All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிந்தியனின் " இனி எல்லாமே நீ தானே " கதை திரி....

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
21 இனி எல்லாமே நீ தானே

இரவு பொழுது கழிய காலை சற்று தாமதாமாகவே எழுந்த பாரதி முதலில் புரியாமல் கண்களை கசக்கி பார்த்து தான் இருக்கும் இடம் உணர்ந்து கொண்டாள்...

மணியை பார்க்க அது எட்டு காட்டியது அவசரமாக பாத்ரூம் நுழைந்து குளித்து முடித்துவிட்டு தயார் படுத்தி கொண்டு கீழே இறங்கி வந்தாள்....

ஏற்கனவே அங்கு தாயாராக அபி ஸ்குல் கிளம்பியும் வெற்றி ஆபிஸ் கிளம்பியும் உணவு அருந்த அமர்ந்து கொண்டு இருந்தனர்...

பாரதி " சாரி கொஞ்சம் தூங்கிட்டேன் அதான் "
என தயங்கி தயங்கி கூறினாள்...

வெற்றி " இது என்ன ஆஃபிஸா லேட் ஆகிடுச்சுனு ரீஸன் சொல்ல வீடு உனக்கு என்ன தோனுதோ அத செய் "

அபி " குட் மார்னிங் மா "

பாரதி " குட் மார்னிங் செல்லம் "
" அம்மா இன்னைக்கு கொஞ்சம் லேட்டா எழுத்துடன் நாளைக்கு சீக்கிரமா எழுந்து உன்ன கிளப்பிவிடுறேன் "

அபி " இட்ஸ் ஓகே மா "
" வாங்க சாப்பிடலாம் "

பாரதி " நீங்க சாப்பிடுங்க நான் வைக்குறேன் "
என்றவாறு அங்கு இருந்த வேலையாளை அனுப்பி விட்டு இருவருக்கும் உணவு பறிமாறினாள்...

இது மூவருக்குமே புதிய அனுபவமாக இருந்தது.
எப்போதும் வேலையாள் வைக்கும் உணவை தானே எடுத்து போட்டு கொண்டு தேவையானதை சாப்பிடும் இருவரும் இன்று பாரதி பறிமாறிக் சற்று அதிகமாகவே சாப்பிட்டனர்....

நாட்கள் நகர அபியும் பாரதியும் யாருமே பிரிக்க முடியாத அளவுக்கு இணைந்து விட்டனர்..
அவர்களின் இடையே யார் வந்தாலும் அவர்கள் கதி அவ்வளவு தான் என்கிற நிலைமையில் இருவரும் சிறு குழந்தை போல விளையாடினர்...

வெற்றி பாரதி இருவரும் கூட குட்மார்னிங் தொடங்கி குட் நைட்டு சொல்லும் அளவுக்கு இணைந்து தான் இருந்தனர்...

பெரியதாக பேசி கொள்ளவில்லை எனினும் அவர்களுக்குள் நல்ல புரிதல் உணர்வு இருந்தது...

இரவு உணவு உண்ண
அபி " மா போதும் மா "

பாரதி " டேய் இன்னும் கொஞ்சம் சாப்பிடு டா"
என அவனை மிரட்டி சாப்பிட வைத்து கொண்டு இருந்தாள்..

அபி " மா இப்படி சாப்பிட்ட அப்புறம் உன்ன மாதிரியே நானும் குண்டா ஆகிடுவன் "

பாரதி " நான் என்ன குண்டா வாடா இருக்கேன் "

அபி " அப்பா நீங்களே சொல்லுங்க பா மம்மி குண்டு தான "

இதனை கேட்ட வெற்றியும் சத்தமாக சிரிக்க பாரதி அவனையும் சேர்த்து முறைத்தாள்..

வெற்றி " டேய் உங்க பிரச்சினைல ஏன்டா என்ன இழுக்குறீங்க நான் வரல பா இந்த விளையாட்டுக்கு "
என்று வெற்றியும் நகர

பாரதி " மவனே மாட்டினியா "
" இங்க வாடா நான் உனக்கு குண்டா "

அபி " வரமாட்டேனே என்ன பண்ணுவீங்க "

பாரதி " உன்ன "

அபி " போங்க குண்டு மம்மி "
அவன் ஓட அவனை துரத்தி கொண்டு இவளும் அவன் பின்னாலே ஓடினாள்..

ஓடியவன் எதிரில் வெற்றி வர அவனின் பின்னாலே இவன் மறைய பாரதி வெற்றியின் அருகில் சென்று அவனை பிடிக்க முயற்சி செய்தாள்...

வெற்றியின் சட்டையின் பின்பக்கத்தை பிடித்து கொண்ட அபி அங்கும் இங்கும் ஓடி அவளின் கைக்கு பிடிபடாமல் ஆட்டம் காட்டினான்...

இவளும் வெற்றியின் முன்பக்கம் நின்று கொண்டு அவனை பிடிக்க பார்த்தாள்..

சற்று நேரம் கழித்து தன் நிலை உணர்ந்த பாரதி நிமிர்ந்து பார்க்க வெற்றி அவளையே சிரித்த முகத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்...
படபடக்கவும் பாரதி தன் அறை நோக்கி ஓடிவிட்டாள்..

பாரதி தன் மனதில் " ச்ச என்னடி ஆச்சு உனக்கு ஏன் இப்படி பண்ணுற இப்பலா அவர பாத்தாலே ஒரு மாதிரியா இருக்கு நோ நோ டி பாரதி நீ அபிக்கு அம்மா அது மட்டும் தான் மனசுல இருக்கனும் புரியுதா அடுத்த வேலைய பாரு போ "

அந்த நெருக்கம் வெற்றியின் மனதிலும் சற்று சஞ்சலத்தை உருவாக்கியது.
" வேணாம் டா வெற்றி அவ முழுசா உன்ன புரிஞ்சுட்டு வர வரைக்கும் வெயிட் பண்ணனும் புரியுதா "
என தன் மனசுக்கு தானே கட்டளை இட்டு கொண்டான்...

இரவு அறைக்கு வந்த வெற்றி பார்த்தது
அபியை தன் மடியில் படுக்க வைத்து கொண்ட பாரதி அவன் தலையை கோதி கொண்டு இருக்க அதில் அபியும் தூங்கிவிட்டான்...

இதை பார்த்த வெற்றி என்ன நினைத்தானோ சட்டென சென்று பாரதியின் இன்னொரு பக்கம் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான்...

அவன் செயலில் அதிர்ச்சியாய் இருந்த பாரதியிடம்..
வெற்றி " எனக்கும் அம்மா இல்ல பாரதி இதுவரைக்கும் அம்மா மடியில் படுத்ததும் இல்ல பிளிஸ் "

இதற்கு மேல் என்ன பேச முடியும் அவளால் அவனை தன் குழந்தையாக நினைத்து அவன் தலையையும் கோதி தூங்கி வைத்தாள்....

நடுஇரவில் விழித்த வெற்றி
இருபக்கமும் இருவரையும் போட்டு கொண்டு உட்கார்ந்தவாறே தூங்கும் பாரதியை பார்த்து தன் தலையில் தானே தட்டி கொண்டான்..

" ஐய்யோ பாவம் இவ்வளவு நேரமா இவ மடிலே படுத்து இருந்தோம் பாவம் கால் வலிக்குமே " என நினைத்தவாறு எழுந்து அபியை தூக்கி ஒருபுறம் படுக்க வைத்துவிட்டு பாரதியை அசையாமல் பொறுமையாக படுக்க வைத்தான் வெற்றி...

அவள் கால் மறுத்து சற்று வலிக்க அதில் முகம் சுனுங்குவதை பார்த்த வெற்றி இதமாக கால்களை சற்று நேரம் பிடித்து விட்டு பாரதியின் மறுபுறம் படுத்துகொண்டான்...

விடியல் விடிய கண் விழித்த பாரதி தன் அருகில் அழகாக தூங்கும் தான் பெறவில்லை என்றாலும் கடவுள் தந்த தங்கமகன் தூங்க அவன் தலை கோதி நெற்றியில் முத்தமிட்டு எழ முயற்சித்தால்...

முடியவில்லை தன் மேல் ஏதோ கிடக்க திரும்பிய போது வெற்றியின் கை பாரதியின் இடையை சுற்றி அவளின் முதுகில் முகம் புதைத்து தூங்கி கொண்டு இருந்தான் நம் நாயகன்.....

அவனின் செயலில் வெட்கமும் படபடப்பும் போட்டி போட்டு கொண்டு வர சத்தமே இல்லாமல் அவனின் கையை விலக்க முயற்சித்தால்...

எங்கே இரும்பை போல வளைத்து பிடித்து இருந்த இவனின் கையை அசைக்க கூட முடியவில்லை அவளால் பொறுத்து பார்த்தவள் அவன் புறம் திரும்பி அவனை எழுப்ப பார்த்தாள்..

கள்ளன் தூங்குவது போல நடித்தவன் இவள் செய்வதை பார்த்து ரசித்து கொண்டு தான் இருந்தான்..

ஒரு கண்ணை மூடி மறுகண்ணால் அவளை பார்க்க பாரதியும் கண்டு விட்டாள் இவன் எழுந்து விட்டான் என..

பாரதி " நான் போகனும் அபியை ஸ்குலுக்கு ரெடி பண்ணணும் "

வெற்றி " போ நான் என்ன உன்ன போகதனா சொன்னன் "

பாரதி " இப்படி பிடிச்சுகிட்ட எப்படி போறது "
என அவளும் இம்முறை சத்தமாகவே கேட்க..

பாரதி " ம்ம் தள்ளுங்க "
என அசந்த நேரம் அவன் கையை விலகி விட்டு சென்றுவிட்டாள்...

குளித்துவந்த பாரதி கண்ணாடி முன் நின்று தன் பார்த்து தன் நிலையை நினைத்து சிரித்து கொண்டு இருந்தாள்...

அவளை அறியாமலே அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியின் பக்கம் திரும்பியதை கவனிக்க தொடங்கினாள்....

