All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கதை திரி

Status
Not open for further replies.

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சென்னையில்..பெரும் செல்வந்தர்கள் அதிகமாக வசிக்கும்...பகுதியில் அமைந்திருந்தது மாதவனின் பங்களா…! தங்கள் அறையின் குளியல் அறையிலிருந்து...தலையை துவட்டிக்கொண்டே….வெளியே வந்த மாதவன்…. கட்டிலில் அமர்ந்து தீவிர யோசனையிலிருந்த மனைவியை பார்த்த வாறே….உடைமாற்றிக் கொண்டவர். தலையை..சீவிக் கொண்டே...கண்ணாடி வழியாக மனைவியை அளவிட்டார்… குளித்து முடித்து...இடையை தொட்ட கூந்தலை நுனியில் முடிச்சிட்டு…. களையான முகத்தில் குங்குமமிட்டு சிவந்த மேனியில் விலை உயர்ந்த சந்தன நிறத்தில் தங்கநிற சரிகை இடையோடிய காட்டன் புடவையை நேர்த்தியாக உடுத்தி...எடுப்பான மூக்கில் அழகாக வைர மூக்குத்தி துலங்க...கணத்த தாலி சங்கிலியோடு சற்றே பூசினாற்போன்ற உடல்வாகோடு…. அமர்ந்திருந்த மனைவியை கண்டவருக்கு காதல் பெருக்கெடுக்க...சத்தம் செய்யாது மனைவியை நெருங்கியவர்...பின்னோடு சேர்த்தணைக்க… கணவனின் திடீர் அணைப்பில் யோசனை கலைந்தவள்….கணவரின் நெஞ்சில் வாகாக பின்னோடு சாய்ந்து நிற்க…


“அதிசயமான மனைவியின் இணக்கத்தில் இன்னும் நெருங்கிய மாதவன்.. “நான்வந்ததை கூட கவனிக்காம அப்படி என்ன யோசனை என் மகாராணிக்கு..” என்றவாரே மனைவியின் கன்னத்தில் தன் முத்திரையை பதிக்க... கண்மூடி கிறங்கி நின்றவள்..

சுயம் பெற்று துள்ளி விலகி..


"என்னங்க இது நேரங்காலமில்லாம… இப்படியெல்லாம் ..." என்று முடிக்க இயலாது கன்னம் சிவக்க..


"என்னடி இது வம்பாப் போச்சு...என் பொண்டாட்டியை நான் கொஞ்ச நேரங்காலம் பார்க்கனுமா…"என்றார் கண்சிமிட்டியவாறே….


“போதும் உங்க அலப்பறை..
கல்யாண வயதில் பொண்ணை வச்சிக்கிட்டு… பேசுற பேச்சைப் பாரு…”



“எனக்கென்னவோ...நேத்து தான் நமக்கு கல்யாணம் ஆன மாதிரி தோணுது….உன்னைப் பார்த்தா... கல்யாண வயசுல பொண்ணு இருக்குங்கறதை நம்பவே....முடியலைடி… வேணும்னா உன்னை வர்ஷூவோட அக்கான்னு சொல்லலாம்….என்றார் கண்களில் குறும்பு மின்ன…!


கணவனது கிண்டலில் மேலும் முகம் சிவந்தவள்..


“அப்படின்னா.. இருங்க.. வர்ஷூவையும்… வருணையும் கூப்பிடுறேன் அவங்களே வந்துஉங்க டவுட்டை கிளியர் பண்ணட்டும்…”என்றவள் அவர்களை அழைப்பது போல் பாவனை செய்ய…. பாய்ந்து வந்து மனைவியின் வாயைப் பொத்தியவர்…


“அடியேய்….!

ஏண்டி உனக்கு இந்த கொலவெறி….! பொண்டாட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்தது குத்தமா….ஆளை விடுடி…!” என்று மனைவியிடம் வெற்றிகரமாக பின்வாங்கியவரை..


“அது…” என்று அவரை மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தவள்.. வாய்விட்டு சிரிக்க... மனைவியின் புன்னகையில் தானும் கலந்து கொண்டார்.


“ஆமா.. நான் குளிச்சிட்டு வரும்போது ஏதோ தீவிர யோசனையில் இருந்தியே என்ன விஷயம்? என்று வினவினார் ஞாபகம் வந்தவராக…!


அதுவரை கேலிப்பேச்சில் மலர்ந்திருந்த அருணாவின் முகம் மீண்டும் யோசனைக்கு செல்ல..


“அது ஒண்ணுமில்லைங்க…. அண்ணா...அண்ணிகிட்ட தான் பேசிட்டிருந்தேன்… ரத்னம் ஊரிலிருந்து இன்னைக்கு காலையில வந்துட்டானாம்…! என்றவள் செல்பேசி உரையாடலை அப்படியே கணவரிடம் கூறத் தொடங்கினாள். மனைவி கூறியவற்றை முழுமையாக கேட்டவர்.


“பாண்டிக்கு கல்யாணத்தில் விருப்பமில்லைன்னா… விட்டுடவேண்டியது தானே… அவன் தான் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்றானே.. பிறகு மெதுவா பார்த்து...முடிக்கலாமே..” என்றவரை முறைத்த அருணா..


“ஏங்க புரிஞ்சு தான் பேசுறீங்களா..? அவன் வேலையில் சேர கிளம்பி போய் நாலு வருஷமாச்சு….! இடையில் ஒரு தடவை கூட ஊர்ப்பக்கம் வரலை போன்ல எப்பவாவது பேசுறதோட சரி…. அதுமட்டுமா… இந்த ஜுன் வந்தா அவனுக்கு29 முடிஞ்சு…. 30 வயசு ஆரம்பிச்சிடும்… இன்னும் தள்ளிப் போட்டா நல்லாவாயிருக்கும்! அதான் அண்ணி… நம்ம கதிரோட தங்கையையே ரத்னதுக்கு பேசி முடிச்சிட்டா…. இரண்டு கல்யாணத்தையும் ஒண்ணாவே முடிச்சிடலாம்னு நினைக்கிறாங்க…. ஆனா அவன் பிடிகுடுக்க மாட்டேங்குறானாம்… அவனை எப்படியாவது சம்மதிக்க வச்சிடறேன்னு… அண்ணிக்கு ஆறுதல் சொல்லியிருக்கேன்… அதைப்பற்றி தான் யோசிச்சிட்டிருந்தேன்…”


“நீ சொல்றதும் சரி தான் இதுக்கு மேல கல்யாணத்தை தள்ளிப் போடுறது எனக்கும் சரியாபடலை...இப்ப என்ன பண்ணப்போற….?” என்றவரை..


“பண்ணப்போற இல்ல…. பண்ணப்போறோம்னு சொல்லுங்க…!”


“என்னது நானா..? இந்த விஷயத்தில் நான் என்ன பண்ண முடியும்..என்றார் புரியாதவராக..!


“நீங்க ஒரு வார்த்தை சொன்னா உங்க பேச்சை தட்டவே மாட்டான் பாண்டி..!”


உண்மை தான் சிறுவயதிலிருந்தே பாண்டிக்கு மாதவனின் மீதும் அவருடைய போலீஸ் வேலையின் மீதும் தனி மரியாதை உண்டு… அதுமட்டுமில்லாமல் ஐ.பி.எஸ் படிப்புக்கு தேவையான அனைத்து விவரங்களையும் குறிப்புகளையும் அவ்வப்போது அளித்து...அவனுக்கு குருவாய் இருந்து அவனை வழி நடத்தியவராயிற்றே…!

அந்த மதிப்பும் மரியாதையும் அறிந்தவள் என்பதனாலேயே அருணா கணவரை இதில் இழுத்தது..!


அதை உணர்ந்து கொண்டவராக...மனைவியை வியப்போடு நோக்க..


“பின்ன அவனுக்கு எம்மேல எவ்வளவு பாசம் இருக்கோ... அந்தளவுக்கு உங்க மேல அன்பும் மரியாதையும் வச்சிருக்கான்…. உங்களை பார்த்து தானே தானும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி ஆகனும்னு நினைச்சான்! உங்க மேல ஒரு ஹீரோ அபிமானம் வச்சிருக்கான்... நீங்க தான் அவனோட ரோல்மாடல்னு…. பலதடவை என்கிட்ட பெருமையா சொல்லுவானே….இவ்வளவு அன்பும் மரியாதையும் வச்சிருக்கிற நீங்க சொன்னா அவன் நிச்சயமா கேட்பாங்க…” என்ற மனைவியை பார்த்தவர்…..


“அதெல்லாம் சரி தான் அருணா…. கல்யாணத்துல விருப்பமில்லாதவனை…. எப்படி… என்று தயங்கியவரை…


நம்ம தமிழரசியை பார்த்தா விருப்பமெல்லாம் தன்னால வந்துடும்னு தோணுதுங்க… அவனை வளர்த்தவ நான். எனக்கு அவனோட விருப்பு வெறுப்பு… ரசனை இதெல்லாம் அத்துபடி…. எனக்கு நம்பிக்கை இருக்கு…. நீங்க அவனை பொண்ணுபார்க்க மட்டும் சம்மதிக்க வைங்க போதும்…. மற்றதெல்லாம் தன்னால நடக்கும்….என்று… நம்பிக்கையாய் உரைத்த மனைவியின் முகத்தை பார்த்தவருக்கு முயற்சித்து பார்க்கலாமே என்ற எண்ணமே தோன்றியது.


தானும் ஒரு காலத்தில் கல்யாணத்தை முதலில் மறுத்தவர் தானே..! பெற்றோர்களின்… பிடிவாதத்திற்காக...வேண்டா வெறுப்பாக அருணாவை பெண் பார்க்க சென்றவர்…. துடைத்து வைத்த குத்துவிளக்கின் சுடரைப் போல தன்னெதிரே வந்து நின்ற அருணாவின் அழகில் மெய்மறந்து அவளையே விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தவரை...உலுக்கி பெண்ணை பிடித்திருக்கிறதா என்ற தந்தையின் கேள்விக்கு…. தன்னையறியாமல் தலையாட்டி தான் சம்மதித்து வைத்ததை நினைத்துப் பார்த்தவரின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது!


தான் கூறியதற்கு எந்த பதிலுமின்றி யோசனையில் ஆழ்ந்திருந்த கணவர் திடீரென...புன்னகைக்கவும்..

புரியாது விழித்தவர்…

என்ன என்று பார்வையால் வினவ…


“இல்ல... நான் தான் கல்யாணங்குற பேர்ல தெரியாம… உங்கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறேன்னா…. என் மாப்பிள்ளையையும் அந்த கஷ்டத்தில் தள்ளிவிடனுமான்னு யோசிக்கிறேன்…. அவனாவது இன்னும் கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கட்டுமே..”என்று முகத்தை மிகவும் சீரியஸாக வைத்துக்கொண்டு சொன்னவரை….பார்த்து தன் நெற்றிக் கண்ணைத் திறந்த அருணா…


“ஓஹோ…! அப்ப...என்னைக் கட்டிக்கிட்டு…. சார் ரொம்ப கஷ்டப் படுறீங்க… உங்களுக்கு எதுக்கு அம்புட்டு கஷ்டம்….போதும் சாமி நான் இப்பவே என் அண்ணன் வீட்டுக்கு பொட்டியை கட்டுறேன்…. இனிமேலாவது நிம்மதியா மீதி வாழ்க்கையை உங்க விருப்பபடியே..குஜாலா வாழுங்க நான் கிளம்புறேன் என்று முறுக்கிக் கொண்ட மனைவியை… கெஞ்சி கொஞ்சி மலையிறக்கினார்.. மாதவன் ஐ.பி.எஸ்.


(வாண்டடா...வாயை கொடுத்து வாங்கி கட்டுறது இதானா...பாண்டி உன் நிலைமையும் நாளைக்கு இது தானோ…?)


மனைவியுடன் ஒரு வழியாக சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டவர்..


“ஆமா அதென்னடி குஜாலா…?”


“ம்ம்ம்... அது உங்க சென்னை தமிழ்… குஜாலா”


“அப்படின்னா…?”


“கூட்டா சேர்ந்து கும்மியடிக்கறது…”


“இதையெல்லாம் எங்க போய்டி கத்துக்கிட்ட…?!”



“ம்ம்ம் ….டியூஷன் வச்சி கத்துக்கிட்டேன்…!”


“நம்ம வேலைக்காரி முனியம்மாகிட்ட ரெண்டு நிமிஷம் பேசுனீங்கனா…. இது போல பல அரிய வார்த்தைகள் வந்து விழும்….அதுல ஒண்ணு தான் இது...!

என்றவளை…ஆசையாய் பார்த்தவர்...மனைவியை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க...அவரை நன்கறிந்தவளாய்…. இதோ வந்துட்டேன் அத்தை என்று கூப்பிடாத மாமியாருக்கு பதிலளித்தவாறே அறையை விட்டு வேகமாக வெளியேறியவளைத்… தொடர்ந்தது மாதவனின் சிரிப்பு சத்தம்.




(கையணைக்க வருவான்…)

ஹாய் மைடியர் பேபீஸ்... 5வது அத்தியாயம் பதிந்துவிட்டேன்... கமெண்ட் ப்ளீச்.... நிறைய பேர் படிக்கிறீங்கன்னு தெரியும்.... ஆனால் ஒரு சிலர் மட்டும் தான் கமெண்ட் பண்றீங்க....! படிக்குற மத்தவங்களும் ஒரு எட்டு வந்து... எப்படி யிருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா... ரொம்பவே சந்தோஷப்படுவேன் பேபீஸ் சைலண்ட் ரீடர்ஸ் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்கபா தொடர்ந்து என் கதையை ரசித்து படித்து கமெண்ட் பண்ண எல்லா பேபீஸ்க்கும் நன்றி ...நன்றி💞💞💞😍😍😍😘😘😘
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 6

received_2073017266101361.pngreceived_421834418364137.png
கதிரவன் - தாமரை

சென்னையின் எலியட்ஸ் கடற்கரை என்று அழைக்கப்படும்… அஷ்டலஷ்மிகளும் அமர்ந்து அருள் பாலிக்கும்…. பெசண்ட் நகர் ஏரியா…! அதிகாலை 4 மணி... தீவிரமாக காலை நேர ஜாகிங்கில் இருந்தான் கதிரவன்.

அந்த அதிகாலை நேரத்திலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைய பேர் தீவிர நடைப் பயிற்சியிலும் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தனர்…!


வியர்வை பெருக்கெடுக்க..ஒருமணிநேரம் ஓடியவன்...தன் சிவப்பு நிற ஸ்விப்ட்டை அடைந்து...காரின் கதவை திறந்து இருக்கையில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் வாட்டர் பாட்டிலை எடுத்து அப்படியே வாயில் சரித்துக்கொண்டு...மீதியை தன் முகத்தில் ஊற்றிக் கொண்டவன்….டாஷ் போர்டில் இருந்த துவாலையால் முகத்தை துடைத்துக் கொண்டான்…


“ஹாய்…. யங்மேன் குட்மார்னிங்…!”.என்ற அழைப்பில் திரும்பி பார்க்க அங்கே...60வயது மதிக்க தக்க மனிதர் கையில் வாக்கிங் ஸ்டிக்கோடு நின்று கொண்டிருந்தார்.


அவரை பார்த்து புன்னகை புரிந்தவன்… “ குட்மார்னிங் அங்கிள்..!”


“என்ன கதிர்...ஜாகிங் முடிச்சிட்டியா..?!”


“ஆச்சு அங்கிள் கிளம்பவேண்டியது தான்…” என்றான்.


“ஓ.கே கேரியான்… மை பாய்!” என்றவர் தன் நடைப்பயிற்சியை தொடர்ந்தார்.


வழக்கமாக இந்த நேரத்தில் நடைபயிற்சிக்கு வருபவர் தான்… அதில் வந்த பழக்கம் தான். மற்றபடி அவரைப் பற்றிய விவரங்களை அவரும் சொல்லவில்லை..அவனும் கேட்கவில்லை.


காரின் இருக்கையை பின்னுக்கு நகர்த்தி சாய்ந்து அமர்ந்தவன் காலை நேரத்து குளிர்ந்த கடற்காற்று முகத்தில் மோத அதை ஆழ்ந்து சுவாசித்தான்…! அது உடலில் புத்துணர்வை கூட்ட சிறிது நேரம் அந்த இனிமையை அனுபவிக்கும் விதமாக கைகளை தலைக்கு கீழே கோர்த்துக் கொண்டு...கண்களை மூடிக்கொண்டான்.


மூடிய கண்களுக்குள் தாமரை வந்து நின்று அவனை பார்த்து புன்னகைத்தாள். திடுக்கிட்டு விழிகளைத் திறந்தவன்..

“கண்ணை மூடினால் போதும் உடனே...வந்து நிக்குறா… இவளோட முடியல…!” என்று செல்லமாய் சலித்தவாறு..தன் காரைக் கிளப்பினான். கைகள் காரை இலாவகமாக ஓட்டிக் கொண்டிருந்தாலும்…. நினைவுகள் அவளை சுற்றியே சுழன்றது.


அவளது புகைப்படத்தை முதன் முதலில் பார்த்த நொடியே அவனது மனதில் பெருத்த சலனத்தை ஏற்படுத்தினாள் தாமரை!. ஆயினும்

அவள் பெரிய கோடீஸ்வரர் அருணாச்சலத்தின் மகள் என்று அறிந்தவுடன்…. அவளை மறுத்தான் கதிரவன். அதற்கு காரணம் இல்லாமலில்லை...அவர்களோடு ஒப்பிடுகையில் வசதிவாய்ப்புகளில் பலபடிகள் பின்தங்கியிருந்தனர் சொக்கநாதர் குடும்பம்.


பெரும் பணக்காரியான தாமரை நிச்சயம் தன் குடும்பத்தாருடன் ஒட்டமாட்டாள் என்று அவன் திடமாக நம்பினான். அவளுக்காக தன் குடும்பத்தவரை இழக்க அவன் விரும்பவில்லை. தன் பெற்றோரிடமும் தங்கையின் மீதும் அளவற்ற பாசம் கொண்டவன் அவன். அது மட்டுமல்லாமல் பணக்கார வீட்டிற்கு மாப்பிள்ளையாக செல்ல அவனுக்குமே விருப்பமில்லை. நீண்ட யோசனைக்கு பிறகு தந்தையிடம் சென்றவன்...


“அப்பா...இந்த சம்பந்தம் நமக்கு வேண்டாம். பெரிய பணக்கார வீட்டு பொண்ணு நம்ம குடும்பத்துக்கு செட்டாகாது. பணத்தில் புரண்டு வளர்ந்தவ...நம்ம வீட்டு பழக்க வழக்கத்துக்கு நிச்சயம் ஒத்துவர மாட்டா. அதனால நமக்கேத்த மாதிரி நடுத்தர வர்க்கமா பாருங்க… போதும்!” என்றவனை பெருமையோடு பார்த்தவர்...


அருணாச்சலத்தின் குடும்பத்தை பற்றியும் அவரது குணத்தைபற்றியும்...இளாவைப் பற்றியும் பரமேஸ்வரன் தன்னிடம் கூறியவற்றை மகனிடம் கூற…. அதைக் கேட்டவனுக்கு அருணாச்சலத்தின் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டானது. “இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா..!” என்று வியந்தான்.


ஆயினும் தயங்கியவனை… “இதோ பாரு கதிர் எனக்கு பரமேஸ்வரன் அண்ணன் முறையானாலும் தகப்பன் ஸ்தானத்தில் தான் நான் அவரை வச்சிருக்கேன். அவரோட வார்த்தைகளை என்னால் மீற முடியாது. யாரையும் அவ்வளவு சுலபமாக நம்பாதவர் அவரே அருணாச்சலத்தை பற்றி புகழ்ந்து பேசுறாருன்னா... நிச்சயமாக அவங்க நல்லவங்களாத்தான் இருப்பாங்க. அதுமட்டுமல்ல மாதவனோட மனைவி அருணாவைப் பற்றி உனக்கே தெரியும் அந்த பொண்ணு குணத்தில் தங்கம்..அந்த குடும்பத்து பொண்ணு நிச்சயமாக நல்ல பொண்ணாத்தான் இருப்பா!” என்று எப்படியோ பேசி மகனை சரிகட்டினார்.



ஒரு நல்ல நாளில் சொக்கநாதர் தன் குடும்பத்தாருடன் தங்கள் காரில் தாமரையை பெண்பார்க்க வேட்டைவலம் நோக்கி புறப்பட. பரமேஷ்வரன் குடும்பமும் மற்றொரு காரில் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.


தந்தையின் பிடிவாதத்திற்காகவே அவன் இந்த ஏற்பாட்டிற்கு அரை மனதாக சம்மதித்தான்.


காரிலிருந்து இறங்கியவனின் பார்வையில் முதலில் பட்டது…. வேதவல்லி பவனத்தின் பிரம்மாண்டமான தோற்றம்…! இதுபோன்ற மாளிகையை...அவன் இதுவரை... சினிமாக்களிலும் புகைப்படங்களிலும் மட்டுமே கண்டிருக்கிறான். அவன் திகைப்புடன் பெற்றோரை நோக்க...அவர்களுக்கு இது போன்ற ஆச்சரியம் ஏதுமில்லை போலும்… அவர்களது முகம் சாதாரணமாகவே இருந்தது…! தங்கையோ …. வேதவல்லி பவனத்தையும் அதனை சுற்றியிருந்த அழகிய தோட்டத்தையும் விழிகள் விரிய ரசித்துக் கொண்டிருந்தாள்.


நடப்பது எதுவும் கதிரவனுக்கு துளியும் பிடிக்கவில்லை... தந்தையை நினைத்தவன் ஆத்திரத்தில் கண்கள் சிவக்க பல்லைக்கடிக்க...

மகனின் குணத்தை அறிந்தவரான...மீனாட்சி எதுவானாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம். இப்ப கொஞ்சம் அமைதியா இருப்பா...என்றார் மகனிடம் வேண்டுதலாக...அவனுமே சூழலை உணர்ந்ததால் தன் கோபத்தை அடக்கிக் கொண்டான். அதற்குள் அருணாச்சலம் தம்பதியினர்… வாசலுக்கே வந்து அனைவரையும் பார்த்து புன்னகையுடன் கைகளை குவித்து வாங்க… வாங்க.. என்று வரவேற்க அவர்களின் வரவேற்பை புன்னகையோடு ஏற்றுக்கொண்டு... சொக்கநாதர் முன்னே செல்ல...அவரைத் தொடர்ந்தார் மீனாட்சி.


