All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "ரகுக் குல கர்ணா" - கதை திரி

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 15

தன்னை பார்க்க வந்த கடைசி நோயாளியை பார்த்து முடித்த அகிலன் தன் பொருட்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

டாக்டர் அகிலன் தற்போது வேறு ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஹர்ஷாவின் மருத்துவனையில் இருந்து வெளியே வந்த சில நாட்கள் பின்னர் இந்த புது மருத்துவமனையில் சேர்ந்து கொண்டான்.

அந்நேரம் அலறியது அவன் கைப்பேசி. "ஹலோ! டாக்டர் அகிலன் ஹியர்!" என்றான் அகிலன் நடந்துக் கொண்டே. அந்த புறம் மௌனமே நீடித்திட "ப்ச்! யாருங்க அது. போன் பண்ணீட்டு பேசாம இருக்கீங்க" என்று கடுகடுத்தான்.

அப்போதும் எதிர்ப்புறம் அமைதி நீடிக்கவே கோபமாக அழைப்பை அணைக்க போக "டாக்டர். அகிலன் உங்கள அவமானபடுத்தின ஹர்ஷவர்தனை பழிவாங்க நல்ல ஒரு சான்ஸ் வந்திருக்கு. நான் சொல்றத கேட்டீங்கனா அவனை சாச்சிடலாம். என்ன சொல்றீங்க!" என்றது அக்குரல்.

முதலில் அகிலனுக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. "என்னங்க உலறீட்டு இருக்கீங்க. நீங்க யாரு அதை பர்ஸ்ட் சொல்லுங்க" என்றான் கடுமையாக.

"நான் யாருன்றது முக்கியமில்லை அகிலன்‌. ஹர்ஷவர்தன் உங்களை அவமானபடுத்தினது உண்மை தானே?" என்று கேள்வியாக இழுக்க அகிலன் கேட்டுக்கொண்டானே ஒழிய எதுவும் பேசினால் இல்லை.

"உங்களை அசிங்கப்படுத்தின அந்த ஹர்ஷவர்தன ஏதாவது செய்யனும்னு உங்க மனசில கோபம் இருக்கு தானே! அதை முதல்ல சொல்லுங்க" என்றவரின் குரலில் இருந்த வன்மம் கேட்போரை பயக்க வைக்கும் வண்ணம் இருந்தது.

ஆனால் அகிலன் வாயை திறந்து என்னவென்று கேட்கவில்லை. "என்ன டாக்டர் எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க. ஓஓ‌... புரியுது புரியுது. திடீர்னு ஒருத்தன் போன் பண்ணி இப்படி பேசுனா உங்களுக்கு எதுவும் தோனாது தான்.

சோ உங்களுக்கு வேணும்ற அளவு நல்லா யோசிங்க. ஆனா அவனை பழிவாங்கனும்னு நினைச்சீங்கனா உடனே என்னை கான்டாக்ட் பண்ணுங்க. நான் உங்களுக்கு கண்டிப்பா உதவி பண்ணுவேன். இதே நம்பர்க்கே கால் பண்ணுங்க. சரி நான் வச்சிடவா டாக்டர்!" என்று அகிலன் பதிலை எதிர்ப்பாராது வைத்துவிட்டது எதிர்புறம்‌.

அகிலனுக்கு 'என்னடா இது' என்றாகிவிட்டது. ஆனால் அதே நேரம் அவனுக்கு ஹர்ஷாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமும் மனதில் ஒரு மூலையில் இருந்தது என்பதும் உண்மையே!

'ம்ம் இந்த ஹர்ஷா ஊர் பூரா பகை சம்பாதிச்சு வச்சிருப்பான் போலையே. நமக்கு என்ன வந்தது. இதை அப்புறம் பார்த்துக்கலாம்' என்று எண்ணியபடி வீட்டிற்கு நடையை கட்டினான்.
-------------------------------------------------

"ஐயோ அத்தை! முடியலை பிளீஸ் விட்டுடுங்க. என்ன பார்த்தா பாவமா இல்லையா. இந்த ஸ்வீட் எல்லாத்தையும் எடுத்திருங்களே அத்தை" என்று பார்வதியிடம் கெஞ்சி கொண்டிருந்தான் ஹர்ஷா.

"ஹர்ஷா குட்டி இலைல வச்சதை எடுக்க கூடாதுடா கண்ணா. இதை மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டிருடா" என வாஞ்சையாய் அவன் தலையை தடவி சென்றார்.

இன்று ஹர்ஷாவின் நலக்கு நிகழ்ச்சி. அதில் தான் ஹர்ஷாவை உண்ண வைத்தே அவன் குடும்பத்தினர் கொடுமைப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இதையெல்லாம் அருகில் அமர்ந்து பார்த்த விக்ரம் "ஹாஹாஹா மச்சான். இந்த மாதிரி நலங்கு எல்லாம் வாழ்க்கைல ஒரு முறை தான் வைப்பாங்க. சோ எஞ்சாய்!" என்றான்‌.

அவனை பாவமாக பார்த்த ஹர்ஷா "அதுக்கு இப்படியாடா சாப்பிட வச்சே கொல்லுறது" என்றான். ஹர்ஷாவின் காதை நோக்கி குனிந்த விக்ரம் "மச்சான்! இப்பவே நல்லா சாப்டு எனர்ஜி ஏத்திக்கோ. ஆப்டர் மேரேஜ் எல்லா எனர்ஜியும் தேவைப்படும்" என்று கூறி விசமமாக கண் அடித்தான்.

விக்ரம் முதுகில் நான்கு அடி வைத்த ஹர்ஷா "உனக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தி ஆகிருச்சுடா. உன் வாயை அடக்க ஒருத்தி வரதான் போறா பாரு. அவக்கிட்ட நீ சிக்கி சிங்கி அடிக்க போறத நான் பார்க்க தானே போறேன்.

அப்போ நான் பேசிக்கிறேன்டா உன்கிட்ட. இது என் சாபம்டா இந்தா பிடி!" என அவனை வாரினான். இதை கேட்ட அபியும் "ஆமாமா விக்ரம் அத்தான்! உனக்கு வரப்போற எங்க சிஸ்டர் சும்மா ஜாக்கி சான் சிஸ்டர் மாதிரி உன்னை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிறதை நாங்களும் பார்க்க தானே போறோம்" என்றான் சிரித்தபடியே.

"அடேய் பப்பல்லோ மண்டையாஸ்! ஏன்டா ஏன்டா இப்படி சாபம்லாம் தரீங்க. என்னை பார்த்த பாவமா இல்லையா" என அப்பாவியாக வினவ

அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்த ஹர்ஷாவும் அபியும் "இல்லை" என கோரசாக கூற "கலிகாலம்டா! கடவுளே என்னை மாதிரி அப்பாவி இந்த விஷக் கிருமிகளுக்கு மத்தியில‌ உயிரோட இருக்கிறதே பெரிய சாதனை தான் போல‌. ம்ஹூம்" என வானத்தை பார்த்து கையை ஏந்தி புலம்பிட,

அந்த இடைவெளியில் ஹர்ஷா தன் இலையில் இருந்த இனிப்புகள் உணவு என கொஞ்சத்தை எடுத்து விக்ரம் கவனிக்காத வண்ணம் அவன் இலையில் வைத்து விட்டு ஒன்றும் அறியாதவன் போல் சாப்பிட்டு எழுந்து விட்டான்.

"ஆத்தா! மாரியாத்தா! இந்த பக்கி‌ பைலுங்க சாபம் எல்லாம் என்னைய எதுவும் பண்ணவிடாம உன் புள்ளைய பார்த்துக்க ஆத்தா!" என ஒருவழியாக வாய்விட்டு புலம்பி தள்ளிவிட்டு இலையை பார்த்தவன் திகைத்தான்.

"எம்மோவ்!" என ஹைப்பிச்சில் கத்தி பார்வதியை அழைத்து "எதுக்கு மறுபடியும் சாப்பாடு ஸ்வீட் எல்லாம் வச்சிருக்கீங்க. என்னை கேட்டுட்டு வைக்க மாட்டிங்கிளா" என கத்த அவனை புரியாது பார்த்த பார்வதி "டேய் மடையா! நான் எங்கடா வச்சேன். கேனத்தனமா பேசிக்கிட்டு. சாப்பிட்டு இடத்தை காலி பண்ணுடா முதல்ல" என திட்டிவிட்டு சென்றார்.

அதை கேட்டு "என்னடா இது நமக்கு வந்த சோதனை!" என முழித்துக் கொண்டு சாப்பிட முடியாமல் சாப்பிட்டு எழுந்து சென்றான் விக்ரம்‌. இதையெல்லாம் பார்த்திருந்த அபியும் ஹர்ஷாவும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

ஹர்ஷாவின் முகத்தில் இருந்த சிரிப்பை வாஞ்சையுடன் பார்த்த அருணாசலம் "நீ எப்பவும் இதே சிரிப்போட நூறு வயசு இருக்கனும் குட்டி" என்றிட "நூறு வயசு போதுமா தாத்தா நான் ஒரு இருநூறு வயசுல பிளான் பண்ணிருக்கேன்" என கிண்டல் செய்ய

"அப்போ நானு" என தலையை நீட்டினான் அபி. அவன் தலையிலும் கைவைக்க "நீயும் சந்தோஷமா நூறு வயசு வாழ்வடா கண்ணா" இதை தானே தாத்தா சொல்ல போறீங்க என அருணாசலத்தின் குரலில் பேசி அவரை பார்த்து கண்ணடித்தான் அபி.

இருவரின் கிண்டலை கண்டு அபி ஹர்ஷாவின் காதை திருகிய ராஜசேகர் "சேட்டை கூடிப் போச்சுல இரண்டு பேருக்கும். தாத்தாவையே கிண்டல் செய்றீங்க. அவர் என் அப்பாடா நானே அவரை கிண்டல் செஞ்சது இல்லை‌. நீங்க பண்றீங்களா" என்ற அவரின் கூற்றை கேட்ட பார்வதி

"என்ன ண்ணா! பசங்களோட சேந்து நீயும் இப்படி ஆகிட்ட. இப்ப பசங்க அப்பாவ கிண்டல் பண்ணது தப்புங்கிறியா இல்ல நீ கிண்டலே பண்ணலைன்னு வருத்தப்படுறியா?" என்றார் மேலும் வம்பிழுக்கும் பொருட்டு.

"அத்தை ரொம்ப பீல் பண்ணுனீங்கனா நீங்களும் வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க. ஏன் எங்க அப்பாவ வாருறீங்க" என அவரையும் சேர்த்து வம்பு செய்துக் கொண்டிருந்தான் அபி.

இப்படி ஹர்ஷாவின் வீடு மகிழ்ச்சி நிறைந்து காணப்பட்டது. தன் குடும்பத்தினரின் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் மனநிறைவுடன் பார்த்த அருணாசலம் இவர்கள் எப்போதும் இப்படியே இருக்க வேண்டும் என மனதிற்குள் கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.


ஆனால் அதற்கு இடையூறு விளைவிக்கும் முனைப்பில் ஒருவன் அங்கே தீவிரமாக திட்டம் தீ‌ட்டிக் கொண்டிருப்பதை அறியாமல் போயினர் அருணாசலம் குடும்பத்தார்.

------------------------------------------------

"என்னடா ஆச்சு?" என்று உறுமலாக சீறினார் ராம் தன் முன்னால் நின்று கையை பிசைந்து நின்றிருந்த இரண்டு தடியன்களை கண்டு.

"அது ண்ணே! அது..." என அந்த இருவரும் திணற "என்னன்னு சொல்லி தொலைங்கடா" என்று மீண்டும் சீறினார்‌. அதை கண்டு எச்சிலை கூட்டி விழுங்கிய அவர்கள் இருவரும் "அது அந்த டாக்டர் இன்னும் போன் பண்ணல ண்ணே" என்றனர் திணறலாக.

"என்னடா இன்னுமா அவன் போன் பண்ணலை. நீங்க ஒழுங்கா பேசுனீங்களா இல்லையாடா?" என கேட்க "என்ன ண்ணே இப்படி சொல்லிட்டீங்க. நாங்க பேசுன பேச்சுக்கு அவன் இன்னேரம் உங்க கூட கூட்டணி வச்சிருக்கனும்.

ஏன் இன்னும் போன் போடலைன்னு தான் ஒன்னும் விளங்க மாட்டேங்குது" என்ற அந்த இருவரில் ஒருவன் கூறி தாங்கள் பேசியதை அப்படியே சொல்லிவிட்டான்.

அவர்கள் கூறியதை கேட்டு யோசித்த ராம் 'ஏன் இன்னும் அவன் போன் பண்ணலை. அவனை வச்சு காய நகத்தலான்னு எல்லா பிளானையும் போட்டா இப்படி ஆகுதே!

கல்யாண நாள் வேற நெருங்குது. என்ன பண்ண போற ராம். அந்த ஹர்ஷா தனியா இருக்கும் போதே அவனை ஒன்னும் பண்ண முடியலை. இதுல அந்த விஸ்வநாதன் கூட சேர்ந்துட்டா அவ்ளோ தானே.

இப்ப என்ன பண்றது. ஒன்னும் புரியலையே. ச்சோ!' என்று கடுப்பில் சுவற்றில் குத்திக் கொண்டான். ராம் ஹர்ஷா அவன் நினைத்த நபரின் சாயலை கொண்டிருந்ததாலே முதலில் கொல்ல முயன்றார்.

ஆனால் என்று ஹர்ஷா விஸ்வநாதனின் மருமகனாக ஆகப் போகின்றான் என அறிந்தாரோ அப்போதில் இருந்து கொஞ்சம் அடக்கி தான் வாசித்தார். ஏன் அவனை இனி தொடக்கூடுது என்று கூட முடிவு எடுத்தார்.

ஆனாலும் ஹர்ஷாவிற்கும் அவர் நினைத்த நபருக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்கிறது என அவரின் உள்மனம் அடித்து கூறிவிட சில விஷயங்களை தேடி பிடித்து ஆராய ஆரம்பித்தார்.

தன் செல்வாக்கை பயன்படுத்தி ஹர்ஷா யாரென அறிய முயன்றார். ஆனால் அவருக்கு அவ்வளவு சுலபமாக எந்த தகவலும் கிட்டிவிடவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக அலைந்து திரிந்து ஹர்ஷாவின் பூர்விகத்தை கண்டறிந்து விட்டார் ராம்.

அதில் கிடைத்த விடை என்னமோ அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விடையாக இல்லாது பெரும் வன்மத்தை கிளப்பிவிட
போதுமானதாக இருந்ததால் மீண்டும் ஹர்ஷாவை கொல்லும் நோக்கில் இறங்கிவிட்டார் ராம்.

அதன்பின்னர் ஹர்ஷாவின் வாழ்க்கை அன்றாடம் என முழு விவரங்களையும் திரட்டியவர் ஹர்ஷாவிற்கும் அகிலனுக்குமான சண்டையை நுகர்ந்துவிட

அந்த அகிலனை வைத்தே ஹர்ஷாவை கொல்லும் தன் திட்டத்தை தீட்டினார் ராம். அதன் முதல் படியாக தன் ஆட்களை வைத்து அகிலனிடம் பேசி தன்னோடு சேர்ந்து ஹர்ஷாவை வீழ்த்த அழைப்பு விடுத்தார்.

தனக்கான முழு ஆதாயத்தை தான் மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்திட்டார் ராம். ஆம் ஹர்ஷாவை கொல்ல போய் அதில் இவர் சிக்கி விட்டால் என்ன செய்வது. இதில் விஸ்வநாதன் இடையில் வருவது வேறு அவர் மூலையை சூடேற்றி விடுகிறது.

எனவே நன்கு யோசித்து பின் தனக்கு பதிலாய் ஒரு பலியாடை மாட்டிவிடவே ஹர்ஷாவின் எதிரிகள் யாரென விசாரிக்க அகிலனின் விஷயம் மட்டுமே அவருக்கு தெரிய வந்தது. எனவே தான் அகிலனை தேர்வு செய்தார்.

எங்கே அந்த பிளானில் ஓட்டை விழுந்திடுமோ என்னும் பதட்டத்தில் தான் இப்போது இந்த குதி குதித்து கொண்டிருக்கிறார் ராம். அந்த நேரம் சரியாக அடியாள் ஒருவன் கைப்பேசி அடித்து அவர்களின் கவனத்தை ஈர்த்தது.

"என்ன தேவிம்மா! ரொம்பவே வெயிட் பண்ண வச்சிட்டனா? சாரிடா பேபி. நான் சீக்கிரம் வரதான் நினைச்சேன் பட் முடியலைடா. இப்போ தான் வரமுடிஞ்சது. என்னை நீ மறக்கலைலடா தேவிம்மா.

எனக்கு தெரியும் என் பேபி எப்பவும் என்னை மறக்கவே மாட்டா. ஆனா இவ்ளோ நாள் உன்னை வெயிட் பண்ண வச்சதுக்கு ரொம்ப ரொம்ப சாரிடா!" என்று தன் காதை பிடித்து கொண்டு மன்னிப்பு கேட்டு அழகாய் புன்னகைத்துக் கொண்டிருந்தான் அவன்.

"ராம்! ராம்" என கனவின் தாக்கத்தால் தூக்கத்தில் இருந்து அலறியபடி எழுந்து அமர்ந்தார் தேவி. "என்னம்மா ஆச்சு?" என அருகில் இருந்த ராமும் பதறி எழுந்தார். அவரின் கேள்வியில் திருதிருவென முழித்த தேவி

"அ.. அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. ஒரு கனவு. அதான்..." என இழுத்தார். "ஓ.. கெட்ட கனவா? அதான் பயந்து அலறி எழுந்தியா!" என அவரே அதற்கு ஒரு பதிலையும் கூறிக் கொண்டவர்

"என் கையை பிடிச்சு படுந்துக்கமா. பயம் இருக்காது. கெட்ட கனவும் வரவே வராது" என தன் கையை நீட்டினார் ராம். அதை பிடித்துக் கொண்ட தேவியும் மீண்டும் உறக்கத்திற்கு சென்றார்.

ஆனால் ராம் தான் அவர் முகத்தை பார்த்து 'நீ என்கிட்ட எதையோ மறைக்கிற மாதிரி இருக்கே தேவி? நீ மறைக்கிற ஒரு விஷயம்னா அது அவன் சம்மந்தப்பட்டதா தானே இருக்கும். ச்சே' என மனதில் எண்ணி கையை முறுக்கினார்.

'கவலையேபடாத மை டியர்! ரொம்ப சீக்கிரமாவே அந்த பையனை கொன்னு போட்டரேன். அதுக்கு அப்புறம் உனக்கு எப்பவும் நான் மட்டும் தான். அவன் ஞாபகம் வரேவே வராது!' என கருவிக்கொண்டே படுத்துவிட்டார் ராம். ஆனால் தூக்கம் தான் தூரம் சென்றிருந்தது.

-------------------------------------------------

விஸ்வநாதனின் இல்லமே மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. அனுவின் திருமண நாள் நெருங்கி விடவே வேலைகள் தலைக்கு மேல் இருந்தது‌. முடிந்தளவு எல்லா வேலைகளையும் விஸ்வநாதனே முன்னின்று பார்த்துக் கொண்டார்.

முடியாத பட்சத்தில் ஒன்று இரண்டு வேலைகளை அவர் தன் தங்கை வசுந்தராவின் மகனான ஆதர்ஷின் மூலம் நடத்திக் கொண்டார். ஆதர்ஷும் அனுவை தன் சொந்த சகோதரியாகவே எண்ணி தான் இந்த திருமண வேலைகளில் தானும் முழு மனதுடன் இசைந்துக் கொடுக்கிறான்.

அனுவிற்கு தற்போது கைகளுக்கு மருதாணி வைக்கும் வைபவம் நடந்துக் கொண்டிருக்கிறது. அனுவை சுற்றி அமர்ந்து கொண்டிருந்த சொந்தகார இளைஞர்களின் கேலியும் கிண்டலும் வீட்டை நிறைத்துக் கொண்டிருந்தது.

அதில் சிவந்த அனுவின் முகத்தை தூரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார் விஸ்வநாதன். சில நிமிடங்கள் கடந்தப் பின்னே அவரை கண்ட மீனாட்சி

"என்னங்க! புள்ளைய இப்படி வச்சக் கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்கீங்க?" என்று புன்னகையுடன் வினவினார். அதற்கு அனுவின் முகத்தில் இருந்து பார்வையை எடுக்காமலே "ம்ம். நம்ம பொண்ணு எவ்ளோ அழகா இருக்கால்ல மீனா.

அவளை இப்போ தான் குழந்தையா என் கைல தூக்கின மாதிரி இருக்குமா. இப்போ கல்யாணமே பண்ண போறோம். நாளு எவ்ளோ வேகமா ஓடிருச்சுல" என கூறியபடி விழிகளில் துளிர்த்த நீரை துடைத்துக் கொண்டார்.

"என்னங்க இது நல்ல காரியம் நடக்கப்போற நேரத்தில கண்ணீர் விட்டுட்டு இருக்கீங்க. கண்ணை துடைங்க. நம்ம பொண்ணு எப்பவும்‌ நல்லா சந்தோஷமா தான் இருப்பா" என விஸ்வநாதனின் கரத்தை பற்றி அழுத்திக் கொடுத்தார் ஆறுதலாக.

"ம்ம்" என்று தலை அசைத்தவரின் பார்வை அனுவின் அருகே அமர்ந்திருந்த வசுந்தராவின் புறம் இப்போது நகர்ந்தது. அங்கே அனுவிற்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தார் வசுந்தரா.

"வசு சாப்பிட்டாளாமா?" என்று வாஞ்சையாய் கேட்டவரிடம் "ம்ம் அண்ணி அப்போவே சாப்பிடாங்க. அண்ணா தான் கரெக்டா டைமுக்கு எல்லாத்தையும் சாப்பிட தந்துடராரே. அப்புறம் என்ன. ஆனாலும் நீங்க ஏங்க உங்க பாசத்தை எல்லாம் மனசுக்குள்ள வச்சிட்டு வெளியே காட்டிக்க மாட்டேங்குறீங்க" என்றார் மீனாட்சி ஆற்றமையுடன்.

விஸ்வநாதன் திரும்பி மீனாட்சியை பார்த்த பார்வையில் அத்தனை வேதனை. அந்த பார்வை சொன்னது 'நான் என்ன வேண்டும் என்றா செய்கிறேன்' என. கேட்ட மீனாட்சிக்கு ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது அவர் பார்வையில்.

"ஏங்க அந்த மண்டப‌ டெக்கரேஷன் ஆளுங்களுக்கு அட்வான்ஸ் தரனும்னு சொல்லிட்டு இருந்தீங்களே. கொடுத்துட்டீங்களா?" என அவரின் பேச்சை திசைத் திருப்ப முயன்றார். அதை விஸ்வநாதனும் உணர்ந்தாரோ என்னவோ

"நல்ல வேளை ஞாபகப்படுத்தின மீனா. இன்னைக்கு பேமென்ட் பண்ணலைன்னா அவன் மண்டபத்துல வந்து பிரச்சினை பண்ணுவான்‌. நான் போய் அதை பார்க்குறேன்" என கூறி சென்றார்.

போகும் விஸ்வநாதனை பார்த்து பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட மீனாட்சி 'இவர் எப்பதான் மனசுல இருக்கிறத மனசு விட்டு பேசுவாறோ?' என நினைத்தவாறு நகர்ந்து சென்றார்.

இங்கே அனுவை சுற்றி இருந்த அனைவரும் அவளை நன்றாக கிண்டல் செய்து அவளின் கண்ணத்தை சிவக்க வைத்துக் கொண்டிருந்தனர்‌. "அத்தை போதும் த்தை. வயிறு புல்" என்று வசுந்தராவிடம் உணவை அனு மறுக்க அவர் "அவ்ளோதான் இன்னும் ஒரு வாய்" என அனைத்து உணவையும் ஊட்டி முடித்தார்.

"ஹே ஷரா! இதையெல்லாம் இங்கவே நல்லா அனுபவிச்சுக்கோ. அங்க உனக்கு உன் ஹப்பிய தான் இனிமே பார்த்துக்க நேரம் இருக்கும்" என ஒரு பெண் கிண்டல் செய்யவே

"ஏ..‌ என்ன விஜி இப்படி சொல்லிட்ட. நம்ம ஷராவுக்கு அவ ஹப்பியே ஊட்டி விடுவாரு. இவ அவருக்கு ஊட்டி விடுவா. அப்படியே அவளை சும்மா அப்படி கைல வச்சு பாத்துக்க போறாரு பாரேன்" என கூறி கண்ணடித்தாள் இன்னொரு பெண்.

"வாலு பொண்ணுங்க" என அந்த பெண்களின் காதை விளையாட்டாய் திருகிய வசுந்தரா தட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார். அந்த நேரம் அனுவின் கைப்பேசி சத்தம் செய்யவே அந்த விஜி என்று அழைக்கப்பட்ட பெண் கைப்பேசியை வேகமாக தன் கையில் எடுத்தாள்.

அழைப்பு ஹர்ஷாவிடம் இருந்து தான் வந்திருந்தது. "ஹே ஷரா உன் ஹப்பி தான்டா" என்ற அந்த பெண் அனு வேண்டாம் வேண்டாம் என மறுத்தும் அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டு விட்டாள்.

அங்கே அழைத்த ஹர்ஷாவும் பேசுவது அனுவென நம்பி "அனு குட்டி. என்னடா‌ செய்ற?" என்றான் காதலாக. அதை கேட்ட அந்த பெண்கள் வாயை கையால் மூடிக்கொண்டு சிரித்தவாறு பேசு என சைகை செய்தனர்.

"அ.. அது மெஹந்தி! நான் என் சொந்தகார பொண்ணுங்க எல்லாரும் வச்சிட்டு இங்கே பேசிட்டு உக்காந்திருக்கோம் ஹர்ஷா" என திணறியவாறு பேசி ஹர்ஷாவிற்கு லேசாக ஹின்ட் கொடுத்தாள் அனு.

அனு திணறவும் அதை புரிந்து கொண்ட ஹர்ஷா "ஓஓ.. ஓகேமா! தென் யூ கேரியான். நான் அப்புறம் கால் பண்றேன். அன்ட் எல்லாரையும் நான் கேட்டேன்னும் சொல்லிடு" என கூறி வைத்து விட்டான்.

ஹர்ஷா அழைக்கவும் பெரிதாக இருவரையும் கிண்டல் செய்யலாம் என எண்ணிய அந்த பெண்களுக்கு புஸ் என்று ஆனது. "போடி! எதுக்குடி நாங்க உன் கூட இருக்கோம்னு சொன்ன. அண்ணா வச்சிட்டாங்க பாரு" என்றாள் பொய் கோபத்துடன்‌.

"எதுக்குமா நான் பேசனும். என்னையும் அவரையும் வச்சு கிண்டல் பண்றதுக்கா? அதான் வச்சிட்டேன்" என்றாள் அனு உசாராக.

"அடியே எங்களுக்கு வந்த ஒரு நல்லா என்டர்டெயின்மென்ட் மிஸ் ஆக வச்சிட்டியே. ச்சே அண்ணா பேசிருந்தா உங்க ரெண்டு பேரையும் வச்சு ஓட்டிருக்கலாம். நல்ல சீன இப்படி பாழாக்கிட்டியே அனு" வருத்தம் போல் அவளிடம் மேலும் வம்பு வளர்த்தனர் அந்த பெண்கள்.

"ஹய்யடா! உங்க என்டர்டெயின்மென்ட்குலா என்னால கன்டென்ட் தரமுடியாதுபா. நான் கிளம்பறேன் ஆள விடுங்க" என அனு அடித்து பிடித்து எழுந்து கைப்பேசியுடன் தன் அறையை தஞ்சம் அடைந்தாள். அவள் சென்ற வேகத்தை பார்த்து வெளிய இருந்தவர்கள் சிரித்துக் கொண்டனர்.

அறையின் உள்ளே வந்த அனு ஹர்ஷாவிற்கு அழைத்தாள். "ஹே அனுமா! என்னடி இப்பதான் பிசின்னு சொன்ன. அதுக்குள்ள கால் பண்ணிட்ட. எதாவது கேக்கனுமா?" என்றான் படபடவென.

"பிசிலா இல்லை ஹர்ஷா. நீங்க கால் பண்ணப்ப என் ரிலேட்டிவ் பொண்ணுங்க போனை ஸ்பீக்கர்ல போட்டுட்டாங்க. அதான் அப்படி சொன்னேன். இப்ப தான் போனை பிடிங்கீட்டு ரூம் உள்ள வந்தேன்" என்று நடந்ததை அப்படியே ஒப்பித்தாள் அனு.

"ஓகே ஓகே! அதான் பிசின்னு சொல்லிட்டியா. சரிடா பேபி கைல மெஹந்தி போட்டுருக்காங்கனு சொன்னியே, அதை பாக்கனும்டி வீடியோ கால் வா" என்று கூறி வைத்துவிட்டான்‌.

'வீடியோ கால் பேச இவருக்கு இது ஒரு சாக்கு! சரியான கேடி' என முனகியவாறே அவன் அழைப்பை ஏற்றாள். அனுவின் வாய் 'கேடி' என அசைவதை பார்த்துவிட்ட ஹர்ஷா "குட்டிம்மா என்னடி முனகுற?" என்றான் விழிகளை கூர்மையாக்கி.

"ஐயையோ பார்த்துட்டாரா! சொன்னா திட்டுவாறோ?' என எண்ணியவள் "அதெல்லாம் ஒன்னும் இல்லங்க. சும்மா தான்" என மழுப்ப பார்க்க "மழுப்பாதடி நீ கடைசியா கேடின்னு எதோ சொன்ன. யாரை சொன்ன?" என்று பாயின்டை பிடித்தான் ஹர்ஷா.

"அதெல்லாம் நான் ஒன்னும் சொல்லலையே.‌ அதைவிடுங்க நீங்க எதுக்கு சும்மா சும்மா வீடியோ கால்க்கு வர சொல்றீங்க. இன்னும் டூ டேஸ்ல மேரேஜ். வீடு புல்லா ரிலேட்டிவ்ஸ் இருக்காங்க. எனக்கு தனியா உக்கார கூட டைம் தரமாட்டேங்குறாங்க. இதுல நீங்க வேற வீடியோ கால் பண்ணா எப்படிப்பா" என்றாள் அனு பாவமாக.

அனுவின் பாவமான முகத்தை பார்த்து கொண்டே "என்னால உன் முகத்தை பாக்காம இருக்க முடியலைடா பேபி. அதான் உனக்கு வீடியோ கால் பண்றேன். ஆனா நீ ரொம்ப பண்றடி.

போ போய் அந்த உன் ரிலேட்டிவ் பொண்ணுங்களையே கட்டிட்டு அழு. என்கிட்ட அப்படி ஒன்னும் நீ கஷ்டபட்டு பேச வேணாம்டி. நான் வைக்கிறேன்" என கோவம் போல் ஹர்ஷா பேசி வைக்க போக

"ஐயோ ஹர்ஷா சாரி சாரிபா! நான் தெரியாம சொல்லிட்டேன். இனிமே இப்படி பண்ணமாட்டேன். பிளீஸ் பேசுங்களே!" என்றாள் வேகமாக. அனுவின் முகத்தில் வழியும் பாவத்தை ரசித்துக் கொண்டே "என்ன செல்லம் பயந்துட்டியா. சும்மா உன்னை கிண்டல் பண்ணுனேன்டி" என்று கண்ணடித்து சிரித்தான் ஹர்ஷா.

"என்ன கிண்டல் செஞ்சீங்களா? போங்க போங்க எப்பவும் இதே வேலையா போச்சு உங்களுக்கு" என்று சிணுங்கினாள் அனு. "ஓகே பேபி உன் கைய கேமரா கிட்ட காட்டு. மெஹந்தி எப்படி சிவந்திருக்குன்னு நானும் பார்க்குறேன்" என கேட்க அனுவும் தன் கையை தூக்கி காட்டினாள்.

அனுவின் கைகளில் மருதாணி நன்றாக சிவந்து இருந்தது. அதை கைப்பேசி வழியாகவே ரசித்த ஹர்ஷா "ரொம்ப அழகா இருக்குடி குட்டிம்மா" என்றான் ரசனையான பார்வையில்.

அந்த பார்வை அனுவை ஏதோ செய்ய "பிளீஸ் அப்படி பார்க்காதீங்க" என்று சிணுங்கினாள் அனு. அதற்கு "சிணுங்காத செல்லம் அப்புறம் நான் சொல்லவந்தத மறந்துடுவேன்" என ஹர்ஷா எதோ ஞாபகம் வந்தது போல் கூறவும் 'என்ன' என பார்த்தாள் அனு.

"அது வேற ஒன்னும் இல்லடா. நான் முன்னையே சொல்லனும்னு நினைச்சேன். உன் முகத்தை பார்த்து எல்லாத்தையும் மறந்துட்டேன் டி. சரி நான் என்ன கேக்கனும்னு வந்தன்னா நம்ம ஹனிமூன் டிரிப் எங்க போகலாம்னு தான்.

உனக்கு எதாவது ஆசை இருக்கா? சொன்னன்னா நான் டிக்கெட்ஸ் புக் பண்ணிடுவேன். சொல்லு எங்க போலாம்?" என ஹர்ஷா அனுவிடம் கேடட்வுடம் அவள் முகம் நன்கு சிவந்து விட்டது.

"இ.. இதெல்லாம் எதுக்கு ஹர்ஷா என்கிட்ட கேக்குறீங்க" என்று அனு திணறிட "நீ தானே என் பொண்டாட்டி. உன்கிட்ட கேக்காம வேற யாருட்டடி கேக்குறது" என ஹர்ஷா பேச பேச இன்னும் வெட்கி சிவந்தாள் அனு.

"நீ.‌. நீங்களே ஒரு பிளேஸ டி.. டிசைட் பண்ணுங்க" என்றாள் சிறு குரலில் அனு‌. அவள் முக சிவப்பை ரசித்து படி "அப்படியா செல்லம்! அப்போ எல்லாத்தையும் நானே பாத்துக்கிறேன்" என கூறி கண்ணை சிமிட்டி சிரித்தான் ஹர்ஷா.

"சரிடா பேபி. நான் வைக்கிறேன். நாளைக்கு ரிஷப்ஷன்ல மீட் பண்ணலாம் பாய்டி. உம்மா..." என கடைசியாக அவளை இன்னும் சிவக்க வைத்தே கைப்பேசியை அணைத்தான் ஹர்ஷா. ஹர்ஷாவோடு பேசிய வார்த்தைகளை மனதில் சுமந்து கொண்டே அனு படுக்கையில் விழுந்தாள்.

இரு நெஞ்சம் இங்கே மகிழ்ச்சியில் திளைத்து திருமண நாளை எதிர்ப்பார்த்து காத்திருக்க, அங்கோ ராம் ஹர்ஷாவை வீழ்த்த ஒரு பெரிய திட்டத்தோடு அவனின் திருமண நாளை எதிர்ப்பார்த்து காத்திருந்தார்.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 16

வானம் இருளால் சூழ தொடங்கி இளந்தென்றல் இனிமையாக வீசி செல்லும் மாலை நேரம். ஹர்ஷவர்தன் அனுக்ஷ்ராவின் வாழ்விலும் இது மிக முக்கியமான ஒரு நாளே. ஆம் வண்ண விளக்குகளால் சூழப்பட்ட அந்த பெரிய மண்டபத்தில் இன்று இவர்களின் ரிசெப்ஷன் கோலாகலமாக நடந்துக் கொண்டிருக்கிறது.

கண்ணை கவரும் மேடை அலங்காரத்தின் நடுவே கரும் ஊதா வண்ண கோட் வெள்ளை சட்டை அணிந்து ஹர்ஷா மாப்பிள்ளை கலை முகத்தில் மின்ன அம்சமாக நின்றுக் கொண்டிருந்தான்.

அவன் அருகே அனுவோ அதே ஊதா வண்ண டிசைனர் புடவையில் ஆளை அசரடிக்கும் அழகில் ஹர்ஷாவிற்கு ஏற்ற மணப்பெண்ணாக நிற்க, வந்த உறவினர் நண்பர்கள் என பலர் இவர்கள் ஜோடி பொருத்தத்தை வாயில் கையை வைத்து பார்த்தனர். அதில் சிலர் கொஞ்சம் பொறாமையாகவும் பார்த்து பெருமூச்சை வெளியேற்றி கொண்டும் இருந்தனர்.

"அனும்மா நீ இந்த டிரஸ்ல
செமையா இருக்கடி. இன்னும் இந்த நைட் மட்டும் தான் அப்புறம் நாம ஹஸ்பண்ட் அன்ட் வொய்ப்டி" என்றான் ஹர்ஷா அனுவை ரசனையாக பார்த்துக் கொண்டே. அதில் வெட்கி சிவந்தாள் அனு.

ரிஷப்ஷன் ஆரம்பித்து இரண்டு மணி நேரமாக நின்ற இருந்ததில் மிகவும் களைத்து போனாள் அனு. அதை அவள் முகத்தில் இருந்து உணர்ந்த ஹர்ஷா "என்னடா அனு டையர்டா இருக்கா?" எனவும் ஆம் என தலை அசைத்தாள்.

உடனே அருகில் இருந்த விக்ரமை அழைத்தான் ஹர்ஷா. "விக்ரம்! டேய் மச்சான்" என ஹர்ஷாவின் குரலை மண்டபத்தில் இருந்த பெண்களை வாயில் ஜொல்லு ஒழுக சைட் அடித்துக் கொண்டிருந்த விக்ரம் கவனிக்கவில்லை. அதில் கடுப்பான ஹர்ஷா

"ஏய்.. விக்ரம் எருமை!" என்று அவன் கையை பிடித்து உலுக்கிய பிறகே ஹர்ஷாவின் புறம் திரும்பி "என்னா மச்சான்?" என்றான் கூலாக. அதில் கடுப்பாய் முறைத்த ஹர்ஷா "என்னடா பண்ணிட்டு இருக்க?" என்று கடுகடுத்தான்.

"இல்ல மச்சான்! அந்த பிங்க் சுடி. செம்ம அழகா இருக்காடா. அதான் நான் அவளை..." என வெட்கப்பட்டுக் கொண்டே நகத்தை கடித்தான். விக்ரம் வெட்கப்படுவதை விசித்திரமாக பார்த்த ஹர்ஷா "என்ன வெட்கப்படுரியா? ச்சை! சகிக்கல. மொதல்ல வாயில இருந்து கைய எடுத்து தொலை" என்றான் கடுப்பாக.

