All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "ரகுக் குல கர்ணா" - கதை திரி

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 24

ஒரு அறையின் தரையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தான்‌ அவன். அந்த அறைக்கதவை திறந்து சென்ற அருணாசலம் அவனை கண்டு பதறி துடித்தார்.

"கண்ணா" என்று பாசமாக அழைத்துக் கொண்டே அருகில் செல்ல, அவரை நிமிர்ந்து பார்த்தான் அவன்.

"அப்பா!" என்று அவன் உதடுகள் தானாக உச்சரித்தது. "அப்பா தான்டா கண்ணா" என்று கூறியபடி நெருங்கினார் அருணாசலம்.

"அப்பா! என்னை மறந்துட்டீங்களா. ஏன்ப்பா என்னை இவ்வளவு நாளா பட்டினியா போட்டீங்க. இப்போ எனக்கு ரொம்ப பசிக்குது ப்பா. சீக்கிரம் எதாவது செய்ங்க ப்பா" என கதறி அழுதவன்,

கொஞ்ச கொஞ்சமாக காற்றோடு கரைய, "ஐயோ என் கண்ணா!" என்று அலறி அடித்து எழுந்தார் அருணாசலம். அவருக்கு நன்றாக வேர்த்து விட்டிருந்தது.

திடீரென கனவில் தன் மகன் இப்படி தோன்றவும் என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை அருணாசலத்திற்கு. சிறிது நேரம் அந்த கனவையே யோசித்தபின் எதுவோ அவருக்கு புரிய மறுநாள் அதுகுறித்து தன் மற்ற பிள்ளைகளிடம் பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்தார்.

அதற்கு பின்னர் எப்போதும் போல் பழைய நினைவுகள் வந்து மேகம் போல் சூழ்ந்து கொள்ள தூக்கம் தூர சென்றது.

அதே நேரம் ஹர்ஷா அவன் அறையில் அவனுக்கு வந்த கனவில் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான். ஹர்ஷாவிற்கு இது எப்போதும் வந்துக் கொண்டிருக்கும் கனவு தான் என்றாலும் இன்று சிறிது வித்தியாசமாக இருந்தது.

ஆம் ஹர்ஷாவிற்கு அன்று வந்த அதே கனவு மீண்டும் மீண்டும் வருகிறது. இன்று சற்று வித்தியாசமாக அந்த குழந்தையை சுவற்றில் அடிக்கும் நேரம் அந்த அறையின் மூலையில் ஹர்ஷாவை போன்ற ஒரு உருவம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது.

அதை யோசித்த ஹர்ஷா 'என்னடா இது ஒரே கனவு இத்தனை தடவை வருது. ஒன்னும் புரியலையே' என குழம்பினான்.

சில நிமிடங்களில் தன் யோசனையில் இருந்து வெளிவந்த ஹர்ஷா, தன் அருகே சுருண்டு படுத்திருந்த அனுவை கண்டு புன்னகை பூத்தான்.

அவள் முகத்தை ரசனையான பார்த்தவன், அவள் நெற்றியில் ஒரு முத்தத்தை பதித்து விட்டு அனுவை அணைத்து படி படுத்து நிம்மதியாக உறங்கினான்.

காலை நேரம் ஹாலிற்கு வந்த ஹர்ஷா தன் வீட்டு பெரியவர்கள் அனைவரும் அங்கேயே இருப்பதை பார்த்து, காலை வணக்கத்தை பொதுவாக கூறியவன் அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டான்.

"அத்தை அம்மாக்கு திதி பண்ணனும். சோ அதுக்கு தேவையான எல்லா ஏற்பாடும் செய்யனும். அதை எல்லாத்தையும் நீங்க ரெடி பண்ணிடுறீங்களா" என்று பார்வதியை நோக்கி கேட்டான் ஹர்ஷா.

காலையில் இருந்தே வந்த கனவின் தாக்கத்தில் இருந்த அருணாசலம் ஹர்ஷா திதி கொடுப்பதை பற்றி பேசவும் சட்டென அவருக்குள் ஒரு யோசனை தோன்றியது. பார்வதி எதோ கூற வரும் முன் அருணாசலம் பேசினார்‌.

"பார்வதி திதி இந்த வருஷம் மருமகளுக்கு செய்யறதோட இன்னொரு ஆளுக்கும் செய்யப்போறோம்னு அந்த ஐயர்க்கிட்ட சொல்லிடுமா.

ரெண்டு பேருக்கு திதி குடுக்க எல்லா ஏற்ப்பாடையும் செய்ய சொல்லிடு" என்ற அருணாசலத்தின் பேச்சில் அனைவரும் குழம்பினர்‌.

"அது யாரு ப்பா இன்னொருத்தர்?" என்று ராஜசேகர் கேட்டுவிட்டார். ஒரு பெருமூச்சை வெளியிட்டு "எல்லாம் என்னோட மூத்த பிள்ளைக்கு தான்டா ராஜா. அவன் என் கனவுல வந்து அழுகுறான்டா" என்ற அருணாசலம் இரவு தனக்கு வந்த கனவை கூறி

"அவனுக்கு இதுவரை திதி குடுத்ததே இல்லைடா. என் புள்ளை பசியோட அலையுறான். அவன் அழுவறத பார்க்குற சக்தி எனக்கும் இல்லடா" என்ற அருணாச்சலத்தின் குரல் தழுதழுத்தது.

அதை கேட்ட ராஜசேகர் வருத்தமாக கண்ணை மூடி அமர்ந்துவிட்டார். பார்வதியின் விழியில் இருந்து கண்ணீர் தானாக வழிந்தது.

அவர் மூத்த அண்ணன் அப்படியே ஹர்ஷாவை போல். யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்காமலே செய்வார். அவ்வளவு பாசம் குறும்பு மரியாதை இரக்கம் என அவரின் அத்தனை அம்சங்களும் ஹர்ஷாவை ஒத்தது.

அதுவும் அந்த புன்னகை எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை கண்டால் அனைத்தும் பறந்து சென்றது போல் தோன்றும்.

அப்படிப்பட்ட நல்ல உள்ளம் இன்று பசியால் அழுகிறது என கேட்கவும் உடன் பிறந்தவர்கள் இருவராலும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

"அத்தை அப்பா உங்க கஷ்டம் எனக்கு புரியுது. கவலைப்படாதீங்க. பெரியப்பாக்கும் அம்மாக்கு திதி பண்ற அதே நாள் நம்ம வீட்ல திதி குடுத்திடலாம்.

சோ ஐயர்கிட்ட சொல்லி எல்லாத்தையும் செஞ்சிடுங்க அத்தை" என்று ஹர்ஷா அவரிடம் ஆறுதலாக பேசி தன் தந்தையின் தோளையும் அழுத்திக் கொடுத்தான்.

ஒருவாறு அனைவரையும் சமாதானம் செய்தபின்னரே ஹர்ஷா மருத்துவமனைக்கு கிளம்ப சென்றான். அதன்பின் பார்வதியும் ஒரு நல்ல நாளை பார்த்து தன் மூத்த அண்ணன் மற்றும் அண்ணி என இருவருக்குமான திதி ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

------------------------------------------

"குட் மார்னிங் சார்" என்ற சங்கவியின் வாழ்த்துக்கு "ம்ம்" என்று முணகினான் விக்ரம். இப்படி தான் ஒரு வாரமாக அபி வந்து சென்ற பிறகு முகத்தை தூக்கி வைத்துபடி சுற்றிக் கொண்டிருக்கிறான் விக்ரம்.

அதோடு சங்கவி செய்யும் வேலைகளில் இது குறை அது குறை என அவளையும் போட்டு பாடாய்ப் படுத்துகிறான். அவன் எங்கே சென்றாலும் அவளையும் எங்கேயும் விடாது கங்காரு குட்டியை போல் தன் அருகிலே வைத்துக் கொண்டு சுற்றி வருகிறான். அவன் மாற்றம் அப்பட்டமாக தெரிய சங்கவி மனதிற்குள் சிரித்து கொள்வாள்.

அதே போல் இப்போதும் சிரித்தபடி தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தாள். சிறிது நேரத்திலே அவள் கைப்பேசி அலறியது. அழைத்தது அபிமன்யு தான். அன்றே எண்ணை வாங்கிக் கொண்டிருந்தான்.

ஒரு வாரம் கழித்து இப்போது அழைப்பு விடுத்துள்ளான். விக்ரமை ஓர விழியில் ஒரு பார்வை பார்த்தவள், அவன் கணினியில் மும்முரமாக எதுவோ வேலை செய்வதை உறுதிப்படுத்திவிட்டு அழைப்பை ஏற்றாள்.

ஆனால் அவளுக்கு எங்கே தெரிய போகிறது, விக்ரம் பார்வை மட்டுமே கணினி மேல். மற்றபடி அவனின் முழு உடலும் காதை தீட்டிக் கொண்டு சங்கவி பேசப்போவதை கேட்க தயாராகி இருப்பதை.

"ஹலோ சிஸ்டா! நான் அபி பேசுறேன்" என்று அபி கத்தியது விக்ரம் காதில் துல்லியமாக போய் விழுந்தது. அதை கேட்டவுடன்

'இவன் எதுக்கு என் கவிக்கு போன் பன்றான்' என்று உள்ளுக்குள் புகைந்த விக்ரம் அவர்கள் பேசுவதை மேலும் கேட்க கவனம் ஆனான்.

"சொல்லுங்க ண்ணா" என்றாள் சங்கவி மெதுவாக. "விக்ரம் பக்கத்தில தானே இருக்க சிஸ்டா?" என்று அபியின் கேள்விக்கு ஆம் என்றாள்‌.

"அப்போ என்னை அபின்னு மட்டும் கூப்பிடு. அண்ணாவ கட் பண்ணிடு ஓகேவா" என்று அபி கூறவும் விக்ரமை லேசாக திரும்பி பார்த்தாள் கவி. அவன் கண்கள் மட்டும் கணினி திரையில் இருக்க முழு உடலும் மனதும் இங்கே இருப்பது புரிந்தது.

அதை பார்த்து வந்த சிரிப்பை அடிக்கிய கவி "ஓகே அபி" என்றாள் சத்தமாக. இங்கே விக்ரமிற்கோ 'எதுக்கு அவனுக்கு இவ ஓகே சொல்றா' என இதயம் தாறுமாறாக அடித்து கொண்டது.

"என்ன சார் நீ என்ன பேசறன்னு காதை தீட்டி வச்சிட்டு உக்காந்திட்டு இருக்கானா?" என்று அபி கிண்டலாக கேட்க, "ஆமாம் அபி" என்று சிரித்தாள் கவி.

"சூப்பர் சிஸ்டா! இப்படியே இன்னும் ஒரு ஐஞ்சு நிமிஷம் பேசுற, அவனை வெறி ஏத்துற" என்று அபி கூற அருகில் அமர்ந்திருந்த அம்மு அபியை முதுகில் அடித்து

"என்ன அத்தான் இப்படியெல்லாம் என் அண்ணன டார்ச்சர் பண்ற. அவன் பாவம்ல" என்று சண்டைக்கு வர,

"ஏன்டி அவனா பாவம். ஒரு பொண்ண லவ் பண்ண துப்பில்ல இவனை எல்லாம் என்னன்னு தான் எங்க அத்தை வளர்த்து விட்டாங்களோ. என்னையும் அவங்க தான் வளத்தாங்க. நான்லாம் எப்படி உன்கிட்ட லவ்வ சொன்னேன்‌. அவனும் தான் இருக்கானே. சரியான டூயுப் லைட் டூயுப் லைட்" என்று அம்முவிடம் எகிறினான்.

"இங்க பாருங்க அத்தான் நீங்க ரொம்ப ஓவரா போறீங்க. என்னதான் இருந்தாலும் அவன் என்னோட ஒன் அன்ட் ஒன்லி அண்ணன். அவனை நீங்க கிண்டல் பண்ணக்கூடாது" என தன் பங்கிற்கு எகிறினாள் அம்மு.

இப்படி இவர்கள் இங்கே மள்ளுக்கட்ட, இதை கேட்டு சங்கவி அங்கே வாய்விட்டு சிரித்து கொண்டிருக்க, விக்ரம் காதில் புகை வராத குறைதான். இப்போது நேராகவே திரும்பி அமர்ந்து சங்கவியை முறைத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் சங்கவி தான் அவனை பார்க்கவில்லை. இவர்கள் சண்டையை கேட்டு "ஐயோ அபி என்னதிது" என சங்கவி கேட்க அதை எங்கே அந்த பக்கம் உள்ள இருவரும் கேட்டனர். அவர்கள் சண்டை இட்டுக் கொள்வதிலே தீவிரமாக இருந்தனர்‌.

ஆனால் அனைத்தையும் புரியாது பார்த்த விக்ரம் தான் சங்கவியின் கடைசி வரிகளில் "கவி" என கத்தி பொங்கி எழுந்து விட்டான்.

விக்ரமின் குரலில் தூக்கிவாரி போட திரும்பிய சங்கவி "என்ன சார்?" என கேட்பதிற்குள்ளையே அவளை நெருங்கி விட்டான்.

"போன்ல யாரு?" என்றான் உறுமலாக. "அ..‌து அது உங்க கசின் அபிமன்யு சார்" என்று திணறலாக கூறினாள் சங்கவி. அதில் கடுப்பான விக்ரம் "அவன்கிட்ட உனக்கு என்னடி இவ்ளோ நேரம் பேச்சு" என்று அதே கோபத்தோடு கேட்டான் விக்ரம்.

அவன் டி என்று அழைத்ததை அவன் உணர்ந்தானா என்று தெரியவில்லை. ஆனால் சங்கவி அதில் அதிர்ச்சியாக ஆச்சரியமாக அவனை பார்த்து எழுந்து நின்றாள்.

அவள் எழுந்து நிற்கவும் வசதியாக அவளின் தோளை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்த விக்ரம்

"என்னடி அவன்ட்ட பேசறப்ப சிரிச்சு சிரிச்சு பேசுன. என்னை பார்க்கவும் இப்புடி முழிக்கிற. என்ன என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியிது ஹான்" என்று கத்தியவன் அவளை மேலும் உலுக்கி

"அவன் கூட இனிமே நீ பேசக் கூடாது புரியுதா. அதை மீறி பேசு அப்புறம் தெரியும் இந்த விக்ரம் யாருன்னு" என்று முடித்தவன் அவன் இருக்கைக்கு சென்றான்.

சங்கவி தான் பேய் அடித்தது போல் அதிர்ச்சியாகி நின்று விட்டாள். அவனிடம் இப்படி ஒரு மாறுதல் உடனே தெரியும் என அவள் எண்ணவில்லை. அபி வந்து சொன்னபோது கூட அவள் பெரிதாக எதையும் எடுத்துக் கொள்ளவில்லை.

விக்ரம் தன்னை காதலிப்பான் என்று அவள் சிறிதும் எண்ணவில்லை. ஏதோ அபி கூறியதால் கேட்டுக் கொண்டு வந்துவிட்டாள்.

அபி பேசியதால் விக்ரம் நடந்துக் கொண்டவற்றை நினைக்கையில் அபி கூறியது உண்மை தான் போல் என்று எண்ணம் இப்போது வந்தது சங்கவிக்கு.

அதே அதிர்வோடு அமர்ந்து விட்டாள் கவி. சிறிது நேரம் கழித்தே தெளிந்தவள் அவள் வேலைகளை பார்க்க துவங்கினாள்.

அபி பேசிக் கொண்டிருக்கும் போதே விக்ரம் இப்படி நடந்துவிட, அழைப்பில் இருந்த அபியும் அம்முவும் விக்ரம் பேசியதை எல்லாம் கேட்டு விட்டனர்.

"அம்மு என் பிளான் கண்டிப்பா சக்சஸ்டி. உன் அண்ணன் இதே ஸ்பீட்ல போனானா அடுத்த மாசமே நம்ம வீட்ல இன்னொரு கல்யாணம் தான்" என்று புன்னகையுடன் கூறிய அபி "செல்லக்குட்டி" என்று அம்முவை அணைத்துக் கொண்டான்.

அபியை தள்ளிவிட்ட அம்மு "எதாவது சாக்கு வச்சு இப்படி சும்மா கட்டிப்பிடிக்க வேண்டியது" என அவனை திட்டிக் கொண்டே ஓடிவிட்டாள். போகும் அவளை சிரிப்புடன் பார்த்திருத்தான் அபி.

--------------------------------------

"நானா இப்படி நடந்துக்கிட்டேன். ஐயோ விக்ரம் என்னடா இப்படி பண்ணி வச்சிருக்க. அவ என்னை பத்தி என்ன நினைப்பா. போச்சு என் மானமே போச்சு!" என்று தன் அறையில் குறுக்கும் நெருக்குமாக நடந்த வண்ணம் புலம்பி தள்ளினான் விக்ரம்‌.

எல்லாம் காலையில் அவன் அலுவலகத்தில் சங்கவியிடம் அவன் நடந்துக் கொண்ட நிகழ்வை நினைத்து தான் இந்த புலம்பல் எல்லாம்.

'காலையில் ஏன் அவ்வாறு நடந்துக் கொண்டோம், அவள் யாரிடம் பேசினால் நமக்கு என்ன. இப்படி தான் ஒரு பெண்ணிடம் நடந்துக் கொள்வதா?' என தன்னையே பலவாறு கேள்வி எழுப்பி பார்த்தான்.

ஆனாலும் அவன் மனது அவள்பால் சாய்ந்துவிட்டதை மட்டும் அவன் மூளை ஒத்துக் கொள்ளவில்லை. பலவற்றை யோசித்து யோசித்து "ஆண்டவா!" என தலைப் பிடித்து கொண்டு அமர்ந்தான்.

"நான் ஏன் இப்படி ஆகிட்டேன்" என மீண்டும் மீண்டும் யோசித்தபடி விட்டத்தை பார்த்து படுத்துவிட்டான் விக்ரம். இப்படியே ஒரு வாரம் ஓடியது. விக்ரம் தயங்கி தயங்கி சங்கவியிடம் பேசி நாட்களை நகர்த்த,

அடுத்த நாள் அபியின் பிறந்தநாள் என வந்து நின்றது. ஹர்ஷா யூகித்தது போல் அபி சோகமே உருவாக சுவற்றை வெறித்துபடி அவன் அறையில் அமர்ந்திருந்தான்.

அந்த நேரம் கதவை திறந்துக் கொண்டு அந்த அறையினுள் நுழைந்தாள் அம்மு. அங்கே எதையோ இழந்தது போல் அமர்ந்திருந்த அபியை கண்டு அவள் மனது பதறியது.

கலகலப்பாக பேசிக் கொண்டு அனைவரையும் சிரிக்க வைக்கும் அபியை தான் இதுவரை அம்மு பார்த்திருக்கிறாள். இப்படி சோகமாக எல்லாம் அமர்ந்து பார்த்தது இல்லை.

தங்கள் காதலை பகிர்ந்த பின் வரும் முதல் பிறந்தநாள் என்பதால் அம்மு அனைவருக்கும் முன்னர் தன்னுடைய வாழ்த்தை பகிர வந்தவள் அபியின் இந்த நிலையை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் அவன் விழிகளின் ஓரம் இருந்த கண்ணீர் சுவடுகளில் அதிர்ந்து நின்று விட்டாள் அம்மு.

"அபி அத்தான்!" என்றாள் அவன் அருகில் சென்று தோளில் கை வைத்து. அம்முவின் குரலே அவ்வளவு நடுங்கி வெளிவந்தது. திடீரென வந்த அம்முவின் ஸ்பரிசத்தில் திரும்பி பார்த்த அபி என்ன நினைத்தானோ "அம்முமா" என்று அழைத்தவாறே அவளை இழுத்து அணைத்து கொண்டான்.

அவன் அணைப்பின் இறுக்கத்தில் இருந்து அபியின் மன இறுக்கத்தை உணர்ந்த அம்மு "என்னாச்சு அத்தான்" என்றாள் பரிவாக. அதற்கு பதில் ஒன்றும் கூறாத அபி "உன் மடியில படுத்துக்கட்டா அம்மு" என்றான் ஏக்கமாக.

அவன் கேட்ட பாவத்தில் அம்முவிற்கு உள்ளுக்குள் என்னவோ செய்தது. "ஐயோ! என்ன அத்தான் நீங்க பர்மிஷன் எல்லாம் கேக்குறீங்க. வாங்க வந்து படுத்துக்கோங்க" என்று அவனை மடி தாங்கினாள் நல்ல காதலியாக.

சிறிது நேரம் கழித்து தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள் அம்மு. அதில் "அத்தான்" என்று அதிர்ந்து போய் அழைக்க, அபி இன்னும் அம்முவோடு ஒன்றினான்.

அவன் தலையை தடவிக் கொண்டே தன்னிடம் இருந்து மெதுமெதுவாக பிரித்தெடுத்த அம்மு "ஏன் அத்தான் அழற?" என்றாள் குரல் கம்மி.

ஏதும் பேசாத அபியிடம் "ஏன் அத்தான் என்கிட்ட சொல்ல மாட்டியா. நான் தான் உனக்கு எல்லான்னு நான் நினைச்சேன்‌. ஆனா என்னை நீ அப்படி நினைக்கலையா" என்றாள் பாவமாக.

அம்மு கூறியதை கேட்டு அவள் வாயை தன் கையால் மூடிய அபி "நீதான்டி அம்மு எனக்கு எல்லாமே. இப்படி பேசாதடி கஷ்டமா இருக்கு" என்றான் வருத்தத்துடன். "அப்போ என்கிட்ட சொல்லலாமே அத்தான்" என்று ஊக்கினாள் ஆதிரா.

"உன்கிட்ட சொல்லாம யார்ட்ட அம்மு சொல்லப்போறேன். நாளைக்கு எனக்கு பர்த்டே உனக்கு ஞாபகம் இருக்காடி" என்றவனின் கேள்விக்கு 'ஆம்' என தலையசைத்தாள் ஆதிரா.

"ஆனா அதுவும் இல்லாம அது இன்னொரு நாளும்டி‌. அது எங்க அம்மா எங்களை விட்டுட்டு போன நாள்‌. என்னை இந்த உலகத்துக்கு தந்துட்டு எங்க அம்மா அப்பா அண்ணாவ விட்டுட்டு போன நாள்" என்ற அபியின் குரல் வெறுமையாக வெளிவந்தது.

"அப்போ நீங்க அத்தான். உங்களையும் தானே அத்தை விட்டுட்டு போன நாள்" என அம்மு நியாயமாக கேட்டு வைக்க, அவளை பாவமாக ஒரு பார்வை பார்த்து வைத்தான் அபிமன்யு.

அவனை அதற்கு மேல் பார்க்க முடியாமல் "என்ன அத்தான்" என்று கேட்டவாறு அபியை இழுத்து தன் மார்போடு அணைத்து கொண்டாள் அம்மு.

"உண்மை தான் அம்மு. ஆனா நான் வராம இருந்திருந்தா அப்பா அண்ணா ரெண்டு பேரும் அம்மா கூட சந்தோஷமா இருந்திருப்பாங்கல" என கூற

"ஏன் அத்தான் இப்படி லூசு மாதிரி பேசுறீங்க. அத்தையோட லைஃப் ஸ்பேன் அவ்ளோ தான். அவங்க இறக்கனும்னு இருந்திருக்கு. அதுக்கு நீங்க ஒரு ரீசன். இதே நீங்க பிறக்காம இருந்திருந்தா கூட அவங்க இறந்திருக்கலாம்.

ஆனா அத்தை உங்கள தந்திட்டு போய் ஹர்ஷா அத்தானையும் பெரிய மாமாவையும் உயிர்ப்போட வச்சிருக்காங்க. நீங்க இப்படி யோசிச்சு பாருங்க. ஒருவேளை நீங்களும் இல்லாம அத்தையும் இல்லாம இருந்திருந்தா என்ன ஆகிருக்கும்.

இந்த வீட்டுல ஹர்ஷா அத்தான் ஒரு பக்கமும் மாமா ஒரு பக்கமும் இருந்திருப்பாங்க. நீங்க தான் அவங்கல ஏன் இந்த குடும்பத்தையே சந்தோஷமா வச்சிருக்கீங்க. ஏன் அத்தான் நீங்க இல்லாம போனா நான் என்ன ஆவேன்னு யோசிச்சீங்களா.

இப்பக் கூட ஹர்ஷா அத்தான் தான் என்னை இங்க அனுப்பி விட்டாரு. 'என் தம்பி தனியா கஷ்டபடுவான். அவனை கொஞ்சம் போய் பாரு அம்முன்னு'. இப்படி ஒரு அண்ணன் கிடைக்க தான் அத்தை உங்கள விட்டுட்டு போனாங்கன்னு நினைச்சுக்கோங்க அத்தான்.

இவ்ளோ தூரம் நீங்க இங்க இருக்குற எல்லாருக்கும் தேவைபடுறப்ப ஏன் அத்தான் இப்படி பேசுறீங்க" என்று தன் நீண்ட பேச்சை முடித்தபோது அபி ஓரளவு தெளிந்தான்‌.

அபி என்றும் தன் மனதில் இருப்பதை யாரிடமும் பகிர்ந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த அபியின் முகம் ஹர்ஷா மட்டுமே அறிந்த ஒரு முகமும் கூட.

இந்த நேரத்தில் மற்ற யாரையும் நெருங்கவிடவும் மாட்டான் அபிமன்யு. ஆனால் வாழ்வு முழுவதும் இனி ஆதிரா என்றான பின்பு அவளும் அபியின் சுக துக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று எண்ணியே அம்முவை இங்கே அனுப்பி வைத்தான் ஹர்ஷா.

ஹர்ஷா ஒரு அண்ணனாக ஆதரவாக பேசினாலும் வாழ்க்கை துணையின் ஆதரவு என்பது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது என்பது அபிக்கு இப்போது நன்றாக புரிய அம்முவோடு ஒன்றி கொண்டான்.

ஒருவாறு அபியை சமாதானம் செய்த அம்மு மணியை நோக்க அது பன்னிரெண்டு தாண்டிவிட்டது என்று காட்டியது. "ஐயோ!" என்று தலையில் அடித்து கொண்ட அம்மு

"ஹாப்பி பர்த்டே அபி அத்தான்" என்று கூறி அவன் நெற்றியில் முத்தம் கொடுத்து அவனை அணைத்து கொண்டாள்.

அம்முவின் செய்கையில் புன்னகைத்த அபி "தேங்கியூடி செல்லம்" என தானும் அவளை இறுக்கி அணைத்தவன், தன் மனதை மாற்றும் பொருட்டு அம்முவிடன் பேச தொடங்கினான்.

"அம்மு நாம லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறம் வர என்னோட பர்ஸ்ட் பர்த்டே. அத்தானுக்கு என்ன கிப்ட் வச்சிருக்க?" என்றான் புன்னகையுடன்.

"ஒரு நிமிஷம் அத்தான்" என எழுந்து தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு பெட்டியை எடுத்தாள். "என்னடி இது" என்றான் அபி ஆர்வத்துடன்.

"வெய்ட் பண்ணுங்க அத்தான்" என சிணுங்கியபடி அதை திறந்தாள். திறந்த மறுநிமிடம் அதை மூடிவிட்டு "அத்தான் பர்ஸ்ட் நீங்க கண்ணை மூடுங்க" என்று சிறு கட்டளை போல் கூறினாள்.

"ப்ச் என்னடி இது ஒரு கிஃப்ட் தர இவ்ளோ பில்டப் பண்ற" என சலித்து கொண்ட அபி மறக்காது அவன் கண்களையும் மூடிக் கொண்டான்.

"உங்க லெஃப்ட் ஹேண்ட காட்டுங்க" என்று அடுத்ததாக அம்மு கூற அபி கையை நீட்டினான்.

கை மணிக்கட்டில் ஏதோ ஊர்வது போல் தோன்ற "என்னடி இன்னும் என்ன செய்ற" என்ற அபிக்கு பதிலளிக்காது "ஆன்.. இப்போ கண்ணை திறந்து பாருங்க அத்தான்" என்றாள்.

கண்களை திறந்த அபியின் கைகளில் மினுமினுத்தது அந்த தங்க பிரேஸ்லெட். அதை உற்று பார்த்த அபியின் கண்கள் ஒளிர்ந்தது‌. ஏனெனில் அந்த பிரேஸ்லெட்டில் இரண்டு 'ஏ'க்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருந்தது.

"இந்த ரெண்டு 'ஏ'ல ஒன்னு ஆதிரா இன்னொன்னு அபிமன்யு. எப்படி இருக்கு அத்தான்" என்றாள் ஆவலே உருவாக.

அபி எதுவும் பேசாமல் அம்முவையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான். "என்ன அத்தான் பிடிக்கலையா" என அபியின் அமைதியில் அம்முவின் ஸ்ருதி குறைந்தது.

அம்மு எதிர்பாராத நேரம் அம்முவின் கையை பிடித்து இழுத்த அபி அவள் இதழ்களை எடுத்துக் கொண்டான்.

அதிர்வில் அம்முவின் கண்கள் இரண்டும் பெரிதாய் விரிய, அபி கண்களை மூடுமாறு செய்கை செய்தான். அம்முவின் கண்களும் அதன்பின் தானாக மூடியது.

இதழ் யுத்தம் நெடுநேரம் செல்ல அம்முவின் விடாத கைப்பேசி அழைப்பில் தான் இருவரும் தங்கள் நிலையில் இருந்து வெளிவந்தனர். அம்மு அழைப்பை எடுத்து பார்க்க அழைத்தது ஹர்ஷா தான்.

"என்ன அம்மு ரொம்ப அழுதானாடா. அவன் இப்போ என்ன பண்றான்" என்று வருத்தத்துடன் கேட்டான். "ஆமா அத்தான். ஆனா இப்போ ஓகே தான். நார்மல் ஆகிட்டாரு" என அம்மு அங்கே வந்த போது அபி இருந்ததை கூறினாள்.

"அப்போ ஓகேமா. கீழ எல்லாம் ரெடி அவனை கொஞ்சம் கூட்டிட்டு வா அம்மு" என்று ஹர்ஷா வைத்துவிட "என்னடி அண்ணா என்ன பத்தி விசாரிச்சாரா" என புன்னகையுடன் வினவினான் அபி.

அப்போது தான் தான் இன்னும் அபியின் அணைப்பில் இருப்பதை உணர்ந்த அம்மு "ஐயோ விடுங்க அத்தான். வாங்க வெளியே போலாம்" என இழுத்து சென்றாள்.

கீழே ஹாலில் அனைவரும் கேக்குடன் தயாராக இருக்க "ஹேப்பி பர்த்டே அபி" என ஹர்ஷா வாழ்த்து கூறி அணைத்து கொண்டான்‌. அதன்பின் அனைவரும் தங்கள் வாழ்த்தை கூறினர்.

இனிதாக பிறந்தநாள் விழா முடிய ஹர்ஷா தன் தம்பியின் தோளை பற்றி அழுத்தியவன் "என்னடா கண்ணு எல்லாம் வீங்கி இருக்கு. ஏன்டா இப்படி அழுது உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிற.

அபி எப்பவும் சிரிச்சா தான் நல்லா இருக்கும். அண்ணா சொன்னா கேப்பல்ல. நீ இனிமே எதுக்கும் அழக்கூடாது. இதே மாதிரி சந்தோஷமா இருக்கனும்‌. அம்முவையும் நல்லா பாத்துக்கனும். இந்த வருஷம் நல்லா போக வாழ்த்துகள் அபி" என அபிக்கு வாழ்த்தை கூறி அவன் கையில் தான் எடுத்த உடையை கொடுத்தான்.

"ஓகேடா நீ ரூம் போய் நல்லா தூங்கு. குட் நைட்" என்ற ஹர்ஷா தன் அறைக்கு அனுவுடன் சென்றான். எல்லோரும் சென்ற பின்னர் அபியும் அம்முவும் மட்டுமே தனித்திருந்தனர்.

"ஹேய் அம்மு குட்டி! நீ வளந்துட்டடி செல்லம். அத்தானுக்கு கிஃப்ட்லா வாங்கிட்டு வந்திருக்க. அப்புறம் உன்னோட இந்த லிப்ஸ் வாவ்டி. இன்னொரு தடவை கிடைக்குமா" என்று கள்ளப் பார்வை பார்த்து வைத்தான் அபி.

அபியின் எண்ணம் உணர்ந்த அம்மு "ஐயோ அத்தான்! போங்க போங்க அதுலாம் முடியாது. நான் போறேன்" என சினுங்கிக் கொண்டு ஓடப்பார்க்க, அபி அவளை விடாது பிடித்து இழுத்தான்.

சிறிது நேரம் கெஞ்சிய அம்மு திடீரென "ஐயோ ஹர்ஷா அத்தான்" என அலற அபி அவள் கையை விட்டு திரும்பி பார்க்க அங்கே யாரும் இல்லை.

"என்ன நம்பிட்டீங்களா! சும்மா உல்லுலாய்க்கு. போய் தூங்குங்க அத்தான். பாய்!" என பழிப்பு காட்டி ஓடினாள் அம்மு. சிறிது தூரம் சென்ற பின் திரும்பி பார்த்து "இப்போ நீங்க ஓகே தானே அத்தான்" என்று வினவினாள் அம்மு.

"மச் பட்டர் செல்லம்" என்றான் அபி உளமார. "லவ் யூ அத்தான்" என கத்திக் கொண்டே தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் அம்மு. அதை மகிழ்வுடன் பார்த்த அபி அதன்பின் தன் அறைக்கு சென்றான்.


-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 25

அருணாச்சலத்தின் இல்லம் பலதரப்பட்ட ஆட்களால் நிரம்பி வழிந்தது‌. எல்லாம் அபியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்த கூட்டம் தான் அது.

அங்கே ஒரு ஓரமாக சேரில் பயங்கரமான யோசனையில் ஆழ்ந்திருந்தாள் சங்கவி. தன் நண்பர்களிடம் பேசி முடித்த அபிமன்யு அங்கு ஒரு மூலையில் அமர்ந்திருந்த சங்கிவியை கண்டு புருவம் சுருக்கியவன், அவள் அருகே சென்றான்‌.

"என்ன சிஸ்டா தனியா உக்காந்திட்டு எதோ பலமான யோசனை பண்ணிட்டு இருக்க. அப்படி எந்த கோட்டைய பிடிக்க பிளான் பண்ற" என்று விளையாட்டாக கேட்டபடி அருகே அமர்ந்தான்‌.

