All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜெஃப்ரியின் "இதயம் மீட்டும் நினைவலைகள்" - கதை திரி

Status
Not open for further replies.

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க? அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...:smiley13::smiley37:
"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-22 ஐ உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!

ஜெஃப்ரி....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-23

கலாச்சக்கரத்தின் வேகமான சுழற்சியால் நாட்கள் வேகமாய் கடக்க, அர்ஜூன்- பூஜா திருமணம் முடிந்து தேனிலவிற்குச் சென்றிருக்க, ஷ்யாமும் வியாபார ரீதியாக அயல்நாடு சென்றிருந்தான். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் திருமண வேலைகள் ஒரு பக்கம், ஷ்யாம் உடன் இல்லாமல் அலுவலக வேலைகள் மறுபக்கம், இவை அனைத்திலும் மேலாக தன்னவளை தன் அருகிலேயே வைத்துக்கொண்டு படும் அவஸ்தைகள் என்று அஜய் தான் பக்கம் பக்கமாகத் திணறிக் கொண்டிருந்தான்.

அன்று மாலை, வழமை போல் ஆதியே வந்து ரீனாவை அழைத்து சென்றிருக்க, அலுவலகத்தில் ஒவ்வொருவராக கலைந்து செல்ல, அஜய் கணினியோடுப் போராடிக்கொண்டிருக்க, அவனது காரியதரிசி சஹானா மட்டும் அஜய்யின் அறையில் சாய்விருக்கையில் அமர்ந்து அலைபேசியில் நிகழ்நிலை லுடோ (online ludo)வை விளையாடிக் கொண்டே,

“ரித்து, டைம் ஆச்சுடா. வா போகலாம்”என்றாள்.

அவனோ, "சஹி, எனக்கு வொர்க் முடிய டைம் ஆகும்டா. கொஞ்சம் வெயிட் பண்ணு”என்க,

“ஈவினிங் ஷாப்பிங் போகனும்னு அப்பா என்னை வர சொன்னாங்க. மறந்துட்டியா?" என்று நொடித்துக்கொள்ள,

அவனது வேலைப்பளுவையும், அவளது நேர விரயத்தையும் உணர்ந்தவன்,

“சரி, நான் அபியை வர சொல்றேன், அவன்கூட நீ கிளம்பு”என்று அலைபேசியை கையிலெடுக்க,

அதைப் பறித்தவள், "அபியை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் ரித்து, அவன் ஹாஸ்பிடல்ல இருப்பான். நான் எங்க டிரைவர் அங்கிள் கூடவே கிளம்புறேன்" என்று கூறியபடி தன் தந்தையின் வாகன ஓட்டிக்கு அழைப்பு விடுத்தாள்.

"சஹி, இன்னைக்கு அவசியம் ஷாப்பிங் போகனுமாடா?" என்று கேட்க, அவளோ தன் இடுப்பில் கைகளை வைத்து முறைத்தவள்,

"ரித்து உனக்கு வேலை இருக்குல்ல, அதைப் பாரு. பார்த்துட்டு வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடு. நான் இன்னைக்கு ஷாப்பிங் போக தான் செய்வேன். எனக்காக வீட்டுல ரேணு வெயிட்டிங். நான் இன்னும் ஒன் ஹவர்ல வீட்டுக்கு போகலைன்னா உனக்கு தான் கால் வரும், பார்த்துக்க" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளது வாகன ஓட்டியிடமிருந்து அழைப்பு வர,

"அங்கிள் வந்திட்டாங்க ரித்து. நான் கிளம்புறேன். பை" என்று அவள் வெளியேற எத்தனிக்க, அவளைக் கைப்பிடித்து இழுத்தவன் அவசரமாய் எழுந்து வந்து, அவளை இறுக அணைத்தான்.

"என்னாச்சு என் ரித்துக் குட்டிக்கு?"என்று சஹானா கேட்டதும்,

"சம்திங், உன்கூடவே இருக்கனும் போல தோணுது" என்று அணைப்பை மேலும் இறுக்க,

"இப்போ மட்டுமில்ல, எப்போவுமே உன்கூடவே தான் இருப்பேன் ரித்து. ஐ லவ் யூ சோ மச் மை ரித்து" என்று கூற, தினம் ஆயிரம் முறை தன்னிடம் காதல் தெரிவிக்கும் தன்னவளின் அதரங்களுக்கு தன் முரட்டு அதரங்களால் காதல் அன்பளிப்புகளை பரிசளித்து அவளை அனுப்பி வைத்தான் அஜய்.

அவள் சென்றதும் மனம் வேலையில் ஒன்றாமல் உழன்றவன், 'வீட்டிற்கே செல்லலாம்'என்று முடிவெடுத்தவன், தன் மகிழுந்தில் ஏறி, தன் அலைபேசியில் ஊடலையை (Bluetooth) இணைப்பு கொடுத்து தன் காதில் சொருகியவன், தன்னவளுக்கு அழைப்பு விடுத்தவாறே மகிழுந்தை இயக்கினான்.

அழைப்பு எடுக்கப்பட்டதும்,

"சஹி, போர் அடிக்குடா. நீ எங்க இருக்கனு சொல்லு, நானும் வர்றேன்" என்று கூறி அவள் இருக்குமிடத்தை அறிந்தவன் தன் வாகனத்தை அங்கே திருப்பியபடி,

“அப்படி என்னடி உனக்கு அவசரம்?ஷாப்பிங் தானே, கொஞ்சம் பொறுத்தா ஆகாதா? அது சரி, உனக்குத்தான் என்னை விட்டு விலகிப் போறதுன்னா பிடிக்குமே...!" குரலில் நையாண்டியுடன்.

அவனது கோபத்தை உணர்ந்தவள்,

"காமெடி பண்ணாதீங்க ரித்து, உங்களை விட்டுட்டு நான் எங்கே போவேனாம்? அப்படி போனா, உங்களை விட்டுப் பிரியற அடுத்த நொடி, நான் இந்த உலகத்திலே இருக்கமாட்டேன் ரித்து!" என்றாள் காதலுடன். அலைபேசியின் வழியே கேட்டுக் கொண்டிருந்தவனுக்கோ எதையோ சாதித்த உணர்வு.

ஆனாலும், “ஹேய் லூஸு, என்னடி பேசுற? அதுவும் டிராவல்ல”என்று அஜய் கடிய, சஹானாவின் வார்த்தைகளை உண்மையாக்குவது போல் எதிரே சரக்குந்து (லாரி) ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.

“நெருப்புன்னு சொல்லுறதால வாய் வெந்துடாது ரித்து”என்று சிரித்தபடியே நிமிர்ந்தவள் எதிரில் வரும் சரக்குந்தை கவனித்தவள்,

"ரித்து, லாரி....!" சஹானா அலறிய அடுத்த நொடி, கட்டுப்பாடு இழந்து தாறுமாறாய் வந்து கொண்டிருந்த சரக்குந்தை கவனித்த ஓட்டுநர், மகிழுந்தை ஒடித்துத் திருப்ப எண்ணிய அந்த நொடியில், சரக்கு வண்டி அவர்களது மகிழுந்தில் பலமாக மோதியது.

“ரித்து..” என்ற சஹானாவின் அலறல் அவனது செவியை அடைந்த நேரம், அவளது அலைபேசியோ தூக்கியெறிப்பட்டது.

“சஹி...”என்று அலறியவன், அதிவேகத்துடன் அவளது இருப்பிடத்திற்கு மகிழுந்தை செலுத்தினான்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த அகோர விபத்து நடந்தேறியது. அவசர ஊர்தியும் அழைப்பு விடுத்தவன் முன்னதாகவே கிளம்பியிருந்ததால், அவள் சென்று கொண்டிருந்த வழித்தடத்தை அறிந்தவனால், அந்த இடத்தை வெகு விரைவில் அடைய முடிந்தது. விபத்து நடந்த இடத்தை அடைந்தவன், தன்னவளை நோக்கி ஓடினான்.

சரக்குந்து மோதியது பக்கவாட்டில் மோதியதால், ஓட்டுநருக்கு பெரிதாக பாதிப்பின்றி தப்பியிருக்க, மொத்த பாதிப்பும் பக்கவாட்டில் அமர்ந்திருந்த சஹானாவிற்கே...!

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் வளைய வரும் தன்னவள், தலையில் பலத்த அடி பட்டிருக்க, முகம் முழுவதும் இரத்தத்துடன் சாலையோரத்தில் கிடந்தவளைப் பார்த்தவன்,

“சஹி...” என்று அலற,



அவனது அலறல் சத்ததில் சற்று கண் விழித்தவள்,"ரி.. ரித்...!", என்று இரத்தம் தோய்ந்த முகத்துடனும் புன்னகைக்க முயன்றாள்.



எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் அந்த ஆண்மகனுக்கு, முதல் முறையாக பயத்தை அறிமுகப்படுத்தினாள் அந்த மங்கை.



"நோ சஹி! உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன். நோ....!", கைகள் நடுங்க தன்னவளை அள்ளிக் கொண்டவனின் முகம் பயத்தில் வெளிறியிருந்தது.

“ரி.. ரித்து என்னை எ..எப்படியாவது கா..காப்பாத்து. ஒ.. ஒரு நாளாவது உன்... கூட வாழனும் ரித்து. ந..நம்ம குழந்தைய நான் சு...சுமக்கனும் ரித்து. என்னைக் காப்...பாத்து..”என்று தன் உடல் வலியைப் பொருட்படுத்தாது ஒரே மூச்சாக கூறி முடித்தவள், அடுத்த கணம் மயங்கிச் சரிந்திருந்தாள் அவனது கைகளில்....!

"நோ...!" என்று கத்தியவன், தன்னவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டு அப்பொழுது தான் வந்திருந்த அவசர ஊர்தியில் ஏறினான்.

******

நகரின் பிரம்மாண்டமான அந்த மருத்துவமனையில், மருத்துவர்களும், செவிலியர்களும் அந்த அவசர சிகிச்சை அறைக்குள் உள்ளே நுழைவதும், வெளியே வருவதுமாய் பதட்டத்துடன் அலைந்து கொண்டிருக்க, கலங்கிச் சிவந்திருந்த கண்களுடன் அந்த அறைக்கதவையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் அஜய்.

"மிஸ்டர்.அஜய்! உங்க ஃபியான்ஸிக்கு உடனடியா ஆப்ரேஷன் பண்ணியாகணும். தலையில பலமா அடிபட்டதில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கு. உடனடியாக அதை சரி செய்தாகணும். அவங்களோட பேரெண்ட்ஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா?",இடியாய் அவன் தலையில் செய்தியை இறக்கினார் அந்த மருத்துவர்.



அவரது வார்த்தைகளில் உடைந்து போன தன் மனதை ஒருவாறாகத் தேற்றிக் கொண்டு நிமிர்ந்தவன்,

"உடனே ஆப்ரேஷன் பண்ணுங்க டாக்டர். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, என் சஹிக்கு எதுவும் ஆகக்கூடாது....!",கடைசி வார்த்தையைக் கூறும் போதே அவன் குரல் கமறியது.



"வீ வில் ட்ரை அவர் பெஸ்ட்!" உரைத்த மருத்துவர் தனது பரிவாரங்களுடன் நகர்ந்து விட்டார்.



தன் இரு கைகளாலும் தலையைத் தாங்கி அமர்ந்திருந்தவனின் மனம் முழுவதும் வேதனை. தன்னவளின் இரத்தம் தோய்ந்த முகமும், அவனது கைகளிலும்,சட்டையிலும் படிந்திருந்த அவளது இரத்தக் கறைகள் அவனைப் பயமுறுத்தின.

‘திரும்ப வந்திடுடி. நீ எனக்கு வேணும்டி. நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியல’என்று அவனது உதடுகள் மந்திரம் போல் ஜெபித்துக் கொண்டிருக்க, குடும்பத்தினருக்கு தகவல் சொல்லவேண்டும் என்பதையே மறந்திருக்க, அந்த ஓட்டுநர் மூலமே தகவல் சென்றிருக்க அவர்களும் விரைந்து வந்தனர்.

அப்போது அங்கு ஒரு அறுவை சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவராக அந்த மருத்துவமனைக்கு வந்த அபிஜித், தன் சகோதரன் அமர்ந்திருந்த நிலையைப் பார்த்துவிட்டு அவனருகில் சென்றான். அஜய்யும் அவனைக் கட்டிக்கொண்டு, விவரத்தை கூற, இதற்கிடையில், அறுவை சிகிச்சை செய்வதற்காக ஒரு படிவத்தில் கையெழுத்து இட வேண்டிய நிலைமை வர,உடல் தூக்கிப் போட அந்த படிவத்தை கையில் வாங்கவே மறுத்தான் அஜய்.

அபிஜித், "அண்ணா, இது ஜஸ்ட் ஃபார்மாலிட்டீஸ் தான்",என்று அவனை சமாதானப்படுத்தி, கையெழுத்து வாங்குவதற்குள் அபிக்கு வியர்த்துவிட்டது.



அடுத்த சில மணித் துளிகளில், இருவருடைய குடும்பமும், ஆதி மற்றும் ரீனா என அனைவரும் அங்கு பதட்டத்துடனும் அழுகையுடனும் கூடியிருந்தனர்.



"அஜய்!" வெறுமையான பார்வையோடு அமர்ந்திருந்தவனின் தோளில்,ஆதரவாக ஆதி கை வைத்த அடுத்த நொடி அவனைக் கட்டிக் கொண்டு,



"டேய்! எனக்குப் பயமா இருக்குடா.என் சஹிபேபி எனக்கு வேணும்டா",கதறித் துடித்து கண்ணீர் விட்டான் அந்த ஆண்மகன்.



"இல்லடா. சானுக்கு எதுவும் ஆகாது.நீ கொஞ்சம் அமைதியா இரு", தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு நண்பனைத் தேற்றினான் ஆதி.

“டேய், எவ்வளவு இரத்தம் தெரியுமாடா. எனக்கு என் சஹிபேபி வேணும்டா. அப்போ தான் அவ ஃபோன்ல சொன்னாடா, உன்னை விட்டு போனா, நான் செ...செத்....” அதற்கு மேல் பேச முடியாமல் உருத்தெரியாத பந்து ஒன்று வந்து அவன் தொண்டைக்குழியில் சிக்கிக் கொள்ள, நண்பனின் நிலை உணர்ந்தவனாய் அவனை இறுக அணைத்துக் கொண்டான்.

தங்கள் மகள் மேல் அஜய் வைத்திருக்கும் காதலை நேரில் கண்ட சஹானாவின் பெற்றவர்களின் கண்களிலும் கண்ணீர். விஷயத்தை அறிந்த கார்த்திக்கோ, அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் கிளம்பிவிட்டான்.

முழுதாக நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சஹானாவிற்கு அறுவை சிகிச்சையை முடித்து விட்டு மருத்துவர்கள் குழு வெளியே வந்தது.

“மிஸ்டர் அஜய், ஆப்ரேஷன் சக்சஸ். ஆனால், அவங்க கண் விழித்ததுக்குப் பிறகுதான் மேற்கொண்டு எங்களால எதையுமே சொல்ல முடியும். அதுவரை கொஞ்சம் பொறுமையா இருங்க", தலைமை மருத்துவர் கூறி விட்டு சென்று விட அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் அஜய்.

