All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிதிராஜின் "என்னுள் சங்கீதமாய் நீ" - கதைத் திரி

Status
Not open for further replies.

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 26



அத்தை.. “நானும் உங்க கூட சென்னை வரேன்..” என்று ஹர்ஷினி சொல்லவும், புரியாமல் பார்த்த மேனகா,

“நாளைக்கு உனக்கு காலேஜ் இருக்கே ஹர்ஷினி..” என்று கேட்க,

“இருக்கு தான் அத்தை.. ஆனா எனக்கு சுபத்ரா அத்தையை பாக்கணும் போல இருக்கு..”என்று குறுகுறு நெஞ்சோடு சொன்னாள். அவள் சுபத்ராவை பார்க்க அல்ல.. ஜெயயை தானே பார்க்க செல்கிறாள்.

ஓஹ்.. என்று யோசித்தவர், ரேணுகாவை கேள்வியாக பார்க்கவும், “கூட்டிட்டு போ மேனகா..” என்று சம்மதம் சொல்லிவிடவும், அன்று இரவே அவர்களுடன் சென்னை சென்றவள், மறுநாளே ஷாப்பிங் போவதாக சொல்லிவிட்டு ஜெய் தங்கியிருக்கும் பிஜிக்கு சென்றாள்.

ஆனால்.. “அவன் வெளியே சென்றிருக்கிறான்..” என்றுவிடவும் அங்கேயே சுற்றி கொண்டு ஈவினிங் வரை வெய்ட் செய்தவள், அதற்கு மேல் சுப்தராவை சமாளிக்க முடியாமல் கிளம்பிவிட்டாள்.

அன்று மட்டுமல்ல அடுத்த இரண்டு நாட்களும் அவன் அந்த பிஜிக்கு வரவே இல்லை.. எங்கு சென்றான் என்று தகவலும் சொல்லவில்லை.. என்றுவிடவும், இதற்கு மேல் சமாளிக்க முடியாது.. “காலேஜ் செல்ல வேண்டுமே.. ரேணுகா வேறு வரச்சொல்லி போன் செய்து கொண்டேயிருக்கவும்..” வேறு வழி இல்லாமல் ஊர் திரும்பிவிட்டாள்.

எங்கு சென்றான்..? எப்படி இருக்கிறான்..? ஏன் இன்னும் போனை ஆன் செய்யவில்லை.? என்று அவனின் கவலையே அவளின் மனதை கரையனாக அரித்து கொண்டிருந்தது. அதற்கு விடுவு கிட்டுவது போல், விடியற்காலையிலே தாரணி போன் செய்து “ஜெய் இப்பொழுது தான் வீட்டுக்கு வந்ததாக கூறவும் தான் ஹர்ஷினிக்கு உயிர் மூச்சே வந்தது”.

தன்னை நிதானித்து கொண்டவள்.. “தாரணி நான் சொல்றதை கவனமா கேட்டு அப்படியே செய்யணும்..” என்று தாரணியிடம் சில விஷயங்கள் சொன்னவள்,

“அன்று விடுமுறை நாள்” என்பதால் எப்பொழுதும் போல் ஹோட்டல்க்கு சென்றவள் அன்று முழுவதும் போனை கையிலே வைத்து சுற்றிக்கொண்டிருந்தாள், அவள் எதிர்பார்த்த போன் மாலையில் வரவும், உடனடியாக அட்டென்ட் செய்து காதில் வைத்துக்கொண்டு அங்கு விஜயா மற்றும் ஜெயின் உரையாடலை கவனிக்க ஆரம்பித்தாள்.

“ஜெய் ஏன் இவ்வளவு மெலிஞ்சு போய் இருக்க..? மூஞ்சும் சரியில்ல.. என்னடா ஆச்சு..? ஏதாவது பிரச்சனையாப்பா..? அம்மாகிட்ட சொல்லு சாமி..” என்று விஜயா மகனிடம் கவலையோடு கேட்டு கொண்டிருந்தார்,

“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா..” என்ற தன்னை இத்தனை நாள் தவிக்கவிட்ட ஜெயின் குரலை கேட்ட ஹர்ஷினியின் கண்களில் கண்ணீர் அரும்பவும், அதை துடைத்து கொண்டவள், அவர்களின் பேச்சை தொடர்ந்து கேட்க ஆரம்பித்தாள்.

“இல்லப்பா எதோ இருக்கு.. ஏதா இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லுப்பா..” என்று “அவன் எதுவும் இல்லை..” என்று சொன்னாலும் விடாமல் தொடர்ந்து வற்புறத்துவும்,

இப்போ என்னம்மா தெரியணும் உனக்கு..? நான் ஏன் இப்படியிருக்கேன்னா..? நல்லா கேட்டுக்கோ.. “எனக்கு ஒழுங்கா டான்ஸ் ஆடவே தெரியலையான்.. யாரும் எனக்கு சான்ஸ் கொடுக்க மாட்டேங்கிறாங்க…”

அப்படியும் அலைஞ்சி.. தெரிஞ்சி ஒரு டான்ஸ் மாஸ்டர் கிட்ட சான்ஸ் கேட்டதுக்கு, “எனக்கு ப்ரொபெஷனாலா, எல்ல விதமான் டான்ஸும் தெரியலையாமா..? நீ எல்லாம் எந்த மூஞ்சை வச்சிக்கிட்டு டான்ஸ் ஆட சான்ஸ் கேட்டு வரேன்னு எல்லாரும் பார்க்க அவமானப்பட்டேன்..”

“அவர்கிட்ட மட்டுமில்ல.. அதுக்கப்புறமும் நிறைய டைம்.. நிறைய பேர்கிட்ட அசிங்கப்பட்டேன் போதுமா..?” என்று அவன் கத்தும் போது அங்கு வந்த மஹாதேவன்,

“இதுக்கு தான் பெரியவங்க சொல்றதை கேட்கணும்ங்கிறது, ஒழுங்கா IT கம்பெனிக்கே வேலைக்கு போயிருக்கலாம் இல்லை.. இப்போ பாரு இத்தனை மாசம் சுத்தியும் உன்னால ஒன்னும் செய்ய முடியல..”

இதுல நீ வேற “சும்மா சுத்துற உன் மகனுக்கு காசு தரச்சொல்லி அழுகை.. நல்ல வேளை நான் காசு தரலை.. இல்லாட்டி அதுவும் கரியாத்தான் போயிருக்கும்..” என்று அவனின் மனஅழுத்தம் தெரியாமல் நக்கலாக சொல்ல,

இங்கு “ஹர்ஷினிக்கு தன்னவனின் நிலையை நினைத்து உயிர் துடித்தது”,

“ஏங்க சும்மா இருங்க.. எப்போ என்ன பேசணும்ன்னு தெரியாதா உங்களுக்கு..? புள்ள ஏற்கனவே கஷ்டத்துல இருக்கும் போது இப்படித்தான் பேசுவாங்களா..?” என்று விஜயா கணவரை கத்தியவர்,

இறுக்கமாக அமர்ந்துஇருந்த மகனின் தலையை வருடியவாறே நீ போ ரெஸ்ட் எடுப்பா.. போப்பா, போ ஜெய்.. என்று அவனை வற்புறுத்தி ரூம்க்கு அனுப்பும் சத்தம் கேட்க,

அதை தொடர்ந்து “ஹலோ ஹலோ..” என்று தாரணி கூப்பிடும் குரலில், அடைத்த தொண்டையை செறுமிய ஹர்ஷினி, சொல்லு தாரணி.. எனவும்

“நீங்க சொன்ன படியே, அண்ணா எதோ மனசு கஷ்டத்துல இருக்கிற மாதிரி தெரியுது, என்ன எதுன்னு..நீங்க விசாரிங்கம்மான்னு அம்மாகிட்ட சொன்னேன்”,

அண்ணா ரொம்ப மெலிஞ்சி போயி, எப்படியோ இருக்க அம்மாவும் பயந்துட்டாங்க,

அண்ணா காலையிலருந்து நல்லா தூங்கிட்டே இருக்கவும், எழுப்பாம அவரே எழட்டும்ன்னு வெய்ட் பண்ணோம்.. அதான் லேட் என்று சொல்ல, சரி, அவரை கொஞ்சம் பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

தாரணி.. என்று ஜெய் கத்தும் சத்தத்தில், அப்பொழுதுதான் ஹர்ஷினியிடம் பேசிவிட்டு வைத்தவள், ஜெய் கூப்பிடவும் போனை கையிலே கொண்டு சென்றுவிட்டாள், ஜெயின் ரூமிற்குள் சென்ற தாரணி, அவனின் கோவமான முகத்தில், பயந்தவாறே

“என்ன அண்ணா..?” என்று கேட்கவும், “அம்மாவை வர சொல்லு உடனே..” எனவும், வேகமாக சென்று விஜயாவை கையோடு அழைத்து கொண்டு வந்தாள்,

“எனக்கு நீங்க காசு அனுப்பினீங்களா..? இல்லையா..?” என்று அழுத்தத்தோடு கேட்க, தாரணியின் கைகள் பயத்தில் வேர்த்து கொட்டியது,

“என்ன ஜெய் இப்படி கேட்கிற.. உனக்கு முதல்ல ஒரு மூணு, நாலு மாசம்தான் என்னால காசு அனுப்ப முடிஞ்சது.. அதுக்கு அப்பறம் தான் நீயே அங்க எதோ வேலை.. என்ன தாரணி சொன்ன.. என்ன வேலை அது..?” என்று தாரணியிடம் கேட்க, ஜெயின் கண்கள் கூர்மையாக அவளை துளைத்தது.

ஏய் சொல்லுடி..? என்று விஜயா மறுபடியும் கேட்க, “பார்ட்.. பார்ட் டைம்” என்று திணறியவள், ஜெயின் பார்வையில் வேகமாக தலை குனிந்து கொண்டாள். ஆங்.. அதான்.. அந்த வேலை பாத்து நீயே சம்பாதிக்கிறன்னு தாரணி சொல்லவும் தான் எனக்கு நிம்மதியாச்சி.. என்று சொல்லவும், நீ போம்மா..? என்று அவரை அனுப்பிவிட்டவன்,

“இப்போ நான் என்ன நடந்ததுன்னு உன்கிட்ட கேட்டா தான் எனக்கு எல்லாம் சொல்லுவியா தாரணி..?” என்ற ஜெயின் குரல் அழுத்தத்திலே, பயந்து போன தாரணி “ஹர்ஷினி வேலை பார்த்து பணம் அனுப்புவது முதல், இப்பொழுது போன் பேசியது வரை..” அனைத்தையும் சொல்லிவிட்டாள்.

“மேம்.. உங்களை பார்க்க உங்க ஜூனியர் வந்திருக்காங்க..” என்று ரிசெப்ஷனில் போன் செய்து சொல்லவும், யாரு என்று யோசித்து கொண்டே வந்தவள்,

அங்கு தாராணியோடு இருந்த ஜெயயை கண்டிப்பாகவே எதிர்பார்க்கவில்லை. வெகு மாதத்திற்கு பிறகு அவனை பார்த்ததால், ஆனந்த அதிர்ச்சி கொண்டவள், மலர்ந்த முகத்துடனே ஜெயயை நன்றாக பார்த்தவாறே வேகமாக அவர்களை நெருங்கியவள்,

“வாங்க.. வாங்க உள்ளே போய் பேசலாம்..” என்று ஹோட்டல் உள்ளே அழைக்கவும், அவளையே தன் நெருப்பு பார்வையால் பொசுக்கி கொண்டிருந்த ஜெய்,

“இங்கேயே பேசலாம்..” என்று கடினமான குரலில் சொல்லவும் தான், வேறுபாட்டை உணர்ந்து அவர்களை நன்றாக பார்த்தவளுக்கு “தாரணியின் அழுத முகமும், ஜெயின் இறுகிய முகமும் கண்ணில் பட்டது”.

என்ன.. என்ன ஆச்சு..? என்று புரிந்தும்.. புரியாமலும் திணறியவாறே கேட்டவளை,. கண்களில் கனலுடன் நோக்கிய ஜெய்,

“சோ.. உனக்கும் நான் எதுக்கும் லாயக்கில்லாதவனாதான் தெரியுறேன் போல..” என்று அடக்கப்பட்ட குரலில் சீறவும்,

“இல்லை.. அப்படி எல்லாம் நான் நினைக்கவே இல்லை..” என்று பதறி போனவளாக மறுக்கவும்,

“ஆமா.. அப்படித்தான் நினைச்சிருக்க.. அதனால தான் நீ வேலைக்கு போய் எனக்கு காசு அனுப்பியிருக்க..”

“நான் அப்படி எல்லாம் நினைச்சு காசு அனுப்பலை.. உங்களுக்கு.. நீங்க எப்படி சமாளிக்க முடியும்ன்னு தான்..” என்று சொல்லும்போதே,

ஓஹ்.. “அப்போ என்னால என்னோட செலவுக்கு கூட காசு சம்பாதிக்க முடியாதுங்கிறாயா..? அந்தளவு கையாலாகாதவனா உன்கண்ணுக்கு தெரியறேனா..?”

“அய்யோ.. நான் அப்படி நினைக்கவே இல்லை.. ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க..” என்று அவள் சொல்வதை காது கொடுத்து கூட கேட்காத ஜெய்

“இனி எனக்கு யார் தயவும் தேவையில்லை, என் செலவை நானே பாத்துக்கிறேன்..” என்றுவிட்டு விடுவிடுவென சென்றுவிடவும், “சாரி..” என்றுவிட்டு தாராணியும் அவனுடன் சென்றுவிட்டாள், ஹர்ஷினிக்கு சில நிமிடங்களிலே ஒரு பெரிய புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.

சொன்னது போல் “பார்ட் டைமாக ஒரு பிஸ்ஸா கார்னரில் வேலை” செய்து அவன் செலவை அவனே பார்த்து கொண்டாலும் மனது அமைதியடையவே இல்லை.

“தன் தந்தை தன்னை நம்பி காசு தராதது, ஹர்ஷினி வேலை செய்து தனக்கு காசு அனுப்பியது” எல்லாம் அவனை மனதளவில் இன்னுமே பாதித்தது,

“ஒரு காதலனாக ஹர்ஷினி தனக்காக செய்தது பெருமையாக, கர்வமாக இருந்தாலும், ஒரு முழு ஆண்மகனாக அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை..”

“எதோ தன் மிகவும் தாழ்ந்து போனதாக தான் தோன்றியது அவனுக்கு..”

“அவளுக்காக எதோ செய்ய வந்து, இறுதியில் அவளிடமே உதவி பெற்று” என்று நினைத்து மறுக்கியவனால் ஒரு கட்டத்தில் ஹர்ஷினியின் முகத்தை கூட பார்க்க முடியும் போல் தோணவில்லை.

அதனாலே அவன் ஹர்ஷினியை பார்க்காமல், பேசாமல் அவளை வருத்தவைத்தான். தாரணி மூலமாக எவ்வளவு முயன்றும் அவனை சமாதான படுத்த முடியாமல் தவித்த ஹர்ஷினி,

இறுதியாக ஒரு விஷயத்தை மட்டும் தாரணி வழியாக அவனை சென்று சேருமாறு பார்த்து கொண்டவள்.. அதற்கு பிறகு “அவனுடைய கோவம் தீர்ந்து அவனே வரட்டும்..” என்று

“அவனுடைய உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அவனுக்கான டைம்மை கொடுத்தவள் எவ்விதத்திலும் அவனை தொடர்பு கொள்ளாமல் தாரணியிடம் மட்டும் தினமும் அவனின் நலத்தை விசாரித்து கொண்டு அமைதியாக இருந்து கொண்டாள்”.

ஹர்ஷி.. “உன்னோட காலேஜ் சீனியர் ஜெய் தெரியுமா உனக்கு..?” என்று ஊர் வந்த சுபத்ரா கேட்கவும், அவரின் தீடிரென ஜெய் பற்றிய கேள்வியில் மெலிதான பயம் கொண்டவள்,

தெரியும்.. தெரியும் அத்தை..

அந்த தம்பி “இப்போ நம்ம டான்ஸ் அகாடமியில தான் டான்ஸ் கிளாஸ் வராப்படி.. ரொம்ப நல்லா ஆடுறான், அவனும் என்னை மாதிரியே எல்லா ஸ்டைல் ஆப் டான்சும் தேடி பிடிச்சி கத்துகிறான்”.

“டான்ஸ்ல தனக்குன்னு ஒரு முத்திரையை பதிக்கறது தான் அவனுடைய குறிக்கோள் போல.. நீ வேணும்ன்னா பாரேன்.. அவன் கண்டிப்பா சாதிக்கவும் செய்வான்”. என்று சுபத்ரா சொல்ல சொல்ல,

“குரு மெச்சிய சீடனாக ஜெய் இருப்பதை கண்ட ஹர்ஷினிக்கு மனதில் சாரல் அடித்தது”.

அன்றிரவு.. போன் செய்த தாரணி, “உங்க அத்தை வந்திருக்காங்களா..?” என்று கேட்கவும், ஆமா.. என்று ஹர்ஷினி சொல்லவே,

அண்ணா போன் பண்ணியிருந்தாங்க.. “உங்களை உங்க அத்தை கிளம்பிறப்போ அவங்களோடயே சென்னை வரசொன்னார் அண்ணா..” என்று சொல்லவும்,

“நீண்ட நெடிய இடைவெளிக்கு பின் தன்னை தேடிய ஜெயயை” நினைத்த ஹர்ஷினியின் மனம் என்ன உணர்கிறது என்றே தெரியவில்லை. சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும்,

இத்தனை மாதம் தன்னை தவிக்க விட்ட அவன் மேல் கோவம், வருத்தம் இரண்டுமே இருந்தது. “வரமாட்டேன்னு சொல்லிடலாமா..?” என்று மூளை யோசிக்கும் போதே, வாய் "வரேன்.." என்று சொல்லிவிட்டுருந்தது.

“எனக்கு நானே தான் பெரிய எதிரி போல என்று தன்னையே கொட்டிக்கொண்டாள் ஹர்ஷினி”.

சுபத்ரா சென்னை கிளம்பவும், நானும் வரேன்.. எனக்கு இப்போ லீவ் தான் என்று ஹர்ஷினி கிளம்ப, “நாங்களும் சென்னை வரோம் அத்தை.. எங்களுக்கும் இப்போ லீவ் தான் என்று கார்த்திக், ஹாசினி” அடம்பிடிக்க அவர்களுடன் மாலதி, இந்திரன் என்று ஒரு படையே சென்னை கிளம்பியது.

“குட்டி பிசாசுங்களா..” என்று கடுப்பில் அவர்களின் மண்டையை கொட்டவும், ஏன்க்கா..? என்று தலையை தேய்த்து கொண்டே அமுல் பேபி போல் சப்பியாக இருந்த ஹாசினி பாவமாக கேட்கவும் சிரிப்புடன் அணைத்துக்கொள்ள தான் முடிந்தது ஹர்ஷினியால்.

.....................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போட்டுட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை சொன்னா சந்தோஷப்படுவேன் ப்ரண்ட்ஸ்.. thank you
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 27



ஹர்ஷி.. வீட்ல இருந்து என்ன செய்ய போறோம்..? சுபத்ராவும் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளாஸ்க்கு கிளம்பிருவா.. வெளியே எங்காவது போலாமா.? என்று இந்திரன் கேட்கவும்,

அச்சோ.. இந்த சித்தப்பா காரியத்தையே கெடுத்தாரே.. என்று மனதுக்குள் அலறிய ஹர்ஷி, “இல்லை சித்தப்பா.. நான் அத்தையோட கிளாஸ்க்கு போறேன்.. நீங்க எல்லாம் வேணா கிளம்புங்க..”

அதுசரிவராது.. நீ அங்க போய் சும்மா உட்காந்திருக்கிருத்துக்கு எங்களோடு வா போலாம்.. என்று மாலதி கண்டிப்புடன் சொல்ல,

“சித்தி.. அதான் அத்தை இருக்காங்கல்ல.. நான் இருந்துப்பேன்.. நீங்க கிளம்புங்க” என்று அவர்களை சரிக்கட்டி அனுப்பியவள் சுப்தராவுடன் அகாடெமிக்கு சென்றாள்,

ச்சே.. இந்த டைம்மே போவேனாங்குது.. இன்னும் கிளாஸ் ஆரம்பிக்க அரை மணிநேரம் இருக்கு என்று கடுப்புடன் நேரத்தை சபித்தபடி சுபத்ரா ஆட்கள் மூலம் கிளீன் செய்வதை பார்த்து கொண்டிருந்தாள்.,

நான் தான் இன்னிக்கு வரேன்னு அவருக்கு தெரியுமில்ல.. ஏன் கொஞ்சம் சீக்கிரமா வந்தா தான் என்னவாம்,, கரெக்ட்டா டைம்க்கு தான் வருவாரா..? என்று ஜெயயை மனதுக்குள் அர்ச்சித்தபடி இருந்தவளின் அர்ச்சனையை கேட்டோ என்னமோ வேகமாக வந்து கொண்டிருந்தான் ஜெய் ஆகாஷ்,

இவள் கருப்பு கண்ணாடி தடுப்புக்கு அப்பால் உள்ள சுபத்ராவின் ஆஃபீஸ் அறைக்குள் அமர்ந்து இருந்ததால் அவளால் நன்றாக ஜெயயை பார்க்க முடிந்தது, அன்று ஹோட்டலுக்கு வந்து கத்திவிட்டு சென்ற ஜெய் இல்ல இவன்.. நிறைய மாற்றங்கள்..

கல்லூரி மாணவன் தோற்றத்தில் இருந்து மாறி “கட்டிளங்காளையாக, கம்பீர ஆண்மகனாக, தோள்கள் எல்லாம் விரிவடைந்து, இன்னும் ஒரு அடி வளர்ந்து, கண்களில் தனி பளபளப்புடன், முகம் இன்னும் ஜொலிக்க, அரும்பு மீசை மறைந்து கத்தை மீசையாக வளர்ந்து அதை முறுக்கி கொண்டே தன்னை தேடும் அவன் பார்வையில் இருக்கும் காதலை உணர்ந்தவளின் மனம் நெடு நாட்களுக்கு பிறகு தன் காதலனை கண்ட நிறைவில் மலர்ந்து மனம் வீசியது, அதுவே ஹர்ஷினியின் முகத்திற்கு தனி சோபையை கொடுத்தது,”

வழியில் உள்ள சுபத்ராவிடம் பேசியபடியே தன்னை தேடியவனின் முன் சென்று நிற்க மனம் ஆவல் கொண்டாலும், மூளை அதனை தட்டி, அவன் மேல் உள்ள செல்ல கோவத்தை ஞாபகப்படுத்தி “தேடட்டும்.. இன்னும் நல்லா தேடட்டும்.. இத்தனை மாசம் உன்னை தவிக்க விட்டார் இல்ல..” என்று தடை போட்டது.

அப்பொழுது கதவை திறந்து கொண்டு சுபத்ரா உள்ளே வரவும், அவரின் பின்னாலே வந்த ஜெயயை கண்டவுடன் வேகமாக எழுந்து நின்றாள், அதை பார்த்து சிரித்த சுபத்ரா,

“இன்னும் சீனியர் பயம் உன்னை விட்டு போகல போல.. படக்குன்னு எழுந்து மரியாதை எல்லாம் தர..” என்ன ஜெய்,,? என் மருமகளை நல்லா பயமுறுத்தி வச்சிருக்க போல..?” என்று சிரித்து கொண்டே பைலை பார்த்தவாறே அவனிடம் கேட்டார்.

அவர் பேசுவது எல்லாம் அவன் காதில் விழுந்தா தானே அவன் பதில் சொல்ல, அவன்தான் அவன் காதலியையே தீவிரமாக பார்த்து கொண்டிருந்தானே,

அச்சோ.. அத்தை கேட்கிறதுக்கு பதில் சொல்லாம இப்படி என்னை விடாம பாத்துட்டு இருக்காரே என்று மனதுள் பதறிய ஹர்ஷினி, “ஜெயிடம் தன் அத்தையை கண்ணால் காட்டி பேசுமாறு சைகை செய்ய, அவனோ அவளிடம் தான் பேச வேண்டும் என்று சைகை செய்ய”,

“அத்தை இருக்காங்க.. அப்பறம் பேசலாம்.. என்று இவள் சைகை செய்ய, அவனோ எனக்கு இப்பொழுதே பேசியாக வேண்டும்” என்று பிடிவாதமாக சைகை செய்ய,

“எப்போ பாரு இவர் நினைச்சது தான் சட்டம்..” என்று மனதுள் திட்டியவாறே அவனை முறைத்தவள், “அத்தை.. நான் இன்னிக்கு மதியம் என் பிரண்டை பாக்க ஸ்பென்சர் பிளாசா போறேன்..” என்று சொல்லவும்,

என்ன ஹர்ஷி இது..? அண்ணாதான் உன்னை வெளியே வரச்சொல்லி எவ்வளவு கம்பெல் பண்ணாரு.. அவர்கிட்ட என்கூடவே இருக்கேன்னு சொல்லிட்டு இப்போ வந்து நீ தனியா போறான்னு என்ன அர்த்தம்.. என்ன ஹர்ஷி இது எல்லாம்..? என்று சுபத்ரா கண்டிப்புடன் திட்ட,

“இவராலதான் எனக்கு இப்போ திட்டு..” என்று ஓரக்கண்ணால் அவனை கடுப்புடன் பார்க்கவும், “ப்ளீஸ்டி.. பேசு” என்று தன் வாயசைத்து அவன் சொல்ல,

“அத்தை.. நான் போயிட்டு அவளை பாத்துட்டு உடனே வந்துடுறேன்.. கொஞ்ச நேரம் தான் ப்ளீஸ் அத்தை..” என்று விடாது கெஞ்சவும், “சரி போ.. ஆனால் போன டைம் மாதிரி நீ தனியா எல்லாம் எங்கேயும் போக கூடாது.. நம்ம டிரைவர் கூடவே போயிட்டு வந்துடு” என்று முடிவாக சொல்லிவிட,

“விட்டார்களே அதுவே போதும்..” என்று “ஓகே வும்” சொல்லிவிட்டாள் ஹர்ஷினி. “சாரி ஜெய் இவளால நீ வெய்ட் செய்ய வேண்டியதா போயிடுச்சு..” என்று சொல்லவும்,

“பரவாயில்லை மேம்..” என்று சொன்னவன், தன் பாக்கேட்டிலிருந்து பணத்தை எடுத்து பீஸ் கொடுக்கவும், எண்ணி பார்த்து விட்டு பில் கொடுக்கவும்,

“ஏன் எண்ணி பாக்காம தான் வாங்குனா என்னவாம்.. இவரே பார்ட் டைம் வேலை பார்த்து கஷ்டப்பட்றாரு.. இவர்கிட்டேயும் பீஸ் வாங்கணுமா..? அதான் இவ்வளவு காசு வச்சிருக்கே.. இந்த அத்தை ரொம்ப மோசம்” என்று மனதுள் அவரை தாளித்தபடி நின்றுஇருந்த ஹர்ஷினியை கண்ட ஜெய்.

அவளின் பொருமலை அவள் சுபத்ராவை பார்க்கும் பார்வையிலே புரிந்து கொண்டு பொங்கி வந்த தன் சிரிப்பை வாய்க்குள் அடக்கினான்,

ஓகே மேம் நான் கிளாஸ்க்கு போறேன்.. என்று விட்டு வெளியே வந்த ஜெயின் மனம் நிறைந்து ஆசுவாசமாகவே உணர்ந்தது. எங்க அவகிட்ட நான் நடந்துக்கிட்ட விதத்துல என் மேல பயங்கர கோவத்துல இருப்பாளோ..? இல்லை ஒரு சமயம் வெறுத்தே இருப்பாளோ..? என்று பல நாட்களாக அவன் பயந்த பயம் அவனுக்கு மட்டும் தானே தெரியும்.

“ஹர்ஷி, நான் கிளாஸ் போறேன்.. நீயும் வாயேன்” என்று சுபத்ரா அழைக்க, மறுபடியும் ஜெயயை பார்க்கும் ஆசையில், “வரேன்..” என்றவள் அவருடன் கிளாஸ் நடக்குமிடம் சென்றவள், ஓரமாக அமர்ந்தபடி தன்னவன் ஆடுவதை ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்,

“ம்ம்.. நிறைய சேஞ்ஜஸ் இவர் டான்ஸ்ல.. எல்லா ஸ்டெப்ஸும் அவருக்கான தனி ஸ்டைல்ல தான் ஆடுறாரு.. இங்க இத்தனை பேர்லே அவர் ஆடுற பாங்கு மட்டும் தனியாவே தெரியுது” என்று பெருமையுடன் அவனை பார்த்து கொண்டிருந்தவளை,

உணர்ந்த ஜெய், “ஆடும் போதே இவளை பார்த்து கண்ணடிக்கவும், முதல் போல் வெட்கத்தில் குனியாமல்.. மறுபடியும் கண்ணடிக்க மாட்டானா.. என்று தங்களின் நீண்ட மாத பிரிவில் அவனுக்காக.. அவன் காதலுக்காக.. இது போல் அவன் குறும்புக்காக ஏங்கியவளின் பார்வை அதை அப்படியே ஜெயிடம் வெளி படுத்தவும் தவறவில்லை..”

அவளின் ஏக்கமான பார்வையை புரிந்து கொண்ட ஜெயின் கால்கள் ஆடுவதை நிறுத்திவிட்டு “அவளையே குற்ற உணர்வுடன் தவிப்பாக பார்க்கவும்”, சுதாரித்து கொண்ட ஹர்ஷினி.. “அங்க பாத்து ஆடுங்க..” என்று சைகை காட்டும் போதே..

“என்ன ஜெய்..? ஏன் நின்னுட்ட..?” என்று சுபத்ரா பாடலை ஆப் செய்துவிட்டு கேட்க, “கொஞ்சம் பிரேக் வேணும் மேம்..” என்றவன் அங்குள்ள மேடையில் அமர்ந்துகொண்டான்.

“ஓகே..” என்ற சுபத்ரா.. “நீங்களும் கொஞ்ச நேரம் உட்காருங்க” என்று மற்றவர்களிடமும் சொன்னவர். நேரே ஹர்ஷினியிடம் வந்து அமர்ந்து கொண்டார்.

“மேம் அது உங்க அண்ணா பொண்ணு தானே.. இந்த போட்டோல இருக்கிறதும் அவங்க தானே..?” என்று அங்கு சுவரில் “ஹர்ஷினியின் முதல் நாட்டிய அரங்கேற்ற போட்டோவை” காட்டி ஒரு மாணவி கேட்க,

“ஆமாம்.. அவதான்..” என்று சுபத்ரா சிரிப்புடன் சொல்ல,

அப்போ சூப்பர் மேம்.. நீங்க அடிக்கடி சொல்வீங்க இல்ல.. “பரதத்துல உங்களுக்கு ஈகுவலா அவங்களும் ஆடுவாங்கன்னு.. இப்போ நீங்க ரெண்டு பேறும் எங்களுக்காக ஆடுங்க மேம்..” என்று அந்த மாணவி கேட்க,

“ஆமா மேம்.. ஆடுங்க..” என்று மற்றவர்களும் கேட்க, சுபத்ரா பதறி போனவராக ஹர்ஷினியை பார்த்தார். அந்த போட்டோவை பார்த்ததுமே தன் தலையை குனிந்து கொண்ட ஹர்ஷினியின் கண்களில் இருந்து கண்ணீர் வர பார்க்க, வேகமாக எழுந்து கொண்டவள்,

“சாரி.. ஐ காண்ட்..” என்று பொதுவாக சொல்லிவிட்டு, அங்கிருந்து செல்லவும், சுபத்ராவும் அவளை பின்தொடர்ந்த படி சென்றார், “என்ன ஆச்சு..?” என்று மற்ற மாணவர்கள் பேசுவதை கேட்ட படி அமர்ந்து இருந்த “ஜெயின் மனக்கண்ணில் ஹர்ஷினியின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரே நின்றது”.

“எனக்கு பசிக்குது.. ஏதாவது சாப்பிடலாமா..?” என்று ஸ்பென்ஸரில் சந்தித்து கொண்ட ஜெய்.. ஹர்ஷினியின் வாடிய சோர்ந்த முகத்தை பார்த்து கேட்க, “ம்ம்.. போலாம்” என்றவள், அங்கிருக்கும் புட் கோர்ட்டில் சென்று இருவரும் அமைதியாக சாப்பிட்டு முடித்து, வெளியே உள்ள மேடை மீது அமரவும்,

“நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்..” என்று ஹர்ஷினி மிகுந்த தயக்கத்துடன் இழுக்க,

“ம்ம் சொல்லு..” என்று சொன்ன ஜெய்க்கு, “அவள் என்ன சொல்ல போகிறாள்..?” என்று தெரியத்தான் செய்தது.