அண்ணனோடு சற்றே பின் தங்கிய தமிழரசி டேய் அண்ணா..… நீ வாக்கப்பட போற இடம் ரொம்ப பெரிய இடம் போலயே..‌‌..என்றாள் நமட்டு சிரிப்புடன்…


ஏற்கனவே தந்தையின் மீது கடுங்கோபத்தில் இருந்தவனின்….இரத்த அழுத்தம் தங்கையின் கேலியில் மேலும் அதிகரிக்க அவளை பார்த்து கண்கள் சிவக்க முறைத்தான்.


அண்ணனின் கோபத்தில் விடு ..‌‌ஜூட் என்று ஓடிவிட்டாள்...தமிழரசி.


ஆத்திரத்தில் காரின் கதவை அவன் அடித்து சாத்த...அந்த சத்தத்தில் தன் அறையின் பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தாள் தாமரை…!


.ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய்….சிவந்த நிறத்தில் ..அலையலையாய் மின்னும் கேசம் துள்ளி முன் நெற்றியில் விழ...அதை அழகாக கோதிக் கொண்டே தான் வகிக்கும் பதவிக்கேற்ற கம்பீரத்துடன்... கண்களில் கோபம் மின்ன நின்றவனைக் கண்டவளின் உள்ளம் அக்கணமே அவனிடம் தஞ்சம் புகுந்தது.


யதேச்சையாக தானும் மேலே பார்த்தவனின் கண்கள் பால்கனியில் ஓவியப் பாவையாய் நின்று….தன்னையே விழியகலாது பார்த்துக் கொண்டிருந்த தாமரை விழ...அவனது விழிகளில் மின்னல் வெட்ட….அதுவரை இருந்த கோபம் விடை பெற...ஆர்வத்தோடு நோக்கினான். கண்கள் நான்கும் காதல் மொழி பேச...தன்னிலை மறந்து இருவரும் தனி உலகில் சஞ்சரிக்கத் தொடங்கினர்…!


தங்களுக்குள் மூழ்கியிருந்தவர்களைக் கலைத்தது இளாவின் குரல்…. மாப்பிள்ளை சார் என்ன இங்கேயே நின்னுட்டீங்க….உள்ளே வாங்க …! என்றவனின் குரலில் கலைந்த தாமரை… வெட்கத்துடன் உள்ளே ஓடிச் சென்றவிட…

கதிரவன் தானும் சுற்றுப்புறம் உணர்ந்து மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்டான்.


தன் பதிலுக்காக தன்னையே பார்த்துக்கொண்டிருந்த இளாவை பார்த்தவன்..


அ...அது ஒரு...முக்கியமான போன் கால் அதான் பேசிட்டிருந்தேன். என்று தடுமாறி...சமாளித்தான்.


பரவாயில்லை மாப்பிள்ளை சார்… வாங்க உள்ளே எல்லோரும் வெயிட் பண்ணிட்டிருக்காங்க… உள்ளே போலாம்…. என்றவனை பின் தொடர்ந்தவன்…! பார்வை மீண்டும் ஒருமுறை திரும்பி பால்கனியில் பதிந்து மீண்டது.


தன்னறைக்கு திரும்பிய தாமரையின்

இதயம் இதுவரை அவள் அறியாத உணர்வில் படபடக்க...உடலெங்கும் பரவிய புத்துணர்வை தாங்க இயலாது... அறையின் சுவற்றில் சாய்ந்து நின்று கண்களை மூடிக் கொண்டாள்.


“இப்படியா…. பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையை பார்க்குறதைப்போல அவரை பார்த்து வைப்ப….என்று தானே தலையில் அடித்துக் கொண்டாள்…!


என்ன நினைச்சிருப்பான் உன்னை பத்தி லூசு….லூசு என்று தன்னையே திட்டித் தீர்த்தவள்…. ஓடிச்சென்று...நிலைக் கண்ணாடியில் தன் பிம்பத்தை உற்று நோக்கினாள் ஏற்கனவே சிவந்த முகம் புதிதாய் தோன்றிய வெட்கத்தில் மேலும் சிவந்து அவளின் அழகை அதிகரித்துக் காட்டியது ...இளா அண்ணா மட்டும் பார்த்திருந்தாரு… மானம் போயிருக்கும்.


‘நீ மட்டுமா அப்படி உலகம் மறந்து நின்ன...அவருந்தான் உன்னை கண்ணெடுக்காம பார்த்துட்டிருந்தாரு… யப்பா….என்ன பார்வைடா…!’என்று நினைத்தவளுக்கு வெட்கத்தில் முகம் ரோஜாநிறம் கொண்டது.


வீட்டின் உள்ளே நுழைந்த கதிரவனை எழுத்து நின்று வரவேற்ற அருணாச்சலத்தின் மரியாதையை தலையசைத்து புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டவன் இருக்கையில் அமர தானும் அமர்ந்து கொண்டவர்…. கதிரவனின் அழகிலும் கம்பீரத்திலும் திருப்தியடைந்தவராக… பார்வதியை நோக்க….பார்வதியும் கதிரவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்... மனக்கண்ணில் தன் மகளையும் ...கதிரவனையும் அருகருகே நிறுத்திப் பார்த்துக் கொண்டவரின் முகத்தில் பெரும் நிறைவு ஏற்பட...கணவனை..சந்தோஷத்தோடு பார்த்து சிரித்தார்.


ஏற்கனவே புகைப்படத்தில் பார்த்தது தான் என்றாலும்...நேரில் இன்னும் பொலிவோடு இருந்தவனை இளா உட்பட அனைவருக்கும் பிடித்துவிட்டது.


பெண்பார்க்கும் நிகழ்வுக்கு அருணா தன் மாமியார் மாமனாரோடு வந்திருந்தாள். மாதவன் தன் பணி நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டதால் அவர் கலந்த கொள்ளவில்லை.


பரமேஸ்வரன் தாமரையை அழைத்து வரும்படி தன் மருமகளை பணிக்க… அருணா ..பார்வதியோடு..

தாமரையின் அறைக்கு விரைந்தாள்… கூடவே வந்த பார்வதி…


“அருணா...நீ போய் தாமரையை ரெடி பண்ணி கூட்டி வா… நான் காபி... பலகாரங்களை...தயாரான்னு பார்க்கிறேன்” என்று அவளை அனுப்பி விட்டு சமையலறைக்கு விரைந்தார்.


மேலே தாமரையின் அறைக்குள் நுழைந்த அருணாவின் விழிகள் விரிந்தது... ஏற்கனவே அடர்ந்த ஊதா நிற பட்டுப்புடவை அணிந்து அதற்கேற்ற அணிகலன்கள் அணிந்து அழகாக தயாராகி அமர்ந்திருந்த தாமரையைக் கண்டவர்… ஆத்தாடி என் மருமக எம்புட்டு அழகு..! என்றவரை திரும்பிப் பார்த்து சிரித்த தாமரை தன் அத்தையை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.


“அத்தை...என்ன நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்க….மாமா..வரலையா… வர்ஷூ...வருண் யாருமே வரலையா என்றால் ஏமாற்றத்துடன்.

அவளை தானும் அணைத்துக் கொண்ட அருணா…


உங்க மாமா வேலை விஷயமா வெளியூருக்கு போயிருக்காங்கடா….வர்ஷூவுக்கு செமஸ்டர் எக்சாம்...நடக்குது வருண்...கோச்சிங் கிளாஸ் இருக்கறதால அவனாலும் வரமுடியலை…. என்றவர் இப்ப பெண்பார்க்க தானே வந்திருக்காங்க நிச்சயதார்த்துக்கு கண்டிப்பா அவங்க இங்க ஆஜராயிடுவாங்க சரியா என்றார் சமாதானமாக….


அதில் ஓரளவு சமாதானமாகி சம்மதமாய் தலையசைத்தவளை...ஆசையாய் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவள். அவள் அலங்காரங்களை ஒருமுறை சரி பார்த்துவிட்டு...அவளது கையை பிடித்து அழைத்துக்கொண்டு அறையிலிருந்து... வெளியேறினார்.


உள்ளம் படபடக்க அத்தையின் கைகளை ஆறுதலாக இறுகப் பற்றிக் கொண்டு மெதுவாக படியிறங்கி வந்தாள் தாமரை.


வரவேற்பறையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் மாடியில் இறங்கி வரும் அரவத்தில் அனைவரின் பார்வையும் மாடிப் படியை நோக்க...கதிரவன் தானும் நோக்கினான்.


அழகான வட்டமுகம் அதில் கருவண்டு கண்கள்...கூரான நேர் நாசி... பட்டுக் கன்னம்..சிவந்த இதழ்கள்… பின்னிவிடப்பட்ட நீண்ட கூந்தலில் முல்லைப் பூக்கள் சரம் சரம் சரமாய் இருபக்க தோள்களில் வழிய...தங்கப்பதுமையென மென்னடையிட்டு நடந்து வந்தவள்… அனைவரையும்

இரு கரம் கூப்பி வணங்கினாள். ஒரு கணம் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழி வீச்சில்..அவனது இதயத்துடிப்பு ஸ்வரம் தப்பியது. இதுவரை மனதில் இருந்த கோபமும் எரிச்சலும் அவளின் பார்வையில்...மறைந்தது.


பால்கனியில் தெரிந்த பாதி உருவத்திலேயே...தன்னிலை மறந்து நின்றவன்…. முழுதாய் தங்கச் சிலையென தன்னெதிரில் நின்றவளின் எழிலில் முற்றிலும் தொலைந்தே போனான்.


அவன் பார்வை.. அவளை உரிமையோடும் ஆசையோடும்… தலைமுதல் பாதம் முதல் வருடியது..!


தன்னவனின் பார்வையை உணர்ந்த போதும்… அதன் பிறகு அவள் அவனை தலை நிமிர்ந்து பார்க்கவில்லை... வெட்கத்தில் தலை குனிந்து நின்றாள்.



அவளின் பார்வைக்காக காத்திருந்தவனுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. “ஏன் நிமிர்ந்து பார்த்தால்தான் என்னவாம் அப்ப மட்டும் அப்படி பார்த்தா….இப்ப என்ன வந்தது இவளுக்கு…”என்ற கோபம் எழுந்தது.


(கொஞ்ச நேரத்துக்கு முன்பு கோபத்தில் கொந்தளித்த கதிரவனை நீங்க யாராவது பார்த்தீங்களா….🤣🤣😂😂)


குடும்ப பாங்கான அழகுடன் வந்து நின்ற தாமரையை மீனாட்சிக்கு… ரொம்பவே பிடித்து விட தன் கணவரை ஏறிட்டார் தானும் மனைவியை பார்த்தவரின் பார்வையில் அவரது சம்மதம் விளங்க மகன் கதிரவனை கேள்வியாக நோக்கினார். அவன் அதை கவனித்தால் தானே.. அவன் பார்வைதான் அவளையே அளவிட்டுக் கொண்டிருந்ததே… மகனின் பார்வையை புரிந்து கொண்டவர் பக்கத்தில் அமர்ந்திருந்த மகளை பார்க்க அவள் குறுப்புப் புன்னகையுடன்…


இதுக்கு மேலயும் உன்புள்ளையோட சம்மதம் தேவையா என்பது போல புருவத்தை ஏற்றி இறக்க…. அவர் சிரித்துக் கொண்டே


எழுந்து சென்று வாங்கி வந்திருந்த பூவை தாமரையின் தலையில் சூட்டிவிட்டு...மகாலட்சுமியாட்டம் அழகா இருக்கடா என்று கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர் அவளை கையோடு அழைத்து வந்து தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டவர். அவளோடு மலர்ந்த முகத்துடன் பேச ஆரம்பித்தார். தாமரையை பார்த்ததுமே… தமிழரசிக்கு ஏனோ ...பிடித்துவிட

அவர்களுடன் தானும் கலந்து கொண்டாள்.


தன்னிடம் யதார்த்தமாக பேசிய மீனாட்சியையும் தமிழரசியையும் தாமரைக்கு ரொம்பவே பிடித்துவிட்டது அதிலும் தன்னோடு நட்போடு பேசிச் சிரித்த தமிழரசியை தன் மனதுக்கு நெருக்கமானவளாக உணர அவளும் தயக்கங்கள் விடுத்து அவர்களுடன் உரையாட ஆரம்பித்தாள்.


மீனாட்சியின் செயலில் முகம் கனிந்த பார்வதியும் அருணாவும் கோகிலாவும் கலந்து கொள்ள சற்று நேரத்தில் பெண்கள் அனைவரும் நெடுநாள் பழகியவர்களை போன்று உணர்ந்தார்கள்.


இவற்றை மகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் மனதும் நிறைந்து விட்டது. கதிரவனும்...அவர்களை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அதிலும் தாமரை தன் அன்னையிடமும்...தங்கையிடமும் காட்டிய இணக்கம் அவனுக்கு மிகுந்த மனநிறைவைத் தர...தன்னவளை உரிமையோடு பார்வையிட ஆரம்பித்தான்.


பரமேஸ்வரன் மூத்தவராய் எல்லோருக்கும் சம்மதம்னா மேற்கொண்டு கல்யாண விஷயங்களை பேசலாமா?’ என்றார் பொதுவாக… “என்னப்பா கதிர் உனக்கு பொண்ணை பிடிச்சிருக்கா” என்றவரை… திரும்பி பார்த்தவனின் தலை சம்மதமாய் அசைந்தது.


மகனின் மனதை அறிந்திருந்தாலும் அவனது சம்மதத்தில் திருப்தி அடைந்தனர் மீனாட்சியும், சொக்கநாதரும்.


மேற்கொண்டு கல்யாண விவரங்களை இரு தரப்பினரும் சந்தோஷமாக பேச ஆரம்பித்தனர். தங்கள் இல்லத்திற்கு அருணாச்சலம் குடும்பத்தை முறைப்படி அழைத்தார் சொக்கநாதர்.


அருணாச்சலம்...தன் மகன் பாண்டியை பற்றி கூறியவர் இன்னும் ஒரு வாரத்தில் அவன் வந்ததும் அவனையும் கூட்டிக் கிட்டு நாங்க உங்க வீட்டுக்கு முறைப்படி வருகிறோம் என்றார்.


அனைவருக்கும் அதுவே சரியென்று பட்டதால் அதற்கு ஒத்துக்கொண்டனர்.


அதற்குள் காப்பியும் பலகாரமும் பரிமாறப்பட அனைவரும் உண்டு முடித்தவுடன்.


தாமரை தமிழரசியை தன்னறைக்கு அழைத்து கொண்டு ஏற்கனவே சென்றுவிட... அருணாவுடனும் பார்வதியுடனும் மீனாட்சி தோட்டத்தை பார்க்க கிளம்பினார்.


இளா… கதிரவனை வீட்டை சுற்றிக் காட்ட அழைக்க அவனது அழைப்பை ஏற்று அவனுடன் சென்றான் கதிரவன்.


வீட்டின் ஒவ்வொரு அடியிலும் தெறித்த செல்வ செழிப்பு… அவன் மனதில் விலகியிருந்த சஞ்சலத்தை மீண்டும் விதைத்தது. இந்த மாளிகையை தன் வீட்டோடு ஒப்பிட்டு பார்த்தவன் மனதில் பெரும் தாழ்வுணர்வு குடிகொண்டது. இதற்காகத்தான் அவன் இத் திருமணத்தை மறுத்தான். இத்தனை பெரிய மாளிகையின் இளவரசி தன் வீட்டில் பொருந்துவாளா என்ற குழப்பமும் எழுந்தது ஆனால் பார்த்த நொடியே கண்களில் விழுந்து இதயம் நுழைந்து ஊனோடும் உயிரோடும் நீக்கமற நிறைந்து விட்டவளை….இழக்கவும் அவன் மனம் சம்மதிக்கவில்லை…!

தன் மனதோடு தானே போராடியவனுக்கு… பெருங்குழப்பமே மிஞ்சியது.அதன் பிறகு அவனுக்கு எதுவும் ரசிக்கவில்லை. மூச்சுமுட்டும் சூழலை வெறுத்தவனாக நின்றுவிட..அவனை திரும்பிப் பார்த்த இளா…


“என்ன மாப்பிள்ளை சார் நின்னுட்டீங்க வாங்க போகலாம் என்று அழைத்தவனிடம்..


“சாரி இளா... எனக்கு சென்னையில் முக்கியமான வேலையிருக்கு..‌..உடனே கிளம்பனும்… இங்க வந்ததில் அதை மறந்துட்டேன் நாம இன்னொரு நாள் பார்க்கலாமா…?” என்றவனை உற்றுப் பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ..


“ஓ... ! இதுக்கு எதுக்கு மாப்பிள்ளை சார் சாரியெல்லாம் சொல்லிக்கிட்டு... வாங்க போலாம்…!” என்றவுடன் விறுவிறுவென வரவேற்பரையை அடைந்தவன். எல்லோரையும் பொதுவாக பார்த்தவன்…. “எனக்கு முக்கியமான ஆபீஸ் வேலையிருக்கு உடனடியா கிளம்பனும் என்க மகன் உடனடியாக கிளம்பியதில் ஏதோ பிரச்சினை என்று உணர்ந்த சொக்கநாதர். தானும் எழுந்தவர்… சரிங்க சம்பந்தி நீங்க நம்ம வீட்டுக்கு வரும் போது விலாவாரியாக பேசிக்கலாம் இப்ப நாங்க கிளம்பறோம் என்று கரம் குவித்தவரை பார்த்து தானும் எழுந்து நின்று கரம் குவித்தார். அருணாச்சலம்...அதற்குள் பெண்களும் வந்துவிட எல்லோரும் கிளம்ப அருணா தானும் தன் குடும்பத்தாருடன் கிளம்பினாள்


அனைவரிடமும் தானும் விடைபெற்ற கதிரவன்.. தாமரையை மட்டும் திரும்பியும் பார்க்காமல் வெளியேறினான். அவன் தன்னை திரும்பியும் பாராமல் சென்றது தாமரைக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தர… பொங்கி வந்த கண்ணீரை மற்றவர்கள் அறியா வண்ணம் இமை சிமிட்டி மறைத்தவள்… புன்னகையுடன் அனைவருக்கும் விடை கொடுத்தாள்...அவர்களுடனே வீட்டினரும் வெளியேறிவிட… வெறுமையை உணர்ந்தவளின் கண்கள் உடைப்பெடுக்க அழுதவாறே தன்னறைக்கு விரைந்துவிட்டாள்.


ஓடிச் சென்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டு பால்கனிக்கு விரைய...அங்கே அனைவரும் காரில் ஏறி அமர்ந்து விட….கதிர் இறுதியாக அனைவரையும் ஒருமுறை பார்த்து விடை பெற்றவனின் பார்வை தாமரையை தேடியது… அவளைக் காணாது தவித்தவன்... பால்கனியை பார்க்க அங்கே கண்களில் நீரோடு தன்னையே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த தாமரை விழ தன்னவளின் கண்ணீருக்கான காரணம் உணர்ந்தவனாய்...அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்தவன். இலேசாக தலையசைத்து விடைபெற அதில் பூவாய் முகம் மலர்ந்தவள்….தானும் தலையசைத்து விடைகொடுத்தாள். தன்னவளின் புன்னகையில் மனம் குளிர்ந்தவன் திருப்தியுடன் காரில் ஏறி அமர்ந்து காரைக் கிளப்பினான்..!

received_560622097763296.png

வேதவல்லி பவனம்.


விழிகள் பேசுமா…? இதோ!

உனது விழிகள் என்னிடம் பேசியதே!

அதன் வீச்சு என்னுயிர் வரை தீண்டியதே!

அதிகாலை உதிக்கும் கதிரவனால் மலரும் தாமரை

அல்லவா நான்!

உன் சிறு அசைவும் என்னை

பாதிக்கிறதே!

காதல்...இறைவன் இரண்டுக்கும் முன்

உயர்வுதாழ்வு இல்லை..!

அது உயர்ந்தோர்.. எளியோர்

எனப் பார்த்து வாசம் செய்வதுமில்லை என அறிவாயோ!

கதிரா...உன் ஒளிவீசும் விழிகளினால்..

தாமரையின் காதலை மலர்ந்திட செய்வாயா?! இல்லை தகிக்கும் வெப்பத்தால் அவளின்

விழிநீரின்..உடையவன்..
ஆவாயா?!!.


இந்த கவிதை எழுதியவர்…..தோழி சுபாஷிணி சுகுமாறன்.

நன்றி டியர்😍😍



(கையணைக்க வருவான்..)


ஹாய் பேபீஸ்....!! எல்லாரும் எல்லாரும் எப்படியிருக்கீங்க 6 வது அத்தியாயத்துடன் வந்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க பேபீஸ்...!! போன எபிக்கு கமெண்ட் பண்ண எல்லாருக்கும் நன்றி...நன்றி...😍😍😍😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍

உங்கள் கருத்துக்களை கீழேயுள்ள திரியில் பதியுங்கள் பேபீஸ்👇👇👇👇👇👇👇👇😍😍😍😍😘😘😘

http://srikalatamilnovel.com/community/threads/சியாமளாவின்-என்னை-விட்டால்-யாருமில்லை-கண்மணியே-உன்-கையணைக்க-கருத்துத்-திரி.608/
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபீஸ்.... எல்லோரும் எப்படி இருக்கீங்க....நான் இப்ப இங்க வந்தது யுடி போட இல்லை...உங்ககிட்ட ஒரு தகவல் சொல்லத்தான்...உங்க எல்லாருக்கும் தெரியும் நம்ம சைட்ல நாவல் போட்டி நடக்குது...அதில் கலந்துகிட்டவங்க தங்களோட நாவல்களை இதில் போடப்போறாங்க..... மொத்தம் 41 கதைகள் இதையெல்லாம் படிக்கவே நமக்கு நேரம் போதாது....அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா..... நான் என்னோட கதையை.... போட்டி கதைகள் முடியும் வரைக்கும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாமான்னு நினைக்கிறேன்....!!உங்களுக்கு ஓகே தானே... அப்படியில்லை யுடி வேணும்னா தரவும் நான் தயாராயிருக்கேன்...நீங்களே முடிவு பண்ணி சொல்லுங்க பேபீஸ்....உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன்..!

அன்புடன்

சியாமளா 😍😍😘😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபீஸ்....!! உங்க ஆர்வத்தை பார்த்து மீ ரொம்ப ஹாப்பி...!!உங்களுக்காக....வெய்யிலுக்கு இதமான ஜில் ஜில்....கூல் கூல் டீ
இதே..படிச்சிட்டு ஜொள்ளுங்கோ..!😍😍😍😍😘😘😘😘💓💓💓💓

"என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கையணைக்க..!!

