All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதீக்க்ஷா ஈஸ்வரின் "எனை ந(நி)னைக்கும் சாரலே" - கதை திரி

Status
Not open for further replies.

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,


எல்லாருக்கும் வணக்கம். இந்த கதை இடையில் நிறுத்தி, திரும்பவும் நான் தொடர்ந்த போதும், கதைக்கான உங்கள் அன்பும் ஆதரவும், அளவில்லாதது. யாராவது ஒரு வார்த்தை கமெண்ட் செய்ய மாட்டாங்களா என ஏக்கத்தோடு கழித்த காலங்கள் போய், எனக்கே எனக்கா நீங்க கொடுக்கும் அன்பு தான் என்னை தொடர்ந்து எழுதவே வைக்குது.


போன பதிவுக்கு லைக் கமெண்ட் செய்து என்னை உற்சாகப்படுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி. And a special thanks to kalai karthi sis, saras hp sis, shanthy durai aanathan sis, raja deepa sis, siva geetha sis, valli mano sis, rsakthi sis, sumee sis, lakshmi murugan sis, megalasis, sundara ganesan sis, saro jaa sis, shobha kalirajan sis, bharathi moorthy sis, sahanas majas sis, jayabharathi senthilkumar sis, remoraj sis, sowmiyaa balaji sis, vani lavanya sis, Renuga rajan sis, kavitha subramani sis, sanju saraka sis, venmathi M sis, viji rsn 1965 sis, indhu karthick sis, devi tamil sis, ums sis, chithra ravindran sis, revathi D sis, fathima Nazlh sis, fathi Naz sis i think neenga rendu perum onnu thaanu nenakiren. Dr. deebiga karunakran sis, revathi TS sis, அஞ்சாயாள் சண்முகம் சிஸ். எல்லாருக்கும் எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது. சாரி யாருடைய பேரும் விட்டு போய் இருந்தா, மன்னிச்சுக்கோங்க. லிஸ்ட் கொஞ்சம் பெருசா போய்டுச்சு. சில நேரம் யார் பெயரையாவது மிஸ் பண்ணிட்டா எனக்கு கஷ்டமா இருக்கும். அதான் எல்லார் பெயரையும் ஒண்ணாவே போட்டுட்டேன்.


இன்று தான் அப்டின்னு என்னால ஒரு நாளை பிக்ஸ் செய்து ud போடமுடியலை. நான் ஒன்னு பிளான் செய்தா வேற ஒன்னு நடக்குது. அதே மாதிரி கதை கொஞ்சம் ஸ்லோ பிளாட். மெதுவாக தான் நகரும். எனக்கும் இப்டி தான் எழுத வருது. எனக்கு ஏனோ தானோ என்று எழுதி போஸ்ட் செய்துட்டு போக விருப்பமில்லை. ஒரு பதிவுக்கும் இன்னொன்றுக்கும் மூன்று நாள் இடைவெளி எடுத்துக்குவேன். அதே மாதிரி எழுதி முடிச்சுட்டு பல முறை எனக்கு திருப்தி வந்தால் மட்டுமே போஸ்ட் செய்வேன். அதான் இந்த கால தாமதம்.

என்னோட எழுத்துகள்

நான் சொல்ல வருவதை சரியாக சொல்லி, உங்கள் உணர்வோட கலக்கணும் என்று எனக்கு பேராசை உண்டு. ஆனா எனக்கு அது இன்னும் வரலை என்று தான் நான் நினைக்கிறேன். என் அளவில் எழுத்துக்களுக்கு பெரும் சக்தி உண்டு. சிலரோட எழுத்துக்கள் நம்மை புன்னகைக்க வைக்கும், மனம் விட்டு வாய் விட்டு சிரிக்க வைக்கும், அழுக வைக்கும், இப்டி எல்லாமே அதற்கு உண்டு. சோ இது தான் நான் லேட் ud கொடுக்க காரணம் என்று சொல்லிக் கொண்டு, உங்களை நம்ப வைக்க எனக்கு வேற வழி தெரியலை. சாரி ரொம்ப பேசிட்டேன். இந்த பதிவுக்கும் உங்க அன்பையும் ஆதரவையும் தாங்க மக்களே.


நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்


சாரல் 19


காரிருளை பூசிக் கொண்டிருந்தது வானம். அதில் மின்னும் வைரங்களாய் நட்சத்திரப் பூக்கள். பூர்ண சந்திரன் தனது குளுமையை பூமிக்கும் கொஞ்சமே கொஞ்சம் கடன் கொடுத்திருக்க, அந்த குளுமை விஷ்வாவை கொஞ்சமும் பாதிக்கவில்லை. நீச்சல் குளத்தின் விளிம்பில் கைகளை பின்னே கட்டிக் கொண்டு, நிலவை வெறித்திருந்தவனின் கண்களில் குளிர் நிலவின் அழகோ கிஞ்சித்தும் படவில்லை. அதில் அவனிடம் கோபித்துக் கொண்ட நிலவும், முகிலவனின் பின்னே தன்னை மறைத்துக் கொள்ள, விஷ்வாவின் நினைவுகளோ பின்னோக்கி சென்றுக் கொண்டிருந்தது.


பிருந்தா இடம் கருதி, தனது அதிர்வை விழுங்கிக் கொண்டு அவனைக் கண்டு கைகூப்பி வணக்கம் தெரிவிக்க, முதலில் விஷ்வா அதனை உணரும் நிலையில்கூட இல்லை. அவனது மூளை ஸ்தம்பித்து போயிருக்க, நொடிகள் கழித்தே தன்னை மீட்டுக் கொண்டான். இரண்டொரு நொடிகளுக்கு பின் தெளிந்தவன், தானும் கைகூப்பி பதில் வணக்கம் செலுத்த முயல, வார்த்தைகள் தொண்டையை விட்டு வெளிவருவேனா? என சதிராடியது. தொண்டைக்குழி ஏறி இறங்க, மிடறு விழுங்கி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், தானும் பதில் வணக்கம் செலுத்தினான்.



“ம்ம்ம் வா பிரகாஷ் சாப்பிட போகலாம்!” அவனை அழைத்த வைத்தியை, ஏதோ தெரியாத பாஷை பேசும் ஊரில் தொலைந்த குழந்தையை போல பார்த்து வைத்தான். அதனை தூரத்தில் இருந்து இரு ஜோடி கண்கள் பார்த்ததை இருவரும் அறியவில்லை. உள்ளுக்குள் முரசு கொட்டும் மனதை அடக்க பெரும் பாடுபட்டான், விஷ்வா. அனைவரின் முன்பும் கம்பீரமாகவே தன்னை காட்டிக்கொள்ள வேண்டிய நிலை அவனுக்கு. ஆனால் தனது கம்பீரம், மிடுக்கு, கர்வம் அனைத்தையும் தொலைத்து, முதல் முறை நடை பயிலும் குழந்தை போல தடுமாறினான்.


“உன் வைப் எங்கப்பா?” அவனிடம் கேட்டவர், அவனின் பதிலை எதிர்பாராமல், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “பிருந்தா நீ அவங்க எங்க இருக்காங்கன்னு பார்த்து கூட்டிட்டு வரியா?” என பிருந்தாவிடம் சொல்லிவிட்டு அவர் திரும்ப, அதற்கு அவசியமே இல்லாது விஷ்வாவின் பின்னே சிறு இடைவெளி விட்டு, சற்று தூரத்தில் நின்றிருந்தாள், அபிரக்ஷிதா. “அடடே வாங்கம்மா உங்களைத்தான் விஷ்வா கிட்ட கேட்டுட்டு இருந்தேன். உங்களை காணலனவும் என்னோட மருமகளை பார்க்க சொன்னேன்!” என்றார் மனிதர்.


அவர் இவ்வளவு பேசிய பின்பும் அபியின் பார்வை பிருந்தாவை விட்டு இம்மியும் அகலவில்லை. அவளது முகத்தையே அளவிட்டுக் கொண்டிருந்தது அவளது விழிகள். “ஹா மறந்துட்டேன் பாருங்க. இது என்னோட மருமகள் பிருந்தா!” என வைத்தி தன்போக்கில் அறிமுகப்படுத்த, அப்போதும் அபியிடம் மாற்றமில்லை. இரண்டு நொடிகளுக்கு பின், அவரை பார்த்து புன்னகை செய்ய, வைத்தியின் விழிகளோ அப்போது தான் வித்தியாசத்தை உணர்ந்தது. அவரது பார்வை உணர்ந்து, மீண்டும் ஒரு புன்னகையை சிந்தியவள், “எவ்வளவு தெய்வீகமான அழகு உங்க மருமக. அதான் பிரம்மிச்சு போய்டேன்!” என்றவளின் குரலில் என்ன இருந்தது என்று தெரியவில்லை.


பிருந்தாவைக் கண்டு சிறு புன்னகையை உதிர்க்க, அவளோ அதிர்ச்சி தாண்டிய அடுத்த நிலைக்கு சென்று இருந்தாலும், தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள அவளுக்கு அவகாசம் தேவைப்பட்டது. விஷ்வா, பிருந்தா இருவரும் அபி வைத்தியிடம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அதிர்வில் இருந்து மீண்டு சகஜமாகி இருந்தனர். இல்லை ஒரு வேளை தங்களை அப்படி காட்டிக் கொண்டனரோ?



“நேரமாகுது வாங்க போகலாம்!” வைத்தி அழைத்து செல்ல, அவளுக்கு தனிமை தேவையாக இருந்தாலும், தேவையற்றதை தவிர்க்க தானும் கூடவே சென்றாள். பிருந்தாவுக்கு வீட்டாளாய் அனைத்தையும் கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது. இருந்தாலும் மனதின் ஓரம் சிறு சுணக்கம் இருக்கதான் செய்தது. அபியின் கண்களோ விஷ்வாவையும், பிருந்தாவையும் தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இருவரும் தங்களை சகஜம் போல காட்டிக்கொண்டாலும், அவர்கள் அப்படி இல்லை என்பது அவளது கூர்விழிகளுக்கு பட்டவர்த்தனமாகவே தெரிந்தது.


அறுசுவை விருந்துகள் படைக்கப்பட்டிருக்க, அதன் மணமே வயிற்றுக்குள் பசியை உண்டு பண்ணியது. ஆனால் அதனை அனுபவித்து மகிழும் நிலையில் தான் அவனில்லை. உணவு, தொண்டைக்குள் சிக்கிய மீன் முள்ளாய் அவனை அவஸ்தைக்குள்ளாக்க, முயன்று, அதன் சுவையோ மனமோ என்னவென்று உணராமலே ஏதோ பேருக்கு விழுங்கி வைத்தான், விஷ்வா.



உணவு முடிந்ததும், வைத்தி மற்றவர்களை கவனிப்பதில் மும்மரமாக இருக்க, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஷ்வா மற்றவருடன் ஒன்றாது மெதுவாய் தனியே வந்துவிட்டான். நீச்சல்குளத்தின் விளிம்பில் நின்றிருந்தவன் மனதிலோ பெரும் புயலே அடித்துக் கொண்டிருந்தது. தன்யா ராகுல் இருவருக்கும் உணவூட்டி, தானும் அமர்ந்தவளுக்கு நிச்சயமாய் உண்ணும் எண்ணம் கொஞ்சமும் இல்லை. தலை விண் விண்ணென தெறிக்க, கொஞ்ச நேரம் தனியாக இருந்தால் நன்றாக இருக்கும் போல தோன்றியது.


அப்போது குழந்தைகளோடு தன்யா ராகுல் இருவரும் விளையாடிக் கொண்டிருக்க, வழக்கம் போல தன்யா தம்பியை சேர்த்துக்கொள்ள மாட்டேன் என வீம்பு செய்து, மற்றவர்களையும் அவனுடன் விளையாட விடாமல் தடுக்க, ராகுலுக்கு அழுகையில் உதடு பிதுங்கியது. “இரு அம்மாக்கிட்டயே உன்னை சொல்றேன்!”அழுதபடி ஓடி வந்த சிறுவன் கண்களில் கண்ணீர் மறைக்க, எதன் மீது மோதி தடுமாறி விழுகத் தெரிந்தான்.


தன் மீது வந்து எதுவோ மோத, அதில் சிந்தை கலைந்து குனிந்து பார்த்தான், விஷ்வா. அனிச்சை செயலாய் தன்மீது வந்து மோதிய சிறுவனை பிடித்துக்கொண்டான். அரையிருளில் அவனுக்கு யாரென்று சரியாக தெரியாமல் போக, கூர்ந்து நோக்கினான். விழுகப் போனவனை தடுத்து நேராய் நிற்க வைத்தவன், தன் முன்னே செப்பு வாய் அழுகையில் பிதுங்க, கண்கள் கலங்கி, கண்ணீர் கன்னங்களை நனைத்திருக்க, முகம் கசங்க நின்றிருந்த சிறுவனை கூர்ந்து பார்த்தான். அந்த அழுகையிலும் “சாரி!” பயந்தவாறே மன்னிப்பு கேட்டான் சிறுவன். சிறு கூரிய விழிகளும், சொப்பு வாயும், கொழுகொழு கன்னங்களும் என அச்சு அசலாய் சிறுவயது பிருந்தாவை உரித்து வைத்திருந்த ராகுலை கண்டு அதிர்ந்து போனான், விஷ்வா.



அதே நேரம் எங்கே இருந்தாலும் தன் மக்களின் மீது ஒரு கண் வைத்திருக்கும் பிருந்தா தனது பிள்ளைகளை காணாது தேடினாள். தன்னுள் உழன்றுக் கொண்டு பிள்ளைகளை கவனியாது விட்டுவிட்டேனே என தன்னையே கடிந்துக்கொண்டு இருவரையும் தேடி சென்றவளது கண்ணில் தன்யா மட்டும்பட, அவளிடம் தம்பி எங்கே எனக்கேட்க, வேறொரு குழந்தை தன்யா ராகுலை அழ வைத்ததையும், அவனும் அழுதுக்கொண்டே நீச்சல்குளம் பக்கம் சென்றதையும் சொல்ல, அதிர்ந்து நெஞ்சில் கைவைத்து, விடுவிடுவென மகனை தேடிச் சென்றாள், பிருந்தா.



பரபரப்புடன் நடையை எட்டிப் போட்டு, மகனை தேடி, “ராகுல்! ராகுல்!” என அழைத்தபடி நீச்சல்குளம் பக்கம் சென்ற பெண்ணவளின் காதில், “உங்க அம்மா பேரு பிருந்தாவா?” எனும் விஷ்வாவின் குரல் விழுந்ததில், அதிர்ந்து அங்கேயே வேர்ப்பிடித்த மரமாய் நின்றுவிட்டாள். புதியவனை கண்ட அதிர்ச்சியில் இருந்த சிறுவன், எங்கே தான் இடித்ததற்கு அடித்து விடுவானோ என பயந்து அவனின் கண்கள் இன்னும் கண்ணீரை சொரிய, அதில் உருகிய விஷ்வா, அவனது உயரத்துக்கு மண்டியிட்டு, அவனது தாய் பெயரை கேட்க, தாய் பெயரைக் கேட்டதில், கலக்கம் மறந்து, “ஐ எங்க அம்மா பேரு தான் பிந்தா!” சிறுவனும் மழலையில் மிளிற்ற, அவனது பாவனையில் சிறுவயது பிருந்தா நினைவில் ஆடினாள்.



விழிகளில் கண்ணீர் திரண்டிருக்க, உதடு மடித்து பொங்கும் விழிநீருடன் இருவரையும் பார்த்திருந்தாள், பெண். அவளையும் மீறி கண்ணீர் கரகரவென வழிந்து, மார்பு சேலையை நனைக்க, வேகமாய் சுற்றும் முற்றும் தன் விழிகளை சுழற்றியவள், அவசரமாய் பெருகும் விழிநீரை துடைத்துக் கொண்டாள். குரலை செருமிக்கொண்டவள், “ராகுல்!” சத்தமிட்டு மகனை அழைக்க, அதில் இருவரும் திரும்பி பார்த்தனர். “அம்மா!” என அழைத்தபடி, முயல் குட்டியாய் துள்ளி வந்த மகன், அன்னையை காலோடு கட்டிக்கொண்டான். தாவி வந்த மகனை தோளோடு அணைத்துக் கொண்டவளை தான் விஷ்வாவின் விழிகள் பார்த்தபடி இருந்தது.

மகன் உயரத்திற்கு குனிந்தவள், “ராகுல்! அம்மா உன்னை இங்கெல்லாம் தனியா வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல!” என கேட்கவும், தவறு செய்த பாவனையில், முகம் சுருக்கி “சாரி அம்மா! இனிமே தெய்ய மாட்டேன்!” வாக்களித்தான் மகன்.


“சரிப் போ! பெரிய பாட்டிக்கிட்ட இரு!” மகனை அனுப்பி வைத்துவிட்டு நிமிர்ந்தாள். அதுவரையும் விஷ்வா தனது பார்வையை மாற்றவில்லை. பெண் மனம் அவனிடம் பேச சொல்லி உந்த, மறு மனமோ வேண்டாம் என தடுத்தது.


முடிவில் அவளையும் அறியாது அவளது கால்கள் அவனை நோக்கி அடியெடுத்து வைத்தது. அவள் தன்னை நோக்கி வரவும், வேகமாய் தனது பார்வையை திருப்பிக் கொண்டானே தவிர, அங்கிருந்து அகலவில்லை அவன். அடிவயிற்றில் இருந்து கிளம்பிய வலி, தொண்டை வரை பரவ, தடுமாறினான் ஆண்மகன். இயலாமையால் கைகளை மடக்கி தனது தொடையில் குத்திக் கொண்டவன், அடைத்த தொண்டையை செருமிக்கொண்டு அவள்புறம் திரும்பினான்.


அவனைக் கண்டு இளநகை பூத்தாள், மலரவள். “நல்.. நல்லா இருக்கியா பிந்…” விஷ்வா கேட்க, அதே நேரம் அவளும் “நல்லா இருக்கீங்களா விஷு மா…” இருவரும் அடுத்து வார்த்தையை முடிக்க முடியாது தடுமாறி நின்ற நேரமது.


“ம்ம்மக்கும்….. எப்படி இருக்க பிருந்தா?” என்றவன் குரல் கலங்கி ஒலித்ததுவோ? தன்னையே அந்த நொடி அவன் வெறுத்த நேரமது. யாரை கடந்து வந்துவிட்டேனென அவன் சொல்கிறானோ! அப்படி தன்னையே அவன் நம்ப வைக்கிறானோ! அந்த நம்பிக்கை எல்லாம் ஆட்டம் கண்டு, தவிடு பொடியாவதை கண்முன் கண்டான்.


“நான் நல்லா இருக்கேன் வி..ஷு… மா..ம” என்றவள், வேகமாய் “மாமா” என திருத்திக் கொண்டாள். மனதின் அடியாழத்தில் இருக்கும் நேசம், காலம் மாறினாலும், தன்னை மாற்றிக் கொள்ளுமா? பிந்து என்ற அவனின் அழைப்பும், விஷு என்ற அவளின் அழைப்பும், காதலின் வெளிப்பாடு மட்டும் அல்லவே. அது நம்பிக்கையின் வெளிப்பாடு. நேசம் கடந்த அன்பின் வெளிப்பாடு. காதல் தோற்று இருக்கலாம், ஆனால் காதலையும் தாண்டிய அன்பும் என்றும் தோற்காதே!


ஒருவர் மற்றவர் மீது கொண்ட அக்கறையும், அதன் வெளிப்பாடும் தான் அவ்வழைப்பு. தங்களையும் மீறி அது வெளிப்பட்டு விட்டாலும், தவறாய் தோன்றவில்லை இருவருக்கும். “நான் நல்லா இருக்கேன் மாமா!”

“நீங்க எப்படி இருக்கீங்க?” வினவினாள், பிருந்தா.

“நீ எப்படி இருக்க?” இருவரும் ஒன்றுப்போல கேட்க, இருவரின் முகத்திலும் மெல்லிய புன்னகையின் சாயல்.

“அத்தை எப்படி இருக்காங்க மாமா?” என்றவளிடம்,

“ம்ம் நல்லா இருக்காங்க!” என்றவன், “அது உன் பையனா?” என்றான்.

“ம்ம்ம் ஆமா மாமா!” என்றவள் முகத்திலோ ஒரு மென்மை. அதை உள்வாங்கியவாறே அமைதியாக இருந்தான், விஷ்வா. ஒரு குறுநகையுடன், “உங்க வைப் ரொம்ப அழகா இருக்காங்க மாமா!” என்றவளிடத்திளோ, அவளது குரலிலோ நிச்சயம் பொறாமை என்பது துளியும் இல்லை. தனது அன்புக்குரியவருக்கு ஆனந்தம் அடையும் ஜீவனின் மகிழ்ச்சி தான் அதில் இருந்தது.

“தேங்க்ஸ்!” என்றவனிடம் ஒரு தயக்கம்.


“மு…ரளி….முரளி தான் உன்னோட ஹஸ்பன்டா!” என கேட்க, கணவனது நினைவில் சட்டென்று உள்ளுக்குள் மூண்டது கலக்கம். அவளையும் மீறி கண்களில் வெளிப்பட்டு விட, சுதாரித்து மறைத்துக்கொண்டு தலையசைத்தாள். ஆனால் அவளது நொடி நேர தயக்கமும், அவள் விழிகள் வெளிப்படுத்திய கலக்கமும் சிறுவயது முதல் அணுஅணுவாய் அவளை அறிந்து வைத்திருந்தவனின் கண்களில் இருந்து தப்புமா? அவனது விழிகளும் அதனை குறித்துக்கொண்டது. ஆனால் அவனும் அதனை மறைத்துக்கொண்டான்.


“குழந்தைங்க…!” அவள் இழுக்க, “ஒரு பொண்ணு பேரு பிரகதி!” அவன் பதிலிறுக்க, உள்ளுக்குள் ஒரு ஆசுவாச மூச்சு அவளுள்.
“ரொம்ப அழகான பேர் மாமா! மாமாக்கு(விஷ்வாவின் அப்பா) ரொம்ப பிடித்த பெயர்!” எனவும் விஷ்வாவிடம் பெரும் மௌனம். எதோ நினைவில் சொன்னவள் அதன்பிறகே தனது தவறு உணர்ந்தாள். “சாரி மாமா! என்னால மாமா!”

“பரவாயில்லை விடு பிந்… பிருந்தா!” இருவரின் நினைவிலும், சுந்தர் உடனான பசுமையான மலரும் நினைவுகள். அவர் நினைவில் இருவரும் மூழ்கி கிடந்த தருணமது. நொடிகளுக்கு பின் இருவரும் தன்னிலை அடைய, அடுத்து என்ன பேச என இருவரிடமும் பெரும் தயக்கம்.

“உன் பையன் உன்னைய மாதிரியே இருக்கான் பிருந்தா!” என்றவனின் வார்த்தையில், அச்சிறு பாலகன் மீதான நேசமே தெரிந்தது. அவளது முகமோ இப்போது வெளிப்படையாகவே கசங்கிப் போனது. அவனது விழிகள் அவளின் ஒவ்வொரு அசைவுகளையும், ஒவ்வொரு வார்த்தைகளையும், அவளது உள்ளத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் அவளது நயனங்களையும் தான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதை அவள் அந்த நேரம் மறந்துதான் போனாள்.

மனம் தாளாது, தன்னையும் மீறி, “பிருந்தா நீ சந்தோச….!” என்றவனின் வார்த்தைகள், அவள் பின்னே கேட்ட, முரளியின் “பிருந்தா!” எனும் அழைப்பில் தடைப்பட்டு போனது. அதில் இருவரும் திரும்ப, முரளியோ தனது நீண்ட கால்களை எட்டி வைத்து அவர்களை நோக்கி வந்திருந்தான். இருவர் முகத்தையும் ஆழ்ந்து பார்த்தபடியே வந்தவன், மனையாளின் முகத்தில் சில நொடிகள் தனது பார்வையை கூடுதலாய் நிலைக்க விட்டான்.


இருவர் முகத்திலும் அதிர்வு தெரிய, அது முரளியின் கண்களுக்கு அழகாய், தவறாகப்பட்டது. திடீரென கேட்ட குரலில் விளைந்த பதட்டத்தில் அவர்கள் இருக்க, அந்த நெடியவனோ சரியாய் தவறாக தப்பிதம் செய்துக் கொண்டான். திடீரென கேட்ட குரல், அதுவும் கணவன் குரலாக இருக்கவும், உள்ளுக்குள் பிருந்தாவுக்கு கலக்கம் மூண்டது. அந்த குளிர் காற்றிலும் அவள் முகத்தில் முத்துமுத்தாய் வேர்வை பூக்கள் அரும்பியிருக்க, கணவனையே பயந்த விழிகளுடன் அசையாமல் பார்த்திருந்தாள். விஷ்வாவோ அதற்குள் மீண்டிருந்தான். அருகில் வந்திருந்த முரளி, “ஹல்லோ விஷ்வா சாரி உங்ககிட்ட அப்ப சரியா பேச முடியல!” என்றவன்,


“உங்களுக்கு என் வைப்பை முன்னாடியே தெரியுமா?” விஷ்வாவிடம் இலகுவான குரலில், ஆழமான பார்வையுடன் கேட்க, விஷ்வாவின் கண்களோ அவனது பார்வையை சளைக்காது எதிர்கொண்டான். பிருந்தா தவிப்பாய் நின்றிருக்க, அதனையும் முரளியின் கண்கள் குறித்துக்கொண்டது.

“ம்ம்ம் தெரியும்… சின்ன வயசுல இருந்து! பக்கத்து வீடு… மாமா பொண்ணு!” என்றானே பார்க்கலாம்.


முரளியின் விழிகளோ நிச்சயம் அவனது இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதை அப்பட்டமாய் காட்டியது. அடுத்த நொடியே தேர்ந்த வியாபாரியாய் அதனை மறைத்துக் கொண்டவன், “ஒஹ்! பிருந்தா என்கிட்ட சொல்லவே இல்லை!” என்றவன், மனையாளின் முகத்தை கண்டான்.


“சாரி அங்க அப்பா தேடிக்கிட்டு இருப்பாங்க நம்ம இன்னொரு நாள்…… சாவகாசமா பேசலாம்!” என்றவன் அந்த இன்னொரு நாளில் அழுத்தத்தை கூட்ட, பிருந்தாவின் தோளில் கைப்போட்டு, தன்னோடே அழைத்துச் சென்றான். அவனது குரலில் அதன் பாவனையில் அதிர்ந்துப் போய் இருந்தவள், ஒருமுறை விஷ்வாவை திரும்பி பார்க்க, அவள் மீதான அவன் பிடி இறுகியது. தோள் மீதான அழுத்தத்தில் திடுக்கிடலுடன் பிருந்தா கணவன் முகம் காண, இறுகி இருந்த தாடை அவனது கோபத்தை அவளுக்கு பறை சாற்றியது. அதில் உள்ளுக்குள் பெண்ணவளுக்கு குளிர் கண்டது.


செல்லும் பிருந்தாவையே வேதனை கமழ பார்த்திருந்தான், விஷ்வா. அதில் அவளுக்கான பரிவு தான் இருந்தது.


சாரல் அடித்தது…











 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,


எல்லாரும் எப்படி இருக்கீங்க? வழக்கம் போல இந்த முறையும் நான் லேட். காரணம் சொல்லி சமாளிக்க நினைக்கலை. ஆனா எழுத நேரமும் மனதும் இல்லை என்பது தான் உண்மை.


சாரி என்ன முயன்றாலும், கால தாமதம் ஆகிடுது. இனிமே எந்த சபதமும் எடுக்க கூடாதுன்னு நினைக்கிறேன். சாரல் அடுத்த பதிவு போட்டுட்டேன். உங்க அன்பும் ஆதரவும் தான் எனக்கு வேண்டும். குழந்தை பிள்ளைய மன்னிச்சு விட்ருங்க மக்கா. And a special thanks to thavaselvi ganeshan sis, saraswathy gurusamy sis, revathi TS sis, fathi naz sis and that 5 star koduththa peyar theriyatha 2 anbu ullangal, அஞ்சாயாள் சண்முகம் sis, saras hp sis, kalai karthi sis, MSmurthy sis, shobha kalirajan sis, Anita karan sis, vanajavanesh sis, vijaydharuayar sis, renuga rajan sis, vijirsn1965 sis, revathi D sis, rajam rajam sis, eswarikasirajan sis, saro jaa sis, padma vathy sis, rohini kanishka sis, bharathi raman sis, velvizhi gowrikanthan sis, sathvika elango sis, sembaruthi sis, sumee sis, lakshmi murugan sis, kavithadhananrajan sis, sundara ganesan sis, poova sis, sathya.A sis, siva geetha sis, ums sis, sanju saraka sis, kalai karthi sis, veena sis, suganya 17 sis, kavitha subramani sis, valli mano sis, venmathi m sis, elakkiya prakash sis, devitamil sis, sumee sis, rsakthi sis. Unga ellarukum ennoda special thanks.


