All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜெஃப்ரியின் "இதயம் மீட்டும் நினைவலைகள்" - கதை திரி

Status
Not open for further replies.

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-27 ஐ உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!

ஜெஃப்ரி....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-28

24512

திருமணத்திற்கு முந்தைய நாள் வரவேற்புக்கு தயாராகிக் கொண்டிருந்தாள் சஹானா. தனக்கு முன் தயாராகி களையற்ற முகத்துடன் அமர்ந்திருந்த மிதுனாவைப் பார்த்து அவளருகில் சென்று,



"மி..மிதுனா, ஏன் டல்லா இருக்கீங்க?" என்று தோளில் கை வைத்தாள்.



"நத்திங் சானு, நீ இன்னும் என்ன ஃபுல் நேம், மரியாதையா சொல்லித்தான் கூப்பிடுற?" என்று கேட்க,



"அது… இனி வந்திடும்" என்று புன்னகைக்க,



"இப்படி சிரிச்சபடியே இரு சானு, அதான்டி உனக்கு அழகு"என்று அணைக்க, அதேநேரம் கையில் அலைபேசியுடன் உள்ளே நுழைந்த ரீனா,



"யோவ் வாத்தி, எடுத்து தொலைடா...." என்று படுக்கையறையை தப்படி(Footspan) முறையிலேயே அளக்க,





"ஹேய் ரீனு, இப்போ எஸ்.ஐ மெத்தேடே வந்துட்டு, இன்னும் நீ ரூமை தப்படி முறையில மெஸர் பண்ணுற?" என்று கேட்ட மிதுனாவை முறைத்த ரீனா மீண்டும் நடக்க... அளக்கத் தொடங்கினாள்.



அப்போது உள்நுழைந்த பூஜாவோ,



"ஏன்டி, குறுக்கால நடக்குற? அப்படி ஓரமா போய் நட" என்று ரீனாவை இடித்துவிட்டு சஹானாவிற்கு தலைப்பிண்ண ஆரம்பித்தாள்.



மிதுனாவும், பூஜாவும் பேசியபடியே சஹானாவிற்கு அலங்காரம் செய்ய,வழக்கம் போல் சஹானா அமைதியாய் இருக்க, தன்னை கண்டுகொள்ளாத தோழிகளிடம்,



"இங்க ஒருத்தி டென்சனா இருக்காளே, ஏன் எதுக்குனு கேட்க தோணுச்சாடி? அப்படி உங்களுக்கு மேக்கப் முக்கியமா?" என்று புலம்ப, தன்னை முறைத்த மிதுனாவிடம்,



"சரி..சரி.. பூஜா, உன் மொபைல குடு"என்க,



"என்கிட்ட ஆதிண்ணா நம்பர் இல்ல"என்று கேட்கப்படாத கேள்விக்கு பூஜா பதிலளித்தாள்.



"ஒன் அவரா கால் பண்ணுறேன்டி, அந்த பக்கி எடுக்க மாட்டேங்குது"என்று ரீனா சிணுங்க,



மிதுனாவோ வியப்பில், "ரீனு, நீ பக்கினு யாரை சொல்ற?ஆதிண்ணாவை இல்லதானே?" என்று கேட்க,



"அந்த நொண்ணாவ தான் சொல்றேன்." என்று பதிலளித்தவள்,



"அஜய்ண்ணா இன்னைக்கு பிஸி, இல்லனா யாரு இவனுக்கு கால் பண்ணப்போறா?" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவளிடம்,



"எருமை, கால் எடுக்கலைனா மெஸேஜ் போடு, நீ டார்ச்சர் பண்ணுறன்னு சைலண்ட்ல போட்டுறுப்பாங்க" என்று ஆலோசனை கூறவும்,



"இப்போ மட்டும் எடுக்கல, அப்புறம் எனக்கு மொபைல் வாங்கித் தர போறதே நீதான், ஒழுங்கா கால் அட்டண்ட் பண்ணு" என்று குறுந்தகவல் அனுப்பியவளிடம்,



"ரீனா, எதுக்கு இவ்ளோ டென்சனா இருக்க? ஏதாவது அர்ஜென்டா, நான் வேணும்னா அண்ணாவைக் கூப்பிடவா?" என்று சஹானா கேட்க,



"அதுவா? நீங்க மட்டும் ஜோடியா சேம் கலர் டிரஸ் போடுவீங்க. இந்த வோலினிகூட கார்த்திண்ணாவோட போய் எடுத்துட்டு வந்திட்டு. நாங்களும் போடனும்ல. அதான்" என்று கண்ணடிக்க, சஹானா தலையிலே அடித்துக் கொள்ள,



"ஆமா இப்போ நீ கேட்டா மட்டும் ஆதிண்ணா அப்படியே உண்மைய சொல்லிருவாங்க பாரு" என்று மிதுனா நொடித்துக்கொள்ள,



"அதுல்லாம் நான் எங்கண்ணாஸ் கூட சேர்ந்து ஆல்ரெடி ப்ளாண்ட்”என்று ரவிக்கையில் இல்லாத காலரை இழுத்துவிட,



“பின்ன எதுக்குடி இத்தனை தடவ ரூமை அளந்த?”என்று மிதுனா கேட்க,



“அது ஆதுகிட்ட சும்மா வம்பிழுக்கனும் போல இருச்சா, அதன்”என்று தோழிகளின் முறைப்பைப் பெற்றுக்கொண்டாள்.



“ஆமா மிது, உன் ஃபேஸ்ல ஏதோ மிஸ்ஸிங், அண்ணாகூட எதுவும் டிஸ்யூம் டிஸ்யூமா?”என்று வினவிய பூஜாவிடம்,



“பேசுனா தானே ப்ராப்ளம் வர”என்று நொடித்துக்கொண்டாள் மிதுனா.



“நானும் இதான் கேட்டேன், அவ சொல்லல பூஜ்”என்று சஹானாவும் கூற,



“ஷ்யாம் என்கிட்ட ஏதோ ஒதுக்கம் காட்டுற மாதிரி ஒரு ஃபீல்”என்று வருந்திய மிதுனாவிடம்,



“யா, ஐ நோட்டிஸ்ட் இட்”என்றாள் சஹானா.

“தன் வினை தன்னை சுடும்’னு சும்மாவா சொன்னாங்க, கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனீங்க ரெண்டு பேரும். லாஸ்ட்ல இந்த சானு, இவளோட வீடு வரைக்கும் அஜய்ண்ணா வந்தப்பறம் ஒத்துகிட்டா. நீ இப்போ வரைக்கு ஷ்யாம்ண்ணாவ ஏத்துக்கலை. அப்படி என்னடி உனக்கு கல் நெஞ்சம்?”என்று எகிறிய ரீனாவை அடக்கிய பூஜா,



“ரீனு சில், எப்போ போய் என்ன பேசுற? அதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாளே? விடிஞ்சா கல்யாணம். அதுக்கப்புறம் ஷ்யாம் அண்ணாவை எப்படி கைக்குள்ள வச்சிக்கனுங்கிற வித்தை எல்லாம் அவளுக்கு நல்லாவே தெரியும். சரிதானே மிது?”என்று கேட்க மிதுனாவின் முகமோ நாணத்தில் சிவக்க, சஹானாவின் முகமோ பயத்தில் வெளிறியது.



‘சும்மாவே கல்யாணம் நடக்கனும், நடக்கனும்னு அவ்ளோ அவசரப்பட்டான், இன்னும் என்னவோ’என்று மனதில் சிந்தித்தபடி அதிர்ந்து தன் படுக்கையை பார்த்தபடி நின்ற சஹானாவை,



“அதெல்லாம் இங்க நடக்காது, அஜய்ண்ணா ரூம்ல. மைண்ட்ல டூயட் பாடாம கெளம்புங்கமா, மீ வாண்ட் டு சீ வாத்தி..”என்றபடி ரீனா கூற,



“அவ கிடக்குறா, நீ எதுக்கும் பயப்புடாத சானு, யு வில் ஃபீல் மோர் கம்ஃபர்ட்டபிள் வித் ஹிம்” என்று பூஜா சஹானாவை தேற்றியபடி இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியே வர, மகளை மணப்பெண் அலங்காரத்தில் கண்ட பெற்றோருக்கோ மகிழ்ச்சி..!



மிதுனா தன் தாயிடம் ஆசிர்வாதம் வாங்க, சஹானாவோ தாயைக் கட்டிக்கொண்டு கண்கலங்க ஆரம்பித்தாள்.

“எனக்கு கல்யாணமே வேண்டாம்மா, எனக்கு பயமாயிருக்கு. நான் உங்ககூட இங்கேயே இருந்துக்குறேன்”என்று அழுகையில் துடித்த இதழ்களுடன் கூற,



“சானும்மா, இதுக்கெல்லாம் அழுவாங்களா? நாளைக்கு ஒருநாள் தான் அங்க இருக்கப்போற. நாளான்னைக்கே இங்க வந்திடுவடா. நாங்களும் நாளைக்கு அங்கதான் இருப்போம், இப்போ போய் அழலாமா சின்னப்புள்ள மாதிரி... பூஜா கூட்டிட்டு போமா”என்று மகளின் தலையில் முத்தமிட்டார்.



“அம்மு வொர்ரி பண்ணாத, நாங்க எப்போவும் உன்கூடவே தான் இருப்போம். அஜய் கால் பண்ணிட்டே இருக்கான்.இப்போ நாம கிளம்பலாமா?”என்று கேட்டு வாகனத்திற்கு ஓட்டுநரையும் அனுமதிக்காது தானே அழைத்துச்சென்றான் கார்த்திக்.

சஹானாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அனைத்து வைபவங்களும் சீக்கிரமாகவே முடிக்க திட்டமிட்டிருந்தனர்.

சஹானாவும், மிதுனாவும் மகிழுந்திலிருந்து இறங்கியவுடன் சஹானாவை யாழினியும், அஜய்யின் அக்கா ரேஷ்மாவும் சேர்ந்து ஆரத்தியெடுக்க, மிதுனாவிற்கு ஷ்யாமின் தங்கை ஸ்வாதியுடன், திவ்யாவும் சேர்ந்து ஆலம் சுத்தி உள்ளே அழைத்து சென்றனர்.

அதன் பின்னர் மணமகளுக்கு கொடுக்கவேண்டிய அத்தனை மங்கள மற்றும் அலங்காரப் பொருட்கள் அடங்கிய தாம்பூலங்கள் அனைத்தையும் கொடுத்து பெண்களை புடவை மாற்ற அனுப்ப, சரியாக அந்நேரம் அஜய்யும்,ஷ்யாமும் மண்டபத்திற்குள் நுழைந்தனர்.



அவர்களது வழக்கப்படி இருபத்தி ஐந்து பெண்கள் அவ்விருவருக்கும் ஆலம் சுற்றி வரவேற்க, ஆரத்தியெடுத்த அந்த இருபத்தி ஐந்து பெண்களுக்கும் அஜய்யும், ஷ்யாமும் வெள்ளி குத்துவிளக்கை அன்பளிப்பாய் அளித்தனர். ஷ்யாமிற்கு மகேசும், அஜய்க்கு கார்த்திக்கும் கைக்கடிகாரத்தை பரிசளித்து உள்ளே அழைத்துச் சென்றனர்.



இருவரும் மண்டபத்தின் உள்ளே நுழைய அப்போது மேலிருந்து பலூனொன்று வெடிக்க, அதிலிருந்து அப்பளப் பொடிகள் அனைத்தும் இருவரின் மேலும் படர்ந்தது. அங்கிருந்த அனைவரும் சிரிக்க,அவ்விருவரும் யாரென்று தெரியாமல் விழித்த அவ்விருவரின் முன் நின்று சிரித்துக் கொண்டிருந்தாள் மிதுனாவின் தங்கை மலர்,

“ஹாய் மாம்ஸ், எப்படி என் வரவேற்பு” என்றவள் தொடர்ந்து,

“மாம்ஸ், எதுக்கு இப்போ இந்த முறைப்பு?நீங்க முறைக்க வேண்டிய ஆள்கள் உள்ளே இருக்காங்க, அங்க போய் முறையுங்க”என்றாள்.

மலரின் அருகில் சென்ற அஜய், “கொழுந்தியா குசும்புனு சொல்வாங்களே,அது இதுதானா?”என்க,

“அப்கோர்ஸ் மாமா, பின்ன ஒரே மேடைல நடக்கப்போற ரெண்டு கல்யாண மாப்பிள்ளைக்கும் நான்தான் ஒரே கொழுந்தியா. இது கூட இல்லன்னா எப்படி?”என்றாள் சுடிதாரில் இல்லாத கழுத்துப்பட்டையை இழுத்துவிட்டபடி.

“வெல்கம்லாம் நல்லா தான் இருந்துச்சு, ஆனா இந்த அப்பளத்துக்கு பதில் உன் பேர்ல இருக்குற பூவை போட்டிருக்கலாமே”என்று ஷ்யாம் கேட்க,

அஜய்யோ, “டேய், அவ சில்லிப்பவுடர் போடாம அப்பளத்தோட நிறுத்திக்கிட்டாளேனு சந்தோஷப்படு”என்று அப்பளத்தை அகற்றியபடி உள்ளே நுழைந்தனர் இருவரும்.

மேடையேறியதும் அஜய்யின் கண்கள் மணமகள் அறையை நோட்டமிட்டவாறு கார்த்திக்கிடம்,

“சஹி எங்கேடா? சீக்கிரம் இங்க வரச்சொல்லு”என்று கூற,

“டேய் கல்யாணம் நாளைக்கு தான்டா, இன்னைக்கு இல்ல. பொறுமை”என்றபடி, தன் இணையைத் தேடும் தனது கண்களுக்கும் சேர்த்தே ஆறுதல் கூறினான் ஷ்யாம்.

“ரெடியாகிட்டு இருக்காங்க மச்சான், சேஃப் தான்”என்றான் கார்த்திக்.

ஒருவழியாக அனைத்து அலங்காரமும் முடிந்து பெண்கள் மேடைக்கு அழைத்து வரப்பட, நலுங்கு வைக்கும் முறை ஆரம்பமானது. நாணத்தில் சிவந்த மிதுனாவின் முகத்தை ஆசையுடன் ஷ்யாம் பருகினானென்றால், அஜய் கண்டது என்னவோ, உடல் முழுவதும் மணப்பெண்ணிற்குரிய அனைத்து அடையாளங்களுடன், பயத்தில் கருத்த முகத்துடன் வந்த சஹானாவைத்தான்.

தன்னருகில் அமரவைக்கப்பட்ட சஹானாவின் கரங்களை அழுத்திப் பிடித்தவன்,

“சஹிபேபி, நீ பயப்படுற எதுவுமே நடக்காது. ரிலாக்ஸ்டா”என்றவன்,

“மயக்குறடி அழகியே”என்று கிசுகிசுத்தான்.

அவனது பேச்சில் கட்டுண்டு அவனையே பார்த்திருக்க, அதனை புகைப்படக் கலைஞர் அழகாய் தன் கருவியில் பதிவு செய்தார்.

ஆனாலும் குழம்பிய முகத்துடனே இருந்த மகளது நடவடிக்கை பெற்றோருக்கு வருத்தம் தர, சஹானாவை நெருங்கிய அவளது பெற்றோர்,

"சானுமா, இப்போ உனக்கு அம்னீசியா, சீக்கிரமே குணமாகிடும்டா. ஆனா, கல்யாணம் வாழ்க்கைல ஒருதடவ நடக்கும் அழகான நிகழ்வும்மா. ஃபோட்டோஸ்லாம் நம்ம நினைவுகளுக்காக எடுக்குறது தான்டா. சோ, கொஞ்சம் சிரிச்ச மாதிரி போஸ் குடு. உனக்கு நாங்க கெடுதல் பண்ணமாட்டோம்"என்று ரகுராம் முடித்துவிட சஹானாவிற்கு தான் வருத்தமானது.



