All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிதிராஜின் "என்னுள் சங்கீதமாய் நீ" - கதைத் திரி

Status
Not open for further replies.

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 7



என்னதான் தங்கள் “காதல் கை கூட வேண்டும்..” என்றாலும்… ஹர்ஷினியை “பார்க்காமல்.. பேசாமல்.. இருப்பது” நினைத்ததை விட மிகவும் கொடுமையாக தான் இருந்தது ஆகாஷிற்கு.

அதனாலே மிகவும் எதிர்பார்ப்போடே..! தான் பங்க்ஷன்க்கு வந்தான்.

ஆனால் இங்கோ ஹர்ஷினி அவனின் எதிர்பார்ப்பிற்கு மாறாக..? முழுவதுமாக அவனை “அவாய்ட் செய்து கொண்டிருந்தாள்”.

அதோடு அவள் “சம்பளம்…?” வேறு கேட்டது தெரிந்தவுடன் “இவள் தன்னை விட்டு விலகி செல்ல நினைக்கிறாளோ…?” என கட்டுக்கடங்கா கோவம் வேறு வந்து தொலைத்தது.

பங்க்ஷன் என்பதால் வேறு வழி இல்லாமல்…? தங்கள் பிரச்சனைகளை தள்ளி வைத்து விட்டு முடிந்தவரை இயல்பாகவே இருக்க செய்தான் ஜெய் ஆகாஷ்.

பங்க்ஷன் பாதியில் கிளம்ப நினைத்த ஹர்ஷினியும்.. “தாரணியின் வற்புறுத்தலால்..” பங்க்ஷன் முடியும் வரை அங்கே தான் இருந்தாள்.

அப்படியும் ஜெய் ஆகாஷின் பக்கம் திரும்பவே இல்ல.

பங்க்ஷன் முடியவும் எல்லோருக்கும் “ரிட்டர்ன் கிப்ட் கொடுக்க..” வேண்டும் என்பதால் பூர்வியை ஹர்ஷினியிடம் விட்டு சென்றாள் தாரணி.

ஹர்ஷினிக்கும் எல்லோரையும் போல் “குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்” என்பதால் மகிழ்ச்சியுடனே பூர்வியை வைத்து கொண்டாள்.

வீட்டு ஆட்கள் தவிர “எல்லோரும் கிளம்பி விடவும்” தாரணி, விஜயா இருவரும் ஹர்ஷினி, பூர்வி இருக்குமிடம் வந்தனர்.

தாரணி “பூர்வியை பாரேன்….!” நான் என்ன சொன்னாலும் சிரிக்குறா…. ஹர்ஷினி சிரிப்புடன் சொல்லவும்..

குழந்தைன்னா இவ்வளவு ஆசை இருக்கிறவ “கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்துக்கோ ஹர்ஷினி…”

உனக்கும் “26 வயசு…. ஆச்சுல்ல…? “

உனக்கும் “சின்னவ தானே தாரிணி….” உண்மையான பாசத்தோடயே கேட்டார் விஜயா.

ஏற்கனவே கொஞ்சம் மோசமான மனநிலையில் இருந்ததால்…. தீடிரென்று அவர் இப்படி கேட்கவும்….. ஹர்ஷினியின் “கண்களில் சட்டென்று கண்ணீர் துளிர்த்து விட்டது” . அதை மறைக்க வேகமாக கீழே குனிந்தவள் தாரணியின் கைய பிடிக்கவும்

தாராணியும் விஜயாவின் “தீடிர் கேள்வியால்” அதிர்ந்து இருந்தவள்…! ஹர்ஷினியின் பிடியில் அவளின் நிலைய புரிந்து “ம்மா உன்ன அப்பா கூப்பிடுறாரு நீ போ…” என வேகமாக அவரை அங்கிருந்து அனுப்பினாள் .

“நான் வரேன்….” இரும்மா விஜயா சொல்லி சென்றவுடன் “சாரி… சாரி…” என தாரணி பதட்டமாக சொல்லவும்….

ஒன்னும் இல்ல விடு “நீ பாரு….” நான் இதோ வந்துடுறேன் என பூர்வியை கொடுத்தவள்., பார்ட்டி ஹாலின் கடைசியில் ஒதுக்கு புறமாக இருக்கும் அலங்கார அறைக்குள் வேகமாக சென்றுவிட்டாள் .

என்னதான் “கோவமாக இருந்தாலும்….!” ஹர்ஷினியை பார்க்காமல் பார்த்து கொண்டிருந்த ஜெய் ஆகாஷ் அவளின் கண்ணீரை கண்டுவிட்டான் .

ஹர்ஷினி சென்றவுடன் வேகமாக தாரணியிடம் சென்று “என்ன நடந்தது?” என தெரிந்து கொண்டவனின் மனம் என்ன உணர்கிறது…? என்றே தெரியவில்லை.

“அண்ணா….?” தாரணி கூப்பிடவும் ஒண்ணுமில்ல விடு.

நீங்க எல்லாம் போய் சாப்புடுங்க… “நான் அவளை பாக்குறேன்…..!” தாரணி புரிந்து கொண்டு எல்லோரையும் சாப்பிட அழைத்து சென்றாள்.

ஜெய்… ஹர்ஷினி இருக்கும் ரூமிற்கு சென்று “கதவை லாக்” செய்யவும்… அந்த சத்தத்தில் பார்த்தவள்… “ஜெய் ஆகாஷ கண்டு முதலில் அதிர்ந்தாலும்…!” பின்பு வேறு பக்கமாக தன் முகத்தை திருப்பி கொண்டாள்.

அதுவரை “ஆகாஷின் அம்மா..” தன்னை இப்படி கேட்டு விட்டாரே….? என வருத்தத்தில் இருந்தவள் ஜெய் பார்த்தவுடன் வருத்தம் போய் கோவம் வந்தது .

ஹர்ஷினி வீம்பாக தன்னை பார்க்காமல் முகம் திருப்பியபடியே நிற்கவும்…. அவளின் கலங்கிய முகத்தை பார்த்ததால் ஆகாஷ் பொறுமையாகவே… “இங்க பாரு ஹர்ஷினி….”

அவள் திரும்பாமல் நிற்கவும் “ஏய் என்ன பாருடி”

“ஓஹ் திரும்ப மாட்ட…” அப்படித்தானே…. என்ற படி அருகில் வந்து

அவளின் இரு கன்னத்தையும் பிடித்து திருப்பி தன் முகம் பார்க்க செய்தவாறே ”என்னடி அம்மா கேட்டதுக்கு வருத்தபட்ரியா?” ஆறுதலாகவே கேட்டான்.

ஹர்ஷினி “பதில் சொல்ல முடியாது போ…” என்பது போல் பார்த்து நிற்கவும்.., அவள் கன்னத்தை இறுக்கி பிடித்தவன் “பதில் சொல்லு…?”

அவன் கை இறுக்கத்தில் “கன்னம் வலித்தாலும்” காட்டி கொள்ளாமல் “வைராக்கியமாக….” உன் கேள்விக்கு பதில் சொல்லும் எண்ணம் இல்லை… என்பதை தன் “மௌனத்தில்” காட்டினாள் ஹர்ஷினி.



அதை புரிந்து கொண்டவன்… அவளின் கன்னத்தில் இருந்து கைய எடுத்து விட்டு நிதானமான குரலில்…, “ஓஹ் ஹோட்டல் மேடம் என்கிட்டே பேச மாட்டிங்க…?”

.............?

உங்களக்கு தான் என்ன “பாக்கவே பிடிக்கலையே…?” அப்புறம் எங்கிருந்து பேசறது எல்லாம் ...!

“நீ என்ன வேணும்ன்னா பேசிக்கோ…” என்பது போல் ஹர்ஷினி அழுத்தமாக நிற்கவும்…. ஆகாஷின் உள்ளுக்குள் எரிமலை வெடித்தது….,

என்ன பார்க்க மாட்ட….? பேச மாட்ட…? அப்படித்தானே அப்போ ஓகே…

.............?

இன்னும் கொஞ்ச நேரத்துல…. சாப்பிட போன எல்லாரும் திங்ஸ் எடுக்க இந்த ரூம்க்கு தான் வரணும்….., என்னோட “கேள்விக்கு பதில் வரலைன்னா…” நான் கண்டிப்பா இந்த “டோர திறக்க மாட்டேன் மிஸ்.ஹர்ஷினி…” என மிக உறுதியான குரலில் சொல்லவும் …..,

அவன் கண்டிப்பாக செய்வான்…! என ஹர்ஷினிக்கு புரியாமல் இருக்குமா என்ன…?

“ஓஹ் என்ன மிரட்டுறீங்க…?”

வச்சுக்கோ...! நான் கேட்டதுக்கு பதில்…?

பதில் தானே “நான் எதுக்கு உங்கள பாக்கணும்…?”

அவளின் கேள்வியால் ஆத்திரமடைந்த ஜெய் “என்ன பேச்செல்லாம் வேற மாதிரி இருக்கு..”

என்ன பாக்க மாட்டியோ….? என்னடி திமிறா…?

நானும் வந்ததிலருந்து பாக்குறேன்…. மூஞ்ச திருப்பி கிட்டே இருக்க பிச்சுடுவேன்….

எதுக்கு பாக்கணும்…? நமக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு…! நீங்க தானே ரெண்டு வரில பதில் அனுப்பினீங்க… ஹர்ஷினியும் ஆத்திரமாக கேட்கவும்

ஓஹ் அப்போ “நமக்குள்ள எதுவும் கிடையாது…?” அப்படித்தானே

நான் சொல்லல…… நீங்க தான் சொன்னீங்க…..

நான் சொன்னவுட “இதுதான் சான்ஸேன்னு என்ன விட்டாச்சு…” அதனால தான் என்கிட்டேய “சம்பளம்…கேட்டிருக்க நீ….?”

ஹர்ஷினி புரியாமல் விழிக்கவும் “ஓஹ் அத கூட மறந்தாச்சு….” இல்ல

“எங்க குடும்பத்துக்கு…..” அழுத்தி சொன்னவன்… இனிமேல் மேடம் ப்ரீயா எதுவும் செய்ய முடியாதுன்னு காசு கேட்டு இருந்தீங்களே…. இப்போ ஞாபகம் வந்துடுச்சா….? நக்கலாக கேட்கவும்

அய்யோ “சும்மா கோவத்துல…” கேட்டதை இந்த தாரணி சொல்லிட்டாளே என மனதுக்குள் அதிர்ந்தவள். இல்ல அது சும்மா….!

சும்மா எல்லாம் கிடையாது “நீ உண்மையா தான் கேட்டிருக்க…”

நான் கோவத்துல தான் கேட்டேனே…. தவிர உண்மையா எல்லாம் கேட்கல….

ஓஹ் அப்போ “கோவத்துல என்ன வேணுமலாலும் கேட்டுடுவியா….?”

ஜெய் நான் மீன் பண்ணில்லாம் கேட்கல……. கோவத்துல தான் கேட்டேன் சொல்லியும்…., இப்படி பேசினா எப்படி…? கொஞ்சம் கோவமாகவே கேட்கவும்


இல்ல ஹர்ஷினி “நீ கேட்டது கரெக்ட்” தான்…..

“எங்க குடும்பத்துக்கு… நீ ஏன் செய்யணும்…?” …… கோவத்தில் என்ன வேண்டுமானாலும் பேசிவிடுவதா…..?

இந்தா “என் கார்ட் வச்சுக்கோ…! எவ்வளவு வேணுமாலும் எடுத்துக்கோ…” ஹர்ஷினியின் கையில் ஜெய் கார்டை திணிக்கவும்

கோவத்தில தான் கேட்டேன் சொல்லியும்…. விடாம கார்ட் கொடுத்தா என்ன அர்த்தம்….?

“உங்க கார்ட் யாருக்கு வேணும்…?” ஆத்திரமடைந்த ஹர்ஷினி கார்டை உடைத்து விட்டாள்….!

“பளார்…!” சத்தத்துடன் தீடிரென்று தான் தரையில் விழவும்…! ஒரு நிமிடம் என்ன நடந்தது…? என்றே புரியவில்லை ஹர்ஷினிக்கு.

கன்னம் எறியவும் தான் ஆகாஷ் தன்னை அறைந்து விட்டது புரிந்து அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தால்…,

அடக்கப்பட்ட கோவத்தில்… கண் எல்லாம் சிவந்து…, தோள்கள் விறைக்க… தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து “ருத்ர மூர்த்தியாக…” நின்றிருந்தான் ஜெய் ஆகாஷ்.

அவனின் அதீத கோவத்தில்…. ஹர்ஷினிக்கு நெஞ்சு கூடே சில்லிட்டு போனது...

என்னடி.. என்னோட “கார்ட் யாருக்கு வேணுங்கிற…?”

என்ன.. புதுசா பண திமிர காட்றியோ.? தொலைச்சுடுவேன்…!

அப்படி என்ன கோவம்…? நான் பாக்கலைன்னா…? பேசலைன்னா…?

ஏதோ ஒரு காரணத்துக்காக…? தான் நான் இப்படி பன்றேன்னு…. உனக்கு புரியாமலா இருக்கும்…? “சொல்லுடி” கர்ஜிக்கவும்….

அதிர்ச்சி…, பயம்…., கோவம்…! எல்லாம் கலந்த உணர்வுடனே அவனை பார்த்தாள் ஹர்ஷினி.

உனக்கு கண்டிப்பா புரிஞ்சிருக்கும்…. அப்படி இருந்தும் நீ… என்ன அவாய்ட் செய்ரன்னா….? உனக்கு நான் வேண்டாமா…..?

ஓஹ்… அன்னிக்கு உங்க தாத்தா உனக்கு ஏதோ “மாப்பிள்ளை ரெடியா இருக்கான்…!” சொன்னாரே அவனை கல்யாணம் பண்ணிக்க போறியா..?

அதான் நான் வேண்டாம்ன்னு…. இப்படி எல்லாம் பண்றியா ...?

அப்படி மட்டும் இருந்துச்சு…. உன்ன இங்கேயே “கொன்னு புதைச்சுருவேன்” பாத்துக்கோ….! உச்ச கட்ட கோவத்தில் வெடித்து கொண்டிருந்தான் ஜெய் ஆகாஷ்.

உன்னோட பிடிவாதத்தால…! தான் இந்த கஷ்டம் எல்லாம்…., அப்பவே நான் இந்த “டான்ஸை விட்டு தொலையுறேன்…” சொன்ன கேட்டியா...?

அண்ணா..? அண்ணா…? சீக்கிரம் கதவை திறங்க.. எல்லாரும் வராங்க கதவை தட்டிகொன்டே… தாரணி பதட்டமாக கூப்பிடவும்… “ச்சே..” உன்ன இறுடி வரேன்… உறுமி விட்டு கதவை திறக்கவும்

அதீத அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்த ஹர்ஷினி வேகமாக எழுந்து நின்றாள்.

உள்ளே வந்த தாரணி இருவரின் முகமும் சரியில்ல என்பதை புரிந்து கொண்டு “என்ன ஆச்சு….?” கேட்டபடி ஹர்ஷினியை பார்த்தவள் அய்யோ…! கன்னம் இப்படி வீங்கி இருக்கு…..! என்ன இது விரல் தடம்…?

“அண்ணா அடிச்சீங்களா…?” கோவமாக கேட்கவும்.. ஹர்ஷினி அவளின் கையை பிடித்து வேண்டாம்…. என்பது போல் தலையாட்டினாள்.

ஆகாஷ் எதையும் கண்டு கொள்ளாமல்…? தாரணி எனக்கு இவ கிட்ட “ஒரு 5 நிமிஷம் பேசணும்…” அதுவரைக்கும் நீ எல்லாரயும் சமாளி.,

தாரணி சொல்ல வருவதை கூட கேட்காமல்…. அவளை கை பிடித்து வெளியே விட்டு கதவை மூடியவன்…

கண்மூடி மூச்சை இழுத்து விட்டு… தன் கோவத்தை குறைக்க முயன்றவன்….! முடியாமல் போகவே ….? ஹர்ஷினியை தீவிரமாக பார்த்தவாறே…! என்னால இந்த பிரஷர்…., கோவம்…, சண்டை…,

எல்லாத்தையும் விட… “உன்ன விட்டு விலகி இருக்கறது…” எல்லாம் இனிமேலும் தாங்க முடியும்ன்னு தோணல…!

அதனால ஒன்னு நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு….! இல்லாட்டி ஒரே ஒரு வழி தான்…,

அவளை நெருங்கி நின்று அவளின் கண்ணுக்குள் பார்த்தபடி…. “நாம சேர்த்து ஒரே வீட்ல வாழ ஆரம்பிக்கலாம்…..” ஜெய் ஆகாஷின் குரலில் தெரிந்தது எல்லாம் மிக மிக உறுதி மட்டுமே…

ஹர்ஷினி அதிர்ச்சியாகி பார்க்கவும்…!

என்ன இந்த நிலைமைக்கு… கொண்டு வந்து விட்டதும் நீ தான்..!

உனக்கு “ஒரு மாசம் தான் டைம்…”

கதவை திறக்கமுன்…. அப்புறம் “இந்த அடி உனக்கு தேவையான ஒன்னு தான்” என அவளின் வீங்கி இருந்த கன்னத்தை காட்டி ஒரு விரலால் வருடியவாறே முடியலடி…? ஆவேசமாக அவளை இறுக்கமாக கட்டி பிடித்தவன் பின் அவளின் நெற்றியில் அழுத்தமாக தன் உதட்டை பொருத்தியவன்…! அங்கிருந்து சென்றே விட்டான்.

தாரணி உள்ளே வந்து ஏதோ கேட்கிறாள்…? என புரிந்தாலும்…

ஹர்ஷினியின் எண்ணம் முழுவதும் “ஆகாஷ் வீசி சென்ற விஷம் தோய்ந்த வார்த்தைகளிலும்…..! தங்கள் காதல் தாத்தாக்கு தெரியும்….?” என்பதிலே இருந்தது.


......................................................................................


ஹாய் ப்ரண்ட்ஸ்

என்னுள் சங்கீதமாய் நீ 7 போஸ்ட் போட்டுட்டேன் . படிச்சி பார்த்துட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்கப்பா thank you ப்ரண்ட்ஸ்
 
Last edited:

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 8



தங்கள் “காதல் தெரிந்தவுடன்” இவர்கள் தன்னிடம் தானே கேட்டிருக்க வேண்டும்…?

அதை விட்டு இவர்கள் எப்படி பார்ம் ஹவுஸிற்கு சென்று ஆகாஷிடம் பேசலாம்…? என நடந்த எல்லாவற்றையும் விசாரித்து தெரிந்து கொண்டு கோவமாகவே ஆச்சார்யாவை பார்க்க வந்தாள் ஹர்ஷினி.

“ஹர்ஷினி மேம் வந்திருக்காங்க…!” ஆச்சார்யாவின் கார்ட்ஸ் சொல்லவும்

இப்போத்தானே வீட்ல இருந்து வந்தோம்., ஏன் வீட்ல பேசாம இங்க ஹோட்டல்ல…? என யோசித்தவாறே.. வர சொல்லவும் உள்ளே வந்த ஹர்ஷினி எடுத்த எடுப்பிலே

“எங்க வீடு எப்படி இருக்கு..?” என தைரியமாக நேரடியாகவே கேட்டு விட்டாள்.

அவள் தீடிரென்று கேட்கவும் ஓரு நொடி புரியாமல் யோசித்த ஆச்சார்யா...! பின்பே அவர்கள் இருவரும் வாங்கிய "பார்ம் ஹவுசை" பற்றி தான் கேட்கிறாள் என புரிந்தவுடன்..,

அவளின் தைரியத்தை கண்டு முதலில் மெலிதாக பிரமித்தாலும்..! பின் “என் பேத்தியாச்சே..!” என உள்ளுக்குள் மெச்சியவர்

வெளியே சாதாரணமாக "ம்ம் ரொம்ப நல்லாயிருக்கு”

அப்படி இருக்க முடியாதே…? உங்களுக்கு புடிக்காதது ஏதாவது இருக்கணுமே..? என
பார்ம் ஹவுசை கேட்பது போல்.. மறைமுகமாக “ஜெய் ஆகாஷ” பற்றி ஹர்ஷினி கேட்கவும் புரிந்து கொண்ட ஆச்சார்யா

என் பேத்தி “செலெக்ஷன்” எனக்கு பிடிக்காமல் போகுமா என்ன…? ஆனா...? என இழுக்கவும்

அதானே பார்த்தேன்…! அடுத்து அவர் எங்கு வருவார் என புரிந்ததால் கடுப்பானாள் ஹர்ஷினி

சில விஷயங்கள் தவிர…, மிகுந்த வெறுப்போடு ஆச்சார்யா சொல்லவும்...

சில விஷயம் இல்ல…, ஒரு விஷயம் மட்டும் தானே..? அழுத்தமாக ஹர்ஷினி

ஆமா.., ஒரு விஷயம் மட்டும் தான்.., அதை விட்டுட்டா போதும்.., ஆச்சார்யாவும் நேரடியாக கேட்கவும்

கொதித்து போன ஹர்ஷினி "யார் சொன்னாலும்ம்….! அதை கண்டிப்பா விட முடியாதே…?" மிக உறுதியான குரலில்

அப்படி சொல்ல முடியாதே…? நமக்கு “உயிரான ஒரு ஒன்னு..!” நமக்கு வேணும்ன்னு நினைச்சா… கண்டிப்பா விட்டுடலாம்..,

அதுக்கு யாரும்ம்ம்….! சொல்லணும்ன்னு தேவையில்ல ஹர்ஷினி … ஆச்சார்யாவும் மிகவும் உறுதியாகவே சொன்னார்.

என்ன மீறி அப்படி விட யாராலுமே...! முடியாதே..? அவளின் அழுத்தத்தில் ஆகாஷுமே டான்ஸை விட நினைத்தாலும்...? நான் விட.. விடமாட்டேன் என்ற பொருளே இருந்தது

அதை புரிந்து கொண்ட ஆச்சார்யா.., நமக்கு புடிச்சவங்களுக்காக நாம சிலதை விடறதுல என்ன தப்பு ஹர்ஷினி...? ஏன் எனக்காக நீ விடலை..?

அதனால தான்… அப்படி விட்டதனால “நான் அனுபவிச்ச அந்த கொடுமையான வலியை எப்படி என் ஜெய்க்கும் நான் கொடுப்பேன்..?”

அது இந்த ஜென்மத்துல மட்டுமில்ல…? எந்த ஜென்மத்திலும் நடக்காது…?

சோ இனிமேல் இதை பத்தி நீங்க எப்பவுமே பேச கூடாது..? ஏன் நினைக்கவே கூடாது…! கோவத்தில் கத்தியே விட்டாள் ஹர்ஷினி.

ரிலாக்ஸ் ஹர்ஷி...! பொறுமையா பேசலாம்...

பொறுமையா பேச ஒண்ணுமில்ல.. ஆத்திரம் குறையாமல் ஹர்ஷினி சொல்லவும்

பேச இருக்கா இல்லையான்னு நான்.. நீ.. மட்டுமே முடிவு பண்ண முடியாதே ஹர்ஷினி…? ஆச்சார்யா அர்த்தம் பொதிந்த பார்வையுடன் கேட்கவும்

உங்க வெறுப்புக்குக்காக "உங்க பேத்தி டான்ஸை விட்ட மாதிரி..., ஜெய்யும் டான்ஸை விடணும்ன்னு எந்த அவசியமும் இல்ல..?"

அவருக்கு நீங்க யாராவும் இருந்தாத்தானே கேக்க முடியும்…? சோ

நீங்க நினைக்கறது எப்பவும் நடக்காது...? நான் நடக்கவும் விட மாட்டேன்... உறுதியுடன் சொல்லிவிட்டு ஹர்ஷினி கிளம்பவும்.

அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்ட ஆச்சார்யாக்கு மனதுக்குள் எல்லையில்லா வருத்தமே..., அப்போ நான்...?

ஹர்ஷினி உன்கிட்ட ஒன்னு கேட்கணும்…? ஆனா எனக்கு கண்டிப்பா பதில் வேணாம்.. இறுக்கமான முகத்துடனும் ஆச்சார்யா சொல்லவும்

ஹர்ஷினி கோவம் குறையாமல் நின்றபடி கேள்வியாக அவரை பார்த்தாள்.

9 வருஷ காதல் ஹர்ஷி...

எங்க கிட்ட சொல்லாம உன்னால எப்படி இருக்க முடிஞ்சது..?

தெரிஞ்சப்போ "என் பேத்தியா இப்படின்னு...?" என்னால நம்பவே முடியல.., மிகுந்த வேதனையான குரலில் ஆச்சார்யா கேட்கவும்

அவரின் கேள்வியில் அவரின் வேதனையை புரிந்து கொண்ட ஹர்ஷினி கலங்கி போய் நின்று விட்டாள்.