இந்த பதிவையும் படிச்சுட்டு உங்க கருத்துக்களை தெரியப்படுத்துங்க மக்களே. உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து ஆவலுடன்,
நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்


சாரல் 20


முரளியின் கை அணைப்பில் செல்லும் பிருந்தாவையே வேதனையுடன் பார்த்திருந்தான், விஷ்வா. கலங்க துவங்கிய கண்களை கட்டுக்குள் வைக்க பெரும்பாடு பட்டான். அவனது கண்ணில் அவளுக்கான பரிவு தான் இருந்தது. முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு கைகளை விலக்கும் போது அவன் முன் பிரசன்னமாகி இருந்தாள், அபிரக்ஷிதா. அவளது முகத்தை கூட காணாது, “போகலாம்!” ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிட்டு முன்னே நடந்தான். காரில் எங்கும் அமைதியே படிந்திருந்தது. அபி அடிக்கடி கணவனது முகத்தையே திரும்பி திரும்பி பார்த்தபடி வந்தாள். கண்ணீருக்கு கரையிட முயன்றதால், கண்கள் சிவந்து தெரிய, அது அவனது மனப் போராட்டத்தை பறை சாற்றியது. இவை எதுவும் அவன் கருத்தில் பதியவேயில்லை. அவன் அகம் முழுதும் சற்று முன் நடந்த சம்பவங்கள் தான் அணிவகுத்து நின்று இருந்தது. தொண்டைக்குழி ஏறி இறங்கியதில் இருந்தே, மனதின் துக்கத்தை அடக்க வெகுவாக பிரயத்தனப்படுகிறான் கணவன் என அபிக்கு தெரிந்திருந்தது.


****************************************************************************************************************************************************


அனைவரையும் கவனித்து, வழியனுப்பி என வேலைகள் வரிசை கட்டி நின்றது பிருந்தாவுக்கு. உள்ளம் சோர்ந்து போனதால், உடலும் சோர்ந்து பெண்ணை வாட்டியது. சற்று தனிமை கிடைத்தால் தேவலாம் போல இருந்தது. உடல் அதன் பாட்டில் இயந்திரகதியில் அதன் பணியை செய்தாலும், மனம் முழுதும் கணவனின் நினைவு தான் மங்கைக்கு. முடிந்தவரை ஒதுக்கி வைத்துவிட்டு, வேலையாட்களிடம் மீதியை காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்றுவிட்டு, படி ஏறினாள், பிருந்தா. முரளியின் பார்வை உள்ளுக்குள் தோன்றி, அவளை நடுக்கமுற செய்தது. எவ்வளவு மெதுவாக வந்தும், அறை வந்தேவிட்டது. உள்ளே செல்லாமல், கதவருகே நின்றிருந்தவள் மனமோ ‘திக் திக்’ என அடித்துக்கொண்டது, அந்த இரவின் நிசப்தத்தில் வெளியே கேட்கும் போல இருந்தது.


அந்நொடியின் கணத்தை தாளமுடியாது, என்னவாகினும் பார்த்துக் கொள்ளலாம் என துணிந்து கைப்பிடியில் கையை வைக்க, கதவு திறந்துக்கொண்டது. அறை எங்கும் கனத்த அமைதி ஆக்கிரமித்திருக்க, கண்களை சுழட்டி பார்வையை ஓடவிட்டாள். கணவனை எங்கும் காணாது போக, அந்த அமைதி அவளை அச்சுறுத்தியது. அணிந்திருந்த புடவையை களைந்துவிட்டு, இரவுடையை அவள் மாற்றிக் கொண்டிருந்த சமயம், முதுகில் எதுவோ துளைப்பது போல உணரவும் அவசரமாய் திரும்பி பார்த்தாள். அவளது கணவன் தான் பால்கனியில் இருந்து, அவளையே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அவனது அசையாத பார்வை அவளுள் இனம்புரியா பயத்தை உண்டு செய்ய, கலங்கிப் போனாள்.



முரளி அவளை நோக்கி மெதுவாய் எட்டுவைக்க, சோர்ந்த மனதால், நடுங்க துவங்கிய கால்களை ஸ்திரப்படுத்தி கொண்டு நின்றாள். ஆக்ரோஷமான முரளியை விட இந்த அமைதியான முரளி அவளை நிரம்பவும் பயங்கொள்ள செய்தான். அவனது கோபத்தை கூட தாங்கி விடலாம், என்றே தோன்றியது பிருந்தாவுக்கு. அவளையே துளைத்தது அவனது கூர் விழிகள். அவனது அசையாத பார்வை, உள்ளுக்குள் பிருந்தாவுக்கு பல நினைவுகளை தோற்றுவித்தது.

இந்த பார்வை! இந்த பார்வை! தன்னை கூறு போட்ட பார்வை, தன்னை உயிரோட வதைத்த பார்வை என அவளது நினைவடுக்கில் வேண்டாத பல சம்பவங்கள் முட்டி மோதி, அவளை வதைக்க, பொங்கிய அழுகையை அடக்கியதில் தொண்டைக்குழி ஏறி இறங்கியது. முரளியின் பார்வை அவளது வதனத்தில் தான் நிலைத்திருந்தது. அவளது சிவந்து விடைத்த மூக்கும், ஏறி இறங்கும் தொண்டைக்குழியும் அவனது பார்வைக்கு தப்பவில்லை. மெதுவாய் அறைக்குள் வந்தவன், கைகளை கட்டிக்கொண்டு ஒருபக்கமாய் சுவற்றில் சாய்ந்து நின்றுக்கொண்டான்.



கணவனது முகத்தையே தான் பிருந்தாவும் பார்த்திருந்தாள். இருவரது பார்வையும் அடுத்தவரில் நிலைத்திருக்க, மௌனத்தின் நேரம் நீண்டுக்கொண்டே இருந்தது. “ஹ்ம்ம் அப்புறம்! முன்….னால் காதலனை ஆசை… இல்ல இல்ல முன்னால் ஆசை காதலனை ஆசை தீர பார்த்துட்டு வந்தாச்சா?” முதலில் அறையின் அமைதியை கிழித்துக் கொண்டு ஒலித்தது முரளியின் குரல். அவனது தொனியே அவளுக்குள் பயபந்தை உருள செய்திருக்க, அவனது வார்த்தைகள் அவளுள் அபாயமணி ஒளிர செய்தது. என்ன நடந்தாலும், வாயை திறக்காதே என மூளை அறிவுறுத்த, அதன் கட்டளையை ஏற்று மௌனத்தை தாங்கி நின்றாள், மாது.


“ம்ம்ம் சொல்லு! கேட்டதுக்கு பதிலே வரலை? என்ன முன்னால் காதலனை பார்த்துட்டு வந்தாச்சா?” என்றபடியே அடிமேல் அடி வைத்து அவளை நோக்கி வந்தான். அவன் அருகே வர வர, இதயம் மத்தளம் கொட்ட ஆரம்பித்தது.


“ம்ம்ச் சரியா பேசியிருக்க முடியாது. குறுக்க நான் தான் கரடியா வந்து கெடுத்துட்டேனே!” போலியாய் வருந்தியவன், அந்த “பேசியிருக்க” என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தான். அவனது வார்த்தைகளுக்கு மறுவார்த்தை அவளிடம் இல்லாது போக மெல்ல மெல்ல உஷ்ணம் ஏறியது அவனுள்.



“சொல்லுடி பொண்டாட்டி! நான் வேணா ஒரு கேண்டில் லைட் டின்னர் புக் பண்ணி தரட்டுமா?” நக்கலாய் அவன் மொழிய, அவனது வார்த்தைகளில் விலுக்கென நிமிர்ந்த பிருந்தாவின் விழிகள் அவனை பொசுக்கியது.


“அப்பா பயமா இருக்கே! என்ன கண்ணாலே பொசுக்குற? பா அனல் தாங்கலையே!” என்றபடி தனது டிஷர்ட்டை உதறிக்கொண்டான். “என்னடி? முறைச்சா பயந்துடுவேனா? நீ கண்ணால பார்த்தா எரிஞ்சு போக நான் கொக்கும் இல்லை. நீ பத்தினியும் இல்லை!” என நரம்பில்லாத நாவில் தனது இஷ்டத்துக்கு பேசினான்.



“என்னடி அமுக்கமா கமுக்கமா அவனை சந்திக்க போன போல… எல்லாம் என்னால வேஸ்ட் ஆகிடுச்சே! என்ன சொன்னான் உன்னோட விஷ்… ஹான் விஷு மாமா!” என்றவனிடத்தில் எள்ளல் ஏகத்துக்கும் நிறைந்திருந்தது.



“நல்ல பணக்கார பொண்ணை தான் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டான் போல… நான் கூட நீ கொடுத்த பில்ட் அப்லாம் வச்சு காதல் தோல்வில தாடி வளர்த்து, குடிச்சு குடிச்சே குடல் வெந்து, போய் சேர்ந்து இருப்பான்ல நெனச்சேன்!” என்றவனை கண்டு முறைத்தாள், பிருந்தா.


“என்னடி பொண்டாட்டி முன்னால் காதலனை சொன்னவுடன் பார்வையில உஷ்ணம் கூடுது!” இரு புருவம் உயர்த்தி அவளிடம் கேட்க, அவனது முகத்தை காண பிடிக்காது முகம் திருப்பிக் கொண்டாள், பெண்.


“என்னடி புதுசா முகத்தை எல்லாம் திருப்புற? என்ன குளிர் விட்டுப் போச்சோ?” அவள் முகம் திருப்பலில், சினம் சீறி எழ, அவளது மோவாயை வலிக்க பற்றி தன் முகம் காண செய்தான். அவளது விழிகளையே கூர்ந்து பார்த்தவன், “இந்த கண்ணு அவனை பார்க்கும் போது அப்படியே உருகி வழிஞ்சதே! ப்பா என்ன பார்வைடி அது? ஊன் உருக உள்ளம் உருகன்னு படிச்சிருக்கேன்! ஆனா அதை உன் கண்ணுல தான் நேரா பார்த்தேன்!” என்றவனின் கண்களில் அவளை காயப்படுத்தி விடும் வேகம் கொழுந்து விட்டு எரிந்தது.


“ம்ம்ச்” அவனது பிடியில் வலி தாளாமல், அவள் முகம் சுருக்க, “என்ன வலிக்குதா? ரொம்ப வலிக்குதோ! எனக்கும் இப்படி தாண்டி வலிச்சுச்சு! நான் ஆசை ஆசையா விரும்புன உன்னோட மனசுல, எனக்கு முன்னாடி வேற ஒருத்தன் இருந்தான்னு தெரியும் போது இப்படி தாண்டி வலிச்சுச்சு! ப்பா….. உயிரையே உருவி வெளிய எடுக்குற வலி! அந்த வலி உனக்கு புரியாதுடி! உன்னை மாதிரி காசுக்காக கல்யாணம் பண்றவளுக்கு எல்லாம் என்னோட வலி புரியாதுடி!” என்றவன், பற்றி இருந்த அவளது முகத்தை கண்டு சினம் தலைக்கு ஏறி, வேகமாய் உதற, தடுமாறி விழுந்தாள், பிருந்தா.

**********************************************************************************************************************************************************


காரை போர்ட்டிக்கோவில் நிறுத்திய விஷ்வா, வேகமாய் காரை விட்டு இறங்கினான். அபி கதவை திறந்து இறங்குவதற்குள் முடுக்கிவிட்ட பொம்மை போல தளர்வாய் வீட்டினுள் நுழைந்தான். கார் கதவை சாற்றிவிட்டு, தன்னை திரும்பியும் பாராது செல்லும் கணவனையே பார்த்திருந்தாள், பெண். அவளையும் அறியாது பெருமூச்சு ஒன்று வெளிப்பட, அமைதியாய் அவனை தொடர்ந்தாள். விஷ்வாவை அறிந்தவர்களுக்கு நிச்சயம் அவனது நடையில் இருக்கும் அந்த கம்பீரமும், வேகமும் தொலைந்து இருப்பது நன்றாகவே புலப்படும்.



அறைக்குள் சென்றவள், அவனை காணாது தேட, பால்கனியில், கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி நின்ற அவனது வரிவடிவம் அந்த அரையிருளில் நன்றாக தெரிந்தது. அவனையே சில நொடிகள் ஆழ்ந்து பார்த்தவள், அறைக்குள் சென்று உடை மாற்றி வந்த பிறகும், அவன் நிலையில் மாற்றமில்லை. படுக்கையில் விழுந்தவள் கண்கள் அவனையே தான் வெறித்தபடி இருந்தது.


அண்ணாந்து வானத்தை வெறித்துக் கொண்டிருந்தவன் மனமோ, “பிருந்தா சந்தோசமா இல்லப்பா! அவ கண்ணே சொல்லுது! தப்பு பண்ணிட்டேனோ?” என மாண்டுப் போன தந்தையிடம் மானசீகமாக கேட்டுக் கொண்டிருந்தான். கண்ணீர் உருண்டு அவன் கன்னத்தை நனைக்க, அதனை கூட உணராது இருந்தான். அபிக்கும் கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்க துவங்க, வேகமாய் போர்வையை உதறித் தள்ளியபடி எழுந்தவள், ஆவேசமாய் அவனை நோக்கி சென்றாள்.

“இப்ப எதுக்கு நீ அவளை நினைச்சு உருகிக்கிட்டு இருக்க? என்ன ஆகிப் போச்சுன்னு இப்படி தவிக்குற? என்ன பழைய காதலை மறக்க முடியலையோ?” என பொருமியவளின் வார்த்தைகள் கோவமாக வெளிப்பட, “என்னவோ உலகத்துல இல்லாத அழகி மாதிரி ரொம்ப தான் உருகிக்கிட்டு!” என வாய்க்குள் முனங்கிக் கொண்டாள். அதில் நிச்சயம் பொறாமை தான் இருந்தது.


“உனக்குன்னு ஒரு குடும்பம், உனக்குன்னு பொண்டாட்டி பிள்ளைன்னு இருக்கிறது உனக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா?” ஆவேசமாய் கேட்டவளுக்கு எந்த பதிலும் தராமல், அமைதியாய் நின்றான், விஷ்வ பிரகாஷ்.


“யோவ் உன்னையத்தான் கேட்குறேன்! என்ன தான்யா உன் மனசுல நெனச்சுக்கிட்டு இருக்க?” அவன் அமைதியில் கொந்தளித்து, வேகமாய் அவனது கைப்பற்றி தன்புறம் திருப்ப, கணவன் கண்ணில் ஜொலித்த நீர் மணிகளை கண்டு பேச்சிழந்து ஸ்தம்பித்து நின்றாள், அபி.


***********************************************************************************************************************************************************


“என்னடி ஊமைக்கொட்டான் மாதிரி நிக்குற? வாயை திறந்து பதில் சொல்லுடி!” அவன் தள்ளியதில் தடுமாறி விழுகத் தெரிந்த, பிருந்தா கால்களை ஊன்றி சமாளித்து நின்றாள். அதிர்வுடன் அவனை ஏறிட, “இந்த முகம் தான்! இந்த முகம் தான்! இந்த அப்பாவி மூஞ்சியும், முழியும் பார்த்து தான், நான் இப்போ ஏமாந்து நிக்குறேன்! பாக்கதடி பாக்காத!” வீறிட்ட படி அவள் அருகில் வந்தவன், அவளது கையை இறுக பற்றியபடி, “அப்படி பாக்காதன்னு சொல்றேன்ல! ஐயோ என்னால முடியலையே! என்னால முடியலையே!’ பைத்தியக்காரன் போல தனது கோபத்தை எல்லாம், அங்கிருந்த பொருட்கள் மீது காட்ட, அவனது சீற்றம் தாளாமல் ஒவ்வொன்றும் அவளது காலருகே உடைந்து சிதறியது.



அவனைக்கண்டு அவன் ஆக்ரோஷம் கண்டு, அஞ்சி நடுங்கி கண்களை இறுக மூடி, கைகளால் காதுகளை பொத்தியபடி அவள் இருக்க, அவனது கோபம் அடங்கிய பாடாகத்தான் இல்லை.


“எல்லாத்துலையும் ஜெயிச்ச நான்! என்னோட வாழ்க்கையில தோத்துட்டேன்! ரொம்ப அசிங்கமா தோத்துட்டேன்! கேவலமா தோத்துபோய் நிக்குறேன்!” என்றபடியே மீதி இருந்த பொருட்களையும் துவம்சம் செய்தான். அவன் உதைத்து தள்ளியதில்,
அங்கிருந்த மரடீப்பாய் அவளது காலில் விழுக, “ஆ!” என அலறினாள் பிருந்தா. அவள் குரலில் திரும்பி பார்த்தான் முரளி.



வேகமாய் அவளை நெருங்க, அவன் வேகம் கண்டு பின்வாங்கினாள், பெண். அதில் அடங்கி இருந்த கோபம் திரும்ப மேலெழ, “என்னை அப்படி பார்க்காத! அப்படி பார்க்காதன்னு உன்கிட்ட நான் சொல்லி இருக்கேன்!” அவளது பயந்த பார்வைக்கண்டு அவன் சொல்ல,



“உனக்கு ஏண்டி என்னைய பிடிக்காம போச்சு?” என்றவனின் குரலில் துக்கம், ஆற்றாமை, கவலை, கோபம் வருத்தம் அனைத்தும் ஏகத்துக்கும் நிரம்பி இருந்தது. என்ன பதில் சொல்வாள் பெண்ணவளும்? “ச்சீ போடி!” அவளை உதறி தள்ளி அறைக் கதவை அறைந்து சாத்தி வெளியேறியவன், தனது காரை எடுத்துக் கொண்டு, மனம் போன போக்கில் சுற்றினான்.


அவன் சென்றதும், அறையை சுற்றி பார்வையை ஓடவிட்ட பிருந்தாவோ, அதன் நிலைக்கண்டு ஓய்ந்து போனாள். அவனது ருத்ர தாண்டவத்தில் அறையே போர்க்களமாய் காட்சி அளிக்க, மெதுவாய் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள், பிருந்தா.
இதே போல அலங்கோலமாய் கிடந்த அறை, பிருந்தாவின் நினைவடுக்கில் வந்து அவளை மருட்டியது. அன்றும் இதே போல கால்களை மடக்கி குறுக்கிக் கொண்டு, கணவனுக்காய் தவிப்புடன் அமர்ந்திருந்ததும், கூடவே அதன் தொடர்ச்சியாய் சில பல நினைவுகளும் சேர்ந்தே நினைவுக்கு வந்தது. வலிக்க வலிக்க, இன்றைய, அன்றைய சம்பவங்களின் பிண்ணனியை புரட்டி பார்க்க துவங்கியது பிருந்தாவின் நெஞ்சம்.



சாரல் அடிக்கும்….
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,


சாரல் 21 பதிவு செய்துட்டேன். வழக்கம் போல லேட் செய்துட்டேன். இந்தமுறை அதுக்கு காரணம் இருக்கு. பொதுவாகவே எனக்கு flashback எழுத பயமும் கூட, எந்த தைரியத்தில் இந்த கதைக்கு பிளாஷ்பாக் வைத்து எழுத ஆரம்பித்தேன்னு எனக்கே புரியாத புதிர் தான். இந்த பகுதில ரொம்ப பெரிய சீன்ஸ் எல்லாம் கிடையாது. கொஞ்சம் எல்லார் பத்தியும் ஒரு அவுட்லைன் தான் கொடுத்திருக்கேன்.


முன்ன பின்ன இருந்தாலும், கோச்சுக்காம படிங்க. பயந்துக்கிட்டே தான் எழுதியிருக்கேன். சரியா தப்பான்னு எனக்கு தெரியலை. எத்தனை பேர் சாரல் கதையை படிக்குறீங்க என எனக்கு இப்ப தான் தெரியவந்தது. நான் எவ்வளவு லேட் செய்தாலும், உங்களோட சப்போர்ட் தான் என்னைய எழுதவே வைக்குது. ஒரு பயம், fb எழுத. வேலைகள் ஒருபுறம் கழுத்தை நெரித்தாலும், என்னால கதை மீது கவனம் செலுத்த முடியலை. எதாவது சொதப்பிவிடுவேனோ என பயம் தான் இந்த பதிவுக்கு தாமதம். இனிமே நான் மௌன விரதம்.


உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி மக்களே. A special thanks to veena R sis, sivageetha sis, renugarajan sis, indukarthick sis, sanjusaraka sis, suganya 17 sis, elakkiyaprakash sis, vijaydharuayar sis, umasai sis, ramchandar sis, kalai karthi sis, ums sis, valli mano sis, vijirsn sis, devitamil sis, venmathi m sis,latha veerasamy sis, sujatha sis, revathi D sis, rsakthi sis, lakshmi murugan sis, saranya mohan sis, sumee sis, amutha vinoth sis, shobha kalirajan sis, jayabharathi senthilkumar sis, sowmiya balaji sis, sathya.A sis, remoraj sis, saro jaa sis, padmavathy sis, rohini kanishka sis, latha pugazh sis, shanthy durai ananthan sis, daisy tulip sis, ketheeswary suresh sis, saraswathy gurusamy sis, thavaselvi ganeshan sis, dhaalakshmi saranya sis, sara hp sis, rajammal sis, அஞ்சாயாள் சண்முகம் சிஸ். உங்க எல்லாரோட தொடர் ஆதரவும் அன்பும் தான் என்னைய எழுதவே வைக்குது. தேங்க்ஸ் டு ஆல் dearies. அண்ட் முகம் தெரியாத rating மட்டும் கொடுத்த அந்த நாலு அன்பு உள்ளங்கள், நீங்களும் தான். வேற யாரோட பெயராவது விட்டு இருந்தேனா மன்னிச்சுடுங்க மக்களே.

வெட்டியா இருந்த என்னை பிஸியா எழுத வைக்குறதும் நீங்க தான். ஆமா ஆமா இதை நீங்க நம்பி தான் ஆகணும். அப்புறம் இது என்னோட சரித்திரத்திலேயே பெரிய பதிவு தான் 1700 வார்த்தைகள். இதை டைப் செய்ய நாலு நாளா குட்டி கரணமெல்லாம் அடிச்சு இருக்கேன். சின்னதுன்னு சொல்லி என்னோட பிஞ்சு மனசை உடைச்சுடாதீங்க அன்பூக்களே.

உங்களது ஆதரவை எதிர்ப்பார்த்து,

நான் உங்கள்,
சுதீக்ஷா ஈஸ்வர்

சாரல் 21



எப்போதும் கணவனின் மௌனத்தை கடக்க அபி பழகியிருந்தாலும், அன்று அவனது அமைதி அவளது பொறுமையை வெகுவாய் சோதித்திருக்க, வேகமாய் அவனது தோள் பற்றி தன்புறம் திருப்பியவள், அந்த அரையிருளில், கணவன் கண்களில் ஜொலித்த நீர் மணிகளை கண்டு பேச்சிழந்து போனாள். விஷ்வாவின் மனம் அவன் வசத்திலில்லை. நிலைக்குலைந்து போயிருந்த மனதால், உடலும் அவன் வசம் இழந்து போயிருக்க, தன்னையும் மீறி வெளிப்பட்டு விட்டது அவனது கண்ணீர். எப்போதும் ஒரு கம்பீரத்தோடும், ஒரு மிடுக்கோடும் கவனமாக தனது உள்ளுணர்வுகளை மறைத்தும், புதிராய் இருக்கும் விஷ்வாவின் மென்மையான மறுபக்கம் அவனது தாயிடமும், மகளிடமும் மட்டுமே அவன் மனையாள் கண்டதுண்டு. இருவரும் இயல்பான வாழ்வை வாழவில்லை என்பதுதான் உண்மையும் கூட.


அவள் தோள் தொட்டு திருப்பியதும், உணர்வுகளின் பிடியில் இருந்த விஷ்வா, தனது மனபாரத்தை இறக்கி வைத்திடும் விதமாய், படர கொலுகொம்பை தேடும் கொடியை போல மனையாளை அணைத்துக் கொண்டான். அதில் அபியின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்துக் கொண்டன. அவனது விழிநீர் அவளது தோளை நனைக்க, மனையாளை இறுக அணைத்துக்கொண்டு, மௌனமாய் தனது மனபாரத்தை கண்ணீர் வழி கரைத்துக்கொள்ள முயன்றானோ? அபி ஆரம்பக்கட்ட திகைப்பில் இருந்து வெளிவந்து, கணவனை ஆதரவாய் அணைத்துக்கொள்ள கரம் உயர்த்தி, ஒருகணம் தயங்கினாள். மறுநொடியே தனது தயக்கம் அத்தனையும் விட்டொழித்து தானும் அவனை ஆதரவாய் அணைத்துக் கொண்டாள்.
அவனும் எத்தனை நாள் தான் அனைத்தையும் தனக்குள் மறைத்து வைத்திருப்பான்?


அறையை ஒருமுறை பார்வையிட்ட பிருந்தா, அங்கிருந்த நீள்விரிக்கையில் சோர்வாய் அமர்ந்துக்கொண்டாள். புயலில் சிக்கிய படகு போல இருந்தது அவள் நிலை. மனம் வேதனையில் விம்ம, விதி தனது வாழ்க்கையில் ஆடிய சதியை நினைத்து வெதும்ப தான் முடிந்தது பேதை பெண்ணால். வலிக்க வலிக்க கடந்த காலத்தை புரட்டியது, பிருந்தாவின் உள்ளம். நடந்து முடிந்த களேபரங்களால் தலை விண் விண்ணென வலிக்க, சோபாவில் சாய்ந்துக் கொண்டாள்.

***************************************

காவிரி பாயும் பகுதியது. திரும்பும் திசையெங்கும் வாழையும், நெல்லும், கரும்பும் வீசும் தென்றலுக்கேற்ப தலையசைத்து, காண்போரின் கண்களை கவர்ந்திழுக்கும் ஊரது. அந்த பகுதியின் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் முத்துவேலும், சுந்தரும். இருவரும் படித்து முடித்து அரசாங்க வேளைக்கு காத்திருந்த தருணம், சுந்தரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாது போக, தனியாளாய் பரந்து விரிந்த விவசாய பூமியை பார்க்கும் நிலை ஏற்பட்டது, சுந்தருக்கு. நண்பனின் விருப்பம் அறிந்தவராதலால் சுந்தரின் மனதை மாற்ற முயற்சி செய்தார், முத்துவேல். ஆனால் தனக்குப்பின் மகன்தான் அனைத்தையும் வழிநடத்த வேண்டும் என்ற தந்தையின் விருப்பமே சுந்தரின் மனதை வெல்ல, நண்பனை சமாதானம் செய்தார் சுந்தர்.


நண்பனின் முடிவில் மனம் சுணங்கினாலும், அதனை ஏற்றுக்கொண்டார் முத்துவும். வருடங்கள் ஓட, இருவருக்கும் திருமணம் செய்ய ஆசைப்பட்டனர் பெரியவர்கள். சுந்தரின் ஒன்றுவிட்ட தங்கை கீதாவுடன், முத்துவேலுக்கு திருமணம் நல்லபடியாக நடந்தேறியது. இரண்டு வருடம் கழித்து சுந்தரும் வித்யாவை திருமணம் செய்துக் கொண்டுவிட, வித்யா கீதா இருவரும் நல்ல தோழிகள் ஆயினர். நான்கு மாதத்தில் வித்யா கருவுற்றுவிட, அவருக்கு உறுதுணையாய் இருந்தார், கீதா.
ஒரு மழை நாளில், வித்யாவுக்கு ஆண்குழந்தை பிறக்க, அதனை கீதாவின் கரத்தில் கொடுத்து மகிழ்ந்தார், சுந்தர். விஷ்வா வளர்ந்தது எல்லாம் கீதாவிடம் தான். அவர்களின் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தை தீர்த்தவன் தான் விஷ்வா. விஷ்வாவுக்கு மூன்று வயதாகும் போது கீதா கருவுற்றார். அப்போது சுந்தர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நண்பனுக்காக அவரும் வருந்தாத நாள் கிடையாது.


