்துடன் கேட்டாள். அவள் பேசிய மலையாளத்தை ரசித்து பார்த்தவன் சிறுநகையுடன் "குறைச்சு குறைச்சு அறியும்" பதிலளித்தான்.

‘அச்சச்சோ இது தெரியாம நீ வேற அப்பப்போ மலையாளத்தில் திட்டியிருக்கேடி அப்பெல்லாம் தெரிஞ்சு இருக்குமோ....' மைன்ட் வாய்ஸ்சில் யோசிக்க "நீ திட்டினதால தான் படிச்சேன்" நெற்றியில் சுண்டினான்.

நெற்றியை தடவியாவாறே அவனை தவிர அங்கிருந்த அனைத்தையும் பார்த்தவள் தன்னை தானே திட்டி கொண்டாள் 'என்னடி உன் மைண்ட் வாய்ஸ் இவ்வளவு கேவலமா வெளியில் எல்லாம் கேக்குது'.

"வா போகலாம்" ஹாலுக்கு வந்தவன் கதவை திறந்து வெளிய பார்த்தான். கீழ் படி வரை தண்ணீர் வந்திருந்தது. இரவு முழுதும் மழை பொழிந்தால் வீட்டினுள்ளேயும் தண்ணீர் வரலாம். "அஜா இரவு வெள்ளம் உள்ளே வந்தால் மேலே உள்ள அறைக்கு போ, திங்க்ஸ் அப்படியே இருக்கட்டும் விடு, விடிந்ததும் பார்க்கலாம் இரவு எங்கும் வெளியில் செல்ல வேண்டாம்" உத்தரவாய் இட்டான்.

"சரி பாஸ்"என்றவனிடம் இரண்டு மெழுகுதிரிகளையும் சார்ஜ்ர் லைட்டையும் கொடுத்தாள் ஸ்ரீனிகா. "இரவு பவர் கட் ஆனாலும் உதவும்"

"ஜெனெரேட்டர் இருக்கு தானே" கௌதமின் கேள்விக்கு "சிலவேளை மழைக்கு ஸ்டார்ட் ஆகாட்டி அதுதான் ஒரு முன் ஏற்பாடு" என்றாள். உதட்டுக்குள் சிறு முறுவலுடன் தலையசைத்தான். அவளின் மழையோடு இருட்டு பயம் அறிந்தது தானே.

🎻🎻🎻🎻 🎻

உறக்கம் கலைந்த ஸ்ரீனிகா எழுந்த ஸ்ரீனிகா போனை எடுத்து நேரத்தை பார்த்தாள் நேரம் நள்ளிரவு பன்னிரண்டு என்று காட்டியது. வெளியே இன்னும் கும்பவர்ஷமாய் மழை பொழிந்து கொண்டிருக்க அவ்வப்போது வந்த இடி மின்னலில் அறைக்குள் பிளாஷ் அடித்தது போல் இருந்தது. கடலின் இரைச்சலும் காற்றின் ஊளை சத்தமும் மழை சத்தத்துடன் சேர்ந்து ஒலிக்க ஸ்ரீனிகாவுக்கு அந்த சத்தமே விநோதமாய் இருந்தது.

ஆனால் அந்த சத்தத்திற்கா எழும்பினாள். இல்லையே... சாதாரணமாய் உறங்கியே இருக்கமாட்டாள். சுற்றிலும் இருளாய் இருப்பது புரிய கடைசியில் பவர் கட்டே ஆகிவிட்டது. சில நேரம் மின்சார துறையினரே விபத்துகளை தவிர்ப்பதற்கு இவ்வாறு செய்வது உண்டு.

போன் லைட்டின் உதவியோடு சார்ஜ்ர் லைட்டை ஒளிர விட்டவள் "ஸ்ரீ.... ஸ்ரீனி..." என்ற குரலில் பயத்தில் உறைந்து போய் நின்றாள்.

மீண்டும் ஒலித்து "ஸ்ரீனி...." கட்டில் அருகே இருந்து வரவே துடித்த இதயத்தை கையில் பிடித்து சார்ஜ்ர் லைட்டை உயர்த்தி பிடித்தவாறு அருகே சென்றாள். அவள் கட்டிலில் யாரோ படுத்திருந்தார்கள்.

கம்பளியை விலக்கி பார்த்தாள். கெளதம், அவள் கணவன் இவன் எப்படி என் அறையில்..... ஒரே கட்டிலில்... சட்டென குனிந்து பார்த்தாள். ஆடை அணிந்த மேனிக்கே இருந்தது. காற்றை கற்றையாக ஊதி தொப்பென கட்டிலில் அமர்ந்தாள். குழப்பமாய் இருந்து. எங்கே இருக்கிறோம்.

யோசிக்க அன்னையின் இழப்பு, கேரளா வந்தது, பின் புயல் மழை அனைத்தும் கோர்வையாக ஞாபகம் வந்தது. அப்படியே கெளதமின் காய்ச்சலும். உறக்கத்தில் உடலை முறுக்கி அருகே உருண்டு வந்தவன் அவள் மடியில் முகம் புதைத்தான். ஐஸ் கட்டியை தூக்கி மடியில் வைத்தது போல் இருந்தது. அவன் கேசத்தை கோதி கொடுக்க தண்ணீர் ஊற்றியது போல் நனைந்திருந்தது.

வேகமாக சார்ஜர் லைட்டை முழு வோல்டேஜில் எரியவிட்டாள்.

அவனை பார்க்க புரிந்து ஜன்னி கண்டுவிட்டது. காய்ச்சலோ என்ன காரணமோ அவன் மேல் முழுதும் வியர்த்து இருக்க குளிரில் நடுங்கி கொண்டிருந்தான். "ஸ்ரீனி..." அவன் அழைத்ததில் தான் எழும்பியிருந்தாள். சமயத்திற்கு மின்சாரம் போனதில் ஏசி ஹீட்டர் எதுவும் பாவிக்க முடியவில்லை.

அவள் எழுந்து செல்ல கைகளால் தேடி அவள் ஆடையை பற்றினான் "ஸ்ரீ...ஸ்ரீனி... போ போக..... பிளீ..."

"கீழே போய் வெந்நீர் எடுத்து வாரேன்" குழந்தைக்கு சொல்வது போல் சொன்னவள் கீழே சென்றாள்.

காஸ் அடுப்பில் நீரை கொதிக்க வைத்து பாத்திரத்தில் எடுத்து வந்தாள். சிறு டவலால் அவனை துடைத்து ஓடிகொலன் பவுடர் போட்டு உடைகளை மாற்றினாள். நனைந்திருந்த கம்பளி போர்வையையும் மாற்றினாள்.

அவள் இதையெல்லாம் செய்யும் போது அவன் காய்ச்சலில் ஏதோ பிதற்றிக் கொண்டிருந்தான்.

"ஸ்ரீனி... வெறு.... க்கதே... போ....கா" காய்ச்சலின் காரணம் வெறுமே நனைந்தது இல்லையோ...

என்ன உற்று கேட்டும் அவன் என்ன சொல்கின்றான் என்று புரியவில்லை. ஜுரத்தில் ஏதோ பிதற்றுகின்றான் போல் என நினைத்தவள் நள்ளிரவு என்றும் பாராது அவன் பேமிலி மருத்துவருக்கு போனை போட்டாள்.

அவரிடம் அவன் நிலையை எடுத்து கூற, அவர் சொன்னதை கேட்டு சங்கடத்துடன் உதட்டை கடித்தவள் கவனமாக கேட்டவாறே ஜன்னலை லேசாக திறந்து வெளியே எட்டிப் பார்க்க காற்றின் வேகம் கூடியிருந்தது. இப்போதைக்கு வெளியே செல்வது ஆபத்தை விலைக்கு வாங்குவது போன்றது. சிறிது நேரம் யோசித்தவள் தலையை மடியில் தூக்கி வைத்து சில மாத்திரைகளை புகட்டினாள்.

அவன் மனம் தேடியது கிடைத்ததோ.... இல்லை தேகத்தின் குளிருக்கு அவளின் மேனி வெப்பம் இதமாக இருந்ததோ வயிற்றில் முகம் புதைத்தான்.

விரல்களால் அவன் கேசம் அளைய "ஸ்ரீ.....னி" இன்னும் அவளுள் புதைத்தான். ஒரு கணம் அசையாமல் இருந்தவள் மூளை விழித்து கொண்டு கூறியது 'ஜுர வேகத்தில் இருக்கின்றான் விலகு' என்று, வேகமாக அவனை விட்டு விலக முயற்சித்தாள்.

"போ...கா... தே..." ஜுரத்தின் தீவிரத்துடன் அவள் விலகுவது மனதிற்கு பிடிக்காமல் அவளை பற்றி இழுத்தான். ஒரே இழுவையில் அவனருகே விழுந்தவளை தன் கீழ் கொண்டு வந்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

"கெளதம் வேண்டாம்..." அவனை தள்ள முயன்றாள். ரட்சாச கனம் கனத்தான். "டேய் கெளதம் கிருஷ்ணா... வேண்டாம் சொன்னால் கேளடா" அவள் வார்தையில் சட்டென நிமிர்ந்து முகம் பார்த்தான். ஜுரத்தில் சிவந்திருந்த கண்கள் அவளிடம் எதையோ எதிர்பார்த்து ஏங்கின.

"என்னை பிடிக்கலையா....? வெறுத்திட்டியா...." பாவமாய் கேட்டான்.

அடி வாங்கிய சிறு குழந்தை போல் அவன் கேட்க அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவனுக்கு அண்ணா என்று ஒருவன் இருந்தாலும் பிரதானமாக தொழிலை ஆளுவது அவன்தான். அவன் எடுக்கும் முடிவிற்கு அனைவரும் மறு பேச்சின்றி உடன்படுவார்கள் அப்படிபட்டவன் தன்னிடம் கெஞ்சியது ஏனோ பிடிக்கவில்லை. அது சுய நினைவில்லாத போதும் "அப்படி இல்லை இப்போ நீங்க சுய நினைவில் இல்ல" எப்படி சொல்வது.... எப்படி அவனுக்கு புரிய வைப்பது தெரியாமல் விழித்தாள்.

"உனக்கு பிடிக்கல இல்ல போ..." உதட்டை பிதுக்கி சிறு குழந்தை போல் கோபம் கொண்டு விலகி படுத்தான்.

அவளோ விழித்தாள், இப்போது இப்படி சொல்லும் இவன் ஜுரம் விட்டு நினைவு வந்ததும் என்னை மயக்கினாயா என்று கேட்டாலும் கேட்பான். யாருக்கு தெரியும்.

