All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"கல் நெஞ்சே கசிந்துருகு " கதைப் பகுதி

Status
Not open for further replies.

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"வேற என்னப் பண்ண முடியும். சாப்டு தான ஆகனும். எல்லாம் தலைவிதி" அவன் சலிப்போடு சொல்லியதும் , இவள் கோபம் கொண்டதும், அவன் சமாதானம் செய்ததும் நினைவுக்கு வர தோசை தொண்டைக்குள் இறங்க மறுத்தது. கண்களில் கண்ணீர் வழிய சாப்பிடாமல் எழுந்து விட்டாள்.

கண்ணீரோடு அவளது அறைக்கு செல்வதைப் பார்த்த அவளது பெற்றோருக்கும் உணவு உள்ளே செல்லவில்லை. அறைக்குள் சென்றவள் அவனுடைய புகைப்படத்தை பார்த்தேன் அழுதுக் கொண்டிருந்தாள்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3

ராமின் நினைவலைகள் இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன் சென்றது....

"ராமையா.... சின்னதம்பி எங்க. சாப்டானா"

"இல்லங்கய்யா.. சாப்ட மாட்டேனு சொல்லிடாங்க. ரூம்ல தாங்கய்யா இருக்காங்க"

"சரி நீங்க போங்க. நான் பாத்துக்குறேன். " என்ற படி மாடிப்படிகளில் ஏறினார் ராமின் தந்தை.

"ஐயா... ஒருநிமிஷம்... சொல்றேனு தப்பா நினைக்காதீங்க. அம்மா போனதுலேர்ந்து நீங்களும் , தம்பியும் இப்படி இருக்குறது மனசுக்கு கஷ்டமா இருக்குங்கய்யா. ஓடி ஆடி திரிஞ்சப் புள்ள இப்படி ஒரே ரூம்ல அடஞ்சு கிடக்குறத பாக்க முடியலங்கய்யா. அஞ்சு வயசு பையன் இப்படி சாப்படாம , யார்கிட்டயும் பேசாம இருக்குறது நல்லது இல்லங்கய்யா. உங்களுக்கு தெரியாதது ஒண்ணுல்ல . ஏதோ எனக்கு தோணுனத சொன்னேன். தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க" என்றார் அந்த விசுவாசமான பணியாளர்.

" என்ன ராமையா. நீங்களும் இந்த வீட்ல ஒருத்தரு தான உங்களுக்கு இல்லாத உரிமையா. நீங்க சொல்றது எனக்கு புரியுது. ஆனா என்னப் பண்றது. இந்த நாலு மாசத்துல பத்து பேர வேலைக்கு வச்சுட்டேன் இவன பாத்துக்குறதுக்கு. யார்கிட்டயும் ஒட்ட மாட்றானே. இந்த வயசுலே இவ்ளோ கோபப்படறான். எல்லாரும் பயந்து ஓடறாங்க. நான் என்னப் பண்ணட்டும். "

" ஐயா காலைல நம்ம வீட்டுக்கு ஒரு பொண்ணு வீட்டு வேல கேட்டு வந்திருக்கு. கையில வேற ஒன்ற வயசு குழந்தைய வச்சிருக்க. புருஷன் விபத்துல இறந்துட்டானாம். பாவமா இருந்துச்சுங்கய்யா. அதான் உங்கள பாத்துட்டுப் போக சொல்லி உக்கார வச்சுருக்கேன்"

"அப்படியா. அவங்களுக்கும் , குழந்தைக்கும் சாப்ட ஏதாவது கொடுத்தீங்களா"

"கேட்டேங்கய்யா. ஆனா வேணாம்னு சொல்லிட்டு"

"சரி அவங்கள வர சொல்லுங்க" என்றவர் படிகளிலிருந்து இறங்கி ஹாலில் அமர்ந்தார்.

சிறிது நிமிட இடைவெளியில் எந்த வித அலங்காரமுமின்றி, கனிவான முகத்துடனும் , நேர்க்கொண்ட பார்வையுடனும் , கையில் குழந்தையுடன் ஒரு பெண் ராமையாவை பின் தொடர்ந்தாள்.

"உன் பேரு என்னம்மா"

"கமலம்"

"உன் பையனாமா. ரொம்ப அழகா இருக்கான். ராமையா சொன்னாருமா எல்லாத்தையும். ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கியேமா. கடவுள் இந்த வயசுல உனக்கு கஷ்டத்த கொடுத்திருக்க கூடாது. வேறக் கல்யாணம் பண்ணிக்கலாம்ல. எப்படிமா தனியா வாழப் போற"

சின்னதான விரக்திப் புன்னகையுடன் பதிலளித்தாள் அவள் " தப்பா நினைக்காதீங்க. நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணல. உங்களுக்கும் வயசு அதிகம் இல்லயே. அம்மாவ மறக்க முடியாம தான வாழறீங்க. அது மாதிரி தான் நான் அவர் கூட வாழ்ந்தது கொஞ்ச நாள்னாலும் என்னால அவர மறக்க முடியாது. இப்படியே வாழ்ந்துருவேன்"

அவளுடைய பதில் அவரை திருப்திப்படுத்த " உன்ன பாத்தா என்னோட தங்கச்சி மாதிரி தாம்மா இருக்கு. என் பையன் இந்த நாலு மாசமா பைத்தியம் மாதிரி இருக்கான். உன்னால அவன மாத்த முடியுமா" என்று ராமைப் பற்றி எடுத்துரைத்தார்.

"அவர் அன்புக்கு தாங்கய்யா ஏங்குறாரு. என்னால முடிஞ்ச வரைக்கும் அவருக்கு அன்பு காட்ட நான் தயார இருக்கேங்கய்யா"

"அவன் பழயபடி மாறுனா போதுமா. இன்னும் அவன் சாப்டல. அவன சாப்பிட வைக்குறியாமா." குரலில் ஏக்கம் நிறைந்திருந்தது.

"சரிங்கய்யா" என்றவள் ராமையாவிடம் கேட்டுக் கொண்டு ஒரு தட்டில் உணவை எடுத்துக் கொண்டு ராமின் அறைக்கு சென்றாள்.

அறையினுள் பொம்மைகள் நிறைந்திருந்தது. அதில் உயிர் கொண்ட பொம்மையாய் அமர்ந்திருந்தான் ராம். பார்ப்பவர்களை மயக்கும் எழில் கண்ணனைப் போல இருந்தான். பார்த்த நொடிகளிலிலே கமலத்திற்கு ராமை பிடித்து விட்டது. தன் கரங்களில் தவழும் குழந்தையைப் போல ராமும் தனது குழந்தை என்ற எண்ணம் தோன்றியது.

மெல்ல அவனருகே சென்றவள் தட்டினை அவன் முன்பு வைத்து

"ராம்குட்டி என்னப் பண்றாங்க. சாப்டாம இருக்காங்களா. ராம் நல்ல பையன் தான அதுனால இப்ப எல்லாத்தையும் சமத்தா சாப்டுவாங்களாம்" என்றாள்.

புதியவளை அறைக்குள் கண்டதும் முதலில் கோபம் கொண்ட ராம், அவளுடைய ராம்குட்டி என்ற அழைப்பில் அமைதியானான். அவனுடைய அம்மாவைத் தவிர வேறு யாரும் அவனை அப்படி அழைத்ததில்லை. எல்லோரும் சின்னதம்பி, சின்னய்யா என்றே அழைப்பார்கள்.

"என்ன செல்லம் பாக்குறீங்க. சாப்டுறீங்களா. ஊட்டி விடவா"

அவனுள் மீண்டும் கோபம் தலைத்தூக்க பக்கத்திலிருந்த பொம்மையை உடைத்தவன் " வேணாம். நீ போ" என்று கத்தினான். அவனுடைய கரத்தில் அந்த வீடு முழுக்க எதிரொலித்தது.
அதில் அரண்டு போன குழந்தை அழ ஆரம்பித்தது.

