All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "ரகுக் குல கர்ணா" - கதை திரி

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நண்பர்களே:love::love:!

நான் சாந்தி கவிதா. நம் தளத்திற்கு புதியவள்‌. அதேபோல எழுதிற்கு ரொம்ப நெருக்கமானவள்னு சொல்லலாம். நான் எவ்ளோ எழுதறனோ அதை விட ரொம்ப ரொம்ப அதிகமா புத்தகம் படிப்பேன்.

நான் வேற தளங்கள்ல எழுதிட்டு இருக்கேன்‌‌. இப்போ இங்க புதுசா வந்திருக்கேன். சோ மக்காஸ் நீங்க என்னுடைய கதையை படிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு என்னோட பிளஸ் மைனஸ் எல்லாத்தையும் என்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டீங்கனா நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன். அவ்ளோ தான்!!

அப்புறம் ரகுக் குல கர்ணா இந்த நாவல் உங்க எல்லாருக்கும் பிடிக்கும்னு நான் நம்புறேன். ரெகுலர் எபிஸ் கண்டிப்பா தந்திருவேன். நம்புங்க சகோஸ்..

நன்றிகள் பிரண்ட்ஸ்:giggle::giggle:
 
Last edited:

Jeevitha jeevi

New member
வணக்கம் நண்பர்களே:love::love:!

நான் சாந்தி கவிதா. நம் தளத்திற்கு புதியவள்‌. அதேபோல எழுதிற்கு ரொம்ப நெருக்கமானவள்னு சொல்லலாம். நான் எவ்ளோ எழுதறனோ அதை விட ரொம்ப ரொம்ப அதிகமா புத்தகம் படிப்பேன்.

நான் வேற தளங்கள்ல எழுதிட்டு இருக்கேன்‌‌. இப்போ இங்க புதுசா வந்திருக்கேன். சோ மக்காஸ் நீங்க என்னுடைய கதையை படிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு என்னோட பிளஸ் மைனஸ் எல்லாத்தையும் என்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டீங்கனா நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன். அவ்ளோ தான்!!

அப்புறம் ரகுக் குல கர்ணா இந்த நாவல் உங்க எல்லாருக்கும் பிடிக்கும்னு நான் நம்புறேன்.

நன்றிகள் பிரண்ட்ஸ்:giggle::giggle:
welcome:love::love::smile1:
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மார்னிங் மக்காஸ் :love::love:,

இன்னைல இருந்து இந்த கதைய பகிர போறேன். கொஞ்சம் பெரிய epi தான். சோ அட்ஜஸ்ட் கரோ :). எப்படி இருக்குன்னு படிச்சு பார்த்துட்டு உங்க லைக்ஸ தட்டிவிட்டு கமெண்ட்ட போட்டுவிட்டு‌ போய்டுங்கபா. அன்ட் இந்த நல்ல ஆப்பர்டியுனிட்டி தந்த ஶ்ரீ மாக்கு என்னோட பெரிய தேங்க்ஸ்😍🙏

அத்தியாயம் - 1


நிலவு மகள் நட்சத்திரங்களை தோழிகளென கொண்டு தன் இணையாம் வானோடு வீதி உலா வரும் நேரம். அந்த இரவு வேளையிலே ஒரு பெண்ணின் அலறல் சத்தம் வீரிட்டு கேட்டது.

அது ஒரு தனியார் மருத்துவமனை. அதில் பிரசவ அறை ஒன்றில் இருந்து வந்த ஒரு பெண்ணின் அலறல் சத்தம் தான் அது. அந்த அலறலுக்கு சொந்தகாரர் சுபத்ரா.

சர்வ சாதாரணமாக பிற பெண்களுக்கு பிரசவம் பார்ப்பவர் தான் சுபத்ரா. ஆம் அவர் மகப்பேறு மருத்துவர்.

இன்று தன் பிரசவ வலியில் உயிர் வேதனையை அனுபவித்து கொண்டு இருக்கிறார். அவருக்கு இது தன்னுடைய கடைசி நிமிடங்கள் என தெரிந்தே இருந்தது.

அவரின் அலறல் சத்தத்தை கேட்டு வெளியே பயத்தில் முகம் வேர்க்க கை கால்கள் நடுங்க நின்று கொண்டிருந்தார் ராஜசேகர் அருணாசலம், பொதுநல மருத்துவர். சுபத்ராவின் கணவர்.

அவரின் சொந்த மருத்துவமனையே அது. ராஜசேகர் மற்றும் அவர் மனைவி சுபத்ரா இருவரின் கடின உழைப்பால் உருவானது தான் அருணாசலம் மருத்துவமனை.

அப்போது வந்து அவரின் காலை கட்டிக் கொண்டு அழுதுக் கொண்டிருந்த ஹர்ஷவர்தன், அவரின் ஐந்து வயது மகனை கூட பார்க்க திறனற்று நின்றிருந்தார்.

அவனை தூக்கி சென்று சமாதானம் செய்து கொண்டிருந்தார் பார்வதி, ராஜசேகரின் தங்கை. என்றும் சிரித்த முகத்துடன் வளைய வரும் தன் சுபத்ரா அண்ணியை பார்வதிக்கு மிகவும் பிடிக்கும்.

அவருக்கும் இப்போது மனம் முழுவதும் வேதைனையே‌. மேலும் அவன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பதட்டத்துடன் தான் வெளியே காத்திருந்தனர்.

அவர்களின் நிலமை இப்படி ஆகும் என எள்ளளவும் அவர்கள் எண்ணவில்லை. இதுநாள் வரை தன்னிடம் எதையும் கூறாது மறைத்த தன் மனைவியை எண்ணி அழுகை தான் வந்தது ராஜசேகருக்கு.

ராஜசேகரும் சுபத்ராவும் காதல் மணம் புரிந்து கொண்டவர்கள். அதனால் பல வருடங்களாக குடும்பத்தில் இருந்து தனித்தே வாழ்ந்து வந்தனர்.

இரு வருடத்திற்கு முன் தான் அவர்களை ராஜசேகரின் தந்தை அருணாசலம் ஏற்று கொண்டார். எனவே இப்போது ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

அருணாசலம், இவரின் மனைவி இறந்து விட்டார். அவரின் மூத்த மகன் தான் ராஜசேகர். அவர் மனைவி சுபத்ரா, மகன் ஹர்ஷவர்தன்.

அருணாசலத்தின் இளைய மகள் பார்வதி, கணவர் வேதாசலம், அவரின் மூன்று வயது மகன் விக்ரம் என கூட்டு குடும்பம். அருணாசலத்தின் மூத்த மகள் தன் கணவன் குழந்தைகளோடு ஊட்டியில் வசித்து வருகிறார்.

இவர்கள் வசிப்பது சென்னையில் தான். தன் குடும்பத்தோடு சேர்ந்த பின்னர் ராஜசேகர் வாழ்க்கை இன்னும் வண்ணமயமானது.

அப்போது தான் சுபத்ரா கருவுற்றார். அதில் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியே. குடும்பமே கொண்டாடி தீர்த்தது.

தங்கள் மருத்துவமனையிலே வேறொரு பெண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொண்டனர். எல்லாம் நன்றாக தான் சென்றது என்று நினைத்திருந்தார் ராஜசேகர்.

ஆனால் அப்படி இல்லை. தன் மனைவியே அவ்வளவு பெரிய உண்மையை தன்னிடம் மறைந்திருப்பார் என கனவிலும் அவர் எண்ணவில்லை.

ஏனெனில் சுபத்ராவின் கர்ப்பப்பை பலவீனமாக இருக்கிறது மற்றும் குழந்தை பிறக்கும் சமயம் அது உயிருக்கே ஆபத்தாகவும் வாய்ப்புள்ளது என மருத்துவர் எச்சரித்து இருந்தார்.

ஆனால் அதை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு சொல்லாது மறைத்து விட்டார்‌.

தான் இல்லாது போனாலும் தன் குழந்தை வாழ வேண்டும் என்ற சராசரி தாயின் மனநிலை கொண்டது விதியா? அல்லது தாயின் மனதா?

இதில் அந்த பெண் மருத்துவரையும் தனக்கு எதுவும் நேராது எனவே யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

தன் நாட்கள் இன்னும் சொற்பம் தான் இவ்வுலகில் என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்த சுபத்ரா, தன் குடும்பத்தை மகிழ்வித்து தானும் மகிழ்ந்தார்.

இச்சமயத்தில் சுபத்ராவிற்கு பிரசவ வலி வந்தது. தங்களின் மருத்துவமனையிலே சுபத்ராவை அனுமதித்தனர் குடும்பத்தினர்.

அதுவரை சிறிய பயம் இருந்தும் பெரிதாக கலங்கவில்லை ராஜசேகர் ஏனெனில் அவர் இது போல் பல பிரசவத்தை நேரில் கண்டவரே.

தைரியமாக இருந்த ராஜசேகருக்கு தலையில் பெரிய இடியை இறக்கினார் சுபத்ராவை பரிசோதித்த மருத்துவர்.

அறையில் இருந்து வெளியே வந்தார் அந்த மருத்துவர். "சாரி டாக்டர் ராஜசேகர் இதை எப்படி சொல்றதுனு எனக்கு தெரியலை" என்றவர் சிறிது இடைவெளி விட்டு

"அவங்க இப்ப ரொம்ப கிரிட்டிகல் ஸ்டேஜ் ல இருக்காங்க. அவங்க கர்பப்பை ரொம்ப வீக். அதுக்கு குழந்தைய தாங்குற அளவு சக்தி இல்லை.

ஆனா அவங்க இந்த குழந்தைய பெத்துக்கனும்னு ரொம்ப அடமென்டா இருந்தாங்க. சுபத்ரா டாக்டர் இதை உங்ககிட்ட சொல்லிருப்பாங்கனு தான் நான் நினைச்சேன்.

ஆனா அவங்க சொல்லலை போல" என்றவர் மேலும் தபங்கவே முன்னே வந்த பார்வதி " இப்ப என் அண்ணி எப்படி இருக்காங்க டாக்டர்.

அவங்களுக்கு ஒன்னும் இல்லை தானே. பிளீஸ் சொல்லுங்க. ஏன் அமைதியா இருக்கீங்க" என்றார் அழும் குரலில்.

தன் முன்னே இருக்கும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்த மருத்துவர் " சாரி மேடம் அவங்கல காப்பாத்த சான்ஸ் ரொம்ப கம்மி தான்.

அம்மா இல்லை குழந்தை ரெண்டு பேருல ஒருத்தர தான் காப்பாத்த முடியும்" என்றதும் தான் சுற்றி இருந்தவர்களுக்கு சுபத்ராவின் உண்மை நிலவரம் புரிந்தது.

புரிந்த உண்மை அவர்களை நிலைகுலைய செய்தது. ராஜசேகருக்கு தன் மனைவி தன்னிடம் கூட கூறாது மறைத்து விட்டதை இன்னும் நம்ப முடியவில்லை.

இதை கேட்டதும் நொருங்கிப் போய் சுவற்றை வெறித்தவர் தான் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட காணும் நிலையை தாண்டி இருந்தார்.

அவரின் மனது பலவற்றை யோசித்தது. 'என்னால் தானா, கடைசியில் எல்லாம் என்னால் தானா. நான் எவ்வளவு சொன்னே ஹர்ஷா மட்டும் போதும்னு.

இப்படி பண்ணிட்டியே சுபா. என்னை விட்டுட்டு போக முடிவு பண்ணிட்டியா. ஏன் சுபா' என மனதோடு மனைவியிடம் பேசிக் கொண்டு இருந்தார்.

அண்ணனின் நிலை கண்டு பார்வதியின் "அண்ணா. என்ன இது நீங்களே இப்படி உக்காந்துட்டா எப்படி. இங்க பாருங்க அண்ணிக்கு எதுவும் ஆகாது" என்ற சொற்களோ,

"அப்பா! அப்பா!! அம்மா" என்ற ஹர்ஷாவின் அழுகுரலோ எதுவும் அவரை எட்டவில்லை. இதை கண்ட குடும்பத்தினருக்கு எப்படி இச்சூழ்நிலையை சமாளிக்க என்று தெரியவில்லை.

இதில் பார்வதியின் கணவர் வேதாசலம் தான் அனைவரையும் தேற்றிக் கொண்டும், மருத்துவரிடம் பேசிக் கொண்டும் என நிலைமையை கையாண்டு வந்தார்.

ஆனால் 'அவ்வளவு பெரிய மருத்துவர்கள், சொந்த மருத்துவமனை என இவ்வளவு இருந்தும் என்ன பயன்' என்ற எண்ணம் குடும்பத்தில் அனைவரும் தோன்றியே வேதனையை தந்தது.

அப்போது அங்கே வந்த செவிலியர் சுபத்ரா அனைவரையும் காண விரும்புவதாக கூறினார்‌. ஆனால் அதை கூட உணரும் நிலையில் இல்லை ராஜசேகர்.

அவரை அழைத்து பார்த்து பலன் இல்லை என்ற பின்னே பார்வதி மட்டும் செல்ல முயன்றார். இதுவரை நடந்தது அனைத்தையும் பார்த்து அழுது கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.

அவன் வயதிற்கு புரிந்த வரை தன் தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்பது வரை புரிந்தது. எப்போது தாயை பார்ப்போம் என்று இருந்தவனுக்கு பார்வதி உள்ளே செல்வது தெரிந்தது.

அவரிடம் ஓடியவன் "அத்தை என்ன அம்மாட்ட கூட்டி போ. நானும் வரேன் நானும்.." என்று அழ துவங்கினான். எனவே அவனையும் உடன் அழைத்துச் சென்றார் பார்வதி.

உள்ளே வலியின் மிகுதியில் இருந்த சுபத்ரா தன் மகனை கண்டதும் மனம் முழுவதும் ரணம் ஆனதை போல் உணர்ந்தார்.

அழுதுக் கொண்டிருந்த ஹர்ஷாவை அருகே அழைத்தவர் "ஹர்ஷா குட்டி அழக் கூடாது டா கண்ணா‌. அம்மாக்கு ஒன்னும் இல்லை....ஆ..ஆ

அம்மா கொஞ்சம் நாள் சாமிய பார்க்க போறேன். ஆனா சீக்கிரம் உன்கிட்ட வந்துருவேன்" என்று கூறும் போதே "உங்களுக்கு அதெல்லாம் ஒன்னும் ஆகாது அண்ணி" என்றார் பார்வதி அழுகையுடன்.

அவரை பார்த்து வலி மிகுந்த சிரிப்பை தந்தவர் "என்னோட நிலைமை எனக்கு தெரியும் பார்வதி" என்றார். பின் மீண்டும் மகனிடம் "இங்க பாரு கண்ணா. அம்மா கொஞ்ச நாள் இருக்க மாட்டேன்.

அதனால அம்மா வேனும்னு சொல்லி அப்பா அத்தை தாத்தானு யாரையும் தொந்தரவு தரக்கூடாது. சரியா. சமத்தா இருக்கனும்.ஆஆஆ....

அப்புறம் நீ ஆசைப்பட்ட மாதிரி உனக்கு தம்பி பாப்பா வரப்போறான். உன் அப்பா உன் தம்பி பாப்பா அப்புறம் தாத்தா அத்தைனு எல்லாத்தையும் நீதான் பாத்துக்கணும்.

அம்மா உனக்காக கண்டிப்பா வருவேன் கண்ணா..." என்றார் தன் வலி நிறைந்த குரலில். பின் பார்வதியை நோக்கி " பார்வதி என் ரெண்டு பசங்களையும் நீதான் பாத்துக்கணும்.

எனக்காக செய்வியா" என்றார் இறைஞ்சலாக. "ஐயோ அண்ணி நீங்க இதை சொல்லனுமா. விக்ரமோட சேர்ந்து எனக்கு மூனு பிள்ளைங்க தான் எப்பவும்.

நான் நல்லா பாத்துப்பேன். ஆனா உங்களுக்கு ஒன்னும் ஆகாது அண்ணி. நீங்க நல்லபடியா குட்டி பையனோட வருவீங்க பாருங்க" என்றார் பார்வதி.

அப்போது நன்கு அழுதுக் கொண்டிருந்த ஹர்ஷாவின் அழுகையை தாளாது அவனை மீண்டும் அழைத்த சுபத்ரா,

"அழக்கூடாது குட்டி. இங்க பாரு குட்டி. உன் பேர் மீனிங் அம்மா சொல்லிருக்கேன்ல ஹர்ஷவர்தன் அப்படினா 'சந்தோஷத்தை உருவாக்கறவன்'னு.

நீ எப்பவும் உன்னை சுத்தி இருக்க எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்கனும். உன் தம்பியை அப்பாவ எல்லாரையும் பாத்துக்கனும்.

குட்டி அழுதா அம்மாக்கு பிடிக்காதுல்ல. எப்பவும் என் ஹர்ஷா குட்டி சிரிச்சுட்டே இருக்கனும். அழாதடா கண்ணா.

அதே மாதிரி யாரையும் அழ விடாத கண்ணா சரியா... ஆஆஆஆஆ...." என பேசிக்கொண்டு இருக்கும் போதே அவருக்கு தாங்க முடியாத வலி வரவே பார்வதியையும் ஹர்ஷாவையும் வெளியே அனுப்பி விட்டனர்.