"அம்மா.... இவள் என்னை பிடிக்கல சொல்றாள்..." அங்கில்லாத அம்மாவிடம் முறைப்பாடு செய்தான். "அத்... அத்தை.... இவளுக்கு என்ன பிடிக்கல சொல்றா பா.. பா... பாருங்க உங்... உ... உங்க செல்ல புஜி குட்டி பிடிக்... ஹிக்....கலையாம்"

விழி வெளியே விழுந்துவிடும் போல் இருந்தது. அவனது கம்பீரம் என்ன இப்போது கஞ்சா அடித்தவன் போல் புலம்புவது என்ன. ஜன்னி வந்தால் இப்படியெல்லாமா நடப்பார்கள். முன்ன பின்ன ஜன்னி வந்த ஆட்களை பார்த்தால் தானே மூளை பரிகாசம் செய்தது.

"யாரு செல்ல புஜி குட்டி..?" அவன் எண்ணங்களை திசை திருப்ப விசாரித்தாள்.

சட்டென திரும்பி படுத்து அவள் மூக்கை விரலால் தட்டியவன் "நான்தான்... புஜி குட்டி..." அசடு வழிய சிரித்தான்.

"அத்தை யாரு...." இப்போது ஆர்வமாக விசாரித்தாள்.

மூளை காறி துப்பியது 'இதேல்லாம் இப்ப ரொம்ப தேவை பாரு' அதை துடைத்து ஓர் ஓரமாய் போட்டவள் ‘கொஞ்சம் சும்மா இரு இது எல்லாம் வரலாற்று நிகழ்வு திரும்ப கிடைக்காது அச்சோ இப்ப பார்த்து கரண்ட் கட்டாகி போச்சே ச்சே....

இதை மட்டும் போன்ல ரெகார்ட் பண்ணியிருந்த இதோட வல்யுவே வேறடி....

"எ எ... ன் அத் அத்தை உன்னோட.... அம்மா... எனக்கு தெரியாது... அவங்க தான் உன்னோட அம்மா என்று" கண்ணோரம் கோடாய் நீர் வழிந்தது.

அவன் பேசுவது புரியாமல் விழித்தாள். என்றைக்கு புரிந்தது இன்று புரிய...

திடீரென எழுந்தான் "நான் போய் கூட்டி வருகிறேன்"

"யாரை" அவனை பிடித்து வைத்து கேட்டாள்.

"அத்தையை...."

"என் அம்மாவையா...?" அதிர்ச்சியுடன் கேட்டாள்.

"ம்ம் அவர்களைத்தான்..."

"எப்படி?" அதிர்ச்சி விலகாமல் கேட்டாள்.

"முடியாதே.... சாரிப்பா நா தோத்துட்டன்...." சோர்ந்து விழுந்தவன் உடல் மறுபடியும் மோசமாக நடுங்க தொடங்கியது.

"இல்லப்பா நான் தோற்க முடியாது... நெவர் உங்களுக்கு கொடுத்த பிரமிஸ்... நான் எப்படியாவது அவர்களை அழைத்து...." வெறி பிடித்தவன் போல் வெளியே செல்ல முயன்றவனை இறுக அணைத்து கொண்டாள். இந்த புயல் மழையில் எங்காவது ஓடி போனால் எங்கே போய் யார் தேடுவது.

அவள் அணைப்பில் குழந்தையாய் அடங்கியவன் அவள் தோளில் முகம் புதைத்து கரகரத்த குரலில் சொன்னான் "சாரி, நான் முதலே வந்து இருக்கனும்"

என்ன ஏது ஒன்றும் புரியவில்லை அவளுக்கு தலையில் தடவி ஆறுதல் அளித்தாள் “இல்ல பரவாயில்ல இப்ப வந்தீங்களே அதுவே போதும்” அவனைப் படுக்க வைத்தாள்.

இருவருக்கும் சேர்த்து கம்பளியால் போர்த்தவள் அவன் நடுக்கம் நிற்க தன் உடல் வெப்பத்தை கடத்த மூளை செய்த எச்சரிக்கையை மீறி அவனருகே படுத்தாள்.

அவன் நடுக்கத்திற்கு இதமாய் இருந்ததோ இல்லை ஆழ் மனதின் தேடலே அவளாக இருந்ததோ அவளுடன் நெருங்கி படுத்தவன் மெதுவே அவளை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து தன் தேடலை தொடங்கியிருந்தான்.

(அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நான் சொல்லவில்லை. வாலிப கவிஞர் வாலியின் இந்த பாடல் சொல்லும், இந்த அளவு விரசம் இல்லாமால் விரகம் எழுத வருமா என்று தெரியவில்லை.... வரவே வராது வாலி எங்கே நான் எங்கே)

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்

நான் மெய் மறந்து மாற
ஒர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்

கண்ணிரண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்....

நாடி எங்கும் ஏ....தோ
நாத வெள்ளம் ஓடும்.....
ஆனாலும் என்ன தா...கம்

மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ - வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டில்- இட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் - நான்

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் - கலந்தாட....
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட- தியானம்....
ஆழ் நிலையில் அரங்கேற....

காலம் என்ற தேரே....
ஆடிடாமல் நில்லு
இக் கணத்தை போலே....
இன்பம் எது சொல்லு...
காண்பவை யாவும்
சொர்க்கமே தான்

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்

நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும்
தூரம்......
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

ஒரு வேலை இன்றைய அப்ட்டேட் பிந்திவிட்டது. நாளையும் பிந்தக் கூடும் அதுதான் நாளைய அப்ட்டேட்டும் சேர்த்து போட்டகிவிட்டது. இதோ உங்களின் காதல் தீரன் அத்தியாயம் - 08, 09 வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா🎻10
முன்னே பரந்து விரிந்திருந்த அரபிக் கடலின் மேற்புறமிருந்த கருமை நிறம் குறைந்திருந்தது. ஆனால் இன்னும் அலைகளின் உரம் குறைந்திருக்கவில்லை. காலை பத்து மணிக்கு கரை கடந்த புயல் தன்னால் முடிந்த சேதராமாக சில வீடுகளை இல்லாமல் செய்தது உடன் மரங்களை சாய்த்து மழையால் மண் சரிவு என தான் போன வழியெல்லாம் தடங்களை பதித்து கைவரிசையை காட்டி சென்றிருந்தது. அதன் எச்சமாய் அங்கங்கே மொட்டடையாய் சில மரங்கள், சரிந்து விழுந்திருந்த சில மரங்கள், எங்கிருந்தோ வந்து விழுந்திருந்த கூரை தகரங்கள், ஆட்டோவின் மேல் பக்க லெதர் துணிகள் என ஏதோதோ பொருட்களை எங்கெங்கிருந்தோ தூக்கி வந்து வீசியிருந்தது. தூரத்தில் மலையிருந்து வழிந்த மழை நீர் வாய்க்கால் கட்டி கடலில் இணைந்து கொண்டிருந்தது.

கடலை பார்த்தபடி இருந்த அந்த வீட்டின் மேல் மாடியின் கைப்பிடி சுவரோடு ஓட்டி சிறு மேஜை போட்டிருக்க அதன் விளிம்பில் அமர்ந்து காலை கீழே தொங்கவிட்டு அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் ஸ்ரீனிகா. கீழே குனிந்து குதிகாலை சேர்த்து முன் பாதத்தை விரித்து அந்த இடைவெளியில் பார்த்தாள். முழங்கால் வரை நீர் நிற்கும் போலிருந்தது. நள்ளிரவே வீட்டினுள் நீர் வந்திருந்தது. சுற்றிலும் வெள்ள காடாய் இருக்க, அஜா ஒரு ரெயின் கோட்டை தலையில் மாட்டி கொண்டு மதிலின் ஓரம் ஏதோ செய்து கொண்டிருந்தான்.

மழை இன்னும் நின்றபாடில்லை லேசாக பெய்து கொண்டிருந்தது. காலை முன்னும் பின்னும் ஆட்டி நீட்டி மழை நீரின் சில்லிப்பை உள்வாங்கியவள் முகம் மலர்ந்தே இருந்தது.

ஸ்ரீனிகா காலை எழுந்து குளித்து வெளியே வந்த போது புயல் உச்சத்தை தொட்டிருந்தது. மாடியின் பல்கனியில் நின்று பார்க்க புயலின் நாட்டியம் அழகாய் தெரிந்தாலும் நீண்ட நேரம் நின்று பார்க்க முடியவில்லை. காற்று அள்ளி வந்த தூசுதுணிக்கைகள் ஊசி போல் மேனியில் குத்த, அப்போதும் பெய்து கொண்டிருந்த மழையின் சாரல் வேறு அடிக்க இறங்கி கீழே சென்றாள்.

கணுக்கால் வரை நீரில் நின்றவாறே ஒரு கறி சாதம் என சமையல் முடித்தவள் மேலே சென்று கௌதமை பார்க்க அப்போதும் உறங்கி கொண்டிருந்தான். நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்து பார்க்க உறக்கத்திலும் அவனை உணர்ந்தவனாய் அவள் கையை பிடித்து தலையணைக்கு கன்னத்திற்கும் நடுவில் வைத்து கொண்டு லேசாக மலர்ந்த புன்னகையுடன் உறக்கத்தை தொடர்ந்தான்.

ஒரு கணம் பயந்து மூச்சை இழுத்து பிடித்தவள் அவன் உறங்குகின்றான் என்றதும் நிம்மதியாய் வெளியேவிட்டாள். மறு கரத்தால் அவன் கேசம் கோதியவளுக்கு இரவு நிகழ்ந்தது நினைவில் வர கன்னம் அழகாய் சிவந்தது.

வீழும் இருவர்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு என்ற குரலுக்கு அமைவாக இருவரும் காற்றுக்கும் வழியின்றி இறுக தழுவிய கணங்கள் கண் முன்னே வந்து போக அவள் முகம் குங்குமமாய் சிவந்தது.


🎻🎻🎻🎻 🎻
நேற்று அவனருகே அவன் உடலை வெப்பமேற்ற படுத்தவளை அணைத்து உதடுகளை அவன் ஆளுகையில் எடுத்ததும், அவள் பெயரையே மந்திரம் போல் உச்சரித்ததும், அவளில் அவன் உதடுகள் செய்த மாயமும், அவளிடம் புதைந்து தன்னை முற்றும் தொலைந்த போது காதருகே ஸ்ரீனிஇ.. என அவள் பெயரை தாபமாய் அழைத்த தருணம்....

அவள் தோளில் அவன் அடையாளம்....