அதில் தன்னிலை அடைந்த சங்கவி "ஏன் ண்ணா அந்த சோக கதையை கேக்குறீங்க. எல்லாம் உங்க வீனா போன அத்தானால தான் எனக்கு இந்த நிலைமை" என்றாள் சோகமாக.

சங்கவி கூறிய விதத்தில் சிரித்த அபி "இனன்னைக்கு என் அத்தான் என்ன செஞ்சான்?" என்றான் அவளிடள். சங்கவியும் காலையில் நடந்தவற்றை கூற தொடங்கினாள்.

காலை அலுவலகம் வந்த சங்கவி எப்போதும் போல் விக்ரமிற்கு காலை வணக்கத்தை வைத்துவிட்டு தன் வேலையை துவங்கினாள். அவள் வந்தது முதல் விக்ரம் எதுவோ சொல்ல வருவது போல் தோன்றியது சங்கவிக்கு.

'எதுவா இருந்தாலும் அவர் வாயில இருந்தே வரட்டும்' என்றிருந்த சங்கவியும் அமைதியாக இருந்தாள். சிறிது நேரத்திலே அவளை அழைத்த விக்ரம்

"கவி உன்கிட்ட ஒரு விசயம் பேசனும்" என ஆரம்பிக்க "ம்ம் சொல்லுங்க சார்" என்றாள் சங்கவி. "அது... அது வந்து... சாரி கவி" என்றான் திணறலாக.

அவன் முகத்தை பார்த்து சிரிப்பை அடக்கியவாறு "எதுக்கு சார்" என்றாள் கவியும் புரியாதது போல். "கவி நேத்து நான் ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்னு எனக்கே சுத்தமா புரியலை.

நான் யூஸ்வலா இப்படிலாம் நடந்துக்குறவனே கிடையாது. அப்புறம் நான் நேத்து உன்கிட்ட கொஞ்சம் ஹார்ஷா பிஹேவ் பண்ணிட்டேன். ரொம்ப சாரி மா" என்றான் அவள் முகத்தை பாவமாக பார்த்து.

கவியும் பெரிய மனதுடன் "அது பரவாயில்லை விடுங்க சார். அதை நான் அப்பவே மறந்துட்டேன். இந்தாங்க சார் நீங்க கேட்ட பைல்" என்று ஒரு கோப்பை நீட்டினாள்.

அவள் கூறியதை புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்ட விக்ரம் அந்த பைலை வாங்கி பார்க்க ஆரம்பித்தான்.

'அபி அண்ணா சொன்னது நூறு பர்சண்ட் உண்மை தான் போல. இவருக்கு இப்ப கூட என்மேல லவ்னு புரியலை. இவரை வச்சுட்டு நான் என்ன பண்ண போறனோ' என்று மனதில் அவனை நினைத்து நொந்தவள்

'இவரை இப்படியே விட்டா நமக்கு அறுபதாம் கல்யாணம் தான். இதுக்கு எதாவது பண்ணியே ஆகனுமே' என தீவிரமாக யோசித்து ஒரு முடிவு செய்தவளாக விக்ரம் பார்க்காத நேரம் அபியின் எண்ணிற்கு ஒரு மிஸ்ட் கால் விடுத்தாள்.

சங்கவியின் அழைப்பை பார்த்த அபி உடனே அவளுக்கு அழைப்பை விடுத்தான். விக்ரம் சங்கவி கொடுத்த கோப்பை பார்த்துக் கொண்டிருந்த நேரம் சங்கவியின் கைப்பேசி அழைப்பில் நிமிர்ந்து பார்த்தான்.

விக்ரமை ஓர விழியில் பார்த்தபடி அழைப்பை ஏற்ற சங்கவி "ஹான் சொல்லுங்க அபி சார். என்ன இந்த டைம் கால் பண்ணியிருக்கீங்க" என்றாள் ஒன்றும் அறியாதவள் போல்.

சங்கவியின் திட்டம் புரிந்த அபி "என்ன சிஸ்டா, உன் ஆள் பக்கத்துல இருக்கானா?" என்றான் குதூகலமாக. அபிக்கு தான் விக்ரமை கிண்டல் அடிப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போலல்லவா.

சங்கவி "ஆமாம் சார்" என்றாள் மெதுவாக. "ஓஓ... அதான் ஐயாவை வெறுப்பேத்த எனக்கு கால் பண்ணுனியா" என்ற அபியிடம் "ம்ம் ஆமாம்" என்றாள்.

"ரைட்டு விடு. அவனை வெறுப்பேத்திடலாம். சரி நீ அப்படியே அவனை பார்க்காம வெக்கப்படுற மாதிரி சிரிச்சு வை பார்க்கலாம்" என்றவுடன் விக்ரமை பார்க்காது வெட்கத்துடன் சிரிக்க,

"என்னமா எதாவது ரியாக்ஷன் வருதா?" என்று எதிர்ப்பார்ப்போடு அபி கேட்க விக்ரமை லேசாய் திரும்பி பார்த்த கவி "ம்ஹூம் இல்லை" என்று உதட்டை பிதுக்கினாள்.

ஆனால் அவள் எங்கே அறிய போகிறாள்‌, விக்ரம் கவியின் ஒவ்வொரு செய்கையையும் பார்த்துக் கொண்டிருப்பதை.

"டோசேஜ் பத்தலை போலையே. சரி சிஸ்டா நீ இப்படி பண்ணு 'என்ன சார் நீங்க' அப்படின்னு கொஞ்சம் சிணுங்கு பாக்கலாம்" என்று அபி கவியை இன்னும் ஏற்றிவிட்டான்.

விக்ரமை எப்படியாவது தன்னிடம் காதலை சொல்ல வைக்க முடிவு செய்த சங்கவியும் அதே போல் சிரித்து சிரித்து பேச, அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே விக்ரமிற்கு கோபம் சுல்லென்று ஏறியது.

'இவ எதுக்கு அவன்கிட்ட பல்லை காட்டிட்டு சிணுங்குறா. இவ மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்கா. அவன் போன் பண்ணுனா இவ உடனே சிரிச்சு பேசிடுவாளா?' என்று புசுபுசுவென மூச்சு வாங்கியது விக்ரமிற்கு‌.

அதை உணர்ந்த கவி 'ஆஹா ஒர்க்கவுட் ஆகுது போலையே' என மகிழ்ந்து மேலும் பேச்சை வளர்த்து அவனை வெறுப்பேற்றினாள்.

அதற்கு மேல் அவள் அபியிடம் பேசுவதை பொருத்துக் கொள்ள முடியாத விக்ரம் சட்டென அவள் கையில் இருந்த கைப்பேசியை பறித்து தன் காதுக்கு கொடுத்தான்.

"ஹலோ அபி!" என்ற விக்ரமின் குரலை கேட்டு புன்னகைத்த அபி "என்ன விக்ரம் அத்தான் நீ பேசுற. நான் கவிட்ட தானே பேசிட்டு இருந்தேன். ஏன் கவிக்கு என்னாச்சு" என்றான் ஒன்றும் அறியாதவன் போல்.

"இங்க பாரு அபி இது ஆபிஸ் டைம். நீ சும்மா அவளுக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாத. எனக்கு வேலை கெடுது" என்று விக்ரம் சமாளிப்பாய் கூற

"ஓஓ... நான் பேசனதுனால உன்னோட வேலை கெட்டுப்போச்சா. சரி சரி அத்தான். இனிமே வொர்க் அவர்ஸ்ல நான் கவிக்கு கால் பண்ணலை.

ஆனா அவ வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் கால் பண்ணி பேசிக்கிறேன்" என்றான் நல்ல பிள்ளையாக.

அபி கூறியதை கேட்டு அதிர்ந்த விக்ரம் "இல்லை அதெல்லாம் ஒன்னும் நீ அவக்கிட்ட பேச தேவையில்லை. என் பி.ஏ கிட்ட உனக்கு என்னடா பேச்சு வேண்டி இருக்குது.

உனக்கு பொழுது போகலைனா என் தங்கச்சி தான் இருக்காளே‌, அவகிட்ட பேசு. கவிகிட்ட பேசுற வேலை வச்சுக்காத புரியுதா. மீறி பேசுன அப்புறம் நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்" என கத்தி அழைப்பை அணைத்தான் விக்ரம்.

விக்ரம் வைத்தவுடன் தன் காதை குடைந்த அபி "ஷப்பா.. இவன லவ் பண்ண வைக்கிறதுக்குள்ள என் காது செவிடா போயிரும் போலையே" என்று அலுத்துக் கொண்டான்.

இங்கே அலுவலகத்திலோ கவி விக்ரமையே வைத்த கண் வாங்காது பார்த்திருந்தாள். 'இவருக்கு இவ்ளோ பொசசிவ்நெஸ் வருதா. மனுஷன் நம்மகிட்ட தான் வாய திறக்கமாட்டேங்குறார் போல‌' என நினைத்து சிரித்தாள்.

சரியாக அபியிடம் பேசி முடித்த விக்ரம் கவி சிரிக்கும் நேரம் அவளை பார்த்தான். "ஏய் என்னடி சிரிக்கிற. நான்தான் அவன்கிட்ட பேசக்கூடாதுனு நேத்தே உன்கிட்ட சொன்னேன்ல.

அப்புறம் என்ன அவன் போன் பண்ணவும் அப்படி பேசுற. என்ன என்னைய பார்த்தா உனக்கு கேனையன் மாதிரி இருக்கா. சொல்லுடி"

என கத்தியபடி அவளை நெருங்க, காலையில் அவன் மூளை அவளை நெருங்காதே என கட்டளை போட்டதை மனம் அழகாக மீறியது.

"இங்க பாரு நான் மட்டும் தான் உனக்கு முதல்ல. என்னை விட்டுட்டு வேற எவன் கூடையாவது பேசுன, தொலைச்சிடுவேன்" என்று மிரட்டி விட்டு தன் இருக்கையில் அமர்ந்தான்.

விக்ரம் பேசிய அதிர்வில் இருந்த கவி 'இவரும் லவ்வ சொல்லமாட்டாரு. வேற யாரையும் நெருங்கவும் விடமாட்டாரா? இது எந்த ஊரு நியாயம்' என மனதில் திட்டியவள் அவனை நோக்கி சென்றாள்.

"விக்ரம் சார்! ஒரு நிமிஷம். இதெல்லாம் நீங்க எதுக்கு சொல்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? இல்லை எனக்கு புரியலை. நான் யார் கூட பேசுனா உங்களுக்கு என்ன.

அது என்னோட பர்ஸனல். நீங்க எப்படி அதுலை தலையிடலாம். நீங்க தான் எனக்கு முதல்லன்னு சொல்றீங்க. நீங்க யாரு எனக்கு. வெறும் பாஸ் தான். என் லவ்வரோ ஹஸ்பண்டோ இல்ல.

என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது ஹான்! உங்ககிட்ட வேலை பார்க்குறேன்ற ரீசன்காக என்ன வேணும்னாலும் பேசுவீங்களா" என்று சங்கவியும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேசி சென்று அமர்ந்து கொண்டாள்.

இப்போது விக்ரம் சிலையாக அமர்ந்திருந்தான். 'அவ சொல்றதும் உண்மை தானே. நான் யாரு அவளுக்கு. என் மனசு ஏன் அவ மேல இவ்ளோ உரிமை காட்டுது.

ஒருவேளை நான்.. நான்" என்று யோசித்து கொண்டே சென்றவன் அவன் மூளை கூறிய பதிலில் அதிர்ந்தான்‌.

அதே அதிர்வில் திரும்பி சங்கவியை பார்த்தவனுக்கு ஏதோ புரிய 'அப்போ இது தான் லவ்வா...!" என்று ஆச்சரியபட்டான் விக்ரம்.

இவனை காதலில் விழ வைக்க இத்தனை நாட்கள் மாடாக உழைத்த கியூப்பிட்டோ 'ஹப்பாடா இவனுக்கு ஒரு வழியா பல்ப் எரிஞ்சிருச்சுடா எப்பா. இவனை லவ்ல விழ வைக்கிறதுக்குள்ள என் ஜீவனை வாங்கிட்டானே பாவி பைய' என புலம்பி நின்றது.

விக்ரம் மனதின் மாற்றம் அறியாது இங்கே கணினியை தட்டி உடைத்துக் கொண்டு, அவனை திட்டி தள்ளி கொண்டிருந்தாள்.

அவளை திரும்பி பார்த்த விக்ரம், கவியின் இதழ் அசைவை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான். அதோடு விடாமல் அவளின் தலை முதல் பாதம் வரை, ஏன் அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்துக் கொண்டிருந்தான்.

"இது தான் ண்ணா நடந்தது‌. காலையில செமையா கோபம் வந்திருச்சு. அதான் புடிச்சு திட்டிவிட்டுடேன். இவரை என்ன பண்ணறதுன்னே தெரியலை ண்ணா.

நீங்க எவ்ளோ பிளான் போட்டாலும் அவர் வந்து என்கிட்ட லவ்வ சொல்றது எல்லாம் நடக்கவே நடக்காதோன்னு தோனுது ண்ணா.

அதான் உங்க அத்தான எப்படி கரெக்ட் பண்றது மசியலனா கலட்டி விடலாமானு யோசிக்கிறேன்" என்று குறும்புடன் முடித்தாள் சங்கவி.

"இவன் தேறமாட்டான் போலையே. பேசாமா கலட்டி விட்டுறு சிஸ்டா. உனக்கு நானே ஒரு நல்ல மாப்பிள்ளையா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்று அபிமன்யு விளையாட்டாக கூற "என்ன ண்ணா" என்றாள் கவி பாவமாக.

"பின்ன என்ன சிஸ்டா. டுயூப் லைட்டா இருந்தா கூட எரிய வச்சிடலாம் போல‌, இவன் அருத பழைய லாந்தர் விளக்கா இல்ல இருக்கான்.

சரி விடு சிஸ்டா அவனை எப்படி கவுக்குறதுன்னு இன்னொரு பிளான் போடறேன்" என்று கூறிய அபி யாரோ அழைக்கவும் "இதோ வந்திடுறேன் சிஸ்டா" என கிளம்பினான்.

அவன் அந்த பக்கம் நகர்ந்த பின் சங்கவி எழுந்து அந்த இடத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்‌. அப்போது ஏதோ ஒரு கையை அவள் கையை பிடித்து ஒரு கையால் வாயை பொத்தி இழுத்து மறைவிடம் சென்றது.

சங்கவியை இழுத்து சென்ற அந்த உருவத்தை கண்டு அவள் அச்சத்தில் விழி விரித்தாள். பார்ட்டிக்கு வந்திருந்த ஆட்களில் ஒருவன் தான் அவன். வந்ததில் இருந்து சங்கவி தனியே அமர்ந்திருந்ததை பார்த்தவன் இப்போது தனியே இழுத்து வந்திருந்தான்.

"பேபி யூ லுக் கார்ஜியஸ். கம் வித் மி" என்று அவன் குலறலிலே புரிந்தது அவன் நன்றாக குடித்திருப்பது. கத்தி யாரையும் அழைக்க முடியாதவாறு அவள் வாயையும் கை வைத்து மூடி இருந்தான் அந்த கயவன்.

சங்கவிக்கு பயத்தில் கை கால் எல்லாம் நடுங்கியது. ஹர்ஷா வீட்டின் முன்புற தோட்டத்தில் தான் விழா நடந்துக் கொண்டிருந்தது. சங்கவியை இவன் பின்பக்க தோட்டத்திற்கு இழுத்து வந்திருந்தான்.

எனவே பயத்தில் கண்களில் இருந்து தண்ணீர் நிற்காமல் வந்தது. 'பிளீஸ் விட்டிரு' என கண்களால் இரைஞ்சியும் அது போதையில் இருந்தவனுக்கு புரியவில்லை.

தப்பிக்க முயல கை காலை வைத்து அவனை தள்ள தன்னால் முடிந்தளவு முயற்சி செய்து பார்த்தாள் கவி. ஆனால் அவ்வளவு பெரிதாக இருந்த ஆளை அவளால் தள்ள முடியவில்லை.

சங்கவியை ஏளன சிரிப்புடன் பார்த்த அந்த ஆள் "என்ன பேபி என்னை அடிக்க உன் கை பரபரன்னு இருக்குமே. ஆனாலும் உன்னால இப்ப எதுவும் செய்ய முடியாது.

அன்னைக்கு பார்ட்டில வச்சு ஒரே ஒரு கிஸ் தானேடி கேட்டேன். அதுக்கு என் கன்னத்தில அரைஞ்சல. இப்போ நான் உன்னை கிஸ் பண்ண போறேன். என்னடி செய்யப்போற" என வக்கிரமாக கேட்டான்.

அவன் விக்ரமிற்கு தொழில் முறை தொடர்பு உள்ளவன். ஒரு முறை ஒரு பார்ட்டிக்கு சங்கவியையும் விக்ரம் அழைத்து சென்றிருக்க, இவன் தவறாக நடக்க எண்ணினான்.

எனவே சங்கவி சிறிதும் யோசிக்காது அனைவரின் முன்னும் அறைந்து விட்டாள். அதற்காக அவள் மீது கோபத்தில் இருந்தவன் இன்று சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டான்.

அவன் கோரமாக சிரித்துக் கொண்டு அவளை முத்தமிட நெருங்க ஒரு கரம் அவனை பிடித்து கீழே தள்ளி, சங்கவியை தன்னோடு அணைத்துக் கொண்டது.

அந்த கரத்தின் பாதுகாப்பு அணைப்பு மற்றும் அந்த நபரின் வாசத்தை வைத்தே உணர்ந்து கொண்டாள் வந்தது அவளின் ஆருயிர் காதலன் விக்ரம் என.

அவனை உணர்ந்த நொடி "விக்ரம் சார்!" என்ற கதறலுடன் அவனை இறுக அணைத்து கொண்டாள். அவளின் அணைப்பில் அவளின் நடுக்கத்தை அறிந்துக் கொண்டவனின் கோபம் எவரெஸ்டை எட்டியது.

"ஒன்னும் இல்லடா கவிமா. ஒன்னும் இல்ல. நான் வந்துட்டேன்ல பயப்படாத" என்று சமாதானம் செய்தவன், கோபத்தோடு அந்த ஆளை நெருங்கினான்.

அவன் சட்டையை பிடித்து கொத்தாக தூக்கி "ஏன்டா எங்க வந்து யாரு மேலடா கைய வைக்கிற பொறுக்கி. என் கவியையே தொடுறியா" என்று கேட்டபடியே வாயிலே ஒரு குத்து விட்டான். அவன் விட்ட குத்தில் அந்த ஆள் பத்தடி தள்ளி கீழே சென்று விழுந்தான்.

கீழே விழுந்தவனை எழுந்திருக்க விடாது தாறுமாறாக அடி பின்னி எடுத்துவிட்டான். கவி இன்னும் பயத்தில் அழுதபடியே இருந்தாள். இவர்கள் சத்தம் கேட்டு வீட்டினர் எல்லோரும் வீட்டின் பின்னர் வந்துவிட்டனர்.

விக்ரம் யாரோ ஒரு ஆளை வெறித்தனமாக அடிப்பதும், அருகில் அவன் பி.ஏ சங்கவி அழுது கொண்டிருப்பதையும் கண்டவர்கள் என்ன நடந்திருக்கும் என்று ஓரளவு யூகித்தனர்.

அழுதுக் கொண்டிருந்த கவியின் அருகே சென்ற அபி "என்ன சிஸ்டா ஏன் அழற? என்னாச்சு?" என்று கலக்காமாக கேட்டான். சங்கவியும் அழுதுக் கொண்டே நடந்ததை விவரித்தாள்.

கேட்ட அனைவருக்கும் கோபம் வந்துவிட்டது. அதுவும் தங்கள் வீட்டு விழாவிற்கு வந்த பெண்ணிடம் இப்படி ஒருவன் தவறாக நடக்க முயன்றதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இன்னும் வெறியோடு அடித்துக் கொண்டிருந்த விக்ரமை கஷ்டப்பட்டு இழுத்த ஹர்ஷா "விக்ரம் போதும் விடு செத்துற போறான். நாம போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணிடலாம்‌.

நீ அடிச்சு அவனுக்கு ஏதாவது ஆகிருச்சுனா உனக்கு தான் பிராப்ளம். சோ கொஞ்சம் உன் கோவத்தை கண்ட்ரோல் பண்ணு" என்று சமாதானம் செய்தான்.

சொன்னது போல் ஹர்ஷா போலீஸை வரவைத்து அவனை பிடித்து கொடுத்தான். இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் முடிந்து சூழ்நிலை சரியாக இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.

இப்போது தான் அருணாசலம் குடும்பத்தார் சங்கவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்து அமர்ந்தனர்‌. ஹர்ஷா அவனை அடிக்காமல் விலக்கிய பின் அமைதியாக இருந்த விக்ரம் வீட்டின் உள்ளே வந்தவுடன் என்ன நினைத்தானே வேகமாக சங்கவியின் அருகில் வந்து அவள் கன்னத்தில் பளாரென அறைந்து விட்டான்.

வீட்டினர் அனைவருக்கும் ஒரு நிமிடம் திக்கென்றது. "ஏய் அறிவில்லையாடி உனக்கு‌. அவன் கைய புடிச்சி இழுத்துட்டு போற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்த.

செவுள்லையே நாளு அறை விட வேண்டியது தானே. அவன் அந்த அளவு மோசமா நடந்துக்க வரான், அழுதுட்டு நிக்கிற. வாய் கிழிய என்கிட்ட வம்படிக்க தெரியுதுல்ல, அந்த வாய் இப்ப எங்க ஊர் சுத்த போச்சா சொல்லுடி" என இருந்த மொத்த கோபத்திலும் சங்கவியை திட்டி தீர்த்தான் விக்ரம்.

வீட்டினர் அனைவருக்கும் விக்ரம் சங்கவியை அடித்தது அதிர்ச்சி என்றால், அவன் பேசியது பேரதிர்ச்சியாக இருந்தது. விக்ரமின் கோபம் எல்லாம் அலுவலகத்தோடு நின்றுவிடும்.

வீட்டில் எப்போதும் சிரித்துக் கொண்டு, மற்றவர்களை வம்பிழுத்துக் கொண்டு என சுற்றுவது தான் விக்ரமின் இயல்பு. எனவே அவனின் கோபத்தை அனைவரும் பார்த்து அசந்து தான் விட்டனர்.

பேசியபடி மறுபடியும் சங்கவியை அடிக்க சென்ற விக்ரமை தடுத்த ஹர்ஷா "போதும் விடுடா. அந்த பொண்ணு என்ன பண்ணும். பாவம்டா ஏற்கனவே பயத்துல இருக்கா. நீ வேற ஏன்டா உன் பங்குக்கு டார்ச்சர் பண்ற" என கடிந்து கொண்டான்.

இப்போது அதிர்வில் இருந்து மீண்டிருந்த அபி சங்கவியை நோக்கி "ஏன் சிஸ்டா அங்க என்ன தான் நடந்தது. நான் அவ்ளோ நேரம் உன்கிட்ட தானே பேசிட்டு இருந்தேன்.

அதுக்குள்ள நீ எப்படி அங்க மாட்டின?" என்று கவியிடம் கேட்டான்.
ஏனெனில் அங்கு வைத்து அவன் தவறாக நடக்க பார்த்தான் என்று மட்டுமே கூறியிருந்தாள் சங்கவி. அதனால் தற்போது அபி என்ன நடந்தது என கூற பணித்தான்.

"நீங்க போன அப்புறம் சும்மா சுத்தி பார்த்துட்டு இருந்தேன் ண்ணா. அப்போ தான் அவன் என் வாயை பொத்து கையை புடிச்சு இழுத்துட்டு போய்ட்டான்.

என்னால கத்தவும் முடியலை" என்று ஆரம்பித்து அதன் பின் நடந்தது, அவன் அவ்வாறு நடக்க காரணமான நிகழ்வு எல்லாவற்றையும் கூறினாள் சங்கவி.

அவள் பேசி முடித்தவுடன் சீறி எழுந்த விக்ரம் "அப்போ அன்னைக்கு ஹோட்டல்ல வச்சே உன்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ண பார்த்திருக்கான்ல்ல. என்கிட்ட ஏன்டி அதை மறைச்ச.

அப்பவே சொல்லிருந்தா அங்கையே அவனை தூக்கி போட்டு நாளு
மிதிச்சிருப்பேன்ல. எதெதுக்கு சண்டை போடனுமோ அதையெல்லாம் விட்றது. மத்த நேரம் பாரு ரோடுனு கூட பாக்காம வம்பு பண்றது" என்று மேலும் மேலும் திட்டினான்.

அவன் திட்ட திட்ட எதுவும் பேசாது தலையை குனிந்து அமைதியாக அமர்ந்திருந்தாள் சங்கவி‌. விக்ரம் கூறியதிலும் ஒரு உண்மை உண்டு தானே. தவறு நடந்த பொழுதே அதை அவனிடம் கூறி இருந்தால், இன்று இவ்வளவு தூரம் அவன் அவளிடம் மோசமாக நடந்து கொள்ள விட்டிருப்பானா விக்ரம்.

அதனாலே கவியும் அமைதி காத்தாள்‌. "சரி ரொம்ப திட்டாத அத்தான். என் சிஸ்டா பாவம். அவ என்ன பண்ணுவா விடுடா. இனிமே நாம பத்திரமா பாத்துக்கலாம்" என்று சமாதானம் செய்தான்.

அதன்பின்னரே விக்ரம் சற்று தனிந்தான்‌. ஆனால் அவன் செய்கையின் மூலம் அவன் குடும்பத்தினர் அனைவருக்கும் தன் காதலை வெட்ட வெளிச்சமாக்கி விட்டான் விக்ரம்‌.

சங்கவியும் அவன் பேச்சை கேட்ட விதத்தில் அவளுக்கும் விக்ரமை பிடிக்கும் என அனைவரும் ஊகித்தனர். "ஹப்பாடி உன் அண்ணன் ஒருவழியா கமிட் ஆகிட்டான்டி" என்று அம்மு காதில் மகிழ்வுடன் கிசுகிசுத்தான்.

அதில் அவனை கோபமாக முறைத்த அம்மு "அத்தான் இங்க என்ன நடந்துட்டு இருக்கு நீங்க என்ன பேசுறீங்க?" என்று கடுகடுத்தாள்.

"யூ சீ அம்முமா. உன் அண்ணன் கல்யாணம் நடந்தா தான் நம்ம ரூட் கிளியர் ஆகும். இப்போ தான் உன் அண்ணனுக்கு பல்ப் எரிஞ்சிருக்கு.

எப்படியும் அவன் கல்யாணம் அடுத்த வருடம் பண்ணிட்டான்னு வச்சிக்கோ, அடுத்து நாம தான்" என்று கண்ணடித்து கூற அம்மு தலையில் அடித்து கொண்டாள். அவனுக்கு அவன் கவலை.

"அனு சங்கவிய கெஸ்ட் ரூம்க்கு கூட்டிட்டு போமா. அந்த பொண்ணு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்‌. காலைல அவங்க வீட்ல கொண்டு போய் விட்டுக்கலாம்" என்ற ஹர்ஷா வீட்டில் இருந்த மற்ற நபர்களையும் படுக்க அனுப்பி வைத்தான்.

கடைசியாக விக்ரமிடம் வந்தவன் "என்ன மச்சான் கடைசியா அந்த பொண்ணை லவ் பண்றதை கண்டு பிடிச்சிட்ட
போல. ஆனாலும் நீ விட்டத்த பாத்து புலம்பரத பாத்து நீ இப்போ தேற மாட்டேன்னு நினைச்சேன்டா. பரவாயில்லை ஒருவழியா தேறிட்ட" என்று சிரிப்புடன் சொல்ல

"உன்னால மட்டும் எப்படிடா எங்க மூஞ்சிய பார்த்தே மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முடியுது" என்று அதிசயப்பட்ட விக்ரம் "உண்மை தான் மச்சான். அவ தான் என் லைப்னு டிசைட் பண்ணிட்டேன்டா" என்றான் புன்னகையுடன்.

"ஆனா உன் தம்பி இருக்கானே சரியான கேடிடா. நான் கவிய லவ் பண்றத புரிஞ்சிக்க எவ்ளோ வேலை பாத்திருக்கான். அவன் இங்க பார்ட்டில அவ கூட பேசறத கேட்டேன்டா.

எனக்கு செம ஷாக். என்ன வெறுப்பேத்த ரெண்டும் கூட்டணி போட்டுருக்குங்க. ஆனாலும் உன் தம்பிக்கு என் மேல கொஞ்சம் பாசம் இருக்கும் போலடா" என்று சிரித்த விக்ரம்

"அப்படி அவளை பார்த்துட்டு இருந்ததால தான் அவ பின் பக்கமா போன மாதிரி இருந்ததுன்னு நானும் போனேன்டா. போனா இப்படி நடக்குது. அந்த நேரம் வந்த கோபத்துக்கு நீ மட்டும் தடுக்கலை அவனை அங்கையே கொண்ணு பொதச்சிருப்பேன்" என்று கோபப்பட்டான் விக்ரம்.

"சரி விடு மச்சான். அதான் இப்போ எல்லாம் ஓகே ஆகிருச்சே. சங்கவியும் பாவம்டா ரொம்ப கோவப்படாத அந்த பொண்ணு ஏற்கனவே ரொம்ப பயந்திருக்கா சரியா.

அப்புறம் எப்போ சங்கவிய பொண்ணு கேக்க போலாம் அதையும் சொல்லிடுடா" என்றான் ஹர்ஷா கிண்டலாய்.

"அட ஏன்டா நீ வேற. அவள லவ் பண்றதையே இன்னைக்கு காலைல தான் கண்டுபிடிச்சேன். இன்னும் கல்யாணம் எல்லாம் ஒரு வருஷமாவது ஆகட்டும். நல்லா பொறுமையா லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்கிறோம்" என்று விக்ரம் தான் எண்ணியதை கூறினான்.

"ம்ம் கலக்கு மச்சான்" என தோளில் தட்டிய ஹர்ஷா அனு வரவும் தங்கள் அறைக்கு சென்று மறைந்தான். இப்போது ஹாலில் விக்ரம் மட்டுமே நின்றிருந்தான்.

தூங்க போகும் முன் விக்ரம் சங்கவி இருந்த அறையை எட்டி பார்க்க அவள் நன்றாக தூங்குவதை கண்டு 'அதுக்குள்ள தூங்கிட்டாளா?' என எண்ணி அவளை சிறிது நேரம் ரசித்துப் பார்த்தவன் புன்னகைத்தபடி தன் அறைக்கு சென்றான்.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 26

"விக்ரம் அத்தான் அப்புறம் மெதுவா நீ உன் ஆள சைட் அடிச்சுக்கலாம், இப்ப வா வந்து அந்த கதவுக்கு பூ போட ஹெல்ப் பண்ணு வா" என்று சங்கவியை சைட் அடித்துக் கொண்டிருந்த விக்ரமை கஷ்டப்பட்டு இழுத்து சென்றான் அபிமன்யு.

அன்று அபியின் பிறந்தநாள் விழாவில் நடந்த நிகழ்விற்கு பின் விக்ரம் பகிரங்கமாக சங்கவியின் பின் சுற்ற துவங்கிவிட்டான்.

அதுவும் அவன் காதல் சொன்ன லட்சனத்தை இப்போது நினைத்தாலும் சங்கவிக்கு வெட்கம் வந்துவிடும். விக்ரமின் பெர்பார்மன்ஸ் அந்தளவு இருந்தது.

காதலை புரிந்து கொள்ளும் வரை தத்தியாய் இருந்த விக்ரம், உணர்ந்த பின்னர் அவனின் அவதாரம் அதிரடியாக மாறியது. அன்று அவளை வீட்டிற்கு அழைத்து சென்றது விக்ரம் தான்.

சங்கவியின் வீடு வரும் வரை காரில் அமைதியே நிலவியது. அதில் சங்கவி கடுப்பாகிவிட்டாள். 'இவரு சரியான லாந்தர் விளக்கு தான்' என மனதில் எண்ணி நொந்த படி வர, வீட்டை அடைந்தனர்‌.

சங்கவி இறங்கப்போகும் தருணம் அவள் கையை பிடித்து கொண்ட விக்ரம் "கொஞ்சம் பேசணும்" என்றான். 'என்னவா இருக்கும்?' என்று யோசித்தாலும் "சொல்லுங்க சார்" என்றாள் கவி.

அவள் சார் என்றதில் அவளை ஒரு மாதிரி பார்த்த விக்ரம் "கவி இப்ப நான் சொல்றது தான் பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் நல்லா கேட்டுக்கோ.

நாம தனியா இருக்கும் போது இப்படி சார் மோர்னு நீ என்னை கூப்பிட கூடாது. போடா வாடா கூட போட்டுக்கோ, பட் இந்த சார் மட்டும் வரக்கூடாது புரியுதா" என்றான் கண்டிப்பான குரலில்.

"சார்னு கூப்பிட வேண்டாம்னா நான் உங்களை வேற எப்படிங்க கூப்பிடறது?" என்று தயங்கியபடி கேட்டாள் சங்கவி.

சங்கவியின் தயங்கிய முகத்தை பார்க்க விக்ரமிற்கு சிரிப்பு தான் வந்தது. முதல் நாள் காலை அவனிடம் சண்டை இட்ட கவிக்கும், தற்போது வெட்கத்துடன் கன்னம் சிவந்து அமர்ந்திருக்கும் கவிக்கும் நூறு வித்தியாசங்கள்.

அவள் தாடையை தொட்டு நிமிர்த்தியவன் "என்னடி இப்படி வெக்கப்படுற. நீ உண்மையாவே என் கவி தானா" என்று கிண்டல் செய்துவிட்டு

"அதான் சொன்னனே பேபி, நீ என்ன போடா வாடான்னு கூட கூப்பிட்டுக்க. இல்ல மாமா அத்தான் இப்படி எப்படி கூப்பிட்டாலும் ஓகே தான்" என கூறி கண்ணடித்து வைத்தான்.

"ம்ம்" என்று இழுத்தவள் "என்னவோ பேசனும்னு சொன்னீங்க" என்று நினைவுப்படுத்தினாள். "அது பேபி நீ இனிமே இந்த விக்ரமோட பிராப்பர்டி‌.‌ சோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிகலாம்.

நேத்து தான் என்னோட லவ் எனக்கு புரிஞ்சுது. பட் உன்னை இப்போ இங்க விட்டுட்டு போக எனக்கு பிடிக்கலை.
நான் கூட ஹர்ஷாட்ட சொன்னேன் ஒன் இயர் கழிச்சு மேரேஜ் பண்ணிக்கிறேன்னு‌.

