All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபீஸ்....!
நான் தான் உங்க பானுரேகா தமிழ்ச்செல்வன். இந்த தளத்தில் உங்களைப் போல சாதாரண வாசகியாக அறிமுகமாகி....ஶ்ரீமா வின் கதைகளில் மனதைப் பறிகொடுத்தவள்...!!
அதையெல்லாம் விடு விஷயத்துக்கு வான்னு நீங்க சொல்றது எனக்கு கேட்டுடிச்சி....நான் மேட்டருக்கு வரேன்....!
எனக்கும் கதை யெழுதலாம்னு ஒரு ஆசை வந்துடுச்சு....!! அதுக்காக நான் ஏதோ வித்தியாசமான கதை...எழுத போறேன்னு தவறா நினைச்சுக்காதீங்க...!! நமக்கு அந்தளவுக்கு கிட்னியில்லீங்க....!
சாதாரணமான காதல் கலந்த குடும்ப கதை தான்...!! அதை என்னோட பாணியில் கொடுக்க போறேன் அம்புட்டு தான்....!!
இதுக்காக நான் சில பேருக்கு நன்றி சொல்லனுங்க....!!
முதலில் என் மேல நம்பிக்கை வச்சு நான் கேட்டதும்... திரி ஆரம்பித்து கொடுத்த ஶ்ரீமா வுக்கு ஏன் முதல் நன்றியை தெரிவித்துத்துக் கொள்கிறேன்...!!
அதுக்கப்புறம்... நான் கண்டிப்பா கதை எழுதியே ஆகனும்னு அடம்பிடித்து என்னை எழுத வச்சு ஊக்கம் கொடுத்த என் தோழிகளான....தாமரை....பாப்....ஊர்மி... இவங்க மூன்று பேருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிச்சுக்கிறேன்....!!


இது என்னோட முதல் முயற்சி.... இதுக்கு உங்களோட ஆதரவை கமெண்ட் மூலமா தரணும்னு கேட்டுக்கொள்கிறேன்... !!
நிறை ...குறை இப்படி எதுவாயினும் குணமா ...வாயில மட்டும் சொன்னா கேட்டுப்பேன்....!!அதை விட்டு ஆயுதத்தையெல்லாம் தூக்கக்கூடாது...!! மீ பாவம்...!
லவ் யூ பேபீஸ்...!!


கதையின் தலைப்பு..!

"என்னை விட்டால் யாருமில்லை...
கண்மணியே உன் கையணைக்க..!!"
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையின் நாயகன் நாயகி யை பற்றிய சிறிய அறிமுகம் மட்டும் இப்போ தர்றேன் பேபீஸ்... டீசர் நாளைக்கு..... ஓகே வா பேபீஸ்😍😍😍😘😘😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை விட்டால் யாருமில்லை….
கண்மணியே உன் கையணைக்க!!

அறிமுகம்
:

நாயகன்… ரத்னவேல் பாண்டியன் ஐ.பி.எஸ்.
நாயகி… தமிழரசி எம்..சி.ஏ


received_509099472952453.png received_327172307903730.png


ரத்னவேல் பாண்டியன்..

தற்போது ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் காவல் துறை உதவி ஆணையாளராக பணியாற்றுகிறான்
அவன் தன் பணியை நேசிக்கிறான் என்பதைவிட அதை சுவாசிக்கிறான் என்பதே உண்மை…! காவல் பணி அவனது சிறுவயது கனவு....!! ஆறடிக்கும் அதிகமான உயரமும்...முறுக்கிய மீசையும்
அசாத்தியமான துணிவும்... கம்பீரமும் அவனது அடையாளங்கள்..! பயம் என்ற சொல் அவன் அகராதியில் இல்லை..! அதனால் தோல்வி இதுவரையில்...அவனை தொட்டதில்லை….! குற்றவாளிகளின் சிம்ம சொப்பனம் அவன்..! எதற்காகவும் தன்னையும் தன் இயல்பையும் மாற்றிக் கொள்ளாதவன்… ரத்னவேல் பாண்டியன் ஐ.பி.எஸ்.
மொத்தத்தில் ஸட்ரிக்ட் ஆபிஸர்!



தமிழரசி…பாலில் சந்தனத்தை குழைத்த நிறம்…. காண்பவர் மனதை சுண்டியிழுக்கும் ஐந்தரை அடி எழிலோவியம்…! கொஞ்சம் குறும்பு…. கொஞ்சம் குழந்தைதனம் அதோடு நிறைய்ய்ய்ய்ய்ய்ய்யயயயய…...பிடிவாதம்….இவற்றின் ஒட்டு மொத்த கலவை தான் நம்ம தமிழரசி.! எம்.சி.ஏ முடித்து விட்டு…சென்னையில் புகழ்பெற்ற மென் பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்குறாங்க மேடம்!!


உங்கள் விமர்சனங்களை கருத்திரியில் பகிர்ந்தால் மகிழ்வேன் பேபீஸ்...😍😍😍😘😘😘😘
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன்னோட்டம்.

அடியேய்... தமிழு சீக்கிரம் எழுந்துறுடி...!!. விடிஞ்சு எத்தனை மணியாச்சி...ஒரு நாளாவது வெள்ளென எந்திரிக்கிறாளா....? என்று முணுமுணுத்தவாறு மகளின் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவர்....தூங்கும் தன் செல்ல...மகளைக் கண்டு மென்னகை புரிந்தவர்... பின்பு கடவுளே இன்னைக்கு பொண்ணு பார்க்க வர்ற இந்த இடமே கூடிவந்து.... என் பொண்ணு கல்யாணம் சிறப்பா நடந்து என் மக அமோகமா வாழனும் அதுக்குநீதான் துணையிருக்கனும் அருணாசலனே....!! என்று மனமாற பிரார்த்தித்து கொண்டவர்.... கணவனின் நினைவு வந்தவராக .... தமிழு.. எந்திரிடி மணி என்னாகுது உங்க அப்பா வந்தா ...கோபப்படுவாரு எந்திரி...என்று சத்தமிட....

அங்கே கட்டிலில் தலைமுதல் கால் வரை போர்வையை இழுத்து மூடிக்கொண்டு அதுவும் போதாமல் தலையணையையும் தலையோடு சேர்த்து இறுக்கிக் கொண்டு ஆனந்த சயனத்தில் இருந்த அந்த வீட்டின் இளவரசியின் காதுகளை அது….எட்டியதற்கான எந்த அறியோ…..குறியோ… அசைவோயில்லை...பொருத்துப் பார்த்தவர் இவளை... என்று பல்லைக் கடித்தவர்... அருகிலிருந்த... மக்கில் இருந்த நீரை... போர்வையை விலக்கி சட்டென்று அவளின் முகத்தில் வீசினார்....!!


அதுவரை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள்……ஏம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ......!! என்று அலறியபடி எழுந்தவள்…. முகத்தில் வடிந்த நீரை நிதானமாக துடைத்த படி…….“எழுப்பிவிட்டிருந்தா நானே போய் முகத்தை கழுவியிருக்க மாட்டேனா....? எதுக்கு நீங்களே கழுவிவிட்டீங்க”....? என்று அன்னையை முறைத்துப் பார்த்தவள்... “ம்ம்ம் போங்க... போய் பிரஷ்ல பேஸ்ட் வச்சி எடுத்துட்டு வந்து பல்லையும் நீங்களே விளக்கிவிட்டுடுங்க....! ஈஈஈஈஈஈ....” என்று கண்கள் குறும்பில் மின்ன கேட்டவளை....பார்த்து முறைத்தவர்... “அடிங்க.”.. என்று கையிலிருந்த மக்கை ஒங்கியவாறே அவளை துரத்த...கட்டிலில் இருந்து ஒரே தாவலில் குளியலறைக்குள் சிரித்ததுக் கொண்டே ஓடி மறைந்தாள்...!!

அவளின் குறும்பை நினைத்து தலையை இருபக்கமும் ஆட்டிமெல்ல நகைத்தவர் “வாலு…”என்று செல்லமாக கடிந்து கொண்டே....அவளின் படுக்கை விரிப்புகளை சரிசெய்துவிட்டு சீக்கிரம் தயாராகி..வருமாறு அறையை விட்டு வெளியேறினார்...!!

------------------------------------------------------------

பிடிக்கல பிடிக்கலை....என்னை விட்டுடுங்க....என்று கோபமாக அலற....

“என்னடி பிடிக்கலை…”என்று தானும் முறைத்தார் மீனாட்சி... முகத்தில் கடுமையேற..

இந்த கல்யாணமும் பிடிக்கலை ...நீங்க பார்த்திருக்க மாப்பிள்ளையும் பிடிக்கலை....

மாப்பிள்ளைக்கு என்னடி குறைச்சல்..?..நல்லா...‌படிச்சவரு நல்ல வேலையும் கூட..பார்க்கவும் இலட்சணமா...கம்பீரமா...அழகாத்தானே இருக்காரு...!!

ஆளு அழகாயிருந்து என்ன பண்ண ....பார்க்குற வேலை நல்லாயில்லையே.... என்று மனதுக்குள் முணுமுணுத்தவள்.... அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு பிடிக்கலை அவ்வளவு தான்...! என்றாள் முடிவாக...!!

___________________________________

பிரம்மாண்டமான அந்த திருமண மண்டபத்தில் கூட்டம் அலை மோதியது..ஒருபுறம் உறவினர்களும் நண்பர்களும் குவிந்திருக்க மறுபுறம்...நகரின் முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள் ... அரசாங்கத்தின் உயர்பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் என்று பலரும் வருகை தந்திருந்ததால் ...பெரும் பரபரப்புடன் காணப்பட்டது அவ்விடம். இருக்காதா…! ஒரே நேரத்தில் இரண்டு திருமணம் அதுவும்...மணமகன்கள் இருவரும் அரசாங்கத்தின் உயர்பதவிகளை வகிப்பவர்களாயிற்றே…! இதெல்லாம் ஒருபுறம் இருக்க அங்கே மணவரையில் “கெட்டி மேளம்… கெட்டி மேளம்…” என்ற அய்யரின் குரலைத் தொடர்ந்து கெட்டி மேள சத்தம் அந்த மண்டபத்தை நிறைக்க….ரத்னவேல் பாண்டியன்… தமிழரசியையும்., கதிரவன்...தாமரைச்செல்வியையும், மங்கல நாண் பூட்டி…. அக்னி சாட்சியாய் தங்கள் சரிபாதியாக ஏற்றுக்கொள்ள… திருமணம் இனிதே…. நிறைவடைந்தது…! மண்டபத்தில் இருந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி….ஆனால் மணமக்கள்…?!!!


கையணைக்க வருவான்...!!


ஹாய் பேபீஸ்..... சொன்னபடி முன்னோட்டத்துடன் வந்துவிட்டேன்....!!படித்து விட்டு உங்கள் கருத்துக்களை... குறை நிறைகளை... கமெண்ட் திரியில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போனால் ரொம்பவும் சந்தோஷப்படுவேன் பேபீஸ்...!

