All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ப்ரியா நிலாவின் “என் நிஜமே நீ தானடி” - கதை திரி

Status
Not open for further replies.

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 16


பார்க்கில் இருந்து வீட்டிற்கு வேகமாக வந்த வானதி தன்னுடைய பையை அங்கிருந்த சோபாவில் போட்டு விட்டு சமயலறைக்குள் சென்று தண்ணீரை குடித்தவுடன் தான் அவளுடைய கோவம் சற்று அடங்கியது போல் இருந்தது. இப்படி திடீரென அவன் மனதில் இருப்பதை கூறுவான் என்று அவள் எதிர்ப்பார்க்கவில்லை பிறந்த நாளன்று அவனுடைய மனதை கஷ்டப்படுத்த கூடாது என்பதற்காக பதிலுக்கு எதுவும் பேசாமல் வந்து விட்டாள் ஆனாலும் அவன் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் காதுகளுக்குள் கேட்டுக் கொண்டே இருப்பதை போல் தோன்றியது.


மும்பைக்கு செல்ல நேரம் ஆகியதால் வேகமாக தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து விட்டு தயாராகி கொண்டிருந்த போது அந்த அறைக்குள் நுழைந்தான் ஷக்தி. அவன் கிளம்பி தயாராகி இருப்பதை கண்ட ஷக்தி, “ நான் கூட நீ எங்க போகாம இருந்துடுவியோன்னு நினைச்சேன் ஆதி “ என்றவனின் குரலில் அவனை திரும்பி பார்த்தவன், “ நான் ஏன் போகாம இருக்க போறேன்.... எதாவது உளறனும்ன்னு முடிவோடு இருக்கியா “ என்றான்.


ஷக்தி, “ அது இல்ல ஆதி.... நீ சிஸ்டர பாக்க போனல அதான் வந்தவுடனே மைண்டை மாத்திக்கிட்டியோன்னு தான் “ என்று கூறி சிரித்தவனை பார்த்த ஆதி எதுவும் கூறாமல் அமைதியாக அவன் வேலையை பார்த்து கொண்டிருந்தான். ‘ என்ன இவன் வானதியை பத்தி பேசினாலே முகம் ப்ரைட் ஆயிடும் இப்ப என்னன்னா அமைதியா இருக்கான். ஒரு வேளை பாக்க போன இடத்துல எதாவது நடந்து இருக்குமோ ‘ என்று நினைத்தவன் அவன் அருகில் சென்ற ஷக்தி, “ என்னாச்சு ஆதி சிஸ்டர் கூட பிரச்சனையா.... நீ ஏன் ஒரு மாதிரியா இருக்க” என்று கேட்டான்.


அவன் அப்படி கேட்டதும் எதுவும் மறைக்க தோன்றாமல் மதியம் வானதியை சந்தித்தப்பின் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான். அதை கேட்ட ஷக்தி, “ என்னடா இப்படி திடீர்ன்னு உன் மனசுல இருக்கறதை சொல்லிட்ட.... சரி சிஸ்டர் எதுவும் சொல்லலியா “.


ஆதி, “ அவ என்னை திட்டி இருந்தா கூட பரவால ஆனா எதுவும் பேசாமா போய்ட்டா அதான் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு “.


ஷக்தி, “ ஆதி சிஸ்டர் மனசுல நீ இருக்க அதனால தான் பிறந்த நாள் அதுவுமா உன் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு தான் எதுவும் சொல்லாம போய் இருக்கா.... ஒரு வேலை உன்னை பிடிக்கலனா முகத்துக்கு நேரா சொல்லி இருப்பால ஏதோ ஒன்னு அவள தடுக்குது....நீ சொன்ன உடனே ஒத்துக்க கூடாதுன்னு பிடிவாதமா இருக்குமோ.... ஆனாலும் இவ்வளவு பிடிவாதம் இருக்க கூடாது ஆதி “ .


அவன் கூறியதை கேட்டு சிரித்த ஆதி, “ நீ சொல்ற மாதிரி மட்டும் இருந்தா அதை விட சந்தோஷம் என் வாழ்க்கையில் வேற என்ன இருக்கு.... அப்பறம் என்னோட மனைவிக்கு இந்த அளவுக்கு கூட பிடிவாதம் இல்லனா எப்படி.... உண்மைய சொல்லனும்ன்னா எனக்கு அவளோட குணம் எப்பவும் பிடிக்கும்.... . ஷக்தி ஷர்மீ கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பன்னிட்டு வா புரிதா.... இந்த ரிஷி கிட்ட நான் சொன்ன வேலை எந்த லெவெல்ல இருக்குன்னு தெரில கொடுத்த டைம் முடிய போகுது அவன் உனக்கு போன் பன்னா எல்லாம் டீட்டைல்யயும் என்னோட மெயில்க்கு அனுப்ப சொல்லு சரியா “ என்று அவன் கூறிய அனைத்திற்கும் தான் பார்த்து கொள்வதாக உறுதியளித்து ஆதியை வழியனுப்பி வைத்தான்.


அன்று வேலையில் இருந்து வீட்டுக்கு வந்ததிலிருந்து வானதியை கவனித்து கொண்டு தான் இருந்தாள் மித்ரா. இன்று அவளின் அன்னையின் பிறந்த நாள் என்பதால் அவர்களின் நினைவில் இருப்பதால் இவ்வாறு சோகமாக இருப்பது போல் அவளுக்கு தோன்றியது. அதனால் அவளை எந்த தொந்தரவும் செய்யாமல் அவள் போக்கிலே விட்டு விட்டாள். வானதியின் எண்ணம் முழுவதும் அருளே நிறைந்திருந்தான். இனி அவனை பற்றி நினைக்க கூடாது என்று எண்ணினாலும் மனம் அவள் அறியாமல் அவனையே நினைக்க வைத்தது.


அடுத்த நாள் காலையில் இருந்து ஆதிக்கு மும்பையில் இருக்கும் கம்பெனியின் பிரச்சனையை பற்றி தெரிந்து கொண்டு அதை சரி செய்யவே நேரம் சரியாக இருந்தது. அந்த நெருக்கடியான நேரத்திலும் சிறிய இடைவேளை கிடைக்கும் போது எல்லாம் வானதிக்கு எப்போதும் போலவே மெசேஜ் அனுப்பி கொண்டு தான் இருந்தான். அவை அனைத்தையும் அவள் பார்த்தாலும் எதற்குமே பதில் அனுப்பவில்லை. அதற்கு அவன் பெரிதாக கவலைப்படவில்லை அவள் தான் அனுப்பியவற்றை பார்ப்பதே அவனுக்கு ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும் அவளின் குரலை கேட்க வேண்டும் என்று அவன் அழைத்த போது எல்லாம் ஒரு முறைக் கூட எடுக்கவே இல்லை என்பது அவனுக்கு சிறிது ஏமாற்றமாகவே இருந்தது.


அடுத்த நாள் ஸ்கூலுக்கு சென்ற போது தான் வானதியின் மனதிற்கு சற்று நிம்மதியாக இருந்தது. நாளையில் இருந்து அவள் பள்ளியில் விடுமுறை ஆரம்பமாகிறது. அதனால் வேலைகள் அதிகமாக இருந்ததால் வேறு எதை பற்றியும் சிந்திக்க நேரம் இல்லாது போனது. மாலை விடு வந்தவுடன் தன்னுடைய போனை எடுத்து பார்த்த போது தான் தெரிந்தது ஆதி சொன்னதை போலவே பல மெசேஜ் அனுப்பி வைத்துள்ளதை அனைத்தையும் பார்த்தாலும் எதற்குமே அவளுக்கு பதில் அனுப்ப மனம் வரவில்லை. சரியாக அதே நேரம் அவன் அவளை அழைத்தான். அதில் ஒளிர்ந்த அவன் பெயரை பார்க்கும் போது எடுக்க தோன்றினாலும் அவளால் அதை எடுக்க முடியவில்லை.


மாலை விடு வந்த மித்ராவுக்கு வானதியின் செயல்கள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதை போலவே தோன்றியது. அதுவும் அவள் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வருவதும் அதை அவள் அது முழுவதும் நிற்க்கும் வரை பார்ப்பதுமாக இருப்பவளை காணும் போது மித்ராவுக்கு சந்தேகமாக இருந்தது.


இரவு உணவு உண்டப்பிறகு அவள் அருகில் அமர்ந்த மித்ரா, “ ஆரூ.... உனக்கு என்னாச்சு நேத்துல இருந்து நீ சரியாவே இல்லை எதாவது பிரச்சனையா “.


வானதி, “ அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை மித்ரா. நான் எப்பவும் போல தான் இருக்கேன் “ என்று சமாளித்தவளின் முகத்தை தன் புறமாக திருப்பிய மித்ரா, “ என்னோட வானதியோட முகம் எப்படி இருக்கும்ன்னு எனக்கு தெரியாத.... எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு ஆரூ “ என்று பாசமாக கேட்பவளிடம் இதற்குமேல் எதுவும் மறைக்க தோன்றாமல் நேற்று நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்தாள். அதை கேட்டு கொண்டிருந்த மித்ராவுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.


மித்ரா, “ ஆரூ நீ உன்மையாவா சொல்ற.... எனக்கு இப்ப தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு நான் தான் அன்னிக்கே சொன்னேன்ல இது இப்படி வந்து தான் முடியும்ன்னு “ என்று அவளை சந்தோஷமாக கட்டிக்கொன்டாள் மித்ரா. அவளை தன்னிடமிருந்து பிரித்த வானதி, “ இது எல்லாம் சரிப்பட்டு வராது மித்து.... அவர்கிட்ட நான் எதுவும் சொல்லல அப்படின்றதுக்காக எனக்கு இதுல சம்மதம்ன்னு அர்த்தம் கிடையாது அதை நீ புரிஞ்சிக்கோ “ என்றாள்.


அவளை இப்போது தெளிவுபடுத்த வேண்டியது தன்னுடைய கடமை என்பதை உணர்ந்த மித்ரா, “ சரி அப்படின்னா இப்ப நான் உன்கிட்ட கேக்கர கேள்விக்கு மனசுல தோன்றத அப்படியே சொல்லனும்.... முதல்ல இதுவரைக்கும் அவர் உன்னை தவறான எண்ணத்தொட பார்க்கவோ இல்லனா தொடவோ செஞ்சி இருக்கார".


அவள் இப்படி கேட்ப்பாள் என்று எதிர்ப்பார்க்காத வானதி அவர்கள் இருவரும் சந்தித்த போது நடந்த அனைத்து நிகழ்வுகளும் அவள் கண் முன்னால் விரிந்தது. அவன் நீட்டிய கையை பிடிக்க தோன்றவில்லை என்று அவள் கூறியதற்காக இன்று வரை தள்ளி நிற்கும் அவன் கண்ணியம் அவளை கவர்ந்த விஷயம். அதனால் மித்ராவிடம், “ அப்படி ஒன்னும் கிடையாது அவர் எப்பவும் என் கிட்ட தவறான எண்ணத்தோட ஒரு வார்த்தை கூட பேசினது இல்லை மித்ரா.... இந்த மாதிரி எல்லாம் அவரப்பத்தி பேசாத “ என்றாள் வானதி.


அவள் கூறியதை நினைத்து மனதிற்குள் சிரித்த மித்ரா, “ ஹ்ம்.... அவர் கூட இருக்கும் போது நீ எப்படி பீல் பண்ணி இருக்க.... அவரா உனக்கு பிடிக்குமா பிடிக்காத நேரடியா சொல்லு".


சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், “ அவர் கூட இருக்கும் போது எல்லாம் நான் பாதுக்காப்பா தான் பீல் பண்ணியிருக்கேன்.... அதுக்காப்புறம் எனக்கு அவர.... பிடிக்கும் ஆனா நீ நினைக்கற மாதிரி எல்லாம் கிடையாது" என்று சமாளித்தவளை பார்த்த மித்ரா, “ இங்க பாரு ஆரூ.... நீ சொல்றத எல்லாம் வெச்சி பாக்க்கும் போது எனக்கு தெரிஞ்சி உன் மனசுக்குள்ளையும் அவர் தான் இருக்கார் ஆனா அதை நீ ஒத்துக்க மாட்டேங்கற.... நீ சொன்னது எல்லாம் பாக்கும் போது அவர் நல்லவரா தான் தெரியுது.... ஒரு நல்ல வாழ்க்கை உன்னை தேடி வந்து இருக்கு தயவுசெய்து வேண்டாம்ன்னு சொல்லி அதை வீணாக்கிடாத. உன் கையால சமைச்சி எல்லாருக்கும் கொடுக்கறதனால மட்டும் அம்மா சந்தோஷப்பட மாட்டாங்க. உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை நீ அமைச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்றது தான் நீ அவங்களுக்கு கொடுக்கற உண்மையான சந்தோஷம்.... இங்க எல்லாரும் கெட்டவங்க இல்ல ஆரூ நம்பு. இதுக்கு மேல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. நீ எந்த முடிவு எடுத்தாலும் சரியாத்தான் இருக்கும்.... நிதானமா யோசிச்சி ஒரு நல்ல முடிவெடு “ என்றவள் எழுந்து அவளுடைய அறைக்குள் சென்று விட்டாள்.


அவள் கூறியதை கேட்கும் போது அனைத்தும் சரியாகவேப்பட்டது. ஆனால் என்ன முடிவெடுப்பது என்று அவளுக்கு குழப்பமாகவே இருந்தது. அதைப்பற்றி சிந்தித்து கொண்டிருந்தவளுக்கு அன்றைய இரவு தூங்கா இரவாகவே அமைந்தது.


அடுத்த நாள் காலையில் ஆபீஸ்சில் சுரேந்தர் தன்னுடைய அறையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அப்போது அவனுடைய நண்பன் ரகு அவன் அறைக்குள் நுழைந்தான்.


ரகு, “ என்னாச்சு சுரேன்.... ஏன் இவ்வளவு டென்ஷன்னா இருக்க எதாவது பிரச்சனையா “ என்று கேட்டான்.


அவனை பார்த்த சுரேன், “ ஆமாம் ரகு.... ஒரு பிரச்சனை தான் பாஸ் என்கிட்ட கொடுத்துட்டு போன வேலையை என்னால செய்ய முடியாம போய்டுமோன்னு தான் எனக்கு பதட்டமா இருக்கு “ என்றவன் ஆதி ஊருக்கு போவதற்க்கு முன் அவனிடம் குடுத்த வேலையை பற்றி கூறினான். அதை முழுவதுமாக கேட்ட ரகு, “ இதுல டென்ஷன் ஆக என்ன இருக்கு அந்த இடத்தோட சொந்தக்காரங்ககிட்ட போய் பேசி வேலையை முடி” என்றான்.


சுரேன், “ பிரச்சனையே அதுல தான் இருக்கு. அந்த இடம் ஒரு ட்ரஸ்ட் பேர்ல இருக்கு.... அந்த ட்ரஸ்டா நடத்துறது ஒரு லேடி. அவங்க அங்க ஆஸ்ரமத்துக்கு பில்டிங் கட்ட போறாங்கலாம் அதனால கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அந்த இடம் இப்ப அவங்க இருக்க ஆஸ்ரமத்துக்கு பக்கத்துல இருக்கறதுனால எங்களுக்கு அந்த இடம் ரொம்ப முக்கியம்ன்னு சொன்னாங்க.... அதான் இப்ப என்ன பன்றதுன்னு தெரில “ என்று புலம்பியவனை பார்க்கும் போது அவன் கூறியது அனைத்தும் சரியென்றேபட்டது. என்ன செய்வது என்று சிந்தித்தான்.


ரகு, “ சுரேன் அவங்க இப்ப இருக்க இடமும் நாம பார்த்த லேண்ட் பக்கத்துல தான இருக்கு.... அது அவங்களுக்கு சொந்தமானதா “ என்று கேட்டவனை ஒன்றும் புரியாமல் பார்த்த சுரேந்தர், “ அந்த லேண்ட் பக்கத்துல தான் இருக்கு அதுவும் அவங்களுக்கு சொந்தமானது கிடையாது. ஆனா ரொம்ப வருஷமா அங்க தான் இருக்காங்க.... நான் எல்லாத்தையும் தெளிவா விசாரிச்சிட்டேன் “ என்றான். அப்போது ரகு தனக்கு ஒரு யோசனை கிடைத்துள்ளதாக தனக்கு தோன்றியதை அவனிடம் தெளிவாக கூறினான். அதைக்கேட்ட சுரேந்தர்க்கு அப்போது தான் சந்தோஷமாக இருந்தது. அந்த இடம் நிச்ச்சயமாக நமக்கு சொந்தமாகி விடும் என்று எண்ணியவன். அந்த யோசனையை கூறிய ரகுவை கட்டியனைத்து விட்டு, “ ரொம்ப தேங்க்ஸ் ரகு.... செம ஐடியா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..... கண்டிப்பா இது வொர்க்ஔட் ஆகும். இதை மட்டும் நான் சரியா செஞ்சிட்ட பாஸ் கிட்ட எனக்கு நல்ல பேர் கிடைக்கும் “ என்று மகிழ்ந்தவன் அடுத்து செய்ய வேண்டியதை பற்றி சிந்திக்க ஆரம்பித்தான்.


இன்றிலிருந்து பள்ளி விடுமுறை என்பதால் வானதிக்கு வீட்டில் பொழுதே போகவில்லை. நேற்று முழுவதும் போன் செய்து கொண்டிருந்த ஆதியிடம் இருந்து காலையில் இருந்தே ஒரு மெசேஜ் கூட வராதது அவளுக்கு கொஞ்சம் கவலையாகவும் இருந்தது. நொடிக்கொரு தரம் அவனிடமிருந்து எதாவது செய்தி வந்துள்ளதா என்று போனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தன்னை நினைத்து அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. இது தான் தான என்று. ஒருவனை பற்றி இந்த அளவுக்கு அவள் இது வரை சிந்தித்ததே இல்லை. ஆதியை சந்தித்த நாளில் இருந்து இன்று வரை நடந்தது அனைத்தையும் நினைத்து கொண்டிருந்தவளுக்கு நேற்று மித்ரா கூறியது சரியென தோன்றியது. இதற்கு மேல் இந்த குழப்பத்துக்கு விடை தெரியாமல் இருக்க முடியாது என்று நினைத்தவள். அவள் எப்பவும் குழப்பமாக இருக்கும் போது கோவிலுக்கு செல்வது வழக்கம் அங்கு செல்வதன் மூலம் ஒரு தெளிவு கிடைக்கும் என்பது அவளுடைய எண்ணம். இப்போதும் தன் மனதில் இருக்கும் இந்த உணர்வுக்கு என்ன அர்த்தம் என்று அறிந்து கொள்ள கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தாள்.


பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்றவள் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு அர்ச்சனை கூடையை வாங்கி கொண்டு உள்ளே சென்றாள். தான் மனதில் இருக்கும் குழப்பத்துக்கு விடை கூறுமாறு வேண்டியப்படி தன் கையில் இருந்த அர்ச்சனை தட்டை ஐயரிடம் கொடுத்து விட்டு கண் மூடி வேண்டினாள். அர்ச்சனை முடிந்து தட்டை எடுத்து கொண்டு வந்த ஐயர், “ நீங்க கொண்டு வந்த தேங்காய்ல பூ வந்து இருக்கு..... உங்க வேண்டுதல் நாள்ளப்படியா நிறைவேறும் “ என்றவர் பிரசாதத்தையும் தட்டையும் கையில் கொடுத்து விட்டு சென்று விட்டார். அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை அவள் எதை நினைத்து கொண்டு வந்தாளோ அதற்கு அந்த சிவனே சம்மதம் கூறியது போல தோன்றியது.


அந்த யோசனையுடன் பிரகாரத்தை சுற்றியவள் அங்கிருந்த மண்டப்பத்தில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தாள். வெகு நேரம் தன்னுடைய மனதை ஒரு நிலைப்படுத்தி அந்த சிவனை நினைத்து கொண்டிருந்த போது திடீரென்று ஆதியின் முகம் அவள் கண் முன்னால் தோன்றியதால் திடுக்கிட்டு அவள் கண் விழித்த போது கோவில் மணி அடிக்க ஆரம்பித்தது. அவள் எந்த கேள்வியுடன் கோவிலுக்கு வந்தாளோ அதற்கான விடை கிடைத்து விட்டதை அவள் மனது உணர்ந்து கொண்டது. இதுவரை எதற்குமே அசையாத தன் மனம் அருளிடம் சென்று விட்டதை நினைக்கும் போது சந்தொஷமாகவே இருந்தது. இந்த விஷயத்தை முதலில் வீட்டிற்கு சென்றவுடன் அருளிடமும் மித்ராவிடமும் கூற வேண்டும் என்று எண்ணியவள் தனக்கு சரியான வழியை காண்ப்பித்த அந்த சிவபெருமானுக்கு நன்றி செலுத்தி விட்டு கோவிலை விட்டு வெளியே வந்தாள் வானதி.


அதே நேரம் மும்பையில் இன்று நிற்க கூட நேரம் இல்லாமல் வேலை அவனை சூழ்ந்து கொண்டது. அவனால் வானதியிடம் கூட பேச முடியாத அளவுக்கு இருந்தது. மாலை நேரம் முடிய போகும் நேரம் தான் ஆதிக்கு எல்லா வேலையும் முடித்து தன்னுடைய வீட்டிற்கு வந்தவன் ஒய்வு எடுத்து விட்டு காலையில் இருந்து எதுவும் உண்ணாததால் சாப்பிட்டு விட்டு வானதியிடம் பேச வேண்டும் என்று நினைத்தப்படியே சாப்பிட்டு கொண்டிருந்தான். அப்போது திடீரென்று அவனுடைய இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவனுடைய மனம் தனக்கு நெருக்கமானவருக்கு ஏதோ ஆபத்து ஏற்ப்படப்போவதுப்போல் தோன்றியது. வீட்டிற்கு வரும் போது தான் ஷக்தியிடம் பேசினான் அவர்கள் இப்போது தான் ஹோட்டல் அறைக்கு வந்ததாக தெரிவித்தனர். பிறகு யாருக்கு என்று யோசித்த போது வானதியின் முகம் அவன் கண் முன்னால் வந்ததும் பதட்டம் அதிகமாக தொடங்கியது. உடனே தன்னுடைய போனை எடுத்து அவளுடைய எண்ணூக்கு வேகமாக அழைத்தான். அவனுடைய கேட்ட நேரம் அவள் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேரம் ஆக ஆக அவனுக்கு பயம் வர ஆரம்பித்தது.


அதே நேரம் இருட்டி விட்டதால் வேகமாக வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்த வானதியின் வண்டியில் திடீரென்று ப்ரேக் பிடிக்க முடியாமல் போய் விட்டது. வானதிக்கு மனதிற்குள் பயம் வர ஆரம்பித்தது ஆனால் இப்போது பயம் கொள்ள வேண்டிய நேரமல்லா நிதானமாக சிந்திக்க வேண்டிய நேரம் என்பதை உணர்ந்தவள். முதலில் வண்டியின் வேகத்தை குறைத்து மெதுவாக செல்ல ஆரம்பித்தாள் அப்போது இடத்து பக்கத்து சந்தில் இருந்து ஒரு கார் திரும்பியது. அந்த நேரம் தன்னுடைய வண்டியை நிறுத்த .முடியாததால் காரின் மீது மோதி வண்டியோடு கீழே விழுந்தவள் தலையில் அடிப்பட்டு ஆழ்ந்த மயக்கத்திற்க்கு செல்ல ஆரம்பித்தாள்.


வானதிக்கு நிகழப்போவது என்ன.... ஆதியால் அவளை தொடர்பு கொள்ள முடியுமா....


உந்தன் முகம் பார்த்தப்பின்னே

கண்ணிழந்து போவதேன்றால்

கண்கள் இரண்டும் நான் இழப்பேன்
இப்போதே நான் இப்போதே

உந்தன் முகம் பார்க்கும் முன்னே

நான் மறைந்து போவதேன்றால்

கண்கள் மட்டும் அப்பொழுதும்

மூடாதே இமை மூடாதே

காதலே என் காதலே

எனை காணிக்கை தந்துவிட்டேன்

சோதனை இனி தேவையா

சுடும் மூச்சினில் வெந்துவிட்டேன்

காதல் என்னும் சாபம்

தந்த தேவதையே

காணலாமோ ராகம்

நின்று போவதையே....


நிஜத்தை தேடும்....


உங்களின் கருத்துகளை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்
....
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
த்தியாயம் 17


சந்திரிகா வின் அடியாட்கள் வானதி கோவிலுக்குள் செல்வதை பார்த்தப்பின் அவளை எப்படியாவது யாருக்கும் சந்தேகம் வராமல் அவளின் கதையை முடிக்க வேண்டும் என்று அங்கிருந்த இருவர் சிந்தித்து கொண்டிருந்த போது அவர்களுக்கு ஒரு எண்ணம் எழுந்தது. அதாவது அவள் வண்டியின் ப்ரேக் வயரை கட் செய்து விட்டால் அதன் மூலம் விபத்து நேர்ந்து இறந்து விட்டால் கூட யாருக்கும் சந்தேகம் வராது என்று திட்டம் தீட்டியவர்கள். அவள் உள்ளே சென்றவுடன் ஆள் நடமாட்டம் இல்லாத நேரமாக பார்த்து அவள் வண்டியின் ப்ரேக்கை யாருக்கும் தெரியாதவாரு அறுத்து விட்டனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அவள் கோவிலை விட்டு வெளியே வந்து வண்டியை எடுத்து கொண்டு சென்றதை மறைந்து இருந்து பார்த்தவர்கள். வானதி சிறிது தூரம் சென்றதும் அவளை சற்று இடைவெளி விட்டு பின் தொடர்ந்து கொண்டிருந்த போது அவள் வண்டி தாறுமாறாக செல்வதையும் ஒரு காரில் மோதி கீழே விழுவதையும் பார்த்தனர். பிறகு அங்கிருந்து சென்று விட்டனர்.


ஆதி சொன்ன வேலையை முடித்த ரிஷி காரில் சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் அப்போது ஒரு திருப்பத்தில் தீடிரென ஒரு ஸ்கூட்டி மோதுவது போல் வருவதை கண்டவன் காரை சட்டென நிறுத்தி விட்டான். ஆனால் அதற்குள் வண்டியின் முன்னால் இடித்து ஒரு பெண் கீழே விழுவதை பார்த்து விட்டு வேகமாக வெளியே வந்து பார்த்த போது அந்த பெண் மயங்கி இருப்பதை கண்டு அவளை எழுப்புவதற்காக அருகில் சென்று அவளின் முகத்தை பார்த்தவன் அதிர்ந்து நின்றான். ஏன்னெனில் யாரை பற்றி விசாரிக்க நீலகிரி வரை சென்று வந்தானோ அந்த வானதி இப்போது கீழே மயங்கி இருப்பதை கண்டவன் அவளை தூக்கி காரில் படுக்க வைத்து விட்டு அவள் கொண்டு வந்த வண்டியை எடுத்து ஒரமாக நிறுத்தி விட்டு அவளின் பையை எடுத்து கொண்டு மறுத்துவமனைக்கு சென்றான்.