இதுவரை கமலத்தை மட்டுமே பார்த்த ராம் , அவளுடைய சேலை முந்தானையைப் பிடித்து அழுது கொண்டிருக்கும் ஸ்ரீ யை பார்த்தான்.

அதுவரை இருந்த கோபம் மறைந்து போக "ஏன் அழுவுறான்"

"நீங்க கோபமா இருக்கீங்கல்ல அதான் பயந்துட்டான்"

கமலத்தின் பதிலை கேட்டு ராமின் முகம் சோகமானது. அவனுடைய முகத்திலிருந்து என்ன உணர்ந்தாளோ சட்டென ஸ்ரீ யை ராமிற்கு அருகில் விட்டுவிட்டு
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஸ்ரீக்குட்டி அம்மாவுக்கு கொஞ்சம் வேல இருக்குமா. அதனால சமத்தா அழமா இங்கயே இருக்கீங்களா. வேலய முடிச்சிட்டு அம்மா வந்துடுறேன்" சொல்லிக்கொண்டே ஸ்ரீ யின் அழுகையை கண்டு கொள்ளாமல் அந்த அறையை விட்டு சென்றாள்.

ஸ்ரீக்கு ஒன்றும் புரியவில்லை. அழுகை அதிகமாக வந்தது. அதுவும் ராமை ப் பார்த்தால் இன்னும் அதிகமாக வந்தது. அவன் அழுவதைப் பார்த்த ராமால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. மெதுவாக எழுந்து ஸ்ரீயிடம் வந்தவன்.

" உன் பேரு ஸ்ரீ யா. ஏன் அழற. அழாத. நான் அடிக்க மாட்டேன்." என்று தனக்கு தெரிந்தளவு ஸ்ரீ யை சமாதானம் செய்தான். ஸ்ரீ யின் அழுகை நிற்காமல் இருக்கவும் "இந்தா என் பொம்ம நீ விளாடு (விளையாடு) " என தன்னுடைய பொம்மைகளை ஸ்ரீ யிடம் கொடுத்தான்.

அதுவரை அழுதவன் பொம்மைகளை பார்த்ததும் அழுகையை நிறுத்தினான். மேலும் தனக்கு பொம்மைகளை தந்த ராமை பார்த்து புன்னகை செய்தான். ராம் ஸ்ரீ விளையாடுவதை ரசித்துக் கொண்டிருந்தான். அழகாய் கொளு கொளுவென்றிருந்த ஸ்ரீ யை மிகவும் பிடித்திருந்தது.

அரைமணி நேரம் கடந்திருக்கையில் ஸ்ரீ விளையாடுவதை நிறுத்திவிட்டு சோகமாய் அமர்ந்திருந்தான்.

"என்னாச்சுடா விளயாடுல. ஏன்டா சோகமா இருக்க" ராம் பதட்டத்துடன் கேட்டான்.

"மம்மு.... மம்மு " என்ற படி தட்டிலிருந்த இட்லியை காண்பித்தான். அவனின் வாய்மொழியில் புரியாதது அவனது உடல்மொழியில் புரிந்தது ராமிற்கு.


"பசிக்குதாடா குட்டி இரு." என்று சற்று முன்பு கமலம் தனக்கு கொண்டு வந்த உணவினை தனது பிஞ்சுக் கரங்களால் ஸ்ரீ யின் செப்பு வாய்க்குள் ஊட்டினான். சாப்பிட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ என்ன நினைத்தானோ, தனது பூந்தளிர் கரங்களால் உணவை எடுத்து பாதி கீழே சிந்த செய்து மீதியை ராமிற்கு தந்தான்.


இவர்களின் பாசமழையில் பாதியுணவு கீழே இறைந்திருந்தாலும் இருவரது வயிறுமே நிறைந்திருந்தது. மறைந்திருந்து அதை பார்த்துக் கொண்டிருந்த ராமின் தந்தைக்கும் , ஸ்ரீ யின் தாய்க்கும் மனம் நிறைந்தது.

அன்றிலிருந்து இன்று வரை ஸ்ரீ ராமிற்கு இன்றியமையாதவனாக மாறி விட்டான். உண்ணும் போதும், உறங்கும் போதும், விளையாடும் போதும் ஸ்ரீ உடனிருக்க வேண்டும் ராமிற்கு.

ஸ்ரீ யை ஏற்றுக்கொண்ட ராம் காலப்போக்கில் கமலத்தை தன்னுடைய தாயாக ஏற்றுக் கொண்டான். வருடங்கள் கடந்தன. ராம் படித்த பள்ளியிலேயே ஸ்ரீயும் படித்தான். அவனை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டுமென்ற கமலத்தின் வாதம் எடுபடவில்லை.

ஸ்ரீ யை தன்னுடைய இன்னொரு மகனாகவே நினைத்தார் ஈஸ்வர் ( ராமின் தந்தை). ஆனால் கமலம் தன்னுடைய நிலையை மறக்கவில்லை. அந்த மாளிகையின் பின்புறம் இருந்த சிறிய வீட்டில் தங்கினார்.

ஸ்ரீக்கு நினைவு தெரியும் வரை , அவன் தான் ஒரு ஏழைத் தாயின் பிள்ளை என்பதை அறியவில்லை. ஆனால் சுயமாக சிந்திக்கும் திறனை அவன் அடைந்தவுடன் கமலம் உண்மைகளை எடுத்துரைத்தார்.

அன்றிலிருந்து ஸ்ரீ யும் தன் தாயுடன் அந்த சிறிய வீட்டில் தங்க ஆரம்பித்தான். ராமின் பிடிவாதம் ஸ்ரீ யிடம் வேலை செய்யவில்லை. பள்ளி படிப்பு முடிந்ததும் ஸ்ரீ எம்.பி.ஏ படித்தான். இப்பொழுது ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான்.

ராம் ஸ்ரீ யோடு மட்டுமே தன் உலகத்தை சுருக்கி கொண்டான். அவன் வாழ்வில் ஸ்ரீ, அப்பா, கமலம் அம்மா என மூவரைத் தவிர யாரும் இல்லை. ஏன் நட்பு கூட கிடையாது. இவர்களைத் தவிர வேறு யாருடனும் கலகலப்பாக பேச மாட்டான். யாருக்கும் அடங்கவும் மாட்டான்.

ஸ்ரீ யின் மேல் தன்னுடைய உயிரையே வைத்திருந்தான். கமலத்தின் விருப்பத்திற்காக ஏழைகளுக்கு கஷ்டப்பட்டு நியாயம் வாங்கித் தருகின்றான்.

ஈஸ்வர் தன்னுடைய சொத்துக்களை இரண்டு பாகமாக பிரித்து ஸ்ரீ, ராம் இருவரின் பெயரிலும் எழுதி வைத்துவிட்டார். இனிமையான நாட்களை மட்டுமே அந்த குடும்பம் கண்டு கொண்டிருந்தது.

எங்கிருந்தோ கேட்ட தொலைப்பேசியின் ஒலியில் நினைவுக்கு வந்தான் ராம். தொலைப்பேசியில் ஸ்ரீ யின் பெயரைக் கண்டவுடன் புன்னகை வந்தது ராமிற்கு.