பட் கொஞ்ச நேரம் உன்னை விட்டு இருக்க முடிலடி. அதான் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்கலாம். ஓகேவா பேபி" என்றான் அடாவடியாக.

எல்லாவற்றையும் கேட்ட கவி "நான் போய்ட்டு வரேன்ங்க. ஆபிஸ்ல பாக்கலாம்" என்று மட்டும் கூறி வீட்டிற்குள் போக பார்க்க அவளை போக விடாது கையை பிடித்து கொண்டான் விக்ரம்,

"என்னடி எதுவுமே சொல்லாமா கூப்பிட்டா விட்டுருவனா. மாமானு சொல்லுடி" என்று வம்பிடியாய் பேசினான்‌. விக்ரமின் விருப்பம் அதுதான். எனவே போனவளை பிடித்து வைத்தான்‌.

"ஐயோ பிளீஸ் விக்ரம்! நான் வேணா உங்களை பேர் சொல்லியே கூப்பிடுறேன். தயவு செஞ்சு விட்டுருங்கபா" என்று கவி கெஞ்சிவிட

"அப்போ நீ என்னை மாமான்னு கூப்பிட மாட்ட அப்படிதானே" என அது தான் இப்போது பெரிய பிரச்சினை என அதை பிடித்து கொண்ட விக்ரம், அவளை ஒரு மார்க்கமாய் பார்த்தான்.

"இது தப்புல்ல பேபி. அப்போ இதுக்கு பனிஸ்மெண்ட் தந்தே ஆகனுமே" என்று பேசியபடி அவள் முகத்தை கையில் ஏந்தினான் அவன்.

விக்ரம் அருகே நெருங்க நெருங்க சங்கவியின் இதயம் படக் படக்கென்று அடித்துக் கொண்டது. "வேணாம் விக்.." என்ற சங்கவியின் வார்த்தைகள் விக்ரம் அவள் நெற்றியில் தந்த முத்தத்தில் அப்படியே நின்றது.

மென்மையாக மிக மெதுவாக ஒரு நெற்றி முத்தம். அப்படியே அவள் கன்னத்தை கடித்து வைத்த விக்ரம் "இறங்கி போயிருடி" என்றான் கிறக்கமான குரலில்.

ஆனால் விக்ரமின் இந்த அவதாரத்தில் வாய் ஓயாது பேசும் சங்கவியே வாயடைத்து நின்றாள். பின்னே அவள் என்ன கனவா கண்டாள் காதலை இனம் காணாது தத்தியாய் சுற்றிக் கொண்டிருந்த விக்ரம் இப்படி ரொமோ அவதாரம் எடுப்பான் என.

பாவம் கவி அறியாதது, விக்ரமிற்கு எப்போதும் ஆரம்பம் தான் கோளாறு. அதாவது ஸ்டார்டிங் டிரபில். ஆனால் ஆரம்பித்து விட்டால் அவன் வேகத்தை தாங்கவே முடியாது.

அவன் தொழிலில் அவன் செலுத்தும் ஆதிக்கமே சொல்லும் அவன் விரும்பி செய்யும் செயலை எந்த அளவு ஈடுபாட்டுடன் செய்வான் என.

அதன்பின்னர் மந்திரித்து விட்டது போல தான் சங்கவி அவள் வீட்டிற்கு சென்றாள். அதற்கு பிறகு வந்த நாட்கள் எல்லாம் விக்ரம் ஒரு ரோமியோ போல் கவியையே சுற்றி வர வெட்கி போய்விடுவாள் கவி.

"ஏன் விக்ரம் இப்படி செய்றீங்க" என சுகமாய் அலுத்துக் கொண்டாலும் கவிக்கும் விக்ரம் அவள் பின்னால் சுற்றுவது பிடித்து தான் இருந்தது. இப்படி தான் இந்த ஒரு மாதமும் ஓடியது.

ஹர்ஷாவின் அம்மா மற்றும் பெரியப்பா என இருவருக்கும் இன்று திதி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ஒரு மாதத்தில் நல்ல நாள் எதுவும் சரியாக இல்லாத காரணத்தால் இப்போது நடக்கிறது.

அந்த நிகழ்வுக்காக தான் சங்கவியும் இன்று அருணாசலம் இல்லத்திற்கு வந்துள்ளாள்‌. அவள் வந்த நேரம் முதல் விக்ரம் எப்போதும் போல் அவள் பின்னே சுற்றிக் கொண்டிருக்க,

அவனை பார்த்து கடுப்பான அபிமன்யு தான் அவனை இழுத்துக் சென்று வேலை வாங்கி கொண்டிருக்கிறான். இங்கே இப்படி வேலைகள் பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்க ராஜசேகரோ எதையோ எண்ணி கவலையில் இருந்தார்.

அவர் மனது முழுவதும் சஞ்சலமாக இருக்க, அது சுபத்ராவிற்கு திதி கொடுப்பதால் என்று வீட்டினர் எண்ணி இருந்தனர்‌. ஆனால் அவர் மனது ஏதோ தவறாக நடக்கப் போவதாக அடித்து கூறியது‌.

எனவே அவர் யோசனையோடு தன் அறைக்குள் அடைந்து கிடந்தார்‌. அருணாசலமோ தன் மூத்த மகனின் நினைவில் அவர் புகைப்படத்தை அணைத்தபடி பழைய எண்ணங்களில் மூழ்கி இருந்தார்.

பார்வதிக்கு தன் அண்ணன் மற்றும் அண்ணியின் நினைவு மனதை வருத்தினாலும் சூழ்நிலை கருதி அங்கே அனைவருக்கும் வேலைகளை சொல்லியபடி தானும் செய்துக் கொண்டிருந்தார்.

அறையில் அமர்ந்திருந்த ஹர்ஷாவிற்கும் இன்று எதுவோ தவறாக நடக்கப்போவது போல் தான் தோன்றியது. எதனால் தன் மனதிற்குள் இப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறதோ என்று யோசித்தபடி இருந்த ஹர்ஷாவை அனுவின் குரல் கலைத்தது.

"ஹர்ஷா பார்வதிமா உங்களை கீழ கூப்பிட்டுட்டு இருக்காங்க. நீங்க இங்க உக்கார்ந்து என்னப்பா செய்றீங்க?" என்றவாறு உள்ளே வந்தாள் அனு.

ஆனால் ஹர்ஷா பேசாது இருந்ததை பார்த்து 'இவருக்கு என்ன ஆச்சு?' என்று நினைத்தவாறு அவனை பிடித்து உலுக்கினாள். "ஹான் என்னம்மா?" என்றான் தூக்கத்தில் இருந்து விழித்தது போல்.

"என்னங்க ஏதோ பெருசா யோசனை பண்ணிட்டு இருகீங்க. என்னாச்சு‌? பார்வதிமா வேற உங்களை காணோம்னு கேக்குறாங்க. நீங்க தானே அங்க சடங்கு எல்லாம் செய்யனும்.

நீங்க என்னடான்னா இங்க இப்படி உக்காந்துட்டு இருக்கீங்க" என தான் கூற வந்ததை கூறி முடித்தாள். அதன் பின்னரே தன் கடமையை உணர்ந்த ஹர்ஷா "ஒன்னும் இல்ல அனு. இதோ வந்துட்டேன்" என்றவாறு வெளியே சென்றான்‌.

அவன் விசித்திரமான செய்கையில் குழம்பிய அனு 'சரி திதி எல்லாம் முடியவும் என்னன்னு கேட்டுக்கலாம்' என நினைத்துக் கொண்டு வேலையை பார்க்க சென்றாள்.

இங்கே இப்படி செல்ல சங்கவி எப்போது தனியே மாட்டுவாள் என கண்கொத்தி பாம்பாக கவனித்துக் கொண்டிருந்த விக்ரமுக்கு லட்டாக ஒரு சந்தர்ப்பம் அமைந்தது.

"கவிமா அந்த பின்பக்க தோட்டத்தில கொஞ்சம் பூ பறிச்சிட்டு வாடா" என்று ஒரு கூடையை தந்தார் பார்வதி. "சரிங்க அத்தை" என்ற சங்கவியும் பின்பக்கம் நகர,

அவளை பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் அபிமன்யுவிற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவள் பின்னாடியே பதுங்கி பதுங்கி சென்றுவிட்டான்.

கவி ஏதோ ஒரு பாட்டை வாய்க்குள் முணுமுணுத்தபடி அந்த பூக்களை பறித்து கூடையை நிரப்பிக் கொண்டிருந்தாள். 'ஐயோ செல்லக்குட்டி இப்படி வந்து என்கிட்ட மாட்டிக்கிட்டியேடி' என மகிழ்ச்சியாய் எண்ணியபடி சுற்றும் பார்த்தபடி அருகில் சென்றான்.

அவள் பின்னே சென்றவன் மெதுவாக அவன் கைகளை அவளின் இடையை சுற்றி அணைத்தான். திடீரென ஒரு கரம் பின்னால் இருந்து அணைக்கவும் பயந்த கவி கத்தப்போக

"ஏய் கத்தீடாதடி. நான் தான்" என்று கிசுகிசுப்பான குரலில் கூறியவன் இன்னும் நெருக்கினான். "என்ன செய்றீங்க. யாராவது வந்திட போறாங்கா" என்றாள் கவி உள்ளே சென்ற குரலில்.

"இந்த டைம் யாரும் இங்க வரமாட்டாங்கடி செல்லம்" என்ற விக்ரம் கவியை தன்னை நோக்கி திருப்பியவன் கவியின் முகத்தையே ரசனையாய் பார்க்க 'என்ன' என்று விழியை உயர்த்தி கவி கேட்டாள்.

"காலைல இருந்து நானும் பார்க்குறேன். மேடம் என்னை கண்டுக்கவே மாட்டேங்குறீங்க. அதுவும் இன்னைக்கு வேற செமையா இருக்கடி" என்றவனின் கைகள் அவள் இடுப்பை இன்னும் அழுத்தின.

அதில் சிவந்தாள் கவி. "அதான் உன்னை எப்படிடா தனியே தள்ளிட்டு வரலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்‌. என் மம்மியே அதுக்கு ரூட் போட்டு தந்த அப்புறம் எப்படிடி சும்மா இருப்பேன்" என்றான் கிறக்கமாக.

"ப்ச் விடுங்க விக்ரம். இதெல்லாம் மேரேஜ்க்கு முன்னாடி தப்பு. சோ போங்க. அத்தை வேற பூ கேட்டுருக்காங்க. நான் அதை கொண்டு போய் கொடுக்கனும். பிளீஸ் விக்ரம் விடுங்கப்பா" என கவி கெஞ்சி பார்த்தாள்.

அவளை பார்த்து ஒரு மார்க்கமாய் சிரித்த விக்ரம் "விட முடியாது செல்லம். இன்னும் விக்ரம்னு தான் கூப்பிடுற. மாமா வரமாட்டேங்குதே. எப்போடி உன் வாய்ல இருந்து அந்த வார்த்தை வரும்" என்றான்.

அவன் குரலே அவனின் ஆசையை அப்பட்டமாக காட்ட "ஏன்ப்பா நான் மாமான்னு கூப்பிடறது உங்களுக்கு அவ்ளோ பிடிக்குமா?" என்று ஆர்வமாக கேட்டாள்.

அதற்கு விக்ரமும் வேகமாக தலையை ஆட்ட சங்கவிக்கு உள்ளே உருகிற்று. விக்ரமும் இந்த ஒரு மாதமாக 'மாமா'வென அழைக்க சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறான்.

கவி தான் கூப்பிடாது ஏமாற்றி கொண்டிருக்கிறாள். இன்று அவன் இவ்வளவு ஆசையாக கேட்கவும் சங்கவியும் 'சரி இனி அப்படியே கூப்பிடலாம்' என மனதில் முடிவு செய்து கொண்டாள்.

எனவே "ம்ம்" என வெட்கத்துடன் சம்மதமாக தலையசைத்த கவி வாயை திறந்த நேரம் "டேய் விக்ரம் எருமைமாடே" என்ற குரலில் கவி அடித்து பிடித்து விலகினாள்.

அங்கே அபி தான் விக்ரமை முறைத்தபடி நின்றிருந்தான். "சிஸ்டா வேலை முடிஞ்சு போச்சுனா நீ உள்ள போ" என்று கவியை பார்த்து அபி கூறவும் ஒரே ஓட்டமாக உள்ளே ஓடிவிட்டாள் சங்கவி.

அதில் கொலை வெறியான விக்ரம் "ஏன்டா?" என்றான் இயலாமையில். விக்ரமை நக்கலாய் பார்த்த அபி "ஏன்டா வீட்ல என்ன நடக்குது, நீ இங்க என்ன வேலைய பாக்குற.

உன் ரொமேன்ஸ் எல்லாத்தையும் ஆபிஸ்லையே வச்சுக்கோ என்ன. இப்ப வா இன்னும் டெக்கரேஷன் வேலை இருக்கு‌. அதை முடிக்கனும்" என்று வீட்டிற்குள் சென்றான். விக்ரமும் தன் நிலையை நொந்தவாறு அபியை பின் தொடர்ந்தான்.

"ஹலோ டாக்டர் ஹர்ஷவர்தன்?" என்ற கம்பீர குரலை கேட்டு ஒரு நொடி யோசித்த ஹர்ஷா "யெஸ் நான் டாக்டர் ஹர்ஷவர்தன் தான். சொல்லுங்க யார் நீங்க?" என்றான் தானும் கம்பீரமாக.

"நான் ஏ.சி கதிர்வேல். அன்னைக்கு வேதாசலம் மாமாவோட வந்து கம்ப்லைன் தந்திருந்தீங்க. ஞாபகம் இருக்கா?" என்று ஏ.சி கதிர்வேல் கேட்டான்.

அப்போது தான் கடந்து வந்த பிரச்சினைகள் குறித்து நினைவு வந்தது ஹர்ஷாவிற்கு. "ஹான் நல்லா ஞாபகம் இருக்கு. நீங்க எப்படி இருக்கீங்க சார். அண்ட் இந்த இஸ்யூ எந்த அளவுல இருக்கு? ஆள் யார்னு கண்டுபிடிச்சிட்டீங்களா?" என ஆர்வமாக கேட்டான்.

"ஐம் பைன் ஹர்ஷா. ஓரளவு நாங்க அவரை நெருங்கிட்டோம்னு நினைக்கிறேன் டாக்டர். அதோட நீங்க சொன்ன ஆள் குடுத்த டீட்டெய்ல்ஸ் ரொம்பவே உதவியா இருந்தது.

அன்ட் இதுல உங்ககிட்ட இருந்து ஒரு சில டீடெயில்ஸ் வேணும். அதான் அது சமந்தமா உங்ககிட்ட பேசனும்னு கால் பண்ணிருக்கேன்.

பட் விஷயத்தை நேர்ல பேசினா பெட்டர். நீங்க இப்ப பிரீயா இருந்தா ஆபிஸ் வாங்களேன். பேசலாம்" என்று கதிர்வேல் அவன் அழைத்ததன் நோக்கத்தை‌ கூறினான்.

"ஓஓ... அப்படியா சார். பட் இன்னைக்கு வீட்ல அம்மாக்கு திதி பண்றோம். சோ இப்போ என்னால வர முடியும்னு தோனலை. நான் வேணா நாளைக்கு வரட்டுமா சார்.

இல்ல உங்களுக்கு நாளைக்கு எதாவது வொர்க் இருக்கா?" என ஹர்ஷா தன்னுடைய நிலையையும் எடுத்து கூற, சிறிது நேரம் யோசித்த கதிர்

"உங்க சிட்டுவேஷனும் புரியுது ஹர்ஷா. அன்ட் இங்க சஸ்பெக்ட் யாருன்னு கிடைச்ச க்ளூலாம் வச்சு பார்த்ததுல..." என்று ஆரம்பித்த கதிர்

"அதை நேர்ல சொல்லிடுறேன் ஹர்ஷா. நீங்க நாளைக்கு கால் பண்ணிட்டு வாங்க. நான் என் வொர்க்க கொஞ்சம் பிரீ பண்ணிக்கிறேன்" என்று வாக்குறுதி அளித்தான்.

அதில் நிம்மதி அடைந்த ஹர்ஷாவும் "ஓகே சார் அன்ட் தேங்க் யூ சோ மச்" என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான். அதன்பின் 'குற்றவாளி யாரா இருக்கும்? ஏ.சி ஏன் பேர சொல்ல இவ்ளோ தயங்குறாரு?' என யோசித்த ஹர்ஷா 'சரி நாளைக்கு அங்கே போனா தெரிஞ்சிடும்' என எண்ணிக் கொண்டான்‌.

---------------------------------------

"சங்கவி இந்த அம்முவ காணோம்மா. ரூம்ல போய் எதாவது பண்ணிட்டு இருப்பா. இவளோட இதே பிரச்சினைமா. கொஞ்சம் போய் அவள கூட்டிட்டு வரியாடா" என்று பார்வதி கேட்க

"சரிங்க அத்தை" என்று ஒத்துக் கொண்ட சங்கவியும் அம்முவை எண்ணி சிரித்துக் கொண்டே அவள் அறை நோக்கி சென்றாள். மாடிப் படியில் ஏறி செல்லும் சங்கிவியை கண்கள் ஒளிர பார்த்தான் விக்ரம்.

'வாவ் சூப்பர் சான்ஸ் விக்ரம்' என மகிழ்ந்தான் விக்ரம். பின்னே அபி அசால்ட்டாக ஆபிசில் ரொமான்ஸை வைத்து கொள் என கூறிவிட்டானே. ஆனால் நம் விக்ரமோ வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்பது போல் தான் அலுவலகத்தில் வேலையில் இருந்து சிறிதும் தன் எண்ணத்தை திருப்பமாட்டான்.

இதில் சங்கவியை எங்கே காதல் செய்வது. கடந்த ஒரு மாதமும் இப்படியே சென்றிருக்க, தன் வீட்டிற்கு வந்திருந்த சங்கவியிடம் எப்படியாவது ஒரு முத்தம் பெற வேண்டும் என துடித்து கொண்டிருக்கிறான் விக்ரம்‌.

"மச்சான் என் மொபைல ரூம்லையே வச்சிட்டு வந்துட்டேன்டா. போய் எடுத்துட்டு வந்திடுறேன்" என்று அபியை சமாளித்த விக்ரம் மாடி ஏறினான்.

விக்ரமை சந்தேகமாய் பார்த்தாலும் இருந்த வேலையில் 'இவன் முழி ஒன்னும் சரியில்லையே. போகட்டும் எப்படியும் நம்ம ஆளு அவ்ளோ வொர்த்லாம் இல்ல' என்று நினைத்த அபி விக்ரமை விட்டுவிட்டான்.

'ஹப்பா ஒருவழியா ரூம்க்கு வந்தாச்சு. இனி நம்ம பெர்பார்மன்ஸ ஆரம்பிக்க வேண்டியது தான்' என நிம்மதி பெருமூச்சு விட்ட விக்ரம் கதவுக்கு பக்கத்தில் நின்றுக் கொண்டான்.

சங்கவி வந்தால் அப்படியே அமிக்கி அறையினுள் இழுத்து தான் எண்ணியதை நிறைவேற்ற தயார் ஆனான். ஏனெனில் இவன் அறையை கடந்த பின்னரே அம்முவின் அறை வரும்.

'நீ நினைக்கிறது எப்பவும் நடக்காது மகனே. நான் நடத்தவும் விட மாட்டேன்' என்று மர்மமாய் இயற்கையும் புன்னகைத்துக் கொண்டு நடக்க போவதை பார்க்க தயாரானது.

அப்போது சரியாக யாரோ வரும் அரவம் கேட்க தன்னை தயார்படுத்திக் கொண்டான். சட்டென அவன் கரத்தை வெளியே நீட்டி யாரையோ பிடித்து உள்ளே இழுத்தும் விட்டான்.

அவரை அப்படியே அணைக்க போக "ஐயையோ! எருமைமாடே என்னை விடுடா" என்ற பார்வதியின் குரலில் அடித்து பிடித்து கையை விட்டான் விக்ரம். பின் பாவமாக தன் அன்னையை பார்த்து அசடு வழிந்தான்.

"என்னடா ஆச்சு. எதுக்கு என் கையை புடிச்சு இப்ப உள்ள இழுத்த" என்று பார்வதி கத்த, விக்ரம் திருதிருவென முழித்து நின்றான்.

எதுவும் சொல்லாமல் நின்ற விக்ரமை கண்டு தன் தலையில் அடித்துக் கொண்ட பார்வதி "சரியான பைத்தியத்தை பெத்து வச்சிருக்கேன். ச்சே" என முணுமுணுத்து சென்றார்.

விக்ரம் 'நம்ம நேரம் சரியில்லை' என்று விதியை நொந்தபடி நின்றான். அவன் எங்கே அறிவான் முதலில் அம்முவின் அறைக்கு சங்கவியை போக சொன்ன பார்வதி, அவளுக்கு வேறு வேலையை தந்துவிட்டு தானே அம்முவின் அறைக்கு வந்ததை.

பின் 'இது எப்பவும் நமக்கே நடப்பது தானே' என தன் மனதை சமாதானம் செய்துக் கொண்டு வெளியே சென்றான் விக்ரம்.

அதே போல் கீழே சென்று திதிக்கான ஏற்பாடுகளை பார்வதி செய்து முடிக்க சடங்குகள் தொடங்க இருந்தது. அப்போது சரியாக விஸ்வநாதனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்துவிட்டனர் ராஜசேகரின் அழைப்பின் பேரில்.

அதோடு வசுந்தரா தேவி மற்றும் கணபதி ராமையும் அழைத்து வந்திருந்தனர். விஸ்வநாதன் கணபதியை தானும் வர சொல்லி அழைத்தார்.

ஆனால் அவர் வரமாட்டேன் என்று தீட்சண்யமாக மறுத்து நிற்க, அதற்கு விஸ்வநாதன் அங்கேயே அவரிடம் சண்டைக்கு சென்றுவிட்டார். அவரை சமாதானம் செய்த அனுவின் தாய் மீனாட்சி தான் பேசி பேசியே கணபதியை வர சம்மதிக்க வைத்து அழைத்து வந்திருந்தார்.

ஆனால் இந்த விழா நிறைவு பெறுவதற்குள் 'ஏன் இவங்கல கூட்டிட்டு வந்தோம்' என்று கவலை கொள்ள போகிறார் அவர்.

ஐயர் சரியான நேரத்திற்கு வந்துவிட, அனைத்தையும் சரியாக தயார் செய்துவிட்டார் பார்வதி. வீட்டின் மூத்த வாரிசு மற்றும் சுபத்ராவின் மகன் என்ற முறையில் ஹர்ஷா ஐயரின் முன் சடங்குகளை செய்ய அமர்ந்தான்.

அங்கே இருந்த தன் பெரிய தந்தை புகைப்பத்தை கண்ட ஹர்ஷாவின் மனம் 'தாத்தா எப்போதும் சொல்வது போல பெரியப்பா மாதிரி தான் நாம இருக்கோம்.

ஆனா பாவம் ரொம்ப சின்ன வயசுலையே இறந்து போய்ட்டார்' என்று வருந்தியது. அதன் அருகே கொஞ்சம் தள்ளி இருந்த தன் தாய் சுபத்ராவின் புகைப்படத்தை கண்டு கண்களில் நீர் கோர்த்து விட்டது ஹர்ஷாவிற்கு.

என்னதான் அவன் தாய் அவனுடைய ஐந்து வயது வரை மட்டுமே உடன் இருந்திருந்தாலும், அந்த ஐந்து வருடமும் உலகில் உள்ள அவ்வளவு பாசத்தையும் அவன் மீது பொழிந்தவர் சுபத்ரா.

அந்த நாட்கள் தெளிவாக ஞாபகத்தில் இல்லையென்றாலும் புகைமூட்டமாய் மனக்கண்ணில் எழ கண்களில் இருந்து நீர் தானாகவே கீழே சிந்தியது.

அப்போது இருந்த சுபத்ராவின் முகம் நினைவில் இல்லை தான். ஆனால் அவர் நினைவாக மனதில் எப்போதும் நிற்கிறார். அப்போது ஆறுதலாக ஒரு கரம் அவன் தோளை தொட, திரும்பி பார்த்தான் ஹர்ஷா.

அவன் தோளில் இருந்த கரம் ராஜசேகர் உடையது தான். ஆனால் அவரை சுற்றி அவன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நின்றிருந்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரின் பார்வையும் சொல்லியது 'உனக்கு நான் என்றும் பக்கபலமாக இருப்பேன்' என.

அவர்கள் அனைவரையும் பார்த்து மென்னகை புரிந்த ஹர்ஷா "ஐம் ஓகே ப்பா" என்று ராஜசேகரின் கரத்தை அழுத்தி கொடுத்தான். இதுவரை மன சஞ்சலத்துடன் சுற்றிக் கொண்டிருந்த ராஜசேகர் தன் மகனின் கண்ணீர் கண்டு அவனை ஆறுதல் படுத்த வந்தார்.

ஆனால் மகன் தனக்கு ஆறுதல் கூறியதில் உண்மையாகவே சற்று மனம் நிம்மதி அடைந்தார். பின் அவரும் அமைதியாக பின்னே நகர்ந்தார்.

வீட்டினர் அனைவரும் இவனை சுற்றி அமர்ந்திருக்க விஸ்வநாதன் குடும்பத்தினர் சற்று தள்ளி அமர்ந்து இருந்தனர். எனவே முன்னால் இருந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று சரியாக தெரியவில்லை.

இதில் இங்கே இஷ்டமில்லாது வந்திருந்த கணபதியை சொல்லவே வேண்டாம். வேண்டா வெறுப்பாக அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து படி தன் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தார்.

எல்லாம் நல்லபடியாகவே முடிய, "தம்பி பித்ருக்கு சாதம் வச்சிட்டு வாங்கோ. திவசம் நல்லபடியா முடிஞ்சிடும்" என்று ஐயர் முடித்தார்.

எனவே வீட்டு உறுப்பினர்கள் காக்கைக்கு சாதம் வைத்து விட்டு திதியை நிறைவு செய்தனர்‌. இப்படி அனைத்து சடங்குகளும் முற்று பெற இப்போது விஸ்வநாதன் குடும்பத்தினர் புகைப்படத்தின் முன்னர் வந்து வணங்கினர்.

கடைசியாக வந்த வசுந்தரா மற்றும் கணபதி ராம் கையை கூப்பி வணங்கியபடி அங்கிருந்த புகைப்படத்தை கண்டு அதிர்ந்தனர்.

முதலில் அதிர்வில் இருந்து வெளிவந்த கணபதி திரும்பி வசுந்தராவை பார்க்க அவரின் நிலைக்குற்றிய பார்வையில் பெரிதாக அதிர்ந்தார் அவர்.

எது நடக்க கூடாது என்று எண்ணியிருந்தாரோ இன்று அது தன் கண் முன்னே நடக்கப் போகுதோ என்று பதறிய கணபதிக்கு அடுத்து என்ன செய்வது என்று கூட புரியவில்லை.

வசுந்தராவோ கணபதியை கவனிக்காது தன் மன போராட்டத்தில் மூழ்கி இருந்தார். ஏதேதோ எண்ணங்கள் அவர் மூளையை ஆக்கிரமிக்க வசுந்தரா இந்த உலகிலே இல்லை.

வசுந்தரா அங்கிருக்கும் புகைப்படத்தை கண்டு இப்படி சிலையாக நிற்பதையும், அவரை கணபதி உலுக்கிக் கொண்டிருப்பதையும் பார்த்த அனைவரும் குழம்பினர்.

வீட்டில் இருந்த அனைவரும் வந்து அவரை அழைத்து பார்க்க அசையவில்லை வசுந்தரா. கடைசியில் விஸ்வநாதன் வசுந்தராவை நெருங்கி "வசும்மா" என்று அவரை உலுக்கினார்.

அவரின் செயலுக்கு கொஞ்சம் தெளிந்தார் வசுந்தரா. "என்னம்மா ஆச்சு. ஏன் இப்படி நிக்கிற" என்று அவர் பதற்றத்துடன் கேட்க வசுந்தராவிடம் இருந்து கதறல் வெளிப்பட்டது.

"அண்ணா" என்று விஸ்வநாதனை அணைத்த வசுந்தரா தேம்பி தேம்பி அழுதாரே ஒழிய எதுவும் பேசவில்லை. அவரும் வசுந்தராவை முடிந்தளவு சமாதானம் செய்தார்.

இதை எல்லோரும் சேர்ந்து வேடிக்கை பார்த்தனர். அவர்களுக்கும் என்ன நடக்கிறது என ஒன்றும் புரியவில்லை. ஆனால் ராஜசேகரின் மனம் மட்டும் தாறுமாறாக அடித்துக் கொண்டது.

சிறிது நேரம் கழித்து சற்று அழுகை மட்டுப்பட "என்ன ஆச்சு வசுமா. ஏன் அழுத?" என்று கேட்டார் விஸ்வநாதன். இப்போது ஏதோ யோசித்த வசுந்தரா ஒரு முடிவு எடுத்தவராக

"அண்ணா என் மூத்த மகன் இறந்து போனதா தானே நாம நினைச்சிட்டு இருக்கோம். அவன் சாலை ண்ணா. உயிரோட தான் இருக்கான்" என்றார்.

இதை கேட்டு விஸ்வநாதனுக்குள் பதற்றம் தொற்றியது. கணபதிக்கோ பயமே வந்து விட்டது. "என்னம்மா சொல்ற?" என்ற விஸ்வநாதனின் குரல் அவருக்கே சரியாக கேட்கவில்லை.

"ஆமா ண்ணா. அது யாருன்னு கூட எனக்கு தெரியும்" என்றவர் தற்போது ஹர்ஷாவை பார்த்து அவனை நோக்கி சென்றார். ஹர்ஷாவின் கையை பிடித்து கொண்ட வசுந்தரா "இவன் தான் என் மூத்த மகன் ண்ணா" என்று கூற அங்கே எல்லாரும் அதிர்ந்து நின்றுவிட்டனர்.

இத்தனை நாள் எது நடக்க கூடாது என்று ராஜசேகர் எண்ணியிருந்தாரோ அது தன் கண் முன்னே நடப்பதில் விக்கித்து நின்றார் அவர்.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 27

வசுந்தரா தேவி கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ந்து நிற்க "ஹலோ! என்ன உளறீட்டு இருக்கீங்க. அவரு என் அண்ணன். இந்த வீட்டு வாரிசு. சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுற வேலை வச்சுக்காதீங்க" என்று பொங்கி எழுந்து விட்டான் அபிமன்யு.

"ஆமா வசும்மா மாப்பிள்ளை இந்த வீட்டு பையன். உன்னோட மூத்த குழந்தை இறந்து போய்ருச்சுமா. அதுமட்டும் இல்லாம அந்த குழந்தை, பெண் குழந்தைமா அதை நீ மறந்துட்டியா?" என்று விஸ்வநாதன் தன் பங்கிற்கு பேசினார்.

அப்போது தான் கணபதிக்கும் அது நினைவு வந்தது. எனவே "ஆமா வசுமா. நானும் இதை மறந்தே போய்ட்டேன் பாரு. உனக்கு முதல்ல பிறந்தது பெண் குழந்தை தான் அதை மறந்துட்டியா?" என்று தன் பங்கிற்கு சமாதானம் செய்ய முயன்றார்.

ஆனால் எதுவும் பேசாத வசுந்தராவோ ஹர்ஷாவின் கையை இன்னும் பிடித்து நின்றிருந்தார். ஹர்ஷவர்தனுக்கோ இது பெரிய அதிர்வை தரவில்லை.

ஏனெனில் வசுந்தரா ஏதோ தவறாக புரிந்து கொண்டு இப்படி கூறுகிறார் என்று எண்ணியதால் ஹர்ஷா பொறுமையாகவே அவரிடம் பேசினான்.

"நீ டென்ஷன் ஆகாத அபி. நீங்க எல்லாரும் சைலண்டா இருங்க. நான் பேசுறேன்" என்று அபிமன்யு மற்றும் மற்றவர்களை சமாதானம் செய்த ஹர்ஷா மெதுவாக தன் கையை வசுந்தராவிடம் இருந்து பிரித்துக் கொண்டான்.

"இங்க பாருங்கமா, நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு பேசுறீங்க. நான் உங்க புள்ள கிடையாது. அண்ட் எல்லாரும் சொல்றாங்களே, உங்களுக்கு பிறந்து இறந்துப் போனது பெண் குழந்தை தான்னு.

சோ உங்களை போட்டு நீங்க குழப்பிக்கிட்டு மத்தவங்களையும் குழப்பாதீங்க" என்று பொறுமையாக எடுத்து கூறினான் ஹர்ஷா‌‌.

ஆனால் அதை ஏற்று கொள்ளாத வசுந்தராவோ "இல்ல எனக்கு பையன் தான் பிறந்தான். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு" என்று கத்தியவர் அவர் பக்கம் தெரிந்த விஷயங்களை கூறினார்‌.

"டாக்டர் சுபத்ரா தான் என்னை ஆரம்பத்தில இருந்து செக் பண்ணி பிரசவமும் பார்த்தாங்க. அந்த நாட்கள்ல எனக்கு கொஞ்சம் மனசு சரியில்லை.

அந்த குழந்தைய பெத்துக்கறதுல நிறைய சிக்கல் இருந்தது. ஏன் அந்த குழந்தை வேண்டாம்னு கலைக்க கூட நினைச்சேன்.

ஆனா சுபத்ரா டாக்டர் குடுத்த ஊக்கத்துல தான் என் மூத்த பிள்ளைய நான் பெத்து எடுத்தேனு செல்லலாம்.

அப்படி பிறந்த அந்த குழந்தையை நான் எப்படி மறப்பேன். அதுவும் பிறந்த உடனே சுபத்ரா டாக்டர் 'உங்களுக்கு பையன் பிறந்திருக்கான் பாருங்கனு' என்கிட்ட காட்டிட்டு தான் போனாங்க.

அது எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கு" என்று பேசிய வசுந்தராவின் விழிகள் அந்த நாட்களை எண்ணி கண்ணீர் வடித்தது.

தன்னை ஒருவாறு தேற்றிக் கொண்ட வசுந்தரா "இங்க சுபத்ரா டாக்டரோட போட்டோ பார்த்த உடனே எனக்கு ரொம்பவே அதிர்ச்சி தான். அதுமட்டும் இல்லாம ஒரு சில விஷயங்களை வச்சு நான் யோசிச்சு பார்த்ததுல எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது. அது இவன் என் பையன் தான்னு" என்று உறுதியாக கூறினார்.