கீதாவின் வீட்டிலேயே தவமிருக்க ஆரம்பித்தான், குழந்தை விஷ்வா. ஒருநாள் கீதா குழந்தையிடம் பேசுவதை கண்டு, “அத்தை நம்ம பேச்சுது பாப்பாவுக்கு கேட்குமா?” என கேட்க, “ஆமாடா கண்ணா! நம்ம அவங்க கிட்ட பேசுறது எல்லாம் அவங்களுக்கு கேட்கும்!” என கீதா சொல்ல, அவரின் வயிற்றையே ஆர்வமுடன் பார்த்தான் விஷ்வா. அவனின் ஆசை புரிந்து தானே அவனது கரங்களை எடுத்து தனது வயிற்றில் வைக்க, முதலில் பயந்தாலும், தானும் ஆர்வமுடன் பேசினான். அப்போது அவன் குரல் கேட்டு தாயின் வயிற்றில் எட்டியுதைத்தாள் குழந்தை. அவரின் வயிற்றில் கைகளை வைத்துக்கொண்டு, குழந்தையிடம் பேசுகிறேன் பேர்வழி என அத்தையின் முந்தானையையே பிடித்துக்கொண்டு திரிந்தான், விஷ்வா.



அதன் பிறகு கீதா பிருந்தாவை பெற்று எடுக்க, பாப்பா பாப்பா என குழந்தையையே சுற்றி சுற்றி வந்தான் விஷ்வா. “இவன் என்னடா பாப்பா பாப்பான்னு அவளையே சுத்தி வரவன், பேசாம அவ வளர்ந்தோன கல்யாணம் கட்டி உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுயா!” என விஷ்வாவிடம் வம்பிலுப்பார், கல்யாணி.


அவளுக்கு அடுத்து நான்கு வயது கழித்து பிறந்தவன் தான் முகுந்தன். முகுந்தன் தாயின் பின்னே சுற்றிக்கொண்டு இருக்க, பிருந்தாவுக்கு விஷ்வா மாமாவே சகலமாகிப் போனான். அவளின் நாட்களே பெரும்பாலும், சுந்தர் வீட்டில் தான் கழியும். வித்யாவும் தனக்கு பெண் குழந்தை இல்லாத குறையை பிருந்தா மூலம் தீர்த்துக்கொண்டார்.

தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, உணவு ஊட்டி, வீட்டுப் பாடம் சொல்லிதரும் விஷ்வா மாமா மீது அவளுக்கு அப்படி ஒரு பிரியம். பட்டம் செய்துக் கொடுத்து, சோளம் சுட்டுக் கொடுத்து, பள்ளியில் அரணாய் தங்களை பாதுகாத்து என தங்களை பாசமாக நடத்தும் விஷ்வா என்ன சொன்னாலும் செய்வார்கள் இருவரும். அதேபோல தன்னைவிட ஐந்து வயது சிறிய பெண்ணான பிருந்தாவிடம் தனி பிரியம் விஷ்வாவுக்கும். வருடங்கள் சென்று மறைந்தது. பத்தாம் வகுப்பு முடிந்து திருச்சியில் இருக்கும் விடுதியில் சேர்ந்தான், விஷ்வா. அன்று அவனைப் போகவிடாது அவனது கைப்பற்றி பிருந்தா அழுத அழுகை இருக்கிறதே அப்பப்பா!


அவளை பிரிவதை நினைத்து தானும் வெகுவாய் கலங்கிப் போனான், விஷ்வா. “லீவ் விடும் போதெல்லாம் உன்னை வந்து பாக்கிறேன் பிந்துக்குட்டி! நீ என் செல்ல பிந்துக்குட்டில அழக்கூடாது! சமத்து பொண்ணா இருக்கனும் சரியா?” என அவளை வெகுவாய் சமாளித்து கிளம்பினான், விஷ்வா. விடுமுறைக்கு வரும் போது அவனை வால் பிடித்துக் கொண்டே சுற்றினாள், குழந்தை. இருவருடம் கடந்திருக்க, சிறுவனிலிருந்து பருவ வயதில் அடியெடுத்து வைக்கும் வாலிபனாக வளர்ந்திருந்தான் விஷ்வா. அவனது நெடுநெடு உயரமும், அதற்கேற்ற உடல் வளர்ச்சியும் சிறுவர்கள் இருவருக்கும் ஒருவித பயத்தையும் அதையும் தாண்டி பிரமிப்பையும் ஒருங்கே தந்தது.



பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்த விஷ்வாவுக்கு அக்ரி இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. தந்தையும் மகனது விருப்பம் அறிந்து சம்மதித்திருந்திருந்தார். ஏற்கனவே ஒரே மகனை வித்யா இருவருடமாக பிரிந்திருந்தவர், மகன் மதுரைக்கு செல்கிறேன் என்றதும் அழுதே சோர்ந்து போனார். அவன் ஊருக்கு செல்லும் நாளும் அருகில் வர, அந்த நேரத்தில்தான் பிருந்தா பெரியவள் ஆனாள்.

அவளுக்கான முறைகள் அனைத்தும் செய்தது சுந்தர் தான். புடவைக்கட்டி, பூச்சூடி, அலங்காரங்கள் செய்து சிறு பெண்ணில் இருந்து பதின்பருவத்தில் அடியெடுத்து வைத்திருந்த பிருந்தா, விஷ்வாவின் மனதில் அவனையும் அறியாது பதிந்து போனாள். அவன் ஊருக்கு கிளம்ப, கால் முளைத்த காற்றாய் தன்னையே சுற்றிவரும் பிருந்தாவைக் காணாது விஷ்வாவுக்கு தான் ஒருமாதிரி இருந்தது. “ம்மா இந்த பிந்துகுட்டி எங்கம்மா? ஆளையே காணோம்?” தனது சின்னஞ்சிறு தோழியை தேடியது விஷ்வாவின் மனம்.


“அவ பெரிய மனுஷி ஆகிட்டாளடா…. கல்யாணி பெரியம்மா அவளை மிரட்டி வீட்டுல உட்கார வச்சுட்டாங்க போல!” என்றார் வித்யா. அதனைக் கேட்டு ஒருமாதிரி இருந்தது அவனுக்கு. எப்படியாவது அவளை பார்க்க வேண்டுமென, தாயிடம் சொல்லிக்கொண்டு முத்துவேல் வீட்டுக்கு சென்றான் விஷ்வா. “அத்தை அத்தை!” என கீதாவை அழைத்தபடியே உள்ளே வர, அவனது அரவம் கேட்டு வேகமாய் வீட்டினுள் ஓடினாள், பிருந்தா. கதவின் பின்னே கேட்ட கொலுசு சத்தம் வைத்தே அவளைக் கண்டுக் கொண்டவன், “ஒய் பிந்து குட்டி என்ன புதுசா என்னைய கண்டு ஓடுற! நான் என்ன பார்க்க அவ்வளவு பயங்கரமாவா இருக்கேன்!” மாமன் மகளை சீண்டினான் விஷ்வா. நொடி நேர அமைதிக்குப்பின், “அப்பத்தா தான் என்னைய வெளிய போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க மாமா!” தனது தோழனிடம் குற்றப்பத்திரிக்கை வாசித்தாள், பிருந்தா. அதனை கேட்டவனிடத்தில் சிறுநகைப்பு. “ஆயா கிட்ட நான் சொல்றேன். இப்ப நீ வெளியவா!” என்றான், விஷ்வா.



பொந்துக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் முயல் குட்டியாய், அவள் தனது தலையை மட்டும் வெளியே நீட்ட, அவளது மருண்ட அழகிய நீள் கூர்விழிகள் அவனை கவர்ந்த அந்நொடி ஆணவனின் மனப்பெட்டகத்தில் அழகாய் பதிந்துபோனது.
தயங்கி தயங்கி வெளியே வந்தவளைக் கண்டு புன்னகை புரிந்தவன், அவளையே விழியசையாது பார்த்திருந்தான். அவனது செல்ல பிந்துக்குட்டி இப்போது அவனது கண்களுக்கு புதிதாய் தெரிந்தாள். குரலைக் செருமிக் கொண்டு, “பிந்துகுட்டி மாமா மதுரைக்கு போறேன்!” எனவும், அந்த குட்டி முகத்தில் ஆயிரம் பாவங்கள்.



“என்ன்…னது மதுரைக்கு போறியா? எதுக்கு?” என்றாள். “அது… அது எனக்கு மதுரையில சீட் கிடைச்சு இருக்கு!” வெகுவாய் தயங்கியவன், ஒருவாறு அவளிடம் சொல்லிவிட்டான். “நீ.. நீ… ஸ்கூல் முடிச்சுட்டு இங்கேயே வந்துடுவேன்னு என்கிட்டே சொன்னே?” தனது பிரியத்துக்கு உரிய மாமன் தன்னைவிட்டு தூர செல்வதில் மனம் சுணங்கிப் போனது பெண்ணுக்கு. கண்கள் கலங்க, முகம் சுருங்க, உதடு பிதுங்க அவள் கேட்ட பாவனையில் உள்ளூர உருகிப் போனது விஷ்வாவுக்கு. அவனுக்கும் அதில் வருத்தம் இருந்தாலும், “மாமா உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன் பிந்துக்குட்டி! ஜஸ்ட் நாலே வருஷம் தான். கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள ஓடியே போய்டும்! நீ இப்படி எல்லாம் முகத்தை தூக்கி வச்சுக்கிட்டா அங்க நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும் சொல்லு!” வருத்தம் தோய்ந்த குரலில் ஆணவன் கேட்க, கண்ணீர் கரைக்கட்டி நிற்க, “நாலு வருஷமா???? அப்பா என்கிட்டே மூணு வருஷம் தானே சொன்னாங்க?” உதடு பிதுக்கி அழத் தயாரானாள், பிருந்தா.


தனது செல்ல பிருந்தாவை விட்டு பிரிவது அவனுக்கும வருத்தமாக இருந்தாலும், அவளை கெஞ்சிக் கொஞ்சி சம்மதிக்க வைப்பதற்குள் திணறி திண்டாடித்தான் போனான், விஷ்வாவும். அவனிடம் ஆயிரம் வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டு தான் வழியனுப்பினாள், பிருந்தாவும். அதுதான் அவர்களின் கடைசி சந்திப்பாக இருக்கும் என இருவருமே அறியவில்லை.


அதேநேரம் தான் முத்துவுக்கும் பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் வந்தது. முதலில் தங்களது ஊரை சுற்றியுள்ள பகுதிகளில் தான் வேலை செய்தார் முத்துவும். குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு தான் மட்டும் தினமும் போய் வந்தார். ஆனால் பணிசுமையும், பயண அலைச்சலும், அவரை சோர்வடைய செய்ய, அங்கேயே தங்கிக்கொண்டு வாரம் ஒருமுறை மட்டும் ஊருக்கு வந்து சென்றார். பெற்றவர்கள், உறவுகள் சூழ குடும்பத்தை விட்டு சென்றவருக்கு குடும்பத்தை நினைத்து ஏக்கமாக இருந்தது. அதில் மனம் தளர்ந்து போனார், முத்துவேலும்.

ஒருமுறை உடல்முடியாமல் அலுவலகத்திலேயே மயங்கி விழுந்தவரை, அங்கே உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்க்க, பதறியடித்து வந்தனர் அனைவரும். கீதாவும் பிள்ளைகளும் அழுதே கரைந்தனர். அதன்படி அவரின் உடல்நிலையை முன்னிட்டு அவருடன் செல்வதாக இருந்தனர் குடும்பத்தினர். அனைவருக்கும் அங்கிருந்து செல்ல மனதேயில்லை. பிருந்தா விஷ்வாவை நினைத்து, அழுதுகரைந்தாள். கீதாவுக்கும் அதேயளவு வருத்தமிருந்தாலும், கணவனை முன்னிட்டு மனதை தேற்றிக்கொண்டார்.


காரில் செல்லும்போது விஷ்வாவின் வீட்டை கடக்கும்போது திரும்பி திரும்பி பார்த்து அழுதபடியே சென்றாள், பிருந்தா. தாயின் மூலம் அனைத்தையும் தெரிந்துக் கொண்டவனுக்கு பிருந்தாவை நினைத்து நெஞ்சில் பாரமேறிய உணர்வு. அதன் பிறகு இருவரும் நான்கு வருடங்கள் பார்த்துக் கொள்ளவேயில்லை. புது இடம், புது பள்ளி அனைத்தையும் கண்டு பிருந்தா மருண்டு போனாள். மனம் வெகுவாக தனது விஷ்வா மாமாவை தான் தேடியது. தன்னை வந்து காணாதவன் மீது தோன்றிய ஏக்கம் நாளாக நாளாக கோபமாக உருமாறியது. விடுமுறைக்கு ஊருக்கு சென்றாலும், அவனால் வரமுடியாது போக, அவன் மீதான கோபம் உரமின்றி வளர்ந்து போனது.


ஒவ்வொரு முறையும் ஊருக்கு வருபவள் தனது அத்தையின் பின்னே குட்டிபோட்ட பூனையாக திரிவாள். எப்படியும் அவன் வந்துவிடுவான் வந்துவிடுவான் என அவனுக்காக காத்திருக்க துவங்குபவள், காத்திருப்பின் முடிவில் அவன் வராது போகவும், கோபம்கொண்டு மடல் ஒன்று அவனுக்காக வரைந்து விட்டு செல்வாள். தாயின் வாய்மொழி வழியே அவளது கோபத்தை அறிந்திருந்தாலும், அவனாலும் ஒன்றும் செய்யமுடியாத நிலை. அடுத்தமுறை வரும்போது அவளுக்கு பதில் மடல் ஒன்று எழுதிவிட்டு செல்வதும் அவர்களுக்குள் வாடிக்கையாக இருந்தது. அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் கடிதம் வழியே நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவன் அவளை சமாதானம் செய்ய அவளுக்கு பிடித்ததை வாங்கி வைத்திருப்பதும், அடுத்த முறை வரும்பொழுது அதனை ஆசையாய் எடுத்துக்கொள்ளும் பிருந்தா, அவனை திட்டி கடிதம் எழுதுவதையும் மறக்கவில்லை.


அவர்களின் கண்ணாம்மூச்சி ஆட்டம் நிறைவு பெரும் நாளும் வந்தது. விஷ்வா தனது படிப்பை முடித்திருந்தான். அவன் விண்ணப்பித்திருந்த வேலையும் அவனுக்கு கிடைத்திருக்க, பேரானந்தம் அடைந்தான். மகனின் முடிவறிந்து அனைத்திற்கும் துணை நின்றார், சுந்தர்.



விஷ்வா வேலைக்கு சேரும் நாளும் வர, தனது உடமைகளை அடுக்கிக் கொண்டிருந்தவன் முன் பிருந்தாவுக்கும் முகுந்தனுக்கும் பிடித்த அனைத்தையும் கல்யாணியும், வித்யாவும் அடுக்க இருவரையும் முறைத்துப் பார்த்தான். “என்னடா பார்க்குற?” வித்யா கேட்க, “ஏன்மா எனக்கு எதுக்கும்மா இவ்வளவு? நான் இங்க இருக்கிற கோயம்பத்தூர் தானே போறேன் அமெரிக்காவா போறேன்?” அயர்வாய் கேட்க,


“இதெல்லாம் உனக்குனு யாரு சொன்னா? அது என் பிருந்தா செல்லத்துக்கும் முகுந்தன் குட்டிக்கும்!” என்றார் வித்யா.
அவரின் பதிலில் தாயை முறைத்தாலும், உள்ளுக்குள் மகிழ்வாகவே அதனை எடுத்துக்கொண்டே கிளம்பினான் விஷ்வா. நெடுநாள் கழித்து அவளைக் காணப் போகிறோம் என்ற ஆவலுடனும், ஆசையுடனும் தனது பிந்துவை காண விரைந்தான், விஷ்வா.


வழிநெடுக அவளைப் பற்றிய யோசனையுடனே கழித்தான், விஷ்வா. தன்னை கண்டால் என்ன செய்வாள்? மாமா என அழைப்பாளா? இல்லை முகம் திருப்பி செல்வாளா? என ஆயிரம் எண்ண ஊர்வலம் அவன் மனதில். விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் முத்துவேல் வீட்டு வாசலில் இறங்கினான், விஷ்வா. கதவை திறக்க கைவைத்த நேரம், கோலம் போட்டுக்கொண்டிருந்த கீதா அவனைக் கண்டு மகிழ்வாய், “ஹே விஷ்வா! வா! வா! இப்ப தான் இந்த அத்தை வீட்டுக்கு வர உனக்கு வழி தெரிஞ்சுச்சா?”என ஆரவாரமாய் வரவேற்றார்.



“ஐயோ அப்படி எல்லாம் இல்லத்தை” என்றவன் கண்கள் தனது தோழியையே தேடியது. அவனைக் கண்டு புன்னகைத்தவர், “வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என சிலபல சம்பிரதாய பேச்சுக்களுக்கு பின், “மாமா இன்னும் எழுந்திரிக்கலையா அத்தை?” என்றவனுக்கு “உங்க மாமா மட்டும் இல்லை இன்னும் யாருமே எழுந்திரிக்கல! நீ போய்ட்டு ரெப்ரெஷ் ஆகிட்டுவா!” என அவனை அனுப்பி வைக்க, பிருந்தாவை காணமுடியாத சோகம் அவனது விழிகளில்.


குளித்து முடித்து தயாராகி அவன் வெளியே வந்து காபி அருந்தி டிபன் சாப்பிடும் நேரம் வந்தும், பிருந்தா எழவில்லை. “அத்தை பிருந்தா என் மேல இன்னும் கோவமாத்தான் இருக்காளா? இவ்வளவு நேரமாகியும் அவளை ஆளைக் காணோமே?” மெதுவாய் அத்தையிடம் வினவ, “ம்ம்ம் கொஞ்ச நஞ்ச கோபமா? எக்கச்சக்க கோவத்துல இருக்கா! நீ வரதை அவக்கிட்ட நான் சொல்லலை நீயே நேர்ல பார்த்து சமாதானம் செஞ்சுக்கோ!” என்றார், கீதா.



அத்தையின் பதிலைக் கேட்டு மானசீகமாக தலையில் கைவைத்துக் கொண்டான். அதே நேரம் “அம்மா காபி!” என கத்தியபடி முகம் துடைத்துக்கொண்டே வந்தாள், பிருந்தா. முகம் துடைத்து டவலை விலக்கியவள், யாரோ புதியவன் அமர்ந்திருக்கவும், சங்கடமாய் உணர்ந்தாள். அவளது சத்தத்தில் விஷ்வா வேகமாய் திரும்பி பார்க்க, முதலில் ஒருவரை ஒருவர் திகைத்துப் போய் பார்த்தனர். பள்ளிப் படிப்பை நிறைவு செய்து கல்லூரியில் அடியெடுத்து வைக்க இருந்தாள், பாவை. அதற்கேற்ப அவளது குழந்தைத்தனமான முகமும் மாறி, பருவ வயதில் இருந்தாள், பாவை.



விஷ்வாவும் இருபதுகளின் ஆரம்பத்தில், முகத்தில் ஒருவித கம்பீரமும், அந்த வயதிற்கே உரிய மிடுக்குமாக இருந்ததால், அவளுக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை. இருவரும் ஸ்தம்பித்து நின்றது சில நொடிகளே. முதலில் யாரோ என நினைத்திருந்த பிருந்தா பின்னரே அது விஷ்வா என தெரியவும் வேகமாய் முகத்தை திருப்பிக்கொண்டவள், விடுவிடுவென வாசலில் போய் அமர்ந்துக்கொண்டாள்.



அவள் முகத்திருப்பலில் இருந்தே அவளின் கோபத்தின் அளவை உணர்ந்துக் கொண்டவன், தானும் வேகமாய் அவள் பின்னே சென்று அவளை இடிக்காத குறையாய் அவளருகில் அமர்ந்துக்கொண்டான். அவன் தனது அருகில் அமர்ந்தது உணர்ந்தாலும், பிருந்தா அவன்புறம் திரும்பாது அமர்ந்திருக்க, “ஒய் பிந்துக்குட்டி! உன்னை பார்க்கத்தானே நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன் இப்படி பேசாம போற!” என விஷ்வா வினவ, “யாரும் என்கிட்டே பேச தேவையில்லை!” என முறுக்கிக் கொண்டாள், பிருந்தா. அவளை எப்படி மலையிறக்குவது என தெரியாது விழி பிதுங்கி நின்றான், விஷ்வா.


சாரல் அடித்தது….
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,


சாரல் அடுத்த பதிவு போட்டுட்டேன். லாஸ்ட் பதிவுக்கு நிறைய reponse வரலையே நட்பூஸ். I know அதுல சின்ன outline மாதிரி தான் கொடுத்திருந்தேன். ஆனாலும், அதுக்கு views கூட வரலையே மக்களே. உங்களுக்கு எதாவது குறை இருந்தாகூட என்னுடன் பகிர்ந்துக்கோங்க நட்பூஸ். உங்களோட கருத்துகள் மூலமா தான் என்னோட எழுத்துக்களை நான் மெருகேத்த முடியும். சாரலும் ஸ்லொவ் மூவிங் பிளாட் தான். என்னோட பாணி இப்படின்னு எனக்கே இப்பதான் தெரியுது. ஆஹா ஓஹோன்னு பில்ட் அப்லாம் நான் தர விரும்பலை.


ஒன்னும் ஒன்னும் ரெண்டு அப்டின்னு நீங்க ஊகிக்கும்படிதான் கதை இருக்கும். ரொம்ப எதிர்பார்ப்பு வைக்காம கொஞ்சம் ஸ்லொவா, மெல்லிய அழுகை கலந்து (கொஞ்சமே கொஞ்சம் ரொமான்ஸ், லவ்) எல்லாம் இருக்கும். லவ் இருக்கும்னு நான் நம்புறேன் நீங்களும் நம்பணும் ஓகே.



சாரலை படிச்சுட்டு உங்களது கருத்துக்களை சொல்லுங்க மக்களே. And a special thanks to kalai karthi sis, vijirsn sis, juhi sis, vanajavanesh sis, kanimozhi ragu sis, indhu karthick sis, r sakthi sis, lakshmi murugan sis, vaishanika sis, sathya. A sis, priyatharshini vamadevan sis, sowmiya balaji sis, saro jaa sis, nalina janakiram sis, indra muthu sis, padmavathy sis, porkodi balaji sis, jahubar sis, moorthy sis, uma sugumar sis, Msmurthy sis, rohini kanishka sis, shanthy durai anathan sis, venmathi. M sis, kavitha subramani sis, elakkiya prakash sis, ums sis, siva geetha sis, devitamil@79 sis, sanju saraka sis, veena R sis, fathi naz sis. உங்க எல்லாருக்கும் என்னோட ஸ்பெஷல் தேங்க்ஸ். நீங்க இல்லனா நான் இல்லை. நீங்க தரும் சின்ன சின்ன பாராட்டுகளும், லைக், ஊக்கமும், உங்களுக்கு பெருசா தெரியாம இருக்கலாம். ஆனா எனக்கு, நீங்க வைத்திருக்கும் என் மீதான அன்பும் அக்கறையுமாக தான் எனக்கு தெரியுது. ஒரு சிறு nice குட் அப்படி என்கிற வார்த்தைகளுக்கு பின், என்னோட உழைப்புக்கு நீங்க கொடுத்த பாராட்டாகவே நான் அதை பார்க்குறேன். அது கொடுக்கும் சந்தோசமும் அங்கீகாரமும் அளப்பரியாதது.


என்னையும் என் கதையும் நீங்க படிச்சு, என்னை தேடும் போது உள்ளுக்குள் பறக்கிற பீல். என்னோட கதையை படிக்கும் ஒவ்வொருதற்கும் பதில் சொல்ல, விளக்கம் சொல்ல, நான் கடமைப் பட்டிருக்கிறேன். சோ உங்களுக்கு எதாவது நெருடல் இருந்தால், நிச்சயம் என்கிட்ட சொல்லுங்க.


உங்கள் ஆதரவை எதிர்பார்த்து,

நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்




சாரல் 22


“அம்மா காப்பி!” என கூவியபடியே வந்த பிருந்தா, அங்கே அமர்ந்திருக்கும் புதியவனைக் கண்டு சங்கடமாக உணர்ந்தாள். விஷ்வாவை பார்த்து நான்கு வருடங்களுக்கும் மேலாகியிருக்க, வயதிற்கேற்ப மெருகேறியிருந்த அவனது தோற்றம், அவளை அடையாளம் காணவிடாது செய்திருந்தது. அவளது சத்தத்தில் ஆர்வமாய் திரும்பியவன், பெண்ணவளைக் கண்டு திகைத்துப் போனான். நான்கு வருடம் முன்பு, முயல் குட்டியாய் மருண்ட விழிகளுடன் அவளைப் பார்த்திருந்தவன், இப்போது பள்ளி முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் பாவையாய் பிருந்தாவை எதிர்பார்க்கவில்லை என்பதை அவனது விரிந்த விழிகளே சொன்னது.



திகைப்பில் இருந்து வெளிவந்து விஷ்வா, அவளைக் கண்டு புன்னகைக்க, அவனது மாயக்கண்ணன் சிரிப்பைக் இனம் கண்டுக் கொண்டாள், வஞ்சியும். அவனைக் கண்டு அகமும் புறமும் பூவாய் மலர, மூளையோ சமய சந்தர்ப்பம் பாராது, “ஹே பிருந்தா! நீ அவன் மேல கோபமா இருக்க!” என நூலெடுத்துக் கொடுக்க, வெடுக்கென முகம் திருப்பியவள், துண்டை நாற்காலியில் வீசிவிட்டு விடுவிடுவென வாசல் நோக்கி சென்று படியில் அமர்ந்துக் கொண்டாள்.


நிச்சயம் அவளிடம் இத்தகைய கோபத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை எனலாம். தான் என்ன சொன்னாலும், அவளோடு அவளது இரட்டை குடுமியும் அவனது வார்த்தைகளுக்கு தலையாட்ட, “விஷு மாமா! விஷு மாமா!” என தன் பின்னே வால் பிடித்துக்கொண்டு திரியும் பிந்துக்குட்டியின் புதிய பரிணாமம் அவனை வாயடைத்து போக செய்திருந்தது. மகளின் செய்கையில் சங்கடமடைந்த கீதாவும், அண்ணன் மகனை சங்கடமாய் பார்த்து வைக்க, “நீங்க விடுங்கத்தை நம்ம பிந்துகுட்டி தானே! என் மேல அவ கோவப்படாம வேற யார் கோபப்பட முடியும்!” என அத்தைக்கு சமாதானம் சொன்னவன், வேகமாய் அவளை தேடி வெளியில் விரைந்தான். அத்தையிடம் ஜம்பமாய் சொல்லிவிட்டு வந்தாலும், உள்ளுக்குள் அவளை எப்படி மலையிறக்க போகிறோம் என்பதை நினைத்து விஷ்வாவுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.


ஊரில் உள்ள தெய்வங்களை எல்லாம் துணைக்கு அழைத்தவன், அத்தை மகளை தேடி, தனது தைரியம் அனைத்தையும் ஒன்றுத்திரட்டிச் சென்றான். அவன் சென்ற போது வாய்க்குள் எதையோ முணுமுணுத்தபடி இருந்தாள், பிருந்தா. அவளருகில் அவளை இடிக்காத குறையாய் அமர்ந்துக் கொள்ள, தனதருகில் அவன் அமர்ந்திருப்பது உணர்ந்துக்கொன்டாலும், அவன்புறம் திரும்பியும் பாராது அலுச்சாட்டியம் செய்தாள். அதில் லேசாய் மனம் சுணங்கினாலும், மனம் தளராது, “ஒய் பிந்துக்குட்டி மாமா உன்னை பார்க்க தானே ஆசை ஆசையா நான் இவ்வளவு தூரம் ஓடி வந்திருக்கேன். நீ என்னடான்னா இப்படி மூஞ்சிய திருப்பிக்கிட்டு போற?” என அவளிடம் வினவ,


“யாரும் என்கிட்ட பேச தேவையில்லை!” வெடுக்கென சொன்னாள், மாது. அவளது வார்த்தைகளில், “ஐயோ இவளை ஈஸியா மலையிறக்க முடியாது போலிருக்கே! என்னடா விஷ்வா பண்றது?” என கண்ணை இருட்டிக் கொண்டு வந்தாலும், “டேய் விஷ்வா! பயப்படாத உன்னால முடியும்! சமாளி சமாளி!” தன்னைத் தானே தேற்றிக் கொண்டவன், “ஒஹ் அப்போ நீ என்கிட்ட பேச மாட்ட! சரி அப்போ நான் இதையும் முகுந்தன் கிட்டயே கொடுத்திடுறேன்!” என கையில் ஐந்து ரூபாய் டைரிமில்க் வைத்தபடி அவன் சொல்ல, எது என ஓரக்கண்ணால் அவனை லேசாக பார்த்தவள், அதனைக் கண்டதும், கண்கள் மின்ன, அவன் கையில் இருக்கும் மிட்டாயை வேகமாய் வெடுக்கென பிடுங்கிக்கொண்டு, படபடவென கிழித்து ஒருகடி கடித்தாள்.