தான் செய்தது மிக பெரிய தவறு தானே…? தங்கள் காதல் அவருக்கு தெரிந்தவுடன் "அவரின் மனம் என்ன பாடுபடும்" என யோசிக்காமல் போனோமே...?

ஆகாஷ பற்றி மட்டும் யோசித்த நான்.., அவரை பற்றி நினைக்கவே இல்லையே…?

தாத்தா…? தவிப்பாக கூப்பிடவும்

நீ கிளம்பு ஹர்ஷினி..! கண்டிப்பான குரல் ஆச்சார்யாவிடம்

அவரின் கண்டிப்பை மீறி எதுவும் சொல்ல முடியாமல் வெளியே வந்துவிட்டாலும்..!

"என்ன பதில் சொல்லிட முடியும் தன்னால் அவருக்கு…?" என ஹர்ஷினிக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாகவே இருந்தது.



………………………………………………………………………………………….



“தேவி டான்ஸ் அகாடமி 50 வது ஆண்டு விழா” இன்விடேஷன் கார்ட்…. நீங்க தான் முக்கியமான சீப் கெஸ்ட்…! கண்டிப்பா வரணும்…! சுபத்ரா கொடுக்கவும்

எதுவும் பேசாமல் இறுக்கமான முகத்துடன் வாங்கி கொண்ட ஆச்சார்யா எழுந்து தன் அறைக்கு செல்லவும்….

அப்பா...? சந்திரன் பதட்டத்துடன் கூப்பிட ....

"க்கும்..." அடைத்த தொண்டையை செறுமியபடி "5 நிமிஷம்.." என்றவர் ரூமிற்கு சென்று விட்டார்.

ஏன் சுபத்ரா...? ஆற்றாமையுடன் இந்திரன் கேட்கவும்...

ஏன் கூடாது...? சுபத்ராவிடமிருந்து கோவமாகவே வந்தது பதில்....

அத்தை ப்ளீஸ் ....! ஹர்ஷினி கெஞ்சும் முகத்துடன் சுபத்ராவை பார்க்கவும்...

இல்ல ஹர்ஷி... அவர் “கண்டிப்பா வரணும்...!” அப்பதான் எங்க அம்மா மனசு சாந்தி அடையும்..! சொல்லும் போதே தோண்டை அடைத்து கண்ணீர் வர பார்க்கவும் வேகமாக சமாளித்து கொண்ட சுபத்ரா

அவர் மட்டுமல்ல.... நீங்க எல்லோரும் தான் கண்டிப்பா வரணும்... என்றவர்

ஹர்ஷி நீ என்னோடயே இன்னிக்கு சென்னை கிளம்பு...? எனவும்

இல்லை அத்தை... கொஞ்சம் அவசர வேலை.... உங்களோட அபி.. ஹாசினி... வருவாங்க. அவங்க கிட்ட பங்க்ஷன் அரேஞ்சமென்ட்ஸ் பிளான் எல்லாம் கொடுத்துட்டேன்....!

அவங்க பாத்துப்பாங்க... அதோட நானும் 2 நாள்லே வந்துருவேன்....

ஓகே சீக்கிரம் வந்துரு ஹர்ஷி.. அபி., ஹாசினி நாம கிளம்பலாமா...?

என்ன அவசரம் சுபா...? காலையில் தானே வந்த... பொறுமையா ஈவினிங் கிளம்பலாம், கண்டிப்புடன் ரேணுகா சொல்லவும்

சுபத்ரா ஓகே என்றுவிடவும்.., எல்லோரும் பொதுவான குடும்ப விஷயங்களை பற்றி., பங்க்ஷன் ஏற்பாட்டை பற்றி பேச ஆரம்பித்துவிட்டாலும்

உள்ளுக்குள் எல்லோருக்குமே தற்பொழுது "ஆச்சார்யா என்ன மனநிலையில் இருப்பார்" என்பதே யோசனையாக இருந்தது, சுபத்ரா, ஹர்ஷினி உட்பட..

அதுவும் ஹர்ஷினிக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது. நேற்று தான் நான் ஆகாஷ பற்றி பேசினேன்... இன்று இந்த பிரச்னை வேறு...!

கண்டிப்பாக வெளியே காட்டி கொள்ளாவிட்டாலும் ஆச்சார்யா மிகுந்த "மன அழுத்தத்துக்கு உள்ளாவார்" என புரிந்ததாலே..!

அவரை விட்டு செல்ல மனதில்லாமல்..., சுபத்ராவிடம் இரண்டு நாள் கழித்து வருவதாக சொல்லிவிட்டாள் தான் என்றாலும்..?

எங்கள் பக்கம் எங்களுக்கான சில நியாமான காரணங்கள், கோவங்கள் இருப்பது போல்…!

அவர் பக்கமும் அவருக்கென ஒரு சில காரணங்களும், அளவில்லா வேதனைகளும் இருக்க தானே செய்கிறது

அது தெரிந்தாலும்…! ஏன் நன்றாக புரிந்தாலும்…!

“என்ன பண்றோம் நானும் அத்தையும் அவரை…!” என மனதுக்குள் மிகுந்த குற்ற உணர்ச்சியுடன் ஆச்சார்யாவை பற்றி யோசித்து கொண்டிருந்தாள் ஹர்ஷினி



………………………………………………………………..



அங்கு ஆச்சார்யாவிற்கோ இன்விடேஷன் கார்டை பார்க்கும் போது தேவியின் நினைவுகளே…!

தேவி “ஆச்சார்யாவின் காதல் மனைவி..”

முறையாக நடனம் பயின்ற தேவியின் “நடன அரங்கேற்றத்தின் போதுதான் முதன் முதலாக தேவியை பார்த்த ஆச்சார்யா..! பார்த்த நொடியில் இருந்தே அவரை காதலிக்கவும்..!” தொடங்கி விட்டார்.

பின்னர் தன் “பெற்றோரின் அனுமதியுடனே” தேவியின் கரம் பிடித்தார்.

தேவியின் மீது அளவில்லா காதலை கொண்டவர் ஆச்சார்யா.

அதே போல் தேவியும் அவரின் உண்மையான காதலை புரிந்துகொண்டு அதே அளவு ஆச்சார்யா மீதும் காதல் கொண்டு வாழ்ந்தவர்.

திருமணத்திற்கு பிறகு “தேவி நடன அரங்கேற்றம் செய்ய கூடாது” என்ற நிபந்தையுடனே ஆச்சார்யாவின் பெற்றோர்கள் திருமணம் செய்தனர்.

ஆனாலும் தேவிக்கு நடனத்தின் மீது இருந்த அளவில்லா பற்று புரிந்ததாலே “தேவி டான்ஸ் அகாடமி” ஆரம்பித்து கொடுத்தார் ஆச்சார்யா.., தன் பெற்றோரின் எதிப்பையும் மீறி .

ஆனால் அதே நடனத்தாலே தன் "செல்ல மகள் சுபத்ராவின் வாழ்க்கையில் வந்த பிரச்சனைகளும்…? அதை தொடர்ந்து தேவியின் முடிவும்…?" தான் நடனத்தின் மீதான “வெறுப்பிற்கு” காரணமாக அமைந்தது.

அதோடு முடியாமல்…? அதை தொடர்ந்து சுபத்ரா “டான்ஸை விட முடியாது” என்றது மட்டுமல்லாமல்

“திருமணமே செய்யாமல்” தனியாகவே நின்று விட்டது இன்னும் பாதித்தது ஆச்சார்யாவை.

தன் “செல்ல பேத்தி” தன் காதல் மனைவியின் “மறு உருவம்” தன் மேல் உயிராய் இருந்த ஹர்ஷினி..

அதே டான்ஸ்க்காக தன்னிடம் சண்டை போட்டு “விலகி இருப்பதும்” இன்னும் இன்னும் வெறுப்பை தான் கூட்டியது ஆச்சார்யாவிற்கு.

இப்பொழுது "ஜெய் ஆகாஷும் அதே டான்ஸ் தான்" என்னும் போது சொல்லவும் வேண்டுமா ஆச்சார்யாவின் மனநிலையை...?


“ஜெய் ஆகாஷும் தான் சீப் கெஸ்ட்..!” தெரியும் இல்ல ஹர்ஷி

அதனால நீ சீக்கிரம் ஆகாஷ் வீட்டுக்கு போய் “பெர்சனலா” அவனோட குடும்பத்துக்கும் இன்விடேஷண் கொடுத்துடு சரியா…? என சுபத்ரா சென்னை கிளம்புமுன் ஹர்ஷினியிடம் சொல்லி சொல்லவும்

“ஜெய் அன்று பேசிய பேச்சை’ நினைத்து கோவத்தில் கொதித்து கொண்டிருந்த ஹர்ஷினி

தாரணியிடம் விசாரித்து “ஆகாஷ் வீட்டில் இல்லை” என தெரிந்த பிறகே…! ஆகாஷ் வீட்டிற்கு சென்று
இன்விடேஷண் கொடுத்து விட்டு வந்தாள்.



..............................................................................


ஹாய் ப்ரண்ட்ஸ்

என்னுள் சங்கீதமாய் நீ 8 போஸ்ட் பண்ணிட்டேன்... படிச்சுட்டு உங்க கம்மெண்ட்ஸ் சொல்லுங்க ப்ரண்ட்ஸ் .. இந்த டைம் உங்க கம்மெண்ட்ஸ்க்கு ரிப்ளை பண்ண முடியுமான்னு தெரியல.. இன் அம்மா ஹோம்.. thank யூ ப்ரண்ட்ஸ்
 
Last edited:

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 9



அபி., “பாட்டி” போட்டோக்கு ஏன் இன்னும் மாலை போடாம இருக்கு..?

உடனே போட்டுடறேன்க்கா..

என்ன அபி.., எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க.., போ சீக்கிரம்.. தாத்தா வேற வந்துடுவார்.. இதோக்கா ஒரே நிமிஷம்..,

ஹாசினி “அப்பா” கிட்ட கேளு எங்க வந்திருக்காங்கன்னு..? அக்கா பெரியப்பாவே போன் பண்ணிருந்தார்.., இன்னும் 5 நிமிஷத்துல வந்திருவாங்கலாம்..,

ஓகே.., நீ போய் சுபா அத்தையை “வெல்கம்” பண்ண சொல்லு ஓடு..!

அக்கா “மாலை” போட்டாச்சி.. வேற எதுவும் பெண்டிங் ஒர்க் இருக்கா..?

ஆமா அபி., ரூபா கிட்ட “டின்னர் மெனு” இருக்கு.., டின்னர் வந்தவுடன் நீ ரூபாவோடயே நின்னு எல்லாத்தையும் ஆர்டரா செட் பண்ணிடு சரியா..?

ஓகே க்கா நான் பண்ணிடுறேன்.., நீ முதல்ல போய் ரெடியாகி வாக்கா.., எல்லாம் வந்துருவாங்க..,

என்னோட ஒர்க் எல்லாம் முடிஞ்சது அபி .., இதுக்கு அப்பறம் எல்லாம் அத்தை தான் பாத்துக்கணும்..,

என்னால முடியல., நான் கொஞ்ச நேரம் கண்டிப்பா ரெஸ்ட் எடுக்கணும்., நான் அத்தை ரூம்க்கு போறேன்., என்னை யார்கேட்டாலும் கொஞ்ச நேரம் நீயே சமாளிச்சுக்கோ..,

சரிக்கா 2 நாளா நிறைய வேலை தான் உனக்கு.., போ போய் ரெஸ்ட் எடுத்துட்டு ஒரு அரை மணி நேரத்துல வர பாரு.., இல்லாட்டி நாட்டாமையை சமாளிக்க முடியாது., எங்க என் பேத்தின்னு..? ஆரம்பிச்சுடுவார்.,

போடா., நானே அவருக்கு “மெஸேஜ்” பண்ணிடுறேன்., தேடமாட்டார்.., ஏதாவது தேவைன்னா கால் பண்ணு..,

சுபத்ரா பொறுப்பேற்ற பிறகு “டான்ஸ் அகாடமியை” மிக பெரியதாக பேர் சொல்லும் அளவிற்கு உயர்த்தி விட்டார். “50 வது ஆண்டு விழாவும்” அணைத்து தரப்பு பிரபலங்களும் கலந்து கொள்ளும் அளவுக்கு மிக பெரியதாகவே ஏற்பாடு செய்து இருந்ததால் ஹர்ஷினிக்கு தான் எக்கச்சக்க வேலைகள்.

ரூமிற்கு வந்த ஹர்ஷினி "ஜெய் ஆகாஷின் PAக்கு" கால் செய்தவள் "ஹலோ.." மோகன் எங்க இருக்கீங்க..?

இதோ மேம் 2 நிமிஷம் ரீச் ஆயிட்டோம்..,

ஓகே., என்று விட்டு வைத்தவள்., மிகவும் சோர்வாக இருந்ததால் “அப்பாடான்னு” கட்டிலில் விழுந்தவள்.. தன்னையும் அறியாமலே தூங்கியும் விட்டாள்.


“போக்கே கொடுத்து வாங்க..” என்று ஆச்சார்யாவை மரியாதையாக வரவேற்ற சுபத்ரா., அவரின் குடும்பத்தினரையும் முறையாக வரவேற்று உபசரித்தார்.

அத்தை ஜெய் ஆகாஷ் வந்துட்டாங்க.., இதோ வரேன் ஹாசினி.,

“வாங்க ஜெய் ஆகாஷ்..” என மரியாதையாக “போக்கே” கொடுத்து "தன் மாணவனை" சுபத்ரா பெருமையுடன் வரவேற்கவும்..,

மேம்., புதுசா மரியாதை எல்லாம் வேண்டாமே., ப்ளீஸ்..!

வர மரியாதையை வேண்டாங்குற.., நீ மாறமாட்ட விடு.., வா எங்க பேமிலியை அறிமுக படுத்துறேன்..,

எங்க போனா இவ..? என ஹர்ஷினியை தேடிய படி சுபத்ராவுடன் சென்ற ஆகாஷ் அவர்கள் பேமிலி இருக்குமிடத்திலும் அவள் இல்ல..! என்பதை சிறிது தூரத்திலே கண்டுகொண்டவன் மனதுக்குள் காண்டானான்.

சுபத்ரா தன் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் முறையாக அறிமுகப்படுத்தவும்.., ஆகாஷும் “தன் மாமியார் குடும்பம்..” என்ற மரியாதையுடனே எல்லோரிடமும் பேசினான்.

தூரத்தில் போன் பேசியபடி அமர்ந்து இருந்த ஆச்சார்யாவிடம் அழைத்து சென்ற சுபத்ரா., “இவர் தான் தேவி டான்ஸ் அகாடமியை ஆரம்பித்தவர்..” என அறிமுகப்படுத்தவும்..

“அப்பான்னு” சொல்ராங்களா பாரு..! இவங்களக்கு “ஹர்ஷினியே தேவலை” என மனதுக்குள் நினைத்தவன்., ஆச்சார்யாவை பார்த்து “வணக்கம் சார்..!” என்றான்.

அவரும் இவன் போலே ”வணக்கம்” என்றவர்.., தன் பக்கத்து சேரை காட்டவும் தலையசைப்புடன் அமர்ந்துகொண்டான் ஆகாஷ்.., “என்னடா புலி பதுங்குது பார்ப்போம்..!”

“ ச்சே..” இப்ப அவளுக்கு போன் கூட பண்ணமுடியாது .., “அத்தை.,” என அபி வரவும் “நீ போய் வந்தவங்களை கவனி..” என்று ஆச்சார்யா சொல்லவும்.., சுபத்ரா “பேசிட்டுரு ஆகாஷ்” என்றவர் அபியுடன் சென்றார்.

உங்க வீட்ல யாரும் காணோம்..! வரலையா..?

தங்கச்சி பேமிலி மட்டும் தான் வராங்க.., அவங்களும் இன்னும் 10 நிமிஷத்துல வந்துருவாங்க..,

“அப்பா..” மேனகா வரலை போல..! சந்திரன் கொஞ்சம் பதட்டமாக சொல்லவும்

“பெரியவனே..” முதல்ல “இங்க பாரு.,” என ஜெய் ஆகாஷ காட்டவும்.., கவனிக்கலப்பா.., வாங்க தம்பி., வீட்டு ஆளாய் மரியாதையுடன் வரவேற்கவும் ஆகாஷும் எழுந்து நின்று கை குவித்து “வணக்கம்..” என்றான்.,

நான் மேனகா கிட்ட பேசிட்டேன்.., வந்துட்டே இருக்காங்க.., கவலையை விடு நீ போய் வந்தவங்களை கவனி.,

“சரிப்பா..,” உங்களுக்கு” டீ டைம்..” என சந்திரன் கேட்டு கொண்டிருக்கும் போதே சர்வர் டீ கொண்டு வரவும் ஆச்சார்யா பெருமையாக ஆகாஷ பார்த்தவாரே “என் பேத்தின்னா சும்மாவா..,!” என்றபடியே டீயை எடுத்துக்கொள்ளும் நேரம்.,

சரியாக இன்னொரு சர்வர் “ஆகாஷிற்கு கிரீன் டீ..” கொண்டுவரவும்., "என் ஹர்ஷினி" என ஆச்சார்யாவை “கர்வமாகவே..,” பார்த்தபடி கிரீன் டீயை எடுத்து கொண்டான் ஜெய் ஆகாஷ்.

“என்னடா நடக்குது இங்க ..?” அவ “என் பொண்ணு..,” ஆனா எனக்கு ஒண்ணும் கிடையாது..? அட்லீஸ்ட் பச்சை தண்ணியாவது “என் பொண்ணு” எனக்கு ஏற்பாடு பண்ணிருக்கலாம்.., என மனதுக்குள் நொந்தவாறே நின்றிருந்தார் சந்திரன்.,

மேடைக்கு போலாமா..? எல்லாரும் வந்தாச்சு.., சுபத்ரா அழைக்கவும் மேடைக்கு செல்ல கிளம்பியவர்கள்.., சந்திரன் வராததை புரிந்து கொண்டு “வா பெரியவனே..” என ஆச்சார்யா அழைக்கவும்

இல்லப்பா.., நான் இங்கே இருக்கேன்.,

சந்திரன் மேடைக்கு வரமாட்டேன் எனவும் கோவமான சுபத்ரா., இப்போ “உங்க புள்ள” மேடைக்கு வரலைன்னா..? நான் இங்கயே இப்படியே எல்லாத்தையும் விட்டுட்டு கிளம்பிடுவேன்., என்று உறுதியாக சொல்லவும்..,

இவ கண்டிப்பா செஞ்சாலும் செய்வா..,

ஏன் எல்லா இங்கேயே நிக்கிறீங்க..? வாங்க போலாம்.., பன்க்ஷனுக்கு லேட் ஆச்சு.., என்றபடி சந்திரன் முதல் ஆளா மேடையேறவும்..,

“என் மாமனார் ரொம்ப பாவம்டா சாமி..! தங்கச்சிகிட்டயும், மககிட்டயும் மாட்டிட்டு படாதா பாடு பட்ரார் மனுஷன்..,” என நினைத்தவாறே அவர்களுடன் மேடையேறினான் ஆகாஷ்.

விடாமல் போன் ஒலிக்கவும் கண்ணை கூட திறக்க முடியாமல்.., தூக்க கலக்கத்தனுடனே "ஹலோ.." என்றாள் ஹர்ஷினி.,

ஹேய்..! “என்னடி.,” தூங்கிட்டு இருக்க..? அதிர்ச்சியுடன் கிசுகிசுப்பாக ஆகாஷின் குரல் ஒலிக்கவும்.., ஒரு நொடி புரியாமல் விழித்த ஹர்ஷினி பின்பே வேகமாக எழுந்து அமர்ந்தாள்.,

உடம்பு சரியில்லையா ஹர்ஷ்..? இல்லை.., எனக்கே தெரியாம தூங்கிட்டேன்., சரி சீக்கிரம் வா..,

இதோ 5 நிமிஷம்.., என்றவள் வேகமாக பிரஷ் அப் செய்து கொண்டு தயாராகி அவசரமாக பங்க்ஷன் நடக்குமிடம் வந்தாள்.

சுபத்ரா எல்லோரையும் வரவேற்று "வெல்கம் ஸ்பீச்" பேசிகொண்டிருக்கும் சமயத்தில் தான் ஆகாஷ் பொறுக்க முடியாமல் ஹர்ஷினிக்கு அழைத்து விட்டான்.,

ஆச்சார்யாவிற்கு அருகில் தான் ஆகாஷ் அமர்ந்து இருந்ததால் அவருக்கும் புரிந்தது தான் என்றாலும்.., அவரின் “மனநிலை காரணமாக..,?” ஒன்றும் கண்டு கொள்ளாதவராக அமர்ந்து இருந்தார்.

"தேவியின் மறைவுக்கு பிறகு..," அவர் டான்ஸ் அகாடமி வந்ததே இல்லை., அவர் கண்டிப்பாக வரவும் மாட்டார்.., என தெரிந்ததாலே சுபத்ரா., அவரை கேட்காமலே.., "இன்விடேஷன் கார்டில் சீப் கெஸ்டாக" அவரின் பெயரை போட்டு விட்டார்.

சுபத்ராவிடம் மேலும் “கசப்பை.,” ஏற்படுத்தி கொள்ள விரும்பவில்லை ஆச்சார்யா.., அதனாலே வேறு வழி இல்லாமல் வந்தவற்கு கசப்பும்.., இனிமையும்.., கலந்த பழைய நினைவுகளே..,

ஆகாஷும் அவரின் மன நிலைய புரிந்து கொண்டான்., அவர் கடந்த வந்த பாதையை முழுவதும் தெரிந்தவன்.., "அவரவர் காரணங்கள்., நியாங்கள் அவரவர்களுக்கு.," என்னும் எண்ணம் இருந்ததாலே., ஆகாஷிற்கு அவரின் மேல் எப்பொழுதும் "கோவம்" கொள்ள தோன்றியதே இல்லை..,

மேடைக்கு அருகில் வரும்போதே ஜெய் ஆகாஷ பார்த்துவிட்டாள் ஹர்ஷினி. தான் கற்பனையில் பார்த்ததைவிட "கோட் சூட்டில்" இன்னும் இன்னும் கம்பீரமாக..! ஆணழகனாக.., மயக்கும் புன்னகையுடன் அமர்ந்து இருந்த தன்னவனை பார்க்கும் பொது.., ஹர்ஷினியின் மனது தன் கோவங்களை எல்லாம் மறந்து அவனிடம் சரணடையவே விரும்பியது.,

உள்ளுணர்வு உந்த ஹர்ஷினி இருக்குமிடம் பார்த்த ஆகாஷ் கோவத்தில் பல்லை கடித்தவன்., போன் எடுத்து வேகமாக அவளுக்கு அழைக்கவும் செய்தான்..,

அவனையே பார்த்து கொண்டு இருந்ததால்.., தன்னை பார்த்தவுடன் அவன் முகத்தில் தீடிரென்று தோன்றிய கோவம் எதனால்..? என்று புரியாமல் அவனின் கால்ஐ அட்டென்ட் செய்த ஹர்ஷினி.,

என்னடி டிரஸ் இது..?

ஏன் இந்த ட்ரேஸ்க்கு என்ன..?

என்னவா பங்க்ஷன்க்கு போடற ட்ரெஸ்ஸாடி இது..? இளஞ்சிவப்பு நிறத்தில் நார்மலான ஒரு டாப் அதோடு வெள்ளை நிறத்தில் லெகின்ஸ் இது தான் அவள் உடை..,

எனக்கு இதுவே போதும்.., ஏன் நான் இந்த ட்ரெஸ்ஸில் இருந்தா என்ன பாக்க மாட்டாரா இவர்..? என மனம் முறுக்கி கொண்டது ஹர்ஷினிக்கு.,

அவளின் முகத்தில் இருந்தே அவளின் எண்ணத்தை புரிந்து கொண்ட ஆகாஷ்., "இவளை..!"

போய் ஒழுங்கு மரியாதையா ஒரு நல்ல சாரீ கட்டிட்டு வா..,ஹர்ஷினி முறைத்தவாறே அசையாமல் நிற்கவும்.,

இப்போ நீ போகலேன்னா நான் மேடையை விட்டு கீழ இறங்கி எல்லாரும் பாக்கற மாதிரி நேரா உன்கிட்ட தான் வருவேன் பாத்துக்கோ..,

அப்படி வேண்டாந்தானே.., அதனால அப்பறம் வந்து என்னை முறைச்சுக்கோ., இப்போ சீக்கிரம் போடி.., என்றவன் கால்ஐ கட் செய்து விட்டான்.

எப்ப பாரு என்ன மிரட்டியே காரியம் சாதிக்க வேண்டியது என மனதுக்குள் அவனை திட்டு கொண்டே சென்ற ஹர்ஷினி.., பேபி பிங்க் நிறத்தில் டிசைனர் சாரீ அணிந்து கொண்டு அதற்கேற்ற மிதமான அலங்காரத்துடன் தயாராகி வந்தவள் அமைதியாக கீழே ரேணுகாவின் பக்கம் அமர்ந்து கொண்டாள்.

