All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிந்தியனின் " இனி எல்லாமே நீ தானே " கதை திரி....

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29 இனி எல்லாமே நீ தானே

வெற்றி " பாரதி "
என அழைக்க கண்களை துடைத்து கொண்டு எழுந்து நின்றாள் பாரதி.

வெற்றி" ஆரம்பிச்சிடியா உனக்கு இதே வேல எப்ப பாரு அழ வேண்டியது இப்ப என்ன உனக்கு "

பாரதி " இல்லங்க அபி இதுவரைக்கும் இப்படி பேசுனதே இல்லங்க இன்னைக்கு ஏதோ இருக்குங்க "

வெற்றி " அடிபோடி இங்க பாரு அவன் நார்மல் தான் நீதான் நீ தான சொன்ன குழந்தைங்கனா அடம்பிடிக்கனும் விளையாடனும் சண்ட போடனும் அப்பதான் அவங்க மனசுல ஒன்னும் இல்லனு அர்த்தம் இல்லான மனசுல எதையோ பூட்டி வைச்சிறுகாங்கனு "

பாரதி " ஆமாம்ங்க நான் தான் சொன்னேன் ஆனா அபி எதையோ என்கிட்ட மறைக்கற மாதிரி இருக்கு "

வெற்றி " பாரதி பாரதி அபி நார்மல் நீ எதையும் போட்டு குழப்பிக்காத சரியா போ போ வேலைய பாரு "

ஒரு வாரமாகவே அவன் இப்படி இருப்பது என்னவோ போல் பட இன்று தனது வேலைகளை அவசர அவசரமாக முடித்து கொண்டு அபியை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்றாள்...

பள்ளிக்கு வந்த பாரதி கண்டது அபியின் கைகள் இரண்டையும் பிடித்து கொண்டு சரண்யா அவனிடம் பேசி கொண்டு இருந்ததை தான்..

பாரதி " அபி "
என சத்தமாக கூப்பிட்ட பாரதியின் குரல் வந்த திசையை நோக்கி திரும்பினர் அபியும் சரண்யாவும்..

அபிக்கு பாரதி கோபமாக இருப்பதை பார்த்து பயமும் பாரதியை அங்கு எதிர்பார்க்காத சரண்யாவிற்கு எரிச்சலாகவும் இருந்தது..

அபி " மா "
என்றவன்

பாரதி " இங்க என்ன பண்ணுற இதான் நீ சொன்ன ஸ்பெஷல் கிளாஸ் ஆ என்கிட்டயே பொய் சொல்லறியா "

அபி " மா இல்லமா வந்து "

சரண்யா " ஏய் அவன் என் புள்ள நீ யாரு டி எங்களுக்குள்ள குறுக்க வர "

பாரதி " வாய மூடு யாரு யாரு புள்ள இவன் என் அபி அபி எப்பயும் பாரதி வெற்றி யோட பையன் நீ எங்க லைஃப் குறுக்க வராத "

சரண்யா " ஓஓஓ இப்படிலா பேசி தான் இவங்க அப்பா வ மயக்குனியா "

பாரதி " உன்கிட்ட எதும் சொல்லனும் எனக்கு அவசியம் இல்லை இன்னோரு முறை என் பையன் கிட்ட ஏதாவது பேசனும் நினைச்ச உன்ன என்ன பண்ணுவனு எனக்கே தெரியாது வாடா "
என அபியின் கையினை பிடித்து இழுத்து கொண்டு போனாள் பாரதி....

காரில் ஏறி அமைதியாகவே வுடு வந்தனர் இருவரும்..

பாரதி " அபி நில்லு "

அபி " மா "

பாரதி " இது எத்தனை நாளா நடக்குது "

அபி " மா அதுவந்து இன்னைக்கு "

பாரதி " அபி என்கிட்ட பொய் சொல்லாத அபி என்னால தாங்க முடியாது "

அபி " ஓன் வீக்கா "

பாரதி " ஓன் வீக்கா அவங்க உன்ன வந்து பாக்குறாங்களா நீ ஏன் அபி என்கிட்ட சொல்லல "
" சொல்லு அபி "

அபி " இல்ல அவங்க ...."
தடுமாற.

பாரதி " ஓகே அபி லீவ் இட் நடந்தது நடந்து போச்சு இனிமே அவங்கிட்ட பேசாத சரியா நான் தான்டா உன் அம்மா அவங்கள நமக்கு வேணாம் டா என் செல்லம் லா அம்மாவிட்டு எங்கயும் போகாத டா என்கிட்ட பொய் சொல்லாத என்னால தாங்க முடியல டா "

அபி ஒன்றும் கூறாமல் தன் அறைக்கு செல்ல பாரதி சற்று நேரம் அழுது விட்டு இதை பற்றி வெற்றியிடம் கூற தனது மொபைலை எடுத்தாள்
" இப்ப எதும் சொல்ல வேணாம் நான் தான் குழப்பிக்குறேனு திட்டுவாங்க அப்புறம் சொல்லாம் "
என எண்ணி அவனுக்கு கூறாமல் விட்டு விட்டாள்...

அவனிடம் கூறியிருந்தால் நாளை வரும் துயரத்தில் இருந்து தப்பித்து இருப்பாள் பாரதி ( தப்பு பண்ணிடியே பாரதி மா )...

இரவு வெற்றி வர எதை பற்றியும் கூறாமல் மூவரும் உணவு அருந்திவிட்டு அறைக்கு சென்று தூங்க போயினர்...

பாரதி " அபி இங்க தூங்க வரல "

வெற்றி " இல்ல டா அவன் ரூம்லயே தூங்கிட்டான் "

பாரதி " ம்ம் "
என சோகமான முகத்துடன் கூற

வெற்றி " அதுக்கு ஒரு ஃபீலிங்கா பாரதி மா வர வர ரொம்ப ஓவரா போற "

பாரதி " அதலா ஒன்னும் இல்ல நான் நார்மல் தான் போங்க நான் தூங்க போறேன் "

வெற்றி " தூங்க போறியா விட்டா தான "
என்றவன் அணைப்பு இறுக
இரவு கழிய மறுநாள் விடிந்தது..

எழுந்த பாரதி குளித்து முடித்துவிட்டு அபியின் அறைக்கு செல்ல தூங்கி கொண்டு இருப்பவனை தலை கேசம் தொட்டு முத்தம்யிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றாள்....