"சொல்லுடா. மீட்டிங் எப்படி போச்சு"

"இல்லணா. இனிமேல் தான் ஸ்டார்ட் ஆகப் போகுது. அப்புறம் கங்கிராட்ஸ் அண்ணா. நியூஸ் பாரத்தேன். ஆபிஸ்ல ஒரே பெரும போ. ஓவரா மரியாத தராங்க. ஏன்னா நான் உன்னோட தம்பியாம்"

"ம்ம்ம்..... அப்படியா என்ஜாய் பண்ணு"

"பண்ணலாம்... பண்ணலாம். மீட்டிங் முடியட்டும். அண்ணா நீங்க கொஞ்சம் பத்திரமா இருங்க"

"ஸ்ரீ"

"சொல்லுங்க அண்ணா"

"வெளியே எங்காவது போகலாமாடா"

"எப்பப் போறோம்ணா"

"நீ ப்ரீனா இப்பவே போகலாம். ஆனா உனக்கு மீட்டிங் இருக்குல. முடிஞ்சோன போகலாம்"

"சரிண்ணா. மீட்டிங் லன்ச்குள்ள முடிஞ்சுடும். நான் ரெடியாருக்கேன். நீங்க வரீங்களா இல்ல நானே வரட்டுமா"

"நானே வரேன்டா. நம்ம சீனி அங்கிள் கூட ஏதோ பேசனும்னு சொன்னாரு. அப்படியே அவரையும் பாத்த மாதிரி இருக்கும்"

"ஓ.கேணா..... பை" என்ற படி அழைப்பைத் துண்டித்தான்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அலைபேசியின் தொடர்பு துண்டிக்கப்பட்டதும் ராமின் முகம் சிந்தனையைக் காட்டியது. அதை யோசித்தவாறே தனது தந்தையிடமும் , தாயிடமும் விடைப் பெற்றுக் கொண்டு தனது தம்பியின் அலுவலகம் நோக்கி காரைச் செலுத்தினான் ராம்.

ஸ்ரீ யின் அலுவலகத்தை அடைந்ததும் , ஸ்ரீ யை அலைபேசியில் தொடர்பு கொண்டான்.

"சொல்லுங்கண்ணா. வந்துட்டிங்களா. மீட்டிங் முடிஞ்சுடுச்சு. ஒரு டென் மினிட்ஸ் வைட் பண்ணுங்கணா. நான் வந்துடுறேன்"

"..................."

"ஓ.கேணா. நீங்க அந்த மரத்துகிட்டயே நில்லுங்க. நான் வந்துடுறேன்"

ஸ்ரீ யின் பதிலைப் பெற்றுக் கொண்டவன், ஸ்ரீ குறிப்பிட்ட மரத்திற்கு அருகில் காரை நிறுத்திவிட்டு, கண்ணாடிகளை இறக்கி விட்டுவிட்டு அமர்ந்திருந்தான். அவனது கவனத்தை கலைத்தது ஒரு இளம்பெண்ணின் குரல்.


"என் செல்லம்ல. சாரிப்பா. கொஞ்சம் டைம் ஆகிட்டு. ரொம்ப நேரமா வைட் பண்றீயா" கெஞ்சலாக கேட்டது.

அந்த பேச்சைக் கேட்டவுடன் காதலர்களுக்குள் நடைபெறும் உரையாடல் என்று எண்ணினான் ராம். அந்த பெண்ணின் பேச்சிற்கு மறுபுறமிருந்து பதிலில்லை. கோபமோ என்றெண்ணினான்.

"ஓ.கே. சாப்டலாமா. இன்னைக்கு ஹாஸ்டல்ல உனக்கு பிடிச்ச ஆம்லெட் தந்தாங்க. உனக்கு ரொம்ப பிடிக்கும்ல அதான் கொண்டு வந்தேன். சாப்டுபா ப்ளீஸ்"

ராமின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன. 'பெண்கள் எப்பவும் இப்படிதானா' என்று நினைத்தான்.

"பொறுமையா சாப்பிடு. அப்றம் இந்தா உனக்கு பிடிச்ச பிஸ்கட் இதையும் சாப்பிடு" என்றவள் இடைவெளிவிட்டு "டேய் டைம் ஆயிட்டு நான் போறேன்" என்ற படி நடந்து செல்லும் ஓசையை அவளுடைய கொலுசொலி கூறியது.

அவள் சென்று விட்டாள் என ராம் நினைக்க, கொலுசொலி மீண்டும் கேட்டது.

"மறந்துட்டேன்" என்று விட்டு அவள் முத்தமிடும் ஓசைக் கேட்டது. பின் "எனக்கு" "ம்ம்ம் போதும் போதும் ரொம்ப பாசந்தான். பை" என்று விட்டு ஓடினாள்.

அதுவரை புன்சிரிப்புடன் நின்றிருந்த ராம் மனதினுள் 'என்ன பெண்ணிவள் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்வதென்று தெரியாது......... சை.... என்ன ஜன்மமோ' என்று நினைத்தவன் அவளுடைய காதலனை ஒரு பிடி பிடித்துவிடும் வேகத்தோடு குரல் கேட்ட மரத்தடியை நெருங்கினான்.

அங்கே பார்த்தவனுக்கோ அதிர்ச்சி. ஒரு நிமிடம் திகைத்து நின்றான். மறுபடியும் அவன் இதழ்களில் புன்னகை.

ஏனெனில் அந்த மரத்தடியில் அந்த பெண் கொடுத்த ஆம்லெட்டையும், பிஸ்கட்டையும் தின்று கொண்டிருந்தது ஒரு நாய்க்குட்டி.

நல்ல கொழு கொழுவென , வெள்ளை நிறத்தில் அழகாய் இருந்தது நாய்க்குட்டி. ஆர்வமும் உண்டு கொண்டிருந்தது புதியவனை கண்டதும் பயத்தில் மிரண்டது.

அதன் பயத்தை பார்த்தவனது முகம் கனிவானது. மெல்ல திரும்பி அந்த பெண் சென்ற திசையை பார்த்தான். தொலைவில் நீல நிற சுடிதார் அணிந்த பெண் போவது தெரிந்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனது புருவம் யோசனையாய் சுருங்கியது..
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4

ஏனெனில் அவள் சென்றது ஸ்ரீ யின் அலுவலகத்திற்கு. அதிலும் அவள் அலுவலகத்தின் வாயிலை நெருங்குகையில் வெளியே வந்த ஸ்ரீ அவளிடம் ஏதோ பேசினான்.ஸ்ரீ யின் முகம் மட்டுமே ராமிற்கு தெரிந்தது. அந்த பெண் ராமிற்கு முதுகு காட்டி நின்றிருந்தார்.
ஸ்ரீக்கு கைகொடுத்தவள் , அவனிடம் விடைபெற்று அலுவலகத்தின் உள்ளே சென்று விட்டாள். ஏனோ ராமிற்கு கோபம் வந்தது. ஸ்ரீ அவனை நெருங்கி வந்ததைக் கூட ராம் உணரவில்லை.


"வாங்கண்ணா போகலாம்" ஸ்ரீ அழைத்தது அவனது செவிகளை தீண்டவில்லை.

"அண்ணா..... அண்ணா" ஸ்ரீ ராமை உலுக்கிய பிறகே சுயநினைவிற்கு வந்தான்.

"ஹான்..... ... வாடா"

"என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க அண்ணா. நான் கூப்டது கூட தெரியாம"

"ஒண்ணுமில்லடா"

"என் கிட்ட சொல்ல மாட்டிங்களா. சொல்லுங்க"

"அது இருக்கட்டும். உன்னோட ஆபிஸ் வாசல்ல யார்கிட்ட பேசிட்டு இருந்த"

"என்னோடு அஸிஸ்டெண்ட் அதோட என்னோட பிரண்டு"

"ரொம்ப க்ளோஸ் போல"

"ஆமாண்ணா. இந்த ஆபிஸ்ல எனக்கு இருக்குற ஒரே பிரண்டு "

"இதுவரைக்கும் ஏன் என் கிட்ட சொல்லல"

"அவ இப்ப தான் என் கிட்ட பேசுறா. அவ ஒரு டிப்ரண்ட் கேரக்டர் அண்ணா. அதான் சொல்லல"

"டிப்ரண்ட் கேரக்டர்னா??"