“அது.. நாம அப்போ காலேஜில் டான்ஸ் ஆடினோமே., எங்க தாத்தா கூட வந்திருந்தாரே.. அப்போ.. அன்னிக்கு.. தாத்தா.. என்னை இனி..” எனும் போதே தொண்டை அடைக்கவும், அவளின் வேதனையை புரிந்து கொண்ட ஜெய் தண்ணீர் பாட்டிலை நீட்டினான், மறுக்காமல் வாங்கி குடித்தவள், மூச்சை இழுத்து விட்டவாறே,

“என்னை இனி எப்போதும் டான்ஸ் ஆடக்கூடாதுன்னு எங்க பாட்டி.. என்னோட முதல் குரு மேல சத்தியம் வாங்கிட்டாரு..” என்று வேகமாக சொன்னவள்,

பொங்கும் கண்ணீரை மறைக்க வேகமாக கீழே குனிய பார்க்க, அவளின் முகத்தை குனிய விடாமல் தன்னை பார்த்தவாறு நிமிர்த்து பிடித்தவன், தன் கையால் வடியும் அவளின் கண்ணீரை துடைக்கவும், மேலும் விம்மிய படி அவனை கட்டி கொண்டவள், அழுது தீர்க்கவும்,

“போதும் விடுடி.. இன்னும் எத்தனை நாளைக்கு அதையே நினைச்சி இப்படி அழ போற..” என்று அவளின் வேதனையை தாங்காது கடிந்து கொண்ட ஜெய், அவளை தன்னிடம் இருந்து பிரிக்கவும், இத்தனை மாத பிரிவுக்கு பின்னால் கிடைத்த அவனின் நெருக்கத்தை இழக்க விரும்பாமல்,

“ம்ஹூம்.. மாட்டேன்..” என்பது போல் தலையாட்டி கொண்டே, மறுபடியும் அவனை இறுக்கி கட்டிப்பிடித்தாள். “நீ இப்படி கட்டி பிடிக்கிறது மாமனுக்கு குஜாலாவாதான் இருக்கு.. என்ன ஒன்னு மத்தவங்களுக்கு தான் ப்ரீ ஷோ காட்ட வேணும்ன்னு பார்த்தேன்..” என்று சென்னை மொழியில் குறும்பாக சொல்ல, “ச்சே.. பொது இடத்துல இப்படி நடந்துக்கிட்டோமே..” என்று வேகமாக அவனிடம் இருந்து பிரிந்து அமர்ந்தாள்.

“நான் கூட நீ எதோ பெருசா சண்டை போடா போற.. எப்படி உன்னை சமாதானப்படுத்த போறேன்னு பயந்துட்டு வந்தா.. நீ என்னடான்னா அழுதுட்டு இருக்க.. அதுவும் என்னையே கட்டிப்பிடிச்சு..” என்று சிரிப்புடன் சொல்ல,

“யாரு நீங்க பயந்தீங்க.. அதுவும் என்னை சமாதானபடுத்த..” என்று நக்கலாக கண்களை துடைத்து கொண்டே கேட்டவளின், தலையில் செல்லமாக தட்டிய ஜெய்,

“நம்புடி.. நிஜம் தான்..” என்று சொன்னவன், சிறிது நேர அமைதிக்கு பிறகு, “உன்னை ரொம்ப படுத்திட்டேன் இல்ல..” என்று குற்ற உணர்வுடன் கேட்க, “அது உண்மைதான்” என்றாலும், அவனின் அன்றய நிலையை புரிந்து வைத்திருந்த ஹர்ஷினி,

“இப்போ அதை பத்தி என்ன.. விடுங்க பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்..” என்று சொல்ல, அவளின் காதலில் நெகிழ்ந்த ஜெய் அவளின் கையை எடுத்து தன் கையோடு இறுக்கமாக பிணைந்தவன்,

“உனக்கு எங்கிருந்து..? எப்படி என் சூழ்நிலையை சொல்ல..”

ம்ம்.. “நான் முதல்ல அப்பாகிட்ட இதை பத்தி பேசனப்போ, அவருக்கு இதுல சுத்தமாவே விருப்பமில்லை.. இப்பவும் தான்..” அதனால தான் எனக்கு அவர் காசு தரல போல.. அப்போ எனக்கு அதை பத்தி அம்மா எதுவும் சொல்லல.. நான் அப்பாதான் அனுப்புறாருன்னு நினைச்சிட்டு இருந்தேன்.

ம்ப்ச்.. “எனக்கு உண்மையிலே அப்போ காசை பத்தி எந்த ஐடியாவே இல்லை..” நான் டான்ஸை பத்தி மட்டும் தான் யோசிச்சேன்.

“அதுதான் நான் செஞ்ச முதல் தப்பு..”

அடுத்து எனக்கு டான்ஸ் ஆட தெரியுமே தவிர, அதை ஒரு ப்ரொபஷனலா எப்படி இன்னும் டெவலப் பண்ணனும்ன்னு யோசிக்கல..

“அதுதான் நான் செஞ்ச இரண்டாவது தப்பு..”

“அடுத்த பெரிய தப்பு.. நான் உனக்கு செஞ்சது.. என்னோட அவமானத்தை, இயலாமையை, ஆத்திரத்தை உன்கிட்ட காமிச்சது.”

“உன்கிட்ட போன்ல பேசின முறை.. இப்போ அதை பத்தி நினைச்சா எனக்கே என்ன பார்த்து ஆத்திரம் வருது..” எனக்கு உண்மையிலே அந்த பையன் உன்பின்னாடி சுத்துறதால எந்த பிரச்னையும் இல்லை..

“நான் உன்னை எப்படி சொல்ல..? என்னை நீ நம்புற தானே..? என்று தவிப்புடன் கேட்க,

“ம்ம்.. நீங்க கோவத்துல தான் பேசுறீங்கன்னு அப்பவே புரிஞ்சது..”

“கோவம்.. அப்டிங்கிறதை விட ஒரு விதமான பயம்ன்னு கூட சொல்லலாம்”. அவள் நம்ப முடியாமல் பார்க்க, “உண்மை தான் ஹர்ஷி..”

“எல்லா ஆண்களுக்கும் ஒரு கட்டத்துல நம்மால எதையும் செய்ய முடியாம போயிருமோன்னு பயம் கண்டிப்பா இருக்கும்”,

“நானும் அதுக்கு விதிவிலக்கல்ல..” அதுவும் நான் என்னோட அப்பாகிட்ட சினி பீல்டுக்குள்ள போறேன்ன்னு சண்டைபோட்டு, வீட்டை விட்டு வெளியே வந்து “எங்க என்னால எதையும் செய்ய முடியாத ஒரு பெயிலியர் பெர்சனா ஆயிடுவேனோ.. என்னால் நான் நினைச்சதை சாதிக்க முடியாம போயிருமோ..?” அப்படிங்கிற பயம்.

அதோட.. நாலு பேர் பாக்க “மத்தவங்க என்னை உனக்கு ஒன்னும் தெரியல அப்படின்னு க்ரிடிஸைஸ் பண்ணவும் அவமானம், ஆத்திரம்..” அதுதான் என்னை அன்னிக்கு அப்படி உன்கிட்ட பேசவச்சுது போல..

“காரணம் எப்படி இருந்தாலும் அது தப்பு.. சாரிட” என்று மனமார சொன்னவனின் கையை இன்னும் இவள் இறுக்கி கொண்டவள்,

“அப்புறம்.. அடுத்த ஒரு வாரம் நீங்க சென்னையிலே இல்ல, எங்க போயிருந்தீங்க..?” என்று கேட்க,

“உனக்கு எப்படி தெரியும்..?”

“நான் உங்களை தேடி உங்க பிஜிக்கு போனேன்..”

ஓஹ்.. நீ என்னை தேடி சென்னை வந்திருந்தயா..?

ஆமாம்.. “ஒரு வாரமாகியும் நீங்க போனை ஆன் பண்ணவே இல்ல, உங்க வீட்டுக்கும் பேசல.. அதான் என்ன ஆச்சோன்னு,,? பாக்க வந்தேன்..”

“என்னால ரொம்ப கஷ்டப்பட்டுட்ட இல்ல..”

எனக்கு உண்மையிலே கஷ்டமாவே இல்ல.. உங்களை பாக்க முடியாதது தான் வருத்தமா இருந்துச்சி.. எங்க போனீங்க..?

ம்ம்.. இங்க வந்து பழக்கமான ஒரு பையன், ஒரு டான்ஸ் மாஸ்டர் கிட்ட அசிஸ்ட்டண்டா இருக்கான்.. அவன்கூடவே சாங் ஷூட்டிங்குக்காக ஊட்டி வரை வந்திருந்தேன்.. அப்போ அந்த மாஸ்டர்கிட்ட பேசி சான்ஸ் வாங்கலாம்ன்னு, பட் அங்கேயும் அவர்கிட்ட அவமானபட்டது தான் மிச்சம்..

அந்த கோவத்துல ஊருக்கு வந்தா அப்பா.. ஏதேதோ பேசி.. அதான் நீயும் போன்ல கேட்டஇல்ல. எனக்கு அப்போ உண்மையிலே “நீ தான் எனக்கு காசு அனுப்பறே.. அதுவும் வேலை செஞ்சி காசு அனுப்புறேன்னு” தாரணி சொன்னதும்,

அப்பாவும் சும்மா சுத்துற.. காசை காரியக்குறேன்னு கத்தவும், நீயும் என்னை நம்பலைபோலன்னு ஆதங்கம், அதோட உனக்கு எப்படி சொல்ல, “நான் சாப்பிட, தங்க நீ வேலை பாத்து காசு அனுப்புறேங்கிறது..

“எல்லாம் ஒரு ஆணா எனக்கு அது ரொம்ப பெரிய அவமானமாத்தான் தெரிஞ்சிது.”

அதுமட்டுமில்ல, நான் பிளான் பண்ணதே “டான்ஸ்ல ஏதாவது அச்சீவ் பண்ணிட்டு உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணனும் அப்படிங்கிறது தான்,, ஆனா நடந்தது எல்லாம் தலைக்கீழ்..”

அந்த ஏமாற்றம், ஆத்திரம் எல்லாம் தான் உன்கிட்ட அன்னிக்கு ஹோட்டல்ல அப்படி கத்த வச்சுது. அப்புறம் “உங்க அத்தை டான்ஸ் அகாடமில என்னை சேர சொன்னேன்னு தாரணி சொன்னப்போ.. உங்க அத்தை டான்ஸ் அகாடமிக்கு ஆள் பிடிக்க நான் தான் கிடைச்சேனாங்குற கோவத்துல..”

“முறைக்காதடி.. அப்போ கோவத்துல அப்படித்தான் நினைச்சேன்..” அப்புறம் கொஞ்ச நாள்லே போய் சேந்துட்டேன் இல்ல.. அப்புறமென்ன முறைக்கிறவ.. “அதெல்லாம் இருக்கட்டும்.. நான் தான் உன் காசு வேண்டாம்ன்னு தானே சொன்னேன்.. அப்படி இருந்தும் எதுக்குடி மாசாமாசம் என் அக்கவுண்டுக்கு இன்னும் காசு அனுப்பிட்டு இருக்க..”என்று காதை பிடித்து திருகியவாறே கேட்க,

அச்சோ.. வலிக்குது விடுங்க.. அப்பறம் அந்த காசை வச்சிட்டு என்ன செய்ய சொல்றீங்க.. அதான் உங்களுக்கே அனுப்பினேன்.. அப்பவும் கோவத்திலாவது போன் செஞ்சி திட்டுவீங்கன்னு பார்த்தா பண்ணவே இல்ல..என்று முறுக்கியவாறே கேட்க,

ம்ம்.. அப்போ எனக்கு கோவத்துல கூட உன்கிட்ட பேசக்கூடாதுன்னு கட்டுப்பாடு.. பின்ன நீயும் எங்க அப்பா மாதிரித்தான் என்னை நினைக்கிறயோன்னு ஆதங்கம்.. என்னால என் செலவை கூட சம்பாதிக்க முடியாதான்னு ஒரு வெறி..

அதான் அப்படி என்று சொன்னவன், எல்லாத்தையும் சொல்லிட்டேன், இனியும் உன்கிட்ட மறைச்சி செய்ய ஒண்ணுமில்ல.. என்று பெருமூச்சுடன் சொல்லவும், குறும்பாக சிரித்த ஹர்ஷினி,

இன்னும் ஒன்னு நீங்க என்கிட்ட சொல்லவே இல்ல என்று சொல்ல, என்னடி சொல்லல.. எல்லாத்தையும் சொல்லிட்டேனே.. ம்ம் இல்லை.. நீங்க இன்னும் உங்க காதலை சொல்லவே இல்லை.. என்று குறும்பாக சொன்னாலும், அதில் சிறிதளவு எதிர்பார்ப்பும் இருந்ததோ..?

.............................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்.. நெக்ஸ்ட் எபியோட பிளாஷ் பேக் முடிஞ்சுடும் ப்ரண்ட்ஸ்.. thank you
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 28



“ஹர்ஷ்.. இந்த ஃப்ரைடே என் டே... அன்னிக்கு புல்லா நீ என்கூடத்தான் இருக்க போற.. சோ அன்னிக்கு உன்னை ப்ரீ பண்ணிக்கோ.. லாட்ஸ் ஆப் சர்பரைஸ் இஸ் தேர் பார் யூ.. பி ரெடி..” என்ற ஜெயின் குதூகல குரல்,

நான்கு நாள் முடிந்த பின்னும் இன்னும் ஹர்ஷினியின் காதில் ஒலித்து கொண்டே அவளை பரவச படுத்தி கொண்டிருந்தது.

அன்று மாலில்.. அவன் காதலை சொல்லவில்லை என்று கேட்ட போது.. “இப்போயெல்லாம் சொல்ல முடியாதுடி.. அதெல்லாம் சொல்லும் போது பக்காவா சொல்லுவோம்.. இன்னும் கொஞ்ச நாளுக்கு மாமா எப்போ லவ்வை சொல்வேன்னு வெய்ட் பண்ணிட்டே இரு..” என்று முடித்துவிட்டான்.

அதற்கு பிறகு இருவர் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள்.. “ஹர்ஷினி தன் படிப்பை முடிக்கவும், ஹோட்டல் பொறுப்பை எடுத்து கொள்ளும் படி ஆச்சார்யா எவ்வளவு வற்புறுத்தியும் கேட்காதவள், சுபத்ராவும், ரேணுகாவும் சொல்லத்தான் கேட்டாள்”.

அதுவும் “முதலாளியாக இல்லாமல் எப்போதும் போல் வேலை மட்டுமே பார்ப்பேன்..” என்று உறுதியாக நின்றுவிடவும், வேறுவழி இல்லாமல் “வர ஒத்துக்கொண்டதே போதும்..” என்று ஆச்சார்யாவும் விட்டு விட்டார்.

ஜெய்.. சுபத்ராவிடம் பயிற்சி முடித்ததும், முதலில் சில கஷ்டங்கள் வந்தாலும், தன்னம்பிக்கையுடன் போராடி தன் திறமையின் மூலம் ஒரு டான்ஸ் மாஸ்டரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட்டான், சேர்ந்த பின்னும், எடுபடி வேலை தான் செய்ய வேண்டியிருந்தது,

அவனுக்கு முன்னால் ஏற்கனவே நான்கு பேர் அந்த டான்ஸ் மாஸ்டரிடம் உதவி இயக்குனராக இருந்தனர். இருந்தாலும் முட்டி மோதி தன் திறமையை காட்டி சில பாடல்களுக்கு சில ஸ்டெப்ஸ்கள் கிடைத்தன, அதையும் தன் தனி ஸ்டைலில் சூப்பராக செய்யவும் தான் அடுத்து சில வாய்ப்புகள் கிடைத்தன,

பல மாத போராட்டங்கங்களுக்கு பிறகே, “தனியாகவே ஒரு முழு பாடலுக்கு டான்ஸ் கோரியோகிராப் செய்யும் வாய்ப்பு கிடைத்தது”, சரியாக அந்நேரத்தில் தான் தாரணியின் திருமணமும் கூடி வர,

“ஒரு அண்ணனாக தன்னால் எதுவும் செய்ய முடியாமல் வருத்தபட.. ஹர்ஷினி தான் அவனின் நிலையை புரிந்து அவனுக்காக எல்லாமே தாரணியின் துணையோடு செய்து கொடுத்தது”,

அவன் “தனியாகவே கோரியோகிராப் செய்த பாடல் அதில் உள்ள தனிதன்மையான நடனத்துக்காகவே மிகவும் பிரபலமடைய”, அதற்கு பிறகு இரண்டு, மூன்று பாடல் செய்தவன், இப்பொழுது “ஒரு முழு படத்துக்கும் அவன்தான் டான்ஸ் மாஸ்டர்”,

அந்த படமும் ஹிட் ஆக அதில் உள்ள பாடல்களும் மிக சிறப்பாக இருக்க, ஜெய் தன் முழு உழைப்பையும், திறமையும் கொட்டி மிகவும் சிறப்பாகவே கோரியோகிராப் செய்து கொடுக்க, பாடல்களோடு சேர்ந்து அவனின் டான்ஸும் எல்லாராலும் மிகவும் கவரப்பட்டதோடு. அவனை பற்றியும் அதிகமாக பேசப்பட்டது,

அதை எல்லாம் நினைத்தபடி அமர்ந்திருந்த ஹர்ஷினியின் போன் ஒலிக்கவும் எடுத்து பார்த்தால் ஜெய் தான், “ஹண்ட்ரட் இயர்ஸ் உங்களுக்கு, இவ்வளவு நேரம் உங்களை பத்திதான் நினைச்சிட்டு இருந்தேன்..” என்று சந்தோஷமாக சொல்ல,

“அதான்.. எனக்கு தெரியுமே, உனக்கு எப்பவும் மாமன் நினைப்பு தான்..” என்று ஜெயும் உல்லாசமாக சொல்ல, அவனின் பெருமையில் ஹர்ஷினி உதடு சுழிக்கவும்,

“என்ன நான் சொன்னதுக்கு உதடு சுழிச்சிருப்பியே”, என்று ஜெய் சரியாக கேட்க, எப்பொழுதும் போல் அவனின் கணிப்பில் பெருமை கொண்டாலும், “ஆமா.. நீங்க ரொம்பத்தான் கண்டீங்க”,

“ஏன் நான் உன்னை கண்டதே இல்லையா..?” என்றான் கிறக்கமாக.. அவனின் கிறக்கத்தில் தன் உதட்டை கடித்த ஹர்ஷினிக்கு, “எப்படி இல்ல என்று சொல்ல முடியும்..?”

எப்போதாவது வெகு அபூர்வமாக கிடைக்கும் தங்களின் தனிமை பொழுதில் எல்லாம் அவனின் நோக்கம்.. செயல் எல்லாம் இத்தனை நாள் பிரிவை ஈடுகட்டுவது போல் அவளை கட்டி தழுவதிலும், தொடர்ந்து முத்தம் கொடுப்பதிலும் தான் இருக்கும்,

பேச ஆரம்பித்தாலே, முத்தம் கொடுத்துவிடுபவன், “அதான் போன்ல பேசுறோமே அதே போதும்.. இப்போ மாமனை கவனடி.. நாம இந்த மாதிரி தனியா சந்திச்சு குறைஞ்சது ஆறுமாசமாவது இருக்கும்..”

“எப்போ திருப்பி இந்த மாதிரி தனியா இருக்க முடியுமோ..? வந்துட்டா பேச, திருப்பி எதாவது பேசுன.. பேசுற உன் உதட்டை கடிச்சு வச்சிருவேன் பாத்துக்கோ..” என்று மிரட்ட,

“இப்போ மட்டும் கடிச்சு வக்கிலியா நீங்க.. பாருங்க என்று தன் வீங்கிய உதட்டை காண்பித்தால், கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்லாதடி”, என்று சொல்வதும்.. அதற்கு பிறகு அந்த காயத்துக்கு அவன் உதட்டாலே திரும்ப திரும்ப மருந்து போடுவதும் தான் நடக்கும்..

“என்னடி பதிலே சொல்ல மாட்டேங்கிற..? ஒருவேளை மாமன் சரியா கவனிக்கலையோ..?” சரி விடு.. அதான் “நாளைக்கு புல்லா என் டே தானே.. நீ எப்பவும் மறக்காத மாதிரி உன்னை சிறப்பா கவனிச்சிறேன்..” என்று குறும்பு போல் சொன்னாலும், அதில் தெரிந்த அவன் காதல் தாபத்தில் இப்போதே உச்சி முதல் பாதம் வரை சிலிர்த்தது ஹர்ஷினிக்கு,

“விட்டா.. இவர் விடியவிடிய இதுபோலே பேசிட்டிருப்பர்..” என்று மனதுள் செல்லமாக நொடித்தவளின், மனசாட்சி விழித்து, “என்னமோ அவன் பேசுறது உனக்கு பிடிக்காத மாதிரி ரொம்ப தான் நொடிக்கிற..” என்று நக்கல் செய்ய,

“ம்ப்ச்.. உன்னை யாரு கேட்டா.. நீ உன் வேலையை பாரு..” என்று அதனை அதட்ட.., “என் வேலையே இது தான்..” என்று அவளின் மனசாட்சி அதற்கும் நக்கல் செய்ய, “நீ முதல்ல உள்ள போ.. இப்போ நான் அவர்ட்ட பேசணும்” என்று அதை அடக்கியவள்,

“நாளைக்கு என்ன ஸ்பெஷல்..?” என்று எதிர்பார்ப்புடன் கேட்க,

“என்னடி பேச்சை மாத்தறியா..? சரி இப்போதைக்கு பொழைச்சு போ.. நேர்ல என்ன செய்வன்னு நானும் பாக்குறேன்..” என்று உல்லாசமாக சொல்ல,

“நான் கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லல..” என்று மறுபடியும் கேட்க,

“ஏன் உனக்கு தெரியதாக்கும்..? இதை என்னை நம்ப சொல்றியா..? போடி” என்று நொடிக்க,

“ம்ஹூம்.. யோசிச்சேனே.. ஆனா எனக்கு உண்மையிலே தெரியல..”என்று “நாளை அவன் பிறந்த நாள்..” என்று தெரிந்தும் குறுஞ்சிரிப்புடன் சொல்ல,

“நம்பிட்டேன்..” என்று கிண்டாலாக சொன்னவன், “எல்லா வருஷமும் நான் எங்கிருந்தாலும் தேடி பிடிச்சி கிப்ட் அனுப்புறவளுக்கு.. இந்த வருஷம் மறந்து போச்சாம்.. சரி விடு அப்படியே இருக்கட்டும், நான் நாளைக்கு நேர்லே வந்து நீ இந்த நாளை எப்பவும் மறக்காத மாதிரி செஞ்சிடுறேன்.” என்று காதல் வம்பு செய்தவன்,

“சரிடி.. எனக்கு பிளைட்க்கு டைம் ஆச்சு.. உன்கிட்ட பேசினாலே என் நேரம் வேகமா ஓடுது,ஆனா அப்பவும் பத்தமாட்டேங்குது போடி..” என்றவன்,

ஏய் நான் அனுப்பின xxx கம்பெனி கொரியர் கிடைச்சுதா..? என்று கேட்க,

கொரியரா..? இல்லையே..? எப்போ அனுப்பினீங்க..?

நேத்து தாண்டி அனுப்பினேன்..

ம்க்கும்.. நீங்க இருக்கிறது இமாச்சல்.. இப்போதான் சென்னையே வந்திருக்கும், நாளைக்கு தான் இங்க வரும் என்று சொல்ல,

அய்யோ.. அப்போ எப்படி..? போடி உனக்காக தேடி பிடிச்சி ஆசையா வாங்குன சாரீ.. நாளைக்கு அதை தான் உன்னை கட்டிக்கிட்டு வரச்சொல்லலாம்ன்னு தான் போனே பண்ணேன்.. ம்ப்ச் போடி என்று கடுப்பாக சொன்னவன் வைத்துவிடவும்,

“இந்த முறை அவன் கிப்டை தவற விட கூடாதென்று..” நொடியில் யோசித்து வேகமாக செயல்பட்டவள், அங்குள்ள அவன் அனுப்பிய கொரியர் ஆபீஸ்க்கு போன் செய்து, கோரியரை தன் செலவில் பிளைட்டில் அனுப்ப செய்தவள்,

அன்றே அந்த கொரியர் தன் கையில் கிடைக்கும் படி விடாமல் பாலோ செய்தவள், அன்று மாலையே கொரியர் தன் கையில் கிடைக்கவும், “தனக்காக முதன் முதலாக அவன் கொடுத்த கிப்ட்..” என்ற அளவில்லா மகிழ்ச்சியில் கண்களில் கண்ணீரோடு அதை தடவி கொடுத்தவள், சிறிது நேரம் சென்ற பின்னே அதை பிரித்து பார்த்தவளின் முகம் அளவில்லா சிரிப்பில் விரிந்தது.

“நினச்சேன்.. கண்டிப்பா இந்த கலர்ல தான் எடுத்துருப்பாருன்னு..” என்று காதலாக அலுத்தபடி அந்த “குங்கும கலர்..” புடவையை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். மறுநாளே பிளவுஸ் கையில் கிடைக்கும் படி பார்த்துக்கொண்டவள், ஜெயின் ஆசைப்படி அதையே கட்டிக்கொண்டு மிகுந்த சந்தோஷத்தோடும்,

“இன்றாவது தன் காதலை சொல்வானா..?” என்ற எல்லையில்லா எதிர்பார்ப்போடும் அவன் சொன்ன கோவிலில் வெய்ட் செய்து கொண்டிருந்தவளிடம் வேகமாக வந்த ஜெய்,

சிறிது தூரத்திலே அவளின் புடவையை கண்டு ஆனந்த அதிர்ச்சியில் இரண்டு நொடி நின்றவன், பின் முன்னிலும் வேகமாக அவளை நெருங்கியவன், “ஏய்.. இந்த இந்த சாரி .. நான் எடுத்ததுதானே..” என்று மகிழ்ச்சியில் கொஞ்சம் சத்தமாகவே கத்தவும்,

ஷ்ஷ்.. மெதுவா, மெதுவா பேசுங்க.. எல்லாம் உங்களை தான் பாக்குறாங்க என்று ஹர்ஷினி உரிமையாக அதட்ட,

“ச்ச்சு.. பாத்துட்டு போட்டும் போடி” என்றவாறே அவளை தலை முதல் பாதம் வரை ரசித்து பார்த்தவன், “நான் நினைச்சதை விட நீ இன்னும் இந்த சாரியில் சூப்பரா இருக்கடி..” என்ற படி அவளை மேலும் நெருங்கவும்,

“அச்சோ.. என்ன பண்றீங்க.. இது கோவில்..” வாங்க முதல்ல சாமி கும்பிட்டிட்டு வந்துரலாம்.. டைம் ஆச்சி.. நடை சாத்திட போறாங்க.. என்றபடி அவனை இழுத்து கொண்டு சாமி கும்பிட்டிட்டு வெளியே வரவும்,

“நீ எதுல வந்த..?”

“கார்ல தான் வந்தேன்..” என்று தன் காரை காட்டவும்,

ஓஹ்.. ஓகே.. அது இங்கேயே இருக்கட்டும்.. வா நாம என் பைக்ல போலாம் என்று அழைக்கவும், சாரி கட்டிக்கொண்டு எப்படி பைக்கில் உட்காருவது என்று “அதுபோல் பழக்கம் இல்லாததால்” ஓர் நொடி யோசித்தவள்,

பின்பு பாத்துக்கொள்ளலாம் என்று ஜெயின் பின்.. அவன் பைக் நிற்குமிடம் சென்றவள், அவனின் பைக்கை பார்த்துவிட்டு, அதிர்ச்சியில் மயக்கமே வருவது போல் இருந்தது,

இது தன் தம்பி கார்த்திக் தாத்தாகிட்ட சண்டை போட்டு ரெண்டு நாள் சாப்பிடாம இருந்து வாங்கின வண்டி மாதிரியே இருக்கு.. ஒருநாள் ஆசைப்பட்டு கார்த்திக் வண்டியில் ஏறியவள், ஏறிய அடுத்த நொடியே பயந்து போய் இறங்கியும் விட்டாள்.

பின் இருக்கும் சீட் மிகவும் உயரமாக, பிடிப்பதற்கும் சைடில் எதுவும் இல்லாமல், உட்காரும் இடமும் சிறிதாக, எதோ வானத்திலே உட்காருவது போல் இருந்தது.

அதற்கு பிறகு எத்தனையோ முறை கார்த்திக் எவ்ளோ கம்பெல் செய்த போதும் பயத்திலே இதுவரை அதில் ஏறாதவள், இன்று ஜெயின் வண்டியும் அதே போல் இருக்கவும், பயத்தில் தொண்டை குழி ஏறி இறங்கியது.

“இது இந்த பைக்..” என்று பயத்தில் திக்கவும், அதை கவனிக்காத ஜெய் வண்டியில் ஏறி அதை ஸ்டார்ட் செய்த படி,

“நானே சம்பாரிச்சி வாங்குன என் பைக்.. நல்லா இருக்குல்ல..” என்று பெருமையாக கேட்பவனிடம், எப்படி தன் பயத்தை சொல்வது..?

“ம்ம்.. ரொம்ப.. ரொம்ப நல்லாயிருக்கு” என்று சொல்லவும்,

“சரி உட்காரு.. டைம் ஆச்சு.. கிளம்பலாம்” என்று அவசரபடுத்தவும், ஊரில் உள்ள எல்லா சாமிகளிடமும் வேண்டியபடி, அவனை பிடித்தவாறே ஏறி அமர்ந்தவுடன், ஜெய் முதலிலே வேகம் எடுத்து பறக்கவும், பயத்தில் மெலிதாக அலறியவள், அவனின் தோளிலே முகம் புதைத்து கொண்டு வழி முழுதும் மனதுள் கந்த சஷ்டி கவசம் சொல்லியபடியே தான் வந்தாள்.

முதலில் ஹோட்டல் சென்று டிபனை முடித்தவர்கள், அடுத்து ஊரை விட்டு வண்டி ஹைவேஸில் வெளியே செல்லவும், கவனித்தாலும் எதுவும் சொல்லாமல் பயத்தில் அவனை ஒன்றியபடியே பயணம் செய்தவள், ஜெயின் பைக் ஹைவெஸ்ஸை பிரிந்து சிறிது தூரமே உள்ள ஒரு கேட்டுக்குள் மெதுவாக செல்லவும், நன்றாக பார்த்தவள்,

“இது எதோ பார்ம் அவுஸ் மாதிரி இருக்கே..?” என்று கேட்கவும்,

“ம்ம். ஆமா..” என்றபடி வீட்டின் முன்னால் வண்டி நிறுத்தியவன், அவள் வேகமாக இறங்கவும், தானும் இறங்கியவன்..

“உள்ளே போலாம், வா” என்று அவளின் கையை தன்னோடு கோர்த்தவாறு அழைத்து சென்றவன், வாசலில் ஒரு வயதான பெண்மணி, சிரித்தவாறே “வாங்கம்மா..” என்றபடி ஆரத்தி எடுக்கவும், புரியாமல் ஜெயயை பார்க்க,

“வலது காலை வச்சி உள்ள வா ஹர்ஷ்..” எனவும், புரிந்தும் புரியாமலும் அவன் சொன்னபடி வலது காலை வைத்து ஜோடியாக உள்ளே சென்றவள், வீட்டின் இயற்கையான உள்ளழகில் கவர்ந்தவாறே நின்ற இடத்திலே தலையை சுற்றி பார்க்கவும்,

அவளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்த ஜெய், “வா சுத்தி பாக்கலாம்.. நீங்க காபி மட்டும் இப்போதைக்கு போட்டு வைங்க..” என்று ஆரத்தி கொட்டிவிட்டு உள்ளே வந்த பொன்னம்மாவிடம் சொன்னவன், ஹர்ஷினியை அழைத்து கொண்டு வீடு முழுவதும் சுற்றி காட்டியவன்,

இறுதியாக மேலே தனியாக இருந்த ரூமிற்குள் அழைத்து சென்றபடி.. “இதுதான் நம்ம பெட்ரூம்..” என்று தாபமாக சொல்லியபடி அவளை நெருங்கவும், அவன் முகத்தில் தெரிந்த “காதல் தாபத்தில் ஹர்ஷினியின் முகம் வெட்கத்தில் சிவந்து, கை.. கால் எல்லாம் சில்லிட்டு, துடிக்கும் உதடுகளுடன், மெலிதாக நடுங்கியபடி நின்றவளை”,

ஓர் நொடி ரசித்து பார்த்தவன், அவளின் அழகில், கண்ணில் தெரிந்த காதல் கலந்த எதிர்பார்ப்பில் தன்னையே கட்டுப்படுத்த முடியாதவனாய், “வேங்கையாய் பாய்ந்து அவளை இறுக்கி அணைத்தவன்.. தோன்றும் இடமெல்லாம் அழுத்தமாக தன் இதழை பதித்தவாறே, எப்போதும் தன்னை பாடய்படுத்தும் அவளின் வெற்றிடையில் கை விட்டு இடை முழுவதும் ரசனையாக வருடியவன்”,

“தன் வருடலில் உடல் எல்லாம் சிலிர்த்து உணர்ச்சியில் துடிக்கும் இதழை கடித்து கொண்டிருந்தவளின் சிறுத்த இடையை தன் ஒரு கையால் வளைத்து.., மேலும் கற்று கூட புகமுடியாத அளவு தன்னோடு இறுக்கி அணைத்தவன், மறுகையால் அவளின் பின்னந்தலையில் கை விட்டு அவளின் முடியை பிடித்து இறுக்கியவாறே அவளின் இதழில் தன் இதழை முழுவதுமாக புதைத்தவன்”,

அவள் உணர்ச்சியில் திமி.. திமிர தன் இத்தனை மாத பிரிவை முத்தத்திலே கரைக்க நினைத்தவன் மேலும்.. மேலும் விடாமல் முத்தமிட்டாவாறே இடை வளைத்த கை.. அவளின் பெண்மையை மேலும்.. கீழும்.. அலைந்து தடவி மேலும் அவளை உணர்ச்சி குவியலில் தள்ளவும்..

