All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜெஃப்ரியின் "இதயம் மீட்டும் நினைவலைகள்" - கதை திரி

Status
Not open for further replies.

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,


"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-13 உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.



கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!


ஜெஃப்ரி......!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-14

22513


கோள்கள் தன் சுற்று வட்டப்பாதையில் இயங்கி ‘கெப்ளரின்’ கூற்றை நிரூபித்து நாட்கள் உருண்டோடியது. அஜய்யின் மீதான சஹானாவின் காதலை நிரூபிக்கும் நிகழ்வும் அன்று நிகழ்ந்தது.

அன்று அஜய் வெகுத் தாமதமாய், அதுவும் குழப்பம் தாங்கிய முகத்துடன் அலுவலகத்திற்கு வந்தான். அந்நேரம் சஹானா மேசையில் தலைக் கவிழ்ந்து படுத்திருக்க, அஜய்க்கோ ‘என்னாச்சு இவளுக்கு? எப்போவுமே இப்படி படுக்கமாட்டாளே’ என்று எண்ணியவன், அவள் தோள் தட்டி,

“சஹானா, கம் வித் மீ” என்று கூறிவிட்டு தனதறைக்குள் சென்றான்.

குறிப்பரை மற்றும் பேனாவுடன் உள்ளே நுழைந்தவளைக் கண்டவன்,

“இப்போ இது எதுக்கு?”என்று கடிய,

அவளோ, “நீங்க தானே கூப்பிட்டீங்க?” என்று சோர்ந்த முகத்தில் வரவழைத்த புன்னகையுடன் கூற,

அவளருகில் சென்று அவள் நெற்றியில் கைவைத்து,

“என்னாச்சுடா… உடம்பு சரியில்லயா? உடம்பு சரியில்லனா வீட்டுல இருக்க வேண்டியதானா?”என்று செல்லமாய் கடிந்துகொண்டான்.

சஹானாவோ அவனது கைகளை விலக்கியவாறே,

“கொஞ்சம் தலைவலி, வேற ஒண்ணுமில்லை. நீங்க சொல்லுங்க”என்றாள்.

அஜய்யின் அலுவல் அறையின் உள்ளே, அவன் ஓய்வெடுப்பதெற்கென்று ஓர் அறை உண்டு.அங்கே தான் தினமும் அவன் ஷ்யாமுடன் இணைந்து சாப்பிடுவான். அந்த அறையை சஹானவிடம் காட்டி,

“சஹி, அங்கே போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுடா” என்றான் கனிவாக.

சஹானா மறுக்க, அஜய்யோ பிடிவாதமாய்,

“சொன்னா கேளு சஹி. எனக்கு ஷ்யாம் கூட கொஞ்சம் கான்ஃபிடன்ஷியலா ஒரு மீட் இருக்கு. அது வரை போய் ரெஸ்ட் எடு”என்று அவளை வலுக்கட்டாயமாக கையை பிடித்து அழைத்து சென்று, அவளுக்கு தலைவலி மாத்திரைக் கொடுத்து, அந்த அறையில் அவளை படுக்க வைத்த பின்னரே ஷ்யாமை அழைத்தான்.

ஸ்ரீராமுடன் வந்த ஷ்யாமை முறைத்துவிட்டு,

“ஸ்ரீ நீங்க கொஞ்சம் வெளிய இருக்கீங்களா?”என்றதும்,

ஷ்யாம், “டேய் அவன ஏன்டா...”என்று கூறியவனை இடைமறித்த அஜய்,

“யாழினி கல்யாண விஷயமா பேசனும்டா”என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“இட்ஸ் ஓகே சார்.”என்று விடைபெற்ற ஸ்ரீராமை அழைத்த அஜய்,

“ஸ்ரீ, நீங்க அந்த J.K குரூப்ஸ் ஃபைல கொஞ்சம் எடுத்து பூஜாகிட்ட குடுத்து கொஞ்சம் சரிப்பார்க்க சொல்லுங்க. அவங்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. ஐ வாண்ட் தட் இம்மீடியட்லீ” என்றான் அவனுக்கும் சந்தேகம் வராதபடி.

ஸ்ரீ சென்றதும்,

“நீயென்ன லூஸாடா. நான் கான்ஃபிடன்ஷியலானு சொல்லிருக்கேன். நீ அவன கூப்பிட்டு வந்திருக்க?”என்று அஜய் உறும, ஷ்யாமோ,

“அவன் தான்டா நானும் வர்றேனு சொன்னான்”என்றான்.

“ஷ்யாம், நான் இப்போ சொல்றது உனக்குள்ள வச்சுக்கோ. யார்கிட்டயும் ஷேர் பண்ணாத. முக்கியமா ஸ்ரீகிட்ட” என்றதும்,

“நீ சஹானாவையே கூப்பிடலயே, அப்போவே புரியுது. சொல்லு என்ன விஷயம்?”என்றான் ஷ்யாம்.

“ஷ்யாம், நாம எதிர்பார்த்த MR GROUP ப்ரோஜெக்ட் நம்ம கையவிட்டு போய்டுச்சு.”

“அஜய், என்ன டா சொல்ற

ம்ம்... ப்ரோஜெக்ட் கைய விட்டு போனது எனக்கு பெரிய விஷயமா தோணலடா.பிஸ்னஸ்ல இதெல்லாம் சகஜம் தான். பட், நம்ம கோட் பண்ணுனத விட எக்ஸாக்ட் 100 ரூபாய் மட்டுமே கம்மியா கோட் பண்ணிருக்காங்க. அங்க தான் எனக்கு இடிக்குது.”

ஹவ் இஸ் இட் பாஸிபில்?” என்று ஷ்யாம் அதிர,

தட்ஸ் வாட் ஐயம் ஆஸ்கிங், அமௌண்ட் நீயும் நானும் மட்டும் கோட் பண்ணுனது. அதுவும் நம்ம வீட்டுல வச்சு. சோ, கோட் பண்ணுனப்போ யாருக்கும் தெரிய சான்ஸ் இல்ல.” என்றான் அஜய் தன் மடிக்கணினியைப் பார்வையிட்டவாறே.

அப்போ நம்ம கூட்டத்துலக் கருப்பாடு இருக்குனு சொல்றியா?” என்று ஐயமாய் வினவ,

உன்கிட்ட இருக்குனு சொல்றேன்என்றான் அஜய் அதிரடியாய்.

அஜய்நீ...”என்று இழுக்க,

மடையா, உன்னை சந்தேகப்படுறது நான் என்னையே சந்தேகப்படுறதுக்கு சமம். அந்தக் கருப்பாடு உன் பக்கத்தில் இருக்குனு சொல்றேன்என்று அஜய் தன் இடது புருவத்தை தன் பெருவிரலால் நீவ,

ஷ்யாம் உன்னோட லேப்டாப் பாஸ்வோர்ட் உன்னைத் தவிர வேற யாருக்கும் தெரியுமா?” என்று கேட்க,

என்னைத் தவிர உனக்கும், ஸ்ரீக்கும் மட்டும் தான்டா தெரியும்.”என்று ஷ்யாம் புரியாமல் கூற,

“காட் இட்என்றான் அஜய்.

என்னோட கெஸ் கரெக்ட்னா அந்தக் கருப்பாடு ஸ்ரீ தான்என்றதும் ஷ்யாம் அதிர்ச்சியில் எழுந்தேவிட்டான்.

அஜய்நீ ஸ்ரீயை சந்தேகப்படுறியாடா?”

நோடா, கன்ஃபார்மா அவன் தான்னு சொல்றேன். கொஞ்சம் திரும்பி டோர்கிட்ட பாரு, யாரோ நிற்குறது தெரியுதா? நாம என்ன பேசுறோம்னு தெரிஞ்சிக்கனு நினைக்குறேன்என்றான்.

அது சஹானாவோட ப்ளேஸ் தானே?”என்று ஷ்யாம் இன்னும் அதிர்ச்சியில் வெளிவராதவனாய் கூற,

சஹிக்கு தலைவலி. அவ உள்ள ரெஸ்ட் எடுக்குறா. அதனால தான் இங்க வச்சு பேசுறேன், ஸ்ரீக்கு ஒரு வொர்க் கொடுத்து அனுப்பினேன். பட், அவன் அங்க என்ன பண்ணுறான்னு பாருஎன்று தான் இதுவரைப் பார்த்துக் கொண்டிருந்த மறைகாணிக்(CCTV) காட்சியை ஷ்யாமின் பக்கம் திருப்பினான்.

“நம்பவே முடியல அஜய். எவ்ளோ நம்புனேன் அவன... சே… எனக்கு வர்ற கோபத்துக்கு, அவன…”என்று கோபத்தில் எழ,

“கூல் டவுண்டா.. இது நாம கோபப்படுற நேரம் கிடையாது, யோசிச்சு திருப்பி அடிக்குற நேரம். பொறுமையா தான் ஹேண்டில் பண்ணனும்.” என்று பாயவிருக்கும் புலியின் உறுமலுடன் கூறினான் அஜய்.

மேலும் யோசித்தவாறே,

“அவனோட வொர்க்ல எனக்கு இதுவரைக்கும் எந்த சந்தேகமும் வரல. அவன் எதனால விலை போனான்னு தெரியனும். சோ, கீப் இட் வித் யூ. இது உனக்கு தெரிஞ்சிகிட்ட மாதிரி காட்டிக்காத”என்று கூற,

“அதெப்டிடா முடியும்?”என்று கேட்க,

“ஷ்யாம், அவன்கிட்ட எப்போவும் போலவே பேசு. பட், உன்னை சுத்தி என்ன நடக்குதுனு நீ புரிஞ்சிக்கனும். நமக்கு அவன்மேல சந்தேகம் இருக்குனு அவனுக்கு கண்டிப்பா தெரிய வரவே கூடாது, அண்ட் உன்னோட லேப்டாப் பாஸ்வோர்ட் மாத்தாதே, இதுவே இருக்கட்டும்”என்று நீளமாக பேசினான்.

ஷ்யாமோ, “ஏன்டா?அவனுக்கு தான் பாஸ்வோர்ட்தெரிஞ்சிடுச்சே, நாம சேன்ஜ் பண்ணுறது தானே பெஸ்ட்” என்று தன் ஐயத்தை அஜய்யிடம் கேட்க,

அவனோ, “ஷ்யாம் இது என்னோட சந்தேகம் மட்டும் தான். கன்ஃபார்ம் இல்ல. ஒருவேளை அவன் இல்லாம கூட இருக்கலாம். சோ, அத நான் பார்த்துக்குறேன்.” என்றான்.

சற்று யோசித்த அஜய், “நம்ம ரெண்டு பேரோட ரூம்ல மட்டும் சிசிடிவி இல்லாம இருக்குறது தான் தப்போனு தோணுதுடா” என்க,

ஷ்யாம், “ஏன்டா அன்னைக்கு ஃபைல் ரூம்ல நடந்த மாதிரி அடிக்கடி ஃப்ரீ ஷோ காட்டுறதுக்கா?” என்றான் குறும்புடன் அஜய்யை பார்த்து சிரித்தவாறே.

அஜய்யோ, “டேய்,அதை ஏன்டா நீ பார்த்த?”என்க,

ஷ்யாமோ, “ஃபைல் ரூம் எப்பவுமே நம்ம அப்செர்வேஷன்ல இருக்கனும்னு நீ தான சொல்லிருக்க. அப்படியிருக்க அங்க வச்சு உனக்கு என்ன ரொமான்ஸ் வேண்டிகிடக்கு?”என்று நண்பனை கலாய்க்க, “இல்லட, அது ஏதோ எதேர்ச்சையா நடந்தது.” என்று வெட்கப்பட,

ஷ்யாம்மும், “எதேர்ச்சையா? நம்பிட்டேண்டா. அதுவும், நான் பார்த்த நேரம் அந்த விருமாண்டி சீன் தான் ஓடுச்சு..”என்று மேலும் அஜய்யின் காலைவார,

“என்னடா, பொறாமையா?”என்று சிரிப்புடனே அஜய் கேட்க,

“சரிதான் போடா. ஆனாலும் அஜய், சானு பாவம் தான் டா.”என்று கூறியவுடன் இருவரும் சிரிக்க, அந்நேரம் ஸ்ரீ அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தான்.

சிரித்துக் கொண்டிருப்பவர்களை குழப்பத்துடன் பார்த்த ஸ்ரீ, “சார், நீங்க கேட்ட ஃபைல்” என்று அஜய்யிடம் தர,

அவனது குழப்பத்தினைக் குறித்துக் கொண்ட அஜய்,

“தேங்க்யூ சோ மச் ஸ்ரீ”என்று கூறிவிட்டு, புன்னகையினுடனே அக்கோப்பினை பார்வையிட ஆரம்பித்தான்.

மதிய உணவு இடைவேளையின் போது, சஹானாவைக் காணாமல் தோழிகள் மூவரும் அஜய்யின் அறைக்கு வந்தனர். அங்கே அஜய் ஷ்யாமுடன் பேசிக்கொண்டிருக்கவே, பூஜா அஜய்யிடம்,

“சார் சானு எங்க? எங்ககூட தான வந்தா, பட் அதுக்கப்பறம் அவளை பாக்கவே இல்லை”என்று கூறினாள்.

“டோன்ட் வொர்ரி, சஹி உள்ளே ரெஸ்ட் எடுக்குறா”என்று கூறியதும் மூவரும் பதறிக்கொண்டு,

“என்னாச்சுண்ணா அவளுக்கு?”என்று கூற,

அஜய்யோ, “ரிலாக்ஸ்மா, அவளுக்கு ரொம்ப தலைவலிக்குதுனு சொன்னா. அதான் டேப்லட் கொடுத்து உள்ள தூங்க சொன்னேன். நீங்க வேணும்னா போய் பாருங்க”என்றதும் மூவரும் உள்ளே சென்றனர்.

அஜய்யின் கட்டிலில், அவனது தலையணையைக் கட்டிக்கொண்டு, குழந்தை போல் உறங்கும் சஹானாவைப் பார்த்ததும் அங்கிருந்த அனைவருக்குமே சிறு புன்னகையும், வருத்தமும் ஒரு சேர எழுந்தது. வெளியே வந்ததும், மிதுனா தான்,

“சார், நாங்க இப்போ போய் வொர்க பார்க்குறோம், சானு முழிச்சதும் லன்ச் போறோம்”என்று அனுமதி வாங்கி சென்றனர்.

மணி மூன்றைத் தாண்டவும், அஜய்யே போய் சஹானாவை எழுப்பினான்.

“சஹிபேபி, எழுந்திருடா”என்று கூற,

அவளோ கனவென்று எண்ணி, அவன் நெஞ்சிலே சாய்ந்து,

“ஏன் ரித்து… இன்னும் கொஞ்ச நேரம். ப்ளீஸ்...” என்று கூறி தன் முகத்தை அவன் நெஞ்சிலே தேய்த்து அவனுடன் இன்னும் ஒன்றினாள். அஜய்யோ ஆழ்ந்த உறக்கத்திலும் தன்னவள் தன்னையே நாடுகிறாள் என்று பெருமிதம் கலந்த மகிழ்ச்சியில் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

“தூக்கத்தில கூட என்னை தேடுற அளவுக்கு என்மேல லவ் இருக்கு, அதை ஏன்டா சஹிமா ஒத்துக்க மறுக்குற?”என்ற அவனது கேள்வியில் தூக்கம் கலைந்தவள், தானிருக்கும் நிலைக் கருதி, முகம் சிவக்க அவனிடமிருந்து விலகினாள்.

“ச... சாரி, ஏதோ கனவுல… அது…”என்று சொல்வதறியாது உளற,

அஜய்யும், “அப்போ கனவுல கூட நான் தான் வந்தேனா டார்லிங்?” என்றான் சிரித்துக்கொண்டே.

மேலும் அவளை சோதிக்க விரும்பாத அஜய்,

“ஓ.கே சஹி, டைம் 3.20. நீ போய் சாப்பிடு, உன் ஃப்ரெண்ட்ஸ் உனக்காக வெயிட் பண்றாங்க. ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு போ”என்று சொல்லிவிட்டு அகன்றான்.

நால்வரும் சேர்ந்து உணவருந்தி முடிக்கும் வரை யாரும் எதுவும் பேசவில்லை. சாப்பிட்டு முடித்ததும்,

“தலைவலி போய்ட்டுச்சா சானு”என்று மிதுனா கேட்க,

சஹானாவும், “ம்ம், போய்டுச்சு, நைட் வேற சரியா தூங்கலையா? அதான்” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.

“எதுக்கு தூங்கல?”என்று பூஜா கேட்க,

சஹானாவும், “தூக்கம் வரல”என்றாள்.

ரீனாவும் தன் வழக்கமான பாணியில், “ஓ... அஜய் சார்கூட டூயட் பாடிட்டு இருந்தியா? எந்த சாங்கு?” என்று கேட்க,

சஹானாவும் அமைதியாய் இருக்க, மிதுனாவோ எழுந்த கோபத்தில்,

“இன்னும் எத்தனை நாள் தான்டி மறைப்ப? இல்ல இவங்ககிட்டலாம் எதுக்கு சொல்லனும்னு நினைக்குறியா?”என்று கேட்டாள்.

சஹானாவோ அதிர்ந்து, “என்ன மிது இப்படி பேசுற? நான் மறைக்கனும்னு நினைக்கலடி, மறக்கனும்னு நினைக்குறேன்” என்று கூறி அழுதாள்.

பூஜா அவளருகில் வந்து, அவள் தோளில் கைவைத்து,

“ஏன் சானு, அஜய் சாருக்கு என்ன குறை? ஏன் மறக்க நினைக்குற? நீயும் தானே அவர லவ் பண்ணுற... நீயே மறுத்தாலும் அதான் உண்மைனு எங்களுக்குத் தெரியும்” என்றாள்.

“அன்னைக்கு டேவிட் லவ் சொன்னப்போ, அவன்கிட்ட சொன்ன மாதிரி உன்னால ஏன் அஜய் அண்ணாகிட்ட சொல்ல முடியலை?” என்று ரீனா கேட்க,

“புரியாம பேசாதீங்கடி. என் அண்ணா பாக்குற மாப்பிள்ளைய தான் நான் மேரேஜ் பண்ணிக்குவேனு அவனுக்கு வாக்கு கொடுத்துக்குறேன்.”என்க,

பூஜாவோ, “லூஸு, நீ சொல்லி ஒரு விஷயத்த கார்த்தி அண்ணா வேண்டாம்னு சொல்வாங்களா? நீ அண்ணாகிட்ட பேசுடி. இல்லனா, ஆஜய் அண்ணாகிட்ட பேசி வீட்டுல பேசச் சொல்லு”என்றாள்.

சஹானாவோ, தன் குடும்பத்தின் பாசம் என்ற மழையில் நனைந்து கொண்டிருந்தவள், அஜய்யின் ‘காதல்’என்ற குடையின் கீழ் வர மறுத்தாள். குடையைப் பிடித்தபடி மழையினில் நனைவது ஒரு தனி சுகம்....! அந்த சுகத்தை காதல் அவ்விருவருக்கும் கொடுக்கும்...!

நிற்காமல் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட சஹானா,

“என் அண்ணா சின்ன வயசிலிருந்து ஆசைப்படுறத அவ்ளோ சீக்கிரம் வெளிய சொல்லமாட்டான்.அதையும் தாண்டி அவன் கேட்ட ஒரு விஷயம் இது தான். அதுக்கு என் காதலே தடையா இருக்குறத நான் விரும்பல”என்றவள் ஒரு பெருமூச்சை வெளியிட்டு,

“எஸ், ‘ஐ லவ் மை ரித்வி’ ‘ஐ லவ் ஹிம் மேட்லி’ பட், என்னால ரித்விகிட்ட சொல்லமுடியாது. வீட்டுல நேத்து நைட் தான் என் அம்மா, அண்ணாகிட்ட ஃபோன்ல ஏதோ வரன் பத்தி பேசிட்டு இருந்தாங்க. என் அண்ணா பாக்குற மாப்பிள்ளைய தான் நான் மேரேஜ் பண்ணுவேன்னு அண்ணா அம்மாகிட்ட சொல்லியிருக்கான்.”என்று கூறிய சஹானா ஒரு முடிவுடன் கண்களை அழுந்தத் துடைத்தவள்,

“ப்ளீஸ் இத பத்தி நீங்க யாரும் ரித்விகிட்ட சொல்லக்கூடாது. என்னால என் ரித்வி மனசுல மேற்கொண்டும் சலனத்தை ஏற்படுத்தமுடியாது” என்று கண்ணீருடன் கூறிவிட்டு செல்பவளை காதலுடன் பார்த்தபடியே தூணின் பின்புறம் நின்றிருந்தான் சஹானாவின் ரித்விக்…!

சஹானாவை அவள் வீட்டிற்கு அழைத்து செல்ல வந்தவன், அவளது அழுகுரலில் அங்கேயே நின்றுவிட்டான். தன்னவளின் மனதை அறிந்து கொண்டவன், இனிமேலும் தன்னவளை கஷ்டப்படுத்த மனமின்றி, தான் அடுத்து செய்யவேண்டிய வேலையை, அப்போழுதே செய்ய முனைந்தான். கார்த்திகுக்கு அழைப்புவிடுத்து தன் முடிவை தெளிவாகவே கூறினான் அஜய்.

“இதயமும்


ஒரு ரகசிய சுரங்கம்

சின்ன சின்ன

ஊடல்கள் உன்னை

பிரிவதற்கில்லை...

நம் காதலை

வளர்ப்பதற்கு....”

நினைவுகள் தொடரும்.....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,


"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-14 உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.



கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!


ஜெஃப்ரி......!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-15

22594

அன்று இரவு, ஏதேதோ சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்தவளைக் கலைத்தது கார்த்திக்கின் அழைப்பு.

எப்போதும் அவனிடமிருந்து அழைப்பு வரும் போது அவளிடம் தோன்றும் உற்சாகமும், சிரிப்பும் இன்று அவளிடம் இல்லை. அலைபேசியை உயிர்ப்பித்து,

”சொல்லுண்ணா, எப்படியிருக்க?”என்றாள் சஹானா.

“ரொம்ப சூப்பர்பா இருக்கேண்டா, நீ எப்படி இருக்க அம்மு?”என்றான்.

“ம்ம், ஐயம் குட், என்னண்ணா ரொம்ப ஹேப்பியா இருக்க போல?”

“எஸ் டா, ரொம்பவே. நான் ரொம்ப நாளா எதிர்பார்த்த ஒரு விஷயம் நடக்கப்போகுது. நான் உன்கிட்ட முன்னாடி ஒரு வாக்குக் கேட்டேன், ஞாபகம் இருக்கா அம்மு?”என்று ஆவலுடன் கேட்க,

சஹானாவோ நடுக்கத்துடன், “ஆமா, பட் இப்போ ஏன்ண்ணா...?”என்று இழுக்க,

“உனக்கு ஒரு வரன் வந்திருக்குடா, அப்பாவோட ஃப்ரெண்டோட பையனாம்... ஃபாரின்ல படிச்சிருக்கானாம்... உன்னை எங்கேயோ பார்த்திருக்கானாம், அவனுக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்காம்டா அம்மு. நீ தான் அவன் மனைவியா வரனும்னு ஆசைப்படுறானாம்”என்று உற்சாகத்துடன் கார்த்திக் கூறிக்கொண்டிருக்க, கேட்டுக் கொண்டிருந்தவளுக்கோ, தன் கனவே தன் கண் முன்னே கலைவது போல் தோன்றியது.

“என்கிட்டயும் பேசுனான்டா, எனக்கும் பையன ரொம்ப பிடிச்சிருக்குடா. உனக்கு பிடிக்குமானு தான் யோசிக்குறேன்...”என்று இழுக்க, சஹானாவின் மனதிலோ ஒரு யுத்தமே நடந்து கொண்டிருந்தது.

மங்கையவளின் ஒரு மனமோ, ‘முதல்ல நீ கல்யாணம் பண்ணினா தான் அஜய் மனச மாத்திட்டு வேறொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பான்’ என்க, காதல் கொண்ட மனமோ, ‘உன்னால அஜய்யோட இடத்துல இன்னொருத்தன நினைச்சுப் பார்க்க முடியுமா? உன்னாலயே முடியலன்னா, அந்தப் பிடிவாதக்காரன் மட்டும் செய்வானா?’என்று கேள்வியெழுப்பியது.

காதலா? பாசமா என்று இரண்டிற்கும் இடையில் போராடிக் கொண்டிருந்தவளைக் கலைத்தது கார்த்திக்கின் குரல்,
“சானுமா, என்னாச்சுடா?”என்றான்.

சஹானா மனதில் அந்த மாப்பிள்ளைக்கு பாமாலைகளை சூட்டியபடி,
“என்னண்ணா நீ, இப்படி கேட்குற? நான் ஆல்ரெடி சொல்லிட்டேன், நீ எப்படிபட்ட மாப்பிள்ளைய பார்த்தாலும் எனக்கு ஓகே தான்...” என்று உற்சாகமிழந்த குரலில் கூறினாள்.

அம்மு, மாப்பிள்ளை பார்க்க செம்ம பெர்ஸொனாலிட்டியா இருக்கார்டா. அவரோட ஃபோட்டோ, பையோடேட்டாலாம் உனக்கு மெயில் பண்ணிருக்கேன், பாருடா. பார்த்து சொல்லு உனக்கு பிடிச்சிருக்கானு”, என்றான் குதூகலமாய்.

அண்ணா, உனக்கு பிடிச்சா கண்டிப்பா எனக்கு போதும், அப்புறம் பார்த்துக்குறேன்”, என்று சஹானா மறுத்தாள். அவளால் அஜய்யை தவிர இன்னொருவரை அந்த இடத்தில் நினைத்துப் பார்க்ககூட பிடிக்கவில்லை.

.கேடா. அப்புறம் அம்மு, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை, அவங்க வீட்டுல இருந்து உன்ன பொண்ணு பார்க்க வர்றாங்க. ஈவினிங் தான் வர்றாங்க, ஆனாலும் நீ லீவ் எடுத்துரு

அண்ணா, ஏன் இவ்ளோ சீக்கிரமா? அண்ட், நீ இல்லாம இப்போ இந்த ஃபங்சன் எல்லாம் வேண்டாம்என்று இயன்றவரை மறுத்துப் பார்த்தாள்,

அம்மு, என்னால இப்போ வர முடியாதுடா. பட், மாப்பிள்ளை இப்போவே கன்ஃபார்ம் பண்ணனும்னு சொல்றாராம். இது சும்மா ஒரு சம்பிரதாயத்துக்காக வர்றாங்க, அவ்ளோ தான். நிச்சயத்தார்த்தம் நான் இல்லாம நடக்காது. எங்க வீட்டு இளவரசியோட என்கேஜ்மெண்ட், ஊரே மெச்ச நடத்தவேண்டாமா?” என்றவனது குரலில் அதை இப்பொழுதே நடத்திப் பார்க்கும் குதூகலம்.

“நாளைக்கு ஆஃபிஸ் போய்ட்டு அஜய்கிட்ட லீவ் சொல்லிட்டு வந்துரு” என்று கார்த்திக் கூறியதும் அதிர்ந்தவள்,

“நானா? அண்ணா, நீயே சொல்லிரேன். ப்ளீஸ்” என்று தமையனிடம் கெஞ்சினாள் தங்கை. ஏனோ அவளால் இந்த விஷயத்தை அஜய்யிடம் சொல்லமுடியும் என்றே தோன்றவில்லை.

கார்த்திக்கோ, “சானுமா, நீ தான் அவன்கிட்ட வொர்க் பண்ணுற. சோ, நீ தான் சொல்லனும்” என்று கை விட்டுவிட,
தான் சொன்னால் அஜய் வருந்துவதை அவளால் நிச்சயம் பார்க்கமுடியாது என்றே எண்ணினாள்.

தொடர்பைத் துண்டித்தப் பின்னரும், சஹானாவினால் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அழுதே கரைந்து கொண்டிருந்தவளை பாதி ஜாமத்திற்குப் பிறகுதான் நித்திரா தேவி வந்து தழுவிக் கொண்டாள்.

*****
மறுநாள் மனம் வேலையில் செல்லாமல் திணறிக்கொண்டிருந்த சஹானாவை ஆர்வமுடன் பார்த்தான் அஜய்.
“சஹானா, ஆர் யூ ஆல்ரைட்? நான் என்ன டைப் பண்ண சொன்னேன், நீ என்ன டைப் பண்ணுற?” என்று அஜய் சற்று குரலை உயர்த்திக் கேட்டபடியே தன் அலுவல் அறைக்குள் சென்றான்.