எல்லாவற்றையும் கேட்ட ராஜசேகர் மனதிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து போனார். ஒரு வேளை வசுந்தரா கூறியதை கேட்டு ஹர்ஷா தன்னிடம் வந்து கேட்டுவிடுவானோ என்று உள்ளுக்குள் பயந்து போய் நின்றிருந்தார்.

ஆனால் அவர் மகன் ஹர்ஷாவோ தன் தந்தையை திரும்பி சந்தேகப் பார்வை கூட பார்க்கவில்லை. ஏன் சிறிதும் குழப்பம் கூட அடையவில்லை. அந்த மட்டும் ராஜசேகர் சற்று ஆசுவாசம் அடைந்தார்.

இங்கே 'இதென்னடா புது தலைவலி' என்று சலிப்பாக எண்ணிய ஹர்ஷாவிற்கு, வசுந்தராவிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு பெருமூச்சு எடுத்துக் தன்னை சமன் செய்து கொண்டு பேச துவங்கினான்.

"இங்க பாருங்க, எங்க அம்மா உங்களை மாதிரி பல பேருக்கு பிரசவம் பார்த்திருக்காங்க. டெலிவரி டைம்ல நீங்க மயக்கத்தில இருந்திருப்பீங்க.

அண்ட் அப்போ உங்க மென்டல் ஹெல்த் கூட சரி இல்லைன்னு இப்போ நீங்க தானோ சொன்னீங்க. சோ என்னோட அம்மா சொன்னதை அப்போ நீங்க சரியா கவனிக்காம இருந்திருக்கலாமே" என்று ஹர்ஷா நியாயமாக கேட்டு வைக்க சற்று யோசித்தார் வசுந்தரா.

அதை கண்ட மற்றவர்களுக்கும் சற்று நிம்மதி ஆனது. அவர் யோசிப்பதை கண்டு சிறிது புன்னகைத்த ஹர்ஷாவும் 'அவர் புரிந்து கொள்வார்' என்றே எண்ணினான்.

ஆனால் "இல்லை எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சுபத்ரா டாக்டர் எனக்கு பையன் தான் பிறந்திருக்கான்னு சொன்னாங்க" என்று சிறு பிள்ளை போல் அதே வாக்கியத்தை மீண்டும் மீண்டும் கூறினார்.

ஆரம்பத்தில் இருந்தே வசுந்தரா பேசுவதை கோபத்துடன் பார்த்திருந்த பார்வதி "இங்க பாருங்கமா எங்க ஹர்ஷா குட்டி இவ்ளோ தூரம் பொறுமையா சொல்றான்.

நீங்க என்னடான்னா சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கீங்க. என்னம்மா நினைச்சுட்டு இருக்கீங்க. நாங்க அமைதியா இருந்தா நீங்க உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போவீங்களா?" என்று தன் பங்கிற்கு தன் கோபத்தை காட்டினார்.

அதில் பார்வதியிடம் நகர்ந்த ஹர்ஷா அவரை தோளோடு அணைத்து சாந்தப்படுத்தியவன், "அத்தை காம்டௌன். அவங்க ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு இப்படி எல்லாம் உளறீட்டு இருக்காங்க.

நீங்க ஏன் அதை இவ்ளோ போட்டு திங்க் பண்ணி கன்பியூஸ் பண்ணிக்கிறீங்க. நான் அவங்க டௌட் எல்லாத்தையும் தெளிவா பேசி சால்வ் பண்ணிடுறேன்" என்றான் அமைதியாக.

இதை எல்லாம் பார்த்து கலவரம் அடைந்த அனு "அத்தை என்னாச்சு அத்தை? ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க. அவர் இந்த வீட்டு பையன். அதை நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகனும்" என்று தன் பங்கிற்கு பேசினாள்.

என்னதான் வசுந்தரா அனுவின் பாசமான அத்தையாக இருந்தாலும், அனுவிற்கு தெரியுமே இந்த வீட்டில் ஹர்ஷாவை சார்ந்து தான் அனைவரும் இருப்பது‌.

வசுந்தரா இப்படி பேசுவதே மற்றவர்களை பாதிக்கும் எனும்போது அதை எப்படி அனு தொடர விடுவாள்.

ஆனால் இவர்கள் ஒருவரின் வார்த்தை கூட வசுந்தராவின் காதில் ஏறவில்லை என்பது போல் "இல்லை இல்ல இவன் என்னோட பையன் தான்" என்றார் மீண்டும்.

வசுந்தராவின் கூற்றில் வீட்டினர் அனைவருக்கும் அவர் மீது கோபம் அதிகமாகவே வந்தது. ஆனால் அனுவின் முகத்திற்காக பல்லை கடித்து கொண்டு அமைதியாக நின்றிருந்தனர்.

ஹர்ஷாவிற்கும் கோபம் வந்தது தான். அப்போதும் அவன் வார்த்தைகளில் நிதானத்தை கொண்டு வந்து

"இங்க பாருங்க நீங்க அனுவோட அத்தைன்றதால தான் நான் ரொம்பவே பொறுமையா இருக்கேன். நீங்க என் பொறுமைய ரொம்ப சோதிக்கிறீங்க" என்றவன்

"ஓகே அதை விடுங்க. நான் கேக்குற கேள்விக்கு பர்ஸ்ட் பதில் சொல்லுங்க. உங்க மேரேஜ் முடிஞ்சு எத்தனை வருஷம் ஆகுது, அதை முதல்ல சொல்லுங்க?" என்று கேட்டு நிறுத்தினான் ஹர்ஷா.

ஹர்ஷா கேட்டவுடன் கணபதி "அது இருபத்தி ஆறு வருஷம் ஆகுது தம்பி" என்று அவர்கள் திருமணம் ஆன ஆண்டையும் கூற அங்கே இருந்த பலர் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.

ஹர்ஷாவும் புன்கைத்தவன் "கேட்டீங்களா உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் ஆகி இருபத்தி ஆறு வருஷம் ஆகுது. பட் என்னோட வயசு முப்பது ஆகப்போகுது.

அது மட்டும் இல்லாம என் அம்மா டெலிவரி பார்த்தாங்க அப்படின்ற ஒரே காரணத்துக்காக நீங்க இப்படி பேசுறது ரொம்ப தப்பு. நீங்க உங்க பிடிவாதத்தால இங்க இருக்க என் ஃபேமிலி மெம்பர்ஸ் மனசை காயப்படுத்துறீங்க.

அது எனக்கு சுத்தமா பிடிக்கல. அண்ட் இது ஜஸ்ட் ஒரு மிஸ் அண்டர்ஸ்டேன்டிங். அதை புரிஞ்சுக்கிட்டு இதை இப்படியே விடுங்க" என ஹர்ஷா அவன் வீட்டினரின் வேதனை படிந்த முகத்தை கண்டு இப்படி கூறினான்.

அதுவும் அபிமன்யு மற்றும் விக்ரம் இருவரும் விட்டால் இப்போதே வசுந்தராவை பிடித்து வெளியே தள்ளி விடுவேன் என்பது போல் நின்றிருந்தனர்.

அருணாசலம் மற்றும் ராஜசேகரின் முகங்களில் இருந்த பாவத்தை காண சகியாமலும் இவ்வாறு கூறினான் ஹர்ஷா.

அதுவும் ராஜசேகரகன் வேதனையான முகத்தை கண்டு அவரை ஆதரவாக அணைத்த ஹர்ஷா "அப்பா அவங்க ஏதோ புரியாம பேசுறாங்க. அதுக்காக நீங்க பீல் பண்ணாதீங்க" என்று ஆறுதல் அளித்தான்.

அப்போது ராஜசேகர் ஹர்ஷாவை திரும்பி பார்த்த பார்வையில் என்ன இருந்தது என்று ஹர்ஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

அதை நிம்மதி என்பதா இல்லை தன் மகன் தனக்கு மட்டும் தான் என்று புதிதாக வந்த தைரியம் என்பதா. ஆனால் ஏதோ ஒன்று ராஜசேகரை நிமிர்ந்து நிற்க செய்தது.

அதே நிம்மதியோடு "ம்ம் புரியுதுபா. அப்பா ஒன்னும் கவலைபட மாட்டேன்டா. எனக்கு தெரியும் நீ என் புள்ளைடா" என்று உணர்ந்து கூற நிறைவாய் புன்னகைத்தான் ஹர்ஷா.

ஆனால் வசுந்தராவோ எதையோ மனதில் நினைத்து மெல்லவும் முடியாது சொல்லவும் முடியாது பரிதவிப்புடன் அனைவரையும் பார்த்து நின்றார்.

கணபதியோ இங்கு நடப்பதை எல்லாம் பார்த்து உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தாலும், இதுதான் தக்க நேரம் என நினைத்து

"வசும்மா அதான் எல்லாரும் இவ்ளோ சொல்றாங்களே இந்த பையன் உனக்கு பிறக்கலமா புரிஞ்சுக்க. இதுக்கு மேலையும் நீ இதையே சொல்லிட்டு இருக்காம கிளம்புமா, நாம வீட்டுக்கு போகலாம்" என்று நைச்சியமாக பேசி அழைத்தார்.

கணபதியை தொடர்ந்து மற்றவர்களும் இதையே கூற "ஆஆ...!" என தலையை பிடித்து கொண்டு கத்திய வசுந்தரா "இல்ல இல்ல..." என்று புலம்பி தவித்தார்.

வசுந்தராவின் நிலையை கண்டு விஸ்வநாதன் உட்பட அவர்கள் குடும்பமே வேதனை கொண்டனர். அந்த சம்பவத்தை இப்படி தன்னுள்ளே போட்டு இத்தனை நாட்கள் வசுந்தரா எவ்வளவு வருந்தி இருப்பார் என்று தான் விஸ்வநாதன் கவலை கொண்டார்.

"அம்மா ஏன்மா இபப்டி செய்ற. இது அனு அக்கா வீடு இங்க வந்து நீ இப்படி பிரச்சினை செய்யலாமா? வாமா நாம வீட்டுக்கு போகலாம்" என்று வசுந்தராவின் மகள் ரித்து அழுது கொண்டே கூறியும் அசையவில்லை அவர்.

'எல்லாரும் இவ்ளோ சொல்றாங்க, இந்தம்மா என்னனா இடிச்சபுளி மாதிரி அசராம நிக்குது. இப்படியே விட்டா இந்தம்மாவுக்கு பாவம் பார்த்து உங்க புள்ளை தான்னு நம்ம வீட்டு ஆளுங்க சொன்னாலும் சொல்லிடுவாங்க.

எதாவது நடக்கிறதுக்கு முன்னாடி கூட்டத்தை கலச்சு விடுடா அபி' என அபி தனக்குள் யோசித்த நேரம்,

"என்னம்மா நீங்க இப்படி செய்றீங்க. நாங்க இவ்ளோ பேர் இவ்ளோ தூரம் பேசியும் நீங்க சொன்னது தான் சரின்னு நின்னா என்ன அர்த்தம். உங்க வீட்ல இருக்க பெரியவங்களே சொல்றாங்க உங்களுக்கு பிறந்து இறந்தது பெண் குழந்தைனு.

ஆனால் நீங்க ஏன் ஒத்துக்க மாட்டேங்கிறீங்க" என்று பொறுமையாக எடுத்து சொல்ல ஆரம்பித்தான் விக்ரம்‌.

விக்ரம் கூறியதை கேட்டு "இல்ல இறக்கல. இவன் தான் என் பையன்" என மீண்டும் கூறியபடி நின்றார் வசுந்தரா.

யார் சொன்னாலும் நான் சொல்வது மட்டுமே சரி என எண்ணும் வசுந்தராவை எப்படி மாற்றுவது என அனைவருக்கும் ஆயசமாக வந்தது.

"வசுந்தரா எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனா நீ அந்த லிமிட் தான்டி போய்ட்டு இருக்க. நான் சொல்றத கேட்டு என்கூட வருவியா மாட்டியா?" என்று பொறுமை இழந்து விஸ்வநாதன் கத்தினார்.

அவரை இயலாமையுடன் பார்த்து வைத்த வசுந்தரா, கணபதியை திரும்பி பார்த்தார். ஆனால் எப்போது விஸ்வநாதன் வசுந்தராவிடம் கடுமையாக நடந்துக் கொண்டாலும் துணை நின்று கண்களாலே ஆறுதல் சொல்லும் கணபதி,

இன்று விஸ்வநாதன் கூறுவதை ஆமோதிப்பது போல் நின்றது வசுந்தராவிற்கு கடைசி நம்பிக்கையும் போனது போல் தோன்றியது.

ராஜசேகருக்கு பயம் என்னவென்றால் ஹர்ஷா அவரை பார்த்து 'இவங்க சொல்றது உண்மையா?' என கேட்டு விடுவானோ என்பது தான்.

ஆனால் அவர் மகனோ அந்த துன்பத்தை கூட தன் தந்தைக்கு தராது 'இவங்க சொன்னா நான் நம்பீடுவேனா' என்று சொல்லாமல் உணர்த்தியதில் ராஜசேகர் மன நிம்மதி அடைந்தார்.

அனைவர் கூறியும் அசையாது நின்ற வசுந்தராவை கண்டு கடுப்புடன் தலையை பிடித்து அமர்ந்து விட்டான் ஹர்ஷா.

அதில் இவ்வளவு நேரம் பயத்தில் நின்றிருந்த ராஜசேகர், இப்போது தைரியம் வரப்பெற்று எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று வாயை திறந்தார்.

"சம்மந்தி நான் பேசிக்கிறேன்" வசுந்தராவிடம் கெஞ்சிக் கொண்டிருந்த விஸ்நாதனை பார்த்து கூறிய ராஜசேகர் இப்போது வசுந்தராவை பார்த்து நேரடியாக பேசினார்.

"நீங்க இவ்ளோ நேரம் பேசுனதுல இருந்து உங்களுக்கு இறந்து போன உங்க மூத்த பிள்ளை மேல எவ்ளோ பாசம் இருக்குன்னு எனக்கு புரியுதுமா.

ஆனா நீங்க நினைக்கிற மாதிரி என் பையன் உங்க பையன் கிடையாது. அது மட்டும் உறுதி. நீங்க 'முடியாது நம்ப மாட்டேன்' அப்படின்னு சொன்னாலும், நான் அதுக்கும் ஒரு வழி வச்சிருக்கேன்"

ராஜசேகர் இடையில் நிறுத்தவும் அனைவரும் அவர் என்ன சொல்ல போகிறார் என ஆர்வமாய் பார்த்தனர். அதில் அனைவரையும் ஒரு பார்வை பார்த்த ராஜசேகர்

"ஒரே ஒரு டி.என்.ஏ டெஸ்ட் போதும். அவன் என் பையன், இந்த வீட்டு பையன்னு புரூப் பண்ண. என்ன சொல்றீங்க டெஸ்ட் எடுக்கலாமா?

டெஸ்ட் ரிசல்ட்ல கண்டிப்பா ஹர்ஷா என் பையன்னு வந்தா நீங்க இப்படி அர்த்தமில்லாம பேசறத விட்டுடனும். புரியுதா"

ராஜசேகர் பேசிய விதம் சாதாரணமாக இருந்தாலும், அதில் இருந்த உறுதி அமைதியாக ஒளித்த அதிகாரம் சொல்லாமல் சொல்லியது ஹர்ஷாவை அவர் யாருக்கும் விட்டு தர மாட்டார் என.

அவர் கேட்ட கேள்வியை உணர்ந்த அனைவருக்கும் திக்கென்றது. வசுந்தரா தான் எதோ தெரியாமல் பேசுகிறார். சொல்லி புரிய வைத்தால் அவர் புரிந்துக் கொள்வார் என நம்பினார்கள்.

எனவே ராஜசேகரின் இந்த பேச்சை கேட்ட ஹர்ஷா "அப்பா என்ன இது. அவங்கதான் ஏதோ புரியாம பேசிட்டு இருக்காங்கனா, நீங்களும் டி.என்‌.ஏ டெஸ்ட் அது இதுன்னு உளறீட்டு இருக்கீங்க. இதை இப்படியே விடுங்கப்பா" என்றான்.

ஆனால் ஹர்ஷாவின் கூற்றை மறுத்து அவன் தந்தையின் கூற்றை ஆமோதித்த அபிமன்யு பேசினான்.

"நீ சும்மா இருண்ணா. இவங்க எதுவேணா பேசுவாங்க, நாம கேட்டுட்டு இருக்கனுமா?

ஒரு டி.என்.ஏ டெஸ்ட் போதும் நீ என் அண்ணா தான்னு எல்லாத்துக்கும் காட்ட. இவங்க இன்னும் இப்படியே பேசிட்டு இருந்தா நாம அதை தான் செய்யனும் ண்ணா".

காட்டமாகவே பதில் வந்தது அபியிடம் இருந்து‌. அவன் கோபம் வசுந்தராவின் மேல் என புரிந்த ஹர்ஷாவும்

"டோன்ட் வொர்ரி டா. நாம அந்த அளவு போக வேண்டிய அவசியம் இல்லை. அவங்க புரிஞ்சிப்பாங்க. புரிஞ்சு தான் ஆகனும்" என்றான் அழுத்தமாக.

சுற்றி இருப்பவர்கள் அவ்வளவு தூரம் பேசியும் மாறாது நின்றிருந்த வசுந்தரா, ராஜசேகர் டி.என்.ஏ டெஸ்ட் என்று ஆரம்பித்ததில் குழம்பி விட்டார்.

அதன் பிறகே 'ஒருவேளை இவர்கள் சொல்வது உண்மை தான் போல. இல்லை என்றால் எப்படி டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கும் படி சொல்லுவாங்க' என்று யோசித்தார்.

ஆனால் ராஜசேகர் இவ்வாறு கேட்பதில் இருந்த உள்குத்தை யோசிக்காது விட்டார் அவர். வசுந்தரா தீவிரமாக யோசிப்பதை கண்டு மற்றவர்கள் சற்று ஆசுவாசம் அடைய, அவர்கள் மனம் மகிழும்படி

"எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. நான் தான் எதோ தப்பா புரிஞ்சுக்கிட்டேன் போல‌. எல்லார் மனசையும் ஹேர்ட் பண்ணிட்டேன். அதுக்கு ரொம்ப சாரி" என்றார்.

வசுந்தரா அனைவரின் முன் கைக் கூப்பி நிற்க, அனைவருக்கும் அவர் நிலையை காண பாவமாய் போனது.

"அதான் உங்களுக்கே ஹர்ஷா இந்த வீட்டு பையன் தான்னு புரியுதுலமா. அப்புறம் எதுக்கு கையை எல்லாம் கூப்பிட்டு இருக்கீங்க. கைய கீழே போடுங்க" என பார்வதி வந்து சமாதானம் செய்தார்.

அதன் பின்னரே நிலவரம் சற்று தெளிந்து சுமூகம் திரும்பியது. 'ஹப்பாடா பிரச்சினை இதோட முடிஞ்சது'. இப்படிதான் அனைவரின் மனதிலும் எண்ணம் வந்தது.

விஸ்வநாதன் மீனாட்சி என அவர்களும் தங்கள் பங்கிற்கு மன்னிப்பை வேண்டிட, பின்னர் சிறிது நேரம் கழித்து விஸ்வநாதன் குடும்பம் கிளம்பி விட்டனர்.

"சரி இதையே யாரும் நினைக்காம உங்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க" என ஹர்ஷா அனைவரையும் அவர்கள் அறைக்குள் அனுப்பி வைத்தவன் விக்ரமை பார்த்து

"விக்ரம் சங்கவிய அவ வீட்ல கொண்டு விட்டுட்டு வாடா. அவளை தனியா அனுப்பாத" என சொல்லி தானும் செல்ல விக்ரமும் சரி என்று அழைத்து சென்றான்.

செல்லும் முன் பார்வதியை பார்த்து அவன் தந்தை அறையை கைகளால் காட்டி பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி நகர்ந்தான் ஹர்ஷா.

காரில் செல்லும் போது காலை போல் அல்லாமல் முகத்தை கொஞ்சம் இறுக்கமாக வைத்திருந்தான்‌ விக்ரம்.

"என்னப்பா பேஸ் ரொம்ப டல்லா இருக்கு. இன்னும் வீட்ல நடந்ததையே நினைச்சிட்டு இருக்கீங்களா. அந்த அம்மா தான் சாரி கேட்டுட்டு போய்ட்டாங்கல. இதை அப்படியே விடுங்கப்பா" என சமாதானம் செய்தாள் சங்கவி.

அவளும் வசுந்தரா பேச ஆரம்பித்தது முதல் பதறி போய் விக்ரம் முகத்தை தான் பார்த்திருந்தாள். எப்போதும் விளையாட்டாய் பேசும் விக்ரம் முகம் இன்று அதீத கோபத்தை சுமந்திருந்தது.

அதிலே அவன் நடந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டதை உணர்ந்த கவி தற்போது தனிமை கிடைக்கவும் ஆறுதல் படுத்துகிறாள்.

"எப்படிடி டென்ஷன் ஆகாம இருக்க முடியும். அந்த அம்மா பேசுன பேச்சுக்கு அது வாய நான் கிழிக்காம விட்டதே பெரிய விஷயம் தான்" இதுவரை கோபத்தில் பேசிய விக்ரமின் குரல் கம்மியது.

"அவன் இல்லாம எங்க வீட்ல நாங்க யாருமே இல்லடி. அவன் தான் எங்க குடும்பத்துக்கே ஆணிவேர். அதை எப்படி சொல்றதுனு கூட தெரியலைடி. ஆனா அந்த அம்மா..." என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினான் விக்ரம்.

அவனை புரிந்தது போல் "கூல்பா அந்த அம்மாவும் ஏதோ அவங்க குழந்தை மேல இருந்த பாசத்துல இப்படி பண்ணிட்டாங்க. இதை இப்படியே விட்டுருங்க ப்பா" என ஆறுதலாக அவன் தோளை பிடித்தாள்.

இங்கே இப்படி செல்ல அபியின் அறையிலோ அபி பயங்கரமான கோபத்தில் இங்கும் அங்கும் நடந்தபடி இருக்க, ஹர்ஷா தன் தம்பியின் மனநிலை புரிந்தார் போல் அவன் அறைக்குள் வந்தான்.

"அபி" ஹர்ஷாவின் ஒற்றை வார்த்தையில் தன் சக்தி எல்லாம் வடிந்தார் போல் வேகமாக வந்து ஹர்ஷாவை அணைத்துக் கொண்டான் அபிமன்யு.

"ஒன்னும் இல்லடா. அதான் நான் இருக்கேன்ல. நான் இருக்கும் போது என் தம்பி நீ எப்பவும் கவலைபடவே கூடாது புரியுதா".

ஹர்ஷாவின் இந்த வரிகளில் உடைந்தே விட்டான் அபி. "அண்ணா" என தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்துவிட்டான். அழுத அபியை தேற்றுவதற்குள் ஹர்ஷாவிற்கு போதும் போதும் என்றாகி விட்டது.

"என்னடா அபி இது. குழந்தை மாதிரி இப்படி அழற. விக்ரம் விஷயத்தில நீ மெச்சூர்டா நடந்ததை பார்த்து நான் கூட என் தம்பி வளந்துட்டான் போலன்னு எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா.

நீ என்னடான்னா இதுக்கே மூக்க உறிஞ்சிட்டு இருக்க. யார் என்ன சொன்னாலும் ஹர்ஷா தான் என் அண்ணன்னு தைரியமா நிக்கிறத விட்டுட்டு இது என்ன சின்ன பையன் மாதிரி அழற. உன்னை நான் இப்படி தான் வளர்த்தனா"

ஹர்ஷா எவ்வளவு கூறினாலும் அபிமன்யு ஹர்ஷா என வரும் போது அவன் ஒரு வளர்ந்த சிறுவன் போல தானே. எனவே இன்னும் ஹர்ஷாவை ஒட்டிக் கொண்டான்‌.

அதில் புன்னகைத்த ஹர்ஷா "சரிடா அபி குட்டி ஒன்னும் இல்ல. நீயே இப்படி அழுதா அம்முவ யாரு சமாதானம் செய்வா. எனக்கு அப்புறம் நீதானேடா‌ நம்ம வீட்ல பொறுப்பான பையன்.

ம்ம் நீயே இப்படி ஒடிஞ்சு போன எப்படி. தைரியமா இருக்கனும் என்ன. போ போய் அம்முவ பாரு" என்று பேசி அவனை சமாதானம் செய்து அபியை திசை திருப்பிய பினன்ரே வெளியேறினான் ஹர்ஷா.

இதையெல்லாம் கதவின் அருகே நின்று பார்த்த அனுக்ஷ்ராவிற்கு மனது பாரமானது‌.

இந்த நிகழ்வுகள் எல்லாம் நடப்பதற்கு மூலக்காரணம் அவளின் அத்தை வசுந்தரா என்பதில் இன்னும் குற்றவுணர்வு உண்டானது.

அதே யோசனையில் தங்களின் அறைக்கு சென்று அமர்ந்து விட்டாள் அனு. அபியை சமாதானம் செய்து விட்டு வந்த ஹர்ஷா கண்டது சோகமாக அமர்ந்திருந்த அனுவை தான்.

"என்னடி என்னாச்சு ஏன் இப்படி உக்காந்து இருக்க?" என்ற ஹர்ஷாவின் கேள்விக்கு பாவமாக அவனை பார்த்து வைத்தாள் அனு. அவள் முகத்தை பார்த்து சிரிப்பு வந்தது ஹர்ஷாவிற்கு.

"சாரி ஹர்ஷா அத்தை இந்த மாதிரி எல்லாம் நடந்துப்பாங்கனு நான் நினைச்சு கூட பார்க்கல. வீட்ல இருக்க எல்லாரும் எவ்ளோ ஹர்ட் ஆகிருக்காங்கனு அவங்க எல்லார் முகத்தை பாக்கும் போதே தெரியுது. எல்லாம் என்னால தான். என்னை நீங்க மேரேஜ் செஞ்சதால தான்"

ஹர்ஷா உள்ளே வந்ததும் அனு தன்போக்கில் புலம்ப தொடங்கிவிட, ஹர்ஷாவின் சிறு சிறு சமாதானங்கள் வேலைக்காக வில்லை.

'இது சரிப்படாது' என யோசித்த ஹர்ஷா அனு பேசிக் கொண்டிருக்கும் போது அவளை இழுத்தவன் இதழோடு இதழ் பொறுத்திவிட்டான்.

சில நிமிடங்களில் மூச்சுக்காக பிரிந்தாலும் மீண்டும் அவள் இதழில் கவிபாடினான் ஹர்ஷா. இதற்கு பிறகு நடந்தது எதுவும் அனுவின் நினைவில் இல்லை.

ஹர்ஷாவும் அவளை தன்னை தவிர வேறு எதுவும் நினைக்காத அளவு பார்த்துக் கொண்டான். அப்புறம் என்ன அவள் நினைவு கனவு எல்லாம் ஹர்ஷா ஹர்ஷா மட்டுமே.

ஹர்ஷாவின் மனதும் வசுந்தராவின் பேச்சில் நன்றாக காயப்பட்டிருந்தது. எங்கே தான் சோர்ந்து அமர்ந்தால் வீட்டினர் அதற்கு மேல் ஒடிந்து போய்விடுவரோ என்று எண்ணிய ஹர்ஷா தன் மனதை மறைத்து அனைவரையும் தேற்றினான்.

அதன் பொருட்டே விக்ரமை சங்கவியோடு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு வந்து அபியை சமாதானம் செய்தான்‌. அவனை அம்முவிடமும் அனுப்பி வைத்தான்.

பின் அனுவிடம் வந்து தன் மனதை சொல்லும் பொருட்டு வந்தால், இங்கே அனுவோ அவர்களுக்கு மேல் இருக்க அவளை முத்தமிட்டு சமாளித்து, தானும் சமாதானம் அடைந்தான்.

இந்த நிகழ்வின் தாக்கத்தில் ஒரு வாரம் சென்றுவிட, ஹர்ஷா கதிர் அவனை அலுவலகத்திற்கு அழைத்திருந்ததை சுத்தமாக மறந்திருந்தான்.

கதிரும் ஒரு வாரம் பார்த்தபின் தானாகவே ஹர்ஷாவின் வீட்டிற்கு வந்துவிட்டான் மிகப்பெரிய குண்டை தாங்கிக் கொண்டு.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 28


"வாப்பா கதிர்" வாசலில் வந்து நின்ற ஏ.சி கதிர்வேலை முதலில் பார்த்த வேதாசலம் வீட்டிற்குள் வர அழைத்தார்.

அவரை பார்த்து புன்னகைத்த கதிரும் "வரேன் அங்கிள்" என்றவாறு உள்ளே வந்தான்.

ஒரு வாரம் முன் வீட்டில் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்து அப்போது தான் மெல்ல மெல்ல அருணாசலம் இல்லம் வெளியே வந்து கொண்டிருந்தது.

இந்நேரம் பார்த்து கதிர் வரவை வேதாசலம் சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை‌
என்பதை அவர் பார்வையே காட்ட, அதை கதிர் பார்க்காமல் மறைத்தவர்

"என்ன கதிர் சாப்பிடுற. டீயா இல்ல காபியா?" என வீட்டு ஆளாக கதிரை உபசரித்து காபி கொண்டு வர செய்து கொடுத்தவர் பேச தொடங்கினார்.

ஹர்ஷாவிற்கு நடந்த கொலை முயற்சி சம்மந்தமாக பேசுவதற்கே கதிர் இங்கே வந்துள்ளான் என்று யூகித்த வேதாசலம் கதிரிடம்

"கதிர் நீ பேச வேண்டிய விஷயத்தை நாம தனியா ரூம் உள்ள போய் பேசிக்கலாம். இங்க நடு விட்டூல வேண்டாம் பா. நடந்தது வீட்ல யாருக்கும் தெரியாது.

தெரிஞ்சா எல்லாரும் மனசு சங்கடப்படுவாங்கபா. அதான் சொல்றேன்" என்றார்.

கதிரும் எதுவும் பேசாது வெறுமனே தலை அசைத்தான் சம்மதமாக. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஹர்ஷா கீழே இறங்கி வந்தான்.

அப்போது வேதாசலத்துடன் அமர்ந்திருந்த கதிரை கண்டவுடன் தான் ஹர்ஷாவிற்கு கதிரிடம் பேசியதே நினைவு வந்தது.

'ப்ச் நடந்த கலவரத்துல நான் இதை மறந்தே போய்ட்டேன். கதிரே இங்க வந்துட்டாரு' என மனதில் நினைத்தபடி கீழே வந்துவிட்டான் ஹர்ஷா.

"ஹலோ கதிர் எப்படி இருக்கீங்க. அண்ட் ரொம்ப சாரி கதிர் வீட்ல ஒரு சின்ன பிராப்லம்‌. சோ அதான் உங்கள பார்க்க வர முடியலை‌"

கதிரிடம் மன்னிப்பு கேட்டபடி அவன் அருகில் வந்தமர்ந்தான் ஹர்ஷா. "தட்ஸ் ஓகே ஹர்ஷா. ஆனா நான் இப்போ பேச வந்தது ரொம்ப முக்கியமான விஷயம். நாம தனியா பேசலாம்னு வேதாசலம் அங்கிள் கூட சொன்னாரு.

சோ நாம தனியா பேசலாம்‌. அதோட கூட உங்க அப்பா இருந்தா பெட்டரா இருக்கும்" என கதிர் தனியாக பேச வேண்டியதின் அவசியத்தை கோடிட்டு காட்டினான்.

அதை புரிந்து கொண்ட ஹர்ஷா "புரியுது கதிர். இன்னைக்கு சண்டே சோ எல்லாருமே வீட்ல தான் இருக்கோம். இருங்க அப்பாவ ரூம்லையே நாம் போய் பேசிக்கலாம்" என்றான்.

உடனே அபிமன்யுவை அழைத்த ஹர்ஷா விக்ரமை அழைத்து கொண்டு ராஜசேகரின் அறைக்கு வரும்படி கூறி கதிர் மற்றும் வேதாசலம் இருவரோடு அவன் தந்தையின் அறைக்கு சென்றான்‌.

ஹர்ஷாவிற்கு வரும் நன்மை தீமை என்பது அவன் மட்டும் அன்றி அவன் குடும்பத்தினரையும் சேர்ந்தே பாதிக்கும் என்பதால் ஹர்ஷாவிற்கு இப்போது சற்று பதற்றமாகவே இருந்தது.

ஏனெனில் வசுந்தரா ஏற்படுத்திய பிரச்சினை ஒரு வாரம் ஆகியும் இப்போது வரை அவர்கள் இல்லத்தில் எப்படி பாதிப்பை ஏற்படுத்தியது என்று உணர்த்தி சென்றுள்ளதே.

எனவே அபி மற்றும் விக்ரம் வரும் வரை ராஜசேகரின் நலத்தை விசாரித்த கதிர் அவர்களின் வருகைக்காக காத்திருந்தான். அவர்கள் வந்த பின் கதவை அடைத்த வேதாசலம் பேசினார்.

"கதிர் நீயே இவ்ளோ தூரம் இங்க வந்துருக்கனா பிரச்சினை எதோ பெருசா தெரியுது பா. எங்க ஹர்ஷாவுக்கு இப்படி அடிக்கடி தொந்தரவு தரது யாரு?"

வேதாசலம் கேட்ட கேள்வியில் அதிர்ந்த ராஜசேகர் "ஏம்பா எங்க மாப்பிள்ளை சொல்றது உண்மையா? என் புள்ளைக்கு யாரால இவ்ளோ பிரச்சினை?" என்று கலக்கமான குரலில் கேட்டார்.

விக்ரமும் அபியின் முகமும் அதே கேள்வியை தாங்கி இருக்க கதிர் இப்போது துவங்கினான்.

"நான் சொல்றது உங்களுக்கு கண்டிப்பா அதிர்ச்சிய தரும். சோ நான் என்ன சொல்ல போறேனு கேட்டுட்டு அதுக்கு ஏத்த மாதிரி ஒரு முடிவு நீங்க தான் எடுக்கனும்.

ஹர்ஷாக்கு முதல்ல நடந்த கொலை முயற்சிய கண்டுபிடிக்க எங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கல. அண்ட் ரெண்டாவது அவர் மேரேஜ் அப்போ நடந்த இண்சிடெண்ட்.

உங்களுக்கே தெரியும் அதுலையும் எங்களுக்கு எந்த எவிடென்சும் கிடைக்கலை.