அபி எழுந்து கிளம்பி கீழே வர
பாரதி " பாருடா எழுப்பமையே சார் எழுந்திடிங்க "

" டேய் எங்க கிளம்பி இருக்க டாடி எதும் சொன்னாங்களா "
என கேட்டு கொண்டு இருக்கும் போதே
அங்கு சரண்யா நேத்ரா மைதிலி மூவரும் அவர்களுடன் ஆண் வக்கில் ஒருவரும் வந்து இருந்தனர்...

பாரதி " ஏய் நீ எப்படி இங்க வந்த முதல வீட்ட விட்டு வெளியே போ "
" ஓஓ நீயும் இவங்களோட கூட்டா இவ யாரு உன் கூட நிக்குறவ எதுக்கு இப்போ வந்துறுக்கா "
என மைதிலியை பார்த்து கேட்க..

மைதிலி " நாங்க அபிய கூட்டிட்டு போ வந்துறுக்கோம் "

பாரதி " யாரு யார கூட்டிட்டு போறது அன்னைக்கு வாங்குன அறை பத்தலயா இன்னைக்கும் அது மாதிரி வேணுமா "

சரண்யா " இங்க பாரு பாரதி நாங்க உன்கிட்ட பிரச்சினை பண்ண வரல அபிய கூட்டிட்டு போக வந்தோம் "

பாரதி " அபிய நீ கூட்டிட்டு போறியா அதான் வேணானு போய்ட்டல அப்புறம் என்ன அபி எங்கயும் வர மாட்டான் மொதல வெளியே போ "

சரண்யா " இவகிட்ட என்ன பேச்சு அபி நீ வாடா "

அபி அப்போதும் அங்கயே நின்று கொண்டு நேத்ரா மைதிலியை பார்க்க அவர்களின் கண் அசைவில் இவன் நகர்ந்து சரண்யாவிடம் செல்ல முயன்றான்...

பாரதி " அபி எங்கடா போற "
" நீ பயப்படாத அபி நான் இருக்கேன் டா "

இவர்களின் சத்தம் கேட்டு தூங்கி எழுந்த வெற்றி கீழே வர அவனின் தலை கண்டு நேத்ரா மைதிலி இருவரும் ஒதுங்கி கொண்டனர்..

வெற்றி " என்ன பிரச்சினை இங்க பாரதி மா இவ ஏன் இங்க வந்தா என்ன வேணுமா இவளுக்கு "

பாரதி " அபியை அவங்க கூட கூட்டிட்டு போக போறாங்களான் "
என அழுது கொண்டே கூற.

சரண்யா " ஆமாம் மாமா நான் பையன கூட்டிட்டு போறேன் "

வெற்றி " இங்க பாரு இந்த மாமா அப்படிகுற உறவு முறைல தேவையில்ல "

வக்கில் " சார் நானே எல்லாம் சொல்லுறேன் அவங்க குழந்தைய கேட்டு அவங்க கேஸ் போட்டு இருக்காங்க அதனால குழந்தைய அவங்கிட்ட கொடுங்க சட்டப்படி குழந்தை அம்மா கிட்ட வளரது தான் சரி பிரச்சினை பண்ணாம கொடுத்தா நல்லது சார் "

வெற்றி " அது எப்படி முடியும் அவ தான் குழந்தையும் வேணாம் நானும் வேணாம்னு சொல்லி கேஸ் போட்டா இப்ப அவ வந்து கேட்டா நான் கொடுக்கனுமா அவன் என் குழந்தை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் "

வக்கில் " ஆமாம் சார் அவங்க தான் குழந்தை வேணானு கேஸ் போட்டாங்க ஆனா குழந்தை இப்போ அவங்க அம்மாகிட்ட இருக்க தான் ஆசைபடுறான் "

அதிர்ச்சி அடைந்த இருவரும் அபி பார்க்க பாரதி ஓடி சென்று அவனின் உயரத்திற்கு முட்டி இட்டு அமர்ந்து கொண்டு
" கண்ணா அவங்களா என்னமோ சொல்லுறாங்க டா நீ சொல்லு அம்மாகிட்ட தான் இருப்பேனு சொல்லு சொல்லு டா "
என கதறி கொண்டே கேட்க..

வெற்றி " அபி என்னாச்சு உனக்கு அப்பா இருக்கேன் சொல்லு அவங்கிட்ட பாரதி தான் எனக்கு அம்மானு சொல்லு "

வக்கில் " சார் குழந்தைய மிரட்டாதிங்க அவன அவன் இஷ்டத்துக்கு விடுங்க "
சரண்யா முன்னேறி சென்று அபியின் கைபிடிக்க பாரதி மற்றொரு கையினை பிடித்து கொண்டு போகதே
என கண்களில் நீர் வர தலையை அசைந்து கூறினாள்...

சரண்யா அவளின் கையினையும் அபியின் கையினையும் பிரித்து விட்டு அபியை அழைத்து சென்றாள்...

தொடரும்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்து இன்னும் நான்கு பகுதி தான் இருக்கிறது விரைவில் பதிவிடுகிறேன்...
தாமதத்திற்கு மன்னிக்கவும்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
30 இனி எல்லாமே நீ தானே

பாரதி அபியை விட்டு கதறி அழ அவளின் அழுகையினை பொருட்படுத்தாமல் நேத்ரா மைதிலி சரண்யா மூவரும் அபி அழைத்து கொண்டு வீடு வந்தனர்.....

நேத்ரா சரண்யா இருவரும் ஒரே ஆஃபிஸ் வெலை செய்து நண்பர்கள் ஆனர் அதன்படியே சரண்யா நேத்ரா பேச்சை மட்டும் கேட்டு அவர்களுடன் இணைந்தாள் மைதிலி நேத்ரா கல்லூரி தோழி..

ஓரே குட்டையில் இணைந்த மட்டை போல இருவர் எண்ணமும் பணம் ஒன்றே இருக்க அதற்காக அவர்கள் சரண்யாவை சினிமாவில் சேர்த்து நிறைய பணம் சம்பாதிக்க ஆசைபட்டனர்..

ஆனால் அவர்களின் போதாத நேரம் நடித்த படம் வெளி வருவதற்கு முன்பே பிரச்சினை ஆகி பாதியில் நின்றது அப்போது பணம் தேவைபட அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் வெற்றி அபி....