வானதியை அங்கு சேர்த்து விட்டு வெளியே மருத்துவருக்காக காத்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்தவர், “ அவங்களுக்கு கைல கொஞ்சம் அடிப்பட்டு இருக்கு…. விழுந்த அதிர்ச்சில தான் மயங்கி விழுந்து இருக்காங்க. நல்ல வேலை வண்டி அந்த அளவுக்கு பலமா மோதல…. இன்னும் கொஞ்ச நேரத்தில கண் முழிச்சிடுவாங்க நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போலாம் “ என்று அவளின் உடல்நிலை பற்றி விவரமாக கூறி விட்டு சென்று விட்டார். வானதியை பார்க்க உள்ளே செல்லும் போது அவளின் பையில் இருந்த கைப்பேசி ரொம்ப நேரமாக அடித்து கொண்டிருந்ததை அப்போது தான் கவனித்தான். அதை வெளியே எடுத்து பார்த்தால் அதில் அருள் என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டிருப்பதை பார்த்து யோசனையோடு அதை எடுத்து காதில் வைத்தான்.


ரொம்ப நேரமாக வானதியின் எண்ணிணூக்கு முயற்சி செய்து கொண்டிருந்தான் ஆதி நேரம் ஆக ஆக அவன் மனதை பயம் சூழ ஆரம்பித்தது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூட அவனால் சிந்திக்க முடியாமல் இருந்தது. அவளின் எண்ணிற்க்கே விடாமல் முயற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது அவள் எண்ணிற்க்கு ரிங் போய் அது எடுக்கப்பட்டதும், “ ஆரு.... ஆருந்யா.... உனக்கு ஒன்னும் ஆகலல.... சொல்லு “ என்று உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்தவன் குரலை கேட்ட ரிஷிக்கு அப்போது தான் புரிந்தது அது ஆதி என்று.


ரிஷி, “ ரீலாக்ஸ் ஆதி.... வானதிக்கு ஒன்னும் ஆகல “ என்றவனின் குரலை கேட்டதும் முதலில் ஆதிக்கு ஒன்னும் புரியவில்லை வானதியின் குரலை கேட்டால் போதும் என்று காத்துக் கொண்டிருந்தவனுக்கு தீடிரென ஒரு ஆணின் குரல் கேட்டதும் முதலில் குழப்பமாக இருந்தது. பிறகு அது யாரென்று தெரிந்ததும் சற்று நிம்மதியாக இருந்தது.


ஆதி, “ ரிஷி... நீயா.... நீ எப்படி அங்க. வானதிக்கு ஒன்னும் இல்லைல. அவளுக்கு ஏதோ ஆபத்துன்னு என் மனசுக்குப்பட்டது. அவளுக்கு போன் பன்னா எடுக்கவே இல்லையா கொஞ்சம் பயந்துட்டேன் நீ எப்படி அங்க வந்த.... வானதி எங்க “ .


ரிஷி, “ கவலப்படற அளவுக்கு ஒன்னும் ஆகல ஆதி ஒரு சின்ன விபத்து “ என்றவன் நடந்த அனைத்தையும் கூறினான். அப்போதும் ஆதி ஒன்னும் கூறாமல் இருப்பதை கண்டு , “ டாக்டர் செக் பன்னிட்டார்.... சாதாரண மயக்கம் தான் அப்புறம் கைல சின்ன அடி அவ்வளவு தான் “ என்றான்.


அப்போது தான் சற்று நிதானத்திற்கு வந்த ஆதி அவன் கூறியதை பொறுமையாக கேட்டு விட்டு, “ கைல பெறுசா எதுவும் அடிப்படலல.... நீ உண்மையா தான சொல்ற ரிஷி “ என்று கேட்டவனின் குரலில் இருந்த வருத்ததை புரிந்து கொண்ட ரிஷியும் அவனிடம் பொறுமையாக மருத்துவர் கூறியதை தெளிவாக விவரித்தான். அதை கேட்டதும் தான் அவன் மனம் ஆசுவாசமடைந்தது.


ரிஷி, “ உனக்கு பயப்படக்கூட தெரியுமா ஆதி... இது நீ தானன்னு என்னால நம்பவே முடியல... இந்த போன் ஸ்கிரீன்ல அருள்ன்னு வந்தத பாத்ததும் யாரோன்னு நினைச்சிட்டேன் “ என்று அவன் கூறியதை கேட்டு சிரித்தவன், “ என்னோட பெயர மறந்துட்டியா ஆதித்ய அருள்மொழி வர்மன்” என்றான்.
ரிஷி, “ சரி தான்... ஆனா உன்னை அப்படி யாரும் கூப்பிட்டு நான் கேட்டதேயில்லை அதான் கொஞ்சம் குழம்பிட்டேன் “ என்றவனுக்கு ஆதியின் இந்த மாற்றம் ஆச்சர்யத்தையே கொடுத்தது.


ஆதி, “ ரிஷி எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு.... எதுக்கும் இந்த ஆக்ஸிடென்ட் பத்தி கொஞ்சம் விசாரி அதுக்கு பின்னாடி யாராவது இருந்தா எனக்கு இன்பொர்ம் பண்ணு. அவங்க வாழ்கையிலேயே மறக்க முடியாத ஒரு தண்டனையா நான் அவங்களுக்கு கொடுக்கறேன். ஆழம் தெரியாம கால்ல விட்டுட்டாங்க அதுக்கான பலனையும் அவங்க அனுப்பவிச்சே ஆகனும் “ என்று கோவமாக கூறியவனை கேட்டவன், “ நீ கவலப்படாத ஆதி.... நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன். நீ வரவரைக்கும் வானதி என் பொறுப்பு “.


ஆதி, “ தேங்க்ஸ் டா.... அவ எழுந்ததும் என் கிட்ட பேச சொல்லு. அவளுடைய குரல கேட்ட தான் எனக்கு நிம்மதியா இருக்கும் “ என்று கூறி விட்டு வைத்து விட்டான். ஆதியிடம் பேசி விட்டு உள்ளே செல்வதற்கும் வானதி மயக்கம் தெளிந்து எழுவதற்கும் சரியாக இருந்தது.


மயக்கம் தெளிந்து கண்ணை திறந்தவளுக்கு முதலில் என்ன நடந்தது எங்கு இருக்கிறோம் என்று புரியவே சிறிது நேரம் பிடித்தது. பிறகு படுக்கையில் இருந்து எழும் போது யாரோ அந்த அறைக்குள் வருவதை கண்டவளுக்கு அது யாரென்று தெரியாததால் குழப்பத்துடன் அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அறைக்குள் நுழைந்த ரிஷி அவள் மயக்கம் தெளிந்து அமர்ந்து இருப்பதையும் அவள் பார்வையில் இருந்த குழப்பத்தையும் கண்டவன். அவள் அருகில் வந்து, “ இப்ப எப்படி இருக்கீங்க.... உங்களுக்கு எதுவும் வலியில்லையே “ என்று கேட்டவனை பார்க்கும் போது அவன் யார் என்று அவளுக்கு தெரியவில்லை.


வானதி, “ நான் நல்லா தான் இருக்கேன்.... நீங்க யாரு.... “ என்று தயங்கியவளை பார்த்த ரிஷி, “ என் பெயர் ரிஷி.... நீங்க என் வண்டியில தான் அடிப்பட்டு விழுந்தீங்க ஆனா நான் உங்க மேல இடிக்கவே இல்ல.... உங்க வண்டி கொஞ்சம் வேகமா வர்ரத பாத்துட்டு நான் நிறுத்திட்டேன் “ என்று நடந்ததை கூறியவனை கண்ட வானதி, “ உங்க மேல எந்த தப்பும் இல்லன்னு எனக்கு தெரியும்... என் ஸ்கூட்டில தான் தீடீர்ன்னு ப்ரேக் பிடிக்கலன்னு எனக்கு தெரியும். இவ்வளவு தூரம் எனக்கு உதவி பன்னதுக்கு ரொம்ப நன்றி “ என்று கூறிக் கொண்டிருக்கும் போதே மருத்துவர் உள்ளே வந்து அவளை பரிசோதித்து பார்த்தார். அவரிடம் தன்னுடைய உடல்நிலையை பற்றி தெரிந்து கொண்டவள் மேற்க்கொண்டு எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டு விட்டு வீட்டிற்கு செல்ல கிளம்பினாள்.
எல்லா போர்மலிட்டிஸ்சையும் முடித்து கொண்டு வெளியே வந்த வானதியை தடுத்து நிறுத்திய ரிஷி, “ நீங்க தப்பா எடுத்துகளன்னா நானே உங்கள ட்ரொப் பன்றேன் “.


வானதி, “ உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்.... நானே கிளம்புறேன். என் வண்டியை வேற எடுத்துட்டு போகணும்".


ரிஷி, “ நான் ஏற்கனவே என்னோட ஆளுங்கள விட்டு வண்டியை ரிப்பர் பண்ண சொல்லிருக்கேன்.... உங்கள இப்படி பாதியிலேயே விட்டுட்டு போக மனசேயில்ல.... நீங்க என்னை உங்க பிரதரா நினைச்சிக்கொங்க “ என்று கூறியவனை பார்க்கும் போது அதற்கு மேல் எப்படி உதவி செய்தவரை வேண்டாம் என்று சொல்லுவது என்று யோசித்தவள் அவனிடம் சரியென்று சொன்னவளை அழைத்து கொண்டு சென்றவன். அபார்ட்மென்ட் வாசலில் இறக்கி விட்டு அவளின் பையை கொடுத்து கவனமாக இருக்குமாறு வலியுறுத்தியப்பின் வண்டியை நாளை காலையில் இங்கு அனுப்பி வைப்பதாக சொல்லியவன் செல்ல இருக்கும் நேரம் அவளிடம் , “ நான் உங்கக்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.... உங்க போனுக்கு யாரோ அருள்ன்னு ஒறுத்தர் ப்போன் பன்னிட்டே இருந்தார். அவர்க்கிட்ட பேசிடுங்க “ என்று விடைபெற்று கொண்டு சென்று விட்டான்.


நேரமாகியும் இன்னும் வானதி வீட்டிற்கு வரவில்லையே என வாசலுக்கும் ஹாலுக்கும் பதட்டமாக நடந்து கொண்டிருந்த மித்ரா கையில் கட்டுடன் சோர்வாக வீட்டிற்குள் நுழைந்தவளை பார்த்து அதிர்ந்த மித்ரா. முதலில் அவளை கவனிப்பதே முக்கியம் என்று எண்ணியவள் அவளை கைத்தாங்கலாக அழைத்து கொண்டு வந்து அவளின் அறையில் அமர வைத்தவள்.


மித்ரா, “ என்னாச்சு வானதி.... நீ இன்னும் வீட்டுக்கு வரவே இல்லையேன்னு நான் எவ்வளவு டென்ஷனா இருந்தேன் தெரியுமா.... ஆனா நீ இப்படி வந்துருக்க சொல்லு “ என்று கண்கலங்கியப்படி கேட்டவளிடம் நடந்த அனைத்தையும் கூறினாள்.


மித்ரா, “ நல்ல வேலை பெறுசா எதுவும் ஆகல இல்லனா என்னாயிருக்கும்.... சரி நீ வேற ரொம்ப சோர்வா இருக்க சாப்பிட்டு ரெஸ்ட் எடு எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம் “ என்றவள் இரவு உணவை தயாரித்து கொண்டு வந்து அவளுக்கு கொடுத்து உறங்குமாறு கூறி விட்டு வெளியே சென்றாள்.


அவள் சென்றதும் தன்னுடைய போனை எடுத்து பார்த்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆதி இத்தனை முறை அழைத்து இருக்கிறானே இப்போது என்ன செய்வது பேசலாமா தன் மனதில் ஏற்ப்பட்டு இருக்கும் மாற்றத்தை பற்றி கூறலாமா என்று அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே அவளின் கைப்பேசி மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது. அதில் தன்னுடைய சிந்தனையில் இருந்து கலைந்தவள். அதில் ஒளிர்ந்த அருளின் பெயரை கண்டதும் அவளின் முகத்தில் புன்னகை அரும்பியது. பிறகு அதை அட்டென்ட் செய்து காதில் வைத்ததும் அந்த பக்கம் இருந்து, “ ஆருந்யா.... இப்ப எப்படி இருக்க உனக்கு ஒன்னும் இல்லையே.... நீ நல்லா தானே இருக்க. நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா.... ஏன் எதுவும் பேசாமா அமைதியா இருக்க “ என்ற பதட்டமான குரலே அவளை வரவேற்றது.


வானதி, “ நீங்க என்னை பேச விட்டாத்தானே நான் பேச முடியும்..... நான் நல்லா தான் இருக்கேன் எனக்கு ஒன்னும் இல்லை. சின்னதா கைல தான் அடிப்பட்டு இருக்கு போதுமா “ என்று அவளே சொன்னதும் தான் அவனுக்கு திருப்தியாக இருந்தது.


வானதி, “ ஆமா நீங்க ஏன் இத்தனை தடவ கால் பண்ணியிருகீங்க.... எதோ பெறுசா சொன்னீங்க உன்கிட்ட பேசமா இருக்க முடியாதுன்னு அதெல்லாம் சும்மா தானே காலையில இருந்து ஒரு ப்போன் கூட பண்ணல அப்பறம் எதுக்கு இத்தனை தடவ கால் பண்ணியிறுக்கீங்க “ என்று காலையில் இருந்து அவன் ப்போன் பண்ணாத கடுப்பில் அவனிடம் சற்று கோவமாக கேட்டாள்.


இதுவே மற்ற நேரமாக இருந்திருந்தால் அவளின் பேச்சில் இருக்கும் வேறுப்பாட்டை கண்டுப்பிடித்து இருப்பான் ஆனால் இப்போது அவன் இருக்கும் மனநிலையில் எதையும் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. ஆதி, “ சாரி டா.... காலையில இருந்து செம வொர்க் சாப்பிட கூட டைம் இல்லை. அதனால தான் ரூம்க்கு வந்து சாப்பிட்டு உன்க்கிட்ட பேசலாம்ன்னு நினைக்கும் போது உனக்கு ஏதோ பிரச்சனைன்னு என் மனசுல தோணுச்சு அதுக்காப்புறம் நான் நானவே இல்லை உனக்கு வேற லைன் கிடைக்கல.... அப்புறம் நீ எடுக்கவே இல்லையா எனக்கு ரொம்ப பதட்டமாயிடுச்சு. என் வாழ்க்கையிலயே இந்த அளவுக்கு நான் எதுக்குமே பயந்ததே இல்லை. தயவுசெய்து இனிமே எனக்காகவாது கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.... ஏன்னா இந்த உலகத்துல நீ எனக்கு முக்கியமானவள்ன்னு நான் சொல்ல மாட்டேன்....ஆனா என்னோட உலகமே நீ தான் “ அவன் உணர்ச்சிவசப்பட்டு பேசியதை கேட்கும் போது உண்மையில் வானதியின் மனதில் அப்படி ஒரு சந்தோஷம் உருவானது. தன்னை இந்த அளவுக்கு நேசிக்க கூட இந்த உலகத்தில் ஒருவர் உண்டு என்ற உணர்வே மிகவும் அழகானது. அந்த நிமிடம் அவளுக்கு ஒன்று புரிந்தது நம்மை நேசிக்கும் ஒரு உறவு நாம் பிறக்கும் போது கூடவே பிறப்பதில்லை ஆனால் எதிர்பாராமல் நாம் சந்திக்கும் ஒரு நபர் நமக்கு உறவாகி பின்பு நம்முடைய ஒட்டு மொத்த வாழ்க்கையாகவே மாறுவது என்பது ரொம்ப விசித்திரமான விஷயம் தான்.


அவள் அமைதியாகவே இருப்பதை கண்ட ஆதி, “ இப்படி அமைதியாவே இருந்தா எப்படி செல்லக்குட்டி.... உனக்கு என் மேல எவ்வளவு கோவம் இருந்தாலும் பரவாயில்லை ஆனா என்னோட ப்போன மட்டும் அட்டென்ட் பண்ணிடு சரியா.... என்னாத்தான் இருந்தாலும் நீ இன்னிக்கு பன்னது பெரிய தப்பு அதனால நான் சென்னைக்கு வந்த உடனே உனக்கு பனிஷ்மென்ட் உண்டு “ என்று கொஞ்சலாக ஆரம்பித்து மிரட்டலாக முடித்தவனை நினைக்கும் போது அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. முதலில் சந்தித்ததிலிருந்து அந்த கோவம் மட்டும் அவனுக்கு மாறவேயில்லை ஆனால் அந்த கோவத்தில் கூட அவள் மீதான பாசமே வெளிப்பாடுக்கிறது. இந்த நிமிடமே தன்னுடைய மனத்தில் இருப்பதை கூறினால் என்ன என்று யோசித்தாலும் அவனின் கண்ணை பார்த்து சொன்னால் தான் அதில் வந்து போகும் உணர்வுகளை தெரிந்து கொள்ள முடியும் அதனால் அவனை நேரில் சந்திக்கும் போது கூறுவது தான் சரியாக இருக்கும் அதுவரை தன் மனதில் இருப்பதை அவனிடம் காட்டிக்கொள்ள கூடாது என்று முடிவெடுத்தாள்.


வானதி, “ அது இருக்கட்டும் யார் அந்த செல்லக்குட்டி “ என்று கோவமான குரலில் கேட்பது போல் கேட்டாள்.


ஆதி, “ வேற யாரு நீ தான் என்னோட.... செல்லக்குட்டி. நீ என்னோட ஆதியும் அந்தமுமா இருக்கணும் அப்படின்றதுக்காக உன்ன ஆதின்னு கூப்பிடனும்ன்னு வெச்சிருக்கேன் ஆனா உன் மேல என்னோட காதல் அதிகமாகும் போது உன்னை செல்லக்குட்டின்னு இன்னும் என்ன எல்லாம் தோனுதோ அப்படி எல்லாம் நான் கூப்பிடுவேன் “ என்றவனின் குரலில் அப்படி ஒரு காதல் நிறைந்து இருந்தது. அதை கேட்டவளின் முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு இருந்தது. இதற்கு மேல் இவனை பேச விட்டால் க்கன்னை அறியாமலேயே மனதில் இருப்பதை சொன்னாலும் சொல்லிவிடுவோம் என்று எண்ணியவள் , “ நான் மாத்திரை சாப்பிட்டு இருக்கேன் எனக்கு தூக்கமா வருது.... நான் ப்போனா வைக்கிறேன் “.


ஆதி, “ ஓகே மா நீ தூங்கு ஆனா என்னோட கால் அட்டென்ட் பண்ண மறந்துடாத இல்லானா நான் உன் நேர்ல இருப்பேன் நியாபகம் வெச்சிக்கோ “ என்று கூறி விட்டு வைத்தான். அவனின் குரலில் அப்படி பிடிவாதம் நிறைந்து இருந்தது சொன்னதை அப்படியே செய்வேன் என்கிற பிடிவாதம் அது. என்றும் இல்லாமல் வானதியின் மனம் முழுவதும் காதல் நிறைந்து இருந்தது. ஆதியை பற்றியே நினைத்து கொண்டு இருந்தவளை தூக்கம் சூழ்ந்து கொண்டது.


அவளிடம் பேசிய பிறகு அவன் அழைத்தது ரிஷியை தான். அந்த விபத்தை பற்றி எதாவது தெரிந்ததா என்று விசாரித்தான். ரிஷி, “ நீ சொன்னது சரி தான் ஆதி யாரோ சிஸ்டர் ஸ்கூட்டியோடா ப்ரேக்கா கட் பன்னிருக்காங்க.... அது மட்டுமில்லாம அவள ரெண்டு பேர் ப்போல்லோ பன்னி வந்து இருக்காங்க.... அவங்க யாருன்னு நம்ம ஆளுங்கள விட்டு கண்டு பிடிக்க சொல்லிருக்கேன் “ என்று அவன் விளக்கமாக கூறியதை கேட்டு சிறிது நேரம் யோசித்தவன்.


ஆதி, “ அவங்க யாருன்னு எனக்கு தெரியனும் ரிஷி.... அவங்கள கண்டு பிடிச்சு நம்ம கஸ்டடியில பத்திரமா வெச்சிக்கொங்க. நான் இன்னும் ரெண்டு நாள்ள கண்டிப்பா வந்துறுவேன். அதுவரைக்கும் நம்ம குடோனில் அடைச்சி வெச்சி நம்மளோட ட்ரீட்மென்ட்டா குடு “ என்று கூறியவன் மேற்க்கொண்டு என்னனென்ன செய்ய வேண்டும் என்று கூறி விட்டு வைத்தான்.


இரவு தன் அறைக்கு வந்த ஆதிக்கு தூக்கமே வரவில்லை இன்று நடந்தது அனைத்துமே அவன் கண் முன்னால் நின்றது. தன் கையில் உள்ள கைப்பேசியில் இருக்கும் வானதியின் போட்டோவை பார்த்துக் கொண்டிருந்தான். இனி அவளை அதிக நாட்களுக்கு பிரிந்து இருக்க முடியாது கூடிய விரைவில் அவளை தனக்கு சொந்தமாக்கி எப்பவும் தன்னுடனே வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்து க்கொண்டே அவளின் முகத்தையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவன் மனதில் அவள் மீது இருக்கும் காதல் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.


இன்றைய நாள் இருவரின் மனதில் இருக்கும் நிம்மதியும் சந்தோஷமும் நாளை நீடித்து இருக்குமா.... நாளை நடக்க இருக்கும் விஷயங்கள் இவர்கள் வாழ்க்கையின் போக்கை மாற்றி அமைக்குமா என்று நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்....


தேன் துளியின் விழியா
தீ தீண்டும் மொழியா
இவள் முழுமதி நிலவா
இல்லை திருமதி மகளா
நான் சூரிய கதிராய்
உன் பார்வையோ புதிராய்
நிழல் மோதுதே நிகராய்
நிஜம் சொல்லடி திமிராய்


நான் தூரத்தில் கானல்
நீ ஒரத்தில் நாணல்
நம் இருவரின் தேடல்
அது இருவிரல் ஊடல்
உயிர் போகுதே தூரம்
உடல் வேகுதே ஒரம்
மனம் ஏங்குது ஏனோ
நாம் சேர்ந்திட தானோ


நிஜத்தை தேடும்....


உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்
....
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 18


யாருடைய வேலை தடைப்பட்டாலும் கதிரவன் தன்னுடைய வேலையை சரியாக செய்து அடுத்த நாள் விடியலை விடிய செய்தான். வானதியும் மித்ராவும் காலை உணவு உண்ணுவதற்காக வந்து அமர்ந்தனர்.


மித்ரா, “ ஆரூ உன் கை இப்ப எப்படி இருக்கு “ என்று அக்கறையாக கேட்டவளிடம், “ பெருசா எதுவும் அடிப்படல மித்து இன்னும் ரெண்டு நாள்ள முழுசா சரியாயிடும் “ என்றாள் வானதி.


மித்ரா, “ ஆமாம் கேட்க மறந்துட்டேன்.... நீ எதுக்காக நேத்து கோவிலுக்கு போன.... என் கிட்ட கூட சொல்லவே இல்லை நான் எவ்வளவு டென்ஷன் ஆயிட்டேன் தெரியுமா “.


வானதி, “ என் மனசுல இருந்த கேள்விக்கு விடை தெறிஞ்சிக்க போனேன் “ என்று அவள் கூறியதும் அதற்கு முன் நாள் நடந்த உரையாடல் மித்ராவிற்க்கு நியாபகம் வந்தது.


மித்ரா, “ அப்படினா அந்த கேள்விக்கு என்ன பதில் கிடைச்சிது “ என்று ஆர்வமாக கேட்டாள். அவளின் அந்த ஆர்வத்தை கண்ட வானதி , “ அது.... நீ சொன்னது தான் சரின்னு தோணுச்சு.... என்னோட மனசுக்குள்ளயும் அவர் தான் இருக்கார்ன்னு தெரிஞ்சிக்கிட்டேன் “ என்று கூறியவளின் முகத்தில் இதுவரை காணாத வெக்கம் அழகாக வெளிப்பட்டதை பார்த்த மித்ராவிற்கு வெளியில் சொல்ல முடியாத அளவிற்க்கு அப்படி ஒரு சந்தோஷம் இருந்தது.


மித்ரா, “ ஐயோ ஆரூ நீ வெக்கப்படுறத பார்க்கும் போது அவ்வளவு அழகா இருக்கு.... என்னால நம்பவே முடியல ரொம்ப சந்தோஷமா இருக்கு.... உன்னை இப்படி மாத்துனவர நான் பாத்தே ஆகனும் ஆரூ “.


வானதி, “ அதுக்கு முன்னாடி உன்னோட ஆள நான் மீட் பன்னனும் புரிதா “ என்றவளிடம் , “ சரி.... சரி.... பேசாமா நம்ம நாலு பேரும் ஒன்னா மீட் பண்ண என்ன நல்லா இருக்கும்ல “ என்றதும் சிறிது நேரம் கழித்து , “ அருள் இப்போ ஊர்ல இல்ல அவர் வந்தவுடனே நம்ம எல்லாரும் மீட் பன்னலாம் “ என்று முடிவு செய்து இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்த போது மித்ராவின் அறையில் இருந்த கைப்பேசி ஒலிக்கும் சத்தம் கேட்டு தன்னுடைய அறைக்கு எழுந்து சென்ற மித்ரா சிறிது நேரம் பேசிவிட்டு வெளியே முகத்தில் யோசனையுடன் வந்தவளை கண்ட வானதி , “ என்னாச்சு மித்து.... யாரு ப்போன்ல “ என்று கேட்டாள்.


மித்ரா, “ ஆசிரமத்தில் இருந்து மீனாட்சி அம்மா தான் பேசினாங்க.... அவங்க நம்மள பாக்கணும்ன்னு வர சொன்னாங்க. அவங்க குரல்ல ஏதோ ஒரு பதட்டம் இருந்தது அதான் என்னன்னு தெரில கொஞ்சம் குழப்பமா இருக்கு “ என்றவளிடம், “ சரி நம்ம சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புலாம்.... அங்க போய் என்னன்னு தெரிஞ்சிக்கலாம்.... டொன்ட் வொர்ரி “என்று சொன்னவள் வேகமாக இருவரும் காலை உணவை உண்டு விட்டு ஆசிரமத்திற்க்கு சென்றனர்.


ஆசிரமம் வந்த இருவரும் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளுக்குள் நடந்து சென்ற போது எப்போது வரும் போதும் குழந்தைகளின் சத்தம் அந்த இடத்தை நிறைத்து கொண்டு இருக்கும் ஆனால் இன்று என்றும் இல்லாத அமைதி அந்த இடத்தை சூழ்ந்து இருந்ததை போல் இருவருக்குமே தோன்றியது. ஆபீஸ் ரூம்மிற்க்கு சென்ற இருவரும் அங்கு ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்த மீனாட்சியின் முன் இருவரும் அவரை அழைத்தப்படியே அமர்ந்தனர். அவர்களை கண்ட மீனாட்சி வானதியின் கையில் இருந்த கட்டை பார்த்து பதறியபடி என்ன நேர்ந்தது என்று கேட்டார்.