அவள் செய்கையில் இதழ்களில் குறுநகை எட்டிப் பார்க்க, “இப்ப கோபம் போயிடுச்சா?” ஆர்வமாய் வினவ, “கோபம் போச்சுன்னு நான் எப்ப சொன்னேன்?” என்றபடியே மிட்டாயை இன்னொரு கடி கடித்தாள். அவளது பதிலில் ‘ஞே’ என விழித்தான், விஷ்வா.



தொண்டையை செருமிக் கொண்டு, அவள் வைத்திருந்ததில் கை வைக்க வர, வெடுக்கென அவன் கையை தட்டி விட்டவள், அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு மிட்டாயை உண்டு முடித்தாள். அவள் அடித்ததில் வலித்த கையை தடவிக் கொண்டவன், “ஸ்ஸ் அம்மா இப்படியா அடிப்ப? பிந்துக்குட்டி இப்ப பிசாசு குட்டியா போச்சு!” வலியில் விஷ்வா முனங்க, அது தெளிவாய் பிருந்தாவின் காதில் விழுக, கண்ணை உருட்டி விஷ்வாவை முறைத்தாள், பிருந்தா. “ஐயையோ கேட்டுடுச்சு போலயே! இப்படி முறைக்கிறா!” என ஜெர்க்கானான், விஷ்வா. இருந்தும் சமாளிப்பாய், அவளைக் கண்டு தனது உதட்டை சிரிப்பது போல இழுத்துப் பிடித்தான்.


இருவரும் உள்ளே வர, முத்துவேல் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். இவனைக் கண்டதும், வரவேற்பாய் புன்னகைத்தவர், அவனது நலம் விசாரித்தார். சிறிது நேரம் சிலபல சம்பிரதாய பேச்சுக்களுக்கு பின், அவனது வேலை, அது தொடர்பான விவரங்கள் என அனைத்தையும் கேட்டு தெரிந்துக் கொண்டார். நேரம் ஆவது உணர்ந்து “சரிப்பா! நீ ரெஸ்ட் எடு! நம்ம சாயங்காலம் பேசலாம்!” என்று கிளம்ப ஆயத்தம் ஆனார். அதே நேரம் முகுந்தனும் வர, நேரம் கலகலவென சென்றது. அதன் பின்னர் நேரம் ஆவது உணர்ந்து கீதா அவனை பள்ளிக்கு விரட்ட, “போங்கம்மா மாமா வந்து இருக்காங்க! நான் இன்னைக்கு ஸ்கூல் போகலை!” என மட்டம் போட பார்க்க, “உன் மாமா எங்கேயும் போக போறதில்லை. இங்க தான் இருப்பான். நீ ஈவினிங் வந்து உங்க மாமா கூட ஆற அமர பேசு!” மகனை தெரிந்தவராய் கீதா சொல்ல, “போங்கம்மா!” என சிணுங்கியபடியே சென்றான் முகுந்தன். அதன் பிறகான நேரம் முழுதும் மகன், கணவன் பின்னே சென்றது கீதாவுக்கு. அவர்கள் இருவரும் சென்றதும், அண்ணன் மகனிடம் ஊர் நிலவரங்கள் அனைத்தையும் கேட்டு, அறிந்து, வெட்டிக் கதை பேசி என்று பொழுது ஓடியது, அத்தை மருமகன் இருவருக்கும்.


பிருந்தா இன்னும் முறுக்கிக் கொண்டே தான் திரிந்தாள். அடுத்த நாள் காலை அவனது வேலையிடம் பற்றி தெரிந்துக் கொள்ள, முத்துவேலுடன் கிளம்பினான் விஷ்வா. அதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து வேலைக்கு சேர்ந்தான். முதல் நாள் சீக்கிரமே எழுந்து குளித்து முடித்து, தாயின் உத்தரவின் பெயரில் கோவிலுக்கு சென்றவன், பிரசாதத்தை கீதா, முகுந்தன் கொடுத்துவிட்டு, அடுத்து பிருந்தாவிடம் நீட்ட, அவனையே கண்கள் சுருக்கி முறைத்தாள், பாவை.



“முதல் நாள் வேலைக்கு போறேன். ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்ல மாட்டியா பிந்துக்குட்டி?” வருத்தம் கொண்டு ஆடவன் வினவ, முதல் நாள் வேலைக்கு செல்பவனை வருத்த வேண்டாம் எனும் எண்ணத்தில், வாழ்த்த அவள் வாயை திறக்க, அவளுக்கு இன்னும் தன் மீதான கோபம் குறையவில்லை என நினைத்து, முகம் சுருங்க, திரும்ப போன வேளை, “ஒய் மாமா!” என அழைத்த பிருந்தா, அவன் திரும்பவும், அவன் முன் ஒரு டைரிமில்கை நீட்டி, “ஆல் தி பெஸ்ட் மாமா!” என வாழ்த்தவும் செய்ய, தனது தோழி தன்னிடம் பேசிவிட்டதை எண்ணி முகமெல்லாம் பூரிக்க, அதனை வாங்கிக் கொள்ள, அவனது எண்ணம் உணர்ந்தவளாய், “ரொம்ப சந்தோசப்படாத! நான் இன்னும் கோபமா தான் இருக்கேன்!” முகத்தை திருப்பிக் கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டு கூறினாள், பிருந்தா. அதிலேயே அவளது கோபம் குறைந்து விட்டதை உணர்ந்துக் கொண்டவன், அகமெங்கும் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க, “சரிடா பிந்து நீ கோவமா தான் இருக்க! நானும் அதை நம்பிட்டேன்!” என குறும்பு சிரிப்புடன் கூறினான் விஷ்வா.


அவனுக்கு பிடித்த வேலை, கூடவே பிருந்தாவும் தனது மௌனபூட்டை திறந்திருக்க, சற்றே துள்ளலாய் வேலைக்கு சென்றான், விஷ்வா. வேலையிடமும் அவனுக்கு மிகவும் பிடித்திருக்க, அனைத்தையும் ஆர்வமாய் கற்றுக் கொண்டான். இதற்கிடையே பிருந்தாவுக்கும் தேர்வு முடிவுகள் வர, நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தாள், பெண். அன்றைய தினம் விஷ்வாவும் பிருந்தாவின் குடும்பமும் வெளியே இரவுணவிற்கு சென்றனர். சிறியவர்கள் மூவரும் தங்களுக்குள் கிசுகிசுத்தபடி மகிழ்வாய் அமர்ந்திருந்தனர். பிருந்தாவின் கவனத்தை கவரா வண்ணம் முகுந்தனை அழைத்த விஷ்வா, “டேய் முகுந்தா! இந்த பொண்ணை எப்படிடா மலையிறக்குறது?” கவலையாய் அவன் கேட்க,


“அட நீங்க வேற மாமா! அவ எப்பவோ சமாதானம் ஆகிட்டா. அதை வெளிய காட்டிக்கிட்டா நீங்க சாக்லேட் வாங்கி தரமாட்டீங்கள. அதுக்கு தான் ஓவரா சீன போடுறா!” தன் தமக்கையின் வண்டவாளத்தை, தண்டவாளத்தில் ஏற்றினான், முகுந்தன்.


“அடிப்பாவி! இது தெரியாம நான் என்னோட மண்டைய பிச்சுகிட்டு இருந்தேனேடா!” அதிர்வாய் விஷ்வா தனது நெஞ்சில் கை வைத்தபடி பிருந்தாவை அவன் முறைக்க, எதேச்சையாய் அவர்களது புறம் தனது பார்வையை திருப்பிய பிருந்தா மாமனின் முறைப்பை உணர்ந்து புருவம் சுருக்க, விஷ்வாவின் பின்னே அவளைப்பார்த்து வக்காளம் காட்டினான் முகுந்தன். தம்பியின் கேலிப்பார்வையும், விஷ்வாவின் முறைப்பும் அவளுக்கு மண்டைக்குள் மணியடிக்க, “அய்யய்யோ இந்த எருமமாடு மாமாகிட்ட போட்டுக் கொடுத்துட்டான் போலயே!” என உள்ளுக்குள் கலவரமானாள், மாது.


உணவு முடிந்து அனைவரும் வீட்டுக்கு வர, விஷ்வா தனது முறைப்பை விட்டபாடில்லை. வீட்டுக்குள் நுழைந்தவன் அவளை திரும்பியும் பாராது செல்ல, முதல்முறை மனம் வாடிப் போனாள், பிருந்தா. நேரமாவது உணர்ந்து தனது அறைக்குள் புகுந்துக் கொண்டவளுக்கு தூக்கம் தொலைதூரம் தான் போனது.

*******************************************************************************************************************************************************



பழைய நினைவுகளுள் உழன்றுக் கொண்டிருந்த பிருந்தாவின் நினைவலைகள் மகனின் “அம்மா!” எனும் அழைப்பில் அறுந்துப் போக, மகனது குரலில் பதறிப் போய், குழந்தை எழுந்துவிடக் கூடாதே எனும் பதட்டத்தில் வேகமாய் எழ முயற்சிக்க, மரத்துப் போயிருந்த கால்கள் அவளுக்கு ஒத்துழைக்க மறுக்க, சுரீரென தோன்றிய வலியில், முகம் சுருக்கி “அம்மா!” என காலைப் பிடித்தபடி அப்படியே அமர்ந்துவிட்டாள். முயன்று எழுந்தவள், வேகமாய் மகனின் அறை நோக்கி சென்றாள். அங்கே ராகுல் படுக்கையில் அங்கும் இங்கும் உருண்டுக் கொண்டிருக்க, விரைந்து மகன் அருகே சென்றவள், “ஒண்ணுமில்லைடா கண்ணா! ஒண்ணுமில்லை அம்மா வந்துட்டேன்!” என்றபடி குழந்தையை தட்டிக்கொடுக்க, தாயின் குரல் கேட்கவும், மீண்டும் துயிலில் ஆழ்ந்தான், சிறுவன். குழந்தை உறங்கியது கூட உணராது, தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தாள், பிருந்தா. அவளது நினைவுகளில் பலபல நிகழ்வுகள் அணிவகுக்க, அதன் கணம் தாளமுடியாது கண்களை மூடினாள், பெண். மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் கோடாய் வடிய, அதனை நினைத்து தவித்தது பெண் உள்ளம். தாயின் மடியில் தனது பாரம் அனைத்தையும் இறக்கி வைத்து, ஆறுதல் அடைய துடித்தது பூவை உள்ளம். “அம்மா எனக்கு மட்டும் ஏன் இப்படி? நான் என்ன பாவம் செஞ்சேன்?” மனம் வெகுவாய் காயப்பட்டிருக்க, தொடர் வேதனைகளாலும், வலியாலும் நைந்து போயிருந்த பூமனம் தாய்மடி தேடி தவித்தது, அந்த அந்தகாரத்தில்.


அதே நேரம், தங்களது வீட்டில் மகளின் நினைவு அதிகம் உந்த, பழைய புகைப்படங்களை பார்வையிட்டு கொண்டிருந்தார் கீதாவும். கண்கள் கண்ணீரில் தத்தளிக்க, அதற்கு நேர்மாறாய் உதடுகளில் புன்னகை நெளிய, சிறுவயது பிருந்தாவின் புகைப்படங்களை ஆசையோடு வருடிக்கொண்டிருந்தது கீதாவின் கரங்கள். வரிசையாய் படங்களை திருப்பியவரின் கண்களில் அதுபட, அதில் கூர்மையாய் நிலைத்தது அவர் விழிகள்.


கரங்கள் நடுங்க அந்த புகைப்படத்தை எடுத்தவரின் கண்கள், அது உணர்த்திய செய்தியில், நெஞ்சம் துடித்தது. நெஞ்சம் நின்றுத் துடிக்க, அதிர்வில் தனது கரங்களில் இருந்த அந்த புகைப்படத்தை நழுவவிட்டார், கீதா. அதேநேரம் மனைவியை தேடிவந்த முத்துவேலின் கண்களில் மனைவியின் அதிர்ந்த முகம் பட, அவரைத் தொடர்ந்து தானும் அதில் பார்வையை செலுத்தினார், முத்துவேல். தனது காலடியில் விழுந்த புகைப்படத்தில் நிழலாட, கண்ணீர் வழியும் கண்களோடு கணவனை ஏறிட்டார் கீதா. அதேநேரம் முத்துவேலின் கண்கள் அதே படத்தை வெறித்தபடி நிலைத்திருந்தது.



மௌனமாய் கண்ணீர் சிந்திய கீதா, உதடு துடிக்க கணவனிடம் “இந்த பொண்ணு மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கும்னு எனக்கு தெரியாம போச்சேங்க! என்றபடி கேவ, சில நொடிகள் கழித்து தான் கணவனின் அசைவற்ற நிலையை உணர்ந்துக் கொண்டார். அதில் திகில் அடைந்தவர், “என்னங்க! என்னங்க! என்னாச்சுங்க?” என்றபடி அவரை உலுக்கியவர், மெதுவாய் “நீங்க இங்க வாங்க!” என்றவாறு அவரை கைத்தாங்கலாய் பிடித்தபடி அருகிலிருந்த நாற்காலியில் அவரை அமரவைத்து, வேகமாய் சமையலறைக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்தவரின் நடை ஸ்தம்பித்து போனது.



அந்த புகைப்படத்தை கையில் வைத்தபடி, “ஐயோ சுந்தர்! டேய் சுந்தர்! நானே உன்னை கொன்னுட்டேனேடா! நானே உன் சாவுக்கு காரணம் ஆகிட்டேனேடா! எனக்கு மன்னிப்பே கிடையாதே! நான் பண்ணின பாவத்துக்கு தான் என் பொண்ணை கண்ணாலக்கூட பார்க்க முடியாதபடி இருக்கேனே!” என அதை கையில் ஏந்தியபடி வெடித்து அழுக, அதனைக் கேட்டு திகைத்துப்போய் தனது கையில் இருந்த தண்ணீர் சொம்பை தவற விட்டார், கீதா.



சாரல் அடித்தது…


ஹாய் நட்பூஸ்,



சாரி முன்னாடியே சொன்னேன் எனக்கு fb எழுத பயம் என்று. அதே மாதிரி எனக்கு ஒரு மாதிரி linear ஆஹ கோர்வையாய் எழுத வரலை. சோ நட்புகள் எல்லாரும் என்னை மன்னிச்சு விட்ருங்க.

 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,


சாரல் 23 பதிவு செய்துட்டேன். எனக்கு லைக் கமெண்ட் செய்து ஆதரவு தரும் நட்பூஸ் அனைவருக்கும் நன்றி. கொஞ்சம் fb இழுக்குது. நானும் சீக்கிரமே முடிக்க தான் நினைக்கறேன். ஆனா இப்படி தான் எனக்கு வருது. சோ யாரும் கோச்சுக்காம படிங்க ப்ளீஸ். படிச்சுட்டு உங்களோட கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக்கோங்க நட்பூஸ். உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து ஆவலுடன்,


நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்




சாரல் 23


ஏனோ அன்றைய தினம் மகளின் நினைவு அதிகமாய் கீதாவை தாக்க, அதனூடே வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். மனமோ மகளைக் காண வேண்டும் என ஏங்கியது. ஆனால் அது முடியாதே! உடனே செல்ல முடியாத தூரத்தில் அவளிருக்க??? போய் பார்க்கவோ, இல்லை அவள் இங்கு வந்து சீராடும் சூழ்நிலையும் அவர்களுக்கு வாய்க்கவில்லையே! தங்களது நிலையை எண்ணி பெருமூச்செறிய மட்டும் தான் அவரால் முடிந்தது. மனம் இறுக்கமாக உணர, மெல்ல தங்களது அறையைவிட்டு மகளின் அறைக்கு வந்தவர், அங்கே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த படங்களைக் கண்டு இதழ் விரித்தார்.



எதுவோ தோன்ற பரண் மீதிருந்த பழைய ஆல்பங்களை எடுத்தார். பல வருடங்களாக எடுக்காததால் தூசி படிந்திருக்க, தனது புடவையால் துடைத்தவர் கண்கள் அதனைத் திறந்தும் மென்மையாகிப் போனது. கண்களும் மனமும் பிள்ளைகளின் நினைவில் மென்மையாகியிருக்க, கரம் கொண்டு சிறுவயது பிருந்தாவின் படத்தை வருடினார். ஒவ்வொரு படங்களாய் திருப்பியவர் வதனத்தில், அப்புகைப்படங்களின் பின்னணியும் நினைவுக்கு வர, பழைய நினைவுகளில் ஆழ்ந்தார், கீதா. வரிசையாய் அனைத்து ஆல்பங்களையும் பார்வையிட்டவரின் கரங்களில் கடைசியாய் சிக்கியது, அது. தன்னுள் பல ரகசியங்களையும் பூகம்பங்களையும் புதைத்து வைத்துக்கொண்டு.

அது பிருந்தாவின் கல்லூரி காலத்து ஆல்பம். அதிலிருந்த புகைப்படங்களை வரிசையாய் பார்த்துக்கொண்டே வந்தவர் கண்களில் பட்டது விஷ்வாவின் புகைப்படம். அந்த ஆல்பத்தில் பெரும்பாலும், முகுந்தன், விஷ்வா மற்றும் பிருந்தா சரண்யாவே நிறைந்திருக்க, அவர்களின் நினைவில் மலுக்கென நிறைந்தது நீர். கண்கள் கலங்க, கன்னத்தில் குழி விழுக, மாயக்கண்ணனாய் புன்னகைத்துக் கொண்டிருந்த விஷ்வாவின் புகைப்படத்தை மெல்ல வருடியது கீதாவின் கரங்கள். அவனது நிழலின் மீது ஒருதுளி நீர் சிதற, “இந்த அத்தை மேல உனக்கு என்ன கோவம் கண்ணா?” மானசீகமாய் மருமகனிடம் கேட்டார்.


கண்களை துடைத்துவிட்டு ஒவ்வொரு படங்களாக பார்த்துக் கொண்டிருந்தவர் இதழ்களில் சிறு புன்னகையும், விழிகளில் நீரும் நிறைந்திருந்தது. ஒவ்வொன்றாக பார்வையிட்டு வந்தவரின் கரம், அடுத்ததை திருப்ப முனையும் போது, ஒரு இடத்தில் அவர் பார்வை நிலைப்பெற்றது. கண்களில் கூர்மையை தேக்கி, வேகமாய் பார்த்தவர் விழிகள், அதிலேயே நிலைத்திருந்தது. மனம் அதிர, வேகமாய் அப்படத்தை கையில் ஏந்தியவர், கண்கள் அதையே வெறித்திருக்க, விழிகள் உணர்ந்த செய்தியில் மூளை செயல்பட மறுத்தது. அதிர்வில் கையிலிருந்ததை நழுவ விட்டவர் கண்களோ கலங்கி கண்ணீரை சொரிய, தொண்டையை விட்டு வெடித்து கிளம்ப முயன்றது, அழுகை.


அதே நேரம் மனையாளை தேடி வந்த முத்துவேல், மகளின் அறையில் வெளிச்சம் தெரியவும் அங்கே செல்ல, அவர் கண்களில் பட்டதென்னவோ, முகம் சிவந்து, கண்கள் கண்ணீரில் தத்தளிக்க, கீழே வெறித்துக் கொண்டிருந்த கீதாவை தான். அவரின் பார்வையை தொடர்ந்து தானும் பார்வையை செலுத்தியவர் தானும் அதிர்ந்துப் போனார். முகம் பதட்டத்தில் வியர்த்து விறுவிறுக்க, அந்த படமும், அதன் பின் நடந்தவையும் அவரை நிலையிழக்க செய்தது. தனது காலடியில் விழுந்திருந்த படத்தில் நிழலாட, கண்ணீர் வழிந்த கண்களோடு நிமிர்ந்தவர், கணவனிடம் ஆறுதல் தேடும் முனைப்புடன், “இந்த பொண்ணு மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கும்னு எனக்கு தெரியாம போச்சேங்க!” என்றபடி கேவ, சில நொடிகள் கழித்து தான் கணவனின் அசைவற்ற நிலையை உணர்ந்துக் கொண்டார், கீதா.


முத்துவேலின் நிலைக் கண்டு பதட்டமானவர், “என்னங்க! என்ன பண்ணுது? நீங்க இங்க வாங்க! வந்து இப்படி உட்காருங்க!” அவரின் கைப்பற்றி படுக்கையில் அமர வைத்தவர், மின்விசிறியை சுழலவிட்டு, அடுக்களைக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்தவரின் நடை, கணவனின் வார்த்தைகளில் ஸ்தம்பித்து போனது.


அந்த புகைப்படத்தை தனது மாரோடு அணைத்தபடி, “ஐயோ சுந்தர்! டேய் சுந்தர்! ஒரு ஈ எறும்புக்கு கூட துரோகம் நினைக்க மாட்டியேடா! எதிரில் இருக்கவன் மனசு நோக பேசக்கூட அவ்வளவு யோசிப்பியேடா! அப்படிப்பட்ட உன்னை… நா… நானே கொன்னுட்டேனே! நானே… உன் சாவுக்கு காரணம் ஆகிட்டேனேடா! அய்யோ என் பாவத்துக்கு மன்னிப்பே கிடையாதா? நான் பண்ணின பாவத்துக்கு தான் இப்ப ஒரு பாவமும் அறியாத பிருந்தா தண்டனை அனுபவிக்கிறாளே! பெத்தவங்க பாவம் பிள்ளைங்களை தான் சேரும்னு சொல்லுவாங்க அது என்னோட விஷயத்துல உண்மையாகி போச்சே! யாருக்காக.. எது…க்காக நண்பன்னு என்னை உயிரா நெனச்சிருந்த உன்னை உயிரோட கொன்னனோ! அவ வாழ்க்கை கேள்வி குறியாகி நிக்குதே! ஐயோ இப்பவே நான் நெஞ்சு வெடிச்சு செத்தா என்ன! இதெல்லாம் பார்த்துட்டு இன்னும் உயிரோட இருக்கேனே! என் கண்ணு முன்னாடி வளர்ந்த பசங்களோட வாழ்க்கை என்னோட சுயநலத்தால நாசமாகி போச்சே!” என்ற முத்துவேலின் கதறலில், அதிர்வில் தனது கையில் இருந்த சொம்பை தவறவிட்டார், கீதா.


பாத்திரம் தவறி விழுந்த சத்தத்தில், திகைத்து நிமிர்ந்த முத்துவேல், மனையாளின் அதிர்ந்த பார்வையில் தன்னிலை அடைந்தார். கீதாவின் கண்களில் கண்ணீரும் அதிர்வும் சமமாய் விரவியிருக்க, “எ… என்…என்ன சொன்னீங்க? இப்ப என்ன சொல்…லிட்டு இருந்தீங்க? எங்கண்ணன் சாவுக்கு நீங்க தான் கா… காரணமா?” அதிர்வில் வார்த்தைகள் திணறலாய் திக்கி திக்கி வர, மனையாளை குற்றவுணர்வுடன் நேருக்கு நேர் பார்க்கமுடியாது தனது பார்வையை தழைத்தார், முத்துவேல். ஒவ்வொரு அடியாய் எடுத்து கணவனை நெருங்கி வந்தவர், “என்ன பண்ணுனீங்க? சொல்லுங்க… சொல்லுங்க? என்ன பண்ணி தொலைச்சீங்க?” மெதுவாய் கேட்டவர் கணவன் பதிலின்றி அமைதியாய் தலை குனியவும், பெருங்குரலில் சீறினார்.


“அப்ப உங்களுக்கு எல்லாமே முன்னாடியே தெரியுமா? சொல்லுங்க தெரியுமா? ஏன் என்கிட்ட சொல்லாம மறைச்சீங்க?” அழுகையுடன் ஒலித்த கீதாவின் குரலில் தவிப்புடன் மனையாளை ஏறிட்டார், முத்துவேல். மகனருகில் படுத்திருந்த பிருந்தாவின் விழிகள் நேரே வெறித்திருக்க, கன்னங்களை இடைவிடாது நனைத்தது கண்ணீர். கடந்த காலத்தின் வலி நிறைந்த பக்கங்களை வலிக்க வலிக்க, திரும்ப புரட்ட ஆரம்பித்தது பெண்ணவளின் மனம்.




பிருந்தா கல்லூரியில் அடியெடுத்து வைக்க, விஷ்வாவும் தனது பணியில் மும்மரமாக இருந்த நேரமது. கல்லூரியில் அவளுக்கு கிடைத்த நட்பு தான் சரண்யா. நாட்கள் ஏகாந்தமாக பறக்க, கல்லூரியில் சரண்யாவுடனும், வீட்டில் விஷ்வாவுடனும் இனிதாய் கரைந்தது பெண்ணுக்கு.

ஒருநாள் சீக்கிரமே கல்லூரி விட, விஷ்வாவிடம் பிருந்தாவை அழைத்து வர சொன்னார், கீதா. சரண்யாவுடன் வாயிலில் பிருந்தா காத்திருக்க, “ஹே வாவ் எவ்ளோ அழகா இருக்கான்? யாருடி இந்த ஆணழகன்? இவ்ளோ நாள் நான் இவனை பார்த்ததேயில்லையே! ஹே அவன் நம்மளை நோக்கி தான் வரான்” என்ற சரண்யாவின் உற்சாக குரலில் யாரென திரும்பிப் பார்த்தாள், பெண்.


பார்த்தவள் கண்களோ அதிர்வில் விரிய, அங்கே அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்ததோ விஷ்வா. “ஒய்! அது எங்க விஷ்வா மாமா!” பல்லை கடித்துக்கொண்டு சொன்னாள், பெண்.


“யாரா இருந்தா என்னடி… என்னது உங்க மாமாவா! இப்படி ஒரு அழகான மாமா உனக்கு இருக்கிறதா என்கிட்ட நீ சொல்லவேயில்லையே!” விஷ்வாவையே பார்த்தபடி உரைத்தாள், சரண்யா. அவளது அசையாத பார்வையில் உள்ளுக்குள் ஏதோவொன்று பற்றிக்கொள்ளும் போல் இருந்தது பிருந்தாவுக்கு. இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டவளின் கண்களில் கனல் கூடியது. ஆனால் விஷ்வாவின் பார்வை அவளைவிட்டு அசையவில்லை.



“ஹே ஹே! கொஞ்சம் அவரை இன்டரடுஸ் பண்ணி வைடி. ப்ளீஸ் ப்ளீஸ்!” பிருந்தாவின் கைப்பிடித்து சரண்யா கெஞ்சவே ஆரம்பிக்க, “ம்ம்கும் முடியாது!” நிர்தாட்சண்யமாய் மறுத்தாள், பாவை.


“நீ பண்ணாட்டி என்னடி? நானே இன்ட்ரோ ஆகிக்கிறேன்!” என சரண்யா அவளை மேலும் சீண்ட, அதற்குள் அவர்களை அடைந்திருந்தான், விஷ்வா. அவர்களை கண்டு புன்னகைத்தப்படி வர, “வாவ் அந்த கன்னக்குழி சிரிப்பு இருக்கே சிரிப்பு! அதுல விழுந்தா எழுந்திரிக்கவே தோணாதே எனக்கு!” சரண்யா கூச்சமேயின்றி விஷ்வாவை வர்ணிக்க, “இவனை யாரு வர சொன்னா?” வாய்க்குள் முணங்கினாள், பிருந்தா.


“ஹாய்!” ஆளுக்கு முன்னே சரண்யா கையை நீட்ட, அவளைக்கண்டு திகைத்துப்போய் ஓரடி தள்ளி நின்றான். அவனது செய்கையில் காற்றுப்போன பலூனாய் பாவையின் முகம் சுருங்க, அதனைக் கண்டு குதூகலமாகிப் போனது பிருந்தாவுக்கு. “பாரு பாரு நல்லா பாரு! உனக்கு இது தேவை தான்!” எனும் பார்வை பார்த்தாள், தனது தோழியை.


சரண்யாவை தொடர்ந்து விஷ்வாவும் தனது பார்வையை அத்தை மகளிடம் செலுத்த, தனது பார்வையை திருப்பிக் கொண்டாள், பூவை. “ஹாய்! நான் சரண்யா பிருந்தா பிரின்ட்.” தானே முன்வந்து அறிமுகம் செய்துக்கொள்ள, “ஹாய்!” என்ற வார்த்தையுடன், சிறு தலையசைப்பு மட்டுமே அவளுக்கு பதிலாக கிடைக்க, வெடித்து கிளம்பிய சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டாள், பிருந்தா.


