All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "ரகுக் குல கர்ணா" - கதை திரி

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 5

"ஹாய் அத்தான்!! வாட் எ சர்ப்ரைஸ்! இன்னைக்கு ஈவ்னிங் வீட்ல இருக்கீங்க. எப்பவும் ஹாஸ்பிடல்ல தானே இந்த டைம் இருப்பீங்க. என்ன ஸ்பெஷல் அத்தான்?

ஐ!! மாமா அப்பா எல்லாரும் இன்னைக்கு வீட்ல தான் இருக்கீங்களா. ஹை! செம்ம செம்ம!!" என ஹர்ஷாவிடம் கேட்டு விட்டு குதூகலமாக முடித்தாள் ஆதிரா.

ஹர்ஷா என்றும் தன் பணி என்று வரும் போது மிகவும் அர்ப்பணிப்புடன் தான் செயல்படுவான். எனவே அவன் வீட்டில் இருக்கும் நேரத்தை விட மருத்துவமனையில் இருக்கும் நேரம் அதிகம்.

இன்று அபியும் அம்முவும் கல்லூரி முடித்து வந்த நேரம் ஹர்ஷா வீட்டில் இருக்கவும் இருவரும் மகிழ்ந்து விட்டனர். அவன் அருகே அமர்ந்து கொண்டு கதை பேச துவங்கி விட்டாள் அம்மு.

"சும்மா தான் டா அம்மு. இன்னைக்கு வொர்க் அவ்ளோவா இல்ல. அதான் வீட்டுக்கு வந்துட்டேன்" என்ற ஹர்ஷா அபி அம்முவிடம் கல்லூரி முதல் நாள் எப்படி சென்றது என கேட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது அவன் முகம் அடிக்கடி ஏதோ யோசனைக்கு செல்லவும் பேசவுமாக இருக்க பேச்சு சுவாரசியத்தில் அம்மு அதை கவனிக்கவில்லை.

ஆனால் அதை கண்டு கொண்ட அபி "ண்ணா.. என்ன ரொம்ப நேரமா எதோ திங்க் பண்ணிட்டு இருக்கீங்க. என்ன விஷயம் ண்ணா.." என்றான் கேள்வியாக.

அவன் முகத்தை வந்ததில் இருந்து பார்த்திருந்த அருணாசலம் ராஜசேகர் கூட என்னவென தான் யோசித்து இருந்தனர். அபி சட்டென கேட்டுவிடவும் அவர்களும் ஹர்ஷாவை பார்த்தனர்.

சிறிது நேர மௌனத்திற்கு பின் "ம்ஹீம்.." என மூச்சை இழுத்து விட்ட ஹர்ஷா "எல்லாரும் வந்த அப்புறம் பேசலாம்னு தான் வெய்ட் செஞ்சேன்.

ஓகே அபி நீ போய் அத்தையை கூட்டி வா நான் தாத்தாவை கூப்புடறேன். பேசனும்" என்றதோடு முடித்தவன் தன் தாத்தாவின் அறை நோக்கி சென்றான்.

அருணாசலம் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் விக்ரமை தவிர்த்து அங்கே அமர்ந்திருந்தனர். "தாத்தா ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு தான் எல்லாரையும் வரவச்சேன்.

விக்ரம நான் தான் ஒரு இடத்துக்கு அனுப்பி வச்சிருக்கேன். அவன் இப்ப வந்துருவான். நான் அதுக்குள்ள உங்ககிட்ட விஷயத்தை சொல்லிடறேன்" என்று ஆரம்பித்தான்.

என்னவாக இருக்கும் என அருணாசலம் தன் மகன் மற்றும் மருமகனை பார்த்தார். அவர்களும் எதுவும் தெரியாது என்பது போல் தங்கள் உதட்டை பிதுக்கினர்.

மீண்டும் அவர்கள் ஹர்ஷாவை கண்ணில் கேள்வியுடன் பார்த்தனர். அவர்களை பார்த்துக் கொண்டே "தாத்தா நேத்து கோமதி அத்தை எனக்கு போன் பண்ணிருந்தாங்க" என ஆரம்பிக்கவும்

"அவ எதுக்கு உனக்கு போன் பண்ணா‌. அதான் அவளோட பங்கு எல்லாம் வாங்கிட்டு நாம வேணாம்னு போய்டால்ல. அப்பறம் என்ன இப்ப திரும்பவும் போன் பண்றா!" என்று கோபமாக திட்டினார் பார்வதி.

அதையே தங்கள் பார்வையில் வைத்து பார்த்தனர் அருணாசலமும் ராஜசேகரும். "அத்தை டென்ஷன் ஆகாதீங்க. நான் சொல்றத முழுசா கேட்டுட்டு அப்புறம் உங்க ஒப்பீனியன சொல்லுங்க" என்றான் ஹர்ஷா அமைதியாக.

பின் "கோமதி அத்தை போன் பண்ணி ரொம்ப பீல் பண்ணாங்க தாத்தா. 'என்ன தான் சொத்து கேட்ருந்தாலும் என்னை எதுக்கு அப்படியே மொத்தமா தள்ளி வைச்சீங்க'ன்னு ஒரே அழுகை.

அன்ட் இப்ப நம்ம ஸ்ரேயாக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிருக்காங்கலாம். தாய் மாமாவா அப்பா வந்து நிக்கனும் அப்படின்னு ஆசைப்படுறாங்க.

தாய் வீடுன்னு நம்ம ஃபேமிலில எல்லாரும் இருக்கனும்னு ரொம்ப கேட்டுக்கிட்டீங்க. அப்புறம் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்து இன்வைட் பண்ணுறேன்னு சொன்னாங்க.

நானும் யோசிச்சு பாத்தேன் தாத்தா. அவங்களுக்கும் தாய் வீடுன்னு இருக்கிறது நாம தான். சோ வர சொல்லிட்டேன். அவங்கல பிக்கப் பண்ண தான் விக்ரம் ரயில்வே ஸ்டேஷன் போயிருக்கான்" என்று முடித்தான் ஹர்ஷா.

"அவளுக்கு நாம எதுவும் செய்ய மாட்டோன்னு நினைச்சு தானே அவ சொத்து குடுத்தாதா ஆச்சுன்னு அப்பாட்ட வம்பு பண்ணி சொத்த வாங்கிட்டு போனா.

இப்ப என்ன தாய் வீடு வேணும். தாய் மாமன் வேணும்னு பேசுறா. அப்படி நாம வேணும்னு நிஜமாவே நினைக்கிறவளா இருந்தா கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டு வந்தா சொல்வா.

நீ எதுக்கு ஹர்ஷா குட்டி அவள வீட்டுக்கு வர சொன்ன. நீங்களே பாத்துக்கங்க அப்படினு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்ல வேண்டியது தானே" என்று படபடவென பொறிந்து தள்ளினார் பார்வதி.

"அத்தை கூல். ஏன் இவ்ளோ டென்ஷன். கொஞ்சம் நான் சொல்றத கேளுங்க. கோமதி அத்தை நாம‌ எல்லாம் ஒன்னா அவங்க அங்க தனியா இருக்கதால இன்செக்யூரா பீல் பண்ணி இருக்கலாம் இல்ல‌.

நாம‌ அவங்களுக்கு எதுவும் குடுக்காம ஏமாத்திருவோம்னு நினைச்சிருக்கலாம். இல்லை அங்க மாமா வீட்ல எதுவும் பிராப்லம் வந்துருகலாம்.

அதுனால கூட அவங்க சொத்தை கேட்டுருக்லாம்ல அத்த‌. நாமும் கொஞ்சம் இப்படி யோசிச்சு பாக்கலாமே அத்த" என்றான் ஹர்ஷா பார்வதியை சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.

"நீ சொல்ற மாதிரி வச்சுக்கிட்டாலும் நாம தான் அவகிட்ட பேசாம இருந்தோம். நாம‌ வேணும்னு நினைக்கிறவ அவளா நம்மட்ட பேசிருக்னும் தானே.

இதுதான் சாக்குன்னு அவளும் பத்து வருஷமா பேசாமையே இருக்கா. இப்ப பொண்ணு கல்யாணம் பண்றப்ப மட்டும் நாம‌ தேவைப்படுறோம்" என்ற பார்வதிக்கு மனதே ஆறவில்லை.

மீண்டும் பார்வதியே "அண்ணா நம்ம வீட்டுல ஹர்ஷா இருக்கப்ப எப்படி அவளுக்கு வேற சம்மந்தம் பாக்க மனசு வந்துச்சு. நாம‌ அவளுக்கு வேணும்னு பேசறவ பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குறோம் அப்படின்னு சொல்ல வேண்டியது தானே.

நாம ஹர்ஷாக்கு கேட்ருப்போம்ல. அப்படி அவ பாத்த மாப்பிள்ளை நம்ம ஹர்ஷாவ விட ரொம்ப பெரிய ஆளா என்ன. இப்ப மட்டும் பொண்ணுக்கு தாத்தா வேணும் தாய்மாமா வேணும்னு வர தெரியுது" என தன் ஆதங்கத்தை கொட்டினார்‌.

பார்வதி பேச்சில் இருந்த நியாயம் அனைவருக்கும் புரியவே செய்தது. அருணாசலம் ராஜசேகர் இருவருக்குமே இதே எண்ணம் தான். ஹர்ஷாவிற்கும் அது புரிந்தது தான்.

எனவே "நீங்க சொல்றத நானும் யோசிக்க தான் செஞ்சேன் அத்த‌. கோமதி அத்தைக்கு வேணா நாம தேவையில்லாம இருக்கலாம். சூழ்நிலைக்காக நம்மல தேடி வராங்க அது எனக்கும் புரியுது.

ஆனா நாம நம்ம கடமைய சரியா செய்யனும். என்னதான் இருந்தாலும் ஸ்ரேயாவுக்கு தாய்மாமாவா இருந்து அப்பா எல்லா கடமையையும் செய்யனும்.

அவங்க அப்படி சுயநலமா இருக்காங்க அப்படிங்கறதுக்காக நாம நம்ம கடமைல இருந்து தவற கூடாது. என்ன தாத்தா நாம சொல்றது சரிதானே.

நாம ஸ்ரேயாக்கு சீர் செய்றோம்ல" என்றவனின் தொனியே நாம் செய்தாக வேண்டும் என்பதை போல் இருந்தது.

ஹர்ஷா முடிவு செய்து விட்டான் என எண்ணி "சரி ஹர்ஷா" என்று அருணாசலமும் ஒரு வார்த்தையில் முடித்து கொண்டார்.

பார்வதிக்கும் ராஜசேகருக்கும் விருப்பம் இல்லை என்றாலும் ஹர்ஷா கூறிய கடமை என்ற வார்த்தை அவர்களையும் ஒத்துக் கொள்ள வைத்தது.

அதற்கே அவன் அதை அழுத்தி அழுத்தி கூறினான். இவர்கள் பேசி முடிக்கவும் சிறிது நேரத்திலே விக்ரம் கோமதி மற்றும் அவர் கணவர் மோகன் என இருவருடன் வந்து விட்டான்.

அவர்களை ஹர்ஷா சொன்னது போல் கவனித்து பத்திரிகையை வாங்கிக் கொண்டனர். ஆனால் சற்று விலகியே இருந்தனர். ஹர்ஷாவோ வீட்டினரிடம் பேசியதுடன் தன் வேலை முடிந்துவிட்டது என மருத்துவமனை சென்று விட்டான்.

கோமதிக்கு தன் குடும்பத்தின் ஒதுக்கம் நன்றாக புரிந்தது. ஆனால் அவருக்கு அவரின் பெண் திருமணம் சிறப்பாக நடந்தால் போதும். அதற்கு மட்டும் இவர்கள் வந்து சீர் செய்தால் போதும் என அனைவரையும் அழைத்து அன்று தங்கிவிட்டு அடுத்த நாளே கிளம்பி விட்டார்.

பார்வதி தான் அவர் சென்ற பின் அவரை திட்டிக் கொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்தார்‌ ஹர்ஷாவிறகு பெண் கொடுக்கவில்லை என.

அதை பார்த்த ஹர்ஷாவிற்கு சிரிப்பாக வந்தது. "ஹையோ அத்த. ஏன் இப்படி புலம்பிக்கிட்டே இருக்கீங்க. கூல் அத்த" என்ற ஹர்ஷாவிற்கும் தன்னையும் தன் தம்பியையும் தன் பிள்ளைகளாக எண்ணும் அத்தையை பார்த்து மனது நிறைந்து தான் போனது.

இப்படி நாட்கள் செல்ல. கோமதி சென்ற ஒரு வாரம் கழித்து பார்வதி ஆரம்பித்தார். அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் சிறியவர்கள் அனைவரும் சாவகாசமாக எழுந்து மெதுவாக சாப்பிட வருவர்.

எனவே பெரியவர்கள் சீக்கிரம் உண்டு முடிப்பது வழக்கம். ஏனெனில் உண்டு அவர்கள் மாத்திரை எடுக்க வேண்டுமே. ஒரு வேளை மாத்திரை எடுக்க மறந்தால் யார் ஹர்ஷாவின் கோபத்திற்கு ஆளாவது.

எனவே பெரியவர்கள் அனைவரும் உண்டு கொண்டிருந்தனர். அப்போது "அப்பா அண்ணே உங்க ரெண்டு பேர் கிட்டையும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.

சாப்பிட்டு ஹால்க்கு வாங்க" என்றவர் தன் கணவரை பார்த்து "நீங்க போய் ஹர்ஷாவ கூப்பிட்டு வாங்க பேசணும்" என்றார்.

அவரின் தீவிரமான முகமே சொல்ல போகும் விஷயம் பெரியது என சொல்லாமல் சொல்லியது. எனவே அனைவரும் வேகமாக உண்டு சென்று ஃசோபாவில் அமர்ந்து கொண்டனர்.

"குட் மார்னிங் அத்த‌. என்ன மாமா எதோ நீங்க பேச கூப்டதா சொன்னாரு. என்ன விஷயம் அத்த" என்றான் ஹர்ஷா அவனும் நாற்காலியில் அமர்ந்த பின். "நீயும் உக்காரு விக்ரம்" என்றான் தன்னுடன் வந்த விக்ரமை பார்த்து.

பெரியவர்கள் அனைவரும் பேச அமர்ந்திருப்பதை கண்ட அவர்களின் பின்னால் வந்த அபியிடம் அம்மு "என்ன அபி பொதுக்குழு கூடியிருக்கு. என்னவா இருக்கும்?" என்றாள் ஆர்வமாக.

அவளை ஒரு பார்வை பார்த்த அபி அங்கிருந்தவர்களை பார்த்து "தெரியலை அம்மு. வா போய் பாக்கலாம்" என்று முன்னே சென்றான்.

"ம்மா.. என்ன எல்லா பேச வந்துருக்கீங்க. எங்கள மட்டும் கூப்பிடவே இல்ல" என்று சிறுப்பிள்ளையாய் புகார் வாசித்தவள் சென்று ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

அதை பார்த்த அனைவர் முகத்திலும் சிறு புன்னகை வந்தது. ஆனால் பார்வதி மட்டும் அம்முவை முறைத்து "கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா" என்றார் காட்டமாக.

'ஆஹா மம்மி சீரியஸ் மோட்ல இருக்கும் போல‌. எதாவது பேசுனாலே தூக்கி அடிச்சிரும் போலையே. வாய மூடிக்கிட்டு கம்முன்னு உக்காந்துரு அம்மு" என மனதிற்குள் பேசியவள் நல்ல பிள்ளை போல் அமர்ந்து கொண்டாள்.

அவளின் செய்கைகளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த ஹர்ஷா பார்வதி கூறிய செய்தியை கேட்டு திடுக்கிட்டு திரும்பினான். அதை கேட்ட வீட்டினருக்கு பார்வதி என்ன கூறினார் என கிரகித்துக் கொள்ளவே சில நிமிடம் பிடித்தது.

இதில் அந்நேரம் வீட்டிற்கு வந்த நபரை கண்டு ஹர்ஷாவின் ரத்த அழுத்தம் ஏறியது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அவன் அதற்கு எதிர்வினை ஆற்றும் முன்னே பார்வதி தான் நினைத்ததை சாதித்துக் கொண்டார்.

அதே நேரத்தில் தன் தந்தை பேசும் கடுஞ்சொற்களை கேட்டு விழியில் வழிந்த நீரை கூட துடைக்க தெம்பில்லாமல் நின்றுக் கொண்டிருந்தாள் அனுக்ஷ்ரா.

அவள் சுதாரிக்கும் முன்னே நிலைமை கை மீறி செல்லும் என அவள் என்ன கனவா கண்டாள். விழியில் வழியும் கண்ணீரோடு இனி தன் தந்தையின் முடிவு என்னவாக இருக்குமோ என்ற அச்சத்துடன் விஸ்வநாதனையே பார்த்திருந்தாள் அனுக்ஷ்ரா.

என்றும் போல் அன்றும் கல்லூரி முடிந்து தங்கள் கார் வருவதற்காக கல்லூரி வாயிலில் நின்றிருந்தனர் அனுக்ஷ்ராவும் ரித்திகாவும்.

அந்த நேரம் பக்கத்து கல்லூரி மாணவன் ஒருவன் அவர்களிடம் வந்தான். வந்தவன் "அ.. அக்கா! அக்கா! ஒரு நிமிஷம்" என்றான் தயக்கமாக. அனுக்ஷ்ரா திரும்பி பார்த்து என்னவென கேட்டாள்.

அவன் திரும்பி அவனை அனுப்பிய மாணவர்களை பார்க்க "ம்ம்.. சொல்லு" என்று அங்கிருந்தே ஊக்கப்படுத்தினார்கள் அவர்கள்.

அந்த மாணவனை காண சிறு வயதாக தெரிய, அவனின் பதட்டம் சொல்லாமல் சொல்லியது அவன்‌ முதலாம் ஆண்டு மாணவன் என்று.

"அது வந்து அக்கா... அது" என்று இழுத்தவனிடம், "என்ன தம்பி என்ன வேனும். எதுக்கு கூப்பிட்ட?" என்றாள் அனு. "அக்கா நான் பக்கத்து காலேஜ் க்கா.

பர்ஸ்ட் இயர்‌. ஊருக்கு புதுசு. இன்னைக்கு தான் ஜாயின் பண்ணுனேன். அந்த அண்ணாலாம் காலைல என்கிட்ட ரேகிங் செஞ்சாங்க" என்று ஒரு குழுவாக தள்ளி நின்றிருந்த மாணவர்களை காட்டினான்.

அனு அங்கே திரும்பி பார்க்கையில் அந்த மாணவர்கள் குழுவின் எல்லோரின் பார்வையும் இங்கே தான். மீண்டும் தன் அருகில் இருந்த மாணவனை பார்த்தாள்.

"அப்போ ஒரு சார் வரவும் என்னை விட்டுட்டாங்க. ஆனால் இப்ப கிளாஸ் முடிஞ்சு வரப்ப மறுபடியும் நான் அவங்ககிட்டயே மாட்டிக்கிட்டேன். காலைலக்கும் சேத்து வச்சு இப்ப ரொம்ப கிண்டல் பண்ணுனாங்க.

அப்புறம் வெளிய கூட்டிட்டு வந்தாங்க. அப்ப நீங்க நிக்கிறத பாத்த உடனே உங்ககிட்ட பேச சொன்னாங்க" என்றவன் இப்போது மிகவும் தயங்கினான்.

ஓரளவு சூழலை புரிந்த அனு அந்த மாணவனையும் பார்க்க பாவமாக இருக்கவே "சரி பேசிட்டேன்னு போய் சொல்லிரு" என்றாள். இவ்வளவு நேரம் பேசியதை தூரத்தில் இருந்து அந்த மாணவர்களும் பார்த்துக் கொண்டு தானே உள்ளனர்.

எனவே இவன் சென்று கூறினால் விட்டு விடுவர் என நம்பினாள். அது மட்டும் அன்றி பக்கத்தில் நின்றிருந்த ரித்து வேறு அந்த மாணவன் வரவுமே பயத்தில் அனுவின் கைகளை பற்றிக் கொண்டாள்.

ஆனால் அப்போதும் அவன் தயங்கி நிற்கவே "அதான் சொல்லிட்டேன்ல தம்பி. நீ ஏன் இன்னும் இங்க நிக்கிற போ" என்றாள் அனு சற்று அழுத்தமாக.

ஏனெனில் அனுவையும் ரித்துவையும் அழைத்து செல்ல எந்த நேரமும் அவர்கள் கார் வந்துவிட கூடும். எனவே அவனை முடிந்த மட்டும் வேகமாக அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்த நினைத்தாள்.

ஆனால் அந்த மாணவன் இன்னும் பயந்தவாறு "அக்கா அது... அது. இந்த ரோஸ உங்ககிட்ட குடுக்க சொன்னாங்க க்கா. சாரி க்கா. இதை மட்டும் நீங்க வாங்கிங்க.

அப்புறம் தூக்கி போட்டாக்கூட ஓகே. பிளீஸ் இப்ப வாங்கிங்க க்கா. நான் போறேன்" என்றான் இரைஞ்சலாக. அவனை முடிந்த மட்டும் முறைத்த அனு "ஒழுங்கா அதை தூக்கி போட்டுட்டு போ" என்றாள் மிரட்டலாக.

இந்த நேரம் பார்த்து சரியாக அவர்கள் முன் வந்து நின்றது அனு மற்றும் ரித்துவிற்கான கார்.‌ ஆனால் உள்ளே ஓட்டுனர் இருக்கையில் இருந்ததோ விஸ்வநாதன்.

ஏற்கனவே அந்த மாணவனின் செய்கையில் பயந்திருந்த ரித்துவிற்கு இப்போது கண்களில் நீரே வந்து விட்டது. அனுவிற்கும் உள்ளுக்குள் ரயில் வண்டி ஓடும் சத்தம் தான்.

இன்று வீட்டிற்கு சென்ற பின் என்ன ஆகப்போகிறதோ என எண்ணுகையில் இதயமே வெளியே வந்து விழும் போல் ஆனது. அதுவும் விஸ்வநாதன் இவர்களை திரும்பி பார்த்த பார்வையில் இருந்த உக்கிரம் சொல்லாமல் சொல்லியது இங்கு நடந்ததை அவர் பார்த்து விட்டாரென.

வீட்டிற்கு சென்ற உடன் என்னவாகுமோ என இப்போதே பயம் பிடித்தது இருவருக்கும். "ம்ம்.. ஏறுங்க" என்ற விஸ்வநாதனின் குரலே அவர்களுக்கு வரப்போகும் நிலையை தெரியப்படுத்தியது.

வீட்டிற்கு உள்ளே நுழைந்தது முதல் சோஃபாவில் அமர்ந்து கொண்ட விஸ்வநாதன் முன் இருவரும் நடுங்கியபடி நின்றிருந்தனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் என்ன ஆயிற்றோ என பதைபதைத்து பார்த்திருந்தனர்.

அனுவிற்கு கோபமாக வந்தது. 'யாரோ சில மாணவர்கள் தங்கள் ஜூனியரை ரேகிங் செய்ய தன்னிடம் பேச சொன்னதில் பிரச்சினை தனக்கு தான்' என அவர்களை மனதில் திட்டிவிட்டு விஸ்வநாதன் என்ன சொல்வாரோ என விழியில் நீர் தேங்க பார்த்திருந்தாள்.

நீண்ட மௌனத்திற்கு பின் தன் மனைவி மீனாட்சியை அழைத்து "உன் பொண்ண உள்ள கூட்டிட்டு போ. அவ படிச்சு கிழிச்சதெல்லாம் போதும். இனிமே வீட்டிலேயே இருக்கட்டும்.

சீக்கிரம் அவளுக்கு ஒரு முடிவு எடுக்கிறேன்" என்றார். இதை கேட்டு கண்ணில் தேங்கிய நீர் அவள் கண்ணத்தில் இறங்கியது. உடனே தன் தந்தையின் அருகே சென்றவள்

"அப்பா பிளீஸ் நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க. அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் நான் அதை கேக்குறேன்" என்றவள் அவர் பதில் கூறும் முன் நடந்தவற்றை ஒருவாறு சொல்லி முடித்தாள்.

அப்போதும் அவர் நிலை மாறாது அமர்ந்திருக்கவே "அப்பா நிஜமா நான் ஒன்னுமே பண்ணல. என்னை நம்புங்க ப்பா பிளீஸ்" என கெஞ்சினாள். "ப்பா இந்த ஒரு வருஷம் தான் ப்பா நான் பி.ஜி முடிச்சிடறேன்‌.

காலேஜ் மட்டும் போக வேண்டாம்னு சொல்லாதீங்க ப்பா. நான் நீங்க என்ன சொன்னாலும் அதை மீறி எதுவும் பண்ண மாட்டேன். இனிமே கார் வந்துருச்சான்னு உள்ள இருந்தே பாத்துட்டு வெளிய வரேன் ப்பா.

காலேஜ்க்கு மட்டும் அனுப்புங்க ப்பா" என்று அழுது தீர்த்தாள். பார்த்திருந்த அனைவருக்கும் அனுவை கண்டு கண்ணீர் வந்தது.

அவள் கூறியதில் இருந்து தவறு அவள் மேல் இல்லை என புரிந்தது. ஆனால் இதை விஸ்வநாதனிடம் பேச தான் எல்லோருக்கும் பயமாக இருந்தது.

அந்த பயத்தையும் மீறி "என்னங்க அதான் ஷரா இவ்ளோ சொல்றாளே. இந்த ஒரு வருஷம் மட்டும் அவ படிப்பை முடிக்கட்டுமே. அவ தான் நீங்க என்ன சொன்னாலும் அதை கேக்குறேன்னு சொல்றால்ல.

கொஞ்சம் கோபப்படாம யோசிச்சு பாருங்க" என்றார் மீனாட்சி உள்ளுக்குள் பயந்துக் கொண்டே. இங்கே வசுந்தராவோ 'அண்ணா என்னால தான் இப்படி ஆகிட்டாங்க.

நான் செஞ்ச தப்புக்கு பாவம் சின்ன பொண்ணுங்க இவங்க தண்டனை அனுபவிக்கிராங்க. எப்படி இருந்த அண்ணனை இப்படி மாத்திட்டனே' என உள்ளுக்குள் மறுகி கொண்டிருந்தார்.

அனைவரும் அங்கே விஸ்வநாதன் என்ன சொல்ல போகிறாரோ என பார்த்திருக்க ஒன்றும் சொல்லாது தன் அறைக்குள் சென்று மறைந்தார் அவர்.

இங்கே அன்னையுடன் தன் அறைக்கு வந்த அனுவிற்கு இன்னும் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே தான் இருந்தது.

"அம்மா நான் அப்படி என்ன ம்மா தப்பு செஞ்சேன். அப்பா ஏன் ம்மா என்னை எப்பவும் நம்ப மாட்டேங்குறாரு. நான் செய்யாத தப்புக்கு எதுக்கு எனக்கு தண்டனை தராரு?" என்றவள் மனதில் பல நாட்கள் எழும் கேள்வியை கேட்டு தேம்பி தேம்பி அழுதாள்.

மீனாட்சிக்கு அனைத்தும் புரிந்தது. ஏன் அவர் மனதிலும் அதே கேள்வி தான். அவர்க்கும் கணவர் இப்போது செய்ததில் சிறிதும் உடன்படிக்கை இல்லை.

என்ன ஒன்று அனு வாய் விட்டு கேட்டு விட்டாள். அவர் மனதின் உள்ளேயே கேட்டு கொண்டார். ஆனால் இதை விஸ்வநாதனிடம் கேட்பதற்கு மட்டும் இருவருக்கும் என்றும் தைரியம் வந்ததில்லை. இனி வரப்போவதும் இல்லை போல்.

----------------------------------------------------

"ஏய் ஆதி! என்னடி அதிசயம் இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் வந்து கிளாஸ்ல உக்காந்துட்டு இருக்க? வாட்ஸ் த மேட்டர்" என்று வரும்போதே பட்டாசாய் பொறிந்து கொண்டு வந்தாள் தோழி சந்தியா.

"நந்திங் சந்து. இன்னைக்கு என் அபி அத்தான் சீக்கிரம் கிளம்பிடாரு எதோ வொர்க் இருக்குன்னு. அதான் என்னையும் இழுத்துட்டு வந்துட்டார்" என்றாள் சலிப்பான குரலில்.

"ஹோ.. உன் அத்தானுக்கு வொர்க்கா. அதான் இன்னைக்கு ரொம்ப சீக்கிரம் வந்தாச்சா" என்றாள் சீண்டலாக. அபியோடு ஆதியை வைத்து எப்போதும் கிண்டல் செய்வது சந்தியா தான்.

அதுவும் ஒரு முறை ஆதிராவின் வீட்டிற்கு சென்ற நேரம், ஆதிரா விக்கியிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அபியின் பொறாமை பார்வையை கண்ட சந்தியா அதிலிருந்து நன்கு ஓட்டி தள்ளுவாள்.

ஆனால் அபியின் பார்வையை சந்தியா உணர்ந்த அளவு ஆதிரா உணரவில்லை. அவன் அக்கறையாக பார்த்து கொள்வதில் அவனின் பாசத்தை உணர்ந்தவள் அவன் காதலை உணரவில்லை.

அபி அதை உணர்த்தி விடுவான் என எண்ணிய சந்தியாவும் அவளிடம் கிண்டலோடு நிறுத்திக் கொள்வாள்.

இப்போது 'இவ ஆரம்பிச்சா நிறுத்த மாட்டா' என எண்ணிய ஆதிரா பேச்சை மாற்றும் விதமாக "சரி நீ என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட. பிரேக் பாஸ்ட் சாப்பிட்டியா இல்லை பட்டிணியா வந்தியா?" என்றாள்.

"ஓஓ... ஓகே ஓகே பேச்சை மாத்துற. சரி விடு. இன்னைக்கு ஹாஸ்டல்ல உப்மா டி" என சந்தியா முகத்தை சுளித்து சொல்லும் போதே "அதானால தான் மேடம் விழுந்து அடிச்சு ஓடி வந்துட்டீங்களோ" என்றாள் கிண்டலாக.

அதற்கு "ம்ம்.. ம்" என எல்லா புறமும் சந்தியா பாவமாக தலையை ஆட்ட "சரி வா கேன்டீன் போலாம்" என ஆதிரா சொல்ல இருவரும் வகுப்பை விட்டு வெளியேறினர்.

இதையெல்லாம் ஜன்னலின் வழி பார்த்திருந்த இரு கண்கள் ஆதிராவை மட்டும் ரசனையாக பார்த்து வைத்தது. அந்த கண்களுக்கு செந்தகாரன் ஆதிராவின் அனாட்டமி வகுப்பு எடுக்கும் ஆசிரியர் விஷ்ணு என்பவனே.

இந்த ஆண்டு தன் படிப்பை முடித்தவுடன் இந்த கல்லூரியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்திருக்கிறான். வந்த முதல் நாளே ஆதிரை ஒரு மரத்தடியில் அவள் நண்பர்கள் உடன் பார்த்திருந்தான்.

அது அவள் மாணவர்களை ரேகிங் செய்துக் கொண்டிருந்த நேரம். அவள் கிண்டல் செய்ததை விட இவளை கிண்டல் செய்து கிளம்பியவர்கள் அநேகம்.

அதில் அவளின் வெகுளி தனமும், அவளின் சிரிப்பும் அவனை வெகுவாக ஈர்த்து விட்டது. இதில் அவனுக்கே ஆச்சரியம் என்னவென்றால் அவன் ஆதிராவின் வகுப்பிற்கு சென்றது தான்.

காலையில் பார்த்த அந்த நிமிடம் முதல் ஆதிராவை பிடித்துவிட்டது. இப்போது வகுப்பில் அவள் இருக்கவும் அவள் தனக்கு தான் என மனத்திற்குள் முடிவே செய்தான்.

ஆனால் இது தற்செயலான ஒரு விஷயம் என எண்ண மறந்தான். மற்ற மாணவர்கள் முன்னிலையில் எதையும் காட்டிக் கொள்ளாது இருந்து விடுவான்.

ஆனால் தனியே எங்கேனும் அவளை பார்க்க நேர்ந்தால் நின்று சில நிமிடம் ரசித்து விட்டே செல்வதை வழக்கமாக்கி கொண்டான். இன்றும் அப்படியே‌.

ஆனால் இதை எதையும் அறியாத ஆதிராவோ அங்கே தோழியுடன் அந்த கேன்டீன் பூரியை ரசித்து ருசித்து அதை பாராட்டியபடி உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தாள்.

ஆதிராவை உயிரென எண்ணி அவள் தன்னுடைய வாழ்வில் வர யாரும் தடை விதிக்க போவதில்லை என எண்ணிக் கொண்டிருக்கும் அபிமன்யு இப்படி ஒருவன் தங்களுக்கு இடையில் வருவான் என்பதை அறியாது தன் வேலையில் மூழ்கி இருந்தான்.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 6

நாட்கள் அதன் போக்கில் செல்ல ஆதிராவிற்கு கல்லூரி துவங்கி ஐந்து மாதங்கள் நிறைவுற்றது. அதே போல் விஷ்ணு மனதில் ஆதிரா மீது தோன்றிய காதலும் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே சென்றது.


அவனின் பார்வை மாற்றங்கள், ஆதிராவிடம் நடந்து கொள்ளும் முறையை கண்டு வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் விஷ்ணுவின் நோக்கம் புரிந்தது ஆதிராவை தவிர.


இன்றும் வகுப்பு முடிந்த பின் ஆதிராவை பார்வையால் வருடி செல்லும் விஷ்ணுவை கண்ட சந்தியா ஆதியை திரும்பி பார்த்தாள். அவள் வழக்கம் போல் எதையும் கண்டு கொள்ளாமல் அடுத்த வேளைக்கான புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.


இதை கண்டு ஆதியின் தலையில் நான்கு குட்டு வைத்தால் என்ன என எண்ணிய சந்தியா, அதை விடுத்து வழமை போல் இது குறித்து ஆதியிடம் பேச துவங்கினாள்.


"ஆதி உனக்கு ஏன் புரியலை. அந்த புரபசர் பார்வையே சரி இல்ல டி‌‌. புரிஞ்சிக்கோ. அவர் கிட்ட உனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லன்னு சொல்லிடு டி" என்று எப்போதும் போல் அன்றும் புலம்பினாள் சந்தியா.


அதற்கு "உலறாத சந்து. நம்ம சார் ஒன்னும் அப்படி இல்ல. என் கிட்ட சப்ஜெக்ட் விஷயத்தை தவிர வேற எதுவும் பேசக் கூட மாட்டாரு. நீங்க எல்லாரும் தான் தேவை இல்லாம வொர்ரி பண்ணிகிறீங்க" என்ற அதிரா


"கூல் சந்து! வா செமஸ்டர் வருது படிக்க நிறைய போர்சன் இருக்கு. அதை கம்ப்லீட் பண்ணலாம். எங்க ஹர்ஷா அத்தான் வேற நான் மார்க் கம்மியா வாங்கினா, என்னை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிருவாரு" என்று தன் போக்கில் புலம்பி புத்தகத்தை எடுத்தாள்‌.


'இவள் அபி அண்ணாவோட காதலையே கண்டு பிடிக்கல. இதுல இவ விஷ்ணு சார் பார்வையோட மீனிங் கண்டுபிடிச்சிருந்தா தான் ஆச்சரியப்படனும்' என எண்ணிய சந்தியா


'பேசாம அபி அண்ணாட்ட சொல்லி விடலாமா?' என்று ஒரு நொடி யோசித்தாள். பின் 'அதான் இப்ப எந்த பிராப்லமும் இல்லையே. அபி அண்ணாக்கிட்ட சொல்லி புதுசா சண்டைய கிளப்பி விட வேண்டாம்' என்ற முடிவுக்கு வந்தாள்.


"ஹே சந்து! இன்னும் என்ன யோசனை பண்ணிட்டு இருக்க" என்ற ஆதிராவின் குரலில் தெளிந்தவள் "ஹான் ஒன்னும் இல்லை. வா படிக்கலாம்" என்றாள். அதன் பின் தோழிகள் இருவரும் தங்கள் பாடத்தில் கவனம் செலுத்த துவங்கினர்.


இப்படியாக நாட்கள் செல்ல பரிட்சை நாட்களும் வந்தது. ஆதிரா ஹர்ஷா மற்றும் அபியின் சிறு உதவிகளோடு தன் பாடங்களை திறம்பட படித்து பரிட்சையிலும் நன்றாகவே எழுதி வந்தாள்.


"ஹே சந்து! இந்த எக்சாம் எப்படி எழுதுன?" என்று ஆர்ப்பாட்டமாக கேட்டுக் கொண்டே சந்தியாவை நோக்கி வந்தாள் ஆதிரா. அதற்கு "ம்ம் ஏதோ எழுதியிருக்கேன்.


ஓகே தான் டா‌. நீ எப்படி எழுதின?" என்ற சந்தியா அவள் பதில் சொல்லும் முன்னே "உனக்கு என்ன கவலை. அதான் ரெண்டு இன்டலிஜன்ட் டாக்டர்ஸ் வீட்ல இருக்காங்க.


அவங்க உனக்கு சொல்லி தராங்க. நீயும் எப்பவும் எக்சாம்ல நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணிடுற. என் நிலைமை தான் சொல்ற மாதிரி இல்ல. போ போ" என தன் போக்கில் பேசிய சந்தியாவை தன் புறம் திருப்பினாள் ஆதி.


"ஹே..ஏ.. என்ன சந்து பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட. அத்தான் இரண்டு பேரும் என்னோட டௌட்ஸ் கிளியர் பண்ணுவாங்க அவ்ளோ தான். இதுக்கு போய் நீ பீல் பண்ற.


ஏன் உங்க அம்மா கூட டாக்டர் தான். நீயும் தான் டௌட் கேளேன். யார் வேண்டாம்னு சொல்றாங்க" என சந்தியாவை கிண்டல் செய்யும் விதமாக முடித்தாள் ஆதி.


அதற்கு சந்தியா "அப்படியே கேட்டுட்டாலும் எங்க அம்மா கிட்ட போடி" என்று சந்தியா கூறும் போது அவர்களுடன் விக்கியும் வந்து சேர்ந்தான். சந்தியாவின் தாய் கொஞ்சம் கண்டிப்பானவர்.


அதனால் அவள் தன் தாயிடம் பேசவே தயங்கும் ரகம். பேச்செல்லாம் கல்லூரியில் அதுவும் ஆதிரா மற்றும் விக்கியிடம் மட்டுமே. அதுவும் ஆதிராவின் துறுதுறு குணமும், அவள் வீட்டு சூழல் சந்தியாவிற்கு மிகவும் பிடிக்கும்.


சந்தியாவிற்கு ஆதியிடம் நட்பு கொள்ள இதுவும் ஒரு காரணம் ஆகும். எனவே தான் தன் அம்மாவை பற்றி ஆதி கூறியவுடன் இப்படி கூறினாள்.


விக்கி வந்த உடன் அவனையும் சேர்த்து கிண்டல் அடிக்க ஆர்மபித்த ஆதியிடம் "அம்மா தாயே! எக்சாம்-ங்குற பெரிய போர இப்பதான் முடிச்சிட்டு வந்துருக்கேன்.


தயவு செஞ்சு என்னை பேசி பேசியே டயார்ட் ஆக்காம வாங்க. வீட்டப் பாத்து போவோம்" என பாவமாக சொன்ன விக்கியை பேசியே இன்னும் களைப்படைய செய்தனர் தோழிகள்.


பின் மூவரும் சிரிப்புடன் பேசிக் கொண்டே தேர்வு நடைபெற்ற கட்டிடத்தை விட்டு வெளியே வந்தனர். ஆதியை அழைத்து செல்ல அபியும் அருகிலேயே தன் வண்டியுடன் காத்துக் கொண்டிருந்தான்.


அதே நேரம் விஷ்ணுவும் 'இவ்வளவு நாட்கள் பொருத்தது போதும்' என தன் மனதிலிருந்த காதலை சொல்ல ஆதிராவை நோக்கி வேகமாக வந்துக் கொண்டிருந்தான்.


அருணாசலம் மருத்துவமனை. ஹர்ஷா கடைசியாக அந்த மூன்றாம் தளத்தில் ரௌண்ட்சை முடித்து விட்டு தன் அறைக்கு சென்று அமர்ந்தான்.


அவன் உட்கார்ந்த பின் தன் முன்னே இருந்த திரையை ரிமோட் மூலம் இயக்கிக் கொண்டிருந்தான். அந்த நேரம் என்னையும் பார் என அழைத்தது அவனின் கைப்பேசி. அழைத்தது வேறு யாரும் இல்லை ஹர்ஷாவின் அருமை அத்தை மகன் விக்ரம் தான்.


விக்ரமின் அழைப்பு என்றவுடனே ஹர்ஷாவிற்கு என்ன விஷயம் என புரிந்து விட்டது. 'இன்னைக்கு யாரோ! ம்.ஹீம்...' என பெருமூச்சு எழுந்தது.


ஹர்ஷா போனை எடுத்து உடன் அவன் பேசும் முன்னே "ஹர்ஷா நான் ஒரு போட்டோ அனுப்புறேன். உனக்கு ஓகே வான்னு பாத்து சொல்லு" என்றான்.