அதன் பின்னர் நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் அவர்கள் சொல்வது போல் இசைந்து கொடுத்தாள் சஹானா. இரவு உணவிற்கு பின்,

"சஹிபேபி, டேப்லட் போட்டுட்டு ரிலாக்ஸா தூங்கு. நான் எப்பவுமே உன்கூட இருப்பேன்"என்று ஊக்கமூட்டி அனுப்ப, சஹானா அனைத்திற்குமே சாவிக் கொடுத்த பொம்மை போலவே இயங்கினாள்.

சஹானாவை உறங்க அனுப்பிய அஜய்க்கோ உறக்கமென்பது மருந்திற்கும் இல்லை.உள்ளே வந்த சஹானாவிற்கோ மருந்தின் வீரியமும், விழா வைபவங்களும் சேர்ந்து கண்களை சுழட்ட எதையும் யோசிக்கவும் திராணியின்றி படிக்கையில் வீழ்ந்தவள் உறங்கிவிட்டாள்.

உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த மிதுனாவின் மனதிலோ, ரீனா கூறிய,

"நீ இதுவரைக்கும் ஸ்யாம் அண்ணாவ ஏத்துக்கல" என்ற வார்த்தைகளே ஊர்வலம் செல்ல, ஷ்யாமின் தற்போதைய சின்ன சின்ன விலகலுக்கு காரணம் இதுவாக இருக்குமோ என்று மனம் குழம்பியது.

ஷ்யாமிடம் இப்போதே பேசிவிட மனம் பரபரக்க அலைபேசியை எடுப்பதும், நாணம் தடுப்பதில் அலைப்பேசியை வைப்பதுமாக இருந்தவளை கண்ட ரீனா, அவளுக்கே தெரியாமல் மிதுனாவின் நிலையை புகைப்படம் எடுத்து ஷ்யாமிற்கு அனுப்பினாள்.

கையில் அலைபேசியுடன் இருக்கும் தன்னவளின் புகைப்படத்தை பார்த்த ஷ்யாம் மனதில் குமிழியிட்ட உற்சாகத்தில், தனது இத்தனை நாள் மௌன விரதத்தை கலைந்து மிதுனாவுக்கு,

"குட் நைட் மிதும்மா, தூங்குடா" என்று குறுந்தகவல் அனுப்ப, அதைக்கண்ட பின்பு தான் மிதுனா நிம்மதியாக உறங்கினாள் அலைப்பேசியை அணைத்தபடியே.

****

மறுநாள் காலையில் தாயின் உலுக்கலில் கண்விழித்த சஹானாவை குளித்து வர ஏவ, அவளோ பயத்தில் நடுங்கினாள்.

“ம்மா, நீயும் என்கூட வாயேன்”என்று.

“எதுக்கு உன்னை குளிப்பாட்டவா? விளையாடாம போய் குளிச்சிட்டு வாடி, டைமாகுது”என்று அதட்ட,

“இல்லம்மா, நான் போகமாட்டேன். உள்ளே யாராவது இருப்பாங்க”என்று பதற, சஹானாவின் பயத்தை ஏற்கனவே அர்ஜூனின் மூலம் அறிந்திருந்த பூஜாவோ,

“ஆன்ட்டி, நீங்க போங்க. நான் அவளை ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன்”என்று அவரை அனுப்பியவர்,

“சானு நான் செக் பண்ணிட்டேன், உள்ளே யாரும் இல்ல. நான் இங்கேயே இருக்கேன். பயப்படாதடி”என்று தேற்றி அனுப்பினாள்.

பயத்தில் அவசர அவசரமாய் குளித்து முடித்து வெளியே வந்த சஹானாவையும், மிதுனாவையும் ஒப்பனை கலைஞர்களின் உதவியுடன் அலங்கரித்து பதுமைகளாக்கினர்.

அழகில் ஜொலித்த சஹானாவின் முகத்திற்கு சற்றும் பொருந்தாமல் இடம்பெற்றிருந்த பயத்தைக் கண்ட பூஜா,

“சானு, எதுக்காக இவ்வளவு பயப்படுற? உன்னை சின்ன வயசிலயிருந்தே பார்த்துட்டு இருக்கேன். திரும்பவும் சொல்றேன், இப்போ உனக்கு அமையப் போறது நீ ஆசைப்பட்ட வாழ்க்கை, உன் பேரெண்ட்ஸ் விரும்பிய வாழ்க்கை. உன் முகத்துல இருக்குற பயத்தை பார்த்திட்டு உனக்கு கல்யாணம் நடத்த அவங்களுக்கு மனசு வருமா? ரொம்ப யோசிக்காதடி. எனக்கு தோணுனத சொல்லிட்டேன். இனி எல்லாமே உன் விருப்பம்”என்று முடித்துக் கொள்ள, அதன் பின்பே சஹானா தெளிந்தாள்.

“என்னம்மா ரெடியா? அழைச்சுட்டாங்க, வாங்க”என்ற திவ்யாவின் குரலில் தோழிகள் சூழ மணமேடையை நோக்கி நடையிட்டனர் மணப்பெண்கள் இருவரும்.

தங்க நிறத்தில் ரோஜா வண்ண வேலைபாடுகளுடன் கூடிய பட்டில் மிதுனாவும், சிகப்பு வண்ண காஞ்சிப்பட்டில் சஹானாவும் தலை முதல் கால்வரை ஆபரணம் சூழ அழைத்து வரப்பட, தங்களுடன் வாழ்க்கைப் பயணத்தில் இணைய வரும் இணைகளை இமைசிமிட்டாது ரசித்துக் கொண்டிருந்தனர் மணமகன்கள் இருவரும்.

பட்டு வேஷ்டி சட்டையில் மணமகன்களுக்குரிய அத்தனை அம்சங்களுடன் மேடையில் வீற்றிருந்த ஷ்யாமைக் கண்ட மிதுனாவிற்கு நாணத்தில் முகம் சிவக்க, அஜய்யைக் கண்ட சஹானாவோ, அவனது கம்பீரத்தில் ஒரு நொடி தன் நடையை நிறுத்தியிருந்தாள். இது அஜய்க்கும் இதமளிக்க தன்னை நோக்கி வரும் தன் ‘சஹி பேபி’யை கண்களால் பருகினான்.



"ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே....!"


இரு அக்னி ஹோமத்தின் முன்னிலும் அமர்ந்திருந்த ஐயர்கள் வேத மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்க, வேத மந்திரங்கள் முழங்க, தேவர்களின் ஆசிர்வாதத்தோடும், சுற்றியிருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாழ்த்தொலிகளோடும், மங்கள நாணை முதலில் கையில் ஏந்திய ஷ்யாம், அந்த பொன் தாலியை அவள் கழுத்தில் அணிவிப்பதற்காக எடுத்துச் சென்றவன் கண்களில் காதலோடு அவள் கழுத்தில் இரண்டு முடிச்சிட அவனது தங்கை ஸ்வாதி மூன்றாம் முடிச்சியிட மிதுனாவை தன்னவளாக்கிக் கொண்டான்.



அதன் பின்னர், ஐயர் நீட்டிய மங்கல நாணை பெற்றுக்கொண்டு சஹானாவின் கழுத்தில் முடிச்சிடுவதற்காக அவளது கழுத்தருகே எடுத்துச் சென்ற அஜய்யின் கைகள் சற்று தாமதிக்க, பார்வையோ குனிந்திருந்த அவள் முகத்தை வருடியது. திடீரென்று நிமிர்ந்த அவளது விழிகளை தன் காதலால் கட்டிப் போட்டபடி, அவள் கண்களை விட்டு இம்மியளவும் தன் பார்வையை விலக்காமல் அவளது சங்கு கழுத்தில் மூன்று முடிச்சிகளையும் போட்டு தன்னில் சரிபாதியாக்கிக் கொண்டான் அஜய்.



சஹானாவின் கண்களில் எந்த கலக்கமுமில்லை. மாறாக, அவள் மனதில் ஒரு நிறைவு தோன்றியது.காதல் கைக்கூடிய நிறைவு அது...! ஆனால், அது ஏனோ புரியவேண்டிய அவளுக்கு தான் புரியவில்லை.



நெற்றி வகிட்டிலும்,மாங்கல்யத்திலும் குங்குமத்தை வைத்து இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தான் அஜய். ஹோமத்தை மூன்று முறை வலம் வந்ததோடு பெரியோர்களின் கால்களில் விழுந்து வணங்கியும் ‘எந்த ஜென்மங்களிலும் பிரிக்க முடியாத பந்தமாய்’ தங்களது உறவை வலிமையாக்கி கொண்டனர் அம்மணமக்கள்.



அனைத்து சடங்குகளும் முடித்து அனைவரும் அஜய்யின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட, மிதுனாவோ ‘இங்கே ஏன்?’என்பது போல் ஷ்யாமை நோக்க,

அவள் பார்வையின் பொருள் புரிந்தவன்,

“இனி இதே வீட்டுல தான் எல்லாரும் இருப்போம். பெரியப்பா அண்ட் அப்பா சேர்ந்து எடுத்த முடிவு”என்று தகவலளித்தவன், அவளது வலது கையைப் பற்றிக்கொண்டு இறங்கினான்.

தான் வாழப்போகும் வீட்டில், கணவனது கையைப் பிடித்தபடி அடியெடுத்து வைத்து உள் புகுந்தாள் சஹானா.வீட்டின் பூஜையறையில் இருவரும் விளக்கேற்றிய பின் பெண்கள் சாய்விருக்கையில் அமர வைக்க, சம்பிரதாய விளையாட்டுகள் ஆரம்பமானது. சஹானாவும் உற்சாகமாகவே கலந்துகொண்டாள்.



கடந்த இரண்டு நாட்களாக இருந்த களைப்பும், மருந்து உட்கொள்ளும் உடம்பும் ஓய்விற்கு கெஞ்ச, ஆனாலும் 'அஜய்யின் அறைக்கு செல்ல நேரிடுமே' என்று சஹானா குழம்ப, அதை கண்டுகொண்ட அஜய்யோ,

"அம்மா, ஃப்ரெண்ட்ஸ் கூப்பிடுறாங்க, இதோ வர்றேன். சஹி நீ போய் ரெஸ்ட் எடு"என்று சஹானாவின் வசதிக்காக சொல்லிவிட்டு வெளியேறினான்.

"சானு, நீயும் மிதுனாவும் போய் யாழினி ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க. நான் அப்புறமா வந்து கூப்பிடுறேன்"என்று கூறி அவர்களை அனுப்ப, சஹானாவும், மிதுனாவும் யாழினியின் அறையை நோக்கிச் சென்றனர்.

உள்ளே நுழைந்த திவ்யா கொடுத்த இலகு உடைக்கு மாறியவள், படுத்ததும் உறங்கிவிட்டாள்.

அலைபேசியின் ஒலியில் சஹானா கண் விழிக்க, அறையில் தான் மட்டும் தனித்திருப்பதை கண்டவள் வெளியேற எத்தனிக்க, இடைவிடாது ஒலிக்கும் அலைபேசியின் சப்தத்தில் அழைப்பை உயிர்ப்பித்தாள் சஹானா....!



நினைவுகள் தொடரும்...!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-28 ஐ உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!

ஜெஃப்ரி....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-29


அலைபேசியின் தொடர் அழைப்பில், அலைபேசி யாருடையதென்று தெரியாமாலேயே அழைப்பை உயிர்பித்த சஹானா,

“என்ன கல்யாணப்பொண்ணு, நோ..நோ.. என்ன மிஸஸ்.அஜய் ரித்விக் ஹாப்பி மேரிட் லைஃப்”என்ற நக்கல் தொனியில் அதிர்ந்து இருக்கையை விட்டே எழுந்துவிட்டாள்.

“ர.. ராம்?” என்று அவளது நாக்கு தந்தியடிக்க,

“எஸ், நானேதான் உன்னோட ராம். பரவாயில்லையே பேரெல்லாம் நியாபகம் வச்சிருக்க?” என்று அவனும் குரோதத்துடன் வினவ,

“நீங்க எப்படி கால் பண்ணுனீங்க?இது யாரோட ஃபோன்?” என சஹானா குழப்பத்துடன் வினவ,

“ஏன், இதையும் உன் அண்ணன்கிட்ட போட்டுக்குடுக்கலாம்னு பார்க்குறியா?” பற்களை கடித்தான்.

“நான் எங்க போட்டுக்கொடுத்தேன்? நான் அண்ணாகிட்ட எதுவுமே சொல்லல” என்று சஹானா பதற,

“நீ சொல்லாமலேயா, அஜய் அந்த நம்பர்ல என்ன ட்ரேஸ் பண்ணுனான்? என் காதல பறிச்சது மட்டுமில்லாம அர்ஜூன வச்சு என்ன துரத்திக்கிட்டே இருக்கான். அவன் கையில மட்டும் நான் மாட்டுனேன், சாவு கன்ஃபார்ம்” என்று ஆதங்கத்துடன் கூறியவன்,

“எப்படிடி என்ன காதலிச்சுட்டு அவன கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சது உன்னால, அப்போ என்னை எதுக்குடி காதலிச்ச? இப்படி நான் ஓடி ஒளியறதுக்கா?” என்று உண்மைபோலவே ஆதங்கப்பட,

“அய்யோ ராம், நீங்க என்ன சொல்லிறீங்க? எனக்கு எதுமே புரியல. நீங்க கால் பண்ணினத நான் யார்கிட்டயுமே சொல்லல” சஹானா மீண்டும் சொன்னதையே திரும்ப கூற,

“போதும் நிறுத்து. உன் புருசன்கிட்ட சொல்லி வை, என் வழியில கிராஸ் பண்ண வேண்டாம்னு. அர்ஜூன்கிட்ட சொல்லி கேஸ வாபஸ் வாங்க சொல்லு. இல்லன்னா, உன் தாலியோட ஈரம் காயுறதுக்கு முன்னாடியே அதை உன் கழுத்துல இருந்து இறக்க வேண்டி வரும். பார்த்துக்க” அவன் எச்சரிக்க, சஹானாவோ நொடியில் அதிர்ந்து கழுத்தில் தொங்கிய தாலியை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

‘பிடிக்காமல் தான் கட்டிக்கொண்டேன்; ஆனால், அவனுக்கு ஒண்ணுனா எனக்கு ஏன் பதறனும்?’என்று அவளது மனது யோசிக்கும் போதே அலைபேசியின் குரல் தடைசெய்தது.

“சஹி பேபி, என் காதலுக்கு துரோகம் செஞ்சிட்டு இன்னைக்கு அவன்கூட தாம்பத்திய வாழ்க்கைல சேர்ந்து வாழத் தயாராகிட்டல்ல? உன்னால எப்படிடி முடிஞ்சிது...!” அனுதாபக் குரலில் அவளை குழப்பியவன் திருப்தியுடன் இணைப்பைத் துண்டித்தான்.

அதிர்ச்சியில் செய்வதறியாது சஹானா அமர்ந்திருக்க உள்ளே நுழைந்தனர் தோழிகள்.