“ஓகே போகலாமா?” என்ற விஷ்வாவுக்கு ஒரு தலையசைப்பை பதிலாக தந்தாள், கோதை. பின்னே அமர்ந்தவள், நண்பியை கண்டு நாக்கு துருத்த, “போடி!” என வாயசைத்தாள், சரண்யா.


“என்ன உங்க ரெண்டு பேருக்குள்ள?” கேள்வியாய் விஷ்வா இருவரின் பார்வைக்கண்டு வரும் வழியில் கேட்க, “அது… அவ உன்னை இன்ட்ரோ கொடுக்க சொன்னா மாமா. நான் மாட்டேன்னு சொல்லவும் அவளே உன்கிட்ட பேசுறேன்னு சொன்னா… ஆனா நீ அவளுக்கு செம்மையா பல்பு கொடுத்துட்ட!” பிருந்தா நினைத்து நினைத்து சிரிக்க, “என்னது?” அதிர்ந்துப் போய் வண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தான், விஷ்வா.


“ரொம்ப ஷாக் ஆகாத மாமா! நீ முதல வீட்டுக்கு போ! ரொம்ப பசிக்குது!” என பெண்ணவள் சொல்ல, சலிப்பாய் இருபுறமும் தலையாட்டிக் கொண்டு வண்டியை கிளப்பினான், விஷ்வா.


அன்று முழுதும் அவனைக் கண்டு குறும்பாய் சிரித்து சிரித்து வைத்தாள், பிருந்தா. அவன் அவளைக் கண்டு முறைக்க, உதட்டை சுளித்து அவனை நன்றாக வெறுப்பேற்றினாள். என்னவென்று கேட்ட கீதாவிடம், சொல்லாதே என விஷ்வா மறுக்க, “அப்போ எனக்கு சமோசா வாங்கிக் கொடு!” பேரம் பேசினாள்.



அடுத்த நாள் காலை, சரண்யா சோகமே உருவாய் அமர்ந்திருக்க, அவளைக் கண்டு குபீரென சிரிப்பு கிளம்பியது இவளுக்கு. “என்னடி கப்பல் கவுந்த மாதிரி சோகமா மூஞ்சியை வச்சிருக்க?” அவளை கேலி செய்ய, “என்னடி லந்தா?” என்றாள், சரண்யா.


“ச்சே! ச்சே! அதெல்லாம் இல்லடி!” வாய் சொன்னாலும், கண்கள் அப்பட்டமாய் அப்படி தான் என்றது. அதில் அவளை இன்னும் நன்றாக முறைத்தாள், சரண்யா.


“விடுடி! விஷ்வா இல்லனா ஒரு விஷ்ணு!” பிருந்தா சொல்ல, “ஐயைய அந்த பேச்சுக்கே இடமில்லை! மணந்தாள் விஷ்வா இல்லனா…” தொக்கி நிறுத்த,


“இல்லனா!” இழுத்தவள், “வேற யாரும் கிடைக்காமலா போய்டுவான்? அப்டி யாரும் கிடைக்கலானா, வீட்டுல ஒருத்தனை கட்டி வைப்பாங்க அவனை சைட் அடிக்க வேண்டியது தான்!” கண்ணடித்தாள், சரண்யா.


“அடிப்பாவி!” பிருந்தா வாயில் கை வைக்க, “சில் செல்லக்குட்டி! நீ ரொம்ப குட்டிப் பொண்ணு இதெல்லாம் உனக்கு புரியாது!” என்று வேற சொல்ல, தலையில் அடித்துக் கொண்டாள், பெண்.


“சரி சரி நீ சொல்லு உனக்கு அவர் எப்படி மாமா வேணும்?” சரண்யாவின் கேள்வியில் புருவம் சுருக்கியபடி, “எப்படினா?” எதிர்க்கேள்வி கேட்க, “அடியேய்! உன்னை…” பல்லைக் கடித்த சரண்யா,


“முறைப்பையனா?” சரண்யா.


“முறைப்பையனா?” என யோசித்தவள், தோழி தனது முகத்தையே ஆர்வமாய் பார்ப்பது கண்டு, “ம்ம்ம் அப்டியும் சொல்லலாம்” என இவள் இழுக்க, “உன்னை கொல்லபோறேன் பாரு! ஒழுங்கா சொல்லுடி என் செல்லமே! உனக்கு அவர் வெறும் மாமா தானே!” உயிரை கையில் பிடித்தபடி அவள் கேட்க,


“என்னடி லூசு உளறுற?” பிருந்தா. மூச்சை நன்றாக வெளியிட்ட சரண்யா, “அடியே அவர் உனக்கு வெறும் மாமாவா? இல்லை ஸ்பெஷல் மாமாவா?” என ‘ஸ்பெஷலில்’ அழுத்தம் கொடுத்து கண்ணடித்து கேட்க,


“லூசு அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை!” முகத்தை சுளித்தபடி பிருந்தா சொல்ல,


“ஹப்பா! இப்பதாண்டி என் நெஞ்சுல பாலை வார்த்த! இனிமே ஒரு பிரச்சனையும் இல்லை. என் ரூட் கிளியர்!’ அப்படி ஒரு ஆசுவாசம் அவளுள். அவள் புரியாது பார்க்கவும், “நான் கூட உன்னை கட்டிக்க போறவர்னு நெனச்சு கவலைப்பட்டேன்டி!” என்றவள் விளக்க,


“அடியே அவர் என்னோட விஷ்வா மாமா!” பிருந்தா சிலிர்த்தெழ, “நீதான் அப்படி எதுவும் இல்லன்னு சொன்னலடி!” சரண்யா தோழியிடம் நியாயம் கேட்க,



“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆனா நீ அவரை பார்க்கக்கூடாது!” கட்டளை போல சொல்ல,


“ஏண்டி?”

“பார்க்க கூடாதுனா பார்க்கக்கூடாது! அவ்வளவுதான்!” என்றவளின் மனதில் இனம் புரியாத ஒரு எரிச்சல், தவிப்பு, பயம். அதனை இனம்காண அவளுக்கு தெரியவில்லை.


அங்கே தோழியை கலவரப்படுத்தி விட்டு வருபவள், இங்கே விஷ்வாவிடம் அதனை சொல்லி சொல்லி அவனை ஓட்டவும் செய்தாள். ஒருநாள் சரண்யா அவளிடம், “ஹேய் ஹே நீ என் உயிர் நண்பி தானேடி! எனக்காக ஒரு உதவி செய்ய மாட்டியா?” பலமான பீடிகை போட, என்னவென்று கண்ணால் வினவினாள், பிருந்தா.


“அது… அது… உங்க மாமாகிட்ட இந்த லெட்டரை நீ கொடுக்கணும்!” வெட்கத்தோடு சரண்யா அதனை நீட்ட, “என்னது இது? லவ் லெட்டரா?” சுவாரசியம் பொங்க தோழியிடம் கேட்க,


“ம்ம்ம்ம்!” தலையசைத்தாள் பெண். “கொடு பார்ப்போம்!” பிருந்தா பறிக்க போக, “ஏய் ஏய் இத நீ படிக்க கூடாது. நீ இதை அவர்கிட்ட கொடுத்தா மட்டும் போதும்!” படப்படப்பாய் சரண்யா சொல்ல,


“எவர்கிட்ட?” மூக்கில் புகை வராத குறையாய் பிருந்தா கேட்க, “அதான் உங்க விஷ்வா மாமாகிட்ட!” வெட்கபட்டபடி அவள்.


“என்னைத்தான் நீ படிக்க கூடாதுன்னு சொல்லிட்டியே! அப்போ எதுக்கு என்கிட்டே கொடுக்கிற? நீயே கொடுக்க வேண்டியது தானே!” சிலுப்பலாய் சொல்லிவிட்டு, முகம் திருப்பிக்கொண்டு முதுகு காட்டி அமர்ந்தாள், பிருந்தா.



“ஹேய் அப்படியா? எப்படிடி? எனக்கு பயமா இருக்கு!” என்றவளின் குரலில் பயமும், தவிப்பும் ஆசையும் சரிவிகிதத்தில் கலந்தொலித்தது. பிருந்தாவின் முதுகை சுரண்டியவள், “ஹேய் பிருந்தா! நீ உங்க மாமாவ நம்ம காலேஜ் பக்கத்துல இருக்க அந்த பேக்கரிக்கு கூட்டிட்டு வரியா?” சரண்யா கெஞ்சலாய் கேட்க,


“கூட்டிட்டு வந்தா எனக்கு என்ன வாங்கி தருவ?” பட்டென திரும்பிய பிருந்தா பேரம் பேச, உடனே சரண்யாவின் கண்கள் மின்ன, முகம் பளிச்சென்றாக, “ நீ என்ன கேட்டாலும்…!” என வாக்கு தந்தாள்.

“சரி பேச்சு மாறக்கூடாது! நாளைக்கு பாக்கலாம்!” பிருந்தா சொல்லவும், கலர் கலராய் கனவுகள் விரிந்தது பெண்ணுள். அன்று இரவு பிருந்தா விஷ்வாவிடம், “நாளைக்கு நீ வந்து என்னைய காலேஜ்ல விடு மாமா!” சலுகையாய் கேட்க, புருவம் சுருக்கி அவளை பார்த்தான் விஷ்வா.

“என்ன விஷயம்?” புருவம் உயர்த்தி அவன் கேட்க, என்ன சொல்வதென தெரியாது திருதிருவென முழித்தாள், பெண். அதில் மேலும் சந்தேகமடைந்தவன், “ஒய் என்னை வச்சு என்ன பிளான் பண்ணியிருக்க?”


“அது… அது உன்னை வச்சு நான் என்ன பிளான் பண்ணியிருக்க போறேன்? சும்மா கூப்பிட்டேன் அவ்வளவுதான்!” சிறு தோள் குலுக்கலுடன் அவள் சொல்ல, “உன் முகத்தை பார்த்தா நம்புற மாதிரி இல்லையே!” விஷ்வா சொல்ல,


“உன்கிட்ட போய் கேட்டேன் பாரு. டெய்லியும் பஸ்ல வர கஷ்டமாயிருக்குன்னு தான் ஒரு நாள் உன்னை கூப்பிட்டேன். அதுக்கு ரொம்பதான் பிகு பண்ணிக்கிற!” முகவாயை தோளில் இடித்தபடி வாய்க்கு வந்ததை அவள் சொல்ல,
இன்னும் முழுதாய் அவளை நம்பாவிட்டாலும், அவள் சொன்ன கஷ்டமாயிருக்கு என்ற வார்த்தையில், அவனது சந்தேகமனைத்தும் கரைந்து காணாதுபோய்விட,


“சரி சரி கோச்சுக்காத பிந்துக்குட்டி! மாமா நாளைக்கு வரேன்!” என்று வாக்கு கொடுத்தான் விஷ்வா. மறுநாள் அவள் கேட்டுக் கொண்டபடியே அவன் பிருந்தாவுக்காக காத்திருக்க, சரண்யா அவனுக்காக காத்திருக்க, தனக்கு அதிர்ச்சியளித்த சரண்யாவுக்கு அதிர்ச்சி அளித்தான், விஷ்வா.



சாரல் அடித்தது….
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹாய் நட்பூஸ்,


சாரல் 24 செய்துட்டேன். எப்பவும் லைக் கமெண்ட் செய்து எனக்கு ஆதரவு தரும் அன்பு உள்ளங்கள் எல்லாருக்கும் நன்றி. நான் எவ்வளவு லேட்டா எபி கொடுத்தாலும், அட போடான்னு கோச்சுக்கிட்டு போகாம, என்னுடனே பயணிக்கும் எல்லா நட்பூஸ்க்கும் என்னோட நன்றி நன்றி நன்றி.


A special thanks to shanthy durai aananthan sis, kalai karthi sis, sarojaa sis, rajammal sis, அஞ்சாயாள் சண்முகம் சிஸ், saras hp sis, sathish sis, saraswathy gurusamy sis, ketheeswary suresh sis, sahira safi sis, daffodil sis, indu karthick sis, vijirsn sis, anita karan sis, vanaja vanesh sis, siva geetha sis, srinithi sis keerthukutti sis, anitha mohan sis, elakkiya prakash sis, sanju saraka sis, renugarajan sis, sathya sis uma sai sis, ums sis, kavitha subramani sis, latha veerasamy sis, shobha kalirajan sis, padmavathy sis, jayabharathi senthil kumar sis, krishnavani krishnan sis, veena sis, vijaydharuayar sis, raji mani sis, n. Palaniappan sis, amudha vinoth sis, rsakthi sis, rabi sis, lakshmi murugan sis, thenmozhi kavitha sis, rohini kanishka sis, ammu ammukutty sis, fathima naziah sis, sathya sspmk sis, lekshmikala sis, subha senthilkumar sis, priyadharshini ratheesh sis, ela mathi sis, remo raj sis, dharun adithya sis, sathish sis, Msmurthy sis, kalai vani sis, rose mary sis, malina jankiram sis, indra muthu sis, porkodi balaji sis, jahubar sis, moorthy sis, uma sugumar sis, sridevi sri sis, sowmiya balaji sis, priyatharshini vamadevan sis, venmathi.m sis, devi tamil sis, எல்லாரையும் சொல்லிட்டேன் என்றே நினைக்கிறேன். Ud எழுதுறதை விட இந்து தான் கடினமான வேலை என்று நினைக்கிறேன் மக்களே. யாரையாவது விட்டுவிட்டேன் என்றால் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்படி குறிப்பிட மறந்துட்டேன் என்றால் மன்னிச்சுக்கோங்க மக்களே.


சிலர் படிக்க கஷ்டமா இருக்கு என சொல்வதால் தான் font size பெருசாவே போடுறேன் நட்பூஸ். யாருக்காவது அது கஷ்டமா இருந்தா சொல்லுங்க. அதே மாதிரி போன ud1800 வார்த்தைகள். என்னோட சரித்திரம் பூகோளம் எல்லாத்துலையும் இப்ப தான் 1500ku மேல ud டைப்பே பண்றேன். அதை சின்னதுன்னு சொல்லி என்னோட மனசை உடைக்காதீங்க மக்கா. ஆனா இன்னைக்கு சின்ன ud தான் 1300. அதே மாதிரி எனக்கு சோல்டர் pain இருக்கு. ரொம்ப ஸ்டைன் செய்தா என்னோட வீட்டு வேலையை கூட என்னால பார்க்க முடியாது. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா பதிவு போட்டுடுறேன் அதே மாதிரி அன்று பதிவு போடுறேன் என்றால் சொல்லிடுவேன் மக்களே. கோச்சுக்காதீங்க ப்ளீஸ்.


இந்த பதிவுக்கும் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து,

நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்






சாரல் 24


பிருந்தாவின் முகவாட்டத்தில் மனம் வாடிப் போன விஷ்வா, அவளது ஆசைக்காக நாளை அவளை அழைத்து செல்வதாக வாக்கு கொடுத்தான். அதனைக் கேட்டு பிருந்தா துள்ளி குதிக்காத குறையாய் மகிழ, அவளது மின்னும் விழிகளைக் கண்டு புருவம் சுருக்கினான். அவனது பார்வைக் கண்டு உசாரானவள், “அடியேய்! கொஞ்சம் அடக்கி வாசி! அப்புறம் மாமா கண்டுப்பிடிச்சா… அவ்வளவுதான்!” மனம் மணி அடிக்க, தனது உற்சாகத்தை மறைத்துக்கொண்டு முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள். அடுத்த நாள் விஷ்வாவும் அவளுக்காக காத்திருக்க, குதித்துக் கொண்டு வந்தவள், “மாமா மாமா! அந்த பேக்கரில சூடா பப்ஸ் கிடைக்கும் சாப்பிடாலாமா?” பாவமாய், ஆர்வமாய் அவள் கேட்க,


“இதற்குத்தானா?” எனும் பார்வை பார்த்தவன், “நெனச்சேன் அப்பவே இப்படி எதாவது ஒன்னு இருக்கும்னு!” அவளை செல்லமாய் வைதாலும், அழைத்து செல்லவும் மறக்கவில்லை.

தங்களுக்கு ஒரு டேபிள் பார்த்து அமர்ந்துக் கொண்டவள், அடிக்கடி வெளியே பார்ப்பதும் படபடப்பாய் நகம் கடிப்பதுமாக இருக்க, ஓரக்கண்ணால் அவளது செய்கை அனைத்தையும் விஷ்வா கவனிப்பதை முதலில் அவள் உணரவில்லை. “பிந்து எதுக்கு இவ்வளவு டென்ஷநா இருக்க?” விஷ்வாவின் கவனம் மெனுகார்டில் நிலைத்திருந்தாலும், குரல் பிருந்தாவிடம் வினவியது.


அதில் திடுக்கிட்ட பிருந்தா, “நானா… நா…ன் நான் எதுக்கு டென்ஷனா இருக்க போறேன்? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே!” பதற்றத்தை மறைக்க இலகுவாக உரையாட முயன்றாலும், உள்ளதை உள்ளது போல் காட்டும் அவளது பளிங்கு முகத்தை அவன் ஏறிட்டு பார்த்துவிட்டு அமைதியாக இருந்தான்.


சிறிது நேரத்திற்கெல்லாம் சரண்யா அங்கே வந்துவிட, கண்ணாடி தடுப்பின் வழியே தோழியைக் கண்டவள், பெருமூச்செறிந்தாள். இவர்களைக் கண்டதும் சரண்யாவின் முகம் பளிச்சென்றாகிவிட, கதவில் கை வைப்பதற்கு முன் தன்னை ஒருமுறை சரிசெய்துக் கொண்டாள்.

உதட்டில் முகிழ்த்த குறுநகையுடன் இவர்களை நோக்கி வந்த சரண்யாவின் ஹாய் எனும் குரலில் தான் தனது தலையை நிமிர்த்தினான் விஷ்வா. “ஹாய்!” மரியாதைக்கு அவனும் சொல்ல, “நீங்க பேசிக்கிட்டு இருங்க! நான் எதாவது சூடா இருந்தா வாங்கிட்டு வரேன்!” என பிருந்தா நடையைக் கட்ட,


“ஒஹ் பக்கி இதுக்குதான் நம்மை வர சொன்னுச்சா!” என நினைத்தபடி அமர்ந்திருந்தான், விஷ்வா. லேசாய் சரண்யா தனது தொண்டையை செரும, அதில் தனது கவனத்தை அவள் புறம் திருப்பிய விஷ்வா, அவளையே பார்த்திருக்க, “ஹா…ய் நா…ன் சரண்…யா..!” எனும் சரண்யாவின் தடுமாற்றத்தில் விஷ்வா லேசாய் புன்னகைக்க, “ஐயோ சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்கானே! என்ன சொல்ல வந்தேனே மறந்துடுவேன் போலயே!” சரண் மனதிற்குள் நினைக்க, “ம்ம்ம் சொல்லுங்க” என்றான் விஷ்வா, இலகுவாய்.


“அது… நான் உங்களை உங்களை…” அவள் தடுமாற, முகத்தில் எதையும் காட்டாது சுற்றி முற்றி பார்த்தான் விஷ்வா. அவனது கவனம் சுற்றுபுறத்தில் பதிந்திருந்தாலும், அதில் பாதி பிருந்தாவை சுற்றி தான் இருந்தது. அவனது கவனம் தனது பேச்சில் இல்லை என்பதை தாமதமாக உணர்ந்துக்கொண்ட சரண்யாவும், அவனது பார்வை போகும் திசையை பார்க்க, அவளிதழில் ஒரு மலர்ச்சி தோன்றியது.


“நீங்க பிருந்தாவை விரும்புறீங்களா?” சட்டென கேட்க, பிருந்தாவிடம் பார்வையை பதித்திருந்த விஷ்வாவுக்கு சில நொடிகள் கழித்தே அவளது வார்த்தைகள் சென்றடைந்தது. அதில் அதிர்வுடன் எதிரில் இருப்பவளை பார்க்க, ஒருநொடி மொழி புரியாதவன் போல புருவம் சுருக்கி புரியாது பார்க்க, அவனுக்கு புரியாததை உணர்ந்து, “நீங்க பிருந்தாவை லவ் பண்றீங்களானு கேட்டேன்?” நிறுத்தி நிதானமாய் ஒரு வார்த்தையாய் அவள் உச்சரிக்க, அப்பட்டமான அதிர்வு அவன் முகத்தில்,

நொடியில் தன்னை மீட்டுக் கொண்டவன், இல்லை எனும் விதமாய் தலையசைத்து மறுக்க, “பொய் சொல்லாதீங்க! நீங்க அவ இங்கிருந்து போன இந்த பத்து நிமிஷத்துல உங்க கண்ணு சுத்தி வேடிக்கை பார்க்கிற மாதிரி இருந்தாலும், அது அவளை மட்டும் தான் அதிக நேரம் பார்த்துச்சு!” சரண்யா பட்டென சொல்ல, பெரும் திகைப்பு அவனிடம்.


“அப்படியெல்லாம் எதுவுமில்லை நீயா எதுவும் சொல்லாத!” விஷ்வாவின் குரலில் கோபமில்லை. அதனை சரண்யாவும் உணர்ந்தே இருந்தாள். “இப்பகூட நான் சொன்னதுக்கு நீங்க கோபப்படலை! அப்ப கன்பார்ம்மா அதுதான்!” என்றவளுக்கு,


“நீயா எதாவது சொல்லாத! சின்ன வயசுல இருந்து அவ அவங்க வீட்டுல அவங்க அம்மாக்கூட இருந்த நேரத்தை விட, அவ எங்க வீட்டுல என் கையை பிடிச்சுட்டு இருந்த நேரம் தான் அதிகம்!” பதிலிறுத்த விஷ்வாவுக்கு,


“ஒஹ் அப்ப இது லவ் இல்லைன்னு நீங்க சொல்றீங்க?” கிண்டலாய் சரண்யா கேட்க, “உன்ன ஊர்ல இதுதான் லவ்வா? தானும் கிண்டலாய் கேட்டான்.


“இல்ல அவ எழுந்து போனதுல இருந்து இந்த நொடி என்கிட்ட இல்லைன்னு சொல்லி பேசிக்கிட்டு இருந்தாலும், அவ மீதான உங்க பார்வையில மாற்றம் இல்லை. ஒரு வேளை இது லவ்வா இருந்தா அவளுக்காக நான் ரொம்ப சந்தோசப்படுவேன்!” என்றவளின் முகத்திலும், குரலிலும் நிச்சயம் பொறாமையின் சுவடு கிஞ்சிதுமில்லை. அதில் தோழிக்காக மகிழும் ஒரு நல்லெண்ணம் தான் மிகுந்திருந்தது.


அவளது கூற்றில், திகைப்பு மாறாது அவளையே பார்த்திருந்தான் விஷ்வா. என்ன பெண் இவள் என்று தான் அவனுக்கு தோன்றியது.

“ஹலோ என்ன நான் சொன்னது கரெக்ட்டா?” அவள் கேட்க,


“இல்ல நீ எப்படி பட்ட பொண்ணுன்னு யோசிக்கிறேன்!” மறைக்காது மொழிந்தான் விஷ்வா. அதற்கு மலர்ந்த புன்னகை தான் அவளிடமிருந்து. “ஆமா என்னைய நினைக்கிற இதயம் தானே எனக்கு வேண்டும்! உங்க இதயம் தான் உங்ககிட்ட இல்லையே!” என்ற சரண்யாவை திகைத்துப் போய் பார்த்தான் விஷ்வா.


“போதும்ங்க ரொம்ப ஷாக் ஆகாதீங்க! நான் பார்த்தவரை நீங்க ரொம்ப நல்ல பையன் தான். என் பிரெண்ட்க்கு அவளை புரிஞ்சிக்கிட்ட, அவளுக்கு எல்லாத்துலையும் பக்கபலமா இருக்க, அவளை சின்ன வயசுல இருந்து கண்ணும் கருத்துமா பார்த்துக்கிற, நீங்க, அவளோட லைப் பார்ட்னரா வந்தா… அவளை விட நான் தான் அவளுக்காக ரொம்ப ரொம்ப இந்த உலகத்துலயே சந்தோசப்படுவேன்!” தோழிக்காக அகம் மகிழ்பவளின் எண்ணம் ஈடேறி இருந்திருக்கலாம், ஆனால் விதி யாரை விட்டது! இருவரும் பிரிந்து தங்களது வாழ்வை தொலைத்து, நடைபிணமாய் வாழ வேண்டும் என்பது தான் விதியோ!


அவளது வார்த்தைகளைக் கேட்டு அகமகிழ்ந்து போனான் விஷ்வா. அதன் விளைவாய், அழகாய் கன்னக்குழி தெரிய அவன் புன்னகைக்க, “அப்பா! ஆணழகங்க நீங்க! இப்படியெல்லாம் சிரிச்சு என்னைய வில்லி ஆக்கிடாதீங்க!” குறும்பாய் அவள் சொல்ல, பெரிதான புன்னகை அவனிடம்.



“அப்பா உங்க சிரிப்பை நாள் முழுதும் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல. இதை சொன்னதுக்கு தான் ஒருத்தி அன்னைக்கு சாமி ஆடினா!” போற போக்கில் அவள் சொல்லிவிட, அந்த சம்பவத்தின் பின்னணியை கேட்டு அறிந்துக் கொண்டான், விஷ்வா. பிருந்தா வரவும், அவளிடம் சொல்லிவிட்டு இவள் புறப்பட, இவனை நச்சரிக்க ஆரம்பித்தாள், பெண். “மாமா… மாமா அவ என்ன சொன்னா மாமா?” விடாது கேட்க, அவனிடம் தான் பதிலில்லை. அவனது மனமோ பிருந்தா சரண்யாவிடம் பேசியதிலேயே நிலைத்திருந்தது. அதையே அவள் விதவிதமாய் வித்தியாசமாய் வழி நெடுக கேட்டு வைக்க, ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் வாய் மூடி மௌனியானாள். “இரு இரு எங்கிட்ட மாட்டாமலா போவே அப்ப உன்னை கவனிச்சுக்கிறேன்!” என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டவள், இறங்கும் நேரம் அதனை அவனிடம் சொல்லவும் செய்தாள்.


மனம் முழுதும் சரண்யாவின் வார்த்தைகள் தான் அவனுள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அதையே நினைத்தபடி வீட்டுக்குள் விஷ்வா வர, “வா விஷ்வா சாப்டியா? இவ உன்னை ரொம்ப படுத்திட்டாளா?” சிநேகமாய் கேட்ட கீதாவைக் கண்டு, தனது எண்ணம் போகும் பாதையைக் கண்டு அதிர்ந்துப் போனான்.


“இதை எப்படி நான் மறந்துப் போனேன்? உன்னை நம்பி தானே அவங்க வீட்டுக்குள்ள விட்டுருக்காங்க! அவங்களுக்கே நீ துரோகம் செய்ய பார்த்தியேடா விஷ்வா!” அவன் மனசாட்சி இடித்துரைத்ததில் நிலைக்குலைந்துப் போனான், ஆணவன். மனதெங்கும் பாரமேறி போக, அத்தையிடம் உணவை மறுத்துவிட்டு தனதறைக்கு வந்தவன் உடையைக் கூட மாற்ற தோன்றாது அப்படியே படுக்கையில் வீழ்ந்தான். ஏதேதோ நினைத்தவன் மனம் புயலில் சிக்கிய படகாக தத்தளித்தது. பலமணி நேர போராட்டத்துக்கு பின்னர், “என்னோட எண்ணம் அத்தைக்கு மட்டுமில்லை யாருக்குமே தெரியக்கூடாது. என்னோடது காதலே கிடையாது. அந்த சரண்யா பொண்ணு சொல்லவும் கொஞ்சம் தடுமாறிட்டேன்!” தனக்குள் பலமுறை உருப்போட்டுக் கொண்டவன், மனதுக்கும் மூளைக்குமான போராட்டத்தில் சோர்ந்து போனாலும், இறுதியில் தனக்குள் ஒரு முடிவெடுத்தவனாய் உறக்கத்தை தழுவினான் விஷ்வா. அவனது முடிவு வெற்றி பெறுமா? தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பானா விஷ்வா?