அப்படியே சங்க தமிழ் கூறும் பெண்ணின் அவயவத்தில் ஆடவர் நகத்தினாற் பதிக்கும் அர்த்தசந்திரன், மண்டலம், புலிநகம், மயூரபதம், முயலடி, உற்பலம் என ஆறு வகை அடையாளத்தையும் ஒரே நாளில் கொடுத்திருந்தான். கூடலின் பின் நடுக்கம் நின்று உறங்கிய போதும் ஜுரத்தில் அனத்தி கொண்டே இருந்தான் கௌதம். அவன் தலை கோதிய ஸ்ரீனிகா மெல்லிய குரலில் பாட தொடங்கினாள்.

(இது லதா மங்கேஸ்கர் பாடிய பாடல்)

சோஜா சந்த ராஜா சோஜா
ஜல் ஸப்னோமே ஜல்
நீந் கி பரியான் பேகென்கி ஆயீ பைரோன் மைன் பயல்|
துஜுக்கோ ஆபநே நரம் பரோன் பர் லேக்கர் ஜயங்கி
சோனே காய்க் தேஸ் ஹை ஜிஸ்கி சாய் கரயேகி

டர்ட்டி ஸே குச் தூர் கஹின் சாத் ஸமுன்டர் பர்
ஆகாஷ் கே பீச் ஹை சப்னோ கா சன்சார்
வோ சமீன் ஹை பியர் கி வஹான் செர்ப் பியர் ஹை
மேரே சந்த் ஜா வஹான் தேரே இந்துசார் ஹை...


கீழ் ஸ்தாயியில் காதருகே ஒலித்த அந்த தாலாட்டில் அவன் அனத்தல்கள் குறைந்து ஆழ் துயிலுக்கு செல்ல அவளும் மெதுவே உறக்கத்தை தழுவினாள்.

காலை நேரம் கழித்தே எழுந்த போதும் அவன் எழுந்திருக்கவில்லை. நல்லவேளை என நினைத்தவள் அவன் உடலின் சூட்டை பரிசோதித்து பார்த்தவளுக்கு திருப்தியாக இருக்க வெந்நீரில் அவன் உடல் துடைத்து உடை மாற்றிவிட்டாள்.


🎻🎻🎻🎻 🎻
கையை மெதுவே விடுவிக்க புருவம் சுழித்து அசைந்தான் ஆனால் எழும்பவில்லை. 'இப்படி உறங்குகின்றான் கும்பகர்ணனுக்கு தம்பியா இருப்பானோ...' மனம் கவுண்டர் கொடுக்க மெதுவே வெளியே வந்து மாடியின் மதில் சுவரில் ஏறி அமர்ந்தாள்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இது வரை ஒரு அசைவும் இல்லை. மருந்தும் கொடுக்கனும் போய் எழுப்புவோமா வேண்டாமா என மனம் பட்டி மன்றம் நடத்த சிறிது நேரம் சுற்றுப்புறம் மறந்து இருந்தாள்.

"ஏன் மதில் திண்டில் ஏறி இருக்கின்றாய் விழுந்துவிட்டால்..." ஒரு குரல் காதருகே கடிந்து கொண்டது. திடிரெனக் கேட்ட குரலில் திடுக்கிட்டு துள்ளி விழ பார்த்தவள் முன்னே நிலத்தில் தான் விழ போகின்றேன் என பயந்து கண்களை இறுக மூட கடினாமாய் மெல்லிய வெப்பத்துடனான எதன் மீதோ மோதினாள்.

குனிந்து பார்க்க கீழே விழ விடாமல் கெளதமின் வலிய கரம் இடையை பிடித்திருக்க அவன் மார்பின் மீது பின்புறமாக சாய்ந்து இருந்தாள்.

லாவகமாக இறக்கிவிட்டவன் அவள் வழவழத்த இடையில் பதிந்த கையை எடுக்க முடியாமல் திணற எங்கிருந்து வந்தது என தெரியாமல் அவளை ஏதேதோ செய்யத் துடித்த எண்ணங்களை தூண்டிய மனதை அடக்கும் வழி தெரியாமல் திகைத்து நின்றான் கெளதம்.

ஸ்ரீனிகா அவன் மனைவிதான் ஆனால் இது நாள் வரை அவன் மனம் இது போல் கட்டு மீறி தடம் புரளவில்லையே. சில நேரங்களில் அவளிடம் தடுமாறியது உண்டுதான், ஆனால் இந்த அளவிற்கு இல்லையே. அவனை மேலும் சோதிப்பது போல் மெல்லிய நாண சிவப்புடன் ஏதோ சொல்வதற்கு வாய் திறந்தாள் ஸ்ரீனிகா "கெளதம்.."

அவளை உதறி திரும்பி நின்றவன் "உனக்கு கொஞ்சமாவது அறிவில்லை.... உன் மனதில் என்ன தான் நினைத்து கொண்டிருக்கிறாய்?" வழமை போல் தன் உணர்வுகளை அடக்க அவளிடமே காய்ந்தான்.
அவளுக்கு முதலில் தயக்கமாய் இருந்தது. நேற்றைய இரவை பற்றி அவனிடம் பேசுவோமா வேண்டாமா என. ஏதாவது ஏறுக்கு மாறாய் சொல்லிவிட்டான் என்றால் அதை அவளால் தாங்கி கொள்ள முடியாது. மிகுந்த தயக்கத்தி்ன் பின்தான் அவனிடம் சொல்வதற்கு முடிவெடுத்தாள்.
அவன் உதறலிலும், கடுமையான குரலிலும், முகம் திருப்பிய செயலிலும் அடியுண்ட மனம் சட்டென விழிகளில் நீரை சிந்தவிட்டது. அவன் குரலின் கடுமையில் அவளையும் அறியாது இரண்டடி பின்னே நகர்ந்துவிட்டாள். இதற்கு மேல் அவனே கேட்டாலும் வாய் திறக்க மாட்டாள்.

விறைத்திருந்த அவன் பரந்த முதுகை பார்த்தவள் மூளை சொல்லியது இந்த வெறுப்பு, உதறல் ஒரு நாளும் மாற போவதில்லை. இதை சொல்லியும் பயனில்லை. அன்று போல் இன்றும் ஏதாவது பேசுவான். கன்னத்தில் வழிந்த நீரை துடைத்தவள் "சாரி பின்னால் மேசை இருந்தது அதான்.... உடை மாற்றி சாப்பிட வாருங்கள்" மெதுவான குரலில் கூறினாள்.

அவள் குரலில் இருந்த பேதம் புரிய, நிஜமாகவே நெற்றியில் அறைந்து கொண்டவன் "இல்லம்மா இப்படி திண்டில் ஏறி இருக்கிறாய்? விழுந்து வைத்தால்...." திரும்பியவன் காற்றிடம் தான் பேசிக் கொண்டிருந்தான்.

உடை கூட மாற்றாமல் அப்படியே வெறும் மேலுடனும் ட்ராக் பாண்ட்டுடனும் வேகமாக கீழே இறங்கி வந்தான் கௌதம். சாப்பாடு எடுத்து வைத்து கொண்டிருந்தவள் அவன் வந்த வேகத்தை பார்த்து குரல் கொடுத்தாள் "கவனம் கீழே ஈரம்." கடைசி படியில் நிதானித்தவன் அவளருகே வந்தான்.
"ஸ்ரீனிஇ.... நான் மேல... அது.... வந்து" கோர்வையாக கூற முடியாமல் முதன் முறையாக தடுமாற்றம் அவனில் தடுமாறி விழுந்தது.

அவன் முழுதாக சொல்லி முடிப்பதற்குள் உள்ளே வந்த அஜா “பாஸ் இப்ப உங்களுக்கு ஓகேவா” விசாரித்தான் “நேற்று பயந்துட்டேன் நல்லவேளை மேடம் பேமிலி டாக்டரிடம் பேசி மருந்தை எனக்கு மெசேஜ் செய்தாங்க” அவளையும் புகழ்ந்தான்.

"இவரும் பிரஷ் ஆகி சாப்பிட வாங்க" நிமிர்ந்து பார்க்காமல் அழைத்தாள் ஸ்ரீனிகா.
அவனோ குனிந்திருந்த அவள் முகத்தையே பார்த்திருந்தான். ஓர் இரண்டு நாட்களாக தான் நத்தை கூட்டை விட்டு வருவது போல் கொஞ்சம் பேசினாள். இப்போது மீண்டும் சுருண்டு விட்டாளோ... தன் வாயிலேயே ஒன்று போட வேண்டும் போல் இருந்து. இப்போது எதுவும் பேசுவதற்கில்லை. மெதுவே மாடியேறி சென்றுவிட்டான்.

குளித்து பிரெஷ் ஆகி கீழே வந்த போது ஸ்ரீனிகா அந்த இடம் முழுவதையும் மோப் போட்டு துடைத்து கொண்டிருந்தாள். அவள் துடைப்பதைப் பார்த்து முகம் சுழித்தவன் "அஜா..." சத்தமாக அழைத்தான் .
அவன் சத்தத்தில் வேகமாக வந்து ஈரத்தில் வழுக்கி விழப் பார்த்தவனுக்கு கை கொடுத்து நிறுத்திய ஸ்ரீனிகா கண்ணை விரித்து கௌதமை பார்த்தாள் "வன்னு இல்ல கோபகுலநாயக" வாய்க்குள் முனங்கினாள்.

அஜாவின் தாத்தா பாட்டி மலையாளி எனவே அவனுக்கு நன்றாகவே மலையாளம் தெரியம் அதோடு அவனின் தங்கச்சி மேடம் அடிக்கடி மலையாளத்தில் பாஸுக்கு பூசை வைப்பதும் தெரியும். என்றும் போல் இன்றும் புரிந்தது 'வந்திட்டாருல்ல கோபக்காரன்' திட்டுகின்றாள் என்று, வழமை போல் சிரிப்பும் வந்த தொலைக்க கஷ்டப்பட்டு அடக்கி அப்பாவியாய் நின்று "பாஸ்" என்றான்.
கௌதமுக்கு தெளிவாகவே விளங்கியது அவள் தன்னை தான் ஏதோ சொல்கின்றாள். இந்த அஜா குரங்கும் அவளுடன் சேர்ந்து பல்டியடிக்கின்றான். முதலில் வந்த வேலை என்று நினைத்தவன் சோபாவில் அமர்ந்தது போனை கையில் சுழற்றியவாறு "வீட்டு வேலைக்கு ஆட்கள் வர சொல்லி சொன்னனே என்னவாயிற்று" கேட்டான்.