"அண்ணா.... இதை கோர்ட் இல்ல. ஏன் இவ்ளோ கேள்வி."

"இல்லடா சும்மாதான்"

"ம்ம்... சொல்ல மறந்துட்டேனே. கை கொடுணா" என்று தமையனது கரம் குலுக்கியவன்.
"கங்கிராட்ஸ் அண்ணா. கனியும் உனக்கு விஷ் பண்ணதா சொல்ல சொன்னா"

கனி அந்த பெயரை ஒரு முறை மனதில் சொல்லிப் பார்த்தவன் ஸ்ரீ யிடம் "கனியா.... அது யாரு"

"அண்ணா... இவ்ளோ நேரம் அவளப்பத்தி தான சொன்னேன். ஓ... பேர சொல்லைல.. அவ பேரு கனிமொழி. நாங்க கனினு கூப்டுவோம்"

ஸ்ரீ சொன்னதைக் கேட்டவாறே திரும்பி நாய்க்குட்டியைப் பார்த்தான். அவனுடைய பார்வையை தொடர்ந்த ஸ்ரீ யும் அதைப் பார்த்தவுடன்,
"டேய் குட்டி..... சாபடுறீங்களா... அக்கா தந்தாங்களா" என கிட்டே சென்று கொஞ்சினான்.

"அவளுக்கு இந்த நாய்க்குட்டிய ரொம்ப பிடிக்கும் அண்ணா. டெய்லி இதுக்கு சாப்பாடு , பிஸ்கட்னு வாங்கி தருவா. நல்ல வேல ஹாஸ்டல்ல இதை allow பண்ண மாட்டாங்க. இல்லனா அவ ரூம்லயே தங்க வச்சிருப்பா . அவ்ளோ பிடிக்கும்"

அவனுடைய பேச்சை கேட்டவன் தானும் நாய்க்குட்டி அருகே சென்று அதன் தலையை தடவிக் கொடுத்தான். முதலில் மிரண்டாலும் அடுத்து ஏதோ மந்திரத்திற்கு கட்டுண்டது போல அமைதியாய் இருந்தது அது.

சற்று நேரம் இதே நிலை நீடிக்கவும் நாய்க்குட்டியைத் தூக்கி மூக்கோடு மூக்கு உரசி விளையாடினான் ராம். அதுவும் ராமின் முகத்தை தன் நாவால் நக்கி அன்பைக் காட்டியது.

"அண்ணா வெளியில போகணும்னு சொன்னீங்க"

"ஆமாடா.... போகலாம்" என்று நாய்க்குட்டியை கீழே விட்டான். காரை நோக்கி அவன் செல்கையில் அதுவும் பின் தொடர்ந்தது. அவனது கால்களை உரசிக் கொண்டு நின்ற அதனை குனிந்து கரங்களில் ஏந்தினான்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சற்று நேரம் இதே நிலை நீடிக்கவும் நாய்க்குட்டியைத் தூக்கி மூக்கோடு மூக்கு உரசி விளையாடினான் ராம். அதுவும் ராமின் முகத்தை தன் நாவால் நக்கி அன்பைக் காட்டியது.

"அண்ணா வெளியில போகணும்னு சொன்னீங்க"

"ஆமாடா.... போகலாம்" என்று நாய்க்குட்டியை கீழே விட்டான். காரை நோக்கி அவன் செல்கையில் அதுவும் பின் தொடர்ந்தது. அவனது கால்களை உரசிக் கொண்டு நின்ற அதனை குனிந்து கரங்களில் ஏந்தினான்.

"ஸ்ரீ.... பின்னாடியே வருதுடா. பாக்க பாவமா இருக்கு. நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போலாமா. உன்னோட பிரண்டு கிட்ட கேக்குறியா"
கோர்ட்டில் சிங்கமாய் கர்ஜிக்கும் தன்னிடமும் , வீட்டில் உள்ளவர்களிடம் பேசும் போது குழந்தையாய் மாறும் விந்தையை நினைத்து ஸ்ரீ புன்னகைத்தான்.

"ஏன்டா சிரிக்குற. பதில் சொல்லுடா"

"ம்ம்.... கொண்டு போலாம்ணா. அவ கிட்ட நான் பேசிக்கிறேன்" என்றவன் காரில் ஏறி அமர்ந்தான்.

"தேங்க்ஸ்டா" என்றவன் காரின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து அவனது மடியின் மேல் ஒரு டவலை வைத்து அதில் நாய்க்குட்டியை அமர வைத்தான். ஒரக்கண்ணால் ராமின் செய்கைகளை பார்த்த ஸ்ரீ எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான்.

அதன் பிறகு தியேட்டர், மால் என்று எங்கு சென்ற போதும் அந்த நாய்க்குட்டியை கையிலேயே தூக்கி கொண்டு திரிந்தான். பலரது பார்வைகளும் ராமை ஆச்சரியமாக தழுவின. பத்திரிக்கையாளர்களால் சில புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. ஆனால் ராமோ யாரையும் கண்டு கொள்ளவும் இல்லை, அதை கீழே விடவும் இல்லை.

எல்லாம் முடிந்து வீட்டிற்கு திரும்பியவுடன் ராம், "ஸ்ரீ உன் பிரண்ட் கிட்ட பேசுடா"
ராமை பார்த்துக்கொண்டே தனது அலைபேசியை எடுத்தவன் கனியைத் தொடர்பு கொண்டான்.
"கனி.... நான்தான். உன்னோட நாய்க்குட்டிய காணும்னு தேடுனியா"
"........."
"ஹேய்.... இரு இரு. அது பத்ரமா என்கிட்ட தான் இருக்கு. அதுக்குள்ள ஏன் டென்ஷன் ஆகுற. என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்"
"....."
"திடிர்னு பாசம் வந்துச்சு அதான்."
"....."
"சரிமா தாயே பத்ரமா பாத்துக்குறேன். பொண்ணக் கட்டிக் குடுக்கறவன் கூட இவ்ளோ அட்வைஸ் பண்ண மாட்டான் அவன் மாப்ளைக்கு. நீ ரொம்ப பண்ணுற"
"....."
"தெரியாம சொல்லிட்டேன் தாயே! என்ன விட்டுடு. பை"
"போதுமாணா. அவ ஒத்துகிட்டா"
"ம்ம்ம்..... தேங்க்ஸ்டா" என்று புன்னைகையுடன் அதை தூக்கிக் கொண்டு தன்னுடைய அறையை நோக்கி சென்றான்.

இரவு தன்னுடைய அறையில் அன்று நடந்தவைகளை நினைத்துக் கொண்டிருந்தான் ராம்.அவனுடைய அருகில் பெட்டில் நன்றாக உறங்கி கொண்டிருந்தது நாய்க்குட்டி. அதனை வருடியவன் நினைவோ கனியை சிந்தித்தது.

நல்ல பெயர் பெற்ற , புத்திசாலி என்று எல்லாரும் தன்னை புகழுகையில் அப்பாவி பெண்ணைத் தவறாக கணித்த தன் அறிவை எண்ணி நகைத்தான்.
அதிலும் அவள் முத்தமிட்டு எனக்கு என்ற கேட்டப் பிறகு முத்தத்தின் ஓசை கேட்கவில்லையே என்று எண்ணியதை நினைக்கையில் அவனுக்கே சிரிப்பாக இருந்தது. நாய்க்குட்டி அவளை நக்கி கொடுத்திருக்கும் என்பதை இப்போது தானே சிந்திக்கிறான்.

நானெல்லாம் என்ன வக்கீல் என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டிருந்தவன்,' என் மேல மட்டுமா தப்பு. அவளும் தான் நாய்க்கிட்ட பேசுற மாதிரியா பேசுனா. லவ்வர் கிட்ட பேசுற மாதிரி தான பேசுனா என்று அவள் மீது குற்றம் கொண்டான். எது எப்படியோ ஏதோ ஒன்று கனியின் குரலை அவனுடைய ஆழ் மனதில் பதிய செய்தது.
மறுநாள் காலையில்.....

