All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாந்தி கவிதா "saka"வின் "ரகுக் குல கர்ணா" - கதை திரி

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 32

"ஹர்ஷா நடந்ததை யாராலும் மாத்த முடியாது. அதனால எல்லாரும் மனசை தேத்திக்கோங்க. இதை தவிர என்ன சொல்றதுனும் எனக்கு தெரியலை. நான் வரேன்" என்றான் கதிர்.

அவனுக்கு நிஜமாகவே அதை தவிர வேறு என்ன கூற வேண்டும் என்று தோன்றவில்லை. கணபதியை அழைத்து சென்றதும் எல்லாரிடமும் சொல்லிவிட்டு கதிரும் கிளம்பிவிட்டான்.

விஸ்வநாதன் தன் தங்கை வாழ்வில் கணபதி எப்படி எல்லாம் விளையாடி இருக்கிறான் என கோபத்தில் இருந்தாலும், தன் தங்கை மகனே தன்னுடைய மாப்பிள்ளையாக வந்ததில் சற்று மனம் மகிழ்ந்தார் என்றே சொல்லலாம்.

அருணாசலத்தின் வீட்டினரில் சிறியவர்கள் ஹர்ஷாவை எண்ணி கவலையில் இருக்க, பெரியவர்கள் ராஜாராமை எண்ணி வருத்தத்தில் இருந்தனர்.

அதில் வசுந்தராவின் நிலை என்னவென்றே தெரியவில்லை. அவரால் ஹார்ஷாவை கண் கொண்டு பார்க்க முடியவில்லை எனலாம்.

இத்தனை வருடங்கள் தன்னால் தன் மகன் உயிரோடு இருந்தும் அவனோடு இருக்க முடியவில்லையே என மனதிற்குள் புழுங்கி கொண்டிருந்தார்‌.

ஒருவேளை குழந்தை உயிருடன் உள்ளது என அப்போது ஹர்ஷாவை அவர் கையில் தந்திருந்தால் ராமின் நினைவோடு அவருடன் வாழ்ந்த அந்த வீட்டிலேயே தன் காலத்தை கழித்திருப்பார் வசுந்தரா.

அவரின் எண்ணமும் அப்போது அதுவாக தான்‌ இருந்தது. ஆனால் குழந்தை இறந்து விட்டது என்றதில் மொத்தமாக நொறுங்கி போயிருந்தார்.

எனவே தான் அவர் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் தன் தமையனின் மகிழ்விற்காக அந்த திருமணத்தை செய்ய சம்மதித்திருந்தார்.

ஆனால் அதில் கணபதி இப்படி திட்டம் போட்டு காய் நகர்த்தி இருப்பார் என கிஞ்சிற்றும் எண்ணாது போனார்.

கணபதியுடன் ஒரு வருடம் இரண்டு வருடம் வாழ்கையை வாழவில்லையே வசுந்தரா. நீண்ட இருபத்தி ஆறு ஆண்டுகள் பிடிக்காமல் வாழ்க்கையை துவங்கி இருந்தாலும்

சில வருடங்களில் கணபதியின் நடவடிக்கையில் தானும் உடன்பட்டே இந்த வாழ்வை வாழ்ந்த வசுந்தராவிற்கு தற்போது நடந்த நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள மனம் முரண்டியது.

ஹர்ஷாவிற்கோ தன் மனம் எதை நினைத்து வருத்தம் கொள்கிறது என்று அறிய முடியாத நிலை.

பெற்ற தாய் தந்தையின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்க, சட்டென்று அவனால் வசுந்தராவிடம் பேசவும் மனம் வராது போனது.

இந்த சூழ்நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் இரு நபர்கள் வசுந்தராவும் ஹர்ஷவர்தனும். எனவே மற்றவர்கள் இவர்களை பாவமாய் பார்த்திருக்க

"ஹர்ஷா உனக்குள்ள இருந்தது என் புள்ளைக்கு தெரியுமாமா?" என்று அருணாசலம் வாய் திறந்தார்.

"இல்ல அவருக்கு தெரியாது. அவருக்கு ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு ஹாஸ்பிடல்ல வச்சு தான் எனக்கே தெரியும்" என்றார் வசுந்தரா மெதுவாக. அதற்கு மேல் அங்கே அமர்ந்திருக்க முடியாத ஹர்ஷா

"அப்பா ஐ'ம் டோட்டலி எக்ஸாஸ்டட். ஐ நீட் ரெஸ்ட் பேட்லி. சோ நான் போகட்டா" என்றான்.

ஹர்ஷாவின் குரலே அவ்வளவு சோர்ந்து போய் வெளிவர அனைவருக்கும் புரிந்தது ஹர்ஷாவிற்கு சோர்வு உடல் அளவில் அல்ல மனதளவில் தான் என்று.

எனவே "சரிடா கண்ணா நீ போ" என்று விட்டார். அதற்கு மேல் என்ன சொல்வது என அவருக்கும் தெரியவில்லை.

ஹர்ஷா வசுந்தராவை திரும்பி பார்க்காது அவன் அறைக்கு செல்ல, அனுவை பார்த்த அபி "அண்ணி நீங்களும் போங்க. அண்ணாவ தனியா விடாதீங்க" என்றான்.

'எப்போதடா நேரம் கிடைக்கும். நாம் ஹர்ஷாவிடம் தனியே பேசுவோம்' என்று நின்றிருந்த அனு, அபி கூறியவுடன் 'சரி' என்றவள் வேக வேகமாக தங்கள் அறையை நோக்கி சென்றாள்.

மெதுவாக கதவை திறந்து உள்ளே பார்க்க, ஹர்ஷா தலையை கையால் தாங்கியபடி அமர்ந்திருந்தான். அவனின் அந்த அநாதரவான நிலையை கண்டவுடன் அனுவின் மனம் ஒரு நிமிடம் ஆட்டம் கண்டது.

"ஹர்ஷா" என மெதுவாக அழைத்தபடி அவன் அருகே சென்ற அனு அவன் தலையை தடவிக் கொடுக்க

அதில் அவளை நிமிர்ந்து பார்த்த ஹர்ஷா அப்படியே அமர்ந்தவாறு அவளின் இடையை கட்டிக் கொண்டான்.

ஹர்ஷாவை தானும் அணைத்த அனு அவனின் கவலை புரிந்தது போல் எதுவும் பேசாமது அவன் தலையை மேலும் தடவிவிட, அவ்வளவு தான் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த மொத்த அழுகையையும் வெளியேற்றினான் ஹர்ஷா.

ஹர்ஷா அழுக துவங்கியதும் பதைபதைத்து போன அனு "என்னங்க இது" என்றவாறு அவன் அருகில் அமர்ந்து அவனை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டாள்.

அனுவின் ஆறுதலான அணைப்பில் தானும் அவளை இறுக்கி அணைத்து கொண்ட ஹர்ஷாவிற்கு இன்னும் அழுகை தான் வந்தது.

"ஹர்ஷா அழாதீங்க பிளீஸ். என்னங்க இது சின்ன குழந்தை மாதிரி அழறீங்க. ஹர்ஷா இங்க பாருங்க. ஐயோ என்னப்பா இது"

அனு எவ்வளவு கெஞ்சியும் கொஞ்ச நேரம் சென்ற பின்னரே தன் அழுகையை நிறுத்தினான் ஹர்ஷா. அதன்பின் தான் அனுவுக்கும் சற்று ஆசுவாசம் ஆனது.

இப்போது ஹர்ஷா அனுவின் மடியில் படுத்திருக்க, அவள் கைகள் அவன் தலையை வருடுவதை இன்னும் நிறுத்தவில்லை. இவ்வளவு நடந்தும் இருவருக்கும் இடையே மௌனம் தான் நிலவியது‌.

"கஷ்டமா இருக்குடி" என மெதுவாக கரகரத்த குரலில் இவ்வளவு நேரம் மனதிற்குள் வைத்திருந்ததை கொட்ட ஆரம்பித்தான் ஹர்ஷா.

"முப்பது வருஷமா உன்னோட அப்பா அம்மா இவங்க தான். இவங்க தான் உன் குடும்பம்னு இருந்துட்டு, இப்போ திடீர்னு வந்து நீ வேற யாருக்கோ பிறந்தன்னு சொல்றப்ப உடைஞ்சிட்டேன்டி...

அப்போ கூட என் அப்பா தம்பினு யாரும் வருத்தப்பட்டுட கூடாதுன்னு அழுகைய அடக்கிட்டு மனச கல்லாக்கிட்டு உக்காந்துட்டு வர எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா.

மனசு வலிக்குதுடி. அதை எப்படி சொல்றதுன்னு கூட தெரியலை. ஒருபக்கம் என் அப்பான்னு நினைச்சவரு என்னை பெத்தவரோட தம்பி.

நான் அவர் பையன்னு ஏன் அவர் அண்ணன் பையன்னு தெரியவர முன்னாடியே நான் தான் உலகம்னு இருந்தாரு.

இன்னொரு பக்கம் என்னை பெத்தவரை கொலை பண்ணிருக்காங்க. அது மட்டும் இல்லாம என்னையும் இல்லாம ஆக்க பாத்திருக்காங்க.

எல்லாத்தையும் தெரிஞ்சு என்னோட சுபத்ரா அம்மா அவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து என்னை காப்பாத்தி உயிருக்கு உயிரா வளத்திருக்காங்க. அவங்க இரண்டு பேரோட அன்பும் பொய் இல்ல தானடி.

அந்த அன்புக்கு நான் என்னடி கைமாறு செய்ய போறேன். இப்பக்கூட பாரு அந்த மனுஷன் என்னை யாருக்கும் விட்டு தர மனசில்லாமா,

எனக்கு எல்லாம் தெரிய வந்திருச்சேன்னு எவ்ளோ பதறி போய் இருக்காரு பாத்தியா. எனக்கு இந்த சிட்டுவேஷன்ல என்ன பண்றதுன்னு கூட தெரியலை டி"

ஹர்ஷா மனதில் இருந்த குழப்பம் வலிகள் அனைத்தையும் சொல்ல அவனின் ஒவ்வொரு வலிக்கும் மருந்தாக அனுவின் வருடல் இருந்தது.

"ஹர்ஷா எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதீங்க. இங்க நடந்த எதுக்கும் நீங்க காரணம் இல்ல புரியுதா" என மெதுவாக ஆரம்பிக்க

'என்ன சொல்ல போகிறாள்' என அவளின்‌ முகத்தையே பார்க்க ஆரம்பித்தான் ஹர்ஷா.

அவன் பார்வையில் மெல்ல சிரித்தவள் அவன் நெற்றியில் ஒரு முத்தம் வைத்து "நீங்க நடந்த விஷயத்துல பாதிக்கப்பட்டிருக்கீங்கன்றது எவ்ளோ உண்மையோ,

அதே போல நம்ம ரெண்டு பேர் குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கிறது உண்மை தான்.‌ அதுவும் அருணாசலம் தாத்தாவ நினைச்சு பாருங்க.

எத்தனை வருஷம் உயிருக்கு உயிரா‌‌ வளத்த பையன். அவரே கொள்ளி வச்சுருக்காரு. இப்போ அவர் கொல்லப்பட்டார்னு கேட்டு எவ்ளோ உடைஞ்சு போய் இருப்பார்.

ஆனா நீங்க அந்த பையன் வழி வந்த பேரன்னு தெரிஞ்சு அவர் மனசை கொஞ்சம் தேத்திப்பாரு. இப்படி நடந்த விஷயத்தை பத்தி யோசிக்காம அந்த தப்பால நமக்கு கிடைச்ச நல்லத மட்டும் மனசுல வச்சுக்கோங்கபா.

உங்க மனசுல இருக்க கஷ்டம் எல்லாம் சீக்கிரம் உங்கள விட்டு ஓடி போயிடும்" என சொல்லி முடித்தாள்.

"அப்புறம் வசுந்தரா அத்தைய பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?" மெதுவாக கேட்டு வைத்தாள் அனு.

ஏனெனில் ஹர்ஷா இவ்வளவு நேரம் புலம்பும் போது கூட வசுந்தாரவை பத்தி ஒரு வார்த்தை கூட பேசாததை குறிந்து கொண்டிருந்தாள் அனு. அதை வைத்தே அவரை பற்றி ஹர்ஷாவின் எண்ணம் என்னவென்று அறிய கேட்டாள்.

அனு கேட்டபின்‌ சிறிது நேரம் யோசித்த ஹர்ஷா "அவங்கல நினைச்சா தான்‌ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அனு.

நீ சொன்ன மாதிரி நான் என்னை பெத்தவங்கல பிரிஞ்சு வந்தும் ஒரு நல்ல அப்பா அம்மா, பாசமான தம்பி, உயிரையே வச்சிருக்கிற குடும்பம் எல்லாமே எனக்கு கிடைச்சிருக்குடி.

ஆனா அவங்க நிலைமை..." என்று நிறுத்திய‌ ஹர்ஷா வேதனையுடன் எச்சிலை விழுங்கிக் கொண்டான்.

"உயிருக்கு உயிரா காதலிச்சு கல்யாணம் பண்ணுன புருஷன் கண்ணு முன்னாடியே இறந்து போனதை பார்த்து,

சரி இனி நமக்கு ஒரு குழந்தை வரப்போகுது. அதோட நம்ம வாழ்க்கையை வாழலாம்னு இருக்கப்ப, அந்த குழந்தையும் செத்துப் போயிடுச்சுன்னா எப்படி இருந்திருக்கும்.

ஆனா அதோட அண்ணனுக்காகனு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கிட்டு, இத்தனை வருஷம் அந்த வாழ்க்கைய வாழ்ந்திருக்காங்க. இப்போ அந்த வாழ்க்கையே துரோகத்தால வந்ததுன்னு தெரியும் போது எப்படி இருக்கும்.

எனக்கு யோசிச்சு பார்க்க கூட முடாயலைடி. அவங்க தான் இங்க எல்லாத்தை விடவும் ரொம்பவே அதிகமா‌ பாதிக்கப்பட்டிருக்காங்க. அதை கண்டிப்பா ஒத்துக்கனும்டி"

இதுவரை தன் மனது மற்றும் தன் குடும்பத்தினரின் கஷ்டத்தை பற்றி மட்டுமே யோசித்த ஹர்ஷா இப்போது வசுந்தராவின் மனதின் வலியை பற்றியும் யோசித்தான்.