வானதி, “ அது ஒன்னும் இல்லமா சின்ன அடி தான் நீங்க கவலப்படுற அளவுக்கு எல்லாம் இல்ல அம்மா.... உங்க முகம் இப்படி வாடி போய் இருக்கு எதாவது பிரச்சனையா சொல்லுங்க அம்மா “ என்று அவள் கேட்டதும் தன்னை நிலைப்படுத்தி கொண்டு நடந்தவற்றை சொல்ல தொடங்கினார்.


மீனாட்சி, “ இதுவரைக்கும் எவ்வளவோ பிரச்சனைகளை நான் சந்திச்சி இருக்கேன். ஆனா அடுத்து என்ன பன்றதுன்னு புரியாம நான் திகைச்சி நின்னது இல்லை இப்போ நான் அப்படி ஒரு சூழ்நிலைல தான் இருக்கேன் “ என்று வருத்தத்துடன் கூறியவரிடம் மித்ரா, “ எதுவா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லுங்க அம்மா.... நீங்க இப்படி வருத்தப்படுற அளவுக்கு என்ன நடந்தது “ என்று கேட்டாள்.


மீனாட்சி, “ நான் எதைன்னு மா சொல்றது.... நம்ம இப்ப இருக்க இடத்துக்கு பக்கத்துல இருக்க காலியான இடத்தை கொஞ்ச நாளுக்கு முன்னாடி நாம வாங்குனது உங்களுக்கு தெரியும்ல “.


மித்ரா, “ ஆமா மா.... நம்ம பசங்க படிக்கறதுக்கு அப்பறம் இன்னும் நிறைய தேவைகளுக்கு அந்த இடத்த வாங்கி பில்டிங் கட்டப்போறதுன்னு ப்ளான் பன்னி இருந்தும் அதுக்கு என்ன மா “.


மீனாட்சி, “ இப்போ நம்ம இடம் கொஞ்சம் மெயின் இடத்துல இருக்கறது நாள ஒரு மூணு நாளைக்கு முன்னாடி ஒரு பெரிய கம்பெனில இருந்து வந்து அவங்க கன்ஸ்ட்ரக்ஷன்காக அந்த இடம் வேணும் அதுக்காக எவ்வளவு பணம் வேணாலும் தறோம்ன்னு கேட்டாங்க “ என்று அவர்கள் சொன்னதும் அதை கேட்டு கொண்டிருந்த வானதிக்கு கோவம் வந்தது.


வானதி, “ நீங்க அதுக்கு கொடுக்க முடியாது எங்களுக்கு இந்த இடம் ரொம்ப முக்கியம்ன்னு சொல்ல வேண்டியது தான மா “ என்றாள்.


மீனாட்சி, “ நானும் அப்படி தான் சொன்னேன் அவங்க சொன்ன எதுக்குமே முடியாதுன்னு சொல்லி அனுப்பி வெச்சிட்டேன்.... ஆனா பிரச்சனையே அப்பறம் தான் ஆரம்பம் ஆச்சி “ என்றவுடன் கேட்டு கொண்டிருந்த இருவருக்கும் ஒன்றும் புரியாமல் அவர்களை குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்.


மீனாட்சி, “ போனவங்க அமைதியா இல்ல..... நம்ம இப்போ இருக்க இடம் நமக்கு சொந்தமானது இல்லை ரொம்ப வருஷமா வாடகைக்கு தான் இருக்கோம். ஆனா இது நம்ம சொந்த இடம் மாதிரி ரொம்ப சுதந்திமா இருந்தது. இதுக்கு சொந்தக்காரங்க வெளிநாட்டுக்கு அவங்க பசங்களோட இருக்கபோறத சொல்லி இந்த இடத்த நம்மக்கே இலவசமா கொடுக்கறத சொன்னாங்க.... ஆனா தீடீர்ன்னு அவங்க ஊருக்கு போய்ட்டாங்க திரும்ப இங்க வரும் போது ரிஜீஸ்ட்ரேஷன் வெச்சிக்கலாம்ன்னு சொன்னாங்க.... எற்கனவே இந்த இடத்த வாங்க தான் நான் பணம் ரெடி பன்னேன். அவங்க அப்படி சொன்னதும் தான் அந்த பணத்த வெச்சி பக்கத்துல இருக்க இடத்த வாங்குனேன்.... ஆனா இப்போ என்ன ஆச்சுன்னு தெரியல.... நேத்து அந்த கம்பெனில இருந்து வந்து இப்போ நீங்க இருக்க இடத்த நாங்க வாங்கிட்டோம். உங்களுக்கு இப்போ நீங்க இருக்க இடம் வேணும்ன்னா நாங்க கேட்ட இடத்த குடுங்க இல்லானா இந்த இடத்தை காலி பன்னிடுங்க.... உங்க பதில சொல்ல ரெண்டு நாள் டைம் தரேன்ன்னு சொல்லி நிறைய ஆளுங்கள கூட்டிட்டு வந்து நம்ம பசங்க முன்னாடி மிரட்டிட்டு போய்ட்டாங்க அதான் என்ன பன்றதுனே தெரியல “. என்று அவர் சொல்லி முடித்ததும் இருவருக்குமே பயங்கரமாக கோவம் வந்தது.


மித்ரா , “ அவங்க சொன்னது உண்மையா மா.... நீங்க நல்லா விசாரிச்சு பாத்தீங்களா “ என்று கேட்டவளிடம், “ அந்த பத்திரத்தை நல்லா செக் பன்னி பாத்துட்டேன்.... பத்தாததுக்கு நான் இடத்தோட ஒனர்கிட்ட கூட பேசிட்டேன். அவங்க பையன் சொன்னதால வேற வழியில்லாம இப்படி செய்ய வேண்டியதா போய்டுச்சுன்னு மன்னிப்பு கேட்டாங்க “ என்றார்.


வானதி, “ இது எல்லாத்துக்கும் காரணமா இருக்க அந்த கம்பெனி பெயர் என்ன மா “ என்று அவள் கேட்டதும் , “ அந்த கம்பெனி பெயர் வந்து.... வர்மா குரூப் ஆஃப் கம்பெனிஸ் “ என்று அவர் சொன்னதை கேட்ட இருவருக்கும் அது மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.


மித்ரா, “ அம்மா.... நீங்க நல்லா யோசிச்சி தான் சொல்றீங்கல. ஏன்னா நான் அங்க தான் வேலை செய்றேன்.... இந்த மாதிரி அங்க நடக்க வாய்ப்பே இல்லை என்னால உறுதியா சொல்ல முடியும் அதுவும் இல்லாம எங்க பாஸ் இப்ப ஊர்ல இல்லவே இல்லை அப்படி இருக்கும் போது இவ்வளவு பெரிய முடிவு எடுக்க யாராலையும் முடியாது “ என்று அவள் கூறிக் கொண்டு இருப்பதை மற்ற இருவரும் புரியாமல் பார்த்து கொண்டிருந்தனர். அவர்களின் பார்வையை புரிந்து கொண்டவள் மீண்டும் தொடர்ந்தாள், “ இதுக்கு காரணம் அந்த சுரேந்தர் தான்.... பாஸ் போகும் போது கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ட பத்தி அவன் கிட்ட தான் சொல்லிட்டு போய் இருக்கார். பாஸ் கிட்ட நல்ல பெயர் வாங்கனும் அப்படின்றதுக்காக அவன் தான் இந்த வேலையை பாத்து இருப்பான் “ என்று உணர்ச்சி வசப்பட்டு கூறிக்கொண்டிருந்தாள் மித்ரா.


வானதி, “ மித்ரா.... இந்த மாதிரி சூழ்நிலைல உணர்ச்சி வசப்படாம நிதானமா யோசிச்சா தான் ஒரு வழி கிடைக்கும்.... நீ சொல்றப்படி பாத்தாக் கூட இவ்வளவு பெரிய முடிவ வேலை செய்ற ஒறுத்தரால எடுக்க முடியுமா.... பிஸ்னஸ் பன்றவங்க அவங்க லாபத்துக்காக என்ன வேணாலும் செய்வாங்க மித்ரா அதை நீ புரிஞ்சிக்கோ “ .


மித்ரா, “ இல்ல ஆரூ.... எங்க பாஸ் கோவக்காரர் தான் ஆனா இப்படியெல்லாம் செய்யமாட்டாங்க. நான் சொல்றத நம்பு. அவர்க்கிட்ட இதை பத்தி பேசினா நமக்கு உதவி செய்வாரு “.


வானதி, “ சரி.... இப்ப பிரச்சனை அது இல்ல.... நம்ம இந்த இடத்த எந்த காரணத்த கொண்டும் விட்டு கொடுத்துட கூடாது.... நீ அந்த கம்பெனில தானே வொர்க் பண்ற அதனால நானே உங்க பாஸ்ஸ மீட் பன்றேன்.... அவர் எப்போ வருவார்ன்னு சொல்லு “ என்றவள். மீனாட்சி அம்மா அருகில் சென்று அவரின் கையை பிடித்துக் கொண்டு, “ நீங்க கவலப்படாதீங்க மா.... என்ன நடந்தாலும் இந்த இடத்த நாங்க நம்ம கைய விட்டு போக விட மாட்டோம்.... இது சாதாரண இடம் இல்லை பல பேரோட வீடு இது. என்னை பொறுத்தவரைக்கும் வீடுன்னா அது கல்லும் மண்ணும் சேர்ந்தது இல்லை அன்பும் பாசமும் கலந்தது தான். எங்கள மாதிரி ஆதரவு இல்லாமா இருக்கறவங்களூக்கு இது தான் வீடு இங்க உள்ளவங்க தான் சொந்தம்..... ரத்த உறவு தான் உயர்ந்தது இல்லை மனசாலையும் உணர்வாலையும் உருவாகுற உறவு தான் காலத்துக்கும் நிலைக்கும்ன்றது என்னோட கருத்து. அப்படி பாத்தா நீங்க எங்க அம்மா இங்க இருக்குற எல்லாரும் எங்க சொந்தம்.... அதனால இந்த இடம் நம்ம கைய விட்டு போக நான் விட மாட்டேன். இனிமே அவங்க வந்து உங்க கிட்ட லேண்ட் பத்தி கேட்டா நீங்க கொஞ்சம் டைம் வேணும்ன்னு கேளுங்க அதுக்குள்ள எங்களால என்ன பண்ண முடியுமோ நாங்க கண்டிப்பா பன்றோம் “ என்று கவலையாக இருந்தவருக்கு ஆறுதல் கூறியப்பிறகு இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு சென்றனார்.


அன்று இன்னும் ரெண்டு நாள் செய்ய வேண்டிய வேலையை முடித்து விட்டு வேகமா மாலையே சென்னை வந்து இறங்கினான் ஆதி. வீட்டிற்கு சென்று தன்னுடைய பொருட்களை வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து சிட்டிக்கு வெளியே உள்ள அவனுடைய குடோனுக்கு சென்றான். உள்ளே நுழையும் போது ஒருவன் வேகமாக அவன் அருகில் வந்து, “ வர்மா ஜி.... நீங்க சொன்ன மாதிரி அவனுங்க ரெண்டு பேரையும் நம்ம கஸ்டடிக்கு கொண்டு வந்தாச்சி. ஆனா எதைப்பத்தி கேட்டாலும் வாய்யே திறக்க மாட்றாங்க “ என்று கூறியவன் பெயர் ரவி. ஆதியின் கீழ் வேளை செய்யும் அடியாட்களின் தலைவன். ரவி ஆதியின் நம்பிக்கைக்கு உரியவன். அவன் மீதும் அவன் செய்யும் வேலையின் மீதும் ஆதிக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. ஆதி எந்த வேலை சொன்னாலும் சத்தமே இல்லாமல் முடித்து விடுவான்.


இப்பொது ரவி கூறியதை கேட்டப்படியே நடந்தவன் அங்கு இரண்டு இருக்கையில் கை கால்களை கட்டியப்படி மயங்கி இருந்தவர்கள் முன்னால் அங்கிருந்த மத்த ஆட்கள் ஒரு இருக்கையை தூக்கி வந்து வைத்தனர். அதில் கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்தவன் அவர்கள் இருவரையும் எழுப்புமாறு செய்கை செய்தான். அவர்களும் ஒரு பக்கெட் தண்ணீரை கொண்டு வந்து அவர்கள் மீது ஊத்தினார். அதில் மயக்கம் கலைந்து எழுந்த இருவரும் தங்கள் முன் கம்பீரமாக அமர்ந்திருந்த ஒரு புதியவனை பார்த்தவர்களுக்கு சிறிது புரிந்தது இவன் சொல்லி தான் இவர்கள் தங்களை கடத்தி வைத்துள்ளனர் என்று.


ஆதி கண்ணை காட்டியதும் ரவி, “ சொல்லுங்க டா யாரு உங்களை அந்த பொண்ணோட வண்டி ப்ரேக்கை கட் பண்ண சொன்னது “ என்று அவன் கோவமாக மிராட்டிய போதும் அவர்கள் தங்களுக்கு தெரியாது என்ற பதிலையே கூறிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவர் கூறுவதையும் அசையாமல் பார்த்து கொண்டிருந்தவன் தன் அருகில் இருந்த ரவியிடம் எதையோ கூறினான். அதைக் கேட்ட ரவியும் உள்ளே சென்று ஒரு டேபிளை கொண்டு வந்து ஆதிக்கும் அவர்களுக்கும் நடுவில் கொண்டு வந்து வைத்தவன் இன்னும் அவன் கூறிய சிலவற்றை வைத்து விட்டு அவன் பின்னால் சென்று நின்று கொண்டான். மீதம் இருந்தவர்கள் கை கட்டுக்களை மட்டும் கழட்டி விட்டு அவர்களின் கைகளை அந்த டேபிளின் மேல் வைத்து விட்டு அவர்கள் அருகிலேயே நின்று கொண்டனர்.


ஆதி, “ சரி உங்களுக்கு ஒன்னும் தெரியாது இல்லை.... ஒக்கே வாங்க நம்ம மூணு பேரும் விளையாடலாம்.... இது என்ன கேம் தெரியுமா “ என்றவன் அங்கிருந்த கத்தியை கையில் எடுத்து பார்த்தப்படி, “ இப்போ நான் உங்க அஞ்சு விரல்களுக்கு நடுவுல இருக்க இந்த சின்ன கேப்புல வேகமா இந்த கத்தியால குத்திட்டே வருவேன். அப்போ நான் கேக்கர கேள்விக்கு நீங்க சரியா பதில் சொன்னா ஒன்னும் பிரச்சனை இல்ல ஆனா பொய் சொன்னா இந்த கத்தி உங்க விரல பதம் பாத்துடும் “ என்று சிரித்துக் கொண்டே கூறியவனை பார்க்கும் போது இருவருக்கும் பயம் வர ஆரம்பித்தது.


முதலில் அமர்ந்திருந்தவனின் கை விரல்களின் நடுவே கத்தியை வேகமாக குத்தியப்படியே ஆதி, “ உன்னோட பெயர் பாபு தான “ என்று கேட்டதும் அவன் செய்து கொண்டு இருப்பதை பார்த்து பயந்து கொண்டே ஆமாம் என்று பதிலாளித்தான்.
ஆதி, “ ரெண்டு நாள் முன்னாடி கோவில் வாசல்ல ஒரு பொண்ணோட வண்டி ப்ரேக்கை கட் பன்னீங்களா “ என்று அவன் நேரடியாக கேட்டதும் பயத்தில் அவனுக்கு வார்த்தையே வரலை இருந்தும் தைரியத்தை வரவழைத்து கொண்டு அவனிடம் இல்லை என்று அவன் கூறிய அடுத்த நொடி கத்தி அவனின் ஒரு விரலை நன்றாக பதம் பார்த்தது. திரும்பவும் கத்தியை குத்தி கொண்டே, “ அச்சோ கத்தி குத்திடுச்சு போலயே.... நான் தான் சொன்னேன்ல பொய் சொல்ல கூடாதுன்னு சரி மறுபடியும் அதே கேள்வி தான் பதில் சொல்லு “ என்று அவன் வேலையை பார்த்து கொண்டிருந்தான். ஒரு விரலில் வழிந்து கொண்டிருக்கும் ரத்தத்தை கண்டு அந்த வலியில் அவனுக்கு முதலில் வார்த்தையே வரவில்லை. எங்கே மீண்டும் இன்னொரு விரலையும் இழந்து விடுவோமோ என்று பயந்தவன், “ ஆமா.... ஆமாம் சார் நாங்க தான்.... அப்படி பன்னோம் “ என்று பயந்தப்படியே கூறினான்.


அடுத்து அவனை விட்டு விட்டு பக்கத்தில் இருந்தவனின் அருகில் கத்தியை கொண்டு செல்வதை கண்ட இன்னொருவன், “ சார்.... வேண்டாம் சார் நான் சொல்லிடுறேன்..... என் பெயர் ராஜூ.... ஏதோ இந்த மாதிரி சொல்ற வேலையெல்லாம் செய்றோம்..... எங்களுக்கு அந்த பொண்ணோட போட்டோவும் பணமும் குடுத்து கொல்ல சொன்னாங்க..... அது யாருன்னு எல்லாம் தெரியாது சார் எங்களை நம்புங்க “ என்று கெஞ்சியவனை அமைதியாக பார்த்து கொண்டிருந்த ஆதிக்கு அவனுடைய கண்கள் பொய் சொல்வது போல் தெரியவில்லை பிறகு யார் இந்த வேலையை செய்து இருப்பார்கள் என்று அவன் சிந்திக்கும் போது “ அது யாருன்னு எனக்கு தெரியும் “ என்றப்படி ரிஷியும் அவனுடன் ஷக்தியும் உள்ளே வந்து கொண்டிருந்தனர்.


ரிஷி, “ உன் கிட்ட இருக்க எல்லா கேள்விக்கும் என்க்கிட்ட பதில் இருக்கு ஆதி “ என்றவனை புரியாமல் பார்த்தவன் எழுந்து அவர்கள் அருகில் வந்து நின்று, “ சொல்லு யாரு அது.... “ என்று கேட்டவனிடம் ரிஷி கூறிய பெயரை கேட்டதும் ஆதிக்கும் ஷக்திக்கும் அதிர்ச்சியாக இருந்தது.


ஷக்தி, “ அவங்களுக்கும் வானதிக்கும் என்னடா சம்பந்தம்.... ஒரு வேலை அவங்க பொண்ணூக்காக இப்படி பண்ணியிறுப்பாங்களோ “ .


ரிஷி, “ அப்படியே இருந்தாலும் அது இப்ப நடந்த விஷயம்.... ஆனா இது பல வருஷத்து பகை “ என்றவனிடம் ஆதி, “ எதை சொல்றதா இருந்தாலும் தெளிவா சொல்லு புரிதா “ என்று எரிந்து விழுந்தவனை பார்த்த ரிஷி இதுவரை தான் சேகரித்தவற்றை கூற ஆரம்பித்தான்.


ரிஷி, “ எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நான் முதல்ல இருந்து சொல்றேன்.... ஒரு பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி வானதியும் அவங்க அம்மாவும் நீலகிரிக்கு வேலை தேடி வந்தாங்க. உங்க எஸ்டேட்க்கும் போனாங்க அப்போ தான் உங்க அப்பாக்கும் வானதிக்கும் ஒரு உறவு உருவாயிருக்கு அதுக்கு காரணம் வானதியோட அம்மா.... அவங்க பெயர் வான்மதி அவங்களுக்கு பிறவியில இருந்தே பேச முடியாது. உங்க அப்பாவோட தங்கைக்கும் இந்த மாதிரி ஒரு பிரச்சனை இருந்து சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க. அவங்கள மாதிரி ஒறுத்தர பாக்கும் போது அவர அறியாம அவங்க மேல ஒரு பாசம் தோன்ற ஆரம்பிச்சுது. அவரோட தங்கைக்கு செய்ய முடியாதத இவங்களுக்கு செய்யணும் ஆசைப்பட்டாரு ஆனா அவங்க ரெண்டு பேருமே சுயமரியாதை உள்ளவங்க அதனால ஒரு வேலையை மட்டும் வாங்கிட்டு அங்கயே ஒரு வீடு பத்து தாங்கிட்டாங்க.... இப்படியே வருஷங்களும் போய்டுச்சு ஒரு ஆறு வருஷத்துக்கு அப்பறம் வானதியோட அம்மா ஒரு விபத்துல இறந்துட்டாங்க. அவங்க சாகறதுக்கு முன்னாடி உன் அப்பாக்கிட்ட தான் வானதியோட முழு பொறுப்பையும் ஒப்படைச்சிருக்காங்க...... அதுக்காப்பறம் வானதியை தன்னோட வான்னு கூப்பிட்டப்பா கூட வானதி வர மாட்டேன்ன்னு சொல்லி அங்கயே வேலை பாத்துட்டே படிச்சி தனக்குன்னு ஒரு வேலையை தேடிட்டு சென்னை வந்துட்ட..... உங்க அப்பாவும் பண உதவிய எத்துக்க மாட்டான்னு உங்க ட்ரஸ்ட் மூலமா படிக்க வெச்சாரு. அது மட்டுமில்லாம நிறைய உதவிய செஞ்சிருக்காரு..... இது எல்லாமே நான் நீலகிரி எஸ்டேட் போனப்போ தெரிஞ்சிக்கிட்டேன் “ என்றான்.


ஷக்தி, “ ஆனா இதுல வானதிக்கும் சந்திரிகாவுக்கும் என்ன சம்பந்தம்ன்னு புரியலையே “ என்று அவன் கேட்ட கேள்வியை தன் கண்களால் ரிஷியை பார்த்து கேட்டான் ஆதி.


ரிஷி, “ இருக்கு... ஏன்னா வானதியோட அம்மா இறந்தது விபத்து இல்ல அது ஒரு கொலை... அந்த சம்பவம் நடக்க ரெண்டு நாள் முன்னாடி அவங்க நடவடிக்கைல மாற்றம் இருந்து இருக்கு. எனக்கு தெறிஞ்சி இந்த ஊருக்கு வரத்துக்கு முன்னாடியே எதுவோ நடந்து இருக்கு அதனால தான் அவங்க ரெண்டு பேரையும் கொலைப்பன்ற அளவுக்கு அவங்க மேல வெறி இருக்கு.... அவங்க அம்மாவ கொன்னப்பறம் கூட இன்னும் அது அடங்கள. இப்போ அவங்க டார்கெட் வானதி தான்.... மூணு வருஷத்துக்கு முன்னாடி அன்னிக்கு நடந்ததுக்கு பின்னாடி இருக்கறதும் அவங்களும் அவங்க அண்ணனும் தான். அவங்க அண்ணன் இப்போ ஊர்ல இல்லை. அவங்களுக்கு நடுவுல அப்படி என்ன நடந்ததுன்னு வானதியே சொன்னா தான் உண்டு.... ஆனா இப்போ அவ உயிருக்கு பெரிய ஆபத்து இருக்கு அது மட்டும் என்னால தெளிவா சொல்ல முடியும்....“ என்று அவன் கூறி முடித்ததும் சிறிது நேரம் அமைதியாக இருந்த ஆதி.


ரவியை அருகில் அழைத்து சில கட்டளைகளை பிறப்பித்தவன், “ இவங்க ரெண்டு பேர் உடம்புலையும் உயிர் மட்டும் தான் இருக்கணும் பக்கவா முடிச்சிடு “ என்று அவன் சொல்லியதை கேட்ட ஷக்திக்கு அதிர்ச்சியில் கண்கள் விரிந்தது. அவனை பார்த்த ஆதி, “ எனக்கு சொந்தமானவங்க மேல யாராவது கைய வெச்சாலே நான் சும்மா விட மாட்டேன் அப்படி இருக்கும் போது என் வானதி மேலயே வெச்சா நான் எப்படி சும்மா இருக்க முடியும்.... இனிமே இந்த மாதிரி நிறைய காட்சிகள் வரும் அதனால ரெண்டு பேரும் உங்க ஷாக்கா குறைங்க “ என்றவன் தன் வேகமான நடையுடன் வெளியே சென்றான். அவனை பின் தொடர்ந்து மற்ற இருவரும் அவனின் அதிரடியான செயல்களை கண்டு வியந்தப்படியே சென்றனர்.


இரவு தன்னுடைய அறையில் இருந்த வானதியின் போட்டோ பார்த்தப்படி அமர்ந்திருந்தவன் மனதில், ‘ இனியும் நம்ம அமைதியா இருக்க முடியாது. அவ உயிருக்கு ஆபத்து இருக்குன்னு தெரிஞ்ச பிறகும் இப்படியே விட முடியாது.... கூடிய சீக்கிரம் உன்ன என் மனைவியா என்னோட கண் பார்வையிலேயே வெச்சிக்கனும்.... உன் கிட்ட இதை பத்தி ப்பேசி ஒரு முடிவ எடுத்தே ஆகனும் ‘ என்று நினைத்தவன் அவனுடைய ப்போனில் இருந்து வானதிக்கு அழைத்தான் முதல் ரிங் முடிவதற்குள்ளேயே அது எடுக்கப்பட்டது.


ஆதி, “ என்ன ஒரு அதிசயம் உடனே கால் அட்டென்ட் பன்னிட்டா.... எப்பவும் நான் ரெண்டு தடவை பண்ணா தான் எடுப்ப “.


வானதி, “ என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு... நான் என்னமோ உங்க ப்போனுக்காக தினமும் காத்திட்டு இருக்க மாதிரி.... நீங்க பண்ண உடனே எடுக்கறதுக்கு “ என்று அவள் கூறியதும் ஆதிக்கு சிரிப்பாக வந்தது.


சிரித்துக்கொண்டே அவளிடம், “ அப்போ நீ என்னோட பேச காத்திட்டு இல்லன்னு சொல்றியா”. உண்மையில் இவ்வளவு நேரம் அவள் அடுத்து என்ன செய்வது என்று கவலையாக இருந்தாள். அப்போது அவன் அழைத்ததை பார்த்தவுடன் தான் அவள் முகத்தில் சிறிதாக புன்னகை உண்டானது இருந்தாலும் அதை அவனிடம் காட்டிக்கொள்ளாமல், “ ஆமாம்.... எனக்கு என்ன வேற வேலை இல்லைன்னு நினைச்ச்சீங்களா “


ஆதி , “ ஆனாலும் உனக்கு இவ்வளவு அழுத்தம் ஆகாது.... எனக்கு நல்லா தெரியும் உன் மனசுல நான் இருக்கேன்ன்னு ஆனா அதை ஒத்துக்க மாட்றள “.


ஒரு வேளை கண்டு பிடித்து விட்டானோ என்று சிந்தித்தப்படியே , “ பேசாம நீங்க கதை எழுதலாம்... கற்பனை திறன் உங்களுக்கு நிறைய இருக்கு “.