அஜா விழித்தான் "பாஸ் இப்ப தோணில தான் வரனும்"

"ஏன் என்னாச்சு"

“சுத்தி வர தொடை வரை தண்ணி அதோட இரண்டு பக்கமும் மண் சரிவு ரோட் ப்ளோக் மோர்னிங் வீட்டுக்குள்ளயும் தண்ணி வந்திட்டு மேடம் தான் சொன்னாங்க பக்கத்தில் உள்ளவர்களை கேளுங்கள் எல்லோருக்கும் சிரமம் தானே வருவார்கள் என்று நானும் கேட்டேன் அவர்களும் வந்தார்கள். எல்லோரும் சேர்த்து வாய்க்கால் வெட்டி விட்டுருக்கோம். இன்று மழை பெய்யாவிட்டால் நாளைக்குள் வெள்ளம் வடிந்துவிடும்” என்றான்.

"இன்று மழை பெய்யுமா..." அவன் இழுக்க அஜா விழித்தான்.

"அவன் என்ன செக்யூரிட்டி ஏஜென்சி நடத்துறான... வானிலை அறிவிப்பு மையம் நடத்துறான..." வாய்க்குள் முனகி ஸ்ரீனிகாவின் மனம் கவுண்டர் கொடுக்க அஜாவுக்கு உதவிக்கு வந்தாள் "எட்டா போய் குளிச்சு பிரெஷ் ஆகி வாங்க இருவருக்கும் காலை உணவும் இல்லை சீக்கிரம்" விரட்டினாள்.
கௌதமிடம் திரும்பி "சாப்பிடலாம் வாங்க" என்றாள்.

"சமைக்க பொருட்கள் ஏது?" வினவினான்.

'ஆரம்பிச்சிட்டாருல்ல கேள்வியை திருவிளையாடல் நாகேஷ் தோத்தார்'

"மருந்து வாங்க சொல்லும் போது அதையும் வாங்க சொன்னாங்க மேடம்" அவன் அறைக்கு சென்றவாறே பதிலளித்தான் அஜா.

அவனை முறைத்தவள் கௌதமிடம் திரும்ப "இருப்பது மூவர் அவனும் வரட்டும்" என்றான். "எட்டா..." ஸ்ரீனிகா அழைக்க திரும்பி "பத்தே நிமிடத்தில் வந்திருவன் தாயே" என்று குனிந்து ஒரு கும்பிடு போட்டு விட்டுச் சென்றான்.

மெல்லிய சிரிப்புடன் சென்று மோப் போட்டு முடித்தவளை பார்த்து கொண்டிருந்த கௌதம் முகம் யோசனையை தத்தெடுத்ததது. இவர்கள் இருவரிடையே நல்லதொரு ஸ்நேக பூர்வமான பந்தம் உருவாகியிருந்தது. ஆனால் எங்கே.... எப்போது..... அவன் அவர்களை தவறாக நினைக்கவில்லை. ஆனால் அவளுடன் ஒரு ஆண் எந்த விதத்திலும் பந்தத்தை உருவாக்குவது இலகுவான காரியமில்லை.

மோப் போட்டபடி அவனருகே வர அவளை பார்த்தவாறே கால்களை தூக்கி சோபாவில் வைத்துக் கொண்டான்.

நான் உருவாக்க தவறிய பந்தத்தை ஒரு சகோதரனாய் அவன் எவ்வாறு உருவாக்கி கொண்டான். அவள் வரைந்த கோட்டை தாண்டி சென்ற ஆண்கள் சிலரே. நான் கோட்டை தாண்டி சென்றேனா இல்லை அழித்து சென்றேனா தன்னை தானே கேட்டு கொண்டான்.

அதற்குள் அவனை அழைத்தது ஞாபகம் வர "எட்டா" வாய்க்குள் சொல்லி பார்த்தவன் "அது என்ன எட்ட கிட்ட" அவளை தேட கிச்சினுள் கைகழுவி கொண்டிருந்தாள். அஜாவுக்கு 'முப்பது நிமிடம் கழித்து வெளியே தலை காட்டு' என்று மெசேஜ் போட்டவன் அவளருகே சென்றான். கைகழுவி திரும்பியவள் பின்னால் நெருக்கத்தில் நின்ற கௌதமின் மேல் மோத பார்த்து சுதாரித்து நின்றாள்.

அந்த ஹிந்தி பாடலின் மொழிபெயர்ப்பு என்னால் முடிந்தவரை செய்திருக்கின்றேன்
(தூங்கு நிலவே ராஜா தூங்கு
செல் கனவுலகு செல்
காலில் கொலுசணிந்து வரும் நித்திரையின் தேவதைகள்
பட்டு சிறகுகளில் தூக்கி செல்வார்கள்
தங்கம் போன்ற உலகிற் உன்னை அழைத்து செல்வார்கள்
உலகம் தாண்டி தூரமாக ஏழ் கடலும் தாண்டி
ஆகாயத்தின் பின்னே கனவுகளின் உலகிற்கு
அன்பின் உலகம் அது அங்கே அன்பு மட்டுமே
என் நிலவே செல் அங்கே உனக்காக காத்திருக்கின்றார்கள்
செர்க்கத்தில் மின்னும் தேவதைகள் அவர்கள் விருந்தினாராய்
நீ பேசும்தேவதை கதைகளை தேவதைகள் கூற
உன்னுடன் ஆடிவிளையாட)
முடிந்த வரை மொழிபெயர்ப்பை சரியாக செய்திருக்கின்றேன், இது மிஷன் காஸ்மீர் படத்தில் லதா மங்கேஸ்கர் பாடிய பாடல், அருமையான பாடல்.
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா🎻11
"அது என்ன எட்டா கிட்டா"

அவளோ விழித்தாள் திரும்பிக் காபர்ட்டை பார்த்தவள் "எட்டுமே என் உயரத்துக்குச் சரியாதானே இருக்கு" என்றாள் குழப்பத்துடன்.

நெற்றியில் சுண்டியவன் "அதில்லை, அஜாவை எப்படி கூப்பிட்டாய்?" கேட்டான்.

"ஓஹ் அதுவா..." என்று விலக போனவளை, அவளருகே இருந்த சுவரில் கையை ஊன்றி மறித்தான்.
மீன் போல் வாயை 'ஓ' வடிவில் திறந்து அவன் கை நீளத்திற்கும் பார்த்தவள் அவனை திரும்பிப் பார்த்தாள். மறுபக்கம் திரும்ப அங்கேயும் அவன்கை இருக்கவே கீழாக குனிந்து தப்ப முயல கையை கீழே இறக்கினான். நிமிர்ந்து "ஹிஹிஹிஹ்" அசட்டு சிரிப்பொன்றை அவிழ்த்துவிட்டாள்.

நானே பாவம் என்பது போல் பார்த்து வைக்க "பதில் சொன்னால் விடுறன்" புன்னகைத்தான்.
"எட்டாது கிட்டாது எல்லாம் இல்ல, ஏட்டா என்றால் தமிழில் அண்ணா என்று அர்த்தம்" பதில் சொன்ன வேகத்தில் போக திரும்பியவள் கையை எடுக்காமல் இருக்க மிரண்ட மானாய் பார்த்தாள்.

"ஏன் மேடம் தமிழ்ல பேசமாட்டிங்களோ....?" அவள் மிரண்ட பார்வையில் 'கொல்றாளே' அஞ்சான் சூர்யாவாட்டம் மனதினுள் புலம்பியவன் "இன்னும் இருக்கு" என்றான் கெத்தாக. ‘என்ன’ என்பது போல் பார்த்து வைத்தாள்.

கண்களில் குறும்பு மின்ன அவளைப் பார்த்தவன் "கோப...குல....நாயக...." இடைவெளி விட்டு ராகமிழுத்துக் கூறினான்.

"போச்சு போச்சு இன்று நான் செத்தேன்" வாய்க்குள்முனகினாள்.

"ஹ்ம்ம்..." அவனுக்கு தெளிவாக கேட்டாலும் கேட்காதது போல் காதை அவள் வாய் அருகே கொண்டுவந்தான்.

"கோ.........ரன்"

"கேக்கல.... கொஞ்சம் சத்தமா சொல்றது" வேண்டுமென்றே சீண்டினான்.

"கோப..காரன்..." அந்த குட்டி இடம் அனுமதித்த வரைஅவனிடமிருந்து திரும்பி நின்றாள்.
"உன்னிடம் அப்படி கோபமாகவா நடந்து கொண்டேன்" முகத்தில் யோசனை சிதறல்களுடன் கேட்டான். அவளோ திரும்பி அவன் வலது முட்டியின் முன்புறத்தில் இருந்த மச்சத்தை தீவிரமாய் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

"என்ன..." அவள் எதை பார்க்கின்றாள் என்று தெரிந்திருந்தே கேட்டான்.

"இல்லை.... நீங்க இரட்டையரா... இல்லை ஒரேமாதிரி உள்ள ... அவர்களுக்குதான் ஒரே மாதிரி மச்சம் இருக்குமாம்..." அவள் பேச்சு அவளுக்கே முட்டாள்தனமாக பட்டது ஆனால் கண்ணுக்கு முன் நடப்பதை மூளை நம்பமறுத்தது.

அவளையே சிறிது நேரம் ஆழ்ந்து பார்த்தான். அவன் பார்வையில் குழம்பி போய் பார்வையை திருப்பிக் கொண்டாள் ஸ்ரீனிகா. "கணவனை மலையாளத்தில் எப்படி அழைப்பார்கள்?" அவள் திரும்பியிருந்த முகத்தை பார்த்தவாறே ஆழ்ந்த குரலில் கேட்டான்.

சட்டென திரும்பி அவனை பார்த்து விட்டு அதே வேகத்தில் பார்வையை தாழ்த்தினாள்.

ஒரு கணம் கண் வழியே இதயத்திற்கு மின்சாரம் பாய்ந்து போல் இருக்க "ஹாப்ப்பா...." என்றான். என்ன என்பது போல் நிமிர்த்து பார்த்தவளை "அதைவிடு... மலையாளத்தில் எப்படி அழைப்பார்கள், சொல்லு" அதிலேயே பிடிவாதமாக நின்றான்.

அவள் போட்டிருந்த டீஷிர்டின் முனையை கையில் வைத்துச் சுற்றியவாறே முனங்கினாள் "சேட்டா....".
"ஸ்ரீனிஇ.... நிமிர்ந்து என்னை பார்" அந்த குரலில் என்ன இருந்தது கெஞ்சல் கொஞ்சம் கொஞ்சல் கொஞ்சம்.

அவன் குரலில் நிமிர்த்து பார்த்தவள் கண்களை தன் கண்களால் கௌவிக் கொண்டான். "சொல்லு..." என்றான் அதே குரலில்.