உடனே வாயில் இருந்து கையை எடுத்த விக்ரம் அப்போது தான் ஹர்ஷா தன்னை எதற்கோ அழைத்தான் என்பதை உணர்ந்து "ஆமா மச்சான்! நீ எதுக்கு என்னை கூப்பிட்ட?" என்றான்.

"ஹப்பா! இப்போவாவது கேட்கனும்னு தோணுச்சே" என வெளிப்படையாக அலுத்துக் கொண்ட ஹர்ஷா "மச்சான் உன் தங்கச்சிக்கு ரொம்ப டையர்டா இருக்கு போலடா. சோ அவளுக்கும் எனக்கும் சேர்த்து ரெண்டு டம்ளர் ஜுஸ் எடுத்துட்டு வாடா" என்று வேலை ஒன்றை கொடுத்தான்.

ஆனால் அதை அருகில் இருந்த வசுந்தரா கேட்டுவிட்டு "நீங்க இருங்க தம்பி நான் போய் எடுத்துட்டு வரேன்" என சென்றுவிட இப்போது விக்ரம் மீண்டும் அந்த பிங்க் சுடி பெண்ணை சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டான். "இவனை திருத்த முடியாது" என தலையில் அடித்துக் கொண்ட ஹர்ஷாவும் அதன்பின் வந்த விருந்தினரை கவனிக்க திரும்பினான்.

இங்கே இப்படி இருக்க அபிமன்யுவோ அம்முவின் இன்றைய கோலத்தில் அவள் பின்னாலே சுத்திக் கொண்டிருந்தான். அம்மு பச்சை வண்ண லெஹாங்கா அணிந்து அதற்கேற்றார் போல் அலங்காரமும் செய்து தேவதை போல் மண்டபத்தை சுற்ற,

அவளை கண்ட அபி நொடி நேரமும் பிரியாது அவளை உரசியபடி சுற்றிக் கொண்டிருக்கிறான். எப்போதுடா அவள் தனியாக தன்னிடம் மாட்டுவாள் என சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்தவனுக்கு அவன் அத்தையே நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தி கொடுத்து அனுப்பினார்.

"அம்மு மாடில நான் இருக்க ரூம்ல ஒரு ஜுவல் பேக் இருக்குடா. இந்தா ரூம் சாவி. கொஞ்சம் போய் சீக்கிரம் எடுத்துட்டுவாடா‌. அனுவுக்கு போட வேண்டிய ஜுவல்ஸ் அதுல இருக்கு. சோ பத்திரமா எடுத்திட்டுவா" என்ற பார்வதியின் வார்த்தைகள் அம்மு மட்டுமன்றி அபியின் காதிலும் விழுந்துவிட

'இதோ நானும் வந்துட்டேன் செல்லம்' என மனதிற்குள் குதூகலமாக எண்ணிக் கொண்டே அம்முவின் பின்னால் பதுங்கி பதுங்கி சென்று அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான். அந்த சத்தத்தில் திரும்பிய அம்மு "என்ன அபி அத்தான்‌ எதுக்கு இப்போ உள்ள வந்தீங்க. கதவை எதுக்கு அடைச்சிங்க?" என்றாள் படபடப்புடன்.

அதற்கு அம்முவை பார்த்து ஒரு மார்க்கமாக சிறித்த அபி "என்னடா அம்மு வாய் டைப்படிக்குது. இந்த அத்தான்ட்ட என்ன செல்லம் பயம். ம்ம்ம்" என்றவாறு அம்முவை நோக்கி முன்னேறினான்.

அபியின் இந்த செயலை கண்டு "வேணாம் அத்தான்! கிட்ட வராதீங்க" என்று பின்னாலே நகர்ந்தாள் அம்மு. ஆனால் அந்த அறையின் சுவர் வந்துவிடவே திருதிருத்தப்படியே சுவற்றில் மோதி நின்றாள்.

அம்முவின் முன்னே நின்று தன் இரு கைகளையும் அணைவாய் சுவற்றில் ஊன்றிய அபி "இன்னைக்கு இந்த டிரஸ்ல அவ்ளோ அழகா இருக்கடி அம்மு. சத்தியமா உன்னை விட்டு என் பார்வைய நகர்த்தவே முடிய மாட்டேங்குது. சும்மா அப்படியே தேவதை மாதிரி இருக்கடி" என்றான் கொஞ்சும் குரலில்.

அபியின் இந்த பேச்சில் அம்மு முகம் வெட்கத்தில் செவ்வானமாய் சிவந்து விட்டது. "ம்ம் தாங்க்ஸ் அத்தான்" என்றாள் பதிலுக்கு. அம்முவின் வெட்கத்தை ரசித்தவாறே "சரி சரி‌ அப்புறம் வெட்கப்பட்டுக்கலாம். இப்போ அத்தானுக்கு ஒரு உம்மா குடுத்துட்டு போடி" என்றான் அபி காதலாக.

அபி முத்தம் கேட்டதில் பதற்றம் அடைந்த அம்மு "ஐயோ அத்தான்! நான் போகனும். அம்மா ஜுவல் பேக் எடுத்துட்டு சீக்கிரம் வர சொன்னாங்க. நான் போகனும். பிளீஸ் பிளீஸ் அத்தான் வழிய விடுங்க" என்றாள் கொஞ்சலாக.

"அதெல்லாம் முடியாதுடி. எனக்கு வேணும்னா வேணும் தான்.‌ இப்போ தந்துட்டு போ" என வம்படியாக அம்முவை இழுத்து இதழில் ஒரு முத்த யுத்தம் செய்தே விட்டான் அபி.

அபியின் நெஞ்சின் கை வைத்து தள்ளிய அம்மு "நீங்க ரொம்ப பேட் பாய் அத்தான்" என்றவாறு நகைப் பையை எடுத்து கொண்டு வெளியே ஓடிவிட்டாள் ஆதிரா. அதன்பின்னர் வந்த அபியின் பார்வை இப்போது அம்முவை இன்னும் உரியமையாய் பார்த்து வைத்தது.

அபியின் ஒவ்வொரு பார்வைக்கும் அம்மு வெட்கி சிவந்தாள்‌. இவர்கள் பார்வை பரிமாற்றத்தை கண்ட விக்ரம் "நாளைக்கு உனக்கு தானேடா கல்யாணம். என்னமோ உன் தம்பிகாரனுக்கு கல்யாணம் நடக்கப்போற மாதிரி இப்படி ஒரே குஜாலா சுத்திட்டு இருக்கான்டா" என்றான் கடுப்புடன்.

விக்ரமின் புலம்பலில் சிரித்த ஹர்ஷா "பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான்‌. நீ ஏன்டா கடுப்பாகுற" என்று கூறி கண் அடித்துவிட்டு அனுவை நோக்கி திரும்பிவிட்டான்.

ஹர்ஷாவின் பதிலில் அழும் நிலைக்கே சென்ற விக்ரம் "பேசுங்கடா பேசுங்க. எனக்கும் ஒரு காலம் வராமையா போகும். அப்போ பேசிக்கிறேன்" என்று சபதம் போடுவது போல் பேசியவன் திரும்பி நீண்ட நேரம் அவன் பார்த்த அந்த பிங்க் சுடி பெண்ணை காண நெஞ்சு வலியே வந்துவிட்டது.

ஏனென்றால் அந்த பெண்ணின் தோளில் வேறொரு ஆடவன் கைப்போட்டு சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தான். அதுமட்டும் இன்றி அந்த பெண்ணின் கையில் ஒரு குழந்தை வேறு இருந்தது. அதை பார்த்தவுடன் புரிந்துவிட்டது அது அந்த பெண்ணின் குழந்தை என.

'ஐயோ! இவ்ளோ நேரம் கல்யாணம் ஆன பொண்ண பார்த்தா வழிஞ்சோம். ஐயையோ இது மட்டும் அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் தெரிஞ்சது வச்சு செய்வானுங்களே. விக்ரம் தப்பி தவறிக் கூட இவனுங்களுக்கு தெரியக் கூடாதுடா' என மனதோடு பேசியவன் திரும்பி ஹர்ஷாவிற்கு வருகின்ற பரிசுகளை சமத்தாக வாங்கி வைக்க ஆரம்பித்தான்.

இப்படி மண்டபமே மகிழ்ச்சியில் செல்ல இரு விழிகளோ எப்போதும் போல் ஹர்ஷவர்தனை வெறுப்புடன் பார்த்திருந்தது. அது வேறு யாரும் இல்லை ராம் தான்.

இந்த நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஹர்ஷாவையே வெறித்தபடி தான் அமர்ந்து உள்ளார். ஹர்ஷா ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும் மனதுக்குள் எரிமலையே வெடித்து சிதறியது அவருக்கு.

'இன்னும் கொஞ்ச நேரம் தான்டா இந்த சந்தோஷம் எல்லாம். அப்புறம் பாரு நீ எப்படி அழுகப்போறன்னு. இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்காதுடா. நான் நடக்கவும் விடமாட்டேன்' என சூளுரைத்துக் கொண்டார் மனதிற்குள்.

மனதில் இருந்த அதே வெறியோடு அவரின் அடியாள் மோகனுக்கு அழைத்து "என்னடா பண்றீங்க. அந்த அகிலன் டாக்டர்கிட்ட பேசினியா. என்ன தான்டா அவன் பிளான். சீக்கிரம் கேட்டுட்டு சொல்லுடா. இங்க அந்த ஹர்ஷாவ பாக்க பாக்க எனக்கு வயிறு எரியுது. ஒழுங்கா அவன்கிட்ட பேசிட்டு சொல்லுடா" என பேசி வைத்தார்.

ஆம் அகிலன் இப்போது இவர்கள் கூட்டணியில் சேர்ந்து விட்டான். அன்று என்னதான் அகிலன் வீடேட்றியாக பேசி வைத்தாலும் பின் அவனே அவர்களை அழைத்து ஹர்ஷாவை பழிவாங்கும் படலத்தில் தானும் சேர்த்து கொண்டான்.

ஹர்ஷாவிற்கு எதேனும் நடந்துவிட்டால் விஸ்வநாதன் தன் மருமகனுக்கு ஊறு விளைவித்தவர்கள் அனைவரையும் உறு தெரியாமல் அழித்துவிடுவார். அதை எண்ணியே முதலில் ஹர்ஷாவின் திருமணத்தை நிறுத்த திட்டம் தீட்டினார் ராம். ஆனால் அவர் நேரில் சென்று அகிலனிடம் பேசவில்லை.

ஏன் இதில் ராம் என்ற ஒருவர் இருப்பதை மறைத்து அந்த அடி ஆட்களின் மூலம் தன் எண்ணங்களை அகிலனுடன் பகிர்ந்து கொண்டார். அதே போல் அகிலனுக்கு ராம் என்ற நபரையும் சுத்தமாக தெரியாமல் பார்த்துக் கொண்டார் சாமர்த்தியமாக.

அங்கே ராமிடம் பேசிய மோகன் உடனே அகிலனுக்கு தொடர்பு கொண்டான். "ஹலோ! டாக்டர் என்னதான் உங்க பிளான் சீக்கிரம் சொல்லுங்க. விடிஞ்சா கல்யாணம். நாம அதுக்குள்ள எதாவது செஞ்சே ஆகனும்" என்று எடுத்தவுடன் பொறிந்தான் மோகன்.

அனைத்தையும் பொறுமையாக கேட்ட அகிலன் "என்ன மோகன் நீ இவ்ளோ டென்ஷன் ஆகுற. இன்னும் விடியிற வரை நமக்கு டைம் இருக்கு. சோ டோன்ட் வொர்ரி மேன். ஐ ஹேவ் எ கிரேட் பிளான்" என்றான் கூலாக.

அகிலனின் பதிலில் "என்ன டாக்டர் ரொம்ப கூலா பேசிட்டு இருக்கீங்க. உங்களால முடியும்னா சொல்லுங்க. இல்லைனா நான் பாத்துக்கிறேன்" என்றான் மோகன் வேகமாய். அதற்கு "அப்படி என்ன பண்ண போற மோகன்" என்று வினவினான் அகிலன்.

"அதெல்லாம் எப்பவும் செய்ற பிளான் தான் டாக்டர். மாப்பிள்ளையை கடத்திடலாம். அவனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு அவன் போன்ல இருந்தே ஒரு மெசேஜ போடுவோம். கல்யாணம் தானா நின்னுடும்" என்றுவிட அங்கே அகிலன் தலையில் அடித்து கொண்டான்.

"ஏன்டா உனக்கு மூளைன்னு ஒன்னு இருக்கா. அந்த ஹர்ஷவர்தன் சம்மதம் சொல்லி தான் இந்த கல்யாணம் நடக்குது. அவன் வாக்கு குடுத்தா அதுல இருந்து பின்வாங்கினதா சரித்திரமே இல்லை. இதுல இப்படி நாம செஞ்சா ஒருத்தனும் நம்ப மாட்டானுங்க. உடனே போலிஸ்க்கு போய்ருவாங்க" என்று நக்கலாக பேசிய அகிலன்

"சோ நான் சொல்ற மாதிரி செய். யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. அதே நேரம் இந்த கல்யாணத்தை விஸ்வநாதனே நிறுத்துருவார்" என்று அகிலன் தன் திட்டத்தை விளக்கினான்.

"அப்படி என்ன டாக்டர் திட்டம்" என்றான் மோகனும் ஆர்வமாக. அகிலன் கூறிய திட்டத்தை கேட்டு மோகன் ஆச்சரியத்தில் வாயை பிளந்து விட்டான். "சூப்பர் பிளான் டாக்டர்" என்று பாராட்டியவன் அழைப்பை அனைத்து விட்டு ராமிற்கு அழைத்து அகிலனின் திட்டத்தை கூற ராம் முகத்தில் கோரமான ஒரு சிரிப்பை தந்தவர் மகிழ்வுடனே கைப்பேசியை வைத்தார்.

'இனி இந்த கல்யாணம் நிச்சயமா நடக்காது ஹர்ஷா. அதே மாதிரி உன்னை கொல்லாம விடவும் மாட்டேன்டா. உன் சாவும் என் கையால தான்' என மனதில் வன்மத்துடன் ஹர்ஷாவை பார்த்து வைத்தான் ராம்.

ராமிடம் மகிழ்ச்சியாக பேசிய மோகனிடம் அவன் உடன் இருந்த மற்றொரு அடியாள் 'அப்படி என்ன பிளான். இவ்ளோ சந்தோஷமா இருக்க' என்று வினவிட மோகன் அகிலன் கூறியவற்றை பகிர்ந்தான்.

"டேய் என்ன தான் இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்க தான்டா. அந்த டாக்டரு சொன்னதை நாம சரியா செஞ்சா விஸ்வநாதனே இந்த கல்யாணத்தை நிறுத்திருவான். அப்படி ஒரு பிளானுடா" என்று சிலாகித்து சொல்ல ஆரம்பித்தான்.

அகிலன் "இங்க பாரு அவசரபடாம ரிஷப்ஷன் முடியரவரை வெயிட் பண்ணு. நான் உன்கிட்ட ஒரு டேப்லட் தரேன்.

அதை மட்டும் பால் இல்ல ஜுஸ்னு ஹர்ஷா குடிக்கிற எதாவது டிரிங்க்ஸ் இல்ல புட்ல கலந்து குடுத்திரு. அப்புறம் தானா கல்யாணம் நின்னிடும்" என்று தன் திட்டத்தை கூறிட மோகன் சற்று பயந்து விட்டான்.

"ஐயோ டாக்டர். எதாவது விஷ மாத்திரையா. அதை குடிச்சு ஹர்ஷா செத்துட்டா நாம என்ன பண்றது?" என பயந்து போய் வினவினான். அதற்கு அகிலன்

"ஏய் மோகன்! லூசா நீ. அப்படிலாம் அந்த ஹர்ஷாவ அவ்வளவு ஈசியா சாக விடமாட்டேன். அவன் கொஞ்சம் கொஞ்சமா மனசு நொந்து போகனும். வாழவும் முடியாம சாகவும் முடியாம அனு அனுவா சித்திரவதைய அனுபவிக்கனும்.

சோ நீ தைரியமா அந்த மாத்திரைய கலந்து குடு. அது விஷ மாத்திரைலா ஒன்னும் இல்ல. அது ஒரு புல் டோஸ் போதை மாத்திரை. அதை எடுத்துக்கிட்டா தன்னால போதை தலைக்கு ஏறிடும். அப்புறம் என்ன பயங்கரமா ரகளை பண்ண ஆரம்பிச்சிருவாங்க.

அப்புறம் இதை எல்லாம் பார்த்தா விஸ்வநாதன் என்ன பண்ணுவாரு? அந்த ஹர்ஷாவ சும்மாவா விடுவாரு" என நக்கலாக கேட்டவன் அவனே பதிலாக "அவனை கழுத்த பிடிச்சு வெளியே தள்ளி இந்த ஒழுக்கம் இல்லாதவனுக்கு பொண்ணு குடுக்க முடியாதுனு சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுவாரு.

அந்த ஹர்ஷாவுக்கு விஸ்வநாதன் பொண்ணை ரொம்ப பிடிச்சு போச்சு போல. அப்போ அந்த பொண்ணு அவனுக்கு இல்லைனா அவன் உடம்பு இருந்தும் உயிர் இல்லாம தானே இருப்பான். அது தான் நமக்கும் வேணும்" என்றான்.

அவன் குரல் அப்பட்டமாக வன்மத்தை காட்டியது.‌ அதை கைப்பேசியின்‌ வழி கேட்ட மோகன் நன்றாகவே உணர்ந்தான். இதை கேட்டே ராமும் அங்கே மண்டபத்தில் ஹர்ஷாவின் திருமணம் நின்று விடும் என மகிழ்ச்சியுடன் இருந்தான்‌.

இங்கு அகிலன் மனது இதை எல்லாம் பேசியபின் 'நீ என்ன டாக்டர். உன் ஒழுக்கம் எங்க போச்சுன்னு டையலாக் பேசினியே ஹர்ஷா.

நாளைக்கு பாரு ஊரே உன்னை ஒழுக்கம் இல்லாதவன்னு சொல்ல போகுது. அதை பார்த்து நான் சந்தோஷப்பட போறேன்டா' என்று எண்ணி மகிழ்ந்து போனது. அதையே மோகனும் கூறி இன்னும் அகிலனை ஏற்றிவிட்டு குளிர் காய்ந்தான்.

திருமண மண்டபத்தில் இன்னும் வரவேற்பு நடந்து கொண்டிருக்க விஸ்வநாதன் கணபதியை முறைத்துக் கொண்டே அலைந்திட, கணபதியும் பதிலுக்கு முறைத்தபடி தான் சுற்றினார்‌.

எப்போதும் விஸ்வநாதன் தான் கோபம் கொண்டு கணபதி மற்றும் வசுந்தாராவை முறைத்துக் கொண்டும் திட்டிக் கொண்டும் திரிவார்.

ஆனால் இப்போது எல்லாம் கணபதியும் எதிர்த்து பேச இருவரும் அடிக்கடி முட்டி கொள்கின்றனர். காரணம் வேறு ஒன்றும் இல்லை கணபதி வசுந்தரா மற்றும் தன் பிள்ளைகளுடன் அவர் சொந்த ஊரான கோயம்புத்தூர்க்கே செல்கிறேன் என கூறுகிறார்.

விஸ்வநாதன் தான் அவர் தங்கை எங்கும் வர மாட்டார், தன்னோடு இங்கே தான் இருப்பார் என அனுப்ப மறுக்கிறார். இவர்கள் இருவரால் வீட்டில் இருப்பவர்களின் இதயம் தான் தினம் தினம் பக்பக்கென்று அடித்து கொள்கிறது.

அனுவின் திருமண வேலைகளிலும் அவரை விஸ்வநாதன் சேர்த்துக் கொள்ளாதது மேலும் கணபதியை கோபப்படுத்துக்கிறது. எனவே இப்போது மண்டபத்திலும் இருவரும் முறைத்து பார்க்க வசுந்தரா தான் யாரை சாமாளிக்க என பரிதவித்தார்.

"என்ன அப்படி பாக்குற, நீ நினைக்கிற எதுவும் நடக்காது. நான் நடக்கவும் விடமாட்டேன். என் தங்கச்சி எப்பவும் என் தங்கச்சி தான். நான் சொல்ற வார்த்தையை மீறமாட்டா. அதனால உன் எண்ணத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு போய் வேற வேலை இருந்தா பாரு" என்று விஸ்வநாதன் போகிற போக்கில் நக்கலடித்து செல்ல

கணபதி இங்கே பல்லை கடித்து தன்னை கட்டுப்படுத்தி நின்றிருந்தார். அவரும் வசுந்தாராவிடம் எவ்வளவோ எடுத்துரைத்து பார்த்தும் அவர் தன் அண்ணனின் பேச்சை மீறவே மாட்டேன் என வசனம் பேசி வருகிறார்.

இதில் இவர்கள் பிள்ளைகள் இருவரும் ஒருசேர 'நாங்கள் இந்த ஊரை விட்டு வேறு எங்கும் வர மாட்டோம்' என கூறிவிட இப்போது கணபதி அதீத கடுப்பில் சுற்றி கொண்டிருக்கிறார்.

மண்டபத்தில் நுழைந்ததில் இருந்து ராம் சரியான சந்தர்ப்பத்துக்காய் காத்துக் கொண்டிருக்க அவர் அருகில் அமர்ந்திருந்த அவர் மனைவி தேவியோ ஹர்ஷாவை பூரித்துப் போய் பார்த்திருந்தார்.

"என்னங்க அங்க பாருங்களே! அப்படியே ராஜா மாதிரி இருக்கான்ல. அவன் நம்ப பிள்ளை இல்லைன்னு நீங்க சொன்னாலும் என்னமோ அவனை பார்த்தாலே மனசுக்கு ரொம்ப குளோஸா பீல் ஆகுதுங்க" என்று ஏக்கமாக தேவி பேசி கண் கலங்க

"ஐயோ! என்னமா இது. சின்ன பிள்ளை மாதிரி கண்ணை கசக்கிட்டு இருக்க. அதான் நான் நல்லா விசாரிச்சு பார்த்தேனு சொன்னனே. அவன் நம்ம பிள்ளை இல்லடா" என தேவியின் தலையை கோதியவாறே பரிவுடன் கூறினார். அதற்கு மாறாக அவரின் முகம் ஹர்ஷாவையும் விஸ்வநாதனையும் வன்மையாக பார்த்து வைத்தது.

இங்கே ஒவ்வொருவரும் இப்படி ஒவ்வொரு நிலையில் இருக்க ராமின் அடியாள் மோகன் அகிலனை சந்தித்து அவன் தந்த போதை மாத்திரையையும் கையோடு வாங்கி கொண்டு மண்டபத்திற்கு வந்தடைந்தான்‌.

அதை அவனிடம் இருந்து பெற்ற ராம் ஹர்ஷாவிற்கு கொடுக்க நிகழ்ச்சி எப்போது முடியும் என்று பார்த்துக் காத்திருந்தார்.

"ஹப்பாடா ஒரு வழியா பங்சன் முடிஞ்சதுடா. நின்னு நின்னு எனக்கு கால் வழியே வந்திருச்சு. எப்படா ஸ்டேஞ் விட்டு இறங்குவோம்னு ஆகிருச்சு" என்று அலுத்தப்படி அமர்ந்தது ஹர்ஷா அல்ல விக்ரம்.

வரவேற்பு முடிந்த பின் உணவை முடித்துக் கொண்டு அறைக்கு இப்போது தான் திரும்பினர் மூவரும். விக்ரம் அலுத்துக் கொள்வதை கேட்ட அபி

"ஏன் ஹர்ஷா ண்ணா, உனக்கு தானே இப்போ ரிஷப்ஷன் வச்சாங்க. இங்க என்னடான்னா நம்ம விக்ரம் அத்தான் அவருக்கே பங்சன் வச்ச மாதிரி ரொம்ப தான் அலுத்துகுறாரு" என்றான் கிண்டலாக.

அபி கிண்டல் செய்வதில் கடுப்பான விக்ரம் "நீ எல்லாம் பேசாதடா. இன்னைக்கு உங்க அண்ணனுக்கு பங்கனா இல்ல உனக்கு பங்சனான்னு எனக்கு டௌட்டே வந்திருச்சுடா. நீ என் தங்கச்சிய பார்த்து ஊத்துன ஜொல்லுல மண்டபத்துல வெள்ளம் வராம இருந்ததே அதிசயம் தான்" என்றான் வயிற்றெரிச்சலால்.

விக்ரமை இப்போது நக்கலாக பார்த்த அபி "ண்ணா உனக்கு இன்னைக்கு ஒரு விஷயம் நடந்தது தெரியுமா?" என்று கேள்வியாய் இழுக்க "என்னடா நடந்துச்சு?" என்று ஹர்ஷாவும் சிரித்துக் கொண்டே கேட்டான்.

"அது ண்ணா‌. இன்னைக்கு மண்டபத்துல ஒரு ரோமியா நுழைஞ்சிட்டான். அவன் பொண்ணுங்கள பாத்து ஊத்துன ஜொல்லுல அவன் நின்ன இடத்துக்கு பக்கத்துல சின்னதா குளமே வந்திருச்சாம்" என்று கதை போல் அபி இழுத்து கூறியவன் இப்போது விக்ரமை பார்த்து

"அதுல ஹைலைட் என்னன்னா அவன் தொறத்தி தொறத்தி சைட் அடிச்ச பொண்ணுக்கு ஏற்கனவே குழந்தையே இருந்ததுன பாரேன்" என ஏதோ அதிசயத்தை கண்டது போல் வாயில் கைவைத்து கூறி நிறுத்தினான்.

விக்ரமிற்கு புரிந்து விட்டது 'ஐயோ நம்மல தான் சொல்றான்‌. ஆனா இவன் என் தங்கச்சி பின்னாடில சுத்திட்டு இருந்தான். எப்போ நம்மல பார்த்திருப்பான்?

சரி நைஸா நாம இப்படியே கழண்டுக்க வேண்டியது தான். இன்னும் இங்க இருந்தா அண்ணனும் தம்பியும் நம்மல ஒட்டியே கொண்டுவானுங்க' என மனதிற்குள் எண்ணிய விக்ரம்

"மச்சான் அப்பா கூப்பிட்டாருடா. எதோ இம்பார்ட்டன்ரட் வொர்க்‌ இருக்காம். நான் மறந்தே போய்ட்டேன். இப்போ போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்டா" என்று விக்ரம் வெளியே செல்ல எத்தனிக்க

அவனின் சட்டை காலரை பிடித்து இழுத்த ஹர்ஷா "அப்படி என்ன மச்சான் முக்கியமான வேலை மாமா எங்களுக்கு தெரியாம உனக்கு தந்திருக்காரு" என்றான்.

இப்போது விக்ரம் தான் பாவமாய் முழிக்க ஆரம்பித்தான். ஆனால் அதை எல்லாம் கணக்கில் எடுக்காது அண்ணன் தம்பி இருவரும் இணைந்து ஓட்டி தள்ளி கொண்டிருந்தனர் விக்ரமை. அந்த அறை முழுவதும் இவர்கள் மூவரின் சிரிப்பு சத்தமே நிறைந்திருந்தது.

அப்போது ஹர்ஷாவின் அறை கதவை யாரோ தட்ட அபி சென்று கதவை திறந்தான். அங்கே புதியதாக ஒரு நபர் நிற்கவும் அவரை யோசைனையாக பார்த்த அபி "நீங்க யாரு?" என்றான்.

அதற்கு அந்த நபர் சமையல் வேலை செய்பவர் என்று கூறி அபியிடம் ஒரு பால் டம்ப்ளரை நீட்டி "இந்த பாலை கல்யாண மாப்பிள்ளைக்கு தர சொன்னாங்க சார். அதான் எடுத்துட்டு வந்தேன்" என்றார்.

'யார் தர சொல்லியது?' என்று அபி கேட்டிட அவர் ஒரு திசையில் கை காட்டினார். அங்கே நின்றிருந்ததோ பார்வதி. அவரை கண்ட அபியும் எதுவும் சொல்லாது பாலை வாங்கி கொண்டு உள்ளே வந்தான். ஆனால் அந்த நபர் கை காட்டிய இடத்தில் இருந்ததோ ராம் தான்.

என்ன அவர் பார்வதியின் அருகில் நின்றிருந்தார். சமையல் நபர் அங்கே ராமை காட்ட அபி தான் தவறாக புரிந்து கொண்டான். ஏன் ராமே அதற்காக தான் முன்னேற்பாடாக பார்வதியின் அருகில் நின்றதும் கூட.

இது எதுவும் அறியாத அபியோ உள்ளே பாலை ஹர்ஷாவிற்கு எடுத்து சென்று விட்டான். இதை வெளியே இருந்து பார்த்த ராம் மனதிற்குள் குரூரமாய் புன்னகைத்து கொண்டார்.

"என்னடா அபி பால் கொண்டு வர யாருக்கு இது?" என்று கேள்வியாய் ஹர்ஷா நிறுத்த சிரித்துக் கொண்டே வந்த அபி "ம்ம் கல்யாண மாப்பிள்ளைகாம். எங்க அருமை பார்வதி அத்தை தான் கொடுத்து விட்டுருக்காங்க" என்றான்.

அதை கேட்ட விக்ரம் "இதென்னடா அநியாயமா இருக்கு. உங்க பார்வதி அத்தைக்கு அப்போ நம்மல பார்ந்தாலாம் மனுஷனா தெரியலையா.‌ ஒரு ஒப்புகாவது நமக்கு எதாவது கொடுத்து விட கூடாது. சரியான ஓரவஞ்சனைடா இது" என்று பொறுமி தள்ளினான்.

அதற்கு "சரி தான் விக்ரம் அத்தான். நமக்கு ஏன் கொடுத்து விடல?" என்று அபி கேட்க "ஓகே அப்போ இந்த பாலு எனக்கு தான்" என டம்ப்ளரை பிடிங்கிக் கொண்டான் விக்ரம் சிறுப்பிள்ளை போல்.

"ஹே என்ன தான் இருந்தாலும் என் அண்ணனுக்கு குடிக்க தான் கொடுத்து விட்டாங்க. இதை அவன் தான் குடிக்கனும் ஒழுங்கா இதை அண்ணன்ட தந்திரு விக்ரம் அத்தான்" என இப்போது அந்த டம்ப்ளரை அபி பிடிங்கி கொண்டான்.

இவர்கள் ரகளையை ஹர்ஷா ரசித்து சிரித்து கொண்டிருக்க சில நிமிடங்கள் அந்த பால் டம்ளர் அபி விக்ரம் கைகளில் மாறி மாறி போக கடைசியாக ஹர்ஷாவின் கைகளில் அது அபியால் திணிக்கப்பட்டது. பின் சில நிமிடங்களில் அது காலியும் ஆகிவிட்டது.

இங்கே இன்னும் மண்டபத்தில் இருந்த ராம் எப்போதுடா பிரச்சினை ஆரம்பமாகும் என ஆவலாக எதிர்ப்பார்த்து காத்திருக்க தொடங்கினார்.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 17

அந்த திருமண மண்டபம் அதிக சலசலப்பு இன்றி காணப்பட்டது. ஏனெனில் ஹர்ஷாவிற்கும் அனுவிற்கும் திருமணம் நடைப்பெற போகிறது. எனவே அனைவரின் பார்வையும் அங்கே மேடையில் அக்னி முன் அமர்ந்திருந்த ஹர்ஷாவின் மேல் தான் விழுந்தது.

வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக முகத்தில் படர்ந்த சிரிப்புடன் ஐயர் கூறும் மந்திரத்தை திரும்பி சொல்லிக் கொண்டு மணமகளான அனுவின் வரவிற்காக காத்திருந்தான் ஹர்ஷா.

சில நிமிடங்கள் கழித்து ஐயர் "பொண்ண அலச்சிட்டு வாங்கோ" என்று கூறிட அனுவை அழைத்து வந்தனர். அழகிய குங்கும நிற புடவையில் பார்லர் பெண்கள் சேர்த்த சில ஒப்பனைகளோடு,

ஏற்கனவே அழகாய் இருக்கும் அனு மேலும் அழகு கூடி தேவதையாக மேடையை வந்தடைந்தாள். அனுவின் வருகையை உணர்ந்த ஹர்ஷா தன் தலையை திருப்பி அனுவை பார்க்க சில நிமிடங்கள் அவள் அழகில் உறைந்து விட்டான்.

அந்த கோலி குண்டு கண்களை இதயத்தில் எழுந்த படபடப்பால் முட்ட முட்ட விரித்து முழித்துக் கொண்டே வந்து சேர்ந்தாள் அனு. எப்போதும் போல் அந்த பார்வையில் சொக்கி தான் போனான் ஹர்ஷவர்தன்.

பார்வையில் மையல் கூட அருகில் அனு அமர்ந்த பின்னும் அவளையே பார்த்து வைக்க அனுவிற்கு வந்த பதற்றம் எல்லாம் எங்கோ ஓடிப்போக அந்த இடத்தை இப்போது வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

இவர்கள் காதல் நாடகம் மேடையிலே அற்புதமாக அறங்கேற, அதோடு பக்கத்தில் இருந்த அபியும் ஹர்ஷாவிற்கு சலைக்காது அம்முவை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் மேடையில் ஒரு ஓரத்தில் நின்று பார்த்த விக்ரமிற்கு தான்‌ நெஞ்சில் பாராங்கல்லை தூக்கி வைத்தது போல் இருந்தது. அவன் நினைவுகள் நேற்று நடந்த நிகழ்வுகளை எண்ண தொடங்கியது.

அந்த டம்ளரில் இருந்த பாலை யார் குடிப்பது என போட்டி போட்டுக் கொண்டு இருந்த வேளையில் அபி அதை ஹர்ஷா கையில் திணிக்க, அவன் குடிக்கும் முன் அதை லாவகமாக கைப்பற்றிய விக்ரம் சடாரென தன் வாயில் கவிழ்த்து கொண்டான்.

விதியோ விக்ரமை பார்த்து 'யார் பெத்த புள்ளையோ மத்தவங்களுக்கு வர எல்லாத்தையும் இதே ஏத்துக்குதே! பாவம்டா விக்ரம் நீ' என்று நினைத்தாலும் அதுவும் விக்ரம் என்ன செய்ய போகிறான் என ஆவலுடன் பார்க்க ஆரம்பித்தது.

ஒரே மூச்சில் குடித்து முடித்தவனை முதுகில் ஓங்கி ஒரு போடு போட்ட அபி "ஏய் எருமைமாடே! அது என் அண்ணனுக்கு கொடுத்துவிட்ட பாலு அத்தான். எல்லாத்தையும் நீயே வாயில் ஊத்திக்கிட்ட. சரியான பானை வயிறு போல‌ உனக்கு. இப்ப தானே அத்தான் புல்லா தின்னுட்டு வந்த" என அவனை கிண்டல் செய்தான்.

"போடா டேய்! நான்‌ எல்லாம் எங்க எப்படி இருக்க வேண்டியவன். என்னை ஒரு டம்ளர் பாலுக்கு இந்த ஓட்டு ஓட்டுறீங்களேடா பாவிகளா" என்று சுகமாய் அலுத்துக் கொண்டாலும் அவனும் அவர்கள் கிண்டலில் இணைந்து கொண்டான்.

கொஞ்ச நேரம் ஆக ஆக அந்த போதை மாத்திரை தன் வேலையை சிறப்பாய் செய்ய ஆரம்பிக்க விக்ரம் ஒரு மாதிரி நெளிய துவங்கினான்‌. அவன் நெளிவதை கண்ட அபி "என்ன விக்ரம் அத்தான் தூக்கம் எதுவும் வருதா? இந்த நெளி நெளியற" என்றான் அவனின்‌ வித்தியாசமான செய்கையை பார்த்து.

"அது... அபி உள்ள என்னமோ என்னன்மோ பண்ணுதுடா" என்றவனின் பேச்சு வரவர குலறலாக மாற போதை மருந்து தாக்கத்தில் இன்னும் புலம்ப துவங்கினான் விக்ரம்.

"டேய் ஹர்ஷா மச்சான்! உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. யூ ஆர் மை வெரி வெரி பெஸ்ட் பிரண்ட்டா. அப்புறம் என்னோட பெரிய இன்ஸ்பிரேஷன் ரோல் மாடல் எல்லாம் நீதான்." என்று சத்தாமாக சொல்லியவன் இப்போது குரலை தாழ்த்திக் கொண்டு ஹஸ்கி வாய்சில்

"அன்ட் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லட்டா. நீ.. நீ.. நீ தான் என்னோட பர்ஸ்ட் கிரஸ்டா" என கூறி நகத்தை வாயில் வைத்து கடிக்க ஹர்ஷா விக்ரமை முறைத்து பார்த்து நின்றான்.

அருகில் நின்று விக்ரமின் செய்கையை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அபியோ தன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டான். அவனை முறைத்த ஹர்ஷா "மொதல்ல இவனை பிடிடா. அப்புறம் வீடியோ எடுக்கலாம்" என்று போதையில் தள்ளாடியபடி தன்னை நோக்கி வந்த விக்ரமை ஒரு கையால் பிடிக்க

விக்ரமோ "மச்சான்! யூ ஆர் மை லவ்டா. நீ என் ஹர்ஷாடா" என கூறி ஹர்ஷாவின் கண்ணத்தில் முத்தம் வைத்துவிட இப்போது ஹர்ஷா அதிர்ந்து நின்று விட்டான்.

ஹர்ஷாவின் மனமோ 'டேய் இன்னும் என் பொண்டாட்டி கூட எனக்கு ஒரு முத்தம் கொடுத்தது இல்லைடா பாவிபயலே. என்ன காரியம் பண்ணிட்ட' என எண்ணி அவன் பிடியை விட்டுவிட்டான்.

அபியோ இதற்கு மேல் தாங்கிது என வயிற்றை பிடித்தபடி சிரிக்க, அவன் சிரிப்பு சத்தத்தில் அவனை நோக்கி திரும்பிய விக்ரம் "டேய் என் சின்ன மச்சான்!" என அழைத்தான்.