தொடரும்....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
22 இனி எல்லாமே நீ தானே

நாட்கள் கழிய அன்று நடுஇரவு ஏதோ சத்தம் கேட்டு விழித்த பாரதி அருகில் பார்க்க அங்கு படுத்திருந்த வெற்றியை காணவில்லை சற்றி பார்த்துவிட்டு லைட்டு போட அதும் வேலை செய்யவில்லை மெதுவாக எழுந்து தனது செல்பேசி டார்ச் உதவியுடன் வெளியே வந்து அபி அறைக்கு சென்றாள் அங்கு சென்றாள் அங்கு அபியையும் காணவில்லை....

" என்னது இரண்டு பேரையும் காணும் என்னச்சு "
என யோசித்து கொண்டு படி இறங்கி ஹாலிற்கு வந்தாள் அங்கு பாப் என்கிற சத்தத்துடன் வெடிக்க விளக்குகள் ஒளிற அந்த இடமே அலங்காரங்களால் ஜொலித்தது..

தனம் ருக்மணி இவர்களுடன் சேர்ந்து வெற்றி அபி அனைவரும் அங்கே தான் இருந்தனர்..

அபி " ஹாப்பி பர்த்டே மா "
என்று ஓடி வந்து அவளை கட்டி கொண்டான் அபி..

பாரதி " தேங்க்ஸ் டா செல்லம் "
அவனை தூக்கி கொண்டே அருகில் சென்றாள்..

தனம் " பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா மா "

பாரதி " தேங்க்ஸ் மா "

ருக்மணி " பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா "

பாரதி " தேங்க்ஸ் மா "

வெற்றி மெழுகுவர்த்தி ஏற்ற பாரதி கேக் 🍰 வெட்டி பிறந்தநாளை சிறப்பித்தனர்..

ஏனோ பாரதியின் மனம் வெற்றியின் வாழ்த்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்...

சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் அறைக்கு சென்று தூங்க தன் அறைக்கு வந்தாள் பாரதி...

கோபமாக முதுகு காட்டியபடி தூங்க
வெற்றி " பாரதி மா "

" பாரதி மா உன்னதான் "

பாரதி " ம்ம் கேக்குது சொல்லுங்க "

வெற்றி " இந்த பக்கம் பாரேன் "

பாரதி " ஒன்னும் வேணாம் "

வெற்றி " திரும்பு சொல்றேன்ல "
என அவளின் முதுகின் மீது கை வைக்க ஏதோ தழும்பு போல இருப்பதை உணர்ந்தான்...

வெற்றி " பாரதி இது என்ன "
அவன் எதை கேட்கிறான் என உணர்ந்த பாரதி சட்டென அவன் புறம்

திரும்பி " ஆங் ஒன்னுல்லங்க "

வெற்றி " உன் முதுகுல என்ன அது தழும்பு மாதிரி "

பாரதி " அது இல்ல ஒன்னுல்ல "

வெற்றி " கேக்குறேன்ல சொல்ல போறியா இல்லையா "

என அவளின் முதுகில் கை வைத்து பார்க்க ஏதோ மாதிரி இருக்க சட்டென அவளின் புடவையை விலக்கி வெற்று முதுகில் பார்க்க நிறைய தழும்புகள் காயங்கள் இருந்தது...

இதனை பார்த்த வெற்றி கண்கலங்கி
வெற்றி " என்னடி இது "
தனது ஆடையை சரிசெய்தாவாறே

பாரதி " கடந்தகால வாழ்க்கை கொடுத்த பரிசுங்க "

அவளை இழுத்து தனது மடியில் அமர்த்தி கொண்டு தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான்..

ஏனோ தன் கூட்டிற்கே வந்த பறவையை போல அவனுள் தஞ்சம் அடைந்து யாருக்மே தெரியாத நெஞ்சுக்குள் பூட்டி வைத்த துயரங்களை சொல்ல தொடங்கினாள்....

திருமணம் முடிந்து பாரதி சத்யா இருவரும் கோவிலுக்கு சென்று விட்டு தன் புகுந்த வீட்டிற்கு சென்றனர்..

அங்கிருந்த பழக்கம்வழக்கம் முற்றிலும் வேறுபட்டதாய் இருக்க பாரதி கூட பயந்து போனாள் அவளுக்கு ஆறுதல் கூற வேண்டியன் தன் வேலையை பார்க்க சென்றுவிட தனித்துவிடப்பட்டாள் பாரதி....

இரவு பொழுது வர தயார்படுத்தி இருந்த அறையில் சத்யாவின் வருகைக்காக காத்திருந்தான்..
அவருடன் பேச வேண்டும் பழக வேண்டும் நிறைய விஷயங்களை பேசி பழகி புரிந்து கொண்டு வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்ற கனவுகளோடு அமர்ந்திருந்த பாரதிக்கு கிடைத்தது ஏமாற்றமே.....

சத்யா அவன்பாட்டு அறைக்கு வந்து படுத்து தூங்கிவிட்டான் அவளை பற்றி சிறிது கூட கணக்கில் கொள்ளவில்லை...
அழுகை முட்டி கொண்டு வர இரவை கழித்தால்...

மறுநாள் எழுந்து அவன் கிளம்பி செல்ல அடுத்து என்ன செய்வது என புரியாமல் எடுத்து சொல்ல ஆளும் இல்லாமல் பசி எடுக்க குளித்து கிளம்பி கிச்சனுக்கு சென்றாள்..

" ஏய் இங்க ஏன் வந்த குளிச்சியா எதையும் தொடாத "
என்று அவள் மாமியார் எடுத்து எடுப்பிலே எறிந்து விழ வேற வழி தெரியாமல் திரும்பவும் அறைக்கே சென்றாள்...

அப்போது தான் விதி அவள் வாழ்வில் விளையாடியது..
" ச்ச ரொம்ப போர் அடிக்குது என்ன பண்ணலாம் "
என எண்ணியவாறு தன் அறை தானே என்ற உரிமையுடன் அங்கு இருந்த பொருட்களை சுத்த படுத்தி கொண்டு இருந்தாள்..

அப்போது எதிர்பாராத விதமாக விழுந்த ஒரு பையில் நிறைய மருத்துவசீட்டுகள் உள்ளவை பார்த்தாள்..

" யாருதுனு தெரியல தெரியாம பாக்க கூடாது "
வைக்க போனவள் சத்யா என்ற பெயர் இருக்க " இவருது தானா இவருக்கு என்ன "
என்கிற நினைப்புடன் திறந்து பார்த்தாள்...

உள்ளே பல மருந்து அட்டைகள் பல மாத்திரைகள் இருக்க அவர் மனநிலை சரியில்லாத காரணத்தால் டீரிட்மெண்ட் எடுத்து கொண்டுள்ளது தெரியவந்தது...

ஏதோ ஒருவித நோய் தாக்க அவருக்கு இந்த பிரச்சினை இருப்பது தெரிய வந்தது..

பயந்த பாரதி இதனை பற்றி அறிய தன் மாமியாரிடம் சென்றாள்..
பாரதி " அத்த இதுலா என்னது அவருக்கு என்ன பிரச்சினை "
கோமதி ( மாமியார் ) " ஏய் உன்ன யாரு இதலா எடுக்க சொன்னது இப்ப தான வந்த அதுக்குள்ள இதுலா ஆராய்ச்சி பண்ணுற "

பாரதி " இதுல இருக்கறது எல்லாம் உண்மையா "

கோமதி " என்ன என்னடி உண்ம எல்லாம் காசு வாங்கிட்டு தான கல்யாணம் பண்ணிங்க அப்புறம் என்ன போ போய் வேலைய பாரு "

பாரதி " காசா என்ன நடக்குது இங்க எனக்கு ஒன்னுமே புரியல என்ன நடந்துச்சு சொல்லுங்க "

அப்போது அங்கு வந்த அவளது மாமனார் குமரகுரு " இங்க பாரு மா நீ நினைக்கிற மாதிரிலா இல்ல பையன் முன்னாடி கொஞ்சம் அப்படி தான் இருந்தான் ஆனா இப்ப பரவால டாக்டர் கிட்ட காட்டி சரி பண்ணிருக்கோம் இதுலா உன் அண்ணன் அண்ணிகிட்ட சொல்லி ஐஞ்சு லட்சம் பணம் கொடுத்து தான் கல்யாணம் பண்ணோம் அதனால இதுலா பெரிசு பண்ணாம போ போய் வாழ்ற வழிய பாரு "

உண்மை தெரிந்த பின் பாரதி தன் உடன்பிறந்த அண்ணன் தனக்கு துரோகம் செய்தான் " நான் அவங்களுக்கு என்ன பாவம் பண்ணனேன் இப்படி ஏன் என் வாழ்க்கைய கெடுத்தாங்க "
என புலம்பியபடி தன் அறையில் அமர்ந்து ஆதங்கத்தில் ஆரம்பித்து அழுகையில் முடித்தாள் பாரதி...

தொடரும்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23 இனி எல்லாமே நீ தானே

மதியம் அறைக்கு வந்த சத்யாவிடம் நடந்ததை பற்றி பேச எண்ணினாள். ஆனால் இவள் பேசுவதற்கு முன்னே சத்யாவின் தாய் " இங்க பாருடா அவளுக்கு எல்லாம் தெரிஞ்சுட்டு விட்டா அவ ஊரு உலகத்துக்கு எல்லாம் சொல்லி உன்ன அசிங்கபடுத்துவா என்னனு கொஞ்சம் அடக்கி வை "
என மாமியார் தூபம் போட...

அறைக்கு வந்தவன்
" நீ யாரு டி என்னோட பொருளா எடுத்து பார்க்க என்ன "
என அவளை கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்...

அடி வாங்கிய வலியிலும் வேதனையிலும் அவளால் பேச முடியவில்லை..

சத்யாவின் மனநிலை சரியில்லை என்பது அவன் கோபம் மட்டும் தான் பார்க்க சாதுவாக தெரிந்தாலும் கோபம் என்று வந்தால் கண்முன் தெரியாமல் நடந்து கொள்வான்..

இதனை பற்றி தெரியாத பாரதி " இல்லங்க நான் உங்கள எதும் சொல்ல"
என சமாதானமாக பேச முயற்சி செய்தாள்..

