All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதீக்க்ஷா ஈஸ்வரின் "எனை ந(நி)னைக்கும் சாரலே" - கதை திரி

Status
Not open for further replies.

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரி நண்பர்களே,

தொடர்ந்து பதிவு போடணும் என்று தான் நினைக்குறேன் அனால் என்னால சரியாக பதிவு போட முடிவதில்லை. ஒரு வயது குழந்தையின் தாயாக என்னால் தொடர்ச்சியாக எழுத முடிவதில்லை. கதை continuaton விட்டு போய்டும் என்பது என்னாகும் புரியுது .

உங்களது தொடர் ஆதரவு தான் எனக்கு எழுத ஒரு உத்வேகமே தருது.

என்றும் உங்கள்,
சுதீக்ஷா ஈஸ்வர்.




சாரல் 9







தன் முன்னே பரந்து, விரிந்த அந்த பங்களாவின் பிரம்மாண்டமான வாயிற் கதவையே, ஒரு வித கோவத்தோடும், சலிப்புடனும் பார்த்துக் கொண்டு இருந்தான்,
முகுந்தன்.

அந்த வீட்டினுள் செல்லவே அவனுக்கு சிறு துளியும் விருப்பம் இல்லாது போக, தன்னை இந்த நிலையில் கொண்டு வந்தவரின் மீது அளவில்லாது ஆத்திரம் வெள்ளம் வந்த நதியை போல கரை புரண்டு ஓடியது.

அவன் முகுந்தன். இன்றைய 90’ஸ் கிட்ஸ்களின் பெற்றோரை போலவே மகன் இன்ஜினியரிங் படித்தால் முன்னேறிவிடுவான் என்ற
இன்றைய சாரி சாரி அன்றைய 90‘ ஸ் கிட்ஸ்களின் பெற்றோரின் புல்டோசர் விட்டு கூட அசைக்க முடியாத நம்பிக்கையினால், அவனது தந்தை அவனை எப்படியாவது இன்ஜினியரிங் சேர்க்க வேண்டும் என்று தலை கீழாக கூட நின்று பார்க்க, ம்ஹும் அவரை தலையால் தண்ணீர் குடிக்க வைத்து, தனக்கு பிடித்த கேட்டரிங் பிரிவில் சேர்ந்து அவரின் வெறுப்பை சம்பாதித்து கொண்டான்.

படிப்பே அவருக்கு பிடிக்காதது ஆக இருக்க, அதில் தான் வேலை செய்வேன் என பிடிவாதம் பிடித்து எப்படியோ தந்தையின் திட்டுக்களில் இருந்து தப்பிப்பதற்காக, நானும் ரவுடி தான் என்கிற மாதிரி தானும்
வேலைக்கு சென்னையில் சேர்ந்து விட்டான்.

வயது 26. பார்க்க, நம்ம குக்கு வித் கோமாளி அஷ்வின் குமார் மாதிரி இருப்பவன்.

காலையில் அலாரம் அடித்தும் எழாமல், அதனை அடித்து வைத்து விட்டு ஒரு அரை மணி சேர்ந்து தூங்கியதினால், அரக்க பறக்க எழுந்து சாவகாசமாக கிளம்பி கொண்டு இருந்தான்.

கண்ணாடி முன் நின்று கொண்டு, தலையை சீவுகிறேன் பேர்வழி என்று முன்னும் பின்னும் ரொம்ப நேரம் சீவி விட்டு கொண்டு,
பின் ஒரு வழியாக சீவி முடித்து அழகு பார்த்து, பின் அதனை கலைத்து விட்டு,

“அழகன்டா முகுந்தா நீ!” என தன்னையே கொஞ்சி கொண்டு, அந்த கண்ணாடியே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாமா என நினைத்தது தான் குறை என்ற அளவுக்கு அதனை படுத்தி எடுத்து கொண்டு இருந்தவனின் கவனத்தை கலைத்தது அவனது அலைபேசி.

அதில் அவ்வளவு நேரம் “யாரவது என்ன காப்பாத்துங்களேன்!” என்ற அதனின் அபய குரல் கேட்டது கடவுளுக்கு கேட்டது போல

அதில் அவனது கவனம் தடை பட, “அப்பாடா ஒரு வழியா தப்பிச்சோம்” என்று பெரு மூச்சு வெளியிட்டது அந்த கண்ணாடி.

அலை பேசி அவன் வருவதற்குள், ஒரு முறை முழுதாக அழைத்து ஓய, அதனை எடுத்து பார்த்தவனின் கண்ணில் பட்டது ஏகப்பட்ட மிஸ்டு கால்கள், அதில் ஏன் இத்தனை கால்கள் என்று புருவம் சுருக்கி பார்த்தவன், எதுவும் எமர்ஜென்சியாக இருக்குமோ என்ற பரபரப்பு தோன்ற உடனடியாக அதற்கு அழைப்பு விடுத்தான்.

மறுமுனை எடுக்க தாமதித்த அந்த ஒரு நொடியும், அவன் மனம் எங்கெங்கோ சுத்தி அலை பாய, எடுத்த மறுநொடியே
“அம்மா” என்ற தாயை காணாத சேயாய் கலக்கத்தை சுமந்து ஒலித்தது அவன் குரல்.

“அ..ம்..மா! அம்மா உங்..க..ளுக்கு உங்களுக்கு ஒன்னும் இல்லையே!”
“பாட்டி பாட்டி எதாவது, எப்படி இருக்காங்க!” என்று பதட்டோடு விசாரிக்க,

மறுமுனையில் மகனின் கலக்கமான குரலில் பதறியவர், அது தங்களுக்கானது என்று நிம்மதியில் கீற்று போன்ற புன்னகை வந்து அமர்ந்தது, அவரது உதட்டில்.

அதற்குள் அவன் அம்மா அம்மா என்று பல முறை அழைத்து கொண்டு இருக்க,
“ந்தா! எனக்கென்ன நான் குத்து கல்லு மாதிரி நல்ல தான் இருக்கேன், இந்த கட்டை அவ்வளவு சீக்கரம் சாயாது இது வைரம் பாஞ்ச கட்டைலே!”


“என்ன கண்டா ஆத்தாளுக்கும் மகனுக்கும் எப்படி இருக்கு நல்ல இருக்குறவள சீக்கரம் சாய்க்க பாக்குறீங்களா?” என பேரனிருக்கு பதில் சொன்னவர்,

“எங்கோ கெடந்து புள்ள என்னமோ ஏதோனு போன போட்டா நீ என்னடானா வாயில கொள்ளுக்கட்டை வச்சவ மாதிரி நின்னுகிட்டே கனவு காணுறவ!” என்ற மாமியார் கல்யாணியின் அதட்டலில், தன் நிலை மீண்டார் கீதா.

அதில் இவ்வளவு நேரம் பட படவென யாருக்கு என்னவோ என்று பயந்து கொண்டு இருந்தவன் தனது பாட்டியின் குரலில் தான் யாருக்கும் எதுவும் இல்லை என நிம்மதி பெருமூச்சு விட்டவன்,

பின் தனது தாயை தனது பாட்டியே ஆனாலும் அதட்டுவதா என்று தோன்ற,
“ஏ பாட்டி! நான் பக்கத்துல இல்லன்ற தைரியமா எங்க அம்மாவை எதாவது பேசுன அப்பறம் பாரு அந்த வாய தெறக்கவே முடியாத மாதிரி கம் வச்சு அடைச்சுடுவேன் என்று அவன் இங்கே கத்த

உடனே மகனை அன்னையாய் “என்ன பேசுற முகுந்த் இப்டி தான் பெரியவங்கள பேசுறதா நான் இப்படி தான் உன்ன வளர்த்து
இருக்கேன்னா?” என அவர் கண்டிக்க.
“நீ என்னடா புதுசா கம்மு வாங்கி ஒட்டுறது நீ செஞ்ச சமையல்ல சாப்பிட்டாலே அப்படி தான் வாய் தானா ஒட்டிக்கும்!” என அவனை வம்பிலுக்க,

“இங்க பாரு கெழவி எங்க அம்மாகாக தான் உன்ன சும்மா விடுறேன் இன்னொரு தடவை என்னோட தொழில பத்தி எதாவது சொன்ன அவ்ளோ தான் சொல்லிட்டேன் ஆமா!” என அவன் எண்ணெயில் பட்ட தண்ணீர் துளி போல அவன் வெடிக்க,

“போடா! போடா! பொழப்பத்த பயலே நேத்து மொளச்ச சுண்டக்காய் பய நீ என்ன மிரட்டுறியா?”

“நீ என்ன மண்ணுக்குள போன உங்க தாத்தனே என்ன கண்டு பயப்படுவாரு” என
அவனிடன் சிலிர்த்துவிட்டு,

“எனக்கும் என் பேரனுக்கும் ஆயிரம் இருக்கும் அதுல நீ தலை இடாதே!” என மருமகளையும் ஒரு கொட்டு வைக்க,

“சரி! சரி! உங்க பஞ்சாயத்தை அப்புறம் வச்சுகோங்க எனக்கு நேரம் ஆச்சு!” என்றவன்

“எதுக்கு மா போன்
பண்ணினே?” என அவன் அப்போது தான் ஞாபகம்

வந்தவனாக போன் செய்த காரணத்தை கேட்க, “அ..து.. அது வ..ந்..து.. வந்து” என அவர் இழுக்க,

“என்ன மா என்ன விஷயம் சொல்லுங்க!” என்று அவன் அன்னையின் குரலில் பேதம் உணர்ந்தாலும், அவர் வாயில் இருந்தே வருவது வரட்டும் என அவன் அவரிடம் போட்டு வாங்க,

“என்ன இன்னும் வந்து போயின்னு இழுத்துகிட்டு இருக்குறவ

சட்டு புட்டு னு விஷயத்தை சொல்லுரத விட்டுப் புட்டு, இன்னும் ஜவ்வு மாதிரி இழுக்கற!”
என அவர் மேலும் சொல்ல “மா என்ன மா முக்கியம் இல்லனா நான் சாயங்காலம் வந்து பேசவா!” என அவன் அழைப்பை துண்டிக்க போக,

“கண்ணா! கண்ணா! இல்ல இல்ல வச்சுராத அது வந்து

“அட என்ன இன்னும் சொல்லி முடிக்காம அவன் தான் சோலிக்கு நேரம் ஆகுதுன்னு சொல்றான்ல!

அவன் கிட்ட என்ன தயக்கம்
உன்னோட உடன் பொறந்தவள போய் பார்த்துட்டு வா கண்ணு னு சொன்னா சரிங்க அம்மா னு சொல்லிட்டு ஒரு எட்டு போய் அவள பார்த்துட்டு வர போறான்!” என அவர் பட்டென விஷயத்தை போட்டு உடைக்க,

மாமியாரின் அதிரடி தெரிந்தும் அவரின் முன்னே தயங்கிய தனது மடத்தனத்தை நொந்துகொண்டே மகன் என்ன சொல்வானோ என ஒரு புறம் பயம் இருந்தாலும்,

மகனது மனநிலையை கண்டு கொண்டு மெதுவாக ஆற அமர சொல்லி இருக்கலாம் என ஒரு புறம் நினைத்துக் கொண்டு இருந்தார் மனதில்


அதில் இவ்வளவு நேரம் இருந்த இலகு தன்மை மாறி வந்து முகத்தில் ஒரு இறுக்கம் கொண்டி கொண்டது.
தனது பாட்டி இப்படி சொன்னதும் சில நினைவுகள் தொடர்வண்டி போல நொடிகளில் அவன் மனக் கண்ணில் ஓடி மறைந்தது.


என்ன முயன்றும் சில நினைவுகள் தரும் காயங்கள் நாட்கள் சென்றாலும், மறக்க முடிவதில்லை.

அது உள்ளுக்குள்ளே “முனு முனு”வென ஒரு வலியை கொடுத்து கொண்டு தான் இருக்கும்.

என்ன தான் அன்னையின் செல்லப் பிள்ளையாக இருந்தாலும், “அது மட்டும் என்னால முடியாது இத பத்தி பேசுறதா இருந்தா என்கிட்டே நீங்க மேற்கொண்டு பேச வேணாம் எனக்கு நேரமாச்சு நான் அப்புறம் பேசுறேன்.”

என அவன் மறுபுறம் இருந்த அன்னையுடன் சொல்லி வைத்து விட்டாலும், பிறகு நேரம் ஆவது உணர்ந்து,

பிறகு பேசிக்கொள்ளலாம் என நினைத்து ஒரு பெருமூச்சுடன்
கிளம்பினாலும் முன்பு இருந்த அந்த சந்தோசமும் துள்ளலும் அவனிடம் இருந்து விடை பெற்று வெகு தூரம் சென்று இருந்தது.

வண்டியில் போகும் வழி எங்கும் அதனை பற்றியே யோசித்து கொண்டே வந்தவன், தன் நினைவு அற்று போக, சாலையில் கவனம்
இல்லாது இருந்தவன், முன்னே ஒரு வண்டி சடன் பிரேக் போட்டு நிற்க,

அதில் இருந்தவரோ, “என்ன நினைப்புல யா வண்டி ஓட்டிட்டு வர நீ கண்ண என்ன பொடனிலையா வச்சுட்டு வர, குறுக்க வண்டி வர்றது தெரியலையோ

நினைப்ப இங்க வச்சுட்டு ஓட்டுங்கையா” என அவர் சர மாறியாக திட்டிவிட்டு செல்ல,

இவன் தான் ஆத்திரம் கண்ணை மறைக்க, தன் கோவம் கொஞ்சமும் குறையாமல் வண்டியை ஓங்கி ஒரு தட்டு தட்டினான்.

அதில் சாலையில் போவோர் வருவோர் எல்லாம் அவனையே பார்க்க, சிறிது நேரம் களைத்து சுயத்திற்கு வந்தவன் பிறகு தான் சுற்றும் முற்றும் கவனித்து விட்டு தனது வாகனத்தை கிளப்பிக்கொண்டு சென்றான்.

முகுந்தனை நித்தமும் சுடும் அந்த நினைவுகள் தான் என்ன???

சாரல் அடிக்கும்...
 
Last edited:

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,

திரும்பவும் நானே. என்னோட ரெண்டாவது கதையை தூசி தட்டி எடுத்து இருக்கேன். சாரி ரொம்ப சாரி. இந்தகதைக்கு எவ்வளவு பேர் ஆர்வமா வெயிட் செய்தீங்கநு தெரிந்தும் என்னால அப்போ தொடர முடியாத சூழல்.

உங்க நம்பிக்கையை திரும்ப பெற தான் நானும் முயற்சி செய்றேன். பாக்கலாம் உங்க நம்பிக்கையை திரும்ப பெறுவேனா? திரும்ப சாரல் உங்களை நனைக்க வருது யாருக்கெல்லாம் அதுல நனைய விருப்பம். கதை டச் விட்டு போச்சு என நினைப்பவர்கள், முந்தைய எபி படிச்சுட்டு வாங்க ப்ளீஸ்.


உங்க கருத்துக்களை எதிர்பார்த்து ஆவலுடன்,
நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்


சாரல் 10


தன் முன்னே பரந்து விரிந்திருந்த அந்த பங்களாவின் கதவையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான், முகுந்தன். வெளியே அமைதியாக தன்னை காட்டிக்கொண்டாலும், உள்ளே தனக்குள் போராடிக் கொண்டு இருந்தது அவனுக்கு மட்டும் தான் தெரியும். மனதுக்கும் மூளைக்கும் கிடந்து அல்லாடியவனின் மனதை இறுதியில் தாய் பாசமே வென்றது. தாயின் பரிதவிப்புடன் கூடிய குரலே முகுந்தன் எனும் பனிமலையை கரைக்க போதுமானதாக இருந்தது. அவர் தன்னிடம் அதட்டி மிரட்டியோ, இல்லை கெஞ்சவோ செய்திருந்தால், நிச்சயம் தனது பிடித்தம் இல்லாததாக இருந்திருந்தால், அதனை செய்திருப்பானோ என்பது சந்தேகம் தான். ஆனால் அவர் பாசம் எனும் தழை கொண்டு அல்லவா அவனை பிணைத்திருந்தார். அதனை மீறும் சக்தி அவனுக்கு இல்லாதததால், தனக்கு பிடிக்காவிட்டாலும் அவருக்காக அதனை செய்ய விழைந்தான். பாட்டி சொன்னதோடு சரி. உன் விருப்பம் என சொல்லாமல் சொல்லும் தாயின் ஆசையை எப்படி மகன் நிறைவேற்றாது போவான். அன்னையின் குரலுக்கு அடிபணியவேண்டி தான் இருந்தது.


அனைத்தையும் யோசித்தப்படி அந்த கதவையே அவன் நீண்ட நேரமாய் வெறிக்க, அதனை கண்ட காவலாளி, புருவம் சுருக்கினார். “எப்பா தம்பி யாருப்பா நீ? ரொம்ப நேரமா இங்கேயே நின்னு மொறச்சு மொறச்சு பார்த்துட்டு இருக்க!”


“யாரை பாக்கணும்? சின்னவரையா? இல்ல பெரியவரையா?” என அவர் கேட்க, அவன் முகமோ தனது விருப்பமின்மையை அப்பட்டமாய் காட்டியது. அதனை கண்ட காவலாளி, “இங்கெல்லாம் ரொம்ப நேரம் நிக்க கூடாதுப்பா. கிளம்புங்க கிளம்புங்க இடத்தை காலி பண்ணுங்க!” என அடித்து விரட்டாத குறையாய் அவனிடம் கறாராய் சொல்ல, பல்லை நறநறவென கடித்தான், முகுந்தன்.


அதற்குமேலும் அங்கே நிற்க துளிக்கூட அவனுக்கு விருப்பமில்லாது போக, விறுவிறுவென திரும்பிபாராது நடந்தான். வேகமாய் வண்டியில் ஏறி அமர்ந்து கிளப்ப, ஏனோ இரு பெண்களின் முகம் அவன் மனதில் மின்னி மறைய, ஓய்ந்து போனான், ஆடவன். தனது கையாலாகா தனத்தை எண்ணி, கோபத்தில் வண்டியில் ஓங்கி குத்தினான்.


அவனது செய்கையையே சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டு இருந்த காவலாளி இண்டர்காம் ஒலிக்க அதில் கவனம் களைந்தார். அழைப்பை ஏற்றவர் கண்கள் அவனையே அளவிட்டபடியே இருக்க, எதிர்முனையில் என்ன சொல்லப் பட்டதோ, நொடியில் அவர் கண்களில் ஒரு மாற்றம். அதுவரை அவனை சந்தேகமாய் பார்த்துக்கொண்டுக் இருந்தவரின் உடல்மொழியில் ஒரு குழைவு. “சரிங்க! சரிங்க சார்” என்றபடியே வேகமாய் அவனை நெருங்கினார்.

“சார் சார் கொஞ்சம் நில்லுங்க!” என முகுந்தனை அழைக்க, அவன் சுற்றும் முற்றும் திரும்பி திரும்பி பார்த்தான். “உங்களைத்தான் சார்! உங்களை கூப்பிடுறாங்க! உள்ளவாங்க சார்!” என பவ்யமாய் அழைக்க, முகுந்தனுக்கோ என்னடா இது என்றுத்தான் தோன்றியது.



வேற எதையும் ஆராயும் மனம் இல்லாததாலோ, இல்லை விரும்பவில்லையோ? அது அவன் மனதுக்கே வெளிச்சம். இப்போதைக்கு சீக்கிரம் இங்கிருந்து சென்றால் போதும் என்றிருக்க, மெதுவாய் உள்ளே நடக்க ஆரம்பித்தவன் கண்களோ அந்த வீட்டின் சுற்றுப்புறத்தையே அலசிய படியே வந்தது. அந்த வீட்டின் ஆடம்பரமோ, பகட்டோ, கொஞ்சம் கூட அவன் மனதை பாதிக்கவோ, சலனத்தையோ உருவாக்கவே இல்லை. ஒரு ஏளன புன்னகை தான் அவன் இதழில் உதித்தது.


“வீடு மட்டும் பெருசா இருந்து என்ன பிரயோஜனம்? பணக்கார ஏழைங்க!” என கிண்டலாய் நினைத்துக் கொண்டது, அவன் மனம். “பொழப்பு இல்லாதவங்க! வீட்டுக்கும் வாசலுக்குமே ரெண்டு கிலோமீட்டர் இருக்கும் போலவே! எவ்ளோ தூரம் தான் நடக்குறது!” என சலித்தபடியே வாயிலை நெருங்கி இருந்தான். அவனுக்கு அங்கு வரவே இஷ்டம் இல்லாததால், காணும் அனைத்திலும் அவன் மனம் ஒரு குறையை கண்டுபிடித்த படியே வந்தது.


வாயிலை நெருங்கியவுடன் ஏனோ அவன் உடல்மொழியில் சட்டென ஒரு மாற்றம். மனதில் ஏனோ பல பல நிகழ்வுகள் சூறாவளியாய் சுழன்று அடிக்க, உடல் இறுக, ஒரு நொடி திரும்பி சென்று விடலாமா என்று கூட தோன்றியது. ஒரு நொடி கை முஷ்டியை இறுக்கி தன்னை நிலைப்படுத்தியவன், “பார்த்துக்கலாம் விடுடா முகுந்தா! இந்த தடவை எது பேசுனாலும், திரும்பி கொடுத்துட்டு வந்திரு! எதுனாலும் பார்த்துக்கலாம்!” என மனதை திடப்படுத்தியவாறே உள்ளே சென்றான்.


அவன் உள்ளே சென்ற நேரம் காலை உணவுக்காக அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்திருக்க, கணவனுக்கு பரிமாறியபடி எதேச்சையாய் திரும்பிய பிருந்தா, தனது உடன்பிறந்தவனை எதிர்பாராமல் கண்டதும் அசைவற்று போய் அப்படியே நின்றாள். அனைவரின் பார்வையும் அவனிடமே தேங்கி நிற்க, உள்ளே செல்லலாமா? வேண்டாமா? எனும் தயக்கம் அவனிடத்தில். “அடடே வாப்பா முகுந்தா! ஒரே ஊருள்ள இருந்துக்கிட்டு இப்பத்தான் எங்களை எல்லாம் பார்க்கணும்னு உனக்கு தோணுச்சா?” என வைத்தியநாதன் தான் அவனை ஆர்ப்பாட்டமாய் வரவேற்றவர், இறுதியில் அவனுக்கு கொட்டு வைக்கவும் தவறவில்லை.


சங்கடமாய் ஒரு சிறு புன்னகையை சிந்தியவன் கண்களோ தன் உடன் பிறந்தவளிடம் தான் தொக்கி நின்றது. தம்பியை கண்டவளின் கண்கள் ஆனந்தத்தில் கலங்க உதடு கடித்து உணர்வுகளை அடக்க போராடினாள், மங்கை. அவளையும் மீறி இருதுளி நீர் கண்கள் பொழிய, “இப்பதான் என்னை பார்க்கணும்னு உனக்கு தோணுச்சா? உனக்கு கூட நான் வேண்டாதவளாகி போய்டேன்ல!” அவளின் கண்கள் அவனை குற்றம் சாட்டுவது போல இருக்க, தனது பார்வையை விளக்கி, வேறு புறமாக திருப்பிக் கொண்டான்.


“பிருந்தா என்ன அப்படியே நின்னுட்ட! தம்பி எவ்ளோ நேரமா வெளியவே நிக்குது! உள்ள கூப்பிடுமா!” என அமிர்தம் பாட்டி அவளை கலைக்க, “ வா…. வா.. வாடா!” அழுகையில் தோய்ந்த குரலை சீர் படுத்தி தம்பியை அழைத்தாள், பிருந்தா. என்ன முயன்றும் அவளது குரலே அவள் எவ்வளவு உணர்ச்சிவசப் பட்டுயிருக்கிறாள் என உணர்த்தியது.


தாயும், மகனும் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல இருக்க, அமிர்தம் பாட்டி தான், வீட்டுக்கு மூத்தவராய், “சாரதா! முரளி! வீட்டுக்கு வந்து இருக்குறவங்களை வான்னு கூப்பிட மாட்டிங்களா? என்ன பழக்கம் இது?” என அதட்டலாய் கேட்க, மாமியாரை மனதினுள் வசைபாடியபடி, “வாங்க!” என வாயை இழுத்து பிடித்து முகத்தை அஷ்டகோணலாய் வைத்துக்கொண்டு வரவேற்றார், சாரதா.


“இதுக்கு இவ கூப்பிடாமலே இருந்து இருக்கலாம்!” என்று தான் தோன்றியது, வைத்தியநாதன், அமிர்தம் இருவருக்கும். “ வாப்பா உட்காரு சாப்பிடலாம்!” பெரியவராய் பாட்டி உபசரிக்க, “இல்லை பாட்டி நான் சாப்பிட்டு தான் வந்தேன்!” மறுத்தான் முகுந்தன்.


அதற்குள் உணவை முடித்த வைத்தி, அவனை அழைத்துக்கொண்டு சோபாவில் அமர, ஏனோ முள் படுக்கை மீது அமர்ந்திருப்பவன் போல சோபாவின் நுனியில் பட்டும்படாமல் அமர்ந்தான். “ஹ்ம்ம் சொல்லுப்பா! வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா? வேலை எல்லாம் எப்படி போகுது? அப்பாவுக்கு உடம்பு எப்படி இருக்கு?” என விசாரிக்க, முயன்று தன்னை சகஜமாக்கி கொண்டவன், அவருக்கு பதிலளித்தான்.