அன்னை சுபத்ரா சமாதானத்திற்கு கூறிய வார்த்தைகள் தான் அது. ஆனால் அது பசுமரத்தானி போல் ஹர்ஷா நெஞ்சில் பதிந்ததை அவர் அறிய மாட்டார்.

அதை இருந்து பார்க்கவும் இருக்க மாட்டார். தன் அன்னை கூறியதை வேதவாக்காக எடுத்து வாழ்நாள் முழுவதையும் கடைபிடிக்க போகிறான் அவரின் அன்பு மகன் ஹர்ஷா.

சுபத்ரா இங்கு தன் இறுதி நொடிகளில் இருந்தார். கடைசியாக வந்த ஒரு பெரும் வலியால் தன் இரண்டாம் மகனை ஈன்றவர் அவனின் முகத்தை தன் கண்களில் நிரப்பியபடி தன் உயிர் நீத்தார்.

இத்தனை ஆண்டுகளாக தன் உயிரோடு கலந்து வாழ்ந்த கணவனின் முகத்தை கூட காணாது மண்ணுலகிலிருந்து தன் இன்னுயிரை பிரிந்து பறந்து சென்றார்.

வெளியே அமர்ந்திருந்தார்கள் காதில் சுபத்ராவின் உச்ச சத்தம் கேட்டது உடன் குழந்தையின் அழுகுரலும். அப்போது தான் ராஜசேகர் தன் சுயம் பெற்றார்.

மருத்துவர் வரவும் கடைசி நம்பிக்கை என வந்த அவரை ஆர்வமாய் பார்த்தனர். வந்தவர் "உங்களுக்கு பையன் பிறந்திருக்கான் டாக்டர்" என ஆரம்பித்தார்,

பின் "அன்ட் வெரி சாரி டாக்டர். எவ்ளோ முயற்சி செஞ்சும் சுபத்ரா மேடம எங்களால காப்பாத்த முடியலை" என்று வருத்தத்தோடு முடித்தார்.

அதை கேட்ட பின் தலையில் இடி இறங்கியது போல் இருந்தது ராஜசேகருக்கு. அவர் அப்படியே அமர்ந்து விட்டார்.

அதன்பின் அவர் குழந்தையை அவரிடம் காட்டியதோ, அவர் மனைவியின் உடலோடு அவர்கள் இல்லம் வந்ததோ, மேற்கொண்டு நடைபெற்ற காரியங்களோ எதுவும் அவர் மூலைக்கு செல்லவில்லை.

ஒரு மாதிரி பித்து பிடித்த நிலையில் தான் இருந்தார் ராஜசேகர். அவர் மனம் முழுவதும் தன் காதல் மனைவியின் நினைவுகளே.

அவரை முதன் முதலில் சந்தித்தது. அவரிடம் தன் காதலை சொல்லியது. முதலில் மறுத்தவரிடம் மீண்டும் மீண்டும் சென்று தன்னை ஏற்க வைத்தது.

இவ்வளவு நாட்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை என ஒவ்வொரு நிகழ்வையும் மூலை அதுபோல் ஓட்டிக் கொண்டிருந்தது.

யாருக்கு விதி என்ன வைத்திருக்கிறது என யார் அறிவார். அவன் சொல்லும் திசையில் பயணிக்கும் நாம் நம் பாதை முடிந்தவுடன் செல்ல வேண்டியது இயற்கை தானே!!


விதிர்த்து எழுகிறேன் தினமும்
நான் கண்ட கனவு கனவாய்
இருந்திடாதா எனும் ஏக்கத்தில்!!
மறந்திட்டேன் நீ என்றும் என் கனவாய்
சென்று வெகு தினம் ஆகியதை!!


நாட்களுக்கு தான் எவ்வளவு சக்தி, அதுபோல் ஓடிக் கொண்டே இருக்கிறதே. சுபத்ரா இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது என்பதை இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை.

அருணாசலத்தின் வீடே உயிர்ப்பு இன்றி காணப்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் ஒரு வித கட்டாயத்தில் தான் இயங்குவது போல் இருந்தது. இந்த ஒரு வாரமும் அருணாசலத்தின் மூத்த மகள் கோமதி தான் அனைவரையும் பார்த்து கொண்டார்.

அவரும் இன்று கிளம்பி விட்டார் தன் கணவருடன். இதில் ராஜசேகரின் நிலை தான் கவலைக்கிடமாக இருந்தது. சுபத்ரா இறந்த செய்தி கேட்டு சுவற்றை பார்த்து வெறித்தவர் தான்.

இன்னும் அதே போல் தான் இருக்கிறார். அவர் கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை. ஒரு வாரம் கோமதி தான் அவரை பார்த்து கொண்டார்.

பார்வதிக்கு பிறந்த அந்த சிறு குழந்தை மற்றும் வீட்டில் இருக்கும் மற்ற குழந்தைகளை பார்க்கவே நேரம் சரியாக இருந்தது. அவரும் சோகத்தில் இருந்ததால் மற்றவற்றை கவனிக்கவில்லை.

இப்போது தான் தன் அண்ணனின் நிலையை கவனித்த பார்வதிக்கு திக்கென்று இருந்தது. என்ன செய்தும் ராஜசேகர் தன் நிலை திரும்பவில்லை.

வீட்டில் இருந்தவர்களுக்கு சுபத்ராவின் இறப்போடு சேர்த்து ராஜசேகர் நிலை அவர்களை சிந்திக்க விடாது செய்தது.

பார்வதி தன் அண்ணனிடம் சென்றார் இப்போது. "ப்ளீஸ் அண்ணா நீ இப்படி இருக்காத. தயவு செஞ்சு அழுதுரு ண்ணா. இங்க பாரு உன் இரண்டாவது பையன் அப்படியே உன்னையே உரிச்சு வச்சிருக்கான்.

நம்ம ஹர்ஷாவ பாரு அம்மாவும் இல்லாம நீயும் இப்படி இருக்கறத பாத்து பயப்படுறான் பாரு. அண்ணா எதாவது பேசு ண்ணா‌‌. அழுதுரு ண்ணா ப்ளீஸ்" என்றார் அழுகுரலில் தன் அண்ணனிடம் கெஞ்சலாக.

இதில் பார்வதி கையில் இருந்த அந்த சிறு சிசுவும் அழுக தொடங்கியது. ஆனாலும் ராஜசேகர் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

இதை அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அருணாசலத்திற்கு மனதில் சொல்லொணா வலி ஏற்பட்டது. மொத்தத்தில் அந்த வீடே ஏதோ சூன்யம் நிறைந்தது போல் தெரிந்தது.

இதையெல்லாம் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷாவிற்கு தன் அன்னை தன்னிடம் கடைசியாக சொன்ன அந்த வரிகள் ஞாபகம் வந்தது.

"யாரையும் அழ விடாத கண்ணா. சந்தோஷமா வச்சுக்கனும்" என்ற சுபத்ராவின் வரிகள் அந்த சிறுவனை அந்த நொடியில் இருந்து செயல்பட வைத்தது.

ஒரு முடிவு எடுத்தவனாய் தன் அத்தயை நோக்கி சென்ற ஹர்ஷா "அத்தை அழாத. நீ அழற அதான் என் தம்பியும் அழறான். அம்மாட்ட நான் தம்பிய அழாம பாத்துப்பேன்னு பிராமிஸ் பண்ணிருக்கேன்" என்றான்.

மீண்டும் அழுகேயோடு பார்த்த பார்வதியிடம் " நீ அழாத சொல்றேன்ல" என்ற ஹர்ஷாவின் சத்தமான குரல் பார்வதியின் அழுகையை நிறுத்தியது.

'ஒரு சிறுவன் குரல் இவ்வளவு சத்தமாக கேட்குமா' என்ற அளவு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. தன் அத்தையை தாத்தா அருணாசலத்தின் அருகே அழைத்து வந்து அமர வைத்தான்.

"அத்தை என் தம்பிய நீ அழ வைக்கிற. நீ அவன இப்படி அழ வச்சா நான் அவன உன்கிட்ட தரமாட்டேன் பாத்துக்க" என்றான் தன் மழலை மொழியில்.

பின் தன் தாத்தாவை நோக்கி சென்றவன் "இங்க பாரு தாத்தா இங்க யாரும் அழக்கூடாது. அப்படி யாராவது அழுதீங்க நான் நான்" என்றவன் சிறிது இடைவெளி விட்டு

"அம்மா கிட்ட போய்ருவேன்" என்றான். இதை கேட்டு அனைவரும் பதறி விட்டனர். சட்டென அருணாசலம் தன் பேரனின் கைப்பற்றி "நாங்க யாரும் அழலை டா கண்ணா.

இனிமே அழவே மாட்டோம். ஆனா நீ இப்படிலாம் பேசக்கூடாது. எப்பவும் பேசவேக் கூடாது சரியா" என்றார் அவசரமாக. இதை கேட்ட ஹர்ஷாவிற்கு என்ன புரிந்ததோ சரி என்பதாய் தலை அசைத்தான்.

இப்போது தாத்தாவை விடுத்து தன் தந்தையை கண்ட ஹர்ஷா அவரை நோக்கி சென்றான். ராஜசேகரின் கையை பிடித்து கொண்ட ஹர்ஷா "அப்பா அப்பா என்னை பாருங்க.

இங்க பாருங்க. ஏன் இப்படி உக்காந்து இருக்கீங்க அப்பா...." என்றவன் சிறிது நேரம் சென்று "அப்பா நம்ம தம்பி பாப்பாவ பாருங்களேன். இங்க வாங்க வாங்க" என்று தன் தந்தையின் கையை பிடித்து இழுத்தான்.

அப்போதும் அசையாது அமர்ந்திருந்தார் ராஜசேகர். "அப்பா.... " என்று அவர் கையை இழுத்தவன் கை வழுக்கி "அம்மாஆஆஆ......." என்ற சத்தத்துடன் தானாக கீழே விழுந்தான்.

ஒரு நிமிடத்தில் அனைத்தும் நடந்துவிட்டது. ஹர்ஷாவின் அலறல் குரல் ராஜசேகரின் காதில் சுபத்ராவின் அழுகுரலாய் கேட்க சடாரென திரும்பி பார்த்தார்.

அங்கே தனது மகன் விழுந்து கிடப்பதை கண்டவர், உடனே அவனிடம் விரைந்தார். "ஹர்ஷா குட்டி கண்ணா! என்ன ஆச்சுப்பா.

எப்படி கீழே விழுந்த கண்ணா. அம்மா எங்க போய்டாங்க உன்னை விட்டுட்டு" என்றார் படபடப்பாக. அவர் மகனை மட்டுமே கவனித்தவர் இன்னும் சூழ்நிலையை உணரவில்லை.

அவர் உணர்வுகள் தான் சுபத்ரா இறந்த அன்றே போய்விட்டதே. ஹர்ஷா கீழே விழுந்தது முதல் ராஜசேகர் பேசியது வரை அனைத்தையும் பார்த்த வீட்டினருக்கு நிம்மதியே.

என்ன தான் இப்போது உணர்வு வர பெற்றாலும், ராஜசேகர் விரைவில் தன் நிலை திரும்பி விடுவார் என அவர்கள் ஆசுவாசம் அடைந்தனர்.

ராஜசேகரின் உணர்வை மீட்ட ஹர்ஷாவின் மீது கொள்ளை பாசம் வந்தது. ஆனால் ராஜசேகர் சுபத்ரா இருப்பதை போல் பேசியது மனதிற்குள் திக்கென்றது இருந்தாலும், அவர் விரைவில் சரி ஆகி விடுவார் என்று நம்பினர்.

தந்தை தன்னிடம் பேசவும் மகிழ்ந்த ஹர்ஷா "அப்பா நான் தான் விழுந்துட்டேன். நீங்க கவலைப் படாதீங்க. எனக்கு ஒன்னும் இல்லை" என்றபடி எழுந்தவன் தன் தந்தை கையை பிடித்து இழுத்து சென்றான்.

"வாங்க ப்பா. நம்ம தம்பி பாப்பாவ பாக்கலாம் வாங்க வாங்க" என்று உற்சாகமாக அந்த சிறு குழந்தையை அவரிடம் காட்டினான். ராஜசேகர் பிறந்த அந்த குழந்தையை ஒரு வாரம் சென்று இன்று தான் முதன்முதலில் பார்க்கிறார்.

பார்த்த பின் தான் அவர்க்கு தன் மனைவி இப்போது இந்த பூமியில் இல்லை என்பதே உறைத்தது‌. குழந்தையை அவர் கையில் தந்தார் பார்வதி.

அதுவரை அடங்கியிருந்த அவரின் உணர்வுகள் இதற்கு மேல் தாளாது என்று கண்ணில் கண்ணீராய் இறங்க தொடங்கியது. இதை பார்த்த அனைவருக்கும் வருத்தமாக இருந்தாலும் இது நல்லது என்றே தோன்றியது.

கண்ணில் விழுந்த நீரை ஒரு கை துடைத்து விட்டது. வேறு யார் ஹர்ஷா தான். தன் தந்தையின் கண்ணீரை கண்டவன் எதுவும் சொல்லவில்லை. அவரை சிறிது நேரம் அழ விட்டான்.

பின் தந்தையை நோக்கி "ப்பா போதும் ப்பா அழுதது. இனிமே அழக் கூடாது சரியா" என்றவன் தன் அத்தையை பார்த்து

"அத்தை அப்பா அழாம இருந்தா அவருக்கு உடம்பு சரியில்லாம போயிரும்னு சொன்னீங்க. இப்ப அப்பா அழுதுட்டாரு. இனிமே ஒன்னும் ஆகாது தானே" என்ற ஹர்ஷாவை வியப்புடன் தான் பார்த்தனர் அனைவரும்.

"ம்ம் ம்ம். சரி ஆகிருவார் கண்ணா. உங்க அப்பாக்கு ஒன்னும் இல்லை" என்றவாறு அவனை அணைத்து கொண்டார் பார்வதி.

ஹர்ஷாவிடன் இதை யார் சொன்னது என்று கேட்ட பார்வதியிடம் கோமதி கிளம்பும் போது அவரிடம் பேசியதை கேட்டதாக சொன்னான்.

ஹர்ஷவர்தன் இயல்பிலே புத்திசாலியான குழந்தை என்பதால் அவன் சட்டென்று சூழ்நிலையை புரிந்து செயல்பட்டு விட்டான்.

அனைவரும் மீண்டும் அமைதியாக அமர்ந்திருக்கவும் "தாத்தா அப்பா அத்தை வாங்க எனக்கு பசிக்குது சாப்டலாம்" என்றான்.

"ஐயோ கண்ணா பசிக்குதா! வாடா அத்தை ஊட்டி விடுறேன் சாப்பிடு" என்றவர் சமையலறை செல்ல திரும்பவும் "இல்ல நான் தனியா சாப்ட மாத்தேன். எல்லாம் வாங்க.

அப்பா தாத்தா அத்தை தம்பி பாப்பா எல்லாம் சாப்டலாம். எல்லாக்கும் பசிக்கும்ல" என்றான் நியாயமாக தன் மழலை குரலில்.

ஒருவரும் அசைவதை காணோம் என பார்த்தவன், அந்த வீட்டில் வேலை செய்யும் ராணி அம்மாவை உணவை எடுத்து வைக்க சொன்னான்.

பின் ஒவ்வொருவரையும் இழுத்து சென்று அமர வைத்தான். ஆம் இழுத்து தான் சென்றான் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

தங்கள் முன்னே உள்ள சாப்பாட்டை யாரும் தொடாது தன் தந்தையை காணவும் என்ன நினைத்தானே உடனே தன் கை நிறைய உணவை எடுத்து அவர் வாய் அருகே கொண்டு சென்றான்.

"அப்பா ஆஆ... காட்டு இந்தா சாப்பிடு" என்றான். தன் மகனின் செயலை கண்ட ராஜசேகர் கண்களில் மீண்டும் கண்ணீர்; ஆனால் வாயை திறந்து உணவை வாங்கி கொண்டார்.

பார்வதி தான் ஊட்டுவதாக கூறியும் "இல்ல த்தை நான் பிக் பாய்ல நான் தான் சாப்டனும். நீங்க ஊட்டி விடவேண்டாம்" என்றான். கேட்ட பார்வதிக்கு விழிகளில் நீர்க் கோர்த்தது.

ஏனெனில் ஹர்ஷா அடம் பிடிக்கும் போது சுபத்ரா எப்போதும் கூறும் வார்த்தைகள் இது. அதுவும் சுபத்ரா பார்வதியை மரியாதையாக அழைக்க சொல்வார்.

ஆனால் ஹர்ஷா கேட்டதில்லை. இப்போது தானாகவே பார்வதியை மரியாதையாக அழைக்கிறான். அதையும் உணர்ந்தார் அவர்.

தன் அன்னைக்கு பிடித்தது போல் நடந்தால் அவர் சீக்கிரம் தன்னிடம் வந்திடுவார் என்று முழுமையாக நம்பிய ஹர்ஷா இப்போது இப்படி கூறினான்.

ஆனால் அதை அவன் ஒருவரிடமும் கூறவில்லை. தினமும் கடவுள் முன் நின்று வேண்டுதல் வைத்து கொண்டிருக்கிறான் இந்த ஒரு வாரமும் தன் தாயை சீக்கிரம் அனுப்பி வைக்க சொல்லி.

ஆனால் இருந்த நிலையில் யாரும் அவனை கவனிக்கவில்லை. இப்போது தன் தந்தையுடன் தானும் ஏதோ பேசிக் கொண்டு அவருக்கு இடையில் ஊட்டிக் கொண்டு என தன் உணவை உண்டான் ஹர்ஷா.