அவர்களின் திட்டப்படி மைதிலி வெற்றி ஆபிஸில் இணைந்து அவனை தன் வலையில் வீழ்த்தி அவனிடம் பணம் கறக்க நினைத்தனர். இதற்கிடையில் பாரதி இடை புகுந்து வெற்றியை திருமணம் செய்துவிட்டாள்..

பிறகு அபியை குறி வைத்து அவனிடம் இருந்து பிரித்து பணம் பரிக்க அடுத்த கட்ட திட்டத்தை ஆரம்பித்தனர்......

வெற்றி " பாரதி கொஞ்சம் சாப்பிடு காலையிருந்து எதும் சாப்பிடல "

பாரதி " எனக்கு அபி தான் வேணும் வேற எதுவும் வேணாம் "

வெற்றி " பாரதி எனக்கு புரியுது அபி என் பையனும் தான் நான் வக்கில் கிட்ட பேசி இருக்கேன் நீ சாப்பிடு இந்தா "

தட்டினை தட்டி விட்டவள்
" எனக்கு அபி தான் என் புள்ள வந்தா தான் சாப்பிடுவேன் "

வெற்றி " ஏய் லூசாடி நீ சின்ன புள்ள மாதிரி அடம் பிடிக்கற நான் தான் சொல்லுறன்ல அபி வருவான் "
என அவனும் கோபமாக கத்திவிட்டு நிகர்த்தான்....


வெற்றியின் போனனுக்கு ருக்மணி அம்மா அழைக்க
ருக்மணி " வெற்றி எப்படி டா இருக்க அபி பாரதி எப்படி இருக்காங்க "

வெற்றி " ம்ம் எல்லாரும் நல்லா இருக்கோம் மா நீங்க தனம் அம்மா எல்லாரும் எப்படி இருக்கிங்க "

ருக்மணி " நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் டா குளிர் தான் கொஞ்சம் அதிகமா இருக்கு அடுத்த வாரம் வந்துடுவோம் டா "

வெற்றி " சரிமா நீங்க உங்க டூர் முடிச்சுட்டு பத்திரமா வாங்க "

ருக்மணி " சரிடா நாங்க பத்திரமா வரோம் நீ பாரதி அபி யை நல்லா பாத்துக்கோ "

ருக்மணி அம்மாயிடம் பேசிய பின் தனது மனபாரம் சற்று குறைய திரும்பவும் பாரதிக்கு உணவு எடுத்து கொண்டு சென்றான்...

வெற்றி " பாரதி மா பிளிஸ் டா கொஞ்சம் சாப்பிடு "

பாரதி " அபி வேணும் "

வெற்றி " எனக்கும் அபி வேணும் நம்ப பையன் சீக்கிரம் நம்பகிட்ட வருவான் சாப்பிடு "
என அவளுக்கு ஒருவழியாக ஊட்டி முடித்துவிட்டு படுக்கையில் விழுந்தவன் கண்களில் இருந்து கண்ணீர் ஓடியது.....

ஒன்றா இரண்டா ஆறு வருடம் அவன் மட்டுமே வாழ்க்கை என அவனுக்காகவே வாழ தொடங்கினான் ஆனால் இன்று அவன் இப்படி செய்தது காரணம்....

சரண்யா " அபி இன்னும் கொஞ்சம் "

அபி " இல்ல வேணாம் எனக்கு போதும் "

சரண்யா " ஏன் அபி சாப்பாடு நல்லா இல்லையா "

அபி " இல்ல நான் இவ்வளவு தான் சாப்பிடுவேன் "

சரண்யா " சரி வா அபி நாம சேர்ந்தே தூங்கலாம் "

அபி " இல்ல தனியா தூங்கி தான் பழக்கம் நான் தனியாவே படுத்துகுறேன் "

சரண்யா " ஏன் அபி என்ன விட்டு விலகி விலகி போற யாரோ மாதிரி பேசுற அம்மா கூப்பிட மாட்ற "
" ஓரே ஒரு வாட்டி அம்மா சொல்லு டா பிளிஸ் "
என கண்களில் ஆர்வத்துடனும் உதட்டில் புன்னகையுடனும் கேட்டாள்..

அபி " அஅ....அ...அப்புறமா சொல்லுறேன் தூக்கம் வருது "
என போர்வையை தலைவரை இழுத்து படுத்து கொண்டான்...

எவ்வளவோ ஏமாற்றங்களை தாங்கிய சரண்யா வால் இதனை தாங்கி கொள்ள முடியவில்லை இதற்கொல்லாம் தனக்கு தகுதியில்லை என ஒற்றை மனம் எடுத்து உரைப்பினும் அடுத்து மனம் செய்வதே சரி என முடிவு செய்தது...

மைதிலி " நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல டி அபி நம்ப கூட வருவானு "

நேத்ரா " ஆனா எனக்கு தெரியும் அவன் கண்டிப்பா வருவானு "

மைதிலி " அப்படி என்ன டி பண்ண "
" ஆங் அன்னைக்கு ஐஸ்கிரீம் வாங்க சரண்யா போனப்ப நீ அபிகிட்ட கொஞ்சம் நேரம் தனியா இருந்தல அப்ப ஏதோ நடந்துருக்கு "

நேத்ரா " கரைட் அன்னைக்கு தான் அபிக்கு கொஞ்சம் ஷாக் டிரிட்மெண்ட் கொடுத்தேன் "

மைதிலி " ஏய் எனக்கும் சொல்லு "

நேத்ரா " ரொம்ப சிம்பிள் நீ நாங்க சொல்லுறத கேக்குலனா உங்க பாரதி அம்மாவ கொண்ணுடுவோம்னு சொன்னேன் அவ்வளவு தான் "

மைதிலி " என்னது கொலையா இது நம்ப லிஸ்ட்லே இல்லையே "

நேத்ரா " ஏய்ய்ய் ஏன்டி கொலை னு சொன்னா கொலை பண்ணிடுவோமா நம்பல பொறுத்தவரை இது சாதாரண வார்த்தை ஆனா அபி அவன் குழந்தை அவனுக்கு அவங்க பாரதி அம்மா உயிர் "
" சோ அவங்க அம்மாக்காக நாம சொல்லுறதுக்கு எல்லாம் சரினு சொல்லிட்டான் "

மைதிலி " பட் இருந்தாலும் வெற்றி சார பாத்ததும் எனக்கு கொஞ்சம் பயம் தான் "