அந்நேரம் அவருக்கு ஒரு அழைப்பு வர, “ஒரு நிமிஷம்ப்பா!” என்றவர், அதனை ஏற்று காதில் வைக்க, அவன் கண்களோ வீட்டை வலம் வர துவங்கியது. அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டே வந்தவனின் கண்கள் ஒரு இடத்தில் நிலைக்குத்த, புருவமோ யோசனையில் சுருங்கியது.



அங்கே ஒரு நவநாகரீக மங்கையின் புகைப்படம் தான் அந்த சுவற்றை விதவிதமாய் அலங்கரித்திருக்க, அவளின் முகமோ அவனுக்கு நன்கு பரிச்சயபட்டதாய் தோன்றியது. அதே நேரம் டக் டக் என ஹை ஹீல்ஸ் சப்தம் எழுப்ப அவனையே தான் பார்த்தப்படி படி இறங்கினாள், அந்த மங்கை. சத்தம் போடாமல் அவன் பின்னே நின்றுக்கொள்ள, அனைத்து போட்டோகளையும் ஊன்றி கவனித்தவன், மெதுவாய் திரும்ப, ஒரு நொடி திடுக்கிட்டு போனான். நிச்சயமாய் அவன் அவளை அங்கே திடீரென்று எதிர்பார்க்கவில்லை என்று அவன் முகமே சொன்னது.


அதற்குள் போன் பேசி முடித்து வந்த வைத்தியநாதன், “என்னப்பா அப்டி பாக்குற? என் பொண்ணு அர்ச்சனா!”

“இது யாருன்னு தெரியுதா? உங்க அண்ணியோட தம்பி முகுந்தன்!” என இருவருக்கும் அறிமுகம் செய்துவைக்க, அவள் கண்களோ அவனை ஒரு நொடி அளவிட்டது. பின்னர் ஒரு அலட்சிய பாவத்துடன், திரும்பிக்கொண்டாள்.


அவளது பெயரைக் கேட்டவுடன் அவனது உடலில் ஒரு விறைப்பு. முகமோ கடுகடுவென்றாக, இதுவரை இருந்த இலகுத்தன்மை சுத்தமாய் இல்லை. அதற்கு பிறகு முகுந்தன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை.


தம்பிக்கு ஜூஸ் போட சென்ற பிருந்தா பின்னோடு தாயின் சேலையை பற்றியபடி, ராகுலும் நடந்து வந்தான். “இந்தா முகுந்த்!” பிருந்தா நீட்ட, தாயின் பின்னே ஒளிந்துக் கொண்டு மாமனை கண்டான் சிறுவனும்.


அவனைக் கண்டதும் பெரியவன் உதட்டில் சிறுபுன்னகை உதயமாக, சிரித்தபடியே, அவனை நோக்கி கைகளை நீட்ட, தாயின் பின்னே தன்னை நன்றாக மறைத்துக்கொண்டான், சிறுவன்.


மகனின் கைகளை பிடித்து முன்னே இழுக்க, முன்னிலும் வேகமாய் தாயின் பின்னே மறைந்துக்கொண்டு, மாமனை ஓரகண்ணால் பார்த்தான், ராகுல். அதனைக் கண்டதும் முகுந்தனின் முகத்தில் புன்னகை விரிய, வேகமாய் அவனை இழுத்து தனது மடியில் அமர்த்திக்கொண்டான், மாமன்.


“உன் பேர் என்ன?” ஆசையாய் தோளில் தூக்கி வைத்து தனது நெஞ்சில் வளர்ந்து இருக்க வேண்டிய குழந்தைகளை, இப்படி யாரோ போல தன்னை அறிமுகம் செய்ய வேண்டிய நிலையை எண்ணி அவன் நெஞ்சில் பெரும் பாரம் ஏறியது. அதிலும் அக்காள் குழந்தையின் பேர் கூட தெரியாத தனது நிலையை எண்ணி, அவளின் கணவன் மீதும் கோபமும், தங்களின் நிலையை எண்ணி வருத்தமும் சரிவிகிதத்தில் அகத்தில் தோன்றி மறைந்தது.


அதற்குள் மாமனின் சட்டை பட்டனை ஆராய்ச்சி செய்தபடி, “உங்க பேரு என்ன?” மழலையில் குழந்தை கேட்க, சிறு சிரிப்புடன் “முகுந்தன்!” என இவன் மறுமொழி கூற, “மு..ந்தன்!” பெயர் வாயில் நுழையாமல் குழந்தை அவனது பெயரை தனக்கு தோது போல உச்சரிக்க, அவனின் முகமோ விளக்கெண்ணெய் குடித்தது போலாகியது.

“சரிவிடு உனக்கு எப்படி சொல்ல வருதோ அப்டியே சொல்லு!” என்றவன், அவனிடம் ஒரு கடலைமிட்டாயை நீட்ட கண்கள் மின்ன அதனை பார்த்தவன், ஒப்புதலுக்காக தாயின் முகத்தை பார்க்க, அவள் கண்மூடி திறக்கவும், அதனை ஆசையாய் வாங்கிக் கொண்டான்.


அதே நேரம், “குழந்தைக்கு கண்டதையும் வாங்கிக் கொடுக்க கூடாது. இது எந்த கடையில வாங்குனதோ! பாக்கவே லோக்கல் ஐட்டம் மாதிரி இருக்கு!” என நீட்டி முழக்கியபடியே வந்தார், சாரதா. முகுந்தனின் முகம் ஒரு நொடி பொலிவிழந்து போக, சகோதரனின் முகத்தை கண்டவளுக்கு மனதில் ஒரு வலி. பதில் பேச முடியா தன் நிலையை எண்ணி அவள் வருந்த, “அவன் என்ன கண்டதையுமா வாங்கிட்டு வந்திருக்கான்! ஆசை ஆசையா தன் அக்கா பிள்ளைங்களுக்கு நல்லதை தான் வாங்கிட்டு வந்திருக்கான்! நம்ம பகட்டுக்காகவோ, இல்லை அவங்க ஆசைப்படுறாங்க அப்படிங்கிறதுக்காக, நம்ம தான் குழந்தைக்கு விஷத்தை கொடுத்து அவங்களை கெடுக்கிறோம்! இது ஒன்னும் செய்யாது!” என்றவர், தனது கொள்ளுபேரனிடம், “கண்ணா நீ போய் அக்கா கூட விளையாடு போ!” என சிறுவனை சாமர்த்தியமாய் அவனை அனுப்பி வைத்தார், அமிர்தம் பாட்டி.

அவனை மட்டம் தட்ட நினைத்து அவர் ஒன்றை சொல்ல போக, அது தனக்கே எதிராய் முடிந்ததில் அதிருப்தி கொண்ட சாரதா, தனது வாயை மூடிக் கொண்டார். மேலும் எதாவது பேச போனால், மாமியார் யார் இருக்கார் என்றும் பார்க்காது தன்னை வைத்து செய்துவிடுவார் என உணர்ந்தவராய், கடுகடுவென்ற முகத்தோடு அங்கிருந்து நகர்ந்தார்.


மேலும் அங்கிருக்க பிடிக்காதவனாய், இல்லாத அழைப்பு வந்ததாய் சொல்லி அவன் விடை பெற எழுந்த சமயம், அமிர்தம் பாட்டி தான், “அப்பா முகுந்தா! நீயும் அடிக்கடி வந்துட்டு போ! அப்ப தான் உன் உடன் பிறந்தவளுக்கு தன் பிறந்தவீட்டு சொந்தம்னு ஒரு பிடிப்பு இருக்கும்!” என்றவர், திரும்பி பிருந்தாவிடமும், “உன் தம்பியை கண்டவுடன் தான் உன் முகமே தெளிவா இருக்கு!”

“என்ன இருந்தாலும் உடன் பிறந்தவங்க பாசமே தனிதான்! இனிமே நீதான் உன் அக்காவுக்கு உங்க அப்பாவுக்கு அடுத்து எல்லாமே செய்யணும்!” என மறைமுகமாய் அவனது பொறுப்பை உணர்த்தினார், பாட்டி. பிருந்தாவின் கண்களோ அவனையே ஏக்கத்தோடு பார்க்க, சகோதரியை கண்டவன் மனதில் வலித்தாலும், “எப்படி இருந்திருக்க வேண்டியவள், யாரோ போலவா நான் உன்னை வந்து பார்க்க வேண்டும்! எல்லாம் நீயே அமைத்துக்கொண்டது! உனக்கு இது தேவை தானா?” எனும் செய்தி ஒழிந்திருந்தது, அவர்கள் இருவர் மட்டுமே அறிவர். சகோதரனின் பார்வையில், அது தன்னிடம் கேட்ட கேள்வியில் ஒரு நொடி தடுமாறிய பிருந்தா, முகத்தில் ஓட்டவைத்த புன்னகையுடன், தலையசைத்தாள்.


பெருமூச்சுடன், தமக்கையிடம் தலையாட்டி விடை பெற்றவன், வேகவேகமாய் விடுவிடுவென்று திரும்பியும் பாராது, சென்றான். செல்லும் தம்பியையே கலங்கிய கண்களுடன் பார்த்திருக்க, “ஏதோ ஊரு உலகத்துலயே இல்லாத தம்பி வந்துட்டான்! இதான் சாக்குன்னு வேலைக்கு டிமிக்கி கொடுக்கவேண்டியது” என மாமியாரின் முணுமுணுப்பில் கண்களை துடைத்து விட்டு கிட்சனுள் சென்று மறைந்தாள், பிருந்தா.

சாரல் அடிக்கும்…
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,

திரும்பவும் நானே. சாரி வழக்கம் போல லேட் ஆகிடுச்சு. கொஞ்சம் எடிட்டிங்ல லேட் ஆகிடுச்சு. போன பதிவுக்கு விருப்பம், கமெண்ட் செய்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. நீங்க இல்லனா எனக்கு இது சாத்தியமே இல்லை
உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்கிறது தவிர என்கிட்டே வேற வார்த்தைகள் இல்லை. மௌன வாசகர்களே நீங்களும் உங்கள் மௌனம் களைந்தால், மகிழ்ச்சி. தொடர்ந்து படிங்க உங்கள் கருத்துக்களை சொல்லுங்க நண்பர்களே.

உங்கள் ஆதரவு தேடி,

நான் உங்கள
சுதீக்ஷா ஈஸ்வர்


சாரல் 11


மாமியாரின் முணுமுணுப்பில் மெல்ல தன்னினைவு அடைந்தவள், வேகமாய் தனது கண்ணீர் கரைப்படிந்த கன்னங்களை துடைத்துக்கொண்டு அடுக்களைக்குள் மறைந்தாள். வெளியே வந்த முகுந்தனின் கண்களும் கலங்கி போய் இருக்க, யாரும் அறியாதவாறு சட்டையில் முகத்தை துடைத்துக்கொண்டான். செல்லும் அவனின் முதுகையே பால்கனியில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தான் முரளி.

—-------------------------------------------------------------------------------------------


அக்காவை பார்த்ததில் இருந்து மனம் நிலையில்லாது தவிக்க, அதனை வண்டியின் வேகத்தில் காட்டினான். வேலையிடத்துக்கு வந்து சேர்ந்தவன், ஒரு பெருமூச்சை வெளியிட்டு, தன்னை நிலைபடுத்திக் கொண்டு, அடுக்களைக்குள் நுழைந்து ஏப்ரானை அணிந்து, அடுப்பை பற்ற வைத்தான். எரியும் ஜூவாலையின் முன், அவன் மனதில் எரியும் ஜூவாலையின் தகிப்பு குறைவது போல இருக்க, மெல்ல மெல்ல தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொண்டான், முகுந்தன்.


—-------------------------------------------------------------------------------------------

இங்கு பிருந்தா, தம்பியிடம் மாமியார் நடந்துக்கொண்ட முறையில் வருந்தினாலும், தனது தம்பியை கண்ட மகிழ்வு, அவள் மனதெங்கும் விரவியிருந்த வெறுமையை கொஞ்சமே கொஞ்சம் போக்கி இருந்தது.


கணவனுக்கான டீயுடன் அறைக்கு சென்றவள், மெதுவாய் கதவை தட்டிவிட்டு உள்ளே செல்ல, ஒரு அழைப்பில் இருந்தவன், அவளை கண்டு கண்களால் பொசுக்கினான். எதையும் யோசிக்காது போன தனது மடமையை எண்ணி நொந்துக் கொண்டவள், மெதுவாய் சத்தம் எழுப்பாது கப்பை வைத்துவிட்டு திரும்ப, “என்ன உடன்பிறப்பை பார்த்தவுடன் ரொம்ப சந்தோசமா இருக்க போலிருக்கே!” அழைப்பை துண்டித்து விட்டு திரும்பியவனின் குரலில் எள்ளல் ஏகத்துக்கும் நிறைந்திருக்க, மனையாளை சீண்டும் நோக்கில் கேட்டான், முரளி.


ஒரு நொடி அவளது நடை தடைபட, எதோ கூற துடித்த நாவை கட்டுக்குள் கொண்டு வந்து, அவனை வெறுமையாய் ஏறிட்டாள். “என்ன! கண்ணுல லைட்டா திமிர் தெரியுது! தம்பியை கண்ட தைரியமா?” சீண்டலாய் கேட்க, அவளது நிலையில் மாற்றமில்லை. அவளின் அமைதியில் அவனது சீற்றம் அதிகரிக்க, வேகமாய் அவளை நெருங்கியவன், தோளை வலிக்கும்படி பற்றி, “என்னடி உன்னைதான் கேட்குறேன்? பதில் வாயையே திறக்காம அழுத்தமா நிக்குற!” என்றவனின் கண்களில் மனையாளை காயப்படுத்தும் எண்ணம் தான் மிகுந்திருக்க, அவன் எண்ணம் புரிந்தவள் போல அமைதியாகவே நின்றாள் பிருந்தா. அவளின் அமைதியில் அவனின் அகங்காரம் சீண்டப்பட, “கேட்குறேன்ல! அவ்வளவுக்கு அவ்வளவு திமிர் கூடி போய்டுச்சு!” என்றவன் தனது பிடியில் அழுத்தத்தை கூட்ட, வலியில் கண்கள் கலங்க, உதடு துடிக்க, அவனை ஏறிட, “ச்சீ போய்தொலை! எப்ப பாரு ஊமைக்கோட்டான் மாதிரி வாயையே திறக்காம இருக்க வேண்டியது இல்லனா கண்ணுல டாம்மை திறந்திடவேண்டியது! என் கண்ணுல பட்டுதொலைக்காத!” என உறுமியபடி அவளை கதவை நோக்கி தள்ளினான். அடுத்த நொடியே அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிவந்தாள் பிருந்தா.

—-------------------------------------------------------------------------------------------


வீட்டை விட்டு வெளியேறிய அந்த கார், சாலையை அடைந்தவுடன் வேகம் பிடிக்க, அப்பா அப்பா என நூறு முறையாவது தந்தையை அழைத்திருப்பாள், பிரகதி. அவனும் மகளின் இழுப்புக்கு வளைந்து கொடுத்தபடி அவளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தபடியே வந்தான். தந்தையிடம் காட்ட, பேச கேட்கவென அந்த சிறு மொட்டுக்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தது. மகளின் குதூகலத்தை ரசித்தபடியே காரை செலுத்தியவன், முகத்தில் அவளின் துள்ளல் கண்டு ஒருபுறம் சந்தோசமாக இருந்தாலும், மறுபுறம் துக்கமும், ஆதங்கமும் சரிவிகிதமாக கலந்து இருந்தது.


மகளின் சந்தோசம் கண்டு தந்தையாய் மகிழ்ந்தாலும், சிறுகுழந்தை தன்னை இந்தளவு தேடி இருப்பதில் அவன் மனம் குற்றவுணர்வில் தவித்தது. இதுபோல இனிமேல் மகளை அடிக்கடி வெளியே அழைத்து செல்லவேண்டும் என நினைத்துக்கொண்டான். “அப்பா!”

“ம்ம் என்னடா குட்டிமா?”

“அப்பா அம்மாவும் நம்மக்கூட வந்தா நல்லா இருக்கும்லப்பா! என் பிரிண்ட்ஸ் எல்லாரும் அவங்க அம்மா அப்பா ரெண்டு பேர் கூடவும் தான் வெளிய போவாங்களாம்! என் பிரெண்ட் வைஷு சொன்னாப்பா! ஏன்ப்பா அம்மா நம்மக்கூட வரலை!” எனும் கேள்வியில் அவனது இத்தனை நேர இளக்கம் இருந்த இடம் தெரியாமல் போனது. மகளின் கேள்விக்கு அவன் என்ன பதில் சொல்லுவான்? பதில் இருந்தால் தானே சொல்வதற்கு! ஒரு நொடி பதில் கூற முடியாது தடுமாறியவன், “அ.. அ.. து அது வந்து.. அம்மாவுக்கு வீட்டுல நெறைய வேலை இருக்காம் செல்லம்! அதான் நம்மளை போயிட்டு வர சொன்னாங்க!” என ஏதோ சொல்லி விஷ்வா சமாளிக்க, அந்த சிட்டோ நம்பாது, “ஆனா அம்மா மாமா வந்து கூப்பிட்டா போறாங்களே அப்பா!” அவளின் சாதுரியத்தில் நிஜமாய் விழிப்பிதுங்கி தான் போனது அவனுக்கு.



“சரிடா அடுத்த முறை அம்மாவையும் கூட்டிட்டு வரலாம் சரியா?” என சொல்லவும், “ஹை ஜாலி ஜாலி அப்பானா அப்பா தான்!” என குதூகலித்தது குழந்தை. அவனை மேலும் சோதிக்காது குழந்தை அமைதியாய் இருக்க, ஒரு நெடும் மூச்சை வெளியிட்டான் விஷ்வா. மேலும் அவர்கள் அடையவேண்டிய இடம் வந்ததும் அவனுக்கு நல்லதாகி போனது.


“அப்பா நம்ம பீச் வந்துட்டோமா?” முகம் மலர்ந்து கேட்க, “ஆமா டா குட்டி!” என்றவன் மகளை கைகளில் அள்ளிக்கொண்டான்.


“என்னப்பா பீச் காணோம்?” என குழந்தை பாவமாய் கேட்க, “கொஞ்ச தூரம் நடக்கணும்டா!” என்றவன் காரை பூட்டிக் கொண்டு கடற்கரையை நோக்கி சென்றான்.


மகளை மணலில் இறக்கி விட்டவன், அவள் விளையாடும் அழகை ரசிக்க ஆரம்பித்தான். அந்நேரம் அலுவலக விஷயமாய் ஒரு அழைப்பு வர மகள் மீது ஒரு கண் வைத்தபடியே சற்று தள்ளி பேசிக்கொண்டு இருந்தான்.


“அப்பா! அப்பா!” எனும் மகளின் குரலில் திரும்ப, அங்கே “விஷ்வா விஷ்வா!” என அவள் அழைப்பது போன்றொரு பிரம்மை. திகைத்து போய் தலையை உலுக்கிக் கொள்ள, அங்கே மகள் தான் தெரிந்தாள். நிதர்சனம் முகத்தினில் அறைய, அதன் கணம் தாள முடியாது அவன் கண்கள் குளம் கட்ட ஆரம்பித்தது.


வேக வேகமாய் இதயம் எகிறி துடிக்க, மகளிடம் விரைந்தான், விஷ்வா. “அப்பா! அப்பா! இங்க பாருங்களேன்! நான் மணல் வீடு கட்டி இருக்கேன்!” மகிழ்வாய் தந்தையிடம் காட்டி குதூகலிக்க, “விஷு விஷு!” என தன்னையே சுற்றி வந்த காரிகை தான் நினைவில் வந்தாள்.



“என் வாழ்க்கையில் சந்தோசமே வராதா?”


“என் ஆயுள் முழுக்க இப்படி தான் நான் தவிக்க வேண்டுமா?”

“விடாது தொடரும் அவளது நினைவுகளை நான் செய்வேன்?” “அய்யோ!... ” என நெஞ்சம் கதறியது. தலையை பற்றிக் கொண்டு, மனதின் வலி தீர கதற வேண்டும் போல ஒரு எண்ணம் நொடிக்கு நொடிக்கு அவனுள் வலு பெற, செய்வதறியாது கலங்கி போனான் விஷ்வப்ரகாஷ். குழந்தையின் ஆசைக்காக அழைத்து வந்தவன் நேரம் ஆக ஆக, மனமிடும் கதறலை சகிக்க முடியாது, “பாப்பா போலாமாடா?” தயக்கமாய் அவளிடம் கேட்க, நிமிர்ந்து தகப்பன் முகம் கண்டாள் மழலை.



அவள் முகத்தில் இப்பவேவா எனும் கேள்வியும், ஏக்கமும் சரி பாதியாய் கலந்திருந்தாலும், “ம்ம் சரிப்பா!” என உடனே கைகளை தட்டிக் கொண்டு எழுந்தாள், பிரகதி. அதில் அவன் மனம் குத்த, “அது அது அப்பாவுக்கு கொஞ்சம் தலைவலியா இருக்குடா!” மகளிடம் பொய் உரைக்கிறோமே எனும் எண்ணம் அவனை தடுமாற செய்ய, குரல் கலங்கி ஒலித்தது. வேகமாய் தந்தையை நெருங்கியவள், அவனின் கழுத்தை தொட்டுப் பார்த்து, “அச்சோ தலை வலிக்குதாப்பா! நம்ம வீட்டுக்கு போய் பாட்டிக்கிட்ட தைலம் வாங்கி தடவலாம்ப்பா! உடனே தலைவலி சரியாப் போய்டும்!” என தன்னை பெரிய மனுஷியாய் பாவித்துக் கொண்டு சொல்ல, சேயின் வடிவில் தன் தாயைக் கண்டான், விஷ்வா. தான் எதுவும் சொல்லாமலே தனது உள்ளத்து உணர்வுகளை புரிந்துக் கொள்ளும் தனது தாயுமானவளை கண்டு உள்ளம் நெகிழ, அமைதியாய் அவளை அழைத்து கொண்டு காரில் ஏறினான்.


வரும் வழியில் ஒரு உணவகத்தில் நிறுத்தி மகளுக்கு பிடித்ததாய் ஆர்டர் செய்ய, குழந்தையோ கண்கள் மின்ன தந்தையுடன் இருக்கும் நேரத்தை குதூகலமாய் அனுபவித்தாள்.


உணவு வரவும், “குட்டிமா கை வச்சுடாதீங்க! சூடா இருக்கும் அப்பா ஊட்டிவிடுறேன்!” என்றபடி இட்லியை பிட்டு ஊதி தர, ஏதேதோ கதைகள் பேசியபடி உணவை வாங்கியவள், பாதி வயிறு நிறையவும், “அப்பா போதும்!” என்றபடி முகத்தை திருப்ப, “இன்னும் கொஞ்சோண்டு தான்டா!” என்றபடி அவன் உணவூட்டி முடித்து, அவள் கைகள் கழுவி வாயை துடைத்து விட்டவன், கைகளை துடைத்துவிட்டு நிமிர, மகளின் கவனம் இங்கில்லாததைக் கண்டு அவனும் அங்கே தன் பார்வையை செலுத்த, ஒரு ஆண் மற்றும் பெண் நடுவே இவள் வயதுடைய ஒரு குழந்தையும் அமர்ந்திருக்க, குழந்தையின் தாய் போல, கணவனுடன் பேசி சிரித்தபடியே மகளுக்கு ஊட்ட, அதுவோ மறுத்தபடி, தந்தையோடு ஒட்டிக்கொண்டது, தாய் செல்ல மிரட்டலோடு கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்ய, தந்தையிடம் இன்னும் ஒட்டிக்கொள்ள, தாய் செல்ல கோபத்தோடு முகம் திருப்பிக் கொண்டாள். கணவன் சிரித்தபடியே உணவை மகளுக்கு ஊட்ட, சமத்தாய் உண்டு முடித்த குழந்தை, உணவு அப்பிய வாயோடு தாயின் கன்னத்தில் முத்தம் பதிக்க, அந்த பெண்ணின் முகத்தில் குடிக் கொண்டிருந்த கோபம் விடைபெற தானும் மகளின் முகத்தில் முத்தமிட்டாள்.



அதைதான் பிரகதியும் ஏக்கம் சுமந்த விழிகளோடு பார்க்க, இதனை கண்ட விஷ்வாவின் மனமும் கலங்கி போனது. கலங்க துடித்த கண்களை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவன், “பிரகதிம்மா வீட்டுக்கு போலாமா?” விஷ்வா வினவ, அப்போதும் அவளின் பார்வையில் மாற்றமில்லை. நெஞ்சம் இரும்பு குண்டாய் கனக்க, அவளை தன்புறம் திருப்ப, “அம்மாவும் நம்மக்கூட வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்லப்பா!” என இரண்டாவது முறையாக தனது சின்னஞ்சிறு மனதின் ஆசையை மறைக்க தெரியாது ஏக்கம் ததும்பிய குரலில் தந்தையிடம் உரைத்துவிட, கள்ளம் கபடமில்லா பிள்ளையின் மொழியில் பெற்றவன் துடித்துப் போனான்.