அவன் கண்ணை பார்த்தவாறே "சேட்டா..." என்றாள். நொடியில் மாறிய அவன் பார்வையில் விழி விரித்தாள். 'ஆத்தி.... இது நேற்று பார்த்த பார்வையில்லை' அவளுக்கு அவன் பார்வையை இனம் காணத் தெரியவில்லை. ஆனால் நேற்று மெல்லிய வெளிச்சத்தின் மத்தியில் மந்திரம் போல் தன் பெயரை உச்சரிக்கையில் இதே பார்வைதான் என்பது வரை புரிந்தது.

"போ..." பாதி மயக்கமும் பாதி பயமுமாய் பார்த்திருந்தவளை அவன் குரல் கலைத்தது. அவளிடமிருந்து ஓரடி விலகி கைகளை மார்புக்கு குறுக்கே காட்டியிருந்தான். அவனை பார்த்தவாறே, அவன் மீது படமால் கவனமாக விலகி சென்றாள்.

அவன் உணர்ச்சிகளை எப்படிக் கட்டுப்படுத்திக் கொண்டான் என்பது அவனுக்கே புரியவில்லை. மயக்கத்துடன் அவள் கண்களில் பயத்தைப் பார்த்த போது உள்ளே வலித்தது. என்னிடமே பயம் கொள்ள வைத்துவிட்டேனே ச்சே, இதற்கு முன் பயந்த போதெல்லாம் என்னை நாடியவள் கடைசியில் என்னைப் பார்த்தே அச்சம் கொள்கின்றாள். போதக் குறைக்கு கன்னாபின்ன என்று எண்ணங்களின் ஓட்டம் வேறு.

சோறு இருந்த பாத்திரத்தை எடுத்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு வந்து பார்க்க கிச்சின் சிங்கிள் முகத்தைத் தண்ணியடித்துக் கழுவிக் கொண்டிருந்தான். எதுவும் பேசாமல் டவலை கொடுக்க வாங்கி அழுத்தி துடைத்தவாறே அவள் முகத்தைக் கூட பார்க்காமல் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டான்.
அவள் யோசனை எங்கெங்கோ ஓடியது. கால நேரமின்றி சாணக்கியரின் வாசகம் நினைவுக்கு வந்து தொலைத்தது. ‘வழமைக்கு விரோதமான எதுவும் சந்தேகத்துக்குரியது.’ மூளையின் சந்தேகத்திற்கு பதிலின்றி மனமோ அமைதியாய் இருந்தது. இதுவே சில காலத்திற்கு முன்னானால் இன்னேரம் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்திருக்கும். இன்றோ வாங்கிக் கட்டிக் கொண்ட அடியில் அமைதியாகவே இருந்தது.

போய் டைனிங் டேபிளில் அமர்த்தவனுக்குப் புரியவேயில்லை ஏன் தன் உணர்வுகள் கட்டவிழ்த்து ஆடுகின்றன என்று. அவளிடம் தோன்றும் எண்ணங்கள் தவறென்றோ வேண்டாம் என்றோ நினைக்கவில்லை. ஆனால் அதை காட்டும் தருணம் இதுவல்ல என்றே எண்ணினான். ஏற்கனவே பயந்து நத்தை போல் சுருளுகின்றாள். தான் எதாவது செய்ய போய் இன்னும் மோசமாக போய்விட்டால் என்ன செய்வது என்றே பயந்தான்.

ஏதோ தட் என்ற சத்தத்தில் சிந்தை கலைய திரும்பிப் பார்த்தான். கை நிறைய பாத்திரங்களுடன் நின்றாள் ஸ்ரீனிகா. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வந்ததில் டம்ளர் விழுந்த சத்தம். அருகே சென்று "கூப்பிடுவதற்கென்ன..." லேசாய் கடிந்தவன் அவள் கையிலிருந்து எடுத்து மேஜையில் வைத்தான்.

அவளோ வேற்றுகிரகவாசியை போல் பார்த்து வைத்தாள்.

அஜாவும் வர சாம்பார் பொரியலுடன் உணவை முடித்த போது மணி இரண்டைத் தாண்டியிருந்தது. ஆனால் மீண்டும் நன்றாக மழை பிடித்துக் கொண்டது. ரெயின் கோட் குடையுடன் அஜாவையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றவன் சுற்றிலும் பார்த்துவிட்டு "பெரிய அளவில் மண் சரிவு அபாயம் இல்லையென்றாலும், மழை தொடர்ந்து பொழிந்தால், மணல் பிரதேசம்.... மண்ணரிப்பு வெள்ளத்தினால் வீடு இடிந்து விழும் அபாயம் உண்டு" என்ற கௌதம் சுற்றி வர இருந்த ஐந்து வீட்டையும் பார்க்க அஜா பதிலளித்தான் "மொத்தமாக ஒரு பதினைந்து பேர்".

"அஜா...., அநேகமாக அனைவரும் நம்மை போல் தங்க வந்தவர்களாக தான் இருப்பார்கள். அவர்கள் வந்தால் அவர்களையும் அழைத்து செல்வோம். நாளை பின்னேரத்தினுள் நாம் சென்று விட வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளையும் கவனி, முடியுமானால் நடந்து செல்வோம் இல்லாவிட்டால் தோணி இரண்டில் ஒன்றை ஏற்பாடு செய், வெளிநிலவரம் விசாரித்தாயா? சென்னை செல்ல முடியுமா?"
பாஸ் சொன்னதன் அர்த்தம் அவனுக்கும் தெளிவாக புரிந்தது. இப்படியே வெள்ளம் பாய்ந்தால் வீடு இடிந்து விழும் ஆபயாமும் உண்டு. ஸ்ரீனிகாவை பயமுறுத்த விரும்பாமல் தான் அவன் இது பற்றி வாய் திறக்கவில்லை “புயல் கடந்ததால் நாளை விமானம் செல்கின்றது. வேண்டுமானால் இரவு ஹொட்டேல் அறையில் தங்கி விமான நிலையம் செல்ல முடியும், ஏற்கனவே புக் செய்த அறை தயாராக இருக்கின்றது” என்றான்அஜா.

யோசனையுடன் தலையசைத்தவன் திரும்பிப் பார்க்க அவன் பார்வையில் விழுந்தாள் கேட்வாசலில் வந்து நின்ற ஸ்ரீனிகா.

அவளைச் சினத்துடன் பார்த்தவன் வேகமாக நெருங்கிசென்றான். முட்டி வரை சென்ற வெள்ளத்தின் வேகத்தில் அடித்துச் செல்லாமலிருக்க கேட்டை இறுக பிடித்து கொண்டுக் நின்றவளை நெருங்கி முறைத்தான் கௌதம். அவனை திருப்பி முறைத்தாள்அவள்.

"சொல் வழி கேட்பதில்லை" கணவன் மனைவி இருவரும் கோரஸாக கேட்டனர்.

"ஆள் இருக்கிற சைசில் வெள்ளத்தில் வந்து நிற்கிறா" வாய்க்குள் முணுமுணுத்தான்.

"நேற்று முழுக்க சொல்ல சொல்ல கேட்காமல் மழையில் நனைந்து ஜுரம் இப்ப எதுக்கு திரும்ப நனைந்தது போன ஜுரத்தை திரும்பி வாங்கவா?" வாய்க்குள் முனகினாள் அவள்.

இருவரையும் மாறிமாறி பார்த்த அஜா "நாளை எங்களுடன் அவர்களும் வருகின்றார்களா என்று பக்கத்து வீட்டில் கேட்டு வருகின்றேன்" என்று ஓடிவிட்டான்.

அவள் முறைத்து கொண்டு நின்றது அவனுக்கு தன் தங்கையின் நாலரை ஐந்து வயது மகள் நிலாவை போல் தோன்ற “ஏன் அதான் வைத்தியம் பார்க்க டக்டாரம்மா இருக்கிறீங்களே, பிறகு என்ன” அவளைச் சீண்டினான்.

“நான் டாக்டர் இல்ல சட்.... ஆர்ர்ஹ்ஹ்” சொல்லிக் கொண்டிருந்தவள் திடீரென அந்தரத்தில் எழும்பக் கத்திவிட்டாள். பேசி கொண்டிருக்கும் போதே சட்டெனெ குனிந்து அவளை தூக்கியிருந்தான் கௌதம்.

“வேண்டாம் உடம்பு அலட்டினால் ஜுரம் திரும்ப வந்திரும்” கையை காலை ஆட்டி மறுத்தாள். ஒரு கணம் நின்றவன் "காலுக்கு கீழே வெள்ளம், என் கையிலிருந்து பரதநாட்டியம் ஆடினால் இருவரும் சேர்ந்தே விழ வேண்டி வரும் ஜாக்கிரதை" எச்சரித்தான்.

அதன் பின் வீட்டினுள் இறக்கி விடும் வரை அவன் கழுத்தை வளைத்து பிடிக்காமல் தன் மார்பின் முன் கோர்த்து அமைதியாய் இருந்தவள் அவளை கீழே இறக்கி விட்டு ரெயின் கோட் கழட்டியதும் டவல் கொண்டு வந்து கொடுத்து குடிக்க சுடுநீர் வைத்தாள்.

அவன் ஈர உடை மாற்றி வர மருந்துகளை எடுத்து வந்தவள் தெர்மாமீட்டர் வைத்து அவன் வெப்ப நிலையை சரி பார்த்தாள். நேற்று சிவப்பு நிறத்தில் காட்டியது இன்று மஞ்சள் நிறத்தில் அழுவது போன்ற படத்துடன் வெப்பத்தை காட்ட மெல்லிய காய்ச்சலே இருந்தது.

"நேற்று இருந்தத்திற்கு இன்று குறைந்துவிட்டது" தனக்குத்தானே சொன்னவள் அவன் குளிரில் நடுங்குவது கண்டு காபி போட்டு எடுத்து வர உள்ளே சென்றாள் ஸ்ரீனிகா.

டீப்போவில் இருந்த வெப்பமானியை ஜென்ம விரோதி போல் முறைத்தவன் தூக்கி எறிய உள்ளே வந்த அஜா அதைப் பிடித்து கொண்டான். இந்த தெர்மோமீட்டர் என்ன பாவம் செய்தது விழித்தான் அஜா. அதை பார்த்த கெளதம் "மறைத்துவை" சத்தமின்றி வாயசைத்தான். திரும்பி வந்த ஸ்ரீனிகாவைப் பார்த்து விட்டு சட்டென அதை ஜீன்ஸ் போக்கெட்டினுள் போட்டான் அஜா.

ஒரு கப் தேநீரை அஜாவிடம் கொடுக்க அவன் இல்லாத ஆளுடன் போன் பேசியவாறே வாங்கிக் கொண்டு சென்றுவிட்டான்.