அவனது முடிவுக்கு சோதனை அடுத்த நாள் காலையிலேயே விடிந்தது. “டேய் டேய் விஷ்வா ப்ளீஸ் எனக்கு ஒரு உதவி செய்றியா?” என்ற கீதாவிடம், “ஏன் அத்தை! உதவினா கேட்கணுமா? செய்டானா செய்யப் போறேன்!” தானே வாயைக் கொடுத்து மேனியை புண்ணாக்க போவது அறியாது வாக்கு கொடுத்தான் விஷ்வா. “இந்த பிருந்தாவை இன்னைக்கு போய் காலேஜ்ல விட்டுட்டு வந்துரியா? அவ காலேஜ்ல ஏதோ பங்ஷனாம். இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்காம் உங்க மாமாக்கு. எனக்கும் வீட்டுல வேலை நிறைய இருக்கு இந்த உதவி மட்டும் செய்டா கண்ணா!” அண்ணன் மகன் தவறாக நினைத்திடுவானோ என கிட்டத்தட்ட கெஞ்சினார், கீதா.


“ம்ம்ச் அத்தை நீங்க போய் அவளை வர சொல்லுங்க நான் வெளிய வெயிட் பண்றேன்!” தவளை தானே வாயை கொடுத்து மாட்டிக்கொண்டது. வண்டி துடைத்துக் கொண்டவன், “ம்மா நான் போயிட்டு வரேன்!” என்றவளின் குரலில் எதேச்சையாய் நிமிர்ந்து பார்த்தான். பார்த்தவன் தனது கண்களையே நம்ப முடியாது திகைப்பில் ஆழ்ந்தான். பிங்க் நிற புடவையில், அதற்கு தோதாக கடல் நீல நிற ப்ளவுஸ் அணிந்து தலைக்கு குளித்திருப்பாள் போலும், முடியை தளர பின்னி அதில் சரமாய் மல்லிகைப்பூ சூடி, மயக்கும் வன மோகினியாய் “மாமா போலாமா?” அவனிடம் தலையசைத்து கேட்க, அவளது அசைவுக்கேற்ப அவள் காதில் குடிக்கொண்டிருந்த குடை ஜிமிக்கியும் அவளுடன் நர்த்தனமாட, முந்தைய நாள் எடுத்த முடிவை செயல் படுத்த மிகுந்த பிரயத்தனப்பட்டான் விஷ்வா.



அவனிடம் அசைவில்லாது போகவும், “மாமா….. உன்னை தான்….. கேட்டேன்…. போகலாமா?” கத்தி கேட்க, அதில் தன்னிலை அடைந்தவன், நொடியில் தனது எண்ண குதிரைக்கு கடிவாளமிட்டு, “ஆஆ ஏண்டி இப்படி கத்துற? நீ கத்துறதுல எனக்கு காதே கேட்காம போய்டும் போல! காது கேட்காம போச்சுனா யாருடி எனக்கு பொண்ணு தருவா?” விஷ்வா சாமர்த்தியமாய் தன்னை மறைத்துக் கொண்டு சீண்டலாய் கேட்க,


அதில் ஒருநொடி அவனை ஆழ்ந்து பார்த்த பிருந்தா, தனக்கே உரிய குறும்பு கொப்பளிக்கும் விழிகளுடன், “என்ன மாமா திடீர்னு பொண்ணு கிண்ணுலாம் பேசுற? என்ன விஷயம்? ஏதாவது பொண்ணு எதுவும் பார்த்து வச்சுருக்கியா? யார் அந்த பொண்ணு? சரண்யாவா? நீ தயங்காம சொல்லு நான் யாருக்கிட்டயும் சொல்ல மாட்டேன்!” இருபுருவம் உயர்த்தி கிண்டலாய் கேட்டவள், பின் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே, குரலை தனித்து அவனிடம் ஆர்வமாய் வினவ,


அவளது பாவனையில் தொலைய துடித்த மனதை சிரமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவன், “யே வாலு இப்ப என்கிட்ட வசமா மாட்டினியா? மொளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள என்னென்ன வேலையெல்லாம் பார்த்து வச்சிருக்க?” என்றபடி அவளது காதினை பற்ற,


“ஐயோ… அம்மா…. என் காது… காது வலிக்குது! வலிக்குது விடு மாமா! விடு மாமா ஐயோ ரொம்ப வலிக்குது தயவு செஞ்சு விடேன் அம்மா அம்மா!” பெண்ணவள் அலற,


“கூப்பிடு.. கூப்பிடு.. நல்லா அத்தையை கூப்பிடு நானும் எங்க அத்தைக்கிட்ட நீ செஞ்ச வேலையை பத்தி சொல்றேன்!” விஷ்வா மொழிய, அதில் ஜெர்கானவள், “மாமா மாமா ப்ளீஸ் மாமா அம்மாகிட்ட மட்டும் சொல்லிடாத.. என் தோலை உறிச்சு உப்புக்கண்டம் போட்ருவாங்க. ப்ளீஸ் ப்ளீஸ்!” கண்கள் சுருக்கி அவள் கெஞ்ச, இதழ்களோடு அவளது விழிகளும் கெஞ்ச, அவளது விழி மொழிதனில், தான் எடுத்து வைத்திருந்த சங்கல்பம் அனைத்தும் தவிடு பொடியாகி, கரைந்து காணாமல் போவதை அதிர்வுடன் உள்வாங்கியவன், இனி மீளவே கூடாதெனும் உறுதியோடு அவளது விழிகள் எனும் ஆழியில் தன்னை தொலைத்திட, அவளுள் கரைந்து காணாமல் போய்விட, முடிவு செய்தான் மாயவன்…



சாரல் அடித்தது….

 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,


சாரல் 25 போட்டுட்டேன். போன பதிவுக்கு லைக், கமெண்ட் செய்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றியோ நன்றி. இன்னும் பிளாஷ்பாக் எத்தனை எபி வரும் என்று தெரியலை. சீக்கிரமே முடித்துடுவேன் என நானும் நம்புறேன். நீங்களும் என்னை நம்பணும் ஓகே.



புதிதாக நட்பு வட்டத்தில் இணைந்திருக்கும் நட்பூஸ், my hearty welcome. அப்புறம் இந்த பதிவு 1850 வார்த்தைகள் மக்களே. இதற்கு மேல என்கிட்ட எதிர்பார்த்தா, சாரி அதுக்கு மேல மேல்மாடில சரக்கு இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். Please read and pen your comments. Happy reading.


சாரல் 25


அவளது துருதுரு விழிகள் காந்தமென விஷ்வாவை ஈர்த்து தன்னிலை இழக்க செய்ய, மீளவே முடியாத பெரும்சுழலில் சிக்கிக் கொண்டவன் போல உணர்ந்தான். முந்தைய இரவு எடுத்த முடிவுகள் அனைத்தும் அவனது கட்டுப்பாட்டை மீறி தடையை தகர்த்துக் கொண்டு வருவதை உணர்ந்தான், ஆணவன். அதற்குள் சத்தம் கேட்டு வெளியே வந்துவிட்டார், கீதா. தாயைக் கண்டு பதறியவள் “அய்யய்யோ அம்மா வராங்க மாமா..!” என அலற, “டேய் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” பொதுவாய் கேட்டவர், மகளிடம் திரும்பி, “நீ எதுக்குடி அம்மா அம்மானு ஏலம் விட்டுட்டு இருந்த?” என கேட்க,

என்ன சொல்வதென்று தெரியாது திருதிருவென விழித்தபடி அவள் பாவமாய் விஷ்வாவை பார்க்க, அவனோ “சொல்லேன்! சொல்லித்தான் பாரேன்!” எனும் விதமாய் பார்த்து வைக்க, “அய்யய்யோ இந்த மாமா வேற நேரங்காலம் இல்லாம வச்சு செய்யுதே!” மனதினுள் புலம்பிக் கொண்டவள், “மாமா மாமா ப்ளீஸ் காப்பாத்து மாமா!” தாய்க்கு தெரியாது கெஞ்ச அவளது செய்கையை ரசித்தான், விஷ்வா.


“அது ஒண்ணுமிலத்தை மேடம்க்கு சாயங்காலம் சமோசா வேணுமாம்!” என விஷ்வா பேச்சை மாத்த, “ஹப்ப்பாடி தப்பித்தோம்!” என இருந்தாலும், “அடப்பாவி! இப்படியா என்னை கோர்த்துவிடுவ! இவங்க என் காது தீயிற வரையில அட்வைஸ் பண்ணுவாங்க! இதுக்கு உண்மையை சொன்னாக்கூட நாலு திட்டோட முடிந்து இருக்குமே!” மனதினுள் நினைத்துக் கொண்டு, வெளியே பாவமாய் பார்த்து வைத்தாள். அவள் நினைத்தது போலவே கீதா தனது வசை மாரியை பொழிய ஆரம்பிக்க, “இது இப்போதைக்கு முடியாது போலிருக்கே!” என நினைத்துக்கொண்டு, அமைதியாய் நின்றாள்.


விஷ்வாவுக்கு அவளைக் கண்டு பாவமாய் இருக்க, குறுக்கே புகுந்து அத்தையிடம் இருந்து அவளைக் காப்பாற்றினான். “படுபாவி செய்றதையும் செஞ்சுட்டு கடைசில காப்பாத்த வேற செய்றியா! இவ்வளவு நேரம் திட்டவிட்டுட்டு இப்ப வந்து சமாதானம் வேற செய்றான்!” மனதினுள் விஷ்வாவை தாளித்தவள், அவனை முறைக்கவும் தவறவில்லை.

அவளது பார்வையைக் கண்டு ஜெர்கானவன், “அத்தை அத்தை போதும் போதும் சாயங்காலம் வந்து தொடருங்க. அவளை விட்டுட்டு வேற நான் போகணும்!” குறுக்கே புகுந்து அத்தையை அமைதிப்படுத்தியவன், “சாயங்காலம் எதாவது வெளிய சாப்டுட்டு வந்த!... அவ்வளவு தான்…” மகளிடம் எச்சரித்தவர், “டேய் உனக்கும் தான். என்கிட்ட சொல்லிட்டு அந்த பக்கம் அவளுக்கு எதாவது வாங்கிட்டு வந்து கொடுத்த…. ரெண்டு பேருக்கும் ராத்திரி சோறு கிடையாது பார்த்துக்கோங்க!” மிரட்டிவிட்டே சென்றார். தாயின் தலை மறைந்ததும், கையில் இருந்த தனது பையை வைத்து ஆத்திரம் தீரும் மட்டும் அவனை நன்றாக மொத்தினாள். அவள் கொடுத்த அடிகள் அனைத்தையும் சிரிப்புடனே வாங்கிக்கொண்டான்.


அன்றைய காலைப் பொழுது அவர்களுக்கு ரணகளமும், குதூகலமுமாக விடிய, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே, கல்லூரிக்கு வந்தாள். அவளது முகத்தைக் கண்டு சரண்யா என்னவென்று விசாரிக்க, அவளிடமும் சிடுசிடுத்தாள்.
அன்றும் அவளை அழைக்க விஷ்வா வந்து நிற்க, தூரத்தில் தோழிகள் இருவரும் வருவதை கண்டுக் கொண்டவன், பிருந்தாவின் ஒவ்வொரு அசைவையும் பைக்கில் சாய்ந்து நின்றபடி ரசித்துக் கொண்டிருந்தான்.

சரண்யா எதுவோ கேட்க அதற்கு அவள் தீவிரமாய் பதிலளிப்பதும், நெற்றியில் தவழும் முடியை ஒதுக்கி விடும் பாங்கு, அவளது தலையாட்டலுக்கேற்ப அசைந்தாடும் ஜிமிக்கி என ஒவ்வொன்றையும் அவன் பார்த்து ரசிக்க, அவனைக் கண்டுவிட்ட சரண்யா இருபுருவம் உயர்த்தி கேலியாய் அவனைக் கண்டு சிரிக்க, அவள் கண்டு கொண்டாள் என்றுணர்ந்து விஷ்வாவின் வதனம் வெட்கம் சுமந்துக் கொண்டது. தோழியின் பார்வை செல்லும் திசையைக் கண்டு தானும் தனது பார்வையை திருப்பிய பிருந்தா, இருவரையும் கண்டு புருவம் சுருக்கினாள். இவள் சிரிப்பதும் அதற்கு அவன் அழகாக வெட்கப்படுவதும் கண்டு அவளது வயிற்றில் உருவமில்லா ஒன்று மேலெழும்பி தொண்டையை அடைத்தது. அதுவரை சகஜமாக இருந்தவளின் நடை சட்டென ஓய்ந்துப் போனது.


“ஹாய் விஷ்வா!” சரண்யா சொல்ல, எந்த விகல்பமுமின்றி, அவளைக் கண்டு “ஹாய்!” என மகிழ்வாய் கையசைத்தான். இருவரையும் கண்டு உள்ளுக்குள் ஏதோவொன்று உடைந்தது பிருந்தாவுக்கு. சரண்யாவின் கண்களுக்கு பிருந்தாவின் முகமாற்றமும் தப்பவில்லை. சுரத்தேயின்றி வண்டியில் அமர்ந்துக் கொண்டவள், அமைதியாய் வர, புதிதாய் காதல் வயப்பட்ட விஷ்வாவும் அவளின் அருகாமை ஒன்று போதுமென்று அந்த பயணத்தை வெகுவாய் ரசித்துக்கொண்டே வந்தான்.


வீடு வந்த பின்பும் அவளது மௌனம் தொடர, விஷ்வாவுக்கு அது பெரிதாக தெரியவில்லை. அதற்கு அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாளென அவளது மௌனம் தொடர, கிலுகிலுப்பையை போல சலசலக்கும் பெண்ணவளின் அமைதியில் குழம்பித்தான் போனான் ஆணவன். அவளிடம் என்னவென்று கேட்கவும் முடியாது அவளது மௌனத்திற்கான காரணமும் புரியாது தவித்தான். பேதைப் பெண்ணுக்கும் தனது மனமும் புரியவில்லை. அவளைக் கவனித்து வந்த சரண்யா என்னவென்று கேட்க அவளிடமும் அதே மௌனம் தான். இதுவே ஒரு வாரமும் தொடர, எப்படியாவது அவளிடம் பேசிவிட வேண்டுமென தவித்து அன்று அவளைக் காண காலேஜ் வந்தான். அவளுக்குமுன் சரண்யா வர, அவளிடம் தனது மனக்குமுறலை கொட்டினான் விஷ்வா.


அதனைக் கேட்டு மென்மையாய் சிரித்தவள், “அவளுக்கு உங்க மேல ரொம்ப பொசசிவ் விஷ்வா சார். அனேகமா அன்னைக்கு நீங்க அவளைக் கூப்பிட வந்தனைக்கு இருந்து தான் அப்படியிருக்கானு நான் நினைக்கிறேன்!” அவள் சொல்ல, முயன்று தனது நினைவடுக்கை தட்டி யோசித்து பார்த்தவனுக்கு சரண்யா சொல்வதும் உண்மையாக இருக்குமோ என்றும் தோன்றியது. அதையே கண்ணில் தாங்கி அவன் சரண்யாவைப் பார்க்க, “என்ன யோசனை விஷ்வா சார்? அப்படி இருக்குமோ இல்லை.. அப்படி தான்!” என்றாள் சரண்யா. அங்கு வந்த பிருந்தாவின் கண்களில் விஷ்வாவை பலநாள் கழித்து பார்த்ததால் தோன்றிய சிறு மின்னல், அடுத்த நொடியே இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது கண்டு வந்த வேகத்திலேயே மறைந்தது. முகம் சிறுத்து போக, உதடுக் கடித்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள்,


இருவரையும் கண்டும் காணாதது போல கடந்து செல்ல, அவள் செல்வதை உணர்ந்து பதறியபடி சரண்யாவை பார்க்க, அமைதியாக இருக்கும்படி கண்களை மூடித்திறந்தாள். அடுத்த நாள் காலையில் சரண்யா பிருந்தாவிடம் பேச விழைய, தோழியை கடந்து சென்றாள், பிருந்தா. “ஏய் பிருந்தா! ஏய் பிருந்தா!” சரண்யா அவள் பின்னே ஓடி வர, தனது நடையை எட்டிப்போட்டாள் பெண். வேகமாய் அவளை அடைந்து அவளின் முன் மறைத்தபடி நிற்க, பேசாது முகம் திருப்பினாள், பிருந்தா. அவளது முகத்திருப்பலில் கோபமடைந்த சரண்யா, “என்னடி உன் பிரச்சனை? எதுக்குடி என்னை அவாய்ட் பண்ற?” குரலில் கோபம் கொப்பளிக்க சரண்யா சூடாக கேட்க, மௌனமே அவளிடம்.

“பதில் சொல்லுடி!” சரண்யா மறுபடி கேட்க, திரும்பி நின்றுக்கொண்டாள், பிருந்தா.


“உன் விஷ்வா மாமாவை உன்கிட்ட இருந்து நான் பிடுங்கிக்கிட்டு போயிடுவேனோனு தானேடி என்னை கண்டா இப்படி மூஞ்சியை திருப்பிக்கிட்டு ஓடுற?” சரண்யா கேட்க அவள் நிலையில் மாற்றமில்லை.


“நான் கேட்டுட்டு இரு…” பொறுமை இழந்தவள் அவளை தன்புறம் திருப்ப, பிருந்தாவின் கண்ணீர் சுமந்த விழிகளைக் கண்டு அதிர்ந்து தான் போனாள், பெண். “ஹே பிருந்தா எதுக்குடி இந்த அழுகை?” தோழியை தொட, “இல்…லடி… நா…ன் என்னதான் நீங்க ரெண்டு பெரும் சேரணும்னு நினச்சாலும் இப்பெல்லாம் என்னால உங்க ரெண்டு பேரையும் இயல்பா சேர்த்து வச்சு பார்க்க முடியலை. மனசெல்லாம் எதோ சொல்லத்தெரியாத வலி… எதோ என்னோட கைப்பொருள் என்னைவிட்டு போற மாதிரி தோணுது!” மனதில் அடக்கி வைத்திருப்பதை அழுத்தம் தாளாது தனது தோழியிடம் பகிர்ந்துக்கொண்டாள், கோதை. தன்போக்கில் சொன்னவள், தனது தவறு உணர்ந்து திடுக்கிட்டு சரேலென நிமிர்ந்து தோழியின் முகத்தைக் காண, அங்கு அவள் எதிர்பார்த்ததுக்கு நேர்மாறாய் சரண்யாவின் முகத்தில் புன்னகை தவழ்வது கண்டு தோழியை குழப்பமாய் ஏறிட்டாள். “ஹப்பாடி உன்னோட மனசுல இருக்க லவ்வ உணர உனக்கு இவ்வளவு நாளா ஆச்சுடி?” கேலி கலந்த குரலில் ஆச்சரியம் போல வினவினாள், சரண்யா.



“என்னடி சொல்ற?” பிருந்தா அதிர்வாய் கேட்க, “ஏண்டி மரமண்டை! உங்க மாமாவ பார்க்க கூடாதுன்னு எனக்கு தடா போடுவ. யார் அவர் கிட்ட பேசுனாலும் பொசுபொசுன்னு உனக்கு உள்ள எரியும்! அதையும் தாண்டி உன் முகத்தை அந்த நேரம் பார்க்கணுமே நெற்றிக் கண்ணு ஒன்னு இல்லாதது தான் பாக்கி!” சரண்யா தோழியைக் கிண்டல் செய்ய, தன்னை இவள் இவ்வளவு கவனித்திருக்கிறாளா? எனும் ஆச்சரியம், தன் மனதைக் கண்டுக்கொண்டாளே எனும் வெட்கம், அனைவருக்கும் தெரியும்படியாகவா நடந்துக் கொண்டிருக்கிறேன் எனும் சிறு சங்கடமென கலவை உணர்வில் தத்தளித்தாள், பிருந்தா.


தோழியின் முகத்திலிருந்தே அவளது எண்ணவோட்டத்தை அறிந்துக் கொண்டவள், அவளை கேலி செய்து ஒரு வழி ஆக்கினாள். புதிதாய் காதல் கொண்ட மனது மனம் கவர்ந்தவனை காண ஆவலாய் பறக்க, மாலை எப்போது வருமென காத்திருந்தவள், அவனுக்காக ஆவலும் எதிர்ப்பார்ப்புமாக ஆளுக்கு முன்னே ஓடினாள். அவள் எதிர்ப்பார்த்தவன் வராது போக முகம் சுணங்கி தான் போனாள்.


வீடு வந்து சேர்ந்தவள், ஒருநொடி ஆவலுடன் கதவின் பிடியில் கை வைத்தவளை பயமும், தயக்கமும் ஆட்கொண்டது. ஒரு வாரமாக அவனிடம் பாராமுகமாக நடந்துக் கொண்டு, திடீரென தனது காதலை எப்படி வெளிபடுத்துவது என ஒரு தயக்கம் பூதாகரமாய் எழுந்து அவளை தவிக்க செய்தது. விறுவிறுவென உள்ளே வந்தவளின் நடை உள்ளே அவனது குரல் கேட்டதும் சற்று நிதானமாகியது.


வாயிலில் அரவம் கேட்டதும், சற்றென்று நிமிர்ந்து பார்த்தான், விஷ்வா. இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தொக்கி நிற்க, அனைத்தும் சில பல நொடிகள் அவுட் ஆப் போக்கஸ் ஆகி தாங்கள் இருவர் மட்டுமே இருப்பது போன்ற தோற்றம் எழுந்தது பெண்ணுள்.


மகளின் அசையா தோற்றம் கண்டு “ஹேய் பிருந்தா பிருந்தா” என இருமுறை சத்தமாக அழைக்க, தன்னிலை மீண்டவளுக்கு தன்னை நினைத்தே வெட்கமாகி போனது. வேகமாய் தலையை குனிந்துக் கொண்டவள், தலை நிமிராது தாய் கேட்க கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்து விட்டு விருவிருவென தனது அறைக்குள் புகுந்துக் கொண்டாள். கதவை அடைத்துவிட்டு படுக்கையில் அமர்ந்திருந்தவள் இதயமோ வேகமாய் துடிப்பதை அவளால் உணர்ந்துக்கொள்ள முடிந்தது. எப்போது எங்கே காதல் வயப்பட்டோம் என யோசித்தவளின் மனதிற்கு அதற்கான விடை தான் தெரியவில்லை. கண்களை திறந்துக் கொண்டே கனவுலகில் சஞ்சரித்தவள் சுற்றம் சூழல் அனைத்தையும் மறந்தாள்.


அதன் பிறகான நாட்களில் அவனை ஏறிட்டு பார்க்க முடியாத அளவு தயக்கமும், பயமும் அவளை ஆட்கொள்ள, அவனை தவிர்த்தாள். அவளது விலகலில், இன்னும் பயந்து போன விஷ்வா, தனது காதல் கொண்ட மனதை அடக்கவும் வழி தெரியாது தவித்தான். பேசாமல் தனது மனதை வெளிப்படுத்தி விடுவோமா என யோசித்தவன், “வேண்டாம் அவ சின்ன பொண்ணு. இது அவளுக்கு காதலிக்கிறதுக்கான வயசும் கிடையாது. தேவையில்லாம சின்ன பொண்ணோட மனசை கெடுக்காத. அவ படிக்கணும்!” அவனுள் இருந்த நல்லவன் அறிவுறுத்த, மௌனியாகிப் போனான், விஷ்வா.


அவளை அமைதியாக கண்களால் பின்தொடர்வதே அவனுக்கு போதுமானதாக இருக்க, படபட பட்டாசாய் தன்னிடம் சலசலக்கும் தனது பிந்துக்குட்டியை தேடி தவித்தது ஆண் மனம். இருவரின் கண்ணாமூச்சி ஆட்டமும் முடிவுக்கு வரும் நாளும் வந்தது. வழக்கம் போல கீதா பிருந்தாவை விட சொல்ல, நெடுநாள் கழித்து இனிய பரபரப்பு தொற்றிக்கொண்டது அவனுள். வேகவேகமாய் வண்டியை துடைத்தவன், அவள் வரும் வழியையே ஒருவித ஆர்வத்தோடு பார்த்திருந்தான். கீதா மகளிடம் இதனை சொல்ல, “வேண்டாம்மா நான் பஸ்லயே போய்க்கிறேன்!” அவள் மறுக்க,


“இனிமே பஸ் பிடிச்சு நீ எப்ப காலேஜ் போவ? விஷ்வா வெளிய தான் நிக்குறான். ஒழுங்கா காலேஜ் கிளம்பு காலையில சீக்கிரம் எழுந்திரிக்கிறதே இல்லை. ஆடி அசைஞ்சு எழுந்துட்டு, இன்னைக்கு லீவ் போட நெனச்ச அவ்வளவுதான்!” பிருந்தா மறுப்பதற்கான காரணம் தெரியாது, அவளை திட்ட, “வேண்டாம்மா நான்…” என்றவளின் வார்த்தை வாயிலில் நின்ற விஷ்வாவைக் கண்டு தேய்ந்து மறைந்து போனது. அவளது வார்த்தைகளைக் கேட்டு முகம் சுருங்கிப் போன விஷ்வா, அவள் பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டான். இருவரின் முகத்தையும் கண்டு, “என்ன? ரெண்டு பேருக்கும்… மறுபடி சண்டையா? இன்னும் சின்ன பிள்ளை மாதிரியே பண்ண வேண்டியது. ஒழுங்கா கிளம்பி போற வழியை பாரு!” என்றபடி உள்ளே சென்றுவிட்டார்.


அவனது கூம்பிய முகம் அவளை வதைக்க, பேசாது அவனை பின்தொடர்ந்தாள். நேரம் இருப்பது உணர்ந்து, வழியில் ஒரு கடையில் நிறுத்தினான். கேள்வியாய் அவனைப் பார்க்க, அவள் முகம் காண மறுத்து ஒரு இடத்தில் அமர்ந்துக் கொண்டான். அவனது வதனத்தை நேராய் பார்க்க முடியாது, அங்குமிங்கும் அவள் தனது பார்வையை ஓட்ட, “என்கூட பேசக்கூட பிடிக்கலையா பிந்தும்மா?” உயிர் உருக்கும் குரலில் விஷ்வா கேட்க, அவனது குரலில் அதிர்ந்து, அமைதியாய் ஏறிட்டாள்.


உயிரானவளின் மௌனமும் விலகலும் தந்த பாதிப்பில் கண்களில் நீர் தேங்கியிருக்க, அவளது முகத்தையே பார்த்திருந்தான். அவனோடு சண்டையிட்டு, சரிக்கு சரி வாயாடுபவள் தான், ஏனோ தமிழில் உள்ள அத்தனை வார்த்தைகளும் மறந்துப்போன உணர்வு அவளுள். பல நாட்கள் கழித்து அவன் முகம் காண்கிறாள். சில நொடிகளுக்கு மேல் அவனது கண்களை நேராய் சந்திக்க இயலாமல், புதிதாய் முகிழ்த்த வெட்கம் தடைபோட, தனது பார்வையை தழைத்துக் கொண்டாள். அவனது விழிவீச்சு வாயடைத்து போக செய்ய, பேசாமடந்தையாகி போனாள். அதையும் தவறாகவே புரிந்துக் கொண்டான் ஆண்மகன். “போலாம்!” சட்டென அவன் எழுந்துக்கொள்ள, அவனை பின்தொடர்ந்தாள், பிருந்தா.


அங்கே ஊரில்,

வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார், முத்துவேலின் தந்தை சிவசிதம்பரம். அப்போது அங்கே வந்தார் தரகர். “என்ன சுப்பு இந்த பக்கம்?” கேட்டார், பெரியவர்.


“இல்லைங்கையா…. டவுன்ல கொஞ்சம் பெரிய ஆளுங்க. தோப்பு துரவுன்னு நம்மளை விட வசதி, சொத்து பத்து எல்லாம் நிறைக்க தான்… அவங்களுக்கு பொண்ணு தேடுறாங்க… எனக்கு சட்டுன்னு நம்ம பாப்பா நினவு வந்துச்சு…. அதான்… பெரியவர்கிட்ட ஒரு வார்த்தை….” சுப்பு இழுக்க,



“யாருடா இவன்? என் பேத்திக்கு ஐயனார் கணக்கா, எம்பேரன் பக்கத்துலயே இருக்க, நான் ஏன் என் பேத்தியை வெளிய கொடுக்கணும்? அவளுக்கு இப்பதான் பத்தொம்போது வயசாகுது… இப்ப அவளுக்கு செய்யுற எண்ணமும் எங்களுக்கில்ல!” நறுக்கு தெறித்தார், போல் சொன்னார் சிவசிதம்பரம். “சந்தோசங்கையா. அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிறேன்!” விடைபெற்றார் சுப்பு.