சஹானாவோ பயந்தபடியே அவன் பின்னால் சென்று,
“சாரி அஜய், ஏதோ யோசனையில, இனி இப்படி நடக்காது” என்று கூறினாள்.

அஜய்யோ தலைதூக்கிய குறும்புடன்,
“சஹி பேபி, என்ன நாம ரெண்டு பேரும் டூயட் ஆடுற மாதிரி நினைச்சுப்பார்த்தியா?”என்று கேட்க, சஹானா அமைதியாகவே இருக்க, இவனோ தொடர்ந்தான்,

“அத ஏன் நினைச்சு பார்க்குற டார்லிங், நிஜம் நான் இங்க இருக்குறப்போ என் நிழல் கூட ரொமாண்டிக்கா? நீ மனசு வச்சா இப்போவே, இங்கேயே ஒரு ரொமாண்டிக் சாங்க்கு பெர்ஃபார்மன்ஸ் பண்ண நான் ரெடி.” என்று அவளிடம் கண்ணடித்து கூறியதோடு நிற்காமல், அவளருகில் நெருங்கி,

“கண் பார்த்து கதைக்க

முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்....

கண் கொட்ட முடியாமல்
முடியாமல் பார்த்தும்

சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்........”

என்று கண்களில் காதல் வழிய அஜய் பாட சஹானாவிற்கோ இதயம் பிறழும் நிலை,

“ரித்வி, ப்ளீஸ்... இதெல்லாம் வேண்டாம்” என்று கெஞ்ச,

அஜய்யோ, “நல்லாயில்லயா சஹிமா? உன் அளவுக்கு எனக்கு பாட வராட்டினாலும் ஓரளவுக்கு வரும். ஆனா, டான்ஸ் நல்லாவே வரும், வேணும்னா ட்ரை பண்ணுவோமா?” என்று தன் புருவத்தை உயர்த்தி அவளிடம் கேட்க, அதில் மயங்கியவள் அவனை காதலுடன் பார்த்தாள்.

ஆனாலும் சுதாரித்து நடப்பிற்க்கு வந்தவள், தன் முகத்தை கோபமாகக் காட்டிக்கொண்டவள்,
“என்ன அஜய் சார், உஙகிட்ட வேலை பார்க்குற எம்ப்ளாயிகிட்ட இப்படி தான் பேசுவீங்களா?” என்று எதையாவது கேட்டு வைக்கனுமே என்று கேட்டாள்.

அஜய்யோ அவளருகில் நெருங்கி வந்து, துடிக்கும் இதயத்துடன் இருந்தவளை மேலும் நெருங்கி, அவளை சுவற்றோடு சாய்த்து,
“சஹி பேபி, என்கிட்ட வேலைப்பாக்குற எம்ப்ளாயீகிட்ட நான் எப்படி நடந்துக்குவேன்னு உனக்கு நல்லாவே தெரியும். அண்ட், நீ என் எம்ப்ளாயியும் இல்ல. யூ ஆர் மை ஓன் ப்ராப்பர்ட்டி”, என்றவாறு அவளது பிறை நெற்றியில் தன் இதழ் பதித்தான்.

அஜய்யின் இதழொற்றலில் நெகிழ்ந்த தன் இதயத்தை மறைத்து அவனிடம்,
“உங்களுக்கு எப்போவும் இதே எண்ணம் தானா? சீ போங்க” என்று அவனைத் தள்ளிவிட,

அஜய்யோ அதைக் கண்டுகொள்ளாமல்,

“காட்டிக் கொடுக்கிறதே

கண்ணே காட்டிக் கொடுக்கிறதே.....

காதல் வழிகிறதே
கண்ணில் காதல் வழிகிறதே.....

உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தே கடந்தேன் பகலிரவை........

உன் அலாதி அன்பினில்
நனைந்த பின் நனைந்த பின்

நானும் மழையானேன்.........”

என்று பாடியதோடு சஹானாவின் கையைப் பிடித்து ஆடவும் செய்ய, சற்று நேரம் தன்னை மறந்து உடனிசைந்தவள் அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல், தன்னை பிடித்திருந்த அஜய்யின் கையை உதறிவிட்டு வெளியேறினாள்.

ஒருவழியாக நேரத்தை மாலை வரை நெட்டித் தள்ளியவள் மறுநாள் விடுப்பு எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அவனது அனுமதி பெற்று அவனறைக்குள் நுழைந்தாள்.

“வொய் பேபி, நம்ம ரூம்க்கு வர்றதுக்கு பெர்மிஸன்லாம் கேட்குற?” என்று மடிக்கணினியிலிருந்த தன் தலையை தூக்காமலேயே அஜய் பதிலளிக்க, ‘நம்ம ரூம்’ என்றதிலே நெகிழ்ந்தவள், தான் அவனிடம் கூற வந்த விஷயத்தை நினைவிற்கு கொண்டு வந்தவள்,

“சாரி சார் ஒரு சின்ன திருத்தம். நம்ம ரூம் இல்ல, உங்க ரூம்” என்றாள் அழுத்தமாக.

“சஹி டார்லிங், நீ இன்னும் கொஞ்சம் நாள்ல என்னோட பெட்டர் ஹாஃப் ஆகப் போற. அதுக்கு தான் நம்ம ரூம்னு சொன்னேன். அதுக்கு ஊரறிய உன் கழுத்துல மூணு முடிச்சு போடனும்னுலாம் அவசியமில்லை. நீ எப்போ ‘கண்ணாளனே…..’னு என்னைப் பார்த்து பாடுனியோ, அப்போவே நான் உனக்கு கண்ணாளன் ஆகிட்டேனோ இல்லையோ, நீ என் மனைவி ஆகிட்ட. சோ, இது பத்தி என்கிட்ட ஆர்கியூ பண்ணி தோத்துப்போகாதே” என்று கூறிவிட்டு மீண்டும் மடிகணினியில் தலையை நுழைத்தான்.

“ஓ அப்படியா? இப்போ நான் சொல்ல வந்த விஷயத்த கேட்டீங்கன்னா சார் அப்படியே சந்தோஷத்துல மிதக்குவீங்க” என்று சஹானா கூற,

அவனோ, “என் சஹிக்கு சந்தோஷத்த கொடுக்குற எல்லாமே எனக்கும் கண்டிப்பா சந்தோஷத்த மட்டும் தான் கொடுக்கும். சொல்லுங்க மேடம், அப்படி என்ன சந்தோஷமான விஷயம் சொல்ல வந்தீங்க... ஆனாலும் சஹி, அந்த மூனு வார்த்தைய என்கிட்ட சொல்ல, இவ்ளோ ப்ரோமோ தேவையில்ல தான்” என்றான் தன்னவளைப் பார்த்துக் கண்ணடித்தவாறு.

“ம்ம்ம், ஆச தான், நாளைக்கு எனக்கு லீவ் வேணும்”

“இது வருத்தப்படக்கூடிய விஷயமாச்சே…அண்ட், உனக்கு லீவ் குடுக்குற மாதிரி ஐடியால நான் இல்ல.”

“சார், வீட்டுல ஒரு ஃபங்சன். என் அண்ணா தான் உங்ககிட்ட விஷயத்த சொல்லி லீவ் கேட்க சொன்னான்.”

என்ன ஃபங்சன்? அதுவும் கார்த்தி இல்லாத நேரத்துல?”

அது.... என்னை பொ... பொண்ணு பார்க்க வர்றாங்க

வாட்? எங்க அம்மா என்கிட்ட பொண்ணு பார்க்க போறோம்னு சொல்லவே இல்லையே

ஓவர் கான்ஃபிடண்ஸ் உடம்புக்கு ஒத்துக்காது சார். நாளைக்கு ஈவினிங் என்னைப் பொண்ணு பார்க்க மா..மாப்பிள்ளை வீட்டுல இருந்து வர்றாங்கனு தான் சொன்னேன், உங்க வீட்டுல இருந்து வர்றாங்கனு சொல்லலயே? அப்பாவோட ஃப்ரெண்டோட பையன். சிம்ப்ளா தானாம், அண்ணாக்கு லீவ் இல்லயாம். சோ, வரல”

நீ ஓகே சொல்லிட்டியா?” என்றான் கணினித் திரையைப் பார்த்தவாறே, உணர்வுகள் துடைத்த முகத்துடன்.

நான் தான் அன்னைக்கே சொன்னேனே, என் அண்ணா பாக்குற மாப்பிள்ளைய தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னுஎன்று அவள் கூறியதும் அஜய்யின் முகம் சொல்லொண்ணா வேதனையை பிரதிபலித்தது.

சஹானாவோ வேதனைப்படும் அவனது முகத்தைப் பார்க்க முடியாமல் மறுபுறம் திரும்பி, “ரித்வி, இப்போவும் சொல்றேன் என்மேல உள்ள இந்த கா... காதல விட்டுறுங்க. நாம ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம். இதனால உங்களுக்கும் என் அண்ணாக்கும் இடைல உள்ள ஃப்ரெண்ட்ஷிப்பும் பாதிக்கப்படக்கூடாது. அதான் சொல்றேன், உங்க வீட்டுல சொல்லி ஒரு ந... நல்ல பொண்ணா பார்த்து க....”என்று சொல்லும் போதே குறுக்கிட்டா அஜய்,

ஸ்டாப் இட் சஹானா. நடக்காத ஒண்ணப் பத்தி பேசி என்னை கோபப்படுத்திப் பார்க்காதே. எங்க ஃப்ரெண்ட்ஷிப் பத்தி நீ ஃபீல் பண்ணாத, அத எப்படி பார்த்துக்கணும்னு எங்களுக்குத் தெரியும். நான் இப்போ ஒரு மெஸேஜ் பண்ணினா கூட அடுத்த முகூர்த்தத்துல கார்த்தி நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணமே நடத்தி வைப்பான். ஆனா, எனக்கு தேவை உன்னோட வாய்மொழி சம்மதம் தான்.” என்று கோபமாய் ஆரம்பித்து எதிர்ப்பார்ப்போடு நிறுத்தினான் அஜய்.

சஹானாவோ கட்டுப்படுத்தப்பட்ட அழுகையுடன் மௌனமாய் துப்பட்டாவின் நுனியை சுருட்டியபடி நிற்க, அஜய்யே தொடர்ந்தான்.
“சஹிமா, நீ சொல்லவேண்டியது ஒரு வார்த்தை தான். உன் கண்ணுல என்மேல உள்ள காதல் தெரியுது, ஆனா ஏன்டி மறுக்குற? நீ சரினு மட்டும் சொல்லு, உன் வீட்டுல எல்லார்கிட்டயும் நான் பேசுறேன். சஹிபேபி சொல்லுடி” என்று தன்னவளிடம் காதலுக்காக போரடினான், இது வரை யாரிடமும் அடிபணியாத அந்த காதல் அடிமை...!

அந்த அடிமையிடம் சிரம் பணிந்த தன் இதயத்தை கட்டுப்படுத்திக் கொண்டு,
“கண்டிப்பா என்னால முடியாது அஜய், என் அண்ணா அந்த மாப்பிள்ளையப் பத்தி சொல்லும் போது அவன் வாய்ஸ்ல அப்படி ஒரு சந்தோஷம். நான் அந்த மாப்பிள்ளைய தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு அவன் ஆசைப்படுறான். அதுக்காகவே சம்மதம் சொல்லிட்டேன்” என்றாள்.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த அஜய்யோ வெற்று சிரிப்புடன்,
“அப்போ நீ மாப்பிள்ள ஃபோட்டோவ பார்க்கல, உனக்கு பிடிக்கல. கார்த்திக்காக தான் ஓ.கே சொல்லிருக்க. ரைட்?” என்று என்று கேட்க,

சஹானாவோ திருதிருவென முழித்தவாறே, “இல்லயே,நானும் பார்த்தேன். எனக்கும் மாப்பிள்ளைய ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.

அஜய் சஹானாவை நோக்கி ஒரு நம்பாத பார்வையை வீச,
“உண்மையா தான் சொல்றேன். எனக்கு மாப்பிள்ளைய ரொம்ப பிடிச்சிருக்கு. அவர் செம்ம ஹேண்ட்ஸம், உங்கள விட கலர். வாட் எ மெஜெஸ்டிக் பெர்சன் ஹீ இஸ்!” என்று ஏதேதோ கூற,

அஜய்யோ உதட்டை சுழித்தபடி,
“எங்க காட்டு பார்க்கலாம் உன் வருங்கால கணவர் போட்டோவ” என்றான்.

‘அந்த போட்டோவ நான் பார்த்தா தானே காட்ட முடியும்’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டு வெளியே,
“அத நீங்க பார்த்து என்ன பண்ண போறீங்க? எனக்கு லீவ் வேணும். தர முடியுமா? முடியாதா?”என்று கேட்டாள்.

“நான் லீவ் தரலன்னா அந்த மாப்பிள்ளைய வேண்டாம்னு சொல்லிடுவியா?” என்று கண்ணடித்தபடியே கேட்க, அவளோ அவனை முறைத்துவிட்டு, “ஆசைதான்...”என்றாள் கடுப்பாக.

“ஏன் சஹானா, இப்போ கூட என் காதல உன்னால புரிஞ்சிக்க முடியலையா?” என்றான் வலி நிறைந்த குரலுடன்.
சஹானாவோ வார்தைகளின்றி மௌனமாய் நிற்க, அவனோ இயலாமை அளித்த கோபத்தில்,

“தூங்குறவனை எழுப்பலாம், தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்பவே முடியாதுடி. கெட் அவுட்” என்று கத்தினான்.

கண்களில் கண்ணீருடன் அவனது அறையிலிந்து வெளியேறியவள், தன்னை இளைப்பாற்றிக் கொள்ள ஓய்வறைக்கு சென்றாள். அவள் செல்வதைப் பார்த்த மிதுனா, அவள் கைப்பிடித்து, அருகிலிருந்த ஷ்யாமின் அறையை ஒட்டியுள்ள வரைபட அறைக்கு அழைத்து வந்தாள். அங்கே ரீனா வரைந்து கொண்டிருக்க, பூஜா அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். ஷ்யாமின் முக்கிய வேலையே கட்டிடத்தின் வடிவமைப்பு தான், அதனால் தான் அவனது அறையை ஒட்டுயாவாறே அந்த அறையினை அமைத்திருந்தனர்.

கைகளிலிருந்த வரைபடக் கருவியை மேசையில் வைத்தபடியே, சஹானாவின் சோர்ந்த முகத்தைப் பார்த்து,
“என்னாச்சு சானு?” என்று அருகில் வந்தனர் ரீனாவும், பூஜாவும்.

மிதுனா, “இப்போ சொல்லுடி, எதுக்கு அஜய் சார் ரூம்ல இருந்து அழுதுட்டே வந்த?”என்றாள்.

சஹானா, “அவரு என்ன பார்த்து கெட் அவுட்னு சொல்லிட்டாருடி” என்று அவள் தோள் சாய்ந்து மீண்டும் கண்கலங்கினாள்.

ரீனாவோ, “ஏன் நீ என்ன பண்ணுன?” என்க,

சஹானாவும், “நாளைக்கு லீவ் கேட்டேன்...”என்று இழுக்க,

ரீனா, “லீவ் கேட்டதுக்குலாம் கெட் அவுட்னு சொல்றதுக்கு அஜய் சார் ஒன்னும் ஹிட்லர் இல்லையே... ஃபுல்லா சொல்லு. ஆமா எதுக்கு நாளைக்கு உனக்கு லீவ்?”என்று சஹானாவைத் தூண்டினாள்.

“அது... நாளைக்கு என்னை பொண்ணுப் பார்க்க வர்றாங்க. நைட் தான் அண்ணா சொன்னான். அதான்...”என்று மேலும் சொல்ல முடியாமல் விம்மினாள்.

பூஜாவோ, “என்னடி சொல்ற? உனக்கு இதுல விருப்பமா?”என்று கேட்கும் போதே அந்த அறையில் கதவைத் தள்ளிக் கொண்டு அஜய்யுடன் உள்ளே வந்தான் ஷ்யாம்.

ஆண்கள் இருவரும் உள்ளே நுழைந்ததும் திரும்பி நின்று சஹானா தன் விழிநீரைத் துடைத்துக் கொண்டதும் அவ்விரு ஆண்களின் கண்களிலிருந்து தப்பவில்லை.

ஒரு நிமிடம் அங்கே அமைதி நிலவ, அந்த அமைதியை அஜய்யே துடைத்துவிட்டு,
“கேர்ள்ஸ், உங்கள பார்க்க தான் வந்தேன். நாளைக்கு உங்க இன்டிமேட் ஃப்ரெண்ட் சஹானாவ பொண்ணுப் பார்க்க வர்றாங்களாம். சோ, நீங்களும் அங்க போகனும்னு லீவ் கேட்பீங்க. சோ, அதுக்கு முன்னாடி இந்த டிசைன முடிச்சு எங்ககிட்ட கொடுத்துட்டு வேணும்னா ஹாஃப் டே லீவ் எடுத்துக்கலாம்.”என்று தன்னவளைப் பார்த்தபடியே கூற,

ரீனாவோ, “அட நீங்க வேற சார், லீவ் என்ன பெர்மிஸன் கூட வேண்டாம். நாங்க போகலை, எங்கள யாருமே இன்வைட் பண்ணல சார்”என்றாள்.

“சஹானா இன்வைட் பண்ணலனா என்ன? நான் இன்வைட் பன்றேன், ஆன் பிஹாஃப் ஆஃப் மை பி.ஏ”என்று கூறிவிட்டு,

“மிஸ்.சஹானா, உங்களுக்கு நான் கொடுத்த வேலைய பூஜாகிட்ட கன்வே பண்ணிட்டு நீங்க கிளம்பலாம். ஷ்யாம், நான் கார் எடுத்துட்டு வெளிய போறேன், நீ அர்ஜூன் இல்லனா அபிக்கு கால் பண்ணி அவன்கூட வீட்டுக்குப் போய்டு” என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டான்.

தன் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டு, தன் மனம்கவர்ந்த நாயகனின் வாழ்க்கைக்கு வழிவிட எண்ணினாள் அம்மங்கை. ஆனால் அந்த முற்றுப்புள்ளியை காற்ப்புள்ளியை மாற்றி அஜய் அதை தொடர்கதையாக்கப் போகிறான் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை....!

காதல்’ அந்த தொடர்கதையை அழகிய காவியமாக்கப் போகிறது என்பதை அவ்விருவருமே அறிந்திருக்கவில்லை....!

“உன் கண்ணாமுச்சி

ஆட்டத்தில்
களைத்துப் போனது
என் இதயம் தான்…
உனக்கான

காத்திருப்பில்....!”

நினைவுகள் தொடரும்...!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-16


22727

இளங்காலைப் பொழுது புலர்ந்து, ஆதவனின் கதிர்கள் அறைக்குள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன. இரவு நெடுநேரம் உறங்காமல் அழுது கொண்டிருந்தவளின் கண்ணீர் வற்றிப் போய், கண்ணயர்ந்தவள், காலையில் தன் தாய் ரேணுகாவின் சுப்பிரபாதத்தில் தான் கண் விழித்தாள்.

“எழுந்திருடி. வெள்ளிக்கிழமை அதுவுமா இப்படியா தூங்குவ? இன்னைக்கு என்ன ஃபங்சன்னாவது தெரியுமா?” என்று அவளை உலுக்க, அதில் துயில் கலைந்தவள் சோம்பல் முறித்து, அருகிலிருந்த தன் தாயின் மடியில் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

“சானு, எழுந்திருடி. மணி எட்டாகிடுச்சி. உங்கப்பா திட்டப்போறாரு.”

“என்னது? எட்டாகிட்டா? அச்சச்சோ… அப்போவே எழுப்ப வேண்டியதானேம்மா, இப்போ கிளம்பி 9 மணிக்கு எப்படி ஆஃபிஸ்க்கு போகமுடியும்?” என்று புலம்பினாள்.

“உளறாதடி, நேத்து தான் சொன்ன, லீவ் சொல்லிட்டு வந்திட்டேன்னு. இன்னைக்கு உன்னைப் பொண்ணுப் பார்க்க மாப்பிள்ளை வீட்டுல இருந்து வர்றாங்க. அதாவது ஞாபகத்துல இருக்கா?” என்று வினவினார்.

சட்டென்று உற்சாகம் வடிந்த குரலில்,

“ஓ, மறந்துட்டேன்” என்றாள்.

“நல்ல மறந்த போ. ஆமா, உன் ஃப்ரெண்ட்ஸ நான் இன்வைட் பண்ணவேயில்ல. கால் பண்ணிக்கொடு, பேசுறேன்” என்க,

நானே சொல்லிட்டேன்ம்மாஎன்று மறுத்தாள் சஹானா.

போன் பண்ணுடிஎன்றவாறு அவளது அலைபேசியை எடுக்க முயன்ற தாயிடமிருந்த அலைபேசியைப் பறித்து, காட்சிப் படிமத்தில் (display picture) இருந்த அஜய்யின் சிரித்த புகைப்படத்தை பார்த்துவிட்டு, அதை மாற்றிய பின்பே மிதுனாவிற்கு இணைப்பு கொடுத்து ஒலிப்பெருக்கியை இயக்கிவிட்டு, தாயிடம் அலைபேசியைத் தந்தாள். அலைபேசி இணைப்பு கிடைத்ததும்,

மிதுனா, நான் அம்மா பேசுறேன்மா, எப்படி இருக்க?”

அம்மா, நல்லா இருக்கோம்மா. நீங்க? அப்பா எப்படி இருக்காங்க?”

நல்லா இருக்கோம். எங்க இருக்கீங்க? ரீனா எங்கம்மா?”

நாங்க மூணு பேருமே இப்போ தான் ஆஃபிஸ்ல தான் இருக்கோம்மா.

என்னம்மா? இவ்ளோ சீக்கிரம் ஆஃபிஸ் போயிருக்கீங்க?”

அது, அஜய் சார் ஒரு வொர்க்க சீக்கிரம் முடிச்சுக்கேட்டாரு. அதான் நாங்களும் சீக்கிரமே வந்துட்டோம். ஆனா சார்ஸ் ரெண்டு பேரும் எங்களுக்கு முன்னாடியே வந்துட்டாங்க…”

சரிமா, இன்னைக்கு சஹானாவ பொண்ணுப் பார்க்க மாப்பிள்ளை வீட்டுல இருந்து வர்றாங்க. சொல்லியிருப்பாளே, ஈவினிங் நாலு மணிக்கு. யாரையுமே பெருசா அழைக்கல. நீங்க மூணு பேரும் கண்டிப்பா வரனும்

அம்மா, ஆஃபிஸ் வொர்க் இருக்கு, ஆஃபிஸ் முடிஞ்சதும் அங்க வர்றோம்.”

அவளுக்கு விருப்பம் இருக்கா இல்லையானு கூட தெரியலமா. கார்த்தி சொல்றான், நாங்க செய்றோம். ஆனா இவ நடந்துக்குறதலாம் பார்த்தா கொஞ்சம் பயமாவே தான் இருக்கு. நீங்க இருந்தா இவளுக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். நான் வேணும்னா அஜய் தம்பிகிட்ட சொல்லவா?” என்க,

அதெல்லாம் வேண்டாம்மா. நாங்க லன்ச்க்கே அங்க வந்திடுறோம்என்று மிதுனா கூற, மற்ற இருவரிடமும் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

நேரமும் உருண்டோட, சஹானாவின் மனதும் பந்தையக்குதிரைப் போன்று தடதடவென ஓடியது. வீட்டில் பலகாரம் செய்யும் வேலைகள் சிறப்பாக நடக்க, சஹானாவின் மனத்திரையிலோ, விமான நிலையத்தில் அஜய்யை சந்தித்தது முதல் நேற்று அவன் விடைப்பெற்றது வரை அனைத்தும் காட்சிகளாக ஓடியது. அதிலும் அவன் கொடுத்த இதழ் முத்தம், அழையா விருந்தாளியாக அவள் நினைவில் வந்து அவளின் இரத்ததின் வண்ணத்தை அவள் முகத்தில் தெளித்து செம்மையுற செய்தது.

*****

தன் அலுவல் அறையில் சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, மடிகணினித் திரையில் தன்னவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தவனைக் கலைத்தது ஷ்யாமின் குரல்.

“டேய், இன்னும் எவ்ளோ நேரம்டா இப்படியே, சானு ஃபோட்டோவயே மாத்தி மாத்திப் பார்த்துட்டு இருப்ப? இன்னும் கொஞ்ச நேரத்துல அவளுக்கு ஃபங்ஷன். ஒண்ணு, அவளுக்கு கால் பண்ணி பேசு, இல்லன்னா மூடி வச்சுட்டு அடுத்த வேலைய பாரு.” என்றான் கடுப்பாக.

அஜய் கொடுத்த வேலையை முடித்த பெண்கள் மூவரும் அறைக்குள் வர, கடுப்பில் இருந்த ஷ்யாமோ வேண்டுமென்றே தன் காலைக் குறுக்கே வைத்தான். கோப்புகளை சமர்ப்பிக்கும் ஆவலுடன் உள்ளே வந்த மிதுனா, அதை கவனிக்காமல் கால் வைக்க, நிலை தடுமாறி கீழே விழப்போனாள். ஷ்யாமோ, அவளது இடையில் தன் கரம் கொடுத்து தாங்கியதோடு மட்டுமின்றி, அவளை தன் நெஞ்சோடு பிணைத்துக்கொண்டான்.

“சாரி சார்.” என்று அவனது கரங்களிலிருந்து விடுபட முயல,

அவளை விடுவித்தவன், “இதுக்கு யாராவது சாரி சொல்வாங்களா? இது என் கடமை” என்றான்.

“என்ன சார் சொன்னீங்க?”என்று மிதுனா கேட்க,

“ஹ்ம்ம், காப்பாத்துனதுக்கு தேங்க்ஸ் தான் சொல்லுவாங்கனு சொன்னேன்.” என்று கூற,

அஜய்யோ, “டேய் நாங்களும் இங்க தான் இருக்குறோம்”என்ற கூறியவன்,

ஷ்யாமிடம், “ஏன்டா இப்படி பப்ளிக்கா ஷோ காட்டி மானத்தை வாங்குற” என்றான் சிறு குரலில்.

“நீ ஃபைல் ரூம்ல காட்டின விருமாண்டி ஷோவ விடவா?”என்று கேட்க, அதற்கு மேல் அஜய் பேசுவானா?

“டேக் யுவர் சீட்” என்று பெண்கள் மூவரையும் அமர சொல்லிவிட்டு, கோப்புகளை சரிப்பார்க்கத் தொடங்கினான். சரிபார்த்த பின்,

“வெல், இப்படி தான் பண்ணனும். இனி உங்களுக்கு ப்ரோஜெக்ட்ஸ்ல எந்த ஏரியால க்ளாரிஃபிகேஷன் வேணும்னாலும் என்னயோ, ஷ்யாமையோ மட்டும் தான் கேட்கனும். அதுவும் எங்க ரூம்ல வச்சு மட்டும். எஸ்பெஷலி ஃபார் மிதுனா, உனக்கு தான் ரொம்ப முக்கியமான வொர்க்க கொடுத்திருக்கேன்” என்றான்.

“தென், இப்போ மணி ஒன்னாச்சு, நீங்க கிளம்புங்க. நாலு மணிக்கு தான ஃபங்சன்?” என்று கேட்க, அவர்கள் மூவரும் புரியாமல் முழிக்க,

“ஈவினிங் ஃபங்சன்ல மீட் பண்ணலாம்” என்றான்.

ரீனாவோ, “சார், நீங்களும் வர்றீங்களா?” என்று ஆச்சரியத்துடன் கேட்க,

“அஃப் கோர்ஸ், நான் முன்னாடியே சொன்ன மாதிரி, சஹானா எனக்கு தான், எனக்கு மட்டும் தான். அவளுக்கே விருப்பமில்லாட்டினாலும் அவள தான் கல்யாணம் பண்ணுவேன். இன்னைக்கு நானும் வர்றேன். என் சஹிய இன்னொருத்தன் சும்மா பார்க்க வர்றத கூட என்னால பொறுத்துக்க முடியாது. அவளே வாய் திறந்து கேட்பா.” என்றான் தீவிரமான முகத்துடன்.