இப்போது அபியோ "என்னாது சின்ன மச்சானா!" என வாயை பிளந்தவன் அருகில் வரும் விக்ரமை கண்டு "ஏய் என்னை பார்த்து எதுக்கு இப்போ வர விக்ரம் அத்தான் வேணாம். என்னால உன் தங்கச்சிக்கு துரோகம் பண்ண முடியாது.

ஒழுங்கா ஓடி போயிரு. அதான் உன் லவ்வு கிரஸு எல்லாம் என அண்ணன் தானே அவன் அங்க இருக்கான் பாரு நீ அங்க போ இங்க வராதடா" என கத்தியும் விக்ரம் மேலும் முன்னேற

"ஐயோ..! நான் இல்லை‌. அம்மு குட்டி உன் அத்தானை காப்பாத்துமா" என்று அலறியபடி அறையை விட்டு வெளியே ஓடியே விட்டான். ஆனால் அவன் வீடியோ எடுப்பதை மட்டும் விடவில்லை.

திறந்த கதவை பார்த்து விக்ரமும் வெளியேறினான். சிறிது நேரத்தில் அதிர்ச்சியில் இருந்து சிறிது வெளியே வந்த ஹர்ஷா "ஹையையோ இவன் வெளியே போய்ட்டானே. என்ன ஏழரைய கூட்ட போறானே!" என பயந்தபடி அறையை விட்டு வெளியே வந்தான்.

ஆனால் அவன் வரும் முன்னே அங்கே எல்லாம் எல்லை மீறி சென்றுவிட்டது. விக்ரம் இப்போது பார்வதியின் கண்ணத்தை பற்றி "என் செல்ல மம்மி! ஐ லவ் யூ...!" என கொஞ்சிக் கொண்டிருந்தான். சுற்றி இவர்கள் குடும்பமே அவனை குழப்பத்துடன் பார்த்திருந்தார்கள்.

அதை கண்டு தன் தலையில் அடித்துக் கொண்டு விக்ரம் அருகில் சென்றான் ஹர்ஷா. இப்போது பார்வதியை விட்டு தன் தங்கை ஆதிரை இருந்த பக்கம் நகர்ந்த விக்ரம் அவள் கையை பிடித்து

"அம்மு குட்டி எப்படிடா இருக்க?" என்று அன்பொழுக கேட்க இங்கே அபி "ஆமா பத்து வருசம் கழிச்சு பார்க்குறாரு. அதான் நலன் விசாரிக்கிறாரு" என கவுண்டர் கொடுத்தான்.

அதில் அபியை திரும்பி பார்த்துவிட்டு அம்முவை நோக்கி "அம்முமா உனக்கு அண்ணன் நல்ல மாப்பிள்ளையா பார்க்குறேன்டா. ஆனா இந்தா இருக்கான் பாரு இந்தா இவன்" என அபியை காட்டி

"இவன் உனக்கு வேணாம்மா. அவனை விட்டுருடா. இவன் வெரி வெரி பேட் பாய். நான் உனக்கு சூப்பரா வேற பையன பார்க்குறேன் சரியாடா?" என முடித்தான். இங்கே அபியோ விக்ரமை வெறிக் கொண்டு முறைத்து பார்த்தான்.

அடுத்ததாக "டேடி.. மை நைநா!" என வேதாசலத்தை அவன் நெருங்க, இதற்கு மேல் விட்டால் அவ்வளவு தான் என் எண்ணிய ஹர்ஷா "போதும் மச்சான். வா நாம ரூம்குள்ள போகலாம்" என விக்ரம் கையை பிடித்து இழுக்க "மச்சான்! மை டாடிடா" என்று கூறி பாவமாக பார்த்து வைத்தான்.

"முடியலடா உன்ன வச்சிக்கிட்டு" என வெளிப்படையாக அலுத்தவன் "அதெல்லாம் உன் டாடி இங்கையே தான் இருப்பாரு. நாம காலையில வந்து பார்க்கலாம்" என கஷ்ட்டப்பட்டு அவனை இழுத்துக் கொண்டு போய் அறையில் தள்ளி கட்டிலில் படுக்க வைத்து விட்டு வெளியே வந்தான்.

இங்கே விக்ரம் பண்ண அலம்பலில் ஹர்ஷாவின் குடும்பம் மட்டும் இல்லாது அனுவின் குடும்பத்தாரும் வந்துவிட்டனர்.

ஹர்ஷா வந்தவுடன் ராஜசேகர் தான் "என்ன கண்ணா இது. விக்ரம்க்கு என்னாச்சு? ஏன் இப்படி நடந்துக்குறான்?" என்று அனைவரின் மனதில் இருந்த கேள்வியை கேட்டு வைத்தார்.

அதற்கு அபி "ப்பா அத்தான் நல்லா தான் இருந்தான் ப்பா. ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒருத்தர் வந்து ஹர்ஷாவுக்கு அத்தை பால் தந்ததா கொடுத்துட்டு போனாரு. அதை தான் அவன் குடிச்சான் ப்பா. அதுக்கு அப்புறம் தான் இப்படி நடந்துக்குறான்" என்று கூறிவிட்டான்.

அனைவரும் பார்வதியை பார்க்க அவரோ அதிர்ந்து போய் இருந்தவர் "நான் யார்க்கிட்டயும் பால் கொடுத்து விடலையே அபி குட்டி" என்றார். அதில் மற்றவர்கள் அதிர்ந்து விட்டனர்.

இப்போது சுதாரித்த ராஜசேகர் அந்த பால் கொண்டு வந்த ஆளை அழைத்து வர கூற அபியும் சமையல் அறையில் இருந்து தேடி பிடித்து அந்த நபரை அழைத்து வந்தான்.

அவரிடம் விசாரித்தால் அவர் அந்த பாலை தந்தது பார்வதி இல்லை வேறு ஒரு நபர் என கூற அவரை யார் என காட்ட பணித்தனர்.

அவர் மண்டபம் முழுவதும் தேடிய பின் அந்த ஆள் இங்கே எங்கும் இல்லை என கூறி சென்றார். எப்படி இருப்பார். ராம் தான் ஹர்ஷாவிற்கு பதில் விக்ரம் ரகளையில் இறங்கிய போதே மண்டபத்தை காலி செய்திருந்தாரே.

எனவே அனைவரின் மனதிலும் இப்போது 'யார் இதை செய்திருப்பார்கள்?' என்றே ஓடியது. சட்டென எதுவோ யோசித்த ஹர்ஷா தன் அறைக்கு சென்று அந்த பால் டம்ளரை எடுத்து வந்து அபியிடம் தந்து

"அபி நீ நம்ம ஹாஸ்பிடல் போ. அங்க லேப்ல இந்த டம்ளரை கொடுத்து இதுல என்ன கலந்திருக்குன்னு டெஸ்ட் பண்ண சொல்லுடா. போ" என அபியை அனுப்பியவன் விஸ்வநாதனின் புறம் திரும்பி

"சாரி மாமா! இதை வேணும்னே யாரே செஞ்சிருக்காங்க. விக்ரம் மேல எந்த தப்பும் இல்லை. சோ அவனை எதுவும் நீங்க நினைச்சிக்காதீங்க" என்றவன் குரல் எங்கே அவர் விக்ரமை தப்பாக நினைத்து விடுவாரோ என்றே தவிப்பாய் வந்தது.

விஸ்வநாதனும் புரிந்தது போல் "இட்ஸ் ஓகே மாப்பிள்ளை எனக்கு புரியுது. நீங்க அவரை பாருங்க. நான் எதுவும் நினைச்சுக்கில" என்று ஆதரவாய் பேசி சென்றார். அப்போதே ஹர்ஷாவின் குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.

--------------------------------------------

எங்கோ முணுமுணுவென பேச்சு சத்தம் கேட்பது போல் இருக்க தன் கண்களை கஷ்டப்பட்டு திறந்தான்‌ விக்ரம். தலை எல்லாம் பாரமாக இருக்க "எனக்கு என்னாச்சு. ஏன் இப்படி தலை வலிக்குது?" என தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்.

என்ன யோசித்து பார்த்தும் அவனுக்கு இரவு பால் குடித்த வரை தான் நினைவு வந்தது. அப்போது தான் அருகில் இருக்கும் அபியை பார்த்தவன் "அபி நேத்து நைட் என்ன ஆச்சு?" என்று அவனை நோக்கி செல்ல போக,

விக்ரம் விழித்தது முதல் அவனையே பார்த்திருந்த அபி அவன் தன்னை பார்த்து வர எத்தனிக்கவும் "விக்ரம் அத்தான் எதுவா இருந்தாலும் அங்கையே நின்னு பேசு. கிட்ட வராத" என்றான் பொய்யான பதற்றத்துடன்.

அவன் செய்கையை புரியாது பார்த்த விக்ரம் "டேய் என்னாச்சுன்னு ஒழுங்கா சொல்லுடா" என்று கத்தினான்.

அதற்கு அபி "நான் சொல்றதை விட நீ என்ன செஞ்சன்னு பார்த்தா உனக்கு நல்லா புரியும் அத்தான்" என்று உள்ளுக்குள் சிரித்தபடி வெளியே அப்பாவியாக முகத்தை வைத்து தன் கைப்பேசியை எடுத்து விக்ரமிடன் நீட்டினான்.

அபி கூறியதை கேட்டு குழப்பத்துடன் கைப்பேசியை வாங்கி அந்த வீடியோவை முழுதாய் பார்த்த விக்ரம் அதிர்ந்து தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.‌

அவன் மனமோ 'போச்சே! போச்சே! எல்லாம் போச்சே!' என்று அலறியது.

தலையில் கையை வைத்து வானமே இடிந்து விழுந்து விட்டது போன்ற நிலையில் அமர்ந்திருந்த விக்ரமை நெருங்கிய அபி "அத்தான் என்ன ரொம்ப பீல் ஆகிட்டியா?" என அப்பாவியாக வினவினான்.

விக்ரம் அபியின் உள்குத்தை அறியாது பாவமாக 'ஆம்' என தலை ஆட்டினான். விக்ரமை கண்டு இப்போது நக்கலாக "ச்சுச்சு! இனிமே பீல் பண்ணி ஒன்னும் ஆகப் போறது இல்ல அத்தான். உன்னோட பர்ஸ்ட் கிரஸ் அன்ட் பஸ்ட் லவ்க்கு இன்னைக்கு கல்யாணம்.

ஏன் அத்தான் கொஞ்ச நாள் முன்னாடியே இந்த மேட்டரை நீ சொல்லிருந்தா என் அண்ணனுக்கு உன்னையே எப்படியாவது செட் பண்ணி வைக்க வீட்டுல பேசிரும்பேன்ல" என்றுவிட்டு

" அப்புறம் அத்தான் யாருக்கு யாருன்னு அந்த கடவுள் எழுதியிருப்பான்னு சொல்லுவாங்க. அது மாதிரி அண்ணா லைஃப்ல இனிமே அனு அண்ணி தான்னு கடவுள் எழுதிட்டாரு. சோ பீல் பண்ணாம கிளம்பு விக்ரம் அத்தான்" என அவனை பேசவிடாது அபியே பேசி தள்ளினான்.

கடுப்பான விக்ரம் "ஏய் அபி வேண்டாம்டா" என்று கத்த, அதற்கும் அபி அசராது "என்னது அபியா! நான் உன் சின்ன மச்சான் இல்லையா அத்தான்" என்று வெட்கப்படுவது போல் விரலை வாயில் வைத்து கொண்டான்.

இதற்கு மேல் தாங்காது என விக்ரம் அடித்து பிடித்து குளிக்க ஓட அங்கே அப்போது தான் ஹர்ஷாவும் குளித்து முடித்து வெளியே வர கதவை திறந்தான். விக்ரம் வந்த வேகத்தில் இருவரும் நன்றாக ஒருவர் மேல் ஒருவர் மேதிக் கொள்ள

அபி "தம்தன தம்தன தம்தன..." என மியூசிக்கை தன் கைப்பேசியில் போட்டு விட்டான். அதன் பின்னர் அங்கே நில்லாது ஏன் ஹர்ஷாவை நிமிர்ந்து கூட பார்க்காது வேகமாக குளியல் அறைக்குள் சென்று மறைந்தான் விக்ரம்.

விக்ரமின் செய்கையில் குழம்பிய ஹர்ஷா அபியிடம் என்ன நடந்தது என கேட்க அபி நடந்தவற்றை சிரித்துக் கொண்டே கூறினான். அதில் தானும் சிரித்த ஹர்ஷா

"ஏன்டா அவனை இப்படி கிண்டல் செய்ற. பாவம் அவன் ஏதோ நேத்து சுயநினைவே இல்லாம அப்படி நடந்துகிட்டான். அதுக்காக இப்படியா?" என கேட்டு வைத்தான்.

"ஐயோ ண்ணா! இது ஜஸ்ட் பார் ஃபன். நைட்டு பார்த்தல்ல சாரை, அவர் தங்கச்சிக்கு வேற நல்ல மாப்பிள்ளை பார்க்க போறாராம். அப்போ நாங்க என்ன பண்றது. அதுக்கு தான் அவனை கொஞ்ச நேரமாவது வச்சு செய்யப் போறேன். நீ எதுவும் கேட்க கூடாது. ஓகேவா ண்ணா" என்று தன் நியாயத்தை அபி எடுத்து விட

"என்னமோ பண்ணுடா. ஆனா பாத்துடா ரொம்ப கிண்டல் பண்ணாத‌. அவனை பார்க்க வேற பாவமா இருக்கு" என்று ஹர்ஷா முடித்துக் கொண்டான்.

சும்மாவே அபியை கையில் பிடிக்க முடியாது இதில் ஹர்ஷாவிடமே ஒப்புதல் வாங்கியபின் சும்மா இருப்பானா. விக்ரம் கதற கதற விடாது அவனை ஓட்டி தள்ளி விட்டான்.

ஆனால் அவன் வீட்டு ஆட்கள் மற்றும் அனு வீட்டு ஆட்கள் என மற்றவர்கள் யாரும் விக்ரமை எதுவும் கேட்கவில்லை. அதே போல் அவனிடம் எப்போதும் போல் சிரித்து பேசி சென்றனர்.

அபிக்கு விக்ரம் அம்முவிடம் அப்படி பேசியது இன்னும் தாளவில்லை. அதனாலே அவன் வரும் நேரம் முன்னைவிட அம்முவிடம் இன்னும் நெருக்கமாக பழகினான்.

பார்த்த விக்ரம் மெல்லவும் முடியாது முழுங்கவும் முடியாது அவஸ்தையில் இருந்தான். பின் முகூர்த்த நேரம் நெருங்க மாப்பிள்ளை பெண் இருவரும் மேடையை வந்தடைந்தனர்.

விக்ரம் பாவம் போல் மேடையில் நிற்க இது போதும் என எண்ணிய அபி "உன்னை பாவம் பார்த்து இதோட விடுறேன்‌ அத்தான். இனிமே உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்க போறேன்‌, மாங்கா பறிக்க போறேன்னு டயாலாக் விடாத. அப்படி எதாவது பண்ண அப்புறம் அவ்வளவு தான் என்ன வர்டா" என விக்ரமின் கண்ணத்தில் தட்டி கிளம்பினான்.

அங்கே அக்னியின் முன்னே அமர்ந்திருந்த அனு பதற்றத்தின் உச்சத்தில் இருந்தாள். திருமணம் பெண்களுக்கு வாழ்வில் பெரிய‌ திருப்பம் அன்றோ. இனி வாழ்க்கை ஹர்ஷாவோடு எப்படி இருக்கும் என பல எண்ணங்கள் மனதின் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது.

அனுவின் அலைப்புறுதலை அவள் முகத்தை பார்த்தே கண்டுக் கொண்ட ஹர்ஷா யாரும் அறியாமல் அனுவின் கையை பிடித்து ஆறுதலாக அழுத்திக் கொடுத்தான். அதுவே 'உனக்காக என்றும் நான் இருப்பேன்' என சொல்லாமல் சொல்லியது.

இப்போது சற்று தைரியம் வந்த அனு தானும் ஹர்ஷாவின் எண்ணத்தை புரிந்து கொண்டதின் அடையாளமாக இமைகளை மூடி திறந்தாள்.

அதை கண்டு நிறைவான ஒரு புன்னகையை சிந்திய ஹர்ஷா தன் வாழ்க்கை துணையை ஆதூரமாக பார்த்து வைத்தான். அதன்பின் ஐயரின் சொல்படி ஒவ்வொன்றையும் செய்தனர் தம்பதிகள்.

இவ்வளவு நேரம் அவர்கள் எதிர்ப்பார்த்த நேரமும் வந்தது. ஐயர் "கெட்டி மேளம்! கெட்டி மேளம்!" என்றிட அனுவை மகிழ்வுடன் பார்த்துக் கொண்டே "லவ் யூடா" என்றவாறு மூன்று முடிச்சிட்டான்.

அந்த நிமிடங்களின் தாக்கத்தில் அனுவின் கண்களில் இருந்து தானாக இரு சொட்டு கண்ணீர் கீழ விழ அதற்கு மாறாக அவள் இதழ்களே அழகாக புன்னகையை சிந்தி நின்றன.

இந்த தருணத்தை புகைப்பட கருவிகளும் அழகாக தனக்குள் உள்வாங்கி கொண்டன. இரு குடும்பத்தினரும் திருமணம் நல்லபடியாக முடிந்ததில் நிம்மதியாய் மூச்சு விட்டுக் கொண்டனர்.

அதன்பின் நேரம் அசுர வேகத்தில் ஓடியது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு புறம் உணவு பந்தி கலைக்கட்ட இங்கே மேடையில் புதுமண தம்பதிகளுடன் வரிசையில் நின்று பலர் பரிசு பொருட்களை வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கீழ் வரிசையில் அமர்ந்திருந்த ராமோ ஏகத்துக்கும் கடுப்பில் இருந்தார். அவர் திட்டம் எல்லாம் தவிடு பொடி ஆனதை எண்ணி எண்ணி நொந்து கொண்டார். இனி ஹர்ஷாவை எப்படி சாய்ப்பது அது நம்மால் முடியுமா என்று கூட தோன்றியது.

ஆனால் மனதில் இருந்த வன்மம் அவரை அதற்கு மேல் யோசிக்க விடாது தடுத்து ஹர்ஷாவை அழிக்க வேறு திட்டம் தீட்ட தூண்டிக் கொண்டிருந்தது.

அதனால் 'சரி இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்.‌ அப்புறம் பார்த்துக்கலாம்' என்று மனதிலே அவர் பகைக்கு இன்னும் தூபம் போட்டுக் கொண்டு காத்திருக்க முடிவு செய்தார் நல்லதொரு சந்தர்ப்பத்திற்காக.

மதிய உணவு நேரம் கடந்த பின்னே அனுவை அழைத்துக் கொண்டு ஹர்ஷாவின் வீட்டிற்கு அனைவரும் கிளம்பினர். மண்டபத்தை விட்டு கிளம்பும் முன் தன் தாய் மீனாட்சி, அத்தை வசுந்தரா மற்றும் ரித்து மூவரையும் கட்டிக் கொண்டு அழுக ஹர்ஷாவிற்கே அனுவை பார்க்க பாவமாய் போய்விட்டது.

இதில் விஸ்வநாதனும் தன் மகளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டதை பார்த்து அவர் குடும்பத்தினரே ஆச்சரியப்பட்டனர்.

அவர் ஹர்ஷாவின் கையை பிடித்து "மாப்பிள்ளை அவ சின்ன பொண்ணு. எதாவது தப்பு செஞ்சா கூட மன்னிச்சிருங்க. அவளை நல்லா பார்த்துக்கோங்க மாப்பிள்ளை" என தொண்டை அடைக்கப் பேசிவிட்டார் விஸ்வநாதன்.

அந்த நிலையில் அவரை பார்க்கவே பாவமாக இருக்க "நீங்க இதை சொல்லனும்னு இல்ல மாமா‌. நான் அவளை கண்டிப்பா நல்லா பாத்துப்பேன். நீங்க கவலைப்படாதீங்க" என்று அவர் கையை ஆறுதலாக பிடித்து விட்டான்.

அதில் நம்பிக்கை வரப் பெற்ற விஸ்வநாதன் மகிழ்ச்சியாய் அவர்களை ஹர்ஷாவின் வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தார்.

பெரியவர்கள் ஒரு காரில் சென்றுவிட விக்ரம் அபி அம்மு ஹர்ஷா அனு என இவர்கள் ஐவரும் வேறொரு காரில் வந்தனர். அனு கண்களை துடைத்துக் கொண்டே வருவதை பார்த்த அபி

"ஹயோ! என்ன அண்ணி இப்படி அழறீங்க. எங்க வீட்ல ஜூல இருக்க ஒரு அனிமல் இருக்கு தான்" என விக்ரமை ஓரப்பார்வை பார்த்து கூறியவன் தொடர்ந்தான்.

"அதை நினைச்சு நீங்க பயப்படவே வேணாம். அண்ணா நான் அம்மு இப்படி உங்களுக்கு துணைக்கு நிறைய பேர் இருக்கோம். சோ பயப்படாம வாங்க" என்றிட "தங்கச்சி முன்னாடியே சொல்றேன் நீ கோச்சிக்காத" என்ற முன்னறிவிப்பாய் உரைத்த விக்ரம் அபியின் முதுகில் சப்பென்று ஒரு அடியை வைத்தான்.

பின் "ஏன்டே காட்டெருமை! என்னை பார்த்தா ஜூல இருக்க அனிமல் மாதிரி இருக்கா. நீதான்டா அது. அம்மு பாருடா இவன் உன் அண்ணனையே என்ன சொல்றான்னு. அப்போ என் தங்கச்சி உன்னையும் சேர்த்து தானே அப்படி சொல்றான்" என அபியிடம் ஆரம்பித்து அம்முவிடம் அவனை வசமாக கோர்த்து விட்டான் விக்ரம்.

"அதானே!" என்ற அம்மு "என்ன அபி அத்தான் என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது. எப்படி நீங்க இப்படி சொல்லலாம்" என அவளும் சேர்ந்து கொள்ள அந்த இடமே கலை கட்டியது.

இவர்கள் அலம்பலை சிறிது நேரம் பொறுத்த அபி விக்ரமை பார்த்து கொண்டே "அண்ணி உங்களுக்கு ஒரு சக்காலத்தான் இருக்கான் தெரியுமா?" என மெதுவாக ஆரம்பிக்க "என்ன சொல்றீங்க?" என்றாள் அனு புரியாமல்.

பேச்சு செல்லும் திசையை கண்டு பதறிப்போன விக்ரம் "ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லமா தங்கச்சி. அவன் ஏதோ சும்மா விளையாடுறான்மா" என சமாளித்து விட்டு அபியை பார்த்து "வாய மூடுடா" என்று அடிக்குரலில் சீற சிரித்துக் கொண்டே அபியும் அமைதி ஆகிவிட்டான்.

இப்படி ஒருவருக்கு ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டும் ஓட்டிக் கொண்டும் அழுத அனுவை சிரிக்க வைத்து விட்டே வீட்டை சென்றடைந்தனர்.

--------------------------------------------

வசுந்தரா கணபதி இருவரும் தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். பிள்ளைகள் இருவரும் விஸ்வநாதன் வீட்டில் இருக்க வசுந்தராவிடம் ஏதோ பேச வேண்டும் என அவரை அழைத்து வந்திருந்தார் கணபதி.

"வசும்மா! நான் சொல்றதை கேளுடா. நாம இங்க இருக்க வேணாம். உன் அண்ணன் நம்மகிட்ட எப்பவுமே கோபமா தான் நடந்துக்கறாரு. உன் மனசையும் பேசியே ஹர்ட் பண்றாரு. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா. நம்ம போய்டலாமே" என வசுந்தராவின் கைகளை பிடித்து கொண்டு உறுக்கமாய் பேசினார்‌ கணபதி.

அவர் அன்பில் என்றும் போல் இன்றும் நெகிழ்ந்த வசு "எனக்கு நீங்க சொல்றது புரியுதுங்க. ஆனா அண்ணா இப்படி ஆகவும் நாம தானே காரணம். அப்போ அவர் என்ன சொன்னாலும் நாம ஏத்துக்கிட்டி தானே ஆகனும்.

அதுமட்டும் இல்லாம இப்போ தான் அனுக்கு கல்யாணம் ஆச்சு. நாம இங்க இருந்து கிளம்பிட்டோம்னா அண்ணா அண்ணி தனியா இருப்பாங்களே. அவங்களும் பாவம் தானேங்க" என்றார் நியாயமாக.

அவர் கூறுவதை கேட்டு விட்டு "புரியுது வசுமா. உன் அண்ணா இப்போ இப்படி இருக்க நாம ஒரு விதத்தில காரணம் அப்படின்றதால தான் நானும் இவ்ளோ நாள் அமைதியா இருக்கேன்மா. ஆனா..." என்று இழுத்தவர்

"உன்னோட விருப்பம் உன் அண்ணன் கூட இருக்கிறது தான்னா எனக்கும் அதே தான். ஏன்னா நீ வேற நான் வேற இல்லடா" என்று அவரை தோளோடு அணைத்து விடுவித்தார் கணபதி.

என்னதான் விஸ்வநாதன் திட்டினாலும் வசுந்தரா மேல் அவர் கொள்ளை பாசம் வைத்திருப்பார் என அறிந்தவர் தான் கணபதி. எனவே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். தன் கணவனின் இந்த பூரிதலில் பூரித்து போன வசுந்தராவும் மகிழ்ச்சியாக தன் அண்ணன் வீட்டை நோக்கி சென்றார்.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 18

குருவிகள் கூக்குரல் எழுப்பிட அந்த இன்னிசையை கேட்டுக் கொண்டே களைந்து எழுந்து அமர்ந்தாள் அனுக்ஷ்ரா. இப்போது எல்லாம் இந்த குருவிகளின் கானத்தில் தான் துயில் எழுகிறாள்.

அனு ஹர்ஷாவின் திருமணம் முடிந்து இன்றோடு ஒரு வாரம் முடிந்து விட்டது. இந்த ஒரு வாரமும் அவர்கள் வீட்டு தோட்டத்தில் இருந்து வரும் குருவிகளின் கீச் கீச் ஒலி அவளின் நாளை இனிமையாக்கியது என்பது உண்மையே.

அதில் உதட்டில் புன்னகை அரும்ப சோம்பல் முறித்தவள் அருகில் படுத்து உறங்கி கொண்டிருந்த ஹர்ஷாவை பாசம் பொங்க பார்த்து வைத்தாள். இந்த ஒரு வார வாழ்க்கையில் ஹர்ஷாவின் புதிய புதிய பரிமாணங்களை பார்க்கிறாள் அனு.

அவள் நினைவு ஒரு வாரம் முன்னே சென்றது. ஹர்ஷா அனு இருவருக்கும் முதல் இரவுக்கு குடும்பத்தினர் ஏற்ப்பாடு செய்திருந்தனர்.

அனுவும் பயந்துக் கொண்டே தான் அறைக்கு வந்தாள். ஆனால் அங்கே ஹர்ஷாவின் அறை எந்தவித அலங்காரமும் இன்றி இருக்க அதிலே கொஞ்சம் நிம்மதி அடைந்த அனு உள்ளே வந்தாள். அங்கே மெத்தையில் அமர்ந்திருந்த ஹர்ஷா கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.

அவள் வரும் அரவம் உணர்ந்த ஹர்ஷா, அறைக்குள் வந்த அனுவை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தவன் "வாடா அனு" என்றான்.

மனதில் உள்ள பதற்றத்தை அனுவின் முகம் அப்பட்டமாக காட்டிட அவள் கையை ஹர்ஷா பிடிக்க அவள் கை வேர்த்து போய் இருந்தது. "என்னடா டென்ஷனா இருக்கா?" என வினவிட 'ஆம்' என்று தயக்கமாய் தலை ஆட்டினாள்.

மெலிதாக புன்னகைத்த ஹர்ஷா "என்னை பார்க்க அவ்ளோ பயங்கரமா இருக்கா என்ன?" என்று கிண்டலாய் கேட்டவன் அவளை சாதாரணமாக்க

"உனக்கு எப்போடா செமஸ்டர் எக்சாம்ஸ் வருது?" என்றான். அனுவும் "இன்னும் டென் டேஸ் இருக்கு ஹர்ஷா" என்றாள்.

"ஓஓ! ஓகேடி. எக்சாம்க்கு பிரப்பேர் பண்ணிட்டியா? புக்ஸ் எல்லாம் இங்க எடுத்துட்டு வந்துட்டியா?" என கேள்விகளை அடுக்க "ம்ம் ஓரளவு பிரிப்பேர் பண்ணிட்டேன். புக்ஸ் எல்லாம் நாம ஈவ்னிங் அப்பா வீட்டுக்கு போய்ட்டு வந்தோமே அப்பவே எடுத்துட்டு வந்துட்டேன்" என்று ஒப்பித்தாள்.

அதற்கு ஹர்ஷா "சரிடா! அப்புறம் இன்னொரு விஷயம். நமக்கு இன்னைக்கு மேரேஜ் ஆச்சுன்றதால எல்லாமே இன்னைக்கே நடக்கனும்னு எந்த கம்ப்பள்ஷனும் இல்லடி புரியுதா.

நீ உன் எக்சாம்ஸ்ல கான்சென்ட்ரேட் பண்ணு. நமக்குள்ள இதெல்லாம் அதுவாவே நடக்கட்டும். ம்ம் ஓகே தானேடா" என்று பரிவாய் கேட்க இந்த ஹர்ஷாவை அவ்வளவு பிடித்து தொலைத்தது அனுவிற்கு. எனவே அவளும் மகிழ்வுடன் சரியென்று சம்மதித்தாள்.

ஹர்ஷாவின் மனதில் 'படிக்கின்ற பெண் மனதை கெடுக்க வேண்டாமே' என்ற எண்ணம் ஓடிட அந்த இரவை இனிமையாக பேசி கழித்தனர் இருவரும்.

இந்த ஒரு வாரமும் நண்பர்கள் சொந்தகாரர்கள் வீட்டில் விருந்து என அமோகமாக செல்ல மீதம் இருந்த நேரத்தில் அனுவை படிக்க சொல்லி பாடாய்படுத்தினான் ஹர்ஷா. அதை செல்லமாக அலுத்துக் கொண்டாலும் அனு ஹர்ஷாவின் இந்த செய்கையை எல்லாம் ரசித்துப் பார்ப்பாள்.

இப்போதும் அதே போல் ஹர்ஷாவை அனு மெய்மறந்து ரசித்து கொண்டிருக்க "என்னடி நான் அவ்ளோ அழகா இருக்கனா என்ன? இப்படி வச்ச கண்ணு வாங்காம பாக்குற" என திடீரென கேட்ட குரலில் தூக்கிவாரிப் போட்டது அனுவிற்கு.

அனு ஹர்ஷாவை பார்த்த போதே விழித்துவிட்டான்‌ ஹர்ஷா. இப்போது விழித்த அனு "ஆஆ.. நான் ஒன்னும் உங்களை பார்க்கலையே. சும்மா அ.. அங்க ஹான். குருவி சௌன்ட் ரொம்ப பிளசன்ட்டா இருந்தது. அதான் அதை கேட்டு கொஞ்சம் ரசிச்சிட்டு இருந்தேன்" என்று சமாளித்தாள்.

"ம்ஹூம்! அப்படியா!" என்று வாய்க்குள் சிரித்த ஹர்ஷா "நம்பிட்டேன்டி" என்றவனின் கண்கள் 'நான் உன்னை நம்பவில்லை' என்று சிரித்தது.

அதற்கு அழகாய் வெட்கப்பட்ட அனு "போங்க சும்மா கிண்டல் பண்ணாதீங்க. நான் குளிக்க போறேன்" என்று குளியல் அறைக்குள் புகுத்துக் கொண்டாள். அனு இந்த ஒரு வாரத்தில் அந்த குடும்பத்தில் ஒரு நபராகவே மாறி விட்டாள்.

எத்தனை பெண்கள் இந்த காலத்தில் அனுவை போல் இருக்கிறார்கள் என அவளை நினைத்து சிரித்துக் கொண்டே எழுந்து அமர்ந்த ஹர்ஷாவின் மனம் நிறைவாய் இருந்தது.

ஹர்ஷா அனு இருவரும் கிளம்பி கீழே வர அவர்கள் ஜோடி பொருத்தத்தை கண்டு பூரித்த பார்வதி அவர்களை இன்முகத்துடன் பார்த்தார். ஹர்ஷா சென்று ஷோபாவில் விக்ரம் அருகில் அமர்ந்து கொள்ள அனு பார்வதியை நோக்கி சென்றாள்.

அங்கே உம்மென்று அமர்ந்திருந்த விக்ரமை விசித்திரமாக பார்த்த ஹர்ஷா "என்னடா என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி சோகமா உக்காந்து இருக்க. ஏதாவது பிரச்சினைல மாட்டிக்கிட்டியா?" என்று அக்கறையாக வினவ

அவனை முறைத்த விக்ரம் "ஏன்டா நான் சும்மா இருந்தா கூட பிரச்சினையில இருக்கேன்னு தான் நினைப்பியாடா" என்றான் ஆதங்கமாய்.

"பின்ன என்னடா எங்க போனாலும் பிரச்சினையில வான்ட்டட்டா போய் மாட்டுறது நீதானே. என் மேரேஜ் அப்போ கூட எனக்கு வந்த பாலை நீ குடிச்சு பிரச்சினைய இழுத்து வைக்கல" என்று நக்கலாக கேட்டான் ஹர்ஷா.

அதில் மேலும் நொந்து போன விக்ரம் "ஏன்டா நீயுமா? உன் தம்பி செய்றது பத்தாதுன்னு நீயும் இப்படி செஞ்சா எப்படிடா?" என்றான் பாவமாய். ஏனெனில் அபி அந்த வீடியோவை வீட்டு நபர்கள் அனைவரின் எண்ணுக்கும் அனுப்பி வைத்துவிட்டான்.

அதை பார்த்த ராஜசேகரே "ஏன் விக்ரம் நீ உண்மையாவே ஹர்ஷாவ லவ் பண்றியா என்ன?" என்று அதிர்ந்து கேட்டுவிட, மற்றவர்களை பற்றி கேட்கவும் வேண்டுமா! விக்ரமை கதற வைத்து விட்டனர். அதுவே அவன் சோகத்திற்கு முழுமுதற்காரணம்.

விக்ரமின் பாவமான முகத்தை பார்த்து "சரி விடுடா" என்ற ஹர்ஷா "இப்போ என்னாச்சுன்னு இப்படி கப்பல் கவுந்த மாதிரி தலைய தொங்கப் போட்டுட்டு உக்காந்து இருக்க. அதை முதல்ல சொல்லுடா?" என்று வினவினான்.

அப்போது வந்த அபியை முறைத்த விக்ரம் "இந்தா வரான்ல உன் உடன்பிறப்பு அவனால வந்த வினைடா. அவன் எதுக்குடா அந்த வீடியோவை வீட்ல இருக்க எல்லாருக்கும் அனுப்புனான்" என்று அபியின் மீது பாய்ந்தான்.

அதை தூசு போல் தட்டிவிட்ட அபி "அத்தை இன்னைக்கு என்ன டிபன்?" என்று கத்தினான். பார்வதி என்ன உணவென்று கூற "ஓஓ சூப்பர் அத்தை!" என்று மீண்டும் கத்தி சொன்னவன் விக்ரமிடம் திரும்பி "ஆமா என்னமோ பேசிட்டு இருந்தியே அத்தான். என்ன பேசுன?" என்றான் ஒன்றும் அறியாதது போல்.

அதில் விக்ரம் கடுப்பாக ஏதோ பேசிவர ஹர்ஷா முந்திக் கொண்டு "அபி ஏன்டா! கொஞ்சம் சும்மா இரேன்டா" என்றுவிட்டு விக்ரமை பார்த்து "விடுடா அவன் சின்ன பையன்டா" என்றான். அதற்கு "ஆமா பச்சை பிள்ளை" என வாய்க்குள் முனகிய விக்ரம் அமைதி காத்தான்.

அதேநேரம் அபியிடம் திரும்பிய ஹர்ஷா "என்ன அபி அதை யார் செஞ்சாங்கன்னு தெரிஞ்சுதா?" என்று கேட்டான். அபி அதற்கு "இல்லை" என சோகமாக தலை அசைத்தான். பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட ஹர்ஷா "ம்ம் விடுடா பார்த்துக்கலாம்" என்றுவிட்டான்.

ஆம் அன்று மருத்துவமனையில் ஹர்ஷா அனுப்பிய சாம்பிலை அவர்கள் ஆய்வு செய்து மறுநாளே அதில் போதை மருந்து கலந்திருந்ததை சொல்லிவிட்டனர்.

திருமணம் அதன் பின்னான வேலைகளில் அதை யார் தந்தது என பிறகு கண்டுபிடித்து கொள்ளலாம் என தள்ளிப்போட்டுவிட்டு இப்போது இரண்டு நாட்களாக தான் அதன் முயற்சியில் இறங்கினர்.

எனவே அபி அங்கே திருமணம் மற்றும் முதல் நாள் ரிஷப்ஷனில் நடந்த நிகழ்வுகளின் வீடியோக்கள் புகைப்படங்களை புகைப்பட கலைஞரிடம் சென்று வாங்கி வந்துவிட்டான். ஆனால் சாட்சி சொல்ல வேண்டிய அந்த சமையல் நபரோ ஆளை காணவில்லை.

முதல் நாள் மண்டபத்தில் இரவு நடந்த நிகழ்வுகளை அங்கே இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியலாம் என மண்டபம் சென்றதில் அந்த இரவு நடந்த எல்லா நிகழ்வுகளும் கேமராவில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. ராம் தான் அதை அடுத்த நாளே ஆட்களை வைத்து அழித்து விட்டாரே!

இதில் அதிகம் குழம்பி போன அபி அதை ஹர்ஷாவிடம் கூறிவிட அவனுக்கு 'ஒருவேளை அந்த கொலை சம்பவத்திற்கும் இந்த நிகழ்விற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமோ' என காரணமே இல்லாமல் அவன் உள்மனம் கூறியது.