இத்தனை நாள், ஏன் இரண்டு வருடமாக படிக்கும் கல்லூரி என்றாலும் இன்று அனைவரின் பார்வையும் வித்தியாசமாய் , இல்லையில்லை அச்சம் அல்லது மரியாதையாக பார்ப்பது போல் தோன்றியது மதிக்கு. தூரத்தில் தினேஷ் வந்துக் கொண்டிருந்தான். கைகளில் கட்டுப் போடபட்டிருந்தது. மதி பயந்து கையிலிருந்த நோட்டை அழுந்தப் பற்றினாள்.

தினேஷ் இவளைக் கண்டவுடன் அந்த திசைப் பக்கமே திரும்பாமல் தலை குனிந்துக் கொண்டே சென்றான். அவனது மனம் மட்டும் கொதித்துக் கொண்டிருந்தது. இதற்கெல்லாம் காரணம் ஆதிதான் என்றவளின் மனம் நேற்றைய நிகழ்வுகளை சிந்தித்தது.

வகுப்புகள் முடிந்து பெல் அடித்ததும் அனைவரும் சென்றுவிட நிவியும், மதியும் மட்டுமே வகுப்பில் இருந்தனர்.

"என்னடி வரேனு சொன்னான் வரல"

"தெரியலடி. என் கிட்ட அப்படித் தான் சொன்னான். வினோத் வந்தா பிரச்சனை ஆயிடும்டி. எனக்கு பயமா இருக்கு"

"க்ளாஸ் முடிஞ்சு பத்து நிமிஷம் ஆச்சுடி"

"இப்ப என்னடிப் பண்றது" என்ற மதியின் கண்கள் கண்ணீரை கொட்டிட ரெடியாகின.

" எதுக்கெடுத்தாலும் இப்படித் தான் அழுவியாடி. அவ்ளோ தண்ணி இருக்காடி உன்னோட கண்ணுல" என்றபடி வந்தான் ஆதி.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் மதியை உரிமையாக 'டி' போட்டதில் அதிர்ந்த நிவியும், அவனைப் பார்த்ததிலேயே அரண்ட மதியும் ஒரு சேர எழுந்து நின்றனர்.

"என்னடி மதி, ஆதி உன்னோடு 'டி' போட்டு கூப்டுறான்" என்று மதியின் காதில் முணுமுணுத்தாள் நிவி.

அப்போது தான் மதிக்கும் அது உறைத்தது. காலையில் கோபத்தில் ஏதோ சொல்வதாக எண்ணினாள் , இப்பொழுதும் அவன் அப்படியே அழைக்கவும் அவளுக்கு பிடிக்கவில்லை.

"ஆதி நான் உங்க கிட்ட ஹெல்ப் கேட்டேன். நீங்க எனக்கு ஹெல்ப் செய்றீங்க. இதெலாம் ஓ.கே. ஆனா என்ன "டி" போட்டுக் கூப்டாதீங்க எனக்கு பிடிக்கல" திக்கி திணறினாலும் ஒரளவு தைரியமாகவே கூறினாள்.

"என்ன சொன்ன........ என்ன சொன்னா" என்று கேட்டபடியே அவளுக்கு அருகில் வந்தான்.

மதியோ பயத்தில் பின்னடைந்து "டி போடாதீங்கனு சொன்னேன்" என்றாள் பயத்துடன்.

"ம்ப்ச்.... அத யாரு கேட்டா. நான் எப்படி வேணாக் கூப்டுவேன் அது என் இஷ்டம். நீ என்னய என்ன சொல்லி கூப்டேனு கேட்டேன்"

"ஆ.... ஆதினு"

"நான் உன் கிட்ட என்ன எப்படி கூப்டனும்னு சொன்னேன். மறந்துட்டியாடி" இன்னும் அருகில் வந்தான்.

"ஆது...... ஆது......" என்றாள் மதி பயத்துடன் "சாரி.... ஆது"

சட்டென்று நின்றவன் அவளுடைய கண்களை ஆழ்ந்துப் பார்த்தான், அதில் பயமே தேங்கி நின்றது. சிறு புன்னகை புரிந்தவன் " நீ போ.... நா பாத்துக்குறேன்"

நிவிக்கு ஆதியின் செயல்களை நம்ப முடியவில்லை. காலையிலிருந்து அவன் மதியிடம் மட்டும் அதிக உரிமை எடுத்துக் கொண்டது போல் தோன்றியது.

சிந்தித்துக் கொண்டே மதியோடு சேர்ந்து நடந்தாள். சரியாக அவர்கள் கல்லூரி வாசலை நெருங்கவும் தினேஷ் வந்தான், நேராக மதியை நோக்கி.

பயந்து போன மதி பின்னால் திரும்பி பார்க்க ஆதி அவளை நெருங்கி நின்றான். இதை பார்த்த தினேஷ் அதிர்ந்தாலும், ஆதியை பார்த்து

"ஆதி..... அது என் ஆளு"

"அப்படியா..... அவ உன்ன லவ் பண்ணல போலயே"

"அதெல்லாம் பண்ணுவா ஆதி. ப்ளீஸ் நீ குறுக்கு வராத"

இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்க்க கூட்டம் கூடியிருந்தது. ஆதி ஒரு பெண்ணுக்காக பேசுவது அதிசயமான நிகழ்வாக தெரிந்தது அவர்களுக்கு. அனைவருடைய பார்வையும் அவளைத் துளைத்தது. மதி சங்கடமாய் நெளிந்து கொண்டிருந்தாள்.

"ம்ம்ம்..... மதி நீ இவன லவ் பண்றியா. இல்ல இனிமே பண்ணுவியா"

"ம்ஹும்"

"மாட்டேனு சொல்றாளே தினேஷ்"
"நீ மிரட்டுறதுல பயந்துருப்பா. வாய திறந்து அவ பிடிக்கலனு சொல்லலயே"
" நான் மிரட்டுறேன்..... மதி வாய திறந்து பதில் சொல்லு "
மதியோ பயத்தின் உச்சத்தில் வாய் மூடியிருந்தாள்.
"மதி... வாயத் திறந்து பதில் சொல்லுடி. சும்மா வாய மூடிகிட்டு இருக்க" என்று உறுமினான்.
அதுவரை ஆதி ஒரு பெண்ணிற்காக பேசுகிறான் என்று எண்ணிய கூட்டம் அவனது 'டி' யில் வாய் பிளந்தது.
"பண்ண மாட்டேன். எனக்கு உங்கள பிடிக்கல தினேஷ்..." என்றாள் நடுக்கத்துடன்.
தினேஷோ ஆதியை மறந்து மதியை நெருங்க முயல ஆதி அவனை துவம்சம் செய்துவிட்டான்.
ஆதியின் நண்பர்கள் தடுக்காவிடில் நிலைமை மோசமாகியிருக்கும்.

"சொல்லிட்டே இருக்கேன். அப்புறமும் அவ கிட்ட என்ன. இனி அவள மட்டுமில்ல காலேஜ்ல எந்த பொண்ணையாவது டார்ச்சர் பண்ணுனேனு தெரிஞ்சுது. சாவுதாண்டா உனக்கு. ஓடிடு. இல்ல கொண்ணுடுவேன்" என்ற படி மதியின் கையினை பிடித்து இழுத்து சென்றான். மதியோ நிவியின் கரத்தினை பற்றி அவளையும் இழுத்து சென்றாள்.