அதற்கே நடுசாமம் ஆனதால், ஆதி தான் அஜய்யின் தாயைத் தவிர மற்றவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அழுதுகொண்டிருந்த சஹானாவின் பெற்றவர்களை மருத்துவமனையில் ஓர் அறை எடுத்து தங்க வைத்துவிட்டு, அஜய்யுடன் சென்று அமர்ந்து கொண்டான்.

இரவு முழுக்க தூங்காமல், சஹானா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கதவையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்த அஜய்யின் அருகில்,ஆதரவாய் அவனது கையைப் பற்றியபடியே அமர்ந்திருந்தான் ஆதித்யா.



மறுநாள் காலையிலேயே,அனைவரும் சஹானா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு முன் வந்து குவிந்தனர்.எதையும் கண்டு கொள்ளாது,அப்படியே அமர்ந்திருந்த அஜய்யிடம் வந்த ஆதி மெல்ல வந்து பேச்சுக் கொடுத்தான்.



"அஜய்...", ஆதி அழைக்க..



"..........", அஜய்யிடம் எந்தப் பதிலும் இல்லை.



நண்பனின் தோற்றம் மனதைப் பிசைய,

"டேய், நேத்து ஈவினிங்ல இருந்து இப்படியே இருக்கிறடா. முதல்ல ட்ரெஸ்ஸை மாத்திட்டு ஏதாவது சாப்பிடு. வா",அவனை எழுப்பினான் ஆதி.

அவனோ அமைதியாய் இருக்க,

“டேய் ட்ரெஸ் எல்லாம் இரத்தம். இதையாவது மாத்துடா. இப்படியே இருந்தா உனக்கு ஏதாவது ஆகிட போகுது. சானு முழிக்குறப்போ அவள இப்படியா போய் பார்க்கப்போற? வாடா” என்று கூற,

“சஹி சீக்கிரம் முழிச்சிருவாடா. அவ முழிச்சதும் அவகூட சேர்ந்து சாப்பிடுறேன்.”என்று அஜய் உறுதியாகக் கூறிக் கொண்டிருக்கும் போதே, அங்கு கலங்கிய கண்களுடன் வந்தான் கார்த்திக்.

தாயைக் கட்டிக்கொண்டவன்,

“அம்மா, அம்மு எப்படிமா இருக்கா?”என்று கேட்க, அவரோ அழுகையை மட்டுமே பதிலாய் அளிக்க, அங்கு அறையின் கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அஜய்யின் அருகில் சென்று அவனைக் கட்டிக்கொண்டான்.

“ஏன் எல்லாரும் அமைதியா இருக்கீங்க? என்னடா ஆச்சு? சொல்லுடா”என்று அஜய்யின் தோளிலேயே சாய,

“ஏன்டா அழற? அவளுக்கு ஒண்ணுமில்ல. சீக்கிரம் முழிச்சி வந்து உன்கூட சண்டை போடுவா பாரு.” என்று கலங்கிய தன் கண்களைத் துடைத்துக்கொண்டு தனக்கே ஆறுதல் போல் கூறியவன் மேலும்,

“எனக்கு தெரியும் கார்த்தி, என்னால அவ இல்லாம இருக்க முடியாது. அதுக்காகவே அவ கண்டிப்பா திரும்ப என்கிட்ட வருவாடா”என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே தலைமை மருத்துவர் அழைப்பதாக செவிலியர் கூற, அவரது அறைக்கு விரைந்தனர்.

“மிஸ்டர் ரகு, உங்க மகளோட தலையில ஏற்பட்டிருந்த இரத்தக்கசிவை ஆப்ரேஷன் மூலமா நாங்க நிறுத்திட்டோம்.ஆனால் அவங்க இன்னும் கண் விழிக்கலை, இன்னும் 10மணி நேரத்துல அவங்களுக்கு கான்ஸியஸ் வரலைன்னா அவங்க கோமா ஸ்டேஜ் போகக் கூட சான்ஸ் இருக்கு”என்று தலைமை மருத்துவர் கூற, ஆயிரமாயிரம் இடிகள் தன் தலையில் இறங்குவதைப் போல் உணர்ந்தான் அஜய்.

“நோ, என் சஹி சீக்கிரம் கண் விழிப்பா. நிச்சயமா மீண்டு வருவாள்.நான் மீண்டு வர வைப்பேன்...!", என்று தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று வில்லேற்றிய நாணாய் உடல் விறைக்க கர்ஜித்தான்.

‘என்னுடைய காதல் அவளை திரும்ப என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும்', என்று மனதிற்குள் கூறியவன் அவரிடம் விடைபெற்று வெளியே வந்தான்.

வெளியே வந்ததும், அதிர்ச்சியில் உறைந்து, கண்கள் நிறைய கண்ணீருடன் நின்ற கார்த்திக்,

“நீங்க இத்தனை பேரு இருந்து எதுக்கு? உங்கள எல்லாம் நம்பி தானே விட்டுட்டு போனேன்?”என்று இயலாமையில் கத்த, அவனிடம் சென்ற அஜய்,

“கார்த்தி,முன்னாடி ஒரு டைம் உன்கிட்ட சொல்லியிருக்கேன் ஞாபகமிருக்கா? அவளை நான் யாருக்காகவும், எதுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன், உனக்காக கூட.. அப்படி இருக்கும் போது, அந்த எமன்கிட்ட மட்டும் அவளை விட்டுக் கொடுத்திடுவேனா? நெவர்...!",அவனது குரலில் அப்படியொரு நம்பிக்கை...!

அங்கிருந்த செவிலியர்களிடம் அனுமதி பெற்று உள்ளே நுழைந்த அஜய், கட்டிலுக்கு அருகில் இருந்த சிறு இருக்கையை எடுத்துப் போட்டு, கட்டுப் போடப்பட்டிருந்த சஹானாவின் கைகளை தடவியவாறே அமர்ந்து கொண்டான்.

சிறிது நேரம் அவன் பேசாது அமர்ந்துகொள்ள, நேற்று முதல் இருந்த களைப்போ, அல்லது தன்னவளின் அருகாமையோ ஏதோ ஒன்று அவனை நித்திரைக்கு அழைத்து செல்ல, அவளது கைகளில் சாய்ந்தவாறே கண் அயர்ந்தான். அந்நேரம் அவன் பேசாத அனைத்தையும், அவன் இதயம் அவளது இதயத்துடன் பேசியது.

திடீரென விழித்தவன், எப்போதும் துறுதுறுவென்று சுற்றிக்கொண்டிருக்கும் தன்னவள் யாருமற்ற நடு சாலையில் அநாதையாய் கிடந்ததே அவன் கண்முன் உலா வந்தது.

“சஹிபேபி, எழுந்திருடி. நீ இப்படி படுத்திருக்குறது பார்க்கவே நல்லா இல்லடி. நீதானே சொன்ன, ‘நம்ம மேரேஜ்க்கு எல்லாத்தையுமே நானே பார்த்துப் பார்த்து பண்ணுவேன்’னு. இன்னும் ஒரு மாசம் கூட இல்லடா. இப்போ நீயே இப்படி படுத்திருந்தா, எப்படிடா? சீக்கிரம் எழுந்திருடா”என்று கண்களில் நீர் வழிய கூறியவன்,

“தாலி மட்டும் முதல்லயே எடுக்கனும்னு இதுக்கு தான் அடம்பிடிச்சியாடா. தாலி மட்டும் தான் எடுத்திருக்கோம். அதுக்குல்ல உனக்கு என்ன அவசரம்னு என்னை விட்டுட்டு நீ மட்டும் வந்து இப்படி படுத்திருக்குற? கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தால் நானும் உன்கூட வந்திருப்பேன்லடி.”என்று கண்கலங்கினான் அஜய்.

“மண்ணில் விழுந்த

மழை துளியாய்

உன் மனதோடு

தொலைந்து விட்டேன்

என்னுயிரே.....!

என் வாழ்வின்

கருவறையும் நீ...! “


கல்லறையும் நீ...!”

நினைவுகள் தொடரும்...!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-23 ஐ உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!

ஜெஃப்ரி....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-24

“ஜன்னலை தீண்டும்
தென்றலாய்
மனதை தீண்டி
உயிர் புள்ளிவரை
சென்று
எனை ஆள்கிறாய்
அன்பே..”


முழுதாக எட்டு மணிநேரம் கழிய, அறைக்குள் சஹானாவின் கைகளையே பிடித்துக் கொண்டிருந்த அஜய்யின் கைகளில் சிறு அசைவு...! அம்மெல்லிய அசைவையும் உணர்ந்தவன், தன்னவளை ஏறிட அவளது உடல்நிலையில் மாற்றமிருப்பது போல் தோன்ற உடனடியாக ஓடிச் சென்று மருத்துவரை அழைத்து வந்தான்.

மருத்துவர்களின் பரிசோதனை முடிந்து மெல்ல கண் விழித்தாள் சஹானா. முழுதாக ஒருநாள் கழிந்த பின்பே கண் திறந்தவளால் கண்களை சிரமப்பட்டே திறக்க முடிந்தது. கண்களைத் திறந்தவள் கண்களில் கண்ணீருடன் சுற்றியிருந்த குடும்பத்தார் மற்றும் நட்புகளைப் பார்த்தவள்,

தாங்கமுடியாத தலைவலியும், உடல்சோர்வும் தந்த பயத்தில் கண்ணீருடன் “ம்மா...”என்று தாயை அழைத்தாள்.

“சானுமா” என்று ரேணுகா மகளின் நெற்றியில் இதமாக முத்தமிட,

“அண்ணா...வலிக்குது”என்று தலையைப் பிடித்தாள்.

“அம்மு உனக்கு ஒண்ணுமில்லடா, யூ ஆர் ஆல்ரைட்.எல்லாம் சரியாகிடும்”என்று தங்கையை கார்த்திக் தேற்ற,

“எ..னக்கென்னாச்சுப்பா?”என்று அங்கிருந்த தன் குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே வினவ,

“ஒண்ணுமில்லடா கண்ணா.”என்றார் அவரும்.

“சஹானா, நேத்து உங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆனதிலேயிருந்து உங்க குடும்பமே இங்க தான் இருக்காங்க”என்று அங்கிருந்த அனைவரையும் அவளது பார்வை வளையத்திற்குள் கொண்டு வந்து தன் சந்தேகத்தை மறைமுகமாகவே விசாரித்தார் மருத்துவர்.

தன்னை சுற்றியிருப்பவர்களைப் பார்த்தவள், “யாருண்ணா இவங்கெல்லாம்?”என்று அவர்களது தலையை இடியை இறக்கினாள் சஹானா.

தங்கையின் பதிலில் சற்றே குழம்பிய கார்த்திக்,

“சானுமா, விளையாடாதடா. ஆல்ரெடி நேத்து உனக்கு இப்படி ஆனதிலிருந்து இவன் பேய் பிடிச்ச மாதிரி இருக்கான். நீ வேற...”என்று அஜய்யை பார்த்தபடியே கூற,

தன் அண்ணனை தொடர்ந்து, அஜய்யை பார்த்தவளுக்கு அவனது கண்கள் காட்டிய வலியில், ஏதேதோ உணர்வுகள் சட்டென்று மனதை தாக்க அவளுக்கும் அனிச்சை செயல் போல் கண்கலங்க ஆரம்பித்தது. உயிரை உருவும் அவனது பார்வையில் எதையும் யோசிக்க முடியாமல் அவளுக்கு தலைவலிக்க, இரு கைகளாலும் தலையை பிடித்துக் கொண்டவள்,

“எனக்கு தெரியலண்ணா,உன் ஃப்ரெண்டா?”என்று கேட்டு அனைவரையும் அதிர வைக்க,

தன்னவள் கண்விழித்ததிலிருந்து அவளது ஒற்றைப் பார்வைக்காக காத்திருந்த அஜய்க்கு, தன்னவளின் அறிமுகமில்லாத பாவனையில் ஏதோ புரிவது போலிருக்க, புரிந்துகொண்ட செய்தியோ அவனுக்கு உயிர்வலியை தர,மனதளவில் முழுதாக நொறுங்கிப்போனான்.

இருப்பினும் முயன்று தன்னை சமன்படுத்தியவன்,

“சஹி,ரொம்ப வலிக்குதாடா”என்று சஹானாவின் கைகளை பிடிக்க அவனது கைகளை உதறியவள்,

“டச் பண்ணாம பேசுங்க அண்ணா”என்று அஜய்யைத் தள்ளி நிறுத்தினாள்.

அனைவரும் அதிர்ந்து விழிக்க, மிதுனாவோ,

“சானு, அஜயண்ணாவா?நேத்து ஃபுல் இப்படி இந்த பெட்ல படுத்து கிடந்துட்டு, யூ.எஸ், திருச்சி, குலுமனாலினு அங்கங்க இருந்தவங்க எல்லாரையும் கதி கலங்கி இங்க வர வச்சிட்டு,ஆனாலும் உனக்கு இந்த லொள்ளு மட்டும் குறையலடி”என்று தோழியை அணைக்க வர,

“நீங்க யாரு?”என்று ஒதுங்கினாள் சஹானா.

அப்போது கதவைத் திறந்து கொண்டு அர்ஜூனுடன் உள்ளே வந்த பூஜா,

“பேசுனா அடிச்சு பல்ல கில்ல கழட்டிருவேன், பார்த்துக்கோ. அஜய் அண்ணா கூட மட்டுமே ஆஃபிஸ்க்கு போய்ட்டுவானு அத்தனை டைம் சொல்லிட்டு தானடி போனேன்”என்று அழ,

“பூஜ், எனக்கொண்ணும் இல்லடி. இப்போ நான் ஆல்ரைட். ஆமா நீ எங்க போன? அர்ஜூன்ண்ணாவ உனக்கெப்படி தெரியும்”என்று வினவ, அனைவருக்கும் அதிர்ச்சி என்றால் அஜய் இந்த உலகத்திலேயே இல்லை எனலாம்.

அருகில் நின்ற கார்த்திக்கின் கரங்களிலேயே அவனது மனநிலை உணரப்பட,

மருத்துவரோ, “வெல் சஹானா, இப்போ தான் முழிச்சிருக்கீங்க, ரெஸ்ட் எடுங்க. ரொம்ப நேரம் பேசக்கூடாது. இப்போ நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க”என்று தன் சோதனையைத் தொடர்ந்தார்.

சோதனையை முடித்து வெளியே வந்தவரிடம்,

“டாக்டர், சஹிக்கு அம்… இப்போ என்ன ப்ராப்ளம்?”என்று அஜய் கேட்க,

அவனது தோளில் தட்டியவர்,

“யுவர் கெஸ் இஸ் கரெக்ட் அஜய். ஷீ இஸ் அஃபெக்டேட் பை ஆன்டெரோக்ரேட் அம்னீசியா.”என்று அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியமளித்தார்.

“இது வழக்கமா மூளை அதிர்ச்சியால் ஏற்படும். ஆக்ஸிடண்ட்ல சஹானாவோட தலையில் பலமா அடிபட்டதால் அவங்களோட மூளை சேதமடைந்திருக்கு. அவங்க உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்ல,ஆனா பிரச்சனை எல்லாமே அவங்க நினைவுகளோட. சஹானாவோட கடந்த கால நினைவுகள் இப்போ மறக்கடிக்கப்பட்டிருக்கு”என்றதும் அஜய்க்கோ கால்களின் கீழ் பூமி நழுவியது போல் உணர்ந்தான்.