அதை பிடித்து கொண்ட அனு "அப்போ உங்க அம்மாவ நீங்க ஏத்துக்குவீங்களா ஹர்ஷா" என்று தயக்கத்துடன் கேட்டு விட்டாள்.

அதில் வெடுக்கென திரும்பி பார்த்த ஹர்ஷா "நான் அவங்க கஷ்டப்பட்டாங்கன்னு தான் சொன்னேன். அதனால அவங்க என்னோட அம்மாவா ஆகிட முடியாது.

ஆனா நல்லா
ஞாபகம் வச்சுக்கோ அனு சுபத்ரா அம்மா தான் எப்பவும் என்னோட அம்மா" என்றான் கோபமாக.

இது ஒருவிதமான பாதுகாப்பில்லா நிலை என்று கூறலாம். ஒரு பொருள் நம்முடையது என்றால் அதை யார் உபயோகப்படுத்தினாலும் அது அப்போது பெரிதாக தெரியாது‌.

ஆனால் அந்த பொருள் தனக்கு சொந்தமானதில்லை என்று தெரிந்தால், அது தரும் பாதுகாப்பின்மை மிக கொடுமையாக இருக்கும். அதை தான் தற்போது ஹர்ஷாவும் உணர துவங்கினான்.

தன் தாய் தந்தை தன்னை பெற்றவர்கள் இல்லை என தெரிந்தது முதல் அவர்களை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்ற அச்சம் தானாகவே வந்து விட்டது ஹர்ஷாவிற்கு. ராஜசேகர் இத்தனை நாட்கள் உணர்ந்த அதே நிலை.

அந்த கோபத்தில் சட்டென்று வாயை மூடிக் கொண்ட அனு "சரிங்க நான் அத்தைய பத்தி இனிமே பேசவே மாட்டேன். நீங்க மட்டும் இப்படி கோபப்படாதீங்க ஹர்ஷா" என்றாள்.

"ம்ம்" என்று முனகிய ஹர்ஷா "அனு குட்டி சாரிடி உன்னையும் போட்டு படுத்துறேன்ல" என்று பாவமாக கேட்க உருகி விட்டாள் அனு.

"ப்ச் என்னங்க இது. என்னை படுத்தாம வேற யாரை படுத்துவீங்களாம்‌. நான் தானே உங்க பொண்டாட்டி. வேற யார்கிட்டயாவது போங்க அப்புறம் இருக்கு"

அனு போலியாக மிரட்ட "ஏன்டி என்னை பார்த்தா வேற ஆள தேடி போற மாதிரியா இருக்கு" என அவள் கண்ணத்தை வலிக்காது கிள்ளினான்.

"ஐயோ! வலிக்குது" என அனு மெல்ல சிணுங்கி "ஆனாலும் இந்த ஆம்பளைங்கல நம்ப முடியாது பா. எப்ப எப்படி இருப்பாங்கன்னு. நான் தானே உஷாரா இருக்கனும்" என உதட்டை சுழித்து வேண்டும் என்றே ஹர்ஷாவை வம்பிலுத்து பேச்சை மாற்றிட எண்ணினாள்.

"நச்சுன்னு பக்கத்துலையே செமையா நீ இருக்கப்ப நான் எதுக்கு வேற ஆள தேடப் போறேன். அப்புறம் ஏன்டி செல்லம் அந்த உதட்டை போட்டு இந்த சுழி சுழிக்கிர" என்றவாறு சிணுங்கிய அவள் உதடை கடித்து வைத்தான்.

"சரியான கேடி ஹர்ஷா நீங்க. கிடைக்குற கேப்ல எல்லாம் எதாவது செய்றது. அப்புறம் பாவமா பேசி ஆக்ட் விடுறது..." என தன் போக்கில் அனு ஏதேதோ பேசி ஹர்ஷாவையும் பேச வைத்தாள்.

இப்படி பேசி பேசியே அனு வெற்றிகரமாக ஹர்ஷாவின் மனநிலையை வேறுபுறம் தற்காலிகமாக திருப்பி விட்டதாக எண்ண,

தன் மனைவியின் மனதை புரிந்து ஹர்ஷா அவன் மனதை மறைத்து கொண்டு அவளோடு வம்பு பேசி அவள் மனதை தான் திசை திருப்பி இருந்தான். ஆனால் மனதின் காயங்கள் அவ்வளவு எளிதில் மறைய கூடிய ஒன்றா என்ன!

ஹர்ஷா வசுந்தராவை திரும்பியும் பார்க்காது மேலே அவன் அறைக்கு செல்வதை வலியோடு பார்த்திருந்தாள் வசுந்தரா.

தன் பிள்ளை தன்னை அம்மாவாக ஏற்றுக் கொள்வானா என அந்த தாயுள்ளம் தவித்து தான் போனது.

ஹர்ஷா அவன் அறைக்கு சென்று கிட்டதட்ட ஒரு மணி நேரம் கழித்து அனு கீழே வந்தாள். எல்லோரும் அவள் மேலே போகும் போது எந்த நிலையில் இருந்தார்களோ அப்படியே இப்போதும் இருந்தனர்.

"என்னாச்சு அண்ணி" என்று அனுவிடம் அபிமன்யு கேட்க "அவர் தூங்கிட்டு இருக்கார் அபி" என்க, அபி 'அதுக்குள்ள அண்ணா தூங்கிட்டாரா. அதுக்கு வாய்ப்பே இல்லையே' என்று மனதிற்குள் எண்ணி கொண்டான்.

ஆனால் அனு அறியாதது, அவள் அங்கே இருக்கும் நேரம் கண்ணை மூடி படுத்திருந்த ஹர்ஷாவை தூங்குவதாக தவறாக எண்ணியே அவள் கீழே வந்தது.

இவ்வளவு கலவரங்கள் நடந்த பின் எப்படி அவனுக்கு தூக்கம் வந்தது என அனுவும் யோசிக்கவில்லை.

இங்கு நடந்த சம்பவத்தில் யாருக்கு என்ன புரிந்ததோ அனுவிற்கு தன் தந்தை தங்களிடம் ஏன் அவ்வளவு கடுமையாக நடந்துக் கொண்டார் என்று புரிந்தது.

எங்கே தாங்களும் வாழ்வில் வழித் தவறி போய் விடுவோமோ என்றே அவர் எண்ணி இப்படி நடந்திருக்கிறார் என மனதிற்குள் நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டாள் அனு.

"நாங்க கிளம்பறோம் சம்மந்தி. இப்போ பேச யாருக்கும் மனசுல திடம் இல்ல. அதோட இப்போதைக்கு இதை பத்தி பேசறதும் சரியா இருக்காது. இதுக்கு மேலையும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருந்தா அது தர்மசங்கடத்தை தான் தரும். அதுனால நாங்க போய்ட்டு வரோம்ங்க"

விஸ்வநாதன் பொதுவாக அனைவரையும் பார்த்து கூறியவர் "வா வசும்மா. நாம வீட்டுக்கு போகலாம்" என வசுந்தராவையும் எழுப்பினார்.

வசுந்தராவிற்கும் அதற்கு மேல் அங்கிருக்க மனம் வரவில்லை. சரி என அவரும் தன் அண்ணன் அண்ணியோடு கிளம்பி விட்டார்.

விஸ்வநாதன் வசுவை தனியே விடாமல் தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அவரை அதற்கு மேல் தனியே விட விஸ்வநாதனும் தயாராக இல்லை.

இவர்கள் அனைவரும் கிளம்பியதும் "பசங்கலா ஏன் இப்படியே உக்காந்து இருக்கீங்க. போங்க போய் கொஞ்ச நேரம் எல்லாரும் ரெஸ்ட் எடுங்க" என்று அருணாசலம் சொல்லியவர் தளர்ந்து போய் அவர் அறைக்கு சென்றுவிட்டார்.

அவர் கூறியதை கேட்டு மற்றவர்களும் தங்களின் அறைகளில் தஞ்சம் அடைந்தனர்.

பார்வதியின் அறையில் அவர் வேதாசலத்தின் அணைப்பில் அழுதுக் கொண்டிருந்தார் என்றால், ராஜசேகரின் அறையிலே அவர் மனதில் இருந்த பாரம் எல்லாம் நீங்கிய அவர் இன்று தான் சற்று நிம்மதியாக இருந்தார்.

அருணாசலம் தளர்ந்து போய் துவண்டிருந்தாலும் அவர் மகன் ராஜாராமின் புகைப்படத்தை அவர் கைகள் வருடியடி இருந்தது.

அவர் மனமோ 'இந்த அப்பாவ விட்டுட்டு போறோம்னு உன் பிள்ளைய என்கிட்ட அனுப்பிட்டு போனியா ராஜா' என்று தன் போக்கில் எண்ணி நின்றது.

விக்ரம் அபிமன்யு அனு மற்றும் அம்மு நால்வரும் மாடியில் இருந்த ஹாலில் ஒன்றாக அமர்ந்து கொண்டு அவரவர் நினைவில் உழன்றனர்.

அனு கூட ஹர்ஷாவை தொந்தரவு செய்யாமல் இவர்களுடன் இருக்க ஹர்ஷா அவன் அறையில் படுத்திருந்தவன், அனு கூறிய வார்த்தைகளை மீண்டும் மனதிற்குள் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.

'இங்கு நடந்த கெட்டதிலும் நம் வாழ்க்கையில் உண்மையான சொந்தங்களே கிடைத்திருக்கிறது. நாமும் வருந்தி ஏன் அவர்களையும் வருத்த வேண்டும்' என்று தான் எண்ணி கொண்டிருந்தான்.

அதோடு அவன் மனதில் தோன்றிய 'தான் முறை தவறி பிறந்தவனோ?' என்ற பயம் அவனை விட்டு மொத்தமாக நீங்கியது. வாழ்வில் ஒழுக்கம் என்பதை உயிரென எண்ணும் ஹர்ஷாவிற்கு,

அவன் தாய் தந்தை முறையாக திருமணம் செய்த பின்னரே அவன் பிறந்தான் என்ற செய்தி எவ்வளவு மன நிம்மதியை தந்தது என்று அவன் மட்டுமே அறிவான்.

அதன்பின் ஒவ்வொரு நாட்களும் அமைதியாக தான் கழிந்தது. கணபதி ராமின் கேஸ் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்க ஓரளவு சகஜ நிலைக்கு அருணாசலம் இல்லம் திரும்ப துவக்கியது.

அன்று அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்த நேரம் ஹர்ஷா பேச்சை ஆரம்பித்தான்.

"அத்த மாமா நம்ம விக்ரம் கல்யாணத்தை சீக்கிரமே நடத்தலாம்னு தோணுது‌. நீங்க என்ன சொல்றீங்க"

ஹர்ஷா கேட்டதும் விக்ரம் "என்ன ஹர்ஷா நாம இருக்க மனநிலைல இப்போ இது எல்லாம் தேவையா மச்சான்" என்றான்.

விக்ரம் பேசியதும் அவனை மறுத்து பேசிய ராஜசேகர் "ஹர்ஷா சொல்றது சரிதான் விக்ரம். இப்போ நாம இருக்க நிலைல இந்த பங்சன் நடந்தா எல்லாருக்கும் கொஞ்சம் ரிலீப்பா இருக்கும்" என்றார்.

மற்றவர்களும் அதை ஆதரிக்க "விக்ரம் இந்த சன்டே சங்கவி வீட்டுக்கு போய் பேசிட்டு வரலாம். நீ சங்கவிட்ட இன்பார்ம் பண்ணிடு" என்று ஹர்ஷா கூறியவுடன்

"ஹேஏஏஏ...! விக்ரம் அத்தான் சூப்பர் உனக்கு கல்யாணமா செம. நல்லா ஜமாய்ச்சிடலாம்" என்று ஆர்ப்பரித்தான் அபிமன்யு.

அவன் குதூகலத்தில் மொத்த குடும்பமும் மகிழ்ந்தது. அந்த வீட்டில் காணாமல் போன சிரிப்பு சத்தம் மெல்ல எட்டிப் பார்த்தது. அதற்காக தான் ஹர்ஷாவும் இந்த பேச்சை எடுத்ததும்.

ஹர்ஷா கூறியதை போலவே அந்த வாரம் சங்கவியின் வீட்டிற்கு சென்று திருமணத்தை பேசினர். திடீரென சங்கவியை பெண் பார்க்க அதுவும் அவள் முதலாளி குடும்பம் வரவே ஒன்றும் ஓடவில்லை அவளின் பெற்றோருக்கு.

அவர்களின் பதற்றத்தை குறைத்தது பார்வதியின் பேச்சு. விக்ரம் அவர்கள் மகளை விரும்பவதாக கூறி பெண் கேட்க முழுமனதுடன் சம்மதித்தனர்.

அதன்பின் என்ன விக்ரமின் கல்யாண வேலைகள் ஜரூராக துவங்கியது. அதோடு சேர்த்து அபியின் கிண்டல்களும் அதிகரித்தது.

ஹர்ஷாவின் தாய் தந்தை யார் என்று தெரிந்த பின்னரும் அந்த வீட்டில் எதுவும் மாறவில்லை. அந்த செய்தி அதிர்ச்சி தான். ஆனால் அது அவர்களுக்கு ஹர்ஷா மீதிருந்த பாசத்தையோ அபிமானத்தையோ எள்ளளவும் மாற்றவில்லை.

"விக்ரம் அத்தான் கிளம்பு கிளம்பு வெளிய போகலாம்" போனில் சங்கவியுடன் கடலை போட்டுக் கொண்டிருந்த விக்ரமின் காதில் கத்தினான் அபி.

அதில் காதை தேய்த்துக் கொண்ட விக்ரம் அபியை பார்த்து முறைத்து விட்டு "ஏன்டா ஒரு கர்ட்டசிக்காகவாவது கதவை தட்டிட்டு வர மாட்டியாடா" என கடுப்பாக கேட்டு வைக்க

"ஏன் உனக்கு என்ன அதுக்குள்ள கல்யாணமா ஆகிருச்சு. இப்ப தானே நிச்சயம் பண்ணிருக்காங்க. உன் கல்யாணம் முடிஞ்சு கவி சிஸ்டா நம்ம வீட்டுக்கு வரட்டும் அப்புறம் நாங்க டீசென்டா இருந்துக்குறோம்.