அதற்கு "என்னடா இது. நான் தான் யாரா இருந்தாலும் ஓகே நம்ம ஃபேமிலிக்கு செட் ஆனா போதும்னு சொல்லிட்டனே. அப்புறம் என்ன. அத்தைக்கு, வீட்ல இருக்க உங்க எல்லாருக்கும் ஓகேன்னா எனக்கும் ஓகே டா" என்றான்.


"என்ன ஹர்ஷா இப்படி பேசுற. உனக்கு பிடிச்சா தானே மேல மூவ் பண்ண முடியும். நீ தானே வாழ போற. அப்ப நீதானே பாத்து சொல்லனும். சீக்கிரம் பாத்து சொல்லுடா" என்றான் நியாயமாக.


சட்டென குதூகலமான குரலுக்கு தாவிய ஹர்ஷா "என்னடா விக்ரம். என்னைவிட நீதான் என்னோட மேரேஜ்ல இவ்ளோ இன்ட்ரஸ்ட் காட்டுற.


என் மேரேஜ் முடிஞ்சா தான் உன் ரூட் கிளியர் ஆகும்னு ரொம்ப தீவிரமா இறங்கீட்டியோ?" என்றான் கிண்டலாக. அதற்கு காரணமும் உண்டு.


அன்று கோமதி வந்து சென்ற பின் தன் வேலையை ஆரம்பித்து விட்டார் பார்வதி. வீட்டு உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்தவர் ஹர்ஷாவின் திருமண விஷயத்தை எடுத்தார்.



ஹர்ஷாவின் வயதும் இன்னும் சில மாதங்களில் முப்பதை நெருங்க இருப்பதும் பார்வதியின் இந்த முடிவிற்கு ஊக்கம் சேர்த்து சென்றது.


கோமதி மூக்கில் விரல் வைக்கும் அளவில் பெண்ணை பார்த்து, ஹர்ஷாவின் திருமணத்தை நடத்த திட்டமிட்டார்.


அதன் தாக்கம் அன்றே தரகரையும் வரவைத்து விட்டார். அன்று வந்திருந்த நபரை பார்த்திருந்த ஹர்ஷாவிற்கு ஒருநிமிடம் ஒன்றுமே புரியவில்லை.


பின் அவர் பெண் பார்க்கும் தரகர் என தெரியவர அதிர்ந்து தான் போனான் தன் அத்தையின் வேகம் கண்டு. முழுமூச்சாக அன்று பெண் தேடும் வேட்டையில் இறங்கியவர் தான் பார்வதி.


இன்று ஐந்து மாதங்கள் முடிந்த பின்னும் அதே வேகத்துடன் ஹர்ஷாவிற்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார். பல வசதியான வீட்டு பெண்களின் வரன்கள், நிறைய படித்த பெண்களின் வரன்கள் என பல ஜாதகங்கள் வந்தன.


ஆனால் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணையும் 'அது இப்படி, இது அப்படி' என ஏதாவது ஒரு காரணம் சொல்லி மறுத்து கொண்டிருக்கிறார் பார்வதி.


அவரிடம் இது குறித்து கேட்டால் "ஹர்ஷாவிற்கு இவள் சுத்தமாக பொருந்த மாட்டாள். என் ஹர்ஷா குட்டி இருக்க இருப்புக்கு எவ்ளோ லட்சனமான பொண்ணா பாக்கனும்" என்பார்.


இவரின் அலுச்சாட்டியங்களை காணும் ஹர்ஷாவிற்கு 'ஹையோ' என்றானது. ஆனால் பார்வதியின் தூய்மையான அன்பை காணும் போது தன் அன்னைக்கு மேல் தான் தெரிந்தார்.


அன்றிலிருந்து ஹர்ஷாவிடம் பெண்ணின் புகைப்படங்கள் காட்டி சம்மதம் பெற வேண்டிய பெரும் பொருப்பு விக்ரம் தலைமையில் விழுந்தது.


எனவே ஒவ்வொரு முறையும் விக்ரம் தவறாது கூறும் இதே வரிகளுக்கு ஹர்ஷாவும் சலிக்காது கிண்டல் அடிப்பான். ஆனாலும் தன் வீட்டில் வரப்போகும் முதல் திருமணத்தை ஆவலாக வரவேற்க விக்ரமும் தன் அன்னையோடு சேர்ந்து இறங்கிவிட்டான்.


இதையெல்லாம் எண்ணி பார்த்த ஹர்ஷாவின் இரண்டு நிமிட அமைதியை பொறுக்காமல் "ஹர்ஷா... அடேய் ஹர்ஷவர்தனா...." என்னும் விக்ரமின் அலறல் மீட்டது.


"ப்ச் என்னடா" என்றான் சலிப்புடன். "என்ன என்னடா. இவ்ளோ நேரம் என்ன கதையா சொல்லிட்டு இருந்தேன். என்ன பெத்த ஆத்தா, அதான் உன் அருமை அத்தை உனக்கு ஒரு பொண்ணு பாத்துருக்காங்க.


அலசு அலசுன்னு அலசி ஆராஞ்சு இந்த பொண்ணு தான் உனக்குன்னு அடிச்சு சொல்லுராங்க. அப்புறம் என்னோட வருங்கால தங்கச்சி இந்த பொண்ணு தான்னு என அடி மனசும் ஆழமா சொல்லுது மச்சான்.


சோ நீ என்ன பண்ற. இப்ப நான் அனுப்புற போட்டவ பாத்து உனக்கு புடிச்சிருக்கான்னு சொல்லுடா. என்ன ஓகேவா" என்றான் நீளமாக.


விக்ரம் கூறியதை சிரிப்புடன் கேட்டிருந்த ஹர்ஷா "சரி அனுப்பு. பாக்குறேன்" என்றான் கடைசியாக. "இதை ஆரம்பத்திலேயே சொல்றதுக்கு என்னடா. இவ்ளோ நேரம் என் தொண்ட தண்ணி வத்தரு அளவுக்கு கத்த விடுற" என புலம்பியபடி அழைப்பை வைத்தான்.


கைப்பேசியை வைத்தவுடன் வாட்சப்பில் செய்தி வந்ததற்கான ஒலி கேட்டது. 'தீயா வேலை செய்றான் போலையே' என விக்ரமை எண்ணி சிரிப்புடன் போனை எடுத்த ஹர்ஷா,


அதே நேரம் தன் கண்முன்னே தெரிந்த பெரிய திரையில் கண்ட காட்சியில் அவனின் கோபம் சுர்ரென மேலே ஏறியது. விக்ரம் அனுப்பிய பெண்ணின் புகைப்படத்தை கூட காணாது அவன் சிந்தையை கலைத்த விஷயத்தை நோக்கி அவன் கால்களும் வேகமாக முன்னேறியது.

கண்ணில் கோப தீயுடன் கிளம்பிய ஹர்ஷா, நேராக சென்று நின்றது அவன் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் அகிலனின் முன் தான்.


ரவுண்ட்ஸ் முடிந்து வந்த ஹர்ஷா தன் முன் இருந்த பெரிய தொலைக்காட்சியின் மூலம் மருத்துவமனை கண்காணிப்பு கேமராவை இயக்கினான்.


விக்ரமிடம் பேசிவிட்டு நிமிர்ந்த ஹர்ஷாவின் கண்களில் அவன் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் அகிலன் யாரோ ஒரு பெண் செவிலியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டிருந்த காட்சி தான் விழுந்தது.


அங்கு நடப்பவற்றை கண்டு அந்த இடத்தை நோக்கி விரைந்து சென்ற ஹர்ஷா டாக்டர் அகிலனை கோபமாக முறைத்து நின்றான்.


சற்று நேரம் முன்னே தன் ரவுண்ட்சை முடிந்த சென்ற ஹர்ஷா மீண்டும் வர வாய்ப்பில்லை என எண்ணிய அகிலன் இப்போது தன் முன்னே வந்து நிற்பவனை சற்றும் எதிர்ப்பார்க்கவே இல்லை.


ஹர்ஷாவின் உக்கிர பார்வையில் அந்த செவிலியின் கையை விட்ட அகிலன் பயத்தோடு அவனை பார்த்திருந்தான்.


"ரெண்டு பேரும் இன்னும் டூ மினிட்ஸ்ல என் ரூம்ல இருக்கனும்!" என்றுவிட்டு தன் அறை நோக்கி சென்று விட்டான். அந்த செவிலி பெண்ணும் ஹர்ஷா வந்த தெம்பில் அகிலனை காணாது ஹர்ஷாவின் பின்னே கிட்டத்தட்ட ஓடினாள்.


டாக்டர் அகிலன் கடந்த இரண்டு ஆண்டுகளாக அருணாசலம் மருத்துவமனையில் தான் மருத்துவனாக பணியில் உள்ளான். நல்ல திறமையான மருத்துவன். பெரிதாக இதுவரை அவன் மேல் குற்றச்சாட்டு என எதுவும் எழுந்தது இல்லை.


எனவே தான் அனைவரின் முன்பும் வைத்து விசாரிக்காமல் தனியே தன் அறைக்கு வரவழைத்து விசாரிக்க எண்ணினான் ஹர்ஷா.


அந்த செவிலி பெண் கீதா வந்து சில நிமிடங்கள் கழித்தே வந்து சேர்ந்தான் அகிலன். வந்த இருவரையும் தன் முன்னே இருந்த நாற்காலியில் அமர சொன்ன ஹர்ஷா இருவரையும் பார்த்தவன் பேசாது அமைதி காத்தான்.


சில நிமிட மௌனத்திற்கு பின் அந்த செவிலி பெண்ணே "டாக்டர் என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன்" என்று மெதுவாக ஆரம்பித்தாள்.


கீதா டாக்டர் அகிலனுக்கு உதவியாக இருக்கும் செவிலிகளில் ஒருத்தி. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்‌. வெகு அமைதியான பெண்ணும் கூட. இந்த மருத்துவமனையில் சேர்த்து ஒரு சில மாதங்களே ஆகிறது.


டாக்டர் அகிலனுக்கு கீதாவின் பொறுமை, பொறுப்பு, சாந்த குணம் பிடித்துவிட்டது. எனவே எப்போதும் தனக்கு உதவிக்கு அவளை தான் அழைப்பான். பக்கத்திலே இருப்பது போல் வேலை சொல்லுவான்.


இப்போது சில நாட்களுக்கு முன் தான் அவளிடம் தன் காதலை தெரிவித்தான்‌. இது போல் காதல் திருமணங்களை தன் வீட்டில் ஏற்க மாட்டார்கள் என கீதாவும் மறுத்து வந்தாள்.


ஆனால் அகிலன் அவளை விடாது தொல்லை செய்ய, இன்று அதன் அளவு எல்லை மீறியது. மதிய நேரம் யாரும் இல்லா ஐ.சி.யூ காரிடோரில் கீதாவை கண்ட அகிலன் மீண்டும் தன் காதலை ஏற்க வற்புறுத்தினான்‌.


மறுத்து கிளம்ப பார்த்த கீதாவை கையை பிடித்து இழுத்தவன் திடீரென அனைத்து விட்டான். இதை சரியாக ஹர்ஷாவும் பார்த்து விட தாமதிக்காமல் அங்கே சென்றுவிட்டான்.


அனைத்தையும் சொல்லி முடித்த கீதா தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள்.‌ இப்போது அகிலனை காண அவன் தலை குணிந்து அமர்ந்திருந்தான்.


"கீதா சிஸ்டர் சொன்னது எல்லாம் உண்மையா அகிலன்?" என்றான் ஹர்ஷா அகிலனிடம். அதற்கு அகிலன் "டாக்டர் ஹர்ஷா எனக்கு கீதாவ ரொம்ப பிடிச்சிருக்கு. சோ அதான் பேசிட்டு இருந்தேன்" என்றான்.


"பேசிட்டு மட்டும் தான் இருந்தீங்களா அகிலன்" என்ற ஹர்ஷாவின் கூர்மையான எதிர்கேள்வியில் தடுமாறிய அகிலன் "ஐ லவ் ஹர் எ லாட் ஹர்ஷா" என்றான் தவிப்பாக.


ஒரு தோல் குழுக்களுடன் "சோ வாட்?" என்ற ஹர்ஷா முறைத்து பார்த்திருந்தான். காதலிக்கிறேன் என்பவன் செய்யும் வேலையா இது என்று அவன் பார்வை கேட்டது.


ஹர்ஷாவின் உடல் மொழியில் இருந்து தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காது என எண்ணிய அகிலன் இப்போது "இங்க பாருங்க ஹர்ஷா நான் கீதாவ லவ் பண்றேன். அவகிட்ட நான் எப்படி வேனா பழகுவேன்.


அதை கேட்க நீங்க யாரு. நீங்க வேனா இந்த ஹாஸ்பிடல் ஓனரா இருக்கலாம். பட் என் பர்ஸ்னல்ல தலையிட உங்களுக்கு எந்த ரைட்ஸ்ம் இல்லை. புரியுதா!


நீங்க இதோட ஸ்டாப் பண்ணிட்டா உங்களுக்கு நல்லது" என்றான் சீரலாக. அகிலன் பேசியது கோபத்தை ஏற்றினாலும் தன் பொறுமையை பிடித்து வைத்தி பேசினான் ஹர்ஷா.


"அகிலன் நீங்க மட்டும் லவ் பண்ணா பத்தாது. கீதாவும் உங்கள லவ் பண்ணியிருந்தா நான் இப்படி உங்கள உக்கார வச்சு பேசிட்டு இருந்திருக்க மாட்டேன்.


கீதா தான் உங்கள லவ் பண்ணவே இல்லைன்னு சொல்றாங்களே. அப்புறம் எதுக்கு அந்த பொண்ணை போர்ஸ் பண்றீங்க. இதோட நீங்க ஸ்டாப் பண்ணிக்கோங்க. அவங்கல டிஸ்டர்ப் பண்ணாம இருந்தீங்கனா தான் உங்களுக்கு நல்லது.


இந்த ஹாஸ்பிட்டல்ல ஒர்க் பண்ணனும்னா அவங்க ஒழுக்கமானவங்கலா இருக்கனும். இதை நீங்க வந்த பர்ஸ்ட் டேவே சொல்லிட்டேன். அப்படி இருந்தும் இந்த மாதிரி செஞ்சுருக்கீங்க.


பொண்ணுங்க இந்த ஹாஸ்பிடல் வந்தா சேப்டின்னு நம்பி தான் அவங்களும் எங்க ஹாஸ்பிடல்க்கு வேலைக்கு வராங்க‌. அவங்க சேப்டிக்கு நாங்க தான் பொறுப்பு. சோ இதோட விட்டுட்டு உங்க வேலைய மட்டும் பாருங்க" என்றான் ஹர்ஷா அவனின் சீரலுக்கு பதிலாக.


ஆனால் ஹர்ஷாவின் பதிலில் 'இவன் யார் என்னை கேட்க' என கோபமடைந்த அகிலன் "இங்க பாருங்க ஹர்ஷா. இது என் லைஃப். எனக்கு யாரை பிடிக்குதோ அவங்கல தான் லவ் பண்ண முடியும்.


எனக்கு கீதாவ பிடிச்சிருச்சு. அவளுக்கு பிடிக்குதோ இல்லையோ அவ என்னை தான் லவ் பண்ணனும் கல்யாணமும் பண்ணனும்" என்றான் திமிராக.


அந்த பெண் கீதா அகிலனின் சத்தத்தில் மிரண்டவள் பயத்தில் எழுந்து ஹர்ஷாவின் புறம் நகர்ந்து நின்றுக் கொண்டாள். அதை கண்டு கோபமான அகிலன் "ஏய் ஒழுங்கா இந்த பக்கம் வாடி.


இப்ப எதுக்கு அங்க போய் நிக்கிற‌. என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?" என்றான் ஆவேசமாக அவளின் புறம் நகர்ந்தவாறு.


"அகிலன் மரியாதையா அங்கையே நில்லுங்க. நான் இவ்ளோ தூரம் சொல்றேன் கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம நடந்துக்குறீங்க. கொஞ்சம் கூட பேசிக் மேனர்ஸ், பொண்ணுங்ககிட்ட கண்ணியமா நடந்துகனும் அப்படின்னு ஒரு ஒழுக்கம் இல்லை.


நீங்களாம் டாக்டர்க்கு படிச்சு என்னத்த கத்துக்கிட்டீங்க. உங்கள லாஸ்டா வார்ன் பண்றேன். போய்ருங்க. டீசன்டா உங்க ஜாப் ரிசைன் பண்ணிட்டு போய்ருங்க.


இல்லைனா டெர்மினேஷன் ஆர்டர் உங்கள தேடி வரும்" என்றான் ஹர்ஷா முடிவாக. ஹர்ஷாவின் ஒழுக்கம் இல்லை என்ற வார்த்தை அகிலனனை அதிகம் உசுப்பி விட "ஆமாம் டா நான் ஒழுக்கம் இல்லாதவன் தா.


இவள என்னோடையே கூட்டிட்டு போறேன். நீ என்ன பண்றனு நானும் பாக்குறேன்" என்றவன் கீதாவின் அருகே வர, அவள் கையை பிடித்து இழுக்கும் முன்பே ஹர்ஷா வந்திருந்தான்‌.


அவனை தடுக்கும் நோக்கோடு தள்ள அகிலன் தடுமாறி கீழே விழுந்தான். ஹர்ஷாவும் அவனை தள்ளிவிட வேண்டும் என வரவில்லை. அவனை தடுக்க முயற்சிக்க திடீரென கீழே விழுவான் என எதிர்ப்பாக்கவில்லை.


கீழே விழுந்த அகிலனுக்கு ஹர்ஷாவின் மேல் கொலை வெறியே வந்தது. தன்னை ஒழுக்கம் கெட்டவன் என சொன்னதும் அல்லாமல் வேண்டுமென கீழே தள்ளியதாக எண்ணினான்.


கோபமாக எழுந்தவன் விருட்டென வெளியே கிளம்பி விட்டான். மற்ற அனைவரிடமும் நன்றாக நடந்து கொண்ட அகிலன் தனக்கு பிடித்த ஒரே காரணத்திற்காக அந்த பெண்ணும் தன்னை விருப்ப வேண்டும் என எண்ணியது முட்டாள் தனமென நினைக்க மறந்தான்.


அவன் சென்ற பின் ஹர்ஷாவை நோக்கி திரும்பிய கீதா " ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தாரு. என்ன செய்யன்னு தெரியாம இருந்தேன்.


ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்" என்றாள் அழுகையுடன். "இங்க பாருமா இந்த மாதிரி பிராப்லம்னா நேரா என்கிட்ட வந்து கம்ப்லைன் பண்ணுங்க.


அதை விட்டுவிட்டு இந்த மாதிரி ஆட்களை எல்லாம் சகிச்சுக்கிட்டு வேலை பார்க்கனும்னு எந்த அவசியமும் இல்லை. புரியுதா" என்றான் அவளுக்கு பதிலாக.


பின் அவளுக்கு விடுப்பையும் கொடுத்து நன்கு ஓய்வெடுத்து விட்டு அவள் மனநிலை நன்றான பின் மருத்துவமனை வந்தால் போதும் என அனுப்பினான்.


"ஓகே டாக்டர். தேங்க் யூ சோ மச். இந்த ஹெல்ப்ப என் லைப்ல நான் எப்பயும் மறக்க மாட்டேன்" என்ற கீதாவும் கிளம்பி விட்டாள். வந்த பிரச்சினை ஒருவழியாக நான்கு சுவற்றுக்குள் முடிந்து விட்டது என எண்ணிய ஹர்ஷா ஒரு பெருமூச்சை விட்டு தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தான்.


ஆனால் அது இல்லை இனி தான் ஆரம்பம் என எண்ணும் படி அகிலன் தன் இல்லத்திற்கு வந்த பின் சுவற்றை வெறித்து அமர்ந்திருந்த காட்சி உணர்த்தியது.


இப்போதும் தன் தவறை உணராத அகிலனோ ஹர்ஷாவின் மீது பெரும் வன்மத்தை வளர்த்துக் கொண்டு அமர்ந்து விட்டான். அவனை எப்படியும் மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் மரமாய் வளர துவங்கியது.


--------------------------------------------------


அறையில் சோகமே உருவாக அமர்ந்திருந்தார் வசுந்தரா. அந்த நேரம் அறைக்குள் வந்த கணபதி சோக சித்திரமாக அமர்ந்திருந்த வசுந்தராவை கண்டு "என்ன வசுமா இப்படி உக்காந்திருக்க" என்றவர் அவரின் நிலையை உணர்ந்தவராக


"இன்னும் எத்தனை நாளைக்கு பழசயே நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருப்பமா. மறக்க முயற்சி பண்ணுமா" என்றவர் ஆதரவாக அவரின் தலையை வருடினார்.


வேதனையோடு கணபதியை பார்த்த வசுந்தரா "எப்படிங்க இந்த நாள மறக்க முடியும். மறக்க கூடிய விஷயமா. நம்மலால ஒரு உயிர் போயிருச்சே அது நான் எப்படிங்க மறக்கறது" என்றவர் முடிவில் அழுது விட்டார்.


கணபதிக்கும் அந்த நினைவுகள் தான். ஆனால் அவரும் சோர்ந்து அமர்ந்து விட்டால் வசுந்தரா இன்னும் உள்ளுக்குள் நொந்து விடுவாரே. எனவே அவரின் வருத்தத்தை போக்கும் பொருட்டு வசுந்தராவை ஆதரவாக அனைத்து கொண்டார் கணபதி.


அன்னை தந்தையை உணவுன்ன அழைக்க வந்த ரித்துவின் காதில் இவர்களின் வேதனையான புலம்பல்கள் வந்து விழுந்தது. உடனே 'அப்படி யாரு இறந்து போயிருப்பாங்க' என்ற எண்ணம் தான் மனதில் தோன்றியது.


அதை அப்படியே விட்டவள் அவர்களை உணவுன்ன அழைக்க இருவரும் ஒருசேர மறுத்துவிட்டனர். ரித்து இவர்களின் செய்கையில் குழம்பியபடி அனுவிடம் இது குறித்து பேச வேண்டும் என எண்ணி சென்றாள்.


இதே நேரம் மருத்துவ கல்லூரியின் அருகே இருந்த பார்க்கில் அபிமன்யுவின் கோப முகம் கண்டு திகைத்து போய் நின்றிருந்தாள் ஆதிரா!!


-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 7

அனுக்ஷ்ராவும் ரித்துவும் மதிய உணவு வேளையில் தங்கள் கல்லூரியின் உள்ளே இருந்த மரத்தடியில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தனர்.

விஸ்வநாதன் அன்று அனுவை திட்டி சென்றாலும் இரண்டு நாட்கள் சென்ற பின்னர் அவளை அழைத்து "உன்னை நம்பி அனுப்பறேன். போனோமா வந்தோமான்னு இருக்கனும்" என்ற அறிவுரையோடு கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.

இந்த மட்டுமேது அனுமதி தந்தாரே என்ற நிம்மதியில் அனுவும் ஆர்வமாக கல்லூரி சென்று வர ஆரம்பித்ததாள். இந்த சம்பவம் நடந்த பின்னர் விஸ்வநாதனின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் வந்தன.

முன்னர் போல் அனுவை எந்த கேள்வியும் கேட்பதில்லை. அதே போல் திட்டுவதும் இல்லை. ஏன் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களையும் எதுவும் சொல்வதும் இல்லை.

இவரின் இந்த செய்கை வீட்டில் இருந்தவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆம் குழப்பத்தை தான் ஏற்படுத்தியது. அதுவும் அனுவிற்கு மிக அதிகமாகவே குழப்பத்தை தந்தது அவர் நடவடிக்கைகள்.

தான் பிறந்ததிலிருந்து தன்னை எதற்கெடுத்தாலும் கண்டிக்கும் தந்தை இப்போது அமைதியாக செல்வது அவளுக்குள் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த அமைதிக்கு பின் என்ன வரக் காத்திருக்கிறதோ என எண்ணிய அனு 'வருவது வரும் போது வரட்டும். இப்போது நம்மை கல்லூரி செல்ல அனுமதி அளித்திருக்கிறாரே. அதுவே போதும்' என்று அதற்கு மேல் சிந்திக்காமல் விட்டு விட்டாள்.

ஆனால் அந்த அமைதிக்கான அர்த்தம் எங்கு போய் முடியும் என இன்னும் ஒரு வாரத்திற்குள் தெரியும் போது அவள் என்ன செய்வாளோ?

இங்கு கல்லூரியிலோ அனுவிற்கென சொல்லிக் கொள்ளும் அளவில் தோழிகள் என யாரும் இல்லை. எனவே இப்போது ரித்து வந்தபின் அவளுடன் சேர்ந்து உணவு உண்கிறாள். இல்லையெனில் தன் வகுப்பறையில் தனியாக உண்டுவிடுவாள்.

"ஷரா க்கா.. நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கனும். நானும் ஒரு வாரமா உன்கிட்ட கேக்கலாம்னு நினைக்கிறேன். ஆனால் கேக்க முடியலை" என்று பீடிகையோடு ஆரம்பித்தாள் ரித்து.

"என்ன ரித்து. எதுவும் சிலபஸ்ல டவுட்டா?" என்றாள் ஷரா உண்டுக் கொண்டே. "இல்ல க்கா.. அது வந்து... நான் அன்னைக்கு உடம்பு சரியில்லைன்னு லீவ்ல வீட்ல இருந்தேன்ல அப்போ.." என இழுத்தவள், அன்று அன்னையும் தந்தையும் பேசியதை முழுவதுமாக கூறினாள்.

அனைத்தையும் கேட்ட அனு "எனக்கும் எதுவும் தெரியாதே ரித்து. நீ அத்தை மாமாட்டையே கேட்டு உன் டவுட்டை கிளியர் பண்ணிருக்கலாம்ல" என்றாள் யோசைனையாக.

அதற்கு "இல்லை க்கா. அப்பா அம்மா இரண்டு பேரும் ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தாங்க. அதுவும் அம்மா அழுதுட்டு இருக்கவும் எனக்கு எதுவும் கேக்க தோனலை க்கா" என்றாள்.

பின் இருவரும் அதை பேசாது விட்டு படிப்பு விஷயத்திற்கு தாவி விட்டனர். ஆனால் இருவருக்கும் இறந்த நபர் யாராக இருக்கும் என்ற கேள்வி மட்டும் மனதின் ஓரத்தில் தங்கிவிட்டது‌.

ஆதிரா பரிட்சையை முடித்து நண்பர்களுடன் வெளியே வந்து கொண்டிருந்தாள். அபிமன்யு நிற்கும் மரத்தின் அருகே வரும் போது சரியாக இருவருக்கும் இடையில் வந்து நின்றான் விஷ்ணு.

"குட் ஆப்டர்னூன் சார்" என்றாள் ஆதி தன் முன் வந்த நின்ற விஷ்ணுவை கண்டு இயல்பாக. "குட் ஆப்டர்னூன் ஆதி" என்ற விஷ்ணு தன்னிடம் என்றும் மரியாதை பார்வை பார்க்கும் ஆதியிடம் எப்படி தன் காதலை சொல்வதென தெரியவில்லை.

ஆனால் உடன் நின்ற சந்தியாவிற்கு சந்தேகம் வந்துவிட்டது. விஷ்ணு தன்னுடைய காதலை கூற தான் ஆதியை நிறுத்தி இருப்பானே? என.

அருகில் அபி இருப்பது ஒருவித நிம்மதியும் தைரியமும் கொடுத்தாலும் சிறு பயம் இருக்கவே செய்தது. எனவே விஷ்ணுவை நோக்கி

"சார் இங்க வெயில் ரொம்ப அதிகமா இருக்கு. அந்த மரத்தடிக்கு போலாமா?" என்றாள் வேகமாக. அவள் கூறியது ஒரு விதத்தில் உண்மையே. ஏனெனில் ஆதி சந்தியா இருவருக்கும் வெயிலில் வேர்வை ஊற்றிக் கொண்டிருந்தது.

ஆதலால் இருவரோடும் சேர்ந்து அபியின் அருகே சென்றனர். அபிமன்யுவிற்கு அனைவரும் சேர்ந்து வருவது குழப்பத்தை தந்தாலும் அமைதியாய் பார்த்திருந்தான்.

அபியின் அருகே வந்த உடன் அனைவரையும் முந்திக் கொண்ட சந்தியா "ஹாய் அபி அண்ணா. எப்ப வந்தீங்க" என்றாள் அப்போது தான் அவன் அங்கே இருப்பதை பார்த்தது போல.

சந்தியாவின் கேள்வியை கேட்டு குழப்பினான் அபி. ஏனெனில் அவன் நிற்பதை கண்டு கையை அசைத்து விட்டு தான் நண்பர்கள் வந்தது. இருந்தும் "இப்ப தான் மா. டென் மினிட்ஸ் ஆகுது" என்றான்.

"ஓஓ.. ஓகே ண்ணா.. ஓகே" என்ற சந்தியாவிற்கு சடுதியில் ஒரு யோசனை தோன்ற இவர்கள் பேசியதை பார்த்திருந்த விஷ்ணுவை நோக்கி

"விஷ்ணு சார். இவர் அபிமன்யு அண்ணா. நம்ம காலேஜ் தான். பட் பி.ஜி பர்ஸ்ட் இயர்" என்றாள். அதற்கு "ஓஓஓ..." என்று இழுத்த விஷ்ணு இந்த தகவல் தற்போது எதற்கு என பார்வையால் கேட்டு நின்றான்.

"ம்ம். ஆமாம் சார். அன்ட் அது மட்டும் இல்ல நம்ம ஆதிராவோட கஸினும் கூட" என்ற போது அவன் கண்களில் சிறிது மின்னல் கூட வந்தது.

ஆனால் அவள் அதோடு மட்டும் நிறுத்தாது "சாரி சாரி சார் கஸின்னு மட்டும் சொல்ல முடியாது. ஏனா..." என்று இழுத்தவள் ஒரு முடிவுடன் "வீட்ல இவங்க ரெண்டு பேருக்கும் தான் மேரேஜ்னும் பேசி வச்சிருக்காங்க.

ஆதி யூ.ஜி. முடிச்ச உடனே மேரேஜ் தான்னு பிக்ஸ் பண்ணிட்டாங்க" என்றாள் ஒரே போடாக. கேட்டிருந்தவர்களில் யாருக்கு எவ்வளவு அதிர்ச்சி என வரையறுக்க முடியாது போனது.

அதுவும் விக்கி 'அட புளுகு மூட்டையே' என அதிர்ந்து வாயை பிளந்து பார்த்திருந்தான். அவனை பார்த்து வந்த சிரிப்பை அடக்கி நின்றிருந்தாள் சந்தியா.

ஆனால் ஆரம்பம் முதலே சந்தியாவின் செய்கையில் ஏதோ அர்த்தம் இருக்கிறது என எண்ணிய அபிக்கு இப்போது விஷயம் ஓரளவுக்கு புரிந்து விட்டது.

இப்போது சூழ்நிலையை கையில் எடுத்த அபி "யாஹ் சார். எங்க வீட்ல பிக்ஸ் பண்ணிட்டாங்க. அன்ட் ஐ டூ லவ் ஹர் எ லாட். இன் பேக்ட் ஆதிய நான் ஃபைவ் இயர்ஸா லவ் பன்றேன்.

சோ வீட்ல யாரும் எதுவும் சொல்லாம ஓகே சொல்லிட்டாங்க" என்று முடித்தான். பின் சந்தியாவை நன்றியோடு ஒரு பார்வை பார்த்தவன் ஆதியை பார்த்தான்.

இதை ஆரம்பத்தில் இருந்து பார்த்திருந்த ஆதியின் மனதில் 'அப்போ வீட்ல நமக்கும் அபி அத்தான்னு பேசி வச்சிட்டாங்களா?' என்று தான் எண்ணம் வந்தது.

அவளின் எண்ணத்தை அவள் முகத்தில் இருந்தே அறிந்து விட்ட அபி இதற்கு மேல் இங்கே இருந்தால் ஆதி 'அப்படியா அத்தான்?' என்றே கேட்டு விடுவாள் என "வா அம்மு கிளம்பலாம்.

டை ஆச்சு. நீ இன்னும் சாப்பிடல. சோ டையர்டா தெரியிர பாரு" என்று அவளை அழைத்து சென்றான். என்ன முயன்றும் அவன் குரலில் இருந்த அக்கறை மற்றவர்க்கு புரியத்தான் செய்தது.

இதையெல்லாம் கண்ட விஷ்ணுவிற்கு மனதிற்குள் பாரமாக இருந்தது. ஆனால் நிதர்சனம் உரைக்க 'இனி ஆதியை தன் மனதால் கூட எண்ண கூடாது' என்ற முடிவில் ஆசிரியர் அறை நோக்கி சென்று விட்டான்.

செல்லும் விஷ்ணுவை பாவமாக பார்த்திருந்த சந்தியாவின் சிந்தனை அவள் முதுகில் பட்டென்று விழுந்த அடியின் வலியில் கலைய
திரும்பி பார்த்தாள்.

விக்கி தான் அடிந்திருந்தான். "ஹே சந்து! என்னா பெர்பார்மன்ஸ் எரும. எவ்ளோ பெரிய அனு குண்ட அசால்டா வீசிட்டு நிக்கிற. நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்" என்றான் வடிவேலுவின் மாடுலேஷனில்.

விக்கியின் கிண்டலில் "அட போடா. விஷ்ணு சார் வந்த வேகத்தை பாத்தல்ல. அவர் அம்முகிட்ட புரபோஸ் பண்ற முடிவுல வந்த மாதிரி தான் இருந்துது. ஆனா ஆதி ரொம்ப இன்னசன்ட் டா.

அவ வீட்ல ரொம்பவே செல்லமா வளத்துட்டாங்க. அவளால பாக்குறவங்க யாரையும் தப்பா கூட நினைக்க முடியாது டா. அவளுக்கு இந்த மாதிரி விஷயம் எல்லாம் புரியவும் செய்யாது.

அன்ட் விஷ்ணு சார். அவர் ஆதிய உண்மையாவே லவ் பண்ணாரு. நான் கூட ஆரம்பத்தில அவர் ஆதிய பார்த்தத வச்சு அவர் மேல பெருசா மரியாதை வைக்கில.

பட் இந்த சிக்ஸ் மந்த்ஸ். என்னதான் அவ மேல லவ் இருந்தாலும் தப்பா நடந்துக்கிட்டது இல்லை. அவ பாக்காம இருக்கப்ப தான் பாப்பாரு. சோ இரண்டு பேருக்கும் எந்த மன கஷ்டமும் வராதபடி செய்யதான் இப்படி செஞ்சேன் டா" என்றாள் நீளமாக.

நல்ல நண்பர்கள் என்றும் ஒரு சிறந்த தாய் தந்தை மற்றும் அனைத்து உறவுகளையும் உள்ளடக்கியவர்கள் என்பது எவ்வளவு உண்மை என புரிந்து கொண்டான் விக்கி.

மேலும் விக்கிக்கு சந்தியாவை எண்ணி பெருமையாகவே இருந்தது. விஷ்ணு என்னதான் தன் காதலை சொல்லி இருந்தாலும் அபி இருக்கும் வரை அது கண்டிப்பாக நடவாத ஒன்று.

அதனால் அனைவருக்கும் மன கஷ்டம் தான் மிஞ்சும். இதை அறிந்து யாருக்கும் எந்த தர்மசங்கடமும் வராதவாறு பார்த்துக் கொண்ட சந்தியா விக்கியின் மனதில் உயர்ந்து சென்றாள்.

இருந்தும் அவளை கிண்டல் அடிக்கும் பொருட்டு "ஹப்பா சந்து! உன்னை நான் என் ஏஜ் பொண்ணுன்னு தப்பா நினைச்சிட்டேன். இப்ப தானே தெரியிது.

நீ பாப்பா இல்லை பாட்டினு" என்று ராகமாய் இழுத்துவிட்டு ஓட தொடங்கிட "என்னது நான் பாட்டியா! ஏய் விக்கி மண்டையா. நில்லுடா...! உன் மண்டைய இன்னைக்கு நான் உடைக்கில என் பேர் சந்தியா இல்லடா" என்றபடி விக்கியை துரத்திச் சென்றாள்.

மருத்துவமனையில் அகிலனால் இன்று நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் ராஜசேகருக்கு அரைகுறையாக தெரியவர ஹர்ஷாவை எண்ணி எப்போதும் போல் இப்போதும் பெருமை வந்தது அவருக்கு.

அந்த நேரம் ஹர்ஷாவும் வீட்டிற்கு வந்துவிட, அவனை பேச அழைத்த ராஜசேகர் என்ன நடந்தது என ஹர்ஷாவின் வாய்மொழியாகவே கேட்டு தெரிந்து கொண்டார்.

பின் "ஹர்ஷா நீ அகிலனோட விஷயத்தில கொஞ்சம் ஓவரா எமோஷனல் ஆகி நடந்துகிட்ட மாதிரி தோனுது பா" என்றார் தன் எண்ணத்தை.

அதற்கு "எனக்கு அகிலன் லவ் பண்ணதுலா ஒரு விஷயமே இல்லப்பா. அந்த பொண்ணுக்கு இதுல சம்மதமே இல்லப்பா. பட் அது மட்டும்னா கூட நான் அதையெல்லாம் ஹாஸ்பிடல்க்கு வெளிய வச்சுக்கோங்கனு சொல்லிருப்பேன்.

பட் அந்த பொண்ணு கிட்ட மிஸ் பிஹேவ் பண்றான் ப்பா. நம்மள நம்பி தானே நம்ப ஹாஸ்பிடல்க்கு வொர்க் பண்ண வராங்க. அப்போ அவங்க சேப்டிக்கு நாம தானே பொறுப்பு. அதை தான் செஞ்சேன் ப்பா‌.

அன்ட் அட் த சேம் டைம் அங்க மிஸ்டேக் அந்த நர்ஸ் மேல இருந்திருந்தாலும் நான் கண்டிப்பா ஆக்ஷன் எடுத்திருப்பேன் ப்பா.

உங்களுக்கு தெரியாதா?" என்றான் ஹர்ஷா ராஜசேகரிடம். இவர்கள் பேசுவதை கேட்டபடி வந்த பார்வதி "என் ஹர்ஷா குட்டிய பத்தி தெரியாதா ண்ணா. அவன் நியாயமா தான் இருப்பான்.

அப்புறம் தப்புன்னு ஒரு விஷயத்தை பண்ணவே மாட்டான். அது அவனுக்கு தெரியவும் தெரியாது" என்று திடமாக சொன்னவர் ஹர்ஷாவின் புறம் திரும்பி

"ஹர்ஷா குட்டி விக்ரம் உனக்கு ஒரு போட்டோ அனுப்பி வச்சானே பாத்தியாப்பா. உனக்கு புடிச்சிருக்கா?" என்றார் ஆர்வமாக.

நடந்த பிரச்சினையில் விக்ரம் பேசியதை சுத்தமாக மறந்துவிட்டிருந்த ஹர்ஷா திருதிருவென முழித்தான். அவன் முழியிலே அவன் இன்னும் பார்க்கவில்லை என உணர்ந்த பார்வதி

"அப்ப இன்னும் பாக்கலயா" என்றார் சட்டென்று உள்ளே சென்ற குரலில். அவரின் முக வாட்டத்தை பொறுக்காத ஹர்ஷா " ஐயோ அத்த இருந்த டென்ஷன்ல மறந்துட்டேன்.

இப்ப போய் பிரஸ் ஆகிட்டு உடனே அந்த பொண்ணு போட்டோவ தான் பாக்குறேன். ஓகேவா. கூல் கூல் அத்த" என்றுவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.

அவன் செல்வதை பார்த்திருந்த பார்வதி மனதில் 'கடவுளே இந்த பொண்ணு அம்சமா ஹர்ஷாவுக்கு நல்ல ஜோடியா இருக்கா. அவனுக்கு பிடிக்க வச்சிரேன். உனக்கு வேண்டிகிட்ட மாதிரி உன் கோயில்க்கு வந்து பொங்கல் வச்சு பூஜை பன்றேன்" என்று வேண்டுதலோடு அமர்ந்து விட்டார்.

ஆதிராவை அபிமன்யு பக்கத்தில் இருக்கும் பார்க் ஒன்றிற்கு அழைத்து வந்திருந்தான். அங்கே வந்த பின் யோசனை முகமாக அமர்ந்திருந்த அவனையே விழி எடுக்காது பார்த்திருந்தாள் ஆதிரா.

அபிமன்யுவின் காதல் அவனை ஒரு புதிய மனிதனாக ஆதியிடம் காட்டியது. அவளுடன் கல்லூரியில் இருந்து வந்த அபி அவளின் பசி உணர்ந்து வெளியே சாப்பிட வைத்தே அழைத்து வந்தான்.

இதுநாள் வரை அபியின் செய்கைகள் யாவும் அக்கறையாக தெரிய, இன்று அபியின் காதலை தெரிந்த பின் அவ்வளவும் காதலாகவே வேறு தெரிந்து துளைத்தது.

'எப்போ இருந்து நம்மள லவ் பன்றாருன்னு தெரியலையே. சந்துக்கே தெரிஞ்சுருக்கு. நாம அவ்ளோ தத்தியாவா இருந்திருக்கோம். ச்ச' என்று இடையே ஒரு மனது வேற காறி துப்ப அமைதியாக இருந்த அபியின் மனதை அறிய அவனை பார்த்தாள்.

