All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"கல் நெஞ்சே கசிந்துருகு " கதைப் பகுதி

Status
Not open for further replies.

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவர்கள் உள்ளே நுழையும் போது நிவி கண்களில் ஆர்வத்துடன் தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டு டப்பாக்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்தவர்கள் அவளை சீண்டி பார்க்கும் எண்ணத்தில் அவளருகே அமர்ந்தனர்.

அவர்கள் அமர்ந்ததும் அவளது பார்வை ஏக்கமாக சாப்பாட்டு டப்பாக்களை பார்த்தது. அதைப் பார்த்து அவர்கள் புன்னைகைக்க அந்த நேரம் சரியாக அங்கு வந்தாள் மதி.

ஆதியை பார்த்ததும் அவளது கரங்கள் தானாக ஆட்டம் கண்டன.
கையில் கொண்டு வந்த பக்கோடாவை தடுமாறிய படி அவள் மேஜையில் வைத்துவிட்டு அமைதியாக நின்றிருந்தாள்.

"ஏன்டி நிக்குற . வா உக்காரு " என ஆதி அவனருகில் கைகாட்ட அன்றைய நிகழ்வில் அதிர்ந்தவள் நிவியின் புறம் நின்று கொண்டாள்.

அதில் நிவி மிரண்டு போய் ஆதியைப் பார்த்தாள். அவனோ இவர்களை கண்டு கொள்ளாமல் அங்கிருந்த சாப்பாட்டு டப்பாக்களை ஆராய்ந்தான்.

"வத்தகுழம்பா.... யார் கொண்டு வந்ததது உங்க ரெண்டு பேர்ல"

நிவி மதியைக் கைக்காட்ட அவளைப் பார்த்தவன் யாருமறியாமல் அவளைப் பார்த்து கண்சிமிட்டினான்.

மதிக்கு வியர்வை பூக்கள் முகத்தில் அரும்ப ஆரம்பித்தன.
"உனக்கு சாப்பாடுனா ரொம்ப பிடிக்குமா. இதுக்கே நிறைய சம்பாதிக்கணும் போல . ரெண்டு பாக்ஸ் கொண்டு வந்துருக்க"

மதியின் பார்வை நிவியைப் பார்க்க
"நிவி மேடமுக்கா" என்றான்.

"ஐயோ.... எனக்கு இல்ல. எனக்கு இதெல்லாம் பிடிக்காது. "

"சரி நா கொண்டு போறேன். அதான் உனக்கு பிடிக்காதே.." என அவன் டிபன் பாக்ஸை கையில் எடுக்கவும் நிவி கலக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

"எதுக்குடா இது... நாம கேன்டீன்ல்ல தான சாப்ட போறோம். பாவம்டா குடுத்துட்டு வாடா"

"டேய் என் மாமியார் வீட்டு சாப்பாடு... கல்யாணத்துக்கு அப்றம் நான் தான சாப்டணும். அதான் இப்பவே ப்ராக்டீஸ் பண்ணிக்கிறேன். என்னடி செல்லம்ஸ் மாம்ஸ் கொண்டுப் போகவா. இல்ல உன் கூட இங்கயே சாப்டவா" என அவளை நெருங்கி ஆழ்ந்த குரலில் கேட்க மதி பயத்தில் திரு திருவென விழித்தாள்.

பயத்தில் விரிந்த அவளது விழிகளை பார்த்தவன் அதில் மயங்கி மேலும் அவளை நெருங்கி நின்றான். அவனுக்கும் அவளுக்கும் இடையே இடைவெளி இருந்தது.

ஆனால் தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஆதி மதியினை உரசிக் கொண்டிருப்பதை போல தோன்றும்.

தொலைவில் வந்து கொண்டிருந்த தினேஷ் இந்த காட்சியைப் பார்த்ததும் கோபத்தோடு அவர்களைப் பார்த்தான்.

அவனது மனமோ "மதி என்ன வேணாம்னு சொல்லிட்டு அவன் கூட சுத்துற. இருடி உன்ன என்னப் பண்றேனு பாரு. நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்." என நினைத்தது.

அங்கே அமர்ந்திருந்தவர்கள் இவர்களையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த மதி ஆதியிடமிருந்து சற்று தள்ளி நின்றாள்.

ஆதிக்கு மதியை சீண்டுவது மிகவும் பிடித்திருந்தது. அவளது கண்களை தான் அவன் பார்க்க விரும்பினான். பயத்தில் விரியும் போது அவளது கண்கள் அவனை ஈர்த்தன.
அதற்காகவே அவன் அவளை காதலிப்பதாய் சீண்டினான்.

ஆதி கம்பீரமானவன், அழகானவன். அவன் முரடனாய் மட்டும் இல்லாவிட்டால் அவன் பின்னே பலர் சுற்றியிருந்திருப்பார்கள்.

அவ்வளவு அழகான , கம்பீரமான ஆதி மதியின் அருகே வந்து நின்றதும் ஒரு நிமிடம் மதியின் இதயம் நின்று துடித்தது போன்று இருந்தது அவளுக்கு.

அவளின் கண்களில் பயத்தைக் கண்டவன் மீண்டும் அதன் அழகில் மயங்கி சின்னப் புன்னகையுடன் சென்று விட்டான்.

அவன் சென்று பின்பு நிம்மதி பெருமூச்சு விட்ட நிவி "அப்பாடா போய்ட்டான். ஆனா என்னோட சாப்பாடு. மதி நீ நா கொண்டு வந்த லெமன் ரைஸ் சாப்பிடு. நா உன்னோட சாப்பாட சாப்டுறேன். பத்தாது தான். இருந்தாலும் பரவாயில்ல" என சலசலத்துக் கொண்டிருந்தவள் அவளது தோழியின் நிலையை உணர்ந்திட மறந்து விட்டாள்.

மதியோ பித்துப் பிடித்தவளை போல மௌனமாய் அமர்ந்திருந்தாள்.

இவர்களின் வாழ்வில் அடுத்து நடக்கப் போவது என்ன?


சென்னையிலிருந்த அந்த அனாதை இல்லத்தில் கண்ணீரோடு அமர்ந்திருந்தாள் ப்ரியா.

அழுதழுது அவளது முகம் வீங்கியிருந்தது. அவளது கண்ணீரை காண சகிக்காமல் அவளது கண்ணீரை துடைத்தார் ஆசிரமத்தின் நிறுவனரான சீதா.

"ப்ரியா அழாதமா. "

"ஏன்மா ... இந்த ரெண்டு மாசமா எனக்கு லெட்டர் வரல. அந்த லெட்டர நா எவ்ளோ எதிர்பார்ப்பேனு உங்களுக்கு தெரியும்ல. நா இங்க வந்ததுலேர்ந்து ஒவ்வொரு மாசமும் எனக்கு அந்த லெட்டர் வரும்தான.

அப்பா அம்மா இல்லாத அனாதை மேலயும் யாருக்கோ பாசம் இருக்குனு நினச்சேன். யார் போடுறானு தெரியலனாலும் எனக்குனு யாரோ இருக்காங்கனு நிம்மதியா இருந்தேன்.