ஆனால் சத்யா கோபத்தில் பாரதியை அடிக்க ஆரம்பித்தான். அருகில் இருந்த பெல்டை அடித்து அடிக்க வலி தாங்கதா பாரதி வெளியே ஒட முயற்சி செய்தாள்..

சத்யா " நான் ஒன்னும் பைத்தியம் இல்ல எல்லாரு கிட்டயும் சொல்லி என்ன அசிங்க படுத்த போறியா "

பாரதி " அப்படிலா ஒன்னும் இல்லைங்க வலிதுங்க பிளிஸ் "
அவள் பேச்சை காதில் வாங்காமல் திரும்ப திரும்ப அடித்தான்..

ஓய்ந்தவன் அவள் இருக்கும் அறையை பூட்டிவிட்டு சென்றான்..

அடுத்து என்ன செய்வது என புரியாமல் அழுது அழுது வலியும் பொறுக்கமாட்டாமல் பசியின் கொடுமை தாங்காமல் கதவை தட்டினாள்..

சத்யாவின் கோபத்தை அறிந்த அவன் குடும்பத்தினர் கதவை திறக்காமல் மேலும் அவளை வதைத்தனர்...

பாரதி " பிளிஸ் கதவை துறங்க
பிளிஸ் "

இரவு வீட்டிற்கு வந்த சத்யா குடித்துவிட்டு திரும்பவும் அவளை அடிக்க ஆரம்பித்தான்..

தடுக்க கூட பலமில்லாமல் அவனிடம் அடி வாங்கினாள்.....
அவளது துயரத்திற்கு அன்று இரவே முடிவு வந்தது. அவளின் கஷ்டங்களை பார்த்த இறைவன் அவனுக்கு வாழ வழியில்லாமல் அன்று இரவே ஆக்ஸிடென்ட் மூலம் அவனின் வாழ்க்கையை முடித்துவிட்டார்....

அவனின் இறப்பு செய்தி கேட்ட குடும்பத்தினர்..
" அடிபாவி வந்த மூன்னாவது நாளே என் புள்ளய பரிச்சிடியே "

" நீ வந்த நேரம் தான் என் புள்ள போயிட்டான் "
என கூறி அவளின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்து வெளியே விட்டனர்.......

வெற்றியின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு தேம்பியவாறு சொல்லிய பாரதியின் வாயை மூடியவன்...

வெற்றி " போதும் டி நீ எதும் சொல்ல வேணாம் நீ கஷ்டப்பட்டத கேக்குற சக்தி எனக்கு இல்ல "

பாரதி " இல்ல வெற்றி எனக்கு அழனும் போல இருக்கு யாருகிட்டையும் சொல்லாம மனசுள்ளயே பூட்டி பூட்டி வைச்சு டெய்லி நைட்டு தூங்கும் போது அதே நியாபகம் தான் வருது "
தேம்பியவளை இழுத்து அணைந்தவன்
" நான் இருக்கேன் பாரதிமா உனக்கு எப்பவும் இருப்பேன் "
சாய்ந்து கொண்டவள்

" எனக்கு உங்கள பிடிச்சிருந்த போதும் என் ராசி உங்கள எதாவது பண்ணிடும் பயந்து தான் உங்கள பிடிக்காத மாதிரியே காட்டிகிட்டேன் உங்கிட்ட இருந்த விலகி விலகி போனேன் "

அவளை சமாதானம் செய்ய பேச்சை சகஜ நிலைக்கு கொண்டு வர
வெற்றி " அப்போ உனக்கு என்ன பிடிச்சிருக்கு "

பாரதி " ம்ம் "
என்றவள் கண்களை துடைத்து கொண்டு புன்கையுடன் திரும்பினாள்...

வெற்றி " நீங்க ஏன் இங்க வந்திங்க உங்க அண்ணன் கூடவே இருந்திருந்தா பாதுகாப்பா இருந்துருக்கலாம் லா "

பாரதி " அண்ணன் "
என்று ஒரு வெற்றுபுன்னகை புரிந்தவள்...

" நாங்க அவங்க கூட தான் இருந்தோம் ஒரு ஒரு வாட்டியும் அண்ணி யோடு பேச்சு தாங்க முடியல சரி நம்ப இருக்கறது பிடிக்கல சொல்லி வெளியே போகலாம்னு நினைச்சு வீட்ட விட்டு கிளம்பிட்டேன் ஆனா அவங்ககிட்ட தனியா எங்க அம்மாவ விட்டு போக மனசு இல்ல அவங்களையும் கூட்டிட்டு சென்னை வந்தேன் படிச்ச படிப்புக்கு ஒரு வேல நிம்மதியா இருக்கும் போது திரும்பவும் பிரச்சினை "

வெற்றி " ம்ம் தெரியும் உன் பழைய மனேஜர் தொல்ல தான "

பாரதி " அம்மா சொன்னாங்கலா "

வெற்றி " ம்ம் ஆமாம் "
இப்போது இருவரும் அழுகையை நிறுத்திவிட்டு சகஜமாக பேசினார்கள்...

தீடிரென கதவு தட்டப்படும் ஓசை கேட்க அப்போது தான் வெற்றியின் தோள் மேல் சாய்ந்து இருந்த பாரதி எழுந்தாள்..

பாரதி " இந்த நேரத்துல யாரு "

வெற்றி " நீ இரு நான் போய் பாக்குறேன் "
எழுந்து கதவை திறக்க அங்கு அபி நின்று கொண்டு இருந்தான்..

வெற்றி " டேய் நீ என்னடா பண்ணுற அதுவும் நடு ராத்திரியில் இப்படி புது டிரஸ் போட்டு கிளம்பி இருக்க "

அபி " வாட் டாடி என்னச்சு உங்களுக்கு விடிஞ்சுடுச்சு டைம் மார்னிங் சேவன் ஓ கிஃளக் "
இருவரும் அதிர்ச்சி ஆகி மணியை பார்க்க அது ஏழு காட்டியது..

அபி " என்ன டாடி மம்மி பர்த்டே செலிபிரேட் பண்ணனும் சொன்னிங்க மறந்துடிங்களா "

பாரதி " அதலாம் வேணாம் நான் என்ன குழந்தையா பர்த்டே செலிபிரேட் பண்ண "

அபி " நோ நோ நாங்க டீசைட் பண்ண மாதிரி செய்ய தான் போறோம் "

" மம்மி நீங்க இங்க கிளம்புங்க
டாடி நீ என் ரூம்ல கிளம்புங்க "
" கோ கோ "

வெற்றி " டேய் இருடா டிரஸ் எடுத்துகுறேன் "

அதன்பின் பாரதி குளியல் அறைக்கு செல்ல இருவரும் கிளம்பி வெளியே சென்றனர்..

குளித்து வந்த பாரதி துணி உள்ள கபோட்டை திறக்க அங்கு நிலநிற பட்டு புடவை அதற்கேற்ற அணிகலன்களுடன் இருக்க அது வெற்றி வேலை என புரிந்து கொண்ட பாரதி எடுத்து அணிந்து கொண்டு மிதமான ஒப்பனைகளுடன் வெளியே வந்தாள்...

படியிறங்கி வந்த பாரதி முகத்தில் என்றுமில்லாத பளபளப்பு தெரிய அதனை கண்ட பெற்றவர் மனம் குளிர சிரித்த முகத்துடன் தனம் மற்றும் ருக்மணி இருவரும் பார்த்தனர்..

அபி " வாவ் மம்மி செம சூப்பரா இருங்கிங்க"
" டேடி உங்களுக்காக தேடி தேடி எடுத்த டிரஸ் "

" ஆஹா இவன விட்டா எல்லாத்தையும் உளறிடுவானே " என எண்ணிய வெற்றி
" நீங்க கிளம்பி வாங்க நான் கார் எடுக்குறேன் "
என அபி இழுத்து கொண்டு அந்த இடத்தை விட்டு நழுவினான்...

அவனின் செய்கையை பார்த்து சிரித்தனர்
பாரதி தனம் ருக்மணி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டு அனைவரும் கிளம்பி அன்னை இல்லம் சென்று அங்கே சற்று நேரம் இருந்துவிட்டு அபி பாரதி வெற்றி மூவர் மட்டும் கிளம்பி வெளியே சென்றனர்..

தொடரும்
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24 இனி எல்லாமே நீ தானே

" இப்போ நாம எங்க தான் போறோம் " என்ற பாரதியின் கேள்விக்கு பதில் தெரியாமல் முழித்தான்..

வெற்றி " ஏய் நிஜமா எனக்கு தெரியாது இவன் தான் பிளான் பண்ணான் "
" டேய் எங்கதான்டா போறோம் உங்க அம்மாகிட்ட நீயே சொல்லிக்கோ "

அபி " மா எங்க போறோம்னு லா கேக்க கூடாது இன்னைக்கு உங்க பர்த்டே ஜாலியா சுத்த போறோம் "

பாரதி " எனக்கு தெரிஞ்சுட்டு இன்னைக்கு ஸ்குல எக்ஸமா டா "

அபி " இல்லையே "
என திரு திரு முழித்து அபியை கண்டு கொண்டு பாரதி..

பாரதி " எக்ஸம் க்கு பயந்து ஸ்குல் லீவ் போட என் பர்த்டே உனக்கு சாக்கா "

வெற்றி " அடப்பாவி நான் கூட பயபுள்ள ஆசைய கூப்பிடுறானே ஒருநாள் தான நினைச்சேன் "

இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே
அபி " நான் தூங்கிட்டேன் "
என கண்களை மூடி கொண்டு நடித்தான் அபி...

பாரதி " பாருங்க இவன எப்படி பண்ணுறானு "

அவனின் செயலை நினைத்து சிரித்து கொண்டே ஒரு மாலில் வண்டியை நிறுத்தி மூவரும் உள்ளே சென்றனர்...

தந்தையும் மகனும் சேர்ந்து பாரதிக்கு எல்லா பொருளையும் பார்த்து பார்த்து வாங்கினர்..

பாரதி வேண்டாம் வேண்டாம் என அவளுக்கு தேவையானதை அளவுக்கு அதிகமாகவே வாங்கினான் அபி வெற்றி இருவரும்....