அனைவரும் அதிர்ச்சியில் இருக்க முதலில் சுதாரித்த மிதுனா,

“ஆனா டாக்டர்,சானுக்கு அப்பா,அம்மா, அண்ணா எல்லாம் நியாபகமிருக்குறது ஓகே. பூஜாவ மட்டும் நியாபகமிருக்கு, எங்களை தெரியலைனு சொல்றா,ஏன் டாக்டர்?”என்று கண்கலங்க,

“கமான் கேர்ள், சஹானாவோட மூளைக்கு உங்க ஃப்ரெண்ட்ஷிப் லெவல் தெரியாதில்லையா?”என்றவர்,

“பூஜா மாதிரி நீங்களும் சஹானாவோட ஸ்கூல் ஃப்ரெண்டா இருந்திருந்தா சஹானாக்கு இப்போ உங்களையும் நியாபகமிருந்திருக்கும். நம்மோட மூளை கம்பியூட்டரோட சி.பி.யூ மாதிரி. மெமோரி டிவைஸ்ல சில நிலைகள் இருக்கு. சஹானாவோட ப்ரைன் மெமோரில இப்போ ரீசண்ட் ஸ்டோரேஜ் மட்டும் தான் எரேஸ் ஆகிருக்கு. அவங்களால புது உறவுகள், சமீபத்தில் நடந்த விஷயங்கள், புதிய தகவல்களை நினைவில் வைக்க முடியாது.”என்றவர், அஜய்யின் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்தவர்,

“ஐயம் சாரி டு சே திஸ் அஜய், அவங்களுக்கு நீங்க யாருன்னு தெரியாது. இப்போதைக்கு சஹானா உங்களை அண்ணனோட ஃப்ரெண்டா மட்டும் தான் பார்ப்பாங்க, ஃபியான்ஸியா இல்ல”என்று அழுத்தம் கொடுத்தார்.

அஜய் அமைதியாய் இருக்க கார்த்திக் தான்,

“டாக்டர், இது எப்படி குணப்படுத்தலாம்? எந்த மாதிரி ட்ரீட்மெண்ட் வேணும்னாலும் பண்ணலாம் டாக்டர்” என்க,

“கார்த்திக், மூளை கம்பியூட்டர் மாதிரினு தான் சொன்னேன். காசு கொடுத்து உடனடியா சரி பண்ண மூளை ஒண்ணும் கம்பியூட்டரில்ல. அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். சஹானாவோட மெடிக்கல் ரிப்போர்ட் படி, இப்போ அவங்க அபாயக் கட்டத்தைத் தாண்டிட்டாங்க தான். பட், அவங்களோட மூளை அதை அக்செப்ட் பண்ணனும். எல்லாத்துக்கும் மேல, சஹானாவுக்கே தெரியாது ‘அவ இப்போ ஒரு அம்னீசியா பேசண்ட்’னு. ஃபர்ஸ்ட் சஹானா மெண்டல்லி இந்த ட்ரீட்மெண்ட்க்கு ஃபிட் ஆகனும்.”என்று விளக்க,

“சஹானாக்கு எப்போ எல்லா நினைவுகளும் திரும்பும் டாக்டர்?”என்று கேட்ட அஜய்யிடம்,

“ஆக்ச்சுவலி, அம்னீசியா எப்போ குணமாகும்னு உறுதியா சொல்லவே முடியாது அஜய். அது காயத்தோட அளவைப் பொருத்தது. இப்போ உங்களை யாருன்னே தெரியாதுனு சொல்லிட்டு தூங்குற சஹானா, முழித்ததும் கூட உங்களை ஹக் பண்ணி காதலை வெளிபடுத்தலாம்….இல்ல, ஒரு மாதமோ, வருஷமோ கூட ஆகலாம். நினைவுகள் திரும்பாமலே கூட போகலாம்... காயமடைந்த மூளை தானாகவே குணமாக ஆரம்பிச்சா தான் நினைவுகள் திரும்ப வரும்.”என்றவர் அஜய்யின் சோர்ந்த முகத்தைப் பார்த்து,

“டோன்ட் வொர்ரி யங் மேன், காயத்திலிருந்து மூளை சேதத்தை எஸ்டிமேட் பண்ணுறதுக்கு அண்ட் குணமாகுறதை ஊக்குவிக்குறதுக்கும் சில நுட்பங்கள் இருக்கு. அதை நாங்க ஸ்டார்ட் பண்ணிட்டோம்”என்று ஆறுதலளித்தார்.

“டாக்டர், இன்னும் ஒரு மாசத்துல என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கோம். தாலி எடுத்தாச்சு, பத்திரிக்கைலாம் கூட குடுத்து முடிக்கப்போறோம். இப்போ போய் இப்படி ஆகிருக்கே, நாங்க என்ன பண்ண போறோம்?”என்று கலங்கிய ரேணுகாவிடம்,

“அவங்களுக்கு அம்னீசியானு மட்டும் தான்மா சொன்னேன். அவங்க மேரேஜ் பண்ணிக்குறதுல பிரச்சனைனு சொல்லவேயில்லையேமா. ஃபிஸிக்கலி ஷீ இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்னு இந்த ரிப்போர்ட்ஸ் சொல்லுதே”என்று சஹானாவின் மருத்துவ குறிப்பேட்டைக் காட்டினார்.

“அப்போ இவங்க கல்யாணத்தை தள்ளிப்போடாம குறிச்ச நாள்லயே நடத்தலாம்னு சொல்றீங்களா டாக்டர்?”என்று வினவிய அஜய்யின் தாயிடம்,

“ஒய் நாட்? என்கிட்ட கேட்டால், தள்ளிப்போடாம இந்த மேரேஜ நடத்துறது கூட சஹானாவுக்கு ஒரு பெட்டர் அம்னீசியா ட்ரீட்மெண்ட் தான்.”என்றவரிடம்,

“சானு இன்னும் கம்ப்ளீட்டா குணமடைஞ்சதுக்கு அப்புறம் கல்யாணம் வச்சிக்கலாம்னு எனக்கு தோனுது டாக்டர்”என்ற கார்த்திக்கிடம்,

“கமான் கார்த்திக், சஹானாவ நீங்க நோயாளியா ட்ரீட் பண்ணாதீங்க. கவனமா பார்த்துக்கோங்க. கவனம் உங்க பார்வைல இருந்தா மட்டும் போதும்.குழந்தைக்கு சொல்லிக்கொடுக்குற மாதிரி சஹானாக்கு சொல்லிக்கொடுக்ககூடாது. ஆனா, அஜய் அண்ட் பேமிலியை அவங்ககிட்ட பக்குவமா சொல்லி புரிய வையுங்க. பிகாஸ், இப்போ சஹானாக்கு அவளோட வயசு என்னனு கூட தெரியாது. ஐ திங்க், இப்போ சஹானா அவளோட ஸ்கூல் லைஃப்ல இருக்காங்க. அதான் பூஜாவை மட்டும் நியாபகமிருக்கு.”என்று இயம்பினார் மருத்துவர்.

“சஹியோட இந்த நிலைமைல எப்படி எங்க மேரேஜ் நடக்கணும்னு சொல்றீங்க டாக்டர்? இதனால என்ன மாற்றம் வரும்?” தன் ஐயத்தை அஜய் கேட்க,

“அஜய் மேரேஜ்க்கு முன்னாடி சஹானா அவங்க வீட்டுல இருக்கப்போற நாட்கள்ல இருந்து மேரேஜ்க்கு அப்புறம் அவங்க அட்மோஸ்ஃபியர் சேன்ஜாகும். அது தான் வேணும்.மறந்த நினைவுகளை இப்போ மீட்டுக் கொண்டு வர்றதுல குடும்ப ஆதரவு ரொம்பவே முக்கியம். மேரேஜ்க்கு முன்னாடி உள்ள நாட்கள்ல அவங்களோட காலேஜ் லைஃப் ஃபோட்டோஸ்,அவங்களுக்கு பிடிச்ச மியூஸிக், ஸ்நாக்ஸ், ஸ்மெல் இப்படி எல்லாத்தையும் அவங்களுக்கு உங்க வாயால சொல்லாம உங்க ஆக்டிவிட்டீஸ்னால சொல்லனும்”என்றவர்,

“நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கு சஹானா வீட்டிலே, அவங்க கூடவே இருக்குறது இன்னும் பெஸ்ட்”என்று மிதுனாவையும், ரீனாவையும் கைக்காட்டி கூறியவர்,

“இது தான் ட்ரீட்மெண்ட்டோட தொடக்கமே. அவங்க தனியா இருந்தாங்கன்னா, அவங்களாகவே அழிக்கப்பட்ட நினைவுகளை கொண்டு வர முயற்சிப்பாங்க.அது கரெக்ட் தான், ஆனாலும் மூளைக்கு ஓவர் ஸ்ட்ரஸ் கொடுப்பாங்க. அது கூடவே கூடாது. நினைவுகளை புதுப்பிக்குறது, இப்போ அவங்களுக்கு ஒரு டிரைனிங். அது இயல்பா நடக்கனும். உதாரணத்துக்கு, காலேஜ் லைஃப்ல நடந்த ஒரு போட்டோவ காட்டி நீங்க ஒரு சின்ன சண்டை, கதை மாதிரி கொண்டு போனீங்கன்னா, அது அவங்களுக்கும் ரிலாக்ஸா இருக்கும், இப்படியே அஜய்யை அவங்க புரிஞ்சிக்குறதுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும்”என்றார்.

“ஒரு டைம் ஹிப்னாஸிஸ் பண்ணலாமா டாக்டர்?” என்று கேட்ட அஜய்யிடம்,

“டெஃபனைட்லி... மறக்கப்பட்ட நினைவுகளை நினைவுபடுத்துவதுக்கு பெஸ்ட் வே ஹிப்னாஸிஸ். ஆனா நான் சொன்னேனே, அவங்களுக்கு வந்திருக்குறது ஆன்டெரோக்ரேட் அம்னீசியா. மூளைக்கு வேலை கொடுக்காம வேலை செய்ய வைக்கனும்”என்று குணமடைதலின் மேலும் சில யுக்திகளையும் எடுத்துக்கூறிய பின் அனைவரும் வெளியேறினர்.

வெளியே வந்த பின்பும் யோசனையிலேயே அமர்ந்திருந்த அஜய்யின் அருகில் வந்த ரேணுகா,

“தம்பி,இந்த கல்யாணம் எப்படியாவது நடக்கனும். என் பொண்ண விட்டுற மாட்டீங்க தானே...”என்று கண்ணீருடன் கேட்க,

“என்ன அத்தை பேசுறீங்க நீங்க. என் சஹியை நான் விடுறதா? என்னை பொறுத்தவரையில் அவ என் மனைவி. இப்படி எது வந்தாலும் அவ என்னை விட்டு போய்ட கூடாதுன்னு தான் சஹியை பொண்ணுப் பார்க்க வந்தபோவே,அவளோட முழு சம்மதத்தோடயே என்னோட முதல் தாலியை அவ கழுத்துல செயினா போட்டுட்டேன்.இனி அவளே நினைச்சாலும் என்கிட்ட இருந்து போக முடியாது.”என்று உறுதியுடன் கூறி பெரியவர்களை அங்கிருந்து அகற்றினான்.

“வேற என்னத்தடா யோசிச்சிட்டு இருக்குற?நீ போய் சும்மா சானுகிட்ட பேசு”என்ற கார்த்திக்கின் குரலில்,

“இல்லடா மச்சான், இப்போ அவளுக்கு அம்னீசியானு அவளுக்கே தெரியாதுடா. அதை எப்படி சஹிக்கிட்ட சொல்லறதுன்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன்.”என்க,

“என்னால சொல்ல முடியும்னு கண்டிப்பா தோணலடா, நீயே சொல்லிடேன்.”என்று கை விரிக்க,

“ஹ்ம்ம்”என்றவன், அர்ஜூனிடம் திரும்பி,

“அர்ஜூன், இந்த கேஸை நீ தான் எடுத்து நடத்தனும்”என்றான்.

“டேய்,இது ஆக்ஸிடண்ட்னு தானேடா ரிப்போர்ட் ஃபைல் பண்ணிருக்காங்க?” அர்ஜூனின் கேள்விக்கு,

“நோ அர்ஜூன், எனக்குத் தோணுதுடா. சஹி என்கிட்ட போன்ல பேசுறப்போ ‘தூரமா ஃபாஸ்டா ஒரு லாரி வருது, ஓரமா போங்க’னு டிரைவர் கிட்ட சொன்னாடா. ஆனா நான் ஆக்ஸிடண்ட் ஸ்பாட்டுக்கு போனப்போ இவங்க காரும் ஓரமா தான் கிடந்திருந்துச்சு.”என்றவன்,

“இது ஆக்ஸிடண்டா இருந்திருந்தா, அந்த லாரி டிரைவர் ஏன்டா நிக்காமலே போகனும்?”என்றான்.

“ஆனா அஜய், சானுவ கொலைப் பண்ணுற அளவுக்கு யாருடா எதிரி?”என்று ஆதி கேட்க,

“கண்டிப்பா இருக்காது அஜய், அம்முவ எல்லாருக்குமே பிடிக்கும்டா, யாருக்கிட்டயுமே எதிர்த்து கூட பேசமாட்டா”என்று கார்த்திக் கூற,

அங்கு நின்றிருந்த தோழிகள் மூவரிடமும்,

“சஹாக்கு அப்படி யாராவது இருக்காங்களா?” என்று அர்ஜூன் கேட்டான்.

“கண்டிப்பா இல்லண்ணா, அவ யார்கிட்டயும் அதிர்ந்து கூட பேசமாட்டா. நாங்க வம்பு பேசுனாலே அவ எங்கள தான் திட்டுவா”என்று ரீனாவும் கூற,

“கார்த்தி உங்க அப்பாக்கு பிஸ்னஸ் சைட் எதிரிகள் யாராவது இருக்காங்களா?”என்று கார்த்திக்கிடம் திரும்ப,

“கொலைப்பண்ண துணியுற அளவுக்குலாம் அப்படி யாருமில்லைடா. இவனுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம்னு தான் எனக்கு சந்தேகமா இருக்கு”என்றான்.

“நோ அர்ஜூன், நீ இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்ணு. நான் கேஸ் குடுக்குறேன். இப்போதைக்கு எனக்கு யாரு மேலேயும் சந்தேகம்னு வரலை. ஆனா இது திட்டமிடப்பட்ட கொலை முயற்சி தான்டா.”என்று உறுதியுடன் கூறியவன்,

“என்னடா, நீயும் இவங்கள மாதிரி இது ஆக்ஸிடண்ட் தான்னு என்னை கன்வீன்ஸ் பண்ண போறியா?”என்று அர்ஜூனிடம் சாட,

“இல்ல மச்சான், உன்னோட வியூல எனக்கும் சேம் டவுட் வருது தான்டா. பட் இப்போ சஹாக்கு அம்னீசியா. எங்கயிருந்து தொடங்கனு தான் யோசிச்சிட்டு இருக்கேன்”என்க,

“விட்ட இடத்துல இருந்து தொடங்கு. ஆக்ஸிடண்ட் ஆகுறதுக்கு முன்னாடி அண்ட் பின்னாடி இருக்குற பர்ஸ்ட் சிக்னல்ல உள்ள சிசிடிவி புட்டேஜை கலெக்ட் பண்ணு. அதுல அந்த பர்ட்டிக்குலர் டைம்ல போன லாரியோட டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணு. ஏதும் ஹெல்ப் வேணும்னா என் அண்ணாகிட்ட கேளு.அவன் வக்கீலா இருக்குறதால உனக்கு அவனோட ஹெல்ப் தேவைப்படலாம். பட், இது எல்லாத்தையுமே கொஞ்சம் கான்ஃபிடன்ஷியலாவே பண்ணு.”என்று படபடவென ஆணையிட்டவன்,

“ப்ளீஸ்டா, நீயே இறங்கி பண்ணுடா. அந்த கிரிமினல் யாரா இருந்தாலும் அவனை நீ உன் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தவேண்டாம். என் சட்டத்தின் படி, நான் தான் தண்டனை கொடுப்பேன்.”என்று கர்ஜித்தவன், அங்கிருந்த எவரையும் கண்டுகொள்ளாது சஹானாவின் அறைக்குள் நுழைந்தான்.