இப்ப அதுவும் இல்லயே மா. நா என்னமா பாவம் பண்ணேன். " பாசத்திற்காக ஏங்கி தவிக்கும் அவளை பார்க்கையில் சீதாவிற்கு வருத்தமாயிருந்தது.

ப்ரியா இந்த ஆசிரமத்திற்கு வரும் போது அவளது வயது மூன்று. ஆசிரம வாசலில் அழுது கொண்டிருந்த ப்ரியாவை பார்த்ததும் சீதாவிற்கு பாவமாய் இருந்தது. அவளை அரவணைத்துக் கொண்டார்.

அவள் சேர்ந்த அடுத்த மாதம் பெயரில்லாத ஒரு கடிதம் அந்த ஆசிரமத்திற்கு வந்தது. அதில் ப்ரியாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு எழுதியிருந்தது.

அதன்பின்னர் மாதந்தோறும் ப்ரியாவிற்கு கடிதம் வரும். அதை சேர்த்து வைத்த சீதா , ப்ரியாவிற்கு நினைவு தெரிந்த பின்னால் அவற்றை அவளிடம் தந்தார்.

அதன் பின்னர் ப்ரியா ஒவ்வொரு மாதமும் அந்த கடிதத்திற்காக காத்திருப்பாள். படித்து வேலைக்காக ஆசிரமத்தை விட்டு சென்ற பின்னும் அந்த கடிதத்திற்காக ஒவ்வொரு மாதமும் அங்கு வந்து விடுவாள்.

இன்று அந்த கடிதம் வராததால் அவளது மனம் உடைந்து போயிருந்தது. அவளை சமாதானம் செய்ய முடியாமல் சீதா திணறிக் கொண்டிருந்தார்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9

சென்னையின் மற்றோரிடத்தில்.....

"அண்ணா அந்த பிரபாகரன போட்டாச்சு. ஆனா அந்த ஆளு கடைசி வரைக்கும் நமக்கு தேவையானத சொல்லவே இல்லனா. "

"சரி விடுடா. இன்னும் ரெண்டு பேர் இருக்காங்கல. எப்படியாவது கண்டுபிடிச்சிடலாம்."

"அண்ணா ஒரு பிரச்சன."

"என்னடா"

"அந்த பிரபாகரனோட பொண்ணு போலிஸ்ல கம்ளைண்ட் குடுத்துருக்கு"

"நாம பாக்காததா விடுடா"

"இல்லனா. அந்த பொண்ணு ராம் கிட்ட போயிருக்கு" என ஒருவன் சொல்லி முடிக்கவும் அதுவரை அலட்சியமாக கேட்டவன் எழுந்தமர்ந்தான்.

"என்னடா சொல்ற ராம் கிட்ட போயிருக்காளா. அப்படினா பிரச்சன பெரிசு தான் . "

"அண்ணா பேசாம அந்த பொண்ண போட்றவா"

"டேய்.... ஏற்கனவே நாட்ல பொண்ணுங்க எண்ணிக்க கம்மி. இதுல நாம வேற ஏன்டா...
அதனால தான் நா எப்பவும் பொண்ணுங்க மேல கை வைக்கிறது இல்ல.
நா பண்ற கடைசி தப்பு , இப்ப செய்றதா தான் இருக்கணும்"
அவன் சொல்லி முடிக்கவும் மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
நாட்கள் யாருக்கும் காத்திருப்பதில்லை. ஹரிணி அந்த வகுப்பில் சேர்ந்து இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

ஆரம்பத்தில் அவளைப் பொறாமையாய் பார்த்தப் பெண்களும் இப்போது அவளது குணத்தை அறிந்ததால் அவளோடு நட்புப் பாராட்டினர்.

அமைதியாக இல்லாமல் எப்போதும் ஏதாவது குறும்பு செய்யும் அவளை அந்த வகுப்பில் இருந்த அனைவருக்கும் பிடித்திருந்தது.

அவளைச் சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்வுடன் வைத்திருந்தாள். தன்னிடம் படிப்பில் சந்தேகம் கேட்டு வருபவர்களுக்கு முகம் சுளிக்காமல் அவர்களுக்கு புரியும் வரை பொறுமையாக சொல்லிக் கொடுப்பாள்.

வகுப்பில் தூங்கிவிடுவாள். ப்ரண்டஸ் டிபன் பாக்ஸில் உள்ளவற்றை காலி செய்துவிட்டு ஒன்றுமறியா பெண்ணை போல அமர்ந்திருப்பாள்.

அவளது எல்லா சேட்டைகளுக்கும் பலியான முதல் நபர் அவளது உயிர்த் தோழி ப்ரியா தான்.

ஹரிணி எல்லாரிடமும் சகஜமாக பேசினாலும் அத்து ஒருவனிடம் மட்டும் பேச முயலவே இல்லை.

அவனும் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அவன் அவனது படிப்பில் கவனம் செலுத்தினான். அவனைப் பொறுத்தவரையில் ஹரிணி அந்த வகுப்பில் பயிலும் சக மாணவி.

ப்ரியா ஹரிணிக்கு மட்டுமல்ல அத்துவிற்கும் தோழி. அவளிடம் அத்து பேச வரும் போதெல்லாம் சிறு புன்னகையுடன் நகர்ந்து விடுவாள் ஹரிணி.

அழகு தேவதையாக இருந்தவளை தன்னவள் என்று சொல்லிக் கொள்ள அந்த கல்லூரியிலிருந்த அனைவருக்கும் ஆசை .

அந்த கல்லூரியில் பயிலும் எல்லா மாணவர்களுமே அவளிடம் காதல் சொல்லத் தொடங்கினர். அவர்களிடம் இயல்பாய் அவர்களது மனம் புண்படாத வகையில் காதலை மறுத்துவிடுவாள்.

அதுவே அவள் மேல் அவர்களுக்கு உள்ள காதலை அதிகரித்தது. அவள் பின்னே கல்லூரியே சுற்ற அவளோ அதை தனது கருத்தில் கொள்ளாமல் நடமாடினாள்.

அன்று வகுப்பிற்குள் நுழைந்தவள் தன்னுடைய இடத்திற்கு செல்ல நினைக்கையில் , அவள் முன்னே ஒரு காலை மண்டியிட்டு அமர்ந்தான் ஒருவன்.

வகுப்பிலிருந்த அனைவரும் அதனை வழக்கம் என்பது போல் பார்க்க ஹரிணியோ திரு திரு வென்று விழித்தாள்.

"ஹரிணி ஐ லவ் யூ.... ப்ளீஸ் அக்செப்ட் மை லவ்.... ப்ளீஸ்" என கெஞ்சினான்.

"தயவு செஞ்சு எழுந்தரிங்க சஞ்சய். உங்களுக்கு எத்தன தடவ சொல்லிருக்கேன். இப்படி செய்யாதீங்கனு"

"நா உன்ன லவ் பண்றேன் ஹரிணி..."