அது ஏன் என அவனுக்கும் சுத்தமாக புரியவில்லை. ஆனால் அதை அப்படியே விடவும் அவன் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. அதே நேரம் அந்த சமையல் நபர் கிடைத்தால் தான் ஏதாவது தெரியவரும் என்பதால் என்ன செய்வது என யோசித்த ஹர்ஷா இதை அப்படியே அந்த கொலை முயற்சி வழக்கை விசாரிக்கும் ஏ.சிக்கு தெரியப்படுத்தி விட்டான்.

ஆனால் இதை வீட்டினர் யாரிடமும் அவன் பகிர்ந்து கொள்ளாது மறைந்தான். அவர்களை பயம்முறுத்த வேண்டாம் என தன் மனதிற்குளே வைத்துள்ளான்.

தன் யோசனையில் இருந்து வெளிவந்த ஹர்ஷா இன்னும் சோகமாக அமர்ந்திருந்த விக்ரமை கண்டு வந்த புன்னகையை அடக்கியவன் "இன்னும் என்னடா?" என்றான்.

அதற்கு "ஒன்னும் இல்லடா. எனக்கே என்னை நினைச்சு ஒரு மாதிரி இருக்குடா. நானா அப்படி பேசுனேன்னு" என்று வருத்தப்பட "ஹைய்யோ என்ன விக்ரம் அத்தான் நான் என்னமோ உன்னை பெரிய டான் ரேஞ்சுக்கு நினைச்சா நீ என்ன இதுக்கே இப்படி சொங்கி மாதிரி ஆகிட்ட.

விடு அத்தான்! நமக்குள்ள இதெல்லாம் சகஜம் தானே. நம்ம வீட்ல இருக்கவங்களுக்கு நம்மல பத்தி நல்லா தெரியும். நீ சும்மா போதைல உளறினதை யாரும் தப்பாலா எடுத்துக்கலை" என்று சமாதானப்படுத்தினான்.

ஹர்ஷாவோ 'என்னடா இது என் தம்பியா இப்படி பேசறது?' என சந்தேகமாக பார்க்க அபி தொடர்ந்தான் "நீ எவ்ளோ நல்லவன் தெரியுமா. இப்போ உன் தங்கச்சியை நான் அவுட்டிங் கூட்டிட்டு போனாக்கூட நீ எதுவும் சொல்ல மாட்ட.

அதுவும் எனக்கு தெரியும். ஏன்னா நீ ரொம்ப ரொம்ப நல்லவன் விக்ரம் அத்தான்" என்று நல்ல பிள்ளை போல் சொல்லி முடித்தவன் அம்முவை நோக்கி சென்றான். 'அதானே! என் தம்பியாவது விக்ரம் கிட்ட நல்லா பேசறதாவது' என நினைத்த ஹர்ஷாவும் சிரித்துவிட்டான்.

அந்த சத்தத்தில் திரும்பிய விக்ரம் "ஏன்டா! உன் தம்பி திருந்தவே மாட்டானா?" என்று ஆதங்கமாக பேச "வாய்ப்பில்லை ராஜா! வாய்ப்பில்லை" என்ற சத்தம் அபியிடம் இருந்து வந்தது.

"டேய்..! பக்கி" என கடுப்பில் விக்ரம் கத்த "அத்தை நானும் அம்முவும் அவுட்டிங் போறோம். சோ வெளிய சாப்டுக்கிறோம். பாய்!" என கத்தியபடி அம்முவை இழுத்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டான்.

அம்முவும் "பாய் ம்மா! நான் அபி அத்தான் கூட அவுட்டிங் போறேன். பாய் ண்ணா!" என் விக்ரமை அவள் பங்கிற்கும் வெறுப்பேற்றி விட்டே சென்றாள்.

இதையெல்லாம் நொந்து பார்த்த விக்ரம் "டேய் நானும் சீக்கிரமே ஒரு பொண்ணை உசார் பண்ணி கூட்டிட்டு வந்து உன்னை வெறுப்பேத்துறேன்டா. இது எங்க ஆத்தா பார்வதி மேல சத்தியம்டா" என்று கத்தி சபதமே போட்டு அமர்ந்தான். அந்த நிமிடம் ததாஸ்து தேவதைகள் 'அப்படியே ஆகட்டும்' என்றனர் போல்.

ஆனால் என்ன ஒன்று விக்ரம் தான் அவன் காதல் வயப்படப் போகும் பெண்ணிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தை படப்போகிறான் என அவன் அப்போது அறியவில்லை பாவம்.

பார்வதியோ "நான் என்னடா பண்ணுனேன். எதுக்கு எம் மேல சத்தியம் செஞ்ச" என்று அதிர்ந்து போய் கேட்க அதை கண்டுக் கொள்ளாது "எம்மா டிபன் வைமா" என உண்ண அமர்ந்துவிட்டான் விக்ரம். இவர்கள் ரகளையை வீட்டில் இருந்தவர்கள் சிரிப்புடன் பார்த்துவிட்டு உணவை உண்ண அவர்களும் சென்றனர்.

காலையிலே அபியால் எழுந்த கடுப்பில் அலுவலகம் கிளம்பி சென்ற விக்ரமிற்கு அன்று சோதனையாக டிராபிக்கும் சதி செய்யவே நொந்து போய் தன் காரை சைக்கிள் வேகத்தில் நகர்த்திக் கொண்டிருந்தான்.

அந்த நேரம் பார்த்து ரெட் சிக்னலும் விழுந்திட "ச்சே என்னடா இது நமக்கு வந்த சோதனை! இந்த சிக்னல் கூட சிக்கல் பண்ணுதே. எப்ப சிக்னல் விழுந்து, நான் எப்ப ஆபிஸ் போயி! எப்பா நினைக்கவே கண்ண கட்டுதே!" என புலம்பியபடி அமர்ந்திருந்தான் காரினுள்.

அப்போது எதோ வண்டி ஒன்று அபியின் காரில் மோதிய சத்தம் கேட்கவே திடுக்கிட்டு காரில் இருந்து இறங்கி வெளியே வந்தான். அங்கே அவன் காரை ஒரு ஸ்கூட்டி இடித்திருந்தது.

அந்த ஸ்கூட்டி ஓட்டிய நபரை கோபமாய் திட்ட போன விக்ரம் அதிர்ந்து நின்றுவிட்டான். ஏனெனில் அந்த ஸ்கூட்டியை ஓட்டி வந்த பெண்ணோ அவள் பின்னே இருந்த பைக்காரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்‌.

"ஏன்டா டோமரு! என்ன தைரியம் இருந்தா என் வண்டிய இடிச்சிருப்ப ஹான்!" என்று கத்தியவள் அந்த பைக் ஆளை பிடித்து இழுத்து வந்து அவள் ஸ்கூட்டி அருகில் நிறுத்தி

"பாருடா! நல்லா பாரு. என் வண்டி எப்படி அடி வாங்கிருக்குன்னு. உன் கண்ணை ரோட்டுல வைக்காம எங்க பராக்கு பாத்துட்டுடா வந்த என் வென்று" என எகிறிக் கொண்டிருந்தாள்.

சிக்னல் விழுந்திருந்த நேரம் கொஞ்சம் வேகமாக வந்த பைக்காரன் அந்த பெண்ணின் வண்டியை இடித்துவிட அதில் அவள் தடுமாறி சென்று விக்ரமின் காரில் இடித்துவிட்டாள்.

ஆனால் அந்த பெண்ணின் வண்டிக்கு அந்த அளவு சேதாரம் ஏற்ப்படவில்லை. ஆனால் அவள் இடித்ததில் விக்ரமின் கார் தான் நன்றாக அடிவாங்கியிருந்தது. அதை கண்டுக் கொள்ளாத அந்த பெண் பைக் ஓட்டி வந்தவனிடம் வம்புக்கு நின்று கொண்டிருக்கிறாள்.

"எம்மா பொண்ணே! அதுக்கு ஏன்மா அந்த பையன்ட இப்படி நடுரோட்டுல சண்டை போடுர?" என கூட்டத்தில் இருந்து ஒரு குரல் வரவே கொதித்து போன அந்த பெண் "யோவ்! யாருயா அது? யாரா இருந்தாலும் என் முன்னால வந்து பேசுங்க" என்று கத்தி விட்டாள்.

பின் அந்த பைக்காரனிடம் திரும்பி "இங்க பாரு ஒழுங்கா என் வண்டிய இடிச்சு டேமேஜ் பண்ணதுக்கு காச எடுத்து வச்சிட்டு இடத்தை காலி பண்ணு" என்று நிலையாய் நின்று விட்டாள்.

அதற்கு மேல் தாங்காது என அந்த பைக்காரனும் காசைக் கொடுத்துவிட்டான். பின் அருகில் அதிர்வாய் பார்த்து நின்ற விக்ரமை பார்த்து "யோவ் என்ன ஆ..னு வாய பிளந்து பார்த்துட்ட இருக்க.

எங்கடா சண்டை நடக்கும் வேடிக்கை பார்க்கலாம்னு வரது. போயா போய் பொழப்ப பாருங்க எல்லாம். வந்துட்டாங்க! பிரச்சினை வந்தா உதவி செய்ய ஒருத்தனும் வரமாட்டாங்க. ஆனா வேடிக்கை பார்க்க மட்டும் வருவாங்க" என விக்ரமை திட்ட ஆரம்பித்து தன் போக்கில் பேசியடி அவள் வண்டியை எடுத்து கொண்டு நகர்ந்து விட்டாள்.

விக்ரம் தான் அதிர்ந்து போய் நின்று விட்டான். அப்படியே போய் காரில் ஏறிய விக்ரம் "என்னடா இந்த விக்ரமுக்கு வந்த சோதனை. நான் அந்த பொண்ணுட்ட பேச வேண்டிய டயலாக்கை எல்லாம் அந்த பொண்ணு வேற யார்ட்டையோ பேசிட்டு காசு வாங்கிட்டு போகுது.

சரியான பஜாரியா இருப்பா போல. யாரு என்னன்னு தெரியாம மானாவரியா எல்லாருட்டையும் சண்டைக்கு போகுது. எப்பப்பா நல்ல வேளை நான் அவக்கிட்ட எதுவும் கேக்கலை. இல்லை என்னையும் டாரு டாரா கிழிச்சு தொங்கவிட்டருப்பா போலையே.

ஐயோ வண்டி ரைட் சைடு வேற ஒடுங்கி போச்சு. அதை கேக்க கூட விடாம ஆஃப் பண்ணி அனுப்பிட்டா. ச்சே இந்த நாளே இவ்ளோ அமோகமா ஆரமப்பிச்சிருக்கே, இன்னும் போக போக என்ன ஆகப்போகுதே!" என்று புலம்பியவாறே அவன் அலுவலகத்தை சென்றடைந்தான்.

விக்ரம் அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் அவனின் தோரணை அப்படியே மாறியது. வீட்டில் எந்த அளவிற்கு விளையாட்டுதனமாய் இருப்பானோ அந்த அளவு அலுவகத்தில் மிகவும் கண்டிப்பாக இருப்பவன் தான் விக்ரம்.

எனவே அவன் உள்ளே வந்த நேரம் அவன் அலுவலக ஊழியர்கள் அனைவரும் மரியாதையாக வணக்கம் கூறிட அதை ஏற்றவாறு அவன் அறைக்குள் சென்று விட்டான்.

அவன் அறைக்கு சென்றபின் பின்னாலே அவனின் அலுவலக மேனேஜர் வந்து கதவை தட்டினார். "எஸ் கம்மின்" என்ற விக்ரமின் கம்பீர குரலில் உள்ளே வந்த மேனேஜர் "சார் குட்மார்னிங்!" என ஆரம்பித்தார்.

"இப்போ வந்திருக்க அந்த கவர்மெண்ட் டெண்டர்க்கு நாம இன்னும் கொட்டேஷன் அனுப்பலை சார். அதை இன்னைக்கு காலைல வந்த உடனே உங்களுக்கு நியாபகப்படுத்த சொல்ல சொன்னீங்க சார்" என்று முடித்தார் அந்த மேனேஜர்.

அவர் கூறியதை முழுவதும் கேட்ட விக்ரம் "ம்ம் ஓகே! ஐ'ல் டேக் கேர் ஆஃப் இட். நீங்க அந்த சேப்பாக்கத்துல நடக்குற பில்டிங் டீடெயில்ஸ பார்வர்ட் பண்ணிடுங்க" என்று கூறியவன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

ஆனால் மேனேஜர் அந்த இடத்திலே நிற்க இப்போது அவரை பார்த்த விக்ரம் "இன்னும் என்ன?" என்றான் கடுப்பாக. காலையில் நடந்த நிகழ்வுகளால் வந்த கடுப்பு அது.

அதில் தடுமாறிய மேனேஜர் "அது சார். இன்னைக்கு உங்களுக்கு பி.ஏ போஸ்ட்க்கு இன்டர்வியூ வச்சிருக்கோம். அதான் நீங்க ரெடின்னா எல்லாத்தையும் அரேஜ் பண்ணிடுவேன் சார்" என்றார்.

"ப்ச்!" என தன் நெற்றியை தடவி யோசித்தவன் "இங்க பாருங்க சார் எனக்கு அந்த டெண்டர் வேலை இருக்கு. இதை ஈவ்னிங்குள்ள முடிக்கனும். அது உங்களுக்கும் தெரியும் தானே. இப்போ நான் வந்து இன்டர்வூயுவை எடுக்கறது ஒத்து வராது" என்றவன் சிறிது நேரம் யோசித்தான்.

பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக "ஒன்னு பண்ணுங்க சார். நீங்க அன்ட் ராகவ் யூ போத் ஜஸ்ட் கேரி ஆன் த இன்டர்வியூ. எப்பவும் பாலோ பண்ற ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன் படி கொண்டு போங்க. ஆல்ரெடி குவெஸ்ஸின்ஸ் பிரிப்பேர் பண்ணி தானே வச்சிருப்பிங்க.

அதையே வச்சு பார்த்துக்கோங்க. எல்லா டெஸ்ட்டுலையும் குவாலிபை ஆகுற பெஸ்ட் திரி கேண்டிடேட்ட மட்டும் என் ரூமுக்கு அனுப்புங்க. அன்ட் அவங்கல்ல ஒருத்தரை நான் செலக்ட் பண்ணிக்கிறேன்" என்று அவரை அனுப்பி வைத்தான்.

அதன்பின் அவன் வேலையில் கவனம் வைத்தான். வெளியே அவன் சொன்னது போல் அந்த மேனேஜர் மற்றும் மற்றொரு ஊழியரும் சேர்ந்து இன்டர்வியூவை முடித்துவிட்டனர். அதன்பின் மூன்று தேர்வானவர்களின் ரெஸ்யூமை விக்ரமிடம் தந்துவிட்டு சென்றார் மேனேஜர்.

அவர் சென்று பின் ஒவ்வொரு ஆளாக உள்ளே அனுப்பினார் மேனேஜர். முதல் இரண்டு நபர்களை சோதித்தவன் மூன்றாவது நபரை அழைத்தான் "கம்மின்" என்றவன் அவள் ரெஸ்யூமை பார்தவாறே "வெல் மிஸ்.சங்கவி" என்று நிமிர்ந்தான்.

நிமிர்ந்தவன் அதிர்ந்து போய்விட்டான். ஏனென்றால் காலையில் விக்ரம் பஜாரி என பட்டப்பெயர் இல்லை இல்லை செல்லப்பெயர் வைத்த அந்த ஸ்கூட்டி பெண் தான் அவன் எதிரில் அமர்ந்திருந்தாள்.

அதுவும் சாந்த சொருபினியாக முகத்தில் மென்னகை மின்ன காலையில் பார்த்த தோற்றத்தில் இருந்து முற்றிலும் எதிர்ப்பதமான தோற்றம். விக்ரமின் நிலை அவளின் "குட்மார்னிங் சார்" என்ற வார்த்தையில் கலைந்தது.

அதன்பின் அவன் மற்றவர்களிடன் கேட்ட அதே கேள்விகளை கேட்டு அவள் பதிலையும் பெற்று கொண்டான். அவளும் எல்லாம் முடித்து வெளியே சென்றபின் மூவரின் பதில்களையும் ஆராய்ந்தான். எப்படி பார்த்தாலும் எல்லாரையும் விட சங்கவியின் பதில்கள் தான் சிறப்பாக இருந்தது.

அவள் பேச்சிலே தெரிந்தது அவள் நல்ல திறமைசாலி என. ஆனால் விக்ரமின் மனமோ 'என்ன திறமை இருந்து என்ன பண்றது‌. சரியான பஜாரியா இல்ல இருக்கா. ம்ஹூம் ஒருவேளை நான் வேலை தரலைனா சண்டைக்கு வந்திருவாளோ. நடந்தாலும் நடக்கலாம்' என்று எண்ணியது.

பின் பலவாறு யோசித்து சங்கவிக்கே வேலை கொடுக்க முடிவு செய்தான். அவள் திறமைக்கு ஐம்பது சதவிகிதம் பார்த்தான் என்றால் எங்கே சண்டை போட வந்துவிடுவாளோ என பயந்து ஆம் பயந்து போய் தான் மீதி ஐம்பது சதவிகிதம் என எண்ணி வேலை கொடுக்க முடிவு செய்தான்.

சங்கவி வேலை கிடைத்த மகிழ்வில் விக்ரமை காண செல்ல அவள் வேலைகளை எல்லாம் சொல்லி முடித்த விக்ரம் "இங்க பாருங்க மிஸ்.சங்கவி. இனி நீங்க என்னோட பெர்சனல் அஸிஸ்டன்ட். நீங்க நாளைக்கு உங்க வேலைல ஜாயின் பண்ணிடுங்க. ஓகே தானே' என்ற விக்ரம் அவள் வெளியே செல்லும் நேரம்

"அன்ட் மிஸ்.சங்கவி இனிமே ரோட்ல போறப்ப எதிர்ல இருக்க கார்ல மோதாம போங்கமா" என்றிட சங்கவி புரியாமல் பார்க்க "அது மார்னிங் நீங்க என்னோட கார்ல தான் உங்க ஸ்கூட்டிய லேண்ட் பண்ணிருந்தீங்க" என்றான் நக்கலாய்.

அதில் அதிர்ந்து போய் விக்ரமை பார்த்த சங்கவி "சார் ஐம் சாரி! என் பின்னாடி வந்த வண்டி என்னோட ஸ்கூட்டில மோதவும் தான் உங்க கார்ல லேசா இடிச்சிட்டேன். ரியலி வெரி சாரி சார்" என்றாள் தயக்கமாக.

புரிந்தது போல் தலை அசைத்தவன் "யூ மே கோ நவ்" என்றிட "தேங்க்ஸ்" என கூறி கிளம்பிவிட்டாள். ஆனால் 'எப்படி அப்படியொரு நிகழ்வை பார்த்தப் பின்னும் வேலை கொடுத்தார்' என யோசித்தப்படியே சென்றாள் அவள் வீட்டை நோக்கி.

இங்கே விக்ரமின் நாள் இப்படி வேலை வேலை என செல்ல, வெளியே சென்ற அபி மற்றும் அம்முவின் நேரமோ கொண்டாட்டமாய் கழிந்தது.

அம்முவும் அபியும் ஒரு மாலிற்கு தான் வந்திருந்தனர். என்னதான் விக்ரமை வெறுப்பேத்த அம்முவிடன் நெருக்கமாக இருப்பது போல் நடித்தாலும் அபி அம்முவின் மனதை கலைப்பது போல் என்றும் நடந்துக் கொண்டதில்லை. அதிக நேரம் கைகளை பிடித்து கதை பேசுவான். எப்போதாவது சிறிய அணைப்பு அவ்வளவுதான்.

"ஏன் அத்தான்! நான் ஒன்னு கேட்டா நீங்க தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே" என்று பீடிகையோடு ஆரம்பிக்க "என்னடி டிஸ்கிளைமர் எல்லாம் பலமா இருக்கு. அப்படி என்னத்த கேக்க போற?" என்றவன் அவள் கைகளை தன்னுடன் கோர்த்து கொண்டான்.

அதற்கு "அது ஒன்னும் இல்லை அத்தான். ஏன் உனக்கும் என் அண்ணனுக்கும் ஒத்தே வர மாட்டேங்குது. ஏன் ரெண்டு பேரும் டாம் அன்ட் ஜெர்ரி மாதிரி அடிச்சிக்கிறீங்க?" என்று தன் சந்தேகத்தை கேட்டு வைத்தாள்.

அதில் புன்னகை சிந்திய அபி "ஏனா நானும் உன் அண்ணாவும் சின்ன வயசுல இருந்தே அப்படி தான். அது என்னமோ நான் என்ன செஞ்சாலும் அவன் அதுக்கு ஏட்டிக்குப் போட்டியா தான் பண்ணுவான்.

ஹர்ஷா அண்ணாவை அவன் பிரண்டா பார்த்தான். நான் பிறந்த அப்புறம் என்னை பார்க்கவும் அவனுக்கு என்ன தோனுச்சோ என்கூட சண்டை போடுவான். எனக்கும் அவன் கூட நார்மலா பேசவே வராது.

என்னவோ மாமா மச்சான்னாலே அப்படி தான் போல‌. உன் அண்ணன் எனக்கிட்ட சண்டை போட்டு நல்லா எண்டர்டெயின்மெண்ட் பண்ணிக்கிட்டான். எனக்கும் அது பிடிச்சது. சோ நான் இப்ப அவனை ஓட்டி எண்டர்டெயின்மெண்ட் பண்ணிக்கிறேன். அவ்ளோ தான்" என்று கூற

'லூசாடா இவனுங்க' என்றே அம்மு நினைத்தாள். 'இவனுங்க சண்டைல தலையிட்ட நம்ம மண்டை தான் உடையும் இவனுங்க நல்லா சந்தோஷமா தான் இருப்பானுங்க போல. எப்படியோ போகட்டும்' என எண்ணி கொண்டே அவனோடு சேர்ந்து சுற்றினாள் அம்மு‌.

-மீண்டும் வருவான்
 
Last edited:

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 19

"என்ன அனு ரெடியா? இன்னும் என்னடி பண்ற. டைம் ஆகுது பாரு" என அனுவை அழைத்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.

"தட்டுள இருக்கறத புல்லா சாப்பிடாம நீ எழுந்திருக்க கூடாது அனு" என அவளை சாப்பிட சொல்லிக் கொண்டிருந்தார் பார்வதி. இருவருக்கும் இடையில் முழித்தபடி உணவு தட்டை நோண்டிக் கொண்டிருந்தாள் அனு.

"ப்ச் அத்தை! உங்க பொண்ணுக்கு அப்புறமா ஊட்டி விடுங்க‌. இப்போ அவளுக்கு எக்சாம்க்கு டைம் ஆச்சு. அவளை கொஞ்சம் விடுங்க" என ஹர்ஷா பார்வதியிடம் இப்போது உரைக்க

"ஆமா ம்மா. எனக்கு டைம் ஆகிடுச்சு. நான் இப்போ கிளம்பினா தான் கரெக்டா இருக்கும்" என்று தயங்கியவாறு அனுவும் கூற "நீ சும்மா இருடா. இந்த பையலுக்கு பொறாமை உன்னை மட்டும் கவனிக்கிறேன்னு" என பார்வதி நொடித்துக் கொண்டார்.

அதை பார்த்து கடுப்பான ஹர்ஷா "ஆமா அப்படியே பொறாமை பட்டுட்டாலும்" என கடுப்பாய் மொழிந்தான். அதில் சிரித்து விட்டாள் அனு. இது தினமும் நடப்பது என்பதால் இவர்களின் அலும்பை பார்த்துக் கொண்டே அனுவை கல்லூரிக்கு ஒருவழியாக கிளம்பிவிட்டான் ஹர்ஷா.

அனுவிற்கு இப்போது செமெஸ்டர் நடந்துக் கொண்டிருக்கிறது. ஹர்ஷா தான் அவளை கல்லூரியில் இறக்கி விடுவான். ஆனால் அவளை மதியம் கண்டிப்பாக ஆட்டோ அல்லது டாக்ஸி பிடித்து தான் வரவேண்டும் என கறாராக கூறிவிட்டான்.

விஸ்வநாதன் கூட 'நான் அழைத்து வந்து விடுகிறேனே. தனியாய் வேண்டாமே. அவ சின்ன பொண்ணு' என தயக்கமாக கேட்க ஹர்ஷா "சின்ன பொண்ணுக்கு எதுக்கு அப்போ கல்யாணம் பண்ணி வச்சீங்க" என சுருக்கென்று கேட்டுவிட்டான்.

அதில் திகைத்த விஸ்வநாதன் "மாப்பிள்ளை" என்றார் உள்ளே சென்ற குரலில். அந்த குரல் ஏதோ செய்ய "பின்ன என்ன மாமா, அவ எப்போ தான் நாலு இடம் வெளியே போய் வந்து பழகுறது" என்றான் சற்று சமாதானமாக.

விஸ்வநாதனும் புரிந்தது போல் "சரி மாப்பிள்ளை" என்று முடித்துக் கொண்டார். ஹர்ஷா சொன்னது போல் அனுவை பரிட்சை முடிந்து தனியே வரவும் வைத்தான். முதல் இரண்டு நாட்கள் சிறிது பயமாக ஏன் அதிகமாகவே இதயம் அடித்து கொண்டது அனுவிற்கு.

ஆனால் போக போக பழகிக் கொண்டாள். வாழ்வில் முதல் முறை சுதந்திர காற்றை உணரும் அந்த நிமிடம் நிறைவாய் உணர்ந்தாள். அதை தந்த தன் கணவன் ஹர்ஷவர்தன் மேல் இன்னும் பித்தாகினாள் அனு.

அனு கல்லூரி செல்ல துவங்கிய நாள் முதல் ஹர்ஷா தன் மருத்துவமனைக்கு செல்ல துவங்கிவிட்டான். கிட்டதட்ட ஒன்றரை மாதங்கள் கழித்து செல்கிறான்.

அத்தனை நாட்கள் கடந்து அவன் அறைக்குள் சென்று அமர்ந்த போது மனதிற்குள் அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தான்.‌ அதுவே கூறும் அவனுக்கு அந்த துறை மீதிருக்கும் காதல் எவ்வளவு என்று.

இன்றும் அனுவை கல்லூரியில் இறக்கிவிட்டு அதே உள்ள மகிழ்ச்சியோடு மருத்துவமனையை அடைந்தான் ஹர்ஷா. நீண்ட நாட்கள் ஆனதால் மருத்துவமனையை சுற்றி ரவுண்ட்ஸ் செல்ல முடிவெடுத்தவன் வெளியே வந்தான்‌.

அப்போது மருத்துவனையில் உள்ளே உள்ள மெடிக்கல் வழியாக செல்லும் போது புதிதான இரண்டு நபர்கள் மருந்துகளை கொடுத்து கொண்டிருக்க வழக்கம் போல் அந்த மருந்துகளை எடுத்து பார்த்தான்.

அதை பார்த்தவன் குழம்பி விட்டான். ஏனெனில் அது அவர்கள் எப்போதும் வாங்கும் மருந்து கம்பெனி மருந்துகள் இல்லை. புதிய கம்பெனியாக ஏன் இதுவரை அவன் கேள்வியேபடாத ஒரு கம்பெனியாக இருக்க "யாரு இந்த மருந்து வாங்க பெர்மிஷன் தந்தா?" என அங்கே இருப்பவர்களிடம் கேட்டான்.

அதற்கு அங்கே இருந்த அவர்கள் இருவரும் திருதிருவென முழித்துக் விட்டு "நீங்க தான் டாக்டர்" என்றனர் ஒரு குரலில். அதில் அதிர்ந்த ஹர்ஷா "வாட்?" என்று இரைந்தான். அவன் கத்தியதில் அங்கிருந்த அனைவரும் அங்கே வந்துவிட்டனர்.

ஹர்ஷா சம்மதமே தராத போது எப்படி அவன் பெயரை சொல்லி இதை உபயோகப்படுத்துக் கொண்டிருக்கிறார்கள் என அதிர்ந்தவன் தன் தந்தை ராஜசேகரை அழைத்து விசாரிக்க அவரும் இதற்கு சம்மதம் தரவில்லை என்று கூறிவிட பெரிதும் அதிர்ந்து விட்டான்.

இது எத்தனை நாட்களாக நடக்கிறது என அந்த மெடிக்கலில் இருக்கும் நபரிடம் கேட்க 'இரண்டு வாரங்களாகவே வருகிறது' என கூறவிட இங்கு என்ன தான் நடக்கிறது என்று புரியாமல் நின்ற ஹர்ஷா முதலில் அந்த இரண்டு புதிய நபர்களையும் உடனே பிடித்து வைக்க உத்தரவிட்டான்.

ஹர்ஷா திடீரென அழைத்து கேட்கவும் குழம்பி போன ராஜசேகரும் அங்கே வந்துவிட்டார். என்ன நடந்தது என ஹர்ஷாவிடம் கேட்க அவனும் அங்கே நடந்ததை அப்படியே சொல்லிவிட்டான். ஹர்ஷாவின் முகத்தை பார்க்கவே அவனின் ரௌத்திரம் நன்றாக மற்றவர்களுக்கு புரிந்தது.

அவனின் கோபம் கண்டு மொத்த மருத்துவமனையுமே நடுங்கிக் கொண்டிருந்தது. ராஜசேகரால் கூட ஹர்ஷாவை சமாளிக்க முடியாது போனதில் தான் அவன் கோபத்தின் உச்சத்தை அனைவரும் பார்ந்தனர்.

ஹர்ஷாவால் இதை சுத்தமாக ஏற்க முடியவில்லை. இது அவன் மருத்துவமனை ஆனால் அவனுக்கு தெரியாமல் என்னவோ நடந்து கொண்டிருக்க கோபம் சுறுசுறுவென ஏறிக் கொண்டே இருந்தது.

பிடித்து வைத்த இரு நபர்களை விசாரிக்க 'எங்களுக்கு எதுவும் தெரியாது' என்றே அவர்கள் சாதித்தனர். கோபம் தலைக்கு ஏற போலீஸிற்கு தகவல் கொடுத்துவிட்டான் ஹர்ஷா.

அந்த மெடிக்கல் ஆட்களிடம் "எந்த புரூப் வச்சு மருந்தை வாங்கி வச்சீங்க.‌ அப்படியே அவங்க எதை கொண்டு வந்து காமிச்சிருந்தாலும் என்கிட்ட கேக்கனும்ற பேசிக் சென்ஸ் கூட இல்லயா" என்று காய்ச்சி எடுத்து விட்டான்.

ஏனெனில் அருணாசலம் மருத்துவமனையில் மருந்துகளை விற்க அனுமதியை அந்த மருத்துவமனையின் எம்.டியிடம் எழுத்து பூர்வமாக வாங்க வேண்டும். அப்படி வாங்கி இருந்தாலும் ஒரு முறை அழைத்து சரி பார்க்க வேண்டும் என்பது ஹர்ஷா கூறிய சட்டம்.

அதை அவர்கள் செய்திருந்தால் இந்த அளவு வந்திருக்காது என்பது அவனின் கோபம். ஆனால் முதலில் இதை ஹர்ஷாவிடம் அவர்கள் தெரிவிக்க முயன்ற போது அது ஒவ்வொரு முறையும் தடங்களாகி விட்டது என்பதும் உண்மையே.

இப்போது ராஜசேகர் "என்னப்பா இது இவ்ளோ டென்ஷன். அதான் போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணியாச்சே. அப்புறம் என்னடா! அவங்க வந்து எல்லாத்தையும் விசாரிச்சு உண்மைய கண்டுப்பிடிச்சிருவாங்க. நீ டென்ஷன் ஆகாத ஹர்ஷா" என்று சமாதானம் பேசிட,

"எப்படி ப்பா. எப்படி டென்ஷன் ஆகாம இருக்க சொல்றீங்க. இந்த மெடிசின் கம்பெனிக்கு நான் அப்ரூவல் குடுக்கவே இல்லை. நீங்களும் குடுக்கலை. அப்போ நமக்கு தெரியாம இங்க எதுவோ நடக்குதுன்னு தானே மீனிங்.

சப்போஸ் பேஷன்ட்க்கு இதனால எதாவது இஸ்யூஸ் வந்தா என்ன ஆகறது. நமக்கு தான் பெரிய பிராப்ளம் வரும். மோர் ஓவர் ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம் இல்லையா ப்பா. யாருக்காவது எதாவது ஆச்சுன்னா அந்த கில்டே நம்மல கொன்னுடாதா ப்பா" என தன் மனதில் இருந்தவற்றை அப்படியே இறக்கி வைத்தான் ஹர்ஷா.

அவன் கூறுவதில் உள்ள நியாயம் புரியவே 'ஆம்' என ஓத்துக் கொண்ட ராஜசேகரும் அமைதி காத்தார். சிறிது நேரத்தில் போலீஸும் வந்துவிட ஹர்ஷா நடந்த எல்லாவற்றையும் சொல்லி எழுத்து மூலமாக ஒரு புகாரும் கொடுத்து அந்த இரண்டு நபர்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தான்.

அதுவரை சற்று தெனாவட்டாக இருந்த அந்த இருவரும் இப்போது உண்மையாகவே பயந்து போய் ஹர்ஷாவை பார்க்க அவன் இன்னும் எதோ தீவிர யோசனையிலே இருந்தான்.

அந்த இருவரையும் போலீஸ் இழுத்த சென்றுவிட தன் லேப் ஆட்களை அழைத்து உடனடியாக அந்த மருந்துகளை பரிசோதிக்க உத்தரவிட்டான். அதன் பின்னே தான் சற்று தனிந்தான்.

"இந்த மருந்தை எல்லாம் இனி சேல் பண்ணாதீங்க. இந்த கம்பெனி மெடிசின் சேம்பில் எல்லாத்தையும் போலீஸ் ஸ்டேஷன்க்கு அனுப்பிடுங்க. அன்ட் மீதி மெடிசினை வேற ரூம்ல வச்சிருங்க

அப்புறம் இனிமே நீங்க எந்த கம்பெனியாவது மெடிசின் அப்ரூவல் பேப்பர மட்டும் தூக்கிட்டு வந்து நீட்டுனா அதோட எனக்கும் போன் பண்ணி கிராஸ் செக் பண்ணிட்டு தான் எடுத்துக்கனும்.

என்னை கான்டேக்ட் பண்ண முடியலைனா என்கிட்ட பேசி அப்ரூவலை ஓகே பண்ற வரை மெடிசினை வாங்கிக்க கூடாது காட் இட்!!" என்று கடுமையான எச்சரித்து அனுப்பினான் அந்த மெடிக்கல் இன்சார்ஜ்ஜை.

பின் ஹாஸ்பிடலில் இருந்த டாக்டர்களை பார்த்து "அன்ட் எந்த பேஷன்ட்டுக்காவது இதை கொடுத்துட்டு இருக்கோம்னா உடனே ஸ்டாப் பண்ணிடுங்க ஓகே!" என்று முடித்தான்.

அதன்பின் ஹர்ஷாவை அவன் அறைக்கு அழைத்து வந்த ராஜசேகர் "என்னப்பா இது தப்பு நடந்திடுச்சு தான் அதுக்கு டென்ஷன் ஆனா எல்லாம் சரியா போய்டுமா?" என பேசி செல்ல ஹர்ஷாவின் எண்ணம் முழுவதும் வேறெங்கோ சென்றுவிட்டது.

ஹர்ஷாவின் எண்ணம் இங்கில்லை என்று உணர்ந்த ராஜசேகர் அவன் தோலை உலுக்கி "என்னடா ஹர்ஷா குட்டி. என்ன யோசிக்கிற?" என்று வினவினார்.

ராஜசேகர் உலுக்கலில் தன்னிலை அடைந்த ஹர்ஷா "இல்ல ப்பா. இப்போ ரீசென்டா நடந்த எல்லாத்தையும் யோசிச்சு பார்த்தேன். பர்ஸ்ட் என்ன கொலை பண்ண டிரை பண்ணுனாங்க. பட் நான் தப்பிச்சிட்டேன்.

நெக்ஸ்ட் அன்னைக்கு என் மேரேஜ்க்கு முதல் நாள் எனக்கு தான் டிரக் குடுக்க டிரை பண்ணினாங்க. அதுவும் எனக்கு என்னவோ இவங்க பண்ண வேலைன்னு தான் மனசுல தோனிட்டே இருந்தது.

இதுல இன்னைக்கு இந்த இன்சிடென்ட். என்னோட சைன் போட்டே என்னை சிக்க வைக்க பார்த்திருக்காங்க. டோட்டலா யாருக்கோ என் மேல‌ அவ்ளோ வென்ஜென்ஸ்னு தோனுது ப்பா" என்று தன் மனதில் தோன்றியதை எல்லாம் கோர்த்து கூறியவன்

ஒரு பெருமூச்சை வெளியிட்டு "பட் அப்படி யாருக்கு என் மேல‌ இவ்ளோ வென்ஜென்ஸ் அப்படின்னு தான் எனக்கு புரியல ப்பா" என்று கூறி முடித்தான் ஹர்ஷா.

ஹர்ஷா கூறியவுடன் தானும் யோசித்த ராஜசேகருக்கும் அப்போது தான் புரிந்தது. "ஆமா ஹர்ஷா! யாரோ உன்னை தான் டார்கெட் பண்ற மாதிரி இருக்குடா. இப்போ என்ன பண்றது ஹர்ஷா. உன்னை எதாவது பண்ணிடுவாங்களோன்னு பயம் இப்போ வருது கண்ணா" என்றவரின் குரல் சிறிது நடுங்கியும் போனது.

தன் சந்தேகத்தை கூறி தந்தையை பயம் கொள்ள செய்து விட்டோம் என பதறிய ஹர்ஷா "ஐயோ ப்பா! அப்படி எல்லாம் எனக்கு ஒன்னும் ஆகாது. நீங்க எல்லாரும் இருக்கப்ப எனக்கு எதாவது ஆக விட்டுருவீங்களா என்ன?" என்று சமாதானம் செய்தான்.

இங்கு எல்லாவற்றையும் ஓரளவு சரி செய்தபின் மீண்டும் அனைத்து மருத்துவமனை ஊழியர்களையும் கடுமையாக எச்சரித்து விட்டே அங்கிருந்து அகன்றான் ஹர்ஷா தன் தந்தையுடம்.

வீட்டிற்கு சென்றபின் நடந்தவற்றை வேதாசலம் அபி மற்றும் விக்ரமிடம் மட்டும் கூறிவிட்டு இதற்கு சீக்கிரம் ஒரு தீர்வை பார்க்க வேண்டும் என கலந்து ஆலோசனை நடத்தினார் ராஜசேகர்.