இப்பலாம் அது முடியாது மகனே. சரி அதை அப்புறம் பேசிக்கலாம். இப்ப நீ கிளம்பு நாம வெளிய போறோம்" என்று நக்கலாக பதில் அளித்தான் அபிமன்யு.

ஆம் ஒரு வாரத்திற்கு முன்பே நம் விக்ரமிற்கும் சங்கவிக்கும் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்றது.

அந்த பக்கம் அழைப்பில் இருந்த கவியோ வயிற்றை பிடித்து கொண்டு சிரித்து "விக்ரம் நீங்க அபி அண்ணா கூட போய்ட்டு வாங்க. நாம நைட் பேசிக்கலாம்" என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

"ஏய் ஏய் கவி வச்சிராதடி" என விக்ரம் கத்த கத்த வைத்து விட்டாள் சங்கவி.

அதில் கடுப்பான விக்ரம் அபியை முறைத்து "ஏன்டா ஏன் இப்படி என் உயிரை வாங்குற. மனுசன நிம்மதியா ஒரு போன் பேச விடுற" என கத்தினான்.

விக்ரம் கத்தியதில் காதை குடைந்து கொண்ட அபி "சும்மா கத்தாத உன் மேரேஜ்கு நீ கொஞ்சமாவது பளிச்சுன்னு தெரிய வேண்டாமா. அதுவும் கவி சிஸ்டா இருக்க அழகுக்கு அவ பக்கத்துல நிக்கிற அளவாவது நீ இருக்க வேண்டாம்.

அதான் உன்னை ஸ்பாக்கு கூட்டிட்டு போய் பட்டி டிங்கரிங் பாக்கலாம்னு வந்தேன். நீ ரொம்ப தான் சலிச்சுக்கிற. வேண்டாம்னா போ" என கொஞ்சம் பிகு செய்தான்.

"என்ன ஸ்பாக்கா. அய்யோ அபி செல்லக்குட்டி உன் நல்ல மனச புரிஞ்சுக்காம நான் தான்டா தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுடா. வா வா நாம உடனே கிளம்பலாம்"

விக்ரம் அந்தர் பல்டி அடித்து அபியை தாஜா செய்து, அவனை கிளப்பிக் கொண்டு சென்றான்.

விக்ரம் திருமண பேச்சு ஆரம்பித்தது முதல் இப்படி தான் அருணாசலம் இல்லமே மகிழ்ச்சியுடன் இருக்கிறது.

"ஹர்ஷா அந்த மண்டப விஷயம் என்னாச்சு கண்ணா. ஓகே பண்ணிட்டியா"

"ம்ம் ஓகே பண்ணிட்டேன் மாமா. நாம சொன்ன டேட் அவெய்லபிலா தான் இருந்தது. சோ நோ பிராப்ளம்"

வேதாசலம் கேட்டதற்கு பதில் அளித்தவாறே பெயர் எழுதிய பத்திரிகைகளை ஹர்ஷா அடிக்கிக் கொண்டிருந்த நேரம்

"கண்ணா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்டா" என்று தயங்கியபடி பேச வந்தார் பார்வதி. "சொல்லுங்க அத்த" என்றவுடன்

"அது ஹர்ஷா கண்ணா..." என பேச தயங்கியே நின்றார் பார்வதி.

அவர் திணறலில் அதுவரை குனிந்திருந்த ஹர்ஷா நிமிர்ந்து "என்ன அத்த எதுக்கு இப்படி தயங்கிட்டு இருக்கீங்க. சொல்ல வந்ததை தயங்காம சொல்லுங்க" என்று ஊக்கினான்.

"அது வந்து ஹர்ஷா" என்று மீண்டும் இழுத்த பார்வதி கண்ணை மூடிக் கொண்டு தான் சொல்ல வந்ததை சொல்லி விட்டார்.

"உன் அம்மாகிட்ட நீ பேசு ஹர்ஷா குட்டி. அவங்க பாவம் கண்ணா. என் அண்ணன் இறந்து நீ இல்லைன்னு ஆகி‌. ப்ச் அது அவங்களுக்கு எவ்ளோ வேதனை கண்ணா.

அதுவும் அவங்க ஹஸ்பண்ட் கணபதி செஞ்ச துரோகம்னு அவங்க ரொம்ப பட்டுட்டாங்க. அவங்களுக்கு நீ பேசுறது ரொம்பவே மனசுக்கு ஆறுதலா இருக்கும்டா கண்ணா.

சுபத்ரா அண்ணி கண்டிப்பா உன் அம்மா தான் கண்ணா. அதை யாரும் இங்க மறுக்க போறது இல்ல. அதே சமயம் உன்ன பெத்த வசுந்தராவையும் நீ பாக்கனும்பா.

நம்மலாள ஒருத்தர் வாழ்க்கைல நிம்மதியா இருக்காங்கன்றது தானே நமக்கு பெருமை. அவங்கல நீ அம்மானு கூப்பிட்டு நாலு வார்த்தை பேசிட்டு வந்தா அவங்க மனசு நெறஞ்சு போகும்பா.

என் ஹர்ஷா குட்டியால யாரும் கஷ்டபட்டதா இருக்க கூடாதுடா"

பார்வதி பேசி முடிக்கும் நேரம் அவ்வளவு அமைதி நிலவியது அந்த இடத்தில். இதையெல்லாம் அங்கு அமர்ந்திருந்த அனைவரும் கேட்டபடி தான் இருந்தனர்.

"பார்வதி சொல்றதுலையும் ஒரு நியாயம் இருக்கு கண்ணா. அந்த பொண்ணு வாழ்க்கைல ரொம்ப அடிபட்டுருச்சுடா. நாமலும் அந்த பொண்ணு மனசை காயப்படுத்த வேண்டாம் கண்ணா‌. நீ போய் பேசுப்பா"

இதை கூறியது அருணாசலமே. தன் பேரனை யாருக்கும் விட்டு தராதவர் அவனை அவன் தாயோடு சேர வற்புறுத்தி சொன்னார்.

ராஜசேகரும் தற்போது அவருக்கு பரிந்து பேசினார். இதுநாள் வரை தன்னை பற்றி மட்டுமே யோசித்த ராஜசேகரின் மனதை வசுந்தராவின் வாழ்க்கையின் சோகம் மாற்றியிருந்தது.

ஹர்ஷாவிற்கு திடீரென அனைவரும் வசுந்தராவின் சார்பில் பேசியது மனதை குழப்பியது. அதே நேரம் வசுந்தராவிடம் பேசலாமா வேண்டாமா என்ற எண்ணம் முதன்முதலில் தோன்றியது.

ஆனால் யாருக்கும் பதில் தராது ஹர்ஷா எழுந்து தன்னறைக்கு சென்றான். அவனுக்கு யோசிக்க சற்று தனிமை தேவைப்பட்டிருந்தது.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 33

அந்த அறை அமைதி மிகுந்து காணப்பட்டது. அறையின் வெளியிலோ விஸ்வநாதன் மீனாட்சி அனு என அனைவரும் நெஞ்சம் தடதடக்க அமர்ந்திருக்க

அவர்களை பதறவிட்டிருந்த ஹர்ஷாவோ அறையினுள் வசுந்தராவுடன் அமர்ந்திருந்தான். வந்து பத்து பதினைந்து நிமிடங்கள் கடந்து விட்டிருந்தது.

ஆனால் ஹர்ஷாவோ வசுந்தராவோ இருவரில் ஒருவரும் வாயை திறந்தபாடில்லை. வசுந்தரா குற்றவுணர்ச்சியில் வாயை திறக்காது இருந்தார் என்றால், ஹர்ஷா தயக்கத்தில் வாயை திறக்காமல் இருந்தான்.

எனவே சில நேரம் அங்கே மௌனமே நிலவியது. இப்படியே போனால் எப்படி என்று யோசித்த ஹர்ஷா ஒரு பெருமூச்சை வெளியிட்டவாறு பேச துவங்கினான்.

"எப்படி இருக்கீங்க?" ஹர்ஷா மெதுவாக கேட்க

"ம்ம் ஏதோ இருக்கேன் கண்ணா" என்று தானாகவே உரிமையாய் அழைத்திட்டு, ஹர்ஷா இப்படி அழைத்ததை தப்பாக எடுத்துக் கொண்டானா என்று சற்று பதறிப்போய் தான் பார்த்தார்.

ஆனால் பதிலுக்கு ஹர்ஷா அமைதி காக்கவே நிம்மதி கொண்டார் வசுந்தரா.

"நான் எதுக்கு உங்களை பாக்க வந்திருக்கேன்னு உங்களுக்கு தோனலாம். அதுக்கும் நானே பதில் சொல்றேன்" என்று ஆரம்பித்தான்.

"நடந்த எல்லா விஷயத்திலும் நாம ரெண்டு பேருமே பாதிக்கப்பட்டிருந்தாலும், அதிகமா பாதிக்கப்பட்டது நீங்க தான்.

உண்மையாவே உங்கள நினைச்சு பாத்தா என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்றதுனும் எனக்கு தெரியல.

சின்ன வயசுல அதாவது ஒரு அஞ்சு வயசு வரைக்கும் என்னோட அம்மாவோட பாசத்துல வளந்திருக்கேன். அவங்க என்னை அவ்ளோ பாசமா பாத்துகிட்டாங்க.

என்மேல உயிரையே வச்சிருந்தாங்க. ஆனா திடீர்னு அவங்க என்னை பெத்தவங்க இல்லைன்னு தெரியவும் என் மனசு அதை ஏத்துக்கவே இல்ல"

ஹர்ஷா முகத்தில் வலியை காட்டி பேசப்பேச வசுந்தரா மனமோ பெரிதாக தவித்துப் போனது. தன் மகன் தன் கண்முன்னே கலங்கி தவிக்க அவனை அணைத்து ஆறுதல் கூட கூற முடியாது இருக்கும் தன் நிலையை வெறுத்தார் வசுந்தரா.

"ஆனா இதுல உங்களையும் குறை சொல்ல முடியாதுல. எனக்கு வந்தது கஷ்டமனா உங்களுக்கு நடந்தது கொடுமை‌.

என் வீட்ல இருக்கவங்க அன்னைக்கு வீட்ல நடந்த விஷயத்தை பத்தி அதுக்கு அப்புறம் யாரும் எதுவும் பேசவே இல்லை. ஆனா ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு விஷயம் சொன்னாங்க.

உங்களை பத்தி உங்களோட கஷ்டத்தை பத்தி. உங்களுக்கு என்னை நல்லா மகனா இருக்க சொல்லி" என்று ஹர்ஷா நிறுத்தி வசுந்தராவின் முகம் பார்க்க

வசுந்தராவின் முகம் இன்னதென கூற முடியா உணர்ச்சி பிடியில் இருந்தது‌. அவருக்கு தன் மகனை உரிமை கோற மனம் முழுவதும் வேகம் கொண்டிட, அவர் மூளையோ இன்னும் தர்க்கம் செய்து நின்றது.

"என்னால உங்கள சட்டுன்னு அம்மாவா ஏத்துக்க முடியுமானு தெரியலை. ஆனா ஒரு நல்ல மனுஷியா உங்களை பாக்க முடியுது.

என் வீட்ல இருக்கவங்க சொன்னதுக்கு பின்னாடி நான் ஒரு வாரம் நல்லா யோசிச்சேன். ஆனா அம்மானா அது சுபத்ரா அம்மான்னு நல்லா மனசுல பதிஞ்சு போச்சு.

சாரி நீங்க என்னை பெத்தவங்க. ஆனா அந்த உரிமையை எடுத்துக்க மனசு முரண்டுது. அதனால எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.

இந்த விஷயத்தை எல்லாம் என் மனசு ஏத்துக்க கொஞ்ச டைம் வேணும். குடுப்பீங்களா ம்மா.." என்று வலியுடன் ஹர்ஷா எச்சிலை முழுங்கி தவிக்க, அவன் விழிகள் இரண்டு சொட்டு நீரை வெளியேற்றியது.

ஹர்ஷாவின் விழிகளில் நீரை பார்க்கவும் "ஐயோ கண்ணா" என்று அவனை அணைத்து கொண்டவர் "நீ அவ்ளோ கஷ்டப்பட வேண்டாம்பா. நீ என்ன அம்மாவா ஏத்துக்கலைனாலும் நீ என்னோட பையன் தான்டா கண்ணா.

அதை யாராலையும் மாத்த முடியாது. நீ கஷ்டப்பட்டு என்னை அம்மான்னு கூப்பிடக் கூட வேணாம். அதுவா மனசுல இருந்து வரனும்.

எப்போ உன் மனசு ஓத்துக்கிட்டு என்னை அம்மாவா நினைக்கிதோ அப்போவே நீ என்ன அப்படி கூப்பிட்டுக்கபா. அம்மா அதுவரை எப்பவும் உனக்கு துணையா இருப்பேன்"

வசுந்தரா ஹர்ஷாவை அணைத்தவாறே அவனை ஆறுதல் படுத்த சற்று கண்ணீர் மட்டுப்பட்டு சமாதானம் ஆனான் ஹர்ஷா.

ஒருவாறு இருவரும் தங்களை தேற்றிக் கொண்ட பின் ஹர்ஷா மெதுவாக வெளியே வந்தான். அதன்பின் வசுந்தராவும். வெளியே இருந்தவர்கள் இவர்களின் அழுத முகத்தை கண்டு பெரிதும் வருத்தப்பட்டனர்.

ஆனால் அதற்கு அவர்களாலும் ஒன்றும் செய்யமுடியாதே. இதை குறித்தான முடிவை எடுக்க வேண்டியது அவர்கள் இருவரும் என்பதால் அமைதி காத்தனர்.

அதன் பின்னான நாட்கள் வசுந்தராவிற்கு சற்று நன்றாகவே சென்றது எனலாம். ஏனெனில் அவரின் மூத்த மகன் ஹர்ஷா அவரிடம் தற்போது எல்லாம் கைப்பேசியின் வழியே தினமும் அழைத்து இரண்டு வார்த்தையேனும் பேசி விடுகிறான்.

வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறையேனும் வந்துப் பார்த்து செல்கிறான். அதுவே அவருக்கு யானை பலம் வந்தது போல் உள்ளது.