7308 7310

டீசர்..
--–--–
பெருந் தயக்கத்துடன் கையில் பார்வதி தந்த பால் செம்போடு…உடல் முழுவதும் நடுக்கம் பரவ… இதயம் இருமடங்காக துடித்து ஒலியெழுப்ப….பாண்டியனின் அறைக்கு முன்பு நின்றவளுக்கு… ஒரு கணம் …இப்படியே ஓடிவிடலாமா என்ற எண்ணம் தோன்றியது.
நினைப்பதெல்லாம் நடத்திவிடத் தான் முடியுமா என்ன? தயக்கத்தை உதறித் தள்ளியவள் மூச்சை இழுத்து பிடித்தவாறு.. தன் பூங்கரத்தால் அறைக்கதவை மெல்லத்திறந்து தலையை மட்டும் உள்ளே நுழைத்து அறையை பார்வையால் துழாவினாள். அறையில் யாரும் இருப்பதற்கான அறிகுறி தென்படாததால்…. நிம்மதி பெரு மூச்சுடன் மெதுவாக வலதுகாலை வைத்து உள்ளே நுழைந்தவளின் முகத்தில் பூக்களின் நறுமணத்தோடு...கூடிய குளிர்காற்று மோத…. மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து தன் நுரையீரலில் நிரப்பிக் கொண்டவளின் மனம் சற்றே ஆசுவாசமடைந்தது.
அந்த அறையின் ஷோபாவில் அமர்ந்து ஏதோ புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தவன். அவள் அறையில் நுழைந்ததை அவளது கொலுசொலியில் உணர்ந்து... சட்டென்று திரும்பி பார்க்க சிவப்பும் வெள்ளையும் கலந்த மணிகளைக் கொண்டு அழகாக டிசைன் செய்யப்பட்ட வெண்ணிற புடவையில் அதற்கேற்றவாறு பொருத்தமான முத்து நகைகள் அணிந்து கொண்டு தலை நிறைய நெருக்கமாக தொடுக்கப்பட்ட மல்லிகைபூக்கள் சரம்சரமாக இரு பக்க தோள்களைத் தாண்டி வழிய கை கால் முளைத்த வெண்தாமரை மலராய் வந்து நின்றவளைக் கண்டவன் இதயம் ஒரு கணம் நின்று துடிக்க…. ஏற்கனவே அவளது அழகில் மயங்கிக்கிடப்பவன் முற்றிலும் தன்னியல்பைத் தொலைத்து தடுமாறித்தான் போனான்….! காலையில் தான் கட்டிய மங்கல நாணில் அவன் பார்வை நிலைக்க அது உணர்த்திய உரிமையில் அவன் இதயம். தித்தித்தது. இவள் தன்னுடமையினி எனக்கே எனக்கான என்னவள் என்ற உரிமையுணர்வு தோன்ற தலையிலிருந்து பாதம்வரை அவன் பார்வை அவளை உரிமையோடு ரசிக்க ஆரம்பித்தது.
தன்னை கணவன் பார்வையாலே கபளீகரம் செய்வதை உணராதவள் தான் இருக்கும் இடம் மறந்து அறையின் அழகை ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.

கலைநயத்தோடு அலங்கரிக்கப்பட்டிருந்த அறையை அணுவணுவாக ரசித்து பார்த்துக்கொண்டிருந்தவள்.ஒரு பக்க சுவரில் அழகிய புன்னகையோடு‌…….கரு நீல ஜீன் அணிந்து வெள்ளை நிற முழுக்கை சட்டையை முழங்கை வரை ஏற்றிவிட்டவாறு கண்களில் அழகிய கூலிங் கிளாஸில் வசீகரமான தோற்றத்தில் பாண்டியின் புகைப்படம் வீற்றிருக்க… அதில் கவரப்பட்டவளாக…அருகே சென்று பார்வையிட ஆரம்பித்தாள்.

அவனது வசீகரப் புன்னகையில் தன்னை ஒரு கணம் தொலைத்தவள்.மறுகணமே தன் மனதை அடக்கியவளாக… ஏளனமாக உதட்டை சுழித்தவள்..
“ஓ… இந்த ஹீ-மேனுக்கு சிரிக்கக்கூட தெரியுமா ஆச்சரியம் தான்!”.என்றவளின் கரங்கள் அவளையும் மீறி அவனது கன்னத்தை மென்மையாக வருடத் தொடங்கியது.

அவள் அறைக்குள் வந்ததிலிருந்து அவளின் மீது பார்வையை பதித்திருந்தவன் அவள் தன் புகைப்படத்தை ஆசையாய் வருடியதில்அவளின் மென்கரங்களின் பரிசத்தை தன் கன்னங்களில் உணர்ந்தவனாக.,. கன்னங்களைத் தொட்டுப் பார்த்தான். அவளின் பரிசத்தை உணரத்துடித்த அவனது மனத்தின் ஆர்ப்பரிப்பை அடக்க இயலாது சத்தமின்றி எழுந்தவன் நிதானமாக தன்னவளை நெருங்கினான்.ஒரு நூலளவு இடைவெளியில் தன் பின்னே நின்றிருந்தவனின் வருகையை கூட உணராது மெய்மறந்து தன்னவனின் புகைப்படத்தை ரசித்துக் கொண்டிருந்தவளை….பின்னிருந்து அணைத்தவன்.. அவளிள் செவிமடலை தன் மீசைமுடிகள் உரச முத்தமிட்டு… “நிஜம் நான் உன் பக்கத்திலேயே இருக்கும் போது நிழல் எதுக்கு பேபி… அங்கே வருடுவதை இங்கே வருடலாமே…..!! நான் என்ன வேணாம்னா சொல்லப்போறேன்…” என்ற கிசுகிசுப்பான கிறக்கமான குரலில் …. திடுக்கிட்டவள் சட்டென்று அவனை நோக்கி திரும்ப….அவனது மார்பில் மோதிக்கொண்டாள். ஏற்கனவே. நெருங்கி நின்றிருந்தவன் வாகாக அவளது இடையை வளைத்துக்கொள்ள…. இருவரின் முகமும் அருகருகே… அதிர்ச்சியில் அவளது கண்கள் மேலும் விரிய….குடைபோல் இமையிரண்டும் விரிந்து படபடக்க…அதன் அழகில் மேலும் மயங்கியவன்… அவளது கண்களிலும் தன் முத்திரையை பதிக்க.. கணவனின் திடீர் அணைப்பிலும்….பேச்சிலும் முற்றிலும் நிலைகுலைந்து போனவள்… உடலெங்கும் நடுக்கம் பரவ…செயலற்று அவன் கைகளில் துவண்டாள். மனைவியின் நிலையை அறிந்து கொண்டவன் வெற்றிப் புன்னகையுடன் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான் ரத்னவேல் பாண்டியன்.
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 7


7447


வானக்காதலனுடன் இரவெல்லாம் கூடிக்களித்த நிலவுமங்கை அவனை விட்டு பிரிய மனமில்லாமல் மயங்கி நிற்கும் அதிகாலை வேளை பாண்டி தன் படுக்கையறையின் பிரம்மாண்டமான தேக்குமரக்கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்…! இரவெல்லாம் தீவிர யோசனையில் இருந்தவன் அதிகாலை 3 மணிக்கு தான் சற்று கண்ணயர்ந்தான். உறக்கத்தில் இருந்த அவன் இலேசாக புரண்டு படுக்கவும்…. அவன் அலைபேசி அலாரம் அலறி அவனை எழுப்பிவிடவும் சரியாக இருந்தது. கண்களை திறக்க முடியாத அளவுக்கு உறக்கம் அழுத்திய போதும் அலைபேசியை கட்டிலை ஒட்டி போடப்பட்டிருந்த குட்டி டீபாயிலிருந்து எடுத்தவன் அதை அணைத்து வைத்துவிட்டு சிறிது நேரம் படுத்திருந்தவன்... கட்டிலை விட்டு எழுந்து குளியலறைக்குள் நுழைந்தான்.

காலைக்கடன்களை முடித்தவன்… உடைமாற்றிக் கொண்டு தன்னுடைய படுக்கையறையை அடுத்து இருக்கும்… உடற்பயிற்சி அறைக்குள் வெகு நாளைக்குப் பிறகு நுழைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டான். இது வழக்கமான ஒன்று தான். ஒருமணிநேரம் தீவிரமாக பயிற்சி செய்தவன் வியர்வை வழிய அறையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு துவாலையால் ஆறாகப்பெருக்கெடுத்த வியர்வையை ஒற்றி எடுத்துக்கொண்டே அறையை விட்டு வெளியேறினான்.


வரவேற்பறையின் பால்கனியின் கதவை திறக்க சில்லென்ற மலைக்காற்று முகத்தை தழுவியது. பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டே தூரமாய் தெரிந்த மலைமுகடுகளையும்…அதில் வெண்பஞ்சாய் தழுவி செல்லும் மேகக் கூட்டத்தையும் ரசித்து பார்த்தவனுக்கு….ஏனோ மனதிற்கு உற்சாகமாக இருந்தது. பார்வை தன் வீட்டு தோட்டத்தில் பதிய அழகாய் வடிவமைக்கப்பட்ட தோட்டத்தில் கண்ணை கவரும் வகையில் பலவண்ணமலர்கள் வரிசையாய் அணிவகுத்திருக்க… காலைப் பனியில் நனைந்திருந்த மலர்கள் தலையசைத்து அவனை வா…வென அழைப்பதைப்போல இருந்தது… இலேசாக புன்னகை விரிய எழுந்தவன் தன்னறையை விட்டு வெளியேறி தோட்டத்தை நோக்கி நடந்தான். தோட்டத்தின் கலவையான பூக்களின் மணம் மனதை மயக்க ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்தவன் தோட்டத்தின் ஓடு பாதையில் தன் ஜாகிங்கை தொடர்ந்தான். .அடுத்த அரைமணி நேரம் ஓடி களைப்புடன் தோட்டத்தில் ஆங்காங்கே அமர்வதற்காக அமைக்கபட்டிருந்த அலங்கார இரும்பு இருக்கையில் அமர்ந்தான்.

அப்படியே சரிந்து அமர்ந்தவனின் நினைவை நேற்றைய மாதவனுடனான தொலைபேசி உரையாடல்கள் ஆக்ரமித்து கொண்டன.


வழக்கமான நல விசாரிப்புகள் முடிந்து சிறிது நேரம் அவனது பணிபற்றி பேசிக் கொண்டிருந்தவர்… அவனது திருமணம் பற்றி பேச ஆரம்பித்தார். பெண்வீட்டாரைப் பற்றியும் குறிப்பாக பெண்ணை பற்றியுமே பேசியவர்….அவனை திருமண செய்ய வற்புறுத்தினார். இதுவரை அவரை மறுத்து பேசி பழக்கமில்லாததால்… அவன் மௌனமாக அவர் சொன்னதை செவிமடுத்தான். அவனது அமைதியை புரிந்து கொண்டவர்…அவனிடம் “என்ன பாண்டி அமைதியாயிட்ட…?",என்று வினவ… அதற்கும் அவன் மௌனத்தையே பதிலாக்க….. “வாழ்க்கையில் திருமணம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல…அவசியமும் கூட…பாண்டி ….இந்த சம்பந்தம் உனக்கு பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை உன் மனசுக்கு பிடிச்ச பொண்ணு யாராவது இருந்தாலும் சொல்லு.. மச்சான் கிட்ட பேசி நான் முடிச்சு வைக்கிறேன்..” என்றவரின் வார்த்தைகளில் ஆழ்மனதில் என்றோ ஒரு நாள் புதைந்த முகம் மின்னலாய் ஓரு கணம் மின்னி மறைய….தன் நினைவை உதறித் தள்ளியவன் தன் பதிலுக்காக அந்த பக்கம் காத்திருக்கும் மாமனிடம் "அப்படியெல்லாம் யாருமில்லை மாமா..!" என்றான் நிதானமாக…!

"அப்படின்னா தமிழரசியை உனக்கு பேசி முடிக்கலாமா?" என்றவரிடம் இனி தப்பிக்க இயலாது என்பதை புரிந்து கொண்டவன் எனக்கு "கொஞ்சம் யோசிக்க டைம் கொடுங்க என்க…" அவன் இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெரிது என்று எண்ணியவர்…

“சரி பாண்டி நல்லா யோசிச்சு நல்ல முடிவா சொல்லு" என்றவர் "உன்

அத்தை கிட்ட பேசு பக்கத்தில் நின்னுகிட்டு என்னையே ரொம்ப நேரமா முறைச்சு பார்த்திட்டிருக்கா…..” என்றார் சிரிப்புடன்… கணவனை முறைத்தவாறே அலைபேசியை வாங்கிய அருணா… நெடுநாள் கழித்து கேட்கும் மருமகனின் கம்பீரகுரலில் கண்களில் கண்ணீர் குளம் கட்ட…. தொண்டையடைக்க "ரத்னம் எப்படிடா இருக்க? எத்தனை வருஷமாச்சு உன் குரலை கேட்டு…..இந்த அத்தையை மறந்துட்ட தானே?!"

"அத்தை…" என்றவனுக்கும் உணர்ச்சி கொந்தளிப்பில் குரல் கரகரத்தது. பின்னே இருக்காதா..? சிறுவயதில் தனக்கு இன்னொரு அன்னையாய் இருந்து பாசம் காட்டி வளர்த்தவராயிற்றே!

"அத்தை நீங்க எப்படியிருக்கீங்க? வருண் அந்த வாயாடி வர்ஷினி எல்லாரும் நல்லாயிருக்காங்க தானே..!"

அவன் அப்படி கேட்டதும் கோபம் கொண்டவர்

"போடா எங்கிட்ட பேசாதே... இவ்வளவு தூரம் வந்தவன் ஒரு எட்டு இங்க வந்துட்டு போயிருக்கலாம் இல்ல… அதைவிட்டு இப்ப நானா போன் போட்ட பிறகு நலம் விசாரிக்கிறியா..?!! என்று சிறு குழந்தையாக முறுக்கிக் கொள்ள…தன் செல்ல அத்தையின் கோபத்தில் முதலில் திகைத்தவன்… பிறகு புன்னகை விரிய


“அனுமா…" என்றான் குரலில் பாசத்தை தேக்கி…. அவனது அந்த செல்ல அழைப்பில் தன் கோபத்தை மறக்க கண்களில் மீண்டும் கண்ணீர் திரள "ர..த்னம்… நீ என்னை இப்படி கூப்பிட்டு எவ்வளவு நாளாச்சு…. தெரியுமா…. என்றார் குரல் கம்ம….

பாண்டி.. முதன்முதலாக பேச ஆரம்பித்தவுடன் அருணாவை மற்றவர்கள் அழைப்பதை கேட்டு மழலையில்…”அணா” என்று அழைக்க…அதில் மகிழ்ந்து போனவள் தன்னை அத்தை என அழைக்க வைக்க அரும்பாடு பட்டாள் …ஆனால் அவன் வளர வளர பார்வதியை அம்மா என்றும்… அருணாவை சுருக்கி அனுமா என்றே அழைக்க ஆரம்பித்தான்….அவளும் மருமகனின் பிரத்யேக அழைப்பில்…. மகிழ்ந்து போவாள். அதன் பிறகு பெரியவனானதும் அத்தை என்றே அழைத்தான். எப்போதாவது.. பாசத் தருணங்களில் மட்டுமே இத்தகைய அழைப்பு வெளிப்படும். அதை நினைத்துப் பார்த்தவளுக்கு மனம் நிறைந்து விட்டது.

அனுமா…..அனுமா என்ற அலைபேசியில் அந்தபக்கம் அழைத்த பாண்டியின் குரலில்… கலைந்தவள்….. சொல்லு ரத்னம்
என்க.... “அனுமா… சென்னையில் நான் லாண்ட் ஆகும்போது லேட் நைட் ஆயிடுச்சு…அந்த நேரத்தில் உங்களை தொந்தரவு பண்ண வேண்டாமேன்னு தான் வரலை..‌அது மட்டுமில்லாம…மாப்பிள்ளை வீட்டை பார்க்க திரும்பவும் இங்கே தானே வரப்போறோம் …. அதான் அப்படியே திருவண்ணாமலைக்கு கிளம்பிட்டேன்…” என்ற அவனின் தன்னிலை விளக்கத்தில்…ஓரளவு சமாதானமாகிய அருணா அதன் பிறகு…கலகலப்பாக உரையாட ஆரம்பித்தார்கள் இருவரும். இறுதியில் அவன் திருமண பேச்சை ஆரம்பித்தவரிடம் மாமனிடம் கூறிய அதே சமாதானத்தை கூற…. அருணா அதற்கெல்லாம் மசியவில்லை மருமகனின் குணத்தை பற்றி அவளுக்கா தெரியாது ….இவனை விட்டால் பிடிக்க முடியாது என்பதை நன்கறிந்தவர் பிடிவாதமாக நின்று கடைசியில் நாளை மறுநாள் தமிழரசியை பெண்பார்க்க சம்மதம் வாங்கிய பிறகே .,… புன்னகையுடன் அலைபேசியை அணைத்த அருணாவின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

கல்யாணம் முடிந்து அவள் மாமியார் வீட்டுக்கு செல்ல கிளம்பியதும்… குட்டிப்பையனான பாண்டி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய….அவன் தான் சின்னவன் என்றால் அருணா அவனை கட்டிப்பிடித்து கதறியதில் பரமேஸ்வரன் குடும்பமே ஒரு கணம் கலங்கித்தான் போனார்கள் இவர்களின் பாசப் போராட்டத்தில்….! பார்வதியும் அருணாச்சலமும் ஒருபுறம் கண்கலங்கி நிற்க….நிலைமையை கையில் எடுத்த மாதவன்….. "பாண்டி இங்க வா" என்றழைக்க….அதுவரை அழுது கரைந்து கொண்டிருந்தவர்களுக்கு…. அப்போது தான் சூழ்நிலை உரைக்க அருணாச்சலமும் பார்வதியும் தன்னிலை மீண்டு தவிப்புடன் மாதவனை நோக்கினர்…!

மாதவனின் குரலில் அழுத விழிகளோடு அவரை நிமிர்ந்து பார்த்தவன் அவரது அருகே செல்ல….அவனுக்கு சரிசமமாக மண்டியிட்டவர்….!

"நீ ரொம்ப தைரியமானவன் என்னைப்போலவே படித்து பெரிய போலீஸ் ஆபீஸர் ஆவேன்னு சொன்னதெல்லாம் பொய்யா…?"


கண்ணீரோடு அவரை ஏறிட்டவன்…மறுப்பாய் தலையசைக்க….

"அப்படியா எனக்கு ஒண்ணும் அப்படி தோணலை…. நீ போலீஸ்காரனாகனும்னா பெரிய படிப்பெல்லாம் படிக்க வேண்டியிருக்கும் அதுக்கு நீ இந்த ஊரை விட்டு சென்னைக்கு தானே வரணும்….அப்பவும் வீட்டில் இருக்கறவங்களை பிரிஞ்சு தனியா தான் தங்கி படிக்க வேண்டியிருக்கும்…நீ உங்க அத்தையை பிரியவே இப்படி அழுதா ….. எப்படி உன்னோட இலட்சியத்தை அடைய முடியும்? என்று அவனது கவனத்தை திசை திருப்பினார்….அது நன்றாகவே வேலை செய்தது‌‌..!

உடனே இருகைகளால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவன்…. " நான் இனிமே அழ மாட்டேன்…. கண்டிப்பா படிச்சு உங்களைப் போல பெரிய போலீஸ் அதிகாரியா வருவேன்…! என்று தன்னம்பிக்கை கண்களில் மின்ன கூறியவனை அணைத்து அவன் தோள்களில் தட்டிக்கொடுத்தவர்

“தட்ஸ் தி ஸ்பிரிட் மை பாய்” என்றவரை அருணாச்சலம் குடும்பத்தினர் மகிழ்வோடு நோக்க…. அருணா காதலோடு நோக்கினாள்.

அதன் பிறகு வருத்தம் இருந்த போதும்… மலர்ந்த முகத்தோடே அத்தையை வழியனுப்பினான்..! காரில் ஏறும் நேரத்தில் கண்கலங்கிய அருணாவை நெருங்கிய மாதவன்…”ஏண்டி சின்ன பையன் அவனே அமைதியாயிட்டான் நீ திரும்பவும் ஆரம்பிக்காம வண்டியில் ஏறு” என்க… அமைதியாக வண்டியில் ஏறி அமர்ந்தவள் வேதவல்லி பவனம் கண்களை விட்டு மறையும் வரை திரும்பி பார்த்து தன் குடும்பத்தாருக்கு கையசைத்தவளின் கண்கள் உடைப் பெடுக்க…. கணவரை நினைத்து அழுகையை அடக்கிய போதும் துடைக்க துடைக்க நிற்காமல் வழிந்த கண்ணீரை ...அடக்க போராடும் மனைவியை கண்டவர்… வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியின் இடுப்பில் கையிட்டு தன்னருகில் இழுத்தவர்…கண்ணீரை துடைத்து விட்டு ஆறுதலாய் அணைத்துக்கொள்ள அந்த அணைப்பில் மனம் சிறிது சிறிதாக சமநிலையை அடைய சுற்றுப்புறம் உணர்ந்தவள் வெட்கத்தோடு விலகி முயற்சிக்க…. மனைவியை காதலாய் நோக்கியவர் தன் அணைப்பை இன்னும் இறுக்க…அதில் மேலும் லஜ்ஜையுற்றவள்….கன்னம் சிவக்க… என்னங்க நடு ரோட்டில் வண்டியை நிறுத்திட்டு என்ன பண்றீங்க….. விடுங்க என்று விலக அதில் உரக்க சிரித்தவர் பார்றா…! இவ்வளவு நேரம் அது தெரியலையாக்கும் என்றார் குறும்புடன். அதில் இன்னும் சிவந்தவளை ஆசையோடு பார்த்தவர்… "மீதியை வீட்டுக்கு போய் வச்சிக்கிறேன்!" என்று விட்டு வண்டியை கிளப்பினார்.

தன் நினைவில் மூழ்கி இருந்தவளை..மாதவனின் குரல் கலைத்தது.


ஹான் என்ன கேட்டீங்க என்றவளை வினோதமாக பார்த்தவர்.."நீ இன்னும் தூங்கலையான்னு கேட்டேன்"

"இல்லைங்க ...ரொம்ப நாள் கழிச்சு.. ரத்னத்தோட பேசிட்டிருந்தது மனசுக்கு சந்தோஷமாயிருந்தது.. அதுமட்டுமில்ல ரத்னம் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டான் தெரியுமா… என்று குதுகலித்தவளின் சந்தோஷம் அவரையும் தொற்றிக்கொள்ள..


"அப்படியா என்கிட்ட ரெண்டு நாள் டைம் கேட்டானே யோசிச்சு சொல்றேன்னு… நீ ஏதும் கட்டாயப்படுத்தலையே" என்றவரை முறைத்தவள்.

"ஆமா அவன்கிட்ட விஷயத்தை பட்டுன்னு சொல்லி சம்மதம் வாங்கறதை விட்டுட்டு அவன் போக்குல விட்டா..