"அ.. அத்தான்" என்றாள். ஆனால் வாயில் இருந்து காத்து தான் வந்தது. 'என்னடா இது இந்த அம்முக்கு வந்த சோதனை. ஐயோ அத்தான்ட பேச வேற ஷையா இருக்கே. என்ன இது புதுசா உள்ள என்னனமோ பண்ணுதே' என தடுமாறினாள்.

பின் 'ஓம் சாந்தி! ஓம் சாந்தி!' என தன் மனதை சமாதானம் செய்தவள் மெதுவாக அபியின் கரத்தை சுரண்டினாள். இவ்வளவு நேரம் 'அம்முவிடன் தன் காதலை எப்படி சொல்ல போகிறோம்.

அப்படி சொன்னால் அவள் எப்படி எடுத்துக் கொள்வாள்' என யோசித்துக் கொண்டிருந்த அபி அம்முவின் தொடுகையில் திரும்பி பார்த்தான்.

அவனை பார்த்து தயங்கியவாறே "அ.. அத்தான் அது வந்து அத்தான். அது நீங்க எப்போல இருந்து என்ன லவ் பண்றீங்க" என்று திக்கி தினறி கேட்டு முடித்தாள்‌.

அம்முவின் கேள்வி அபிக்கு இன்ப அதிர்ச்சியை தான் தந்தது. 'நீங்க காலேஜ்ல ஏன் அப்படி சொன்னீங்க' இல்லை 'நம்ம வீட்ல இரண்டு பேருக்கும் உண்மையாவே மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க லா என்ன?'

இது போன்ற கேள்விகளை அம்முவிடன் எதிர்ப்பார்த்திருந்த அபிக்கு அவளின் இந்த கேள்வி மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

அபியின் அமைதியில் "அபி அத்தான். சொல்லுங்க என்ன எப்படி உங்களுக்கு பிடிச்சுது? எப்போல இருந்து?" என்றாள் இப்போது தடுமாறாமல் ஆனால் சிறிய குரலில்.

"அம்மு அம்முமா. உனக்கு நான் உன்னை லவ் பண்றது, அதை உன்கிட்ட சொல்லாதது இதெல்லாம் அன்-ஈசியா பீல் ஆகலையா டா" என்றான் அபி அவள் முகத்தை பார்த்து.

அதற்கு "பர்ஸ்ட் சந்து சொன்னத கேட்டப்ப கொஞ்சம் ஷாக்கா தான் இருந்தது. அவளுக்கே புரிஞ்ச விஷயம் எனக்கு புரியாம போய்ருச்சேன்னு கொஞ்சம் ஷேமா கூட இருந்துச்சு. அன்ட் அதுக்கு அப்புறம் தான் நீங்க என்கிட்ட நடந்துக்கற விதம் புரிஞ்சுது.

அதுவும் இப்பக் கூட நீங்க எனக்கு பிடிச்சத சாப்பிட வச்சு தான் கூட்டிட்டு வந்தீங்க. அது எனக்கு ரொம்ப பிடிச்சுது. இப்ப வரை நீங்க என்கிட்ட நடந்துக்கிட்ட விதத்தை யோசிச்சு பாத்தேன்.

அப்போ அப்போ தான் புரிஞ்சுது..." என்று இழுக்க இப்போது "என்ன மேடம் புரிஞ்சுது?" என்று குறும்பாக கண் அடித்தான் அபி.

இப்போது அவனை பாராது "அது அது... உங்க செய்கை எல்லாம் அக்கறைன்னு நெனச்சது தப்பு. அதை நீங்க மனசுல இருக்க லவ்னால தான் செஞ்சிருக்கீங்கன்னு புரிஞ்சுது"என்றாள் வெட்கத்துடன்.

அவளின் புரிதலான பதில் மற்றும் வெட்க முகத்தில் மகிழ்ந்த அபி "செல்லக்குட்டி நீ ஒரு நாள்ல இவ்ளோ வளந்துட்டியா டா" என்று பொய்யாக வியந்தவன் அவளை தோளோடு அனைத்து கொண்டான்.

அவனின் கேலியில் "ஐயோ அத்தான் கிண்டல் பண்ணாதீங்க" என்று சினுங்கிக் கொண்டே அவனோடு மேலும் ஒன்றினாள். அவளின் செய்கையில் இன்னும் அவனை இறுக்கிக் கொண்டான் அபி.

சிறிது நேரம் இதே நிலை நீடிக்க அம்மு தான் "என்ன அத்தான் நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலை" என்றாள் அவன் நெஞ்சில் இருந்து நிமிர்ந்து முகத்தை ஆர்வமாக பார்த்தவாறு.

அவளின் ஆர்வத்தை கண்டு மகிழ்ந்த அபி மென்மையாக அவனின் அனைப்பை மென்மையாக மாற்றி "ம்ம். அது ஒரு ஆறு வருஷ ஃபிளாஷ் பேக்" என்றான் சிரிப்புடன்.

அவனின் சிரிப்பை விடுத்து "என்ன ஆறு வருஷமா?" என்றாள் அம்மு வியப்பாக. பின் "அத்தான் பிட் பிட்டா சொல்லாம முழுசா சொல்லுங்க" என்றாள் உரிமையான அதட்டலுடன்.

"பார்ரா என் அம்முக்குட்டி என்னை மிரட்டற அளவுக்கு வந்துட்டா" என்று சிரித்தவன் அவளை மேலே சீண்டாது அவனாகவே சொல்ல ஆரம்பித்தான்.

ஆறு வருடங்களுக்கு முன்.....

"ம்ஹீம் முடியாது முடியாது. நீங்க என்ன விட்டு போகக் கூடாதுனா போகக் கூடாது" என ஆதிரா ஹர்ஷாவின் கெஞ்சலுக்கு மறுத்துக் கொண்டிருந்தாள்.

ஆதிரா அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். ஹர்ஷாவிற்கு அப்போது தான் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படிக் சீட் கண்பார்ம் ஆகி இருந்தது.

அவனை போக வேண்டாம் என சொல்லி தான் இந்த அக்கப்போர் செய்துக் கொண்டிருந்தாள் ஆதிரா. ஆதிரா பிறந்ததிலிருந்து எல்லாவற்றிற்கும் ஹர்ஷா தான் வேண்டும் அவளுக்கு.

அவளை பள்ளி அழைத்து சென்று வர, அவளுக்கு பாடம் சொல்லி தர, அவளுக்கு பிடித்த உணவை வாங்கி தர, அவளை வெளியே அழைத்து சென்று வர என அனைத்திற்கும் ஹர்ஷா வேண்டும்.

இதில் அவன் வெளிநாடு சென்று விட்டால் அவள் நிலமை என்னவாவது என்று தான் இந்த அழுகை. அவள் அழுவதை பார்க்க பாவமாக இருந்தாலும் அவளை ஒருவாறு சமாளித்து வெளிநாடு சென்று விட்டான் ஹர்ஷா.

எப்போதும் அண்ணன் செய்வதை அப்படியே செய்யும் அபிக்கு அதன் பிறகு அம்முவை பார்த்துக் கொள்வது தன் கடமை என்ற எண்ணம் தானாகவே வந்தது.

அவளை சமாதானம் செய்து, அவளை படிக்க வைத்து என அவன் நேரங்கள் அவளை சுற்றியே அதன் பின் இருந்தது. அப்போது தான் ஒரு நாள் ஆதிரா பெரிய பெண் ஆனாள்.

சடங்குகள் செய்ய ஹர்ஷா வர முடியாத காரணத்தால் அபியே செய்யட்டும் என முடிவெடுத்தனர் வீட்டினர். எனவே சடங்கு நாள் வரும் வரை ஆதியை பார்க்க அவனை அனுமதிக்கவில்லை.

பக்கத்து அறையே ஆனாலும் ஒரு வார்ம் பார்க்க முடியவில்லை அபியால் அம்முவை. அதுவே அவனுள் ஏதோ சொல்ல முடியாத ஒரு தவிப்பை உருவாக்கியது.

ஒரு வாரம் சென்ற பின் புடவை அணிந்து முழு அலங்காரத்தில் அழைத்து வரப்பட்ட அம்முவை கண்டதும் மொத்தமாக விழுந்துவிட்டான் அபி.

அபியும் அப்போது தான் கல்லூரி முதல் ஆண்டில் இருந்தான். ஆனால் அந்த நிமிடம் அவள் மேல் காதலில் விழுந்தான்.

அன்றிலிருந்து அவளுக்கு செய்யும் அனைத்தையும் உரிமையாகவே செய்தான். அதனால் தான் அவள் வீட்டினர் அறியாது எங்கே சென்றாலும் அவளுக்கே கூட தெரியாது அவளுக்கு காவலாக செல்வான்.

மூன்று வருடம் சென்று இந்தியா வந்தான் ஹர்ஷா. வந்த சில நாட்களிலே அபியின் செயல்களில் அம்முவின் மீது தோன்றிய அதிக அக்கறை அவனை ஈர்த்தது.

தம்பியின் சிறு சிறு செய்கையிலே அவனின் மனம் அறிந்து அதை செய்து கொடுக்கும் ஹர்ஷாவிற்கு அபியின் மனம் போகும் திசை புரியாமலா போய்விடும்.

சில நாட்களில் அவனின் மனமும் ஓரளவு புரிந்தது. அதேபோல் அவனின் காதலை அம்மு உணரவில்லை என்பதையும் புரிந்துக் கொண்டவன் அபியிடமும் அதை குறித்து கேட்டுக் கொள்ளவில்லை.

ஹர்ஷாவிற்கு தெரிந்துவிட்டதோ என எண்ணிய அபியும் தன் அண்ணன் தான் நினைப்பது நியாமெனில் தங்களை சேர்த்து வைப்பான் என அதை அத்தோடு விட்டுவிட்டான்.

அனைத்தையும் சொல்லி முடித்த அபி தன் கை வளைவில் இருந்த அம்முவிடன் "அப்புறம் அண்ணா அவ்வளவு சொல்லியும் பாரின்லையோ இல்லை அந்த டெல்லி யூனிவர்சிட்டிலையோ படிக்க போகலை ஏன்னு தெரியுமாடா?" என்று வினவினான்.

அதற்கு இல்லை என்பது போல் தலை ஆட்டிய அம்முவிடம் "உன்னால தான். உன்னை பாக்காம இருக்க முடியாதுன்னு தான் இங்க இருக்க காலேஜ்லயே என்ட்ரண்ஸ் எழுதுனேன்" என்றான் சிரிப்புடன்.

இப்போது அனைப்பில் இருந்து விலகிய அபி அவள் முகத்தில் இருந்த முடியை விலக்கியவாறு "இப்ப ஓகேவா மேடம். உங்க டவுட்ஸ்லாம் கிளியர் ஆகிருச்சா?" என்று முடித்தான்.

"ம்ம்..." என்று வெட்க சிரிப்புடன் இழுத்த அம்முவிடம் "ஓய் என் லவ் ஸ்டோரிலாம் கேட்டல்ல. இப்ப உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு சொல்லு?" என்றான் என்னவோ பிடிக்காமல் தான் அவள் இவன் அனைப்பில் இருப்பது போல்.

"அது.. எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு அத்தான்" என்றவளிடம் "உண்மையாவா?" என்றான் கேள்வியாக அபி. அவள் பதிலில் ஏன்டா கேட்டோம் என ஆகிவிட்டது.

"அது வந்து அத்தான். சின்ன வயசில இருந்தே உங்கள‌ எனக்கு பிடிக்கும். ஆனா ஹர்ஷா அத்தான் பாரின் போனப்ப தான் உங்க கூட இன்னும் ரொம்ப குளோஸ் ஆனேன்.

பட் ஹர்ஷா அத்தான் மாதிரி தான் உங்களையும் நினைச்சேன். உன்மையாவே வேற எதுவும் தோனுனது இல்லை. இன்னைக்கு சந்தியா சொன்னப்ப கூட எனக்கு இது தெரியலையே அப்டின்னு தான் தோனுச்சு.

பட் அவெர்ஷனா எதுவும் தோனலை. அதே சமயம் நம்ம மேரேஜ் பண்ணிக்கிட்டா நான் லைப் லாங் நம்ம வீட்லையே இருக்கலாம்ல. அது மட்டும் இல்ல நீங்க ரொம்ப நல்லவரு அபி அத்தான். என்னை கஷ்டபடுத்த மாட்டீங்க.

அன்ட் நீங்க எதாவது வம்பு பண்ணாலும் ஹர்ஷா அத்தான்கிட்டையோ இல்ல அம்மாகிட்டையோ சொல்லிருவேன். அவங்க பாத்துப்பாங்கல. சோ அதான் ஓகேன்னு சொல்லிட்டேன்" என்று நீண்ட வசனமாக முடித்தாள்.

'ஒரு பேச்சுகாவது என்னை பிடிச்சிதால தான் ஓகே சொல்றேன்னு சொல்றாளா பாரு' என நொந்த அபி "அம்மு என்ன உனக்கு பிடிச்சிருக்கு தானே?" என்றான் பீதியுடன்‌.

அதற்கு அம்மு "பிடிச்சிருக்கு அத்தான். எத்தனை டைம் கேப்பீங்க. சரி போலாமா" என்றாள். "ஏய் அம்மு குட்டி கொஞ்ச நேரம் பேசிட்டு போலாமே. அதான் இன்னையோட உனக்கு எக்சாம்ஸ் முடிஞ்சு போச்சுல. சோ கொஞ்ச நேரம் டா" என்றான் கெஞ்சலாக.

பின் இருவரும் சிறிது நேரம் சின்ன வயது கதைகள், அபி அம்மு அவர்கள் வீடு, குடும்பம், வாழ்க்கை என அனைத்தையும் பற்றி பேசி விட்டு மாலை ஆகவே வீட்டை நோக்கி கிளம்பினர். இதில் அம்முவிற்கு மனதில் அபியின் மீது தனி பிரியம் தான் எப்போதும்.

அதுவும் இன்று அவன் ஆறு ஆண்டுகளாக தன்னை மட்டுமே மனதில் நினைத்துக் கொண்டு இருப்பதாக கூறியது அவளின் மனதை அவனை நோக்கி செலுத்தி விட்டது.

ஆனால் அதை அபியிடம் நேராக சொல்ல தெரியாது சுற்றி வளைத்து வீடு குடும்பம் ஹர்ஷா என உளறி முடித்தாள்.

அவள் மனதை அறியாத அபி 'இவளுக்கு உண்மையாவே என்னை பிடிச்சிருக்கா இல்லை நம்ம வீட்லயே இருக்க போறோம்னு சம்மதம் சொல்லிட்டாளா? ஒன்னு புரியலையே' என எண்ணியவாறே வண்டியை கிளம்பினான்.

எப்போதும் அம்மு தன் மாமன் மகன் என்ற உரிமையில் அபியோடு செல்பவள் இன்று இனி எல்லாம் அவனே என்ற உரிமையில் வண்டியின் பின்னே அமர்ந்து அவனை கட்டிக் கொண்டு சென்றாள்.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 8

ஹர்ஷவர்தன் அறைக்கு சென்றவன் குளித்து வந்துவிட்டு செய்த முதல் வேலை விக்ரம் தனக்கு அனுப்பிய புகைப்படத்தை எடுத்துப் பார்த்தது தான்.

இல்லையென்றால் அவனின் அத்தையின் முகம் வாடிவிடுமே. அவன் அத்தை முகம் லேசாக மாறினாலும் அவனால் தாங்க முடியாததே அதன் காரணம்.

பின்னே அன்னை இல்லா இவர்கள் இருவரையும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தன் சொந்த பிள்ளைகளுக்கு மேலாக கவனித்து கொள்கிறாரே. எனவே தன் கைப்பேசியை எடுத்தான்.

அதில் இருந்த புகைப்படத்தை தொட்டவன் தன் முன்னே திரையில் விரிந்த முகத்தை பார்த்ததும் அவனின் மனதை ஒரு நிமிடம் ஏதோ ஒன்று ஈர்த்தது.

அந்த பெண்ணின் கண்கள் தான் அது. பார்த்தவுடன் 'எப்பா எவ்ளோ பெரிய கண்ணு..?' என்று தான் நினைத்தான். ஆம் அவள் கண்கள் இயல்பிலே சற்று பெரியதாக இருந்தது. ஆனால் அதுவும் அவளின் அழகை உயர்த்தி தான் காட்டி சென்றது.

அந்த கண்களின் வசீகரத்தில் சில நிமிடம் அந்த கண்ணை மட்டுமே பார்த்தான் ஹர்ஷா‌. அதை அவனே உணராது போனது தான் அவன் விதியோ?

அதன்பின் அந்த பெண்ணின் முழு முகத்தை காண அதில் இருந்த சாந்தமான சிறு முறுவலை பார்த்தான். அதை கண்டு இந்த படங்களில், கதைகளில் வருவது போல் எந்த பல்ப்பும் அவன் மனதின் உள்ளே இப்போது எரியவில்லை.

ஆனால் மனதில் 'அமைதியான பொண்ணா இருப்பா போல‌. நம்ம ஃபேமிலிக்கு செட் ஆவான்னு‌ தான் தோனுது‌. அழகா இருக்கா. இல்ல இல்ல ரொம்ப அழகா இருக்கா...' என தன் போக்கில் நினைத்தவள் தன் கையை பார்த்தான்.

'ம்ஹீம் அவ பக்கத்துல நாம கொஞ்சம் கலர் கம்மியா தான் தெரிவோம் போலையே' என எண்ணியவன் தன் எண்ணம் போகும் திசையை கண்டு

'ஹோ.. என்ன ஹர்ஷா இது சின்ன பசங்க மாதிரி கலர்லா பாக்குற. அந்த பொண்ணு கேரக்டர் தான் முக்கியம். அது தான் அவளோட அழக சொல்லனும். அவளோட கலர் இல்ல ம்ம்..' என தன் தலையிலே கொட்டி கொண்டான்.

'ஆனால் அவள் முகத்தை கண்ட போது ஸ்பெஷலாக மனதினுள் எதுவும் தோன்றவில்லையே ஏன்' என எண்ணியவன் பின் 'சரி பழக பழக பிடித்துவிடும் போல' என்று எண்ணி கொண்டான்.

'பலர் தங்கள் வாழ்க்கையின் பயணத்தில் இப்படி தானே முதலில் புகைப்படத்தில் அறிமுகமாகி பின் பழகி பார்த்து வாழ்வில் ஒன்றாய் பயணம் செய்கிறார்கள்!!' என எண்ணிய ஹர்ஷாவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் ஹர்ஷா அந்த பெண்ணின் கண்ணை பார்க்கையிலே அந்த கண்களில் தன்னை தொலைந்து விட்டதை எப்போது உணர்வானோ என எண்ணிய விதியும்

"ஆனா இவன் இவ்ளோ டியூப் லைட்டா இருக்கக் கூடாது" என இவனை கிண்டல் செய்து நின்றது. அதன்பின் அவளின் பையோ-டேட்டாவை எடுத்து அதில் இருக்கும் அவள் பெயரை பார்த்தான்.

அந்த பெயர் அவனிற்கு சட்டென பிடித்து விட்டது. "அனுக்ஷ்ரா" தானும் ஒரு முறை மனதினுள் மெதுவாக சொல்லி பார்த்தவன் மகிழ்வுடன் தன் அத்தையை காண சென்றவன்.

"ம்ம். அனு ஸ்வீட் நேம். ஹர்ஷவர்தன் - அனுக்ஷ்ரா வாவ் நைஸ், சௌன்ட்ஸ் கிரேட்" என சொல்லி பார்த்தவன் பார்வதியை காண சென்றான்.

அவன் மெத்தையில் விட்டு சென்ற கைப்பேசியில் அனுக்ஷ்ரா அழகாய் புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

அவன் கீழே செல்லும் நேரம் தான் அபியும் அம்முவும் வந்தனர். இருவரும் கைக் கோர்த்துக் கொண்டு வரும் தோற்றம் ஹர்ஷாவிற்கு என்றும் இல்லாது இன்று வேறுப்பட்டு தெரிந்தது.

எப்போதும் ஆர்ப்பாட்டமாக வரும் அம்முவோ இன்று அமைதியே உருவாக வர, அபியின் முகமோ மகிழ்ச்சியை தத்தெடுத்து இருந்தது.

அதே போல் இருவரின் முகமும் ஒரு வித பொலிவுடன் இருக்கவே இருவரையும் ஊன்றி பார்த்திருந்தான் ஹர்ஷா.

உள்ளே வந்த அபி ஹர்ஷா ஹாலில் தங்களையே பார்த்தபடி நின்றதை கண்டு சற்று திடுகிட்டாலும் அவள் கையை ஆறுதலாக அழுத்தியே விட்டான்.

ஹர்ஷாவை பார்த்த அம்மு திருதிருவென விழித்தாள். பின் அபியின் ஆறுதலான செய்கையில் மெல்ல தன் அறைக்கு சென்று விட்டாள்.

இதையெல்லாம் பார்த்த ஹர்ஷா எதுவும் சொல்லாது சோஃபாவில் சென்று அமர்ந்து விட்டான். அபியும் அமைதியாக அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

அவனை பார்த்தவாறே "அத்தை" என்றான் ஹர்ஷா. அவனின் ஒரே சொல் பார்வதியின் காதை எப்படி தான் எட்டியதோ "சொல்லு ஹர்ஷா குட்டி" என்று வந்துவிட்டார்.

அவன் "என்ன அத்தை ஒரே சௌன்ட்க்கு வந்துட்டீங்க. எங்க இருந்தீங்க" என்றான் ஆச்சரியமாக. "இங்க பூஜை ரூம்ல தான் குட்டி இருந்தேன். அதை விடு.

நீ சொல்லு அந்த போட்டோ பாத்துட்டியா டா. பொண்ண உனக்கு பிடிச்சிருக்கா?" என்றார் ஆர்வமாக. ஒரு நிமிடம் அனுவின் கண்கள் அவன் சிந்தையை நிறைத்தது.

அதற்குள் பார்வதி பொறுமையை இழந்தவர் "ஹர்ஷா ஹர்ஷா குட்டி" என்று சில முறை அழைத்து விட்டார். அதன் பின்னே கனவில் இருந்து விழித்தது போல "ஹான் சொல்லுங்க அத்தை" என்றான்.

அவன் பதிலில் விசித்திரமாக அவனை பார்த்த பார்வதி "என்ன ஹர்ஷா குட்டி என்ன சொல்ல சொல்ற. நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுடா" என்றார்.

அதன்பின் தான் பார்வதி கேட்டது நியாபகம் வர "அது அத்தை எனக்கு ஓகே தான். வீட்ல உங்க எல்லாத்துக்கும் ஓகேன்னா புரசீட் பண்ணுங்க அத்தை" என்று முடித்துவிட்டான்.

அவன் மனசாட்சியோ " நீ அவளோட முழு பெயரை அனு என சுருக்கி அழைக்கவே தொடங்கிவிட்டு இப்போது என்ன வீட்ல இருக்க எல்லாருக்கும் ஓகேன்னா எனக்கும் ஓகேன்ற" என கேள்வி எழுப்ப

'நீ கம்முன்னு கிட' என அதை துரத்தியவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.

இப்போது ஆயிரம் தாமரை மலர்கள் மலர்ந்தது போல் பார்வதியின் முகம் விகசித்தது. இந்த செய்தியை அண்ணன் தந்தையிடம் சொல்ல அந்த வயதிலும் சிட்டாக பறந்து சென்றார் பார்வதி.

ஹர்ஷாவும் தனதறைக்கு அவன் கைப்பேசியை தேடி சென்றுவிட்டான். ஆனால் அருகே இருந்த அபி தான் ஆ.. வென வாயை பிளந்து அமர்ந்திருந்தான்.

'அந்த பெண்ணை பத்தி பேசியதும் அண்ணா முகம் என்ன இப்படி குளோ ஆகுது. அப்போ கண்பார்மா அவங்க தான் என் அண்ணி போலையே.

வாவ்!! அப்போ சீக்கிரமே அண்ணா மேரேஜ். யாஹூ...' என மனதில் எண்ணியவன் இங்கு நடந்ததை அம்முவிடம் பகிர்ந்து கொள்ள வேகமாக சென்றான்.

விஸ்வநாதன் வசுந்தரா மற்றும் கணபதியை அவர் அறையில் வைத்து திட்டிக் கொண்டிருக்க எப்போதும் அமைதியாக ஏற்றுக்கொள்ளும் இவர்கள் இருவரும் இன்று எதிர்த்துப் பேசினர்.

"முடியாது ண்ணா. உனக்கு அது என்ன நாள்ன்னு தெரியும்ல. எல்லா வருஷமும் நாங்க அந்த நாள் ஊருக்கு போவோம்னும் தெரியுமே.

அப்புறம் ஏண்ணா இப்ப போக வேணாம்னு சொல்ற" என்றார் தவிப்பாக. இப்போது சட்டென தன் குரலை கடுமையான தொனியில் இருந்து பாசமான தொனிக்கு மாற்றியவர்

"என்ன வசும்மா இது. இவ்ளோ வருஷம் ஆகியும் அதை உங்களால மறக்க முடியலையா. உங்க லைப் இப்ப ஸ்மூத்தா தானே போய்கிட்டு இருக்கு.

அதை மறந்துட்டு நிம்மதியா வாழ வேண்டியது தானே. இன்னும் ஏன் இப்படி இருக்கீங்க" என்றார்.

இவ்வளவு நேரம் விஸ்வநாதன் பேச்சில் கோபமான கணபதி இப்போது பேச ஆரம்பித்தார். "மறந்துட்டு வாழ்றதா. எதை மறந்துட்டு வாழுன்னு சொல்லிட்டு இருக்கீங்க.

எங்க இழப்பு எவ்ளோ பெருசுனு உங்களுக்கு தெரியும்ல. அப்புறம் எப்படி உங்காள இப்படி பேச முடியுது.

அதுக்காக தான் இவ்வளவு வருஷமா நாங்க எங்க ஊருல இருக்க கோயில்க்கு போய் தானம் தர்மம்னு செஞ்சு எங்க மனச ஆத்திக்கிறோம்.‌ அது பொறுக்கலையா உங்களுக்கு.

இவ்ளோ நாள் நீங்க எங்கள எவ்ளோ ஜாடமாடையா பேசி இருப்பீங்க. எங்க பையன விட்டு பேச வச்சீங்க. எங்களுக்கு அது புரியாம இல்லை.

ஆனா எல்லா புரிஞ்சும் தெரிஞ்சும் நாங்க அமைதியா போனது உங்க மேல உள்ள பயத்தினால‌ ஒன்னும் இல்லை. ஏன் எனக்கு உங்க மேல என்னைக்கும் பயம் இருந்ததும் இல்லை.

நாங்க செஞ்ச பெரிய தப்பு இல்ல பாவம்னு சொல்லனும். அதனால‌ எங்க மனச கொன்னுட்டு இருந்த குற்ற உணர்ச்சி இதுக்காக மட்டும் தான் அமைதியா போனோம்.

அதோட வசுந்தராவும் பொறுத்து போக சொன்னதால தான் அமைதியா போய்கிட்டு இருக்கேன்‌. நீங்க உங்க லிமிட்ல இனிமே நின்னுக்கோங்க.

இது எங்க பர்ஸ்னல். இன்னும் சொல்ல போனா இது எங்க குடும்ப விஷயம். அதுல நீங்க தலையிடாம இருக்கிறது தான் உங்களுக்கு நல்லது" என்று நீளமாக பேசி முடித்தவர் வசுந்தராவை கண்டு வா என்பது போல் தலை அசைத்து சென்றார்.

வசுந்தராவும் கண்களில் நீரோடு கணபதியின் பின்னே அமைதியாக சென்றார். கணபதியின் இந்த அவதாரத்தை பார்த்திருந்த விஸ்வநாதனுக்கு இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்று வரை அவர் மீது உள்ள பயத்தினால் தான் கணபதி அமைதியாக செல்வதாக எண்ணியிருந்தார் விஸ்வநாதன்.

ஆனால் அப்படி எதுவும் இல்லை உன் மீது பயம் கொள்ள எனக்கு என்ன இருக்கிறது என சொல்லாமல் சொல்லி சென்று விட்டார் கணபதி.

இங்கிருந்து சென்ற கண்பதி வசுந்தராவை அழைத்து கொண்டு தன் சொந்த ஊரான கோயம்புத்தூரை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினார்.

இதை கேள்விப்பட்ட விஸ்வநாதன் இனி கணபதியிடம் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தார். அதுவும் கணபதி இவரிடம் சொல்லாமல் ஊர் சென்றது அவர் எண்ணத்தை உறுதி செய்தது.

அங்கே தன் சொந்த ஊரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கணபதி மற்றும் வசுந்தராவின் மனதில் பழைய நினைவுகளே வந்து சென்றன.

பழைய நினைவுகள் என்றும் சுகத்தை மட்டும் தருவதில்லையே சுமையையும் சேர்த்தே கொண்டு வருகிறதே. என்ன செய்ய.

இவ்வளவு நேரம் ஒன்றாக பயணம் செய்யும் இவர்கள் இருவரும் பேசாமல் அமைதியாக தான் பயணித்து கொண்டிருந்தனர்.

ஆனால் இவர்கள் மனம் அதற்கு நேர் மாறாக பல நினைவுகளில் தத்தளித்துக் கொண்டு தான் இருந்தது. இத்தனை வருடம் மாறாத தங்கள் சோகம் திடீரென இப்போது மாறவா போகிறது என எண்ணிக் கொண்டனர்.

பின் சரி விதி நமக்கு இன்னும் என்னவெல்லாம் தர காத்திருக்கிறதோ அதன்படி அதை அனுபவித்து செல்வோம் என எண்ணி தங்கள் மனதை எப்போதும் போல் இப்போதும் தேற்றிக் கொள்ள இவர்கள் போகும் இடமும் வந்தே விட்டது‌.

காலை எட்டு மணி!! ஆதிராவின் கைப்பேசி அலறிக் கொண்டிருந்தது. ஆனால் 'அதெல்லாம் என் காதில் விழவில்லை' என்பது போல் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள் அம்மு.

இதோடு ஐந்து முறை அடித்து ஓய்ந்திருந்தது அந்த கைப்பேசி. அந்த புறம் அழைப்பை ஏற்படுத்தி கொண்டிருந்த அபிமன்யு கடுப்பின் உச்சியில் இருந்தான்.

"இவள..." என பல்லை கடித்தவன் "மணி எட்டு ஆகுது‌. இன்னும் இவளுக்கு விடியலை. உன் நிலைமை ரொம்ப மோசமா போயிரும் போலையே அபி.

இவளை தினமும் காலைல எழுப்பி விடறத்துக்குள்ள என் ஜீவன் தான் போகும் போலையே. ஆண்டவா!!" என் நொந்தான்.

"அடியே! இப்ப மட்டும் நீ போன் எடுக்காம இரு. அப்புறம் என்ன பண்றேனு பாரு" என வாய் விட்டே புலம்ப அவன் மனதோ 'ஆமா அப்படி என்ன பண்ணிருவ.

அம்முவ உன்னால என்ன செஞ்சுற முடியும். முடிஞ்சா அவ அடி உதைல இருந்து தப்பிக்க எதாவது வித்தைய கத்து வச்சுக்கோ. அது வேனா யூஸ் ஆகும்' என நக்கலாக சொல்லி சென்றது.

"அது வேனும்னா உண்மை தான்" என்று நொந்தவன் ஆறாவது முறையாக அழைக்க அடித்து முடிக்க போகும் நேரம் கைப்பேசி எடுக்கப்பட்டது.

"ஹ..லோ..." என்று தூக்க கலக்கத்தில் அபி ஒரு ஹலோவை உதிர்க்க "ஆத்தா ஒரு வழியா எழுந்திட்டியா. எத்தனை டைம் நான் கால் பண்றேன்.

என்ன பண்ணிட்டு இருந்த" என்றான் கோபமாக. இப்போது தூக்கம் கலைந்து எழுந்த அம்மு "அத்தான் நீங்க கோபமா இருக்கீங்களா?" என்றாள் புரியாமல்.

இவக்கிட்ட சண்டை போட்டுட்டு இருந்தா இன்னைக்கு வெளிய போன மாதிரி தான் என உணர்ந்த அபி "கோபம்லா ஒன்னும் இல்ல டா. நாம இப்போ வெளிய கிளம்புறோம் ஓகே.

சோ நீ இன்னும் ஹாஃப் - அன் அவர்ல கிளம்பி கீழ வர புரியுதா" என்றான்‌. "எங்க அத்தான்" என்ற அம்முவின் கேள்விக்கு "அதலாம் நான் போகும் போது சொல்றேன்.

நீ கிளம்பி வா" என வைத்து விட்டான். அப்போது தான் அவள் கைப்பேசியில் இருந்த ஐந்து தவறிய அழைப்புகளை கண்டவள் 'ஓஓ அதான் அத்தான் கோபமா பேசுனாறா" என்று எண்ணி கொண்டாள்‌.

பின் அவன் கிளம்பி வந்து சில நிமிடங்கள் கழித்து அம்முவும் கிளம்பி வந்தாள். ஆனால் அவர்கள் வெளியே செல்லும் முன் அவர்களை நிறுத்தினார் பார்வதி.

இருவரும் வாசல் புறம் சென்ற நேரம் "அபி" என்ற குரலில் ஒருசேர திரும்பி பார்த்தனர். "என்ன மார்னிங் டைம் இவ்ளோ ஏர்லியா எங்க போறீங்க. நேத்தே அம்முக்கு எக்சாம் முடிஞ்சு போச்சே?" என்று கேள்வி எழுப்பினார் அவர்.

அபி "ஸ்ஸ்ஸ்.. அத்தை காம் டௌன். நானும் அம்முவும் ஒரு முக்கியமான விஷயமா வெளிய போறோம். ஆனா நாங்க வீட்ல இல்லைன்ற விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது.

மெயினா அண்ணாவுக்கு தெரியவே கூடாது அத்தை" என்றான் மெதுவாக.‌ அதற்கு "ஏன்டா ஹர்ஷாக்கு தெரியக் கூடாது. அப்படி என்ன டா திருட்டு தனம் பண்ண போறீங்க" என்றார் சந்தேத்துடன்.

"ஐயோ! அத்த இங்க வாங்க" என அவரை அருகே இழுத்தவன் அவர் காதில் ஏதோ கிசுகிசுப்பாக சொல்ல அவரின் முகமும் பூவாய் மலர்ந்தது.

"யாருக்கும் தெரியாம நான் பாத்துக்கிறேன் டா அபி செல்லம். நீ போய் எல்லா ஏற்ப்பாட்டையும் செய். போ போ" என்றார் மகிழ்வுடன்.

அவர் மகிழ்ச்சியை கண்டு "அத்த உங்களுக்கு இன்னொரு ஸ்வீட் நுயூஸ் சொல்லட்டா" என்றான் அபி ஆர்வத்தை தூண்டும் விதமாக.

பின் அவனே அவரிடம் "அண்ணா நேத்து ஓகே சொன்னாங்கல‌ அந்த பொண்ணு தான் எனக்கு அண்ணி. அது மட்டும் கண்பார்மா சொல்றேன்" என்றான் அவன் ஹர்ஷாவிடம் தெரிந்த மயக்கத்தால்.

அபி சொன்ன செய்தியில் "என்னடா அபி சொல்ற. ஹர்ஷா உன்கிட்ட சொன்னானா" என்றார் மகிழ்ச்சியாக. பார்வதியின் தோளை சுற்றி கைப் போட்ட அபி "அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனா நீங்க அண்ணாவ நோட் பண்ணி பாருங்க அத்த.

நான் சொன்னது கரெக்ட்னு புரியும்" என்று கூறி அவர் கண்ணத்தில் முத்தமிட்டு "வரேன் அத்த" என கிளம்பி விட்டான். அப்போது தான் தன் மகளின் நினைவு வர அவளை கண்டார்.

அபியின் பின்னே அமைதியாக செல்வது தன் மகள் தானா என ஆச்சரியப்பட்ட பார்வதி "சரி தூக்க கலக்கத்தில இருக்கவல அபி இழுத்துட்டு போறான் போல" என எண்ணியவர் அதை அதோடு விட்டுவிட்டார்.

அவருக்கு தான் அதை விட முக்கியமான வேலை இருக்கிறதே. அதான் ஹர்ஷாவின் மனதை அறியும் வேலை. சிறிது நேரத்தில் ஹர்ஷா ராஜசேகர் இருவரும் உணவு உண்ண வந்து அமர்ந்தனர்.

இதுதான் சரியான நேரம் என எண்ணிய பார்வதி மெதுவாக பேச்சை ராஜசேகரிடம் ஆரம்பித்தார். இருவருக்கும் உணவை பரிமாறியபடி "அண்ணா நேத்து ஒரு பொண்ண பத்தி சொன்னேனே.

அந்த பொண்ண கூட நம்ம ஹர்ஷா பாத்து ஓகேன்னு சொல்லிட்டான்னு" எனும் போதே ஹர்ஷா தன் காதை தீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

"அந்த பொண்ணு வீட்ல பேசிருங்க ண்ணா. எப்ப பொண்ண பார்க்க வரதுன்னு" என்றவர் ஓர பார்வையாக ஹர்ஷாவை காண அவன் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்டது போல் பிரகாசம் ஆனது.

அதை கண்டு தானும் மகிழ்ந்த பார்வதி அவர் அண்ணனை வேகமாக செயல்படுத்துமாறு முடுக்கி விட்டார். அனைவரும் உணவு உண்டு சென்ற பின்னர் "இந்த பசங்கல சின்னதுல இருந்து நான் தான் வளர்க்குறேன்.

ஆனா இவனுங்கல என்னால புரிஞ்சுக்க முடியலையே. எப்படியோ இவங்க வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சா அதுவே போதும்" என்று தான் எண்ணினார்.

அனுக்ஷ்ராவும் ரித்திகாவும் கல்லூரி விட்டு தங்கள் இல்லம் வந்தனர். அவர்கள் வந்த நேரம் விஸ்வநாதன் வீட்டில் தான் இருந்தார். என்றும் மாலை அவ்வளவாக வீட்டில் இருக்கமாட்டார்.

'இன்று ஏன் இந்த நேரம் வீட்டில் இருக்கிறார்' என ஒன்று போலவே இரண்டு பெண்களும் எண்ணினர். ஆனால் அதை ஒருவர் மற்றவரிடம் கேட்டுக் கொள்ளவில்லை.

அதே நேரம் விஸ்வநாதனுடன் அவர்களின் தாத்தா ராகவன் அமர்ந்து கொண்டிருக்க அனுவின் தாயோ சற்று தள்ளி நின்றிருந்தார்.

என்ன நடக்கிறது எனப் புரியாத போதும் விஷயம் சற்று பெரியது என்றே நம்பினர். ஏனெனில் அவர்கள் தாத்தா ராகவன் தந்தை விஸ்வநாதன் இருவரையும் ஒரே நேரம் பார்ப்பது அரிது.

அதுவும் இருவரும் சாதாரணமாக பேசுவதெல்லாம் அதிசயமாக நடக்கும் நிகழ்வே அந்த வீட்டில். கணபதியும் வசுந்தராவும் கோயம்புத்தூர் சென்ற காரணத்தால் அவர்கள் இங்கே இல்லை.

அப்போது "ஷரா நில்லு" என்ற விஸ்வநாதன் குரலில் இருவரும் அப்படியே நின்றனர். "இப்பவாவது அவனை என்ன விஷயம்னா சொல்ல சொல்லுமா மீனாட்சி" என்றார் ராகவன் தன் மகனை நோக்காது.

ராகவனின் குரலில் விஸ்வநாதனை கண்டார் மீனாட்சி. ஆனால் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாத விஸ்வநாதன் ஏதோ செய்தி கூறுவது போல் அந்த விஷயத்தை பகிர்ந்தார்.

"நம்ம ஷராக்கு ஒரு வரன் வந்திருக்கு" எனும் போதே அனைவரின் கவனமும் விஸ்வநாதன் மீது ஆழமான பதிந்தது.

அனுவிற்கோ திக்கென்றது இருந்தாலும் 'ஆறு மாசம் முன்னாடியே நடந்த இன்சிடென்ட்டால அப்பா இதை அப்பவே பண்ணுவாருன்னு நீயே நினைச்ச.

இப்ப என்ன புதுசா ஷாக் குடுக்குற' என அவள் மனமே எடுத்துக் கொடுக்க 'உண்மை தானே' என எண்ணிய அனுவும் அவள் தந்தை சொல்ல போவதை கேட்க தயாரானாள்.

ஆனால் மனதின் உள்ளே சிறு குறுகுறுப்பு தானாகவே எழுந்தது. அதை பயம் என எண்ணிக் கொண்டாள். ஆனால் அவளுக்கு புரியவில்லை திருமணம் என்ற பேச்சு வந்தாலே பெண்களுக்கு இந்த குறுகுறுப்பு வந்துவிடும் என்று.

விஸ்வநாதன் கூறுவதை இப்போது அனுவும் கவனித்தாள். "பையன் பேரு ஹர்ஷவர்தன். அருணாசலம் இண்டர்ஸ்டீரிஸ் அருணாசலத்தோட மூத்த மகன் ராஜசேகரோட பெரிய பையன்"

'அப்ப பிசினஸ் மேனா' என மனதில் எண்ணினாள் அனு. "ஆனா பையன் பிசினஸ் எல்லாம் பாக்கல. அதேயெல்லாம் அருணாசலத்தோட பொண்ணோட பையன் தான் பாத்துகிறான்.