ஆச்சார்யாவிற்கு பேச விருப்பம் இல்லாததால் அவருக்கு பதிலாக சந்திரன் தான் பேசினார்., அவர் பேசி முடிக்கவும் ஜெய் ஆகாஷ பேச அழைத்தனர்.,

ஹர்ஷினியை தீர்க்கமாக பார்த்து கொண்டே ஆகாஷ் பேச ஆரம்பிக்கவும்.., ஏதோ "தனக்கு பிடிக்காததை தான் செய்ய போகிறான்" என புரிந்து கொண்ட ஹர்ஷினிக்கு மனதுக்குள் புயல் அடிக்க ஆரம்பித்தது.,

வந்திருந்த அனைவரைக்கும் முறையாக வணக்கம் செய்தவன்.. பின் சுபத்ரா பற்றி., டான்ஸ் அகாடமி பற்றி., என பொதுவாக பேசியவன் முடிக்கும் பொழுது..,

ஜெய் ஆகாஷ் உன்கிட்ட எல்லாரும் ரீசெண்டா கேட்கற கேள்வி தான் நானும் கேக்கபோறேன்..?

எப்போ கல்யாணம்,,? வீட்ல தீவிரமா பொண்ணு பாக்குறாங்கன்னு கேள்வி பட்டோம் என்று சுபத்ரா கேட்கவும்..,

வந்திருந்த அனைவரும் கரகோஷத்தோடு “வீ நீட் அன்செர்.., சொல்லுங்க.., சொல்லுங்க..”, என ஆர்பரிப்புடன் கத்தவும்..,

ஜெய் ஆகாஷ் மெலிதாக சிரித்து கொன்டே., ஹர்ஷினியை பார்த்தவாறே இன்னிக்கு கண்டிப்பா நானே சொல்றதா தான் இருந்தேன்.., எனவும் ஆச்சார்யா, சந்திரன் உட்பட அனைவரும் அவனை எதிர்பார்ப்புடன் பார்த்தனர்..! என்றால் ஹர்ஷினி தட தடக்கும் இதயத்துடன் பார்த்தாள்.,

அவளின் தவிப்புடன் கூடிய இறைஞ்சலான பார்வையை புரிந்து கொண்ட ஆகாஷ் "வழுக்கும் தன் மனதை இழுத்து பிடித்து" அவளின் புறம் இருந்து பார்வையை திரும்பியவன்.,

உறுதியான குரலுடன் “நெக்ஸ்ட் மந்த் எண்ட்ல.., என்னோட மேரேஜ் இருக்கும்..,” என்றான்.

“பொண்ணு யாருன்னு” சொல்லுங்க.., “லவ் மேரேஜா..? அரேஞ் மேரேஜா..,?” என அனைவரும் மறுபடியும் கத்தவும்..,

சுபத்ராவும் ஆமா இதுக்கு கண்டிப்பா பதில் வேணும் என்றார்.,

“உண்மை.,” என்னனு தெரியாமல் என்னையே மாட்டி விடறாங்க.., இவங்களை என மனதுக்குள் சுபத்ராவை தாளித்து கொண்டிருந்தாள் ஹர்ஷினி.

சுபத்ராவின் கேள்வியை கேட்டவுடன் ஆகாஷ் சிரிப்புடன் “லவ் மேரேஜ் தான்.., 9 வருஷ காதல் எங்களோடது.”,

ஆனா “பொண்ணு யாருங்கருது மட்டும் சஸ்பென்ஸ்..”, என்று ஹர்ஷினியை பார்த்தவாறே சொன்னவன் குறும்பாக கண் அடிக்கவும் செய்தான்..!

.........................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்

என்னுள் சங்கீதமாய் நீ 9 போஸ்ட் பண்ணிட்டேன், எல்லாரும் படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க ப்ரண்ட்ஸ்..
thank you for your support ...
 
Last edited:

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 10



நீங்க மேடையில் சொன்னதுக்கு என்ன அர்த்தம்ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..? அதுவும் இல்லாம எங்ககிட்ட சம்மதமும் கேட்காம நீங்க இப்படி பப்லிக்ல சொன்னதும் தப்பு.., என்று டின்னெர் சாப்பிடும் போது சந்திரன், இந்திரன் உடன் இருக்க ஆச்சார்யா கொஞ்சம் கோவமாக கேட்கவும்.,

கண்டிப்பா கேட்டிருக்கணும்.. தப்பு தான் ஒத்துக்கறேன்.., ஆனா "டான்ஸை தவிர.., உங்களுக்கு என்கிட்ட பிடிக்காதது வேற எதாவது இருக்கா..?" ஆகாஷ் பொறுமையாக பேசவும், நிதானமான ஆச்சார்யா,

இல்லை தான்., ஆனா இது எப்படி சாத்தியம் ..? டான்ஸ்..? ஹர்ஷினி..?

ம்ம் டான்ஸ்..? "ஹர்ஷினிக்காக என்னால டான்ஸை விட முடியும்..", கண்டிப்பா கொஞ்சம் வருத்தமா இருக்கும் தான்..,என்று சொல்லும் போதே மனது மிகவும் வலித்தது ஆகாஷிற்கு.,

எத்தனை போராட்டம். கஷ்டம் எல்லாம் கடந்து, மேலும் மேலும் உயரும் நிலையில் இப்படி ஒரு முடிவு..? என்பது தனக்கு வாழ் நாள் முழுவதுக்குமான மிக பெரிய ஆறாத ரணமே.,!

ஆனால் ஹர்ஷினி..! அவள் இல்லாமல்.., ஏன் அப்படி யோசிக்க கூட முடியாதே...!

கண்டிப்பா ஹர்ஷினி ஒத்துக்க மாட்டா..? ஆச்சார்யா உறுதியாக சொல்லவும்

ஒத்துக்க மாட்டா தான்., ஆனா நானும் இந்த முறை எக்காரணத்தை முன்னிட்டும் “என் முடிவுல இருந்து பின் வாங்கறதா இல்ல.,” ஆகாஷின் குரல் மிக உறுதியுடன் ஒலித்தது.,

உங்க வீட்ல எப்படி..? சந்திரன் கேள்வியாக இழுக்கவும்

சொல்லிட்டேன்.., டைம் கேட்டிருக்காங்க.., சொன்ன ஆகாஷின் குரலில் கொஞ்சம் வருத்தம் தெரிந்தது.

"அம்மாக்கு.." உங்க விஷயம் தெரிஞ்சு கொஞ்சம் பெரிய பிரச்னை ஆகிருச்சி, தாரணி ஹர்ஷினியிடம் சொல்லவும்

பெரிய அதிர்ச்சி எல்லாம் இல்ல ஹர்ஷினிக்கு., வீட்டில் சொல்லாமல் கண்டிப்பாக மேடையில் சொல்லிருக்க மாட்டான்..,

ஆனா ஏன் இப்படி..? என்ன அவசரம்..?

அம்மா அண்ணாவை எப்பவும் போல பொண்ணு பாக்க கூப்பிடவும் அண்ணா பொறுமையா தான் “வேண்டாம்” சொன்னாங்க..,

ஆனா இந்த டைம் அம்மாக்கு ரொம்ப கோவம் வந்துருச்சி., எப்பவும் இப்படியே சொல்ற இன்னிக்கு கண்டிப்பா பொண்ணு பாக்க போயே ஆகணும்ன்னு சொல்லி சண்டை போடவும் தான் டென்ஷனான அண்ணா சொல்லிட்டாங்க..,

அண்ணா சொல்லிட்டதும் நல்லதா போச்சு., இன்னும் எத்தனை நாளைக்கு தான் நீங்க ரெண்டு பெரும் உங்க கல்யாணத்தை தள்ளி போட முடியும்.,

அம்மாக்கு கொஞ்சம் வருத்தம் தான்., ஆனா கண்டிப்பா ஒத்துக்குவாங்க., அதனால நீங்க பீல் பண்ணாதீங்க.., ஹர்ஷினியின் முகம் என்னவோ போல் இருக்கவும் தாரணி ஆறுதலாக சொன்னாள்.

ஹர்ஷினிக்கு புரிந்தது “டென்ஷனில் எல்லாம் இல்லை., சொல்ல வேண்டும் என்ற முடிவோடுதான் சொல்லிருக்கிறான்” என்று, அதனால் எதுவும் சொல்லாமல் அமைதியாக தலையை மட்டும் ஆட்டினாள்.

அக்கா.. “மேனகா அத்தை.,” கூப்புடுறாங்க.., அபி சொல்லவும் நான் வரேன்னு சொல்லு என்றவள்

தாரணியிடம் “அண்ணா.,” உனக்காக வெயிட் பன்றாங்க பாரு.. நீங்க போய் முதல சாப்புடுங்க., பாப்பாவை ஹாசினி பாத்துப்பா..,

அதனால நீ பொறுமையா சாப்புடு., சரியா..? நான் இதோ வரேன்., என்றவள் செர்வரிடம் அவர்களை கவனிக்கும் படி சொல்லி விட்டே சென்றாள்.,

என்னடி என்னவோ போல இருக்க..? ஏதாவது பிரச்சனையா..? ரேணுகா, மாலதி, உடன் இருக்க மேனகா கவலையாக கேட்கவும்., கொஞ்சம் "டயர்டு தான் அத்தை.."

இல்லை., வேற ஏதோ இருக்கு..? ரேணுகா மகளை அறிந்தவராக கேட்க, மாலதியும் ஆமா., சொல்லு ஹர்ஷினி.., என்றார் வற்புறுத்தலாக.,

“ம்மா, சித்தி” என்ன இருக்க போகுது., அதெல்லாம் ஒண்ணுமில்ல., வாங்க முதல்ல சாப்புடுங்க.., அத்தை., எங்க மாமா..?

அவர்.. அங்க தெரிஞ்சவங்க கிட்ட பேசிட்டுருக்கார்.., நிஜமாவே ஒண்ணுமில்லயே ஹர்ஷி..? சந்தேகமாக மேனகா விடாமல் கேட்கவும்

அதெல்லாம் ஒண்ணுமில்ல அத்தை., நீங்க மூணுபேறும் பர்ஸ்ட் சாப்புடுங்க.., வெய்ட்டரை கூப்பிட்டு மூவருக்கும் உணவு கொண்டு வர செய்தவள் “நீங்க ஆரம்பிங்க..,” நான் இதோ வந்துடுறேன்.., என்றவள் வேகமாக சுபாவின் ரூமிற்கு வந்துவிட்டாள்.

மூவரும் தன் பேச்சை நம்பவில்லை., என புரிய தான் செய்தது ஹர்ஷினிக்கு., ஆனால் என்ன செய்ய..? என்ன முயன்றும் முகத்தை நார்மலாக வைக்க முடியவில்லையே.,!

அங்கு டின்னெர் டேபிளில் “ஆச்சார்யா, சந்திரன், இந்திரன் உடன் ஆகாஷ் தீவிரமாக பேசி கொண்டிருப்பதையும்.,” கவனித்தே இருந்தாள்., என்ன பேசுவார்கள்..? என்றும் உறுதியாக தெரியும் தான்.,

"தாத்தாவின்..," மேல் எந்தளவு கோவமோ., அதை விட அதிகமாக வருத்தமும், ஆற்றாமையே., எங்களுடைய உண்மையான காதலை புரிந்து கொண்டு., "எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் எங்களை சேர்த்து வைப்பார்.," என்று மனதில் இருந்த கொஞ்ச நம்பிக்கையும் உடைந்து விட்டது ஹர்ஷினிக்கு.,

எனக்காக.., எங்களுடைய காதலுக்காக.., ஆகாஷ் டான்ஸை விட முடுவெடுத்து விட்டான்..! என்று உறுதியாகிவிட்டது. இனி மேல் தான்.., நான் இன்னும்.. இன்னும்.. உறுதியாக இருக்க வேண்டும்..,

அவருடைய வெறுப்புக்காக ஆகாஷ் டான்ஸை விட வேண்டும் என்று நிர்பந்திப்பது, அதுவும் தன்னை வைத்தே நிர்பந்திப்பது.., என்பது ஏற்று கொள்ளவே முடியாதது..,

அவனுடைய இத்தனை வருட உழைப்பை, சாதனையை, மிக பெரிய அங்கீகாரத்தை "ஒன்றுமே இல்லாமல் செய்வது" என்பது மன்னிக்கவே முடியாத ஒன்றும் கூட..,

இதற்காகவா இத்தனை போராட்டம்..?

என்னுடைய காதலால் "ஜெயின் நிலை உயர்ந்தது.," என்பதுதான என்னுடைய காதலுக்கு.., கிடைத்த மிக பெரிய வெற்றியாக., கர்வமாக இருக்குமே தவிர, “இந்த முடிவு என்பது கண்டிப்பாக எங்கள் காதலை கவுரவிக்காது..!”

ஜெய் எங்களுடைய காதலுக்காக., இந்த முடிவை எடுக்கும் போது..! நான் எப்படி அமைதியாக இருக்க முடியும்.?

அதுவும் தன்னை., "தன் காதலை வைத்து தானே..?" அவனுக்கான அடையாளத்தை அவனிடமிருந்து பறிக்க எண்ணுகிறார்கள்., அதுவே இல்லை என்றால்..? என கோவத்தில், இயலாமையில் விபரீதமாக யோசித்தாள் ஹர்ஷினி..,!

ஹர்ஷினி என்னாச்சு உனக்கு.., ஏன் இங்க வந்து உக்காந்திருக்க..?

அதுவரை என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்த ஹர்ஷினி., சுபத்ரா வந்து கேட்கவும் சும்மா தான் அத்தை.., என்றாள்.

இல்ல “அண்ணி..” நீ எதோ சரியில்ல சொல்ராங்க.., உன் முகமும் எப்படியோதான் இருக்கு.., ஆராய்ச்சியாக அவளின் முகத்தை பார்த்தவாறே சுபத்ரா விடாமல் கேட்கவும்

கொஞ்சம் டயர்ட் தான் அத்தை .., வேற ஒண்ணுமில்ல..,

சரி வா சாப்பிட போலாம்.., கெஸ்ட் எல்லாம் கிளம்பிட்டாங்க.., தாரணி வேற உன்கிட்ட சொல்லிட்டு போகணும்ன்னு வெயிட் பண்ணிட்டுருக்கா.., என்று கூறியவாறே அவளை கையோடே அழைத்து வந்தார்.

வந்திருந்த கெஸ்ட் எல்லாம் கிளம்பியிருக்க இவர்கள் குடும்பமும், ஆகாஷ், தாரணி குடும்பம் மட்டுமே இருந்தது.

“அக்கா.. எங்க போன..? செம பசி.., வா சாப்பிடலாம்., உனக்காகத்தான் வெயிட்டிங்., ஹாசினி சொல்லவும்

ஏய்.., பொய் சொல்லாத..,? அப்பவே கார்த்திக் உனக்கு செடிக்கு அந்த பக்கம் ஊட்டிவிட்டது எந்த கணக்கு..? என அபி சத்தமாக சொல்ல சுற்றியிருந்த அனைவரும் சிரிக்கவும் ஹாசினிக்கு வெட்கம், கோவம் ஒன்றாக வந்தது.,

கார்த்திக்., போன் பேசுவது போல் வேகமாக அங்கிருந்து செல்லவும் “மச்சான்..” ரிங்கே வரலை.., நக்கலாக அபி சத்தமாக சொல்லவும்

ரேணுகா அதட்டலாக ஷ்.. சும்மா இரு அபி.., தாத்தா வரார் பாரு.., ஆச்சார்யா, இந்திரன், சந்திரன் உடன் ஆகாஷும் வந்து கொண்டிருந்தான்.

பக்கத்தில் வரும் போதே அவளின் முகத்தில் இருந்த கோவத்தை கண்டு கொண்ட ஆகாஷ் “இவ கோவத்துல எந்த பிரச்சனையும் பண்ணாம இருக்கணும்.,” என நினைத்தவாறே வந்தான்,

எங்க போன ஹர்ஷினி..? ஆச்சார்யா கேட்கவும், ஹர்ஷினி அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு பக்கமாக பார்த்தபடி நின்றாள்.

"ஹர்ஷினி..," என்று மேனகா, ரேணுகா இருவரும் ஒரே குரலாக அதட்டினார்கள்..,

தாத்தா., உன்னைத்தான் கேட்குறாரு ஹர்ஷினி..? என்று ரேணுகா கொஞ்சம் கடுமையாக சொன்ன பிறகும்.,ஹர்ஷினி பதில் சொல்லாமல் தான் நின்றாள்.

ஆச்சார்யா, ஆகாஷ பார்த்த பிறகு என்ன முயன்றும் தன் முகத்தில் தோன்றும் அதிக படியான கோவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை ஹர்ஷினியால்.

அவள் அப்படி நிற்கவும் கோவமான ஆகாஷ் “இது என்ன உதாசீனம்..?" என்றே முறைத்து பார்த்தான்.

அவளின் முகத்தில் இருந்தே அவளின் கோவத்தை புரிந்து கொண்ட ஆச்சார்யா., முதல்ல போய் சாப்புடு ஹர்ஷினி.., சுபா, அபி, ஹாசினி நீங்களும் போய் சாப்ட்டு வாங்க, டைம் ஆச்சு கிளம்பலாம்., என்று பிரச்சனை ஆரம்பிக்கும் முன்னே கிளம்பிட பார்த்தார்.

அப்பொழுதும் ஹர்ஷினி அசையாமலே கோபத்துடன் நிற்கவும்.,

சுபத்ரா யோசனையாக என்ன ஆச்சு ஹர்ஷி..? ஏதாவது பிரச்சனையா..? என ஆச்சார்யாவை சந்தேகமாக பார்த்தவாறே கேட்கவும்..,

நீங்க முதல்ல போய் சாப்புட்டு வாங்க., வீட்ல போய் பேசிக்கலாம்., என்று இந்திரன் கொஞ்சம் அவசரமாக சொன்னார்.

அப்போ வீட்ல போய் பேசறதுக்கு என்னமோ இருக்கு அப்படித்தானே..? இவர்கள் கண்டிப்பாக ஏதோ செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட சுபத்ரா முறைப்புடன் கேட்கவும்,

சொல்றதை முதல்ல செய்ங்க.., போய் சாப்புட்டு வாங்க., அப்பறம் பேசிக்கலாம் என்று ஆச்சார்யா சொல்லும் போதே

ஏன் இப்போ பேசினா என்ன..? என்று தன் கோவத்தை அடக்க முடியாமல் ஆச்சார்யாவை பார்த்து நேராகவே கேட்டு பிரச்சனையை ஆரம்பித்து விட்டாள் ஹர்ஷினி.

ஏன் இவ்வளவு கோவம்,,? என்ன ஆச்சு..? என்று எல்லோரும் அவளின் கோவத்தில் என்னமோ? ஏதோ? என்று புரியாமல் பார்த்து கொண்டு நின்றனர் தாராணி உட்பட .,

இது பேசும் இடமும் இல்லை, அதற்கான நிதானமும் ஹர்ஷினியிடம் இல்லை என்று புரிந்து கொண்ட ஆச்சார்யா பொறுமையுடன் “வீட்ல போய் பேசிக்கலாம் ஹர்ஷினி.,” என்றார்.

எனக்கு இங்கேயே., இப்பவே தான் பேசணும்., "விட்டேனா பார் உங்களை..," என்ற பிடிவாதத்துடன் ஹர்ஷினி நிற்கவும்.,

என்ன தான் ஆச்சு ஹர்ஷி..? சொல்லேன்., அவளின் நிதானமில்லா கோவத்தை உணர்ந்து சுபத்ரா கவலையுடன் கேட்கவும்,

அவர் கிட்ட கேளுங்க அத்தை..? அவர் செஞ்சிருக்குற நல்ல வேலையை..? நெஞ்சை நிமித்திக்கிட்டு சொல்லுவார், என்று கோவத்தில் கத்தவே செய்தாள் ஹர்ஷினி.

கோவத்தில் மூக்கு விடைக்க, கண் எல்லாம் கலங்கி, சிவந்த முகத்துடன் ஆங்காரமாக நின்ற ஹர்ஷினியை பார்த்த அனைவரும் அவளின் அதீத கோவத்தில் "இருவருக்கும் ஏதாவது பெரிய பிரச்சனையோ..," என்று பயந்து போயே நின்றனர்.,

ஆகாஷ் அவளின் கோவத்தை எதிர்பார்த்தே இருந்தான் தான்., ஆனால் இங்கேயே இப்படி நடந்து கொள்வாள் , என்று நினைக்கவில்லை., இப்போ நான் பேசினா., கண்டிப்பாக இன்னும் அதிகமா தான் கோவப்படுவா., என்று தெரிந்ததால் முடிந்தவரை அமைதியாக இருக்க முயன்றான்.

என்னடி ஆச்சு..,? ஏன் இவ்ளோ கோவம்..? ரேணுகா மகளின் கையை பிடித்து கலங்கிய குரலில் கேட்கவும், “ம்மா..” என்னை யாரும் எதுவும் கேக்காதீங்க., அவரை கேளுங்கன்னு தானே சொல்றேன்..,

என்னப்பா.., பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்..? மேனகா கவலையாக ஆச்சார்யாவிடம் கேட்கவும்..,

இப்போ எதுவும் பேச வேண்டாம்., எல்லாரும் கிளம்புங்க, வீட்ல போய் பேசிக்கலாம்.., தம்பி நாம அப்பறம் பேசலாம் என்று ஆச்சார்யா ஆகாஷிடம் சொல்லி கொண்டிருக்கும் போதே

அவர்கிட்ட பேச இன்னும் என்ன இருக்கு..? அதான் எல்லாம் சாதிச்சிட்டேங்களே..?

அவரோட இத்தனை வருஷ உழைப்பை, போராட்டத்தை, கஷ்டத்தை ஒண்ணுமே இல்லாம பண்ண..! உங்களுக்கு எப்படி மனசு வந்தது..?

நீங்க யார் முதல்ல அவருக்கு..? சொல்லுங்க..?

இப்படி நடந்து விட கூடாதென்று தானே இத்தனை வருடம் போராடினேன்., ஆனால் முடிவில் எல்லாமே ஒன்றும் இல்லாமல் போய்விட்டதே..! என்று கோவம் , ஆற்றாமை, இயலாமையை தாங்க முடியாமல் வெடித்து கொண்டிருந்தாள் ஹர்ஷினி.

ஹர்ஷினியின் பேச்சால் ஆச்சார்யாவின் முகத்தில் தோன்றும் வேதனைய பார்த்த ஆகாஷ்., இதற்கு மேலும் இவளை விட்டால் ஆகாது., என்ற முடிவுடன் வேகமாக அவளின் அருகில் வந்தவன்,

இதுக்கு அப்பறம் “ஒரு வார்த்தை கூட நீ பேசக்கூடாது.., புரிஞ்சுதா” என்று விரல் நீட்டி கடுமையாக எச்சரித்து விட்டு அவளின் கையை பிடித்து இழுத்து கொண்டு ஆச்சார்யாவிடம் வந்தவன்,

"நான் இதோ வந்துறேன்.," என்று விட்டு ஹர்ஷினியுடன் வேகமாக அங்கிருந்து செல்லவும்.,

அங்கிருந்த "அனைவரும் உச்ச கட்ட அதிர்ச்சியில்.!" நின்று விட்டனர். அதுவும் “சுபத்ரா பிரமை பிடித்தே..! நின்றுவிட்டார்.,

அப்போ “அக்காதான் அந்த பொண்ணா..?” என்று அதிர்ச்சியில் ஹாசினி சத்தமாகவே சொல்லவும், ஆச்சார்யா “ஆமாம்.,” என்றுவிட்டார்.


..........................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்,

என்னுள் சங்கீதமாய் நீ 10 போஸ்ட் பண்ணிட்டேன். படிச்சுட்டு உங்க மேலான கருத்துக்களை ஷேர் பண்ணுங்கப்பா... thank you ப்ரண்ட்ஸ்..
 
Last edited:

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 11



ஒரு “பங்க்ஷன்..” நடக்குற இடத்துல இப்படித்தான் நடந்துப்பியா..? அப்படியென்ன கன்ட்ரோல் பண்ண முடியாத “கோவம்..” உனக்கு..?

அதுவும் உங்க “தாத்தாட்ட..” வேற கொஞ்சம் கூட மரியாதை இல்லாம., அந்த பேச்சு பேசுற..?

இதுல என்ன தைரியம் உனக்கு..? நான் யாரு அவருக்குன்னு வேற கேட்குற..? ஏன் நான் அவருக்கு யாருமே இல்லங்கறியா..?

என்ன நினைச்சு இந்த கேள்வியை கேட்ட நீ..? பதில் சொல்லுடி..? என்று ஆகாஷ் கேட்க., கேட்க., ஹர்ஷினிக்கு கோவம் மறைந்து., “விரக்தி..,” தான் தோன்றியது.