அனைவரும் மௌனமாய் அவனையே பார்த்தபடி இருக்க, அதை உணர்ந்தவனோ,

“என் சஹிய கஷ்டப்ப்படுத்துற எந்த வேலையையும் செய்யமாட்டேன். ஆனா எனக்கு எங்க காதல் மேல நம்பிக்கையிருக்கு.” என்றான் உறுதியாய்.

*****

அஜய்யுடன் தான் சேர்ந்து எடுத்த சுயமிக்களை (selfie) பார்த்துக்கொண்டிருந்த சஹானாவின் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்தனர், தோழிகள் மூவரும்.

“இன்னும் எத்தன நாளுக்குடி அஜய் அண்ணாவோட ஃபோட்டோவ பார்த்துக்கிட்டே இருப்ப. இனி நீ அஜய் அண்ணாவோட ஃபோட்டோவ வச்சுக்க கூட அவங்க மனைவியோட பெர்மிஸன் வேணும்.” என்று ரீனா நொடித்துக்கொள்ள,

பூஜாவும், “விடுடி, எதுக்கு வந்திருக்கோமோ அத மட்டும் பார்க்குவோம்” என்று கூறினாள்.

அதற்குள் சஹானா கண்கலங்க அவளை அணைத்துக்கொண்ட மிதுனா,

“சும்மா அவளயே திட்டாதீங்கடி. பாவம் அவளும் என்ன தான் பண்ணுவா? அவளும் சந்தோஷமா தான் இந்த முடிவ எடுத்திருப்பானு நினைக்குறீங்களா? அவளுக்கு குடும்பமும் வேணும், அஜய் அண்ணாவும் வேணும்னு நினைக்குறா." என்றதும்,

ரீனாவோ, "அதுக்கு அவ தான் முயற்ச்சிக்கனும்" என்று கூற,

பூஜா, "சரி விடுப்பா, ஆமா என்ன சானு இந்த சுடில இருக்க?" என்று பேச்சை மாற்றினாள்.

"அம்மா தான் நாலு மணிக்கு புடவைக் கட்டலாம்னு சொன்னாங்க" என்றாள் மூக்கை உறிஞ்சிக் கொண்டே. ஒருவாறு தோழிகளும் தங்கள் கோபத்தை கைவிட்டுவிட்டு, வழக்கமான அரட்டையில் இறங்கினார்கள்.

நீள் சாய்விருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி, தன் அலைபேசியை பார்த்தபடியே, தோழிகளிடம் கதைத்துக் கொண்டிருந்த சஹானாவின் கயல்விழிகளை சிறை செய்தது ஓர் ஆணின் வலியகரங்கள். அந்த சிறு தொடுகையிலேயே அக்கரங்களின் சொந்தக்காரனைக் கண்டுகொண்ட சஹானாவின் முகத்தில் மகிழ்ச்சியும், இதழ்களில் புன்னகையும் போட்டிப்போட்டுக் கொண்டிருந்தன.

அக்கரங்களை விலக்கியவள், கண்களில் கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டாள், “அண்ணா...” என்றபடி....!

அம்மு, எப்படிடா இருக்க?” தங்கையின் தலையை தடவியவாறே விசாரிக்க, முகத்தை நிமிர்த்தியவள்,

இருக்கேன்ண்ணா, நீ வர்றேன்னு சொல்லவேயில்ல. எப்போண்ணா வந்த?” என்று கேட்டாள்.

அம்மு, ரிலாக்ஸ். இப்போ தான் வந்தேன். நான் வர்றேன்னு அஜய்ய தவிர வேற யாருக்குமே தெரியாதுடா. உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுமேனு தான் சொல்லலஎன்று கார்த்திக் உற்சாகத்துடன் கூறஅஜய்என்ற பெயரிலேயே உற்சாகம் வடிய மௌனமானாள்.

தன் மேல் உயிரையே வைத்திருப்பவன், தனக்கு பிடிக்காத ஒரு நிகழ்விற்கு தன்னை நிச்சயம் நிர்பந்திக்கவேமாட்டான் என்று எண்ணியவள், தமையனிடம்இப்போவே சொல்லிவிடலாமா?’ என்று தன் மனதில் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,

“ரித்.. அஜய்க்கு தெரியுமா நீ வர்றது?”என்று தயங்கியபடியே கேட்க,

“ம்ம் தெரியும், அவன் தான் டிக்கெட்டே போட்டான். நீயில்லாம எப்படிடா உன் தங்கச்சிக்கு ஃபங்ஷன்? ஃபங்ஷன்ல உன் தங்கச்சி சந்தோஷமா இருக்க வேண்டாமானு கேட்டான்”என்றவன்,

என் செல்ல தங்கச்சியோட ஃபங்சன் நான் இல்லாம எப்படி நடக்கும். அதான் ஓடிவந்துட்டேன். நான் இங்க இருக்கப்போற நாலு நாள்ல, எங்க வீட்டு இளவரசியோட என்கேஜ்மெண்ட சும்மா கிராண்டா, சிறப்பா முடிச்சுட்டு தான் போவேன்” என்று சஹானாவின் கன்னத்தைப் பிடித்து கிள்ளியபடியே, முக மலர்ச்சியுடன் கார்த்திக் கூற, சஹானாவின் மனதிலோ, ‘வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறிய’ கதையாயிற்று...!

“சரி அம்மு, நீ ரெடியாகு. இன்னும் ஒரு மணிநேரத்துல மாப்பிள்ளை வீட்டுல வந்துடுவாங்க. எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு.” என்று கூறிவிட்டு சென்றவன் திரும்பி, “ஆமா சானு, பார்லர்ல இருந்து இன்னும் ஆட்கள் வரலயாடா? அம்மாகிட்ட சொல்லியிருந்தேனே” என்றான்.

“டேய், அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், என் பொண்ணு சும்மாவே அழகு தான். அதுமட்டுமில்லாம, சும்மா சம்பிரதாயத்துக்கு தான் பார்க்க வர்றாங்க. ஃபர்ஸ்ட் இவளுக்கு பிடிக்கணுமாம். அப்புறம் தான் மத்த பேச்சுலாம்னு உங்கப்பா சொல்லிட்டாரு. நீ போய் ரெடியாகு, நீங்க இவள ரெடிபண்ணுங்கமா. இந்த பேக்ல புடவை, நகை எல்லாம் இருக்கு” என்று கார்த்திக்கில் ஆரம்பித்து தோழிகளிடம் முடித்தார் ரேனுகா.

“அம்மா, அதெல்லாம் அவளுக்கு கண்டிப்பா பிடிக்கும்மா. அந்த நம்பிக்கைல தான் நான், மாப்பிள்ள கூட சேர்ந்து பேசி, என்கேஜ்மெண்ட் டேட் கூட கன்ஃபார்ம் பண்ணிட்டே வந்திருக்கேன். அவளுக்கு பிடிக்காத ஒரு விஷயத்த நான் எப்போவுமே செய்யமாட்டேன்” என்று கூறிவிட்டு வெளியேறினான் தன் தாயை உடன் அழைத்துக்கொண்டு.

அவர்கள் வெளியேறியதும், அந்த அறைக்குள் அப்படி ஒரு அமைதி. அந்த அமைதியை குலைத்தது சஹானாவின் அழுகுரல்.

“இனி என் ரித்வி எனக்கில்லடி” என்று முகத்தை குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுதவளை சமாதானப்படுத்தும் வழியறியாமல் நின்றிருந்தனர் தோழிகள் மூவரும்.

ஒரு வழியாக சஹானாவே எழுந்து தயாராக ஆரம்பித்தாள். தோழிகள் மூவரும் சேர்ந்து சஹானாவை அழகிய பதுமையாகவே மாற்றியிருந்தார்கள்.

“இந்நேரம் அந்த வோலினி இருந்தா நல்லா இருக்கும், கூப்பிடலையா சானு அவள?” என்று ரீனா கேட்க,

சஹானாவோ தலையில் அடித்தபடி, “மறந்துட்டேன் டி. நான் உங்களையே கூப்பிடலயே. எப்படி டி கூப்பிட சொல்ற?” என்று சலித்தபடியே கேட்டாள் சஹானா.

“ஜஸ்ட் இன்ஃபார்ம் பண்ணிருக்கலாம், நீ அவளுக்கு அண்ணியாகலனாலும், அவ உன்னோட அண்ணியாகனும்னு நீ ஆசப்படுற தானே?”என்று பூஜா கேட்க சஹானாவோ மௌனமாகவே தலையசைத்தாள்.

பின், தன் அலைபேசியை எடுத்து யாழினியை அழைத்தாள். இணைப்பு கிடைத்ததும், யாழினியே, “என்ன சானு, இப்போ கால் பண்ணிருக்க? மாப்பிள்ள வீட்டுல இருந்து வந்தாச்சா? ஆன்ட்டி கூப்பிட்டாங்க, ஐ வில் பீ தேர் வித்தின் 15 மினிட்ஸ்” என்று முடித்தாள்.

“சரி வா”என்று முடித்துக்கொண்டாள்.

மனம் முழுவதும் அஜய்யே நிரம்பியிருக்க, அவன் தன்னிடம் கடைசியாய் கேட்ட, ‘என்னோட காதல கடைசி வரை புரிஞ்சிக்க மாட்டியாடி’ என்பதே காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்நேரம் சரியாக கீழிருந்து யாரோ,

மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்துட்டாங்கஎன்று கூவும் குரல் கேட்க, எதையும் யோசிக்காமல் ஒரு வேகத்தில் தன் அலைபேசியை எடுத்து அஜய்க்கு அழைத்தாள். இணைப்புப்பெற்று தன்னவனின்ஹலோஎன்ற விளிப்பு கேட்டதும்,

ரித்து, ஐ லவ் யூ, ஐ லவ் யூ சோ மச் ரித்வி. இப்போ தான் என் காதல் உனக்கு புரிஞ்சுதானு கேட்காதே. நான் உன்னை என்னோட சரி பாதியா நினைக்க ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு. உன்னைத் தவிர ஒருத்தர என் பக்கத்துல நினைச்சுப்பார்க்க கூட என்னால முடியல. என்னால என் அண்ணா கிட்ட சொல்ல முடியல. ஆனா எனக்கு நீ வேணும் ரித்வி. ஐ வாண்ட் யூ இன் எவரி செகண்ட்ஸ் ஆஃப் மை லைஃப்.” என்று உடனிருப்பவர்கள், இருக்கும் நிலைமை என்று எதைப் பற்றியுமே யோசிக்காமல் தன்னவனின் தன்னலமற்ற காதலின் கீழ் சரண்டைந்தாள் அம்மங்கை....!

காதல்!!!

கடினமான பாறையிலும்…


விரிசலிட்டு விருட்சமாகும்…
 
Last edited:

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,


"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-16 உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.



கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!

ஜெஃப்ரி....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நினைவு -17

22832


தன்னவள் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியது மட்டுமின்றி, ‘நம் காதல் கைக்கூட ஏதாவது செய்’ என்றும் கூறியது அஜய்யை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொழிலிலைத் திறம்பட நடத்தி வெற்றியை மட்டுமே ருசித்தவன், இன்று தன் காதலின் வெற்றியையும் தன் காதலியின் வாய்மொழியால் அடைந்தான். ஆனாலும், அவள் காதலை தெரிவித்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,

“இப்போ சொன்ன எப்படி சஹானா? நேத்து வரை உன்கிட்ட எப்படியெல்லாமோக் கேட்டுப்பார்த்தேன். கடைசியா கெஞ்சியும் பார்த்துட்டேன். இப்போ, உன் ஃபியான்ஸி கூட உன் வீட்டுக்கு வந்திருப்பாரு. இப்…” என்று சொல்லிகொண்டிருந்தவனை இடைமறித்தவள்,

“எனக்கு அதெல்லாம் தெரியாது ரித்வி. நீ தான் என் ஃபியான்ஸி, நீ மட்டும் தான் என் பெட்டர்ஹாப் ஆகமுடியும். நான் எதுவுமே பண்ணமாட்டேன். நீ சொன்னமாதிரி என் காதல உன்கிட்ட சொல்லிட்டேன். நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது, இப்போ… இங்க… இந்த பொண்ணு பார்க்குற ஃபங்சன் நடக்கக்கூடாது” என்றாள் உறுதியாக.

ஹேய், என்னடி பேசுற? நீ வேணும்னா கார்த்திக்கிட்ட பேசு. பொண்ணு பார்க்க தானே வந்திருக்காங்க. பார்த்துட்டு போகட்டும். அப்புறம் பேசலாம். இப்போ நான் அத விட முக்கியமான வேலைல இருக்கேன், சோ அப்புறமா வந்து உன் பொண்ணுப் பார்க்குற ஃபங்சன நிறுத்துறேன்.” என்றபடி இணைப்பைத் துண்டித்தான்.

அஜய் இணைப்பைத் துண்டித்ததும் அதிர்ந்து சிலையென நின்றவளைக் கலைத்தது கார்த்திக்கின் குரல்,

அம்மு ரெடியா?”என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தவன்,

அழகா தேவதை மாதிரி இருக்கடா. வா போகலாம்என்று அழைக்க, சஹானாவின் முகத்திலிருந்த கலக்கத்தைக் கண்டு,

என்ன சானு, டல்லா இருக்க? உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லையாடா?” என்றான்.

அண்ணா, என்னை மன்னிச்சிருண்ணா... எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்ண்ணாஎன்று அழுதுகொண்டே மடை திறந்த வெள்ளம் போல் அனைத்தையும் தன் தமையனிடம் கூறிமுடித்தாள்.

அம்மு, இங்க பாருடா, அழாதே. இத நீ முன்னடியே என்கிட்ட சொல்லியிருக்கலாம். இல்ல, அஜய்கிட்டயாவது சொல்லியிருக்கலாம். சரி, கீழ மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இருக்காங்க. இப்போ எதுவுமே பேசிக்க டைம் இல்ல. பாரு, கண்மை எல்லாம் கலைஞ்சிட்டு. சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணிட்டு கீழ வாஎன்று கூற,

அவளோ, “என்ன அண்ணா, நான் என்ன சொல்றேன், நீ என்ன சொல்ற? என்னால எவன் முன்னாடியும் ஷோக்கேஸ் பொம்மை மாதிரிலாம் நிக்க முடியாது, ரித்துவ இங்க வர சொல்லு”என்று அங்கிருந்த ஒரு நாற்காலியிம் சென்றமர,

“அம்மு, புரிஞ்சிக்கோ. இது ஒரு ஃபார்மாலிட்டீஸ்க்கு தான் டா. உனக்கு பிடிக்காத எதுவுமே கண்டிப்பா நடக்காது. சரியா?” என்று அவளிடம் சொல்லிவிட்டு,

சீக்கிரம் ரெடி பண்ணி அழைச்சிட்டு வாங்கஎன்று அவள் தோழிகளிடம் கூறிவிட்டு கீழே சென்றான்.

தயாராகி கீழே சென்ற சஹானா, அங்கிருக்கும் எவரையும் பார்க்காமல் தலை குனிந்தபடியே அவர்களுக்கு வணக்கமும் வைத்தாள். அவள் மனம் முழுக்க அவளதுரித்வியே வியாபித்திருந்தான்.

சிலையென தலை கொலுப் பொம்மை போன்று அழகுற நின்றிருந்தவளின் அருகில் வந்த கார்த்திக், அவளை தன் தோளோடு அணைத்து, “சானுமா, கொஞ்சம் நிமிர்ந்து மாப்பிள்ளைய பாருடா, உனக்கு வேண்டாம்னா வேண்டாம் தான்” என்றுக் கூற, அவனளித்த தைரியத்தில் நிமிர்ந்து மாப்பிள்ளையைப் பார்த்தாள்.

பார்த்த நொடியில் அவள் முகத்தில் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் போட்டி போட, அழுகையுடன் தன் தமையனைக் கட்டிகொண்டாள்.

கார்த்திக்கோ அவளை சீண்டும் விதமாக,

“என்ன அம்மு, மாப்பிள்ளை அவ்ளோ மோசமாவா இருக்கான். இப்படி அழற? வேண்டாம்னு சொல்லிடவா?” என்று கேட்க, அவளோ நாணத்துடன் ‘வேண்டாமெ’ன தலையசைத்தாள்.

மாடிப்படிகளில் சஹானா இறங்கி வரும்போதிலிருந்தே அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் அஜய். அஜய்யின் தாய் சஹானாவின் அருகில் வந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு, தன்னருகில் அமர்த்திக்கொண்டார்.

தன்னைப் பார்க்க வந்த மாப்பிள்ளையே அஜய் என்பதை உணர்ந்த சஹானாவின் முகமோ மகிழ்ச்சியில் பூரித்திருந்தது.

உரையாடியபடியே, அனைவரும் பறிமாறப்பட்ட தேநீர் மற்றும் பலகாரங்களுடன் ஐக்கியமாகிவிட, அஜய்யின் கண்கள் மட்டும் சஹானாவையே சுற்றிவந்தது. துளைக்கும் அவனது பார்வையின் வீச்சில் முகம் சிவந்த சஹானாவை சீண்டியது திவ்யாவின் குரல்.

என்ன சானு, உன் ஃப்ரெண்ட்ஸ் ரூச்’ அதிகமா போட்டுவிட்டுடாங்களோ? சீக்ஸ்’ இவ்ளோ ரெட்டிஸ்ஸா இருக்கு” என்று கூற, அங்கு குழுமியிருந்த அனைவரின் முகத்திலும் திருப்தியான புன்னகை நிலவியது.

அஜய்யின் தந்தை ஜெயப்பிரகாஷ் சஹானாவிடம்,

“சஹானா, உனக்கு என் பையன் அஜய்ய பிடிச்சிருக்காமா? உனக்கு முழு சம்மதம்னா மட்டும் மேல பேசலாம்” என்று கேட்டதும் சஹானாவோ அஜய்யை ஒருமுறை பார்த்துவிட்டு தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

ராகிணியோ அஜய்யிடம்,

“அஜய் இந்த மோதிரத்த சஹானாக்கு போட்டு விடுப்பா” என்றதும்,

அஜய், “பொறுங்கம்மா” என்று தாயிற்கு பதிலுரைத்துவிட்டு, சஹானாவின் தந்தை ரகுராமிடம்,

“சஹானா அவளோட சம்மதத்தை சொல்லிட்டாங்க, என்னோட சம்மதத்தை நான் சொல்றதுக்கு முன்னாடி நான் உங்க பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியா பேசனும் அங்கிள், அப்பா வித் யுவர் பெர்மிஸன்” என்று இருவரின் தந்தைக்குமே பொதுவாகக் கேட்டான்.

இது அனைவருக்குமே அதிர்ச்சி என்றாலும், அஜய்யின் காதல் மனம் புரிந்ததால் ரகுராம் சஹானாவிடம்,

“உன் ரூம்க்கு கூப்பிட்டுட்டு போமா” என்றார்.

சஹானாவின் அறையில் இருவரும் தனித்து விடப்பட்டதும், சில நொடிகள் ஆட்க்கொண்ட மௌனத்திற்கு பின் அஜய்,

“சொல்லு சஹானா, எல்லார் முன்னாடியும் என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம்னு சொல்லிருக்க. உன் அண்ணன் கார்த்தி பார்த்த மாப்பிள்ளை உனக்கு அவ்ளோ பிடிச்சிருக்கா?” என்று கேட்க, அவன் கேட்ட நக்கல் தொனியே சஹானாவிற்கு தைரியத்தை வரவழைக்க,

”என் அண்ணா பார்த்த மாப்பிள்ளை அஜய்யை விட, என்னை உயிருக்கு உயிரா நேசிச்ச என் ரித்விய என் மனசுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் நாணத்துடன்.

“எப்போதிலிருந்து இந்த ஞானோதயம்?” என்று அஜய் கேட்டதிலிருந்தே அவனது கோபத்தை உணர்ந்து கொண்ட சஹானா அவனருகில் சென்று அவன் கையைப் பிடிக்க, அவனோ கோபத்தில் அவள் கையை உதறினான்.

தன் தலையைக் கோதியவன்,

“அது எப்படிடி? என் கண்ணுல தெரிஞ்ச காதலை உன்னால புரிஞ்சுக்க முடியலையா? என்னுடைய ஒவ்வொரு செய்கையிலும் வெளிப்பட்ட காதலை உன்னால உணர முடியலையா? நான் உன்ன மட்டுமில்ல உன் மனசையும் சேர்த்தே தான் காதலிக்கிறேன். என் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் நீ வேணும்ன்னு நினைச்சேன். ஆனா நீ, உன் குடும்பத்துக்காக என்னை விட்டுட்டு யாரையோ கல்யாணம் பண்ணிக்க துணிஞ்சிட்டல்ல…?” என்று கோபத்துடன் கத்தினான்.

அவள் கூற வந்த எந்த சமாதானத்தையும் அவன் மனது ஏற்க மறுக்க,அவன் கோபத்தை தணிக்கும் பொருட்டு அவனை அணைத்தாள், அவளது மென்மையான அணைப்பில் அமைதி அடைந்தான்.

கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட்டு அவனது கண்களை பார்த்து,

"என்ன கேட்டீங்க? உங்க காதல் என்னைப் பாதிக்கலையா? பாதிச்சது. உங்க கண்ணுல நான் பார்த்த காதல், என்னோட மனச புயலா சுழற்றியடிச்சு உங்க காலடில கொண்டு வந்து போட்டுச்சு. நீங்க ஒவ்வொரு முறை என்னை நெருங்கும் போதும், உங்களைப் பிடிக்காத மாதிரி விலகிப்போக என்ன பாடு பட்டேன்னு எனக்குத்தான் தெரியும். நீங்க என் மேல வைச்சிருக்கிற காதலுக்கும், என் குடும்பத்தோட பாசத்துக்கும் இடையில மாட்டிக்கிட்டு நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த பக்கமும் போக முடியாம, அந்தப் பக்கமும் நிலைச்சு நிற்க முடியாம ஒவ்வொரு நிமிஷமும் அணு அணுவா செத்துக்கிட்டு இருந்தேன் ரித்து", அவன் சட்டையைப் பிடித்து,தன் கண்ணீரை அதிலேத் துடைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள்.

கடைசியில என் அண்ணாகிட்ட கூட நம்ம காதலை சொல்லிட்டேன், ‘உனக்கு பிடிக்காத எதுவுமே நடக்காது’னு அவன் சொல்லப்போய் தான் வந்தேன். ஆனா நீங்க எல்லாரும் சேர்ந்து இப்படி தில்லாலங்கடி வேலைப் பார்த்திருப்பீங்கனு நான் நினைச்சுக்கூடப் பார்க்கல” என்று அவன் நெஞ்சிலே குத்தினாள்.

“ஹேய், நாங்க எங்கடி தில்லாலங்கடி வேலைப் பார்த்தோம். கார்த்தி இதான் மாப்பிள்ளைனு அனுப்புன மெயில நீ பார்க்கலன்னா நாங்க என்ன பண்ண? இதுல மாப்பிள்ளை என்னைவிட ஹேண்ட்ஸம், கலர்னு பில்டப் வேற...” என்று கூற, அவளோ நாக்கைக் கடித்தவள்,

“சொல்லுடி, உன் அண்ணன் பார்த்த மாப்பிள்ளை உன் ரித்வியை விட ஹேண்ட்ஸமா?”என்று அவள் முகம் குனிந்து கேட்க,

“அ... அது.. அதெல்லாம் எதுக்கு இப்போ.. நீங்க ஏன் என்கிட்ட சொல்லல?”என்று சமாளிக்க,

“நீ இன்னைக்கு சொன்ன லவ்வ முன்னாடியே சொல்லியிருந்தா சொல்லியிருப்பேன். உன்னைப் பார்த்த அன்னைக்கே நீ என்னை பாதிச்சுட்ட. அதுவும் அந்த டான்ஸ்ல டோட்டலா விழுந்துட்டேன்” என்று கனவில் மிதந்தபடி கூறியவன்,

“அன்னைக்கு உன்னை நான் லவ் பண்ணுறேனு தெரிஞ்சுகிட்டதால தான் உன்னை என் ஆஃபிஸ்க்கு வர வச்சேன். உன்னைப் பத்தி ஃபுல்லா தெரிஞ்சுகிட்டதால தான் உன்னை நான் லவ் பண்ணுறதப் பத்தி உன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே என் மாமனார், மாமியார்கிட்ட பேசி சம்ம்மதம் வாங்கிட்டேன்” என்று தன்னவளை அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பே கூறியது, அஜய்யின் விட்டுக்கொடுக்கா காதலை.

சற்று நேரத்தில் சஹானாவை தன்னிடமிருந்து பிரித்தவன், தன் காற்ச்சட்டைப் பையிலிருந்து ஒரு பரிசுப்பொதியை எடுத்து அவளிடம் கொடுத்து பிரிக்க சொன்னான். அவள் அதை பிரிக்க, அதில் கழுத்தையொட்டி அணியக்கூடிய ஒரு தங்கச்சங்கிலியில் ‘SR’ என்று வைரக்கற்கள் பொறிக்கப்பட்ட அழகிய டாலர் கோர்க்கப்பட்டு அழகுற மிளிர்ந்து கொண்டிருந்த்தது.

“வாவ், சூப்பர் ரித்து. அழகா இருக்கு”

“சஹி, இது தான் உனக்கு நான் கொடுக்குற முதல் கிப்ட் அண்ட் இப்போவே உனக்கு நான் இந்த தாலியக் கட்டப்போறேன்” என்று கூறியவன்,

அவள் கழுத்தில் அணிவிக்கும் முன்,

“என்ன கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பமா, சஹி?” என்றான் கண்களில் காதலைத் தேக்கி.

அக்கண்களில் தெரிந்த காதலில் கட்டுண்ட சஹானாவும் அதே அளவு காதலுடன்.

“உனக்காக மட்டுமே உன்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்குறேன் ரித்வி” என்று அவன் விரும்பும் சம்மததை அவனிடம் தெரிவித்தாள். அதில் நெகிழ்ந்த அஜய்யும், அந்த தங்க சங்கி(தா)லியை அணிவித்து அவள் நெற்றியில் இதழொற்றினான்.

“இனிய திருமண நல்வாழ்த்துக்கள் Mrs.அஜய் ரித்விக்” என்று கூறி கண்ணாடித்தான்.

அவளோ, “என்கேஜ்மெண்ட்க்கு முன்னாடியே கல்யாணம் பண்ணுன கப்பிள்ஸ் நாமலா தான் இருப்போம்” என்று கூற,

அவனோ, “என்கேஜ்மெண்ட்க்கு முன்னாடி ஃபர்ஸ்ட் நைட் நடந்தா தான்டி தப்பு, நான் தாலி மட்டும் தான் கட்டியிருக்கேன்.” என்றவாறு அவளின் கழுத்தில் தன் மூக்கால் உரசிக்கொண்டே கேட்க,

சஹானாவோ அவனை தள்ளி விட்டுவிட்டு, “ரித்து, என்ன இது? கொஞ்சம் தள்ளி நில்லுங்க” என்றாள்.

அஜய்யோ கடுப்பாகி, “என்னடி உன் பிரச்சனை, அதான் இப்போ லைசென்ஸ் கிடைச்சிடுச்சுல்ல. இப்போ நான் உன் புருஷன்.” என்று மறுபடியும் நெருங்கினான்.

சஹானா, “வெளியே எல்லாரும் இருக்காங்க ரித்து, வாங்க போலாம்” என்க,

அஜய்யோ அவளை நெருங்கி வந்து, சுவற்றோடு சேர்த்து அணைத்தபடி, கைகளால் அவள் வெற்றிடையில் கோலம் போடத் துவங்கும் நேரம் கதவு தட்டப்படும் ஓசையில் இருவரும் அவசர அவசரமாய் பிரிந்தனர்.

“இவ்வளவு நாள் உன்னை கரெக்ட் பண்றதுக்கு கஷ்டப்பட்டேன். இனி இந்த கரடிகளை சமாளிக்கக் கஷ்டப்படனுமா?” என்று சலித்தப்படி கதவைத் திறந்தான்.