கீழ்கண்ட திரியில் கருத்துகளை பதியுங்கள் பேபீஸ்...👇🙏🙏🙏🙏🙏🙏


http://srikalatamilnovel.com/community/threads/சியாமளாவின்-என்னை-விட்டால்-யாருமில்லை-கண்மணியே-உன்-கையணைக்க-கருத்துத்-திரி.608/
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் :1


40409340_2299289576965558_8157584191349855449_n (1).png
வேட்டைவலம்

பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது வேட்டைவலம் என்னும் சிற்றூர். ஊரைச்சுற்றிமலைகளும்…ஊருக்கு நடுவே மிகப்பெரிய தாமரைக்குளமும்…... மறுபுறம் பரந்து விரிந்த ஏரியும் அவ்வூரின் குடிநீர்தேவைக்கும் விவசாயத்திற்குமான நீராதாரங்களாக விளங்குகின்றது இதனால் விவசாயம் செழித்து எங்கு திரும்பினாலும் பசுமை போர்த்திய வயல்வெளிகளும்….பழத் தோட்டங்களும் பசுமையை வாரியிறைத்து கண்ணையும் கருத்தையும் கவரும் சொர்க்கபுரியாகவே திகழ்ந்தது வேட்டைவலம் கிராமம்.


அவ்வூரின் பெருந்தனக்காரர் துரைப்பாண்டி….அவரது மனைவி வேதவல்லி.. இவர்களுக்கு… இரு மக்கள் மூத்தவன் அருணாச்சலம். மகள் அருணா…! நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருணாவை கருவில் தாங்கிய வேதவல்லி .. பிரசவத்தின் போது உடல் நலிவுற்று….இறந்துவிட… தனது குட்டித் தங்கையை… இன்னொரு அன்னையாய் மடிதாங்கிக்கொண்டார் 10 வயது...அருணாச்சலம். அவளும் தன் தந்தையை விட அண்ணனிடமே அதிகம்ஒட்டிக்கொண்டாள். காலங்கள் மின்னலாய் மறைந்தோட... அருணாச்சலம் படிப்பை முடித்து தன் தந்தையின் தொழிலைக் கையிலெடுத்து திறம்பட நடத்த ஆரம்பித்தார்.


அருணாச்சலம் தனது.....இருபத்துமூன்றாவது வயதில்… பார்வதியை மணந்தார். மூத்த மருமகளாக அந்த வீட்டிற்கு வந்த பார்வதிக்கு தன் கையை விடாது பற்றிக் கொண்டு தன்பின்னேயே சுற்றிக் கொண்டு திரியும் பதிமூன்றே வயதான தன் குட்டி நாத்தனாரை மிகவும் பிடித்து விட...அன்று முதல் அருணாவை தன் மூத்த மகளாகவே எண்ணி அரவணைத்துக் கொண்டார்…! பார்வதி! மனைவியின் இந்த குணத்தில் கவரப்பட்ட அருணாச்சலம் மனைவியை தன் காதலால் குளிர்வித்தார்.


இருவரின் பாசப்பிணைப்பை கண்டு அருணாச்சலம்பெருமையும்…...துரைப்பாண்டி.. நிம்மதியும் அடைந்தனர்…!



திருமணம் முடிந்து இரு வருடங்களுக்கு பிறகு கருவுற்ற பார்வதியை… உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள் அருணாச்சலத்தின் குடும்பத்தினர்…!!


அடுத்த ஒன்பதாவது மாதத்தில் அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார் பார்வதி…! இளஞ்சிவப்பு நிறத்தில் தாயின் நிறத்தையும்…. தந்தையின் சாயலையும் கொண்டு இளஞ்சூரியனாய் கைகளில் தவழ்ந்த மகனை பெருமை பொங்க பார்த்து தன் மீசையை முறுக்கிச் சிரித்தார் அருணாச்சலம். அண்ணனின் கைகளில் குட்டி கை கால் களை அசைத்து அழுகைக்கு தயாரானவனை ஆசையாய் வருடி சிரித்தாள் அருணா..! துரைப்பாண்டியும் தன் பேரனின் அழகில் மெய் மறந்தவராய் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய...நின்றிருந்தார்.



அடுத்த மூன்றாவது மாதம்... ஊரை அழைத்து விருந்து வைத்து தன் பேரனைத் தொட்டிலில் இட்டு ரத்னவேல் பாண்டியன் என்று தனது தந்தையின் பெயரையே பேரனுக்கு சூட்டி மகிழ்ந்தார் துரைப்பாண்டி.



மன நிறைவோடு தூங்க சென்ற துரைப்பாண்டி அன்று இரவே தூக்கத்திலேயே மரணமடைந்தார்.!



தந்தையின் திடீர் மறைவில்….அருணாவை விட அருணாச்சலம் தான் அதிகம் உடைந்து போனார்… தாயின் மறைவுக்குப் பிறகு…. மறுமணத்தை மறுத்து தங்களுக்காகவே வாழ்ந்த தந்தையின் நினைவில் உருகிக் கரைந்தார்.

தந்தையின் மறைவில்தன்னை மறந்திருந்த கணவரை....பார்வதி தான் அணைத்து ஆறுதல் படுத்தித் தேற்றினார்.



காலங்கள் கடக்க...ரத்னவேல் பாண்டியன் தன் அத்தை அருணாவின் உலகமாகிப் போனான். படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ரத்னத்தை தரையில் விடாது இடுப்பிலேயே இறுக்கிக்கொண்டு திரிவாள்..அருணா. அவனும்...எல்லாவற்றிற்கும் பார்வதியை விட அவளையே நாடுவான்...பார்வதி இவர்களின் பாசத்தை அன்னையாய் ரசிப்பார்.



அருணாச்சலம் தம்பதியினர் அருணா படித்து முடித்து பட்டம் பெற்றவுடன் அவளது விருப்பத்துடன் சென்னையின் மிகப்பெரிய தொழிலதிபரனா பரமேஸ்வரன் - கோகிலா தம்பதியினரின் ஒரே மகனான மாதவனுக்கு சீரும் சிறப்புமாக மணமுடித்து வைத்தனர். மாதவன் ஐ.பி.எஸ் முடித்து சென்னையில் க்ரைம் பிரான்ச் அதிகாரியாக உள்ளார்.


மாதவன் - அருணா தம்பதிக்கு தற்போது….வர்ஷினி….வருண் என்ற இருமக்கள் உள்ளனர்…!அவள் தற்போது தன்….குடும்பத்தோடு சென்னையில் வசிக்கிறாள்.


“வேதவல்லி பவனம்”அன்று அதிகாலையிலேயே மிகவும் பரபரப்போடு காணப்பட்டது..! இல்லத்தின் தலைவி பார்வதி மிகவும் பரபரப்போடு…..வேலையாட்களை ஏவிக்கொண்டிருந்தார்.


“வள்ளி….முனியன் பால் கொண்டு வந்துட்டானா….”

“இப்ப தாம்மா குடுத்துட்டு போனாரு... நான் பாலை காய்ச்சி வச்சிட்டேன்….பில்டர்ல….டிகாக்ஷன் தயாராயிருக்குமா…..” ஓ சரி நீ போய் காலை பலகார வேலையை கவனி….! என்றவாறே நகர்ந்தவர்…!


வீட்டின் வரவேற்பறையை துடைத்துக் கொண்டிருந்த முத்தம்மாவைப் பார்த்து….


“முத்து… சீக்கிரம் இங்க முடிச்சிட்டு…தம்பியோட அறையை இன்னும் ஒருமுறை சுத்தம் பண்ணிடு… தும்பு ...தூசியுமா இருந்தா அவன் கோபப்படுவான்.!” என்றவர்….


வரவேற்பறைக்குள் நுழைந்து அங்கே அருகருகே அமர்ந்து செய்தித்தாள் படித்து கொண்டிருந்த கணவனையும் மகளையும் கண்டவர்… “என்னங்க தினமும் படிக்குற அந்த பேப்பரில் அப்படி என்னத்தான் இருக்கு”…? என்று நொடித்தவர்….



தாமரை...அண்ணன் ரும்ல எல்லாம் சரியாயிருக்கான்னு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடு…! ஏங்க..

“தம்பிக்கு வண்டியை அனுப்பிட்டீங்களா…? என்றவரை பார்த்து.. தந்தையும் மகளும் ஒருவருக்கொருவர் சிரித்து கொண்டனர்.


“அம்மா….. ஆனாலும் இதெல்லாம் ரொம்பவே ஓவர் சொல்லிட்டேன்…!

உங்க மகன் ஊர்லயிருந்து... வர்றாரு தான் அதுக்காக...எப்பவும் உங்க கூடவேயிருக்க எங்களை மறந்துடுவீங்களா…”.என்ற மகளின் கேள்வியில் புரியாது முழித்த பார்வதி ...கணவனை நோக்க அவர் வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கியவராய்…. மகளை நோக்கினார்…!

என்ன புரியலையா… என்றவள்…! “இந்த காப்பிதண்ணி… காப்பித்தண்ணின்னு ஒண்ணை இந்த நேரத்துல தருவீங்களே…. அது இன்னைக்கு இன்னும் வரல….இனியாவது வருமா…? இல்ல அதுவும் அண்ணன் வந்த பிறகு தான் கண்ணுல காட்டுவீங்களா…?! என்ற மகளைப் பார்த்து அருணாச்சலம் வாய்விட்டு சிரித்தார்…! கணவரின் கம்பீரமான சிரிப்பில் ஒரு கணம் தன்னை தொலைத்தவர்… மறுகணம் தன் தவறை உணர்ந்தவராய்

அடடா…. மறந்துட்டேன்டா…?! என்றவர்... சமையலறையை நோக்கி “வள்ளி காபி கொண்டு வா” என்று உத்தரவிட்டவர் ….! மீண்டும் கவனம் வந்தவராய்….” தம்பியை அழைச்சிட்டு வர யாரை அனுப்புனீங்க….? என்று வினவ… மனைவியின் கண்களில் ஒரு கணம் வந்து சென்ற மயக்கத்தை உணர்ந்து கொண்டவர்… கண்களை இலேசாக சிமிட்டி… “நம்ம இளா தான் போயிருக்கான்..”இன்னேரம் போய் சேர்ந்திருப்பான் என்றார் . புன்னகையுடன். கணவரது செய்கையில் ஒரு கணம் திகைத்தவர் மறுகணம் மகளை நோக்க….பெற்றோரின் பாவனைகளை கண்டும் காணாமல் பேப்பரில் விழிகளைப் பதித்திருந்தாள்....தாமரை மென்நகையோடு! “வயசுப் பொண்ணை பக்கத்தில் வச்சிக்கிட்டு இதென்ன அடாவடி என்று கணவனை முறைத்தார் பார்வதி. அதற்குள் வள்ளி காபியுடன் வர… கணவருக்கும்... மகளுக்கும் கொடுத்தவர்...தானும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டார்.


அவங்க காபி குடிச்சு முடிக்கறதுக்குள்ள நாம “வேதவல்லி பவனத்தை “ சுத்திபார்த்துட்டு வந்துடலாம் வாங்க…!


அருணாச்சலத்தின் தந்தை...துரைப்பாண்டிக்கு பரம்பரை சொத்தான பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள்... தோட்டம் துரவு...என்று வேட்டைவலத்தையும் அதை சுற்றியுள்ள பல இடங்களிலும் உண்டு.. மனைவி….வேதவல்லியின் திடீர் இழப்பை...தாங்காது...துவண்டு போனவர்.. பிள்ளைகளுக்காக தன் சோகத்திலிருந்து மீண்டு.. தன் தொழிலான விவசாயத்தில் முழுகவனத்தையும் செலுத்த ..அது பல்கி பெருகி...அரிசி ஆலை… பால் பண்ணை… பட்டுத்தறி நெசவுக்கூடம்.. என வளர்ந்தது…!