"ஓ மை காட்..... ஏன் உங்களுக்கு புரியல. எனக்கு உங்க மேல லவ் வரல. "

"ஹரிணி ப்ளீஸ்...உண்மையா உன்மேல நா உயிரையே வச்சிருக்கேன்"

"சஞ்சய்... முதல்ல இப்படி பேசுறத நிறுத்துங்க. உங்க லவ் பொய்னு நா சொல்லல. ஆனா எனக்கு உங்க மேல லவ் வரலனு சொல்றேன். லவ் கம்பெல் பண்ணிலாம் வரக் கூடாது.

தானா வரனும். உங்க மேல பரிதாபப்பட்டு வரக்கூடாது. மத்தவங்களுக்காக காதலிக்க கூடாது.

காதல் ஒரு உணர்வு. புனிதமான உணர்வு. சுயநலம் இல்லாத ஒரு உறவு. என்ன பொறுத்த வரைக்கும் அந்த உணர்வும் , உறவும் ஒருத்தர் மேல தான் வரும்.

எனக்கு உங்க மேல அந்த உணர்வு வரல. என்ன மன்னிச்சிடுங்க" என்று நீண்ட உரையாற்றியவள் தன்னுடைய இடத்தில் சென்று அமர்ந்தாள்.

எப்பொழுதும் யாராவது காதல் சொன்னால் அதை இனிமையாக மறுப்பவள் இன்று கொஞ்சம் கடுமையாய் மறுத்ததை நினைத்து அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர்.

அவளோ கோபமாய் இருந்தாள். காரணம் அந்த வகுப்பறையில் அத்துவும் அமர்நதிருந்தான். அவன் அங்கு நடந்தவைகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அது தான் ஹரிணியின் கோபத்திற்க்கு காரணம். இது வரை அவளிடம் பலர் காதல் சொல்லியிருந்தாலும் அவள் மனம் யாரிடமும் சாயவில்லை.

முதன் முதலில் அத்துவை பார்த்த நொடியில் அவள் மனதில் லேசான சலனம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் அதன் பின்னர் அவள் அதை மறந்து விட்டதாக எண்ணியிருந்தாள்.

இன்று அத்துவின் முன்பே ஒருவன் தன்னிடம் காதல் சொல்லவும் , அந்த நொடி அங்கிருந்த அனைவரும் அவள் கண்களுக்கு மறைந்து அத்து மட்டுமே தெரிந்தான்.

இது நாள் வரை இல்லை என்று அவள் மனதில் பதிய வைத்த காதல் இன்று அவளுக்கு இருப்பதாக தோன்றியது.

அவள் செய்வதறியாது திகைத்து நிற்க அவளிடம் வந்தான் அத்து.
அவனைப் பார்த்ததும் ஹரிணிக்கு அவனிடம் காதல் சொல்ல இயலாத தனது இயலாமையை எண்ணி கோபம் வந்தது.

"ஹரிணி..... ப்ரியா இன்னைக்கு லீவா... இன்னும் வரல" என்றவுடன்

"அவ வரலனா அவளுக்கு போன் பண்ணி கேக்க வேண்டியது தான. என்ன பாத்தா எப்படி இருக்கு. பெருசா வந்துட்டாரு" என்று அவனிடம் பொரிந்தவள் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.

அத்துவோ திகைத்துப் போய் நின்றான். இன்று தான் முதல் முதலாக அவளிடம் பேசுகிறான். ஆனால் அவளோ அவனிடம் கோபம் கொள்கிறாள். ' என்ன பெண்ணிவள்' என ஒரு நிமிடம் சிந்தித்தவன் வழக்கம் போல அதை ஒதுக்கிவிட்டு தன் இடத்தில் அமர்ந்தான்.

ஹரிணியோ தனிமையில் அழுது கொண்டிருந்தாள்.
' எனக்கு என்னாச்சு. நா ஏன் இவ்ளோ கோபப்படுறேன். அத்துவ நா லவ் பண்றேனா. இது நடக்காது . அதுக்கு எனக்கு தகுதி இல்ல. கடவுளே நா என்ன பண்ணுவேன்.

என்னோட காதல எப்பவும் அத்துகிட்ட சொல்ல மாட்டேன். என்னோட மனசுக்குள்ளே அது புதஞ்சு போகட்டும்" என்று கண்ணீர் விட்டவளுக்கு தெரியவில்லை

பல வருடங்கள் மண்ணில் புதைந்திருக்கும் விதைகள் தான் மரமாகவும் , செடியாகவும் மண்ணில் வளர்கிறது.

அதுபோல மனதில் புதைந்த அவளது மன்னவனின் நினைவுகள் அவளது மனதில் மரமாகி நின்றது.

அன்றிலிருந்து ஹரிணியின் நடவடிக்கைகள் மாறின. கலகலவென்று எப்போதும் இருந்தவள் அமைதியானாள்.

குறும்பு தனம் செய்து கொண்டிருந்தவள் அதையெல்லாம் விட்டுவிட்டாள். யாரிடமும் எதுவும் பேசாமல், விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை தொலைத்தவள் போல் அமைதியாக இருந்தவளிடம் காரணம் கேட்டு ஓய்ந்து போயினர் அவளது தோழிகளும், தோழர்களும்.

தினமும் தொலைவில் இருந்து அத்துவை பார்வையால் வருடுவாள். அந்த ஒன்றே தன் வாழ்வில் போதும் என இருந்தவளை விதி விடவில்லை.

எந்த காதலை அத்துவிற்கு தெரியக்கூடாது என மறைத்தாளோ அதை அத்துவே தெரிந்து கொள்ளுமாறு செய்தது அந்த நாளில்.

ஹரிணி எதிர்பார்க்காத அந்த நாள் அவளது வாழ்வில் வந்தது.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்று இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்க்கு வராத அண்ணணை நினைத்து கவலையிலிருந்த ஸ்ரீ வாசலிலேயே தமையனுக்காக காத்திருந்தான்.

ராமின் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது. அதனால் ஸ்ரீ அவனை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தான்.

அந்த நேரத்தில் ஸ்ரீ யின் அலை பேசி ஒலித்தது. அதை எடுத்து பேசியவனின் முகம் கோபத்தைக் காட்டியது.

உடனடியாக தனது காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவன் சென்றது ராமின் தனிப்பட்ட பங்களாவிற்கு.

வாசலிலேயே அவனை எதிர்கொண்ட அந்த வீட்டின் வேலைக்காரர் ஸ்ரீ யிடம் ராமின் நிலையைக் கூறினார். அவரிடம் நன்றி உரைத்தவன் .

அவசரமாக வீட்டினுள் ஓடிச் சென்றான். ஹாலில் சிதறிகிடந்த இரத்தத்தை பார்த்தவனுக்கு இதயம் வலித்தது. உள்ளே ஒரு ரூமில் கையில் கட்டு போடப்பட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அவனது தமையன்.

கையில் போடப்பட்டிருந்த கட்டினையும் மீறி வெளியே இரத்தம் கசிந்திருந்தது. மென்மையாக தமையனது கரத்தைப் பற்றியவன் கண்ணீர் வடித்தான்.

