All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நவ்யாவின் "தேடல் தொடங்கியதே" - கதைத்திரி

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேடல் ஐந்து:-
11899

இரவில் அனைவரையும் தன்னகத்தே மறைத்த சாலை யார் வேண்டுமானாலும் வந்து செல்லுங்கள் என்பது போல் வழிவிட்டு நிற்க… சோம்பேறித்தனமாக மெதுவாய் எழும் ஆதவனோ காலை ஆறுமணி என்பதை உணர்த்திக் கொண்டிருக்க அந்த இடமே மக்கள் கூட்டத்தாலும், பத்திரிகை ஆட்களின் இரைச்சலாலும் காவலர்களின் பாதுகாப்பாலும் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்க, ஒருவன் மட்டும் சிந்தனையுடன் மரத்தில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான் கண்களை மூடி……

அவனை நோக்கி வந்த காவலர் ஒருவர்,

சார் என்று அழைக்க….

கண்மூடி யோசித்துக் கொண்டிருந்தவன் இவரின் அழைப்பில் எந்த சலனமும் இன்றி கண்திறந்து என்ன என்பதுபோல் பார்க்க….

உணர்ந்தவரோ…

கூட்டம் சேத்துக்குட்டே இருக்கு சார்… பத்திரிகைகாரங்களும் கொஞ்ச கூட நகர மாட்டேன்றாங்க நீங்க வந்து பேசினீங்கனா நல்லா இருக்கும் என்று சொல்ல,

அவர் கூறியதையெல்லாம் தான் கேட்கவேயில்லை என்பதுபோல் பார்த்தவன்….

சிவானந்தம் இந்த கேஸை பத்தி என்ன நினைக்கிறீங்க???? என்று தூண்டில் போட்டிருந்தான்,

இத்தனை நேரம் சாதாரணமாக பேசி கொண்டிருந்தவர் அவனின் கேள்வியில் தன் மூளையை தட்டி எழுப்பி,

சார் பார்த்தா ஏதோ பழிவாங்கறதுக்கு செஞ்ச மாதிரி இருக்கு…. என சொல்லிவிட்டு அவனை பார்க்க,

அதற்க்கு அவன்,
கண்டிப்பா சிவானந்தம்… ஆனா இதுல ட்விஸ்ட் என்னனா எதுக்காக பணியிருப்பாங்கன்னு நமக்கு யோசிக்க வேண்டிய அவசியமே கொடுக்கல பாருங்க அவங்க… என்று அவர் உயரதிகாரி மிக சாதாரணமாக சொல்ல,

அவருக்கோ ஒன்றும் விளங்கவில்லை அதையும் அவனிடம் கேட்க செய்தார் ஆனால் அவனோ,

சிவா சார் வாங்க அங்கபோய் உங்களுக்கு பொறுமையா விளக்கறேன் நல்லா… என்று இழுத்து சொன்னவன் முன்னே நடக்க,

அவன் புதிரான பேச்சில் குழம்பியவர் இவர் புரிவதுபோல் பேசினால் தானே ஆச்சரியம் என மனதில் எண்ணிக்கொண்டு அவனை பின்தொடர இத்தனை நேரம் அந்த இடத்தில் இருந்த சலசலப்பு மொத்தமும் ஒரு நிமிடம் அவன் நடந்து வரும் நடையில் உறைந்து அசையாமல் நின்றது…. அப்படிபட்ட நடை!!!!

தன் சொந்த காட்டில் நடந்து வரும் சிங்கத்திற்கு பிடரி அத்தனை கர்வமாக ஆடும் அதனிடமிருப்பதனால்…. அதை பார்க்க கண் இரண்டு ஒருவருக்கு போதாது.... அதை போல் இவன் நடக்கும் அந்த ராஜநடையினுடன் சூரிய ஒளிபட்டு அவன் பிடரி அவன் நடைக்கேற்றார் போல் அசைய, கண்ணின் குளிர் கண்ணாடியோ அவனுக்கே செய்தது போல் பொருந்தி இருக்க, இந்த நடைக்கே சலசலப்பு சத்தமில்லாமல் அடங்கி போக... இத்தனை அழகுக்கு சொந்தக்காரன் அவன்…

அவன் அவன்தான் கார்த்திக்ராஜா ஐபிஎஸ்!!!! செங்கல்பட்டு மாவட்டத்தின் எஸ்.பி… குறுகிய காலத்தில் எல்லா எதிரிகளும் மிக எளிமையாக சம்பாதித்தவன்… யாருக்கும் அடங்கா காளை… முரட்டு காளை!!!!