இறுதியாக துணி கடையில் நுழைந்த அபி
" ப்பா அம்மா க்கு வேற டிரஸ் வாங்கலாமா "

வெற்றி " ஏன்டா சாரிக்கு என்ன நல்லா தான இருக்கு "
என அவளை பார்த்து கண் சிமிட்டி கொண்டே கூற..

அபி " நல்லாருக்கு மா பட் எப்ப பாரு சாரி தான் வேற மாட்டென் டிரெஸ் பாக்கலாம் "

பாரதி " டேய் மார்டென் டிரெஸ் லா வேணாம் இதுவே நல்லா தான் இருக்கு வாங்க போலாம் "

வெற்றி " ஆமாம் எப்ப பாரு சாரி தான் வேற டிரஸ் டிரை பண்ணி பாரு "

பாரதி " அதலாம் மாட்டேன் பா "
ஒருவாறு இருவரும் பல பிளிஸ் போட்டு அவளை சம்மதிக்க வைத்தனர்..

பாரதி " ஓகே ஓகே ஆனா சுடி மட்டும் தான் வேற டிரெஸ் கிடையாது "

இளஞ்சிவப்பு நிற அழகிய வேலைப்பாடுகள் கொண்ட அனார்கலி சுடியை இருவரும் தேர்ந்தெடுத்து பாரதிக்கு கொடுத்தனர்...

தான் போட்டு இருந்த உடையை மாற்றி அந்த உடைக்கு மாறியவள். இருவரின் முன்னே வந்து நிற்க.

அபி " சூப்பர் மா உங்களுக்கு எந்த டிரெஸ் போட்டாலும் அழகு தான் "
என எப்போதும் தனம் செய்வது மாதிரி இரு கைகளாலும் அவளது முகத்தை வழித்து தன் தலையில் வைத்து நெட்டி முறிந்தான்...

அவனின் செய்கை பார்த்த பாரதியும் அதே போல் அவனுக்கு செய்து முத்தமிட்டாள்..

கண்களால் வெற்றியிடம் எப்படி என கேட்க அவனும் கண்களாலே பதில் கூறினான்..

அவனின் கண் அசைவு பதிலாள் வெட்க புன்னகை புரிந்தாள் பெண்ணவள்...

மூவரும் சிரித்தபடி வெளியே கிளம்பி வர குருரத்துடன் நான்கு கண்கள் பார்க்க..

" அவன எப்படி எல்லாம் ஆட்டி வைக்கனும் நினைச்சோம் கடைசியா அவன் இவ்வளவு சந்தோஷமா இருக்கான் நாம இப்படி புலம்பிட்டு இருக்கோம் "

" நான் என்ன பண்ண அவன என் வலையில விழ வைக்க எவ்வளவோ முயற்சி பண்ணேன் கடைசி வரை அவன் என் பக்கம் திரும்பவே இல்ல " என்றாள் மைதிலி..

" உன் வேலைய நீ க்ரைடா செய்யலனு சொல்ல அவனுக்கு என்ன பத்தி தெரியும் இல்லனா இந்த வேலைய நானே செய்து இருப்பேன் " என்றாள் மற்றொருத்தி..

" சும்மா தேவயில்லாம பேசாத இந்த பாரதி மட்டும் குறுக்க வரலனா எல்லா சரியாத்தான் நடந்து இருக்கும் "
மைதிலி..

" யாரு இவ நம்ம ப்ளென் ல குறுக்க வந்தா நமக்குனே வந்து சேருவா போல "

" ஆனா சும்மா சொல்ல கூடாது நம்ப நினைச்ச வேலைய சத்தமே இல்லாமல் அவ முடிச்சுட்ட பெரிய கைகாரி தான் போல "

மைதிலி " சரி நடந்து போனத பத்தி பேச வேணாம் வேற என்ன செய்யலாம் "

" ம்ம் கொஞ்சம் டைம் எடுத்து யோசிக்கலாம் ஆனா இந்த டைம் எதும் சொதப்ப கூடாது "

மைதிலி " அப்போ நம்ப அடுத்த திட்டம் வெற்றி யா "

" அபி "
என வன்மத்துடன் புன்னகைத்து கொண்டாள் அவள்...

அவர்களுக்கு தெரியவில்லை அபியை நெருங்குவது அவ்வளவு சுலபம் இல்லை அபிக்கு அரணாக பாரதியும் பாரதிக்கு அரணாக வெற்றி யும் இருக்கிறார்கள் என....

பொழுது முழுக்க சுற்றிவிட்டு மாலை பீச்சில் அமர்ந்து இருந்தனர் மூவரும்..

அபி " மா தண்ணில விளையாட்டா "

பாரதி " நோ டா செல்லம் இப்ப ரொம்ப டைம் ஆகிடுச்சு இன்னொரு நாள் சீக்கிரம் வந்து விளையாடலாம் ஓகே "

அபி " ம்ம் டண் மா "

அதன்பிறகு அபி மணலில் பிசியாக விளையாட அவனையே பார்த்துக் கொண்டு இருந்த பாரதியின் கையின் மேல் ஏதோ படர திரும்பி பார்த்தாள்..
வெற்றியின் கை பாரதியின் கையை இறுக

பாரதி " என்ன "

வெற்றி " என்ன என்ன "

பாரதி " கையலா பிடிக்குறிங்களே அதான் கேட்டேன் என்ன "

வெற்றி " என் பொண்டாட்டி நான் புடிக்கறன் "

சிரிப்புடன் கடல் அலையை ரசித்தவாறு கை கோர்த்து அமர்ந்திருந்த இருவரும் மனதிலும் அமைதி ஒன்றே ஆட்சி செய்தது...

இரவு உணவை முடித்து கொண்டு வீடு வர அதற்கு முன்பே அபி தூங்கி விட்டு இருந்தான். அபியை தூக்கி வந்து அவன் அறையில் படுக்க வைத்துவிட்டு வந்தவன்..

அறையின் கண்ணாடி முன் நின்று தனது அணிகலன்களை கழட்டி கொண்டு இருந்தவளை பின்னாலிருந்து அணைந்தான் வெற்றி...

இதுவரை இல்லாத பதட்டம் படபடப்பு எல்லாம் சேர உடல் நடுக்கத்தை உணர்ந்தான் வெற்றி...

வெற்றி " ஓய் என்னாச்சு "

பாரதி " ம்கூம் ஒன்னுமில்ல "

அவளை தன் முன்புறம் திருப்பியவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு " ஹாப்பி பர்த்டே "

பாரதி " இப்ப தான் சொல்ல தோனுச்சா "

வெற்றி " ஆமாம் என் பொண்டாட்டி என்ன பத்தி யோசிக்கும் போது மட்டும் என்னோட விஷ சொல்லனும் நினைச்சேன் "

மறுபடியும் நெற்றியில் முத்தமிட்டு
" லவ் யூ பாரதி மா "

இதுவரை யாரிடமும் இந்த வார்த்தையை பாரதி கேட்டதும் இல்லை கூறியதும் இல்லை..

அதனால் உண்டான வெட்கம் அவளின் கண்ணத்தை சிவக்க செய்ய இதழ்கள் தானாக புன்னகை புரிந்தது....

வெற்றி " உன் சம்மதம் இல்லாம எதும் நடக்காது ம்ம் என்ன "

பாரதியின் சிரிப்பின் மூலம் அவள் சம்மத்தை அறிந்தவன் முதன்முதலில் இதழ் முத்தம் பதித்தான்..

தன்னவனின் வேகத்தில் சற்று தடுமாறியள் பின்பு அவனிற்கு ஏற்ப தானும் வளைந்து கொடுக்க அங்கு ஒரு இனிமையான இல்லறம் அரங்கேறியது.....

களைப்புடன் தன் மார்பின் மீது கண்துயர்ந்த மனையாளை கண்டவன் இதழ்கள் தானாக புன்னகை புரிந்தது....

தூக்கத்திலும் அவனை விட்டு விலக கூடாது என்பதாலோ இறுக அணைத்து கொண்டு தூங்கினாள் பாரதி.....

தொடரும்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
25 இனி எல்லாமே நீ தானே

பாரதி " என்னங்க போய் தான் ஆகனுமா "

வெற்றி " ஆமாம் போய் தான் ஆகனும் "

ஆபிஸ் கிளம்பி கொண்டு இருந்தவனின் அருகில் அமர்ந்து அவனின் தோளினை சுரண்டி கொண்டு இருந்தாள்..

பாரதி " நானும் "

வெற்றி " பாரதி மா எத்தனை வாட்டி சொல்லுறது ஊருக்கு போறது கண்பார்ம் நீ கிடையாது ஓகே நான் ஆபிஸ் கிளம்புறேன் நீ பேக் பண்ணி வை பாய் "

பாரதி " போடா "

வெற்றி " போடா வா அடிங்க வந்து உன்ன கவனிச்சுகிறேன் "

மாலை வரை அவன் சொன்ன அனைத்து வேலைகளையும் முடித்தவள்.....