அவள் குழந்தை அல்லவோ! மனதின் ஏக்கத்தை தனது தந்தையானவனிடம் இறக்கி வைத்துவிட, இவன் நெஞ்சிலோ பெரும் பாரம் ஏறிக் கொண்டது. அதன் விளைவாய் மகளை கைகளில் ஏந்திக் கொண்டவன், யாரோ துரத்துவது போல வேகமாய் அந்த இடத்தை விட்டு கிட்ட தட்ட ஓடினான். ஆனால் தனது வார்த்தைகளில் தந்தையின் மனம் ஆழிப் பேராளியாய் ஆர்ப்பரித்துக்கொண்டு இருப்பதை மகள் அறியாது தான் போனாள். காரில் கனத்த மௌனம் வியாபித்திருக்க, தகப்பனின் தவிப்பு உணர்ந்தாளோ என்னவோ வரும் போது ஆர்பரிக்கும் அருவியாய் கொட்டி தீர்த்தவள், இப்போது அலையற்ற ஆழ்கடலாய் அமைதியாய் வந்தாள்.


மனம் குற்ற உணர்வில் குறுகுறுக்க, மகளின் அமைதியை தாள முடியாது, பெரும் தயக்கத்துக்கு பிறகு, “அப்பா மேல கோபமாடா?” என்றபடியே திரும்ப, அவனது செல்ல சிட்டோ, ஜன்னலில் தலை சாய்த்தபடியே உறங்கி இருந்தாள். அதனை கண்டவனின் முகம் கனிய, ஒரு கை ஸ்டீரிங் வீலை பற்றியபடியிருக்க, மறுகையால், மகளின் தலையை ஆதுரமாய் வருடினான்.



வீடு வந்தவுடன், மகளின் துயில் கலையாதவாறு மெதுவாய் அவளை சுமந்தபடி வீட்டினுள் வர, கைகளை நீட்டிய அன்னையிடம் மெதுவாய் தலையசைத்து மறுத்தவன், தங்களது அறையில் அமைக்கப்பட்டிருந்த மகளின் பகுதிக்கு சென்றான்.


மலரினும் மென்மையாய் மகளை படுக்கையில் கிடத்திவிட்டு நிமிர, தூக்கத்திலும் தந்தையின் சட்டையை இறுக்கி பற்றியவாறு இருந்தாள், பிரகதி. அதனை கண்டவன் மனம் தனது இறுக்கங்களை தொலைக்க, தன் பொன் மயில் துயில் கொள்ளும் அழகை கண்டு, மகளையே ரசித்துப் பார்த்திருந்தான். மெதுவாய் அவள் துயில் கலைக்காது, தனது சட்டையை அவளது பிடியில் இருந்தும் விடுவித்துக் கொண்டவன், மெதுவாய் குழந்தையின் பிறை நுதலில், கண்ணீர் கண்களோடு முத்தமிட்டான்.



தந்தையின் ஸ்பரிசத்தில் பிரகதி லேசாய் அசைய, வேகமாய் தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு, அரவம் எழுப்பாது கதவை சாற்றிவிட்டு வெளியே வந்தான். அத்தனை நேரம், அவனது கார் வீட்டை நெருங்கியதில் இருந்து, இதோ இப்போது இந்த நொடிவரை அவனது அசைவுகள் அத்தனையையும் பால்கனியில் நின்றபடி வெறித்துக் கொண்டுதானிருந்தாள், அவன் மனைவி அபிரக்ஷிதா.


தங்களது அறைக்குள் நுழைந்தவன், அவளை பற்றிய எண்ணம் கிஞ்சித்தும் இன்றி, தன்னுள் உழன்றவாறே, குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டான். கணவனின் உதாசீனத்தில் அவள் மனம் கோபம் கொள்ள, வார்த்தை கொண்டு வதைக்க தயாராக இருந்தாள், மாது.



இதை எதையும் அறியாத விஷ்வா, தனது மனதின் வெம்மை தணிய, நீரின் கரங்களில் சரண் புகுந்தான். வார்த்தை எனும் வாள் சுழற்றி மனைவி தன்னை உயிரோடு வதைக்க போவது அறியாது போனான் ஆண்மகன். இறுதியில் காயப்படப் போவது யாரோ?


சாரல் நனைக்கும்…
 
Last edited:

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,


போன வாரம் பதிவு போடாததுக்கு சாரி. பதிவு போடலை என்றால் அதை முன்னாடியே சொல்லிடுவேன் மக்களே. இருந்தாலும் உங்களை எல்லாம் வெயிட் செய்ய வைத்ததுக்கு ரொம்ப ரொம்ப சாரி. எனக்கு திருப்தி வரும் வரை, அழித்து அழித்து எழுதுவேன். இந்த முறை லேட் ஆகிடுச்சு.


உங்க வீட்டு பிள்ளையா நெனச்சு என்னை மன்னிச்சுடுங்க! போன பதிவுக்கு விருப்பம், கருத்துகள் தெரிவித்த அனைத்து நட்பூக்களுக்கும் நன்றி.


இந்த பதிவு எப்டி இருக்குனு நீங்க தான் சொல்லணும். நான் சரியா பயணிக்கிறேனா இல்லையா என நீங்க தான் சொல்லணும். உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து ஆவலுடன்,


நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்


சாரல் 12


மெல்லிய தூறலாய் வானம் பூ தூவிக் கொண்டிருந்தது. சற்று முன்னர் தான் பலத்த மழை பெய்து ஓய்ந்திருக்க, அதன் மிச்சமாய் வானம் பூ சிதறல்களை சிதறவிட்டுக் கொண்டிருந்தது. மழை மக்களின் அன்றைய பொழுதை சற்று சோம்பலாய், எரிச்சலாய், கோவமாய் மாற்றிக் கொண்டிருந்தது.


மழை இருந்தாலும், அந்த உணவகத்தில் எப்போதும் போல அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் ஆட்கள் இருந்தபடி தான் இருந்தனர். முகுந்தன் தனது வேலை முடிந்து சற்றே ஆசுவாசமாய் இருந்த நேரம் அது. தனது நண்பன் ஜேக்கப் கொடுத்த டீயை பருகியபடி, அந்த சிறு இடைவெளியில் தளர்வாய் அமர்ந்தான். உடலின் சோர்வு அவனை ஆட்டி படைக்க, லேசாய் உடலை வளைத்துக் கொண்டான்.


அவனுடன் சற்று நேரத்தில் அவனது நண்பன் ஜேக்கப்பும் சேர்ந்துக்கொள்ள, நண்பர்களை கேட்கவும் வேண்டுமா? நீண்ட நெடிய நேரத்துக்கு பின், தனது குரலை செருமிக் கொண்ட ஜேக், “அதுக்கு அப்புறம் அக்காவை

போய் பார்த்தியா மச்சான்?” என கேட்க, அவனிடம் பெரும் மௌனம். கண்கள் நேரேதிரே வெறிக்க, மெல்ல இல்லை எனும்படி தலை அசைத்தான்.



“ம்ம்ச்! என்னடா நான் எவ்ளோ சொல்லியும நீ இப்படியே பண்ணுனா என்னடா அர்த்தம்? நீ அங்க போய் அவங்களை அடிக்கடி பார்த்தாதான் அவங்களுக்கும் ஒரு தைரியமா இருக்கும்!” என கடிந்தவன் குரலில் நண்பனின் மீதான அதிருப்தி அப்பட்டமாய் தெரிந்தது.


“சரி விடு எல்லாம் சரியாகிடும்!” அவனே சற்று நேரத்தில் சகஜமாகி, நண்பனை தேற்றினான். “சரி டா மச்சான் உனக்கு டுட்டி டைம் முடிந்ததுல! அப்புறம் பாக்கலாம்!” என்றபடி வேலையை தொடர்ந்தான்.


நீண்ட நேரம் நின்றதால், வலித்த கால்களை தடவிக் கொண்டவன், தன்னை சுத்தம் செய்துக் கொண்டு, தன்னுடைய லாக்கர் சென்று உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பும் நேரம் வெளியே சலசலப்பு கேட்டது. முதலில் கண்டுக்கொள்ளாது இருந்தவன், நேரமாக நேரமாக சத்தம் அதிகரிக்கவும், மெதுவாய் தலையை நீட்டி என்னவென்று பார்க்க, கூட்டமாய் இருக்கவும் ஒன்றும் தெரியவில்லை.


“ம்ம்ச்!” சலித்துக்கொண்டவன், திரும்ப போக, ஒரு பெண் ஆவேசமாய் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. மேனேஜரிடம் கோபமாய் கையை நீட்டி நீட்டி பேச, அதில் அவள் அணிந்திருந்த மெல்லிய விலை உயர்ந்த கடிகாரம் தெரிய, அவனது கவனம் அங்கே குவிந்தது. மெதுவாய் தனது பார்வையை முன்னேற்றியவன் கண்களுக்கு, அவளின் ஒரு பக்க தோற்றத்தை தான் காண முடிந்தது. அதில் லேசாய் சுணங்கினான். அவள் பேசும் போது காதில் கிடந்த பெரிய வளையமும், முன்னும் பின்னும் நர்த்தனமாட, அவன் கவனம் அங்கே குவிந்தது.


“என்ன சர்வீஸ் செய்றீங்க? எது கேட்டாலும் இல்லனு சொன்னீங்க! ஒரு ஆர்டர் சேர்வ் செய்ய அரைநாள் ஆக்க வேண்டியது. இதுல நான் கேட்டேன்! நீங்க என்ன கொண்டு வந்துருக்கீங்க!” காச் மூச் என கத்திக் கொண்டிருந்தாள், அந்த பெண்.


அவளை உடன் இருந்த தோழிகள் சமாதானம் செய்து கொண்டிருக்க, அவள் அமைதியாகும் வழியை தான் காணோம். “ஹே வேணாம்டி! வா போகலாம்! எந்த பிரச்சனையும் வேண்டாம்!” அவர்களில் ஒருத்தி இவளை பிடித்து இழுக்க, “விடுங்கடி என்னைய! ஹோட்டல் நடத்துறாங்களாம் ஹோட்டல்! சாரி எங்க கிட்ட நீங்க கேட்குற எதுவும் இருக்காதுனு வெளிய போர்டு மாட்ட வேண்டியது தானே! ஹோட்டல மூடிட்டு வேணும்னா எங்க கம்பனிக்கு வாங்கையா! எங்க கம்பெனில உங்களுக்கு வேலை போட்டு தரேன்!” கூட்டம் குறைவாக இருந்தாலும், அங்கங்கு இருந்தோரின் பார்வை முழுக்க இங்கேயே இருக்க, மேனேஜரின் சமாதானம் தான் அவளிடம் செல்லுபடியாகவில்லை.


மேனேஜர் செர்வ் செய்த பணியாளிடம் கேட்க, “சார் அவங்க டிரமிசு பன்னா கோட்டா வித் காபி சாஸ் (tiramisu panna cotta with coffee sauce) ஆர்டர் செய்து இருந்தாங்க. ஆனா… மாங்கோ பன்னா கோட்டா (mango panna cotta) மாறி வந்துடுச்சு சார்” தாழ்ந்த குரலில் எச்சில் கூட்டி விழுங்கியபடி, கிசுகிசுப்பாய் மொழிய, அவருக்கு எங்கேயாவது தலையை முட்டிக் கொள்ளலாம் போலத் தான் இருந்தது.


“மேடம் சாரி மேடம்! மிஸ்டேக் எங்க மேல தான்! வீ வில் ரீப்ளேஸ் இட் சூன் மேம்” என தகைந்து குழைந்து பதிலளிக்க, அப்போதும் அவள் அடங்கிய பாடாக இல்லை. இவர்கள் தங்களுக்குள் எதோ பேசிக் கொண்டிருக்க, அவளது தோழிகள் அவளை சமாதானப் படுத்தும் வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தனர்.


ஏதோ ஒரு உந்துதலில், கூட்டத்தை நோக்கி சென்றான், முகுந்தன். கூட்டத்தை விலக்கியபடி சென்றவன், “எக்ஸ்கியூஸ் மீ மேடம்!” என அழைக்க, யாரோ ஒரு பெண் என எண்ணி வந்தவன், அவள் திரும்பவும், அதிர்ந்து போனான். கோபத்தில் கத்திக் கொண்டிருந்த அர்ச்சனா, இவனை “யார் நீ?” என்பது போல் ஒரு நொடி புருவம் சுருக்கி பார்த்தவள், அவன் யார் என்பதை கண்டுக் கொண்டாள். கண்களில் ஒரு அலட்சிய பாவம்.


அவள் முகத்தில் வந்து போன பாவங்களை பார்த்துக் கொண்டிருந்த முகுந்தனுக்கு, தான் யார் என்பது அவளுக்கு தெரிந்திருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டான். அவளது அலட்சியத்தை கண்டவுடன் அவனது வதனத்திலும் ஒரு அலட்சியம் வந்து அமர்ந்துக் கொண்டது.

அவள் அவனை கண்டு யார் நீ எனும் விதமாய் புருவத்தை ஏற்றி இறக்கி, குரலிலும் அதே அகம்பாவம் தொனிக்க, “ஹூ ஆர் யூ!” என கேட்க, முகுந்தன் முகத்திலோ ஒரு வித இறுக்கம். அவனது முகம் கண்டு, “இவன் ஏன் இங்க வந்தான்? இது இவன் வேலையே இல்லையே!” என்று தான் மேனேஜர் நினைத்தார்.


வேகமாய் இருவருக்கும் இடையே வந்த மேனேஜர், “மேடம் ப்ளீஸ் காம் டெளன் ப்ளீஸ்!” அவளை சமாதானம் செய்ய, “முதல இந்த ஆளு யாரு?” என அவனை கை காட்டிக் கேட்க, “அவர் எங்க ஸ்டேஷன் செப் மேடம்!” என பதிலளிக்க, அதில் அவள் முகத்தில் ஒரு திமிர் கலந்த அலட்சியம்.


“ஒஹ்! சொல்லுங்க சார்! நான் ட்வென்டி பீஸ் ஆர்டர் செய்தேன். சும்மா நீங்க தரலல! நானும் அமௌன்ட் பே பண்ணி இருக்கேன்ல!” கைகளை கட்டிக் கொண்டு மேனேஜரிடம் பேசினாலும், அவளது பார்வை முழுதும் முகுந்தனிடம் தான் நிலைத்திருந்தது.



“ஹையோ எனக்கு இன்னைக்கு முழிச்ச நேரம் சரி இல்லை!” என்றுதான் மேனேஜர் மனதினுள் நொந்துக் கொண்டார். அதற்குள் ஜேக் சலசலப்பு கேள்வி பட்டு, வாயில் அருகில் வந்து நிற்க, அப்போது உள்ளே வந்த பணியாளரிடம் என்ன விஷயம் என்று கேட்டான்.


“அந்த பொண்ணு டிரமிசு பன்னா கோட்டா வித் காபி சாஸ் ஆர்டர் செய்து இருந்தது. ஆனா மாங்கோ பன்னா கோட்டா கொடுத்துட்டாங்க. அதை மாத்தி தரோம்னு சொன்னாலும் காதுலையே வாங்காம, காச் மூச் என்று கத்திகிட்டு இருக்கு!” என விவரம் தெரிவிக்க, அப்போது தான் நண்பன் அங்கிருப்பதையும் கவனித்தவன், “அய்யய்யோ இவன் எங்கடா இங்க இருக்கான்! இவன் இன்னும் வீட்டுக்கு போகலையா? அப்பவே கிளம்பினானே!” என சத்தமாய் சொல்லிக்கொண்டான்.



அர்ச்சனா எதுவோ சொல்ல, முகுந்தன் முகத்தில் ஒருவித இறுக்கம். பார்த்துக் கொண்டிருந்த ஜேக் ஏதோ உணர்ந்து, வேகமாய் நண்பனை நோக்கி ஓடினான். அதற்குள் தண்ணீரை அவள் முகத்தில் ஊற்றி இருந்தான். கண நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது. அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர். ஜேக் ஐயோ என தலையில் கைவைத்தபடி அப்படியே நின்றுவிட்டான். முகுந்தன் மேலும் ஏதாவது கிடைக்கிறதா என சுற்றும் முற்றும் தேட, “டேய் அவனை பிடிங்கடா!” என அலறியபடி நண்பனிடம் வந்து சேர்ந்தான், ஜேக்.



விரைந்து முகுந்தனிடம் வந்தவன், அவன் கையை பிடிக்க, மற்றவர்களும் அவனை பிடித்துக் கொண்டனர். “சாரி மேடம் சாரி மேடம்!” மேனேஜர் நடந்து விட்ட அசம்பாவிததுக்கு மன்னிப்பு கோரினார்.



“யு…. யு….! என் மேலையே தண்ணியை எடுத்து ஊத்திட்டியா! உன்னை என்ன பண்றேன் பாரு!” என அவனை அடிக்க பாய, தோழிகள் தடுத்து பிடித்துக் கொண்டனர். “எங்க அப்பாகிட்ட சொல்லி உங்க ஹோட்டெல மூட வைக்கல என் பேரு அர்ச்சனா இல்லை!” அவளது தோழி வேகமாய் டிஷு கொண்டு தண்ணீரை துடைக்க, அவள் கையை தட்டி விட்டாள். வேகமாய் அவளை இழுத்துக் கொண்டு சென்றனர் அவர்கள்.



தனது அறையில் மேனேஜர் கையில் தலையை தாங்கிய படி அமர்ந்திருந்தார். அவரின் முன் முகுந்தனும், அவனது ஹெட் மாணிக்கவேலும் நின்று இருந்தனர். மாணிக்கவேலின் கண்கள் அவனை தான் சுட்டு எரித்துக் கொண்டிருந்தது. அவன் முகமோ நிர்மலமாக இருந்தாலும், எதையோ சாதித்த நிறைவு வதனத்தில் குடி கொண்டிருந்தது.



“சொல்லுங்க சார். ஒரு ஸ்டேஷன் செப்க்கு டைனிங் பிளேஸ்ல என்ன வேலை? உங்க ஜூனியர் தானே! வேலைக்கு சேரும் போதே என்னென்ன ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸ் இருக்குனு சொல்ல மாட்டிங்களா? இல்ல அவருக்கே இதெல்லாம் தெரியாதா?” கேள்வி ஹெட் செப்பிடம் (chef) இருந்தாலும், பார்வை அவனிடம் தான் இருந்தது. “உங்களுக்கே இதெல்லாம் தெரியாதா முகுந்தன்? காலேஜ்ல இதெல்லாம் தானே பேசிக்!”


“சாரி சார் நான் அவனை என்னனு கேட்கிறேன்! இனிமே இது போல நடக்காம பார்த்துக்கிறேன் சார்!” என தனது ஜூனியருக்காக தான் மன்னிப்பு கேட்டார். அவர் கண்களோ, “என்னை இப்டி நிறுத்தி விட்டாயே!” என அவனை குற்றம் சாட்டியது. அதில் குற்ற குறுகுறுப்பாய் இருக்க, அவர் பார்வையை சந்திக்க முடியாமல், தலை குனிந்தான்.



ஒரு பெருமூச்சு விட்டு கண்களை மூடி திறந்தவர், “மிஸ்டர் முகுந்தன் இனிமே இப்படி நீங்க நடந்துக்க கூடாது. ஒரு லெட்டர் எழுதி கொடுத்துட்டு போங்க!” என கடுமையாய் மேனேஜர் சொல்ல, மாணிக்கவேலும், கண்களாலே அவனை பணித்து விட்டு, வேகமாய் வெளியேறினார்.



அவன் மேனேஜர் அறையை விட்டு வெளியே வந்த நேரம், ஜேக் அவனுக்காக அறையின் வெளியே காத்திருக்க, வேகமாய் நண்பனை எதிர்கொண்டான். “டேய் உள்ள என்னடா சொன்னாங்க? ஹெட் வேற ரொம்ப கோபமா போறார்!” அவன் கேட்க, “டேய்! சார் இப்ப எங்க இருக்கார்?” அவனை கண்டுக்கொள்ளாமல் திருப்பி கேள்வி கேட்க, “டேய்…. ம்ம்ச் நான் என்ன கேட்குறேன்? நீ என்ன கேட்குற? கிறுக்கு பயலே!” நண்பனை அர்ச்சித்தவன்,


“அவர் வேற ரொம்ப கோவமா போனார். தயவு செஞ்சு அவர் கண்ணுல ஒரு ஒரு வாரத்துக்கு மாட்டிடாத! உடம்பு சரி இல்லன்னு ஒரு வாரம் லீவ் எடுத்துட்டு எங்கேயாவது போய்டு! அவர் கண்ணுல மட்டும் நீ இப்ப பட்ட தொலைஞ்ச! அவ்ளோதான்!” என்ற நண்பனின் வார்த்தைகளை காதில் வாங்காது, “ம்ம்ச் வளவளன்னு பேசாம சொல்லுடா!” என சலித்துக் கொள்ள, “அவர் கிட்சேன்க்கு தான் போனார்!” சொல்லி வாயை மூடுவதற்குள், அந்த பக்கமாய் வேக வேகமாய் சென்றான்.


“டேய் டேய்!” ஜேக்கின் குரல் அவனை தீண்டவே இல்லை. “லூசு பய! லூசு பய! இவன் கூட சகவாசம் வச்சதுக்கு…. என் புத்திய தான் செருப்பால அடிக்கணும்!” முனங்கினான், ஜேக்.


அதே நேரம் முகுந்தன் சமையல் அறையை அடைந்த நேரம், அவனை கண்ட மாணிக்கவேல், தனது உதவியாளிடம், “விகாஸ் அவனை முதல போக சொல்லு! ஒரு வாரம் அவன் என் கண்ணுலேயே படக் கூடாது! “ என கட்டளையிட, அவன் அமைதியாய் அங்கேயே நிற்க, அதில் கோபம் கொண்டவர், “பர்ஸ்ட்! கெட் அவுட் ஒப் மை கிட்சேன்!” என கத்தினார்.



தொண்டை அடைக்க, முகம் சிறுத்து போக, தளர் நடையுடன் வெளியே வந்தான் முகுந்தன்.

—--------------------------------------------------------------------------------


ஓராயிரம் முறையாக தன்னையே நொந்துக் கொண்டான் முகுந்தன். “ஹையோ! ஹையோ! எல்லாம் என்னை சொல்லணும்!” என தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். அவனையே பரிதாபமாய் பார்த்தபடி ஜேக்.



வாங்கி வந்திருந்த கூலிங் பீரும் இவன் அடித்த லூட்டியில் சூடாகி இருக்க, கூடவே அவன் நண்பனாய் இருக்கும் பாவத்திற்கு ஜேக்கும் சூடாக இருந்தான்.


“டேய் கிறுக்கு பயலே! நானும் வந்ததுல இருந்து பாக்குறேன்.. நீ பாட்டுக்கு தனியா புலம்பிக்கிட்டு இருக்க… இதுல வாங்குன பீர் வேற கூலிங் போய்டுச்சுடா! ஆனா நீ என்னனு தான் சொல்ல மாட்டேங்கிற!” என பொறுமையிழந்து கத்தினான். அதற்கு முகுந்தன் அளித்த பதிலில், அவன் இதய துடிப்பு தாறுமாறாய் எகிறியது.

அப்படி என்ன சொன்னான் முகுந்தன்!...


சாரல் அடிக்கும்….
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,

நான் வந்துட்டேன். நலம் விசாரிச்ச நட்பூக்கள் அனைவருக்கும் நன்றி. சாரி நான் எவ்ளோ தான் முயன்றாலும், என்னால வாரத்துக்கு ஒரு ud தான் கொடுக்க முடியுது. ஒரு கதையை நம்ம ongoing படிக்கும் போது சரியா பதிவுகள் வரலை என்றாலோ, இல்லை இடையிலே நிறுத்தினாலோ வாசகர்களுக்கு எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சது கொள்ள முடியும். அந்த தவறை நான் செய்ய கூடாது என்று தான் நினைக்கிறேன். ஆனா என்னோட உடல் நிலை ஒத்துக்கொள்ள மாட்டேங்குது.

எனக்கு எப்போதும் லைக் கமெண்ட் செய்து ஆதரவு தரும், vijirsn sis, uma shankar sis, vijaydharuayar sis, kavitha subramani sis, sanju saraka sis, siva geetha sis, sathya.A sis, renugarajan sis, ums sis, sindhu priya sis, indu karthik sis,
kanimozhi ragu sis, veena.R sis, chitra ravi sis, elakkiya prakash sis, dharani suresh sis, srinithi (ஸ்ரீநிதி) sis, tejuu sis, எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.

கடந்த பதிவுகளுக்கு யாரையும் தனியா mention செய்ய முடியல அவசர அவசரமா பதிவுகள் போட்டுட்டு ஓடிட்டேன். ஆனா உங்க எல்லார் பெயரும் தனியா எழுதி வச்சு அம்மா கிட்ட காட்டுவேன். வேற யார் பெயரும் இடையிலே விட்டு போய் இருந்தா உங்க வீட்டு பிள்ளையா நெனச்சு என்னை மன்னிச்சுக்கோங்க.

உங்க ஒவ்வொருத்தரோட சப்போர்ட் மற்றும் லவ் இல்லனா நான் இந்த கதையை எழுதியே இருக்க மாட்டேன். நான் எவ்ளோ லேட்டா பதிவுகள் போட்டாலும் தொடர்ந்து படிச்சு எனக்கு ஆதரவு தர உங்கள் அனைவருக்கும் நன்றி.