தாயின் மடியில் குழந்தையென படுத்திருந்தவளிடம்,

“என்ன சஹி, தூங்கலையா? இப்போ பெயின் இருக்காடா?”என்று ஆதூரத்துடன் விசாரித்தான்.

“ம்ம், பரவாயில்ல. என் அண்ணா எங்க?”என்று கேட்கும் போதே அனைவரும் அங்கு வர, அர்ஜூனின் அருகில் நின்ற பூஜாவைக் கண்டவள்,

“ஹேய் பூஜ், உனக்கு மேரேஜ் ஆகிட்டாடி? இப்போவே ஏன்டி மேரேஜ் பண்ணின?”என்று கேட்டாள்.

வார்த்தை வராமல் அனைவரும் நிற்க,

தன்னவளின் நிலையுணர்ந்த அஜய்,

“இப்போ மேரேஜ் பண்ணாம, அறுபது வயசுலயா பண்ணுவாங்க?”என்று வேண்டுமென்றே சஹானாவிடம் வம்பிழுக்க,

“நான் ஒண்ணும் உங்ககிட்ட கேட்கலை. என் ஃப்ரெண்ட்கிட்ட கேட்குறேன். உங்களுக்கென்ன?அண்ணா, இந்த அண்ணா யாரு?”என்று அஜய்யிடம் ஆரம்பித்து கார்த்திக்கிடம் கேள்வியாக முடித்தாள்.

அஜய்யோ வேண்டுமென்றே,

“என்னது அண்ணனா? அண்ணா கிண்ணானு கூப்பிட்ட பல்ல கழட்டி கையில தந்திருவேன், பார்த்துக்கோ. ஒழுங்கா அத்தான்னு கூப்பிடு” என்று உசுப்பேற்றினான்.

சஹானாவும் பதிலுக்கு, “அத்தானா? அரமெண்டல்னு வேணும்னா கூப்பிடவா?”என்று கேட்க,

“சஹா பேக் டு ஃபார்ம்”என்ற அர்ஜூன் நகைக்க,

“சானுமா, மாப்பிள்ளையை அப்படிலாம் சொல்லக்கூடாதுடா”என்ற தந்தையின் கூற்றில்,

“என்னது மாப்பிள்ளையா? யாருக்குப்பா?”என்று கேட்க,

“ஹேய் அம்மு, அஜய் தான்டா நீ கட்டிக்கப்போற மாப்பிள்ளை”என்று கார்த்திக் கூறவும்,

அதிர்ச்சியில்,

“என்னது.....! இவனா?”என்று அலறினாள் சஹானா.


நினைவுகள் தொடரும்....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-24 ஐ உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!

ஜெஃப்ரி....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-25

“என்னது இவனா?”என்று அலறிய சஹானாவை,

“சானுமா மாப்பிள்ளையைப் பார்த்து அப்படி சொல்லக்கூடாதுடா”என்ற தந்தையை விழிவிரித்துப் பார்க்க,

அஜய்யே அவளருகில் வந்து, “சஹி, நான் உன் அண்ணனோட ஃப்ரெண்ட் தான். ஆனா இப்போ நான் உன் ஃபியான்ஸிடா”என்க, அதில் ஒடுங்கியவள்,

“இல்ல நீங்க பொய் சொல்றீங்க?”என்று கண்கள் கலங்க கூறியவளிடம்,

“சஹி, நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுடா, நடந்த ஆக்ஸிடெண்ட்ல யூ ஆர் அஃபெக்டெட் பை ஆன்டெரோக்ரேட் அம்னீசியா.”என்று கூற அதில் அதிர்ச்சியடைந்தவள் சிலையென இருக்க அவளது கைகளைப் பற்ற அவனை உதறியவள்,

“இல்ல நான் நம்பமாட்டேன், நான் நல்லா தான் இருக்கேன். இதோ எனக்கு இவங்க எல்லாரையுமே தெரியுதே”என்று அழுதபடியே கூற,

பூஜா தான், “சானு அஜய் அண்ணா சொல்றதெல்லாம் உண்மைதான். பின்ன எப்படி உன்கூட படிச்ச எனக்கு மட்டும் இப்போ கல்யாணம் ஆகிருக்கும்? அங்க பாரு”என்று அங்கே தொங்கவிடப்பட்டிருந்த நாள்காட்டியைக் காட்டினாள்.

அதில் அதிர்ந்தவள் வார்த்தைகளின்றி மௌனமாய் இருக்க,

“புரிஞ்சுக்கோ சானு, இப்போ உன் வயசு 22. உனக்கு நடந்த ஆக்ஸிடெண்ட்ல உன்னோட ரீசன்ட் மெமோரீஸ் அழிக்கப்பட்டிருக்கு. அதான் உனக்கு என்ன தெரியுது, நம்ம காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் இவங்கள தெரியலை”என்று தோழிகளைக் கைக்காட்டினாள் பூஜா.

அப்போது தற்ச்செயலாக அறைக்குள் நுழைந்த அபிஜித்,

“எல்லாரும் என்ன பண்ணுறீங்க? அவங்க அவங்களாவே தான் எதையும் தெரிஞ்சிக்கணும், இப்போவே எல்லாத்தையும் புரிய வைக்கனும்னு ஏன் இவ்வளவு அவசரம்? லெட் ஹெர் டேக் ரெஸ்ட்”என்று சற்று குரல் உயர்த்தியே பேச, அவனை மருத்துவ உடையில் கண்டவளோ,

“டாக்டர், எனக்கு என்னாச்சு?எனக்கு ஏதோ அம்னீசியானு சொல்றாங்க? அம்மா அப்பாலாம் எதுவுமே பேச மாட்டிருக்காங்க. ஏன்?” என்று அழுதபடியே கேட்க, அஜய்க்கு தான் இருப்புக்கொள்ளவில்லை. சஹானாவின் அருகில் வர முயற்சித்த தமையனைத் தடுத்த அபி சஹானாவிடம்,

“உங்களுக்கு என்ன? நல்லா தானே இருக்கீங்க?”என்றவன்,

“அம்னீசியான்னா என்ன அண்ணி? ரீசென்ட் மெமோரீஸ் தானே டெலீட் ஆகிருக்கு. உங்களுக்கு இப்போ உங்க அம்மா, அப்பா, கார்த்திண்ணா இவங்களலாம் தெரியுதில்ல. பின்ன என்ன? அம்னீசியா,அதுபாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டு அப்படியே போகட்டுமே. ஃபீல் ஃபிரீ அண்ணி”என்றவனை விழிவிரித்துப் பார்க்க, அதன் பொருளை புரிந்து கொண்ட அபியோ,

“யூ ஆர் ரைட் அண்ணி, நான் டாக்டர் தான். ஆனா, நம்ம ஃபேமிலி டாக்டர். அஜய்யோட தம்பி.”என்றவன் சஹானாவைக் கூர்ந்து பார்க்க,

“அண்ணி உங்களுக்கு வந்தது அம்னீசியா தான், அதுக்காக நீங்க என் அண்ணாவோட வருங்கால மனைவிங்கிறத மறுக்க முடியாது; நிதர்சனத்தை புரிஞ்சிக்க முயற்சி செய்யுங்க. ரொம்ப யோசிக்காதீங்க அண்ணி. வாழ்க்கையை அது போக்கில விடுங்க. இப்போ ரெஸ்ட் எடுங்க”என்றவன் அஜய்யையும் அழைத்துக்கொண்டு வெளியேறினான். கண்களில் கண்ணீருடன் குழம்பிய மனநிலையில் இருந்தவளை திரும்பி திரும்பிப் பார்த்தவாறே தம்பியுடன் வெளியேறினான் அஜய்.

*****

மருத்துவமனை வளாகத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த அஜய்யின் தோளில்,

“அஜய்”என்றவாறு கைவைத்த ஷ்யாமைக் கட்டிக்கொண்டான் அஜய்.

“பாருடா, என் சானு என்ன பார்த்து ‘யாரு நீ’ன்னு கேட்டுட்டா டா”என்று சிறு குழந்தை போல் கூறியவனை அணைத்தவனுக்கும், நண்பனின் மனஇறுக்கம் பெரும் வலியை தர, அஜய்யின் மனநிலையை மாற்ற எண்ணி,

“டேய் அஜய், நீயாடா இது? நீ எந்த விஷயத்தையுமே அவ்ளோ ஈஸியா, ரொம்ப தைரியத்தோட ஃபேஸ் பண்ணுவ. என்னாச்சுடா உனக்கு? சியர் அப் மேன்”என்று நண்பனை ஊக்கினான்.

“முடியலடா, சஹி விஷயத்துல என்னால அப்படியிருக்க முடியலைடா”என்றவன்,

“அவள இந்த நிலைல பார்க்குறப்போ எல்லாம், ‘ரித்து என்னை எப்படியாவது காப்பாத்து, ஒரு நாளாவது உன்கூட வாழனும்னு சொன்னது தான்டா என் காதுல கேட்டுட்டே இருக்கு. அப்போ அப்படி பேசுனவ இப்போ என்னைப் பார்த்து யாருனு கேக்குறா”என்று இயலாமையில் கலங்கியவனிடம்,

“இப்போ அவ ஃபிஸிக்கலி மேரேஜ்க்கு ஓகே தான்னு டாக்டரே சொல்லிட்டாங்களே. ஃபர்ஸ்ட் மேரேஜ முடிச்சுட்டு மறுபடியும் உங்க பழைய ரொமான்ஸ ரினியுவல் பண்ணப் பார்ப்பியா? அத விட்டுட்டு சேது விக்ரம் மாதிரி ஏன்டா பொலம்பிட்டு இருக்க?”என்ற அர்ஜூனிடம்,

“அட போடா, இப்போ அவ என்னைக் கண்டாலே பயப்படுறா. இதுல எங்கயிருந்து மேரேஜ் பண்ணி, அதுல ரொமான்ஸ் வேற.”என்று சிடுசிடுக்க,

“அண்ணா, ஏன் இந்த கடுப்ஸ்? இவ்வளவு நாள் ரெமோவா ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தல்ல, இப்போ அந்நியனா ரொமான்ஸ் பண்ணுனு சொல்றாங்க அர்ஜூன்ண்ணா. ரைட்?”என்று அபியும் இவர்களுடன் சேர்ந்து பேச,

“டேய் என் நிலைமை உங்களுக்கு காமெடியா தெரியுதா. கடுப்பேத்தாம போய்டுங்க” என்ற அஜய்யிடம்,

“சில் மச்சி, அவனுங்க சொல்றது கரெக்ட் தான், தெரிஞ்சே பண்ணுற ரொமான்ஸை விட, தெரியாதத சொல்லிக்குடுக்குறப்போ வர்ற ரொமான்ஸ்க்கு வால்யூவே தனி தான், லவ்வரா இல்லாம ஹஸ்பெண்டா ட்ரைப் பண்ணுடா.”என்று ஷ்யாமும் இணைந்து அஜய்யை சகஜமாக்க,

“அப்படியா? மிதுனா உள்ள தான் இருக்கா, அவக்கிட்ட கேளேன், அவளுக்கு என்னெல்லாம் தெரியாதுன்னு”என்று ஆதி கூறிக்கொண்டிருக்கும் போதே, சஹானாவின் அறையிலிருந்து விழிநீரைத் துடைத்த படியே வெளியேறினர் தோழிகள். மிதுனாவைக் கண்டதும் ஷ்யாமின் முகத்தில் ஆயிரம் வாட் மின்விளக்கு எறிந்தது என்றால், மிதுனாவோ ஒரு வேகத்தில் ஷ்யாமை ஓடிவந்து கட்டிக்கொண்டவள்,

“மாது, பாருங்க, சானு எங்களைப் பார்த்து யாருனு கேட்டுட்டா”என்று அவன் நெஞ்சில் சாய்ந்து அழ, அங்கிருக்கும் அனைவருக்குமே மிதுனாவின் விளிப்பு குழப்பத்தைக் கொடுத்ததென்றால், ஷ்யாமிற்கோ அப்போது தான் ‘ஷ்யாம் மாதேஷ்’என்ற தன் முழுப்பெயரும் நினைவிற்கே வந்தது எனலாம்.



அந்த சூழ்நிலையில் தங்கள் இருவருக்குமிடையிலான மனவருத்தத்தை தள்ளிவைத்து மிதுனாவை சமாதானப் படுத்தினான்.

“ஹனி, அழாதேடா. சானு புரிஞ்சிக்குவா.”என்று அவளது தலையை வருடியவன் தாங்கள் இருக்கும் இடமறிந்து,

“ஹனி டயலாகை மாத்துடா, அஜய் இப்போ கொஞ்ச முன்னாடி சிங்குலர்ல சொன்னத நீ ப்ளூரல்ல சொல்லிருக்க, தட்ஸ் இட்”என்றதும் நடப்பிற்கு வந்தவள், “சாரி”என்று விலக, அவளின் காதருகில்,

“இதுக்கு தேங்க்ஸ் நான் தான் சொல்லனும்” என்றான்.

“நீ எப்போடா வந்த? என்ற கார்த்திக்கின் கலையிழந்த குரலில்,

“இப்போ தான். என்னங்கடா ஆளாளுக்கு சோக கீதம் வாசிக்குறீங்க. இதுக்கு தான் போயிட்டு இருக்குற ஃப்ரோஜெக்டை நான் பாதியில முடிச்சிட்டு வந்தேனா?”என்று நகைக்க அங்கே நிலவிய அழுத்த நிலை மறந்து இயல்பு நிலைத் திரும்பியது.



“வெல், ஜோக்ஸ் அபார்ட், அர்ஜூன் கேஸ் எந்த லெவல்ல இருக்கு?”என்று விசாரிக்க,

“இப்போ தான் பேசுனோம், இனி தான் ஸ்டார்ட் பண்ணனும், நீ என்ன நினைக்குற?”என்று ஷ்யாமிடம் கருத்துக் கேட்டான் அர்ஜூன்.

“கண்டிப்பா இது ஆக்ஸிடெண்ட்னு தான்னு சொல்றேன்”என்றவனை அனைவரும் விழியுயர்த்திப் பார்க்க,

“அஜய்,எனக்கு இந்த கேஸ்ல ஸ்ரீ மேல சந்தேகமிருக்குடா”என்று அஜய்யின் தோளில் கைவைத்தான் ஷ்யாம்.

அஜய்யோ யோசனையில் மூழ்கியிருக்க,

“ஸ்ரீராமா?”என்று அர்ஜூன் வினவ,

“எஸ், எங்ககிட்ட பி,ஏவா வொர்க் பண்ணின ஸ்ரீராம் தான்”என்றவன், ஸ்ரீராமினால் வந்த பிரச்சனைகளை அர்ஜூனிடம் விளக்கினான்.