பட் மூனாவதா உங்க ஹாஸ்பிடல்ல அந்த மாத்திரை வந்த இன்சிடென்ட். அதுல இருந்து எதாவது கண்டிப்பா குளூ கிடைக்கும்னு தோனுச்சு.

ஏன்னா இப்படி போலி மாத்திரை வேணும்னா ஒரே வழி அதை தப்பான பார்மேட்ல உற்பத்தி செய்யறது. அதை வச்சு தான் நாங்க விசாரிக்க ஆரம்பிச்சோம்.

அப்படி விசாரிச்சப்போ தான் நாங்க கண்டுபிச்சோம்‌ அது எல்லாம் உங்க மாமனார் கம்பெனில இருந்து வந்திருக்கிறதை"

கதிர் இடையில் நிறுத்திய நேரம் அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர். "என்ன கதிர் சொல்றீங்க?" என்று விக்ரம் கேட்க

"லெட் மீ கம்ப்ளீட் விக்ரம். நாங்களும் முதல்ல அவரை டவுட் பண்ணி, அவரோட எல்லா ஆக்டிவிட்டீசையும் கவனிக்க ஆரம்பிச்சோம்.

பட் அவர் மேல சந்தேகப்படற மாதிரி எதுவும் நடக்கல. அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அந்த பாரமெட்டிகல் இன்டஸ்டிரி உங்க மாமனார் விஸ்வநாதனோட சிஸ்டர் வசுந்தராவோட ஸேர்னு.

அதை கவனிச்சிட்டு இருக்கிறது அவங்க ஹஸ்பண்ட் கணபதி ராம்னு தெரிஞ்சுது. நாங்க அதுக்கு அப்புறம் கணபதிய பாலோ பண்ணினோம். ஆனா அவர்கிட்டயும் தப்பு இருந்த மாதிரி தெரியலை.

ஆனா ஹர்ஷா நீங்க ஒரு ஆள எனக்கு இன்ட்ரோ தந்தீங்களே. அவர் தந்த டீட்டெய்ல்ஸ் வச்சு தான் இப்படியெல்லாம் செஞ்சது யாருன்னு தெரியவந்தது".

கதிர் இவ்வாறு கூறவும் அனைவரின் பார்வையும் கதிரை ஆர்வமாய் பார்த்தது. கதிர் மேலே தொடர்ந்தான்.

"அது வேற யாரும் இல்ல அந்த கணபதி ராம் தான் இதையெல்லாம் செஞ்சது. அந்த ஆள் குடுத்த நம்பர் வச்சு நாங்க டிரேஸ் பண்ணுனதுல கடைசிய வந்து நின்ன ஆளும் இவரு தான்.

அதை பத்தி பேசுறதுக்கு தான் ஹர்ஷாவ ஆபிஸ் வர சொன்னேன். ஆனா ஹர்ஷா வரலை. அதான் நான் வேதாசலம் அங்கிள்கு கால் பண்ணி கேட்டேன்.

அப்போ அவர் இங்க வசுந்தராவால நடந்த பிரச்சினை எல்லாத்தையும் சொன்னாரு. அதுக்கு அப்புறம் தான் எனக்கு வேற மாதிரி ஒரு சந்தேகம் வந்துச்சு.

அது என்னன்னு தெரிஞ்சுக்க நானே கணபதியோட சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு போனேன். அங்க தான் எனக்கு நிறைய விஷயம் எல்லாம் தெரிய வந்தது.

ஆனா அதை நான் சொல்றதுக்கு முன்ன ராஜசேகர் அங்கிள் நீங்க ஒரு உண்மைய சொல்லனும்"

கதிர் பேசி முடித்தவுடன் அனைவரும் அவன் பேச்சில் சுத்தமாக குழம்பி போய் நிற்க, ராஜசேகர் மட்டும் அதிர்ச்சியாகி நின்றுவிட்டார்.

"என்ன அங்கிள் சைலண்ட்டா நிக்கிறீங்க. உங்களுக்கு தெரிஞ்ச உண்மைய நீங்க சொல்லுங்க அங்கிள்.

ஹர்ஷா யாருன்னு உங்களுக்கு தெரிஞ்ச உண்மைய மட்டும் சொல்லுங்க" என்று கதிர் கூறியபின் அனைவரும் புரியாது பார்த்து வைத்தனர்.

ஆனால் ராஜசேகரோ இதுநாள் வரை எது நடக்க கூடாது என்று எண்ணி இருந்தாரோ அது தன் கண் முன்னே நடப்பதில் வேரறுந்த மரமாக அமர்ந்திருந்தார்.

அந்த இடமே அவ்வளவு அமைதியாக இருக்க அனைவரும் ராஜசேகர் என்ன சொல்ல போகிறார் என்று அவரையே பார்த்திருக்க

தன் மனதை சற்று திடப்படுத்திக் கொண்ட ராஜசேகர் நிமிர்ந்து ஹர்ஷாவை பார்த்து அவன் அருகே சென்றார்.

"ஹர்ஷா கண்ணா நான் இப்ப சொல்ல போறத கேட்டா உனக்கு ரொம்பவே அதிர்ச்சியா இருக்கலாம். ஏன் கண்டிப்பா அதிர்ச்சியா தான் இருக்கும்.

ஆனா நீ எப்பவும் என் புள்ளை தான்டா‌ கண்ணா. அப்பா சொல்லப்போறதை கேட்டு என்னை வெறுத்துடாத கண்ணா.

என்ன நடந்து இருந்தாலும் நான் மட்டும் தான் உன்னோட அப்பா. நீ எனக்கு மட்டும் தான் பையன். புரியுதா ஹர்ஷா குட்டி".

ராஜசேகரின் குரல் கரகரத்து ஒலித்தாலும் அவர் குரலில் இருந்த உறுதி சொல்லியது அவர் ஹர்ஷாவை யாருக்கும் விட்டு தர மாட்டார் என.

அதை அவரின் குரலில் இருந்து புரிந்து கொண்ட ஹர்ஷாவிற்கு புன்னகை வந்தாலும் அவன் தந்தை ஏதோ பெரிய விஷயத்தை கூறப் போகிறார் என்று உணர்ந்து குழப்பமும் வந்தது.

அதே குழப்பம் தான் மற்றவர்களுக்கும். எனவே ராஜசேகர் கூற வருவதை கவனிக்க தொடங்கினர் மற்றவர்கள்.

ராஜசேகர் தன் மனதை கல்லாக்கி கொண்டு அடுத்து வந்த வார்த்தைகளை தொடுத்தார். "ஹர்ஷா குட்டி நீ என்னோட புள்ளை, இந்த குடும்பத்தோட மூத்த வாரிசும் நீதான் கண்ணா.

ஆனா நீ... நீ எனக்கு..." என்று திணறியவர் "நான் உன்னோட பயலாஜிக்கல் பாதர் இல்ல குட்டி" என்று சொல்லியே விட்டார்.

முதலில் கேட்ட அனைவருக்கும் அவர் சொல்லிய வார்த்தைகளின் அர்த்தம் புரியவே சில நிமிடங்கள் ஆனது. புரிந்தது ஒன்றும் அவ்வளவு உவப்பாகவும் இல்லை.

மற்றவர்களுக்கே இந்த நிலை என்றால் ஹர்ஷாவின் நிலை அதைவிட மிக மோசமாக இருந்தது. ஆனால் ராஜசேகர் கோர்த்து கூறிய வரிகள் அந்த சூழ்நிலையின் தாக்கத்தை குறைத்து கூறியது என்றால் அது மிகையல்ல.

அப்போது "அப்பா" என்று அதிர்வாய் அபி அழைக்க ராஜசேகரோ எதுவும் பேசாமல் ஹர்ஷாவையே தவிப்புடன் பார்த்திருந்தார்.

அபியின் குரலில் ஹர்ஷா தன் அதிர்ச்சியில் இருந்து மீண்டவன் அவன் தந்தையின் தவிப்பை பார்த்து தன் மனபாரத்தை மறைத்தவாறு "அப்பா" என்றான்.

அந்த "அப்பா"வில் உயிர்த்த ராஜசேகர் "ஹர்ஷா குட்டி நான் மட்டும் தான் கண்ணா உன்னோட அப்பா. அது எப்பவும் மாறாது" என்று அவனை அணைத்து கொண்டார்.

"அண்ணாக்கு யாரு வேணா பயலாஜிக்கல் பாதரா இருக்கட்டும். ஆனா எபப்வும் அவன் என்னோட அண்ணன் தான்".

அபிமன்யுவும் தவிப்புடன் ஹர்ஷாவை அணைத்து கொள்ள, அவனின் மனநிலை புரிந்தது போல் ஹர்ஷா அவனையும் சேர்த்து அணைத்து கொண்டான்.

அந்த நிமிடத்தில் கூட தன் தந்தை மற்றும் சகோதரனுக்காக பார்க்கும் ஹர்ஷாவை கண்டு வேதாசலம் விக்ரமிற்கு தொண்டையே அடைத்தது.

சில நிமிடங்கள் அந்த இடத்தில் கணமான அமைதி நிலவ அபிமன்யு ஹர்ஷாவின் அணைப்பை விட்டு விலகவேவில்லை.

ஆனால் எவ்வளவு நேரம் அப்படியே இருப்பது. எனவே அந்த அமைதியை கலைத்தான் கதிர்.

"ஹர்ஷா உங்களுக்கு பிறக்கலைன்ற உண்மைய சொன்ன நீங்க, அவரு எப்படி உங்ககிட்ட வந்தாருனும் நீங்களே சொல்லிடுங்க அங்கிள்" என்றான்.

முழுதாக வெள்ளம் போனபின் இனி மறைக்க என்ன இருக்கிறது என்று ராஜசேகரும் நடந்தவற்றை கூற ஆரம்பித்தார்.

"நானும் உங்க அம்மா சுபத்ராவும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம் ஹர்ஷா குட்டி. அவ எனக்கு ஜூனியர். அப்போ எல்லாம் இந்த மாதிரி புக் நிறைய கிடைக்காது.

கிடைச்சாலும் நிறைய பேருக்கு வாங்க வசதி பத்தாது. அதுனால சீனியர்ஸ்கிட்ட பாதி புக் வாங்கி தான் படிப்பாங்க. அடுத்த வருஷம் அந்த புக்க அவங்க ஜூனியர்க்கு தந்து ஹெல்ப் பண்ணுவாங்க.

அப்படி தான் உங்க அம்மா எனக்கு பழக்கம். அவ அவ்ளோ பொறுமைசாலி. அவ்ளோ அழகு" என்று பேச ஆரம்பித்த ராஜசேகர் அந்த நாட்களுக்கே சென்று விட்டார்.

சுபத்ரா ஒரு மத்திய தர குடும்பத்தை சேர்ந்தவள். எனவே அவளால் அனைத்து புத்தகங்களையும் வாங்க முடியாது போகவே இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் உதவி கேட்க வந்தாள்.

அந்த வகுப்பில் ராஜசேகரும் இருக்க, தயங்கி தயங்கி வந்த சுபத்ரா முதல் பார்வையிலே அவனை ஈர்த்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

அவளின் தயக்கத்தை புரிந்தபடி ராஜசேகர் தானே முன் வந்து அவளுடைய தேவை உணர்ந்து தன்னுடைய புத்தகங்களை தருவதாக கூறி அவள் மனம் குளிர செய்தான்.

இப்படி இவர்களின் முதல் சந்திப்பு நிகழ, கல்லூரியில் எதேர்ச்சியாக இருவரும் அடிக்கடி சந்திக்க தொடங்கினர். இயல்பிலே நன்றாக படிக்க கூடிய ராஜசேகரிடம் படிப்பு சம்பந்தப்பட்ட சந்தேகம் கேட்கவும் வருவாள் சுபத்ரா.

இப்படி இவர்களின் பிணைப்பு நாளுக்கு நாள் அதிகமாக ஒரு கட்டத்தில் சுபத்ரா இல்லாமல் தான் இல்லை என்று உணர்ந்த ராஜசேகர்,

அவனின் காதலை சுபத்ராவிடம் சொல்ல நல்லதொரு சந்தர்பத்திற்காக காத்திருந்தான். அந்த நாளும் விரைவில் வந்தது.

ஒரு நாள் சென்னை கன்னிமாரா லைப்ரரிக்கு ஒரு புத்தகம் எடுக்க ராஜசேகர் வந்திருந்தான்.

அவன் அந்த புத்தகத்தை தேடி எடுத்து கொண்டு வந்து ஒரு இடத்தில் அமர அவனுக்கு எதிரே அமர்ந்து மும்முரமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள் சுபத்ரா.

சுபத்ராவை அங்கு கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்த ராஜசேகர் அவளை ஆவலுடன் அழைக்க, அவளும் ராஜசேகரை கண்டு மகிழ்ந்து கை அசைத்தாள்.

அதன் பின் இருவரும் தங்களுக்கு தேவையான தகவல்களை எழுதிக் கொண்டிருக்க, ராஜசேகர் இன்று எப்படியும் தன் காதலை சுபத்ராவிடம் சொல்லிவிட வேண்டும் என்று தீர்மானித்தான்.

அதே போல் சுபத்ரா வெளியே கிளம்பும் வரை அவனும் தனக்கு வேலை இருப்பது போலவே புத்தகத்திற்குள் தலையை புதைத்து அமர்ந்து, சுபத்ராவை ஓரவிழியால் நோட்டம் விட்டான்.

மதிய நேரம் கடந்த பின்னரே சுபா தலை நிமிர்ந்த, அதற்கு பின்னரே இருவரும் லைப்ரரியை விட்டு வெளியே வந்தனர்.

"என்ன சுபா ஒரு வருஷத்துக்கு தேவையான நோட்ஸ ஒரே நாள்ல எடுத்துட்ட போல"

ராஜசேகர் கிண்டலாக கேட்க சிரித்து வைத்த சுபத்ரா "அதெல்லாம் ஒன்னும் இல்ல சீனியர். நாளைக்கு ஒரு டாப்பிக் செமினார். அதான் நோட்ஸ் எடுத்தேன்" என்றாள் அப்பாவியாக.

இப்படியே பத்து நிமிடம் ஏதேதோ பேசியபடி வந்த ராஜசேகர் "சுபா நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று பேச்சுவாக்கில் கேட்டுவிட்டான்.

சுபத்ராவிற்கு ராஜசேகர் கேட்டது புரியவே சில நிமிடம் எடுத்தது. அதன்பிறகு அங்கே நிற்காமல் ஓடி விட்டாள் சுபா.

அதற்கு பின் வந்த நாட்களிலும் அதேபோல் ராஜசேகரை கண்டால் எதோ பேயை பார்ப்பது போல பார்த்து ஓடி ஒளிந்து கொள்வாள் சுபா.

இதை கொஞ்ச நாட்கள் சுவாரஸ்யமாக பார்த்த வந்த ராஜசேகர், அதன் பின் கடுப்பாகி விட்டான். இனி பொறுக்க முடியாது என ஒரு நாள் சுபாவை வழி மறித்து பேச சுபத்ரா பயத்தில் அழுதே விட்டாள்‌
.

ராஜசேகருக்கோ என்னவோ போல் ஆகிவிட "சாரி சுபா அழாத பிளீஸ்" என கெஞ்சியவன் அதன்பின் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

எப்போதும் பின்னால் சுற்றிய ராஜசேகர் இப்போது எல்லாம் கண்ணிலே தென்படாமல் இருப்பதை சுபா கவனித்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை முதலில்.

கொஞ்ச நாட்கள் செல்ல செல்ல 'அவன் தன் பின்னால் வர வேண்டாம் என கூறிய மனது இப்போது ஏன் இவ்வளவு நாள் வரவில்லை.

அவன் என்னை மறந்து விட்டானா?' என சஞ்சலம் அடைய தொடங்கியது. என்னதான் இருந்தாலும் பருவ வயதில் வரும் முதல் காதலுக்கு சக்தி அதிகம் தான் போல.

அந்த காதலை கூட கண்ணியமாக 'திருமணம் செய்துக் கொள்ளளாமா?' என தன்னிடம் கேட்ட மாயவனின் பின்னால் அவளின் மனமும் சரிய தொடங்கிற்று.

இரண்டு மாதங்கள் பொறுத்து பார்த்த சுபத்ரா, ஒரு நாள் கல்லூரி மரத்தடியில் தனியே அமர்ந்திருந்த ராஜசேகரை கண்டவள், தானே நேரில் சென்று பேசினாள்.

"ஏன் சீனியர் இப்ப எல்லாம் உங்கள அடிக்கடி பாக்கவே முடியலை. ரொம்ப பிசியா?"

சுபா நேரில் வந்து பேசியதில் திகைத்து போய் அமர்ந்திருந்த ராஜசேகர் அவளின் கேள்வியில் இருந்த ஏக்கத்தை துள்ளியமாக கண்டுக் கொண்டான்.

அதில் களிப்படைந்தாலும் வேண்டும் என்றே அவளை வெறுப்பேற்றும் வண்ணம் பேசினான் ராஜசேகர்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல சுபா. உனக்கு தான் என்னை பாத்தாலே பிடிக்க மாட்டேங்குது. நான் பேச வந்தா ஓன்னு அழற‌.

வேற என்ன நான் செய்றது சொல்லு. அதான் உன் கண்ணுல படாம ஒதுங்கி நிக்கிறேன்"

அவனின் பதிலில் சுபாவின் மனதில் மழைச்சாரல் தான். 'தனக்காக பார்த்தே ஒதுங்கி நின்றானா?' என மகிழ்வுடன் எண்ணிய சுபா

"அது... அது நீங்க வந்து திடீர்னு கல்யாணம் பண்ணிக்கலாமானு கேக்கவும் கொஞ்சம் பயந்துட்டேன். நீங்க வேற பணக்காரங்க. அதான் என்னை போய் எப்படின்னு..."

சுபா தயங்கி நிறுத்திய நொடி "என்ன சுபா என்ன பார்த்தா டைம் பாசுக்கு உன் கூட பழகி கலட்டி விட்டுட்டு போறவன் மாதிரியா இருக்கு?" என்று ராஜசேகர் வேதனையுடன் கேட்டான்.

அவன் வேதனை அவளையும் தாக்க அவனிடம் தன் மனதை பகிர்ந்தாள் சுபா.

"ஐயோ அப்படி இல்லங்க. ஆனா கொஞ்சம் பயத்துட்டேன்‌‌. ஆனா இந்த ரெண்டு மாசமா உங்கள பாக்காம பேசாமா எதோ ரொம்ப டௌனா பீல் பண்ணுனேன்.

உங்களை மனசு ரொம்ப தேடுச்சு. ஆனா நேரில் வந்து பேச தயக்கமா இருந்துச்சு. ஆனா இவ்ளோ நாள் ஆகியும் நீங்க என்கிட்ட பேசவே இல்லையா, அதுக்கு மேல பேசாம இருக்க மனசு கேக்கலை. அதான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்‌"

சுபத்ரா சடசடவென கூறியதை உள்வாங்கிய ராஜசேகர் "சரிமா இனிமே நான் உன்கிட்ட எப்பவும் போல நல்லா பேசறேன் ஓகேவா" என்று புன்னகைத்தான்.

"அது மட்டும் இல்ல.. அது வந்து... நாம கல்யாணம் பண்ணிகலாமானு கேட்டீங்கள்ள" என்று மெதுவாக சுபா கேட்க

"ஆமா ஆனா உனக்கு அது இஷ்டமில்லனு ஆகிருச்சு. அதனால அதை விட்டுருமா" என்றார் ராஜசேகர் தடாலடியாக சுபாவின் எண்ணம் என்னவென்று அறியும் பொருட்டு.

அதில் அதிர்ந்த சுபா "இல்ல அது இல்ல. எனக்கு சம்மதம்" என்றாள் அவசரமாக.

அவள் கூறிய வேகத்தில் சிரிப்பு வந்தது ராஜசேகருக்கு "என்னம்மா எதுக்கு சம்மதம்" என்றான் புன்னகையுடன்.

அவனை பார்த்து தானும் சிரித்த சுபா "எனக்கும் உங்களை கல்யாணம் பண்ணிக் சம்மதம்" என வெட்கப்பட்டுக் கொண்டே சொல்லிவிட்டு எப்போதும் போல் ஓடிவிட்டாள்.


அதற்கு பிறகு வந்த நாட்கள் இவர்களின் காதலின் நினைவு சின்னங்களே!

சுபாவிற்கு பாடத்தில் சந்தேகம் தீர்ப்பது, தினமும் ஒரு முறையேனுபம் சந்தித்து கொள்வது. பார்வையிலே தங்கள் காதலை தன் இணைக்கு உணர்த்துவது‌ என இவர்கள் காதலும் கவிதையே!

அதிகபட்சம் கைக்கோர்த்து கொள்ளும் நொடிகள் இவர்கள் காதலின் தனிமை பொழுதை இன்னும் சுவைக்கூட்டி சென்றன.

இப்படியே நாட்கள் கடக்க ராஜசேகர் அவனின் இளங்கலை மருத்துவத்தை நல்லபடியாக முடித்து, முதுகலை பொது மருத்துவமும் படித்து முடித்தான்.

ஆனால் சுபா இளங்கலை பட்டம் மட்டும் பெற்றுவிட்டு ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து விட்டாள்.

அந்த நாட்களில் இளங்கலை பட்டம் பெறுவதே பெரிதாக தான் பார்க்கப்படும். இதில் ராஜசேகரின் குடும்பம் சற்று செல்வ வளம் பெற்றமையால், அவன் முதுகலை பட்டமும் பெற்று ஒரு மருத்துவமனையில் வேலைக்கு அமர்ந்தான்.

இங்கே சுபாவின் வீட்டில் திருமணத்திற்கு வற்புறுத்த, அவள் ராஜசேகரை விரும்பும் விஷயத்தை கூறி, அவனை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வேன் என திடமாக கூறினாள்.

அவளை திட்டி அடித்து கெஞ்சி என அவள் குடும்பத்தினர் எவ்வளவோ செய்து பார்த்தும் அவள் மனசு மாறவில்லை.

தன் வீட்டில் நடப்பதை சுபா அப்படியே ராஜசேகரிடம் கூறிவிட, இதற்கு மேல் தாமதிக்கக்கூடாது என முடிவு செய்த ராஜசேகரும் தன் தந்தை அருணாசலத்திடம் வந்து அனைத்தையும் கூறிவிட்டான்.

ஆனால் வீட்டில் ராஜசேகரின் அண்ணன் மற்றும் தங்கைகள் என யாருக்கும் திருமணம் நடக்காத போது இப்படி தன் இளைய மகன் காதல் என வந்து நின்றது அருணாசலத்திற்கு பெரிய அதிர்ச்சி தான்.

"இங்க பாரு சேகரா உன் அண்ணன் தங்கச்சினு யாருக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை‌. இந்த நேரத்தில உன் கல்யாணம் நடந்தா எல்லாரும் தப்பா பேசுவாங்க பா.

இன்னும் கொஞ்ச நாள் காத்திரு உன் அண்ணன் கல்யாணம் முடிஞ்சு உடனே உன் கல்யாணத்தை நான் செஞ்சு வச்சிடுறேன்"

அருணாசலம் கூறியதை கேட்டு அமைதியாக சென்ற ராஜசேகர், அதை அப்படியே சுபாவிடம் கூறி அமைதி காக்க வேண்டினான்.

ஆனால் சுபாவின் பெற்றோர்களோ சுபாவுக்கு வேறு மாப்பிள்ளையே அவர்களின் சொந்தத்தில் பார்த்துவிட்டனர்.

இப்போது ஹர்ஷா மற்றும் தன்னை சுற்றி இருந்த தன் குடும்பத்தாரை பார்த்த ராஜசேகர் தொடர்ந்தார்.

"உங்க அம்மாக்கு கல்யாண தேதியே முடிவு பண்ணிட்டாங்க. அவளும் அவங்க வீட்ல போராடி பார்த்தா. ஆனா அவ பேச்சை யாரும் ஏத்துக்கவே இல்ல.

என்ன பண்றதுனு தெரியாம கல்யாணத்துக்கு முன்னையே வீட்டை விட்டு என்னை மட்டும் நம்பி வெளிய வந்தாபா"

இதையெல்லாம் கூறும் போதே அவர் கண்ணில் அவ்வளவு காதல் நேசம் தெரிந்தது. அதை கேட்டவர்களுக்கும் அவரின் காதல் அப்பட்டமாக தெரிந்தது.

அப்படி சுபத்ரா வீட்டை விட்டு வந்தபின் ராஜசேகராலும் எதுவும் செய்ய முடியவில்லை. தன்னை நம்பி வந்த பெண், இனி அவள் என் பொறுப்பு என்றே உறுதிக் கொண்டான் ராஜசேகர்.

என்வே நண்பர்களின் உதவியோடு ஒரு கோவிலில் தங்கள் திருமணத்தை நடத்திக் கொண்டனர் அந்த தம்பதியர்.

திருமணம் முடிந்த கையோடு சுபாவின் வீட்டுக்கு சென்றால், இவர்களை வீட்டின் உள்ளே கூட விடாது தடுத்து திட்டி அனுப்பி விட்டனர்.

அருணாசலமும் தன்னை சேர்த்துக் கொள்ள மாட்டார் என யூகித்தே அவன் இல்லத்திற்கு சுபாவுடன் சென்றான் ராஜசேகர்.

அன்றைக்கு என பார்த்து ராஜசேகரின் அண்ணன் வீட்டில் இல்லை. அருணாசலம் மற்றும் அவர் மகள்கள் இருவர் மட்டும் இருந்தனர்.

அப்போது வீட்டினுள் ஒரு பெண்ணுடன் மன கோலத்தில் வந்து நின்ற ராஜசேகரை எல்லோரும் அதிர்ந்து போய் பார்த்தனர்‌.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 29

"சேகரா...!" என்ற அருணாசலத்தின் குரல் அவ்வளவு அதிர்வுடன் ஒலித்தது. ராஜசேகருக்கு அவன் தந்தை மற்றும் தங்கைகளை பார்க்க பார்க்க குற்ற உணர்ச்சி எழுந்தது.

ஆனால் அவன் அருகில் நின்றிருந்த சுபத்ராவை எண்ணி அதை முகத்தில் காட்டாமல் நின்றிருந்தான்.

"அப்பா இவ சுபத்ரா. இவளுக்கு அவங்க வீட்ல கல்யாணம் முடிவு பண்ணீட்டாங்க. அதனால அவ என்னைய மட்டுமே நம்பி அவ வீட்ட விட்டு வந்துட்டா.

அப்படி வந்தவள என்னால எப்படிபா விட முடியும். அதான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அண்ணா தங்கச்சி எல்லாரும் இருக்கும் போது நான் என்னோட வாழ்க்கைய மட்டும் நினைச்சது சுயநலம்னு புரியுது பா.

ஆனா எங்களுக்கு வேற வழியும் இல்ல. இது சம்பந்தமா நீங்க என்ன முடிவு எடுத்தாலும் நான் ஒத்துக்கிறேன்"

ராஜசேகர் கண்ணை மூடி கொண்டு தன் தரப்பில் நடந்ததை அப்படியே ஒப்பித்து, அருணாசலம் பேசுவதற்கு தனக்கு தரும் தண்டனையை ஏற்பதற்கு தயாராக நின்றிருந்தான்.

அருணாசலத்திற்கு ராஜசேகரின் சூழ்நிலை ஓரளவு புரிந்தது. ஆனால் வீட்டில் இருக்கும் மற்ற பிள்ளைகளின் முகம்‌ அவர் எடுக்கும் முடிவுகளை அப்போது தீர்மானித்தது.

"நீ உன் தரப்பு நியாயத்தை சொல்லிட்ட. ஆனா நீ என்ன தான் சொன்னாலும் இப்படி என்கிட்ட கூட சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறது எனக்கு மனசு ஒப்பலை.

எனக்கு இனிமே நாலு பிள்ளைங்க இல்ல, மூனு பிள்ளைங்க தான்னு முடிவு பண்ணிட்டேன். உன் பொருள் எல்லாத்தையும் எடுத்துட்டு இந்த நிமிஷமே வீட்டை விட்டு வெளிய போ!"

அருணாசலத்தின் குரல் உயரவில்லை. ஆனால் வார்த்தைகள் கணமாக, அழுத்தமாக வெளிவந்தது.

இனி யார் பேசினாலும் அவர் ஒத்துக் கொள்ள மாட்டார் என புரிந்து கொண்டான் ராஜசேகர்.

தன் தந்தை கூறியபடி தன் பொருட்களை எடுத்து கொண்டு அந்த வீட்டை விட்டே தன் மனைவியுடன் வெளியேறினான்.

"அண்ணா போகாத பிளீஸ்!" என்று கெஞ்சியபடி வந்த அவன் தங்கைகளை பார்த்து புன்னகைத்து

"நம்ம அண்ணா இருக்காருடா. அவன் உங்களை பார்த்துப்பான். நீங்க என்னை பத்தி கவலைப்படாதீங்கடா. நான் சீக்கிரம் உங்க அண்ணியோட திரும்ப வருவேன்" என்று சமாதானம் செய்தவன் சுபாவோடு கிளம்பியே விட்டான்.

"சாரிங்க! என்னால தானே உங்களையும் வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க. எல்லாம் என்னால தான்"

சுபத்ரா இதோடு பத்தாவது முறையாக தலையில் அடித்து கொண்டு அழ, போவோர் வருவோர் எல்லோரும் அவர்களையே பார்த்து சென்றனர்.

அவர்கள் இருந்தது மத்திய ரயில் நிலையத்தில். அருணாசலமும் வெளியே அனுப்பிய பிறகு இனி இந்த ஊரிலே இருக்க கூடாது என முடிவு செய்தனர் தம்பதியர்.

எனவே வெளியூரில் இருந்த நண்பர்களை தொடர்பு கொண்டு அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டு,

அந்த ஊருக்கே போகும் பொருட்டு ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர் இருவரும். எப்போது ராஜசேகரை அவன் தந்தை வெளியேற்றினாரோ அப்போது இருந்து சுபத்ரா இதையே எண்ணி புலம்பி கொண்டு இருக்கிறாள்.

அவள் கணவனும் சலிக்காது அவளை சமாதானம் செய்து கொண்டிருக்கிறான்.

"சுபா! போறவன் வாரவன் எல்லாம் நம்மல தான்டி ஒருமாதிரி பாத்துட்டு போறானுங்க. ஏன்டி இப்படி ஒப்பாரி வச்சிட்டு இருக்க.

இப்படியே நல்லா அழு. என்னமோ நான் உன்னை மிரட்டி கடத்திட்டு போறேன்னு எவனாவது போய் கம்ப்ளைன்ட் பண்ண போறான் பாருடி.

ஒரு டாக்டர் மாதிரியா நடந்துக்குற. இப்படியே அழுதுட்டு இருந்த இங்கையே உன்னை கலட்டி விட்டுட்டு போக போறேன் பாரு" என கோபமாக கத்திவிட்டு

"வெளியே போக சொன்னதுக்கு நானே பீல் பண்ணல. இவ உக்காந்து ஓன்னு அலறா" என்று வேறு ராஜசேகர் கோபமாக முணுமுணுத்தான்.

எல்லாம் கேட்ட பின்னரே அழுகாமல் சுபத்ரா அமைதி ஆனாள். அதிலும் ராஜசேகர் கோபமாக பேசியது ஏன் இதுவரை பார்த்தது கூட இல்லை.

அதனால் கோபமாக பேசிய ராஜசேகரை ஆச்சரியமாக பார்த்து வைத்தாள் சுபத்ரா. அவள் அப்படி பார்க்கவும்

"என்னடி? ஏன் அப்படி பாக்குற. என் முகத்துல அப்படி என்ன தெரியுது" என கடுப்புடன் கேட்டான் கணவன்.

"உங்களுக்கு இவ்ளோ கோபம் வருமா?" என்று ஆச்சரிய பாவனையில் கேட்க, சிரித்து விட்டான் ராஜசேகர்.

"ஏன்டி என்ன பாத்தா எப்படி தெரியுது. நானும் மனுஷன் தான்டி. எனக்கும் கோவம் எல்லாம் வரும்" என்று கூறிய ராஜசேகர்

"இங்க பாரு சுபா. நான் உனக்கு இப்ப சொல்றது தான் எப்பவும். நல்லா கேட்டுக்கோ. உன் வீட்ல இனிமே நம்மல ஏத்துக்கிறது ரொம்ப கஷ்டம்.

என்னோட வீட்ல என் அண்ணன் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகாம நம்மல வீட்டுக்குள்ள உன் மாமனாரு சேத்துக்கமாட்டாரு.

ஆனா நாம நல்லா இருக்கனும்னு தான் என் வீட்ல இருக்க எல்லாரும் ஆசைப்படுவாங்க. சோ நீ இப்படி அழுது உன் ஹெல்த்த கெடுத்துக்கிறதுல நோ யூஸ்.

அதனால நீ என்ன பண்றனா உன் புருஷன் என்ன மட்டும் நல்லா பாத்துக்கிட்டனா போதும்" என நீளமாக பேசி முடிக்கும் நேரம் அவர்கள் ரயிலும் வந்தது.

ராஜசேகர் பேச்சில் முகம் சிவந்தது சுபத்ராவிற்கு. அவள் முகத்தை கண்டு தானும் மகிழ்ந்தார் ராஜசேகர்.

தங்கள் புதியதொரு வாழ்விற்கு நல்ல தொடக்கமாக எண்ணிய தம்பதியர், அந்த ரயிலில் தங்களின் முதல் அடியை அவர்களின் வாழ்வின் முதல் அடியாக எண்ணி வைத்தனர்.

அந்த இரவு நேர நீண்ட ரயில் பயணத்தை ராஜசேகரின் தோல் வளைவில் நன்றாக சாய்ந்து ரசித்தபடி வந்தாள் சுபத்ரா.

காலை விடியல் நேரம் அந்த ரயில் கோயம்புத்தூரை போய் சேர, அந்த சூரிய உதயம் அவர்கள் வாழ்வையும் அழகாய் தழுவி சென்றது.

கோயம்பத்தூர் சென்ற ராஜசேகர் சுபா இருவரும் அவர்கள் ஏற்கனவே பேசி வைத்திருந்த நண்பனின் வீட்டிற்கு சென்று, அவன் மூலமாக அங்கிருந்த மருத்துவமனையில் பணியில் சேர்ந்துக் கொண்டனர்‌.

அதன்பின் அவர்களுக்கு ஏற்றவாறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அவர்களின் வாழ்வை அழகாக தொடங்கினார்கள்.