அதன்பின் தான் அனைவரும் தங்கள் உணவை பாதி என்றாலும் வயிற்றில் நிறைத்துக் கொண்டனர். தன் தம்பியை பார்த்த ஹர்ஷா "த்தை தம்பிக்கு சாப்பாடு?" என்றான் கேள்வியாக.

அவனின் தலையை வாஞ்சையுடன் தடவியவாறு "தம்பி பால் மட்டும் தான் கண்ணா குடிக்கணும். அவன் உன்னை மாதிரி வளர்ந்த அப்புறம் சாப்பாடு சாப்டுவான்" என்றார் அவனுக்கு புரியும் விதத்தில்.

ஹர்ஷாவும் தலையை எல்லா புறமும் ஆட்டிவிட்டு சாப்பிட தொடங்கினான். இதையெல்லாம் பார்த்த வேதாசலத்திற்கு தான் ஒரு வாரமாக இவர்களுடன் போராடி செய்ய வைத்ததை சில மணி நேரத்தில் செய்ய வைத்த ஹர்ஷாவை கண்டு ஆச்சரியமாக இருந்தது.

எப்படியோ வீட்டில் உள்ளவர்கள் இயல்பானால் அதுவே போதும் என்றிருந்தது அந்த நல்ல உள்ளத்திற்கு. அதன் பின் வந்த நாட்களில் இயல்பு நிலை திரும்ப துவக்கியது அந்த வீட்டில்.

அதே போல் ஹர்ஷாவின் அழகான ஆளுமையும் அதிகரிக்க துவங்கியது. வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவனின் சொல்படி நடந்தனர்.

எனவே அவர்கள் நேராநேரம் உணவு சரியாக எடுத்து கொண்டனர். "இரவில் தந்தையோடு தான் நானும் தம்பியும் தூங்குவோம்" என்ற ஹர்ஷாவின் திட்டவட்டமான முடிவால் ராஜசேகர் மனைவியின் நினைவை தற்காலிகமாக ஒதுக்க வேண்டியதானது.

சிறிய சிறிய மாற்றங்களே வாழ்வில் பெரிய மாற்றத்திற்கான படிகள். அது போல் சிறிது சிறிதாக அந்த வீடு மீள தொடங்கி விட்டது.

ஒரு மாதம் சென்ற நிலையில் மீண்டும் ஹர்ஷா பஞ்சாயத்து ஒன்றை கூட்டி வீட்டின் ஹாலில் அனைவரையும் கூட செய்தான்.

அவன் குற்றச்சாட்டை கேட்ட வீட்டினருக்கு சிரிப்பே பிரதானமாக வந்தது‌. ஆனால் தங்களுக்கு கூட தோன்றாததை இவன் யோசித்து உள்ளானே என்று ஆச்சரியமாகவும் இருந்தது.


வர்ணங்களாய் நீ வந்தாய் கண்ணா;
ஜாலங்கள் நீ புரிந்தே நின்றாய்!
மாயனாக உன் கார்குலலோடு;
வசந்தங்கள் நீ வீசி சென்றாய்!!


-மீண்டும் வருவான்
 
Last edited:

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 2

அருணாசலத்தின் இல்லம் மெல்ல மெல்ல தங்கள் இழப்பின் வேதனையில் இருந்து மீண்டு கொண்டிருந்தது. அந்த ஒரு மாத வீட்டின் இயல்பு நிலைக்கு ஹர்ஷாவின் பங்கு அலப்பறியது.

அன்று ஞாயிற்றுக்கிழமை காலை நேரம். வீட்டின் ஹாலில் தான் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இருந்தனர். அப்போது தான் தன் அறையில் இருந்து வெளியே வந்தான் ஹர்ஷவர்தன்.

வந்தவன் நேராக தன் அத்தை மற்றும் தாத்தாவின் முன்னே சென்று நின்றான். அவன் அத்தை கையில் இருந்த அவனின் செல்ல தம்பியே அதன் காரணம் என்றால் மிகையில்லை.

சிறிது நேரம் தன் தம்பியை கொஞ்சியவன் அவன் அத்தையை பார்த்து "ஏன் அத்தை என் தம்பிக்கு பேர் வைக்கலையா?

நம்ம விக்ரம்க்கு அப்போ பெய்ய பங்சன் வச்சு பேரு வச்சோம்ல. அப்பி என் தம்பிக்கு எப்ப பேர் வைக்க போறோம்?" என்றான் தன் நினைவடுக்கில் இருந்த நிகழ்வை தோன்டி எடுத்து.

கேட்ட அருணாசலம் குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் "அட இது நமக்கு தோனாம போய்டுச்சே!" என்று தான் தோன்றியது. அதே நேரம் ஹர்சாவிற்கு தன் தம்பி மேல் உள்ள பாசமும் நன்கு புரிந்தது.

அப்போது "சரி உன் தம்பிக்கு என்ன பேரு வைக்கலாம்னு நீயே சொல்லு கண்ணா" என்ற குரல் அருகே கேட்டது. அது வேற யாருடைய குரலும் இல்லை சாட்சாத் ராஜசேகரின் குரலே. ஆம் ராஜசேகர் இப்போது தன் மனைவியின் இழப்பில் இருந்து நன்றாக மீண்டிருந்தார்.

கடந்த ஒரு வாரமாக மருத்துவமனைக்கும் சென்று வந்துக் கொண்டிருக்கிறார். காரணம் அவர் இரு மகன்கள் இன்றி வேறு யாராய் இருப்பார்கள்.

தந்தை தன்னையே தன் தம்பிக்கு பேரை தேர்வு செய்ய சொல்லவும் சிறிது நேரம் தன் குட்டி விரலால் மூலையை தட்டி யோசித்தான் ஹர்ஷா.

சட்டென அந்த பெயர் அவன் மூலையில் உதையமானது.‌ "அப்பா நான் பேர் செலக்ட் பண்ணிட்டேன். அபிமன்யு எப்படி இருக்கு" என்றான் தன் தம்பியை பார்த்து கொண்டே உற்சாகமாய்.

சுபத்ரா இருந்த வரை விக்ரம் ஹர்ஷா இருவருக்கும் மகாபாரதம் கதையை கூறுவதுண்டு. அதில் இந்த பேர் ஹர்ஷாவை கவர்ந்திருந்தது. அதையே இப்போதும் முன்மொழிந்தான்.

ஹர்ஷா பேரை சொன்னவுடன் பெரியவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அப்போது தான் அவர்களுக்கு ஒன்று புரிந்தது குழந்தைகளுக்கு சிறு வயதில் நாம் என்ன சொல்லி தருகிறோமோ அதை அவர்கள் அப்படியே மனதிற்குள் எடுத்து கொள்கிறார்கள் என.

எனவே தான் சிறு குழந்தைகளிடம் நல்ல விஷயங்களை சொல்லி தர வேண்டும் என்று சொல்லி சென்றனரோ ஆன்றோர்கள்.

தன்னை ஆச்சரியமாக பார்த்திருந்த தாத்தா அருணாசலத்திடம் "தாத்தா இந்த பேரு தான் என் தம்பிக்கு வைக்கிறோம்" என்றான் அழுத்தமான குரலில்.

"ஹர்ஷா குட்டி பேர் சூப்பரா இருக்கு டா. உன் தம்பி பேர் இனிமே அபிமன்யு தான். அதையே வச்சிடலாம் சரியா" என்ற அருணாசலத்திடம் "அப்ப பங்சன்?" என்றான் கேள்வியாய் ஒற்றை புருவத்தை தூக்கி ஒயிலாக.

தன் செல்ல பேரனை தன்னை நோக்கி இழுத்து அணைத்து "சரிடா பெரிய மனுஷா பங்சன் வச்சிடலாம்" என்றார் அருணாசலம் சிரிப்புடன்.

அதே போல் அடுத்த வாரமே ஒரு நல்ல நாளை தேர்வு செய்து அன்றே ராஜசேகரின் இரண்டாம் புதல்வன் ஹர்ஷாவின் தம்பிக்கு பெயர் சூட்டு விழா வீட்டின் அளவில் சிறியதாக அழகாக நடைபெற்றது.

ஹர்ஷா கூறியது போல அவன் தம்பிக்கு அபிமன்யு அருணாசலம் என்ற பெயரே முடிவானதில் ஹர்ஷாவிற்கு ஏக மகிழ்ச்சி. பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் தன் தம்பியை விட்டு அவன் எங்கும் நகரவில்லை.

நிகழ்ச்சியும் நல்லபடியே முடிந்தது. ராஜசேகருக்கு தன் மனைவி இல்லை என்பது மனதில் வருத்தமாக இருந்தாலும் தன் பிள்ளைகளுக்கு தான் மட்டுமே இனி என்ற நிதர்சனத்தை புரிந்து கொண்டார்.

அதன் பின் நாட்கள் அதன் போக்கில் நகர ஆரம்பித்தது. பிள்ளைகளும் வளர தொடங்கினர். ஹர்ஷா தன் தம்பி அபிமன்யுவை தனக்கு தெரிந்த அளவில் நன்றாக பார்த்து கொண்டான்.

காலை முதல் மாலை வரை பார்வதி பார்த்து கொள்வார். மாலை வீடு வரும் ஹர்ஷா தன்னை சுத்தப்படுத்தி கொண்டு தான் அபிமன்யுவிடம் வருவான்.

அதே போல் வெளியே சென்று வரும் மற்றவர்களையும் தங்களை சுத்தம் செய்யாது அபிமன்யு முன் வரவிட மாட்டான்.‌ தன் தம்பி இருக்கும் அறையிலே அமர்ந்து வீட்டு பாடங்கள் அனைத்தையும் முடித்து பின் அவனுடனே தன் நேரத்தையும் செலவு செய்ய தொடங்கினான் ஹர்ஷா.

அவனை பின்தொடர்ந்தது விக்ரமும் அதே போல் நடந்து கொள்ள பார்த்தப் பெற்றோருக்கு மகிழ்ச்சி பிள்ளைகள் தாங்கள் சொல்லாமலே ஒழுக்கத்துடன் நடந்து கொள்வதில்.

இதில் குட்டி அபிமன்யு வளர வளர தன் அண்ணனை நன்கு அடையாளம் கண்டு கொண்டான். அவன் காலை பள்ளி செல்லும் போது முதலில் முகத்தை முகத்தை பார்த்தவன் இப்போது தானும் வருவதாக அடம் பிடிக்க தொடங்கினான் அழுகையுடன்.

"அபி குட்டி அழக் கூடாது. அண்ணா ஸ்கூல் போய்ட்டு சீக்கிரம் வந்துடுவேன். அப்புறம் ரெண்டு பேரும் விளையாடலாம்.

இப்ப சமத்தா அத்தை கூட இரும்பியாம்" என சலிக்காது தினமும் அழனை சமாதானம் செய்தே பள்ளி கிளம்புவான் பொறுப்புள்ள அண்ணனாக ஹர்ஷா.

அதே போல் எப்படி தான் மாலை ஹர்ஷா வீடு வரும் நேரம் தெரியுமோ இந்த பாசக்கார தம்பியும் வாசலை பார்க்க தொடங்கி விடுவான். பெரியவர்களுக்கு ஆச்சரியமாக மற்றும் மகிழ்ச்சியாக இருந்தது இவர்களை கண்டு‌.

அபிமன்யுவிற்கு ஒரு வயது ஆன பின் அவனை தன் அறையில் தன்னோடு வைத்து கொண்டான் ஹர்ஷா. அவன் வயதிற்கு மேல் இருந்தது அவனின் முதிர்ச்சி.

அன்னையும் இல்லாது தந்தை அதுவும் அதிக நேரம் தங்களோடு இல்லாதவர், குடும்பத்தின் பொறுப்பில் வளர்வது இது போன்ற காரணங்களால் இயல்பிலே பொறுப்பான ஹர்ஷா இப்போது அதிக பொறுப்புடன் நடக்க துவங்கினான்.

அபியை பார்த்து கொள்வதோடு விக்ரமிற்கும் நல்ல எடுத்துக்காட்டாகவும் தோன்ற தொடங்கினான் ஹர்ஷா. பார்வதி, ராஜசேகர் ஏன் அருணாசலத்திற்கே ஹர்ஷாவை காணும் போது இன்னொரு சுபத்ராவாகவே தெரிந்தான்.

அவ்வளவு பாசத்தையும் தன் குடும்பத்தின் மீதும் அபிமன்யு, விக்ரம் மீதும் அவன் வைத்தான். அவனின் அன்னையின் வார்த்தைகள் படி அந்த குடும்பத்தை சிரிப்புடன் அதற்கும் மேல் உயிர்ப்புடன் வைத்திருந்தான் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

அபிமன்யுவிற்கு தன் மீது பாசத்தை பொழியும் அண்ணன் என்றால் அவ்வளவு பிரியம். அதுவும் விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம் அவன் அண்ணன் பின் தான் இருப்பான்.

ஹர்ஷா படிக்கும் போது தானும் ஸ்லேட்டுடன் அமர்ந்து கொள்வான் அபிமன்யு. இவ்வாறு அன்னை என்ற உணர்வை தானே அறியாது தன் தமையனுக்கு அளித்தான் ஹர்ஷா.

இவர்களின் பிணைப்பை கண்டு ராஜசேகருக்கு மனதில் சொல்லொணா நிம்மதி. அவரின் மனதில் எழுந்த பயங்கள் இப்போது அநாவசியமாக தோன்றியது.

காலம் தங்களுக்கு என்ன வைத்திருக்கிறது என தெரியாது என்றாலும் அதை கண்டிப்பாக தன் பிள்ளைகள் துணையோடு சமாளித்து விடுலாம் என்று முழுமையாக நம்பினார் ராஜசேகர்.

நாட்கள் அதன் போக்கில் நகர வருடங்கள் இரண்டும் கடந்தது. அன்று தீடீரென ஒரு நாள் பார்வதி மயக்கி விழுந்தார்.

அவரை பரிசோதித்த மருத்துவர் பார்வதி கருவுற்றதாக கூறினார். இப்போது ஐந்து ஆண்டுகள் கழித்து அருணாசலம் குடும்பத்தில் மீண்டும் ஒரு வாரிசு.

கேட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியே ஆனால் உள்ளுக்குள் பயமும் சமமாக இருந்தது. அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஒன்றும் அவ்வளவு சுலபமாக மறக்க கூடியது அல்லவே.

ராஜசேகர் தானே தன் தங்கையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். அவருக்கு இன்னும் சுபத்ராவை ஒழுங்காக பார்க்காமல் விட்டு விட்டோம் என்ற குற்ற உணர்வு இருந்தது.

அதே தப்பை தன் தங்கையிடம் காட்டக்கூடாது என்று சிறு சிறு விஷயத்திலும் கவனம் செலுத்தினார். ஹர்ஷா தன் பங்கிற்கு மூன்று வயது அபிமன்யு மற்றும் விக்ரமை தன் பொறுப்பில் கொண்டு வந்தான்.

என்னதான் ஒரு வயதில் இருந்து இரவில் அபியை ஹர்ஷா பார்த்துக் கொண்டாலும், காலை முழுவதும் பார்வதி தான் பார்ப்பார்.

அவனுக்கு மூன்று வயது ஆகவும் ஹர்ஷாவின் பள்ளியிலே சேர்க்க அபியின் பொறுப்பு முழுவதும் இப்போது ஹர்ஷாவிடம் வந்து விட்டது. அபியும் பள்ளிக்கு அண்ணனுடன் என்றதும் ஆர்ப்பாட்டமாக கிளம்பி விடுவான்.

பார்வதியின் கணவர் வேதாசலம் மற்றும் தந்தை அருணாசலம் என குடும்பமே பார்வதியை தாங்கியது. எனவே பார்வதிக்கு சிறு தலை வலி என்றால் கூட அப்படி கவனித்து கொண்டனர்.

இதை எல்லாம் சிரிப்புடன் பார்ப்பதை தவிர எதுவும் செய்ய முடியாது பார்வதியால். அன்று வார இறுதி, ஞாயிற்றுக்கிழமை! காலை உணவிற்கு கூடினர் அனைவரும்.

அப்போது பார்த்து அபிமன்யு தன்னை தூக்கி சாதம் ஊட்டுமாறு பார்வதியை கேட்டுக் கொண்டு இருந்தான். பெரியவர்கள் அவனுக்கு தன்மையாக சொல்லி புரியவைக்க முயன்றனர்.

ஆனால் அபியின் அடம் அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்நேரம் திடீரென "அபி உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது. என்ன‌ இவ்ளோ அடம் பண்ற.

அத்தைய டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. நீயே உக்காந்து சாப்டு" என்றான் ஹர்ஷா அதிகாரமான குரலில். ஹர்ஷா கத்தவில்லை அதே நேரம் தன் கோபத்தை அவனின் குரலின் அழுத்தத்திலே வெளிப்படுத்தினான்.

அவனின் குரல் மாறுபாட்டை வைத்தே தன் அண்ணனின் கோபம் உணர்ந்த அபிமன்யு அதற்கு மேல் அவன் வாயை திறக்கவில்லை. சமத்தாக அமர்ந்து ஹர்ஷா சொல்லி கொடுத்தது போல் உண்ண துவங்கினான்.