அவன் பாட்டுக்கு கிளம்பி ஊரைப்பார்த்து போய்கிட்டே இருப்பான். அதான் பேசுற விதமா பேசி அவன்கிட்ட சம்மதம் வாங்கினேன்...எப்புடி!" என்ற பார்வை பார்த்தவளிடம்.. ஒற்றை புருவத்தை உயர்த்தி .

"என் பொண்டாட்டியோட திறமையே திறமை என்று மெச்சியவர் இனியாவது படுத்து தூங்கு"...என்றார் .

"நீங்க தூங்குங்க எனக்கு முக்கியமான வேலையிருக்கு

அண்ணிக்கு போன் பண்ணி பாண்டி கல்யாணத்துக்கு சம்மதித்த விஷயத்தை சொல்லனும்" என்றவளை பார்த்துத் தலையில் அடித்துக் கொண்ட மாதவன் மனைவியை பார்த்து..

"அடியேய் உன் ஆர்வக்கோளாறுக்கு ஒரு அளவேயில்லையா…? இப்ப மணி என்னாகுதுன்னு தெரியுமா...நடுராத்திரி 12 மணி இந்த நேரத்தில் என்னைத்தான் தூங்க விடாம தொந்தரவு பண்றேனா...நல்ல தூக்கத்தில் இருக்குறவங்களுக்கு போனை போட்டு அவங்க தூக்கத்தையும் கெடுக்கப் போறியா..? என்றவர் மனைவியின் கையிலிருந்த அலைபேசியை பிடுங்கி வைத்தவர்….காலையில் பேசலாம் இப்ப படுடி" என்றார் எரிச்சலுடன்.


அப்போது தான் தான் செய்த தவறு புரிய…. "அ….து...வந்து சந்தோஷத்தில் டைமை பார்க்கலை சாரி!" என்று அசடு வழிந்துவிட்டு சட்டென்று படுத்து தலைவரை போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்துவிட…

மனைவியின் குழந்தைத் தனத்தை எண்ணி புன்னகையோடு தானும் தூக்கத்தை தொடர்ந்தார் மாதவன்.



இந்த பக்கம் தானும் அலைபேசியை அணைத்தவனின் மனமோ…ஒரு நிலையில் இல்லாது தவித்தது…அத்தைக்காக திருமணத்திற்கு தான் சம்மதித்தது தவறோ… எனக்கு என்ன தான் பிரச்சினை…திருமணம் என்றாவது செய்யவேண்டும் தான் ஆனால். என்னால் ஏன் முழுமனதுடன் சம்மதிக்க இயலவில்லை? என்று அவன் மனமே அவனிடம் கேள்வி கேட்க…. அதற்கான விடையாய் மனதில் மின்னலாய் தோன்றியது ஒரு பளிங்கு முகம்…. ஒரு கணம் அதிர்ந்தவன் தன் நினைவு போகும் பாதையை

விரும்பாதவனாக தலையை உலுக்கி தன்னை மீட்க முயல…. ஆனால் அவன் எண்ணம் அதையே சுற்றி சுழன்றது….!

மனித மனம் எதை கூடாது என்று தவிர்க்க நினைக்கிறதோ…. அதைப்பற்றி தானே இன்னும் தீவிரமாக சிந்திக்கும்.....அது தான் அவன் விஷயத்திலும் நடந்தது. இது சரிவராது என்று நினைத்தவன் மறுபடியும் தலையை உலுக்கி வேண்டாத நினைவுகளை துரத்தியவன் திடீரென்று எழுந்து வீட்டைநோக்கி நடக்க எதிரே இளா டிராக் பேண்ட் டீ-சர்ட் அணிந்து கொண்டு ஜாகிங் செய்ய மெதுவாக ஓடி வந்து கொண்டிருக்க…பாண்டி அவனை பார்த்ததும் புன்னகைக்க..


"என்ன மாப்பிள்ளை ஜாகிங் முடிச்சிட்டியா.....?!"


"ம்ம்ம்…ஆச்சு…நீ என்ன இவ்வளவு லேட்டா ஜாகிங் வர… ?!"


"அதை ஏன் கேட்குற மாப்ளை நைட் ஒரு முக்கியமான மீட்டிங் அது கொஞ்சம் இழுத்துடுச்சி.. முடிச்சிட்டு லேட்டா தான் வீட்டுக்கு வந்தேன்… அதான் காலையில் கொஞ்சம் அசந்துட்டேன் மாப்ள..."


"என்ன ஆச்சு மாப்ள…ஏன் ஒரு மாதிரியா இருக்க? என்றான் நண்பனின் முகத்தை பார்த்து…!

"அதெல்லாம் ஒண்ணுமில்லடா..நீ ஜாகிங் முடிச்சிட்டு வா… பிறகு பேசலாம்… ஹான்… இன்னைக்கு உனக்கு ஆபீஸ்ல முக்கியமான வேலை எதுவும் இருக்கா…?"

"அப்படி இன்னைக்கு முக்கியமான வேலை எதுவும் இல்லை மாப்ள அப்படியே இருந்தாலும் என் பி .ஏ பார்த்துப்பான்." என்ற இளா நண்பனை யோசனையாய் பார்க்க…

"அப்படின்னா இன்னைக்கு வெளியே போகலாமா….


தாராளமா போலாம் மாப்ளே..‌நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஊரை சுத்தி எத்தனை நாளாச்சு" என்றான் … சந்தோஷமாக!

நண்பனின் மகிழ்ச்சி தன்னையும் தொற்றிக்கொள்ள அவனை அணைத்து விடுவித்தவன்.


"சரி நீ முடிச்சிட்டு வா நாம கிளம்பலாம்" என்றுவிட்டு வீட்டை நோக்கி நடக்க… இளாவும் உற்சாகமாய் தன் ஓட்டத்தை தொடர்ந்தான்.

இளா...தாமரையை தன் தங்கையாக ஏற்றுக் கொண்டாலும் பாண்டிக்கு எப்போதும் உயிர்த்தோழன் தான்… அவர்களுக்கிடையே பாசத்தோடு கூடிய நட்பே தொடர்ந்தது. இருவருக்குள்ளும் எந்த ஒளிவு மறைவும் இருக்காது….மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களை நண்பர்கள் இருவரும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வர். பாண்டியின் முகத்தை வைத்தே அவன் மனதை அறிந்து கொண்டவன். என்னவாக இருக்கும் என்ற யோசனையோடே தன் ஓட்டத்தை தொடர்ந்தான்.


(கையணைக்க வருவான்)
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 8


74537452


கதிரவனின் மனம் தீவிர யோசனையில் இருந்தாலும் காரை இலாவகமாக ஓட்டியவன் வீட்டை அடைய காரை அதற்குரிய இடத்தில் நிறுத்தியவன்… காரை விட்டு இறங்கி வீட்டினுள் சென்றான்.


வரவேற்பரையின் ஷோபாவில் அமர்ந்து அன்றைய நாளிதழில் மூழ்கியிருந்த தன் தந்தை சொக்கநாதரின் பக்கத்தில் அமர்ந்தான்.


கதிரவன் தாமரையை பெண்பார்க்க சென்று விட்டு வந்து இன்றோடு ஒரு வாரம் கடந்துவிட்டது. மனம் முழுவதும் அவளது நினைவுகள் ஆட்டிப் படைத்த போதும்.. அவன் இதுவரை அவளை ஏனோ தொடர்பு கொள்ள வில்லை.


அவளை மணக்க தான் சம்மதித்தது சரியா… தவறா என்ற குழப்பத்தில் அவன் மனம் உழன்றது. அவளுடைய அமைதியான அழகு அவனை அடியோடு சாய்த்து விட்டது உண்மைதான் ஆனால் அவளுடைய பணமும் அந்தஸ்தும் அவனை அவளிடமிருந்து தள்ளி வைத்தது.




மீனாட்சி மகனின் கார் சத்தம் கேட்டதுமே காபியை போட்டு எடுத்துக் கொண்டு வந்தவர் மகனிடம் அதை நீட்டினார்.

யோசனையோடு அதை வாங்கியவன் அமைதியாக பருக ஆரம்பித்தான்.

மகனது முகத்தில் யோசனையை கண்டவர்..


“என்னாச்சு பா ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்க.. மனைவியின் குரலில் கலைந்த சொக்கநாதர் அப்போது தான் மகனின் வரவை உணர்ந்தார். செய்தித் தாளை மடித்து டீப்பாயில் வைத்தவர் கேள்வியாக கதிரை நோக்க..

காலி காபிகோப்பையை தானும் டீபாய் மீது வைத்தவன்.


மௌனம் காக்க… "என்ன விஷயம்னு சொன்னாத்தானே தெரியும் நீ இப்படி அமைதியா இருந்தா எங்களுக்கு எப்படி தெரியும்?" என்றார் சொக்கநாதர்.


அவரையே அழுத்தமாய் ஏறிட்டவன். முடிவெடுத்தவனாக "அப்பா எனக்கு இந்த கல்யாணத்திற்கு சம்மதம் ஆனால்… அவங்க வீட்டில் கொடுக்குற எந்த சீர்வரிசையும் இந்த வீட்டுக்கு வரக் கூடாது. என் மனைவியா வரப்போறவ என் சம்பளத்தில் தான் வாழனும்னு நினைக்கிறேன் அதுக்கு சம்மதமான்னு அவங்ககிட்ட கேட்டு சொல்லுங்க… இல்லைன்னா இந்த கல்யாணப் பேச்சை இதோட நிறுத்திடுங்க. என்றவனை பார்த்து மீனாட்சியும் சொக்கநாதரும் திகைத்து நின்றுவிட்டனர்.


அதைக் கண்டு கொள்ளாமல் தன் வேலை முடிந்தது.. என்பது போல தன்னறைக்கு விரைந்துவிட்டான்.


"என்னங்க … இவன் இப்படி ஒரு குண்டைத் தூக்கி போட்டுட்டு போறான்…. நாமளா எதுவும் கேட்க வேண்டாம் னு சொன்னா...அதில் ஒரு நியாயமிருக்கு… ஆனால் அவங்க மகளுக்கு செய்யிறதை நாம எப்படி தடுக்குறது..அதுவும் தாமரை ஒரே பொண்ணு வேற அவங்களுக்கும் தன் பொண்ணுக்கு செய்யனும்னு ஆசையிருக்கும் தானே…!?" என்றார் தானும் பெண்ணை பெற்றவர் என்ற ஆதங்கத்துடன்..


சொக்கநாதருக்கு தன் மகனை நினைத்து பெருமையாக இருந்த போதும்…. " என் மகன் சுயமரியாதையோடு பேசுறது எனக்கு பெருமையாயிருக்கு மீனாட்சி.. ஆனால் இதை எப்படி சம்மந்தி வீட்டுல சொல்றதுன்னு தான் யோசனையாயிருக்கு…!?" என்றவரை கவலையோடு நோக்கினார் மீனாட்சி.


தன்னறைக்கு வந்த கதிரின் நினைவுகளை மறுபடியும் தாமரையே ஆக்ரமித்துக் கொண்டாள். பெண்பார்க்க சென்ற அன்று பார்த்தது தான் திரும்பவும்...அவளை பார்க்காது …. பேசாது...அவனது காதல் மனம் தவிக்கத் தான் செய்தது...ஆயினும் அவளின் எண்ணுக்கு அழைத்து அவன் பேசவில்லை...ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது…! பகலெல்லாம் வேலையில் மூழ்கி அவளது நினைவை விரட்டியடிப்பவன்...இரவில் அவளை எண்ணி… ஏங்கினான்.‌‌..! சில நேரங்களில் தன் மனதின் தவிப்பை தாங்க இயலாது... எத்தனையோ முறை அவளது குரலையாவது கேட்டு விட அலைபேசியில் அவளது எண்ணை அழுத்திவிட்டு….தயங்கி பின்பு தூக்கி எறிந்துவிடுவான்…!


நீ ஏண்டி இவ்வளவு பெரிய பணக்காரியாயிருந்து தொலைக்கிற…! உன்னை ஏற்கவும் முடியாமல் விலக்கி தள்ளவும் முடியாமல்… என் மனதோடு நானே போராடி களைச்சிட்டேன்டி ராட்சஸி…! என்று அதற்கும் அவளின் மீதே கோபம் கொண்டான்!


இவ்வளவு தவிப்பு எதற்கு...கதிர்? இதற்கு ஒருமுறை நீ அவளிடம் நேரடியாக பேசிவிடலாமே என்றது அவனின் மனசாட்சி…! நான் ஏன் பேசனும்...அவளுக்கு என்மேல ஒரு இது இருந்தா அவ பேசட்டுமே என்றது அவனது மூளை…


நீ பேசுறது உனக்கே நியாயமா… படித்தவள் என்றாலும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவள் எப்படி உன்னிடம் தயக்கம் விட்டு பேசுவாள்…. அதுவும் உன் ஒரு பார்வைக்கே வெட்கப்படும் மென்மையானவள் என்று வாதிட்டது அவனது இதயம். பெண்பார்க்க சென்ற அன்று அவளின் பார்வைகள் அவனை இம்சிக்க… மனம் அவளது குரலையாவது கேட்டேயாக வேண்டும் என்று ஏனோ அடம்பிடிக்க.. அவனே அறியாமல் அவனது விரல்கள் அலைபேசியில் அவளது எண்ணுக்கு அழைப்பு விடுத்திருக்க…. அந்தப்பக்கம் இதற்காகவே காத்திருந்தது போல அழைப்பை உடனே எடுத்தாள் தாமரை.


கதிரவனின் எண்ணை தங்கையின் மனமறிந்து இளா தான் அவளுக்கு முன்பே அனுப்பியிருந்தான்.. அதை அவளும் தன் அலைபேசியில் சேமித்து வைத்திருந்ததால்...தன்னவனின் அழைப்பை உடனே ஏற்று ... ஆவலோடு "ஹலோ…" என்றவள் அந்தபக்கம் அவன் பேசாது இருக்கவும்… பதறியவள் மறுபடியும் .."ஹலோ" என்க….


"எப்படியிருக்க பே…..தாமரை…"என்றான் தடுமாற்றத்துடன்...அவன் தன்னை பேபி என்று சொல்ல வந்து தாமரை என்று மாற்றி அழைத்ததை கண்டு கொண்டவள் …!


"நான் நல்லாயிருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க…!"


"ம்ம்ம் யா ஐயாம் பைன்…!" என்றவன் மௌனம் காக்க...அவன் தொடர்பைத் துண்டித்துவிட்டானோ என்று ஒரு கணம் திகைத்து அவள் அலைபேசியை பார்க்க..அது இணைப்பில் இருப்பதைக் காட்டியதும் ஆசுவாசம் அடைந்தவள்…. தானே தயங்கியவாறே பேச ஆரம்பித்தாள்.


"அத்...தை மாமா…. தமிழரசி எல்லோரும் எப்படியிருக்காங்க…?

தன் பெற்றோரை முறை வைத்து அவள் விசாரித்தது சற்றே அவனின் இறுக்கத்தை குறைக்க... இயல்புக்கு திரும்பியவன்

மீண்டும் மௌனம் தொடர கண்களை ஒரு கணம் இறுக மூடித்திறந்தவன் … பேசவந்ததை பேசி விடலாம் என்று முடிவெடுத்தான்…!


"பே…..தாமரை …"


"ம்ம்ம்….சொல்லுங்க …"


"என்னை உனக்கு பிடிச்சிருக்கா...தாமரை" என்க..

"டேய் இப்ப இந்த கேள்வி தேவையா"என்று அவனது மனசாட்சி காரி துப்ப அதை முறைத்து அடக்கியவன். அவளின் பதிலுக்காக ஆர்வத்துடன் காத்திருக்க..


இதென்ன இப்படி ஒரு கேள்வி கேட்கிறான் என்று‌ எண்ணியவள்... பிடிக்காமத் தான் அழைப்பு வந்ததும் ஆசையாய் எடுத்து பேசுறேனா...என்று செல்ல கோபம் எழுந்தாலும் நாணத்தோடு மெல்லிய குரலில்... "ம்ம்ம் ரொம்ப பிடிச்சிருக்கு .." என்றாள்.


அவளது பதிலில் இறக்கையில்லாது வானில் பறந்த தன் மனதை வெகு சிரமப் பட்டு அடக்கியவன்… குரலில் இறுக்கத்தை கொண்டு வந்து எனக்கு உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.. அவனது குரலின் பேதத்தை உணர்ந்தவளுக்கு படபடப்பு அதிகரிக்க... முயன்று தவிப்பை அடக்கியவள்...வெளி வராத குரலில்"சொல்லுங்க"…


"சிறிது நேர மௌனத்திற்கு பிறகு… நான் சொல்லப் போற விஷயம் நம்ம ரெண்டு பேர் மட்டுமில்ல நம்ம ரெண்டு குடும்பத்தில் இருக்கிறவங்களுக்காகவும் தான் என்ற பலத்த பீடிகையுடன் ஆரம்பித்தான்…


"உங்க அளவுக்கு நாங்க கோடீஸ்வரங்க இல்லை.‌‌.."


"ஆமா அதை எதுக்கு இப்ப சொல்றீங்க.."


"நாங்க சாதாரண மிடில்கிளாஸ் குடும்பம் தான்…"


"சரி.."


"உங்க வீட்டோட ஒப்பிடும்போது எங்க வீடு அதில் கால் பாகம் தான் இருக்கும்.. என்கிட்ட இருக்க மிகப்பெரிய சொத்தே…... ஐ.ஏ எஸ் படிப்பும்…. கலெக்டருங்கிற பதவியும் தான்… இப்ப நாங்க குடியிருக்க வீட்டைத்தவிர பெருசா எந்த சொத்தும் எங்களுக்கு இல்லை..! "


"நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா…இந்த சாதாரண வாழ்க்கை தான் உனக்கு கிடைக்கும்."


"அதான் எனக்கு தெரியுமே... எனக்கு எந்த சொத்தும் வேண்டாம்….நீங்க மட்டும் போதும். உங்க காதல்மட்டும் போதும் நீங்க இருக்குற இடம் தான் எனக்கு சொர்க்கம். உங்களோட குடிசையில் வாழக் கூட நான் தயார். ஆனா இதெல்லாம் ஏன் இப்ப சொல்றீங்கன்னு தான் புரியலை…"


"அதனால ….நீ ...ங்க உங்க அந்தஸ்து வசதிக்கேத்தமாதிரி… வசதியானவனா பார்த்து கட்டிக்கிறது தான் உனக்கு நல்லது…. ஏன்னா இந்த ஏற்றத்தாழ்வு நம்மிடையே ஒரு நெருஞ்சியாய் உறுத்தும். அதனால நம்ம ரெண்டு பேரோட நிம்மதியும் சந்தோஷமும் பறிபோகும் பொருந்தாத இந்த கல்யாணம் கடைசியில் பிரிவுல போய் தான் நிற்கும்.

அது இன்னும் வலியையும்… வேதனையும் நமக்கு மட்டுமல்ல நம்ம இரண்டு குடும்பத்துக்கும் கொடுக்கும். அதனால்… இப்பவே நாம விலகிடுறது தான் நல்லது. நீயே இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லி நிறுத்திடு…." என்றான் தன்னை திடப்படுத்திக்கொண்டு..!


இதுவரை அவன் சொன்னதுக்கெல்லாம் தன் மனதுக்குள் சந்தோஷமாக பதில் அளித்தவள்….. அவன் கடைசியாக கல்யாணத்தை நிறுத்தி விடசொன்னதை நிச்சயம் எதிர் பார்க்கவில்லை... தான் கேட்டது உண்மை தானா? என்ன சொன்னாங்க….நான் இந்த கல்யாணத்தை நிறுத்திடனுமா...வேறொருவனை மணக்க வேண்டுமா…? இதையெல்லாம் சொன்னது அவர் தானா? கடவுளே...இதெல்லாம் கனவாக இருக்கக்கூடாதா? பார்த்த கணம் முதல் மனதால் அவனை கணவனாகவே நினைத்து... அவனுடன் கற்பனையில் வாழ்ந்து வரும் தன் மனதை அவன் புரிந்து கொள்ளவேயில்லையா…? என்னிடம் இப்படியொரு வார்த்தையை சொல்ல அவனுக்கு எப்படி மனது வந்தது…? நான் தான் அவனை தவறாக கணித்து விட்டேனா..? அப்படியானால் பெண் பார்க்க வந்த அன்று தன்னை பிடித்திருப்பதாக சம்மதம் சொன்னது….அவன் பார்த்த ஆர்வப்பார்வைகள்…. அதற்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லையா…? என்று கேள்விகள் ஒருபுறம் அணிவகுக்க கண்களில் அணையுடைத்த வெள்ளமாய் கண்ணீர் பெருக...அவனது வார்த்தைகள் சுருக்கென்று இதயத்தை தைக்க அது தந்த வலியில் துடித்தவள்… தன்னுள் ஏதோ ஒன்று மரிப்பது போல உணர்ந்தாள். நிற்க இயலாது கண்ணை இருட்டிக் கொண்டு வர கால்கள் துவள… மயங்கி சரிய ஆரம்பித்தவளை..

அறைக்கு வெளியே பார்வதியின் குரல் மீட்க…

எதையும் உணராதவளாக மலங்க மலங்க விழித்தாள்.


அதற்குள் பார்வதி பலமுறை அறைக்கதவை தட்டி அழைக்க… தாயின் பதற்ற குரலில் தன்னை மீட்டவள்.

தான்அதிர்ச்சியில் கீழே நழுவ விட்ட தன் அலைபேசியை பார்க்க அது கீழே விழுந்ததில் தன் உயிரை விட்டிருந்தது. அதை எடுத்து பத்திரப்படுத்தியவள்.


இந்த முகத்தோடு… பார்வதி தன்னை பார்த்துவிட்டால்... அவருக்கு என்ன பதில் சொல்வது….என்று தவித்தவளுக்கு மீண்டும் கண்ணீர் பெருக…

அவசரமாக எழுந்தவள் தன் கண்களை துடைத்துக் கொண்டு குளியலறைக்குள் ஒடிச்சென்று தன் முகத்தை கழுவி வெளியே வந்து முகத்திற்கு இலேசாக பவுடர் பூசி ஓரளவுக்கு முகத்தை சீராக்கியவள் ஓடிச்சென்று கதவை திறந்தாள்.


முகமெல்லாம் புன்னகை பொங்கி வழிய சந்தோஷத்தோடு பார்வதி வெளியே நின்றிருந்தார்.

மகளை உற்றுப் பார்த்தவர் மகளின் முகம் வழக்கத்திற்கு மாறாக பொலிவிழந்து காணப்படவும் பதறியவர்….