இவர்கள் வாழ்க்கை சுமூகமாக ஆனந்தமாக செல்ல, அதை கலைக்கும் வண்ணம் புயல் ஒன்று அவர்கள் வாழ்வை நெருங்கியது.

ஒரு நாள் சுபா அதீத வயிற்று வலியின் காரணமாக வேலையை விட்டு பாதியிலே வீட்டிற்கு வந்து விட்டாள். எப்போதும் மாதவிடாய் நாட்களில் சுபாவிற்கு வயிறு வலி கொஞ்சம் இருக்கும்.

ஆனால் இன்றோ அளவுக்கு அதிகமான உதிரப்போக்கும் அதீத வயிற்று வலியும் அவளை துவண்டு போக செய்தது. எனவே வலியில் துடித்தவள் சாப்பிடாமல் கூட படுத்துவிட்டாள்.

ராஜசோகரோ அன்று முழு நாளும் மருத்துவமனையில் வேலை செய்துவிட்டு வந்தவர், சுபா உறங்கி கொண்டிருப்பதை கண்டு யோசனையுடன் புருவத்தை சுருக்கி அவள் அருகில் சென்றான்.

"சுபா என்னம்மா இந்த டைம் தூங்குற.‌ என்னாச்சு என்னடா செய்யுது"

ராஜசேகர் பரிவுடன் கேட்டு அவள் தலையை கோதி விட, தூக்கத்தில் இருந்து விழித்தாள் சுபத்ரா. அவள் விழிகளில் அவ்வளவு சோர்வு.

அதில் பதறிப்போன ராஜசேகரோ என்னவென்று விசாரிக்க அவளும் சற்று நேரம் தயங்கியவள், பின் ஒருவாறு தன் நிலையை அப்படியே கூறினாள்‌.

"என்னடி ஓவர் பிளீடிங்னு இவ்ளோ கேர்லசா சொல்ற. இது எவ்ளோ டேஞ்சர்னு தெரியாதா. வா ஹாஸ்பிடல் போகலாம். உன் சீனியர் டாக்டர் சாந்தா மேம் அவங்ககிட்ட காட்டலாம் வாடி‌"

ராஜசேகர் சுபத்ராவை வற்புறுத்தி அவள் சீனியர் டாக்டரிடம் அழைத்து சென்று அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டான்.

சோதனைகளின் முடிவு அடுத்த நாள் வந்து சேர்ந்தது. அதோடு மிக பெரிய இடியும் ராஜசேகர் சுபத்ரா தலையில் விழுந்தது. சோதனைகளின் முடிவுகளை ஒருமுறைக்கு இருமுறை பார்த்த டாக்டர் சாந்தா ஒரு பெருமூச்சை வெளியிட்டு தன் முன்னே அமர்ந்திருந்த இருவரையும் பாவமாக பார்த்து வைத்தார்.

"என்னாச்சு மேம்?" என்ற ராஜசேகரின் குரலே அவ்வளவு பயந்து வெளியே வந்தது.

"நான் சொல்றத கேட்டு ரெண்டு பேரும் பயப்பட வேண்டாம்" என முன்னெச்சரிக்கையாக கூறியவர் இருவரையும் பார்த்து

"சுபத்ரா உனக்கு கர்ப்பப்பைல ஒரு கட்டி இருக்குமா. அதான் இந்த ஓவர் பிளீடிங். அதை ஆப்பரேட் பண்ணி சரி பண்ணிடலாம்" என கூற இருவருக்கும் 'அப்பாடா' என்றிருந்தது.

ஆனால் அதற்கு மேல் தான் அவர் அந்த விஷயத்தை பகிர்ந்தார். "அதோட சுபாக்கு யூட்ரஸ் ரொம்ப வீக்கா இருக்கு. அதுக்கு ஒரு பேபிய தாங்குற அளவுக்கு சக்தி இல்ல. அதையும் மீறி பேபி வந்தா சுபத்ராவோட உயிருக்கு ஆபத்து".

சாந்தா அனைத்தையும் கூறிவிட சுபத்ரா வெடித்து அழ, ராஜசேகர் சிலையென அமர்ந்து விட்டான்.

"நீங்க ரெண்டு பேருமே டாக்டர்ஸ். நான் சொல்லனும்னு இல்ல. உங்களுக்கே புரிஞ்சிருக்கும் சுபாவோட ஹெல்த். பாத்து நடந்துக்கோங்க" என்று முடித்துவிட்டார்.

வெளியே வந்த தம்பதியரில் முதலில் சுதாரித்தது ராஜசேகர் தான். "இங்க பாரு சுபா. நமக்கு குழந்தையே இல்லைனாலும் பரவாயில்லைடி. நீ என்கூட காலம் முழுக்க இருந்தனா அதுவே போதும்டி" என்றுவிட்டார்.

ஆனால் சுபத்ரா ஒருவார்த்தை கூட பேசவில்லை. அவளின் அமைதி ராஜசேகரை என்னவோ செய்ய அவளை முடிந்த அளவு சமாதானம் செய்தார்.

இப்போது ராஜசேகர் தொடர்ந்தார். "இப்படியே கொஞ்ச நாள் எங்க வாழ்க்கை போய்ட்டு இருந்தது. அப்ப தான் ஒரு பொண்ணு சுபத்ராக்கிட்ட டிரீட்மென்ட்க்கு வந்தா.

அந்த பொண்ணு யாரு என்னன்னு எனக்கு தெரியலை. ஆனா அந்த பொண்ணு உங்க அம்மாட்ட டிரீட்மென்ட்கு வந்த நாள்ல இருந்து சுபா அந்த பொண்ண பத்தி தான் நிறைய பேசுவா.

என்னவோ அந்த குழந்தைய அவளே சுமக்குற மாதிரி அவ ஒவ்வொரு தடவையும் செக்கப் வரப்போ அவ்வளவு எக்சைட் ஆவா.

ஆனா அந்த பொண்ணு அவ குழந்தைய பெத்துகிறதுல ரொம்ப குழப்பத்துல இருக்கிறதா அவ சொல்லுவா.
எதோ பிராப்லம் இருந்தது. ஆனா சுபாக்கும் அது என்னன்னு தெரியலை.

இப்படி போய்ட்டு இருக்கும் போது தான் ஒரு நாள் எமர்ஜென்சினு ஹாஸ்பிடல் போன சுபா வரும்போது ஹர்ஷா குட்டிய தூக்கிட்டு வந்தா. எனக்கு ஒன்னும் புரியல.

வந்தவ இவன் இனிமே நம்ம குழந்தைனு சொன்னா. அதோட ஹர்ஷாவ குழந்தைனு கூட பார்க்காம யாரோ கொல்ல பார்த்ததா சொன்னா. அதனால அவன பாதுகாப்பா தூக்கிட்டு வந்துட்டேனு சொன்னா.

சின்ன குழந்தையை போய் கொல்ல பாத்திருக்காங்கன்னு தெரிஞ்சு எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது.

அது என்னமோ ஹர்ஷா குட்டிய பார்த்தப்ப எனக்கு என்னவோ நெருக்கமான ஒரு உறவா தான் தெரிஞ்சான்.

அதுக்கு அப்புறம் நாங்க கோயம்புத்தூரை விட்டு உடனே கிளம்பி சென்னை வந்துட்டோம். இங்க வந்து எங்க சேவிங்ஸ் வச்சு புதுசா ஒரு ஹாஸ்பிடல் நாங்களே கட்டி அதுக்கு அப்பா பேரை வச்சு பாத்துக்கிட்டோம்.

ஆனா ஹர்ஷா நீ வந்த நாள்ல இருந்து தான் நாங்க இழந்த எங்க சந்தோஷம் எங்கிட்ட வந்தது கண்ணா.

முதமுதல்ல எங்களை அப்பா அம்மாவா ஆக்குனது நீதான்டா குட்டி" என்ற ராஜசேகர் இப்போது உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.

ஹர்ஷாவும் அவருக்கு குறைவில்லாமல் பலவித உணர்ச்சியின் பிடியில் இருந்தான்.

ராஜசேகர் சுபத்ரா ஹர்ஷா என்று மூன்று பேரும் அழகிய குடும்பமாக மகிழ்வுடன் இருந்தனர். அப்போது ஹர்ஷாவிற்கு மூன்று வயது.

தன் மூத்த மகனை நான்கு வருடத்திற்கு முன் பறிகொடுத்திருந்த அருணாசலம் ஒரு வருடம் கழித்து தன் சின்ன மகனை தேட துவங்கினார்.

ஆனால் மூன்று வருடம் சென்ற பின்னரே இவர்களை கண்டு பிடித்தார். சிறிதும் தாமதிக்காமல் தன் மகன் மருமகள் பேரன் என அனைவரையும் தன்னுடன் அழைத்து சென்று விட்டார்.

அதனால் ஹர்ஷாவை பற்றி வீட்டினருக்கு தெரியாமல் போனது. தன் வீட்டினருடம் மீண்டும் சேர்ந்த ராஜசேகர் மகிழ்ச்சியாக இருக்க,

சுபத்ராவோ தன்னால் அவருக்கு ஒரு குழந்தையை பெற்று தரமுடியவில்லையே என்று மனதிற்குள் மறுகி தவித்தாள்.

அதை ராஜசேகரிடம் கூறினால் "நமக்கு ஹர்ஷா மட்டும் போதும் டி" என்று விடுவார்.

அதனால் ராஜசேகர் சுபத்ராவிற்கு குழந்தை வராமல் இருக்க மிகவும் கவனமாக இருக்க, ஆனால் இறைவனின் கணக்கு வேறாகி போனது.

ஹர்ஷாவின் நான்காவது வயதில் சுபத்ரா கருவுற்றாள். எங்கே ராஜசேகரிடம் கூறினால் கலைக்க சொல்லிவிடுவாறோ என்று பயந்த சுபத்ரா நான்கு மாதங்கள் வரும்வரை மறைத்து விட்டார்.

ராஜசேகருக்கு தெரிய வந்த போது தங்கள் மருத்துவமனையில் இருந்த மருத்துவரை அவளுக்கு சாதகமாக பேச வைக்க, அவள் நிலை என்னவென்று ராஜசேகருக்கு தெரியாமலே போனது.

மீதம் நடந்தது நாம் அறிந்ததே. ஒருவழியாக தன் கணவன் சாயலில் தன் இரண்டாம் மகன் அபிமன்யுவை தன் உயிர் தந்து ஈன்று அவன் கையில் தந்து சென்றாள் நிம்மதியோடு.

"நான் ஹர்ஷா குட்டி மட்டும் போதும்னு இருந்தேன். ஆனா ஏன் அவ உயிரை தந்து அபியை என்கிட்டா தந்தான்னு எனக்கு தெரியலை‌.

ஆனா என் ரெண்டு புள்ளைங்க இருக்கிறதால தான் என் வாழ்க்கை சுபா போனதுக்கு அப்புறமும் இன்னும் உயிர்ப்பா இருக்கு"

ராஜசேகர் அவர் வாழ்வில் நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க அண்ணன் தம்பி இருவரும் சொல்லொண்ணா தவிப்புடன் அமர்ந்திருந்தனர்.

ஒரு மனைவி என்றும் தன் கணவனுக்கு தன்னால் ஒரு குழந்தை வர வேண்டும் என ஆசை கொள்வாள் என்று ராஜசேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

"எல்லாம் ஓகே அங்கிள். அதோட என்னோட இந்த கேள்விக்கும் பதில் சொல்லிடுங்க"

அந்த அறையில் இருந்த நிசப்தத்தை கலைத்தது கதிரின் குரல். அதில் நிமிர்ந்த ராஜசேகர் 'என்ன' என்பதை போல் அவனை பார்த்தார்.

"இல்ல அங்கிள். ஹர்ஷா உங்களுக்கு பிறந்த பையன் இல்ல. அது உங்களுக்கே தெரியும்.

ஆனா ஒன் வீக் முன்னே நடந்த பிரச்சினைல எந்த தைரியத்தில டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கலாம்னு சொன்னீங்க".

கதிரின் கேள்வியில் பெருமூச்சு விட்ட ராஜசேகர் "ஹர்ஷா குட்டி எனக்கு பிறக்காம இருக்கலாம். ஆனா அவன் இந்த வீட்டு மூத்த வாரிசு தான்" என்று கூற கதிரை தவிர்த்து மற்றவர்கள் குழம்பி போய் நின்றனர்.

ராஜசேகரின் பதிலில் குழம்பி அனைவரும் நிற்க "என்ன மச்சான் சொல்றீங்க. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களே" என்று இடைப்புகுந்தார் வேதாசலம்.

"சொல்றேன் மச்சான். இந்த விஷயம் தெரிய வந்தப்ப எனக்கும் ரொம்பவே அதிர்ச்சியா தான் இருந்தது. ஒரு நிமிஷம் இதை பாருங்க நான் சொல்றது என்னன்னு உங்களுக்கு புரியும்"

ராஜசேகர் பேசிவிட்டு அவர் அலமாரியில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து வந்து நீட்ட அனைவரும் அதை வாங்கி பார்த்து அதிர்ந்தனர்.

"அப்பா என்னப்பா இது. எனக்கு சுத்தமா புரியலை. நீங்க அண்ணாவோட பையலஜிகல் பாதர் இல்லனு சொன்னீங்க. ஆனா இந்த டி.என்.ஏ டெஸ்ட் பாஸிட்டிவ்னு இருக்கு. இது எப்படிப்பா"

அபி குழம்பிப் போய் கேட்க, மற்றவர்கள் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் முகமும் அந்த கேள்வியையே தாங்கி இருந்தது.

"உண்மையாவே எனக்கும் தெரியலை அபி. ஹர்ஷா எங்க கைக்கு வந்த அப்புறம் அவனை வேறையா நினைச்சது இல்ல.

ஆனா ஒரு நாள் நம்ம வீட்டு விருந்துக்கு வந்த அனுவோட அத்தை ஹர்ஷா அவங்க பையனு சொல்லவும் எனக்கு ரொம்ப பயமாகி போச்சு. எங்க என் பையனை என்கிட்ட இருந்து யாராவது பிரிச்சிடுவாங்களோனு தினம் தினம் அவஸ்தைல இருந்தேன்"

ராஜசேகரின் முகம் அந்த வேதனையை இப்போதும் பிரதிபலித்தது.

"அப்பா கண்ட்ரோல் யுவர்செல்ப்" என அபி ஆறுதலாக தோளை பிடித்துவிட, மெலிதாக புன்னகைத்த ராஜசேகர் தொடர்ந்தார்.

"அப்போ தான் ஒரு நாள் பசங்க எல்லாம் யாரை மாதிரி இருக்கோம்னு விளையாட்டா பேசிட்டு இருந்தாங்க" என அந்த நாளை நினைவு படுத்தினார்.

அருணாசலம் அப்போது தான் ஹர்ஷா தன் அன்னை மற்றும் மூத்த மகனை உரித்து வைத்திருப்பதாக கூறி சென்றார்.

அன்றே அருணாசலம் மயங்கி விழுந்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். அதில் தான் அண்ணனின் நினைவு வந்தது ராஜசேகருக்கும். அந்த நினைவில் அவரிகளின் வாலிப வயதில் எடுத்த புகைப்படங்களை புரட்டி கொண்டிருந்தார்.

அவர் அண்ணன் முகம் ஹர்ஷாவை நினைவுப்படுத்த, ஹர்ஷாவின் புகைப்படத்தை தன் அண்ணனின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு பார்த்த ராஜசேகர் அதிர்ந்து போனார்.

ஏனெனில் அவரின் அண்ணனின் உருவத்தை அப்படியே கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன். அதன்பின் வந்த நாட்களில் ராஜசேகர் ஹர்ஷாவின் ஒவ்வொரு செய்கையையும் உன்னித்து கவனிக்க தொடங்கினார்.

அப்படி கவனிக்குப் போது அவரே ஆச்சரியம் கொள்ளும் வகையில் ஹர்ஷா ராஜசேகரின் அண்ணனை ஒவ்வொரு நொடியும் நினைவுப்படுத்தினான்.

ஹர்ஷாவின் கையை பிடித்து அமர்ந்துக் கொண்டு தான் பேசிக் கொண்டிருந்த ராஜசேகர் அவனின் கண்ணத்தை தடவிக் கொடுத்தார்.

"என் ஹர்ஷா என் அண்ணன் பையன்னு நான் முடிவுக்கு வந்ததுக்கு ஒரு முக்கியமான காரணம் இவனோட சிரிப்பு தான். அப்படியே என் அண்ணனோட சிரிப்பு.

என் அண்ணன் சிரிச்சா அதுல ஒரு உயிர்ப்பு இருக்கும். அவன் சிரிச்சாலே எங்க கவலை காணாம போயிரும்‌. அது மட்டும் இல்லாம அவன் அவனை பத்தி நினைச்சதை விட எங்களை பத்தி நினைச்ச நாட்கள் ரொம்ப அதிகம்.

அந்த குணம் அது அப்படியே என் ஹர்ஷா கிட்ட இருந்தது. அதான் என் சந்தேகத்தை உறுதி பண்ணிக்க அவனுக்கே தெரியாம நான் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க முடிவு செஞ்சேன்"

ராஜசேகர் பேச பேச அவர் முகத்தில் தோன்றிய பூரிப்பு சொல்லியது அவரின் அண்ணன் மேல் அவருக்கு இருக்கும் பாசம் எப்படிபட்டது என.

டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க முடிவு செய்த ராஜசேகர் ஹர்ஷா ஒரு நோயாளிக்கு ரத்தம் தரும் நேரம் அவனே அறியாது அந்த மாதிரியை எடுத்துக் கொண்டார்.

அதோடு தன் ரத்த மாதிரியையும் எடுத்து அவரே சென்று பரிசோதனை செய்ய சென்றார். அந்த மாதிரிகளை தனியாக ஒரு லாக்கரில் வைத்து பூட்டியவர் ஒரு நாள் முடிந்த பின்னர் வந்து எடுத்தார்.

அந்த ஒரு நாள் முடியும் முன் இரவு உறக்கம் தொலைத்து விட்டார் மனிதர். அடுத்த நாள் விடிந்தவுடன் மருத்துவமனை சென்று அந்த மாதிரிகளை சோதனை செய்தார்.

முடிவு வருவதற்குள் வேர்த்து விறுவிறுத்து போய்விட்டது. அந்த இயந்திரம் முடிவை காட்ட அதை பார்ப்பதற்குள் கை கால்கள் எல்லாம் நடுங்கியது.

இத்தனை வருட மருத்துவ அனுபவத்தில் நடுக்கம் கொள்ளாத அவர் இதயம் இப்போது தாறுமாறாக நடுங்க, அதே நடுக்கத்தோடு முடிவை பார்த்தவர் ஆனந்த அதிர்ச்சி அடைந்தார்.

மகிழ்ச்சியில் அவருக்கு கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது. ஏனெனில் அந்த முடிவு ஹர்ஷா அவரின் ரத்தம் என வந்து நின்றது.

"எனக்கு அந்த நிமிஷ சந்தோஷத்தை எப்படி சொல்றதுன்னே தெரியலை. அவ்ளோ நாள் என் மனசுல இருந்த பயம் இன்செக்யூரிட்டினு எல்லாமே காணம போன பீல்.

ஏன்னா நம்ம வீட்ல விருந்து நடந்தப்பவே அனுவோட அத்தை ஹர்ஷாவ அவங்க பையனு அவங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க.

அப்போல இருந்தே நான் எவ்ளோ பயத்துல இருந்தேன் தெரியுமா கண்ணா. அந்த டி.என்.ஏ டெஸ்ட் எனக்கு ஆயிரம் யானை பலம் தந்தது தெரியுமா"

ராஜசேகர் பேச்சில் இருந்தே அவர் இத்தனை நாட்கள் மனதிற்குள் எவ்வளவு தவித்து போய் இருந்திருப்பார் என மற்றவர்கள் புரிந்து கொண்டனர்.

"இந்த டெஸ்ட் ரிப்போர்ட் வச்சு பார்த்ததுல எனக்கு ஏற்கனவே இருந்த சந்தேகம் உறுதியாச்சு. அது என்னன்னா என் ஹர்ஷா குட்டியோட பயாலஜிக்கல் பாதர் என் அண்ணன் ராஜாராம் தான்னு"

ராஜசேகர் சொல்லி முடிக்கவும் ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு பாவனையை காட்டியது. வேதாசலம், அபி, விக்ரம் மூவருக்கும் ஹர்ஷா இந்த வீட்டின் வாரிசு தான் என்பதில் அப்படியொரு மன நிம்மதி.

கதிரின் முகமோ இது ஒன்றும் எனக்கு புதிய தகவல் இல்லை என்பது போல் இருந்தது‌.

இவர்கள் அனைவரும் இப்போது திரும்பி ஹர்ஷாவின் முகத்தை காண, அதில் எந்த பாவமும் இல்லை. நீண்ட முப்பது வருடங்களாக இவர்களே என் தாய் தந்தை என எண்ணி இருந்த வேலையில்,

அவர்கள் உன் பெற்றோர் இல்லை என்று கூறினால் அவன் மனநிலை எப்படி இருக்கும் என அங்கிருந்த யாராலும் கணிக்க முடியவில்லை.

ஹர்ஷாவின் மறுபுறம் அமர்ந்திருந்த அபி "அண்ணா" என்று அழைக்க, ஹர்ஷா எதுவும் பேசாமல் அவனை வெறுமனே பார்த்து வைத்தான்‌.

"அண்ணா நீ எப்படி இருந்தாலும் என் அண்ணன் தான். அதோட இந்த வீட்டு பையன் தான். நீ எப்படி யாரா இருந்தாலும் நாங்க கவலைப்பட போறதில்ல. தயவு செஞ்சு நீ மட்டும் இப்படி இருக்காத ண்ணா கஷ்டமா இருக்கு"

அபி ஹர்ஷாவின் கையை பிடித்து கொண்டு அழுக ஹர்ஷாவின் கை அந்த நேரத்திலும் அபியின் தலையை தடவிக் கொடுத்தது.

சிறிது நேரம் அபியின் அழுகுரல் தவிர வேறு எதுவும் அந்த அறையில் கேட்கவில்லை.

"அப்பா உங்க அண்ணாக்கு யாரோட கல்யாணம் ஆகி இருந்தது. என்னோட பயாலஜிக்கல் மதர் யாரு?"

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஹர்ஷாவிடம் இருந்து இந்த கேள்விகள் தான் வந்தது. பெயருக்கு கூட தான் பிறக்க காரணமானவர்களை ஹர்ஷா அப்பா அம்மா என்று கூறவில்லை.

அதை அவன் மனது ஏற்றுக் கொள்ளவில்லையா இல்லை அவன் தந்தையின் மனதை நோக செய்ய ஹர்ஷாவின் மனது ஒத்துக் கொள்ளவில்லையா என்பதை அவனே அறிவான்.

ஆனால் அவன் விளிப்பில் ராஜசேகர் உயிர்த்தார் என்றால் அது மிகையல்ல. அதன்பின் சற்று யோசித்த ராஜசேகர் ஒரு பெருமூச்சுடன் கூறினார்.

"எனக்கு தெரிஞ்சு என் அண்ணாக்கு கல்யாணம் ஆகலை கண்ணா. அப்பா அண்ணாக்கு தீவிரமா பொண்ணு பார்த்துட்டு இருந்தார்.

அது எனக்கு நல்லா தெரியும். எனக்கும் உங்க அம்மாவுக்கும் கல்யாணம் ஆன ஒரு நாலு மாசத்துலையே என் அண்ணா ஆக்சிடென்ட்ல இறந்து போனதா அப்பா சொன்னாங்க.

ஏன்னா அந்த டைம் அப்பாவால என்னை காண்டேக்ட் பண்ணவும் முடியலை. அப்போ மொபைல் போன்லாம் கிடையாது. அதுமட்டும் இல்லாம நான் கோயம்புத்தூர்ல இருக்கோம்னு அப்பாக்கு தெரியாது.

நம்மல இங்க தாத்தா கூட்டிட்டு வந்தப்ப தான் தாத்தா எல்லா விஷயத்தையும் சொன்னாரு. உன்னோட பயாலஜிகல் மதர் யார்னு தெரியாது கண்ணா"

இதை கேட்ட பின் ஹர்ஷா "நான் உங்க கைக்கு வந்து சேரும் போது உங்க அண்ணா உயிரோட இருந்தாரா?" என்று கேட்க, சற்று யோசித்த ராஜசேகர்

"இல்ல ஹர்ஷா கண்ணா. உங்க தாத்தா சொன்னது நாங்க கோயம்புத்தூர் போய் நாலு மாசத்துல அண்ணா இறந்துட்டார்னு.

அப்படி பார்த்தா என் அண்ணா இறந்து ஐஞ்சு மாசம் கழிச்சு தான் நீ எங்களுக்கு கிடைச்சடா குட்டி" என்று வருத்தத்துடன் கூறினார்.

அதற்கு சரி என்பது போல் தலை அசைத்த ஹர்ஷா இதுவரை
எல்லாத்தையும் பொறுமையாக கேட்டுவிட்டு ராஜசேகரிடம் திரும்பி கேட்ட கேள்வியில் அனைவரும் அதிர்ந்தனர்.

"அப்போ நான் பை பர்த் ஒரு இல்லீகல் சைல்ட் இல்லப்பா"

அவன் குரலில் இருந்த ஆதங்கம் வெறுமையை உணர்ந்த ராஜசேகர் துடித்துவிட்டார். அவர் இதுவரை இந்த கோணத்தில் யோசிக்கவே இல்லை.

இப்போது மகன் கூறியது புரிந்ததும் தான் அவன் தந்தைக்கு ஹர்ஷாவின் குணமே நினைவு வந்தது.

வாழ்வின் சிறு விஷயத்தில் கூட ஒழுக்கத்தை உயிராக கருதும் ஹர்ஷாவிற்கு தன் பிறப்பு குறித்து எவ்வளவு வேதனை எழும் என்று யோசித்த ராஜசேகர் வருத்தம் கொண்டார்.

இதற்கு அவர் என்ன பதில் சொல்வது. எதை கூறினாலும் அது ஒரு சமாதானமாக தான் இருக்குமே தவிர உண்மையை மாற்ற முடியாதே.

"ஹர்ஷா நான் சொல்லி உனக்கு தெரியனும்னு இல்ல மச்சான். நாம எப்படி பிறந்தோங்கறது முக்கியமே இல்ல. நாம வாழுற வாழ்க்கையில எப்படி இருக்கோங்கறது தான் முக்கியம்.

இதை கூட நீதான்டா சொன்ன. அப்படிப்பட்ட நீயே இப்படி பேசுலாமா மச்சான்" விக்ரம் ஹர்ஷா கூறியதை தவறென சுட்டிக் காட்டினான்.

ஆனால் அவனுக்கும் ஹர்ஷாவின் மனதின் கஷ்டம் புரியத்தான் செய்தது. நேரம் இப்படி செல்ல கதிர் "நான் கொஞ்ச பேசலாமா?" என்றான் இடையே.

"ஹர்ஷா உங்க மைன்ட் செட் இப்ப எப்படி இருக்கும்னு எனக்கு புரியுது‌. ஆனா நீங்க எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் இன்னும் நிறைய இருக்கு‌.

இந்த ஒரு வாரம் நான் கணபதிய பத்தி விசாரிக்க அவர் சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு போயிருந்தேன். அங்க எனக்கு கிடைச்ச நிறைய விஷயம் ரொம்பவே அதிர்ச்சி தந்தது.

அன்ட் இதையெல்லாம் கேட்டா நீங்க எப்படி எடுத்துக் போறீங்கனும் எனக்கு தெரியலை. அதோட நான் சொல்லப்போற விஷயம் அருணாசலம் தாத்தாக்கும் தெரிஞ்சா நல்லா இருக்கும்னு தோணுது"

கதிர் பேசி முடித்தவுடன் "அப்பா என்னை பத்தின டீட்டெய்ல்ஸ் நம்ம வீட்ல இருக்க எல்லாருக்கும் தெரியனும்" என ஹர்ஷா அழுத்தி கூறி நிறுத்தினான்.

மற்றவர்கள் எவ்வளவோ வேண்டாம் என எடுத்து கூறியும் ஹர்ஷா தன் பிடியிலே நிற்க, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் வெளியே வந்தனர்.

"அபி விக்ரம் வீட்ல இருக்க எல்லாரையும் வர சொல்லுங்க" என்ற ஹர்ஷா தன் தந்தை மாமா மற்றும் கதிருடன் சென்று சோஃபாவில் நடுநாயகமாக அமர்ந்துக் கொண்டான்.

அபியும் விக்ரமும் 'வேணாம்' என எவ்வளவோ கொஞ்சியும் ஹர்ஷா அசைந்துக் கொடுக்காமல் இருக்க, வேறு வழி இல்லாமல் அனைவரையும் அழைக்க சென்றனர்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் சத்தத்தில் பார்வதி வந்து என்னவென கேட்க "நம்ம வீட்ல இருக்க எல்லாரும் வரட்டும் அத்தை" என்றுவிட்டான் ஹர்ஷா.

அங்கு அமர்ந்திருந்த அனைவரின் முகத்தையும் கண்டு பார்வதிக்கே அச்சம் வந்தது. விஷயம் பெரியது என புரிந்தவர் தானும் அமர்ந்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் அருணாசலம், அம்மு, அனு என அனைவரும் வந்துவிட, எதற்கு அனைவரையும் ஹர்ஷா வரச் சொன்னான் என ஒருவரும் புரியாது குழம்பி நின்றனர்.

ஹர்ஷா இப்போது ராஜசேகரை திரும்பி பார்க்க, அவரோ விட்டால் இப்போதே அழுது விடுபவர் போல் இருக்க அவரை சோதிக்க விரும்பவில்லை ஹர்ஷாவும்.

அவரும் எத்தனை தடவை தான் மனதை கல்லாக்கிக் கொண்டு ஹர்ஷாவை தன் மகன் இல்லை என கூறுவார். அதை புரிந்தபடி ஹர்ஷா தானே பேச தொடங்கினான்.

"நான் ராஜசேகர் அப்பாவோட பயாலஜிகல் பையன் இல்ல"

ஹர்ஷா ஒற்றை வரியில் முடித்துவிட்டான். ஆனால் அந்த ஒற்றை வரி அந்த குடும்பத்தின் அனைவரின்‌ மனதிலும் எவ்வளவு பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி சென்றது என்பதை சொல்வதிற்கு வார்த்தைகள் இல்லை.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 30

"என்ன கண்ணா சொல்ற" அதிர்வாய் வார்த்தைகள் வெளிவந்தது பார்வதியிடம் இருந்து.

அங்கு நிலவும் சூழ்நிலையை கண்டு வருத்தமடைந்த கதிர் தானே இதுவரை ராஜசேகர் ஹர்ஷா அவரிடம் எப்படி வந்து சேர்ந்தான் என்று பகிர்ந்தவற்றை ஒரே மூச்சில் கூறி வைத்தான்.

எல்லோரும் அமைதியாய் இருக்க "அவன் எப்படி இங்க வந்திருந்தாலும், அவன் இந்த வீட்டு ரத்தம் இல்லைனாலும், அவன் என்னோட, இந்த அருணாசலத்தோட பேரன் தான்" என்று தழுதழுத்தார் அருணாசலம்.

அதையே பார்வதியும் கூற, இந்த வீட்டினர் தன் மேல் வைத்திருக்கும் அன்பை மெய்மறந்து பார்த்திருந்தான் ஹர்ஷா.

"தாத்தா நான் சொல்ல வரதை முழுசா கேளுங்க. ஹர்ஷா ராஜசேகர் அங்கிளுக்கு பிறந்த பையன் இல்ல, ஆனா அவர் இந்த வீட்டு ரத்தம் தான்" என்ற கதிர் பேச அவனை அனைவரும் புரியாது பார்த்து வைத்தனர்.

"கொஞ்சம் புரியும்படி சொல்லேன் தம்பி" என பார்வதி மற்றவர்கள் நினைத்ததை கேட்டுவிட, கதிர் தொடர்ந்தான்.

"ஆமா ஆன்டி. ஹர்ஷா ராஜசேகர் அங்கிள் பையன் இல்ல பட் அவரு உங்க மூத்த அண்ணன் ராஜாராமோட பையன்"

கதிர் இவ்வாறு கூற அருணாசலம் மற்றும் பார்வதி இருவருக்கும் இந்த செய்தி பேரதிர்ச்சியே. அவர்கள் அதிர்வில் இருந்து மீண்டு வருவதற்குள் கதிர் ராஜசேகர் ஹர்ஷாவை பற்றி கணித்தது, டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தது என்று அனைத்தையும் கூறிவிட்டான்.

இப்போது அருணாசலம் ஹர்ஷாவை அடைந்தவர் "என் செல்லம் நீ என் ராஜா மாதிரி இருக்கன்னு ஒவ்வொரு நாளும் பெருமைப்பட்டிருக்கேன் கண்ணா.

என் பிள்ளை சொல்லுவான் "நான் உங்கள விட்டுட்டு போகமாட்டேன் ப்பானு". ஆனா அவன் என்னை விட்டு நிரந்தரமா போய் கூட உன்னை எனக்கு குடுத்த அவன் வாக்கை காப்பாத்திட்டான்" என்று உணர்ச்சிவசப்பட்டு பேசி கொண்டிருந்தார்.

பார்வதியோ தன் மூத்த அண்ணன் ராஜாராமே அவர் எதிரே அமர்ந்திருப்பதை போல் பரவசத்துடன் ஹர்ஷாவை பார்த்துக் கொண்டிருந்தார்.

இவர்கள் இப்படி இருக்க அனுவோ தன் கணவனை தான் ஒரு வித பதற்றத்துடன் கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.

இவ்வளவு பெரிய உண்மை இத்தனை வருடத்திற்கு பிறகு அறிந்த தன் கணவனின் மனநிலை எப்படி இருக்கும் என அவள் மனம் தவித்தது.

சூழ்நிலை இப்படி இருக்க ஹர்ஷா கதிரை பார்த்து "கதிர் நான் கேட்ட விஷயம் என்னாச்சு சொல்லுங்க" என்றான்.

அருணாசலம் "என்ன கண்ணா கேட்ட?" என்று கேட்க சற்று யோசித்த ஹர்ஷா "தாத்தா என்னோட பயாலஜிகல் மதர் யார்னு கதிர் சொல்றேன்னு சொன்னார். அதை தான் அவருக்கு ஞாபகப்படுத்தினேன்" என்றான்.