அவனின் வேகத்தை, முரட்டு தனத்தை ஓர் அளவுக்கு மேல் தாங்க முடியாத ஹர்ஷினி சரியவும் தான் அவளை விட்டவன், தன் முரட்டு தனத்தால் அவளின் கலைந்த தோற்றத்தில் தெரிந்த பெண்மையின் அழகில் மேலும் கிறக்கம் கொண்டவன்,

“கொல்றடி.. முடியல..” என்றபடி மறுபடியும் அவளை வேகமாக நெருங்கவும், ”அய்யோ.. இன்னிக்கு நான் ஒழிஞ்சேன்” என்று அவனின் முரட்டு தனத்தில் மனதுள் பதறிய ஹர்ஷினியை.. காப்பாத்துவது போல் கீழே பொன்னம்மாவின் அழைக்கும் சத்தம் கேட்கவும்,

“ச்ச்சு..” என்று கடுப்பாக முகம் சுளிக்கவும், அவனின் கடுப்பில் ஹர்ஷினி சிரித்துவிடவும், “என் கஷ்டத்தை பாத்தா உனக்கு சிரிப்பு வருதா.. உன்னை..” என்று அவளின் இதழில் வேகமாக அவசரகால முத்தத்தை கொடுத்தவன்,

சரி வா.. இப்போ கீழே போலாம்.. இன்னிக்கு புல்லா நீ இங்கதானே, அப்புறம் உன்னை பாத்துக்கிறேன் என்று செல்லமாக மிரட்டியபடி அவளை பார்த்தவன்,

அவளின் கலைந்த தோற்றத்தை கண்டு, சாரீ சரிபண்ணிட்டு வா,, நான் கீழே போறேன்.. என்றபடியே மறுபடியும் அவளை இறுக்கி கட்டிப்பிடித்து விடும்போது, “இடையில் மறைத்திருந்த சாரீ நழுவி முழுவதும் தெரிந்த அவளின் வெற்றிடையில் அழுத்தமாக கிள்ளிவிட்டு செல்லவும்”,

“ஸ்ஸ் சரியான முரடு..” என்றவாறே சரிசெய்தவள், கண்ணாடியை பார்க்கவும், மெலிதாக வீங்கியிருந்த உதட்டை கண்டு, எப்படியும் இதை ஒன்னும் செய்ய முடியாது.. “அய்யோ.. கீழே வேற பொன்னம்மா இருப்பாங்களே..” இவரை.. என்று வெட்கத்துடன் கடிந்து கொண்டவாறே,

முகத்தை மட்டும் அங்கிருந்த பாத்ரூமில் கழுவிக்கொண்டவள், கீழிறங்கி வரவும், எவ்வளவு மறைத்தும் தெரிந்த அவளின் சோர்ந்த வெட்கத்துடன் கூடிய அழகில், தன்னை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த ஜெய்,

“இவளை யாரு இவ்வளவு அழகா இருக்க சொன்னா.. இப்போ பாரு என்னாலதான் என்னையே கண்ட்ரோல் முடியல..” என்று அவளை காதலாக முறைத்தவனை,

அவனின் முறைப்பில் “என்னவென்று..” பார்வையால் கேட்டவாறே அருகில் வந்தவளை.. கையை பிடித்து இழுத்து தனக்கு மிகஅருகில் அமர செய்யும் பொழுது,

காபி எடுத்துக்கொண்டு பொன்னம்மா வர.. வேகமாக அவனை விட்டு தள்ளி அமர்ந்து கண்ணால் மிரட்டவும், “போடி..” என்று இவனும் கண்ணாலே மிரட்டினான்,

“அய்யா.. நீங்க வரச்சொன்னதா ரெண்டு பேர் வந்திருக்காங்க..” என்றபடி கையில் காய்கறி பையோடு உள்ளே வந்த கந்தன், ஹர்ஷினியை பார்த்துவிட்டு

“வணக்கம்ங்கம்மா..” , என்று சொல்லவும்,

“ம்ப்ச்.. சொல்ல மறந்துட்டேன்.. ஹர்ஷினி இது கந்தன்.. இது அவங்க ஒய்ப் பொன்னம்மா, இவங்க தான் இதை ரொம்ப வருஷமா பாத்துகிறவங்க..” என்றவன்,

“அவங்களை நான் தான் வரச்சொன்னேன்.. உள்ளே கூட்டிட்டு வாங்க கந்தன்” எனவும்.., அவர் சென்று அந்த இருவரை அழைத்து வந்தார். அவர்களுக்கும் பொன்னம்மா காபி தர அதை குடித்து முடிக்கவும்,

“சார்.. சைன் பண்ணிடலாமா..?” என்றபடி பத்திரத்தை வெளியே எடுக்கவும், “ஓகே.. கொடுங்க” என்று அவர்களிடம் இருந்து வாங்கியவன், ஹர்ஷினியிடம் கொடுத்து சைன் பண்ண சொல்ல, புரியாமல் கேள்வியாக பார்த்தவளை,

“இந்த வீட்டை உன்பேருக்கு ரெஜிஸ்டர் பண்ணப்போறோம்… அதுக்கு தான் சைன் பண்ணு..”

“இல்லை உங்க பேருக்கு.. என் பேருக்கு.. ஏன் வேண்டாம்..? என்று உறுதியாக மறுத்து திருப்பி அவனிடமே கொடுக்க பார்க்க, அதை வாங்காமல் அவளை கடுமையாக முறைத்து பார்த்தவன், அடிக்குரலில்,

“சைன் பண்ணுடி..” என்று அதட்ட,

“இல்ல வேண்டாமே..” என்று அவனின் கடுமையில் லேசாக பயந்தாலும், சொல்ல.

“முதல்ல சைன் பண்ணு.. ஏதா இருந்தாலும் அப்பறம் பேசலாம்..” என்று எச்சரித்து பென்னை கையில் திணிக்கவும், மற்றவர்கள் முன்னால், மேலும் மறுக்க முடியாமல்… “அப்பறம் பேசி என்னாகிற போகுது..?” என்று மனதுள் அவனை திட்டியவாறே சொல்லிய இடத்தில எல்லாம் கையெழுத்து போடவும்,

“ஜெயும், கந்தனுமே சாட்சி கையெழுத்து போட்டனர்”, “ஓகே சார்.. நாங்க ரெஜிஸ்டர் பண்ணிடறோம்” என்றபடி வந்தவர்கள் கிளம்பிவிட, மிகவும் கோவமாக தன்னை முறைத்தவளை, சிரித்தவாறே கையோடு கை கோர்க்கவும்..,

கோவமாக அவனின் கையை விலக்க பார்க்க, அதற்கு இடம் கொடுக்காமல் மேலும் தன் கையோடு இறுக்கி பிடித்தவன்,

“அத்தானோட பர்த்டே கிப்ட் எப்படி..?” என்று காலரை தூக்கிவிட்டவாறே கண்னடித்து பெருமையாக கேட்க,

“உங்க பர்த்டேக்கு நான் தான் உங்களுக்கு கிப்ட் தரணும்.. நீங்க இல்ல..” என்று சிடுசிடுத்தவள்.. “ஏன் என்கிட்ட இதை பத்தி நீங்க முதலே சொல்லலை..”

“சொன்னா ஒத்துக்கமாட்டான்ன்னு தெரிஞ்சு தான் சொல்லலை..” என்று கூலாக சொல்லவும்,

“நீங்க செஞ்சது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல, இது உங்க சம்பாத்தியம்..” என்று ஆத்திரமாக சொல்லவும்,

“ம்ஹூம் இது நம்ம ரெண்டு பேருடைய சம்பாத்தியம் தான்..” ஹர்ஷினி நம்பாமல் பார்க்க, “நிஜம் ஹர்ஷ், நீ இப்பவரைக்கும் மாசாமாசம் என் அக்கவுண்ட்ல போடுற காசு உன் சம்பாத்தியம் தானே.. அப்பறம் என்ன..?” என்று சொன்னவன்,

அவளை நெருங்கி தோளோடு அணைக்க பார்க்க, விலகி அதை தடுத்தவள், “எனக்கு இந்த மொத்த ப்ராப்பர்ட்டி வெல்யூ எவ்வளவு இருக்கும்ன்னு தெரியும்.. சோ என்னோட காசு இதுல கால்பங்கு தான் இருக்கும், ஆமா தானே”,

“ச்சு, அதை விடுடி..”

“ம்ஹூம்.. நீங்க மறுபடியும் உங்க பேருக்கே ரெஜிஸ்டர் பண்ணிக்கோங்க..”

“ஹர்ஷ்.. என் பேர்ல இருந்தாலும்.. உன் பேர்ல இருந்தாலும்.. ரெண்டும் ஒண்ணுதான்.., சோ இதுக்கு மேல அதை பத்தி பேசி என்னை கோவப்படுத்தாத..” என்று கடினமாக சொன்னவன்,

“நான் முக்கியமான விஷயத்தை பத்தி பேசணும்.. இப்போ போய் இது ஒரு விஷயமா நினைச்சி ஆர்கிவ் பண்ணிட்டிருக்க..” என்று கடுப்படித்த ஜெய், அவள் முகம் இன்னும் தெளிவாகாமல் இருக்கவும், அவளை தோளோடு அணைத்து பிடித்தவன்,

“ஹர்ஷ்.. அதை விட்டுட்டு வெளிய வா.. நான் நம்ம வீட்ல நம்ம கல்யாணத்தை பத்தி பேசிறலாம்ண்ணு நினைக்கிறேன்..” என்று அவனுக்கே தெரியாமல் முன்னதை விட பிரச்சனையான விஷயத்தை ஆரம்பித்தான்,

“ஏன்..? ஏன் திடீர்ன்னு.?” என்று அதிர்ச்சியாக கேட்டவளை,

“என்னடி இப்படி அதிர்ச்சியாகுற..? ஏன் நாம கல்யாணமே பண்ணிக்காம இப்படியே இருக்க முடியுமா என்ன..? இப்பவே உங்க வீட்லயும், என் வீட்லயும் தொல்லை பன்றாங்க.. அவங்களை சொல்லியும் குத்தமில்ல.. உனக்கு 24 ஆச்சு, எனக்கு 27 ஆச்சு கேட்கமாட்டாங்களா..? அதனால நாமே சொல்லிடுவோம்.. என்ன சொல்ற..?” என்று கேட்டவன்,

அவளின் முகம் எதோ போல் இருக்கவும், “ச்சு.. பயப்படாதடி, முதல்ல கொஞ்சம் கோவப்பட்டாலும் ஒத்துப்பாங்க..” என்று வீட்டை நினைத்து பயப்படுகிறாள் போல் என்று சமாதானம் சொல்லவும்,

“எங்க வீட்ல கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க..” என்று ஹர்ஷினி உறுதியாக சொன்னவள்.., அவன் கையை எடுத்துவிட்டு தள்ளி அமரவும், “ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவன்”

ஏன் ஒத்துக்க மாட்டங்க..? ஸ்டேட்டஸ் பார்ப்பங்களா..?

ம்ப்ச் அதெல்லாம் பாக்கமாட்டாங்க..

அப்புறம் என்ன காஸ்ட் பாத்தாகூட நாம ஒரே காஸ்ட் தான்.. இதை தவிர அவங்க எதிர்க்க காரணமே இல்லையே..? என்று யோசனையாக கேட்டவனிடம், எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும்,

“சொல்லு ஹர்ஷ்.. சொன்னாத்தானே எனக்கு தெரியும்..” அமைதியே பதிலாக வரவும்,

“ச்சு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்டி, என்ன காரணம்ன்னு சொன்னாத்தானே என்னால அதை தீர்க்க முடியும்..” என்று கேட்பவனிடம்

“நீ போராடி ஜெயிச்ச உன் தொழில், டான்ஸ் தான் காரணம்..” என்று சொல்ல முடியாமல்.. சொல்லவும் மாட்டாமல் அமைதியாக இருந்தவளை கண்ட ஜெய்க்கு பொறுமை போய் கொண்டிருந்தது,

“ஏய் என்னை கோவப்படுத்தாம பேசுடி.. அமைதியாவே இருந்த பிச்சிடுவேன் பாத்துக்க.. நான் எவ்வளவு முக்கியமான விஷயம் கேட்டுட்டு இருக்கேன், நீ பதில் சொல்லாம எனக்கெனன்னு இருக்க.. சொல்லுடி..?” என்று அதட்ட,

“அதை விடுங்க, நாம இதை பத்தி இன்னொரு நாள் பேசலாம்..” என்று வரும் பிரச்சனையை ஹர்ஷினி தவிர்க்க பார்க்க,

“முடியாது.. இன்னைக்கே பேசுறோம்.. பதில் சொல்லு.. ஏன் உங்க வீட்ல ஒத்துக்கமாட்டாங்க..?” என்று உறுதியாக ஜெய் நிற்க, முயன்ற வரை சமாளிக்க பார்த்த ஹர்ஷினி அவன் விடாமல் பிடிவாதமாக கேட்கவும்,

“நான் கிளம்புறேன்..” என்று எழவும், ஆத்திரமடைந்த ஜெய் அவளை பிடித்து இழுத்து பக்கத்தில் உட்காரவைத்தவன், “எனக்கு என் கேள்விக்கு பதில் சொல்லாம இங்கிருந்து நீ போகவே முடியாது..?”

“ப்ளீஸ் ஜெய்.. நாம இன்னொரு நாள் இதை பத்தி கண்டிப்பா பேசலாம்..”என்று ஹர்ஷினி நயமாக பேச, “வளைக்க முடியாத இரும்பாக நின்ற ஜெய்”, “இன்னிக்கே.. இப்பவே பேசலாம்.. சொல்லு” என்று விடாமல் கேட்க, ஏற்கனவே உள்ளுக்குள் கொதித்து கொண்டு.. வெளியே முடிந்த வரை பொறுமையாக பேசிக்கொண்டிருந்த ஹர்ஷினி அவனின் பிடிவாதத்தில்,

“சொல்லு.. சொல்லுன்னு என்ன சொல்ல..? அதெல்லம் சொல்ல முடியாது போங்க..” என்று வெடிக்க,

“ஓஹ்.. சொல்ல முடியாதோ..? அப்போ போகவும் முடியாது..”

“நானே போய்க்குவேன்..”

நீயேயும் போகமுடியாது.. கந்தன், பொன்னமாவும் அப்பவே தோட்டத்துக்கு போயாச்சு.. இனி நான் கூப்பிட்டா மட்டும் தான் வருவாங்க.. இங்க வேற யாரும் இல்லை உனக்கு ஹெல்ப் செய்ய என்று அலட்சியமாக சொல்லவும்,

“யாரோட உதவியும் எனக்கு தேவையில்ல.. நானே போய்க்குவேன்” என்றவள் விறுவிறுவென நடக்கவும், வேகமாக எட்டி அவளை பிடித்தவன், அவளை கூர்மையாக பார்த்தவாறே..

“இப்போ நீ என்ன காரணம்ன்னு சொல்லியே ஆகணும்.. இது என்மேல சத்தியம்..” என்றுவிட, அவனை அதிர்ச்சியாக வெறித்த ஹர்ஷினி, அவனின் பிடியிலிருந்து விலகி சில நிமிடம் கண்மூடி நின்றவள்,

“ஓகே நான் சொல்லிடறேன்.. ஆனா அதுக்கு முன்னாடி நீங்க எனக்கு ஒரு சத்தியம் செஞ்சி கொடுக்கணும்..” என்று சொல்ல.. புரியாமல் பார்த்தவனை,

“நீங்க எப்பவும், யாருக்காகவும் டான்ஸை விட்டு கொடுக்க மாட்டேங்கன்னு சத்தியம் பண்ணுங்க..” என்று தன் கையை நீட்டவும், “பிரச்சனையின் நுனியை எளிதாக பிடித்துவிட்ட ஜெய்க்கு”,

அப்பொழுது தான் ஒரு விஷயம்.. “நடு மண்டையில் ஆணி அடித்தது போல் நச்சென இறங்கியது..”

“ஆச்சார்யா ஹர்ஷினியை டான்ஸ் ஆடக்கூடாதென்று சத்தியம் வாங்கியது..” புரிந்தவுடன் நம்பமுடியாமல் ஹர்ஷினியை பார்த்தவனிடம்.. இதுக்கு மேல் மறைக்க எதுவும் இல்ல என்று..

“உங்க டான்ஸ்.. நீங்க இருக்க சினிபீல்ட் ரெண்டும் தான் காரணம்” என்று கண்களில் இருந்து கண்ணீர் வழிய சொன்னவளை, இப்பொழுது அதிர்ச்சியாக பார்த்தான் ஜெய்,

சில பல நிமிடங்கள் இருவரிடமும் மிகவும் கனமான அமைதி நிலவியது, அந்த அமைதியை கலைத்தது ஜெயின் குரல், “இதுல என்ன இருக்கு, அவங்களுக்கு பிடிக்கலைன்னா விட்டுடவேண்டியது தான்.. இதுக்கா இவ்வளவு யோசிச்ச..?” என்று சொன்னவாறே ஹர்ஷினியை அணைத்து கொண்டவனின் கைகளில் கண்ணீரோடு சரணடைந்த ஹர்ஷினிக்கு.,

“முதல்லே அவன் இந்த முடிவை தான் எடுப்பான் என்று தெரியத்தான் செய்தது”.

அவனை விட்டு விலகியவள்.. தன் கையை நீட்டி “சத்தியம் பண்ணுங்க” என்று மறுபடியும் கேட்க,

“ஏய் ஹர்ஷ்.. என்னடி இது..?” என்று மறுப்பவனை, விடாமல் மறுபடியும் கேட்க, “அதெல்லாம் முடியாது. எனக்கு நீ தான் முக்கியம்.. டான்ஸ்ல எனக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடைச்சிடுச்சு அதே போதும்.. சோ.. விட்டுட்டு நாம நம்ம கல்யாணத்தை பத்தி ரெண்டு வீட்லயும் பேசலாம்” என்றவனின்

“கண்களில் தெரிந்த ஆழ்கடலளவு துயரத்தை” புரிந்து வைத்திருந்த ஹர்ஷினி,

“ம்ஹூம்.. முடியாது எங்க தாத்தாவோட பயத்துக்காக எல்லாம் நீங்க விடணும்ன்னு எந்த அவசியமும் இல்ல.. இத்தனை வருஷம் இவ்வளவு கஷ்டப்பட்டு இப்போ போய் விடறது எல்லாம்..”

“ம்ஹூம் கண்டிப்பாவே முடியாது, சத்தியம் பண்ணுங்க” என்று கேட்டவளிடம் ஜெய், “பண்ண முடியாது.. எனக்கு நீ தான் முக்கியம்..” என்று உறுதியாக மறுத்துவிடவும், தாங்க முடியாத ஹர்ஷினி, வேகமாக வெளியே நடக்க தொடங்கவும்,

“ஏய்.. இருடி., நானே உன்னை ட்ராப் பன்றேன்” என்று கத்திய படி சாவியை எடுத்து வண்டியை எடுத்து கொண்டு வரவும், அவள் கிளை ரோடில் இருந்து ஹைவேஸில் வெறி வந்தவள் போல் வேகமாக நடந்து கொண்டிருந்தாள்,

“எது நடக்க கூடாதென்று அவள் நினைத்தாளோ..? அதுதான் நடக்க போகிறது என்பதை தாங்க முடியாத கோவம், ஆத்திரம், ஏமாற்றம், ஆங்காரம் என்று எல்லாம் கலந்த கலவையாக நடந்து கொண்டிருந்தவளின் முன் வண்டியை நிறுத்திய ஜெய்,

“ஏறு ஹர்ஷினி..” என்று கூப்பிட, முடியாது என்று தலையை அசைத்தவள், தன் கையை நீட்டவும், ஆத்திரமடைந்த ஜெய், “ஒழுங்கா வண்டியில் ஏறு..” என்று எச்சரிக்க,

நிதானித்திலே இல்லாமல் இருந்த ஹர்ஷினியோ, அவன் வண்டியை சுற்றி நடக்க பார்க்க, அவளின் கையை பிடித்த ஜெய், “ஹர்ஷினி என்னை வெறியேத்தாமா ஒழுங்கா வண்டியில ஏறிடு” என்று கடுமையாக எச்சரிக்கை, அவனின் கையை உதறிய ஹர்ஷினி அப்படியே பின்னால் நடக்க,

“ஏய் என்னடி பண்ற.. இது ஹைவேஸ், பாரு வண்டியெல்லாம் எவ்வளவு வேகமா வருது..” என்று வண்டியை போட்டுவிட்டு அவளிடம் ஓட, ஒரு லாரி வேகமாக அவளை இடிக்க வரவும், நொடியில் அவள் கையை பற்றி இழுத்தவனால் பேலன்ஸ் செய்ய முடியாமல் நடு ரோடிலே உருள..

நல்ல வேலை வேறு எந்த வண்டியும் வராமல் உயிர் தப்பினர், “அதிர்ச்சியிலே ஹர்ஷினி மயக்கமாகிவிட வேகமாக அவளை பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு மற்றவரகளின் உதவியோடு கொண்டு சென்றவன், அவளுக்கு ஒன்றும் இல்லை..” என்றபிறகே உயிர் பிழைத்தான்.

...................................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போட்டுட்டேன்.. ரொம்ப பெரிய எபி.. இந்த எபி புல்லா ஒரே எபியா படிச்சாதான் நல்லருக்கும்ன்னு கஷ்டப்பட்டு டைப் செய்துஇருக்கேன்.. அதுக்காகவாது ஒரு ரெண்டு வரி உங்க கருத்தை சொல்லிட்டு போங்க ப்ரண்ட்ஸ்.. இதோட பிளாஷ் பேக் முடிஞ்சதுப்பா.. thank you
 
Last edited:

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 29



அண்ணா.. அண்ணா.. என்று கூப்பிட்டபடி தாரணி கதவை தட்டவும், அதுவரை ஹர்ஷினி சொல்லிய "நாம ரெண்டு பேறும் மீட் பண்ணிருக்கவே வேண்டாம்.." என்றதில் உள்ளம் கொதித்து சீரும் புலியாய் ரூமினுள் நடந்தபடியே தங்களின் கடந்த காலத்தை நினைத்து பார்த்து கொண்டிருந்த ஜெய்,

தாரணி கூப்பிடவும், முயன்று தன் உள்ள கொதிப்பை தன்னுள் மறைத்தவன், சென்று கதவை திறக்கவும், “அண்ணா.. அப்பா உங்ககிட்ட எதோ முக்கியமா பேசணுமா..? இப்போதான் அம்மா போன் பண்ணிருந்தாங்க.. உடனே உங்களை அப்பாக்கு கூப்பிட்டு பேச சொன்னாங்க..” என்று சொல்லவும்,

“ம்ம்.. நான் பேசறேன்..” என்றவன், மறுபடியும் ரூமினுள் வந்து போன் செய்தது என்னமோ ஆச்சார்யாவுக்கு தான், அவர் எடுத்ததும், “நான் நாளைக்கே எங்க வீட்ல இருந்து எல்லாரையும் அழைச்சிட்டு வரேன்.. நாளைக்கே உறுதி பண்ணிரலாம்..” என்று சொல்ல,

“இவ்வளவு அவசரமா எதுக்கு..? பொறுமையா நல்லா கிராண்டா பண்ணலாம்.. என் பேத்தியோட கல்யாண பங்க்ஷன் எல்லாத்தையும் ரொம்ப கிராண்டா செய்யணும்..” என்று மறுத்தவரை,

பேசியே சமாதானம் செய்த ஜெய், “மறுநாள் உறுதி செய்வதை நிர்ணயித்த பிறகே”, அவனுடைய வீட்டிற்கு அழைத்தான், முதலில் அம்மாவிற்கு அழைத்தவன், “அவர் எடுக்கவில்லை” என்றபின்னும் அவர் எடுக்கும் வரை விடாது தொடர்ந்து அழைக்கவும், எடுத்த விஜயா..

“எதுக்குடா இத்தனை டைம் கூப்பிடுற.. நான் தான் உன் மேல கோவத்துல இருக்கேன்னு தெரியாதா உனக்கு..?” என்று பொறியவும்,

“ம்மா.. முதல்ல நான் சொல்றதை கேளுங்க..” என்று அதட்ட,

“என்னடா என்னையே அதட்டுற..? நான் உன் அம்மாடா.. உனக்கே இவ்வளவு இருக்கும் போது எனக்கு இவ்வளவு இருக்கும்..” என்று சண்டைக்கு கிளம்ப,

“ம்மா.. ஏற்கனவே எனக்கு மூட் சரியில்ல.. நீங்களும் எதாவது பேசி என்னை இன்னும் டென்சன் பண்ணாதீங்க..”

“ஆனா.. உனக்கு இவ்வளவு ஏத்தம் இருக்க கூடாதுடா ஜெய்.. எவ்வளவு பெரிய விஷயத்தை இத்தனை வருஷமா என்கிட்ட மறைச்சதும் இல்லாமல், இப்போ என்மேல கோவம் வேற பட்றியா நீ..தப்பு செஞ்சது நீ.. நான் இல்லை.. சோ உனக்கு என்கிட்ட கோவப்பட எந்த உரிமையும் இல்லை..” என்று

“யார் கோவப்படுவது..” என்று போர்க்கொடி தூக்க, கடுப்பான ஜெய், “நான் கோவப்பட்டது தப்புதான் தாயே.. நீங்களே கோவபட்டுக்கோங்க.. வேணும்ன்னா உங்களை நேர்ல பாக்கும் போது உங்க கால்லே விழறேன் போதுமா..?” என்று பல்லை கடித்து கொண்டு பேசியவன்,

“இப்போவது நான் சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க.. நாளை விடிய காலைக்கு உங்களுக்கும் அப்பாக்கும் பிளைட்ல டிக்கெட் போடறேன்.. ரெண்டு பேறும் சென்னை வாங்க..”

“எதுக்கு..? நாங்க எதுக்கு சென்னை வரணும்..?” என்று விஜயா வேகமாக இடையிட்டு கேட்க,

“ம்ம்மா.. அடுத்து நானே அதை தான் சொல்லப்போறேன்.. அதுக்குள்ள சென்டர்ல வந்து கேள்வி கேட்காதா.. நான் பேசி முடிக்கிறவரைக்கும் பொறுமையா இரு..” என்று அடக்கப்பட்ட குரலில் கோவமாக பேசியவன்,

“நாம நாளைக்கே அவ வீட்டுக்கு போய் கல்யாணத்தை உறுதி பண்ணிரலாம்” என்று முடிக்க, பொங்கியெழுந்த விஜயா.,

“ஏண்டா.. நான் இன்னும் உங்க கல்யாணத்துக்கு ஓகேவே சொல்லல.. அதுக்குள்ள உறுதி பண்றதை பத்தி பேசுற.. அட்லீஸ்ட் அதாவது எங்ககிட்ட கேட்டியா..? அதுவும் இல்லை.. எல்லாத்தையும் நீயே முடிவு எடுத்துட்டு எங்களுக்கு ஜஸ்ட் இன்பார்ம் மட்டும் பண்ற..” என்று ஆற்றாமையில் வெடித்தவர், அழுகவும்,

“ம்மா.. நீ என்னை அடிக்க கூட செஞ்சிடு.. ஆனா தயவு செஞ்சு அழுக மட்டும் செய்யாதா..?”

“ஏன் இந்த வீட்ல எனக்கு அழுகை கூட உரிமை இல்லையா..?” என்று அழுதுகொண்டே சண்டையிட்டவரிடம், பலவாறாக பேசி சமாதானம் செய்ய முயற்சித்தவன், பலிக்காமல் போக,

“ம்மா.. அப்போ நீ இத்தனை வருஷமா எனக்கு கல்யாணம் செய்யணும்ன்னு பொண்ணு பாத்தது எல்லாம் சும்மாவா..?”

“என்னடா சொல்ற..? நான் சும்மா பொண்ணு பாத்தேனா..? சொல்லுவடா சொல்லுவ.. இதையும் சொல்லுவ.. இதுக்கும் மேலயும் சொல்லுவா.. உனக்கு தான் இப்போ அம்மான்னு கிள்ளு கீரையா போய்ட்டேனே..” என்று மூக்கை உறிஞ்சிக்கொண்டே சண்டையிட்டவரிடம்,

“பின்ன என்னம்மா..? நானே கல்யாணத்துக்கு ஓகே சொல்லி, பொண்ணும் பாத்துவச்சிருக்கேன் சொல்றேன்.. நீ சந்தோஷமா வந்து கல்யாணம் செஞ்சி வைக்காம.. ஓஓஓன்னு அழுதுட்டு இருக்க..” என்று சீண்டியவன்,

“நாளைக்கு எத்தனை மணிக்கு பிளைட், டிக்கெட் எல்லாம் தாரணிகிட்ட விசாரிச்சிக்கோ..” என்று முடிக்க பார்க்க,

“நான் இன்னும் ஓகே சொல்லல” என்று முறுக்கியவரிடம்,

“நான் கண்டிப்பா அவளை தவிர வேற யாரையும் கல்யாணம் செஞ்சுக்க போறதில்லை, அவளை விட்டா வேற யாரும் வந்து உன் வீட்ல மருமகளா விளக்கேத்த போறதில்ல, சோ உனக்கு உன் ஒத்தை பையனுக்கு கல்யாணம் பண்ணும்ங்கிற ஆசை இருந்தா வாம்மா.. இதுக்குமேல நான் என்ன சொல்ல..?” என்று பாவம் போல் பேசியவன் வைக்கவும், “அவன் பேச்சில் என்ன செய்ய..?” என்று விஜயா தான் குழம்பிப்போனார்.

அடுத்து தன் தந்தைக்கு அழைத்தவன், “அம்மாகிட்ட பேசியிருக்கேன்.. நீங்க அம்மாகிட்ட கேட்டுக்கோங்க” என்று முடித்தவனிடம்,

“என்ன கேட்கணும் அம்மாகிட்ட..?” என்று தந்தையாய் கேள்வி கேட்பவரிடம், அம்மாவிடம் சொன்னது போல் சொல்ல முடியாமல் திணறியவன்,

“நீங்க அம்மாகிட்டே பேசிக்கோங்க,”, என்றவனிடம்,

“சரி நான் பேசிக்கிறேன்.. ஆனா.. நான் உன்கிட்ட இப்போ ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசணும்” எனவும்,

“சொல்லுங்கப்பா..” என்று யோசித்தபடியே கேட்டான் ஜெய்.

“அது xxx டைரக்ட்டர் போன் பண்ணிருந்தார்.. அவரோட படத்துக்கு டான்ஸ் மாஸ்டரா போட உன்னை கேட்டதுக்கு.. நீ இனி எந்த புது படத்துக்கும் ஒதுக்கறதில்லைன்னு சொன்னியாமே..? ஏன்ன்னு கேட்டார்..?” என்று கேட்டவரின் குரலிலும் அதே கேள்வி இருப்பதை புரிந்து கொண்ட ஜெய்,

“அப்பா.. நாம இதை பத்தி நாளைக்கு நேர்லே பேசலாம்”,

“நேர்லயா..? ஏன் நீ நாளைக்கு இங்க வர போறயா..?”

“இல்லை நீங்களும்.. அம்மாவும் தான் சென்னை வரப்போறீங்க..”

“ஏன்..? நானும் அம்மாவும் ஏன் சென்னை வரணும்..?”

“அதை பத்திதான் நான் அம்மாகிட்ட பேசியிருக்கேன்.. நீங்க பேசிக்கோங்க” என்று வைக்க போனவன், “அப்பா.. அம்மா சொல்றதை கேட்டு நீங்க என்மேல கோவப்படாதீங்கப்பா.. என் சூழ்நிலை அப்படி..” என்று சொல்லிவிட்டு வைக்கவும்,

மஹாதேவன் அடுத்து விஜயாவிடம் பேசியவர், அவர் சொன்னதை கேட்டு கோவம் வந்தாலும் மகன் சொன்ன சூழ்நிலையை கருத்தில் கொண்டு, “எதுக்காக..? ஏன் இவ்வளவு அவசரம்..? என்று யோசித்தவர்., தாராணிக்கு போன் செய்து “எல்லாவற்றையும்... எல்லாவற்றையும்” கேட்டு தெரிந்து கொண்டவர் “சரியாக தப்பாக யோசித்தார்”.

“ஹர்ஷினி… நாளைக்கே உறுதி பண்ணிரலாம்ன்னு மாப்பிள்ளை முடிவா நிக்கிறார்.. அதான் தாத்தாவும் ஓகே சொல்லிட்டார்..” என்று ஹாலிற்கு வரவழைத்து இந்திரன் சொல்லவும்,

அதிர்ந்த ஹர்ஷினி.. பின் வேகமாக திரும்பி ஆச்சார்யாவை முறைப்புடன் சந்தேகமாக பார்க்க, “இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. நான் பொறுமையா கிராண்டா பண்ணலாம்ன்னு தான் சொன்னேன்.. ஆனா ஜெய் தான் கேட்கல” என்று ஆச்சார்யா சொல்லவும்,

“எனக்கு உறுதி பண்றதுல இஷ்டம் இல்லை..” என்று கோவமாக சொல்ல,

“ஏன்..? ஏன்..? உனக்கு இஷ்டம் இல்லை”, என்று ரேணுகா கேட்க,

“அம்மா.. உங்களுக்கு தெரியதுமா..? இவர் அவருக்கு எவ்வளவு பெரிய அநியாயம் செஞ்சிருக்கார் தெரியுமா..?” என்று ஆச்சார்யாவை கைகாட்டி ஆத்திரமாக வெடிக்க,

“ஹர்ஷினி எனக்கு அதெல்லாம் தெரியாது.. நீயும் அந்த தம்பியும் விரும்புறீங்கதானே.. அதுவும் வீட்ல எங்க யாருக்கும் தெரியாம வருஷ கணக்கா விரும்பிட்டு இப்போ வந்து கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்..?” என்று கத்தியவரிடம்,

“ம்மா.. அப்போ உங்களுக்கு இவர் செஞ்சது தப்பாவே தெரியலையா..? நீங்க என்னை பத்தி மட்டும்தான் யோசிக்கிறீங்க..?”

“அவரோட எத்தனை வருஷ உழைப்பு தெரியுமா..? அதுக்காக அவர் எவ்வளவு கஷ்ப்பட்டிருக்கார்.. உங்க வீட்டு பொண்ணை விரும்புறார்ன்ற ஒரே காரணத்துக்காக அவர்கிட்டே இருந்து அவரோட உழைப்பை, அங்கீகாரத்தை, அவரோட சாதனையை பறிக்க நினைக்கிறாரே..? அதை பத்தி ஏன் யாரும் பேசமாட்டேங்கிறீங்க..?” என்று வெடித்தவளிடம்,

“அவர் செஞ்சது தப்புன்னா.. நீ செஞ்சது மட்டும் என்ன..?” என்று ரேணுகா கூர்மையாக கேட்க,

“நான் என்ன செஞ்சேன்..?” என்று புரியாமல் கேட்டவளிடம்.