ஹர்ஷாவின் வீட்டிலோ விக்ரமின் கல்யாண வேலைகள் எல்லாம் படு ஜோராக நடந்துக் கொண்டிருக்க, எல்லாம் ஹர்ஷாவின் பொறுப்பு தான்.

விக்ரமை ஆடைகள் வாங்க அழைத்து செல்வது முதல் திருமண மண்டபம்‌ சமையல் ஆட்கள் பத்திரிகை அடித்து அதை கொடுப்பது என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறான் ஹர்ஷா.

அபிமன்யுவும் தன் அண்ணனுக்கு உதவியாக இருந்து கொண்டு, அதே நேரம் விக்ரமை வம்பிழுத்து என அந்த வீட்டையே எப்போதும் பிசியாக சுற்றுகிறான்.

அன்றும் அப்படித்தான் "விக்ரம் அத்தான்" என்று வீட்டின் நடுவில் நின்று அபி காட்டு கத்தாக கத்த, அனைவரும் என்னவோ ஏதோ என பதறிப் போய் வந்தனர்.

"என்னாச்சு அபி. ஏன்டா இப்படி கத்துன" என்று விக்ரம் கேட்டதற்கு "எனக்கு ஒரு நியாயம் வேணும்" என்றான் சட்டமாக அமர்ந்துக் கொண்டு.

"என்னடா போராட்டம் எதுவும் பண்ண போறியா. அதுக்கு டிரைனிங் எடுக்க வீட்டுக்குள்ளையே நீதி வேணும் நியாயம் வேணும்னு கேக்குறியா?" என்று விக்ரம் கேட்க,

மற்றவர்கள் இது எங்கே போய் முடியும் என அறிந்தவர்கள். எனவே அமைதியாக அவரவர் வேலையை பார்க்க கிளம்பிவிட்டனர். கடைசியாக நின்றது என்னவோ விக்ரம் தான்.

"போராட்டமா?" என ஒரு மாதிரி கேட்ட அபி "ஆமா போராட்டம் தான். ஆனா என் வாழ்க்கைகான போராட்டம்" என்று தத்துவமாக பேசினான்.

"என்னடா சொல்ற?" என்று கடுப்பாகி விக்ரம் கத்த

"பின்ன என்ன அத்தான். நீயும் கவி சிஸ்டாவும் ஒரு வருஷம் முழுசா லவ் பண்ணி இருப்பீங்களா?

அதுக்குள்ள உனக்கு கல்யாணத்துக்கு ரெடி பண்ணிட்டாங்க. ஆனா நான் என் அம்மு குட்டிய செவன் இயர்ஸ் முழுசா செவன் இயர்ஸா லவ் பண்றேன்.

உனக்கு முன்னாடியே என் லவ்வ சொல்லி ஓகே வாங்கி கமிட் ஆகிட்டேன். ஆனா எனக்கு அப்புறம் லவ் பண்ண ஆரம்பிச்சு. அந்த லவ்வ கூட புரிஞ்சுக்க துப்பில்லாம சுத்திட்டு இருந்த உனக்கு கல்யாணம் ஆகுது.

ஆனா இந்த கதைல ஆரம்பத்துல இருந்து லவ் பண்ற எனக்கு எப்படா கல்யாணம் ஆகும்" என வேண்டும் என்றே விக்ரமை வம்பிழுத்தான் அபி.

அதில் அவன் கடுப்பும் சிறிது இருந்தது குறிப்பிடத்தக்கது. அபிமன்யு இவ்வாறு பேசவும் அவனை நக்கலாக பார்த்து வைத்த விக்ரம்

"அதுக்கு எல்லாம் ஒரு முகராசி கொடுப்பினை இதெல்லாம் வேணும் ராஜா" என்றான் காலரை தூக்கி விட்டு.

விக்ரம் இப்படி கூறியதும் அவன் முகத்தை மேலிருந்து கீழ் வரை நோக்கிய அபி "அது உண்மனா எப்படி அத்தான் உனக்கு போய் கல்யாணம் நடக்குது.

உன் மொகரகட்டைக்கு தான் சுட்டுப் போட்டாலும் முகராசின்னு ஒன்னு வரவே வராதே" என்று சீரியசாக கேட்டு வைக்க

"டேய் பம்பரகட்ட மண்டையா! உன்னை என்ன பண்றேன்னு பாருடா" என்றவாறு அடிக்க துரத்தினான். சிக்குவானா அபி அடித்து பிடித்து ஓடி விக்ரமிடம் சிக்காமல் அறையில் தஞ்சமானான். அதுவும் ஆதிராவின் அறையில்.

"எது நடந்தாலும் எதாவது ஒன்னு பண்ணி என் தங்கச்சியோட டூயட் பாடுறதுல கொண்டு போய் முடிச்சிடுறான் பக்கி பய" என்று வயிற்றெரிச்சலில் சத்தமாக கத்தியே சென்றான் விக்ரம்.

அங்கே அம்முவின் அறைக்கு சென்ற அபியா சும்மா‌ இருப்பான். அவன் அம்முவை கொஞ்சி கெஞ்சி சில முத்தங்களை கொடுத்து பல செல்ல அடிகளை பெற்று விட்டே வெளியேறினான் அபி.

இப்படி கிண்டலும் குதூகலமாக ஹர்ஷாவின் இல்லம் இருக்க, விக்ரமின் திருமண நாளும் வந்தே விட்டது.

"மச்சான் ஏன்டா நெளியிற. கொஞ்ச நேரம் ஆடாம நில்லேன்டா"

ஹர்ஷாவின் எந்த அதட்டலும் கெஞ்சலும் மிரட்டலும் விக்ரமிடம் எடுபடவில்லை. விக்ரம் தனது திருமணத்திற்கு வேட்டி கட்ட படுத்துகிற பாடுதான் இது.

புதிதாக வேட்டி அணிகின்ற விக்ரமிற்கு அது தன் இடுப்பில் நிற்காதோ என்ற பயம் ஒருபுறம் என்றால், பக்கத்தில் 'நேரம் கிடைத்தால் உன் வேட்டியை அவிழ்த்து விடுவேன்' என்ற பாவனையில் நிற்கும் அபியால் இன்னொரு புறம் பயம்.

அவன் பயத்தை போக்கி அவனுக்கு வேட்டியை அணிவிக்க திணறுவது நம் ஹர்ஷவர்தனே.

"ஏன்டா தடிமாடு மாதிரி வளந்திருக்க. ஒரு வேட்டி கட்ட இவ்ளோ அலப்பறை பண்ற. ஏன்டா என் உயிரை வாங்குற" கடுப்பில் ஹர்ஷா கத்திவிட்டான்.

அவ்வளவு படுத்தி எடுத்தான் விக்ரம். அதை கண்டு கடுப்பான அபி "ண்ணா நீ போய் கெஸ்ட்ட பாரு. நானே நம்ம விக்ரம் அத்தான நல்லா ரெடி பண்ணி நானே கூட்டிட்டு வரேன்" என்று கூற பயந்துவிட்டான் விக்ரம்.

"மச்சான் உன் உயிர் நண்பனை உன் தம்பியை நம்பி விட்டுட்டு போயிராதடா" என்று மரண பீதியில் சொல்ல

விக்ரமை கையால கூடிய சரியான ஆள் அபியை தவிர வேறு யார். எனவே "ஓகே அபி. அவனை கெளப்பி கூட்டிட்டு வந்திடு டா. நான் போய் நம்ம கெஸட்ட வெல்கம் பண்றேன்" என்று ஹர்ஷா நேக்காக அபியிடம் விக்ரமை கோர்த்து விட்டு சென்றுவிட்டான்.

"டேய் மச்சான் நான்‌ பாவம்டா. இரக்கமே இல்லாம உன் தம்பி கிட்ட கோர்த்து விட்டுட்டு போறியே. இது நியாயமா" என்று வசனம் பேச, அதை கேட்க அங்கே ஹர்ஷா இருந்தால் தானே.

அவன் தான் எப்போதே சென்றுவிட்டானே. "கிராதகா இப்படி இவன் கிட்ட மாட்டிவிட்டுட்டு போய்ட்டானே. இன்னைக்கு என் கல்யாணம் நடக்குமா?" என்று பீதியாய் விக்ரம் அபியை பார்க்க

அபியோ "ஹா..ஹா..ஹா.." என்று வில்லன் போல் சிரித்து வைத்தான். அப்படியே மெதுவாக விக்ரமை நெருங்கி "அப்புறம் விக்ரம் அத்தான் ரெடி ஆகலாமா?" என்று கேட்க பீதி ஆகிவிட்டான் விக்ரம்.

அப்புறம் என்ன விக்ரமை போட்டு பாடாய் படுத்தி எடுத்துவிட்டான் அபி. இன்று அவன் திருமணம் என்று கூட பார்க்கவில்லையே.

"ஏன் விக்ரம் அத்தான் இவ்ளோ பெருசா வளந்துருக்கியே தவிர உனக்கு கொஞ்சம் கூட மூளையே இல்ல. உனக்கு ஒரு வேட்டி கட்ட தெரியுதா?

நீ எல்லாம் என்னத்த கல்யாணம் பண்ணி, என்னத்த குடும்பம் நடத்த போறியோ. பாவம் என் சிஸ்டா. உன்கிட்ட வந்து மாட்டனும்னு அவ தலையில எழுதியிருக்கு"

இதெல்லாம் அபி பேசிய வசனங்களே. அவன் பேசியதை கேட்டு "வேட்டி கட்டுறதுக்கும் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தறதுக்கும் என்னடா சம்மந்தம்" என்று விக்ரம் தான் நொந்து விட்டான்.

ஆனால் அபி பேசிய பேச்சிற்கு மறுபேச்சு பேசவில்லை. ஏனெனில் அபி தான் வேட்டி சட்டையில் மாப்பிள்ளை போல் ஜம்மென்று தயாராகி நின்றிருக்கிறானே‌.

மேலும் அவன் அமைதியாக இருக்க இன்னொரு காரணம் அவன் அபியிடம் வாயை கொடுத்தால் இன்று அவன் திருமணம் நடந்தது போல் தான். எனவே இன்று விக்ரம் அமைதியின் சிகரம் ஆகிவிட்டான்.

இதுபோன்ற சில பல கலாட்டாக்களோடு விக்ரமின் திருமணம் அவன் ஆருயிர் சங்கவியோடு இனிதே நடைபெற்றது.

ஐயர் சொல்லும் மந்திரத்தை புரியாது தப்பும் தவறுமாக திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான் விக்ரம். அவன் மனமோ

'எப்படா பொண்ணை கூப்படுவீங்க. நான் சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிச்சிட்டு வீட்டப்பாத்து கிளம்புவேன்ல' என்று சலித்தபடி இருந்தது.

அவன் மைன்ட் வாய்ஸ் கேட்டதாலோ இல்லை முகூர்த்த நேரம் வந்துவிட்டதாலோ ஐயர் பெண்ணை அழைத்து வர சொன்னார். அந்த வார்த்தையை கேட்டதும் ஆயிரம் வாட்ஸ் லைட்டை போட்டது போல் விக்ரமின் முகம் பிரகாசமானது.

'அப்பாடா ஒருவழியா அவளை கூப்டு விட்டுடாங்க' மனதில் பெரும் உவகை அடைந்த விக்ரம் சங்கவி வரும் வழியில் தன் விழியை வைத்தான்.

தாமரை பூவின் நிறத்தில் அங்காங்கே ஜரிகை வைத்து அதற்கு எதிர்ப்பதமாக பச்சை வண்ண ரவிக்கை அணிந்து, முகத்தில் வெட்கம் ததும்ப அட்டகாசமாய் மேடைக்கு வந்து சேர்ந்தாள் கவி.

'அம்மாடி எவ்ளோ அழகா இருக்கா நம்மாளு' என்று வரும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து வைத்த விக்ரமிற்கு சுற்றி நின்ற அனைவரும் மறைந்து போக அவன் கவி மட்டுமே தெரிந்தாள்.

அதில் அவனை ஐயர் இரண்டு முறை அழைத்ததையும் அவன் கவனிக்கவில்லை. அவன் உறைந்த நிலையை கண்டு தன் தலையில் அடித்துக் கொண்ட அபி

"விக்ரம் அத்தான்" என்று அவன் முதுகிலேயே பட்டென ஒரு அடியே வைக்க அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒரு நிமிடம் முழித்தான் விக்ரம்.

"ஐயர் கூப்பிடறாரு அங்க பாரு" அபியின் அருகில் இருந்த ஹர்ஷா தான் தக்க சமயத்தில் நடப்பதை நினைவு படுத்தி விட்டான்.

"ஆன்.. ஆ.. ஓகே மச்சான்" என்று திணறிய விக்ரம் அதன் பின்னே ஐயரை திரும்பி பார்த்தான்.

"என்ன ண்ணா கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடியே பையன் இப்படி பிளாட் ஆகிட்டான். இவன் கல்யாணம் முடிஞ்சா நாமலாம் அவன் கண்ணுக்கு தெரிய மாட்டோம் போலையே"

அபி சத்தமாக விக்ரமை கிண்டல் செய்ய அனைவரும் சிரித்து விட்டனர். ஆனால் விக்ரம் தான் இந்த உலகிலே இல்லையே. சங்கவியின் அழகில் மந்தரித்து விட்டது போல் அமர்ந்திருந்தான்.

விக்ரமின் திருமணம் கூத்தும் கும்மாளமுமாக முடிய அனைவரும் அருணாசலத்தின் இல்லம் திரும்பினர். பால் பழம் தருவது போன்ற அனைத்து சடங்குகளும் நல்லபடியாக நடந்தேற, மாலை கடந்து இரவு நேரம் மெல்ல கவிழ

"என்ன விக்ரம் அத்தான் முகம் ஜொலிக்குது. ம்ம் பர்ஸ்ட் நைட் மூட்ல இருக்க போல" என்று கண்ணடித்த அபி "என்ஜாய் மச்சான்" என எப்போதும் போல் அல்லாமல் சற்று நல்ல வார்த்தை சொல்லி போனான்.

அவன் கூற்றில் புன்னகைத்த விக்ரம் என்றும் இல்லாத நாளாய் அமைதியின் உருவாய் சென்று அவன் அறைக்குள் ஆவலாய் தன் கவியின் வரவை எதிர்நோக்கி அமர்ந்தான்.