தனக்கு தாயும், தந்தையுமாய் பாசத்தைப் பொழிந்த தமையனின் காயங்களை பார்த்தவன் ' ஏன்னா ... இப்படி பண்ண. எவ்ளோ இரத்தம் போயிருக்கு.. வலிச்சுருக்குமே.... ஐயோ அண்ணா....

நா உன்ன ரெஸ்ட்டாரண்ட் தான வர சொன்னேன். ஏன் ஆபிஸ் வந்த . எல்லாம் ஏன் இப்படி முடிஞ்சிடுச்சு. கட்டுக் கூட போட்டுக்க மாட்டேனு பிடிவாதம் பிடிச்சியா. கணேசன் போராடி உன்ன சம்மதிக்க வச்சதா சொன்னாரு. அண்ணே... இது மாதிரி இனிமே பண்ணாத . ப்ளீஸ் " என்றவன் தமையனின் கரங்களை பிடித்தபடியே உறங்கிப் போனான்.
விடிந்ததும் எப்பொழுதும் போல கண்விழித்த ராமிற்கு கை அதிக வலியை கொடுத்தது. அதன் காரணமாய் "ஸ்ஸ்ஸ்ஸ் " என்று பல்லை கடித்தவன் தனது கனம் தன் தம்பியிடம் சிக்கியிருப்பதை பார்த்தான். அவனது அசைவில் கண்விழித்த ஸ்ரீ ராமையே பார்க்க

ஸ்ரீ யை கண்டவனோ தயங்கியவாறு " ஸ்ரீ.... அது வந்து " என ஆரம்பிக்க அவனைத் தடுத்த ஸ்ரீ "வீட்டுக்கு போலாம் வாங்க" என்றான் அழுத்தமாய்.

அவனது கோபத்தை குரலே பறைசாற்ற ராம் அமைதியாய் ஸ்ரீ யுடன் சென்றான்.

ராமிற்காக ஸ்ரீ கார் கதவை திறந்துவிட அதில் அமர்ந்தவன் ஸ்ரீ யையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஸ்ரீ யோ கவனமாக காரினை செலுத்தியபடி தமையனை பார்ப்பதை தவிர்த்தான்.


நேராக வீட்டிற்கு அழைத்து செல்வான் என ராம் நிலைத்திருக்க அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றவன், மருத்துவரிடம் தமையனின் கரத்தினைக் காட்டி மருந்துகளோடு அருகிலிருந்த பீச்சிற்கு சென்றான்


காரிலிருந்து இறங்கியவன் மௌனமாய் தமையனை பார்க்க அவனும் அந்நேரம் ஸ்ரீ யை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.சற்றும் தாமதியாமல் தமையனை அணைத்துக் கொண்டவன் கண்ணீர் விட்டான்.

"அண்ணா... வலிக்குதாண்ணா. "

அவனது கண்ணீரில் திகைத்த ராம் " டேய் ஸ்ரீ ... இதெல்லாம் சின்ன காயம் தான்டா. ஏன்டா அழற"

"ஏண்ணா... இப்படி பண்ண. எவ்ளோ இரத்தம் தெரியுமா?"

ராமோ அதற்கு பதில் கூறாமல் " ஸ்ரீ கனிகிட்ட பேசுனியா. ஏதாவது சொன்னாளா?"

ஸ்ரீ யின் முகம் ஒரு நொடி சிந்தித்தது. அன்றொரு நாள் தன் தமையனிடம் கேட்ட அதே கேள்வியை மீண்டும் கேட்டான்.

"அண்ணா ... நீ கனிய லவ் பண்றியா"

அன்று பதில் சொல்லாமல் திகைத்தவனோ இன்று கம்பீரமாய் கூறினான்.

"ஆமாம்டா... அவ தான் என் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன்"
அதை கேட்ட ஸ்ரீக்கு ஒரு அதிர்வு தோன்றியது.

" அண்ணா நல்லா யோசிச்சுக்க. காதல் சந்தோஷத்த மட்டும் தராது .. கூடவே வலியையும் தான். உன்னால அதெல்லாம் தாங்கிக்க முடியுமா?"

"என் கனி எனக்கு என்ன தந்தாலும் அதுக்கு நா ரெடி. அது மரணமா இருந்தாலும் கூட ஓ.கே "

"அண்ணா .... கனிய நீ பாத்துருக்க.... அவ உனக்கு பொருத்ததமானு யோசிச்சு முடிவெடு. நாளைக்கு நீ தப்பா முடிவெடுத்துட்டோம்னு நினச்சா. அது காதலுக்கு அசிங்கம்"

அவனது பேச்சை கேட்ட ராம் கனியை பற்றி சிந்தித்தான். ராம் அழகின் தன்னிகரில்லா காளை என்றால் அவனது மனம் கவர்நதவளோ ராமிற்கு இணையானவள் இல்லை.

ஒல்லியாக , மாநிறத்தில் ஐந்தரை அடியில் குடும்ப பாங்காய் இருந்தாள். கண்டிப்பாக அழகில் ராமிற்கும் பொருத்தமில்லை. ஆனால் மனம் இதையெல்லாம் பார்ப்பதில்லையே. தன் சிந்தனையிலிருந்து வெளிவந்தவன் ஸ்ரீயிடம்

"ஸ்ரீ நா எப்படி பட்டவனு உனக்கு நல்லா தெரியும். தெரிஞ்சும் என் கிட்ட இப்படி கேக்கலாமா. எனக்கு அழகு முக்கியம் இல்ல. எனக்கு கனி வேணும். அவளோட காதல் வேணும் . என்ன நடந்தாலும் நா மாற மாட்டேன்" சாதரணமாய் ஆரம்பித்தவன் கர்ஜனையாய் முடித்தான்.

இனி தனது தமையனை மாற்ற யாராலும் முடியாது என்றுணர்ந்த ஸ்ரீ மெல்லிய பெருமூச்சை வெளியிட்டான்.

அவன் மனம் ஒன்றை நன்றாக உணர்ந்தது இந்த காதல் தன் தமையனின் வாழ்வை அடியோடு மாற்றப் போகிறது என்று.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஸ்ரீ.... நா கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல. கனி கிட்ட பேசுனியா"

"இல்லணா. அவ போன் ஸ்விட்ச் ஆப். இன்னைக்கு ஆபிஸ்ல பாத்து தான் பேசணும்"

"சரிடா... அவ கிட்ட பேசிட்டு சொல்லு. நா அவ கிட்ட பேசணும். போன தடவ மாதிரி இல்லாம இந்த முறையாவது நல்லபடியா அவள பாக்கணும் "

"ம்ம்ம்... வீட்டுக்கு போகலாம் வாங்க. நைட் அம்மாவும் , ஐயாவும் உங்க ள தான் கேட்டுகிட்டே இருந்தாங்க. எப்படியோ சமாளிச்சேன். இந்நேரம் ரெண்டு பேரையும் தேட ஆரம்பிச்சுருப்பாங்க"

"சாரிடா.... வா போகலாம்" இருவரும் தங்களது வீட்டினை நோக்கி பயணம் செய்தனர். ராமோ கனியைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாயிருந்தான்.