கதையை படிங்க உங்க மனசுல எப்படி தோன்றினாலும், அதை என்னுடன் பகிர்ந்துக்கோங்க. உங்கள் கருத்துக்கள் தான் எனக்கான பூஸ்ட் ஹோர்லிக்ஸ் எல்லாமே.
உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து ஆவலுடன்,

நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்








சாரல் 13


இரவு நேரம் கழித்து உறங்கியதில், காலையில் தாமதமாக தான் கண் விழித்தான், முகுந்தன். கண்கள் இரண்டும் சிவந்து. திறக்க முடியாது காந்தியது. எரிச்சலுடன் கண்களை மூடிக் கொண்டான். மெதுவாக எழுந்து சோம்பல் முறித்தவன், தன்னை சுத்தப்படுத்திக் வர, வயிறு, “நானும் இருக்கேன்! எனக்கு எதாவது கொடேன்!” என கெஞ்சியது. அதன் குரலுக்கு செவி மடுத்தவன், சமையல் அறைக்கு செல்ல, அறையை விட்டு வந்தான்.



அங்கே சோபாவில், ஜேக் தலையில் போர்வையை போர்த்தியபடி அமர்ந்த நிலையிலேயே உறங்கிக் கொண்டிருந்தான்.


“இவன் ஏன் இங்கே தூங்குறான்?” என்றெண்ணியபடி புருவம் சுருக்கி பார்த்தவன், அவனை நெருங்கி தோளைதொட்டு, “டேய் மச்சான் மச்சான்!” அவனை உலுக்க, பதறி எழுந்தவனைக் கண்டு, “ஏன்டா இங்கேயே தூங்குற?” முகுந்தன் கேட்கவும், அவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்து வைத்தான், அவனது நண்பன்.


“ஏண்டா கேட்க மாட்ட? ஏன் கேட்க மாட்ட? உனக்கு நண்பனா இருக்க பாவத்துக்கு எனக்கு தான் கதி கலங்குது!”



“மச் என்னடா உளருற!” முகுந்தன் சலித்துக் கொள்ள, “ஹ்ம்ம்! நீயும் குடிக்க மாட்ட! அடுத்தவனையும் குடிக்க விடாம, ராத்திரி முழுக்க நைநைன்னுட்டு, நீ பாட்டுக்கு தூங்க போய்ட்ட ! எனக்கு தான் தூக்கமே போச்சு!” என புலம்பி தள்ளினான்.



“ம்ச்ச் விடு மச்சான் பார்த்துக்கலாம்!” அவன் அசால்ட்டாய் சொல்லிவிட்டு அடுக்களையை நோக்கி நடையை கட்ட, அவனின் பதிலில் “என்னது விடு பார்த்துக்கலாமா? என அதிர்ந்தவன், அவன் பின்னாடியே சென்றான். “ஏண்டா உன்னை ஹெட் வரக் கூடாதுன்னு சொல்லிட்டார்! அதுல உனக்கு கொஞ்சமாச்சும் வருத்தம் இருக்காடா?” என கடுப்பாய் வினவ, “அதான் விடுன்னு சொல்றேன்ல! அது அது நடக்கும் பொது பார்த்துக்கலாம். லிவ் த மொமென்ட் மச்சான்!” என்றபடியே தனக்கும் நண்பனுக்கும் டீ போட்டவன் அவனுக்கும் ஒரு கோப்பையை நீட்ட, அவனை சலிப்பாய் ஒரு பார்வை பார்த்தவன், “என்னவோ போடா! இதெல்லாம் எங்க போய் முடிய போகுதுன்னு எனக்கு தெரியல!” புலம்பியபடியே டீயை பருகினான்.

அப்படி என்ன நடந்திருக்கும்???

—------------------------------------------------------------------------------------------
நேற்று….


மாடிப்படி கட்டை சுவற்றை பற்றியபடி, இரவின் இருளை வெறித்தபடி நின்றிருந்தான், முகுந்தன்.


“டேய்…. நானும் பார்த்துட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு இப்படியே நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்?” நண்பனின் மௌனம் தாளாது, கோபத்தில் வார்த்தைகளை கடித்து துப்பினான், ஜேக். வாங்கி வந்திருந்த பீர், கூலிங் போகிறதே! எனும் வருத்தம் ஒருபுறம். நண்பனின் நடவடிக்கை பற்றிய குழப்பம் மறுபுறம் என இரண்டுக்கும் இடையே கிடந்து அவன் ஊசலாட, சம்பந்தப்பட்டவனோ எதுவும் சொல்லாது வானை வெறித்திருக்க, வெடித்து விட்டான்.



அப்போதும் அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லாது போக, “டேய் உன்னை தான் கேட்குறேன்!” வேகமாய் அவனை நெருங்கி தோள் தொட்டு திருப்பியவன், “ஏன்டா அப்படி பண்ணுன? யார் அந்த பொண்ணு? நீ முன்னாடியே அவளை பார்த்திருக்கியா? உனக்கு தெரிஞ்ச பொண்ணா?” நண்பனிடம் அடுக்கடுக்காய் கேள்வி கேட்க, முகுந்தனோ நண்பன் முகம் காணாது தொலை தூரத்தை வெறித்தபடியே, “ஹ்ம்ம்! முரளியோட தங்கச்சி!” அவனது அத்தனை கேள்விகளுக்கும் ஒற்றை பதிலாய், சலனமற்ற ஒருவித இறுக்கமான குரலில் மொழிய, “டேய்….. மச்சான்!.... என்னடா சொல்ற! உங்க அக்காவோட நாத்தனாரா அந்த பொண்ணு?” என கேட்க,


“ம்ம்ம்!” - முகுந்தன்.

“டேய் அப்ப… அது….!” என வார்த்தைகளை கோர்க்க முடியாது ஜேக் திணற, நண்பன் சொல்ல வருவது புரிந்தது போல “ஆமா!” சிக்கனமாய் வந்தது பதில்.



“டேய் இருக்குற பிரச்சனை போதாதுன்னு நீ வேற ஏன்டா இன்னும் பிரச்னையை இழுத்து வச்சிருக்க?” நண்பனின் மனம் படும்பாடு உணர்ந்த போதும், கடிந்துக் கொண்டான் ஜேக்.



“சரி விடு! எதுக்கு நீ அங்க போன! நமக்கு தான் அங்க வேலை இல்லையே!”


“ம்ம்ச்!” சலித்துக் கொண்டவன், அங்கே நடந்ததை பகிர்ந்துக் கொண்டான்.


“டேய்… நீ சொல்றது நம்புற மாதிரியே இல்லையே!” தாடையை தடவியபடி யோசனையாய் நண்பனை அளவிட்டது ஜேக்கின் கண்கள்.



“என்ன… என்னடா! சும்மா வளவளன்னு பேசாம போய் தூங்கு! என அதட்டியவன் நண்பனை விரட்ட, “என்னவோ போ! நீயும் எதோ சொல்ற! நானும் அதை நம்புறேன்!” என்று சந்தேகமாய் முகுந்தனை திரும்பி திரும்பி பார்த்தபடியே உள்ளே சென்றவன், போன வேகத்திலேயே திரும்பி வந்து, “மச்சான்… எதுவும்…. ம்ம்ம்கும்….!” என சங்கேதமாய் வினவ,



“என்னடா ம்ம்ம்ஊம்?” கடுப்பாய் வினவினான் முகுந்தன். “இல்ல ஒரு வேளை அதுவோ….! என ராகம் இழுக்க, அவன் சொல்ல வருவது புரிந்து, “ஹே ச்சீ போடா லூசு பயலே!” நண்பனை அச்சில் ஏற்ற முடியாத பல நல்ல வார்த்தைகள் கொண்டு அர்ச்சிக்க துவங்க, அதனை காது கொடுத்து கேட்க முடியாது ஓடி மறைந்தான், ஜேக்.


அவன் தலை மறைந்ததும், சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தவன் தன்னை நிலை படுத்திக்கொண்டு அறைக்குள் முடங்கினான்.


கட்டிலில் படுத்தவன், மனதிலோ ஆயிரம் எண்ண ஊர்வலம். புரண்டு புரண்டு படுத்தவனுக்கு தூக்கம் போக்கு காட்ட, சலிப்பாய் கண்களை மூடியவன் விழிகளுக்குள், பல நிகழ்வுகள் வரிசையாய் அணிவகுத்தது.



“ஹையோ! இது உனக்கு தேவையாடா முகுந்தா? போயும் போயும் அவள… லூசு பயலே லூசு பயலே!” தன் தலையில் அடித்துக் கொண்டவன்,


“உனக்கு மறைதான் கழண்டு போச்சு! எப்போதும் போல ஒரு பொண்ணை பார்த்தோமா, சைட் அடிச்சோமானு இருக்காம, உனக்கு இது தேவையாடா?”


“கை அழகா இருக்கு! அவ காது அழகா இருக்குனு பார்த்ததோட போய் இருக்க வேண்டியது தானேடா முட்டா பயலே! முகத்தை பார்க்க ஆசைப்பட்டு… இப்ப எங்க வந்து நிக்குற பார்த்தியா! அவளால உனக்கு என்னைக்குமே பிரச்சனை தான்!” தலையில் தலையில் அடித்தபடி புலம்பியவன், மனதின் சோர்வு தாளாது கண்ணை இறுக்கமாய் மூடி படுத்துக்கொண்டான். அவனைக் கண்டு நித்ரா தேவிக்கே பாவமாய் இருக்க, தன் இருகரம் கொண்டு அவனை வாரி அணைத்துக் கொண்டாள்.

—------------------------------------------------------------------------------------------

இரவு பிருந்தா வீட்டில்,


அனைவரும் உணவு மேஜையில் கூடியிருக்க, தன்யா வழக்கம் போல தந்தையிடமும், பாட்டியிடமும் கொஞ்சிக் கொண்டு இருக்க, ஹாலில் இருந்து அதனை ஏக்கமாய் பார்த்தபடி தாய் ஊட்ட உண்டுக் கொண்டிருந்தான், ராகுல்.



ஏதோ சொல்லி தமக்கை சிரிக்க, அதற்கு தந்தை சிரித்தபடி அவள் தோளை அணைத்துக் கொள்வதும், கொஞ்சியபடி உணவு ஊட்டவுமாய் இருக்க, பார்த்தவனுக்கு ஆசையாய் இருந்தது.



ஏனோ தந்தை தன்னிடமும் அப்படி நடந்துக் கொண்டால்!... என ஒருவித ஏக்கம் முளைத்தது சின்னவனின் மனதில். மகனது கவனம் இங்கில்லாதது கண்டு அழைக்க, அவன் திரும்பாமல் இருக்கவும், அவனது பார்வை செல்லும் திசையில் தனது பார்வையை செலுத்தினாள். மகனின் மனம் புரிந்து அவளது கண்கள் குளம் கட்ட, தாய் மனமோ குழந்தையின் ஏக்கம் கண்டு துடித்துப் போனது. தங்களின் நிலை கண்டு அவளால் அந்த நேரம் வருந்ததான் முடிந்தது.



அதற்குள் அனைவரும் உண்டு முடித்திருக்க, கைகளை துண்டால் துடைத்தபடி வந்த வைத்தியநாதன், “அர்ச்சனா! சாப்டுட்டு ஆபீஸ் ரூம்க்கு வா!” என்றார். சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் திரும்பி பார்க்க, வாயில் இருந்த உணவை விழுங்கிவிட்டு “சரிப்பா!” என்றாள் பவ்யமாய். கையை கழுவி விட்டு, தந்தையை தொடர்ந்தாள், மகள்.


அனுமதி வேண்டிவிட்டு அவள் உள்ளே செல்ல, நாற்காலியில் அமர்ந்து எதோ ஒரு கோப்பை பார்வையிட்டுக் கொண்டிருந்தவர், அரவமுணர்ந்து, உட்கார் என இருக்கையை காட்ட, தயங்கியபடி உட்கார்ந்தாள், பெண்.


“நான் நேரடியாவே விஷயத்துக்கு வரேன். இன்னைக்கு என்ன நடந்துச்சு?” மகளின் முகத்தை கூர்மையாய் அளவிட்டது அவரது கண்கள்.


தந்தை கண்டுக் கொண்டாரோ என ஒரு நொடி திடுக்கிட்ட அர்ச்சனா, தனது முகபாவத்தை நொடியில் மாற்றிக்கொள்ள, அது அவரது கழுகு கண்களில் இருந்து தப்பவில்லை.


“என்னப்பா கேட்குறீங்க? நான் இன்னைக்கு காலேஜ் போனேன். அப்புறம் வீட்டுக்கு வந்துட்டேன்!” என்றவள், இலகுவாய் தன்னை காட்டிக்கொள்ள முற்பட்டாள்.



“ஓ… அப்ப இன்னைக்கு சீ ப்ரீஸ் ஹோட்டல பிரச்சனை பண்ணினது நீ இல்லையா அர்ச்சனா?” வாளின் கூர்மையோடு வந்தது அவர் வார்த்தைகள்.


தந்தையின் வார்த்தையில், விலுக்கென நிமிர்ந்தவள், அவரை அதிர்ச்சியாய் ஏறிட, “எப்போதும் என் வீட்டு ஆளுங்க மேல எனக்கு அக்கறை இருக்கு அர்ச்சனா!” என்றவரின் வார்த்தைகளில், நீங்கள் அனைவரும் எனது கண்காணிப்பில் என்ற அர்த்தம் பொதிந்து இருந்தது.


“ப்பா.. அது வந்து… நான் எதுவும் பண்ணல…!” வேகமாய் வெளிவந்த வார்த்தைகள் தந்தையின் பார்வை தீட்சண்யத்தில் தேய்ந்து மறைந்தது. குரலை செருமிக் கொண்டவர், “எனக்கு தேவை உன் வாயால என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியனும்! அவ்ளோதான்!”


நடந்ததை விவரித்தவள், வசதியாய் தான் சொன்னதை மறைத்துவிட்டாள். “அவ்ளோதானா?” வைத்தி தொக்கி நிறுத்த, அதே நேரம் புயல் போல வேகமாய் அறைக்குள் நுழைந்தனர், சாரதாவும், முரளியும். “என்னப்பா இவ்ளோ நடந்திருக்கு! நீங்க யாரு என்னனு விசாரிச்சு கைய கால தட்டுறத விட்டுட்டு அச்சுவ விசாரிச்சுட்டு இருக்கீங்க!” படபடவென பொரிந்தான், தமையன். மகனின் வார்த்தைகளை அமைதியாய் ஆமோதித்தார் தாய். இருவரையும் அமைதியாய் ஏறிட்டவர், மகளை பார்க்க, அவரது பார்வையில், “இன்னும் இருக்கிறது சொல்!” எனும் செய்தி இருந்தது.


“அது அது நான் இல்ல அ… வ.. அவன் தான்… அந்த மு… கு..ந்தன் தான்!” அவள் திக்கி திணற, “ வேகமாய் மகளை இடையிட்ட சாரதா, “யாரு? எந்த முகுந்தன்?” என கேட்க, முரளிக்கு எதுவோ புரிவதாய், “யாரு பிருந்தாவோட தம்பியா?” என வினவ, ஆம் என்பது போல தலை அசைத்தாள். தங்கையின் பதிலில் வெகுண்ட முரளி, ஆத்திரத்தில் பல்லை கடிக்க,


“பார்த்தீங்களா? பார்த்தீங்களா? அவனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா அக்கா நாத்தனார்ன்னு தெரிஞ்சும் இப்படி செய்து இருப்பான்!” என சாரதா பொரிய, முரளிக்கு கோபம் கரையை கடந்தது.


“அவனை!” ஆத்திரத்தில் பல்லை நறநறவென கடிக்க, “எங்கடா உன் பொண்டாட்டி கூப்பிடு அவளை!” மகனை ஏவ, வாயிலில் சத்தம் கேட்டது. அனைவரும் திரும்ப பிருந்தா தான் நின்றிருந்தாள்.


மாமியாரிடம் நாளை உணவுக்கான பட்டியலை கேட்க அறைக்கு சென்றிருக்க, அவர் அங்கில்லாது போகவே, தேடி வந்த சமயம், அவர்கள் பேசிக்கொண்டு இருக்க, திரும்ப போனவள், தம்பியின் பெயர் அடிபடவும், அங்கேயே தேங்கினாள்.


“பாத்தியா! பாத்தியா! உன் பொண்டாட்டி நம்ம பேசுறத ஒட்டு கேட்குறா!” சாரதா எடுத்துக்கொடுக்க, முரளியின் கண்கள் மனையாளை எரித்தது. “பிருந்தா இங்க வாம்மா!” வைத்தி அழைக்க, அடிமேல் அடிவைத்து உள்ளே வந்தவள், மாமனாரின் முன் நின்றுக் கொண்டாள். தலை குனிந்தபடி, “மாமா நான் ஒட்டு எல்லாம் கேட்கல!” என்பதற்குள் இருதுளிகள் கண்ணில் இருந்து சிதற, அதனை வேகமாய் துடைத்துக் கொண்டாள்.



அதனை கண்டு சாரதா இளக்காரமாய், “இதோ ஆரம்பிச்சுட்டா நாடகத்தை!” சத்தமாய் முணுமுணுக்க, வைத்தியநாதன் மனைவியை கண்டன பார்வை பார்த்தார். இருந்தும், அவரின் தான் எனும் அகங்காரம் அடங்க மறுக்க, “ஏய் என்ன அக்காவும் தம்பியும் சேர்ந்து எல்லாம் பண்ணிட்டு, நீ இங்க நீலி கண்ணீர் வடிக்கிறியா?” பிருந்தா மீது பாய,


“சாரதா” மனைவியை அதட்டினார் வைத்தி. மெல்ல நடந்ததை விவரிக்க, ஒரு நொடி பிருந்தாவுக்கு தம்பியின் செய்கை மீது அதிருப்தி தான் எழுந்தது.

“என்ன அப்படியே கல்லு மாதிரி நிக்குற! நீ சொல்லித்தான் அவன் அப்படி செய்திருப்பான்!” சாரதா மறுபடி குற்றம் சாட்டினார்.


“இல்ல மாமா! அவன் அப்டி செய்ற ஆளு இல்லை!” மெதுவாய் ஒலித்தது அவள் குரல். “அப்போ என் பொண்ணு தான் தப்புன்னு சொல்றியா!” மருமகளை இடையிட்டார், சாரதா.


பிருந்தா அமைதியாக இருக்க, “வாயை திற! நீ நிக்குறத பார்த்தா அப்படித்தான்னு சொல்ற மாதிரி இருக்கு!” மருமகள் மீது பாய, “சாரதா!” வைத்தியின் குரல் ஓங்கி ஒலிக்கவும் தான் அடங்கினார். பெருமூச்சுடன், “அர்ச்சனா! நீ இன்னும் முழுசா சொல்லல!” தந்தையின் அழுத்தம் நிறைந்த குரலில் எச்சில் கூட்டி விழுங்கினாள், பெண்.


“அவளை ஏன்ப்பா கேட்குறீங்க?” முரளி இடையிட, கை உயர்த்தி அவனை தடுத்தவரின் பார்வை மகளை துளைக்க, “அ… அது… சமைக்கிறவனுக்கு இங்க என்ன வேலை….ன்னு…” இழுத்து நிறுத்தியவள், தந்தையின் பார்வை தன்னைமீது இருப்பது உணர்ந்து தலை நிமிராமலே, “ “மாசம் கைகட்டி சம்பளம் வாங்குற சமையல்காரன்…. எல்லாம் என்கிட்ட பேசுறான்!” அவள் சொல்லி முடிக்க, அதையே தான் அங்கே முகுந்தனும் நினைத்துக் கொண்டிருந்தான்.



சாரல் அடிக்கும்…
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,


சாரல் 14 பதிவு செய்துட்டேன் நண்பர்களே. போன பதிவுக்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றியோ நன்றி. இந்த பதிவுக்கும் உங்கள் ஆதரவை கொடுங்க மக்களே.

A special thanks to vijirsn sis vijaydharuayar sis, umashankar sis, sathya A sis, elakkiya prakash sis, ums sis, indhu karthik sis, sanju saraka sis, devasena sis, siva geetha sis, sindhu priya sis and welcome to our family poova sis, vanajavanesh sis. வேற யாரையும் குறிப்பிட மறந்துட்டா என்னைய தப்பா எடுத்துக்காதீங்க நண்பர்களே. நீங்க யாரும் இல்லனா நான் இந்த கதையே எழுதி இருக்க மாட்டேன். உங்க எல்லாரோட அன்புக்கும் இடைவிடாத ஆதரவுக்கும் நன்றி


உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து ஆவலுடன்,
நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்


சாரல் 14


தந்தையின் பார்வை தன்னைமீது இருப்பது உணர்ந்து தலை நிமிராமலே, “மாசம் கைகட்டி சம்பளம் வாங்குற சமையல்காரன்…. எல்லாம் என்கிட்ட பேசுறான்!” தட்டுத்தடுமாறி அர்ச்சனா முடிக்க, அந்த அறையில் ஏசியின் மெல்லிய சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, அங்கு நிசப்தமே குடிகொண்டிருந்தது.


மகளின் வார்த்தைகளைக் கேட்டு வைத்தியநாதன் பெரிதும் வருந்தினார். சட்டென்று ஏறிட்டு பிருந்தாவை பார்க்க, அவளோ உதடு கடித்து வரும் கண்ணீரை அணையிட்டு கொண்டிருந்தாள். அவரது பார்வை அனைவரையும் வலம் வந்தது. முரளி முகத்தில் இருந்து எதையும் படிக்க முடியாது போக, அர்ச்சனா இன்னும் குனிந்த தலை நிமிராது இருக்க, சாரதா முகத்திலோ ஒரு செருக்கு கலந்த பூரிப்பு தெரிந்தது.



தனது குரலை செருமிக் கொண்டவர், “இவ்ளோ நேரம் ரெண்டு பேரும் அந்த குதி குதிச்சீங்க! இப்ப என்ன சொல்ல போறீங்க!” வைத்தியநாதன் மனைவி, மகன் இருவரையும் பார்த்து கேட்க, முரளியை முந்திக் கொண்டு, “அதுக்காக அவன் இவமேல எல்லார் முன்னாடியும் தண்ணியை ஊத்துவானா?” மகனை சிந்திக்க விடாது, மகள் செய்தது தவறே இல்லை என்பது போலவும், முகுந்தன் மீது தன தவறு என்பது போலவும் பேசினார்.


பிருந்தாவுக்கு நெஞ்சமெல்லாம் வலி பரவி வதைத்தது. இந்தியாவில் 90 சதவீத பெண்கள் அனுபவிக்கும் வலி. தன் மீதோ, தங்கள் குடும்பத்தின் மீதோ, தவறே இல்லாத போதும், எதுவும் பேச முடியாமல், அமைதியாய் கேட்டுக் கொண்டிருக்கும் வலி.


உதடுகள் துடிக்க, ஏதேனும் பேசிவிடும் வேகம் எழுந்தாலும், தன்னை கட்டுப் படுத்திக் கொண்டாள். கோபத்தில் முகம் சிவக்க, “நிறுத்து சாரதா! முகுந்தன்னு இல்லை தன்னோட வேலையை நேசிக்கிற யாரா இருந்தாலும், அப்படி தான் செய்வாங்க! அதுவும் பொது இடத்துல வச்சு உன் மகள் அப்படி பேசுனது தப்பு இல்லையா? இல்ல அது தப்புன்னு உனக்கு தெரியவே இல்லையா?” வைத்தியநாதன் மனையாளை கேட்க, அவரின் உடல் மொழியில் அப்போதும் மாற்றம் இல்லை.



“அவ என்ன தப்பாவா கேட்டா? சரியா தானே பேசி இருக்கா?” தான் பிடித்த முயலுக்கு மூன்று இல்லை, முக்கால் கால் தான் என அவர் வாதிட, சலித்து போனது வைத்திக்கு.


முட்டாள்களிடம் பேசுவது நேரம் வீண் என அவரும் நினைத்தாரோ! கண்களை மூடி திறந்தவர், “எல்லாரும் போய் படுங்க நேரமாச்சு!” என்றார். சாரதா பிருந்தாவை எள்ளலாக பார்க்கவும் தவறவில்லை.


பிருந்தாவால் அதை நன்கு உணரவே முடிந்தது. தளர்ந்த நடையுடன் அவள் திரும்ப, பெருமூச்சு விட்டவர், “நீ எதுவும் சொல்ல விரும்புறியாம்மா பிருந்தா?” அவள் அமைதி கண்டு, “தேவை படும் நேரம் தன்னோட குடும்பத்துக்கோ இல்ல தனக்கோ எதாவது மரியாதை குறைவு நடக்கும் போது நம்ம எதிர்த்து கேள்வி கேட்க வாயை திறக்கலாம்! தப்பில்லைம்மா!” எனவும் மாமனாரை நிமிர்ந்து பார்த்தவளின் இடது கண்ணில் சரேலென ஒரு துளி நீர் கன்னம் நோக்கி பயணம் செய்ய, அவளை நோக்கி கசந்த முறுவல் புரிந்தார். “கடவுளே இந்த பொண்ணுக்கு சந்தோசத்தை கொடுப்பா!” என்று வேண்டுதல் வைத்தது அவரது இளகிய மனம்.


அறைக்குள் பிருந்தா நுழைந்த நேரம், முரளி இன்னும் தூங்காமல், கூண்டு புலி போல குறுக்கும் நெருக்குமாய், பால்கனியை அளந்துக் கொண்டிருந்தான். கணவனை கவனித்தாலும், குழந்தைகளின் அறைக்குள் நுழைந்தவள், தன்யா இறைத்து போட்டிருந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு திரும்ப, ராகுல் தனது பொருட்கள் அனைத்தையும் சமத்தாய் எடுத்து வைத்திருந்தான், அதனை கண்டு புன்முறுவல் பூக்க, இருவருக்கும் போர்வையை போர்த்திவிட்டு, மகளின் நுதலில் முத்தமிட, தூக்கத்திலும் முகத்தை சுருக்கியது பெண்.