மாப்பிள்ளை பையன் அவரோட அப்பா மாதிரி டாக்டர் வேலை பாக்குறான். மூனு வருஷம் வெளிநாடு போய் படிச்சிட்டு இங்கையே வந்து அருணாசலம் ஹாஸ்பிடலோட எம்.டியா இருக்கான்.

சென்னைல பிரபலமான கார்டியாலஜிட்ல இந்த பையனும் ஒருத்தன். வயசு என்னமோ இருபத்தி ஒன்பது தான். ஆனா இந்த சின்ன வயசுல நல்ல திறமை. ப்யூச்சர்ல இன்னும் பெரிய ஆளா வர வாய்ப்பு அதிகம்னு சொல்றாங்க.

அந்த ஹாஸ்பிடலையும் ரொம்பவே நல்லா மேனேஜ் செய்றான்னு கேள்வி பட்டேன். அங்க போய் கேட்டப்ப எல்லாரும் அவ்ளோ புகழ்றாங்க.

நான் வெளிய விசாரிச்சு பாத்தப்பையும் அந்த பையன பத்தி யாரும் தப்பா ஒரு வார்த்தை கூட சொல்லலை. அவங்களுக்கு நம்ம ஷராவ போட்டோ பாத்தே ரொம்ப பிடிச்சு போச்சாம்.

எனக்கு இன்னைக்கு தான் மாப்பிள்ளையோட அப்பா போன் செஞ்சார். டீட்டெயில்ஸ் சொல்லி எப்போ பொண்ணு பார்க்க வரட்டும்னு கேட்டாரு" என்று முடித்தவர்

"அவங்களுக்கு சண்டே வசதியா இருக்குமாம். அன்னைக்கு வரட்டுமான்னு கேக்குறாங்க. என்ன சொல்லலாம்" என்றார் அனைவரையும் பார்த்து பொதுவாக.

"இந்த வரன் யார் கொண்டு வந்தது" என்றார் ராகவன் இப்போது. அவர் நேரடியாக விஸ்வநாதனிடம் கேட்டதே அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

விஸ்வநாதன் தானும் வியபந்தவர் "ஒரு ஆறு மாசம் முன்னாடி தரகர் கிட்ட ஜாதகத்தை கொடுத்திருந்தேன். அவங்களும் அதே தரகரை தான் பாத்திருப்பாங்க போல.

அவங்களும் கொஞ்ச நாளா பொண்ணு பாத்துட்டு இருந்தாங்கலாம். ஆனா அதுல யாரையும் பிடிக்கலையாம். நம்ம ஷராவ பாத்ததும் அவங்களுக்கு பிடிச்சு போச்சாம்.

அதனால அந்த பையன் வீட்ல அவங்க அப்பாவே கால் பண்ணி பேசினாரு ப்பா" என்று முடித்தார். சிறிது யோசித்த ராகவன் "அருணாசலம் குடும்பத்தை பத்தி எனக்கு ஓரளவு தெரியும்.

ரொம்ப நல்ல குடும்பம். பையன் குணமும் அருமையா இருக்கப்ப தயங்க வேண்டாம். வர சொல்லு" என்றபின் அவர் அறையை நோக்கி சென்றுவிட்டார்.

அவரை பொறுத்த வரை விஸ்வநாதன் வாழ்வில் ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை. அது மட்டும் அல்ல.

அவர் மகன் விஸ்வநாதன் ஒருவரை பத்தி கணித்தால் அது தவறாது என்ற எண்ணம் எப்போதும் உண்டு. எனவே அவர் தன் சொந்த மகள் விஷயத்தில் தவறாக எதுவும் செய்ய மாட்டார் என நம்பினார்.

இத்தனை ஆண்டுகள் சென்று ராகவன் விஸ்வநாதனிடம் நீளமாக பேசியதில் மகிழ்ந்து போயிருந்த விஸ்வநாதனும் அவர்களை வரும் ஞாயிறு அன்றே வர சொல்லி அழைத்து சொல்லி வைத்தார்.

மீனாட்சியும் மாப்பிள்ளையின் தகுதியை கேட்டு தன் மகள் இனி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என கடவுளை வேண்ட பூஜை அறையை அடைந்தார்.

ஆனால் இவர்கள் யாரும் பயத்தில் வியர்த்து போய் நின்றிருந்த அனுவை கவனிக்காது போயினர்!!


-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 9

ஹர்ஷவர்தன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அப்போது "மச்சான்..." என ஆர்ப்பாட்டமாக வந்து அவனை அனைத்து கொண்டான் விக்ரம்.

விக்ரமின் அனைப்பை எடுத்து விட்டவாறு "டேய் ஏன்டா இப்டி செய்ற‌. தள்ளி நில்லுடா" என்றான் நெளித்துக் கொண்டே. "ஹேய்.. ஏய் ஹர்ஷா நடிக்காத மேன். அந்த பொண்ணு நேம் என்னடா சொல்லு சொல்லு" என்றான் விஷமமாக‌.

அவன் நக்கலை கண்டு வெட்கமாக வர அதை முகத்தில் காட்டாது "என்னடா?" என்றான் அலுத்துக் கொண்டு. "என்ன சார் ரொம்ப அலுத்துக்குறீங்க.

என் ஆருயிர் நண்பன் நீ. உனக்கு மேரேஜ். இவ்ளோ கூட நான் உன்னை ஓட்டுலைனா உலகம் என்னை தப்பா பேசாது" என்ற விக்ரமை சிரிப்புடன் பார்த்தான் ஹர்ஷா.

பின் ஹர்ஷாவை இழுத்து வந்து கட்டிலில் அமர்த்தியவன் "ம்ம் சொல்லு சொல்லு" என்றான் ஆர்வமாக. அதற்கு "என்னடா சொல்ல சொல்ற" என்றான் ஹர்ஷா.

"ஹான் இன்னைக்கு எத்தனை ஆப்பரேஷன் செஞ்சன்னு" என்று கடுப்பாய் மொழிந்தவன் "ஏன்டா ஏன் நான் என்ன கேக்குறேன்னு தெரிஞ்சே வம்பு பண்ற" என்று அவன் வயிற்றில் லேசாக குந்தியவன்

"எல்லாம் எங்க தங்கச்சியை பத்தி தான் மச்சான்" என்றான் குதூகலமாக. "ஏன் அவளுக்கு என்ன. கீழே தானே இருக்கா" என்றான் விளையாட்டாக.

"ஓ காமெடி. எனக்கு சிரிப்பு வரல. கடுப்பேத்தாமா ஒழுங்கா சொல்லு மச்சான்" என்றான் இப்போது கெஞ்சலாக. "சரி சரி கெஞ்சாத சொல்றேன்.

அனு போதுமா" என்றான் ஹர்ஷா. "ம்ம் பேரைலாம் செல்லமா சுருக்கி கூப்பிட ஆரம்பிச்சிட்ட போல. நடக்கட்டும் நடக்கட்டும். ஆனா எனக்கு இந்த பேர் தெரியாதா.

நான் கேட்டது உனக்கு சிஸ்டரை எவ்ளோ பிடிச்சிருக்குனு தெரிஞ்சுக்க தான். சொல்லு சொல்லு" என்றான் வேகமாக.

"பிடிச்சிருக்கு டா. ஆனா அது எவ்ளோன்னுலாம் சொல்ல தெரியலை போதுமா" என்றான் சிரிப்புடன். "ஹே ஹர்ஷா. யு ஆர் ப்ளஷிங் மச்சான்‌" என்றவன்

ஹர்ஷாவின் கன்னத்தை பிடித்தபடி "அட் லாஸ்ட் மை மச்சான் பெல் இன் லவ்" என்றான் சந்தோஷமாக. "ஹையோ.. கொஞ்சம் சும்மா இருடா" என ஹர்ஷா அவனை அடக்க முயன்று கொண்டிருந்தான்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் நடக்க மாலையில் நடந்த நிகழ்வுகளே காரணம். ஹர்ஷா மாலை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த நேரம் பார்வதி அவனை அழைத்தார்.

அப்போது தான் விக்ரமும் வந்தான். பார்வதி "ஹர்ஷா குட்டி சண்டே உனக்கு எந்த கமிட்மெண்ட்ஸ்ம் வச்சுக்காத பா" என்றார் மொட்டையாக.

அதற்கு "ஏன் அத்தை?" என்றான் புரியாது. "அது ஹர்ஷா குட்டி பொண்ணு வீட்ல அண்ணா பேசிருந்தாரு சண்டே வரலாமான்னு கேட்டு.

அவங்க இன்னைக்கு தான் கால் பண்ணாங்க. சண்டே அவங்களுக்கு ஓகே தானாம்‌. நம்மல வர சொல்லிட்டாங்க டா ஹர்ஷா" என்றார் பார்வதி ஆர்ப்பாட்டமாக.

இதை கேட்டு சரி என சொல்லி தலை அசைத்த ஹர்ஷா அவன் அறைக்கு செல்ல பின்னோடு வந்த விக்ரமும் அவனை வம்பு செய்துக் கொண்டிருந்தான்.

விக்ரமிடம் எதுவும் காட்டிக் கொள்ளாது சமாளித்தாலும் ஞாயிற்றுக்கிழமை என்று வரும் என ஹர்ஷா எதிரநோக்கியது அவன் மனம் மட்டுமே அறிந்த உண்மை.

ஹர்ஷா எப்போது உணவை உண்டு அவன் அறைக்கு போவான் என எண்ணியபடி பார்த்திருந்தான் அபிமன்யு.

அன்று அம்முவை வெளியே அழைத்து சென்ற அபி நிறைய ஏற்பாடுகள் செய்துவிட்டே வீட்டிற்கு வந்தான். அதை செயல்படுத்தவே இந்த தவிப்பு.

அவன் அப்படி உள்ளே சென்றவுடன் "ஊப்.." என்று மூச்சை விட்ட அபியை கண்டு அருகில் இருந்த விக்ரம் "என்னடா ஹர்ஷாக்கு தெரியாம எதோ பெருசா பிளான் பண்ற போல‌" என்று கேலியாக வினவினான்.

விக்ரமை லேசாக முறைத்த அபி "ரொம்ப பேசாத அத்தான். நீயும் தான் எங்க பிளான்ல ஒரு பார்ட். தின்ன உடனே தூங்க மட்டும் போய்றாத அத்தான்.

நமக்கு மிகப் பெரிய வேலை ஒன்னு இருக்கு" என்றான் தீவிரமாக. அவன் பேசிய தொனியை கேட்ட விக்ரம் "என்னடா கொல்லை கூட்ட தலைவன் மாதிரியே பேசுற.

என்ன பிளான் டா எரும" என்றான் அவன் முதுகில் அடித்தவாறு. "ஐயோ அத்தான் நாளைக்கு என்ன நாள்ன்னு மறந்துட்டியா. அட கிராதகா!

நீயெல்லாம் என அண்ணே பிரண்டுனு வெளிய சொல்லிட்டு திரியாத" என்று வறுத்தெடுத்தான். அதற்கு "ஏன்டா திட்ற. எனக்கு ஒன்னும் புரியலயே" எனறு பாவமாக கேட்டான் விக்ரம்.

"என்ன திட்றனா. உன்னை கொல்லனும். நாளைக்கு என் செல்ல அண்ணே, உன் ஆருயிர் பிரண்டோட பர்த் டே" என்றான் முறைத்து கொண்டே.

அப்போது தான் தன் கைப்பேசியை எடுத்து தேதியை பார்த்தவன் "ஹையோ ஆமாடா அபி. நான் மறந்தே போய்ட்டேன். பார்ட்டிக்கு எல்லா ரெடி பண்ணிட்டியா டா" என்றான் அவசரமாக.

"ஹான் இப்ப வந்து கேளு" என சிறிது பிகு செய்தவன் பின் "அதெல்லாம் பெர்பெக்ட்டா பண்ணிட்டேன். நானும் உன் பாசமலரும் தான் சேந்து செஞ்சோம்.

இப்போ வீட்ட டெக்ரேட் பண்ற வேலை இருக்கு. சோ அதை பினிஷ் பண்றோம். அண்ட் அண்ணன டுவெல்க்க நீதான் போய் எழுப்பி கூட்டிட்டு வர என்ன.

அப்புறம் நாளைக்கு ஒரு பெரிய பார்ட்டிக்கு அரேஞ்ச் பண்ணியாச்சு. எல்லாம் பக்கா. போதுமா" என்று முடித்தான்.

"பரவாயில்லை டா அபி வளர்ந்துட்டடா" என்று தோலை சுற்றி கைப் போட்டு சொன்னவன் "சரி வா வா போய் நாம‌ வீட்ட டெக்கரேட் பண்ணலாம்" என எழுந்து கொண்டான்.

அபியும் எழுந்தான்‌. பின் இருவரும் சேர்ந்து வீட்டை அலங்கரிக்க ஆரம்பித்தனர். அவர்கள் வேலை முடித்த நேரம் இரவு பன்னிரண்டு மணி நெருங்கியே விட்டது.

அபி வீட்டில் இருந்த மற்ற அனைவரையும் அழைத்து வர செல்ல விக்ரமை ஹர்ஷாவின் அறையில் தள்ளி விட்டு சென்றான்.

விக்ரம் ஹர்ஷாவின் அறையில் நுழைந்த போது அனுவின் நினைவில் தன் பிறந்தநாளையே மறந்த ஹர்ஷா அங்கே சுகமான நித்திரையில் இருந்தான்.

அவன் அருகே அமைதியாக சென்ற விக்ரம் மெதுவாக எழுப்பினான். ஆனால் அந்த சிறு அசைவிலே எழுந்து விட்ட ஹர்ஷா தம் முன் இருட்டில் நிற்கும் விக்ரமை கண்டவன் வீட்டில் தான் யாருக்கும் எதுவோ ஆகிவிட்டது என எண்ணினான்.

ஹர்ஷாவின் உள்ளே இருக்கும் மருத்துவன் விழித்துக் கொள்ள "என்ன ஆச்சு விக்ரம். வீட்ல யாருக்கும் எதுவும் இல்லைல. என்னடா இந்த டைம்க்கு வந்திருக்க" என்றான் பதட்டத்துடன்.

அவனின் பதற்றத்தில் நொந்த விக்ரம் "டேய் டேய் மச்சான். உன் சின்சியாரிட்டிய நான் வியக்கேன். ஏன்டா ஏன் இருபத்தி நாலு மணி நேரமுமே நீ டாக்டராவே இருப்பியா" என்று விட்டான்.

சில நிமிடம் ஒன்றும் புரியாத ஹர்ஷா "அப்புறம் ஏன்டா இந்த அர்த்தராத்திரி எழுப்பின" என்றான் கடுப்புடன்.

"அது வந்து மச்சான் அது.." என இழுத்தவன் 'ஐயையோ திடீர்னு சொல்ல காரணம் ஒன்னும் கிடைக்கலையே. இப்படி கோர்த்து விட்டுட்டு போய்ட்டியே டா அபி தடிமாடு" என அபியை மனதில் திட்டியவன்,

"என்னடா எதுக்கு எழுப்பி தொலைச்ச" என்று மீண்டும் கேட்க "அது ஹான் நியாபகம் வந்திருச்சு மச்சான். கீழ ஹால்ல ஏதோ விழுந்த சத்தம் கேட்டுச்சு டா.

அதான் என்னன்னு போய் பாக்கலாம்னு" என இழுக்க "அதுக்கு அங்க போக வேண்டியது தானே டா. இங்க எதுக்கு வந்த" என்றான் ஹர்ஷா.

"அது மச்சான் சத்தம் ஒரு தினுசா இருந்துச்சு டா. அதான் திருடனா ஏதும் இருந்தா. ரெண்டு பேரும் சேந்து போனா சேப் இல்ல அதான்" என இன்னும் இழுக்கவும்

ஹர்ஷா தன் தலையிலே அடித்துக் கொண்டவன் "ச்சே உன்னோட பெரிய ரோதனை டா‌‌. வா போலாம். வந்து தொலைக்கிறேன்" என்று முன்னே சென்றான்.

அவன் கீழே செல்லும் போது ஹாலே கும்மிருட்டாக இருந்தது. பார்த்த ஹர்ஷாவே ஒரு நிமிடம் குழம்பி விட்டான். உண்மையில் திருடன் தான் வந்து விட்டானா என.

ஹர்ஷாவும் விக்ரமும் நடு ஹால் வரும் போது திடீரென விளக்குகள் ஒளிர குடும்பம் மொத்தமும் ஹாலில் இருக்க அனைவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் "ஹேப்பி பர்த்டே டே ஹர்ஷா!!!

ஹேப்பி பர்த்டே அண்ணா!! ஹேப்பி பர்த்டே டே அத்தான்!! ஹேப்பி பர்த்டே டே மச்சான்!!" என வாழ்த்து தெரிவிக்க அப்போது தான் ஹர்ஷாவிற்கே இன்று தன் பிறந்தநாள் என்ற நினைவு வந்தது.

பின் தனக்காக மொத்த குடும்பமும் அந்நேரம் விழித்து கொண்டு இருந்தது அவன் மனதை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்தது. அனைவருக்கும் நன்றி சொன்னான்.

இருந்தும் அவன் தாத்தா அருணாசலமும் இந்நேரம் முழித்து இருக்கவே "ஏன் தாத்தா நீங்களும் இவ்ளோ நேரம் முழிச்சிருக்தனுமா" என செல்லமாக அலுத்து கொண்டவன் அவர் பாதம் பணிந்து அவரின் ஆசிகளை வாங்கினான்.

அதன்பின் அவன் தந்தை அத்தை மாமா என தனித்தனியாக எல்லோரிடமும் ஆசிகளை பெற்றுக் கொண்டதும் அபி வந்தான்.

"இந்தா ண்ணா கத்தி. வா வா கேக் கட் பண்ணலாம்" என அழைத்து சென்றான். பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாட ஹர்ஷா கேக்கை வெட்டி அனைவருக்கும் ஊட்டி விட்டு தானும் வாங்கி கொண்டான்.

கேக்கை உண்ட பின் பெரியவர்கள் கலைந்து சென்றுவிட சிறியவர்கள் மட்டுமே மிஞ்சி இருந்தனர். அதிலும் அம்மு தூக்கம் வருது என கண்ணை தேய்க்கவும் அவளையும் தூங்க அனுப்பி விட்டனர்.

அப்போது விக்ரம் "எல்லா ஏற்பாடும் செஞ்சது உன் தம்பி தான்டா. நான் கூட மறந்துட்டேன் டா. அவன் தான் எல்லாம் செஞ்சான்" என்றான் அபியை பற்றி பெருமையாக.

அதற்கு அபியை தன் தோளோடு அனைத்த ஹர்ஷா "அவன் எதுவும் செய்லனா தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். அவன பத்தி என்கிட்டையே சொல்றியா.

அவன் என் தம்பி டா" என்றான் இன்னும் பெருமையாக. "நல்ல அண்ணே தம்பிடா நீங்க. எப்படிடா இப்டி இருக்கீங்க. லைட்டா பொறாமை கூட வருதுடா" என்றான் விக்ரம்.

ஆனால் குரலில் பொறாமை என்பது துளியும் இல்லை. மாறாக அவனும் மகிழ்ச்சியாக அந்த நிமிடத்தை அவர்களுடன் கழித்தான் என்றால் மிகையில்லை.

அடுத்த நாள் அழகாக விடிய ஹர்ஷாவின் நாளும் நன்றாகவே விடிந்தது. அபி பரிசளித்த புது உடைகளை உடுத்திக் கொண்டான் ஹர்ஷா.

பின் மீண்டும் பெரியவர்கள் அனைவரிடமும் ஆசி பெற்று மருத்துவமனை சென்றான். ஆனால் இன்று விரைவாகவே வீட்டிற்கு வந்தான்.

அவன் வந்தவுடன் வீட்டில் இருந்த அபி மற்றும் அம்முவோடு வெளியே சென்று வந்தவனுக்கு அங்கே வீட்டில் சிறிய அளவில் பார்ட்டிக்கான ஏற்பாடுகள் கண்டு ஆச்சரியமாகி போனது.

ஒருவழியாக எல்லாம் முடிந்து படுத்த ஹர்ஷாவின் மனது ஆனந்தத்தில் திளைத்து இருந்தது. காரணம் அவன் குடும்பம் இன்றி வேறு யாரோ!!

அதே நேரம் நாளை ஞாயிற்றுக்கிழமை என நினைவு வர கூடுதல் சந்தோஷத்தில் மனம் நெகிழ அதே மகிழ்வுடன் தன் படுக்கையில் விழுந்தான்.

வண்டுகள் ரீங்காரம் இடும் இரவு நேரம். அந்நேரம் தூரத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டகவே அந்த கும்மிருட்டில் அந்த பெண்னை துலாவிக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.

நீண்ட நேரமான அவனின் தேடலுக்கு விடை தான் கிட்டவில்லை. "யாரு... யாருங்க? நீங்க எங்க இருக்கீங்க?" என்று சத்தம் வந்த திசையை நோக்கி கேட்டான்.

இவனுக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் சத்தம் மட்டும் அதிகரித்தது. சத்தம் வந்த திசையை நோக்கி முன்னேற முயன்றான் ஹர்ஷா. ஆனால் சத்தம் எந்த திசையில் இருந்து வந்துக் கொண்டிருக்கிறது என அவனால் கணிக்க முடியவில்லை.

பின் குத்துமதிப்பாக ஒரு திசையை நோக்கி சென்றான். அங்கே ஒரு வீடு மட்டும் இருந்தது. ‌அதுவும் நன்கு இருளில் மூழ்கி இருந்தது. அந்த வீட்டை அடைந்து கதவை திறக்கவுமே விளக்குகள் ஒளிர்ந்தது.

ஆனால் அந்த வீட்டின் ஆடம்பரம் அவன் மனதின் உள்ளே ஏதோ செய்தது. அங்கிருந்த அறை ஒன்றில் இருந்து தான் அந்த சத்தம் வந்துக் கொண்டிருந்தது.

இப்போது மற்றதை விட்டு ஹர்ஷா வேகமாக அந்த அறையின் கதவை நோக்கி சென்றான். கதவு ஹர்ஷா கையை வைத்து தள்ளவும் அது திறந்து கொண்டது.

எனவே எளிதில் உள்ளே சென்று விட்டான். ஆனால் உள்ளே அவன் கண்ட காட்சி அவனின் ரத்தத்தை உறைய வைப்பது போல் இருந்தது.

அங்கே அவன் கண்டதோ ஒரு பெண் கதற கதற அவள் கையில் இருக்கும் குழந்தையை பிடுங்கி ஒருவன் சுவற்றில் அடிக்க செல்லும் காட்சி தான்.

அப்போது தான் பிறந்த அந்த குழந்தையின் மீது இருந்த ரத்தம் கூட காயாததை பார்த்தும் யார் இப்படி ஒரு காரியம் செய்வது என கோபமடைந்த ஹர்ஷா அங்கே செல்ல துணிய அப்போது அங்கே வந்தார் ராஜசேகர்.

அவன் தந்தையை அங்கே திடீரென கண்ட ஹர்ஷா திகைக்க ராஜசேகர் அக்குழந்தையை அந்த நபரிடம் இருந்து கைப்பற்றி அழகாய் அரவணைத்தார்.

அதை ஹர்ஷா புன்னகையுடன் பார்த்திருக்க அந்த நபர் இப்போது ஹர்ஷாவை பார்த்துவிட்டான் போல். இப்போது அந்த நபரின் குறி ஹர்ஷா மீது பாய்ந்தது.

ஹர்ஷா சுதாரிக்கும் முன்னே அந்த நபர் ஹர்ஷாவை நோக்கி கத்தியை வீச, அது அவன் வயிற்றில் பாய்ந்த நொடி வியர்த்து போய் தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தான்‌.

அவன் மனது வேகமாக அடித்து கொண்டது. அவன் கைப்பேசியை எடுத்து மணியை பார்க்க அது ஒன்று என காட்ட "சே கனவா! நிஜமா நடந்த மாதிரியே இருக்கு. என்ன இது இப்படி ஒரு கனவு.

ஒருவேளை நேத்து பர்த் டேக்கு நைட்டு இருட்டில‌ போன எபக்ட்டா இருக்குமா?" என்று பலவாறு யோசித்தவன் "ஆனா இந்த கனவு ரொம்ப பயங்கரமா வித்யாசமா இருந்தது.

இடையில அப்பா கூட வராங்க. ஒன்னும் புரியலயே" என்று தண்ணீரை எடுத்து குடித்து வைத்தான். அதன் மூலம் தன் மனதை சற்று சமாதானம் செய்ய முயன்றான்.

ஆனால் அவன் அறியவில்லை இந்த பிறந்தநாள் தான் அவன் வாழ்வில் இனி இவ்வளவு மகிழ்ச்சியுடன் கொண்டாட போகும் பிறந்தநாள் என.

அதை உணர்த்த தான் இந்த கனவும் வந்து சென்றதோ? இதுவும் விதி தனது விளையாட்டு என அமைதியாக பார்த்துக் கொண்டது.

மனதை கொஞ்சம் சமன் செய்ய "இது சாதாரண கனவு! வெறும் கனவு தான். இதை பத்தி ரொம்ப யோசிக்காம இருப்பது தான் நல்லது" என மீண்டும் மீண்டும் மனதில் இதை நிறுத்தி மனதை சமன் செய்ய முயன்று அதில் வெற்றியும் கண்டான்.

பார்வதி அவர் அறை, சமையல் அறை, பூஜை அறை என காலையில் இருந்து பம்பரமாக சுற்றிக் கொண்டிருந்தார்‌. காரணம் இன்று ஞாயிறு ஹர்ஷாவிற்கு பெண் பார்க்க குறிக்கப்பட்ட நாள்.

அதற்கு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டு, காலை உணவை செய்ய வேலை ஆட்களை ஏவிக் கொண்டு, தானும் தயாராக என காலையில் இருந்தே வேலையில் மும்முரமாக இருந்தார்.

அதே நேரம் மாடியில் ஒரு கண்ணையும் வைத்திருந்தார். ஏனெனில் குடும்பத்தில் ஹர்ஷாவை தவிர்த்து மற்ற அனைவரும் கீழே வந்து தேனீர் அருந்து விட்டு பெண் வீடு செல்ல கிளம்ப சென்று விட்டனர்.

ஆனால் காலை எட்டு மணி ஆகியும் ஹர்ஷா கீழே வரவில்லை. எனவே சிறிது பதற்றம் கூட பார்வதியின் மனதில் ஏற்ப்பட்டது.

அறை மணி நேரம் கடந்து தயாராகி வந்த விக்ரமை கண்ட பார்வதி "விக்ரம் கொஞ்சம் இங்க வாடா" என்றார் பதட்டமாக. அவரின் பதட்ட முகம் கண்ட விக்ரம் யோசனையுடன் அவரை நெறுங்கினான்.

மேலேயே பார்வையை வைத்திருந்த பார்வதி "விக்ரம் ஹர்ஷா காலைல இருந்து இன்னும் கீழ வரவே இல்லை டா. தூக்கிட்டு இருக்கானா என்னன்னு ஒன்னும் புரியல.

நீ போய் கொஞ்சம் ஹர்ஷா என்ன செய்றானு பாருடா. லேட் ஆகுது பொண்ணு வீட்டுக்கு போகனும்ல. என்னன்னு பாருடா" என்று அனுப்பினார்.

பார்வதி கூறியதை கேட்ட விக்ரம் 'என்ன ஆச்சு ஹர்ஷா இவ்ளோ நேரம் தூங்குற ஆள் இல்லையே. உடம்பு ஏதும் சரியில்லையா' என்ற யோசனையில் தான் ஹர்ஷாவின் அறையை அடைந்தான்.

இரவு கண்ட கனவின் தாக்கத்தால் மனதை ஒருவாறு சமாதானம் செய்தாலும் ஹர்ஷாவின் தூக்கம் தூர சென்றிருந்தது. வெகு நேரம் சென்றே அவனை தூக்கம் தழுவ மணி எட்டு ஆகியும் தூங்கிக் கொண்டிருந்தான்.

ஹர்ஷாவின் அறையில் விக்ரம் கண்டதும் நிம்மதியாக உறங்கும் ஹர்ஷாவை தான். அவன் கழுத்தில் கை வைத்து உடல் நிலை நன்றாக இருப்பதை முதலில் உறுதி செய்த விக்ரம் ஹர்ஷாவை எழுப்பலானான்.

விக்ரம் எழுப்பிய பின் எழுந்த ஹர்ஷா தூக்க கலக்கத்தில் விக்ரமை புரியாது பார்த்து வைத்தான். "சுத்தம்! தூக்கம் இன்னும் தெளியலை போலையே" என முணுமுணுத்த விக்ரம்,

"என்ன மச்சான்! இன்னும் தூக்கம் போகலை போல" என்று கிண்டலாக இழுத்தவன் "இன்னைக்கு சண்டே உனக்கு பொண்ணு பார்க்க போறோம் அது நியாபகம் இருக்கா?

நீ என்னடா இப்படி தூங்கற. உன் அருமை அத்தை வேற புல்லா ரெடி ஆகிட்டு கீழ வீட்டையே ரெண்டாக்கிட்டு இருக்காங்க. நீ எப்படா கீழ‌ வருவேன்னு மாடியவே முறச்சு முறச்சு பாக்குறாங்க.

ஆனா நீ இன்னும் பெட்ட விட்டு எந்திரிக்காம இருக்க. என்ன பொண்ணு பார்க்க வர ஐடியா எதாச்சும் இருக்கா இல்லையா?" என்று நீளமாக பேசி முடித்தான்.

விக்ரம் பேசிய பின்னே இன்றைய நாள் ஞாயிறு என நினைவு வர வேகமாக மணியை பார்த்தான். அது எட்டு நாற்பதை கடந்து கொண்டிருக்க வேகவேகமாக குளிக்க ஓடினான். அதன் பின் எல்லாம் ஜெட் வேகம் தான்.

பத்தே நிமிடங்களில் வெளியே வந்த ஹர்ஷா விக்ரம் என்ற ஒருவன் அங்கே இருப்பதை கண்டு கொள்ளாது எந்த உடையை போட என அவன் அலமாரியில் தலையை விட்டு ஆராய தொடங்கினான்‌.

மேலும் பத்து நிமிடங்கள் கடந்தது. நேரம் சென்றுக் கொண்டே தான் இருந்ததே தவிர ஹர்ஷா அலமாரியை விட்டு நகரவில்லை. பார்த்து பார்த்து கடுப்பான விக்ரம்

"என்னடா அந்த அலமாரில புதையல் எதுவும் இருக்கா. இப்படி தேடிட்டு இருக்க?" என்றான் நக்கலாக. அதையெல்லாம் கிஞ்சித்தும் காதில் வாங்காத ஹர்ஷா தன் கைகளில் சில உடைகளை அள்ளி வந்து மெத்தையில் கிடத்தினான்.

பின் ஒவ்வொரு சட்டையையும் எடுத்து தனக்கு எது பொருத்தமாக இருக்கிறது என வைத்து வைத்து பார்க்க துவங்கினான். அடுத்த ஐந்து நிமிடம் கடந்தும் ஹர்ஷா ஒன்றை கூட தேர்வு செய்யவில்லை.

இதை கண்டு விக்ரமின் பொறுமை காற்றில் பறக்க "ஹலோ மிஸ்டர். ஹர்ஷவர்தன் என்ன பண்றீங்க" என்றான் கேள்வியாக.‌ பதில் வரவில்லை என்றதும் "கிரேட் இன்சல்ட் விக்ரம். கிரேட் இன்சல்ட்‌.

திரும்பி கூட பார்க்க மாட்டேங்குறானே" என நொந்தபடி அவனை இழுத்து தன்னை பார்க்க செய்தான். உடையை தேர்ந்தெடுக்கும் போது நந்தியாக தனக்கு குறுக்கே வந்த விக்ரமை முறைத்த ஹர்ஷா "என்னடா?" என்றான் கடுப்பாக.

"அடேய் எப்பா.. எவ்ளோ கோபம் வருது. எல்லாம் என் நேரம்" என சத்தமாக புலம்பியவன் "சரி சொல்லுங்க சார் சட்டைய லைனா வச்சு என்ன ஆராய்ச்சி செஞ்சுட்டு இருக்கீங்க" என்றான் கிண்டலாக.

அதற்கு "பார்த்தா தெரியலையா. பொண்ணு பார்க்க போக நல்ல டிரஸா போட வேண்டாமா. அதான் நல்லா சட்டை எதுன்னு பாக்குறேன்" என்றவன் மீண்டும் திரும்பி தன் சட்டை ஆராய்ச்சியை தொடர்ந்தான்.

"ம்ம் நீ நடத்து ராஜா! நடத்து" என்றுவிட்டு அமைதியாக அமர்ந்து கொண்டான். சில நிமிடங்களில் இரண்டு சட்டைகளை கையில் எடுத்த ஹர்ஷா விக்ரமிடம் "விக்ரம் இதுல எந்த ஷர்ட் நல்லா இருக்கு மச்சான்?" என்றான்.

இரண்டு சட்டைகளையும் மாறி மாறி பார்த்தவன் "ம்ம்... இந்த புளு ஷர்ட் ஓகே தான். பட் இந்த கிரே ஷர்ட் நல்லா இருக்கு டா. இது ஓகே" என்றான் ஒரு சட்டையை காட்டி.

ஹர்ஷா அந்த சட்டையை ஒரு பார்வை பார்த்தவன் அதை வைத்து விட்டு "இந்த புளு ஷர்ட் ஓகே. சரி மச்சான் நீ கீழ‌ போ. நான் ரெடியாகி வந்தரேன்" என்று விக்ரமை செல்ல சொன்னான்.

ஹர்ஷாவின் பதிலில் கடுப்பின் உச்சியை அடைந்தான் விக்ரம். "ஏன்டா உனக்கே இது ஓவரா தெரியலை. இப்படி பண்றதுக்கு ஏன்டா என்கிட்ட கேட்ட" என்று ஆதங்கபட அவன் பேசியது காதில் விழாதது போல் விக்ரமை வெளியே தள்ளி கதவை அடைத்தான்.

கதவை ஒரு தட்டு தட்டி "உன்னை போய் எழுப்பி விட வந்தேன் பாரு. என் புத்திய சொல்லனும். அப்படியே தூங்குடா மகனேன்னு விட்டுட்டு போயிருக்கனும்.

நல்லா வச்சு செய்றீங்க டா காலைலையே" என புலம்பிக் கொண்டே படிகளில் இறங்கி சென்றான்.

கீழே வந்து சேர்ந்த விக்ரமுக்கு வேலைகளும் வந்து சேர்ந்தது. பார்வதி ஹர்ஷாவின் நிலையை அறிந்த பின் "இந்தா டா இந்த பைய கொண்டு போய் கார்ல வச்சிட்டு வா" என்று அனுப்பினார்.

பின் இதை செய் அதை செய் என பார்வதி வேலை ஏவ "எம்மா என்ன எல்லா வேலையையும் என் தலைல கட்டுற. இங்க பாரு வேத்து ஊத்துது.

பொண்ணு பார்க்க போறப்ப கொஞ்சமாச்சும் பிரஸ்ஸா போக வேண்டாமா" என்றான் ஆதங்கமாக. அவனை ஒருமாதிரி பார்த்த பார்வதி "உனக்காடா பொண்ணு பார்க்க போறோம்.

ஹர்ஷா குட்டிக்கு தானே. போடா போய் பொழப்ப பாரு. வந்துட்டான்" என நொடித்துக் கொண்டு சென்றார். போகும் பார்வதியை கண்டு "மம்மி உன் டைரில குறிச்சு வச்சுக்க.

எனக்கும் ஒரு காலம் வரும். அப்ப நானும் இப்படி சீன போடல என் பேரு விக்ரம் இல்ல இல்ல இல்ல" என தலையை ஆட்டி ஆட்டி பேச பார்த்திருந்த அனைவரும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இவ்வளவு அலப்பறைகளுடன் பெண் பார்க்க அனைவரும் கிளம்ப மாப்பிள்ளை ஹர்ஷா இன்றி தான் பெண்னை காண கிளம்ப போகிறோம் என யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 10

"மீனாட்சி எல்லாம் ரெடியா இல்லையா?" என்ற விஸ்வநாதனின் அதட்டல் குரல் எப்போதும் போல் அந்த வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது.

அதற்கு பதிலாக "இதோ ரெடி ஆகிருச்சுங்க" என்ற மீனாட்சியின் குரலும் இடையிடையே கேட்டுக் கொண்டிருந்தது. அனுவின் அறையில் ரித்து அவளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள்.

"அக்கா உனக்கு மாப்பிள்ளை போட்டோவ மாமா காட்டுனாறா க்கா?" என்றாள் ஆர்வமாக. அவளை மெல்லிய புன்னகையுடன் பார்த்திருந்த அனு இல்லை என்பதாய் தலை அசைத்தாள்.

"என்ன க்கா சொல்ற. போட்டோ கூட பார்க்காம ஓகே சொல்லிட்டியா. ஏன் க்கா?" என்றாள் புரியாமல். "அதான் அப்பா விசாரிச்சு அவர் நல்லவருனு சொல்லிட்டாரே. அது போதும் ரித்து" என்றாள் அனு நம்பிக்கையாக.

"ஆனா அக்கா ஒரு வேளை வர மாப்பிள்ளை பார்க்க நல்லா இல்லைனா என்ன செய்றது‌. உனக்கு பிடிச்சு இருக்கா இல்லையா அப்படின்னு ஒருத்தர் கூட கேக்க மாட்டேங்குறாங்க.

நீயும் எதுவும் சொல்லாம ரெடி ஆகிட்டு இருக்க" என்று ரித்து பொறிந்து தள்ளினாள் ஆதங்கமாக. ரித்துவின் பேச்சை சிரிப்புடன் கேட்டிருந்த அனு

"ரித்து அழகுனு நீ எதை சொல்ற. முகம் மட்டும் அழகா இருந்து என்ன பயன் சொல்லு. மனசும் அழகா இருப்பது ரொம்ப முக்கியம். அப்பா நம்மகிட்ட ஸ்ரிக்ட்டா தான் இருப்பார்.

ஆனா நம்ம மேல அவருக்கு அக்கறை இல்லைன்னு சொல்லிடுவியா. அவர் கண்டிப்பா மாப்பிள்ளையை பத்தி நல்லா விசாரிச்சு தான் வர சொல்லி இருப்பார்.

அதுவும் இல்லாம தாத்தாவும் அவங்க போமிலிய பத்தி நல்ல விதமாக தானே சொன்னார். சோ அதை பத்தி கவலைபடவே வேண்டாம்" என்ற அனு தன்னை தயார் செய்துக் கொண்டாள்.

வெளியே சத்தம் கேட்கவே ரித்து வேகமாக சென்று பார்த்து வந்தவள் "அக்கா மாப்பிள்ளை வீட்ல இருந்து எல்லாம் வந்துட்டாங்க" என்றாள் குதூகலமாக.

என்னதான் வெளியே மௌனமாக புன்னகை சிந்தினாலும் அனுவிற்கு மனதின் உள்ளே சற்று படபடப்பாக இருந்தது அவள் மட்டுமே அறிந்த உண்மை.

ஆனால் இங்கே எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மாப்பிள்ளையாகிய ஹர்ஷாவை தவிர்த்து மற்ற குடும்ப உறுப்பினர்கள் தான் வருகை தந்திருந்தனர்.

விஸ்வநாதன் மட்டுமே ஹர்ஷவர்தனின் புகைப்படத்தை கண்டிருந்ததால் 'மாப்பிள்ளை எங்கே காணோம்?' என பார்த்திருந்தார். வீட்டில் இருந்த மற்றவர்கள் அங்கு வந்திருந்த விக்ரம் மற்றும் அபிமன்யுவை 'இதில் யார் மாப்பிள்ளை?' என பார்த்திருந்தனர்.

அங்கு நிலவிய அமைதியை கலைக்கும் விதமாக "மாப்பிள்ளை வரலையா?" என்றார் விஸ்வநாதன் பொதுவாக அனைவரையும் பார்த்து. அந்த கேள்வியில் ஒருவர் மற்றவர் முகத்தை சங்கடமாக பார்த்து கொண்டனர்.

காலையில் நடந்த நிகழ்வு அனைவருக்கும் நினைவு வந்தது. பெண் வீடு செல்ல அனைத்தையும் எடுத்து வைத்து முடித்தார் பார்வதி. ஹர்ஷா தயாராகி வந்த பின் கிளம்பலாம் என காத்திருந்தனர் வீட்டினர்.

சில நிமிடங்களில் ஹர்ஷாவும் தன் அக்மார்க் புன்னகையுடன் வந்து சேர்ந்தான். படிகளில் இறங்கி வந்த ஹர்ஷாவை கண்ட போது பார்வதிக்கு ஒரு ராஜகுமாரன் இறங்கி வருவது போல் தான் தெரிந்தது.

அவ்வளவு மிடுக்கோடும் கம்பீரத்துடனும் வந்த ஹர்ஷாவின் அந்த புன்னகை அவன் முகத்திற்கு இன்னும் அதிக தேஜஸை தான் தந்தது. ஹர்ஷா அருகே வந்தவுடன் நெட்டி முறித்த பார்வதி "அப்படியே சும்மா ஜம்முன்னு இருக்க குட்டி.