நேத்ரா " எனக்கும் தான் இவன் எங்க போட்டு கொடுத்துடுவானோனு நானும் பயந்துட்டு தான் இருந்தேன் "

மைதிலி " சரி நெக்ஸ்ட் ப்ளான் என்ன "

நேத்ரா " ப்ளான் லா இல்ல அபியை வைச்சு வெற்றி கிட்ட எவ்வளவு கறக்க முடியுமோ கறந்துட்டு சரண்யாவயும் டீல்ல விட்டுட்டு நாம எஸ்கேப் ஆகுறோன் "

மைதிலி " சரண்யாவ விட்டுட்டா ஏய் அவ பாவம் டி "

நேத்ரா " பாவம் புண்ணியம் பாத்தா வேலைக்கு ஆகாது நான் அவள வைச்சு பணம் சம்பாதிக்க தான் இவ்வளவு கஷ்டபட்டேன் இப்போ அவ புள்ளய வைச்சு சம்பாதிக்குறன் இதுல அவளையும் கூட்டு சேத்தா ஒன்னும் கிடைக்காது "

மைதிலி " இருந்தாலும் துரோகம் இல்லையா "

அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த சரண்யா " என்ன துரோகம் "

பதறிய நேத்ரா " அஅ...அது ஒன்னும் இல்ல சரண்யா சும்மா தான் பேசிட்டு இருந்தோம் அபி தூங்கிட்டானா "

சரண்யா " ம்ம் சரி ஓகே குட் நைட்டு "

தொடரும்....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
31 இனி எல்லாமே நீ தானே

இன்றுடன் மூன்று நாட்கள் ஆனது பாரதி அபியை பிரித்து வைத்து.

கடவுளின் முன்பு கண் மூடி நின்றவளின் நம்பிக்கையை கலைக்காமல் தானும் அவளுடன் சேர்ந்து நின்று கடவுளை வேண்டினான் அபி தங்களுக்கு கிடைக்க வேண்டும் என..

வெற்றி " கிளம்பலாமா "

பாரதி " பயமா இருக்குங்க "

வெற்றி " கவலப்படாத நம்ப வக்கில் கிட்ட எல்லாம் பேசிட்டேன் அபி நிச்சயம் நமக்கு தான் "

பாரதி " எல்லாம் நல்லபடியாக நடக்கனும் ங்க "

இருவரும் கிளம்பி வெளியே செல்ல வெற்றியின் போனுக்கு அழைப்பு வந்தது

வெற்றி " ஹலோ ஹூ ஸ் திஸ் "

" வெற்றி சார் எப்படி இருக்கிங்க "

வெற்றி " ஐ யம் சாரி நீங்க யாருனு தெரியல "

" என்ன வெற்றி சார் என்ன அதுகுள்ள மறந்துடிங்களா "

வெற்றி " ஹலோ டைம் வேஸ்ட் பண்ணாம யாருனு சொல்லுங்க இல்ல ஃபோன வைங்க எனக்கு நிறைய வேலை இருக்கு "

" அப்படி என்ன சார் வேல கோர்ட் போகவா அதுக்கெல்லாம் அவசியமே இல்ல "

வெற்றி " ஏய் யாரு பேசறது நான் கோர்ட் போறது உனக்கு எப்படி தெரியும் "

" நான் நேத்ரா பேசுறேன் உங்கிட்ட ஒரு டீல் பேசனும் பேசலாமா "

பாரதி " வெற்றி கிளம்பலாமா "
என வந்து நின்றவளை கார் சாவி மறந்து வைத்துவிட்டு வந்தாக மறுபடியும் வீட்டினுள் சென்று சாவி எடுத்து வருமாறு பாரதிக்கு சைகை மூலம் செய்தான்...
பாரதியும் உள்ளே செல்ல

வெற்றி " இப்ப சொல்லு உனக்கு என்ன வேணும் என்ன டீல் பேசனும் "

நேத்ரா " கூல் கூல் கூல் சார் ஏன் இவ்வளவு பதட்டம் உங்களுக்கு உங்க பையன் அபி வேணும் வேணுலா "
என அமைதி காக்க அவளே பேச்சினை தொடர்ந்தாள்..
" உங்களுக்கு உங்க பையன் வேணும் எனக்கு பணம் வேணும் "

வெற்றி " கொடுக்கலனா‌ "

நேத்ரா " ஒன்னும் பண்ண மாட்டேன் காலத்துக்கும் உங்க பையன உங்க கண்ணுலயே காட்ட மாட்டேன் "

வெற்றி " என்ன மிரட்டுறியா "

நேத்ரா " சத்தியமா சார் உங்களுக்கே தெரியும் சரண்யா நான் சொல்லுறனோ அத மட்டும் தான் கேப்பா என் இஷ்டத்துக்கு அவள ஆட்டி வைச்சேன் இப்போ உங்க பையனையும் ஆட்டி வைப்பேன் "

வெற்றி " நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணுற "

நேத்ரா " லைஃப்ல ரிஸ்க் எடுக்கனும் சார் இல்லனா செட்டில் ஆக முடியாது "
" இப்ப நீங்க பணம் கூடுக்கலனா அபிய உங்கிட்ட இருந்து பிரிச்சுடுவேன் அதுவே பணம் கொடுத்தா அபிய உங்கிட்ட கொடுத்துட்டு நாங்களாம் நிம்மதியா போய்டுவோம் "

வெற்றி " எவ்வளவு வேணும் "

நேத்ரா " அப்படி வாங்க வழிக்கு ஸ்மார்ட் பாய் ஐந்து கோடி "

வெற்றி " வாட் ஐஞ்சு கோடி என்னால எப்படி அவ்வளவு பணம் உடனே ரெடி பண்ண முடியும் "

நேத்ரா " எப்ப ரெடி பண்ணுறிங்களோ அப்ப உங்க பையன வாங்கிக்கோங்க "
" பாய் சார் "

வெற்றி " ஏய் ஏய் ஹலோ ஹலோ "
என கத்தி கொண்டே இருக்க அவள் இணைப்பை துண்டித்து விட்டு சென்றுவிட்டாள்....