கதவைத் தட்டிய கார்த்திக்கோ, “டேய் மச்சான் என்னடா ஆச்சு? கீழ எல்லாரும் வெயிட் பண்றாங்க. வாங்க” என்று இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

கீழே வந்ததும் அஜய் தன் சம்மதத்தை தெரிவித்ததோடு, அஜய்யின் தாய் ராகிணி கொடுத்த மோதிரத்தை சஹானாவிற்கு அணிவித்தான். கார்த்திக் கொடுத்த கைகடிகாரத்தை சஹானாவும் அஜய்க்கு அணிவிக்க, அந்த இனிய நிகழ்வு அங்கிருந்தவர்களின் அலைபேசிகளில் சுயமிகளாகவும், புகைப்படங்களாகவும் அரங்கேறியது.

ஜூன் 15ம் தேதி சஹானாவின் பிறந்தநாள் அன்றே நிச்சயதார்த்தம் வைக்கப்பட வேண்டுமென்று கார்த்திக் உறுதியாக சொல்லிவிட, ரகுராம்,

“கார்த்திக், சானு பிறந்தாநாளுக்கு இன்னும் மூணு நாள் தானப்பா இருக்கு. அதுக்குள்ள எப்படி நிச்சயத்த வைக்கமுடியும்? எவ்வளவு வேலை இருக்கு...” என்று இழுத்தார்.

கார்த்திக் ஏதோ கூறவர, முந்திக்கொண்ட அஜய், “மாமா, கார்த்திக்கு சஹி பிறந்தநாள் அன்னைக்கு நைட் ஃப்ளைட். சோ, அன்னைக்கே என்கேஜ்மெண்ட் வைக்கலாம். அப்பா மண்டே என்கேஜ்மெண்ட் வைக்குறதுல உங்களுக்கு ஓகே தானா?” என்று கேட்டு அனைவரிடமும் ஒப்புதல் கேட்டுவிட்டு, நிச்சயத்தார்த்தத்திற்கான வேலைகளை ஆரம்பித்தனர்.

அனைவரும் கிளம்பும் நேரம், அனைவர் முன்னிலையிலும் ரேணுகாவே அஜய்யின் தாய் ராகிணியிடம்,

“அண்ணி, எங்களுக்கு உங்க பொண்ணு யாழினிய ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கு விருப்பமிருந்தா எங்க மகன் கார்த்திக்கு சம்பந்தம் பேசலாமா?” என்று கேட்டார்.

ராகிணி சம்மதமாக தன் கணவரைப் பார்க்க, அவரே சஹானாவின் தந்தை ரகுராமிடம்,

“டேய் ரகு, பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கலாமே, எனக்கு கார்த்திக்க ரொம்ப பிடிச்சிருக்கு” என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்க, யாழியின் முகமோ வெக்கத்தில் சிவந்தது.

ரகுவும், “கார்த்திக்கு பிடிச்சிருந்தா, எனக்கு இதுல டபுள் ஓகே தான். என்னப்பா கார்த்திக், உனக்கு யாழினிய கல்யாணம் பண்ணிக்க விருப்பமா?” என்று தன் தனையனிடம் கேட்டார்.

கார்த்திக்கும், “அப்பா, எனக்கு யாழினிய பிடிச்சிருக்கு. எனக்கு அவள கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தான். பட் இப்போ வேண்டாம். ஃபர்ஸ்ட், அவ படிச்சி முடிக்கட்டும். அப்புறம் மேரேஜ் வச்சுக்கலாம்” என்றான் யாழினியை கண்களால் வருடிக்கொண்டே.

“அப்போ ரெண்டு நிச்சயத்தையும் ஒண்ணா வச்சிடலாமா?” என்று ஜெயப்பிரகாஷ் கேட்க,

கார்த்திக்கோ அவசரமாக,

“வேண்டாம் மாமா, நான் மறுக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க மாமா. இப்போ டைம் ரொம்ப கம்மி. அண்ட், இப்போ சானு-அஜய்க்கு மட்டும் என்கேஜ்மெண்ட் நடக்கனும்னு நான் ஆசைப்படுறேன். இவங்க மேரேஜ் நடக்கும்போது எங்க நிச்சயத்த வச்சுக்கலாம்” என்று முடித்துவிட்டான்.

அனைவருக்கும் அவன் கூறியதே சரி என்று பட, இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் விடைப்பெற்றனர்.

அடுத்த இரு நாள்களும் நிச்சயத்திற்கான ஆடை, அணிகலண்கள் வாங்குவது, உறவினர்களை அழைப்பது என்று ரெக்கைக்கட்டி பறக்க, அஜய்யும், சஹானாவும் தங்களுக்கு கிடைக்கும் இரவு, பகல் என அனைத்து நேரத்தையும் அலைபேசியிலேயேக் கழித்தனர். அவள் சிறுவயதில் தான் வாங்கிய அடிகள், பள்ளிப்பருவக் கதைகளை ஏதோ பத்மஸ்ரீ விருது வாங்கிய வரலாறு மாதிரி கூற, 'ஓ.....அப்படியா.....!’ என்று கர்மசிரத்தையாய் கேட்டுக் கொண்டான் அந்த காதல் மாணவன்...!

இத்தகையான 'ஸ்வீட் நத்திங்ஸ்.....!’ காதலில் இனிமையான ஒன்று....!

காதலர்களுக்காகவே ‘கால்வின் ஹாரிஸ்’ என்ற இளம் ஆங்கில கவிஞ னின் இளமை துள்ளும் வரிகளுடன் அமைத்த பாடல் (Calvin Harris - Sweet Nothing)

“நான் உனது


ஒவ்வொரு வார்த்தைகளையும்

விழுங்குவேன்....

உன்னுடைய

ஒவ்வொரு இரகசியமும்,

ஒவ்வொரு பெருமூச்சும்

என்னுடைய

இதயத்தை

உண்கிறது”






நினைவுகள் தொடரும்....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,


"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-17 உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.



கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!

ஜெஃப்ரி....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு -18

22927

ஜூன் – 15:

ஏழு மணி வரை, அயர்ந்து துயில் கொள்ளும் சஹானாவை எழுப்ப முயன்று சோர்ந்துவிட்டனர் தோழிகள்.

“ஹேய்… சானு எழுந்திரிச்சுத் தொலைடி. இன்னும் நாலு மணி நேரத்துல உனக்கு நிச்சயதார்த்தம்டி. இப்போ உங்க அம்மா வந்தா நாங்க காலி... எழுந்திருடி...” என்று விதவிதமாக தோழிகள் எழுப்புவது கூட அவளுக்கு தாலாட்டுப்பாடலாகவே இசைக்க, உறக்கத்தை மேலும் தொடர்ந்தாள்.

பூஜாவோ, “ஹேய் நைட் அவ ரொம்ப லேட்டா தாண்டி தூங்குனா, கொஞ்சம் நேரம் தூங்கட்டும்” என்று தோழிக்கு பரிந்துரைக்க,

ரீனாவோ,
ஆமாடி, நைட் 12 மணிக்கு கேக் கட் பண்ணிட்டு, அப்புறம் நீங்க ரெண்டு பேரும் மொபைல தூக்கிட்டு கடலை போட போய்ட்டீங்க, நீ எப்போ வந்தேனே தெரியாது. அவ வந்ததுக்கு அப்புறமும் மொபைல பார்த்துக்கிட்டே இருந்தா. எப்போ தூங்குனாளோ? ஆனா ஒண்ணுடி, இந்த லவ்வர்ஸ்க்கு ஃப்ரெண்ட்ஸா இருக்குறது மாதிரி கொடுமை வேற இல்ல” என்று சலித்துக் கொண்டாள்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, சஹானாவின் அலைபேசி, ‘சஹிபேபி... பிக்அப் மை கால்’ என்ற நாதத்துடன் இசைக்க, அந்த குரலில் எழுந்தவள், அங்கிருந்த எவரையும் கண்டுகொள்ளாமல், திரையில் ஒளிர்ந்த தன்னவனின் புகைப்படத்தை பார்த்து புன்னகையுடனே அழைப்பை ஏற்றாள்.

“குட் மார்னிங், சஹி பேபி. இன்னுமாடா முழிக்கல. நல்ல நாள் அதுவுமா இப்படியா தூங்குவ?” என்றான் அஜய்.

“எல்லாம் உங்களால தான், உங்க கூட நைட்லாம் பேசிட்டே இருந்ததால தான்” என்று முறுக்கிக்கொள்ள,

“அதெல்லாம் இருக்கட்டும், நான் இப்போ எதுக்கு கால் பண்ணுனேனு நெனைக்குற?” என்று அவன் கேட்கும் போதே, சஹானா உற்சாகத்துடன்,

“எனக்கு தெரியும். ஆனாலும் ரித்து நீங்க ரொம்ப லேட்” என்று நொடித்துக்கொண்டாள்.

அஜய்யோ சிரித்துக்கொண்டே, “குட், பேபிமா. சொல்லாமலே புரிஞ்சிக்கிட்டீங்க. கார்த்திக் எனக்கு கால் பண்ணி, உன்னை ரெடியாக சொல்றதுக்கு முன்னாடி நீயே போய் சீக்கிரம் ரெடியாகிடு பார்க்கலாம்.” என்று கூற, சஹானாவின் முகமோ விளக்கெண்ணெய் குடித்தது போலாகிவிட்டது.

“அப்போ, இதுக்கு தான் கால் பண்ணுனீங்களா அஜய்?” என்று கேட்க,

“ஆமாடா, நம்ம வீட்டுல என்னை இப்போவே ரெடியாக சொல்றாங்க உன் மாமியாரு. நீ என்னன்னா இன்னும் தூங்குற? வித்தின் 2 ஹவர்ஸ் யு ஷுட் பீ தெர்” என்றவன்,

“சானு, ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்..” என்றான். சஹானாவோ ஆவலுடன்,

“சொல்லுங்க ரித்வி, என்ன?” என்றாள்.

அஜய்யோ, “ஐ லவ் யூ சோ மச் டா” என்றான்.

எப்போதும் அவன் கூறும் காதல் மொழியில் நெகிழ்பவள், இன்று ,


சரி… இத சொல்லதான் கால் பண்ணிங்களா..?” என்று முறுக்கிகொள்ள, அவனோ அதை கண்டுகொள்ளமல்,

“எஸ் டா. ஓகே, மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம். சீக்கிரமா ரெடியாகு. குயிக்” என்று இணைப்பைத் துண்டித்தான்.

அலைபேசியை மெத்தையில் எறிந்தவளிடம், “என்னடி ஆச்சு? பல்லுத் தேய்க்கிறதுக்கு முன்னாடியே ‘கோல்கேட்’ விளம்பரத்துக்கு போஸ் குடுக்குற மாதிரி ‘ஈ’ன்னு ஃபோன எடுத்த. இப்போ என்னடான்னா, GEM(Ginger Eating Monkey) போஸ்ல ஃபோன கட் பண்ணிருக்க. என்னாச்சு?” என்று ரீனா அவளைச் சீண்ட, சஹானாவோ தூண்டப்பட்ட கோபத்தில், “அவனுக்கு ரொம்பத்தாண்டி. ரொம்ப ஓவரா தான் பண்றான்” என்றாள்.

“யாரடி சொல்ற? நீ இப்போ அஜய் அண்ணா கிட்ட தானே பேசுன?”என்று பூஜா கேட்க, சஹானாவும்,

“ம்ம்ம், அந்த நொண்ணாவ தான் சொல்றேன்” என்றதும் தான் தாமதம் தோழிகள் மூவரும் அதிர்ந்து விழித்தனர்.

மிதுனாவோ, “என்னடி அண்ணாவ போய், இப்படி மரியாதையில்லாம பேசுற?” என்றதும்,

“பின்ன என்னடி, எனக்கு இன்னைக்கு பிறந்தநாள். இந்த பேர்த்டே எனக்கு ஸ்பெஷல் தானே? ரித்வி தான் ஃபர்ஸ்ட் விஷ் பண்ணனும்னு நினைச்சேன். பட், இன்னும் ஒரு விஷ் கூட பண்ணலடி” என்று சோகத்துடன் கூறினாள் சஹானா.

“இவ்ளோ தானே. விடுமா, மறந்திருப்பாங்களா இருக்கும். டைம் ஆகுது சானு, நி கிளம்புற வேலைய பாரு” என்று மிதுனா கூற, அதன் பின் அனைவரும் நிச்சயதார்த்தத்துக்கு கிளம்பினர்.

*****

பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR) அமைந்துள்ள அந்த பெயர்பெற்ற ‘ஸ்ரீ ஷைத்தன்யா திருமண மண்டபம்’ சொர்க்க அமைப்பை கொண்ட கருவை தேர்வு செய்து அலங்கரிக்க பட்டிருந்தன.

குறிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே அனைவரும் மண்டபத்திற்கு வருகைத் தர நிச்சயத் தாம்பூல நிகழ்ச்சி ஆரம்பமானது. அஜய்யின் கண்களோ நொடிக்கொரு முறை மணமகள் அறையையே தொட்டு மீள, அவனை சிறிது காலம் சோதித்துவிட்டே மேடைக்கு வருகைத் தந்தது அவனது தேவதை.

வானுலகத்து நங்கைகளையும் தோற்கடிக்கும் அழகோடு,அஜய்யின் வீட்டில் எடுத்துக் கொடுத்த இள ரோஜா வண்ண பட்டுப்புடவையில், புடவையின் வண்ணத்திற்கு ஏற்ற நகையணிந்து, வெட்கத்தில் முகம் குங்குமமாய் சிவந்திருக்க, தேவதையைப் போல் நடந்து வந்தவளிடம் இருந்து பார்வையைத் திருப்ப முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் அவன்....!

பதுமைபோல் அமர்ந்திருந்த சஹானாவின் தலையில் அஜய்யின் தாய் ராகிணி பூ வைத்து சடங்குகளைத் தொடங்க, புரோகிதர்களால் திருமண லக்கன பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, மஞ்சள், குங்குமம், வெற்றிலைப் பாக்கு அடங்கிய தாம்பூலம் பெரியவர்களால் மாற்றிக்கொள்ளப்பட்டு, அஜய்-சஹானாவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.அடுத்த மூன்று மாதத்திற்குள் திருமணம் என்று ஒரு நல்ல சுப முகூர்த்தத்தினத்தில் திருமண தேதியையும் குறித்தனர்.

முதலில் சஹானா அஜய்க்கு மோதிரம் அணிவிக்க, அதன்பின்னர் அஜய் சஹானாவிற்கு மோதிரம் அணிவித்து விட்டு, அவளது கையை விடாமல் அனைவர் குழுமியிருந்த சபையிலும் அவள் புறங்கையில் இதழொற்றினான். சஹானாவிற்குள்ளோ மின்சாரம் பாய, அவனோ கலையாமல் தன்னவளின் நாணம் சுமந்த முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க, தன் நண்பர்களின் கேலிச்சிரிப்பில்தான் நடப்பிற்கு வந்தான்.

சற்று நேரத்தில் மண்டபத்தின் அனைத்து விளக்குகளும் அணைய,சஹானாவோ பயத்தில் அஜய்யின் கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். இருவரும் நெருக்கமாக நின்ற நேரம், மேடையில் அவ்விருவரும் நின்ற இடத்தில் மட்டும் விளக்குகள் ஒளிர, அஜய் சஹானாவின் பிறை நெற்றியில் முத்தமிட்டு,
“ஹேப்பி பேர்த்டே, மை ஏஞ்சல்” என்றான். அப்போது,ஒலிப்பெருக்கியின் உபயத்தில் பிறந்தநாள் வாழ்த்து மெல்லிசை அலைபரப்பட்டது. உடனே அவ்வறையின் விளக்குகள் ஒளியூட்டப்பட, அவ்விருவரும் நின்றிருந்த தோற்றமும், மெல்லிசையும் அந்த மேடையையே அலங்கரித்தது.

“இது தான் நீ பிறந்த நேரம் பேபி, இப்போ சொல்லலாம்னு தான் அப்போ சொல்லலை. கோபம் போய்டுச்சா?” என்று அஜய் கண்சிமிட்டிக் கேட்க, அசந்து தான் போனாள் அம்மங்கை.

“ஹேப்பி பேர்த்டே அண்ணி” என்றவாறு அபி, ஷ்யாமுடன் சேர்ந்து அந்த பெரிய இரண்டடுக்கு கேக்கை கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தனர்.

“அண்ணி, ஃபர்ஸ்ட் லேயர நீங்க மட்டும் கட் பண்ணனும், நெக்ஸ்ட் லேயர என் அண்ணாவோட சேர்ந்து கட் பண்ணுங்க” என்றான்.

சஹானாவும் ‘ஹேப்பி பேர்த்டே மை சஹி பேபி’ என்று வாசங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த முதல் அடுக்கை வெட்டி, தன் அருகில் நின்ற தாய்,தந்தையிடம் ஊட்டிவிட்டு, தன் சகோதரனிடம் ஊட்ட வர, அவனோ,

“சானுமா, அஜய்க்கு தான் குடுக்கனும்” என்று மறுத்தான்.

கார்த்திக் கூறியதைக் கேட்டு சஹானா முகம் சுணங்க, அஜய்யோ,

“இந்த உரிமைய உன்கிட்ட இருந்து நான் எப்பவுமேத் தட்டிப்பறிக்கமாட்டேன் மச்சான். சஹி, அவனுக்கே குடுடா” என்றான்.

கேக்கின் அடுத்த அடுக்கை இருவரும் சேர்ந்து வெட்டி தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள அந்த இனியக்காட்சி அனைவரது அலைபேசியிலும் பதிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் இளவட்டங்கள் அஜய் மற்றும் சஹானாவை நடனமாடக் கேட்டு கூச்சலிட, அவளோ நாணத்தில் மறுத்து அங்கிருந்து நகர்வதற்கு முன்பாகவே பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

“சகியே… ஸ்நேகிதியே…


காதலில்…

காதலில்…

காதலில்
நிறமுண்டு…!

சகியே… ஸ்நேகிதியே…

என் அன்பே…

அன்பே…

உனக்கும் நிறமுண்டு...”


என்று பாடல் ஒலிபரப்ப, சஹானாவின் அருகில் வந்த அஜய், அவள் கையைப் பற்றி லாவகமாக சுண்டியிழுக்க, ஒரு வித லயத்துடன் இரண்டு முறை சுழன்று வந்து அவன் நெஞ்சில் விழுந்திருந்தாள் அம்மங்கை.

நெஞ்சில் விழுந்த தன்னவளின் தோளைச் சுற்றி கைகளால் அணைத்தபடி, இசைக்குத் தகுந்தபடி, அவன் நடனமாட ஆரம்பிக்க, சுற்றியிருந்தோரின் உற்சாக கரகோஷமும் "ஹா...!வாவ்....!",என்ற ஆரவாரங்களும் அம்மங்கையையும் ஆடத்தூண்டியது.

“இரவின் நிறமே...


இரவின் நிறமே...

கார்காலத்தின் மொத்த நிறமே....

காக்கைச் சிறகில் காணும் நிறமே...

பெண்மை எழுதும் கண்மை நிறமே...

வெயிலில் பாடும் குயிலின் நிறமே....

எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே....

எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே...


அஜய் ஆடிய ஒவ்வொரு அசைவும் அவள் மீதான காதலை பிரதிபலிக்க, அதற்கு இணையான காதலை தன் விழிகளில் தேக்கியபடி நடனமாடிக் கொண்டிருந்தாள் சஹானா.

பாடலின் இறுதியில்,அவளது இடையை இரு கைகளாலும் பற்றித் தன் கைகளில் ஏந்தியபடி ஒரு சுழற்று சுழற்றி இறக்கி விட, அம்மண்டபமே கரவொலிகளால் நிறைந்திருந்தது.

அடுத்து நண்பர்கள் அவர்களது இணைகளுடன் இணைந்து நடனமாட, அந்த மண்டபமே ஒரு திருவிழாக்கோலம் பூண்டது. ஏன், ஷ்யாம் கூட சஹானாவின் உதவியினால் மிதுனாவுடன் இணைந்து நடனமாடினான்.

சுயப்பறிமாறுதல் (Buffet) முறையில் உணவுகள் பறிமாறப்பட அனைவரும் உணவு விருந்தினர் அனைவரும் விழாவின் சிறப்பை பாராட்டி, மணமக்களை வாழ்த்தி விடைபெற்றனர்.

கார்த்திக்கின் நண்பர்களோ, “உன் தங்கச்சி என்கேஜ்மெண்டயே மேரேஜ் மாதிரி சிறப்பா நடத்திட்டடா. அப்போ மேரேஜ் எப்படிடா நடத்துவ?” என்று கூற, கார்த்திக் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

நிச்சயதார்த்த நிகழ்வில் பகுதியளவு கூட இன்றி இவர்களது திருமணம் நடக்கும் என்பதை அப்போது அவர்கள் அறியவில்லை.....!

ஷ்யாமோ, மகிழ்ச்சியில் ஒரு படி மேலே போய்,

“மிது, கொஞ்சம் வாயேன் என்கூட” என்று அவள் விருப்பத்தைக் கேட்காமலேயே தன் பெற்றோரிடம் அழைத்து சென்று,

“மாம்,டேட் எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று மிதுனா யோசிக்கும் முன்பே அவளை இழுத்துக் கொண்டு அவர்களின் கால்களில் விழுந்தான்.

மேலும், “இது மிதுனா, இவ தான் உங்க மருமக” என்று ஷ்யாம் அறிமுகப்படுத்த, மிதுனாவோ அதிர்ச்சியிலும், பெரியவர்கள் முன்னிலையில் எதுவும் சொல்ல முடியாமலும் திணறினாள்.

“எப்படிமா என் செலக்‌ஷன்?” என்று அவர்களிடமே ஷ்யாம் கருத்து கேட்க, மிதுனாவிற்கோ முள் மேல் நிற்கும் நிலையாயிற்று. அத்தனைக் கோபமும் ஷ்யாம் புறமே திரும்ப,

“சார்...” என்று அடிக்குரலில் சீற,

ஷ்யாமின் தாயார் சரிதாவோ மிதுனாவை நெற்றியில் உச்சி முகர்ந்து,

“அழகா இருக்காடா என் மருமக. இப்போ தான் டா உன் வாழ்க்கையில உருப்படியா ஒரு விஷயத்தை செஞ்சிருக்க” என்று கலாய்க்க அங்கே ஒரு சிரிப்பலையே உருவாகியது.

“உனக்கு எந்த ஊருமா? அப்பா என்ன பண்றாங்க? கூட பொறந்தவங்க” என்று ஷ்யாமின் தந்தை சங்கர் கேட்க,

மிதுனாவோ தன் தந்தையின் நினைவில் கண்கலங்கியவளாக,

“ஹீ இஸ் நோ மோர் அங்கிள்” என்று கூற, அவரும் ஆதூரமாக அவள் தலையைத் தடவினார்.

மிதுனாவின் கலங்கிய கண்களை கண்டவன் ஆதரவாக அவன் பிடித்திருந்த அவளது கரத்தில் சற்று அழுத்தம் கொடுத்தான். அதைக் கண்ட ஷ்யாமின் தங்கை ஸ்வாதி நிலைமையை சீர்ப்படுத்த,

“அண்ணா, அண்ணி கைய விடு, டெய்லியும் தான் ஆஃபிஸ்ல பார்த்துகிட்டே இருக்கல்ல. இன்னைக்கு எங்கக்கூட தான் இருப்பாங்க” என்று கூறி மிதுனாவின் கையைப் பிடித்து இழுத்து சென்று தன் குடும்பத்தாருடன் அமர்ந்து கொண்டாள். மிதுனாவின் நிலை தான் பரிதாபமாகியது.

சஹானாவோ, “போச்சு, ஷ்யாம் அண்ணா சொதப்பிட்டாங்களே...! இனி இவளை மலை இறக்குறது ரொம்ப கஷ்டமாச்சே..” என்று அஜய்யிடம் கூறினாள்.

அஜய், “ஐ திங்க் சோ, பட் மிதுனா மறுத்து ஒரு வார்த்தைக் கூட சொல்லாம இருக்காளே” என்று கேட்க,

சஹானாவோ, “பின்ன, பெரியவங்க முன்னாடி வேற எப்படி நடந்துக்குவா? அண்ட், இது நம்ம ஃபங்ஷன். அதான் எரிமலை இன்னும் சீறாம இருக்கு. எப்படினாலும் ஷ்யாம் அண்ணாக்கு நாளைக்கு சேதாரம் அதிகம் தான்” என்றாள்.

“அப்படியா சொல்ற?” என்று அஜய் ஐயமாக கேட்க,

“ஆமா. அவளுக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தையே ‘காதல்… காதல்… காதல்’ தான். சேதாரம் அதிகமாகுறதுக்கு முன்னாடி சரிதா அத்தையையும், சங்கர் மாமாவையும் மிது வீட்டுல போய் பேச சொல்லுங்க ரித்து. அங்கேயும் லவ்வுனு சொல்லாம பேசுறது பெட்டர்” என்றாள்.

அன்றிரவே கார்த்திக் அமெரிக்காவிற்கு மீண்டும் பயணிக்க வேண்டி இருப்பதால், அஜய்யின் வீட்டாரும் கிளம்பிச் சென்றனர். கார்த்திக்கோ செல்லும் முன் யாழினியிடம் பேச ஆசைப்பட்டாலும், அதை வெளிப்படுத்த தயங்கி அமைதி காத்தான். அவனது அமைதியிலிருந்தே நண்பனின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட அஜய் தன் தந்தையிடம், “அப்பா, கார்த்திக்கு ஒரு கிப்ட் வாங்கி கொடுக்கனும்னு சொன்னீங்கல்லப்பா. அத கார்த்திக் கூட யாழியே போய் செலக்ட் பண்ணட்டுமே” என்று அனுமதி வாங்கி அதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தான்.

முதல்முறையாக தன் மனம் கவர்ந்த நாயகனுடன் பயணிக்கும் இந்த கார்ப்பயணம் கூட யாழினிக்கு மிகப்பெரும் உவப்பை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் காரை நிறுத்திய கார்த்திக் யாழினியிடம்,

“கொஞ்சம் பேசலாமா,யாழி” என்றான்.

“ம்ம், ஓகே” என்றாள்.

அவள் புறம் சற்று நெருங்கி வந்தவன்,

“என்மேல கோபமா?” என்று கேட்க,

“இல்லையே, நான் எப்பவுமே உங்கமேல கோபப்பட மாட்டேன். ஏன் அப்படி கேட்குறீங்க?”

“நம்ம என்கேஜ்மெண்ட் இப்போ வேண்டாம்னு சொன்னேன்ல, அதுக்கு”

“இல்லையே. நீங்க சானுவோட என்கேஜ்மெண்ட தனியா நின்னு நடத்தனும்னு ஆசைப்பட்டது எனக்கு முன்னாடியே தெரியும். இப்போ அது நடந்திருக்கு, அந்த விதத்துல நான் ஹாப்பி தான்” என்றாள் புன்னகையுடன்.

அவளது பதிலில் மகிழ்ந்தவன், “ஆனா அதுமட்டும் ரீசன் இல்ல. ஆமா, உன்கிட்ட ரொம்ப நாளா ஒண்ணு கேக்கனும்னு நினைச்சேன். எப்போலயிருந்து என்ன லவ் பண்ணுற?” என்றான் தெரிந்து கொள்ளும் ஆவலுடன்.

யாழினியோ, “அது... அஜய் அண்ணாவோட ட்வெண்டி தெர்டு பேர்த்டேல இருந்து” என்றாள் முகம் சிவக்க.

அவனோ ஆச்சர்யத்தில் விழிவிரிக்க, “அஞ்சு வருசமாவா?அதனால தான் சானு படிக்குற காலேஜ்ல சேர்ந்தியா?” என்று கேட்டான்.

“ஆமா, எப்படியும் உங்கள கரெக்ட் பண்ண சானு தான் சரியான ஆளுன்னு தெரிஞ்சது. அதான், அந்த காலெஜ்ல அடம்பிடிச்சு சேர்ந்தேன். பட், நான் எடுத்த மார்க்குக்கு ஆர்க் தான் கிடைக்கல” என்றாள் வருத்தமாக.

“ஸோ வாட், இப்போ நானே கிடைக்கப்போறேனே!” என்றான் அவள் கைகளை தன் கைகளால் சிறை செய்தபடி.