அவன் எதிர்ப்பார்ப்பை பொய் ஆக்காமல் கவியும் வந்துவிட்டாள். அவள் தயங்கி கொண்டே விக்ரமை நோக்கி வர விக்ரம் முகம் முழுவதும் புன்னகையின் சாரல்.

"வா கவி. உக்காரு" என வார்த்தைக்கே வலிக்காமல் விக்ரம் அழைக்க அவன் அருகில் நெருங்கி வந்து அமர அவள் கையை மிருதுவாக பிடித்து கொண்டான்.

"உன்ட்ட கொஞ்சம் பேசணும்டா. நம்ம மேரேஜ்க்கு முன்னவே உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண நினைச்சேன்‌. பட் வேலை புல்லா இருந்தது. சோ உன்கிட்ட பேச கூட முடியலைடி.

உனக்கு ஓகே தானே பேசலாமா" விக்ரம் கேட்டு நிறுத்த சங்கவி சம்மதமென தலையசைத்தாள்.

விக்ரம் பேச துவங்கிட எதை பற்றி பேச போகிறான்‌ என ஆர்வமாக சங்கவி கேட்க தயாரானாள்.

"உனக்கே தெரியும் கவி இப்ப நம்ம வீட்ல இருக்க சிட்டுவேஷன். இந்த பிராப்ளம் வந்ததால தான் நம்ம மேரேஜும் இவ்ளோ சீக்கிரம் நடந்தது. நான் நம்ம மேரேஜ் ஒன் இயர் கழிச்சு பண்ணிக்கனும்னு அப்படின்ற தாட்ல தான் இருந்தேன்.

பட் அது மாத்த காரணம் என்னோட ஃபேமிலி. இன்னும் சொல்லப்போனா நம்ம மேரேஜால இந்த வீட்ல கொஞ்ச நாள் காணாம போயிருந்த சிரிப்பு மறுபடியும் வந்திருக்கு.

நான் என்னதான் விளையாட்டு தனமா இருந்தாலும், என் குடும்பம்னு வரப்போ நான் டோட்டலா வேற ஆள் கவி. இந்த ஃபேமிலி மட்டும் தான் என்னோட உலகம். அது உனக்கு புரியுதா"

விக்ரம் பேசி நிறுத்த 'இதையெல்லாம் எதுக்கு இப்போ சொல்றாரு' என குழம்பி போய் பார்த்தாள் சங்கவி.

"‌இதை நான் ஏன் சொல்றேன்னு உனக்கு தோனலாம். கண்டிப்பா தோனும். அதுவும் எதுக்குன்னு நானே சொல்லிடறேன்.

உனக்கு என் கூட தனியா இருக்கனும்னு தோனும். நீ நினைக்கிறத நான் தப்பு சொல்ல மாட்டேன். அதே நேரம் நம்மளுது ஜாயின் ஃபேமிலி. இங்க நமக்கு சில நேரம் தனிமை கிடைக்காம போகும்.

சோ இதெல்லாம் வச்சு தனிக்குடித்தனம் போகனும் அப்படின்னு நீ எப்பவும் சொல்ல கூடாது. நீ சொல்ல மாட்ட இருந்தாலும் இதையெல்லாம் நான்‌ உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன்"

விக்ரம் தன் மனதில் இருந்த அனைத்தையும் தயங்கியபடியே ஆனாலும் அப்படியே சொல்லிவிட, சங்கவி தான் அவனை வியப்பாய் பார்த்தாள்.

எப்போதும் குறும்பு செய்து கொண்டு அபியிடம் வம்பிழுத்துக் கொண்டு, அலுவலகம் சென்றால் வேலை வேலை என்று அலையும் விக்ரம் இல்லை இவன்.

இன்று ஏனோ சற்று வித்தியாசமாக பொறுப்பாக தெரிந்து தொலைந்தான். இது இன்னும் பிடித்து போனது சங்கவிக்கு.

"இந்த விக்ரம எனக்கு ரொம்ப பிடிக்குது ப்பா. எனக்கு பர்ஸ்ட் உங்கள பிடிக்க முன்னாடி உங்க பேமிலிய தான் பிடிச்சது. நீங்க லவ் பண்றத உங்களுக்கு முதல்ல தெரிஞ்சு என்கிட்ட வந்து பேசி,

என் குடும்பம் அந்த அளவுக்கு பணக்காரங்க இல்லன்னு தெரிஞ்சும் என்னை எந்த வித்யாசமும் காட்டமா ஏத்துக்கிட்ட இந்த ஃபேமிலி... இல்ல நம்ம பேமிலிய விட்டு நீங்க போலானு சொன்னாலும் நான் வரமாட்டேன். போதுமா விக்ரம்"

சங்கவி புன்கைத்து நிறுத்த விக்ரம் மனதில் பேரமைதி கொண்டான். தன் மனைவி தன் குடும்பத்தை அவள் குடும்பமாக எண்ணியதில் பெருமகிழ்ச்சி அடைந்தான்.

"என் செல்லக்குட்டி! ஐ லவ் யூ டி" அதே மகிழ்ச்சியோடு சங்கவியை இழுத்து அணைத்த விக்ரம் அவளை முத்த மழையில் நனைந்து விட்டான்.

அப்படியே அவளோடு கட்டிலில் சரிந்த விக்ரம் அவர்களின் காதல் வாழ்க்கையை அழகாய் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றான்.

---------------------------------------

எல்லா வேலைகளையும் முடித்து சங்கவியை விக்ரமின் அறைக்கு அனுப்பிவிட்டு தங்கள் அறைக்கு கலைத்து போய் வந்த அனு உடையை மாற்றிக் கொண்டு அப்படியே மெத்தையில் சரிந்தாள்.

அங்கே இவளுக்காக வெகு நேரமாக காத்துக் கொண்டு அமர்ந்திருந்த ஹர்ஷாவை சிறிதும் இவள் கண்டுக் கொள்ளாமல் படுத்துவிட, கடுபபாகிப் போனான் ஹர்ஷா.

"அனு என்னடி நீ பாட்டுக்கு வந்த, டிரஸ் மாத்துன. இங்க ஒருத்தன் உக்காந்திருக்கேன் என்னை கூட கண்டுக்காம பொசுக்குன்னு படுத்துட்ட‌" ஹர்ஷா பாவமாக கேட்ட

"ப்ச் என்னங்க வேணும் உங்களுக்கு. காலைல இருந்து செம வேலை டையர்டா இருக்கு. எனக்கு தூக்கம் வருது பா" அவனை விட பாவமாக முகத்தை வைத்து அனு கூற ஹர்ஷாவின்‌ முகம் புஸ்சென்று ஆனது.

"ஏய் என்னடி இது நான் உனக்காக எவ்ளோ நேரமா வெயிட் பண்றேன். இப்படி சொன்னா என்ன அர்த்தம். என்னை பாத்தா பாவமா இல்லையா உனக்கு" ஹர்ஷா அப்பாவியாக தன்போக்கில் புலம்ப அதை கேட்க வேண்டிய அனுவோ அங்கே தூங்கி விட்டிருந்தாள்.

"அனு அனு அடியே பொண்டாட்டி!" ஹர்ஷா கத்தி பார்த்து அவள் தூங்கியதை கண்டு அதிர்ந்தே விட்டான். ஏனெனில் ஹர்ஷாவிற்கு இன்று நடந்த நிகழ்வுகளில் அவனின் திருமணம் நினைவு வந்தது.

அதோடு சேர்த்து அவன் முதல் இரவும் ஞாபகத்தில் வந்து நிற்க, ஆசையோடு அனுவுக்காக காத்திருந்தான். அவன் மனைவியோ இதை எல்லாம் அறியாது தூங்கிவிட பாவமாய் முகத்தை வைத்து அவளை பார்த்த ஹர்ஷா இதற்கு மேல் தான் என்ன செய்ய என எண்ணி அவளை மெதுவாக அணைத்து கொண்டு தானும் தூங்கினான்.

அதிகாலை கதிரோன் தன் கதிர்களை வீசி உலகுக்கு புத்துயிர் தந்து பாரெங்கும் பரவினான். அந்த காலை வேளையில் துயில் கலைந்து எழுந்த அனு தன் அருகே குழந்தை போல் தூங்கும் கணவனை கண் எடுக்காமல் பார்த்து வைத்தாள்.

'இவரால மட்டும் எப்படி இது முடியிது. தன்னை பத்தி யோசிக்காம மத்தவங்கள பத்தியே யோசிக்கிறாரே. என்ன மனுஷன்' அனு ஹர்ஷாவை பார்த்தபடி இந்த நாட்களில் நடந்த நிகழ்வுகளை அசைப்போட்டாள்.

ஹர்ஷா தன் அன்னையிடம் இப்போதெல்லாம் ஓரளவு நன்றாகவே பேசுகிறான். அவன் மனதில் அவரை தன் அன்னையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவரின் நலனுக்காக அவன் பேசுவது அனு அறிந்ததே.

இப்படி ஒவ்வொருவருக்காகவும் பார்த்து பார்த்து செய்யும் தன் கணவனை எண்ணி கர்வம் கொண்ட அனு வேறு உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்தாள்.

அதில் ஹர்ஷா தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டதை கவனிக்கவில்லை அவள். "என்ன செல்லம் அப்படி என்னத்த இவ்ளோ சீரியஸா யோசிட்டு இருக்கீங்க"

பேசியபடி ஹர்ஷா அனுவின் இடையை கட்டிக் கொள்ள அதில் தன்னிலை அடைந்த அனு "எல்லாம் உங்கள பத்தி தான் யோசிட்டு இருக்கேன் ஹர்ஷா" என்றாள்.

"என்னடி என்ன பத்தி என்ன யோசிட்டு இருந்த" ஹர்ஷா அனுவின் மடியில் படுத்தபடி கேள்வியை கேட்டு வைக்க, அனுவின் கைகள் தானாக அவன் தலையை கோதிவிட்டது.

"நீங்க எப்படி ஹர்ஷா இப்படி இருக்கீங்க‌. எல்லாருக்காவும் பார்த்து, எல்லாரும் நல்லா இருக்கனும்னு நினைச்சு. அதுக்காக உங்க மனசை பத்தி கூட கவலப்படாம. ப்பா என்னால எல்லாம் இப்படி இருக்கவே முடியாது தெரியுமா. நீங்க ரியலி கிரேட் ப்பா"

அனு ஹர்ஷாவை சிலாகித்து பேச, ஹர்ஷாவோ தன் மனைவியின் சிரித்த முகத்தை தான் பார்த்திருந்தான்.

"ஓய் பொண்டாட்டி என்னடி இன்னைக்கு இவ்ளோ அழகா இருக்க. எனக்கு என்னென்னமோ தோனுதே" ஹர்ஷா தாபமான குரலில் பேசியபடி அவள் கன்னத்தை கைகளில் தாங்கினான்.

அவன் செய்கையில் தான் பேசிக் கொண்டிருந்ததை மறந்து வெட்கம் கொண்ட அனு "என்ன ஹர்ஷா காலைலயே ஆரம்பிக்கிரீங்க. விடுங்க நான் குளிக்க போறேன்" என நைசாக நழுவ பார்த்தாள்.

"என்ன குளிக்க போறியா. நைட்டே மிஸ் பண்ணிட்டேன். இப்போ செம சான்ஸ் கிடைச்சிருக்கு‌. அதை அப்படியே விட்டுருவேனா" அவன் அனுவை நகரவிடாமல் பேசிக்கொண்டே அவள் மீது படர

அந்த அதிகாலை சூரியனும் மேகத்திற்குள் சென்று மறைத்துக் கொண்டது‌. இரவில் நடத்த நினைத்த அனைத்தையும் காலையில் நடத்திக் கொண்ட ஹர்ஷாவின் செய்கையால்.

"குட் மார்னிங் ப்பா! குட் மார்னிங் தாத்தா" அபிமன்யு தன் தாத்தா மற்றும் தந்தைக்கு காலை வணக்கத்தை சொன்னபடி ஹாலில் வந்து அமர்ந்தான்.

அப்போது தான் காலை ஏழு மணி ஆகி இருக்க ஒவ்வொருவரும் தங்கள் அறையினுள் இருந்து வெளியே வந்தனர்.

ஹர்ஷா முதற்கொண்டு அனைவரும் அங்கே இருக்க அங்கு இல்லாமல் இருந்த ஒரே ஆள் நம் விக்ரமே. அவன் எப்போதடா வருவான் அவனை வம்பிழுக்கலாம் என மாடியையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான் அபி.

ஆனால் அவனுக்கு அதற்குள் ஏதோ வேலை வந்துவிட விக்ரமை வம்பிழுக்க முடியாத கடுப்பில் தான் வெளியே சென்றான் அபி.

"ஹப்பா போய்ட்டான்டா. இனிமே நாம நிம்மதியா கீழ போகலாம்" அபிமன்யு கிளம்புவதை மேலே மறைந்து நின்று‌ பார்த்திருந்த விக்ரம் அதன்பின் தான் கீழே வந்தான்.

"வாடா மச்சான்" என்ற ஹர்ஷாவின் குரலோடு "வெல்கம் அத்தான்" என்ற அபியின் குரலும் கேட்டு அதிர்ந்து திரும்பினான் விக்ரம்.

"என்ன விக்ரம் அத்தான் வெளிய போனவன் எப்போ திரும்பி வந்தான்னு தானே பாக்குற ஹாஹாஹா. இந்த அபி எங்க போனாலும் வர வேண்டிய நேரத்தில கரெக்டா வருவான்"

அபி டயலாக் அடித்தவாறு வர நொந்து போய் பார்த்தான் விக்ரம். "அப்புறம் என்ன அத்தான் இன்னைக்கு இவ்ளோ லேட்டா வர. கண்ணு வேற நல்லா செவந்திருக்கு. என்னாச்சு" அபி கண்ணடித்து கேட்க விக்ரமுக்கு தான் வெட்கம் வந்துவிட்டது.

"நான் கூட நீ ஒரு அப்பாவினு நினைச்சேனே. நீ சரியான அடப் பாவியா இருப்ப போலையே" அவன் வாயில் கை வைத்து ஏதோ அதிசயம் நிகழ்ந்தது போல் பேச 'போச்சு அபி ஒட்டியே சாகடிக்க போறான்' என விக்ரமுக்கு அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை.