அவளது செய்கையில் பிருந்தாவின் முகத்தில் சிறுப்புன்னகை தோன்ற, அரவம் எழுப்பாது, மகளது கன்னத்தை கிள்ளி கொஞ்சிக் கொண்டாள். விழித்திருக்கும் நேரம் தாயை அருகேயே அண்டவிட மாட்டாளே! “செல்ல ராட்சசி!” மனதினுள் மகளை கொஞ்சி கொண்டு மகனுக்கும் முத்தமிட, ஆழ்ந்த நித்திரையின் பிடியில் லயித்திருந்தபோதிலும், தாயின் ஸ்பரிசம் உணர்ந்து, அம்மா என்று மெல்லிய குரலில் அழைத்தவன், அவளது புடவை முந்தானையை பற்றியும் கொண்டான்.


“ஸ்ஸ்!” நாக்கை கடித்துக் கொண்ட பிருந்தா, மெதுவாய் மகனது துயில் கலையா வண்ணம் தனது புடவையை விடுவித்துக் கொண்டவள், அறையின் விடிவிளக்கை போட்டு விட்டு தங்களது பகுதிக்கு வர, முரளி அப்போதும் அளப்பதை நிறுத்தவில்லை.


அவள் படுக்கையை தட்டி போட்டு கொண்டிருக்க, வேகமாய் அவளை நெருங்கி கைகளை பற்றிக் கொண்டவன், “என்னடி உன் தம்பிக்கு அவ்ளோ திமிரா? எல்லார் முன்னாடியும் என் தங்கச்சியை அவமான படுத்தி இருக்கான்! அவனுக்கு என்ன மனசுல பெரிய இவன்னு நெனப்பா?” என கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளையும் கடித்து துப்ப, வலி மிகுதியோடு அவனை ஏறிட்டு பார்த்தாள்.


“பதில் சொல்லுடி! கண்ணாலயே கதை பேசுற! வாயை திறந்து பதிலை சொல்லுடி! எப்ப பாரு ஊமைக் கோட்டான் மாதிரியே இருந்துட்டு எல்லா வேலையும் பார்க்க வேண்டியது! அக்காவுக்கும் தம்பிக்கும் உடம்பெல்லாம் திமிரு…. திமிரு!” அவன் வார்த்தைகளை மென்று துப்ப, பிருந்தாவின் கண்ணில் கோபம். அதனை கண்டுக் கொண்டவன், “ஒண்ணுமில்லைன்னாலும் அக்கா தம்பி ரெண்டு பேருக்கும் இந்த கொழுப்புக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை!” எப்போதும் தான் திட்டினால், அழுதோ இல்லை அமைதியாய் இருக்கும் மனைவி, இன்று முறைத்துக் கொண்டு நிற்கவும், அவளை காயப்படுத்தும் வேகம் முகிழ்த்தது அவனுள்.



“என்னடி! மொறச்சா நான் பயந்துடுவேனா? நீயும் அவனும் கூட்டு சேர்ந்து தானே இதை செய்தீங்க! எனக்கு நல்லா தெரியும்டி நீங்க காசுக்காக எதையும் செய்ய தயங்காத ஆட்கள் தானே!” விஷமாய் வார்த்தைகளை கக்க, அவனது பிடியின் அழுத்தத்தில் நெளிந்துக் கொண்டிருந்தவள், “சும்மா உங்களுக்கு தான் பேச தெரியும்னு பேசாதீங்க! நாங்க எதுக்கு அப்படி செய்யணும்! அர்ச்சனா பேசுனது மட்டும் சரியா?” என்பது போல அவள் கண்கள் அவனிடம் கேள்வி கேட்க,


“வாயை திறடி!” அவளை சுவரோடு ஒட்டிவைத்து கழுத்தை பிடிக்க, “எங்க….ளுக்கு யா… யா..ரையும் அவமா…னப் படுத்தனும் என்…கிற எண்ண….ம் கிடையா…து…. அதுக்…அதுக்கான அவசியமும் கிடையாது!” அவனது பிடி வலித்தாலும், வலித்த தொண்டையை செருமிக் கொண்டு, “யா.. ர் யாரு எப்படி…ன்னு உ…ங்க ம.. ம..னசுக்கு தெ…ரியும் அ…அதை கேட்…ட்டு பா…ருங்க!”


அவனது பிடியில் தொண்டை வலித்த போதும், தம்பியின் மீது குற்றம் சுமத்துவதை பொறுக்க முடியாது அவள், தீர்க்கமாய் அவனது விழிகளை பார்த்து சொல்ல, தனது கைகளில் அழுத்தத்தை கூட்ட, வலி தாளாமல், கண்களில் கண்ணீரை சிந்தினாலும், திடமாய் அவனது பார்வையை எதிர் கொள்ள, அவள் மூச்சுக்கு தவிப்பது உணர்ந்து, சட்டென்று தனது கரங்களை அகற்றினான், முரளி.



இவ்வளவு நேரம் அவனது அழுத்தமான பிடியில், மூச்சு விட முடியாது திணறியவளுக்கு கண்கள் கலங்கி முகமே சிவந்து வீங்கி விட்டது. தொண்டையை இரு கைகளாலும் பிடித்து கொண்டு அவள் இடைவிடாது இரும, தனது கோபம் அத்தனையும் கதவை அறைந்து சாற்றி வெளியேறினான்.


கதவை சாற்றிய வேகத்திலேயே அவனது கோபம் புரிய, அந்த கதவையே வெறித்து பார்த்திருந்தாள். இதுநேரம் வரை கணவனுக்கு வைராக்கியமாய் தன் கண்ணீரை மறைத்தவள், அப்படியே மடங்கி அமர்ந்து அடக்கி வைத்திருந்த கண்ணீரை வெளியேற்றினாள்.

*****************************************************************************************

கைகளை தலைக்கு கொடுத்தபடி அண்ணாந்து வானத்தை வெறித்தபடி கல் மேடையில்(sit-out) படுத்திருந்தான், விஷ்வா. மேககூட்டத்தின் நடுவே நட்சத்திர தோழிகளோடு, விரிந்த வானில் நிலவு பவனி வந்துக் கொண்டிருந்தது.


எங்கோ தூரத்தே மழை பொழிந்துக் கொண்டிருக்கும் போல, சில்லென்ற குளிர் காற்று மேனியை தழுவ, அதனை கூட உணராது இருந்தான், மாயவன். உடலும் மனமும் சோர்ந்து போய் இருந்தாலும், தூக்கம் வருவேனா? என அட்டூழியம் செய்தது.


நாள்முழுதும் அயராத, தளராத ஓட்டம் அவனை தொய்வடைய செய்யவில்லை. மாறாக தன்னை, தனது கவலையை மறக்க தான் அதன் பின்னே ஓடினான். மனதினுள் நிம்மதி இருந்தால் தானே தூக்கம் வர, ஏனோ மனம் மிகவும் சோர்ந்து போனதை போல உணர்ந்தான். அயர்வுடன் கண்களை மூடியவனின் விழிகளின் ஓரம் கண்ணீர் வடிய, அதனை கூட உணராது படுத்திருந்தான்.


சற்று முன்பு நடந்ததை எண்ணி, வேதனை அடைந்தது உள்ளம். மகளை படுக்கையில் விட்டு, குளியலறைக்குள் நீரிடம் தஞ்சம் புகுந்தவன் மனம் தணலாய் தகிக்க, நீரின் குளுமை அவன் மனம் கொண்ட வெம்மையை தணிக்க முடியாது தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, அவனது காலடியில் வீழ்ந்தது.


தலையை துவட்டியபடியே வந்தவன், தன் போக்கிற்கு வேலைகளை செய்தபடியே இருக்க, பொறுமையிழந்து போனாள், அவன் மனையாள். அவன் படுக்கையில் விழுந்த சமயம் வேகமாய் வந்தவள், போர்வையை இழுத்து தூர எரிய, கண்திறந்து பார்த்தவன், சலிப்புடன் திரும்ப கண்களை மூடிக்கொள்ள, பார்த்தவளுக்கு இன்னுமின்னும் வெறி கூடியது. அவனது தலையணையை பறித்தவள் அதையும் எரிய, அவனோ இன்னொன்றை தலைக்கு வைத்துக்கொண்டு விட்ட தூக்கத்தை தொடர, அவளுக்கு கோபம் தலைகேறியது.


“என்ன செய்வது? என்ன செய்வது? என யோசித்தவள் கண்கள் அலைபாய, எதையாவது செய்து அவனை அவன் தூக்கத்தை கெடுத்துவிடும் வேகம் அவளுள். நொடியும் யோசிக்காது பக்கத்தில் இருந்த தண்ணீர் புட்டியை எடுத்தவள் அவனது முகத்தில் ஊற்ற, படாரென்று கண்களை திறந்தவன் விழிகளோ, கோவைப்பழம் போல சிவந்து கிடந்தது. அவனது முகம் கண்டு உள்ளுர அஞ்சினாலும், வெளியே அவனை மிதப்பாய் பார்த்து வைத்தாள், அபிரக்ஷிதா.


“என்ன உன் காதலி… இல்ல… கள்ளக்காதலியை பார்த்து கொஞ்சிட்டு வந்தாச்சா?” நக்கலாய் அவனை காயப்படுத்திவிடும் நோக்கில் அவள் வினவ, எழுந்து சோபாவில் படுத்துக் கொண்டான். விடாது அவனை தொடர்ந்தவள், “நான் ஒருத்தி இங்க கேட்டுட்டு இருக்கேன்! நீ காதிலேயே வாங்காம இருந்தா என்ன அர்த்தம்!” அவளது குரல் உயர, வேகமாய் எழுந்தவன், “ஏய் கத்தாதடி! பாப்பா தூங்கிட்டு இருக்கா! எழுந்துட போறா!” என்றது தான் வினயமே!


“ஒஹ்! உன் பொண்ணு தூக்கம் கெட்டுடும்னு யோசிக்கிற நீ யாரோ பெத்த பொண்ணை பத்தி யோசிக்கிலல!” ஆங்காரமாய் கேட்க, வேகமாய் மகளின் அறையை எட்டி பார்த்தான். “அங்க என்னய்யா பார்வை எனக்கு பதில சொல்லு!” மேலும் எகிற,


“இப்ப எதுக்குடி லூசு மாதிரி அர்த்த ராத்திரில கத்திகிட்டு இருக்க?” பல்லை கடித்தபடி விஷ்வா கேட்க, “ஆமாய்யா நான் லூசு தான்! நான் லூசே தான்! எல்லாம் என் தலைஎழுத்து! யாரையும் சொல்லக்கூடாது என்னை தான்… என்னைத்தான் சொல்லணும்!” பெருங்குரலில் அழ, இவனது பொறுமையோ பறந்தது. “ஏய் படிச்சவ தானேடி நீ! கத்தாதன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்ல! சத்தம் கீழ கேட்க போகுது!” என அவன் உறும,



“நான் கத்துறேனா? நான் பேசுறது உனக்கு கத்துற மாதிரிதான் இருக்கும்! அவ பேசுறது மட்டும் காதுல தேன்வந்து பாயுற மாதிரி இனிக்குமே! அப்படிதான் கத்துவேன்” மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவள் மேலும் குரல் உயர்த்த, அதற்குமேல் அவளுடன் பேச தெம்பின்றி அவன் அமைதியாகி போக, “நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன்! நீ பாட்டுக்கு அமைதியா இருந்தா என்னய்யா அர்த்தம்!” கோபத்தில் அவனை நோக்கி பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எரிய, அது அங்கிருந்த கண்ணாடியை பதம் பார்த்தது. “சிலீர்” என கண்ணாடி நொறுங்கிய சப்தம் இரவின் நிசப்தத்தில் கணீர் என கேட்க, திடுக்கிட்டு போனான் விஷ்வப்ரகாஷ்.


அவனது நிதானம் கண்டு தன்னிலை இழந்த பெண்ணவள், அறையில் உள்ள பொருட்களை எல்லாம் உடைத்தும் ஆத்திரம் அடங்க மறுக்க, விரைவாய் உடைந்த கண்ணாடி துண்டை எடுத்து கரத்தில் வெட்டப்போக, நொடியில் அவள் செய்ய விளைந்த காரியம் உணர்ந்து, அவளை நெருங்கி அவளிடமிருந்து அதனை பறிக்க போக, இருவருக்கும் இடையே ஒரு பெரும் போராட்டம். அதில் அவனது கரத்தை கண்ணாடித்துண்டு பதம் பார்த்து விட, “ஸ்ஸ்ஆ!” வலியால் துடித்தான், விஷ்வா.


அவள் அதனை உணராது தன்னை காயப்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே இருக்க, வலியையும் மீறி, அதனை அவளிடம் இருந்து பறித்தவன், அவளை ஓங்கி அறைய அதில் தான் நிதானம் அடைந்தாள், அபி.


சுயம் அடைந்தவள், கன்னத்தை பற்றியபடி அவனை பார்த்தவள், கன்னத்தில் ஈரம் உணர்ந்து கையை பார்க்க, அப்போது தான் கணவனின் கரத்தில் கசியும் உதிரம் கண்டாள்.


ஐயோ என்றபடியே அவனது கரத்தை பற்ற முற்பட, வேகமாய் கையை பின் இழுத்தான். “ஐயோ ரத்தம் விஷ்வா!” என்றபடியே கரத்தை மீண்டும் பற்ற, “விடுடி! விடுடின்னு சொல்றேன்ல!” அவனது மறுப்பையும் பொருட்படுத்தாமல், வேகமாய் கரத்தை ஆராய்ந்தவள் கண்களிலோ பெரும் தவிப்பு. படுக்கையில் அவனை அமர வைத்தவள், புயல் வேகத்தில் முதலுதவி பெட்டியை எடுத்து மருந்திட முயல, அவளது உதவியை ஏற்க மறுத்து, கையை மடக்க, கண்களில் கோபம் கொப்பளிக்க அவனது கையை பிடித்து காயத்தை சுத்தம் செய்தாள்.



சாரல் அடிக்கும்…

 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,

சொல்லாம கொள்ளாம ஓடி போய்டேன். அம்மாவீட்டுக்கு வந்தேன். என் பையன் வழக்கம் போல என்னைய வச்சு செய்துட்டான். லேப்டாப் போன் எதையும் நெனச்சு கூட பார்க்க முடியலை. சொல்லாம லீவ் எடுத்தது தப்பு தான். அடுத்து தீபாவளி அப்புறம் விசேஷம் என்று இன்னும் ஒரு மாசம் எப்ப வருவேன் எப்படி ud போடுவேனு எனக்கே தெரியாது. ஆனா வாரம் ரெண்டு அல்லது மூன்று நாளுக்கு ஒரு குட்டி எபியாவது கொடுக்க முயற்சி செய்றேன். யாரும் என்னை கட்டைய தூக்கி அடிக்க தேடாம, உங்க வீடு பிள்ளையா நெனச்சு என்னைய மன்னிச்சு விட்ருங்க மக்களே.

போன பதிவுக்கு எனக்கு லைக், கமெண்ட் செய்து என்னை உற்சாகப்படுத்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி. இந்த பதிவுக்கும் உங்க அன்பை வாரி வழங்குங்க மக்களே. And a special thanks to kavitha subramani sis, venmathi m sis, uma shankar sis, vijaydharuayar sis, renuga rajan sis, punithavathi sis, srinithi sis, elakkiya prakash sis, uma sis, indhu karthick sis, veena.R sis, sanju saraka sis,
sathya . A sis, vijisrn 1965 sis. எல்லாருடைய போரையும் சொல்லிட்டேன் என்றே நினைக்கின். புதுசா நம்ம குடும்பத்தில் இணைந்திருக்கும் அன்பூஸ் எல்லாரையும் வரவேற்கிறேன். எனக்கு தெரிந்து எல்லாரின் பெயரையும் mention பண்ணிட்டேன் என்றே நினைக்கிறேன் யாரின் பெயரையாவது குறிப்பிட தவறி இருந்தால், என்னைய மன்னிச்சுடுங்க நண்பர்களே.

பல நேரம் இந்த கதையை எழுதவே முடியாம தடுமாறும் போது உங்க அனைவரின் ஆதரவும் தான் என்னைய எழுதவே வைக்குது. நீங்க இல்லனா எனக்கு இது சாத்தியமே இல்லை என்று தான் சொல்லுவேன். love u all makkale

உங்கள் ஆதரவை எதிர்பார்த்து,
நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்


சாரல் 15

அறையில் படுக்கையில் அமர்ந்திருந்த வித்யா, தன் மகனையும் அவன் வாழ்கையும் நினைத்து வருந்தாத நாளே கிடையாது. பெட் சைட் லாம்ப் அருகே இருந்த தங்களது குடும்ப படத்தை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார்.
தனது மனக்கவலைகளை சொல்ல ஆளின்றி, தெய்வமாகி போன கணவரிடம் தினமும் தனது மனக்கவலையை இறக்கி வைத்திடுவார். இன்றும் அப்படி தான். ஏனோ மனம் மகனை நினைத்து அதிகமாக துவள, அறைக்குள் இருப்பதே மூச்சடைப்பதை போல உணர்ந்தவர், சற்று வெளிக்காற்று வாங்கினால் தேவலாம் போல தோன்ற, மாடிக்கு சென்றார்.

படியேறி வந்தவர், அந்த நேரத்தில் மேடையில் யாரோ படுத்திருப்பது போல தெரியவும், திடுக்கிட்டு போனவர், அது மகன் என்பது தெரிந்து துடித்து போனார். வாழ வேண்டிய வயதில், துணை இருந்தும், தனிமையில் மகன் இருப்பது கண்டு தாயாய் மனம் வெதும்பி போனார். மெதுவே அவன் அருகே வந்து நிற்க, தன் மீது நிழல்படுவது உணர்ந்து கண் விழித்தான், விஷ்வா. மெதுவாய் கைகளை விலக்கி பார்க்க, தாயை இந்த நேரத்தில் கண்டு பதறி போனான், மகனாய்.

“என்னம்மா? என்னாச்சு?” தாய் முகம் கண்டு பதட்டமாய் கேட்க, அவனது கவலை உணர்ந்து, அன்னையாய் அந்த நேரத்திலும் பூரித்தது பெற்ற மனம். அவரை நெருங்கி கை பிடித்து, மேடையில் அமர வைத்தவன், “என்னம்மா?” உயிர் உருக அழைக்க, அவனின் குரலில், உள்ளே எதுவோ உடைவதை உணர்ந்தார் வித்யா. நடுங்கும் கரம் கொண்டு, மெல்ல கரம் நீட்டி அவனது கன்னம் தாங்க அதிர்ச்சியில் அகல விரிந்தது அவன் கண்கள்.


தாயின் நடுக்கம் உணர்ந்து “ம்ம்மா!” தவிப்பாய் வார்த்தைகள் உதிர, “அம்மாவ மன்னிச்சுடுடா கண்ணா!” மகனின் வருத்தம் கண்டு பல நாட்கள் கழிந்து தனது மௌனத்தை உடைத்தார் வித்யா. உடைந்து போய் அன்னை சொல்ல, பதறி போனான் ஆண்மகன். “என்னம்மா! மன்னிப்பு அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க! நான் உங்க மகன்மா என்கிட்டே போய்!” தாயை தேற்ற முனைந்தான் மகன்.

“இல்ல… நாங்க எல்லாரும் எங்க இஷ்டத்துக்கு தான் உன்னைய வளைக்க பார்த்தோம். வளைச்சோம்! உனக்கு என்ன தேவை என்று ஒரு அம்மாவா நான் கவனிக்க தவறிட்டேனோனு எனக்கு நெஞ்சு குறுகுறுக்குது விஷ்வா! உன்னைய நான் கவனிச்சு இருந்தா நீ இப்ப இப்படி கஷ்டப்பட வேண்டி இருக்காதே. நாந்தான்.. நான் தான் எல்லாத்துக்கும் காரணம்!” என்றவர் முகத்தை மூடியபடி அழுதார்.

“அம்மா… அம்மா… என்னம்மா…. என்னம்மா நீங்க! நீங்க என்னம்மா செய்தீங்க? நடந்த எதுக்கும் நீங்க காரணம் இல்லையேமா! அது…” சொல்ல முடியாது கமறிய தொண்டையை எச்சில் விழுங்கி சரி செய்தவன், “அது என் தலைவிதிம்மா. அதுக்கு நீங்க என்ன செய்ய முடியும்!” நெஞ்சை அடைத்த துக்கத்தை மறைத்துக் கொண்டு, தன்னையும், தன் வாழ்க்கையையும் கண்டு மருகும் தாய்க்கு என்ன சொல்லி ஆறுதல் படுத்தவென தெரியாது, வாய்க்கு வந்ததை சொல்லி தேற்ற முயன்றான், விஷ்வா.


“அப்ப ஏண்டா நீ இந்த அர்த்த ராத்திரில இங்க தனியா நின்னுகிட்டு இருக்க?” மகனது வாழ்க்கையில் தலையிடாதவர் தான் வித்யா. கணவன் மனைவி அவர்களுக்குள் ஆயிரம் இருக்கும் என்ற எண்ணம் கொண்டவர் தான். என்ன இருந்தாலும், எத்தனை தான் கண்டுக் கொள்ளாமல் இருப்பதை போல காட்டிக் கொண்டாலும், தாய் மனம் பெற்ற மகனின் வாழ்க்கையை கண்டு கதறி துடிக்க தான் செய்தது. தாயின் கேள்வியில் விஷ்வாவின் முகத்தில் ஆயிரம் வர்ண ஜாலங்கள். என்ன சொல்வது என்று, ஆயிரம் வார்த்தைகள் தெரிந்தும், பதில் சொல்ல முடியா ஊமையாகித்தான் போனான் அந்த நேரத்தில்.

மகனின் மௌனத்தில், “சொல்லுடா ஏன் பதில் சொல்லாம தவிக்குற? முடியலைல! உன்னால பதில் சொல்ல முடியலைல. என்னால முடியலைடா… என்னால முடியலை! என் பையன் வாழ்க்கை கடைசி வரை இப்டியே இருந்திடுமோனு எனக்கு கவலையா இருக்குடா விஷ்வா!” அவர் கதற, அவர் அழுவது பொறுக்காது வேகமாய் சென்று தாயை தோளோடு அணைத்துக் கொண்டான், தனையன்.

சற்று நேரம் தனது மனபாரம் தீரும் மட்டும் அவரை அழுக விட்டவன், “ம்மா போதும்மா! அழுதது போதும். உடம்புக்கு எதாவது முடியாம வந்திட போகுது! அவன் அதட்ட, விலுக்கென நிமிர்ந்து அவன் முகம் கண்டவர், “ஆமா… இந்த உடம்புல உசுரு இருந்து என்ன பிரயோஜனம்! எல்லாத்தையும் பார்த்துட்டு நான் நல்லா தானே இருக்கேன்!” என்றார் மனம் வெதும்பி.


“அம்மா” பதறியபடி வேகமாய் தாயின் வாயை கைக்கொண்டு மூடினான், விஷ்வ பிரகாஷ். “என்னமா இப்படி சொல்லிட்டீங்க! நீங்க இல்லனா நான் அநாதையாகி போயிடுவேனேம்மா!” குரல் உடைய, தாயின் கரம் பற்றி கலங்கினான், அந்த கம்பீரமான ஆண்மகன்.

“எனக்குன்னு உங்களுக்கு அடுத்து யாருமா இருக்கா!” என உணர்ச்சி வேகத்தில் தன்னையும் அறியாது அவன் புலம்ப, கேட்டவரின் மனதில் பெரும் பாரம் ஏறிக் கொண்டது. “அதை தான் நானும் சொல்றேன் விஷ்வா! இதோ இப்ப நீ இங்க தனியா வந்து இருக்கிறதுளையே எனக்கு அது தெரியாதுன்னு நெனச்சியா!” எனவும் அவனது கண்ணில் அழுகை மறைந்து அதிர்ச்சி குடி கொள்ள, “ம்மா!” என்றான் திணறலாய்.


“என் மகன் எப்படி வாழ்றான் என்கிறதை கூட புரிஞ்சிக்க முடியாதவன்னு நெனச்சியா உன் அம்மாவை!” தாயின் குரல் கூர்மையாய் ஒலிக்க, கண்களில் நீர் திரள, வேகமாய் அன்னையின் மடியில் அடைக்கலம் புகுந்தான், அந்த வளர்ந்த குழந்தை. மெதுவாய், ஆதரவாய், ஆதூரமாய் அவன் தலை வருட, பல நாள் கழித்து கிடைத்த தாயின் அருகாமையில், அவரின் புடவை முந்தானையை பற்றியபடி, தாயின் வாசத்தை நுரையீரலில் சேமித்துக் கொண்டு கண் மூடினான் மகன்.

அறையில் சிதறிய பொருட்களுக்கு நடுவே அமர்ந்து தொலை வானத்தை வெறித்தபடி இருந்தாள், அபி ரக்ஷிதா. மெதுவாய் தனது கரத்தை தூக்கி பார்க்க, அதில் தன்னவனின் ரத்தம் காய்ந்து கிடக்க, திடீரென்று எதுவோ தோன்ற படக்கென எழுந்தவள், ஈர துணி கொண்டு கரத்தை துடைத்தாள். துடைத்து விட்டு கரத்தை பார்க்க, ஏனோ அவளுக்கு அவனது ரத்தக்கறை இன்னும் தனது கரங்களில் படிந்திருப்பது போல ஒரு பிரம்மை. மறுபடி மறுபடி அதனை துடைத்தவளுக்கு என்ன முயன்றும் அது இன்னும் இருப்பது போல ஒரு எண்ணம். விலுக்கென எழுந்தவள், வேக வேகமாய் அறையை துளாவினாள். அவளது பார்வைக்கு அவள் தேடியது தட்டுப்பட அந்த கூரிய கண்ணாடி துண்டை எடுத்து, தனது உள்ளங்கையை வெட்டிக் கொண்டாள், அபி.