"தாமரை என்னாச்சும்மா ஏன் ஒரு மாதிரியிருக்கடா... என்னாச்சு...உடம்புக்கு எதுவும் சரியில்லையா என்று பதறியவர் அவளது தலையிலும் ...கழுத்திலும் கை வைத்து பார்க்க…

அன்னையின் கரிசனையிலும் அன்பிலும் அவளுக்கு கண்கள் கலங்க அன்னையின் தோளில் சாய்ந்து கொண்டாள்.


மகளது திடீர் சோர்வில் கலங்கியவர் அவளது முதுகை வாஞ்சையோடு வருடியவர்..." என்னடா பண்ணுது உடம்புக்கு… ஆஸ்பிடல் போலாமா…?

அன்னையின் தவிப்பில் தன்னை மீட்டுக் கொண்டவள்.


"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்மா...இலேசான தலைவலி கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்தா சரியா போகும்மா" என்றவளை

யோசனையோடு பார்த்தவர்

மகளின் கூந்தலை தொட்டுப்பார்க்க அது காலையில் தலைக்கு குளித்ததால் காயாமல் ஈரமாக இருக்க..


"என்னடா இது தலைமுடி இப்படி காயாம இருந்தா தண்ணீர் தலைக்கு கோர்த்து தலைவலி வராம என்ன செய்யும்? கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு போகப்போற பொண்ணு இன்னும் தலையை ஒழுங்கா துவட்டத்தெரியலை...என்னப் பொண்ணோ…? என்றவர் தானே துவாலையை எடுத்து துவட்டி விட ஆரம்பிக்க..

அன்னையின் கல்யாணப் பேச்சில் அவளுக்கு திரும்பவும் கதிரின் வார்த்தைகளை நினைவு படுத்த கண்களை கரித்துக் கொண்டு வந்தது. உதட்டைக் கடித்து அழுகையை அடக்கியும் முடியாமல் கண்ணீர் வழிய… மகளின் கண்ணீரைப் பார்த்து துடித்த பார்வதி…' என்னடா ரொம்ப வலிக்குதா? என்க.


ஆமாம் மா ஆனா தலையில் இல்லை இதயத்தில் என்று மனதுக்குள் கதறியவள்… அன்னையிடம் ஆமோதிப்பாய் தலையசைக்க….


அவளை அழைத்து சென்று படுக்கையில் படுக்க வைத்து நீலகிரித் தைலத்தை தலையில் பூசி இதமாய் வருடித் தந்தார்.. அன்னையின் மடியில் தலை வைத்தவள் அவரது வருடலில் மனம் சற்றே நிம்மதியடைய அப்படியே அவரது இடுப்பைக் கட்டிக்கொண்டு தூங்கிவிட்டாள். அவளது தலையை மெதுவாக தலையணைக்கு இடம் மாற்றியவர்… சிறுவலியைக்கூட பொருத்துக் கொள்ளாமல் கண்ணீர் சிந்தும் மகளின் மென்மையான குணத்தை நினைந்து...இவ எப்படித்தான் புகுந்த வீட்டில் சமாளிக்க போறாளோ என்ற கவலை எழ அன்போடு தலையை வருடி முத்தமிட்டவர்… பெருமூச்சோடு… அறையை விட்டு வெளியேறினார்.


(கையணைக்க... வருவான்)

ஹாய் பேபீஸ் நான் திரும்பவும் வந்துட்டேன். உங்களையெல்லாம் திரும்பவும் சந்திக்கறதில் மீ ஹாப்பி .... கதையின் அத்தியாயம் 7 , 8 பதிந்துவிட்டேன் படிச்சிட்டு கமெண்டுங்க பேபீஸ்... அடுத்த அத்தியாயத்துடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.😍😍😍😘😘😘😘


உங்கள் கருத்துக்களை கீழ்க்கண்ட கமெண்ட் திரியில் பதியுங்கள்....🙏🙏🙏🙏🙏🙏🙏

 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 9


76277630

தாமரையின் அறையிலிருந்து வெளியே வந்த பார்வதி… சாப்பாட்டு அறைக்குள் நுழைய அங்கே அருணாச்சலம் , பாண்டி, இளா எல்லோரும் ஏற்கனவே அமர்ந்திருக்க , “வள்ளி டிபன் கொண்டு வா என்று சமையலறை நோக்கி குரல் கொடுத்தவர்…தானே சமையலறைக்கு சென்று வள்ளி கொண்டு வந்த உணவுபாத்திரங்களை சிலவற்றை வாங்கி வந்து உணவு மேசையில் அவற்றை வைத்தவர்… குடும்பத்தினருக்கு பரிமாற ஆரம்பித்தார்.


அருணாச்சலம் மகளைக் காணாது…. “பார்வதி எங்கே தாமரையை காணோம்”

தங்களுக்குள் ஏதோ தீவிர அரட்டையில் மூழ்கியிருந்த பாண்டியும், இளாவும் அப்போது தான் தங்கை அங்கு இல்லை என்பதையே உணர்ந்தனர். அவர்களும் கேள்வியாக பார்வதியை நோக்க..

பார்வதி…. அவளுக்கு தலைவலியாங்க அவ ரூம்ல படுத்திருக்கா…

மகளுக்கு தலைவலி என்றதும் பதறியவர்… “என்னாச்சு பார்வதி காலையில் கூட நல்லாத்தானே இருந்தா தீடீர்னு என்ன ஆச்சு..?"

பாண்டியும் இளாவும் அவசரமாக எழுந்தவர்கள்..
"அம்மா நான் போய் டாக்டரை கூட்டி வர்றேன்" என்று இளாவும்..

"வேண்டாம் இளா என்கிட்ட தலைவலிக்கு ஒரு தைலம் இருக்கு …அதை .எடுத்துட்டு வர்றேன் உடனே ரீலீப் கிடைக்கும்"! என்று பாண்டியும் எழ…

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நீங்க மூன்று பேரும் முதல்ல..உட்கார்ந்து சாப்பிடுங்க…! அவளுக்கு தைலத்தை தேய்ச்சு படுக்க வச்சிட்டு தான் கீழ வந்தேன். கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியாப்போய்விடும்". என்றவரை கவலையோடு பார்த்தவர்களிடம்

"நான் தான் சொல்றேன் இல்ல… தலைக்கு குளிச்சிட்டு சரியா தலையை துவட்டாம விட்டுட்டா போல அதான் தலையில் நீர் கோர்த்து தலைவலி வந்திருக்கு..வேற ஒண்ணுமில்லை.. நீங்க சாப்பிடுங்க அவளுக்கு டிபனை நானே கொண்டு போய் சாப்பிட வச்சிட்டு வர்றேன்." என்றதும் ஓரளவு சமாதானமாகி மூவரும் சாப்பிட அமர்ந்தனர்.

சாப்பிட்டு முடித்து … பாண்டியும் இளாவும் தாமரையின் அறைக்கு செல்ல.. அங்கே அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதை சிறிது நேரம் பார்த்தவர்கள் சத்தமில்லாமல் அறையை விட்டு வெளியேறினர்.

அருணாச்சலம் தூங்கும் மகளின் அருகே சென்று தலையை அன்பாய் வருடியவாறு சிறிதுநேரம் நின்றிருந்தவர் மகளுக்கு காலை உணவை எடுத்து வந்த பார்வதியிடம் மகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு கீழே செல்ல அங்கே பாண்டியும் இளாவும் எங்கோ புறப்பட்டு செல்ல ஆயத்தமாகி அமர்ந்திருப்பதை பார்த்தவர்.. "என்ன இளா இன்னைக்கு ஆபீஸ் போகலையா?" என்று வினவ..

"இல்லைப்பா…இன்னைக்கு நான் லீவு நானும் பாண்டியும் ஜாலியா ஊரைச் சுத்தப் போறோம்!". என்ற நண்பனை பார்த்து புன்னகைத்தான் பாண்டி..!

இருவரையும் வியப்போடு நோக்கியவர். எப்போதும் வேலை…வேலை என்று ஓடியவர்கள்… நீண்ட இடைவெளிக்கு பிறகு சேர்ந்து வெளியே கிளம்பியதில் மகிழ்ந்தவர் சந்தோஷமாகவே விடையளித்தார்.

இருவரும் தயங்கி நிற்கவும் கேள்வியாக பார்த்தவரை……“அப்பா…. தாமரை…. அம்மா.. என்று ஆரம்பித்த மகன்களை புரிந்து கொண்டவராக..

“தாமரைக்கு சாதாரண தலைவலி தானேப்பா? அவளை நான் பார்த்துக்கிறேன் தூங்கி எழுந்தா சரியாகிடும்… அப்படியில்லைன்னா நம்ம டாக்டரை கூப்பிட்டு பார்க்க சொல்றேன் நீங்க ரெண்டு பேரும் கவலைப்படாதீங்க… உங்க அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா போய்ட்டு வாங்க..!” என்று இருவரையும் வழியனுப்பி வைத்தார்.

தாமரையின் அறையில் பார்வதி மகளை சாப்பிட வற்புறுத்த மறுத்தவளை கட்டாயப்படுத்தி உண்ண வைத்தார். பெயருக்கு கொறித்தவளை கவலையோடு பார்த்தவர் "என்னடா…. ரொம்ப முடியலைன்னா டாக்டரை கூப்பிடலாமா" என்க.

அன்னையின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்தவள் தன்துயரை மறைத்துக் கொண்டு புன்னகையுடன் "இப்போ கொஞ்சம் பரவாயில்லைமா டாக்டரெல்லாம் கூப்பிட வேண்டாம். கொஞ்ச நேரம் படுத்திருந்தா சரியாப் போய்விடும் . அப்புறமா நானே எழுந்து ஓடி வந்துடுவேன். நீங்க கவலைப்படாம போய் அப்பாவையும் அண்ணன்களையும் கவனிங்க.." என்று சமாதானப்படுத்தி பார்வதியை அனுப்பி வைத்துவிட்டு.. மீண்டும் தன் படுக்கையில் சாய்ந்து கொள்ள... கதிரவனின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்து அவளை துடிக்க வைத்தது.

அவனது நிராகரிப்பில் இதயத்தை யாரோ கசக்கி எறிந்தது போல வலித்தது. கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகி அவள் தலையணை நனைந்தது.

அப்படியானால் தான் அவனுக்கு வேண்டாமா…? நான் வேறொருவனை மணக்க வேண்டுமாம் அய்யோ….! அந்த நினைவே கசந்து வழிந்தது. அப்படியானால் அவனும் வேறொருத்தியை மணக்க முடிவு செய்துவிட்டானா? அவனை மணக்கோலத்தில் வேறொரு பெண்ணுடன் இணைத்து பார்த்தவளின் மனம் அடிபட்ட குழந்தையாய் கதறியது. எதையெதையோ நினைத்துத் தன்னைத்தானே வருத்திக் கொண்டவள் காய்ச்சலை வரவழைத்துக் கொண்டாள்.

மதியம் சாப்பிட மகளை அழைக்க வந்த பார்வதி மகள் இருந்த நிலையைப் பார்த்து பதறி கணவரை அழைக்க….. அருணாச்சலமும் பதறியவர் தன் குடும்ப நண்பரும் மருத்துவருமான சிவராமனை அழைத்தார்.. அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவர் வந்து பரிசோதித்து பார்த்து சாதாரண வைரஸ் காய்ச்சல் தான் ஒண்ணும் பயப்பட வேண்டாம்.. காய்ச்சலுக்கு ஊசி போட்டிருக்கேன் படிப்படியாக காய்ச்சல் குறைஞ்சிடும்…மருந்து மாத்திரையெல்லாம் தவறாம கொடுங்க…. சாப்பிட எளிதா ஜீரணமாகுற மாதிரி நீராகாரமா கொடுங்க. ஏதாவதுன்னா கால் பண்ணுங்க என்றவர் விடை பெற்றுச் சென்றுவிட்டார்.

மருத்துவர் சென்றதும் பார்வதி கண்களில் நீரோடு மகளைப் பார்த்தவர். மருந்தின் உபயத்தால் ஆழ்ந்த நித்திரையில் இருந்த மகளின் தலைமுடியை ஒதுக்கி விட்டவர். நல்லாத்தானே இருந்தா திடீரென இப்படி காய்ச்சல்ல படுத்துட்டாளே…. என்று வருந்தினார். மருத்துவரை அனுப்பி வைத்துவிட்டு வந்த அருணாச்சலம்.

இது சாதாரண வைரஸ் காய்ச்சல் தானே பார்வதி. சீக்கிரம் சரியாயிடுவா நீ கவலைப்படாதே என்று ஆறுதல் படுத்திவிட்டு மகளின் மறுபுறம் அமர்ந்தார். பார்வதி பாத்திரங்களோடு வெளியேறிவிட…. மகளின் கையை எடுத்து தன் கரங்களுக்குள் பொத்தி வைத்தபடி மகளையே வாஞ்சையோடு பார்த்திருந்தார் அருணாச்சலம்.


எப்போதும் சிட்டாக ஒரிடத்தில் நில்லாமல் மான்குட்டியாய் வீட்டை சுற்றிவரும் தன் அருமை மகளை இப்படி வாடி வதங்கிய கொடியாய் பார்க்க அவருக்குமே தாளவில்லை.

அருணாச்சலத்திற்கு மகளின் மீது கொள்ளை பாசம். தாமரை பிறந்த அன்று பன்னீர் பூவின் குவியலாய் தன் கையில் ஏந்திய மகளை பார்த்து தந்தையாய் அவரது உள்ளம் பெருமையிலும் சந்தோஷத்திலும் பூரித்தது . காரணம் தாமரை அருணாச்சலத்தின் தாய் வேதவல்லியின் சாயலில் இருந்தாள். தன் அன்னையே தனக்கு மகளாக வந்து பிறந்திருப்பதாக எண்ணியெண்ணி மகிழ்ந்து போனார் அருணாச்சலம். அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் தன் மகளை தரையில் விடாது கண்ணுக்குள் வைத்து வளர்த்தார். அவளுக்கும் தந்தை என்றால் உயிர். மகளைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியிருந்தவரை…அலைபேசி ஒலி எழுப்பி கலைத்தது.

அலைபேசியை உடனே எடுத்தவர் மகளின் தூக்கத்தை கலைக்காதவாறு அறையை விட்டு வெளியேறியவர் யாரென்று பார்க்க… கதிரவன் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

மாப்பிள்ளை அழைக்கவும் சந்தோஷமாக அழைப்பை ஏற்றவர்…ஹலோ சொல்லுங்க மாப்பிள்ளை… எப்படியிருக்கீங்க…அப்பா, அம்மா, தமிழரசி எல்லோரும் சௌக்கியமா என்று அன்போடு விசாரித்தவருக்கு பதில் அளித்தவன்… சற்று நேரம் மௌனம் காக்க….. அவனது அமைதியில் நிதானித்தவர்..


“என்ன மாப்பிள்ளை ஏதாவது பிரச்சனையா…? என்க “அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா…” என்று தயங்கியவனை புரிந்து கொண்டவராக..


"தாமரைகிட்ட பேசனுமா மாப்பிள்ளை?" என்று நேரடியாகவே கேட்க… தான் சொல்லாமலே தான் அழைத்த காரணத்தை சரியாக யூகித்த தன் மாமனாரை மனதுக்குள் மெச்சியவன்.

"ஆ….ஆமா மாமா!" என்றான் தயக்கத்துடன்..


(நீ ஏற்கனவே அவளிடம் பேசியதெல்லாம் போதாதா !)


ஆசையாய் மகளிடம் பேச அழைத்த மாப்பிள்ளையிடம் என்ன கூறுவது என்று தயங்கியவர்….

அ…..து வந்து தாமரைக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை மாப்பிள்ளை… என்க

இந்த பக்கம் பதறியவன்… “எ…என்ன சொ..ல்றீங்க தாமரைக்கு உடம்பு சரியில்லையா…? என்னாச்சு..? காலையில் கூட நல்லாத்தானே பேசினா?” என்று பதற்றத்தில் அவன் உளறி கொட்ட அதைக் கண்டு கொள்ளாதவராக…


“ஆமா மாப்பிள்ளை காலையில் நல்லாத்தான் இருந்தா…. என்று நடந்த அனைத்தையும் மாப்பிள்ளையிடம் விவரிக்க…கதிரவனுக்கு தெளிவாகத் தெரிந்து போனது இந்த திடீர் காய்ச்சலுக்கான காரணம் தான் தானென்று!.


காலையில் தான் பேசியது அவளை இந்தளவுக்கு பாதிக்குமென்று அவன் சற்றும் நினைக்கவில்லை. அவளின் நிலைக்கு தான் தான் காரணம் என்ற குற்றவுணர்வு மேலோங்க என்ன சொல்வது என்று தெரியாது உதட்டைக் கடித்து கண்களை இறுக முடித் திறந்து மௌனம் காத்தான்.


அந்தப்பக்கம் அருணாச்சலமோ.. “கவலைப்படறமாதிரி ஒண்ணுமில்லை மாப்பிள்ளை சாதாரண வைரஸ் காய்ச்சல் தான் பயப்பட ஒண்ணேமில்லை இரண்டு மூன்று நாளில் சரியாயிடும்னு சொல்லி ஊசி போட்டுட்டு டாக்டர் இப்ப தான் போனாரு. தாமரையும் இப்ப தான் இலேசா கண்ணசந்தா..!" என்று இவனுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்.

அது மேலும் அவனை வதைக்க.. "சரிங்க மாமா பத்திரமா பார்த்துக்கோங்க… நான் திரும்பி கூப்பிடறேன்…! என்றவன் அழைப்பை துண்டித்து விட..

அருணாச்சலத்திற்கு மருமகனின் அக்கறையில் மனம் குளிர்ந்துவிட்டது. சந்தோஷமாக இந்த விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்து கொள்ள சென்றார் புன்னகையோடு.


(ம்க்கும் …. நல்லாயிருந்த புள்ளையை காய்ச்சல்ல தள்ளினதே அவன் தான் இது தெரியாம நீங்க வேற…!)


இந்தப்பக்கம் கதிரவனுக்கோ மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.

காலையில் ஒரு வழியாக தான் நினைத்ததை அவளிடம் சொல்லி முடித்தவனுக்கு இதயத்தில் ஏதோ பாரத்தை ஏற்றி வைத்ததை போன்ற உணர்வே எழுந்தது. தான் ஏதோ பெரிய தவறு செய்து விட்டதாகவே அவனுக்கு தோன்றியது. அதற்கான அவளது பதிலை எதிர்பார்த்து ஓருவித தவிப்போடு காத்திருந்தவனுக்கு அந்த பக்கம் ஒரு பதிலும் இல்லாது போகவும் காதிலிருந்து பேசியை எடுத்துப் பார்த்தவன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பது தெரியவும். திகைத்தவன் மறுபடியும் அவளின் எண்ணுக்கு முயன்றான். அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக கூற…மறுபடியும் முயன்று பார்க்க அதே பதிலே கிடைத்தது.


ஒருவேளை தான் திருமணத்தை நிறுத்திவிடச் சொன்னதும் கோபப்பட்டு சுவிட்ச் ஆப் செய்திருப்பாளோ…? இல்லை அதிர்ச்சியில் மயங்கி விழுந்து ஏதாவது… ஓ…மை காட்.. என்று நெற்றியில் அறைந்து கொண்டான்.


காலையில் தான் அழைத்ததும் எவ்வளவு ஆர்வத்தோடு பேசினாள்…! ச்சே..! என்று தன்னையே நொந்து கொண்டவன்… மனம் தன்னவளை நினைத்து தவிக்க…

அந்த நேரம் அவனது கைபேசி ஒலியெழுப்ப... அவள் தானோ என்று ஆவலோடு எடுத்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அலுவலகத்திலிருந்து அவனது பி.ஏ வாசுதேவன் அழைக்க ஏமாற்றத்துடன் அழைப்பை எடுத்தவனிடம்…அவன் இன்று கலந்து கொள்ள வேண்டிய விவசாயிகள் குறை கேட்புக் கூட்டத்தை நினைவுபடுத்தினார் அவர்.


இன்னும் சற்று நேரத்தில் அங்கிருப்பதாக கூறியவன் அதற்கேற்ற ஏற்பாடுகளை கவனிக்குமாறு அவருக்கு உத்தரவிட்டான். கடமைக்காக தன்னை ஓரளவு சமன்படுத்திக்கொண்டவன் கிளம்பி தன் அலுவலகத்தை அடைந்தான். அங்கு தனக்காக காத்திருந்த விவசாயிகளின் குறைகளை கவனமாகக் கேட்டறிந்தவன்…. அவரவர்களுக்கு உரிய பதிலைத் தந்து கூட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தன் அலுவலக அறைக்குள் சென்று ஓய்வாக அமர்ந்தவனின் களைப்பை உணர்ந்தவராக அவருடைய பி.ஏ காபியைத் தருவித்தவர். அதை கோப்பையில் நிரப்பி அவனிடம் நீட்ட அந்த நேரத்திற்கு அவனுக்கு அது தேவைப்பட சிறு புன்னகையுடன் நன்றி சொல்லி வாங்கிக் கொண்டான். அதை சிறு தலையசைப்புடன் பணிவாக ஏற்றுக் கொண்டவர். தன் பணிகளை தொடரும் பொருட்டு அறையை விட்டு வெளியேறினார்.

காபியை அருந்தி முடித்தவனுக்கு திரும்பவும் தாமரையின் நினைவு எழ திரும்பவும்…அவளது எண்ணுக்கு முயன்றான்… திரும்பவும் அது அதே பல்லவியை பாட நொந்து போனவன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தலையை இரு கைகளாலும் தாங்கிக்கொண்டு அமர்ந்து விட்டான்.


சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் கைபேசியை எடுத்து இளாவுக்கு அழைக்க… அவன் தான் தாமரைக்கு உடல்நிலை சரியில்லை என்ற விஷயத்தை சொல்ல பதறியவனுக்கு சாதாரண தலைவலி தான் என்று ஆறுதல் சொன்னவன். தானும் பாண்டியும் வெளியில் இருப்பதால் தன் தந்தையின் எண்ணைக் கதிரவனிடம் கொடுக்க…அதன் பிறகே அவன் அருணாச்சலத்திற்கு அழைத்து பேசினான். அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதிலிருந்து அவன் அவனாக இல்லை அவளிடம் பேசலாம் என்றால் அதற்கும் வழியில்லை…அவளைக் நேரடியாக பார்க்க செல்லலாம் என்றால் அதற்கும் … என்ன காரணத்தை சொல்லிக்கொண்டு அவள் வீட்டுக்கு செல்வது என்று குழம்பியவன்… இதற்கு மேல் தன்னால் அலுவலக பணியில் கவனம் செலுத்த இயலாது என்று முடிவு செய்தவன் .தனது பி.ஏவை அழைத்து சொல்லிவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியேறியவன் நேராகச் சென்றது பெசண்ட் நகர் கடற்கரைக்கு தான்.