"டேய் அபி பாவம்டா என் மச்சான். அவனை நடு வீட்ல நிக்க வச்சு இப்படி ஓட்டுரியே. அவனை விடுடா" அப்போது அவனை காப்பாற்றும் விதமாக ஹர்ஷாவின் குரல் ஒலிக்க தன்னை காக்க வந்த தன் ஆருயிர் நண்பனை பெருமை பொங்க பார்த்தான் விக்ரம்.

அபி ஹர்ஷாவை குழம்பி போய் பார்க்க "நடு வீட்ல வச்சு பேசாம அப்படி சோபாவுல போய் ஓரமா உக்காந்து பேசுடா. என் மச்சான் பாவம்ல அவன் காலு வலிக்க போகுது" என ஹர்ஷா அடுத்து கூறிய வார்த்தைகளில் அபி உற்சாகமாக விக்ரம் முகம் பீஸ் போன பல்ப் ஆனது.

அதன்பின் என்ன அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து தங்களுக்கு சிக்கிய வாழ்நாள் அடிமையை போட்டு கதற கதற அவனை பேசக் கூட விடாமல் ஓட்டி தள்ளி விட்டனர்.

அதை வீட்டில் இருந்த அனைவரும் மகிழ்வுடன் பார்த்து ரசிக்க, ஹர்ஷா எதிர்ப்பார்த்த படியே அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்பட்டது.

"என் பேரனுங்க இதே போல எப்பவும் சந்தோஷமா இருக்கனும் ஆண்டவா" வாய் விட்டே அருணாசலம் மகிழ்வுடன் வேண்டிக் கொண்டார்.

"கண்டிப்பா ப்பா" என்று அருகில் இருந்த ராஜசேகரும் அதை ஆமோதிக்க சிறியவர்களின் ஆரவாரத்தை ஆதூரமாய்‌ பார்த்து வைத்தனர்.

மற்றவர்கள் அவ்வாறு வாய் விட்டு சொல்லவில்லை தானே தவிர அவர்கள் மனதிலும் அதே எண்ணம் தான் ஓடியது என அவர்கள் முகமே காட்டியது.

-மீண்டும் வருவான்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 34 (இறுதி அத்தியாயம்)

ஐந்து வருடங்களுக்கு பிறகு...

"டேய் மகனே சொல்ற போச்சு கேளுடா ஓடாத. என்னால முடியலை"

கத்தி கொண்டே தன் மகனின் பின்னே ஓடிக் கொண்டிருந்தான் விக்ரம். ஆனால் அவன் வார்த்தையை கொஞ்சமும் கண்டுக் கொள்ளாமல் குடுகுடுவென ஓடிக் கொண்டிருந்தான் அவன் அருமை புதல்வன்.

விக்ரம் சங்கவியின் மகன் சைரேஷ், இரண்டு வயது சிறுவன். விக்ரமின் கையில் சிக்காமல் ஓடி அவனுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தான். எல்லாம் எதற்கு சைரேஷை ஒரு டம்ளர் பாலை குடிக்க வைப்பதற்கு தான்.

அது என்னவோ சைரேஷ் விக்ரமின் ஜெராக்ஸ் காப்பி போல் இருக்க, அவன் செயல்களிலும் விக்ரமை கொண்டே பிறந்து விட்டான். தன் தந்தை விக்ரமை தினமும் காலை ஓட்ட பந்தயம் ஓட விடுவதில் தவறுவதில்லை.

வீட்டில் பொதுவாக அனைவரின் சொல்ப்பேச்சையும் கேட்கும் சைரேஷ், விக்ரமை மட்டும் டீலில் விட்டுவிடுவது விந்தையே. சைரேஷ் மாடிப்படியின் அருகே ஓடி செல்லும் நேரம் "சைரு" என்று ஒரு குரல் கேட்க அப்படியே நின்று விட்டான் பையன்.

"ஏன் சைரு குட்டி அப்பாவ இப்படி ஓட வைக்கிற. பாவம் தானே அவன். ஒழுங்கா பாலை குடிடா குட்டி"

ஹர்ஷாவின் குரல் தான் அது‌‌. அவன் குரல் கேட்ட மறுநிமிடம் அவனுக்கு என்ன புரிந்ததோ உடனே அந்த பாலை வாங்கி ஒரு மூச்சில் குடித்து விட்டான். சைரேஷுக்கு அவனின் ஹர்ஷா மாமா என்றால் உயிர் என்றே சொல்லலாம்.

"சைரு" என தற்போது இன்னொரு குரல் கேட்க ஆர்ப்பரித்து கொண்டு ஓடினான் சிறுவன்‌. அது வேறு யாரும் அல்ல ஹர்ஷா அனுக்ஷ்ராவின் நான்கு வயது தவப்புதல்வன் சைத்தன்யா.

எப்படி ஹர்ஷா விக்ரம் நண்பர்களாக இருந்தார்களோ அதே போல் தற்போது அவர்களின் பிள்ளைகளும் நண்பர்களாக வளர்கின்றனர்.

"சைத்து கண்ணா இந்தா பால் குடி" சங்கவி சைத்துவிடம் பாலை நீட்ட அவன் சமத்தாக வாங்கி குடித்தான்.

"என் செல்லக்குட்டிடா நீ. இவனும் தான் இருக்கானே தினமும் என்னை ரேஸ் ஓட விட்டுட்டு. இவனால நான் ஐஞ்சு கிலோ குறஞ்சிட்டேன்" சலித்துக் கொண்டே அவனை தூக்கி முத்தமிட்டான் விக்ரம்.

அருணாசலம் இல்லம் தற்போது அடுத்த தலைமுறையை நோக்கி நகர்ந்து விட்டது‌. சைத்தன்யா மற்றும் சைரேஷ் இருவரின் துள்ளலில் அந்த வீடே மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.

"அப்புறம் மச்சான் உன் டெல்லி டிரிப் எப்படி போச்சு. அம்மு என்ன பண்றா?"

"அது நல்லாவே போச்சு மச்சான். இந்த பில்டிங்கையும் நம்ம கம்பெனியவே கட்டி தர சொல்லிட்டாங்கடா‌. பிசினஸ் டீல் சக்சஸ். அப்புறம் அம்மு அவளுக்கு என்ன ரொம்ப ரொம்ப நல்லா இருக்கா. முன்ன இருந்த மாதிரி சின்ன புள்ளையா இல்லாம நல்லா மெச்சூர் ஆகிட்டா"

ஹர்ஷாவின் கேள்விக்கு விக்ரம் பதில் சொல்லும் நேரம் "அபிப்பா! மாமா!" என சைத்து மற்றும் சைரு கத்தியபடி வாசலுக்கு ஓட

"வந்துட்டான் டா. என் தங்கச்சிய பத்தி பேசுனா எப்படி தான் இவன் மூக்கு வேர்க்குமோ" என்ற விக்ரமின் உதறலான குரலே சொல்லியது வந்தது யாரென. "செல்லக்குட்டிஸ்" ஓடி வந்த இருவரையும் வாரி அணைத்து கொண்டான் அபிமன்யு.

"குட் மார்னிங் அண்ணா அத்தான்" என இருவருக்கும் பொதுவாக அபி வணக்கம் சொல்ல விக்ரம் "குட் மார்னிங்" என்க,

"வெரி குட் மார்னிங் டா அபி. உன் ஆப்பரேஷன் என்ன ஆச்சு?" என்று கேட்டான் ஹர்ஷா.

"சக்சஸ் ண்ணா" ஒரே வார்த்தையில் சொன்னான் அபி. அதில் புன்னகைத்த ஹர்ஷா "கங்கிராட்ஸ் அபி" என்றான் மனதார.

இந்த அறுவை சிகிச்சை அபியின் முதல் அருவை சிகிச்சை அல்ல. இருந்தாலும் ஹர்ஷா அவனை எப்போதும் உற்சாகப்படுத்தி கொண்டே இருப்பான்.

அபி தன் படிப்பை முடித்து அவன் அண்ணனுடன் மருத்துவமனைக்கு மூன்று வருடமாய் சென்றுக் கொணடிருக்கிறான். அதுவும் அபி நியூராலஜி பிரிவை எடுத்து படித்திருந்ததில் அவனுக்கு நிறைய அனுபவம் தற்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது.

ஹர்ஷா எப்படி இதய மருத்துவத்தில் பெயர் வாங்கி இருக்கிறானோ அதே போல் அபியும் நரம்பியலில் நன்றாகவே பெயர் வாங்க துவங்கியுள்ளான்.

அதே நேரம் தன் இளநிலை மருத்துவத்தை சென்னையில் முடித்த அம்மு தன்னுடைய முதுநிலை படிப்பை டெல்லியில் தான் பண்ணுவேன் என்று பிடிவாதம் பிடிக்க, அபியோ முடியவே முடியாது என்று நிலையாய் நின்றான்.

விக்ரம் தன் தங்கைக்கு ஆதரவாக நிற்க, அவனிடமும் சண்டைக்கு சென்றான் அபி. அவன் அம்முவிற்காக தன் படிப்பை சென்னையில் முடித்திருக்க

இன்று அம்முவோ தன் படிப்பிற்கு டெல்லி செல்ல வேண்டும் என்று கூற கடுப்பின் உச்சியில் இருந்தான் அபி. அதன்பின் ஹர்ஷா தான் அபியை பேசியே சரிக்கட்டி அவளை படிக்க டெல்லி அனுப்பி வைத்தான்.

அம்மு இப்போது இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள். அவளுக்கு பிடித்தது போல் குழந்தைகள் நலப் பிரிவையே தேர்வு செய்து படிக்கிறாள்.

குடும்பத்தினர் அனைவருக்கும் அம்முவின் இந்த சுயமான முடிவு மகிழ்ச்சியையே தர முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சுற்றுவது நம் அபிமன்யுவே.

போதாதற்கு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரே தங்கள் திருமணத்தை நடத்த வேண்டும் என அம்மு முடிவாக சொல்லிவிட, அதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் முழுதாக இருக்க அபியின் நிலையை சொல்லவும் வேண்டுமா.

எனவே அந்த கோபம் கடுப்பு எல்லாவற்றையும் மறக்க தன் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தி உழைத்து வருகிறான் அபி. அதுக்கு இன்றைக்கு நடந்த அறுவை சிகிச்சையும் ஒரு சான்று.

ஆம் மூளையில் சிக்கலான ஒரு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக அபி முடித்து வந்துள்ளான். அதை எண்ணி அவன் தந்தையும் அண்ணனும் மனதிற்குள் பெருமிதபட்டு அமர்ந்திருந்தனர்‌.

"ஓகே அபி நீ போய் ரெஸ்ட் எடு. நைட் புல்லா ஆப்ரேஷன் செஞ்சதுல டயர்டா இருப்ப" என்று ஹர்ஷா சொன்னபின் மெதுவாக தன் அறையை நோக்கி நகர்ந்து சென்றான் அபி.

"சரி மச்சான் நானும் போய் ஹாஸ்பிடல் கிளம்பறேன்" என்ற ஹர்ஷா தன் அறைக்குள் சென்று விட்டான். அங்கே அனு அவர்கள் மகனை பள்ளிக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

ஹர்ஷாவின் மகன் அவனை போல் சமர்த்தாக பள்ளிக்கு கிளம்பிவிட்டான். "செல்லக்குட்டி கிளம்பியாச்சா. சரி கீழ இருங்க அப்பா ரெடி ஆகிட்டு வந்திடுறேன்" ஹர்ஷா சைத்துவை தூக்கி கொஞ்சவும் அவன் கீழே ஓடி விட்டான்.

ஹர்ஷா திரும்பவும் "ஹர்ஷா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என அனு மெதுவாக அவனிடம் பேச்சை துவங்கினாள்‌.

"என்னடி" என ஹர்ஷா கேட்கவும்

"ஹர்ஷா‌ பெரிய மாமா இறந்த நாள் வருது. வருஷா வருஷம் இப்போ நாம அத்தைக்கும் பெரிய மாமாக்கும் திதி தரோம். ஆனா இந்த வருஷமாவது வசுந்தரா அத்தைக் கூட அந்த வீட்டுக்கு போய்ட்டு வரலாமே"

அனு சொல்லிவிட்டு ஹர்ஷா முகத்தையே பார்க்க அவன் முகம் ஏதோ போல் ஆனது. என்ன தான் அவன் பிறப்பின் ரகசியம் அவன் அறிந்து மூன்று வருடங்கள் ஓடி இருந்தாலும் அதன் தாக்கம் இன்றுவரை ஹர்ஷாவை தொடருகிறது.

வசுந்தராவிடம் ஹர்ஷா நல்ல முறையில் பேசியே உறவை வளர்த்து வந்தாலும், அது எல்லாம் அவன் வீட்டினர் கூறிய ஒற்றை வார்த்தைக்காக தான்.

வசுந்தரா மனதில் அவர் இறப்பதற்குள் ஒரு நாளாவது அவர் காதல் கணவருடன் வாழ்ந்த அந்த வீட்டில் அவர் மகனுடன் இருக்க வேண்டும் என்பது பேராசையாகவே இருக்கிறது.

இன்னும் சொல்ல போனால் இது சாதாரண ஒரு பெண்ணின் நியாயமான ஆசை தான். ஆனால் வசுந்தராவின் வாழ்வில் நடந்த இன்னலின் காரணமாக இது அவருக்கு பேராசையாகவே இருந்து வருகிறது.

கடந்து ஐந்து ஆண்டுகளாக கணபதி ராம் ஆயுள் தண்டனை கிடைத்து சிறையில் இருக்க அது எதுவும் வசுந்தராவை பாதிக்கவில்லை.

அவர் சென்று கணபதியையும் பார்க்கவில்லை. சிறையில் இருந்த கணபதிக்கு மனதளவில் இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றது. அதோடு தன் வாழ்நாளை சிறையில் கழித்து வருகிறார் அவர்.

எல்லாவற்றும் தனக்கு முடிந்துவிட்டது என்றிருந்த வசுந்தராவிற்கு ஹர்ஷாவுடன் அந்த வீட்டில் ஒரு நாள் தங்க மட்டும் ஆசை இருந்தது.