பின் பார்வதியை பார்த்து "அத்த இனிமே நீங்க அபிய பாம்பர் பண்றத விட்டுருங்க. அவன் வளந்துட்டான்‌. அதனால அவன் வேலையை அவனே பாத்துப்பான்.

அப்படி அவனால முடியலைனா நான் இருக்கேன். நீங்க ஸ்ரைன் பண்ணிக்காதீங்க" என்றவன் தன் தம்பியிடம் "அப்படி தானே அபி" என்றான். அவன் சொல்லிய தினுசில் அபிக்கு ஆம் என தலையை அசைப்பதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை.

அதே பார்வையை மாற்றாது விக்ரமை பார்க்கவும் அவன் "ஆமா அம்மா நாங்க பிக் பாய்ஸ். சோ இனிமே உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டோம்" என்றான் தானாகவே.

ஏனெனில் விக்ரமும் அபியும் தான் எப்போதும் பார்வதியிடம் செல்லம் கொஞ்ச சண்டை இட்டு கொள்வார்கள். அதனாலே ஹர்ஷாவின் கோபத்தை கண்டு சுய வாக்குமூலம் அளித்து விட்டான் விக்ரம்.

ராஜசேகர் பார்வதியிடம் அதிக பளுவை தூக்கக் கூடாது என அனைவர் முன்னிலையிலும் தான் கூறி இருந்தார்.

அதை வைத்தே சாமர்த்தியமாக அவர்கள் வாயாலையே இப்படி சொல்ல வைத்து விட்டான். இப்போது ஹர்ஷா தன் உணவிலும் தன் தம்பியின் மீதும் கவனம் செலுத்த துவங்கினான்.

இவனை பார்ப்போருக்கு தன் ஒவ்வொரு செய்கையால் தினம் தினம் ஆச்சரியம் கொடுத்து கொண்டிருக்கிறோம் என உணராது மகிழ்வுடன் தன் அறையை நோக்கி சென்றான் ஹர்ஷவர்தன் அருணாசலம்.

எப்போதும் போல் அன்றும் பள்ளி சென்று வந்த ஹர்ஷா, அபி, விக்ரம் மூவரும் தங்களை சுத்தம் செய்து, உடை மாற்றி, மாலை சிற்றுண்டிக்கு வந்தனர்.

இதுவும் சுபத்ரா ஹர்ஷாவிற்கு சொல்லி தந்த பழக்கம். அதை அவன் தன் தம்பிகளுக்கும் சொல்லி கொடுத்து, பின்பற்றவும் வைத்தான்.

தனது ஒவ்வொரு செய்கையிலும் நேர்த்தியை கடைப்பிடித்தான் ஹர்ஷவர்தன். அதையே தன் தம்பிகளிடமும் எதிர்ப்பார்த்து கடைபிடிக்க செய்தான்.

இவர்கள் மாலை சிற்றுண்டியை உண்ணும் போது அவர்கள் அருகில் வந்து அமர்ந்தார் பார்வதி. பார்வதிக்கு இப்போது ஒன்பதாம் மாதம் நடந்துக் கொண்டு இருக்கிறது.

எனவே அவரை இன்னும் கவனத்துடன் பார்த்துக் கொண்டனர் குடும்பத்தினர். வேலைக்கு ஆட்கள் இருக்கவே பார்வதிக்கும் பெரிதாக வேலை எதுவும் இருக்கவில்லை.

பார்வதி வந்து அமரவும் "ஹாய் அம்மு குட்டி. சாப்டீங்களா! சமத்தா அத்தைய டிஸ்டர்ப் பண்ணாம இருந்தீங்களா!!" என இன்னும் வெளியே வராத குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்தான் ஹர்ஷா.

உடன் விக்ரம் அபியும் சேர்ந்து கொண்டனர். பார்வதி வளைகாப்பின் போது வளையல் எதற்கு என்று வளைத்து வளைத்து கேள்வி கேட்ட ஹர்ஷாவிடம் "வயிற்றில இருக்க குட்டிப் பாப்பாக்கு நாம பேசுறது அப்படியே கேக்கும்.

அதுக்கு இந்த சவுண்ட் கேட்டா ரொம்ப ஹாப்பியா பீல் ஆகுமா. அதான் ஹார்ஷா குட்டி இந்த வளையல் எல்லாம்" என்று விளக்கி இருந்தார் பார்வதி.

அன்றிலிருந்து ஹர்ஷா, வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் தினமும் ஒரு முறையாவது பேசி விடுவான். அண்ணன் பேசுவதை பார்த்து அபியும் பேச அவனுடன் போட்டி போடவே விக்ரமும் பேசுவான்.

அதுவும் வயிற்றில் இருப்பது கண்டிப்பாக பெண் குழந்தை என நம்பும் ஹர்ஷா அம்முவென தான் அழைப்பான். மொத்தத்தில் அந்த மாலை வேளை குழந்தைகளின் குதூகலத்தில் புன்னகையுடன் நகரும் பார்வதிக்கு.

தன் பேரப்பிள்ளைகள் பேசுவதை அருணாசலமும் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தார். பார்வதிக்கு பிரசவ நாட்கள் அருகே வர வர அருணாசலம் வீட்டில் இருப்பதை தன் வழக்கமாக்கி கொண்டார்.

அந்நேரம் பார்வதிக்கு வயிற்றில் சுருக்கென்று வலித்தது. முதலில் சாதாரண வலி தான் என்று நினைத்த பார்வதி அமைதியாக இருந்தார்.

சிறிது நேரத்தில் வலி அதிகமாகவும் அருகே அமர்ந்திருந்த தன் தந்தை அருணாசலத்தின் கையை அழுத்தி பிடித்தார். அவர் பிடியின் வித்தியாசம் உணர்ந்த அருணாசலத்திற்கு ஏதோ தவறாக தோன்றியது.

"என்ன பண்ணுது பார்வதி?" என்றார் பதட்டத்துடன். "அப்பா வலிக்குது பா..." என்றார் பார்வதி அவர் கையை இன்னும் அழுத்தமாக பிடித்து.

ஒரு நிமிடம் என்ன செய்வதென்று அருணாசலத்திற்கு புரியவில்லை. அருகில் இதை பார்த்து கொண்டிருந்த பத்து வயது ஹர்ஷாவிற்கு நிலைமை ஓரளவு புரிந்துவிட்டது.

அவன் சிறிதும் தாமதிக்காமல் தன் தந்தை சொல்லியிருந்த அவர்கள் மருத்துவமனை எண்ணிற்கு அழைத்து விட்டான் "அப்பா அத்தைக்கு வயிறு வலிக்குதாம்" என்ற தகவலோடு.

ராஜசேகரும் விரைந்து ஆம்புலன்ஸை அனுப்பி வைத்தார். அடுத்த அரை மணி நேரத்தில் பார்வதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டார்.

அருணாசலத்தை தன் தம்பிகளுக்கு துணைக்கு இருத்தி விட்டு ஆம்புலன்சில் தான் பார்வதிக்கு துணையாக ஏறிக்கொண்டான் ஹர்ஷா.

அருணாசலம் பயத்தில் இருந்து தெளிவதற்குள் அந்த சூழ்நிலையை அழகாக கையாண்டு மருத்துவமனைக்கே வந்து விட்டான் ஹர்ஷவர்தன் அருணாசலம்.

பார்வதியுடன் தன் மகன் ஹர்ஷா மட்டும் தனியே வருவதை கண்டு புருவம் உயர்த்திய ராஜசேகர், அதை பிறகு கேட்டு தெரிந்து கொள்வோம் என தன் தங்கையுடன் சென்றார்.

சிறிது நேரத்திலே வேதாசலமும் வந்துவிட்டார் அருணாசலம் தெளிந்து அளித்த தகவலால். அரை மணி நேரத்தில் பார்வதி அழகான ஒரு பெண் குழந்தையை பெற்று எடுத்தார் நல்லபடியாக.

இப்போது தான் அனைவருக்கும் நிம்மதி. அதே நேரம் அருணாசலத்தின் மூலம் ஹர்ஷா கண நேர செயல்பாட்டை அறிந்த ராஜசேருக்கு தந்தையாய் தன் மகனை எண்ணி பெருமையாக இருந்தது.

வேதாசலத்திற்கு ஏற்கனவே ஹர்ஷாவை பிடிக்கும், இப்போது இன்னும் நிறைய பிடித்தது. வாழ்வில் அவன் பெரிய உயரம் அடைய மனதார கடவுளிடம் வேண்டுதல் வைத்தார்.

____________________________________________

"ஹர்ஷா குட்டி நீ சொன்ன மாதிரி பாப்பா தான் பிறந்திருக்கா. நீயே பேர் செலக்ட் பண்ணு" என்று ஹர்ஷாவின் முன் வந்து நின்றது வேதாசலமே. பார்வதி நல்லபடியாக வீடு வந்து ஒரு மாதம் ஆகிறது.

இப்போது பெரிய மனித தோரணையில் நின்ற ஹர்ஷா "ம்ம் ஓகே மாமா. நான் ஏற்கனவே பாப்பாக்கு நேம் செலக்ட் பண்ணிட்டேன்.

பேர் என்னன்னா.... " என்று நிறுத்தி அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன் "ஆதிரா" என்றான் தனக்கு உரித்தான குரலில்.

அந்த பேரே பிடிக்கவும் ஒரு மனதான அதையே எல்லோரும் தேர்வு செய்தனர். ஹர்ஷாவிற்கு தன்னை விட பத்து வயது சிறிய குழந்தையை பார்க்கும் போது என்ன தோன்றியதோ அதை தன் குழந்தையாகவே பாவித்து கொண்டான்.

அந்த வீட்டின் ஒரே பெண் குழந்தையாக போகவும் ஆதிராவே இப்போது அனைவரின் செல்லமாகி போனாள். அப்படி இருக்க தன் அன்னையின் சாயலை அவளிடம் கண்ட ஹர்ஷாவின் நிலை சொல்லவும் வேண்டுமா.

நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவனின் பொழுது ஆதிராவுடனே கழிந்தது. அருணாசலம் இல்லமும் எப்போதும் மகிழ்ச்சியை தத்தெடுத்து இருந்தது.

ஆண்டுகள் சில கடந்தது. அன்று பள்ளி விட்டு வரும் போதே அவனிடம் கேட்டுவிட வேண்டும் என்று வாசலிலே அமர்ந்திருந்தார் ராஜசேகர். இதை பார்த்த பார்வதி அமைதியாக சிரிப்புடன் கடந்து சென்றார்.

நடந்தது இதுதான். நேற்று பள்ளி சென்ற அபிமன்யு தன் உடன் பயிலும் மாணவனுடன் சண்டையிட்டு உள்ளான். அதில் அந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு விட்டது.

இதை அறிந்த பள்ளி தாளாளர் இருவரையும் வரவழைத்து அடுத்த நாள் பெற்றோருடன் வரவேண்டும் என சொல்லி அனுப்பி இருக்கிறார்.

ஆனால் அதை ராஜசேகரிடம் கூறவில்லை அபி. அந்த பள்ளி தாளாளர் ராஜசேகருக்கு தெரிந்தவரே. அவர் இன்று மதியம் அழைத்தவர் நடந்ததை கூறி

"ராஜசேகர் உன் பெரிய பையன் தான் பா வந்தான். உன் பையன் அந்த பையனோட பேரன்ட்ஸையே நிக்க வச்சி கேள்வி கேக்குறான் பா. என்னாலையே ஒன்னும் பேச முடியலைனா பாத்துக்கோயேன்" என்று ஆச்சரியத்துடன் முடித்திருந்தார்.

அப்படி என்ன தான் நடந்தது, தன் மூத்த மகன் என்ன செய்தான் என கேட்க தான் இன்று மருத்துவமனையில் இருந்து சீக்கிரம் வந்து அமர்ந்திருந்தார் ராஜசேகர்.

எப்போதும் வரும் நேரம் சரியாக வந்து சேர்ந்தனர் ராஜசேகர் மகன்களும் அவர் தங்கை மகனும். "ஹர்ஷா இங்க வா கண்ணா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பா" என்றார் ராஜசேகர் கொஞ்சம் கண்டிப்பான குரலில்.

"இருங்க ப்பா நான் போய் ப்ரஷ் ஆகிட்டு ஃபைவ் மினிட்ஸ்ல வந்தர்ரேன்" என்று எப்போதும் போல் முகத்தில் உறைந்த புன்னகையுடன் கூறி நேராக தன் அறைக்குள் புகுந்துக் கொண்டான் ஹர்ஷா.

ஹர்ஷாவிற்கு தன் தந்தை எதற்கு இப்படி நேரமே வந்து தன்னை அழைக்கிறார் என ஓரளவு புரிந்து விட்டது. தன் தந்தையை எண்ணி சிரித்துக் கொண்டவன் சொன்னது போல் ஐந்து நிமிடத்தில் அபியையும் அழைத்து கொண்டு வந்தான்‌.

"என்ன ஹர்ஷா குட்டி இது. ஸ்கூல்ல இருந்து எனக்கு போன் வருது. அண்ணன் தம்பி ரெண்டு பேரும் என்ன பண்ணீங்க. நீ எப்பவும் தப்பு செய்ய மாட்டனு நான் நினைச்சேன் ஹர்ஷா.

இப்ப என்னப்பா இது" என அவர்கள் இருவரும் அமர்ந்தவுடன் ஆரம்பித்தார் ராஜசேகர். அவரை பொருத்த வரை ஹர்ஷா எந்த தவறும் செய்ய கூடியவன் இல்லை.

ஆனால் தன் தம்பிக்கு என்றால் எதுவும் செய்பவன் தான் அதே ஹர்ஷா. எனவே தான் கண்டித்தால் தன் மகன் தவறு செய்ய மாட்டான் என்ற எண்ணம் அவருக்கு.

ராஜசேகர் பேசுவதை பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் அபிமன்யு. ஏனெனில் இந்த பிரச்சினைக்கு மூல காரணி அவனே. ஆனால் ஹர்ஷா ஒரு சிரிப்புடன் கேட்டு கொண்டான்.

ராஜசேகர் பேசுவதை தடை செய்யாமல் முழுவதும் கேட்ட ஹர்ஷா இப்போது நடந்ததை சொல்ல துவங்கினான் "அப்பா என்ன நடந்தது அப்டின்னு நான் சொல்றேன்.

அதை கேட்டுட்டு ஃபைனலா எங்க மேல மிஸ்டேக் இருந்தா நீங்க சொல்லுங்க. அபியோட பிரண்ட் கொஞ்சம் மிடில் கிளாஸ் பையன் பா. அவன கிளாஸ்ல இருந்த வேற பையன் அவன் ஸ்டேட்ஸ் வச்சு கிண்டல் பண்ணி இருக்கான் ப்பா.

அதான் நம்ம அபி குட்டி போய் இது தப்பு நீ சாரி கேளுன்னு சாதாரணமா தான் சொல்லிருக்கான். ஆனா அந்த பையன் சண்டைய பெருசு பண்ணி அபிய அடிச்சிட்டான்.

அதனால தான் அபியும் அந்த பையன தள்ளி விட பெஞ்ச்ல இடிச்சுக்கிட்டான். இது தான் ப்பா நடந்தது. நம்ப அபி அவன தள்ளி விட்டது தப்பு தான்.

அதுக்கு நானே அவங்க பேரன்ட்ஸ் கிட்ட சாரி கேட்டுட்டேன். பட் அந்த பையன் ஸ்டேட்ஸ் பத்தி எட்டு வயசுலையே பேசுறது ரொம்ப ராங் தானே ப்பா.

சோ அதான் நான் அவங்ககிட்ட பர்ஸ்ட் உங்க பையனுக்கு மேனர்ஸ்ச சொல்லி கொடுங்கன்னு சொன்னேன். இதுல நான் செஞ்சது எதாவது தப்பா அப்பா" என்று தான் செய்ததில் தப்பில்லை என்பதை சுட்டிக் காட்டினான்.

"அப்போ ஏன்டா என்கிட்ட சொல்லலை அப்பா அம்மா யாரையாவது தானே கூப்டு வர சொன்னாங்க" என்ற தன் தந்தையின் கேள்விக்கு

"அப்பா நீங்க ஆல்ரெடி பிஸியா இருந்தீங்க. அது மட்டும் இல்லாம இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் உங்கள, அத்தையைலாம் டிரபில் பண்ண வேணாம்னு நானே டீல் பண்ணிட்டேன்"

என இதெல்லாம் ஒரு விஷயமா என்று பேசி சென்றான் ஹர்ஷா. ஆனால் அவன் தந்தைக்கு தான் தன் பிள்ளையின் மேல் பெரும் மதிப்பு வந்துவிட்டது.

அப்படி தான் ஒரு நாள் அருணாசலம் தன் மகன் ராஜசேகர் மற்றும் மகள் பார்வதி வேதாசலம் என மூவரையும் அழைத்து தன் சொத்துக்களை பிரிக்கப்போவதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ந்த அவர்களின் பிள்ளைகள் அதிர்ந்தனர். ஏன் என கேட்டதற்கு அருணாசலம் எதுவும் சொல்லாது அமைதி காத்தார்.

அப்போது இதை எல்லாம் கேட்டு அங்கே வந்த ஹர்ஷா "தாத்தா நீங்க ஆசைப்படுறது மாதிரி சொத்தை பிரிச்சுருங்க. ஆனா கோமதி அத்தை ஷேர மட்டும் அசட்ஸ்ஸா குடுத்துடுங்க.