இனி தான் “ஆச்சார்யாவுடன் மட்டுமல்ல., ஆகாஷுடனும் தான்., அவள் மல்லு கட்ட வேண்டும் என்று”, என்று புரிந்ததால் மனதளவில் ஓய்ந்து போனவளாக, அருகில் இருந்த சேரில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டாள்.,

அவள் குனித்திருந்ததால் அவளின் விரக்தியை புரிந்து கொள்ள முடியாத ஜெய் மேலும் பேசினான்.,

இதுதான் "பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங்க்" உனக்கு..! இனிமேல் இது சம்மந்தமா ஒரு வார்த்தை கூட அவர்கிட்ட நீ பேச கூடாது..?

எது கேட்கிறதா இருந்தாலும் என்கிட்ட தான் நீ கேட்கணும்.., புரிஞ்சுதா..? அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..?

இவ்ளோ நேரம் அந்த குதி குதிச்ச..! இப்போ எனக்கு பதில் சொல்லுடி.., என்று ஆகாஷ் கோவத்தில் பேச.. பேச.. ஹர்ஷினிக்கு எந்த வருத்தமும் தோன்றவில்லை..

மாறாக "மனது முழுவதும் எதிர் மறை எண்ணங்களே..", என்னை காதலிக்காமல்.., இருந்திருந்தால் ஆகாஷிற்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லையே..?

ஆனால் இப்பொழுது “என் காதலே..” அவனின் வளர்ச்சிக்கு மிக பெரிய தடை கல்லாக உள்ளதே..! தாத்தா மாறுவாரா..? என்பதும் மிக பெரிய கேள்விக்குறி..?

எந்த சூழ்நிலைலும் நாங்கள் இருவருமே.., எங்கள் “இரு குடும்பத்தையும் எதிர்த்து..” கண்டிப்பாக எதுவும் செய்ய போவதில்லை.., அதற்கு கடந்த காலங்களே சாட்சி…

இப்பொழுது.., இனி தான் என்ன செய்ய வேண்டும்.? என்பதே அவளின் தீவிரமான யோசனையாக இருந்தது.

உன்கிட்ட தானே பேசிட்டுருக்கேன்., முதல்ல என்னை நிமிந்து பாருடி..? என்று ஆகாஷ் அதட்டவும், அவனை நிமிர்ந்து பார்த்த ஹர்ஷினியின் முகத்தில் உள்ள பாவத்தை புரியாது பார்த்தவன்.,

என்னடி பார்வையே சரியில்ல..? சந்தேகமாக அவளின் முகத்தை பார்த்தவாறே கேட்டான்,

சோர்வான முகத்துடன் எழுந்து நின்ற ஹர்ஷினி “நாம ரெண்டு பேறும் மீட் பண்ணிருக்கவே வேண்டாம்..!” என்று விட்டாள்.,

ஏய்.. என்னடி சொன்ன..? என்று வேகமாக அவளை அறைய கையை ஓங்கி விட்டவன்.., அவளின் ஓய்ந்த தோற்றத்தில் ச்சே.. என்றுவிட்டான்.,

அப்படியும் அவனால் அவளின் பேச்சால் உண்டான கோவத்தை அடக்கமுடியாமல் அவளின் கையை இறுக்கி பிடித்தவாறே.,

இதுதான் கடைசி.., இனிமேல் ஒரு வார்த்தை பேசுனா உன்னை இங்கேயே நொறுக்கிருவேன்.,! என்று கடுமையாக எச்சரித்து அவளை முறைத்து நின்றான்.,

பார்க்கும் தூரத்தில் இருந்ததால்.., அனைவரும் அவர்களையே “பார்க்காமல்., பார்த்து..!” கொண்டிருந்ததால், ஆகாஷ்.., ஹர்ஷினியை அறைய கையை ஓங்கி கொண்டு கோவமாக நெருங்கும் போதே, ஏதோ பிரச்சனை..? என்று புரிந்து கொண்டு வேகமாக அவர்கள் இருக்குமிடம் வந்தனர்..,

இருவரும்.., ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு நிற்பதை கண்டவர்கள் என்னாச்சு..? என்று புரியாமல் பதட்டத்துடனும்.., அவளை அறைய கையை ஓங்கியதால் கொஞ்சம் கோவத்துடனும் பார்த்தனர்.,

ஜெய்.., “முதல்ல அவ கையை விடு..,” என்று சுபத்ரா கோபத்துடன் அதட்டலாக சொல்லவும்., ஆகாஷ்

“இனிமேல் இவ கையை எப்பவும் விட்றதா இல்ல மேம்..” என்று ஒரு இன்ச் கூட தன் கையை அசைக்காமல்.., ஹர்ஷினியை பார்த்தவாறே உறுதியாக சொன்னன்..,

ஜெய் என்ன இது..? ஆச்சார்யா கொஞ்சம் கண்டிப்புடன் கேட்கவும்.,

பேச வாய் திறந்த ஹர்ஷினி., ஆகாஷ் மேலும் தன் கையை இறுக்கி பிடிக்கவும் அவனை திரும்பி பார்த்தவள்.., அவனின் பொசுக்கும் பார்வையில்.., எதுவும் பேசாமல் கடுப்புடன் முகத்தை திரும்பி கொண்டாள்.

ஹர்ஷினி என்னடி இதெல்லாம்..? ஆச்சார்யா எல்லாம் சொன்ன பிறகும்., தன் மகளின் காதலை நம்ப முடியாமல்.., மனவருத்ததுடன் ரேணுகா கேட்கவும்

அவளின் கையை பற்றிய படியே அனைவரையும் பார்த்த ஆகாஷ் “நான் மேடையில சொன்னது ஹர்ஷினியை..” தான்.., நாங்க 9 வருஷமா லவ் பண்றோம்.,

கண்டிப்பா நீங்க எல்லாம்., “எங்க காதலுக்கு அகைன்ஸ்டா இருக்க மாட்டேங்கன்னு..” தெரிஞ்சும்., ஒரு சில பிரச்சனைகளால் எங்களால் சொல்ல முடியாம போச்சு.,

“காரணங்கள்..?” எதுவா இருந்தாலும் உங்க எல்லார்கிட்டயும் மறைச்சது கண்டிப்பா தப்பு தான்.,

ஹர்ஷினியை., நினைச்சு நீங்க நிறைய கவலை பட்டுருக்கீங்க, ஏன் நிறைய பேச்சு, மனசு கஷ்டம் கூட..,

எல்லாத்துக்கும்., எங்களால “எந்த சமாதானமும் சொல்ல முடியாது.,” ப்ளீஸ் எங்களை மன்னிச்சிருங்க.., என்று ரேணுகாவிடம்.., ஆகாஷ் உண்மையான வருத்தத்துடன் சொல்லவுமே..,

ரேணுகாவின்.., மனதில் இருந்த “ சந்தேகமும், கவலையும் பனி போல் விலகிவிட்டது”.

என்னதான் “தாரணியுடனான பழக்கம் மூலமாக..” அவர்கள் குடும்பத்தை பற்றி ஓரளவு தெரிந்து இருந்தாலும்.., ஏன் ஆச்சார்யாவுமே “நல்ல பையன், நல்ல குடும்பம்..” என்று சொன்னாலும்., மனதில் கொஞ்சம் பயத்துடனே இருந்த ரேணுகாக்கு,

ஆகாஷின் நேர்மையான பேச்சு, அவனிடம் இருக்கும் கம்பீரம், எல்லாம் பிடித்து போய்விட்டது., தன் மகளுக்கு.., “மிகவும் பொருத்தமானவன்..,” தான் என்று நிம்மதியடைந்தவர்.,

என்ன தம்பி நீங்க.., அதெல்லாம் ஒண்ணுமில்ல, என்று கொஞ்சம் மலர்ந்த முகத்துடனே சொல்லவும், “கவுத்துட்டான்..,” என்று பல்லை கடித்தாள் ஹர்ஷினி.

சுபத்ரா தன்னை “குற்றம் சாட்டும் பார்வையுடன்..,?” கூர்மையாக பார்க்கவும்.., அவரின் எண்ணத்தை புரிந்து கொண்ட ஆகாஷ்

மேம்.., உங்களுக்கு நான் “குரு.., துரோகம் பண்ணல..”

“உங்க பொண்ண லவ் பண்ணதுக்கு அப்பறம் தான்..,” நான் உங்க ஸ்டுடென்டே தவிர., உங்க ஸ்டுடென்டா ஆனதுக்கு அப்பறம்.., “நான் அவளை லவ் பண்ணல.,” என்று உண்மையை சொல்லவும்..,

சுபத்ரா.., ஆகாஷ விட்டு ஹர்ஷினியை முறைத்து பார்த்தார்., ராஸ்கல்.., “என்ன மாட்டிவிட்டுடான்..,” என்று மனதுக்குள் ஆகாஷ திட்ட மட்டுமே முடிந்தது ஹர்ஷினியால்.

ஹர்ஷினியின் கையை விடாமல் பிடித்தவாறே ஆச்சார்யாவிடம் வந்தவன் தாத்தா.., இந்த வாரத்துல உங்களுக்கு தோதுப்பட்ட நாளா சொல்லுங்க.., நான் என் குடும்பத்தோடு உங்க வீட்டுக்கு வரேன்..,

“கல்யாண தேதி உறுதி பண்ணிரலாம்..,” என்று ஹர்ஷினியை பார்த்தவாறே முடிவுடன் சொன்னான்.

அதுவரை “சார்..,” என்று கூப்பிட்டு கொண்டிருந்த ஆகாஷ்.., இப்பொழுது “உறவு முறையுடன்..,” தாத்தா என்று கூப்பிடவும் ஹர்ஷினிக்கு புரியாதான் செய்தது. இனி அவன் பின் வாங்க மாட்டான் என..,

ஆனாலும் அமைதியாக இருந்து தன் காரியத்தை சாதிக்க நினைத்தவள் எதையும் வெளிக்காட்டி கொள்ளாமலே நின்றாள்.,

இப்போதிருக்கும் சூழ்நிலையில்.., “வேறு எதுவும் பேசவேண்டாம்..” என்று தோன்றியதால்.., ஓகே.. டைம் ஆச்சு.., நாங்க கிளம்புறோம்.., என்று எல்லாருக்கும் பொதுவாக சொன்னவன்., எச்சரிக்கும் விதமாக ஹர்ஷினியின் கையை ஒரு அழுத்து அழுத்தியே விட்டு கிளம்பினான்.

ஆகாஷ் கிளம்பவும், இருக்கும் சூழ்நிலையை உணர்ந்து கொண்ட தாராணியும், ரமேஷும் எதுவும் பேசாமல்.., எல்லோரிடமும் சொல்லி கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

அவர்கள் கிளம்பியவுடன்., ஹர்ஷினியின் குடும்பத்தினர் அனைவரும் அவளை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தனர் என்றால்.., ரேணுகாவும், சுபத்ராவும்.., நீயா இப்படி..? என்று அவளை வெறித்து பார்த்தனர்.

இந்த “வீட்டு பெண்ணாய் நான் இவர்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் செய்யவில்லை…!” என்று தெரிந்ததாலே, அவளால் அவர்களின் பார்வையை எதிர் கொள்ளவே முடியவில்லை.

கடந்த வருடங்களில்.., தன்னால் இவர்கள் பட்ட “மனவேதனைய.,” முழுவதும் அறிந்தும், தன் காதலுக்காக “சுயநலமாக..,” இருந்தவளாயிற்றே.,

அப்படியிருந்தும் “எல்லாம் வீணே..!” எனும் நிலைய தான், அவளால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.

மெதுவாக திரும்பி தன் அப்பாவை பார்த்தாள், அவர் அவளை பரிவுடன், ஆறுதலாகவே பார்த்தார்.

ஒரு “அப்பாவாக..”, தான் செய்த செயல், அவருக்கு எவ்வளவு மனக்கஷ்டத்தை கொடுத்து இருக்கும்.., இருந்தாலும் இது வரை தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவே இல்லையே.,

இவை எல்லாம் ஒன்று சேர்ந்து.., “மிகுந்த மனஅழுத்தத்தை” கொடுத்தது ஹர்ஷினிக்கு .,

இப்போதிருக்கும் மனஅழுத்தத்தில் தன்னால் யாரிடமும் “தன்னிலை விளக்கமாக கூட.. ஒரு வார்த்தை சொல்ல முடியாது..” என்று புரிந்ததால்..

நான்.., உங்க யார் “பாசத்துக்கும் நியாயம் செய்யலன்னாலும் பரவாயில்ல.., ஆனா, நானே உங்க எல்லார் மனக்கஷ்டத்துக்குமே காரணமாயிட்டேன். என்னை மன்னிச்சிருங்க,,” என்று குற்ற உணர்ச்சியில் கலங்கிய குரலுடன் சொல்லவும்..,

எல்லோருக்கும் அவளின் மீது வருத்தம் இருந்தாலும், அவள் கலங்குவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதுவும் தன் பேத்தி கஷ்டப்படுவது பொறுக்குமா ஆச்சார்யாவிற்கு.., போங்க., எல்லாரும் கிளம்புங்க., நாளைக்கு பேசிக்கலாம்.,

அபி உங்களுக்கு டின்னர் பேக் பண்ணி எடுத்துக்கோங்க., வீட்ல போய் சாப்டுக்கலாம்.., என அனைவரையும் எதுவும் பேச விடாமல் .., அவர்கள் சென்னை வீட்டிற்கு கிளப்பி கொண்டு வந்துவிட்டார்.

எல்லாருக்கும் புரியத்தான் செய்தது அவரின் நோக்கம்., அது மட்டுமில்லாமல் ஹர்ஷினியின் ஓய்ந்த தோற்றமே.., அவர்களை வருத்தப்பட வைத்ததால், மேலும்.., அவளை கஷ்டப்படுத்த விரும்பாமல், அவளிடம் எதுவும் கேட்காமல் விட்டனர்.

அவனின் சென்னை பிளாட்டிற்கு வந்த பிறகும்.., ஆகாஷிற்கு, கோவம் போவேனா என்றது.., கோட்டை கழற்றி வீசியவன்.., கழுத்து பட்டனை கழட்டி விட்டு, முழுக்கை சட்டைகளை முட்டிக்கு மேல் ஏற்றி விட்டு குறுக்கும் நெடுக்குமாக சீறும் புலியென நடந்தான்..,

மீட் பண்ணிருக்கவே கூடாதுண்ணு..? எப்படி அவள் சொல்லலாம்..? எவ்வளவு திமிரு இருந்தா அப்படி சொல்லுவா..!

என் லைபிலே.., நான் அவளை பர்ஸ்ட் பாத்தது தான், பொக்கிஷமா நினைச்சிட்டிருக்க.., அவள் எப்படி சொல்லலாம்..? என கொந்தளித்து கொண்டிருந்தான் ஆகாஷ்.

அதே நேரம் ஹர்ஷினியும் தன் ரூமில் அமர்ந்து ஆகாஷின் கோவத்தை தான் நினைத்து பார்த்து கொண்டிருந்தாள். தான் சொன்னது அவனை மிகவும் வருத்தியருக்கும் தான்.,

ஆனால் அதில் எந்த தவறுமே இல்லையே., தங்களுடைய குடும்ப பிரச்சனையில்.., என்னுடைய காதலால் தானே அவன் சிக்கி கொண்டான்.,

அதை தான் நாம் மீட் பண்ணிருக்கவே கூடாதென்றும் ஆகாஷிடமும் சொன்னாள்., இருவருமே தாங்கள் முதன் முதலாக பார்த்து கொண்ட நாளை நினைத்து பார்த்தனர்.,



……………………………………………………….



தாத்தா.. காலேஜ்க்கு டைம் ஆச்சு.., சீக்கிரம் வாங்க.., என்று கத்தி கொண்டிருக்கும்போது, தன் தலையில் விழுந்த நறுக்கென்று “கொட்டில்,” திரும்பி பார்த்தவள்..,

“ம்மா.. “ எதுக்கு கொட்டுன..? என்று வலியால் தலையை தேய்த்து கொண்டே கேட்டாள் ஹர்ஷினி.

ஏண்டி.., நீ காலேஜ் போக அவர் உன் கூட வரணுமா..? அவரை தொந்தரவு பண்ணாம ஒழுங்கா நீயா கிளம்பு..,

ம்மா.. எனக்கு இன்னிக்கு தான் பர்ஸ்ட் டே காலேஜ் தெரியுமில்ல.., அவர் வந்து என்னை ட்ராப் பண்ணத்தான் நான் போவேன்..,

ஆமா.., இதோ இங்க., அடுத்த தெருவுல இருக்கிற காலேஜ்க்கு உன்னை ட்ராப் பண்ண அவரே வரணுமா உனக்கு., வர வர உனக்கு ரொம்ப கொழுப்பாயிடிச்சி.., கிளம்புடி நீயே..,

"தாத்தா.." என்று ஹை டெசிபலில் கத்திய ஹர்ஷினி., ரேணுகாவிடம் இரு உன்னை தாத்தாகிட்ட., சொல்றேன் என்று மிரட்ட வேறு செய்தாள்.

என்னாச்சு ஹர்ஷினி..? அவளின் கத்தலில் வேகமாக வந்த ஆச்சார்யா கேட்கவும்,

நான் பர்ஸ்ட் டே காலேஜ் போறதால, நீங்க தானே தாத்தா என்ன ட்ராப் பன்றேன்னு நேத்து சொன்னீங்க., ஆனா அம்மா உங்கள தொந்தரவு பன்றேன்னு.., என்னை கொட்டிட்டாங்க என்று முகத்தை அழுவது போல் வைத்து கொண்டு சொல்லவும் ,

என்ன ரேணுகா இது..? “என் பேத்தி முத நாள் காலேஜ் போகும் போது, இப்படித்தான் அவளை அழவைப்பியா..?” என்று கோவமாக கேட்கவும்,

இல்லேங்க “மாமா..” மெதுவா தான் கொட்டுனேன்., உங்களுக்கு எதுக்கு தொந்தரவுன்னு தான்..,

என் பேத்திக்கு செய்றது தொந்தரவா எனக்கு..? நீ போய் முதல்ல எங்களுக்கு டிபன் எடுத்து வை.., எனவும் ரேணுகா ஆச்சார்யாக்கு தெரியாமல் ஹர்ஷினியை கண்களால் மிரட்டி விட்டே சென்றார்.

நீ வா ஹர்ஷினி.., நாம சாப்ட்டு கிளம்பலாம், டைம் ஆச்சு என்று அவளை தோளோடு அணைத்தவாறே டைனிங் டேபிளுக்கு வந்தவர்., ரேணுகா, மாலதி உடன் இருந்து பரிமாற அவளுடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டு., அவரே அவளை காலேஜில் விடவும் செய்தார்.

.........................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்,

என்னுள் சங்கீதமாய் நீ 11 போஸ்ட் பண்ணிட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க ப்ரண்ட்ஸ்.., thank you
 
Last edited:

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 12



“KSK காலேஜ் ஆப் இன்ஜினியரிங்”. கோயம்பத்தூரில் இருக்கும் மிகவும் பிரபலமான இன்ஜினியரிங் கல்லூரிகளில் இதுவும் ஒன்று,

ஸ்கூல் லைப் முடிஞ்சுதுடா சாமி, இனி லைப் புல்லா ஜாலிதான் என்ற கலர் கலர் கனவுடன் { உண்மையாவே கனவு தான்பா., நானும் இப்படித்தான் ஏமாந்தேன்....!} கல்லூரி வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் இளஞ்சிட்டுகள் நிறைந்த வண்ண மயமான உலகத்திற்குள்.,

மிகுந்த எதிர்பார்ப்புடன்.., முதல் நாள் காலேஜ்க்கு, ஆச்சார்யாவுடன் வந்து இறங்கிய ஹர்ஷினி.. “தாத்தா., காலேஜ் முடிஞ்சு நானே வீட்டுக்கு போயிடுறேன்., நீங்க வரவேண்டாம்,

இல்லை ஹர்ஷி., உன்னை பிக் அப் பண்ணிக்க, நான் வரேன்,

வேண்டாம் தாத்தா.., “பர்ஸ்ட் டே காலேஜ்..,” அதனால எப்போ முடியும்ன்னு தெரியல., சோ நானே போய்க்கிறேன்., நடக்குற தூரம் தானே.,

அது சரிப்பட்டு வராது, நான் வேணும்னா காரை மதியமே அனுப்பிடுறேன்., டிரைவர் இங்கேயே வெய்ட் பண்ணட்டும்.,

உனக்கு எப்போ காலேஜ் முடியுதோ..? அப்போ நீ அதுலே வந்துரு என்று முடிவுடன் ஆச்சார்யா சொல்லவும்

இதற்கு மேல் ஆச்சார்யாவிடம் பேச முடியாது., என்பதால் ஓகே.. தாத்தா என்றுவிட்டாள்.

ஓகே பை ஹர்ஷினி, ஆல் தி பெஸ்ட்.,

தேங்க்ஸ் தாத்தா., ஈவினிங் மீட் பண்ணலாம் பை., என்று விட்டு காலேஜ் உள்ளே நுழைந்த ஹர்ஷினி ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தவாறே வந்து கொண்டிருக்கும் போது,

ஏனுங்க வெள்ளை சுடி அம்மணி.., என்று கூப்பிடும் சத்தம் கேட்கவும்.., நான் வைட் சுடி தானே போட்டுருக்கேன்., ஒருவேளை நம்மள தான் கூப்புடுறாங்களோ..? என்று சந்தேகத்துடன், திரும்பி அந்த மரத்தடி மேடையை பார்த்த ஹர்ஷினியின் கண்ணுக்கு முதலில் பளிச்சென்று தெரிந்தது அங்கு “தலைவனாக அமர்ந்து இருந்த ஜெய் ஆகாஷ் தான்”.

“முறுக்கு மீசையுடன், முன்னுச்சி முடி காற்றில் பறக்க, வாயில் சுவிங்கத்தை மென்று கொண்டே, ஒற்றை விரலால் தன் நோட்டை சுழற்றியவாறே அலட்சியமாக தன்னை பார்த்து கொண்டிருந்த ஜெய் ஆகாஷிடம்,

என்னயா கூப்பிட்டிங்க,,? என்று தன் “கண்களாலே…!” அவனை பார்த்து கேட்கவும், “அவள் கண்கள் பேசும்..!” வித்தையில் நோட்டை சுற்றி கொண்டிருந்த ஜெயின் கை விரல் தானாகவே நின்று விட்டது..,

தனது “ஆச்சி தேவியை..” போல் ஹர்ஷினியும் பரதத்தின் மீது ஈடுபாடும் , அர்ப்பணிப்பு கொண்டவள்..,

தனது “ஐந்தாவது வயதில்” இருந்தே தனது ஆச்சியிடம் பரதத்தை மிகுந்த ஆசையோடு கற்று கொள்ள ஆரம்பித்தவள், அவர் மறைந்த பிறகும் விடாது மேலும்., மேலும்.., கற்று கொண்டு இன்று வரை ஆடிக்கொண்டிருப்பவள்.,

அதனாலோ.. என்னவோ.. எப்பொழுதும் “அவளின் வாய் பேசுமுன்பே.., கண்கள் பேசிவிடும்”.

டான்ஸின் மீது ஈடுபாடு கொண்ட ஜெய்க்கு.. அவளின் “மை தீட்டிய கண்களில் தெரிந்த நாட்டிய பாவத்திலே..!” அவள் முறையாக பரதம் கற்றவள், என்று புரிந்து கொள்ள முடிந்தது.

அதுவரை அவளை யாரோ போல் அலட்சியத்துடன்..! பார்த்து கொண்டிருந்தவன், இப்பொழுது ஆச்சர்யத்துடன்..! பார்த்தான்.,

வெள்ளை நிறத்தில் அனார்கலி சுடி அணிந்து, மயக்கும் புன்னகையுடன் , வெள்ளை பூ தேவதையென அவர்களை பார்த்து கொண்டிருந்தவளை,

உங்களை தான்.., அம்மிணி கூப்புடுறோம்., இங்க வாங்க என்று ஜெய் ஆகாஷின் பக்கத்தில் அமர்ந்து இருந்த செல்வத்திடமிருந்து சத்தம் வரவும்..,

ஆச்சார்யா.. அவளுக்கு எப்போதும் போதிக்கும் “பாரதியின்…” நிமிர்ந்த நன்னடை..! நேர் கொண்ட பார்வையென.., எந்த விதமான பயமும் இல்லாமல் அவர்களை நோக்கி வந்தாள்,

என்னடா.., இந்த பொண்ணு “ராகிங்..,” பண்ண போறோம்ன்னு தெரிஞ்சும், இப்படி தைரியமா வரா.., என்று குமார் சொல்லவும், அங்கிருந்த இன்னொருவன் ஆமாடா., அதுவும் நாம அவளுக்கு ஏதோ “அவார்ட்.,” கொடுக்கறது போலே வரா பாரேன் என்றனர்.,

உங்க பேர் என்னங்க மேடம்..? என்று அருகில் வந்த அவளிடம் குமார் கெத்தாக கேட்கவும்

மலர்ந்த முகத்துடனே அவர்களை தைரியமாக எதிர்கொண்டவள் “ஹர்ஷினி...” என்றாள்.