“ஷ்ஷப்பா.... முழிச்சுட்டியாமா, மணி இப்போ மூணாகிடுச்சி, சாப்பிட வா”என்று பூஜா அழைக்க,

“எனக்கு பசிக்கல, சாப்பாடு வேண்டாம்” சஹானா மறுக்க,

“உனக்காக அங்க அஜய் அண்ணா சாப்பிடாம வெயிட் பண்ணுறாங்க, மிது கூட”என்று அழைக்க அலைபேசியை மறந்தவளாக பூஜாவுடன் சென்றாள். சஹானாவிடம் எந்திரத்தனத்தை கண்ட அஜய், அவளை நெருங்கி,

“சஹி பேபி, ஆர் யூ ஓகே? நல்லா தூங்குனியா?” வினவ,

‘எல்லாம் இவனால தான்; செய்றதெல்லாம் செஞ்சிட்டு ஆர் யூ ஓகேவாம்’ மனதில் எண்ணியதோடு,கோபம் கனன்ற விழிகளுடன் கணவனை முறைத்தவள்,

“ஒன் கிரேட் ரிக்வெஸ்ட், டோட்டல் ஃபேமிலியே இங்க தான் இருக்காங்க, சோ, கொஞ்சம் சிரிச்சமாதிரி இரு. மாமாவை முறைக்குறதெல்லாம் நம்ம பெட்ரூம்ல போய் வச்சிக்கலாம்” என அஜய் கண்ணடிக்க, சுற்றத்தார் தம்மை கவனிப்பதை உணர்ந்து வரவழைக்கப்பட்ட செயற்கை புன்னகையுடன் சாப்பிடுவதைத் தொடர்ந்தாள்.

சஹானாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, வரவேற்பை இரு நாட்களுக்கு தள்ளி வைத்திருக்க, உணவருந்தி முடித்ததும் இளையவர்கள் மணமக்களுடன் சில விளையாட்டுகளைத் தொடர்ந்தனர்.

இரவு, மணி ஏழைத் தொடவும், சஹானாவையும், மிதுனாவையும் அழைத்து பெரியவர்கள் அடுத்து நடைபெறவிருக்கும் சடங்கிற்குத் தயாராகச் சொல்ல, சஹானாவோ பயத்தில் தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். சஹானாவின் பயத்தை உணர்ந்த அஜய்யோ அலைபேசியுடன் தனியே செல்ல, சஹானாவை ரேணுகா சமாதானப்படுத்தியதோடு,சில அறிவுரைகளையும் கூற ஆரம்பித்தார்.

அலைபேசியுடன் தாயிடம் வந்த அஜய்,

“அம்மா, நான் கொஞ்சம் வெளியே போறேன். ஒரு கிளைண்ட அர்ஜென்டா மீட் பண்ணனும்” என்று கிளம்ப எத்தனிக்க, அனைவரும் அவனை ஆச்சரியத்துடன் நோக்க,

அவனது தாய் ராகிணியோ, “அஜய் நில்லு, இன்னைக்கு தான் உனக்கு கல்யாணம் நடந்திருக்கு, சில சடங்குலாம் இருக்கு; எங்கேயும் போக வேண்டாம்; ராகுல், இவனை கூட்டிட்டு போய் ரெடியாக சொல்லு” சிறிய மகனுக்கு அறிவுறுத்திவிட்டு பெரிய மகனுக்கு ஏவினார்.

“அம்மா, ப்ளீஸ். போய்ட்டு ஒன் அவர்ல வந்திருவேன். இப்போ விட்டா அவர் நைட் டெல்லிக்கு போய்டுவாருமா.”மேலும் கேட்க,

“அஜய், நாளைக்கு நீ அவரை டெல்லிக்கு இல்லனா டென்மார்க்குக்கே போய் பாரு. எதுக்கும் ஒரு நேரம் காலம் இருக்கு; ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணினா மட்டும் போதாது. சாந்தி முகூர்த்தத்துக்கு நேரம் குறிச்சாச்சு; அதுக்கு ரெடியாகுற வேலைய பாரு;” தன் பேச்சு முடிந்து விட்டது என்று கூற,

அவனோ கடுப்பில், “எனக்கு இந்த நல்ல நேரம், சம்பிரதாயத்துலல்லாம் நம்பிக்கையில்லனு உங்களுக்கு தெரியும்ல?” என்க,

“டேய் அஜய், நானும் உன்கூட வர்றேன்டா”என்று ஷ்யாமும் சம்மணில்லாமல் ஆஜராக, ‘இவன் ஒருத்தன், நேரம் காலம் புரியாம’என்று மனதிற்குள் ஷ்யாமை தாளிக்க,

“ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் சொல்றேன், சடங்கு, சம்பிரதாயங்கள்ல உங்களுக்கு நம்பிக்கை வேண்டாம்; எங்க திருப்திக்காக நாங்க செய்றோம், அதுக்கு கட்டுப்படுறது உங்க வேலை, அதுக்கும் மேல உங்கள நாங்க கட்டாயப்படுத்த போறதில்ல; உங்க உறவ முன்னோக்கி கொண்டுபோறதும், போகாததும் நீங்க ரெண்டு பேரும் சம்பந்தப்பட்ட விஷயம்; அதுல நாங்க தலையிடமாட்டோம். இப்போ போய் ரெடியாகு; திவ்யா, அவங்கள ரெடி பண்ணு” நீளமாக கூறியவர், தொடர்ந்த வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார்.

தங்களறைக்கு வந்த அஜய்யிடம், “அது யாருடா இந்த டைம்ல புது கிளைண்ட்?” என்று தன்னை சீண்டிய ஷ்யாமின் கைகளை முறுக்கியவன்,

“உன்னை.... சும்மா ஒரு பிட்ட போட்டேன். நான் எதுக்கு சொல்றேன்னு தெரிஞ்சும் சொதப்பிட்டு, கேள்வியா கேக்குற?”என்று கேட்க,

“அடேய் கிராதகா, விடுடா வலிக்குது ; ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு போறவனை ஃபர்ஸ்ட் எய்டு ரூமுக்கு அனுப்பிடாத” என்று கத்த, அவனது கைகளை விடுவித்தவனிடம் கார்த்திக்,

“ஏன் அஜய், உனக்கு இதுல விருப்பமில்லையா?” தயக்கத்துடன் விசாரிக்க, இதை ஏதும் கண்டுகொள்ளாமல் அஜய்யின் படுக்கையை அலங்கரித்துக் கொண்டிருந்த அர்ஜூன், ஆதியைப் பார்த்தவன்,

“நீ வேற, உன் தங்கச்சி சும்மாவே அந்த முறை முறைச்சா; உங்கம்மா வேற அறிவுரைங்கிற பேர்ல அவளுக்கு சலங்கை கட்டி விட்டிருப்பாங்க; இதுல இந்த அரேஞ்ச்மெண்ட்ஸ்லாம் பார்த்துட்டு வேப்பில்லை எடுக்காத குறையா ஆடப்போறா” என்று சலிப்புடன் அமர்ந்தவனைப் பார்த்து நண்பர்கள் சிரிக்க, தெளியாத கார்த்திக்கின் முகத்தைப் பார்த்த அஜய்,

“மச்சான், நீ இவ்ளோ ஃபீல் பண்ணுற அளவுக்கு ஒண்ணுமே இல்ல; அவளுக்கு ஆக்ஸிடெண்ட் நடந்து ஒன் மன்த் தான் முடிஞ்சிருக்கு, இன்னும் அவ கம்ளீட்டா கியூர் ஆகல; மேரேஜ் முடிச்சே ஆகணும்னு முடிச்சேன்; பட், இப்போ இதல்லாம் தேவையா? அதான் அப்படி சொன்னேன்” என்று கூற, அதை கேட்டுக்கொண்டிருந்த ஷ்யாமிற்கோ தலைசுற்றாத குறை.

“டேய் நல்லவனே, உனக்கு முன்னாடி என் மிதுவ பார்த்து லவ் பண்ண ஆரம்பிச்சது நான்; நீ என்னன்னா அதுக்கு அப்புறம் பார்த்து, எனக்கும் சேர்த்து அவ்ளோ ரொமான்சையும் பண்ணி என்னை வெறுப்பேத்திட்டு, என்னமோ நல்லவன் மாதிரி பேசுறியா?” என்றபடி அஜய்யின் வயிற்றில் குத்த,

அர்ஜூன் தான், “சோ வாட் அஜய், அதான் மேரேஜ் லைஃப் லீட் பண்ணுறதுல சானுக்கு எந்த பிராப்ளமும் இல்லனு டாக்டர் சொல்லிட்டாங்களே” கூற,

“இருந்தாலும், அவ இன்னும் முழுமையா என்னையோ என் குடும்பத்தையோ ஏத்துக்கல; கொஞ்ச நாள் போகட்டும்டா; ப்ளீஸ் கார்த்தி, டோன்ட் திங்க் டூ மச்; கிவ் சம் ஸ்பேஸ் டு அஸ். பட், கண்டிப்பா சஹி நல்லா இருப்பா” முடித்துக்கொண்டான்.

அவனது பேச்சில் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட, அஜய்யைத் தவிர மற்றவர்கள் வெளியேறினார்கள்.

*****

தாயின் அறிவுரைகளில் மலைத்துப் போய் நின்ற சஹானாவை அழைத்த ராகிணி கடவுளை வணங்க சொல்ல, அதை செய்துவிட்டு அவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிய சஹானாவின் நெற்றியில் முத்தமிட்டவர்,

“சானு, உங்கம்மா சொன்ன மாதிரி தான் நீ நடந்துக்கனும்னு நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன்; உன்னோட ஹெல்த், இப்போ உன்னோட மனநிலை எல்லாம் எனக்கு புரிஞ்சாலும், என் பையன் மேல நம்பிக்கை இருக்கு, அவன் உன்னை நல்லா பார்த்துக்குவான்னு; உன் மேலயும் நம்பிக்கை இருக்கு, உன் கழுத்துல தொங்குற இந்த மாங்கல்யத்துக்கு நீ மதிப்பு குடுப்பேன்னு.” பட்டும் படாமலும் எடுத்துக் கூறி சஹானாவை அனுப்பி வைக்க,

ஷ்யாமின் தாயோ மிதுனாவிடம், “சீக்கிரம் ஒரு பேரனையோ, பேத்தியையோ எங்க கையில குடுத்துட்டு அப்புறமா என்ன வேணாலும் சண்ட போட்டுக்கோங்கமா நீயும் உன் புருசனும்”என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தனர்.

‘இனி எதையும் சந்தித்து தான் ஆகனும்’என்று மனதை திடப்படுத்தியவாறு அஜய்யின் அறையில் சஹானா நுழைய, அவனில்லாத வெற்று அறையே வரவேற்றது. ‘எங்க போனான் இந்த டெர்மினேட்டர்’ என்று அவனுக்கு வைத்த பெயருடன் அறையை சுற்றி பார்வையை ஓட்டினாள்.

“ஒருவேளை அந்த கிளைண்ட பார்க்க ஓடிட்டானோ?”என்று வாய்விட்டே கூறியவள்,

நேர்த்தியாக இருந்த அவனது அறையை கண்டவள், “பரவாயில்ல, இந்த டெர்மினேட்டர் அவன் ரூமையும் நல்ல நீட்டா தான் வச்சிருக்கான்” தனக்குத் தானே பேசியவளின் பார்வையில் விழுந்தது அவர்களது நிச்சயதார்த்த புகைப்படம். மூன்றடியில், அஜய்யில் மடியில் சஹானா அமர்ந்திருக்க இருவரும் கண்களில் காதலுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த அந்த காட்சியை புகைப்பட கலைஞர் தத்ரூபமாக படம்பிடித்திருக்கிறார்.

தன்னை மீறி அந்த புகைப்படத்தில் லயித்திருந்தவளைக் கலைத்தது அஜய்யின் குரல்.

“நிஜம் நான் இங்க இருக்குறப்போ, நிழலை சைட் அடிக்குறியே ஸ்வீட்டி” அவளறியாமல் அவளை அணு அணுவாய் ரசித்தவாறே கூற, அவனோ அப்போதுதான் குளித்திருப்பான் போலும், மேற்சட்டை இன்றி அரைக்கால் சட்டையுடன் தலையை துவட்டிக் கொண்டிருந்தான்.

படிக்கட்டுகளுடன் கூடிய அவனது வெற்று மேலுடம்பில் ஒரு சில நீர்த்திவளைகள் ஒட்டிக்கொண்டிருப்பதை பார்த்தவள், சங்கடத்தில் முகத்தைத் திருப்பியவாறு,

“என்ன இது, இப்படியா அரைகுறை டிரஸ்ஸோட ரூமுக்குள்ள நிப்பீங்க? டீ-சர்ட் போடுங்க” என்று சிடுசிடுக்க,

“இதென்னமா வம்பா போச்சு, பெட்ரூம் குள்ள மட்டும் தான் இப்படி நிக்க முடியும்; ஆமா மேடம் எதுக்கு இங்க வந்திருக்கீங்க?” சீண்டினான் அவளை.

“எ..எதுகுன்னா என்ன சொல்லுவேன்?”

“எதுக்கு வந்தியோ அத சொல்லு”இவனும் விடாமல்,

“இனி இந்த ரூம்ல உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கோ, அதே ரைட்ஸ் எனக்கும் இருக்கு” என்று மார்பில் தொங்கிய தாலியைத் தூக்கி அவனிடம் காட்டினாள்.

“ஓ.... அப்போ அதே ரைட்ஸ நானும் எடுத்துக்கலாமா?” குறும்புடன் அவன் வினவ, அவனைக் கண்டு உதட்டை சுழித்தவள் படுக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.

“டேப்லட்ஸ் போட்டியா?”

“ம்ம்... ரொம்பத்தான் அக்கறை” என்று ந்நொடித்துக் கொண்டவள்,

“என்ன, உங்க கிளைண்ட பார்க்க போகலையா?” என்று அவள் கேட்க,

“அது... நாளைக்கு போகணும்” சமாளித்தான்.

“உங்கம்மாகிட்டயும் கூட பொய் சொல்வீங்களா?” என்று அவள் கேட்க,

“நான் சொன்னது பொய் தான்னு உனக்கு எப்படி தெரிஞ்சிது?” அவளிடமே மறு கேள்வி கேட்டான்.

“நான் என்ன யாருமே அதை உண்மைனு நம்பியிருக்கமாட்டாங்க” அவளும் சமாளித்தவளுக்கு ஸ்ரீராமின் அழைப்பு நினைவில் வர,

“ஏதோ என்மேல அக்கறை இருக்குற மாதிரி பேசுனா, அவங்கள மாதிரி நானும் நம்பிருவேன்னு நினைச்சிங்களா?” கத்தியவள்,

“எனிவே, நீங்க ஆசைப்பட்டது மாதிரி என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க; எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை தான்; ஆனா, நான் இந்த மாங்கல்யத்தையும், அதனால வந்த இந்த உறவையும் மதிக்குறேன்.” என்க, அவனும் கேள்வியாக புருவம் உயர்த்த,

“எவ்வளோ உன்கிட்ட கெஞ்சுனேன், இப்போ மேரேஜ் வேண்டாம்னு. நான் கல்யாணம் வேண்டம்னா சொன்னேன்? இப்போ வேண்டாம்னு தானே சொன்னேன். என்னால என்னோட பாஸ்ட்ட கடந்து வர முடியல; கொஞ்சமாவது காது குடுத்து கேட்டியா? என் அண்ணனை உன் கன்ட்ரோல்ல வச்சிட்டு இப்போ என் வாழ்க்கைல நடந்த இந்த முக்கியமான நிகழ்வையும், அது மூலமா கிடைச்ச இந்த உறவுகளையும் நான் ஏத்துக்க முடியாம திணறுறதுக்கு காரணமே நீ தான்” தழுதழுத்த குரலில் கூறினாள்.