"சொல்றேன் ஹர்ஷா. ஆனா அதுக்கு முன்னாடி இன்னும் சிலரை நீங்க இங்க கூப்பிட வேண்டி இருக்கு"

ஹர்ஷா கேள்வியாய் புருவம் உயர்த்த, "உங்க‌ வொய்ப் பேமிலிய வர சொல்லனும். மெயினா அவங்க அத்தை வசுந்தரா அன்ட் அத்தை ஹஸ்பண்ட் கணபதி ராம் இவங்க இருக்கனும்.

அப்புறம் தாத்தா அவங்க வந்தா நான் நிறைய பேசுவேன். நீங்க அதிர்ச்சி ஆகவே கூடாது. இப்பவே சொல்லிடறேன்" என்றான்.

மற்றவர்களுக்கு எதற்கு என புரியவில்லை என்றாலும் ஹர்ஷாவிற்கு கதிர் அனைத்தையும் யோசித்தே கூறுவான் என தோன்றியது.

எனவே ஹர்ஷா அனுவை பார்த்து "அனு உன் பேமிலி மெம்பர்ஸ வர சொல்லு" என்றான். உடனே அவளும் தன் தந்தைக்கு அழைத்து அனைவரையும் முக்கியமாக அவள் அத்தை மாமாவையும் உடனே அழைத்து வருமாறு கூறிவிட்டு வைத்தாள்.

அனு திடீரென அழைத்து இப்படி சொல்லவும் அங்கு எதாவது பிரச்சினை வந்து விட்டதோ என விஸ்வநாதன் பயந்து விட்டார். எனவே சிறிது நேரத்திலே தன் வீட்டினரை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார் அவர் சம்மந்தி வீடு நோக்கி.

விஸ்வநாதன் குடும்பம் உள்ளே நுழைய, அங்கிருந்த அசாதாரண சூழல் அவர்களுக்கு நன்றாக புரிந்தது.

கணபதி 'எதுக்கு நம்மல வர சொன்னாங்க' என குழம்பி போனாலும், விஸ்வநாதனின் அழுத்தமான அழைப்பில் வந்திருந்தவர் அங்கிருந்தவர்களை கண்டுக் கொள்ளாது, எப்போதும் போல் சென்று அமர்ந்து கொண்டார்.

ஆனால் அவர் தான் ஹர்ஷாவை கொல்ல முயன்றது என தெரிந்த நபர்கள் அவரை கொலை வெறியுடன் பார்த்து வைக்க, அதையும் அவர் கவனிக்காது இருந்தார்.

"என்னாச்சுங்க சம்மந்தி உடனே வர சொல்லி போன் பண்ணி இருக்கீங்க. எதாவது முக்கியமான விஷயமா?"

விஸ்வநாதன் ஒருவித பதட்டத்துடனே கேட்டு வைக்க, யாரும் எதுவும் பேசாமல் அமைதி காத்தனர்‌. இப்போதும் கதிரே ஆரம்பித்தான், ஆனால் வசுந்தராவிடம் இருந்து.

"வசுந்தரா தேவி மேடம் உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கனுமே"

கதிர் ஏன் அவரிடம் பேச ஆரம்பிக்கிறான் என யாருக்கும் புரியாத போதும் அனைவரும் மௌனமாக பார்த்திருந்தனர்.

"என்ன தம்பி கேக்கனும்" என வசுந்தரா கேட்க

"இங்க ஹர்ஷா வீட்ல லாஸ்ட் டைம் நீங்க வரும் போது ஏன் ஹர்ஷாவ உங்க பையன்னு சொன்னீங்க" என கேட்டான்.

வசுந்தரா அமைதி காக்கவும் "உங்களுக்கு பிறந்து இறந்ததா சொன்ன குழந்தை எந்த வருஷம் பிறந்தது?" என அடுத்த கேள்விக்கு தாவினான்.

தன் இறந்த குழந்தையை பற்றி பேசவும் ஏற்கனவே உணர்ச்சி வசப்பட்டிருந்த வசுந்தரா "முப்பது வருஷம் ஆச்சு தம்பி" என்று தழுதழுத்தார்.

"ஓஓஓ... சரிமா. ஆனா உங்களுக்கும் உங்க ஹஸ்பண்ட் கணபதி ராம் சார்கும் மேரேஜ் ஆகி இருபத்தி ஆறு வருஷம் தான் ஆகுது அப்படிதானே" என கதிர் நிறுத்த

அங்கிருந்தவர்களில் யார் அதிகம் அதிர்ந்தனர் யார் குறைவாக அதிர்ந்தனர் என அனுமானிக்க முடியாது போனது.

கணபதி ராம் தான் இடையில் புகுந்து "அப்படிலாம் இல்ல. வசு ஏதோ குழப்பத்துல அப்படி சொல்லிட்டா" என சமாளித்தார்.

"என்ன வசுந்தரா மேடம் நீங்க எதுவும் பேச மாட்டேங்குறீங்க. உங்க முதல் குழந்தை பிறந்தது எப்போ? நீங்க மறந்துட்டீங்களா இல்ல தெரியாம உளறீட்டீங்களா?"

கதிரோ மர்மமாக புன்னகைத்தவன் தொடர்ந்தான். "உங்க முதல் குழந்தை பிறந்தது கோயம்புத்தூர்ல ஆம் ஐ ரைட்" என்ற கதிர் கேள்வியாய்‌ நிறுத்த ஆம் என்பது போல் தலை அசைத்தார் வசுந்தரா.

"சுபத்ரா ஆன்டியும் ராஜசேகர் அங்கிளும் கோயம்புத்தூர்ல ஒரு ஹாஸ்பிடல்ல தான் கொஞ்ச நாள் வேலை பார்த்தாங்க. அதுவும் முப்பது வருஷத்துக்கு முன்னாடி. சரிதானே அங்கிள்"

கதிர் இப்போது ராஜசேகரை பார்த்து கூற அவரும் ஆம் என தலை அசைத்தார்.

கணபதி புசுபுசுவென மூச்சு வாங்க பார்த்திருந்தார் கதிரை. "இதெல்லாம் கேக்க நீங்க யாரு தம்பி. என் மனைவியே இப்பதான் எல்லாத்தையும் மறந்துட்டு கொஞ்சம் நார்மல் ஆனா.

நீங்க அது இதுன்னு பேசி அவளை கஷ்டப்படுத்துறீங்க. எங்க குழந்தை ஒன்னும் கோயம்புத்தூர்ல பிறக்கலை. நாங்க உடனே கிளம்பறோம்" என நிற்க கதிர் அவரை கண்டுக் கொள்ளவே இல்லை.

"உங்க ஹஸ்பண்ட் சொல்றாரே அது உண்மையா மேடம். எதாவது பேசுங்க" என வசுந்தராவை பார்த்து பேசிய கதிர் இப்போது தன் பையில் இருந்து ஒரு பைலை எடுத்து டேபிலில் போட்டான்.

"முப்பது வருஷத்துக்கு முன்னே நீங்க செக் அப்கு போன கோயம்புத்தூர் ஹாஸ்பிடல்ல தந்த பைல் தான் இது"

கதிர் இப்போது கணபதியை பார்த்து 'இப்ப என்ன சொல்லப் போறீங்க' என பார்த்து வைக்க அவர் வசுந்தராவிடம் தான் பேசினார்‌.

"வா வசுமா நாம போகலாம். இங்க வேண்டாம்" என்றிட அசையாமல் அந்த பைலையே வெறித்து பார்த்திருந்தார் வசுந்தரா.

"பொறுங்க கணபதி சார். நான் இன்னும் பேசி முடிக்கவே இல்ல. அதுக்குள்ள போறேன்னு சொன்னா எப்படி"

கணபதியை பார்த்து நக்கலாக கேட்ட கதிர் "பேசுங்க வசுந்தார மேடம். இவன் ஏன் இப்படி திடீர்னு வந்து கேள்வி கேக்குறான். இவன் யாரு அப்படின்னு தோனுதா.

நான் ஏ.சி கதிர்வேல். ஹர்ஷாவோட சொந்தகாரன் தான். சரி இப்ப சொல்லுங்க. உங்க குழந்தை பிறந்து முப்பது வருஷம் ஆச்சு. ஆனா குழந்தையோட அப்பா உண்மையாவே இந்த கணபதி ராம் தானா என்ன?"

கதிர் பேசி முடித்த நேரம், அவன் சட்டையை பிடித்துவிட்ட கணபதி ராம் "அது என்னோட குழந்தை தான். என் பொண்டாட்டிய பத்தி இனி தப்பா பேசுனீங்க மரியாதை கெட்டுடும்"

என சீற விஸ்வநாதக்கும் தன் தங்கையை பேசியதில் கோபம் வந்துவிட்டது. ஆனால் கணபதி பேசும் போது இடையே பேசவில்லை ‌

"இப்ப என்ன உண்மை என்னன்னு தெரியனும் அப்படிதானே. சொல்றேன் நானே சொல்றேன். நானும் வசுவும் கோயம்புத்தூர்ல ஒரு காலேஜ்ல தான் படிச்சோம்‌.

ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா லவ் பண்ணுனோம். அப்போ எங்களுக்கு கல்யாணம் ஆகலை. ஆனா குழந்தை வந்திருச்சு.

அவ அண்ணனுக்கு ரொம்ப பயந்தா. ஆனா‌ நாங்கலாம் எப்படியோ அவளை தேத்தி குழந்தைய பெத்து எடுக்க வச்சோம்.

ஆனா எவ்ளோ முயற்சி செஞ்சும் எங்க குழந்தை எங்களை விட்டு போய்ட்டா" என உணர்ச்சி பூர்வமாக பேசி முடித்தார்.

கணபதியை பார்த்து பாராட்டாய் புருவம் உயர்த்திய கதிர் "வெல் மிஸ்டர் கணபதி ராம் உங்க கதை ரொம்பவ டச்சிங்கா இருந்தது. நானே ஒரு நிமிஷம் உருகிட்டேன்னா பாருங்க" என்றான்.

அவன் பேச்சில் இருந்த நக்கலில் கணபதி தன் பற்களை கடித்தான். "என்ன கணபதி எவ்ளோ அழகா கதை சொல்றீங்க. சூப்பர் சூப்பர் சார்" என போலியாக பாராட்டிய கதிர்

"என்ன வசுந்தரா மேடம் உங்க ஹஸ்பண்ட் மட்டுமே பேசிட்டு இருக்காரு. நீங்க என்ன இவ்ளோ அமைதியா இருக்கீங்க.

நீங்க மத்தவங்கள வேணும்னா ஏமாத்தலாம் மேம். ஆனா என்னை யாரும் ஏமாத்த முடியாது. அங்க கோயம்புத்தூர்ல உங்களுக்கு என்ன நடந்ததுனு எல்லாமே எனக்கு தெரியும்"

கதிர் அழுத்தி கூறியதில் அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்த வசுந்தராவை ஒர பார்வை பார்த்தவாறே அனைவரிடமும் பேசினான்.

"வசுந்தரா மேம் கோயம்புத்தூர்ல ஒரு எஞ்சினியரிங் காலேஜ்ல தான் படிச்சாங்க. அங்க படிப்பு காலேஜ்னு இருந்தவங்கள ஒரு ஆள் லவ் பண்ண சொல்லி விடாம டார்சர் பண்ணியிருக்கான்.

கொஞ்ச நாள் பொறுத்து பார்த்தவங்க நேரா அந்த ஆள்கிட்டையே போய் 'இது தப்பு எனக்கு நீங்க பின்னாடி வரது பிடிக்கலை. இப்படி பண்ணாதீங்னு' சொல்லி பாத்திருக்காங்க.

ஆனா அந்த ஆள் இன்னும் கூட கொஞ்சம் டார்சல் தந்திருக்கான். ஒரு நாள் வசுந்தராவ கை பிடிச்சு இழுத்து அந்த ஆள் ரகளை பண்ண, இவங்க அந்த ஆளை எல்லார் முன்னாடியும் வச்சு அடிச்சிட்டாங்க.

அது அவனுக்கு அவமானமா போயிருச்சு. சரியான சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவனுக்கு அந்த சந்தர்ப்பமும் ஒரு நாள் கிடைச்சது.

ஒரு நாள் வசுந்தரா அவங்க பிரண்ட்ஸோட வெளிய போனப்ப இவங்கள கடத்திட்டு போய் அடைச்சு வச்சுட்டார். அதோட தன்னை அடிச்சு எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தின வசுந்தராவ பழிவாங்க அவங்கள ரேப் பண்ணிட்டாரு.

அந்த இன்சிடென்ட்ல தான்‌ வசுந்தரா பிரக்னென்ட் ஆனாங்க. சோ அந்த குழந்தைய பெத்துக்கலாமா வேண்டாமானு ஒரே குழப்பத்தில இருந்த வசுந்தராவ சுபத்ரா ஆன்டி தான் பேசி பேசியே அந்த குழந்தைய பெத்துக்க வச்சாங்க.

அப்படி பிறந்த அந்த குழந்தை தான் ஹர்ஷவர்தன். வசுந்தரா மேடம ரேப் செஞ்சவரு ராஜசேகர் அங்கிளோட அண்ணன் ராஜாராம்"

கதிர் கூறியவற்றை அதிர்ச்சியாக அனைவரும் கேட்டு நிற்க, 'என் பையன் அப்படி கிடையாது' என்று அருணாசலம் கூறுவதற்கு முன் "இல்ல" என்று வசுந்தரா கத்தி விட்டார்.

"இல்ல இல்ல. நீ பொய் சொல்ற. என் ராம் ஒன்னும் அப்படிப்பட்டவர் கிடையாது" என கத்த "இல்லையா அப்போ என்ன நடந்ததுன்னு நீங்களே சொல்லுங்க" என கதிர் ஊக்கினான்.

"சொல்றேன் சொல்றேன்" என்ற வசுந்தரா கணபதியை திரும்பி கூட பார்க்காது பேசினார்.

"ராஜாராம், என்னோட ராம்" எனும் போதே அவர் குரல் அவ்வளவு உருகியது. "நான் கோயம்புத்தூர்ல படிக்கும் போது அந்த காலேஜ கட்ட வந்தாரு தான் ராம்.

அப்படி தான் அவரை எனக்கு தெரியும். அவரோட சிரிப்பு அது அப்படி இருக்கும். அந்த சிரிப்பு நாம எவ்ளோ கஷ்டத்துல இருந்தாலும் அதை அப்படியே போக்கிடும்.

எப்பவும் நாங்க எங்க ஹாஸ்டல் மரத்தடில தான் நின்னு பேசுவோம். அவரை ஒரு நாள் பார்க்கலைனாலும் அந்த நாள் என்னவோ போல இருக்கும்.

அப்படி அவரை பார்த்த கொஞ்ச நாளுளையே அவர் என்கிட்ட அவரோட காதலை சொன்னாரு.

எனக்கும் அவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நானும் அவரும் அவ்ளோ உயிரா காதலிச்சோம்" என்ற வசுந்தரா தன் வாழ்வில் நடந்த உண்மைகளை பகிர்ந்தார்.

கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அதிர்ந்து போய் கேட்க வசுந்தரா யாரையும் கண் எடுத்து பார்க்காது தன் கடந்த காலத்திற்கு சென்றுவிட்டார்.

வசுந்தராவிடம் சென்னையில் வைத்து தன் காதலை சொன்ன ராஜராம், அவர்கள் காதலை கோயம்புத்தூர் சென்று வளர்த்து வந்தான்.

இப்படியே நாட்கள் இனிமையாக கடக்க, நாட்களுக்கு இன்னும் இனிமை சேர்க்கும்படி ராஜாராமிற்கு பிறந்தநாள் வந்தது. அங்கு தான் மிகப்பெரிய திருப்பமும் நிகழ்ந்தது.

"மெனி மோர் ஹேப்பி பர்த்டே ராம்!" என்று அனைவரும் கத்தி வாழ்த்து தெரிவிக்க ராஜாராம் கேக்கை வெட்டினான்.

"தேவிமா!" என்று காதலுடன் அழைத்து ராஜாராம் முதல் கேக் துண்டை எடுத்து தேவிக்கு ஊட்டி விட்டான். சுற்றி இருந்த அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

ராஜாராமின் பிறந்தநாள் கொண்டாட்டம் கோயம்புத்தூரில் இருக்கும் அவன் கெஸ்ட் ஹவுஸில் தான் நடந்து கொண்டிருந்தது‌.‌

வீட்டிற்கு எல்லாம் வரவே மாட்டேன் என்ற வசுந்தராவை கொஞ்சி காலில் விழாத குறையாக கெஞ்சி வர வைத்திருந்தான் ராஜாராம். சிறிது பயத்துடனே வந்திருந்தாலும் வசுந்தராவிற்கு அங்கிருந்த சூழல் பிடித்துவிட்டது.

அந்த வீட்டை சுற்றி இருந்த இயற்கையான காற்று மரங்கள் என அனைத்தும் பிடித்திருந்தது. கொஞ்ச நேரம் அதையெல்லாம் தன் தோழிகளோடு சுற்றி பார்த்து கொண்டிருந்தாள் வசுந்தரா.

அப்போது தயங்கி தயங்கி வந்த ராஜாராம் "தேவிமா ஒரு விஷயம்" என இழுக்க "என்ன ராம்" என்றாள் புன்னகையுடன்.

"அது தேவிமா... என் பிறந்தநாள்கு பிரண்ட்ஸ் பார்ட்டி கேட்டிருந்தாங்க"

"அதான் பார்ட்டி நடந்துட்டு தானே ராம் இருக்கு" என்றாள் வசுந்தரா ராமின் கேள்விக்கு.

"அதில்ல தேவிமா அது வந்து பசங்க டிரிங்க்ஸ் பார்ட்டி கேட்டிருந்தாங்க" என்று ராம் ஒருவழியாக கூறி முடிக்க

"ராம் நீ.. நீங்க குடிப்பீங்கலா?" என அதிர்ந்து கேட்டாள் ராமின் தேவி.

"ஐயோ இல்லமா. உன் மேல சத்தியமா சொல்றேன் தேவிமா, நான் இதுவரை குடிச்சதும் இல்லை. என்னோட பிரண்ட்ஸ் கேட்டாங்கடா.

அதான் இந்த பார்ட்டி அரேஞ்ச் பண்ணிருக்கேன். அதுவும் வீட்ல இல்லடா. பக்கத்து ஹோட்டல்ல. ஈவ்னிங் ஐஞ்சு மணிக்குள்ள அவங்க எல்லாரும் கிளம்பிடுவாங்க.

நான் அங்க ஹோட்டல்ல போய் அவங்களுக்கு எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துட்டு வந்திடுறேன்மா. ஒரு ஒன் அவர் வெயிட் பண்ணுமா நான் வந்திடுவேன்"

தன் முன்னால் நின்றிருந்த வசுந்தராவிடம் கிட்டதட்ட கெஞ்சினான் ராம்.

"இல்லங்க லேட் ஆகிடும். ஹாஸ்டல் உள்ள விடமாட்டாங்கபா. ஆல்ரெடி என்னோட பிரண்ட்ஸ் எல்லாரும் கிளம்பி வெளிய போய் நிக்கிறாங்க. நான் கிளம்பனும் ராம்"

வசுந்தராவும் தன் நிலையை கூறி கெஞ்சிட "தேவிமா தேவிமா என்னோட நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோடா. காலைல இருந்து உன்கிட்ட பேசக்கூட எனக்கு டைம் கிடைக்கல.

என்ன பார்த்தா உனக்கு பாவமா இல்லையா. ஒரு ஒரே ஒரு மணி நேரம் தான்டா. அங்க போய் பசங்கல விட்டுட்டு நான் உடனே வந்திடுறேன்.

உன் பிரண்ட்ஸ் கிளம்பிட்டா போக சொல்லுடா. நான் உன்னை கரெக்ட் டைம்கு ஹாஸ்டல்ல சேர்த்திடுறேன்" என ராம் தேவியின் கையை பிடித்து கொண்டு கெஞ்ச உருகி விட்டாள் வசுந்தரா தேவி.

"சரி ராம். நான் வெயிட் பண்றேன். பட் நீங்க சீக்கிரம் வரனும். இல்ல நான் கிளம்பிடுவேன்" என வசுந்தரா செல்ல மிரட்டல் விட

"தேங்க்யூ தேவிமா. போய்ட்டு உடனே வந்திடுறேன் செல்லம்" என்று உற்சாகமாக பேசிய ராம் அவளின் கன்னத்தை செல்லமாக தட்டிவிட்டு, அவன் நண்பர்களை அழைத்து கொண்டு ஹோட்டலுக்கு சென்றுவிட்டான்.

வசுந்தரா தன் தோழிகளை அழைத்து தான் வர நேரம் ஆகும், ராமே தன்னை கொண்டு வந்து விடுவதாக கூறியதையும் எடுத்து சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள்.

"வசுந்தரா சீக்கிரமே வந்திடுடி. ரொம்ப லேட் பண்ணாத. வார்டன் உள்ள விடமாட்டாங்க. அப்புறம் கொஞ்சம் பத்திரமா இரு.

நான் என்ன சொல்றேன்னு புரியுதா" என செல்லும் முன் அவள் தோழி ராகினியும் அறிவுரை வழங்கியே சென்றாள்.

"சரி" என வெட்கத்துடன் ஒத்துக் கொண்ட வசுந்தராவும், ராம் வரும் வரை நேரத்தை நெட்டி தள்ள அந்த வீட்டை மற்றும் வீட்டை சுற்றி இருந்த தோட்டத்தை மீண்டும் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.

இப்படியே இரண்டு மணி நேரம் சென்றும் ராம் வரவில்லை. கடுப்பான வசுந்தரா 'இவரை என்ன இன்னும் காணோம்.

இப்படியே போனா வார்டன் என்னை கேட் வெளியவே நிறுத்தி வச்சிடுவாங்க. சரி நாம கிளம்பலாம்' என்று தன் பையை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.

அவள் வாசல்படியை தான்டி வெளியே வரும் நேரம் சரியாக ராமின்‌ காரும் வீட்டின் உள்ளே வந்தது. அதை கண்டு நிம்மதியடைந்த வசுந்தரா தானே அந்த காரை நெருங்கினாள்.

ஆனால் காரின் உள்ளே இருந்து வெளிவந்த ராமோ தன் தலையை கையில் தாங்கியபடி கீழே இறங்கினான்.

அவன் சிறிது தள்ளாடியபடி வசுந்தராவை நெருங்க, ராமுக்கு ஏதோ உடல்நிலை சரியில்லை என புரிந்துக் கொண்டவள் அவள் கீழே விழும் முன் தன் கையில் தாங்கி கொண்டாள்.

"என்னாச்சு ராம். ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" ராஜாராமை கையால் தாங்கியபடி அவன் அறைக்கு வந்துவிட்டாள் வசுந்தரா.

"தேவி....மா" என்ற ராமின்‌ குளறலான குரலை கேட்டு, அது ஏன் இப்படி வருகிறது என உணர்ந்த வசுந்தரா அதிர்ந்துவிட்டாள்.

"ராம் குடிச்சிருக்கீங்கலா?" அதிர்வாய் வசுந்தரா கேட்க

"இல்ல தேவிமா. என் பிரண்ட்ஸ் அவனுங்க எல்லாம் சேர்ந்து இப்படி பண்ணிட்டாங்கடி. என்னோட கூல் டிரிங்க்ஸ்ல சரக்க மிக்ஸ் பண்ணி தந்திட்டாங்க. நானா குடிக்கலை செல்லம்"

ராஜாராம் கூறியதை வைத்து இது எல்லாம் ராஜாராமின் நண்பர்களின் வேலை என புரிந்து கொண்டாள் வசுந்தரா.

"என் செல்லம்டி நீ. தேவி உன்னை நான் எவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா தங்கம். நீதான் என்னோட உயிரு. என்னை பத்தி தெரியும்ல டா. நான் இதுவரை குடிச்சதே இல்ல தெரியுமா.

ஆனா என்னோட ஃபிரண்ட்ஸ் இப்படி எல்லாம் பண்ணிட்டானுங்க சாரிடி. அப்புறம் இன்னொரு விஷயம்டா. நான் இதுவரை என் பர்த்டேவ அப்பா இல்லாம செலிபரேட் செஞ்சதே இல்லடி.

ஆனா உனக்காக எல்லாத்தையும் உனக்காக மட்டும் தூக்கி போட்டுட்டு இந்த வருஷம் செலிபரேட் பண்ண வந்துட்டேன்டி"

தெரியாத்தனமாக குடித்திருந்தாலும் ராம் குடிபோதையில் தன் மனதில் இருந்ததை வசுந்தராவிடம் கொட்டினான்.

ராம் பேச பேச வசுந்தராவின் கன்னங்கள் சிவந்து விட்டது. அப்படியே மனது ஜிவ்வென்று வானில் பறப்பது போல் இருந்தது.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென ராம் 'வாந்தி வருகிறது' என்பது போல் செய்கை செய்ய,

'ஐயையோ' என பதறிய வசுந்தரா அவனை அவசரமாக இழுத்து பாத்ரூமிற்குள் சென்றாள். சிறது நேரத்திலே வயிற்றில் இருந்தது அனைத்தும் வெளியே வந்துவிட தண்ணீர் குழாயை திறந்தாள் வசுந்தரா.

தண்ணீர் குழாய்க்கு பதில் ஷவரை வசுந்தரா திறந்து விட்டுவிட, தண்ணீர் இருவர் மேலும் பூமாலை பொழிந்தது. ராமை ஒரு பக்கம் தாங்கியபடி ஷவரை அணைக்க முடியாமல் வசுந்தரா திணறி விட்டாள்.

ஆனால் அவள் ஷவரை அணைக்கும் நேரம் இருவரையும் தண்ணீர் தொப்பலாகவே நனைத்திருந்தது.


ஒருவழியாக பைப்பை நிறுத்தி, அவனை மீண்டும் அறைக்குள் அழைத்து வந்தாள்.

அதில் ராமின் போதை பாதி தெளிந்திட, அறையினுள் இருந்த ஏ.சியின் உபயத்தால் போதை இருந்த இடத்தை தற்போது குளிர் ஆக்கிரமித்துவிட்டது.

"சாரிடி செல்லம். நான் இப்ப குடிச்சிட்டு வந்து உன்னை ரொம்ப கஷ்டபடுத்துறேன்ல. என்னை அடிச்சிடுடி" என அழுக தொடங்க

"ஐயோ கொஞ்ச நேரம் வாயை மூடுங்க ராம்" என கடுப்பில் கத்தியே விட்டாள் வசுந்தரா.

"தேவி குளிருதுடி" என ராம் தற்போது நடுக்கத்துடன் கூற, வசுந்தரா எதுவும் கூறவில்லை. அதுமட்டுமே வித்தியாசம்.

ஏற்கனவே தண்ணீரில் நனைந்தது தற்போது ஏ.சியில் நிற்பது என அவளுக்குள்ளும் குளிர் பரவியது.

"இதையெல்லாம் குடிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும். ஒரு கூல் டிரிங்க்ஸ்கும் சரக்குக்கும் வித்தியாசம் தெரியாம குடிச்சிட்டு வந்த நீங்க பேசக்கூடாது"

வசுந்தராவும் முடிந்தளவு தன் கடுப்பை காண்பித்து "இருங்க ராம் டவல் எடுக்கிறேன். இங்க உக்காருங்க" என மெத்தையில் அவனை அமர வைத்து கபோர்டில் டவளை துளாவினாள்.

ராஜாராமின் பிறந்தநாள் என்பதால் புடவை அணிந்து சிறப்பாக தன்னை அலங்கரித்து வந்திருந்தாள் வசுந்தரா.

நீரில் நின்றது ராம் எக்கு தப்பாக அவள் மீது சாய்ந்தபடி அறை வரை வந்தது என அனைத்தும் சேர்த்து அவள் ஆடையை அலங்கோலமாக்கி இருந்தது.

அவள் கபோர்டில் துண்டை தேடும் நேரம் எதேச்சையாக அவளை திரும்பி பார்த்த ராமிற்கு அவள் இடை பளிச்சென்று தெரிய, அவன் மூலை எக்குத்தப்பாக யோசித்து வைத்தது.

ஏற்கனவே தலையில் ஏறியிருந்த போதை, அந்த மாலை நேர ஏகாந்தம் மற்றும் அறையில் நிலவிய குளிர் என ஏதோ ஒன்றோ இல்லை மொத்தமும் சேர்ந்தோ ராமை நன்றாகவே உசுப்பியது என்பது தான் உண்மை.

கபோர்டினுள் கையை விட்டிருந்த வசுந்தராவை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான் ராம்.

"என்னடி செல்லம் இது இவ்ளோ வழுவழுன்னு இருக்க" என்று அவள் இடையை வருடியவாறே கேட்க அதிர்ந்து போனாள் வசுந்தரா.

அப்போது தான் அவள் இருக்கும் நிலையும் தாங்கள் மட்டுமே இருக்கும் தனிமையும் அவளுக்கு புரிந்தது. அவள் தோழி ராகினி கூறிய வார்த்தைகள் அவள் காதில் மீண்டும் விழ

'இப்போ என்ன செய்ய' என அந்த சூழ்நிலை சமாளிக்க தெரியாது நெளிந்தாள் வசுந்தரா. அது மேலும் ராமே உசுப்பிவிடவே செய்தது.

"இது தப்பு ராம். கல்யாணத்துக்கு முன்ன இது வேணாங்க" என நமத்துப்போன குரலில் கூற "எனக்கு நீ வேணுமே செல்லம்" என ராம் அவளுக்கு மேல் உருகினான்.

அதற்கு மேல் யார் கெஞ்சினார்கள் யார் மிஞ்சினார்கள் என தெரியாத அளவு திகட்ட திகட்ட ஒரு கூடல் நடந்துவிட்டது அந்த காதலர்களுக்குள்.

அன்று வசுந்தரா அவளின் ஹாஸ்டலுக்கும் செல்லவில்லை. அடுத்த நாள் காலை எழுந்த பின்னரே என்ன நடந்தது என ராமிற்கு நினைவு வந்தது.

அதற்கு பிறகு தவறை புரிந்து யாரை நோவது என உணர்ந்த ராம் சிறிது நேரம் நன்றாக சிந்தித்து ஒரு முடிவை எடுத்தான்.

நிகழ்ந்தவற்றை எண்ணி அழுதபடி இருந்த வசுந்தராவை ஆதரவாக அணைத்த ராம்

"தேவிமா அழாதடி. கஷ்டமா இருக்கு‌. நாம தப்பு பண்ணிட்டோம் தான். ஆனா அதை எப்படி சரி பண்ணனும்னு எனக்கு தெரியும்டி" என்ற ராம் தான் எண்ணியதை கூறினான்.

அழுத விழிகளுடன் 'என்ன' என கேள்வியாக வசுந்தரா பார்க்க, அவள் விழி நீரை துடைத்தபடி "நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்" என முதல் அதிர்ச்சியை தந்தான்.

"அதுவும் இன்னைக்கே. என் பிரண்ட்ஸ் கிட்ட சொல்லி ஏதோவொரு கோவில்ல வச்சு நம்ம கல்யாணத்த நடத்திக்க போறோம். நம்ம பேமிலிக்குலாம் இதை பொறுமையா சொல்லிக்கலாம்" என தன் திட்டத்தை கூறினான் ராம்.

இதற்கு மேல் திருமணம் செய்யாமல் எப்படி. அதுமட்டும் இல்லாமல் தவறு நடந்தும் தன்னை விலக்காது இருக்கும் ராம் தனக்கு வேண்டும் என யோசித்த வசுந்தராவும் அதற்கு சம்மதித்தாள்.

அதன்பின் ராமின் நண்பர்கள் உதவியோடு மருதமலை முருகன் கோவிலில் வைத்து ராஜாராம் வசுந்தரா தேவியின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது.

தன் தந்தை மற்றும் தமையனிடம் 'விடுதி உணவு சேரவில்லை. அதனால் தன் தோழியோடு வெளியே வீடெடுத்து தங்கிக் கொள்கிறேன்' என்று பொய் உரைத்துவிட்டு ராமுடன் தன் வாழ்வை துவங்கிளாள் வசுந்தரா.

ராஜராமிற்கு கோயம்புத்தூரில் வேலை ஏற்கனவே முடிந்துவிட்டது. வசுந்தராவிற்காக தான் வந்துக் கொண்டிருந்தான்.

இப்போது வேலை திருச்சியில் என்றிருக்க வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்துவிடுவான் ராம். வசுந்தரா தன் வீட்டினரிடம் கூறியபடி அவள் தோழி ராகினியோடு தான் ராம் வீட்டில் தங்கியிருந்தாள்.

ஆனால் வார இறுதியில் ராம் வரும்போது இயல்பான கணவன் மனைவியாக தான் வாழ்ந்து வந்தனர்.

அப்படி ஒருமுறை ராம் திருச்சி சென்றவன் ஒரு மாதம் ஆகியும் திரும்பி வரவில்லை. வேலை அவனை அவ்வளவு நெருக்கி பிடித்தது‌.

இதனாலையே இருவரும் தங்கள் திருமணத்தை அவர்களின் வீட்டிற்கு சொல்லமல் தள்ளிப்போட்டபடி இருந்தனர். கடைசிவரை சொல்ல முடியாமலும் போனது.

போனில் பேசிக் கொண்டு தான் வசுந்தரா நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தாள். அன்று கல்லூரி விட்டு வெளியே வந்த வசுந்தராவிற்கு தனக்காக கல்லூரியின் எதிரே காத்திருந்த ராமை கண்டு மகிழ்ச்சி பொங்கியது.

ராம் அவளை பார்த்து புன்னகைத்தபடி சாலையை கடக்க அப்போது தான் அந்த விபரீதமும் நடந்தது.

கண் இமைக்கும் நிமிடத்தில் அவள் கண் முன்னே நடந்து வந்துக் கொண்டிருந்த ராமை ஒரு மினி லாரி அடித்து தூக்கி எறிய, அவனை ரத்த வெள்ளத்தில் பார்த்த வசுந்தராவும் மயங்கி சரிந்தாள்.


-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 31

விபத்தில் அடிபட்ட ராஜாராமையும் மயங்கி விழுந்த வசுந்தராவையும் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். ஆனால் விதி அங்கே சதி செய்துவிட்டது.

ஆம் ராஜாராம் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்க, வசுந்தரா வேறொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

அதில் கொடுமை என்னவென்றால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலே ராஜாராமின் உயிர் அவர் உடலை விட்டு பிரிந்து சென்றிருந்தது.