கைகளில் இருந்து குருதி வடிய, அதனை கண்டு திருப்தி கொண்டவள், தளர்ந்து போய் படுக்கையில் அமர்ந்துக் கொண்டாள். அவளது கரத்தில் இருந்து ரத்தம் சொட்டு சொட்டாய் வடிந்து தரையில் சிந்த, அதில் அவ்வளவு நேரம் புயலில் சிக்கிய தோணி போல இருந்த அவள் உள்ளம் பேரமைதி கொண்டது.

இது எதையும் அறியாது தாயின் மடியில், அன்னையின் கதகதப்பு தந்த அமைதியில் தனது மனக் கிலேசம் அனைத்தும் தூர ஓடி ஒளிந்தது போல தோன்ற, வெகு நாட்கள் கழித்து கிடைத்த அவரின் அருகாமையை ஆழ்ந்து அனுபவித்த வண்ணம் தூங்கி போனான், விஷ்வா. மகனின் சிகையை வருடியவரின் கண்கள் வானத்து வெண்ணிலவை வெறிக்க, அவருள்ளும் பல பல நினைவுகள். துக்கம் தொண்டையை அடைக்க, கண்ணில் பொங்கும் கண்ணீருக்கு அணையிட முயன்று தோற்று போனார், வித்யா.

அவரின் விழிநீர் விஷ்வாவின் மீது பட்டுவிட, லேசாய் அசைந்தான் தனையன். பதறி போனவர் வேகமாய் விழிநீரை உள்ளிழுத்துக் கொண்டு, மகனது முகத்தையே வாஞ்சையாய் பார்த்தார். கண்ணோரம் விழுந்த சுருக்கங்களும், கண்ணை சுற்றி இருந்த கருவளையமும் அவனது நிற்காத ஓட்டத்தை சத்தமின்றி பறை சாத்த, வெளியில் இருந்து பார்ப்பவருக்கு அது அவனது தொழில் மீதான ஈடுபாடு, அதற்கான ஓட்டம் என்று தான் தோன்றும். ஆனால் மகனை நன்கு அறிந்து வைத்திருந்த தாய்க்கு மட்டும் தான் தெரியும் மகனின் உள்ளக்கிடக்கை.

மகன் மனம் அறிந்தவரால், அவனின் மனம் அறிய தவறியதை எண்ணி, எண்ணி உள்ளுக்குள் குமைந்து தான் போனார். வானத்து வெண்ணிலவு அவரை பார்த்து கண் சிமிட்ட, மனமோ தனது மன்னவனை எண்ணி வேதனை கொண்டது. “இதெல்லாம் பார்க்க கூடாதுன்னு தான் நீங்க முன்னாடியே போய்டீங்களா?” மறைந்த கணவனை நினைத்து கேள்வி எழுப்பியவர், “ஆனா என்னைய மட்டும் இதெல்லாம் பார்க்க விட்டுட்டு தனியா போய்டீங்களே! இதெல்லாம் பார்க்கணும் என்று தான் எனக்கு எழுதி வச்சிருக்கோ! இன்னும் நான் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோன்னு எனக்கு தெரியலையே!” என அவரின் மனம் அரற்ற, அது உண்மை தான் என்பது போல, பிற்காலத்தில் அவர் கனவிலும் நினைத்து பார்க்காத பல நிகழ்வுகள் அவர் கண் முன்னே நிகழ போவதையும், அதை தானும் எதுவும் செய்ய முடியாது வேடிக்கை மட்டும் பார்க்க போவதை அறியாது தான் போனார். அதில் அவர் இன்னும் இன்னும் உடைந்து போக போவதையும் தெரியாது அமர்ந்திருந்தார், வித்யா.
கடவுளின் கைகளில் அனைவரின் வாழ்க்கையும் நூல் பாவையாய் சிக்கி இருக்க, யாரால் தான் அவனை மீறி என்ன செய்துவிட முடியும்?


“என்னங்க! என்னால அவன் கஷ்டப்படுவதை பார்க்க முடியலை! எல்லாரும் நல்ல இருக்கணும்னு நினைக்கிற நம்ம மகனுக்கு ஒரு நல்லது நடக்க மாட்டேங்குதே! அவனுக்கு நீங்க தான் எப்பவும் துணையாய் இருக்கணும்!” மறைந்து போய் காற்றோடு காற்றாய் கலந்திருந்த தனது கணவனிடம் வேண்டி கொண்டார் அந்த பாசமிகு தாய்.


வானில் அருவமாய் இருந்த சுந்தரும், தனது மகனும் மனைவியும் தானின்றி அடையும் துயர் கண்டு கலங்கி இருப்பார் போலும். நடக்க போவதை எண்ணி அவராலும் எதுவும் செய்ய முடியாது என தெரிந்து மனைவிக்கு இணையாய் அவரும் கலங்கி தான் போனார். தான் அவர்கள் உடன் இருக்க முடியா நிலையை எண்ணி வருந்தினார்.

காலை விடிவெள்ளி யாரையும் பற்றிய கவலை இன்றி, தனது கடமையை செவ்வென செய்ய கிழக்கு திசையில் உதயமாக, பறவைகள் தனது “கீச் கீச்” ஒலியால் ஆதவனை வரவேற்றுக் கொண்டிருந்த நேரம் அது. திரை சீலை மெதுவே காற்றுக்கு விலக, அந்த இடைவெளியில் மெல்ல மெல்ல உதயவன், தனது ஒளி கீற்றுகளை கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தான்.

இரவு அமர்ந்த இடத்திலேயே அழுதபடியே தன்னையும் அறியாது பிருந்தா அங்கேயே உறங்கி போய் இருக்க, காலை இளம் வெயில் முகத்தில் படவும், மெல்ல மெல்ல கண் மலர்த்தினாள், பாவை. கண்கள் இரண்டும் சரியான உறக்கம் இன்றியும், அழுததாலும், நெருப்பாய் தகிக்க, தலை வேறு பாரமாய் இருந்தது. மெல்ல சுயநினைவுக்கு வந்த பிருந்தா, மெதுவாய் விழிகளை திறக்க முற்பட, காந்திய கண்கள் திறக்கவிடாது அவளை இம்சித்தது. கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டவள், மறுமுறை கண்களை சிரமமப்பட்டு திறந்து மெதுவாய் விழிகளை சுழல விட்டாள்.

முதலில் சூழல் புரியவே நேரமெடுத்தது பெண்ணுக்கு. நேரம் பார்த்து பதறி போனவள், வேகமாய் எழ முற்பட, ராத்திரி முழுக்க ஒரே இடத்தில் இருந்ததால் கால்கள் அவளது கட்டளையை ஏற்க மறுத்தது. முயன்று சமாளித்து, எழுந்து நிற்க, முடியாது தடுமாறினாள். தன்னை சுத்தப்படுத்தி கொண்டு குளித்து முடித்தவள், துரிதமாய் குழந்தைகளின் அறையை எட்டிப் பார்க்க, “தன்யா ராகுல் நேரமாச்சு எழுந்திருங்க! ஸ்கூல் போகணும்!” என குரல் எழுப்பியபடியே திரைசீலையை விலக்க, காலை சூரியனின் ஒளிக்கீற்று முகத்தில் படவும், அசைந்தாள் தன்யா. தலையணையை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டவள், “அம்மா முதல அந்த ஸ்க்ரீனை க்ளோஸ் பண்ணுங்க!” கண்களையே திறவாமல் க்ரிச்சிட, அவளை சட்டை செய்யாது, குளியல் அறையில் ஹீட்டரை ஆன் செய்து வந்தவள், “ராகுல்! ராகுல் கண்ணா எழுந்திருங்க! ஸ்கூலுக்கு நேரமாச்சு பாருங்க!” மகனை எழுப்ப முனைய, தாயின் குரலில் மெதுவாய் கண்களை பிரித்த ராகுல்,“குட்மார்னிங் அம்மா!” தாயை கண்டு புன்னகை புரிய, தனது இன்னல்கள் அனைத்தும் மகனின் புன்னைகையில் மறைந்தது போன்ற உணர்வு பிருந்தாவினுள்.


மகனை நெருங்கியவள், அவனது நுதலில் முத்தமிட்டு, “குட் மார்னிங்டா கண்ணா!” தானும் வாழ்த்த, தாயை அணைத்துக் கொண்டான், தனையன். இவர்கள் இருவரையும் கண்களில் வழியும் பொறாமையோடு பார்த்திருந்தாள், தன்யா.


சாரல் அடிக்கும்…
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,

சாரல் 16 போட்டுட்டேன். போன பதிவுக்கு எனக்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றியோ நன்றி. நீங்க இல்லனா எனக்கு இது சாத்தியமே இல்லை. உங்க வார்த்தைகள் தான் எனக்கு பூஸ்ட் ஹோர்லிக்ஸ் எல்லாமே. சோ உங்க பொன்னான கருத்துக்களை தெரிவிங்க மக்களே.

எவ்வளவு முயன்றும் என்னால வாரம் ஒரு பதிவு தான் கொடுக்க முடியுது. தலைகீழா நின்னா கூட ஒரு நாளைக்கு நூறு வார்த்தை டைப் செய்றதே எனக்கு குதிரை கொம்பா இருக்கு மக்களே. என்னோட நிலையை புரிந்துகொள்வீங்க என நம்புறேன். And a special thanks to elakkiya prakash sis, suganya 17 sis, indhu karthick sis, vijirsn 1965 sis, sanju saraka sis, renuga rajan sis, vijaydharuayar sis, kavitha subramani sis, srinithi sis, venmathi. M sis, sathya. A sis, ums sis, pavithra . D sis. unga ellarukum evlo thanks sonnalum pothaathu.

அண்ட் ரவுடி பேபி sathya. A சிஸ், ud போட்டுட்டேன் தெய்வமே. கம்பு கட்டை எல்லாம் தூக்கிட்டு வந்து சின்ன பிள்ளைய மிரட்டாதீங்க. மீ கிரீன் sand ரொம்ப ரொம்ப பாவம்.

உங்கள் ஆதரவை எதிர்பார்த்து,
நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்




சாரல் 16

காலை நேரத்து பட்சிகளின் ரீங்காரத்தில் புரண்டு படுத்தான், விஷ்வா. இதமான குளிர் பரவி இருக்க, போர்வையை இன்னும் இழுத்து போர்த்திக் கொண்டான். சட்டென எதுவோ தோன்ற போர்வையை நோக்கினான். அவன் மீது ஒரு கனமான போர்வை போர்த்தப்பட்டிருக்க, புருவம் சுருக்கி யோசித்தவனுக்கு நேற்றைய நினைவுகள் மனக்கண் முன் விரிய, தாயின் செயலாக தான் இருக்குமென யூகித்தவனின் முகம் மென்மையை பூசிக் கொண்டது. அன்னை மடி ஆழ்ந்த அமைதியை தந்திருக்க, மனம் நிர்மலமான உணர்வு அவனுள். போர்வையை மடித்து எடுத்துக் கொண்டவன் முகம்தனில் நெடு நாள் கழித்து ஒரு வித இளக்கம்.

அறைக்கு வந்தவன் கதவை திறக்க போன நொடி, நேற்றைய நிகழ்வுகள் வரிசையாய் ஓட, ஆழ்ந்த மூச்செடுத்து, மனையாள் என்ன பேசினாலும் எதிர்வினையாற்ற கூடாது எனும் உறுதி எடுத்தவனாய் அறைக்குள் நுழைந்தான். படுக்கையில் அபி படுத்திருக்க, விறுவிறுவென குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டான். வெளியே வந்தவன், கண்ணாடிமுன் நின்று முகம் துடைத்துக் கொண்டிருந்தான். முகம் துடைத்து நிமிர்ந்தவன் பார்வையில் அதுபட, மீண்டும் கண்ணாடியில் தனது பார்வையை பதித்தான், விஷ்வா.
அவனது பார்வை ஓரிடத்தில் நிலைகுத்த, அவளது கையில் இருந்து வடிந்த குருதி அந்த இடத்தில் சொட்டு சொட்டாய் அந்த இடம் முழுதும் படிந்திருக்க, பார்த்தவன் அதிர்ந்து போனான். வேகமாய் அவளை நெருங்கியவன், அவளது கரத்தில் பார்வையை பதிக்க, கையில் இருந்த காயத்தில் ரத்தம் காய்ந்து போய் இருந்தது. நெஞ்சம் திடுமென அதிர, மனையாளை நெருங்கியவன், காயப்பட்ட கரத்தை கையில் எந்த, அந்நொடி அவனுள் கண்மண் தெரியாத கோபம் தான் முகிழ்த்தது.

பல்லை கடித்தபடியே தண்ணீர் பாட்டில் எடுத்து அவளது முகத்தில் தெளிக்க, மயக்கம் தெளிந்து விழித்தாள், அபி. அவனது பார்வை அவளை துளைக்க, புரியாது முகம் சுருக்க, நொடியில் அவளுக்கும் அனைத்தும் நினைவிலாட, அவனது பார்வையை ஒருவித அலட்சியத்தோடு எதிர்க்கொண்டாள். அதில் அவனுக்கு சுர்ரென்று ஏற, “ஏண்டி நீ படிச்சவ தானே! லூசாடி நீ? அறிவு கெட்டவளே! மூளையை எங்கேயாவது கடன் குடுத்திட்டியா?” பல்லை கடித்தபடி ஆத்திரத்தில் உறும, அவனது கடைசி வாக்கியத்தில் கணவனை தீயாய் முறைத்தாள், பெண்.

“என்னடி! என்ன முறைக்கிற! லூசு மாதிரி கையை கிழிச்சு வச்சிருக்க, இனிமே கையை கிழிக்காத கழுத்தை கிழிச்சுக்கோ! நானாவது நிம்மதியா இருப்பேன்?” விஷ்வா வார்த்தையை விட, நொடியில் பெண்ணவளுக்கு கண்ணில் நீர் திரண்டது. அவனுக்கு அதனை காட்டகூடாது என வீம்பாய் வெளிக்காட்டாது அமர்ந்திருந்தாள்.

“ஏண்டி நான் இங்க கத்திக்கிட்டு இருக்கேன்! நீ எனக்கென யாருக்கோ சொல்ற மாதிரி இருக்க?” ஆத்திரத்தில் பல்லைக் கடிக்க, அவனை சட்டை செய்யாது மெதுவாய் சிரமத்துடன் கையை ஊன்றி எழுந்துக் கொண்டவள், கணவனை கிஞ்சித்தும் கண்டுக்கொள்ளாது, முதலுதவி பெட்டியை தேடி எடுத்தாள். அவளது நடவடிக்கையை கண்ணில் கனலுடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் சிரமப்படுவது உணர்ந்து, ஈரெட்டில் அவளை அடைந்தவன், கையில் இருந்த பஞ்சை வாங்கி காயத்தை துடைக்க ஆரம்பித்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், அபி.

வாய் அதன் பாட்டில் திட்டிக்கொண்டிருக்க, “பைத்தியக்காரி! பைத்தியக்காரி!” எனும் வசவுடன் அவன் சுத்தம் சட்டென முகிழ்த்த சினத்தில், வேகமாய் கையை அவனிடமிருந்து உருவ முயற்சித்தாள், முயற்சித்தாள் அவ்வளவே. அவனது வலுவான பிடியில் அவளால் கரத்தை அசைக்கக்கூட முடியாது போக, மறுபடி முயன்றாள். அதில் அவனது பிடியும் நொடிக்கு நொடிக்கு இறுக, வலியில் தீயாய் அவனை முறைக்க துவங்கினாள்.


அவளை நிமிர்ந்தும் பாராமலே, இவ்வளவும் நடக்க, “சும்மா இருடி அப்புறம் இன்னும் வலிக்கபோகுது!” நக்கலாய் விஷ்வ மனையாளை எச்சரிக்க, அவனை தீர்க்கமாய் பார்த்தவள், “என்ன பதிலுதவியா!” அவனையும் விட நக்கலாய் கேட்டாள். அதில் அவனது கரம் ஒருநொடி நின்று, மறுபடி செயல்பட ஆரம்பித்தது.

“இது போண்டா….ட்டினு என் மேல இருக்க பாசமா? அக்கறையா? இல்ல…” நக்கலாய் இழுத்தவள், “இல்ல காதலா?” கேலியாய் முடிக்க, அவளை கணக்கில் எடுக்காமல், கடமையே கண்ணாயினான்.

அவனிடம் பதிலின்றி போக, “உன்கிட்டதான்யா கேட்டேன்!” என்றாள். “இது பொண்டாடினு என்மேல இருக்கிற காத…. காதலா இருக்க வாய்ப்பில்லை. உன் மகளோட அம்மானு ஒரு கரிசனமா!” மேலும் வார்த்தைகளால் சீண்ட, கையை சுத்தம் செய்து முடித்திருந்தான்.

“என்ன பதிலையே காணோம்?” விடாது கேட்க, “உனக்கு எப்படி தோணுதோ அப்படியே வச்சுக்கோ!” கடினமாய் வந்தது குரல். “ஹ்ம்ம்! ஏற்கனவே பழக்கமோ!” அடுத்த கேள்வியை தொடுக்க, அவளது கேள்வியில் புருவம் சுருக்கியவன், நிமிர்ந்து பார்க்க, “இல்ல ஏற்கனவே இதுமாதிரி யாருக்கோ… செஞ்சு பழக்கமோ?” அந்த “யாருக்கோ”வில் அழுத்தம் கொடுக்க, காதே கேளாது போல மருந்திட்டு கட்டியவன், இறுதியில் கட்டை இறுக்கி, தன் கோபத்தை வெளிபடுத்தினான்.

“ஆ!” என அலறியவள், வேகமாய் தனது கையை உதற, “என்கிட்ட எப்போதும் பார்த்து வார்த்தையை விடுன்னு உன்கிட்ட பலதடவை சொன்னதா ஞாபகம்!” இதழ்களில் சிறுபுன்னகை நெளிய பதிலுறுக்க, உள்ளுக்குள் சுறுசுறுவென ஏறியது, அபிக்கு.

“போ! போய் உருப்படியா எதாவது வேலை இருந்தா பாரு!” நக்கலாய் சொல்லிவிட்டு அவன் வெளியே சென்றுவிட, அவனையே வெறித்தது அவளது விழிகள். அவனிடம் எதையோ எதிர்பார்த்ததோ அவள் மனம்?


மகனை உச்சி முகர்ந்த பிருந்தா, மகளின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்து, குறும் புன்னகையுடன் அவளை நோக்கி கைகளை நீட்ட, முகம் திருப்பிக் கொண்டாள், தன்யா. அதில்
மலர்ந்த சிரிப்புடன் மகளை நெருங்கி அவளது கன்னத்தில் முத்தம் பதிக்க, “ச்சீ! டர்ட்டி!” என்றபடியே தனது கன்னத்தை அழுந்த துடைக்க, பிருந்தாவின் முகமோ ஒளியிழந்து போனது. முயன்று தன்னை சமாளித்துக்கொண்டவள், “சரி சரி ரெண்டு பேரும் எழுந்திரிங்க! ஸ்கூல்க்கு டைம் ஆச்சு பாருங்க !” பிள்ளைகளை கிளப்ப, “நான் இன்னைக்கு ஸ்கூல் போக மாட்டேன்! எனக்கு ஸ்கூல் போக பிடிக்கலை!” எழுந்தவுடனே படுக்கையை விட்டு எழாமல், தன்யா அன்றைய நாளுக்கான பஞ்சாயத்தை கூட்ட, “ஏன் போக மாட்ட!” தாய் கேட்க, “எனக்கு பிடிக்கலைனா பிடிக்கலை! அவ்வளவுதான்! அதை உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை!” என்றாள், மகள். மகளின் வார்த்தைகளில் முகம் மாறியபோதும், “இல்ல இன்னைக்கு நீ ஸ்கூல் போற அவ்வளவுதான்!” தான் உனக்கு தாய் என்பதை உணர்த்தினாள்.


தாயை முறைத்த வண்ணமே தயாராகி வந்தாள். அதற்குள்ளே பிருந்தாவுக்கு பாதி சக்தி வடிந்தது போல இருந்தது. வழக்கம் போல உணவு மேஜையில், தட்டில் இட்லியை வைத்தவுடன், “அய்ய இட்லியா? எனக்கு இட்லி பிடிக்காது போ!” எனக்கு சப்பாத்தி தான் வேணும்!” அவள் அடுத்ததை ஆரம்பிக்க, “தன்யா இன்னைக்கு சப்பாத்திக்கு போடல! இட்லியை சாப்பிடு !” பிருந்தா மகளிடம் சொல்ல, “ஹ்ம்ம்… எனக்கு இட்லி வேணாம்! நான் சாப்பிட மாட்டேன்! எனக்கு சப்பாத்தி தான் வேணும்!” என பெருங்குரலில் வீரிட, பிருந்தா பொறுமையாய், “தன்யா அம்மாதான் சொல்றேன்ல! இன்னைக்கு இட்லி சாப்பிடு. அம்மா நைட் உனக்கு சப்பாத்தி செய்து தரேன்”

“எனக்கு வேணாம்!” என்பதை மட்டுமே மந்திரம் போல சொன்னாள், மகள். பொறுமையிழந்த பிருந்தா, “தன்யா என்னதிது இப்படி இல்லாததை கேட்டு அடம்பிடிக்கிற பழக்கம்? நான்தான் நைட் செய்து தரேன்னு சொல்றேன்ல” என கடிய, வீரிட்டு அழ ஆரம்பித்தாள், தன்யா. “என்ன.. என்ன இங்க சத்தம்! தன்யா கண்ணு ஏன்மா அழற?” சம்மன் இல்லாது சரியாய் தவறான நேரத்தில் ஆஜரானார் சாரதா. வார்த்தை பேத்தியிடம் இருந்தாலும், பார்வை மருமகளிடம் தான் இருந்தது. பாட்டியை கண்டவுடன் துணைக்கு ஆள் கிடைத்த தைரியத்தில் அழுகையை கூட்டினாள், பிருந்தாவின் சின்ன மாமியார்.

அதில் சாரதாக்கு உருகி போய்விட, “ஏய் அவ எதுக்கு அழறா?” மருமகளிடம் கேட்க, “அவ சப்பாத்தி வேணும்னு கேட்குறா!” பிருந்தா மெதுவாய் சொல்ல, “என்ன கேட்குறாளோ கொடுக்க வேண்டியது தானே!”

“இல்ல இன்னைக்கு சாப்பாத்திக்கு போடல!” மெதுவாய் மொழிய, “ஏன் ஏன் இன்னைக்கு போடல! அவ கேட்குறத செய்றதவிட அம்மாவா உனக்கு வேற என்ன வேலை!” சாரதா நாக்கில் நரம்பின்றி பேச,

“நீங்கதான் நே…த்..து மெ..னு மெனுல சப்பாத்தி வேண்டாம்னு சொன்னிங்க!” திணறலாய் அவள் சொல்லி முடிக்க, நொடியில் தன்னை சமாளித்துக் கொண்டவர், “ஏன் இப்ப என்ன ஆகிப்போச்சு போய் செய்ய வேண்டியது தானே!” அவளுக்கு கட்டளையிட, “இல்லை இதுக்கு மேல செய்ய நேரம் இல்லை. அவ குருமாதான் கேட்பா! அதுக்குள்ள நேரமாகிடும்!” பிருந்தா சொல்ல,

“என்ன.. என்ன நேரமாகிட போகுது! சின்ன பிள்ளை ஆசைப்பட்டு கேட்குறா அதை உடனே செய்ய வேண்டியது தானே! பேசுற நேரம் இந்நேரத்துக்கு பாதி செஞ்சே முடித்திருக்கலாம்!” தோரணையாய் மொழிந்தார், சாரதா.

“இல்ல அவளுக்கு ஸ்கூல்க்கு நேரம் ஆகிடும்! ஏற்கனவே நேரமாகிடுச்சு!” பிருந்தா சொன்னது தான் தாமதம். “என் பேத்திக்கு இந்த வீட்டுல அவ ஆசைபட்டத்தை சாப்பிட உரிமையில்லையா? சின்ன குழந்தை கேட்குறா அதை செய்றதை விட்டுட்டு உனக்கு வேற என்ன வெட்டி முறிக்கிற வேலை?” எப்போதடா மருமகள் சிக்குவாள் என காத்திருக்கும் சாரதா அதுதான் சாக்கென அவளை திட்ட ஆரம்பித்தார்.


“இது என்ன உங்கப்பன் வீடு மாதிரி ஒண்ணுமில்லாத வீடா? என் வீட்டுக்காரர் சம்பாதிக்கிறார்! என் மகன் சம்பாதிக்கிறான்! உட்கார்ந்து சாப்பிட்டாகூட பல தலைமுறைக்கு தாங்கும். உன் குடும்பம் போல மாசசம்பளம் வாங்கி அதை எண்ணி..எண்ணி செலவு பண்ற அவசியம் எங்களுக்கு இல்லை!” அந்த “எண்ணி”யை இழுத்தார், மாமியார். எப்போதும் கேட்டு பழகியது தான் என்றாலும், தனது பிள்ளைகள் முன்னே, பிறந்த வீட்டை அவமானப்படுத்துவதை தாள முடியவில்லை. தொண்டைக்குள் அடைத்ததை கண்ணீரால் விழுங்கிக் கொண்டாள், பெண்ணவள்.