அப்பா பார்வதி அத்தை ஷேர் அப்படியே இருக்கட்டும். அன்ட் இந்த வீடு மூனு பேருக்கும் காமனா இருக்கட்டும். என்ன சொல்றீங்க தாத்தா" என்றான் அதை ஒத்துக் கொண்டு ஆக வேண்டும் என்ற தினுசில்.

அவன் கோபமாக கூறுவதை போல் தெரிந்தது. அதை கேட்ட அருணாசலத்திற்கு ஆச்சரியம் 'இவனுக்கு எப்படி தெரியும் என'.

அவன் கூற்றை கேட்ட மற்ற மூவருக்கும் எதுவோ புரிவது போல் இருந்தது அவனின் கோபத்தால். ஏனெனில் ஹர்ஷா அவ்வளவு எளிதில் கோபம் கொள்பவனும் இல்லை.

எனவே தங்கள் சகோதரி கோமதி தான் சொத்தை பிரித்து கேட்டிருக்கிறார் என்று ஹர்ஷாவின் கூற்றில் புரிந்தது.

"அப்பா உங்க இஷ்டம் ப்பா. எனக்கு ஹாஸ்பிடல் போதும் ப்பா. மீதிய தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் பிரிச்சு கொடுத்துருங்க" என்று தன் முடிவை சொல்லி விட்டார் ராஜசேகர்.

அண்ணன் கூறியதை கேட்ட பார்வதி "அப்பா எனக்கு எதுவும் வேணாம். கோமதி அக்காக்கு என்ன வேனுமோ அதை கொடுத்துருங்க.

எனக்கு கடைசி வரைக்கும் உங்க கூடவும் அண்ணே கூட இருக்கிறதே போதும் ப்பா" என்றுவிட்டார் பார்வதி. உண்மையில் கோமதி தான் சொத்தை பிரித்து கேட்டிருந்தார்.

அதனாலே அருணாசலம் இந்த பேச்சை ஆரம்பித்தார். எப்படி தன் மற்ற இரு பிள்ளைகளிடம் சம்மதம் வாங்க போகிறோம் என குழம்பிய அருணாச்சலத்திற்கு அந்த வேலையை சுலபமாய் முடித்து கொடுத்து விட்டான் ஹர்ஷவர்தன்.

முதல் நாள் கோமதியிடம் பேசும் போது அருணாசலத்திற்கு மாத்திரை கொடுக்க வந்த ஹர்ஷா கேட்டு விட்டான்.

நேற்றிலிருந்து கோபத்தில் இருந்தவன் இன்று அருணாசலம் விஷயத்தை பேசவும் தன் எண்ணத்தை கூறி விட்டான்.

தன் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளையை எண்ணி பூரித்துப் போன அருணாசலம் தன் பேரனின் முடிவையே உறுதி செய்து கொண்டார்.

மொத்தத்தில் ஹர்ஷா மூத்த மகனாக அந்த குடும்பத்தில் தன் தம்பி தங்கை மட்டும் அல்லாது, தன் தந்தை தாத்தா மாமா அத்தை என எல்லோருக்கும் யோசனை கூறும் அளவு வளரும் போதே தன் ஆளுமையையும் வளர்த்துக் கொண்டவன் அனைவருக்கும் ஆச்சரியக்குறியாகி நின்றான்!!

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis supera story poguthu harsh chance a illa 😘 avan elarum santhosama iruntha amma varuvaanganu nambran hope waitinghow his mom come to him again
Thank you sis :love::love: kandipa varuvanga nu nambuvom. And aathirava avan amma placela vachu thaa Harsha paakuran
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 3

அருணாசலம் மருத்துவமனை என்றும் போல் தனக்கே உரித்தான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.

அந்த இரவு நேரத்தில் அந்த தளத்தில் இருந்த ஐ.சி.யுவின் முன்பு ஒரு பெண் தடதடக்கும் நெஞ்சோடு அமர்ந்துக் கொண்டிருந்தார்.

வாயில் ஏதோ ஸ்லோகம் சொல்லி கொண்டு இடைவிடாத பிரார்த்தனையுடன் அமர்ந்திருந்தார் என்பதை பார்க்கும் போதே தெரிந்தது.

அந்த ஐ.சி.யூவின் உள்ளே அவர் கணவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைப்பெற்றுக் கொண்டிருந்ததே அவரின் இந்நிலைக்கு காரணம் எனலாம்.

என்ன தான் சிறிதளவு பயம் இருந்தாலும், மனதில் தைரியம் அதிகமாக இருந்தது அப்பெண்ணிற்கு. ஏனெனில் அப்பெண்ணின் கணவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருப்பது இந்த நகரின் தலை சிறந்த இதய நிபுணர்களிள் ஒருவர்.

இந்த மருத்துவரிடம் வந்துவிட்டால் நிச்சயம் உயிரை காப்பாற்றி விடுவார் என்று ஏக நம்பிக்கை உள்ளது மக்கள் மத்தியில். அதுவும் அவர் முகத்தில் இருக்கும் அந்த சாந்த புன்னகையே அவரை அனைவருக்கும் பிடிக்க வைக்க போதுமானதாக இருந்தது.

அவ்வளவு புகழ் பெற்ற அந்த மருத்துவர் வேறு யாரும் இல்லை, அருணாசல குடும்பத்தின் மூத்த வாரிசு மற்றும் ராஜசேகரின் மூத்த மகன் ஹர்ஷவர்தன் அருணாசலம்.

இப்போது நான்கு மணி நேர பைபாஸ் அறுவை சிகிச்சையை கவனத்துடன் முடித்த ஹர்ஷா அந்த ஐ.சி.யூவில் இருந்து வெளியில் வந்தான். அவன் வெளியே வரவும் அந்த பெண்மணியும் அவனை நோக்கி வந்தார்.

"டாக்டர் என் ஹஸ்பண்ட் இப்ப எப்படி இருக்காரு. அவர்.. அவருக்கு எதுவும் இல்லையே?" என்று தவிப்புடன் வினவிய அந்த பெண்ணிடம்

"டோன்ட் வொர்ரி மா. ஆப்ரேஷன் சக்சஸ். உங்க ஹஸ்பண்ட் இப்ப சேஃபா இருக்கார். இன்னும் சில மணி நேரத்தில கண்ணு முழிச்சிருவார்‌. அப்ப நீங்க அவரை பார்க்கலாம்.

அன்ட் இன்னும் டூ டேஸ்ல நார்மல் வார்ட் ஷிப்ட் பண்ணிருவோம். சோ நீங்க தைரியமா இருங்க" என தன் அக்மார்க் புன்னகையுடன் சொல்லி தலை அசைத்து சென்றான்.

ஹர்ஷாவின் வார்த்தைகளோடு அவனோட புன்னகையும் அந்த பெண்ணிற்கு அபரிமிதமான நம்பிக்கையை அளித்தது என்றால் மிகையில்லை.

"ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். உங்கள எங்க லைஃப்ல மறக்க மாட்டோம்" என்று அந்த பெண்ணும் அவர் கணவரை காப்பாற்றிய ஹர்ஷாவிற்கு நன்றி செலுத்திக் கொண்டே மகிழ்வுடன் ஐ.சி.யூவின் முன் சென்று தன் கணவரை பார்த்தார் நிம்மதியுடன்.

ஒரு ஆப்பரேஷன் முடிந்த எந்த களைப்பையும் முகத்தில் காட்டாது தன் அறைக்கு வந்த ஹர்ஷாவிற்கு மனம் எப்போதும் போல் நிம்மதியை சுமந்திருந்தது.

ஒவ்வொரு நாளும் ஒரு உயிரை காப்பாற்றுவதில் ஹர்ஷா தன் மகிழ்ச்சியை கண்டான். பண்ணிரெண்டாம் வகுப்பை முடித்த உடன் தன் தந்தையை பின்பற்றி மருத்துவம் பயின்ற ஹர்ஷா;

தன் முதுகலைப் பட்டத்தை வெளிநாடு சென்று படித்தான். பின் தற்போது மூன்று ஆண்டுகளாக அருணாசலம் மருத்துவமனையில் தன் பணியை செவ்வனே செய்து கொண்டு இருக்கிறான்.

அதிலும் அவன் இதய அறுவை சிகிச்சைகள் செய்ய துவங்கிய பின் அவனுக்கு ஏறு முகம் தான். நல்ல கைராசி உள்ள மருத்துவர் என்று பெயரும் கிட்டியது.

எவ்வளவு தான் வாழ்வில் மேலே சென்றாலும் அவன் என்றும் அதே ஹர்ஷவர்தனாக அவனின் குடும்பத்தினருக்கு. அவனின் பலம் ஏன் பலவீனம் இரண்டும் அவன் குடும்பம் தான்.

தன் அறைக்கு சென்ற ஹர்ஷா தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டான். தன் பொருட்களை எடுத்து அந்த நீண்ட நடைபாதையில் மருத்துவமனையின் வாயிலை நோக்கி சென்றான்.

அந்த நேரம் அவசரமாக வந்த ஆம்புலன்சில் இருந்து ஒரு இளம் பெண்ணை மருத்துவமனை உள்ளே அழைத்து வந்தனர்.

ஹர்ஷா வெளியே செல்லும் முன் அவனை தடுப்பது போல் வந்த செவிலி பெண் ஒருவர் "டாக்டர் ஒரு எமர்ஜென்சி. கொஞ்சம் வரீங்களா" என்றார் பரபரப்பாக.

அந்த பதற்றம் தனக்கு தொற்றியது போல் வேகமாக அந்த செவிலியை தொடர்ந்த ஹர்ஷா "டாக்டர் அகிலன் இல்லையா?" என்றான். ஏனெனில் அன்று இரவு நேர பணியில் இருந்தது டாக்டர் அகிலன் என்பவரே.

"அகிலன் டாக்டர் இன்னொரு கேஸ் பார்த்துட்டு இருக்காரு டாக்டர். மத்த டாக்டர்ஸ்ம் இப்ப அவைலபில் இல்லை. அதான் உங்கள இங்க பார்க்கவும் வந்தேன் டாக்டர்" என்றார் அந்த செவிலியும் ஹர்ஷாவை பின்தொடர்ந்தவாறு.

அந்த நோயாளி ஒரு இளம் பெண்‌. அவளை பார்த்து சென்ற ஹர்ஷா "என்ன கேஸ்?" என்று அந்த பெண்ணை நெருங்கினான்.

அதற்கு செவிலிப் பெண் "சூசைட் அட்டெம்ப்ட் டாக்டர்" என்றார் தயக்கத்துடன். அவரை கூர்ந்து பார்த்தவன் மேலை சொல்லுமாறு தலை அசைத்தான்.

"அது.. அது இந்த பொண்ண ஒரு பையன் ஏமாத்திடானாம் டாக்டர். பொண்ணு இப்ப பிரக்னென்ட். ஆனா அந்த பையன் வேணாம்னு போய்ட்டான் போல. அதான் சூசைட் டிரை பண்ணி இருக்கா டாக்டர்" என்று தனக்கு தெரிந்த தகவலை ஹர்ஷாவிடம் தயங்கி தயங்கி பகிர்ந்தார் அந்த செவிலி.

கேட்ட ஹர்ஷாவிற்கு கோபம் தாறுமாறாக ஏறியது. ஏனெனில் ஹர்ஷவர்தன் ஒழுக்கத்தை தன் உயிரை விட மேலாக கருதுபவன்.

ஒழுக்கம் தவறும் சிறு தவறை கூட வன்மையாக கண்டிப்பான். அதே போல் தன் மருத்துவமனையிலும் எல்லோரும் அந்த ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது ஹர்ஷாவின் உத்தரவு.

அதை மீறினால் கடுமையான தண்டனையும் அவனிடம் இருந்து வந்துவிடும். அதனால் தான் இன்றும் அருணாசலம் மருத்துவமனை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது.

தன் கோபத்தை சட்டென்று கட்டுப்படுத்திய ஹர்ஷா தற்போது உதவி தேவைப்படும் பெண்ணிற்கு மருத்துவம் பார்க்க துவங்கினான்.‌ அந்த பெண்ணிற்கு சிகிச்சையை கொடுத்து காப்பாற்றியவன் அரை மணி நேரம் சென்று வெளியே வந்துவிட்டான்.

அந்த பெண்ணின் பெற்றோரிடம் அவளின் நலத்தை ஒரு இறுக்கத்துடன் சொல்லினான் ஹர்ஷா. அதற்கு அந்த பொண்ணின் பெற்றோர் "ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்.

அப்புறம் என் பொண்ணு வயித்துல வளர்ர குழந்தைய அழிச்சிருங்க. இல்லைனா எங்க பொண்ணு லைஃப் தான் பாதிக்கும்" என்றனர் தயக்கமாக. இவ்வளவு நேரமும் தன் பொறுமையை பிடித்து வைத்திருந்த ஹர்ஷா

"என்ன பேரன்ட்ஸ் நீங்க. உங்க பொண்ணு ஒரு பையன் கூட இந்த அளவு போற வரைக்கும் விட்டுருகீங்க. இப்ப ஈசியா குழந்தைய அபார்ட் பண்ண சொல்றீங்க.

உங்க பொண்ணும் அந்த பையனும் செஞ்ச தப்புக்கு அந்த குழந்தைக்கு தண்டனை தர மாதிரி அதை சாகடிக்க நினைக்கிறீங்க. என்ன மனுஷங்க நீங்க" என்றவன் ஒரு பெருமூச்சினை விட்டு தன்னை சாந்தப்படுத்தி

"இது கண்டிப்பா போலீஸ் கேஸ் தான். ஹாஸ்பிடல்ல இருந்தே இன்பார்ம் பண்ணிருவோம். மீதிய காலைல வந்து பேசிக்கிறேன்.

அப்புறம் அபார்ட் பண்றது பத்தி இனிமேல் என்கிட்ட பேசக்கூடாது" என்று கடுமையாக கூறினான்.

பின் அந்த பெண் செய்த செயலுக்கு இவர்கள் என்ன செய்வார்கள் என நினைத்து "சாரி உங்க பொண்ணு இப்படி செஞ்சதுக்கு உங்களை பிளேம் பண்ணிட்டேன்" என அத்துடன் அங்கிருந்து நகர்ந்தான் ஹர்ஷா.

அந்த பெண்ணின் பெற்றோருக்கு வருத்தமாக இருந்தாலும், அவன் கூறிய உண்மை புத்தியில் உரைக்க தங்கள் பெண் தங்களுக்கு இவ்வளவு பெரிய அவமானத்தை தேடி தந்ததை எண்ணி தலை குனிந்து நின்றனர்.

பெரும்பாலும் சமூகத்தில் பிள்ளைகள் அது ஆணோ பெண்ணோ செய்யும் நல்லதும் கெட்டதும் பெற்றோரின் வளர்ப்பை கண்டே காணப்படும்.

இதில் சரியான விழிப்புணர்வு இன்றி தவறான பாதைக்கு செல்லும் பிள்ளைகளை விட, வயது வேகத்தில் தவறை செய்து விட்டு, பின்பே வருந்தும் பிள்ளைகள் அதிகம்.

ஆனால் அதை அவர்கள் உணரும் போது காலம் கடந்து விடுகிறது என்பது தான் உண்மை. இங்கே பிள்ளைகள் தவறினாலும் முதலில் குற்றம் சாட்டப்படுவது பெற்றோர் என்பதே வேதனையான உண்மை.
____________________________________________

இரவு ஒரு மணி. மருத்துவமனையில் இருந்து கிளம்பிய ஹர்ஷவர்தன் இப்போது தன் இல்லத்தை வந்தடைந்தான். அந்த இரவு நேரத்தில் வீட்டில் உள்ள யாருக்கும் தொந்தரவு தராதவாறு தன்னிடம் உள்ள சாவியை கொண்டு வீட்டை திறந்து உள்ளே வந்தான்.

ஹர்ஷா எப்போதும் இப்படி தான். அவன் அறுவை சிகிச்சை முடிந்து வரும் போது சில நாட்கள் நடுநிசி ஆகிவிடும். எனவே அவன் எப்போதும் தன்னிடம் வீட்டின் சாவி ஒன்றை வைத்திருப்பான்.

பின் அவன் தன் அறைக்கு செல்லும் போது ஏதோ ஒரு உருவம் மெல்ல மாடியின் ஹாலில் உள்ள பால்கனியில் இருந்து உள்ளே குதிப்பது அந்த இருட்டிலும் தெளிவாக தெரிந்தது.

அந்த உருவம் ஒரு அறையை நோக்கி நகர்ந்து சென்றது. அதை பார்த்ததும் திக்கென்றது ஹர்ஷாவிற்கு. பின் சுதாரித்தவன் 'யாருடா இது இந்த நேரத்தில நம்ம வீட்டுக்குள்ளையே குதிக்கிறது.

ஒருவேளை திருடனா இருக்குமோ?" என யோசித்து கொண்டே அந்த உருவத்தை நோக்கி சென்றான் ஹர்ஷா. இந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த உருவம் தன் பக்கம் யாராவது வருகிறார்களா என அருகே பார்த்து கொண்டே முன்னேறியது.

அந்த உருவத்தின் செய்கைகளை ஊன்றி கவனித்தப்படி ஹர்ஷாவும் பின்னே சென்றான். அந்த உருவம் அந்த குறிப்பிட்ட அறையின் கதவின் கைப்பிடியை திருகவும் ஹர்ஷா வந்துவிட்டான்.