“ஐ லவ் யூ யாழி. உன் அளவுக்கு நான் உன்னை லவ் பண்றேனானு தெரியல.பட், ஐ லவ் யூ. என்னோட அப்பா வீட்டு சைட்ல எனக்கு தப்பா சொல்லிகுடுத்ததுனால, என் அம்மா செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டது எனக்கு பிடிக்கல. ஆனா சானு பிறந்ததுக்கு அப்புறம் தான் என் லைஃப்ல நிறைய மாற்றங்கள். அதனால தான் எனக்கு சின்ன வயசில இருந்தே எல்லாமே சானு மட்டும் தான். அப்படியே வளர்ந்துட்டேன். உனக்கு நான் சொல்றது புரியுது தானே?” என்று கேட்டான் கேள்வியாக.

“புரியுது, உங்க மனசுல எனக்கு இடம் இருக்குதுனு சொல்லிட்டீங்க. எனக்கு அதுவே போதும்” என்று அவன் தோள் சாய்ந்தாள்.

சாய்ந்திருந்த அவள் தலையில் தன் கன்னத்தை வைத்து அழுத்தியவன் அவளை தன் தோள் வளைவிற்குள் கொண்டு வந்து,

“யாழி, நைட் கிளம்புறேன்டா” என்றான்.

அவளோ அமைதியாய் இருக்க, அந்த ஏகாந்தத்தை கலைக்க விரும்பாமல் அவனும் அமைதியாய் இருந்தான். சற்று நேரத்தில் அவளது விழிநீர் அவனது சட்டையை நனைக்க,

“ஹேய் டாலி, என்னாச்சுடா, ஏன்டா அழற?” என்று பதறினான்.

“நீங்க ஏன் கார்த்தி யூ.எஸ் போறீங்க? போகாதீங்க. என்னால உங்கள பார்க்காம இருக்க ரொம்ப கஷ்டமாயிருக்கு” என்று நெஞ்சில் முகம் புதைத்து அழுதாள்.

“டாலி, இங்க பாரு. இன்னும் ஒரு மூணு மாசம் தான். சீக்கிரம் ஓடிரும்டா. இனி டெய்லி வீடியோ கால் பேசலாம். ஓ.கேவா?” என்று குழந்தையை சமாதானப்படுத்துவதைப் போல் அவள் கண்ணீரைத் துடைத்து, அவள் பிறை நெற்றியில் தன் இதழால் திலகமிட்டான்.

தன்னவனது முதல் இதழ் முத்திரையில் நெகிழ்ந்து அவன் முகத்தைப் பார்த்த யாழினியோ குறும்புடன்,

“உங்களுக்கு கிஸ் பண்ணவே தெரியாதா?” என்று கேட்க, அவனோ ‘ஙே’ என விழித்தான்.

மேலும் அவனைச் சீண்டும் விதமாக, “என்ன முழிக்கிறீங்க? இந்த கிஸ்ஸெல்லாம் சானுக்கும், உங்க அக்கா பொண்ணு தீக்ஷூக்கும் போய் குடுங்க. லவ்வர்க்கு எப்படி கிஸ் குடுக்கனும்னு கூட தெரியாதா உங்களுக்கு?” என்று தன் உதட்டைச் சுழிக்க, தன்னைப் பார்த்து சுழித்த அந்த அதரங்களுக்கு தன் முரட்டு இதழ்களாலேயே தண்டனை வழங்கினான்.

“இப்போ ஓ.கே வா?” என்று அவளிடம் கேட்டு சிவந்திருந்த அவள் கன்னங்களை மேலும் சிவப்பாக்கினான்.

அதன் பின்னர், அவளுடன் ஒரு ஆடையகத்திற்குச் சென்று யாழினிக்கு சில உடைகளைப் பரிசளித்துவிட்டு அதன் பின்னரே இல்லத்திற்குச் சென்றான்.

அனைவரிடமும் விடைப்பெற்று செல்லும் நேரம் முகம் சுணங்கிய சஹானாவிடம், “அம்மு, ஒரு மூணு மாசத்துக்கு காதல் பறவைகளா அஜய் கையப் பிடிச்சிக்கிட்டு, ஜாலியா சுத்தித் திரிங்க. ஸோ, நோ ஃபீலிங்ஸ். மச்சான், என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன். பத்திரமா பாத்துக்கோடா..!” என்று கூறி அஜய்யின் கைகளில் சஹானாவின் கரங்களை ஒப்படைத்தான். தான் திரும்பி வருகையில் மகிழ்ச்சி நிறைந்த சஹானாவின் முகத்தை மட்டுமே காண்போம் என்ற நம்பிக்கையில் தன் அமெரிக்கப் பயணத்தைத் தொடங்கினான் கார்த்திக்...!

ஆனால், மனிதனின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று நம்மை இயக்கின்றது என்பதை அங்கே எவரும் அறிந்திலர்....!



நினைவுகள் தொடரும்...!
 
Last edited:

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,


"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-18 உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.



கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!

ஜெஃப்ரி....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-19

23021

மறுநாள் சஹானாவுடன் இணைந்து அலுவலகத்தினுள் நுழைந்த அஜய்யை அலுவலகமே எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றது. அவனும் தன்னவளுடன் இணைந்து புன்னகையுடனே அவர்களது வாழ்த்தைப் பெற்றான்.

“தேங்க்யூ சோ மச் கைஸ், என்கேஜ்மெண்ட் ரொம்ப ஷார்ட் பீரியட்ல அரேன்ஜ் பண்ணுனதால உங்கள இன்வைட் பண்ண முடியல. கண்டிப்பா மேரேஜ்க்கு இன்விடேஷன் உண்டு. நீங்க எல்லாரும் எங்க மேரேஜ்க்கு ஃபேமிலியோட வந்து எங்கள வாழ்த்தனும்..” என்றான் அஜய்.

வழக்கமாக அலுவலகத்தில் தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தைக்கூட ஊழியர்களிடம் பேசாத அஜய் இன்று பேசுவது, அதுவும் சிரித்து பேசுவது அனைவருக்கும் ஒரு வித உற்சாகத்தையே ஏற்படுத்தியது.

பணிபுரிபவர்களில் ஒருவர், “சார், இஃப் யூ டோன்ட் மைண்ட், ஒண்ணு கேட்கலாமா?” என்றதற்கு,

“என்ன கேட்க போறீங்க? லவ் மேரேஜா? அரேஞ்டு மேரேஜான்னு தான?” என்று அவரைப் பார்த்து கேள்வியை வீசிவிட்டு, தன்னவளைப் பார்த்து சிரிப்புடன்,

“கண்டிப்பா லவ் பண்ணினதால தான் அரேஞ்டு மேரேஜ்” என்றான்.

அனைவரும் சிரிப்புடன் உற்சாகமாக “ஓ....”என்று குரல் கொடுக்க, அதில் ஒரு பெண்,

“சார், சஹானா உங்களுக்கு பி.ஏவா ஜாயின் பண்ணினதுக்கு அப்புறம் லவ்வா? இல்லன்னா அதுக்கு முன்னாடியேவா?” என்று அன்றைய உணவுவேளை வீண்பேச்சிற்கான உள்ளடக்கத்தை கேட்க,

அஜய்யும், "நான் அவங்கள





லவ் பண்ண போய் தான் எனக்கு பி.ஏவா சேர்த்துக்கிட்டேன்” என்று கூற,

ஷ்யாமும், "அதானே... இல்லைன்னா உனக்கு பி.ஏ தான் தேவைப்படுமா?இல்ல உன்னை ஒரு பொண்ணு நெருங்க தான் முடியுமா என்ன?” என்றான்.

அஜய்யும், "ஓ.கே கைய்ஸ். ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் ஃபார் யுவர் விஷ்ஸஸ். நீங்க உங்க வேலைகளைப் பார்க்கலாம்" என்று கூறி ஷ்யாம் மற்றும் சஹானாவுடன் தன் அறையில் நுழைந்தான்.

அனைவரும் உற்சாகத்துடன் தத்தமது பணிகளில் கவனம் செலுத்த, ஒரு ஜோடிக் கண்கள் மட்டும் இதை குரூரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.....!

அஜய்யின் அலுவல் அறைக்குள் அவர்கள் நுழைந்து பேசிக்கொண்டிருக்கும் போதே, அனுமதியுடன் உள்ளே நுழைந்த மிதுனா அஜய்யிடம்,

“அண்ணா, ஏதாவது முக்கியமான விஷயம் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்களா?" என்று கேட்டாள்.

மிதுனாவைக் கண்டதும், ஷ்யாமின் முகம் மலர, அஜய்யும்,

“நத்திங்மா.., நீ சொல்லு” என்று அனுமதி வழங்கினான்.

ஷ்யாமின் அருகில் சென்றவள்,

“உங்க மனசுல என்ன சார் நினைச்சிட்டு இருக்கீங்க? உங்க இஷ்டத்துக்கு இவ தான் உங்க மருமகன்னு உங்க பேரெண்ட்ஸ்கிட்ட அறிமுகப்படுத்துறீங்க” என்று சீறினாள்.

ஷ்யாமும் இதனை ஓரளவிற்கு எதிர்பார்த்திருந்ததால்,

“உன்ன தான் நினைச்சிட்டு இருக்கேன் மிது. நான் கட்டிக்கப்போறவள தானே அவங்க மருமகன்னு சொல்லமுடியும்" என்றான்.

"என்ன அறிவா பேசுறதா நினைப்பா? உங்க குடும்பத்துல எல்லார்கிட்டயும் என்னை உங்க ஃபியான்ஸினு சொல்றீங்க. என்ன இழுத்துட்டு அவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்குறீங்க... யாரைக் கேட்டு இதெல்லாம் பண்ணுறீங்க?" என்று குமுறினாள்.

"யாரைக் கேட்கனும்?" என்று ஷ்யாம் கேட்க,

"என்னக் கேட்கனும்."

"சரி கேட்குறேன். சொல்லு, என்னை கல்யாணம் பண்ணி எனக்கு வாழ்க்கை கொடுக்க உனக்கு சம்மதமா?" என்று மிதுனா முன் மண்டியிட்டான் ஷ்யாம்.

“என்ன பண்றீங்க நீங்க? ஃபர்ஸ்ட் எழுந்திருங்க சார். நான் உங்ககிட்ட வேலை செய்ய தான் வந்திருக்கேன். ஒரு எம்ப்ளாயீயா தான், உங்க மனைவியா வேலைப் பார்க்க இல்ல” என்று கோபத்தில் கத்தினாள்.



சஹானாவோ மிதுனாவின் அருகில் சென்று,

“மிது, காம் டவுன். கொஞ்சம் பொறுமையா பேசு” என்று கூற, அவள் கையைத் தட்டி விட்ட மிதுனா, “சும்மா இருடி. இவங்களுக்கு தான் தெரியாது. உனக்கு தெரியும்ல என்னைப் பத்தி. சொல்லுடி, இதெல்லாம் எனக்கு என்னைக்கும் ஒத்துவராதுனு” என்றாள்.

“ஏன் ஒத்துவராது? எனக்கு என்ன குறை?” என்றான் ஷ்யாம், அவளுக்கு நிகரான அதே அளவு சீற்றத்துடன்.

“குறையா? நான் அப்படி சொன்னேனா? எனக்கு இந்த காதல், கத்தரிக்காய் இதிலெல்லாம் சுத்தமா விருப்பமில்ல. அதான் சொல்றேன், இதெல்லாம் இத்தோட விட்ருங்க” என்றாள் மிதுனா.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அஜய்யோ சஹானாவிடம் ரகசியமாக,

“ஏன் டார்லிங், இப்படில்லாம் பேசனும்னு முன்னாடியே நீங்க நோட்ஸ் எடுத்து வச்சிருப்பீங்களோ” என்று ஐயத்துடன் வினவ,

சஹானா முறைக்கவே, “இல்ல சஹிபேபி, நீ என்கிட்ட சொன்ன சேம் டையலாக அவளும் சொல்றாளே, அதான் கேட்டேன்” என்றான்.

“லுக் மிது, என் பேரெண்ட்ஸ்கிட்ட இவ தான் உங்க மருமகள்னு சொன்னேனே தவிர நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு சொன்னேனா? இப்போ இவ்வளவு பேசுற நீ, நேத்து அங்கயே மறுத்திருக்கலாமே. ஏன் செய்யல? நீயும் நான் சொல்றத அக்ஸெப்ட் பண்ற மாதிரி அமைதியா தானே இருந்த?” என்று கேட்க, அஜய்க்கோ பேசுறது ‘ஷ்யாம் தானா?’ என்றே தோன்றியது.

“என்ன சார் பேசுறீங்க நீங்க? நேத்து ஃபங்சன் இவங்களுக்கு. அங்க வச்சு என்னை பிரச்சனைப் பண்ண சொல்றீங்களா? அண்ட், பெரியவங்க முன்னாடி எதிர்த்து பேசி எனக்கு பழக்கமில்ல. அதான் அப்படி ஊமையா இருக்க வேண்டியதா போய்டுச்சு” என்றாள்.

“வெல்…. இப்போவும் அப்படியே இரு. அண்ட், என்ன பிடிச்சிருக்கானு மட்டும் சொல்லு, நீ என்ன லவ் பண்ணி தான் ஆகனும்னு நான் உன்ன கட்டாயப்படுத்தவே இல்லையே” என்று ஷ்யாம் வெகு சாதாரணமாக கூற, மிதுனாவிற்கோ தலையில் முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.

“சார், ஒரு எம்ப்ளாயீகிட்ட எப்படி பேசனுமோ அப்படி பேசுங்க. நீங்க பேசுறது கொஞ்சமும் சரியில்ல” என்றாள் மிதுனா.

அருகில் இருந்த அஜய்யைக்காட்டி, “இதோ இவன மாதிரி ‘லவ் பண்ணு, லவ் பண்ணு. எனக்கு உன் விருப்பம் தான் முக்கியம்’னு பின்னாடியே கொஞ்சிக்கிட்டுலாம் நான் இருக்கமாட்டேன். உனக்கு தோணுனா இப்போ லவ் பண்ணு. இல்லைன்னா ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தைல்லாம் பெத்ததுக்கு அப்புறம் பொறுமையா லவ் பண்ணிக்கோ. இப்போ நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் மட்டும் சொல்லு. நம்ம மேரேஜயும் இவங்கக்கூடயே நடத்திடலாம்” என்றான் உற்சாகமாக.

ஷ்யாமின் பேச்சில் மிதுனா தான் இறங்கி வர வேண்டியாகிவிட்டது. “ஷ்யாம், ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க. எங்க வீட்டுல என் மேல நம்பிக்கை வச்சு என்னை இவ்வளவு தூரம் அனுப்பியிருக்காங்க. அவங்க நம்பிக்கையை என்னால கெடுக்க முடியாது. உங்களுக்கு நல்லாவே தெரியும் எனக்கு அப்பா கிடையாது. என் அண்ணா அவங்க கஷ்டப்பட்டு என்ன படிக்க வச்சிருக்காங்க, எனக்கு ஒரு தங்கச்சி வேற இருக்குறா” என்றாள் தழுதழுத்தக் குரலில்.

“ஸோ வாட்? உன்னோட ஃபேமிலி டீடெயில்ஸ் எல்லாமே எனக்கு ஆல்ரெடி தெரியுமே மிதுமா. நான் கேட்டது நம்ம கல்யாணத்துல உன்னோட விருப்பத்தை, நீ ஏன் சம்மந்தம் இல்லாம ஏதேதோ சொல்ற” என்றான்,

“சம்பந்தமிருக்கு ஷ்யாம். உங்க ஃபேமிலி ஸ்டேட்டஸ் வேற.. எங்களால உங்கள மாதிரி ரிச் ஃபேமில சம்பந்தம் பண்ண நினைச்சுக்கூட பார்க்க முடியாது....” என்று மிதுனா சொல்லிக்கொண்டிருக்கும் போதே இடையிட்ட அஜய்,

“என்ன மிதுனா பேசுற நீ? லவ்ல ஸ்டேட்டஸ் எங்கயிருந்து வந்துச்சு? அவன் உன்கிட்ட சம்மதமானு மட்டும் தான கேட்குறான்?” என்றான் சற்று கோபமாகவே.

மிதுனாவோ, “சாரி அண்ணா,எனக்கு இப்போ என் அண்ணாவோட சுமைய குறைக்கனும். அண்ட், எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்குற மாதிரி ஐடியா இல்ல. ரெண்டு வருஷம் வொர்க் பண்ணிட்டு, அப்புறம் அண்ணா பார்க்குற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்குவேன். அவ்வளவு தான்” என்று ‘தன் பேச்சு முடிந்தது’ எனும் விதமாக வெளியேற எத்தனித்தவளை,

“ஒன் மினிட் மிஸ்.மிதுனா....” என்று நிறுத்தியது ஷ்யாமின் குரல்.

“உன்கிட்ட சம்மதம் வாங்கிட்டு, முறைப்படி உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சேன். பட், நீயே அந்த எண்ணத்தை மாத்திட்ட. இப்போ சொல்றேன், நல்லா கேட்டுக்கோ, உனக்கே விருப்பமில்லனாலும் இந்த கல்யாணம் நடக்கும்” என்றான் தீர்க்கமாக.

“ஷ்யாம் ப்ளீஸ் கொஞ்சம் யோசிங்க. உங்க தகுதிக்கும், அந்தஸ்தத்துக்கும் உங்களுக்கு எத்தனையோ பொண்ணுங்க வருவாங்க. ஏன் இப்படி அடம்பிடிக்குறீங்க?” என்றாள் விம்மலுடன்.

“போதும் நிறுத்துடி, பணத்தையும், அந்தஸ்தையும் பார்த்து பண்ண, கல்யாணம் என்ன வியாபாரமா? மனசப் பார்த்து பண்ணுற கல்யாணம் தான் கடைசி வரை நிலைச்சு நிற்கும். எனக்கு உன்மேல காதல் இருக்கு. எந்த ஸ்டெட்டஸ வச்சு என் காதல நிராகரிச்சியோ, அதே ஸ்டெட்டஸ வச்சு உன்ன என் மனைவியாக்க என்னால முடியும்...”என்றவன், சிறிது இடைவெளிவிட்டு,

“ஆனால், எந்த ஸ்டேட்டஸ வச்சியும் உன் மனசுல இல்லாத காதல என்னால வரவழைக்க முடியாது. பிகாஸ், காதல் ஸ்டேட்டஸ் வச்சு வாங்குற பொருள் கிடையாது, அது ஒரு உணர்வு. ஸ்டேட்டஸ் பத்தி பேசுற உனக்கெல்லாம் அது புரிய நாளாகும்” என்றான் விரக்தியாக.

மிதுனாவும் ஷ்யாமின் அருகில் சென்று, “ஷ்யாம், நான் என்ன சொல்ல வர்றேன்னா...” என்று அவன் தோளில் கைவைக்க, அவள் கைகளை விலக்கியவன்,

“என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம்னா சொல்லு, மேல பேசலாம். இல்லன்னா, நீ எதுவும் பேசவேண்டாம். கிளம்பு. என் வாழ்க்கையைப் பார்த்துக்க எனக்கு தெரியும்” என்றான் உறுதியாக.

“என்னவோ செஞ்சித் தொலைங்க..” என்றவாறு கோபத்துடன் வெளியேறினாள் மிதுனா.

மிதுனா வெளியேறியதும் பிடித்து வைத்திருந்த மூச்சை பெருமூச்சாக வெளியேற்றினான் ஷ்யாம்.

சஹானாவோ அவனருகில் வர, ஷ்யாம், “எப்படி நம்ம பெர்ஃபார்மன்ஸ்?” என்று கேட்க,

சஹானாவும், “செம்ம பெர்ஃபார்மன்ஸ் அண்ணா. கலக்கிட்டீங்க போங்க” என்று ஷ்யாமுக்கு ஹைபை கொடுத்தாள்.

அஜய்யோ, “அடப்பாவிகளா, அப்போ நடிப்பா எல்லாமே? நானும் இவன் லவ் எமோஷன்ல தான் இப்படியெல்லாம் பேசுறானேனு தப்புக் கணக்கு போட்டுட்டேனே” என்று அதிர,

ஷ்யாமும், “சானு, எதையுமே அவ்வளவு சீக்கிரத்தில் நம்பாத இவனே நம்பிட்டான்னா அப்போ நம்ம பெர்ஃபார்மன்ஸ் எப்படினு பார்த்துக்கோயேன்” என்று கூற,

சஹானாவோ, “இருக்காதா பின்ன? யாரோட ட்ரைனிங்?” என்று தன் சுடிதாரில் இல்லாத கழுத்துப்பட்டையைத் தூக்கிவிட்டாள்.

அஜய்யோ, “சஹிபேபி, மிதுனா உனக்கு ஃப்ரெண்ட், நீ இப்படில்லாம் பண்ணலாமா?” என்க,

“ஸோ வாட்? நான் ஒண்ணும் தப்பு பண்ணலையே ரித்வி. அவ மனசுல வேற யாராவது இருந்திருந்தாலோ, இல்ல வேற ரீசன்னா நான் கண்டிப்பா அவ பக்கம் தான் இருப்பேன்” என்றாள்.

“இருந்தாலும், காதல்ல எப்பவுமே காம்ப்ரோமைசிங் இருக்கக்கூடாதுடா” என்று அஜய் கூற,

சஹானாவும், “அண்ணாவோட காதல ஏத்துக்க அவ சொல்றது உப்பு சப்பில்லாத ரீசன்ஸ். அதான் ஷ்யாம் அண்ணாக்கு ஹெல்ப் பண்ணுனேன். பெருசா ஒண்ணும் பண்ணலை. ஜஸ்ட், மிதுகிட்ட எப்படி பேசுனா வொர்க்கவுட் ஆகும்னு கொஞ்சம் ஹிண்ட்ஸ் குடுத்தேன், அவ்வளவு தான்.” என்று தன் தோள்களைக் குலுக்கினாள்.

“ஒரு காதலனோட கஷ்டம் இன்னொரு காதலனுக்கு தான் தெரியும்னு சொல்வாங்க. நீ என்னடான்னா எனக்கு ஹெல்ப் பண்ண மாட்டிக்குற” என்று ஷ்யாம் முறுக்கிக்கொள்ள,

அஜய்யோ, “டேய், போடா போய் மிதுனாவ சமாதானப்படுத்து” என்று கூற,

சஹானாவோ, “அப்படில்லாம் பண்ணிடாதீங்க. ஒரு ரெண்டு நாள் அவகிட்ட பேசாம, அவ கண் பார்வைல படுற மாதிரி ஏதாவது பொண்ணுங்ககிட்ட பேசுங்க. அவளே வந்து உங்ககிட்ட பேசுவா. அப்புறம் அத்தை,மாமா, திவிக்காவை கூட்டிட்டு இந்த வீக் எண்ட் மிது வீட்டுக்கு போய்ட்டு வாங்கண்ணா” என்று தன் நலத்திட்டங்களை அள்ளி வீசினாள்.

அஜய்யோ பொறுமையிழந்து, “ஹேய் இரு இரு, என்ன நீ பாட்டுக்கு பேசிகிட்டே போற? ஆமா, இவன் உனக்கு அண்ணனா? அவன் எனக்கு தான் அண்ணன். ஒழுங்கா அவனை மாமானு கூப்பிடு” என்றான் சிறு கடுப்புடன்.

“என்னப்பா இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு” என்று ஷ்யாம் கேட்க,

“நீ இன்னுமா போகலை. மிதுனாகிட்ட சொல்லவா இது ரியாலிட்டி ஷோ இல்ல, ஸ்கிரிப்ட் ப்ளே தான்னு?” என்று அஜய் கூற,

சஹானாவும், “மாம்ஸ்…” என்று இழுக்க,

ஷ்யாம், “போதும்மா, இப்போ நான் கரடினு சொல்லாம சொல்றீங்க ரெண்டு பேரும், நானே கிளம்பிடுறேன்” என்று கூற,

அஜய்யோ, “நேரடியாவே சொல்லிதான்டா எனக்கு பழக்கம். இடத்தைக் காலிப் பண்ணு. எனக்கு முக்கியமான நிறைய வேலைகள் இருக்கு” என்று சஹானாவின் தோளில் கையைப் போட,

ஷ்யாமும், “எல்லாம் என் நேரம்டா..... எனக்கு அப்புறம் பொறந்த நீயெல்லாம் ரொமான்ஸ் பண்ணுற.” என்று புலம்பியவாறே அங்கிருந்து அகன்றான்.

தனிமைக் கிடைத்ததும், சஹானாவின் தோளில் இருந்த தன் ஒரு கையை இடைக்கு மாற்றி, மற்றொரு கையின் விரல்களைக் கொண்டு அவள் முகத்தில் தவழ்ந்த முடிக்கற்றையை காதுக்குப் பின்னால் தள்ளியவன், “என்ன சஹிபேபி, ஏதோ தீவிரமான யோசனைல இருக்க போல”என்று அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி, அவளைத் தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.

“ரித்து, எனக்கொரு ஆசை. நிறைவேத்துவீங்களா?” என்று கேட்டாள் அவனது சட்டை பொத்தானைத் திருகிக் கொண்டே.

“உத்தரவு மகாராணி, நீ கேட்டு செய்யாம இருப்பேனா? சொல்லு என்ன செய்யனும். கண்டிப்பா அது நம்ம ரெண்டு பேர் சம்பந்தப்பட்டதா இருக்காது. ரைட்?” என்க,

தன்னைக் கண்டுகொண்ட அவன் ஆளுமையை மனதிற்குள் மெச்சியவாறே,

“நம்ம கல்யாணமும், மிது-ஷ்யாம் மாமா கல்யாணமும் ஒரே மேடையிலேயே ஒண்ணா நடக்கனும். செய்வீங்களா?” என்று கேட்டாள்.

“சானு, இது அவங்க வாழ்க்கைடா. நாம அவங்களுக்கு நடுவுல போறது அவ்வளவு நல்லா இருக்காதுடா” என்றான் குழந்தைக்கு புரிய வைப்பது போல்.

“அண்ட், இதுல மிதுனாவோட சம்மதமில்லாம கண்டிப்பா என்னால எதுவும் பண்ணமுடியாது” என்க,

அவன் நெஞ்சிலிருந்து தலையை விலக்கியவள், “மிதுக்கு ஷ்யாம் மாமாவோட காதல் புரிஞ்சாலும், ஏன் அவ மனசுக்குள்ள ஷ்யாம் மாமா மேல ஆசை இருந்தாலும் கண்டிப்பா வெளிப்படுத்தமாட்டா, யாருக்கிட்டயுமே. அவ ஒரு சீக்ரெட் பாக்ஸ்” என்றதும்,

அஜய், “உன்ன மாதிரினு சொல்லு” என்றான்.

“நான் கூட அன்னைக்கு எமோஷன்ல அவளுங்ககிட்ட சொல்லிட்டேன். லாஸ்ட்ல, அண்ணாகிட்ட கூட நீங்க தான் வேணும்னு சொன்னேன். பட், மிது அப்படி இல்ல. அவ்வளவு சீக்கிரத்துல எதையுமே வெளிய காட்டிக்கமாட்டா. அவ எங்க தனக்கு லவ் வந்துருமோனு பயத்துல தான் எல்லார்கிட்டேயும் எனக்கு லவ் பிடிக்காத மாதிரி பேசி வைப்பா, இப்போ கூட... அவங்க வீட்டுல, அவளோட அம்மா, அண்ணா என்ன சொல்வாங்களோ அத மறுபேச்சில்லாம அப்படியே கேட்பா” என்றாள் வருத்தத்துடன்.

அஜய்யும் யோசனையிலே இருக்க, சஹானாவே தொடர்ந்தாள்,

“ரித்து, நீங்களே நேரடியா மிது அண்ணாகிட்ட பேசுங்க. அவங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லுங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு, மிது அண்ணா புரிஞ்சிப்பாங்கன்னு” என்றாள்.

“ஓகே பேசுறேன், ரெண்டு கல்யாணாமும் ஒரே மேடைல நடக்கும். போதுமா? ஹேப்பியா?அதுக்கு ஏன் இவ்வளவு டிஸ்டன்ஸ்” என்று கேட்டுக்கொண்டே அவளது இடையில் கைக்கொடுத்துத் தன்னருகில் இழுத்தான்.

தான் ஆசைப்பட்ட இந்த திருமண விழாவை நிறுத்துமாறு, ஒருநாள் தானே தன்னவனிடம் கேட்டு நிற்போம் என்பதை அறியாமலேயே அவனின் இழுப்பிற்கு உடன்பட்டாள் நாயகி...!