அவளின் தைரியத்தில் காண்டான செல்வம்.., நாங்க எதுக்கு உங்களை கூப்பிட்டுருக்கோம் தெரியுமில்ல., என்று மிரட்டவும்

ஓஹ்.., தெரியுமே “ராகிங்..,” பண்ணதானே., என்று சாதாரணமாக சொல்லவும்,

தெரிஞ்சும் இவ்ளோ தைரியமா உங்களுக்கு., அங்க பாருங்க அந்த அம்மணி கிட்ட நாங்க பேர் மட்டும் தான் கேட்டோம்..? அதுக்கே பதில் சொல்லாம பயத்துல அழுதுட்டே நிக்கிறாங்க.., என்று பக்கத்திலிருந்த பெண்ணை கை காட்டவும்,

அழுது கொண்டிருந்த அந்த பெண்ணிடம் திரும்பிய ஹர்ஷினி.., சினேக பாவத்துடன்.. ஹாய்., நான் ஹர்ஷினி..! என்று தன் கையை நீட்டவும்

தன் அழுகையை கொஞ்சம் நிறுத்தி விட்டு ஆச்சரியமாக அவளை பார்த்த அந்த பெண், மிகுந்த தயக்கத்துடனும், பயத்துடனும் ஹர்ஷினியின் கையை பற்றியபடி “நான் ஜோதி..,” என்றாள்.,

நான் “IT பர்ஸ்ட் இயர்..” நீங்க..? எனவும் ஜோதி கொஞ்சம் சந்தோஷத்துடன் நானும் IT பர்ஸ்ட் இயர்.., தான் என்றாள்.,

என்னடா நடக்குது இங்க..? என்று அதிர்ச்சியுடன் ஒருவன் கேட்கவும், குமார் கோவமாக ஹலோ அம்மணி அங்க என்ன பேச்சு..? என்று அதட்டவும்

நீங்க தானே சொன்னீங்க… அவங்க பேரை கூட சொல்லாம அழுறாங்கன்னு., அதான் நான் “உங்களுக்கு ஹெல்ப்” பண்ணலாம்ன்னு, அவங்க பேர் மட்டுமில்ல., அவங்க எந்த டிபார்ட்மென்ட்ன்னு கூட சொல்ல வச்சிட்டேன் என்று குறும்பு சிரிப்புடன் சொல்லவும்,

IT தானே நீங்க.., நாங்களும் அதே டிபார்ட்மென்ட் பைனல் இயர் ஸ்டூடெண்ட்ஸ் தான்.., நாங்க தான் உங்க சீனியர்ஸ்..,

எங்ககிட்ட இந்த சேட்டை எல்லாம் வேண்டாம் அம்மிணி.., பாத்து நடந்துக்கோங்க.., என்று மிரட்டலாக மற்றொருவன் சொல்லவும்

ஹேய் சூப்பர்… அப்போ நீங்க தான் எங்க சீனியர்ஸா.., எங்களுக்கு எதாவது ஹெல்ப் தேவைப்பட்டா உங்ககிட்டே கேட்டுக்கலாம்.. என்ன ஜோதி..? என்று அவளையும் கூட்டு சேர்த்தாள்.,

ஐயோ நம்மள வேற இழுக்குறாளே.., இவங்க எல்லாம் ஏற்கனவே கோவமா பாக்குறாங்க.., இதுல இவ வேற இன்னும் டென்ஷன் பன்றாளே என்று மனதுக்குள் அலறலுடன் ஹர்ஷினியை கெஞ்சலாக பார்த்தாள் ஜோதி.,

டேய் இந்த அம்மிணி “நம்மள கலாய்க்குதுடா..” என்று இன்னொருவன் ஆத்திரமாக சொல்லவும்

நோ.. சீனியர்., அப்படி எல்லாம் இல்ல.., ஐ அம் சீரியஸ்.., என்ற ஹர்ஷினியின் முகம் சீரியசாக இருந்தாலும் கண்கள் குறும்பைத்தான் காட்டியது,

அவள் “கண்கள் பேசும் மொழியையே..” ஆச்சர்யத்துடன் படித்து கொண்டிருந்த ஜெய் ஆகாஷ்.., அவளின் கண்கள் வெளிப்படுத்திய நக்கல், தைரியம், குறும்பு என அனைத்தையும் கண்டுகொண்டவன்.,

சீனியர்ஸ்ன்னு கொஞ்சம் கூட பயமில்லாம.., வந்த முத நாளே எவ்ளோ தைரியமா வாயடிக்கிறா பாரு.., என்று கொஞ்சம் சுவாரசியமாகவே அவளை பார்த்தான்.

எல்லா பெண்களுக்கும் “கடவுள் கொடுத்த வரமான..! உள்ளுணர்வால்..” ஹர்ஷினியும்.., ஆகாஷின் பார்வையை உணர்ந்தே இருந்தாள்.,

அவனின் விடாத பார்வையில்.., மனதுக்குள் கொஞ்சம் படபடப்பாக இருந்தாலும் வெளியே தைரியமாகவே நின்றாள்.,

குமார் மெதுவாக ஜெயிடம்.. டேய்.., அந்த பொண்ணு நம்மளையே கலாய்க்குது, நீ அமைதியாவே பாத்துட்டு இருக்க.., என்று பல்லை கடித்து கொண்டு கேட்கவும், ஜெய் கொஞ்சம் சத்தமாகவே சிரித்து விட்டான்..

டேய்.., ஏன்டா நீயே சிரிச்சு இன்னும் நம்மள கேவலப்படுத்துற.., என்று குமார் கடுப்பாக கேட்டான் என்றால் ஹர்ஷினி, அவனின் சிரிப்பை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

என்னடா இது,,? நாம பண்றதுக்கு எல்லாரும் கோவமா இருந்தா.., இவர் மட்டும் சிரிக்கிறாரே என்ற ஆச்சரியத்துடன் கேள்வியாக அவனை பார்த்தாள்.

அப்போது பெல் அடிக்கும் சத்தம் கேட்கவும்.., “சீனியர்ஸ்.., நாங்க போகலாமா..? என்று ஹர்ஷினி கேட்கவும்., ஆகாஷ் சிரிப்புடனே “போ..” என்பது போல் கை ஆட்டினான.

அவனை குழப்பத்துடன் பார்த்தவாறே., ஜோதியும் இழுத்து கொண்டு சென்றாள் ஹர்ஷினி.

டேய்.., என்னடா ஆச்சு உனக்கு..? என்று குமாரும், மற்றவர்களும் கடுப்பாக கேட்கவும், ஆகாஷ் கிண்டலாக ஏன் உங்களுக்கு இன்னும் அசிங்கப்படணுமா..? அவ கண்டிப்பா அசரமாட்டா..,

அதுமட்டுமில்லாம ரூல்ஸ் தெரியுமில்ல நாம ராக் பண்ணதே தப்பு.., அவ மட்டும் கம்பிளைன் பண்ணா.., நமக்கு சஸ்பென்ஷன் தான்.,

அப்படி பாத்தா அந்த அம்மிணி தான் நம்மளை ராக் பண்ணிச்சு.., நாம தான் கம்பிளைன் பண்ணனும்.., கடுப்பாக மற்றொருவன் சொல்லவும்

டேய்., மெதுவா பேசுடா.., வெளிய தெரிஞ்சா நாம கஷ்ப்பட்டு மைண்டைன் பண்ற கெத்து எல்லாம் காலி..! என்று குமார் புலம்பவே செய்தான்.

சரி வாங்கடா போலாம்.., நாம தான் பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸை வெல்கம் பண்ணனும் தெரியுமில்ல.., பெல் அடிச்சு ரொம்ப நேரம் ஆச்சு.., கிளம்புங்க என்று உத்தரவாக ஆகாஷ் சொல்லவும்,

என்னது..! அந்த வாயாடி அம்மிணிக்கு நாம வெல்கம் பண்ணனுமா., அதெல்லாம் முடியாது., என்று குமார் எரிச்சலாக சொல்லவும், மற்றவர்களும் ஆமா, நீ அந்த பொண்ணு எங்களை கலாய்ச்சதை ரசிச்சு தானே பாத்துட்டு இருந்த, வர முடியாது போடா.., என்று விட்டனர்.

இப்போ என்ன..? உங்களுக்கு அந்த பொண்ணை ராக் பண்ணனும்.., அவ்வளுதானே.., சரி வாங்க.., நானே இப்போ எல்லார் முன்னாடியும் அவளை ராக் பண்றேன்.., என்று ஜெய் ஆகாஷ் சொல்லவும்

ஹேய்.. சூப்பர் மச்சி, இப்போதான் “நீ எங்க தல..!” வா போலாம்.. இன்னிக்கு அந்த பொண்ணை அலற விட்றோம்.., என்ற கொண்டாட்டத்துடன் அனைவரும் ஆகாஷுடன் சென்றனர்., {போங்க.. போங்க.. ஹர்ஷினியை பத்தி இன்னும் சரியா தெரில உங்களுக்கு}

“ஹாய் ஜூனியர்ஸ்…” என்று அழைத்து கொண்டே செமினார் ஹாலுக்குள் நுழைந்த ஆகாஷின் கேங்கை பார்த்த ஹர்ஷினி.., முகத்தில் எந்தவிதமான பாவத்தையும் காட்டாமல் எல்லாரையும் போல் மரியாதையுடன் எழுந்து நின்றாள்.

பக்கத்தில் இருந்த ஜோதி “அய்யோ., இங்கேயும் வந்துட்டாங்க” என்று மெதுவாக பயத்துடன் புலம்பவும்,

ஷ் ஷ்.., சும்மா இரு பாத்துக்கலாம், என்று ஹர்ஷினி அசால்ட்டாக சொன்னதை அவளையே பார்த்து கொண்டிருந்த ஆகாஷின் கேங் உணர்ந்து பல்லை கடித்து கொண்டனர்,

நான்.., தான் நம்ம “டிபார்ட்மென்ட் ரெப்ரெசென்ட் ஜெய் ஆகாஷ்” என்று ஆரம்பித்தவன்., காலேஜ் பற்றி, ரூல்ஸ் பற்றி பொதுவாக இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து விட்டு..,

எதாவது “ஹெல்ப் வேண்டுமென்றால்..” தன்னை கேட்கலாம் என்று முடித்து கொண்டவன்., எல்லோரையும் முன்னாள் வந்து “செல்ப் இன்ட்ரோ” கொடுக்க சொன்னான்.,

ஒவ்வொருவராக சென்று தன்னை அறிமுக படுத்தும் போது அமைதியாக இருந்த ஆகாஷ்., ஹர்ஷினியின் முறை வரவும் குறுஞ்சிரிப்புடன் அவளை பார்த்தான்,

அவனின் சிரிப்பை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் “நான் இப்படித்தான்..” என்று தைரியமாக முன்னாள் வந்து தன்னை பற்றி சொல்லி முடிக்கவும்,

ஹர்ஷினி.., நீங்க சூப்பரா “டான்ஸ் ஆடுவீங்கன்னு” கேள்விப்பட்டோம், எங்களுக்காக இப்போ ரெண்டு ஸ்டெப், நக்கல் குரலில் ஆகாஷ் கேட்கவும்,

அவனை கேள்வியாக..? ஆச்சர்யத்துடன் பார்த்த ஹர்ஷினிக்கு, அவன் குரலில் நக்கல் இருந்தாலும், கண்களில் அவளின் டான்ஸை பார்க்கும் ஆர்வம் தான் தெரிந்தது.,

அதனை புரிந்து கொண்ட ஹர்ஷினி ஏன் இப்படி..? என்று ஒரு நொடி அவனை யோசனையாக பார்த்து விட்டு,

எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் why not..? என்றவள்., மியூஸிக் என்று கேட்கவும்,

அச்சச்சோ.., “ மியூஸிக் இல்லையே” என்று கவலை படுவது போல், அவளை பார்த்து கிண்டலாக கையை விரித்தான் குமார்..,

அவர்களின் எண்ணத்தை நொடியில் புரிந்து கொண்டவள்.. என்கிட்டேயேவா…! என்று “சவால்..” பார்வை பார்த்து விட்டு,

நீங்க கவலை படாதீங்க சீனியர்.., நானே பாடிக்கிறேன், என்றவள் ஒரு நொடியில் தன்னை தயார்படுத்தி கொண்டு குரலை சீராக்கி பாடி கொன்டே ஆட ஆரம்பித்துவிட்டாள்.

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே…

விதை இல்லாமல் வேர் இல்லையே….

கிருஷ்ணா…

நிதம் காண்கின்ற வாள்கூட நிஜமில்லை…

இதம் சேர்கின்றும் கானா கூட சுகம் இல்ல…

நீ இல்லாமல் நான் இல்லையே..

என்று பாடிக்கொண்டே அபிநயம் படித்தவளின் அழகில் ஆகாஷின் கேங் உட்பட.. அனைவருமே மெய்மறந்து விட்டனர்..,

அதுவும் ஜெய் அவள் கண்கள் வெளிப்படுத்திய பாவத்தில்.., ஆடும் நளினத்தில், டான்ஸை ரசித்து ஆடிய பாங்கில் உறைந்தே நின்றுவிட்டான்!



.............................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்,

என்னுள் சங்கீதமாய் நீ 12 போஸ்ட் பண்ணிட்டேன். படிச்சுட்டு உங்க கருத்துக்களை ஷேர் பண்ணுங்க பிரென்ட்ஸ்.. thank you
 
Last edited:

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 13





என்னங்கடா இப்படி ஆயிருச்சி..? நாம அந்த அம்மிணியை ராக் பண்ண நினைச்சா..! அந்த அம்மிணி என்னடான்னா அதை வச்சே எல்லார்கிட்டயும் கிளாப் வாங்கிடுச்சு..!

நாம என்ன பண்ணாலும் அசுரமாட்டா போலே.. செல்வம் எரிச்சலாக சொல்லவும்

ஆமாடா.. ரொம்ப தைரியம் தான் அந்த அம்மிணிக்கு.., வந்த முத நாளே என்ன போடு போடுது.. கொஞ்சம் ஆச்சரியத்துடன் குமார் சொன்னான்.

என்னமா டான்ஸ் ஆடுச்சு அந்த அம்மிணி.., சான்சே இல்லை, நம்ம ஜெய் எப்படி சூப்பரா டான்ஸ் ஆடுவானோ அதே மாதிரி தான்டா அந்த அம்மிணியும் ஆடுது.. இன்னொரு நண்பனான அசோக் பிரம்மிப்பாக சொல்லவும்,

டேய் நீ எப்படி..? நம்ம ஜெய்ய அவகூட கம்பேர் பண்ணலாம்.., டான்ஸ்ன்னா நம்ம ஜெய் தான் என்று கோவத்தில் எகிறினான் செல்வம்.

ஆமாடா நீ சொன்னது தப்பு, நம்ம காலேஜ்லே டான்ஸ் அப்படின்னாலே எப்பவும் ஜெய் தான், இன்னொரு டைம் இப்படி சொல்லாதே.. என்று இன்னொரு நண்பனான மூர்த்தி சத்தமிட்டான்.

ஆனால் இவர்கள் யாருக்காக சண்டை போடுகிறார்களா..? அவன் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல என்பது போல்… எதுவும் பேசாமல் அமர்ந்து இருக்கவும், அவனின் தோளில் தட்டிய குமார், என்ன மச்சி நீ அமைதியாவே உட்காந்திருக்க..?, அவன் என்ன சொல்றான் பாத்தியா..? என்று கேட்கவும்

அசோக் சொன்னதுல கண்டிப்பா தப்பு இருக்கு, ஆனா நீங்க சொல்ற மாதிரியான தப்பு இல்ல.. என்று ஜெய் அமைதியாக சொல்லவும்,

அவன் என்ன சொல்ல வருகிறான்..? என்று புரியாமல்.. அனைவரும் அவனை கேள்வியாக பார்க்கவும்,

ஆமாடா.. அவ என்ன மாதிரி எல்லாம் டான்ஸ் ஆடலை.. என்னைவிட நல்லாவே ஆடுறா.. வெரி வெல் ட்ரைன்ட் டான்ஸர்டா அவ,

நான் எல்லாம் சும்மா அப்படியே ஆடுவேனே தவிர அவளை மாதிரி பெர்பெக்டா எல்லாம் ஆடமாட்டேன்..,

டேய் அசோக் சொன்னதே பரவாயில்ல போல.., நீ அவனுக்கு மேலே சொல்ற, எங்களுக்கு எப்பவும் நீ தான் பெஸ்ட் அவ்வளவுதான் என்று குமார் முடிவாக சொல்லவும் மற்றவர்களும் ஆமா என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது

டேய் எல்லாம் அமைதியா இருங்கடா.., நம்ம பஞ்சாயத்தை அப்பறம் வச்சுக்கலாம்.. அந்த அம்மிணி வருது என்று எச்சரிக்கையாக மூர்த்தி சொல்லவும்,

ஜெய் கொஞ்சம் “ஆர்வமாகவே..” பார்த்தான் என்றால், மற்ற எல்லாரும் முகத்தை கெத்தாக வைத்து கொண்டு திமிராக அவளை பார்த்தனர்.

படை சூழ சந்தோஷமாக பேசி கொன்டே வந்த ஹர்ஷினி.. இவர்கள் கேங்கை பார்க்கவும் குறும்பாக சிரித்தவள், அவர்களிடம் விடை பெற்று கொண்டு இவர்களை நோக்கி வந்தாள்.

அவளின் குறும்பு சிரிப்பிலே கண்டிப்பாக எதோ வம்பிழுக்கவே வருகிறாள், என்று அனைவருமே நினைத்தனர், அவர்கள் நினைத்தது சரியே என்பது போல் அருகில் வந்தவுடன்,

ரொம்ப.. ரொம்ப.. தேங்க்ஸ் உங்க எல்லாருக்கும்.. என்று சிரிப்புடன் சொல்லவும், என்னடா இது..? நமக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்லுது இந்த அம்மிணி.. கண்டிப்பா இதுல ஏதோ வில்லங்கம் தான் என்று புரிந்ததால் உஷாராக,

எதுக்கு தேங்க்ஸ்..? என்று கெத்து குறையாமல் கேட்டான் குமார்.

உங்களுடய “மேலான ராகிங்கால் தான்” {சொல்லும் போதே வேண்டுமென்றே இழுத்து நக்கலாக சொன்னாள்} எனக்கு ஒரே நாள்ல இத்தனை ப்ரண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க..

அந்த “உங்க மகத்தான சேவைக்கு தான்..” இந்த தேங்க்ஸ் என்று குறும்பாக சொல்லவும்,

டேய் மச்சி.. இந்த அம்மிணிக்கு இருக்குற லொள்ளை பாரேன், நம்மளை ரொம்ப டேமேஜ் பண்ணுது, இதுக்கு கண்டிப்பா நீ எதாவது பண்ணனும் பாத்துக்கோ… என்று செல்வம் வேண்டுகோளாக ஆகாஷிடம் முணுமுணுத்தான்.

அவளின் அடாவடியான குறும்பில் ஆகாஷிற்கு கோவம் வரவில்லையென்றாலும்.., தன் நண்பர்களுக்காக வேண்டி முகத்தை கோவமாக வைத்து கொண்டவன்,

உனக்கு இவ்வளவு ப்ரண்ட்ஸ் கிடைக்க.. நாங்க தானே ஹெல்ப் பண்ணிருக்கோம், அதனால “இன்னிக்கு எங்க எல்லாருக்கும் மதியம் லன்ச் நீ தான் வாங்கி கொடுக்கணும்” என்று சொல்லவும்,

அதிர்ச்சியான ஹர்ஷினி.., என்ன நான் எதுக்கு வாங்கி கொடுக்கணும்..?, அதெல்லாம் முடியாது,

நீ எதுக்கு வாங்கி கொடுக்கணுமா..? எங்க மேலான ராகிங்கால் தானே {அவளை போலவே இழுத்து சொன்னவன்} உனக்கு இவ்வளவு ப்ரண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க,

எங்களுடைய அந்த “மகத்தான சேவைக்கு.. பீஸ் தான் இந்த லன்ச்” என்று அதிகாரமாக சொல்லவும்,

அவனின் அதிகாரத்தில் கண்ணை சுருக்கி கோவமாக முறைத்தவளை, மனதுக்குள் கொஞ்சம் ரசிக்கவே செய்தான் ஜெய்.

ஆமா.. நீ தான் எங்களுக்கு வாங்கி கொடுக்கணும், நம்ம கான்டீன்ல இன்னிக்கு பிரியாணி வேற போட்டிருக்காங்க.. கிளம்பு அம்மிணி போலாம் என்று அனைவரும் உற்சாகமாக சொல்லவும்,

ஹர்ஷினி இந்த “ட்விஸ்ட்டை..” எதிர்பார்க்கவில்லை என்பதால் முதலில் கொஞ்சம் அதிர்ச்சியானவள்.., பின்பு உஷாராகிவிட்டாள்.

சீனியர்ஸ்.. உங்களுக்கு வாங்கி கொடுக்கணும்ன்னு தான் எனக்கும் ஆசை, ஆனால் என்கிட்டே அவ்வளவு காசு இல்ல பாருங்க.. என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு சொன்னாள்.

அவளின் அப்பட்டமான நடிப்பில் கண்டான செல்வம், அதெல்லாம் “அக்கவுண்ட் வச்சுக்கலாம்”, நீ ரொம்ப வருத்தப்படாத அம்மிணி,

ஆமாம்.. அக்கவுண்ட் வச்சுக்கலாம், கிளம்பு அம்மிணி, பிரியாணி காலியாகிற போகுது.., கிளம்பு என்று அனைவரும் கிடைத்த சான்சை விடுவோமா என்று வம்படியாக அவளை அழைத்து செல்லவும் “என்ன செய்யலாம்..? என்று யோசித்து கொண்டே தான் சென்றாள்.

வா அம்மிணி.. முதல்ல போய் அக்கவுண்ட் ஓபன் பண்ணலாம்.., என்று ஹர்ஷினியை “கேன்டீன் ஹெட்டிடம்” அழைத்து சென்ற குமார் இவர்கிட்ட தான் ஓபன் பண்ணனும் எனவும்,

ஓகே சீனியர்.. நீங்க போங்க நான் பண்ணிக்கிறேன்..,

சரி பண்ணிட்டு சீக்கிரம் வா அம்மிணி என்றுவிட்டு குமார் சென்றிடவும், ஹெட்டிடம் பேசிய ஹர்ஷினி, அவர் மறுக்கவும் அவரையும் கையோடு அழைத்து கொண்டு குமாரிடம் வந்தவள்,

சீனியர்.. நீங்க ஒரு வார்த்தை சொல்லிடுங்க.. நான் பர்ஸ்ட் இயர் தானே என்ன நம்ப மாட்டேங்குறார் எனவும்,

குமார் பெரிய மனித தோரணையுடன் அக்கவுண்ட் போட்டுருங்க ஹெட்.. “நம்ம ஜூனியர் தான்” என்று ஹர்ஷினியை கெத்தாக பார்த்து கொண்டு சொன்னான்.

அப்பொழுது “நொடி நேரம் ஹர்ஷினியின் கண்களில் தோன்றிய குறும்பை” கண்டு கொண்ட ஆகாஷ், இவ அடங்கமாட்டா போலே.., ஏதோ பண்ணிருக்கா என்று யோசனையாக அவளை பார்த்தான்.

சாப்பிட்டு முடித்து எல்லாரும் ஹர்ஷினியை நக்கலாக பார்த்தவாறே வெளிய வரவும், முகத்தை சோகமாக வைத்து இருந்த ஹர்ஷினி சீனியர்ஸ் இனி மேல் நான் எந்த குறும்பும் பண்ணமாட்டேன், சோ நோ சண்டை..! ஓகே என்று பணிவுடன் கேட்கவும்,

ஓகே போ.. போ.. இனியாவது பெரியவங்ககிட்ட பாத்து நடந்துக்கோ என்று கெத்தாக செல்வம் சொல்லவும்,

மற்றவர்களும் ஆமா.. இனிமேல் எங்க கிட்ட எந்த சேட்டையும் வச்சுக்க கூடாது.., சீனியர்ஸ்ன்னா சும்மாவா..? என்று பெருமை வேற பேச செய்தனர்.