ராம் மீண்டும் கனியை சந்திக்கும் போது அவள் அவனிடம் பேசுவாளா? கனியைப் பற்றி அறிந்து கொள்ள முயலும் அவனது முயற்சியில் அவன் வெற்றி பெறுவானா?
ப்ரியா ஹாஸ்டலில் அழுத வண்ணம் அமர்ந்திருந்தாள். அவளுக்கு யாரையும் பார்க்க பிடிக்கவில்லை. பூமிக்கு பாரமாய் தான் வாழ்வதாய் அவள் மனம் எண்ணியது.

தனிமை அது எவ்வளவு கொடுமையானது என்பதை அவளைவிட நன்கறிந்தவர் யார்.

வாழ்வின் கொடுமையான பக்கங்களை மட்டுமே அவள் பார்த்திருக்கிறாள். தாய் தந்தையின்றி தனிமையில் வாழ்ந்தவளுக்கு ஆறுதல், ஆதரவு எல்லாமே அந்த கடிதம் தான்.

இன்று வரை அதை யார் போடுகிறார்கள் என அவள் அறிய முயற்சி செய்யவில்லை. ஆனால் இன்றோ முதல் முறையாக அதை தெரிந்து கொள்ள நினைக்கிறாள்.

எந்தவொரு விவரமும் இல்லாமல் எப்படி அந்த கடிதம் இத்தனை நாளாய் வந்தது என அவளுக்கு யோசனையாய் இருந்தது.

அதே நேரம் அவளைப் பற்றி ஒரு ஜீவன் சிந்தித்துக் கொண்டிருந்தது.
"ப்ரியாமா...... எங்கள மன்னிச்சுடுங்க .... உங்களுக்கு எங்களால லெட்டர் போட முடியல. இனிமே போடவும் முடியாது. உங்கள நாங்க பாதுகாக்க நினக்கிறோம். எங்களால உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. எங்க உயிரே போனாலும் உங்க ள காட்டிக் குடுக்க மாட்டோம்" என்று.

விதியை வெல்பவர் யார்? ப்ரியாவை காப்பாற்றத் துடிப்பவர்கள் ஒருபுறம், ப்ரியாவை கொல்ல துடிப்பவர்கள் ஒருபுறம் இருவரில் விதி யார்புறமோ?
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10

அன்று காலையில் விடிந்ததலிருந்து மதிக்கு மனம் படபட வென்று அடித்துக் கொண்டது. இன்று ஏதோ அசம்பாவிதமாய் நடக்கப் போகிறது என அவளது மனம் அடித்துக் கூறியது.

மனதின் படபடப்பை மனதோடு மறைக்க தெரியாமல் முகத்தில் பளிங்கு போல காட்டிக் கொண்டிருந்தாள். கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்தவள் அதில் தெரிந்த பயத்தில் இன்னும் மிரண்டாள்.

"என்னாச்சு எனக்கு. என்ன யாருமே திட்டல. இன்னைக்கு கிளாஸ்ல (class) டெஸ்ட் கூட கிடையாது. நானும் எதையும் சொதப்பல. அப்புறம் ஏன் இவ்ளோ பயமா இருக்கு. ஹார்ட் வேகமாக துடிக்குது. கடவுளே காலேஜ் போகணுமே" என்று புலம்பியவாறே டைனிங் டேபிலை அடைந்தாள்.


அங்கே அவளது தந்தை சாப்பிட்டுக் கொண்டிருக்க , அவளது தாய் பரிமாறிக் கொண்டிருந்தார். அவர்களது அருகில் அவளது அத்தை அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.


அவர்களை பார்த்ததும் எப்போதும் போல மௌனத் திரையை சூடிக் கொண்ட மதி அமைதியாய் போய் அங்கே அமர்ந்தாள் காலை உணவிற்காக.

"என்னடா ஒரு மாதிரி இருக்க. உடம்பு சரியில்லயா" பரிவாக கேட்ட தந்தையைப் பார்த்து மெல்லிய புன்னகையை சிந்தியவள் பதிலுரைக்காமல் மறுப்பாய் தலையாட்டினாள்.

"சாப்பிடு மதிமா" என அன்னை வைத்த உணவுத் தட்டினை பார்த்தவளுக்கு மயக்கமே வந்தது. அதில் வைக்கப் பட்டிருந்த மூன்று இட்லிகளும் அவளது மன நிலைக்கு மூன்று மலைகளாக தெரிந்தன.

அவளால் உணவருந்த முடியாது என அவளுக்கு தோன்றியது.என்ன செய்வது என அவள் திணறிக் கொண்டிருக்கையில் அவளைப் பார்த்த அவளது தந்தையின் பார்வை கூர்மையானது.

"என்ன மதி காலேஜ்ல எதுவும் பிரச்சனயா.. உன் முகம் சரியில்ல. "

"ஒண்ணுமில்லபா" தட்டு தடுமாறி கூறியவள் தலையை குனிந்து கொண்டாள்.

"என்னப் பிரச்சனனாலும் பயப்படாம அப்பா கிட்ட சொல்லுமா... இந்த பாலமோகன் இருக்கற வரைக்கும் அவன் பொண்ணு எதுக்கும் கலங்க கூடாது" என கர்ஜனையாய் கூற மதியோ திரு திருவென விழித்தாள்.

"அண்ணே.... நம்ம பொண்ண எதுக்கு காலேஸுக்கு அனுப்பனும். அப்புறம் ஏன் பிரச்சனனு துடிக்கணும். படிச்சு என்ன பண்ண போறா. பேசாம வினய்க்கும் இவளுக்கும் கல்யாணத்த முடிச்சாச்சுனா. பயமில்ல பாரு"
என முடிக்கவும் அதுவரை புன்சிரிப்போடு இருந்தவர் தன் தங்கையை முறைத்தார்.

"இங்க பாரு தங்கம் என் பொண்ண என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும். அவளப் பத்தி தப்பா பேசாத" என முகத்தில் அறைந்தது போல கூறவும் அதில் மனவருத்தமடைந்த தங்கம் கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள்.

"நீயும் என்ன திட்டுற தான அண்ணே... நா என்னத் தப்பா சொல்லிப்புட்டேன். என் அண்ண மவ எனக்கு மருமவளா வரணும்னு ஆசப்பட்டது குத்தமா. நல்ல புருஷன் அமஞ்சிருந்தா எனக்கு இந்த நில வருமா. நாதியத்தவனு தான் நீயும் திட்டுற"

"என்ன அண்ணி பெரிய வார்த்தைலாம் சொல்லிகிட்டு. உங்களுக்கு தான் இந்த வீட்டில் முத உரிமை இருக்கு அண்ணி. எங்களுக்கு எல்லாம் அப்பா தான். " என நாத்தியின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார் பாசமான அண்ணியாக மதியின் தாய்.

மதி இருந்த மனநிலையில் இவர்கள் பேசுவதில் கவனமின்றி கல்லூரிக்கு செல்ல உணவுண்ணாமல் எழுந்தவள் , தன்னுடைய காரினை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.