தான் எடுத்துக் கொடுத்த சுடிதாரில், கழுத்தில் தான் அன்று அணிவித்த ஒற்றைச் சங்கிலியுடன், விரலில் நிச்சயத்தன்று தான் போட்டுவிட்ட மோதிரம் என்று மிக எளிமையாக, ஒப்பனையே இன்றி தன் பார்வையிலே சிவந்த முகத்துடன் பேரழகியாக இருந்த தன்னவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“கொல்றடி...” என்று பிதற்றியவன், அவளது கழுத்திற்கு சற்றுக் கீழே தொங்கிக் கொண்டிருந்த அந்த சங்கிலியில் முத்தமிட்டான்.

அவனது மீசையின் குறுகுறுப்பில் நெகிழ்ந்தவள்,

“ஐயோ, ரித்து என்ன பண்ணுறீங்க? இது ஆஃபிஸ்” என்று குழைந்த குரலிலேயே கூற,

“அப்ப வா டார்லிங், அங்க போய் கண்டினியூ பண்ணலாம்” என்று தன் அறைக்குள் இருக்கும் படுக்கையறையைக் கைக்காட்டி அவளைத் தன் கைகளில் அள்ளினான்.

“ரித்து விடுங்க. எப்போவுமே உங்களுக்கு இதே நினைப்பு தானா” என்று திமிறிக் கொண்டு அவனது கைகளில் இருந்து இறங்கினாள்.

“ஏன்டி, அந்த நினைப்பு இல்லன்னா தான் தப்பு. அண்ட், நான் உனக்கு லைசன்ஸ் கொடுத்துட்டேன். இப்போ நான் உனக்கு புருசன்” என்றான் கடுப்பாக.

“ஊரறிய இந்த லைசென்ஸ கொடுங்க. அப்புறம் நானே வேண்டாம்னு சொன்னாலும் நீங்க தாராளமா எடுத்துக்கலாம். அப்போ தான் அதுக்கு முழு உரிமையும் உங்களுக்கு கிடைக்கும்.” என்று கூற,

“அப்ப யாருடி உன்கிட்ட பெர்மிஸ்ஸன் கேட்டுட்டு நிக்கப்போறா” என்று கேட்க,

“அத அப்போ பார்த்துக்கலாம் பாஸ். டாடா” என்று அஜய்யைப் பார்த்துக் கண்ணாடித்தவாறே வெளியேறினாள் சஹானா.

பின்னால் நடக்கவிருக்கும் ஒரு நிகழ்விற்கு, அது என்னவென்று அறியாமலேயே, இப்போதே சஹானா தன் வாய் மொழி வாயிலாகவே அனுமதி வழங்கியது விதியின் விளையாட்டே...!

“விதிகள் மாற்றப்படுகிறது


உன் கருவிழிகளின்

அசைவுகளினால்.....

உன் இமைகளின்

இயற்பியலில்

ஈர்க்கப்பட்டது

என் இதயம்....”


நினைவுகள் தொடரும்...!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,


"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-19 ஐ உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!

ஜெஃப்ரி....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-20

23171

ஷ்யாம் தன் குடும்பத்தினருடன் திருச்சியை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தான். மிதுனாவுடனான தன் திருமணத்தை உறுதி செய்யும் பொருட்டே இன்றைய பயணம், திருச்சியை நோக்கிய பயணத்தில் இவனது எண்ணங்கள் மட்டும் கடந்து சென்ற 10 நாட்களை நோக்கி பின் சென்றன.



சஹானாவிடமிருந்து மிதுனாவின் அண்ணன் மகேஷின் அலைபேசி எண்ணைப் பெற்று அவனைத் அழைத்தவன்
,

“ஹலோ மகேஷ், ஐயம் அஜய் ரித்விக், ஃப்ரம் சென்னை. உங்களுக்கு என்னை தெரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்.” என்றான்.

மகேஷும், அஜய் மிதுனாவின் முதலாளி என்பதை அறிந்ததால், நலம் விசாரித்து உரையை தொடங்கினான்
.

“நான் உங்ககிட்ட கொஞ்சம் பெர்ஷனலா பேசனும் மகேஷ். நேர்ல வந்து தான் பேசனும்னாலும் நான் ரெடி தான்”

“என்ன விஷயமா சார்?” என்றான் மகேஷ்.

“மிதுனா விஷயமாதான் நான் உங்ககிட்ட பேசணும் மகேஷ்?”

“மிதுனா விஷயமா! நீங்க என்ன பேசனும், அதுவும் பெர்ஷனாலா?”

“நான் நேரடியா விஷயத்துக்கே வர்றேன் மகேஷ். இந்த கம்பெனி பற்றிய டீடெயில்ஸ் உங்களுக்கு தெரியும்னு நினைக்குறேன். என்னோட கஸின் ப்ரதர், ஷ்யாமும் இந்த கம்பெனில ஒன் ஆஃப் த பார்ட்னர். ஹீ லவ்ஸ் மிதுனா. அது தான் உங்களுக்கு இதுல உடன்பாடு இருந்தா, நாங்க பெரியவங்களோட வீட்டுக்கே வந்து பேசுறோம்” என்றான் அஜய்.

“மிதுனா என்ன சொன்னா?”

“என் அண்ணா பாக்குற பையன தான் மேரேஜ் பண்ணிக்குவேனு சொன்னாங்க.” என்று அஜய் கூற,

“அவளோட விருப்பத்தை உங்ககிட்ட அவளே தெளிவா சொல்லிட்டாளே அஜய். பின்ன, இப்போ எதுக்காக நீங்க என்கிட்ட பேசுறீங்க?”

“மகேஷ், மிதுனா ஷ்யாம பிடிக்கலைன்னோ, இல்ல வேற ரீசன்ஸ் சொல்லியிருந்தாலோ கண்டிப்பா இதுல நான் இன்டஃபியர் ஆகியிருக்கமாட்டேன். பட், மிதுனா சொல்ற ரீசன் வேற. ஸ்டேட்டஸ் பாத்துதான் ஷ்யாம வேண்டாம்னு சொல்றா.”

“அதுவும் சரி தானே அஜய். மிதுனா வேலைப் பார்க்குற கம்பெனில ஷ்யாம் ஜே.டி. எங்க வீட்டுல சின்ன வயசிலயே தகுதிக்கு மீறி ஆசைப்படக்கூடாதுனு சொல்லியே அம்மா வளர்த்துட்டாங்க.” என்றான்.

“காதல், ஜாதி, மதம், தகுதி எல்லாம் பார்த்து வராது.அது ஒரு உணர்வு. ஷ்யாம்க்கு மிதுனாவை ரொம்ப பிடிச்சிருக்கு, கண்டிப்பா அவளை நல்லா பார்த்துக்குவான். அந்த நம்பிக்கைல தான் நான் உங்ககிட்ட பேசுறேன்.”

“மிது வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறம் என்னால என்ன பண்ண முடியும் அஜய்?” என்று அஜய்யிடமே கேட்க,

“மிதுனா எனக்கும் தங்கச்சி மாதிரி தான். என் தங்கச்சிய ஒருத்தன் விரும்புனா, அந்த இடத்துல நான் என்ன யோசிப்பேனோ அதையே நீங்களும் யோசிங்கனு சொல்றேன். அதாவது, அவனோட தகுதியைப் பார்க்காதீங்க, திறமையைப் பாருங்கனு சொல்றேன்.”

“புரியல”

“ஷ்யாம்கிட்ட இப்போ தகுதி, ஐ மீன் ஸ்டேட்டஸ் இருக்கு, ஆனால் இந்த தகுதி இல்லனாலும் அவன்கிட்ட மிதுனாவ ராணி மாதிரி வச்சுப் பார்த்துக்கிற திறமை இருக்கானு பாருங்க. இருந்தா, தாராளமா மிதுனாவை ஷ்யாம்க்கு மேரேஜ் பண்ணி கொடுக்கலாம் தானே?” என்று தன் கேள்விக்கணையை வீசி மிதுனாவின் தமையனை சிந்திக்கத் தூண்டினான் அஜய்.

“நான் என் தங்கச்சி யாழினியோட விஷயத்தில் யோசித்த மாதிரி தான் மிதுனாவோட விஷயத்திலும் யோசிக்குறேன். அந்த மாதிரி நீங்களும் யோசிக்கலாமேனு சொல்றேன்.” என்றான்.

மகேஷ் அமைதியாய் யோசிக்க, அஜய்,

“நான் உங்களுக்கு ஷ்யாமோட பயோடேட்டா, எங்க ஃபேமிலி டீடெயில்ஸ் எல்லாமே மெயில்ல அனுப்பியிருக்கேன். அண்ட், ஒன் மோர் திங், எங்க குடும்பத்துல ஒரு பழக்கம் இருக்கு. நாங்க எங்க வீட்டுப் பொண்ண வெளியே கொடுத்தாலும், வெளியே இருந்து பொண்ண எடுத்தாலும் வரதட்சணை வாங்கவும் மாட்டோம், கொடுக்கவும் மாட்டோம்” என்று நேரடியாக மகேஷ் யோசிக்கும் விஷயத்திற்கும் சேர்த்தே பதில் கூறினான்.

“எப்படினாலும் எங்களுக்குனு ஒரு கடமை இருக்குல்ல? சும்மா எப்படி எங்க பொண்ண அனுப்பமுடியும்?” என்று மகேஷ் கூற,

“நீங்க பொண்ண தர சம்மதிச்சதே போதும் மகேஷ்” என்று அஜய் கூற,

“நான் எப்போ சம்மதம் சொன்னேன்?”

“இப்போ தானே சொன்னீங்க, ‘எங்க பொண்ண எப்படி சும்மா அனுப்ப முடியும்’னு”

“இல்ல அஜய், அம்மாக்கு காதல்னாலே பிடிக்காது. அதான் யோசிக்குறேன்.”

“இட்ஸ் ஒகே மகேஷ், நீங்க ஷ்யாம் பற்றி விசாரிங்க. உங்களுக்கு விருப்பம்னா மட்டும் உங்க அம்மாகிட்ட பேசுங்க. உங்க அம்மாகிட்ட எப்படி பேசனும்னு உங்களுக்கு தான் தெரியும்” என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தான் அஜய்.

அதன் பின்னர், அஜய்யின் பேச்சும், ஷ்யாமைப் பற்றி விசாரித்து பெற்ற தகவல்களும் மகேஷிற்கு விருப்பமாக இருக்கவே, தன் தாயிடமும் பேசி சம்மதத்தைப் பெற்றான்.

தன் வீட்டில் அஜய் பேசியவை அறியாத மிதுனவோ
ஷ்யாமிடம் இருந்து விலகுவதிலேயே கருத்தாய் இருந்தாள். சஹானாவின் ஆலோசனையின் படி, ஷ்யாமும் மற்ற பெண்களிடம் பேசி மிதுனாவின் பொறாமை குணத்தை வளர்க்க முயற்சிக்க, பலன் எண்ணவோ பூஜ்ஜியமே..!

அன்று, தோழிகள் நால்வருடன் யாழினியும் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருக்க, அடுத்து நடைபெறவிருக்கும் அர்ஜுன் பூஜாவின் திருமணப் பேச்சு வந்தது.

யாழினி, “என்ன அண்ணி, பூஜா மேரேஜ்க்கு என்ன மாதிரி டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ்? குரூப்பா டூயட்டா?” என்று கண்ணடித்துக் கேட்க,

சஹானாவும், “டூயட் இருக்கானு தெரியாது, குரூப் கண்டிப்பா இருக்கும்” என்றாள் சிரித்துக்கொண்டே.

மிதுனாவோ அவசரமாக, “ஆமா சானு, இப்போ நீங்க மட்டும் தானே ஜோடி பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கமுடியும்? சோ, ஒரு டூயட்டாவது வேண்டாமா? நீங்க ட்ரை பண்ணுங்க” என்றாள்.

அவள் மனதைப் படித்த சஹானாவோ, “இதெல்லாம் டூ மச் பா. எங்க என்கேஜ்மெண்ட்க்கு மட்டும் எல்லாரும் ஜோடியா பெர்ஃபார்மன்ஸ் கொடுத்துட்டு, பூஜா மேரேஜ்க்கு பண்ணலைன்னா நல்லா இருக்காது. அண்ணா வருவானா இல்லையானு இன்னும் தெரியல. பட், எல்லாருமே ஜோடியா பெர்ஃபார்மன்ஸ் கொடுக்குறோம். அவ்வளவு தான்” என்க,

மிதுனா, “இல்ல சானு, எனக்கு ஜோடியா ஆட விருப்பமில்லை. விட்டுரு.” என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டே அகன்றாள்.

அன்று மாலையே, மிதுனாவிற்கு ஒரு கோப்பில் ஷ்யாமின் உதவி தேவைப்பட்டது. அஜய்யும் சஹானாவும் பணி நிமித்தம் கட்டுமாண பணி நடைபெறும் இடத்தைப் பார்வையிட சென்றிருக்க, வேறு வழியின்றி ஷ்யாமின் அறைக்குச் சென்றாள் மிதுனா.

“சார், ஒரு ஹெல்ப்...” என்று தன் கோரிக்கையை கூறினாள்.

அவனும் அதற்கு உதவ, வேறு வழியின்றி அவனருகில் போய் அமர்ந்தாள். வேலை முடிவடையும் வரை இருவருக்கும் முட்டாமல், மோதாமல் வேலை அதன் போக்கில் சென்றது. வேலையை முடித்துவிட்டு, மிதுனா எழ முயல்கையில், மிதுனாவின் துப்பட்டா இருக்கையின் அடியில் சிக்கி, அவள் நிற்க தடுமாறி பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஷ்யாமின் மடியிலேயே விழுந்தாள்.

திடீரென்று தன் மீது விழுந்த மிதுனாவை அவளது இடையில் கைகோர்த்து ஷ்யாமும் தாங்கி கொண்டதோடு, அவளது நெற்றியில் இதழ் பதித்தான். குழந்தைப்பருவம் கழிந்த பின், தான் பெற்ற முதல் முத்தத்தில் தன்னை மறந்து திளைத்து நின்றவள் நொடியில் சுதாரித்து,

“என்ன சார் இது, உங்ககிட்ட வேலை செய்ற பொண்ணுகிட்ட கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம இப்படி நடந்துக்குறீங்க?” என்று வார்த்தைகளை தவறவிட,

அவனோ நிதானமாகவே, “ஹலோ மேடம், என் மேல விழுந்தது நீங்க. ஐயோ பாவம், கீழ விழுந்திட கூடாதேனு பாவம் பாத்து பிடிச்சா, என்ன ரொம்ப ஓவரா பேசுறீங்க?” என்றான்.

“பிடிச்சீங்க, ஓகே. அதுக்கும் மேல ஏன் அப்படியெல்லாம் பண்ணுனீங்க?” என்று எகிற,

“எப்படி பண்ணுனேன்?” அவனும் தன் பங்கிற்கு கேட்க,

“இங்க நீங்க மு....” என்று கூற வந்ததை முடிக்காமல் திணற, அவள் திணறலை ரசித்தவன்,

“ம்ம் சொல்லு, அங்க என்ன?” என்று அவளது நெற்றியைக் காட்டி கேட்க,

அவளோ அவனது கேள்வியில் சிவக்கும் முகத்தை அவனிடம் காட்டாமல் திருப்பிக் கொண்டு,

“அது... அது...” என்று இழுத்தாள்.

அவளை திணறலை ரசித்தவன், அவளை தவிக்க வைத்தது போதும் என்று எண்ணினானோ என்னவோ,

“ஆமா, என்ன சொன்ன, என்கிட்ட வேலைப் பார்க்குற பொண்ணுகிட்ட மேனர்ஸ் இல்லாம நடந்துக்கிறேனா? நீ என் வருங்கால மனைவி, அந்த உரிமையில்னு கூட வச்சுக்கலாம். நான் எத்தனை பேர் கூட இப்படி நடந்து நீ பார்த்த?”
என்று எகிற,

“அத வேற பார்க்கனுமா? அதான் என் கண்ணு முன்னாடியே எந்த பொண்ணு இருந்தாலும் பேசுற மாதிரி சீன் போடுறீங்களே...” என்க,

“என்ன பொறாமையா?”

“பொறாமையா? எனக்கா? அப்படி நீங்க நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல. நீங்க யார் கூட வேணாலும் பேசுங்க, கொஞ்சுங்க. எனக்கு ஏன் பொறாமை. ஆனால், ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பொண்ணா சொல்றேன், என்னைக்குமே ஒரு பெண்ணோட உணர்வுகளோட விளையாடாதீங்க. அது ரொம்ப தப்பு” என்று கூறிவிட்டு வெளியேறினாள் மிதுனா.

அதன் பின்னர் அவர்கள் பேசும் வாய்ப்பு முற்றிலும் நின்று போக, அன்று சாப்பிட்டுவிட்டு தோழிகள் நால்வரும் அலுவலகத்திற்குள் நுழைய, அஜய்யிடமிருந்து அழைப்பு வரவே, அஜய்யின் அறைக்கு சென்ற நால்வருக்கும் அதிர்ச்சி. அஜய் மற்றும் ஷ்யாமுடன் பேசிக்கொண்டிருந்த மகேஷ், மிதுனாவைக் கண்டதும்,

“மிதுமா, எப்படிடா இருக்க?” என்க,

அண்ணனை இங்கே பார்த்ததும் ஒரு நொடி அதிர்ந்தவள், அதை தன் முகத்தில் காட்டாது,

“நல்லா இருக்கேன் அண்ணா, நீங்க என்ன இங்கே. நீங்க வர்றதா சொல்லவே இல்ல?” என்று சாதாரணமகவே கேட்டாள்.

“ஒரு முக்கியமான விஷயமா சென்னை வந்தேன். அதான் அப்படியே உன்னையும் அப்படியே கூட்டிட்டு போகலாமேனு வந்தேன்” என்க,

“என்னையா?
ஏன்ண்ணா?”

“எல்லாம் சந்தோசமான விஷயம் தான். உனக்கு ஒரு வரன் வந்திருக்கு. அந்த மாப்பிள்ளைக்கூட சென்னை தான். அதான் மாப்பிள்ளைப் பற்றி விசாரிக்க வந்தேன்.” என்று கூறிவிட்டு தங்கையின் முகம் நோக்க, அவளோ உணர்வுகள் துடைத்த முகத்துடன்,

“அப்படியா?” என்றாள்.

“என்னம்மா அப்படியானு கேட்குற? உனக்கு விருப்பம் இல்லையா? உன் மனசில யாரும் இருக்காங்கன்னா ஓபனா சொல்லிருமா” என்று மகேஷ் கேட்க,

மிதுனாவோ ஷ்யாமின் முகத்தை ஒரு நொடி பார்த்தவள்,

“என் மனசுல அப்படி யாரும் இல்ல. உங்க விருப்பம் தான் என் விருப்பம். நீங்க ஆக வேண்டிய வேலைய பாருங்க அண்ணா” என்றாள்.

“அப்படின்னா, உனக்கு வந்திருக்குற இந்த வரன முடிச்சிரலாமா மிதுனா?”

“உங்களுக்கு, அம்மாக்கு பிடிச்சிருந்தா முடிச்சிரலாம். எனக்கு நீங்க என்ன சொன்னாலும் சம்மதம் தான்” என்று கூற, ஷ்யாமும் உணர்வுகள் துடைத்த முகத்துடன் கணிணித் திரையை வெறித்துக் கொண்டிருந்தான்.

“அவங்க வீட்டுல இருந்து சண்டே உன்னைப் பொண்ணுப் பார்க்க வர்றதா சொல்லியிருக்காங்க. அன்னைக்கே நிச்சயத்தையும் வச்சிக்கலாம்னு அம்மா சொல்றாங்க. அதான் உன்னையும் என்கூடவே கூட்டிட்டு போய்டலாம்னு வந்தேன்.” என்க,

அங்கே பார்வையாளராய் இருந்த அனைவரையும் பார்த்த மகேஷ்,

“நீங்க எல்லாரும் அவசியம் என் தங்கச்சியோட நிச்சயத்துக்கு வரனும்” என்று அழைப்புவிடுத்துவிட்டு, தங்கையை உடன் அழைத்துக்கொண்டு விடைப்பெற்றான் மகேஷ்.

அன்று தன்னவளைக் கண்டவன் தான், அதன் பின்னர் இப்போது அவளை தன்னவளாக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் தான் சந்திக்கப்போகிறான்.

“டேய் மாப்பிள்ளை, என்னடா யோசிக்குற? இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு, இறங்கு. உள்ளே போய் மிதுனாகூட டூயட் பாடு” என்று ஷ்யாமின் சிந்தனையைக் கலைத்தான் அஜய்.

“டூயட்.. அது ஒண்ணு தான்
இப்போ குறை. அவ வேப்பிலை எடுத்து ஆடாம இருந்தா சரி தான்” என்றவாறு அந்த சமுதாய நலக்கூடத்தினுள் நுழைந்தான் ஷ்யாம்.

மிதுனாவின் குடும்ப வழக்கப்படி, ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது. மணப்பெண்ணிற்கே உரிய அலங்காரத்துடன் மிதுனா அழைத்து வரப்பட, பதுமையென நடந்து வந்த தன்னவளைக் கண்ணுற்ற ஷ்யாமிற்கோ, சில நிமிடங்கள் அவளது அழகில் லயித்து தன் உடலில் உள்ள அனைத்து செல்களும் வேலை நிறுத்தம் செய்தது போன்ற உணர்வு. ஷ்யாம் ஆர்வமாக தன் கண்களில் காதலை தேக்கி, அவளது கண்களில் தனக்கான காதலை எதிர்பார்த்து நின்றான். மங்கையவளோ உணர்வுகள் துடைத்த முகத்துடன் அனைவருக்கும் வணக்கம் செலுத்தினாள்.

மிதுனாவின் முகத்திலிருந்து எதையுமே அறிந்து கொள்ள முடியாமல், ஷ்யாமோ, 'ஒரு வேளை அவளுக்கு என்னை பிடிக்கவே இல்லையா? அன்னைக்கு மகேஷ் கேட்டப்போ இருந்த அதே ஃபேஸ் ரியாக்ஸன் தான் இப்பவும் கொடுக்குறா... அவளோட அண்ணன் சொல்லிட்டாங்கன்னு தான் என்னை கல்யாணம் செய்துக்க சம்மததித்தாளா... அவளிடம் எனக்கான காதலோ, தேடலோ கொஞ்சம் கூட இல்லையா...?' என்று தன் மனதின் பலவிதமான எண்ணவோட்டத்தில் குழம்பி தவித்தான். குழப்பத்திலிருந்தவனைக் கலைத்தது அபியின் குரல்.

"அண்ணா, எப்படியோ ஒரு வழியா அமேசான் காட்டுல போய் உன் டார்லிங்க பார்த்து, கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்துட்ட தான். அதுக்காக இப்படியே கண்ணாலயே கபளீகரம் பண்ணாம, அண்ணியோட சேர்ந்து சின்னதா ஒரு டூயட் ஆடுண்ணா" என்று அபி நிலைமைப் புரியாமல் கலாய்க்க,

"டேய் அடங்குடா, ஓவரா எக்ஸைட் ஆகாத. இது சிங்கிள் சைட் லவ் தான். எப்படியோ என்கேஜ்மெண்ட் வரை கொண்டு வந்திருக்கோம். இப்படியே மெயிண்டய்ன் பண்ணுறது தான் சரி" என்று அஜய் தன் சகோதரனை அடக்க,

ஷ்யாமோ, “ஆமா அபி, இப்போ அவ கங்காவா இருக்காளா? சந்திரமுகியா இருக்காளேன்னே தெரியல.. இதுல டூயட் பெர்ஃபார்மன்ஸ் ஒண்ணுதான் குறைச்சல்....." என்று அங்கலாய்க்க,

அபியோ, “டோன்ட் வொர்ரி ப்ரோ, அப்போ 'ராரா....சரசுகு ராரா'சாங் போடலாமா? சிச்சுவேசன் சாங். சாங் ப்ளே பண்ணவா அண்ணா?" என்று கேட்கவும், அஜய் உட்பட இளவட்டங்கள் சிரிக்க ஷ்யாமின் நிலை தான் அந்தோ பரிதாபமானது.

ஷ்யாமும், “சாங் இல்லாமலேயே அவ பயங்கரமா ஆடுவா. அந்த டான்ஸ்ல அவ கைத்தேர்ந்த நடனப்புயல். இப்போ நீ கொஞ்சம் அடங்கு” என்று சிடுசிடுத்தான். மிதுனாவின் உணர்வுகள் துடைத்த முகமும், அவனது குழப்பமும் சேர்ந்து அவனது மனதில் கோபத்தையும், சோர்வையும் ஒருசேர ஏற்படுத்தியது.

சபையோர் முன்னிலையில் மாலை மாற்றி, மோதிரமும் மாற்றிக்கொண்டனர். மோதிரம் மாற்றும் போது மணப்பெண்களுக்கே உரிய நாணம் தலைத்தூக்க, தன்னவன் என்ற எதிர்பார்ப்போடு ஷ்யாமின் முகத்தைப் பார்த்தாள் மிதுனா. தன்னவனது முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமே எண்ணி அவன் முகம் பார்த்த மாயோள் கண்டது என்னவோ அவனது சோகம் படர்ந்த முகத்தையே....!

குழப்பத்துடன் மிதுனா ஷ்யாமிற்கு மோதிரம் அணிவிக்க, அடுத்து ஷ்யாம் மிதுனாவிற்கு மோதிரம் அணிவிப்பதற்காக அவளது வலது கையை தன் இடது கையில் ஏந்தியவன் அவள் மதிமுகத்தைப் பார்த்தான். நவரசங்களை முகத்தில் காட்டும் தன்னவளது குழப்பம் சுமந்த இந்த முகத்தைப் பார்க்கப் பிடிக்காதவன், தன் மனதின் உணர்வுகளை வெளிக்காட்டாமல், இந்த நொடியின் மகிழ்ச்சியையே பிரதானமாக எண்ணி தன்னவளைப் பார்த்து சிநேகிதமாக புன்னகைத்தான். பின்னர் ஷ்யாமின் தாய், தன் மகள் ஸ்வாதியிடம் ஒரு அட்டிகையைக் கொடுத்து மிதுனாவின் கழுத்தில் அணியும் படி கூற, ஸ்வாதியும் போட்டுவிட்டு மிதுனாவின் கன்னத்தில் முத்தமிட்டு,

"யூ ஆர் சோ பியூட்டிஃபுல் அண்ணி" என்று அணைத்துக்கொள்ள, மிதுனாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் மனம் நிறைந்தது.

ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததால் வெகு எளிமையாகவே, அதே சமயம் முழுக்க முழுக்க சம்பிரதாய முறைப்படியே நடந்ததால் ஷ்யாமும் மிதுனாவும் பேசிக்கொள்ள தனிமைக் கிட்டவில்லை. அஜய்-சஹானாவின் திருமண நாளிலே, ஒரே மேடையிலே இரு திருமணமும் நடைபெறும் என்று பெரியோர்களால் உறுதி செய்யப்பட்டது.



மிதுனாவிற்கோ ஒருபுறம் மகிழ்ச்சி இருந்தாலும், ஷ்யாமின் முகத்தில் தான் கண்ட சோகமும், பின் சடுதியில் அவன் மாற்றிக்கொண்டதும் குழப்பமாகவே இருந்தது. அன்று அலுவலகத்தில் தன்னிடம் காதலை சொல்லும்போது கூட, என்மேல் அவ்வளவு உரிமை காட்டியவனுக்கு, இன்று என்னவானது. மனதின் கேள்விகளுக்கு பதில் புரியாமல், தனிமையில் ஷ்யாமை எதிர்கொள்ள துணிவின்றி அமைதியாகவே இருந்தாள். திருமணத்திற்கு இரண்டு மாத காலவகாசமே இருப்பதால், மிதுனாவைத் தொடர்ந்து பணிபுரிய மிதுனாவின் தாய் மறுத்துவிட, அவளைத் தவிர அனைவரும் சென்னைத் திரும்பினர்.

மிதுனாவும், ‘அதான் பூஜா கல்யாணத்துக்கு போவோம்ல, அப்போ எப்படியாவது ஷ்யாம்கிட்ட பேசி என்னனு கேட்டுக்கலாம்’ என்று எண்ணியவாறே துயில் கொண்டாள்.