அதை அறியாத வசுந்தராவோ இன்னும் மயக்கத்திலேயே இருக்க, அதற்குள் ராஜாராமின் அடையாள அட்டையை வைத்து அவன் வீட்டிற்கு தகவல் சென்றுவிட்டது.

சென்னையில் அருணாசலம் தன் செல்ல மகன் இறந்த செய்தியை கேட்டு தலையில் இடி விழுந்தது போல் அமர்ந்துவிட்டார்.

சின்ன மகனும் அங்கே இல்லாது போயிருக்க, கதறி அழுத மகள்கள் இருவரையும் தேற்றி அதன்பின் ராஜாராமின் உடலை கோயம்புத்தூருக்கு சென்று பெற்று வந்து அனைத்து சடங்குகளையும் முடித்தார் அருணாசலம் தனியாளாக.

இப்படி இருக்கும் போது அவருக்கு வசுந்தரா என்றொரு பெண் தன் மகன் வாழ்வில் வந்தது தெரியாமலே போனது.

தெரியப்படுத்த வேண்டிய வசுந்தராவோ ராஜாராமின் உடல் எரியூட்டப்பட்ட நேரத்திற்கு பின்னரே கண்விழித்து பார்த்தாள். அதாவது ராஜாராம் இறந்து முழுதாக ஒரு நாள் சென்றபின்.

அவனின் விபத்தை கண்டதற்கே ஒரு நாள் மயக்கத்தில் ஆழ்ந்திருந்த வசுந்தராவிற்கு ராஜாராமின் உடலை கூட இனி காண முடியாது என தெரிந்தால் என்ன ஆகுமோ என அவள் நண்பர்கள் தோழிகள் பயந்து போயினர்.

அவர்கள் பயந்தபடியே கண் விழித்த வசுந்தரா "நான் என் ராம பார்க்கனும்" என அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள்.

அவளை சமாதானம் செய்வதற்கு அங்கிருந்த யாராலும் முடியாமல் போனது‌. கொஞ்ச நேரம் சமாளித்த தோழிகள் தங்கள் மனதை கல் ஆக்கிக் கொண்டு உண்மையை போட்டு உடைத்துவிட்டனர்.

"உன்னோட ராம் இந்த உலகத்தை விட்டு போய் ஒரு நாள் ஆச்சுடி" என வசுந்தராவின் தோழி ராகினியும் அழுதபடி சொல்லிவிட்டாள்.

"ஏய் ஏன்டி பொய் சொல்ற. என் ராம் என்னை விட்டுட்டு போக மாட்டார். நீங்க எல்லாரும் சேர்ந்து அவரை என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்குறீங்க" என கத்தியபடி அவள் தோழிகளை போட்டு அடித்தாள் வசுந்தரா.

ஒரு கட்டத்தில் ராம் இந்த உலகில் இல்லை என்பதை உணர்ந்த வசுந்தரா

"என்னை விடுங்க நான் என் ராம் கிட்ட போறேன். நானும் செத்துப்போறேன்‌. என்னால இனிமே வாழவே முடியாது" என கதறியபடி ஓட முயன்ற வசுந்தராவை பிடித்து வைத்த தோழிகளுக்கும் அழுகை தான் வந்தது‌.

இவ்வளவு சிறிய வயதில் கணவனை இழந்து அவள் படும் வேதனையை தோழிகளால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

அவளது ரகளையில் அவளை அடக்கமுடியாது தோழிகள் திணற, அங்கே கேட்ட சத்தத்தில் அந்த அறைக்கு வந்தாள் வசுந்தராவிற்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் சுபத்ரா.

"என்னம்மா என்ன பிரச்சினை?" என்று கேட்ட சுபத்ராவிடம்

"என்னை கொன்னுடுங்க. நான் செத்துப் போறேன். நான் என் ராம் இருக்க இடத்துக்கே போறேன். எனக்கு உயிரோட இருக்கவே பிடிக்கலை" என கதறினாள் வசுந்தரா.

வசுந்தராவின் நிலை அவளை பார்த்த சுபத்ராவிற்கே வேதனையை தந்தது. சில மாதங்களுக்கு முன் தான் வசுந்தராவிற்கு திருமணம் ஆகி இருந்ததை தோழிகள் கூறியிருந்தனர்.

அதோடு அவள் கண் முன்னே கணவனை இழந்து தவிப்பதை காணும் போது மனம் வலிப்பதை தவிர்க்க முடியவில்லை.

"இங்க பாருமா உன் மனநிலை எனக்கு நல்லா புரியுது. ஆனா நீ சாகனும்னு நினைக்கிறது ரொம்ப தப்புமா"

"இல்ல என்னால என் ராம் இல்லாத உலகத்தில ஒரு நிமிஷம் கூட வாழ முடியலை. பிளீஸ் டாக்டர் விஷ ஊசி இருந்தா போட்டு என்னை கொன்னுருங்க" சுபத்ரா என்ன சொன்னாலும் செத்துப் போகிறேன் என்றே நின்றாள் வசுந்தரா.

"இங்க பாருங்க வசுந்தரா. நீங்க சாகலாம். ஆனா உங்களால இன்னொரு உயிர் போகவே கூடாது. நீங்க செத்தா போகப்போறது ஒரு உயிர் இல்ல ரெண்டு உயிர்"

என சுபத்ரா கோபத்தில் கத்த, வசுந்தரா அவர் என்ன சொன்னார் என புரியாது முழித்தாள்.

வசுந்தரா குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு புரியாமல் முழிப்பதை கண்டு இரக்கம் சுரந்தது சுபத்ராவிற்கு. எனவே பொறுமையாக அவள் நிலையை எடுத்துக் கூறினாள்.

"இங்க பாருமா நீ ரொம்ப சின்ன பொண்ணா இருக்க. ஆனாலும் நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.

உன் வயித்துல ஒரு குட்டி பாப்பா வளருது. அது இப்போ நாலு மாச கருவா உன் வயித்துக்குள்ள இருக்கு. நீ அந்த குழந்தைய நல்லபடியா பெத்து எடுத்து வளர்க்க வேணாமா"

சுபத்ராவின் வார்த்தைகளில் "என் ராம் பாப்பா என் வயித்துல இருக்கா?" என்று அப்பாவியாய் கேட்டு வைக்க, சுபத்ராவிற்கு மேலும் கஷ்டமாகி போனது.

எனவே 'ஆம்' என தலை அசைத்தாள். உடனே குனிந்து தன் வயிற்றை தடவி பார்த்த வசுந்தரா "என் ராமோட பாப்பா" என்று வாய் விட்டே சொல்லிக் கொண்டாள்‌.

"என் ராமோட பாப்பா டாக்டர்" என அழுதபடி வசுந்தரா கூறுவதை கண்டு அவள் தோழிகள் இன்னும் அழுதனர். சிறு வயதில் ஒரு குழந்தையோடு கணவனும் இல்லாமல் தங்கள் தோழி இனி என்ன செய்ய போகிறாளோ என எல்லாவற்றையும் எண்ணி அழுதனர்.

"ஐயோ என் ராம்! என் குழந்தை!" என அங்கிருந்த நாட்கள் முழுவதும் அழுதுக் கொண்டே இருந்தாள் வசுந்தரா.

அவளை காணும் போது தன் சிறு தங்கையை போல உணர்ந்த சுபத்ரா தன்னாலான ஆறுதலை மறக்காமல் தந்தாள்.

அதன்பின் வசுந்தரா கல்லாரி செல்லவில்லை. ராமுடன் அவள் இருந்த வீட்டில் தோழியுடன் தங்கிக் கொண்டாள். ராம் அந்த வீட்டை வாங்கும் போது என்ன நினைத்தானோ அதை வசுந்தராவின் பெயரிலே வாங்கி இருந்தான்.

அருணாசலத்திற்கு கூட இது தெரியாது. அதேபோல் வசுந்தரா இங்கே நடந்ததை எல்லாம் தன் தந்தை அண்ணன் என இருவருக்கும் தெரியப்படுத்தவே இல்லை.

தன் ராமின் நினைவோடு அவன் குழந்தையை சுபத்ராவின் உதவியோடு பார்த்துக் கொண்டாள்‌.

அப்படி ஒரு நாள் மருத்துவமனைக்கு செல்லும் போது யாரோ ஒரு பெண் வசுந்தராவை பார்த்து

"அந்த குழந்தை வந்த நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். அதான் அது வந்த உடனே அப்பாவ முழுங்கிடுச்சு" என்று இரக்கமே இல்லாமல் பேச எல்லாவற்றையும் வசுந்தரா கேட்டு விட்டாள்.

அதிலிருந்து 'இந்த குழந்தை தான் ராம் இறக்க காரணமா' என தேவையில்லாமல் யோசித்து வைப்பாள்.

சில நேரம் நன்றாக இருப்பவள் பல நேரம் ராமை எண்ணி வெறிப்புடித்தவள் போல் நடந்துக் கொள்வாள். அந்த நேரம் எல்லாம் "இந்த குழந்தை எனக்கு வேணாம்" என கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாள்.

அப்போது எல்லாம் சுபத்ராவே அவளை தேற்றி சமாதானம் செய்வாள். வசுந்தராவே சிறு குழந்தை போல் நடந்து கொள்ள அவள் மீதும் அவள் குழந்தை மீதும் தானாகவே ஒரு பற்று வந்துவிட்டது சுபத்ராவிற்கு.

அதன்பின் அதை ராஜசேகரிடமும் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள்‌. இப்படியே வசுந்தராவின் நாட்கள் குழப்பத்துடன் செல்ல அவளின் பிரசவ நாளும் வந்தது‌.

அதே நேரம் இன்னொரு பெண்ணும் அதே மருத்துவமனையில் பிரசவ வலியில் வந்து சேர்ந்தாள்‌. அங்கே தான் விதியின் அடுத்த விளையாட்டு ஆரமபமானது.

இவ்வளவு நாட்கள் ராகவன் விஸ்வநாதனிடம் கூறாத உண்மையை அன்று வசுந்தரா அழைத்து கூறானாள் பயத்துடன்.

அவர்கள் அதிர்ந்து போய் அங்கே வந்த நேரம் அவளை திட்டக்கூட முடியாதபடி அவள் அங்கு பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்‌.

பிரசவம் பார்ப்பதற்கு சுபத்ராவிற்கு தகவல் சென்றது‌. அவளும் விரைந்து வந்து சேர்ந்தாள். அந்த இரவு வேளையில் வசுந்தராவின் வலி கதறல்கள் என ரணகளமாய் நேரம் செல்ல,

வசந்தரா அழகானதொரு ஆண் மகவை பெற்றெடுத்தாள். அதை மகிழ்வுடன் சுபத்ரா அவளிடம் காட்டி சென்றாள்.

அதன்பின் என்னவானதோ தெரியவில்லை, காலை வந்த விஸ்வநாதன் "உனக்கு பிறந்த குழந்தை இறந்து போச்சுமா" என கூறினார்.

இதற்கு மேலும் ஆண்டவன் எதற்கு என்னை சோதிக்கிறான் என்ற விரக்தி நிலைக்கே சென்ற வசுந்தரா, அந்த குழந்தையை 'நீயும் என்னை விட்டு போய்ட்டியா' என உணர்வற்று பார்த்தார்.

அங்கே கோயம்புத்தூரில் குழந்தையை அடக்கம் செய்ய என தடுமாறும் போது தான் கணபதியின் நட்பு விஸ்வநாதனுக்கு கிடைத்தது.

அவர் உதவியுடன் குழந்தையை அடக்கம் செய்தவர்கள் கோயம்புத்தூரை மொத்தமாக காலி செய்துவிட்டு சென்னை சென்றனர்.

அதன்பின் தான் கணபதி அந்த குடும்பத்தினருடன் நெருங்கி பழகினார். எப்போதும் சூன்யத்தையே வெறித்தபடி இருப்பார் வசுந்தரா.

அதை கண்டு ராகவன் விஸ்வநாதனிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். தன் மகள் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் தன் மகன் அவளை வெளியூருக்கு படிக்க அனுப்பியதே என்று நம்பினார்.

தன் வாழ்வில் என்ன நடந்தது என வசுந்தராவும் தன் வீட்டினரிடம் கூறவில்லை. ஒருமாதிரி நாட்கள் கனமாகவே நகர்ந்தது.

இரண்டு மூன்று வருடங்கள் இப்படியே செல்ல இதற்கு ஒரு முடிவு வேண்டும் என்று எண்ணிய விஸ்வநாதன் தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

அதை பற்றி எண்ணும் போதே ஏனோ கணபதி தான் அவரின் நினைவிற்கு வந்தார்‌. இந்த சில வருடங்களில் அவர் விஸ்வநாதனுடன் துணைக்கு நின்றதால் இருக்கலாம்.

வசுந்தராவிடம் செத்து விடுவேன் என பலவாறு மிரட்டி உண்ணாவிரதம் இருந்து அவரை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார் விஸ்வநாதன்.

கணபதியை பிடிக்காமல் திருமணம் செய்த வசுந்தராவை அவர் தொந்தரவு செய்யவில்லை. மாறாக காத்திருக்க தொடங்கினார்.

ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல முழுதாக நான்கு வருடங்கள் மனிதர் வசுந்தராவிற்காய் காத்திருந்தார். அவரை கண்டு ஆச்சரியமடைந்த வசுந்தரா அதன்பின்னரே அவரின் மனைவியாக மாறினார்.

பின்னர் சுமூகமாக சென்ற வசுந்தராவின் வாழ்வில் நுழைந்தான் ஹர்ஷா. அன்று ஒருநாள் துணிக்கடையில் ஹர்ஷாவை கண்டு ராஜாராமோ என ஒரு நிமிடம் அதிர்ந்தே விட்டார் வசுந்தரா.

ஆனால் அதற்கு வாய்பில்லை என உணர்ந்த போது ஒருவேளை தான் பெற்றே பிள்ளையாக இருக்குமோ என சந்தேகித்தார்.

ஹர்ஷாவை மீண்டும் ஒருமுறை பார்க்கமாட்டோமா என்றிருந்த வசுந்தராவிற்கு அனுவின் மூலம் அவன் அருகே இருக்கும் சந்தோஷம் கிடைத்தது.

"அன்னைக்கு திதி தந்தப்போ என் ராமோட போட்டோ பாத்து தான் இவன் என்னோட பையன்னு சொன்னேன். டி‌.என்.ஏ டெஸ்ட் அது இதுன்னு நீங்க சொல்லவும் நானும் அப்போ குழம்பிட்டேன்.

ஆனா அவர் பிள்ளை இந்த வீட்டு ரத்தம் தான்னு எனக்கு சுத்தமா மறந்துப்போச்சு"

வசுந்தராவின் பேச்சை கேட்ட எல்லோருக்கும் வலி வேதனை தான் மிஞ்சியது. அருணாசலத்திற்கு தன் மகன் ஒரு மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து தான் இறந்தான் என மகிழ்வதா

இல்லை அவனால் அந்த வாழ்க்கையை காலம் முழுவதும் வாழ முடியாது போனதை எண்ணி நொந்து கொள்வதா என தெரியவில்லை.

தன் தங்கை வாழ்வில் நடந்ததை முதன்முறையாக கேட்ட விஸ்வநாதன் மனதிற்குள் உடைந்து விட்டார். வசுந்தராவிற்கு ஆறுதலாக இருக்கும் நேரத்தில் தான் கோபத்தை காட்டியது அவரை இன்னும் பாதித்தது.

அப்போது "ஒரு நிமிஷம்" என மீண்டும் கதிர் அனைவரையும் தன்னை பார்க்க செய்தான்.

"இந்த நேரத்தில உங்களை எல்லாம் டிஸ்டர்ப் பண்றேன்னு நினைக்காதீங்க. ஆனா இதை இப்பவே பேசி முடிக்கனும்" என்ற கதிர்

"மிஸ்டர்.கணபதி ராம் அப்படியே நீங்க ஏன் ஹர்ஷாவை கொல்ல பாத்தீங்கன்னும், ராஜாராம் அங்கிள ஏன் கொன்னீங்கனும் சொல்லிடுங்க" என கூறி அனைவரின் தலையிலும் மேலும் ஒரு இடியை இறக்கினான்.

"என்ன கதிர் சொல்றீங்க?" என்ற விக்ரமிற்கே பேச்சு வரவில்லை என்றால் மற்றவர்கள் நிலையை சொல்லவும் வேண்டுமா.

"இருங்க விக்ரம். நான் இங்க சொல்ல ஒன்னுமே இல்ல. சம்மந்தப்பட்ட எல்லாரையும் எதுக்கு இங்க வரவச்சிருக்கோம். அவங்கள அவங்க வாயாலேயே சொல்ல வைக்க தானே" என்று விக்ரமிடம் பேசியவன்

"நீங்க சொல்லுங்க கணபதி சார். உங்க வீர தீர சாகசங்களை" நக்கலாகவே கேட்டு வைத்தான் கதிர்வேல்‌.

ஆனால் கணபதி எதுவும் பேசாமல் அமைதி காத்தார். "என்ன கணபதி சார் பேசாம அமைதியா இருந்தா எப்படி. நீங்க ராஜாராம் அங்கிள என்ன என்ன செஞ்சீங்க, அப்புறம் எதுக்கு ஹர்ஷாவ கொல்ற அளவுக்கு போனீங்க.

இதை எல்லாத்தையும் அப்படியே பாய்ண்ட் பாய்ண்டா எடுத்து வைங்க பாக்கலாம்".

"தம்பி நீ என்னப்பா சொல்ற. இவரு எதுக்கு என் பையன கொல்லனும். என் பேரனை கொல்ல பாக்கனும். கொஞ்சம் புரியிர மாதிரி சொல்லுப்பா"

அருணாசலம் கதிரின் பேச்சில் அதிர்ந்து போய் அவனிடம் கிட்டத்தட்ட கெஞ்சினார்‌. கதிருக்கு எனன்வோ போல் ஆகிவிட "இருங்க தாத்தா சொல்றேன்" என்றான்.

"முதல்ல ஹர்ஷா விஷயத்தில என்ன நடந்ததுன்னா" என ஆரம்பித்தவன் ஹர்ஷாவிற்கு நடந்த அனைத்தையும் கூறினான்.

"இது உங்களுக்கு அதிர்ச்சியா தான் இருக்கும். ஆனா நான் சொன்னது உண்மை தான். வேதாசலம் அங்கிள், ராஜசேகர் அங்கிள் அப்புறம் ஹர்ஷா எல்லாருமே வந்து என்கிட்ட ஒரு கம்ப்ளைன்ட் தந்திட்டு போனாங்க.

ஆரம்பிக்கிரப்ப கூட இது இவ்ளோ பெரிய கேஸ்னு எனக்கு தெரியலை" என்ற கதிர் தான் சேகரித்த தகவலை கூறினான்.

"எங்கிருந்து இந்த கேஸை ஆரம்பிக்கிறதுனு நான் யோசிசிட்டு இருந்தப்ப தான் ஹர்ஷாவே அவர் ஃபிரண்ட் டாக்டர் அகிலன எனக்கு இன்ட்ரோ பண்ணிவிட்டாரு"

டாக்டர் அகிலன் என்ற பெயரை கேட்டு ஜெர்க் ஆகி திரும்பி பார்த்த கணபதியை ஒரு நக்கல் சிரிப்புடன் பார்த்த கதிர், ஏதோ ஒரு மாத்திரை டப்பாவை எடுத்து காட்டி

"இது என்ன டேப்லெட்னு தெரியுதா கணபதி ராம் சார்?" என்றான்.

கணபதி எதுவும் பேசாமலே இருக்க கதிர் தொடர்ந்தான். "நீங்க டாக்டர் அகிலன் கிட்ட கேட்டு ஹர்ஷாவுக்காக வாங்கி தந்த ஸ்லோ பாய்சன்‌. இப்ப ஞாபகம் வருதா?"

ஹர்ஷாவுக்கு ஸ்லோ பாய்சன் தரும் அளவு என்ன வன்மம் இவருக்கு என அனைவரும் அதிர்ந்து போய் பார்க்க ஹர்ஷா இது தனக்கு தெரிய வந்த நாளை எண்ணி பார்த்தான்.

டாக்டர் அகிலன் என்னதான் ஹர்ஷாவின் மீது கோபத்தில் இருந்தாலும், அவன் என்றுமே ஒரு நல்ல மருத்துவரே. அவனால் ஒரு உயிர் போவதை என்றும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டான்.

அவன் ஹர்ஷாவின் மீதுள்ள கோபத்தை போக்கிக் கொள்ள ஹர்ஷாவை அவமானப்படுத்த மட்டுமே எண்ணியிருந்தான். அதனாலே அந்த போதை மாத்திரையை தந்துவிட்டான்.

ஆனால் கணபதியின் ஆட்கள் ஹர்ஷாவின் மருத்துவமனையில் மாத்திரையை மாற்றி வைத்து மக்கள் உயிருடன் விளையாட பார்த்ததில் அதிர்ந்து போய் விட்டான்.

எனவே இனிமேல் இவர்களுடன் சேரக்கூடாது என முடிவு செய்த நிலையில், கணபதியின் ஆட்கள் ஹர்ஷாவிற்கு கொடுக்க ஸ்லோ பாய்சன் கேட்டு வர பயங்கரமாக கோபம் கொண்டுவிட்டான்.

"ஒருவேளை தான் மறுத்தால் வேறு யாரிடமாவது விஷத்தை வாங்கி ஹர்ஷாவிற்கு தந்துவிட்டால் என்ன செய்வது" என யோசித்த அகிலன் அவர்களிடம் 'சிறிது யோசிக்க நேரம் வேண்டும்' என்று அவகாசம் கேட்டான் புத்திசாலித்தனமாக.

அவர்கள் சென்றவுடன் அகிலன் செய்த முதல் வேலை ஹர்ஷாவை அழைத்தது தான். நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறிய அகிலன்

"உங்க மேல எனக்கு கோபம் இருந்தது ஹர்ஷா. நான் ஒத்துக்கிறேன். ஆனா நான் செஞ்சதும் தப்பு தான். அது எனக்கு இப்ப தான் புரியுது.

இந்த ஆளுங்க ரொம்ப மோசமானவனுங்க ஹர்ஷா. இதை அப்படியே போலீஸ்கிட்ட சொல்லிடலாம். நான் அப்ரூவராகி சாட்சி சொல்றேன்"

அகிலன் தந்த சுய வாக்குமூலத்தில் என்ன செய்வது என குழ்மபிய ஹர்ஷா அவனை அப்படியே கதிரிடம் கூட்டி சென்றுவிட்டான்.

அகிலன் கூறியதை கேட்ட கதிர் "நான் இன்வஸ்டிகேஷன் முடிக்கிற வரை நீங்க அவங்க கூட கான்டேக்ட்லையே இருங்க அகிலன்.

அதே சமயம் அவனுங்களுக்கு உங்க மேல சந்தேகம் வராத மாதிரியும் நடந்துக்கனும்" என்ற கதிர் வேறு மாத்திரைகளை தந்து அதை வைத்து அவர்களை நம்ப வைக்க கூறினான்.

அதை ஏற்றுக் கொண்ட அகிலனும் சத்து மாத்திரைகளை தந்து அந்த ஆட்களை ஏமாற்றினான். அந்த ஆட்களின் எண்களை கதிரிடம் பகிர்ந்தவன் அதன்பின் அவன் உண்டு அவன் வேலை உண்டென இருந்துக் கொண்டான்.

கதிர் அந்த எண்களை வைத்து கணபதியை பிடித்தார். ஒரு பக்கம் அந்த மாத்திரை இவர்கள் கம்பெனியில் உருவானது என விஸ்வநாதன் மேல் அவன் சந்தேகிருந்த நேரம் அது.

அந்த நேரம் அகிலன் தந்த எண்களை வைத்து பார்த்ததில் கணபதியை குற்றவாளி என முடிவு செய்து விட்டான் கதிர்வேல்‌.

"என்ன கணபதி ராம் சார் நான் சொன்ன விஷயமெல்லாம் கரெக்டா. எல்லாமே சொல்லிட்டேன். ஆனா உங்களுக்கு ஏன் ஹர்ஷா மேல. இவ்ளோ கோபம் கொலைவெறி?" என கேட்டு நிறுத்தினான்.

"என்ன சார் எதுவும் பேசாம இருந்தா நீங்க தப்பிச்சு போயிடலாம்னு நினைச்சிட்டு இருக்கீங்களா. அதுலாம் நடக்காது சார்.

அது இருக்கட்டும். சரி இந்த கதிர் எப்படி உங்க கதைக்குள்ள வந்தேன்னு இன்னும் நான் சொல்லவே இல்லையே. அதை முதல்ல சொல்லிடறேன்" என்றான்.

கதிர் ஹர்ஷாவிடம் பேச வேண்டும் என கூறிய அந்த நாள் இங்கே வசுந்தராவால் வந்த பிரச்சினையை வேதாசலம் கதிரிடம் பகிர்ந்துக் கொண்டார்.

அதை முதலில் கதிரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேநேரம் கணபதியை பற்றிய தகவலும் முழுதாக அவனுக்கு கிடைக்காமல் போனது.

ஆனால் இவர்கள் அனைவரையும் ஒன்றினைக்கும் ஒரே விஷயம் கோயம்புத்தூர் என புரிந்தது. அங்கே செல்லலாம் என முடிவெடுத்தான்.

அப்போது எதேச்சையாக அவன் பார்வை டேபிலின் மேல் இருந்த கணபதியின் போன் ஹிஸ்டரியில் விழ அதை எடுத்து பார்த்தான்.

அந்த விவரம் வந்த போதே அதை நன்கு ஆராய்ந்திருந்தான். சில மாதங்களாக கணபதி அடி ஆட்களுக்கு பேசி இருப்பது அதில் இருந்தது‌.

ஆனால் அதற்கு சில மாதங்களுக்கு முன் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியிடம் அவர் பேசி இருந்தார். அதை கதிர் அப்போது கவனித்தும் பெரிதாக எடுக்காமல் விட்டிருந்தான்.

ஆனால் தற்போது 'இவரு எதுக்கு டிடெக்டிவ் ஏஜன்சிக்கு கால் பண்ணி இருக்காரு? அதுவும் ஒரு மாசம் முழுசும்' என்ற சந்தேகம் வந்தது.

அந்த எண்ணை வைத்து அது எந்த டிடெக்டிவ் ஏஜென்சி என அறிந்துக் கொண்ட கதிர் தானே நேரில் சென்று அங்கே விசாரித்தான்.

அங்கே அவர்கள் தந்த பதிலின் மூலமே ஹர்ஷா யார் எதற்கு கணபதி அவனை கொல்ல பார்த்தார். அது மட்டும் இல்லாமல் ராஜாராமிற்கு என்னவாயிற்று என்பது முதற்கொண்டு தெரிந்தது.

அந்த டிடெக்டிவ் நிறுவன ஆட்கள் ஹர்ஷா யார் என கண்டறிய சென்று அவன் தந்தைக்கு என்னவானது என்று வரை கண்டுபிடித்து விட்டனர்.

கதிர் போலீஸ் அதிகாரி என்பதால் அவன் கேட்டவுடன் அனைத்து தகவல்களையும் தந்துவிட்டனர் டிடெக்டிவ் ஏஜென்சி ஆட்கள். அதில் இருப்பது சரிதானா என கதிர் தானும் கோயம்புத்தூர் சென்று பரிசோதித்தான்.

அங்கே அனைத்தும் உண்மை என அறிந்த கதிர் அடுத்த நாளே ஹர்ஷாவின் இல்லத்திற்கு வந்து இப்போது வரை பேசிக் கொண்டிருக்கிறான்.

"நீங்க ஹர்ஷா ராஜாராம் அங்கிளோட பையன் தானானு தெரிஞ்சுக்க டிடெக்டிவ் கிட்ட போனீங்க. ஆனா பாருங்க அதுவே உங்களுக்கு ஆப்பா வந்து நின்றுடுச்சு. ச்சுச்சு" என்று நக்கலாக பரிதாபப்பட்டான் கதிர்.

கணபதியோ தன்னால் இயன்ற அளவு பற்களை கடித்தபடி அமர்ந்திருந்தார்.

"என்ன சார் இப்ப நீங்க சொல்லப் போறீங்களா இல்ல நானே சொல்லட்டா?" என கதிர் நிறுத்த கணபதியே பேசினார்.

"ஆமா நான் தான் ஹர்ஷாவ கொல்ல ஆள் வச்சேன் போதுமா" என கத்தினார். தன் வேலை முடிந்தது என்பது போல் கதிர் அமைதி காத்தான்.

கதிர் பேசும் போது கூட கணபதியை ஏதோ தவறாக எண்ணிக் கொண்டு பேசுகிறான் என்றிருந்த வசுந்தரா வீட்டினரின் அதிர்ச்சிக்கு இப்போது அளவே இல்லை.

"ஆமா நான் தான் அவனை கொல்ல பார்த்தேன். நான் ஒத்துக்கிறேன். ஏன்னா அவன் அப்படியே அந்த ராஜாராம் மாதிரியே இருந்தான்‌. அதான் கொல்ல பார்த்தேன்‌" என்ற கணபதி வசுந்தராவை பார்த்து இத்தனை வருடம் அவர் மனதில் இருந்தவற்றை எல்லாம் கொட்டினார்.

"வசுமா நீ காலேஜ்கு முதல் நாள் வந்திருந்த ஞாபகம் இருக்கா. நீ மறந்திருப்ப ஆனா என்னால அதை மறக்க முடியாது. அவ்ளோ அழகா இருந்த.

உன்னை பார்த்த நாள்ல இருந்தே உன்னை நான் விரும்ப ஆர்மபிச்சேன். ஆனா நீ அந்த ராஜாராம் அவனை போய் லவ் பண்ணுற. எனக்கு எவ்ளோ கோபம் தெரியுமா.

உன் மனசுல எப்படியாவது இடம் பிடிக்கலாம்னு நானும் என்னென்னவோ செஞ்சேன். ஆனா நீ ராம் ராம்னு அவன் பின்னாலேயே சுத்துன. அதை கூட பொறுத்துகிட்டேன்.

ஆனா உன்னை அவனோட மாலையும் கழுத்துமா பார்த்தேன் பாரு. எனக்கு எவ்ளோ கோபம் வந்துச்சு தெரியுமா. அப்போ முடிவு செஞ்சேன் அவனை கொன்னாவது உன்னை கல்யாணம் பண்ணனும்னு.

அப்படி காத்திருக்கப்ப தான் ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்தது. அதான் உன் கண் முன்னாடியே லாரிய வச்சு தூக்குனேன். ஒரேதா போய்ட்டான்ல" என்ற கணபதியின் முகத்தில் இருந்த கொடூர சிரிப்பை பார்த்து அனைவருக்கும் சற்று பயம் கூட வந்தது‌.

"அப்புறம் தான் தெரிஞ்சது நீ கர்ப்பமா இருக்கன்னு. குழந்தைய அழிக்க முடியுமான்னு பாத்தேன். ஆனா அது உனக்கும் ஆபத்துன்னு தெரிஞ்சது.

அதான் அந்த குழந்தை பிறந்த உடனே கொல்லனும்னு ஹாஸ்பிடல்லையே காத்திருந்தேன். ஆனா எப்படியோ அந்த சுபத்ரா டாக்டர் இதை தெரிஞ்சுக்கிட்டு வேற ஒருத்திக்கு செத்து பிறந்த குழந்தைய உன்னோட குழ்நதைனு சொல்லி ஏமாத்தி இருக்கா. ச்சே..

இல்லனா அப்பவே இவனை கொன்னுருப்பேன்" என்ற கணபதியின் விழிகள் ஹர்ஷாவின் மீது அப்பட்டமாக வன்மத்தை காட்டியது.

"ஆறு வருஷம் வசுமா. முழுசா ஆறு வருஷம் உன் மனசு மாற காத்திருந்து நான் உன்னோட வாழ ஆர்மபிச்சேன். எல்லாம் நல்லா போன நேரம் இவன் வந்து நிக்கிறான்.

அப்படியே ராஜாராமை உரிச்சு வச்சு. எனக்கு எப்படி இருந்திருக்கும். அதான் அவனையும் கொன்னுட்டா நீ எனக்கு மட்டும் தானே. உன் காதல் எனக்கு மட்டுமே கிடைக்கும்ல"

கணபதி பேசி முடித்தும் ஹர்ஷாவை முறைத்து நிற்க, சுற்றி இருந்தவர்களுக்கு கணபதியை கண்டு கோபம் கோபமாக வந்தது.

"நீ விரும்புன பொண்ண கல்யாணம் பண்ண என் அண்ணன ஏன்டா கொன்ன" என ராஜசேகர் கோபத்தில் கணபதியின் சட்டையை பிடித்து கேட்டார்.

ஆனால் கணபதி அவரை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் நின்று வசுந்தராவை தான் பார்த்தார். வசுந்தராவோ மொத்தமாக உடைந்து போய் அமர்ந்திருந்தார்.

'என்னால் தானா. எல்லாமே என்னால் தானா‌. என் ராம் என்னை விட்டு போனது, என் பிள்ளை என்னைய விட்டு போக காரணம் எல்லாம் நான் தானா'

இது மட்டுமே அவர் மனதில் ஓடிக் கொண்டிருக்க கதிர் தந்த தகவலின் பேரில் அவன் டீம் ஆட்கள் வந்து சேர்ந்தனர் கணபதியை கைது செய்ய.

ஆனால் போகும் நேரம் கூட "வசுமா என்ன பாருடா. என் மேல தப்பு இல்ல. எல்லாம் அந்த ராம் மேல தான் தப்பு. அவன் எதுக்கு உன்னை லவ் பண்ணுனான். அதான் அவனை கொன்னேன்" என நியாயம் பேச

கணபதிக்கு மனநிலை தான் எதாவது பாதிப்படைந்து விட்டதா என மற்றவர்கள் பார்த்திருந்தனர். அவர் வசுந்தராவை அழைக்க அழைக்க போலீஸ் அவரை இழுத்து சென்றது.

ஆனால் வசுந்தரா கணபதியை திருப்பியும் பார்க்கவில்லை. அவர் மனதில் தன் ராமோடு பேசிக் கொண்டிருந்தார் போல்.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends😍😍

ரகுக் குல கர்ணா கதை இன்னும் ரெண்டு மூனு எபில முடிஞ்சிடும் நட்பூஸ்.

சோ படிச்சு பார்த்து உங்க likes and comments a கொஞ்சம் தட்டி விட்டுட்டு போங்க பா.🥰🥰

Bye friends💞💞
 
Top