பாரதி " என்னாச்சுங்க யாரு ஃபோன் "

அவளிடம் இப்போது எதையும் கூற வேண்டாம் என எண்ணிய வெற்றி
" ஒன்னுமில்ல மா சும்மா ஆபிஸ் கால் தான் வா போகலாம் "

சரண்யா " அபி கிளம்பலாமா "

அபி " ஜெஸ்ட் ஃபய் மினிட்ஸ் வந்துறன் "

சரண்யா வெளியே அவனுக்காக காத்திருக்க அபி இருந்த அந்த அறைக்கு நேத்ரா சென்றாள்..

நேத்ரா " ஹாய் அபி கிளம்பியாச்சா "

பயத்துடன் பின்வாங்கியவன்
" கி...கி.... கிளம்புறேன் "

நேத்ரா " ஏன் அபி என்ன பாத்து பயப்புடுற நான் உன்ன ஒன்னுமே பண்ண மாட்டேன் "

அபி மறுபடியும் அவளை கண்டு பயத்துடன் முழிக்க

நேத்ரா " க்மான் அபி என்ன பாத்து பயப்பட ஒன்னுமே இல்ல நான் சொல்லுறத மட்டும் நல்லா காதுல வாங்கிக்கோ புரியுதா "

அபி அமைதியாக நிற்க
" புரியுதா "
என சத்தமாக கேட்டாள் நேத்ரா...

அபி " பு....பு... புரியுது "

நேத்ரா " இப்ப நாம கோர்டுக்கு போறோம் அங்க நீ சரண்யா கூட தான் இருக்க எனக்கு விருப்பம் னு சொல்லனும் "
" சரியா "
என சற்று அழுத்தமாகவே கேட்க

அபி " சரி சரி ஆண்டி "
என்று அவனும் பயத்துடனே தலை ஆட்டினான்....

அனைவரும் கிளம்பி நீதிமன்றம் செல்ல வழக்கு விசாரணைக்கு வரும் வரை வெளியே காத்து இருந்தனர்...

அபியை கண்ட பாரதி அவனிடம் ஓடி சென்று
" அபி அபி ஏனாடா இப்படி பண்ணுற அம்மா கூட வாடா நாம நம்ப வீட்டுக்கே போயிடலாம் வாடா பிளிஸ் "

சரண்யா " இங்க பாரு பாரதி தேவையில்லாம பிரச்சினை பண்ணாத அபி யாருக்குனு கோர்ட் முடிவு பண்ணும் நீ இங்க சீன் போடாத "

பாரதி " யாரு சீன் போடுறது நீ தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் மரியாதையா எங்கள விட்டு போயிட்டு இல்லனா இல்லனா உன்ன நான்..... "

சரண்யா " என்ன மிரட்டுறியா இதலாம் நிறைய பாத்துட்டேன் போ போய் வேற எதாவது யோசி போ "
என அவள் பேசி கொண்டே அபியை அழைத்து சென்றாள்....

கோர்ட் வெற்றியின் வக்கில் குழந்தை இவர்களுடன் இருப்பதே பாதுகாப்பு என வாதாட சரண்யா பக்கம் உள்ள வக்கில் குழந்தை இவர்களிடம் இருக்கவே விரும்புவதாக வாதாட நீதிபதி குழந்தையிடமே கேட்டார் ....

" சொல்லு பா உனக்கு யாரு கூட இருக்க இஷ்டம் "

அபி ஒன்னும் பேசாமல் அமைதியாக இருக்க மீண்டும்
" அபி நீ யாருக்கும் பயப்படாத சொல்லு பா உனக்கு உங்க அம்மா கூட இருக்க இஷ்டமா இல்ல அப்பா கூட இருக்க இஷ்டமா "

அபி அனைவரையும் பார்க்க கண்களில் நம்பிக்கையுடனும் கண் அசைவில் தன்னிடம் வரும்படி கூறிய வெற்றியை கண்டான்..

பின்பு அழுகையுடனே இரு கைகளையும் நீட்டி தன்னை அழைக்கும் பாரதியையும் கண்டான்...
மனது அவர்கள் பக்கம் செல்ல அடுத்தது

தவிப்புடன் நிற்கும் சரண்யாவை அவன் பார்க்கவில்லை மாறாக அருகில் நிற்கும் மைதிலி நேத்ரா இருவரையும் கண்டுவிட்டு
" நான் இவங்க கூட போறேன் "
என்று சரண்யா பக்கம் தன் கைகளை நீட்டி காட்டினான்....

பாரதி வெற்றி இருவரும் அதிர்ச்சி அடைய கோர்ட் அவன் விருப்பத்திற்கு ஏற்ப அபியை சரண்யாவிடமே ஒப்படைத்தனர்...

வெளியே செல்ல நேத்ரா வெற்றியை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தாள் அதன் அர்த்தம் " பார்த்தியா இவங்க இரண்டு பேரும் நான் சொல்லுறத தான்
கேப்பாங்க "...

சரண்யா தனது வக்கிலிடம் சந்தோஷத்துடன் பேச வெற்றி தனது வக்கிலிடம் சண்டை இட்டு கொண்டு இருந்தான்..

வெற்றி " என்ன சார் இப்படி ஆகிட்டு என்ன பண்ணுவிங்களோ எனக்கு தெரியாது என் பையன் எனக்கு வேணும் "

" சார் நான் என்ன பண்ண உங்க பையன் உங்கூட தான் இருப்பேன் சொல்லாம அவங்க கூட தான் இருப்பேன் அழுத்தமா சொல்லிட்டான் "

கண்களை அழுந்த துடைத்த பாரதி நேராக அபியிடம் சென்று அவனின் தோள்யினை பற்றி
" ஏன் அபி இப்படி பண்ணுற என்னடா ஆச்சு அம்மா உன்ன நல்லா தான்டா பாத்துட்டேன் நான் எதாவது தப்பு பண்ணிடனா சொல்லு டா என்கூட வா நாம நம்ப வீடுக்கே போகலாம் வாடா "

சரண்யா " அபி வா போகலாம் "
என அவனை இழக்க...

யாரும் எதிர்பாராத சமயத்தில் பாரதி சட்டென அவளின் கால்களில் விழுந்தாள்..
தலை தூக்கி
" உன்ன கெஞ்சி கேக்குறேன் எங்கள விட்டுட்டு அவன் இல்லாம என்னால இருக்க முடியாது அதுமாதிரி நான் இல்லாம அவனாளையும் இருக்க முடியாது அவன் ஏதோ முட்டாள்தனமா பண்ணுறான் "
என கூற
அப்போது அங்கு வந்த வெற்றி கோபமாக
" பாரதி என்ன பண்ணுற பைத்தியமா உனக்கு அவ கால போய் விழுகுற அறிவில்ல உனக்கு "

பாரதி " ஆமாம் நான் பைத்தியம் தான் எனக்கு அபி வேணும் அவன கூப்பிடுங்க "
என கதற

இதனை எதையும் காதில் வாங்காமல் சரண்யா அபியை அழைத்து கொண்டு போக அபி திரும்பி பார்த்து கொண்டே சரண்யாவுடன் சென்றான்...