அபியின் அருகில் அமர்ந்து
" டேய் நீ ஆசும் சொல்லு டா
உங்க டாடி கிட்ட "

அபி " மா டோண்ட் வொர்ரி மா நான் பாத்துகுறேன் "

பாரதி " நீயும் இப்படி தான் டா பண்ணுற
போடா "

அதே நேரம் சரியாக உள்ளே வந்த வெற்றி

" எல்லா பேக் பண்ணிடியா ரெடியா "
பதில் கூறாமல் உம்மென்று அமர்ந்த இருந்த மனைவியை பார்த்த வெற்றி
" என்னடா உங்க அம்மா இப்படி உக்கார்ந்து இருக்கா "

அபி "அவங்க மார்ணிங் லேந்து அப்படி தான் இருக்காங்க "
என்றவன் தனது போனில் கேம் விளையாட

வெற்றி " ஏய் என்னடி பிரச்சினை உனக்கு
ஊருக்கு போற அவனே கம்முனு கிளம்புறான் நீ ஏன் இப்படி பண்ணுற "

பாரதி " என்னால எப்படி அபிய விட்டு தனியா இருக்க முடியும் "

அபி " மா சுகந்தி பாட்டி நல்லா பாத்துபாங்க மா நான் இருப்பேன் "

வெற்றி " ம்ம் அவனே சொல்லிட்டான் அப்புறம் என்ன "

அப்போதும் சமாதானம் ஆகாமல் இருந்த பாரதியின் ஒருபுறம் அபியும் மறுபுறம் வெற்றியும் அமர்ந்து கொண்டு
" அவங்க ஆசபட்டு என்கிட்ட கேக்குற ஒரே விஷயம் வருஷத்துக்கு மூணு நாள் இவன அவங்க கூட இருக்க சொல்லுறது தான் இத்தனை வருஷம் பண்ணன் அதையும் இந்த வருஷம் ஸ்டாப் பண்ணா அத்த ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க டா "

பாரதி " நான் அனுபாதிங்க சொல்லல நானும் கூட போறனு தான சொன்னேன் "

வெற்றி " நீ இப்ப தான் பாஸ்ட் டைம் போற உன்ன தனியா அனுப்ப எனக்கு விருப்பம் இல்ல யாராவது ஏதோவது சொல்லிட்டா சரி வராது நான் உன்ன கூட்டிட்டு போறேன் ஓகே "

பாரதி " அப்ப நீங்களும் வாங்க சேர்ந்து போலாம் "
போச்சுடு என்பது போல அபி தலையில் கை வைக்க

வெற்றி " ஏய் என்னடி நேத்துலேந்து சொல்லிட்டு இருக்கேன் மீட்டிங் இருக்குனு டூ நைட்டு ஒன்லி அதுக்கு அப்புறம் நம்பலும் அங்க போலாம் சரியா "

ஒருவாறாக அவளின் மனதினை மாற்றி ஊர் செல்ல தயாராகிய அவனை காரில் அனுப்பி வைத்தனர் வெற்றி பாரதி இருவரும்......

சோர்வான முகத்துடன் வந்தமர்ந்த பாரதியின் அருகில் அமர்ந்தான் வெற்றி..

அவனின் தோளில் சாய்ந்து பாரதியிடம்
" என்னடா என்னச்சு "

பாரதி " எனக்கு என்னமோ மாதிரி இருக்குங்க அபிய ஏன்டா தனியா விட்டோம்னு தோனுது "

வெற்றி " சுகந்தி அத்த அவங்க பொண்ணும் இல்லாம புருஷனையும் இழந்துட்டு நிக்குறாங்க அதுனால தான் டா மறுக்க முடியல "

இரவு முழுவதும் கூட பாரதிக்கு அபி நியாபகம் தான் எப்படி இரு நாட்களை கழிப்பது என யோசித்தவளுக்கு வெற்றி சொன்ன யோசனை சரி என பட முடிவு எடுத்தவளாய் உறங்கினாள்..

வெற்றி " ஓய் ரெடி ஆகிடியா எவ்வளவு நேரம் "

பாரதி " வரேன் வரேன் கிளம்ப வேணாமா "

இளங்பச்சை நிறத்தில் தங்க நிற மணி வேலைப்பாடுகள் கொண்ட புடவை அணிந்து வந்தவளை மெய் மறந்து ரசித்த வெற்றி

" எப்படி டி ஒவ்வொரு நாளும் இவ்வளவு அழகாக இருக்க "

பாரதி " போதும் போதும் கிளம்பலாம் "

வெற்றி " கிளம்பனுமா "
என்று அருகில் நெருங்கி வந்தவனின் காலில் சற்று ஓங்கி மிதித்தால் பாரதி..

வெற்றி " ராட்சசி ஏன் டி மிதிச்ச "

பாரதி " ஆபிஸ் கிளம்பற நேரத்துல என்ன வேல பாக்குறிங்க போங்க போய் கிளம்புங்க "

வெற்றி " உன்ன என்ன பண்ணுறேன் பாரு "
என்று அவளின் இரு கையினையும் பிடித்து சுவற்றில் வைத்து அவளை நெருங்கி வந்தான்...

அவன் அருகே வர வர அவன் செய்யும் செயலை யூகித்து கண்கள் இரண்டும் தானாய் மூடி கொண்டு நின்றாள் பாரதி..‌
பொறுத்து பொறுத்து பார்த்தவள் எந்த சத்தமும் கேட்கமல் இருக்க கண்களை துறந்து பார்க்க எதிரில் கைகளை கட்டி கொண்டு அவளையே பார்த்து சிரித்து கொண்டு இருந்தான் வெற்றி...

அவன் கேலி புன்னகை அர்த்தம் புரிய
" போங்க நான் போறேன் "
சென்றவளை பின்னிருந்து அணைத்தவன்
" ரொம்ப எதிர்பார்த்திங்க போல மேடம் "

பாரதி " தள்ளுங்க மணி ஆகிட்டு போலாம் வாங்க "

கண்ணத்தில் அழுத்தமான முத்தம் ஒன்றை வைத்துவிட்டு நேரம் ஆவதை உணர்ந்து இருவரும் கிளம்பி வெளியே சென்றனர்....

இவர்கள் போகும் போது இருக்கும் சந்தோஷம் திரும்ப வீடு வரும்போது இருக்க போவதில்லை என்பதை அறியாத இருவரும் சென்றனர்...

பாரதி வீட்டில் தனியாக இருப்பது சற்று சிரமம் என வெற்றியிடம் கேட்க அவன் " என்னுடன் ஆபிஸ் வா " என்று அழைக்க சரி என ஒப்பு கொண்டு அவனுடன் சென்றாள்...

திருமணத்திற்கு பிறகு இதுதான் அவள் முதல்முறையாக ஆபிஸ் செல்லுவது. சற்று தயக்கம் இருந்த போதும் வெற்றி கொடுத்த துணிவில் ஆபிஸ் வந்தாள்...

அவளை பார்த்த சிலர் சந்தோஷத்திலும் சிலர் பொறாமையுடன் பார்த்தனர்..

" பாருடி இவள எப்படி இருக்கானு"

" பணம் காசு வந்தா இப்படி தான் டி இருப்பாங்க "

" ஊமை மாதிரி இருந்துட்டு வெற்றி சாரையே வளச்சு போட்டுட்டா "

"ஏய் அவ நல்ல பொண்ணு டி "

" அவ நல்ல மனசுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சுறுக்கு "

" நல்ல அழகாக இருக்கா வளைச்சு போட்டுட்டா "

ஒவ்வொருவரும் ஒரு மாதிரியாக பேச எல்லாவற்றையும் கேட்ட பாரதி
வெற்றி கொடுத்த தைரியத்தால் மனம் தடுமாறாமல் அங்கு இருந்தவர்களை பொருட்படுத்தாமல் தான் வந்த வேலையை மட்டும் பார்த்தாள்....

இதை எல்லாம் கவனித்து கொண்ட மைதிலி வேறு ஒரு திட்டம் நீட்டினாள்..
வெற்றி மீட்டிங் செல்லும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த மைதிலி அவன் சென்றவன் அறையில் தனியாக அமர்ந்திருந்த பாரதி கண்டு அருகில் வந்தாள்...

மைதிலி " ஹாய் பாரதி "
ஏற்கனவே மைதிலி மீது சற்று கோபமாக இருந்தாள்பாரதி. இருப்பினும் அவளை அலட்சியப்படுத்த கூடாது என எண்ணி

" ஹாய் சொல்லுங்க மைதிலி "

மைதிலி " சாரி உன்ன அப்படி பேசி இருக்க கூடாது "

பாரதி " பரவால்ல மைதிலி அதலா நான் மறந்துட்டேன் நீங்க உங்க வொர்க் கண்டிணியூ பண்ணுங்க "
அவள் தயக்கத்துடன் நிற்பதை பார்த்த

பாரதி " ஏதாவது சொல்லனுமா "

மைதிலி " ம்ம் ஆமாம் அது எப்படி சொல்லுறதுனு தெரியல "

பாரதி " பரவால்ல சொல்லுங்க என்ன உங்க பிரெண்டா நினைச்சு சொல்லுங்க "

சட்டென கண்களில் கண்ணீருடன் பாரதியின் கையினை பிடித்து கொண்ட மைதிலி " உன்கிட்ட எப்படி சொல்லுறதுனு தெரியல ஆனாலும் வேற வழி இல்ல சொல்லி தான் ஆகனும் "

அவள் என்ன கூற வருகிறாள் என்பதை கேட்க ஆர்வமானாள் பாரதி..

மைதிலி " நீ நினைக்கிற மாதிரி வெற்றி சார் அவ்வளவு நல்லவர் இல்ல நானும் அவரும் ஒருதர ஒருதர் மனசாற நேசிச்சோம் "

பாரதி " ஏய் என்ன பேசுற "
என்று சற்று கோபத்துடன் கேட்டாள்..

மைதிலி " நீ கோபட்டாலும் அதான் உண்மை நான் வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாளே எனக்கு லவ் பிரபோஸ் பண்ணாறு நான் வேணாம்னு மறுத்தேன் தொடர்ந்து தொல்ல கொடுக்க ஒரு கட்டத்துல அவரு என்ன உண்மையா காதலிக்குறாறு நினைச்சு நானும் அவர நேசிச்சேன் இப்போ என்னனா தீடிரென உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன கை கழுவிட்டாறு "

பாரதி " ஏய் யார பாத்து என்ன பேசுற அறைஞ்சு பல்ல உடச்சுடுவேன் "

மைதிலி " நீ நம்ம மாட்டனேனு எனக்கு தெரியும் இத பாரு "

அதில் வெற்றியும் மைதிலியும் கட்டி அணைந்து சிரித்த மாதிரி ஒரு புகைபடத்தை தனது செல்லில் இருந்து காட்டினாள்.....

இதைனை பார்த்த பாரதி.....

தொடரும்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26 இனி எல்லாமே நீ தானே

மைதிலி காட்டிய போட்டோவை கண்ட பாரதி தன் பலம் அனைத்தையும் திரட்டி மைதிலியின் கண்ணத்தில் ப்ளார் என அறைந்தாள்..