வசதி வாய்ப்புகள் பெருக பெருக வேட்டைவலத்தில் மிகப் பெரிதாக மாளிகை ஒன்றை கட்டி அதற்கு…தன் மனைவியின் நினைவாக ‘வேதவல்லி பவனம்’ என்று பெயர் சூட்டினார்…!


மாளிகையைச் சுற்றிலும் 8 அடி உயரத்திற்கு சுற்றுசுவரும்…. சுவரோரம் பலவண்ணங்களை மலர்களை வாரியிறைக்கும் பூ மரங்கள் வரிசையாக காவல்நிற்க…! மாளிகையை சுற்றிலும் பலவகையான பூச்செடிகள்… பழமரங்கள் ..இவற்றோடு வீட்டுக்குத் தேவையான காய்கறித் தோட்டமும்… அழகுற நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்க.. சுற்றுச்சுவரை இணைக்கும்… இரு பெரிய பிரம்மாண்டமான இரும்பு கதவுகள் கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்டு வாசலை அலங்கரிக்க… வெளி வாசலில் இருந்து உள்ளே செல்லும் பாதையின் இருமருங்கிலும்…. பலவண்ணங்களை வாரியிறைக்கும் அழகிய பூச்செடிகள் அணிவகுத்து நிற்க...பாதையின் முடிவில் ஒரே நேரத்தில் பத்து கார்களை வரிசையாக நிறுத்துமளவுக்கு போர்டிகோ பரந்து விரிந்திருக்க…. வீட்டின் வாயிற்கதவை... விலையுயர்ந்த பர்மா தேக்கை கடைந்து நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட நிலைக்ககதவு அலங்கரிக்க….என்று அத்தனை அழகையும் எழிலையும் தன்னகத்தே கொண்டு அழகுற வீற்றிருந்தது “வேதவல்லி பவனம்’!!

(கையணைக்க வருவான்…!)

ஹாய் பேபீஸ் ....
கதையின் முதல் அத்தியத்துடன் வந்துவிட்டேன்....!, படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போங்க ப்ளீச்... பேபீஸ்😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘!!
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்: 2

received_296933770990740 (2).png


‘வேதவல்லி பவனத்தின் உட்புற அமைப்போ பழமையும், புதுமையும் கலந்து மிளிர்ந்தது. பெரிய வரவேற்பறை… தரைதளம் முழுவதும் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒத்த உயர்தர கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு பளபளத்தது. அதில் தேக்குமரத்தாலான அலங்கார இருக்கைகள்...ஒருபுறம் அழகுற எழிலாக வீற்றிருந்தது…!


மறுபுறம் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் சிறு சிறு வெண்கல மணிகள் குலுங்கி ஒலி எழுப்பும் அழகிய ஊஞ்சலும்… வரவேற்பறையின் உத்திரத்தில் பிரம்மாண்டமான அலங்கார விளக்கும் தொங்கவிடப்பட்டிருந்தது!


வரவேற்பரைக்கு அடுத்து பிரம்மாண்டமான சமையலறை…. தற்காலத்துக்கு ஏற்ற அனைத்து நவீன வசதிகளுடன்…. விரிந்திருக்க....அதை ஒட்டி...சாப்பாட்டு அறை…. ஒரே நேரத்தில் இருபது பேர் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு விஸ்தாரமாய் பெரிய மேசையும்.... அமர்வதற்கு ஏற்ற அழகிய இருக்கைகள் பக்கத்துக்கு 10 இருக்கைகள் வீதம் 20 இருக்கைகள் போடப்பட்டிருந்தது..


அதனையடுத்து வரிசையாக நிறைய அறைகள் இருபுறமும் வெவ்வேறு தேவைக்காக உபயோகப்படுத்தபட்டது. முடிவில் பின்பக்கம் தோட்டத்துக்கு செல்லும் பின்பக்க வாசலும் நிலைக்கதவுடன் அமைக்கப்பட்டிருந்தது.


வரவேற்பறையின் நடுவே மரத்தாலான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு அவை முதல் தளத்தை அடையும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கபட்டிருந்தது..!



முதல் தளத்தில் தான் அருணாச்சலம் தம்பதியினர் அறையும்... தாமரையின் அறையும் இருக்கிறது..! இது தவிர நிறைய அறைகளும் உண்டு. முதல் தளத்தை சுற்றிலும் பெரிய பால்கனியும் அங்கிருந்து வரவேற்பறையை பார்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது. பால்கனியின் மையத்திலும் குடும்பத்தினர் அமர்ந்து பேசுவதற்கு ஏற்ற வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தது.

இதே போன்ற அமைப்போடு இரண்டாம் தளமும் அமைக்கப்பட்டிருந்தது.



இரண்டாம் தளத்தில் தான் ரத்னவேல் பாண்டியனின் அறை இருக்கிறது. மற்ற அறைகள் எப்போதும் பூட்டியே வைக்கப்பட்டிருக்கும்.

அதற்கும் மேலே பரந்து விரிந்திருந்தது.... மொட்டைமாடி..!



இப்படி ...ஒவ்வொரு அங்குலமும்.. பழமை மாறாமல் அதே சமயம் தற்காலத்தின் நவீன வசதிகளுடன் ஒவ்வொரு அடியிலும் பணத்தின் செழுமையை உணர்த்துவதாக...கண்களை சுண்டியிழுத்தது.. ‘வேதவல்லி பவனம்’.


(பேக் டூ வரவேற்பறை)


காபியை அருந்தி முடித்ததும் தாமரை தன் அண்ணனின் அறையை நோக்கி நகர…

பார்வதி அருணாச்சலத்திடம் ‘ஏங்க தம்பிகிட்ட விஷயத்தை சொல்லிட்டீங்களா?’ என்றவரை யோசனையுடன் நிமிர்ந்து பார்த்தவர்….


‘இல்லம்மா இனி தான் சொல்லனும்… வரட்டும் பார்ப்போம்’ என்றவரை…. ‘எப்படியாவது சம்மதிக்க வச்சிடுங்க.. இந்த சந்தர்ப்பத்தை விட்டுட்டா திரும்ப நல்ல சந்தர்ப்பம் அமையாது...ட்ரைனிங் முடிச்சு போனவன் நாலு வருஷம் கழிச்சு இப்ப தான் வர்றான்… இப்ப கிளம்பி போனா திரும்பி வர எத்தனை வருஷம் ஆகுமோ…! அவனுக்கும் காலாகாலத்தில் நல்லது நடக்க வேணாமா…?’ என்ற மனைவியை பார்த்தவர்..



‘நீ சொல்றது வாஸ்தவம் தான் பார்வதி….ஆனா இந்த ஏற்பாட்டுக்கு அவன் சம்மதிப்பானான்னு தான் யோசனையா இருக்கு…! 'என்று இழுத்தவரை...முறைத்து பார்த்தவர்.


'நீங்க உங்க யோசனையை தூக்கி தூரப் போட்டுட்டு .‌..அவன்கிட்ட பேசி புரிய வைங்க...அவன் இங்கிருந்து கிளம்பி போகும் போது அவன் பொண்டாட்டி யோட தான் போகனும்...' என்று தீர்மானமாய் சொன்ன மனைவியை புன்னகையோடு ஏறிட்டவர்…!

‘உத்தரவு மகாராணி...என்றார் கேலியாக...'கணவனின் குறும்புப் பேச்சில் பார்வதியின் முகம் சிவந்தது.

இந்த வயதிலும்… அழகாக முகம் சிவந்த மனைவியை ஆசையாய் வருடியது அருணாச்சலத்தின் பார்வை….சாந்தம் தவழும் மஞ்சள் முகம் அதில் அழகாய் துலங்கும் குங்குமம் காது, கழுத்து, கைகளில் மின்னும் வைரநகைகளோடு அவரது நிறத்தை எடுத்து காட்டும் அடர்சிவப்பில் சின்ன கரையிட்ட பட்டுப்புடவையை பாந்தமாய் அணிந்து... ஆங்காங்கே தென்பட்ட ஒன்றிரண்டு...நரைமுடியை தவிர கருத்த கூந்தலை தலைக்கு குளித்திருந்ததால் விரியவிட்டு நுனியில் முடிச்சிட்டு அதில் சிறிதளவு சாதிப்பூவை முடிந்து... மங்களகரமான அழகுடன் அமர்ந்திருந்த மனைவியை கனிவோடு பார்த்தவரின் பார்வையை உணர்ந்து கொண்ட பார்வதியின் முகம் மேலும் சிவக்க…. கணவரை செல்லமாய் முறைத்தவர்.. சட்டென்று எழுந்து நான் பலகாரம் ரெடியாயிடுச்சான்னு பார்த்துட்டு வரேன் நீங்க போனை போட்டு இளாகிட்ட கேளுங்க தம்பி வந்தாச்சான்னு என்று அவசரமாக நகர்ந்தவரை அருணாச்சலத்தின் சிரிப்பு சத்தம் தொடர்ந்தது…!


புன்னகையோடு தன் அலைபேசியில் இளாவை அழைத்தவர்...விவரம் கேட்க… அந்தபுறம் சொன்ன தகவலில் திருப்தி அடைந்தவராக செல் பேசியை அணைத்து விட்டு ... தங்கையின் திருமணத்திற்காக ஒரு மாத விடுப்பில் வரும் தன் மகனிடம் எப்படி இந்த விஷயத்தை கூறி சம்மதம் வாங்குவது என்ற யோசனையில் ஆழ்ந்தார்… அருணாச்சலம்!


தாமரையை பெண்பார்க்க வந்த சொக்கநாதர் குடும்பத்தை மிகவும் பிடித்துவிட்டது பார்வதிக்கு.‌‌..குறிப்பாக மாப்பிள்ளையின் தங்கையான தமிழரசியின் அழகிலும் கலகலப்பாக பேசும் குணத்திலும் கவரப்பட்ட பார்வதிக்கு தன் பிள்ளை ரத்னவேல் பாண்டியனுக்கு இந்த பெண்ணையே ஏன் பேசி முடிக்க கூடாது என்ற எண்ணம் தோன்றிவிட…. இரண்டு கல்யாணத்தையும் ஒரே முகூர்த்தத்தில் முடித்து விட்டால் என்ன....என்ற எண்ணம் தோன்ற.....தன் எண்ணத்தை அவர்கள் விடைபெற்று சென்றதும் தன் கணவரிடம் கூற…. மனதுக்குள் தமிழரசியையும் தன் மகனையும் அருகருகே நிறுத்திப் பார்த்த அருணாச்சலத்திற்கு இருவரின் ஜோடிப் பொருத்தம் திருப்திகரமாக தோன்றியது….!!ஆயினும் பாண்டியனிடம் கலக்காமல் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லி அவர்கள் மனதிலும் ஆசையை வளர்க்க அவர் விரும்பவில்லை….! ஏனெனில் மகனது குணத்தை நன்கு அறிந்தவராதலால் அவர் அமைதியாக இருந்தார்.


தனக்கு பதில் சொல்லாமல் தீவிர யோசனையில் இருந்த கணவரின் தோளைத் தொட்டு அசைத்தவர்…

'என்னங்க நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம மௌனமாயிட்டீங்க... உங்களுக்கு இதில் விருப்பமில்லையா?’ என்று பரிதாபமாய் கேட்ட மனைவியின் கையை பிடித்து தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்ட அருணாச்சலம், ‘பாரு… இது நாம மட்டும் முடிவு பண்ணிட முடியாது….பாண்டியோட சம்மதம் ரொம்ப முக்கியம்.