ஓகே.. சீனியர்.. நான் வரேன்.. என்று பணிவுடன் சொன்னவள் திரும்பி நடக்கும் போது சிரித்து கொன்டே சென்றாள். அவளின் முதுகு மெலிதாக குலுங்குவதிலே அவள் சிரிப்பதை புரிந்து கொண்ட ஜெய்,

என்ன பண்ணி வச்சிருக்காண்ணு தெரியலேயே..? என்று யோசித்தவாறே பார்க்கிங்கை நோக்கி சென்றவன், அங்கு ஹர்ஷினி பென்ஸ் காரில் ஏறி கொண்டிருப்பதை பார்த்து விட்டு,

ஓஹ் மேடம்.. ரொம்ப “பெரிய இடம்தான்” போல, ஆனா அவகிட்ட அந்த திமிர் தெரியலேயே.., பரவாயில்லயே.. ரொம்ப வித்தியாசமான பொண்ணு தான்..,

என்ன ஓவர் சேட்டை, குறும்பு தான், நல்லா தைரியமாவும் இருக்கா.., என்னமா டான்ஸை ரசிச்சு ஆடுறா..? டான்ஸ்ன்னா ரொம்ப பிடிக்கும் போல,

அவகிட்ட எந்த அசட்டுத்தனமும் தெரியல, ஆளும் நல்ல அழகு தான், ஆனா அவ டான்ஸ் தான் அதை விட அழகு..

ஜெய்.. டேய் ஜெய்.. என்ன யோசனை உனக்கு..? என்று ஆகாஷின் அம்மா விஜயா அவனுடைய தோளை தட்டவும் தான், தன் எண்ணத்திலிருந்து வெளியே வந்தவன் பார்த்தால்.., இது நம்ம வீடாச்சே.., எப்படி வந்தேன்..?

பார்கிங்க்ல.. பைக் கிட்ட போன வரைக்கும் தான் ஞாபகம் இருக்கு.. அப்பறம் ஹர்ஷினியை பாத்தேன்.. அப்பறமா..! அப்படின்னா அவளை பத்தி யோசிச்சிட்டே வீடு வரைக்கும் வந்திட்டோனா..?

என்ன செய்றேன்னே மறந்த அளவு அவளை பத்தி யோசிச்சிருக்கேன்.. அதுவும் பார்த்த அரை நாள்லேவா.. நானா இது..?

ஜெய்.. வாசல்ல நின்னுட்டு அப்படி என்ன தீவிரமா யோசிக்கிறே..? வீட்டுக்குள்ள வா முதல்ல.. என்று விஜயா அதட்டவும்,

பாத்த கொஞ்ச நேரத்திலே நம்மள சுத்தல்ல விட்டுட்டா, இனி அவளை பத்தி நினைக்கவே கூடாது, என்று முடிவெடுத்தவன் தலையை குலுக்கி கொண்டு உள்ளே சென்றான்.

ஜெய்.. சாப்பாடு எடுத்து வைக்கவா..? உனக்கு பிடிச்ச பிரியாணி தான் என்று விஜயா கேட்கும் நொடியே ஹர்ஷினியின் குறும்பு முகம் மனக்கண்ணுக்குள் மின்னி மறைந்தது...

இப்போ தானே அவளை நினைக்க கூடாதுன்னு முடிவெடுத்தேன்.., ரெண்டு நிமிஷம் கூட தாண்டலையே..! என்று தலையை பிடித்து கொண்டே அமர்ந்து விட்டான்.

அங்கு ஹர்ஷினியோ.. அவளின் குறும்புகளை வீட்டில் உள்ளவர்களிடமும். “சந்திரன்” சென்னையில் இருப்பதால் அவரிடமும்,சுபத்ராவிடமும் “போனில் தன் பர்ஸ்ட் டே காலேஜ் அனுபவத்தை” சொல்லி சிரித்து கொண்டிருந்தாள்,

மாலை ஆச்சார்யா.. வரவும், அவரிடம் “எப்பொழுதும் போல் தன் நாள் எப்படி சென்றது” என்பதை சொன்னாள்..,

ஹர்ஷி இன்னிக்கு செஞ்சதே போதும்.., இனிமேல் சீனியர்ஸ்கிட்ட எந்த குறும்பும் பண்ண கூடாது..?

அப்பறம் அதுவே உனக்கு பின்னாடி பிரச்சனை ஆகிற கூடாது.. சரியா..? என்று கொஞ்சம் கண்டிப்புடன் சொல்லவும், ஓகே தாத்தா.. இனி எந்த குறும்பும் பண்ணமாட்டேன்.. என்று விட்டாள்.

மறுநாள் காலேஜ்க்கு.. கொஞ்சம் ஆர்வத்துடனே சென்றான் ஜெய். “அவள் தன்னை ஏதோ ஒரு விதத்தில் டிஸ்டர்ப் செய்கிறாள்..!” என்று புரிந்தது,

அது அவளின் “குறும்பா, டான்ஸா இல்ல அவளிடம் இருக்கும் தைரியமா எது” என்று தெரியவில்லை. ஆனாலும் அந்த உணர்வு மிகவும் பிடித்து தான் இருந்தது.

போகிற வரை போகட்டும்.. பார்த்துக்கலாம்.. என்ற முடிவுக்கே வந்துவிட்டான். முதலில் நேராக கேன்டீன் சென்றவன், நேற்று ஹர்ஷினி என்ன செய்தாள்..? என்று கண்டுபிடித்து அதை சரி செய்தும் விட்டான்.

ஹர்ஷினி.. சொன்னது ஞாபகம் இருக்குல்ல, முதல்ல கேன்டீன் போ என்று ஆச்சார்யா சொல்லியே அனுப்பவும்..

காலேஜ் வந்தவுடன் கேன்டீன் சென்றவள்,
தான் செய்ய நினைத்தை.., ஜெய் செய்துவிட்டான்.. என்று தெரிந்து கொண்டு அவனின் கிளாஸிற்கே வந்து விட்டாள்.

என்னடா.. “தில்லானா.. அம்மிணி” நம்ம கிளாஸ்க்கு வருது.. என்று குமார் சொல்லவும், ஜெய் அவன் யாரை சொல்கிறான்..? என்று புரிந்தும் புரியாமலும் பார்த்தவன், அது ஹர்ஷினி தான் எனவும்,

மறுபடியும் “எதோ வம்பிழுக்கவே வந்திருக்கா..” என்று நினைத்தவன் வேகமாக வெளியே வந்து,

எதுக்கு இங்க வந்த..? என்று கொஞ்சம் அதட்டலாகவே கேட்டான்

என்ன இவரு..? நானும் நேத்திலுருந்து பாக்குறேன், ரொம்பத்தான் அதிகாரம் பன்றாரு.. என்று தன் விருப்பமின்மையை கண்களால் வெளிப்படுத்தவும்,

அதை சரியாக புரிந்து கொண்ட ஜெய்.. “நான் எப்பவும், எல்லார்கிட்டேயுமே இப்படித்தான் பேசுவேன், என்று சொல்லவும், {ஆனா உன்கிட்ட மட்டும் தான் ஏதோ "உரிமையும் தோணுது எனக்கு" என்று மனதுக்குள் நினைத்து கொண்டான்}”

என்னடா இது..? நாம நினைச்சதை எப்படி கரெக்டா கெஸ் பண்ணாரு..? என்று ஆச்சர்யமாக பார்க்கவும்,

எதுக்கு வந்தேன்னு கேட்டேன்..? அதுக்கு பதில் சொல்லாம.., என்னைய ஆராய்ச்சி பண்ணிட்டிருக்க.. என்று கொஞ்சம் குறும்பாக கேட்கவும், சிலிப்பிக்கொண்ட ஹர்ஷினி.. நான் உங்கள பாக்க தான் வந்தேன்..

என்ன பாக்கவா..? ஏன்...?

நீங்க தான கேன்டீன்ல காசு குடுத்தது..?

ஆமா.. நான் தான் கொடுத்தேன்,

எதுக்கு கொடுத்தீங்க..? என்று முறைப்பாக கேட்கவும்

எதுக்கு கொடுத்தேனா..? என்ன செஞ்சு வச்சிருக்க நீ..? “குமார் அக்கவுண்ட்ல..” எல்லாருக்கும் லன்ச் வாங்கி கொடுத்திருக்க..

நீ பண்ணது மட்டும் பசங்களுக்கு தெரிஞ்சது.. அவ்வளவுதான்..

எங்க தாத்தாவுமே தப்புதான் சொன்னாரு.. என்று கொஞ்சம் மெலிந்த குரலில் சொல்லவும்,

உனக்கு புரிஞ்சா சரி, இதோட உன் குறும்பு, சேட்டை எல்லாம் நிப்பாட்டிக்கோ...?
தேவையில்லாம அப்பறம் அதுவே உனக்கு பின்னாடி பிரச்சனை ஆகிரும்.. புரிஞ்சுதா..? என்று கொஞ்சம் உரிமை கலந்த குரலில் அதட்டினான்.

நேற்று “ஆச்சார்யா அவளின் மீது அக்கறை கொண்டு சொன்னதையே… இன்று ஆகாஷும் சொல்லவும்..” ஆச்சரியத்துடன் அவனை பார்த்தாள்.

சரி கிளம்பு, பசங்க எல்லாம் இங்க தான் பாக்குறாங்க,

காசு.. எவ்வளவு நான் கொடுத்துடுறேன், தாத்தா கண்டிப்பா கொடுக்க சொல்லிருக்கார்,

அவள் காசு தரேன்.., எனவும் ஏன்..? என்று தெரியாமல் கோவம் வந்தது ஆகாஷிற்கு. என்னது காசு தரியா எனக்கு..?

அவனின் கோவத்தை புரியாமல் பார்த்த ஹர்ஷினி, இல்ல “சீனியர்..” நீங்க எதுக்கு காசு..?

ஹர்ஷினி.. இனி அந்த காசை பத்தி என்கிட்டே எப்பவும் நீ பேசக்கூடாது..? இப்போ கிளம்பு.. என்று இறுக்கமான முகத்துடன் அழுத்தமாக சொல்லவும்,

ஏனோ அவனின் பேச்சை மீற தோன்றாமல், அவனை திரும்பி.. திரும்பி.. பார்த்து கொண்டே சென்றாள் ஹர்ஷினி.

......................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்,

என்னுள் சங்கீதமாய் நீ 13 போஸ்ட் பண்ணிட்டேன். உங்க கம்மெண்ட்ஸ்க்காக ஆவலாக வெய்டிங் சிஸ்டர்ஸ், thank you
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 14



ஜெய்.. இந்த மாசம் தானே இன்டெர் காலேஜ் மீட் இருக்கும்., டேட் அனோன்ஸ் பண்ணிட்டாங்களா என்ன..? என்று மூர்த்தி கேட்கவும்

இன்னும் இல்லடா.. மே பி.. இந்த மந்த் எண்ட்ல தான் இருந்தா இருக்கும் போல, என்று விடேற்றியாகவே ஜெய் சொல்லவும்,

என்ன இப்படி சொல்றான்..? டான்ஸன்னாலே விட மாட்டானே..? என்று அனைவரும் அவனை குழப்பமாக பார்த்தனர்,

பாட்டு செலக்ட் பண்ணிட்டியா ஜெய்..? எப்போ ப்ராக்டிஸ் ஆரம்பிக்க போற..? என்று குமார் மேலும் கேட்கவும்,

ச்சு.. இனிமேல் தாண்டா பாக்கணும்.. அயர்ச்சியுடன் சொன்னான் ஜெய்.

அவனின் ஏனோ தானென்று பேச்சில்.. என்ன ஜெய் இது.. ஏன் இந்த டைம் இவ்வளவு லேட்.. ? என்ன ஆச்சு உனக்கு ..? என்று குமார் யோசனையாக கேட்கவும்,

ஆமாடா.. கொஞ்ச நாளா நீ சரியே இல்ல.. அடிக்கடி அமைதியாகிடுற.. என்ன தான்டா ஆச்சு உனக்கு..? செல்வமும் ஆராய்ச்சியாக கேட்டான்.

ச்சு.. ஒண்ணுமில்ல விடுங்கடா..

என்ன ஒண்ணுமில்ல .. ஏதோ இருக்கு..

நீ நார்மலாவே இல்ல..

எதாவது பிரச்சனையா ஜெய்..? அனைவரும் மாற்றி, மாற்றி கேட்கவும், இவங்க விடமாட்டாங்க.. என்று புரிந்து கொண்ட வன், எனக்கு தலை வலிக்குது.. நான் கேன்டீன் போறேன்.. என்று கிளம்பிவிட்டவனின் எண்ணங்கள் முழுவதும் ஹர்ஷினியே..!.

ஹர்ஷினி.. மனதுக்குள் பேரை சொல்லும் போதே இவ்வளவு உணர்வு என்னுள் கொந்தளிக்குமா..?

ஒரு பொண்ணால என்னை முழுசும் மாற்ற முடியுமா..? அதுவும் பார்த்த இரண்டு மாசத்திலே..! நான் இவ்வளவு வீக்கா..? என்னாலே நம்பமுடியல.. இது நான்தானா..? என்னை எனக்கே அந்நியமா மாத்திட்டா..!

பார்த்த முதல் நாளே ஏதோ ஒரு விதத்தில டிஸ்டர்ப் பண்றான்னு தான் நினைச்சேன் ஆனா போக போக தான் எனக்கே புரியுது.. அவ அப்பவே என் மனசுல நச்சுன்னு நங்கூரமா இறங்கிட்டான்னு..!

நாளுக்கு ஒரு முறையாவது அவளை பாக்கலைன்னா அந்த நாளே முடிய மாட்டேங்குது.. காலேஜ் லீவ் விட்டா.. ஏன் தான் லீவ் விட்றாங்கன்னே எரிச்சலா வருது.. லீவ் முடிஞ்சு மறுபடியும் அவளை பாக்கறதுக்குள்ள.. "ஒரு யுகமே கடந்த மாதிரி தோணுது.."

எப்போ..? எப்படி..? எதனால..? அப்படின்னு எந்த விதமான கேள்விக்கும் பதில் இல்ல என்கிட்டே..

ஆனா ஒன்னும் மட்டும் தெரியுது.. அவளுக்கான என் உணர்வு நாளாக நாளாக இன்னும் தீவிரமாதான் ஆகுது.. இது கண்டிப்பா மாறவே மாறாதுன்னும் புரியுது..

இந்த உணர்விற்கு பெயர் தான் "காதல்.." அப்படின்னா இருந்துட்டு போகட்டுமே.. எனக்கு அவ மேல இருக்கிற பீலிங்குக்கு பேர் என்ன..! அப்டிங்கிறதெல்லாம் விஷயமே இல்ல..

என்னோட எண்ணமெல்லா.. “எனக்கு தோண்றதை போல அவளுக்கும் எப்போ தோணும்..” இது தான்..

ஏன்னா “நான் கண்டிப்பா என்னுடைய காதலை அவகிட்ட சொல்ல போறதில்ல..! சொல்லியோ.. கேட்டோ.. வரும் உணர்வு காதல் இல்லையே..”

எனக்கு தானாகவே அவ மேல காதல் வந்த மாதிரி, அவளுக்கும் என் மேல தானாக தான் காதல் வரணும்.

ஆனால் இது எப்போ நடக்கும்..? இதுதான் அவனுடைய தீவிர எண்ணமாகவே இருந்தது.

அந்த அழகு ராட்சசி என்னை இப்படி முற்றும் முழுசா ஆட்டிப்படைக்கும் போது என்னால எப்படி நார்மலாக இருக்க முடியும்.. என்று நினைத்து கொன்டே கேன்டீன் சென்றவன் பேருக்கு ஒரு டீ வாங்கி கொண்டு அமரும் பொழுது,

அவனின் அழகு ராட்சசியான ஹர்ஷினியே...!" கேன்டீனுக்குள் வந்துகொண்டிருந்தாள். க்ளாஸ் டைம் ஆச்சே.. இப்போ ஏன் கேன்டீன் வந்திருக்கா..? கூடவே இருக்குற அந்த ஒட்டுப்புல்லு ஜோதியை வேற காணோம் என்று யோசித்தவாறே அவளை பார்த்தவன், அவளின் கண்கள் சிவந்து இருந்ததிலே, மேடம் நைட் தூங்கலை போலே என்று நினைத்து கொண்டான்,

அவனின் எண்ணம் சரியே தான். நைட் முழுவதும் யாருக்கும் தெரியாமல் சுபத்ராவும், இவளும் படம் பார்த்து கொண்டிருந்து விட்டு விடிய காலையில் தான் படுத்ததால், காலையில் இருந்தே தலை வலி மண்டைய பிளந்தது.

ரேணுகாவிற்கு தெரிந்தால் கண்டிப்பாக டின் கட்டிவிடுவார் என்பதால் சொல்லாமலே காலேஜ் வந்துவிட்ட ஹர்ஷினியால் சமாளிக்க முடியாமல் கேன்டீனிக்கு காஃபி குடிக்க வந்துவிட்டாள்.

வேகமாக காபி வாங்கி குடித்து முடித்த பிறகே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது போல் இருந்தது.

ஆனால் அதை கெடுப்பது போல் “ஹாய் ஹர்ஷி..” என்று வந்து நின்றான் மெக்கானிக்கல் பைனல் இயர் ராஜீவ். கடந்த ஒரு மாதமாக அவளை சுற்றி வந்து தொல்லை தருபவன். அவனை பார்த்தவுடன் கடுப்பானவள்,

“கால் மீ ஹர்ஷினி..” சீனியர், என்று முகத்தை கடினமாக வைத்து கொண்டு சொல்லவும்,

ஏன் ஹர்ஷின்னு கூப்பிட்டா என்ன தப்பு..? உன் ப்ரண்ட்ஸ் எல்லாம் அப்படித்தானே கூப்புடுறாங்க.. என்று அடாவடியாக கேட்டான் ராஜீவ்.

நீங்களே சொல்லிட்டீங்க அவங்க என் ப்ரண்ட்ஸ்ன்னு.. ஆனா நீ யார் என் அப்படி கூப்பிட..? என்ற கேள்வியை முகத்தில் காட்டிட,

அதை புரிந்து கொண்ட ராஜீவ், கரெக்ட் நான் தான் உன் ப்ரண்ட் இல்லையே.. அதுக்கும் மேல என்று சொல்லும் போதே, அதற்கு மேல் பொறுக்க முடியாத ஜெய்.. “ஹர்ஷினி..” என்று சத்தமாகவே கூப்பிட்டவும்,

அவன் குரலில் கொஞ்சம் வேகமாகவே திரும்பி பார்த்த ஹர்ஷினி, பக்கத்து டேபிளில் அமர்ந்து தன்னையே முறைத்து கொண்டிருந்த ஆகாஷை கண்டவுடன் தானாகவே எழுந்து நின்றவள்,

அவன் இங்க வா.. என்பது போல் கையை அசைக்கவும், அமைதியாகவே அவனிடம் சென்றவள், அவனின் முகத்தை பார்க்காமல் அவன் டேபிளில் இருக்கும் டம்ளர்களை பார்த்தவாறே நின்றாள்.

தன் முகத்தை பார்க்காமல் நிற்கும் ஹர்ஷினியை பார்த்த ஆகாஷ… இதோ இப்படித்தான்.. என் முகத்தையே பார்ப்பதில்லை.. நான் அவளை பார்க்கும் பார்வையிலே என் மன உணர்வுகளை புரிந்து கொண்டவளின் மவுனத்தாலே தான் நான் இன்னும் இன்னும் என்னுடனே போராடுகிறேன். அதோடு இந்த ராஜீவின் தொல்லை வேறு..

அவன் அவளிடம் வழிந்ததை பார்த்து கொண்டிருந்ததால் கடுப்பாகியவன், கிளாஸ்ல இல்லாம இங்க என்ன பண்ற..? என்று அதட்டவும்,

காபி குடிக்க வந்தேன்..

குடிச்சு முடிச்சிட்டா கிளம்ப வேண்டியது தானே.. அவன்கிட்ட என்ன பேச்சு உனக்கு..

நானா போய் பேசல.. என்று கொஞ்சம் கோவமான குரலுடன் சொல்லவும்,

அவன் வந்து பேசினா.. உடனே நீயும் அவன்கிட்ட பேசிடுனுமா என்ன..? என்று அடக்கப்பட்ட குரலில் சீறலாக கேட்டான் ஜெய்,

அவனின் பேச்சு பிடிக்காமல் கண்கள் சுருங்கி, மூக்கு விடைக்க கோவமாக நின்றாள் ஹர்ஷினி,

அவளின் கோவத்தை புரிந்து கொண்டவன், இந்த கோவத்துக்கு ஒன்னும் குறைச்சலில்லை, அவன் பேச்சும், பார்வையும் சரியில்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்பறமும் அவன்கிட்ட பேசினா என்ன அர்த்தம்..?

அப்பறம் அவன் அதையே சாக்கா வச்சிக்கிட்டு பார்க்கற இடமெல்லாம் உன்கிட்ட வந்து பேசத்தான் செய்வான், என்று அவளை முறைத்தவண்ணம் சொன்னவன், இப்போ முதல்ல கிளாஸ்க்கு கிளம்பு போ.. என்று அதிகாரத்துடன் சொல்லவும்,

எதுவும் பேசாமல் அவளுடைய டேப்ளேக்கு சென்று புக்ஸை எடுத்து கொண்டு உடனடியாக கிளம்பியும் விட்டாள்.

அவர்கள் இருவரும் பேசுவதை கடுப்புடன் பார்த்து கொண்டிருந்த ராஜீவ். ஹர்ஷினி தன்னை ஏனென்றும் கவனிக்காமல் செல்லவும், திரும்பி ஜெய் முறைத்த பார்த்த ராஜீவ் வேகமாக ஹர்ஷினியின் பின் சென்றான்.

அவன் ஹர்ஷினியின் பின்னாடியே போவதை கண்ட ஜெய்க்கு சுர்ரென்று கோவம் உச்சிக்கே ஏறியது. ஒரு மாசமா அவ பின்னாடி சுத்தறதே வேலையா வச்சிருக்கான்,

ஒரு நாள் இல்ல ஒரு நாள் இவன் என்கிட்ட செமத்தியா வாங்க போறான் என்று மனதுக்குள் கொதித்த ஜெய் தானும் எழுந்து கிளாஸ்க்கு செல்லும் வழியில் அவர்கள் எங்காவது தென் படுகிறார்களா என்று பார்த்து கொன்டே தான் சென்றான்.

டேய் பசங்களா உங்களை எங்க எல்லாம் தேடுறது.. வெளியே ஒரு மணிநேரமா பெரிய ரணகளமே நடந்துட்டு இருக்கு.. நீங்க என்னடான்னா லேப்ல உட்காந்து வெட்டி கதை அடிச்சுட்டு இருக்கீங்க.. என்று பரபரப்புடன் மூர்த்தி கேட்கவும்,

அப்படி என்னடா ரணகளம் ஆச்சு..? சொன்னதான்டா தெரியும் கிண்டலாக செல்வம் சொல்லவும், அசோக் சிரித்து கொன்டே ஹை பை போட்டுக்கொண்டான்.

போங்கடா நான் சொல்ல போற விஷயத்தை மட்டும் கேட்டா நீங்க எல்லாம் ஷாக் ஆயுடுவீங்க..

பில்ட் அப் பண்ணாம சீக்கிரம் சொல்லி தொலைடா.. இம்சை.. என்று குமார் எரிச்சலாக சொன்னான்.

டேய் அந்த மெக்கானிக்கல் குரங்கு ராஜீவ் இருக்கானில்ல.. அவன் இந்த டைம் செமயா மாட்டினாடா எனவும்,

அதுவரை எனக்கென இருந்த ஜெய்.. ராஜீவ் பேரை கேட்டவுடன், குமார் என்ன சொல்ல வருகிறான் என்று படபடக்கும் மனதுடன் கேட்க ஆரம்பித்தான்.

ஆமா அந்த சீன் பார்ட்டி கொரில்லவா.. MLA மகன்னு ஏகப்பட்ட திமிரு அவனுக்கு.. எங்க மாட்டினான்..? என்ன ஆச்சு.. என்று ஆர்வத்துடன் அனைவரும் கேட்கவும்,



எல்லாரும் பாக்க நடு கிரவுண்ட்லே..! செமயா பளீர்ன்னு ஒன்னு கன்னத்திலே கொடுத்தா பாரு.. ஒரு பர்ஸ்ட் இயர் பொண்ணு.. அதுவும் நம்ம டிபார்ட்மென்ட் பொண்ணு… என்னா சீன் தெரியுமா..? கண் கொள்ளா காட்சிடா அது.. சந்தோஷமாக சொல்லவும்,

என்னடா சொல்ற.. யாருடா.. டேய் அந்த அம்மினியா..? ஆமாடா கண்டிப்பா அவளாத்தான் இருக்கும்.. கரெக்ட்தானே மூர்த்தி என்று ஆளாளுக்கு அதிர்ச்சியாக கேட்கவும்,

பின்ன “நம்ம தில்லானா..” அம்மிணி தவிர வேற யாருக்கு அவ்வளவு தைரியம் இருக்கு.. என்று மூர்த்தி சொல்லவும்

என்னடா சொல்ற.. ஏன்..? எதனால் அடிச்சா..? அதிர்ச்சியுடன் அசோக் கேட்கவும்

அவன்தான் ஹட்ச் டாக் மாதிரி அவ பின்னாடியே சுத்திட்டுருந்தான் இல்ல.. இன்னிக்கு டக்குன்னு அவ கையை புடுச்சிட்டான்..