“அப்படி பார்த்தா, பிரச்சனை உனக்கும் ஸ்ரீக்கும் தானே. இதுல சஹானாவை ஆக்ஸிடெண்ட் பண்ண என்ன மோட்டிவ் இருக்கும்?”என்ற தன் ஐயத்தை கேட்க,

“நீ டிலே பண்ணாம விசாரணையை சீக்ரெட்டா ஸ்டார்ட் பண்ணு, அது தானா வெளிய வரும். முக்கியமா இந்த கேஸ் விஷயம், சஹிக்கோ, நம்ம பேரெண்ட்ஸ் யாருக்குமோ தெரியவே கூடாது”என்றவன் அனைவரையும் அனுப்பிவிட்டு,

“அர்ஜூன், ஸ்ரீயோட பெர்சனல் டீடெயில்ஸ் எனக்கு வேணும். உன் ஸ்பை மூலமா எனக்கு கிடைக்குமாடா?”என்று வினவ,

“கிடைக்கும். பட், எது பண்றதா இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு பண்ணுடா.”என்று கேட்டுக்கொண்ட அர்ஜூனுக்கு சிரிப்பை மட்டுமே பரிசாய் அளித்துவிட்டு வெளியேறினான் அஜய்.

****

“அம்மு, வர்ற நவம்பர்-1 உனக்கும் அஜய்க்கும் மேரேஜ்டா”என்ற கார்த்திக்கை அதிர்ச்சியாய் பார்த்தவள்,

“இப்போ மேரேஜா? எனக்கு இப்போ கல்யாணம்லாம் வேண்டாம்”என்று அழத் தயாரனவளை,

“இல்ல சானு, இது ஆல்ரெடி டிசைட் பண்ணுனது தான்”என்க,

“எதுவோ இருக்கட்டும், எனக்கு இப்போ என்னை சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியலை, இதுல கல்யாணம்”என்று மறுத்தாள்.

“சானுமா, நீயும் மாப்பிள்ளையும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினதால தான்டா இந்த கல்யாணத்தையே முடிவு பண்ணுனோம், இப்போ இப்படி சொன்னா எப்படிடா?”என்று ரகுவும் அவர் பங்கிற்கு பேச,

“நான் லவ் பண்ணுனேனா? அதுவும் அவனை? நம்பவேமாட்டேன்.”என்று அடம்பிடிக்க,

“ஊர் முழுக்க பத்திரிக்கைலாம் குடுத்து முடிச்சாச்சு, இப்போ போய் இப்படி சொல்றாளே..”என்று ரேணுகா கண் கலங்க,

கார்த்திக் அவனது அலைபேசியில் அவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்களை சஹானாவிடம் காண்பிக்க,அதைப் பார்த்தவளுக்கோ தன் கண்ணையே நம்பமுடியவில்லை. அந்த புகைப்படத்தில் அஜய்யின் மடியில் அமர்ந்து,அவனது நெஞ்சில் சாய்ந்தபடி முகம் முழுக்க புன்னகையுடன் சஹானா எடுத்திருந்த அந்த சுயமி(selfie)யில், அஜய்யின் கண்களை ஆராய்ச்சியாய் கூர்ந்து நோக்கினாள்.

“இப்போ சொல்லு, என்ன பண்ணட்டும்?”என்ற தாயின் கோபத்தில் மேலும் குழம்பியவளை தடுத்தது கதவுத் தட்டப்படும் ஓசை.

“சஹானா எப்படி இருக்கடா”என்று ஆதரவாய் தலையை வருடிய ராகிணியை நோக்கி அறிமுகமற்ற பார்வையை வீசியவள்,

“நல்லாயிருக்கேன் ஆன்ட்டி”என்றாள்.

“சஹானாமா பெயின்லாம் இருக்குதாடா?நல்ல தூங்குனியா”என்று நலம் விசாரித்த அஜய்யின் தந்தை ஜெயப்பிராகஷிற்கும் தலையசைப்பை மட்டுமே பதிலாய் அளித்தவள், தாயை ஏறிட்டுப் பார்க்க,

“இவங்க தான் சம்பந்தி. மாப்பிள்ளையோட அப்பா அம்மா” என்றதும்,

“தலைவலிக்குது, நான் தூங்குறேன்”என்று படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

“ரகு, குறித்த முகூர்த்தத்தில் இந்த கல்யாணம் நடக்குமாடா?”என்று ஐயத்துடன் வினவிய ஜெய்ப்பிரகாஷிடம்,

“ஏன்டா இப்படி கேட்குற? சானு,அம்னீசியாங்கிற அதிர்ச்சியில இருக்குறா. அவ்வளவு தான், கண்டிப்பா குறிச்ச முகூர்த்தத்தில கல்யாணம் நடக்கும்.அவ என் பொண்ணுடா, நான் சொல்றத கண்டிப்பா கேட்பா”என்று தந்தை கூறியது உறங்குவது போல் படுத்துக்கொண்டிருந்த சஹானாவின் செவிகளிலும் பாய்ந்தது. மனதில் ஒரு முடிவுடன் கண்களை நிஜத்திலும் மூடினாள் அம்மங்கை...!

அன்று முதல் தன்னியல்பை மறைத்து அனைவரிடமும் இயன்றவரை சகஜமாக உரையாட ஆரம்பித்தாள் சஹானா. பூஜாவின் உதவியால், மிதுனா, ரீனா, யாழினி போன்ற நட்புகளை ஏற்றுக்கொண்டு பழக ஆரம்பித்த சஹானாவால், ஏனோ அஜய்யின் குடும்பத்துடன் இணக்கம் காட்டமுடியவில்லை. யாழியையுமே தன் அண்ணனின் வருங்கால மனைவி என்ற கோணத்திலேயே பார்த்தாள்.

அஜய்யும் சஹானாவை தொந்தரவு செய்யாமல், அவள் உறங்கும் வேளைகளில் மட்டும் வந்து பார்த்துச் சென்றான். அஜய்யின் மேல் கோபமிருந்தாலும், அஜய் மருத்துவமனை வந்து தன்னை பார்க்கவில்லை என்பதை மகிழ்வாக உணரவேண்டிய சஹானாவோ ஏதோ ஏமாற்றமாகவே உணார்ந்தாள். அந்த ஏமாற்றமும் அஜய்யின் மேல் கோபமாகவே திரும்பியது.

முழுதாக பத்து நாட்கள் மருத்துவமனை வாசம் முடிந்து இல்லம் திரும்பினாள் சஹானா. அன்று மாலை சஹானாவைக் காண அஜய் தன் குடும்பத்தினருடன் வந்திருக்க, அனைவரிடமும் இயல்பாகவே பேசினாள் சஹானா. சில நாட்களாக தன்னவளின் அருகாமையின்றி தவித்த அஜய்யின் மனமோ, அவளது அருகாமையை நாடியது. அவனது கண்களோ அனைவர் முன்னிலும் காக்கப் பட வேண்டிய கண்ணியத்தையும் தவிர்த்து வெட்கமின்றி தன்னவளை பார்வைகளால் தின்றது.

அவனது பார்வையில் உடல் சிலிர்க்க, ‘இத்தனை பேர் இருக்காங்க, எப்படி பார்க்குறான் பாரு,எருமை’என்று மனதிலேயே திட்டிக்கொண்டாள்.

அவர்களது மனதைப் படித்த கார்த்திக்கோ தங்கையிடம்,

“அம்மு டயர்டா இருக்காடா? நீ வேணும்னா உன் ரூம் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுடா”என்று கூற,

‘அப்பாடா தப்பிச்சோம்’என்று பெருமூச்சுவிட்டவாறு எழும்ப முயல, தொடர்ந்து,

“என்னடா மச்சான் பார்த்துட்டே இருக்க? சானுவ ரூம்க்கு கூட்டிட்டு போ” என்று தன் நண்பனுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தர,

“இல்லடா,ஏன் கூட்டிட்டு போகனும்? தூக்கிட்டே போய்ரலாமேனு யோசிச்சேன்டா”என்று கூற அங்கிருந்த அனைவரும் நகைக்க ஆரம்பித்தனர்.

“இல்லண்ணா? எனக்கு டயர்டுலாம் இல்ல, நான் இங்கயே இருந்துக்குறேன்”என்றவளை வலுக்கட்டாயமாக அஜய் தூக்க,

“விடுங்க, அஜய், எனக்கு நடக்கத் தெரியும். விடுங்கனு சொல்றேன்ல”என்று தன் கைகளிலிருந்து திமிறியவளையும், அங்கிருந்த எவரையும் கண்டுகொள்ளாது தூக்கிச் சென்றான் அஜய்.

அறைக்குள் வந்ததும் அவளை சாய்விருக்கையில் விட்டவன்,அவளை பழைய அஜய்யாக நெருங்க, அவனும் நெருக்கம் கொடுத்த மயக்கத்தில் சஹானாவும் எதுவும் கூறாமல் அவனது சீண்டலுக்கு அனுமதி அளித்தாள்.

அவனது இதழ் அவளது இதழ்களுடன் சங்கமித்ததுமே தன்னுணர்வுக்கு வந்த சஹானா அஜய்யை விலக்கித் தள்ளினாள்.

“என்ன இது, கொஞ்சம் கூட மேனர்ஸே இல்லாம இப்படி தான் அடுத்த பொண்ணை கிஸ் பண்ணுவீங்களா?”என்று பொரிய,

“இதுக்கு பதில் நான் சொன்னேன்னா அது உனக்கு தான் கஷ்டம்” என்றவன்,

“அடுத்த பொண்ணா யார் அது? நீ எனக்கே உரிமையானவ.” என்க,

“எனக்கு என்ன? சும்மா சமாளிக்குறதுக்காக பேசாதீங்க”என்று நொடித்துக் கொள்ள,

“நான் என்ன பண்ணுறது? பார்த்து பதினோறு நாளாச்சுனு இதோ இது தான் என்னை கூப்பிட்டுச்சு”என்று தன் பெருவிரலால் அவளது சுழித்த இதழை அளந்தவன்,

“ஏன் உனக்கு பிடிக்கலையா? பிடிக்குற மாதிரி இன்னொன்னு தரவா?”என்று கேட்டான்.

“நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்பேன், செய்வீங்களா?”என்று கோரிக்கை வைக்க,

“சஹி பேபி, எத்தனை நாளாச்சுடி இப்படி பேசி,. கேளு,என்ன வேணும்னாலும் கேளு, அதுக்காக என் உயிரெல்லாம் கேட்டுராத”என்று முன்ஜாமின் கேட்டான் அஜய்.

“ஏன், அவ்வளவு பெரிய்ய்ய்ய்ய பிஸ்னஸ் மேக்னட் நீங்க. உங்களுக்கு உயிர் மேல பயமா?”

“ஒய் நாட், உண்மையா சொல்லப்போனா, நீ சொன்ன மாதிரி பெரிய்ய்ய்ய்ய பிஸ்னஸ் மேக்னட்ஸ்க்கு தான் உயிர் மேல பயமே வரும்”என்றவன்,

“என் உயிர் எனக்கு வேணும், அதுவும் என் சஹி பேபி என்கிட்ட கேட்ட வாழ்க்கையை திகட்ட திகட்ட நான் அவக்கூட சேர்ந்து வாழுறதுக்கு”என்று கண்களில் காதலைத் தேக்கி கூறியவனின் காதலில் கட்டுண்டு நின்றவள் சுதாரித்து,

“உங்க உயிரெல்லாம் எனக்கு வேண்டாம். ஆனா,…இந்த க..கல்யாணத்தை நி...நிறுத்திடுங்க...”என்றாள் அஜய்யின் ஆருயிர் காதலி.....!

நினைவுகள் தொடரும்....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-25 ஐ உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!

ஜெஃப்ரி....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-26

பதினோறு நாட்களுக்கு முன் ‘உன்கூட ஒருநாளாவது வாழனும்’ என்று கூறிய தன்னவளின் வாயால் இப்போது, ‘கல்யாணத்தை நிறுத்திடுங்க..’என்ற வாய்மொழிக் கூற்றைக் கேட்டவனுக்கோ கால்களின் கீழ் பூமி நழுவுவது போன்ற உணர்வு.

“எதுக்கு?”என்றான் பொறுமையாக.



“எ..எனக்கு விருப்பமில்லை”என்றாள்.



“அதான் ஏன்னு கேட்டேன்”என்றான் பொறுமையை இழுத்து பிடித்தவாறு.



“ஏன்னு கேட்டா என்னனு சொல்ல? இப்போ நான் ஒரு அம்னீசியா பேசண்ட், என்ன சுத்தி என்ன நடக்குதுன்னே எனக்கு புரியல. இந்த அழகுல நான் கல்யாணம் பண்ணி உங்க வீட்டுக்கு வந்து என்ன பண்ண?”என்று கடுகடுத்தாள்.



“என்ன பண்ணனும்னா, கல்யாணம் பண்ணினா அடுத்து என்ன நடக்கனுமோ அத தான் பண்ணனும், இதென்ன கேள்வி?”என்றவன்,

“லுக் சஹி, நீ அம்னீசியா பேசண்டா இருந்தாலும், என்னோட ப்ராப்பர்டி தான். இந்த கல்யாணம் நடக்கனும், அவ்வளவு தான்”என்று வெளியேற முயன்றவனை,



“எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லலை. இப்போ வேண்டாம்னு தான் சொல்றேன், புரிஞ்சிக்கோங்க”என்று நிறுத்தினாள்.



“சரி, நீயே சொல்லு. எப்போ வச்சிக்கலாம் ‘நம்ம’ கல்யாணத்தை” என்றான் அந்த ‘நம்ம’வில் அழுத்தம் கொடுத்து.



“எ... எனக்கு இந்த அம்னீசியா குணமானதுக்கு அப்புறம்..”என்று இழுக்க,



"அம்னீசியா எப்போ குணமாகுங்றத உறுதியா சொல்லமுடியாதுன்னு டாக்டர் சொன்னதைக் நீயும் கேட்டல்ல, நாம ட்ரீட்மெண்ட் கண்டிநியூ பண்ணிக்கிட்டே இருக்கலாம்டா”என்க,



‘இதுக்கு என்ன சொல்லலாம்’என்று விழித்தவள்,

“இல்ல எனக்கு ட்ரீட்மெண்ட் முடியுரவரைக்கும் நான் ஏதாவது படிக்கலாம்னு பார்க்குறேன்”என்றாள் அவசரமாக.



“அவ்வளவு தானே, தாராளமா படி, மிஸ்.சஹானாவா இல்லாம, நம்ம வீட்டுல வந்து மிஸஸ்,சஹானா அஜய் ரித்விக்கா.”என்றான்.



‘எது சொன்னாலும் பதில் வச்சிருக்கானே’என்று எண்ணியவள், திருமணம் என்பதிலேயே பயந்திருந்தவள், கூடுதலாக ‘நம்ம வீட்டுக்கு’என்றதும் மேலும் ஒடுங்கி,

“இல்ல நான் அங்க வரமாட்டேன், என் அம்மாக்கூடதான் இருப்பேன்.”கிட்டத்தட்ட கத்தினாள்.



“ஓகே,ஓகே… ரிலாக்ஸ் சஹி, இப்போ என்ன, உன்னால அங்க வரமுடியாது அவ்வளவு தானே, நீ அங்க வரவேண்டாம், நானே இங்க வந்து உன்னைப் பார்த்துக்குறேன்”என்று காதலுக்காக தன் கொள்கையை அடகு வைத்தவனாகக் கூறியவனின் பதிலில் விழிவிரித்துப் பார்க்க,



“நீ சொல்ற எல்லாத்தையும் செய்றேன். ஆனா, கல்யாணம் குறிச்ச நாள்ல நடக்கனும்”என்றான்.