ஆர்ப்பரிப்போடு கரையைத் தொடும் அலைகளின் தழுவலில் சிறிது நேரம் நின்றவன். பின்னர் ஆழ்கடலை பார்த்தவாறு அமர்ந்துவிட்டான். ஆனால் அவன் மனமோ…அலைகடலில் மிதக்கும் படகாக தத்தளித்துக் கொண்டிருந்தது.

பார்த்த கணமே தன் நெஞ்சில் குடியேறிவிட்டவளை…இனியும் தன்னால் அவள் அந்தஸ்தை காரணம் காட்டி விலக்கிவைக்க முடியாது என்பது அவனுக்கு தெள்ளத்தெளிவாக விளங்கிவிட்டது. அவளைதன் வாழ்வில் இருந்து விலக்கி வைக்கவே அவன் காலையில் அப்படி பேசினான்….. ஆனால் காய்ச்சலில் விழும் அளவுக்கு அவள் மனம் காயப்படும் என்றுஅவன் சிறிதும் எண்ணவில்லை…. இப்படியொரு காதலை பெற அவன் என்ன தவம் செய்தான்? இத்தனைக்கும் அவளும் நானும் தினமும் சந்தித்ததில்லை மணிக்கணக்கில் காதல் மொழிகளை பேசிக்கொள்ளவில்லை… அப்படியிருந்தும் இத்தனை அன்பும் காதலும் எப்படி சாத்தியம். இதோ சாத்தியப்படுத்தியிருக்கிறாளே என் தேவதை. இவளின் இந்த காதலுக்காக தான் எதையும் செய்யலாமே…! என்று முடிவெடுத்தவனாக தன் காதலியோட மானசீகமாக பேசினான்… “என்மேல உனக்கு அவ்வளவு காதலாடி..?! எங்க என்னை இழந்துடுவியோன்னு பயந்துபோய் தான் காய்ச்சலில் விழுந்துட்டியா…?! என்னை மன்னிச்சிடுடி கண்ணம்மா…?! இனி உன் மனம் புண்படும்படி ஒரு நாளும் நடந்துக்க மாட்டேன்டி! என்று அவளிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டான்.

ஆனால் தன்னை அவள் மன்னிப்பாளா என்ற சந்தேகமும் அவனுக்கு தோன்றாமலில்லை ..ஆனால் தன் மீதான அவளின் காதலில் அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டாக எளிதில் அவளை சமாதானப்படுத்தி விடலாம் என்று நம்பிக்கை கொண்டான்.

ஆனால் அது அத்தனை சுலபமில்லை என்பதை அவன் அப்போது உணரவில்லை…!



(கையணைக்க வருவான்..!)

உங்கள் கருத்துக்களை கீழேயுள்ள கருத்து திரியில் பதியுங்கள் பேபீஸ்...



நிறைய பேர் படிக்கிறீங்க..ஆனால் சிலர் மட்டுமே கருத்துக்களை சொல்றாங்க நிறைய பேர் அமைதியா படிச்சிட்டு கடந்துடுறீங்க.. உங்க கருத்துக்கள் தான் எங்களை போன்ற புதிய எழுத்தாளருக்கு டானிக் மாதிரி அதனால் தயவு செய்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் பேபீஸ் 😍😘
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் :10


7893 7898


அடுத்து வந்த நாட்களில்…. தாமரையின் காய்ச்சல் குணமான போதும் அவளது முகத்தில் பழைய பொலிவின்றி எந்நேரமும் ஏதோ யோசனையில் இருந்தவளை குடும்பத்தினர் என்னவென்று விசாரித்தும். அவள் கதிரவன் தன்னை நிராகரித்த விஷயத்தை யாரிடமும் கூறவில்லை.


தன்னுடைய கல்யாண கனவுகளில் இருக்கும் பெற்றோரிடமும் அண்ணன்களிடமும் இதைக் கூறி அவர்களையும் வருத்த அவளுக்கு விருப்பமில்லை. எப்படியும் அவனே கல்யாணத்தை நிறுத்திவிடுவான் அப்போது தெரிந்து கொள்ளட்டுமே. இப்போதே கூறி தான் ஏன் அவர்கள் நிம்மதியையும் குலைக்க வேண்டும் என்று எண்ணினாள்.


அவனது நிராகரிப்பு தந்த வலியில் அவள் தனக்குள் ஒடுங்கிப் போனாள்.எதன் மீதும் நாட்டமின்றி வெறித்த பார்வையோடு…பொலிவிழந்த சிற்பமாய் அமர்ந்திருந்தவளின் அறையில் சகோதரர்கள் இருவரும் நுழைந்தனர். அவர்களின் வரவைக்கூட உணராது சோக சித்திரமாக அமர்ந்திருந்தவளை கண்டு திகைத்து ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். காய்ச்சல் வந்ததிலிருந்து தங்கை உற்சாகமின்றி … எப்போதும் தன்னறையிலையே முடங்கி கிடப்பதை… அவர்களும் தான் கவனித்தார்களே!


பாண்டி “குட்டிமா என்று மெதுவே அழைக்க… தன் நினைவில் மூழ்கியிருந்தவள் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.


அண்ணன்கள் இருவரையும் கண்டதும்….தன் வேதனையை மறைத்துக் கொண்டு புன்னகையுடன் அவர்களை நோக்க..
“குட்டிமா …ஏன் ஒரு மாதிரியா இருக்க…ஏதாவது பிரச்சனையா? இல்லை திரும்பவும் உடம்புக்கு ஏதாவது பண்ணுதா..?என்று பாண்டியும், டாக்டரைக் கூப்பிடலாமா? “ என்று இளாவும் கனிவாக கேட்க..
அண்ணன்களின் பரிவில் கண்களை கரித்துக் கொண்டு வர முயன்று அதை அடக்கிக் கொண்டவள். வரவழைத்துக் கொண்ட மலர்ச்சியுடன்.

“நான் நல்லாத்தான் இருக்கேன் அண்ணா..எனக்கு ஒண்ணுமில்லை…காய்ச்சல் வந்ததால கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்வளவு தான் நீங்க கவலைப்படாதீங்க இன்னும் ரெண்டு நாள் போனா சரியாப் போய்விடும்” என்றாள் புன்னகையுடன்.


“என்னவோ போடா நீ இப்படி ஒரே இடத்தில் துவண்டு போய் படுத்திருக்குறதைப் பார்க்க கஷ்டமாயிருக்குடா. எப்பவும் கலகலப்பா பேசி வம்பிழுக்கும் தாமரையை ரொம்பவே மிஸ் பண்றோம்” என்று கவலையாக சொன்னவனை , பாண்டி ஆமோதிப்பாய் பார்க்க.. அவர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் மௌனம் காத்தாள்.
தாமரையின் இந்த திடீர் மாற்றம் அவர்களுக்கு சந்தேகத்தை விதைத்தது …அதனால்தான் அவர்கள் தங்கையிடம் பேசிப்பார்க்க வந்தனர்.


“ஆமாம் உன் போனுக்கு என்னாச்சு…? மாப்பிள்ளை இரண்டு நாளா உனக்கு கால் பண்றாராம் போன் சுவிட்ச் ஆப்னு வருதாமே?” என்று சொன்ன இளமாறனை ‘விலுக்’ கென்று நிமிர்ந்து பார்த்தவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை பாண்டி கூர்மையாக பார்க்க…. அண்ணனின் துளைக்கும் பார்வையை உணர்ந்தவள் சட்டென்று தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டாள்.


“அ…து வந்து போனு….கை தவறி கீழே போட்டுட்டேன்… அதுக்கப்புறம் அது ஆன் ஆகலைண்ணா.. அதான்” என்றாள் சமாளித்தபடி..!


“ஓ…சரி கொடு என்னாச்சுன்னு பார்க்குறேன்” என்றவனிடம் அன்று கீழே விழுந்ததில் இரண்டாக சிதறிய தன் அலைபேசியை எடுத்து கொடுக்க…விழுந்ததில் தனியே கழன்றிருந்த பாகங்களை பொருத்தி பாட்டரியை இணைத்து சுவிட்ச் ஆன் செய்தவுடன் போன் ஆனாகிவிட “நல்லாத்தான் இருக்கு போன்ல சார்ஜ் தான் இல்லை” என்றவன் சார்ஜரை தானே இணைத்து அவளது கட்டிலை ஒட்டிய சிறு மேசையில் வைத்தான்.


“உனக்கு காய்ச்சல்னு தெரிஞ்சதும் மாப்பிள்ளை ரொம்பவே பதறிட்டாரு தெரியுமா..? தினமும் கால் பண்ணி உனக்கு எப்படியிருக்குன்னு விசாரிப்பாரு. உன்கிட்ட பேச சொன்னேன்..ஆனா அவரு தான் பரவாயில்லை டிஸ்டர்ப் பண்ணவேணாம் நான் அப்புறமா பேசறேன்னு சொல்லி வச்சிட்டாரு”. என்ற இளாவை உணர்வுகளை தொலைத்த பார்வை பார்த்தவள் அமைதியாகிவிட அதை வெட்கம் என்று நினைத்து அவர்களும் சிறிது நேரம் தங்கையுடன் கதிரவனை இணைத்து கேலி பேச.. அவர்களுக்காக பொய்யாக வெட்கப்படுவது போல நடித்தவள் கலங்கிய கண்களை அவர்களுக்கு தெரியாமல் மறைக்க தலையை குனிந்து கொண்டாள்… பிறகு அவளை ஓய்வெடுக்குமாறு சொல்லிவிட்டு தமையன்மார் இருவரும் அவளின் அறையை விட்டு வெளியேறினர்.


அவர்கள் வெளியேறியதும்…மீண்டும் தனிமையில் அவனின் நினைவுகள் அவளை சூழ்ந்து கொள்ள இளாவின் வார்த்தைகளை மீண்டும்…நினைவு கூர்ந்தவள் அவன் எதுக்காக தன்னைப்பற்றி விசாரிக்க வேண்டும்? என்னிடம் பேச இன்னும் என்ன இருக்கிறது?அதான் பேச வேண்டியதை போதும் போதும் என்ற அளவுக்கு பேசி விட்டானே? இன்னும் என்ன தான் வேண்டுமாம் அவனுக்கு..? ஒரு வேளை என்னை கல்யாணத்தை நிறுத்தி விட சொன்னானே….அதற்காக இருக்குமோ? அப்படித்தான் இருக்கும்? என்று நினைத்து தன்னைத்தானே வருத்திக் கொண்டவள்... துரத்தும் அவனது நினைவுகளிலிருந்து தப்பிக்க நினைத்தவளைப் போல தன்னறையைவிட்டு வெளியே வந்தவள்…கீழே வரவேற்பறையின் ஷோபாவில் சென்று அமர்ந்தாள்.


இரண்டு நாட்களுக்கு பிறகு கீழே இறங்கி வந்த தன் சின்ன எஜமானியை கண்ட வள்ளி ஓடிவந்து நலம் விசாரிக்க…அவளுக்கு புன்னகையுடன் பதில் சொன்னவள்.


“வள்ளி…. எங்கே வீட்டில் யாரையும் காணோம்?” என்று வினவ..


“அய்யாவும் ,அம்மாவும் கோவிலுக்கு போயிருக்காங்க… சின்னய்யாங்க ரெண்டு பேரும் இப்ப தான் கிளம்பி எங்கேயோ போனாங்க….! போகும் போது அம்மா உங்களைப் பார்த்துக்க சொல்லி சொல்லிட்டு தான் போனாங்க …. நானே ஜீஸ் எடுத்துக்கிட்டு மேலே வரலாம்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்களே இறங்கி வந்துட்டீங்க…நான் போய் ஜூஸ் போட்டு எடுத்துக்கிட்டு வர்றேன் இருங்க... பார்க்க ரொம்பவே களைப்பா தெரியறீங்க…” என்றவள் சமையலறைக்கு விரைந்து விட்டாள்.


சிறிது நேரம் அங்கிருந்த பத்திரிக்கைகளை புரட்டிக் கொண்டிருந்தவளுக்கு எதிலும் மனம் இலயிக்கவில்லை. அதை மடித்து வைத்தவள்…. டீப்பாயிலிருந்த ரிமோர்ட் எடுத்து டி.வியை இயக்கி சேனல்கள் ஒவ்வொன்றாய் மாற்றிக்கொண்டே வந்தவள்.. பழைய திரைப்பட பாடல்கள் ஒளிபரப்பும் சானலில் வைக்க.. அதில் ஒலித்த பாடலில் தன்னை மறந்து திரையை வெறித்தாள்.



காவேரி ஓரம் கவி சொன்ன காதல் …..
கதைசொல்லி நான் பாடவா… உள்ளம் அலைமோதும் நிலை
கூறவா…!
எந்தன் கனிவான காதல் ..
முடிவாகும் முன்னே கனவான கதை கூறவா….பொங்கும்
விழிநீரை அணை போடவா….
மணவாழ்வு மலராத மலராகுமா…?
மனதாசை விளையாத பயிராகுமா…!?
உருவான உயரன்பு பறி போகுமா..!?

உயிர் வாழ்வு புவி மீது சுமையாகுமா…சுமையாகுமா?!”

என்ற கடைசி வரிகளைக் கேட்டதும் தன்னை மீறிக் கேவல் உருவாக இருகைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டு கண்களில் கண்ணீர் பெருக தன்னறையை நோக்கி ஓடினாள்…!!


அறையை தாளிட்டவளுக்கு துக்கம் தொண்டையை அடைக்க அப்படியே தரையில் மடிந்து அமர்ந்து ஆற்றுவாரின்றி கதறித் துடித்தாள்.
எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ..அறைகதவு தட்டும் ஒலியில் கலைந்தவள் முகத்தை கழுவிக்கொண்டு அறைக்கதவை திறக்க…வள்ளி வெளியே பழச்சாறோடு நின்றிருந்தாள்.


“சின்னம்மா…. ஜூஸ் போட்டு எடுத்துட்டு வந்து பார்த்தேன் உங்களைக் காணோம்…! வருவீங்கன்னு பார்த்தேன் வரலை அதான் நானே கொண்டு வந்தேன்...என்றபடி அவளது முகத்தை பார்த்து பதறியவள்… “
“என்னாச்சும்மா ..! முகமெல்லாம் சிவந்து கண்ணு வீங்கியிருக்க மாதிரியிருக்கு, திரும்பவும் காய்ச்சல் வந்துடுச்சா?!” என்று பதட்டத்துடன் கேட்டவளிடம்….


“இல்ல வள்ளி தலைவலிக்குற மாதிரியிருந்தது அதான் கொஞ்சம் படுத்துக்கலாம்னு வந்துட்டேன்..! “

“சரிம்மா அப்ப சூடா இஞ்சி ஏலக்காய் தட்டி போட்டு ஸ்ட்ராங்கா டீ போட்டு எடுத்துட்டு வரவா…?தலைவலியெல்லாம் பறந்து போகும்” என்று பரிவாக கேட்டவளிடம் மறுக்க இயலாது சரி என்க…


“இதோ ரெண்டு நிமிஷத்தில் எடுத்துக்கிட்டு ஓடி வரேன் என்று விரைந்து சென்றவள் சொன்னதைப் போல.. ரெண்டே நிமிடத்தில் ஆவி பறக்கும் டீயோடு வந்தாள். அதை வாங்கிப் பருகியவளுக்கு அந்த நேரத்திற்கு அது தேவையாகவே இருந்தது பருகி முடித்து கோப்பையை கொடுத்தவள் “தேங்க்ஸ் வள்ளி..! உண்மையிலேயே டீ ரொம்ப நல்லாயிருந்தது… ! என்று மெல்லிய புன்னகையோடு சொன்ன தன் சின்ன எஜமானியை முகம் விகசிக்க பார்த்த வள்ளி …என்னம்மா நீங்க போய் எனக்கு நன்றியெல்லாம் சொல்லிக்கிட்டு... என்று கூச்சப்பட்டவள்… நீங்க கொஞ்சம் படுத்து ஓய்வெடுங்கம்மா.. நான் போய் சமையல் வேலையை பார்க்குறேன்”. என்றவள் அறைக் கதவை சாத்திவிட்டு வெளியேறினாள்.


தன்னறையின் பால்கனியின் ஊஞ்சலில் சென்று அமர்ந்தவளின் பார்வை தூரத்தில் இருந்த தொடுவானில் நிலைத்தது. அறையில் தன் கைப்பேசி ஒலியெழுப்பும் சத்தம் கேட்டு எழுந்து வந்தவள். எடுத்து பார்க்க அது கதிரவன் காலிங் என்றது…! அவனது அழைப்பில் முதலில் பதற்றம் அடைந்தவள் பிறகு எடுப்பதா வேண்டாமா…. என்று யோசிக்க அதற்குள் அழைப்பு நின்றுவிட… பெரு முச்சோடு திரையை வெறித்தாள். சற்று நேரத்தில் திரும்பவும் அழைத்தான். கண்களை ஒரு கணம் மூடித் திறந்தவள் முடிவெடுத்தவளாக அழைப்பை ஏற்றாள்.


அந்தபக்கம் அழைத்த கதிரவன் பெருந் தயக்கத்துடன் “ஹ..லோ….பே……தா…மரை என்றான் தடுமாற்றத்துடன் . இந்த பக்கம் அவள் மௌனத்தை தொடர….தாமரை.... காய்ச்சல்னு சொன்னாங்க இப்ப பரவாயில்லையா…? என்று குரலில் அன்பைத் தேக்கி பரிவாய் கேட்டவனின் கரிசனையில் கண்களில் கண்ணீர் திரள …பேச நினைத்த வார்த்தைகள் வராமல் தொண்டைக்குழியிலேயே சிக்கிக் கொள்ள “ம்ம்ம்…” என்றாள் வெளிவராத குரலில்.
அவளின் நிலையை உணர்ந்து கொண்டவன்….
“சாரி”…. என்றான் மனமுவந்து..!


நெஞ்சில் நெருப்பள்ளிக் கொட்டிவிட்டு…இப்போது எதற்காக இந்த மன்னிப்பு என்று எண்ணியவளுக்கு சினம் துளிர்த்தது.! ஆயினும் அடக்கிக் கொண்டவளுக்கு தன்மானம் தலை தூக்க..! தன் மனதை அவனிடம் வெளிப்படுத்த விரும்பாமல்… அமைதி காத்தாள்.

அவனுக்குமே தன்நிலையை அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை… இருப்பினும் தன்னை அவளுக்கு புரிய வைத்துவிடும் நோக்கோடு….
“நான் அன்னைக்கு உன்கிட்ட சொன்…… “ என்றவனை பாதியிலேயே இடைமறித்தவள்..


“இதோ பாருங்க.. உங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லைனா…தாராளமா உங்க வீட்டில் இருக்கிறவங்க கிட்ட சொல்லி இந்த கல்யாணப் பேச்சை இதோட நிறுத்திக்கோங்க.!. அதைவிட்டு என்னை நிறுத்த சொல்லாதீங்க…! அது என்னால முடியாது..! இதுக்கு அப்புறமா இது விஷயமா எனக்கு கால் பண்ணாதீங்க…” என்று படபடவென்று பொரிந்தவள் அவனது பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்துவிட்டாள்.


அந்தப்பக்கம் கதிரவனோ அவளது பேச்சில் முதலில் திகைத்தவன்.. பின்னர் அவள் அழைப்பை துண்டித்ததில் செல்ல கோபம் கொண்டான்.


“ அம்மாடியோவ்….!! என் மொசக்குட்டிக்கு என்னா கோவம் வருது…! நான் என்ன சொல்ல வரேன்னு முழுசா கூட கேட்காம.. எண்ணெயில் போட்ட கடுகு மாதிரி இந்த வெடி வெடிக்குறாளே...! என்று ஆச்சரியப்பட்டவன். திரும்பவும் அவளுக்கு அழைத்தான். அது அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் சொன்னது. அதைக் கேட்டு தலையில் கை வைத்தவாறு அமர்ந்துவிட்டான்.

அவளை எப்படி அணுகுவது என்று யோசித்தவனுக்கு ஒரு வழியும் புலப்படவில்லை. ஏற்கனவே அவளை தான் காயப்படுத்தியது போதும் என்று நினைத்தவன் மேலும் அவளை துன்புறுத்த விரும்பவில்லை.


அருணாச்சலமும் பார்வதியும் பாண்டியன் திருமணத்திற்கு சம்மதித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்தவர்கள்…இந்த இரு திருமணங்களும் நல்லபடியாக எந்த வித தடைகளும் இன்றி நடக்க வேண்டும் என்று அக்னியே ரூபமாய் கொண்ட அண்ணாமலையானிடம் மனமுருக வேண்டிக்கொண்டு… உண்ணாமுலை அம்மனையும் கண்குளிர தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பினர்.


மனநிறைவுடன் வீடு வந்து சேர்ந்தவர்கள் திருப்தியுடன் வரவேற்பரையின் இருக்கையில் அமர…. அவர்களின் வரவை உணர்ந்தவளாக வள்ளி இருவருக்கும் பழச்சாறு கொண்டு வந்து தர… கணவருக்கு கொடுத்து விட்டு தானும் எடுத்துக் கொண்ட பார்வதி


“வள்ளி தாமரைக்கு ஜூஸ் குடுத்தியா என்று வினவ..அவள் நடந்ததை கூறினாள்.
“என்ன..? திரும்பவும் தலைவலின்னு சொன்னாளா.. ?” என்று கவலையாக வினவியவர் மகளின் அறைக்கு விரைந்தார். அருணாச்சலம் தானும் உடன் சென்றார்.
கட்டிலில் கண்மூடி படுத்திருந்த தாமரையை நெருங்கியவர் பக்கத்தில் அமர்ந்து நெற்றியை இதமாக வருட… அவரின் வருடலில் கண்திறந்து பார்த்த தாமரை பெற்றோரை பார்த்ததும் எழுந்து அமர்ந்தாள்.
“என்னாச்சு டா திரும்பவும் தலைவலின்னு வள்ளி சொன்னாளே என்று கவலையோடு வினவிய தந்தையின் கையை பற்றி தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவள்.. “இருந்தது ஆனா இப்போ இல்லை…வள்ளி கொடுத்த டீயில் தலைவலி சரியாப் போச்சுபா” என்றாள் புன்னகையுடன்.
மகளின் முகம் இரண்டு நாட்களுக்கு பிறகு சற்று தெளிந்திருப்பதில் நிம்மதியடைந்தனர் பார்வதியும் அருணாச்சலமும்.