சொல்லவா வேணும் நம்ம அம்மிணியை.. உட்டா பாரு ஒரு அறை.. என்னா சவுண்ட்.. கண்டிப்பா அவனுக்கு குறைந்த பட்சம் நாலு நாளைக்காவது காது கேட்காது..

அதை பார்த்துட்டுருந்த எங்களுக்கே காதுகிட்ட கொய்ங்ன்னு சத்தம் கேட்கற மாதிரி இருந்துச்சுன்னா பாத்துக்கோ.. என்று பிரமிப்புடன் குமார் சொல்லவும்

மூர்த்தி சொன்னதை கேட்டவுடன் அதிர்ச்சி கலந்த ஆத்திரத்துடன் எழுந்து வேகமாக நடக்கவே ஆரம்பித்துவிட்ட ஜெய்க்கு அவனை கொன்று விடும் வேகம் வந்தது.. ராஸ்கல்.. எவ்வளவு தைரியம் இருந்தா அவ கையை புடிச்சுருப்பான்..?

இன்னிக்கு தொலைஞ்சடா நீ..? என்று மனதுக்குள் கருவியவாறே வேகமாக அவனின் டிபார்ட்மென்டை நோக்கி செல்லும் வழியில் உள்ள பிரின்சிபால் அறைக்கு வெளியே இருபுறமும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு நின்றிருந்த ஹர்ஷினி, ராஜீவை பார்த்துவிட்டவன்..

இன்று அவனை ஒரு வழி செய்திடும் எண்ணத்துடன், ஆத்திரமாக அவனை நெருங்கும் சமயம், திடிரென்று ராஜீவ் வலியில் கத்திக்கொன்டே கீழே விழவும், என்ன நடந்ததென்று ஒரு நொடி புரியாமல் நின்ற ஜெய், பின் நன்றாக பார்க்கும் பொழுது தான் புரிந்தது,

கோவத்தில் முகம் சிவக்க.. 70 வயது மதிக்க கூடிய ஒரு பெரியவர் ராஜீவை கொலை வெறியுடன் பார்வையாலே எரித்து கொண்டிருப்பதை பார்த்தான், யாரு இவர்..?

உனக்கு எவ்வளவு தைரியம்.., நெஞ்சழுத்தம் இருந்திருந்தா.. “என் பேத்தி..” கையை புடிச்சிருப்ப.. என்று சிங்கம் போல் கர்ஜித்த செய்த ஆச்சார்யா.. “பெரியவனே..” இன்னும் 5 நிமிஷத்தில இவன் இந்த காலேஜை விட்டே போயிருக்கணும்.. சீக்கிரம் என்று உட்ச கட்ட கோவத்தில் கத்தவும்,

இதோ உடனேப்பா.. என்று சந்திரன் சொல்லும் போதே, அங்கு வேகமாக வந்த காலேஜ் சேர்மன் சார்.. வாங்க சார்.. உள்ளே போய் பேசலாம் என்று மரியாதையுடன் அழைக்கவும்,

அதெல்லாம் அப்பறம்.. முதல்ல இந்த பையனோட TC கொண்டு வாங்க..

சார் உட்காந்து பொறுமையா பேசலாம்..

என்ன..? எதுக்கு உட்காந்து பேசணும்..?, ஆச்சார்யா கூர்மையான பார்வையுடன் கேட்கவும், அவரின் பார்வையில் தெரிந்த தீட்சண்யத்தில் என்ன பார்வைடா இது..! என்று அசந்தே நின்றுவிட்டான் ஜெய்.

அது.. அது.. அவன் நம்ம MLA வோட மகன் என்று திக்கி திணறி சொன்னார் காலேஜ் சேர்மன்.

பெரியவனே.. அந்த MLA க்கு போன் போட்டு உடனே இங்க வர சொல்லு.. என்று கட்டளையாக சொன்ன ஆச்சார்யா,

இறுகி போய் நின்றிருந்த ஹர்ஷினியிடம் சென்று அவளின் கையை பற்றி கூட்டிட்டு வந்து அங்கிருக்கும் சேரில் அமரவைத்து.., தானும் பக்கத்தில் அமர்ந்து கொள்ளவும்,

அவரின் தோளில் சாய்ந்து கண்மூடி அமர்ந்துவிட்ட ஹர்ஷினியின் எண்ணம் முழுவதும், தங்களை பார்த்து கொண்டிருக்கும் ஜெயிடமே இருந்தது..!

.......................................................


ஹாய் ப்ரண்ட்ஸ்,

என்னுள் சங்கீதமாய் நீ 14 போஸ்ட் பண்ணிட்டேன். படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க ப்ரண்ட்ஸ். சாரி ப்ரண்ட்ஸ் இந்த டைம் நாள் ஆயிடுச்சு.. பொங்கலுக்காக ஊருக்கு போயிருந்தேன்.. லேப்டாப்ஐ தொட கூட டைம் கிடைக்கல ப்ரண்ட்ஸ்..
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்




என்னுள் சங்கீதமாய் நீ 15



ஹர்ஷினி.. இந்த மாசம் “இன்டெர் காலேஜ் மீட் “ இருக்குன்னு சொல்ராங்க.. உன் பேரையும் கொடு.. நீ தான் சூப்பரா டான்ஸ் ஆடுறயே.. என்று ஜோதி லன்ச் பிரேக்கில் வெளியே அமர்ந்து சாப்பிடும் போது சொல்லவும்,

ஆமா ஹர்ஷி.. நீ மட்டும் பார்ட்டிசிபேட் பண்ணா கண்டிப்பா “நீ தான் விண் பண்ணுவ..” என்று மற்றொரு தோழியான செல்வியும் சொன்னாள்.

அதெப்படி நம்ம “சீனியர் ஜெய்..” தான் 3 வருஷமா விண் பண்ணிகிட்டு இருக்கார். அவரும் சூப்பரா தான் டான்ஸ் ஆடுறாரு.. நாம பார்த்தோம் இல்லை என்று ரோஹன் சொல்லவும். தங்கள் டிபார்ட்மென்ட் பங்க்ஷனில் ஜெய்யும் தன்னை போலவே டான்ஸை ரசித்து.., அர்ப்பணிப்போடு ஆடுனதை நினைத்து பார்த்தாள் ஹர்ஷினி.

ஹேய் ஹர்ஷி.. பெட்டர் ஐடியா ஒன்னு என்கிட்ட இருக்கு.. நீ பேசாம நம்ம “சீனியர் ஜெய் கூட சேர்ந்து டான்ஸ் ஆடு..” செமயா இருக்கும். கண்டிப்பா நாம தான் விண் பண்ணுவோம் என்று அவளின் கிளாஸ் மெட் சுதாகர் சொல்லவும்

ஆமா ஹர்ஷினி.. நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து “ஜோடியா ஆடினா.. பாக்கவே செமையா இருக்கும்..”, என்று மற்றொருவனும் சொன்னான்.

அவர்கள் சொல்வதை கேட்கும் போதே மனதில் கொஞ்சம் சாரல் அடிக்க தான் செய்தது. நானும், அவருமா..? எப்படி இருக்கும் என்று மனக்கண்ணில் ஓட்டி பார்க்கும் போதே சிலிர்த்தது ஹர்ஷினிக்கு.

தன் மன சிலிர்ப்பை மறைத்தவள், சாதரணமாக "பாக்கலாம்பா.." என்று முடித்து விட்டு, நான் கிளாஸ்க்கு போறேன் நீங்க வாங்க.. என்றவள் ஆகாஷை பற்றி சுகமாக நினைத்து கொன்டே சென்றாள்.

அவர் “என்னை பர்ஸ்ட் பாக்கும் போது ரொம்ப அலட்சியமா..! தானே பாத்தாரு..” அப்பறம் கொஞ்சம் “ஆச்சரியமா..!” பாத்தாரு. ஆனா ஏன் அப்படி ஆச்சரியமா பாத்தாருன்னு தான் தெரியல..

அப்பறம்.. அவர் “என்னை ராக் பண்ண டான்ஸ் ஆட சொன்ன மாதிரி தெரியல.. அவர் கண்ணுல என் டான்ஸை பாக்கணும்ன்னு எதிர்பார்ப்பு தானே தெரிஞ்சது.. ஆனா அவருக்கு நான் டான்ஸ் ஆடுவேன்னு எப்படி தெரியும்..?”

ஆனா அதுக்கு அப்பறம் இருந்து தான் என்னை ரசனையா பாக்க ஆரம்பிச்சாரு.. இப்போ என்று நினைத்தவுடன் வெட்கத்தில் காது மடல் வரை சிவந்து விட்டது ஹர்ஷினிக்கு.. என்ன பார்வை அது..? அப்படியே என்னை உயிரோட உறிஞ்சுற பார்வை..!

அதுவும் எந்த இடத்திலும், எவ்வளவு கூட்டத்திலும்..! என்னை மட்டுமே பார்க்கும் அவரின் பிரத்தியோகமான சிலிர்க்க வைக்கும், உரிமையான பார்வை..

அவரின் தீவிரமான பார்வைலியே அவர் மனசு புரியாத்தான் செய்து.. ஆனா எனக்கு தான் என்னமோ பயமா இருக்கே..

முதல்ல என்னால அவர் முகத்தை கூட நிமிந்து நேரா பாக்க முடியறதில்லயே.. அவரை பாக்கும் போது மட்டும் என் தைரியம் எல்லாம் எங்க போய் ஒளிஞ்சுக்குதுன்னு தான் தெரியல

எனக்கும் அவரை பிடிச்சிருக்கு தான்.. ஆனா எப்போலிருந்து அவரை பிடிக்க ஆரம்பிச்சதுன்னு தான் தெரியல.. ஒருவேளை அவரை பர்ஸ்ட் டைம் பார்த்த போதே பிடிச்சுருக்குமோ..? அப்படித்தான் இருக்கும்.. முதல்ல இருந்தே அவர் பார்வையிலே அவர் மனசை என்னால புரிஞ்சிக்க முடியுதே..

அவரோட ஆளுமையான தோரணை, அசட்டுத்தனம் இல்லா கம்பீரமான நடை, உடை, பாவனை, பேச்சு, சிரிப்பு, எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கே..

ஆனா என்னமோ ஒரு தயக்கம், பயம், வெட்கம் எல்லாம் என்னை போட்டு பாடா படுத்துதே.. இன்னிக்கு அந்த ராஜீவ் என்கிட்டே பேசினத்துக்கு எவ்ளோ கோவம்..

அந்த பேச்சு பேசுறாரு.. ஆனா அவரோட அந்த உரிமையான கோவமும் ரொம்ப பிடிக்கதான் செய்யுது.. என்று ஆகாஷை நினைத்து கொண்டே கனவுலகில் மிதந்து கொண்டிருந்தவள்..

யாரோ தன்னை ஹர்ஷி.. என்று கூப்பிடும் குரல் ஒலிக்கவும் சுய நினைவிற்கு வந்தவள், தன் முன்னே வந்து வழி மறைத்தார் போல் நின்றிருந்த ராஜீவை பார்க்கவும் முகத்தில் தானாகவே எரிச்சல் வந்து ஒட்டி கொண்டது,

அவனோ மிகவும் கோவமான முகத்துடன் “நான் கேன்டீன்ல பேசிட்டு இருக்கும் போதே நீ எப்படி போலாம் ஹர்ஷி..?” என்று திமிராக கேட்கவும்,

அவனின் திமிரான பேச்சில் ஆத்திரமடைந்த ஹர்ஷினி இவன் கிட்ட எதுவும் பேசவே கூடாது என்று விலகி நடக்க தொடங்கினாள்.

ராஜீவோ உன்னை இன்று விட்டேனா பார் என்று மறுபடியும் வழி மறித்து “நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம.. அமைதியா போனா என்ன அர்த்தம்..?” என்று கேட்கவும்,

இவன் அடங்க மாட்டான்… என்று புரிந்து கொண்ட ஹர்ஷினி “பதில் சொல்ல பிடிக்கலன்னு அர்த்தம்..” என்று அழுத்தமாக சொன்னாள்.

அப்போ அந்த ஜெய் கேள்வி கேட்டா மட்டும் பதில் சொல்ல பிடிக்குதோ..?

ஆமா அப்படித்தான்.. அவர் கேள்வி கேட்டா மட்டும் தான் நான் பதில் சொல்லுவேன்...

ஓஹ் அந்த அளவுக்கு ஆச்சா..? அதென்ன அவன் கேள்வி கேட்டா மட்டும் பதில் சொல்லுவ. அப்படியென்ன அவன் ஸ்பெஷல் உனக்கு..?

அவர் எனக்கு ஸ்பெஷலா.. இல்லையான்னு.. உங்க கிட்ட சொல்லணும்ன்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை..

இப்படி சொல்லிட்டா ஆச்சா..? அதான் நானே கேன்டீன்ல பாத்தேனே.. நான் உன்கிட்ட பேசணுத்துக்கு அவன் என்ன அந்த பொங்கு பொங்குறான்.. அவன் மனசுல என்ன இருக்குன்னு தான் தெரியுதே.. நீ எப்படி..? என்று ஆத்திரமாக கேட்டான்.

நான் முதலே சொல்லிட்டேன்.. என் மனசுல என்ன இருக்குன்னு உங்க கிட்ட சொல்லணும்ன்னு எந்த அவசியமும் இல்லை எனக்கு..

முடியாது நீ எனக்கு சொல்லித்தான் ஆகணும்.. என்று அதிகாரமாக கத்தவும்,

சொல்ல முடியாது.. என்று உறுதியாக சொன்னாள்,

அதெப்படி எனக்கு நீ சொல்லி தான் ஆகணும்.. அவனுக்கும்.. உனக்கும் நடுவுல என்ன இருக்கு..?

அவனின் கேள்வியில் அளவுக்கு அதிகமான கோவம் கொண்ட ஹர்ஷினி.. இப்போ நீ எனக்கு வழி விட்டலன்னா அப்பறம் கண்டிப்பா வருத்த படுவ..

என்ன மிரட்டுறியா என்னை..

ஆமா அப்படியே வச்சிக்கோ.. என்று சொன்னவள், என் பின்னாடி சுத்த ஆரம்பிச்ச முதல் நாளே நான் உன்னை கூப்பிட்டு எனக்கு பிடிக்கலை சொன்னேன் இல்ல..

அதுக்கு அப்பறமும் நீ அடங்கலை.. ஆனா உனக்கு இது தான் பைனல் வார்னிங் ராஜீவ்.. இனிமேல் என் பின்னாடி வராத.. என்று நிறுத்தி நிதானமாக அழுத்தி சொன்னவள் நடக்க ஆரம்பிக்கவும்,

அவளின் பேச்சில் ஆத்திரத்தில் அறிவிழந்த ராஜீவ் அவளின் கையை பிடிக்கவும், கொதித்தெழுந்த ஹர்ஷினி அவனை ஓங்கி அறைந்தே விட்டாள்.

ஆச்சார்யாவின் தோள் சாய்ந்தே அதை நினைத்து பார்த்தவள்.. ஜெய் கேன்டீன்ல சொன்னது கரெக்ட்தான். நான் அவன்கிட்ட இந்தளவு பொறுமையா இருந்திருக்க கூடாது..

அதுதான் அவனுக்கு அட்வான்டேஜா போயிருச்சு.. கடைசியில ராஸ்கல் என் கையைவே புடிச்சிட்டான்.. என்று மனதுக்குள் ராஜீவை திட்டிய ஹர்ஷினி, இப்போ கண்டிப்பா இதுக்கும் ஜெய் கோவப்படுவாரு.. அவன் என்கிட்ட பேசனத்துக்கே அவ்ளோ கோவம் அவருக்கு இப்போ சொல்லவும் வேண்டாம்..

இந்த விஷயம் தெரிஞ்சு இங்க வந்தப்போ என்ன கோவம் அவர் முகத்துல..

அப்போ மட்டும் அவர் வந்த வேகத்துல தாத்தா மட்டும் வரலைன்னா.. கண்டிப்பா அவரே ராஜீவை அடிச்சிருப்பார். அப்பறம் இது வேற மாதிரி பிரச்னையாகிருக்கும். நல்ல வேளை அதுக்குள்ளே தாத்தா வந்துட்டார் என்று நினைத்தவாறே லேசாக நிமிர்ந்து ஆகாஷை பார்த்தவள்..

யாரோ ஆகாஷை மறைத்தவாறு நின்று பேசி கொண்டிருக்கவும், மன சோர்வின் காரணமாக மறுபடியும் ஆச்சார்யாவின் தோளிலே கண் மூடி சாய்ந்து விட்டாள்.



மச்சி.. இங்க என்ன பண்ற..? சரி வா போலாம்.. இங்க எல்லாரையும் போக சொல்ராங்க என்றபடி ஆகாஷின் கிளாஸ் மேட் சிவா வரவும்,

நான் வரல நீ போடா.. என்றான் ஜெய்,

டேய் இங்க யாரும் இருக்க கூடாதாம்டா.. நானே டவுட் கேக்க வந்துட்டு மேமை மீட் பண்ண கூட முடியலை.. எல்லாரையும் போக சொல்ராங்கடா.

ச்சு.. நான் வரல, நீ கிளம்புடா..

மச்சி அந்த ராஜீவ் பிரச்சனை பெருசாகும் போலடா.. அவன் அப்பா வேற வந்துட்டு இருக்கார்.. அதான் இங்க யாரும் இருக்க கூடாதுன்னு சொல்ராங்க, வாடா போலாம்..

நான் தான் வரலன்னு சொல்றேன் இல்லை.. நீ கிளம்புடா என்று கோவத்தில் கத்தவும்,

டேய் நீ ஏன்டா கத்துற.. உனக்கு எதுக்குடா இவ்ளோ கோவம்..

அதெல்லாம் உனக்கு எதுக்கு.. நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு..

மச்சி நீ ஏதோ சரியில்லை.. வா போலாம்.. அந்த ப்ரின்ஸி வேற நம்ம கிட்ட தான் வாராருடா.. வாடா போலாம் என்று கெஞ்சியபடியே ஆகாஷின் கையை பற்றி இழுத்து கொன்டே செல்லவும்,

டேய்.. என்ன விட்றா.. டேய் சிவா.. உன்னை கொல்ல போறேன், விட்றா என்னை..

டேய் கத்தமா வாடா.. ஜெய் மறுக்க மறுக்க அவனை இழுத்து கொண்டு வந்துவிட்டான் சிவா.

எதுக்குடா என்னை இழுத்துட்டு வந்த.. என்று ஜெய் கோவத்தில் கத்தவும்,

எதுக்கா..? முதல்ல அங்க உனக்கென்ன வேலை.. ஆமா நீ எதுக்கு இவ்ளோ கோவப்பட்ற..? என்று சந்தேகமாக சிவா கேட்கவும்,

அவனின் சந்தேகத்தில் கடுப்பான ஜெய் “அது உனக்கு எதுக்கு..?” கோவமாக எகிரவும்,

எனக்கு எதுக்கா...? டேய் ஏற்கனவே நம்ம டிபார்ட்மெண்டுக்கும், அந்த ராஜீவ் டிபார்ட்மெண்டுக்கும் ஜென்ம பகை.. இதுல புதுசா இந்த பிரச்னை வேற.. எல்லாரும் என்ன ஆகுமோன்னு பயந்துட்டு இருக்காங்க..

நீ தான் நம்ம டிபார்ட்மெண்ட் ரெப்ரெசென்ட் வேற.. நீ அங்க நின்னா.. அதுவும் இவ்ளோ கோவமா நின்னா எப்படிடா.. அதான் தேவையில்லாத பிரச்சனை வேணாம்ன்னு தான் உன்னை இழுத்துட்டு வந்தேன்..

ம்ப்ச்.. போடா என்று ஆத்திரத்துடன் கத்திய ஜெய் தங்கள் ஆஸ்தான இடமான மரத்தடி மேடைக்கு சென்று உட்காரவும், சிவாவும் அமைதியாக அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

ராஜீவின் அப்பா கார் உள்ளே வரவும் “டேய் மச்சி அந்த ராஜீவோட அப்பா வந்துட்டாருடா.. என்ன ஆகுமோ..?” பரபரப்புடன் சிவா சொல்லவும்,

அவனை திரும்பி முறைத்த ஜெய்.. மவனே இதுக்கப்புறம் ஒரு வார்த்தை நீ பேசுனா..! இன்னைக்கு கைமா தான்டா நீ.. என்று விரல் நீட்டி கொலைவெறியுடன் மிரட்டவும், ஜெயின் கோவம் தெரிந்ததால் கப்பென தன் வாயை மூடி கொண்டான் சிவா.

அடுத்த அரை மணிநேரத்திலே தொங்கி போன முகத்துடன் தன் அப்பாவுடன் வெளியே வந்த ராஜீவ்.. அவர்கள் காரில் ஏறி அங்கிருந்து கிளம்பி விட்டான்.

பிறகு ஹர்ஷினியுடன் வெளியே வந்த ஆச்சார்யா, சந்திரன் இருவரும் கிளம்பும் முன், எங்களோடே வந்துடு ஹர்ஷி, வீட்டுக்கு போலாம்.. எனவும்

இல்லை தாத்தா.. காலேஜ் முடிய இன்னும் டைம் இருக்கு, எப்பவும் போல நானே வந்துடுறேன்..

ஓகே பாத்துக்கோ.. நாங்க கிளம்புறோம், என்றவர்கள் கிளம்பவும், ஹர்ஷினி தன் கிளாஸ்ஸிற்கு சென்றுவிட்டாள்.

என்னங்கடா கிளாஸ்சிக்கே வராம இங்கேயே இருந்துட்டீங்க என்ற படி காலேஜ் முடியவும் ஆகாஷின் ப்ரண்ட்ஸ் அனைவரும் மரத்தடி மேடைக்கு வந்தனர்.

ஜெயின் கோவத்தில் அரண்டு போயிருந்த சிவா எல்லாரும் வரவும், தப்பிச்சோம்டா சாமி.. எல்லாம் வந்துட்டாங்க.. ஒரு மனுஷன் இவ்ளோ நேரமாவா கோவமா இருப்பான்..

என்னடா சிவா இப்படி அரண்டு போய் உக்காந்திருக்க.. செல்வம் கேட்கவும்,

ஏன் கேக்க மாட்ட..? எல்லாம் என் நேரம்டா.. என்று கடுப்பாக சொல்லவும்.

டேய் அவனை விடுடா.. எங்க நம்ம உளவு துறை.. என்ன ஆச்சு..? அந்த ராஜீவ் பிரச்சனை.. ஆர்வத்துடன் குமார் கேட்கவும்,

ஆமாடா.. எனக்கு எப்படா கிளாஸ் முடியும்ன்னு இருந்தது.. என்ன ஆச்சுன்னு தெரியலன்னா மண்டையே வெடிச்சுடும் போல, என்று அசோக் சொல்லும் போதே, அங்கு வந்த பாண்டுவை பார்த்ததும்,

வாடா.. வாடா.. “எங்க ஜேம்ஸ் பாண்டு..” உன்னை தான் தேடிட்டு இருந்தோம்.. அந்த ராஜீவ் மேட்டர் என்னடா ஆச்சு..? என்று குமார் கேட்கவும்,

அதெல்லாம் சிறப்பா முடிஞ்சிருக்கு... அந்த ராஜீவ் இனிமேல் எக்ஸாம் எழுத மட்டும் தான் காலேஜ்க்கு வரமுடியும்..

என்னடா சொல்ற..? என்று அதிர்ச்சியாக செல்வம் கேட்கவும்

ஆமாடா.. அதுவும் ஹர்ஷினி சொன்னதாலதான்.. இல்லாட்டி TC தான் அவனுக்கு.,

நிஜமாவாடா.. அவனோட அப்பா MLA ஆச்சே.. விட்டிருக்க மாட்டாரே..

அவர் MLA கெத்து வேலைக்கு கூட ஆகல.. அந்த ஹர்ஷினி அம்மிணியோட தாத்தா யாரு தெரியுமா..?

யார்டா..?

யாரா..? AD குரூப் ஆப் செவன் ஸ்டார் ஹோட்டல் இருக்குல்ல,

ஆமா நல்ல பெரிய ஹோட்டேல்டா..

அது அவங்களோடது தான்..

ஓஹ் அந்த அம்மிணி பென்ஸ் கார்ல வரும்போதே நினைச்சோமே .. பெரிய இடம்தான்னு, என்று குமார் சொல்லவும்

ஆமாடா அவர் பேறு ஆச்சார்யா.. அவரு தான் கண்டிப்பா TC கொடுக்கணும்ன்னு சொல்லிருக்காரு..

ஆனா ஹர்ஷினி தான் அதெல்லாம் வேண்டாம்ன்னு அவங்க தாத்தாகிட்ட சொல்லிருக்கா.. அதுக்கு அப்பறம் தான் ராஜீவ் எக்ஸாம்க்கு மட்டும் வர மாதிரி முடிவு பண்ணிருக்காங்க..