பேசி கொண்டே இருந்த பாரதி சட்டென மயங்கி விழ வெற்றி தாங்கி பிடித்து கொண்டு அவளின் கண்ணத்தினை தட்டி அவளை எழுப்ப முயற்சி செய்தான்....

இதனை பார்த்த அபி
" அம்மா "
என அழைத்து கொண்டே சரண்யாவின் கையினை தட்டி விட்டு பாரதியிடம் ஓடினான்.......

தொடரும்........
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
32 இனி எல்லாமே நீ தானே

அபி கதறியபடி பாரதியின் கையினை பிடித்து கொண்டு
" அம்மா அம்மா எழுந்திரு மா நான் உன்ன விட்டு எங்கயும் போகமாட்டேன் மா பிளிஸ் மா ஐ யம் சாரி மா "

இதனை கண்ட சரண்யா
" அபி என்ன பண்ணுற வா நாம போகலாம் "

அபி " கைய விடுங்க நான் உங்க கூட வர மாட்டேன் நீங்க என் அம்மா இல்ல. பாரதி அம்மா தான் எனக்கு அம்மா "
என கூறியபடி வெற்றியின் கோள்களுக்கு அருகில் நின்று கொண்டு
" டாடி இவங்க தான் பாரதி அம்மாவ கொலை பண்ணிடுவனு மிரட்டுனாங்க இவங்க கூட இருப்பேனு யாரு கேட்டாலும் சொல்லனும் சொன்னாங்க எனக்கு பயமா இருக்கு டாடி "
என வெற்றியின் தோளினை இறுக பற்ற.....

ஒரு கையில் பாரதியையும் மறுகையில் அபியையும் பற்றி கொண்டு எதிரில் நின்ற சரண்யாவை தீ பார்வை பார்த்தான்...

அதற்குள்ளாக அங்கு இருந்த டாக்டர் ஒருவர் பரிசோதித்து அவள் கர்ப்பமாக இருப்பதை கூறினார்..அதற்குள் மயக்கம் தெளிந்து எழுந்த பாரதி அபியை கட்டி கொண்டாள்....

அவளின் நெற்றியில் முத்தமிட்டு தான் அப்பா ஆகும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.....

மீண்டும் கோர்ட் தொடங்கப்பட்டு அபியின் வாக்குமூலத்தை கேட்டு அபியை பாரதியிடமே அனுப்பி வைத்தனர்..
மேலும் பணம் கேட்டு மிரட்டிய ஃபோன் காலை வெற்றி ரெக்கார்ட் செய்து வைத்திருக்க அதுவும் பயன்பட்டு மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது...

சரண்யா " ஐய்யோ மாமா இவங்க அபியை மிரட்டுனது எதுவும் எனக்கு தெரியாது "
" நடந்த உண்மை எதுவுமே எனக்கு தெரியாது பிளிஸ் மாமா நம்புங்க "
என அவனிடம் பேச...

இதனை கண்ட நேத்ரா
" ஏய் ஏன் டி பொய் சொல்லுற நாம மூன்று பேரும் சேர்ந்து போட்ட பிளான் தான டி இது "

அதிர்ச்சி ஆகி சரண்யா நிற்க வெற்றி தன் குடும்பத்தை கூட்டி கொண்டு வீடு திரும்பினான்...

ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து திரும்பவும் சேர்ந்ததாள் ஏற்பட்ட சந்தோஷ மிகுதியில் அபி பாரதி இருவரும் நிம்மதியா உறங்கி கொண்டே வீடு வந்தனர்....
வீடு வந்தவர்களை வரவேற்றது ருக்மணி அம்மா மற்றும் தனம்...

பாரதி " மா " என ஓடி சென்று அணைத்து கண்ணீர் வடித்தாள்....

தனம் " என்னடி என்னாச்சு "

வெற்றி " சந்தோஷமான விஷயம் தான் மா நீங்க பாட்டி ஆக போறிங்க "

தனம் " நிஜமா வா டி "
என அவளை பார்த்து கேட்க அவள் ஆமாம் என வெக்கத்துடன் தலை ஆட்டினாள்....

ருக்மணி " வாழ்த்துக்கள் அப்பா சார் "

வெற்றி " மா "
என அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க விழ போன பாரதியை தடுத்து நிறுத்தியனார் ருக்மணி அம்மா....

ருக்மணி " பரவால்ல டா என் ஆசிர்வாதம் எப்பவும் உனக்கு உண்டு "
" எங்க என் செல்ல பேரன கானும் "

அப்போது தான் அனைவரும் அபியை பார்க்க அவன் அமைதியாக ஒரமாக நின்று கொண்டு இருந்தான்..

வெற்றி " அபி இங்க வா ஏன் அங்க நிக்குற "

ருக்மணியிடம் வெற்றி கண் காட்ட தனம்மிடம் பாரதி கண் காட்டினாள் எதும் கேட்க கூடாது என...

இருவரும் புரிந்து கொள்ள சில நேரத்திற்கு பிறகு அபி இயல்பு நிலைக்கு திரும்பினான் சந்தோஷமாக....