அந்த உருவத்தின் கையை தன் புறம் பிடித்து இழுத்தான். இவ்வளவு நேரம் யாரிடமும் மாட்டாது வந்த அந்த உருவம் இப்போது யாரோ தன் கையை பிடித்து இழுக்கவும், திடுக்கிட்டு திரும்பியது.

தன்னை கண்டு கொண்டது ஹர்ஷா என அறிந்த அந்த உருவத்திற்கு கைக் கால்கள் எல்லாம் உதற துவங்கி விட்டது.

அந்த உருவம் திரும்பியதும் அது யார் என சட்டென கண்டுக் கொண்ட ஹர்ஷாவிற்கு கோபம் சுறுசுறுவென ஏறியது.

மருத்துவமனையில் இருந்து ஏற்கனவே கோபத்தில் வந்த ஹர்ஷாவின் கோபம் இப்போது எரிமலையானது. ஏனெனில் ஹர்ஷாவிற்கு பொதுவாக கோபம் வராது.

அப்படி வந்தால் சுலபத்தில் போகவும் செய்யாது. வார்த்தைகள் கொண்டு படுத்தி எடுக்க வெல்லலாம் மாட்டான். அதே சமயம் அவன் ஆயுதமான அமைதியை தத்தெடுத்து விடுவான்.

அதிலும் அவன் மூத்த அத்தை கோமதி சொத்தை பிரித்து கொடுக்க வேண்டும் என கேட்ட போது கோபத்தில் அவர்களை ஒதுக்கியவன் தான்.

இன்றும் அவன் அவர்கள் குடும்பத்தில் யாரிடமும் பேசாமல் இருக்கிறான். வீட்டில் யார் சொல்லியும் அவன் கேட்கவில்லை. "என்னால பேச முடியாது. வேனும்னா உங்க பொண்ணுக்கிட்ட நீங்க பேசிக்கங்க தாத்தா" என்றுவிட்டான்.

அவனை மாற்ற முடியாத குடும்பத்தினர் அதன் பின்னர் தாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக கோமதியிடம் பேசுவதை குறைத்து கொண்டனர்.

பத்து வருடமாக கோமதியுடன் அவர்கள் தொடர்பில் இல்லாமல் இருக்கின்றனர் குடும்பத்தினர். எனவே தான் அந்த உருவத்திற்கும் இதயம் தொண்டை குழிக்கு வந்துவிட்டது.

இப்போது தன் முன் ருத்ர மூர்த்தியாக தன் முன் நிற்கும் ஹர்ஷவர்தனை பார்த்தது அந்த உருவம்‌.

அந்த நபரை தரதரவென இழுத்து கீழே வரவேற்பு அறைக்கு இழுத்து வந்து நிறுத்தினான். பின் அந்த நேரத்திலும் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்தான் ஹர்ஷா.

அந்த நபருக்கு முகம் எல்லாம் வேர்த்து விட்டது. ஹர்ஷாவின் குரலுக்கு மொத்த குடும்பமும் அந்நேரம் கூடிவிட்டது. 'எப்படி சமாளிக்க போறோம்' என அந்த உருவமும் கையை பிசைந்து கொண்டு நின்றது.

ஹர்ஷாவின் உக்கிரமான பார்வையை பார்க்க முடியாது தலையை உயர்த்தி பார்ப்பதும் தலை குனிவதுமாய் இருந்தது அந்த வீட்டின் கடைக்குட்டி ஆதிரா தான். அவனிடம் மாட்டியதும் அவளே.

'போச்சு போச்சு. ஆதி உனக்கு இது தேவையா! இன்னைக்கு ஒரு நாள் இவளுங்க கூப்டாளுங்கன்னு போன உனக்கு இது தேவை தான். சே!! சைலண்ட்டா யாரும் பாக்குறதுக்கு முன்னாடி சமத்தா ரூம் உள்ள போய் படுத்தர்லான்னு தப்பு கணக்கு போட்டுட்டியே டி.

இப்ப வசமா ஹர்ஷா அத்தான்ட்ட மாட்டிக்கிட்ட. போச்சு வச்சு செய்ய போறாரு' என மனதில் நினைத்தவள் தலையை மெல்ல நிமிர்த்தி தன் குடும்பத்தை பார்த்தாள்.

குடும்பம் மொத்தமும் 'ஆதிரா இப்போது என்ன செய்து ஹர்ஷாவிடம் மாட்டியிருப்பாள்' என்ற கேள்வியுடன் பார்த்திருந்தனர்.

ஏனெனில் எப்போதும் எதாவது குறும்பு செய்து விட்டு ஹர்ஷாவின் முன் முழித்துக் கொண்டு நிற்பது தான் ஆதிராவின் வேலை.

ஆனால் அவன் அவளை இப்படி குடும்பத்தின் முன் நிறுத்தியது இல்லை. எனவே தான் இன்று என்ன பஞ்சாயத்தோ என்று நின்றிருந்தனர்.

'என்னடா இது குடும்பமே நம்மல கண்ணால ஸ்கேன் பண்ணுறாங்க' என்று எண்ணிக் கொண்டே திரும்பியவள், அங்கே தன்னை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்த அபிமன்யுவை நோக்கி கோபமான பார்வையை வீசும் போது

"எத்தனை நாளா இது நடக்குது?" என்ற ஹர்ஷாவின் சத்தமான குரலில் திடுக்கிட்டு திரும்பினாள். "ஹான்... அ.. அத்தான்" என்றாள் திணறலாக.

'நீ எப்போது பதிலை சொல்கிறாயோ அப்போது தான் உன்னை விடுவேன்' என்னும் விதமாக ஹர்ஷா அவளையே பார்த்து நிற்கவும் எச்சிலை கூட்டி விழுங்கிறவள்

"அ.. அத்தான். இது.. இது தான் பர்ஸ்ட் டைம்" என்றாள் தயக்கமாக. 'உண்மை தானா?' என்னும் கேள்வியோடு அவளை பார்த்தான் ஹர்ஷா‌.

அவனின் நம்பாத பார்வையை கண்ட ஆதிரா "சத்தியமா அத்தான். இது தான் பர்ஸ்ட் டைம் அத்தான். பிரண்ட்ஸ் எல்லாம் கம்பல் பண்ணவும் தான் போனேன் அத்தான்‌.

நைட் டைம் இப்படி டிஸ்கோத்தேலா போனா வீட்டுல திட்டுவீங்கனு என் பிரண்ட்ஸ் கிட்ட எவ்வளவோ சொன்னேன். ஆனா அவங்க அதை கேக்கவே இல்லை. அதான் அத்தான் வேற வழி இல்லாம போனேன்‌.

என் பிரண்ட் திலீப்ம் வைஷூவும் தான் என்னை இப்ப டிராப் பண்ணிட்டு போறாங்க அத்தான். சாரி அத்தான். வெரி சாரி" என்று அவன் ஒரு பார்வைக்கே படபடவென அனைத்தையும் ஒப்பித்து விட்டாள்.

"சரி நீ அங்க போறத யார்க் கிட்ட சொல்லிட்டு போன?" என்ற ஹர்ஷாவின் கூரான கேள்விக்கு "யார்... யார்கிட்டையும் சொல்லலை அத்தான்" என்றாள் திணறலாக.

வீட்டினர் அனைவரும் ஆதிரா ஏதே இரவில் ஹர்ஷாவிடம் வம்பு செய்ததால் தான் அவன் அனைவரையும் அழைத்தான் என்று நினைத்தால் இப்படி ஒரு திருப்பத்தை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

ஒரு நிமிடம் அவளின் வாக்குமூலத்தை கேட்ட குடும்பத்தாருக்கு கோபம் தாறுமாறாக ஏறியது. இதில் வரும் போது ஏற்கனவே ஒரு பெண்ணின் தற்கொலை கதையை கேட்ட ஹர்ஷாவின் நிலை சொல்லவும் வேண்டுமா!

ஆனால் அவன் எப்போதும் போல் அமைதியாக இருந்தான்‌. ஹர்ஷாவின் முகத்தையும், அவர்கள் குடும்பத்தினர் முகத்தையும் காணும் போதே ஆதிராவிற்கு வயிறெல்லாம் கலக்க துவங்கியது.

முதலில் ஆரம்பித்தது அருணாசலமே!! "என்ன அம்மு இது. உன்கிட்ட இருந்து இதை நான் சுத்தமா எதிர்ப்பாக்கலை.

நீ சின்ன சின்ன குறும்பு பண்ணும் போது எல்லாம், உன்னை சும்மா விடவும் தான் இப்ப இப்படி செஞ்சிருக்கியா மா? என்ன பழக்கம் அம்மு இது. வீட்டில் இருக்க யார்க்கிட்டையும் சொல்லாம நீ தனியா அதுவும் டிஸ்கோத்தேக்கு போய்ட்டு வந்துருக்க.

நீ என்ன செஞ்சாலும் நாங்க எதுவும் கேக்க மாட்டோம்னு நினைச்சிட்டியா. இல்லை இவங்கலாம் யாரு இவங்க கிட்ட போய் எதுக்கு சொல்லிட்டு செய்யனும்னு நினைச்சிட்டியா" என்று தன் மனக்குமுறலை கொட்டினார்.

"ஐயோ! இல்லை தாத்தா இல்லை. அப்படிலாம் இல்லை. பிரண்ட்ஸ் சொன்னாங்கனு சும்மா பன்க்கு தான் செய்ய நினைச்சேன் தாத்தா.

மத்தபடி வேற எந்த ரீசனும் இல்லை தாத்தா. என்னை நம்புங்க தாத்தா பிளீஸ். நான் செஞ்சது தப்பு தான். இனிமே இப்படி பண்ண மாட்டேன் தாத்தா.

சாரி தாத்தா. ரொம்ப ரொம்ப சாரி" என்றாள் கலக்கமாக. பார்த்த குடும்பத்தினருக்கு ஆதிரா கெஞ்சுவது கஷ்டமாக இருந்தாலும் அவள் தன் தப்பை உணர வேண்டும் என அமைதி காத்தனர்.

சிறிது நேர அமைதி "அப்புறம் அபி சார் உங்க பாடிகார்ட் வேலைலாம் எப்படி போச்சு?" என்ற ஹர்ஷாவின் நக்கலான கேள்வியில் கலைந்தது.

ஹர்ஷாவிடமிருந்து தீடீரென தன்னை நோக்கி வந்த கேள்வியின் சாராம்சம் புரிந்த அபி இப்போது திருதிருத்தான். குடும்பம் மொத்தமும் அவனை இப்போது பார்த்தது.

'எந்த கேப்ல நம்மல பாத்தாருனு தெரியலையே. மாட்னடா அபி' என்று மனதிற்குள் நொத்த அபிமன்யு ஹர்ஷாவை கண்டு "அது... அது வந்து.. அது ண்ணா" என்று திணறினான்.

பின் தன் மூச்சை நன்றாக இழுத்து விட்டவன் "ண்ணா அது அம்மு அவ பிரண்ட்ஸ் கூட வெளிய போறத பாத்தேன். அதான் அவ பின்னாடியே ஃபாலோ பண்ணிட்டு போனேன்.

அவ அங்க இருந்து சோஃபா வீடு வர வரைக்கும் அவளுக்கு தெரியாம பின்னால வந்தேன் ண்ணா. அவ உள்ள வந்த அப்புறம் தான் நானும் வந்தேன்" என்றான் சன்னமான குரலில்.

குடும்பத்தினர் அனைவருக்கும் அபிமன்யு ஆதிராவை தனியே விடாததை எண்ணி அப்போது தான் மனது ஓரளவு நிம்மதி ஆனது.

"இவன் எப்போ நம்ம பின்னாடி வந்தான். இவ்ளோ நேரம் கிண்டலா சிரிச்சான்னு பார்த்தா நம்ம சோஃபா வீடு வர வரைக்கும் கூடவே வந்துருக்கான் பார்ரா!!"என ஆச்சரியமாக பார்த்தாள்.

"சரி எல்லாரும் போய் படுங்க காலைல பாத்துக்கலாம்" என்ற அருணாசலத்தின் வார்த்தைக்கு அனைவரும் கலைந்தனர்.

அருணாசலம் அபிமன்யு மற்றும் ஆதிராவின் தலையை தடவிக் கொடுத்தே சென்றார். அபிமன்யு தன் அண்ணன் முன் சென்று "ண்ணா நீ எப்ப என்ன பாத்த.

ஐ மீன் நான் அம்மு பின்னாடி வந்ததை" என்றான் தயங்கி தயங்கி. அபியை ஒரு பார்வை பார்த்த ஹர்ஷா எதுவும் சொல்லாது இதழில் ஒரு சிரிப்புடன் தன் அறைக்கு சென்று விட்டான்.

ஆதிரா பால்கனியில் இருந்து உள்ளே வந்து தன் அறை செல்லும் போதே அபியும் அந்த வழியாக உள்ளே குதித்தான்.

உள்ளே வந்தது ஆதிரா என்று அறிந்த ஹர்ஷாவிற்கு பின்னே ஒளிந்து வந்த அபியும் கண்ணில் பட்டது அவன் அதிர்ஷ்டம் என்பதா? இல்லை துரதிர்ஷ்டம் என்பதா?

அதே நேரம் அபி ஆதிராவிற்கு பாதுகாவலாக தான், அவள் பின்னே சென்றிருப்பான் என்பது ஹர்ஷாவிற்கு புரிந்தது.

அது அபியின் மனதை கண்டதாலோ? இப்போது தன் தமையனை எண்ணி மனதிற்குள் பெருமையாக கூட இருந்தது ஹர்ஷாவிற்கு, அவன் தம்பி தங்கை வளர்ந்து விட்டார்கள் என.

இப்போது அருணாசலம் குடும்ப உறுப்பினர்கள் பற்றி சில வரிகள். அபிமன்யு தற்போது நரம்பியலில் நிபுணத்துவம் பெற முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறான்.

விக்ரம் பொறியியல் முடித்து விட்டு தன் தந்தை வேதாசலத்தின் கட்டிடகலை நிறுவனத்தை நடத்தி வருகிறான்‌.

வீட்டின் கடைக்குட்டி ஆதிரா தன் அத்தானை பின்தொடர்ந்து இளநிலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். எப்போதும் போல் ஹர்ஷாவே இன்றும் இவர்களுக்கு ஆசானாக இருந்து வழிநடத்தி வருகிறான்.

____________________________________________

"அத்தான் சாரி. வெரி வெரி சாரி. நான் இப்படி இனிமே பண்ணவே மாட்டேன். தயவு செஞ்சு என் கிட்ட பேசுங்க அத்தான். பிளீஸ் பிளீஸ் அத்தான்" என்று கெஞ்சி கொண்டிருந்தது நம் ஆதிராவே.

காலை எழுந்தது முதல் தன்னுடன் பேசாது இருக்கும் தன் ஹர்ஷா அத்தானிடம் தான் கெஞ்சி கொண்டிருந்தாள் ஆதிரா.

"ம்மா அத்தான என்கிட்ட பேச சொல்லு மா‌. பாரு எங்கிட்ட காலைல இருந்து பேசவே இல்லை" என்று தன் அன்னையையும் தன்னோடு கூட்டு சேர்க்க முயன்றாள்.

'ம்ஹூம்' எந்த முயற்சியும் ஹர்ஷாவிடம் எடுபடவில்லை. வீட்டில் இருந்த யாரும் ஹர்ஷாவிடம் ஆதிராவிக்கு பரிந்து கொண்டு வரவில்லை.

இந்த காலக்கட்டத்தில் நண்பர்களே ஆனாலும் இரவு வேளையில் சென்றது ஆபத்தில் கொண்டு சென்று விட்டிருந்தால் என்ன செய்திருப்போம் என்று அவர்களால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

அதனால் ஹர்ஷாவின் கண்டிப்பை அவர்கள் கண்டும் காணாது விட்டனர். எல்லோரிடமும் பேசி பார்த்து எதுவும் ஆகவில்லை என தெரிந்து சோகமாய் சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்‌.

ஆதிரா தன் பின்னால் சுற்றியது பின் சோகமாக போய் அமர்ந்தது என அனைத்தையும் அமைதியாக ஓரக்கண்ணால் பார்த்திருந்தான் ஹர்ஷா‌.

இப்போது சோகமே உருவாக அமர்ந்திருந்த ஆதிராவை கண்டு சிரிப்பு தான் வந்தது. அவள் அமர்ந்திருந்த விதம் ஹர்ஷாவிற்கு பத்து வயது அம்முவாக தான் தெரிந்தாள்.

அவள் விழிகள் நீர் கோர்த்தது போல் தெரியவும் அதற்கு மேல் ஹர்ஷாவிற்கு மனது தாளவில்லை. மெதுவாக போய் அம்மு அருகில் அமர்ந்த ஹர்ஷா "அம்மு" என்றான்.

அவனின் குரல் கேட்டவுடன் ஆனந்தமாய் நிமிர்ந்த ஆதிராவின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கண்ணத்தில் இறங்கிவிட்டது.

அதன் பின் எங்கே ஹர்ஷாவிற்கோ அவர்தம் குடும்பத்திற்கோ கோபத்தை இழுத்து பிடிக்க. சட்டென அவளின் கண்ணீரை துடைத்தான் ஹர்ஷா. அவளின் தலையை கோதினார் அருணாசலம்.