சிறிது நேரம் இவர்கள் இது சம்பந்தமாக பேசிக் கொண்டிருக்க ஹர்ஷாவிற்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசிய ஹர்ஷா அதிர்ந்து எழுந்து நின்று விட்டான்.

மருத்துவமனை லேப்பில் இருந்து ஹர்ஷாவிற்கு அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசியவனுக்கு அந்த பக்கம் கூறிய செய்து அவ்வளவு அதிர்ச்சியாய் இருந்தது.

"என்ன சொல்றீங்க?" என்றவன் கேள்வியில் அந்த லேப் ஹெட் "ஆமா டாக்டர்! அந்த மெடிசின் எல்லாமே பேக். இன்னும் சொல்லனும்னா அதை எந்த பேஷன்டுக்கு குடுத்தாலும் அந்த பேஷன்ட்டோட ஹெல்த் இருக்க நிலைமையவிட ரொம்ப மோசமா தான் போகும்.

இப்போ இந்த கோல்ட்டுக்கான சிரப்ப ஒருத்தர் குடிச்சிருந்தா கோல்ட் குறையாம இன்னும் அதிகம் தான் ஆகும். எல்லாமே டாக்சின்ஸ் தான் டாக்டர்" என்று தான் ஆராய்ந்தவற்றை சொல்லி முடித்தார் லேப் ஹெட்.

எல்லாவற்றையும் கேட்ட ஹர்ஷாவிற்கு தலை சுற்றாத குறை தான். 'யாரோட வேலைடா இது?' என நெற்றியை பிடித்து அமர்ந்துவிட்டான். அருகில் இருந்த பார்த்த யாருக்கும் எதுவும் புரியவில்லை. "என்னாச்சு ஹர்ஷா?" என்று ராஜாராம் தான் கேட்டார்.

ஹர்ஷா தனக்கு வந்த அழைப்பில் கூறியவற்றை அப்படியே தன் தந்தையிடம் பகிர்ந்து கொண்டான். கேட்டிருந்த மற்றவர்களுக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது.

"என்ன ண்ணா! இது யாரோட வேலையா இருக்கும்? இந்த அளவு செஞ்சிருக்காங்க‌. நீ அதை பார்க்காம விட்டிருந்தா நம்ம ஹாஸ்பிடலுக்கு எவ்ளோ கெட்ட பேரு வந்திருக்கும்‌" என பயத்துடன் அபி புலம்பினான்.

அவனை தொடர்ந்து விக்ரம் "உண்மை தான் அபி. ஆனா யாருக்கு நம்ம மேல இவ்ளோ வென்ஜன்ஸ் இருக்கும். நாம யாருக்கும் இதுவரை ஒரு கெட்டதும் செஞ்சது இல்லையே. அப்புறம் ஏன் நம்ம குடும்பத்தை டார்கெட் பண்றாங்க" என பேசிக் கொண்டே வந்தவனை இடைமறித்தான் ஹர்ஷா.

"இல்லை விக்ரம் நம்ம பேமிலி அவங்க டார்கெட் இல்லை" என்றான் தீவிரமான குரலில். "என்ன சொல்ற ஹர்ஷா எனக்கு புரியல?" என விக்ரம் வினவ

"ம்ம் ஆமா விக்ரம். அவங்க டார்கெட் நான். கொஞ்சம் நடந்த எல்லா விஷயத்தையும் நல்லா யோசிச்சு பாரு. முதல் தடவை என்னை தான் வெட்டி கொல்ல பாத்தாங்க. பட் நான் தப்பிச்சிட்டேன். நெக்ஸ்ட் போதை மருந்து. அதையும் எனக்கு தர பாத்தப்பதான் நீ அதை குடிச்சிட்ட.

ஆனா இந்த ரெண்டு இன்சிடென்ட்கும் நடுவுல ஒரு டூ மந்த்ஸ் கிட்ட கேப். மோஸ்ட்லி நான் அந்த டைம் வெளிய போகலை. அன்ட் இந்த கேப்ல நம்ம பேமில யாரையும் அந்த ஆளுங்க எதுவும் செய்யலை.

தென் இப்போ இந்த இஸ்யூ. இந்த மெடிசின நான் ஆத்தரைஸ் செஞ்ச மாதிரி என்னோட சைனயே அதுல போட்டு போர்ஜெரி பண்ணி டிஸ்டிரிபியூட் பண்ணிருக்காங்க. இதால யாருக்கு என்ன ஆகியிருந்தாலும் நான் தான் ரெஸ்பான்ஸிபில். எம்.டி ன்ற முறையில என்னை அரெஸ்ட் பண்ண கூட சான்ஸ் இருந்தது" என ஹர்ஷா தான் எண்ணியதை எல்லாம் கூற ஒருவருக்கும் பேச்சே வரவில்லை.

ஆனால் அனைவர் மனதிலும் 'யாராக இருக்கும்' என்ற யோசனை மட்டும் பலமாக வந்தது. அதன்பின் வேதாசலம் "மச்சான்! ஹர்ஷா இனிமே தான் நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்‌. ஹாஸ்பிடல் புல்லா சர்வைலன்ஸ்ல வைங்க.

நம்ம வீட்லையும் சிசிடிவி பிக்ஸ் பண்ணிடலாம். யாரு இப்படி எல்லாம் பண்றாங்கனு தெரியுர வரை ஹர்ஷா நீ கொஞ்சம் கேர்புல்லா இருப்பா. வெளிய போய்ட்டு வரப்ப நாலாபுறமும் கவனம் இருக்கனும். உனக்கு சொல்லனும்னு அவசியம் இல்லைதான். இருந்தாலும் கவனம் வச்சுக்கோ. புரியுதா" என்று ராஜசேகரிடம் ஆரம்பித்து ஹர்ஷாவிடம் முடித்தார்.

அவர் கூறியதை கேட்ட ஹர்ஷா "கண்டிப்பா மாமா! நான் கேர்புல்லா இருக்கேன். அன்ட் வீட்ல இருக்க யாருக்கும் இது எதுவும் தெரிய வேணாம் பயப்படுங்க. அப்புறம் தாத்தாட்ட சொல்லவே வேணாம். எல்லா பிராப்ளமையும் சால்வ் பண்ணிட்டு சொல்லிக்கலாம். ஓகே தானே" என்றான் பொதுவாக.

அனைவரும் சரி என ஒத்துக் கொள்ள அதன்பின்னே இன்னும் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து பேசிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தனர்.

இவர்கள் சேர்ந்து வருவதை புருவ முடிச்சிடன் பார்த்த பார்வதி "இங்க வாங்க" என பொதுவாக அழைத்தார். மற்ற அனைவரும் 'எங்களுக்கு எதுவும் கேட்கவில்லை' என்பது போல் தத்தம் அறையை நோக்கி ஓடிவிட சிக்கியது என்னவோ வேதாசலம் தான்.

'ஐயையோ! நாம மட்டும் சிக்கிட்டமே' என மனதில் நினைத்தவர் "என்ன பார்வதிமா?" என்றார் சாந்தமாக. "என்ன நாலு பேரும் தனியா பேசிட்டு வரீங்க. என்ன விஷயம்?" என்று நேரடியாக கேட்டேவிட திருதிருவென முழித்த வேதாசலம்

"ஒன்னும் இல்லையே. ஏன் பார்வதி நாங்க தனியா இப்படி பேசுனதே இல்லையா. அதுக்கு ஏன் சந்தேகமா பார்க்குற!" என மழுப்ப முயன்றார். அவர் பதிலை பார்வதி ஆராய்வதற்குள் "ஹான் இப்போ தான் ஞயாபகம் வருது பாரு. உன் புள்ளை தலை வலிக்கிதுன்னு காபி கேட்டான். அவனை போய் என்னன்னு பாரு. அப்படியே எனக்கும் ஒரு காபி" என விக்ரமை கோர்த்து விட்டு தன் அறைக்குள் ஓடிவிட்டார்.

வேதாசலம் கூறியபடி காபி போட சென்ற பார்வதிக்கு அப்போது அந்த விஷயம் மனதிற்குள் மறந்து போனது. எல்லாம் தெரியும் நாள் பார்வதியிடம் சிக்கி மற்றவர்கள் என்ன ஆவாரோ!

"ஹர்ஷா! ஹர்ஷா!" என ஹர்ஷாவின் தோலை பிடித்து அனு உலுக்கவும் "என்னமா?" என்றான் சிந்தனை கலைந்த ஹர்ஷா. "என்னப்பா ஆச்சு. நான் கூப்பிட்டது கூட தெரியாம யோசனைல இருந்தீங்க. எதாவது முக்கியமான விஷயமா?" என வினவினாள்.

அனுவை அருகில் கண்ட ஹர்ஷா அவளை இழுத்து அணைத்து கொண்டான். என்னதான் உறவுகள் என நிறைய பேர் இருந்தாலும் மனசுமையை தன் மனைவியிடம் இறக்கிக் கொண்டிருந்தான் ஹர்ஷா அந்த ஒற்றை அணைப்பில்.

இப்படி ஹர்ஷா திடீரென அணைக்கவும் அதிர்ந்த அனு "ஹர்ஷா!" என திணற ஆனால் பாவம் அவள் வாயில் இருந்து வெறும் காற்று மட்டும் தான் வந்தது. சில நிமிடங்கள் கடந்த பின் ஹர்ஷாவே அனுவை விட்டு விலகினான்‌.

"ஹ..ஹர்ஷா!" என்ற அனு அழைக்க "ம்ம்" என்றான் ஹர்ஷா. சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய சற்று தன் சுயநினைவு வந்த ஹர்ஷா "என்னடி ஒரு ஹக்குக்கே இப்படி நிக்கிற. அப்போ மத்ததுக்கு எல்லாம் என்ன பண்ணுவ!" என கிண்டல் செய்தான்.

அதற்கு ஹர்ஷா முதுகில் இரண்டு அடி போட்ட அனு "சும்மா கிண்டல் பண்ணாதீங்க" என்று சிணுங்க "ஓகே கிண்டல் பண்ணலை. சரி என்னடி பின்னாடியே வந்த எதாவது கேக்க வந்தியா?" என பேச்சை மாற்றினான் ஹர்ஷா.

"அதெல்லாம் ஒன்னும் இல்லை. இன்னைக்கு ஹாஸ்பிடல்ல இருந்து சீக்கிரம் வந்துட்டீங்கல்ல அதான் சும்மா பேசலாம்னு வந்தேன். நீங்க தான் ஏதோ திங்க் பண்ணிட்டு இருந்தீங்க. எதாவது இம்பார்டன்ட் மேட்டரா என்ன. அப்படி எதாவது இருந்தா சொல்லுங்க நான் டிஸ்டர்ப் பண்ணலை" என அனு அப்பாவியாய் கூறவும் தன் மனதில் இருந்த அனைத்து குழப்பங்களையும் ஒதுக்கிய ஹர்ஷா அனுவின் கைப் பிடித்து தன் அருகே அமர்த்திக் கொண்டான்.

"எனக்கு இது தோனலை பாரேன். என் செல்லக்குட்டி என்கிட்ட பேச வந்துருக்காங்க. எனக்கு அதை விட வேற என்ன முக்கியமான வேலை இருக்கப்போகுது. நாம பேசலாம்டா" என்றான் ஹர்ஷா.

அனு மகிழ்வுடன் தலை ஆட்டவும் அவள் தலையை செல்லமாக கலைத்தவன் அனுவுடன் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அனு "ஐயோ! ஹர்ஷா‌. உங்கட்ட ஒன்னு சொல்லனும்னு நினைச்சேன் மறந்தே போய்ட்டேன். அது அம்மா கால் பண்ணுனாங்கல அப்போ" என வேகமாக பேசியவள் தடுமாறினாள்.

"அப்போ அது ந..நமக்குள்ள எல்லாம் ஓகேவான்னு கேட்டாங்க" என்றாள் தடுமாறியபடி. சட்டென ஹர்ஷாவிற்கு புரிந்துவிட்டது. ஆனால் அனுவை வம்பிழுக்கும் பொருட்டு "என்ன நமக்குள்ள எல்லாம் ஓகே தானே. இதை உங்க அம்மாட்ட சொல்ல வேண்டியது தானே" என்றான் வாய்க்குள் சிரித்துக் கொண்டு.

இப்போது நன்றாக தடுமாறிய அனு "அது அதுவந்து நமக்கு அன்னைக்கு சடங்குலா வச்சாங்கல. அப்போ.." என திணறிக் கொண்டு ஹர்ஷாவை பார்க்க ஹர்ஷா சத்தம் வராது சிரித்துக் கொண்டிருந்தான். அதை பார்த்தவுடன் அனுவிற்கு தெரிந்துவிட்டது ஹர்ஷா அவளிடம் விளையாடுகிறான் என.

"போங்க போங்க! நீங்க இப்படி தான் செய்றீங்க. உங்களுக்கு தான் புரியுதே. அப்புறம் ஏன் என் வாயவே கிளறுறீங்க" என செல்லமாக கோபித்துக் கொள்ள "அனுக் குட்டி உன்கிட்ட நான் விளையாடாம யாரு விளையாட போறா. ஓகேடா உன் அம்மா நமக்குள்ள பர்ஸ்ட் நைட் முடிஞ்சிதான்னு தானே கேட்டாங்க. நீ என்ன சொன்ன" என்றான் சிரிப்புடன்.

அதில் வெட்கம் கொண்ட அனு "அது எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு சொல்லிட்டேன்" என்றாள் தரையை பார்த்தபடி. ஹர்ஷா குனிந்திருந்த அனுவின் முகத்தை நிமிர்த்தி "என்ன எல்லாம் முடிஞ்சிடுச்சா! அடிப்பாவி நமக்கு தான் எதுவுமே நடக்கலையே" என்றான் பொய்யாக அதிர்ந்து.

அதற்கு அனு "நீங்க தானே நம்ம விஷயத்தை அம்மாவே இருந்தாலும் யார்க்கிட்டையும் சொல்லக் கூடாதுனு சொன்னீங்க. அதான் என் அம்மாட்ட முதல் தடவையா பொய் சொல்லிட்டேன்" என்றாள் ரோஷமாக. அன்று மெஹந்தியின் போது ஹர்ஷாவிடம் வாங்கிய வசவுகள் இப்போது வரை வேலை செய்தது.

"பார்ரா! என் அனு குட்டி இவ்ளோ வளந்துட்டாளே!" என அதிசயித்து "அனு செல்லம் நீ இதையே மெயின்டெய்ன் பண்ணு உனக்கு எக்சாம் மட்டும் முடியட்டும் அப்புறம் ரெண்டு பேரும் ஹனிமூன் கிளம்பிடலாம்" என ஹர்ஷா கண்ணடித்தான்.

அதற்கும் சிணுங்கினாள் அனு. "குட்டிம்மா! நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ. நம்மளடோ விஷயம் நம்ம ரெண்டு பேரை தாண்டி வெளிய போகவே கூடாது. அது உன் அம்மாவா இருந்தாலும் அது எனக்கு பிடிக்காது புரியுதா. அதே மாதிரி நான் உனக்கிட்ட என் ஃபிரண்ட்ஸ் ரிலட்டிவ்ஸ்னு அவங்க என்னை நம்பி சொன்ன பர்சனல் விஷயத்தை மோஸ்ட்லி அவங்க சொல்லாம ஷேர் பண்ணிக்க மாட்டேன்.

அதே போல‌ நீயும் உன்னோட குளோஸ் சர்க்கில்ல இருக்கவங்க பர்சனல் என்கிட்ட சொல்ல தேவையில்லை. என்னதான் இருந்தாலும் லைஃப்ல நமக்குன்னு ஒரு ஓன் ஸ்பேஸ் இருக்கும்டா. அதை நான் மதிக்கிறேன். ஆனா நாம ரெண்டு பேருன்னு வரப்ப யாரும் இடைல வரது எனக்கு சுத்தமா பிடிக்காது. நான் இப்ப சொல்றது தான் எப்பவும். ஓகே தானேடி" என்று முடித்தான் ஹர்ஷா.

அனு "ஹர்ஷா நாம லைப் பாட்னர்ஸ் தானே நாம இதெல்லாம் ஷேர் பண்றதுல தப்பு இல்லையே அப்புறம் ஏன்?" என்றாள் புரியாமல். அதற்கு புன்னகைத்த ஹர்ஷா "அனு உனக்கு புரியற மாதிரி நான் சொல்றேன். உன் பிரண்ட் இல்லை உன் ரிலடிவ் இல்லை நம்ம வீட்ல இருக்க யாரோவாவே இருக்கட்டும்.

இப்போ உன்னை நம்பி அவங்க பர்சனல்ல உன்கிட்ட சொல்லி யார்க்கிட்டையும் சொல்ல வேண்டாம்னு சொல்றாங்கனு வை. அப்போ அவங்க உன்கிட்ட எதோ ஒரு குளோஸ்நெஸ் பீல் பண்ணி வேற ஒருத்தர்க்கிட்ட சொல்ல முடியாத விஷயத்தையே உன்னை நம்பி சொல்றப்ப நீ அவங்கலுக்கு உண்மையா இருக்கனும்லடா.

என்ன தான் நான் உன் ஹஸ்பண்டா இருந்தாலும் அதை என்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை. அதே மாதிரி அவங்களுக்கு எதாவது பிரச்சினைனா அதை மத்தவங்ககிட்ட சொன்னாதான் சால்வ் ஆகும்னா நீ தாராளமா என்கிட்ட சொல்லலாம். அது தான் உன்னோட தனிப்பட்ட ஸ்பேஸ் புரியுதா" என்று ஹர்ஷா சீரியசாக விளக்க அவன் பரந்த எண்ணத்தை கண்டு வியந்தாள் அனு‌.

ஆனால் ஹர்ஷாவை கிண்டல் செய்யும் பொருட்டு "ஹப்பா பேசி முடிச்சிட்டீங்களா! என்னா அருவை" என காதை குடைந்து கொண்டாள். "ஹேய் என்னடி கிண்டலா!" என செல்லமாக தலையில் கொட்டியவன் "ஆனா இந்த விஷயம்லா நம்ம லைப்க்கு ரொம்ப முக்கியம்டி.

ஏன்னா நிறைய பேருக்கு இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துல தான் சண்டை வரும். அதான் நாம பர்ஸ்டே தெளிவாகிட்டா பிராப்ளம் வராதுல" என்றான் தெளிவாக.
அதில் அனு அமைதி ஆகிவிட்டாள்.

"என்னடி சைலண்ட் ஆகிட்ட?" என்ற ஹர்ஷாவின் கேள்விக்கு "சத்தியமா சொல்றேங்க. நீங்க சான்ஸே இல்லை தெரியுமா. உங்கள மாதிரி ஒருத்தர் என் லைஃப்ல வந்தது என்னோட லக் தான்" என்றாள் உள்ளார்ந்து.

அவள் பதிலில் சிரித்த ஹர்ஷா "அப்படியா! இல்லவே இல்லை. நான் தான் இப்படி ஒரு ஏஞ்சல் கிடச்சதுல லக்கிடி" என அனு வை அணைத்த ஹர்ஷா அழகாக நெற்றியில் முத்தமிட்டான். தானாக அவன் உதடுகள் அவள் கண்டத்திற்கு சென்று பின் உதட்டையும் எடுத்து கொண்டது. அனுவும் அழகாய் அவன் கரங்களுக்குள் பொருந்தி போனாள்.

தன் மனதில் இருந்த கேள்விகள் மற்றும் குழப்பங்களை ஒதுக்கி விட்டு தன் மனைவியின் அருகாமையை மகிழ்வுடன் ரசித்திருந்தான் ஹர்ஷவர்தன்.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 20

"ச்சே! ரெண்டு பேரும் எப்படிடா மாட்டுனானுங்க. இதை அந்த ஹர்ஷா எப்படி கண்டுபிடிச்சான். ஐயோ அவனை கொல்லனும்னு நினைச்சாலும் முடியலை அசிங்கப்படுத்தனும்னு நினைச்சாலும் முடியலை.

அவன் உயிரோட நடமாடுற ஒவ்வொரு நிமிஷமும் உள்ள பத்திக்கிட்டு எரியுதே! ஆஆ..." என பைத்தியம் பிடித்தது போல் கத்திக் கொண்டிருந்தார் ராம்.

போலி மருந்துகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்திருந்தவரும் ராமே. ஹர்ஷாவை போலீஸில் மாட்டிவிடவே இதை செய்ந்திருந்தார். எனவே தான் அவரே ஒரு போலியான கம்பெனி பெயரை போட்டு புது கம்பெனி போல் எற்பாடு செய்திருந்தார்.

ஹர்ஷாவின் கையெழுத்தையும் அவனுக்கு பதிலாக இவர் போலியாக போட்டுவிட்டார். அந்த மாத்திரைகான அப்ரூவல் அருணாசலம் மருத்துவமனையின் பார்மெட்டில் உருவாக்கவே அவர் நிறைய செலவு செய்து அவர்‌ ஆட்கள் மூலம் மருந்துகளை அனுப்பி வைத்தார்.

பிரச்சினையை பெரிதாக்க இன்னும் இரண்டு நாட்களில் அவரின் ஆள் ஒருவனை அருணாசலம் மருத்துவமனைக்கு அனுப்ப திட்டமும் போட்டு வைத்திருந்தார். ஆனால் இப்போது ஹர்ஷாவால் அவரின் திட்டம் எல்லாம் மண்ணாய் போனது.

இப்போது ஏதோ யோசித்த ராம் "அந்த டாக்டர் அகிலன். அவன் என்ன ஆனான். அந்த மாத்திரை குடுத்து அனுப்பின அப்புறம் எதாவது போன் பண்ணுனானா?" என கேட்டவர் மனதில் ஒரு புதிய திட்டம் உருவானது.

'இது கண்டிப்பா சக்சஸ் ஆகும். உன்னை ஒழிச்சுக்கட்டுனா தான் நான் நிம்மதியா இருப்பேன்டா' என சூழுரைத்துவிட்டு என்ன செய்ய வேண்டும் என தன் ஆட்களுக்கு உத்தரவிட்டான்.

அப்போது ராமின் கைப்பேசி ஒலித்தது. அழைத்தது அவர் மனைவி தேவி தான். "சொல்லுமா" என்று அழைப்பை ஏற்று பாசமாக பேசினார். அந்தபுறம் என்ன சொல்லப்பட்டதோ "இதோ கிளம்பிட்டேன்மா. கொஞ்ச நேரத்துல வந்திடுவேன். சரிமா வச்சிடுறேன்" என அணைத்தவர் "சொன்னது ஞாபகம் இருக்கட்டும்" என தன் ஆட்களிடம் மீண்டும் நினைவுபடுத்தி சென்றார்.

ராமின் இந்த பரிமாணங்களை பார்த்து அவன் ஆட்களே அதிசயித்து வாயை பிளந்து நின்றுவிட்டனர். அந்த புறம் பேசிய தேவியோ அந்த நாளின் கணம் தாளாமல் அமர்ந்திருந்தார்.

-------------------------------------------

தன் முன்னே கணினியை முறைத்திருந்த விக்ரமை பார்த்தவாறு சங்கவி நின்றிருந்தாள். 'என்னடா இது காலைல வந்ததுல இருந்து மனுஷன் அதுக்குள்ளையே தலைய உட்டுட்டு உக்கார்ந்திருக்காரு. என்ன வேலை செய்யனும்னு ஏதாவது சொன்னா செய்யலாம்‌. இப்படி சும்மா நின்னுட்டு இருக்கோமே!' என மனதில் புலம்பியவாறு இருந்தாள்.

தன் வேலையை கணினியில் முடித்துவிட்ட விக்ரமும் நிமிர்ந்துவிட்டான். அப்போது தான் தன் முன்னே முழித்துக் கொண்டு நின்றிருந்த சங்கிவியை பார்த்த விக்ரமிற்கு நினைவு வந்தது‌. அவன் தான் சங்கவியை அழைத்திருந்தான்.

ஆனால் அவள் வரும் முன் வேறு ஒரு மெயில் வர அதில் மூழ்கிவிட்டான். அதனால் அவள் வந்ததை அவன் கவனிக்கவில்லை. அவன் நிமிரவும் 'ஹப்பாடா ஒருவழியா நிமிர்ந்து பார்த்துட்டாரு' என சங்கவியும் நிம்மதி ஆனாள்.

"ஹே கவி! சாரிமா நீங்க வந்ததை நான் கவனிக்கலை. நீங்களாவது என்னை கூப்பிட்டுருக்கலாமோ?" என பரிவாக கேட்டவன் கண்களில் இருந்த சேதி சங்கவிக்கு சுத்தமாக புரியவில்லை.

விக்ரம் ஒரு தாளை நீட்டி "ஓகே! இந்தாங்க. இது ஆர்.கே இன்டஸ்டீரிஸ் டென்டர் நோட்டிஸ்‌. இதுக்கு நாம கொட்டேஷன் அனுப்ப போறோம்.

சோ அந்த கொட்டேஷன்க்கு ஒரு ரஃப் காப்பி ரெடி பண்ணிட்டு வாங்க. அன்ட் லாஸ்ட் மந்த் நம்ம கம்பெனி கவெர்மெண்ட்க்கு ஒரு கொட்டேஷன் அனுப்பி இருந்தோம்‌. அதை சாம்பில்க்கு எடுத்துக்கோங்க. அவ்ளோ தான் நௌ யு கேன் கோ" என இதை கூறுவிட்டு வேறு ஒரு கம்பெனியின் புராஜெக்டை டிசைன் செய்ய ஆரம்பித்தான்.

ஆனால் இங்கே சங்கவியின் நிலை தான் பரிதாபமாக இருந்தது. அவள் இங்கு வேலைக்கு சேர்ந்து இதோடு ஒரு மாதம் நிறைவுப் பெற்று விட்டது.

விக்ரம் ஆரம்பத்தில் சங்கவி என்றழைத்தவன் பின் 'நான் உங்களை கவின்னே கூப்பிடுறேன். உங்களுக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்லையே' என நேரடியாக கேட்டுவிட்டான்.

சங்கவிக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் 'சரி நம்ம எம்.டி தானே. சும்மா இப்படி கூப்டா வசதியா இருக்கும்னு நினைக்கிறார் போல' என எண்ணி நாலா புறமும் தலையை ஆட்டி ஒத்துக் கொள்ள அன்றிலிருந்து அனைவருக்கும் சங்கவியானவள் விக்ரமிற்கு மட்டும் கவி ஆகிவிட்டாள்.

அலுவகத்தில் அளந்து பேசும் விக்ரம் கவியிடம் மட்டும் விதிவிலக்கு தான் இப்போது எல்லாம். விக்ரம் இதுவரை அவளுக்கு சிறிய சிறிய வேலைகள் தான் கொடுத்து வந்தான்.

ஆனால் இன்றோ கூலாக அவளை ஒரு கம்பெனிக்கே கொட்டேஷன் செய்து தர சொல்லிவிட சங்கவிக்கு தான் இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.

'என்ன சங்கவி இது. இவ்ளோ பயப்படுற. நோ பயப்படாத. உன்னால கண்டிப்பா முடியும். எஸ் யு கேன் டூ இட். ஓகே சியர் அப் மை கேர்ள்!' என தனக்குள் பேசி ஊக்குவித்தவாறு சென்று அந்த சாம்பில் பையிலை எடுத்து வந்தாள்.

சில மணி நேரத்தில் அதை படித்து உணர்ந்து புதிய கொட்டேஷனின் தேவைகள், அதற்கேற்ப என்னென்ன சேர்க்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை ஓரளவு திரட்டி ஒரு ரஃப் காப்பியை எழுதி முடித்தாள்.

அவள் முடிக்கும் நேரம் மதிய உணவு வேளையே வந்து விட்டது. எனவே விக்ரம் உணவு உண்ண செல்வதற்குள் வேகமாக சென்றாள் சங்கவி.

"சார்! இந்தாங்க" என்று அவள் தயாரித்த ரஃப் காப்பியை தர ஆச்சரியமாக அவளை பார்த்தவன் "அதுக்குள்ள முடிச்சிட்டீங்களா! பரவாயில்லை குட்" என்று பாராட்டிவாறு வாங்கிக் கொண்டான்.

ஏனெனில் விக்ரம் அவள் இந்த வேலைக்கு புதிது என்பதால் அதை முடித்துதர இன்றைக்கு முழுவதும் எடுத்துக் கொள்வாள் என எண்ணியிருந்தான். ஆனால் அவனே ஆச்சரியம் கொள்ளும் வண்ணம் சீக்கிரமே முடித்து தந்துவிட்டாள் கவி.

அந்த ரஃப் காப்பியை பார்த்த விக்ரம் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்றான். பொதுவாக விக்ரம் கொடுக்கும் அனைத்து வேலைகளையும் சங்கவி திறம்படவே செய்வாள். இன்றோ அதையெல்லாம் தாண்டி மிக அற்புதமாக செய்திருந்தாள்‌.

'எப்பா ரொம்ப திறமையான பொண்ணா தான் இருக்கா' என பாராட்டாக நினைத்தவன் 'ஆனாலும் வாய் தான் கொஞ்சம் ஓவரா இருக்கு' என அவளை மனதில் கிண்டல் செய்தவாறே தன் வேலையை பார்க்க சென்றான்.

அந்த கொட்டேஷனில் சிறு சிறு திருத்தங்கள் மட்டும் செய்தவன் அவன் கணக்கிட்டு வைத்திருந்த பண மதிப்பையும் அதில் சேர்த்தான். பின் சங்கவியை அழைத்து "லஞ்ச் கம்ப்ளீட் பண்ணீட்டு இதை புல்லா டைப் பண்ண எனக்கு மெயில் பண்ணிடுங்க கவி. அன்ட் யுவர் டிராப்ட் காப்பி இஸ் குட்‌. யு ஹேவ் டன் அ கிரேட் ஜாப்" என்று நன்றாக வாய்விட்டு பாராட்டி விட்டான்.

அதற்கு "தேங்க் யு சார்" என வாங்கி மகிழ்ச்சியுடன் செல்லும் கவியையே கண்ணிமைக்காமல் பார்த்து வைத்தான் விக்ரம். 'அவள் இப்படி மகிழ்வாள் என்றாள் இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' என அவன் மனது கூறியது.

அதுமட்டும் இல்லாது இப்போது சில நாட்களாய் விக்ரம் கண்ணிற்கு சங்கவி சற்று அழகாய் வேறு தெரிந்து கொண்டிருக்க அவளை ரசித்து பார்த்து வைக்கிறான். அதனாலோ என்னவோ அவளின் பெயரும் கவி என சுறுங்கிற்று‌. அதை அவன் உணர்ந்தானா என்றால் அதுவும் இல்லை.

அவன் அலுவலகம் வந்தவுடன் அவனுடைய கண்கள் சங்கவியை தேடுவதை உணர்ந்திருந்தால் விக்ரம் தான் எப்போதோ கமிடெட் ஆகியிருப்பானே! அது புரியாமல் இன்று வரை தத்தியாய் சுற்றி கொண்டிருப்பவனை என்ன சொல்ல.

வேலை முடிந்து மாலை வீட்டை வந்தடைந்த விக்ரம் மனது 'ப்பா சான்ஸே இல்ல. என்ன பொண்ணுடா அவ. அழகான பொண்ணுங்க புத்திசாலியா இருக்க மாட்டாங்கன்னு சொல்லுவாங்க. ஆனா இவ அழகாவும் இருக்கா அறிவாவும் இருக்கா.

ஆனா அந்த திமிர்.. ம்ஹூம் அது கூட அவளுக்கு அழகு தான். கவி! வாவ் அவ பேரும் அழகு தான்' என நினைத்துக் கொண்டது. ஆனால் அந்த கவி அவன் மனதில் வந்த நங்கூரம் இட்டு அமர்ந்து விட்டதை அறியாமல் அமர்ந்திருந்தான் விக்ரம்.

ஹர்ஷவர்தன் வந்த போலி மருந்துகள் குறித்த ஒரு ரிப்போட்டை போலீஸிற்கு அனுப்பி வைத்தான்‌. அதன்பின் அவன் மருத்துவமனையில் அந்த மருந்துகளை எடுத்த கொண்ட நோயாளிகளை பரிசோதனை செய்ய உத்தரவிட்டான்.

அந்த மருந்துகள் புதிதாக வந்ததன் காரணமாக அந்த அளவு விற்பனை ஆகாமல் இருந்தது ஹர்ஷாவிற்கு சாதகமாய் அமைந்தது. அப்படி கொடுக்கப்பட்ட ஒன்றிரண்டு ஆட்களையும் அழைத்து தீவிர பரிசோதனை செய்துவிடவே யாருக்கும் எந்த தீங்கும் வராது காப்பாற்றினான்.

மருத்துவமனையை முழுதாக தன்வசம் கொண்டு வந்தபின்னே நிம்மதியடைந்த ஹர்ஷா மாலை நேரம் வீட்டை அடைந்தவுடன் கண்டது சோஃபாவில் ஹாயாக படுத்து விட்டத்தை பார்த்து படுத்திருத்த விக்ரமை தான்.

ஹர்ஷா வந்து அவன் அருகில் நின்றதை கூட கவனியாது ஏதோ கனவு லோகத்தில் இருந்தான் விக்ரம். 'பய ஏதோ சரியில்லையே! ஒரு திணுசா இருக்கான்' என யோசைனையுடன் அவனை பார்த்த ஹர்ஷாவும் அவனை எழுப்பாது தன் அறைக்கு சென்று விட்டான்.

ஒரு வாரமாக நடந்த கலவரத்தில் அவன் அனுவிடம் கூட சரியாக நேரம் செலவு செய்யாததால் விக்ரமை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஓடிவிட்டான் ஹர்ஷா.

அறையை மெதுவாக திறந்தான் ஹர்ஷா. அங்கே அனு புத்தகம் மார்பில் கிடக்க தூங்கியிருந்தாள். அனு பரிட்சைக்கு படித்திருப்பாள் போலும். அசதியில் அப்படியே உறங்கி இருந்தாள்.

'அனு செல்லம் தூங்குறீங்களா! இதோ மாமா வந்துட்டேன்டா. இனி எப்படி தூங்குறன்னு பார்க்குறேன்' என எண்ணியவாறு அவள் அருகே சென்று தானும் படுத்து கொண்டான்.

"அனு! அனு குட்டி!" என்று ஹஸ்கி வாய்சில் அவளை அழைக்க அனு எழவில்லை. 'இது வேலைக்கு ஆகாது' என தோன்றவே அனுவின் காதில் "அடியே பொண்டாட்டி...! எழுந்திருடி" என கத்த அனு அடித்து பிடித்து தூக்கத்தில் இருந்து எழுந்தவள் திருதிருவென முழித்தாள்.

அவள் முட்டை கண்ணை வைத்து முழித்து கொண்டிருந்தது எப்போதும் போல் ஹர்ஷாவை ஈர்க்க அவள் விழிகள் இரண்டிலும் முத்தம் இட்டான். "ப்பா.. என்னா கண்ணுடி. இந்த முட்டை கண்ண விரிச்சு விரிச்சு பார்த்ததுல தான்டி உன்கிட்ட டோட்டலா விழுந்துட்டேன்" என காதலாக பேசியவன் மேலும் விழிகளிலே முத்தமிட்டான்.

ஹர்ஷாவின் காதல் மொழிகளை கேட்டு வெட்கப்பட்ட அனு "எ... என்ன ஹர்ஷா இது! நீங்க எப்போ வந்தீங்க?" என திணற "ம்ம் இப்போ தான்டா செல்லம்" என்றவாறு அவளை அணைத்து கொண்டான்‌.

இதே நிலை சிறிது நேரம் நீடிக்க அனு புத்தகத்தை வைத்து தூங்கியது நினைவு வர "என்னடி நீ படிக்கறேன்னு புக்கை வச்சு தூங்கிட்டு இருக்க. இப்படி தான் மேடம் தூங்கிட்டே படிப்பீங்களா?" என்று தன் கலாட்டாவை துவங்க

அதற்கு "ஐயோ! இல்லைங்க. நான் எப்பவும் நல்லா தான் படிப்பேன். ரொம்ப போக்கஸ்டு. ஆனா இன்னைக்கு கொஞ்சம் அலைச்சல்ல அதான் தூக்கம் வந்திருச்சு போல" என பதறி பதில் அளித்தாள் அனு.

"இன்னைக்கு என்ன அலைச்சல்? எங்க போன?" என அவள் பதிலில் குழம்பிய ஹர்ஷா வினவ‌ "நானும் அம்முவும் ஷாப்பிங் போனோம். அதான் உங்ககிட்ட அம்மு சொன்னாளே. என்னமோ தெரியாத மாதிரியே பேசுறீங்க" என்று ரோசமாக அனு பேச தன்னிடம் அம்மு எதுவும் சொல்லவில்லை என்றான் ஹர்ஷா.

"ஆமாங்க அம்மு உங்களுக்கு கால் பண்ணா. பட் நீங்க எடுக்கலை சோ வீட்ல சொல்லிட்டு உங்களுக்கு ஒரு மெசேஜ் போட்டுட்டு தான் போனோம்" என்று தாங்கள் செய்தி அனுப்பியதை கூற அப்போது தான் தன் கைப்பேசியை எடுத்து பார்த்த ஹர்ஷாவிற்கு புரிந்தது அனு கூறியது உண்மையென.

அவன் தான் வந்த செய்தியை கவனிக்காது விட்டுவிட்டான். அதை உணர்ந்தவன் "ஓஓ.. எஸ்டா. மெசேஜ் வந்திருக்கு. நான் தான் பார்க்கலை. அது இருக்கட்டும் உன் தங்கச்சியோட ஊர் சுத்திட்டு வந்திருக்கியே எனக்கு என்ன வாங்கிட்டு வந்த?" என்றான் விளையாட்டாய்.

அவள் கூற வரும் நேரம் சரியாக அவர்கள் அறை கதவு தட்டப்பட்டது. "ஒரு நிமிஷம்டி! தோ வரேன்" என்று சென்ற ஹர்ஷா அங்கே பதட்டமாக நின்ற அபியை கண்டு குழம்பினான்.

தன் முன்னே பதற்றமாக நின்றிருந்த அபிமன்யுவை 'என்ன' என கேள்வியாய் பார்த்தான் ஹர்ஷா. "அண்ணா நீ கொஞ்சம் சீக்கிரம் வா என்கூட. ஒரு பெரிய பிரச்சினை" என்று கையோடு ஹர்ஷாவை இழுத்து சென்றான் அபி.