தனம் " பாரதி உன்கிட்ட ஒன்னு சொல்லனும் டி "

பாரதி " என்னமா சொல்லுங்க "

தனம் " நாங்க ஆன்மிக கோவிலுக்கு போயிருந்தோல அப்ப ஒரு கோவில் உங்க அண்ணன் அண்ணிய பாத்தேன் டி "

பாரதி " ம்ம் அதுக்கு என்ன மா "

தனம் " அவங்க முன்ன மாதிரிலா இல்ல டி ரொம்பவே மாறி போயிருக்கான் இது வரைக்கும் குழந்தை இல்லனு கோயில் கோயிலா சுத்திட்டு இருக்கறதா சொன்னான் "
" உன் அண்ணி கூட உனக்கு செஞ்ச பாவம் தான் இப்படி இருக்கோனு கதறுனா டி "

பாரதி " மா இத எதுக்கு என்கிட்ட சொல்லுற "

தனம் " இல்லடி.... "

பாரதி " மா பிளிஸ் நானும் ஒரு சாதாரண மனுஷன் தான் என்னால எல்லாத்தையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துட்டு அண்ணன் அண்ணினு உறவு கொண்டாட முடியாது மா "

என அவள் கூறிவிட்டு போக இதனை எல்லாம் கேட்டு அங்கு வந்த வெற்றி
" அத்த உங்களுக்கு விருப்பம்னா என்கிட்ட சொல்லுங்க நான் பாரதி பேசுறேன் நீங்க போய் உங்க மகனையும் மருமகளையும் பார்த்துவிட்டு வாங்க "

தனம் " வேணாம் மாப்பிள அவங்க பண்ணது தப்பு தான தண்டனை அனுபவிக்கட்டும் உங்கள மாதிரி ஒருதர் என் பொண்ணு வாழ்க்கையில் வராம போயிருந்தா அவ நிலம என்னாயிருக்கும் "
" விடுங்க மாபிள அவங்க அண்ணன் மேல அவளுக்கு பாசம் அதிகம் கொஞ்சும் நாள் போனா மன்னிப்பா அப்ப போய் சேர்ந்தே பாக்கலாம் "

அதன்பின் ருக்மணி அம்மாயுடன் தனம் கிளம்பி விட அபி பாரதி இருவரும் பேசிவிட்டு வெற்றி யிடம் சென்றனர்..

பாரதி " ஏங்க இங்க பாருங்களேன் இவன "
என ஏதோ கேட்க அவன் எதுவும் பேசாமல் அமைதியாவே இருந்தான்...

" என்னங்க நான் பேசிட்டே இருக்கேன் நீங்க அமைதியாவே இருக்கிங்க "
என அவன் முகத்தை திருப்பி பார்க்க அது எள்ளும் கொள்ளும் வெடித்தார் போல இருக்க

பாரதி " என்னாச்சு வெற்றி ஏன் கோபமா இருக்கிங்க"

அபி " பா என்னாச்சு பா "
என அவனின் இருபுறமும் அமர்ந்து கேட்க..

வெற்றி " நீங்க இரண்டு பேரும் உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கிங்க "
" என்ன என்ன பார்த்த ஒன்னுமே லாயிக்கில்லாதவன் மாதிரி தெரியுதா "

பாரதி " என்ன வெற்றி பேசுறிங்க "

வெற்றி " நீ வாய மூடு எதும் பேசாத "

வெற்றி " டேய் அபி நீ சொல்லு டா உன்ன ஒருத்தவி மிரட்டுனா அத என்கிட்ட சொல்லனும் உனக்கு தோனல அவளுக்கு பயந்திட்டு அவ கூடவே போயிட்ட "

பாரதி " என்னங்க பேசுறிங்க அவனே பயந்துட்டு இருக்கான் "

வெற்றி " உன்ன வாய மூடுனு சொன்னேன் பாரதி "

அவனின் கோபத்தை கண்டு பாரதி வாய்யை மூடி கொள்ள..

அபி " இல்ல டாடி நான் ரொம்ப பயந்துட்டேன் அதான் "
" ஐ பிராமிஸ் டாடி இனிமேல் என்ன பிரச்சினைனாலும் உங்கிட்ட தான் ஃப்ஸ்ட்
சொல்லுவேன் சாரி டாடி "

வெற்றி " அபி உனக்கு நான் இருக்கேன் அபி எப்பவும் இந்த மூன்னு நாள் உன்ன மிஸ் பண்ணேனு தெரியுமா "

அபி " சாரி டாடி "

வெற்றி " ஐ லவ் யூ அபி உங்க அம்மா மாதிரி வெளிபடையாக என்னால அழ முடியல டா ஆனா மனசுக்குள்ள எவ்வளவு துடிச்சேன் தெரியுமா இனிமே இப்படி பண்ணாத சரியா "
என ஆண்மகன் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய அதனை கண்டு பாரதி அபி இருவரும் அழ...‌.

வெற்றி " உங்க அம்மா அதுக்கும் மேல அவ கால போய் விழுகுற நான் உன்ன கூட்டிட்டு வருவேன்னு அவளுக்கு என்மேல கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்ல "

பாரதி " நம்பிக்கை இல்லனு இல்ல "

வெற்றி " நீ என்கிட்ட பேசாத அவனாவது குழந்தை உனக்கு என்ன டி "

வெற்றி கோபமாக அறைக்கு செல்ல அபியும் அவனுடன் சென்று தாய்க்காக பேச அவனின் வாய்யையும் அடைத்தான் வெற்றி....

அபி அவனது அறையில் தூங்க வெற்றி முதுகு காட்டியபடி தூங்க பாரதி மெதுவாக அவனது தோளினை தொட...
வெற்றி அவளை தட்டி விட்டே இருந்தான்...

வெற்றி " ம்ம்ச்ச என்ன டி வேணும் ஏன் டி நொன்டிடே இருக்க "

ஒன்றும் பேசாமல் அவனது கையை எடுத்து தனது வயிற்றின் மேலே வைத்தாள்..அவ்வளவு தான் கோபம் அனைத்தும் கரைந்து ஓட..

வெற்றி " உன்ன என்ன டி என் பொண்ணு காட்டி என்ன சமாதானம் படுத்துறியா போடி "

பாரதி " சாரி வெற்றி "

வெற்றி " இனிமே இப்படி பண்ணுவ "

பாரதி " சத்தியமா பண்ண மாட்டேன் வெற்றி பொண்டாட்டினு கெத்தா இருப்பேன் "
" அது என் பொண்ணு பொண்ணு தான் பொறக்குமா என்ன பையனா இருந்தா "

வெற்றி " நோ அது பொண்ணு தான் என் உள்மனசு சொல்லுது "

பாரதி " பார்ரா எந்த குழந்தையா இருந்தாலும் நம்ப குழந்தை "
இருவரும் சிரிக்க வயிற்றில் இருக்கும் தனது குழந்தைக்கு முதல் முத்தத்தை பரிசளித்தான்.....

பின்பு அந்த பரிசை கொடுத்த தனது தேவதைக்கு இரண்டாவது முத்தத்தை பரிசளித்தான்.......