ஆதி , “ அப்படியா.... அப்போ நான் உன் மனசுல இல்லாமையா நான் கால் பண்ண உடனே எடுத்த அது மட்டுமில்லாம என் மேல உனக்கு கோவம் இருந்தா.... நீ எப்படி இவ்வளவு சாதாரணமா என் கிட்ட உன்னால பேச முடியுது. ஏதோ வகையில உன்னை நான் பாதிச்சிருக்கேன்.... ஆனா நீ இதை ஒத்துக்க மாட்ட “ என்று அவன் தன் மனதில் இருப்பதை அப்படியே கூறுவதை நினைத்து அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.


வானதி, “ நீங்க விட்டா தேவையில்லாததா எல்லாம் பேசுவீங்க.... எனக்கு நிறைய வேலை இருக்கு “.


ஆதி, “ இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே தப்பிக்கிறன்னு நானும் பாக்குறேன்.... சரி நான் சொல்ல வந்ததையே மறந்துட்டேன். நான் இன்னைக்கு ஈவ்னிங் தான் சென்னை வந்தேன். நாளைக்கு நம்ம மீட் பன்னலாமா ஒரு முக்கியமான விஷயம் பேசனும். நாம கடைசியா மீட் பண்ண இடத்துக்கு வந்துடு “ என்றவனுக்கு சரியென்று பதிலளித்து விட்டு புன்னகையுடன் வைத்து விட்டாள்.


ப்போனை வைத்தப்பின்னும் இருவருக்கும் ஒருவரை பற்றி இன்னொருவரின் நினைப்பு தான் இருந்தது. அவர்களின் முகத்தில் இருக்கும் இந்த சந்தோஷம் நாளை நீடித்து இருக்குமா..... என்று நாளை பொறுத்திருந்து காண்போம்....


கொஞ்சம் உள்ளம் சிந்திடு

கொஞ்சம் கொஞ்சம் என்னுள்

வந்திடு கொஞ்சம் பார்வை வீசிடு

கொஞ்சம் கொஞ்சம் உண்மை

பேசிடு கொஞ்சம் திறக்க

சொன்னேன் - அடி கொஞ்சம்

கொஞ்சம் மறைக்க பார்க்கிறாய்

ஏ கஞ்ச வஞ்சியே

உன் நெஞ்சில் ஏன் தடை

இப்போலி வேலியை

இன்றாவது உடை....


நிஜத்தை தேடும்....


உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்....





 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 19


அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள முடியாத சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு நம் வாழ்க்கை தான். ஆதி மற்றும் வானதியின் வாழ்க்கையில் இன்று நடக்க போவது என்ன....


ஒரு வாரம் கழித்து அலுவலகம் செல்வதால் இன்று சீக்கிரமாகவே சென்று இது வரை முடிக்காமல் இருந்த சில வேலைகளை தீவிரமாக செய்து கொண்டிருந்தான் ஆதி . அப்போது அவனுடைய அறைக்குள் ஷக்தியும் கதிரும் பதட்டத்துடன் நுழைந்தனர். ஷக்தி, “ ஆதி ஒரு தப்பு நடந்து போச்சு “ என்று பதட்டத்துடன் கூறிய ஷக்தியை நிமிர்ந்து பார்த்த ஆதி என்ன வென்று கேட்டப்படியே தன்னுடைய வேலையை ப்பார்த்துக் கொண்டிருந்தான்.


அவர்கள் இருவரும் இங்கு இல்லாத நேரத்தில் சென்னையில் இருந்த மற்ற பிரான்ச்சில் ஒரு வேலையாக கதிர் சென்று இருந்த போது இங்கு சுரேந்தர் செய்துள்ள வேலையை பற்றி விவரமாக கூறினான். இரண்டு நாள் கழித்து வந்தவுடன் இன்று காலை தான் இது பற்றி தெரிய வந்ததாகவும் அனைத்தையும் விளக்கி கூறினான் கதிர். அவன் சொல்லிய தகவல்களை கேட்டு கொண்டே தன்னுடைய வேலையை பார்த்து கொண்டிருந்தான் ஆதி. அவன் அமைதியாக இருப்பதை கண்ட ஷக்தி, “ என்ன ஆதி…. எல்லாத்தையும் கேட்டப்பிறகும் எதுவும் சொல்லாம இருந்தா எப்படி….. இந்த பிரச்சனையை உடனே முடிக்கலனா நம்ம கம்பெனிக்கு அது ஒரு ப்ளாக் மார்க் ஆயிடும்…..” என்று படப்படத்தவனை தான் பார்த்து கொண்டிருந்த வேலையை மூடி வைத்து விட்டு நிமிர்ந்து பார்த்த ஆதி , “ கதிர் நீ போய் சுரேந்தரா வர சொல்லு “ என்றவன். கதிர் சென்றவுடன் ஷக்தியிடம், “ காம் டவுன் ஷக்தி…. இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுற….. வந்து உக்கார் “ என்று கூறி அமர வைத்தான்.


கதிர் சுரேந்தரை அழைக்க சென்ற அந்த நேரம் தான் மித்ராவிற்கு ஆதி வந்து இருப்பதே தெரியும் உடனே தன்னுடைய கைப்பேசியை எடுத்து வானதிக்கு அழைத்தாள். அவள் எடுத்தவுடன், “ ஆரூ…. எங்க பாஸ் வந்து இருக்கார்…. நீ இப்போ கிளம்பி வா. சீக்கிரமா இந்த பிரச்சனையை முடிக்கனும் “ என்று தகவல் கூறி விட்டு அவளின் வருகைக்காக காத்திருந்தாள் மித்ரா.


சுரேந்தரை அழைத்துக் கொண்டு ஆதியின் அறைக்குள் நுழைந்தான் கதிர். அடுத்து என்ன செய்யலாம் என்று விவரித்து கொண்டிருந்த ஆதி அவன் உள்ளே வந்தவுடன் அவனை கண்களில் ஒரு வித கூர்மையுடன் அளவிட்டப்படியே, “ வாங்க சுரேந்தர்…. நான் உங்ககிட்ட கொடுத்த வேலை எந்த அளவுல இருக்கு…. இல்லனா மொத்தமா முடிச்ச்சீடிங்களா “ என்று கேட்டான்.


அவனிடம் என்ன சொல்வது என்று அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை கன்ஸ்ட்ரக்ஷன் சைட் வாங்க வேண்டும் என்று கூறி தான் கம்பெனியில் இருந்து பணம் வாங்கினான். அதை வைத்து தான் அவன் எல்லா வேலையும் செய்தது இன்னும் ஒரு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கழித்து வந்து இருந்தால் வேலையை முழுவதுமாக முடித்து விட்டு ஆதியிடம் நல்ல பெயர் வாங்கி இருக்கலாம். இப்போது பாதியிலேயே நிற்கும் இந்த விஷயத்தை எப்படி கூறுவது என்று அவனுக்கு சுத்தமாக புரியவில்லை. இருந்தாலும் எதாவது சொல்ல வேண்டும் சரி எதாவது சமாளிப்போம் என்று எண்ணியவன். ஆதியை பார்த்து, “ சார்…. இன்னும் ரெண்டு நாள்ள அந்த லேண்ட் நமக்கு ஓகே ஆயிடும்…. கொஞ்சம் டைம் குடுங்க “ என்று அவன் கூறியதை கேட்கும் போது ஷக்தியால் கோவத்தை அடக்க முடியவில்லை ஆனால் ஆதி அமைதியாக இருப்பதை பார்த்த கதிருக்கும் சரி என்ன நடக்க போகிறது என்று புரியாமல் பார்த்து கொண்டிருந்தனர்.


ஆதி, “ இந்த ரெண்டு நாள் டைம் எதுக்கு என்னோட கம்பெனியா மொத்தமா கேவலப்படுத்த வா “ என்று கோவத்தை அடக்கி கொண்டு அவன் கேட்டதும், “ நீங்க என்ன சொல்றீங்க சார்…. இந்த கம்பெனிக்கு நல்லது பன்னனும்ன்னு தான் எல்லாத்தையும் செய்வேன் “ என்று அவன் முடிப்பதற்க்குள் ஷட் அப் என்று அவன் கர்ஜித்தப்படி எழுந்ததும் அவன் அமர்ந்திருந்த இருக்கை ரெண்டு அடி பின்னால் நகர்ந்தது. அவனின் அந்த குரல் அறை முழுவதும் எதிரொலித்தது. அந்த குரலையும் அவன் தன் அருகில் வருவதையும் கண்ட சுரேந்தருக்கு பயத்தில் முகம் முழுதும் வேர்க்க ஆரம்பித்தது.


ஆதி, “ நீ என்ன நினைச்சிட்டு இருக்க நான் இல்லாத போது என்ன பன்னாலும் எனக்கு ஒன்னும் தெரிய வராதுன்னு நினைச்சியா. எனக்கு எல்லாம் தெரியும்….“ என்று நின்று கொண்டிருந்த டேபிளின் மேல் சாய்ந்தப்படி கேட்டான். அதிர்ச்சியில் சுரேந்தர் எந்த பதிலும் கூறாமல் நிற்பதை கண்ட ஆதி , “ உனக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தா இப்படி ஒரு காரியம் பண்ணியிருப்ப. நான் உன்ன லேண்ட்டா வாங்க தான் சொன்னேன். அது ஒரு ஆசிரமத்துக்கு சொந்தமான இடம்ன்னா என் கிட்ட சொல்ல வேண்டியது தானே அதை விட்டு அவங்கள ப்ளாக் மெயில் பன்னி வாங்க ட்ரை பன்னிருக்க. இது மட்டும் வெளிய தெரிஞ்ச நம்ம கம்பெனியோட மொத்த பெயரும் கேட்டு போயிடும். யார கேட்டு நீ இப்படி ஒரு முடிவு எடுத்த அந்த அதிகாரத்தை யாரு கொடுத்தது “ என்று கோவமாக கேட்டான்.


ருத்ர மூர்த்தியாக தன் முன்னால் நிற்ப்பவனிடம் பேசவே பயமாக இருந்தது. இருந்தாலும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு, “ சார்…. சார் நான் நீங்க சொன்ன வேலையை முடிக்க வேண்டும்ன்றதுக்காக்க தான் இப்படி பன்…பன்னேன். வேற எதைப்பத்தியும் நான் யோசிக்கல “ என்று திக்கித் திணறி கூறியவனை பார்த்த ஆதி, “ ஒரு முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை யோசிக்கனும்….. நீங்க பண்ண பெரிய தப்பு இவ்வளவு பெரிய டெசிஷன் எடுக்கறதுக்கு முன்னாடி எங்ககிட்ட இன்போர்ம் பன்னியிருக்கனும்….. நீங்களே எல்லா முடிவையும் எடுக்கலாம்ன்னா அப்புறம் நான் இங்க எதுக்கு பேசமா இந்த சீட்ல வந்து நீங்க உக்காருங்க. நீ இப்ப செஞ்சிருக்க காரியத்துனால இத்தனை வருஷம் நான் சேர்த்து வெச்சிருக்க எல்லா பெயரும் போய்டும். இப்படிப்பட்ட ஒறுத்தர் என் கம்பெனிக்கு தேவையில்லை “ என்று கோவமாக கூறியவன் கதிரிடம், “ இவருக்கு டிஸ்மிஸ் லெட்டர் ரெடி பண்ணுங்க “ என்று அவன் சொல்லியதை கேட்டதும் சுரேன், “ சார்…. ப்ளீஸ் சார் நான் பன்னது பெரிய தப்பு தான் என்னை மன்னிச்சுடுங்க…” என அவன் பேச ஆரம்பித்ததும் தன்னுடைய கையை நீட்டி தடுத்த ஆதி, “ நோ மோர் ஆர்க்யூமென்ட்ஸ்…. இந்த மாதிரி பொறுப்பே இல்லாதவங்களுக்கு என் கம்பெனில இடம் இல்லை…. சோ “ என்று வாசலை நோக்கி கையை நீட்டினான். அதற்கு மேல் அவனிடம் கூற எதுவும் இல்லை தான் செய்ய இருந்த தவறுக்கு இந்த தண்டனை தேவை தான் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.


கதிரும் சுரேந்தரும் வெளியே சென்றதும் தன்னுடைய இடத்தில் அமர்ந்து கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவனை அழைத்த ஷக்தியை பார்த்த ஆதியிடம் , “ நீ என்ன செய்தாலும் அது சரியா தான் இருக்கும் நான் அதை பற்றி எதுவும் சொல்ல வரல..... இப்போ நம்ம என்ன பண்ணப் போறோம் “ என்று கேட்டான்.


ஆதி, “ இதுல யோசிக்க என்ன இருக்கு ஷக்தி.... அந்த ஆசிரமத்த சேர்ந்தவங்க கிட்ட நாம பேசனும் “ என்று அடுத்து என்ன செய்வது என்பதை பற்றி விவாதித்து கொண்டிருந்தனர்.


அதே நேரம் அந்த பிரம்மாண்டமான அலுவலகத்தினுள் நுழைந்த வானதி மித்ராவை கைப்பேசி மூலம் அழைத்தாள். சுரேந்தரை வெளியே அனுப்பி விட்டு வந்தவனை வழிமறித்த மித்ரா அவனின் கையை பிடித்துக் கொண்டு வானதியை சந்திக்க சென்றாள். எதற்கு இவள் இவ்வாறு எங்கே அவசரமாக அழைத்து செல்கிறாள் என்று தெரியாமல் அவள் பின்னாலேயே கதிரும் சென்றான். கீழே வானதியை பார்க்கிங்கில் காத்திருக்க சொன்ன மித்ராவும் கதிருடன் அங்கு வந்தாள்.


அங்கு என்ன நடக்கிறது என்று கதிருக்கு ஒன்றும் புரியவில்லை அதுவும் வானதியை இது வரை போட்டோவில் தான் பார்த்திருக்கிறான் அப்படி இருக்கும் போது இன்று தீடிரென்று இங்கு வந்து இருப்பது எதற்காக என்று யோசித்தவன். கதிர், “ என்னாச்சு மித்ரா.... எதாவது பிரச்சனையா வானதி வேற வந்து இருக்காங்க “ என்று கேட்டவனிடம் சிறிது நேரத்திற்குப் பிறகு ஆசிரமத்தில் நடந்த அனைத்தையும் விளக்கமாக கூறியவள், “ கதிர்.... இது நம்ம கம்பெனினால அப்படின்னு நினைக்கும் போது என்னால நம்ப முடியல.... அதை பத்தி ஆதி சார் கிட்ட பேச தான் வானதி வந்துருக்கா. நீ தான் அவர மீட் பண்ண ஹெல்ப் பன்னனும் “.


கதிர், “ மித்ரா நீ நினைச்சது சரி தான் அந்த சுரேந்தர் தான் எல்லாத்தையும பண்ணியிருக்கான்....” என்று நடந்ததை சொல்ல தொடங்கியவனிடம், “ கதிர் இப்போ பேச டைம் இல்ல.... எனக்கு உங்க எம்.டி யா பாக்கணும் அதுக்கு கொஞ்சம் ஏற்ப்பாடு பண்ணுங்க “ என்று வானதி கேட்டு கொண்டிருக்கும் போது ஆதி கதிரை கைப்பேசி மூலம் அழைத்தான். அதை கண்டவன், “ சரி சிஸ்டர்..... வாங்க போலாம். பாஸ் வேற கூப்பிட்றாரு “ என்று கூறி விட்டு வேகமாக முன்னே சென்றான்.


உள்ளே அழைத்து சென்று ரிசப்ஷனில் அமர வைத்து விட்டு ஆதியை பார்க்க அவன் அறைக்குள் சென்ற கதிரிடம் ஷக்தியும் ஆதியும் சில வேலைகளை கூறினார்கள். பிறகு கதிர்,” பாஸ்.... ஆசிரமத்துல இருந்து உங்கள மீட் பன்னனும்ன்னு வந்து இருக்காங்க “ என்று அவன் கூறியதும் ஷக்தியும் ஆதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். இப்பொது தான் அவர்களை சந்திக்க வேண்டும் என்று சிந்தித்து கொண்டிருக்கும் போது அவர்களே இப்போது வந்தது நல்ல விஷயம் என்று நினைத்தவன் கதிரிடம் அவர்களை உள்ளே அனுப்புமாறு சொல்லி அனுப்பினான். வெளியே வந்த கதிர் வானதியிடம் உள்ளே செல்லுமாறு வழிக்காட்டி விட்டு சென்றான்.


அந்த அறையை நோக்கி சென்று கொண்டிருந்த வானதியின் மனதில் இப்போது நாம் செல்லும் காரியம் நல்லப்படியாக முடிய வேண்டும். என்ன நடந்தாலும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தப்படியே அந்த அறை வாசலுக்கு வந்து கதவை தட்டி விட்டு அனுமதி கிடைத்தப்பின் உள்ளே சென்றவளுக்கு அங்கு அந்த நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து இருந்தவனை பார்த்து அதிர்ச்சியில் ஒரே இடத்தில் உறைந்து நின்று விட்டாள்.


கதவை தட்டியவர்களுக்கு அனுமதி கொடுத்தப்பின்னும் யாருடைய குரலும் கேட்கவில்லையே என்று நிமிர்ந்து பார்த்தவனுக்கும் அது மிகப் பெரிய அதிர்ச்சியையே கொடுத்தது. ஆனால் இப்போது இருக்கும் இடத்தை உணர்ந்தவன் நொடியில் தன்னுடைய தடுமாற்றத்தை மாற்றிக் கொண்டான். அவள் தன்னை பார்த்து விட்டாள் என்பதை கண்டு கொண்டவன் அவள் மனதில் இப்போது தோன்றி இருக்கும் உணர்வுகள் அவனுக்கு புரிந்தது. அவள் அதிர்ச்சியில் நிற்பதை கண்டு , “ உள்ள வாங்க அங்கயே நின்னுட்டு இருக்கீங்க.... வந்து உக்காருங்க “ என்ற அவன் குரலில் தன்னுனர்வு பெற்றவள் கீ கொடுத்த பொம்மை போல் நடந்து சென்று அவன் எதிரில் இருக்கும் இருக்கையில் அமர்ந்ததும் கூட இன்னும் அவளால் நம்ப முடியவில்லை உண்மையில் தான் காண்பது கனவா இல்லை நனவா என்று தன்னுடைய கண்ணை கசக்கி கொண்டு அவனை பார்த்த போது அவளை காணும் அவனின் கண்ணில் தோன்றிய மாற்றம் நொடியில் மறைந்தாலும் அது வானதியின் கண்ணில் பட தவறவில்லை. அந்த நிமிடம் அவள் மனம் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட மனம் மொத்தமாக நொறுங்கியதை போல் மிகவும் வலித்தது. தன் கண்ணில் வெளிப்படும் வலியை அவனுக்கு காண்பிக்க கூடாது என்று சற்று குனிந்து தன்னை சமன்ப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து போது தான் அந்த டேபிளில் இருந்த பெயர் பலகையை கண்டாள் அதில் கம்பீரமாக “ ஆதித்ய அருள்மொழி வர்மன் “ என்று இருப்பதை பார்த்தவுடன் இருந்த சந்தேகமும் தீர்ந்து விட்டது ஆனால் அவளுக்கு இப்போது இருக்கும் கோவத்தை வெளிக்காட்டும் நேரம் இது இல்லை என்று நினைத்து கொண்டிருந்தாள்.


அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க விரும்பி ஷக்தி வெளியே செல்ல எழும்பும் போது அவனின் எண்ணத்தை தெரிந்து கொண்டு அவனை அமர சொல்லி சைகையிலேயே சொன்னான். அவளை சமாதானம் செய்யும் நேரம் இதுவல்ல என்பது ஆதிக்கு நன்றாகவே புரிந்தது. அடுத்து என்ன செய்வது என்றே அவனுடைய சிந்தனையாக இருந்தது.


வெவ்வேறு மனநிலையில் இருக்கும் இவர்கள் இருவருக்குள்ளும் நிகழப்போவது என்ன..... அருளாக மனதில் பதிந்தவன் இன்று ஆதித்ய அருள்மொழி வர்மன் ஆக முன்னால் இருக்கும் அவளின் மனநிலையில் ஏற்ப்படும் மாற்றம் என்ன..... தான் மறைத்த ஒரு விஷயம் இன்று அவனுக்கு முன்னால் விஸ்வரூபமாக நிற்க்கும் இந்த நேரத்தில் ஆதியின் அடுத்தக்கட்ட செயல் என்னவென்பதை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்....


பல ஆயிரம் ஆசைகள் உண்டு

இவர் இதயங்கள் நினைப்பதற்கு

இந்த மனிதர்கள் தெய்வங்கள்

இல்லை இங்கு நினைத்தத்தை

முடிப்பதற்கு போ என்றால்

மேகங்கள் எங்கே போகுமோ யார்

நெஞ்சம் யாரிடம் எங்கே சேருமோ...


நிஜத்தை தேடும்....


உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்
....
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 20


எதிர் எதிரே இருவரும் அமர்ந்து இருந்த அந்த நிமிடம் மிகவும் கனமாகவே தோன்றியது. இது வரை எந்த ஆண் மீதும் வைக்காத நம்பிக்கையை வைத்தவன் தன்னை முழுவதுமாக ஏமாற்றியதை வானதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வானதிக்கு ஆதியை விட அவள் மேல் தான் கோவமாக வந்தது. ஏன்னெனில் ஏமாற்றியவர்களை விட அதற்கான சந்தர்ப்பத்தை கொடுத்து ஏமாந்த தான் தான் பெரிய முட்டாள். அதை நினைக்கும் போது அவள் மேலயே அவளுக்கு வெறுப்பாக இருந்தது. இவ்வளவு நடந்த பிறகும் அவன் முன் அமர்ந்திருப்பது அவளுக்கு பிடிக்கவே இல்லை ஆனால் சூழ்நிலை இவ்வாறு அமைந்ததை நினைத்து கொண்டு அமைதியாக இருப்பதற்கு ஒரே காரணம் அவள் மீனாட்சிக்கு கொடுத்த வாக்குறுதி தான்.எது நடந்தாலும் வந்த காரியத்தை முடித்தே ஆக வேண்டும் என்பதில் அவள் தெளிவாகவே இருந்தாள்.


வெளியில் எதுவும் காட்டிக் கொள்ளாமல் கம்பீரமாக ஆதி அமர்ந்திருந்தாலும் மனதிற்குள் ஒரு வித பயம் ஆட்கொள்வதை அவனால் தடுக்க முடியவில்லை. தன்னை கண்டுக்கொண்டவுடன் அவள் கண்களில் தோன்றிய வலியை பார்க்கும் போது அதை ஆதியால் தாங்கி கொள்ள முடியவில்லை. இப்போது அவன் ஆதியாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். தீர்ப்பை எழுதுவதற்கு முன்பே தனக்கு என்ன தண்டனை என்பதை ஒரு நல்ல காதலனாக அவள் பார்வையை வைத்தே மனதில் இருப்பதை புரிந்து கொண்டான். ஆனால் அந்த தண்டனையை ஏற்க அவன் மனம் தயராக இல்லை. அவள் எவ்வளவு கொடுமையான தண்டனையை கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள அவன் தயார் தான் ஆனால் அவளின் பிரிவை மட்டும் அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அதை தடுக்க வேண்டும் என்றால் அவன் அவளிடம் அருளாக இல்லாமல் ஆதியாக தான் நடந்து கொள்ள வேண்டும்.


இவர்கள் இருவரின் மனதிலும் என்ன நினைத்து கொண்டு இருக்கிறார்கள் என்று அங்கு அமர்ந்திருந்த ஷக்தியால் புரிந்து கொள்ளவே முடியவில்லை சரி பேசாமல் அவர்களுக்கு தனிமையை கொடுத்து விட்டு செல்லலாம் என்று நினைத்தால் அதற்கும் ஆதி போக கூடாது இங்கேயே இருக்கும் படி கூறியதால் ஷக்திக்கு அங்கு இருப்பதை தவிர வேறு வழியில்லை என்பதால் அமைதியாக அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்கினான். இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த ஆதி அவனே பேச்சை ஆரம்பித்தான், “ சொல்லுங்க..... என்னை பார்க்கணும்ன்னு வந்துட்டு அமைதியா இருந்தா எப்படி “ என்று கேட்டவனின் குரலில் நடப்பிற்க்கு வந்த வானதி தன்னை நிலைப்படுத்தி கொண்டு அவனை தீர்க்கமாக பார்த்தாள். அவளின் கண்களில் எப்போதும் போல் இன்றும் தன்னை தொலைத்தான் ஆதி.


வானதி, “ நான் யாரு.... எதுக்கு வந்து இருக்கேன்ன்னு உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சி இருக்கும் அதனால உங்க நேரத்தை நான் வீணாக்க விரும்பல சுருக்கமா சொல்றேன் “ என்றவள் நடந்த அனைத்தையும் கூறியவள் இங்கு அவள் எதற்க்காக வந்து இருக்கிறார் என்பதையும் கூறி முடித்தாள். அவள் கூறுவதை ஒரு பக்கம் கேட்டு கொண்டிருந்தாலும் கோவத்தில் அவள் முகம் மேலும் அழகாகவே ஆதியின் கண்களுக்கு தெரிந்ததால் அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அவனின் பார்வையை உணர்ந்தவள் அவனிடம் கோவமாக, “ நீங்க இந்த மாதிரி செஞ்சதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க “ என்று கேட்டாள்.
ஆதி, “ இங்க பாருங்க ஆருந்யா....” என்று அவன் ஆரம்பித்ததும் பாதியிலேயே இடை மறித்தவள், “ என் பெயர் ஆருந்யா வானதி.... அதனால என்னை நீங்க ஒன்னும் ஆருந்யான்னு கூப்பிட தேவையில்லை.... வானதின்னு சொல்லுங்க...” என்றவளை முறைத்தவன், “ சரி வா..ன..தி.... போதுமா.... இந்த தவறு எனக்கு தெரியாம நடந்தது “.


வானதி, “ வர்மா குரூப் ஆஃப் கம்பெனிஸ் எவ்வளவு பெரிய கம்பெனி அப்படின்னும் அதோட எம்.டி....அதாவது உங்கள பத்தியும் நான் நிறையவே கேள்வி பட்டு இருக்கேன். இவ்வளவு பெரிய பிஸ்னஸ் பண்ற நீங்க இப்படி சொல்றது நம்பர மாதிரி தெரியலயே “ என்று அவள் நக்கலாக பேசுவதை கேட்டதும் ஆதிக்கு ஒன்று புரிந்தது அவன் எது கூறினாலும் அவள் நம்ப போவதில்லை என்று அதனால் அவள் வழியிலேயே சென்று தான் அவளை தன்னுடைய வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று அவன் சிந்தித்து கொண்டிருக்கும் போது வானதியை சமாதானம் படுத்த எண்ணி பேச நினைத்த ஷக்தியையும் கண்ணாலேயே தடுத்து நிறுத்தி விட்டான். அதை புரிந்த ஷக்தி சலிப்புடன், ‘ இவன் என்ன மனசுல நினைச்சிட்டு இருக்கான்ன்னே தெரிலயே.... இந்த பொண்ணு வேற செம கோவத்துல இருக்கு... இவன் எப்படி சமாளிக்க போறான்னே புரிலயே. பயப்புள்ள இப்ப கூட கேத்த விடாம மெயின்டேயின் பன்றானே ‘ என்று நினைத்து கொண்டு இருந்தான்.