என் கண்ணே பட்டுரும் போல‌" என்றவர் தன் கைகளால் திருஷ்டி கழித்தார் பார்வதி. இதை வீட்டினர் சிரிப்புடன் பார்த்திருந்தனர்.

அப்போது ஹர்ஷாவின் அருகே வந்து அவனை கட்டிக் கொண்ட அபிமன்யு "சூப்பர் ண்ணா‌. செமையா இருக்க. பொண்ணு வீட்ல உன்னை பார்த்த உடனே ஓகே சொல்லி கல்யாண தேதிய குறிக்க போறாங்க பாரு" என்றான் ஆர்ப்பாட்டமாக.

அப்படியே ஆதிராவும் தன் வாழ்த்துக்களை பகிர ஹர்ஷா தாத்தா தந்தை அத்தை மாமா என பெரியவர்களிடம் ஆசி பெற்று கொண்டான்.

விக்ரம் மற்றும் அபியின் கேலி கிண்டலோடு உண்டு முடித்த வீட்டினர் ஒருவழியாக வீட்டை விட்டு கிளம்ப வெளியே வந்தனர். அந்நேரம் பார்த்து ஹர்ஷாவின் கைப்பேசி அலறி தள்ளியது.

அதை எடுத்த ஹர்ஷாவின் முகமோ அந்தப்பக்கம் சொல்லப்பட்ட செய்தியினால் முற்றிலும் மாறியது. இவ்வளவு நேரம் இருந்த குறும்பு புன்னகை மாறி ஒருவித தீவிரம் வந்து ஒட்டிக் கொண்டது.

பேசிக்கொண்டே மணியை பார்த்து "ம்ம்... ம்ம்.‌.. இன்னும் பிப்டீன் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்" என்று கைப்பேசியை அனைத்தான் ஹர்ஷா.

அவன் முகத்தை பார்த்திருந்த பார்வதி "என்ன ஆச்சு ஹர்ஷா குட்டி?" என்றார் பதட்டமாக. அவரின் பதட்டத்தை தணிக்கும் விதமாக அவர் கையை ஆதூரமாக பிடித்தான் ஹர்ஷா.

"ஒரு எமர்ஜென்சி அத்தை. டூ டேஸ் முன்னாடி தான் ஆபரேஷன் செஞ்சேன்.‌ என்னோட பேஷன்ட். சோ டீட்டெயில்ஸ் எனக்கு தான் தெரியும். பிட்ஸ் வந்திருச்சாம்.

நான் போயே ஆகனும் அத்தை" என்றான் தயக்கமாக. "ரொம்ப சீரியசா இருந்த கேஸா பா" என்ற ராஜசேகரின் கேள்விக்கு "இல்லை பா நல்லா தான் இருந்தார்.

ஹெல்த் நல்லாவே ரெக்கவர் ஆகிட்டு தான் இருந்துது. எனக்கும் ஒன்னும் புரியல பா. போய் தான் பாக்கனும். ஓகே ப்பா நான் கிளம்பறேன்" என்று முடித்தவன் தன் காரை நோக்கி சென்றான்.

பின் ஏதோ மனதில் சட்டென்று தோன்ற பார்வதியிடம் வந்தவன் "அத்தை அனுவ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இப்போ பொண்ணு பார்க்க நீங்க போய்ட்டு ஓகே சொல்லிட்டு வாங்க அத்தை" என்றான் கொஞ்சலாக.

இவ்வளவு நேரம் பொறுப்பாக பேசிய ஹர்ஷாவா இது என யோசிக்கும் அளவு கொஞ்சலாக பேசிய ஹர்ஷாவின் கண்ணத்தை கையில் ஏந்திய பார்வதி

"சரி ஹர்ஷா குட்டி. உனக்கு பிடிச்சு போச்சுல. அந்த பொண்ணு தான் உனக்கு சரியா. நாங்க பேசிட்டு நிச்சயத்துக்கு நாள‌ குறிச்சுட்டே வந்துடுறோம்" என்றார் வாஞ்சையாக.

பார்வதியின் பதிலில் முகம் மலர்ந்த ஹர்ஷா "யூ ஆர் சோ சுவீட் அத்தை" என அவரின் கண்ணத்தில் முத்தம் இட்டு மருத்துவமனை நோக்கி அவன் காரில் பறந்தான்.

ஒரு பெருமூச்சோடு இதை பார்த்திருந்த பார்வதிக்கு மனதுக்குள் ஏதோ உறுத்தினாலும் தான் பெறாத மகன் ஹர்ஷாவிற்கு பிடித்து போன இந்த பெண்ணை அவனுக்கு கட்டி வைத்தே ஆக வேண்டும் என குடும்பத்தினருடன் கிளம்பி விட்டார்.

நடந்தவற்றை எண்ணி பார்த்த ஹர்ஷாவின் வீட்டினர் யார் சொல்வது ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கொள்ள முடிவில் அனைவரும் ஒருசேர பார்வதியை பார்க்க 'சரி நாமலே சொல்லுவோம்' என்ற முடிவு செய்த பார்வதியும் மேலோட்டமாக அனைத்தையும் சொல்லி முடித்தார்.

அதை கேட்ட விஸ்வநாதன் "ஓஓ.. ஒரு உயிரை தான காப்பாத்த போய் இருக்கார். அதனால‌ என்ன இப்போ" என்றவர் சிறிது யோசித்து "ஆனா அவருக்கு என் பொண்ண புடிச்சிருக்கா இல்லையான்னு எப்படி தெரிஞ்சிக்கறது" என்று கேள்வியுடன் முடித்தார்.

அவர் கேட்டவுடன் மகிழ்ந்த முகமாய் "அதுலாம் போட்டோ பார்த்த உடனே எனக்கு ஓகேன்னு சொல்லிட்டான். இப்பக்கூட போறதுக்கு முன்ன 'எனக்கு ஓகே. நீங்க பொண்ண பார்த்துட்டு மேற்கொண்டு பேசுங்க' அப்படின்னு சொல்லிட்டு தான் போனான்" என்றார் பார்வதி.

"ஓஓ.. சரிங்க சரிங்க" என்று மகிழ்ந்தார் விஸ்வநாதன். 'என்னடா இது சும்மா பேசிக்கிட்டே இருக்காங்க' என கடுப்புடன் எண்ணிய அம்மு "பொண்ணு எங்க இருக்காங்க" என்று கேட்டுவிட்டாள் ஆர்வத்தில்.

அவளை அழைத்த மீனாட்சி அனு இருக்கும் அறைக்குள் அழைத்துச் சென்றார். வெளியே பார்வதி தான் அவர் குடும்பத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்த தொடங்கினார்.

உள்ளே நுழைந்த அம்மு அனுவை கண்டு "நீங்க தான் அனுவா?" என்று கேள்வியாக இழுக்க ஆம் என தலை அசைத்தாள் அனு. "வாவ்! சூப்பரா இருக்கீங்க.

அதான் அத்தான் உங்கள‌ போட்டோல பாத்தே பிளாட் ஆகி ஓகே சொல்லிட்டாரு. உங்களுக்கு எங்க அத்தான‌ புடிச்சாருக்கா?" என்றாள் படபட பட்டாசாய்.

"ஆனா என்ன பண்றது அத்தான் ஒரு எமர்ஜென்சி கேஸ்னு ஹாஸ்பிடல் போய்ட்டாரு. வீட்ல இருக்க மத்தவங்க தான் வந்திருக்கோம்" என சோகமாக முடித்தாள் அம்மு.

ரித்து அம்முவிடம் "என்ன சொல்றீங்க. மாப்பிள்ளை வரலையா?" என்றாள் கேள்வியாக. அதன்பின் அம்மு வீட்டில் நடந்த நிகழ்வை கூறி ஹர்ஷா தனக்கு பெண்ணை பிடித்துவிட்டது என கூறியதையும் சேர்த்தே கூறி முடித்தாள்.

அனுவிற்கு அம்முவை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. அதுவும் அவள் பேச்சு அவளை மேலும் கவர்ந்து விட்டது. ஏன் கூட இருந்த ரித்துவுக்கே அம்முவை பிடித்து போனது.

அதன் பின் அனுவை மீனாட்சி வந்து அழைத்து சென்றார். பார்வதி அவளை தன் அருகிலேயே அமர்த்திக் கொண்டார். கூடவே அம்மு விக்ரம் அபி என இளையவர் பட்டாளமும் அமர்ந்து கொண்டனர்.

ஆண்கள் தனியாக தொழில் நாட்டு நட்பபு என பேச இங்க பார்வதியோ ஹர்ஷாவின் புராணத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்தார். இதில் விக்ரம் அபி அம்மு என அவர்களும் ஹர்ஷா புராணம் பாட அனு கேட்டுக் கொண்டிருந்தாள்.

அம்முவை எப்படி பார்த்தவுடன் அனுவிற்கு பிடித்ததோ அதே போல் "அண்ணி அண்ணி" என பேசிய அபியையும், தங்கை போல் எண்ணி "அனு தங்கச்சி" என உரிமையாய் பேசிய விக்ரமையும் பிடித்து விட்டது.

மொத்தத்தில் தனக்கு வரப்போகும் கணவனை பிடிக்கும் முன் அவன் மொத்த குடும்பத்தையும் அனுவிற்கு பிடித்து போனது. இதையெல்லாம் மீனாட்சி மனநிறைவுடன் பார்த்திருந்தார்.

ஹர்ஷா குடும்பம் வந்ததில் இருந்து இவர்கள் வீடு கலகலவென இருக்க அதுவே இவர்கள் குடும்பத்தை பிடிக்க ஒரு பெரிய காரணமாக அமைந்து விட்டது.

பேச்சுவாக்கில் "ஆமா இந்த பொண்ணு யாரு?" என ரித்துவை ராஜசேகர் கேக்கவே அப்போது தான் விஸ்வநாதனும் தன் குடும்பத்தை பற்றி பேசினார். மேலும் அவர் தங்கை தங்கை கணவர் அவர்களின் சொந்த ஊருக்கு சென்றிருப்பதையும் கூறி முடித்தார்.

ஒருவாறு எல்லாம் சுமூகமாக செல்லவே நிச்சய நாளை குறிப்பது பற்றிய பேச்சை எடுத்தார் பார்வதி. அதன்பின் தான் விஸ்வநாதனும் இதை குறித்து பேச ஆரம்பித்தார்.

விஸ்வநாதன் தங்கள் ஜோசியரை அழைத்து நல்ல நாளை குறித்து தர வேண்டினார். பதினைந்து நாட்கள் கழித்து ஒரு நல்ல நாள் இருப்பதாக அவர் சொல்ல அன்றே நிச்சயம் செய்யும் நாளாக முடிவு செய்தனர்.

இதற்கிடையில் விக்ரம் எதோ கேட்க வருவதும் தயங்கவுமாக இருக்க அவனை பார்த்த அபிமன்யு 'என்ன' என கண்களால் வினவினான். விக்ரமும் ஹர்ஷா அனுப்பிய செய்தியை காட்டினான்.

'நான் பாத்துக்கிறேன்' என ஜாடை செய்த அபி அனுவிடம் சென்று மெதுவாக "அண்ணி உங்க போன் நம்பர் தரீங்களா" என தயங்கியபடி கைப்பேசி எண்ணை கேட்டான்.

ஆம் ஹர்ஷவர்தன் அனைவரின் முன்னும் கேட்க தயங்கியவன் விக்ரமிற்கு ஒரு செய்தியாக 'பெண்ணின் எண்ணை பெற்று வரவும்' என அனுப்பி வைத்திருந்தான்.

அபியின் கேள்வியில் அனு சட்டென திருப்பி விஸ்வநாதனை தான் பார்த்தாள். இதை கேட்ட விஸ்வநாதன் "தம்பி நிச்சயம் கூட முடியலை. கல்யாணம் முடியாம என் பொண்ணு போன்ல எல்லாம் பேச மாட்டா. நாங்க அவள‌ அப்படி தான் வளர்த்து இருக்கோம்" என்றார் கடுமையான குரலில்.

கேட்ட அனைவருக்கும் முகமே விழுந்து விட்டது. அபியோ 'எந்த காலத்துல இருக்காரு இந்த ஆளு. போன்ல பேசறதுக்கும் பிள்ளைங்களை வளர்க்கறதுக்கும் என்னடா சம்மந்தம்' என மனதினுள் திட்டிக் கொண்டிருந்தான்.

ஹர்ஷா கேட்டு ஒரு விஷயத்தை செய்யாமல் செல்வது மனதிற்கு வருத்தமாக தான் இருந்தது.


ஆனால் அதற்கு மேல் வருத்தி கேட்க யாருக்கும் மனது வராது போகவே சிறிது நேரத்தில் சொல்லிக் கொண்டு கிளம்பி எண்ணினர்.

விக்ரமும் அபிமன்யுவும் தான் 'ஹர்ஷா கேட்டால் என்ன சொல்ல போறோமோ' என யோசித்தவாறு இருந்தனர்.

நிச்சயதார்த்தத்திற்கு பதினைந்து நாட்கள் இருக்கவே இன்றே மாப்பிள்ளை வீட்டையும் பார்க்க முடிவு செய்த விஸ்வநாதன் அருணாசலம் குடும்பத்தினரோடு மீனாட்சி மற்றும் ஆதர்ஷை அழைத்து கொண்டு பார்த்து வர சென்றார்.

அப்போது மீனாட்சி பூஜை அறையில் இருந்த சுபத்ராவின் புகைப்படத்தை காண விஸ்வநாதன் அதை பெரிதாக எடுக்காது வீட்டை மட்டும் பார்த்து சென்றது விதியின் செயலோ?

தங்களையே பார்த்திருந்த ஹர்ஷாவின் முன் திருதிருவென முழித்தபடி நின்றிருந்தனர் விக்ரமும் அபிமன்யுவும். அவன் முகத்தை வைத்து அவன் மனதில் என்ன இருக்கிறது என இருவராலும் யூகிக்க முடியவில்லை.

"உங்ககிட்ட என்னடா சொல்லிட்டு போனேன். ஒரேயொரு போன் நம்பர். அதை உங்களால வாங்கிட்டு வர முடியலையா?" என்று இருவரிடமும் ஆதங்கமாக கேட்டு கொண்டிருந்தான் ஹர்ஷா.

விக்ரமிற்கு ஹர்ஷாவை பார்க்க பாவமாக இருந்தது. தாங்கள் என்ன கேட்டாலும் ஏன் கேட்காமல் போனாலும் தங்களுக்கு என்ன தேவை என்பதை பூர்த்தி செய்து கொடுப்பவன் ஹர்ஷா.

ஆனால் தன்னிடம் முதல் முறை அவன் ஒன்று கேட்டிருக்க அதை செய்துக் கொடுக்க முடியாமல் வந்தது மனதை பிசைந்தது.

"ண்ணா உன் வருங்கால மாமனார் கொஞ்சம் டெரர் போல‌. நான் அண்ணிக்கிட்ட நம்பர் கேட்ட உடனே அதலாம் தரமுடியாதுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டாரு. நாங்க என்ன ண்ணா செய்றது" என்றான் அபிமன்யு இடையே.

அப்போது தான் ஹர்ஷாவும் பெண் வீட்டில் எங்கே தன் குடும்பத்தை அவமானப்படுத்தும்படி ஏதேனும் சொல்லி விட்டார்களோ என சிந்தித்தான்.

அதன்பொருட்டு "அங்க அப்பா அத்தை மாமாவ இன்சல்ட் பண்ற மாதிரி எதுவும் பேசிடாங்கலா டா" என்றான் பதட்டத்துடன். தனக்காக பெண் பார்க்க சென்று எங்கே தன் குடும்பம் அவமானம் பட்டுவிட்டனரோ என பதறியே கேட்டான் ஹர்ஷா.

அதற்கு "அவங்களை‌ எல்லாம் ஒன்னும் சொல்லலை ண்ணா.‌ ஆனா அவரு கொஞ்சம் வெரப்பா தான் இருந்தாரு. அண்ணியோட அம்மா கூட தயங்கி தயங்கி தான் பேசுறாங்க.

இதில‌ அண்ணிய பத்தி சொல்லவே வேணாம். பேசவே காசு கேப்பாங்க போல. ஆனா அவங்ககிட்ட உன்னை பிடிச்சிருக்கான்னு கூட யாருமே கேக்கலை ண்ணா. நான் போன் நம்பர் கேட்ட உடனே டக்குன்னு திரும்பி அவங்க அப்பாவ பார்த்தாங்க பாரு.

அப்போ கன்பார்ம் பண்ணுனேன் ண்ணா. உன் மாமனார் ஒரு டெடர் பீஸ்னு" என அபிமன்யு தான் ஆராய்ந்தவற்றை சொல்லி முடித்தான்.

அவன் கூறியவற்றை கேட்டு வியந்த விக்ரம் "ப்பா.. என்னா ஒரு ஆராய்ச்சி. எப்படிடா இப்படி அலசி ஆராஞ்ச" என்றான் நக்கலாக. "என்ன மாமா நக்கலா" என்று தலையில் தட்டினான் அபி.

இவர்கள் வம்பிழுத்து விளையாடிய போது ஹர்ஷாவின் முகம் தீவரமான சிந்தனைக்கு சென்றது இவர்கள் கருத்தில் பதியவில்லை. "அபி அப்பாகிட்ட போய் மிஸ்டர். விஸ்வநாதன் நம்பர் வாங்கிட்டு வா" என்றான் ஹர்ஷா தீடீரென.

ஒரு நிமிடம் ஹர்ஷா எதற்கு கேட்கிறான் என்றே புரியவில்லை அபிக்கு. 'சரி போவோம்' என எண்ணி "இதோ போறேன் ண்ணா" என கிளம்பி விட்டான். விக்ரம் 'எதோ முடிவு பண்ணிட்டான் போலையே.

என்னன்னு ஒன்னும் தெரியலையே. கேட்டாலும் சொல்ல மாட்டான். ம்ஹூம்' என பெருமூச்சுடன் ஹர்ஷாவின் முகத்தையே பார்த்திருந்தான்.

அபிமன்யு வரும் வரை அங்கு அமைதியே நிலவியது‌. "அண்ணா இந்த நம்பர் தான்" என விஸ்வநாதனின் எண்ணை தந்த அபி "ஆமா எதுக்கு ண்ணா அவர் நம்பர்?" என்றான் கேள்வியாய்.

அதை கண்டுகொள்ளாத ஹர்ஷா தன் வருங்கால மாமனாரான விஸ்வநாதனை கைப்பேசியில் அழைத்தான். அந்த பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டது.

"வணக்கம் சார். நான் ஹர்ஷவர்தன் பேசுறேன்" என ஹர்ஷாவே உரையாடலை துவங்கினான். திடீரென மாப்பிள்ளை அழைத்து பேசவும் சட்டென அலெர்ட் மோட் போன விஸ்வநாதன் "சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை" என்றார் பவ்யமாக.

"சார் நான் உங்க பொண்ணு கிட்ட பேசனும். கொஞ்சம் போனை குடுக்க முடியுமா" என்றான் எந்த தயக்கமும் இல்லாமல் நேரடியாக. "எதுக்கு மாப்பிள்ளை?" என்ற விஸ்வநாதன் மனதில் எதற்கு தர வேண்டும் என்னும் எண்ணத்தில் தான் இருந்தார்.

"அது ஒன்னும் இல்ல சார். உங்க பொண்ணுக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்க தான். பிகாஸ் இப்ப இருக்க காலத்தில‌ யாரையும் நம்ப முடியாது பாருங்க.

அதான் உங்க பொண்ணு வாயாலையே அவங்களுக்கு இந்த மேரேஜ்க்கு ஓகேன்னு சொல்லிட்டா பிராப்லம் வராதுல. அதுக்கு தான் நம்பர் கேட்டேன்" என்றான் வெட்டும் குரலில்.

ஹர்ஷா வேண்டும் என்றே தான் இப்படி குதர்கமாக பேசினான்.‌ அதற்கு விஸ்வநாதனை பற்றி அவனுக்கு அபி சொன்ன தகவல்கள் ஒரு காரணம். அதற்கு மேல் முக்கிய காரணம் ஒன்று உண்டு.

அது என்ன என்றால் அவனின் அனு அவனை உண்மையிலே பிடித்து தான் திருமணம் செய்ய சம்மதித்து இருக்கிறாளா என்று அறியவிடாது என் வளர்ப்பு அது இதுவென விஸ்வநாதன் பேசி வைத்தது தான்.

அதிலும் ஆண் பெண் என எந்த பேதமும் இன்றி வளர்ந்து அனைவருடனும் நன்றாக பழகும் ஹர்ஷாவிற்கு விஸ்வநாதனின் செயல் எரிச்சலை தான் கிளப்பியது‌.

எந்த ஒரு ஆணும் தான் திருமணம் செய்ய போகும் பெண் தன்னை பிடித்து அந்த திருமணத்தில் உடன்பட வேண்டும் என்று எண்ணுவது உண்டு. அதற்கு ஹர்ஷா மட்டும் விதிவிலக்கா என்ன.

ஆனால் இதை புரியாத விஸ்வநாதன் மீண்டும் ஹர்ஷாவுடைய கோபத்தை ஏற்றினார். "என்னோட பொண்ணை நான் அப்படி எல்லாம் வளர்க்கலை மாப்பிள்ளை. அதுலாம் அவ நான் சொல்றத மீற மாட்டா" என்றார் பெருமிதமான குரலில்.

"சார் எனக்கு ஒன்னு புரியலை. ஒரு போன் கால் உங்க பொண்ணு கிட்ட பேச விடாம செய்றீங்கலே. அப்போ என்‌ மேல நம்பிக்கை இல்லாம தான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி தர சம்மதம் சொன்னீங்கலா என்ன?" என்றான் வேண்டும் என்றே குரலில் ஆச்சரியம் காட்டி.

அப்போது தான் பேச்சு போகும் திசையை உணர்ந்த விஸ்வநாதனுக்கு திக்கென்றது. சரி ஒரு முறை தானே பேசிவிட்டு போகட்டும் என அனுவை அழைத்து விட்டார் விஸ்வநாதன்.

அனு அருகில் வரவும் கைப்பேசியை தந்த விஸ்வநாதன் பேசு என்று விட்டு அவள் அருகிலே நின்றுக் கொண்டார். அனுவிற்கு என்ன நடக்கிறது என ஒன்றும் புரியவில்லை.

கைப்பேசியை வாங்கி காதில் வைத்து "ஹலோ" என்றாள். அதன்பின் தான் ஹர்ஷாவின் முகத்தில் புன்னகையே வந்தது. அவனும் "ஹலோ" என்றான்.

பின் "அனு நான் ஹர்ஷவர்தன் பேசுறேன்" என்றான்.‌ இப்போது அனுவிற்கு மனதிற்குள் படபடவென வந்தது. இடையில் விஸ்வநாதன் வேறு "பேசுமா பேசு" என்க அதுவும் அச்சுரம் பிசகாமல் ஹர்ஷாவின் காதில் விழுந்தது.

'போன் தான் தந்திட்டாரே. அப்புறம் என்ன பக்கத்திலே நிக்கிறாரு' என எண்ணினாலும் அனுவிடம் "என்ன கல்யாணம் பண்ண உனக்கு சம்மதமா?" என்றான் சுற்றி வளைக்காமல்.

"புடிச்சிருக்குன்னு சொல்லு" என்ற விஸ்வநாதன் குரல் தான் முதலில் கேட்டது. அதன் பின் தான் அனுவின் குரலில் "ம்ம் சம்மதம்" என்ற சொல் தயங்கி தயங்கி வந்தது‌.

'இவ்ளோ பேசி எதுக்குடா சம்மதம் கேட்டோம்' என்றாகிவிட்டது ஹர்ஷாவிற்கு. பின் அவள் என்ன படிக்கிறாள் என்ன கல்லூரி என கேட்டு விட்டு வைத்துவிட்டான் ஹர்ஷா.

ஏனோ விஸ்வநாதனை முதலில் இருந்தே பிடிக்காமல் போக ஆரம்பித்தது ஹர்ஷாவிற்கு. எப்போதும் அனைவரின் பக்கமும் இருந்து யோசிக்கும் ஹர்ஷா இவரின் விஷயத்தில் மட்டும் பிசகுவது தான் அவனுக்கும் தெரியவில்லை.

ஒருவேளை அவர் செய்த கர்மவினை தற்போது திரும்பி தாக்க தயாராகிறதோ? அதை அவரும் உணரும் தருணம் கூடிய சீக்கிரம் வரப்போவதை அவரும் அறியவில்லை.

என்றும் இல்லாமல் இன்று காலையில் எழுந்தது முதல் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தாள் அனு. அது நேற்று ஹர்ஷா அவளிடம் பேசியதற்கு பின் ஏற்ப்பட்டு விட்டது.

வீட்டில் இருந்த எல்லோரும் ஏன் அவள் அன்னை உட்பட அவளிடம் மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா என ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.

அவளுக்கு அது பழகிய ஒன்று என்றதாலே ரித்து கேட்டபோதும் சமாளித்து இருந்தாள். ஆனால் இனி காலம் முழுவதும் வாழப்போவது தான் தன்னிடம் ஒன்றும் கேட்கவில்லையே என மனதில் ஒரு சிறு சுணக்கம் இருக்கவே செய்தது.

நேற்று ஹர்ஷா அழைத்து அவள் விருப்பத்தை மதித்து கேட்டது அவளுக்குள் அவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அவனோடு தன் வாழ்க்கை இனி நன்றாக இருக்கும் என இப்போது திடமாக நம்பினாள் அனு.

எனவே மனது தெளிவாக இருக்க அதுவே முகத்துக்கு நல்ல தேஜசை தந்தது. அதே மகிழ்ச்சியோடு கல்லூரி சென்றாள். அதே நேரம் வகுப்புகள் முடிந்து வந்த இடைவெளியின் போது ஹர்ஷாவே நேராக அவளை பார்க்க வந்தது அவளின் இதயத்துடிப்பை ஏகத்துக்கும் ஏற்றி வைத்தது.

திடீரென வந்து நின்ற நபர் தன்னிடம் தனியே பேச வேண்டும் என கூற புரியாது விழித்தாள் அனு. ஏனெனில் அவளுக்கு தான் ஹர்ஷாவை புகைப்படத்தில் கூட யாரும் காட்டவில்லையே.

அவளிடம் தான் ஹர்ஷவர்தன் என அந்த நபர் அறிமுகம் செய்து கொண்ட பின் அவளுக்கு உள்ளே உதறல் எடுக்க ஆரம்பித்தது. பின் கல்லூரி கேன்டீனிலே அமர்ந்து பேச அழைத்து சென்றான். ஒருவித பயத்திலே அனுவும் சென்றாள்.

தன் முன்னால் தலையை கவிழ்ந்தவாறு நகத்தை நோண்டி கொண்டிருந்த அனுவை கண்டு சத்தம் வராமல் சிரித்த ஹர்ஷா "அனு" என்றான் மெல்லிய குரலில்.

அவள் நிமிரவில்லை எனவும் "அனு அனுக்ஷ்ரா கொஞ்சம் என்னை பாரேன்" என்றான் ஆசையாய். சிறிது தயங்கிய அனு மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள்.

இப்போது விரிந்த புன்னகையுடன் "ம்ம் இப்போ சொல்லு. உனக்கு உண்மையாவே இந்த மேரேஜ்ல சம்மதம் தானே. இல்லை வீட்ல சொன்னதால ஓகே சொன்னியா?" என்றான்.

'நேத்தும் கேட்டீங்களே?' என்று தான் பார்த்தாள். ஆனால் பேசவில்லை. அவள் நினைதத்து புரிந்ததோ இல்லையோ அவனாகவே தொடர்ந்தான்.

"அது நேத்து நீ போன்ல பேசினப்போ பாதி உன் அப்பா பேசினது தான் என் காதுல விழுந்துச்சு. இதுல உனக்கு ஓகேவா இல்லையான்னு எனக்கு ஒன்னும் புரியல.

சோ அதான் நேர்லையே கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு வந்துட்டேன். சரி சொல்லு சொல்லு" என்று சிரித்தான் ஹர்ஷா. ஆனால் அனுவோ வெட்கத்தால் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரம் பார்த்த ஹர்ஷா "ஓஓ... அப்போ என்னை பிடிக்கலையா?" என்றான் சிறிது வருத்தமான குரலில். அவனின் வருத்தம் அனுவை ஏதோ செய்ய "இல்ல எனக்கு உங்கள‌ புடிச்சிருக்கு" என்றாள் தயங்கியபடி.

இப்போது "என்ன சொன்ன. எனக்கு ஒன்னும் கேக்கல" என்றான் ஹர்ஷா அவளை வம்பிழுக்கும் நோக்கத்தில். அவன் தன்னை வம்பு செய்கிறான் என புரிந்த அனுவின் முகம் சிவந்து விட்டது.

"என்ன சொல்ல மாட்டியா?" என்றான் மீண்டும். 'ஆண்டவா! ஏன் இப்படி செய்றாரு' என எண்ணிய அனு "பிளீஸ்" என்றாள் மெதுவாக. அவளின் முகம் கண்டு பாவம் பார்த்து அவளை விட்ட ஹர்ஷா அவளின் கைப்பேசியை அடுத்து கேட்டான்.

"எதுக்கு?" என்றாள் தயக்கமாக. "ஏன் நான் கேட்டா தரமாட்டியா?" என்றான்‌ சற்று கோபம் போல். அவன் கோபப்படுகிறான் போல என பயந்துவிட்ட அனு சட்டென்று எடுத்து தந்துவிட்டாள்.

அவளை புன்சிரிப்புடன் பார்த்த ஹர்ஷா முதலில் அவளின் எண்ணை தன் கைப்பேசியில் சேமித்து கொண்டான். "இனிமே நான் பிரீயா இருக்கப்போ நான் கால் இல்ல மெசேஜ் பண்ணுவேன்.

நீ ரிப்ளை பண்ணனும் புரியுதா" என்றவாறு அவளிடம் கைப்பேசியை தந்துவிட்டு கிளம்பி விட்டான். அனு தான் அவன் வந்ததில் இருந்து நடந்தவற்றை நினைத்துக் கொண்டு ஒருவித மோன நிலையிலே வகுப்பிற்குள் நுழைந்தாள்.

வகுப்பில் கவனம் இல்லாது ஏதோ போல் இருந்த அனுவை வகுப்பே விசித்திரமாக பார்த்து வைத்தது. எப்போதும் படிப்பு படிப்பு என இருப்பவள் இன்று இப்படி இருந்தால் அவர்களும் தான் என்னவென்று நினைப்பர்.

அனுவை பார்த்து விட்டு சென்ற ஹர்ஷாவின் நிலையும் அதே போல் தான் இருந்தது. இருந்த மகிழ்ச்சியில் அவன் வாகனம் சாலையில் அழகிய ரிதத்தில் பயணித்தது.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 11

அந்த வகுப்பில் இருந்த அனைவரும் குனிந்த தலை நிமிராது அமர்ந்திருந்தனர். ஆசிரியர் நடத்தும் பாடத்தை தான் அனைவரும் மும்முரமாக குறிப்பு எடுக்கின்றனர் என நீங்கள் நினைத்தால் அது தவறு.

ஆசிரியர் போடும் மொக்கையை தாங்க முடியாது கீழே தங்கள் கைப்பேசியை நோண்டி கொண்டிருந்தனர். அதே நேரம் அதையெல்லாம் செய்தே பழக்கம் இல்லாத அனுவோ ஆசிரியர் சொல்வதை கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

நீ பார்க்கவில்லை என்றாள் நான் விட்டுவிடுவேனா என்பதை போல் அவள் கைப்பேசி அலறி தொல்லை செய்து கொண்டிருந்தது. நல்ல வேளை வைப்ரேட்டர் மோடில் தான் வைத்திருந்தாள்.

அதனால் அருகில் இருந்தவர்களுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. வாட்சப்பில் செய்தி தான் வந்திருந்தது. 'அப்பாடி' என மனம் நிம்மதி அடைந்தவள் எடுத்து பார்த்தாள்.

செய்தி அனுப்பியது யார் என அவளுக்கு நன்றாக தெரிந்தது. எதற்காக என்றும் புரிந்தது. "அனு நல்லா பார்த்து சொல்லுடா! இதுல எது உனக்கு ஓகேன்னு?" என்று கேட்டு ஒரு பத்து புடவையின் புகைப்படங்கள் வந்திருந்தது.

"இவரை.." என மனது செல்லமாக சலித்து கொண்டாலும் அனுவிற்கு ஹர்ஷா தன் மனம் அறிந்து செயல்படுவது மிகவும் பிடித்து தான் இருந்தது. ஆம் இந்த புகைப்படங்களை அனுப்பி கொண்டிருப்வன் ஹர்ஷவர்தனே.

இவர்கள் இருவரின் நிச்சயம் இன்னும் பத்து நாட்களில் வர இருக்க புடவை எடுக்க அனுவை உடன் அனுப்பும் படி பார்வதி விஸ்வநாதனிடம் கேட்க அவர் ஒரேயடியாக மறுத்து விட்டார்.

கல்யாண புடவை எடுக்கன்னா கூட நாங்க வந்துருவோம். அப்பவும் கல்யாண பொண்ணை கூட்டிட்டு வரது எல்லாம் எங்க பழக்கம் இல்லை. இது நிச்சய புடவை தானே உங்க விருப்பப்படியே எடுங்க என்று சொல்லிவிட ஹர்ஷவர்தன் தான் கோபமாகி விட்டான்.

அன்று கல்லூரிக்கு வந்து ஹர்ஷா அனுவின் கைப்பேசி எண்ணை வாங்கி சென்றதை மாலை வந்து தன் தாய் மீனாட்சியிடம் அப்படியே கூறி விட மீனாட்சி "பேசு ஷரா" என்றுவிட்டார் ஒரே வார்த்தையில்.

தன் அன்னை தன்னை கிண்டல் தான் செய்கிறாரோ என்று நினைத்தாலும் அவர் முகத்தில் அதற்கான எந்த பாவமும் இல்லை. அனு நின்று மீனாட்சி முகத்தை குறுகுறுவென பார்க்கவும் "என்னடி?" என்றவர் சிரித்துவிட்டார்‌.

"அம்மா நான் எதுவும் பண்ணலை. அவரா தான் என்னை பார்க்க வந்தாரு‌. நான் அவர் போன் செஞ்சாலும் பேசலை மா. அப்பாட்ட சொல்லிராதீங்க" என்றாள் திகிலான குரலில்.

இப்போது வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்ட மீனாட்சி "ஏன் நீயே போய் உங்க அப்பாகிட்ட சொல்லேன்" என்று கடிந்தவர் "ஏன்டி அறிவுன்னு ஒன்னு இருக்கா இல்லையா?

அந்த மனுஷன் தான் மாப்பிள்ளை கிட்ட பேசக்கூடாது அப்படின்னு புத்தியே இல்லாம சொல்லிட்டு இருக்காருனா. நீ ஏன்டி இப்படி இருக்க.

அப்பா புள்ளை எல்லாம் எந்த காலத்துலடி இருக்கீங்க. பாவம் மாப்பிள்ளை உன்கிட்ட பேச ஆசைப்படுராரு. பேசிட்டு தான் போயேன்டி. உன் அப்பா தான் பழைய பஞ்சாங்கம் பேசிட்டு இருக்காருனா,

நீயும் அதையே சொல்லாத" என்றவர் இப்போது தீவிரத்தை உணர்த்தும் வகையில் "அவர் தான் இனிமே உன் வாழ்க்கை ஷரா. நாங்களாம் இனி எவ்ளோ நாள் உன் கூட வரப்போறோம் டா.

மாப்பிள்ளை தான் இனி உன்னோட காலம் பூரா வரவரு. அவர்காக இல்லைனாலும் நீ அவரை பத்தி தெரிஞ்சிக்க இதை நல்ல வாய்ப்பா எடுத்துக்கடா" என்று முடித்தார்.

அனுவிற்கு தன் அன்னை கூறியது ஒருவிதத்தில் சரியென தோன்றியதால் அதன்பின் ஹர்ஷாவின் அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்து விட்டாள்.

'தயங்கி தயங்கி பேசினாலும் தன் அழைப்பை எடுத்து பேச செய்கிறாளே!' என எண்ணிய ஹர்ஷாவும் அவளிடம் உரையாடுவான்.

அதே நேரம் அவள் வாயிலிருந்து சில வார்த்தைகளையும் வர வைத்து தான் அழைப்பை வைப்பான். இதில் அவள் வீட்டினர் அவளை ஷரா என அழைக்க, ஹர்ஷா அனுவென்று அழைப்பது வேறு பிடித்து போனது அனுவிற்கு.

எனவே ஹர்ஷாவின் குணத்திற்கு ஏற்றவாறு சிறிது சிறிதாக தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி கூட செய்கிறாள் அனு. இப்படி போய்க் கொண்டிருக்கும் போது, நேற்றைய இரவில் அனுவிற்கு அழைத்தான் ஹர்ஷா.

"அனு நாளைக்கு நம்ம எங்கேஜ்மெண்ட்க்கு உனக்கு ஸாரி எடுக்க போறோம். நீயும் கிளம்பி வா" என்றான் அதிரடியாக. அவள் தந்தை ஏற்கனவே மறுத்தும் அவளை ஹர்ஷா அழைத்தது அனுவிற்கு மனதினுள் உதறலை தான் தந்தது.

அதனால் ஹர்ஷாவிடம் கெஞ்சி போராடி தான் நாளை வர முடியாது என கூற ஹர்ஷா பெரிதும் கோபித்துக் கொண்டான். பின் அவனிடம் சமசரம் பேசினாள் அனு.

கடைசியில் "நான் புடவை போட்டோஸ் அனுப்பி வைப்பேன். அன்ட் அந்த போட்டோவை பார்த்து செலக்ட் பண்ணு. யார்க்கிட்ட வேணா ஒப்பீனியன் கேட்டுக்கோ. பட் பைனலா உனக்கு பிடிச்சதை தான் செலக்ட் பண்ற" என்றான் முடிவாக.

அவன் சொன்ன முடிவை கேட்டு அவள் மனதும் 'இந்த வரையிலாவது ஒத்துக் கொண்டானே" என சரி என்று விட்டாள். அனு கல்லூரி செல்லும் நேரம் ஹர்ஷா அவளுக்கு அழைப்பு விடுத்து என்றும் தொல்லை செய்யமாட்டான்.

ஆனால் இன்று இவர்களின் நிச்சய புடவையை தேர்ந்தெடுக்கும் பொருட்டு அவனுக்கு பிடித்த புடவைகளின் புகைப்படங்கள் எல்லாம் அனுப்பிய வண்ணம் இருந்தான்.

அதை கண்ட அனுவும் மகிழ்ச்சியாக அந்த புடவைகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பார்க்க துவங்கினாள்.

ஆனால் அங்கே கடையிலோ தன் கையில் இருந்த கைப்பேசியை முறைத்து கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன். அவனை நமட்டு சிரிப்புடன் பார்த்தான் விக்ரம்.

'ஒரு புடவை செலக்ட் பண்ண என்ன இவ்ளோ நேரம் ஆகுது. நான் போட்டோஸ் அனுப்பி டென் மினிட்ஸ் ஆச்சு. பத்து புடவைல ஒரு புடவை செலக்ட் பண்ண சொன்னா இன்னும் என்னதான் செய்றாளோ?' என மனதினுள் புலம்பிக் கொண்டிருந்தான் ஹர்ஷா.

அவனை பார்த்து "என்ன ஹர்ஷா குட்டி போனை பார்த்துட்டு இருக்க. சீக்கிரம் ஒரு புடவையை செலக்ட் பண்ணுப்பா. இந்த புடவை எடுத்த அப்புறம் நமக்கு இன்னும் பர்சேஸ் பண்ற வேலை நிறைய இருக்கு.

எது உனக்கு ஓகேன்னு சொல்லு" என்ற பார்வதியின் கேள்விக்கு பதில் விக்ரமிடம் இருந்து வந்தது. "ஐயோ அம்மா! இன்னும் அவனுக்கு மேலிடத்தில இருந்து உத்தரவு வரலை.

அதான் சார் அந்த உத்தரவுக்காக போனை பார்த்து தவம் செஞ்சிட்டு இருக்கார்" என்றான் நக்கலாக. அவனை நிமிர்ந்து முறைத்த ஹர்ஷாவும் எதுவும் சொல்லாது மீண்டும் கைப்பேசியை பார்த்தான்.

விக்ரம் பதிலில் குழம்பிய பார்வதி தான் "என்னடா சொல்ற" என்றார் கடுப்பாக. "அது ஒன்னும் இல்லை மா. அங்க என் சகோதரி அனுக்கு என் மச்சான் புடவை போட்டோவை அனுப்பி இருக்கான்.

அவங்க எது ஓகேன்னு சொல்றாங்களோ அதை செலக்ட் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டான். அதான் என் தங்கச்சி பதிலுக்கு ஐயா வெய்ட்டிங்" என ஹர்ஷாவின் மனநிலையையும் கிண்டல் கலந்து தெரிவித்தான் விக்ரம்.

இப்போது புரிய "ஓஓ.. அதுதான் விஷயமா! சரி ஹர்ஷா நம்ம‌ அனு சொல்ற புடவையை எடுத்து பில் பண்ண அனுப்பிடுப்பா. நாங்க போய் மத்தவங்களுக்கு டிரஸ் கொஞ்சம் பர்சேஸ் பண்ணிட்டு வந்திடுறோம்" என்று கிளம்பி விட்டார்.