“இத்தனை வருஷமா உங்க காதலை எங்க யார்கிட்டேயும் சொல்லாம மறைச்சியே..? அது நீ எங்களுக்கு செஞ்சு தப்பு இல்லையா..?”

“நீ அந்த தம்பிக்காக இத்தனை வருஷமா கல்யாணம் செஞ்சுக்கமா இருந்ததுக்கு.. உன்னோட அம்மாவா நான் எத்தனை நாள் எத்தனை பேர்கிட்ட பேச்சு வாங்கிருக்கேன்.. எத்தனை நாள் அழுதிருப்பேன்..” அது தப்பு இல்லையா..?

“என்னைவிடு இதோ.. இவ உன் தங்கச்சி,, இவளுக்கு முடிவான கல்யாணம் உன்னால இத்தனை நாளா தடைப்பட்டிருக்கே.. அது தப்பு இல்லையா..? அதுக்கு என்ன சொல்ல போற..? என்று ஹாசினியை முன்னால் இழுத்து விட்டு கேட்கவும்,

“ம்மா.. நான்.. நான்..”

இன்னும் நான் முடிக்கல ஹர்ஷினி..

“மருமகளே வேண்டாம் போதும்..” என்று பேத்தியின் தவிப்பில் தாங்க முடியாமல் ஆச்சார்யா சொல்ல,

“இல்ல மாமா.. நான் இன்னிக்கு இவளை கேட்டே ஆகணும்”,

“அந்த தம்பிக்காக எங்க இத்தனை பேரை, உன் சொந்த குடும்பத்தை இத்தனை நாள் கஷ்டப்படுத்தி இருக்க.. இதை பத்தி எல்லாம் இதுவரை யாராவது உன்கிட்ட கேட்டாங்களா..? இல்லையில்லை.. அப்போ அவர்கிட்டேயும் நாங்க யாரும் எதுவும் கேட்கமாட்டோம்”, என்று ஆவேசமாக சொன்னவர்,

“நாளைக்கு கண்டிப்பா உறுதி பண்றோம்.. இப்போ போ உன் ரூமுக்கு” என்று ஒரு அம்மாவாக கட்டளையிட்டவரை,

“ம்மா.. நான் சொல்றதை..”

“இன்னும் என்ன சொல்லணும் உனக்கு.. இத்தனை வருஷமும் அந்த தம்பிக்காக தானே எங்களை கஷ்டப்படுத்தின.. இப்போவும் அந்த தம்பியை பத்தி மட்டும் தான் யோசிக்கிற..?”

“எப்போ ஹர்ஷினி எங்களுக்காக.. எங்களை பத்தியும் யோசிப்ப..?” என்று ஆற்றாமையில் ரேணுகா கேட்க, வேதனையில் ஒரு நிமிடம் கண்மூடி திறந்த ஹர்ஷினி,

“நான் உங்களுக்கு செஞ்சது எல்லாமே தப்புதான்.. உங்க யார் பாசத்துக்கும் நான் நியாயம் செய்யல.. நான் இதை பங்க்ஷன் நடந்த இடத்திலேயும் சொல்லிட்டேன், இப்போவும் சொல்றேன்.. எப்போவும் சொல்றேன்..”என்று குற்ற உணர்ச்சியுடன் சொன்னவள்,

“ஆனால்.. அதே சமயம்.. இவர் செய்யறதும் ரொம்ப பெரிய தப்பு.. அநியாயம்.. அதை செய்ய நான் விடமாட்டேன்..” என்று தீவிரமாக ஆச்சார்யாவை பார்த்தபடி உறுதியாக சொன்னாள்

ஜெய் ஏற்பாடு செய்தது போல் மறுநாள் விடியகாலை பிளைட்டில் சென்னை வந்த மஹாதேவன் தம்பதியினரை, ஜெய், தாரணி குடும்பத்தோடு சென்று ஏர்போர்ட்டில் பிக்கப் செய்தவர்கள்,

“முதல்ல டிபனை முடிச்சிடுவோம்..” என்று பக்கத்தில் உள்ள ஹோட்டல் சென்று டிபனை முடிக்கவும், அடுத்து என்ன..? என்பது போல் எல்லோரும் ஜெயயை பார்க்க, அவனோ..

“ம்மா.. என்ன அமைதியா இருக்க.. அடுத்து என்ன சொல்லு..? என்று கேட்க,

“நீ இன்னும் என் கால்லே விழல..” என்று சீரியஸாகவே சொல்ல,

“ம்மா.. விளையாட இதுவா நேரம்…” என்று பல்லை கடித்தவனிடம்,

“டேய் நான் எங்க விளையாடுறேன்.. நீ தானே நேத்து போன்ல பேசும்போது சொன்ன என் கால்ல விழறேன்னு.. அதைத்தான் கேட்டேன்..” என்று சமயம் பார்த்து மடக்கியவரிடம்,

“ம்ம்மா.. அது சும்மா..”

“என்னது சும்மா சொன்னியா.. அப்போ நாங்க மறுபடியும் ஊருக்கே போறோம்..” என்று எழுந்தவரின், கையை பிடித்து உட்காரவைத்த ஜெய்,

“நான் வீட்டுக்கு போனதும் கண்டிப்பா உன் கால்ல விழறேன்,”

“ஏன் இங்க விழுந்தா என்ன..?”

“ம்ம்மா.. அவங்க எல்லாம் வெய்ட் செய்வாங்க.. டைம் ஆகுது... என்று பல்லை கடித்தவனை,

“சரி பொழைச்சி போ.. நாம நேரா அவங்க வீட்டுக்கே போயிரலாம்.. என்னங்க சொல்றீங்க..? என்று கணவரிடம் கேட்க, “சரி.. போயிரலாம்” என்று அவர் இறுகிய முகத்துடன் சொல்வதை கவனிக்க தவறிய ஜெய், ஆச்சார்யாவிற்கு போன் செய்து சொல்லிவிட்டு, காரை நேராகவே சுபத்ராவின் டான்ஸ் அகாடெமிக்கு பின்னால் உள்ள வீட்டிற்கு விட்டான்,

வாசலிலே காத்திருந்த ஆச்சார்யா, இந்திரன், சந்திரன் மூவரும், இவர்கள் இறங்கவும், மிகுந்த மரியாதையுடன் உள்ளே அழைத்து சென்று, அமரவைத்தனர்.

மாலதி, ரேணுகா இருவரும் காபி, ஸ்னாக்ஸ் கொண்டுவரவும், எடுத்துக்கொள்ளும்படி படி சொன்ன ஆச்சார்யா, “வீட்டில் உள்ள அனைவரையும் ஜெயின் குடும்பத்திற்கு முறையாக அறிமுகப்படுத்தினார்”,

“என்னதான் ஹர்ஷினி மேல் மலையளவு கோவம் இருந்தாலும், அவளை ஜெயின் கண்கள் எதிர்பார்க்கவே செய்தது”. அது புரிந்தது என்னமோ..?

“சுபத்ரா.. ஹர்ஷினியை கூட்டிட்டு வா..” என்று ஆச்சார்யா சொல்ல, சுபத்ராவும் ரூமினுள் அமர்ந்திருந்த ஹர்ஷினியை அழைத்து கொண்டு வெளியே வந்தார்,

முதலில் தயாராகவே மாட்டேன்..? என்று சொன்னவளை, ரேணுகாவின் கோவம் தான் தயாராக வைத்தது, அதுவும் சிம்பிளான ஒரு சாரீ.. காதில் ஜிமிக்கி, கழுத்தில் இரண்டு செயின், தலையில் கொஞ்சமே மல்லிகை பூ, இவ்வளுதான் அவளின் அலங்காரமே.. அதிலே தேவதையாக வந்து நின்றவளை ஜெயின் கண்கள் தன் கோவத்தையும் மறந்து ரசிக்க தான் செய்தது,

ஆனால் ஹர்ஷினியோ அவனின் பக்கம் கூட திரும்பாமல் நின்றவள், விஜயா தன் பக்கத்தில் அமரும்படி சொல்லவும், நிர்மலமான முகத்துடன் சென்று அமர்ந்தவள்,

“நீ கூட இத்தனை நாள் என்கிட்ட சொல்லல பாத்தியா..?” என்று வருத்தத்துடன் விஜயா நேரடியாகவே கேட்டுவிட,

“ம்மா..” என்று பல்லை கடித்து கொண்டு கூப்பிட்ட மகனை, “நான் உன்கிட்ட கேட்கல, என் மருமக கிட்டத்தான் கேட்கிறேன்..” என்று அதட்டியவர்,

“சரி விடு.. என்ன சொல்லலன்னு வருத்தம் தான்.. வேறஒண்ணும் இல்ல.. இனி அதைப்பத்தி பேசி என்ன செய்ய..?” என்று பேசியவர், தாரணி அந்த பூவை கொடு, “உன் அண்ணிக்கு வைக்கலாம்” என்று சொல்ல,

“கொஞ்சம் இரு விஜயா..” என்று நிறுத்திய மஹாதேவன், “நான் இவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” என்று இறுகிய முகத்துடன் சொல்ல, அப்பொழுதுதான் அவரை நன்கு கவனித்த ஜெய் “ஏதோ சரியில்ல” என்று புரிந்து கொண்டு,

“அப்பா..” என்று பேச வர, “ஜெய் நான் உன்கிட்ட எதுவும் பேசல.. இவங்ககிட்ட தான் பேசணும்” என்று உறுதியாக சொன்னவரை,

“என்ன பேசணுமா தாராளமா பேசுங்க..” என்று ஆச்சார்யா சொல்லவும், அவரை கூர்மையாக பார்த்த மஹாதேவன்,

“என் மகனை.. என் மகனை.. இனி டான்ஸ் ஆடக்கூடாதுன்னு நீங்க சொன்னீங்களா..?” என்று

“என் மகனை டான்ஸ் ஆடக்கூடாதுன்னு சொல்ல நீங்க யார்..?” என்ற அர்த்தத்துடன் முகத்தில் அடித்தாற் போல் கேட்க, அதுவரை தலை குனிந்து அமர்ந்திருந்த ஹர்ஷினி அவரின் கேள்வியில் கண்களில் ஒளியோடு ஆச்சார்யாவை பார்த்தாள்.

“அப்பா..” என்று பேச வந்த ஜெயயை, “ஜெய் நான் பேசி முடிக்கிற வரை நீ எதுவும் பேசக்கூடாது” என்று அப்பாவாக கட்டளையாக சொன்னவர், பதிலுக்காக ஆச்சார்யாவை பார்க்க,

“என் மகன்… என்ற சொல்லில் இருந்த உரிமையில், எதுவும் பேசமுடியாமல் இருந்த அவரின் முகத்தில் தெரிந்தது எல்லாம், வேதனை, சங்கடம் தான், கோவத்தில் உள்ள மஹாதேவனை தவிர மற்ற எல்லோருமே ஆச்சார்யாவின் வேதனையை கண்டுகொண்டனர் ஹர்ஷினி உட்பட,

பதில் சொல்லுங்க சார்..? என்ற மஹாதேவன், “உங்க பொண்ணை விரும்பிட்டான்ற ஒரே காரணத்துக்காக நீங் என் பையனுடைய உழைப்பை, அடையாளத்தை அழிச்சி அவனை கஷ்டப்படுத்துவீங்களா.?” என்று நெத்தியடியாக கேட்க,

“தான் நேற்று கேட்ட அதே கேள்வியை இப்போது மஹாதேவனும் கேட்க, இப்போ பதில் சொல்லுங்க..” என்று சவால் பார்வையை பார்த்த ஹர்ஷினியை கண்ட ஆச்சார்யா மேலும் வேதனைப்பட்டார் என்றால்.. "ஜெய் அவளை சுட்டெரிக்கும் சூரியனாய் தான் பார்த்தான்..."

..............................................................


ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன், படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க ப்ரண்ட்ஸ்.. அண்ட் thank you சோ மச் பார் யுவர் சப்போர்ட் ப்ரண்ட்ஸ்..
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 30



“ஆச்சார்யாவின் முகத்தில் தெரிந்த வேதனை.. ஹர்ஷினிக்கு ஒன்றும் சந்தோஷத்தை கொடுத்து விடவில்லை.. மாறாக வேதனையை தான் கொடுத்தது”.. என்றாலும் அவர் “ஜெய்க்கு செய்ய நினைப்பது மிக பெரிய அநியாயமாயிற்றே..”

அவளுக்கு இருவருமே மிகவும் முக்கியமானவர்கள் தான் ஆனாலும்.. “ஜெய் அவளின் உயிர் அல்லவா..?” அவனுக்கு அவர் செய்ய நினைப்பது எக்காலத்திலும் அவளால் ஏற்று கொள்ளவே முடியாத ஓன்று,

ஒரு பேத்தியாக அவருக்கு நான் என் கனவை, லட்சியத்தை விட்டு கொடுத்தேன்.. ஆனால் ஜெய் ஏன் அவருக்காக விட்டு கொடுக்க வேண்டும்..? அதைவிட “இவர் அதற்காக பயன்படுத்துவது தங்களின் காதல் என்பதை விட.. தன் மேல் ஜெய் வைத்திருக்கும் காதலை அல்லவா..?”

அதை எப்படி தன்னால் பார்த்து கொண்டிருக்க முடியும்,..? என்று நினைத்தபடியே ஆச்சார்யாவை பார்த்து கொண்டிருந்தவளை, ஜெய் மிகவும் கோவத்தோடு மட்டுமல்லாமல், அதிருப்தியாகவும் பார்த்தான்,

அதை உணராத ஹர்ஷினி “மஹாதேவன் கேட்டதுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்..?” என்று ஆச்சார்யாவை தான் சவாலாக பார்த்து கொண்டிருந்தாள்..

இதில் மிகவும் அதிர்ந்தது விஜயா தான்.. “என்ன ஜெயயை டான்ஸை விட சொல்றாங்களா..? முதல்ல என் மகனை டான்ஸை விட சொல்ல இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு..? இவங்க பொண்ணை காதலிச்சிட்டா இவங்க என்ன வேணா கண்டிஷன் போடுவாங்களா..?” என்று கொதித்தவர், அதை வெளியே கொட்டவும் செய்தார்..

“என் மகன் அதுக்காக இத்தனை வருஷம் எவ்வளவு கஷ்டப்பட்டு இப்போதான் அதுக்குடைய பலனை அனுபவிக்கிறான்.. இப்போ போய் அவனை டான்ஸை விட சொல்லி நீங்க எப்படி சொல்ல முடியும்..?” என்று ஆத்திரமாக கேட்க, ஆச்சார்யாவின் முகம் வேதனையில் மிகவும் கசங்கியது..

அதை பார்த்த குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் வருத்தமே.. அவரிடம் இதுபோல் பேசும் மஹாதேவனையும், விஜயாவையும் பார்த்த வீட்டினருக்கு அவர்கள் மேல் மெலிதான கோவம் வந்தாலும்,

“அவர்களின் பக்கம் இருக்கும் நியாமான காரணத்தாலே” அமைதியாக இருந்தனர், அதோடு ஆச்சார்யாவிற்குமே இந்த சூழ்நிலையில் தாங்கள் பேசுவது பிடிக்காதது மட்டுமல்ல, “இதில் சம்பந்தப்பட்டது அவர்களின் செல்ல மகள் ஹர்ஷினியின் வாழ்கையாற்றே..”

“எப்படியும் ஜெய் தான் அவர்களின் மாப்பிள்ளை..” என்பது உறுதியாக தெரிந்த விஷயம்.. இதில் அவரின் பெற்றோர்களை எதிர்த்து பேசுவதோ, சண்டை போடுவதோ பிற்காலத்தில் ஹர்ஷினியின் வாழ்க்கையை தானே பாதிக்கும்...

“எல்லாவற்றையும் விட.. இதே போல் ஒரு சந்தர்ப்பத்தில் தானே சந்திரனின் நிதானமில்லா முன் கோவத்தால் சுபத்ராவிற்கு அமைய இருந்த வாழ்க்கை கைநழுவியதோடு இதுவரை அவர் தனியாகவே நின்றுவிட வைத்தது”,

“இன்றும் அதேபோல் ஒரு சூழ்நிலை தான்.. ஆனால் விதி ஏற்கனவே இவர்களுக்கு மிகப்பெரிய அனுபவப்பாடம் கற்று தந்து இருந்ததால், அனைவரும் பொறுமையாகவே இருந்தனர் ஆச்சார்யா உட்பட..”

“ம்மா.. எதுவும் தெரியாமல் எதுக்கு இப்படி பேசறீங்க..? அவர் என்கிட்ட இதுவரை அப்படி ஒரு வார்த்தையை சொல்லவே இல்லை..” என்று ஜெய் ஆச்சார்யாவின் வேதனையை உணர்ந்து கொஞ்சம் கோவமாக “உண்மையைத்தான் சொன்னான்”,

“அப்போ நீ ஏன் டான்ஸை விடப்போற..?” என்று மஹாதேவன் கூர்மையாக கேட்க,

“அது அது.. எனக்கு அதுல சாதிச்சது போதும்ன்னு தோணிச்சி.. அதான்..” என்று சொன்னவனின் பேச்சை நம்பாமல் தலையாட்டிய மஹாதேவன்,

“ஜெய்.. இவங்களுக்காக உன்னை பெத்தவங்ககிட்டேயே நீ பொய் சொல்வன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல..” என்று ஆற்றாமையாக சொன்னார்,

ஆச்சார்யாவிற்காக சப்போர்ட் செய்யும் ஜெயயை, கோவமாக பார்த்த ஹர்ஷினியை, தானும் முறைப்பாக பார்த்த ஜெய் கண்களில் தெரிந்த “அதிருப்தியில்” துணுக்குற்ற ஹர்ஷினி அவனை கேள்வியாக பார்க்க, அவனோ முகத்தை திருப்பி கொண்டான்.

“சார்.. ஏதா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா பேசலாம்..” என்று மேனகாவின் கணவர் தான் ஆச்சார்யாவின் மேல் பெருமதிப்பு கொண்டவரலால் அவரின் நிலையை சகிக்க முடியாமல், மஹாதேவனிடம் பொறுமையாக சொல்ல,

“சார்.. நீங்க எங்க நிலைமையிருந்தால் நீங்களும் இப்படி தான் பேசுவீங்க..” என்று மஹாதேவன் சொல்ல,

“இருக்கலாம்.. நான் அதை மறுக்கல.. ஆனா நமக்கு எதிர்ல உள்ள மனுஷனை பத்தியும் நாம கொஞ்சம் யோசிக்கணும் இல்லையா..?” என்று சொல்ல,

“என்ன யோசிக்கணும்ன்னு சொல்றீங்க.. அவர் முதல்ல எங்களை பத்தி யோசிச்சாரா..?”

“இவங்களோட காதல் விஷயம் இவருக்கு தெரிஞ்சப்போ.. அவனோட பெத்தவங்க நாங்க.. இவர் எங்ககிட்ட ஒருவார்த்தை உங்க மகன் இப்படின்னாவது சொன்னாரா..?”

அதுகூட பரவாயில்லை.. “இப்போ அவர் பேத்தியை என் மகன் காதலிக்கிற ஒரே காரணத்துக்காக என் பையன் கஷ்டப்பட்டு வாங்குன அங்கீகாரத்தை விட சொல்றாரே..? இதெல்லம் ஒரு பெரிய மனுஷன் செய்யற வேலையா..?” என்று ஆத்திரத்தில் கேட்டுவிட,

சார்.. அப்பா.. என்று மொத்த குரலும் கோவமாக ஒரே நேரத்தில் எதிரொலித்தது, ஹர்ஷினியும் அவரது எதிர்பாரா கேள்வியில் எல்லையில்லா வேதனையை அடைந்தாள்.

“சார்.. இதுவரைக்கும் உங்க பக்கம் இருந்த நியாயம் இருந்ததாலதான் நீங்க எங்க அப்பாவை பத்தி பேசினத்துக்கு எல்லாம் நாங்க இதுவரை அமைதியா இருந்தோம்.. ஆனா இப்போ நீங்க பேசினது ரொம்ப பெரிய தப்பு..” என்று கோவமாக இந்திரன் சொல்ல,

“அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன் நான்..?” என்று மஹாதேவன் கோவமாக கேட்க,

“ஆமா.. நீங்க தப்பாதான் பேசுனீங்க” என்ற ஜெயின் குரலில் அவனை அதிர்ச்சியாக பார்த்தவர்,

“ஓஹ்.. நான் பேசுனது தப்புன்னு சொல்ற அளவுக்கு பெரிய ஆயிட்டியா நீ..?” என்று அவனிடமும் மஹாதேவன் எகிற,

“உங்க மகன் ஒரு பொண்ணை லவ் பண்ணா.. நீங்க அவன்கிட்ட தான் அதை பத்தி கேட்கணுமே தவிர.. இன்னொருத்தர்கிட்ட இல்ல..” என்று நிதானமாக கோவத்தில் அடக்கபட்ட குரலில் பேசியவன்,

“அவர் பேசினத்துக்காக நான் மன்னிப்பு கேட்டுகிறேன்..” என்று ஆச்சார்யாவை பார்த்து கை குவித்து மன்னிப்பு கேட்க, அது மகாதேவனை இன்னும் தான் ஆங்காரம் கொள்ள வைத்தது.

“மத்தவங்களுக்காக நீ என்னையே தப்பு சொல்ற இல்ல..” என்று அவனிடம் சீற,

“அவங்க ஒன்னும் மத்தவங்க இல்ல.. இனி நாம எல்லாரும் ஒரே குடும்பம் தான்..” என்று உறுதியாக சொன்னவன்,

“நாம கிளம்பலாம்.. இனியும் இங்கிருந்து பிரச்சனையை பெருசா செய்ய வேண்டாம்..” என்று முடித்து விட்டவன்,

ஆச்சார்யாவின் அருகில் சென்று.. அவரின் கையை பிடித்து தரையில் முட்டிபோட்டு அமர்ந்தவன், “எங்க அப்பா பேசினது ரொம்ப பெரிய தப்பு.. எனக்காக.. உங்க பேரனுக்காக அவரை மன்னிச்சிடுங்க.. நீங்க இதை எல்லாம் நினைச்சி உங்க மனசை போட்டு ரொம்ப அலட்டிக்காதீங்க.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. என்னைக்கு இருந்தாலும் உங்க பேத்தி தான் என் பொண்டாட்டி..” என்று ஹர்ஷினி, மஹாதேவன், விஜயாவை பார்த்து உறுதியாக சொன்னவன்..

“இப்போ நாங்க கிளம்புறோம்..” என்று முடித்தவன், அவனின் குடும்பத்தை அழைத்து கொண்டு வெளியே சென்றவன், ஹர்ஷினியை தன்னோடு வரும்படி சைகை செய்துவிட்டு தங்கள் குடும்பத்தாரை காரில் ஏற்றி உட்காரவைத்தவன், ஹர்ஷினி வரவும்,

“நீ நான் லவ் பண்ற ஹர்ஷினிதானான்னே எனக்கு சந்தேகமா இருக்கு..” எடுத்தவுடன் கோவத்தோடு பொரிந்தவனை அதிர்ச்சியாக பார்த்த ஹர்ஷினியை இன்னும் வார்த்தைகளால் விளாச ஆரம்பித்தான்..

“ஒரு வயசானவரை இப்படி வருத்தப்படவைக்க உனக்கு எப்படி மனசு வருது.. அவர் இதுவரை உன்னை எப்படி பாத்துகிறார்ன்னு எல்லாரையும் விட உனக்கு நல்லாவே தெரியும்.. நீ அவரை இவ்வளவு கஷ்டபடுத்துற அப்பவும் அவர் உன்னை ஒரு ராணி மாதிரி தான் பாத்துக்கிறாரு..”

“நீ இவ்வளவு செஞ்சாலும் ஒருநாளாவது உன்மேல கோவப்பட்டிருப்பாரா,,? இல்லை உன் வீட்டில் உள்ளவங்களை தான் உன்கிட்ட கோவப்பட விட்டுருப்பாரா..? அப்படி இருந்தும் நீ ஒரு டான்ஸ்க்காக அவர்கிட்ட இப்படி நடத்துகிறது கொஞ்சம் கூட சரியில்ல..” என்று தொடர்ந்து கடுமையாக பேசி கொண்டிருந்தவனை ஆத்திரமாக இடைவெட்டிய ஹர்ஷினி,

“அப்போ அவர் உங்களுக்கு செய்ய நினைக்கிறது தப்பு இல்லைன்னு சொல்றீங்களா..? அவர் உங்ககிட்ட இருந்து உங்க உழைப்பை, அடையாளத்தை மொத்தமா பறிக்க நினைக்கிறது ரொம்ப நல்ல விஷயமோ..?” என்று கோவம்கொண்டு பேசுபவளை,

அதிர்ப்தியாக பார்த்த ஜெய்.. “அப்போ நீ என்னை லவ் பண்ணலை.. டான்ஸ் மாஸ்டர் அப்படிங்கிற என் அடையாளத்தை தான் லவ் பண்றியா..?” என்று கடுமையாக கேட்டான்.

அவனின் கேள்வியில் ஒரு நிமிடம் உறைந்து நின்ற ஹர்ஷினி, மறுநிமிடம் “என்ன பேசறீங்கன்னு யோசிச்சி தான் பேசறீங்களா..?” என்று ஆத்திரமாக வெடிக்க,

“ஏன் நான் கேட்டதில என்ன தப்பு..? நீ நடத்துகிறது அப்படித்தானே இருக்கு..”

“நீ டான்ஸ் மாஸ்டர் ஜெயயை தான் கல்யாணம் செய்ய ஆசைப்படறே.. ஆனா நீ கல்யாணம் செய்ய போறது ஒரு சாதரண ஜெய் ஆகாஷை தான்.. ரெடியா இரு..” என்று வார்த்தைகளால் அவளை கொன்றவன், வேகமாக காரில் ஏறி கிளம்பியும் விட்டான்.

அவன் ஹர்ஷினியுடம் கோவமாக பேசுவதை ஜெயின் குடும்பம் பார்க்கத்தான் செய்தது, ஆனால் அதில் வருத்தப்பட்டது தாராணியும், அவளின் கணவர் ரமேஷும் தான்..

ஏற்கனவே ஜெயின் பேச்சால் கோவத்தில் இருந்த ஜெயின் பெற்றோர்களுக்கு அதை பெரிதாக கண்டு கொள்ள தோன்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் ஜெய் ரூமிற்குள் செல்ல பார்க்க,

“ஜெய்..” என்று மஹாதேவன் கோவமாக அழைக்க.. “அப்பா.. இப்போ எது பேசினாலும் பிரச்சனை பெருசாத்தான் ஆகும்.. அப்பறமா பேசலாம்..” என்று வரும் பிரச்சனையை தவிர்க்கவே பார்த்தான்.

ஆனால்.. “அவனுக்காக தானே நாங்கள் பேசியது.. அப்படி இருக்கும் போது அவனே தங்களை அவர்களிடத்தில் விட்டு கொடுத்து பேசியதோடு அவர்களுக்காக தங்களிடமே ஏத்து கொண்டும் பேசியதும்” அவர்களை வருத்தப்படவைத்ததோடு கோவமும் கொள்ள வைத்தது. அதையே ஜெயிடமே கேட்க,

“அப்பா.. நீங்க எனக்காக தான் பேசுனீங்க, அதில் எந்த தப்பும் இல்லை.. ஆனா நீங்க பேசினதுல எந்த அளவு உண்மை இருக்குன்னு தெரிஞ்சிக்காம நீங்க அப்படி பேசினது தப்பு” என்று பொறுமையாக சொல்ல,

“ஓஹ்.. அப்போ நீ டான்ஸை விட அவர் காரணமில்லைன்னு சொல்றியா..?”

“நான் எப்போ அப்படி சொன்னேன்..”

பின்ன.. நீ பேசுனத்துக்கு அதுதானே அர்த்தம்..

இல்ல.. நான் சொன்னதுக்கான மீனிங் இது இல்லை.. அவர் இதுவரை என்கிட்ட ஒரு வார்த்தை கூட டான்ஸை விடுன்னு சொல்லவே இல்ல.. இதுதான் உண்மை..

சரி நீ சொல்றபடியே பார்த்தாலும் “அவர் பேத்தியை கல்யாணம் செய்ய நீ டான்ஸை விட்டு தான் ஆகணும்ன்னு வலுகட்டாயமா தூண்டினது அவர்தானே.. இதுக்கு நீ மறுப்பே சொல்ல முடியாது ஜெய்” என்று ஆணித்தரமாக பேசியவரை.. வெறித்து பார்த்த ஜெய்,

அப்பா.. “இப்போ நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்பேன்.. நீங்க உண்மையை மட்டும்தான் சொல்லணும்” என்று சொன்னவன்,

“நம்ம தாராணிக்கு சினிமா இண்டஸ்ட்ரில இருந்து மாப்பிள்ளை வந்திருந்தா அவனுக்கு நீங்க மனசார தாராணியை கொடுத்து இருந்துப்பீங்களா..?”என்று நிதானமாக கூர்மையுடன் கேட்க,

“அது.. அது” என்று தடுமாறியபடி இழுக்கவும்,

ஆனா.. உன்னை தான் அவங்களுக்கு நல்லா தெரியுமே, உன்னை நினைச்சி பயப்பட.. யோசனை செய்ய என்ன இருக்கு..? என்று விஜயா கேட்க,

“ம்மா.. அந்த வீட்ல ஹர்ஷினிக்கு மட்டும் தான் என்ன நல்லா தெரியும்”,

அதுபோதாதா.. “அவதானே உன்கூட வாழப்போறா..? அவ உன்னை நம்பினா போதுமே” என்று விஜயா சொல்ல,

ம்மா.. நீங்க தாராணியை உள்ளூருல தான் கொடுத்தீங்க, சுத்தி பாத்தா நமக்கு ஓரளவுக்கு தெரிஞ்சவங்கதான்.. அப்படி இருந்தும் நீங்க இன்னும் நல்லா விசாரிச்சிதானே பொண்ணை கொடுத்தீங்க.. அவங்களை மட்டும் பொண்ணுக்கு தெரிஞ்சா போதாதுன்னா கேட்கிறீங்க..?”

அதையெல்லம் விடு ஜெய்.. அப்போ அவங்க இத்தனை வருஷம் நீ போராடி வாங்கின அங்கீகாரத்தை விட சொல்றது சரின்னு சொல்ல வரியா..? என்று மஹாதேவன் கேட்க,

“அவங்க விட சொல்லல.. நான் தான் விடறேன்..”

“அப்படியொன்னும் அந்த பொண்ணுக்காக நீ விடணும்ன்னு எந்த அவசியமும் இல்லை.. அந்த பொண்ணு இல்லன்னா உனக்கு வேறபொண்ணா இல்ல” என்று வார்த்தை விட, கொதித்தெழுந்த ஜெய்,

“அவளுக்காக என் உயிரை கூட விடுவேன்.. அப்படி இருக்கும் போது அவளுக்காக இந்த சாதராண டான்ஸை விட மாட்டேனா..?”

“டான்ஸ் அப்படிங்கிறது என்னோட தொழில் தான் ஆனா அவதான் என்னோட வாழ்க்கையே…” என்று தீவிரமாக சொன்னவன்.. சட்டென்று வெளியே சென்றுவிடவும்,

அவன் சொல்லி சென்ற வார்த்தைகளை நம்ப முடியாமல் பார்த்த மஹாதேவன், விஜயா இருவரையும் நெருங்கிய தாரணி,

“ம்மா.. ப்பா நீங்க இன்னிக்கு பேசுனது ரொம்ப தப்பு..” அதுவும் ஹர்ஷினி அண்ணியை {என்று அழுத்தி சொன்னவள்} போய்,

“அவளை விட்டா வேற பொண்ணா இல்லைன்னு பேசுனது ரொம்ப பெரிய தப்பு” என்று சொல்லவும்,

ஓஹ்.. “அப்போ நீயும் நாங்க தான் தப்புன்னு சொல்றியா..?” என்று கோவமாக கேட்ட விஜயாவிடம்,

“ம்மா.. நான் சொல்றதை கேட்டுட்டு அப்பறம்அண்ணியை பத்தி நீங்க பேசுனது தப்பா இல்லையான்னு நீங்களே சொல்லுங்க..” என்று சொன்னவள்,

“நீங்க அண்ணன் டான்ஸ் ஆடப்போறேன்னு சொன்னப்போ சண்டை போட்டது மட்டுமில்லாம.. அண்ணனோட மாச செலவுக்கு கூட காசு தராதப்போ..

“காலேஜ் படிச்சிட்டுருந்த அண்ணி.. அவங்க ஹோட்டல்லே பார்ட் டைம் வேலை பாத்து அண்ணனுக்கு காசு அனுப்பினாங்க..” என்று ஆரம்பித்து முழுவதையும் சொன்னவள், அதுமட்டுமில்லை அண்ணாக்கும் தெரியாத இன்னொரு விஷயமும் இருக்கு..

“என் கல்யாணத்தப்போ அண்ணி தான் எல்லா வேலையும் அண்ணா செய்யறது போல் செஞ்சாங்க.. ஆனா “நீங்க அந்த வேலைக்கெல்லாம் காசு கொடுத்தீங்களா..? இல்லையில்லை.. அண்ணாதான் கொடுக்கிறாருன்னு நீங்க நினைக்க, நீங்க காசு கொடுக்கிறீங்கன்னு அண்ணா நினைக்க, கொடுத்தது யார் தெரியுமா அண்ணிதான்..”