கல்லூரி வாசலில் அவளை விட்டவன்" இனிமே உன் கிட்ட வச்சுக்கமாட்டான். ஏதாவது பிராப்ளம் னா என் கிட்ட வந்து சொல்லு. லூசு மாதிரி அழுதுகிட்டு இருக்காத. புரியுதா"

அவள் அமைதியாக இருக்கவும் "நான் கேட்டா பதில் சொல்லனும்னு சொல்லிருக்கேன்ல. பதில் சொல்லுடி"

அவள் மௌனமாய் தலையாட்டவும் அவளுடைய கண்களை ஆழ்ந்துப் பார்த்தான்.
புன்னகையுடன் "வாய திறந்துடாத. நான் வரேன்" என்ற படி பைக்கில் பறந்து விட்டான்.
அவன் செல்வதற்காக காத்திருந்ததைப் போல அனைவரும் மதியை குற்றவாளியை போல் பார்த்தனர். நிவியோ மதியின் கரங்களை பற்றி காருக்குள் ஏற்றினாள்.

"என்ன மதி, ஆதி உன்ன 'டி' போட்டு பேசுறான். எல்லாரும் வேற ஒரு மாதிரியா பாத்தாங்க. ஆதி அந்த மாதிரி பையன் இல்ல தான் இருந்தாலும் எனக்கு பயமாயிருக்கு"
"ஆமா நிவி" என்றாள் கண்ணீருடன்.
"ஏய்.... அழாதடி. இனிமே நமக்கும் , அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல . சோ நீ கவலப்படாத. எனக்கு பஸ் வந்துட்டு பாத்துப் போ" என விடைபெற்று சென்றுவிட்டாள்.

நிவி சொன்னது போல் இனி அவனை தொடர்பு கொள்ள போவதில்லை என்று எண்ணிய பிறகே மதி நிம்மதியானாள்.

அதன்பிறகு இன்று கல்லூரியில் அடியெடுத்து வைத்த கணம் முதல் அனைவருடைய பார்வையையும் கவனித்துக் கொண்டு தான் வந்தாள்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5

தேனியில்.....

"ஏய்.... அம்முவ காணும்டி. எங்க போனானு பாத்தியா" ராஜன் கத்தியதில் அவருடைய மனைவி அரண்டே போய்விட்டார்.
"என்னங்க. என்னாச்சு, ஏன் கத்துறீங்க"
"அம்முவ காணும்டி. ரூம்ல இல்ல வீடு முழுக்க தேடிட்டேன். கடவுளே நேத்து என் பொண்ணு கிட்ட கோபமா பேசுனது தப்புத்தான் . அவ நல்லாருக்கனும்னு தான் பேசுனேன். இப்ப அவளையே காணுமே"
"என்னங்க என்ன சொல்றீங்க" என்று தடுமாறி கீழே அமர்ந்தவரின் கால்கள் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த காலண்டரை பார்த்து அதிர்ந்தது.
"என்னங்க..... இன்னைக்கு தேதி பாத்தீங்களா. ஐயோ என் பொண்ணு இத நினச்சு ஏற்கனவே உடஞ்சிருப்பா. நீங்களும் அவள கஷ்டப்படுத்தீட்டிங்களே" என அழ அன்றைய தேதியை பார்த்த ராஜனுக்கும் அதிர்ச்சியே.

"ஐயோ....தப்பு பண்ணிட்டேனே. நான் போய் வெளியில தேடுறேன்" என்று எழும் நேரம் வாசலில் நிழலாடியது.

அவர்களது செல்ல மகள் கருநிற சுடிதார் அணிந்து தலைக்குளித்து கோவிலுக்கு சென்ற அடையாளங்களுடன் வந்தாள்.

"அம்மு.. எங்கடா போன. ஒரு நிமிஷம் செத்துடேன்மா. இனிமே கோபப்பட மாட்டேன்டா. மன்னிச்சிருடா அப்பாவ"
கரகரத்த குரலில் மன்னிப்பு கேட்டார்.

"அப்பா.... ஏன் இவ்ளோ டென்ஷன். நான் என்னோட வாழ்க்கைய வாழனும்னு நினைக்குறேன். சோ நாளைலேர்ந்து வேளைக்கு போகப் போறேன். நேத்து நைட்டே அவகிட்டப் பேசிட்டேன். அவ கம்பெனியில ஜாயின் பண்ணிக்க சொல்லிட்டா. அதான் கோவிலுக்கு போய்ட்டு வரேன். சீக்கிரம் சாப்டுங்க . ஷாப்பிங் போறோம். நிறைய ஐட்டம்ஸ் வாங்கனும்" என்ற படி தன்னறைக்கு விரைந்தாள்.

அவளின் செய்கைகளை பார்த்த இருவரும் அதிர்ந்து போய் நின்றனர். இது எதில் போய் முடியுமோ என மனது குழம்பி நின்றது.

அறைக்குள் சென்ற ஹரிணியோ தன்னுடைய பீரோவில் இருந்த டைரியை எடுத்தாள். அதில் மடித்து வைக்கப்பட்டு இருந்த காகிதத்தை பிரித்து படித்தாள்.

பறவையாய் திரிந்த
எனதுள்ளம் - மூன்றெழுத்து
வார்த்தை தன்னில்
முடங்கியதே!

சொல்லில் வடித்திடயியலா
உணர்வது எந்தன்
உயிரினில் கலந்ததே!

தயக்கத்தை அறிந்திடாத
எந்தன் பேச்சு
வார்த்தைகளின்றி
தயங்கிடுதே உன்னிடம்!

உனை கடக்கும் பொழுதினிலே
என் விழிகள் உனை தேடுதே
என் அனுமதியின்றி!

உந்தன் பெயர் கேட்கும்
பொழுதினிலே - இதழ்கள்
தானாய் விரிந்திடுதே!

நண்பர்களின் கேலியும்
உன்னால் என்கையில்
தேனாய் இனிக்கிறதே!

உனக்காக எனும்போது
வலியும் எனக்கு
சுகமானதே!

என்ன பெயரென்று
இயன்றவரை தேடிவிட்டேன்
இந்த உணர்விற்கு!

காதலா! நட்பா!
பாசமா! இதுவரை
தெரியவில்லை - இருந்தும்
ரசிக்கிறேன்!!!!!!!!!!!!!!!!!


அத்து முதன் முதலில் தனக்கு தந்த கவிதையை வாசித்தவளின் கண்களில் கண்ணீர் பெருகியது.

"அத்து இன்னைக்கு என்ன நாள் தெரியுமா. முதல் முதலா நான் உன்ன பாத்த நாள். அதுமட்டுமில்லாம உன் கிட்ட என் காதலை சொன்ன நாள். உன் ஞாபகமா தான் உனக்கு பிடிச்ச ப்ளாக் கலர் டிரஸ் போட்ருக்கேன். எனக்கு தெரியும், நீயும் இந்நேரம் என்னதான் நினச்சிட்டு இருப்ப. சாரி என்னால உன் லைப்ல நிறைய கஷ்டம். இதெல்லாமே உனக்காக தான். நீ நல்லாருக்கனும்னு தான். ஏன்னா நா உன்ன அந்தளவுக்கு விரும்புறேன். ஐ ரியல் மிஸ் யூ" என கண்களை துடைத்துக் கொண்டாள்.

காதலனுக்காக துடிக்கும் பெண்ணவளின் இதயம் கல்லால் ஆனதா?????


அதே நேரம் சென்னையில்.......


நகரத்திற்கு சற்று தொலைவில் இருந்த அந்த வீட்டின் ஒர் இருட்டறையில் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் கண்களிலில் மரணத்திற்கு நிகரான வலி இருந்தது. எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவனது நினைவுகளோ தன்னவளை சிந்தித்தது.

"ஏன் ஹனி இப்படி பண்ண. நா உனக்கு அப்படி என்ன தப்பு பண்ணேன். உன் மேல உயிரா இருந்தது தான் நா செஞ்ச தப்பா. என் மேல உயிரையே வச்சிருகேனு சொல்லிட்டு என் உயிர என்கிட்டேர்ந்து பிரிச்சிட்ட.