கணவனுக்கு மோர் எடுத்து வந்த கல்யாணியிடம், “என்ன நான் சொல்றது? சரிதானே கல்யாணி!” மனைவியிடமும் ஒப்புதல் கேட்க, அவருக்கும் அந்த எண்ணம் இருந்தாலும், சுப்பு சென்ற பிறகு, “நீங்க பாட்டுக்கு சொல்லிபுட்டீங்க! பெத்தவங்க மனசுல என்ன இருக்குனு ஒரு வார்த்தை கேட்டீங்களா?” கல்யாணி கேட்க,


அவர்களின் சம்பாஷணையை கேட்டபடியே நுழைந்த சுந்தர், “என்னத்தை இப்படி சொல்லிபுட்டீங்க? என்ற தங்கச்சி மக என் வீட்டுக்கு மருமகளா வந்தா கசக்குதா என்ன?” மறைமுகமாய் தனது விருப்பத்தையும் பெரியவர்களுக்கு உணர்த்தினார், சுந்தர். அதில் பெரியவர்கள் முகமும் மலர, “ம்ம் சரிதான்! ஆம்பளைங்க ரெண்டு பெரும் முடிவு பண்ணுனா சரியா? வீட்டு பொம்பளைங்க கிட்ட ஒருவார்த்தை கேட்க வேண்டாமா?” கல்யாணி கேட்க, “ இதுல என்னைவிட உங்க மகளுக்கு தான் அண்ணன் மகளை எடுக்க ஆசை அதிகம்! நாளைக்கே கல்யாணம் சொன்னா குத்திச்சுகிட்டு நிப்பா உங்க மக!” என்றார், சுந்தர்.


“அப்புறம் என்னப்பா இந்த தடவை முத்து வந்தோன இதுபத்தி பேசிடலாம்!” பெரியவர் சொல்ல, “அட சும்மா இருங்ககுங்றேன்… ரெண்டு பேருக்கும் இன்னும் வயசு வரலை. மொதல ரெண்டு பேருக்கும் சாதகம் பார்த்து… அப்புறம் பேச்சை ஆரம்பிக்கலாம்.. அதுவரை உங்க வாயை திறக்காதீங்க!” மிரட்டினார் கல்யாணி.


“யாருடி இவ ஆரம்பத்துல இருந்தே கோக்குமாக்காவே பேசிக்கிட்டு இருக்கா? போடி போ உள்ள எதாவது வேலையிருந்தா பாரு!” மனைவியை உள்ளே அனுப்ப முனைந்தார், மனிதர். அதில் கணவனை வெட்டும் பார்வை பார்த்தபடி உள்ளே சென்றார், பாட்டி. பிற்காலத்தில் தனது வார்த்தைகள் தானோ பலித்துவிட்டது என எண்ணி எண்ணி மறுகினார், பாட்டி.


“நீ ஒன்னும் தப்பா கிழவி சொல்றதை எடுத்துக்காதையா! நான் அவகிட்ட சொல்றேன்!” மருமகனை சமாதானம் செய்தார், சிதம்பரம். “ஐயோ என்ன மாமா மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு. யாரு அது என் அத்தை தானே! பெரியவங்க சொன்னா ஒரு அர்த்தமிருக்கும்!” அத்தைக்கு பரிந்துக் கொண்டு வந்தார், சுந்தர். அவரைக்கண்டு மென்புன்னகை சிந்தியவர், “அதானே நீயாச்சு உன் அத்தை விட்டுக்கொடுக்கிறதாச்சு! அவளுக்கும் உள்ளுக்குள்ள உன் மகனுக்கு பேத்தியை கொடுக்கணும் என்ற ஆசை இருக்கு!” தனது மனதை வெளிப்படுத்தினார், சிதம்பரம்.


“அத்தை சொல்றதுல தப்பே கிடையாது மாமா. ரெண்டும் சின்ன பிள்ளைங்க. நம்ம பேசுறது காத்து வாக்குல வெளிய போகவும் வாய்ப்பு அதிகம். அவங்களுக்கு இப்ப அந்த எண்ணமில்லைனாலும், நம்மளே அவங்க மனசுல ஆசையை விதைச்ச மாதிரி ஆகிடக் கூடாதுன்னு தானே அத்தை சொல்றாங்க!” அத்தையின் மனதை அறிந்தவராய், சுந்தர்.


“அப்படி சொல்லுயா! இந்த கூறுகெட்ட மனுஷனுக்கு அதெல்லாம் எங்க புரிய போகுது! பேரன் மனசுல என்ன நினைப்பிருக்கோ?” என்றார், பாட்டி.


“அத்தை என் மருமகளை கட்டிக்க உங்க பேரனுக்கு கசக்குமா? அம்மன் சிலையாட்டம் அந்த மீனாட்சி மாதிரி அழகு பெத்த பொண்ண என் தங்கச்சி பெத்து வச்சுருக்கு! அவனுக்கு கட்டிக்க கசக்குதா? கட்டுறா தாலியைன்னு சொன்னா கட்ட போறான்!” பின்னாளில் தானே வேண்டாம் என சொல்லப் போவதை அறியாது தான் போனார், மனிதர்.


கள்ளமின்றி பேசும் சுந்தரையே வாஞ்சையுடன் பார்த்திருந்தனர், மூத்தவர்கள் இருவரும். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் நான் எதற்கு இருக்கிறேன் என விதி நினைத்துக் கொண்டதை பாவம் இவர்கள் மூவருமே அறியாது தான் போனார்கள். அதனை இவர்களின் விதி என்பதா? இல்லை விதியின் சதி என்பதா? இல்லை தன்னை தானே பெரியவனாக நினைத்துக் கொள்ளும் மனிதனின் ஆணவம் என்பதா?


சாரல் அடித்தது….
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,


சாரி இந்த முறை பதிவு தாமதம் ஆகிடுச்சு. போன பதிவுக்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. உங்களோட ஆதரவு இல்லனா எனக்கு இது சாத்தியமே இல்லை. அதே மாதிரி கதையை சரியா கொண்டு போறேனா என பெரிய கேள்வி எனக்கு இருக்கு. அதை தீர்த்து வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு நட்பூஸ். உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், என்னுடன் பகிர்ந்துக்கோங்க நட்பூஸ்.



உங்கள் ஆதரவை எதிர்பார்த்து,

நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்



சாரல் 26


குளிர் காற்று இதமாய் முகத்தில் மோத, மனதுக்கு இனியவனுடனான அந்த பயணத்தை வெகுவாக ரசித்தாள், பிருந்தா. அவளது தோளில், தூங்கி விழுந்த முகுந்தனை தனது பக்கம் சாய்த்துக் கொண்டான், விஷ்வா. பேருந்தில் மூவர் அமரும் இருக்கையில் ஜன்னல் புறம் பிருந்தாவும், நடுவே முகுந்தனும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு அரணாய் விஷ்வா. நினைவு தெரிந்து பெற்றோரின்றி மேற்கொள்ளும் பயணம் என்பதே பெண்ணுக்கு மகிழ்வை கொடுத்தது என்றால், அகம் நிறைத்தவன் உடனான பயணம் என்பது கூடுதல் மகிழ்வை தந்தது.


சரண்யாவின் நிச்சயத்திற்கு தான் சென்னை பயணம். ஆமாம் பெற்றோர் பார்த்து வைத்த வரன். அவளுக்கும் மறுக்க எந்த காரணமின்றி போக மகிழ்வாய் தலையை ஆட்டிவிட்டாள். இப்போது நிச்சயம், படிப்பு முடிந்ததும் திருமணம் என பேசி, மாப்பிள்ளை வீடு சென்னையில் தான் நிச்சயம் வைக்க வேண்டும் என்றுவிட அந்த பொருட்டே இந்த பயணம். மகளை அவ்வளவு தூரம் அனுப்ப பெற்றவர்கள் தயங்க, சரண்யா குடும்பத்தோடு தான் அழைத்தாள், இவர்களால் வரமுடியாதபடி போக, தயங்கினர் பெற்றோர். வழமை போல கீதாவே எடுத்துக்கொடுக்க, இதோ விஷ்வா, முகுந்தனுடன் பிருந்தாவின் பயணம். முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு உள்ளே பனியின் குளுமையை அனுபவித்தாள் பெண். அவளது முகம் காட்டும் வர்ணஜாலங்களை ரசித்தான், ஆணவன்.


சென்று அடைந்ததும், தோழியைக் கட்டிக்கொண்டு ஆனந்த கூச்சலிட்டாள் மணப்பெண். நிச்சயம் நல்ல படியாய் நடக்க, சரண்யாவும், அவளின் வருங்காலமும், எதிர்கால கனவுகளில் திளைத்து, அதை கண்கள் வழி தங்களது இணைக்கு கடத்திக் கொண்டிருந்தனர். அதனை பார்த்த விஷ்வா பிருந்தா இருவருக்கும், அந்த இடத்தில் மனம் தானாய் தங்களை பொருத்தி பார்த்து மகிழ்ந்தது.


இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ள, அதே நேரம் விஷ்வா பிருந்தா சொல்லி வைத்தார் போல தங்களது இணையை ஏறிட்டனர். நிச்சயம் முடிந்ததும் அக்கடாவென அமர்ந்த சரண்யாவிடம் கிளம்புவதாக சொல்ல, “என்னடி விளையாடுறீயா? ஒழுங்கா நாளைக்கு கிளம்பலாம் சொல்லிட்டேன். நாளைக்கு காலையில பீச் போகலாம். அப்புறம் நீங்க சாயங்காலம் பஸ் ஏறுங்க!” சரண்யா கட்டளை போல சொல்ல, தாய் தந்தையை நினைத்து சுணங்கினாள், பிருந்தா. கண்களால் விஷ்வா அவளிடம் சம்மதம் சொல்ல, தெளிந்தாள், கோதை. அதனைக் கண்டு, “ம்ம்ம் மேலிடத்துகிட்ட இருந்து பெர்மிசன் வந்தா தான் மேடம் முகமே தெளியுது! இப்பவே இப்படி! இப்படியெல்லாம் இருந்தா சரிப்பட்டு வராது பிருந்தா! ரொம்ப கஷ்டம்!” சரண்யா பூடகமாய் சொல்ல, “தெய்வமே ஏன் இப்படி? இன்னைக்கு உங்களுக்கு நான் தான் கிடைச்சேனா? ஆளை விடுங்க!” சிட்டாய் பறந்தான், விஷ்வா.


மறுநாள் பொழுதும் அழகாய் விடிய, வெயிலும் அவ்வளவாக இல்லாதிருக்க, இவர்கள் படை கடற்கரையை நோக்கி பயணமாகியது. மழலையாக மாறி பிருந்தாவும், சரண்யாவும் குதூகலிக்க, அதனை இதழில் ஒரு குறுஞ்சிரிப்புடன் பார்த்திருந்தான், விஷ்வா.


சற்று நேரத்துக்கெல்லாம் விஷ்வாவையும் கைபிடித்து அழைத்தாள், சரண்யா. அவன் தயங்க, அவனையே பார்த்திருந்த பிருந்தாவை கண்டு தானும் அவர்களுடன் இணைந்துக்கொண்டான். சிறிது நேரம் கழித்து விஷ்வா கரையில் அமர்ந்து இவர்களையே பார்த்திருக்க, இன்னும் ஆட வேண்டும் எனும் எண்ணமிருந்தாலும், அவனோடு அமரவேண்டும் எனும் ஆசை உந்தித் தள்ள, சிறு இடைவெளி விட்டு அமர்ந்துக்கொண்டாள், பிருந்தா.


இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் முகுந்தனும், சரண்யாவும் இன்னும் நீரில் ஆடிக்கொண்டிருந்தனர். சிலுசிலுவென வீசும் வாடைக்காற்று, அமைதியாக காலைத் தழுவும் கடல் அலை என சூழல் மனதிற்கு இதமாக இருக்க, காலை கட்டிக் கொண்டு கடலை மெளனமாக வெறித்தனர். இன்னுமே இருவரும் காதலை பகிர்ந்துக் கொள்ளவில்லை. இருவருக்குமிடையே யார் முதலில் காதலை வெளிப்படுத்துவது எனும் தயக்கம் பிறகு விளையாட்டாக உருமாறியிருந்தது. நீரில் ஆடிக்கொண்டே திரும்பி பார்த்த சரண்யா, இவர்களைக் கண்டு தலையில் அடித்துக்கொள்ள, அவர்களை நோக்கி செல்லப் போன முகுந்தனை தடுத்து, “டேய் விளையாடியதுல ரொம்ப பசிக்குது. வா எதாவது சாப்பிட்டுட்டு வரலாம்!” அவனை திசை திருப்பி அழைத்து செல்ல, பாதி வழியில், “அக்கா அவங்ககிட்ட நம்ம சொல்லவே இல்லையே! நம்மளை காணோம்னு வேற தேடுவாங்க!” வேகமாய் சரண்யா சுதாரிப்பதற்குள் அக்காவை நோக்கி ஓடி இருந்தான், முகுந்தன்.


ஓடி வந்தவன் அதிர்ந்து நின்றான். பிருந்தா விஷ்வாவின் தோளில் தலையை சாய்த்து அமைதியாய் விழிமூடி அமர்ந்திருந்தாள். அவளது தலை மீது பக்கவாட்டாய் தனது தலையை சாய்த்து அமைதியாய் கடலை ரசித்துக் கொண்டிருந்தான், விஷ்வா. அதிர்ந்துப் நின்ற முகுந்தனை தீண்டியது சரண்யாவின் கரங்கள். இன்னும் அதிர்வில் இருந்து மீளாதவனாக அவன் சரண்யாவை ஏறிட சிறு புன்னகையுடன் இருவரையும் பார்த்தவள், அதே புன்னகையோடு முகுந்தனை பார்த்திருந்தாள்.



அவர்களது மோன நிலையை குறுக்கிடாது தம்பியின் கை பிடித்து தள்ளி அழைத்து வந்தாள். “அக்கா அக்கா!” பேச முடியாது முகுந்தன் தடுமாற, “அக்கா அது அது அக்கா…!” இன்னும் அவனுக்கு திக்க, கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு, “நீ என்ன நினைக்கிறியோ அது தான் முகுந்த் கண்ணா!” சத்தமின்றி அதிர வைத்தாள், சரண்யா. அதில் இன்னும் அதிர்ந்துப் போய் முகுந்தன் அக்காவின் தோழியை ஏறிட, “அப்போ அப்போ உ… உன்… உங்களுக்கு… மு… !” எப்படி கேட்பது என அவன் திணற, அதற்கு அவசியமேயின்றி, ”ம்ம் தெரியும்!” என்றாள், சரண்யா.


“ஏன் அக்கா நீங்க இதை சொல்லல?” ஏற்க முடியாது அவன் வினவ, “உன்னோட சிட்டுவேஷன் எனக்கு புரியுது முகுந்து! ஆனா விஷ்வாவை விட பெஸ்ட் பேர் உங்க அக்காவுக்கு இந்த உலகத்துலயே நீங்க எங்க தேடினாலும் உங்களுக்கு கிடைக்காது! இதுல என்ன தப்பு இருக்கு! இன்பாக்ட் இன்னைக்கு வரைக்கும் ரெண்டு பேரும் அவங்களோட காதலை சொன்னதில்லை. மத்தவங்களை மாதிரி எங்கேயும் சுத்தினதில்லை! ஏன் கை பிடிச்சுக்கிட்டதில்லை!” ஆம் இருவரும் தங்களது காதலை தங்களுக்குள்ளே வைத்து ஆழ்ந்து அனுபவித்தனர். ஏனோ இருவருக்கும் மற்றவரை போல சுற்றும் எண்ணம் கூட தோன்றியதும் இல்லை. சிறுவயதில் இருந்தே கூடவே இருந்ததா? இல்லை தங்களது காதலுக்கு மொழி தேவையில்லை தங்களது விழியின் மொழியே போதும் என்று இருவரும் ஒன்று போல நினைத்ததா? இல்லை தங்களது காதலுக்கு தடையேதுமில்லை எனும் கண்ணுக்கு தெரியாத, பெற்றவர்கள் மேல் இவர்கள் வைத்த நம்பிக்கையா? தைரியமா? எதோ ஒன்று! சொல்லாத காதல் செல்லாது என்ற உண்மையை யார் இவர்களிடம் சொல்வர்?



தம்பியே ஆனாலும், தோழியின் காதலை தவறாக நினைத்துவிடக் கூடாது எனும் எண்ணம் அவளுக்கு. அதே நேரம், அவன் பின்னாளில் இதையே சலுகையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணமும் தான். சரண்யாவின் வார்த்தைகளில் சற்று தெளிந்தவன், அக்காவுக்கு இவர் ஏற்றவர் தான். எந்த குறையும் சொல்ல முடியாத, தங்களை சிறுவயதில் இருந்து உணர்ந்தவர் என மனதினுள் நினைத்துக் கொண்டான், முகுந்தன். நேரம் வஞ்சமில்லாது கடக்க, குரலை செருமிக் கொண்டவன், அவளை பார்க்க, அவனது பார்வை உணர்ந்து தானும் நிமிர்ந்து பார்த்தாள். தான் எழுந்துக்கொண்டு அவள் எழ கை நீட்ட, தனது மையிட்ட நீள் விழிகள் மேலும் விரிய அவனையே இமைக்காது பார்த்திருந்தாள்.


அவளது கண்களில் இன்னும் சிறிது நேரம் என்ற கெஞ்சல் இருக்க, அதனை மறுக்க முடியாது முகுந்தனை தேடினான், விஷ்வா. எதுவோ தோன்ற தங்களது இருவர் பெயரையும், சுருக்கி, “விஷு பிந்து” என வரைந்தவள், அதனை சுற்றி இதயம் வரைந்தாள். மென்மையாக தனது விரல் கொண்டு அதனை வருடியவள், மனமோ என்றும் இல்லாத நிம்மதியை அடைந்திருந்தது. பிருந்தாவை அழைக்க வந்த விஷ்வா இதனைக்கண்டு குறுநகை பூக்க, அரவம் உணர்ந்து திரும்பியவள், மாட்டிக்கொண்ட பாவனையில், நாக்கை கடித்துக் கொண்டாள். அவள் செய்கையில் அவனின் புன்னகை பெரிதாக, தூரத்தில் தனது கைகளில் கேமரா வைத்திருந்த சரண்யா, அவர்களுக்கே தெரியாது அந்த தருணத்தை படம் பிடித்துக் கொண்டாள்.


“போலாமா?” விஷ்வா கேட்க, சம்மதமாய் தலையாட்டிவள், எழுந்துக்கொண்டாள். பின்னால் திரும்பி திரும்பி பார்த்தபடி இருவரும் வர, வேகமாய் அவர்களை நெருங்கிய சரண்யா, “நீங்க போங்க நான் வந்துடுறேன்!” என்றபடியே அவர்களை கடந்து சென்றவள், அவர்கள் நின்ற இடத்தை பார்க்க, பார்த்தவள் முகமோ மென்மையை தத்தெடுத்துக் கொண்டது. பிருந்தா எழுதியதை தனது கேமராவில் சேமித்துக் கொண்டவள், அவர்களுக்கு சந்தேகம் வராத வகையில் அவர்களுடன் இணைந்துக் கொண்டாள். முகுந்தனும் தனக்கு விஷயம் தெரிந்தது போல காட்டிக் கொள்ளவில்லை.



அந்த விடுமுறைக்கு விஷ்வாவுடன் உடன்பிறப்புகள் இருவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல, கணவனை முன்னிட்டு கீதா வரவில்லை. இவர்கள் இருவரும் மற்றவர் அறியாது காதல் மொழி பேச, அனுபவஸ்தரான சிவசிதம்பரத்தின் கண்களுக்கு இவர்களின் கிள்ளை மொழி தப்பவில்லை. இருவரையும் கண்டு அர்த்தமாய் புன்னகைத்துக் கொண்டார், மனிதர். மகன் ஊருக்கு வரும்போது இதுபற்றி பேச வேண்டும் என மனதினுள் நினைத்துக் கொண்டார், தந்தை.


ஊரில் வழக்கம் போல விஷ்வாவை வால் பிடித்துக்கொண்டே திரிந்தனர் இருவரும். முகுந்தன் உறங்கிக் கொண்டிருக்க, விஷ்வாவை வீட்டில் காணாது தேடிய பிருந்தா அவனைத் தேடி தங்களது வயலுக்கு விரைந்தாள். அவளை ஏமாற்றாது அங்கே தான் இருந்தான் அவளின் எண்ணத்தின் நாயகன். துள்ளலாய் அவன் முன் சென்று நிற்க, அவளை அந்த நேரம் எதிர்பாராதவன் சந்தோசமாய் அதிர்ந்து போனான். “ஹே நீ எங்க இப்படி? அதுவும் இவ்வளவு சீக்கிரமா?” பின்னே சூரியன் உதிப்பதையே கண்டிராத பிருந்தா, சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வந்திருந்தாள், அவனுக்கு அதிர்ச்சியாக இருக்குமா? இல்லையா? அவனது கேள்வி புரிந்து முறைத்தவள், கழுத்தை வெட்டிக்கொண்டு திரும்ப நடக்க போக, “ஹே சும்மா சொன்னேன்!” என பதறி போய் காதில் கை வைத்து மன்னிப்பு கேட்டான்.


மழை காலமாதலால் சூரியன் சோம்பலாய் உறங்கிக் கொண்டிருக்க, வெளிச்சம் பரவியும், வெளிவராத உதயனை நினைத்து, ‘கொய் மொய்’ என பறவைகள் கூக்குரலிட, சிலிர்த்து போய் நின்றாள், பிருந்தா. கிழக்கு வானை பார்த்தவன், வேகமாய் அவள் கைப்பிடித்து சென்றான். அவனது இழுவைக்கு என்ன ஏது என எதுவும் கேட்காது உடன் சென்றாள், கோதை.


தன்னைக் காணாது தவிக்கும் புள்ளினங்களின் குரலுக்கு செவி மடுத்த செங்கதிரோன், மெல்லமாய் தனது கரங்களை நீட்டி சோம்பல் முறிக்க, வயலின் வரப்பை தாண்டி ஒரு உயரமான மேட்டினை அடைந்த விஷ்வாவை பின்பற்றி தானும் அங்கே பார்வையை பதித்தாள், பிருந்தா.


காலை பொழுது ரம்மியமாக அமைய, அவனது கைகளுக்குள் தனது கைகளை கோர்த்துக் கொண்டவள், “இதே மாதிரி… உன் கூட…. காலையில, இப்படி உன் கையை பிடிச்சிக்கிட்டு உன் தோள்ல சாஞ்சிக்கிட்டு இந்த “கீச் கீச்” சத்தம், காலைல வீசுற இந்த சிலு சிலு காத்து, பால்கனில நின்னுக்கிட்டு ஒரு கப் காப்பியோட சூரிய உதயத்தை என் வாழ்நாள் முழுசும் பார்க்கணும்!” எனும் பிருந்தாவின் காதல் மொழியில் சந்தோசமாய் அதிர்ந்தான், விஷ்வா.


இதை விட வேற என்ன வேண்டும் அவனுக்கு? தனது மனதிற்கு இனியவள், தனது மனதை வெளிக்காட்டி இருக்க, சந்தோஷ கூத்தாடினான், கோமகன். திகைப்பு மாறாது அவன் அவளையே விழி எடுக்காது பார்த்திருக்க, உணர்ச்சி வேகத்தில் தனது மனம் திறந்திருந்த பிருந்தாவும், அவனிடம் அரவம் இல்லாது போகவும் தனது பார்வையை அவனிடம் திருப்ப, கதிரவனுக்கு இணையாக ஜொலி ஜொலிக்கும் அவனது வதனம் கண்டு அப்போது தான் தனது செய்கையை உணர்ந்தாள், வஞ்சி. சட்டென முகிழ்த்த வெட்கத்தினால், அவனது விழி வீச்சை தாள முடியாது தலையை குனிந்துக் கொண்டாள், பாவை.


பாவையவள் தயக்கம் துறந்து தனது மனதை வெளிபடுத்தியிருக்க, ஆணவன் அவன் மனதினை வெளிபடுத்தும் வேளை தான் வாய்த்திடுமோ?



சாரல் அடிக்குமா???
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,


நலம் விசாரித்த நட்பூஸ் அனைவருக்கும் நன்றி. இன்னும் லேசாக வலி இருக்கு. ஆனாலும் முடியும் எனும் நம்பிக்கையும், நீங்க கதையின் மீது கொண்ட ஈடுபாடும், உங்களின் எதிர்பார்ப்பை வீணாக்க கூடாது எனும் எண்ணத்தில் தான் இந்த எபி டைப் செய்தேன். வழக்கம் போல் குளிர் காலம் என்னை வச்சு செய்யுது. அதனால் பதிவுகள் முடிந்த வரை தரேன் மக்களே. எனக்கும் சீக்கிரம் கதையை முடிக்க ஆசை தான். ஆனால் உடல் பிரச்சனைகள் என்னை தொடர்ந்துகிட்டே இருக்கு.
அனைவரும் புரிந்துகொள்வீங்க என நம்புறேன். போன பதிவுக்கு லைக் கமெண்ட் செய்த அன்பூஸ் அனைவருக்கும் நன்றி. இந்த பதிவுக்கும் உங்களது ஆதரவை தாங்க மக்களே.


உங்கள் ஆதரவை எதிர்பார்த்து,

நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்


சாரல் 27


அழுது அழுது சோர்ந்து போயிருந்தாள், பிருந்தா. மனம் எங்கும் வேதனையே பரவியிருக்க, உயிர் உடலை விட்டு பறந்து விடாதா எனும் ஏக்கம் அவள் அகமெங்கும் வியாபித்திருந்தது. கண்கள் இரண்டும் தொடர் அழுகையால் சிவந்து வீங்கி, பார்க்க என்னவோ போல இருந்தாள், மாது. அக்காவின் நிலைக் கண்டு, வருந்திய முகுந்தன், “அக்கா கொஞ்சமாச்சும் சாப்பிடுக்கா! இப்படியே நீ சாப்பிடாம இருந்தா உன் உடம்பும் கெட்டுடும்க்கா! ப்ளீஸ்கா கொஞ்சமாச்சும் சாப்பிடேன்!” கையில் தட்டை ஏந்திக் கொண்டு தமக்கையிடம் கெஞ்சினான் தம்பி.



“எனக்கு வேண்டாம்டா! தயவு செஞ்சு அதை எடுத்துட்டு போ!” உணர்வுகள் மரத்த குரலில் உறுதியாய் மறுத்தாள். “நீ சாப்டாம நானும் சாப்பிட மாட்டேன்!” அப்படியேனும் தமக்கையின் தொண்டைக் குழியில் ஒரு வாய் உணவாவது இறங்கி விடாதா? எனும் ஏக்கம் அவனிடம். அவன் புறம் மெல்ல தனது பார்வையை செலுத்தியவள், “ம்ம்ச் இப்படியெல்லாம் பேசி என்னை மேற்கொண்டு சங்கடப்படுத்தாத முகுந்த். இப்ப நான் சாப்பிடாம இருந்தா மட்டும் ஒன்னும் மாறப் போறதுமில்லை!” முற்பாதியை சத்தமாய் தம்பியிடம் சொன்னவள், பிற்பாதியை தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.


உடன் பிறந்தவளின் விட்டேறியான தோற்றம் அவனுள் ரத்தம் வடிய செய்ய, தளும்பும் கண்களை தனது சட்டையில் துடைத்துக் கொண்டான். அவன் சென்றதும், மீண்டும் கால்களை குறுக்கி அதில் தலை கவிழ்ந்துக் கொண்டாள், பெண். மனம், கடந்து சென்ற நாட்களை வலியோடு அசைபோட்டது.


அன்று…


விஷ்வாவும் பிருந்தாவும், மனதில் பரவியிருந்த இனிமையுடன் வீடு வர, வாசலில் அமர்ந்திருந்தார், முத்துவேல். தந்தையை கண்டவுடன் முகம் விகசிக்க, அப்பா என்றழைத்தபடியே மகள் தந்தையிடம் விரைய, தந்தையை கண்டவுடன் தன்னை மறந்து ஓடும் காதலியை சிறு புன்னகையுடன் தான் பார்த்திருந்தான், காதலன். முத்துவேலின் கண்கள் மகளை அவளையும் அறியாது கூர்மையுடன் அளவிட்டது யாருக்குமே தெரியாமல் தான் போனது.


“எங்கடா போய்ட்டு வர? மகளிடம் கேட்க, “நம்ம வயலுக்கு தான்ப்பா!” எந்த விகல்பமுமின்றி பதிலளித்தாள், மகள். “ஒஹ்!” என்றவரிடம் ஓர் ஆழ்ந்த அமைதி. “சரி நீ போ!” மகளை உள்ளே அனுப்பியவரின் கண்கள் அடுத்து விஷ்வாவிடம் நிலை பெற்றது. மாமனின் பார்வை தன் மீது படியவும், அவரைக் கண்டு வரவேற்பாய் புன்னகை புரிந்தவனுக்கு தெரியாது, அவர் தனது புன்னகையை களவாடத்தான் வந்திருக்கிறாரென!