" யார பத்தி என்ன பேசுற என் வெற்றி உன்ன லவ் பண்ணாறா பிச்சுடுவேன் உனக்கு இன்னும் அரை மணி நேரம் டைம் தரேன் அதுக்குள்ள நீயா வேலைய விட்டு போயிடு "
என பாரதி கத்த

மைதிலி " இல்ல பாரதி நான் சொல்லுறது எல்லாம் உண்மை நீ வேணா இந்த ஃபோட்டோ பாரு "
என தன் கையில் இருந்த ஃபோட்டோ வை காட்ட அதை பிடிங்கி கிழித்து அவள் முகத்திலே விட்டு எறிந்தாள்..

தான் போட்ட திட்டம் சொதப்பியதும் அவள் அடித்ததில் அதிர்ச்சி இணைந்து அடுத்து என்ன செய்ய என புரியாமல் மைதிலி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்...

மீட்டிங் முடித்து வந்த வெற்றி பாரதி தனியாக இருப்பதை கண்டு

" பாரதி மா என்ன இங்க நிக்குற "

பாரதி " ஒன்னுமில்லங்க கிளம்பலாமா "

வெற்றி " அதுகுள்ளயா ஏன்டி என்னாச்சு "

பாரதி " கிளம்பலாங்க "

வெற்றி " வெளியே போயிட்டு அப்படியே சாப்பிட்டு வீட்டுக்கு போலாம் "

பாரதி " இல்லங்க நான் எங்கயும் வரல நீங்க வேணா போங்க நான் ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போறேன் "

வெற்றி " லூசாடி நீ நல்லா தான இருந்த இப்ப என்னாச்சு "

பாரதி " ஐய்யோ பிளிஸ்ங்க கிளம்பலாம் எனக்கு தலைவலிக்குது "
அதன் பிறகு எதும் பேசாமல் இருவரும் கிளம்பி வீடு வந்தனர். காரில் வந்த போதும் ஒருதர் ஒருதர் பேசி கொள்ளவில்லை...

வீடு வந்தவர்கள் வெற்றி அறைக்கு செல்ல சிறிது நேரம் நடந்ததை நினைத்து பார்த்த பாரதி அதன்பிறகு இரவு உணவை தயாரிக்க கிச்சன் சென்றாள்..

" ச்ச நல்லா தான இருந்தா என்னாச்சு இவளுக்கு யாராவது ஆஃபிஸ் ல ஏதாவது சொன்னாங்களா இவளா வாய திறந்து எதும் சொல்ல மாட்டா சொன்னா தான தெரியும் லூசு "
என அவளை மனதில் திட்டியவன் அடுத்த செய்ய வேண்டியதை செய்தான்....

உணவு தயாரித்த பாரதி அறைக்கு சென்று
" என்னங்க "

வெற்றி " சொல்லு "

பாரதி " சாப்பிட வாங்க "

வெற்றி " நீ சாப்பிடு நான் அப்புறம் சாப்பிடுறேன் "

பாரதி " இப்பவே டைம் ஆகிடுச்சு வாங்க சாப்பிடலாம் "

வெற்றி " அதான் அப்புறம் சாப்பிடுறேன் சொல்றேன்ல விடு நீ போ "
அவனின் கோபம் கண்ட பாரதி கடுப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்..

இதற்கு முன் தான் அவனிடம் கோபபட்டது ஏனோ மறந்தாள்...

தனது வேலைகளை முடித்து வந்த வெற்றி பார்க்க டைனிங் டேபிளில் உட்கார்ந்த படியே தூங்க அதனை கண்ட வெற்றி இருந்த கோபம் மறைய சிரித்து கொண்டே அவளை எழுப்பினான்
" பாரதி பாரதி "
பாரதி முகத்தை திருப்பி கொண்டு அமர அவளின் செய்கையில் சிரித்தவன்.

வெற்றி " பசிக்குது டி "

பாரதி " எல்லாம் இங்க தான் இருக்கு சாப்பிடுங்க "

வெற்றி " ஏன் நீங்க வைக்க மாட்டிங்களா "
என பேசி கொண்டே தட்டில் உணவு எடுத்து வைத்தான்..

இதனை கண்ட பாரதி எழுந்து போக அவளின் கைபிடித்து தடுத்தவன் தன் மடியில் அமர வைத்து உணவை ஊட்டினான்..

கோபம் கலைந்தவள் சில பல கொஞ்சலுக்கு கெஞ்சலுக்கு பிறகு அவனின் நெஞ்சில் தஞ்சம் கொண்டவள் இரவை கழித்தாள்...

மறுநாள் பாரதி வெற்றி ஊருக்கு கிளம்ப காரில் சென்றனர்..
ஊரை நெருங்கயில் தான் சிறு வயது நியாபகங்களை பாரதிக்கு சொல்லி கொண்டே வர தன்னவன் சந்தோஷத்தை கண்டு இவளும் சந்தோஷம் அடைந்தாள்...

வீடு வர இவர்களுக்காக வே காத்திருந்த சுகந்தி அபி வர...
சுகந்தி இருவருக்கும் ஆர்த்தி எடுக்க பாரதி ஒரு சில வார்த்தைகள் பேசி பின்பு அபியுடன் இணைந்து கொண்டாள் இனி அவர்கள் உலகில் யாரும் செல்ல முடியாது....

பயணகளைப்பில் பாரதி சற்று அசந்து தூங்க எழுந்த பார்த்தவள் அருகில் வெற்றியும் இல்லை அபியும் இல்லை..
மெதுவாக எழுந்து கிச்சன் சென்றவள்

" மா "
என்று அழைக்க

சுகந்தி " வாமா பாரதி எழுந்திடியா இந்தா காஃபி குடி "

பாரதி " ஐய்யோ அம்மா நீங்க ஏன் இதுலா செய்றிங்க நானே போட்டுபேன் ல "

சுகந்தி " பரவால்ல டா இதுல என்ன இருக்கு "

காஃபி குடித்து கொண்டே
" மா அபி எங்க "

சுகந்தி " இங்க தான் மா பக்கதுல விளையாடுறான் "

பாரதி தயங்க
சுகந்தி " கவலபடாத மா ஒன்னும் பயம் இல்ல பத்திரமா விளையாடுவேன் "

பாரதி " சரி மா அவரு எங்க "

சுகந்தி " வெற்றி பின்னாடி தோட்டத்துல இருக்கான் மா போ போய் பாரு "

பாரதி வெற்றியை தேடி தோட்டத்திற்கு செல்ல கண்ணுக்கு எட்டிய தூரம் யாரும் தென்படவில்லை.

சிற்று தூரம் நடந்தவள் தூரத்தில் நின்ற வெற்றியை கண்டவள் அருகில் சென்றாள்..

கைகளை கட்டி கொண்டு இறுகிய முகத்துடன் கண் கலங்க நின்ற வெற்றியை கண்ட பாரதி அவனின் தோளில் கை வைக்க...

பாரதி " வெற்றி "
என அவளின் அழைப்பில் திரும்பியவன் கண் காட்ட பாரதியும் அந்த இடத்தை பார்த்தாள்..

அங்கு வெற்றி யின் மாமா சமாதி இருக்க அதனை கண்ட பாரதியும் வெற்றியின் சோகத்திற்கு காரணம் கண்டாள்..

பாரதி " வாங்க வெற்றி எவ்வளவு நேரம் தான் இங்க நிப்பிங்க வாங்க வெற்றி "

வெற்றி " எனக்காகவே எல்லாம் பண்ணாறு மாமா ஊருக்கே வீருமாண்டியா திரிஞ்சாலும் எனக்கு பிரெண்டு தான் "

பேசிக்கொண்டே வீடு வர யாரோ வாசலில் காரில் நிற்க உற்று பார்க்க அது ஒரு பெண் என தெரிந்தது..

அந்த பெண்ணுடன் சுகந்தி பேசி கொண்டு இருக்க நெருங்கி வரவர அந்த பெண்ணை கண்ட வெற்றி அதிர்ச்சி அடைந்து நின்றான்...
அந்த பெண் அந்த பெண் சரண்யா

தொடரும்.......
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
27 இனி எல்லாமே நீ தானே

சரண்யா வை கண்ட வெற்றி சொல்ல முடியாத உணர்வுகள் பதித்த வண்ணம் இருந்தது அவன் முகம் வந்தவன் யாரிடமும் பேசாமல் தன் அறையின் உள்ளே சென்றுவிட்டான்.

நடப்பது புரியாத போதும் வேறு எதும் பேசாமல் பாரதியும் அபியும் அவனுடன் சென்றுவிட்டனர்..

பாரதி " என்னங்க அவங்க யாரு நீங்க ஏன் இப்படி இருக்கிங்க "

வெற்றி " சுகந்தி அத்த பொண்ணு "

பாரதி " அ...அ...அபியோட அம்மா "

இதை கேட்கும் போதே அவளது மனசு தவித்தது ஆனால் அவள் முடிப்பதற்குள்

வெற்றி " அப்படியே அறைஞ்சனா பாத்துக்கோ அபியோடு அம்மா நீ தான் வேற யாரும் இல்ல "
என அபிக்கு கேட்காத வண்ணம் அவளிடம் சொல்லிவிட்டு எழுந்து வெளியே சென்றுவிட்டான்...

வெளியே வந்த பாரதி சுற்றி முற்றும் பார்த்தாள் சரண்யா தென்படுகிறாளா என ஒரு அறையில் மட்டும் விளக்கு எரிவதை கண்டு அங்கு தான் இருக்கிறாள் என ஊகித்தாள்...

மெதுவாக சுகந்தியிடம் சென்றவள்
" மா நான் ஹெல்ப் பண்ணட்டா "

சுகந்தி " எல்லாம் முடிச்சுடன் டா சாம்பார் ரசம் பொரியல் கூட்டு அவ்வளவு தான் வேற ஏதாவது செய்யவா அப்பளம் பொரிக்கட்டா "

பாரதி " வேணாம் மா இதுவே போதும் "

சுகந்தி " நீ சாப்பிடுறியா மா எடுத்து வைக்கட்டா காலையிலேயே சாப்பிடல "

பாரதி " இல்ல மா அவரு வரட்டும் "

சுகந்தி " அப்ப நீ போய் ரெஸ்ட் எடு மா வெற்றி வந்தடுன் கூப்பிடுறேன் "
மெதுவாக வெளி பக்கம் வந்த உட்கார்ந்தாள் பாரதி...