எனவே அவனிடம் இதை கேட்டு பார்த்தார். ஆனால் அதை எல்லாம் அவர் நோகாது மறுத்து வந்தான் ஹர்ஷா.

தற்போது ராஜாராமின் நினைவு நாளிலாவது அந்த வீட்டில் ஒரு நாள் தன்னுடன் தங்க சம்மதிப்பானா ஹர்ஷா என்று அனுவின் மூலம் பேச முயல்கிறார் வசுந்தரா.

"அனு ஹாஸ்பிடல்ல வொர்க் நிறைய இருக்குமா. அதோட திதி தானே எப்பவும் போல ஒரு நல்ல நாள் பார்த்து இங்கையே தந்திடுவோம். இன்னும் எதுக்கு கோயம்புத்தூர் வரைக்கும் போகனும்"

ஹர்ஷா நாசுக்காக மறுத்து கிளம்ப பார்க்க "எதை நினைச்சு நீங்க இப்படி ஓடுறீங்க ஹர்ஷா. எனக்கு புரியல" என அனு அவனை நிறுத்தினாள்.

"என்ன எதுக்காக நான் ஓடனும். எனக்கு ஹாஸ்பிடல்க்கு டைம் ஆச்சு. அதான் கிளம்பிட்டு இருக்கேன்‌. நீ எது பேசுறதா இருந்தாலும் ஈவ்னிங் நான் வந்ததுக்கு அப்புறம் வந்து பேசு"

ஹர்ஷா கடகடவென பேசி வெளியே செல்ல திரும்ப, அவன் கையை பிடித்து தடுத்து நிறுத்தினாள்.

"ஹர்ஷா ஏன் இப்படி நடந்துக்குறீங்க. மத்த எல்லா விஷயத்தையும் மெச்சூர்டா நடந்துக்குற நீங்க ஏன் இந்த விஷயம்னு வரப்ப இவ்ளோ சைல்டிஸா நடந்துக்கிறீங்க.

நீங்க உண்மைய விட்டு எவ்ளோ தூரம் விலகி போனாலும் நடந்த உண்மைய மாத்த முடியாதுபா. தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க. நடந்த விஷயத்துக்கு நீங்க எந்த விதத்திலையும் பொறுப்பில்லை. அதனால எல்லாத்தையும் யோசிச்சு பாருங்க. அதோட வசுந்தரா அத்தை கேட்டதை பத்தியும் கொஞ்சம் கண்சிடர் பண்ணுங்க.

அப்பா தரதா சொன்ன சொத்து எல்லாத்தையும் வேண்டாம்னு சொன்னீங்க. அதை நான் எதுவும் சொல்லலை. பிகாஸ் அது உங்க விருப்பம். ஆனா வசுந்தரா அத்தை ஒரே ஒரு நாள் தானே உங்களோட கேக்குறாங்க. அதுக்கு ஏன் இவ்ளோ யோசிக்கிறீங்க"

அனு தன் மனதில் தோன்றியதை எல்லாம் கூறிவிட்டு இதற்கு மேல் அவன் இஷ்டம் என அமைதியாக நகர்ந்து விட்டாள்.

அனு பேசியதை நினைத்துக் கொண்டே ஹர்ஷா மருத்துவமனை சென்று சேர்ந்தான். அன்றைய நாள் முழுவதும் வேலை பார்த்தாலும் வசுந்தராவை குறித்த எண்ணம் அவன் மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது.

"அண்ணா போலாமா" ஹர்ஷா யோசனையில் இருக்கும் போது அபி வந்து அழைக்க அவனோடு சேர்ந்து கிளம்பினான்.

"என்ன ண்ணா ஏதோ யோசைனை பண்ணிட்டு இருக்க. எதாவது முக்கியமான விஷயமா" அபி வண்டியை ஓட்டிய படி கேட்க இல்லை என தலை அசைத்தான் ஹர்ஷா. அதன்பின் அபியும் எதுவும் கேட்கவில்லை.

"அனு என்னம்மா காலேஜ்ல இருந்து வந்துட்டியா" என தன் அறைக்குள் நுழைந்த உடனே ஹர்ஷா அனுவிடம் பேச ஆரம்பித்தான். அனு தற்போது ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறாள். எனவே அவ்வாறு கேட்டவாறு வந்தான்.

"ஹான் இப்போ தான் ஹர்ஷா" என்ற அனுவை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான் ஹர்ஷா. அவன் செய்கையில் புன்னகைத்த அனு "என்ன ஹர்ஷா சார் இன்னைக்கு வந்த உடனே பொண்டாட்டிய தேடி ஓடி வந்திட்டீங்க" என்றாள்.

"ஏன் நான் என் பொண்டாட்டிய தானே தேடி வந்தேன். அப்புறம் என்னடி" என்று ஹர்ஷா தன் அணைப்பை தளர்த்தி அவளை அழைத்து சென்று அமர்ந்து கொண்டான்.

அவன் யோசனை முகத்தை பார்த்த அனு "என்னாச்சு ப்பா. எதை பத்தி இவ்ளோ டீப்பா திங்க் பண்றீங்க" என கேட்க

"நீ காலைல சொன்னதை நினைச்சு தான் அனு. நீ சொன்னதை ஏன் செய்யக் கூடாதுனு தோனுது. அவங்க மனசை தெரிஞ்சே கஷ்டப்படுத்தறோமோன்னு ரொம்ப கில்டா இருக்கு. அதான் போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்"

ஹர்ஷா தான் யோசித்ததை தீர்க்கமாக கூற அனு மகிழ்வுடன் அவனை அணைத்துக் கொண்டாள்.

அதன்பின் அதை தன் வீட்டு ஆட்களிடம் பகிர்ந்து அனைவரும் சேர்ந்து கிளம்பலாம் என அனைவரையும் கிளப்பி விட்டான் ஹர்ஷா. இன்னும் ஒரு வாரத்தில் திதி இருக்க அம்முவும் வந்திருக்க அவளையும் சேர்த்தே அழைத்து சென்றனர்.

வெகு நாட்கள் இல்லை வெகு வருடங்களுக்கு பின்னர் அந்த வீட்டில் தன் மகனோடு உள்ளே நுழைந்தார் வசுந்தரா.

அந்த வீட்டின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் வசுந்தரா அவர் கணவன் ராஜாராமோடு வாழ்ந்த நினைவுகளை இன்னும் பசுமையாக நினைவுப்படுத்தியது.

ஏற்கனவே ஆட்களை விட்டு வீட்டை சுத்தம் செய்திருந்ததால் ராஜாராமின் வீடு புத்தம் புதிதாய் இருக்க, ஆங்காங்கே வசுந்தரா ராஜாரமின் புகைப்படங்கள் தொங்கிக் கொண்டிருந்தது.

அருணாசலம் மற்றும் விஸ்வநாதன் வீட்டினர் அனைவருமே வந்திருக்க, அந்த புகைப்படங்களில் புன்னகை முகத்தில் தழவ காதலோடு தன் மனைவியுடன் நிற்கும் ராஜாராமையே பார்த்திருந்தனர்.

அவரின் புன்னகை அனைவரையும் கவரும் விதம் வசீகரமாய் இருந்தது. 'ரெண்டு பேரும் எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க. இவங்கள கடவுள் ஏன் இவ்ளோ தூரம் கஷ்டப்படுத்தி பாத்தாரு' என்பதே அனைவரின் வருத்தமாய் போயிற்று.

ஆனால் அதே நேரம் ராஜாராமின் நகலாய் ஹர்ஷா நிற்க பலரின் மனதில் சொல்லொன்னா உணர்ச்சிகள் எழுந்தது உண்மையே.

இவ்வளவு நாட்கள் ஹர்ஷா தனக்கு மட்டுமே மகனாக இருக்க வேண்டும் என்று கண்மூடி தனமாக இருந்த ராஜசேகரின் மனம் ஹர்ஷாவை 'இவன் தன் அண்ணனுக்கு மகனும் கூட' என்று எண்ணத் துவங்கியது.

அருணாசலமோ தன் மகனே பேரன் உருவில் வந்து நிற்கிறான் என்று எண்ணி எண்ணி பூரித்தார். அவருக்கு அதற்கு மேல் வேறு எதுவும் தேவையாய் இருக்கவில்லை.

வசுந்தராவின் மனநிலையோ மற்றவரின் மனநிலையை விட வேறாய் இருந்தது. அவருக்கு தன் ஜென்ம சங்கல்பம் நிறைவடைந்த நிம்மதி அந்த நிமிடம் எழுந்தது.

இப்படியே அவர் விதி முடிந்தால் கூட அதே இடத்தில் சந்தோஷமாக இறந்துவிடுவார் வசுந்தரா. அப்படி ஒரு மனநிலையில் இருக்கிறார்.

ஹர்ஷாவோ தான் ஒருவனின் வரவில் அனைவரும் மகிழ்ச்சி அடைய அது தனக்கு போதும் என்று மட்டும் மனதிற்குள் எண்ணியவன் அதற்கு மேல் எதையும் போட்டு குழப்பிக் கொள்ளவில்லை.

இங்கு வரும் வரை கூட மனதில் ஏதேதோ போட்டு குழப்பிக் கொண்டு தான் வந்திருந்தான் ஹர்ஷா. ஆனால் தற்போது தன் மனதை எதையும் யோசிக்கவிடாது தன்னை சுற்றி இருந்தவர்களை மட்டும் பார்த்து நின்றான்.

அவர்கள் மகிழ்விலே தன் மனதின் நிறைவும் என்பதை உணர்ந்த ஹர்ஷா தன் உணர்வுகளை மறந்தபடி தன்னை பெற்றவர்களுக்காக அந்த நாளை அர்ப்பணித்தான்.

அபிமன்யுவோ பல நாட்கள் கழித்து பார்த்த தன் காதலி அம்முவை தனியாக தள்ளிக் கொண்டு போய் நன்றாக கடலை வறுத்து கொண்டிருந்தான்‌.

பல நாட்கள் கழித்து கிடைத்த அருகாமையில் இருவரும் தங்கள் காதல் உலகில் சஞ்சரித்து கொண்டிருக்க சுற்றி இருந்தவர்களை கண்டுக் கொள்ளவே இல்லை. அவர்களுக்கு அவர்கள் பிரச்சினை!

வசுந்தராவின் பிள்ளைகள் ஆதர்ஷ் மற்றும் ரித்திகா இருவருக்கும் அவர்களின் தந்தை தன் தாய் வாழ்வில் நடத்திய கொடுமைகள் எல்லாம் கேட்டு அதிர்ந்து தான் போய் இருந்தனர்.

ஒருவர் காதல் என்ற பேரில் அவர் காதலித்த பெண்ணின் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் கீழிறங்கி நடந்துக் கொள்வாரா என்று வருத்தப்பட்டனர்.

அதே நேரம் தங்களுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான் அதுவும் அது அனுவின் கணவன் ஹர்ஷவர்தன் என்றும் அறிந்து சற்று மனம் மகிழ்ந்தனர் என்றே சொல்லலாம்.

ஆனால் ஹர்ஷாவின் தந்தையை கொன்றது தங்கள் தந்தை எனும் போது இவர்கள் இருவரும் குற்ற உணர்வில் அவனிடம் இருந்து விலகியே இருக்க, ஹர்ஷா எப்போதும் போல் அவர்களை விலக்காது நல்லபடியாக நடந்துக் கொண்டு அவர்களை சகஜமாக வைத்திருந்தான்.

இப்படி ஒவ்வொருவரும் அவரவர் எண்ணத்தில் இருக்க அந்த ஒரு நாள் இரவு அமைதியாகவே கழிந்தது. அடுத்த நாளே சென்னை நோக்கி புறப்பட்டு விட்டனர் அனைவரும்.

வசுந்தரா மட்டும் இன்னும் சில நாள் அங்கிருந்து விட்டு வருவதாக கூற அவர் மனதை புரிந்தது போல் அவரை மட்டும் அங்கு விட்டு வந்தனர். அவர் மனம் அந்த வீட்டோடு தன் பழைய நினைவுகளோட நின்றுவிட்டது.

இங்கே அம்மு மீண்டும் டெல்லி கிளம்பி வேண்டும் என்றிட, அவளை தன் அறைக்கு தள்ளிக் கொண்டு சென்ற அபி கொடுக்க வேண்டியதை கொடுத்து வாங்க வேண்டியதை கறாராக வாங்கியே விட்டான்.

"இன்னும் கல்யாணத்துக்கு ரெண்டு வருஷம் காத்திருக்கனுமே. இங்கேயே படிச்சா தினமும் பாக்கவாவது செய்வேன். இவ டெல்லி போய் உக்காந்துகிட்டு என் உயிர வாங்குறா"

அவள் சென்றபின் அபிமன்யு சோகத்தில் அம்முவை திட்டியும் புலம்பியும் தள்ளிக் கொண்டிருந்தான்‌.

இன்னும் இரண்டு வருடங்கள் ஆனாலும் வாழ்க்கையை நிம்மதியாக ஆரம்பிக்கப் போகும் இந்த ஜோடி தங்கள் வாழ்வில் இன்பத்தை மட்டுமே பார்க்கவும் போகின்றனர். அதற்கு இந்த பிரிவும் அவசியமே!

இப்படியே நாட்கள் அமைதியாக செல்ல ஒரு நாள் ஹர்ஷா மருத்துவமனை விட்டு வரும் நேரம் அனு அவனுக்காக காத்திக் கொண்டிருந்தாள்.

"வாங்க ஹர்ஷா. வாங்க" அனு பரபரப்பாக அழைக்க அவள் முகத்தில் இருந்த ஜொலிப்பை குழப்பமாக பார்த்த ஹர்ஷா "என்ன அனு இன்னைக்கு ரொம்ப பரபரப்பா இருக்க. என்னடி விஷயம் உன் முகம் வேற ஜொலிக்குது" என்று கேட்டான்.

"அது ஹர்ஷா. நான் நானு மறுபடியும் பிரெக்னெட்டா இருக்கேன்" ஒருவாறு சொல்லி முடித்த அனு வெட்கத்துடன் ஹர்ஷாவை பார்க்க, அவன் முகம் முழுவதும் புன்னகை.