ஆதி, “ சரி....நான் என்ன சொன்னாலும் நீங்க நம்ப போறது இல்லை அதனால நீங்க சொன்னப்படியே.... எனக்கு தெரிஞ்சு தான் எல்லாம் நடந்தது அதுக்கு இப்ப என்ன.... நீங்க இதை தெரிஞ்சிக்க தான் இங்க வந்தீங்களா வானதி...” என்று அவளுடைய பெயரில் ஒரு அழுத்ததுடன் கூறியவனை கடுப்புடன் பார்த்தவள், “ அதான் எனக்கு தெரியுமே எல்லாம் பணக்கார திமிர்... இப்ப அதை பத்தி நான் பேச வரல..... எங்களுக்கு தேவை அந்த இடம் அதுக்கு என்ன பன்னனும் அதைப்பத்தி சொல்லுங்க “.


அவள் சொன்னதை கேட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் , “ என்ன இருந்தாலும் இதில எங்க மேலையும் தப்பு இருக்கு அதனால இந்த லேண்ட நீங்களே வாங்கிக்கொங்க.... நான் என்னோட ப்ராஜெக்ட்க்கு வேற இடம் பாத்துக்கிறேன். ஆனா இப்போ இருக்க மார்க்கெட் ரெட் படி அந்த இடம் எவ்வளவு போகுமோ அந்த பணத்த குடுத்துட்டு பத்திரத்தை வாங்கிக்கொங்க..... நான் உங்களுக்கு ஒரு வாரம் டைம் தரேன் அதுக்குள்ள எல்லாத்தையும முடிச்சிடுங்க.... அவ்வளவு தான் இதான் என் முடிவு “ என்று அவன் தீர்மானமாக கூறியதை கேட்ட வானதிக்கும் ஷக்திக்கும் அதிர்ச்சியாக இருந்தது.


வானதி, “ நீங்க என்ன சொல்றீங்க அந்த இடம் பல லட்சம் போகும்.... ஒரு வாரத்துல எப்படி அதை நாங்க ரெடி பண்ண முடியும்....தப்பே செய்யாத எங்களுக்கு எதுக்கு இப்படி ஒரு தண்டனை... உங்களுக்கு மனசாட்சியே கிடையாத “ என்று கோவமாக கேட்டப்படியே அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து நின்றாள்.


ஆதி, “ இப்போ இருக்க பிஸ்னஸ் உலகத்துல மனசாட்சியோடு இருந்தா நான் இந்த இடத்துல இருக்கவே முடியாது புரியுதா...”.


வானதி, “ அதுக்காக மொத்தமா மனசாட்சியே இல்லாம நடந்துக்கனும் யாரும் சொல்லலையே.... இங்க பாருங்க நான் ஒன்னும் உங்கள அந்த இடத்த இலவசமா கொடுக்க சொல்லல.... ஒரு வாரம் அப்படின்றது ரொம்ப கம்மி எங்களால அவ்வளவு பெரிய தொகைய எப்படி ரெடி பண்ண முடியும் “.


ஆதி, “ அது உங்க பிரச்சனை..... லேண்ட் பக்காவா ரிஜீஸ்டர் ஆயிருக்கு. அது ஒண்ணும் உங்களுக்கு சொந்தமானது இல்லையே. நியாயமா பார்த்தா அந்த இடத்த உங்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல.... ஆனாலும் அதை நான் உங்களுக்கு கொடுக்கற முடிவ எடுத்து இருக்கேன்னா ஏதோ தப்பு எங்க பக்கமும் இருக்கறதுனால தான்.... நான் ஒரு பக்கா பிஸ்னஸ்மேன்.... நான் சம்பாதிக்கற ஒவ்வொரு காசும் எனக்கு ரொம்ப முக்கியம்.... எனக்கு லாபம் இல்லாத எதையும் என்னால செய்ய முடியாது. உங்க விஷயம் மட்டும் தான் எனக்கு வேலை இல்லை.... இதை விட எனக்கு ஆயிரம் வேலை இருக்கு....” என்று சொல்லியவனை நம்ப முடியாமல் பார்த்தவள் , “ அப்போ இதான் உங்க முடிவா “ என்று கேட்டாள்.


ஆதி, “ சரியா ஒரு வாரம் டைம் உங்களுக்கு ஓகே னா ரிஜீஸ்டரேஷன் வெச்சிக்கலாம் இல்லனா என்னால எதுவும் பண்ண முடியாது இடத்த காலி பன்னிடுங்க... ஒரு டூ டேஸ்க்குள்ள உங்க முடிவ சொல்லிடுங்க அப்போ தான் முன்னாடியே எல்லாத்தையும் ரெடி பண்ண முடியும்.... ஓகே இப்போ நீங்க கிளம்புங்க எனக்கு நிறைய வேலை இருக்கு “ என்றவன் அத்தோடு முடிந்தது என்பதை போல் தன்னுடைய வேலையை பார்க்க தொடங்கினான். ஆதி கூறியவற்றை கேட்கும் போது அவன் அளவில் சொல்வதும் சரி தான் ஆனால் அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு செல்வது என்ற யோசனையோடு எழுந்தவள் வாசலை நெருங்கும் போது அவள் கைப்பேசியில் மெசேஜ் வந்ததற்கான சத்தத்தில் எடுத்து பார்த்தாள் அதில் “ இன்று மாலை ஆறு மணிக்கு பார்க்கில் சந்திக்க வேண்டும் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் – அருள் “ என்று இருந்ததை படித்தவுடன் அவளுக்குள் அப்படி ஒரு கோவம் வந்தது திரும்பி அவனை பார்த்து முறைத்தாள் அப்போது குனிந்து அமர்ந்து இருந்தவன் அவளை பார்த்து கண்ணடிக்கவும் வெறுப்போடு அங்கிருந்து வேகமாக வெளியே சென்று விட்டாள்.



அதே நேரம் காலையில் நடந்த அனைத்தையும் மித்ராவிடம் கூறிக் கொண்டிருந்தான் கதிர். உடனே மித்ரா, “ அப்போ எல்லாம் அந்த சுரேந்தர் னால தான்.... நம்ம பாஸ் கிட்ட பேசுன கண்டிப்பா உதவி பன்னுவார்ல.... ஆனா வானதி வேற கொஞ்சம் கோவமா உள்ள போய் இருக்கா என்ன நடந்ததுன்னு வேற தெரியல “ என்று புலம்பிக் கொண்டிருக்கும் போது வானதி வேகமாக அவளை கடந்து செல்வதை கண்ட. மித்ரா அவளை சத்தமாக அழைத்தும் கேட்காமல் சென்று விட்டாள். இப்போது வேலையில் இருக்கும் போது பின் தொடர்ந்து செல்ல முடியாததால் மாலை வீட்டிற்கு சென்று பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவள் கதிரிடம் கூறி அவனை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள்.


இங்கு ஆதியின் அறையில் வானதி சென்ற பின்பு ஷக்தி, “ என்ன ஆதி ஏன் இப்படி பண்ண.... ஏற்கனவே சிஸ்டர் உன் மேல கோவமா இருப்பாங்க. அப்படி இருக்கும் போது ஏன் இன்னும் கோவம் அதிகமாகிற அளவுக்கு நடந்துகிட்ட கொஞ்சம் பொறுமையா நடந்து இருக்கலாம்ல “ என்று கேட்டவனுக்கு தன்னுடைய சிரிப்பையே பதிலாக தந்தான் ஆதி.


ஷக்தி, “ இப்படி சிரிச்சா என்ன அர்த்தம் ஆதி “.


ஆதி, “ இப்போ நான் ஏன் இப்படி நடந்துக்கிட்டேன்ன்னு உனக்கு தெரியனும் அதான” என்றவன் ஷக்தி அதற்கு ஆமாம் என்று தலையாட்டியதும் தன்னை சற்று நிலைப்படித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.


ஆதி, “ நேத்து சென்னைக்கு வந்தவுடனே எனக்கு இங்க நடந்த எல்லா விஷயமும் தெரியும். இதுல வானதியும் இன்வொல்வ் ஆயிருக்கான்னும் தெரிஞ்சிக்கிட்டேன். காலையிலேயே அந்த ஆசிரமத்துல இருக்க மீனாட்சி அம்மா கிட்ட பேசிட்டேன் அவங்க கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டூ அந்த இடத்தா அவங்க ட்ரஸ்ட்க்கே கொடுக்கறேன்ன்னு நான் சொன்ன உடனே ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.... அவங்க கிட்ட இந்த விஷயத்தப்பத்தி வானதிக்கும் மித்ராவுக்கும் தெரிய வேண்டாம்ன்னு சொன்னேன்.... அப்போ தான் வானதி இது விஷயமா என்னை சந்திக்க வருவான்னு சொன்னாங்க “.


ஷக்தி, “ அப்படின்னா உனக்கு எல்லாமே தெரியுமா.... எதுவுமே தெரியாத மாதிரியே எங்கக்கிட்ட நடந்துக்கிட்டியேடா.... அது கூட பரவால சிஸ்டர் இங்க வருவாங்கன்னு தெரிஞ்சும் ஏன்டா அமைதியா இருந்தா. இப்படி ஒரு சந்திப்ப தடுத்து இருக்கலாம்ல “.


ஆதி , “ நேத்து ரிஷி சொன்னதை நீயும் தான கேட்ட அதுக்காப்புறம் என்னால எப்படிடா நிம்மதியா இருக்க முடியும்.... ஏதோ ஒரு சூழ்நிலைல அவளுக்கு என்னை பத்தினா உண்மை தெரியத்தான் போகுது அது இப்பயே தெரியட்டும்ன்னு தான் அமைதியா இருந்தேன். நான் நினைச்ச மாதிரியே அவ என்னை சந்திக்க வந்தா எல்லாமே நடந்தது... அவ என் மேல இப்ப பயங்கர கோவத்தில் இருப்பா.... எனக்கு அது கஷ்டமா இருக்கு ஆனாலும் அதை விட அவ உயிர் எனக்கு ரொம்ப முக்கியம் அதுக்காக நான் சில முடிவு எடுத்து இருக்கேன். அதுக்கு அவ என்னைப்பத்தி முழுசா தெரிஞ்சிக்கனும். இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கு. உன் உதவியும் அதுல எனக்கு தேவைப்படும் தயாரா இரு “ என்று கூறியவனை பார்க்கும் போது அவனுக்கு சிறிது பயமாகவே இருந்தது. கொஞ்ச நாட்களாக மகிழ்ச்சியாக இருந்தவன் இப்போது மீண்டும் பழைய மாதிரி இரும்பாக மாறி விட்டானா என்று கூட தோன்றியது.


ஷக்தி, “ நீ சொன்னது எல்லாம் சரி தான்.... கடைசியா வெளிய போகும் போது வானதி உன்னைப்பாத்து முறைச்சிட்டு போச்சே அது எதுக்கு “ என்று கேட்டவனுக்கு அவன் செய்ததை சிரிப்புடன் கூறினான். ஷக்தி,” இந்த ரணகளத்துலயும் உனக்கு தேவையாடா “ என்று கூறி தலையில் அடித்துக் கொண்டு சென்று விட்டான். அவன் சென்றதும் அவனுடைய சிந்தனை முழுவதும் வானதியே நிறைந்து இருந்தாள். மாலை தன்னை அவள் சந்திக்க வருவாள என்று அவளை எப்படியாவது பார்த்து பேசியாக வேண்டும் என்பதில் உறுதியாகவே இருந்தான்.


ஆதியின் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த வானதிக்கு கோவத்தை அடக்கவே முடியவில்லை. எது நடக்க கூடாது என்று நினைத்தாளோ அதுவே நிகழ்ந்து விட்டதை எண்ணும் போது அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படி எதாவது நடந்து விடுமோ என்ற எண்ணத்தில் தான் தன்னுடைய மனதிற்குள் எவரையும் நுழைய விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் ஆனால் இன்று தன் அன்னைக்கு நிகழ்ந்ததே தனக்கும் நேர்ந்து விட்டதை நினைக்கும் போது அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாள் என்பது அவளுக்கே தெரியாது. வாசல் கதவு தட்டும் ஓசையில் நடப்பிற்கு வந்தவள் எழுந்து போய் கதவை திறந்து மித்ராவை உள்ளே அழைத்து கதவை சாத்தி விட்டு மணியை பார்க்கும் போது தான் தெரிந்தது நேரம் ஆறு மணியை கடந்து இருப்பதை வேகமாக சென்று தன்னுடைய கைப்பேசியை எடுத்து பார்த்தால் அதில் ஆதியிடம் இருந்து அழைப்பு வந்து இருப்பதை கண்டவுடன் அவள் கோவம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது ப்போனை வைத்து விட்டு தன்னுடைய வேலையை பார்க்க சென்று விட்டாள்.


அலுவலகத்தில் வேலை முடிந்ததும் ஆறு மணிக்கு நேராக அவன் பார்க்கிற்கு தான் சென்றான். எப்படியும் அவள் வருவாள் என்று அவன் மனதின் ஒரத்தில் ஒரு எண்ணம் இருந்தது ஆனால் மணி ஆரை கடந்தும் அவள் வராதது ஆதிக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. என்ன தான் அவள் பக்கம் நியாயம் இருந்தாலும் தன்னை காண வராமல் அவளால் இருக்க முடியும் என்ற அவளுடைய எண்ணத்தை ஆதியால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. எந்த விதத்திலும் அவளை தான் பாதிக்கவில்லையோ என்று பல எண்ணங்கள் அவன் மனதில் ஒவ்வொன்றாக தோன்ற ஆரம்பித்தது. எது எப்படி இருந்தாலும் அவளை சந்திக்காமல் இங்கிருந்து செல்லக் கூடாது என்று அவன் மனதில் உறுதிக் கொண்டான். சிறிது நேரத்திற்குப் பிறகு அவளை கைப்பேசியில் தொடர்பு கொண்டான் ஆனால் பலன் என்னவோ பூஜியம் தான். எவ்வளவு அழைத்தும் அவள் எடுக்காததால் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உடனே செயலாற்றினான்.


வீட்டிற்கு வந்து ஆபீஸ்சில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தப்படி வந்த மித்ராவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. வந்ததில் இருந்து எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டு தன் முன்னால் இருக்கும் கைப்பேசியை இமைக்காமல் பார்த்து கொண்டு ஏதோ சிந்தனையில் இருப்பவளிடம் என்ன கேட்பது என்றே மித்ராவிற்கு புரியவில்லை. சிறிது நேரத்தில் சரியாகி விடுவாள் என்று காத்திருந்த்தவளுக்கு ஏமாற்றமே ஏற்ப்பட்டது. இதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாது என்று எண்ணியவள் ஒரு முடிவோடு அவள் அருகில் சென்று அமர்ந்து அந்த கைப்பேசியில் அப்படி எதை பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று எட்டி பார்த்தால் அதில் ஏகப்பட்ட அழைப்புகள் ஒரே நபர் அதுவும் அருளிடம் இருந்து வந்து கொண்டிருப்பதை கண்டாள். அப்போது தான் அவளுக்கு ஒன்று புரிந்தது வானதிக்கும் அருளுக்கும் ஏதோ சண்டை அதனால் தான் இவ்வாறு இருக்கிறாள் என்று.


மித்ரா, “ ஆரூ.... உனக்கும் அருளுக்கும் என்ன பிரச்சனையா இருந்தாலும் ப்போன் அட்டென்ட் பண்ணூ.... பாரு அவர் எத்தனை தடவை கூப்பிடுறார் “ என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போது மெசேஜ் வந்ததற்கான ஒலியில் இருவரும் அதை கண்டனர். அது யாரிடம் இருந்து வந்து இருக்கிறது என்று அறிந்தவுடன் வானதி அமைதியாக இருப்பதை கண்டு அவளே அவளுடைய ப்போனை எடுத்து அதில் வந்து இருக்கும் செய்தியில் அதிர்ந்தவள். வேகமாக அவள் முகத்திற்கு நேராக நீட்டினாள்.அதில், “ ஆருந்யா.... நான் உனக்காக தான் இங்கே காத்திட்டு இருக்கேன். நீ என் மேல ரொம்ப கோவமா இருக்கேன்ன்னு தெரியும் இருந்தாலும் நான் சொல்றதை கேட்க எனக்கு கொஞ்சம் சந்தர்ப்பம் குடு..... இன்னிக்கு உன்னை பார்க்காமல் இந்த இடத்தை விட்டு நான் போக மாட்டேன் என்ன ஆனாலும் சரி எத்தனை நாள் ஆனாலும் சரி “ என்று இருந்தது. அதை படித்து விட்டு அதை பற்றி எதுவும் கூறாமல் எழுந்து செல்பவளை வழி மறித்த மித்ரா.


“ வானதி.... என்ன இது அவர் பாவம் என்ன நடந்து இருந்தாலும் உன் பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்திக்கோ.... ஒன்னு அவர போய் பாரு இல்லனா ப்போன்ல பேசு.... உனக்கு யார் மனசையும் கஷ்டப்படுத்த தெரியாதுன்னு எனக்கு தெரியும் “ என்று அவள் கையில் கைப்பேசியை வைத்து விட்டு அவளுடைய அறைக்குள் நுழைந்து கொண்டாள் மித்ரா.


அவள் கூறியதை பற்றி யோசித்து கொண்டிருக்கும் போது மீண்டும் ஒலிக்க தொடங்கியதை எடுத்து காதில் வைத்தாள் வானதி. அவள் எடுத்ததை கண்ட ஆதி, “ நான் எவ்வளவு நேரமா கூப்பிடுறேன் ஆருந்யா.... ஏன் எடுக்கல “.


வானதி, “ நான் எதுக்கு எடுக்கனும் முதல்ல நீங்க எனக்கு யாரு “.


ஆதி , “ நான் உனக்கு யாருன்னு புரிய வைக்கத்தான் இன்னிக்கு உன்னை சந்திக்கனும்ன்னு சொன்னேன். இன்னும் உனக்காக தான் காத்திட்டு இருக்கேன் “.


வானதி, “ நான் ஒண்ணும் உங்களை காத்திட்டு இருக்க சொல்லல.... நீங்க எனக்கு எதையும் புரிய வைக்கவும் தேவையில்லை. நான் வரவும் மாட்டேன் “ என்று பிடிவாதமாக கூறுவதை கேட்ட ஆதிக்கும் அவளை பார்த்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதம் அதிகமாகியது.


ஆதி, “ நீ இங்க வந்து என்னை பார்க்கிற வரைக்கும் நான் இங்கிருந்து நகர மாட்டேன்.... அது எத்தனை நாள் ஆனாலும் சரி “.


வானதி, “ என்ன.... ப்ளாக் மெயில் பன்றீங்களா. உங்களோட இந்த மிரட்டலுக்கு பயப்படுற ஆள் நான் இல்லை “ .


ஆதி, “ நான் மிரட்டலுக்காக சொல்லல உண்மையை தான் சொன்னேன். உன் மேல எனக்கு இருக்க காதல் எவ்வளவு அதிகமோ அதே மாதிரி என்னோட பிடிவாதமும் ரொம்ப அதிகம் தான்.... அதை நீயே புரிஞ்சிப்ப. நான் சொன்னா சொன்னது தான் நீ நல்லா நியாபகம் வெச்சிக்கோ. நீ வரவரைக்கும் நான் இங்கிருந்து எங்கையும் போக மாட்டேன் “ என்று அழுத்தமாக கூறியவன் ப்போனை துண்டித்து விட்டான்.


ஏதோ தன்னை வரவைப்பதற்காக அவ்வாறு கூறுக்கிறான் சொன்னால் சென்று விடுவான் என்று நினைத்தவள் கடைசியாக அவன் குரலில் இருந்த அழுத்தத்தில் எங்கே அவன் சொன்னதை செய்து விடுவானோ என்று பயம் வரத் தொடங்கியது. இருந்தாலும் அங்கு செல்வதற்கு அவளுடைய தன்மானம் இடம் கொடுக்க வில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு அவனே சென்று விடுவான் என்று தனக்கு தானே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குள் சென்று விட்டாள்.


அங்கு அவளின் வருகைக்காக பசியிலும் குளிரிலும் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்தான் ஆதித்ய அருள்மொழி வர்மன். வானதி வருவாளா மாட்டாளா.... இதில் ஜெய்க்க போவது யார் என்பதை நாமும் பொறுத்திருந்து காண்போம்....



பூஞ்சோலையில் வாடைக்காற்றும்

வாட சந்தம் பாட

கூடாதென்று கூறும் பூவும்

ஏது மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை

தந்தால் என்ன தேனே

ஒரே ஒரு வார்த்தை

சொன்னால் என்ன மானே

ஆகாயம் ஆகாத

மேகம் ஏது கண்ணே....


நிஜத்தை தேடும்....


உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்....

 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
த்தியாயம் 21



நேரம் கடந்து சென்றும் இன்னும் தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு வரவில்லையே என்று கவலையாக வாசலையே பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தாள் ஷர்மிளா. அவளின் கவலையை உணர்ந்த ஷக்தி சமாதானப் படுத்தும் எண்ணத்தொடு அவள் அருகில் வந்து அமர்ந்தவன், “ ஷர்மீ.... அவன் ஒன்னும் சின்ன பையன் கிடையாது சரியா.... கண்டிப்பா வீட்டுக்கு வருவான் “ என்றான்.



ஷர்மிளா, “ இல்லங்க.... வேலை இருந்தா அண்ணன் ப்போன் பன்னுவாரு ஆனா நான் கால் பண்ணியும் அவர் எடுக்கவே இல்லை அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு “.



அவள் கவலையாக இருப்பதை கண்ட ஷக்தி காலையில் அலுவலகத்தில் நடந்த அனைத்தையும் வானதி வந்ததையும் என முழுவதையும் கூறினான். அதை கேட்ட ஷர்மீக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே ஷக்தியிடம் , “ இப்போ என்ன பன்றது.... அண்ணி அண்ணன் மேல ரொம்ப கோவமா இருப்பாங்கல.... “ என்று கேட்டவளிடம் , “ பின்ன உன் அண்ணன் பண்ண வேலைக்கு கொஞ்சவா செய்வாங்க.... எற்கனவே அதிர்ச்சியில இருந்த பொண்ணுக்கிட்ட அவன் நடந்து கிட்ட விதம் எனக்குமே கஷ்டமா தான் இருந்தது. ஆனா அவன் மனசுல என்ன இருக்குன்னு யாராலயாவது கண்டு பிடிக்க மூடியுமா அவனே சொன்னா தான் உண்டு.... இப்போ அவன் வானதியா சந்திக்க தான் போய் இருக்கான் அதனால நீ கவலையா விடு “ என்றான்.



ஷர்மிளா, “ இந்த சூழ்நிலைல அண்ணியோட முடிவு என்னவா இருக்கும்.... அத நினைச்சா தான் பயமா இருக்கு ஷக்தி “.



ஷக்தி, “ எனக்கு வானதியா விட ஆதிய நினைச்சா தான் பயமா இருக்கு.... அவன் முதன் முதல்ல ஆசைப்பட்ட விஷயம் அது அவனுக்கு கிடைக்காது அப்படின்ற நிலைமை வந்த அவன் எப்படி மாறுவான்ன்னு தான் கொஞ்சம் பயமா இருக்கு.... சரி என்ன நடக்குதுன்னு பார்ப்போம்... எதுவா இருந்தாலும் சமாளிப்போம் “ என்று அவர்கள் இருவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் அமர்ந்து கொண்டு இருந்தனர்.


நேரம் இரவை நெருங்கி கொண்டிருந்தது வானதிக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. ஆதி வீட்டிற்கு சென்றான இல்லையா என்று அவள் சிந்தனை முழுவதும் அவனை சுற்றியே இருந்தது. யாரை இனி நினைக்கவே கூடாது என்று நினைக்கிறாளோ அவனையே நினைக்க வேண்டி இருக்கிறதே என்று அவளுக்கு தன் மீதே எரிச்சலாகவும் இருந்தது. அமைதியாக அமரவும் முடியாமல் தூங்கவும் முடியாமல் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருக்கும் போது தீடிரென ஒரு இடி சத்தம் அவள் காதை எட்டியது உடனே அவசரமாக சென்று ஜன்னலின் திரையை விலக்கி பார்த்த போது மழை வருவதற்கான அறிகுறியாக மண்வாசனையும் வானில் அங்கங்கே மின்னல் மின்னியும் உறுதிபடுத்தி கொண்டவளுக்கு மனதில் சிறு நெருடலாக இருந்தது. ஒரு பக்கம் அவள் அறிவு எற்கனவே உன்னை பொய் சொல்லி ஏமாற்றியவன் தானே இம்முறையும் அதே செய்து இருக்க மாட்டான் என்று என்ன உத்தரவாதம் என்று கூறியது. ஆனால் இன்னொரு பக்கம் மனமோ அவன் தவறே செய்து இருந்தாலும் அவன் சொல்வது உண்மையாக இருந்தால் உன்னால் ஒருவன் கஷ்டப்படுவதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று கூறியது.



இப்படி அறிவுக்கும் மனசுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது. கடைசியில் வென்றது என்னவோ அவள் மனம் தான். கடைசியாக ஆதியை சந்தித்து பேச வேண்டியதை பேசி விட்டு வந்து விட வேண்டும் என்று எண்ணியவள் வேகமாக வண்டி சாவியை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவள் மித்ராவின் அறைக்கு சென்று அவள் தூங்குவதை உறுதிப்படுத்தி கொண்டு வீட்டை வெளியே பூட்டி விட்டு அந்த இரவு நேரத்தில் அபார்ட்மென்ட்க்கு அருகில் இருக்கும் அந்த பார்க்க்கு சென்று வண்டியை வெளியே நிறுத்தியவளுக்கு உள்ளே செல்வதற்கு தயக்கமாக இருந்தது. இப்படியே சென்று விடலாமா என்று அவள் அறிவு அந்த கடைசி நொடியிலும் அவளை உள்ளே செல்ல விடாமல் தடுத்தது ஆனால் அவளை அறியாமலே அவளுடைய கால்கள் முன்னொக்கி சென்று கொண்டிருப்பதை அறிந்தவள் இரவு நேரத்தில் ஆள் அரவமற்ற அந்த இடத்தை தன் கண்களால் அவன் அங்கு இருக்கிறானா இல்லையா என்று நாலாப்புறமும் தேடியப்படியே நடந்து கொண்டிருந்தாள்.



அவன் எங்கேயும் இல்லையோ என்று செல்ல நினைத்து அவள் திரும்பும் போது அங்கு கடைசியாக அவர்கள் சந்தித்த போது அவள் அமர்ந்து இருந்த இடத்தில் தளர்ந்து போய் கண்கள் இரண்டும் மூடியப்படி அமர்ந்து இருந்தவனையே கண்டாள். அவனை அப்படி ஒரு தோற்றத்தில் காணும் போது அவளை அறியாமலே அவளுக்கு வேதனையாகவே இருந்தது. அவனை நெருங்கி வந்து நின்றவளுக்கு அவனை எப்படி எழுப்புவது என்று குழப்பமாக இருந்தது.