செல்லும் வழியெங்கும் பயம் மட்டுமே அவள் மனதில் நிறைந்திருந்தது. மன அமைதியில்லாமல் கல்லூரி செல்வது சரியென தோன்றவில்லை மதிக்கு.

சிந்தித்துக் கொண்டே காரினை செலுத்திக் கொண்டிருந்தவளின் கண்களுக்கு தெரிந்தது அந்த கோவிலின் நுழைவாயில்.

கோவிலுக்கு சென்றால் மன அமைதிக் கிட்டும் என எண்ணியவள் காரினைத் திருப்ப , அந்த சிறிய திருப்பத்திற்குள் காரினால் செல்ல இயலவில்லை.

காரினை ஓரமாக நிறுத்தியவள் கீழே இறங்கினாள். வெளிர் நீல டாப்ஸ், வெள்ளை நிறத்தில் பேண்ட் மற்றும் துப்பட்டா அணிந்து, கழுத்தில் மெல்லிய சங்கிலி, காதில் சின்ன சிறு ஜிமிக்கி என அழகாய் இருந்தவளை வக்கிரமாய் பார்த்துக் கொண்டிருந்தான் தினேஷ்.

அன்று கேன்டீனில் அவளையும் , ஆதியையும் ஒன்றாக பார்த்ததில் இருந்து அவனுள் எழுந்த பொறாமையினால் அன்றிலிருந்து இன்றுவரை மதியை பின் தொடர்ந்து வருகிறான் அவளறியாமல்.

நல்ல வாய்ப்புக்காக அவன் காத்திருக்க இதுவரை அமையாத வாய்ப்பு இன்று அவனுக்கு கிடைத்தது. ஏளன சிரிப்போடு அவளை பின் தொடர்ந்தான். இதையறியா மதியோ இறைவனைக் காணும் ஆவலில் நடந்து சென்றுக் கொண்டிருந்தாள்.

அந்த கோவில் சற்று உள்ளே அமைந்திருந்தது. அதனால் சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். ஆள்நடமாட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட தினேஷ் அவள் பின்னே மறைந்து யாருடைய கவனத்தையும் ஈர்த்திடாமல் சென்றான்.

ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தை அடைந்ததும் தாமதியாமல் மதியை நெருங்கியவன். அவளின் பின்னே மிக அருகே சென்று "என்ன மதி தனியா என்னப் பண்ற. துணைக்கு ஆதி வரலயா." என்றான் நக்கலாய்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனை அருகில் கண்ட மதி நடுங்கிப் போய் ஓரடி பின் நகர்ந்தாள். அதை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.

" எனக்கு என்னடி குறைச்சல். என்ன வேணாம்னு சொல்லிட்டு அவன ஓ.கே சொல்லிட்ட. அப்படி என்னடி அவன் கிட்ட இருக்கு. அன்னைக்கு உன் கையப் பிடிச்சதுக்கு அடிச்சான்ல.

இப்ப பாக்குறேன் என்ன பண்ண போறனு." என்ற படி அவளை நெருங்கி வர அவனது வார்த்தைகளை உள்வாங்கியவள் அதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட அடுத்த நொடி ஓட ஆரம்பித்தாள்.

இதை எதிர்பாராத தினேஷும் அவளைத் துரத்த, அவனிடம் தப்பிக்க எண்ணியவள் அருகிலிருந்த சந்தில் புகுந்து ஓடினாள். அருகருகே வீடுகளுடன் மிகவும் நெரிசலாக இருந்தது அந்த சந்து.

குறுக்கும் நெடுக்குமாக ஓடி அவனிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டிருந்தாள் மதி. அவளைத் துரத்தி வந்தவன் அந்த சந்தைப் பார்த்ததும் ஏதோ ஒன்று தோன்ற பயந்து திரும்பி ஓடினான்.

இதையறியாத மதியோ அவன் தன்னைத் துரத்துவதாக எண்ணிக் கொண்டு பின்னே திரும்பி பாராமல் ஓடினாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் ஓட முடியாமல் , ஒளிந்து கொள்ள எண்ணி ஓரிடத்தில் மலை போல் கொட்டிக் கிடந்த அட்டை பெட்டிகளுக்கு பின்னே அமர்ந்து கொண்டாள்.

சிறிது நேரம் சத்தம் எதுவும் கேட்காததால் எட்டிப் பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்தே போனாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. கதறி அழ வேண்டும் என தோன்றினாலும் அவள் உதடுகள் பிரிய மறுத்தன பயத்தில்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11

அன்றைய தினத்திற்கு பின் ராம் கனியைப் பற்றிய அறிய முயன்றான். அவன் அறிந்ததெல்லாம் ஒன்றுதான் கனி ஒரு தனிமை விரும்பி.

யாரிடமும் எளிதில் பழகும் ரகமல்ல. அதே சமயம் எல்லாருக்கும் உதவுபவள். அவன் அறிந்த வரை அந்த ஹாஸ்டலை விட்டு பக்கத்தில் இருக்கும் கடைகளை தவிர வேறெங்கும் அவள் சென்றதில்லை.

அவளுடைய குடும்பம் பற்றி அறிய முயன்றவனுக்கு கிடைத்த பதில் அவள் யாருமற்றவள். பலருடைய நிதி உதவியால் கல்வி பயின்று இன்று நல்ல நிலையில் இருப்பவள்.

எப்படியாவது அவளை சந்தித்து அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவனது மனம் துடித்தது. இருப்பினும் ஸ்ரீ அவனைத் தடுத்ததால் தான் அவன் அமைதியாக இருக்கிறான்.

ஒருவாரம் அமைதியாக இருந்தவனால் அதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியவில்லை. தன்னவளுக்கு யாருமில்லை என்று அறிந்தவனது மனம் ஒவ்வொரு நொடியும் அவளுக்கு ஆறுதல் அளிக்க துடித்தது.

அதைவிட ஏற்கனவே துன்பத்தில் இருந்தவளை தானும் துன்பப்படுத்தி விட்டோமோ என்று அவனது இதயம் துடித்தது.

காதல் எப்படி வரும் என்பதை யாராலும் அறிய இயலாது. அதை இதயத்திற்குள் நுழைய விடக்கூடாது என என்ன தான் தடையிட்டாலும் தடைகளை உடைத்திடும் வல்லமை கொண்டது அது.


காதல் வந்தபின் ஒருவரது இயல்பு மாறி விடுகிறது. தன்னுடைய குடும்பம், தன்னுடைய சந்தோஷம் என்றிருப்பவர்கள் காதல் வந்தபின் முன்பின் அறியா தன்னுடைய துணைக்காக உயிரையும் தர தயாராக இருப்பார்கள்.

காதல் ஒருவரது இயல்பையே மாற்றி விடுகிறது. கோழையாய் இருப்பவனும் தன்னவளை காக்க வீரனாய் மாறிவிடுவான். சூரியனாய் பிறரை சுட்டெரிப்பவன் தன்னவளிடம் நிலவாய் மாறிடுவான்.