சூப்பர்டா.. அவனுக்கு தேவை.. எவ்வளவு திமிரு..

கரெக்ட் அவனுக்கு வேண்டியதுதான், போன டைம் அவன் தேவையில்லாம போட்ட சண்டையால எவ்ளோ பெரிய பிரச்சனை.. எத்தனை பேருக்கு அடிபட்டுச்சு.. அப்போ அவங்க அப்பா பவரை வச்சி ஒண்ணுமில்லா செஞ்சுட்டாங்க..

அதுக்கெல்லாம் சேர்ந்து தான் இப்போ சங்கு அவனுக்கு.. அந்த அம்மிணிக்கு செம தைரியம் தான்.. என்று செல்வம் சொல்லவும்,

பின்ன நான் சும்மாவா அந்த அம்மிணிக்கு “தில்லானான்னு” பேர் வச்சிருக்கேன் என்று பெருமையாக குமார் சொல்லவும்,

டேய் அந்த “தில்லானா..” பேருக்கும்.. அந்த அம்மிணி தைரியத்துக்கும் என்னடா சம்மந்தம்..

அந்த அம்மிணி "நல்லா டான்ஸ்.." ஆடுது.. அதனால "தில்லானா மோகனாம்பாள்" படத்துல வர பேரு வச்சிருக்கே.. ஆனா இப்போ நீ என்ன புதுசா கதை கட்ட பாக்குற என்று அசோக் நக்கலாக சொல்லவும்,

டேய் அதுவும் ஒரு காரணம் தான்.. அது இல்லாம இன்னொன்னும் இருக்கு அந்த பேருல என்று பெருமையாக குமார் சொல்லவும்,

எங்களுக்கு தெரியல., நீயே சொல்லு.. அப்படி என்னதான் காரணம் இருக்குன்னு நாங்களும் கேக்குறோம்.. என்று செல்வம் கேட்டான்.

தில்லானா.. அந்த பேருலே "தில்.." வருது பாத்தியா, அந்த அம்மிணிக்கு ஏகப்பட்ட தில்லு தானே, வந்த முத நாளே "சீனியர்ஸ்ன்னு கூட பயப்படாம.. நம்மள என்ன ஒட்டு ஓட்டுச்சு.." அதான் அப்பவே என் முழு அறிவையும் பயன்படுத்தி இந்த பேரை வச்சேன்.. சூப்பர்ல.. என்று குமார் பெருமையான முகத்துடன் சொல்லவும்,

டேய் அறிவு கொழுந்து.. பேர் வைக்குற முகரையை பாரு,, நீ அந்த பேரை வச்சு நம்மளயும் தான்டா கேவலப்படுத்துற,

நாம பல்பு வாங்கினதை அந்த அம்மிணி மறந்தாலும், இவன் இன்னும் அதை மறக்காம சொல்லி நம்மளை தான்டா டேமேஜ் பன்றான்.

ஆமாடா.. இதுல என்னமோ பெரிய இவன் மாதிரி மூஞ்சியில ஏகப்பட்ட பெருமை வேற.. போட்றா அவனை என்று ஆளாளுக்கு அவனை மொத்த ஆரம்பித்தனர்.

டேய் அவனை விடுங்கடா.. அந்த ஹர்ஷினி அம்மிணி வருது பாரு.. மொத்த காலேஜும் அந்த அம்மிணியை தான்டா பாக்குது..

பின்ன சும்மாவா என்ன தைரியம்.. இனிமேல் கண்டிப்பா இவதாண்டா நம்ம காலேஜ் குயினா இருக்க போற.. சான்ஸே இல்ல..

இவர்கள் பேசுவது எல்லாம் காதில் விழுந்தாலும் ஜெயின் பார்வை முழுவதும் நடந்து வரும் ஹர்ஷினியின் மேலே இருந்தது..

பார்க்காமலே ஹர்ஷினிக்கும் ஜெயின் பார்வையை உணர முடிந்தது.. அவர்கள் அமர்ந்து இருக்கும் இடத்தை கடக்கும் போது கடைக்கண்ணால் ஜெயை பார்த்தவள், அவனின் கூர்மையான ஆளுமையான பார்வையில்.. தன் காரில் ஏறி கிளம்பிய பிறகும், அதிகரிக்கும் அவளின் இதய துடிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை…

..................................................................................


ஹாய் ப்ரண்ட்ஸ்..

என்னுள் சங்கீதமாய் நீ 15 போஸ்ட் பண்ணிட்டேன். படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க ப்ரண்ட்ஸ்.. thank you




















 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 16



ஒரு வாரமாகவே ஹர்ஷினி மிகுந்த மன உளைச்சலுடனே சுற்றி கொண்டிருந்தாள்.. எதிலும் பெரிதாக ஈடுபாடும் இல்லை.. மிகவும் சோர்ந்தே இருந்தாள்.. ராஜீவ் பிரச்னையால் தான் அவள் இப்படி இருக்கிறாள் என்றே அனைவரும் நினைத்தனர்..

ஆனால் உண்மை அதுவல்லவே.. ஜெய் தான் அவளின் சோர்விற்கும், மன உளைச்சலுக்கும் காரணமாக இருந்தான்..

ராஜீவ் பிரச்னை நடந்த அன்று தன்னை கூர்மையாக பார்த்தவனின் பார்வையில் உள்ள பொருள் புரியாமல் மறுநாள் கொஞ்சம் குழப்பத்துடனே காலேஜீற்கு வந்த ஹர்ஷினியை,

ஜெய் கண் கொண்டு பார்க்கவே இல்ல, அன்றோடு இல்லாமல் அடுத்த நாளும் அப்படியே தான் இருந்தான். தப்பி தவறி எதிரே வந்து விட்டாலும் முகத்தை திருப்பி கொண்டு சென்று விட்டான்.. அந்த இரண்டு நாட்களும் தன்னை பார்க்காமலே சுற்றி கொண்டிருந்த ஜெய்,

மூன்றாவது நாளிலிருந்து காலேஜிர்க்கே வரவில்லை. அவனிடம் சந்தேகம் கேட்க வேண்டும் என்ற பேரில், ஏன் வரவில்லையென்று அவன் நண்பர்களிடமும் ஜாடை மாடையாக விசாரித்து பார்த்ததில் அவர்களுக்கும் ஏதும் தெரியவில்லை.

அவனை பார்க்காமல் இருந்ததில் ஹர்ஷினி மனதுக்குள் மிகவும் ஒடுங்கியே விட்டாள். அவனின் பிரிவும், பாராமுகமும் தன்னை இவ்வளவு துன்பப்படுத்துமா..?

இந்த குறுகிய காலத்திலே ஜெய் தன்னை இவ்வளவு பாதித்து இருக்கிறானா..?

தனக்கும் அவனை பிடிக்கும் தான்.. ஆனால் அதற்கு மேல் என்ன..? என்ற யோசிக்கவே பயந்து கொண்டிருந்தவளின், இத்தனை நாள் பயத்தை ஜெய்யின் பிரிவு உடைத்து அவளின் காதலை உறக்க அறிவித்து விட்டது.

ஜெய் எனும் கம்பீர ஆண்மகன் தன்னை அடியோடு சாய்த்து விட்டான் என்று உச்சந்தலையில் ஆணி அடித்தது போல் புரிந்தது. அந்த புரிதல் மிகுந்த பரவசத்தையே கொடுத்தது ஹர்ஷினிக்கு. வானில் சிறகே இல்லாமல் பறக்கும் உணர்வு.. மனதும், உடலும் எந்நேரமும் கனவுலகிலே மிதந்தது.

ஜெய்க்கான தன்னுடைய காதலை உணர்ந்த இந்த கொஞ்ச நாட்களிலே அவனை எப்போது பார்ப்போம்..? என்று ஏங்கவே ஆரம்பித்து விட்டாள். அவனை பார்க்காமல் எதுவும் ருசிக்கவில்லை. அவனின் பிரிவு மிகுந்த மன உளைச்சலையே கொடுத்தது.

இதில் இன்று தான் இன்டெர் காலேஜ் மீட்டில் பார்ட்டிசிபேட் செய்ய பேர் கொடுக்க கடைசி நாள் என்பதால் நேற்று ஜெய்யின் நண்பர்கள் அவன் வீட்டிற்கே சென்று பார்த்ததாகவும்,

அவன் இந்த முறை “இன்டெர் காலேஜ் மீட்டில் பார்ட்டிசிபேட் செய்ய உறுதியாக மறுத்து விட்டான் என கேள்வி பட்டதில் இருந்து, ஹர்ஷினிக்கு இன்னும்.. இன்னும்.. குழப்பமாகத்தான் இருந்தது.

அதனாலே இன்று அவளுடைய நண்பர்கள் இன்டெர் காலேஜ் மீட்டில் பார்ட்டிசிபேட் செய்ய அவள் பெயரை கொடுக்க கம்பெல் செய்த போதும் வேண்டாம் என்று மறுத்து விட்டு கேன்டீனுக்கு வந்துவிட்டாள்.

ஏன் இப்படி செய்கிறான்..? என்ன ஆச்சு..? ஏன் காலேஜிக்கும் வரலை..? என்று ஜெய்யை பற்றியே யோசித்து கொண்டிருந்தவளின் முன் நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தவள்,

தன் எண்ணத்தின் “நாயகனான ஜெய் ஆகாஷே” நேரில் நிற்கவும், வேகமாக எழுந்து நின்றவள், இத்தனை நாள் பிரிவின் ஏக்கத்தோடு அவனை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தன் கண்களில் அவனுக்கான முழு காதலையும் தேக்கி காதலாக பார்த்தாள்.

அவளின் கண்களில் தெரிந்த தனக்கான காதலை புரிந்து கொண்ட ஜெய் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். “ஹர்ஷினியும் என்னை காதலிக்கிறாளா..?”

அவளுக்கு தன்னை பிடிக்கும்.. என்று அவளின் பார்வையிலே முதலில் புரிந்து கொண்ட ஜெய்க்கு, இந்த பிடித்தம் எப்போது காதலாக மாறும் என்ற ஏக்கத்திலே சுற்றி கொண்டிருந்தான்,

இப்பொழுது ஹர்ஷினியின் கண்களில் தனக்கான அளவில்லா காதலை பார்க்கவும்..! இன்ப அதிர்ச்சியில் தான் அவளிடம் பேச வந்ததையே மறந்து அவளை காதலாக பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

அப்பொழுது பிரேக் பெல் அடிக்கும் சத்தம் கேட்கவும் தங்கள் காதல் உலகிலுருந்து வெளிய வந்த இருவரில், ஹர்ஷினி ச்சே.. இப்படியா..? அவரை விடாம பாத்து வைப்பேன் என்று வெட்கத்தில் சிவந்த முகத்துடன் வேகமாக குனிந்து கொள்ளவும்

அவளையே பார்த்து கொண்டிருந்த ஜெய், அவள் வெட்கத்துடன் குனிந்து கொள்ளவும் நிமிர்ந்திருந்த அவன் நெஞ்சு இன்னும் இன்னும் நிமிர்ந்தது காதல் கர்வத்தில்..

மிகுந்த உல்லாசமான மனதுடன் இருந்தவன், அவளை சீண்டும் விதமாக “என்னை ரொம்ப தேடுன போல..?” என்று குறுஞ்சிறுப்புடன் கேட்கவும்,

இப்படி பறக்காவெட்டி மாதிரி பார்த்து வச்சா, இப்படித்தான் மானம் போகும் என்று மனதுக்குள் நொந்தவள்.. குனிந்தவாறே “இல்ல..” எனும் விதமாக தலை அசைக்கவும்,

அப்படியா..? ஆனா என் ப்ரண்ட்ஸ் நீ எதோ சந்தேகம் கேட்க என்னை ரொம்ப தேடுனதா சொன்னாங்க.. என்று குறும்பாக கேட்டான்,

அய்யோ நான் கேட்டதை இந்த சீனியர்ஸ் சொல்லிட்டாங்க போலே.. என் முகத்தை மறைக்க எவ்வளவுதான் குனியரது..

அது.. அது.. சந்தேகம் தான்.. ஆனா இப்போ இல்ல.. என்று கொஞ்சம் திக்கி சொல்லவும், அவளின் அவஸ்த்தையில் கொஞ்சம் சத்தமாகவே சிரித்து விட்டான்.

தன்னுடைய நிலையை கண்டு அவன் சிரிக்கவும் கடுப்பான ஹர்ஷினி, அங்கிருந்து கிளம்ப முயலவும், புரிந்து கொண்ட ஜெய், ஓகே.. ஓகே .. நான் சிரிக்கல, இப்போ உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றான், ஹர்ஷினி கேள்வியாக பார்க்கவும்,

இன்டெர் காலேஜ் மீட்ல பார்ட்டிசிபேட் செய்ய நீ ஏன் உன் பேரை கொடுக்கல..? என்று அதுவரை அவன் குரலில் இருந்த உல்லாசம் இல்லாமல் சீரியசாக கேட்கவும்,

அவனின் இந்த திடீர் கேள்வியில், “உன்னால தான்..” என்று சொல்லமுடியாமல்.. சிறிது நேரம் என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனம் சாதித்தவள்,

பின் நீங்க.. நீங்க.. ஏன்..? என்று முடிக்க முடியாமல் நிறுத்தவும், அவளின் கேள்வியை புரிந்து கொண்ட ஜெய், தன்னை எதிர்பார்க்கிறாள் என்ற கர்வமான புன்னகையுடன்,

“எனக்கு இந்த வருஷம் நீ தான் விண் பண்ணனும்..” என்று சொல்லவும். ஹர்ஷினிக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று புரியவில்லை.

ஒரு பக்கம் தனக்காக “அவன் விட்டு கொடுப்பது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தாலும், மறுபக்கம் கொஞ்சமா கோவம் வரவே செய்தது.” அவளின் முகத்தில் இருந்தே அவளின் கோவத்தை கண்டு கொண்டவன்,அதற்கான காரணத்தையும் புரிந்து கொண்டு,

நான் பார்ட்டிசிபேட் பண்ணாலும் நீ தான் கண்டிப்பா ஜெயிப்ப.. நான் உனக்கு விட்டு எல்லாம் கொடுக்கல.. ஆனா அதே சமயம் உனக்கும் எனக்கும் போட்டி நடக்கறது எல்லாம் கண்டிப்பா என்னால எக்காலத்திலும் ஏத்துக்க முடியாது.. அந்த சூழ்நிலைக்கும் போகவும் நான் விட மாட்டேன் என்று அளவில்லா காதலுடன் உறுதியாக சொன்னான் ஜெய்.

அவன் சொல்ல.. சொல்ல.. ஹர்ஷினி திகைத்தே நின்று விட்டாள். “முதல்.. தன் மனவோட்டத்தை கண்டு கொண்டது, அடுத்து.. தங்கள் இருவருக்கும் இடையில் போட்டியே வேண்டாம் என்ற அவனின் எண்ணம் சொல்ல முடியாத உணர்வையே கொடுத்தது ஹர்ஷினிக்கு.

ஜெய் சொன்னதில் ஒரு மனசுணக்கமும் இருந்தது ஹர்ஷினிக்கு.

இரண்டு பேரில் நான் தான் விண் பண்ணுவேன்..! என்று என் டான்ஸ் மேல் அவன் வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கை,” சந்தோஷத்தை கொடுத்தாலும்,

ஜெய்யும் தனக்கு நிகராகவே டான்ஸ் ஆடுபவன், அப்படி இருக்கும் போது அவர் எப்படி நான் தான் விண் பண்ணுவேன்ன்னு சொல்லலாம், அவர் கண்டிப்பாக யாரிடமும் பேச்சில் கூட தோற்கும் எண்ணம்.. அது தன்னிடமே என்றாலும், என்று மனதளவில் கோவம் கொண்டவள்,

அதை வெளிப்படுத்தும் விதமாக “நான்.. என் 5 வயசுல இருந்து டான்ஸ் கத்துக்கிட்டு ஆடுறேன், நான் நல்லா டான்ஸ் ஆடுறது பெரிய விஷயம் இல்ல,” ஆனா.. “நீங்க யார்கிட்டயும் டான்ஸ் கத்துக்காம இவ்வளவு சூப்பரா டான்ஸ் ஆடுறது தான் உண்மையிலே ரொம்ப பெரிய விஷயம்.”. என்று கொஞ்சம் ஆதங்கமான குரலுடன் சொன்னாள்.

அவள் தனக்காக.. தன்னிடமே.. சப்போர்ட் செய்து பேசுவதும், அதிலும் இருவரில் “அவள் தான் ஜெயிப்பாள்..” என்று நான் சொன்னது அவளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பது மட்டுமில்லாமல் தான் யாரிடமும் தோற்க கூடாது என்ற அவளின் எண்ணத்தையும், கோவத்தையும் புரிந்து கொண்டவனுக்கு, அவளின் காதலை கண்டு வானத்தையே வசப்படுத்திய உணர்வு.

ஓகே.. ஓகே.. நான் சொன்னது தப்பு தான் என்று உடனடியாக ஒத்து கொண்டவன், விடாமல் இன்னைக்கு தான் கடைசி டேட்.. உன் பேரை கொடுத்துடுலாம் தானே என்று கேட்கவும்,

தன்னால் தானே ஜெய் கலந்து கொள்ளவில்லை என்ற எண்ணத்தில் ஹர்ஷினி இல்லை.. நான் என் பேரை கொடுக்கல.. வேண்டாம்.. என்று மறுக்கவும்., ஜெய் விடாப்பிடியாக அவளை கலந்து கொள்ள சொன்னவன், லஞ்சுக்குள்ள உன் பேரை கொடுதுட்டு எனக்கு வந்து சொல்ற.. என்று கட்டளையாக சொன்னவன், கிளம்பியும் விட்டான்.

அவர் என்னால தான் பார்ட்டிசிபேட் செய்யலன்னும் பொது.. எனக்கு கஷ்டமா இருக்காதா.. அதை புரிஞ்சிக்காம எப்ப பாரு அதிகாரமே என்று மனதுக்குள் பொரிந்தவள்.. முதல் வேலையாக தன் பேரை கொடுத்து விட்டு லன்ச் டிமேல் ஜெயிடம் சொல்ல அவனின் கிளாஸிற்கு செல்லவும்.

ஹர்ஷினியை பார்த்த ஜெய் வேகமாக அவள் அருகில் வந்தவுடன், பேரை கொடுத்திட்டியா..? என்று அதிகாரமாக கேட்கவும்,

ம்ம் கொடுத்துட்டேன்..

ஓகே இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.. இன்னிக்கே பிராக்டிஸ் ஆரம்பிச்சுரு.. ஓகே என்று சொன்னவள், கொஞ்சம் தயங்கி கொன்டே நீங்க ஏன் காலேஜேக்கு வரல..? என்று கேட்கவும்,

முகம் இறுக ஆரம்பித்தது ஜெய்க்கு.. கோவத்தில் பல்லை கடித்து கொன்டே அது உனக்கு எதுக்கு..? நீ கிளம்பு என்று அதட்டடவும், அப்படி என்ன கேட்டுட்டேன்.. ஏன் வரல கேட்டதுக்கு இவ்ளோ கோவமா..? என்று மனதுக்குள் சுருங்கி கொண்டவள், வேறேதுவும் பேசாமல் கிளம்பிவிட்டாள்.

ஜெய் சொன்னது போல் அன்றே ப்ராக்டிஸ் ஆரம்பித்து விட்டவள், முழு மூச்சாக பயிற்சி செய்தாள். தனக்காக இல்லாவிட்டாலும் ஜெய்க்காக தான் கண்டிப்பாக விண் செய்ய வேண்டும் என்ற உறுதியில் எந்த சான்சும் எடுக்க கூடாது என்று தன்னுடைய முழு உழைப்பையும் கொட்டி முழு நேரமும் விடாது பயிற்சி செய்தாள்.

அதில் ஆச்சார்யாவிற்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏகப்பட்ட வருத்தமே. இவ்வளவு கஷ்ட படவேண்டுமா..? என்று ஆச்சார்யா கேட்ட போதும் ஹர்ஷினி கொஞ்ச நாள் தான் தாத்தா.. என்று அவரை சமாளித்து விட்டாள்..

தினமும் அவள் காலேஜில் பிராக்டிஸ் செய்யும் போது வந்து 5 நிமிடம் மட்டுமே பார்க்கும் ஜெய், எதுவும் பேசமாட்டான். ஹர்ஷினிக்கும் அவனை பார்ப்பதே போதும்.. என்பதால் அவளும் பேச முயற்சி செய்யமாட்டாள்.

அதோடு ஜெய் செய்த வேலையை பற்றி அவள் கேள்விப்பட்ட விஷயமும் அவ்வளவு உவப்பானதாக இல்ல.. ஏன் கொஞ்சம் கோவமும் கூட அவன் மேல்.. அதான் அன்னிக்கு ஏன் காலேஜ்க்கு வரல கேட்டதுக்கு சாருக்கு அவ்வளவு கோவம் வந்துச்சா..? என்று மனதுக்குள் பொங்கினாலும், டான்ஸ் பிராக்டிஸில் எந்த விதமான மன தடங்கலும் இல்லாமல் பார்த்து கொண்டாள்.

அவர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த காலேஜ் மீட்டும் ஆரம்பித்தது, ஹர்ஷினி அவள் முறை வரும் முன் ஆகாஷை தேடவும், எங்கிருந்தோ அவள் அருகில் வந்தவன் எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டவும், ஹர்ஷினியும் எதுவும் பேச தோன்றாமல் தலையசைத்து விட்டு உறுதியான நடையுடன் மேடையேறி தன் ஈர்க்கும் நடனத்தின் மூலம் எல்லா சுற்றிலும் வெற்றி பெற்று,

“பைனல் ரவுண்டில்.. ஜோதியை கண்ணனாக அலங்கரித்து ஹர்ஷினி ராதையாக மாறி.. கண்களில் கண்ணனுக்காக காதலை தேக்கி உருக்கமாக ஆடவும், பலத்த கைதட்டலை பெற்று முழுமனதாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றியை தட்டி சென்றாள்..

அதுவரை அவளிடம் பேச எந்த விதவிதமான முயற்சியும் செய்யாத ஜெய், எல்லா கொண்டாட்டங்களும் முடிந்து ஹர்ஷினி தனியாக கிளம்பும் சமயம் அருகில் வந்தவன்..

“விண் பண்ணிட்டே..” என்று உற்சகமாக பேச ஆரம்பிக்கும் சமயம், ஹர்ஷினி கொஞ்சம் கோவமாக

ராஜீவை என்ன செஞ்சீங்க..? என்று கேட்கவும், நொடியில் முகம் இறுகிய ஜெய்.. எதுவும் பேசாமல் அவளை கூர்மையாக பார்க்கவும், அவனின் பார்வையில் கொஞ்சம் தயக்கம் வந்தாலும்,

என்ன கையை புடிச்ச.. அவன் கையை உடைச்சிருக்கீங்க..? அப்படித்தானே..? அதனால தான் காலேஜ் வரல.. என்று கேட்கவும்,

அலட்சியமாக தோளை குலுக்கியவன் எதுவும் பேசாமல் நிற்கவும், அதான் ஏற்கனவே பனிஷ் பண்ணியாச்சு இல்ல.. நீங்க ஏன் அவன் கையை உடைச்சீங்க.. என்று விடாமல் கேட்கவும்,

அதெல்லாம் உனக்கு புரியாது.. விடு.. என்று லேசான கோபத்துடன் ஜெய் சொன்னான்,

அதெப்படி புரியாம போகும்.. அதெல்லாம் புரியும் சொல்லுங்க என்று பிடிவாதமாக நிற்கவும்,

என்ன புரியும் உனக்கு.. நான் இருக்கிற இடத்துலே ஒருத்தன் உன் கையை புடிச்சுருக்கான்.. அது எனக்கு எவ்வளவு கோவத்தை, ஆத்திரத்தை கொடுக்கும் தெரியுமா உனக்கு..?

என்னால உன் முகத்தை கூட நிமிந்து பாக்க முடியல. அதான் அவன் வீட்டில் இல்லன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் நாலு நாளா அந்த ராஸ்களை தேடி அலைஞ்சு, அவங்க கெஸ்ட் ஹவுஸுல இருந்த அவன் கையை உடைச்சேன்..

அவனை முதல் நாளே தட்டியிருக்கணும்.. அவனை விட்டது தான் என் தப்பு.. இப்போ கூட அவனை நினைச்சா.. என்று ஆத்திரத்தில் பல்லை கடித்தவன்.. அதான் தேடி புடிச்சு அவன் கையை உடைச்சேன் போதுமா..? வந்துட்டா என்னை பெருசா கேள்வி கேக்க “போடி..” என்று கோவத்தில் கத்தவே செய்தான்.

.................................................................................................................................................



ஹாய் ப்ரண்ட்ஸ்

என்னுள் சங்கீதமாய் நீ 16 போஸ்ட் பண்ணிட்டேன். படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க ப்ரண்ட்ஸ்.. thank you
 
Status
Not open for further replies.
Top