“நான் என் வீட்டுல எப்படி இருந்தேனோ, அது மாதிரி தான் இங்கேயும் இருப்பேன். என் மனசு முழுக்க இப்போ குழப்பங்கள் மட்டும் தான் இருக்கு. அதுக்காக, என்னை வைஃப்னு சொல்லிக்கிட்டு ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக்காதே.”என்றாள் கட்டிலை சாடை காட்டியவாறு.

“நான் மட்டும் பேசிட்டு இருக்கேன், எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்?” என்று வினவினாள் முந்தானையின் நுனியை விரல்களில் சுருட்டியவாறே.

“லுக் சஹி, உனக்கு வந்த அம்னீசியா எனக்கு ப்ராப்ளம் இல்ல; ஆனா, உனக்கு அம்னீசியாவோட சேர்த்து என்மேல வெறுப்பும் வந்திருக்கு. அந்த வெறுப்போட, கடமைக்காக அடுத்தவங்க சொல்றதுக்காக இந்த அழகான தாம்பத்திய வாழ்க்கைய தொடருரதுல எனக்கும் விருப்பமில்லை”

“அப்போ எதுக்கு இவ்ளோ ரிஸ்க் எடுத்து உன்னை கல்யாணம் பண்ணினேன்னு யோசிக்குறியா? உன்னை முதன்முதலா பார்த்த நாள்ல இருந்து இப்ப வரைக்கும் உன்னை லவ் பண்ணுறேன், இனியும் பண்ணுவேன்;யூ ஆர் மைன்; அதனால நீ எப்பவும் என்னோட வேவ்லென்த்க்குள்ள தான் இருக்கனும்”என்றவனை ‘இவன் லூஸா’என்பதை போல் பார்த்தவளது கன்னங்களை தன் கைகளில் தாங்கியவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு,

“சஹி பேபி, தாம்பத்தியம் ஒரு அழகான நிகழ்வு; அதுக்கு கடமை வேண்டாம், காதல் தான் வேணும்;இப்போ உன் மைண்ட்ல, நான் உன் காதலனாவோ, கணவனாவோ, ஏன் ஒரு மனுசனா கூட இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியுது. விருப்பமில்லாத ஒருத்தியை பார்வையால கூட சீண்டுறது எனக்கு பிடிக்காது:என்றவன் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றி,

“இப்போ சொல்றேன் சஹானா நல்லா கேட்டுக்கோ, ஒரு மனைவியா எனக்கு நீ செய்ய வேண்டிய சில விஷயங்களை கண்டிப்பா நீ செய்யனும். ஆனா, உன் விருப்பமில்லாம இந்த தாம்பத்தியத்துக்கான முதல் படியை நான் கண்டிப்பா எடுத்து வைக்கமாட்டேன்” என்றான் உறுதியாக.

அவளோ அவனை ஆச்சரியத்தில் பார்க்க,சற்று நேரம் அங்கே அமைதி மட்டுமே ஆட்சி செய்தது.

“என்ன ஆச்சரியமா பாக்குற? எனக்கும் தெரியும், நானும் உணர்ச்சியுள்ள ஒரு சாதாரண மனுசன் தான்; ஆனா, எனக்கு என் காதல் மேல நம்பிக்கையிருக்கு” என்றவன், சற்று முன் சஹானா பார்த்துக் கொண்டிருந்த புகைப்படத்தை கைக்காட்டியவன்,

“அதோ, அந்த போட்டோ இருக்குற மாதிரி ஒரு காதல் பார்வையை இப்போ உன்னால பார்க்க முடியுமா?” கண்களை ஆழ்ந்து நோக்கி கேட்டவன்,

“எனக்கு மட்டுமே உரிமையான அப்படி ஒரு காதல் பார்வையை என்னைக்கு உன் கண்ணுல நான் பார்க்குறேனோ அன்னைக்கு நான் உன்னை முழுமனசோட எடுத்துப்பேன், அதுக்கு உன் பெர்மிஸன் கூட எனக்கு தேவையிருக்காது” என்று ஆழ்ந்து கூற,

அவனை சீண்டிப் பார்க்கும் எண்ணம் எழ, “ஒருவேளை அப்படி ஒரு சிச்சுவேஸன் அமையலன்னா...?” கேட்டாள் சஹானா.

“கண்டிப்பா வரும், இப்போ வேணும்னா ஒரு டிரைல் பார்க்கலாமா?”என்று கண்ணடித்தவன், சட்டென்று அவள்புறமாக திரும்ப, அதில் மிரண்டு விழித்தவளை பார்த்து சிரித்துக்கொண்டே,

“அதெல்லாம் தானா நடக்கும், இப்போ நீ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து தூங்கு; உன்னோட டிரஸ் எல்லாம் அங்க இருக்கு”என்று உடைமாற்றும் அறையை காண்பித்தவன் மடிக்கனிணியை எடுத்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.

******

ஷ்யாமின் அறையில் நுழைந்த மிதுனாவிற்கோ அதற்கு மேல் கால்கள் எட்டவில்லை. உள்ளே நுழைந்தவள் கூச்சத்தில் கதவின் அருகிலேயே நின்றுவிட்டாள். அவளுக்கு நேரே இருந்த சாய்விருக்கையில் அமர்ந்திருந்த ஷ்யாம் அவளை தலை முதல் கால் வரை அணு அணுவாய் ரசித்துப் பார்க்க, அவனது துளைக்கும் பார்வையில் முன்னேறவும் முடியாமல், திரும்பவும் முடியாமல் அங்கேயே நின்றுவிட்டாள் மிதுனா.

அவளை நோக்கி நடையிட்டவன், “என்ன மிது, இங்கேயே நின்னுட்ட?வா”என்று கதவை பூட்டிவிட்டு அவளை உள்ளே அழைத்துச் சென்று படுக்கையில் அமர வைத்தான்.

அவளோ நாணத்தில் நெழிய, அவனோ அவளையே பார்த்தபடி இருந்தான். பால் தம்ளரை அவனிடம் நீட்டிய மிதுனா,

“குடுக்க சொன்னாங்க..”என்றாள்.

“எனக்கு மில்க் பிடிக்காது, நீயே குடி”நகர முயல,

“இல்ல, இது சம்பிரதாயம்; நீங்க கொஞ்சம் குடிச்சுட்டு குடுங்க” மறுபடியும் அவன் புறம் நீட்ட,

“ஓ…” ராகமிட்டு வாங்கியவன், “கீழ எல்லாரும் இதான் சொல்லி அனுப்புனாங்களா? வேற என்ன சொன்னாங்க?” பாதி அருந்திய தம்ப்ளரை அவளிடம் நீட்டினான்.

“அ..அது…” அவள் தந்தியடிக்க,

“குடிச்சிட்டு, சொல்லு”

குடித்தவள், “ச..சந்தோஷமா இருக்கங்கன்னு சொன்னாங்க” நாணத்தில் கவிழ்ந்த தலையுடன் கூற, அவள் நெருக்கமும், அவள் சூடிய மல்லிகையின் மணமும் அவனை சூடேற்ற,

“ஓகே, எனக்கு வொர்க் இருக்கு; நீ தூங்கு”என்று திரும்பியவனை விழிவிரித்துப் பார்க்க, அவனோ அவளது பார்வையை உணர்ந்தாலும் உப்பரிகையில் போய் நின்று கொண்டான்.

அவன் பின்னூடே சென்றவள், “மாது, என் மேல உங்களுக்கு ஏதும் கோபமா?”என்றாள் வேக வேகமாக.

அவளது ‘மாது’என்ற விழிப்பில் கோபத்தை சற்று தணித்தவன், “பேசாம போய் படு மிதுனா” என்றான்.

“ப்ளீஸ் மாது, என்கிட்ட பேசுங்க, உங்களோட அவாய்டன்ஸ் என்னை ரொம்ப ஹர்ட் பண்ணுது” என்று கூற, அவனோ நம்பாத பார்வையை அவள் மீது வீச,

“என்ன சொன்ன,என்னோட செயல் உன்னை ஹர்ட் பண்ணுச்சா? அப்போ நீ பண்ணுனத என்னன்னு சொல்லுவ? அது சரி, நீ லவ் பண்ணனும்னா அதுக்கு ‘ஸ்டேட்டஸ்’ முக்கியம்ல?” என்று நக்கல் தொனியில் கேட்டவன் அறையின் உள்ளே சென்றுவிட்டான்.

“உன் கேரக்டரை வச்சு தான்டி உன்னை லவ் பண்ணுனேன்; எனக்கு தேவை உன்னோட மனசும், உன்னோட சம்மதமும் தான். அதுக்காக தான் அன்னைக்கு அவ்ளோ பேசுனேன். புரிஞ்சிக்கிட்டியா நீ? தகுதி, ஸ்டேட்டஸ்னு அத மட்டும் தான சொன்ன?” கத்தியவன் மிதுனா பேச வந்த எதையுமே காதில் ஏற்கவில்லை.

“அன்னைக்கு மட்டும் உனக்கு சம்மதம்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா இன்னைக்கு இந்த நேரம் உன்கிட்ட இப்படி நிதானம் இல்லாம நான் கத்திட்டு இருக்கமாட்டேன்” என்று பற்களைக் கடித்துக் கொண்டு பேச,

“மாது, நான் சொல்லவர்றதை கொஞ்சம் கேளுங்க” அவள் கெஞ்ச,

“என்ன சொல்லப்போற? எனக்கு என் குடும்பம் தான் முக்கியம், என் வீட்டுல காதல்னா பிடிக்காது, இதானா?” என்று எகிற,

“எங்க வீட்டு சிச்சுவேசன் அப்படி, அதான் அன்னைக்கு அப்படி பேசிட்டேன். சாரி” வருந்த,

“நான் என்ன உன்னை உன் வீட்ட விட்டுட்டு என்கூட ஓடிவானு கூப்பிட்டேனா,இல்ல எனக்கு மட்டும் குடும்பம் இல்லையா என்ன?” என்று கேட்க, சற்று முன்னர் நாணம் சுமந்த அவளது விழிகளில் இப்போது கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

அவளது கண்ணீரை பார்க்க பிடிக்காதவன் அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு,

“அன்னைக்கு உன்கிட்ட கேட்டது உன்னோட சம்மதம் மட்டும் தான்; நீ அன்னைக்கு சரின்னு சொன்னா கூட உன்னோட ‘செல்ஃப்-எஸ்டீம் (self-Esteem)–க்கு முக்கியத்துவம் குடுத்து உன் வீட்டுல முறைப்படி பேசியிருப்பேன். இப்படி சானு வச்சு, உன் அண்ணனை பிடிச்சு கேம் பண்ணியிருக்கமாட்டேன்” என்றவனை விழிவிரித்து மிதுனா பார்க்க,

“உன்கிட்ட நான் எதிர்பார்த்தது காதல் தான்; அது நான் உன்கிட்ட கேட்ட அன்னைக்கு கிடைக்கல; உன் குடும்பத்துக்காக என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச; திரும்பவும் லூஸு மாதிரி, என்கேஜ்மெண்ட் அன்னைக்கும் உன் கண்ணுல அந்த காதலை தான் தேடினேன். எனக்குரிய எந்த வித எதிர்பார்ப்பும், தேடலும் இல்லாத ஒரு அலங்கார பொம்மை மாதிரி இருந்த உன்னை பார்த்ததுமே நான் தோத்துட்டேன்டி” என்றான் விரக்தியில்.

“அதுக்கப்புறமும், நீ என்னை தேடுன தான்; இல்லன்னு சொல்லல, உன்ன காதலிச்ச ஷ்யாம இல்ல, உன் ஃபியான்ஸி ஷ்யாம் மாதேஷை. என்னால அதைத்தான் கொஞ்சம் கூட ஏத்துக்க முடியலைடி இப்போ வரைக்கும்” என்றவன்,

“நான் உன்கிட்ட காதலை எதிர்ப்பார்த்தேன்; இப்போ வரை எதிர்பார்த்துட்டு தான் இருக்கேன். மனைவிங்கிற உரிமையை உனக்கு நான் குடுத்துட்டாலும், என் மனசு இன்னும் உன்கிட்ட இருந்து எதையோ எதிர்பார்க்குது; அது உனக்கு புரியுறப்போ, கண்டிப்பா நம்ம வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு நாம முன்னேறியிருப்போம்” என்றவன்,

“அதுவரைக்கும் எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்; நான் உன்னை அவாய்டு பண்ணுறேன்னு மட்டும் நினைக்காத, சாரி”என்று அவன் கூற,

“நான் என்ன சொல்ல வர்றேன்னு கொஞ்சம் கேளுங்களேன்”என்று அவள் கூற,

அவளை பேச விடாமல் “இந்த பெட்லயே நீயும் படுத்துக்கலாம், குட் நைட்”என்று பேச்சை கத்தரித்துவிட்டு அவளுக்கு முதுகுக் காட்டி படுத்துக்கொண்டான்.



நினைவுகள் தொடரும்...!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-29 ஐ உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!

ஜெஃப்ரி....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-30
25170


காலையில் தான் எப்போதும் விழிக்கும் நேரம் தாண்டி கண்விழித்த அஜய், ஏதோ பாரம் அழுத்துவதை உணர்ந்தான், சுமையாக அல்ல; சுகமாக; தலையை நிமிர்த்தியவன் கண்டது தன் நெஞ்சில் தலை வைத்து, உடல் முழுவதையும் தன்னை அணைத்தபடி தலையணையாய் தன்னை கட்டிக்கொண்டு உறங்கும் சஹானாவைத் தான்.

'இப்பிரச்சனையிலிருந்து அவள் மீளும் வரை கத்திருக்கலாம்’ என்று நினைத்திருந்தவனுக்கோ, அவளது இந்த நெருக்கமும், இப்போது அவள் தன் மனைவி என்ற எண்ணமுமே தலைத்தூக்க அவர்களது வாழ்வை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல உந்தியது; வெகு இயல்பாய் அவளது கன்னத்தில் இதழ் பதிக்க, அவளோ தூக்கத்திலேயே இன்னும் அவனை நெருங்கிப் படுக்க, இயல்பாகவே அவளருகே சுயத்தை இழக்கும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வெகுவாகப் போராடினான்.


‘சோதுக்குறாளே’என்று எண்ணியவன், அவளை எழுப்பினான். அவளோ இன்னும் தூக்கத்திலேயே அவள் முகத்தை அவன் நெஞ்சில் தேய்த்தபடி தூக்கத்தை தொடர,

“கியூட்டி பை, டைம் ஆறாகிடுச்சு; இன்னும் கும்பகர்ணி மாதிரி தூங்குறத பாரு; இந்நேரம் எல்லாரும் ஹால்ல வட்ட மேஜை மாநாடு வேற போட்டிருப்பாங்களே; இவ வேற இப்போதைக்கு எழும்ப மாட்டா போல”தனக்குள் புலம்பியவன்,

‘இப்படி பொலம்புனா வேலைக்காகாது’என்றவன், அவளை இன்னும் நெருங்கிப் படுத்து அவளை இறுக்கிக் கொண்டான்.

“சஹி பேபி…..” என்று மீசையினால் அவள் காதில் முத்தமிட,

“ஹ்ம்ம்ம்..” அவளும் உறக்கத்திலேயே ராகமிட,

“நேத்து எதுவும் வேண்டாம்ன்னு அந்த டிராமா போட்டுட்டு, இப்போ இப்படி கட்டிட்டு படுத்தா, மாமாக்கு எப்படி எழும்ப மனசு வரும்” என்று அவள் காதில் மேலும் குறுகுறுப்பூட்டினான்.