அதுவும் "அவங்க வீட்ல அவங்க பேர்ல போட்டு வச்சிருந்த பிக்சட் டெபாசிட்டை உடைச்சி அண்ணாக்காக.. அவருடைய கௌறுவத்துக்காக செஞ்சாங்க..”

“ஏன் தெரியுமா..? அப்போ அண்ணா அவ்வளவு சம்பாதிக்கவே இல்லை.. அவர்கிட்ட அவ்வளவு காசும் இல்லை.. நீங்க அதை பத்தி கொஞ்சமும் யோசிக்கல.. ஆனா அண்ணி யோசிச்சாங்க.. அண்ணாகிட்ட இப்போ அவ்வளவு காசு இருக்குமான்னு யோசிச்சாங்க” என்று சொல்லவும் அதிர்ந்தது அவர்கள் மட்டுமல்ல.. சாவி எடுக்க மறுபடியும் வீட்டிற்கு வந்த ஜெயும் தான்..

“நீங்க அண்ணாக்காக.. அவங்க தாத்தாகிட்ட சண்டை போடுறதுக்கு முன்னாடியே.. அண்ணி சண்டை போட்டுட்டு இருக்காங்க..” என்று ஹர்ஷினி பங்க்ஷன் நடந்த அன்று சண்டை போட்டதையும் விரிவாக சொன்னவள்..

“அண்ணியோட லவ் கிடைக்க அண்ணா ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.. அவங்க வசதிக்கும், அழகுக்கும் இல்லாத மாப்பிள்ளையா..? சொல்லுங்க.. இருந்தாலும் அவங்க இத்தனை வருஷம் கல்யாணம் செஞ்சிக்கமா இருந்தது உங்க மகனுக்காக தான்..”

“அப்படிப்பட்ட அவங்களுக்காக அண்ணா டான்ஸை விடறதுல என்ன தப்பு இருக்குன்னு நீங்களே சொல்லுங்க..? அவங்களை விட உங்க மகனுக்கு நல்ல பொண்ணு வேற எங்கேயும் கிடைக்க மாட்டாம்மா..” என்று சொல்லவும், விஜயாவும்.. மகாதேவனும் முன் போல் கோவம் கொள்ள முடியாமல் யோசனையுடன் நின்றுஇருந்தனர்.

................................................................

ஹாய் பிரண்ட்ஸ்

அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை மறக்காம ரெண்டு வரியில சொல்லுங்க ப்ரண்ட்ஸ்.. அடுத்து இன்னும் ஒரு மூணு எபில முடிச்சிடும்ப்பா.. thank you பார் த சப்போர்ட் ப்ரண்ட்ஸ்
 
Last edited:

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 31


ஜெய்… வீசி சென்ற விஷம் தோய்ந்த வார்த்தைகளால் “ஆத்திரம், கோவம் மட்டும் இல்லை ஹர்ஷினிக்கு, வேதனையும், ஆற்றாமையும் தான்..”

“அவர் அந்த சொற்களை உணர்ந்து பேசவில்லை.. கண்டிப்பாக தன் மேல் உள்ள கோவத்தில் தான் அப்படி பேசினார்” என்று அவளுக்கு நன்றாக புரிந்தாலுமே.. அந்த வார்த்தைகள் தன்னை காயப்படுத்த தான் செய்கிறது..

“அவர் எப்படி தன்னை அப்படி சொல்லலாம்..? அவர் டான்ஸ் மாஸ்டர் என்பது ஒரு காதலியாக தனக்கு மிகசிறந்த பெருமையும், கர்வமே தான்.. அதை மறுப்பதற்கே இல்லை”,

ஆனால்… “அவரின் அந்த அடையாளம் தான் எனக்கு முக்கியம் என்று அவர் சொல்வது.. கோவத்தில் என்றாலுமே தவறுதான்..”

“அவரை விட.. அவரின் டான்ஸ் மாஸ்டர் எனும் அடையாளம் எனக்கு இப்பொழுது மட்டுமில்லை எப்பொழுதும்... எக்காலத்திலும்... முக்கியமானதாக இருந்ததும் இல்லை.. இனியும் இருக்க போவதில்லை..”

“அது நன்றாக தெரிந்தும் அவர் எப்படி தன்னிடம் அப்படி பேசலாம்..?” என்று மனதுள் அவன் பேசி சென்ற வார்த்தைகளை நினைத்து கொதித்து கொண்டே வீட்டினுள் சென்றவள், அங்கு ஹாலில் ஆச்சார்யாவை சுற்றி அனைவ்ரும் வேதனையோடு நிற்கவே,

“ஜெயின் தந்தை” அவரை பார்த்து “நீங்க எல்லாம் ஒரு பெரிய மனுஷனா..?” என்று கேட்ட வார்த்தைகள் ஞாபகம் வரவே, தனக்காக அவர் இந்த வயதில் வாங்கிய வார்த்தைகளை நினைத்து பெருந்துயரம் கொண்டவள், வேகமாக சென்று அவரின் கால் மடியில் முகம் புதைத்து கொண்டு,

“சாரி தாத்தா.. என்னால தான்.. அவர் உங்களை பாத்து அப்படி கேட்டுட்டார்.. ரொம்ப ரொம்ப சாரி தாத்தா.. என்னை மன்னிச்சிருங்க..” என்று மெலிதான அழுகையோடு கேட்க,

“முதல்ல அவர்கிட்ட இருந்து தள்ளி போடி..” என்று அவளின் கையை பிடித்து ஆத்திரமாக இழுத்த ரேணுகா,
“இப்போ உனக்கு நிம்மதியா இருக்கா.. டான்ஸ்.. டான்ஸ்ன்னு அவரை போட்டு இந்த பாடுபடுத்துற.. அந்த ஜெய் தம்பிக்கு உங்க தாத்தா மேல இருக்கிற அக்கறையில கொஞ்சமாவது உனக்கு இருக்கா..”

“உன்னை பெத்த எங்களை விட.. அவர்தான் உன்னை அப்படி பாத்துக்கிறாரு.. நீ சாப்பிட்ற சாப்பாடு.. நீ போட்டுகிற துணி.. நீ ஓட்டுற வண்டி.. இப்படி சின்ன விஷயத்திலிருந்து பெரிய விஷயம் வரைக்கும் எல்லாமே உனக்கு பிடிச்சிதா இந்த வயசுலயும்.. பாத்து பாத்து செய்றாரே.. அதுக்கு ஒரு பேத்தியா நல்ல கைமாறு செய்ற நீ..” என்று,
ரேணுகா ஆத்திரமாக பொரிந்ததெல்லாம் ஹர்ஷினிக்கு மிகுந்த வேதனையை கொடுத்தாலும், “அவளின் கவனம் எல்லாம் இடிந்து போய் அமர்ந்திருந்த ஆச்சாரியாவிடம் தான் இருந்தது”.

“தான் மாடி மேல் முகம் புதைத்து மன்னிப்பு கேட்ட போதும் சரி.. இப்போது தன்னை ரேணுகா திட்டும் போதும் சரி.., ஆச்சார்யா அமைதியாக இருந்தது ஹர்ஷினிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியே..”

“ இதுவரை அவர் தன்னிடம் இது போல் இருந்ததில்லை.. இப்பொழுது எனோ அவர் தன்னை விட்டு விலகி செல்வது போல் தோன்றவும், அவள் மனதில் மிகப்பெரிய வெற்றிடம் உண்டாகி மிகுந்த வலியை கொடுத்தது என்றே சொல்லலாம்”.

“ஆச்சார்யா எனும் பேர்.. அவரின் அடையாளம்.. கெளரவம் எல்லாம் மஹாதேவன் தன்னை கேட்ட கேள்வியில் சரிந்தது போலவே தோன்றியது ஆச்சார்யாவிற்கு..”

“தன்னிடம் நெருங்கி பேச.. தன் குடும்பமே பயப்படும் போது, வெளி மனிதர் ஒருவர்.. தன் வீட்டிலே வந்து.. தன்னிடமே இப்படி பேசியது அவரை மிகவும் பாதித்தது”,

அவர் பேசியதை என்னத்தான்.. “தன் பேத்திக்காக” என்று பொறுத்து கொண்டாலும், “ஒரு ஆணாக.. சொஸைட்டியில் எல்லோரும் மதிக்கும் பெரிய மனிதராக... பிறந்ததில் இருந்து இதுவரை எல்லோருமே தன்னிடம் மிகுந்த மரியாதையாகவே பேசி மதிக்கும் பாரம்பரிய குடும்ப பின்னணி கொண்ட ஆச்சர்யாவிற்கு.. இந்த வயதில் ஒருவர் தன் முகத்திற்கு நேராகவே நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா..?” என்று கேட்டது அவரை மனதளவில் மிகவும் பாதித்தது.

அதனாலே ஜெய் பல முறை போன் செய்து பேசிய போதும் அவரால் முன் போல் இயல்பாக பேசமுடியவில்லை.

“அப்பா.. என்ன முடிவு எடுத்திருக்கீங்க..?” என்று மூன்று நாள் கழித்து ஜெய் மஹாதேவனிடம் கேட்க,
“என்னமோ.. எல்லாம் எங்களை கேட்டு தான் செய்ற மாதிரி புதுசா கேட்கிற..?” என்று கேட்க,

“உங்களை கேட்காம இதுவரை நான் எதுவும் செஞ்சதில்லை.. ஆனா இனிமேல் நான் அப்படி செஞ்சா அதுக்கு நீங்கதான் பொறுப்பு..” என்று ஜெயும் இந்த முறை விடாமல் பேசவே,

“எங்கே மகனுக்கும்.. அப்பாவுக்கும் சண்டை வந்துவிடுமோ..?” என்று எல்லா அம்மாக்களையும் போல பயந்த விஜயா,

“ஏங்க… நீங்க என்ன இன்னும் அதையே பிடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கீங்க.. ஹர்ஷினியை விட நல்ல பொண்ணு என் மகனுக்கு எங்க கிடைப்பா சொல்லுங்க.. அதனால பேசாம சட்டுபுட்டுன்னு கிளம்புங்க.. அவங்க வீட்டுக்கு போய் பேசி முடிச்சிடலாம்” என்று மகனுக்கு கல்யாணம் ஆக போகும் சந்தோஷத்தில் உற்சாகமாக சொன்னார்,

“ஓஹ்.. இப்போ நீயும் உன் மகனோட சேர்ந்துக்கிட்டயா..? அவங்க எதிர்பாக்கிற மாதிரி இனி உன் மகன் டான்ஸே ஆடமாட்டான்.. அது மறந்துபோச்சா உனக்கு..” என்று மனைவியிடம் கத்த,

அவரோ அசால்ட்டாக, “டான்ஸ் ஆடாட்டி என்ன, அதை விட்டா என் மகனுக்கு செய்ய வேற தொழிலா இல்லை.. ஏன் நம்ம கார் ஷோரூம் இருக்குல்ல.. அதை பாத்துக்கட்டும்.. அது பிடிக்கலைன்னா வேற எதாவது தொழில் செய்யட்டும்.. என் மகன் எந்த தொழில் செஞ்சாலும் அவனால் சாதிக்க முடியும்.. அதனால அதை விட்டுட்டு ஆகுற வேலையை பாருங்க..” என்று மகனுக்கு வக்காலத்து வாங்கினார்,

“மஹாதேவனுக்கும் ஹர்ஷினி மருமகளாக வருவதில் நூறு சதவீதம் விருப்பமே, ஆனால் அதுக்காக ஏன் டான்ஸை விடவேண்டும்..? என்று கோவம், வருத்தம் தான்..”

ஆனால் இனி விஜயாவும் ஜெயுடன் சேர்ந்து விட்டதால்.. அவரின் சப்போர்ட்க்கு யாரும் இல்லாமல் டெபாசிட் இழந்த மஹாதேவன் வேறு எதுவும் செய்ய முடியாமல் அவர்களுடன் கல்யாணம் பேசி முடிக்க தொங்கி போன முகத்துடன் கிளம்பினார்.

“ஏங்க.. ஹர்ஷினி வீட்டுக்கு போனதும்.. அவங்க தாத்தாகிட்ட மன்னிப்பு கேட்டுடுங்க..” என்று காரில் செல்லும் போது விஜயா சொல்ல,

“என்ன… நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்..?” என்று மஹாதேவன் கோவமாக எகிற,

“பின்ன.. நீங்க அன்னிக்கு அவர் கிட்ட மரியாதை இல்லாம பேசுனீங்களே அது தப்பு இல்லையா..? எவ்வளவு பெரிய மனுஷன் அவரு.. அவர்கிட்ட போய் மரியாதை இல்லாமல் பேசிட்டு இப்போ எதுக்கு மன்னிப்பு கேட்கணும்ன்னு கேட்கிறீங்க..? எனக்கே கடைசி.. கடைசியில நீங்க பேசுனது கஷ்டமா போயுடுச்சு”,

“என்னால எல்லாம் மன்னிப்பு கேட்கமுடியாது.. நான் என்ன இல்லத்தையா பேசினேன்.. அவங்க செஞ்சதை தானே கேட்டேன்..” என்று அடங்காமல் எகிற,

“அதெப்படி கேட்காம போவீங்க.. அன்னிக்கு நீங்க அவரை பேசனப்போ அங்க எல்லார் முகத்திலும் எவ்வளவு கோவம் தெரியுமா..? இருந்தாலும் அவங்க பொண்ணு வாழ்க்கைக்காக எல்லாரும் கண்ட்ரோல் பண்ணிட்டு அமைதியா இருந்தாங்க இல்லை..”

“அதேமாதிரி தான் நமக்கும்.. நம்ம பையன் வாழ்க்கை முக்கியம் இல்லையா..? கல்யாணம் முடிஞ்சா நாளபின்ன அவன் அங்க மரியாதையா போய் வர இருக்கணும் இல்லை.. அதுக்காகவாது அவர்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்டு தான் ஆகணும் சொல்லிப்புட்டேன்” என்று விஜயா மிரட்டலாக முடிக்க,

மகனாவது தனக்கு சப்போர்ட்டாக எதாவது சொல்வானா..? என்று எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த ஜெயயை பார்க்க, அவனோ அவர்கள் பேசுவதுற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் எங்கோ பார்த்து கொண்டு இருக்கவும், கடுப்பான மஹாதேவன் கடுகடு வென முகத்துடனே வந்தார்,

ஜெய் முன்னமே போன் செய்து “நான் என் குடும்பத்தோடு முக்கியமான விஷயம் பேச வருகிறேன்” என்று சொல்லிருந்தாலும், முன் போல் வாசலுக்கே சென்று வரவேற்க தோன்றாமல் மகன்களை மட்டும் வரவேற்க வாசலுக்கு அனுப்பிவிட்டு வீட்டினுள்ளே இருந்துகொண்டார் ஆச்சார்யா,

“பாத்தியா.. அவர் நம்மளை கூப்புட வந்தாரா..?” என்று வாசலிலே வைத்து மஹாதேவன்.. விஜயாவிடம் எகிற,

பின்ன.. “நீங்க பேசுன பேச்சுக்கு யாரா இருந்தாலும் அப்படித்தான் செய்வாங்க.. உள்ள போனவுடனே அவர் கிட்ட மன்னிப்பு கேட்டுடுங்க” என்று சொன்னவர் உள்ளே சென்று அவர் மன்னிப்பு கேட்கும் வரை கண்களாலே மிரட்டவும்,
வேறு வழி இல்லாமல்..,

“அன்னிக்கு நான் பேசுனது தப்பு.. என்னை மன்னிச்சுருங்க” என்று கை குவித்து கேட்க, அவர் பேசியதில் வருத்தம் இருந்தாலும், அவர் மன்னிப்பு கேட்கும் போது அதை வெளிப்படுத்த விரும்பாத ஆச்சார்யா,

“பரவாயில்ல.. மன்னிப்பெல்லாம் எதுக்கு விட்டுடுங்க.. உன் மகனுக்காக தானே நீ பேசுனீங்க..” என்று சொல்ல

“என்னதான் மகனுக்காக பேசினாலும்.. நிதானமில்லாமால் அவர் பேசுனதும்.. விட்ட வார்த்தைகளும் ரொம்ப பெரிய தப்புப்பா.. நான் உங்களை அப்பான்னு கூப்பிடலாம் இல்லை..” என்று மகனுக்காக இறங்கி உறவுமுறையோடு பேசும் விஜயாவை ஆச்சார்யா உட்பட எல்லோருக்கும் பிடித்து விட,

“அதுக்கென்னமா தாராளமா கூப்பிடு.. என் பேத்தியை உன் மகனுக்கு கொடுக்கறதால ஒரு விதத்துல நீயும் என் பொண்ணு மாதிரி தான்”, என்று பாசமாக அவரே சொல்லிவிட, குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் அவரிடம் நன்றாகவே பேசினர்..

“இவர்களின் திடீர் பாசப்பயிரை கடுப்பாக பார்ப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாமல் அமர்ந்து இருந்தார் மஹாதேவன்.”

“அன்னிக்கு நானும் கொஞ்சம் கோபமா பேசிட்டேன் என்னையும் மன்னிச்சிடுங்கப்பா..”

“அது எல்லா அம்மாவையும் போல எனக்கும் என் மகன் எல்லாரும் பேர் சொல்ற மாதிரி வாழ்றது பெருமை தானே.. அதான்.. அந்த கோவத்துலதான் அன்னிக்கு அப்படி பேசிட்டேன்” என்று விஜயாவும் சொல்ல,

“நீ எதுக்குமா மன்னிப்பு எல்லாம் கேட்கிற.. உங்க பக்கம் நியாயம் இருக்கு.. நீங்க கேட்டதுல எந்த தப்பும் இல்லை.. ஆனா ஒரு சினிமா பீல்டுல இருக்கிற பயனுக்கு என் பேத்தியை கொடுக்கணுமாம்ன்னு எனக்கு தான் பயம்..”

என்ன செய்ய..? அதனால நாங்க நிறைய பட்டுட்டுததால என்னை… என்னோட பயத்தை… என்னால மாத்திக்க முடியல.. என் கடைசி பொண்ணு வாழ்க்கை வீணா போக காரணமே டான்ஸும், சினிமாவும் தான்..” என்று பெருமூச்சோடு சுபத்ராவை பார்த்தபடி சொல்லவும்,

சுபத்ராவின் கசங்கிய முகத்தை பார்த்துவிட்டு அது பற்றி மேலும் தூண்டி துருவாமல் விஜயா பேச்சை மாற்ற பார்க்க, “ஹர்ஷினி பேறுக்கு தான் என் மருமக.. ஆனா.. அவ என் பொண்ணு மாதிரி தான். நீங்க என்னை பத்தி தெரிஞ்சுகிறதுல எந்த தப்பும் இல்லை” என்று சுபத்ராவே சொல்லவும்,

ஆச்சார்யா முதலில் இருந்து தேவி தொடங்கி, தன் பெற்றோர் சாபம் முதல் எல்லாவற்றையும் சொன்னார், கடைசியில் வீட்டை விட்டு இளங்கோவை சந்திரன் தள்ளியது வரை.. "சந்திரனின் ஒப்புதலோடு தான், அவர் முன்னமே தன் வீட்டினரிடமும் குற்ற உணர்ச்சியில் அவரே சொல்லிவிட்டதால்", எல்லாரும் அமைதியாகவே நின்றுயிருந்தனர்.

“இதனாலதான் எனக்கு பயம்.. ஏற்கனவே இந்த டான்ஸால, சினிமாவால நாங்க நிறைய கஷ்டப்பட்டுட்டோம். மறுபடியும் என் பேத்திக்கு எப்படி என்னால இது போல ஒரு வாழ்க்கையை அமைச்சி கொடுக்க முடியும்..?”

“நான் என்னை.. என் பயத்தை மாத்திக்க நிறைய வருஷமாவே முயற்ச்சி எடுத்தேன்.. ஆனா.. என்னால அது முடியல.. என் பேத்திக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாத ஒரு பாதுகாப்பான, நிறைவான வாழ்க்கையை தான் நான் எதிர்பாக்கிறேன்.. அதனால தான் நான் ஜெயயை ஒத்துக்கிட்டேன், அவர் கண்டிப்பா என் பேத்தியை நல்லா பாத்துப்பார்ன்னு எனக்கு தெரியும்..” என்று முடிக்க,

எல்லாவற்றையும் கேட்ட “விஜயாவுக்கும் சரி.. மஹாதேவனுக்கும் சரி..” அவரின் பயம் நன்றாக புரியத்தான் செய்தது,

“அப்பா நீங்க பயப்படுறதுல எந்த தப்பும் இல்ல.. இப்போ என்ன என் மகனுக்கு அந்த டான்ஸை விட்டா செய்ய வேற தொழிலா இல்ல. அதுமட்டுமில்லை.. எப்போ ஷூட்டிங் போனாலும் வர மாசக்கணக்கு தான்.. கல்யாணத்துக்கு அப்பறமும் அப்படி இருந்தா எப்படி குடும்பம் நடத்துறது.. அவன் அந்த தொழிலை விட்றது தான் சரி..” என்று விஜயா அந்தர் பல்டி அடிக்க, குடும்பம் மொத்தமும் நிறைவாக மலர்ந்து சிரித்தனர்,

“என்னமோ.. இவர்தான் மகன் அந்த தொழிலை விடறானேன்னு மூஞ்சை முழ நீளத்துக்கு தூக்கி வச்சிருக்கார், ஆனா உங்களுக்கு ஒன்னு தெரியுமா..? இவர் என் மகன் முதல்ல இந்த தோழிலுக்கு போறேன்ன்னு சொன்னப்போ போட்ட சண்டை என்ன..? பேசுன பேச்சு என்ன..?”

“ஏய் சும்மா இருடி..” என்று மஹாதேவன் அவசரமாக அதட்டுவதை கூட பொருட்படுத்தாமல்,

“அதுகூட பரவாயில்லை.. என் மகன் மாச செலவுக்கு கூட காசு தரமாட்டேன்னுட்டாரு.. எவ்வளவு கெஞ்சினே.. அழுதேன் அப்பாவும் தரல..”

அப்போ.. “என் மருமக ஹர்ஷினி தான் வேலை பார்த்து கொடு..”

“அம்மா..” என்று அப்பொழுதுதான் வந்த ஹர்ஷினி அவர் சொல்ல வருவதை புரிந்து கொண்டு சத்தமாக கூப்பிட்டபடி வந்தவள், அவரின் கையை பிடிச்சி கண்களால் சொல்ல வேண்டாமென சைகை செய்ய,

“அதான் எல்லாம் சொல்லிட்டேனே ஹர்ஷினி.. நீ தான் வேலை பாத்து அவனுக்கு மாச செலவுக்கு காசு அனுப்பினேன்ன்னு” என்று தடைப்பட்டதையும் அவளின் சைகையும் மீறி சொல்லி முடிக்க, கோவம் கொண்ட ஹர்ஷினி படபடவென பொரிந்து தள்ளினாள்.

“நான் ஒன்னும் எல்லா மாசமும் அவருக்கு காசு அனுப்புல அது தெரியுமா உங்களுக்கு..? கொஞ்ச நாள் தான் அனுப்பினேன்.. அப்பறம் இது தெரிஞ்சி அவர் என்கிட்ட எவ்வளவு சண்டை போட்டுட்டார் தெரியுமா..?”

“அதுக்கப்புறம்.. இப்போவாரைக்கும் அவர் நான் அனுப்புன காசை தொடவே இல்லை.. அவரே பார்ட் டைம் வேலை பாத்து தான் சாதிச்சாரு தெரியுமா..?”

அப்பவும்.. “அவர் சம்பாதிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லே நான் வேலை பாத்து சம்பாதிச்சு அவருக்கு அனுப்புன கொஞ்ச காசு கூட.. அவரே இன்னும் லட்ச கணக்குல காசு போட்டு.. அப்பவே என் பேருக்கு ஒரு பெரிய பண்ணை வீட்டை வாங்கி கொடுத்து இருக்கார் தெரியுமா..?”

“நீங்க கூட எங்க பார்ம் அவுஸை பாத்திங்கல்ல தாத்தா.. எவ்வளவு சூப்பரா இருந்துச்சுன்னு.. சொல்லுங்க..” என்று ஜெயயை பற்றி யாரும் எதுவும் நினைச்சிடக்கூடாதென்று வேகமாக சொன்னவளை கண்ட ஜெய்க்கு “வற்றாத ஜீவநதியாய் காதல் மேலும் பொங்கியது”.

“தாத்தா சொல்லுங்க..” என்று அவரை பார்த்தவள், அப்பொழுதுதான் அவரையும் தன் வீட்டாரையும் நன்றாக பார்த்தவளின் முகத்தில் தெரிந்த “மாட்டிக்கொண்ட பாவனையில்” ஜெய் சத்தமாகவே சிரித்து விட்டான்,

தான் குடும்பத்தோடு வீட்டிற்கு வருவதாக முன்னமே அவளுக்கும் ஜெய் சொல்லிருந்ததால், தாங்கள் வந்து இவ்வளவு நேரமாகியும் அவள் வராமல் இருக்க கோவமாக அமர்ந்து இருந்த ஜெய்,

இப்போது ஹர்ஷினியின் முகத்தை பார்த்து சிரிக்கவும், அவனை முறைத்து பார்த்த ஹர்ஷினி, பின் சங்கடத்துடன் திரும்பி தன் வீட்டாரை பார்க்க,

“அடிப்பாவி..” என்றபடி வாய் மேல் கை வைத்து கொண்டிருந்த பெண்களையும், “இதுதான் காரணமா..?” என்று தன்னை முறைத்து பார்த்து கொண்டிருந்த ஆண்களையும் கண்டவள் மானசீகமாக தலை மேல் கை வைத்து கொண்டாள்.

பின்னே.. “நான் வேலை செஞ்சு உழைச்சு தான் சாப்பிடுவேன்..” என்று ரோஷமாக ரேணுகாவிடம் பேசியதென்ன..

“நான் இப்பவே தொழிலை கத்துக்கிட்டு படிச்சி முடிச்சி நம்ம ஹோட்டல் தொழிலை உலகம் முழுசும் கொடிகட்டி பறக்க வைக்க போறேன், அதுக்கான ட்ரினிங் தான் இது..” என்று ஆண்களிடம் வீர வசனம் பேசியதாகட்டும்.. அவர்களை முறைக்க வைக்க தானே செய்யும்,

அடிப்பாவி.. “அக்கா.. அப்போ மாமாக்கு காசு கொடுக்க தான் வேலை பாத்தியா..? உன்னால நான் அக்கா பாரு இப்பவே வேலை பாத்து சாப்புடுறா.. நீயும் தான் இருக்கியா எந்நேரமும் தண்டமா ஊரை சுத்திகிட்டு..தண்டசோறு.. எருமைமாடுன்னு எவ்வளவு திட்டு வாங்கிருப்பேன்..” என்று கார்த்திக் கோவமாக கத்த,

“எப்படி.. எப்படி.. நீங்க உழைச்சிதான் சாப்புடுவீங்களோ..?” என்று மாலதியும் குறும்பாக இழுக்க..

“நம்ம ஹோட்டல்… இதுவரை எத்தனை நாட்ல கொடிகட்டி பறக்க விட்டிருக்க ஹர்ஷினி..?” என்று இந்திரனும் நக்கலாக சொல்ல, ஹர்ஷினிக்கு முகத்தை கொண்டு போய் எங்க வைத்து கோவதென்றே தெரியாமல் திண்டாடித்தான் போனாள்.


.............................................

ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போட்டுட்டேன்.. படிச்சிட்டு மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க ப்ரண்ட்ஸ்.. Thank you so much friends for your support..
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 32





ஹர்ஷினியை யாரும் எதுவும் சொல்லாதீங்க.. “என் மகனுக்கு அவ செஞ்சது நாளபின்ன உங்களுக்கு வேற யார் மூலமாவது தெரிஞ்சா.. நீங்க யாரும் என் மகனை தப்பா நினைக்க கூடாதுன்னு தான் நானே சொல்லிட்டேன்..” என்று விஜயா முடிக்கும் முன்னமே..

“இதில.. இவரை தப்பா நினைக்க இவங்களுக்கு என்ன இருக்கு..? நான் ஒன்னும் இவங்க காசை சும்மா தூக்கி கொடுத்துடலை.. கஷ்டப்பட்டு வேலை பாத்து தான் கொடுத்தேன்..” என்று ஹர்ஷினி வரிஞ்சி கட்டி கொண்டு சண்டைக்கு கிளம்பவும்,

“ஏண்டி.. நாங்க இப்போ யாராவது எதாவது சொன்னோமா..? அப்படியே விரிஞ்சி கட்டிக்கிட்டு சண்டைக்கு வர.” என்று ரேணுகா அவளின் தலையை தட்டி சொல்லவும்,

“ஏதாவது சொன்னோமா..?ன்னு வேற கேட்கிறீங்க.. முதல்ல இதுல நீங்க சொல்ல என்ன இருக்கு சொல்லுங்க..? இந்த விஷயத்துல யாருக்கும் எதுவும்ம்ம்.. சொல்ல ஒன்னும் கிடையாதுன்னு தான் நானும் சொல்றேன்” என்று மேலும் சண்டையிட,

“ஹர்ஷினி.. விடு உங்க அம்மா தெரியாம சொல்லிட்டா..” என்று அவளின் எண்ணமான “ஜெயயை பற்றி யாரும் எக்காலத்திலும் எதுவும் சொல்லிடகூடாது என்ற அவளின் கவனம் புரிந்த ஆச்சார்யா” அந்த விஷயத்தை அதோடு முடித்து விட,

“ஜெய்க்காக தன் வீட்டாரிடமே சண்டை போடும் ஹர்ஷினியின் மேல்… அவளின் காதல் மேல்… மஹாதேவன் பெருமதிப்பு கொண்டார்” என்றே சொல்லலாம்.

“வந்ததிலிருந்து யாரும் எதுவும் சாப்பிடல.. எல்லோரும் கொஞ்சம் காபி, ஸ்னாக்ஸ் எடுத்துக்கோங்க..” என்று மாலதியும், மேனகாவும் விருந்தோம்பலை ஆரம்பிக்க, எல்லோரும் எடுத்து கொண்டாலும், மஹாதேவன் மட்டும் எதையும் தொடாமல் விறைப்பாக அமர்ந்திருக்க,

அவரின் அருகில் சென்ற “சந்திரன்..” தானே அவருக்கு காபி கப்பை எடுத்து, “காபி சாப்பிடுங்க..” என்று மரியாதையாக கொடுக்க, அதற்கு மேல் மறுத்தால் நன்றாக இருக்காது என்பதால்.. அமைதியாக வாங்கி குடிக்கவும் தான் எல்லாருக்குமே மனது நிம்மதியானது.

“இதை எல்லாம் பார்த்த படி மட்டும் தான் இருந்தான் ஜெய்... எதிலும் தலையிடவில்லை.. யாருக்காகவும் ஆதரவாகவோ, எதிர்த்தோ பேசவில்லை.. இனி நாம் எல்லோரும் ஒரே குடும்பம்.. சண்டையோ.. சந்தோஷமோ எல்லாம் அவரவர்கள் பார்த்து கொள்ள வேண்டும், இதில் தானோ ஹர்ஷினியோ எங்கும் இருக்க போவதில்லை” என்பதுதான் அவனின் உறுதியான எண்ணமாக இருந்ததால், அவன் எதிலும் பேசவில்லை.

“இந்த வாரத்திலே ஒரு நல்ல நாளா.. உங்களுக்கு வசதிப்பட்ட நாளா பாத்து சொல்லுங்கப்பா.. உறுதி பண்ணி கையோடு அன்னிக்கே கல்யாணத்துக்கு முகூர்த்த நாளையும் குறிச்சிரலாம்.. அப்போதான் அடுத்து கல்யாணவேலை பாக்க ஆரம்பிக்க முடியும்..” என்று விஜயா ஆச்சார்யாவிடம் கேட்கவும்,

“எங்களுக்கு எந்த நாளா இருந்தாலும் சம்மதம் தான்”, என்று பேத்தியின் கல்யாண சந்தோஷம் முகத்தில் தெரிய ஆச்சார்யா பூரிப்பாக சொல்ல,

“அப்போ சரி.. உங்களுக்கு தெரிஞ்ச ஜோசியர் இருந்தா.. இப்பவே என்னைக்கு உறுதி செய்யலாம்ன்னு கேட்டு சொல்லிடுங்க” என்று விஜயா சொல்லிவிட.. ஆச்சார்யாவும் உடனடியாக செயல்பட்டு, “அடுத்த மூன்றாம் நாள் உறுதி செய்வது என்று முடிவெடுக்க பட்டது”.

இதில் முகத்தை தூக்கி வைத்து கொண்டிருந்தது.. “மாமனாரும்.. மருமகளும் தான்..”

அதை எல்லோரும் கவனித்தாலும், “எதுவும் பேசமுடியாமல்.. ஏன் எதுவும் பேசவே வேண்டாம்.. அவர்களிடம் பேசினால் கண்டிப்பாக பிரச்சனை தான்” என்று அனைவருக்கும் புரிந்ததால், மஹாதேவனையும், ஹர்ஷினியையும் எதுவும் கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டிருக்க, காண்டான இருவரும், எல்லோரையும் முறைத்தபடி தான் இருந்தனர்.. ஹர்ஷி வெளிப்படையாக என்றால் மஹாதேவன் மறைமுகமாக..

என்ன..? “என்னை ஒரு வார்த்தை கூட யாரும் கேட்காம எல்லாத்தையும் அவங்களே பேசி முடிவு எடுத்துகிறாங்க.. அப்போ இனி ஜெய்யோட டான்ஸ் கரியர் அவ்வளவுதானா.. அதை பத்தி யாரும் எதுவும் பேசக்கூட செய்ய மாட்டேங்கிறாங்க..”