சம்பவ இடத்திற்கு வந்து கைகளை பின்புறம் இறுக்கமாக கட்ட.. உன்னால் என்னை கட்டி வைக்க முடியாது என வீறுக்கொண்டு எழுந்து நின்றது கையில் இருந்த மொத்த நரம்புகளும் அதனூடே…. குளிர்கண்ணாடியை கழட்டியவன் சட்டையில் மாட்டி மொத்த ஆட்களையும் பார்த்து..

உங்க எல்லாருக்கும் இந்த சமுதாயத்தின் மேல அக்கறை இருக்குனு எங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும், இருந்தாலும் எனக்கு உங்களால ஒரு உதவி செய்ய முடியுமா?? என்று பீடிகையுடன் ஆரம்பிக்க,

அங்கு சூழ்ந்திருந்த பல பேர் அவன் பேச்சிற்கு எதிர்வினையாக,

சொல்லுங்க சார் என்ன பண்ணனும்… என்று அவன் இதுவரை தங்கள் ஊரிற்கு நன்மை செய்ததை நினைவில் வைத்து மரியாதையுடன் கேட்க…

இப்பொழுதைக்கு இங்க இருந்து கலைந்து போனீங்கன்னா அது போதும் அதுதான் நீங்க எனக்கு செய்யற பெரிய உதவி… என்று அவர்களை ஆழம் பார்க்க,

ம்ஹும் கூட்டத்தில் இருந்த ஒருத்தனை தவிற ஒருவரும் அவனை நோக்கி கேள்வி எழுப்பவில்லை… யாரவன்??? பத்திரிக்கைகாரன் அல்லவா!!!

ஏன் சார் நாங்கல்லாம் இருந்தா உங்களால சாட்சிய அழிக்க முடியாதா ஈசியா?? என்று நக்கலாக கேட்க,

கேட்ட கேள்வி கழுத்து நரம்புகளை புடைக்க செய்தாலும் இருக்கும் இடம் கண்டு அடக்கியவன்.
இவன் கேள்வியில் கிளம்ப இருந்த மக்கள் அனைவரும் என்ன பதில் சொல்ல போகிறான் என ஆர்வத்துடன் அவனை நோக்க…

அனல்கக்கும் கண்கள் இரண்டும் அந்த பத்திரிக்கைகாரனை முறைத்துக் கொண்டிருந்தாலும் பதில் பேச வேண்டிய அவசியத்தை உணர்ந்தவன் ஒரு கடுப்பான சிரிப்பை உதிர்த்து,

இங்க இருக்கும் பத்திரிக்கை நிரூபர்களின் இருபது ஜோடி கண்களுக்கும் தப்பியிருந்தாலும் அந்த பத்து கேமராவுல ஒரு இண்டுஇடுக்கு விடாம எங்கள விட திறமையா கவர் பண்ணி இருப்பீங்கன்னு நினச்சேன்??? ஏன் உங்க திறமை மேல உங்களுக்கு அவ்ளோளோ நம்பிக்கையா பாஸ்?? என்று கேட்டவன் அந்த அவ்ளோ என்ற வார்த்தையை மட்டும் அழுத்தி கேட்க….

ஏன் நிற்கிறார்கள் இனிமேல் ஒருத்தரும்!!!!! சந்தேகம் ஆகிடுமே தங்கள் திறமை மீது…. கேட்டவனோ இதை எதிர்பார்த்து தானே கேட்டது,

இதில் உண்மையோ அவன் பேச்சு திறமையே!!! மற்ற காவலர்களே வியந்து பார்ப்பது, அவன் இடத்திற்கு தகுந்தாற் போல் அடிக்கும் பேச்சுயுக்தி…

இவர்களை அகற்றியவன், அவன் காவலர்களுக்கு இங்கு செய்ய வேண்டியதை உத்தரவிட்டு மருத்துவமனைக்கு சிவானந்தத்துடன் பயணிக்க.. வாகனம் நின்றதோ சென்னையின் பிரபல தனியார் மருத்துவமனையின் முன்,

சிவாவை ஒரு பார்வை பார்த்தவன் இறங்கி யாரையும் கண்டு கொள்ளாமல் தலைமை மருத்துவரின் அறைக்குள் அனுமதி பெற்று நுழைய..