இங்கே அனுக்ஷ்ராவிற்கோ எந்த புடவையை தேர்வு செய்வது என புரியவில்லை. "என்னடா இது எல்லா ஸாரியும் ரொம்ப நல்லா இருக்கு. இதுல எதை எடுக்க. ஒன்னும் புரியலையே!!" என வாய்விட்டே புலம்பினாள்.

அவள் அருகில் இருந்த மாணவியோ அனு தானாக பேசியதில் 'இவளுக்கு என்ன ஆச்சு? தானா பேசிட்டு இருக்கா?' என ஒரு மாதிரி பார்த்து வைத்தாள்.

ஆனால் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாத அனுவோ புகைப்படங்களில் கவனம் வைத்தாள். ஒருவழியாக பச்சை நிறத்தில் ஊதா பார்டர் வைத்து அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்த ஒரு புடவையை தேர்வு செய்து முடித்தாள்.

அவள் அதை ஹர்ஷாவிற்கு அனுப்பியபோது அரை மணி நேரம் முடிந்திருந்தது. அந்த அரைமணி நேரமும் ஹர்ஷா கைப்பேசியையே வெறித்தானே ஒளிய அவளை சீக்கிரம் பதில் அனுப்ப சொல்லி தொல்லை செய்யவே இல்லை.

இவ்வளவு நேரமும் அவன் எப்படி பொறுமையாக இருந்தான் என ஹர்ஷாவே உணரவில்லை. அனு அந்த அளவு அவன் மனதில் நங்கூரம் இட்டு அமர்ந்து விட்டாள் என்றாள் அது மிகையாகாது.

இங்கே அனுவிற்கு ஹர்ஷா தன் முடிவுக்கு அவ்வளவு மதிப்பு கொடுத்து பொறுமையாக இருந்து அவளுக்கு பிடித்த உடையை தேர்வு செய்ய வைத்தது என ஒவ்வொன்றும் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது‌.

இதில் இந்த அரை மணி நேரம் அந்த வகுப்பு முடிந்து ஆசிரியர் வெளியே சென்று அடுத்த வகுப்பின் ஆசிரியர் உள்ளே வந்தது என எதுவும் அனுவின் கருத்தில் பதியாது செல்ல,

அனுவோ ஹர்ஷாவின் நினைவில் அவனை பற்றியே யோசித்து இப்போது கனவு காண சென்றுவிட்டாள்.

அங்கே அனு அனுப்பிய புடவை ஹர்ஷாவிற்கு மிகவும் பிடித்துப் போகவே அதை எடுத்து கொண்டான். பின் அவனுக்கும் சில உடைகளை எடுத்து முடிக்க அனைத்தையும் வாங்கிக் கொண்டு அனைவரும் கடையை விட்டு கிளம்பினர்.

விக்ரமுடன் பேசிக் கொண்டே வந்த ஹர்ஷா அப்போது எதிரே வந்த ஒரு நடுத்தர வயது தம்பதியை கவனிக்காமல் அந்த பெண்மணியின் மீது மோதி விட்டான். அதில் அவன் கைகளில் இருந்த பைகள் கீழே விழுந்தது.

"சாரி.. சாரி மேடம்!!" என்றவாறு தன் கைகளில் இருந்து விழுந்த பைகளை எடுத்துக் கொண்டு ஹர்ஷா மன்னிப்பை வேண்டியவாறு சென்று விட்டான். ஆனால் அந்த பெண்மணியோ ஹர்ஷாவின் முகத்தை கண்டு அதிர்ந்து அங்கேயே நின்றுவிட்டார்.

அந்த பெண்மணியின் கணவர் அசையாது நின்ற தன் மனைவியை "என்னமா என்ன எங்கையோ பார்த்து நின்னுட்ட? என்னாச்சு" என்றார் கேள்வியாய்.

அப்போது தான் அதிர்வில் இருந்து மீண்டு வந்திருந்த அந்த பெண்மணி "நம்ம புள்ளங்க! நம்ம புள்ள" என்றவர் அவசரமாக அவன் சென்ற திசை நோக்கி கிட்டத்தட்ட ஓடினார்.

அவர் பின்னே சென்ற‌ அவரின் கணவரோ "என்னமா சொல்ற?" என்றார் புரியாது. "ஐயோ நம்ம மூத்த பையன்ங்க. நான் பார்த்தேன். அது நிச்சயமா அவன் தான்" என்றார் தவிப்பாக.

அவர் முகத்தை வேதனையாக பார்த்த கணவர் "அதெல்லாம் இல்லைமா. நம்ம மூத்த பையன் இப்போ உயிரோட இல்லைடாமா. அந்த உண்மையை புரிஞ்சுக்க மா.

நீ தேவையில்லாம மனசை குழப்பிக்காத" என்று ஆறுதலாக பேச "அவன் கண்டிப்பா நம்ம பையன் தான். அப்படியே சின்ன வயசுல
அப்பாவ பார்த்த மாதிரியே இருந்தது.

நான் சொல்றது உண்மை தாங்க. என்னை நம்புங்க. நான் உளறலாம் இல்லை. பிளீஸ் வாங்க போய் பார்க்கலாம்" என்றார் தவிப்பாக.

அவர் மனைவியின் வருத்தம் அவரையும் பாதிக்க அந்த பெண்மணியை முயன்று சமாதானம் செய்து அழைத்துச் சென்றார் அந்த பாசமான கணவர்‌.

மனிதன் ஒரு செயலை செய்ய மனதில் பல திட்டம் தீட்டினாலும் அங்கே கடவுள் விதியென என்ன எழுதி இருக்கிறான் என இந்த மனித இனத்தால் என்றும் அறிந்து கொள்ள முடிவது இல்லையே!!

"அபி அத்தான்...! அத்தான்‌..! அத்தான்....!" என வண்டி ஓட்டிக் கொண்டிருந்த அபிமன்யுவின் கவனத்தை தன் புறம் திருப்ப அவன்‌ காதில் கத்தினாள் ஆதிரா. அவள் கத்திய கத்தலில் கடுப்பான அபி

"ஏய் அம்மு! ஏன்டி என் காதுக்குள்ள வந்து இப்படி கத்துற. கொஞ்சம் நேரம் கத்தாம வாடி" என்று பதிலுக்கு கத்திய அபியோ கவனமாக தன் இருசக்கர வாகனத்தை அந்த போக்குவரத்தில் செலுத்தினான்.

இன்றைய நாள் இருவருக்கும் கல்லூரி விடுமுறை தான். ஆனால் அம்முவை தோழி வீட்டில் சேர்ந்து படிக்க செல்வதாக கூறும் படி சொல்லிய அபி மாலை போல் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டான்.

ஆனால் அம்முவிற்கு தான் எங்கே செல்கிறோம் என தெரியாது மண்டை குடைந்தது‌. அதை அறிந்துக் கொள்ளவே அபியை கேட்க அழைத்தாள். ஆனால் அவனோ சரியான பதில் தராது அழைத்து செல்கிறான்.

அபி எங்கு கூட்டிச் செல்கிறான் என புரியாமல் ஏற்கனவே கடுப்பில் இருந்த அம்மு அபி கத்திவிடவும் மேலும் கடுப்பானவள் 'செல்லம் வெல்லம்னு கொஞ்சிக்கிட்டு வருவாருள்ள.

அப்போ பேசிக்கிறேன்' என மனதில் நினைத்து அபியிடம் பேசாமல் முகத்தை உர்ரென தூக்கி வைத்துக் கொண்டு வந்தாள்.

அவள் முகத்தை கண்ணாடியின் வழியே பார்த்த அபி 'இன்னும் கொஞ்ச நேரம் தான் செல்லக்குட்டி. அப்புறம் நீயே சந்தோஷத்துல 'அத்தான்னு..!' வந்து என்னை கட்டிப்ப பாரு' என மனதினுள் சிரித்துக் கொண்டான்.

ஒரு மணி நேரம் சென்றது. 'எங்க தான் கூட்டிட்டு போறாரு. கேட்டா வல்லுனு விழறது. எங்க போறோம்னு தெரியாம நமக்கு தான் மண்டை வெடிக்கிது' என மனதிற்குள் புலம்பியபடி வந்த ஆதி அபியை கட்டிக் கொண்டு முதுகில் கண்களை மூடி சாய்ந்துவிட்டாள்.

ஒருவழியாக அபி வரவேண்டிய இடம் வரவே வாகனம் நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்தி‌ ஆதியிடம் "அம்மு வந்துட்டோம்டா. வா வா போகலாம் டைம் ஆச்சு!!" என அவள் பேச நேரமே தராது இழுத்து சென்றான்.

அந்த இடம் அங்கிருந்த பதாகைகள் அலங்காரங்கள் எல்லாம் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என அபி சொல்லாமலே ஆதிக்கு தெரியப்படுத்தியது.

மகிழ்ச்சியில் ஆச்சரியத்தில் அவள் மனது துள்ளி குதித்தது. அதில் அவளுக்கு வந்திருந்த அந்த சிறிது நேர கோபம் எல்லாம் எங்கேயோ காற்றில் பறந்து விட்டிருந்தது.

ஏனெனில் அவர்கள் வந்திருந்த இடம் ஒய்.எம்.சி.ஏ மைதானம். அங்கே நடக்க இருக்கும் இசை நிகழ்ச்சிக்கு தான் அம்முவை அழைத்து வந்திருந்தான் அபி‌.

"அத்தான்...!!!" என ஹை பிச்சில் மகிழ்ந்த ஆதியிடம் "என்னடி?" என்றான் அபி குறும்பாக. " 'மியூசிக் பியஸ்ட்டா' வாவ்!!! அத்தான் செம செம போங்க. நான் இதை எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல.

எங்கையோ கூட்டிட்டு போறீங்கன்னு நினைச்சேன். பட் இதை நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவே இல்லை. தேங்க்ஸ்! தேங்க்ஸ் அத்தான்..! தேங்க் யூ சோ மச்!!" என்று ஆர்ப்பாட்டமாக அபியை அணைத்துக் கொண்டாள் அம்மு.

திடீரென யோசித்தவளாக "ஆனா அத்தான் நான் டிக்கெட்ஸ் எடுக்க டிரை பண்ணி பார்த்துட்டேன். பட் இந்த அனவுன்ஸ்மென்ட் வந்த ஒரே நாள்ல எல்லா டிக்கெட்டும் காலின்னு சொன்னாங்க.

உங்களுக்கு எப்படி கிடைச்சிது" என்றாள் கேள்வியாக. அதற்கு சிரித்த அபி "நானும் உனக்கு பிடிச்ச க்ஷோன்னு எவ்வளவுவோ டிரை பண்ணி பார்த்தேன். எனக்கும் டிக்கெட்ஸ் கிடைக்கலை" என்றான்.

"அப்புறம் இது எப்படி?" என அவன் கையில் இருந்த டிக்கெட்டை காட்டி கேட்க "அது.. என் அண்ணன் எனக்கு முன்னாடி எடுத்துட்டார் டி" என்று நடந்ததை கூறினான் அபிமன்யு.

அபி அவ்வளவு மெனக்கெட்டும் அவனுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. நேற்று அவனை அழைத்த ஹர்ஷா இரண்டு டிக்கெட்களை தந்து அம்முவை பத்திரமாக அழைத்து சென்று வரும் படி கூறினான்.

நடந்தவற்றை கேட்ட அம்மு "அப்போ நாம ரெண்டு பேரும் சேர்ந்து இங்க தான் வரோம்னு ஹர்ஷா அத்தான்க்கு தெரியுமா?" என்றாள் மகிழ்ச்சியாக.

"ம்ம் தெரியும் தெரியும்" என்றவன் ஏதோ யோசித்து "ஆனா அண்ணா பாரேன் யார்க்கு என்ன பிடிக்கும்னு நாம‌ சொல்லாமையே அவர் நமக்கு செய்றாருல்ல" என்றான் பெருமையாக.

அதை தானும் ஆமோதித்தாள் அம்மு. பின் அந்த பதாகைகள் அருகே நின்று பல கோணங்களில் புகைப்படங்கள் தனியாக மற்றும் அபியுடன் எடுத்துக் கொண்டாள் அம்மு.
அந்த புகைப்படங்களை மறுநாள் நன்பர்களிடம் காட்டி மகிழ்ச்சி கொள்ள.

அம்முவின் அழகான ஆர்ப்பாட்டத்தை ரசித்தவாறே அபி "வாடி. டைம் ஆகுது இப்ப போனா தான் முன்னாடி இடம் பிடிக்க முடியும். உனக்கு பிடிச்ச சிங்கர்ஸ் எல்லாரும் வராங்கலாம். வா வா சீக்கிரம் போகலாம்" என இழுத்து சென்றான்.

அங்கே திரண்டிருந்த கூட்டத்தில் அடித்து பிடித்து சென்றவர்கள் நின்று பார்த்தால் மேடையில் இருப்பவர்கள் தெரியும் தூரம் நின்றுக் கொண்டனர்.

வந்ததில் இருந்து வாய் ஓயாது பேசியபடி இருந்த அம்முவை அவ்வளவு பிடித்தது அபியிற்கு. அவள் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் மனதில் வந்து நின்று கொண்டது.

நிகழ்ச்சியும் ஆரம்பமானது. ஒரு புகழ்பெற்ற ஊடக தொகுப்பாளர் நிகழ்ச்சியை துவங்கி வைக்க ஒவ்வொரு பாடகராக பாட வந்தனர்.

அடுத்ததாக வந்த நபரை கண்டு ஆர்ப்பரித்து தள்ளினாள் அம்மு. "அத்தான் அங்க பாருங்க. என் ஃபேவரைட் சிங்கர் அன்ட் மியூசிக் டைரக்டர் யுவன்!!" என தன் மன மகிழ்வை அப்பட்டமாக காட்டினாள் ஆதி.

அடுத்து ஒளித்த பாடல் வேறு அம்முவின் பிடித்த பாடல்களில் ஒன்றாக இருக்க "ஐயோ!! ஒன் ஆப் மை பேவரைட் சாங் அத்தான். சூப்பரா பாடுறாங்கல!!" என்று கேட்டவாறு திரும்பி அபியை பார்த்த அம்மு அதிர்ந்தாள்.

ஏனெனில் அங்கே அபி அம்முவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

நிகழ்ச்சி ஆரம்பித்த கொஞ்ச நேரம் அபியும் நிகழ்ச்சியை தான் கவனித்தான். அதன்பின் அம்முவின் ஆர்ப்பரிப்பில் அவன் கவனம் முழுவதும் தன் செல்ல அம்முவின் புறம் திரும்பிவிட்டது.

அவன் பார்வையின் வீரியம் தாங்காமல் "எ.. என்ன அத்தான் அப்படி பார்க்குறீங்க?" என்றாள் திணறலாக. அவள் வார்த்தையில் தெளிந்த அபி "ஆன்... என்ன என்னடா அம்மு" என்றான்.

அவன் கேள்வியில் என்ன கூறுவது என தெரியாது விழித்த அம்முவோ "அது.. அது அத்தான். இல்லை ஸ்டேஜ்" என மேடையை பார்க்குமாறு சைகை செய்தாள்.

அங்கே பார்த்த அபி "ஹேய் அம்மு இது உன்னோட ஃபேவரைட் சாங் தானே. சூப்பர் டா" என்றான் அதை இப்போது தான் கவனித்த அபி. அதன்பின் எங்கே மேடையில் நடந்த நிகழ்வுகள் அம்முவின் புத்திக்கு சென்றது.

அபி அவளை பார்த்த பார்வை தான் அவள் மனதினுள்ளே வந்து ஏதோ செய்ய ஆரம்பித்தது. சிறிது நேரம் மீண்டும் நிகழ்ச்சியை பார்க்க எண்ணி மேடையை பார்த்தாள் அம்மு.

ஆனால் அவளுக்கு பிடித்த பாடகர்‌ பாடல்களை விட அவளின் அருமை அத்தை மகனின் நினைவே மேலோங்கி நின்று இம்சித்தது. அதற்கு மேல் அவளால் பார்க்க முடியும் என தோன்றவில்லை.

எனவே அபியை அழைத்து "போகலாம் அத்தான்" என்றுவிட்டாள். அவளுக்கு பிடித்த நிகழ்ச்சி. இதற்கு போக வேண்டும் என அவ்வளவு ஆசைப்பட்டு நன்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள் அம்மு.

அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரலாம் என சொல்லாமல் அழைத்து வந்திருந்த அபிமன்யுவிற்கு இப்போது அம்மு திடீரென போகலாம் என அழைத்ததும் ஒன்னும் புரியவில்லை.

"என்னாச்சு டா அம்மு. நீ ரொம்ப ஆசைப்பட்ட க்ஷோ. உனக்காக தானேடா நாம‌ இவ்ளோ தூரம் இந்த க்ஷோவ பார்க்க வந்தோம். இப்போ என்னடா ஆச்சு போலாம்னு சொல்ற" என்றான் அபி சந்தேகமாக.

அபி இவ்வாறு கேட்கவும் என்ன சொல்வது என யோசித்த அம்மு "அத்தான் அது ஐம் நாட் ஃபீலிங் வெல். அதான் வீட்டுக்கு போகலாம்னு..." என இழுக்கவும்,

"செல்லம் உடம்புக்கு என்னடா செய்யுது?" என பதறி விட்டான் அபி.‌ அவன் பதறியதில் "ரொம்பலாம் ஒன்னும் இல்ல அத்தான். ஜஸ்ட் டையர்டா இருக்கு. ரொம்ப நேரம் நிக்கிறோம்ல அதான். நாம இப்போ வீட்டுக்கு போலாமா அத்தான்?" என்றாள் அம்மு கொஞ்சலாக.

அவள் சாதரணமாக சொல்லி இருந்தாலே உடன் அழைத்து சென்றிருக்கும் அபி இப்படி கொஞ்சும் போது மறுத்தா பேசப் போகிறான். அம்முவை அணைவாக பிடித்து கொண்டு பாதுக்காப்பாக அந்த கூட்டத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தான்.

உள்ளே வரும் போது கூட அபி இப்படி அழைத்து வந்தது அப்போது தான்‌ அம்முவிற்கு உரைத்தது. 'ச்சே.. அத்தான் எப்படி என்னை பார்த்துக்காரு. நான் இப்படி தத்தியா இருக்கேனே' என தன்னையே நொந்துக் கொண்ட அம்மு அவனின் அணைப்பில் இன்னும் ஒன்றினாள்‌.

அவள் உடல் நிலை சரியில்லாததால் தான் இப்படி தன்னோடு ஒன்றுகிறாள் என எண்ணிய அபி அவளை பூப்போல் அழைத்து சென்றான்‌.
____________________________________________

"அக்கா ஏன்க்கா இந்த மாமா இப்படி இருக்காரு?" என்று பாவமாக கேட்டபடி வந்து அமர்ந்தாள் ரித்திகா. அவள் முகத்தில் சோகம் டன்டன்னாக வழியவே "என்னடா ஆச்சு?" என்றாள் அனு.

"பின்ன என்னக்கா. எனக்கு இருக்கிறது நீ ஒரே ஒரு அக்கா தான். உன் கல்யாணத்துக்கு கூட நான் ஆசைப்பட்ட மாதிரி டிரஸ் பண்ணக்கூடாதா?" என நடந்த நிகழ்வை கூறினாள் ரித்து.

"உன் மேரேஜ்க்கு நான் ஸாரி தான் கட்டணும் அப்படின்னு மாமா சொன்னாருக்கா. நான் சரின்னு சொல்லிட்டேன். ஆனா உன் எங்கேஜ்மெண்ட்க்கு லெஹாங்கா போடலான்னு ஆசையா இருந்தேன்.

ஆனா அவரு லெஹாங்கா நல்லா இருக்காது. நீ சுடி தான் போடனும் அப்படின்னு சொல்லிட்டாரு க்கா" என்றாள் சோகமாக குரலில்.

"அப்புறம் அம்மா கூட பாவம் சின்ன பொண்ணு போட்டுட்டு போறான்னு சொன்னாங்க. ஆனா அதுக்கும் மாமா அம்மாவ ரொம்ப திட்டிட்டார்" என்றவளின் குரல் சிறிது பிசிறுதட்டியது.

அவள் குரலின் பேதம் உணர்ந்த அனு "ரித்து மா அழறியாடா?" என்றாள் பதட்டமாக. "வேற என்னக்கா நாம பண்ண முடியும். இந்த வீட்ல நாம ஆசைப்பட்டதை படிக்க தான் முடியலை,

அட்லீஸ்ட் ஆசைப்பட்ட டிரஸ் கூடவா போட முடியாது. என்னமோ போக்கா வர வர இந்த வீட்ல எல்லாமே எல்லை மீறி போகுது. வெறுப்பா இருக்குக்கா" என்றவள் கடைசியில் அழுது விட்டாள்.

ரித்து அழுகவும் அவளை அணைத்து ஆறுதல் படுத்த ஆரம்பித்தாள் அனு. இதில் அதுவரை ஹர்ஷாவுடன் அவள் பேசிக்கொண்டிருந்ததை மறந்து விட்டிருந்தாள்.

ஆனால் கைப்பேசியின் வழி அந்த பக்கம் இதை அனைத்தையும் ஹர்ஷா கேட்டுவிட்டான் என்பதை அனு அறியவில்லை. ஏற்கனவே நடந்த நிகழ்வுகள் மூலம் விஸ்வநாதன் மீது அதிர்ப்தியில் இருந்தான் ஹர்ஷா.

அதில் இந்த நிகழ்வும் சேர்த்துக்கொள்ள விஸ்வநாதன் மீது ஒரு வெறுப்பு மனநிலை ஹர்ஷாவின் மனதில் வளர ஆரம்பித்து விட்டது.

விதி வழி வரும் நிகழ்வுகள் எந்நாளும் மனிதன் எண்ணப்படி மாற்றம் காணாதே!!
இதில் விஸ்வநாதன் மட்டும் விதிவிலக்கா என்ன?

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 12

ரம்மியமான இளங்காலை வேளை. ஆதவன் அழகாய் தன் செந்நிற கதிர்களை பூமி மகள் மீது வீசும் நேரம். அந்த திருமண மண்டபம் பதற்றத்திற்க்கு பஞ்சம் இல்லாமல் ஒரு சீரான வேகத்தில் இயங்கி கொண்டிருந்தது.

என்ன தான் சந்தோஷ நிகழ்வு ஒன்று நடக்க போனாலும் அங்கே இருந்த விஷேஷ குடும்பத்தினர் முகங்கள் சற்று பதற்றத்தை தான் வெளிப்படுத்தியது. "என்னவாயிற்று?" என கேட்போரிடம் சிரித்து சமாளித்துக் கொண்டிருந்தனர்.

இங்கே அனைவரையும் பதற்றத்தில் தள்ளிய நம் நாயகன் ஹர்ஷவர்தனோ அவன் தம்பி அபிமன்யுவுடன் மண்டபத்தை நோக்கி காரில் சீறி பாய்ந்து வந்துக் கொண்டிருந்தான்.

"சம்மந்தி! என்னங்க ஆச்சு? மாப்பிள்ளைய இன்னும் காணோம். வந்திருவாருள்ள?" என்று கேட்ட விஸ்வநாதனிடம் "இதோ பக்கத்தில‌ வந்திட்டான் சம்மந்தி‌. கொஞ்ச நேரத்தில வந்திருவான்" என பத்தாவது முறை அதே பதிலை அசராமல் தந்தார் ராஜசேகர்.

அதை கேட்டு அரை மனதுடன் "சரி சம்மந்தி! நான் போய் மற்ற ஏற்பாடு எல்லாம் செய்ய சொல்றேன். மாப்பிள்ளை வந்த உடனை நிச்சியத்தை ஆரம்பிச்சிடலாம்" என்றவாறு விஸ்வநாதன் நகர்ந்தார்.

இதையெல்லாம் அருகில் இருந்து பார்த்திருந்த பார்வதி அவர் அண்ணனை முறைத்து "ஏன் ண்ணே! என்ன இது‌. ஹர்ஷா குட்டி எங்க தான் வந்துட்டு இருக்கான். இந்த அபி பையலும் போன் எடுக்க மாட்டேங்கிறான்.

அபப்டி என்ன நிச்சயதார்த்தம் அன்னைக்கு கூட ஹாஸ்பிடலே கதின்னு கெடக்குறான். சம்மந்தி வீட்ல எல்லாரும் என்ன நினைப்பாங்கன்னு கொஞ்சமாச்சும் தோனுதா? அவன் வரட்டும் இன்னைக்கு இருக்கு‌ அவனுக்கு" என திட்டிக் கொண்டிருந்தார்.

ஆம் ஹர்ஷா நேற்று மருத்துவமனை சென்றவன். காலை வரை வீட்டிற்கு வரவில்லை. அவன் ஒரு அறுவை சிகிச்சையை அன்று மேற்கொள்ள ஒரு மாதம் முன்பே ஒத்து கொண்டதால் போக வேண்டிய கட்டாயம். எனவே சென்றானாம்.

இரவுக்குள் வந்துவிடலாம் என எண்ணியே ஹர்ஷா சென்றது. ஆனால் அங்கே அந்த அறுவை சிகிச்சை செய்யப்போகும் நபருக்கு சில சோதனைகள் மேற்கொள்ள நேரம் எடுத்தது.

அது மட்டும் இல்லாமல் அறுவை சிகிச்சை நடக்கும் போது சிலபல சிக்கல்கள் வந்து விடவே அந்த நபரின் உடல் நிலையை சரியாக்கி அறுவை சிகிச்சையை நல்லபடியாக முடித்து வெளியே வர அடுத்து நாள் விடிந்தே விட்டது.

இது எல்லாம் ஹர்ஷா கூறவில்லை. எல்லாமே அபி கூறிய தகவல்கள் தான். நேற்று வெளியே சென்ற ஹர்ஷா காலை வரை வரவில்லை என அபி ஹர்ஷாவிற்கு அழைக்க மருத்துவமனையில் இருந்து தான் எடுத்தார்கள்.

அங்கே சென்ற அபி தான் இப்படி என சொல்லி வீட்டில் இருந்த அனைவரையும் கிளம்ப சொல்லிவிட்டான் ஹர்ஷாவை தான் அழைத்து வருவதாக சொல்லி. ஆனால் யாரும் ஹர்ஷாவிடம் நேற்றிலிருந்து பேசவில்லை என்பதே உண்மை!

இங்கே வீட்டிலோ உறவினர்கள் வந்தவர்கள் எல்லாம் "என்ன ஹர்ஷாக்கு பொண்ணை பிடிக்கலையா. அதான் இன்னும் வீட்டுக்கு வராம இருக்கானா?" என்று ஏகத்துக்கும் அனைவரின் பிபியையும் ஏற்றி விட்டு கொண்டு இருந்தனர்.

எல்லாரின் கேள்விகளும் பார்வதியை தான் சுற்றி வந்தது. எனவே அவர் மிகவும் நொந்து போய் விட்டார்.‌ 'ஏற்கனவே பெண் பார்க்க சென்ற போதே ஹர்ஷாவால் வரமுடியாது தடங்கள் போல் நடந்துவிட்டது.

இப்போது என்ன இன்றும் இப்படி ஆகிறதே' என யோசித்த பார்வதிக்கு மனதுக்குள் 'நாம் சரியான வழியில் தான்‌ செல்கிறோமா?' என தோன்றிக் கொண்டு தான் இருந்தது. ஆனால் ஹர்ஷாவிற்கு அனுவை பிடித்திருந்த காரணத்தால் பார்வதி இப்போது வரை அமைதியாக உள்ளார்.

இங்கே இவர்கள் மனநிலை இப்படி இருக்க பெண்ணை பெற்ற விஸ்வநாதன் மீனாட்சி தம்பதிக்கோ ஹர்ஷாவின் நிலை புரிந்தாலும் 'உறவினர் வந்த நண்பர்கள் என அனைவரும் என்ன பேசுவார்களோ' என்று மனது திக் திக் என்றே அடித்து கொண்டது.

அவர்கள் பயந்தது போல தான் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் ஹர்ஷா இன்னும் வராததால் சிலர் நேரடியாகவே வந்து "என்ன விஸ்வநாதா! மாப்பிள்ளை பையனுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் ஏதும் இல்லையா?

ஏன் இன்னும் வரல? நல்லா விசாரிச்சிங்க தானே" என கேட்க உள்ளுக்குள் பயந்து போய் தான் இருந்தனர். மீனாட்சி வேறு அனுவிடம் "மாப்பிள்ளைக்கு ஒரு போன போட்டு பாரு பாப்பா. எங்க வந்திட்டு இருக்காருனு கேளு" என ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கூற,

ஏற்கனவே பல முறை அழைத்து பார்த்து சோர்ந்து போய் இருந்த அனு "ஆமா நான் போன் பண்ணுன உடனே உன் மாப்பிள்ளை எடுக்கிற மாதிரி தான். ஏன் மா நீயும் டென்ஷன் பண்ற" என கத்திவிட்டாள்.

ஆனால் அங்கே அவளின் அழைப்புகள் எல்லாம் அணைந்து வைக்கப்பட்டிருந்த ஹர்ஷாவின் கைப்பேசிக்கு தான் சென்று கொண்டிருந்தது. ஹர்ஷாவின் வீட்டினர் அபிமன்யுவிடன் பேசியதால் அவர்களுக்கு சரியான நிலவரம் தெரிந்திருந்தது.

"என்ன அண்ணே! பசங்க கிட்ட வந்துட்டதா சொன்னாங்க. ஆனா இன்னும் காணோம்" என்ற பார்வதி பதட்டத்தின் உச்சியில் இருந்தார். அவர் சொல்வது உண்மையே. அபி சொன்ன இடம் நேரத்தை கணக்கிட்டால் ஹர்ஷா இந்நேரம் மண்டபத்திற்கு வந்து பத்து நிமிடம் ஆகியிருக்க வேண்டும்.

இதே பயம் தான் ராஜசேகர் மனதிலும் இருக்கிறது. அபி வேறு கைப்பேசியை எடுத்து பேசாமல் இருக்க அவருக்கும் உள்ளே தன் மகன்களுக்கு என்னவானதோ என உதறிக் கொண்டிருந்தது.

இதை எதையும் அறியாத விஸ்வநாதன் வீட்டினரும் பயந்து போய் தான் இருந்தனர்‌. அவர்கள் மகளின் வாழ்க்கை ஆயிற்றே. ஹர்ஷா வரும் போது வரட்டும் என அவனுடைய நிச்சயத்தை நிகழ்த்தி விடலாம் என இப்போது முடிவெடுத்தார் பார்வதி.

மனதில் இருந்த பயத்தை மறைத்தவாறு "அண்ணா நாம‌ நிச்சயத்தை நடத்தலாம். ஹர்ஷா குட்டி வந்திருவான் எனக்கு நம்பிக்கை இருக்கு" என்ற பார்வதி அவரையும் தேற்றி அனுவின் வீட்டிலும் பேசிவிட்டார்.

அதன்பின் வேலைகள் வேகமாக நடைபெற ஆரம்பித்தது. சரியாக லக்ன பத்திரிகை வாசிக்கும் நேரம் அபியும் ஹர்ஷாவும் ஒருவழியாக வந்து சேர்ந்தனர். இப்போது தான் இரு வீட்டினர் முகமும் சீரானது.

"என்ன ஹர்ஷா குட்டி இது. இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு வரீங்க ரெண்டு பேரும்" என கடிந்து கொண்டார் பார்வதி. பின் தான் ஹர்ஷாவின் கசங்கிய சட்டையை பார்த்தவர்

"என்னப்பா உன் ஷர்ட் எல்லாம் இப்படி இருக்கு. ரூம்க்கு போ. அங்க டிரஸ் இருக்கு. போ போய் அந்த டிரஸ்ச சேஞ்ச் பண்ணிட்டு சீக்கிரம் வா. பொண்ணுக்கு சேரி குடுத்தாச்சு உனக்கும் டிரஸ் கொடுத்தாங்க.

நான் அதை தான் வாங்கி ரூம் உள்ள வச்சிருக்கேன். அதை சேஞ்ச் பண்ணிட்டு வாப்பா. லக்ன பத்திரிகை வேற வாசிக்க போறாங்க. அப்போ நீயும் அனுவும் ஒன்னா உக்கார்ந்து இருக்கனும்.

அதனால் கொஞ்சம் வேகமா வாப்பா" என ஒரே மூச்சாக சொல்லி முடித்தார் பார்வதி ஹர்ஷாவின் பதிலைக் கூட எதிர்ப்பாராது. பார்வதி தன் நிலையை பற்றி கேட்காது போக சொன்னதை கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டான் ஹர்ஷா.

எதோ சொல்ல வந்த அபியை அறையை நோக்கி இழுத்து சென்ற ஹர்ஷா "வேணாம் அபி. அத்தை பயந்திருவாங்க. அது மட்டும் இல்ல. நாம பேசறத வேற யாராவது கேட்டு அது பிரச்சினைல கொண்டு போய் விட்ர போகுது.

வீட்டுக்கு போனதும் நாம‌ என்ன நடந்துதுன்னு சொல்லிக்கலாம். அதை தான் நம்ம வீட்ல இருக்க எல்லாரும் கூட நினைப்பாங்க. சோ ஸ்டே காம்.

உனக்கு இவ்ளோ நேரம் நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குல்ல. வா இப்போ வேற டிரஸ் பண்ணிட்டு போய் பங்ஷன நல்லபடியா முடிக்க பார்ப்போம்" என முடித்தான்.

ஹர்ஷா கூறியதில் இருந்த உண்மை புரிய "சரி ண்ணா. நான் யார்கிட்டேயும் இதை சொல்லலை. நீங்க சொல்ற மாதிரி வீட்டுக்கு போய் பார்த்துக்கலாம்" என்று அபியும் ஒத்துக் கொண்டான்.

ஆனால் தான் பெற்ற மகன்களை பற்றி முழுதாக தெரிந்த ராஜசேகர் அபியின் முகத்தில் இருந்த பதட்டத்தையும், ஹர்ஷாவின் முகத்தில் இருந்த அதீத களைப்பையும் யோசனையுடன் பார்த்தார்.

ஏனெனில் ஹர்ஷாவிற்கு நேற்று எந்த ஒரு அறுவை சிகிச்சையும் இல்லை என்பதை அவர் அறிவாரே! அப்படி இருக்கையில் என்ன நடந்தது என அவரும் யோசித்து கொண்டு தான் இருக்கிறார். அவர் மகன்கள் வாயை திறந்து எதாவது சொன்னால் தான் தெரியும். எனவே வீட்டிற்கு சென்றபின் கேட்டுக் கொள்ளலாம் என அமைதி காத்தார்.

இங்கே உள்ளே வந்த விக்ரம் இருவரையும் ஒரு மார்கமாய் பார்த்து விட்டு "ஹர்ஷா அம்மா கூப்பிடுறாங்க. ஷர்ட் சேஞ்ச் பண்ணிட்டா சொல்லு போலாம்" என்றவன் சிறிது யோசித்து விட்டு

"ஒரு விஷயத்தை மட்டும் மனசுல வச்சுக்கோ ஹர்ஷா. உனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் உன் கூட அபி மட்டும் இல்ல நானும் இருக்கேன். என்ன புரியுதா?" என்றான்.

விக்ரம் கூறியதை கேட்டு புன்னகை புரிந்த ஹர்ஷா "எனக்கு தெரியும் டா" என கூறி விக்ரம் மற்றும் அபியை இருபுறமும் தோளோடு லேசாக அணைத்து விட்டு "ம்ம் நான் ரெடி போகலாம் டா" என அழைத்து வெளியே வந்தான்.

பின்னர் ஹர்ஷாவையும் அனுவையும் ஒருங்கே அமர வைத்து நிச்சய பத்திரிகை வாசித்து அவர்கள் உறவை உறுதி செய்து முடித்தனர்‌. இதை கண்ட பிறகு தான் இரு குடும்ப உறுப்பினர்களுக்கும் மனதிற்குள் "ஹப்பாடி" என பெரும் நிம்மதி வந்தது.

இவ்வளவு நேரம் ஒரு இறுக்கத்தில் இருந்த ஹர்ஷாவின் முகம் கூட இப்போது சிறிது தெளிந்து சாந்தமாகி பழைய புன்னகை வந்திருந்தது. மனம் லேசான‌ பின்னரே அருகில் இருந்த அனுவே ஹர்ஷாவின் கண்ணிற்கு தெரிந்தாள்.

"ஹே அனுமா என்னடா இப்படி பார்க்குற?" என்று புன்னகைத்தான் ஹர்ஷா. ஆனால் அனுவோ அவனுக்கு மாறாக அவனை முறைத்து கொண்டிருந்தாள்‌. "என்னடா முறைக்கிற. என்மேல கோபமாடா?" என்றான் ஹர்ஷா பாவமாக.

அதற்கும் பேசாத அனுவிடம் "என்னடா செல்லம்! என் சிட்டுவேஷன கொஞ்சம் புரிஞ்சுக்கோ டா. நம்ம பங்ஷன். நானே லேட்டா வர்றேனா, நான் அங்க வரமுடியாத ஒரு இக்கட்டுல மாட்டிக்கிட்டேன்னு புரியலையாடா" என தன்னிலை விளக்கம் தர,

ஹர்ஷாவின் விளக்கம் அனுவின் மனதை சற்று இலக்க இப்போது வாய் திறந்தாள் அனு. "சாரிங்க. நீங்க போன் வேற எடுக்கலை, எல்லாரும் மாத்தி மாத்தி வந்து கேட்டு டென்ஷன் பண்ணிட்டாங்க. அதுமட்டும் இல்லாம" என்றவளின் குரல் கரகரத்தது.

"அதுமட்டும் இல்லாம ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வேற மாதிரி பேச ஆரம்பிச்சிட்டாங்க. அதான் கோபம் அழுகை எல்லாம் வந்திருச்சு" என்றாள் பாவமாக. அவள் நிலை புரிந்தது போல் "சாரிடா! ஐ நோ நான் லேட்டா வந்தது இட்ஸ் மை மிஸ்டேக். வெரி வெரி சாரிடா" என்றான் உண்மையாக.

அதன்பின் சற்று சமாதானம் அடைந்து விட்ட அனு "சாரிங்க எனக்கு உங்களை புரியிது. யார் என்ன சொன்னாலும் இனிமே நான் கவலைபடமாட்டேன்" என்றாள் புரிதலுடன்.

இப்போது இருவரும் தங்களே தங்களுக்கான நிகழ்வை மகிழ்வுடன் அனுபவிக்க தொடங்கினர். அதை கண்ட விஸ்வநாதன் மீனாட்சி மட்டும் அன்றி ராஜசேகர் பார்வதி என அனைவரும் மனநிறைவுடன் நின்றிருந்தனர்.

ஆனால் ஹர்ஷா வந்ததில் இருந்து அவனை கண்ட ஒரு ஜோடி கண்கள் ஆனந்தமாய் அதிர்ந்து என்றால் மற்றொரு ஜோடி கண்களோ அவனை வன்மத்துடன் பார்த்தது. அதோடு "ஐயோ! இவனா மாப்பிள்ளை. இவன் எப்படி உயிரோட வந்தான்?" என்றும் யோசித்திருந்தது.

ஹர்ஷவர்தன் அனுக்ஷ்ரா இருவரின் நிச்சயதார்த்தம் சில மணி நேர பதற்றம் மற்றும் சில மணி நேர மகிழ்ச்சி என இருவித மனநிலையை கொடுத்து ஒருவழியாக சிறப்பாக நடைப்பெற்றது.

அதே போல் இன்னும் நாற்பது நாட்களில் ஒரு நல்ல முகூர்த்த நாள் வருவதாக அன்றைய நாளை இருவரது திருமண நாளாக முடிவு செய்தனர் இருவீட்டு மனிதர்களும்.

இதில் ஹர்ஷா ஏன் அவ்வளவு நேரம் கழித்து தாமதமாக வந்தான்‌ எனும் விஷயம் இந்த பேச்சின் பொருட்டு பின்னுக்கு சென்று விட்டது. இதில் ஹர்ஷாவிற்கு தான் மனதில் பெரும் நிம்மதி. இனி யார் என்ன கேட்டாலும் பார்த்து கொள்ளலாம் என்று தைரியம் வந்திருந்தது.

ஆனால் ஹர்ஷா அறியவில்லை தன்னுடைய கேள்விகளை மனதில் அடுக்கி வைத்திருக்கும் ராஜசேகர் வீட்டிற்கு சென்ற உடன் ஹர்ஷாவிடம் அதை எல்லாம் கேட்டு தெளிவு பெற காத்திருப்பதை. அதே போல் காத்திருந்தனர் இன்னும் இரண்டு நபர்கள்.

அவர்கள் வேறு யாரும் இல்லை விக்ரம் மற்றும் பார்வதியின் கணவர் வேதாசலமும் தான். சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்த பின் ஹர்ஷாவின் வீட்டினர் சாப்பிட்டு கிளம்பினர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஹர்ஷாவிடம் வந்த விஸ்வநாதன் அவனை தனியே அழைத்து "மாப்பிள்ளை இது ஷராவோட போன் நம்பர்" என அனுவின் எண்ணை கொடுத்தார்.