வாழ போறது அவன். அதுமட்டுமல்ல அந்த பொண்ணோட சம்மதமும் வேணும்… அதனால முதல்ல பாண்டி ஊர்லயிருந்து வரட்டும்… அவன்கிட்ட கலந்துகிட்டு அதுக்கப்புறம் முடிவெடுப்போம்!’ என்று முடித்துக் கொண்டார். கணவரது கூற்றை ஆமோதித்தவர் தானும் அமைதியாகி விட்டார்.


அதைப்பற்றிய சிந்தனையில் இருந்தவரை வெளியே கார் வந்து நிற்கும் 'க்ரீச்’ ஒலி நினைவுக்கு கொண்டு வந்தது. பரபரப்புடன் எழுந்தவர் …

“ பார்வதி…..பாண்டி வந்தாச்சு” என்று சமையலறையை நோக்கி குரல் கொடுத்தவர் வாசலை நோக்கி நடந்தார்...


கணவரது குரல் கேட்டதும்... பரபரப்பு அடைந்த பார்வதி தன் மகனுக்கு மிகவும் பிடித்த பால் பாயசத்தை தானே செய்து கொண்டிருந்தவர்... ‘வள்ளி ஆரத்தி தட்டு கொண்டா...என்றவர்.... அடுப்பை அணைத்துவிட்டு வாசலுக்கு விரைந்தார்… அதற்குள் தாமரையும்...ஓடிவந்து அவருடன் இணைந்து கொண்டாள்…!


வாசலில்… வந்து நின்ற வெள்ளை நிற ஆடி காரிலிருந்து முன் பக்க கதவை திறந்து கொண்டு கருப்பு நிற முரட்டு ஜீன்ஸூம்… வெள்ளை நிற டி-சர்ட். அணிந்து கண்களில்...கூலர்ஸுடன்...ஆறடிக்கும் அதிகமான உயரத்துடன்.. மாநிறத்திற்கும் சற்று கூடுதலான நிறத்துடன்… நாள் தோறும் தவறாது மேற்கொள்ளும் தீவிர உடற்பயிற்சிகளால்.. முறுக்கேறிய தேகத்துடன்....முறுக்கி விடப்பட்ட அளவான மீசையுடன்..கிரேக்க சிற்பத்தையொத்த வடிவான முக அமைப்புடன்… ஆண்மையின் கம்பீரத்துடன் வந்து நின்ற ரத்ன வேல் பாண்டியனை...பார்வதி கண்களில் நீரோடும்… தாமரை பாசத்தோடும் அருணாச்சலம் பெருமிதத்தோடும் இமைக்க மறந்து..பார்த்தபடி நிற்க....
இவர்களை பார்த்து புன்னகை புரிந்தவன் இளாவை திரும்பி பார்க்க… அவனும் மூவரின் உறைந்த நிலையை பார்த்து புன்னகை புரிந்தான்.



முதலில் சுதாரித்த தாமரை ‘அண்ணா.. வாங்கண்ணா…எப்படியிருக்கீங்க...பார்த்து எவ்வளவு நாளாச்சு… எங்களையெல்லாம் மறந்துட்டீங்க … தானே...? என்று குரலடைக்க கேட்டவளை பாசத்தோடு தோளோடு…. தோள் சேர்த்து இறுக்கிக் கொண்டவன்….! தாய் தந்தையை நோக்கி நடந்தான்.

அவன் அப்படி தான் அதிகம் பேச மாட்டான்… என்றாலும்...தன் குடும்பத்தினர் மீது மிகுந்த பாசம் கொண்டவன். அவனது சிறுசெய்கையின் மூலம் தன் அன்பை அவர்களுக்கு உணர்த்திவிடுவான். அவனது இயல்பை நன்கறிந்தவர்கள் என்பதால் அவனது மௌனத்தை பெரிது படுத்த மாட்டார்கள் அவனது குடுப்பத்தினர்.


அருணாச்சலம் கண்களில் திரண்ட கண்ணீரை மற்றவர்களுக்கு தெரியாது மறைத்து கொண்டவர்… மகனை புன்னகையோடு வரவேற்றார்...

'வாய்யா… பிரயாணமெல்லாம் சௌகரியமா இருந்ததா…. ' என்று அன்புடன் வினவியவரின்...காலைத் தொட குனிந்தவனை மார்போடு சேர்த்தணைத்துக் கொண்டார்.அருணாச்சலம். தானும் அவரை அணைத்து விடுவித்தவன்… தன்னையே கண்ணெடுக்காது பார்த்து கொண்டு கண்களில் நீர் வழிய நின்ற அன்னையை கண்டவனது முகம் மெல்ல கனிய…’அம்மா’ என்றவனின் குரலில் உடைந்தவர் இத்தனை நாள் மகனை பிரிந்திருந்த துயரத்தை கண்ணீரால் கரைக்க எண்ணியவராய் அவனது தோள் சாய்ந்து அழுது தீர்த்தார். அவனும் தாயின் ஆதங்கம் புரிந்தவனாய் அன்னையை அணைத்துக் கொண்டு...அமைதியாக நின்றான்.


அருணாச்சலமும் மற்றவர்களும் இவர்களின் பாசப் போராட்டத்தில்...தங்களை மறந்து நின்றிருந்தனர்..முதலில் சுதாரித்த அருணாச்சலத்தின் 'பார்வதி… ' என்ற அழுத்தமான அழைப்பில்

ஒருவழியாக சமாதானமாகி..தன்னிலை மீண்ட பார்வதி… ‘நான் ஒருத்தி வந்த புள்ளையை வாசலிலேயே நிற்க வச்சிட்டேன்’ என்றவர் கண்களைத் தன் முந்தானையில் துடைத்துக்கொண்டு...மகனுக்கு மலர்ந்த முகத்துடன் ஆரத்தி சுற்றி திருஷ்டி கழித்து திலகம் இட்டவர்...தட்டை வள்ளியிடம் கொடுத்து விட்டு… இளாவை திரும்பிப் பார்த்து.. அவனையும் தலையசைத்து அழைத்தவர்...அனைவருடனும் வரவேற்பரையில் நுழைந்தார்.


அனைவரும் அமர்ந்ததும். காபி கலக்க சமையலறை நோக்கி நடந்தவரை...தாமரை 'அம்மா நீங்க இருங்க நான் போய் எடுத்துட்டு வர்றேன்’ என்றவளை… மறுத்துவிட்டு தானே எடுத்துவரச் சென்றவரை கண்டு கொண்ட தாமரை…


'அப்பா... பார்த்தீங்களா அம்மாவை…நமக்கு மட்டும் வள்ளி கலக்குன காபி…. அண்ணனுக்கு மட்டும் ஸ்பெஷலா அவங்களே கலந்து எடுத்துட்டு வரப் போறாங்க...ஆனாலும் உங்க பொண்டாட்டிக்கு இத்தனை ஓரவஞ்சனை ஆகாது...என்று போலியாக நொடித்துக் கொண்டவளை...பார்த்து அனைவரும் சிரிக்க...பாண்டியனின் முகத்திலும் புன்னகை விரிந்தது…!


‘போடி அரட்டை..’ என்றவர் சிரத்துக் கொண்டே நகர்ந்தார்.


அருணாச்சலம் தன் மகனிடம் அவன் வேலை விஷயங்களை பற்றி கேட்க இளாவும் தாமரையும் கூட அவர்களுடன் கலந்து கொண்டனர்…! சிறிது நேரத்தில் பார்வதியும் காப்பி கோப்பைகளுடன் வந்து அனைவருக்கும் வழங்கிவிட்டு தானும் அமர்ந்தார்…!


நீண்ட இடைவேளைக்கு பின்னர் தன் தாயின் கையால் கலந்த காபியை ரசித்து ருசித்து குடித்து முடித்தவனின் முகத்தில் பயணக்களைப்பை உணர்ந்து கொண்டவர் … அய்யா… உன் ரூம்ல எல்லாம் தயாராயிருக்கு...நீ போய் குளிச்சிட்டு வந்துடு….காலை பலகாரம் சாப்பிடலாம்.. ! என்றார் பார்வதி தலையசைத்தவன் இளாவிடமும்...அருணாச்சலத்தையும் பார்த்துவிட்டு தனது அறையை நோக்கி நடந்தான்.


இரண்டிரண்டு படிகளாக எட்டு வைத்து விரைந்து
செல்லும் தன் மகனையே... பார்த்துக்கொண்டிருந்த அருணாச்சலம் எதையோ நினைத்தவராக பெருமூச்செறிந்தார். மகனை பற்றி முழுமையாக அறிந்தவருக்கு ஒன்று மட்டும் புரிந்து போனது.. மகனை தங்கள் ஏற்பாட்டுக்கு சம்மதிக்க வைப்பது அவ்வளவு சுலபமில்லையென்று….!!!


( அடக்கடவுளே... என்னப்பா இவரு இப்படி சொல்றாரு…?!)


அருணாச்சலம்...பார்வதி இவர்களின் ஆசையை நிறைவேற்றி தமிழரசியை கைபிடிக்க சம்மதிப்பானா… ரத்னவேல் பாண்டியன்…???!
பார்ப்போம்.


(கையணைக்க வருவான்...!)


ஹாய் பேபீஸ் ... நீங்க ஆவலோடு எதிர் பார்த்த ரத்னவேல் பாண்டியனின் அறிமுகத்தோட வந்துவிட்டேன். படித்து விட்டு எப்படி இருந்ததுன்னு ...ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க பேபீஸ்..!!

உங்கள் கருத்துக்களை கீழ்க்கண்ட கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.🙏🙏👇👇👇👇👇👇

http://srikalatamilnovel.com/community/threads/சியாமளாவின்-என்னை-விட்டால்-யாருமில்லை-கண்மணியே-உன்-கையணைக்க-கருத்துத்-திரி.608/
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 3

received_2360182687333385.png received_372170503379481.png


தன் மகனைப் பற்றிய யோசனையில் இருந்தவரை கலைத்தது தாமரையின் சிரிப்பு சத்தம்…!


எதிரெதிர் ஷோபாவில் அமர்ந்து கொண்டு...இளாவையும்… பார்வதியையும் வம்புக்கு இழுத்து சிரித்துக் கொண்டிருந்தாள் தாமரை…!


அவளின் மலர்ந்த சிரிப்பை கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தான் இளமாறன்..! மலர்ந்த முகத்தோடு… பரந்த நெற்றியில் அலையாக வந்து விழும் தலைமுடி...கூர்மையான நாசி..சிரிக்கும் போது கன்னத்தில் அழகாக விழும் குழி அளவான மீசை… தீர்க்கமான பார்வை மாநிறம் என்று.. நண்பனின் இளவயது சாயலில் இருந்தவனை... பாசத்தோடு வருடியது அருணாச்சலத்தின் பார்வை..!


இளமாறன் அருணாச்சலத்தின் வளர்ப்பு மகன்…தாமரைக்கு உடன்பிறவா சகோதரன்..! பாண்டியின் உயிர்த்தோழன்.

அதுமட்டுமல்ல அருணாச்சலம் குடும்பத்திற்கு எல்லாமே அவன் தான்..! அருணாச்சலத்தின் அனைத்து தொழில் விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவன். அருணாச்சலத்தின் தொழில்கள் அனைத்தையும் தற்போது நிர்வகிப்பது இளமாறனே…!

அருணாச்சலம் அவ்வப்போது மேற்பார்வை பார்ப்பதோடு சரி.