"அம்மு அழக்கூடாது டா. இனிமே வீட்ல யார்கிட்டேயும் சொல்லாம இப்படி எங்கையும் போகக் கூடாது. புரியுதா டா" என வார்த்தைக்கும் வலிக்குமா என்று பேசியது ஹர்ஷாவே தான்.

இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த பார்வதி "பாத்து ஹர்ஷா நீ பேசுனதுல அவ பயந்துர ஏதும் போறா!" என நக்கலாக சொல்லி "இவ அழுதா இவன் உருகி போறான். இவளை கெடுக்கிறதே இவங்க எல்லாம் தான்" என ஆனந்த சலிப்புடன் முணுமுணுத்து சென்றார்.

ஹர்ஷா ஆதிராவிடம் என்று தன் அன்னையின் சாயலை கண்டானோ அன்றிலிருந்து அவளை சிறிதும் காயப்படுத்த மாட்டான். கோபமாக பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வான்.

அவளும் ஹர்ஷாவிடம் தன்னுடைய சேட்டைகளை காட்ட மாட்டாள். விக்ரம் அபிமன்யு என அனைவரையும் வைத்து செய்து விடுவாள். ஆனால் சில நேரம் இதுபோல் மாட்டியும் விடுவாள்.

பல நேரம் சிரிப்புடன் கடந்து விடும் ஹர்ஷா சில சமயம் லேசாக மிரட்டல் தருவான். ஆனால் அதை கூட சாமர்த்தியமாக தகர்த்து விடுவாள் நம் அம்மு.

ஆனால் தவறான பாதையின் வழி அவளை என்றும் விடவும் மாட்டான். இம்முறை நடந்த தவறு ஹர்ஷாவிற்கே பொறுக்க முடியாமல் போகவும் தான் பெரிதாக கோபப்பட்டான்.

ஆம் ஹர்ஷாவை பொறுத்த வரை அவனின் மௌனம் தான் அந்த வீட்டினருக்கு அவன் தரும் பெரிய தண்டனை. அடிப்பது திட்டுவதை விட அமைதியால் அடிப்பது தான் பெரிய தண்டனை அவனை பொருத்த வரை. உண்மையும் அதுதானே!!

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 4

காலையின் பரபரப்பிலும் அந்த இல்லம் அமைதியை தத்தெடுத்து இருந்தது. காரணம் அந்த வீட்டின் தலைவர் விஸ்வநாதன் நடு ஹாலில் அமர்ந்திருந்தது தான்.

அவருக்கு முன் அவரின் மகள் அனுக்ஷ்ரா மற்றும் அவரின் தங்கை மகள் ரித்திகா இருவரும் கையை கட்டிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தனர்.

ஏதேனும் தவறு செய்து விட்டு திட்டுவாங்கிக் கொண்டு நிற்கிறார்கள் என எண்ணினால் அது தவறு. இன்று ரித்திகா தன்னுடைய கல்லூரியின் முதல் வருடத்தின் முதல் வகுப்பில் அடி எடுத்து வைக்கிறாள்.

அதை கொண்டே அவர்களுக்கு அறிவுரை என்ற பெயரில் கட்டளைகள் நீண்டு கொண்டிருந்தது. கல்லூரியில் சேர போவது ரித்திகா தானே. எதற்கு இரு பெண்களையும் நிற்க வைத்து பேசுகிறார் விஸ்வநாதன் என உங்கள் மனதில் கேள்வி பிறக்கும்.

அதை அறிய விஸ்வநாதன் குடும்பத்தை பற்றிய சிறு குறிப்பு அவசியம். ராகவன் ஒரு தொழில் அதிபர். இவருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த மகன் விஸ்வநாதன் மற்றும் இளைய மகள் வசுந்தரா.

விஸ்வநாதன் அவரின் மனைவி மீனாட்சி. இவர்களின் ஒரே மகள் அனுக்ஷ்ரா. வசுந்தரா இவரின் கணவர் கணபதி. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண். பெரியவன் ஆதர்ஷ் மற்றும் இரண்டாவது பெண் ரித்திகா.

அண்ணன் தங்கை இருவரும் அருகருகே உள்ள வீட்டில் தான் வசித்து வருகின்றனர். ராகவன் தன் இரு பிள்ளைகளுக்கும் அருகருகே வீடுகளை கட்டி கொடுத்திருந்தார்.

எதில் ஒற்றுமையோ இல்லையோ ஆனால் இந்த வீட்டில் உள்ளவர்களின் ஒரு ஒற்றுமை என்னவென்றால் அது அனைவருக்கும் விஸ்வநாதன் மீதுள்ள பயமே.

ராகவன் தவிர்த்து மற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் விஸ்வநாதன் என்றால் சற்று பயம் தான். இதற்கு பெரியோர் இட்ட பெயர் மரியாதை என்றால் வீட்டின் சிறியவர்கள் இட்ட பெயர் பயம்.

விஸ்வநாதன் தன் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அவர் சொல்லை மட்டும் தான் கேட்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

பிள்ளைகளிடம் கண்டிப்பை காட்டுகிறேன் என அதிகமாக தன் அதிகாரத்தை செலுத்துகிறார் என்பதை அவர் அறிவாரா? அதுவும் அவர் மட்டுமே அறிந்தது.

கல்லூரியில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று அவர் ரித்திகாவிற்கு பாடம் நடத்தி முடிக்கையில் அரை மணி நேரம் முடிந்திருந்தது.

"என்ன ரித்தி நான் சொல்றது புரியுதுல்ல" என்று கடைசியாக கேட்டதும் விட்டால் போதுமென தலையை ஆட்டி வைத்தாள் ரித்திகா.

"ஷரா அவளை பத்திரமா பாத்துக்கோ. அப்புறம் ரெண்டு பேரும் போனமா படிச்சமா வந்தமான்னு இருக்கனும். தேவையில்லாத வேலைலா பாக்க கூடாது" என தன் தங்கையையும் அவர் கணவரையும் ஒரு பார்வை பார்த்து பின் அவர்களை கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.

அவர் பார்வையை பார்த்த வசுந்தரா தன் தலையை குனிந்து வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார். தன் மனைவியின் வேதனை முகத்தை கண்டு தன் வேதனையை விழுங்கிய கணபதி வசுந்தராவின் கையை ஆறுதலாக தட்டிக் கொடுத்தார்.

இது போல் அடிக்கடி வீட்டில் நடக்கும் என்பதால் நடந்த நிகழ்வுகளை சாதாரணமாக பார்த்து வைத்தனர் வீட்டினர்.

பின் காரில் ஏறி அமர்ந்த ரித்திகா அனுக்ஷ்ராவிடம் வழக்கம் போல் புலம்ப துவங்கினாள். "வர வர நம்ம ஹிட்லர் டார்ச்சர் எல்லையை கடந்துட்டு இருக்கு ஷரா க்கா.

இப்ப எதுக்கு இவர் இவ்ளோ லெக்சர் எடுத்தாரு. நாம போறது லேடிஸ் காலேஜ் தானே க்கா. அதுக்கே இப்படியா‌.

எஞ்சினியரிங் எடுக்குறேன்னு சொன்னேன். மார்க் இருந்தும் இந்த காலேஜில தான் படிக்கனும்னு மாமா சொல்லிட்டாரு. என்னால முடியல க்கா.

அம்மா அப்பாவும் எதுவும் சொல்லல க்கா. அதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. ஆனா ஆதர்ஷ மட்டும் அவன் ஆசைப்பட்டத படிக்க ஓகே சொல்லிட்டாரு மாமா" என்ற ரித்திகாவிற்கு தன் சிரிப்பை தந்து அவள் தலையை கோத

"க்கா நீ ஞானியாவே மாறிட்ட போல. எப்படி க்கா இப்படி. அவர் இவ்ளோ பேசியும் சிரிக்கிற. நான் கூட பரவாயில்லை. நீ என்ன விட நல்ல மார்க் எடுத்திருந்த, உன்னையும் ஆர்ட்ஸ் காலேஜ்ல தான் சேர்த்தாரு‌.

உனக்கு கஷ்டமாவே இல்லையா?" என்று முகத்தை பாவமாக வைத்து கேட்டாள் ரித்திகா.

"ரித்து எனக்கு பழகிருச்சு டா. உனக்கும் பழகிரும் பாரேன்‌. அப்புறம் எஞ்சினியரிங்க விட பேசிக் சைன்ஸ் படிச்சாவே இஸ்ரோல நுழையலாம். நீ பெரிய சைன்டிஸ்ட் ஆகலாம். நல்ல ஸ்கோப் இருக்கு.

அதான் உன்னையும் பிசிக்ஸ் குரூப் எடுக்க சொன்னேன். அப்புறம் நம்ம காலேஜ் ரொம்பவே நல்ல காலேஜ் டா. உனக்கு கண்டிப்பா பிடிக்கும் பாரேன்" என தன் தங்கையின் சைன்டிஸ்ட் ஆகும் கனவை கொண்டு பேசவும் மகிழ்ந்து போனாள் ரித்து.

"ஆனா அக்கா நீ ஏன் பிசிக்ஸ் எடுத்த‌? உன்னோட டிரீம் டாக்டர் தானே" என கேட்டாள் ரித்து. அதில் அனுக்ஷ்ராவிற்கு தன் சிறு வயது முதல் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவை தந்தையிடம் சொன்ன போது

"அதுலாம் ஒன்னும் வேணாம். நீ நான் சொல்ற காலேஜ்ல எதாவது எடுத்து படி போதும்" என்று அவர் கூறிய இந்த வரிகள் அவளை இங்கு கொண்டு வந்தது.

அதே நேரம் தன் அத்தை மகன் ஆதர்ஷ் அவ்வளவு குறைந்த மதிப்பெண் எடுத்தும் அவன் ஆசைப்பட்ட படிப்பை டொனேஷன் கொடுத்து சேர்த்தும் நினைவு வந்தது.

தன் தந்தை சொல்லை மீற முடியாது தன் ஆசையை விட்டு இளநிலை இயற்பியலை தேர்வு செய்தாள் அனு. இப்போது முதுநிலை இரண்டாம் ஆண்டும் படித்துக் கொண்டிருக்கிறாள்.

தன் மனதை மறைக்க "அதை விடு. இன்னைக்கு பர்ஸ்ட் டே காலேஜ். பிரஷ்ஷர்ஸ் டே பங்சன் எல்லாம் வைப்பாங்க. நல்லா எஞ்சாய் பண்ணனும். ஓகே!

அப்புறம் புதுசு புதுசா நிறைய பிரண்ட்ஸ் பிடி. ஜாலியா இரு. ஹேவ் ஃபன் டா ரித்தி" என்று அவள் மனதை திசை திருப்பினாள் முயன்றாள் அனுக்ஷ்ரா.

தன் மாமனின் பேச்சில் துவண்டிருந்த மனதை இப்போது சரி செய்து கொண்டாள் ரித்து. இப்படியே ஒரு வழியாக இருவரும் கல்லூரிக்கு சென்றனர்.

___________________________________________

அந்த நீண்ட காரிடோரில் வேகவேகமாக நடந்து வந்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா. அன்று வழக்கம் போல் மருத்துவமனை வந்தான் ஹர்ஷா. சிறிது நேரத்தில் தன்னுடைய நோயாளிகளை பரிசோதிக்க துவங்கினான்.

அப்போது அவன் அறைக்கு வேகமாக வந்த செவிலி ஒருவர் "டாக்டர் அந்த சூசைட் அடெம்ப்ட் கேஸ் கொஞ்சம் பிராப்லம் பண்றாங்க. சீப் டாக்டர் இல்லை. அதான் உங்கள கூப்பிட வந்தேன்.

சீக்கிரம் வாங்க டாக்டர்" என்றார் பதட்டமாக. தன் தந்தையும் இல்லை என்பதால் ஹர்ஷா என்னவோ ஏதோ என பதறி அந்த அறை நோக்கி இப்போது சென்று கொண்டிருக்கிறான்.

"என்ன விடுங்க நான் சாகனும். நான் சாகனும்!!! என்னை ஏன் காப்பாத்துனீங்க...." என்ற அந்த பெண்ணின் சத்தம் அறை கதவை திறந்த ஹர்ஷாவின் காதிலும் விழுந்தது.

உள்ளே வந்தவன் கண்டதோ, அந்த பெண் தன் இரு பக்கங்களிலும் அவள் கையை பிடித்து நின்றிருந்த அவளின் பெற்றோரின் பிடியில் இருந்து வெளிவர திமிறிக்கொண்டு கத்துவதை தான்.

பக்கத்தில் இன்னொரு செவிலியும் அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்துக் கொண்டிருந்தார். ஆனால் எதற்கும் அந்த பெண் சாந்தமாக வில்லை.

அப்போது திடீரென "ஸ்டாப் இட். ஐ சே ஸ்டாப் இட்!!" என்று வந்த ஹர்ஷாவின் கர்ஜனையான குரலில் திடுக்கிட்டு திரும்பினாள் அந்த பெண். அவளின் வேகத்தை குறைக்கவே அவன் தன் குரலை உயர்த்தியது‌. அது வேலை செய்வவே,

"என்ன பிராப்லம் மா உங்களுக்கு? என்னாச்சு? ஏன் சாகறேன்னு சொல்றீங்க" என்றான் சட்டென மாறிய சாந்தமான குரலில். கேட்டுக் கொண்டே அவள் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டான் ஹர்ஷா.

அப்படி கத்தியவன் இப்படி அமைதியாக பேசவும் அந்த பெண் பயந்த பார்வை பார்த்தாள் ஹர்ஷாவை. "ம்ஹூம்!!" என தன் மூச்சை இழுத்து விட்ட ஹர்ஷா,

"உங்க பேர் என்ன மா?" என்று மெதுவாக ஆரம்பித்தான் ஹர்ஷா. ஏதோ சொல்ல வந்த அந்த பெண்ணின் பெற்றோரிடம் வேண்டாம் என்பதாய் தலை அசைத்தவன், தன் கையை பார்த்து குனிந்து அமர்ந்த அந்த பெண்ணை தான் பார்த்திருந்தான்.

"ஷாலினி" என அந்த பெண் இப்போது தன் வாயை அசைத்தாள். அது வரை ஹர்ஷாவும் எதுவும் பேசவில்லை யாரையும் பேசவும் விடவில்லை. அவள் பேசிய பின்னே பேச ஆரம்பித்தான்.

"ம்ம் ஷாலினி! நைஸ் நேம்‌. உங்கள நேத்து காப்பாத்தின டாக்டர் நான் தான். சோ நீங்க எதுக்கு சாகப்போனிங்கன்ற ரீசன் என்கிட்ட சொல்லலாம். அன்ட் ஏன் இப்போ இப்படி பண்றீங்கனு சொல்லாம்.

இன்பாக்ட் ஐ நவ் ஹேவ் ரைட்ஸ் டூ நோ ஆஸ் ஐ சேவ்ட் யூ ரைட்‌. கரெக்ட் தானே" என பொதுவாக கேட்டவன் "ஓகே சொல்லுங்க ஷாலினி. எதுக்கு நீங்க சாகனும்" என வினவினான் அவளை கூர்மையாக பார்த்தபடி.

சுற்றி இருந்தவர்களும் அவளையே தான் பார்த்திருந்தனர். அவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை சொல்ல தூண்டியது போலும். "அவன் பேர் வருண்" என ஆரம்பித்தாள்.

"என் கிளாஸ் மேட் தான். பர்ஸ்ட் அவன் தான் என் பின்னாடியே வந்தான். லவ் புரபோஸ் செஞ்சான். என் பிரண்ட்ஸ்லா அவனோட என்னை சேர்த்து கிண்டல் செய்வாங்க.

ஆரம்பத்தில எனக்கு கோபமா வந்துச்சு. நான் பர்ஸ்ட் ஒத்துக்கல. ஆனா அப்புறம் கொஞ்ச கொஞ்சமா அது பிடிக்கவும் ஆரம்பிச்சிது.

நானும் அவன் லவ்வ கொஞ்ச நாள்ல அக்சப்ட் பண்ணிட்டேன். அதுல அவனுக்கு அவ்ளோ சந்தோஷம். என்னை அப்படி சுத்தி சுத்தி வருவான் டாக்டர் " என்னும் போது அவள் முகம் அவ்வளவு மென்மையை தத்தெடுத்தது.

அவளின் முகத்தை கண்ட ஹர்ஷாவிற்கு பிரச்சினை வேறு வழியில் பயணித்து உள்ளதோ என்ற சந்தேகம் இங்கே ஆரம்பித்தது. எனவே அவளை தொந்தரவு செய்யாது மேலும் கவனித்தான்‌.

"எல்லா லவ்வர்ஸ் மாதிரியும் நாங்களும் பார்க் பீச்னு எப்பயாவது கொஞ்சம் ஊர் சுத்துவோம்‌. அப்பக்கூட என் கையை மட்டும் தான் பிடிச்சுக்கிட்டு நடப்பான்.

அவ்ளோ லவ்னு சொல்வான். அன்ட் என்னை தப்பா பாக்க கூட மாட்டான். அவன் ரொம்ப ரொம்ப நல்லவன் டாக்டர். அப்ப தான் அது நடந்துச்சு" என்றாள் தயக்கமாக தன் பெற்றோரை பார்த்து.

'இவ சொல்றத பார்த்தா அந்த பையனையும் குறை சொல்ல மாட்டா போல. அப்ப ஏன் இப்படி செஞ்சா?' என அவள் பெற்றோரும் அவளை பார்த்தனர்.