கௌதமுக்கு மருந்தை கொடுத்து விட்டு மீதத்தை எடுத்துப் பத்திரப்படுத்தியவள் நிலத்திலும் சுற்றும் முற்றும் எதையோ தேடினாள். அவள் தேடுவதைப் பார்த்து வந்த சிரிப்பை உதட்டோரம் அடக்கியபடி எதுவும் தெரியாதது போல் கேட்டான் "என்ன தேடுகின்றாய்?"

"அதுவா அந்த தெர்மாமீட்டர் இங்கே தான் வைத்தேன்" தேடியபடி பதிலளித்தாள்.

"அது எதுக்கு இப்போ"

"ச்சு.. ஜுரம் எப்படிப் பார்ப்பது.."

"தொட்டுப் பார்" காபி கப்பை மேசையில் வைத்தவன் சாவதானமாக சொன்னான்.
"ஆஹ்" நிமிர்ந்து அவனை பார்த்தவளுக்கு காலையில் அவன் உதறிவிட்டதை அவள் மனதின் விருப்பமின்றி மூளை ஞாபகப்படுத்தியது. எதுவும் பேசாமல் மீண்டும் தேடி விட்டு "கிச்சினுள் வைத்து விட்டேன் போல" என்றவாறு போக திரும்பியவள் கையை பிடித்து இழுக்க மொத்தமாய் அவன் மேல் வந்து விழுந்தாள்.

கண் விரித்து பார்க்க ஒருகையை தலையின் கீழ் கொடுத்து மறுகையால் அவள் இடையை வளைத்தவன், நெஞ்சில் கையூன்றி எழும்ப முயன்றவளை அசையவிடாமல் பிடித்தவாறே அவள் கண்களை பார்த்து "சாரி..." என்றான். ஜுரத்துடனான அவன் உடல் வெப்பத்துடன் அவனின் மெல்லிய பாரத்தையும் மீண்டும் உணர்ந்தவள் "எஎ... என்ன எ... எதுக்கு" தடுமாறினாள்.

"காலையில் நான் வேறு யோசனையில் இருந்தேன். சாரி ஐ டிடின் மீன் இட்" மன்னிப்புக் கேட்டான்.

இவ்வளவு இலகுவாக மன்னிப்புக கேட்பான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. மெல்லிய அதிர்ச்சி ஆச்சரியம் ஆராய்ச்சி என அனைத்தும் கலந்து பார்த்திருந்தவள் அவனின் "ஸ்ரீனி...." தயங்கிய குரலில் இமை தட்டிவிழித்தாள்.

"ஓஹ்... அதுவா... பரவாயில்ல... நான் ஏதும் நினைக்கவில்லை" மெதுவே நெளிந்தவள் அவனிடமிருந்து விலக முயல, ஆழ்ந்து பார்த்து விட்டு மெதுவே அவளிடமிருந்து விலகினான். 'என்ன பார்வை இது எப்ப பார்த்தாலும் இப்படியே பார்க்கின்றான், விட்டால் பார்வையாலேயே தூளை போட்டுவிடுவான் போலிருக்கே மனம் யோசிக்க ‘பார்த்து பிடரியில் ஓட்டை விழுந்திரும்’ மூளை பரிகசித்தது. வேகமாக தள்ளி அமர்ந்தாள்.

அவளுடன் எழுந்து அமர்ந்து அவளருகே முகத்தை நீட்ட 'என்ன' என்பது போல் பார்த்தாள் ஸ்ரீனிகா. "அதான் மன்னிப்பு கேட்டுடன் இல்ல" என்றவனை 'அதுக்கு' என்பது போல் பார்த்தது வைக்க "ஜுரம் இருக்கா தொட்டுபார்" என்றான்.

அப்போதும் தயங்கி போய் பார்த்திருக்க அவன் கண்களில் சிறிதாய் ஒரு வலி. “அப்ப சாரி அக்செப்ட் பண்ணல இல்ல” அவன் குரல் ஏதோ போல் இருந்தது.

"இல்ல அப்படிலாம் இல்ல" வாய் சொன்னாலும் மூளையோ எதிராய் யோசித்துகொண்டிருந்தது 'ஏன் திடீரென்று வித்தியாசமாய் நடக்கின்றான்? வழமைக்கு விரோதமான எதுவும் சந்தேகத்துக்குரியது. மூளை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்த அடி வாங்கிய மனமோ மூளையை எதிர்த்து எதுவும் பேச முடியாது மௌனித்து நின்றது.

அவன் கண்களில் தென்பட்ட பிடிவாதத்தில் விடமாட்டான் என்பது புரிய, இழுபடவே மாட்டேன் என்ற உதட்டை வலிந்து இழுத்து புன்னகைத்தவள் பட்டும்படாமலும் தொட்டுப் பார்த்தாள்.

அவள் பயந்தவள் தான் ஆனலும் ரோஷக்காரி. அதோடு அவளின் மனம் கூறியது மீண்டும் மீண்டும் காயப்படாதே... இதற்கு மேல் தாங்கும் சக்தி என்னிடம் இல்லை.. மூளையிடமிருந்து எப்போதும் ஒரு எச்சரிக்கை உணர்வு அவனிடமிருந்து தள்ளி இரு என்று.

உதட்டை கடித்தவாறே எழுந்து சென்றவளை பார்த்திருந்தவனை கலைத்தது அவனது தொலைபேசியின் சத்தம். எடுத்து பேசியவன் "புரியுது இம்போர்டன்ட் தான் ஆனா மீட்டிங் அட்டென்ட் பண்ண முடியாது யாதவ். லப் எதுவும் இல்லை போன் மட்டும்தான்" நெற்றியை தேய்த்தான்.
அவன் தொலைபேசியில் பேசியதை கேட்டவள் மேலே ஏறி செல்ல, அவளையே இமைக்காது சில வினாடி பார்த்தவன் குனிந்து "எப்படியும் நாளை...." என்றவன் கண் முன் நீண்டது அந்த கருப்பு நிற மடிக்கணினி. நிமிர்ந்து பார்க்க ஸ்ரீனிகா தான்.

மறு பேச்சு ஏதுமின்றி "ஓகே யாதவ் வி கேன் காரியோன் தி மீட்டிங்" என்றான்.

அவன் மீட்டிங்கில் ஆழ்ந்து போக வாரந்தாவில் இருந்த சோபாவில் முழங்காலை கட்டிக் கொண்டு அமர்ந்து கம்பளியால் உடலை போர்த்திக் கொண்டு சிறிது நேரம் மழையையே பார்த்துக் கொண்டிருந்தாள். இங்கே அதிக காலம் இருக்க முடியாது என்பது புரிந்தது. ஆனால் அவளுக்கு இங்கிருந்து செல்லவே மனமில்லை. இது போல் அவனுடனான கணங்கள் அவளுக்கு பொக்கிஷம்....
மழையை பார்க்க பார்க்க மூளை ஏதோதோ ஞாபகங்களினை நினைவுபடுத்த, மனமோ அவன் நெஞ்சினில் தஞ்சம் கொள்ள ஏங்கியது. பேசாமல் ஃபோனில் பைப் கேமை எடுத்து வைத்து விளையாடத் தொடங்கினாள்.


🎻🎻🎻🎻🎻
வானமே இரண்டாய் பிளந்தது போன்ற அந்த இடிச் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தான் கௌதம். மழை இன்னும் கொட்டிக் கொண்டிருந்தது. அவன் எப்போது உறங்கினான் என்று யோசிக்க அருகே சிறு மேஜையில் திறந்த படி இருந்த மடிக்கணினியை பார்க்க ஞாபகம் வந்தது. மீட்டிங் முடித்து ஸ்ரீனியையும் அழைத்துக் கொண்டு மேலே வந்தவன் அது சம்பந்தபட்ட பைல்ககளை சரி பார்த்தது கொண்டிருந்தவாறே மருந்தின் வேகத்தில் அப்படியே உறங்கிவிட்டிருந்தான். போனை எடுத்தது பார்க்க மணி ஒன்று என்றது.

ஏதோ வித்தியாசமாய் உணந்தவன் சுற்றும் முற்றும் பார்க்க கட்டில் சோபா இரண்டிலும் ஸ்ரீனிகா இல்லை.
 
Last edited:

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் சுவீட்டிஸ்.....

இதோ உங்களின் காதல் தீரன் அத்தியாயம் - 10, 11 வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்கமால் கூறுங்கள்.

பின்னேரம் அடுத்த இரண்டு எபி வரும்


முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 

Nandhaki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீரா 🎻12
ஏதோ வித்தியாசமாய் உணர்ந்தவன் சுற்றும் முற்றும் பார்க்க கட்டில் சோபா இரண்டிலும் ஸ்ரீனிகா இல்லை.
தேடிப் பார்க்க அறையிலேயே இல்லை. எழும்பும் போது மேலே போர்த்தியிருந்த போர்வையை பார்த்தவனுக்கு அவளின் வேலை என்பது புரிந்தது. வெளியே கேட்ட இடி சத்தத்தில் வேகமாக எழுந்து வெளியே வந்தான்.

அவன் எதிர் பார்த்தது போலவே மாடிப் படியில் தன்னை குறுக்கி கொண்டு அமர்ந்திருந்தாள் ஸ்ரீனிகா. அவள் முதுகின் அசைவில் அழுகின்றாள் என்பது புரிய ஒரு கணம் நின்றவன் அப்போது வெளியே வந்த அஜாவிடம் "அஜா எனக்கு சுடுநீரில் நனைத்த டவலும் ஒரு கப் பாலும் சூடாக்கி கொண்டு வா" உத்தரவிட்டவன் வேகமாக தடதடவென படிகளில் இறங்கி அவளை அடைந்தான்.

அவளோ சுற்றம் மறந்து தன்னுள் ஒடுங்கியிருந்தாள். அருகே அமர்ந்தவன் அவளை மடியில் இழுத்து போட்டு முதுகு தலை என்று தடவி கொடுத்தவன் "ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ரீனி... ஸ்ரீனிம்மா.. பயப்பட கூடாது.... ஷ்ஷ்ஷ்.... நானிருக்கின்றேன் இல்லையா.... ஓகே" மென்மையாய் குனிந்து அவள் காதினுள் முணுமுணுக்க அவளோ அவனிடம் ஒன்றி கொண்டாள். அவள் கன்னம் பிடித்து முகத்தை உயர்த்தி பார்க்க கண்ணீர் வழிந்து வீங்கி போய் இருந்தது.

இன்னும் ஒரு படி கீழே இறங்கி அருகே அமர்ந்தவன் "ஏண்டி... ஏன் இப்படி தனியா வந்திருந்து..." ஆற்றாமையோடு கேட்டவன் நெஞ்சோடு அனைத்து கொண்டான்.