அவள் சுகந்தி யிடம் பேச போன நோக்கமே சரண்யா எதற்காக வந்தாள் என தெரிந்து கொள்ள தான் ஆனால் சுகந்தி சாமர்த்தியமாக வேறு ஏதேதோ பேசி பாரதியை அனுப்பி வைத்துவிட்டார்...

அப்போது அந்த பக்கம் வந்த சரண்யா பாரதியை கண்டு நக்கலாக சிரித்தேவிட்டு சென்றாள்..

அவள் சிரிப்பின் அர்த்தமும் வந்ததன் நோக்கமும் தெரியாத பாரதி யோசித்து கொண்டே அறைக்கு சென்று படுத்தவள் தூங்கிவிட்டாள்...

வெளியே சென்று வந்த வெற்றி கண்டது அவனது அத்தையும் மகளும் பேசி கொண்டு இருப்பதை அத்தையிடம் வந்தவன்

வெற்றி " அத்த பசிக்குது சாப்பாடு வைங்க "

சுகந்தி " ம்ம் வா பா "

வெற்றி " அத்த பாரதி அபி சாப்பிடாங்கலா நீ சாப்பிடிங்களா "

சுகந்தி " அபி சாப்பிட்டுட்டு இப்ப தான் தூங்கினான் பாரதி உன் கூட சாப்பிடுறனு சொன்னா இரு பா நான் போய் கூப்பிட்டு வரேன் "

அதன்குள்ளாக இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்தாள் பாரதி.

வெற்றி " ஏய் பாரதி மா சாப்பிடலாம் வா "

பாரதி " ஆங் நான் வைக்கிறேன் நீங்க சாப்பிடுங்க "

சுகந்தி " இரண்டு பேருமே உக்காருங்க நான் வைக்குறேன் "

அதன்பிறகு மூவருமே சாப்பிட அங்கு சரண்யா என்ற பெண் அமர்ந்து இருப்பதை தெரியாதது போல் வெற்றி நடந்து கொண்டான்..

இதை எல்லாம் கண்ட சரண்யா கோபத்தின் உச்சிக்கே சென்று எழுந்து தன் அறைக்கு சென்றாள்..

" ச்ச என்ன இவரு நான் ஒருத்தி இருக்குறது இவரு கண்ணுக்கே தெரியாத மாதிரி நடந்துகுறாறு அபிய வேற நம்ம கண்ணுலயே காட்டமாட்டுறாங்க ஒன்னு அம்மா அவன் கூடவே இருக்காங்க இல்லனா இந்த பாரதி அவன கைகுள்ளயே வைச்சு இருக்காங்க அப்புறம் எப்படி நம்ப திட்டத்த நடத்துறது பாரதி என் வாழ்க்கையில தேவை இல்லாம உள்ள வந்துட்ட உன் சும்மா விட மாட்டேன் "
என எண்ணி கொண்டே சமயம் வர காத்திருந்தாள்...

கிடைத்த வாழ்க்கையை தக்க வைத்து கொள்ள தெரியாமல் தன் வாழ்வினை தொலைத்து விட்டு இப்போது பாரதியை குற்ற காட்டுகிறாள் அவள்...

பாரதி " என்னங்க "

வெற்றி " சொல்லு மா "

பாரதி " அது அது வந்து நான் "

வெற்றி " என்ன வந்து போயினு சொல்ல வந்தத சொல்லு "
என அவள் தோளினை பற்றி கேட்க
சட்டென அவனை அணைத்து கொண்டு அழ ஆரம்பித்தாள் பாரதி..

வெற்றி " ஏய் என்ன மா என்னாச்சு ஏன் அழுகுற "

பாரதி " எனக்கு பயமா இருக்குங்க "

வெற்றி " என்ன பயம் "
என கோபமாகவே கேட்க

பாரதி " அபி "

வெற்றி " இங்க பாரு சரண்யாவுக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவ டைவேர்ஸ் கேட்டா நான் கொடுத்துட்டேன் அபிக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவன் எனக்கு வேணாம்னு அவ எழுதி கொடுத்துட்டு தான் போனா அதனால நீ எத நினைச்சும் குழப்பிக்காத‌ நானும் அபியும் முழுசாக உனக்கு தான் புரியுதா "

வெற்றியின் பேச்சில் சற்று நிம்மதி அடைந்தாலும் ஏனோ அவள் மனம் தவித்தது...

வெற்றி பாரதிக்கு ஆறுதல் கூறினாலும் அவன் மனதும் சற்று ஆறுதல் இல்லாமல் தான் தவித்தது..
வெற்றி வெளியே செல்ல போகும் போது

ஒரு குரல் அவனை தடுத்து நிறுத்தியது..

சரண்யா " மாமா "
அவளுக்கு பதில் கூறவில்லை என்றாலும் அதே இடத்தில் நின்றான்...

சரண்யா " உங்கிட்ட கொஞ்சம் பேசணும் மாமா பேசட்டா "

அவள் குரலில் இருந்தது கொஞ்சலா அல்லது கெஞ்சலா என தெரியாத வண்ணம் இருந்தது..

சரண்யா " நீங்க என்கிட்ட பேச வேணாம் மாமா ஆனா நான் சொல்லுறத மட்டும் கொஞ்சம் கேளுங்களேன் "

வெற்றி எதும் கூறாமல் அருகில் இருந்த சோப்பாவில் அமர்ந்து கொண்டான் அதன் அர்த்தம் பேசு என புரிந்தவலாய் பேச ஆரம்பித்தாள்...

சரண்யா " என் கூட ஆஃபிஸ்ல நேத்ரா கூட வோர்க் பண்ணா உங்களுக்கு தெரியும்ல "

அவன் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாத அமர்ந்து இருந்தான்..
" அவ தான் மாமா என் மனசுல ஆசைய விதைச்சா "

அழுகையுடனே தான் ஏன் வெற்றியை விட்டு பிரிய காரணமாக இருந்த நிகழ்வினை கூற தொடங்கினாள்..

சரண்யா வின் மனதில் அழகை காரணம் காட்டி சினிமா எனும் ஆசையை விதைத்தாள் நேத்ரா ( சரண்யா பிரண்ட் முன்னாடி எபி லா பாத்துருப்போம் நியாபகம் இல்லாதவங்க 14 வது எபிலா போய் பாருங்க )

அவள் அழகை காரணம் காட்டி பேசி பேசி அவளின் மனதை மாற்றி தன் சொல்லுக்கு கட்டுபடும்படி மாற்றி வைத்து இருந்தாள்..

இந்நிலையில் வெற்றி தன் தொழில் கவனிக்க சென்றதால் இவளுடன் நேரம் செலவழிக்க முடியாமல் போனது இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நேத்ரா முழுவதும் வலையில் விழ வைத்தாள்..

அதன்பிறகே சரண்யா கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்று எடுத்தாள். முழுதாக அவள் பக்கம் இருந்ததால் வெற்றி குழந்தையை விட்டு அவளுடன் சினிமா எனும் உலகை நம்பி சென்றாள்..

ஆனால் அவள் நினைத்தது போல அது அவ்வளவு சுலபமாக இல்லை பல போராட்டத்திற்கு பின்பு ஒரு படத்தில் நடித்து அதுவும் பிரச்சினையால் தள்ளி போய் தற்போது சாப்பாட்டிற்கே வழி இல்லை எனும் நிலைமையில் தான் தன் தாயை தேடி வந்ததாக கூறினாள் சரண்யா.....

அவள் அழுகையுடனே கூற அதை பொறுமையாக கேட்டான் வெற்றி..
அழுது கொண்டே ஓர கண்ணால் அவனை பார்க்க அவன் யோசிப்பதை வைத்து தன் மேல் இரக்கம் ஏற்படுவது போல பாவமாக முகத்தை வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள்....

வெற்றி " இப்போ எதுக்கு இதலா என்கிட்ட சொல்லுற "
அவன் கேள்வியில் ஆடி போன சரண்யா

" மாமா ஏன் மாமா உங்கிட்ட சொல்லாம வேற யாருகிட்ட நான் சொல்ல போறேன் மாமா "

வெற்றி " என்கிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்ல போறியா "
கேலி சிரிப்புடன்
" நீ என்விட்டு போகனும் முடிவு எடுத்து லெட்டர் எழுதுன பாத்தியா அப்போ எனக்காக ஒரு மணி நேரம் காத்திருந்து இதலா சொல்லி இருக்கலாம் இல்லனா நீ டைவர்ஸ் வேணும் கேட்டப்ப நான் உன்ன பாக்கனும் சொன்னேன்ல அப்போ என் முகத்தை பாத்து உன் சினிமா கனவ பத்தி சொல்லி இருந்தா கேட்டு இருப்பேன் "

" இப்போ நான் உனக்கானவன் இல்ல இவ்வளவு பேசுறவன் ஏன்டா இவ்வளவு நேரம் உன் கதைய கேட்டனும் நினைக்குறியா அது உனக்கு கொடுத்த மரியாதை இல்ல எங்க அத்தைக்கு கொடுத்த மரியாதை "

பெருமூச்சு ஒன்றை விட்டு
" குட் பாய் "
என்று ஒற்றை வரியில் உனக்கும் எனக்கும் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்று விட்டான் வெற்றி....

தொடரும்....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
28 இனி எல்லாமே நீ தானே

வெற்றி தன்னால் எதும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு போக அவனின் பதிலில் ஆடி போனால் சரண்யா..
வெற்றியின் இளகிய மனதை பயன்படுத்தி அவனுடன் திரும்ப சேர ஏதாவது வழி இருக்குமா பார்த்தாள். ஆனால் வெற்றியின் அழுத்தமான பேச்சு அவளை வாய் அடைக்க வைத்தது...

எல்லாம் முடிய அந்த கிராமத்தை விட்டு கிளம்பும் நாள் வந்தது.
பாரதி சந்தோஷத்துடன் கிளம்புவதற்கான
வேலைகளை பார்த்தனர்..