இதில் ஆச்சரிமடைந்த ஹர்ஷா 'எதற்கு' என்னும் விதமாய் அவரை ஏறிட, அவனின் கேள்வியை புரிந்தவர் போல் "இல்லை உங்க ரெண்டு பேருக்கும் நிச்சயமே முடிஞ்சிருச்சு. இப்பவே ஷரா பாதி உங்க வீட்டு பொண்ணு தான்.

கல்யாணம் வரைக்கும் பேசினா‌ நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை பத்தி ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்க உதவும். அதான் நிச்சயம் முடிஞ்ச உடனே நான் ஷரா நம்பரை உங்களுக்கு தரேன்" என்று கூறி மனிதர் ஹர்ஷாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்‌.

'இந்த மனுஷன புரிஞ்சுக்கவே முடியலையே!!' என மைன்ட் வாய்ஸில் பேசியவன் அதை சிறிதும் தன் முகபாவனையில் காட்டாமல் "தேங்க்ஸ் மாமா!" என சிறு புன்னகையுடன் கூறி அவரிடம் சொல்லி விட்டு கிளம்பினான்.

ஹர்ஷா வீட்டின் பெரியவர்கள் ஒரு காரில் கிளம்ப ஹர்ஷா விக்ரம் அபி அம்மு இவர்கள் நால்வரும் ஒரு காரில் புறப்பட்டனர். புறப்பட்ட பின் எதையோ யோசித்த விக்ரம் ஹர்ஷாவின் புறம் திரும்பி மெதுவாக ஆரம்பித்தான்‌.

"ஹர்ஷா மச்சான்! ஒரு சின்ன டவுட்டு!!" என இழுத்து "அது நாம கிளம்பும் போது உன் மாமனார் உன்னை தனியா கூப்பிட்டு எதுவோ சொன்னாரே, என்ன ரகசியம் மச்சான்?" என்று கண் சிமிட்டினான் விக்ரம்.

அதை கேட்ட ஹர்ஷா சிரித்து விட்டான். அதே சிரிப்புடன் விக்ரமை ஏறிட்ட ஹர்ஷா "அது ஒன்னும் இல்ல மச்சான். என் மாமனார் அனுவோட நம்பரை என்கிட்ட ஷேர் பண்ண தான் கூப்டாரு" என்றான்.

இந்த பதிலில் திரும்பிய அபி "என்ன ண்ணா சொல்ற! உன் மாமனாரா!!" என அதிர்வது போல் பாவனை செய்து "அவர் அவ்ளோ ஒன்னும் நல்லவர்லாம் கிடையாதே!" என்றான் விளையாட்டாக.

அதை ஆமோதித்தபடி விக்ரமும் "அபி சொல்றதுலயும் ஒரு பாயின்ட் இருக்கு மச்சான். உன் மாமனார் காரணம் இல்லாம ஒரு விஷயம் செய்ய மாட்டாருடா" என்று தன் கருத்தை கூறினான்.

ஹர்ஷா சிரித்தானே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை. ஆனால் விக்ரம் கூறியது போல் விஸ்வநாதன் மனதில் ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு தான் அனுவின் எண்ணை தந்திருந்தார்.

காலை ஹர்ஷா வர தாமதம் ஆன ஒவ்வொரு நிமிடமும் விஸ்வநாதன் மனம் எப்படி திக் திக்கென்றது அடித்தது என அவர் மட்டுமே அறிவார். அதுமட்டும் இல்லாது ஹர்ஷா கேட்டும் தான் அவர் அனுவின் எண்ணை தராமல் விட்டது, நிச்சய புடவை எடுக்க அனுவை அனுப்பாதது. என்பது போன்ற காரணங்கள் தான் ஹர்ஷாவை கோபத்தில் தள்ளி, அதனால் அவன்‌ நேரம் தாழ்த்தி வந்தானோ என்றும் ஒரு எண்ணம் தோன்றியது.

அது போக ஹர்ஷாவின் எண் அனுவிடம் இருந்திருந்தால் அவன் எங்கே இருக்கிறான் என்ன எதுவென அறிந்து கொண்டிருக்கலாம் என எண்ணினார். பாவம் அவன் எண் ஏற்கனவே அனுவிடம் உள்ளது என்பதை அறியாமல்.

இந்த காரணங்கள் வரிசையாக அவர் மூலையில் உதிக்க இனி ஹர்ஷாவின் மனம் நோகாமல் பார்த்து கொள்ள எண்ணியே அவனிடம் இன்று அனுவின் எண்ணை தந்திருந்தார் மனிதர். இது எங்கே இவர்களுக்கு புரிய போகிறது.
____________________________________________

காரில் இருந்து இறங்கி வந்த ஹர்ஷா மற்றும் அபியை ஹாலிலே தடுத்து நிறுத்திய வேதாசலம் "ஹர்ஷா அபி உங்க ரெண்டு பேரையும் மாமா கூப்பிடுறாரு வாங்க" என ராஜசேகரின் அறைக்கு அழைத்தார்.

ஹர்ஷாவும் அபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் "தோ வரோம் மாமா!" என்றனர் ஒன்றாக. அதன்பின் வேதாசலம் பின்னால் தங்கள் தந்தையின் அறையை நோக்கி சென்றனர். இதை பார்த்த விக்ரமும் அவர்களின் பின்னால் சென்றான்.

இவர்கள் வந்தவுடன் கதைவை தாழிட்ட ராஜசேகர் தன் இரு மகன்களின் முகங்களையும் குறுகுறுவென பார்த்தார். ஆனால் அண்ணன் தம்பி இருவரும் 'எந்த கேள்வி வருவதாக இருந்தாலும் அது முதலில் தந்தையின் வாயில் இருந்தே வரட்டும்' என மௌனம் சாதித்தனர்.

இதை கண்ட விக்ரமிற்கு கடுப்பாக இருந்தது. 'என்னடா இது யாருமே பேச ஆரம்பிக்க மாட்டேங்குறாங்க. இந்த மாமாவும் எதாவது கேட்டா தான் என்ன' என பார்த்தவன் எதுவும் பேசவில்லை.

சிறிது நேர அமைதிக்கு பின் "ஹர்ஷா நேத்து உனக்கு எந்த ஹாஸ்பிடல்ல பா ஆப்பரேஷன் இருந்தது?" என்ற கேள்வியை கேட்க ஹர்ஷா எதுவும் கூறவில்லை. ஆனால் அபி தான் திறு திறுவென முழித்துக் கொண்டு நின்றான்.

ஹர்ஷாவின் அமைதியை பார்த்த ராஜசேகர் "‌இப்படி சைலண்ட்டாவே இருந்தா எப்படி ஹர்ஷா. நேத்து உனக்கு எந்த கமிட்மென்ட்டோ ஆப்பரேஷனோ இல்லை. இது எனக்கு நல்லாவே தெரியும். எனக்கு தெரியும்னு உனக்கும் தெரியும்.

அப்புறம் ஏன்டா இப்படி பண்ற. நேத்து அப்படி எங்க தான் போன. அபி உன்னை பத்தி சொல்ற வரை இங்க யாருக்கும் உடம்புல உயிரே இல்லை தெரியுமா! என்னாச்சு டா குட்டி. உனக்கு ஒன்னும் இல்லைல.

சொல்லுடா! உங்க அம்மா போனப்ப தாங்க நீங்க ரெண்டு பேரும் இருந்தீங்கபா. இப்ப உங்களுக்கு ஒன்னுன்னா நான் ஒரேதா போக வேண்டியது தான்!" என்று இதுவரை வேகமாக பேசியவர் இப்போது ஓய்ந்து போய் அமர்ந்து கொண்டார்.

அவர் இப்படி பேசிவிட்டு அமரவும் "ஐயோ அப்பா!" "என்னப்பா நீங்க!" என அவர் அருகே சென்று தாங்கி கொண்டனர் மகன்கள் இருவரும். "அப்படிலாம் உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு அவ்ளோ சீக்கிரம் போக மாட்டேன்டா" என்றவர் இப்போது அபியை பார்த்து "காலைல நீ இவனை எங்க தான்டா பார்த்த? என்னாச்சு?" என்றார்.

தன் அண்ணனை திரும்பி ஒரு பார்வை பார்த்து கண்களால் சம்மதம் கேட்டான் அபி. இதை பார்த்த ராஜசேகருக்கே சிரிப்பு வந்துவிட்டது. "என்னமோ எல்லாத்துக்கும் அண்ணனை கேட்டுட்டு தான் செய்றவன் மாதிரி. என்ன பார்த்து சொல்லுடா" என்றார்.

அபி "அப்பா நானும் மார்னிங் நீங்க சொன்ன அப்புறம் தான் அண்ணனை காணாமேன்னு அவன் நம்பர்க்கு கால் பண்ணி பார்த்தேன். ஆனா சுவிட்ச் ஆப்னு தான் வந்தது. என்ன பண்ணன்னு தெரியாம ஒருவேளை ஹாஸ்பிடல்ல எதுவும் இருப்பான்னு நம்ம ஹாஸ்பிடல்க்கு கால் செஞ்சேன்" என்றவன் காலையில் நடந்ததை தனக்கு தெரிந்ததை சொல்ல தொடங்கினான்.

அபி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து ஹர்ஷா அங்கே இருக்கிறானா என கேட்க முதலில் இல்லை என சாதித்தனர். நேற்று எதுவும் வந்தானா என கேட்க ஆம் இல்லை என மழுப்ப அபியிற்கு சந்தேகம் வந்தது. எனவே அவன் வீட்டினரை மண்டபத்திற்கு கிளம்ப சொல்லிவிட்டு இவன் தங்கள் மருத்துவமனைக்கு சென்றான்.

அங்கே போனால் அப்போதும் ஹர்ஷா வரவில்லை என கூற கடுப்பான அபி "இன்னைக்கு அவனுக்கு எங்கேஜ்மென்ட். அது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? அவன‌ எங்க மறைச்சு வச்சிருக்கீங்க. ஒழுங்கா சொல்லிடுங்க இல்லைனா நான் போலீஸ்ல கம்ப்லைன் பண்ணுற மாதிரி ஆகிடும்" என அது இதுவென மிரட்ட தொடங்கினான்.

அதன்பின் தான் ஹர்ஷா இருந்த அறையை அவனிடம் காட்டினார்கள். அங்கு ஹர்ஷா இருந்த நிலையை கண்டு அப்படியே அதிர்ந்து நின்று விட்டான் அபி. வலது தோள்பட்டையில் பெரிய கட்டு போடப்பட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஹர்ஷா.

அவனை பார்த்த போதே தெரிந்தது அவனுக்கு ஏதோ விபத்து நடந்துள்ளது என்று. என்ன நடந்தது என மருத்துவமனையில் விசாரித்த போது அவர்கள் கூறியது 'ஹர்ஷா நேற்று மருத்துவமனை வரும் போதே தடுமாறியபடி தான் வந்திருக்கிறான்.

மருத்துவமனையை அடைந்து மயங்கியவன் இப்போது வரை கண்விழிக்கவில்லை' என்று. அவனை பரிசோதனை செய்த மருத்துவர் 'இது ஆக்சிடென்ட் போல‌ இல்லை. ஏனெனில் அவன் தோள்பட்டையில் அரிவாள் வெட்டுக்கான காயம் இருக்கிறது.

மேலும் அதனால் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் தான் அவனுக்கு மயக்கம் வந்துள்ளது' என கூறியவர் 'எப்படியும் வெட்டுப்பட்ட கையை வைத்து வண்டியை செலுத்தி வந்திருக்கிறார் போல். ஏனெனில் காயம் பட்டு ஒரு மணி நேரம் கழித்து தான் மருத்துவமனையை அடைந்திருக்கிறார்' என கூற ஹர்ஷாவின் நிலை எண்ணி அபியின் கண்கள் கலங்கி விட்டது.

அதே நேரம் 'அண்ணாவுக்கு எதிரின்னு யார் இருக்கா? யார் இப்படி செஞ்சிருப்பா? கொல்லுற அளவுக்கு யாருக்கு அண்ணாவோட பகை?' என பல கேள்விகள் மனதில் முளைத்தது. இந்த சூழலில் வீட்டில் இருந்து அழைத்தவர்களுக்கு எல்லாம் அபிமன்யு தன் வாயில் வந்த கதையை எடுத்து விட்டான்.

அதை நம்பிய குடும்பத்தினரும் அபியிடம் தொடர்பில் இருந்ததால் ஹர்ஷா பேசாததை கருத்தில் கொள்ளவில்லை. காலை ஒன்பது மணிக்கு மேல் கண்விழித்த ஹர்ஷாவிடம் அபி 'என்ன நடந்தது?' என கேட்க அவன் எதுவும் சொல்லவில்லை.

அது போக அன்றைய நாளையும் நேரத்தையும் கண்டு "இன்னைக்கு என்னோட எங்கேஜ்மெண்ட் அபி. பங்ஷன் முடியவும் நான் எல்லா விஷயத்தையும் டீட்டெய்லா சொல்றேன். இப்போ கிளம்பலாம்டா. நான் அங்க இல்லைனா தப்பா பேசுவாங்கடா.

அது மட்டும் இல்லாம எனக்கு இப்படி ஆனது தெரிஞ்சா எல்லாரும் அனுவை தான் பேசுவாங்க. என்ன நடந்தாலும் பொண்ணுங்கள தான் பேசுற ஊர் இது. உன் அண்ணியை மட்டும் பேசாம விட்டுவைப்பாங்களா. அதுக்கு நாம இடம் கொடுக்க வேணாம் கிளம்பலாம்டா" என்று அவசரப்படுத்தி கிளம்பிவிட்டான்.

அவன் அவ்வளவு நேரம் வராமல் இருந்ததற்கே வந்திருந்த சொந்த பந்தங்கள் அவ்வளவு பேசியிருக்க அதை பார்த்த அபிமன்யுவிற்கும் அப்போது தான் அண்ணன் அவ்வளவு வலியிலும் எதற்கு கிளம்பி வந்தான் என புரிந்தது.

"இவ்ளோ தான் ப்பா எனக்கு தெரியும். ஆனா அண்ணாவோட இந்த நிலைமைக்கு யார் காரணம் அப்படின்னு அவன் சொன்னா தான் ப்பா எனக்கும் தெரியும்" என்று முடித்தான்.

அபி ஹர்ஷாவிற்கு வெட்டு காயம் என்பதை கூறியதுமே எல்லாரும் பதறி விட்டனர். ராஜசேகர் ஹர்ஷாவின் அருகே வந்து "காயத்தை காட்டுடா" என்று கூறும் போதே பதறியது. அவன் காயத்தை பார்க்க உடன் அவர் கண்களில் இருந்து நீரே வழிந்தது.

"என்ன குட்டி இவ்ளோ பெரிய காயம். என்னப்பா ஆச்சு?" என்று பதறி துடித்துவிட்டார். அவரை பேசி பேசியே சமாதானம் செய்யவதற்குள் ஹர்ஷா தான் சோர்ந்து விட்டான். அவனின் சோர்ந்த முகம் கண்டே தன்னை தேற்றினார் ராஜசேகர்.

"சாரிபா டையர்டா இருக்கா. சாரி சாரி" என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தார். அவர் முகத்தை பார்க்கவே அனைவருக்கும் பாவமாக போனது. "அப்பா ஒன்னும் இல்லை! ஒன்னும் இல்லை!" என அபியும் இப்போது சமாதானம் செய்தான். அதன்பின் மெதுவாக ஹர்ஷா தனக்கு என்ன நடந்தது என கூற தொடங்கினான்.

- மீண்டும் வருவான்


 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 13

அனுக்ஷ்ராவின் நிச்சயத்தில் மாப்பிள்ளை ஹர்ஷா என அறிந்த அந்த தம்பதி மிகவும் மகிழ்ந்து போனார்கள். அவர்கள் அன்று ஹர்ஷாவை துணிக்கடையில் கண்டவர்களே.

அவர்கள் ராம் மற்றும் தேவி தம்பதி. "என்னங்க நான் அன்னைக்கே சொன்னேன்ல அவன் நம்ம பிள்ளை தான்னு. நீங்க தான் அது வேற யாரோ அப்படின்னீங்க. நாம இத்தனை வருஷம் நினைச்ச மாதிரி நம்ம பையன் சாகலைங்க. அவன் உயிரோட தான் இருக்கான்.

நீங்க பாத்தீங்கள்ள அவன் அப்படியே அவன் அப்பா மாதிரியே இருக்கான்" என தேவி கூறும் போதே ராமின் முகம் ஒரு நிமிடம் கோபமாக மாறியது. தேவி பார்க்கும் போது நொடியில் அவர் முகம் சாதாரணமாக மாறியது. தேவியே இப்போது மீண்டும் தொடர்ந்தார்.

"கடவுள் இருக்கார்ங்க. நம்ம இத்தனை வருஷ கஷ்டம் இப்போ தீர போகுது பாருங்க" என்று அவர் தன் போக்கில் பேசிக் கொண்டிருக்க ராம் குறிக்கிட்டார். "இங்க பாருமா இந்த உலகத்துல ஒருத்தர் மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்னு சொல்லுவாங்க.

அதை நீ கேள்விப்பட்டது இல்லையா. அந்த பையன் அருணாச்சலம் ஹாஸ்பிடல்ஸ் எம்.டி.மா. அதுவும் அந்த ராஜசேகரோட பையன். நாம நடந்த எல்லாத்தையும் பார்த்துட்டு தானே இருந்தோம்.

கண்டிப்பா அந்த பையன் நம்ம மூத்த பையன் இல்லை. இதை நான் உறுதியா சொல்வேன்‌‌. ஒருவேளை அவன் நம்மளோட பையனா இருந்தா அப்போ இறந்து போன ஒரு குழந்தையை நாம புதைச்சமே அது யாரு?"என்று கேட்டவர்

"தயவு செஞ்சு புரிஞ்சுக்கோமா. நாம எதாவது பேசி புதுசா எந்த பிரச்சனையும் கொண்டு வரக்கூடாது. ஏனா நம்ம பையன் உயிரோட இல்லை இனி உயிரோட வர போறதும் இல்லை. புரியுதா!" என்றார் சற்று கடுமையாக.

அவர் கூறுவதில் உள்ள நியாயம் மெதுவாக பிடிபடவே "ம்ம் புரியுதுங்க. நான் இனிமே இதுபோல பேச மாட்டேன். அந்த பையனோட முக சாயல் பார்த்து கொஞ்சம் தடுமாறிட்டேன். எனக்கு இப்போ புரியுதுங்க" என்றார் சோகமான புன்னகையுடன்.

அவரின் தலையை பரிவாக தடவிய ராம் "உன் ஃபீலிங்ஸ் எனக்கு புரியுதுமா. நம்ம சந்தோஷத்துக்காக நாம மத்தவங்க லைஃப்ல பிராப்ளம் உண்டு பண்ணக் கூடாது இல்லையா. அதான் சொன்னேன்" என்றுவிட்டு "சரிமா ஆபிஸ்ல வேலை இருக்கு நான் கிளம்புறேன்" என சொல்லி கிளம்பிவிட்டார்.

அங்கிருந்து சென்ற ராம் ஊரை தாண்டி சென்றார். அங்கே அவர் முன் நின்ற சில அடியாட்களை பார்த்து கத்திக் கொண்டிருந்தார். "என்னடா பண்ணி வச்சிருக்கீங்க. அவனை கொண்ணு புதைக்க சொல்லி தானே கட்டு கட்டா காசை தந்தேன். அவன் எபப்டிடா இப்ப உயிரோட வந்தான்.

அதுவும் அவன் இனிமே விஸ்வநாதன் வீட்டு மாப்பிள்ளை. அவனுக்கு நடந்தது தெரிஞ்சா அந்த டாக்டர் பையலை தொட கூட முடியாது. அவன் மேல கை வைக்க அந்த விஸ்வநாதன் விடுவானா. நம்ம எல்லாரையும் குழி தோண்டி புதைச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பான்.

ஏன்டா என்னத்த பண்ணி வச்சு தொலைச்சீங்க" என்று மூச்சு வாங்க பேசிக் கொண்டிருந்தார் ராம். ராம் அன்று துணிக்கடையில் என்ன தான் ஹர்ஷாவை பார்க்காதது போல் நடித்திருந்தாலும் அன்று ஹர்ஷாவை பார்த்து விட்டார்.

அதுவும் அவர் மனைவி தேவி "நம்ம பையன் சாகலை" என்று சொன்ன போது கொதித்தெழுந்து விட்டார் மனிதர். அவர் அப்படி ஒரு மகன் எப்போதும் தங்கள் வாழ்வில் வரக் கூடாது என்று எண்ணினார்‌.

அவர் மனக் கண்ணில் அன்று தேவிக்கு முதல் மகன் பிறந்த போதும் அதற்கு முன்பும் நடைப்பெற்ற நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வந்தது. மனதினுள் எரிமலையாக கோபம் பொங்கி வந்தது. ஆனால்
அதை தேவியிடம் காட்ட முடியாதே.

எனவே தேவியை வீட்டில் விட்டு வந்தவர் மீண்டும் துணிக்கடைக்கு வந்து அங்கே பணத்தின் பயனால் ஹர்ஷாவின் வண்டி எண்ணை பெற்று கொண்டு அதை வைத்து அவன் வீட்டு முகவரியை கண்டுப்பிடித்துவிட்டார்.

அதை வைத்து ஹர்ஷா யார் அவன் என்ன செய்கிறான் என கண்டறிந்து அவனை கொல்ல ஆட்களை ஏற்ப்பாடு செய்துவிட்டே சென்றார். ஏனெனில் அவர் ஹர்ஷாவை கண்ட போது அவர் மனதில் வந்த நபரின் உருவம் அவரை இவ்வாறு செய்ய தூண்டியது.

ஹர்ஷா தேவியின் மகனோ இல்லையோ ஆனால் அவன் உயிருடன் இருக்க கூடாது என்று திண்ணமாக எண்ணினார் ராம். எனவே அவனை கொல்ல சொன்ன பிறகே நிம்மதி ஆனார்.

இதில் அவர் அறியாத ஒன்று என்னவென்றால் ஹர்ஷா என்னும் மனிதன் தன் வாழ்வில் தன்னை சுற்றி உள்ள ஆட்களை தன் பாச சக்தியாக உருவாக்கி வைத்திருக்கிறான் என்றும், அவர்கள் தான் அவன் பலம் என்றும். அவர்களின் பொருட்டாவது இவன் மீண்டு வருவான் என்று அவர் அறியவில்லை.
____________________________________________

ஹர்ஷா களைப்பாக தெரியவே அவனை சாய்வாக அமர வைத்தான் விக்ரம். "என்னடா கண்ணா ரொம்ப வலிக்குதாப்பா" என்று கேட்டார் ராஜசேகர். அவர் கரகர குரலே அவரின் நிலையை விளக்கியது. தன் மகனின் காயத்தை பார்த்து நொந்து விட்டார். எனவே எதுவும் கேட்காது அமைதியாக அமர்ந்து கொண்டார்.

வேதாசலம் தான் இப்போது ஹர்ஷாவிடம் பேச்சு கொடுத்தார். "எப்படி ஹர்ஷா குட்டி இப்படி ஆச்சு. அன்னைக்கு அப்படி என்ன தான் நடந்தது?" என்றார் வருத்தமான குரலில்.

அதன்பின்னே தான் ஹர்ஷா அன்று தனக்கு நடந்தவற்றை கூற தொடங்கினான். ஹார்ஷா நேற்று எப்போதும் போல் மருத்துவமனை சென்றவன் மதிய உணவு வேளைக்கு தங்கள் இல்லம் நோக்கி புறப்பட்டான் வழமைபோல்.

அவன் சிறிது தூரம் சென்ற பின் வழியில் ஒரு சிறுவன் அவன் காரை தேக்கினான். அந்த சிறுவன் தன் அன்னைக்கு உடல் நிலை சரியில்லை என கூறி ஹர்ஷாவை மருத்துவம் பார்க்க அழைத்தான்.

"நான் டாக்டர்னு உனக்கு எப்படி தம்பி தெரியும்?" என்று ஹர்ஷா கேட்ட போது "நான் நீங்க அந்த பெரிய ஆஸ்பத்திரிக்குள்ள போறப்ப பாத்திருக்கேன் ண்ணா. நீங்க அங்க தான் பெரிய டாக்டரா இருக்கீங்கன்னு என் பிரண்டு கூட சொன்னான். நாங்க உங்க ஆஸபத்திரிய தாண்டி தான் ஸ்கூல் போவோம் அதுனால தெரியும்" என்றான் நீண்டதொரு விளக்கமாய்.

அவனை பார்த்தால் சந்தேகம் வரும்படி இல்லாமல் மிகவும் பாவமாக இருக்கவே ஹர்ஷாவும் சிறுவனுக்கு உதவ முன்வந்தான். எனவே அவனை தன் காரில் ஏற்றி அந்த சிறுவன் சொன்ன இடத்திற்கு அழைத்து சென்றான்.

அந்த இடம் ஊரைவிட்டு சற்று ஒதுங்கி இருந்தது. அங்கே இறங்கிய அந்த சிறுவன் "இதோ வருகிறேன்" என சொல்லி ஓடியவன் தான். அவன் வரவே இல்லை. அதற்கு பதில் ஐந்து ஆறு ஆட்கள் வந்து ஹர்ஷாவிடம் பேச்சு கொடுத்தனர்.

முதலில் இருந்தே வம்பு வளர்ப்பது போல் பேசியவர்கள் ஹர்ஷாவை தாக்க வரவும் சுதாரித்த ஹர்ஷா அவர்களிடம் இருந்து தப்பிக்க பார்த்தான். அங்கே இருப்பது உசித்தம் இல்லை என அவன் காரை நோக்கி செல்லும் வேளை அவனை தாக்கினர் அந்த ஆட்கள்.

ஹர்ஷாவும் தன்னால் முடிந்த அளவு அவர்களுடன் சண்டையிட்டு தன் காரை அடைந்தான். அவன் காரின் கதவை திறக்கும் நேரம் தான் ஒரு அரிவாளை அந்த ஆட்களுள் ஒருவன் வீசினான். அது சரியாக ஹர்ஷாவின் தோளை காயப்படுத்தி விழ அந்த காயத்தோடு காரில் ஏறி அவசர அவசரமாக கிளப்பி விட்டான்.

அதன்பின் தன் மருத்துவமனையை அடைந்தவன் மயக்கம் அடையும் வரை கூட தன் நிலையை பற்றி வீட்டினருக்கு தகவல் கூற வேண்டாம் என்று சொல்லி விட்டான். அதனால் அவர்களும் கூறாது மறைத்தனர்‌.

"அந்த பையன நம்பி தான் அப்பா நான் போனேன். பட் அந்த ஆளுங்க ஏன் இப்படி செஞ்சாங்கன்னு ஒன்னும் புரியல ப்பா" என்றான் ஹர்ஷாவும் யோசனையாக. "பேசாம நாம போலீஸ் போனா என்ன மாமா. ஹர்ஷாக்கு இப்படி நடந்ததை தெரிஞ்சும் நாம‌ பேசாம இருந்தா ஹர்ஷாக்கு தான் ரிஸ்க்.

ஒன்ஸ் கொல்ல டிரை பண்ணுனவங்க மறுபடியும் வர மாட்டாங்கன்னு என்ன நிச்சயம். சோ நாம எதாவது சேப்டி மெஷர் எடுக்கனும் மாமா" என்றான் விக்ரம். அதை ஆமோதித்தவாறு அபியும் "ஆமா ப்பா விக்ரம் சொல்றதும் கரெக்ட். அண்ணாவோட உயிர் நமக்கு முக்கியம்.

நாம பர்ஸ்ட் கம்ப்ளைன் பண்ணுவோம்" என்றான். அதே எண்ணத்தில் இருப்பது போல் தான் ராஜசேகரிம் முகமும் விஸ்வநாதனிம் முகமும் காட்டியது. ஆனால் இதை எல்லாவற்றையும் ஒரேயடியாக மறுத்தான் ஹர்ஷா.

"நோ‌ விக்ரம்! இதுக்கு போலிஸ் கிட்ட போக வேண்டாம்" என்று ஹர்ஷா சொல்ல "ஏன் ண்ணா?" என்றான் அபி. "இல்லை அபி நம்ம எங்கேஜ்மெண்ட் அப்போவே பார்த்தோமே எல்லாரும் எப்படி பேசிட்டு இருந்தாங்கன்னு.

இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா எல்லாம் அனுவை தான் பேசுவாங்க. என்னமோ அவ வந்த டைம் தான் சரியில்லை அப்படின்னு யோசிக்காம பேச சான்ஸ் இருக்கு. சோ நோ அபி" என்றான் ஸ்திரமாக.

தன் வருங்கால மருமகள் மீது ஹர்ஷா கொண்ட காதல் அப்பட்டமாக அவன் வரிகளில் தெரிய அவருக்கு மனநிறைவான புன்னகை வந்தது அந்நிலையிலும்.

அவன் கூறியதும் சரியென ராஜசேகருக்கு தோன்ற "புரியுது ஹர்ஷா. நீ வரதுக்கு டைம் ஆனதுக்கே எல்லாரும் வந்து கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதுல இந்த விஷயம் தெரிஞ்சா வாய்க்கு வந்த படி எல்லாம் பேச ஆரம்பிப்பாங்க தான்.

ஆனா இந்த விஷயத்தை இப்படியேவும் விட முடியாதுல. என்னப்பா பண்ணலாம்?" என்றார் முடிவை அவன் கையில் விடுத்தே. "நான் இதுக்கு ஒரு சொல்யூஷன் சொல்றேன் மச்சான்" என்றார் வேதாசலம்.

"நம்ம ரிலேட்டிவ் பையன் தான் இப்ப புதுசா வந்திருக்கிற ஏ.சி. அவன்கிட்ட கம்ப்ளைன்ட் தருவோம். அபீசியலா இல்லாம பெர்சனலா விசாரிக்க சொல்லுவோம்‌. யாருக்கும் தெரியாத மாதிரியும் ஆச்சு, நமக்கு வேலை ஆன மாதிரியும் ஆச்சு. என்ன சொல்றீங்க" என்றார் வேதாசலம்.

அதுவே அனைவருக்கும் சரியென பட ஒருமனதாக அந்த ஏ.சியிடம் கம்ப்ளைன் பண்ணலாம் என்று முடிவு செய்தனர்‌. அனைவரும் வெளியே வரும் முன் வேதாசலம் "அப்புறம் பசங்களா பார்வதிக்கிட்ட எதுவும் சொல்லாதீங்க.

ஹர்ஷாக்கு ஒன்னுனா அவ தாங்க மாட்டா. சரியா?" என்க புரிந்தது எனும் விதமாய் தலையை ஆட்டினர் மூவரும். ராஜசேகர் அறையில் இருந்து விக்ரம் அபி ஹர்ஷா மூவரும் சேர்ந்து வெளியே வருவதை கண்ட பார்வதி என்ன ஏதுவென கேட்க அவரை சமாளித்து அறையை அடைவதற்குள் ஹர்ஷாவிற்கு போதும் போதும் என்றானது.

அப்படி உள்ளே வந்த ஹர்ஷா 'ஹப்பாடா' என பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி அமரும் நேரம் அவன் கைப்பேசி அழைப்பு விடுக்க "இப்ப யாருடா அது?" என சலிப்புடன் எடுத்து பார்க்க திரையில் அது அனுவின் அழைப்பு என தெரிய மகிழ்ச்சியுடன் கைப்பேசியை எடுத்தான். ஆனால் அனு கேட்ட கேள்வியில் என்ன சொல்வதென முழிக்க தொடங்கிவிட்டான் ஹர்ஷா.

"இன்னைக்கு பங்ஷன் முடிஞ்சு நீங்க என் அப்பாகிட்ட தனியா போய் என்ன பேசுனீங்க. அவர் கூட சண்டை ஏதும் போட்டீங்களா?" என்ற அனுவின் சந்தேகமான கேள்வியில் ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை ஹர்ஷவிற்கு.

அதற்கு "என்னடி கேக்குற. நான் எதுக்கு உன் அப்பாக்கிட்ட சண்டைக்கு போக போறேன். சொல்றத ஒழுங்கா சொல்லுடி" என்றான் ஹர்ஷா கடுப்பாக. பின்னே நிச்சயமான உடன் மாமனாரிடம் யாராவது சண்டை போடுவார்களா என்று கூடவா புரியாது என எண்ணினான்.

"இல்லைங்க‌. நம்ம பங்சன் முடிஞ்ச அப்புறம் என் அப்பா உங்களை தனியா கூட்டிட்டு போய் பேசினாராமே. ரித்தி சொன்னா. அப்பவே எனக்கு கொஞ்சம் பயமா இருந்தது.

ஆனா நாங்க எல்லாம் வீட்டுக்கு வந்த அப்புறம் என்னை கூப்பிட்டு 'மாப்பிள்ளைக்கிட்ட உன் நம்பர் தந்திருக்கேன்டா. அவர் போன் செஞ்சா தயங்காம பேசனும் என்ன' அப்படின்னு சொல்லுராரு.

ஏற்கனவே நான் உங்ககிட்ட பேசற விஷயம் எதுவும் அவருக்கு தெரிஞ்சு போய் இப்படி போட்டு வாங்குறாரோன்னு பயம் வந்திருச்சு‌. அதான் தனியா போய் என்ன பேசுனீங்கன்னு கேக்குறேன்" என்றாள் அனு பதட்டமான குரலில்.

"அதுக்கு என்னை பாத்தா உனக்கு சண்டைக்காரன் மாதிரி இருக்கா?" என்று கோபம் போல் வம்பிழுத்தான். அவன் கோபப்படுகிறான் என நினைத்த அனுவும் "நான் அப்படி சொல்லைங்க‌. அது வந்து அப்பா உங்களை... நீங்க... அப்பா. பிளீஸ் சொல்லுங்களே" என திணறினாள்.

அனு திணுவதை கேட்டு வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிய ஹர்ஷா "ஆன் உக்ரைன் போரை எப்படி நிறுத்துறதுன்னு பேசிட்டு இருந்தோம்" என்றான் கிண்டலாக. அவனின் பதிலில்‌ "ப்ச் உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தானா‌. பிளீஸ் சொல்லுங்க பா.

என்ன தான் பேசுனீங்க" என்றாள் கெஞ்சலாக. அவள் கெஞ்சலாக பேச பேச அவளை சீண்ட வேண்டும் என்ற எண்ணம் தான் வந்தது ஹர்ஷாவிற்கு. "என்ன செல்லம் என்ன சொல்லனும்" என்றான் ராகமாய் இழுத்து.

"ஹையோ ஏன் ஹர்ஷா இப்படி படுத்துறீங்க. என்ன ஆச்சுன்னு சொல்லுங்களே பிளீஸ் பிளீஸ்பா" என்று அனு அலுத்துக் கொள்ளும் போதே "ஹே ஹே குட்டிம்மா! என்னடி சொல்ல சொல்லுற?" என்றான் குதூகலமாக.

"ஐயோ ஹர்ஷா என்ன இது இப்படி பண்றீங்க. அப்புறம் நீங்க கால் பண்ணா நான் பேச மாட்டேன் பாத்துக்கோங்க" என்றாள் மிரட்டலாக. அவள் மிரட்டுவதை ரசித்தவாறே "நீ என்னை மிரட்ட டிரை பண்றியாடா குட்டிம்மா. இதை நான் உன் அப்பா காதுல போட்ட என்ன ஆகும் தெரியுமா செல்லம்" என்றான் குழைவான குரலில்.

அவன் கூறிய திணுசில் அனுவிற்கு தான் பயமாய் போய்விட்டது. அதன்பின் அமைதியாகி விட்டாள் அனு. அவளின் அமைதியை கலைக்கும் விதமாக "என்னடி சைலண்ட் ஆகிட்ட. நாம பேச ஆரம்பிச்சு இத்தனை நாள்ல இப்போ தான் செல்லம் என்கிட்ட வாயை திறந்தே பேசுற. இதுல பேச வேற விஷயமே இல்லாத மாதிரி அப்பா என்ன சொன்னாங்க ஆட்டுக்குட்டி என்ன சொன்னாங்கன்னு" என தன் போக்கில் திட்டுவது போல் பேசி அவள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறாமல் இழுத்தடித்தான்.

இப்படி பேசிக் கொண்டிருந்த நேரம் அனுவின் அறைக்கதவை யாரோ இருமுறை தட்டினர்‌. அதில் கலைந்த அனு "ஹான்.. உள்ள வாங்க‌ கதவு திறந்து தான் இருக்கு" என்றாள் வருவது தன் தாயோ இல்லை ரித்தியோ என எண்ணி. ஆனால் வந்தது அனுவின் தந்தை விஸ்வநாதன்.

உள்ளே வந்த விஸ்வநாதன் காதில் கைப்பேசியை வைத்து தன்னை பார்த்து திருதிருவென முழித்துக் கொண்டிருந்த அனுவை கண்டு "யார்ட்ட ஷரா பேசிட்டு இருக்க?" என்று கேட்டு முடிக்கும் முன்னே "அது அப்பா... அது அவரு தான்" என உளற ஆரம்பித்தாள்.

பின் "இந்தாங்க ப்பா" என தன் கைப்பேசியை தன் தந்தையிடம் நீட்டிவிட்டாள்‌. அதை அந்த பக்கம் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஹர்ஷா தலையிலே அடித்து கொண்டவன் "அவரு மிரட்ட கூட வேணாம். இவளே எல்லாத்தையும் உளறி வச்சிடுவா போலையே" என்று தான் எண்ணினான்.

விஸ்வநாதன் குழப்பத்துடன் அனுவிடம் கைப்பேசியை வாங்கியவர் "ஹலோ?" என்றார்‌. அவர் குரலை கேட்ட ஹர்ஷா "மாமா! நான் ஹர்ஷா" என்றான்‌. ஹர்ஷாவின் குரலை கேட்டு அட்டென்ஷன் போசிற்கு வந்த விஸ்வநாதன் "மாப்பிள்ளை நீங்களா?

நல்லா இருக்கீங்களா?" என்று தடுமாற்றத்துடன் கேட்டவர் "ஷரா பாப்பா நீங்க தான்னு சொல்லலை மாப்பிள்ளை. அதான்" என்று இழுத்தார். அதற்கு "நல்லா இருக்கேன் மாமா. அனு நான் போன் செய்யவும் கொஞ்சம் பதறிட்டா" என்று புன்னகைத்தான் ஹர்ஷா.

"நான் பாப்பாட்ட சொல்றேன் மாப்பிள்ளை" என்று அனுவிடம் கைப்பேசியை தந்தவர் "பாப்பா மாப்பிள்ளை தானேடா நீ தயங்காம பேசு என்னடா" என அவள் தலையை தடவிவிட்டு வெளியேறினார். விஸ்வநாதனின் தடுமாற்றம் ஹர்ஷாவிற்கு சிரிப்பை ஏற்ப்படுத்தியது என்றால் அனுவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அவர் சென்றபின் கூட வாயை பிளந்து கொண்டு பார்த்திருந்தாள் அனு. ஆனால் அவள் சத்தம் கேட்காததால் மீண்டும் மீண்டும் கூப்பிட்டு பார்த்த ஹர்ஷா அழைப்பை அணைத்து மறுபடியும் அழைப்பு விடுத்தான்.

அதில் தெளிந்த அனு அழைப்பை ஏற்றவுடன் "என்னடி கனவு கட்டுட்டு நின்னியா? நானும் கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்துட்டு கட் பண்ணிட்டு கால் பண்றேன்" என்றான் கடுப்பாக. அவன் கேள்வியை கண்டு கொள்ளாத அனுவோ

"உண்மையாவே கனவு மாதிரி தாங்க இருக்கு. இப்ப வந்திட்டு போனது என் அப்பாவா இல்லை அவர் குளோனிங்கான்னே தெரியலை. என் அப்பாவா இப்படி எல்லாம் பேசிட்டு போறாருன்னு நானே ஷாக்ல இருக்கேன் ஹர்ஷா" என்ற அனுவின் குரலே ஆச்சரியத்தில் தான் இருந்தது.

அவள் பதிலில் சிரித்த ஹர்ஷா "ஆனாலும் நீ உன் அப்பாவ பத்தி சொல்றது எல்லாம் உன்னோட ஓவர் இமேஜினேஷன்னு தான்டா தோனுது. அவர் நார்மல் தான். பாரு நம்ம எங்கேஜ்மெண்ட் முடிஞ்ச உடனே என்னை கூப்பிட்டு உன் நம்பரை தந்து பேசி பழகுங்க மாப்பிள்ளைனு சொன்னாரு தெரியுமா" என்று கிண்டலாக முடித்தான்.

அதை கேட்டு "ஹர்ஷா!!" என பல்லை கடிக்க "கூல் செல்லம் கூல்! நான் சொல்றது டுரூ டா" என்றவன் விஸ்வநாதன் தன்னிடம் பேசியதை முழுவதையும் கூறி முடித்தான். அவன் தன் தந்தையை பற்றி கூறியதை கேட்ட அனுவிற்கு உண்மையில் மயக்கம் வரும் போல் தான் இருந்தது.

ஒரு முறைக்கு இரு முறை உண்மை தானா என்று கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்ட பின் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள் அனு. அனுவின் அமைதியை உணர்ந்து "நான் கூட நீ சொன்னதை வச்சு உன் அப்பாவ ரொம்ப ஸ்ரிக்ட் ஆபிசர்னு நினைச்சேன்.