அதுபோலவே ராமும் எல்லாருக்கும் எட்டாத நிலவாய் இருந்தவன் கனிக்கு மட்டும் அவளது கையோடு சேரத் துடித்தான்.

அவனை நெருங்கிட எத்தனை பேர் முயன்றாலும் பார்வைதனில் அவர்களை விலக்கியவன் அவளிடம் வாழ்நாள் முழுவதும் விழுந்திட துடித்தான்.

அவனது அலுவலக வேலைகளில் அழுத்தம் வேறு அவனை துன்புறுத்த கனியிடம் ஆறுதல் வேண்டியது அவனது மனது. தன்னவளின் வார்த்தைகள் கூட வேண்டாம் சின்னப் புன்னகை கூட போதும் என்றெனண்ணியது காதல் கொண்ட காளையின் நெஞ்சம்.

இதற்கு மேலும் தன்னுள்ளே காதலை பூட்டி வைத்திட இயலாது என்றும் , தன்னவளை மகிழ்வாக இனியாவது வைத்திட வேண்டும் என நினைத்தவன் அவளிடம் பேச முடிவெடுத்தான்.

மறுநாள் காலை விடிந்ததும் காலை ஆறு மணிக்கே அவளுடைய ஹாஸ்டலின் முன் சென்று நின்று கொண்டிருந்தான். வழக்கம் போல் ஹெல்மட் அணிந்திருந்ததால் அவனை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.

அரை மணி நேரம் கடந்த நிலையிலும் ஹாஸ்டலிலிருந்து யாரும் வெளிவரவில்லை. பிறந்ததிலிருந்து அவன் யாருக்காகவும் காத்திருந்ததில்லை.

எல்லோரும் அவனை சந்திக்க தான் காத்திருப்பார்கள். இதுவும் அவனுக்கு பிடித்திருந்தது. புது அனுபவத்தை ரசித்தான்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலிக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் காதலனுக்கு சுகம் தானே... அவன் இதயத்தில் காதல் நிறைந்திருக்கும் போது.....

மணி ஏழாகியது... ஏழரையாகியது.... எட்டாகியது.... பலர் அந்த ஹாஸ்டலில் இருந்து வெளியே வந்தனர். கனி மட்டும் வரவில்லை.

அவனுக்கு சிறிதும் சலிப்பு ஏற்படவில்லை. ஆறு மணிக்கு இருந்த அதே உற்சாகம் அவனிடம் இருந்தது. அவனது கண்கள் கனியின் வருகைக்காக ஆர்வமாய் வாசலையே பார்த்திருந்தனர்.

ஒருவழியாக அவனை வெகுநேரம் காக்க வைத்துவிட்டு எட்டரை மணிக்கு அவனது காதலி வெளியே வந்தாள். பச்சை நிற டாப்ஸ் , கருநீல நிற பேண்ட் மற்றும் துப்பட்டா அணிந்திருந்தாள். ஈரமான தலைமுடியை பின்னலிட்டிருந்தாள். அதிலிருந்து சொட்டிய தண்ணீர் அவளது உடையை நனைத்திருந்தது.

அவளைப் பார்த்ததும் அவனது கண்களில் சந்தோஷம் பொங்கியது. காணக் கிடைக்காத பொக்கிஷத்தை கண்டதை போல அவனது முகம் பொலிவுற்றது.

அவள் நடந்து வந்து கொண்டிருப்பதை பார்த்தவன் அவளருகே ஓடினான். அவனது மனமோ அவளை எப்படி சமாதானம் செய்வது என்று எண்ணியது.

கோபப்படுவாளோ இல்லை அன்று போல எதுவும் பேசாமல் சென்றிடுவாளோ என்று பயந்துக் கொணடே அவளை நெருங்கிவிட்டான்.

தன்னை ஒருவன் நெருங்கி வருவதைப் பார்த்தவள் அதிர்ந்து ஓரடி பின் சென்றாள். அவளது கண்களில் தெரிந்த குழப்பத்தை கண்டவன்

" கனி சாரிங்க.... உங்க கிட்ட சாரி கேட்டகணும்னு இத்தன நாளா நினச்சேன் . ஆனா பயம் இருந்துச்சு. இன்னைக்கு தான் ஒருவழியா என்ன ஆனாலும் பரவால்லனு வந்துட்டேன். ப்ளீங்க என்ன மன்னிச்சிடுங்க" எங்கே அவள் ஏதாவது சொல்லிவிடுவாளோ என பயந்து அவன் போக்குக்கு அவன் வேகமாக சொல்லிக் கொண்டே சென்றான்.

கோர்ட்டில் பல கொடூரமான கொலைகாரர்களுக்கு முன்பு கூட தைரியமாக நிதானமாக பயமின்றி பேசுபவன் அவனது காதலியிடம் உளறுகிறான். இது தான் காதலின் விந்தையோ...

அவன் பேசுவதைக் கேட்டவள் அவனைப் புரியாத பார்வை பார்த்தாள். "நீங்க யாரு.. எதுக்கு என் கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க"

அதில் ஒரு நிமிடம் யோசித்தவனது மூளைக்கு அப்போது தான் ஒன்று உரைத்தது. அவன் இன்னும் ஹெல்மட்டை கழட்ட வில்லையென்று. தன்னுடைய முட்டாள் தனத்தை நினைத்தவன் மனதில் தன்னை தானே கடிந்து கொண்டான்.

'டேய்..... சொதப்புறடா..... அன்னைக்கு அவள் அடிச்சு சொதப்புன. இன்னைக்கு அவளுக்கு நீ யாருனே சொல்லாம ஹெல்மட் போட்டுட்டு பேசி சொதப்புற. மறுபடியும் மலையேறிட போறா.... சமாளி....'

மெதுவாக தனது ஹெல்மட்டை கழட்டி அவளுக்கு தன்னுடைய முகத்தைக் காட்டினான். "கனி நா ராம் ... ஸ்ரீயோட அண்ணன். அன்னைக்கு நடந்ததுக்கு சாரி கேக்க வந்தேன்.ஆனா மறுபடியும் சொதப்பிட்டேன்" என்றபடியே தனது ஹெல்மட்டை அணிந்து கொண்டான்.

"சாரி யாராவது பாத்தா... தேவயில்லாம உங்களுக்கு தான் பிரச்சன அதான்" என்று அவளது முகத்தைப் பார்த்தான்.

அவனை அடையாளம் கண்பவளது முகம் முதலில் வருத்தத்யையும், அடுத்து ஆச்சர்யத்தையும், பின்பு சிரிப்பையும் காட்டியது.

அவற்றை எல்லாம் தன் மனதில் கல்வெட்டுகளாய் செதுக்கி கொண்டிருந்தான் ராம். அவன் அவளது பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்தவள் " ஐயோ சார்.... நீங்க இன்னும் அத மறக்கலயா..... நீங்க எவ்ளோ பெரிய ஆளு.... என் கிட்ட மன்னிப்புக் கேக்க இங்க வநாதுருக்கீங்க. அதெல்லாம் எனக்கு மறந்துடுச்சு. சோ கவலப் படாம போங்க" என்ற படி அவள் கிளம்ப தயாரானாள்.