இவர்களின் மருத்துவ அறிக்கையை பார்த்துக் கொண்டிருந்தவர் இவனை பார்த்து மென்னைகை புரிந்து,

வாங்க மிஸ்டர் கார்த்திக் உக்காருங்க.. என்று மரியாதையுடன் அழைக்க,

அவனுக்கு இப்பொழுது தேவைப்பட்டதோ தாம் கணித்தது சரிதானா என்பதுதான் அதனால் அவர் அழைப்பை ஏற்று அமர்ந்தவன் நேரடியாக அவரிடம்,

சொல்லுங்க டாக்டர் ரிப்போர்ட் என்ன சொல்லுது… என்று வினவ

அவனின் அவசரத்தை புரிந்து கொண்டவர் நேரடியாக விஷயத்திற்கு வந்திருந்தார்

நீங்க சந்தேகப்பட்டது சரிதான் மிஸ்டர் கார்த்தி அது ஆசிட்தான்!! என்று மருத்துவர் சொல்ல,

தலையில் இருந்த தொப்பியை கழட்டி மேஜை மீது வைத்தவன் தலையை அழுத்த கோதி அவரை பார்த்து,

எதிர்பார்த்தது தான் டாக்டர்… என்று மட்டுமே சொன்னவன் மற்ற விபரங்களை அவரிடம் தெளிவாக கேட்டு எழுந்துவிட்டான்…

மருத்துவரிக்கோ ஆச்சரியம் இத்தனை சிறுவயதில் இவ்வளவு தெளிவை அவர் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை என்பது ஒன்றென்றால் அவன் காலையில் தன்னை அழைத்த போது பேசியது இன்னும் இவன் மேல் ஆர்வத்தை தூண்டியது எப்படி இந்த கேஸை எடுத்து செல்ல போகிறான் என்பது…. என்ன பேச்சு???

டாக்டர் நான் கார்த்திக் செங்கல்பட்டு எஸ்.பி பேசறேன் என்று தன்னை அறிமுகப்படுத்தியவன் காயம்பட்டவர்களை பற்றி சொல்ல,

எப்பொழுதும் போல் இவரும் சிகிச்சை முடிந்த பின் விவரங்களை சொல்ல சொல்லப்போகிறான் என்று கேட்டுக் கொண்டு வந்தவர் அவன் பேசி முடிக்கும் போது தாம் மருத்துவரா இல்லை அவன் மருத்துவரா என்று சந்தேகிக்கும் அளவுக்கு அவர் சோதனை செய்து கொடுக்க வேண்டிய அறிக்கையை அவை இல்லாமலே சொல்லியிருந்தான் அந்த காவல்காரன்!!!!

மருத்துவராகிய அவருக்கும் புரியாதது இதுதான் ஏன் இவர்களை கொல்லாமல் இந்த தண்டனை என்றே???

இதை அனைத்தையும் கண்காணித்து கொண்டிருந்த வில்லன்கள் உதட்டில் சிரிப்புடன் அவ்விடம் விட்டு மறைத்திருக்க..... இனி தேடல் கார்த்தியின் வழியில்!!!

இவன் மட்டும்தானாதேடலில்???

தேடுவோம் அவர்களை உங்களுடன் நானும்!!!!!

தேடல் தொடரும்….

வணக்கம் தோழமைகளா 🙏🙏
கொஞ்சம் லேட் ஆகிடுச்சு... படிச்சு பாத்துட்டு நீங்க தேடியதை கமெண்ட் திரியில் சொல்லிட்டு போங்கோ.... போன அநியாயத்துக்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் குடுத்த எல்லாருக்கும் நன்றி 😍😍😍😍


நவ்யாவின் "தேடல் தொடங்கியதே"-கருத்துத்திரி
 
Top