இளமாறன் ..அருணாச்சலத்தின் உயிர் நண்பரான பரந்தாமனின் ஒரே மகன். வேட்டைவலம் தான் பரந்தாமனுக்கும் சொந்த ஊர்...சற்று ஏழ்மையான குடும்பம் தான் பரந்தாமனின் குடும்பம்...அவரின் தந்தை மாரிக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலமும்….ஒரு குடிசை வீடு மட்டுமே... எப்படியோ கஷ்டபட்டு பள்ளி இறுதிவகுப்பு வரை படித்தவர்...அதன் பிறகு வசதியில்லாத… காரணத்தால் மேற்கொண்டு படிக்க இயலாது.. தன் தந்தையின் தொழிலான விவசாயத்தில் ஈடுபட்டார்.


அருணாச்சலம் எவ்வளவோ எடுத்துக் கூறியும்...மேற் படிப்புக்கான அவரது உதவியை….பிடிவாதமாக மறுத்துவிட்டார்… பரந்தாமன் நண்பனின் குணத்தையும்... தன்மானத்தையும் உணர்ந்தவராதலால் அருணாச்சலமும் வற்புறுத்தவில்லை.


அதன் பிறகு… ஓரளவுக்கு பரந்தாமனின் குடும்ப நிலை சீரடைந்தாலும்… பெரிய முன்னேற்றம் எதுவுமில்லாமல்…சென்றது.



திருமண வயதில் தனது ஒன்றுவிட்ட தங்கை அன்னத்தின் மகள்...சாந்தியை தன் மகனுக்கு பேசி முடித்தார். பரந்தாமனின் தந்தை மாரி.



அன்னத்தின் கணவர் சாந்தியின் சிறுவயதிலேயே வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு கடித்து...இறந்துவிட…. அதன் பிறகு….அன்னம் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு தன் மகளை வளர்த்து... பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தவர்…. அதற்கு மேல் உடல் நலமின்றி...படுத்த படுக்கையாய் வீட்டில் முடங்கி விட… தன் படிப்பை பாதியிலேயே கைவிட்ட… சாந்தி...விவசாய கூலி..வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்தாள்...அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தான் தாயும் மகளும் தங்கள் வயிற்றுப் பாட்டை மிகவும் சிரமத்தோடு நகர்த்த வேண்டியிருந்தது …!



தன் தங்கையின் நிலையை நன்கறிந்தவரான மாரி சாந்தியையே…. தன் மருமகளாக்கி கொண்டார்.


கோவிலில் மிக எளிமையாய் நடந்த... நண்பனின் திருமணத்திற்கு தந்தை மனைவியுடன் சென்ற அருணாச்சலம்… பெரிய தாம்பாளத்தட்டில் மணமக்களுக்கு… உடையுடன்.. தங்க சங்கிலியும் மோதிரமும் சீராக வைத்துக் கொடுக்க...மறுக்க இயலாது ஏற்றுக் கொண்டார் பரந்தாமன்.


அதுமட்டுமின்றி… அருணாச்சலமும் பார்வதியும் மணமக்களை தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து தடபுடலாக விருந்து வைத்து கௌரவித்தனர். விருந்து முடிந்து... அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் .. மகன் சார்பாக… துரைப்பாண்டி….பரந்தாமனிடம் ஒரு கோரிக்கையை வைத்தார் !


“பரந்தாமா…’ என்று அழைத்த துரைப்பாண்டியை…திரும்பி பார்த்த பரந்தாமன்…., “சொல்லுங்கப்பா…”என்றார் பணிவுடன்!


“எங்களோட தொழில்களை… பற்றி உனக்கு தெரியும் தானே…?”


“தெரியும்பா…..”


“நீ…. ஏம்பா அருணாச்சலத்துக்கு அவன் தொழில்ல அவனுக்கு உதவியா இருக்கக்கூடாது…! அவன் பாவம் ஒத்தையாளா ரொம்பவே...சிரமப்படுறான்... அதுவுமில்லாமல்.இப்ப புதுசா…சர்க்கரை ஆலை… ஜவுளிக்கடை… நகைக்கடைன்னு… ஆரம்பிச்சிருக்கான்...இதனால.. அவனுக்கு வேலை இன்னும் அதிகமாயிடுச்சு….என்னாலையும் முன்ன மாதிரி அவனுக்கு உதவ முடியலை…! தனியா கிடந்து தவிக்குறான்...கூட உன்னை மாதிரி நம்பிக்கையான ஒரு துணை கிடைச்சா...அவனுக்கும் சுமை குறையும்... உனக்கும் நிரந்தரமான வருமானமும் வரும்….! இத்தனை நாள் எப்படியோ…. இப்ப உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்துடுச்சி…. ! நாளைக்கு உனக்கும் புள்ளைகுட்டி பொறக்கும் குடும்பம் பெருசாகும்…. அவங்களையும் சந்தோஷமா வச்சிக்கலாம் அதே நேரம் உன் நண்பனுக்கும்...தோள் கொடுத்த மாதிரி இருக்கும்…” என்று நீளமாய் பேசியவரின் வார்த்தைகள்.. அவருக்கும் சரியென்றே பட்டது…!


அதுமட்டுமின்றி….இத்தனை பெரிய பணக்காரர்... அவரிடம் இல்லாத ஆட்களா? இருந்தும் தன்னை அவர் அழைத்ததற்கு பின்னால் தன் நண்பன் அருணாச்சலம் இருப்பது அவருக்கு தெரியாமலில்லை…!


சிறுவயதிலிருந்தே தன்னிடம் நட்பையும் மீறிய பாசத்தை கொண்டுள்ள நண்பனுக்காக தன் உயிரையே தர சித்தமாயிருக்கையில் அவனுக்காக இதை கூடவா செய்யமாட்டேன்..,. என்று மனதில் நினைத்தவர்…!

புன்னகையுடன்…


“ எதுக்காக இல்லைன்னாலும்...உங்களுக்காகவும் , என் நண்பனுக்காகவும் கண்டிப்பா இதுக்கு ஒத்துக்குறேன்பா….!” என்றவனை பாய்ந்து வந்து கட்டிக் கொண்டார் அருணாச்சலம்...தானும் நண்பனைக் தழுவிக் கொண்டவர்….


“இதை நீ நேரடியா எங்கிட்டேயே கேட்டிருக்கலாமே ...சலம் இதுக்கு எதுக்காக அப்பாட்ட எல்லாம்?” என்றவரை…!


“நீ எதாவது தவறா எடுத்துக்குவியோன்னு……”

இழுத்தவரை...பார்த்து சிரித்தவர்… “உன்னை நான் தவறா எடுக்கறதா… “நீ என் உயிர் நண்பன்டா…!” என்று அணைத்துக் கொண்டனர் இருவரும்…!! நண்பர்களின் நட்பை பெருமையும்… மகிழ்வோடும் பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்களது குடும்பத்தினர்..!



அன்றிலிருந்து ‌அருணாச்சலத்தின் நிழலாகிப் போனார் பரந்தாமன்… இதனால் அருணாச்சலத்தின் வேலை பளூ பாதியாய் குறைந்தது.


பரந்தாமனின் இரவு பகல் பாராது உழைத்த உழைப்புக்கு கைம்மாறாக அவரை தன் தொழிலில் வொர்க்கிங் பார்ட்னராக்க எண்ணிய அருணாச்சலத்தை பிடிவாதமாக மறுத்துவிட்டார் பரந்தாமன்… அதில் அருணாச்சலத்திற்கு நிறைய வருத்தம் இருப்பினும்….நண்பனின் குணத்தை அறிந்தவராதலால்…. தானும் அமைதியாகி விட்டார்.

ஆயினும்..பரந்தாமனுக்கு கணிசமான தொகையை ஊதியமாக வழங்கினார் அருணாச்சலம். இது அதிகம் என்றவரை எப்படியோ சமாளித்து சரிகட்டினார். இதனால் பரந்தாமனின் குடிசைவீடு….மாடி வீடாக உருமாற்றம் பெற்று அவர்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்தது…! மகள் நன்றாக வாழ்வதை பார்த்த அன்னம் கடமையை முடித்த திருப்தியிலேயே தன் மூச்சையும் விட்டுவிட…. மாமியாரின் இறுதிச் சடங்கை மருமகனாக தானே முடித்த பரந்தாமன்…

மனைவியை ஆறுதலாய் அணைத்து தேற்றினார்.


காலங்கள் விரைய… பரந்தாமன்...சாந்தி தம்பதியினர் அருணாச்சலத்தின்… வீட்டின் அங்கமாகவே..மாறிவிட.. அவர்களின் வாரிசுகளும்… தங்கள் தந்தையரை போலவே நட்பால் கட்டுண்டனர்…!


அருணாச்சலத்தைப் போலவே… பரந்தாமனுக்கும் ஆணொன்று... பெண்ணொன்றாய் இரு வாரிசுகள்..மூத்தவன் தான் இளமாறன்… இளையவள்..வெண்ணிலா ! சிறு வயதில் இவர்கள் நால்வரும் எப்போதும் சேர்ந்தேயிருப்பார்கள்….!


இளாவின்…. பன்னிரண்டாம் வயதில்…உறவினர்களின் இல்லத் திருமண விழாவிற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்களின் பைக்.. மீது எதிரே வந்த லாரி மோதியதில்… சம்பவ இடத்திலேயே மூவரும் பலியாகிவிட்டனர்.



அன்று பள்ளியில் தேர்வானதால் இளமாறன் மட்டும் அவர்களுடன் செல்லவில்லை...அவனை தன் தந்தை மாரியிடம் விட்டு விட்டு பரந்தாமன் தம்பதியினர் தன் மகளுடன் சென்றிருந்தனர்.


பள்ளி விட்டு வீடு திரும்புகையில்...தனது பெற்றோரும்...தங்கையும் வீட்டில் பிணமாய் கிடத்தபட்டிருந்ததை கண்டவனின் பிஞ்சுமனம் நடந்தவற்றை ஏற்க இயலாது...கலங்கித் துடித்தது..! மாரியின் நிலையோ... அதைவிட பரிதாபம்…. அவர்களின் இறப்பு செய்தியை கேள்விபட்டு ..அந்த கணமே..நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கி சரிந்தவரை…. அருணாச்சலம் உடனே மருத்துவமனையில் சேர்த்தார். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட மாரி சிகிச்சை பலனளிக்காது தானும் உயிரைவிட்டுவிட…. அனைத்து சொந்தங்களையும் ஒரே நாளில் இழந்து... அனாதையானான் இளமாறன்….! அடுத்தடுத்த அதிர்வுகளால் நிலைகுலைந்து போன இளமாறனை….அருணாச்சலமும்...பார்வதியும்… ஆதரவாய் அணைத்து ஆறுதல் படுத்தினர் …எத்தனை பேர் ஆறுதல் தந்தாலும் ஆறிவிடக் கூடியதா...அவன் இழப்பு…?

எந்நேரமும் அழுது கரைந்த இளமாறனை யாராலும் ஆற்றவோ தேற்றவோ இயலவில்லை…!


நண்பனின் திடீர் மறைவில் அருணாச்சலமும் முற்றிலும் உடைந்து தான் போனார்…!

பார்வதிக்கும் சகோதரி போல தன் மீது பாசம் காட்டிய சாந்தியையும் பரந்தாமனையும்...இழந்தது தாள இயலாத துக்கம்தான்…. ஆயினும் இளாவையும் கணவரையும் தேற்றும் பொருட்டு தன் துக்கத்தை மறைத்துக் கொண்டவர் ….. கண்களைத் துடைத்துக் கொண்டு. வேலையாட்களின் உதவியோடு இறந்தவர்களின் இறுதி காரியங்களை முடித்தவர்..!. இளமாறனையும் தங்களோடு தங்கள் இல்லத்திற்கே அழைத்து வந்துவிட்டார்…!