அதில் சற்று உறக்கம் கலைந்தவள்,

“எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல, ஏற்கனவே ஃபர்ஸ்ட் நைட் மிஸ்ஸான கவலைல இருந்தேன், இன்னும் கொஞ்ச நேராம் போச்சுன்னா ஃபர்ஸ்ட் மார்னிங்க சிறப்பா செலிப்ரேட் பண்ணிரலாம்” என்று கூற, அவ்வளவு தான் அடித்து பிடித்துக்கொண்டு எழுந்தாள் சஹானா. எழுந்த வேகத்தில் உடை ஆய்வையும் கவனிக்கத் தவறவில்லை.

அவள் செய்கையில் சற்று கோபம் கொண்டவன், “என் மேல அவ்ளோ நம்பிக்கை”என்று குத்தலாக கூறியவன் குளியலறையில் புகுந்து சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன்,

“குளிச்சிட்டு கீழ போ, ஆல்ரெடி டைமாகிட்டு” என்று ஒரு துண்டை தோள் மேல் போட்டுக்கொண்டு வெளியேற,

“நான் குளிச்சிட்டு வர்றேன், சேர்ந்தே கீழ போகலாம்”என்று அவசரமாக சஹானா கூற,

“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல; நான் ஒண்ணும் கீழ போகல, ஃபிட்னஸ் ரூம் போறேன்; ரெடியாகிட்டு கூப்பிடு, வர்றேன்” என்று சலித்தபடி கூறிவிட்டு வெளியேறினான்.

***

ஷ்யாமின் அறையிலோ, திறந்திருந்த உப்பரிகையின் சூரிய வெளிச்சத்தில் கண் விழித்த ஷ்யாம் அறையில் மிதுனா இல்லாமலிருப்பதைக் கண்டு, ‘எங்க போனா? நேத்து கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டோமோ?’ என்று தனக்குள் கேள்விகேட்டபடியே எழுந்து சென்று சுத்தம் செய்து வந்தான். அப்போது திறந்திருந்த கதவிடுக்கின் வழியே அஜய் கடந்து செல்வது தெரிய, இவனும் உடற்பயிற்சி அறைக்குச் சென்றான்.

‘ஸ்டிரென்த் எகியூப்மெண்டில்’ உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த அஜய்யிடம்,

“என்ன அஜய், ரொம்ப டயர்டா தெரியுற? நேத்து தரமான சம்பவமா?”என்று ‘ஹாக் ஸ்கவுட்’ எந்திரத்தில் அமர்ந்தான்.

“என்னடா நக்கலா?நான் தான் உன்கிட்ட கேட்கனும்னு நினைச்சேன், நீ என்கிட்ட கேக்குற பார்த்தியா?”என்று கூற, அங்கே சில நொடிகள் மௌனமே ஆட்சி செய்தது.

“ஷ்யாம், மிதுனா மேல உனக்கு ஏதோ கோபம் இருக்குன்னு நினைக்குறேன். அவ வளர்ந்த சிச்சுவேசன் எல்லாமே வேற; அவள ஹர்ட் பண்ணாம அவக்கூட மனசு விட்டு பேசுடா; எல்லாம் சரி ஆகும்” என்றவன் தொடர்ந்து அதைப்பற்றி பேசாமல் வேறு பேச்சிற்குத் தாவினான். உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு அஜய் அறைக்குச் சென்று குளித்துவிட்டு சஹானாவுடன் கீழேச் சென்றான்.

கீழே வந்த ஷ்யாமின் கண்களோ மிதுனாவைத் தேட, அவளோ அவனது கண்ணிலே படவில்லை.

“அம்மா, காஃபி”என்று ஷ்யாம் இரண்டாம் முறையாய் கத்த,

“இந்தாண்ணா...”என்று யாழினி காபியை நீட்ட, அவளை முறைத்தவாறே பெற்றுக்கொள்ள,

“ஏன்டா, மிதுனாவ கூப்பிடனும்னா, அவ பேர சொல்லியே கூப்பிட்டுருக்கலாம்ல, இப்படி ரெண்டாவது காஃபி குடிக்கனுமா?”என்று ராகுலின் சீண்டலில் முறைத்தவாறே கஷ்டப்பட்டு காப்பியை உள்ளே தள்ளினான் ஷ்யாம்.

“பாத்துடா, நேத்து நீ பேசி வச்சதோட எஃபெக்ட் ஹால்ஃப் ஹவர்ல செகண்ட் காஃபி போல. பேசாம கால்ல விழுந்திரு”என்று அஜய் ஷ்யாமிடம் ரகசியமாய் கூற,

"அப்படின்னு சொல்றியா?" என்று ஷ்யாமும் கேட்க,

"பொண்டாட்டி கால்ல விழுறது தப்பே இல்லடா, வேணும்னா அண்ணாகிட்ட கேட்டுப்பாரு" என்று ராகுலைக் கைக் காட்ட, ஷ்யாமும் ராகுலை நோக்க,

"உனக்கு ஏன்டா? நல்லா தான போய்ட்டு இருக்கு. என்னை எதுக்குடா இழுக்குற? கொஞ்சம் அடக்கி வாசிங்கடா." என்று தம்பிகளை அடக்கியவன், மனைவி இருக்கிறாளா என்று நோட்டமிட்டவாறு வழக்கம் போல் நாளிதழில் மூழ்க, அதில் புன்னகைத்தவாறே,

“கோவிலுக்கு போகனும்னு சொன்னீங்கமா. எத்தனை மணிக்கு?”என்று தன் தாயிடம் கேட்டான் அஜய்.

“ஆமாடா, சாப்பிட்டு நீங்க நாலு பேரும் போய்ட்டு வாங்க”என்று ஷ்யாமிற்கு வாய்ப்பு வழங்கினார் ராகிணி.

அங்கே அனைவரும் கேட்ட கேள்வியில் சஹானா ஒரு வழியாகிவிட, அனைவரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு நால்வரும் கோவிலுக்குச் சென்றனர். சஹானாவோ, மிதுனாவின் கைகளை பற்றிக் கொண்டே அவளுடன் பேசிக்கொண்டு வர ஷ்யாமின் பாடு தான் திண்டாட்டமானது.

கோவிலில் நுழையும் போது மிதுனாவுடன் நுழைந்த சஹானாவின் கைகளைப் பற்றி இழுத்த அஜய்,

“மிதுனா, நீ கொஞ்சம் முன்னாடி போறியா?”என்று மிதுனாவை உள்ளே அனுப்ப அவளும் சிறு புன்னகையுடன் உள்ளே சென்றாள்.

சஹானாவோ கோபத்துடன், “என்ன பண்ணுறீங்க அஜய்? பப்ளிக்ல ஏன் இப்படி கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம பிஹேவ் பண்ணுறீங்க?”என்று சஹானா அஜய்யிடம் கடிய,

“கையை தானடி பிடிச்சேன்; இப்போ நான் உனக்கு புருஷன்னு அடிக்கடி மறந்துடற. அதை ஞாபகப்படுத்துற மாதிரி ஸ்டிராங்கா எதாவது பண்ணனும் போல; நீயே சொல்லு என்ன பண்ணலாம்?”என்று கேள்வியை தங்கி அவள் இதழ்களில் பார்வையை நிலைக்கவிட, தொடுகையில்லா அவனது செயல்களின் தாக்கத்தினால் சங்கடத்துடன் நெளிய அவளை ரசித்தவன்,

“அப்புறம், என்ன சொன்னீங்க மேடம்? மேனர்ஸ் இல்லாம பிஹேவ் பண்ணுறது யாரு நானா? அப்போ இவ்ளோ நேரம் நீ பண்ணுனது என்னது?”என்று வினவியவன்,

“அவங்களும் புதுசா கல்யாணம் ஆனவங்க தான். அவங்களும் ப்ரைவேசி எக்ஸ்பெக்ட் பண்ணமாட்டாங்களா? எல்லாரும் உன்னையும் என்னையும் மாதிரி சோசியல் டிஸ்டன்ஸ் ஃபாலோவ் பண்ணுவாங்களா?”என்றவனை விழிவிரித்து பார்க்க,

“சும்மா சும்மா இப்படி பார்த்து வைக்காதடி, அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை”என்றவன், “சஹி, மிதுனா இப்போ உன் ஃப்ரெண்ட் மட்டும் இல்ல, ஷ்யாமோட வைஃப்; நீ அவ கூடவே இருந்தா அவ எப்படி ஷ்யாமோகூட இருப்பா?”என்று கூற அப்போது தான் சஹானாவிற்கு புரிந்தது.

அதன் பின்னர் ஷ்யாமின் அருகில் மிதுனா இருந்தாலும் இருவரும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை; வீட்டிற்குச் சென்றதும் ஷ்யாம் கிடைத்த தனிமையில் மிதுனாவிடம்,

“உட்காரு, கொஞ்சம் பேசனும்”என்று கூற, அவளும் அமர்ந்தாள்.

“நேத்து ஏதோ பல நாள் டென்சன மொத்தமா கொட்டிட்டேன்; அவ்ளோ ஹார்ஸா பேசிருக்க கூடாது தான்; ஐயம் சாரி” என்று வருந்த,

“பரவாயில்லை” ஒற்றை வார்த்தையுடன் முடித்துக் கொண்டாள் மிதுனா.

“இன்னமும் அந்த கோபம் கொஞ்சம் இருக்கு தான்; ஏதோ தாலி கட்டிடானேங்குற கடமைக்காக மட்டும் கணவனா என்னை நீ நினைக்குறத என்னால ஏத்துக்க முடியல”என்று ஷ்யாம் அவளது கைகளை சற்று அழுத்திக் கொடுக்க,அவனது கைகளை உதறியவள்,

“நீங்க லவ் பண்ணுனா நானும் உங்கள லவ் பண்ணனும்ங்கிறது எப்படி உங்க எதிர்பார்ப்போ, அது மாதிரி தான் எனக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்னு நீங்க புரிஞ்சிக்கிட்டீங்களா?” என்று கண்களில் கண்ணீருடன் கேட்க ஷ்யாமோ பதறி போனான்.

“மிது, வாட் டு யூ மீன்?” என்று பதற,

“லுக் ஷ்யாம், நீங்க வளர்ந்த சூழல் அப்படி, என்னை லவ் பண்ணுனீங்க, உங்க ஃபேமிலில எனக்கு இந்த பொண்ணு வேணும்னு கேட்டு என்னை கல்யாணம் பண்ணி இப்போ உங்க வைஃபா உங்க பக்கத்துல இருக்கேன்.. ஆனா நான் வளார்ந்த சூழல் அப்படி இல்ல”என்றவள்,

“சின்ன வயசுலேயே அப்பா இறந்துட்டாரு. வேலைக்கு போய் எங்க மூணு பேரையும் படிக்க வச்ச அம்மாவ பார்த்தே வளர்ந்தோம். படிச்சுட்டே பார்ட்-டைம் வேலைப் பார்த்து படிக்க வச்சான்; ஒரு டிரஸ் எடுத்தா கூட எங்கம்மா வாங்கித் தர்றத தான் போடுவோமே தவிர நாங்களா போய் பர்சேஸ் கூட பண்ணுனதில்ல, அதுவும் அந்த தீபாவளிக்கு முந்தினா நாள் தான் எங்க கைக்கு வரும்; இதெல்லாம் பார்த்து வளர்ந்த எனக்குள்ள எப்படி காதல் வரும்னு நீங்க நம்பலாம்?” என்று எகிறியவள்,

“அப்படியே வந்தாலும், என்னால நான் பிஸ்னஸ்மேன் ஷ்யாமை லவ் பண்ணுறேன், எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு எங்க வீட்டுல என்னால கேட்க முடியுமா?” என்க, ஷ்யாம் ஏதோ கூற வர அவனைத் தடுத்தவள்,

“என்ன சொன்னீங்க, என்கிட்ட உன் விருப்பம் மட்டும் சொன்னா நானே பார்த்திருப்பேனேன்னு, அத்தைக்கும், மாமாக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம். அதனால பிரச்சனை இல்லாம முடிஞ்சிட்டு. இல்லன்னா என்ன நடந்திருக்கும்ன்னு யோசிச்சு பார்த்தீங்களா?” என்று மிதுனா கேட்க அவன் தடுமாறித்தான் போனான்.

“சாரி மிது, இப்படி ஒரு ஆங்கில்ல நான் யோசிக்கவே இல்ல”என்று கூற,

“அதுக்காக தான் அன்னைக்கு வேணும்னே ‘ஸ்டேட்டஸ்’ பத்தி பேசுனேன்; அப்படியாவது விட்டுரமாட்டீங்களான்னு” கண்ணீருடன் கூறியவளை அதிர்ந்து பார்க்க,

“முதலும் கடைசியுமா இப்போவே பேசிடுறேன் ஷ்யாம், நீங்க என்கிட்ட காதலை சொன்னப்போ எனக்கு உங்க மேல காதல் இல்ல; அன்னைக்கு அஜய்ண்ணா ரூம்ல சண்ட போட்டப்போவும் இல்ல; ஏன், என் அண்ணா உங்க முன்னாடி எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டேன்னு சொல்லும் போதும் எனக்கு உங்க மேல காதல் இல்ல; காதலால நீங்க வருத்தப்பட நான் காரணமாகிட்டேனேன்னு தான் வருத்தம்தான் இருந்துச்சு; நிச்சயத்துக்கு முந்தின நாள், என் அண்ணா என்கிட்ட வந்து மாப்பிள்ளை ஃபோட்டோன்னு உங்க போட்டோவ காட்டினப்போ எனக்குள்ள அப்படியொரு சந்தோஷம் வந்திச்சு; ஆனா அதுவும் காதலில்ல”என்று அவனை தெளிவாகக் குழப்பினாள்.

“உண்மையா சொல்லப்போனா, நான் எனக்கு கடிவாளம் போட்டே வளர்ந்தேன். அதனால தான் நேத்து நீங்க உங்களுக்கு தோணுறப்போ வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு போகலாம்னு சொல்றப்போ கூட கேட்டுட்டு பேசாம இருக்க முடிஞ்சது” என்றாள்.

“அப்போ மிதுனா, இப்போவும் உனக்கு என் மேல காதலில்லையா?”என்று சோர்ந்த முகத்துடன் கேட்க,

“இப்போ என் வாழ்க்கையே நீங்க தான் மாது”என்றவள்,

"காதலிச்சவனை கல்யாணம் பண்னி வாழ்க்கையில சந்தோஷமா இருக்கனும்ன்னு நான் நினைக்கல மாது. எனக்கு உரிமையானவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் அணு அணுவா காதலிக்கனும்னு தான் நினைச்சேன்" என்றவளை ஒற்றை புருவத்தை மேலேற்றி அவன் பார்க்க,

"எஸ், என்கேஜ்மெண்ட்க்கு அப்புறம் நான் உங்கள தேடினது எல்லாம் எனக்கு உரிமையாக போறீங்கங்குற எதிர்பார்ப்புலதான். நே... நேத்து நீங்க அ...அப்படி சொன்னப்போ வந்த ஏமாற்றமும், எனக்கு சொந்தமான பொருளே என்னை தள்ளிவச்ச மாதிரி உள்ளுக்குள்ளே உடைஞ்சி போய்ட்டேன்" என்று அழுதவளை அணைத்துக் கொண்டவன் அவளது முகத்தை கையில் ஏந்தி,

"சாரி ஹனி, அழாதடி. தப்பெல்லாம் என்மேல தான். நான் மேரேஜ்க்கு முன்னாடி உன்கிட்ட பேசியிருக்கணும். மன்னிச்சிரு ஹனி", என்று கண்களில் முத்தமிட, கொண்டவனின் முதல் முத்தத்தில் திளைத்தாள்.