"என்னடா அபி என்னாச்சு?" என்ற ஹர்ஷாவின் கேள்விகளுக்கு பதில் தராது அவனை இழுத்து போன அபி சென்று நின்ற இடம் விக்ரம் முன்னரே.

இன்னும் விட்டத்தை பார்த்து படுத்திருந்த விக்ரம் என்ன நினைத்தானோ திடீரென புன்னகை புரிந்தான். அதை காண்பித்த அபி 'அவனை பாரு' என சைகை செய்தான்.

விக்ரமையும் அபியையும் புரியாது பார்த்த ஹர்ஷா "என்னடா சைகை! கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு" என்றான் கடுப்பாக.

"ஐயோ! ண்ணா உனக்கு இன்னுமா புரியலை. நம்ம விக்ரம்க்கு ஏதோ ஆகிப்போச்சு. அங்க பாரு விட்டத்தை பார்த்து படுத்துருக்கான். அதோட காத்துல கைய விட்டு தானா சிரிக்கிறான்" என அபி வேகமாக பாயிண்டுகளை எடுத்துவிட அதை ஆமோதிப்பது போல் "ஆமாடா அதுக்கு என்ன இப்போ?" என்றான் ஹர்ஷா புரியாது.

இவர்கள் இங்கே நின்றிருப்பதை கண்ட பார்வதியும் அருகே வர, அப்போது அபி "என்ன ண்ணா உனக்கு இன்னும் புரியலையா? நம்ம விக்ரம் பண்றதெல்லாம் பார்த்தா எதுவும் சரியா படலை. எனக்கு என்னமோ நம்ம விக்ரமுக்கு பேய் பிடிச்சிருக்கோன்னு தோனுது ண்ணா" என முடிக்கவும் தான் அபி எங்கே வருகிறான் என்று ஹர்ஷாவிற்கு புரிந்தது.

ஹர்ஷாவிற்கு சிரிப்பு வந்து விட்டது அபியின் விளையாட்டு தனத்தில். அவனுக்கு புரிந்தது அபி விக்ரமை கிண்டல் செய்ய தான் இவ்வாறெல்லாம் பேசுகிறான் என. ஆனால் இவர்களின் பேச்சை கேட்ட பார்வதி அது புரியாமல் "என்ன அபி குட்டி சொல்ற?" என்றார் அதிர்ச்சியாக.

அப்போது தான் பார்வதியை கண்ட அபி தான் விளையாட நல்ல இடம் கிடைத்த மகிழ்ச்சியில் "ஆமா அத்த! பாருங்க நம்ம விக்ரம எப்படி தானா பேசி தானா சிரிக்கிறான்னு" என கூற அதே நேரம் விக்ரமும் ஏதோ நினைத்தே சிரிக்க அபி சொன்னவற்றை எல்லாம் அப்படியே நம்பினார் பார்வதி.

பாவம் தலைவர் கவியின் நினைவில் சிரித்தது இப்போது அவருக்கே ஆப்பாக அமைந்தது. அதற்கு ஹர்ஷா "ஏய் அபி கொஞ்சம் சும்மா இருடா" என அவனை அடக்க பார்க்க

"அட ஆமா ஹர்ஷா குட்டி. இந்த விக்ரம் பய கொஞ்ச நாளா இப்படி தான் இருக்கான். நேத்து ரூம்ல கூட தனியா பேசிட்டு இருந்தான். நான் பார்த்தேன்" என சூடம் அடிக்காத குறையாக சத்தியம் செய்ய அபிக்கு தான் கொண்டாட்டமாய் போனது.

இவர்கள் சலசலப்பில் தன் கனவில் இருந்து வெளியே வந்த விக்ரம் "என்னங்கடா எல்லாரும் என்னைய சுத்தி நின்னுட்டு இருக்கீங்க. என்ன விஷயம்" என சர்வசாதாரணமாக கேட்க பார்வதி இப்போது முடிவே செய்து விட்டார் தன் மகனிற்கு பேய் பிடித்துவிட்டதென.

எனவே அபியிடம் "அபி நீ சொன்னது சரின்னு தான் தோனுது கண்ணா. பேசாம எதாவது சாமியார்ட்ட கூட்டிட்டு போலாமா?" என்று கேட்டுவிட வந்த சிரிப்பை அடக்கிய அபி "கண்டிப்பா அத்த! எனக்கு இருக்கறது ஒரே ஒரு அத்தான். அவனுக்கு எதாவது ஆக விடுவேனா" என வசனம் பேசினான்.

இதையெல்லாம் பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்ட ஹர்ஷா "அத்த! விக்ரம்க்கு அதெல்லாம் ஒன்னும் இல்ல. அபி சும்மா கிண்டல் பண்ணிட்டு இருக்கான்" என சமாளித்து அனுப்பி வைத்தான்.

சரியென ஹர்ஷாவிடம் ஒத்துக்கொண்டாலும் மனமே இல்லாமல் பார்வதி விக்ரமை பார்க்க "அவன்கிட்ட என்னாச்சுன்னு நான் கேக்குறேன். நீங்க போங்க அத்த" என ஒரு வழியாக அவரை அனுப்பி வைத்தான்.

ஹர்ஷாவிற்கு ஏதோ புரிந்து விட "யார் மச்சான் அந்த பொண்ணு?" என விக்ரமிடம் கேட்க அம்முவும் அதே நேரம் வந்துவிட்டாள். ஹர்ஷாவை ஆச்சரியமாக பார்த்த விக்ரம் "எப்படி மச்சான்! நான் ஒரு பொண்ண பத்தி தான் யோசிக்கிறேன்னு கரெக்டா சொல்லிட்ட" என்றான்.

"அதைவிடு முதல்ல என்னாத்த அப்படி யோசிச்ச அதை முதல்ல சொல்லு" என விக்ரமை இடையில் நிறுத்தி சரியாக எடுத்துக் கொடுத்தான் அபி.

"அதான் சொன்னேன்லடா என் புது பி.எ கவி. அவளை பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்" என அப்பாவியாக விக்ரம் கூற ஹர்ஷா மற்றும் அபிக்கு விஷயம் பிடிபட்டுவிட்டது. ஆனால் அதை அவனிடம் கேட்காது "அவளை பத்தி என்ன யோசிச்ச?" என்றான் ஹர்ஷா.

"அதுவா மச்சான்!" என்று ஆரம்பித்தவன் சங்கவியின் இன்றைய செயலை கூறி சிலாகித்தான். "ப்ச் சான்ஸே இல்லடா. அந்த பொண்ணு அவ்ளோ டேலண்டட். ஆனா சரியான திமிர்டா அவளுக்கு" என அதையும் ரசித்து கூறினான்.

அவன் சங்கவியை பற்றி பேச துவங்கியதும் அவன் முகம் செய்கை எல்லாவற்றையும் பார்த்த அண்ணன் தம்பி இருவருக்கும் தோன்றியது இதுதான் 'சரி ரைட்டு பையன் காதல்ல விழுந்துட்டான்' என.

'இவன் தானா தெளிஞ்சு வரட்டும்' என எண்ணிய ஹர்ஷாவோ "ஆமா மச்சான்! செம டேலண்ட் தான்" என கூறி மானசீகமாக விக்ரமை நினைத்து தலையில் அடித்து கொண்டு சென்றான்.

ஹர்ஷா சென்றவுடன் விக்ரமின் மறுபுறம் இருந்த அபி 'வாட் எ மெடிக்கல் மிராக்கல்! இவனுக்கு லவ் வந்திருச்சா. அட கிரகமே' என நினைத்தபடி தானும் கிளம்ப 'இங்க என்னடா நடக்குது?' என புரியாமல் பார்த்த அம்மு இதை பற்றி அபியிடம் கேட்க வேகமாக ஓடினாள்.

"அத்தான்! அத்தான் நில்லுங்க! இப்போ இங்க என்ன நடந்துச்சு? என் அண்ணனுக்கு என்ன பிரச்சினை?" என்றாள் புரியாது. அம்முவின் கேள்வியில் அவளை பார்த்த அபி 'ம்ஹும் அண்ணன் தங்கச்சி ரெண்டு தத்தி தான் போல' என்று எண்ணிக் கொண்டான்.

பின் அம்மு தொடர்ந்து கூப்பிட்டு கொண்டே இருக்கவும் "அடியே! இன்னுமா உனக்கு புரியலை. உங்க நொண்ணன் லவ்ல விழுந்திருக்கான். அது அந்த தண்ட கருமத்துக்கே இன்னும் புரியலை" என்றான் கடுப்பாக.

"ஐயோ என்ன அத்தான் சொல்றீங்க" என அம்மு சிணுங்கவும் அதில் புன்னகைத்த அபி அம்முவை அணைத்து கொண்டு "ஐயோ செல்லக்குட்டி! இன்னுமா புரியலை. விக்ரம் அந்த பொண்ணு கவிய லவ் பண்றான்.

அதான் அந்த பொண்ணை நினைச்சு பகல்லையே பல்ல காட்டிட்டு படுத்திருக்கான். ஆனா அது அவனுக்கு தெரியலை. அதனால அவ டேலண்டட் புத்திசாலினு ஒலறிக்கிட்டு திரியிறான். ஆனா இவன் லவ்ல எப்ப உணர்ந்து அதை எப்ப அந்த பொண்ணு கிட்ட சொல்லி..

ப்பா.. நினைச்சாவே கண்ண கட்டுது. ஆனா ஒன்னுடி அதுவரைக்கும் அந்த பொண்ணு கமிட் ஆகாம இருக்கனும்" என புலம்பி விட்டு "அவன் தேறமாட்டான். சரி நீ வா செல்லம் நாம போவோம்" என அம்முவை அழைத்து சென்றான் அபி.

இவர்கள் எல்லோரும் இப்படி நினைத்து செல்ல அங்கே விக்ரமோ 'என்ன ரெண்டு பேரும் ஒரு திணுசா பாத்திட்டு போறானுங்க. சரி என்னவோ. போய் வேலைய பாப்போம்' என்று தன் அறைக்கு சென்றுவிட்டான்.

-------------------------------------------

அறையில் இருந்த வசுந்தராவிடம் வந்து "வசும்மா இந்தாடா" என ஒரு கவரை நீட்டினார் கணபதி. "என்னங்க இதுல என்ன இருக்கு?" என்ற வசுந்தராவின் கேள்விக்கு "பிரிச்சு பார்த்தா உனக்கே தெரியப்போகுது" என்று கணபதியும் அவர் அருகில் அமர்ந்து கொண்டார்.

கவரை பிரித்த வசுந்தராவின் கைகளில் அழகிய புடவை ஒன்று வந்து விழுந்தது. அதன் அழகில் கவரப்பட்ட வசுந்தரா "புடவை ரொம்ப அழகா இருக்குங்க" என்றார் ஆனந்தமாக.

வசுந்தராவின் சந்தோஷத்தில் தானும் மகிழ்ந்த கணபதி "ம்ம் புடவை தான். என்னோட செல்ல வைப்க்கு. இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா வசு?" என்று கணபதி‌ ஆர்வமாக தன் கேள்வியை முன் வைக்க

சற்று யோசித்த வசுந்தரா 'இல்லை' என்பதாய் உதட்டை சுழித்து தலை அசைத்தார். வசுந்தராவின் பாவனையில் புன்னகைத்த கணபதி "சரி நானே சொல்றேன்‌. வருஷா வருஷம் இந்த நாள் உனக்கு புடவை எடுத்து தருவேன்.

அது ஏன்னு சொல்லுவேன். நீதான் மறந்து மறந்து போய்டுற" என செல்லமாக அலுத்துக் கொண்டவர் "இன்னைய நாள் முப்பது வருஷத்துக்கு முன்னாடி நான் உன்னை பர்ஸ்ட் டைம் பார்த்தேன். நம்ம காலேஜ்ல நீ என்டர் ஆனப்ப நான் உன்னை பார்த்த நாள்மா இது" என கண்களில் கனவு மின்ன கூறினார்‌.

இந்த வயதிலும் அவர் முகம் அவ்வளவு அழகாக அவர் காதலை காட்டியது. "அப்போ எப்படி இருந்தியே அப்படியே இப்பவும் இருக்கமா" என்றார் புன்னகைத்து.

கணபதியின் வார்த்தைகளில் அழகாய் வெட்கப்பட்ட வசுந்தரா "ம்ம் நல்லா ஞாபகம் இருக்குங்க. அப்போ எல்லாம் எவ்ளோ ஜாலியா இருந்தோம்ல" என்று தானும் அந்த நாட்களை மகிழ்ச்சியாக நினைவு கூர்ந்தார்.

இருவரும் நன்றாக பேசிக் கொண்டிருந்த நேரம் திடீரென வசுந்தரா "ஆனா சில நினைவுகள் மனசுல இன்னும் ரணமா இருக்கத்தான் செய்யுதுங்க" என சோகமாக கூறினார். அதன்பின் வசுந்தராவின் கண்கள் தானாக கண்ணீர் சொறிந்தன.

வசுந்தராவின் அழுகையை கண்டு கணபதி 'ச்சே பழசை நாமளே ஞாபகப்படுத்திட்டோம். வசுவ அழவச்சிட்டேன்' என தன்னையே நொந்தவர் பேச்சை மாற்றும் பொருட்டு "ஏம்மா கேக்கனும்னு நினைச்சேன். அனுகிட்ட பேசுனியா? எப்படி இருக்கா?" என்றார்.

அதில் மீண்ட வசுந்தரா "ஹான் பேசுனேங்க. மாப்பிள்ளை அவங்க வீட்ல இருக்க எல்லாரும் ரொம்ப நல்ல மாதிரியாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு சொன்னா" என மகிழ்ச்சியாய் பேச துவங்கி விட்டார் வசுந்தரா.

வசுந்தராவின் மனநிலை மாறிய பின்னே நிம்மதியடைந்த கணபதி "சரிமா! ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு. சோ நான் போய்ட்டு வரேன்" என கிளம்பிவிட்டார்.

கணபதி கிளம்பிய பின்னர் இதுவரை அவர் அடக்கி வைத்திருந்த அழுகையை அழுக துவங்கினார் வசுந்தரா. தன் மனதில் உள்ளதை என்னதான் அவர் மறைத்தாலும் அதை கணபதி சென்றபின் தன் தலையணையை நனைப்பதின் மூலம் காட்டிக் கொண்டிருந்தார்.

பெரும்பாலான நாட்கள் அவர் சோகத்தை தாங்கும் அந்த தலையணை என்றும் போல் இன்றும் அவர் கண்ணீர் கரைகளை வாங்கிக் கொண்டது.

'சாரிங்க! ரொம்ப சாரி. நீங்க இவ்ளோ காதல் வைக்கற அளவுக்கு எனக்கு தகுதி இருக்கா இல்லையான்னு தெரியலை‌. ஆனா நான் உங்களுக்கு எப்பவும் கஷ்டம் தானே தந்திருக்கேன். எப்படி என்னை மன்னிச்சு இவ்ளோ நாள் அதே அளவு காதலை காட்டிட்டு இருக்கீங்க.

ஆனா நான் உங்களுக்கு எப்பவும் கஷ்டம் தானே தந்துட்டு இருக்கேன்' என மனதில் புலம்பியபடி அழுதுக் கொண்டிருந்தார் வசுந்தரா. வசுந்தராவின் நினைவுகள் முப்பது வருடங்களுக்கு முன்னே சென்றது.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 21

"அப்பா நான் போயே தீருவேன். அண்ணாவ மட்டும் ஹைதராபாத் அனுப்பிப் படிக்க வைச்சீங்க. நான் இங்க இருக்க கோயம்புத்தூருக்கு தானே படிக்க போறேன்னு சொல்றேன். அங்க அனுப்ப மாட்டேன்னு சொல்றீங்க.

எனக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்றீங்க. இதுலாம் சரியே இல்லை சொல்லிட்டேன்" என்று அந்த வீட்டின் இளவரசி வசுந்தரா தன் தந்தை ராகவனிடம் சண்டை இட்டுக் கொண்டிருந்தார்.

"என்ன வசும்மா. உன்னை விட்டுட்டு நாங்க எப்படிடா இருப்போம். இப்படி போறேன்னு வந்து நிக்கிறியே" என பாவமாய் கேட்டார் ராகவன். சண்டை என்றால் ராகவன் வசுந்தராவை திட்டுவது அடிப்பது என்றில்லை.

ராகவன் கெஞ்சுவதும் வசுந்தரா அதை மறுத்து சண்டை இடுவதுமே இவர்களின் சண்டை. இதையெல்லாம் வேடிக்கை பார்த்திருந்த விஸ்வநாதன் இதற்கு மேல் தன் செல்ல தங்கை கெஞ்சுவதை பார்க்க சகியாது பேசினார்.

"அப்பா! வசு குட்டி கெஞ்சுறா பாருங்க. பாவம் அவ. அவளை அவ இஷ்டப்பட்டபடியே படிக்க அனுப்பலாம் ப்பா. இங்க இருக்க கோயம்புத்தூர் தானே ப்பா. வசு ஞாபகம் வந்தா உடனே டிரைன் ஏறிருங்க. என்னப்பா ஓகே தானே. சரின்னு சொல்லுங்களேன்" என்று விஸ்வநாதன் தன் செல்ல தங்கைக்காக தன் தந்தையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

வசுந்தரா ராகவனின் ஒரே செல்ல மகள். அவள் பிறந்த சில நாட்களிலேயே ராகவனின் மனைவி ஜன்னி கண்டு இறந்து விட தாயின் அரவணைப்பு இன்றியே வளர்ந்தாள் வசுந்தரா.

ஆனால் தாய்க்கு தாயாக தந்தைக்கு தந்தையாக என இருப்பவர் ராகவனே. அதோடு விஸ்வநாதனுக்கு செல்ல தங்கை. அப்பா அண்ணன் என இருவரிடமும் எந்த கஷ்டமும் தெரியாமல் செல்லமாய் இளவரசியாக வளர்ந்தவள் தான் வசுந்தரா.

விஸ்வநாதன் என்னதான் தங்கைக்கு சாதகமாக பேசினாலும் அவருக்கும் வசுந்தராவை பிரிந்திருக்க மனம் இல்லை தான். இருந்தாலும் தங்கையின் ஆசையை நிறைவேற்ற நல்ல அண்ணனாக பேசவும் செய்தார்.

வசுந்தராவை கோவை அனுப்ப ராகவன் தீவிரமாக மறுக்க வசுந்தரா தான் போயே தீருவேன் என உண்ணாவிரதமே இருந்துவிட அதற்கு மேல் தன் செல்ல மகளின் ஆசைக்கு தடை விதிக்கவில்லை ராகவனும்.

அறை மனதாகவே ஒத்துக் கொண்டார். அன்று வசுந்தரா கோவை கிளம்பும் நாள். வசுந்தரா தன் உடமைகளை எடுத்து வைத்து ஹாலுக்கு வர அங்கே சோஃபாவின் இரு ஓரத்திலும் ராகவனும் விஸ்வநாதனும் கையை கண்ணத்தில் வைத்து அமர்ந்திருந்தனர்.

அதை கண்ட வசுந்தராவிற்கு கஷ்டமாக இருந்தாலும் 'நாம் ஏதாவது பேசினால் போதும் நம்மை பேசி சரிக்கட்டி இங்கேயே இருக்க வைத்து விடுவார்கள் இருவரும்' என்று எண்ணி அமைதி காத்தாள்.

"க்கும்!‌' என்று வசுந்தரா தொண்டையை செறுமி தான் வந்துவிட்டதை அவர்களுக்கு உணர்த்தினாள். 'ஐயோ கிளம்பிட்டாளே!' என்று பார்த்த ராகவன் "குட்டிமா போய் தான் ஆகனுமா?" என்றார் ஏக்கமான குரலில்.

அந்த குரல் வசுந்தராவை அசைத்தாலும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. அந்த நிமிடத்தை கடக்க "அண்ணா!" என்று விஸ்வநாதனை அழைக்க அவன் இருந்த நிலைக்கு ராகவனே தேவலாம் போல் இருந்தது.

'இது வேலைக்கு ஆகாது' என எண்ணிய வசுந்தரா "அப்போ நான் கிளம்பறேன். நீங்க ரெண்டு பேரும் இங்கையே உங்காந்துட்டு இருங்க" என நகர பார்க்க "ஏய்! ஏய் வசு குட்டி. இருடா நாங்க‌ வந்து விட்டுட்டு வரோம்" என்று அவசரமாக அவர்களும் உடன் கிளம்பினர்.

ரயில் நிலையம் வரை உடன் வந்த ராகவனும் விஸ்வநாதனும் மனமே இன்றி வசுந்தராவை அனுப்பி வைத்தனர். அது கஷ்டத்தை தந்தாலும் "வாங்க ப்பா! அவளும் வெளி உலக அனுபவத்தை எல்லாம் கத்துகட்டும்" என்று விஸ்வநாதன் சமாதானம் செய்து ராகவனை அழைத்து வந்தான்.

அங்கே ரயிலில் சென்றுக் கொண்டிருந்த வசுந்தராவிற்கும் மனது வலிக்க தான் செய்தது. ஆனால் உலகத்தை அறிய வேண்டும் எனற் ஆவலில் படிக்க கிளம்பி விட்டாள் வசுந்தரா.

அதுவே அவள் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும் அந்த மாற்றத்தால் வாழ்வு முழுவதும் மனதிற்குள் அழுக போகிறேம் என்றும் வசுந்தராவிற்கு தெரிந்திருந்தாள் தன் தந்தை தமையனோடே இருந்திருப்பாளோ!

அந்த பிரபலமான தனியார் பொறியியல் கல்லூரி நன்றாக பரந்து விரிந்து காணப்பட்டது. அந்த கல்லூரி துவங்கி சில வருடங்கள் தான் ஆகி இருந்தது. அதனால் இன்னும் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்க ஆங்காங்கே புதிய கட்டிடங்களும் தென்பட்டன.

ஆனால் பல பணக்கார பிள்ளைகளின் படிப்பை கற்றுக் கொடுக்கும் இடமும் அதுவே. அந்த கல்லூரியின் ஒரு மரத்தின் அடியில் சோகத்தின் மொத்த உருவாக அமர்ந்திருந்தாள் வசுந்தரா.

"என்ன வசு என்னாச்சு. ஏன்டி இவ்ளோ சோகமா உக்காந்திருக்க?" என அவள் அருகில் இருந்த அவள் தோழி கேட்க "ஏன்டி உனக்கு தெரியாதா" என்று பாவமாக எதிர் கேள்வி கேட்டாள் வசுந்தரா.

"ம்க்கு! ஏன் தெரியாம! உன் அப்பாவையும் அண்ணாவையும் நினைச்சு தானே இப்படி உக்காந்திட்டு இருக்க. அதானே!" என்று கிண்டல் செய்தாள் அவள் தோழி ராகினி.

வசுந்தரா இந்த கல்லூரியில் வந்து சேர்ந்ததும் ரெக்கை முளைத்தது போல் உணர்ந்தாள். இங்கே நிறைய நண்பர்களை சேர்த்து கொண்டாள். ஆனால் ராகினி மட்டுமே அவளின் நெருங்கிய தோழி ஆனாள்.

ராகினியின் கிண்டலில் "போடி கிண்டல் பண்ணாத. நானே எப்படா அப்பா அண்ணா ரெண்டு பேரும் வருவாங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்று சோகமாக கூறியவள் ஹாஸ்டல் வாசலையே பார்த்திருந்தாள்‌.

"அடியே இது உனக்கே ஓவரா இல்ல. இந்த காலேஜ்ல நீ சேந்து ஒரு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ள எல்லா வார வீக்கெண்டும் உன் அப்பா அண்ணா உன்னை கரெக்டா பாக்க வந்திடுறாங்க. இதுல நீ சோகமா உக்காந்திருக்கறத தான்டி பாக்க முடியலை" என்று அங்கலாயித்தால் ராகினி.

ராகினி பேசியதை கேட்டு அவளை முறைத்த வசுந்தரா "போடி! நான் என் அப்பா அண்ணா ரெண்டு பேரையும் எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா! இவ்ளோ நாள் நான் என் அப்பாவ பிரிஞ்சு இருந்ததே இல்லை தெரியுமா!" என பாவம் போல் முடிக்க

"அது எப்படிடி வாரா வாரம் இதே டையலாக்கை ஸ்பெல்லிங் மாறாம சொல்ற" என போலியாக ஆச்சரியப்பட்ட ராகினி "இவ்ளோ தூரம் மிஸ் பண்றவ எதுக்கு இங்க படிக்க வந்தியாம். உங்க ஊர்லையே படிக்க வேண்டியது தானே" என்று வினவினாள்.

"அது நிறைய தெரிஞ்சுக்கனும்னு வந்த இன்ட்ரஸ்ட். அது வேற டிபார்ட்மெண்ட். அதெல்லாம் நீ கேக்காத போடி" என்றுவிட "உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடி. என்னவோ பண்ணி தொலை" என்ற ராகினி ஹாஸ்டலின் உள்ளே சென்று விட்டாள்.

உள்ளே சென்ற ராகினி போன வேகத்தில் வெளியே ஓடி வர "என்னடி இப்ப தான் போன உடனே வந்துட்ட? என்ன விஷயம்" என்று கேட்டாள் வசு.

"ஏய் உன் அண்ணா ஹாஸ்டலுக்கு கால் பண்ணிருக்காங்கடி. அதான் வந்தேன். உன்னை கூப்பிட்டாங்க. சீக்கிரம் வா" என்று வசுந்தாவை இழுத்து சென்றாள் ராகினி.

வேகமாக ஓடிய வசுந்தரா அந்த அலைப்பேசியை எடுத்து "ஹலோ அண்ணா! எங்க வந்திட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். ஏன் இப்போ போன் பண்ணிருக்க" என்று கேள்விகளை சரசரவென தொடுத்தாள்.

வசுந்தராவின் படபட பேச்சில் அவளுக்கு தங்களை பார்ப்பதில் உள்ள ஆர்வம், தங்களை பார்க்காததால் வந்த ஏக்கம் அனைத்தும் தெரிந்தது.

அதை உணர்ந்து 'அவ்ளோ தூரம் எங்களை விட்டுட்டு போய் இப்படி தவிச்சு போறாளே. இங்கையே படிக்க சொன்னா அதுவும் முடியாதுன்றா. ஆண்டவா தங்கச்சி இருக்கிற எல்லா அண்ணனும் பாவம்டா' என்று மனதில் புலம்ப மட்டுமே முடிந்தது விஸ்வநாதனால்.

ஆனால் அதை அவரின் அருமை தங்கையிடம் சொன்னால் அவள் 'அங்கேயே என்னால இருக்க முடியும்' என வரட்டு பிடிவாதம் செய்கிறாள். எனவே அவள் போக்கில் விட்டு பிடிக்கலாம் என எண்ணிய விஸ்வநாதன் எதுவும் பேசுவதில்லை இப்போது எல்லாம்.

அவர் தங்கையே 'நான் வரேன்' என சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறார். ஆனால் அந்த வார்த்தைகளை வசுந்தரா கூறும் போது எல்லாவற்றையும் ஏன் வசுந்தராவையே விஸ்வநாதன் வெறுத்து ஒதுக்க போகிறார் என அப்போது அவர் அறியவில்லை.

அலைப்பேசியின் அந்த புறம் தன் தங்கையிடம் இருந்து வந்த கேள்வியில் திணறி விட்டார் விஸ்வநாதன். 'ஐயையோ! ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறா போலையே! இப்போ நாம வரலைன்னு சொன்னா என்ன பண்ண போறாளோ!' என்று உள்ளுக்குள் பயந்தார் அவர்.

அதற்குள் இங்கே வசுந்தரா பல முறை அவரை அலைப்பேசியில் அழைத்து விட்டாள். பின் சுதாரித்த விஸ்வநாதன் "அது ஒன்னும் இல்ல குட்டிமா. நம்ம ஒரு பெரிய கம்பெனிக்கு டென்டர் அனுப்பி இருந்தோம்லடா. அது நமக்கே கிடைச்சிருக்குடா" என்றதும்

"வாவ் சூப்பர் அண்ணா. கங்கிரேட்ஸ்! நீ வந்து பர்ஸ்ட் எடுக்க போற வேலைல. நீ கண்டிப்பா ரொம்ப பெருசா வளருவ அண்ணா" என்று பாசமாக பேசினாள் வசு.

அதை எப்படி சொல்வது என தயங்கிய விஸ்வநாதன் "அதுனால குட்டிமா! நம்ம கூட அவங்க பேசனும்னு சொன்னாங்கடா! அதுக்கு மீட்டிங் அரேஞ்ச் பண்ணி இருகாங்கலாம்!" என்று ராகம் பாட

தன் அண்ணன் எதுவோ சொல்ல வருவதற்கே இப்படி சுத்தி வளைக்கிறான் என்று உணர்ந்த வசு "நீ எதுக்கு இப்படி மாவாட்டுற. என்ன சொல்ல வந்தியோ அதை சீக்கிரம் சொல்லு. அப்புறம் நீங்க எங்க இருக்கீங்க. அதை முதல்ல சொல்லு" என்று கறாராக கேட்டாள்.

இப்போது எச்சிலை கூட்டி விழுங்கிய விஸ்வநாதன் "அது வந்து குட்டிமா. அந்த மீட்டிங் இன்னைக்கு தான் வச்சிருக்காங்கடா. நானும் அப்பாவும் அங்க தான் கிளம்பிட்டு இருக்கோம். அதனால இன்னைக்கு உன்னை பார்க்க வர முடியலைடா" என்று படபடவென சொல்லி முடித்தான் விஸ்வநாதன்.

விஸ்வநாதன் கூறியதை கேட்டு அதிர்ந்த வசுந்தரா "ஓஓ..." என்று ஒரு மார்க்கமாய் இழுத்தவள் "ஓகே! அப்போ நீங்க ரெண்டு பேரும் அங்க கிளம்புங்க. போய்ட்டு வந்து கால் பண்ணு. பாய்" என்று மட்டும் கூறி அலைப்பேசியை வைத்து விட்டாள்.

விஸ்வநாதனிற்கோ கஷ்டமாய் போய் விட்டது. தங்கையை காண வேண்டும் என்று மனதில் தோன்றினாலும் வாழ்வில் அவருக்கு முக்கியமான ஒரு சந்தர்ப்பம் இது. இதை விடவும் மனதில்லை. எனவே போகும் போது வசுவிடம் பேசலாம் என்றே இவ்வளவு நேரம் அவர் அழைக்கவில்லை.

வசுந்தராவிற்கு புரிந்தது தன் அண்ணனின் நிலை. அதனால் தான் அப்புறம் பேசறேன் என்று வைத்து விட்டாள். ஆனால் அவர்கள் அவளை பார்க்க வரவில்லை என்பதும் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கண்களில் நீரே வந்துவிட்டது.

அப்படி விழி நீருடன் அவள் சென்று மீண்டும் அந்த மரத்தடியில் அமர்ந்துவிட்டாள். தூரத்தில் இருந்த ஒரு உருவம் வசுந்தராவின் செய்கைகளை பார்த்துக் கொண்டே இருந்தது‌.

அவள் காலையில் இருந்து அங்கேயே அமர்ந்திருந்தது. பின் சென்று போன் பேசியது. இப்போது கண்கள் கலங்கி வந்து அமர்வது என எல்லாவற்றையும் பார்த்தது. ஏனோ வசுவின் கண்ணீர் அந்த உருவத்தை பாதிக்கவே தானாகவே வந்து அவளிடம் பேசியது.

"ஹாய் ஏஞ்சல்! என்ன இங்க உக்காந்து அழுதுட்டு இருக்கீங்க. என்னாச்சு எனி பிராப்ளம்?" என்று அக்கறையாக வினவ 'யார் நீ?' என்று பார்த்து வைத்தாள் வசு.

அந்த பார்வை புரிந்தது போல் "ஹே ஏஞ்சல்! ஐம் ராம்! உன் பேர் என்ன?" என்றான் அந்த உருவத்திற்கு சொந்தகாரன். ஏனோ அந்த நிமிடம் ஒரு ஆடவனிடம் பேச பயந்து எழுந்து உள்ளே ஓடினாள் வசந்தரா.

அவளை கண்டு புன்னகை புரிந்த ராம் "அப்புறம் பார்க்கலாம் ஏஞ்சல்!" என்று கத்த அதில் அவனை திரும்பி பயப்பார்வை பார்த்த வசு நிற்காமல் ஓடிவிட்டாள்.

"வசுந்தரா!" என்ற மீனாட்சியின் அழைப்பில் நிகழ்காலத்திற்கு மீண்ட வசுந்தரா "சொல்லுங்க அண்ணி" என்று அவரை காண செல்ல எப்போதும் போல் தன் மகள் அனுவை பற்றி கதை பேச ஆரம்பித்தார் மீனாட்சி.


---------------------------------------------------------

"என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? கொலைகாரன் மாதிரியா? ஹான். எவ்ளோ தைரியம் இருந்தா ஒரு டாக்டர் என்கிட்ட வந்து இதை கேட்டுருப்பீங்க" என அகிலன் ஹைப்பிச்சில் கத்திக் கொண்டிருந்தான்.

"இங்க பாருங்க டாக்டர். இந்த கத்துற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க. உங்களால நான் சொல்றதை செய்ய முடியுமா முடியாதா?" என்று கறாராக கேட்டான் ராமின் அடியாள் மோகன். அன்று ராம் அவனுக்கு இட்ட பணியை செய்ய இன்று அகிலனை தேடி வந்துவிட்டான் மோகன்.

அந்த அடியாளை பார்த்து முறைத்த அகிலன் 'ஏதோ சரியில்லையே! இவன் உண்மையாவே ஹர்ஷாவோட எதிரியா, இல்லை இவன் பின்னாடி இருந்து வேற யாரும் தூண்டி விடுறாங்களா? நம்மல லாக்கப் உள்ள வைக்கிறதுக்கு மட்டும் எல்லா வேலையும் பண்றானுங்க போலையே' என்று யோசித்தான்.

அதை கவனித்த மோகன் "என்ன டாக்டர்! என்ன யோசைனை பண்றீங்க. உங்களால இதை செய்ய முடியுமா முடியாதா?" என்று மீண்டும் கேட்க எதோ யோசித்த அகிலன்

"எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. நான் யோசிச்சு சொல்றேன்" என்று முடித்து கொண்டான். அந்த ஆட்களும் சென்றுவிட பின்னே தீவிர யோசைனையில் இறங்கிய அகிலன் யோசனையின் முடிவில் யாருக்கோ அழைத்தான்.

சிறிது நேரம் எல்லாவற்றையும் பேசி முடித்தவன் ஒரு முடிவிற்கு வந்தவனாய் கைப்பேசியை வைத்து விட்டான். அதன் பின் அடுத்த நாள் அந்த மோகனிற்கு அழைத்து "இங்க பாரு மோகன். நான் இதுல தெரிஞ்சோ தெரியாமலோ இன்வால்வ் ஆகிட்டேன்.

இப்போ என்னால பின்வாங்க முடியாது. அதனால நான் இதுக்கு சம்மதிக்கிறேன். ஒரு ரெண்டு நாள் அப்புறம் வா. நான் ஏற்பாடு செஞ்சிடுறேன்" என்று பேசி வைத்தான்.

அந்த தகவலை மோகன் அப்படியே ராமிடம் சேர்க்க "சபாஷ் மோகன்! அந்த டாக்டர் நம்ம வழிக்கு வந்துட்டானே! நான் கூட அவன் ஏதாவது ஏடாகூடம் பண்ணுவான்னு நினைச்சேன். பரவாயில்லை டாக்டர் புத்திசாலி தான்" என பாராட்டிவிட்டு

"அப்புறம் அவன் அந்த மருந்தை தந்த உடனே எனக்கு போன் பண்ணு நான் அதை சேர்க்க வேண்டிய இடத்தில சேர்த்திடுறேன்" என்று வன்மையாய் கூறி கைப்பேசியை வைத்தார்.

--------------------------------------------

"அண்ணா! உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். நீங்க பிரீயா இல்ல எதாவது வேலை இருக்கா?" என்று ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த ராஜசேகரிடம் கேட்டபடி வந்தார் பார்வதி.

"என்ன அத்தை எங்க அப்பாட்ட எதோ பெரிய பிட்டா போட போறீங்க போல. டிஸ்கிளைமர்லா பெருசா இருக்கு?" என்று பார்வதி பேசியதற்கு கிண்டல் பேசியபடி வந்தான் அபிமன்யு.

அவனோடு வந்த ஹர்ஷா அபியின் முதுகிலே ஒரு அடியை போட்டு "ஏன்டா! அத்தைய கூட விடமாட்டியா. எல்லாத்தையும் போட்டு கிண்டல் பண்ணிக்கிட்டு" என்று கண்டித்தவன் "நீங்க பேசுங்க அத்த" என்று பார்வதியிடம் கூறினான்.

அவர்களை பார்த்து புன்னகைத்த பார்வதி "அது ஒன்னும் இல்ல ண்ணா. நம்ம ஹர்ஷா குட்டி கல்யாணம் முடிஞ்சு ரொம்ப நாள் ஆச்சு. ஆனா நாம இன்னும் நம்ம சம்மந்திக்கு விருந்தே தரலை.

அவங்க கல்யாணம் ஆன அந்த வாரமே தந்துடாங்க. நாம அப்புறம் தரலாம்னு பார்த்தா அனுக்கு எக்சாம் வந்திருச்சு. டைமே இல்ல. இப்போ நீங்க எல்லாம் பிரீன்னா இந்த வீக் என்ட் நம்ம வீட்ல அவங்களுக்கு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யலாமா ண்ணா?" என்று தான் எண்ணிய விஷயத்தை கேட்டு விட்டார்.

"எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லமா. பசங்களோட சவுகரியம் எப்படின்னு பார்த்து பண்ணிடலாம் பார்வதி" என்று தன் கருத்தினை சொல்லி விட்டார் ராஜசேகர்.

ராஜசேகர் சம்மதம் தந்தவுடன் "எனக்கு ஒன்னும் சன்டே கமிட்மென்ட் இல்லப்பா. சோ அன்னைக்கே வச்சுக்கலாம்" என்று ஹர்ஷா தன்னுடைய சம்மதத்தையும் கூறிவிட்டான்.