அந்த நேரம் முரளி படியிறங்க, அவனை கண்டுவிட்ட சாரதா, “இன்னும் எவ்ளோ நேரம் இங்கேயே நிப்ப, இந்த வீட்டுல என் பேச்சுக்கு ஒரு மரியாதை இல்லை!” என மூக்கு சிந்த ஆரம்பிக்க, “என்னம்மா? என்ன ஆச்சு?” கேள்வியுடனே வந்தான், சாரதாவின் மகன்.


“அது ஒண்ணுமில்லைப்பா நீ விடு!” என மழுக்க, “என்னம்மா? என்ன ஆச்சு?” மகனும் விடாது கேட்க, “ஒண்ணுமில்லைப்பா தன்யாக்கு இட்லி பிடிக்காது! சப்பாத்தி கேட்டிருக்கா! உன் பொண்டாட்டி செஞ்சு கொடுக்க மாட்டேங்குறாப்பா!” பாவமாய் சொல்ல, மனைவியை ஏறிட்டது அவனது விழிகள், “இ..ல்..ல.. இல்ல இன்னைக்கு செய்யல…!” என்றதும், பொசுக்கியதுஅவனது விழிகள். அதில் எச்சில் விழுங்கியவள், “அத்தை தான்…!” பாதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, எங்கே தனது குட்டு உடைந்திடுமோ என்ற அவசரத்தில், “என்ன… இப்ப என்ன நாந்தான் நேத்து வேண்டாம்னு சொன்னேன் அதுக்காக குழந்தைக்கு இப்ப செஞ்சு கொடுத்தா ஆகாதா?” அவளுக்கு முன், தான் முந்திக்கொண்டார்.

“ஏன் இந்த வீட்டுல உனக்கு உரிமை இல்லையா? நீ இந்த வீட்டு மருமக தானே! அதுசரி.. உனக்கு பெரியவீட்டு மருமகன்னு என்னைக்கு நினைப்பிருக்கு? என் மகன் என்ன குறையாவா சம்பாதிக்கிறான்? நீ என்னைக்கும் மாச சம்பளக்காரன் மகளா தானே உன்னை நினைச்சுக்குவ!” சந்தடி சாக்கில்
மகனை துதிபாடி, மறுபடியும் மகனின் முன்னிலையிலே பிருந்தாவின் வீட்டை சாடினார்.


அந்த வளர்ந்து கெட்டவனும் தாயை அடக்கவில்லை. தாய் அவனின் புகழ் பாடியவுடன் கண்களில் கர்வம் குடியமர, தாயின் வார்த்தைக்கு அமைதியாய் இருந்தான். “இவளை சொன்ன நேரத்துக்கு நானே போய்…!” புடவையை இழுத்து சொருகியபடி, சமையலறைக்கு செல்வது போல பாவனை செய்ய, “அம்மா நீங்க ஏம்மா அதெல்லாம் செய்யணும்! நான் சம்பாரிச்சு போடவும் சாப்டுட்டு வீட்டுல நிம்மதியா தானே இருக்காங்க அவங்க செய்யட்டும்!”

“விடுப்பா என் பேத்திக்கு யாரு செஞ்சா என்ன? பாவம் குழந்தை பசில துவண்டு போய் இருக்கும்!” என தன்யாவின் கன்னம் பிடித்து சொல்ல, கண்களில் கனல் பறந்தது முரளிக்கு, மகள் பசியோடு இருக்கிறாள் எனும் வார்த்தையில்.

“இன்னும் நீ இருக்கிற இடத்தை விட்டு அசையாம அப்டியே தானிருக்க!” என பல்லை கடிக்க, “இல்ல.. அவ ஸ்கூல் போக கூடாதுன்னு தான் அப்படி செய்றா!” எனும் பிருந்தாவின் வார்த்தைகள், தொண்டை குழியினோடே அடங்கி போனது.
“அதற்கும் இந்த சின்ன குழந்தையை என்னவெல்லாம் சொல்றா! குழந்தை முகத்தை பார்த்தா அப்டியா தெரியுது? உன் பொண்டாடிக்கு என்னைய கண்டாலே பிடிக்காது. அதான் என்னைய மாதிரி இருக்க என் பேத்தியை மகள்னு கூட நினைக்காம ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கா!” என்பார், சாரதா.
கணவன் மற்றும் மாமியாரின் குணம் தெரிந்தும், காலையிலேயே அவர்களின் மாட்ட விரும்பாது, அடுக்களை நோக்கி செல்ல போக, “ஏய் நில்லு இதுக்கு மேல நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம்!” என்ற முரளியின் வார்த்தை தடுத்தது.

சாரல் அடிக்கும்….

அப்புறம் எல்லாரும் எதுக்கு சாரதா தன்யாவ ஒரு மாதிரியும் ராகுல் அஹ் ஒரு மாதிரியும் நடத்துறாங்க என்று கேட்டு இருந்தீங்க இந்த பதிவு அதுக்கான விடையை தந்திருக்கும் என நம்புறேன். இதெல்லாம் ஒரு காரணமான்னு நீங்க நினைக்கலாம் ஆனா இதுமாதிரி பல விஷயங்கள் இந்த உலகத்துல நடக்கத்தான் செய்து. Hope நீங்க எல்லாரும் கதையை தொடர்ந்து படிப்பீங்க என நம்புறேன்.

ஹாப்பி ரீடிங் மக்களே.
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,


சாரல் 17 பதிவு செய்துட்டேன் நண்பர்களே. உங்க எல்லாரோட தொடர் ஆதரவுக்கு ரொம்ப நன்றி. ஏனோ இந்த கதை எழுதும் போதெல்லாம் பல தடங்கல்கள். ஆனா உங்களோட கருத்துக்கள் தான் என்னைய எழுதவே வைக்குது. உங்களுக்கு எத்தனை எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. நெறைய பேர் என்னுடன் இணைந்திருக்கீங்க. அவங்க எல்லாரையும் நான் வரவேற்கிறேன். And a special thanks to kanimozhiragu sis, kavitha subramani sis, jeevitha jeevi sis, saranya pazhani sis, veena.R sis, elakkiya prakash sis, vijirsn 1965 sis, renuga rajan sis, vijaydharuayar sis, ums sis, indu karthick sis. sathya sis. pavithra. D sis.


எப்போதும் போல உங்க அன்பும் ஆதரவும் தான் எனக்கு வேண்டும். அப்புறம் கொஞ்சமே கொஞ்சம் எப்டி எழுதுறேன்? கதை எப்டி இருக்குனு? சொன்னீங்க என்றால் இன்னும் மகிழ்வேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் அன்பூஸ். Have a happy and safe diwali natpoos.


உங்கள் ஆதரவை வேண்டி,

நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்


சாரல் 17

“இல்ல.. அவ ஸ்கூல் போக கூடாதுன்னு தான் அப்படி செய்றா!” எனும் பிருந்தாவின் வார்த்தைகள், தொண்டை குழியினோடே அடங்கி போனது.

“அதற்கும் இந்த சின்ன குழந்தையை என்னவெல்லாம் சொல்றா! குழந்தை முகத்தை பார்த்தா அப்டியா தெரியுது? உன் பொண்டாடிக்கு என்னைய கண்டாலே பிடிக்காது. அதான் என்னைய மாதிரி இருக்க என் பேத்தியை, மகள்னு கூட நினைக்காம ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கா!” என்பார், சாரதா.



கணவன் மற்றும் மாமியாரின் குணம் தெரிந்தும், காலையிலேயே அவர்களின் வாயில் அரைபட விரும்பாது, அடுக்களை நோக்கி செல்ல போக, “ஏய் நில்லு இதுக்கு மேல நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம்!” என்ற முரளியின் வார்த்தை தடுத்தது.
அவள் பிரச்சனை வேண்டாம் என நினைத்து அந்த இடத்தை விட்டு செல்ல நினைத்தாலும், பிரச்சனை அவளை விட வேண்டுமே! தேவையற்ற வாக்குவாதமோ சச்சரவோ குழந்தைகள் முன்னிலையில் வேண்டாம் என நினைத்து பிருந்தா அவ்விடத்தை விட்டு அகல, “இதுக்கு மேல நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம்!” என அவளை தடுத்து நிறுத்தியது கணவனின் குரல். அதில் பிருந்தா அப்படியே நிற்க, “குழந்தை கேட்ட போதும் செய்யல! எங்க அம்மா சொன்னப்பவும் செய்யல! இப்ப கடைசி நேரத்துல தாண்டி குதிப்பாளாம்! நீ வாடா செல்லம் அப்பா இன்னைக்கு உனக்கு வெளிய வாங்கி தரேன் !” என்று மனைவியிடம் ஆத்திரத்துடன் கத்தியவன், மகளை நெருங்க, முரளி என்றபடி வந்தார் வைத்தியநாதன்.


“தோ வந்துட்டார்ல மருமகளை காப்பாத்த! இவருக்கு மட்டும் எப்படி தான் தெரியுமோ! கழுகுக்கு மூக்குல வேர்த்த மாதிரி! கரெக்ட்டான நேரத்துல வந்து எல்லாத்தையும் கெடுத்துடுவார்!” சாரதா கணவனை மனதினுள் தாளிக்க, அவர் மனதினுள் நினைத்தது கேட்டது போல, அவர் புறம் தனது பார்வையை திருப்பினார், வைத்தி. அதில் படக்கென தனது பார்வையை திருப்பிக் கொண்டார், சாரதா.


“ஆமா… எங்க என் அத்தையம்மா! இந்நேரம் இவளுக்கு ஜால்ரா தட்ட வந்திருக்கணுமே!” கணவனுக்கு பின்னே தனது மாமியாரை தேட, “எப்ப பாரு இந்த வீட்டுல எதாவது ஒரு களபரம்! ஏன் சாரதா பிருந்தா மேல உனக்கு இவ்வளவு வெறுப்பு?” மகனை தொடர்ந்து வந்த அமிர்தம் பாட்டி சொல்ல, “எங்கடா ஆளை காணலையேன்னு நெனச்சேன்!” என நொடித்துக் கொண்டார், சாரதா.



“என்ன இது பழக்கம் குழந்தைங்க முன்னாடி சத்தம் போடுறது! குழந்தைகளை அது பாதிக்கும்ன்னு படிச்ச உனக்கு தெரியாதா முரளி?” பாட்டி பேரனை பார்த்து தீர்க்கமாய் கேட்க, பதில் பேச முடியாது தனது பார்வையை திருப்பினான் முரளி.


“ஏன் சாரதா? உனக்கு எத்தனை தடவை நான் சொல்லிட்டேன்! முதல தன்யாவ செல்லம் கொடுத்து கெடுக்கிறத நிறுத்து! உன்னால தான் அவ பாதி கேட்டு போறா!” மருமகளையும் கடிய,


“நான் என்ன அத்தை செய்தேன்? குழந்தை ஆசைப்பட்டதை செய்ய சொன்னது ஒரு தப்பா? பாருப்பா முரளி! உங்க பாட்டி எப்படி பேசுறாங்க என்னை! என் பேத்தி மேல நான் பாசம் காட்ட கூடாதா? எனக்கு அந்த உரிமை இல்லையா?” கண்ணை கசக்கினார், சாரதா.


தாய் கண்ணை கசக்கியதும் பொறுக்கமுடியாது, வேக எட்டுக்களில் தாயை நெருங்கி அவரை தோளோடு அணைத்துக் கொண்டவன், “பாட்டி இப்ப எதுக்கு அம்மாவை நீங்க திட்டுறீங்க? அவங்களுக்கு என் பசங்க மேல பாசம் காட்டவும், கண்டிக்கவும் முழு உரிமை இருக்கு!” வார்த்தைகள் பாட்டியிடம் இருந்தாலும், பார்வை மனையாளிடம் தான் பதிந்து இருந்தது.


“உரிமையும் பாசமும் இருக்க வேண்டியது தான். ஆனா அம்மாவை தாண்டி தான் எல்லாமே முரளி!” இதற்கு மேல் அவனிடம் பேசுவது வீண் என உணர்ந்து அமைதியாய் போனார் அமிர்தம் பாட்டி.



“அம்மா நீங்க சாப்டுங்க!” என தாய்க்கு நாற்காலியை இழுத்து போட்டு அமர வைத்தார், வைத்தி. உணவு நேரம் ஒருவித இறுக்கத்துடனே கழிந்தது உணவு நேரம். “தன்யா தாத்தா இன்னைக்கு உன்னை ஸ்கூல்ல ட்ரோப் பண்றேன்!” என தன்யாவின் ஆசையில் ஒரு லாரி மண்ணை அள்ளிப் போட்டார் வைத்தி. தாயை தவிர வேறு யாரிடமும் தனது வாயை திறக்க மாட்டாள், பிருந்தா முரளியின் சீமந்த புத்ரி, தன்யா. தனது பாட்டியை போல!...

அலுவலகத்தில்….



ஒரு விஷயமாக தந்தையின் அறைக்குள் நுழைந்தான், முரளி. பேச்சு முடிந்து அவன் எழப் போக, “முரளி இந்த வாரம் நம்ம புதுசா டை-அப் பண்ண போற கம்பெனி கூட சின்னதா ஒரு பாமிலி கெட்டுகெதர் மாதிரி அரேஞ் செய்யலாம்னு நினைக்கிறேன் நீ என்ன சொல்றப்பா?” கோப்பில் கையெழுத்திட்டு கொடுத்தபடி மகனிடம் வினவ, இது அவர்களது தொழில் முறையில் அடிக்கடி நடப்பது தான் என்றாலும், அனைத்திலும் குடும்பத்தை உள்ளே இழுக்க மாட்டார் வைத்தி. தேவையான இடங்களில் மட்டுமே குடும்பத்துடனான சந்திப்பாக இருக்கும். பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே சென்று வருவர். ஆனால் தந்தை சொல்லவும், மகனது புருவம் ஆச்சரியமாய் உயர்ந்தது.


“என்னப்பா பதிலையே காணோம்?” வைத்தி கேட்க, “இல்லப்பா நீங்க….!” தந்தையின் குணம் தெரிந்திருந்தாலும், மகன் முடிக்காது நிறுத்த, “ஓஒஹ் அதுவா! எனக்கு அந்த பையன் பிரகாஷ பார்த்தவுடனே ரொம்ப புடிச்சு போச்சுப்பா! ரொம்ப டேலன்ட்டான பையன். நல்ல அறிவு, ரொம்ப பொறுப்பான புத்திசாலியான பையன்!” வைத்தி அந்த பிரகாஷை புகழ, ஏனோ காரணம் இன்றி முரளியின் மனதினுள் ஒரு மெல்லிய தீ பற்ற ஆரம்பித்தது. அவன் மனம் அதை உணரவும் இல்லை. அதை பற்றி ஆராயவும் விரும்பவில்லை. ஒரு நொடி ஒரே ஒரு நொடி அவனிடம் தோன்றிய உணர்வு. பிறகு அவன் சகஜமாகி விட்டான்.



“சரிப்பா நீங்க என்ன மாதிரி செய்யணும் என்று சொல்லுங்க! நான் ஆளுங்க கிட்ட சொல்லிடுறேன்!” முரளி தந்தையிடம் சொல்ல, “ம்ம்ம் முரளி ஆளுங்க கிட்ட எல்லாம் வேண்டாம்! நீயே பர்சனலா கொஞ்சம் நேர்லயே எல்லாத்தையும் கூட இருந்து பார்த்துக்கோ! அண்ட் அப்புறம் அவங்களை நம்ம வீட்டுக்கு கூப்பிடலாம்ன்னு நினைக்கிறேன்! வீட்டுல எல்லார்கிட்டயும் சொல்லிடு முரளி” என தந்தை சொல்ல, மகனின் புருவமோ உச்சி மேட்டுக்கே சென்றது இன்னொரு முறை.


அந்த நாளில் அவனது தந்தை அவனை இரண்டாவது முறை வியப்பில் ஆழ்த்தினார். ஏதோ கேட்க வந்தவன் தனது மனதினோடே அதனை வைத்துக் கொண்டான். சிலருக்கு ஒருவரை பார்த்தால் பிடித்து விடும்! சிலரை பார்க்க பார்க்க பிடித்து விடும்! சிலரை பார்த்தவுடனே மனதுக்கு நெருங்கியவர் போலவே தோன்றிடுவர்! இதில் கடைசியில் தான் பிரகாஷ்-வைத்தி.

***********************************************************************************************************************************************************



அறையில் கண்ணாடி முன் நின்று டையை அணிந்துக் கொண்டிருந்தான் விஷ்வா. அவனையே படுக்கையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள், அபி. அவள் பார்ப்பது தெரிந்தும் அவளை சிறிதும் கண்டுக் கொள்ளவில்லை அவன். அவளுக்கும் அது தெரிந்து தான் இருந்தது.


“ஏண்டி! அவன் தான் உன்னைய கண்டுக்குறதே இல்லைல! அப்புறம் ஏன் அவனையே பார்க்குற!” என மூளை கேட்க,


“ம்ம்ம் என் புருஷன் நான் பார்க்குறேன்!” என்றது அவள் மனம். “ம்ம்க்கும் நீ இப்படி இருக்கிறதால தான் அவன் இப்படி இருக்கான்!” என்றது அவள் மனசாட்சி.


“பரவாயில்லை!” என்றாள். அவன் மீதான தனது பார்வையை மாற்றாது, கேள்வனை நோக்கி ஒவ்வொரு அடியாய் அவள் முன்னேற, அவனிடம் அப்போதும் ஒரு மாற்றமும் இல்லை.



“திமிர் பிடிச்சவன்!” என மனதினுள் சொல்லிக் கொண்டாள், பாவை.



“என்ன மிஸ்டர் விஷ்வா! எங்க கிளம்பிட்டீங்க?” கைகளை கட்டியபடி சுவற்றில் சாய்ந்தபடி அவள் கேட்க, டையை சரி செய்தபடி அவளை ஒரு முறை பார்வையிட்டவன், “ஒரு பாமிலி கெட் டு கெதர்!” என்றான் சிக்கனமாய்.


“அதுக்கு பாமிலியால போகணும்!” அவனை சீண்ட, “நான் கூப்பிட்டா நீதான் வர மாட்டியே!” என்றான், தனது பணியை தொடர்ந்தபடி. அவனது உதாசீனம் அவளை சீண்ட, “நானும் வரேன்!” என்றாள் வீம்பாய்.


“லூசாடி நீ?” என்றான் வேகமாய்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது! நீ வேற இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க! உன்னை தனியா விட்டுட்டு, எவ உன்னைய கொத்திட்டு போவாளோனு வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு என்னால இங்க வீட்டுல நிம்மதியா இருக்க முடியாது!” என்றாள், அவன் மனையாள்.



அவளது வார்த்தையில் கோவம் சுறுசுறுவென ஏற, ஆத்திரத்தில் கண்களை மூடித் திறந்தான், விஷ்வா. அவளிடம் பதில் பேசி இருக்கும் மனநிலையை கெடுத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை. ஒன்று தான் எதாவது சொன்னால் தனது பொறுமை பறக்க, அதற்கு நேர்மாறாக செய்வாள். கடைசியில் எதாவது சண்டையில் முடியும் வாய்ப்பும் அதிகம்! இவன் விட்டு சென்றால், வேண்டுமென்றே எதாவது கிறுக்குத்தனமாக செய்தாலும் செய்வாள் என இருவரையும் பற்றியும் அறிந்தவன் ஆதலால், பொறுமையை கடைபிடிக்க முடிவு செய்தான்! “உனக்கு பதினைஞ்சு நிமிஷம் டைம்! அதுக்குள்ள வர! நான் ஹால்ல வெயிட் பண்றேன்! எதாவது பண்ணி வேணும்னே லேட் பண்ணின! அவ்வளவுதான்!” என எச்சரித்து விட்டு சென்றான் விஷ்வா.



ஹாலில் மனையாளுக்காக காத்திருந்த நேரம், ”காபி வேணுமா விஷ்வா?”வினவினார், வித்யா. “ம்ம்ம் கொடுங்கம்மா!” என்றவன், பல நாள் கழித்து தாயின் கையால் அருந்தும் காபி அவனது சுவை அரும்புகளை தூண்டியது. காபியை ரசித்து அருந்தும் மகனை வாஞ்சையுடன் நோக்கினார் தாய். “எவ்வளவோ இடத்துல எவ்ளோ காபி குடிச்சாலும் நீங்க போடுற காபி மாதிரி எதுவும் இல்லமா!” சிலோகித்தான் மகன். அவனது வார்த்தையில் தொண்டை கமறியது பெற்றவருக்கு.


நாள் முழுதும் ஓட்டம்! அவன் வீட்டில் இருப்பதே அரிது. அவன் வரும் நேரமும் ஆந்தை அலறும் நேரமாக பெரும்பாலும் இருக்க, அதில் அன்னையாய் அவருக்கு பெரும் மனத்தாங்கல். எதுவும் சொல்ல விரும்பாது, “இளைச்சுகிட்டே போறியே விஷ்வா!” ஆற்றாமையுடன் வெளி வந்தது அன்னையின் குரல். அதற்கு அவனது பதில் புன்னகை மட்டுமே. தாயிடம் கோப்பையை நீட்டியவன், “அம்மா சின்னதா ஒரு பாமிலி கெட் டு கெதர். நானும் அபியும் போகலாம்னு இருக்கோம்! நீங்களும் எங்க கூட வாங்கம்மா!” என்று அழைத்தான் மைந்தன்.


அதில் ஆச்சரியம் வித்யாவுக்கு. அது முகத்திலும் வெளிப்பட, மனதினுள் சிறு மின்னலாய் முகிழ்த்தது மகிழ்ச்சி. “இல்லப்பா! நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க! நானும் பாப்பாவும் வீட்டுல இருக்கோம்!” என்றார் மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை கொடுக்க எண்ணி. தாயின் எண்ணம் புரிந்தவன் போல அவரது மகிழ்ச்சியை குலைக்காத வண்ணம் மெதுவாய் தலையசைத்தவன், எதேச்சையாய் படிக்கட்டு புறம் திரும்ப, அங்கே புடவை கட்டி பூச்சூடி நிகழ்வுக்கு ஏற்றவாறு தயாராகி வந்தாள், அபிரக்ஷிதா.


அழகி தான் அவள். நிச்சயம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்! இருவரும் வித்யாவிடம் விடைபெற்று வர, அவனின் கார் வழுக்கி கொண்டு சாலையில் பயணித்தது. காரில் நிசப்தமே குடிக்கொண்டிருக்க, ஓரக்கண்ணால் கணவனது பார்வை தன் மீது படிகிறதா? என அடிக்கடி நோட்டம் விட்டுக்கொண்டாள், பெண். நேரமாக நேரமாக, கணவனின் பார்வை தன்னை சீண்டாததில், அதுகாறும் வரை அவளுள் இருந்த இலகு தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்க, அந்த இடத்தில் சீற்றம் குடியேற ஆரம்பித்தது.



“கொஞ்சமாவது திரும்பி பார்க்குறானான்னு பாரேன்! ரோபோ! ரோபோ! திமிரு! திமிரு! உடம்பெல்லாம் திமிரு! ஒரு வார்த்தை! ஒரு வார்த்தை! நீ அழகா இருக்கனு சொன்னா கொறஞ்சா போய்டுவான்! தேடி தேடி இவன்தான் வேணும்னு ஒத்தகால்ல நின்னு கட்டினேன் பாரு! என்னைய தான் சொல்லணும்!” என அவன் கண்டுக்காத ஆத்திரத்தில் முதலில் மனதினுள் முணுமுணுத்தவள், பின்னர் கடுப்பில் வாய்க்குள் முணுமுணுத்தாள். மனைவி வாய்க்குள் முனங்குவது அவனுக்கு புரிந்தாலும் அவன் அலட்டிக் கொள்ளவில்லை. அவன் காதில் விழ வேண்டும் என்றே அடுத்து சத்தமாய் அவள் முனக, அவனது பார்வையோ அவளை அழுத்தமாய் துளைத்தது.


அவனது பார்வையை உணர்ந்தவள், அவனுக்கு சளைக்காமல் அவளும் பார்க்க, “என்ன பார்க்குற? இப்படி பார்த்தா பயந்துடுவோம்மா?” என உள்ளுக்குள் பயம் இருந்தாலும், அதனை வெளிக்காட்டாது தெனாவட்டாய் கேட்க, காரை ஓரம் கட்டினான். அவள் புரியாது பார்க்க, அவளையே தீர்க்கமாய் பார்த்தவன், அவள் என்ன ஏதென்று உணரும் முன்பே பெண்ணவளின் மலரிதழ்கள் கேள்வனின் வசமாகி இருந்தது. அதில் அவள் விழிகளோ திகைப்பில் விரிந்து, பின்னர் அதிர்வில் படபடவென பட்டாம்பூச்சியாய் சிறகடித்து, இறுதியில் அவனது எதிர்பாரா முத்தத்தில் மூழ்கியது.


தங்களை கடந்து சென்ற காரின் ஹாரன் ஒலியில், தன்னினைவில் இருந்து கலைந்தால் பெண். நொடிகள் கடந்திருக்க, மீள முடியாது கண்மூடி அமர்ந்திருந்தாள், கோதை. அவன் அவளது முகத்திற்கு நேரே சொடக்கிட, திடுக்கிட்டு கண் விழித்தவள், புருவ முடிச்சுடன் கணவனை பார்க்க, அவனும் அவளை தான் விசித்திரமாக பார்ப்பது புரிந்து தெளிந்தாள், மாது.