இவர்களின் வாழ்க்கை நல்லபடியாக தொடர...

மைதிலி " என்னடி கொசுலா கடிக்குது "

நேத்ரா " பின்ன நம்ப பண்ண வேலைக்கு ஏசி ரூம்லயா தங்க வைப்பாங்க "

மைதிலி " போடி ஆமாம் அவள எதுக்கு டி போட்டு கொடுத்த "

நேத்ரா " எல்லாம் ஒரு நல்ல எண்ணம் தான் "

மைதிலி " நான் அப்பவே சொன்னேன் இதுலா சரிவரதானு கேட்டியா இதுல அவனுக்கு ஃபோன் பண்ணி பணம் வேற கேட்ட "

நேத்ரா " தெரியாமயா பண்ணேன் வந்தா மலை போனா.___________. தெரிஞ்சு தான் பண்ணேன் விடு வேற வழி இருக்கானு பாப்போம் "

இங்கு ஒரு மூலையில் சரண்யா அமைதியா தனது வாழ்க்கையை எண்ணி கொண்டே இருக்க கண்களில் இருந்து அவளையும் அறியாமல் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது...

தேவையில்லாமல் மற்றொரு பேச்சையினை மட்டும் நம்பி சொந்தமா யோசிக்காமல் கிடைத்த நல்ல வாழ்க்கையை இழந்து இன்று யாரின் ஆதரவும் இல்லாமல் அனாதையாக ஜெயிலில் அமர்ந்து கொண்டு இருக்கிறாள்..........

முற்றும்.........

வணக்கம் பிரண்ட்ஸ்

இதோட இனி எல்லாமே நீ தானே கதை முடிந்தது கதை எப்படி இருந்துச்சு தோனுனத எழுதினேன் பெரிசா எக்ஸ்பெட் லா பண்ணல ஆனா இந்த கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது ரொம்ப சந்தோஷம் இதுபோல் அடுத்த கதையில் சந்திக்கிறேன்.....

நன்றியுடன்
சிந்தியன்
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எபிலாக் ( இனி எல்லாமே நீ தானே )


மூன்று வருடங்களுக்கு பிறகு......

அனு அனு என அழைத்து கொண்டே அறைக்கு வந்தாள் பாரதி அறை முழுக்க தேடியும் கிடைக்காமல் திரும்ப செல்ல நினைக்கும் போது குளியல் அறையில் இருந்து சத்தம் கேட்க...

" இதே வேலையா போச்சு இரண்டு பேருக்கும் "
என திட்டி கொண்டே குளியல் அறையில் நுழைய அங்கே பாதி நனைந்தது அனு என்கிற அனுபிரியா ( பாரதி வெற்றி யின் செல்ல மகள் " சிரித்து கொண்டு இருந்தாள்....

" தெரியும் டி இங்க தான் இருப்பேனு எங்க அந்த பெரிய வாலு "என பாரதி கேட்க....

" எக்கு தெயாது மா "
என பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூற கதவின் பின்னால் பார்த்து சிரிக்க..

அங்கே " சொல்லாத "
என அவளிடம் சைகை மூலம் ஒரு உருவம் சொல்ல...

இதனை எல்லாம் முன்னாடி இருந்த கண்ணாடி வழியே பாரதி காண மெதுவாக கதவின் அருகே சென்றாள்..

" தெரியும் எப்ப பாரு இதே வேல தான் இரண்டு பேருக்கும் "
என அவன் காதனை பிடித்து இழுக்க வெளியே வந்தான் வெற்றி......

" ஏய் விடு டி விடு டி வலிக்குது "
என்று கத்த...
அவனது அருமை புதல்வி அனுவும்
" மா வுடு மா டாடி டாடி "
என கத்த‌..

இவர்களின் கத்தலை கேட்டு அறைக்கு வந்தான் அபி..

ஐந்து வயதிலேயே பக்குவபட்டவன் இப்போது பத்து வயது அதே போலவே பொறுமையுடனும் அமைதியுடனும் பாரதியின் செல்ல மகனாக சுற்றி வருகிறான்...

இதற்கெல்லாம் சேர்த்து நான் இருக்கேன் டா என்பது ஒட்டு மொத்த வாலு தனத்தையும் சேர்த்து வைத்து பொறந்தாள் அனு....

பாரதி " அபி உங்க டாடியையும் தங்கச்சி யையும் என்னனு கேளு டா எப்ப பாரு தண்ணிலேயே விளையாட்டு "

அபி " டாடி ஏன் இப்படி பண்ணுறிங்க பாவம் தான அனு லாஸ்ட் டைமே ஜூரம் வந்து டேன் டேஸ் கஷ்டப்பட்டா திரும்பவும் ஜூரம் வந்துட்டா என்ன பண்ணுறது "
என தனது தங்கையின் தலையினை துடைத்துவிட்டு கொண்டே தனது தந்தையிடம் சண்டை இட்டான்...

இதுவரை தனக்கு சாதகமாக பாரதியிடம் சண்டை இட்டவள் இப்போது தனது அண்ணனின் கைகளுக்குள் அடங்கி போனாள்.....

அனுவிற்கு எல்லாமே அபிதான்...

வெற்றி " அடிப்பாவி நீ தான்டி என் தண்ணில இழுத்துட்டு போன இப்ப அவன் வந்ததும் அவன் கட்சி போயிட்டியே "
என அனுவை செல்லமாக கடிந்து கொள்ள..

பாரதி " உங்களுக்கு இந்த பல்பு தேவையா அவ சரியாண அண்ணன் புள்ள வாங்க நாம போய் கிளம்பலாம் "

நால்வரும் கிளம்பி பாரதியின் சொந்த ஊருக்கு சென்றனர்....
ஆம் பாரதி இத்தனை வருடங்களுக்கு பிறகு இப்போது தான் தனது அண்ணன் அண்ணியை பார்க்க செல்கிறாள் அதுவும் அவளை அத்தை என அழைக்க வந்த உறவை காண செல்கின்றனர்...
இவர்களுடன் தனம் இணைந்து கொள்ள ஆரவாரத்துடன் பயணம் ஆரம்பமானது...


நன்றி......


இனி எல்லாமே நீதானே கதை உங்களை நிச்சயம் மகிழ்வித்து இருக்கும் என நம்புகிறேன்.. மீண்டும் மற்றொருமொறு கதையில் சந்திப்போம்..

சிந்தியன்...
 
Top