“இந்த விஜயா அம்மாவும் அநியாயத்துக்கு இப்படி மாறிட்டேங்களே.. அவங்களுக்கு ஜெயோட அப்பாவே தேவலை.. இன்னும் விறைப்பாதான் இருக்கார்.. அவரை வச்சி மறுபடியும் இதை பத்தி எதாவது கேட்கலாமா..?” என்று தீவிரமாக யோசித்த படி மஹாதேவனை பார்த்து கொண்டிருந்தவளை,

தானும் பார்த்து கொண்டிருந்த ஜெய்க்கு அவளின் எண்ணம் புரியவே, “இவ கண்டிப்பா அடங்கவே மாட்டா..” என்று பல்லை கடித்தவன் “அவரே.. எப்படா சான்ஸ் கிடைக்கும் சண்டை போடலாம்ன்னு வெய்ட் பண்ணிட்டிருக்கார்.. இவ போற போக்கை பாத்தா அவரோட கூட்டணி வச்சி என்னை காலிபண்ணிடுவா போல..”

“நானே இப்போதான் அரும்பாடுபட்டு எல்லாத்தயும் ஒன்னு சேர்த்து கல்யாணத்துக்கு நாள் குறிக்கிற வரை வந்திருக்கேன்.. அதை மொத்தமா கெடுத்துடுவா போல.. இவளை இப்பவே மிரட்டி வைக்கல அவ்வளவுதான்” என்று வேகமாக யோசித்தவன், அதை செயல்படுத்தும் விதமாக,



அவளின் கையில் இருக்கும் போனை பார்த்துவிட்டு வேகமாக மெஸேஜ் செய்ய, மெசேஜ் வந்த சத்தத்தில் போனை பார்த்த ஹர்ஷினி, அதில் “உன்கிட்ட முக்கியமா பேசணும்..” என்று ஜெய் அனுப்பியிருக்க,

நிமிந்து அவனை பார்த்து கோவமாக முறைக்க.. “பேசணும்ன்னு சொன்னதுக்கு எதுக்கு இந்த முறை முறைக்கிறா..?” என்று தான் அவளிடம் அன்று கோவத்தில் சண்டை போட்டதை மறந்து அவளையே கேள்வியாக பார்க்க,

“ஓஹ்.. அன்னிக்கு என்னை அந்த பேச்சு பேசிட்டு.. இப்போ இவருக்கு அதுகூட நியாபகம் இல்லையா..?” என்று இன்னும் கோவம் கொண்டு கண்களால் எரித்தவளை,

“இப்போ எதுக்கு கண்ணுல தீயை எறியவுடுறா..? என்று மேலும் குழம்பியவன், புரியாமல் யோசிக்க, கடுப்பான ஹர்ஷினி முகத்தை திருப்பி கொண்டாள். தான் அவளிடம் என்ன பேச வந்தோம் என்பதையே மறந்துவிட்டு, “அவ எதுக்கு கோவமா இருக்கா..?” என்று அதை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டான் ஜெய்,

ஓஹ்.. “அன்னிக்கு அவகிட்ட வெளியே வச்சி கோவமா எதோ பேசினேனே.. என்ன பேசுனே..? இவ முறைக்கிறதை பார்த்த எதோ பெருசா பேசிருக்கன்னு மட்டும் தெரியுது.. ஆனா என்னத்த பேசி தொலைச்சேன்னு தான் தெரியலை” என்று யோசித்தபடி அமர்ந்திருந்தவன்,

ஆச்சார்யா எதோ கேட்கவும், அவரிடம் பேச ஆரம்பித்தவன், அடுத்து கிளம்பும் வரையிலும் ஹர்ஷினியிடம் பேசமுடியாமல் தான் கிளம்பினான். அடுத்த இரண்டு நாட்கள் எல்லோரும் பம்பரமாய் சுற்றி வேலை பார்த்தனர், குறைந்த நாட்களிலே ஆச்சார்யா தன் செல்ல பேத்தியின் உறுதி செய்யும் பங்க்ஷனை மிக சிறப்பாக, அவர் ஆசைப்பட்டது போல் கிராண்டாகவே ஏற்பாடு செய்து அசத்திவிட்டார் என்றே சொல்லலாம்,

ஜெயும் தங்கள் பக்கம் மிகச்சிறப்பாகவே ஏற்பாடு செய்தான்,”ஹர்ஷினிக்கு அன்று கட்டிக்கொள்ளும் புடவை முதல் போட்டு வரை அவள் அன்று அணியும் அத்தனையும் ஜெய் தானே நேரில் சென்று பார்த்து பார்த்து வாங்கினான்”. இதற்கிடையில் அவசரமாக உறவினர்களுக்கு அழைப்பு விடுப்பது வேறு முடிந்தவரை எல்லாவற்றையும் தானே பார்த்து கொண்டான்,

அதில் மஹாதேவனுக்கு எல்லயற்ற வருத்தமே மகன் மேல்.. “ஏன் நான் செய்ய மாட்டேனா..? என்னிடம் கொஞ்சம் வேலைகள் கொடுக்க கூடாதா..?” என்று விஜயாவிடமும் சண்டை போட..

அவரோ.. “ஏன் உங்ககிட்ட வந்து ஒருத்தர் சொல்லனுமா..? நீங்களே தான் உங்க மகன் கல்யாணத்துக்கு எடுத்து போட்டு செய்யணும்.. வந்துட்டார் எப்போ பார்த்தாலும் என் மகன் மேல பிராது தூக்கிட்டு..” என்று கணவரிடம் சிடுசிடுத்தவர்,

அதற்கு பிறகு அவரை சுத்தமாகவே கண்டுகொள்ளவில்லை என்று தான் சொல்லணும்.. மனைவியின் பேச்சில் இன்னும் நொந்து போன மஹாதேவன், “போடி போ.. மகன் கல்யாண ஜோருல என்னையே திட்டுற இல்லை.. உன்னை அப்புறம் கவனிச்சிக்குறேன்” என்று மனதுள் மனைவியை திட்ட மட்டுமே முடிந்தது அவரால்..

உறுதி செய்யும் நாளும் வந்துவிடவே, என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்த ஹர்ஷினி, “பேசாம நாம முதல்ல எடுத்த முடிவையே அப்ளை செஞ்சிடலாமா..?” என்று யோசிக்கவே ஆரம்பித்து விட்டாள்.

அவளின் யோசனையான முகம் கண்டாலும் வீட்டில் உள்ள யாரும் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல், திருமண வேலைகளை பார்க்க, அங்கு மகாதேவனை போல் இங்கு ஹர்ஷினியும் நொந்தே போனாள்.

“என்னடா.. இங்க ஒருத்தி கஷ்டப்பட்டுட்டு இருக்காளேன்னு..? ஒருத்தராவது என்ன..? எதுன்னு..? என்னை கவனிச்சீங்களா..? என்று அலங்காரம் செய்ய வந்த மாலதியிடமும், மேனகாவிடமும் எகிற,

அவர்களோ “நீ என்னாவது பேசிக்கொள்” என்பது போல் அவளை பங்க்ஷனுக்காக தயார் செய்ய ஆரம்பிக்கவும், “சித்தி.. அத்தை நான் உங்ககிட்ட தான் பேசிட்டிருக்கேன்.. நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லை பாத்துக்கோங்க” என்று கத்தியவளை கண்டுகொள்ளாமல் அவர்கள் வேலையை அவர்கள் செய்யவும்,

இன்னும் கடுப்பான ஹர்ஷினி வேகமாக சென்று கட்டிலில் படுத்து கொள்ள, “அக்கா.. அண்ணி” என்று இருவரும் ஏககாலத்தில் ரேணுகாவை அழைக்க, “அய்யோ… அம்மாவா..?” என்று அவள் பதறி எழும்போதே வந்துவிட்ட ரேணுகா,

மூக்கு விடைக்க, இடுப்பு மேல் கைவைத்து மேல் மூச்சி கீழ் மூச்சு வாங்க பத்ரகாளியாக நின்று அவளை மிரட்டலாக பார்த்தவர்..

“என்னடி..? மறுபடியும் உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா..? எப்போ பாத்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையை ஆரம்பிச்சிர.. உனக்கு ரொம்ப கொழுப்பாயிடிச்சி.. உன்னை சின்ன பிள்ளையிலே ரெண்டு தட்டு தட்டி வளத்திருக்கணும் அதான் நான் செஞ்ச தப்பு..” என்று ஹர்ஷினி தயாராகும் வரை அவளை ஆத்து.. ஆத்தென்று ஆத்தி தள்ளியவர்,

“ம்மா.. போதும்.. போதும் நான் ரெடியாகிட்டேன்.. சந்தோஷமா போ.. போய் உன் மாப்பிள்ளைக்கு சொஜ்ஜி.. பஜ்ஜி எல்லாம் செய் போ..? என்று எரிச்சலாக சொல்ல,

“ம்க்கும்.. நீ சொல்லாட்டியும் நான் என் தங்க மாப்பிள்ளைக்கு செய்ய தான் போறேன்.. போடி” என்று அவளை நொடித்திவிட்டு செல்லவும், தலை மேல் கை வைத்தே அமர்ந்துவிட்டாள் ஹர்ஷினி.

உறுதி செய்யும் பங்க்ஷன் ஆச்சார்யாவின் கோயம்பத்தூர் வீட்டிலே என்பதால், ஜெய் வீட்டினர் உறவுகள் புடை சூழ வந்திறங்கவும், மேல தாளத்துடன் மிகவும் தடபுடலாக குடும்பம் சதவிகிதமாக வரவேற்ற ஆச்சார்யா, மரியாதையுடன் உள்ளே அழைத்து சென்று அமரவைத்தார்.

காபி பரிமாற.. “முதலில் உறுதி செய்துவிடலாம்” என்று ஜெய் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் சொல்லிவிட, முறையாக உறுதி பத்திரம் வாசிக்கப்பட்டு, அடுத்த மாதம் திருமணம் என்று நாளும் குறிக்கப்பட்டு… தட்டை மாற்றிக் கொண்டனர்,

அடுத்து ஹர்ஷினியை அழைத்து வர, மிகவும் ஆவலாக அவளை பார்த்த ஜெய், அவளின் அலங்காரத்தில் தலை சொக்கித்தான் போனான். ஆனால் அவளோ அவன் இருந்த பக்கம் கூட திரும்பாமல் விறைப்பாக நின்றவளின் கைகளில் தாரணி புடவை முதற் கொண்டு ஒரு பெரிய பேக்கையும் கொடுக்க,

“இந்த டைம்மும் குங்கும கலர் புடவை மட்டும் எடுத்திருக்கட்டும்.. அப்பறம் இருக்கு அவருக்கு..” என்று மனதுள் திட்டியவாறே ரூமினுள் சென்று பிரித்து பார்த்தவள்,

“அதே குங்கும கலர் புடவை தான்” எனவும் உச்சக்கட்ட ஆத்திரத்தில் பல்லை கடித்தாள். அதை தான் கட்டியாக வேண்டும் என்பதால் வேறு வழி இல்லாமல் கட்டிக்கொண்டு சபைக்கு வந்தவள்,

ஜெயயை கடுப்பாக பார்க்க, அவனோ அவளை பார்வையாலே கபளீகரம் செய்து கொண்டிருந்தான், அதுவும் அவளின் இடையில் அடிக்கடி தேங்கிய அவன் கண்களில் தெரிந்த கிறங்கத்தில்... அவ்வளவு கோவத்திலும் வெட்கம் கொண்ட ஹர்ஷினி,

“அந்த பார்வை பாக்குற அந்த கண்ணை போய் குத்தினால் தான் என்ன..?” என்று நினைத்தவள் அதை ஜெயிடமும் சைகையாய் காட்ட, அவனோ.. “போடி அப்படித்தான் பார்ப்பேன்..” என்று இன்னும் இன்னும் தலை முதல் கால் வரை சட்டமாக பார்த்தவன்,

“எல்லாம் பெர்பெக்ட்.. அய்யாவோட செலக்க்ஷன் எப்படி..?” என்று காலரை தூக்கி காட்டி கேட்க, “நல்லாவே இல்லை..” என்று ஹர்ஷினி முகத்தை சுழிக்க.

“ஓஹ் அப்போ வா.. இப்பவே ரூமுக்கு போயி எல்லாத்தையும் கழட்டி கொடுத்துற..” என்று வம்பாக சைகை காட்டவும், ஹர்ஷினி வெட்கத்தோடு “கொன்னுருவேன்..” என்று விரல் நீட்டி மிரட்டி சைகை காட்ட, குறும்பாக சிரித்த ஜெய், மேலும் சைகை காட்ட வர,

“பொண்ணு.. மாப்பிள்ளை வாங்க” என்று அழைக்கவும், நல்ல பிள்ளை போல் வந்த இருவரையும் அருகருகே உட்காரவைத்து சந்தனம் தடவி.. பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்ய, உறுதி செய்வது சுபமாக நடந்தேறியது,

அடுத்து இறுதியாக உணவு பரிமாற.. உணவு சுவையில் ஈர்க்கப்பட்டு எல்லாரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உணவு உண்டனர். கடைசியாக வந்திருந்த எல்லாருக்கும் உறுதி செய்ததற்கே ஸ்வீட் உடன் கிப்டும் கொடுத்து அசத்திவிட்டார் ஆச்சார்யா,

எல்லோரும் உணவு உண்ணும் போது, “கார்த்திக்.. உங்க அக்கா எங்க..?” என்று ஜெய் கேட்க,

“அவ அவளோட ரூமுக்கு போய்ட்டா மாமா..” என்று பக்கத்தில் இருந்த ஹாசினி சொல்ல,

“அப்படியா சரி.. அவ ரூம் எங்க இருக்கு..? என்று உரிமையோடு கேட்ட ஜெயயை பார்த்து திருதிருவென விழித்த ஹாசினி, கார்த்திக் இருவரும்,

“அவ ரூமுக்கு.. நீங்க.. இப்போ எப்படி..? நான் பெரியம்மாகிட்ட கேட்டுட்டு வந்திடுறேன்” என்று ஓடிய ஹாசினி, கையோடு ரேணுகாவை அழைத்து கொண்டு வர,

“சொல்லுங்க மாப்பிள்ளை..” என்று வந்த ரேணுகாவை பார்த்து ஹாசினியை முறைத்த ஜெய், “ஹர்ஷினி..” என்று இழுக்க..

“நான் அவளை வரச்சொல்றேன் மாப்பிள்ளை..” என்றவர், “ஹாசினி போய் அக்காவை கூட்டிட்டு வா” என்று அவளை அனுப்பியவர், ஹாசினி வேகமாக சென்று ஹர்ஷினியை அழைத்து கொண்டு வந்தாள்,

“ஹர்ஷினி… மாப்பிள்ளை கூடவே இருந்து அவர் சாப்பாட்டை கவனிச்சிக்கோ.. கார்த்திக்.. ஹாசினி நீங்களும் தான்.. மாமாவை கூடவே இருந்து பாத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு செல்ல, ஜெய் மொத்தமாக மூவரையும் கொலை காண்டுடன் பார்க்கவும், மூவருமே அவனின் கடுப்பில் சிரித்தே விட்டனர்,

“சிரிக்காதடி.. நானே கடுப்புல இருக்கேன்..” என்று ஹர்ஷினியை மிரட்டியவன், இவங்களை.. என்று கார்த்திக்.. ஹாசினியை கொலை வெறியுடன் பார்த்தவன்,

“போங்க.. போய் ரெண்டு பேரும் எனக்கு சாப்பாடு கொண்டு வாங்க” என்று கடுப்புடன் சொல்ல,

“சரி மாமா.. போயிட்டு ஒரு பத்து நிமிஷம் கழிச்சி வந்தா போதுமா..?” என்று கார்த்திக் குறும்பாக இழுக்க, “வரவே வேண்டாம்.. முதல்ல இடத்தை காலி பண்ணுங்க” என்று அவர்களை விரட்டி விட்டவன், ஹர்ஷினி எதோ சொல்ல வர..

“எதுவும் பேசாதா.. எனக்கு இப்போ முதல்ல நாம தனியா மீட் பண்ணனும்..” என்று சீரியசாக சொல்ல.. அவனின் எண்ணத்தை புரிந்து கொண்ட ஹர்ஷினி..

“அப்படியெல்லம் முடியாது” என்று ஏற்கனவே அவன் மேல் இருந்த கோவத்தை காட்டினாள்.

“என்னது முடியாதா..? என்னடி ரெவென்ஜ் எடுக்கிறாயா..? பாருடி இது அதுக்கான டைம் இல்லை..” என்று பாவமாக சொல்ல, உதட்டை சுழித்த ஹர்ஷினி,

“முடியாது..” என்பது போல் தலையாட்ட, “ஓஹ்.. அப்போ முடியாது அதானே.. அப்போ சரி … எனக்கு இங்கேயே கூட ஓகேதான்” என்றபடி அவளை நெருங்க, பதறிப்போன ஹர்ஷினி

“அய்யோ.. என்ன பண்றீங்க.. முதல்ல தள்ளி போங்க..” என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி வேகமாக அவனிடமிருந்து தள்ளி நின்றவள்,

“இப்போ எதுக்கு தனியா மீட் பண்ணும்ங்கிறீங்க..? அதெல்லாம் ஆகாது..”,

“எதுக்கா..? சரி உன் ஆசை அதுதான்னு சொல்றேன்.. “எனக்கு இப்பவே உன்னை இறுக்கி கட்டிப்பிடிச்சு கண்ல பட்ற இடத்திலெல்லாம் நச்நச்சுன்னு முத்தம் கொடுக்கணும்.. அப்பறம் என்னை எப்பவும் மயக்குற உன் இடுப்பை பிடிச்சி நல்லா சிவக்குற அளவுக்கு நறுக்குன்னு கிள்ளனும்.. அப்பறம் உன் உதட்டை..”

அச்சோ.. போதும்.. சும்மா இருங்க.. என்று தாபத்துடன் சொல்லி கொண்டிருந்தவனை வெட்கத்துடன் வேகாமாக தடுத்த ஹர்ஷினி, “யாராவது கேட்டுட்டா என்ன ஆகும்..? இப்படியா பேசுவீங்க” என்று கடிந்து கொண்டவளை,

இன்னும் கிறக்கம் தீராமல் பார்த்த ஜெய், “நீதானடி கேட்ட… எதுக்கு தனியா மீட் பண்ணனும்ன்னு..? அதான் சொன்னேன்” என்று குறும்பாக சொல்ல, சொல்ல மட்டுமே முடிந்தது ஜெயால், இறுதிவரை அதற்குண்டான வாய்ப்பை அவன் மேல் இருந்த கோவத்தில் ஹர்ஷினி தரவே இல்லை.

அவளின் செயலில் முறுக்கி கொண்டு கிளம்பிய ஜெயயை பார்த்து சிரித்த ஹர்ஷினி, அவளின் ரூமிற்குள் வந்தவள், உடை மாற்ற பால்கனி கதவை பூட்ட சென்றவள்,

தோட்டத்தில் “சந்திரன் சந்தோஷமாக ஜெயயை கட்டிபிடுப்பது கண்டு அதிய்ச்சியானவள், ஜெயும் சிரித்தபடி அவரை கட்டிப்பிடிப்பதும், பின் இருவரும் மிகவும் உற்சாகமாக எதோ பேசுவதும் கண்டு மேலும் அதிர்ந்தவளுக்கு சிறிது சிறிதாக எல்லாம் புரிய..” இருவரையும் கோவம் கொண்டு வெறித்து பார்த்தாள்.

...........................................................................................

வணக்கம் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை ஷேர் பண்ணுங்க ப்ரண்ட்ஸ்.. THANK YOU
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 33



“மாப்பிள்ளை... ஹர்ஷினி ரெண்டு நாளா ஏதோபோலவே இருக்கா..? யார்கிட்டேயும் பேசல.. அடிக்கடி தனியாவே வெளியே போயிட்டு வரா.. எனக்கு என்னமோ எதோ செய்ய போறாளோன்னு சந்தேகமா இருக்கு”.. என்று சந்திரன் போன் செய்து ஜெயிடம் கவலையாக சொல்ல,

அவனுக்குமே… அவன் போன் செய்து அவளிடம் பேசியபோது அவள் பேச்சில் தெரிந்த விலகல் தன்மையில் கொஞ்சம் யோசனைதான்..

“சரி மாமா.. என்ன ஆச்சின்னு நான் பாக்கிறேன்..” என்று அவன் போன் வைத்த, அடுத்த நொடி ஆச்சார்யாவிடம் இருந்து போன் வரவே., உடனடியாக அட்டென்ட் செய்தவன்,

“சொல்லுங்க தாத்தா…” என,

“ஜெய்.. நீ இப்போ எங்க இருக்க.?” என்று கேட்ட அவரின் பதட்ட குரலில்,

“சென்னையில தான் தாத்தா.. என்ன ஆச்சு..? ஏன் இவ்வளவு பதட்டமா பேசுறீங்க..?” என்று யோசனையாக கேட்க,

“ஜெய்.. அது ஹர்ஷினி எங்கயோ போறா போல..?” என்று அவசரமாக சொல்லவும்,

“புரியலை தாத்தா.. எங்க போறா..?”

“அதுதான் எனக்கும் தெரியல.. ஆனா எங்கேயோ போறா.. அதுமட்டும் உறுதியா தெரியும்,.”

“தாத்தா.. பதட்ட படாம பொறுமையா சொல்லுங்க.. ஹர்ஷினி எங்க போறா..? அது உங்களுக்கு எப்படி தெரியும்..?” என்று அவனுக்கு சில சந்தேகம் இருந்ததால் பொறுமையாக கேட்டான்,

“அது.. நான் இன்னிக்கு ஹோட்டேல்க்கு போனப்போ அவ அவகிட்ட இருக்கிற எல்லா பொறுப்பை பத்தியும் கார்த்திக்கு சொல்லி கொடுத்துட்டு இருந்தா.. கேட்டதுக்கு அவனும் எல்லாத்தையும் கத்துக்கணும் தானே.. அப்போதான் அவனால தனியா ஹோட்டலை ரன் பண்ண முடியும்ன்னு சொன்னா..”

“அதுக்கு இப்போ என்ன அவசியம் வந்ததுன்னு” நான் கேட்டதுக்கு, “அது நாளைக்கு உங்களுக்கே தெரிஞ்சிடும்”ன்னு சொன்னாப்பா, அதுமட்டுமில்லை.. “அவ முகத்துல மருந்துக்கு கூட சிரிப்பில்லை.. ரொம்ப இறுக்கமா தான் தெரியறா.. என்ன ஆச்சின்னு தான் தெரியல..” என்று ஆச்சார்யாவும் கவலையாக சொல்ல,

“என்னதான் செய்றா இவ.. எல்லாரையும் டென்க்ஷன் பண்ணிக்கிட்டு இருக்கா, இவளை..” என்று மனதுள் ஹர்ஷினியை கடிந்து கொண்டவன்,

“தாத்தா.. ஒன்னும் கவலை பட்டுக்காதீங்க.. ஏதா இருந்தாலும் பாத்துக்கலாம்” என்று ஆறுதலாக சொல்ல,

“இல்ல ஜெய்.. எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு.. நீ பேசாம இங்க கிளம்பி வாயேன்..” என்று அவனை அழைக்க, ஜெயுமே முன்னமே ஊருக்கு சென்று வருவது என்று முடிவு எடுத்து இருந்ததால்,

“ஓகே தாத்தா.. நான் இப்பவே கிளம்பி வரேன்..” என்று சொன்னவன், சொன்னபடி உடனடியாக கிளம்பியும் விட்டான்,

மறுநாள் காலையிலே ஹர்ஷினி இரண்டு ட்ராலி சூட்கேஸை இழுத்து கொண்டு வர, பதறி போன ரேணுகா, “ஹர்ஷினி என்ன இது..?” என்று கேட்க,

“ம்மா.. கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கே எல்லாம் தெரிஞ்சிடும்..” என்றவள்,

“கார்த்திக்… தாத்தா கிட்ட நான் பேசணும்ன்னு சொல்லு” என்று நிதானமாக எந்த வித உணர்வும் இல்லாமல் எதோ போல் பேசியவளை, கண்ட எல்லோருக்கும் “அடுத்து என்ன பூதம் கிளம்பப்போகிறது” என்ற பயம் தான் வந்தது,

கார்த்திக் சென்று தாத்தாவிடம் கேட்க, அவர் உடனடியாக தன் ரூமிலிருந்து ஹாலுக்கு வேகமாக வந்தவர், ட்ராலி சூட்கேஸையும், ஹர்ஷினியையும் பார்த்துவிட்டு,

“என்ன ஹர்ஷி இது..? எதுக்கு இந்த பேக் எல்லாம்..? எங்க போற..?” என்று பதட்டத்துடன் கேட்டார்.

“தாத்தா… நான் உங்ககிட்டயேயும், இவர்கிட்டேயும் பேசணும்” என்று சந்திரனை கை காட்டி சொல்ல, “எல்லோரும் இப்போ என்ன பிரச்சனையோ..?” என்று சந்திரனையும், ஹர்ஷினியையும் மாறி மாறி பார்த்தனர்.

“உங்க மாப்பிள்ளை இங்க எப்போ வருவார்..?” என்று ஜெயயை பற்றி சந்திரனிடம் நேரடியாக கேட்க, அவரின் முகத்தில் தெரிந்த மெலிதான பதட்டத்திலே. “இவர் எதோ செய்திருக்கிறார்..?” என்று அங்கிருந்த எல்லோருக்குமே புரிந்துவிட்டது.

“அது.. அது.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்” என்று சொல்ல, ஆச்சார்யா அதிர்ச்சியுடன் பெரிய மகனை பார்த்தவர்,

“பெரியவனே.. என்னடா செஞ்ச..? ஜெய் வரார்னு உனக்கு எப்படி தெரியும்.?” என்று வேகமாக கேட்க,

“அப்பா.. அது.. அது.. நான் தான்.. நான் தான்” என்று திக்கும் போதே வேகமாக அங்கு வந்த ஜெய், ஹர்ஷினியின் இறுகிய முகத்தையும், பேக்கையும் பார்த்தவன், வேகமாக அவளை நெருங்கி,

“எங்கடி கிளம்பிட்ட..?” என்று கோவத்துடன் கேட்டான். அவனை பார்த்தவுடன் இன்னும் இறுகிய ஹர்ஷினி, அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல்,

“இவர் உங்ககிட்ட வந்து எப்போ பேசினார்..?” என்று சந்திரனை கை காட்டி அழுத்தத்துடன் கேட்டாள், அவள் கேட்டவுடன் ஒரு நொடி அதிர்ந்த ஜெய், மறுநொடி தன் பேண்ட் பாக்கெட்டில் இரு கைகைளை விட்டபடி எப்போதும் போல் திமிருடன் நிமிர்ந்து நின்றவன்,

“முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..? எங்க கிளம்பிட்ட..?” என்று அவனும் அவளுக்கு குறையாத அழுத்தத்துடன் கேட்டான், அவனிடம் இதை முன்னமே எதிர்பார்த்திருந்த ஹர்ஷினி, அவனிடம் இருந்து தன் பார்வையை திருப்பி கொண்டு சந்திரனை வெறித்தவள்,

“நீங்களாவது என் கேள்விக்கு பதில் சொல்வீங்களா..?” என்று “பல வருடம் கழித்து தன் முகம் பார்த்து தன்னிடம் பேசும் மகளிடம் தன்னால் எப்படி சொல்லாமல் இருக்க முடியும்..?” என்பது போல் ஜெயயை பார்த்த சந்திரன்,

“நான்.. நான் அவரை” என்று தொடங்கும் போதே வேகமாக இடையிட்ட ஜெய், “அதெல்லாம் உனக்கு எதுக்கு..? இப்போ அதை பத்தி பேசணும்ன்னு என்ன அவசியம் இருக்கு..?” என்று ஹர்ஷினியிடம் கோவமாக படபடத்தவனை, திரும்பி உணர்வில்லா பார்வையால் வெறித்து பார்த்த ஹர்ஷினியை கண்ட ஜெய்க்கு, எதோ போல் ஆகிவிட..

“ஹர்ஷ்.. இப்போ அதை பத்தியெல்லாம் பேசி என்ன ஆக போகுது..? சொல்லு.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சி அடுத்த மாசம் நம்ம மேரேஜே வரபோது.. எல்லாத்தையும் விட்டுடு ஹர்ஷ்..” என்று பொறுமையாகவே கேட்டான்,

ஆனால் ஹர்ஷினியோ.. அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் “எனக்கு இப்போ தெரிஞ்சேஆகணும்..” என்பது போல் உறுதியாக நிற்க,

“என்ன பெரியவனே..? ஹர்ஷினி என்னென்னமோ கேட்கிறா..? நீ எப்போ மாப்பிள்ளை கிட்ட பேசின..? எதுக்கு பேசுன..?” என்று ஆச்சார்யா கொஞ்சம் கோவத்துடன் சந்தேகமாக கேட்டார், “இனி மறைக்க எதுவும் இல்லை..” என்று புரிந்து கொண்ட சந்திரன்,

“இவங்க லவ் பண்ற விஷயம் தெரிஞ்சவுடனே.. நாம போய் பார்ம் ஹவுஸ்ல பேசிட்டு வந்தோம் இல்ல.. அப்போ மாப்பிள்ளை கூட இனி எனக்கும் ஹர்ஷினிக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.. நான் அவளை விட்டு பிரிஞ்சிட்டேன்ன்னு சொன்னாரு இல்லை..”

“அதுக்கு அப்பறம் அது உண்மையான்னு நாமமும் அவரை தொடர்ந்து பலோவ் பண்ணோம்.. அவரும் அத்தனை நாள் ஆகியும் ஹர்ஷினியை பாக்கல.. பேசல.. ஹர்ஷினியும் அவர் ஒதுக்கத்துல ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தா..” என்று ஹர்ஷினியை அந்த நாட்களில் கவனித்து வைத்திருந்த சந்திரன் சொல்ல,

ஜெய்.. ஹர்ஷினியை வேகமாக பார்க்க, அவளோ தன் கைகளை கட்டியபடி சந்திரன் சொல்வதை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

“ மாப்பிள்ளையும் இறங்கி வராத தெரியல..”

“நாம.. அவர் ஹர்ஷினிக்காக டான்ஸை விட்டு வருவார்ன்னு எதிர்பார்க்க..”

“அவரோ.. ஹர்ஷினிக்காக நாம அவரை டான்ஸோடே ஏத்துப்போம்ன்னு எதிர்பார்க்க..” மாசம் தான் போச்சே தவிர, “நீங்க ரெண்டு பேரும் இறங்கி வரதா தெரியல..” என்று ஆச்சார்யாவையும், ஜெயயையும் பார்த்த படி சொன்னவர்,

“அதான் நானே ஒரு நாள், நம்ம டான்ஸ் அகாடமி பங்க்ஷன் நடக்கிறதுக்கு ஒரு வாரம் முன்னாடி அவரை போய் பார்த்தேன்..” என்று சொன்னவர் ஹர்ஷினியை பார்க்க,

“அவளோ.. எனக்கு நடந்த முழுவதும் தெரிய வேண்டும்” என்பது போல் பார்க்க, பெருமூச்சோடு தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார் சந்திரன்.

“ஹர்ஷினி விஷயத்துல என்ன முடிவு எடுத்து இருக்கீங்கன்னு கேட்டேன்..?”

“அதுக்கு அவர்.. உங்க முடிவு என்ன..?ன்னு” கேட்டார்,

“நான் தெளிவா சொல்லிட்டேன்.. டான்ஸை விட்டு வந்தாதான் எங்க வீட்டு பொண்ணை கொடுப்போம்ன்னு..”

“அதுக்கு அவர்.. முடியவே முடியாதுன்னுட்டார்”.

“நான்.. என் பொண்ணை விட டான்ஸ் தான் முக்கியமான்னு” கேட்டதுக்கு,

அவர்.. “ஹர்ஷினிக்காக தான் இந்த டான்ஸே.. அதை விட்டு வந்தா அவளே என்னை ஏத்துக்க மாட்டான்னு” சொல்லிட்டார்.. என்று சொல்ல, அப்பொழுதும் ஹர்ஷினியின் முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாமல் தான் நின்றாள்,

ஜெய் தான் அவளின் இறுக்கத்தில் உள்ளுக்குள் தவித்து போனான், “சண்டை போட்டாலாவது பரவாயில்லை.. இப்படி எதுவும் பேசாம யாரோ போல நின்னா என்ன செய்ய..?” என்று மாய்ந்து போனான்,

“இந்த ஹர்ஷினி அவனுக்குமே புதிது தான்..” அதனாலே எதுவும் செய்ய முடியாமல், “அடுத்து என்ன செய்வாள்..?” என்று யோசனையாகவே நின்றான்.

“எனக்கு வேற வழி தெரியல.. என் பொண்ணு இத்தனை வயசாகியும் தனியா நிக்கிறது ஒரு அப்பாவா என்னால தாங்க முடியல. ஏற்கனவே.. என் பொண்ணு மாதிரி வளர்த்த என் தங்கச்சி தனியாவே நின்னுட்டா..”

“அதுக்கு நானே காரணமா ஆயிட்டேன்ன்னு.. அந்த குற்ற உணர்ச்சி வேற தினம்.. தினம்.. என்னை கொன்னுட்டு இருக்கு.. எங்க சுபத்ரா மாதிரி ஹர்ஷினியும் தனியாவே நின்னுடுவாளான்னு எனக்கு நிறைய பயம்.. “

“அதான்.. மாப்பிள்ளை கையை பிடிச்சி நல்ல முடிவா எடுங்க.. ஏற்கனவே என் தங்கச்சி என்னாலே தனி மரமா ஆயுட்டான்னு.. எல்லாத்தையும் சொன்னேன்”,

“அம்மா.. அப்பா கல்யாணம் முதல் சுபத்ரா.. இளங்கோ பிரச்சனை... காளிதாஸ் மறுபடியும் ஹர்ஷினி விஷயத்துலயும் தலையிட்டு அதனால அவ டான்ஸை விட்டது வரை..” எல்லாத்தையும் சொன்னேன்,

சொல்லிட்டு.. “அவர் கையை பிடிச்சி கெஞ்சி கேட்டேன்.. நான் கெஞ்சவும் பதறி போன மாப்பிள்ளை”, என்ன நினைச்சாரோ..?, “சரின்னு” சொல்லிட்டார்.. என்று முடிக்க,

அதுவரை குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவு அமைதி நிலவிய வீட்டில், ஆச்சார்யாவின் கோபக்குரல் எதிரொலித்தது..