அனைத்து உறவுகளையும் இழந்து நின்றவனை ...அவர்களது நினைவில் மீளாத் துயரில் மூழ்கியிருந்தவனை….சிறிது சிறிதாக மீட்டெடுத்தது தாமரையின்...பாசம் தான் உணவை மறுத்து பெற்றோர்களின் நினைவில்அமர்ந்திருந்தவனின் பக்கத்தில் வந்து...அமர்ந்து அவன் கண்ணீரைத் துடைத்து...தட்டிலிருந்த உணவை தன் பிஞ்சு விரல்களால் அள்ளி அவனுக்கு ஊட்டிவிட்டாள் குட்டிப் பெண்ணான தாமரை. கண்களில் நீரோடு...சின்னவளை பார்த்தவனுக்கு...தன் தங்கை வெண்ணிலாவாகவே தெரிந்தாள் தாமரை. தங்கையோடு சேர்ந்து தானும் இளாவை ஆறுதலாக அணைத்துக் கொண்டான் பாண்டி….!



மூவரின்..ஆழ்ந்த அன்பை..பாசத்தை சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த அருணாச்சலம் தம்பதியருக்கு நெஞ்சம் நிறைந்து விட்டது...அன்று முதல் இளா அவர்களின் குடும்பத்தின் ஒரு அங்கமானான்...அவனும் அவர்களை.. தன் அன்பால் கட்டி வைத்தான்.


ஆயிற்று… இளாவின் பெற்றோர் இறந்து இன்றோடு ஆறுமாதங்கள் கடந்துவிட்டது..! இளாவும் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தான்..! அதற்கு முக்கியமான காரணம் பாண்டியும்... தாமரையும் தான்... எந்நேரமும் அவனை தனித்து இருக்கவிடாமல்… அவனை தங்களோடே வைத்துக் கொண்டார்கள்..! அவர்கள் இருவரின் அன்பிலும்….அருணாச்சலம்

தம்பதியினரின் அரவணைப்பிலும் தன் சோகத்திலிருந்து விடுபட்டு... படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.


பாண்டி, இளா, தாமரை மூவருமே... படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்ததில் அருணாச்சலம் தம்பதியருக்கு ஏக சந்தோஷம். அதனால் மூவரையும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற படிப்பை படிக்க வைத்தனர்.
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 4


பாண்டிக்கு தன் மாமன் மாதவனைப் போல ஐ.பி.எஸ் படித்து முடித்து போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பது சிறுவயது கனவு…. அவனது ரோல் மாடல் மாதவன் தான். அவனது விருப்பப்படியே சென்னை கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்த பாண்டியனை விடுதியில் தங்கிப் படிக்க அனுமதிக்காத அருணாச்சலம்….. அவனுக்காக சென்னையில் ஒரு பங்களாவையே விலைக்கு வாங்கி….சமையலுக்கும் இதர வேலைகளுக்கும்...கணவன் மனைவியான மரகதம் - மாணிக்கம் தம்பதியினரை வேலைக்கு அமர்த்தினார்.


இளாவையும்… பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சென்னைக்கு அனுப்பி அவனுக்கு பிடித்தமான சிவில் என்ஜினீயரிங் படிப்பில் சேர்த்தார்..அவனும் பாண்டியுடன் சென்னை இல்லத்திலிருந்தே தன் படிப்பை தொடர்ந்தான்…!


ஆனால்… தாமரையை பார்வதி சென்னையில் தங்கி படிக்க அனுமதிக்க வில்லை… அவளுக்கும் அதில் விருப்பமில்லை அதனால்... அருணாச்சலமும் விட்டுவிட….அவள் தன் இளங்கலையை திருவண்ணாமலை அரசுக் கல்லூரியிலேயே சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள்…!


பாண்டியும்...இளாவும் வருடாந்திர விடுமுறைகளைக் கழிக்க ஊருக்கு வந்துவிடுவார்கள்…!


பாண்டி விடுமுறையையும் தனது இலட்சிய படிப்புக்காக தன்னை தயார் படுத்திக்கொள்ளவே செலவழிக்க….. இளா...தன் விடுமுறையை அருணாச்சலத்தின் தொழிற்கூடங்களில் அவருக்கு உதவியாக கழிப்பான்…! அது அருணாச்சலத்துக்கு பெருமையாக இருந்த போதும்… விடுமுறையை நண்பர்களுடன்... குதூகலமாக கழிக்க வேண்டிய வயதில் இங்கே வந்து அனைத்தையும்.. இழுத்துப் போட்டுக்கொண்டு செய்பவனை ...அதட்டி வீட்டுக்கு அனுப்ப முயன்றாலும்… போக மறுத்துவிடுவான்…! அவரின் பணிச்சுமையை நன்கு அறிந்தவனாயிற்றே…!


“அய்யா… வீட்டில் சும்மா பொழுது போக்க... எனக்கு பிடிக்கலை… அதுவுமில்லாமல்… இங்க வந்தா எனக்கும் நிறைய விஷயங்களை கத்துக்க முடியும்…. அதோட உங்களுக்கு உதவினா மாதிரியும் இருக்கும்.” என்று சொல்பவனை… பெருமை பொங்க...ஆரத் தழுவிக் கொண்டு…. “நீ அப்படியே என் நண்பனைப் போல… அவனும் ஒரு நிமிஷம் கூட சோம்பி நின்னு நான் பார்த்ததில்லை”….என்று நண்பனின் நினைவில் மூழ்கியவரை… பாசத்தோடு தானும் தழுவிக் கொள்வான்.. இளா…! அவரின் மீதும் பார்வதி மீதும்...மிகுந்த… பாசம்… என்பதைத் தாண்டி பக்தியே வைத்திருப்பவனாயிற்றே…! அவர்களின் வாக்கே வேதவாக்கு அவனுக்கு…!


பாண்டி தன் முழு கவனத்தையும் உழைப்பையும்… நேரத்தையும்...தனது படிப்பிற்காகவே செலவிட….அவனுக்கு தன் தொழில்களில்.. நாட்டமில்லை என்பதை புரிந்து கொண்ட அருணாச்சலம்… அவனை வற்புறுத்தவில்லை…!


அதே போன்று தன் தொழிலைப் பற்றிய விவரங்களையும்… அதன் நெழிவு சுளிவுகளையும்…. தன் தொழில் வாரிசான இளாவுக்கு போதித்தார்…. அவனும் மிகுந்த...ஆர்வத்துடனும் …. ஈடுபாட்டோடும் கற்றுத் தேர்ந்தான். இதனால் அவனது படிப்போடு அவனது தொழில் திறமையும் வளர்ந்தது…. !


தனது முதுகலை இன்ஜினீயரிங் படிப்பை முடித்து…. அதன் பிறகு எம்.பி.ஏவையும் ...முடித்து வந்தவனை… தன் தொழில்களை நிர்வகிக்கும் பொறுப்பை தந்ததோடு…

அவனது படிப்புக்கான அங்கீகாரமாய்… அவனுக்கென்று தனியாக கட்டுமான நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்து கொடுத்தார்.


முதலில் மறுத்தவன்….பிறகு குடும்பத்தினரின் அன்புக்கு கட்டுப்பட்டு...சம்மதித்தான்…! ஆயினும்...கட்டுமான நிறுவனத்திற்கு…

“அருணாச்சலம் கன்ஸ்ட்ரக்ஷன்” என்று அவர் பெயரையே சூட்டினான்.


அதில் பார்வதிக்கு பெருமையாக இருந்த போதும்.. “ஏய்யா… இளா...நீ முதல்முதலா ஆரம்பிக்க போற கம்பெனிக்கு...அண்ணன் (பரமானந்தம்) பேரையே வச்சிருக்கலாமேய்யா….”

என்றவரை..கனிவோடு பார்த்தவன்…!


இல்லம்மா...என்னைப் பெற்றது வேணும்னா அவங்களாயிருக்கலாம்… ஆனா எனக்கு எல்லாமே நீங்களும்...அய்யாவும் தான்! அப்பா..அம்மாவா நான் நினைக்கிறது உங்களைத்தான். என்னைப்பெத்தவங்களோட ஆத்மாவும் இதைத்தான் சொல்லும். என்றவனை கன்னம் வழித்து...ஆசீர்வதித்தனர் இருவரும்.


ஒரு நல்ல நாளில்..‌அருணாச்சலம்... ரிப்பன் வெட்டி திறந்துவைக்க...பார்வதியும்...தாமரையும்… குத்துவிளக்கை ஏற்ற உதயமானது... “அருணாச்சலம் கன்ஸ்ட்ரக்ஷன்” விழாவுக்கு சுற்று வட்டாரங்களிலிருந்து நிறைய பெரிய மனிதர்களையும்... விழாவுக்கு அழைத்திருந்தார் அருணாச்சலம்..! பாண்டியன் ராஞ்சியில் அப்போது தான் பணியில் சேர்ந்திருந்ததால் அவனால் இந்த விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை...எனினும் அங்கிருந்தே அலைபேசியில் அவனுக்கு அழைத்து தன் வாழ்த்தை தெரிவித்தான்.


தனது ஜவுளிக்கடைக்கும் நகைக்கடைக்கும்… ஒரே இடத்தில் அடுத்தடுத்து….அமையும் பொருட்டு பிரம்மாண்டமான புதிய இரண்டு கட்டிடங்கள் கட்டும் முதல்… வேலையை தானே அவனது நிறுவனத்துக்கு வழங்கியவர்... அதற்கான முன்பணமாக... ரூபாய் பத்து இலட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்... அருணாச்சலம்.


இதை சற்றும் எதிர்பாராத இளமாறன்...திகைத்து நிற்க…! வாவ் சூப்பர் அண்ணா... வாழ்த்துக்கள்…! என்ற தாமரையின் குரலில் மீண்டவன்…! கண்களில் நீரோடு தன்னை ஏறிட்டவனை.....கண்களை மூடி திறந்து…ஆதரவாய் சிரித்தார் அருணாச்சலம்.


விழாவுக்கு வந்திருந்த அனைவரும் கைதட்டி தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர்.

அவர்களது வாழ்த்தை தலையசைத்து ஏற்றுக் கொண்டவன்… “அய்யா என்னை நம்பி
கொடுத்த இந்த முதல் வேலையில் என் திறமையை நிருபிக்கும் வாய்ப்பாக எடுத்துக்கொண்டு...சிறப்பா செய்து முடிப்பேன்…” என்றவனை கட்டியணைத்து கொண்டார் அருணாச்சலம். பார்வதியும் தாமரையும்.. மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.


அன்று ஆரம்பித்த அவனது கட்டுமானத்தொழில்...அவனது கடுமையான உழைப்பாலும் திறமையாலும்….தனித் தன்மையாலும் பல பெரிய வாடிக்கையாளர்களை அவனுக்கு தேடித்தந்தது...அதற்கு அடிப்படையாய் அமைந்தது அருணாச்சலத்திற்கு அவன் கட்டிக்கொடுத்த “பார்வதி ஜவுளி மாளிகை…” “தாமரை ஆபரணமாளிகை” கட்டிடங்கள் தான்.‌.! இரு கட்டிடங்களின் அழகும்...பிரம்மாண்டமும்....நேர்த்தியும்..‌. பல பெரிய வாடிக்கையாளர்களை அவனுக்கு தேடித் தந்தது..! கடந்த நான்கு வருடங்களில் அது..மேலும் வளர்ந்து அவனுக்கு நற்பெயரையும்... இலாபத்தையும் ஈட்டி தந்து கட்டுமானத் தொழிலில் நிலைத்து நிற்கவும் வைத்தது ….!