அஜா பால் டவல் இரண்டையும் கொண்டு வந்து வைக்க சுடுநீரில் நனைத்த டவலை எடுத்து முகத்தை அழுத்தி துடைத்தான். அவளோ மறுபடியும் அவன் மார்பில் புதைய "இந்த பாலை மட்டும் கொஞ்சமா குடிம்மா" கெஞ்சலாய் கேட்டான்.

அவளுக்கோ அவன் முடி நிறைந்த மார்பு கன்னத்தில் மூட்டிய குறுகுறுப்பு மனதிற்கு இதமாய் இருந்தது. தனக்கு இதமாய் இருந்த இடத்தை விட்டு வெளியே வர மனமின்றி சுணங்கிய மனதிற்கு உண்மை உறைக்க நிமிர்ந்து விலகி அமர்ந்தாள்.
“கொஞ்சமா குடி.... இல்லை நானே வேறு விதத்தில் குடிக்க வைப்பேன்” செல்லமாய் மிரட்டினான்.

“ல்ல ல்ல குடிக்கிறேன்” நல்ல பிள்ளையாய் வாங்கி குடித்தாள். அவள் தலையை வருடிவிட்டவன் "ஏண்டா?" மென்மையாய் கேட்டான்.

கையிலிருந்த டம்ளரை இரு கைகளுக்கு நடுவில் வைத்து உருட்டியவள் மெல்ல கூறினாள் "அம்மா.....". இதை எப்படி மறந்தேன் என்பது போல் உதட்டை கடித்தான் கெளதம். அருகே இருந்த சிறு காகித கப்பல்களை பார்த்தவனுக்கு இன்று காலை வசந்த் அனுப்பிய படம் நினைவுக்கு வந்தது.

அதில் அத்தையின் மடியில் அவள் குறுக்கே கவிழ்ந்து படுத்திருக்க மழையில் அமர்ந்து கப்பல் விட்டுக் கொண்டிருந்தனர். ஓவியம் போலிருந்த அந்த படத்திலிருந்து கண்ணை எடுக்கவே முடியவில்லை அவனுக்கு. அந்த படத்தில் இருந்த ஸ்ரீனிகாவிற்கு இருபது வயது இருக்கும். இரு புறமும் புஷ் புஷ் என்று கன்னமும், கண்களில் மின்னிய மகிழ்ச்சியும், உதட்டில் ஒட்டி வைத்திருந்த புன்னகையும் முக்கியமாய் இப்போது காணாமலே போயிருந்த அவளின் கன்னகுழி... அந்த படத்தை பார்க்கும் போதுதான் அவனுக்கு இன்னும் தெளிவாக புரிந்தது அவனை திருமணம் செய்த பின் இப்படி ஒரு சந்தோசம் அவள் முகத்தில் வரவே இல்லை.

கீழே பார்க்க அடுத்த படிவரை வெள்ளம் நின்றது. கீழ் பகுதிக்கு செல்லும் மின்சாரம் அனைத்தையும் கவனமாக நிறுத்தியிருந்தான் அஜா. அதோடு அங்கங்கே சார்ஜ்ர் லைட்டையும் போட்டிருந்தான் அஜா.

வீட்டினுள் முழங்காலுக்கு சற்று மேல் வரை தண்ணீர் நிற்கும் போலிருந்தது. அதோடு அஜாவின் புண்ணியத்தில் வோல்டஜ் குறைத்தது அங்கங்கே வைக்கப்பட்டிருந்த சார்ஜ்ர் லைட்டின் வெளிச்சத்தில் ஏரியில் இரவில் ஏற்றி வைத்த மெழுகுதிரிகள் போல் இருந்தது. சில்லென்ற குளிருடன் வெளியே கேட்ட மழை சத்தம் மடியில் ஸ்ரீனிகா என்று கௌதமுக்கு அந்த இடமே மாய லோகம் போல் தோற்றமளித்தது.

காகித கப்பலை கையில் எடுத்து வைத்து சிறிது நேரம் பார்த்தவன் மடியில் சாய்ந்திருந்த அவளிடம் கொடுத்தான். அவள் என்னவென்று பார்க்க தண்ணீரை கண்களால் காட்டினான்.

இருவருமே சேர்ந்து கப்பல் விட தொடங்கினார்கள். ஒன்றின் பின் ஒன்றாக சென்ற கப்பலுக்கு கையால் தண்ணீரை அலைந்து அலையை உருவாக்க அது வேகமாக மிதந்து சென்றதை பார்த்து மென்மையாய் சிரித்தாள் ஸ்ரீனிகா. அவள் புன்னகையை சந்தோசத்துடன் ரசித்துப் பார்த்து கொண்டிருந்தான் கௌதம். ஒரு கப்பல் திறந்திருந்த வாசல் கதவை தாண்ட ஐ என்று இருந்த இடத்திலேயே துள்ளினாள். மறு கப்பல் கடந்து செல்ல முன் கௌதம் காகிதத்தை உருண்டையாக்கி அடிக்க முயல அது இன்னும் வேகமாக கடந்தது. கண்ணீருடன் குழந்தையாய் கைகொட்டி சிரித்தாள்.

"எனக்கு மழை பயம் என்றே அம்மா என்னுடன் இது போல் கப்பல் போகும் போது தடுத்து விளையாடுவார்கள், தெரியுமா.....?" என்றாள்.

"ஹ்ம்ம்..." அவளாகவே ஒரு வழியாய் திறக்கின்றாள் சொல்லி முடிக்கட்டும் என்று காத்திருந்தான்.

சிறிது நேரம் அமைதியாய் இருந்தவள் "இன்னொரு கொஞ்ச நாள் இருந்திருக்கலாம் தானே, அவர்களை நான் இன்னும் நல்லா பார்த்திருப்பேன். என்னுடைய வாழ்கை செட்டில் என்றதும் போய்ட்டாங்க.... நான் உண்மையை அப்போதே சொல்லி இருந்தால் உயிரோட இருந்திருப்பா இல்லையா.... நான் ஒரு வருடம் கழித்து சொல்வோம் என்று......" அவள் தலையை வருடியவன் கை ஒரு கணம் அந்தரத்தில் நின்று பின் அசைந்தது.

கௌதமோ ஏன்... என்ன ஒரு வருடம்.... யோசித்து கொண்டிருந்தவனை மடியை நனைத்த கண்ணீர் நடப்புக்கு கொண்டு வர "ஸ்ரீனிஇ...." அழுத்தமாய் அழைத்தான்.

"ஹ்ம்ம்..."

“உன்...” உன் அம்மாவிற்கு என்று சொல்ல வந்து பின் "அத்தைக்கு உன்னை பிடிக்கும் தானே" என்றார் கேட்டான்.

"ஹ்ம்ம்.."

"நீ இப்படி தனியாக வந்திருந்து அழுதால் அவர்கள் ஆன்மா வருந்தாது..."

"........"

"மனதிற்கு ரொம்ப கஷ்டம் தான் இல்லை என்று சொல்ல மாட்டேன் ஆனா இப்படி அனா... யாரும் இல்லாதது போல் தனியாக வந்திருக்காதே சரியா?" அனாதை போல் என்று சொல்ல வந்து பாதியில் விழுங்கி கொண்டான்.

அவளுக்கோ யோசனை கவனமெல்லாம் அவன் பேச்சில் இல்லை. 'இப்போது அவர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்குமா? நான் சொன்ன பொய்களும் புரிந்திருக்குமா? மன்னிச்சிருங்க அம்மா' மானசீகமாய் மன்னிப்பு கேட்டாள். அவர்களுக்கு உன்னை தெரியும் இல்லையா அதனால் அவர்கள் புரிந்து கொள்வார்கள் தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டாள்.
கணங்கள் கனமாய் கடந்து செல்ல அமைதியை கீறியது அவன் குரல் "ஸ்ரீனி...." நிமிர்ந்து பார்த்த அழகில் அப்படியே அள்ளி கொள்ள உள்ளம் பரபரத்தது. அப்படியே குனிந்து அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான். திகைத்து போய் அண்ணாந்து பார்த்திருந்தவளை ஒரு புருவம் தூக்கி குறும்புடன் பார்த்தவன் அவள் இதழ்களை ஒரு விரலால் தட்டி கேட்டான் "இங்கும் வேண்டுமா?"

அவளையும் அறியாமல் ஆம் என்பது போல் தலையசைத்தாள். அவன் "ஹ்ம்ம்...." என்று சற்று குனிய வெட்கி அவன் மார்பில் முகம் புதைத்தாள். மெல்லிய சிரிப்புடன் அவள் பின் தலையை தாங்கி கண் மூடி உச்சியில் நாடி பதித்தான்.
சிறிது நேரத்தில் அவள் உடல் தளர்வது புரிய குனிந்து பார்க்க உறங்கி இருந்தாள்.

🎻🎻🎻🎻🎻
சாப்பாட்டு மேஜையில் அவள் லப்பை வைத்து வேலை செய்து கொண்டிருந்தவள் கண்கள் அடிக்கடி வாசலையே பார்த்து கொண்டிருந்தன. நேரம் நடுநிசி தாண்டியிருக்க இன்னும் வந்திருக்கவில்லை அவளது மணாளன். இன்றோடு கேரளாவில் இருந்து வந்து இரண்டு வாரமாகிவிட்டது. கடைசியாய் கிளம்பி வந்தது நினைவுக்கு வந்தது. கிட்டதட்ட அது கடத்தல்.
🎻🎻🎻🎻🎻
புரண்டு படுத்தவளுக்கு அமுங்கி கொடுத்த மெத்தை இதமாக இருக்கவே இன்னும் அதில் கன்னத்தை அழுத்தினாள். ஆனால் யாரோ அவள் அழகான உறக்கத்தை கெடுக்க கங்கணம் கட்டியது போல் அவள் கன்னத்தை வலிக்காமல் கிள்ளினார்.

"கொஞ்ச நேரம் ப்ளீஸ்..." சிணுங்கினாள்.

"சாப்பிட்டு படுக்கலாம் மணி இரன்டு...."

வெடுக்கென எழுந்ததில் முன்னே இருந்தவன் நெற்றியில் நெற்றியோடு முட்டிக் கொண்டாள். ஆவென்று நெற்றி தடவி பார்த்தவளை தானும் தடவியவாறு பார்த்திருந்தான் கௌதம். சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு தங்கள் தங்கியிருந்த வீடு இதில்லை என புரிய குழப்பத்துடன் பார்த்தாள். "எங்கே இருக்கின்றோம்...?" அவனையே கேட்டாள். அவனோ "என்னாச்சு எதாவது கனவு கினவு கண்டாயா...?" அப்பாவியாய் விசாரித்தான்.