"ஏன் மாது, என்னை நீங்க புரிஞ்சிக்கல? என்கேஜ்மெண்ட்ல இருந்து கல்யாணம் வரை இருந்த இந்த மூணு மாசத்துல உங்கள நான் நினைக்காத நேரமே கிடையாது தெரியுமா? எப்படி நம்ம கல்யாணம் நடக்கும்? உங்களோட உயிர் எப்போ நான் சுமக்குவேன்? யாரை மாதிரி இருக்கும் நம்ம குழந்தைன்ன்னு எனக்குள்ளயே நான் வாழ்ந்திட்டு இருக்கேன். என்னை பத்தி 'ஸ்டேட்டஸ்' தான் தெரியும்ன்னு சொல்லிட்டீங்கல்ல?" அவளது பேச்சில் உற்சாகம் வர, மிதுனா மீண்டும் தேம்ப ஆரம்பிக்க,

'ம்ஹும்ம், இது வேலைக்காகாது' என்று அவளை கையில் ஏந்தியவன் மஞ்சத்தில் இறக்கிவிட்டவன், அவளை நெருங்க,அவளோ வேகவேகமாய் அழுகையை நிறுத்தியவள்,

"என்ன பண்ணுறீங்க? விடுங்க ஷ்யாம்" என்று மிரண்டு போய் கேட்க,

"உன் ஆசையை நிறைவேத்தப்போறேன்" என்று அவளை மீண்டும் நெருங்க,

"எ..என்ன ஆசை?" என்று அவள் பின்னால் நகர,

"உனக்குள்ளேயே வாழ்ந்த்திட்டு இருக்கேன்னு சொன்னியே ஹனி, நான் இங்க இருக்குறப்போ நீ ஏன் உனக்குள்ள வாழணும். வா சேர்ந்தே வாழலாம்" என்று அவளை தன்புறம் இழுக்க,

"அய்யோ மாது, அதுக்காக இப்படி பட்ட பகல்ல இதுலாம் தப்பு, வேண்டாம்" என்று மறுக்க,

"அட போடி இவளே, இதுக்கு எதுக்கு நேரமும், காலமும். ஐ நீட் யூ ரைட் நவ்" என்று அவள் மீது படர்ந்தான்.

"மாது, இப்போ வேணா... நைட்....." அதன்பின்னர் அவளை பேச அனுமதிக்காமல் தன் வேலையில் கவனமானான். காதலில்லாமல் வாழ்க்கையில்லை என்றவனை, நீயே என் வாழ்க்கை என்று தன்னை விரும்பியே கொண்டவனிடத்தில் ஒப்படைத்தாள் மிதுனா. அங்கே ஒரு அழகான தாம்பத்தியம் அரங்கேறியது....!

"ஹனி..."

"ம்ம்ம்ம்..."

"எனக்கு உன்னை மாதிரியே ஒரு பெண் குழந்தைதான் வேணும், இப்படி சப்பியா கன்னத்தோட, குண்டு கண்ணோட...." என்று அவளது கன்னத்தை கடித்து வைக்க,

"ஆ..." என்று அலறியவள் சிவந்த முகத்துடன்,

"ஏன் பையன் வந்தா அக்செப்ட் பண்ணிக்கமாட்டீங்களா?" என்று அவனது நெஞ்சில் கோலமிட்டவாறே கேட்க,

"அதெல்லாம் ஏத்துக்குவேன், ஆனா என் பொண்ணு வர்ற வரைக்கும் விடாம கஜினி முகம்மதா படையெடுத்துட்டே இருப்பேன்" என்று கூறியதோடு வேறு என்ன கூறியிருப்பானோ, அவனது வாயினை அடைத்துக்கொண்டாள் தன் இதழ் கொண்டு....!

மாலையில் இருவரும் சிரித்தவாறே இணைந்து கீழே இறங்க இருவரும் முகத்திலும் குடிகொண்டிருந்த மகிழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு வெகு திருப்தி;

“என்ன மிது, ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்க? ஈவினிங் குளிச்சியா?” என்று திவ்யாவும்,

“ஃபேஸ்ல கூட ஒரு தேஜஸ் தெரியுதே”என்று பூஜாவும் கேட்டு வைக்க, மிதுனாவிற்கோ அவர்களது கேள்வியில் தானாகவே முகம் சிவந்தத்து; சஹானாவுக்கு எதுவும் புரியாவிட்டாலும் மிதுனாவின் முகத்தில் காலையில் இல்லாத மகிழ்ச்சியை தற்போது திருப்தியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

முகப்பறையில் ஆண்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, ஷ்யாமோ நிமிடத்திற்கொரு முறை மிதுனாவின் பெயரை ஏலம் விட்டுக் கொண்டிருந்தான்.

“மிது, நீட் டீ”என்று கூவ, அஜய்யின் தம்பி அபிஜித்தோ,

“அண்ணிய கரெக்ட் பண்ணிட்டியாண்ணா?”என்று கேட்டு வைக்க, அவனது வயிற்றில் குத்திய ஷ்யாமோ,

“அண்ணன்கிட்ட பேசுற மாதிரியாடா பேசுற நீ?” என்க,

“எப்படியோ, ஒரு வழியா அமேசான் காட்டுக்கே போய் உன் டார்லிங்க கூட்டிட்டு வந்திட்ட, என்ஜாய்ண்ணா” என்று அபி கூற,அங்கே ஒரு மகிழ்ச்சியான அலைகள் பரவியது.

இரவு நேரம் எட்டைக் கடக்கும் போது, பணியை முடித்துவிட்டு பூஜாவை அழைத்து செல்வதற்காக வந்த அர்ஜூன் அனைவரிடம் பேசிவிட்டு, அஜய்யிடன் தோட்டத்திற்கு வருமாரு சாடைக் காட்டிவிட்டு நகர, அதை கவனித்து அவனும் வெளியேற, இதை கண்டும் காணாமலும் பார்த்திருந்தாள் சஹானா.

பின்னூடே சென்று அவர்களது பேச்சுவார்த்தையை கவனிக்க முனைந்த சஹானாவை தடுத்தது அவளது அலைபேசி தாயின் அழைப்புடன். தாயிடம் பேசிவிட்டு வருவதற்குள் அர்ஜூன் பூஜாவுடன் கிளம்ப எத்தனிக்க, சஹானா ‘வட போச்சே’ தொனியில் அஜய்யை பார்க்க, அவனோ ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

இரவு உணவிற்குப் பின், அனைவரும் தங்களது அறைகளில் தஞ்சம் புக, அறையின் உப்பரிகையில் ஏதோ யோசனையிலிருந்த அஜய்யின் சிந்தனையை தடை செய்தது சஹானாவின் காலடியோசை.

‘என்ன?’என்பது போல் அஜய் திரும்பி மனைவியை ஏறிட, ‘வாயத் திறந்து பேசினா என்ன முத்தா உதிர்ந்திரும்’ என்று மனதிற்குள் அஜய்யை சஹானா தாளிக்க, அவளை கூர்ந்து நோக்கியவன் மறுபடியும் அறைக்குள் சென்று படுக்கையில் அமர்ந்து கொண்டு,

“சொல்லு சஹி பேபி, என்ன பேசனும்?” என்று வினவ,

‘சஹி பேபி’என்ற விளிப்பில் ராமின் நினைவு வர, அதனால் எழுந்த கோபத்தில்,

“ஃபர்ஸ்ட் இப்படி சஹி பேபின்னு கூப்பிடுறத நிறுத்துறீங்களா? என் நேம் சஹானா; கால் மீ அஸ் சஹானா” கிட்டத்தட்ட கத்தினாள்.

“ரிலாக்ஸ், ரிலாக்ஸ்…அப்போ உன்ன சானு, சஹா, அம்முன்னு கூப்பிடுறவங்கள எல்லாம் நிறுத்த சொல்லு முதல்ல; அப்புறம் நான் நிறுத்துறேன். இப்போ சொல்ல வந்ததை சொல்லு, இல்லன்னா தூங்கு”

“அ..அது அர்ஜூண்ணா கூட தோட்டத்துல வச்சு என்ன பேசுனீங்க?” ஒருவழியாக வார்த்தைகளைக் கோர்த்து கேட்டுவிட்டாள்.

“அப்போ நான் அர்ஜூனோட தனியா போய் பேசுறத கூட வாட்ச் பண்ணிட்டே இருந்திருக்க; ஆம் சோ ஹாப்பி பேபி”என்று அவளது நாடியை பிடித்து கொஞ்ச, அவனது கையை தட்டிவிட்டவள்,

“என்ன பேசுனீங்கன்னு கேட்டேன்”

“நாங்க ஆயிரம் பேசிக்குவோம், அதெதுக்கு உனக்கு?” என்றான் அவனும் விடாமல்.

“அப்போ, நான் அதெல்லாம் தெரிஞ்சிக்க கூடாதா?” என்று கோபத்தில் சஹானா கேட்க,

“நான் எப்போ அப்படி சொன்னேன்? அது எதுக்கு நீ பட்டிகுலரா கேக்குறன்னு கேட்டேன்”என்று அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“ஓகே, நாம ஹனிமூனுக்கு எங்கே போறோம்னு கேட்டான், அதன் யோசிச்சிட்டு இருக்கேன். நீயே சொல்லு பேபி, எங்க போகலாம்? சுவிஸ்ஸா? குலுமணாலியா?” என்று அவளை சீண்ட,

“விளையாடாதீங்க. அதுக்காக நீங்க இவ்ளோ சீரியஸா யோசிச்சுட்டு இருக்கமாட்டீங்க; சொல்லுங்க, அர்ஜூண்ணா உங்ககிட்ட என்ன பேசுனாங்க?” என்று மறுபடியும் தன் கேள்வியை கோபத்துடன் முன் வைக்க,

“சில் சஹி, பரவாயில்ல; நான் எப்போ, எப்படி யோசிக்குறேங்குற அளவுக்கு என்னை பத்தி தெரிஞ்சு வச்சிருக்க; ஆமா, ஒரு கேஸ் விஷயமா பேசுனோம்”என்றான் உண்மையை மறைக்காமல்.

“என்ன கேஸ்?” அவள் கேட்க,

“அது நீ அவன்கிட்ட கேட்கணும்; அவன் அவனோட கேஸ் டீடெயில்ஸ் பத்தி சம்பந்தவட்டவங்கள தவிர யார்கிட்டேயும், ஏன் பூஜாக்கிட்ட கூட ஷேர் பண்ணமாட்டான். அது அவனோட ப்ரொஃபெஸ்னல் எதிக்ஸ்” என்று முடித்துக்கொண்டான்.

“சம்பந்தபட்டவங்கன்னு உங்ககிட்ட பேசுறாங்க, அப்போ நீங்க சம்பந்தபட்டிருக்ககீங்க. நீங்க என்கிட்ட சொல்லி தான் ஆகணும் என்ன பேசுனீஙகன்னு”என்று அதிகாரத்துடன் வினவிய சஹானாவை பார்த்தவன்,

“நீ மட்டும் இது மாதிரி என்கிட்ட எல்லாத்தையும் சொல்றியா? உனக்கு எப்போ எல்லாத்தையும் என்கிட்ட சொல்லனும்னு தோணுதோ அன்னைக்கு நானும் உன்கிட்ட ஷேர் பண்ணிக்குறேன்” என்று அந்த ‘எல்லாத்தையு’மில் சற்று அழுத்தம் கொடுத்து கூறிவிட்டு திரும்ப,அவளோ சிறிது சிந்தித்தவள் பின் ஒரு முடிவுடன்,

“அஜய், நான் உங்ககிட்ட வேணும்னு கேட்கிறேன். எனக்காக செய்வீங்களா?” என்று தனது அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்தாள்.

‘விடமாட்டாளே’ என்று சலித்தவன், “என்னன்னு சொல்லு சஹி, என்னால முடிஞ்சா கண்டிப்பா பண்ணுவேன், அதுக்காக என்ன, ஏதுன்னு தெரியாம சும்மா கண்மூடித்தனமாலாம் வாக்கு கொடுக்கமாட்டேன்” என்று கூற,

“நீங்க இப்போவே அர்ஜூண்ணாகிட்ட பேசி ஸ்ரீராம் மேல குடுத்த கேஸ வாபஸ் வாங்கணும்”என்று கூற,

“நான் அர்ஜூண்கிட்ட கேஸ் குடுத்தேன்னு உனக்கு எப்படி தெரியும்?” என்று மறுகேள்வி கேட்க,அதில் கடுப்பானவள்,

“சும்மா எதுக்கெடுத்தலும் கொஸ்டீன் கேட்டே பேச்சை மாத்தாதீங்க; இப்போ கேஸ வாபஸ் வாங்க முடியுமா முடியாதா?”என்று கிட்டதட்ட கத்தினாள்.

“சில் சஹானா,வாலிட் ரீசன் இருந்தா கண்டிப்பா வாபஸ் வாங்குறேன்” என்று அஜய் கூற,

“என்ன ரீசன் வேணும் உங்களுக்கு?உங்க ஆஃபிஸ்ல இருந்து எங்க டிரைவர்கூட நான் வீட்டுக்கு போறப்போ எதேர்ச்சையா எதிர்ல வந்த லாரி மேல மோதி ஆக்ஸிடெண்ட் ஆகி, இப்போ எனக்கு அம்னீசியா? நானும் இப்போ உயிரோட தான இருக்கேன். இதுல எங்கயிருந்து வந்தாரு ராம். அவர் தான் உங்க ஆபிஸ வீட்டு ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே வெளியே வந்துட்டாருல்ல? எதுக்கு சம்பந்தமில்லாம அவர்மேல கேஸ் குடுக்கனும்?” என்று கேட்க,

“வாவ், உனக்கு அம்னீசியா கியூர் ஆகிட்டா சஹி?” என்று கேட்டவனை விழிவிரித்து பார்த்த் சஹானா,

“நான் என்ன சொல்றேன், நீ என்ன கேட்குற?”என்று கேட்க,

“என்ன சொன்னா? எதேர்ச்சையா நடந்த ஆக்ஸிடெண்டா? அது சரி, என் வலி உனக்கு எப்படி புரியும்”என்று மூச்சை வெளியேற்றியவன்,

“ஆமா சஹி, உனக்கு ஆக்சிடெண்ட் ஆனதா தான் நாங்க சொல்லியிருக்கோம்,.. இப்போ உனக்கு அம்னீசியா வேற; ஆனா, இதுல உனக்கு நாங்க யாரும் இண்ட்ரோ குடுக்காத கேரெக்டர் எல்லாம் தெரிஞ்சிருக்கு? அதுவும் நாங்க அவனை ஆபிஸ்ல இருந்து வெளியே அனுப்புன வரை.. எப்படி?” என்று அதிரடியாய் அஜய் கேட்க திணறிப் போய் நின்றிருந்தாள் சஹானா....!

நினைவுகள் தொடரும்...!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-30 ஐ உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.



கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!

ஜெஃப்ரி....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு -31

“நாங்க அவனை ஆபிஸ்ல இருந்து வெளியே அனுப்புன வரை உனக்கு எப்படி தெரிஞ்சது?” என்று அதிரடியாய் கேட்ட அஜய்யின் கேள்வியில் திணறிப்போய் சஹானா நின்றது சில நொடிகளே.