அதில் பொறுமையிழந்தவள்,



“என்னை அப்படி லவ் பண்ணுனீங்க, இப்படி பண்ணுனீங்கனு எல்லாரையும் நல்லா பேச வச்சிருக்கீங்க.ஆனா என்னோட ட்ரீட்மெண்ட் முடிஞ்சதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணலாம்னா அதுக்கு சம்மதிக்க மாட்டிகிறீங்க. ஏன் உங்களோட தெய்வீகக் காதல் நான் முழுசா குணமாகுற வரை வெயிட் பண்ணாதா? இல்....”அவளது பேச்சில் குறுக்கிட்டவன்,

“எ கிரேட் மிஸ்டேக், ‘உங்களோட காதல்’ இல்லை, ‘நம்மோட காதல்’னு சொல்லு”என்றதும் மேலும் கடுப்பானவள்,



“ஆமா பெரிய காதல், ரொம்ப கரெக்டா பேசுறதா நினைப்பா? நான் குணமாகுற வரைக்கும் கூட உங்களால வெயிட் பண்ணமுடியாதாமாம், இதுக்கு பேரு லவ்வா லஸ்டா?”என்று கத்தி அஜய்யை பொறுமையிழக்க செய்தவள், மேலும் அவனது முகத்தைப் பார்க்க இயலாது முகத்தைத் திருப்பி,



“க..காதல் காதல்னு நீங்க நடிக்குறதெல்லாம், அவங்க நம்பலாம், நான் நம்பமாட்டேன். இப்போ எனக்கு நல்லா புரியுது, உங்களுக்கு தேவை நானோ, என் மனநிலையோ இல்ல. என்னோட உட…”என்று உளறிக்கொண்டிருந்தவளை நிறுத்தியது அஜய்யின் குரல்,



“போதும் நிறுத்துடி. என்ன விட்டா ஓவரா பேசுவியா? இப்படி பேசுனா, நான் கோபப்பட்டு கல்யாணத்தை நிறுத்திருவேன்னு பார்த்தியா? அது கனவுலயும் நடக்காது. ஸ்கூல் லைஃப்ல நிறைய படம் பார்த்தியோ?”என்று நகைத்தவன் முகத்தை கோபமாக மாற்றி,



“இனி ஒரு வார்த்தை இந்த மாதிரி பேசுன, நீ ஆசைப்பட்டியேன்னு கூட முகூர்த்தம், மணமேடை, சொந்தபந்தம்னு உன்னை மாதிரி சொல்லிட்டு இருக்கமாட்டேன், இந்த ரூமை விட்டு வெளியே வர்றப்போவே என் மனைவியாதான் வருவ. எப்படி வசதி?”என்று வினவியவன்,



“ஏன் சஹானா, இதையெல்லாம் அன்னைக்கு ‘ஊர் முழுக்க பத்திரிக்கைக் கொடுத்தாச்சி’னு உன்கிட்ட அழுத உன் அம்மாக்கிட்ட சொல்ல வேண்டியதானே?” என்றான்.



அஜய்யின் எந்த கேள்விகளுக்கும் மௌனமே பதிலாய் அமைய,

“சஹி பேபி, உனக்கு வேணும்னா உன்னோட கேரக்டர்ஸ், நினைவுகள் மறந்து போயிருக்கலாம். ஆனா நீ யாருக்கிட்ட,எப்போ, எப்படி பேசுவ? உனக்கு கோபம் எப்படி வரும், எல்லாத்தையும் விட உன்னை எப்படி வழிக்கு கொண்டு வர்றதுனு உன்னை பத்தி எல்லாமே எனக்கு தெரியும்”என்றவன்,



அவளை நெருங்கி அவளது முகத்தில் புரண்ட முடிக்கற்றையை தன் ஒற்றை விரலால் எடுத்து அவளது செவியின் பின்னால் வைக்க, அந்த நெருக்கமும், அவனது ஸ்பரிசமும் அளித்த சுகந்தத்தை ஆழ்ந்து அனுபவித்தாள் சஹானா.



“இப்போ உன்னை இங்கயிருந்து தாலிக்கட்டி வெளிய கூட்டிட்டு போனாலும் யாரும், எதுவும் கேட்க மாட்டாங்க. ஆனா அதுக்கு அவசியமும் இல்லை, உன்னோட முழு சம்மதத்தோட நான் உனக்கு கட்டின செயின் இதோ இன்னும் உன் கழுத்துல இருக்கு”என்று அவன் அணிவித்த சங்கிலியைக் காட்டியவன்,



“அவ்வளவு பெரிய ஆக்ஸிடெண்ட் நடந்தும் உன் கழுத்துல உள்ள இந்த செயினும், கால்ல மெட்டியா நீ போட்டிருக்குற என் மோதிரமும் இன்னும் உன்கூடவே இருக்குதுன்னா, இதுல இருந்தே நீ புரிஞ்சிக்க வேண்டாம், இந்த ஜென்மம் முழுக்க உனக்கு வாழ்க்கை என்கூட தான்னு”என்று அவன் காட்டிய சங்கிலியை கைகளால் வருடினாள் சஹானா.



“இப்படி லூஸுத்தனமா உளறுரத விட்டுட்டு, மூணு வாரத்துல நடக்கப்போற நம்ம கல்யாணத்துக்கு தயாராகுற வேலையைப் பாரு. அதுக்கு அப்புறம் நமக்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கு பேபி”என்று குறும்புக்கண்ணனாய் கண்ணடித்துக் கூறியவன், அவளது பிறை நெற்றியில் இதழொற்றிவிட்டு வெளியேறினான்.





அஜய் வெளியேறிய பின்னரும், ‘அப்படி என்ன கல்யாணத்துக்கு இவ்வளவு அவசரம்? எதுக்காக இவரு இப்படி கட்டாயப்படுத்துறாரு’ என்று குழம்பியவளை மேலும் குழப்பியது அவளது தாயின் அலைபேசிக்கு வந்த அழைப்பு….!



எண்களை மட்டுமே தாங்கி சிணுங்கிய அலைபேசியை உயிர்ப்பித்தவள்,



“ஹலோ...”என்றதும்,



“சஹி பேபி, எப்படிடா இருக்க?”என்ற அந்த ஆணின் குரலில் மேலும் குழம்பினாள்.



அஜய் பேசும் தொனியில், ஆனால் குரல் நிச்சயம் அஜய்யின் குரலல்ல என்று கணித்தவள்,

“ஐயம் குட், நீங்க யாரு?”என்று வினவ,



“என்னை பார்த்தே யாருன்னு கேட்டுட்டியா? உனக்கு அம்னீசியானு கேள்விப்பட்டதும் என் உயிரே போய்டுச்சிடா, நான் நானாவே இல்ல, உன்ன பார்க்கனும்னு துடிக்குறேன். பட், முடியாதே”என்றது அக்குரல்.



“லுக் மிஸ்டர், யாரு நீங்க? ஏன் இப்படி பேசுறீங்க?”என்று கோபப்பட,



“சஹீ, நான் சாகுற வரைக்கும் என் மனசுல உனக்கு மட்டும் தான் இடம்னு என்கிட்ட சொல்லிட்டு, இப்போ என்னையே யாருனு கேட்குறியேடி”என்று கூற,



“என்னது நான் அப்படி சொன்னேனா? என்ன பேசுறீங்க நீங்க? எனக்கு இன்னும் மூணு வாரத்துல மேரேஜ் இருக்கு, அம்னீசியானு தெரிஞ்சிக்கிட்டு இப்படி தான் பேசுவீங்களா?”என்று கத்தினாள்.



“அந்த அஜய் அப்படி உன்னை மறுபடியும் மிரட்டினானா? ராஸ்கல், நம்மல நிம்மதியாவே வாழவிடமாட்டான் போல, அவனை…”என்று பற்களை அவன் கடிப்பது சஹானாவிற்கு புரிய,



“நீங்க என்ன பேசுறீங்கனு எனக்கு புரியல, ரொம்ப குழப்பமா இருக்கு? யார் நீங்க? உங்க பேரென்ன?”என்று கேட்டாள்.



“என் பேரா? உன் கழுத்துல உள்ள டாலர பாரு, நம்ம ரெண்டு பேர் நேம் தான் இருக்கும், ‘SR’ Sahana-Ram. இப்போ தெரியுதாடா?”என்று வினவ,

“என்னது இது நீங்க போட்ட செயினா? நீங்க என்னை லவ் பண்ணுனீங்களா?”என்றதும்,



“நம்ம ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் நாலு வருஷமாக உயிருக்கு உயிரா காதலிச்சோம். நல்ல படியா போய்ட்டு இருந்த நம்ம காதல்ல ஆறு மாசத்துக்கு முன்னாடி அந்த அஜய் கல்லை தூக்கிப் போட்டு கலைச்சிட்டான்” என்றதும் சஹானா அமைதியாய் இருக்க,



“என்ன நம்பமுடியலையா?”என்று கேட்கவும், உடனடியாக சஹானாவிடமிருந்து,



“ஆமா, என்னால நம்பவே முடியல”என்றாள்.



“அந்த அளவுக்கு டிராமா பண்ணிருக்கான் அந்த அஜய். நம்ம லவ்வைப் பிரிச்சு உன்னை அடைய அவன் எடுத்துக்கிட்ட ஆயுதம் தான் ‘கார்த்திக்’.”என்று தன் அடுத்த அம்பை வீச,



“வாட்? என் அண்ணா ஒண்ணும் அப்படிப்பட்ட ஆள் இல்ல, என் அண்ணா எனக்கு ஒண்ணுனா துடிச்சிருவான், தெரியாம பேசாதீங்க?”என்று கோபத்துடன் வினவ,



“ஏன் தெரியாது? உன்னோட பயோடேட்டாவே எனக்கு தெரியும், கார்த்திக் உன் அம்மாவோட முதல் கணவரோட பையன்னு எனக்கு நீ சொல்லி தான் தெரியும்.” என்றவன்,



“ஆனா, கார்த்திக் மேல தப்பில்லை. கார்த்திக்கை அப்படி ஆட்டி வைக்குறதே அஜய் தானே”என்க,



“ஆனா, நானும் அஜய்யும் லவ் பண்ணி அப்புறம் என்கெஜ்மெண்ட் ஆகிடுச்சினு என் பேரெண்ட்ஸும் சொல்றாங்களே, நீங்க சொல்றது எனக்கு கிரகிக்க முடியலை”என்று கண் கலங்கினாள் சஹானா.



“அதான் சொன்னேனே, எல்லாத்துக்கும் காரணம் அவன் தான். எல்லார்கிட்டேயும் நல்லவன் மாதிரி நடிச்சு, அத்தனை பேரையும் கைக்குள்ள போட்டுட்டு, உன்னை என்கிட்டயிருந்து பிரிச்சு நிச்சயதார்த்தமும் பண்ணி என்கிட்ட போட்ட சவால்ல ஜெயிச்சிட்டான்.”என்றான் குரலில் விஷத்தை ஏற்றி.



“என்ன ச..சவால்?”என்று தயங்கியபடியே கேட்ட சஹானாவிடம்,



“உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சுக் காட்டுறேன்னுதான். அவன் போட்ட சவால் படி உன் குடும்பம், ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாருக்குமே என்னை எதிரி ஆக்கிட்டான், அந்த பிளடி ராஸ்கல். இப்போ எல்லாருக்குமே நான்தான் தப்பானவன், அவன் நல்லவன்”என்று ஆதங்கப்பட, அவனது ஆதங்க குரலில் உண்மை இருப்பது போல் தோன்றிய சஹானாவோ,



“இதனால அஜய்க்கு என்ன லாபம்?”என்று கேட்க,



அவனோ, “என்ன லாபமா? உன் அப்பா பெரிய பிஸ்னஸ்மேன், உன்னை மேரேஜ் பண்ணிக்கிட்டா அவனோட பிஸ்னஸ் ஸ்டேட்டஸ் ஹைக்காகும், அப்புறம் உன் மூலம் வர்ற சொத்த மொத்தமா அடைய வேண்டாமா? அதுக்குதானே அவன் தங்கச்சியையும் உன் அண்ணன் தலையில கட்டி வைக்குறான்”என்று சஹானாவின் குழம்பிய குட்டையில் மீன் பிடித்தவன்,



“சஹி, அவனை நம்பாதே, அவன் நல்லவன் இல்லை. சொத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவான். எனக்கென்னவோ, அஜய்தான் லாரி அனுப்பி உன்னை ஆக்ஸிடண்ட் பண்ணியிருப்பானோனு கூட எனக்கு தோணுது”என்று சஹானாவின் தலையில் இடியை இறக்கினான்.



“இல்ல அஜய் அப்படியெல்லாம் பண்ணியிருக்க மாட்டாரு,”என்று கூறிய சஹானாவிடம் கோபத்துடன்,



“இப்படி நீ ஆரம்பத்துல சொல்லவும் தான், அவன்கிட்ட நம்ம காதல் பத்தி பேசுனோம். பேசி என்ன யூஸ்? என்னை புரிஞ்சிக்கோ சஹி”என்று கெஞ்ச,



“அஜய், எ...என்னை எதுக்கு கொ..கொலைப் பண்ண ட்ரைப் பண்ணனும்?”என்றாள் தயங்கியபடியே.



“அவனோட மோட்டிவ் உன்னை கொல்லுறது இல்ல, உன்ன வச்சு என்னை பழிவாங்குறது தான்”என்றான்,



“புரியலை, உங்களை ஏன் பழிவாங்கனும்?”என்று கேட்க, அவளது தொடர் கேள்வியில் கடுப்பானவன்,



“இப்படி எதுக்கெடுத்தாலும் கேள்வி மேல கேள்வி கேட்காத சஹி, நான் சொல்றது தான் உண்மை,இத புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. நாம ஒ.. ஓடிப்போகனும்னு போட்ட பிளான் அவனுக்கு தெரிஞ்சிருக்கும். அதான்” என்க,



“நோ, இப்படி நான் செய்ய சம்மதிச்சிருக்கமாட்டேன். என் குடும்பத்த எதிர்த்து அப்படி ஒரு வேலையை செய்ய நான் கண்டிப்பா துணிஞ்சிருக்கமாட்டேன், என்னை அப்படி வளர்க்கல..”என்று கதறினாள்.



“ஏன்,எனக்கும் குடும்பம் இல்லையா?

நம்ம காதல் கைகூட கடைசி வழி இதுதான்னு நாம ரெண்டு பேரும் சேர்ந்து முழுமனசோட எடுத்த முடிவு தான் இது. என்னை விட்டுட்டு உன்னால இருக்க முடியாதுனு அன்னைக்கு நீ அழுதப்போ தான் இப்படி டிசைட் பண்ணுனோம், அதுக்குள்ள அதையும் தெரிஞ்சிக்கிட்டு உன்னை ஆக்ஸிடண்ட் பண்ணிட்டான் அந்த படுபாவி”என்று கூறிக்கொண்டே இருக்க அந்த பக்கம் சஹானாவின் அழுகையொலி மட்டுமே கேட்க,



“அழாத சஹி, நீ அழனும்னு நான் இப்படி சொல்லல. இப்போ தான் நீ தைரியமா இருக்கனும். உன்னோட அம்னீசியாவ கையிலெடுத்துகிட்டு அவன் உன்னை எப்படியாவது சீக்கிரமா கல்யாணம் பண்ண பார்ப்பான். விட்டுறாத, முடிஞ்சா கல்யாணத்தை நிறுத்தப் பாரு, இல்லைனா வந்திரு. என்னோட வருமானம் கம்மினாலும் நான் உன்னை ராணி மாதிரி வச்சி பாத்துக்குவேன்” என்றவன்,



“சஹி,டைம் ஆகிடுச்சி, நான் வச்சிடுறேன்.அப்புறம் நான் கால் பண்ணினத யார்கிட்டயும் சொல்லிராத. அப்புறம், அஜய் என்னை உயிரோட விடமாட்டான்.”என்றவன் திருப்தியுடன் இணைப்பைத் துண்டித்தான்.