சோகமான முகத்துடன் வந்து அமர்ந்த
அபியை கண்டவளள்
" ஏன்டா ஒரு மாதிரி இருக்க "

அபி " மா "
என்று அவளை நிமிர்ந்து பார்த்தவனின் கண் கலங்கி இருப்பதை கண்ட பாரதி பதறி

" கண்ணா என்னடா ஆச்சு ஏன்டா இப்படி இருக்க "

அபி " மா நம்ம வீட்டுக்கு புதுசா ஒரு ஆண்டி வந்துறுக்காங்கல அவங்க யாரு "

பாரதி " அவங்கள பத்தி ஏன்டா கேக்குற "

அபி " அவங்கள பத்தி நான் முன்னாடியே கேட்டேன் மா அப்பா சுகந்தி பாட்டி யாரும் எதுமே சொல்லல அவங்க என்ன இன்னைக்கு கூப்பிட்டு "

பாரதி " கூப்பிட்டு என்னடா சொன்னாங்க சொல்லு "

அபி " அவங்க அவங்க..
என்னோட அம்மா வா "

அவனின் கூற்றில் அதிர்ச்சி அடைந்த பாரதி
" உனக்கு யாரு டா சொன்னா "

அபி " அவங்க தான் மா அந்த ஆ.... ஆன்டி "

பாரதி " அபி அபி அவங்க சொல்லுறதல நம்பாத நான் நான் தான் உன் அம்மா அபி அபி அம்மாவ விட்டு போயிடாத "

அபி " இல்லமா நான் அவங்க கூட போறேன் அவங்க தான் என் அம்மா "

பாரதி " அபி அபி இல்ல இல்ல நான் தான் உன் அம்மா டா "

" அபி அபி "
என தூக்கத்தில் அலறி கொண்டே எழுந்தாள் பாரதி.

அவளின் சத்தம் கேட்டு வெற்றியும் முழிக்க
" ஏய் என்னச்சு மா "

பாரதி " என்னங்க ‌அபி என் பையன்ங்க என்ன விட்டு போக மாட்டான்ல "
என பயந்து போய் கேட்க

வெற்றி " என்னமா ஏதாவது கனவு கண்டியா "

பாரதி " அபி என்ன விட்டு போற மாதிரி கனவு அதான் பயந்துட்டேன் "

அவளை அணைத்து கொண்டவன்
" பாரதிமா நீ தேவையில்லாம பயப்புடுற நாளைக்கு காலையில நாம கிளம்பிடுவோம் திரும்பவும் நீ நான் அபி மூன்னு பேரும் பழைய மாதிரி இருக்க போறோம் சரியா மனச போட்டு குழப்பிக்காத படு "

அவனின் அணைப்பில் சற்று ஆறுதல் அடைந்தவள் அமைதியாக தூங்கும் அபியினை தொட்டு முத்தம்யிட்டு வெற்றியின் அணைப்பில் தூங்கினாள்...

மறுநாள் காலை பாரதி வெற்றி அபி மூவரும் கிளம்ப சுகந்தி வருத்தம் அடைந்த போதும் அவர்களின் நலன் கருதி அனுப்பி வைத்தார்...

அவர்கள் செல்லும்வரை சரண்யா தன் அறையை விட்டு வெளியே வரவில்லை...

அபி " டாடி மம்மி ஏன் உம்முனு இருக்காங்க "

வெற்றி " மம்மி க்கு உடம்பு சரியில்ல டா அதான் அப்படி இருக்காங்க "

அபி " மம்மி என்னாச்சு "

பாரதி " சாருக்கு இப்பதான் மம்மி நியாபகம் வந்துச்சா உங்க பாட்டி கூடயே தான இருந்த போடா என்கிட்ட பேசாத "

அபி " அச்சச்சோ என் செல்ல மம்மி கோபமா இருக்கிங்கலா "
என அவளின் கண்ணம் தொட்டு கேட்டவனை

பாரதி " ஆஹாஹா ரொம்ப பாசம் தான் போடா உன் மேல கோபமா இருக்கேன் பாருங்க இவன மம்மி மம்மி என்னையே சுத்தி சுத்தி வரவன் மூனு நாளா என்ன கண்டுக்கவே இல்லங்க "

வெற்றி " அட விடு மா விளையாட்டு பிசில உன்ன மறந்துட்டான் "

அபி " என் செல்ல மம்மில சாரி இனி உன் கூடவே விளையாடுறேன் பிளிஸ் "

அவன் கூறியதில் சமாதானம் ஆனவள் முறைக்க முயன்று சிரித்துவிட்டாள்.
மூவரும் சிரித்துபடியே வீடு வந்து சேர்ந்தனர்....

சில நாட்கள் அந்த வீட்டில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தான் சென்றது. பாரதியும் தேவையில்லாத மன குழப்பத்தில் இருந்து வெளியே வந்து கிராமத்தில் நடந்தவற்றை மறந்திருந்தாள்..

பாரதி " ஏன்டா லேட் இன்னைக்கு "

அபி " ஆங் அது அது ஸ்பெஷல் கிளாஸ் மா "

பாரதி " உனக்கு என்ன டா ஸ்பெஷல் கிளாஸ் நீ தான் டாப்பர் அப்புறம் என்னடா "

அபி " ஆங் அது அது எல்லாருக்கும் மா "
முகம் கொடுத்து பேசாமல் தன் அறைக்கு சென்று விட்டான்..

அவன் முகம் தெளிவு இல்லாததை கண்ட பாரதி
" 1 st பசங்களுக்கு என்ன ஸ்பெஷல் கிளாஸ் பாவம் அபி முகமே சரியில்லை "
என எண்ணியவள் அடுத்து வேலை பார்க்க சென்றுவிட..

தன் அறையில் ஸ்குல் விட்டு வரும் போது நடந்த நிகழ்வுகளை நினைத்து கொண்டு இருந்தான் அபி...

மாலை பள்ளி முடிய தனது கார்க்காக காத்திருந்தான் அபி அப்போது அங்கு வந்த சரண்யா அவனை பார்த்து சிரித்தாள்..

சரண்யா " ஹாய் அபி என்ன நியாபகம் இருக்கா "

அபி " ஹான் சுகந்தி பாட்டி வீட்டுல பாத்தேன் ஆனா நீங்க யாருன்னு தெரியாது "

சரண்யா " நான் யாருனு உன்கிட்ட யாருமே சொல்லயா பேபி "

கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைத்து கொண்டே கேட்டாள்..
அபி " நீங்க யாரு ஆன்டி "

சரண்யா "நான் தான் அபி உன்னோட அம்மா உன்ன பெத்த அம்மா "

கோபத்துடன் அபி
" நோ நீங்க என் அம்மா இல்ல பாரதி அம்மா மட்டும் தான் என் அம்மா "

சரண்யா " இல்ல அபி உன்ன ஏமாத்துறாங்க நான் தான் உன்னோட உண்மையான அம்மா அந்த அந்த பாரதி இல்ல "

அபி " நோ நோ "
என காரின் திசை நோக்கி ஓடினான்..

சரண்யா " அபி அபி "
அவள் அழைத்து கொண்டே இருக்க அபி காரில் ஏறி சென்றுவிட்டான்...

இதை பற்றி நினைத்து கொண்டு இருந்த அபி பாரதி அழைத்தது காதில் விழவில்லை..

வெற்றி " டேய் அம்மா எவ்வளவு நேரம் கூப்பிடுறாங்க என்னடா யோசனையில இருக்க "

அபி " ஆங் அப்பா "

பாரதி " அபி கண்ணா என்னாச்சு அம்மாகிட்ட சொல்லு "

அபி " ஒன்னுமில்ல "

பாரதி " இல்லையே என் அபி குட்டி முகமே சரியில்லையே சொல்லு பா "

அபி " அதான் ஒன்னும் இல்ல சொல்லுறேன் ல விடுங்க நான் போறேன் "
அவனை புரியாத‌ பார்வை பார்த்த இருவரும் அவர்கள் வேலையை பார்த்தனர்..

சரண்யா அறையில் சரண்யாவை கட்டி கொண்டு வாழ்த்தினர் அவளது தோழிகள் நேத்ரா மற்றும் மைதிலி..

நேத்ரா " சூப்பர் டி சான்ஸே இல்ல என்ன ஆக்டிங் என்ன ஆக்டிங் "

" உண்மையா அழுகுறவங்க கூட இப்படி அழ மாட்டாங்க அபி நான் உன் அம்மா டா நான் உன் அம்மா டா அடடடடா என்ன நடிப்பு"

சரண்யா " ஸ்டாப் இட் நேத்ரா நான் ஒன்னும் நடிக்கல நிஜமா அபி என்ன யாருனு தெரியாதுன்னு சொன்னப்போ என் மனசு எப்படி தவிச்சுது தெரியுமா பெத்த புள்ள நீங்க யாருனு என் முகத்த பாத்து கேட்டப்போ அப்படியே செத்து போயிடலாம் போல இருந்துச்சு நான் பண்ணது பெரிய தப்போனு இப்ப தோனுது "

மைதிலி கண் காட்ட அவளின் அருகில் சென்று அமர்ந்த நேத்ரா அவளின் தோளினை தொட்டு
" இப்ப என்னாச்சு அபி உன் புள்ள தான் ஆனா இதலா நான் எனக்காக கேக்கலயே உன் கனவு நனவு ஆகனும் தான கேக்குறேன் புரிஞ்சுக்கோ உன்
கனவு தான் எங்க கனவு கண்டிப்பா நமக்கு இப்போ காசு வேணும் யார்கிட்டேயும் கேக்க முடியாத நிலைமையில இருக்கோம் வெற்றி யால மட்டும் தான் நம்மல காப்பாத்த முடியும் அதுக்கு தான் டா இந்த மாதிரிலா "

மைதிலி " வேணாம் இப்படி பண்ணுவோம் எல்லா பிராப்பளம் ஸ்லாவ் ஆன அப்புறம் அபியை உன்கூடவே கூட்டி வந்து வைச்சுப்போம் "

நேத்ரா " நாங்க எதுக்கு இருக்கோம் அபி மனச கொஞ்சம் கொஞ்சமாக மாத்துவோம் நம்ப வழிக்கு கொண்டு வருவோம் "

மைதிலி " ஆங் ஓகே "

ம்ம் என அறை மனதுடன் சம்மதித்தால் சரண்யா...

தொடரும்...
 
Top