“இதுல ‘ராம்’ன்னு ஷார்ட் நேம் வேற?” பொறாமையுணர்வில் அஜய்யிடமிருந்து சூடாகவே வார்த்தைகள் தெறித்தன.

‘தான் ஸ்ரீராமிடம் பேசியது அஜய்க்கும், கார்த்திக்கும் தெரியும்’ என்பதை ஸ்ரீராம் மூலம் உணர்ந்து கொண்ட சஹானா, இனியும் மறைத்து பயனில்லை என்றுணர்ந்து பேசத் தொடங்கினாள்.

“ஆமா, அவர் கால் பண்ணினாரு, அதுக்கு இப்போ என்ன? உனக்கு சப்போர்ட்டுக்கு என் அண்ணா கிடைச்ச மாதிரி அவருக்கு கிடைக்கல, அதுக்கு என்ன வேணாலும் பேசுவியா?” என்று கத்தினாள்.

அவனோ ‘இது என்ன?’என்பது போல் பார்க்க,
“என்ன புரியாத மாதிரி பார்த்தா எல்லாரையும் மாதிரி நானும் உன்னை நம்பிடுவேனா? அவன் என்னை லவ் பண்ணினாங்குற ஒரே காரணத்திற்காக அவன் மேல திருட்டுப்பட்டம் கட்டி ஆஃபிஸ்ல இருந்து வெளியே அனுப்புனது எனக்கு தெரியாதுனு பார்க்குறியா? இல்ல, ராம் உன்கிட்ட வந்து ‘எங்க காதல சேர்த்து வைங்க’னு உன்கிட்ட வந்து கெஞ்சினது எனக்கு எப்படி தெரிஞ்சதுன்னு பார்க்குறியா?”என்று கேட்க,

“என்னடி புதுசா என்னவோலாம் சொல்ற? அவன் அப்படியெல்லாம் சொன்னானா உன்கிட்ட? அவன் ஒண்ணும் உன்னை லவ் பண்ணல. உனக்கு அவனை கண்டாலே பிடிக்காது; எனக்கு பி.ஏவா வொர்க் பண்ணுனான், அதுவும் ஷ்யாம் கேட்டதுக்காக தான் சேர்த்துக்கிட்டேன். அடுத்த கம்பெனிக்கூட சேர்ந்து நிறைய ஊழல் வேற பண்ணி வச்சிருக்கான்; அப்படி தப்பு செஞ்சவனுக்கெல்லாம் என்னால வேலையும் குடுத்து, சம்பளமும் குடுக்குற அளவுக்கு நான் ஒண்ணும் நல்லவன் இல்ல; அது மட்டுமில்லாம நீயும் ஷ்யாம் கூட சேர்ந்து, 'அவன் தப்பு செஞ்சிட்டான் அனுப்பிடனும்னு' சொன்னதால தான் ஆஃபிஸ்ல இருந்து அனுப்பிட்டேன்; அவன் அதுக்கு உன்னை டார்கெட் பண்ணுற அளவுக்கு போவான்னு நான் கொஞ்சம் கூட யோசிக்கல...”என்று பொறுமையை இழுத்துப்பிடித்தவாறு கூற, அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளும் நிலையில் சஹானா இல்லையே...!

“எல்லாத்தையும் பண்ணுனது நீங்க.. நீ ஆசைப்பட்ட மாதிரி தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ல, அப்புறம் எதுக்கு இன்னும் அவனையே விடாம துரத்திட்டு இருக்க? விட்டுரு எல்லாத்தையும் ப்ளீஸ்..”சஹானா கெஞ்ச,

“இன்னும் என்னெல்லாம் சொன்னான் உன்கிட்ட? முதல்ல சொல்லு எல்லாத்தையும்...” என்று உறும, அந்த சத்தம் கொடுத்த பயத்திலேயா, உள் மனதின் உந்துதாலோ ஏதோ ஒன்றின் தாக்கத்தால் முதல் நாள் தாயின் அலைபேசிக்கு ஸ்ரீராமின் அழைப்பு வந்ததிலிருந்து, நேற்று தெரியாத ஒரு அலைபேசிக்கு வந்த அவனது அழைப்பு வரை அனைத்தையும் அவனிடம் கூறினாள்.

“சோ, அவனோட டார்கெட் நீ தான்; இன்னும் விடமாட்டான் போல...?” புருவத்தை நீவியவாறு அவன் கேள்வியெழுப்ப, சஹானாவிற்கு தான் பயம் பற்றிக் கொண்டது.

“இவ்ளோ நடந்திருக்கு, எங்க யாருக்கிட்டேயும், ஏன் உன் அண்ணாகிட்ட கூட சொல்லணும்னு உனக்குத் தோணவே இல்லையா?”என்றவன்,

“சஹானா, ஒரே ஒரு கேள்விக்கு எனக்கு பதில் சொல்லு. அம்னீசியாவோட பாதிப்புலேயும், முகம் தெரியாத எவனோ ஒருத்தன் சொன்னதை நம்ப முடிஞ்ச உன்னால, அந்த நம்பிக்கை எப்படி என்மேல வராம போய்ட்டு? உன்னோட ஒட்டு மொத்த குடும்பமும் என் பேச்சைக் கேட்டு உனக்கு துரோகம் செய்வாங்களா? எப்படிடி உன்னால முடிஞ்சது?” அவன் குரல் இயலாமையுடன் சேர்ந்த வருத்தத்தில் ஒலிக்க,

“அது... எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல; ஆனாலும் இப்போ வர உள்ளுக்குள்ள ஒரு குழப்பம் இருந்துக்கிட்டே தான் இருக்கு” என்றவள் சற்று நிதானித்து சில நிம்மதி மூச்சுகளை வெளியேற்றி,

“உங்கள எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எனக்கும் தெரியல; மே பி அந்த கால் அன்னைக்கு வரல்லைன்னா கூட இவ்வளவு கன்ஃபியூஸ் ஆகிருக்க மாட்டேன். அண்ட், மேரேஜ் விஷயத்தில நீங்க அவசரப்பட்டது எனக்கு பிடிக்கல..." என்றவள் சேலைக்குல் அடைக்கலமாயிருந்த மாங்கல்யத்தை வெளியே எடுத்தவள்,
"பட், என் கழுத்துல இந்த மாங்கல்யம் மட்டும் எப்போவுமே நிலைச்சிருக்கணும்னு நினைக்குறேன்; இந்த சண்ட, கேஸ் இதலாம் வேண்டாம்; எப்போ, என்ன நடக்கும்னு என்னால அதையே யோசிச்சிட்டு இருக்க முடியாது... விட்டுருங்க அஜய், ப்ளீஸ்” என்று அவன் முன் கைக்கூப்ப,

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை, அவனை எப்படி பிடிக்கனும்னு தான் அர்ஜுன்கிட்ட பேசுனேன்; எனக்கு அவன்கிட்ட பேசனும்; அவனோட செயல்களுக்கு விளக்கம் வேணும். அதுக்காக அவனை பிடிக்கணும்னு நினைச்சேன்”என்றவன் அவளை ஆழ்ந்து நோக்கி,

“ஆனா, எப்போ என் வீட்டுக்குள்ளேயும் ஆள் அனுப்பி என் பொண்டாட்டிகிட்ட பேச துணிஞ்சானோ, நீயும் அதை என்கிட்ட மறைக்க நினைச்சியோ, அப்போவே டிசைட் பண்ணிட்டேன்,..” என்று இழுத்தவனை கேள்வியாக சஹானா பார்க்க,

“நீ சொன்ன மாதிரி கேஸை வாபஸ் வாங்கிடுறேன்” என்று முடித்துக்கொண்டான்.

“என்ன அஜய், உண்மையா சொல்றீங்களா? நிஜமாவே வாபஸ் வாங்குறீங்களா?” என்று சந்தேகத்துடன் பார்த்த சஹானாவை வியப்புடன் நோக்கியவன்,

“ஆமா, வாபஸ் வாங்குறேன்” என்றவனை நோக்கி நம்பாத பார்வையை வீசியவளிடம்,

“சோ, என்னை எப்போவுமே நம்பக்கூடாதுன்னு முடிவுல இருக்க... சரி ஓகே. நானும் வாபஸ் வாங்கமாட்டேன்”என்று படுக்கையில் சென்று அமர,

“அய்யோ, அஜய் நான் அப்படி சொல்லல; நீங்க இவ்ளோ சீக்கிரத்துல வாபஸ் வாங்குவீங்கனு நினைக்கல அதான்...” என்று இழுத்தாள்.

தன்னை புரிந்துவைத்திருக்கிறாள் என்று சாரலடித்த தன் மனதினை அடக்கியவன்,
“உன்கிட்ட சிலத தெளிவுபடுத்தனும் சஹானா, உக்காரு”என்றவன்,

“நான் அவன அர்ஜூன்கிட்ட வாட்ச் பண்ண சொன்னது ஒரு சந்தேகத்துல தான்; அது கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாகவும் தான் கம்ப்ளைண்ட் குடுத்தேன், அதுவும் சீக்ரெட்டா தான்.. நம்ம வீட்டுல ராகுல் அண்ணாவ அண்ட் எங்க ஐந்து பேரையும் தவிர வேற யாருக்கும் தெரியாது. இப்ப உனக்கும்...." என்றவன்,

"ஃபர்ஸ்ட் இதுல கார்த்திக்கு சுத்தமா உடன்பாடில்லை; அப்போ கேஸ் வேண்டாம்னு என்னை ரொம்ப ஃபோர்ஸ் பண்ணுனான். ஆனா இப்போ நானே வாபஸ் வாங்குனாலும் கார்த்தி வெளிப்படையாவே கேஸ் குடுப்பான்”என்று அவளை நோக்கி தன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கியவன்,

“அவன் உன்கிட்ட பேசிருக்கான், அதுவும் என்கிட்ட இருந்து உன்னை பிரிக்குறதுக்கு பேசிருக்கான்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் எப்படி அவனை சும்மா சட்டத்தின் முன்னாடி மட்டும் நிறுத்தமுடியும்?? அதுக்கு என் மனசு இடம் கொடுக்குமா? அந்த அளவுக்கு நான் ஒண்ணும் நல்லவன் இல்லையே...” என்று உதட்டை சுழித்தான்.

“இப்போ அவன நான் அர்ஜூன்கிட்ட ஒப்படைச்சா ஈஸியா வெளிய வந்திருவான்; எனக்கு ஆப்போஸிட் கம்பெனியே வெளியே எடுப்பானுங்க இவனை, இவன் தானே அவனுங்களோட கையாள். பட், அவன் எனக்கு பண்ணினது துரோகம்; எனக்கு துரோகம் பண்ணினா மட்டும் என்னால என்னைக்குமே மன்னிக்கவே முடியாது” என்று கைகளால் சுவற்றில் ஓங்கிக் குத்தினான். ஆனால், வலி என்னவோ சஹானாவிற்கே,..!

“என்ன அஜய் இப்படி பண்ணுறீங்க?”என்று பதறியபடி அவனது கையை பிடிக்க, அதனை உதறியவன் அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் சரித்தான். ஆனாலும் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர வெகுவாக போராடினான்.

“எனக்கு இப்போவே அவனை கொல்லனும்ன்னு வெறி வருது; ஆனா, உன்னோட இந்த கலங்கிய முகத்த பார்த்துட்டும் அதை பண்ணுற அளவுக்கு நான் ஒண்ணும் இங்க ஈரம் இல்லாதவன் இல்ல” தன் நெஞ்சை சுட்டிக்காட்டினான்.

“ப்ளீஸ் அஜய், வேணாம். விட்டுருங்க; இந்த கேஸ்லாம் வேண்டாம்; இதனால உங்கள, அண்ணாவ அவன் எதுவும் பண்ணிட்டா.. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு; இந்த பயத்தோட என்னால வாழ முடியாது”என்று கலங்கினாள்.

"எனக்கு எதுவும் ஆகிட்டா நியாயமா நீ சந்தோசம் தானே படனும்.. எதுக்கு இந்த பயம், அழுகை எல்லாம்?" என்று அவளிடம் குத்தலாக கூறியவன்,

“உன்னால ஈஸியா என்னை எதுவும் செய்ய முடியும், ஆனா அவனால என்னை எதையுமே பண்ண முடியாது; அதுனால தான் உன்னை வச்சு என்கிட்ட கேம் விளையாடுறான். ஹிப்போக்கிரைட்.." பற்களை கடித்து துப்பியவாறு பேசியவன்,

"ஓகே, நான் இந்த கேஸை வாபஸ் வாங்குறேன்; ஆனா, அதுக்கு ஒரு கண்டீசன்” அவளது முகத்தை ஆராய்ந்த படி கேட்க,

“எ...என்ன கண்டீசன்?” என்று வினவ,

“இனி அவன் உன்னை காண்டாக்ட் பண்ணினா அடுத்த செகண்ட் நீ அத எனக்கு இன்ஃபார்ம் பண்ணியிருக்கனும்; அவன் சொன்ன எதையும் என்கிட்ட மறைக்கணும்னு நினைக்கக்கூடாது; அப்படி நீ எதையாவது என்கிட்ட மறைக்கணும்னு நினைச்சா, அடுத்த சில மணி நேரத்துல அவன் இருக்கமாட்டான்” என்று கோபத்துடன் கர்ஜித்த அஜய்யை பயம் கலந்த அதிர்ச்சியுடன் பார்க்க,

“எதிரிகள கூட மன்னிச்சிடலாம்.. ஆனா துரோகளை..? நெவர்.. " என்றவன்,

"நான் ராஜா; எனக்கு வெற்றி மட்டுமே வேணும்னு களிப்புல வளரல தான்; ஆனாலும், எனக்கு முன்னாடி வர்ற எதிரிகளையெல்லாம் தோற்கடிச்சிட்டு முன்னேறுரது தான் என் வழக்கம்; அதுக்கு எனக்கு எல்லா விதத்துலயும் ஹெல்ப் பண்ண ஆள் இருக்கு. நீ என்ன சொல்ற?” என்று அவள் முகத்தை ஆழ்ந்து பார்க்க,

“ச...சரி, சரி நான் ஒத்துக்குறேன்” என்றாள் வேகவேகமாக, ஒருநாள் தான் கொடுத்த வாக்கை தானே மீறுவோம் என்றறியாமல்.

“இதை நீ மீறுனா, நானும் உன்கிட்ட குடுத்த வாக்கை மீறிருவேன்” என்றவன் தன் அலைபேசியை எடுத்து அர்ஜூனிற்கு அழைத்து,

“டேய் அர்ஜூன், நான் சொல்ற வரைக்கும் ஸ்ரீராம் கேஸை கொஞ்சம் ஹோல்ட் பண்ணு”

“........”

“நத்திங் டூ வொர்ரிடா. நான் இந்த கேஸ வாபஸ் வாங்கனும்னு உன் தங்கச்சி ஆசைப்படுறா; கெடுப்பானேன்” என்றான் ஓர விழிகளால் அவளை பார்த்துக்கொண்டே,

“......”

“ஓகே, மார்னிங் பேசுறேன்” இணைப்பைத் துண்டித்தவன்,

“இனி எல்லாம் உன் கை வசம் தான்; நானும்... இப்ப இந்த கேஸும்... திங்க் வெல் அண்ட் டிசைட்..”என்றவன் உப்பரிகையில் சென்று நின்று கொண்டான்.