சென்னையில் வெகுவிரைவில் அருணாச்சலம் கன்ஸ்ட்ரக்ஷனின் புதிய கிளை ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளான் இளமாறன். மகனது வளர்ச்சியில் அருணாச்சலம் தம்பதியினர்..பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.


இளாவின் நினைவில் மூழ்கியிருந்தவரை… குளித்து முடித்து ….சாம்பல்வண்ண காஷீவல் பேண்ட்.. கருப்புநிற டிசர்ட் அணிந்து கம்பீரமாக கட கடவென மாடிப்படிகளில் இறங்கி வந்த பாண்டியன் கலைத்தான்.


பேசிக் கொண்டிருந்த பார்வதி மகனைக் கண்டதும் எழுந்தவர் .. அனைவருடனும் சாப்பாட்டு அறையில் நுழைந்தார்…. ஏற்கனவே.. தயாராக இருந்த காலை உணவை அனைவருக்கும்.. பரிமாறியவர்‌. மகனுக்கும் மற்றவர்களுக்கும் தேவையானவற்றை பார்த்து பார்த்து பரிமாறியவரை ஏறிட்ட பாண்டியன்… “நீங்களும் உட்காருங்கம்மா…. சேர்ந்தே சாப்பிடலாம்…” என்றவனை முகம் மலர பார்த்தவர்… நீங்க எல்லாம் முதலில் சாப்பிடுங்கய்யா… நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன் என்றவரை… கையை பிடித்து அமர வைத்தவன்.. !


சமையலறையை நோக்கி… “வள்ளி” என்று அழைத்தவன்

‘சின்னய்யா …’என்று வந்தவளை பார்த்து “எல்லோருக்கும் பரிமாறு” என்று கட்டளையிட்டவன் … தானும் சாப்பிட ஆரம்பித்தான். மகனது கரிசனையில் கண்கலங்கிய பார்வதி தானும் சாப்பிட அமர்ந்தார்…!


அதைக் கண்களில் குறுஞ்சிரிப்புடன்… மற்ற மூவரும் பார்த்துக்கொண்டிருக்க… தாமரை…. இளாவை நோக்கி...”ஏண்ணா… இதை எத்தனை தடவை நாம சொல்லியிருப்போம்...ஒரு நாளாவது நம்ம பேச்சை கேட்டாங்களா…? இன்னைக்கு பார்த்தீங்களா...அண்ணா சொன்னதும்...எப்படி சமத்தா உட்கார்ந்து சாப்பிடுறாங்கன்னு… வர வர சின்னவங்க பேச்சுக்கு மரியாதையே இல்லாம போச்சு இந்த வீட்டுல…”என்றவளின் பேச்சில் இளா வாய்விட்டு சிரித்தான்… என்றால் அருணாச்சலத்திற்கு புரையேறிவிட….அவருக்கு தண்ணீர் எடுத்து கொடுத்த படியே பாண்டியன் தானும் சிரிக்க….


பார்வதி ... தனக்கு பக்கத்தில் அமர்ந்து ஒன்றுமே தெரியாதது போல் உண்ணத் தொடங்கியிருந்த மகளின் காதை பிடித்து திருகி…. "வர வர உனக்கு வாய் அதிகமாயிடுச்சு... சின்னவங்க பேச்சுக்கு மரியாதை தானே தந்துட்டாப்போச்சு..." என்றவர் செல்லமாக முதுகில் ஒன்று போட்டார்…!


ஐயகோ...!! நியாயத்தை சொன்னது குத்தமா.. அதுக்கு இப்படி வெளுக்குறாங்களே‌...இதை கேட்க யாருமேயில்லையா…! என்று போலியாக அலறியவளை அனைவரும் சிரிப்புடன் பார்த்திருக்க…


இளா…. கண்களில் குறும்புடன்… “ஏன் இல்லைடா...ஒருத்தர் இருக்காரு..சென்னையில...நான் வேணும்னா...போன் போட்டு அவரை கூப்பிடட்டுமா உனக்காக நியாயம் கேட்க..”என்க அதைக் கேட்டு அனைவரும் உரக்க சிரிக்க…. தாமரையின் முகம் செவ்வானமாய் சிவந்து விட்டது. தங்கையின் வெட்கச்சிவப்பை பார்த்து..பாண்டியும் இளாவும் மேலும் உரக்க சிரித்தனர்…!

இப்படி..கேலியும் கிண்டலுமாய் உணவுவேளை முடிய….. அனைவரும் சாப்பிட்டு முடித்து வரவேற்பரையில் வந்து அமர்ந்தனர்.

சிறிது நேரம் தாமரையின் திருமண விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பிறகு வேலையிருப்பதாக இளா கிளம்பி சென்றுவிட.. தாமரையும்...தன்னறைக்கு சென்று விட்டாள்.


ஏதோ தீவிர யோசனையில் இருந்த தந்தையை நோக்கிய பாண்டியன்…”சொல்லுங்கப்பா... எங்கிட்ட ஏதாவது பேசனுமா..”என்க நேரடியாக.. விஷயத்துக்கு வந்த மகனின் புத்திசாலித்தனத்தை மெச்சியவர்… ஆமாமென்று தலையசைக்க…


அவரின் புறம் திரும்பி கால் மேல் கால் போட்டு... கம்பீரமாக அமர்ந்தவனின் அழகில் ஒரு கணம் லயித்தவர்… பின்பு சுதாரித்து...தங்களது எண்ணத்தை….கூற ஆரம்பித்தார்… அருணாச்சலம். பக்கத்தில் அமர்ந்து மகனின் முகத்தையே தவிப்புடன் பார்த்துக் கோண்டிருந்தார் பார்வதி…!


பாண்டியன் இவர்களின் ஏற்பாட்டுக்கு என்ன பதில் சொன்னான் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்!


(கையணைக்க வருவான்..)

ஹாய் பேபீஸ் அடுத்த 3....4 அத்தியாயங்களுடன் வந்துவிட்டேன்...! படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்....என் பையனுக்கு எக்சாம் இப்ப தான் முடிஞ்சது...இப்ப என் பொண்ணுக்கு ஆரம்பிச்சாச்சு... அவங்களோட நிறைய...டைம் செலவழிக்க வேண்டியிருக்கு அதான் வாரத்துக்கு ஒரு எபி மட்டும் கொடுக்குறேன்....தயவு செய்து அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க பேபீஸ்...😍😍😍😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 5


received_2512901808739224.png



அருணாச்சலம் பேசி முடிக்கும் வரை அமைதி காத்தவன்… “எனக்கு விருப்பமில்லை…” என்றான் நிதானமாக... ஆனால் குரலில் அழுத்தத்துடன்.


மகனது பதிலில் பார்வதி… தவிப்புடன் கணவரை ஏறிட….கண்களை மூடித் திறந்து...மனைவியை சமாதானம் செய்தவர்….


“எதில் விருப்பமில்லை பாண்டி….இந்த ஏற்பாட்டிலா…? இல்லை கல்யாணத்திலேயேவா…?”

என்றவரை நிமிர்ந்து பார்த்தவன்…


“இரண்டிலும் தான்..” என்றான் பட்டு கத்தரித்தது போல….


“பாண்டி நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சுதான் பேசுறியா…?” இப்பவே...உனக்கு 30 வயசாகுது... இதுக்கு மேல தள்ளிப்போட முடியாது…. பருவத்தே பயிர் செய்னு பெரியவங்க சொன்னது விவசாயத்துக்கு மட்டுமில்ல...கல்யாணத்துக்கும் தான்...அதது நடக்க வேண்டிய நேரத்தில் சரியா நடக்கனும்…! நீ விருப்பப்பட்ட படிப்பை படிச்சு உனக்கு பிடிச்ச வேலையிலும் சேர்ந்தாச்சு…இந்த நாலு வருஷத்துல... உன்னோட கரியர்ல (carrier) மத்தவங்க சாதிச்சதைவிட அதிகமாவே என் மகன் சாதிச்சிருக்கான்….!

என் புள்ளை தொழில்ல ஜெயிச்சதைப் போல சொந்த வாழ்க்கையிலும் ஜெயிக்கனும்...மத்தவங்களைப் போல அவனும் குடும்பம் ,மனைவி , குழந்தைங்கன்னு சந்தோஷமா வாழனும்னு நானும் உங்க அம்மாவும் ஆசைபடுறோம்பா…” என்றவரை இடைமறித்தவன்..


“அப்பா..நான் இப்ப வந்தது தாமரையோட கல்யாணத்துக்கு அது முதல்ல நல்லபடியாக நடக்கட்டும்… எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம்...அப்புறமா பார்க்கலாம்…”என்றவனை…


தவிப்போடு நோக்கிய பார்வதி… “ஏன்யா… அப்புறமான்னா எப்பய்யா…? டிரைனிங் முடிச்சிட்டு போனவன்… நாலு வருஷம் கழிச்சு இப்ப தான் வந்திருக்க… இப்ப கிளம்பி போனா திரும்பி வர எத்தனை வருஷமாகுமோ?

அதனால தான்யா... தாமரையோட உன் கல்யாணத்தையும் சேர்த்து வச்சிட்டா... நல்லாயிருக்கும்னு நினைக்கிறோம்…. தயவு செய்து எங்களுக்காக கல்யாணத்துக்கு ஒத்துக்கைய்யா… என்றார் ஆதங்கத்தில் ஆரம்பித்து கெஞ்சுதலோடு..


“அம்மா… நான் என் கல்யாணத்தைப் பத்தி யோசிச்சு கூட பார்க்கலை... இப்படி திடீர்னு.. சொன்னா எப்படி…? டிபார்ட்மெண்ட்ல புது புராஜெக்ட் போய்டிருக்கு அதுக்கு நான் தான் இன்சார்ஜ்…. நேரங்காலம் பார்க்காம...வேலையிருக்கும் பல நாள் நான் அங்க வீட்டுக்கு கூட போக முடியாது...

இந்த நிலைமையில கல்யாணம் பண்ணி ஒருத்தியை...கூட்டிட்டு போய்... அதெல்லாம் சாத்தியமே இல்லை ..! அதுமட்டுமல்ல... எனக்கு என் வேலை ரொம்ப முக்கியம் எதுக்காகவும் அதை என்னால விட்டு தர முடியாது.. இதையெல்லாம் யோசிச்சு தான் நான் இப்ப வேணாம்னு சொல்றேன்.” என்றவனை..


“பாண்டி… உன்னோட வேலையை எவ்வளவு நேசிக்கிறங்கறது எங்களுக்கு நல்லாவே தெரியும்…! அதனால தான் நாலு வருஷமா..உன்னை தொந்தரவு பண்ணாம இருந்தோம்…! இதுக்கு மேலயும் அப்படி இருக்க முடியாது… கல்யாணம் உன் வேலையை எந்த வகையிலும் பாதிக்காது… தொழிலில் நீ நாளைக்கு சாதனை படைக்கும் போது அதைப்பார்த்து சந்தோஷப்படவும்…. பெருமைபட்டுக்கவும் உனக்குன்னு ஒரு குடும்பம் கண்டிப்பா இருக்கனும்… !
வேலை முக்கியம் தான் .. அதே சமயம் வாழ்க்கையும் முக்கியம் கண்ணா…!
நாங்க பார்த்த பொண்ணைத்தான் நீ கட்டிக்கனும்னு இல்லை…உன் மனசுக்கு யாரையாவது பிடிச்சிருந்தாலும்...சொல்லு பேசி முடிச்சிடலாம்...ஆனா நீ இங்கிருந்து போகும் போது உன் மனைவியோட தான் போகனும்” என்றார் கட்டளையாக…!