ஆதி சொன்ன நேரங்கள் பல கடந்தும் வானதி வராமல் இருப்பதை நினைக்கும் போது அவனுக்கு மனதிற்குள் சொல்ல முடியாத வேதனை ஆட்க்கொண்டது. அவளுடைய மனதில் ஒரு ஒரத்தில் கூட தனக்கு இடமில்லையா என்று இவ்வளவு நேரமாக யோசித்தவனுக்கு நேரம் செல்ல செல்ல பரிதவிக்க தொடங்கியது. தான் எந்த விதத்திலும் அவளை பாதிக்கவில்லையா என்று அவன் கண்களை மூடி அவளுடன் இருந்த நிமிடங்களை நினைத்து கொண்டிருக்கும் போது தான் யாரோ அருகில் வரும் அரவம் அவனுக்கு கேட்டது. அவள் காலில் இருந்த கொலுசு அது அவன் மனங்கவர்ந்தவள் தான் என்று அடித்து கூறியது. அந்த நிமிடம் அவன் அடைந்த ஆனந்ததிற்கு அளவே இல்லை என்று கூறலாம். வானதி அவனுக்கு மிக அருகில் வந்து நின்றதும் அவளுடைய வாசம் அது தன்னுடையவள் தான் என உறுதிப்படுத்தியது. உடனே தன்னுடைய கண்களை திறந்து பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தாலும் அவள் என்னத்தான் செய்கிறாள் என்று பார்ப்போம் என்று எண்ணியவன் எந்த அசைவும் இல்லாமல் அமைதியாக அமர்ந்து இருந்தான்.



அவனை என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் நின்றவள் ஹலோ.... என்று சத்தமாக அழைத்து கொண்டிருந்தாள். அதை கேட்டவனுக்கு கோவமாக இருந்தது என்னை எப்போதும் போல அருள் என்று அழைக்க மாட்டாளா என்று அவள் அப்படி அழைக்கும் வரை கண்களை திறக்க கூடாது என்று நினைத்து கொண்டு அமைதியாக இருந்தான். இதை எதையும் அறியாதவள் இத்தனை முறை சத்தமாக அழைத்தும் எழுந்து கொள்ளவே இல்லையே என்று சற்று பயமாக இருந்தது. சுற்றி யாரும் இல்லாத அந்த சூழல் வேறு அவளுக்குள் சிறிது அச்சத்தை கொடுத்தது. உடனே அவளை அறியாமாலேயே பதட்டத்துடன் அவனின் தோளின் மீது கையை வைத்து அருள் என்று அழைத்து கொண்டே அவனை அசைத்து எழுப்ப முயன்றாள். அவள் அருள் என்று அவன் பெயரை உச்சரித்ததும் அப்படி ஒரு சந்தோஷம் அதை இன்னும் அதிகரிப்பதை போல அவளுடைய விரல்கள் அவனை தீண்டிய நொடி அவனுக்குள் பரவசம் தோன்றியது. கண்கள் முழுவதும் அவள் மீதான காதலோடு திறந்து பார்த்த போது அவனுடைய முகத்திற்கு நேராக அவள் குனிந்து பதட்டதோடு பார்த்து கொண்டிருந்த இருவரது கண்களும் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டது.



அவன் கண்கள் அத்தனை காதலோடு தன்னை பார்ப்பதை உணர்ந்த வானதிக்கு தன்னை சுற்றி உள்ள அனைத்தும் மறந்தது. ஏதோ மீள முடியாத ஒரு சுழலுக்குள் அவளை இழுத்து சென்றது. ஆதியும் அதே நிலையில் தன்னையே மறந்து கொண்டிருந்தான். தான் அவளை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை கண்களாலே அவளுக்குள் உணர்த்தி விடும் நோக்கில் இருந்த வேலையில் தீடிரென இடித்த இடி சத்தத்தில் சுயநினைவு அடைந்த வானதி சடாரென்று அவனை விட்டு நகர்ந்து நின்றாள். ஆதியும் தன்னை நிலைப்படுத்தி கொள்ள முடியை கோதியப்படி எழுந்து நின்றான்.


ஆதி, “ பரவாயில்லையே சீக்கிரமா வந்துட்ட.... நான் கூட ஒரு ரெண்டு நாள் கழிச்சி தான் வருவேன்னு நினைச்சேன்.... ஏதோ என் மேலையும் உனக்கு பாசம் இருக்கு போல “ என்று நக்கலாக கூறியவனை முறைத்த வானதி, “ நான் ஒன்னும் உங்க மேல இருக்க பாசத்துல இங்க வரல.... மழை வேற வர மாதிரி இருந்துச்சு என்னால யாரும் கஷ்டப்படக் கூடாதுன்னு தான் வந்தேன் “ என்று எதோ சொல்லி மழுப்புபவளை பார்க்கும் போது ஆதிக்கு சிரிப்பாக வந்தது.



ஆதி, “ அப்படியா சரி சரி நம்பிட்டேன்.... இந்த ராத்திரி நேரத்தில நான் கஷ்டப்படக் கூடாதுன்னு நீ கஷ்டப்பட்டு வந்து இருக்க.... “ என்று அவன் பேசுவதை கேட்டவளுக்க்கு கோவமாக வந்தது உடனே அங்கிருந்து கிளம்புவதற்க்காக திரும்பியவளால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை யாரோ தன்னுடைய கையை பிடித்திருப்பது போல் உணர்ந்து திரும்பி பார்த்தவள் அதிர்ந்தாள் காரணம் ஆதி தான் அவளை போக விடாமல் அழுத்தமாக அவள் கையை பிடித்திருந்தான். அவளால் அதை நம்பவே முடியவில்லை தன்னை தொட மாட்டேன் என்று வாக்கு கொடுத்தவன் இவ்வாறு செய்வதை கண்டு அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.



அவளின் பார்வையை உணர்ந்த ஆதி, “ இங்க வரது வேணா உன் விருப்பமா இருக்கலாம் ஆனா இங்க இருந்து போகணும்ன்னா என்னோட விருப்பம் இருந்தா தான் போக முடியும் இந்த இடம் இப்போ என்னோட கட்டுப்பாட்டுல இருக்கு “ என்றவன் அவள் தன்னுடைய கையையே பார்ப்பதை கண்டு, “ என்னடா இவன் நம்மள தொட மாட்டேன்ன்னு சொன்னவன் இப்போ நம்ம கைய பிடிச்சிருக்கானேன்னு பாக்கிறியா ஆருந்யா.... நான் கொடுத்த வாக்கு தான் காலாவதி ஆயிடுச்சே “ என்றவனை குழப்பமாக பார்த்தவளிடம் மீண்டும் தொடர்ந்தான், “ புரியலல நீயா உன் கையால என்னை தொட்ர வரைக்கும் தான் நான் உன்னை தொட மாட்டேன்ன்னு சொன்னேன் ஆனா நீ தான் வந்த உடனே உன் கையால என்னை எழுப்புறேன்ன்னு ஒரு உலுக்கு உலுக்கிட்யே “ என்று அவன் கூறியதை கேட்டவுடன் தான் அவள் பதட்டத்தில் செய்ததே நினைவில் வந்தது.
அவன் அழுத்தமான பிடியிலிருந்து தன்னுடைய கையை வலுக்கட்டாயமாக விடுவித்து கொண்டவள், “ நீங்க தான் பெரிய பிஸ்னஸ்மேனாச்சே பேசவா சொல்லி தரணும்.... இங்க பாருங்க வர சொன்னீங்க வந்தாட்ச்சி நான் வந்துட்டேன் நீங்களும் பார்த்தாச்சி.... இனிமே இந்த மாதிரி என் கிட்ட பேசற வேலை வெச்சிக்காதீங்க இதுவே நீங்க என்னை சந்திக்கிறது கடைசியா இருக்கட்டும்.... உங்களுக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை இன்னியோட எல்லாம் முடிச்சிக்கலாம் “ என்று அவள் பேசுவதை கேட்டவனுக்கு கோவம் எந்த நேரமும் எல்லையை கடந்துவிடும் என்ற நிலையில் இருந்தாலும் அதை அடக்கி கொண்டு, “ எப்படி உன்னால இவ்வளவு சுலபமா பேச முடியிது.... இதுவே உன் இடத்துல வேற யாராவது இருந்து இருந்தா இங்க நடக்கறதே வேறையா இருந்து இருக்கும்... நீயா இருக்கவே தான் நான் இன்னும் அமைதியா இருக்கேன்.... உன் மனசுல ஒரு ஒரத்துல கூட நான் இல்லையா.... சரி என்னோட கண்ணை பார்த்து இப்ப நீ சொன்னதை சொல்லு நான் ஒத்துக்கறேன் “ என்று சொன்னதும் அவளும் அவனுடைய கண்களை பார்த்து சொல்லி விட்டு செல்ல வேண்டும் என்ற முடிவோடு அவன் கண்களை நேராக பார்த்தவளால் மேற்க்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. அதில் அவள் மேல் இருந்த காதலே பிரதானமாக தெரிந்தது அதனால் உடனே அவள் வேறுப்புறம் தன்னுடைய முகத்தை திருப்பிக் கொண்டவளை பார்க்கும் ஆதிக்கு சிரிப்பாக வந்தது.



ஆதி, “ உன்னால சொல்ல முடியலல.... அப்புறம் உனக்கு என்ன தான் பிரச்சனை.... காலைல நடந்தத பத்தி நினைச்சிட்டு இருக்கியா....”.



வானதி, “ எப்படி உங்களால எதுவும் நடக்காதத போல பேச முடியிது.... ஒரு வேலை இப்படி பொய் சொல்லி ஏமாத்துறது உங்களுக்கு ரொம்ப பழசு போல ஆனா நான் தான் அதை நம்பி ஏமாந்துட்டேன் “



ஆதி, “ நீ என்ன பேசறன்னு தெரிஞ்சி தான் பேசுறியா.... நான் இப்போ உன்னை என்ன ஏமாத்திட்டேன் “ என்று இறுக்கமான குரலில் சற்று சத்தமாக கேட்டவனிடம் , “ சபாஷ்.... நீங்க என்ன பண்ணிங்கன்னு உங்களுக்கே தெரியலல....நீங்க யாருன்னு என் கிட்ட மறைச்சி இருக்கீங்க.... அப்படின்னா நீங்க என் கிட்ட சொன்னது நடந்துக்கிட்டது எல்லாமே பொய் தான.... இதை எதுவும் தெரியாம நா...நான் உங்கள நம்புனேன்.... இதுவரைக்கும் என் வாழ்க்கைல எந்த ஒரு ஆணையும் நம்பக் கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன் ஆனா உங்கள சந்திச்ச உடனே தான் எல்லாரும் கெட்டவங்க கிடையாது நல்லவங்களும் இருக்காங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன்.... கொஞ்சம் கொஞ்சமா என்னையும் அறியாம என் மனசுகுள்ள நுழைஜீங்க.... இதுவரைக்கும் நான் வாழாத ஒரு வாழ்க்கையா உங்க கூட சந்தோஷமா வாழனும்ன்னு ரொம்ப ஆசையோட நான் காத்திட்டு இருந்தேன்.... ஆனா அது எல்லாத்தையும் சுக்கு நூறா உடைச்ச்சிட்டீங்க.... நீங்க என்னை ஏமாத்திட்டீங்க.... மறுபடியும் நான் வாழ்க்கையில மோசமா தோத்து போய்ட்டேன்.... “ என்று கூறியவள் கீழே மண்டியிட்டு அமர்ந்தவளின் கண்கள் கலங்கி கண்ணீரை வெளியேற்றி கொண்டிருந்தது.



அவள் மனதிலும் நாம் முழுவதுமாக நிறைந்து இருக்கிறோம் என்பதை அவள் வாயாலேயே அறிந்ததில் அவன் மனம் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தது ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் அவள் உடைந்து அழுவதை கண்டவனால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை அதனால் வேகமாக அவள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து அவளின் முகத்தை தன்னுடைய இரு கைகளால் ஏந்தி அவளுடைய கண்ணீரை மேற்க் கொண்டு கீழே விழாமல் தாங்கி பிடித்தவன், “ ப்ளீஸ் செல்லக்குட்டி... என்னால எதை வேணாலும் தாங்கிக்க முடியும் ஆனால் உன் கண்ணுல கண்ணீர் வரதை மட்டும் தாங்கிக்க முடியாது அதுக்கு பதிலா உன் கையாலையே என்னை தண்டிச்சிடு “ என்றவன் அவள் கைகளை எடுத்து அவன் கன்னத்தில் மாற்றி மாற்றி அறைந்து கொண்டான். அவன் அவ்வாறு செய்ததில் முதலில் அதிர்ந்தவள் பிறகு அவன் பிடியில் இருந்து கைகளை விடுவித்து கொண்டு வேகமாக அங்கிருந்து எழுந்து நின்று கொண்டவளின் கண்ணீர் கூட நின்றதை பார்த்தவனுக்கு அப்போது தான் சிறிது திருப்தியாக இருந்தது.



யார் முன்னாலும் தலை குனியாதவன் இன்று முதல் முறையாக அவள் முன்னால் மண்டியிட்டப்படியே, “ ஆமா.... நான் உங்கிட்ட ஒரு உண்மையா மறைச்சேன் தான் ஆனா அது எதுக்காக உனக்காக நமக்காக தான்.... உனக்கு பொதுவா ஆண்கள் மேலையும் சரி பணக்காரங்க மேலையும் சரி நல்ல அபிப்ராயம் இல்ல அப்படி இருக்கும் போது நான் யாருன்னு அன்னிக்கு நாம ஹோட்டல்ல சந்திக்கும் போது சொல்லி இருந்தா நீ என்ன செஞ்சி இருப்ப.... சொல்லு “ என்றவன் குழப்பமான அவள் முகத்தை பார்த்து , “ நம்ம உறவ ஆரம்பிக்கும் முன்னாடியே முடிச்சிருப்ப.... மூணு வருஷம் கழிச்சி உன்னை சந்திச்ச நான் மறுபடியும் இழக்க தயார இல்லை அதுக்கு என்ன விலை கொடுக்கவும் நான் ரெடியா இருந்தேன்... உன்கிட்ட என் மனசுல இருக்க காதல சொல்லி என்னை புரிய வெச்ச அப்புறம் என்னை பத்தின உண்மைய சொல்லலாம்ன்னு இருந்தேன்.... அதுக்காக நான் உன் மேல வெச்சி இருக்க காதல் பொய் இல்ல “ என்று கூறிக் கொண்டே எழுந்து அவள் முன்னால் கண்களை பார்த்து கொண்டே தொடர்ந்தான், “ அது எனக்கு தப்பா தெரில.... நான் காதலிக்கறவ கூட வாழனும்ன்னு நினைச்சது தப்புன்னு எனக்கு தோணல.... இப்பவும் சொல்றேன் எனக்கு உன் கூட வாழனும் ரொம்ப வருஷம் வாழனும்.... இந்த அடுத்த ஜென்மத்துல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.... எனக்கு இப்பவே வாழனும் அவ்வளவு தான்.... நீ என்னை சுயநலவாதின்னு நினைச்சா கூட பரவால “ என்று அவன் ஆவேசமாக கூறிய போது இடி பெரிய சத்தத்துடன் இடித்து மழை பொழிய தொடங்கியது.



அதுவரை அமைதியாக அவன் கூறுவதை கேட்டு கொண்டிருந்த வானதி, “ பொய்யில ஆரம்பிக்குற உறவு என்னைக்கும் நிலைக்காது இப்ப நம்ம உறவும் அந்த சூழ்நிலைல தான் இருக்கு.... நான் ஆசைப்பட்ட அருள் நீங்க இல்ல.... நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராது..... புரிஞ்சிக்கொங்க “ என்று திரும்ப திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தவளை பார்க்கும் போது எங்கே தான் கட்டுப்படுத்தி வைத்து இருக்கும் கோவம் வெடித்து விடுமோ என்று அவனுக்கு யோசனையாக இருந்தது. மழை வேறு சட சடவென பெய்து கொண்டிருந்தது.



அவளுக்கு மீண்டும் புரிய வைத்துவிடும் நோக்குடன், “ இங்க பாரு வா..ன..தி திரும்ப அதையே சொல்லிட்டு இருக்காத உன் மனசுலையும் நான் தான் இருக்கேன் என் மனசுலையும் நீ தான் நிறைஞ்சி இருக்க அப்புறம் நம்ம சேர எதுக்கு தடைவிதிக்கற... அருளும் நான் தான் ஆதித்ய அருள்மொழி வர்மனும் நான் தான் இதை ஒன்ன தவிர வேற ஒரு காரணம் நம்ம பிரிய உன்னால சொல்ல முடியுமா “ என்று அழுத்ததுடன் கூறியவனிடம் , “ அது ஒன்னு போதாத.... உங்களுக்கு நான் என்ன சொன்னாலும் புரியாது.... நான் முடிவு பண்ணிட்டேன்.... என் முடிவு இது தான் நீங்க என்ன சொன்னாலும் அதை என் மனசு ஏத்துக்காது.... இதுக்கு மேல உங்ககிட்ட எதையும் என்னால சொல்லி புரிய வைக்க முடியாது.... “ என்று பேசிக் கொண்டிருந்தவளை பாதியிலேயே , “ ஏய்.... நிறுத்து நானும் பாத்துட்டே இருக்கேன் சும்மா சொன்னதையே சொல்லிட்டு இருக்க.... உன் மனசுல நீ என்ன நினைச்சிட்டு இருக்க என்னை பார்த்த கேனையன் மாதிரி தெரியிதா..... இங்க பாரு நான் சொல்றத நல்லா கேட்டுக்கொ..... நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் நான் உன் கூட வாழ யார் தடையா வந்தாலும் சரி அவங்கள நான் அழிச்சிடுவேன்.... உன்னை உன் கிட்ட கூட விட்டு குடுக்க நான் தயார இல்லை.... இப்போ நான் என்ன சொன்னாலும் கேட்க நீ தயார இல்லை கோவம் உன் கண்ணை மறைக்குது...மழை வேற பெய்யிது நீ வா நான் முதல்ல உன்னை வீட்டுல ட்ரொப் பன்றேன் “ என்றான்.



வானதி, “ யாரோட உதவியும் எனக்கு தேவையில்லை.... இத்தனை வருஷம் தனியா இருந்த எனக்கு இப்போவும் என்னை பாத்துக்க எனக்கு நல்லா தெரியும் “ என்றவள் வேகமாக அங்கிருந்து வெளியே செல்ல தொடங்கினாள். என்னத்தான் அவன் உதவி தேவையில்லை என்று அவள் கூறிவிட்டு சென்றாலும் அவளுடைய பாதுகாப்பு என்பது அவனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று அதனால் அவளின் வண்டியை சிறிது இடைவெளி விட்டு பின் தொடர்ந்தவன் அவள் அபார்ட்மென்ட்க்குள் நுழைவதையும் பின் வீட்டிற்குள் செல்வதையும் உறுதிப்படுத்தி கொண்டே அங்கிருந்து சென்றான்.



தன்னை அவன் பின் தொடர்வதை கண்டும் காணாமல் வீட்டை திறந்து உள்ளே சென்றவள் ஜன்னலின் வழியாக அவன் சிறிது நேரம் நின்ற பின் செல்வதை கண்டவள் வேகமாக கதவை அடைத்து விட்டு அறைக்குள் சென்றவளின் எண்ணம் முழுவதும் ஆதி பேசியதிலேயே உழன்று கொண்டிருந்தது. அவன் என்ன சமாதானம் கூறினாலும் தன் வாழ்க்கையும் தன்னுடைய அம்மாவின் வாழ்க்கையை போல் ஆகிவிட்டதே என்று அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதையே நினைத்து கொண்டிருந்தவளுக்கு அன்றைய இரவு தூங்கா இரவாகி போனது.



இங்கே தனது அறைக்கு வந்த ஆதியால் தன்னுடைய கோவத்தை அடக்க முடியாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன் வானதியின் போட்டோ முன் வந்து, “ இனி என்னை பார்க்க மாட்டியா.... நம்ம உறவா முடிச்சிக்கலாம்ன்னு என்க்கிட்டயே தைரியமா சொல்றல.... பாக்கலாம் நீ நினைக்கறது நடக்குதா இல்லை நான் ஆசைப்பட்டது நடக்குதான்னு.... உனக்கு எல்லாம் பொறுமையை இருந்தா சரியா வராது.... அதிரடி தான் சரியா வரும்.... உன்னை எப்படி என்னை தேடி வர வைக்கனும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும் செல்லம்.... எல்லா வழியும் அடைச்சாலும் கடைசியா என்கிட்ட ஒரு பிரமாஸ்த்ரம் இருக்கு.... என்ன செஞ்சாவது உன்னை எனக்கு சொந்தமாக்கியே தீருவேன் இப்போ என் கிட்ட வேற வழியும் இல்லை.... உன் கண்ணுக்கு நான் தப்பா தெரிஞ்சாலும் பரவாயில்லை.... நீ என் கூட இருந்தா மட்டும் போதும் “ என்று படத்தில் இருப்பவளின் கன்னத்தை வருடியப்படி பேசியவன் மனதில் ஒரு முடிவை எடுத்த பிறகே தூங்க சென்றான் ஆனால் தூக்கம் தான் அவனை விட்டு தூர சென்றது.


நாளைய விடியல் இருவரின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றத்தை கொண்டு வருமோ.... இவர்கள் இருவரில் யாருடைய பிடிவாதம் வெல்லும் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும் பொறுத்திருந்து காண்போம்....



வெட்கம் இன்றி மண்ணில்

அலைவேனே ரெக்கை

இன்றி விண்ணில் திரிவேனே

உயிர் எங்கே எங்கே என்று

உடல் தேடுமே பதறும் இதயம்

தோண்டி எடுத்து சிதறு

தேங்காய் போட்டு முடித்து

உடைந்த சத்தம் உந்திடும் முன்னே

எங்கே சென்றாய் எவ்விடம்

சென்றாய்....

என்னை காணும் போது கண்ணை

பார்த்து சொல்லு கண்ணே என்

போல நீயும் காதல் கொண்டாயா....



நிஜத்தை தேடும்....



உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்
....
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 22


இரவுகள் பல மணி நேரம் நீண்டுகொண்டே சென்றாலும் விடியல் அதற்குரிய நேரத்தில் விடிந்து அனைவரையும் எழுப்பி அவர்கள் வேலையை செய்ய தூண்ட தான் செய்யும். அதே போல் காலையில் எழுந்த மித்ரா அலுவலகம் செல்ல தயாராகி வெளியில் வந்து வானதிக்காக காத்திருந்தாள். நேற்றைய சம்பவத்தின் தாக்கம் வானதியை அதிகாலையில் தான் உறங்க வைத்தது. அதன் பலனாக எப்பொழுதும் எழும் நேரத்தை விட சிறிது தாமதமாகவே தயாராகி வெளியே வேகமாக வந்தவளை ஹால் சோபவில் காத்திருந்த மித்ராவே வரவேற்றாள். அவள் முகத்தில் இருந்த சோர்வை கண்ட மித்ரா, “ ஆரூ…. நேத்து நீ சரியாவே தூங்கலையா…. “.


வானதி, “ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை மித்ரா…. சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு…. சாப்பிடாமா என்ன பண்ற நீ பசிச்சா சாப்பிட வேண்டியது தானே “.


மித்ரா , “ எனக்கு பசியில்ல அதுக்கு முன்னாடி நேத்துல இருந்து உன் கிட்ட ஆபீஸ்ல என்ன நடந்ததுன்னு கேக்கனும்ன்னு வெயிட் பன்னிட்டு இருந்தேன் ஆனா முடியல இப்போ அத தெரிஞ்சிக்கலனா எனக்கு மண்டையே வெடிச்சிடும் சொல்லு ” அவசரமாக இருவருக்கும் செய்து வைத்து இருந்த காலை உணவை எடுத்து வந்து அவளை அமர வைத்து பரிமாறி விட்டு தனக்கும் உணவை எடுத்து கொண்டு அமர்ந்தவள் , “ மித்ரா…. நீ கேட்ட கேள்விக்கு பதில நாம ஆசிரமத்துக்கு போன உடனே அங்க எல்லாத்தையும் தெளிவா சொல்றேன் “ என்று கூறிக் கொண்டே இருந்தவளிடம் மித்ரா, “ ஆரூ…. எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆயிடுச்சு “.


வானதி, “ ஒரு நாள் பெர்மிஷன் போட்டா ஒன்னும் ஆகாது. அதனால சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு “ என்று சொல்லியவள் வேகமாக அங்கிருந்து எழுந்து சமையலறைகுள் சென்றவளை கண்ட மித்ராவிற்கு நேற்று ஆபீஸ் வந்து சென்றதில் இருந்து அவளின் நடவடிக்கைகள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதை போன்று அவளுக்கு தோன்றியது. அந்த யோசனையிலேயே எல்லா வேலையும் முடித்து கொண்டு இருவரும் ஆசிரமத்துக்கு சென்றனர்.


வேகமாக வீட்டில் இருந்து கிளம்பியவர்கள் வந்து நின்றது மீனாட்சி அம்மாவின் முன் தான். நேற்று இந்த இடம் சம்பந்தமாக மித்ராவின் அலுவலகத்தில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறிக் கொண்டிருந்த வானதியை மற்ற இருவரும் கண்கள் அசையாமல் பார்த்து கொண்டிருந்தனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மூவரும் மிகவும் குழப்பத்துடன் அமர்ந்து இருந்தனர்.


மீனாட்சி, “ வானதி…. எதுக்கும் இன்னொரு தடவை நீ அந்த தம்பி கிட்ட பேசிப்பாத்தா என்னன்னு தோனுது மா “ என்று கூறியவரிடம் மீண்டும் ஆதியை பார்க்க பிடிக்காமல் என்ன சொல்லி இதை தவிர்ப்பது என்று தெரியாமல் இருந்தவள், “ அம்மா…. நான் ஏற்கனவே பேசிட்டேன். இந்த முறை மித்ரா அவ பாஸ் கிட்ட பேசட்டும் அது கொஞ்சம் நல்லா இருக்கும் “ என்று ஆதியை சந்திப்பதில் இருந்து தப்பிப்பதற்காக கூறியவளை கண்டு அதிர்ந்த மித்ரா , “ ஐயோ…. உனக்கு ஏன் இந்த கொலைவெறி என் மேல…. அவர் கிட்ட போய் ஒரு வார்த்தை பேசவே எனக்கு பயமா இருக்கும் இதுல நீ வேற என்னை சிங்கத்தோட குகைல தனியா கோர்த்து விட பாக்குறியே உனக்கு இது நியாயமா…. ப்ளீஸ் வானதி நீயே இந்த ஒரு தடவை பாஸ் கிட்ட பேசு “.


மித்ரா பேசுவதை ஆமோதிப்பதை போல் மீனாட்சியும் , “ மித்ரா சொல்றதும் சரி தான் வானதி…. நாம ஒன்னும் இலவசமா கேக்கலயே கொஞ்சம் டைம் தான கேக்கரோம்…. அவர் நம்ம முடிவ நாளைக்கு தான சொல்ல சொன்னாரு நீ இன்னைக்கே போய் அவர் கிட்ட கொஞ்சம் நம்ம நிலைமையை எடுத்து பொறுமையா சொன்னா நமக்கு உதவி பண்ணக் கூட வாய்ப்பு இருக்கு “ என்று அவர் சொன்னதை கேட்ட வானதிக்கும் சிறிது யோசனையாக இருந்தது. இதில் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லையா என்று.