இப்போது ஹர்ஷா ஓரளவு முடிவு செய்து விட்டான் பிரச்சினை அந்த பையனை கொண்டு இல்லை என்று. அதை நிருபிப்பது போல் தான் அந்த பெண் கூறிய நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவள் வாக்குமூலமாக வந்தன.

ஹர்ஷாவிடம் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஷாலினி சொல்லி கொண்டிருக்கும் போது போலீஸ் அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர்.

அவர்களை கண்டு பயந்த ஷாலினியிடம் "நீங்க சூசைட் அட்டெம்ட் செஞ்சதால நாங்க போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டோம் மா. இட்ஸ் ஜட்ஸ் எ பார்மாலிட்டி பார் அவர் ஹாஸ்பிடல் சேப்டி.

சோ நீங்க பயப்பட வேண்டாம். இன் பேக்ட் இவங்க உங்களுக்கு ஹெல்ப் தான் பண்ணுவாங்க. அன்ட் யு கண்டினுயு மா" என்று முடித்தான்.

சிறிது தயக்கத்திற்கு பின் "திரீ இயர்ஸ் நாங்க லவ் பண்ணோம் டாக்டர். உயிருக்கு உயிரா லவ் பண்ணோம். ஃபைனல் இயர் வந்தோம். கேம்பஸ்ல நாங்க ரெண்டு பேரும் ஒரே கம்பெனிக்கு செலெக்ட் ஆகிட்டோம்.

வருண் எங்க ஃபைனல் இயர் எக்சாம் முடிஞ்ச அப்புறம் கல்யாணம் பண்ணிகலாம்னு சொன்னான் டாக்டர். தென் அப்படியே நாங்க ரெண்டு பேரும் செலக்ட் ஆன கம்பெனிக்கு பெங்களூர் போலான்னு சொன்னான்.

அதை அவன் ரொம்ப சீரியசா சொன்னான். எனக்கு அப்போ புரியலை. ஏன் இதை இவ்ளோ சீரியஸ் இஸ்யூ ஆக்கனும்னு. பட் அவன் சொன்னது சரின்னு இப்ப தோனுது டாக்டர்" என சிறிது வருந்தினாள்.

பின் "லாஸ்ட் செமஸ்டர் எக்சாம் முன்னாடி எங்களுக்கு பேர்வல் குடுத்தாங்க காலஜ்ல. அன்னைக்கு வருண் எங்க பிரண்ட்ஸ் எல்லாருக்கும் அவனோட வீட்ல பார்ட்டி தரேன்னு இன்வைட் பண்ணிருந்தான்.

அன்ட் அங்க போய் பார்த்தப்ப தான் தெரிஞ்சது அது அவங்க கெஸ்ட் ஹவுஸ்னு‌. அப்போ தான் வருணோட ஸ்டேட்ஸ் கூட எனக்கு தெரிஞ்சது. அதுவரைக்கும் அவன் ஒரு பணக்கார வீட்டு பையன்னு எனக்கு தெரியாது.

அவன் அதை யார்க்கிட்டையும் காட்டிக்காம நார்மலா தான் பழகுவான்‌. எங்க பிரண்ட்ஸ்க்கு கூட ஷாக் தான் அவன பத்தி தெரிஞ்ச அப்புறம்" இது வரை தடையின்றி பேசியவள் இப்போது தயக்கமாக தன் பெற்றோரை ஏறிட்டாள்.

பின் தன் தலையை குனிந்தவாறு "அன்னைக்கு நான் கொஞ்சம் எமோஷனலா இருந்தேன் அவன் ஸ்டேட்ஸ் நினைச்சு. அவன் என்னை ரொம்ப கண்சோல் பண்ணுனான். அப்போ எங்கள அறியாமையே தப்பு பண்ணிட்டோம்.

ஆனா நடந்தத நினைச்சு அவனும் ரொம்ப பீல் பண்ண ஆரம்பிச்சான். கண்டிப்பா சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்னான். நான் தான் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொன்னேன். அப்புறம் எங்க எக்சாம்ஸ் நடந்துச்சு.

சோ நானும் கவனிக்காம விட்டுட்டேன். இப்ப ஒன் வீக் முன்னாடி தான் நானும் நோட் செஞ்சேன். அப்ப தான் நான் பிரக்னென்ட்னு கன்பார்ம் பண்ணுனேன். ரொம்ப ஷாக்கிங்கா இருந்துச்சு எனக்கு.

நான் உடனே அதை வருண்க்கு சொல்ல கால் செஞ்சேன். நான் சொன்னதை கேட்ட அப்புறம் வருண் உடனே மேரேஜ் பண்ணிக்கலாம்னு அரேன்ஜ் பண்றேன்னு சொல்லி என்னை காம்ப்ரமைஸ் பண்ணிட்டு போனை வச்சான்.

அதுக்கு அப்புறம் அவன் போன் பண்ணவே இல்லை. நான் செஞ்சாலும் எடுக்கல. எங்க பிரண்ட்ஸ் அவன் வீட்டுக்கு போய் பார்க்க டிரை செஞ்சாலும் அவன மீட் பண்ண முடியலை.

என்ன பண்றதுன்னு பயந்துட்டு இருந்தேன். அப்பதான் ஒரு மூனு நாள் முன்னாடி வருணோட வீட்ல இருந்து அவங்க அப்பா எனக்கு கால் பண்ணுனாங்க. அவனுக்கு அவங்க யாரோ ரிலேடிவ் பொண்ணோட மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டதா சொன்னாரு.

அன்ட் அவனோட லைப்ல என்ன தலையிட கூடாதுன்னு மிரட்டுனாறு. அப்படி எதாவது செஞ்சா என் அப்பா அம்மாவ எதாவது செஞ்சுருவோம்னு மிரட்டுனாங்க. காசு... காசு... தரேன்னுனு...." இதுவரை கோர்வையாக சொல்லியவள் கடைசி வரியை கூறும் போது அவள் விழிகளில் நீர் வழிந்தது.

கேட்ட அனைவருக்கும் விஷயம் ஓரளவுக்கு புரிந்து விட்டது. பிரச்சினை செய்வது அந்த பையனின் பெற்றோர் என. அதை உறுதி செய்ய "வருண் எதாவது அவங்க பேரன்ட்ஸ் மூலமா செஞ்சுருக்க வாய்ப்பிருக்கா?" என்றான் ஹர்ஷா.

சட்டென பதில் வந்தது அவளிடமிருந்து. "கண்டிப்பா இல்லை டாக்டர். அவன் அப்படிலாம் பண்ண மாட்டான். அவன் பேசறத அவனோட பேரன்ட்ஸ் கேட்டுட்டாங்க போல.

அவனை யாருக்கும் தெரியாம அவனோட அப்பா தான் எங்கையும் மறச்சு வச்சுருப்பாங்கன்னு நினைக்கிறேன் டாக்டர். ஆனா அவர் என்னை மிரட்டவும் எனக்கு என்ன செய்யன்னு அப்ப புரியல.

என் அப்பா அம்மாக்கு வெளிய என் ரிலெட்டிவ்க்கு தெரிஞ்சா என் பேரன்ட்ஸ்க்கு தான் கஷ்டம். ஒரு வேளை என் பேபிய கலைக்க சொன்னா‌? ஆனா வருணோட எங்க இந்த குழந்தைய அழிக்க எனக்கு மனசு இல்லை.

சப்போஸ் நான் குழந்தைய பெத்துக்கனும்னு டிசைட் செஞ்சா, அதை ஆர்பனேஜ்ல தான் விட யோசிப்பாங்க என் அப்பா அம்மா. என் அப்பா அம்மாக்கும் அவமானம். சோ அந்த டைம் எனக்கு என்ன செய்யன்னு தெரியலை.

அதான் நான் சூசைட் பண்ணிக்கலாம்னு டிசைட் செஞ்சேன். என்னோட என் பேபியும் கஷ்டபடாதுன்னு நினைச்சு இப்படி பண்ணிட்டேன் டாக்டர்" என்று முடித்தவள் தன் கண்ணீரை துடைத்தாள்.

அவள் சொல்லி முடித்தவுடன் சிறிது நேரம் அமைதியில் கழிந்தது. அந்த நேரத்தில் எதையோ யோசித்து முடிவு செய்து விட்டான் ஹர்ஷா. இப்போது அந்த பெண் ஷாலினியிடம் வார்த்தைகளை கவனமாக போட்டு பேச துவங்கினான்‌.

"இங்க பாரு மா, நீ சொன்னது எல்லாம் வச்சு பார்த்தா அந்த பையன் மேலையும் மிஸ்டேக் இருக்க மாதிரி தெரியலை தான்‌. ஆனா நீங்க செஞ்ச இந்த விஷயம் ரொம்ப தப்பு.

பிஃபோர் மேரேஜ்...." என இழுத்தவன் "ஓகே லீட் இட். இனிமே அதை பத்தி பேசி நோ யூஸ். அன்ட் இப்ப நீ சொன்ன டீடெயில்ஸ் வச்சு நாங்க போலீஸ் சப்போர்டோட போய் அந்த பையன ரெஸ்கூயூ பண்ணா உனக்கு ஓகே தானே.

ஒருவேளை அங்க நாங்க போகுறப்ப அந்த பையன் மாத்தி பேசி, உன்னை யாருனே தெரியாது அப்படின்னு சொன்னா நீ என்ன பண்ணுவ மா?" என்றவன் கூர்மையாக அவளை தான் பார்த்திருந்தான்‌.

"கண்டிப்பா அவன் அப்படி சொல்ல மாட்டான் டாக்டர். அவன் உங்களோடவே வந்துருவான். வேனும்னா பாருங்க நான் சொல்ற மாதிரி தான் நடக்கும்" என்றாள் உறுதியாக.

அந்த உறுதியை கண்டு ஹர்ஷா தனக்கு தெரிந்த வகையில் ஒரு முடிவை எடுத்து அதை நடத்தி காட்டியும் விட்டான்.

____________________________________________

அந்த மருத்துவ கல்லூரி மரத்தடி கல் மேடைகள் அமளி துமளி பட்டுக் கொண்டிருந்தது. இன்று கல்லூரியின் முதல் நாள் என்பதால் முதல் வருட மாணவர்களை சீனியர் மாணவர்கள் வைத்து செய்து கொண்டிருந்தனர்.

அதில் ஒரு குழுவில் வந்த ஒருவரின் சத்தத்தை கேட்டு சட்டென திரும்பிப் பார்த்தான் அபிமன்யு. அந்த குரலுக்கு சொந்தக்காரியான ஆதிரா தன் நண்பர்களோடு நின்று முதலாம் ஆண்டு மாணவர்களை வம்பிலுத்து கொண்டிருந்தாள்.

அந்த குழுவில் இருந்தது மூன்றே பேர் தான் - ஆதிரா, சந்தியா மற்றும் அவர்கள் நண்பன் விக்கி. இந்த மூவர் கூட்டணி தான் நின்று கொண்டிருந்தனர்.

அதை கண்ட அபி அந்த மரத்திற்கு சற்று அருகில் போய் நின்று அவள் என்ன செய்கிறாள் என பார்க்க தொடங்கினான்.

அங்கே ஒரு முதலாம் ஆண்டு மாணவனை அழைத்தவள் "நீ எதாவது ஒரு பாட்டு பாடி காட்டு பாப்போம்" என்று கூறி சிரித்துக் கொண்டிருந்தாள்.

"ஐயோ! அக்கா எனக்கு பாட்டுலாம் பாட தெரியாது. அப்புறம் நான் பாடுனா நீங்களாம் அப்படி தெரிச்சு ஓடிருவீங்க. வேற எதாவது சொல்லுங்க செஞ்சுட்டு போறேன்" என்றான் அந்த மாணவன் பதிலாக.

அந்த மாணவன் தன்னை நக்கல் செய்வதை புரியாத ஆதிராவும் "அப்ப சரி நீ டான்ஸ் ஆடிட்டு போ" என தன் கைப்பேசியில் ஒரு பாட்டை போட்டாள்.

'இந்த லூசுக்கு அவன் கிண்டல் பண்றது கூட புரியல. இதுல மேடம் ரேகிங் பண்ண இறங்கிட்டாங்க. இவள...' என தன் தலையில் அடித்து கொண்டவன் அங்கே என்ன நடக்கிறது என பார்த்தான்.

அவனும் அப்படி இப்படி என தன் உடலை அசைக்க, பார்க்க முடியவில்லை ஆதிராவாலும் அவள் நண்பர்களாலும். "ஏஏ..ஏ... தம்பி தம்பி நீ பாடவும் வேணாம்!! ஆடவும் வேணாம்!!

நீ பண்றது எங்களுக்கு தான் பணிஷ்மென்ட் மாதிரி இருக்கு. நீ அப்படியே கிளாஸ பாத்து ஓடிடு" என்று அருகில் இருந்த ஆதிராவின் நண்பன் விக்கி அந்த மாணவனை துரத்தி விட்டான்.

பின் ஆதிரா தான் துவங்கினாள். "என்னடி சந்து இது. போன வருஷம் நம்ம சீனியர்லா நம்மல எப்படி வச்சு செஞ்சுதுங்க.

ஆனா நமக்கு மாட்டுற ஜூனியர் எல்லாம் இவ்ளோ மொக்கை‌ பீசா வருதுங்க" என்று தன் தோழி சந்தியாவிடம் அலுத்துக் கொண்டாள்.

அதற்கு விக்கி "ஹே ஆதி! பசங்க மொக்கை இல்லை. நமக்கு தான் ரேகிங் பண்ண தெரியலை. அந்த பையன் இவ்ளோ நேரம் நம்மள தான் நக்கல் பண்ணிட்டு போறான்.

அது கூட புரியாம பாடு ஆடுன்னு சொல்லிட்டு இருக்க. உன்னை என்ன பண்ண ம்ம்.. இதுக்கு தான் சொன்னேன் நமக்கு இதுலாம் செட்டே ஆகாது.

வழக்கம் போல காலேஜ் வந்தோமா; கேன்டீன் போனோமா; சமோசா தின்னமா; அப்படியே கிளாஸ பாத்து போனோமான்னு இருக்கறத விட்டுட்டு எதுக்கு இப்படி காலைலையே பல்பு வாங்கிட்டு இருக்கோம்.

இப்பவாவது ஒழுங்கா நான் சொல்றத கேட்டு என் பின்னாடியே கிளாஸ்கு வந்து சேருங்க. அதை விட்டு ரேகிங் பண்றேன் ரேசிஸ் போறேன்னு சுத்திட்டு இருந்தீங்க!

அப்புறம் பர்ஸ்ட் இயர் பசங்கலாம் எங்கள ரேகிங் பண்றாங்கன்னு வந்து ஒப்பாரி தான் வக்கினும். என்ன புரியுதா!! மரியாதையா அப்படியே வாங்க கிளாஸ்கு போலாம்" என்று நீண்ட உரையை நிகழ்த்தினான் அவர்களின் நண்பன் விக்கி.

அவன் கூறியதை கேட்டு அசடு வழிந்த ஆதிரா "சரி நமக்கு தான் ரேகிங் பண்ண தெரியலை விடு விடு. ஆனாலும் நாம சீனியர் தானே! நம்மல எப்படி அவன் கிண்டல் பண்ணலாம்.

அவன கூப்டு டா திட்டி விடலாம்" என்றாள். "ஏ லூசு! அவன் நம்மல கிண்டல் பண்ணிட்டு போறான்‌. திரும்ப கூப்பிட்டு மறுபடியும் பல்ப் வாங்கனுமா.

பேசாம இருந்திருந்தா அவன் சீனியர்ன்னு ஏதோ கொஞ்சம் மரியாதையாவது தந்துருப்பான். இப்ப நம்ம பண்ணுன கூத்துல நம்மல பேக்குன்னு நெனச்சிட்டு போய்ருப்பான்.

திரும்ப கூப்பிட்டா நம்மல லூசுன்னே கண்பார்ம் பண்ணிட்டு போய்ருவான்‌. கொஞ்ச நஞ்ச மரியாதைய காப்பாத்தவாது இப்படியே கிளம்புனா நல்லது.

இல்லனா என்னமோ பண்ணுங்க. நான் கிளம்புறேன்" என சொல்லிக் கொண்டே செல்ல ஆரம்பித்தான்.

விக்கி கூறிய உண்மை புரிய "சே சீனியர் ஆகியும் ஒரு ரேகிங் கூட பண்ண முடியலையே" என தங்கள் நிலையை நொந்து கொண்டு வகுப்பறையை நோக்கி நகர்ந்தனர் தோழிகள் இருவரும்.

இதையெல்லாம் மரத்தின் பின் நின்று பார்த்துக் கொண்டிருந்த அபிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஆதிராவின் அப்பாவி தனத்தை ஒரு வித ரசிப்புடன் பார்த்திருந்தவன் "அடியே என் அத்த மகளே!! சீக்கிரம் வளந்துரு செல்லம்! இன்னும் குழந்தையாவே இருக்கியே டா அம்மு!!

நீ அட்லீஸ்ட் யூ.ஜீ முடிச்சா தான் அண்ணா உன்னை பாக்கவே விடுவாரு. இதுல கல்யாணம்லா..." என எண்ணி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு, ஆதியை எண்ணி முகத்தில் மலர்ந்த சிரிப்புடன் தன் வகுப்பறைக்கு சென்றான் அபிமன்யு அருணாசலம்!!

-மீண்டும் வருவான்
 
Top