ஆனால் அவளுக்குத் தெரியவில்லை அதற்குரிய வாய்ப்பை தன்னவன் தனக்கு அமைத்துத் தரப்போவதில்லை என்று….!

இப்படி ஒரு இணை நாட்களைக் கடத்த, ஒரு இணையோ அடுத்து நடைபெறவிருக்கும் தங்கள் திருமணத்தைப் பற்றிய கனவுகளில் இரவையும், திருமண ஏற்பாடுகளில் பகலையும் கழிக்க, மற்றொரு இணையோ தலைவனைப் பிரிந்த தலைவியைப் போல் பசலை நோயிலும், இன்னொரு இணையோ ‘காதல்’ என்ற கல்வியை, மாணாக்கராய் கலவியின்றி பல வழிகளில் வித விதமாய் கற்றுக்கொண்டிருந்தனர்.

நினைவுகள் தொடரும்.....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,


"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-20 ஐ உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!

ஜெஃப்ரி....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-21

அன்று அஜய்ய்யும்,சஹானாவும் பணி நடைபெறும் இடத்தைப் பார்வையிட வந்திருந்தனர். அப்போது ஷ்யாமும் அங்கே இருக்க, இருவரும் தொழில் நிமித்தமான பேச்சுகளில் இறங்கவே, சஹானாவிற்கு சலிப்பு ஏற்பட அங்கே சற்று உலாவிவிட்டு வருவதற்காக அஜய்யிடம் அனுமதி பெற்று நடந்தாள்.

சற்று தூரம் நடந்தவள், அங்கே சிறுவர்களின் பேச்சுக்குரல் கேட்கவும் அங்கே சென்றாள்.

“டேய், குயிக்கா சாப்பிடு. டைமாகிடுச்சு. அவர் வந்தா அடி தான் விழும்” என்று அவ்விரு சிறுவர்களில் பெரியவன் துரிதப்படுத்த,

இளையவனோ, “நோ, ஐ கான்ட். காலெல்லாம் வலிக்குது. கையில ப்ளட் வருது.” என்று அழவே ஆரம்பித்துவிட்டான்.

அவ்விருவரும் சகோதரர்கள் போலும் என்று யூகித்த சஹானா, ‘ஆனால் இவங்க ஏன் இங்க? பார்த்த ஏழைகள் மாதிரியும் தெரியலயே’ என்று எழுந்த வினாவுடன் அவர்கள் அருகில் சென்று,

“ஹாய் பாய்ஸ், வாட் ஆர் யூ டூயிங் ஹியர்?” என்று ஆங்கிலத்திலேயே கேட்க,

பெரியவனோ சற்று உஷாராகி,

“நீங்க யாரு? நீங்க ஏன் இதெல்லாம் கேட்குறீங்க?” என்று எதிர் கேள்வி கேட்டான்.

“நான் இங்க தான் வேலை செய்றேன். என்னை உங்க அக்கா மாதிரி நினைச்சுக்கோங்க. நீங்க இங்க வேலைப் பார்க்குறீங்களா?” என்று தன் கேள்விக்கணையைத் தொடர்ந்தாள்.

பெரியவனோ, “நீங்க நல்லா தானே இங்கிலீஸ் பேசுறீங்க. தென், ஏன் இங்க வொர்க் பண்ணுறீங்க?” என்க,

அவனை மெச்சியவள், “நீங்க கூட இந்த சின்ன வயசுலயே நல்ல இங்கிலீஸ் பேசுறீங்க. அப்போ நீங்க மட்டும் இங்க வொர்க் பண்ணலாமா?” என்றாள்.

சிறியவனோ சஹானாவின் பேச்சில் முற்பகுதியை மட்டும் காதில் போட்டுக்கொண்டு,

“நாங்க சி.பி.எஸ்.இ ஸ்கூல்ல படிச்சோம் தெரியுமா?” என்று பெருமையாகக் கூறினான் தோராயமாக, எட்டு வயதே இருக்கும் அச்சிறுவன்.

“அப்படியா? அப்போ இங்க சும்மா வந்தீங்களா? அம்மா, அப்பா இங்க தான் வொர்க் பண்ணுறாங்களா?” என்று சஹானா கேட்கவும்,

பெரியவன் முந்திக்கொண்டு, “நீங்க ஏன் அதெல்லாம் கேக்குறீங்க? கம் லெட்ஸ் கோ” என்று தன் சகோதரனை மேலும் துரிதப்படுத்திக் கொண்டு சிறியவனையும் அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

இது சஹானாவைத் தேடி வந்த அஜய்யின் காதிலும் விழ,

“சஹி, என்னாச்சுடா? யாரு அந்த கிட்ஸ்?” என்க,

“தெரியல, இங்க வேலைப் பார்க்குறாங்கனு நினைக்குறேன்” என்று கூற,

“என்ன சஹானா சொல்ற?இங்க சைல்டு லேபர்ஸ் டெஃபனைட்டா கிடையாது. இங்க வொர்க் பண்ணுற யாரோட பசங்களா இருப்பாங்க” என்று சிறு கோபத்துடன் கூற,

சஹானாவோ, “அவங்களோட வே ஆஃப் டாக்கிங் ஏழைகள் மாதிரி தெரியல. நானும் பேசிப்பார்த்தேன். ஏதோ மறைக்குறாங்க. ‘அடி விழும்’னு வேற அந்த பெரிய பையன் ஏதோ சொன்னான்” என்று பதற,

“சரி சஹி, ரிலாக்ஸ், நாம விசாரிக்கலாம்." என்று கூறியபடியே ஷ்யாமை அழைத்தவன் சிறுவர்களை பின்தொடர்ந்து சென்று நிறுத்தினான்.

"பாய்ஸ், இங்க என்ன பண்ணுறீங்க? ஸ்கூல் போகலையா? யார் கூட இங்க வந்திங்க?" என்று தன்மையாகவே கேட்டான்.

அந்த பெரியவனோ அஜய் யாரென்றே தெரியாமல்,

"அங்கிள், இந்த ஆன்ட்டி ஏதோ சும்மா சும்மா வந்து எங்ககிட்ட ஏதேதோ கேட்டுக்கிட்டே இருக்காங்க" என்று புகார் அளித்தான்.

அஜய்யோ ஷ்யாமிடம், "என்னடா இது? சைல்டு லேபர்ஸ்லாம் வச்சு வேலை செய்யக்கூடாதுனு தான் நாம பாண்ட்லயே சொல்லிருக்கோமே. மேஸ்திரிய கூப்பிட்டு என்னனு கேளு" என்று ஆணையிட,

அச்சிறுவர்களில் பெரியவனோ, "அப்போ நீங்க தான் எங்க பாஸா? சாரி சார். நாங்க இங்க தான் வொர்க் பண்றோம். பட், யாருக்கிட்டயும் சொல்லக்கூடாதுனு சொல்லியிருக்காங்க. எங்கள வேலைய விட்டு மட்டும் அனுப்பிடாதீங்க சார்..ப்ளீஸ்" என்று அஜய்யின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழ, அஜய்யோ அச்சிறுவர்களின் அளவிற்கு குனிந்து,

"சரி, உங்கள அனுப்பமாட்டேன். பட், இந்த மாதிரி வேலையெல்லாம் நீங்க செய்யக்கூடாது. உங்களுக்கு வேற வேலைக் கொடுக்கிறேன். வாங்க என்கூட" என்று அழைத்துக்கொண்டவன் ஷ்யாமிடம்,

"மேஸ்திரி வந்ததும் செட்டில்மெண்ட் க்ளியர் பண்ணி அனுப்பிடு" என்று உத்தரவிட,

ஷ்யாமோ, "அஜய்,70% வொர்க் முடிஞ்சது. இப்போ போய் எப்படிடா...?" என்று இழுக்க,

அஜய்யோ கோபமாக,

"இதுக்கு தான் முன்னாடியே சொன்னேன் எல்லாத்தையுமே அவன்கிட்ட குடுக்காம, முக்கியமான இந்த மாதிரி சில விஷயங்களையாவது நீயே டைரெக்டா ஹாண்டில் பண்ணுனு. இப்போ ரிஸ்க் யாருக்கு?" என்று உறுமிவிட்டு,

"இப்போ ஃபீல் பண்ணி ஒண்ணும் ஆகப்போறது இல்ல. மேஸ்திரிக்கிட்ட நீ தான் பேசுற மாதிரி பேசி எல்லாத்தையும் சால்வ் பண்ணுற. இன்னைக்கு ஈவினிங்குள்ள நம்மோட எல்லா சைட்லயும், வொர்க் பண்ணுற அத்தனை வொர்க்கர்ஸொட ப்ரொஃபைலும் வித் ப்ரூஃப் உடனடியா வேணும்னு சைட் மேனேஜர்க்கு மெயில் பண்ணு. லிஸ்ட்ல, வயசானவங்க கிட்ஸ் இருந்தா, என்ன பண்ணனும்னு உனக்கு தோணுதோ அதைப் பண்ணு. எல்லாத்தையும் நான் உனக்கு எப்பவுமே சொல்லித்தர முடியாது ஷ்யாம்" என்றான் அதிரடியாக.

தன் தவறை உணர்ந்த ஷ்யாமோ அடுத்து செய்ய வேண்டிய வேலைக் குறித்த சிந்தனையில் இறங்க, அஜய்யோ அப்போதுள்ள நினைமையை சீர்படுத்தும் முறையைக் கையாண்டான்.

சிறுவர்களிடம், "நான் தான் இங்க எம்.டி. நான் கேட்குற கேள்விக்கு உண்மையை மட்டும் சொல்லனும். சொல்லுங்க, உங்க நேம் என்ன? ஊர் எங்க? உங்க பேரெண்ட்ஸ் எங்க? நீங்க எப்படி இங்கே வந்தீங்க?" என்று தன் விசாரணையைத் தொடங்கினான்.

பெரியவனோ தாங்கள் ஒரு விழாவிற்காக 7 மாதங்களிக்கு முன்பு திருச்சி சென்றதாகவும், அங்கே விளையாட்டு கவனத்தில் காணாமல் போனதாகவும், பெற்றோரை காணாமல் தவித்த இந்த சிறுவர்களை ஒரு கும்பல் சென்னைக்கு அழைத்து வந்து, இது போன்ற பெரிய கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளில் பணிகளில் அமர்த்தி, அதன் மூலம் வரும் வருவாயில் இவர்களுக்கு உணவு மட்டுமே அளிப்பதாகவும், யாரையும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும், தங்களைப் போன்று பலர் இருப்பதாகவும் கூறினான்.

உடனடியாக அர்ஜூனைத் தொடர்பு கொண்ட அஜய், அனைத்துத் தகவல்களையும் பரிமாற அடுத்து நடைபெற வேண்டிய பணிகள் துரித வினையில் நடந்தேறியது.

நண்பன் ஆதியை அழைத்தவன் விஷயத்தைக் கூறி,

"நீ வந்து இந்த பசங்கள உன்னோட கூடிட்டு போய்டு.அவங்க பேரெண்ட்ஸ கண்டுபிடிக்குற வரை இவங்க அங்கேயே இருக்கட்டும்" என்று கூற,

சிறுவர்களோ அஜய் கூறியதிலும், அர்ஜூனை காவலர் சீருடையிலும் கண்டதில் பயந்து,

"எங்களை எங்க கூடிட்டு போறீங்க அங்கிள்? அவங்களுக்கு தெரிஞ்சா அடிப்பாங்க. நாங்க வரமாட்டோம்" என்று கூறி அழுதபடியே தான் பெற்ற அடிகளின் பலனாய் கிடைத்த வடுக்களைக் காட்ட, அனைவருக்கும் அதிர்ச்சி என்றால், அதுவரை ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்த சஹானா அழுதேவிட்டாள்.

அஜய் சஹானாவை சமாதானபடுத்த, ஷ்யாம் அச்சிறுவர்களின் அருகில் சென்றமர்ந்து,

"இல்லடா வாலுகளா, இவ்வளவு பேசுறீங்களே, போலீஸுக்கெல்லாம் பயப்படலாமா? இந்த அங்கிள் ரொம்ப நல்ல அங்கிள்டா. இவங்க உங்கள உங்க பேரெண்ட்ஸோட சேர்த்து வைப்பாங்க. அதுவரைக்கும் நாங்க சொல்ற இடத்தில நீங்க இருக்கனும். வேலைக்குலாம் போகக்கூடாது.அங்கேயும் சில பசங்க இருப்பாங்க, அவங்க கூட சேர்ந்து எல்லா வாலுத்தனங்களையும் பண்ணி, அவங்கள ரெண்டாக்குங்க. ஓகேவா?" என்று கூற, 'பெற்றோர் பற்றி பேசியதுமே உற்சாகத்தில்,

"எங்க அப்பா, அம்மாகிட்ட போகப்போறோமா? ஜாலி" என்று ஷ்யாமுடன் ஹைபை கொடுத்தனர்.

அஜய்யும், "ஆமா, சீக்கிரமே. பட் அதுக்கு நீங்க இந்த அங்கிள் கேக்குற கேள்விகளுக்கு பதில் சொல்லனுமே..! அப்ப தான் அவங்களைக் கண்டுபிடிக்க முடியும்" என்று ஆசையைத் தூண்டி அர்ஜூனின் விசாரணைக்கு அவர்களைத் தயார்ப்படுத்தினான்.

ஆதியிடமும், "ஆதி, பசங்க பத்திரம். அந்த கும்பலை அர்ஜூன் அரெஸ்ட் பண்ணினா தான் இவங்க பேரெண்ட்ஸ் பற்றி ஏதாவது தகவல் கிடைக்கும். என்னோட யூகம் சரின்னா இவங்க பேரெண்ட்ஸ் பற்றி கண்டிப்பா அந்த கும்பலுக்கு தெரிஞ்சிருக்கும்" என்று அஜய் கூற,

அர்ஜூனும், "யா, ஐ திங்க் சோ. ஷ்யாம், நீயே இவங்களை கூட்டிட்டு போய் அங்க விட்டுரு. ஆதி, நான் நைட் முடிஞ்சா தான் வீட்டுக்கு வருவேன். டேக் கேர்" என்று நண்பர்களிடம் கூறிவிட்டு, சிறுவர்களிடம் சேகரித்த தகவலின் அடிப்படையில் கடத்தல் கும்பலை நெருங்கும் முயர்ச்சியில் இறங்கினான்.

ஆதியும், ஷ்யாமும் சிறுவர்களுடன் விடைபெற, சஹானாவோ,

"ரித்து, 'அங்க அங்க'னு பேசுனீங்களே, அது எங்க?" என்று கேட்டாள்.

அஜய்யோ, "அது ஒரு ஹோம் மாதிரிடா. இது பற்றி உன்கிட்ட இப்போ சொல்ல முடியாதுடா. பட், கண்டிப்பா சீக்கிரத்தில் சொல்வேன்" என்று அவளையும் அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

*******

மறுநாள் அஜய்யின் அலுவலக அறையிலிருந்த ஷ்யாம் தன் உதவியாளர் ஸ்ரீராமை அழைத்தான். உள்ளே நுழைந்தவன் முதலில் பார்த்தது அஜய்யின் மடிக்கணினியில் தட்டச்சு செய்துகொண்டிருந்த சஹானாவைத் தான்.

உள்ளே சென்றவனை வரவேற்றது ஷ்யாமின் கோபம் தாங்கிய முகம் தான்.

"என்ன ஸ்ரீ இது, இங்க நீ பார்க்குற வேலைக்கு, வேற யாரும் மற்ற கம்பெனியில எவ்வளவு சம்பளம் வாங்குறாங்கனு கேட்டுப்பாரு. நான் உன்னை ஒரு நல்ல நண்பனா நினைச்சுதான் இவ்வளவு பெரிய முக்கியமான வேலையை உனக்கு கொடுத்தேன்" என்று ஷ்யாம் கோபத்தில் வெடிக்க,

ஸ்ரீ, "இப்ப என்னாச்சு ‌ஷ்யாம்? நானும் உங்களுக்கு உ... உண்மையா தானே இருக்கேன்" என்று திணற,

"நீ தானே? நீ எவ்வளவு உண்மையா இருக்கேனு இதோ இந்த ஃபைல பார்த்து தெரிஞ்சிக்கோ" என்று ஒரு கோப்பை அவன் முன் வீசினான்.

அக்கோப்பில், ஒவ்வொரு கட்டுமான பணி மனையிலும் பணிபுரியும் அனைவரது சுயவிவரம் அடங்கியப் பட்டியலும், விதிமுறைகளை மீறி சிறார்களையும், முதியோர்களையும் கட்டுமான பணியில் அமர்த்த அவன் பெற்ற ஊழல் விவரங்களும் தெளிவாக விவரிக்கப்பட்டிருந்தது.

ஷ்யாமும், "படிச்சுட்டியா? உனக்கு நாங்க... நான் என்னடா குறை வச்சேன். மத்தவங்களை விட உனக்கு எல்லாமே பெட்டரா தானே பண்ணுனேன். இவ்வளவு ஏன், என் லேப்டாப் பாஸ்வேர்டு கூட உன்கிட்ட சொல்லி வச்சிருக்கேன். எங்கள ஏமாத்த உனக்கு ஏன்டா மனசு வந்துச்சு?" என்று கேட்க, திடீரென்று தன் வினை வெளியே வருமென்று எண்ணியிராத ஸ்ரீராமும் இதில் விதிர்த்துதான் போனான்.

அதுவரை பார்வையாளராக இருந்த அஜய், "சொல்லுங்க மிஸ்டர்.ஸ்ரீராம். அமைதியா இருந்தா என்னனு நாங்க எடுத்துக்குறது? எங்க பி.ஏவா நீ எங்ககிட்ட இருந்து வாங்கின சாலரிய விட, இந்த தில்லுமுல்லுல நீங்க சம்பாதிச்சது அதிகம். அதுவும் அவ்வளவு கஷ்டப்பட்டு வேலைக்கு வர்ற ஏழைகளோட வயித்துல இப்படியா அடிப்ப? நீயும் அப்படி ஒரு நிலைமைல இருந்து வந்தவன் தானே. அவங்க நிலைமைய யோசிச்சுப் பார்த்தியா?" என்று கேட்டான்.

நிலைமை மோசமாவதை யோசித்த ஸ்ரீராம், "சாரி சார் மன்னிச்சிருங்க. ஏதோ பணத்தாசையில இப்படி பண்ணிட்டேன். இனி கண்டிப்பா இப்படி பண்ணமாட்டேன் சார். நம்புங்க" என்று கெஞ்ச,

அஜய்யோ, "தப்பு வெளிபட்ட ஆன் தி ஸ்பாட்லயே யாராலயும் திருந்தமுடியாது ஸ்ரீராம். முழுசா திருந்தனும்னா முதல்ல தப்பு ஆரம்பிச்ச புள்ளியில இருந்து தான் தொடங்கனும். அப்படி பார்த்தால், நீ பாஸ்ட் ஒன் இயர ரீவைண்ட் பண்ணி பார்க்கனும். நீ இங்க வரும்போது நல்லவனா தான் இருந்த... இடையில தான் உன்கிட்ட மாற்றம். எதுனால மாற்றம், எங்கமேல என்ன தப்புனு உன்னால இப்படி ஒரு நம்பிக்கை துரோகத்தை எங்களுக்கு பண்ண முடிஞ்சதுனு யோசி" என்று முடித்துக்கொண்டான்.

ஸ்ரீராம் அமைதியாகவே இருக்கவே, ஷ்யாம் தான்,

“இனியும் யோசிக்க என்னடா இருக்கு? இவன் இங்க உழைச்சு, நமக்கு நல்லது செய்ததெல்லாம் போதும். இனி இவனோட உழைப்பு நமக்கு தேவையில்லை. இனியும்...” என்று ஏதோ சொல்லவந்தவனைத் தடுத்த அஜய்,

“ஷ்யாம், காம் டவுன் டா. சும்மா, கோபத்துல எடுத்தோம் கவிழ்த்தோம்னு டிசைட் பண்ணாத. என்ன ரீசனுக்காக அவன் அப்படி நடந்துக்கிட்டான்னு பொறுமையா பேசலாம்.” என்க, ஷ்யாமோ அவனது சமாதானத்தை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை.

“லுக் அஜய், இந்த கம்பெனில யாரையும் சேர்க்கனும், வெளிய அனுப்பனும்னு டிசைட் பண்ணுற ரைட்ஸ் எனக்கும் இருக்கு. இனி இவன் இங்க வொர்க் பண்ணக்கூடாது” என்று உறுதியாகக் கூற, ஸ்ரீராமோ ஷ்யாமிடம் கெஞ்ச,அதுவரை அமைதியாக இருந்த சஹானாவும் ஷ்யாமுடன் இணைந்து,

“ரித்வி, என்ன பேசுறீங்க நீங்க? என்னைப் பொறுத்தவரையில் இந்த விஷயத்தில் ஷ்யாம் மாமா எடுத்த முடிவு தான் ரொம்ப கரெக்ட். இதுக்கு மேலேயும் எப்போ என்ன நடக்கும்னு யோசிச்சு, வொர்ரி பண்ணிக்கிட்டே இருக்கமுடியாது. சோ, இட்ஸ் பெட்டர் டு செண்ட் ஹிம் ஆஃப்" என்க, ஸ்ரீராமோ குரோதத்தில் முறைத்தான்.

அஜய்யும், "கோபத்தில் எடுக்குற எல்லா முடிவும் சரியா இருக்காது. திங்க் வெல் அண்ட் டிசைட்" என்று கூறிவிட்டு ஒதுங்க, ஷ்யாமோ பூஜாவை அழைத்து பணிநீக்க உத்தரவு ஆணையை எடுத்துவர கட்டளையிட்டான்.

ஸ்ரீராம் அறையை விட்டு வெளியேறுகையில் அறையில் இருந்த அம்மூவரையும் ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டே வெளியேறினான். அந்த பார்வையை சஹானாவும், ஷ்யாமும் அலட்சியப்படுத்த, அஜய்க்கோ ஏதோ தவறு இருப்பது போன்ற உள்ளுணர்வை ஏற்படுத்தியது.

மாலை தன்னவனுடன் மகிழுந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சஹானா, சில மணி நேரங்களாகவே யோசனையுடன் இருந்த அஜய்யைக் கண்டு,

"ரித்து, பீச்சுக்கு போகலாமே" என்றாள் அவனது தோள்களில் சாய்ந்தவாறே.

அஜய்யோ ஆச்சிரியத்துடன் புருவம் உயர்த்தியபடியே வெளியே பார்த்தவனை ‘மாஷா’வைப் போல் முறைத்த சஹானா,

"இல்ல சஹிபேபி, எப்பவுமே நான் தான் கேட்பேன் வெளியே போகலாமானு, நீ என் அண்ணாகிட்ட பேசனும், ஆட்டுக்குட்டி கிட்ட பேசனும்னு சொல்லுவ. இன்னைக்கு நீயே கேட்டிருக்கியே, அதான் மழை வர்றதுக்கு அறிகுறி இருக்கானு பார்த்தேன்" என்று கூறி, அவள் சாய்ந்த தோளிலேயே அவளிடமிருந்து சில வீர அடிகளையும் பெற்றான்.

"சரி போலாம். அதுக்கு ஏன்டி இப்படி மொத்துற? நீ மொத்துற மொத்துல நாம ரெண்டு பேரும் பீச் போவோமா? இல்ல ஹாஸ்பிடல் போகப்போறோமானே தெரியல" என்று அஜய் கூற, மேலும் இரு அடிகளை பரிசளித்துவிட்டு,

"என்ன பேசுறீங்க நீங்க? போங்கனு சொன்னா போங்க, அத விட்டுட்டு எதுக்கு இந்த விதண்டாவாத பேச்செல்லாம்?" என்று முறுக்கிக்கொள்ள,

"ரிலாக்ஸ், இதோ பீச் வந்துட்டோம்" என்று அவளை சமாதானப்படுத்தினான்.

கடலன்னையைக் கண்டவள் சேயென்று ஓடிச் சென்று கால்களை அலையில் நனைத்து விளையாடிக் கொண்டிருக்க, அஜய்யோ குழந்தை போல் விளையாடும் தன்னவளின் முகத்திலிருக்கும் மகிழ்ச்சியையே பார்த்துக் கொண்டு கடற்கரை மணலில் அமர்ந்திருந்தான்.

ஒரு உந்துதலில் அஜய்யை திரும்பிப் பார்த்த சஹானா, அவனது யோசனை தாங்கிய முகத்தை கண்ணுற்றவளாக அவனருகில் சென்றமர்ந்து, அவள் தோளில் சாய்ந்து கொள்ள அவனும் அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.

"என்னாச்சு என் ரித்துக்குட்டிக்கு, அவனோட சஹிபேபி கூட இருக்கும் போது உலகமே மறந்து போகும். இன்னைக்கு என்ன பயங்கரமா திங்கிங் மோட்ல இருக்குற மாதிரி இருக்கு?" என்று கேட்டாள்.

அவளது கேள்வியில் அவனோ இருக்கும் இடம் மறந்து அவள் முகம் நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டவன்,

"சஹி, பூஜா-அர்ஜூன் மேரேஜ் நடக்கும் போதே நாம மேரேஜ் பண்ணிக்கலாமாடா?" என்று வினவ, அவ்வளவு தான் சஹானாவோ பொறிய ஆரம்பித்தாள்,

"என்ன ரித்து விளையாடுறீங்களா? அதுலாம் முடியாது. அவங்க மேரேஜ்க்கு இன்னும் ஒன் வீக் தான் இருக்கு. நம்ம மேரேஜ்க்கு நான் என்னல்லாம் ப்ளான் பண்ணிருக்கேன் தெரியுமா? ஷாப்பிங், அப்படி இப்படின்னு நான் பெருசா ப்ளான் வச்சிருக்கேன். அதுக்கெல்லாம் எப்படியும் மினிமம் ஒரு மாசமாவது தேவைப்படும். போங்க ரித்து. ஆமா, இப்போ எதுக்கு இந்த மொக்கை கேள்வி?" என்றாள்.

"ஏதோ தோணுச்சு. சரி விடு, நம்ம மேரேஜ்க்கு இன்னும் 43 நாள் தான் இருக்கு. சோ, இனி நீ ஆஃபிஸ் வர வேண்டாம்." என்று கூற,

"இன்னைக்கு உங்களுக்கு என்னவோ ஆச்சு. ஏதேதோ உளறுறீங்க? போங்க ரித்து, ஆல்ரெடி இப்போ மிது வரல. பூஜாவும் 20 நாள் லீவ்... நானும் வரலைன்னா எப்படி? ரீனுவும் பாவம். நான் வருவேன்" என்று சிறு குழந்தை போல் அடம்பிடிக்க,

"ரீனாவையும் வேணும்னா கொஞ்சம் நாள் மிதுனாக்கு துணைக்கு ஊருக்கு அனுப்பிடலாம்" என்க,

"ரித்து, உங்கள பார்க்காம என்னால இருக்க முடியாது. நான் வர்றேன்" சிணுங்க,

"டெய்லி, ஆஃபிஸ் முடிஞ்சதும் நானே உன்னை வீட்டுக்கு வர்றேன்டா" என்று அதற்கும் தடை விதிக்க,

"நான் ஆஃபிஸ் வருவேன். நான் உங்ககூடவே எப்பவுமே இருக்கனும் ரித்து, ப்ளீஸ். இப்ப உங்களுக்கு என்னதான் ப்ராப்ளம்? எதுக்கு இப்படியெல்லாம் பேசுறீங்க?" என்று அவனது சட்டையின் கழுத்துப்பட்டையைப் பிடித்தவாறே கண் கலங்க,

"ஹே லூஸு, இப்ப எதுக்குடி அழற? என்னைக்குனாலும் நீ தான் என் வைஃப். உன்னை எதுக்காகவும், யாருக்காகவும், ஏன் உனக்காகவும் கூட உன்னை விட்டுக் கொடுக்கமாட்டேன். ஆனா, ஏதோ தப்பா நடக்கப்போற மாதிரி ஒரு இன்ஸ்டிங்ட். அதான் சொல்றேன்." என்று தன்னுணர்வை முழுமையாக வெளிக்காட்ட முடியாமல் பாதியில் நிறுத்தினான்.

"சரி வா, பூஜா இனி கொஞ்ச நாள் ஆஃபிஸ் வர மாட்டா. சோ, நானே உன்னை வீட்டுக்கு வந்து பிக் பண்ணிடுறேன்." என்க,

"அப்போ, ரீனு?"