“அப்போ மாப்பிள்ளையோட அப்பா, நம்மை பார்த்து கேட்ட கேள்வி சரிதான் இல்ல.. என்ன பெரியவனே இதெல்லாம்..” என்று கோவம் கலந்த வேதனையுடன் கேட்க,

“எனக்கு என் பொண்ணு வாழ்க்கைக்கு.. இதை விட்டா வேற வழி தெரியலப்பா..?” என்று எல்லையில்லா வேதனையுடன் சொல்ல, ரேணுகா முகத்தை மூடி கொண்டு அழுகவே செய்தார்.

அதுவரை இறுக்கி போய் நின்ற ஹர்ஷினி சந்திரன் சொன்னதை கேட்டவுடன் மிகவும் தளர்ந்து போனாள். “முன்னமே.. அவளுக்கு இதுதான் நடந்திருக்கும் என்று யூகம் இருந்த போதும்.. சந்திரன் சொல்லும் போது எல்லையில்லா வேதனையே..”

“என்னதான் ஜெய் அவளுடைய உயிர்.. என்றாலும், தன் தந்தை தனக்காக அவனிடம் கெஞ்சி கேட்டது மிகவும் வலிக்க தான் செய்தது.” அதையே மறுபடியும் மீட்டு கொண்ட உறுதியுடன் சந்திரனிடமும் சொன்னாள்.

“என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரியாம தான் நான் இத்தனை நாளா இருந்துருக்கேன்..” என்று விரக்தியுடன் சொன்னவள,

“ஜெய் தான் எனக்கு எல்லாமே.. ஆனா அவர்கிட்ட கூட என்னோட அப்பாவா நீங்க கெஞ்சியிருக்கிறது கண்டிப்பாவே என்னால எக்காலத்திலும் ஏத்துக்கவும், ஜீரணிக்கவும் முடியல.. உங்களோட கௌரவம் எனக்கு எப்பவுமே ரொம்ப முக்கியம்..” என்று அழுத்தத்துடன் சந்திரனை பார்த்தபடி சொன்னவள்,

“உங்க எல்லார் கிட்டேயும் நான் இன்னைக்கு மனசார பேசணும்ன்னு நினைக்கிறன், சோ.. ப்ளீஸ் இடையில யாரும் எதுவும் பேசமாட்டேங்கன்னு நம்புறேன்..” என்றவள்,


“என்னை இந்த வீட்ல ஒரு ராணியத்தான் வளத்திருக்கீங்க.. அதை என்னால எப்பவும் மறுக்க முடியாது..”

ஆனா.. அதுக்கு இது அர்த்தம் இல்லை.. “என்னோட ஒரு கண்ணை நீங்க ராணி மாறி பாத்துகிட்டு.. இன்னொரு கண்ணை குத்துறது இல்லை..”

“நான்..” அப்படிங்கிறது “என்னோட விருப்பம், கனவு, லட்சியம், காதல், எல்லாம் சேர்ந்தது தான். அதை அப்படியே ஏத்துகிறது தான்.. எனக்கே என்னை ராணி மாதிரி உணரவைக்கும்..”

“இதையெல்லம் பறிச்சிக்கிட்டு.. நீ இப்பவும் ராணி தான்.. அப்படின்னா என்னால் எப்படி அதை ஏத்துக்க முடியும்..? உணர முடியும்..?” என்று மரத்த குரலில் சொல்லவும், எல்லோருக்கும் ஒரு விதத்தில் குற்ற உணர்ச்சியே..

“உங்களோட பயம்.. நீங்க கடந்து வந்த பாதையில் நீங்க அனுபவித்த கஷ்டம் எல்லாம் எனக்கு நல்லாவே புரியுதுதான்.. அதுக்காக காலத்துக்கும் அந்த பயத்தை பிடிச்சிட்டு தொங்கிறது.. நம்ம மிச்சம் மீதி இருக்க வாழ்க்கையை நரகமாத்தான் மாத்தும் தாத்தா..”

“இதை உங்களுக்கு புரிய வைக்க தான்.. இத்தனை வருஷமா நானும் சுபத்ரா அத்தையும் பாடுபட்டோம்..” ஆனா.. எல்லாமே வீண் தான்.. உங்க பயம் தான் ஜெயிச்சுது.. எங்க நம்பிக்கை, தைரியம்.. எல்லாம் தோத்துடுச்சி.. “ என்று ஆச்சார்யாவை பார்த்தபடி துயரத்துடன் சொன்னவள், ஓர் நொடி கண்மூடி தான் துயரத்தை விழுங்கி கொண்டு சந்திரனை உறுத்து விழித்தவள்,

“உங்களோட முன் கோவத்தால என்ன ஆச்சின்னு உங்களுக்கு தெரியுமா..? இளங்கோ மாமாக்கு ஒரு காலே போச்சி.. இப்போ வரைக்கும் கட்டை கால்ல தான் நடக்கிறாரு..” என்று

“அன்று.. இளங்கோவின் அப்பா தண்டபாணி பொருட்களை எடுத்து செல்லும் போதே, ஆட்கள் மூலம் பின் தொடர்ந்து அவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்ட போதும், அவர்களை எவ்விதத்திலும் சமாதான படுத்த முடியாமல் விரக்தியுடன் விலகி நின்றுவிட்ட சுபத்ராவை வேதனையுடன் பார்த்து விட்டு சந்திரனிடம் சொன்னவள்,

“இப்போ அவங்க எங்க இருக்காங்கன்னு கூட எங்களுக்கு தெரியாது..?, அப்பவே எங்களுக்கு தெரியாம மறுபடியும் வீட்டை மாத்திட்டாங்க..

இதனால என்ன ஆச்சி..? இத்தனை வருஷம் வாழ்க்கை துணை இல்லாமல், ஒரு சந்நியாசி போல் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் அத்தை தனியா நின்னது.. உங்களோட மன்னிப்பால் அதை மாத்த முடியுமா..?” என்று சந்திரனை குற்றம் சாட்டும் பார்வையுடன் கேட்க,

“சந்திரனால் இதற்கு என்ன பதில் சொல்லிட முடியும்..?”

“என்னோட கோவத்தில் எனக்கே தெரியாம நிறைய பேரை அதுவும் என்னை மனசார நேசிக்கிறவங்களை கஷ்டப்படுத்தி இருக்கேன், அந்த என்னோட கோவம் சரியா..? தப்பான்னு..? கூட எனக்கே தெரியல..”

“சில நேரம் சரியா தெரியறது.. பல நேரம் எனக்கே உறுத்தலையும், கஷ்டத்தையும் தான் கொடுத்திருக்கு..” என்று கலங்கிய குரலில் ஆச்சார்யா, சந்திரனை பார்த்த படி சொன்னவள்,

“அடுத்து.. என்னோட வைராக்கியாயத்தை எனக்கே தெரியாம உடைக்க நானே காரணமாவும் இருந்திருக்கேன்..” என்று

“ஜெய் டான்ஸை விட.. தனக்கே தெரியாமல் தானே ஒரு விதத்தில் காரணமா இருந்த விரக்தியில் ஜெயயை பார்த்தபடி இயலாமையுடன் சொன்னவள்”,

“இதையெல்லாம் நினைக்கும் போது.. என்னோட வாழ்க்கையில் நான் ரொம்ப மோசமா தோத்துட்டேன்ன்னு தான் தோணுது”

“என்னோட கனவை பறிச்சப்போவும் சரி, இப்போ ஜெய்யோட லட்சியத்தை பறிச்சப்போவும் சரி.. எதுவும் செய்ய முடியாதா ஒரு யூஸ்லஸ்ஸா தான் என்னை நானே பாக்கிறேன்”.

“உங்களுக்கு எல்லாம் என் மனசு பட்ற கஷ்டம் புரியலைன்னுதான் எனக்கு தோணுது..”

“புரிஞ்சிருந்தா.. என்னை இன்னும் கஷ்டபடுத்தி இருக்க மாட்டீங்க..” என்று ஜெயின் டான்ஸை மனதில் வைத்து.. ஜெயயை பார்த்த படி சொன்னவள்,

“கடைசி வரை என் விஷயத்திலும் சரி, இவரோட விஷயத்திலும் சரி.. அவ்வளவு போராடியும், என்னால எதுவும் செய்ய முடியாம தோத்து போய் தான் நிக்கிறேன்..”

“ம்ப்ச்.. உங்களை சொல்லியும் ஒண்ணுமில்லை.. இவரே டான்ஸை விட்டுட முடிவெடுக்கும் போது நான் மட்டும் தனியா போராடி என்ன செஞ்சிட முடியும்..?” என்று நிரயாசையாக சொன்னவள்..

“ஜெய் சொன்ன மாதிரி.. இதுக்கு மேல் இதை பத்தி எல்லாம் பேசி மட்டும் என்ன ஆகிற போது..? எல்லாம் தான் முடிஞ்சிருச்சே..?” என்று விரக்தியாக முடித்தவள்..

“இப்போ.. உங்க எல்லார்கிட்டயும் எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் வேணும், என்னை கொஞ்சநாளைக்கு தனியா விடுங்க. கண்டிப்பா கல்யாணத்துக்குள்ள நானே வந்திடுவேன், எனக்கு இங்கே.. இப்படியே இருந்தா மண்டை வெடிச்சுடும் போல இருக்கு.. புரிஞ்சிப்பீங்கன்னு நம்புறேன்..” என்று ட்ராலி பேக்கை இழுத்தவள்,

“எங்க போறான்னாவது சொல்லிட்டு போடி..?” என்று ரேணுகா பயத்துடன் கேட்க,

“ம்ம்.. “ என்று மூச்சை இழுத்து விட்டவள், “நாம புதுசா ஹோட்டல் கட்டிட்டிருக்க நம்ம கேரளா சைட்டுக்கு தான் போறேன்ம்மா.. ஆனா ப்ளீஸ் யாரும் என்னை கொஞ்ச நாளைக்கு தொந்தரவு பண்ணாதீங்க..” என்று கண்டிப்புடன் சொன்னவள்,

ஜெயயை பார்க்க, அதுவரை அவளை வெறித்து பார்த்து கொண்டிருந்தவன், அவளிடம் இருந்து பேக்கை வாங்கிக்கொண்டு முன்னாள் நடக்க, எல்லோரிடமும் தலையாட்டி விடைபெற்றவள், ஜெயின் பின்னால் சென்றாள்.

அவனுடைய காரில் பேக்கை வைத்துவிட்டு ட்ரைவிங் சீட்டில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தபடி “எங்க உன்னை விடனும்..?” என்று முன்னாள் அமர்ந்த ஹர்ஷினியிடம் கேட்க,

“ஏர்போர்ட்..” என்று அமைதியாக சொன்னவள், கண்மூடி அமர்ந்து விட, ஜெயும் எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டியவன், ஏர்போர்ட் வந்துவிட, காரை நிறுத்தவும், காரில் இருந்து இறங்கிய ஹர்ஷினி,

ஜெய் இறங்கி சென்று எடுத்து கொடுத்த பேக்கை வாங்கி பக்கத்தில் வைத்து விட்டு, அவனை நெருங்கியவள், “ஒரு முழு நிமிடம் அவனை இறுக்கமாக கட்டி பிடித்தவள்”,

பதிலுக்கு அவன் தன்னை கட்டிபிடிக்காமல் இருப்பதை உணர்ந்தாலும், எதுவும் பேசாமல் விலகியவள், “வரேன்..” என்பது போல் தலையாட்டிவிட்டு, அவன் இறுக்கமாக நிற்பதை உணர்ந்தும் கிளம்பிவிட்டாள்.

...................................................................


வணக்கம் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை மறக்காம ரெண்டு வரியில் சொல்லுங்கப்பா.. ஹர்ஷினியோட உணர்வை உங்களால புரிஞ்சுக்க முடியும்ன்னு நினைக்கிறேன்.. THANK YOU SO MUCH FOR YOUR SUPPORT FRIENDS..
 
Last edited:

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 34 { PRE FINAL}



மேம்.. “இந்த இடத்துல நீங்க சொன்ன மாதிரியே கார்டன் வைக்க ஏற்பாடு பண்ணியாச்சு.. கார்டன் வைக்க தேவையான செடி எல்லாம் இன்னிக்கே வந்துரும்”.. என்று ஹர்ஷினியின் PA ரூபா சொல்ல,

“குட் ரூபா.. செடி எல்லாம் வந்தவுடன் இன்னிக்கே வேலையை ஸ்டார்ட் செஞ்சிட சொல்லி அந்த கான்ட்ராக்ட்டர் கிட்ட நான் சொன்னதா உடனே இன்பார்ம் பண்ணிடுங்க”, என்று ஹர்ஷினி முடிக்க,

ரூபா அவள் சொன்னதை செய்ய செல்லவும், ஹர்ஷினி வழக்கம் போல் வேலை நடக்கும் இடத்தில் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருக்கும் போதே அங்கு வேகமாக வந்த ரூபா,

“மேம்.. MD வந்துட்டு இருக்காராம்”.. என்று அவசரமாக சொல்ல,

“யாரு..? தாத்தாவா..?” என்று சந்தேகமாக கேட்க,

“தெரியல மேம்.. இப்போதான் ஆஃபீசிக்கு பேக்ஸ் வந்தது, இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துருவாராம், சைட் ஒர்க் ரிப்போர்ட் ரெடியா இருக்கனும்ன்னு சொல்லியிருக்கு..” , என்று சொல்லிய படி தன் கையில் இருக்கும் பேக்ஸை நீட்ட..

“என்ன ரிப்போர்ட்டா..? ஏன்..?” என்று புரியாமல் குழம்பிய ஹர்ஷினி, அதை வாங்கி படித்து பார்க்க, அதிலும்.. ரூபா சொன்ன தகவல் மட்டுமே இருக்க,

“சரி.. ரூபா என் டேபிள்ல இருக்கிற டீடைல்ஸ் வச்சி உடனே ரிப்போர்ட் ரெடி பண்ணுங்க..” என்று சொல்ல, ரூபாவும் அவள் சொன்னதை செய்ய அங்கிருக்கும் ஆஃபீஸ் ரூமிற்குள் செல்ல, ஹர்ஷினி மனதுள் குமுறி கொண்டிருந்தாள்.

“என்னடா ஒருத்தி மனசு கஷ்டத்தோடு வீட்டை விட்டு வந்தாலே, அவ என்ன ஆனா..? எப்படி இருக்கான்னு கொஞ்சம் கூட கவலைப்படாம, சைட் விசிட்டிங் செய்ய வராரா.. வரட்டும்..” என்று ஆச்சார்யா தான் வருகிறார் என்று நினைத்து பொருமி கொண்டிருந்தவள்,

ஒரு கருப்பு நிற பென்ஸ் புழுதி பறக்க வேகமாக வந்து நிற்க, ஆச்சார்யா தான் என்று நினைத்து வரவேற்க கார் நிற்குமிடம் சென்ற ஹர்ஷினி, முன் கதவை திறந்து கொண்டு இறங்கிய மோகனை பார்த்து வியந்தவள்,

“இது ஜேயோட PA ஆச்சே, இவர் இங்க எப்படி..?” என்று யோசனையாக பார்த்து கொண்டிருக்கும் போதே, மோகன் சென்று பின் கதவை திறக்க, அதிலிருந்து “ஸ்டைலாக இறங்கிய ஜெயயை” கண்டு முதலில் அதிர்ந்தவள், பின் அவனுடைய தோற்றத்தை பார்த்து போறுமவே செய்தாள்,

“தலைக்கு ஜெல் போட்டு, க்ளீன் ஷேவ் செய்து, முகம் மினு மினுக்க, மீசையை முறுக்கியவாறே திருகி விட்டுருந்தவனின் உடை இன்னும் ஹர்ஷினியை கடுப்பாக்கியது.. ப்ளூ கலர் பாண்ட், வெள்ளை கலர் ஷர்ட், அதற்கு மேல் ப்ளூ கலரில் கோட், அந்த கோட்டிற்கு பட்டன் போடாமல் திறந்தே விட்டுருந்தவன் இடது கையில் இருக்கும் காப்பை ஸ்டைலாக மேலேற்றியவாறே வேகமாக ஆஃபீஸ் அறைக்குள் செல்ல”,

தன்னை ஏனென்று கூட கண்டுகொள்ளாமல் செல்லும் அவனின் திமிரில் ஹர்ஷினி கோவத்தில் மேல் மூச்சி கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தாள்,

“மேம்.. என்ன இங்கேயே நின்னுட்டிங்க, MD உங்களை கூப்பிடறாரு. சீக்கிரம் வாங்க” என்று ரூபா வேகமாக வந்து அவளை கையோடு அழைத்து செல்ல, கோவத்தில் சிவந்த முகத்துடனே உள்ளே சென்றவள்,

அங்கு MD சீட்டில் ஸ்டைலாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து ரிப்போர்ட்டை பார்த்து கொண்டிருந்த ஜெயயை கண்டு மேலும் கொதித்தவள், அவனை தீயாக முறைத்தவாறே நிற்க, அவனோ அவளின் கோவத்தை பற்றி கொஞ்சமும் கண்டு கொள்ளாமல், அவளிடமே ரிப்போர்ட்டில் சந்தேகம் கேட்க, பக்கத்தில் ரூபாவும், மோகனும் இருந்ததால், தன் கோவத்தை வெளிப்படையாக காட்ட முடியாமல், பல்லை கடித்தவாறே அவனுக்கு விளக்கம் சொன்னவளின் எண்ணம் முழுவதும்,

“இவர் எப்படி MD..?” ஒருவேளை தாத்தா தான் இந்த பதவியை இவருக்கு கொடுத்திருப்பாரோ.. ஆனா இதை பத்தி யாரும் என்கிட்ட சொல்லவே இல்லையே.

அதுமட்டுமா.. “நான் வீட்டை விட்டு வந்து இரண்டு வாரம் ஆகியும் என்னை யாரும் கண்டுக்க கூட இல்லை.. இருக்கட்டும், அவங்களை கூட விட்டுரலாம்,, ஆனா இவர் இத்தனை நாளாகியும் எனக்கு ஒரு போனும் பன்ணலை. என்னை தேடியும் வரலை,

ஆனா இப்போ MD யா வந்து உட்காந்துக்கிட்டு ரொம்ப ஓவரா தான் பண்ணிட்டிருக்கார். அதுவும் முன்னைக்கு ரொம்ப அழகா வேற இருக்கார், முகத்துல அப்படியே சந்தோஷ கலை வேற ஓவரா மின்னுது,

நான் இங்க காய்ஞ்சி கருவாடா போய்ட்டுஇருக்கேன்.. ஆனா இவர் என்னடான்னா என்னை பத்தி கொஞ்சம் கூட கவலை படாம ரொம்ப நிம்மதியா தான் இருக்கார், என்று அவனை பார்த்து பார்த்து வெந்து மனதுள் அர்ச்சித்து கொண்டிருந்தவளை உணர்ந்த ஜெய்க்கு, சிரிப்பு வந்தாலும்,

“நான் கோவமா இருக்கேன்னு தெரிஞ்சும், என்னை விட்டு வந்த இல்லை, உன்னை இன்னும் கடுப்பேத்தறேன் பாரு..” என்று சங்கல்பம் எடுத்து கொண்டவன், மேலும்.. மேலும் விடாமல் தொடர்ச்சியாக கேள்விகள் கேட்டு அவளை வெறுப்பேத்தியவன்,

அடுத்து கன்ஸ்ட்ரக்ஷன் நடக்கும் இடத்திற்கு சென்று பார்வையிட்டவன், “இன்னும் ஏன் பாதி வேலை கூட முடியல..? என்ன செஞ்சிட்டு இருக்கீங்க..? இது தான் நீங்க வேலை பார்க்கும் லட்சணமா..? இப்படி ஸ்லோவா வேலை செஞ்சா என்னைக்கு ஹோட்டல் திறக்க..?” என்று விடாமல் வேண்டுமென்றே எகிறியவன்,

மோகன்.. இங்க கொஞ்சம் என்னன்னு பாருங்க.. ரூபா அவருக்கு ஹெல்ப் பண்ணுங்க என்று சொன்னவன், ஹர்ஷினியை தன் பின்னால் வருமாறு ஒற்றை விரல் கொண்டு திமிராக சைகை செய்துவிட்டு முன்னால் நடக்க, அவனை தீயாக முறைத்த ஹர்ஷினி..

“எவ்வளவு திமிரு.. ஏன் வான்னு வாயால சொல்ல மாட்டாரோ.. சைகை தான் செய்வாரோ.. என்கிட்ட மட்டும் மாட்டட்டும் அப்பறம் இருக்கு, அந்த சைகை காட்டின விரலை உடைச்சிடுறேன்..” என்று திட்டி கொன்டே ஜெயின் பின்னால் ஆபிஸ் அறைக்குள் சென்றவள்,

அவன் MD சீட்டில் கம்பீரமாக சென்று அமரவும், அவ்வளவு கோவத்திலும் அவனின் கம்பீரத்தை கண்ணில் காதலுடன் ரசித்தவளை கண்டு கொண்ட ஜெய், கண்ணில் குறும்போடு,

“என்ன..? என்னை சைட் அடிக்கி றியா..? நீ என்னை சைட் அடிக்கிறது மட்டும் என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சிது.. அப்பறம் உன் சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை பாத்துக்கோ..” என்று அவளை சீண்டியவன், அவளின் முறைப்பை கண்டுகொள்ளாமல் மேலும்,

“வரவர பசங்களை விட இந்த பொண்ணுங்க தான் ரொம்ப சைட் அடிக்கிறாங்க.. என்னை மாதிரி ஹாண்ட்ஸம்மான பசங்க எல்லாம் வெளியவே வரமுடியாது போல..” என்று மேலும் குறும்புடன் கிண்டலாக சொல்ல,

“பொறுத்தது போதும்” என்று பொங்கியெழுந்த ஹர்ஷினி, “ஆமா.. இவர் பெரிய ஆணழகன், இவரை பாக்கத்தான் நான் ஏங்கி போய் நிக்கிறேன் பாரு..” என்று வெடுவெடுக்க,

“நான் என்னை பாக்க நீ ஏங்கி போனதா சொல்லவே இல்லையே.. சைட் அடிக்கிறதா தான் சொன்னேன், ஒருவேளை நீயே ஒத்துக்கிட்ட மாதிரி என்னை பாக்க ஏங்கி தான் போயிருந்தியோ என்னமோ..?” என்று நக்கலாக இழுக்க,

“நான் ஏங்கி போனதை நீங்க பாத்தீங்களா..?” என்று ஆத்திரமாக வெடிக்க,

நானா அப்படி சொன்னேன்..? நீ தான் சொன்ன..

நான் ஒன்னும் அந்த அர்த்தத்தில சொல்லலை..” என்று ஹர்ஷினி மழுப்ப பார்க்க,

“அது எனக்கு எப்படி தெரியும்..? நீ சொன்னதை தான் நான் சொன்னேன்.. யாரு கண்டா ஒருவேளை நான் வருவேன்னு என்னை ரொம்ப எதிர்பாத்து இருந்தியோ என்னமோ..? என்று திமிருடன் கேட்க,

அவனின் திமிரான கேள்வியில் கடுப்பான ஹர்ஷினி, அவனை முறைக்க, “பாத்து கண்ணாலே என்னை எரிச்சிட போற, எனக்கு வேற இதுக்கு அப்பறம் தான் கல்யாணமே ஆகணும், அப்பறம் வாழ்க்கையில் எதையுமே நான் அனுபவிக்க முடியாமா போய் சேந்த பாவம் உன்னை தான் சேரும்..” என்று நக்கலாக அவளை சீண்டியவன்,

அவள் மேலும் முறைக்கவும், “இப்போத்தானே சொன்னேன்.. அதுக்குள்ளே மறுபடியும் கண்ணிலே தீப்பந்தத்தை கொளுத்துனா என்ன அர்த்தம்..? என்னை நம்பியிருக்கிற பொண்ணுக்கு நீயா பதில் சொல்லுவ.. அவளே ஒரு ராட்சஸி” என்று மேலும் சீண்டவும்,

“யாரு.. நான் உங்களுக்கு ராட்சஸியா..? எவ்வளவு தைரியம் இருந்தா என்னை ராட்சஸின்னு என்கிட்டேயே சொல்லுவீங்க” என்று கோவமாக கத்த,

“இப்போ எதுக்கு இப்படி கத்தறவ..? நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன், நீ என் உயிரை குடிக்கிற ராட்சஸி தானே.. அப்பறம் என்ன..?”

“யாரு..? நானு..? நான் உங்க உயிரை குடிக்கிறேனா.. நீங்க எப்படி..?ரொம்ப நல்லவரோ..?”

“ஆமாம்.. கண்டிப்பாவே நான் நல்லவன்தான்.. இல்லாட்டி கோவமா போன உன்னை.. போனா போயிட்டு போறான்னு விடாம உன்னை தேடி வருவேனா..?”

“என்னமோ..? என்னை உடனே தேடி வந்த மாதிரி ரொம்பத்தான் பீத்திக்கிறீங்க.. ரெண்டு வாரம் கழிச்சி வந்துட்டு ரொம்பத்தான்..” என்று நொடிக்க,

பாத்தியா நீயே ஒத்துக்கிட்ட..

நான் என்ன ஒத்துக்கிட்டேன்..?

“ஆமா.. ரெண்டு வாரம் கழிச்சுத்தான் உன்னை தேடி வந்திருக்கேன்னு இப்போ நீயேதானே கோவமா சொன்ன.. அப்போ நான் உன்பின்னாடியே வருவேன்னு இத்தனை நாளா வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன்னு சொல்லு..” என்று வேகமாக அவளை மடக்க,

ஸ்ஸ்.. என்று மெலிதாக உதட்டை கடித்தவள், “ச்சே.. கடைசியில என் வாயாலே உண்மையை சொல்ல வச்சிட்டான் ராஸ்கல்..” என்று மனதுள் நொந்தவள், வெளியே ஜெயயை திமிராக பார்த்தபடி,

“இப்போ இதை பத்தி பேசத்தான் MDங்கிற பந்தோவோட என்னை தேடிவந்தீங்களா..?” என்று சிடுசிடுக்க,

“ஆமா.. இதுக்கு தான் வந்தேன்.. வேற எதுக்கு வந்தேன்ன்னு நினைக்கிற..?”

“இவரு மட்டும் அடங்கவே மாட்டாரு..” என்று கடுப்படித்தவள், ஆத்திரத்துடன் வெளியே செல்ல போனவள், தன்னை தடுக்காமல் மேலும் வசதியாக அமர்ந்த ஜெயயை பார்த்து கொதித்தெழுந்து,

“நான் இங்க கோவமா போய்கிட்டு இருக்கேன், என்னை கண்டுக்காம நல்லா வசதியா சாய்ஞ்சி உட்காறீங்களா.. உங்களை என்ன பண்றேன் பாருங்க”, என்று கத்திகொண்டே அவனின் தலை முடியை பிடித்து வேகமாக ஆட்டவும்,

“ஏய்.. ஏய் விட்றி.. வலிக்குது.. விடுடி ராட்சஸி..” என்று சிரித்தவாறே அவளின் கையை பிடித்து தடுத்தவன், உட்கார்ந்த நிலையிலே அவளை இழுத்து தன் மடிமேல் அமரவைத்தவன், அவள் கோவத்தில் திமிர,

“ச்சு.. கொஞ்ச நேரம் அமைதியா இருடி..” என்று அதட்டியவாறே அவளை தன்னோடு சேர்த்து இறுக்கமாக அணைத்து பிடித்தவன், அவளின் கழுத்து வளைவில் முகம் புதைக்கவும், அதுவரை கோவத்தில் இருந்த ஹர்ஷினியும் அவனின் அருகாமையில் எல்லையில்லா காதலோடு அவனை தோளோடு சேர்த்து தானும் கட்டிபிடிக்கவும்,

அவளின் கோபவம் குறைந்ததை உணர்ந்த ஜெய் மேலும் அவளை தன்னோடு இறுக்கி கட்டிக்கொள்ள, அவனின் நெருக்கத்தில் இத்தனை நாள் விரக்தியில் இருந்த தன் மனம் எல்லையில்லா நிம்மதியோடு அமைதியடைவதை பரிபூரணமாக உணர்ந்தாள்,

அப்படியே சிறிது நேரம் இருவரின் நெருக்கத்தை இருவருமே மனதார அனுபவித்து கொண்டிருக்கும் போது, வெளியே மோகன் அழைக்கும் சத்தம் கேட்கவும், பிரிய மனமில்லாமல் பிரிந்த இருவரில் ஜெய் “மோகனை உள்ளே வர சொல்லி சொல்ல”,

உள்ளே வந்த மோகன், “சார் பிளைட்டுக்கு டைம் ஆச்சி.. நாம கிளம்பனும்” எனவும், ஹர்ஷினி தன்னை இங்கேயே விட்டு அவன் மட்டும் சென்றுவிடுவானோ..? என்று கண்கள் சுருக்கி, கோவத்தில் மூக்கு விடைக்க ஜெயயை பார்க்க,

அவளின் முகபாவத்தில் சிரித்த ஜெய், “ஏய் உன்னை இங்கேயே விட்டு போறதுக்கா நான் வந்தேன்.. கிளம்பு நீயும் தான் எங்களோடு வர.. சீக்கிரம் போய் கிளம்பி வா” என்று அவளை அனுப்பிவைத்தவன்,

“ரூபாவை கிளம்ப சொல்லிட்டேங்களா மோகன்..”