“ஆமாம் திடீர்னு இரண்டு பேரும் ஜோடியா எங்கே போய்ட்டு வர்றீங்க”
மகளின் இயல்பான கிண்டலில் முகம் மலர்ந்தவராக பாண்டி திருமணத்திற்கு சம்மதித்த விஷயத்தை மகளிடம் கூறியவர்கள்… “அதான் இந்த ரெண்டு கல்யாணமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக நடந்து முடியனும்னு வேண்டிக்கிட்டு வந்தோம்..!” என்று கூறியவர் பிரசாதத்தை எடுத்து மகளின் நெற்றியில் வைத்து விட்டார் .


அண்ணன் திருமணத்திற்கு சம்மதித்ததில் முதலில் மகிழ்ந்தவள். பிறகு கதிரின் பேச்சு நினைவு வந்ததும் முகம் சுருங்கிபோனாள். அவனுக்கு தான் இந்த திருமணத்தில் விருப்பமில்லையே அப்புறம் எப்படி இரண்டு திருமணம் நடக்கும்…! அய்யோ என்னால அண்ணனோட கல்யாணமும் நின்னுடுமே…எப்படியும் எங்க கல்யாணம் நடக்கலைன்னா அண்ணனும் தமிழரசியை கட்டிக்க சம்மதிக்காதே. என்று எதையெதையோ நினைத்து குழம்பினாள்.


மகளின் முகத்தில் யோசனையை கண்ட அருணாச்சலம் தாமரை என்னடா யோசிக்கிறே..? என்க


“ஒண்ணுமில்லைப்பா இந்த விஷயம் அவங்க வீட்டுல எல்லாருக்கும் தெரியுமா?”


“என்னடா இப்படி கேட்குற…இந்த விஷயத்தை நேற்றே மாப்பிள்ளை வீட்டுக் காரவங்க கிட்ட பேசியாச்சு..! அவங்களுக்கும் இதில் பரிபூரண சம்மதம். “ஏன்…. பார்வதி! நீ தாமரைக்கிட்ட இந்த விஷயத்தை சொல்லலையா ?!”.


"இன்னும் இல்லைங்க…இவ தான் இரண்டு நாளா காய்ச்சல்ல கிடந்தாளே..‌இன்னைக்குத்தான். புள்ள எழுந்தே உட்கார்ந்து இருக்கா…அந்த கவலையிலே இந்த விஷயத்தை இவ கிட்ட சொல்ல மறந்துட்டேங்க..”
அவங்களுக்கும் இந்த ஏற்பாட்டில் முழு சம்மதம்னு சொல்லிட்டாங்க நாம நம்ம சொந்தங்களோட நாளைக்கே நல்ல நாளா இருக்கறதால பொண்ணு பார்க்க போகலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்..!
பாண்டிக்கும் தமிழரசிக்கும் ஒருத்தரையொருத்தர் பிடிச்சிட்டா அடுத்து வருகின்ற முகூர்த்தத்திலேயே நிச்சயம் பண்ணிட வேண்டியது தான் என்றார் முகம் கொள்ளா புன்னகையோடு.


பெற்றோரின் சந்தோஷம் நிலைக்க வேண்டுமே என்று தாமரையின் மனதில் தவிப்பு எழுந்தது. இப்ப என்ன முடிவு பண்ணுவாங்க.. தங்கைக்காக போனா போகுதுன்னு வேறு வழியில்லாம… தன்னை மணக்க சம்மதிப்பானோ… ? அப்படி மட்டும் நடந்தால் தன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா..?! அப்படி ஒரு வாழ்வு தனக்கு தேவையா? அது பற்றி பேசத் தான் தன்னை அழைத்தானோ…?! அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற பெருந் துயரமும் கவலையும் அவளை ஆட் கொண்டது .


“கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது..? மனதுக்கு பிடிச்சவரையே மணக்க நினைத்தது அவ்வளவு பெரிய தவறா? தன் மனம் படும் பாட்டை சொல்லியழவும் ஒருவருமின்றி…தனக்குள்ளேயே புழுங்கித் தவித்தாள் அந்த பேதை. ஆனால் அவளை இத்தகைய துயரத்தில் தள்ளியவனோ… தன் தங்கையை பாண்டிக்காக பெண் கேட்டு வருவதையறிந்து மிகுந்த சந்தோஷத்தில் இருந்தான். தன்னவளுடனான மணவாழ்வின் இன்பக்கனவுகளில் மூழ்கித் திளைத்தான். அவளுக்கு தன்னை உணர்த்திவிடும் பொருட்டே அவன் அன்றைக்கு அழைத்தது.. ஆனால் அவனை பேசவிடாமல் அவள் கோபமாய் அலைபேசியை துண்டிப்பாள் என்பதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை…! அதன் பிறகு எத்தனையோ முறை அவளுக்கு அழைத்தும் தன்னுடைய அழைப்பை அவள் ஏற்காதது அவனுக்கு மிகுந்த வேதனையை அளித்த போதும்…தன்னுடைய தவறுக்கான தண்டனையாக அதை ஏற்றுக்கொண்டான். எப்படியும் அவளை சமாதானப்படுத்தி விடமுடியும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தான். அவனது நம்பிக்கை பலிக்குமா…?! தாமரை அவனை புரிந்து கொள்வாளா..? பார்ப்போம்.




(கையணைக்க வருவான்..!)




ஹாய் பேபீஸ்....!! எப்படியிருக்கீங்க...?!
கதையின் 10வது அத்தியாயத்தை பதிந்து விட்டேன் படித்து விட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்கப்பா...! போன அத்தியாயத்தை படித்துவிட்டு கமெண்ட் பண்ண எல்லா பேபீஸ்க்கும் நன்றி...&உம்மா😍😍😘😘😘😘😘 அடுத்த பதிவில் தமிழரசியோடு... வருகிிறேன்.



கருத்துத் திரி:👇🙏🙏🙏🙏🙏
[URL
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் :11

81178125


எலியட்ஸ் கடற்கரையை ஒட்டிய பகுதியான பெசண்ட் நகர் ஏரியாவில் சுமார் 2 கிரவுண்ட் நிலப்பரப்பின் மையத்தில் ஒரு ஹால் 4 படுக்கை அறைகளோடு பூஜையறை...ஓரளவு பெரிய சமையலறை... அதை ஒட்டி ஆறு பேர் அமர்ந்து சாப்பிட வசதியாக மேசை இருக்கையோடு உணவு உண்ணும் அறை …கடைசியாக வேண்டாத பொருட்கள் போட்டு வைக்கும் ஒரு சிறிய அறை… அதைத் தொடர்ந்து தோட்டத்திற்கு செல்ல பின்புறம் வாசல் கதவோடு வழி இருக்க.. பின்புற தோட்டத்தில் கிணறும் துணி துவைக்க வசதியாக ஒரு கல்மேடையும் இருந்தது.


வரவேற்பரையின் இடது புறம் மேல் தளத்திற்கு செல்ல படிக்கட்டுகள் அழகாக வளைந்து செல்ல…வரவேற்பறையோடு ஒட்டிய பால்கனியில் நின்று கீழே ஹாலைப் பார்வையிட வசதியாக அமைக்கப்பட்டிருந்தது. முதல் தளத்தில் இரு அறைகளும் மீதி இடம் அப்படியே கட்டப்படாமலும் விடப்பட்டிருந்தது.


மேலே இருந்த இரு அறைகளில் ஒன்றை கதிரவனும் மற்றொன்றை தமிழரசியும் பயன்படுத்தினர். கட்டப்படாமல் காலியாக இருந்த இடத்தை கதிரவன் உடற்பயிற்சி செய்ய பயன்படுத்திக் கொண்டான். அதனால் அதற்குரிய உபகரணங்கள் அங்கே ஒருபுறம் வைக்கப்பட்டிருந்தது. அதற்கும் மேலே மொட்டை மாடி என்று அனைத்து வசதிகளோடும் அதே சமயம் நகரத்திற்கே உரிய பாணியில் நவீன முறையில் கட்டப்பட்டிருந்தது அந்தவீடு.


வீட்டுக்கு வெளியே அனைத்து வகையான பழ மரங்கள் சுற்றுச்சுவரை ஒட்டியவாறு வரிசையாக செழித்து வளர்ந்திருக்க… மறுபுறம் பூச்செடிகளான சாதிமல்லி, இருவாட்சி அடுக்குமல்லி, அரளி, பவளமல்லி, பாரிஜாதம் என்று அழகாக பராமரிக்கப்பட்டு பூத்துக் குலுங்க...நடுவில் சிறிய அளவில் புல் தரையும் அதில் ஒரு மூங்கில் ஊஞ்சலும் இரு மூங்கில் இருக்கைகளும் அமர்வதற்கு ஏற்றவாறு போடப்பட்டிருக்க.. வீட்டுக்கு பின்பக்கம் சிறிய அளவில் தோட்டம் அமைத்து காய்கறிகள் பயிரிடப்பட்டிருக்க…. அதில் ஒருபுறம் கீரைவகைகள் பாத்திகட்டி அழகாக செழித்து வளர்ந்திருக்க… பார்ப்பதற்கு எளிமையான அழகோடு குட்டி நந்தவனத்திற்கு நடுவில் அழகாக அமைந்திருந்தது சொக்கநாதரின் வீடு…!


அதிகாலையிலேயே அந்த வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து அழகிய கோலம் போடப்பட்டிருக்க… அந்த வீட்டின் பூஜை அறையில்.. வீட்டின் தலைவி மீனாட்சி

“திருவாக்கும் செய்கருமம்
கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும்
ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தங்கை".

என்ற விநாயகர் துதியோடு வரிசையாக வேறு பல மந்திரங்களையும் உச்சரித்தவாறே பூஜை அறையில் விளக்கேற்றி வணங்கிவிட்டு… தூபக்காலில் கங்குகள் தயாராக இருக்க அதில் சாம்பிராணி இட்டவர் பூஜை அறையில் தெய்வங்களுக்கும் பின்னர் வீடு முழுவதும் காட்டி விட்டு கற்பூர ஆரத்தியுடன் பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்தார்.

மங்களகரமான சிவந்த முகத்தில் மஞ்சள் பூசி முகத்திற்கு பொருத்தமான குங்குமப் பொட்டு இட்டு நெற்றி வகிட்டில் குங்குமம் துலங்க… சாத்வீகமான அழகோடு எப்போதும் இள நகை சிந்தும் முகத்தோடு... எளிமையான காட்டன் புடவையில் தலைமுடியை நுனியில் முடிச்சிட்டு நடந்து வந்தவர்.

சமையலறையில் நுழைந்து பாலை காய்ச்சி பில்டரில் காபிப் பொடி போட்டு வெந்நீர் ஊற்றி மூடி வைத்தவர்..
காலை உணவை சமைக்க ஆரம்பித்தார் இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி வைத்தவர் தொட்டுக் கொள்ள சட்னியும் சாம்பாரையும் செய்து முடித்து ..மதிய சமையலுக்கு வேண்டிய காய்கறியை நறுக்க ஆரம்பிக்கவும்… வெளியே நடைப்பயிற்சியை முடித்து விட்டு கணவரும் மகனும் வந்து விட்ட அரவம் கேட்டு மூவருக்குமாக காபியை கலந்து எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்கு வந்தார்.


கணவருக்கும் மகனுக்கும் கொடுத்துவிட்டு தானும் எடுத்துக் கொண்டு அமர்ந்தார்.

காபியை பருகியவாறே.. மீனாட்சி
"என்னங்க நாளைக்கு சம்மந்தி வீட்டுல எத்தனை மணிக்கு வராங்கன்னு விசாரிச்சீங்களா?"


பத்திரிக்கையை படிப்பதற்காக எடுத்து கொண்டிருந்த சொக்கநாதர்...அதை மூடி வைத்து விட்டு...


"இன்னைக்கு காலையில் கிளம்பி சாயந்திரம் சென்னை வந்துடுவாங்களாம்… அதுக்கு பிறகு நாளைக்கு பத்துமணிக்கு கிளம்பி வந்துடுவோம்னு சம்பந்தியே போன் போட்டு நேற்றே சொல்லிட்டாரு…!
ஆமா... விஷயத்தை அரசிகிட்ட சொல்லிட்டியா..! நாளைக்கு எங்கேயாவது பிரண்ட்ஸூங்க கூட ஊரை சுற்ற கிளம்பிடபோறா…!” என்ற கணவரிடம்….

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேங்க.. நீங்க பரமேஸ்வரன் மாமாவை ஒரு வார்த்தை குடும்பத்தோடு வரச்சொல்லி சொல்லிட்டீங்க தானே…!" என்று வினவ..

"என்ன மீனாட்சி இப்படி கேட்டுட்ட? அவரால தானே இந்த சம்பந்தமே நமக்கு அமைஞ்சது அவரை கூப்பிடாம இருப்பேனா? அதெல்லாம் சம்மந்தி போன் போட்டு விஷயத்தை சொன்னதும் அண்ணனை அழைச்சிட்டேன்…. அவரும் சந்தோஷமா குடும்பத்தோடு வர்றேன்னு சொல்லிட்டாரு..! என்றதில்
திருப்தியுடன் தலையசைத்த மீனாட்சி..

"அதுக்கு முதலில் வீட்டை கொஞ்சம் ஒதுக்கி வர்றவங்க உட்கார்ந்து பேச வசதியா ஷோபாக்களை சரியா...போடனும். என்று அடுத்தடுத்த வேலைகளை பட்டியலிட…

“அதையெல்லாம் ஆளைவச்சி முடிச்சிடு எல்லாத்தையும் நீயே இழுத்து போட்டு செய்யாதே” என்று மனைவியை கடிந்தவர்.. மகனிடம் "கதிர் ... நாளைக்கு உனக்கு முக்கியமான அப்பாயிண்ட்மெண்ட் (appointment) எதுவுமிருக்கா?" என்றார் மகன் வகிக்கும் பதவியை மனதில் கொண்டவராக!


"அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்க கவலையை விடுங்கப்பா! எனக்கு எதாவது வேலை இருக்கா சொல்லுங்க செய்யிறேன்" என்றான் பொறுப்பான அண்ணனாக.


"இப்போதைக்கு எதுவும் இல்லபா.. நம்ம நெருங்கின சொந்தங்களை மட்டும் தான் கூப்பிடனும் மீதிபேரை நிச்சயதார்த்திற்கு கூப்பிட்டுக்கலாம். அவங்களை நானே போன் பண்ணி கூப்பிட்டுக்கிறேன்.
ஏதாவது தேவைப்பட்டா அப்புறமா சொல்றேன்"

"மீனாட்சி…! வர்றவங்க சாப்பிட இனிப்பு, காரம் ஏதாவது வாங்கனுமா? காலேஜ் விட்டு வரும்போது வாங்கிட்டு வந்துடறேன்" என்று வினவ..


"அதெல்லாம் வேணாங்க நான் வீட்டிலேயே செஞ்சிடுறேங்க.. கடையில வாங்குனா டேஸ்ட் எப்படியிருக்குமோ…? என்னவோ.. இனிப்பு காரம் தானே சாரதாவை துணைக்கு வச்சி நானே செஞ்சிடுவேன்" என்க..


"மீனாட்சி வீட்டை சுத்தம் பண்ண..அது இதுன்னு எக்க சக்க வேலையோட அரசியை வேற ரெடிபண்ணனுமே…? ஒத்தையாளா உன்னால முடியுமா? என்றார் மனைவியின் மீது கொண்ட கரிசனையால்.

"இதெல்லாம் பெரிய விஷயமா என்ன..? அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க கவலையை விடுங்க" என்ற
மனைவியின் பதிலில் திருப்தி அடைந்தவராக எழுந்து சென்றார் சொக்கநாதர்.


மீனாட்சியோ மகளை எப்படி இந்த ஏற்பாட்டுக்கு சம்மதிக்க வைப்பது என்ற யோசனையில் இருக்க..


கதிரவன் யோசனையிலிருந்த மீனாட்சியின் அருகில் புன்னகையுடன் நெருங்கி அமர்ந்தவன் அவரது தோளில் கையிட்டு


"
என்ன மீனு ஏதோ தீவிர யோசனையில் இருக்க போல? என்ன விஷயம்? என்ற மகனை திரும்பி பார்த்தவர்…

"ஆமாடா உன் தொங்கச்சி இருக்காளே அவளை நினைச்சாத்தாண்டா எனக்கு வயிறு கலங்குது‌!"

"ஏன்..? பாப்புக்கு என்ன‌‌..?" என்றான் புரியாதவனாக…

"என்னவா…? அவளே இப்ப தான் படிப்பை முடிச்சிருக்கா..எப்படியும் குறைஞ்சது மூணு வருஷமாவது வேலை பார்க்கனும்... அதுக்கு பிறகு தான் கல்யாணம்னு சொல்லிட்டிருந்தா… இப்படி மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க திடீர்னு அவளை பொண்ணு கேட்டு வருவாங்கன்னு நான் என்ன கனவா கண்டேன்…? நானும் சரின்னு தலையாட்டி வச்சேன். இப்ப என்னத்தை சொல்லி அவளை இந்த ஏற்பாட்டுக்கு சம்மதிக்க வைப்பேன்னு தெரியலைடா…!" என்று கவலையோடு சொன்ன தாயைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு பீறிட்டது.


"ஹா….ஹா…" என்று வாய்விட்டு சிரித்தவன்… உண்மையில் ரொம்பவே சிக்கலான பிரச்சினை தான்... ஆமாம்.. இதை எப்படி சால்வ் பண்ண போற மீனு?" என்றான் குறும்பு புன்னகையுடன்.. அவன் முதுகில் ஒன்று போட்டவர்.."ஏண்டா உனக்கு என்னை பார்த்தா கிண்டலா இருக்கா"? என்று முறைக்க…
அவனோ மேலும் சிரித்து வைக்க..
"அம்மாவைப் பார்த்தா
பாவமாயில்லையா…? ப்ளீஸ்...!காப்பாத்துடா மகனே..!" என்றார் கண்களில் கெஞ்சலோடு…!


“அது சரி… உன்னை யாரு அவளுக்கு சம்மதம் சொல்லச்சொன்னா? வேலைக்கு போக சம்மதம் சொன்னதோடு நிறுத்தாம மூன்று வருஷத்துக்கு அப்புறம்தான் கல்யாணம்னு அவ சொன்னா உன்னை யாரு மண்டையை ஆட்டச் சொன்னது. அதுவும் வாத்தியை ஒரு வார்த்தை கேட்காம நீ பாட்டுக்கு அவளுக்கு வாக்கு கொடுத்திருக்க
ஆமா இந்த விஷயம் நம்ம வாத்திக்கு தெரியுமா…?


“டேய் ! இந்த விஷயம் மட்டும் அவருக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாரு… அவருக்கு தெரியாம இவளை எப்படி சரிகட்டுறதுன்னு தெரியாமத் தான்டா முழிச்சிட்டிருக்கேன்!” என்றார் பரிதாபமாக!


"மீனு ….டோண்ட் வொர்ரி செல்லம் நான் எதுக்கு இருக்கேன் நான் பார்த்துக்கொள்கிறேன்… நீ போய் உன் வேலையைப் பாரு இன்னிக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு நான் இன்னைக்கு சீக்கிரம் கிளம்பனும். அதனால சாயந்திரம் வந்து பாப்புகிட்ட பேசுறேன் ஓகே‌..! இப்ப நீ என்ன பண்ற எனக்கு பசி வயித்தை பிராண்டுது நான் போய் குளிச்சிட்டு ஓடி வர்றேன்.. அதுக்குள்ள நீ போய் சமத்தா டிபன் செஞ்சு வைப்பியாம் சரியா…?!" என்று அன்னையின் முகவாயை பிடித்து கொஞ்சியவன் தன்னறைக்கு விரைந்து சென்றுவிட்டான்.


"இனி மகளை மகன் சமாளித்துவிடுவான் என்று நிம்மதியடைந்தவர் மதிய உணவை தயாரிக்க சமையலறை விரைந்தார்.


சொன்னதைப்போல சிறிது நேரத்தில் மகனும் தந்தையும் கிளம்பி ரெடியாகி வந்து டைனிங் டேபிளில் அமரவும்..காலை உணவை எடுத்துக்கொண்டு வந்த மீனாட்சி...மகனுக்கும் கணவருக்கும் பரிமாற இருவரும்
சாப்பிட ஆரம்பித்தனர்.


சொக்கநாதர்… மல்லிகை பூப்போன்ற இட்லியை பிட்டு சட்னியில் தோய்த்து உண்டவாறே…
"எங்க உன்னோட பொண்ணு இன்னும் எழவேயில்லையா?!"
என்றார் மனைவியை முறைத்தவாறே…!


திரு திருவென முழித்த மீனாட்சி... கணவருக்கு என்ன பதில் சொல்வது என்று கையை பிசைந்தாள்.

அதைப்பார்த்து மேலும் கோபம் கொண்ட சொக்கநாதர்…


"வேறொருத்தர் வீட்டுக்கு வாழ போற பொண்ணு இப்படி இருந்தா பெத்தவங்களோட வளர்ப்பு சரியில்லைன்னு நம்மளைத் தான் மீனாட்சி நாளைக்கு குறை சொல்லுவாங்க… புரிந்து நடக்க சொல்லு என்றவர்.. கோபத்துடன் சாப்பிட்டு முடித்துவிட்டு வரவேற்பறையில் வந்து அமர்ந்தார்.


செய்வதறியாது பரிதாபமாக மகனைப் பார்த்தார் மீனாட்சி… அவருக்கு கண்களை மூடித்திறந்து ஆறுதல் சொன்னவன் தானும் சாப்பிட்டு எழுந்து சென்று தந்தையின் பக்கத்தில் அமர்ந்தவன்..



"அப்பா… உங்களுக்குத் தெரியாதது இல்ல பாப்பு படிப்பை முடிச்சிட்டு வீட்டில் சும்மா தானே இருக்கா... நிதானமா எழுந்துக்கட்டுமே…! இத்தனை நாள் காலேஜ்… படிப்பு.. பிராக்டிகல் அது இதுன்னு ஓய்வில்லாம ஓடிட்டிருந்தவ இப்ப தானே ரெஸ்ட் எடுக்க முடியும்…? அதுவும் நம்ம வீட்டில் இருக்கும் வரை தான் அவளுக்கு இந்த சுதந்திரம்.. கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போனா இப்படியெல்லாம் இருக்க முடியுமோ? என்னவோ..? பெண்கள்...பிறந்த வீட்டில் இருக்கும் வரைக்குமாவது அவங்க நினைச்சதை போல இருக்கட்டுமே என்ற மகனின் வார்த்தைகளில் நியாயம் தானே என்று உணர்ந்தவர் ஒன்றும் பேசாது தன்னறைக்கு எழுந்து சென்றுவிட்டார்.