"ரீனுவ,ஆதியை கொண்டுவந்து விட சொல்றேன், என்ன கொஞ்சம் பிகு பண்ணுவான். அதெல்லாம் அர்ஜூன் பார்த்துக்குவான். இனி உனக்கு டிரைவர் கூட நான் தான்" என்று கூறி அவளை சகஜ நிலைக்கு திருப்பினான்.

"ஏன் ரித்து, நீ என்ன இவ்வளவு கஞ்ஜூஸா? ‘பொண்டாட்டி பொண்டாட்டி’னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்றியே தவிர, பீச்சுக்கு கூடிட்டு வந்துட்டு ஏதாவது வாங்கிக் கொடுக்கனும்ன்னு உனக்கு தோணுச்சா?" என்று அங்கலாய்க்க,

அவனோ, "உன்னைப் பார்த்தாலே எனக்கு ஏதேதோ கொடுக்கனும், அதுவும் நிறைய நிறைய கொடுக்கனும்னு தான் தோணுது. இப்போ நீயே வேற கேட்டுட்ட. நானும் எவ்வளவு நேரம் தான் நல்ல பையனாவே நடிக்குறது" என்று பார்வையை அவளது இதழில் வைத்தபடி நெருங்க,

சஹானாவோ, "உங்களுக்கு எப்பவுமே இதே நினைப்பு தானா? நான் பீச்சுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு எனக்கு எதாவது வாங்கிக்கொடுங்கன்னு தான் கேட்டேன்" என்று அவனைத் தள்ளிவிட்டாள்.

அவனும், "இங்கயெல்லாம் ஹைஜெனிக்கா இருக்காதுடா. நான் ஸ்விக்கில ஆர்டர் பண்ணுறேன்" என்றவாறு தன் அலைபேசியை எடுக்க,

சஹானாவோ அவனிடமிருந்து அலைபேசியை பறித்து தன் கைப்பையில் போட்டவள்,

"டெய்லியும் ஹைஜெனிக்கா தானே சாப்பிடுறோம். அந்த பெரிய ஹோட்டல்ஸ்ல எல்லாம் ஹைஜெனிக்கா தான் பண்ணுறாங்கனு நீங்க போய் பார்த்துட்டு வந்தீங்களா? இவங்க எல்லாம் அன்றாட பிழைப்புக்காக இந்த மாதிரி வேலை செய்றாங்க. சோ, ஒருநாள் சாப்பிட்டா ஒண்ணும் ஆகாது. எனக்கு பசிக்குது, பஜ்ஜி வாங்கிக்குடுங்க" என்று சிணுங்கினாள்.

அவனோ அவளையும் உடன் அழைத்துச் சென்று அவள் கேட்ட மாவேச்சியை (பஜ்ஜி) வாங்கிக் கொடுத்துவிட்டு திரும்ப வந்தமர்கையில் வயதான மூதாட்டி ஒருவர் பூச்சரம் விற்றுக் கொண்டிருக்கவே அவரிடம் சென்று அதையும் வாங்கி வந்தான்.

சஹானாவின் கூந்தலில் அந்த மல்லிகைப் பூச்சரத்தை சூடிவிட்டவனைப் பார்த்து,

"என்ன ரித்து, நான் உங்க பொண்டாட்டினு எல்லா வழியிலும் நிரூபிச்சுட்டே இருக்கனுமா? கழுத்தில் செயின் போட்டாச்சு, என்கேஜ்மெண்ட் அன்னைக்கு எல்லார் மத்திலயும் கிஸ் பண்ணுனீங்க, டெய்லி மார்னிங் பொட்டு வச்சு விடுறீங்க, இப்போ பூவுமா? இன்னும் மெட்டி மட்டும் தான் பாக்கி. உங்க அலும்பு தாங்கலப்பா" என்றாள் பொய்யாக சலித்தவாறே.

"அந்த குறையையும் தீர்த்திடுவோம்" என்றவன், தன் சட்டைப்பையிலிருந்து ஒரு பொதியைப் பிரித்து அதிலிருந்த ஒரு குட்டி வைரக்கல் பதித்த மோதிரத்தை எடுத்து அவளது கால் விரலில் மெட்டியாக மாட்டிவிட்டான்.

"ஷ்யாம் என்கேஜ்மெண்ட் அன்னைக்கு நீ வீட்டுக்கு வந்தப்போ, அம்மா என்னோட சின்ன வயசு திங்க்ஸ் எல்லாம் உன்கிட்ட காட்டினாங்களாமே. அதுல நீ இத விரும்பிப் பார்த்ததா அண்ணி சொன்னாங்க. இது நான் சின்ன வயசுல போட்ட மோதிரம்... இப்போ தான் இது சரியான இடத்திற்கு வந்திற்கு" என்று தன் காதலை அனைத்துப் பரிணாமங்களிலும் தன்னவளிடம் காட்டினான் அந்த காதலன்.

"எல்லாமே பண்ணியாச்சு... ஒரு புருஷனா இன்னும் ஒண்ணே ஒண்ணு தான் பாக்கி..." என்று இழுக்க அவனது மனதைப் படித்தவளோ,

"சீ பேட் பாய், உங்களுக்கு வேற பேச்சே தெரியாதா? எப்போ பார்த்தாலும் அதே பேச்சு தானா?" என்று அவனைச் சீண்ட,

அவனும் பதிலுக்கு, "ஏன்டி, அதுல என்னடி பேட் பாய பார்த்த? ஊரக் கூட்டி உன் கழுத்துல தாலியைக் கட்டுறது மட்டும் தான் பாலன்ஸ்னு சொன்னேன். ஏன் நீ என்ன நினைச்சா?" என்று ஒரு கள்ளச்சிரிப்பை அவளிடம் வீச, அந்த மாயோளோ தன் காதல் தலைவனின் நெஞ்சிலே அடித்துவிட்டு, மருந்தாக அங்கேயே சாய்ந்து கொண்டாள்.

அவனோ சிரிப்புடன் தன்னவளை அணைத்துக் கொள்ள, அவர்களை மனதால் இணைத்த விதியும் அவர்களைப் பார்த்து சிரித்தது....!



"ஆணிடம் இருக்கும்

தாய்மையுணர்வை

வெளிக்கொணர்வதே

காதலென்று

யாரோ சொன்னார்கள்.....

நீ என்னை

தாயாக மட்டுமின்றி

சமயத்தில்

சேயாகவும்

மாற்றிவிடுகிறாயே

இதை என்னவென்று

சொல்வது?!!!!!!!!"




நினைவுகள் தொடரும்....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,


"இதயம் மீட்டும் நினைவலைகள்" கதையின் நினைவு-21 ஐ உங்களுடன் பகிர்ந்து விட்டேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


கடந்த பதிவிற்கு கருத்துத் தெரிவித்த அனைத்த நல் உள்ளங்களுக்கும் நன்றி...!

ஜெஃப்ரி....!
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவு-22

23498

அனைவரும் எதிர்பார்த்த பூஜா-அர்ஜூனின் திருமண நாளும் வந்தது. எதிர்ப்புகளின்றி, எதிர்பார்ப்புகளோடு மட்டுமே, தன் மனதிற்கினியவளின் கரம் பிடிப்பதற்கான பொன்னான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு, மணமகனாய் கம்பீரமாய் மணமேடையில் அமர்ந்திருந்தான் அர்ஜூன்.

அர்ச்சகர் கூறும் மந்திரங்களுக்கு செவி சாய்த்து,அதை திருப்பி உச்சரித்துக் கொண்டிருந்தவனின் விழிகள்,தன்னவளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தது.அவளும் வந்தாள்....!

அர்ஜூன் ஒருபுறம் திணறிக் கொண்டிருக்க,அவனுக்கு அருகில் மாப்பிள்ளைத் தோழனாய் அமர்ந்திருந்த அஜய்யும், ஷ்யாமும் கூட தன் நண்பனுக்கு சற்றும் குறையாத திணறலை சந்தித்துக் கொண்டிருந்தனர்.

இளஞ்சிவப்பு வண்ண பட்டுப் புடவையில் மணமகளுக்குரிய அத்தனை அம்சங்களுடனும், பூஜா தன் தோழிகள் சூழ வருகைத் தந்தாள்.

தன்னவனை காவல் சீருடையிலும், வெள்ளைச் சட்டையிலும் மட்டுமே அதிகமாகக் கண்டவள், முதல்முறை பட்டு வேஷ்டி சட்டையில் கண்டவளும் சற்றுத் திணறித்தான் போனாள்.

வேத மந்திரங்கள் முழங்க,தேவர்களின் ஆசியோடும்,சுற்றியிருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாழ்த்தொலிகளோடும், மங்கள நாணை தன்னவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டுத் தன்னில் சரிபாதியாக்கிக் கொண்டான் அர்ஜூன்.



இதழ்களில் தவழ்ந்த புன்னகையோடும்,நாணத்தில் சிவந்த கன்னங்களோடும், தன் மணாளனின் கரம் பற்றிக் கொண்டு,தாங்கள் வாழப் போகும் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாள் பூஜா.



அதன் பின்னர்,மணமக்களுக்கு பால்,பழம் கொடுப்பது,மோதிரம் எடுப்பது என பல சடங்குகள் நடைபெற, நேரம் இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்தது.இந்த சடங்குகளையெல்லாம் முடித்து விட்டு, மாலை நடைபெறவிருக்கும் வரவேற்ப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஆண்கள் அனைவரும் மும்மரமாகிவிட, பெண்களோ வழக்கம் போல் அரட்டையில் கழித்தனர்.

மாலை வரவேற்பு நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாகவே, இணைகளுடைய ஆட்டம், பாட்டம் என்று வெகு உற்சாகமே கழிந்தது.

மிதுனாவின் மனமோ தன்னவனுடன் சிறிது நேரம் கழிப்பதற்காக ஏங்க, அவனோ மறுநாள் அலுவலக வேலையாக அமெரிக்கா செல்வதில் பரபரப்பாக இருந்தான். ஸ்ரீராமின் சூழ்ச்சியினால் அவர்களுக்கு தொழில் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட, ‘தன்னால் ஏற்பட்ட பிரச்சனையை தானே தீர்ப்பேன்’ என்று அது தொடர்பாக அமெரிக்கா செல்ல வேண்டிய வேலையை தானே கையில் எடுத்துக்கொண்டான் ஷ்யாம்.

திருமணத்திற்கு முன்பான இந்த அமெரிக்கப் பயணம் குறித்து மிதுனா மற்றும் அவளது குடும்பத்தினரிடம் தெரிவிக்க அவர்களை நாடிச் சென்றவன், தன் தாயோடு பேசிக்கொண்டிருந்த மிதுனாவின் தாயிடம்,

“சாரி அத்தை, உங்ககிட்ட சரியா பேச முடியலை”என்றவாறே வெகு இயல்பாகவே மிதுனாவின் அருகிலமர்ந்தான்.

“அத்தை, பிஸினஸ் விஷயமா நான் நாளைக்கு நைட் யூ.எஸ் கிளம்புறேன்.”என்க, மிதுனாவும் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினாள். ஏனெனில் அவளுக்கும் இது புதியச் செய்தியே!

“தம்பி, சொல்றேனு தப்பா நினைச்சுக்காதீங்க, கல்யாணத்துக்கு இன்னும் 40 நாள் கூட இல்லையே. இப்போ எப்படி...”என்று மிதுனாவின் தாய் இழுக்க,

“அத்தை, எனக்கு வேலை 20 நாள் தான். மேக்ஸிமம், 25 நாட்களுக்குள்ளயே வந்திடுவேன். இங்க எல்லா வேலையும் அஜய் பார்த்துக்குவான்.”என்று கூற, தெளியாத அவரது முகத்தைக் கண்டு,

“நீங்க கவலையே படாதீங்க அத்த, எங்க கல்யாணம் மட்டும் முடியட்டும், அப்புறம் உங்க வீட்டுல வந்து கொஞ்ச நாள் சும்மா உக்கார்ந்து, உங்ககிட்டயே வேலை வாங்குறேன்”என்று சிரித்தவாறே கூற,

“சரி மாப்பிள்ளை, பத்திரமா போய்ட்டு வாங்க” என்று கூறவும்,

ஷ்யாமின் அருகில் வந்த மிதுனாவின் தங்கை ஷ்யாமிடம்,

“என்ன மாமா? அக்காகூட எதுவும் டிஷ்யும் டிஷ்யுமா? அக்காவோட முகமே சரியில்லையே” என்று கேட்க,

“ஹேய் வாலு,என்கிட்ட கேட்டா எனக்கென்ன தெரியும். அவகிட்டயே கேளு”என்றதும் மிதுனாவின் அண்ணன் மகேஷ் ஷ்யாமை நோக்கி ஆராய்ச்சிப் பார்வை வீச,

அதை கண்டுகொண்ட சஹானாவோ சமாளிக்கும் விதமாக,

“அதுவா? தலைவனைப் பிரிந்த தலைவிக்கு வருமே ஒரு டிஸ்ஸீஸ். ஆஹ்.... அதான் பசலை நோய். அதுதான் இப்போ நம்ம மிதுக்கு. அதானே மிது?”என்று கேட்க, மிதுனாவோ நாணத்தில் முகம் சிவக்க, அதன் பின்பே மகேஷின் முகம் சற்று தெளிவானது,

அதை கண்டுகொண்ட ஷ்யாமும்,

“எனக்கும் இப்போ பி.ஏ இல்ல. மிது, இனி நீ தானே என் பி.ஏ.? அப்போ, பி.ஏவா என்கூட யூ.எஸ் வர்றியா?”என்று கண்கள் மின்னக் கேட்க,

“டேய், கொஞ்சம் கேப் கிடைச்சா போதுமே, சந்துல சிந்து பாடுவியே. அதெல்லாம் மேரேஜ்க்கு அப்புறம் கூட்டிட்டு போ, ஆஃபிஸ் ட்ரிப்பா இல்லாம, ஹனிமூன் ட்ரிப்பா” என்று அஜய்யும் சேர்ந்து கலாய்க்க,

“ஏன் சொல்லமாட்ட? நீ மட்டும் பி.ஏனு கூடவே வச்சிருக்கல்ல. நீ சொல்லுவ... சொல்லு.... சொல்லு...”என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அலைபேசி அழைக்க, அதனை உயிர்பித்தபடி நகர்ந்தான்.

அங்கே ரீனாவோ ஆதியின் பின் திரிந்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு என்னாச்சு? ஏன் இப்படி என் பின்னாடியே வர்ற?எல்லாரும் என்ன நினைப்பாங்க?” என்று ஆதி கடிய,

ரீனாவோ, “என்ன நினைப்பாங்க?”என்று திரும்ப அவனிடமே கேட்க,

“உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அங்க இருக்காங்க, உனக்கு இங்க என்ன வேலை? போ, அவங்க கூட போய் அரட்டை அடி”என்று ஆதி நழுவ பார்க்க,

“அதல்லாம் இருக்கட்டும் ஆதி, நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லனும். வாங்க”என்று அவனது கரங்களைப் பிடித்து இழுத்தாள்.

“ஏய், கையை விடு. நானே வர்றேன்”என்று அவளைக் கடிந்தவன், அவளுடன் செல்ல,

“ஆதி, நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் மிங்கிள் ஆகிட்டாங்க. நாம மட்டும் ஏன் சிங்கிளா இருக்கனும்? நாமளும் மிங்கிள் ஆகிரலாமா?”என்று கேட்க,

“வாட் டு யூ மீன்?”என்று பற்களைக் கடித்துபடி வினவ,

“ஐ மீன் நம்மளும் மேரேஜ் பண்ணிக்கலாமா?” என்று கண்கள் மின்ன ரீனா ஆதியிடம் கேட்க, ஆணவனோ எழுந்த கோபத்தில் அவளது கன்னத்தில் ஓர் அறை விட்டு,

“என்னடி, வாயிருந்தா என்னவேணாலும் பேசுவியா? உங்க வீட்டுல உன்னை எந்த நம்பிக்கையில இவ்வளவு தூரம் அனுப்பியிருக்காங்களோ அதைக் காப்பாத்தப் பாரு.” என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர முயல, அவனைத் தடுத்தவள்,

“அப்படியா? கையிருந்தா நீங்க யாரை வேணாலும் அடிக்கலாமா?”என்று கோபத்தில் கேட்டவள்,

“நான் கேட்டது ஒண்ணும் தப்பில்லையே ஆதி. என் வாழ்க்கைல என்கூட யார் ட்ராவல் பண்ண போறாங்கனு டிசைட் பண்ணுற ரைட்ஸ் எனக்கு தான் இருக்கு. தட்ஸ் ஒய் ஐயம் ஆஸ்கிங். சொல்லுங்க, எப்போ மேரேஜ் பண்ணிக்கலாம்?”என்க,

“அதே மாதிரி, என் வாழ்க்கையை எப்படி அமைச்சிக்கனும்னு டிசைட் பண்ணுற ரைட்ஸ் எனக்கு தான் இருக்கு. நான் உன்ன இல்ல, யாரையும் மேரேஜ் பண்ணிக்குற மாதிரி இல்ல. ஆள விடு”என்று நகர முயல, மனதிற்குள், ‘அப்பாட’என்று பெருமூச்சு விட்டவள்,

“ஏன்?” என்று கேட்க,

ஆதியோ, “அத உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்ல. கஷ்டப்பட்டாலும், உனக்காகவே வாழுற உன் பெத்தவங்களுக்காக நீ வாழப் பாரு” என்று நகர்ந்தவன், சற்று திரும்பி, “எதுவுமே நம்ம கூட இருக்கும் போது அதோட அருமை நமக்கு தெரியாது”என்று கூறிவிட்டு, நண்பர்களிடம் விடைப்பெற்று வெளியேறினான்.

அவன் சென்ற பின் அவன் கூறியதை கேட்டவாறே ஷ்யாமுடன் அங்கு வந்த அஜய் ரீனாவிடம்,

“நீ ஆதியை உண்மையாவே, அதாவது ப்ரெண்ட்ஸ்காகனு இல்லாம அவனுக்காகவே நீ அவனை விரும்புறேன்னா, உனக்கு அண்ணனா நாங்க நாலு பேருமே முன்னாடி நின்னு இந்த கல்யாணத்தை நடத்துவோம்” என்று கூற,

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா”என்று அவனுக்கு நன்றி கூறிய ரீனாவையும், முகத்தில் மகிழ்ச்சியுடன் நின்ற சஹானவையும், யாழினியையும், எந்த உணர்வையுமே பிரதிபலிக்காத முகத்துடன் பார்வையாளராய் நின்று கொண்டிருந்த மிதுனாவையும் பார்த்தவன்,

“அதுக்கு முன்னாடி நாளைக்கு ஒரு பதினோறு மணிக்கு ரெடியா இருங்க, நீங்க ஐந்து பேரும் அவசியம் தெரிஞ்சிக்க ஒரு முக்கியமான இடத்துக்கு கூட்டிட்டு போறேன்”என்று கூறிவிட்டு நகர்ந்தான்.

*******

மறுநாள் காலை, அஜய்,ஷ்யாம் மற்றும் அர்ஜூனுடன் வந்திருந்த பெண்கள் ஐவரையும் கண்ட ஆதித்யா, அவர்களை வரவேற்காது ரீனாவை முறைத்தவாறே,

“இவங்கள எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று தன் நண்பர்களிடம் சாடினான்.

ரீனாவும் பதிலுக்கு, “ஐயா வாத்தியாரே, இது ஒண்ணும் உங்க கிளாஸ் ரூம் கிடையாது, இவங்க மட்டும் தான் உள்ளே வரனும்னு ஆர்டர் போட. இங்க யார் வேணாலும் வரலாம். எப்போ வேணாலும் வரலாம். உங்களுக்கு என்ன?”என்று பதிலுக்குச் சாடிவிட்டு,

“முதல்ல வந்தவங்களை ‘வாங்க’னு கேட்குற பழக்கத்த நீங்க கொண்டு வாங்க, அப்பறம் ஸ்டூடண்ஸ்க்கு சொல்லிக்கொடுங்க. அண்ட், நான் ஒண்ணும் உங்க முறைப்பொண்ணு இல்ல, இப்படி முறைக்குறீங்க” என்ற நொடித்துக்கொண்டாள்.

மிதுனா தான், “சாரி ஆதிண்ணா... ஹேய் ரீனு, கொஞ்சம் அமைதியா இருக்குறியா? நாம எங்கே இருக்கோம்னு கொஞ்சம் யோசிச்சுப் பேசுடி”என்க, அப்போது தான் கவனித்தாள் தாங்கள் இருக்குமிடத்தை.

“ஆமா, இந்த ஆசிரமம் ரொம்ப சின்னதா இருக்கு? யார் நடத்துறாங்க? பட், ஐ லவ் திஸ் ப்ளேஸ்” என்று சஹானா கூற,

அஜய் தான் ஆரம்பித்தான்,

“இது நாங்க ஐந்து பேரும் சேர்ந்து நடத்துற ஆசிரமம். கடந்த ஆறு வருஷமா நாங்க நடத்திட்டு இருக்கோம்”என்க,

சஹானா தான் ஆச்சிரியத்துடன்,

“அண்ணா கூட என்கிட்ட இத பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலையே ரித்வி”என்று கேட்க,

“எங்க அஞ்சு பேரைத் தவிர, நாங்க சம்பந்தப்பட்ட யாருக்குமே இது பத்தி தெரியாது, எங்க பேரெண்ட்ஸ் உட்பட. பிகாஸ், இது முழுக்க முழுக்க எங்க அஞ்சு பேரோட உழைப்பு மட்டும் தான்” என்று ஷ்யாம் கூற,

“ஆனால், நீங்க எங்க வாழ்க்கைத் துணை ஆகப்போறதால, இனி இது பத்தி உங்களுக்கும் தெரிஞ்சிருக்கனும்னு தான் இங்க கூட்டிட்டு வந்தோம். உங்ககிட்ட மறைக்கனும்னு எங்களுக்குத் தோணலை”என்று அஜய் கூற,

ஆதி தான், “அதெல்லாம் சரி தான். அதுக்கு இவள எதுக்குடா கூட்டிட்டு வந்தீங்க”என்று கடிய,

“நான் என் அண்ணாஸ் கூட வந்திருக்கேன், உங்களுக்கு ஏன் இந்த கடுப்ஸ்”என்று ரீனா மேலும் ஆதியைக் கடுப்பேற்ற,

அர்ஜூன், “டேய் ஆதி, நீ ஏன்டா அவளை சீண்டுற. சும்மாயிரு. இவ்வளவு நாள் நானும்,ஆதியும் இங்க தான் தங்கியிருந்தோம்” என்று கூறிய படி அவர்களை அழைத்துக்கொண்டு முன்னேறினான்.

அங்குள்ள ஆசிரம நிர்வாகி உட்பட சிலரை அறிமுகப்படுத்த, அப்போது ஒரு சிறுவன்,

"அக்கா...." என்றபடி ஓடிவந்து சஹானாவின் கால்களைக் கட்டிக்கொண்டான்.

"ஹேய், நீங்க..... எப்படி இருக்கீங்க?" என்று கேட்டபடி அச்சிறுவனை அணைத்துக் கொள்ள,

"வீ ஆர் குட் அக்கா, ஆதிண்ணா எங்களை நல்லா பாத்துக்குறாங்க. எங்க அம்மா, அப்பாவ அர்ஜூண்ணா கண்டுபிடிச்சுட்டாங்களாம். நாங்க சீக்கிரம் அம்மா, அப்பா கூட போய்ருவோமே" என்று மகிழ்ச்சியில் குதூகலிக்க, அச்சிறுவனை அனுப்பிவிட்டு அர்ஜூன் அன்றைய நாளின் நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டான்.

அங்கே முதியவர்கள், அநாதைக் குழந்தைகள், கைவிட்ட நடுத்தர வயதுடைய பெண்மணிகள் உட்பட இருபது பேர் இருந்தனர். அவர்களோடு இணைந்து மதிய உணவை முடித்துவிட்டு, கிளம்புகையில் அவர்களை நிறுத்திய ஆதி ரீனாவிடம்,

"பெத்தவங்க பேர் கூட தெரியாத அநாதையான எனக்கு உறவுன்னா அது இவங்க 4 பேர் மட்டும் தான். இப்போ இது ஆரம்பிச்ச அப்பறம் தானே எனக்கு நிறைய உறவுகள் கிடைச்ச மாதிரி இருக்கேன். இனி என்னோட வாழ்க்கையை இப்படியே இந்த மாதிரி உறவுகளுடனே கழிச்சிருவேன்.”என்றவன்,

மேலும், “இவங்க நாலு பேரோட ஃபேமிலி கொடுத்த படிப்புனால தான், இப்போ உங்க முன்னாடி ஒரு சமூக அந்தஸ்த்தோட ஒரு ப்ரொஃபஸ்ஸரா நிற்குறேன். ஆனா, அதுக்கு முன்னாடி, ஒரு அநாதைன்ற பேரை சுமந்துகிட்டு நான் நிறைய கஷ்டப்பட்டுட்டேன். அந்தக் கஷ்டம் எந்த விதத்துலயும் தொடர நான் விரும்பலை. உன்னோட நல்ல மனசுக்கேத்த மாப்பிள்ளை நிச்சயம் உன்னைத் தேடி வருவான். அவன் கையைப் பிடிச்சுட்டு உன்னோட வாழ்க்கையை சந்தோஷமா அமைச்சிக்கோ" என்று ஆதி நெகிழ்வுடன் கூற,

ரீனாவோ ஆதியின் வலக்கரத்தைப் பற்றிக் கொண்டவள்,

"என் மனசுக்கேத்த மாப்பிள்ளையை நான் தேடி அவன் கையைப் பிடிச்சுட்டேன். அது முள் பாதையா இருந்தாலும் சரி, நந்தவனமா இருந்தாலும் சரி, கடைசி வரை இந்த கையை விடாமலே, கூடவே டிராவல் பண்ண எனக்கு முழு சம்மதம்" என்று கூறினாள்.

"உனக்கு எப்படி சொன்னாலும் புரியாதா? நான் என்னோட மேரேஜ் பத்தி நினைச்சுக்கூட பார்க்கலை." என்க,

"ஸோ வாட், இனி நினைச்சுப் பாருங்க, அதுவும் என்கூட...... வாவ், செம்மயா இருக்கும்ல மாம்ஸ்", என்று குதூகலிக்க,

"என்ன டிசைன் தான் நீயோ? உன்னையெல்லாம் பெத்தாங்களா? இல்ல செஞ்சாங்களா?" என்று ஆதி கோபத்தில் கத்த,

ரீனாவோ, "அத அந்த சந்திரசேகர்கிட்ட தான் கேட்கனும்" என்க, அவனோ புரியாமல் விழிக்க,

"ஆதி கண்ணா, இல்லாத மூளையைக் கசக்கி ரொம்ப யோசிக்காதீங்க. அது வேற யாருமில்ல, அவரு தான் உங்க மாமனார்" என்றவாறு ஆதியின் கன்னத்தில் செல்லமாகத் தட்ட,

ஆதியோ கோபம் தலைக்கேற,

"டேய், முதல்ல இந்த இம்சையை கூட்டிட்டு கிளம்புங்கடா. என் உயிரை எடுக்கனும்னே வந்துருக்கா" என்று கத்த,

அவனருகில் சென்ற ரீனா,

"ஒரு பெரிய மிஸ்டேக் இருக்கு வாத்தி, உங்க உயிர எடுக்க நான் வரலை. உங்க உயிரை உங்க கையில் தர்றதுக்கு தான் நான் வந்திருக்கேன். அத கையில் வாங்கனும்னா, என்னை நீங்க நெஞ்சில் தாங்கனும் வாத்தி" என்று அவனிடம் ரகசியமாய் கூறிவிட்டு,

அஜய்யிடம் சென்று,

"அண்ணாஸ் எனக்கு இந்த மாப்பிள்ளை பையனைப் பிடிச்சிருக்கு. பேசி முடிச்சிருங்க" என்று கூறி, ஆதியின் முறைப்பை நண்பர்களின் பக்கம் திருப்பிவிட்டு, அவனுக்கு பறக்கும் முத்தமொன்றை அனுப்பிவிட்டு சிட்டாகப் பறந்தாள் ரீனா...!

நினைவுகள் தொடரும்.....!
 
Status
Not open for further replies.
Top