அவள் சிந்திப்பதை கண்ட மீனாட்சி, “ நானே அங்க போய்டுவேன் ஆனா இந்த பணம் ஏற்ப்பாடு பண்ற விஷயமா ஒருத்தர பாக்க போகணும்…. சரி விடுமா…. நீ யோசிக்கறதா பார்த்தா உனக்கு அங்க போறதுல விருப்பம் இல்ல போல…. பரவால நான் வேற எதாவது பண்ண முடியுமான்னு பாக்குறேன் “ என்று அவர் வருத்தமாக சொல்வதை கேட்ட வானதி உடனடியாக அவரிடம் , “ அம்மா…. நீங்க எதுவும் வருத்தப்படாதீங்க….. நா….நானே போறேன் “ என்று கூறியவளின் சிந்தனை முழுவதும் ஆதியே நிறைந்து இருந்தான். அவனை எப்படி சந்திப்பது என்பதிலேயே இருந்தது. சிறிது நேரம் பேசிய பிறகு இருவரும் ஆதியை சந்திக்க சென்றனர். அவர்கள் இருவரும் சென்றதை உறுதிப்படுத்தி கொண்ட மீனாட்சி அமர்ந்த இடத்தில் இருந்தே, “ அவங்க ரெண்டு பேரும் போய்ட்டாங்க…. நீங்க வெளிய வாங்க “ என்று குரல் குடுத்தார்.


சிறிது நேரத்திற்கு முன்….


நேற்றைய நிகழ்விற்கு பிறகு வானதியை எப்படியாவது தன்னை வந்து சந்திக்க வைக்க வேண்டும் என்று சிந்தித்தவன் ஒரு முடிவோடு காலையில் விரைவாக எழுந்து கிளம்பி நேராக ஆசிரமத்துக்கு சென்று மீனாட்சி அம்மாவை சந்தித்தான். முதலில் அவன் யாரென்று தெரியாமல் கேள்வியோடு கண்டவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவன். தன் கம்பெனியால் நிகழ்ந்த தவறுக்கு அவரிடம் மன்னிப்பு வேண்டினான், அவன் இல்லாத நேரம் நடந்த தவறை விளக்கமாக கூறியவன், “ இந்த இடம் உங்களுக்கு குடுக்கறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் “.


மீனாட்சி, “ இல்ல தம்பி… நீங்க எங்களுக்கு இலவசமா குடுக்க தேவையில்லை அதுக்கு பதிலா கொஞ்சம் அவகாசம் குடுங்க போதும் “.


ஆதி, “ என்னோட கவனக்குறைவுனால தான் இந்த தவறு நடந்தது…. இது உங்களுக்கு சொந்தமானது தான் இதை நீங்க ஏத்துக்கிட்டீங்கனா எனக்கு நிம்மதியா இருக்கும்… என்னோட அப்பா இருந்திருந்தாலும் இந்த முடிவு தான் எடுத்து இருப்பார் ” என்று வெகு நேரத்திற்கு பிறகே அவரை சம்மதிக்க வைத்தான்.


மீனாட்சி, “ நீங்க ஒரு சக்ஸஸ்புல் பிஸ்னஸ்மேன் அப்படின்னு எல்லாரும் சொல்றது உண்மை தான்…. பேசியே நீங்க சொல்றதை கேக்க வைக்கிறீங்க…. ஆனா ஒன்னு இந்த இடம் உங்க பெயரலேயே இருக்கட்டும்….இனிமே நீங்களும் இந்த ட்ரஸ்ட் ல ஒறுத்தரா சேர்ந்து இந்த நிலத்தை குடுங்க “ என்றவரை பார்க்கும் போது ஆதிக்கு உண்மையிலேயே ஆச்சர்யமாக இருந்தது. இன்னும் பணத்தின் மேல் ஆசை கொள்ளாதவர்கள் இந்த உலகத்தில் வாழ தான் செய்கிறார்கள் என்று.


ஆதி, “ அப்படின்னா நாம ஒன்னு செய்யலாம்… நாங்களும் ஒரு ட்ரஸ்ட் நடத்திக்கிட்டு இருக்கோம். அது என்னோட அப்பா ஆரம்பிச்சது…. ரெண்டையும் ஒன்னா சேர்த்தா நல்லா இருக்கும்ன்றது என்னோட எண்ணம்…. அதுக்கு உங்க சம்மதம் வேணும். இதுக்கு உங்களுக்கு ஒகேனா நீங்க சொல்றதுகும் எனக்கு ஒகே “ அவன் சொன்னதை யோசித்து பார்த்தவர் அவனிடம், “ சரிங்க தம்பி….. உங்க ட்ரஸ்ட் பத்தி நான் கேள்விப்பட்டு இருக்கேன் அதுல இப்போ நானும் ஒரு ஆளா இருக்கறதுல எனக்கு சந்தோஷம்…. அதிக ஷேர் கொண்டவர் நீங்கன்றதால இனிமே எப்படியும் இந்த ட்ரஸ்ட்டும் உங்களுக்கு தான் சொந்தம் “.


ஆதி, “ அப்படி இல்லமா…. எனக்கு இந்த ட்ரஸ்டா நடத்த ஒரு நம்பிக்கையான ஆள் வேணும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன் இப்போ அது நீங்க தான்ன்னு நான் முடிவு பன்னிட்டேன் “.


மீனாட்சி, “ இது சரியா வராது தம்பி…. நான் என்னால முடிஞ்ச வேலை நான் செய்றேன் ஆனா உங்க குடும்பத்த சேர்ந்த யாராவது இதை நிர்வாகம் பன்னா தான் சரியா வரும் “.


ஆதி, “ இது சரியா வரும்…. இதுவரைக்கும் உங்க வாழ்க்கை முழுக்க இந்த ஆசிரமத்துக்குகாக வாழ்ந்து இருக்கீங்க இதை விட வேற என்ன தகுதி வேணும்…. இதுக்கு நீங்க சம்மதிச்சே ஆகனும். வேணா ஒன்னு பன்னலாம் என்னோட மனைவி உங்களுக்கு உதவியா இருப்பாங்க “ என்று அவன் கூறியதை கேட்டதும் அவர் சிறிது நேரம் சிந்தித்த பிறகு தன்னுடைய சம்மதத்தை தெரிவித்தார்.


மீனாட்சி, “ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா “ .


ஆதி, “ இல்ல இனிமே தான் ஆக போகுது ஆனா அதுக்கு உங்க உதவி தேவைப்படுது “ என்று அவன் கேட்டதும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை இதில் தன்னுடைய தேவை என்ன என்று புரியாமல் அவனை பார்த்து கொண்டிருந்தார்.


ஆதி, “ உங்களுக்கு புரியர மாதிரியே சொல்றேன் நான் வானதியா கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுரேன். ஆனா அவ இப்போதைக்கு இதுக்கு ஒத்துக்க மாட்டா ஏன்னா “ என்று நிறுத்தியவன் ஒரு முடிவோடு அவரிடம் வானதியை முதலில் சந்தித்ததில் இருந்து நேற்று வரை நடந்த அனைத்தையும் கூறி முடித்தான்.


ஆதி, “ நான் அவ கிட்ட உண்மையா மறைச்சது தப்பு தான் ஆனா அது மன்னிக்கவே முடியாதது இல்லை. அவ மனசுலையும் நான் தான் இருக்கேன். இப்போ என் மேல அவளுக்கு இருக்க கோவம் அவ கண்ணை மறைக்குது அதனால நான் சொல்றதை எதையும் கேக்கர நிலைமைல அவ இல்லை. கொஞ்ச நாள் போன என்னோட காதல புரிஞ்சிப்பா தான் பட் சூழ்நிலை சரியா இல்லை அவ உயிருக்கு ஆபத்து இருக்கு…. அவள பாதுக்காக்கனும்ன்னா இதை தவிர என் கிட்ட வேற வழியில்லை…. இந்த ஆதித்ய அருள்மொழி வர்மன் மனைவியோட நிழல தொட கூட இங்க யாருக்கும் தைரியம் இல்லை…. அவள என்ன சந்திக்க வைச்சா போதும் மீதியா நான் பாத்துப்ப்பேன் “ என்றவன் சொன்ன கேட்டு யோசித்தவருக்கு அவள் உயிரை காப்பாற்ற வேறு வழியில்லை என்றே தோன்றியது.
ஒரு முடிவோடு அவனிடம், “ நீங்க சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லனாலும் வானதியும் என் பொண்ணு தான் அதே நேரம் உங்களப் பத்தியும் எனக்கு தெரியும்…. அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்றதுக்காக நான் சம்மதிக்கறேன்…. நான் என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க “ என்றவரிடம் தன்னுடைய திட்டத்தை கூறிக் கொண்டிருந்த போதே மித்ராவும் வானதியும் தூரத்தில் வந்து கொண்டிருப்பதை ஜன்னல் வழியாக கண்டவர் ஆதியை பக்கத்தில் இருக்கும் அறையில் சென்று இருக்குமாறு கூறினார்.


பிறகு அவர்கள் வந்ததும் ஆதி கூறியதை போலவே வானதியிடம் அவனை சென்று சந்திக்குமாறு வற்புறுத்தி அனுப்பி வைத்தவர். அவர்கள் இருவரும் சென்ற பிறகு அவனை வெளியே வர சொல்லி குரல் கொடுத்தார். அவர்கள் சென்றதை உறுதிப்படுத்தி கொண்டே வெளியே வந்த ஆதி, “ ரொம்ப தேங்க்ஸ் மா.... இதுக்கு அப்பறம் நான் பாத்துக்குரேன்.... நான் சொன்னதை அப்படியே செய்ங்க “ என்றவன் மீண்டும் வானதியுடன் வருவதாக கூறி அவரிடம் விடைப்பெற்றான். எது எப்படியோ இருவரும் நன்றாக வாழ வேண்டும் என்று அந்த கடவுளிடம் வேண்டிக் கொண்டு அடுத்த வேலையை பார்க்க சென்றார்.


விஸ்வநாதன் இல்லம்


ஹால் சோபவில் அமர்ந்து கைப்பேசியில் யாருடனோ சிரித்தப்படியே பேசிக் கொண்டிருந்த சந்திரிகாவை பார்த்து கொண்டே வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் வந்த சாரா , “ அம்மா இங்க நான் டென்ஷன்ல இருக்கேன் நீங்க சிரிச்சி சந்தோஷமா இருக்கீங்க “ என்று கோவமாக கேட்டவளை புரியாமல் பார்த்த சந்திரிகா ப்போனை அணைத்து கீழே வைத்து விட்டு அவளை தன்னுடன் அமர்த்தி கொண்டு, “ இப்போ உனக்கு என்ன பிரச்சனை சாரா எதுக்கு இவ்வளவு கோவமா இருக்க “.


சாரா, “ நான் என் இவ்வளவு கோவமா இருக்கேன்னா அதுக்கு நீங்க தான் காரணம் “.


சந்திரிகா, “ நான் என்ன பண்ணேன் “.


சாரா, “ நீங்க என்னோட விஷயத்துல இதுவரைக்கும் ஒன்னுமே பண்ணலையே.... அந்த வானதியா நான் பாத்துக்கரேன். ஆதிக்கும் உனக்கும் நான் கல்யாணம் பண்ணி வைக்கறேன்ன்னு சொன்னீங்க... ஆனா இப்போ அந்த பொண்ணு ஆதியோட ஆபீஸ்க்கு போறத நான் பாத்தேன்.... இப்படியே போனா நாம நினைச்சது எதுவுமே நடக்காது “ என்று கோவமாக கத்தியவளிடம் , “ சாரா நான் ஒன்னும் சும்மா இல்ல நான் அவள மொத்தமா முடிக்க கூட முயற்சி பண்ணேன் ஆனா எப்படியோ தப்பிச்சிட்டா. இப்போ அந்த ஆதி உஷார் ஆயிட்டான்.... அவன மீறி அவளோட நிழல கூட இப்போ தொட முடியல “ என்று ஆவேசமாக கத்தினார்.


சிறிது நிதானத்திற்கு பிறகு தன்னை சமாதானம் படுத்திக் கொண்ட சந்திரிகா, “ நீ கவலைப்படாத சாரா.... அம்மா சொன்னா செய்வேன். நான் இதுக்கு வேற ஒரு ஏற்பாடு பன்னிட்டேன். என் அண்ணன மும்பைல இருந்து வர சொல்லியிருக்கேன் “.
அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சாரா , “ நிஜமாவா சொல்றீங்க அம்மா.... சூப்பர் மா. மாமா மட்டும் வந்தார்னா போதும் எல்லாத்தையும் அவர் பாத்துப்பார் “ என்று கூறியப்படி தன்னுடைய அன்னையை கட்டியனைத்து கொண்டாள். அவளின் சந்தோஷத்தை கண்ட சந்திரிகா, “ நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சி கொடுத்ததும் என் அண்ணன் தான்.... கல்யாணம் கூட பண்ணிக்காமா எனக்காகவே வாழ்ந்துட்டு இருக்கார். உன் விஷயத்த சொன்ன உடனே வரேன் சொல்லிட்டார் இனி எதைப்பத்தியும் நாம கவலப்பட வேண்டாம் “ என்று இருவரும் சிரித்தப்படியே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.


கடைசியாக சந்திரிகா அவருடைய அண்ணன் வருவதை பற்றி கூறும் போது தன்னுடைய அறையில் இருந்து வெளியில் வந்த விஸ்வநாதன் அவர்கள் இருவரும் முழுவதுமாக பேசுவதை கேட்டு விட்டு மீண்டும் தன் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டார். அங்கிருந்த அலமாரியில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த ஒரு பழைய புகைப்படத்தை எடுத்து கொண்டு கட்டிலில் அமர்ந்தவர் நினைவு அவர் அறியாமாலேயே பின்னோக்கி சென்றது.


அந்த படத்தை பார்த்து மனதிற்குள் , ‘ நான் சந்தோஷமா இருந்த நாட்கள்னா அது உன் கூட வாழ்ந்த நாட்கள் தான். என்னோட பேராசை தான் என்னோட அழிவுக்கு முக்கியமான காரணம். அது தான் நான் ஒரு அழகான வாழ்க்கையை விட்டுட்டு இப்படி ஒரு அலங்கோலமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க காரணம். எவனால நான் இப்படி உங்களை பிரிஞ்சி கஷ்டப்பட்டு சொந்த வீட்லேயே யாரும் இல்லாம இருக்கேனோ அவன் திரும்பவும் இங்க வரான் ஆனா என்னால தடுக்க முடியல அதுக்கு இங்க இருக்கரவங்களும் விட மாட்டாங்க.... இப்போ யாரோட வாழ்க்கையை கெடுக்க எல்லாரும் திட்டம் போடுறாங்கன்னு தெரியல.... ஆனா எக்காரணத்த கொண்டும் நீயும் நம்ம பொண்ணூம் அவன் கண்ணுல படக்கூடாது. நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் உங்கள நான் தேடிப் பார்த்துட்டேன் ஆனா என்னால கண்டுப்பிடிக்க முடியலை. உங்க உயிருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாதுன்னு என் அப்பா பண்ணி இருக்க ஏற்பாடு தான் எனக்கு பாதுகாப்பாகாவும் உங்களுக்கு பிரச்சனையாவும் மாறி இருக்கு. நீங்க எங்க இருந்தாலும் நல்ல படியா வாழானும்ன்றது தான் என்னோட வேண்டுதல்..... அப்போ உங்கள உதாசீனப் படுத்தினேன் இப்போ உங்க பாசத்துக்காக ஏங்கிட்டு இருக்கேன். எனக்கு இருக்கறது எல்லாம் ஒரே ஆசை தான் என் ஆயுள் முடியறதுக்குள்ள உங்களை பார்த்து நான் மன்னிப்பு கேட்கனும். நீங்களும் பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சா தான் என்னோட இத்தனை வருஷ தண்டனைக்கு ஒரு முடிவு வரும் ‘ என்று தன்னை மறந்து புலம்பிக் கொண்டிருந்தவர் கையில் இருந்த புகைக்படத்தில் சிறு வயதில் இருந்த வானதியும் அவள் அன்னையும் சிரித்தப்படி இருந்தனர்.


வானதியும் மித்ராவும் வருவதற்குள் வேகமாக ஆபீஸ் வந்த ஆதி தன்னுடைய அறைக்கு வந்து அமர்ந்தவன் எண்ணம் முழுவதும் வானதியே நிறைந்து இருந்தாள். ஆதியின் பின்னாலேயே வந்த கதிர் அவன் எதாவது சொல்வான் என்று வெகு நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தான் ஆனால் ஆதி இடமிருந்து எந்த அசைவும் இல்லாததால் அவனே அவனை “ பாஸ் “ என்று சத்தமாக அழைத்தான். அந்த சத்தத்தில் தன்னுனர்வு அடைந்தவன் , “ எதுக்கு இப்படி கத்துற கதிர் “.


கதிர், “ பாஸ்.... உங்களுக்கு இன்னிக்கு இருக்க மீட்டிங்ஸ் பத்தி சொல்ல தான் வந்தேன் ஆனா நீங்க ஏதோ யோசனையில இருந்தீங்க அதான்... “


ஆதி, “ கதிர் இன்னிக்கு இருக்க எல்லா மீட்டிங்சையும் கேன்சல் பன்னிடுங்க.... மீதி இருக்க வேலையை நீங்களும் ஷக்தியும் பாத்துக்கொங்க.... நேத்து அந்த லேண்ட் விஷயமா என்ன பார்க்க வந்தவங்க இப்போ வருவாங்க..... அவங்க வந்த உடனே நாங்க பேசி முடிக்கற வரைக்கும் யாரும் என்னை டிஸ்ட்ர்ப் பண்ண கூடாது புரிதா... இட்ஸ் மை ஒர்டெர் ( its my order) “ என்று அவன் கட்டளையாக கூறியதை கேட்ட கதிருக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் சரயென்று கூறி விடு அமைதியாக வெளியில் வந்து விட்டான்.


கதிர் வெளியே சென்றதும் ஆதியின் மனதில், “ என்னை இனிமே பார்க்க மாட்டேன்ன்னு சொன்னல இப்போ பாத்தியா செல்லம்..... என் கிட்ட இருந்து தப்பிக்கறது அவ்வளவு சுலபம் இல்லை..... சீக்கிரம் வாங்க மிஸ்செஸ். ஆதித்யா உங்களுக்காக தான் காத்திட்டு இருக்கேன் “ என்று நினைத்து கொண்டிருந்தவன் உதட்டில் மெலிதாக புன்னகை அரும்பியது. அப்போது பக்கத்தில் இருக்கும் சிசிடிவியில் வானதி மித்ராவிடம் கூறி விட்டு அவனின் அறையை நோக்கி வருவதை கண்டவன். அவளுக்கு உள்ளே வருவதற்கு அனுமதி அளித்தவன் தன்னுடைய முகத்தை இறுக்கமாக இருப்பதை போல் மாற்றி கொண்டான்.


இனி இங்கு வர கூடாது என்று நினைத்த இடத்திற்கு மீண்டும் வரவழைத்த அந்த விதியின் மீது கோவம் கொண்ட வானதி ஆதியின் அறைக்குள் அனுமதி பெற்று கொண்டு உள்ளே நுழைந்தாள். அந்த பெரிய அறைக்குள் நடுநாயகமாக இருந்த இருக்கையில் கம்பீரமாக அமர்ந்து இருந்தவனை பார்க்கும் போது அவன் தன்னை நக்கலாக பார்ப்பதை போல் அவளுக்கு தோன்றியது. அறை வாயிலில் நிற்ப்பவளை கண்ட ஆதி , “ உள்ள வாங்க மிஸ். ஆருந்ய வானதி அங்கேயே நின்னா எப்படி வந்து உக்காருங்க “ என்றவனின் குரலில் அங்கிருந்து நகர்ந்து அவன் கைக் காட்டிய இருக்கையில் அமர்ந்தவள் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.


அவளின் அமைதியை கலைக்கும் விதமாக , “ என்னை இனிமே பார்க்க மாட்டேன்ன்னு சொன்ன நீங்க இப்போ நான் இருக்க இடத்துக்கே வந்ததுக்கு என்ன காரணம் “ என்ற ஆதியின் குரல் அந்த அறை முழுவதும் கணீரென்று ஒலித்ததில் அவனை நிமிர்ந்து பார்த்த போது அவனின் முகத்தில் தோன்றிய விஷமம் நிறைந்த பாவத்தில் அவளுக்கு கோவமாக வந்தது.


வானதி , “ நான் இங்க உங்க சொந்த விஷயம் பேச வரல.... அதே நேரம் நான் எதுக்கு இங்க வந்து இருக்கேன்ன்னு உங்களுக்கு தெரியும்ன்றது எனக்கும் தெரியும் “.


அவளின் பதிலில் சிரித்தவன் , “ சரி சொல்லுங்க.... நான் நாளைக்கு தான உங்க முடிவ சொல்ல சொன்னேன் இன்னிக்கு எதுக்கு வந்தீங்க “.


வானதி, “ அது.... அது வந்து நான்.... அதை எப்படி சொல்றது.... இந்த இடத்தை நாங்களே வாங்கிக்கிறோம் ஆனா எங்களுக்கு நீங்க கொஞ்சம் அவகாசம் கொடுத்து உதவி பன்னனும் “ என்று சற்று தயங்கியப்படியே கூறினாள்.


அவள் சொன்னதை கேட்டவன் சாவகாசமாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன், “ அப்போ நீங்க இப்போ என்கிட்ட உதவி கேட்டு வந்து இருக்கீங்க.... எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு நீங்க உதவி கேட்டு வந்தது யார்க்கிட்டன்னு நான் தெரிஞ்சிக்கலாமா “ என்று கேட்டவனை புரியாமல் பார்த்தவளை கண்டு, “ புரியலல.... இந்த கம்பெனி எம்.டி ஆதித்யா வா என்னல உனக்கு உதவி பண்ண முடியாது ஏற்கனவே சொன்னது தான் நான் ஒரு பக்கா பிஸ்னஸ்மேன் எனக்கு லாபம் இல்லாத எதையும் என்னால செய்ய முடியாது.... இந்த இடம் எனக்கு தேவையில்லாதது அதனால உடனே இதை சேல் பண்ண வேண்டிய கட்டாயத்துல இருக்கேன் இதுக்கு நீங்க ஒத்துக்கலன்னா அங்க இருக்கரவங்கள காலி பண்ண சொல்லிட்டு என்னோட கன்ஸ்ட்ரக்ஷன்க்கு யூஸ் பன்னிடுவேன் இல்லனா வேற யாருக்காவது வித்துடுவேன்..... அப்படி இல்லனா உங்களுக்கு தெரிஞ்ச அருள் கிட்ட வேணா அடுத்து என்ன பன்னலாம்ன்னு கேக்கலாம் “ என்று கூறியவனை பார்த்து அவளுக்கு கோவம் எக்கச்சக்கமாக வந்தது இருந்தும் அதை மறைந்து கொண்டவள்.
வானதி, “ கம்பெனி எம்.டி யா உங்களால செய்ய முடிஞ்ச உதவிய நீங்க செய்ங்க போதும்.... நான் எனக்காக இங்க வரல அதை கொஞ்சம் யோசிச்சி பாருங்க “.


ஆதி, “ சரி உங்களுக்கு எவ்வளவு டைம் வேனும் சொல்லுங்க “.


வானதி, “ இது ரொம்ப பெரிய தொகை அதனால ஒரு ஆறு மாசம் டைம் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் “.


ஆதி, “ நீங்க சொல்ற மாதிரி நான் உங்களுக்கு டைம் தரதுனால எனக்கு என்ன லாபம் “ என்று அவளை நேருக்கு நேராக பார்த்து கேட்டவனிடம், “ நாங்க வேணா அது வரைக்கும் அந்த இடத்துக்கான வாடகை தரோம் “ என்றவளை பார்த்து சத்தமாக சிரித்தான் ஆதி.


அதை பார்த்து அவள் முறைப்பதை கண்டவன் சிரிப்பை அடக்கி கொண்டு, “ அந்த இடத்துக்கு வாடகைக்கு விடுற எண்ணம் எனக்கு இல்லை... வேணா நான் உங்களுக்கு ஒரு ஐடியா தரேன்... நல்லா யோசிச்சி பார்த்து தான் இதை சொல்றேன்.... நீங்க என்னை கல்யாணம் பன்னிக்கிட்டா என்னோட எல்லாமே உங்களுக்கு சொந்தம் ஆயிடும் அதுக்காப்புறம் நீங்க அந்த இடத்த என்ன வேணா பன்னிக்கலாம் “ என்று அவன் கூறியதை கேட்டவுடன் கோவமாக அந்த இருக்கையை தள்ளிக் கொண்டு எழுந்தவள், “ என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரிது பணத்துக்காக எதுவும் பண்ற மாதிரி இருக்கா.... உங்கக் கிட்ட போய் உதவி கேட்டு வந்தேன் பாருங்க என்னை சொல்லனும் கொஞ்சமாவது உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கும்ன்னு நினைச்சேன்.... ஆனா நான் நினைச்சது தப்பு.... இனிமே என்ன பன்னனும்ன்னு எனக்கு தெரியும் நான் கோர்ட்ல பாத்துக்கிறேன் “ என்று கூறி விட்டு திரும்பி வாசல் பக்கம் நடந்தவளை சொடக்கிட்டு நிறுத்தியவன் அவள் அருகில் நிதானமாக நடந்து வந்து அவள் அருகில் நின்றான்.


ஆதி, “ கோர்ட்க்கு போய் என்னை மீறி உன்னால எதாவது செய்ய முடியும்ன்னு நினைக்கிறீயா.... அது உன்னால முடியாது.... இப்ப நான் சொல்றதை செய்றதை விட உனக்கு வேற வழியில்லை.... வேற வழி உனக்கு வரவும் விட மாட்டேன் “ என்று கத்தினான்.


வானதி , “ என்னால உங்க மிரட்டலுக்கு அடிப்பணிய முடியாது....என்னால நம்பவே முடியல. நீங்களா இப்படி பேசுறீங்க அருள்.... உங்களால இப்படி என்கிட்ட பேசக்கூட முடியுமா... இது தப்பு இல்லயா “ என்று ஆதங்கமாக அவனை பார்த்து கேட்டாள்.