நீ இந்த உலகத்துல இல்லனு நா நம்பனும்னு ஏன் நினைக்கிற ஹனி. இந்த உலகமே நீ இல்லனு சொன்னாலும் நா நம்ப மாட்டேன். என் மனசு சொல்லுது , நீ உயிரோட இருக்கேனு.

உண்மையிலே நீ இல்லனா நானும் இருந்துருக்க மாட்டேன். எனக்கு நல்லது பண்றேனு , துரோகம் பண்ணிட்ட ஹனி. இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? இப்ப நீ என் கூட இல்லங்கறது எவ்வளவு வலிக்குது தெரியுமா.

எதையும் வெளிய காட்டிக்காம சந்தோஷமா இருக்க மாதிரி நடிக்க நா படுற பாடு நரக வேதனை. காதல் பொண்ணுங்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் வலிய தரும். யார்க்கிட்டயும் சொல்லவும் முடியாம உன்ன நினச்சு நினச்சு நா சாகப் போறேன் "
ஊமையின் குமறலாய் அத்துவின் மனம் துடித்தது.
 
Last edited:

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதே நேரம் சென்னையில்.......


நகரத்திற்கு சற்று தொலைவில் இருந்த அந்த வீட்டின் ஒர் இருட்டறையில் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் கண்களிலில் மரணத்திற்கு நிகரான வலி இருந்தது. எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவனது நினைவுகளோ தன்னவளை சிந்தித்தது.

"ஏன் ஹனி இப்படி பண்ண. நா உனக்கு அப்படி என்ன தப்பு பண்ணேன். உன் மேல உயிரா இருந்தது தான் நா செஞ்ச தப்பா. என் மேல உயிரையே வச்சிருகேனு சொல்லிட்டு என் உயிர என்கிட்டேர்ந்து பிரிச்சிட்ட.

நீ இந்த உலகத்துல இல்லனு நா நம்பனும்னு ஏன் நினைக்கிற ஹனி. இந்த உலகமே நீ இல்லனு சொன்னாலும் நா நம்ப மாட்டேன். என் மனசு சொல்லுது , நீ உயிரோட இருக்கேனு.

உண்மையிலே நீ இல்லனா நானும் இருந்துருக்க மாட்டேன். எனக்கு நல்லது பண்றேனு , துரோகம் பண்ணிட்ட ஹனி. இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? இப்ப நீ என் கூட இல்லங்கறது எவ்வளவு வலிக்குது தெரியுமா.

எதையும் வெளிய காட்டிக்காம சந்தோஷமா இருக்க மாதிரி நடிக்க நா படுற பாடு நரக வேதனை. காதல் பொண்ணுங்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் வலிய தரும். யார்க்கிட்டயும் சொல்லவும் முடியாம உன்ன நினச்சு நினச்சு நா சாகப் போறேன் "
ஊமையின் குமறலாய் அத்துவின் மனம் துடித்தது.


சில மாதங்களுக்கு பிறகு..........


ராமின் வீட்டில்.........

"ராம்....... ராம்..... தம்பி என்னப்பா பண்ற. " கமலத்தின் குரல் வீடெங்கும் எதிரொலித்தது. வீட்டினில் இருந்த அனைவரும் அவரது குரலில் திரும்பி பார்த்தனர்.

தன்னுடைய கிண்ணத்தில் வைக்கப்பட்ட பாலை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த பப்லு இடையூறாய் கேட்ட குரலில் பாலைக் குடிப்பதை நிறுத்தி விட்டு தலையை தூக்கிப் பார்த்தது. ராம் என்ற அழைப்பில் அது தனது எஜமானின் அறையை எட்டிப் பார்த்தது.

இவ்வளவு நடந்தும் ராமிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவரது குரல் கேட்டால் எந்த வேலை செய்தாலும் அதை விட்டுவிட்டு வருபவன் இன்று ஏனென்று கூட கேட்காதது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யமாயிருந்தது.

"என்னாச்சு..... தம்பிக்கு..... ஏன் பதில் கூட சொல்ல மாட்டேங்குது. காலைல ஓடவும் (ஜாகிங்) போகல . சரி காபி குடிக்கவாவது கீழே வரும்னு பாத்தா இப்பவும் வரல. ரூமுக்கு கொண்டு போனா தம்பிக்கு பிடிக்காது." தன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தார்.
கமலத்தின் குரல் கேட்டு வந்த ஈஸ்வர், கமலத்தை அதிசமாய் பார்த்தார்.
"என்னங்கய்யா பாக்குறீங்க"
"ஏன்மா... என்னாச்சு இவ்ளோ சத்தம் போட்டுட்டு இருக்க"
"இல்லங்கய்யா. தம்பி இன்னும் ரூமவிட்டு வெளிய வரல. நைட் சாப்டவும் இல்ல. வேணாமுனு சொல்லிடுச்சாம். " அவர் சொல்லவும் ஈஸ்வரின் மூளை சிந்திக்க தொடங்கியது.
இவர்களது உரையாடலை கேட்டவாறே வந்த ஸ்ரீ , "அண்ணாக்கு ஏதாவது வேல டென்ஷன் இருந்துருக்கும். காபி தான குடுக்கணும் , குடுங்க நா கொண்டு போறேன்."
"ஸ்ரீ தம்பிக்கு தான் ரூமுக்கு சாப்பாடு , காபி எல்லாம் கொண்டு போனா பிடிக்காதே"
"நா பாத்துக்குறேன். குடுங்க அம்மா எனக்கும் சேர்த்து"
"இந்தாப்பா.... " என்று இரண்டு காபிக் கோப்பைகளை கொடுத்தார்.
அதை வாங்கி கொண்டவன் , தன்னுடைய தமையனின் அறைக் கதவைத் தட்டினான்.
ஆனால் அவனுக்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை எனவும், தானே கதவினைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.
தாழ்போடப்படாமல் இருந்த கதவு சட்டென திறந்து கொள்ள , அறையினுள் சென்றவன் தன் தமையனை தேட அவனோ அறையிலில்லை.
ராமின் கட்டில் முழுவதும் பல காகிதங்கள் சிதறிக் கிடந்தன, மேஜையில் புத்தகங்கள் கலைந்து கிடந்தன. அவற்றை பார்த்த பிறகு ஸ்ரீ க்கு தமையனின் மனநிலை புரிந்தது. என்ன நடந்தது என்று அவனுக்கு தெரியவில்லை. ஆனால் அண்ணன் குழப்பத்துடன் இருக்கிறான் என்பது மட்டும் அவனுக்கு தெரிந்தது.

காபிக் கோப்பையை அங்கிருந்த மேஜையின் மேலே வைத்தவன் , அந்த அறையின் பால்கனிக்கு (balcony) சென்றான். அங்கே சேரில் அமர்ந்து எதையோ யோசித்து கொண்டிருந்த தமையனைக் கண்டான்.