மகனது புரிந்துணர்வு கண்டு
ஒரு பெண்ணாகவும்.. தாயாகவும் கர்வமும் பெருமையுமாய் மகனை பார்த்த மீனாட்சி… "கதிர்…!" என்றார் குரல் தழுதழுக்க…


தாயின் மனதை புரிந்து கொண்டவனாக கனிவோடு அவரை பார்த்தவன்…"என்ன மீனு‌..எமோஷனலாயிட்டியா?.
நான் உன்னோட வளர்ப்பாச்சே…!" என்று அவரை தோளோடு அணைத்து தாயின் கன்னத்தில் முத்தமிட்டவன்… பிறகு சட்டென்று பீதியுடன் சுற்றும் முற்றும் பார்த்து குறும்புடன்


"வாத்தி மட்டும் இதப் பார்த்தாரு என்னை முறைச்சே கொன்னுடுவாரு…! மீ எஸ்கேப் ..! என்று வசீகரமான புன்னகையை சிந்தியவன். தாயிடம் விடை பெற்று தனக்காக காத்திருக்கும் அரசாங்க காரில் அலுவலகம் கிளம்பி சென்றான்.
பொறுப்பான பதவியில் இருப்பவன் வீட்டில் காட்டும் இந்த குறும்பு ‌முகம் மீனாட்சிக்கு புன்னகையை வரவைத்தது.


மலர்ந்த முகத்தோடு திரும்பியவர் தங்கள் அறை வாசலில் கைகட்டி தன்னை முறைத்துக் கொண்டு நின்றிருந்த கணவரை பதற்றத்தோடு பார்த்து அசடு வழிய... மனைவியை நோக்கி வந்தவர்...


"இதென்னடி நடுவீட்டுல வச்சி அம்மாவும் புள்ளையும் சேர்ந்து இப்படி கூத்தடிக்கிறீங்க…!
அவனைப்பார்த்தியா..? பொறுப்பான பதவியில் இருக்குற கலெக்டர் மாதிரியாடி நடந்துக்குறான் இன்னும் எல்‌கே‌ஜி குழந்தை மாதிரி… உன்னை கட்டிப் புடிச்சி முத்தம் கொடுக்குறான். ச்சீ.. ச்சீ..! என்று உதட்டை சுழித்தாலும் அதில் கோபம் துளியுமில்லை..!


“எத்தனை வயசானாத்தான் என்னங்க.. பெத்தவளுக்கு புள்ளை தானே…? உங்களுக்கு எதுக்கு இவ்வளவு கடுப்பாகுது?” என்று முகத்தை திருப்பிக்
கொண்ட மனைவியை பார்த்தவரின் இதழ்கடையில் சிறு புன்னகை அரும்ப சுற்றும் முற்றும் பார்த்தவர் மனைவியை நெருங்கி…


"என் பொண்டாட்டிக்கு வேற ஒருத்தன் முத்தம் கொடுத்தா அதை பார்த்து நான் கடுப்பாகாம வேற எவண்டி கடுப்பாவான்..? என்றார் கண்களில் குறும்பு மின்ன..!
கணவரது பதிலில் சட்டென்று திரும்பிய மீனாட்சியின் முகம் வெட்கத்தில் சிவக்க அதை ரசித்து பார்த்தவர் வாய்விட்டு சிரிக்க…


"போங்க மாமா கிண்டல் பண்ணிக்கிட்டு"என்று மேலும் சிவந்தவர்..கணவரது பார்வையில் இருந்து தப்பிக்க…"இருங்க நான் போய் உங்க லன்ச் பாக்ஸ் கொண்டு வர்றேன் என்றுவிட்டு சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.


சிறிது நேரத்தில் திரும்பி வந்த மனைவியின் கைகளிலிருந்து உணவுப் பையை வாங்கிக் கொண்டவர். "போய் அரசியை எழுப்பி சாப்பிட வை நீயும் சாப்பிடு… நேரங்கடந்து சாப்பிட்டா அஜீரண கோளாறு வாயுத்தொல்லை... இப்படி ஏகப்பட்ட பிரச்சினை வரும் என்று கனிவோடு உரைத்தவர் மனைவியின் கன்னம் தட்டிவிட்டு விடை பெற்று சென்றுவிட்டார்.


சொக்கநாதர் மீனாட்சிக்கு அன்பான கணவர். பிள்ளைகளுக்கு பாசமான தந்தை தான். ஆனால் சற்று கண்டிப்பானவர். கற்பிக்கும் தொழிலை செய்வதாலோ என்னவோ…மாணவர்களை நல்வழிப்படுத்த சற்று கண்டிப்பாகவே நடந்து கொள்வார். ஆம் அவர் சென்னையில் உள்ள பிரபலமான அரசுக் கல்லூரியில் கடந்த 3 வருடங்களாக முதல்வராக பணியாற்றுகிறார். கல்லூரியில் விரிவுரையாளராக தன் பணியை துவக்கியவர் படிப்படியாக முன்னேறி தன் கடின உழைப்பாலும் எளிமையாக மாணவர்களுக்கு புரியும் வண்ணம் பயிற்றுவிக்கும் தனித்தன்மையாலும், நேர்மையாலும் தான் பணியாற்றிய அதே கல்லூரியில் இன்று முதல்வராக உயர்ந்திருக்கிறார். அதனால் வீட்டில் தன் பிள்ளைகளிடமும் அதே கண்டிப்பை காட்டுவார். சிறு ஒழுக்கக்கேட்டையும் வீட்டிலும் சரி தன் கல்லூரியிலும் சற்றும் அனுமதிக்காதவர் அவர். அதே சமயம் கோபம் இருக்கும் இடத்தில் குணமிருக்கும் என்பதற் கேற்ப… நல்ல தகப்பனாய் தன் பிள்ளைகளின் தேவையறிந்து அவர்கள் ‌கேட்கும் முன்பாக தானே நிறைவேற்றுவார். படிப்பு விஷயத்திலும் தன் கருத்தை பிள்ளைகளிடம் திணிக்காது அவர்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிக்க வழிவிட்டு ஒதுங்கி நின்று அவர்களின் கனவை நிஜமாக்கிட வழிகாட்டியாக உறுதுணையாக செயல்பட்டார்.


அப்படித்தான் கதிர் தன் இலட்சியப் படிப்பான... ஐ.ஏ.எஸ் படிப்பை தேர்வு செய்த போது.. அதற்கு முழுமனதுடன் சம்மதித்து...அவனது படிப்பு சம்பந்தப்பட்ட தேவையான குறிப்புகளை எடுத்துக் கொடுத்து புத்தகங்களை.. தருவித்து கொடுத்து அவன் துவளும் போதெல்லாம் ஊக்கப்படுத்தி… நம்பிக்கை கொடுத்து அவன் முதல் முறையிலேயே இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் தேர்ச்சி அடைய மிக முக்கியமான காரணமாக இருந்தார்.


அதே போல தமிழரசியையும் அவள் விரும்பிய கணினி துறை சார்ந்த படிப்பை படிக்க வைத்தார்.



சொக்கநாதருக்கு அப்படியே எதிர்மறையான குணம் கொண்டவர் மீனாட்சி! அவருக்கு வீடே உலகம்..!
அன்பே உருவானவர். கணவரின் குணமறிந்து நடப்பவர். பிள்ளைகளிடம் அளவில்லாத பாசமும் அன்பும் கொண்டவர். தான் அன்னை என்பதை விட அவர்களிடம் தோழியாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். அதனால் பிள்ளைகள் இருவரும் சொக்கநாதரை விட மீனாட்சி யிடமே அதிக நெருக்கம் கொண்டிருந்தனர் குறிப்பாக கதிரவனுக்கு மீனாட்சியிடம் அத்தனை பாசம்…! சிறு வயதிலிருந்து தாயின் முந்தியை பிடித்துக்கொண்டே அலைவான். அவருக்கும் தன் மூத்த மகனிடம் தனி பாசம். மொத்தத்தில் அவன் அம்மா கோண்டு.
(அப்போ….கல்யாணம் ஆனதும் பொண்டாட்டி முந்தியை பிடிச்சிட்டு அலைவானோ…🤔🤔🤔🤔😜)


தமிழரசிக்கு தாயிடம் அதிக நெருக்கமிருந்தாலும் தந்தை தான் அவளது ஹீரோ..! பெண்பிள்ளைகளுக்கே உண்டான தந்தையிடத்திலான ஈர்ப்பு அவளுக்கும் உண்டு. தந்தை பணியாற்றும் கல்லூரியில் அவருக்கிருக்கும் நன்மதிப்பையும் மரியாதையும் கண்டு பெருமையும் கர்வமும் கொள்வாள். மகளாக கண்டிப்பையும் தாண்டிய பாசத்தை அவரிடம் உணர்ந்தவள் அவள்.


கணவரும் பிள்ளையும் கிளம்பியவுடன் சாப்பாட்டு மேசையை ஒதுக்கியவர் சாப்பிட்ட பாத்திரங்களை சமையலறை சிங்கில் போடவும் அழைப்பு மணி ஒலிக்க… கதவை திறக்க வீட்டுவேலை செய்யும் சாரதா நின்றிருக்க.. “ஏன் சாரதா இன்னைக்கு இவ்வளவு லேட்டு?” என்று வினவ…

“அதையேம்மா கேட்குற..? என் புருஷனுக்கு நேத்து நைட்ல இருந்து ஓரே ஜூரம்மா.. இப்ப தான்ஆஸ்பத்திரிக்கு இட்டுக்குனு போய் மருந்து மாத்திரை வாங்கி கொடுத்து அதுக்கு கஞ்சி காய்ச்சி வச்சிட்டு ஒடி வர்றேன்.


“அடடா இப்ப உன் வீட்டுக்காரருக்கு பரவாயில்லையா..? ஆமா பசங்களுக்கு என்ன கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்பி வச்ச?”


“அவருக்கு இப்ப கொஞ்சம் தேவலைமா.. புள்ளைங்களுக்கு நேற்று நைட் மீந்த சோத்துல தண்ணி ஊத்தி வச்சிருந்தேன் அதை சாப்பிட்டு பள்ளிக்கூடத்துக்கு போவ சொல்லிட்டு ஓடியாந்தேன்மா..” என்க..

"ஏன் சாரதா….. வளர்ற பிள்ளைகளுக்கு அது எம்மாத்திரம்… கிண்ணத்தில் இட்லி வச்சிருக்கேன் எடுத்துட்டு போயி பசங்களுக்கு கொடுத்து முதல்ல ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வா... கொஞ்சம் வேலையிருக்கு” என்றவர் அவளிடம் இட்லியை கொடுத்து அனுப்ப அவரை நன்றியுடன் பார்த்த சாரதா “இதோ புள்ளைங்களுக்கு கொடுத்துட்டு ஓடியாந்துடறேன்மா!” என்றவளை அனுப்பி வைத்துவிட்டு மகளை எழுப்ப மாடியேறி சென்றார்.
இது தான் மீனாட்சி… இயல்பான தாய்மையோடு இரக்க சுபாவம் கொண்டவர்.


ஹாய் பேபீஸ்..!! தாமதத்திற்கு மன்னிக்கவும். கதையின் 11வது அத்தியாயத்தை பதிந்து விட்டேன். படித்து விட்டு கமெண்டுங்கப்பா..!!
அடுத்த அத்தியாயம் இன்று இரவு இல்லை என்றால் நாளை தருகிறேன்.பேபீஸ்😍😍😘😘😘

(கையணைக்க வருவான்…!!)

கருத்து திரி :

 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் :12


8154


மகளின் அறையை அடைந்த மீனாட்சி கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.
அங்கே கட்டிலில் தலைக்கு ஒன்றும் பக்கத்தில் ஒன்றும் அதுவும் போதாது என்று…தலைக்கு மேலாக மூன்றாவது ஒரு தலையணையை வைத்து இறுக்கிக் கொண்டு அந்த வீட்டின் இளவரசி ஆனந்த சயனத்தில் இருக்க… மகள் உறங்கும் அழகைப் பார்த்து புன்னகைத்தவர்….!

“தமிழு…..தமிழு..என்று பலமுறை அழைத்துப் பார்த்து சலித்தவர். கோபம் எழ…அடியேய்… தமிழு… ஒரு நாளாவது வெள்ளென எந்திரிக்கிறாளா….?இவளால அந்த மனுஷன் கிட்ட நான் தினமும் பேச்சு வாங்க வேண்டியிருக்கு.. என்று சலித்துக் கொள்ள… அது அந்த வீட்டு இளவரசியின் காதுகளை எட்டியதற்கான எந்தவித அறிகுறியோ அசைவோ தென்படவில்லை… சற்றுப் நேரம் பொறுத்துப் பார்த்தவர் இது வேலைக்காகாது என்றுணர்ந்து மக்கிலிருந்த தண்ணீரை முகத்தை மூடியிருந்த போர்வையை விலக்கி வீசினார்…..

கனவில் தன் அபிமான ஹீரோவுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தவள் முகத்தில் சில்லென்ற நீர் பட்டதும் அடித்துபிடித்து யம்மாமாமாமா…..ஆஆஆஆஆ என்று அலறியடித்து எழுந்து தன் அன்னையை முறைத்துப் பார்த்தவள் மெதுவாக எழுந்து அமர்ந்து முகத்தில் வழிந்த நீரை வழித்து உதறியவள்…

“ஏன்மம்மி ஒய் திஸ் கொலவெறி…? எழுப்பிவிட்டா நானே போய் முகத்தை கழுவிக்க மாட்டேனா….? எதுக்கு இந்த அபிஷேகம்…?!என்று கிண்டலாக வினவியவள்…. ம்ம்ம போங்க இன்னும் நின்னுகிட்டு என்ன பார்த்துக்கிட்டிருக்கீங்க… போய்… பிரஷ்ஷை எடுத்து வந்து பல்லையும் விளக்கியும் விட்டுடுங்க….!”என்றவள் ஈஈஈஈஈஈஈஈ என்று கண்கள் குறும்பில் மின்ன பல்லை இளித்துக் காட்ட..

“அடிங்க… !” என்று கையிலிருந்த மக்கை ஓங்கிக் கொண்டு துரத்தியவருக்கு கட்டில் மீது ஏறி… இறங்கி ..குதித்து…அங்கும் இங்கும் சிறிது நேரம் ஓடி ஆட்டம் காட்டியவள்…மீனாட்சி மூச்சு வாங்க நின்று விட…. சிரித்துக் கொண்டே தாவிச் சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவளின் குறும்பை நினைத்து தலையை அசைத்து மெல்ல நகைத்தவர் “வாலு ..”என்று செல்லமாகக் கடிந்துகொண்டவர்….
அவளின் படுக்கை விரிப்பை சரி செய்துவிட்டு போர்வையை மடித்து வைத்து தலையணை சரி செய்து விட்டு…சீக்கிரம் தயாராகி சாப்பிட வருமாறு கூறிவிட்டு அவளது அறையை விட்டு வெளியேறினார்.

அடுத்த 15 நிமிடத்தில் குளித்துவிட்டு மஞ்சள் நிறத்தில் சிவப்பு பூக்கள் விரவியிருந்த நீளமான பாவாடையும் அதற்கு பொருத்தமான சிவப்பு நிற டாப்ஸூம் அணிந்து கொண்டு மாடிப்படியில் புள்ளிமானாய் துள்ளிக்குதித்து இறங்கி வரும் தன் மகளை பெருமை பொங்க பார்த்தார் மீனாட்சி..!
எந்தவித அலங்காரமும் இன்றி.. வட்ட வடிவமான சிவந்த முகமும் அதில் துறு துறு வென அலைபாயும் விழிகளும்… வில்லாய் வளைந்த புருவங்களும் அதற்கு மத்தியில் கடுகளவேயான சிறு பொட்டு செதுக்கி வைத்தது போல கூர் நாசி.. அதில் குட்டி நிலாவாய் பளபளக்கும் ஒற்றைக்கல் பதித்த முக்குத்தி… வெண்ணையை குழைத்து வைத்ததை போன்ற சதைப்பிடிப்பான பட்டு கன்னங்கள்… வடிவான இதழ்களும்… அதில் எந்நேரமும் துலங்கும் இளநகையுடன் தேவதை போல வந்தவளை இமைக்க மறந்து மீனாட்சி பார்த்திருக்க…

அவரைத் தாண்டி உணவு உண்ணும் மேசையை நோக்கி நடந்தவள்… தட்டை எடுத்து வைத்துக்கொண்டு….”அம்மா பசிக்குதே…தாயே…. பசிக்குதே” என்று தட்டினால் கரண்டியை வைத்து ஒலி எழுப்ப…அந்த சத்தத்தில் யோசனை கலைந்தவர்… காதுகளைப் பொத்திக்கொண்டு உணவு மேசையை நோக்கி நகர்ந்து மகளின் தலையில் வலிக்காமல் கொட்டி… “வாயை மூடுடி கழுதை..! பாடுற பாட்டைப் பாரு…? என்று நொடிக்க மீனாட்சி கொட்டியதில் தலையை தேய்த்துக்கொண்டே…
“ஏம்மம்மி சாங்கு புடிக்கலையா..சரிவிடு வேற சாங் பாடுறேன்..! தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா….” என்று பாட. ஆரம்பிக்க… இந்த முறை முதுகில் ஒன்று போட்டவர்…

“சகிக்கலை..! வாயை மூடிட்டு சாப்பிடறியா இல்லை மண்டையில இன்னொன்னு போடவா…?”என்று மிரட்டியவரை சாப்பிடாமல் பரிதாபமாய் பார்க்க இப்ப என்ன…என்று பார்த்தவரை..
“வாயை மூடிக்கிட்டு எப்படி சாப்பிடறது மம்மி நீ சொல்லிக் கொடு அப்படியே செய்யிறேன்!” என்றவளை கொலவெறியோடு நோக்கிய மீனாட்சியை கண்டு அரண்டு போனவளாய் தன் தட்டை இழுத்து வைத்துக் கொண்டு மட மட வென்று சாப்பிட ஆரம்பித்தவளை..
‘அது…' என்ற பார்வை பார்த்தவரின் உதடுகள் தானே புன்னகையில் விரிந்தது.

வயிறு முட்ட காலை உணவை ஒரு கட்டுகட்டிவிட்டு… ஏஏஏவ்வ்…என்று ஏப்பத்தோடு எழுந்தவள் . வரவேற்பறையில் அமர்ந்து டீப்பாயின் மீதிருந்த பத்திரிக்கையை சிறிது நேரம் புரட்டிக் கொண்டிருக்க அவள் அருகில் வந்து அமர்ந்தார் மீனாட்சி…!
மகளிடம் விஷயத்தை எப்படி சொல்வது என்று யோசித்தவர்..! தொண்டையை கணைக்க…

“என்னாச்சு இன்னைக்கு மம்மிக்கு ஒரு மார்க்கமா முழிக்கிறாங்க… என்னவாயிருக்கும்?” என்ற யோசனை எழுந்தாலும் கண்டுகொள்ளாது பத்திரிக்கையை தீவிரமாக படிப்பது போல பாவனை செய்தாள்.
‘தமிழு…!”என்று அழைத்தவரை நோக்கித் திரும்பி அமர்ந்தவள்.
என்ன வென்று பார்வையில் விசாரிக்க… அ…து ஒண்ணுமில்லை… என்றவரை… கேள்வியாக நோக்கியவள்…ஒண்ணுமில்லையா ..! சரி விடு என்றவள் திரும்பவும் பத்திரிக்கையை புரட்ட … “தமிழு இங்க பாருடா…..! நாளைக்கு சம்பந்தி வீட்டுக்காரவங்க இங்க வர்றாங்க…! தெரியுந்தானே..?”

“ஆமா நேற்று டாடி போன்ல யார்கிட்டயோ பேசும் போது கேட்டேன். இதை சொல்லவா இவ்வளவு தயக்கம் என்று மனதில் நினைத்தவள். நாம அவங்க வீட்டுக்கு போனதைப் போல பொண்ணு வீட்டிலிருந்து நம்ம வீட்டை பார்க்க வர்றது சகஜம் தானே? அதுக்கு என்ன இப்போ? என்ற பார்வையை வீச…” மீனாட்சி தயக்கத்தை உதறித் தள்ளியவராக பேச ஆரம்பித்தார்.

“அவங்க நம்ம வீட்டை பார்க்க மட்டும் வரலை…..”

“பின்ன..?”

“உன்னையும் பார்க்கத்தான் வர்றாங்க..!”

“என்னையா…என்னைத் தான் அன்னைக்கே பார்த்துட்டாங்களே? திரும்பவும் என்னை எதுக்காக பார்க்க வர்றாங்க?” என்றாள் புரியாமல்.

“அவங்க பையனுக்காக உன்னை பெண் பார்க்கவும் தான் வர்றாங்க” என்று உடைத்து சொல்ல..
ஒரு கணம் அன்னை சொன்னதை நம்ப முடியாது விழித்தவள்…. பிறகு
“வாட்…”! என்று அலற…
“இப்ப எதுக்குடி இப்படி கத்துற…?” என்றவரை புரியாத பார்வை பார்த்தவள்.

“நீ…நீங்க என்ன சொல்றீங்க… அவங்க….பையன்…என்னை…எப்படி.. கல்யாணம்…” என்று அதிர்ச்சியில் வார்த்தைகள் வராது சண்டித்தனம் செய்ய…! மகளின் நிலையை உணர்ந்தவராக ஜக்கிலிருந்த தண்ணீரை டம்ளரில் நிரப்பி அவளிடம் நீட்ட. ..அதை வாங்கி ஒரே மூச்சில் குடித்து முடித்தவளுக்கு சற்றே ஆசுவாசமடைய… அடுத்த கணம்…

“ஆமா யாரைக்கேட்டு இப்படி ஒரு ஏற்பாட்டுக்கு சம்மதிச்சீங்க…?” என்று வெடிக்க…ஆரம்பித்தவளை கையை உயர்த்தி தடுத்தவர்..!

“இங்கே பாரு தமிழு… அவங்களுக்கு இப்படி ஒரு நினைப்பு இருக்கும்னு சம்பந்தி போன் பண்ணி சொல்ற வரைக்கும் எங்களுக்கும் தெரியாது. ஆனா அன்னைக்கு பொண்ணு பார்க்க நாம போனோமே அப்பவே உன்னை பார்த்ததும் சம்பந்தியம்மாவுக்கு ரொம்பவே பிடிச்சிடுச்சாம். உன்னை அப்பவே அவங்க வீட்டு மருமகளாக்கிக்கனும்னு முடிவு பண்ணிட்டாங்களாம். அதன் பிறகு மாப்பிள்ளை ஊரிலிருந்து வந்ததும்.அவரையும் ஒரு வார்த்தை கேட்டு அவரோட சம்மதத்தோட தான் இப்ப உன்னை பொண்ணு பார்க்க வரப் போறாங்களாம்” என்று விலாவாரியாக கூறிமுடித்தார்.
 
Status
Not open for further replies.
Top