இணைப்பைத் துண்டித்தவளுக்கோ தன்னை சுற்றி நடப்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனாலும், அஜய்யிடம் தவறிருப்பதாகவும் சஹானாவினால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. குழம்பியவள் குழப்பத்துடனே நித்திரையடைந்தாள்.



நினைவுகள் தொடரும்.....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-26 ஐ உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!

ஜெஃப்ரி....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-27

24195

மறுநாளும் சஹானாவிற்கு குழப்பத்திலேயே கழிய, அந்த அலைபேசித் தகவல்களை தெளிவுபடுத்திக் கொள்ள வழியறியாது திணறினாள். தோழிகளிடமும் மறைமுகமாக விசாரித்துப் பார்த்ததில் அஜய்க்கு ஆதரவாகவே தகவல் வர சோர்ந்து தான் போனாள்.



இப்படியே அடுத்து வந்த மூன்று நாட்களும் கழிய, அலைபேசி அழைப்பும் வராது சஹானா ஒருபுறம் குழம்பிக் கொண்டிருக்க,அன்று திருமணத்திற்குத் தேவையான உடைகள் மற்றும் நகைகள் எடுக்க விற்பனையாளர்களை வீட்டிற்கே வரவழைத்திருந்தார் ரகுராம்.அஜய்யின் வீட்டிலிருந்து அஜய்யின் தாய் ராகிணி, அண்ணி திவ்யா மற்றும் யாழினியும் சஹானாவின் வீட்டிற்கே வந்திருந்தனர்.



“சானுமா, உனக்கு என்ன பிடிச்சிருக்கோ நீ சூஸ் பண்ணு, செலெக்ட் பண்ணுறதுக்கு உன்னோட டேஸ்ட் அத்தனையும் தெரிஞ்ச உன் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. தே வில் ஹெல்ப் யூ, இல்லனா அஜய்யை வரச் சொல்லவா?”என்று கார்த்திக் கண்ணடித்துக் கேட்க,



“இல்லண்ணா, நீங்களே சூஸ் பண்ணுங்க. எனக்கு எதுவும் தோணல”என்று நகரப் பார்க்க,



அஜய்யின் அண்ணி திவ்யா, “சானு, இது நாலு குடும்பமும் இணைந்து நடத்துற ஃபங்ஷன். எல்லாருமே சந்தோஷமா இதுல பங்கெடுத்துக்க வேண்டாமா?”என்று கேட்க,



“அதுக்கு நான் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கவேண்டாமா?”என்று திருப்பிக் கேட்டாள் சஹானா.



“சரிதான் சானு, இப்போ நீ எடுக்கலைன்னா மிதுனா மட்டும் எடுப்பாளா? அவளுக்கும் மேரேஜ் தானே? அவளையும் கொஞ்சம் யோசி”என்று திவ்யா கூறவும் சஹானா சற்று யோசிக்க,



“அண்ட் சானு, இதுல நீ ரிலாக்ஸ்டா இருக்க என்ன இருக்கு? உன் பேரெண்ட்ஸ், உன் அண்ணன் விருப்பப்பட்டு நடக்கப்போற கல்யாணம், எல்லாத்துக்கும் மேல நீ லவ் பண்ணுன அஜய்… இதுக்கு மேல நீ என்ன யோசிக்குறனு எனக்கு புரியல சானு?”என்று தன் ஐயத்தை சஹானாவிற்கு மட்டுமே கேட்கும் குரலில் கேட்க,



“இல்ல, நானே சூஸ் பண்றேன்”என்று குழம்பிய முகத்தில் வரவழைத்த செயற்கை புன்னகையுடன் ஆடைகளைத் தேர்வு செய்ய ஆரம்பித்தாள்.



வரவேற்பு நிகழ்ச்சிக்கு அடர்சிவப்பு நிறத்தில் வட இந்திய முறையில் வடிவமைக்கப்பட்ட லெஹாங்காவை தேர்வு செய்ய,

“வாவ் சூப்பர் சானு, பூஜா என்கேஜ்மெண்ட்ல நீ ‘கண்ணளனே...’சாங்க்கு ஆடினப்போ அந்த நார்மல் லெஹெங்கால உன்னை பார்த்தே அஜய் அண்ணா ஃப்ளாட்... அன்னைக்கு விழுந்தவர் இன்னும் எழுந்திரிக்கல. இப்போ இந்த கிராண்ட் லுக்ல அஜய் அண்ணாவோட நிலைமை ரொம்ப கவலைக்கிடம் தான்”என்று ரீனா கூற,



சஹானாவின் மனமோ, ‘இவங்க சொல்றதலாம் வச்சிப்பார்த்தா அஜய் தான் என்னை லவ் பண்ணுனாங்களா? நான் யாரை லவ் பண்ணினேன். இதை யாருக்கிட்ட கேட்டுத் தெளிவுப்படுத்துறது’என்று சிந்திக்கலானாள்.



தாயின் உலுக்கலில் நினைவுக்கு வந்தவள்,

“என்ன சானு யோசிக்குற? அடுத்துப்பாரு”என்று மகளை ஏவியவர், ராகிணியிடம்,

“அண்ணி முகூர்த்தப்பட்டு எடுக்கனுமே, மாப்பிள்ளை எப்போ வருவாங்க”என்று வினவ,



“அஜய்யும், ஷ்யாமும் இப்போ வந்திருவாங்க அண்ணி. நாம ஜுவல்ஸ் பார்க்கலாம்”என்று கூற, ஆடவர்களின் வருகையை அறிந்ததும், மிதுனாவோ ஷ்யாமின் வருகையை எதிர்பார்த்தபடி இருந்தாலென்றாள், சஹானாவின் மனதோ, ‘இப்போ இவன் எதுக்கு இங்க வர்றான்’என்று யோசித்தது.



அஜய்யும், ஷ்யாமும் வந்ததும் அஜய் அனிச்சையாக சஹானாவின் அருகில் அமர, மிதுனாவின் அருகில் அமர்ந்த ஷ்யாமோ மிதுனாவுடன் இணைந்து உடைத்தேர்வில் ஈடுபடாமல் அலைபேசியை ஆராய்ந்தபடி இருந்தான்.



மிதுனாவோ ஏமாற்றமாக உணர, ஷ்யாமின் தாய் சரிதா,

“டேய் மொபைல் பார்க்குறதுக்கு இங்க எதுக்குடா வந்த? ஆபிஸ்லயே உட்கார்ந்திருக்க வேண்டியதுதானே?”என்று மகனிடம் சிடுசிடுத்துவிட்டு மிதுனாவிடம்,

“மிது, இது பாருடா நல்லாயிருக்கா?”என்று ஒரு அட்டிகையை மிதுனாவின் கழுத்தில் வைத்துப் பார்க்க,



“நீங்க பாருங்க அத்தை, இதோ வந்திடுறேன்”என்று நகர முயன்றவளை ஷ்யாம் கைப் பிடித்து அமர்த்தி,

“ம்மா, இது ப்ளேட் மாதிரியிருக்கு. வேற பாருங்க, ஃப்ளோரல் டிசைன் பாருங்க”என்றவன்,

“மிது, ரிசெப்சன் லெஹாங்கா நான் ஆல்ரெடி ஆர்டர் பண்ணிட்டேன், உனக்கு பிடிச்ச பிங்க் கலர்ல,எனக்கு பிடிச்ச டிசைன்ல. சோ, பட்டு மட்டும் இப்ப பார்க்கலாம்”என்று கூற மிதுனா மகிழ்வுடன் புன்னகைத்தாலும் ஷ்யாம் தன்னிடம் ஒதுக்கம் காட்டுவதை உணர முடிந்தது.



“இது எப்போடா?என்கிட்ட கூட சொல்லாம....?”என்ற இழுத்த அஜய்யிடம்,



“ஏன் சர்ப்ரைஸ் குடுக்குறதுலாம் உனக்கு மட்டும் தான் தெரியுமா? இது ஆல்ரெடி நானும்,சானுவும் பண்ணின பிளான். மிதுக்கு எப்படி எடுத்தா பிடிக்கும்னு சானு சொன்னா. என் ஃப்ரெண்டோட அண்ணன் சென்னைல பெரிய டிசைனரா இருக்காங்க. அவங்க கிட்ட சொல்லி ஆர்டர் பண்ணிருக்கேன்”என்றான் ஷ்யாம்.



அஜய்யே சஹானாவிற்கு அவளது விருப்பப்படியே அனைத்து ஆடைகளையும் தேர்வு செய்தான். பெற்றோருக்காக சாவிக் கொடுத்த பொம்மை போல் இயங்கிய சஹானாவைப் பார்த்த அஜய் சஹானாவின் அருகில் குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,



“எப்படியெல்லாம் ஷாப்பிங் பண்ணனும்னு ஆசைப்பட்ட, நீ இப்படி ஒரெடத்துல இருக்கவே மாட்ட. கிட்ஸ் மாதிரி துருதுருன்னு வருவ. இப்போ நீ இப்படி இருக்குறது நல்லாவேயில்ல சஹி. சீக்கிரம் ரெக்கவராகுடி”என்று கூறினான்.



அஜய் கண்ணில் தெரிந்த காதலில் கட்டுண்டு இருந்தவள்,

“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்”என்றதும் அஜய்யின் மனமோ, ‘இப்போ என்ன சொல்லப்போறளோ’என்று கூற, அவளை அவளது அறைக்கு அழைத்துச் சென்றான்.



“சொல்லு சஹி, என்ன கேட்கணும்?”என்றான் அவளருகில் இயல்பாய் அமர்ந்தபடி.



“நான் உண்மைலேயே உங்களைத்தான் லவ் பண்ணுனேனா?”என்றாள்.



“இப்போ எதுக்கு உனக்கு இந்த சந்தேகம்?”என்க,



“அ..அது...எனக்கு தான் எதுவுமே நியாபகமில்லையே. அதான் கேட்டேன்”என்று தயங்கியபடியே கூற, அவளது தயக்கத்தை குறித்துக்கொண்டவன்,



“உனக்கு அம்னீசியா இன்னைக்கு வரலையே சஹிமா, இந்த கேள்வியை நீ கேக்கனும்னு நினைச்சிருந்தா அம்னீசியானு உனக்கு தெரிஞ்ச இந்த ரெண்டு வாரத்துல கேட்டுருப்பியே”என்று அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து வினவினான்.



சஹானாவோ அமைதியாகவே இருக்க,

“சஹி பேபி, நீ எதுக்கோ ரொம்ப குழம்பி போய் இருக்க. எதையும் ரொம்ப யோசிக்காதடா. அதன் போக்குல விட்ரு. அப்புறம்,என்ன நடந்தாலும் இந்த கல்யாணம் நிச்சயமா நடக்கும்”என்று உறுதியுடன் கூற,



“எனக்கு அம்னீசியா வந்ததுல உங்களுக்கு ரொம்ப ஹாப்பி போல, ரொம்ப அவசரப்பட்டு கல்யாணத்தை முடிக்கப் பார்க்குறீங்க?” கோபத்தில் கூறினாள்.



“நான் சொல்ற எதையுமே நீ நம்ப போறதில்ல. உன்கூட இருக்குற எல்லா நேரமும் எனக்கு ஹாப்பி தான். ஆனா,உனக்கு அம்னீசியா எப்போ சரியாகுதோ அப்போ தான் எனக்கு உண்மைலேயே ஹாப்பி. அப்போ தான் நான் இழந்ததெல்லாம் எனக்கு நேச்சுரலாவே கிடைக்கும்.”என்றவனது கண்களை ஆழ்ந்து நோக்க சஹானாவின் முகத்தை கையில் ஏந்தியவன் தானே தொடர்ந்தான்,



“நீ இப்படி உன் பேமிலிக்காக கீ கொடுத்த பொம்மை மாதிரி இருக்குறதுல உயிர்ப்பே இல்ல. எனக்கு தேவை கள்ளம் கபடமில்லாம மனசில பட்டதை படபடனு வெடிக்குற என் சஹி. நான் உன்னை ஃபர்ஸ்ட் அப்படி தான் பார்த்தேன்”என்று அவளது கயல்விழிகளில் இதழொற்றினான்.



“ஏன் சஹி, நீ என்னைய உண்மையாவே காதலிச்சியானு கேட்குறியே? அந்த காதல் இல்லாமலா நான் உன்கிட்ட இவ்ளோ நெருக்கமா இருக்கேன்.”என்று கேட்டதும் அவனிடமிருந்து விலகிய சஹானாவின் கைகளைப் பற்றிய அஜய்,



“ஆக்ஸிடண்ட்க்கு அப்புறம் நான் உனக்கு குடுத்த கிஸ்ஸெல்லாம் எந்த விதத்துல அக்செப்ட் பண்ணுற. அப்போ உன் ஆழ் மனசில என்மேல காதல் இருக்கப்போய் தானே? அதை நீ ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குற?”என்றதும்,



“நான் கொஞ்சம் யோசிக்கனும்”என்று கூற,



“சரி நான் கிளம்புறேன், நீ ரொம்ப யோசிக்காத.அது உன் ஹெல்த்க்கு நல்லதில்லை.”என்று எழுந்தவன்,



“சஹிபேபி, டோன்ட் வொர்ரி. உனக்கு விருப்பமில்லாத எதுவுமே நடக்காதுடா, இந்த கல்யாணத்தைத் தவிர.”என்றவன் அவள் கன்னத்தில் தட்டிவிட்டு வெளியேறினான்.

******

நாட்கள் ரெக்கைக் கட்டி பறக்க, திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்க, அன்று சஹானாவின் அலைபேசி புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை உயிர்பிக்க,



“சஹிபேபி, சாரி கல்யாணப்பொண்ணு எப்படி இருக்கீங்க?”என்றது அதே குரல்.



“நீங்க....?”என்று சஹானா இழுக்க,



“எஸ், நீ கண்டிப்பா மறந்திருப்பேனு தெரியும். நான் தான் உன் ராம். இனி அப்படி சொல்லமுடியுமானு தெரியலை. ஆனா, என்ன நடந்தாலும் நீ தான் என் சஹி”என்று அழுத்தம் கொடுத்தான்.