"என்னடி செல்லம் உண்மையாவா" என சந்தோஷப்பட்ட ஹர்ஷா அவளை இறுக்கி அணைத்து முத்த மழை பொழிந்து தள்ளினான். அதன்பின் வீட்டில் இருப்பவர்களுக்கு சென்று ஹர்ஷா கூற அனைவரும் மகிழ்ச்சியில் துள்ள வீடே விழாக்கோலம் கொண்டது.

அனுவை அதற்கு பின் வந்த நாட்கள் எல்லாம் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டனர் வீட்டினர். ஹர்ஷாவே மருத்துவர் என்பதால் ரிப்போர்டை பார்த்து தனக்கு பிறக்கு போவது பெண் என அறிந்துக் கொண்டான்.

அதை வீட்டினரிடமும் பகிர்ந்திருக்க இதுவரை இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்து இப்போது பெண் குழந்தை பிறப்பதில் அனைவரும் மகிழ்ச்சி கடலில் இருந்தனர்.

அன்றும் அப்படித்தான் சிரிப்பும் மகிழ்ச்சியுமான ஒரு மாலை வேளையில் அபி விக்ரமிடம் வம்பு செய்துக் கொண்டிருந்தான்‌.

"சைத்து சைரு கண்ணா ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க. உங்க அம்மா அத்த வயித்துல இருக்க பாப்பா நம்மலோட பாப்பாடா. நாம தான் நல்லா பாத்துக்கணும்" ஹர்ஷா பேசிக் கொண்டிருந்த நேரம் வந்த விக்ரம்

"ஆமாடா சைரு கண்ணா‌. அது நம்ம பாப்பா. பாப்பா மட்டும் பிறந்து வளரட்டும் அதை நாம தான் தூக்கப் போறோம்டா" என்று தன் மகனிடம் கூறிக் கொண்டிருந்தான்.

அதை கேட்டு குறுக்கே புகுந்த அபி "ஏதே நீங்க தூக்க போறீங்களா. எங்க குட்டி பிரிண்செஸ்க்கு ஒரு பிரின்ஸ நாங்க தேடி புடிச்சு தருவோம். போயும் போயும் உன் பையனுக்கு எல்லாம் தரமாட்டோம் விக்ரம் அத்தான். என்ன சைத்து குட்டி" என்று மகனையும் கூட்டு சேர்த்தான்.

"ஹேய் எங்களை என்னன்னு நினைச்ச. இங்க இருந்து பொண்ணு மட்டும் எடுப்பீங்க. ஆனா பொண்ணு தர மாட்டீங்களா. இது எந்த ஊரு நியாயம்" என்ற விக்ரம் தன் இரண்டு வயது மகனை பார்த்து

"டேய் மகனே நாம தான்டா தாய்மாமன் குரூப்பு. பொண்ணு நமக்கு தான். என்ன பொண்ண தூக்கிருவல்ல" என்று கேட்க அவனுக்கு என்ன புரிந்ததோ குதூகலத்துடன் "ஆமா ஆமா" என கத்தினான்.

அதை கண்ட அபி சைத்துவிடம் திரும்பி "டேய் மகனே பொண்ண தூக்க கேங்கா இறங்குவானுங்கடா‌. உன் தங்கச்சிய அவன் பக்கமே அனுப்பக் கூடாது. என்ன உன் தங்கச்சிய நல்லா பாத்துப்பல்ல" என்று கேட்க

"ம்ம் ஓகே அபிப்பா. என் தங்கச்சிய நான் ரொம்ப பத்திரமா பாத்துப்பேன்" என குதித்து கொண்டே கூற

அவன் கண்ணம் வழித்து முத்தம் வைத்த அபி "கேட்டுக்கோ விக்ரம் அத்தான். எங்க சிங்ககுட்டி சைத்துவ மீறி எவனும் வர முடியாது" என்று கெத்தாக காலரை தூக்கிவிட்டான்.

"அங்க சிங்கக்குட்டினா என் சைடு சிறுத்தக்குட்டிடா. நீங்க உங்க பொண்ண எங்க ஒளிச்சு வச்சாலும் உள்ள புகுந்து தூக்குவோம்டா" விக்ரம் சரிக்கு சரியாக அபியிடம் வம்பு வளர்த்தான்.

இவர்கள் இருவரும் செய்யும் அலப்பறையை கேட்டபடி வந்த பார்வதி தன் தலையிலே அடித்துக் கொண்டார்.

"ஏன்டா புள்ளையே இன்னும் பிறக்கலை. அதுக்குல மாப்பிள்ளை பாக்க இறங்குறீங்களா. இவனையெல்லாம் எப்படிமா கவி சமாளிக்கிற" அபி விக்ரமிடம் ஆரம்பித்து சங்கவியிடம் முடித்தார் பார்வதி.

"என்ன பண்றது அத்த. எல்லாம் என் தலை எழுத்து. உங்க புள்ளைட்ட வந்து மாட்டிக்கிட்டேன்" சங்கவி சலித்துக் கொண்டே கூற

"அதுக்கு தான் சிஸ்டா நானே உனக்கு நல்ல மாப்பிள்ளையா பாக்குறேன்னு சொன்னேன்‌. நீ இவன் தான் வேணும்னு தலைகீழா குதிச்சிட்ட. இனி ஒன்னும் பண்ண முடியாது.

வீட்ல இவன் தொல்லை பத்தாதுன்னு ஆபிஸ்லையும் சேந்து இவன்கூட எப்படி தான் குப்பைக் கொட்டிட்டு இருக்கியோ" அபி சைடு கேப்பில் தானும் விக்ரமை ஓட்டினான்.

"பாரு ஹர்ஷா உன் மச்சான எல்லாரும் எப்படி கிண்டல் பண்றாங்கனு" விக்ரம் சிறுவன் போல் தன் நண்பனிடம் புகார் செய்ய

"சரி விடுங்கப்பா என் மச்சான் பாவம்ல. அவன போய் ஓட்டிட்டு இருக்கீங்க" ஹர்ஷா புன்னகையுடன் விக்ரமுக்கு ஆதரவாக பேசி வைத்தான்.

"நீ சும்மா இருண்ணா. இவரு தங்கச்சி டெல்லி போறேன்னு சொன்னப்ப வாய் கிழிய பேசுனாருல்ல. இப்ப பேச வேண்டியது தானே. இப்ப மட்டும் என்ன உன்கிட்ட கம்ப்ளைண்டு" அபி நேரம் பார்த்து விக்ரமை வைத்து செய்தான்.

சிரிப்புடன் நேரம் கழிய அப்படியே சபையும் கலைந்தது. விக்ரம் அறைக்குள் சென்ற மறுநிமிடம் தன் மனைவி சங்கவியை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான்.

"ஏன்டி என்கூட இருக்கிறது உனக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கா என்ன. அங்க வச்சு ஆமான்னு சொல்ற"

"இல்லையா பின்ன உங்க புள்ளைய கூட நான் சமாளிச்சிறுவேன்‌. ஆனா உங்கள என்னால சமாளிக்க முடியலையே. அவனை விட நீங்க தான் ரொம்ப சேட்டை பண்றீங்கப்பா" விக்ரம் கேட்டதற்கு நொந்து போய் கூறினாள் சங்கவி.

"அதுக்கு என் கூட இருக்க முடியலைன்னு சொல்லுவியா. என்ன நிஜமாவே பிடிக்கலையா" விக்ரம் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க

சங்கவி சிரிப்புடன் அவனை அணைத்துக் கொண்டவள் "என் செல்லக்குட்டிக்கு கோவம் வந்துருச்சா" என விக்ரமின் கண்ணத்தில் முத்தமிட்டாள்.

"அது சும்மா உங்கள கிண்டல் பண்ண சொன்னதுப்பா. உங்களோட இந்த ஸ்வீட் இம்சை புடிச்சு போய் தானே கூடவே சுத்துறேன். என் லவ் புரியலையா"

சங்கவி மையலுடன் விக்ரமை பார்த்து வைக்க அவளை காதலோடு நெருங்கிய விக்ரம் "அப்படியா செல்லம் மாமாவ உனக்கு அவ்ளோ பிடிக்குமா" என்று பேசியபடி அவளை அணைத்துக் கொண்டு இதழை நெருங்கும் நேரம்

"அப்பா.....!" என்ற சத்தம் கேட்க பதறிப்போன சங்கவி விக்ரமை விட்டு தள்ளி நின்றாள்.

அதில் கடுப்பான விக்ரம் "எனக்கு வெளிய இருந்து எவனும் சூன்யம் வைக்க போறது இல்லடி. நீ பெத்து வச்சிருக்கியே ஒரு குட்டி சாத்தான் அவன் தான்டி எனக்கு சூன்யம் மான்யம் எல்லாம்" என்றான்.

அவன் பேசி முடிக்கவும் சைரு விக்ரமிடம் வரவும் சரியாக இருக்க, என்னதான் கிண்டல் பேசினாலும் விக்ரமுக்கு தன் மகன் என்றால் உயிர் தான்.

"சைரு குட்டி" என அப்படியே அவனை வாரி தூக்கிய விக்ரம் அவன் கண்ணத்தில் முத்த மழை பொழிந்தான். விக்ரம் சங்கவியின் வாழ்க்கை எப்போதும் இதே போல் அதிரடியாக கலகலப்பாக செல்லும் என்பதில் ஐயமில்லை!

அனு அறைக்குள் வரும் நேரம் "அப்பா அப்புறம் என்னாச்சு" என்ற சைத்துவின் குரலுக்கு ஹர்ஷா ஏதோ கூற என சைத்தன்யாவிற்கு கதை சொல்லி அவனை தூங்க வைத்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.

அதை புன்னகையுடன் ஹர்ஷாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்த அனுவிற்கு அவள் வாழ்வில் கிடைத்தவற்றில் மிகவும் சிறந்த விஷயம் ஒன்றென்றால் அது ஹர்ஷா என்றே தோன்றியது.

சைத்து தூங்கிவிடவே அவன் எழாதவாறு தான் எழுந்து "என்னடி என்ன அப்படி பாக்குற" என ஹர்ஷா அனுவை உரசியவாறு போய் அமர்ந்தான்‌.

அதற்கு புன்னகைத்த அனு "என் லைப்ல கிடைச்ச பெஸ்ட் கிஃப்ட் நீங்கதான் ஹர்ஷா" என்க

"ம்ஹூம் அப்படியா செல்லக்குட்டி. நான் உனக்கு கிப்டோ இல்லையோ எனக்கு தெரியாது. பட் நீ என் லைஃப்ல வந்த பெரிய லக்கி சேம்டி. என் வாழ்க்கையில என்ன நடந்தும் நான் மத்தவங்களுக்காக பாத்தா எனக்காக பாக்க என கூட நீ இருந்த பாத்தியா. அது எப்பவும் இங்க இருக்கும்டி" என தன் இதயத்தை சுட்டி காட்டி அவளை அன்போடு தழுவிக் கொண்டான்.

ஹர்ஷாவின் அணைப்பில் சுகமாய் சாய்ந்திருந்த அனு "உங்களோட இந்த குணம் தான் ப்பா என்னை உங்க பின்னாடியே சுத்த வைக்குது. இங்க இருக்க எல்லாருக்கும் நான் இருக்கேன்ற பீளிங்க நீங்க தரீங்க. பட் உங்களுக்காக நீங்க எதுவுமே பண்ணிக்க மாட்டேங்குறீங்க. அப்ப உங்களுக்காக நான் தானே யோசிக்கனும்" என புருவம் உயர்த்தி கேட்க

அவள் புருவத்தில் தன் இதழை ஒற்றி எடுத்த ஹர்ஷா "ஆமா மேடம் எனக்காக நீங்க தானே இருக்கீங்க. அதை காட்டுற மாதிரி சைத்துவ தந்த இப்போ இன்னொரு செல்லக்குட்டிய தரப்போற. இதைவிட வேற என்னடி வேணும்" என்று உணர்ச்சிகரமாக கூறியவன் அனுவின் வயிற்றில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தான்.

அந்த நேரம் பார்த்து அவன் அருமை மகள் அனுவின் வயிற்றில் ஒரு பக்கம் தன் அசைவை உணர்த்த அதன் அசைவில் "ஏய் செல்லம் என் குட்டிம்மா 'அப்பா நான் உங்களை பீல் பண்றேன்னு" சொல்றா பாரு" என்று மகிழ்வில் ஆர்ப்பரித்தான்.

"ம்ம் உங்க பொண்ணுக்கு இப்பவே அவ அப்பாவ தான் பிடிக்குது போல" என்று சற்று பொறாமையை வார்த்தையில் சேர்த்து கூற

"என்னடி உன் பொண்ணு கூடவே போட்டி போடுற. என்மேல அவ்ளோ பொஸசிவ் பீலாடி" என்று அனுவை கொஞ்ச ஆரம்பிக்க, அனு ஹர்ஷாவின் செய்கையில் மனமார சிரித்தாள்.

காற்றும் சேர்ந்து அவர்கள் ஆனந்தத்தில் மகிழ்வு கொண்டு சன்னலின் வழியே தன் உணர்வுகளை வெளிப்படுத்தி சென்றது.

ஹர்ஷாவின் வாழ்வில் இனி இன்பம் துன்பம் எது வந்தாலும் அவன் குடும்பம் இருக்கும் வரை அவனும் அனைத்தையும் அவர்களுக்காய் தாங்கி நிற்பான். அவன் பின்னே என்றும் அனுவும் இருப்பாள். இவர்கள் வாழ்வும் சிறப்பாக செல்லும் என்பதிலும் சந்தேகமில்லை!

-முற்றும்
 

Shanthi kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai friends,

ரகுக் குல கர்ணா கதை நிறைவு அடைஞ்சிருச்சு. இது தான் கடைசி அத்தியாயம். இதுவரை படிச்சு பார்த்து உங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட் தந்து ஊக்குவித்த எல்லா நட்பூஸ்க்கும் என்னோட நன்றிகள் :love::love::love:

என்னோட ஹெல்த் இஸ்ஷூவால கடைசி எபி போட ரொம்ப லேட் ஆச்சு. அதை அண்டர்ஸ்டேன்ட் பண்ண எல்லா பிரண்ட்ஊக்கும் என்னோட நன்றிகள் பல:):):)

I'm really going to miss Harsha and all friends. What about you...
Seekiram adutha story oda varen

Bye friends
 
Top