"அண்ணா.... அண்ணா " என்ற படி ராமின் தோளினைப் பற்றி உலுக்கினான். அதில் சுய உணர்வு பெற்றவன் ஸ்ரீ யை தன்னுடைய அறையில் அதுவும் அவன் முறைப்புடன் நிற்பதை பார்த்ததும் சற்று திணறியவன்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6


"சொல்லுடா ஸ்ரீ ... என்னாச்சு.... எதுவும் முக்கியமா பேசணுமா? காலைலயே ரூமுக்கு வந்துருக்க"

"என்ன பிரச்சன அண்ணா"

"பிரச்சனயா.. அப்படிலாம் ஒண்ணுமில்லடா"

"அண்ணா என்கிட்டயே மறைக்குறியா"

"ஸ்ரீ சொன்னா நம்ப மாட்டியா. நா என்னோட புது கேஸ் பத்தி யோசிச்சுகிட்டு இருக்கேன்"

"கேஸ் பத்தி யோசிக்குறீங்க... அதுவும் நைட்லேர்ந்து சாப்டாம"

"உண்மயா தான்டா சொல்றேன். "

"எனக்கு சிரிப்பு தான் வருது அண்ணா. சின்ன வயசுலயும் இப்படி தான் எக்ஸாம்காக டென்ஷன் ஆனா எல்லா புத்தகத்தையும் கீழ போட்டு அதுக்கு நடுவுல உட்கார்ந்து யோசிப்ப. ஆனா நீ இப்ப வக்கீல். இப்ப என்ன டென்ஷன். இது வரைக்கும் எந்த கேஸ் க்கும் நீ இவ்ளோ யோசிச்சு நா பாத்தது இல்லயேணா"


"அது வந்து இந்த கேஸ் கொஞ்சம் குழப்புதுடா. "

" என்ன கேஸ் சொல்லு"

"இல்லடா. ஒருத்தர் இறந்திட்டாரு. அவரு பொண்ணு அது கொலைனு சொல்லிக் கம்ளைண்ட் பண்ணப்போ இது தற்கொலை தானு போலிஸ் எப்.ஐ
ஆர் பைல் பண்ணல. அப்புறம் அந்த பொண்ணு என்கிட்ட வந்தப்போ டிடைல்ஸ் கேட்டு நா கம்ளைண்ட் கொடுக்கப் போனப்ப எப்.ஐ.ஆர் பைல் பண்ணாங்க. ஆனா அடுத்த நாளே ஒரு ஆள் குடிபோதைல தெரியாம பண்ணிடேனு சரண்டர் ஆகிட்டான்"


"அவ்வளவு தான அண்ணா. முடிஞ்சு போன விஷயத்துக்கு ஏன் இவ்ளோ யோசிக்குற"

"முடிஞ்சிடுச்சா. இல்லடா இனிமேல் தான் நமக்கு வேல இருக்கு."
"என்ன அண்ணா சொல்ற புரியல.

"முழுசா தெரிஞ்சா உனக்கு புரியும்டா. ஏன்னா இது சம்பந்தம்மா நா கொஞ்சம் டிடைல்ஸ் கலெக்ட் பண்ணருக்கேன். அத தான் நைட் ஆராய்ச்சி பண்ணேன்"

"சரிணா... நீ என்னக் கண்டுபிடிச்ச சொல்லு"

"சொல்றேன் இரு "
"ஸ்ரீ இது கண்டிப்பா கொல தான்டா. அதுவும் பக்காவா பிளான் பண்ணி செஞ்சது" என்றவன் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தான்.
"ஸ்ரீ இறந்தவர் பேரு பிரபாகரன் . வி.எம் இண்டரீஸ் ல மேனேஜரா இருக்காரு. ரொம்ப நேர்மையானவர். பொதுவா நேர்மையானவங்கனா எதிரிங்க இருப்பாங்க தான. அவருக்கு எதிரிங்கனு யாருமே கிடையாதாம்.
அவர் வேல பாத்த இடம் , வீடுனு எல்லா இடத்துலயும் விசாரிச்சட்டேன். எல்லாரும் அவர புகழ்றாங்க. அவ்ளோ உதவி பண்ணிருக்காரு அங்க இருந்த எல்லாருக்கும். அவருக்கு எதிரியே இல்லாத அவர யாருடா கொண்ணுருப்பா.

அந்த ஏரியால இருக்குற எல்லாரும் கொலகாரன் மேல வெறியா இருக்காங்க. சரண்டர் ஆனவன் அந்த ஏரியா கிடையாதாம். அவன் யாருனே தெரியல. அவன் சொல்ற டிடைல்ஸ் முன்ன பின்ன இருக்கு.அதான் சொன்னேனே அவரு பொண்ணு , அவங்க கண்டிப்பா சரண்டர் ஆனவன் அவங்க அப்பாவ கொண்ணுருக்க மாட்டானு சொல்றாங்க . "
"அவங்க எப்படி இவ்ளோ நம்பிக்கையா சொல்றாங்க"
" அவங்க அப்பாவோட நடவடிக்கைள கொஞ்ச நாளா மாற்றம் இருந்ததா சொன்னாங்கடா”
"என்ன அண்ணா சொல்ற"
"ஆமாம்டா.... சரி அத விடு இந்த கேஸ் கொஞ்சம் குழப்புது. பாத்துக்கலாம். நீ ஆபிஸ் போகல."
"போகனும் அண்ணா. நீ பண்ண வேலைல அம்மாவும், ஐயாவும் பயந்து போயிருந்தாங்க. அதான் நானே வந்தேன். வா காபி குடிக்கலாம். இங்கயே கொண்டு வந்துட்டேன். வா வா "
"சரிடா சரி "
இந்த வழக்கு தன்னுடைய வாழ்க்கையை மட்டுமின்றி இன்னும் சிலருடைய வாழ்க்கையையே மாற்றப் போகிறது என்பதை ராம் அறிந்திருக்கவில்லை. நம் வாழ்க்கையில் பிற்காலத்தில் நடப்பவைகளை அறிந்து கொள்ள இயலாதல்லவா.

சிறிது நேரத்திற்கு பின்......

ராம் ஸ்ரீ யை தேடி அந்த கெஸ்ட் ஹவுஸ் க்கு சென்றான். ஸ்ரீ யின் அறையில் அவன் குளித்துக் கொண்டிருந்த ஓசைக் கேட்கவும் அமைதியாக அங்கிருந்த சேரில் அமர்ந்து தன்னுடைய மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த நேரம் ஸ்ரீ யின் மொபைலுக்கு கால் வரவும் , அதைப் பார்த்தான். அதில் பெயரில்லாமல் நம்பர் மட்டும் வரவும் ஸ்ரீ யை அழைத்தான்.

மீண்டும் மீண்டும் அதே நம்பரில் இருந்து அழைப்பு வரவும். ஏதோ அவசரம் போல என்று எண்ணியவன் மொபைலை ஆன் செய்து காதில் வைத்தான்.

"ஹரி...." மெல்லிய தென்றலாய் ஒரு பெண்ணின் குரல் கேட்டது , அவனையுமறியாமல் அவனது உதடுகள் 'கனி' என்று முணுமுணுத்தது.
"ஹரி லைன்ல இருக்கியா....
"ஹலோ.... நா ராம் பேசுறேன். ஸ்ரீ.... இல்ல இல்ல ஹரி குளிச்சுகிட்டு இருக்கான். ஏதாவது முக்கியமா சொல்லணுமா"

"ஆமாம்... அவன் கிட்ட எனக்கு உடம்பு சரியில்ல அதனால நா இன்னைக்கு ஆபிஸ் வர முடியாதுனு சொல்லிடுங்க. தேங்க்ஸ்" என்ற படி அவனது பதிலைக் கூட எதிர்பாராமல் போனைக் கட் செய்து விட்டாள்.

அவளின் இந்த செயலில் ராமிற்கு கோபம் வந்தது. அது அவனுடைய பதிலை எதிர்பாராமல் போனை வைத்ததற்காக அல்ல. இன்னும் சற்று நேரம் பேசாமல் வைத்ததற்காக.

' நாய்க்குட்டி கூடலாம் மணிக்கணக்கா பேசுறா. இங்க ஒரு மனுஷன் பேசிட்டு இருக்கும் போதே கட் பண்றா. நா பப்லுவ விட மோசமா' என்று புலம்பிக் கொண்டிருக்க அதைக் கேட்டபடியே வந்த ஸ்ரீ

"எப்பலேர்ந்து அண்ணா , தனியா பேச ஆரம்பிச்ச"
 
Status
Not open for further replies.
Top