பெட்டிலிருந்து இறங்கி அருகே இருந்த கதவை திறக்க அது பல்கனி. வெளியே சென்று பார்க்க கண் முன்னே விரிந்தது சென்னை வீட்டின் தோட்டம். மீண்டும் உள்ளே வந்தவள் தன் உடையை குனிந்து பார்த்தாள் நேற்று போட்ட அதே உடைதான். தலையை சொறிந்தவாறு கேட்டாள் " இங்கே எப்படி வந்தோம்?"

பொங்கி வந்த சிரிப்பை உதட்டுக்குள் ஓளித்தவன் "நாம் எங்கே போனோம்?" திருப்பி கேட்டான்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்த குழப்பத்தில் விழித்து கொண்டு நின்றவளை பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு "ஏதாவது கனவு கண்டாயா....?" அக்கறையுடன் கேட்டான். "வீட்டிற்குள் தண்ணி வந்ததே...?" என்றவள் எல்லாம் குழப்பமாக இருக்க முதலில் தண்ணியடித்து முகம் கழுவ நினைத்தவள் "மாற்றுடை எங்கே?" கேட்டாள்.

வாயை திறந்தால் சிரித்து விடுவோம் என்ற பயத்தில் கையால் சோபாவில் இருந்த பையை காட்டினான். அவனை பார்க்க ட்ராக் பண்ட் டீ ஷிர்ட்டுடன் நின்றான். அதில் இருந்து த்ரீ குவாட்டர் டவல் எடுத்தவள் வாஷ் ரூமை தேட அதற்கும் அவன் கையையே காட்டினான். அவள் உள்ளே செல்லும் வரை காத்திருந்தவன் போல் வாய் விட்டு சத்தமாக சிரித்தான்.

உள்ளே சென்று கண்ணாடி முன் நின்றவள் பிம்பத்தை பார்த்து கேட்டாள் "நிஜமாகவே கனவு தான் கண்டாயா?" பல் தீட்ட பிரஷை எடுத்தவள் ஏதோ தோன்ற சட்டென வலது புற தோளின் ஆடையை நீக்கி பார்த்தாள். அவன் கொடுத்த அடையாளம் சிரித்தது. பல்லை கடித்தவாறே "இவனை..." என்று கதவை திறக்க கேட்ட சிரிப்பு சத்தத்தில் மீண்டும் மூடி விட்டு அதிலேயே நெற்றியை முட்டி கொண்டு நின்றாள். வெளியே சிரிப்பு சத்தம் இன்னும் பலமாக கேட்டது.

குளித்து பிரஷ் ஆகி வந்தவள் கையை மார்புக்கு குறுக்கே கட்டியபடி தொப்பென்று சோபாவில் அமர அவனோ மீண்டும் சத்தமாகவே சிரிக்கத் தொடங்கினான். முகம் சிவக்க தலை குனிந்தாள். சிரித்தவாறே அவளருகே ஒரு காலை மடித்து அமர்ந்தவன் "ஸ்ரீனி... ஸ்ரீனி" என்று பெயரை இரண்டு தரம் சொல்லி தலையை ஆட்டிவிட்டான்.

"ஏன்...?" கேட்டாள்.

"அதுவா நீ குழம்பி நின்றது ரெம்ப கீயூட்ட இருந்திச்சு அதான்" ரசனையுடன் கூறினான்.

"எப்படி இங்கே வந்தேன்?" ஆர்வமாய் கேட்டாள்.

"அங்கே வீட்டிற்குள் வெள்ளம், நான் தோனியை வைத்து காலையில் வெளியே வருவோம் என்று தான் பார்த்தேன். ஆனால் அதற்குள் இங்கே அலுவலகத்தில் சின்ன தீ விபத்து வந்தே ஆக வேண்டிய கட்டாயம் அதான் கவர்மெண்ட் ஹெலியை வைச்சு பக்கத்தில் இருப்பவர்களை அனுப்பிவிட்டு பிரைவேட் ஹெலியை ஹையர் செய்தேன். வந்து உன்னை எழுப்பினால் என் கையையும் பிடித்து வைத்து உறங்கினாய். எழுப்ப மனமில்லை" என்று சொல்லி கொண்டிருக்க நாக்கை கடித்தாள் ஸ்ரீனிகா.

அவள் செயலில் புன்னகைத்தவன் "மொட்டை மாடியில் நின்ற ஹெலிக்கு உன்னை தூக்கிட்டு வந்தேன். அப்புறம் இங்கே மொட்டை மாடியில் இருக்கும் ஹெலி பாட்டில் இருந்து இந்த அறைக்கு தூக்கி வந்தேன். இது தான் நீ இங்கே வந்த கதை. ஆஹ் நாம் வந்த போது ரூம் கிளீன் பண்ணல அதால கெஸ்ட் ரூமில் படுக்க வைத்தேன் இனி போகலாம்" என்றான்.

எந்த காரணத்திற்காகவும் அவனில்லாமல் அவன் அறைக்குள் யாரும் நுழைய கூடாது என்பது உத்தரவு. அவனில்லாமல் அவள் மட்டும் இருக்கும் நாட்களில் அவள் இருக்கும் போது வந்து செய்து போவார்கள். மணமாகி வந்ததில் இருந்து இருவரும் இல்லாமல் போன நாள் இந்த சில நாட்கள் தான்.

"அப்ப அது கனவில்லையா...?" என்றவள் "எத்தனை மணிக்கு வந்தோம்" என்றார் கேட்டாள்.

"விடிய எட்டு மணி இருக்கும். என்ன கனவு?" என்றவனிடம் "அதுவா... ஹெலியில் பறந்தது போல்.... ஹிஹிஹி" அசடு வழிய சிரித்தாள். இப்படியா தூங்கி வழிவாய் மனம் காறி துப்பியது.

"சரி சாப்பிடு.." என்று கூறவும் போன் அடிக்கவும் சரியாய் இருக்க எடுத்து பேசினான் "சரி வருகின்றேன்" என்றவன் ஸ்ரீனிகாவிடம் திரும்ப "இது இருவருக்கும் தாராளாமாய் போதும் சாப்பிட்டு விட்டு போங்கள்" என்றாள்.

அவனுக்கு எடுத்து வைத்தவள் கேட்டாள் "விபத்தினால் சேதம் அதிகமா....?"

"இல்லை அனைத்தும் இன்சூரன்ஸ் செய்தது அதனால் இழப்பு என்று அதிகமாக எதுவும் இல்லை அப்படியே விட்டால் சில ஏற்றுமதிக்கான நேரம் பிந்திவிடும் அதனால் நஷ்டமாக கூடும். இரு வாரம் மேலதிக நேர வேலை பார்க்க வேண்டி வரும்" என்றவாறு வேகமாக சாப்பிட்டுவிட்டு சென்றுவிட்டான்.

‘அவசரப்படாதே’ என்று எச்சரித்த மூளையை அலட்சியம் செய்து ‘மாறிவிட்டான் இல்லையா?’ மனம் கூறியது. ‘மீட்டிங் அனைத்தும் விட்டுவிட்டு என்னுடன் கேராள வந்தான். நேற்று இரவு கூட என்னைத் தேடி வந்து...’ சப்பைக் கட்டுகட்டிய மனதிற்கு நினவுபடுத்தியது மூளை அதற்கு முதல் நாள்தான் உன்னை உதறித் தள்ளிவிட்டான்’.

‘அதற்குதான் மன்னிப்புக் கேட்டுவிட்டனே’.

‘இத்தனை பட்டும் திருந்துதா பார், இன்னொரு தரம் வலிக்குது என்று வா அப்போது தெரியும். ஏதாவது காரணம் இருக்கும். முட்டாள்தனமாய் முடிவேடுக்கதே’ மூளை எச்சரித்தது. அப்படியெல்லாம் இல்லை மூளையின் எச்சரிக்கையை தூக்கி மூலையில் போட்டவள் மனம் அன்று முழுவதும் லேசாய் இருந்தது. தோட்டத்தில் துள்ளலுடன் நடை பழகியவளை, வள்ளியும் வேலனும் சந்தோசமாய் பார்த்தனர்.

கௌதம் கம்பனியால் வந்த போது நேரம் பத்தைத் தாண்டியிருந்தது. முழுநிலவில் நீருற்றின் அருகே முகம் கொள்ளாத புன்னகையுடன் அமர்ந்திருந்த ஸ்ரீனிகா தண்ணீரைத் தெளித்து விளையாடியவாறே பாட அவள் குரல் அந்தத் தோட்டத்தை நிறைத்தது.

சிட்அவுட்டில் இருந்த சோபா போன்ற ஊஞ்சலில் அமர்ந்தவன் கைகள் இரண்டையும் விரித்து தலையைப் பின்னே சாய்த்து, கண்மூடி அவள் குரலில் கரைந்தான்.

ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடு தான்
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்
நீல வான் கூட நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா
ஓயாமல் உன்னைக் கொஞ்சும்
ஊதாப்பூ வண்ணம்


அதே உற்சாகத்துடன் உள்ளே வந்தவளிடம் தேநீரைக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு துள்ளலுடன் லப்பையும் எடுத்து கொண்டு தன் அறைக்கு சென்றாள். ஏதாவது சிறு வேலையைச் செய்வோம் என்று எண்ணித் திறக்க அதில் கௌதமின் மெயிலும் வாட்ஸ் ஆப்பும் திறந்திருந்தது. ‘இது அவனது மெயில், அவன் அனுமதியின்றி பார்ப்பது இங்கிதமில்லை’ மூளை எச்சரித்தது. ஒரு கணம் கண் மூடி யோசித்தவள் ‘அஹ், புருஷன் பொண்டட்டிக்குள்ள என்ன இங்கிதம் வேண்டி கிடக்கு’ என்ற ஒரு அலட்சியப் பாவனையுடன் தலையை வெட்டியவாறே பார்த்தவள் கண்களில் நீர் நிரம்பியது.

வாய் "அனைத்திற்கும் இது தான் காரணமா....?" என்று கேட்டது.

‘இன்னும் எத்தனை தரம் தான் அவனை நம்புவாய்? ஆனால் உன்னைப் போல் முட்டாளை எத்தனை தரம் வேண்டுமானாலும் ஏமாற்றலாம்’ இரக்கமே இன்றி மனதை கேலி செய்தது மூளை.

ஏமாற்றம் கூரிய முனையால் இதயத்தை குத்தி கிழித்தது.
 
Status
Not open for further replies.
Top