“ச்சே கனவா!” பெண் மனம் நிதர்சனம் புரிந்து தெளிந்த வேளை, “ம்ம்கும் இவனை கட்டிக்கிட்டு, உனக்கு லிப்லாக் வேற கேட்குதா? உனக்கெல்லாம் அது கனவுல கூட நடக்க வாய்ப்பில்லை!” என மூளை எக்காளமிட, அதனை கொட்டி அடக்கியவள் முகமோ அது சொன்னதில் இறுகி போனது.


சாரல் அடிக்கும்…



 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,


வாரம் ஒருமுறை தான் என்னாலும் எபி தர முடியுது. நான் எவ்வளவு தாமதம் செய்தாலும், கதைக்கான உங்களோட அன்பும் ஆதரவும் அளப்பரியது. நீங்க இல்லனா எனக்கு எதுவும் சாத்தியமில்லை. போன பதிவுக்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்கள் எல்லாருக்கும் நன்றி. இந்த பதிவுக்கும் உங்களோட ஆதரவை தாங்க மக்களே.


A special thanks to siva geetha sis, kavitha subramani sis, sanjusaraka sis, elakkiya prakash sis, renuga rajan sis, indu karthick sis, ums sis, vijirsn 1965 sis, sathya sis, saranya pazhani sis, venmathi m sis, shami prabha sis, jeevitha jeevi sis, uma shankar sis, veena R sis, pavithra D sis, kanimozhi ragu sis, vijaydharuayar sis, sowmiya balajisis, vani lavanya sis, உங்க எல்லாருக்கும் என்னோட நன்றி.



உங்களது ஆதரவு வேண்டி,

நான் உங்கள்

சுதீக்ஷா ஈஸ்வர்



சாரல் 18


“ச்சே கனவா!” பெண் மனம் நிதர்சனம் புரிந்து தெளிந்த வேளை, “ம்ம்கும் இவனை கட்டிக்கிட்டு உனக்கு லிப்லாக் வேற கேட்குதா? அதுவும் நடுரோட்ல! உனக்கெல்லாம் அது கனவுல கூட நடக்க வாய்ப்பில்லை!” மூளை எக்காளமிட, உண்மையை ஏற்க முடியாது, “நீ கொஞ்சம் வாயை மூடு!” என அதனிடம் சீறி அடக்கி வைத்தாள். அபி. நிதர்சனத்தை ஏற்க மறுத்த பாவை உளமோ குமுறியது. அனைத்தையும் ஓரக் கண்ணில் அவதானித்தபடி தான் வந்தான், அபியின் கல்லுளி மங்கன். விஷயம் தெரியாவிடினும், அதற்கு காரணம் தான் தான் என்பது மட்டும் அவனுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.


அவள் கோபம் புரிந்தும், அவளை சமாதனப்படுத்த முயலாது, இயந்திரமென அவன் வாகனத்தை இயக்க, காரினுள்ளே கனத்த மௌனம் எங்கும் வியாபித்திருந்தது. அவனுடன் பேச்சை வளர்க்க பிடிக்காது சாலையை வெறித்தபடி வந்தாள், அபி. அகம் குமுற, சினத்தில் அவள் வெளியிடும் மூச்சுக்காற்றோ உஷ்ணமாய் இருந்தது. ஏமாற்றத்தில் நெஞ்சு விம்ம, மார்புக்கூடு ஏறி இறங்க, அடக்கப்பட்ட சினத்தில் அவளது தொண்டைக் குழி ஏறி இறங்கியது.


கார் அவனது கைகளில் சீராக செல்ல, அடையவேண்டிய இடத்தை சென்று அடைந்திருந்தனர். கதவு விரிய திறந்திருக்க, பாதையின் இரு மருங்கும் கொட்டிக்கிடந்த அழகு இருவரின் கருத்தையும் கவர முயன்றது. அவ்விடத்தின் வனப்பு, துளியும் விஷ்வாவை கவராது போக, அபியின் கொந்தளித்த மனதிற்கு சற்றே இதம் பரப்ப முனைந்தது அவ்விடம்.


கண்களில் ஆச்சரியத்தை தேக்கி பார்த்தபடியே அவள் திரும்ப, கணவனின் நிர்மலமான பார்வை கண்டு, உள்ளுக்குள், “ம்ம்கும் அவன் உன்னையவே கல்லையும் மண்ணையும் மாதிரி தான் பார்த்து வைப்பான்! இதெல்லாம் அவனை டச் கூட பண்ணாது!” மணவாளனை பற்றி அறிந்தவளாய் அவளது மனம் விஷ்வாவை கேலி செய்ய, “அது சரி! இவன் சாமியார் தானே!” நேரம் காலமின்றி அவனை திட்டி தீர்த்தது வஞ்சியவள் மனம்.


இருக்கை பட்டியை விடுவித்தபடி திரும்பியவனின் கருத்தில் மனையாளின் கேலி சுமந்த வதனம் பட, கண்கள் சுருக்கி அவளையே பார்க்க, கணவன் தன்னை துளைப்பது உணர்ந்து, நொடியில் தனது பாவனையை மாற்றிக் கொண்டாலும், அவளது விழிகளில் கேலி இன்னும் எஞ்சியிருந்தது. புருவம் இடுங்க, மனையாளின் முகத்திலேயே தனது பார்வையை நிலைக்க விட்டான். பாவையின் விழி மொழி அவனுக்கும் எட்டியது போலும். இரு புருவம் உயர்த்தி என்னவென்று அவளிடம் வினவ, கொண்டவனின் ஆளை அசத்தும் விழிமொழியில் சமநிலை தவற தெரிந்தாள், வஞ்சி.


“அடியேய் நீ அவன் மேல கோபமா இருக்க!” மூளை மணியடிக்க, அவனில் கரைய முயன்ற கோபத்தை இழுத்து பிடித்தாள், காரிகை. கண்களால் அவன் மனையாளை மிரட்ட, அதற்கெல்லாம் அசருபவளா அபிரக்ஷிதா? நேரமாவது உணர்ந்து, குரலை செருமிக் கொண்டவன், “நம்மகூட டை-அப் பண்ண போற கம்பெனி சேர்மேன் நம்மளை இன்னைக்கு இன்வைட் பண்ணியிருக்காங்க. நம்ம சண்டையை எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம். ப்ளீஸ் கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ!” அவளை எச்சரிக்க, அதில் சினம் மேவ, “ஹலோ நாங்களும் பிசினஸ் பாமிலில இருந்து வந்தவ தான்! எங்க அப்பாவும் பெரிய பிசினஸ்மேன் தான். எனக்கும் எங்க எப்படி நடந்துக்கணும் என்று நல்லாவே தெரியும்!” வார்த்தைகளில் அனல் பார்க்க அவள் பதிலளிக்க, அவளை ஒரு நொடி ஆழ்ந்து அமைதியாய் பார்த்தவன், “தெரிஞ்சா சரிதான்!” என்றவாறே இறங்கினான்.



அவனது குரலில் தெரிந்த பேதத்தை உணர்ந்துக் கொண்டவள், “இவனை…. கொழுப்பு கொழுப்பு உடம்பெல்லாம் கொழுப்பு!” திட்ட மட்டுந்தான் முடிந்தது அவளால். வெளிப்புறத்தை தன் பார்வையால் வலம் வந்தவன் ஏனோ சஞ்சலமாய் உணர்ந்தது. உருவமில்லா எதோ ஒன்று அவனை தாக்க, உள்ளம் அவன் வசம் இல்லாது தவித்தது. வேகமாய் அந்த உணர்வை நெட்டி தள்ளியவன், நொடியில் தன்னை மீட்டுக்கொண்டான். வெளியே வந்து அவள் புறமாய் வந்து நிற்க, “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள், அபி.


குனிந்து பார்த்து, தன் தோற்றத்தில் திருப்தியுற்றவளாய், “ம்ம் போலாம்!” என்றவாறே கணவனுடன் இணைந்து நடக்க, எவ்வித சலனமுமின்றி நேர்ப்பார்வை பார்த்தபடி வந்தான் விஷ்வா. இவர்களுடன் இன்னும் சிலரை வைத்தி அழைத்திருக்க, இவனது தலையை கண்டவுடன் யாருடனோ பேசிக் கொண்டிருந்த வைத்தியநாதன் அவனை எதிர்க்கொண்டு வரவேற்றார். “அடடே பிரகாஷ் வாப்பா! வாங்கம்மா!” என இருவரையும் புன்னகை முகமாய் வரவேற்க, ஏனோ வைத்தியநாதனை கண்டதும் தனது தந்தையின் நினைவு மனதினுள் மின்னி மறைந்தது விஷ்வாக்கு.


அவனோடு நடந்தபடியே, தாயிடம் அழைத்து சென்றவர், “அம்மா! நான் சொன்னேன்ல பிரகாஷ் அது இவர் தான்!” விஷ்வா, பாட்டியின் காலில் விழுக, கணவனை பின்னொற்றி தானும் விழுந்தாள், அபி. அதில் பாட்டியின் மனது குளிர்ந்துவிட, “நல்லா இருங்கப்பா! நல்லா இருங்க!” என ஆசீர்வதித்தார். விஷ்வாவின் செய்கையில் வைத்தியின் முகத்தில் பெரும் புன்னகை. அவனை அழைத்து சாரதாவிடம் அறிமுகப்படுத்த, முதல் பார்வையிலேயே அவரின் எண்ணவோட்டத்தை உணர்ந்துக் கொண்டான், நாயகன்.


தூரத்தில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த முரளி தந்தை அழைக்கவும், திரும்பியவன், அவருடன் நின்றிருந்த புதியவனை யாரென்று பார்க்க, “முரளி இது பிரகாஷ்!” வைத்தியின் ஒற்றை வரியில் அவனுக்கு விளங்கிப் போனது. வேகமாய் தனது அளவிடும் பார்வையை மாற்றிக் கொண்டு, அவன் புறம் கைநீட்டி, “ஹாய் நைஸ் டு மீட் யூ! அப்பா உங்களை பத்தி நிறையா சொல்லி இருக்காங்க!” சம்பிரதாயமாய் சொன்னவனின் முகத்தில் என்ன இருந்தது என எளிதில் எதிரில் இருப்பவரால் கண்டுக்கொள்ள முடியாது.


“நீங்க வாங்கப்பா!” என அவனை அமர வைத்தவர், மனைவியிடம் உணவு தயாராக இருக்கிறதா என கேட்க, யாரிடமோ வளவளத்துக் கொண்டிருந்த சாரதா சட்டென மூண்ட சினத்தில், “எனக்கென தெரியும்? உங்க மருமக தான் எல்லாத்தையும் கரெக்ட்டா செய்வாளே!” வெடுக்கென சொல்ல, சொல்லிய பின்பே தனது தவறு உணர்ந்து, “ஹீ ஹீ அது மருமக பார்த்துப்பானு சொல்ல வந்தேங்க!” என சமாளிப்பாய் சொல்ல, உன்னை நான் நம்பவில்லை என்றது வைத்தியின் பார்வை.
கணவன் சென்றதும், வேகமாய் அடுக்களைக்குள் நுழைந்தவர், “எல்லாம் ரெடியா இருக்கா? கெஸ்ட் எல்லாரும் வந்துட்டாங்க!” அதிகாரமாய் கேட்க, “எல்லாம் ரெடியா இருக்குங்கம்மா!” என்று மொழிந்தார், வேலையாள்.

“ஆமா எங்க அவ?” என சாரதா கேட்க,


“யாருங்கம்மா?”


“ம்ம்ம்ம் இந்த வீட்டு மகாராணி!” என்றவர், “தலைக்கு மேல வேலை கெடக்கு. இவ எங்க போனானே தெரியலை! ” தனக்குள் அவர் முணுமுணுக்க,


“பிருந்தா அம்மா இப்பதான் போனாங்கம்மா!” வேலையாள் சொல்ல, “ஒஹ் மேடம் இப்ப தான் கிளம்பவே போனாங்களா? ரொம்ப சந்தோசம்..அம்மணி இப்பதான் சீவி சிங்காரிக்க போனாங்களா?” எள்ளலாய் கேட்க, அதற்குள் அமிர்தம் பாட்டி அனுப்பியதாய் ஒரு வேலையாள் வர, “இந்த வீட்டுல எல்லாம் நானே தான் பார்க்கணும் போல! எல்லாம் எங்க நேரம்!” இவ்வளவு நேரம் தான் தான் அனைத்தையும் தலையில் தாங்கியது போல சாரதா அலட்ட, அங்கிருந்த வேலையாட்கள் அனைவருக்குமே “ச்சீ!” என்றானது. பின்னே இவ்வளவு நேரம் பிருந்தா அவர்களோடு இணைந்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்க, இவர் அவளிடம் மெனுவை சொன்னதோடு சரி. இப்போது தான் உள்ளேயே வருகிறார்!



அங்கே பிருந்தா நேரம் ஆவது உணர்ந்து அவசர அவசரமாய் கிளம்பிக் கொண்டிருந்தாள். அனைத்தையும் தயார் செய்து, குழந்தைகளை கிளப்பி, தானும் கிளம்ப வேண்டும். வேலை அனைத்தையும் பம்பரமாய் சுழன்று செய்து முடித்திருந்தாள் பிருந்தா. என்ன தன்யாவை தயார் படுத்துவதற்குள் தான் அவளது பாதி ஜீவன் வடிந்திருந்தது.


மூச்சு விடக் கூட நேரமின்றி அவள் சுழல, சற்று நேரம் இளைப்பாற தவித்தது பெண்ணின் உடலும், மனமும். உடல் தொடர் வேலைகளால் சோர்ந்திருக்க, “எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடேன்!” ஒவ்வொரு அணுவும் அவளிடம் கெஞ்ச, வலியில் தெறித்த உடலுக்கு கொஞ்சம் சகாயமாய் வெந்நீரில் குளித்து முடித்து ஒப்பனைக்காக கண்ணாடி முன்பு அமர்ந்திருந்தாள். அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத அழகு அவளது. அது தகுந்த கரங்களில் சேர்ந்திருந்தால், மேலும் மெருகேறி இருந்திருக்குமோ? மாமியார் நாத்தனார் என அனைவரும் அலங்கார சுந்தரிகளாக வலம்வர, அவர்களின் மேல்தட்டு ஸ்டேட்ஸ்க்கு ஏற்றார் போல, இன்றைய விழாவுக்கு அணிய தனது வார்ட்ரோபை குடைய ஆரம்பித்தாள்.


தேடலுக்கு மத்தியில், அவளது பார்வையில் விழுந்தது அந்த புடவை. அவளது கரங்கள் தன்னிச்சையாக அதனை எடுத்து வருடிக் கொடுக்க, “உனக்கு இந்த ப்ளூ கலர் சாரி ரொம்ப அழகா இருக்கும் பிந்தும்மா!” எனும் குரல் காதினுள் அசரீரியாய் கேட்க, விதிர்விதித்து போனாள், மங்கை. நெடு நாள் கழித்து செவியினுள் ஒலித்த குரல், ஒருவித நடுக்கத்தை உண்டு செய்திருக்க, புடவையை நழுவவிட்டாள். மனம் படபடவென மத்தளம் கொட்ட, பல வருடங்கள் கழித்து செவியினுள் ஒலித்த குரலில் உடல் நடுங்க ஆரம்பிக்க, வார்ட்ரோப் கதவை இறுக்கி பிடித்து தன்னை சமன் செய்துக்கொண்டாள். அன்னிச்சையாய் புடவையை விரல் நடுங்க எடுத்தவள், தேவையற்ற எண்ணங்களை ஒதுக்கி வைத்து விட்டு, அதனை அணிந்துக் கொண்டாள்.


நேரம் ஆவது உணர்ந்து, அவசர அவசரமாய் தன்னை தயாராகினாள். தோற்றத்தின் மீதெல்லாம் அவள் சிறுவயதிலிருந்தே அவ்வளவாய் அக்கறை எடுத்துக்கொண்டதில்லை. தாயும், அப்பத்தாவும், அவளை பராமரிக்க, தன்னை அவர்களிடம் ஒப்புக்கொடுத்து விடுவாள். ஆனால் இப்போது இடத்துக்கு தகுந்தார் போல, கணவனின் எண்ணத்துக்கு ஏற்றார் போல, மரியாதைக்கு தகுந்தார் போல், இன்னும் பல “போல்”களுக்காய், சாரதாவுக்கு ஈடாக

இல்லாவிடினும், ஏதோ அவரளவில் ‘கொஞ்சம் சுமாராக’, தன்னை அலங்கரிக்க பழகிக் கொண்டாள். கண்ணாடியில் தன்னை பார்த்தவள் திருப்தியாய் உணர, வேகமாய் அறையை விட்டு வெளியேறி சமையலறைக்கு வந்தாள். “அக்கா எல்லாம் ரெடியா?” பரபரப்பாய் கேட்டபடியே அவள் வர, “எல்லாம் தயார்ம்மா!” என்றார் சீதாம்மா.


“அம்மா பெரியம்மா வந்துட்டு போனாங்க!” உபரி தகவலாய் தெரிவிக்க, அவளுள் ஒரு பரபரப்பு. “சரிங்க அக்கா! நான் போய் எல்லாத்தையும் எடுத்து வைக்க சொல்றேன்!” வெளியேற போனவள், சாரதாவின் கண்களுக்குள் சிக்கிக் கொண்டாள். பிருந்தாவின் அமைதியான அழகு அவர் கண்களை உறுத்த, அவளை நோகடித்திடும் வேகம் அவருள். மேலும் கீழும் அவளை அளவிட்டவர், “ம்ம்ம்… எதோ பரவாயில்லை. கொஞ்சம் பார்க்குற மாதிரியிருக்க!” என்றவர், “என்ன இருந்தாலும், எங்க ஸ்டேடஸ்க்கு ஏத்த மாதிரி உனக்கு டிரஸ் பண்ண தெரியலை!” என நொடித்துக்கொண்டு அவள் முகத்தையே ஆழம் பார்க்க, பிருந்தா எதையும் வெளிகாட்டாது அமைதியாய் நின்றாள். ”என்ன சொன்னாலும், அப்படியே ஆடாம அசையாம நிக்குறா பாரு கல்லு மாதிரி! ஊமை கோட்டான்” உள்ளுக்குள் பொருமியவருக்கு எப்படியாவது அவளை நோகடித்திடும் உத்வேகம்.


“சரி சரி சீவி சிங்காரிச்சு நின்னது போதும். மசமசன்னு நிற்காம வேலையை பாரு!” எனும் அதட்டலுடன் வெளியேறினார். அவர் சென்றதும் தான் இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டாள், பிருந்தா. வேகமாய் வாயில்பக்கம் பார்த்த சீதாம்மா, அவளை நெட்டி முறித்து, “நீங்க ஒன்னும் மனசுல வச்சுக்காதீங்கம்மா. அம்மன் சிலை மாதிரியே இருக்கீங்க!” என சொல்ல, ஒரு இதழ் விரிப்பு மட்டுமே அவளிடம்.



வைத்தி தாயிடம் மருமகளை கேட்க,”அவ எதாவது வேலை செஞ்சுட்டு இருப்பாப்பா!” எனவும் அதிருப்தியாய் தலையை ஆட்டிக்கொண்டார். “இந்தபொண்ணு ஏன் தான் இப்படி இருக்காளோ தெரியலை!” புலம்பிய அமிர்தம் பாட்டியின் கண்கள் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டிருந்த மருமகளிடம் தான் படிந்திருந்தது. பெருமூச்சை வெளியிட்டவர், எதிர்ப்பட்ட ஒருவரிடம் பிருந்தாவை அழைத்து வர சொல்ல, அவளும் விருந்து நடக்கும் இடத்திற்கு வந்தாள்.


விஷ்வாவின் உள்ளுணர்வு எதையோ அவனுக்கு உணர்த்த முனைந்தது. அவனின் இதய துடிப்பு பன்மடங்காக எகிற துவங்க, நிலையில்லாது தவித்தான். உதறும் உள்ளத்தை சமாளிக்க, வேகமாய் எழுந்தவன், அங்கிருந்த செடி கொடிகளை பார்வையிடும் சாக்கில் தனது உணர்வுகளை யாரும் அறிந்திடா வண்ணம் இருக்க அரும்பாடுப்பட்டான்.


“பாட்டி கூப்டீங்களா?” என்றபடியே பிருந்தா வர, “எங்கம்மா போயிட்ட? உன்னையும் பசங்களையும் வைத்தி ரொம்ப நேரமா கேட்டுட்டு இருந்தான்!” என்றார் பாட்டி. “சரிங்க பாட்டி!” என்றவள் மாமனாரை தேடிச் செல்ல, “மாமா கூப்டீங்களா?” என்றபடியே வந்தவளிடம், “ஒஹ் எங்கம்மா போயிட்ட? எல்லாம் ரெடியா இருக்கா? டின்னர் ஆரம்பிக்கலாமா?” அவளிடம் கேட்டுக் கொள்ள,


“எல்லாம் ரெடியா இருக்கு மாமா. இருங்க நான் போய் ஒருதடவை எல்லாத்தையும் பார்த்துட்டு வரேன்!” என்றபடியே அவள் செல்ல எத்தனிக்க, “இரும்மா அதெல்லாம் ஆளுங்க பார்த்துப்பாங்க! நீ போய் பசங்களை கூட்டிட்டு வா!” என்றார்.


“சரிங்க மாமா!” அவள் நகர, “அம்மா பிருந்தா!” என சத்தமாய் அழைத்தார் வைத்தி. சற்று தள்ளி நின்றிருந்த விஷ்வாவின் காதிலும் விழுக, அவனது உடலிலோ சட்டென்று ஒரு இறுக்கம். அந்த பெயரை கேட்டதும், அவனது ஆவி துடிக்க, அவனது செல்கள் எங்கும் இறுக்கத்தையும் தாண்டிய ஒரு பரபரப்பு.


தொண்டைகுழி ஏறி இறங்க, மூச்சுக்கு தவித்தவன் போல சுவாசம் தடுமாறியது. உதடு மடித்து தன்னை சமன் செய்துக்கொண்டவன், “சீ சீ அது அவளாக இருக்காது! உலகத்துல இந்த பேரில் அவள் மட்டும் தான் இருக்காளா?” என மூளை அவனை சமாதானப்படுத்த, “இல்லை இல்லை அது அவள் தான்!” எனது உள்ளுணர்வு பொய்க்காது!” என்றது மனம்.


“பிருந்தா முரளியை கொஞ்சம் கூப்பிடும்மா!” என்றார். உணவுண்ணும் நேரம் வரவும், அனைவரையும் அழைத்தவர், அப்போது தான் சற்று தள்ளி நின்றிருந்த விஷ்வா அவரின் கண்ணில் பட்டான். “பிரகாஷ்!” அவனை அழைக்க, அவனுக்கு அது எட்டவில்லை. அவனுக்கு தன்னுள் போராடவே சரியாக இருந்தது. அவன் திரும்பாமல் இருக்கவும், “பிரகாஷ்!” மறுமுறை சத்தமாய் அழைக்க, அருகில் நின்ற பிருந்தாவும் தனது பார்வையை திருப்பினாள்.


அதே நேரம் விஷ்வாவும் திரும்பி இருந்தான். வேகமாய் அவனிடம் விரைந்தவர், “வாப்பா சாப்பிட போகலாம்!” என அழைக்க, அவனது பார்வையோ அதிர்வுடன் பிருந்தாவிடம் நிலைபெற்று இருந்தது. அதே நிலை தான் பிருந்தாவுக்கும். விஷ்வாவை கண்டதும் கண்கள் அதிர்ச்சியை அப்பட்டமாய் காட்ட, ஸ்தம்பித்து நின்றாள், பெண். இருவரின் முகமும் வர்ணஜாலங்களை வாரி இறைக்க, வைத்தி இருவரையும் கவனிக்காது போனார். விஷ்வா நொடியில் தன்னை மீட்டுக் கொண்டாலும், அவனது அகமோ உள்ளே எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது அவனுக்கு மட்டும் தான் தெரியும்!



பிருந்தாவுக்கு கண்கள் கலங்கும் போல இருக்க, வேகமாய் திரும்பியவள் யாரும் அறியாது கண்களை வேகமாய் துடைத்துக் கொண்டாள். அவனையும் அழைத்துக் கொண்டு பிருந்தாவிடம் வந்தவர், “ம்ம்மா பிருந்தா!” என அழைக்க, அதற்குள் தன்னை மீட்டுக் கொண்டிருந்தாள் பிருந்தா. “இது விஷ்வ பிரகாஷ். நம்ம கம்பெனியோட புதுசா டை-அப் பண்ண போற கம்பெனி இவங்க தான்!” என அறிமுகம் செய்ய, உதடுகளை இழுத்து முயன்று சிரிப்பை வரவைத்தவள், கை கூப்பி வணக்கம் என மரியாதை செலுத்த, விஷ்வாவின் பார்வையோ அவளைவிட்டு அகலவில்லை. அவள் வணக்கம் செலுத்தியதில் தெளிந்தவன், தானும் வணக்கம் செலுத்த முயல, வார்த்தைகள் தொண்டைக்குழியை விட்டு வருவேனா என மறுத்து சண்டித்தனம் செய்தது. அடைத்த தொண்டையை செருமி சரிசெய்துக் கொண்டவன், தானும் பதில் வணக்கம் செலுத்தினான்.



சாரல் அடித்தது….
 
Status
Not open for further replies.
Top