*****

மறுநாள் இருவருக்கும் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அவ்விழா மேடையிலேயெ தன் தங்கை யாழினி-கார்த்திக்கின் நிச்சயதார்த்த விழாவையும் நடத்திவிட வேண்டுமென்று அஜய் உறுதியாகக் கூற, அனைவரும் ஏற்றுக் கொண்டனர்; அனைவரும் எதிர்பார்த்த வரவேற்பு விழா மேடையை முதலில் அலங்கரித்தவர்களோ அஜய்-சஹானா மற்றும் ஷ்யாம்-மிதுனா இணைகள். அதன் பின்னர் யாழினி மற்றும் கார்த்திக்கின் நிச்சயத் தாம்பூலம் பெரியவர்கள் முன்னிலையில் மாற்றிக் கொள்ளப்பட்டு இருவரும் மோதிரமும் மாற்றிக் கொண்டனர்.

கண்களில் காதலைத் தேக்கி, கார்த்திக் யாழினியின் கைகளை பற்றியவாறு மோதிரத்தை அணிவிக்க, பெண்ணவளோ நாணத்தில் முகம் செம்மையுற தலையைத் தாழ்த்திக் கொள்ள,
“பார்ரா, என் தங்கச்சிக்கு வெக்கமெல்லாம் வருது. கார்த்திண்ணா, ஸாரி மாம்ஸ், இப்போவே ஃபோட்டோ எடுத்து வச்சிக்கோங்க. இனி இந்த ஃபேஸ பார்க்க கிடைக்குமோ கிடைக்காதோ....” என்று அஜய்யின் தம்பி அபிஜித் யாழினியை கலாய்க்க, அனைவருக்கும் ஒரு திருப்தி நிலவியது.

இந்நிகழ்வை ஒரு ஜோடி விழிகள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. அவ்விழிகளுக்கு சொந்தக்காரியை நெருங்கிய ஆதி,
“என்ன ரீனு, இந்த மாதிரி ஒரு அழகான ஒரு நிகழ்வு உனக்கு நடக்கனும்னு ஆசைப்படுறல்ல” என்று வினவ, அவளோ அவனை ஆச்சரியத்துடன் விழிவிரித்துப் பார்க்க, அவனது ஒற்றை புருவ ஏற்றத்தில் கலைந்து, ‘ஆம்’ என தலையாட்டினாள்.

“டோன்ட் வொர்ரிடா, கண்டிப்பா சீக்கிரமே நடக்கும்”என்று அவனும் ஆமோதிக்க அவளோ மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தபடி,

“உண்மையா சொல்றீங்களா ஆது? அப்ப என் லவ்வை நீங்க ஏத்துக்கிட்டீங்களா?” என்று அவனது கரங்களைப் பற்ற, அதில் கண்களை இறுக மூடித் திறந்தவன், ஒரு பெருமூச்சை வெளியேற்றியபடி தன் கரத்தைப் பற்றியிருந்த ரீனாவின் கரங்களில் அழுத்தம் கொடுத்தவன்,

“அங்கிள்கிட்ட பேசுறேன், உனக்கு சீக்கிரமே ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்க்க சொல்லி...”என்று அவன் முடிப்பதற்குள் அவனது கைகளை உதறியவள்,

“எனக்கு மாப்பிள்ளை பார்க்க நீங்க யாரு? என் லைஃப பார்த்துக்க எனக்கு தெரியும்.” என்று கொந்தளித்தவள் சற்று நிதானத்திற்கு வந்து,

“ஆசிரமத்துல ஆதரவில்லாத இருபது பேருக்கு சாப்பாட்டோட தங்க இடம் கொடுத்திருக்கீங்க. அத்தனை பேரையும் உறவுகளா நினைச்சுப் பாக்குற நீங்க, அதுல இருபத்தியோறவது நபரா என்னையும் அந்த ஆசிரமத்துல சேர்த்து பார்த்துக்கோங்களேன்” என்று சிறு குழந்தை போல கேட்க அவளது கேள்வியில் கோபம் எழுந்தாலும், ‘சிந்திக்காமல் பேசும் இவளிடம் கோபத்தைக் காட்டி பலனில்லை’ என்றுணர்ந்தவன்,

“ரீனு, புரிஞ்சிக்கோ. அந்த மேடைய பார்த்தல்ல? அவங்கள சுத்தி எத்தனை சொந்தம் பந்தமெல்லாம் நிக்குறாங்க. யாழினிக்கு, அண்ணிங்குற முறையில சானு கிஃப்ட் குடுக்குறதும், சுத்தி நின்னு எல்லாரும் கலாய்க்குறதும், அவங்க முகத்துல இருக்குற சந்தோஷம், இதையெல்லாம் என்னால உனக்கு குடுக்க முடியுமா? முக்கியமா இந்த மாதிரி உன் பேரெண்ட்ஸ்கிட்ட தாம்பூலம் மாத்திக்குறதுக்கு எனக்கு யார் இருக்கா?” என்று அவன் ஆதங்கத்துடன் கேட்க அவனது கரத்தை மீண்டும் பற்ற, இம்முறை ஆதி அவளை விலக்கவில்லை. அவனுக்கும் ஆறுதல் தேவைப்பட்டது.

“கண்டிப்பா உங்களால இதைவிட பெரிய சந்தோஷத்தை எனக்கு குடுக்க முடியும் ஆது..”என்று அவனது கரத்தில் சற்று அழுத்தம் கொடுக்க உதறியவன்,

“நீ புரிஞ்சிக்கவேமாட்ட. உன்கிட்ட பேசுறதே வேஸ்ட்; உன்னை கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கையையும் என் பெத்தவங்க மாதிரி இழந்துட்டு நிக்க என்னால முடியாது” என்று வேகத்தில் கூறிவிட்டான்.

அவனது கூற்றின் பொருளை உணர்ந்தவளோ மகிழ்வுடன் அவனுக்கு புரிய வைக்கும் பொருட்டு,
“ஆது, அப்போ நீங்க ரேணுகா ஆன்ட்டி, ராகிணி ஆன்ட்டி, சரிதா ஆன்ட்டி, அப்புறம் அர்ஜூண்ணாவோட அம்மாவ எல்லாம் உங்கம்மானு சொல்றது பொய்யா?”என்று அதிரடியாய் கேட்க,

“ஹே என்னடி ரொம்ப பேசுற? அவங்க நாலு பேரும் என்னை பெறாத தாய்; இதுவரை அவங்க நாலு பேரும் என்னையும் அவங்க மகனாதான் பாக்குறாங்க. எனக்கும் அவனுங்களுக்கும் வித்தியாசம் பார்த்ததே இல்ல”என்று கோபத்தில் கூற,

“இப்போ சொல்லுங்க, யார் லக்கின்னு. பூஜா, சானு, மிது,யாழிக்குலாம் ஒரே ஒரு அத்தை மாமா தான்; எனக்கு நாலு பேர் இருக்காங்களே. நீங்க சொன்ன மாதிரி, நம்ம எங்கேஜ்மெண்ட்ல எங்கப்பாவோட தாம்பூலத் தட்டை மாத்த இவங்க நாலு பேரு இருக்காங்க”என்று கூறியவள்,

“வாத்தி, நம்ம என்கேஜ்மெண்ட்க்கு இந்த ஸ்டேஜ் எல்லாம் பத்தாதுடா; ஆசிரமம், அப்புறம் உன்னோட இவ்வளவு பெரிய குடும்பமே நிக்கனும்னா, ஆசிரமத்துல ஓபன் ப்ளேஸ்ல என்கேஜ்மெண்ட் வச்சிரலாம். என்ன சொல்ற?”என்று கண்கள் மின்ன கேட்க, அதன் பொருளை உணர்ந்தவனோ ‘அப்படியிருந்தால்.....’, என்று மனதில் ஒரு நொடி நினைத்துப் பார்க்கவும் தவறவில்லை.

“ரீனு இதெல்லாம் பேச்சுக்கு செட்டாகும்; ஆனா, வாழ்க்கைக்கு ஒத்துவராது”என்று கிட்டத்தட்ட அவளிடம் கெஞ்சினான்.

“என்ன ஆதி, அப்போ என்ன நீ அம்மான்னு சொல்லுறது கூட பேச்சுக்கு தானா?” என்றபடி அங்கு வந்தார் ராகிணி.

“அ..அம்மா... அப்படியெல்லாம் இல்லமா; இவ ஏதோ உளருறா” நழுவ முயல அவனது கைகளைப் பிடித்தவர்,

“நான் உன் அம்மான்னு நீ சொல்றது உண்மைன்னா என் பேச்சை கேளு”என்று கூறியதிலேயே ‘இது அஜய்யின் வேலை’ என்று உணர்ந்தவன்,

“அம்மா, அவங்க பேரெண்ட்ஸ்க்கும் இந்த மாதிரி ஒரு நல்ல குடும்பத்துல பொண்ண வாழவைக்கனும்னு ஆசை இருக்காதா? நான் இப்படியே இருந்திடுவேன்மா; ப்ளீஸ் விடுங்க”என்று அவர் முன் கைகளைக் கூப்ப,

“சரி அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்; அங்க போட்டோ எடுக்க கூப்பிடுறாங்க; வா போகலாம்” என்று அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு முன்னே சென்றார்.

முதலில் நண்பர்கள் ஐவரும் மட்டும் இணைந்து புகைப்படம் எடுத்தவுடன்,
“நெக்ஸ்ட் ஜோடி போட்டோ...”என்று ஷ்யாம் கூறியதும் ஆதி விலக முற்பட,

அவன் கைகளை பற்றிய அஜய்,
“பேர்(pair) வந்ததும் ஃப்ரெண்ட தனியா விட்டுற முடியுமா மச்சி?” என்று தன்னருகில் இணைத்துக் கொள்ள, ஆதியின் கண்கள் தாமாகவே தனியே நின்றிருந்த ரீனாவைத் தழுவியது.

“டேய், ரீனாவ கூப்பிடுங்கடா. அவ மட்டும் அங்க தனியா இருக்கா”என்று அர்ஜூன் கூற,

“கூப்பிட்டேண்ணா, அவ கூப்பிடுறவங்க கூப்பிட்டா தான் வருவாளாம்” என்று வருத்தத்துடன் மிதுனா கூற, ரீனாவிடம் சென்ற ஆதி,

“ஃபோட்டோ எடுக்க வா”என்றான்.

“நான் எதுக்கு? அவங்க அவங்க பெட்டர் ஹாஃபோட சேர்ந்து எடுக்குறாங்க; எனக்கு அந்த குடுப்பினை இல்ல, நான் வரல” அவள் வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற,

“உன் ஃப்ரெண்ட்ஸ்லாம் ஃபீல் பண்ணுறாங்கடி, வா” இவன் அழைக்க,

“அதெல்லாம் ஃபீல் பண்ணமாட்டங்க.. என் அண்ணனுங்க பார்த்துக்குவாங்க; அவங்களாம் காதல் மன்னனுங்க; நீங்க போய் ஈ...ன்னு சிரிச்சுக்கிட்டே நல்ல போஸ் குடுங்க போங்க” என்று அவன் பொறுமையை சோதித்தாள்.

“எல்லாரும் வெயிட் பண்ணுறாங்கடி, வாடி” என்று அழைத்தவன், ‘தான் உரிமையாய் முதல்முறை ஒரு பெண்ணை டி போட்டு அழைப்பதை’ கூட அவன் சிந்திக்கவில்லை.

“என்ன மிஸ்டர்.ஆதித்யா நீங்க? அவங்கெல்லாம் ஜோடியா நிப்பாங்க, நான் மட்டும் அங்க வந்து தனியா நிக்கனுமா? அங்க வந்து தனியா நிக்குறதுக்கு இங்கேயே இருந்துக்குறேன்; உங்களுக்கு தனியா இருந்து பழக்கம், எனக்கில்லப்பா”என்றவள் அருகிலிருந்த ராகிணியிடம்,

“அத்த நான் என்ன சொல்லிட்டு இருந்தேன்...”என்று சகஜமாக பேசத் துவங்க, அவருக்கு சிரிக்கத்தான் முடிந்தது.

“சூப்பர் மருமகடா எனக்கு ஆதி”என்று ராகிணி கூற மேடையிலிருந்து ஷ்யாமும் அழைக்க,

“உனக்கு ஜோடியா நானே நின்னு தொலையுறேன், என்னை சோதிக்காம வந்திரு” கடுப்படித்தவன் அவள் முடிவை எதிர்பார்க்காது அவளை இழுத்துக்கொண்டு மேடைக்குச் சென்றான்.

ஐவரும் இணைகளுடன் தோளணைத்து புகைப்படம் எடுத்துக் கொள்ள, மகிழ்ச்சி மட்டுமே குடிகொண்டிருந்த அந்த மேடையை ஒரு இணை கண்கள் குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, முதுகைத் துளைக்கும் பார்வையில், தன் தொழிலுக்கே உரிய உள்ளுணர்வு தலைதூக்க கூட்டத்தை நோக்கி ஆராய்ச்சிப் பார்வை வீசினான் அர்ஜூன்.

"லெட்ஸ் டான்ஸ்..." என்ற நண்பர்களின் குரலில் கலைந்த அர்ஜூன், மேடையிலிருந்து வெளியேறியவன், பூஜாவின் காதில் ஏதோ சொல்லிவிட்டு கூட்டத்தில் ஐக்கியமானான்.

விழாவின் மகிழ்ச்சியைக் குலைக்கா வண்ணம் நிதானமாகவே தன் தேடலைத் துவங்கினான். தன் உதவியாளரை அழைத்த அர்ஜூன் கூட்டத்தில் சந்தேகிக்கும்படியான நபர்களை அடையாளப்படுத்தும்படி கேட்டுக்கொண்டான்.

பார்வையை நாலாபுறமும் ஓட்டியவாறு கூட்டத்தினூடே நடந்தவன் எதேர்ச்சையாக ஒருவர் மீது மோத, இவன் மோதியதால் எதிரிலிருப்பவர் சற்றுத் தடுமாறி, அவரது கையிலிருந்த அலைபேசி நழுவி கீழே விழுந்தது. எதிர்பாராத இந்நிகழ்வில், அர்ஜுன் தாடி வைத்த அம்மனிதனை நிறுத்தியவன்,

"சாரி சார், தெரியாம மோதிட்டேன்..." என்றபடி அவன் முகத்தில் பார்வையை ஓட்ட, அர்ஜூனைக் கண்ட அவனோ பதட்டத்தில் தொண்டையை செருமியவாறு,

"இ..இட்ஸ் ஓகே..." என்று திரும்ப, இவன் சந்தேகத்துடன் கீழே விழுந்த அவரது அலைபேசியை எடுத்து அவரிடம் நீட்டுவதற்குள் அம்மனிதன் கூட்டத்தில் நழுவி ஓட ஆரம்பித்தான். பின்னரே, அர்ஜூன் சிந்திக்க, அவனது புருவத்தில் போட்டுருந்த ஒரு சிறு வளையத்தில் சிந்தனையானவன்,
"இது... ஓ... ஷட்.. ஸ்ரீராம்..." என்று முணுமுணுத்தபடி, அவனது அலைபேசியை தன் பாக்கெட்டில் திணித்தபடி அவனை பின்தொடர ஆரம்பித்தான்.

அவனோ, மண்டபத்திற்கு வெளியே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் ஏறி பறக்க, அர்ஜூனால் அவ்வாகனத்தின் பதிவெண்ணை மட்டுமே குறித்துக்கொள்ள முடிந்தது....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் கேப்க்கு அப்புறம் இங்க வர்றேன்.
Long gap க்கு அப்புறம் 'இதயம் மீட்டும் நினைவலைகள் ' கதையின் 31வது அத்தியாயத்துடன் வந்துட்டேன். வாசித்து விட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க friends...


Link👇


Jefri
 
Status
Not open for further replies.
Top