ராமிற்கு ஆச்சர்யமாய் இருந்தது அன்று அவ்வளவு கோபப்பட்டவள் இன்று அதை மறந்து விட்டேன் என எளிதாக சொல்லுவாள் என அவன் கனவிலும் நினைக்கவில்லை.

அவனுக்கு ஆச்சர்யமாயிருந்தது அதே சமயம் வருதாதமாகவும் இருந்தது. இதை சாக்காக வைத்து தான் அவளை அடிக்கடி பார்க்க அவன் திட்டமிட்டிருந்தான்.
ஆனால் அவனது காதலியோ ஒற்றை வார்த்தையில் எல்லாவற்றையும் உடைத்துவிட்டாள். "உங்களுக்கு உண்மையா என் மேல கோபம் இல்லையாங்க. அன்னைக்கு ரொம்ப திட்டுனீங்க. ரெண்டு நாளா ஸ்ரீகிட்ட கூட பேசலயாம். அவன் ரொம்ப பீல்(feel) பண்ணான். இன்னும் நீங்க அவன் கூட பேசாம தான இருக்கீங்க. ப்ளீஸ்ங்க என்னால உங்களுக்குள்ள பிராப்ளம் வேண்டாம்"

அவன் பேசுவதை கேட்டவள் "சார் நீங்க இவ்வளவு பேச வேண்டாம். அன்னைக்கு ஏதோ கொஞ்சம் கோபம் அவ்ளோ தான். உங்க மேல எனக்கு ரொம்ப மரியாத இருக்கு. நீங்க ஏழை மக்களுக்கு நிறைய உதவி பண்றதா கேள்வி பட்டேன். வாழ்த்துக்கள் சார். இந்த விஷயத்த இதோட மறந்திருங்க. நீங்க என்ன தேடி வந்ததே உங்க பெருந்தன்மை சார். ஓ.கே சார் நா கிளம்புறேன். டைம் ஆகிட்டு. உங்களுக்கும் நிறைய வேலை இருக்கும். " என்று தலையசைத்து விட்டு அவள் சென்று விட்டாள்.

அவள் செல்வதையே ஏக்கத்தோடு பார்த்திருந்தன ராமின் விழிகள். இதையே வக்கிர எண்ணத்தோடு பார்த்திருந்தன இரு விழிகள்......
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதி அதிர்ச்சியில் உறைந்திருந்தாள். அந்த வீட்டிற்கு அவள் வந்து ஒரு மாதமாகிறது. ஆனால் இதுவரை யாரிடமும் எதுவும் பேசவில்லை.

அன்றைய நிகழ்விலிருந்து வெளிவர முடியாமல் அவள் திணறிக் கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் அவளை மேலும் ஊமையாக்கின.கட்டிலில் கால்களை குறுக்கி அமர்ந்து தன்னுடைய தலையை முழங்காலில் புதைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் கதவு திறந்த சப்தம் கேட்டு பயத்தோடு நிமிர்ந்து பார்த்தாள்.

அவளது கணவன் குளித்துவிட்டு வந்திருந்தான். இவளைப் பார்த்ததும் அவனது கண்களில் கோபம் கரைபுரண்டது. அவளை முறைத்தவாறே அறையை விட்டு வெளியேறினான். அதுவரை பயத்தில் நடுங்கி கொண்டிருந்த மதி சற்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
மீண்டும் தலையை கால்களில் புதைத்துக் கொள்ள போனவளுக்கு ஏதோ குத்துவது போன்று தோன்றியது. என்னவென்று பார்த்தவளுக்கு கழுத்தில் கிடந்த தாலி தெரிந்தது.அதை கையில் எடுத்து பார்த்தவள் தன்னுடைய வாழ்வில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்ததை நினைத்து பார்த்தாள்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 12

அதே நேரம் அவளது கணவனும் கடந்து போன நிகழ்வுகளை தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

தன்னைத் துரத்திக் கொண்டு தினேஷ் ஓடி வருவதாக நினைத்து மதி கண்மூடித் தனமாக ஓடிக் கொண்டிருந்தாள். ஆனால் அவனோ அவள் அந்த சந்தில் நுழைந்த போதே பயந்து திரும்பி ஓடிவிட்டான்.

இதை அறிந்திருந்தால் மதி அந்த சந்திக்குள் சென்றிருக்க மாட்டாள். அதன் விளைவுகளாக அவள் வாழ்க்கையில் இவ்வளவு துன்பம் வந்திருக்காது.

அந்த அட்டைப் பெட்டிகளுக்கு பின் ஒளிந்து கொண்டவள் தன்னை தினேஷ் பின்தொடர்ந்து வருகிறானா என்று பார்க்க எண்ணி தன்னுடைய தலையை மட்டும் வெளியே நீட்டினாள்.

அங்கே அவள் கண்ட காட்சி அவளது இரத்தத்தை உறைய செய்தது. இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்ட அவள் அங்கு பார்த்த காட்சியில் அதிர்ந்திருந்தாள். அவளது வாயிலிருந்து வார்த்தைகள் மட்டுமல்ல பயத்தில் சின்ன முனகல் கூட வெளிவரவில்லை.

மதியை பயமுறுத்த எண்ணியே தினேஷ் அவளை நெருங்கி மிரட்டினான். அவளை துன்புறுத்த வேண்டும் என்பது அவனது எண்ணமில்லை. கொஞ்சம் மிரட்டி பார்க்கவே நினைத்தான். ஆனால் அவள் ஓடவும் அவளை பிடித்திட எண்ணி துரத்திக் கொண்டிருந்தான்.

மதி அந்த சந்தினில் நுழைந்ததும் அவளை பின்தொடர்ந்த படி ஓடி வந்தான் . ஆனால் அவன் ஓடி வரும் போது தான் அவன் அந்தக் காட்சியைப் பார்த்தான். இதுவரை படத்தினில் மட்டுமே பார்த்திருந்த காட்சியை இன்று நேரில் பார்க்கிறான்.


அதனால் பயத்தினால் அவன் அவ்விடத்தை விட்டு வந்த வழியே திரும்ப ஓடி வந்தான். ஆள் நடமாட்டம் உள்ள முக்கிய சாலையை சென்றடைந்ததும் மூச்சு வாங்க நின்றவனுக்கு மதியின் நினைவு வந்தது. சற்று முன்பு வரை அவனுக்கு அவனது உயிர் மட்டுமே பெரிதாக இருந்தது. இப்பொழுது அவனுக்கு ஆபத்து இல்லை என்றுணர்ந்ததும் மதியை நினைத்தான்.

கண்டிப்பாக அவளது உயிருக்கு ஆபத்து என்றெண்ணியவன் என்ன செய்வதென்று அறியாமல் குழம்பி போய் நின்றான். அவனுக்கும் மதியை மிக பிடிக்கும் அவளுக்கு ஆபத்து என்றதும் தன்னால் எந்த உதவியும் அவளுக்கு செய்ய இயலாது என்றுணர்ந்து உடனே ஆதிக்கு அலைபேசியில் அழைத்தான்.
 
Status
Not open for further replies.
Top