ஹர்ஷாவும் சரி என கூறியவுடன் "அப்போ ஓகே ஹர்ஷா குட்டி. வீட்ல இருக்க மத்த மூனு வானரங்களையும் சன்டே எங்கேயும் போக வேண்டாம்னு சொல்லிடு ப்பா. நீ சொன்னா தான் மூனும் கேக்குங்க" என அவனிடம் தன் உண்மையான எண்ணத்தை கூறினார்.

ஆனால் அதை அருகில் இருந்து கேட்ட அபிமன்யுவிற்கு தான் கடுப்பாகிவிட்டது. "ஏன் அத்த! என்ன பார்த்தா உனக்கு வானரம் மாதிரி இருக்கா. உன் பையன சொன்னா அதுல ஒரு நியாயம் இருக்கு. என்னை எதுக்கு இப்போ இப்படி‌ சொன்ன?" என்று கோபம் போல் கேட்டுவிட்டு

"உன் பேச்சு கா அத்த. இனிமே அபி குட்டி செல்லம்னு வந்துராத" என பேசி திரும்பி அமர்ந்து கொண்டான். அபி பேசியதில் பாவம்‌ போல் முகத்தை வைத்துக் கொண்ட பார்வதி "சாரிடா அபி குட்டி! உன்னை போய் நான் அப்படி சொல்லுவனா. நான் பெத்து வச்சிருக்கனே அந்த ரெண்டு வானரத்தை சொன்னேன்" என்று அந்தர் பல்டி அடித்து விட்டார்.

பார்வதி பதிலில் போனால் போகிறது என்பது போல் முகத்தை வைத்த அபி "சரி உன்னை போனா போகுதுன்னு விடுறேன். ஏன்னா நீ என் செல்ல அத்தையா போய்ட்டியே!" என பார்வதியின் கண்ணத்தை பிடித்து ஆட்டிக் கொண்டான் அபி.

"அப்போ ஓகே அண்ணா. நீங்க நம்ம சம்மந்தி வீடு அவங்க ரிலேட்டிவ்ஸ் வீடுன்னு எல்லாரையும் இன்வைட் பண்ணிடுங்க. அதுதான் முறை" என்று கூறிய பார்வதி எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

பார்வதி கூறாயதை கேட்ட ராஜசேகரும் அனைவரையும் மகிழ்ச்சியோடு அழைக்க ஆரம்பித்தார். ராஜசேகர் அறியவில்லை பாவம் இந்த விருந்து நிகழ்விற்கு பின்னர் அவர் நிம்மதி மொத்தமாக பறிப் போகப் போகிறது என.

இங்கே அனைத்தையும் கேட்ட ஹர்ஷா வேகமாக மாடிக்கு ஓடியவன் அனுவிடம் நடக்க இருக்கும் விருந்தை பற்றி அப்படியே கூறிவிட்டான். அனுவிற்கோ அத்தனை ஆனந்தம் அவள் வீட்டு ஆட்கள் இங்கே வரப்போவது குறித்து.
என்ன தான் கணவன் வீட்டில் பெண்கள் ராணியாய் வாழ்ந்தாலும் தாய்‌ வீடு என்றால் தனி சுகம் தானே!

-----------------------------------------

வசுந்தரா தன் அறையில் துணி மடித்துக் கொண்டிருந்த நேரம் வேகமாக வந்தார் மீனாட்சி. அனுவின் திருமணம் முடிந்த பின் மீனாட்சி அதிக நேரம் வசுந்தராவோடு தான் கழித்துக் கொண்டிருக்கிறார் தன் தனிமையை போக்கிக் கொள்ள.

"ஹே வசு! மாப்பிள்ளை வீட்ல இருந்து போன் வந்துச்சு. இந்த வாரம் ஞாயித்துக்கிழமை மாப்பிள்ளை வீட்டு சார்பா விருந்து தராங்கலாம். நம்மல எல்லாம் இன்வைட் பண்ண போன் பண்ணுனாங்க.

உங்களை இன்வைட் பண்ண போன் நம்பர் கூட உன் அண்ணன்கிட்ட வாங்கிட்டாங்க. அதனால நாம எல்லாரும் இந்த வார கடைசி அனுவ பார்க்க போறோம்" என்று மகிழ்ச்சியாக சொல்ல வசுந்தராவும் மகிழ்ந்தார்.

"ரொம்ப சந்தோஷம் அண்ணி. நம்ம அனு அங்க எப்படி இருக்கான்னும் நாம நேராவே போய் பார்த்துடலாம்" என வசுந்தராவும் அனு வீட்டிற்கு செல்ல போகும் நாளை எண்ணி மகிழ்ந்தார்.

அவர் மகிழ்ச்சிக்கு இது ஒன்றே காரணமா என்று கேட்டால் அதையும் வசுந்தரா மட்டுமே அறிவார். மீனாட்சி சென்ற பின்னே மீண்டும் பழைய நினைவுகள் அவரை ஆக்கிரமித்தன.

அன்று விஸ்வநாதனும் ராகவனும் பார்க்க வராததால் கஷ்டத்தில் இருந்த வசுந்தரா அன்று முழுவதும் ஒழுங்காக சாப்பிடக் கூடவில்லை. அதோடு காலை அவளிடம் வந்து பேசிய அந்த நபரின் சிரிப்பு வேறு அவளை பாடாய் படுத்தியது‌‌.

காதல் என தடுமாறும் வயது ஒரு வாலிபன் வந்து பேசி செல்ல இதுவரை இப்படி வெளி ஆட்களிடம் பேசி பழக்கமில்லாத வசுந்தராவிற்கோ அது புது அனுபவமாய் இருந்தது.

இப்படியே அந்த நாள் செல்ல அடுத்து வந்த நாட்களில் அந்த ராமும் அவள் கல்லூரி செல்லும் போது எல்லாம் பார்வையில் வந்து விழுந்தான்‌. அவன் இவளை பார்த்ததும் பூரித்து போய் புன்னகை புரிவதை பார்க்கும் போது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன வசுந்தராவிற்கு.

'யார் இவரு? நம்ம காலேஜ்ல தினமும் பார்க்குறோம். இங்க படிக்கிறாரா இல்ல வொர்க் பண்றாரா?' என்ற கேள்வி மனதை அறித்திட ராகினியிடம் மறைமுகமாக கேட்டுப்பார்த்தாள் வசுந்தரா.

ராகினிக்கு என்ன புரிந்ததோ 'கேட்டு சொல்றேன்' என ராமை பற்றி விசாரித்து வந்துவிட்டாள். "ஹே வசு! அவர் பேரு ராம். அன்ட் நம்ம காலேஜ் கண்ஸ்ட்ரக்ஷன் வொர்க் நடக்குத்துல்ல. அதை அவங்க கம்பெனி தான் செஞ்சு தராங்கலாம். அவர் அந்த கம்பெனி எம்.டியாம்" என்று முடிந்த அளவு தகவலை திரட்டி வந்து சொன்னாள்.

வசுந்தராவிற்கு ராம் மேல் சிறு ஈர்ப்பு ஏற்பட்டது. அவள் கல்லூரி வரும் நேரம் போகும் நேரம் என எல்லா நேரமும் அவளை தூர நின்று ராம் ரசித்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்றால் ராமின் பால் நன்றாக ஈர்க்கப்பட்டால் வசுந்தரா.

வழமை போல் வசுந்தரா ஒரு நாள் கல்லூரி முடிந்து அவள் ஹாஸ்டலை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாள். ஆனால் அன்றென பார்த்து அவன் நிற்கும் இடம் காலியாக இருந்தது.

அதில் 'என்ன இவரை இன்னைக்கு காணோம். எங்க போயிருப்பாரு?' என்று யோசித்துக் கொண்டே சுற்றி சுற்றி பார்த்தபடி வந்தாள் வசுந்தரா. அப்படி வந்தவள் யாரோ ஒருவர் மேல் மோதி கீழே விழப்போக அந்த நபர் அவளை விழாது பிடித்துக் கொண்டார்.

'ஹப்பாடா கீழ விழல' என நிம்மதி அடைந்த வசுந்தரா அப்போது தான் யாரோ ஒரு ஆண்மகனின் அணைப்பில் இருப்பதை உணர்ந்தார். அதில் அதிர்ந்து விலக பார்த்தவரை "ஹே ஏஞ்சல்! நான் தான்‌டா" என்ற குரல் தடுத்தது.

ஆம் வசுந்தராவை விழாமல் பிடித்திருந்தவர் ராம் தான். "நீ.. நீங்களா! சா‌.. சாரி நான் பாக்கலை" என்று திணறிய வசுந்தராவை பார்த்து குறும்பாய் புன்னகைத்த ராம் "ம்ம் ஆமா முன்னாடி பார்க்கல. ஆனா என்னை தானே தொலவிட்டு இருந்த" என்றார்.

அந்த புன்னகை வசுந்தராவை ஏதோ செய்ய "அ.. அதெல்லாம் ஒன்னும் இல்லையே. நான்‌ சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டே வந்தேன். அதான் உங்க மேல வந்து மோதிட்டேன்" என்று சமாளிக்க பார்த்தார்.

அந்த சமாளிப்பில் நன்றாக சிரித்த ராம் "ஓகே ஓகே! நான் ஒத்துக்கிறேன். நீ வேடிக்கை தான் பார்த்த. நானும் பார்த்தேன்" என்றார். ராமின்‌ சிரிப்பு வசுந்தராவை ஏதோ செய்ய "பிளீஸ் இப்படி சிரிக்காதீங்களே!" என்று சொல்லியே விட்டார்.

அதில் இன்னும் சிரித்த ராம் "சரி நான் சிரிக்கலை. ஆனா உன்கிட்ட ஒன்னு கேக்கனும்" என்று ஆரம்பித்தார். "ரொம்ப நாளா உன்னை தூர நின்று சிரிச்சிட்டு பார்க்க மட்டும் தான் செய்யிறேன்.

நீயும் பார்க்குற சிரிக்கிற. அது எனக்கு பத்தலை. சோ அதான் பேசி உன்கூட ஃபிரண்ட் ஆகலாம்னு இப்போ வந்தேன். என்ன நாம பிரண்ட்ஸா இருக்கலாமா?" என வசுந்தரா மறுக்க முடியாது அளவு கேட்டு விட்டார் ராம்.

"என்ன பிரண்ட்ஸா?" என்று திகைத்தார் வசுந்தரா. காதல் என்று வந்தால் முடியாது என்று மறுக்கலாம். ஆனால் நட்பு என்றவுடன் 'சரி' என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை அவளுக்கு.

அதேபோல் ராம் காதல் என்று வந்திருந்தாலும் வசுந்தரா மறுத்திருக்கமாட்டாள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. எனவே "ம்ம் பிரண்ட்ஸ்" என்றுவிட்டாள் கடைசியில்.

"ஹே சூப்பர்! நான் ராம். உன்கிட்ட அன்னைக்கே சொல்லிட்டேன். ஆமா உன் பேர் என்ன சொல்லு" என்றார் ராம். அதற்கு அழகாய் புன்னகைத்த வசுந்தரா "வசுந்தரா தேவி!" என்றாள் கம்பீரமாக.

-மீண்டும் வருவான்
 
Last edited:

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 22

வசுந்தரா தன் பெயரை சொன்னவுடன் "ராம்-தேவி!" என்று தனக்குள் சொல்லி பார்த்த ராம் "வாவ்! நைஸ் நேம்" என்றான் புன்னகையுடன். எப்போதும் போல் அந்த விரிந்த புன்னகையில் வீழ்த்தப்பட்டாள் வசுந்தரா.

அதற்கு மேல் என்ன பேசுவது என புரியாத வசுந்தரா "அப்போ நான் போகட்டுமா?" என்றாள் தயக்கமாக. அவளின் முகத்தில் இருந்த தயக்கத்தை கண்ட ராமும் "சரி போ தேவிமா" என்றான். இதுவரை தேவி என்று வசுந்தராவை யாரும் அழைத்தது இல்லாததால், அந்த பெயர்‌ அவளுக்கு பிடித்துவிட்டது.

இப்படியே இவர்கள் நாட்கள் செல்ல ராம் தேவியின் உறவு நட்பு என்ற எல்லையை விட்டு மேலே தான் இருந்தது. அவர்களுக்கு அது என்ன உறவு என தெரிந்தாலும் அதை வாய்விட்டு சொல்லிக் கொள்ளவில்லை.

அன்று வார இறுதி நாள் எப்போதும் போல் வசுந்தரா வீட்டில் இருந்து விஸ்வநாதன் மட்டும் அவளை பார்க்க வந்திருந்தார். வசுந்தரா வீட்டில் இருந்து காலை நேரமே ஆட்கள் வந்துவிடுவதால் ஞாயிறு அன்று மட்டும் ராம் மாலை போல் வசுந்தராவை வந்து பார்த்து செல்வான். அதேபோல் காலையில் வந்த தமையனை அணைத்து கொண்டு பாச மழை பொழிந்தாள் வசுந்தரா.

"என்ன ண்ணா நீ மட்டும் வந்திருக்க, அப்பா வரலையா?" என்றாள் பின்னால் நின்ற காரை பார்த்தபடி. அதற்கு "வசுமா நம்ம கம்பெனி ஒரு புராஜெக்ட் சைன் பண்ண போறதா போன்ல சொன்னேன்லமா. அதை செலிபரேட் பண்ண அந்த கம்பெனி ஓனர் ஒரு பார்ட்டி அரேஜ்ச் பண்ணியிருக்காரு.

அதுக்கு நாமலும் போகனும்மா. இன்பேக்ட் இது நம்ம ரெண்டு கம்பெனியும் சேர்ந்து தர விருந்து. அப்பா நீயும் இருக்கனும்னு ரொம்ப ஆசைப்படறார். நானும் தான்மா. அதான் உன்னை கூடவே கூட்டிட்டு போகலாம்னு வந்துட்டேன்" என்று தான் மட்டும் வந்த காரணத்தை விஸ்வநாதன் கூறி முடித்தார்.

விஸ்வநாதன் கூறியதை கேட்டு மகிழ்ந்த வசுந்தரா "ஹேய்! சூப்பர் ண்ணா. இதோ நான் போய் பேக் எடுத்துட்டு அப்படியே காலேஜ்க்கு லீவ் சொல்லிட்டு வந்திடுறேன்" என்று சிட்டாய் பறந்து சென்றாள்.

சென்னை சென்றடைந்த வசுந்தராவை ராகவன் பாசமாய் அணைத்து கொள்ள அவளும் தந்தையை ஆரவாரமாய் அணைத்து கொண்டாள். தந்தையுடன் பாசப் போராட்டத்தை முடித்த வசுந்தரா "சரி போய் பிரஸ் ஆகிட்டு வா" என கூறிய அண்ணன் பேச்சைக் கேட்டு தன் அறைக்கு வந்தாள்.

அறைக்கு சென்ற சில நிமிடங்கள் கடந்த பின்னர் தான் தன் மனதில் ஏதோ ஒன்று குறைவது போல் உணர்ந்தாள். நேரம் செல்ல செல்ல வசுந்தராவின் மனது கோயம்புத்தூரிலையே விட்டு வந்தது போன்ற எண்ணம் எழுந்தது.

'என்னாச்சு வசு உனக்கு?' என தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டவளின் மனக்கண்ணில் அவள் மனம் கவர்ந்த கண்ணாளன் ராமின் முகம் தோன்றி மறைந்தது‌.

அப்போது தான் காலை கிளம்பும் நேரம் இருந்த உற்சாகத்தில் ராமை பார்க்க மறந்ததே நினைவு வந்தது.

"அவரை பார்க்காம வந்ததா இப்படி மனச போட்டு படுத்துது. ஐயோ வசு என்னடி இப்படி ஆகிட்ட. இந்த ராம் என்னை அநியாயத்துக்கு மயக்கி வச்சிருக்காரு போலையே" என்று எண்ணியவள் வெட்கி சிவந்தாள்.

"ராம்! ராம்" என கூற அந்த பெயரே அவ்வளவு தித்தித்தது வசுவிற்கு. சில நிமிடங்கள் கழித்து தன் அண்ணனின் அழைப்பில் உணர்வுக்கு வந்த வசுந்தரா அதன்பின் தமையனை பார்க்க சென்றாள்.

அந்த ஐந்து நட்சத்திர விடுதி பலதரப்பட்ட தொழிலதிபர்களால் நிறைந்து இருந்தது. விஸ்வநாதனுடன் சேர்ந்து புராஜெக்ட் செய்ய இருந்த கம்பெனி சமூகத்தில் கொஞ்சம் பெரிய நிலையில் இருந்ததால், அவர்களின் அழைப்பின் பேரில் நிறைய நிறுவன தலைவர்கள் அங்கே குழுமி இருந்தனர்.

அதில் ராமும் அவன் நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் அங்கே வந்திருந்தான். அவனுக்கு அறிமுகமாக பலர் அங்கே இருந்ததில் அவனும் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அப்போது அந்த விடுதியின் தோட்டத்தில் ஒரு பெண் அவன் வசுந்தரா தேவியை போல் நிற்பது தெரிந்தது.

இன்னும் அருகே சென்று பார்க்க எண்ணிய ராம் தான் பேசிக் கொண்டிருந்த நபரிடம் சொல்லி கொண்டு தோட்டத்தின் பக்கம் சென்றான். அங்கே நிலவு ஒலியில் தேவதை போல் தன்னுடைய தேவி நின்றதை கண்டு வாயடைத்து நின்று விட்டான்.

நேற்று சென்னை கிளம்பும் முன் தன் தேவியின் தரிசனத்தை கண்டுவிட்டு வரலாம் என கல்லூரி விடுதிக்கு சென்றவர், வசுந்தரா ஊருக்கு கிளம்பியதை கேட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார்.

நேற்று ஒரு நாள் வசுவை பார்க்காததிலே ஓய்ந்து போய்விட்டார் ராம். எனவே அவர் கோயம்புத்தூருக்கு திரும்பி வந்தபின் தன் காதலை உடனே சொல்லிட எண்ணி இருந்தார்.

இன்று எதிர்ப்பாராத விதமாக இங்கே வசுந்தராவை பார்த்ததில் அவ்வளவு மகிழ்ந்தார் ராம். அதே மகிழ்வுடன் "தேவிமா!" என்று மென்மையாக அழைக்க, ராமின் குரலை சட்டென கண்டுக் கொண்ட தேவி "ராம்!" என்றவாறு திரும்பினாள். அவள் குரலில் இருந்த பரவசத்தை கண்டுக் கொண்ட ராமுக்கும் புன்னகை வந்தது.

"நீ இங்க என்ன பண்ற தேவிமா?" என்று வசுந்தரா திரும்பியவுடன் கேட்டார் ராம். "இந்த பங்ஷன்க்கு நாங்க ஹோஸ்ட் ராம். எங்க கம்பெனி தான் இவங்க கிட்ட புராஜெக்ட் வாங்கிருக்காங்க. சோ அதான் நானும் கணடிப்பா கலந்துக்கனும்னு அண்ணா கூட்டிட்டு வந்துட்டாங்க" என்று படபடவென ஒப்பித்தாள் வசுந்தரா.

அவளுக்கு இரண்டு நாளாக ராமை பார்க்க முடியாத ஏக்கம், திடீரென இங்கே ராமை கண்டது என பல கலவையான உணர்வு உள்ளே சுழன்று அடித்தது. அதை அவள் முகத்தைப் பார்த்து உணர்ந்த ராமுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

"ஓஓ.. அதான் நேத்து உன்னை ஹாஸ்டல்ல பார்க்க முடியலையா. சரி நானும் சென்னை கிளம்பறத உன்கிட்ட சொல்லலாம்னு தான் வந்தேன். ஆனா நீ ஊர்க்கு கிளம்பிட்டன்னு உன் பிரண்ட் சொல்லவும் என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சுடா.

சரி போயிட்டு வந்து உன்னை பார்த்துக்கலாம்னு நானும் என்னை சமாதானபடுத்திகிட்டேன். பட் உன்னை இங்க பார்ப்பேன்னு நான் நினைச்சு கூட பார்க்கல. இட் இஸ் அ பிளசன்ட் சர்ப்பிரைஸ் பார் மி" என்று தன் மனதில் இருந்தவற்றை எல்லாம் கொட்டி கொண்டிருந்தான் ராம்.

இதையெல்லாம் கேட்டிருந்த தேவிக்கும் வானில் பறப்பது போல் மகிழ்ச்சியாக இருந்தது. ராம் மெல்ல இப்போது விஷயத்திற்கு வந்தார். "தேவி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்டா" என்று ஆரம்பிக்க "என்ன ராம்?" என தேவி கேட்டாள்.

"இந்த ரெண்டு நாள் உன்னை பார்க்காமையே எனக்கு என்னமோ இழந்த பீல் தேவி. நீ பக்கத்துல இல்லைனா கண்டிப்பா நான் நானாவே இருக்க மாட்டேன்னு தான் தோனுது. சோ என் லைப் புல்லா எனக்கு ஒரு நல்ல தோழியா, வெல்விஷரா, அம்மாவா என்கூட லைஃப் புல்லா என்னோட மனைவியா இருப்பியா தேவிமா" என கண்களில் உயிரை ஏந்தி கேட்டு நின்றான் ராம்.

தேவிக்கு ராமின் கேள்வியில் உடலில் ஒரு பூரிப்பு ஓடி நின்றது. கண்களில் தன்னால் நீர் இறங்கிட ராமே எதிர்ப்பாராத விதமாக அவனை அணைத்துக் கொண்டு "கண்டிப்பா ராம். எனக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு" என்றாள் தேவி.

தேவி தன்னுடைய காதலை ஏற்றுக்கொண்டதில் மகிழ்ந்த ராம் "தேவிமா" என்று அவளை தானும் அணைத்து நின்றார். இவர்கள் சிறிது நேரம் இதே மோன நிலையில் இருந்திட, முதலில் தன் உணர்வுக்கு வந்த ராம் "எப்படிமா உடனே ஓகே சொல்லிட்ட" என்று வியப்புடன் கேட்டார்.

அதில் புன்னகைத்த தேவி "ஆரம்பத்தில இருந்தே உங்கள எனக்கு பிடிக்கும் ராம். அதுவும் உங்க இந்த சிரிப்பு தான் என்னை உங்க பக்கம் இழுத்தது. தினமும் நாம மீட் பண்றப்ப எனக்கு ஒன்னும் தெரியலை. ஏன் ஊருக்கு வர வரைக்குமே நான் பீல் பண்ணல.

ஆனா அதுக்கு அப்புறம் தான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுனேன். உங்கள‌ பார்க்காத இந்த ரெண்டு நாள் எதையோ இழந்த மாதிரி தான் எனக்கும் பீல் ஆச்சு. அதான் கோயம்புத்தூர் வந்துட்டு என் மனசில இருக்கிறதை உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன்.

அப்புறம் உங்கள இங்க பார்த்த உடனே எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா. இப்படி நீங்க என் மனசுல வந்த அப்புறம் உங்க லவ்வ நான் எப்படி ஏத்துக்கமாட்டேனு சொல்லுவேன்" என்று வசுந்தரா கூறியவுடன் இன்னும் மகிழ்ந்த ராம் தன் தேவியை நன்றாக அணைத்து கொண்டார்.

இப்படி தொடங்கிய இவர்கள் காதல் கோயம்புத்தூர் சென்றும் நீடித்தது. ராம் தினமும் தேவியை பார்க்க வந்துவிடுவார். அதுவும் அவர்கள் கம்பெனியின் கட்டுமான வேலைகள் முடிந்த பின்னும் கூட தேவிக்காக இங்க வருவதை வழக்கமாக்கி கொண்டார்.

ராம் தேவி மகிழ்ச்சியுடன் தங்கள் நாட்களை கழிக்க, இவர்கள் மகிழ்ச்சியை மேலும் கூட்டும் வண்ணம் ராமின் பிறந்தநாள் வந்தது.

இவர்கள் காதலிக்க தொடங்கிய பின் வந்த முதல் பிறந்தநாள் என்பதால் தன் வீடிருந்த சென்னைக்கு கூட செல்லாது கோயம்புத்தூரிலையே இருந்து கொண்டார் ராம்.

இந்த பிறந்தநாள் விழா தான் ராம் தேவியின் வாழ்வில் மிகப் பெரிய பூகம்பத்தை கொண்டு வரும் என அறிந்திருந்தால் இருவரும் கொஞ்சமேனும் சுதாரித்து இருப்பரோ!

----------------------------

"வசும்மா எங்க இருக்க நீ" என்று கேட்டுக் கொண்டே வந்த கணபதி ராமின் குரலில் தன் இறந்த காலத்தில் இருந்து வெளி வந்த வசுந்தரா "என்னங்க" என்றார்.

"என்னம்மா இன்னும் நீ கிளம்பலையா? இன்னைக்கு ஷரா வீட்டுல விருந்துன்னு நம்மல கூப்பிட்டுருக்காங்க. போகனும்ல நீ என்ன பண்ற" என்று கணபதி கேட்ட பின்னரே நினைவு வந்தவர் போல் "ஆமாங்க மறந்தே போய்ட்டேன். இதோ இப்ப கிளம்பறேன்" என்று கிளம்பினார் வசுந்தரா.

"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் வசும்மா. அங்க போய் நீ எதுவும் வார்த்தையை விட்டுராத. நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதாமா?" என்று கணபதி தயங்கியபடி கேட்கவும்,

எதையோ நினைத்து வந்த அழுகையை அடக்கி முகத்தில் போலியாக புன்னகையை தவழவிட்ட வசுந்தரா "ம்ம் புரியுதுங்க. நான் எதையும் காமிச்சுக்கல" என்றார்.

வசுந்தரா கிளம்ப சென்றபின் கணபதி ராமின் முகம் விகரமாய் மாறியது. "அந்த ஹர்ஷாவ பார்க்க தானே வர வசு.

அவன் இருக்கற வரை என் வாழ்க்கையில நிம்மதி இருக்காது. அவனை கூடிய சீக்கிரம் இல்லாம ஆக்குறேன்டி" என்று வன்மையாக எண்ணி சிரித்தார் கணபதி ராம்.

கணபதி எதை பற்றி பேசக்கூடாது என வசுந்தராவிடம் எச்சரிக்கை செய்து கிளப்பினாரோ, வசுந்தரா அதையே அங்கு சென்று பேசப்போகிறார் என ராம் அறியவில்லை பாவம்.


-------------------------------------

"என்ன அனு குட்டி இவ்ளோ நேரம் மேக்கப் போட்டுட்டு இருக்க. இன்னும் எத்தனை கோட்டிங் பெயிண்ட் அடிக்கப்போற" என கண்ணாடி முன் நின்றிருந்த அனுவை வம்பிழுத்துக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.

அதில் கடுப்பான அனு "என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது. நானே இப்ப தான் கண்ணாடி முன்ன வந்து நிக்கிறேன். காலைல இருந்து இப்படியே அக்கப்போரா பண்றீங்க ஹர்ஷா" என்ற அனுவின் மிரட்டலிலும் சிணுங்களே இருந்தது.

அனு கூறியது போல் காலை எழுந்ததில் இருந்தே ஹர்ஷா அனுவை வம்பிழுத்துக் கொண்டிருக்கிறான். அனு எங்கிருந்தாலும் பின்னாலையே அலைந்து கொண்டு, அடிக்கடி அணைத்து கொண்டு சிறு சிறு முத்தங்கள் கொடுத்து கொண்டு என காதல் இம்சை தான் செய்து கொண்டிருந்தான்.

திருமணம் முடிந்து பரிட்சை நடந்த இந்த ஒரு மாதமும் அமைதியாக இருந்த ஹர்ஷாவா என எண்ணும் அளவு அதிகமாக அனுவை ஒன்றினான் ஹர்ஷா இன்று.

இப்போதும் அனு பேசி முடித்தவுடன் அவளை பின்னே இருந்து அணைத்த வண்ணம் "அனுமா. நான் இன்னைக்கு உன்கிட்ட ஒன்னு கேப்பேன். அது உனக்கு ஓகேவான்னு சொல்லுவியா?" என்று இழுத்தான் ஹர்ஷா.

ஹர்ஷா கேட்ட திணுசில் உள்ளுக்குள் பயம் வந்தாலும் "ம்ம்.." என்றாள் அனு‌. ஆனால் அவள் இதயம் வேகமாக துடித்தது. அதை ஹர்ஷாவும் உணரத்தான் செய்தான்.

எனவே அவள் சம்மதம் கிடைத்தவுடன் புன்னகையுடன் "நமக்கு மேரேஜ் ஆகி ஒன் மன்த்கு மேல ஆகிருச்சு. உனக்கு எக்சாம்னு நானும் உன்னை டிஸ்டர்ப் பண்ணலை‌.‌

உனக்கு தான் எக்சாம் முடிஞ்சிருச்சே நாம இன்னைக்கு நம்ம பர்ஸ்ட் நைட்ட செலிபரேட் பண்ணலாமா" என்று காதுக்குள் கிசுகிசுத்தான்.

ஹர்ஷா கூறியதை கேட்டு அனுவின் முகம் குப்பென்று சிவந்து விட்டது. வெட்கத்தில் அனு தலையை குனிந்து கொள்ள, அவளை தன் புறம் திருப்பிவிட்டு அவள் முகத்தை தன் விரல் கொண்டு நிமிர்த்தினான்.

"என்னடி உனக்கு சம்மதமா? இல்லைனாலும் சொல்லு. நான் உன்னை கம்பல் பண்ண மாட்டேன்" என்று முடித்த ஹர்ஷா கண்களில் அவ்வளவு காதல்.

திருமணம் முடிந்து பொதுவாக பலர் தங்கள் வாழ்வை இப்படி தள்ளிப்போட மாட்டார்கள். ஆனால் தனக்காக பார்த்து இவ்வளவு நாள் ஹர்ஷா பொறுத்திருந்தது, மேலும் இன்றும் தன் சம்மதம் வேண்டி நிற்பதும் அனுவை ஹர்ஷாவின் புறம் சாய்த்துவிட்டது.

ஹர்ஷாவின் விழிகளை நேருக்கு நேர் பார்க்க தடுமாறிய அனு கீழே குனிந்தபடி தலையசைத்தாள்‌. அதில் மகிழ்ந்த ஹர்ஷா "அனுக்குட்டி தலை ஆட்டினா பத்தாதுடி. சம்மதம்னு உன் வாயால சொல்லு" என அவளை மேலும் வெட்கமடைய செய்தான்.

"ம்ஹூம்" என்று சிணுங்கியபடி தன் கை கொண்டு முகத்தை மூடி அனு நிற்க, இப்போது மேலும் அவளை இழுத்து அணைத்த ஹர்ஷா "ஹேய் பொண்டாட்டி! சொல்லுடி. ஓகேவா இல்லையா" என்று அவள் சம்மதம் தெரிந்தே கேட்டு வைத்தான்.

இதற்கு மேல் இங்கே நின்றாள் ஹர்ஷா தன்னை கேலி செய்தே சிவக்க வைப்பான் என்று நினைத்த அனு அவன் அசந்த நேரம் நெஞ்சில் கைவைத்து கட்டிலில் தள்ளிவிட்டு ஓடினாள்.

சுதாரித்து ஹர்ஷா எழும் நேரம் கதவை தாண்டி ஓடிவிட்டாள் அனு. "ஏய் அனு!" என்று கத்திவிட்டு அவள் பின்னால் போக தன் அறை கதவை திறக்க போன நேரம் அந்த பக்கம் இருந்து யாரோ கதவை திறந்து உள்ளே வந்தனர்.

வந்தது யாரென்று கூட கவனியாத ஹர்ஷா, அந்த நபரை இழுத்து அணைத்து கண்ணத்தில் முத்தம் இட்டான். முத்தம் இட்ட நபரின் கன்னத்தின் சொரசொரப்பில் "என்ன அனுக்குட்டி உன் கன்னம் ஏன் சொரசொரன்னு இருக்கு?" என்று கேட்டவாறு நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்தான்.

ஏனெனில் அவன் கட்டிப்பிடித்து முத்தம் வைத்ததிருந்தது அவன் ஆருயிர் நண்பன் விக்ரமிற்கு. ஹர்ஷாவின் அணைப்பில் அதிர்ச்சியில் நின்றிருந்த விக்ரமை ஒரே தள்ளாக தள்ளிய ஹர்ஷா

"ஏன்டா எருமா. உன் கைய புடிச்சி இழுக்கும் போதே நான் அனு இல்லைன்னு சொல்ல வேண்டியது தானேடா‌. அப்படியே நான் கிஸ் அடிக்கிற வரைக்கும் நிக்கிற. கருமம் கருமம்" என தன் போக்கில் திட்டிக் கொண்டே கீழே சென்றுவிட்டான்.

"நான் என்னடா பண்ணுனேன். உன்னை கூப்பிட தானடா வந்தேன்‌. சும்மா வந்தவன ஒரு செகன்ட்ல கைய பிடிச்சு இழுத்து கிஸ் அடிச்சிட்டு, என்னமோ நானே வந்து வாங்கிக்கிட்ட மாதிரி பேசிட்டு போறான். காலக் கொடுமைடா" என அங்கே நின்ற விக்ரம் தான் புலம்பி விட்டு சென்றான்.

கீழே ஹர்ஷா செல்லும் நேரம் விருந்துக்கு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்க, ஹர்ஷாவின் கண்களோ அனுவை‌ தான் முதலில் தேடியது‌. அவனவளோ பார்வதியின் பின்னால் வால் பிடித்து கொண்டு சுற்றி அவனை வெறுப்பேற்றியபடி இருந்தாள். ஹர்ஷா கண்களால் செய்கை செய்து 'ரூமுக்கு வா' என அழைத்து கொண்டிருந்தாள்.

ஆனால் அனுவோ அவனை கண்டும் காணாமல் சுற்ற, கடுப்பான ஹர்ஷா 'எப்படி இருந்தாலும் ரூமுக்கு வந்து தானே ஆகனும். அப்போ பாத்துக்குறேன்டி' என எண்ணி பெருமூச்சை விட்டபடி சோஃபாவில் சென்று அமர்ந்தான்.

ஹர்ஷா முத்தமிட்ட விக்ரம் அதிர்ச்சி நீங்கி கீழே வரும் போது கண்ட காட்சியும் இதுவே. எனவே அவனை முறைத்து பார்க்க அதையெல்லாம் கண்டுக் கொள்ளாத ஹர்ஷா சிறப்பாக அனுவை சைட் அடித்துக் கொண்டிருந்தான்.

எப்போதடா அனு தன்னிடம் தனியாக சிக்குவாள் என எதிர்பார்த்தவன் அம்முவை அழைத்து காதில் ஏதோ முணுமுணுத்தான். அதேபோல் அனுவை அழைத்த அம்மு

"அக்கா என் போன் ரூம்லையே இருக்கு. கொஞ்சம் எடுத்துட்டு வறீங்களா" என பாவம் போல் கேட்க அனுவும் அம்முவின் கைப்பேசியை எடுத்து வர சென்றாள்.

ஆனால் அனு அறையில் நுழைந்த போது உள்ளே ஹர்ஷா இருக்க அவனை கண்டு அதிர்ந்து நின்றாள். சிரித்தபடி அவள் அருகே வந்த ஹர்ஷாவோ அவளிடம் அவர்கள் அறையில் பேசியவற்றை நினைவுபடுத்தி பேசி பேசியே அவளை சிவக்க வைத்தான்.

அவ்வளவு அலும்பு செய்து ஒருவழியாக அனு வாயாலையே 'சரி' என கூற வைத்தபின் அனுவை வெளியே விட்டான். இவர்களின் அலப்பறைகளை வீட்டில் இருந்த பெரியவர்கள் கண்டும் காணாதது போல் பார்த்து சிரித்து கொண்டனர்.

அதே நேரம் விருந்துக்கு சரியான நேரத்திற்கு வந்துவிட்டனர் அனுவின் வீட்டினர். அவர்களை மகிழ்வுடன் வரவேற்று உபசரித்தனர்‌ ஹர்ஷாவின் வீட்டினர்.

அனுவின் முகத்தை வைத்தே அவள் ஹர்ஷாவின் வீட்டில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள் என அறிந்துக் கொண்டனர். எனவே விருந்து நிகழ்ச்சி மகிழ்வுடன் ஆரம்பித்தது.

"ஷராமா எப்படிடா இருக்க?" என்று பாசத்தோடு கேட்ட விஸ்வநாதன் குரலில் அனுவிற்கு கண்களில் நீர் கோர்த்து விட்டது. இத்தனை நாட்கள் தந்தை எப்படி தன்னிடம் பாசமாக இருக்க வேண்டும் என கனவு கண்டிருந்தாளோ அதேபோல் இப்போது மாறியிருக்கும் தந்தையை காணவும் மனது முழுக்க நிறைவாய் இருந்தது‌.

அது முகத்தில் புன்னகையை தோற்றுவிக்க "ம்ம் எனக்கு என்னப்பா. நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்" என்றாள் நிறைவாக. என்னதான் அனுவின் முகத்தை கண்டே அனுவின் வாழ்வை எல்லோரும் அறிந்திருந்தாலும், அதை வாய்வழியாக கேட்ட பெற்றோர் மனங்களும் நிறைந்து போனது.

பின் உணவு நேரம் வரவே விருந்து பரிமாரப்பட அனைவரும் மகிழ்வுடன் பேசி சிரித்தபடி உண்டு அந்த நேரத்தை அழகானதாக்கினர். ஆனால் என்ன நடந்தாலும் நான் உன்னை பார்ப்பதை விடமாட்டேன் என்பதை போல் பார்த்து வைத்த ஹர்ஷாவின் பார்வை தான் பெண்ணை நாணம் கொள்ள செய்தது.

ஹர்ஷாவின் வீட்டிற்கு வந்ததில் இருந்து வசுந்தரா ஹர்ஷாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அதை காணும் போதெல்லாம் பல்லை கடித்தார் கணபதி.