தந்தையின் குரலில் இருந்த கட்டளையை உணர்ந்து கொண்டவன்அவரைத் துளைக்கும் பார்வை பார்த்தான்….அவனது பார்வையை அசராது எதிர்கொண்டவரின் பார்வையில் “நான் உனக்கு அப்பன்டா…”என்ற செய்தியிருந்தது…!


அதைப் பார்த்துக் கொண்டிருந்தவனின்...முகத்தில் இலேசான புன் முறுவல் மலர… மகனின் முகத்தில் புதிதாய் தோன்றிய முறுவலை கண்டவரின் முகமும் மலர்ந்தது….! மகனது இணக்கத்தை சாதகமாக எடுத்துக் கொள்ள நினைத்தவர்….அப்ப.. மாப்பிள்ளையின் வீட்டுக்கு தகவல் சொல்லிவிடலாம் தானே என்று ஆர்வமாக வினவியவரிடம்…!


அவன் மௌனத்தையே பதிலாக்க… அருணாச்சலத்திற்கு ஆயாசமாக இருந்தது… இருவரின்.. உரையாடலை கேட்டுக்கொண்டு... தவிப்புடனும்….மகனது சம்மதம் வேண்டி ஆவலுடன் அவன் முகத்தையே..பார்த்துக் கொண்டிருந்த…. மனைவியின் மனதை உணர்ந்தவராக…. மீண்டும்


மகனை உற்று நோக்கியவர்… “என்னப்பா… நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம...இப்படி மௌனமாயிருந்தா... நான் என்னன்னு எடுத்துக்கறது..!

என்றவரை நோக்கியவன்…!

அப்பா...தாமரையோட கல்யாணம்னு சொல்லி கூப்பிட்டுட்டு….இப்படி என்னையும் கல்யாணம் பண்ணிக்க நிர்பந்தப் படுத்துவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை… இப்ப கல்யாணம் பண்ற மனநிலையில் முதல்ல நான் இல்ல.. வேணும்னா ஒரு ரெண்டு வருஷம் போகட்டும்...அதுக்கப்புறம் நிச்சயம் கல்யாணம் பண்ணிக்கிறேன்… இப்ப என்னால முடியாது…. டயர்டா இருக்கு நான் போய் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்….அப்புறம் பேசலாம்…”என்றவன் அவரது பதிலுக்கு கூட காத்திருக்காமல்..விறுவிறுவென படிகளில் ஏறிச் சென்றுவிட்டான்.



செல்லும் மகனது முதுகையே சிறிது நேரம் வெறித்தவர்…. பெருமூச்சுடன்...தன் மனைவியிடம் பார்வையை பதித்தார்… மகனின் பதிலில் பெரும் ஏமாற்றமும்...கவலையும் ஒருங்கே எழ ...கண்களில் நீரோடு அமர்ந்திருந்த பார்வதி…. “என்னங்க... இப்படி சொல்லிட்டு போறான் அப்படின்னா...என்னோட ஆசை நிறைவேறாதா….?

அப்படி என்னங்க நான் ஆசைபட்டேன்… பெத்த புள்ளைக்கு காலாகாலத்தில் ஒரு கல்யாணம் பண்ணி பார்க்க ஆசைப்பட்டேன் அது என்ன அவ்வளவு பெரிய தவறா?” என்று ஆதங்கப்பட்டவரை என்ன சொல்லித் தேற்றுவது என்று அருணாச்சலத்திற்கு புரியவில்லை.


ஆயினும் மனைவியின் கண்ணீரை காண பொறுக்காதவர்.. “பார்வதி நீ‌‌..முதல்ல கண்ணைத் துடை.. வீட்டுல விசேஷத்தை வச்சிக்கிட்டு இதென்ன கண்கலங்கிகிட்டு...

அவன் தூங்கி எழுந்து வரட்டும் திரும்பவும் ஒரு முறை பேசிப் பார்ப்போம். என்றார் சமாதானப்படுத்தும் விதமாக….

கணவரின் வார்த்தைகள் ஓரளவு...நம்பிக்கையை விதைக்க.. சற்று அமைதியானார் பார்வதி.


யோசனையில் இருந்தவர்களை கலைத்தது...அலைபேசி அழைப்பு...டீபாயின் மேலிருந்த தன் அலைபேசியை எடுத்து அழைத்தது யாரென்று பார்த்தவரின் முகம் மலர்ந்தது….! அருணா தான் கூப்பிடுறா…. என்றவர்


அழைப்பை ஏற்று காதில் வைத்ததும்… “அண்ணா.‌..பாண்டி வந்தாச்சா...எப்படியிருக்கான் என் மருமவன்…. நீங்க….அண்ணி தாமரை….இளா..‌எல்லாரும் சௌக்கியமா..?” என்றுவிடாது படபடவென கேள்விகளை...அடுக்கியவள்அந்தபக்கம் பதிலில்லாது போகவும்.. அண்ணா… லைன்ல இருக்கீங்க தானே….? என்றாள் பதற்றத்துடன்.


இந்த பக்கம் சிரித்த அருணாச்சலம்… “நீ எங்கடா என்னை பேசவிட்ட…..” என்றார் சிரித்தவாறே…


“போங்கண்ணா” என்று செல்லமாக சிணுங்கியவளின் நினைவில் சிறுவயது அருணா வந்து போனாள்… ! அதில் முகம் கனிந்தவர்… “ நீ எப்படிடா இருக்க…. மாப்பிள்ளை… பிள்ளைங்க எல்லாம் சௌக்கியந்தானே? அப்புறம் அத்தை மாமா எப்படி இருக்காங்க..? என்றார் வாஞ்சையுடன்.


“நாங்க எல்லோரும் நல்லாயிருக்கோம்னா… ஆனா...நான் தான் ரொம்ப கோவமாயிருக்கேன்.” என்றவள்…


“ரத்னம் இவ்வளவு தூரம் வந்தவன் ஒரு எட்டு இங்க வந்துட்டு போயிருக்கலாம் தானே… எத்தனை வருஷமாச்சு அவனை பார்த்து… இந்த அத்தையை மறந்துட்டானா... அவன்?” என்றாள் குரல் தழுதழுக்க…!


“அடடா…!..குட்டிமா… இதென்ன சின்னபுள்ள மாதிரி கண்கலங்கிக்கிட்டு… அவன் சென்னையில் லாண்ட் ஆகும் போது அதிகாலை 3 மணி… அந்த நேரத்தில்...உங்களை தொந்தரவு செய்யனுமான்னு நினைச்சிருப்பான். அவனை பத்தி தான் உனக்கு தெரியுமே….எப்படியும் மாப்பிள்ளை வீட்டுக்கு அங்கே இரண்டொரு நாள்ல நாங்க எல்லாம் கிளம்பி வரத்தானே போறோம்… அப்ப உன் மருமகனை நீயே கேட்டுக்கோ…! நீயாச்சு...அவனாச்சு நடுவுல நாங்க வரலை…!”என்றார் தங்கையை சமாதானப்படுத்தும் விதமாக…


ம்ம்ம் ...எங்கே அவன் பக்கத்தில் இருக்கானா…? கொடுங்க நான் இப்பவே கேட்குறேன்..? என்றவளிடம்


இல்லடா‌….இப்ப தான் சாப்பிட்டான்...களைப்பா இருக்கு ரெஸ்ட் எடுக்கறேன்னு அவன் ரூமுக்கு கிளம்பி போனான்….!


ஓ ..! சரிண்ணா…..அண்ணி இருக்காங்களா.‌‌..?கொடுங்க!


இதோ இங்க தான் இருக்கா பேசு என்றவர் மனைவியிடம் அலைபேசியை நீட்ட... ஆவலுடன் வாங்கிய பார்வதி நாத்தனாரிடம் வழக்கமான நலம் விசாரிப்புகளுடன் பேச ஆரம்பித்தார்…!


“அண்ணி என்னாச்சு? குரல் ஒரு மாதிரியா இருக்கு...எதாவது பிரச்சனையா…?என்ற நாத்தானாரிடம்.. கணவருக்கும் மகனுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளை ஒன்று விடாமல் கூறினார்.


அனைத்தையும் கேட்ட அருணா….”கவலைபடாதீங்க அண்ணி… ரத்னத்துக்கிட்ட நான் பேசுறேன்… அவனை எப்படியாவது சம்மதிக்க வச்சிடலாம்… அவன் நான் வளர்த்த பையன் அவனை எப்படி சம்மதிக்க வைக்கனும்னு எனக்கு தெரியும்… நீங்க கவலையை விடுங்க…!அவன் இங்கிருந்து போகும் போது அவன் பெண்டாட்டியோட தான் போவான்...நீங்க தைரியமா கல்யாண வேலையை பாருங்க…. நான் பார்த்துக்கிறேன்.”


அருணாவின் பேச்சு அவருக்கும் நம்பிக்கையை விதைக்க… முகம் விகசிக்க “நீ சொல்றது நிஜமாவே நடக்குமா அருணா?….அப்படி மட்டும் நடந்துட்டா.. அதைவிட சந்தோஷம் எனக்கு வேற எதுவுமில்லை…!”


“நிச்சயம் நடக்கும்

அண்ணி...தைரியமாயிருங்க அவன்கிட்ட நான் பேசிக்கிறேன்…! ஆமா கல்யாணப் பொண்ணு என்னப் பண்றா…? மேடம் ரொம்ப பிஸியா…? இப்பல்லாம் எனக்கு கால் கூட பண்றது இல்ல….. என்றவளிடம்…

இல்லடா மேல அவ ரூம்ல தான் இருக்கா இரு கூப்பிடறேன்….” என்றவரை தடுத்து …


“வேண்டாம் அண்ணி... இருக்கட்டும் விடுங்க…. நான் அப்புறமா ரத்னத்துக்கிட்டபேசும் போது.. அவகிட்டயும் பேசிக்கிறேன்… சரி..அண்ணி..அவர் இப்ப தான் குளிக்க போயிருக்கார்… டிபன் சாப்பிட வந்துடுவாங்க டிபன் எடுத்து வைக்கனும்…. நீங்க மனசை போட்டு குழப்பிக்காம…. நிம்மதியா இருங்க...நான் வச்சிடுறேன் அண்ணாகிட்ட சொல்லிடுங்க…பை...என்று போனை வைத்து விட்டாள்.”


மலர்ந்த முகத்துடன்… அலைபேசியை தந்த மனைவியை கேள்வியாக நோக்கியவரிடம்….அருணா சொன்னதை கூறியவர்….


“ஏங்க ..அருணா எப்படியும் பாண்டிகிட்ட பேசி சம்மதம் வாங்கிடுவாயில்ல…?!


“ம்ம்ம்…. கண்டிப்பா… அருணா சொன்னா உம்மகன் கேட்பான்னு தான் நினைக்கிறேன்… பார்ப்போம்.. என்றார்...தன் தங்கை அருணாவின் மீதான மகனின் பாசத்தை உணர்ந்தவராக….!


அவரின் வார்த்தைகள் மனதுக்கு இதமளிக்க சந்தோஷத்துடன் சரிங்க...நான் போய்...மதிய சமையலை கவனிக்கிறேன்…என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் பார்வதி.
 
Last edited:
Status
Not open for further replies.
Top