சஹானா மறுபடியும் தொடங்கிய குழப்பத்தில் மௌனிக்க,

“என்ன சஹி, என்கூட பேசக்கூடாதுனு மிரட்டிட்டானா உன் வருங்கால புருசன்? இல்லன்னா, நமக்கு தான் வசதியான வாழ்க்கை அமைய போகுதே, இனி எதுக்கு இந்த ஏழைன்னு நினைச்சுட்டியா?”என்று பற்களைக் கடிக்க,



“அய்யோ, அப்படில்லாம் இல்ல. எனக்கு ரொம்ப குழப்பமாயிருக்கு. என்னால எதையுமே புரிஞ்சிக்க முடியலை”என்க, அவனோ மனதிற்குள்,

‘நல்லா குழம்புடி, எனக்கு அதான் வேணும்’என்று குரூரமாய் மனதினுள் சிரித்தவன்,



“நான் உன்கூட பேசுனத அஜய்கிட்ட சொல்லிட்டியா?”என்று கேட்க,



“இல்ல, சொல்லல. நீங்க ஏன் திரும்ப என்னை கூப்பிடலை?”என்று கேட்க,



“எங்க கூப்பிட, கூப்பிட்டா மட்டும் ராம் மாமானு முன்னாடி மாதிரி பேசிடுவியா என்ன?”என்று முத கேள்விக்கு மட்டும் பதிலளித்தவன்,



“நீ இன்னும் நம்பலைன்னா உனக்கு வாட்ஸ்அப்ல ஒரு போட்டோ அனுப்பிருக்கேன், அதை பாரு. அப்போ புரியும்”என்றதும் சஹானா அலைபேசியில் தன் பகிரியை (WhatsApp) திறந்து பார்க்க, அதில் சஹானா ஸ்ரீராமுடன் சிரித்துக் கொண்டிருந்தாள். அந்த புகைபட்டிதிலிருந்து சஹானாவினால் மேற்கொண்டு எதையுமே உணர முடியவில்லை.



“இது தான் நீங்களா?”என்று வினவ,



“நாம ரெண்டு பேசும் லாஸ்டா சேர்ந்து எடுத்த ஃபோட்டோ. உனக்கு பழசுலாம் மறந்து போன குழப்பத்துல என் காதலை மறந்துட்ட,ஆனா அஜய்யை மட்டும் கல்யாணம் பண்ணிக்க எப்படி சம்மதிச்சே?”என்று கேட்க,



“நான் எங்க சம்மதிச்சேன்? எல்லாரும் நான் அஜய்ய தான் லவ் பண்ணுனேனு சொல்றாங்க. நீங்க மட்டும் தான் இப்ப்டி சொல்றீங்க? பின்ன நான் என்ன பண்ண?”என்று இயலாமையில் எகிற,



“நீ ஒண்ணும் பண்ண வேண்டாம். நீ குழப்பத்துல இருக்குற மாதிரி காட்டிக்காத. சந்தோஷமா இரு. கல்யாணத்துக்கு ரெடியாவே இரு. ஆனா, கல்யாணத்துக்கு முந்தின நைட் மண்டபத்த விட்டு வெளிய வந்திரு. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”என்று கூற,



“என்ன பேசுறீங்க நீங்க? என்னால என் குடும்பத்த அவமானப்படுத்துற மாதிரி ஒரு வேலையை எப்பவுமே பண்ண முடியாது.”என்க,



“எப்பவுமே குடும்பத்தையே பாரு, அவங்க மட்டும் உன் சந்தோசத்தை, உன் காதலை புரிஞ்சிக்கிட்டாங்களா? பின்ன, உன்னை இத்தனை வருஷம் உயிருக்கு உயிரா காதலிச்சதுக்கு எனக்கு நீ பண்ண போற கைமாறு என்ன?”என்று ஆதங்கப்பட்டவனை,



“எனக்கு வந்த அம்னீசியா தான் இப்போ ப்ராப்ளம், அதுக்காக என் குடும்பத்தை என்னைக்கும் கேவலப்படுத்தமாட்டேன்”என்றாள் சஹானா.



“சரி, நீ ஓடி வரவேண்டாம். நான் வர்றேன். முகூர்த்தத்துக்கு புடவை மாத்த வர்றப்போ உன்னோட ரூம்ல பால்கனி டோரை திறந்து வை, நான் வந்து அப்புறம் நடக்க வேண்டியதை நான் பார்த்துக்குறேன். இதையாவது செய்வியா?என் காதலிய காப்பத்த இந்த வேலைகளை எல்லாம் பார்க்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்”என்று போலியாய் யாசித்தான்.



சஹானாவும் குழம்பிய மனநிலையிலே, “சரி”என்று இணைப்பைத் துண்டித்தவள், மேலும் குழம்ப, தீவிரமாய் யோசிக்கத் தொடங்கினாள். அதிகபடி யோசித்ததன் விளைவாய் பின்பக்க தலையில் வலியெடுக்க வலியை கட்டப்படுத்த முடியாது கையிலுள்ள அலைபேசியை வீசியெறிந்தாள்.



சத்தம் கேட்டு கார்த்திக் தங்கையின் அறையில் பிரவேசிக்க,

“அம்மு,என்னடா ஆச்சு?”என்று நுழைந்தவன் உயிர்ப்பின்றி கிடந்த அலைபேசியை எடுக்க,



சஹானா அழுதுகொண்டே, “அண்ணா, தலை வலிக்குதுண்ணா, என்னால யோசிக்க முடியலை”என்று கூற,



“இப்போ என்ன யோசிக்குற, நீ எதையுமே யோசிக்காதனு தான் சொன்னேன்ல”என்று தங்கையின் தலையை வருட,



“அண்ணா, உன்கிட்ட ஒண்ணு கேட்குறேன் என்னை மட்டும் மனசில வச்சு உண்மையை சொல்லுவியா?”என்று கேட்டாள்.



“என் விஷயத்துல கூட நான் உன்னை மட்டும் தான் மனசில வச்சு யோசிப்பேன், கேளுடா”என்க,



“அண்ணா, நான் உண்மைலேயே அஜய்யை லவ் பண்ணுனேனா?”என்று கேட்டாள்.



“ஆமாடா, நான் உன்கிட்ட இதுவரை பொய் சொல்லிருக்கேனா? நான் யூ.எஸ் போற அன்னைக்கு ஏர்போர்ட்ல வச்சு தான் நீங்க ஃபர்ஸ்டா மீட் பண்ணுனது. அப்புறம் அர்ஜுன் என்கேஜ்மெண்ட்ல நீ பண்ணுன டான்ஸ்ல அஜய் உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சிட்டான்...”என்று ஆரம்பித்து நடந்த அனைத்தையும் சுருக்கமாகக் கூறினான்.



“சரி, இப்போ ஃபோன் என்ன தப்பு பண்ணிச்சு. அதை சொல்லு”என்று கேட்க,



“இல்லண்ணா, நான் தான் தலைவலியில தூக்கிப்போட்டுட்டேன். சாரிண்ணா”என்று வருந்த,



“நோ ப்ராப்ளம்டா, வேற ஃபோன் வாங்கி தர்றேன்”என்றதும் அவசரமாய் மறுத்த சஹானா,



“இல்லண்ணா, எனக்கு இப்போதைக்கு ஃபோன் வேண்டாம். அந்த ஃபோனையும் தூக்கிப் போட்டுறு”என்று பதறியவளை வியந்து பார்க்க,



“அது...நான் இப்போ வீட்டுல தானே இருக்கேன். அப்புறம், மிதுனா, ரீனாலாம் எப்பவுமே கூட தானே இருக்காங்க. இன்னும் நாலு நாளுக்கு எதுக்குண்ணா நியூ ஃபோன், அப்புறம் பார்த்துக்கலாம்”என்று தயங்கியபடியே கூற,



“ஓகே, ரிலாக்ஸ்டா. நீ தூங்கு. ஈவினிங் ஹாஸ்பிடல் போய்ட்டு வந்திரலாம்”என்று கூறிவிட்டு அவளது அலைபேசியுடன் வெளியேறினான்.



******

“இந்தா மச்சான் நீ வாங்கி கொடுத்த ஆப்பிள் ஃபோன், ரெண்டு வாரத்துலே ரிடர்ன் வந்துடுச்சி”என்று அஜய் முன் வைக்க,



“எதுக்குடா உடைச்சா?”என்று கேட்க,



“தலைவலில போட்டு உடைச்சுட்டேன்னு அழுதா, ஈவினிங் ஹாஸ்பிடல் போலம்னு சொல்லி தூங்க சொல்லிட்டு, மிதுனாவை பார்த்துக்க சொல்லிட்டு வந்தேன். நீ என்னடா பேசுன அவகிட்ட. கொஞ்சம் பொறுமையா போடா”என்று அஜய்யிடம் விசாரிக்க,



“டேய், நான் எங்கடா அவகிட்ட பேசுனேன். நேர்ல பேசுறதோட சரி. இந்த போன் கூட நான் வாங்கி குடுத்ததுனு அவளுக்கு தெரியாதே. என்னை கண்டாலே டென்சனாகுறா, இதுல நான் அவகிட்ட டெய்லி பேசுனா, டெய்லி ஒரு போன் தான் வாங்கிக் குடுக்கனும்”என்று சலித்தபடி கூற,



“அப்போ எதுக்கு அப்படி கேட்டா, நான் அஜய்ய தான் லவ் பண்ணுனேனானு, அதுவும் திடீர்னு? நானும் உங்க ரெண்டு பேருக்கும் தான் ஏதோ பிராப்ளம்னு நினைச்சேன்”என்று கார்த்திக் நடந்த அனைத்தையும் கூற, அலைபேசியை பார்த்தபடியே சிந்தித்த அஜய்,



“சரி வா போலாம்”என்று கார்த்திக்கை அழைத்தபடி ‘ஆப்பிள் ஷோரூம்’சென்றான்.



“ஆனாலும் மச்சான் நீ ஆப்பிள் பேமிலினு தெரியும், அதுக்காக ரெண்டு வாரத்துல ஆப்பிள் ஷோரூம்ல பர்சேஸ் பண்ணுவேனு தெரியாதுடா”என்று சீண்ட,



“டேய், சானு போன் வேண்டாம்னு தான் சொல்லிட்டாளே, பின்ன எதுக்கு இப்போ”என்க,



அலைபேசியை அங்குள்ள விற்பனையாளரிடம் கொடுத்து அதை சரி செய்ய கொடுத்துவிட்டு அங்கேயே காத்திருந்தான்.

“நீ ஏதோ புது மொபைல் வாங்கப்போறனு நினைச்சேன்”என்ற கார்த்திக்கிடம்,



“இல்லடா, சானுக்கு கால் பண்ணினது யாருனு தெரிஞ்சிக்கனும். அதான், அவ யோசிச்சு டென்சன்ல மொபைல உடைச்சிருக்கானு நினைக்குறேன்”என்று தன் ஐயத்தை மேலிட,



“சரி பார்க்கலாம்”கார்த்திக்கும் ஆமோதிக்க, அலைபேசிக்காக காத்திருந்தனர்.



அலைபேசி வந்ததும், அதை கடவுச்சொல் கொடுத்து திறந்து அழைப்புகளின் பட்டியலை ஆராய்ந்தான். கடைசியாக ஒரு புதிய எண்ணிலிருந்து வந்த தொடர்பில் அரைமணி நேரம் சஹானா உரையாடியிருப்பது இருவருக்குமே ஆச்சர்யம் தர,



கார்த்திக்கே, “டேய் நீ சந்தேகப்பட்டது சரி தான்டா. அது யாருனு எப்படி தெரிஞ்சிக்க?”என்று கேட்க, அஜய் அலைபேசியை ஆராய்ந்து பகிரியை திறந்தான்.



பகிரியில் அந்த குறிப்பிட்ட எண்ணிலிருந்து ஒரு புகைப்படம் வந்திருக்க, அதை திறந்தவனுக்கோ கோபம் கண்ணை மறைக்க, கார்த்திக்கை அழைத்துக் கொண்டு அர்ஜூன் இருக்குமிடம் பறந்தான். அனுமதி பெற்று அர்ஜூனின் அறையில் இருவரும் நுழைய,



“என்னடா கால் பண்ணாம டைரெக்டா வந்திருக்கீங்க? எனித்திங் சீரியஸ்?”என்று வினவ,



ஆமோதிக்கும் விதமாய் தலையசைத்த அஜய் சஹானாவின் அலைபேசியில் இருந்த அந்த புகைப்படத்தை அர்ஜூனிடம் காண்பித்தான். சஹானா ஸ்ரீராமுடன் சிரித்தபடி அஜய்யின் அலுவலகத்தில் இருந்து எடுத்த அந்த புகைப்படத்தை பார்த்த அர்ஜூனோ,



“இது எப்போடா? நீ எப்படி அலோவ் பண்ணுன?”என்று கேட்க,



“அவ தான் ஸ்வீப்பர், பியூன் உட்பட எல்லார்கூடவும் வஞ்சமில்லாம செல்ஃபி எடுப்பாளே, அப்படி தான் இதுவும். இப்படி எல்லார் கூடயும் செல்பி எடுத்தா இப்படி ப்ராப்ளம் வர்றது ஒண்ணும் ஆச்சரியமில்லை”என்க,



“அது சரி, நானே உன்கிட்ட பேசனும்னு நினைச்சேன், லாரி டிரைவரை பிடிச்சாச்சு. ஸ்ரீராம் தான் ஆக்ஸிடெண்ட் பண்ண சொன்னதா ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்கான். இப்போ தான் ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு வர்றேன்”என்று கூற,



“ஸ்கவுண்டிரல், இப்போ சஹியை அவன் தான் குழப்புறான்”என்று கோபத்தில் பற்களைக் கடிக்க,



“டேய் சில், இப்போ அவனோட நம்பர் ஆக்சஸ் பண்ண முடியல, மே பீ இந்த நம்பர் யூஸ் பண்ணலாம்”என்றவன்,



“இது சானுக்கு நியூ போன், இந்த நம்பர் எப்படி அவனுக்கு தெரிஞ்சுது?”என்று கேட்ட அர்ஜூனிடம்,



“அதான்டா எனக்கும் குழப்பமாயிருக்கு. எங்க வீட்டுல அண்ணி, யாழினியை தவிர வேற யாருக்குமே இந்த நம்பர் தெரியாது”என்று குழம்ப,



“கார்த்தி, அப்போ கண்டிப்பா உன் வீட்டு சைட்ல இருந்து தான் அவ நம்பர் வெளிய போயிருக்கனும். கொஞ்சம் அலெர்டா இரு”என்று எச்சரித்துவிட்டு,



“அஜய், இந்த மொபைல நான் வச்சிக்குறேன். நம்பர் டிரேஸ் பண்ணனும்”என்று தகவலளித்தவன் கோபத்தில் இருந்த அஜய்யின் அருகில் வந்து அவனது தோளில் கைவைத்து,



“டேய், இன்னும் நாலு நாள்ல கல்யாணம். நீ காதலிச்ச சானுவோட. இந்த பிரச்சனையை என்கிட்ட விட்டுட்டு கல்யாண மாப்பிள்ளையா என்ன பண்ணனுமோ அதை பண்ணு.”என்று ஆறுதலளிக்க,



“கொஞ்சம் பயமாவே இருக்குடா. ஸ்ரீராம் பத்தி இல்ல, சஹியை நினைச்சு. எப்போ எந்த பாலை எந்த பக்கம் அடிப்பான்னே தெரியலையே”என்று குழம்ப,



“டோன்ட் வொர்ரிடா, அதை கேட்ச் பண்ண தான் இவன் இருக்கானே”என்று கார்த்திக்கை காட்ட,



“கார்த்தி, பூஜா இன்னைக்கு உங்க வீட்டுக்கு போய்டுவேனு சொன்னா, அவகிட்ட விஷயத்தை சொல்லி அனுப்புறேன். சானு கூட எப்பவுமே யாராச்சும் இருக்குற மாதிரி பார்த்துக்கோ. அண்ட், நான் சொன்னதையும் கொஞ்சம் கவனி”என்று கூறிவிட்டு கலைந்தனர்.

நினைவுகள் தொடரும்...!
 
Status
Not open for further replies.
Top