“ஆமா சார்.. முன்னமே சொல்லிட்டேன், அவங்க ரெடியா இருக்காங்க..” எனவும் அடுத்து அரை மணியில் அனைவரும் அங்கிருந்து கிளம்பி மாலை போல் கோயம்பத்தூர் வந்தடைந்தனர்,

அங்கு அவர்களின் வீட்டின் அதீத அலங்காரத்தில் யோசனையானவள், அதையே கேள்வியாக ஜெயிடம் கேட்க, “உள்ளே போ உனக்கே தெரிஞ்சிடும்.. நான் இதோ வந்திடுறேன்” என்றவன் அவசரமாக கிளம்பி செல்ல,

“இவர் ஏன் இப்படி ஓடுறாரு..?” என்று யோசித்தவாறே வீட்டின் உள்ளே செல்ல, அங்கோ அனைவரும் ஆளுக்கொரு வேலையாக பரபரப்பாக சுற்றி கொண்டிருந்த, யாரும் அவளை நின்று கவனிக்க கூடவில்லை, குழப்பத்தில் இருந்த ஹர்ஷினி யாரும் தன்னை கண்டு கொள்ளாமல் இருக்க காண்டனவள்,

“ம்மா..” என்று உச்சஸ்தாயில் கத்த, அப்பொழுதும் ஒரு நொடி திரும்பி பார்த்தவர்கள், அடுத்த நொடி அலட்சியத்துடன் திரும்பி மறுபடியும் தங்களின் வேலையை தொடர,

“அப்போ போங்க.. நான் மறுபடியும் கேரளாவுக்கே போறேன்” என்று கத்த, வேகமாக அவளிடம் வந்த ரேணுகா, தன்னை பாசத்தோடு அணைப்பார் என்று பார்த்தால், அவரோ வந்த வேகத்தில் நன்றாக வலிக்குமாறு தன் தலையில் கொட்ட,

“ஸ்ஸ்..” என்று வலியில் தலையை தேய்த்து கொண்டே, “ம்மா.. இப்போ எதுக்கு கொட்டின..?” என்று கோவமாக கேட்க,

“அப்படிதாண்டி கொட்டுவேன்..” என்று அவளை விட அதிகமான கோவத்தில் கத்தியவர், “இன்னொரு முறை அங்க போறேன்.. இங்க போறேன்ன்னு கிளம்பி பாரு, போற காலை உடைச்சி வச்சிடுறேன்” என்று மிரட்டவும்,

“ஆமா.. அக்கா சொல்றதுதான் சரி.. இனி இப்படி கிளம்பி பாரு அப்பறம் இருக்கு உனக்கு” என்று மாலதியும் மிரட்டலாக சொன்னார்,

“நான் அப்பவே உன் காதை பிடிச்சி இழுத்துட்டு வரலாம்ன்னு தான் கிளம்பினேன்.. ஆனா என் மாப்பிள்ளை தான் வேணாம் அத்தை.. அவளோட கோவம் குறைஞ்சதுக்கு அப்பறம் கண்டிப்பா அவளே வீட்டை விட்டு வந்ததுக்காக வருத்தப்படுவா.. நம்மளை தேடவும் செய்வான்னு சொல்லிட்டார், அதான் உன்னை இத்தனை நாள் விட்டேன் ஆனா இது தான் கடைசி இனி இப்படி போன அவ்வளவுதான் பாத்துக்கோ..” என்று கண்கள் கலங்க மிரட்டிய ரேணுகா, அவளை பாசத்தோடு அணைத்து கொள்ள,

நானும்.. நானும்.. என்று கார்த்திக்கும், ஹாசினியும் ஓடி வந்து அவர்களோடு கட்டி கொள்ள அனைவருக்கும் வெகு நாட்களுக்கு பிறகு மனம் நிம்மதியில் மிகவும் நிறைந்தது,

“ம்மா என்ன பங்க்ஷன்..? ஏன் இவ்வளவு அலங்காரம்..? நீங்களும் ரொம்ப பிசியா இருக்கீங்க..?” என்று ஹர்ஷினி ரேணுகாவிடம் கேட்கும் போதே, அவரின் முகம் அளவுகடந்த மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது,

“அது உனக்கு சர்ப்ரைஸ்.. அந்த ரூமுக்கு போ.. உனக்கே தெரியும்.. கதவை தட்டிட்டு போ” என்று சந்தோஷமாக சொல்ல, வேகமாக அந்த ரூமிற்கு சென்று கதவை தட்டிட்டு திறக்கவும், அங்கு அமர்ந்து இருந்த சுபத்ராவை பார்த்த ஹர்ஷினி, அவரிடம் தெரிந்த வித்தியாசத்தில்.. என்ன என்று யோசித்து கொண்டே அவரை நெருங்கியவள்,

“நீண்ட நெடு வருடங்கள் கழித்து நகை அணிந்து, தலை நிறைய பூ வைத்து, கையில் மருதாணி இட்டு முகம் அழகில் மினுமினுக்க” அமர்ந்து இருந்தவரை கண்டவுடன் ஹர்ஷினியின் கண்களில் தானாகவே கண்ணீர் நிறைந்தது,

“அத்தை..” என்று வேகமாக அவரை கட்டி கொள்ளவும், “ஹர்ஷினி.. பாத்து மருதாணி” என்ற வேறுஒருவரின் குரலில் திகைத்து விலகி சத்தம் வந்த திசையை பார்த்த ஹர்ஷினி, அங்கு இளங்கோவை காணவும் நம்ப முடியாமல் திகைத்தவள் கண்களை கசக்கி விட்டு இன்னும் நன்றாக உறுத்து பார்க்க, அவளின் பாவனையில் சிரித்த இளங்கோ,

“இங்க வா..” என்று கூப்பிட, சுபத்ராவை பார்த்து விட்டு தயக்கமாக அவரிடம் செல்ல, அவர் அவளின் கையை பற்றி கிள்ள, “ஸ்ஸ் என்ன மாமா..? எதுக்கு கிள்ளுனீங்க..?” என்று வலித்த கையை தேய்த்து கொண்டு கேட்க,

“ம்ம்.. நீ என்னை நம்பாம கனவோன்னு கண்ணை கசக்கி பார்த்தியே அதான்..” என்று சிரிக்க, சுபத்ராவும் அவருடன் இணைந்து சிரிக்க, இருவரையும் முறைத்தாலும் மனம் அளவுகடந்த மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க தான் செய்தது,

“சுபத்ரா அத்தைக்கு திருமணம் செய்யாமல்.. தான் மட்டும் எப்படி திருமணம் செய்து கொள்வது..?” என்பதே அவளின் மிக பெரிய வருத்தமாக இருந்தது, அதுவே,,அந்த அழுத்தமே அவள் வீட்டை விட்டு செல்ல மிக பெரிய மறைமுக காரணமாக இருந்தது,

அந்த அழுத்தம் நீங்க.. பாசத்தோடு கண்கள் கலங்க சுபத்ராவை நிறைவோடு அணைத்து கொண்டவளை, உள்ளே வந்து காதலாக பார்த்த ஜெய் அவளின் முகத்தில் தெரிந்த அளவுகடந்த மகிழ்ச்சியில், நிம்மதியில் தானும் நிறைவாக உணர்ந்தான்,

“ஏய் அழுமூஞ்சி.. அவங்களை விடு..” என்று தானும் கண்கள் கலங்கி அமர்ந்திருந்த சுபத்ராவை பார்த்து, ஹர்ஷினியை கடிந்து கொள்ள, அவளோ.. “மாட்டேன்” என்று தலையாட்டியபடி விடாமல் மேலும் இறுக்கமாக கட்டி பிடிக்க, தலையை தட்டி கொண்ட ஜெய், அவளின் அருகில் சென்று தலையில் தட்டி,

“அவங்களை விடுடி” என்று அதட்டலாக சொல்லவும்,

“அவளை அடிக்காத விடு ஜெய்” என்று சுபத்ரா, இளங்கோ இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல, சப்போர்ட் கிடைத்த சந்தோஷத்தில் அவரை விட்டு பிரியாத ஹர்ஷினி, ஜெயயை பார்த்து அழகு காண்பிக்க,

“போடி.. ரொம்பத்தான்” என்று ஜெயும் அலட்சியமாக கை அசைத்து பதிலுக்கு அழகு காண்பிக்க, அவர்களின் சிறு பிள்ளை தனமான சண்டையை ரசித்து மனதார சிரித்தனர் இளங்கோவும், சுபத்ராவும்,

“நாளைக்கு கல்யாணத்தை வச்சிக்கிட்டு இங்க கூத்தடிச்சிட்டு இருந்தா ஆகிடுமா..? என்று மிரட்டியபடி ரேணுகா வர,

“நாளைக்கு கல்யாணமா..? யாருக்கு..?” என்று சந்தேகமாக பார்த்த ஹர்ஷினி நொடியில் புரிந்து கொண்டு, இன்னும் சந்தோஷமாக சுபத்ராவை அணைத்து கொள்ள, வேகமாக அவளை நெருங்கிய ரேணுகா,

“சும்மா.. சும்மா.. அவளை கட்டிப்பிடிச்சு கசக்காத.. வா இங்கிட்டு” என்று அவளின் கையை பிடித்து இழுத்தவாறே, “நீங்க இருங்க..” என்று இளங்கோவையும், சுபத்ராவையும் பார்த்து சொன்னவர், கையோடு ஹர்ஷினியை இழுத்து கொண்டு செல்ல, தானும் தலையசைத்து விட்டு அவர்களை பின் தொடர்ந்தான் ஜெய்,

“ஏண்டி.. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா..? இப்படித்தான் அவங்களை தொந்தரவு செய்வியா..? எதோ கொஞ்ச நேரம் இருந்துட்டு வராம மணிக்கணக்கா அங்கே இருந்து அவங்களை தொந்தரவு பண்றது இல்லாமல். இங்க கல்யாண வேலையும் பாக்காம ஏமாத்திட்டு இருக்க..” என்று ஆரம்பித்து அவளை பிடிப்பிடியென்று பிடிக்க,

நொந்து போன ஹர்ஷினி ஜெயயை பார்க்க, அவனோ ரேணுகாவின் அர்ச்சனையை நன்றாக ரசித்து பார்த்து கொண்டிருந்தான், “இந்த அம்மா திட்டுறதை கூட நான் பொருத்துக்குவேன்.. {ஏன்னா உனக்கு அது பழகிருச்சி என்று மனசாட்சி குரல் கொடுக்க, அதை தட்டிய ஹர்ஷினி},

“ஆனா.. இவர் அதை ரசிச்சி சந்தோஷ பட்றதுதான் எனக்கு தாங்கலை” என்று பொறுமியவள், ரேணுகா அர்ச்சனையை முடித்து வா வந்து வேலையை பாரு என்று கையோடு மறுபடியும் இழுத்து கொண்டு செல்ல, ஜெயயை முறைத்தவாறே அவரை பின்தொடர்ந்தவளை போதும் போதும் என்கிற அளவுக்கு வேலை வாங்கி பிழிந்து தள்ளி விட்டார் ரேணுகா.

நொந்து போய் மேலேறி கொண்டிருந்த ஹர்ஷினியை மறித்த ஜெய், கொஞ்சம் பேசலாம் வா.. என்று அழைக்க, முடியாது போ என்று முறுக்கி கொண்டு சென்றவளின் காதில் விழுமாறு சத்தமாக “இப்போ உனக்கு இளங்கோ அப்பாவை பத்தி தெரியுனுமா வேணாமா..?” என,

வேகமாக அவனிடமே திரும்பி வந்தவள், சொல்லுங்க என்று ஆர்வத்துடன் கேட்க, அவளின் தலையில் செல்லமாக தட்டிய ஜெய்,

“இளங்கோ அப்பா இருந்த இடம்.. உங்க அப்பாக்கு தெரியும்” என்று ஆரம்பித்தவன்,

“முதல்ல என்னை பாத்து பேசனப்போவே என்கிட்ட சொல்லிட்டார், அப்பறம் என்ன நானும் அவரும் அவரை மீட் பண்ணோம், மாமா மனசார அவர்கிட்ட மன்னிப்பு கேட்க, கோவமா இருந்த இளங்கோவோட அப்பாவோட அன்னபூரணி அம்மாவும் ஏற்கனவே மகன் வாழ்க்கையை நினைச்சி கவலை பட்டுட்டு இருந்தாங்க போல, உடனே ஒத்துக்கிட்டாங்க.. “
“ஆனா.. இளங்கோ அப்பாதான், பிடிவாதமா இருந்தாரு, அவர் மனசுக்குள்ள நொண்டியான நான் எப்படி சுபத்ராவுக்குன்னு வேதனை இருந்திருக்கும் போல.. நாங்களும் எவ்வளவு சொன்னாலும் கேட்கல..”

“ஆனா நீ வீட்டை விட்டு கோவமா போனதுக்கு அப்பறம் நாங்களே சுபத்ரா அம்மாகிட்ட சொல்ல, அப்பறம் அவங்களே அவரை பார்த்து பேசி சமாதானமாகி இப்போ விடிஞ்சா கல்யாணம்” என்று முடிக்க, ஹர்ஷினி எல்லையில்லா நிம்மதியில் அவன் தோள் சாய்ந்தாள் .

குறித்த சுப முகூர்த்தத்தில் இளங்கோ, சுபத்ராவின் ஆசைப்படி கோவிலில் சிம்பிளாக.. தாலி கட்டி தன் வாழ் நாள் துணையாக சுபத்ராவை மனதார ஏற்று கொண்டார் இளங்கோ,, அதை பார்த்திருந்த அனைவரின் கண்களிலும் ஆனந்த் கண்ணீர் நிறைந்தது.
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ Final 1



எல்லாம் வல்ல இறைவன் சந்நிதியில் “சுபத்ரா.. இளங்கோ திருமணம்” இனிதே நிறைவேற எல்லோரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் மிதந்தாலும், “சுபத்ரா.. ஹர்ஷினியின் கண்களில் மெலிதான குற்ற உணர்ச்சியும்” தெரிந்தது, இருவரின் பார்வையும் சந்திரன் மேல் தான் இருந்தது,

அவரின் பார்வையும் இவர்களை நோக்கி தான் இருந்தது ஒரு வித “எதிர்பார்ப்புடன்”, பின் என்ன நினைத்தாரோ..? சுபத்ரா இருக்குமிடம் வந்தவர், வந்துவிட்டாலும் என்ன பேசுவது..? என்று புரியாமல் திணறவும்,

அவரின் பரிதவிப்பை புரிந்து கொண்ட இளங்கோ.. சுபத்ராவை கண்டிப்போடு பார்க்க, “அவர் என்ன செய்வாரோ..?” என்று எல்லோரும் அவர்களையே தான் எதிர்பார்ப்பு கலந்த ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்,

சுபத்ராவிற்கு.. சந்திரனிடம் பேசக்கூடாது என்றெல்லாம் இல்ல, ஆனால் அவரின் மனதில் இருந்த ஒருவித குற்ற உணர்ச்சி அவரை பேசவிடாமல் செய்தது, அடைத்த தொண்டையை செருமி கொண்டு, வழிந்த கண்ணீரை துடைக்க கை கொண்டு செல்ல, சந்திரன் தன் கையால் அவரின் கண்ணீரை துடைக்க..

அவரின் அன்பில் இருந்த எல்லா தடைகளையும் உடைய.. “அண்ணா..” என்று கதறி கொண்டே வேகமாக அவரை கட்டிப்பிடித்து அழவும், சந்திரனும் எல்லையில்லா ஆனந்தத்தில் தங்கையை கட்டிக்கொண்டு அழ, “இந்திரனும்.. மேனகாவும்” வேகமாக வந்து அவர்களை கட்டிக்கொண்டு அழ, சுற்றிருந்த எல்லோர் கண்களிலும் கண்ணீரோடு “நீண்ட நெடு வருட வேதனை முடிவுக்கு வந்ததில் அளவில்லா ஆனந்தமே..”

ஆச்சார்யா.. தன் பிள்ளைகளின் ஆனந்த கண்ணீரை நிறைவோடு பார்த்து கொண்டிருக்கவும், அவரின் உணர்வுகளை புரிந்து கொண்ட ஹர்ஷினிக்கு அவரிடம் செல்ல கால்கள் பரபரத்தாலும், “ஜெய்க்கு அவர் செய்த அநியாத்தில் மனம் ஓட்டாமல் தள்ளிருக்கவே முடிந்தது.. வருத்தத்தோடு தான்”,

ஆனால்… அந்த “வருத்தம் எதுவும் ஜெய்க்கு இருந்தது போல் தெரியவில்லை, அவன் அவரை நெருங்கி தோளோடு அணைத்துக்கொள்ள, ஆச்சார்யாவும் அவனை மகிழ்ச்சியோடு சேர்த்து அணைத்து கொள்ள, அவர்களின் பாசப்பிணைப்பை பார்த்து கொண்டிருந்த ஹர்ஷினிக்கு தோன்றியது,

“பொறாமையா..? சந்தோஷமா..? கோவமா..? ஆற்றாமையா..?” இதில் எது என்று அவளுக்கே தெரியாமல் அவர்களையே குறுகுறுவென்று பார்க்க, அவளின் பார்வையை உணர்ந்த ஜெய், கிண்டலாக சிரித்தபடி ஆச்சார்யாவை பார்க்கும் படி சைகை காட்ட, அவரும் திரும்பி தன் செல்ல “பேத்தியை பார்த்த உடனே அவரின் கண்களில் தெரிந்ததெல்லாம் ஏக்கமே.”

அதை புரிந்து கொண்ட ஹர்ஷினிக்கு.. “முதல் முறையாக ஓர் நொடி தவறு செய்கிறோமோ..? என்றே தோன்றியது”, ஆனால் அடுத்த நொடி அவளின் மனம் “அவர் தான் தவறு” என்று உரக்க சொன்னதில் மீண்டும் உறுதியுடன் முறுக்கி தான் கொண்டது, அதை அவளின் முகமே காட்டி கொடுக்க, புரிந்து கொண்ட ஜெய் பல்லை கடித்தான்.. என்றால் ஆச்சார்யா நிராசை கொண்டார்,

ஆச்சார்யாவிற்கு நன்றாக புரிந்தது, பேத்தியின் எதிர்பார்ப்பு என்னவென்று..?

அவர்களையே முறைத்து கொண்டிருந்த மகளிடம் வந்த ரேணுகா, அவளின் தலையில் கொட்ட, வழியில் “ஆஆ..” என்று கத்தியவாறு திரும்பி தன் தாயை முறைத்து பார்த்தவள்,

“இப்போ எதுக்குமா கொட்டுன..?” என்று கோவமாக கேட்க,

ம்ம்.. எதுக்கு கொட்டினேனா..? என் புருஷனுக்காக தான் கொட்டினேன்.. “ஏண்டி எதோ கெட்ட நேரம் அவருக்கு.. அப்போ எதோ கோவத்தில், நிதானமில்லாம அப்படி ஒரு பெரிய தப்பு பண்ணிபுட்டாரு.. அதுக்கு அவர் வருத்தப்படாத நாளே இல்லை.. அன்னியிலுருந்து அந்த மனுஷன் நிம்மதியா சாப்புட்டு,, தூங்கி நான் பார்த்ததே கிடையாது..”

“இப்படி செஞ்சிட்டோமேன்னு எப்போ பார்த்தாலும் வேதனை தான், இதுல போதாக்குறைக்கு.. உன்னை வேண்டி.. வேண்டி.. ஒத்த பிள்ளையா பெத்து உன் மேல உசிரையே வச்சிருந்தார்”.

“அவர்கிட்ட இத்தனை வருஷமா பேசாம.. அவர் முகத்தை கூட பார்க்காம என்ன பாடுபடுத்துன அவரை.. பாரு.. இப்போ கூட உன்னைத்தான் ஏக்கமா பாத்துட்டு இருக்காரு.. இப்பாவது போய் என் புருஷன் கிட்ட பேசலாம் இல்லை..” என்று தன் கணவருக்காக ரேணுகா மகளிடம் ஆதங்கமாக சண்டையிட..

தன்னயே பார்த்து கொண்டிருந்த சந்திரனை கவனித்த ஹர்ஷினிக்கும், "இத்தனை வருஷமா கோவத்துல அவரை ஒதுக்கி வச்சி நிறைய கஷ்ட படுத்திருக்கோம்" என்று தெரிந்திருந்தாலும், இப்பொழுது அதையே ரேணுகா வார்த்தைகளாக சொல்ல, மிகவும் வருத்தம் தான்,

அதனாலே.. முயன்று தைரியத்தை வரவழைத்து கொண்டு அவரிடம் செல்ல, “இத்தனை வருடம் கழித்து தன்னிடம் மீண்டும் வரும் மகளை ஆனந்தமாக கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருக்க”, அவரை நெருங்கிய ஹர்ஷினி,

“என்ன பேசுவது..?” என்று சுபத்ரா போலே திணற, அந்த நொடியில் தன் இரு மகள்களின் ஒற்றுமையான தவிப்பை உணர்ந்த சந்திரன், “தானே ஹர்ஷினியின் கையை பாசத்தோடு பற்ற.. ஹர்ஷினிக்கும் தந்தை பாசத்தில் உள்ளுக்குள் உடைந்து அவரின் கைகளை பற்றி அதிலே முகம் புதைத்து அழ, சந்திரனும் கண்களில் தேங்கும் கண்ணீரோடு அவளின் தலையை பாசமாக வருடி விட, ஒரே நாளில் தங்கள் குடும்பத்தில் இழந்த சந்தோசம் மீண்டும் மீண்டதில் எல்லோருக்கும் மகிழ்ச்சியே,

“ஆச்சார்யாவை தவிர..” அவரின் பக்கத்திலே இருந்ததால் அவரின் உணர்வுகளை எளிதாக புரிந்து கொண்ட ஜெய்க்கு ஹர்ஷினி மேல் வருத்தமே..

“சரி.. கடவுள் சந்நிதானத்துல எல்லா பிரச்சனையும் நல்ல படியா முடிஞ்சது.. கிளம்புங்க வீட்டுக்கு போலாம்.. நல்ல நேரம் முடியறதுக்குள்ள வீட்டுக்கு கிளம்பிரனும்” என்று அன்னபூரணி சொல்ல,

எல்லோரும் அடுத்து அடுத்த செய்ய வேண்டிய வேலைகளை பார்க்க ஆரம்பிக்க.. இறுதியாக சுபத்ரா.. கணவர் வீடு செல்லும் நேரமும் வர, அவர் முதலில் தேடியது தன் தந்தையை தான்..

“கல்யாணத்துக்கு முதல் நாளே இரவு முழுவதும் அவரிடம் மனதார பேசி.. இத்தனை வருட கஷ்டத்தை நினைத்து, தேவியை நினைத்து அழுது இருந்தாலும்”,

“பிறந்த வீட்டை விட்டு செல்லும் போது அழாமல் இருக்க அவர் மட்டும் விதிவிலக்கா என்ன..?” அவர் கிளம்பும் போது மறுபடியும் ஒரு பாச அரங்கேற்றம் நடைபெற்று.. அவர் கணவர் வீடு செல்ல “எல்லோரின் மனதிலும் அழுத்திருந்த மிக பெரிய மனபாரம் நீங்கியதில்” அந்த நாள் இனிதே நிறைவடைந்தது.

அடுத்து “ஜெய்.. ஹர்ஷினி” திருமணத்திற்கு இன்னும் சிறிது நாட்களே இருந்ததால், எல்லோரின் கவனமும் அதிலே செல்ல நாட்கள் புயல் வேகத்தில் கடந்து, இன்னும் இரண்டு நாளில் திருமணம் என்னும் நிலையில்..

“ஆச்சார்யா.. எல்லோரிடமும் பேச வேண்டும்..” என்று அனைவரையும் “சுபத்ரா குடும்பம் முதல் ஜெய் குடும்பம் வரை” எல்லோரும் ஒன்று சேர, ஹர்ஷினிக்கு தான் சிறிது நாட்களாகவே இருந்த மிகப்பெரிய தவிப்பு இன்னும் இன்னும் அதிகமாகியயது,

ஏனெனில்.. கடந்து சென்ற நாட்களில் “என்னதான் ஆச்சார்யா சந்தோஷமாக தன் உயிர் பேத்தியின் திருமண வேலைகளை ஓடியாடி பார்த்தாலும் அவரிடம் தெரிந்த அலைப்புறுதலில், வேதனையில், குழப்பத்தில், இவை அனைத்தும் தன்னால் தானோ..? என்ற சந்தேகத்தில் ஹர்ஷினிக்கு குற்ற உணர்ச்சியோடு வருத்தமும் கூட..

அதோடு “ஜெயும்.. அவளின் செயல்.. கோவம் எல்லாம் தப்பு” என்றே தொடர்ந்து சாடி கொண்டிருந்தான்.

அவர் எல்லோரையும் பார்த்து விட்டு கணீரென பேச ஆரம்பிக்க, “நான் கொஞ்சம் பேசணும் தாத்தா..” என்று ஹர்ஷினி பரிதவிப்புடன் சொல்ல, கூர்மையாக அவளை பார்த்த ஆச்சார்யா,

“நான் பேசி முடிச்சதும்.. நீ பேசு ஹர்ஷி” என,

“ப்ளீஸ் தாத்தா.. நான்.. நான்.. பேசி முடிச்சிடுறேனே..” என்று வேண்டுகோளாக கேட்க,

“ம்ம்..” என்று பெருமூச்சு விட்ட ஆச்சார்யா பேசும்படி சைகை காட்ட, அவளோ பேசாமல் அவரிடம் வந்தவள் ஒரு நொடி தயங்கி விட்டு கேவலோடு பாய்ந்து அவரை கட்டி கொண்டு அழ, எல்லோருக்கும் அதிர்ச்சியே..

“மறுபடியும் சண்டையா..?” என்று தான் எல்லோருமே நினைத்து இருந்ததால் இந்த திருப்பத்தை எதிர்பாராமல் அதிர்ச்சியில் வாயடைத்து நிற்க, “ஜெய் மட்டும் இதை.. தான் எதிர்பார்த்தேன்” என்று ஹர்ஷினியை காதலாக பார்த்த படி நின்றான்..

“ஏன் ஆச்சார்யாவுமே.. ஹர்ஷினி பேச வேண்டும்.. என்று கேட்டதில், சண்டை தான் போடா போகிறாள்..” என்றே நினைத்து.. தடுத்து, தான் சொல்ல வந்ததை சொல்லிவிட எண்ணினார்..”


ஆனால்.. ஹர்ஷினியின் இந்த செயலை எதிர்ப்பார்க்காமல் ஒரு நிமிடம் திகைத்து நின்றவர், அடுத்து தானும் அவளை பாசத்தோடு அணைத்து கொள்ள, ஹர்ஷினி இன்னும் இன்னும் தான் அழுதாள்..

“தாத்தா.. என்னை மன்னிச்சிடுங்க..” என்று அழுகையோடு சொல்ல, யாருக்கும் முதலில் அவள் சொன்னதில் நம்பிக்கையே இல்லை.. எல்லோரும் நம்பாமல் ஒருவர் மாற்றி ஒருவர் பார்க்க, இவர்களின் செயலில் ஜெய்க்கு சிரிப்பு தான் வந்தது,

அதே சிரிப்போடே.. “உங்க காதுல விழுந்தது உண்மைதான்.. அவ அவங்க தாத்தாகிட்ட மன்னிப்பு தான் கேட்ட” என்று சொல்ல, அவனின் சிரிப்பில் கடுப்பான ஹர்ஷினி,

“நான் இங்க அழுதுட்டு இருக்கேன்.. இவர் என்னடான்னா என்னை வச்சி காமெடி பண்ணிட்டிருக்கார்..” என்று வீறு கொண்டு எழுந்தவள், வேகமாக ஆச்சார்யாவிடம் இருந்து விலகி அவனை முறைக்க,

“இங்க என்ன முறைப்பு வேண்டிக்கிடக்கு.. முதல்ல அவர்கிட்ட பேச வேண்டியதை பேசு..” என்று அதட்டலாக சொல்ல,

“என் தாத்தாகிட்ட பேச எனக்கு தெரியும்.. நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்” என்று கழுத்தை வெட்டி நொடித்தவள்,

“நீங்க என்ன.. அவர்கிட்ட ரொம்பத்தான் கொஞ்சி குலாவுறீங்க..” என்று ஆச்சார்யாவிடமும் கோவமாக எகிற, அவளின் பொறாமையில் தன் பேத்தி மீண்டும் கிடைத்து விட்டாள் என்று புரிந்த உடன் இத்தனை நாள் இருந்த டென்க்ஷன், பயம்.. வேதனை எல்லாம் நீங்கியது போல் இருந்தது ஆச்சார்யாவிற்கு..

“ஏய்.. நீ பேசவேண்டியதை முதல்ல பேசுடி..” என்று அவளை நெருங்கி ஜெய் கடுப்புடன் முணுமுணுத்து விட்டு செல்ல, “நாம இதை பத்தி அப்பறம் பேசலாம்..” என்று அவளே “தொடரும்..” போட்டு முடித்தவள்,

“தாத்தா.. என்னை மன்னிச்சிருங்க” என்று மனதார மறுபடியும் கேட்கவும்,

“ஷ்ஷ்.. எதுக்கு ஹர்ஷி மன்னிப்பெல்லாம் கேட்கிற விடு..”

“இல்லை தாத்தா.. கொஞ்ச நாளாவே எனக்குள்ள ஒரு உறுத்தல்.. நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்துறோனோன்னு தோணிட்டே இருக்கு.. ஏன் அதுதான் உண்மையும் கூட, நீங்க என் மேல வச்சிருக்கிற பாசத்துல ஒரு சதவீதம் கூட குறை கண்டுபிடிக்க முடியாது..”

“இந்த வயசுலயும்.. என் கல்யாணத்துக்காக நீங்க ஓடியாடி சந்தோஷமா வேலை செய்றீங்க.. எதனால் என் மேல வச்ச அளவுக்கடந்த பாசத்தால் தானே..”


“எனக்கும் உங்களை ரொம்ப.. ரொம்ப.. பிடிக்கும் தாத்தா.. எல்லோருக்கும் அவங்க அப்பா ரோல் மாடலா இருந்தா.. எனக்கு எப்பவும் நீங்க தான் ரோல் மாடலா இருந்திருக்கேங்க..”


“என்னை பொறுத்தவரை என் தாத்தா எப்பவும் எந்த தப்பும் செய்யவே மாட்டாரு.. அவர் ரொம்ப நல்லவர்.. பாசமானவர்..”

“இன்னும் எப்படி சொல்ல..?”

“ என் மனசுல உங்களுக்கு ஒரு ஹீரோ இமேஜ் தாத்தா..” என்று சொல்லும்போதே அவளின் குரலில் இருந்த பெருமையில் கர்வத்தில் ஆச்சார்யாவிற்குமே பெருமை தான்..

“ஆனால்..” என்று அவரை அதிர்ப்தியாக பார்த்தவள்,

“இந்த இமேஜ் முதல்ல உடைஞ்சது எப்போ தெரியுமா..? தாத்தா..

“நீங்க அந்த காளிதாஸ் கேட்டதுக்கு பயந்து.. என்னை டான்ஸை விட சொன்னப்போ..” என்று நிறுத்தி நிதானமாக சொல்ல,

“ஹர்ஷினி..” என்ற ஜெயின் அதட்டல் உச்ச கட்ட கோவத்தில் தான் ஒலித்தது,

“இருக்கட்டும் ஜெய்.. அவ பேசட்டும்” என்று ஆச்சார்யா உறுதியாக சொல்லிவிட ஜெய்க்கு எதுவும் செய்ய முடியாத நிலை..

“மறுபடியும்.. மறுபடியும் ஏன் இதை பற்றியே பேசி பேசி அவரை வருத்தப்பட வைக்க வேண்டும் என்று ஹர்ஷினியின் மேல் அளவுகடந்த கோவம் எரிமலையாய் கொதித்தது”.

ஆனால்… “ஹர்ஷினியோ இன்று தன்னுடைய எண்ணத்தை தாத்தாவிடம் சொல்லிவிட வேண்டும்” என்று உறுதியோடு இருந்ததால் அவள் ஜெயின் புறம் திரும்ப கூட இல்லை,

அதுக்கு அப்பறம் “சுபத்ரா அத்தை விஷயத்துல” என்று சொல்ல,

ஆச்சார்யா.. அதில் “தன் தவறு எங்கே..?” என்று புரியாமல் பார்க்க,

“நீங்க முதல்லே அத்தைக்கு ஓகே சொல்லிருந்தா எந்த பிரச்சனையும் வந்தே இருந்திருக்காதே.. ஏன்னா..? உங்களுக்குமே இளங்கோ மாமா மேல திருப்தி இல்ல.. எல்லோரும் பெருமையா பார்க்க வேண்டிய மனுஷனை.. நீங்க உங்க மகளுக்கு ஏத்தவனா..? இல்லையான்னு..? யோசிச்சீங்க..

“உங்களுக்கும் பொண்ணு இருக்கு.. பேத்தி இருக்கு.. அவரோட நிலைமையை தெரிஞ்சவுடன் நீங்கதான் முதல்ல அவருக்கு யோசிக்காமலே பொண்ணு கொடுத்திருக்கணும்”, என்று சொன்னவள்,

“அடுத்து ஜெய்..” என்று சொல்ல,

“என்னை பத்தி நீ பேசாதே” என்று தன்னை பற்றி பேசுவாள் என்று உறுதியாக தெரிந்ததால், ஜெய் கோவமாக கத்த, அவனின் கோவத்தில் ஹர்ஷினி உடல் அதிர நின்றுருந்தாலே தவிர, பின் வாங்க வில்லை.

ஆச்சர்யாதான் மறுபடியும் ஜெயயை அடக்க, ஹர்ஷினி உறுதியுடன் தான் பேசினாள். “அவரை பத்தி நாம ஏற்கனவே நிறைய முறை பேசிட்டோம்.. சண்டை போட்டுட்டோம்”.

“ஆனாலும்.. இப்போவும் சொல்றேன் “நீங்க அவருக்கு செஞ்சது ரொம்ப பெரிய தப்பு, அநியாயம் தாத்தா.. ஒருத்தரோட உழைப்பை. அங்கீகாரத்தை.. அடையாளத்தை.. இலட்சியத்தை வேரோடு பிடுங்கிறதுக்கு எந்த காரணம் சொன்னாலும் ஏத்தக்கவே முடியாது தாத்தா..” என்று சொல்லவும், ஜெயின் தந்தை மகாதேவனுக்கு மருமகளின் தைரியம்.. நேர்மை.. காதலை நினைத்து பெருமையே.

“தான்.. பேச பேச மருகி போய் நின்றிருந்த ஆச்சார்யாவை கண்ட ஹர்ஷினிக்கு வருத்தம் இருந்தாலும், தன் எண்ணத்தை சொல்லிவிட வேண்டும்” என்று தன் மனதை கல்லாக்கி கொண்டு எல்லாவற்றையும் சொல்லி முடித்தவள்,

இதையெல்லம் உங்களை தப்பு சொல்லணும்ன்னு நான் சொல்லலை தாத்தா.. “என் தாத்தா ஒரு ஹீரோன்னு நினைச்சி உங்களை பாலோவ் பண்ணியிருந்த என்னால.. இதையெல்லாம் ஜீரணிக்கவே முடியலை”

“உங்களுக்கு தெரியாது தாத்தா.. என் தாத்தாவா..? இப்படின்னு நான் நிறைய நாள் எனக்குள்ளே அழுது.. எனக்குள்ளே நிறைய சண்டை போட்டு அந்த அழுத்தம் தாங்காம உங்க கிட்ட சண்டை போட்டு, அதை நினைச்சி நானே வேதனை பட்டு, ரொம்ப ரொம்ப கொடுமையா இருக்கும் தாத்தா..”

“நீங்க பொய்த்து போனது ஒரு பக்கம்.. ஜெயோட கனவு ஒரு பக்கம்ன்னு ரொம்ப எனக்குள்ளே நான் அல்லாடிருக்கேன்”.

“என்னால யார்கிட்ட போய் என் கஷ்டத்தை சொல்ல முடியும்.. ஏன்னா பொறந்ததுல இருந்து நான் யார்கிட்டேயும் எப்பவும்.. எதுவும்.. ஷேர் செஞ்சதே இல்லை.. உங்களை தவிர”..

ஆனா.. இப்போ நீங்க குடுக்கிற கஷ்டத்தை உங்க கிட்டேயே நான் எப்படி சொல்லி..? என்னன்னு சொல்லி? ஆறுதல் தேட முடியும்..” என்று விரக்தியாக முடிக்க, கேட்ட எல்லோருக்குமே மனம் மிகவும் கனத்து போனது,,

“ஆச்சார்யாவிற்கோ.. எதையும் சொல்லிவிட முடியாத நிலை..” மிகவும் திணறி போனவராக அவளை பார்க்க,

“நான் இப்போவும் உங்களை கஷ்டப்படுத்த இதையெல்லாம் சொல்லலை தாத்தா.. நீங்க கொஞ்ச நாளாவே வேதனையோடு இருக்கிறது எனக்கு தெரியும்”.

“என்னால தானோன்ற குற்ற உணர்ச்சி, வருத்தத்தால தான் எல்லாத்தையும் இப்பவே உங்ககிட்ட சொல்லிட்டு இதை எல்லாத்தையும் முடிச்சிடலாம்ன்னு சொல்லிட்டேன்”,

இனி.. “நமக்குள்ள டான்ஸ் அப்படிங்கிற பேச்சோ.. சண்டையோ.. எதுவுமே.. எப்பவுமே.. வேண்டாம் தாத்தா” என்று முடிக்க, கேட்டிருந்த ஆச்சார்யாவிற்கு எல்லையில்லா சந்தோஷம் தான், அதையே அவரின் முகம் பிரதிபலிக்க எல்லோருக்கும் அவரின் மேல் அதிர்ப்தியே..!!
 
Status
Not open for further replies.
Top