பட் இப்போ அதுக்கு பின்னாடி எதோ ரீசன் இருக்குன்னு தோனுது. பட் அவர் உன் ஸ்டடிஸ்லையும் உன் தங்கச்சி ஸ்டடிஸ்லையும் உங்களுக்கு பிடிச்சதை பண்ண விடாம இருந்தது எனக்கு ஓகே இல்லை தான்" என்றான். அனுவும் "ம்ம்" என்றாள்.

ஏனெனில் அனு விஸ்வநாதன் தங்களுக்கு பிடித்த படிப்பை படிக்க விடவில்லை என பேச்சு வாக்கில் சொல்லி இருந்தாள். அதை வைத்து தான் ஹர்ஷா இப்படி சொல்லியிருந்தான். அதன் பின்னான நேரத்தை அவர்களுக்கே உரித்தான நேரமாக அந்த இளம் ஜோடி மாற்றிக் கொண்டனர்.
____________________________________________

இரவு உணவுக்கு ஹர்ஷா இறங்கி வரும் நேரம் உறவினர்கள் எல்லாரும் கிளம்பி இருந்தனர்‌. வீட்டு ஆட்கள் மட்டுமே இருந்தனர். அங்கே ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த விக்ரம் எதோ தீவிர யோசனையில் இருந்தான்.

அவனை பார்த்துக் கொண்டே வந்த ஹர்ஷா "என்னடா மச்சான்! எதோ பெரிய யோசைனையில இருக்க போல. அப்படி என்னத்த யோசிச்சிட்டு இருக்க?" என்றவாறு அவன் அருகில் அமர்ந்தான்.

இன்னும் யோசனையை கைவிடாதவனாக "மச்சான் நீ அபியையும் என் தங்கச்சி அம்முவையும் இப்பலாம் நோட் பண்ணுறியா?" என்றான். ஹர்ஷாவிற்கு விக்ரம் எங்கே வருகிறான் என ஓரளவு புரிந்தது. எனவே "நீ எதை கேட்குற?" என்று மட்டும் கேட்டான்.

அதற்கு "அவங்க ரெண்டு பேரோட ஆட்டிடூய்ட் கொஞ்சம் வித்தியாசமா இருக்குடா. முன்னவிட இப்போ ரொம்ப குளோஸா இருக்க மாதிரி இருக்கு" என்றான்.

இன்று மாலை விக்ரம் ஆபிஸ் கால் ஒன்றை பேசிக் கொண்டே அவன் அறை பால்கனியில் வந்து நின்றான். அப்போது அவர்கள் வீட்டு தோட்டத்தில் அபியும் அம்முவும் நிற்பதை விக்ரம் கண்டான். ஆனால் சிறிது நேரத்தில் அம்முவை அபி அணைப்பதை கண்டு அதிர்ந்து விட்டான்.

அவர்கள் அதன்பின் வீட்டின் உள்ளே சென்றுவிட்டனர். ஆனால் விக்ரம் தான் அவர்களின் தற்போதைய நடவடிக்கைகளை நினைத்தபடி அமர்ந்து கொண்டான். அப்படி யோசிக்கும் போது சமீக காலமாக அம்மு மற்றும் அபியிடம் இருக்கும் நெருக்கம் ஏதோ வித்தியாசமாக பட அதை ஹர்ஷாவிடம் சொல்லினான்.

ஆனால் இது எல்லாம் ஹர்ஷா அறிந்தது தானே. எனவே "ஏன் அபியை கூப்பிட்டு கேளேன்" என்றான் நக்கலாக. "ஏதே! உன் தம்பிக்கிட்டையா! எப்பா ஏன்டா இந்த கொலவெறி. அவனுக்கு எனக்கும் தான் எப்பவும் ஏழாம் பொருத்தமே. நான் என்ன கேட்டாலும் ஏட்டிக்குப் போட்டியா தான் உன் தம்பிகாரன் பண்ணுவான்னு தெரிஞ்சே சொல்ற" என்றான் சட்டென்று.

அதே நேரம் அபிமன்யுவும் வந்து சேர்ந்தான். ஹர்ஷாவின் அருகே அமர்ந்த அபியை கண்ட விக்ரம் "நீயே கேளுடா மச்சான்" என்றான் ஹர்ஷாவிடம். மனதிற்குள் சிரித்துக் கொண்ட ஹர்ஷா அபியிடம் "அபி உனக்கும் அம்முவுக்கும் நடுவுல என்னடா நடக்குது. விக்ரம் கேக்க சொல்றான்" என்றான் விக்ரம் முறைப்பதை சட்டை செய்யாமல்.

தன் அண்ணனின் குறும்பு புரிந்த அபி விக்ரமை பார்த்து "ஏன் விக்ரம் மாமா! என்னை கேட்டிருந்தா நானே சொல்லிருப்பேன். ஏன் என் அண்ணனை தூது அனுப்புற" என்றவன் "நானும் அம்முவும் லவ் பண்றோம். ஏன் உனக்கு தெரியாதா என்ன" என்று குறும்பாக சொல்லி உணவறை நோக்கி சென்று விட்டான்.

கேட்ட விக்ரம் தான் அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டான். ஹர்ஷாவை கண்டு "உன் தம்பி என்ன சொல்லிட்டு போறான்டா?" என்றான். அதற்கு "அதான் சொல்லிட்டு போறான்லடா மச்சான் கேக்குலையா. அவனும் அம்முவும் லவ் பண்றாங்க. வீட்ல இருக்க எல்லாருக்கும் கூட தெரியுமே" என்ற ஹர்ஷாவின் பதிலில் மீண்டும் அதிர்ந்தான் விக்ரம்.

அவன் முகத்தை பார்த்த ஹர்ஷாவிற்கு சிரிப்பை அடக்க முடியாமல் போனது. "அடேய் அண்ணன் தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து இதை என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டீங்கலாடா. எவ்ளோ நாளாடா இது நடக்குது" என்றான் பாவமாக.

அவனின் பாவனை இன்னும் சிரிப்பை தான் தந்தது ஹர்ஷாவிற்கு. "என்ன மச்சான் ஷாக்கா!!" என்று கேட்டு சிரித்தவன் விக்ரம் இன்னும் பாவமாக பார்க்கவும் "அவன் ரொம்ப வருஷமா லவ் பண்றான்டா. இப்போ சில மாசத்துக்கு முன்னாடி அம்முட்ட பேசி ஓகே வாங்கிட்டான் போல" என்றான் கூலாக.

"அப்போ உனக்கும் தெரியும். அதானே உன் தம்பி உனக்கு தெரியாம எதாவது செஞ்சா தானே அதிசயம். என் தங்கச்சியும் தான் இருக்காளே ஒரு வார்த்தை சொல்லலை" என்றான் மனத்தாங்கல் போல்.

"டேய்! அபி ஒன்னும் என்கிட்ட வந்து சொல்லலை. நானே தான் கண்டுபிடிச்சேன். வீட்ல இருக்கவங்க எல்லாரும் கூட அவங்க முகத்தை பார்த்தே கண்டுபிடிச்சிருப்பாங்க. நீ தத்தியா இருந்துட்டு அவனை சொல்லாதடா" என்றான் என்னவோ விக்ரம் கண்டுபிடிக்காதது தான் தப்பு என்பது போல‌.

இதை கேட்டு "என்னமோ போடா" என்று அமர்ந்து விட்டான் விக்ரம். பின் என்னவோ யோசித்து விட்டு "ஆனாலும் அவனுக்கு முன்ன பிறந்த நமக்கு செட்டாகுறதுக்கு முன்னாடி அவன் கமிட் ஆகிருக்கான் பாரேன்.

என்னை கூட ஒருவிதத்தில விட்டுருடா. ஆனா இத்தனை வருஷம் ஆகியும் உனக்கு வீட்ல உள்ளவங்க பொண்ணு பார்க்குறாங்க. உனக்கும் கொஞ்சம் கூட திறமையே இல்லை ஹர்ஷா" என்று கிண்டலாய் முடித்தான்‌.

விக்ரமின் கிண்டலில் சிரித்த ஹர்ஷா "உண்மை தான்டா. அவன் எங்க அப்பா மாதிரி" என்று கூறி பதிலுக்கு கிண்டலடித்தான்‌. இப்படி ஒருவருக்கொருவர் கிண்டல் அடிக்கும் நேரம் வந்து சேர்ந்தனர் ராஜசேகர் வேதாசலம் மற்றும் அருணாச்சலம் மூவரும்.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 14

விக்ரமும் ஹர்ஷாவும் சிரித்துக் கொண்டிருந்த நேரம் அங்கே வந்த அருணாசலம் "என்ன பசங்கலா, என்ன பேசிட்டு இருக்கீங்க?" என்றவாறு அமர்ந்தார்.

"அது ஒன்னும் இல்லை தாத்தா! நம்ம அபி குட்டி அப்படியே எங்க அப்பா மாதிரின்னு சொல்லிட்டு இருந்தேன்" என்ற ஹர்ஷா அங்கே அம்முவோடு சீரியசாக கடலை வறுத்துக் கொண்டிருந்த அபியை பார்த்து கூறினான். அதை கண்ட ராஜசேகர் "இதுக்கு ஏன்டா என்னை இழுக்குற?" என்றார் பாவம் போல்.

"இல்லையா பின்ன. உங்களை மாதிரி தான் ப்பா அபி‌. உங்க லவ் ஜீன் அப்படியே அவனுக்கு இருக்கு. சும்மா எப்படி பெர்பார்ம் பண்றான் பாருங்க" என்று ராஜசேகரையும் சேர்த்து வம்பிழுத்து வைத்தான் அவன்.

அவன் பேச்சை கேட்ட வேதாசலம் கூட வாய்க்குள் சிரித்துக் கொண்டார். எதையோ சிந்தித்த ஹர்ஷா "ஆமா ப்பா! நான் யார் மாதிரி. கண்டிப்பா உங்களை மாதிரி இல்லை. அது எனக்கே தெரியும். ஒருவேளை அம்மா மாதிரியா?" என்றான். ராஜசேகர் முகம் சட்டென பதற்றம் கொண்டது ஹர்ஷாவின் இந்த கேள்வியில்.

ஆனால் ஹர்ஷாவின் கேள்விக்கு பதில் அருணாசலமிடம் இருந்து வந்தது. "நீ அப்படியே என் அம்மா மாதிரிடா குட்டி! அப்படியே அதே இரக்க சுபாவம், அதே ஆளுமை, அதே உருவம். இப்படி எல்லாமே என் அம்மா தான்டா கண்ணா" என்றார் உணர்ச்சிப்பூர்வமாக.

"அப்போ பாட்டிக்கு அப்புறம் இந்த வீட்ல நான் தானா?" என்றான் சிரிப்புடன். அவன் தலையை தடவிக் கொடுத்த அருணாசலத்தின் எண்ணங்கள் சில வருடங்களுக்கு முன் சென்றது. மனதிலே அந்த காயம் அப்படியே இன்னும் இருப்பதை அவர் யாரிடம் சொல்வார்.

'இல்லடா கண்ணா! உன்ன மாதிரியே. இல்லை இல்ல அவனை மாதிரி தான்டா நீ இருக்க. அவன் தான் என்னை ஏமாத்திட்டு ரொம்ப தூரம் போய்ட்டானே! நீயாவது காலம் பூரா என் கூடவே இருக்கனும்' என மனதோடு பேசிக்கொண்டார். அனைவரும் இவர்களையே பார்த்திருந்ததில் ராஜசேகரின் பதறிய முகத்தை பார்க்க தவறினர்.

"என்னை விட்டு எப்பவும் போக மாட்டல்ல ஹர்ஷா குட்டி?" என்று கடைசியாக நினைத்ததை மட்டும் தழுதழுக் குரலில் கேட்டுவிட்டார் அருணாசலம். அவர் குரலில் பதறிய ஹர்ஷா "ஐயோ தாத்தா! என்ன இது. நான் எதுக்கு உங்களை விட்டு போகப் போறேன் சொல்லுங்க. உங்க கூட கடைசி வரைக்கும் நான் இருப்பேன்" என்று அவர் கண்ணத்தை பிடித்து ஆட்டிக் கொண்டே கூறினான் ஹர்ஷா.

பல வருடங்களுக்கு முன்பாக கேட்ட இதே அர்த்தம் தந்த சொற்கள் தான் நினைவு வந்தது. "ஐயோ! என்ன டார்லிங். உங்களை விட்டுட்டு நான் எங்க போய்டுவேன். நீங்க நினைக்கிற நேரம் சிட்டா பறந்து வந்திடுவேன். உங்க கூட யார் இருந்தாலும் இல்லைனாலும் நான் கடைசி வரை இருப்பேன். இப்ப ஹேப்பியா!!" என்று முத்தம் தந்துவிட்டு புன்னகை முகமாய் கிளம்பி சென்ற அந்த முகம் இன்னும் அவர் கண்ணுக்குள் இருக்கிறதே!

அந்த எண்ணங்கள் தந்த அழுத்தத்தில் "ராம்!" என முனங்கியவர் ஹர்ஷாவின் கண்ணத்தை தடவியவாறே மயங்கி சரிந்தார் அருணாசலம். வீட்டு நபர்கள் அனைவரும் பதறி போயினர். சரிந்திருந்த அருணாசலத்தை தன் கைகைளில் ஏந்திக் கொள்ள நினைத்த போது தான் ஹர்ஷாவிற்கு தன் கை காயமே ஞாபகம் வந்தது.

எனவே விக்ரமை தூக்க சொல்ல அந்த மயக்க நிலையிலும் அருணாசலம் ஹர்ஷாவின் கையை இறுக்கமாக பிடித்திருந்தார். அவரை பரிசோதித்த ஹர்ஷா "லோ பிபி தான். கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டார் போல. ஆனா ஏன்னு தான் புரியலை. நாம சாதாரணமா தானே பேசிட்டு இருந்தோம்" என்று விக்ரமை பார்த்து கேட்க அவனும் "எனக்கும் ஒன்னும் புரியல மச்சான்!" என்றான்‌.

அருணாசலத்திற்கு ஒரு ஊசியை செலுத்திவிட்டு அவரை விட்டு வெளியே வந்து அவரவர் அறையை நோக்கி நகர்ந்தனர்.

அனைவரும் சென்றபின் ராஜசேகரை அழைத்த பார்வதி "அண்ணா! அப்பா மயங்கறதுக்கு முன்ன என்ன பேர் சொன்னாருன்னு கவனிச்சியா?" என்றாள் பரிதவிப்புடன். "ம்ம்" என்று அவர் தலை அசைக்கவும்

"அவரு மனசுக்குள்ளையே எல்லாத்தையும் போட்டுட்டு புழுங்கிட்டு இருக்காரு போல ண்ணே‌. நம்மக்கிட்ட கூட சொல்லுல பார்த்தியா?" என்றார் வருத்தமாக.

"இல்லமா அப்பா நம்ம கஷ்டப்படக் கூடாதுனு நினைச்சி இருக்கலாம். அவரு என்ன நினைக்கிறார்னு அவர் சொன்னா தானே தெரியும். விடுமா பாத்துக்கலாம்" என்று ஒரு பெருமூச்சை வெளியேற்றி சென்றார்.

தன் அறைக்கு வந்த ராஜசேகர் 'எதுக்கு ராம்னு சொல்லி ஹர்ஷாவை அப்பா கூப்பிட்டாரு? அவன் எப்படி பாட்டி மாதிரி இருக்கான்னு அப்பா சொல்லுறாரு?' என யோசித்தவர்‌ ஏதோ தோன்ற தன் சிறு வயது ஆல்பம் ஒன்றை அரை மணி நேரம் தேடி எடுத்தார்.

அதை திறந்து பார்த்தவர் அங்கே தன் அருகே தன் வயதொத்த ஒரு வாலிபன் முகம் முழுவதும் புன்னகை பூசி கம்பீரமாக நின்றிருப்பதை ஆசையாக கண்டார். ஹர்ஷாவின் தற்போதைய புகைப்படம் ஒன்றை கையில் எடுத்தவர் இரண்டையும் ஒன்றாக வைத்து பார்த்து அதிர்ந்து விட்டார்.

"இது எப்படி சாத்தியம்?" என குழம்பியவர் மனதில் "ஹர்ஷா என் பையன் மட்டும் தான்" என தோன்றிய கணமே அமைதி கொண்டு படுக்க சென்றார்.

மயக்கம் தெளிந்து எழுந்த அருணாசலமோ "ராம்! ராம்!" என தன் கையில் இருந்த புகைப்படத்தை கண்டு கண்ணீர் விட, அதில் ஹர்ஷாவை உரித்து வைத்த உருவத்தில் ஒரு வாலிபன் சிரித்துக் கொண்டிருந்தான்.
____________________________________________

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஜெட் வேகத்தில் நகர ஆரம்பித்தது. ஹர்ஷாவின் திருமணத்தின் வேலைகளும் துவங்கியது. தோளில் உள்ள காயம் ஆறும் பொருட்டு ஹர்ஷா அதிகம் அலையாது விக்ரம் அபியே அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டனர்.

இதில் ஹர்ஷா வேதாசலத்தோடு சென்று ஏ.சி அலுவகத்தில் ஒரு கம்ப்லைன்ட்டும் கொடுத்து வந்திருந்தான். அவர்கள் ஒருபுறம் ஹர்ஷாவை கொலை செய்ய முயற்சி செய்தது யார் என தேடிக் கொண்டிருந்தனர்.
ஆனால் யாரும் அறியாமல் ஹர்ஷா தன் தனியார் டிடெக்டிவ் நண்பர் ஒருவரிடம் இதை ஒப்படைத்தும் இருந்தான்.

மருத்துவமனைக்கு ஹர்ஷா செல்லாத நாட்கள் ராஜசேகர் பொறுப்பெடுக்க ஹர்ஷா முழு ஓய்வில் இருக்கிறான் இப்போது. பார்வதியிடமும் அருணாசலத்திடமும் சின்ன விபத்து என்று மட்டும் சொல்லிட அதற்கே பார்வதி அழுது ஆர்ப்பாட்டம் செய்து திட்டி தீர்த்துவிட்டார் அனைவரையும் ஏன் தன்னிடம் சொல்லவில்லை என்று.

அதே நேரம் அவர் மனதில் பல நாட்களாக இந்த திருமணத்தில் இருக்கும் நெருடல் பலமானது. அதற்காக அவர் அனு வந்த நேரம் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என எண்ணவில்லை. மாறாக இந்த திருமணம் நடந்தால் இந்த வீட்டில் ஏதாவது தவறு நடந்து விடுமோ என்று தான் அஞ்சினார்.

அருணாசலமும் பதறியவர் அதன்பின் அவனை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை காயம் ஆறும் வரை. இது தான் சமயம் என ஹர்ஷாவிடம் தன் சமையல் யுக்திகளையும் இறக்கி கொண்டிருக்கிறார் பார்வதி.

ஹர்ஷாவிற்கு வேலையே இல்லாததால் தன் வருங்கால மனைவியோடு தினமும் கடலை வறுக்கும் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறான். அதேபோல் குடும்பத்தில் உள்ளவர்கள் தன் மீது கொண்ட பாசம் எப்போதும் போல் இப்போதும் அவனை பூரிக்க தான் வைக்கிறது.

ஹர்ஷாவின் காயம் ஒரு மாதத்தில் ஆறிவிட நேரே மருத்துவமனை கிளம்ப சென்றவனை அழைத்து "இன்னும் பத்து நாள்ல உனக்கு மேரேஜ். பங்ஷன் முடிஞ்சு பத்து நாள் கழிச்சு நீ ஹாஸ்பிடல் வந்தா போதும். புரியுதா! போ போய் ரெஸ்ட் எடு. இல்லனா என் மருமகக் கிட்ட பேசு. போடா" என்றார் ராஜசேகர்.

"என்னப்பா நீங்க!" என செல்லமாக அலுத்துக் கொண்டாலும் அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வீட்டிலே இருந்துவிட்டான்.

ஹாலில் அமர்ந்திருந்த ஹர்ஷாவிற்கு போரடிக்க அனுவிற்கு செய்தி அனுப்பும் வேலையை தொடங்கினான். "அனு ஆன்லைன் வாடி!" என செய்தியை அனுப்பிவிட்டு வாட்ஸ்அப் சென்றான்‌.

"ப்ச்! நான் காலேஜ்ல இருக்கேன் ஹர்ஷா. பிளீஸ்பா அப்புறம் சேட் பண்ணலாம்" என்ற அனுவை "என்னடி இது உனக்கு இன்னுமா ஸ்டடி ஹாலிடே விடலை. டென் டேஸ்ல நமக்கு மேரேஜ், ஆனா கொஞ்சம் டைம் கூட நீ எனக்காக ஸ்பெண்ட் பண்ண மாட்டியா?" என்று கோபம் போல் எமோஜி ஒன்றை தட்டிவிட அனு சேட் செய்ய வந்துவிட்டாள்.

"நாளைல இருந்து லீவ் தான் ஹர்ஷா. சாரி சாரி!!" என பாவமான எமோஜி ஒன்றை பதிலுக்கு அனுப்ப "ஓகே ஓகே! லீவ் இட்" என்றவன் "அப்புறம் முகத்துக்கு பெயிண்ட் பண்ண போகனும்னு சொன்னியே எப்போ போற?" என்று வழக்கம் போல் வம்பிழுக்க ஆரம்பித்தான்.

அது என்னவோ அனுவிடம் பேச ஆரம்பித்தால் வம்பிழுக்க தான் வந்தது ஹர்ஷாவிற்கு. "ப்ச்! அது ஃபேசியல். ரொம்ப ஓட்டாதீங்க இன்னும் டென் டேஸ் தான் முகம் பளிச்சுன இருக்க வேண்டாமா?" என்றாள் நியாயமாக.

"இதைவிட முகத்தை பிரைட் ஆக்க நான் ஒரு ஐடியா சொல்லட்டா?" என்று விஷமமாக கேட்டான். அதை புரியாத அனு "என்ன எதுவும் நேச்சுரல் மெத்தெட் சொல்ல போறீங்களா?" என பதிலுக்கு அப்பாவியாக கேட்டு வைக்க

"ஆமா ஆமா நேச்சுரல் மெத்தெட் தான் பேபிமா! ஆனா அதுக்கு நான் பக்கத்தில இருக்கனுமே" என்றவனின் பேச்சு இப்போதும் அனுவிற்கு புரியவில்லை. "நீங்க பண்ணிவிட போறீங்களா என்ன? இது கூட உங்களுக்கு தெரியுமா? அப்ப ஓகே நீங்க சொல்லுங்க அதையே பண்ணிடலாம்" என்று ஒரு ஆர்வத்தில் அனுப்பி வைத்து விட்டாள்.

அதை படித்த ஹர்ஷாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. "ஹையோ!! நீ பேபி தான்டி" என மனதில் நினைத்தவன் "நைட் வீடியோ கால் வா சொல்றேன். இப்போ பாய்" என சேட்டை முடித்துக் கொண்டான்.

சிரிப்புடன் நிமிர்ந்த ஹர்ஷாவிற்கு தன்னை மூச்சு வாங்க நின்று பார்த்திருந்த விக்ரமை கண்டு திக்கென்றது."ஏன்டா எருமை! வந்தா கூப்ட மாட்டியா? இப்படி தான் பேய் மாதிரி நின்னு மனுஷன் பிபிய ஏத்துவியா?" என ஏகத்துக்கும் எகிற

"ஏன்டா கொற மாசத்துல பிறந்த மலை கொரங்கே! இப்படி தான் நின்னு என் அண்ணா ஹார்ட் பீட்ட ஏத்துவியா" என்று ஹர்ஷாவிற்கு பரிந்து பேசி இன்னும் விக்ரமை ஏத்தி விட்டான் அபிமன்யு.

"அண்ணனுக்கும் தம்பிக்கும் என்னை பார்த்தா எப்படிடா தெரியிது பேக்கு மாதிரியா" என மூச்சு வாங்கியபடி விக்ரம் கேட்க "ஆமா!" என்றான் அபி வேகமாக. "டேய்..! நீ பேசாத.. நீ பேசாத" என்று அபியிடம் பல்லை கடித்தான் விக்ரம்.

"என்னதான்டா உன் பிரச்சினை சொல்லி தொலை. அதை விட்டுவிட்டு ஏன் கத்திட்டு நிக்கிற" என்ற ஹர்ஷாவிடம் "ஏன்டா பேசமாட்ட! உனக்கு என் தங்கச்சி கிட்ட கடலை போடவே நேரம் பத்துல‌. இதுல என் புலம்பல் உனக்கு கத்துர மாதிரி தான் கேக்கும்" என்று வராத நீரை கண்ணில் இருந்து துடைக்க,

'பெரிய ஆக்டிங் கிங்ன்னு மனசுல நினைப்பு! என்னமா நடிக்கிறான். இவன் ஆக்டிங்கு தாங்க முடியலைடா எப்பா!' என்று மனதில் நினைத்த அபி வெளியில் முறைத்து வைத்தான்.

அதே முறைப்போடு "எப்பா சாமி! உன் சிவாஜி கணேசன் ஆக்டிங் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு விஷயத்தை சொல்லு விக்ரம் அத்தான்" என்றான் அபி. அதில் அவனை நோக்கி "எல்லாம் உன்னால தான்டா, வளர்ந்த வண்டலூர் வரிக்குதிரையே!" என்றான் விக்ரம் கோபமாக.

"எதே! என்னாலையா. யோவ் அத்தான் யார பார்த்து வரிக்குதிரைனு சொல்ற. காவால உழுந்த காக்கா மாதிரி இருந்துட்டு என்னை சொல்றியா. எதாவது நல்லா சொல்லிட போறேன். நான் என்ன செஞ்சேன். என்ன உன் தங்கச்சிய இழுத்துட்டா ஓடிட்டேன்" என வேண்டுமென்றே விக்ரமிடம் வம்பிழுத்தான்.

இவர்கள் சண்டையை சிரிப்புடன் பார்த்து பின் "அபி இரு. பர்ஸ்ட் விக்ரம் என்ன சொல்றான்னு கேட்போம். சொல்லு மச்சான் என்னடா உன் பிரச்சினை?" என்றான் ஹர்ஷா கடைசியாக

விக்ரம் "மச்சான் உன் தம்பி ரொம்ப பண்றான் டா. அம்முவ விட்டு கொஞ்சம் தள்ளியே இருக்க சொல்லு. இப்ப தான் அவ பர்ஸ்ட் இயரே முடிக்க போறா. இன்னும் நாலு வருஷம் இருக்கு அவ யூ.ஜி முடிக்கவே.

ஆனா உன் தம்பி போற வேகத்தை பார்த்தா எனக்கு முன்னாடியே அவன் கல்யாணத்தை முடிச்சிருவான் போலடா. நீ ஒருபக்கம் போன்ல ரொமேன்ஸ ஓட்டுற. உன் தம்பிகாரன் நேர்லையே ரொமேன்ஸ் பண்ணி என் வயித்தெறிச்சலை கிளப்புறான்.

ஒரு சிங்கிள் பையன் இருக்க இடத்துல‌ ஏன்டா இப்படி பண்ணி இம்சைய கூட்டுறீங்க" என்றான் ஒரு மூச்சாக. அவன் குரலில் இருந்தது அம்மு மீதான அவனின் அக்கறை கொஞ்சம் மற்றும் அபி மீதான கடுப்பு அதிகம் இருப்பது ஹர்ஷாவிற்கு புரிந்தது.

அதேபோல் ஹர்ஷாவிற்கு அவன் தம்பியையும் நன்றாக தெரியுமே. அபி விக்ரமை வம்பிழுக்க தான் ஏதோ செய்ய போக அதற்கு தான் விக்ரம் எகிறுகிறான் என்றும் புரிந்தது.

உண்மையும் அதுதான். என்று அபியின் காதலை விக்ரம் ஹர்ஷாவின் மூலம் கேட்டானோ அன்றிலிருந்து விக்ரம் அவன் அருகில் வரும் நேரம் அம்முவை உரசிக் கொண்டு அவளை கொஞ்சிக் கொண்டு என தன்னால் முடிந்த அளவு அவனை வெறுப்பேற்றி அனுப்புவான்.

ஆனால் இன்று உண்மையாகவே அம்முவின் கண்ணில் விழுந்த தூசியை தான் ஊதிக் கொண்டிருந்தான் அபி. அதை கண்டு அபி அம்முவிற்கு முத்தமிடுவதாக தவறாக எண்ணியே மூச்சு வாங்க வந்து பேசுகிறான் விக்ரம். "ஏன்டா?" என்று அபியை பார்த்து கேட்ட ஹர்ஷா விக்ரமை தன் அருகே இழுத்து அமர வைத்தான்.

"மச்சான்! உனக்கு என் தம்பியை பத்தி நல்லா தெரியும் தானே. அவன் உன்னை வம்பிழுக்க தான் எதாவது பண்ணிருப்பான். மத்தபடி அவன் அப்படி எல்லாம் அம்முவ டிஸ்டர்ப் பண்ற ஆளா சொல்லு" என்று தன்மையாக பேச,

அபியோ "அண்ணா உனக்கு எதாவது ஸ்டமக் பர்ன் ஆகுற ஸ்மெல் வருதா?" என விக்ரமை சுட்டி கிண்டல் அடிக்க "வேணாம் அபி என்னை கடுப்பேத்தாத" என இவனும் எகிற, இவர்கள் இப்படி அடித்துக் கொள்ளும் நேரம் வந்து சேர்ந்தாள் அம்மு.

"அம்மு இங்க வாடா!" என்று சும்மா சென்றுக் கொண்டிருந்த அம்முவை ஹர்ஷா அழைக்க "என்ன அத்தான்?" என்றவாறு அம்முவும் வந்தாள். "என்னடா எங்கையோ வெளிய கிளம்பிட்ட போல?" என்றான் ஆதிரை கிளம்பி வந்ததை கண்டு.

அதில் தன் பையில் எதையோ சரிப்பார்த்தவள் "ஆமா அத்தான். உங்க மேரேஜ் ஷாப்பிங் தான். நிறைய திங்க்ஸ் வாங்க வேண்டியது இருக்கு. சோ கிளம்பிட்டேன்" என்றுவிட்டு "ஏன் அத்தான் யாராவது என்கூட துணைக்கு வரப்போறீங்கலா" என்றாள் குறும்பாக.

ஏனென்றால் அம்மு ஷாப்பிங் என்று வந்துவிட்டாள் காலை சென்றால் இரவு கடையை மூடும் வரை தேடி வாங்கும் ரகம். அவள் கேள்வியில் சுதாரித்த அபி முன் அறிவிப்பாக "எனக்கு கொஞ்சம் வொர்க் அப்பா தந்திருக்காரு அம்மு.

உன் அண்ணா தான் சும்மா இருக்கான். நீ வேணும்னா அவனை கூட்டிப் போவேன்" என விசமமாக விக்ரமை மாட்டிவிட்டு சென்றுவிட்டான். அதில் திடுக்கிட்ட விக்ரம் இதுவரை இருந்த கடுப்பை கடாயில் கடாசிவிட்டு,

தன் கைப்பேசியில் வராத அழைப்பை வந்ததாக பேர் செய்தவன் "ஹலோ! ஓ முக்கியமான வேலையா! இதோ உடனே கிளம்பிட்டேன்" என்று தானாக பேசிவிட்டு "ஆபிஸ்ல இருந்து ஒரு முக்கியமான கால் மச்சான். நான் உடனே போகனும். வரேன்டா‌" என அவசரமாக சொல்லிவிட்டு வெளியே வந்து தன் காரில் ஏறியவன்

"ஹப்பாடா" என பெருமூச்சு ஒன்றை விட்டு "எனக்கு தான் பிரண்டா வந்ததும் சரியில்லை, கூட பிறந்ததும் சரியில்லை. இதுல பொண்டாட்டியா வரப்போறது எப்படி இருக்க போவுதோ?" என புலம்பியபடியே வண்டியை எடுத்து சென்றான்.

இடையில் குறுக்கிட்ட அவன் மனசாட்சி "முதல்ல உனக்கு பொண்டாட்டினு ஒருத்தி வராளான்னு பாரு மகனே. அப்புறம் பேசு" என கேலி செய்ய "நீ மூடிட்டு கிட! அதெல்லாம் கண்டிப்பா வருவா" என கடுப்புடன் சொல்லி சென்றான்.

இங்கே அபி விக்ரம் இருவரும் விழுந்தடித்து ஓடியதை கண்டு சிரித்த ஹர்ஷா "பாருடா அம்மு! நீ கிண்டல் பண்ணுறத கூட புரிஞ்சுக்காம ரெண்டு பேரும் ஓடுறானுங்க . நீ அப்படி பயமுறுத்தி வச்சிருக்க போல" என்றான். அதில் தானும் சிரித்த அம்மு "நான் என்னத்த சொல்றது அத்தான்.

எனக்கு விதிச்சது அவ்ளோ தான்" என சலிப்பு போல் கூறி சென்றாள். ஆனால் அபியை 'ஓடவா செய்ற. போய்ட்டு வந்து உன்னை பேசிக்கிறேன் அத்தான்' என்று மனதில் அவனை கருவிக் கொண்டே சென்றாள் அம்மு.
____________________________________________

"மீனாட்சி ஷராக்கு இன்னொரு பூரி வைமா. அவளுக்கு பூரினா ரொம்ப பிடிக்கும்ல" என்ற விஸ்வநாதனை வியந்து தான் பார்த்திருந்தனர் குடும்பத்தினர். விஸ்வநாதனின் நடத்தை இந்த ஒரு மாதமாக இப்படி தான் இருக்கிறது.

அனுவின் சிறு சிறு ஏக்கத்தை கூட நிவர்த்தி செய்யும் விதமாக தான் நடக்கிறார். ஏன் திருமண உடைகள் எடுக்கும் நேரம் அனுவை அழைத்து சென்றவர் "உனக்கு இந்த புளு கலர் நல்லா இருக்காதுடா இந்த அரக்கு கலரை பாரேன் நல்லா பொறுத்தமா இருக்கும்" என்று பார்த்த அனைவரின் நெஞ்சிலும் பூமி அதிராமலே நிலநடுக்கத்தை வரவைத்து விட்டார் மனிதர்.

ஆனால் அதேசமயம் ரித்து கேட்ட லெஹாங்காவை வாங்கி தரவும் மறுத்து "புடவை வாங்குறதுனா வாங்கு இல்லை தாவணி வாங்கிக்கோ. ஆனா இந்த லெஹாங்காலா வேணாம்" என்று கறாராக சொல்லிவிட்டார். இப்போது அவரை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தோன்றவில்லை அனுவிற்கு.

'அவர் கூறுவதும் நம் நல்லதிற்கு தானே' என மனதார உணர முனைகிறாள் அனு‌. சாப்பிட்டு முடித்த அனு அனைவரிடமும் சொல்லிவிட்டு தன் அறை நோக்கி சென்று தன் கைப்பேசியை எடுக்க,

அதே நேரம் ஹர்ஷாவிடன் இருந்து "வீடியோ கால் எடு" என்ற செய்தியும் வந்து சேர்ந்தது. அதே போல் அவனின் அழைப்பை ஏற்றவுடன் அனு "ஹர்ஷா நானே உங்ககிட்ட பேசனும்னு தான் வந்தேன். கரெக்ட்டா நீங்களே கால் பண்ணீட்டிங்க.

சொல்லுங்க சொல்லுங்க என்ன நேச்சுரல் மெத்தெட் யூஸ் பண்ணா பேஸ் பிரைட் ஆகும். அம்மா கூட என்னன்னு கேட்டு வச்சு செஞ்சு பார்க்க சொன்னாங்க" என்றாள் ஆவலாக. இதுவரை உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டிருந்த ஹர்ஷா அனு இவ்வாறு சொல்லவும் திடுக்கிட்டு,

"ஏய் அனு! என்னடி சொல்ற? அத்தைகிட்ட போய் என்னத்த சொல்லி தொலைச்ச?" என்றான் படபடப்பாக. அவனை விசித்திரமாக பார்த்த அனு "அதான் நீங்க சொன்னீங்களே! நேச்சுரல் மெத்தெட்ல பேஸ நல்லா பிரைட் பண்ணலாம்னு. இன்னைக்கு ஃபேசியல் பண்ணிட்டேன். அதோட அம்மா உங்ககிட்ட கேட்டுட்டு நீங்க சொல்றதையும் செய்ய சொன்னாங்க" அவ்வளவு தான் எனும் விதமாய் சொல்லி முடித்தாள் அனு‌.

அவள் பதில் கேட்டு தன் தலையிலேயே அடித்துக் கொண்ட ஹர்ஷா "ஏன்டி! நாம எது பேசினாலும் அப்படியே போய் உன் அம்மாட்ட ஒப்பிச்சு வச்சிட்டு தான் அடுத்த வேளை பார்ப்பியா?" என்றான் கடுப்பாக.

அவனின் கடுப்பு புரியாமல் "ஆமா! நான் சின்ன வயசுல இருந்தே அப்படி தான். ஸ்கூல் காலேஜ்லனு எது நடந்தாலும் அப்படியே வந்து அம்மாட்ட சொல்லிடுவேன். அப்புறம் நீங்க சொன்னதுல என்ன தப்பு இருக்கு. அதான் இதை அம்மாவோட ஷேர் பண்ணிட்டேன்" என்றாள் அப்பாவியாய்.

அவளின் இந்த அப்பாவி தனத்தை பார்த்து "நீ உண்மையாவே பேபி தான்டா குட்டிம்மா" என்றான் ஆதூரமாக. "சரி சரி பேச்சை மாத்தாம அந்த டிப்ப சொல்லுங்க" என்று சிணுங்கினாள்.

இதுவரை ரசனையை பூசியிருந்த ஹர்ஷாவின் முகம் விசமத்தை ஏந்தியது. "அது.. பேபி" என்றான் ஹஸ்கி குரலில். "ம்ம் சொல்லுங்க" எனும் அனுவின் குரலிலும் மென்மை சேர்ந்தது.

ஆனால் மேலே எதுவும் கூறாத ஹர்ஷா தன் விரல் கொண்டு திரையில் தெரிந்த அனுவின் நெற்றியில் இருந்து வருட தொடங்கி அவள் உதட்டில் வந்து நிறுத்திவிட்டு அவளை பார்க்க அனுவிற்கு வயிற்றினுள் பட்டாம்பூச்சிகள் பறந்தன.

இப்போது தொடுதிரையில் தெரிந்த அனுவின் முகம் நோக்கி குனிந்த ஹர்ஷா அவளுக்கு முத்தமிட, ஹர்ஷா நேரிலே முத்தம் கொடுத்ததை போல் விதிர்த்து போனாள். "என்ன பண்றீங்க?" என்ற அனுவின் குரல் வெளியே வரவில்லை.

"பேபி அப்படியே எழுந்து போய் கண்ணாடிய பாரேன்" என்றான் மாறாத அதே குழைந்த குரலில். அதிர்வில் இருந்த அனுவோ ஹர்ஷா கூறியதை அப்படியே செய்தாள். "முகத்தை தூக்கி கண்ணாடிய பாரேன். உன் பேஸ் எப்படி ஃபிளஷ் ஆகி பிங்கா இருக்கு பாரேன்" என்றான் ரசனையாய்.

அப்போது கண்ணாடியை நிமிர்ந்து பார்த்த அனு இன்னும் வெட்கி சிவந்தாள். "அனுமா இது என்னடா பெரிய விஷயம், நீ மட்டும் என் கூட வந்து சேருடா. அப்புறம் பாரு என் கைக்குள்ள நீ இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் இதே மாதிரி நீ சந்தோஷமா பிரைட்டாவே இருக்க போற பாரு" என்றவனின் வரிகளில் அவள் மனதிற்குள் ஒரு சிலிர்ப்பு ஓடி அடங்கியது.

இவர்கள் இப்படி தங்கள் நேரத்தை இங்கே இனிமையாக கடத்த அங்கே அம்முவின் கையில் சிக்கியிருந்த அபிமன்யுவோ முழி பிதுங்கி போய் நின்றிருந்தான். "அபி அத்தான்! உங்களுக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது? காலைல நான் சும்மா விளையாட்டுக்கு ஷாப்பிங்கு கூப்டா என்னமோ பேய பாத்த மாதிரி ஓடுறீங்க.

அப்போ உங்களுக்கு என் மேல உண்மையா லவ் இல்ல" என அவனை லெஃப்ட் அன்ட் ரைட் விலாசிக் கொண்டிருந்தாள். தான் காலையில் செய்த சிறு தவறு இப்படி விஸ்வரூபம் எடுக்கும் என அறியாத அபி "ஐயோ! அம்முமா.

நான் சும்மா உன் அண்ணன கிண்டல் பண்ண தான் அப்படி செஞ்சேன். என்னை பத்தி உனக்கு தெரியாதா? ம்ம் நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு உனக்கு தெரியாதா செல்லம்" என்று ஏதேதோ பேசி காலில் விழாத குறையாக கெஞ்சி சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

ஆனால் இங்கே நடப்பவற்றிக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் என குறட்டை விட்டு நிம்மதியாக தூங்கி கொண்டிருந்த விக்ரமை கண்டு 'முடிஞ்ச அளவு இப்பவே தூங்கி நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ செல்லம். ஏனா உனக்கு ஒரு பெரிய ஆப்பா நான் ரெடி பண்ணிட்டே இருக்கேன்' என அவனை நக்கலாக சிரித்து சென்றது விதி!!

-மீண்டும் வருவான்
 
Top