எல்லோரும் இப்போது சாப்பிட்டு முடித்துவிட்டு பேசியபடி இருக்க தயங்கி தயங்கி கணபதியை பார்த்து "என்னங்க நாம நம்ம ஷராவோட மாமனார்கிட்ட கேட்டுப் பார்க்கலாமா. அந்த பையன் நிஜமாவே அவர் பையன் தானானு?" என கேட்டுவிட,

பதறிப்போன கணபதி தாங்கள் பேசியதை யாராவது கேட்டனரா என சுற்றி பார்த்தார். அனைவரின் கவனமும் ஹர்ஷா வீட்டினரிடம் இருக்க நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

இதை இப்படியே விடக்கூடாது என எண்ணிய கணபதி வசுந்தராவை தனியே அழைத்து சென்று "இங்க பாரு வசுமா. நான் வரும்போதே உன்கிட்ட சொல்லி தானேமா கூட்டிட்டு வந்தேன்.

இப்ப வந்து இப்படி பேசிட்டு இருக்க. நம்ம மூத்த பையன் செத்து போய் இருபத்தி ஒன்பது வருஷம் ஆச்சு புரியுதா. நீ பாட்டுக்கு அங்க அத்தனை பேரு இருக்க இடத்தில வச்சு இப்படி பேசுறியேமா. யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க.

அதோட அந்த பையன் ஹர்ஷாவ பார்த்தா உனக்கு இப்படி தான் தோனுதுன்னா சொல்லு, நாம இப்பவே எங்க சொந்த ஊரை பாத்து கிளம்பிடுவோம்" என்று தன் எண்ணத்தை கூறி முடித்தார்.

அவர் இவ்வளவு பேசியும் தலையை குனிந்தபடி நின்ற வசுந்தரா "இருந்தாலும் என் உள் மனசுல எங்கையோ ஒரு பக்கம் தோனுதுங்க அவன் நம்ம பிள்ளையா இருப்பானோன்னு.

நீங்க சொல்றது எனக்கு நல்லாவே புரியுது. ஆனா ஒரு தாயா என்னோட மனசு அவன் என் பிள்ளை தான்னு அடிச்சு சொல்லுது. இத்தனை வருஷம் கழிச்சு என்கிட்ட வந்திருக்கான்னு எனக்கு தோனிட்டே இருக்கு" என்று முடித்தார் பாவமாக.

வசுந்தராவின் பதிலில் கணபதிக்கு கோபம் சுள்ளென்று ஏற அதை முகத்தில் காட்டாதவாறு "அப்போ சரி வசுமா. இனியும் இங்க இருந்தா சரிவராது. நாம உடனே வீட்டுக்கு கிளம்பலாம்‌. ஆபிஸ்ல ஒரு முக்கியமான வேலை வந்திருச்சு.

ஒரு பைல் பாஸ் ஆகனும் அதுக்கு உன் சைன் வேணும்னு சொல்லி நாம கிளம்பிடலாம்" என ஒரே போடாக போட அதிர்ந்துவிட்டார் வசுந்தரா தேவி. "என்னங்க..." என்று பரிதவிப்பாக பார்த்த வசுந்தராவை கொஞ்சமும் இளக்கம் இல்லாது பார்த்த கணபதி தன் முடிவில் உறுதியாய் நின்றார்.

அதன்பின் கொஞ்சமும் தாமதிக்காமல் வீட்டின் உள்ளே சென்று அதே காரணத்தை அச்சு பிசகாமல் சொன்ன கணபதி விஸ்வநானின் முறைப்பையும் பொருட்படுத்தாது வசுந்தராவை அழைத்து கொண்டு சென்று விட்டார்.

இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மற்றவர்களும் மீண்டும் தங்கள் பேச்சை தொடர்ந்தனர். ஆனால் இவர்கள் முதலில் பேச வெளியே செல்லும் நேரம் ஒரு கைப்பேசி அழைப்பை பேசிக் கொண்டிருந்த ராஜசேகரும் அங்கே அருகில் இருந்த தூணின் மறைவில் நின்றதை இருவரும் பார்க்கவில்லை.

இவர்கள் இருவரும் பேச ஆரம்பித்த நிமிடம் அநாகரிகமாக மற்றவர் பேச்சை கேட்கக் கூடாது என எண்ணி நகர நினைத்த ராஜசேகர் இடையில் ஹர்ஷாவின் பேர் அடிபடவும் நின்று கேட்டார்.

கேட்டவருக்கு மாரடைப்பு வராமல் இருந்ததே ஆச்சரியமே. அவருக்குள் பல எண்ணங்கள் மனதை தாக்க வேறோடிய மரமாய் அங்கையே நின்றுவிட்டார்‌. பின் ஒரு முடிவுக்கு வந்தவராக

'ஹர்ஷா என் பையன். அவன் எனக்கு மட்டும் தான் பையன். அவனை யாருக்கும் நான் விட்டு தரமாட்டேன். அவன் எனக்கும் இந்த குடும்பத்துக்கும் மட்டும் தான்' என மனதிற்குள் இதையே சொல்லி கொண்டவர் திகைத்த முகமாய் தன் அறைக்குள் தஞ்சம் அடைந்தார்.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 23

ஹர்ஷாவின் வீட்டில் விருந்து நிகழ்வு நல்லபடியாக முடிய, ஹர்ஷா எதிர்ப்பார்த்த இரவு நேரமும் வந்தது. முடிந்தளவு நேரத்தை பார்வதியோடு கழித்த அனு அறைக்கு செல்லாது நேரத்தை கடத்திக் கொண்டிருந்தாள்.

பார்வதியே இதை கவனித்து "இன்னும் கீழ என்ன பண்ற அனுமா. நீ மாடிக்கு போகலை?" என்ற கேள்வியை கேட்டிட, இதற்கு மேல் இங்கே இருக்கமுடியாது என தங்கள் அறை நோக்கி மெல்ல நகர்ந்தாள் அனு.

தயங்கி தயங்கி வந்து அறை கதவை திறந்து உள்ளே வந்த அனு கட்டிலில் அமர்ந்திருந்த ஹர்ஷாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

உள்ளே வந்தவள் நேராக குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள். அனு வந்ததில் இருந்து அவளின் நடவடிக்கைகளை பார்த்த ஹர்ஷாவிற்கு சிரிப்பு தான் வந்தது.

குளியல் அறைக்கு சென்று வெகு நேரம் கழித்து வெளியே வந்த அனுவை "அனுமா!" என்ற ஹர்ஷாவின் அழைப்பு பதற்றமடைய செய்ய, "ஹே என்னம்மா இது என்னை பாத்து இப்படி பயப்படுற. நான் பார்க்க அவ்ளோ கொடூரமாவா இருக்கேன்" என்று சிரித்தவன்,

"இங்க வா இங்க வந்து உக்காரு" என்று அவளை தன் அருகே அமர்த்திக் கொண்டான். "இங்க பாருடா அனு நான் உன்னை ஹர்ட் பண்ணிடுவேன்னு பயப்படுரியா?" என்று அது தான் காரணமோ என்று எண்ணி கேட்டான் ஹர்ஷா.

அதற்கு 'இல்லை' என்பது போல் தலை அசைத்த அனுவை பார்த்து புன்னகை சிந்திய ஹர்ஷா "அப்புறம் என்னடா நாம நம்ம லைப்ப ஸ்டார்ட் பண்ணலாம். நீ என் மேல முழுசா நம்பிக்கை வச்சிருந்தா மட்டும் ஓகே சொல்லு" என்றவாறு அவளிடம் தன் கையை நீட்டியபடி அமர்ந்தான்.

சிறிது தயங்கிய அனுவும் மெதுவாக அவன் கையை பிடித்துக் கொண்டு சம்மதம் என கூறும் வகையில் தலை அசைக்க மகிழ்ந்த ஹர்ஷா அவள் கையை நன்றாக பற்றிக் கொண்டான்‌. அதுவே கூறியது 'என்றும் உன்னை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன்' என.

மெதுவாக அனுவை அணைத்த ஹர்ஷா தன் முத்தங்களை நெற்றியில் பதித்தான். பூவிலும் மென்மையாய் ஹர்ஷா அவளை கையாள, நிதானமாக அழகாக அங்கே ஒரு இல்லறம் இனிதே நிகழ்ந்தேறியது.

பகலவன் தன் கதிர்களை பரப்பும் நேரம் இங்கே இவர்களின் கண்களும் மூடி தூக்கத்தை தழுவிட, அனு தற்போது ஹர்ஷாவின் அனுவாகவும் ஹர்ஷா அனுவின் ஹர்ஷாவாகவும் முழுதாக மாறி இருந்தனர்.

----------------------------------

காலை நேர பரபரப்பில் அடித்து பிடித்து அலுவலகத்தை அடைந்த சங்கவி, அவளுக்கு முன்னரே அங்கே இருக்கையில் இருந்த விக்ரமை கண்டு ஒரு நொடி அதிர்ந்தாள்.

'இவரு சீக்கிரமே வந்து உக்காந்திருக்காருன்னா இது அவரு ஆபிஸ். நாமளும் அதே மாதிரி வரனுமா என்ன. நான் சரியான நேரத்திற்கு வந்துட்டேன்ல அது போதும்' என மனதிற்குள் சொல்லி கொண்டபடி காலை வணக்கத்தை சொல்லிவிட்டு தன் இடத்திற்கு சென்று அமர்ந்து வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

சங்கவி வேலையை பார்க்க ஆரம்பித்தவுடன் அவளை திரும்பி பார்த்தான் விக்ரம். அவன் பார்வை அவ்வளவு ரசனையை தாங்கி இருந்தது.

விக்ரமின் தொடர் குறுகுறு பார்வையில் சங்கவிக்கு ஏதோ தோன்ற சட்டென்று திரும்பி விக்ரமை பார்த்தாள். சங்கவி இப்படி திடீரென தன்னை பார்ப்பாள் என நினைக்கவில்லை விக்ரம். எனவே சங்கவியை நோக்கி திருதிருவென முழித்து வைத்தான்.

"என்ன சார். எதாவது வேணுமா?" என்று சங்கவி கேட்டேவிட "அது.. அது ஒன்னுமில்லை கவி, விஸ் பண்ண தான் பார்த்தேன். குட் மார்னிங் டா" என உளறிக்கொட்டி விட்டு திரும்பிக் கொண்டான்.

சங்கவிக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஏனெனில் அவள் உள்ளே நுழைந்த உடன், ஏதோ காண கிடைக்காததை கண்டது போல் பார்த்து வைத்த விக்ரம் காலை வணக்கத்தை அவன் தான் முதலில் சொல்லி இருந்தான்.

அதை நினைத்து சிரித்த கவி, சிறிது நாட்களாகவே விக்ரமின் நடவடிக்கையில் தெரியும் மாற்றத்தை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.

அலுவலகத்தில் மற்றவரிடம் எல்லாம் விரைப்பாக பேசி சுற்றும் விக்ரம் தன்னிடம் மட்டும் அப்பட்டமாக வழிந்துக் கொண்டிருந்தால் அவன் மனது தெரியாதா என்ன.

அதேபோல் விக்ரமின் பார்வை வீச்சிலே சில நாட்களாக கவர்ந்து இழுக்கப்பட்டு கொண்டு இருக்கிறாள் கவி. எனவே அவன் தன்னை ரசனையுடன் பார்ப்பதை அவனுக்கு தெரியாமல் மனதிற்குள் ரசித்து கொள்வாள்.

இப்படி அவன் பார்க்கும் போது இடையே அவனை திரும்பி பார்த்து வேண்டும் என்றே திணறவும் வைப்பாள்‌. அதே நேரம் விக்ரம் அவன் மனதில் இருப்பதை எப்போது தன்னிடம் கூறுவான் என்றும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறாள்.

ஆனால் பாவம் சங்கவி அறியவில்லை, விக்ரம் தன் மனதை உணர்ந்து வந்து அவன் காதலை கூற வேண்டும் என்றால் இவர்களுக்கு அறுபதாவது திருமணம் தான் நடக்க வாய்ப்பு உள்ளது என.

இவளின் மன ஓட்டம் புரிந்தோ என்னவோ விக்ரமையும் சங்கவியையும் ஒன்று சேர்த்து வைத்தே தீருவேன் என முடிவு செய்து அபி அம்முவை அழைத்துக் கொண்டு விக்ரமின் அலுவலகத்தை வந்தடைந்தான்.

இப்போது கணினியின் புறம் திரும்பியிருந்த விக்ரமை பார்த்து பெருமூச்சு ஒன்றை விட்ட கவி தன் வேலையை தொடரும் நேரம் அதிரடியாக "அத்தான்!" என கத்திக் கொண்டே உள்ளே அம்முவுடன் நுழைந்தான் அபிமன்யு.

அபி திடீரென கத்தியதிய அதிர்வில் தூக்கிவாரிப் போட்டது விக்ரமிற்கு. அதில் நெஞ்சில் கை வைத்து தன்னை சமன் செய்த விக்ரம் "எருமை ஏன்டா இப்படி கத்துற?" என பதிலுக்கு கத்தினான் விக்ரம்.

அதை கிஞ்சித்தும் கண்டுக் கொள்ளாத அபி நேராக வந்து விக்ரம் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு அருகில் அம்முவையும் அமர்த்திக் கொண்டான்.

அவன் அமர்ந்தவுடன் "வாடா அபி. வா அம்முமா" என முறையாக வரவேற்ற விக்ரம் "என்ன திடீர்னு வந்திருக்க. என்ன விஷயம். என்னால எதுவும் வேலை ஆக வேண்டியது இருக்கா?" என கேள்வியாய் கேட்க,

"ஏன் அத்தான். இருந்திருந்து உன் ஆபிஸ்க்கு கெஸ்ட்டா வந்திருக்கோம், ஒரு கர்டசிகாவது என்ன சாப்பிடுறன்னு கேக்க மாட்டியா. அதை விட்டுட்டு ஏன் வந்த எதுக்கு வந்தன்னு கேள்வியா கேக்குற அத்தான்" என்று பெர்பார்மென்ஸை போட தலையில் அடித்துக் கொண்டான் விக்ரம்.

"உன்னோட.. ஏன்டா காலைல பூரிய எனக்கு கூட தராம நல்லா மொக்கிட்டு தானே வந்த. இதுல நான் உனக்கு விருந்தாடா வைக்க முடியும். ஏன்டா காலங்காத்தால வந்து இப்படி இம்சைய கூட்ற. சரி இரு ரெண்டு பேருக்கும் ஜூஸ் சொல்றேன்" என போனை எடுக்க செல்ல,

"டேய் அத்தான்! நீ இப்படி சலிச்சிக்கிட்டு எல்லாம் எங்களுக்கு ஒன்னும் தர வேண்டாம். அப்படி நீ குடுக்குற அந்த இத்துப்போன ஜூஸ்க்கு நாங்க இங்க வரலைடா" என்று சலித்துக் கொண்டான் அபி.

பின் அம்முவிடம் திரும்பி "இங்க பாருடி உங்க அண்ணனை, நாம ரெண்டு பேரும் வந்தது இவனுக்கு புடிக்கலை போல. எப்படி பேசறான் பாரு" என்று ஏத்தி விட விக்ரமை கண்டு முறைத்த அம்மு

"என்ன ண்ணா நீ இப்படி பண்ற. உன்னை பார்க்க ஆசையா நாங்க வந்தா நீ ஏன் வந்தேங்குற" என்று அவள் பங்கிற்கு பேச நொந்து விட்டான் விக்ரம்.

"சாமி நான் ஒன்னும் சொல்லுலடா. நீ வா இங்கையே பாய விரிச்சு படு. யாரு வேணாம்னு சொன்னா. இது எனக்கு மட்டும் இல்ல ராசா உனக்கும் தாத்தா ஆபிஸ் தான்.

அதனால உனக்கு என்ன பண்ணனும்னு தோணுதோ பண்ணு. என்னை ஆள விடுடா" என்று கையெடுத்து கும்பிட இதை பார்த்திருந்த சங்கவி சத்தமாக சிரித்து விட்டாள்.

விக்ரம் கூறியதை கேட்டு 'இதுதானே எனக்கு வேணும். இப்ப பாருடா என் பர்பார்மென்ஸ்ச' என மனதிற்குள் சொல்லிக் கொண்ட அபி சிரிப்பு வந்த திசையை திரும்பி பார்த்தான்.

அ‌ங்கே விக்ரம் இருந்த அறையிலே மறு மூலையில் இருந்த சங்கவியை கண்டு அபியின் மனத்திற்குள் பல்ப் எரிந்தது. தன் திட்டத்தை செயல்படுத்த சரியான நேரம் வந்துவிட்டதை உணர்ந்த அபி அம்முவிற்கு கண்ணை காட்டிவிட்டு விக்ரமிடம் பேச ஆரம்பித்தான்.

"அத்தான்! அது உன் பி.ஏ கவி தானே" என்று ஆரம்பிக்க "ஆமாடா" என்றான் மிருதுவாக. அதை உணர்ந்த அபி தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன்

"ஓகேடா. நீ அவங்கல அனுப்பு. எனக்கும் அம்முக்கும் என்ன வேணுமோ நான் அவங்கல வச்சு வாங்கிக்கிறேன்" என்று விக்ரம் சம்மதிக்கும் முன்,

"மிஸ்.கவி வாங்க. நீங்க தான் வந்து எனக்கு என்ன வேணுமோ அதை வாங்கி தரனும் ஓகே. கம் கம்" என கவியை அழைத்துவிட்டு "அம்முமா நாங்க போய்ட்டு வந்திடுறோம்டா" என பரபரவென்று கவியை இழுத்துக் கொண்டு வெளியேறினான்.

அபியின் அதிரடியில் கவியை அவன் வெளியே அழைத்து சென்ற பின்னே அதை முழுமையாக உணர்ந்த விக்ரமிற்கு சுறுசுறுவென கோபம் ஏறியது. அம்மு இதை கண்டபடி அமர்ந்திருந்தாள். அபியின் திட்டமும் இதுவே.

காலை விக்ரமின் அலுவலகம் கிளம்பும் போதே அம்முவிடம் சொல்லி தான் அழைத்து வந்தான். "இங்க பாரு அம்மு. உன் அண்ணன்காரனுக்கு லவ்வு செட்டாவனும்னா அவன் எதுவும் பண்ண மாட்டான். நாம தான் பண்ணி ஆகனும்.

அதுக்கு உன் அண்ணனோட பொசஸிவ்நெஸ்ஸ தூண்டி விட்டே ஆகனும். நான் உள்ள போய் போட போற சீன்ல விக்ரமே அவன் லவ்வ அவன் ஆள்கிட்ட சொல்லனும். இதுதான் நம்ம பிளான். சோ நாம போனவுடனே கவிய நான் வெளியே கூட்டிட்டு போயிடுவேன்.

அங்க வச்சு நான் அவங்ககிட்ட விக்ரம பத்தி பேசிடுறேன். அன்ட் நான் வெளியே போன கேப்ல உன் அண்ணன் வாய கிளறுற. அவன் மனசுல என்ன இருக்குன்னு அவனை உணர வைக்கிற என்ன" என்று அரை மணி நேரம் அம்முவிற்கு லெக்சர் எடுத்து தான் அழைத்து வந்திருந்தான்.

கவியை அபி வெளியே இழுத்து சென்ற நேரம் புசுபுசுவென மூச்சு வாங்க பார்த்த விக்ரமை எண்ணி வந்த சிரிப்பை அடக்கிய அம்மு

"ண்ணா என்னாச்சு. ஏன் கதவையே முறைச்சு பார்க்குற. அபி அத்தான் கொஞ்ச நேரத்தில வந்திருவாரு" என்று அவன் கவனத்தை தன்னை நோக்கி திரும்பினாள்.

பின் மெதுவாக தன் பேச்சை தொடங்கினாள் "ண்ணா! அவங்க உன் பி.ஏ கவி தானே" என்றவுடன் விக்ரமின் முகம் பல்ப் போட்டது போல் பிரகாசமாக மாற 'ஆம்' என தலை அசைக்க மேலே தொடர்ந்தாள் அம்மு.

"ரொம்ப அழகா இருக்காங்கல ண்ணா" என்று இழுத்தவள் "ஆனா ண்ணா நீ அந்த பொண்ணை பத்தி சொன்னல்ல. சரியான சண்டைகாரியா இருப்பா போலையே.

நீ எப்படி ண்ணா ஆபிஸ்ல பக்கத்துலையே வச்சு சமாளிக்கிற. பேசாம அவங்கல வேற செஷன் அனுப்பிட்டு நீ வேற ஒரு நல்ல பி.ஏவா பார்த்து அப்பாயின்ட் பண்ணிக்கவே" என்று அபி சொல்லிக் கொடுத்ததை அப்படியே பேசி முடித்தாள் அம்மு.

அம்மு எதிர்ப்பார்த்தது போலவே அவளை முறைத்த விக்ரம் "எனக்கு தெரியும் அம்மு யாரை எந்த போஸ்டிங்ல போடனும்னு. கவி ஒன்னும் அவ்ளோ பேசற பொண்ணுலா இல்ல.

ஒருத்தரை பத்தி தெரியாம அவங்கல தப்பா பேசக்கூடாது அம்மு" என கண்டிப்புடன் கூறிய விக்ரம் பட்டென்று தன் முகத்தை மிருதுவாக மாற்றிக் கொண்டு "கவி எவ்ளோ நல்ல பொண்ணு தெரியுமா அம்மு. அது மட்டும் இல்ல அவ ரொம்ப டேலன்டட்டா.

அதுமட்டும் இல்ல அவ என்னோட பக்கத்தில இருந்தா தான் அந்த நாளே ரொம்ப நிறைவா இருக்குடா" என கனவு உலகில் மிதந்து கொண்டு பிதற்றினான் விக்ரம்‌. விக்ரமை பார்த்து மகிழ்ந்த அம்மு அபியின் திட்டம் வெற்றிப்பெறும் என முழுமையாக நம்பி அபியின் நகர்வுக்காக காத்திருந்தாள்.

சங்கவியுடன் வெளியே வந்த அபி அந்த அலுவலக கேன்டீன் இருக்கும் கீழ் தளத்திற்கு சென்றான். தன் அனுமதி இன்றி தரதரவென இழுத்து வந்த அபியை எண்ணி கோபம் வந்தது சங்கவிக்கு.

ஆனால் அறைக்கு வெளியே வந்ததும் அவன் நடவடிக்கைகள் அப்படியே மாறிப் போனதில் குழம்பிவிட்டாள். அவன் பிடித்திருந்த கையை விட்டுவிட்டு சாதாரணமாக "வாங்க சிஸ்டா!" என்று முன்னே நடந்தவனை எந்த வகையில் சேர்ப்பது என்று சங்கவிக்கு புரியவில்லை.

தன் முன்னே டேபிளை பார்த்தபடி அமர்ந்திருக்கும் அபியை குழப்பத்துடன் பார்த்திருந்தாள் சங்கவி. "என்ன சிஸ்டா இவன் நம்மள அங்க ரூம்ல வச்சு தரதரன்னு இழுத்துட்டு வந்தான். இங்க வந்து எதுவும் பேசாம தரைய பார்த்ததிட்டு இருக்கானேன்னு தோணுதா? என்று கேட்டு சிரித்தவன்,

"உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசத்தான் சிஸ்டா நான் கூட்டிட்டு வந்தேன். பர்ஸ்ட் நான் யாருன்னு சொல்லிடறேன். அதுக்கு அப்புறம் நான் என்ன பேச வந்தேன்னு சொல்றேன்" என்று தன்னை பற்றி கூறினான் அபி.

"நான் அபிமன்யு அருணாசலம், நுயூராலஜில ஸ்பெஷலைசேசன் பண்ணிட்டு இருக்கேன். விக்ரம் என்னோட அத்தை பையன். அவனை பத்தி தான் பேச வந்தேன் சிஸ்டா.

எங்க விக்ரம் பையன் கெஞ்ச நாளா சரியே இல்லைங்க. ஆபிஸ் விட்டு வந்தா எப்பவும் வீடு புல்லா சலம்பிட்டு திரியரவன், இப்போ கொஞ்ச நாளா வந்தோன்னே விட்டத்த பாத்து சிரிச்சிட்டு படுத்திருக்கான்‌.

வாய் ஓயாம பேசிட்டே இருக்கிறவன் இப்போலாம் வாய திறந்தா ஒருத்தர பத்தி தான் பேசிட்டே இருக்கான்‌. அதான் அவங்கல பத்தி உங்ககிட்ட கேக்கலாம்னு வந்தேன் சிஸ்டா" என்று சொல்லவந்ததை சொல்லி முடித்தான்.

இப்போது சங்கவியின் முகம் ஒருமாதிரி ஆகிவிட்டது. தயக்கமாக அபியை பார்த்த சங்கவி "என்ன சார் சொல்றீங்க?" என்றாள் சங்கடமாக. "ஐயோ இந்த சார் மோர்லாம் வேணாம் சிஸ்டா.

என்னை விட எப்படியும் நீ சின்ன பொண்ணா தான் இருப்ப. சோ என்ன நீ அண்ணான்னே கூப்பிடலாம் ஓகேவாமா" என்று அபி அவசரமாக குறிக்கிட்டு சொன்னான்.

அபி கூறிய வேகத்தில் சிரித்த சங்கவி "ஓகே அண்ணா" என்றாள். "இது ஓகேமா. இப்போ நான் எதுக்கு உன்கிட்ட பேசறேன்னா‌. இந்த விக்ரம் ஒரு பொண்ணு பேர சொல்லி புலம்பிட்டு இருக்கான்னு சொன்னேன்லமா.

அது வேற யாரும் இல்ல நீதான். சார்க்கு உன் மேல பயங்கர கிரஷ் போல. இன்னும் சொல்லப்போனா அவனுக்கு உன் மேல லவ் வந்திருச்சுனு தான் நான் நினைக்கிறேன்.

இதுல ஹைலைட் என்னன்னா அவன் உன்னை லவ் பண்ற விஷயம் அவனுக்கே புரியலைமா" என்று முடித்தான் அபி. "என்னன்னா சொல்றீங்க. அவர் என்னை ஆர்வமா பார்ப்பாரு தான். ஆனா லவ் எல்லாம்" என்று சங்கவி இழுக்கும் போது,

"ஓஓ... உனக்கே தெரியர அளவுக்கு சார் ஜொல்லு ஊத்திட்டு அலையுராரா. ஆனா ஒன்னுமா அவன் உன்னை லவ் பண்றான்" என்று கூறிய அபி விக்ரம் வீட்டில் நடந்துக் கொண்ட விதம், அதை வைத்து தான் கண்டுபிடித்தது.

மேலும் அவனை தூண்டிவிட தற்போது செய்துவிட்டு வந்தது என அனைத்தையும் கூறினான். கேட்ட சங்கவிக்கு ஆச்சரியமாக இருந்தது.

"நான் உன்ன கையப்புடிச்சு இழுத்துட்டு வந்ததும் அவனை கடுப்பேத்த தான். உன்னை கூட்டிட்டு வரப்போ அவன் முகத்தை பார்த்தேன். பையன் முகம் கோபத்துல அப்படியே ஜிவுஜிவுன்னு ஆகிருச்சு" என்று கூறி சிரித்தான்.

அதில் தானும் புன்னகைத்த சங்கவி "ஆனா அவரே வந்து லவ்வ சொன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் ண்ணா" என்று தயக்கமாக கூறி அபியின் முகத்தை பார்க்க "உன் மனசு எனக்கு புரியுது மா. ஆனா அவன் வந்து உன்கிட்ட லவ்வ சொல்றதுக்குள்ள நீ ஔவையார் ஆகிடுவ. பரவாயில்லையா" என்று கிண்டலாக கேட்டான்.

பின்னே இவ்வளவு நேரம் அவன் கூறிய கதையில் விக்ரம் எந்த இடத்திலாவது அவளை காதலிக்கிறேன் என எண்ணத்திலாவது வெளிப்படுத்தியுள்ளானா என்ன?

அவனை வைத்துக் கொண்டு சங்கவியின் பாடு சற்று கஷ்டம் தான் என்பதும் மறுக்கமுடியாத உண்மையே!

"இங்க பாரு சங்கவி இதுதான் பிளான். முடிஞ்ச அளவு அவனோட பொசசிவ்நெஸ்ஸ தூண்டுறோம். அவன் மனசை அவனுக்கு புரிய வைக்கிறோம். டீலா?" என கைக்காட்ட "என்னமோ நீங்க சொல்றீங்கன்னு ஒத்துக்கிறேன். டீல் ண்ணா" என்றாள் சங்கவியும்.

அனைத்தையும் பேசி முடித்த பின்னர் இருவரும் விக்ரமின் அறை நோக்கி சென்றனர். அங்கே விக்ரம் முகம் கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது‌.

சிரித்து பேசியபடி வந்த அபியையும் சங்கவியையும் பார்த்த விக்ரம் முகம் மீண்டும் கோபத்தில் சிவந்தது. 'என் கவி கைய பிடிச்சிட்டு வரான். இவளும் பல்லை காட்டிட்டு வரா. இவ மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கா' என்று பல்லை கடித்து கொண்டான்.

வந்த வேலை சிறப்பாக முடிந்ததில் "சரி அத்தான் நான் கிளம்பறேன். நீ வேலைய பாரு" என்று கூற நிம்மதி பெருமூச்சு விட்டான் விக்ரம் 'இதோட போறானே' என.

ஆனால் நான் போனாலும் உன்னை நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என கங்கனம் கட்டியது போல் அபி செல்லும் நேரம் "நான் போய்ட்டு வரேன் கவிமா" என்று கூறி கண்ணடித்து விட்டு அம்முவை அழைத்துக் கொண்டு செல்ல விக்ரமின் மொத்த நிம்மதியும் பறிப்போனது.

-----------------------------------

"ஹர்ஷா ஏன் இப்படி பண்றீங்க. நேத்தும் நீங்க ஹாஸ்பிடல் போகலை. பார்வதி அம்மா கேட்டப்ப நான் ஏதேதோ சொல்லி சமாளிச்சேன்‌. இன்னைக்கும் இப்படி செஞ்சா எப்படிப்பா" என்று கட்டிலில் படுத்து கொண்டு எழுந்து வர அடம் செய்துக் கொண்டிருந்த ஹர்ஷாவிடம் தான் புலம்பிக் கொண்டிருந்தாள் அனு.

'நீ என்னவோ பேசிக்கொள். எனக்கு எதுவும் கேட்கவில்லை' என்பது போல் அனுவின் புடவையை அணைத்து கொண்டு படுத்திருந்தான் ஹர்ஷா.

"ப்ச் என்னப்பா இப்படி செய்றீங்க. டைம் ரொம்பவே ஆகிருச்சு. நீங்க இப்போ எழுந்து கிளம்பினா தானே ஹாஸ்பிடல்கு சரியான நேரத்துக்கு போக முடியும். அடம் பண்ணாம எழுந்திருங்கப்பா" என்று ஹர்ஷாவை எழுப்ப படாதப்பாடு பட்டுக்கொண்டிருந்தாள்‌.

அவளின் உலுக்கலுக்கு ஒருவழியாக திரும்பிப்படுத்த ஹர்ஷா "ஏன்டி புருஷன் டையட்ல தூங்குனா, அவனை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு நினைக்காம இப்படி தான் போட்டு உலுக்கி எடுப்பியாடி" என்று கேட்டுக் கொண்டே அவளையும் இழுத்து கட்டிலில் தள்ளினான்.

"ஐயோ அம்மா" என்று கத்தியபடி ஹர்ஷாவின் அருகே விழுந்த அனு "ஏன் ஹர்ஷா இப்படி செய்றீங்க. நான் குளிச்சிட்டேன். இனிமே என்னால மறுபடியும் குளிக்க முடியாதுபா. ஆள விடுங்க" என எழுந்து கொள்ள பார்த்தாள்.

ஆனால் அவளை போகாமல் தடுத்த ஹர்ஷா "நீ அவ்ளோ கஷ்டப்பட்டு குளிக்கப் போக வேணாம் செல்லம். அத்தான் எதுக்கு இருக்கேன். நான் பாத்துக்கிறேன்" என்று தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டே விட்டான் அந்த பிடிவாதக்காரன்.

இப்படி ஹர்ஷாவின் கொஞ்சலிலும் அனுவின் கெஞ்சலிலும், ஒருவழியாக ஹர்ஷா சினுங்கிக் கொண்டே மருத்துவமனைக்கு கிளம்பி சென்றான்.

மாலை நேரம் வீட்டிற்கு வந்த ஹர்ஷா ஹாலில் அமர்ந்திருந்த ராஜசேகரை கண்டு அவர் அருகில் சென்று "அப்பா என்ன இந்த டைம் இங்க உக்கார்ந்து இருக்கீங்க" என்றவாறு அமர்ந்தான்.

ஹர்ஷாவை பார்த்து புன்னகைத்த ராஜசேகர் அவனின் தலையை வாஞ்சையுடன் தடவியவாறு "ஒன்னும் இல்ல கண்ணா சும்மா தான்" என்றார்‌.

அன்று வசுந்தரா மற்றும் கணபதி ராம் பேசியதை கேட்டு மனதை போட்டு குழப்பிக் கொண்டு இருக்கிறார் ராஜசேகர் 'எங்கே தன் மகனை அவர்கள் உரிமை கோரி வந்துவிடுவார்களோ' என.

அதிலிருந்தே மனம் பதற்றத்தோடு சுற்றிக் கொண்டிருக்கிறார் ராஜசேகர். "அப்பா நீங்க ரெண்டு நாளா சரியே இல்லை. நானும் அதை கவனிச்சிட்டு தான் இருக்கேன்‌. அது ஏன்னு எனக்கு தெரியும்பா" என்று கூற திடுக்கிட்டார் ராஜசேகர்.

"என்னப்பா?" என்று அதிர்வுடன் ராஜசேகர் கேட்க "இன்னும் ஒன் வீக்ல அம்மாவோட நினைவு நாள் வருதுல. அவங்கல நினைச்சு தானே நீங்க இப்படி இருக்கீங்க" என்று கேட்க அப்போது தான் ராஜசேகருக்கே சுபத்ராவின் நினைவு தினத்தை மறந்தது ஞாபகம் வந்தது.

எனவே "ஆம்" என்பது போல் தலை அசைத்தார் ராஜசேகர். "அப்பா பீல் பண்ணாதீங்க. அம்மா நம்ம கூடவே தான் இப்பவும் இருக்காங்க. அப்புறம் அப்பா இதையே நினைச்சிட்டு இருக்காதீங்க‌. அன்னைக்கு அபியோட பர்த்டே கூட.

சோ எப்பவும் போல அம்மாக்கு கோவில் வச்சு திதி கொடுத்துட்டு வந்திடுவோம். அன்ட் ஈவ்னிங் பார்ட்டி அரேஞ்ச் பண்ணப்போறேன் ப்பா. நீங்க அவனை அப்செட் பண்ணக்கூடாது. புரியுதா" என எல்லா வருடமும் சொல்வதை மீண்டும் சொல்லி சென்றான்.

ஹர்ஷா சென்றபின் தன் மகனை பெருமை பொங்க பார்த்த ராஜசேகர் எக்காரணம் கொண்டும் அவனை யாருக்கும் தரமாட்டேன் என உறுதி பூண்டார். அதன் பின்னே சற்று தெளிந்தார்.

அனுவுக்கு ஹர்ஷா வீட்டிற்குள் வந்தவுடன் தன் மாமனாரிடம் பேசிவிட்டு மேலே செல்லும் போது வருத்தமாக சென்றது போல் தோன்ற, ஹர்ஷாவின் பின்னே சென்றாள். அங்கே ஹர்ஷா விட்டத்தை வெறித்தப்படி படுத்திருந்தான்.

தன் கணவனை இதுவரை இப்படி ஒரு நிலையில் கண்டிராத அனு "என்னங்க என்னாச்சு? ஏன் இப்படி இருக்கீங்க" என பதற்றமாக கேட்டுக் கொண்டே அருகில் அமர்ந்தாள் அனு.

அனுவை திரும்பி பார்த்த ஹர்ஷா, அவள் மடியில் தன் தலையை வைத்து அவள் இடுப்பை கட்டிக் கொண்டான். அனு என்ன கேட்டாலும் எதுவும் சொல்லாமல் படுத்திருந்த ஹர்ஷா சிறிது நேரம் கழித்து வாயை திறந்தான்.

" எனக்கு அப்போ அஞ்சு வயசு தான்டி இருக்கும். அப்போ எங்கம்மா என் கைய பிடிச்சுட்டு நான் சாமிய பார்க்க போறேன் ஹர்ஷா. நான் திரும்ப வர வரைக்கும் நீதான் உன் அப்பா தம்பி நம்ம குடும்பத்தை எல்லாத்தையும் நல்லா பாத்துக்கணும் குட்டின்னு சொன்னாங்கடி.

அப்போ எனக்கு ஒன்னும் புரியலை. ஆனா அம்மா வரவரை நம்ம குடும்பத்தை நல்லா பாத்துக்கனும்னு பாத்துக்க ஆரம்பிச்சேன். வருஷாவருஷம் அபியோட எல்லா பர்த்டேக்கும் அவன் அழுதுட்டு இருப்பான்டி.

நான் தான் அவனை சமாதானப்படுத்தி வீட்ல பார்ட்டி பண்ணுவோம். இன்னும் ஒன் வீக்லி அவன் பர்த்டேடி. அதோட அம்மாவோட நினைவு நாள். அதான் அப்பா அப்செட்டா இருக்காரு.

இன்னும் ஒன் வீக் தான் அனு, அபியை நாம தான் பார்க்கனும்டி" என்று கூறி முடித்தவன் "ஆனா அனு நான் அம்மாக்கு பிராமிஸ் செஞ்சது போல நம்ம பேமிலிய நல்லா தானேடி பாத்துக்கிறேன்.

அப்புறம் ஏன்டி இன்னும் அவங்க என்கிட்ட வரலை" என்று கூறி அனுவை இறுக்கி அணைத்தான் ஹர்ஷா. அதில் ஹர்ஷாவின் கஷ்டத்தை உணர்ந்த அனு "கவலைப்படாதீங்க ஹர்ஷா கூடிய சீக்கிரம் உங்க அம்மாவே நமக்கு பொண்ணா பிறக்கப் போறாங்க பாருங்களேன்" என்று கூற

"நிஜமாவா அனு குட்டி" என்று கேட்ட ஹர்ஷாவை காண ஐந்து வயது சிறுவன் போல் தான் தெரிந்தது அனுவிற்கு. 'ஆம்' என்ற அனுவும் அவனை நன்றாக அணைத்து கொண்டாள்
'இனி என்றும் உன் அன்னையாக நான் இருப்பேன்' என்பது போல்.

-மீண்டும் வருவான்
 
Top