“எப்படி இருக்கீங்க மாமா? இப்பதான் வந்தீங்களா? அத்தை வந்துருக்காங்களா?” வரிசையாய் கேள்வி எழுப்பியபடி அவன் கண்கள் தனது அத்தையை உள்ளே தேடியபடி இவரிடம் திரும்ப, அதுவரை அவன் மீது ஆராய்ச்சியை தனது பார்வையை பதித்திருந்த முத்து, “கீதா உள்ள இருக்காப்பா!” என்றார்.


“ஒஹ்! பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா மாமா?” அகத்தில் இருந்து உண்மையான அக்கறையுடன் கேட்க, “ம்ம்ம் ம்ம்ம்!” என்று தலையை மட்டும் ஆட்டினார் முத்துவேல்.



“வேலையெல்லாம் எப்படி போகுது விஷ்வா?” மெதுவாய் ஆரம்பிக்க, “ம்ம்ம் அதுகென்ன மாமா எல்லாம் சூப்பரா போகுது!” அகம் நிறைந்து பதிலிறுத்தான், விஷ்வா.


“அடுத்து என்ன செய்யலாம்னு இருக்க விஷ்வா?” அவர் கேட்க, புரியாது நோக்கினான். “இன்னும் எத்தனை நாளுக்கு தான் இப்படி அஞ்சுக்கும் பத்துக்கும் வேலை செய்வ?” வார்த்தைகளில் உட்பொருள் வைத்து பேச, நிச்சயமாய் அவனுக்கு புரியவில்லை.


“எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் மாமா! இந்த வேலை சும்மா ஒரு எக்ஸ்பீரியன்ஸ்க்கு தான். நம்ம வயல் தோப்பு எல்லாம் இருக்கு. கொஞ்ச நாள் கழிச்சு ஒரு புட் ப்ராடக்ட்ஸ் கம்பெனி ஆரம்பிக்கணும் மாமா. நம்ம பக்க மக்களுக்கு எல்லாம் வேலை கொடுக்கணும்! அப்படியே கொஞ்சம் கொஞ்சமா முன்னேறனும் என்னோட கம்பெனிய லீடிங் கம்பெனியா ஆக்கணும்!” விழிகளில் எதிர்கால கனவுகள் மின்ன மாமனிடம் தனது எதிர்கால லட்சியத்தை விவரித்துக் கொண்டிருந்தான், விஷ்வா.


அவன் சொல்வதை எல்லாம் ஒருவித அலட்சிய பாவத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார், முத்துவேல். கனவுலகில் மிதந்தபடி, தனது எண்ணக் கிடக்கை வெளியிட்டவனை நினைவுலக்கு மீட்டு வந்தது முத்துவேலின் குரல். “இதெல்லாம் நடக்குற காரியமா விஷ்வா? நீயும் உங்க அப்பா மாதிரி வயல் தோட்டம்னு நீ படிச்ச படிப்பை வேஸ்ட் பண்ண போறியா? பேசாம ஒரு ரெண்டு மூணு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சு ஒரு கவர்ன்மென்ட் வேலையில உட்கார்ந்துட்டீனா வாழ்க்கை முழுக்க கடைசி வரை நீ ராஜாவா இருக்கலாம்!”



அவரது வார்த்தைகளை கேட்டு புன்னகை சிந்திய விஷ்வா, “எனக்கு யாருகிட்டயும் கை கட்டி வேலை பார்க்க இஷ்டமில்லை மாமா! நமக்கு என்ன குறைச்ச மாமா? நம்ம ஒரு பெர்சென்ட் உழைப்பை கொடுத்தா அதுக்கு நூறு மடங்கு திருப்பி தர பூமி நமக்கு இருக்கும் போது எதுக்கு மாமா வெளிய எல்லாம் வேலை பார்த்துக்கிட்டு? கொஞ்ச நாள் கழிச்சு இந்த பக்கமே ஒரு பாக்டரி ஆரம்பிச்சுடுவேன் மாமா!” மாமனுக்கு தன்னை புரிய வைத்திடும் முனைப்பு அவனிடம்.


அவனது முயற்சி புரிந்தவராய், “ம்ம்ம் நல்ல ஐடியா தான்ப்பா ஆல் தி பெஸ்ட்!” என்பதுடன் முடித்துக் கொண்டார் மனிதர்.
“சரிங்க மாமா நான் கிளம்புறேன். அத்தைக்கிட்ட சொல்லிடுங்க!” என்றபடி அருகில் இருக்கும் தனது வீடு நோக்கி சென்றான், விஷ்வா. செல்லும் அவனையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டு இருந்தார், முத்துவேல். அந்த நொடி தனது மனதில் இருக்கும் எண்ணத்திற்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் தீவிரமானார். தாயைக் கண்டதும் துள்ளிக் குதித்துக் கொண்டு சுற்றினர், உடன் பிறப்புகள் இருவரும். மனம் கவர்ந்தவனிடம் தனது அகத்தை வெளிப்படுத்திய மகிழ்வில், பிருந்தாவின் கண்களும், வதனமும் என்றும் இல்லாத வகையில் தனி பொலிவுடன் மின்னியது.

காலை உணவு முடிந்து அக்கடாவென அமர்ந்திருந்த முத்துவேலிடம், சில பல சம்பிரதாய விசாரிப்புகளுக்கு பின், “தம்பி பிருந்தாவுக்கும் கல்யாண வயசு வந்திடுச்சு….” தந்தையின் எங்கு வருகிறார் என புரிந்தாலும், அவரை பேசவிட்டு அமைதியாக இருந்தார், முத்துவேல்.

“ம்ம்ம் நானே சொல்லனும்னு நினைச்சேன்ப்பா!” முத்துவேலே எடுத்துக் கொடுக்கவும், உற்சாகமான சிவசிதம்பரம், “ம்ம்ம் எனக்கு தெரியும்ப்பா! நம்ம விஷ்வாவுக்கு பேத்தியை….” என்றவரை இடையிட்டு,

“அப்பா… அந்த பேச்சை மட்டும் எடுக்காதீங்கப்பா. வேற எதை பற்றியாவது பேசுங்க!” என்றும் இல்லாத நாளாய் தந்தையிடம் தீர்க்கமாய் அழுத்தமாய் சொன்னார், முத்துவேல்.


மகனின் அழுத்தமான குரலிலே திகைத்துப் போயிருந்த சிவசிதம்பரம், “ஏன்ப்பா நம்ம விஷ்வாவுக்கு என்ன குறைச்சல்? அவனை மாதிரி தங்கமான பையன் ஊருல எங்க தேடுனாலும் கிடைக்காது! நம்ம கண்ணு எதிர்க்கவே வளர்ந்த பையன். ஒரு குத்தம் குறை சொல்ல முடியாது. ரெண்டு பேருக்கும்…!” என்றவரை மீண்டும் இடையிட்ட மைந்தன்,

“அப்பா சென்னையில வி.என். எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனியோட பையன் நம்ம பிருந்தாவை எங்கேயோ பார்த்திருக்காராம். உடனே பிடிச்சு போய் என்கிட்டே கேட்டாங்க. நானும்!” மைந்தனை இடையிட்டார், தந்தை.


“நீ… நீயும் எங்களை கலந்துக்காம முடிவு சொல்லிட்டியா?” தளர்ந்துப் போன குரலில் கேட்டார், தந்தை. “அப்பா உங்களை கேட்காம எப்படிப்பா நான் முடிவு பண்ணுவேன்?” என்றவரின் வார்த்தைகள் அவர்களை நோக்கி வந்த சுந்தரைக் கண்டதும் நின்று போனது.



“வாயா!” சிவா வரவேற்க, “என்ன மாப்பிளை ஆளு கிறங்கி போய்ட்டியேயா! வேலை அதிகமோ?” நண்பனின் மீதான அக்கரையில் கல்மிஷமின்றி கேட்டார், சுந்தர்.

“அப்படியெல்லாம் இல்லடா” பட்டும் படாமலும் முத்துவேல்.

“உனக்கு பிடிக்குமேனு நம்ம கருப்பனிடம் அயிர மீனு சொல்லி வச்சிருந்தேன்! காலையில வீட்டுல கொண்டு வந்து கொடுத்தான். இப்பதான் பிடிச்சது. பிரெஷா இருக்குடா! தங்கச்சி அருமையா வைக்கும்!” என்றபடியே தங்கையை தேடி பையுடன் சென்றார்.


செல்லும் அவரையே பார்த்திருந்த முத்துவேலின் மனம் லேசாய் குறுகுறுத்தாலும், அதனை தலையை தட்டி அடக்கி வைத்து, எதேச்சையாய் தன்னையே பார்த்திருக்கும் தந்தையின் பார்வையை சந்தித்தார், மனிதர்.


“பார்த்தியா! உன் மேல் உண்மையான பாசம் வைத்திருப்பவனின் அன்புக்கு முன்னால், நீ நினைக்கும் பணமும் பகட்டும் ஒன்றுமே இல்லை!” என சொல்வது போல இருந்தது, அவர் பார்வை. தந்தையின் பார்வையை சந்திக்க முடியாது, அவரது அகம் தடுக்க, தனது பார்வையை தழைத்துக் கொண்டார், முத்துவேல். மகனை தீர்க்கமாய் சில நொடிகள் வெறித்த சிவசிதம்பரம், “காசு பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, பிள்ளை வாழ்க்கையை பாழாக்கிடாத!” என்றவர் தனது துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு உள்ளே சென்றார்..


மனம் ஒரு நொடி உறுத்தினாலும், அவரது தான் எனும் அகம் தடுக்க, தனது முடிவில் தீர்க்கமாய் நின்றார், மனிதர். தான் எடுக்கும் முடிவுகள் சரியானதே என்று தீர்மானமாய் அவர் எடுத்த முடிவுகளின் முடிவில் அவர் மீது அன்பு கொண்டிருந்த ஜீவன்களின் ஜீவனை மரித்துப் போக செய்திருந்தார், முத்துவேல்.


சாரல் அடித்தது….



 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,


சாரல் 27(2) பதிவு செய்துட்டேன். உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் ரொம்ப நன்றி. யாருக்கும் நான் பதிவு போடுவது தெரியலையா? ஏதாவது என்றால் எனக்கு தெரியப்படுத்துங்க நட்பூஸ். இன்னும் ஒரு பதிவுல fb முடிந்து விடும் நட்பூஸ். போன பதிவுக்கு லைக் கமெண்ட் செய்த அன்பு உள்ளங்கள் அனைவரும் நன்றி. இந்த பதிவுக்கும் உங்கள் ஆதரவை தாங்க நட்பூஸ்.


உங்கள் ஆதரவை எதிர்பார்த்து,

நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்



சாரல் 27(2)


அன்று உறக்கம் வராது புரண்டு புரண்டு படுத்தார், சிவா தாத்தா. கணவனின் அசைவில் தூக்கம் கலைந்த கல்யாணி பாட்டி, “என்னாச்சு? உடம்புக்கு பண்ணுதா?” குரலில் ஏகத்துக்கும் பதட்டம் விரவியிருந்தது. மனைவியின் குரலில் தனது நினைவிலிருந்து மீண்டவர், “ஹ்ம்ம் உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு…” கணவனின் குரலில் ஏதோவொன்றை உணர்ந்துக் கொண்ட கல்யாணி பாட்டி, “அப்ப மனசுக்கு என்னங்குறேன்?” கொண்டவனின் மனதில் வியாபித்திருக்கும் எண்ணம் அறியும் எண்ணத்தில் கேட்க, “ஒண்ணுமில்லை. நீ தூங்கு!” என்றார், தாத்தா.


“ம்ம்ச் என்னாச்சு? இப்ப எதுக்கு மனசை போட்டு அலட்டிக்கிறீங்க?” பாட்டி விடாது கேட்க, எல்லாம் பகிர்ந்துக் கொண்டவர், “எங்க முத்துவேலு பேத்தி வாழ்க்கையை வீணாக்கிடுவானோன்னு ஒரு பயம் இருக்கு கல்யாணி!” இறுதியில் தனது ஐயத்தையும் சொல்ல, எல்லாம் கேட்டுக் கொண்டவர், “இப்ப என்ன உடனே பரிசமா போட்டுட்டாங்க? அவங்க கேட்டாங்க. நம்ம கேட்காம அவன் ஒரு முடிவு எடுத்திடுவானா? அவளை பெத்தவ இருக்கா! அதுக்கும் மேல வாழப் போறவ சம்மதம் வேணும்! நீங்க கண்டதையும் நினைக்காம தூங்குங்க!” கணவனை சமாதானம் செய்துவிட்டு படுத்தவர், மனதிலோ கணவனின் வார்த்தைகளை கேட்டு பெரும் ஐயம் உருவாகியிருந்தது தான் நிஜம்.


அறையில் தனது படுக்கையில் அமர்ந்து, சரண்யா கொடுத்த அந்த ஆல்பத்தை நூறாவது முறையாக திருப்பி திருப்பி பார்த்திருப்பாள் பிருந்தா. தங்களுக்கே தெரியாமல் சரண்யா சேகரித்த தங்களது நினைவுகளை, தனது விழிகள் வழி அகத்தில் பொக்கிஷமாக சேமித்துக் கொண்டிருந்தாள். அவளது கரங்கள் எத்தனை ஆயிரம் முறையாக அந்த படத்தை தீண்டியது என கேட்டால் அவளுக்கு தெரியாது!


இதழ்களில் அழியா புன்னகை தங்கியிருக்க, அதனை நிரந்தரமாய் தனது தந்தை அழிக்க போவது தெரியாது இருந்தாள், பாவை. சென்னையில் இருந்து வந்தவுடன் அவளுக்கு கிப்ட் ராப் செய்த ஒரு பரிசை சரண்யா அவளிடம் தர, வாங்கி பிரித்தவள் மகிழ்ச்சியில் சரண்யாவை கட்டிபிடித்து கொண்டாடி தீர்த்துவிட்டாள். அன்னை அழைக்கவும் அவசரத்தில் ஆல்பத்தை அப்படியே வைத்து விட்டு செல்ல, மகளை தேடி வந்த முத்துவேலின் கண்களில் அந்த புகைப்படம் பட்டு, அவரின் முடிவில் அவரை உறுதியாக மேலும் நிற்க சொல்லி தூண்டியது.



மறுநாள் காலையில், நண்பனைக் காண வந்தார், சுந்தர். “அடடே வாடா மச்சான்! நானே உன்னை வந்து பார்க்கணும்ன்னு நெனச்சேன்!” நண்பனை ஆர்ப்பாட்டமாய் வரவேற்றார் முத்து.

“என்னடா மாப்பிள்ளை ரொம்ப சந்தோசமா இருக்க போல?” நண்பனின் மகிழ்வு அவரிடமும் தொற்றிக் கொள்ள, “ஆமாடா. ரொம்ப ரொம்ப சந்தோசமா தான் இருக்கேன். நம்ம பிருந்தாவுக்கு, சென்னையில வி.என். க்ரூப்ஸ் வைத்தியநாதன் பையனுக்கு கேட்டு இருக்கங்கடா!” என்றவர், “ஒஹ் அவங்களை தெரியாதுல! சென்னையில பெரிய கம்பெனிடா அவங்களோடது. அவங்க கால் வைக்காத பீல்டே இல்லடா. அவங்களுக்கு ஒரே பையன்! அவரும் நம்ம பிருந்தாவை எங்கேயோ பார்த்து இருக்காறாம்! பார்த்தவுடனே பிருந்தாவை ரொம்ப பிடிச்சு போச்சாம்!” மகிழ்வாய் தெரிவித்துக்கொண்டு இருந்தார், முத்து.



அவரின் வார்த்தைகளை கேட்டு மூன்று ஜீவன்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. சிவா தாத்தா, பிருந்தா மற்றும் சுந்தர் தான். மகனது புதிய பரிணாமம் கண்டு, வாயடைத்து போய் இருந்தார், தந்தை. தந்தையின் திடீர் முடிவில் அதிர்ச்சி, பயம், வலி என கலவை உணர்வில் தத்தளித்தாள், மாது. தந்தையின் வார்த்தைகள் இதயத்தில் கூர்ஈட்டியை பாய்ச்சிய வலியை கொடுக்க, ஆரம்ப கட்ட அதிர்வில் இருந்தே வெளிவரவில்லை, அவள். சில நொடிகள் அதிர்வில் இருந்த சுந்தர், தன்னை மீட்டுக் கொண்டவர், நண்பனை கண்டு புன்னகைத்தபடி, “ம்ம் என் தங்கச்சி மகளை யாருக்காவது பிடிக்காம போகுமா? அந்த மீனாட்சியே என் மருமகளா வந்து பொறந்து இருக்கா? அவளோட நல்ல மனசுக்கு அவ நிச்சயம் நல்லா இருப்பா!” மனதில் எழுந்த வலியை மறைத்துக்கொண்டு தங்கையின் மகளின் நல்வாழ்வுக்கு வாழ்த்தினார், அந்த பெரிய மனிதர். மனதில் எழுந்த ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு, நல்ல படியாகவே பேசிவிட்டு சென்றார், சுந்தர். தனது மகனின் மனது அறிந்தால்?



வீட்டுக்கு சென்று மனைவியிடம் அதனை ஆர்ப்பாட்டமாகவே பகிர்ந்துக்கொண்டார், சுந்தர். வித்யாவுக்கும் உள்ளுக்குள் ஏமாற்றம் இருந்தாலும், அவரும் தன்னை தேற்றிக் கொண்டார். அவரை சுற்றி இருந்த நல்ல மனிதர்களின் மனதை கருத்தில் கொள்ளாது, தனது முடிவில் வீம்பாய் இருந்தார், மனிதர். விஷ்வா வேலை சம்பந்தமாய் சென்னை வரை சென்றிருக்க, அப்போது அனைவரிடமும் கைபேசி பரவலாக இல்லாத காலமது. அவனுக்கு ஊரில் நடப்பது தெரியாமலே போனது. நாட்கள் விரைந்து பறந்திருக்க, தந்தையின் முடிவில் வாய் இருந்தும் பேசா மடந்தையாய் இருந்தாள், பூவை. சரண்யாவிடம் இவள் விஷயத்தை பகிர்ந்துக் கொள்ள, “உனக்கு என்ன வாய் இல்லையா? நீ உங்க அப்பாகிட்ட பேசுறியா? இல்லை நான் பேசவா?” அவள் கடுகடுவென பொரிய, தோழி தந்த தைரியத்தில், அப்பாவிடம் எப்படி பேச வேண்டும்? என அனைத்தையும் மனதினுள் பிருந்தா ஒத்திகை பார்த்து வைத்திருக்க, அடுத்த நாள் நடந்த சம்பவத்தில் அவளது தைரியம் அனைத்தும் தூள் தூளானது.


ஒவ்வொருக்கும் அன்றைய இரவு தூங்கா இரவாகவே கழிய, பிருந்தா எப்படியாவது தந்தையிடம் பேசிவிட வேண்டும் எனும் முனைப்புடன் விடிவதற்காக காத்திருந்தாள். அன்றோடு தனது வாழ்வு அஸ்தமனமாக போவது அறியாது. காலையில் எழுந்தவள், தந்தையிடம் பேசும் நேரத்திற்காக, முன்பாகவே எழுந்து, அவர்களின் அறை வாசலையே பார்த்திருந்தாள். மகளைக் கண்டு மென்னகை புரிந்த முத்துவேல், “என்னடா நேரமே எழுந்துட்டியா?” வாஞ்சையாய் மகளிடம் கேட்க, ஒரு இதழ் விரிப்பே அவளிடம். காலைக்கடன்களை முடிக்க கொள்ளை பக்கம் சென்றவர், மயங்கி விழுங்க, கணவனைக் காணாது அவரை தேடி சென்ற கீதாவின் அலறலில், வீடு அமளி துமளியானது.


அனைவரும் உயிரை கையில் பிடித்து மருத்துவர் வருகைக்காக காத்திருந்த தருணமது. “பயப்பட ஒண்ணுமில்லை. பிரஷர் ரைஸ் ஆகி இருக்கு. சரியா மாத்திரை போடல போல. நல்ல வேளை கொஞ்சம் முன்னாடியே கூட்டிட்டு வந்துட்டீங்க! காட்ஸ் கிரேஸ். அவரோட ஹெல்த்… பார்த்து கவனிச்சுக்கோங்க. இனிமே கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க!” தனது கடமை முடிந்ததென சென்றார் மருத்துவர். அனைவரையும் பதற வைத்து மூன்று மணி நேரம் கழித்து கண் விழித்தார், முத்துவேல். தந்தையை காண பரிதவிப்புடன் சென்றாள், பிருந்தா. அனைவரையும் கண்டு சோர்வாய் அவர் புன்னகைக்க, அப்போது தான் போன உயிர் மீண்டது போல உணர்ந்தனர்.



“என்னடா பயந்துட்டியா? அதெல்லாம் அப்பாக்கு ஒண்ணுமாகாது! என்னோட பொண்ணுக்கு ஒரு நல்லது பண்ணாம இந்த உயிர் போகாது!” மகளின் கண்ணீர் முகம் கண்டு அவள் தலையை வருடி ஆதரவாய் சொல்ல, தந்தையின் வார்த்தைகளில் அத்தனை நேரம் மறந்து இருந்த விஷயம் மெல்ல மெல்ல மேலெலும்ப, தந்தையின் உடல்நிலைக் கருதி, தொண்டைக்குழியை விட்டு வரத்துடித்த வார்த்தைகளுக்கு அணையிட்டுக் கொண்டாள், மாது. மருத்துவமனை வாசம் முடிந்து முத்துவேல் வந்து இரண்டு நாட்களானது. தந்தைக்கு அமைதியாய் ஜூஸ் பிழிந்துக் கொண்டிருந்தாள் பிருந்தா. “பிருந்தா!” மெதுவாய் தந்தை அழைக்க, நிமிர்ந்து பார்த்தாள் மகள்.


“என்னடா முடிவு பண்ணிருக்க?” பதில் சொல்ல முடியாது உதடு கடித்து அமைதி காத்தாள், மகள். மெதுவாய் முரளி பற்றி சொன்னவர், “அப்பா உன் நல்லதுக்கு தாண்டா சொல்றேன். ஒரே பையன். சொத்து பத்து ஏராளம். காசுக்காக சொல்லலை. அவரை கல்யாணம் பண்ணிகிட்டா நீ ராணி மாதிரி வாழலாம். அப்பா நல்லா விசாரிச்சுட்டேன். எல்லாரும் மாப்பிள்ளையை பத்தி நல்ல விதமாக தான் சொல்றாங்க! நீ தான் உன் முடிவை சொல்லணும்! அப்பா உனக்கு கெட்டது நினைப்பேனாடா?” மகளுக்கு தன் மீதிருக்கும் பரிதாபத்தை தனக்கு சாதகமாய் மாற்ற முயன்றார், மனிதர். பிருந்தா பதில் சொல்ல முடியாது அமைதியாய் தலை குனிய, “ஒன்னும் அவசரமில்லை. நீ நல்ல ஒரு ரெண்டு நாள் கழிச்சு உன் முடிவை சொல்லு!” என்பதுடன் கண்களை மூடிக் கொண்டார். தந்தையிடம் எதுவும் சொல்லாது, அறையை விட்டு அமைதியாய் வெளியேறினாள், மங்கை.


மனம் விஷ்வாவிடம் பேச வேண்டும் என துடியாய் துடித்தது. அவளது நேரம் அவனது வருகை தாமதமாக, என்ன செய்வதென்று புரியாது தவித்தாள், பாவை. “கடவுளே!” தனது நிலையை எண்ணி பெண் மனம் ஊமையாய் அரற்ற, உள்ளுக்குள் புழுங்கி தவித்தாள், கோதை. அடுத்த நாள் விஷ்வா வந்த விஷயம் அறிந்து, அவனை காண துடித்தாள், பிருந்தா. வேகவேகமாய் அவனை காண விரைய, அவன் வெளியே சென்றிருப்பதாக வித்யா சொல்லவும், ஓய்ந்து போனாள். அவன் வருவான்! வருவான்! என காத்திருந்து காத்திருந்து மனம் அல்லலுற்ற வேளை அது. சாயங்காலம் போல வந்தான். கண்களில் ஜீவனற்று, முகம் பொலிவிழந்து பார்க்க என்னவோ போல இருந்தான். எப்போதும் அவனது முகத்தில் குடி இருக்கும் அந்த பளிச் புன்னகை தொலைந்தது போல இருந்தது. தாயிடம் பயணப் களைப்பு என்று அவர் முகம் காண மறுத்து, அறைக்குள் மறைந்துக் கொண்டான்.


இருவரும் ரசிக்கும் இயற்கை, இன்று நடக்கப்போவது அறிந்து அதுவும், கண்ணீர் வடித்ததோ? புயலாய் வீசிக் கொண்டிருந்தது. அவன் வந்தது அறிந்து, புயலாய் அவனைக் காண சென்றாள், பிருந்தா. யாரையும் கருத்தில் கொள்ளாது, கொக்கொன்றே மதி என்பது போல் வில்லில் இருந்து சீறிப் பாயும் அம்பாய் அவனை தேடி சென்றாள். வித்யா வேலையாய் இருக்க, யாரின் அனுமதியும் தான் அவளுக்கு தேவையில்லையே! அவனது அறைக்கு சென்ற வேளை, தலையை துவட்டிக் கொண்டு இருந்தான், விஷ்வா. நெடுநாள் கழித்து கண்டதால், அவனை தனது விழிகளுள் நிரப்பிக் கொண்டாள், பிருந்தா. மற்றவை அனைத்தும் மறந்து போக, அவன் வந்துவிட்டான், அவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்! எனும் ஆசுவாசம் அடைந்திருந்தது, அவளது மனது. இன்னும் சற்று நேரத்தில் அது உடைய போவது அறியாது!


அவள் வருவாள் என அவனும் எதிர்பார்த்து இருந்தானோ? அவனும் அவள் வந்ததை உணர்ந்து தான் இருந்தான். “ஹே பிந்தும்மா வா வா!” சாதாரணமாய் அவன் அவளை வரவேற்க, மெதுவாய் அவனது அறைக்குள் அடியெடுத்து வைத்தாள். “மாமாவுக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு?” மாமனின் நலத்தை அவன் விசாரிக்க, “ம்ம்ம் இப்ப பரவாயில்லை!”



அவனிடம் எப்படி கேட்க? உள்ளுக்குள் பெரும் போராட்டம், அவளுள். தொண்டைக் குழி ஏறி இறங்க, “அப்புறம் கல்யாணப் பொண்ணு… கல்யாணமானதும் இந்த மாமன் மகனை எல்லாம் மறந்துடாத!” எனும் விசாவின் வார்த்தைகளில் அதிர்ந்து அவனை ஏறிட்டாள், பிருந்தா.



அவனது வார்த்தைகளில் அதிர்ந்து போனவள் கண்களில் கண்ணீர் தேங்கி, சரேலென வழிந்தது ஒற்றை துளி கண்ணீர். அப்போது தான் உணர்ந்தாள், அவனிடமுள்ள வித்தியாசத்தை. மனமோ படபடவென அடித்துக் கொள்ள, நம்ப முடியாது “மாமா!” உயிர் உருக்கும் குரலில் அழைத்தாள். அவளது மாமா எனும் அழைப்பில் இவனது உயிர் நின்று துடித்தது. அவளது அனுமதியின்றியே கண்கள் கண்ணீரை சொரிய ஆரம்பிக்க, உதடு கடித்து ஆர்ப்பரிக்கும் மனதையும், கண்களையும் அடக்க முயன்றாள். இவனிடம் சொல்லி, காதலனது துணைக் கொண்டு தந்தையிடம் பேச வேண்டும் என வந்திருந்த அவளது எண்ணம் அனைத்தும் அவனது வார்த்தைகளில் தவிடு பொடியானதை உணர்ந்துக் கொண்டாள்.



“ஏன் மாமா இப்படியெல்லாம் பேசுற?” தவிப்புடன் அவனது வார்த்தைகள் அனைத்தும் பொய்யாக இருக்க கூடாதோ எனும் வேண்டுதலுடன் அவன் முகம் காண, வழியும் கண்ணீரோ, அவனது வதனத்தை காண விடாது சதி செய்தது. அவளது கண்ணீர் குரலில், தளும்பும் விழிகளை அவசரமாய் சிமிட்டி சரி செய்துக் கொண்டவன், நொடியில் தன்னை சீர் செய்துக் கொண்டான்.



சாரல் அடித்தது….
 
Status
Not open for further replies.
Top