அவள் அவ்வாறு பேசுவதை கேட்கும் போது ஆதிக்கு உண்மையில் வருத்தமாக இருந்தது. அதை முகத்தில் காட்டாமல் மறைத்து கொண்ட ஆதி, “ என்னை இப்படி பேச வெச்சதே நீ தான ஆருந்யா.... ஆதியோட மிரட்டலுக்கு நீ அடிப்பணிய மாட்டா அப்படின்னா..... அருளுக்கு நீ கொடுத்த வாக்கு உனக்கு நியாபகம் இருக்கா.... அதை நானே நியாபகப்படுத்துறேன்.... உனக்கு செஞ்சா உதவிக்கு பலனா நான் என்ன கேட்டாலும் அதை நீ தருவேன்ன்னு அன்னிக்கு சொன்னீயே அதுக்கு என்ன பதில் சொல்ல போற “ என்று அவன் கூறியதும் தான் அன்று ஹோட்டலில் நடந்த நிகழ்வு அவள் கண் முன்னால் விரிந்தது. ஒரு பெரிய சக்கரவியூகத்தில் மாட்டிக் கொண்டதை அவள் புரிந்து கொண்டாள். எந்த முடிவு எடுத்தாலும் அது அவளுக்கு எதிராக தான் முடியும் என்பது திண்ணம்.


கண்களில் கண்ணீரோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ அன்னிக்கு சொன்னது தான் இன்னைக்கும்..... இந்த வானதி எப்பவும் வாக்கு மாற மாட்டா.... நான் சொன்னா சொன்னது தான். ஆனா ஒரு விஷயம் நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன் யோசிக்காமா யாருக்கும் வாக்கு குடுக்க கூடாதுன்னு..... சரி உங்களுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்க “ என்று வழிந்த கண்ணீரை அழுத்த துடைத்து கொண்டு அவனிடம் கேட்டாள்.
வானதியின் கண்ணீர் அவனுடைய இதயத்தில் அப்படி ஒரு வலியை ஏற்ப்படுத்தியது. அவளை இப்படி ஒரு சூழ்நிலையில் நிற்க வைத்து தான் நினைப்பதை செய்ய வைக்க வேண்டுமா என்று அவனுக்கு வேதனையாக இருந்தது. ஆனால் இதை தவிர அவளை தன்னுடன் வைத்து கொள்ள வேறு வழியில்ல என தன்னுடைய மனதை கல்லாக்கி கொண்டு இதை செய்து தான் ஆக வேண்டும் என்று தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டு , “ நீ என்னை கல்யாணம் பன்னிக்கனும் “ என்று அவளை பார்த்து கேட்டான்.


வானதி, “ இப்படி ஒரு சூழ்நிலையில நாம கல்யாணம் பன்னிக்கறது உங்களுக்கு சரியா படுதா “ என்று கேட்டவளின் இரு தோல்களையும் இறுக்கமாக பிடித்தவன், “ எவ்ரி திங் இஸ் பேற் இன் லவ் அண்ட் வார் ( every thing is fair in love and war ) அப்படின்னு கேள்வி பட்டது இல்லையா இதுவும் அப்படி தான்.... நான் ஏன் இப்படி பன்றேன்ன்னு என்னால உனக்கு விளக்கம் குடுக்க முடியாது ஆனா ஒரு நாள் உனக்கே புரியும்... உனக்கு இதுல விருப்பம் இல்லன்னு எனக்கு தெரியும் ஆனா ஒரு விஷயம் இந்த கல்யாணம் முறைப்படி தான் நடக்கும் .... என் வாழ்க்கையில திருமணம் ஒரு தடவை தான் அதுவும் உன்கூட மட்டும் தான் இதை யார் நினைச்சாலும் மாத்த முடியாது.... இது உண்மை கல்யாணமா தான் இருக்கணும் ஒரு மனைவியா உன் கடமைய நீ சரியா செஞ்சி என் கூட இந்த ஜென்மம் முழுக்க கூட இருப்பன்னு சத்தியம் பண்ணு “ என்று அவள் முன்னால் தன்னுடைய வலதுக்கையை நீட்டினான்.


இது வரை அவன் மீது இருந்தது ஒரு வகையான ஏமாற்றத்தால் உருவான கோவமாக இருந்தது இன்றைய சம்பவத்திற்கு பிறகு அது அவன் மீது ஒரு வெறுப்பாக மாறியது என்று கூறினால் அது மிகையாகாது. ஏற்கனவே கொடுத்த வாக்கிற்க்கே அவள் வாழ்க்கை கேள்வி குறியாக நிற்க்கிறது இதில் இன்னொரு சத்தியமா என்று அவளுக்கு ஆயாசமாக இருந்தது. அதை செய்யாமல் அவன் விடப்போவதும் இல்லை இதை செய்வதன் மூலம் ஆசிரம பிரச்சனையும் முடிவுக்கு வரும் அவள் கொடுத்த வாக்கும் நிறைவேறும்..... சூழ்நிலைகள் என்றும் அவனுக்கு சாதாகமாக இருக்காது அதனால் இப்போதைக்கு அவளுக்கு இதை தவிர வேறு வழியும் இல்லாததால் அவன் கூறுவதற்க்கு சம்மத்திக்க முடிவெடுத்தாள்.


வானதி, “ நான் உங்களுக்கு சத்தியம் பன்றதுக்கு முன்னாடி நீங்க எனக்கு ஒரு சத்தியம் பன்னனும் “ என்றவளை பார்க்கும் போது ஆதிக்கு சிறிது சந்தேகமாக இருந்தது இருந்தாலும் என்ன தான் சொல்கிறாள் என்று பார்ப்போம் என எண்ணியவன் அவளை சொல்லுமாறு செய்கை செய்தான்.


வானதி, “ பொதுவா கண்கள்னா எல்லா உணர்வுகளையும் பிரதிபலிக்கும் கோவம், ஆசை , காதல், வருத்தம் , அழுகை , பாசம் , கருணை , வெறுப்புன்னு நிறைய சொல்லலாம். நீங்க இது எல்லாத்தையும் என் மேல இருக்க காதல்ல பன்றதா சொன்னீங்க.... உங்க கண்ணுல என் மேல எந்த உணர்வ காட்டுனாலும் பிரச்சனை இல்ல ஆனா என்னைக்கு அதுல என் மேல வெறுப்பு தெரிதோ அன்னைக்கு நம்ம உறவு முடிஞ்சிடும்.... அப்போ நீங்க என்னை தடுக்க மாட்டேன்ன்னு சத்தியம் பண்ணுங்க “ என்று அவன் முன்னால் தன்னுடைய வலதுக்கையை நீட்டினாள். அவனால் கண்டிப்பாக இதை செய்ய முடியாது என்று அவள் நினைத்தாள்.


ஆதியின் மனதில் , “ என்கிட்ட இருந்து எப்படியாவது தப்பிச்சிடலாம் நினைக்கிறீயா பேபி.... அது உன்னால என்னைக்கும் முடியாது. உன்னால என்ன பண்ண முடியுமோ அதை நீ செய்..... சும்மா சொல்ல கூடாது மூளை நல்லாவே வேலை செய்து ஆனா அது நம்ம காதலை அழிக்க பயன்ப்படுதுன்னு நினைக்கும் போது தான் வருத்தமா இருக்கு.... “ என்று நினைத்தவன் அவள் கை மேல் தன்னுடைய கையை வைத்து, “ உன் மேல எனக்கு கோவமோ வருத்தமோ வரவே வராதுன்னு என்னால சொல்லவே முடியாது அது எல்லாம் வரும் ஆனா என்ன நடந்தாலும் உன்னை வெறுக்க என்னால முடியாது..... உன்னை நான் வெறுத்தா அது என்னையே நான் வெறுத்த மாதிரி ஏன்னா நீயும் நானும் வேற வேற இல்லை..... இப்போ வெறுப்பா பாக்குற இந்த ரெண்டு கண்ணும் கூடிய சீக்கிரம் காதலோட பாக்கும்ன்னு நான் நம்புறேன். அதனால இதுக்கு நான் சம்மதிக்கிறேன் “ என்று தன் மனதில் உள்ளதை கண்களில் முழு காதலோடு அவளிடம் கூறினான். அந்த நேரம் அவன் மனதில் தோன்றியது


ஒரு நொடியில் உன்னாலே

எரிமலையில் வெந்தேனே

மறுநொடியில் தன்னாலே

பனிதூளியில் நின்றேனே .....


இந்த வரிகள் தான். அவன் பேசியதை கேட்டவள் ஒன்றும் கூறாமல் தன் கை மேல் இருந்த அவனுடைய கையை அப்படியே திருப்பினாள். இப்போது அவனின் கை மீது இவளுடைய கையை வைத்து, “ அப்படினா நீங்க சொல்றதுக்கு நானும் சம்மதிக்கிறேன் “ என்று கூறியவளின் மனதில், ‘ உங்கள இதுல ஜெய்க்க நான் விட மாட்டேன் கூடிய சீக்கிரம் உங்க வாயாலேயே என்னை பிடிக்கலன்னு சொல்ல வைக்கறேன் ‘ என்று அவள் நினைத்த அதே நேரத்தில் ஆதி, ‘ நீ என்ன நினைக்கறன்னு எனக்கு நல்லாவே தெரியும்.... ஆனா அது என்னைக்கும் நடக்காது..... உன்னை என் கிட்ட இருந்து பிரிக்கறது என்னைக்கும் முடியாத காரியம்.... என்கிட்ட இருந்து பிரியவே நீ இவ்வளவு யோசிக்கும் போது உன் கூட சேர்ந்து வாழ நான் எவ்வளவு யோசிப்பேன்..... பாக்கலாம் இதுல ஜெய்க்கறது உன் பிடிவாதமா இல்ல என்னோட காதலான்னு ‘.


தன்னுடைய கையை அவனிடம் இருந்து பிரித்து கொண்டவள் திரும்பி செல்ல அடியெடுத்து வைத்தவளை ஆதி “ ஒரு நிமிஷம் “ என்று கூறியவனின் குரலில் அவனை திரும்பி பார்த்தாள் வானதி. ஆறடி உயரத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நின்றவன் கையை தன் பேன்ட் பாக்கெட்டில் விட்டு கொண்டு “ ரெடியா இரு வர வெள்ளிக் கிழமை நமக்கு கல்யாணம்..... நாளைக்கு நம்ம மீட் பன்றோம் புரிதா..... ஒரு விஷயத்தை நியாபகம் வெச்சிக்கோ.....decision defines destiny and Iam the only person Who can determine my destiny ( முடிவு விதியை வறையறுக்கிறது , எனது விதியை நிர்ணயிக்ககூடிய ஒரே நபர் நான் ) “ என்று கூறியவன் முகத்தில் நினைத்ததை சாதித்த திருப்தி வானதிக்கு தெளிவாக தெரிந்தது. இப்போதைக்கு அவளால் எதுவும் கூற முடியாததால் அவன் கூறிய அனைத்திற்கும் சரியென்று தலையசைத்து விட்டு அங்கிருந்து விடைப்பெற்று சென்று விட்டாள்.


அவள் வேகமாக வெளியில் செல்வதை மேல் இருந்து கண்ணாடி திரை வழியாக பார்த்து கொண்டிருந்தவன் மனதில் , ‘ எனக்கு இதை தவிர வேற வழி தெரில அதனால தான் உன்னை இப்படி நிர்பந்தம்ப்படுத்துற மாதிரி சூழ்நிலைல நான் இருக்கேன்.... எதையும் மாத்துற சக்தி நம்ம காதலுக்கு இருக்குன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு... என் மேல இப்போ உனக்கு இருக்க கோவமும் மறைஞ்சிடும் .... உன் கூட ஒரு சந்தோஷமான வாழ்க்கைய நான் வாழனும் அதுக்காக நான் என்ன வேணா செய்வேன் ‘ என்று நினைத்து கொண்டிருந்தான்.


எப்பவும் நாம் நினைப்பதே நடந்து விட்டால் விதி என்ற ஒன்று எதற்கு.... இவனின் மனதில் இருக்கும் நிம்மதி நிலைக்குமா.... எண்ணம் பலிக்குமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்....


கடிக்கார முள்ளாய் உன்னை

நான் சுற்றி வந்தேன்

கணம் நேரம் மரணம் ஒன்றை

கண் பார்க்க கண்டேன்....

ஏக்கம் தந்து தூக்கம் தின்றாய்

தாகம் தந்து தள்ளி நின்றாய்

தேளாய் கொட்டும் தேளாய்

ஆனாய் நீயும் ஆனாய்....

தனிமையிலே நான் நின்று

கதறும் படி செய்தாயே

கனவுகளில் நீ வந்து

கன்னிவெடி வைத்தாயே....


நிஜத்தை தேடும்....


உங்களின் கருத்துக்களை

“ என் நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்....

 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
த்தியாயம் 23


ஆதியின் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த வானதி எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்பது அவளுக்கே தெரியாது. நல்லப்படியாக வந்தது அந்த கடவுள் செயல் தான். தன் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றம் ஏற்படும் என்று நேற்று வரை யாராவது சொல்லிருந்தால் அவள் நம்பி இருக்க மாட்டாள். ஆனால் இன்று யாருடன் அவள் வாழ்வு அமைய வேண்டும் என்று ஆசை கொண்டாளோ அவனுடன் இணைய போகும் சந்தோஷம் தூளி அளவு கூட அவள் மனதில் இல்லை. ஒரு வேளை சிறிது நாட்கள் கழித்து இவர்கள் திருமணம் நடந்து இருந்தால் அதை மனதார ஏற்று இருப்பாளோ என்னவோ இப்போது கத்தி முனையில் நிற்க வைத்து சம்மதம் தெரிவித்ததை போல் வானதிக்கு தோன்றியது. இனி தன்னுடைய வாழ்வில் என்னென்ன நடக்க போகிறது என்பதை அவளால் யுக்கிக்க முடியவில்லை.


ஆதியின் அறையில் இருந்து வெளியில் வந்த வானதியின் முகத்தில் இருந்தே எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்த மித்ரா அன்று விடுமுறைக்கு சொல்லி விட்டு வேகமாக வீட்டிற்கு வந்தாள். அங்கு வாழ்க்கையே தொலைந்ததை போல் அமர்ந்திருந்த வானதியை பார்த்த மித்ரா பதட்டத்துடன் அவள் அருகில் சென்று அமர்ந்து, “ ஆரூ..... உனக்கு என்னாச்சு நீ ஏன் இப்படி இருக்க.... நீ இந்த மாதிரி இருந்து நான் பார்த்ததே இல்லை “ என்று கேட்டவளின் குரலில் நினைவுக்கு வந்தவள் கண்ணில் நீருடன் அவளை அணைத்து கொண்டாள். சாத்தியமாய் மித்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை இதுவரை அவள் இப்படி உடைந்து பார்த்ததே இல்லை. இருந்தாலும் பதிலுக்கு ஆறுதலாக அவளை திரும்ப அணைத்து கொண்டாள் மித்ரா.


பிறகு தன்னை சற்று தெளிவுபடுத்தி கொண்ட வானதி அவளிடம் இருந்து தன்னை விடுவித்து கொண்டு கண்ணை அழுத்த துடைத்து கொண்டாள். மித்ராவும் அவளை எழுப்பி அவள் அறைக்குள் அழைத்து சென்று அமர வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்தாள். அதை வாங்கி பருகியவள் தன்னையே கேள்வியுடன் பார்த்து கொண்டிருந்த மித்ராவிற்கு எப்படியும் எல்லா விஷயத்தையும் சொல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தாள்.


மித்ரா, “ இப்போ சொல்லு ஆபீஸ்ல என்ன நடந்தது.... நேத்துல இருந்தே நீ சரியில்லை “.


அவ்வாறு கேட்டவளிடம் எதை சொல்வது என்றே தெரியாததால் நடந்த அனைத்தையும் கூறினாள். அதாவது நேற்று அவள் ஆபீஸ்க்கு சென்றது அங்கு அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி இரவு பார்க்கில் சந்தித்து பேசியது, இன்று ஆதி அவளிடம் திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியது வரை எல்லாவற்றையும் கூறினாள்.


மித்ரா , “ நீ சொல்றத என்னால நம்பவே முடியல ஆரூ.... ஆதி சார் உன்கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சிருக்கார்னா அதுல எதாவது காரணம் இருக்கும் “ அவள் கூறியதிற்கு கோவமாக பதில் கூற வந்தவளை , “ நான் சொல்றதை கொஞ்சம் கேளு.... நான் அவர்கிட்ட மூணு வருஷமா வேலை பாக்குறேன்.... அவர் ரொம்ப நல்லவர்.... எத்தனையோ பேர் அவர கல்யாணம் பன்னிக்கனும்ன்னு நினைச்சி இருக்காங்க ஆனா அவர் தப்பானா பார்வையில எந்த பெண்ணையும் பார்த்தது இல்லை “.


வானதி, “ அப்படினா அவர் இன்னிக்கு என் கிட்ட நடந்துக்கிட்டது சரின்னு சொல்றியா “ என்று ஆவேசமாக கேட்டவளிடம், “ இன்னிக்கு அவர் பன்னது தப்பு தான் ஆரூ.... அது தான் ஏன்ன்னு தெரில....” என்று கூறினாள் மித்ரா.


வானதி, “ இனி அதைப்பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை விடு என்ன நடக்குத்தோ அது நடக்கட்டும் “ என்று விரக்தியாக கூறியவளுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் மித்ராவும் அவள் அருகில் அமைதியாக அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தாள்.


வானதி, “ மித்ரா.... எனக்கு கொஞ்சம் மனசு சரியில்ல அதனால நான் நீலகிரி வரைக்கும் போய்ட்டு வரேன்... கணேசன பாக்கணும் போல இருக்கு “.


மித்ரா, “ இல்ல வானதி.... நீ தனியா போக வேண்டாம் நானும் உன் கூட வரேன் “.


வானதி, “ இல்ல வேண்டாம். மித்ரா எனக்கு தனியா இருக்கணும் போல இருக்கு.... நைட் பஸ் புக் பன்னி இருக்கேன்.... நாளைக்கு நைட்டே அங்கிருந்து கிளம்பிடுவேன் “ என்றவளிடம் வேறு எதுவும் கூறாமல் சரியென்று தலையசைத்தாள். பிறகு வானதி இரவு நீலகிரிக்கு செல்ல வேண்டியவற்றை எடுத்து வைக்க சென்று விட்டாள்.


எப்பொழுதும் வீட்டிற்கு வரும் நேரத்தை விட இன்று தாமதமாகும் என்று முன்பே தெரிந்ததால் ஷக்திக்கு கைப்பேசியில் அழைத்து முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும் என்பதால் இருவரையும் காத்திருக்குமாறு கூறி இருந்தான். அதே போல் இருவரும் உறங்க செல்லாமல் அவனுக்காக ஹாலில் காத்திருந்தனர். வந்தவனை இருவரும் சாப்பிட அழைத்தனர் ஆனால் அவன் வெளியே சாப்பிட்டு விட்டு வந்ததாக கூறியவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான். அவனிடம் ஷக்தி, “ ஆதி எதோ முக்கியமான விஷயம் பேசனும்ன்னு சொன்ன.... இவ்வளவு அவசரமா பேசர அளவுக்கு அப்படி என்ன விஷயம் “ என்று கேட்டு விட்டு ஷக்தியும் ஷர்மியும் ஆதியை ஆர்வமாக பார்த்தனர்.


இருவரையும் நிதானமாக பார்த்த ஆதி , “ எப்போ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவேன்ன்னு கேட்டீங்கல.... வர வெள்ளிக் கிழமை எனக்கும் வானதிக்கும் கோவில்ல கல்யாணம் “ என்றவுடன் இருவருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் இருவருக்கும் பேச்சே வரவில்லை. இதை சொன்னது நீ தானா என்ற ரீதியில் அவனையே அசையாமல் பார்த்து கொண்டிருந்தனர். அதை கண்ட ஆதி இவர்களை விட்டால் நாள் முழுவதும் இப்படியே நிற்ப்பார்கள் என்று நினைத்தவன் அவர்கள் முகத்தருகே எழுந்து சென்று சொடக்கிட்டு நிகழ்வுக்கு கொண்டு வந்தான்.


ஷக்தி, “ என்னடா ஏதோ பூசணிக்காய் வாங்க போற மாதிரி சொல்ற... அந்த பொண்ணு தான் உன் மேல கோவமா இருக்கே அப்புறம் எப்படிடா.... ஒரு நாள் தான் உன் கூட இல்லை அதுக்குள்ள இப்படி ஷாக் குடுக்கிறியே டா..... இது உனக்கே நியாமா “ என்று புலம்பியவனிடம் காலையில் நடந்ததை முழுவதும் கூறி முடித்தான்.


அதை கேட்ட ஷக்தி, “ இதுக்கு தான் காலையில சீக்கிரமா வெளிய போனியா.... இது எல்லாம் சரியா வருமா ஆதி.... சிஸ்டர் பாவம் டா “ என்று கூறியவனை முறைத்த ஆதி, “ அப்போ நான் பாவம் இல்லையா அவ சம்மதம் சொல்லுவான்னு வெயிட் பண்ணா நேரா அறுவாதாவது கல்யாணம் தான் பன்னணும்.... உனக்கு எல்லா விஷயமும் தெரியும்ல ஷக்தி அப்புறமும் கேட்குற எனக்கு இப்போ இதை தவிர வேற வழி தெரில “.


ஷக்தி, “ நீ சொல்றது சரின்னாலும் வானதிக்கு உன் மேல இருக்க கோவம் இன்னும் அதிகம் ஆகுமே “.


ஆதி, “ ஆமா இப்போ அவ என் மேல கொலைவெறில இருப்பா... அதை எல்லாத்தையும் அப்புறம் பாத்துக்கலாம் “ என்றவன் இன்னும் ஷர்மீ எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை கண்டவன் அவள் அருகில் சென்று, “ என்னடா நீ எதுவுமே பேசல ஒரு வேலை உனக்கு இந்த கல்யாணத்துல சந்தோஷம் இல்லையா.... இல்லானா அண்ணன் பன்றது தப்புன்னு நினைக்கீறியா “ என்று கேட்டான்.


அவன் கூறியதை கேட்ட ஷர்மீ உடனே அவன் கையை பிடித்து கொண்டு, “ என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க உங்களுக்கு ஒரு வாழ்க்கை அதுவும் நீங்க ஆசைப்பட்ட வங்க கூட அமையும் போது எனக்கு ரொம்ப சந்தோஷம் அண்ணா.... அதுவுமில்லாம என் அண்ணன் எது செஞ்சாலும் அது சரியா தான் இருக்கும் எனக்கு உன் மேல முழு நம்பிக்கை இருக்கு..... என்னோட கவலையெல்லாம் அண்ணி உங்களை புரிஞ்சிக்கனும் அதான் “ என்றவளை பார்க்கும் போது ஒரு அண்ணனாக ஆதிக்கு கர்வமாக இருந்தது.


அவள் தலையை வருடியப்படி , “ என் மேல உனக்கு இருக்க இந்த நம்பிக்கைய பாக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா ..... உன் அண்ணிய பத்தி நீ கவலப்பட வேண்டாம் சரியா எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன் “ என்றவன்.

இருவரையும் பொதுவாக பார்த்து கொண்டு, “ கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு எல்லா வேலையையும் நீங்க தான் பாக்கணும் புரிதா.... ஷர்மீ பொண்ணூக்கு வேண்டிய மத்த ப்ரீபரேஷன்லாம் நீ பாத்துக்கோ “ என்று கூறியவன் வேகமாக படியேறி தன்னுடைய அறைக்கு சென்று விட்டான். அவன் சென்ற பிறகு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பேசிக் கொண்டே அவர்கள் அறைக்கு சென்று விட்டனர்.


அடுத்த நாள் காலை எப்போதும் விட வேகமாக அலுவலகத்துக்கு வந்த மித்ரா நேராக ஆதியின் அறையை நோக்கி சென்றாள். அவள் வேகமாக நடந்து வருவதை கண்ட கதிர் , “ மித்ரா என்னாச்சு... காலையிலேயே இவ்வளவு டென்ஷன்னா பாஸ் ரூம்க்கு போய்ட்டு இருக்க.... அவர் கிட்ட பெர்மிஷன் கேக்காம உள்ள போக முடியாதுன்னு உனக்கு தெரியாத “ என்று கூறியவனிடம், “ கதிர் வழி விடுங்க நான் இப்போவே உள்ள போகணும் “ என்றவள் அவனை பார்த்து முறைத்து கொண்டு உள்ளே சென்று விட்டாள். இவள் இவ்வாறு செல்வதை கண்டவனும் அவள் பின்னாலேயே உள்ளே நுழைந்தான்.


அப்போது தான் அலுவலகத்துக்கு வந்த ரிஷியுடன் பேசலாம் என்று நினைக்கும் போது கதவை தட்டி விட்டு வேகமாக உள்ளே நுழைந்த மித்ராவை கண்ட ஆதிக்கு அவள் முகத்தை வைத்தே அவள் என்ன எண்ணத்தொடு வந்து இருப்பாள் என்று அவன் ஒர் அளவுக்கு யுகித்து விட்டான். அதே நேரம் அந்த அறைக்குள் வந்த கதிர், “ பாஸ் நான் சொல்லியும் கேக்காம உங்கள பாத்தே ஆகனும்ன்னு வந்துட்டாங்க “ என்றான்.


அவளுடைய கண்களை நேருக்கு நேராக பார்த்த ஆதி மித்ராவை தனக்கு எதிரில் இருக்கும் இருக்கையில் அமரும்படி செய்கை செய்தான். மித்ரா, “ பரவாயில சார்.... நான் என்னோட ரெசிக்நேஷன் ( resignation ) லெட்டர் குடுத்துட்டு போலாம்ன்னு வந்தேன் தயவுசெய்து இதை வாங்கிட்டு என்னை ரிலிவ் பண்ணுங்க “ என்றவளை பார்த்து கதிருக்கு அதிர்ச்சியாக இருந்தது.


அவள் நீட்டியதை வாங்காமல் அவளை கூர்மையாக பார்த்தவன், “ நீங்களும் உங்க ப்ரெண்ட் மாதிரி ரொம்ப அவசர படுறீங்க மித்ரா “ என்று கேட்டவன் பார்வையிலும் குரலிலும் இருந்த அழுத்தத்தில் அவளுக்கு இருந்த தைரியம் முழுவதுமாக போவது போல் தோன்றியது. தன் மனதில் இருப்பதை எப்படி சொல்லாமலேயே தெரிந்து கொண்டான் என்பதை நினைக்கும் போதே, “ நீங்க எந்த காரணத்துக்காக வந்து இருக்கீங்கன்னு எனக்கு நல்லா தெரியும் மித்ரா.... இதுவே நேரடியா என் கிட்ட வந்து பேசி இருந்த நான் சந்தோஷப்பட்டு இருப்பேன் அதை விட்டு எதுக்கு இந்த அவசரம் “ என்றான் ஆதி.


மித்ரா, “ உங்க கிட்ட எதுவும் கேக்க வேணாம்ன்னு வானதி சொல்லிட்ட அப்படி இருக்கும் போது நான் என்னன்னு உங்க கிட்ட கேப்பேன்.... எனக்கு அந்த அளவு தைரியமும் இல்லை சார்.... முதல் முதல்ல அவ ஒறுத்தர விரும்பரான்ன்னு சொல்லும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.... அதுவும் அந்த அருள் நீங்க தான் நினைக்கும் போது எனக்கு இன்னும் சந்தோஷமா இருந்துச்சு.... உங்களப்பத்தி எனக்கு தெரியும் சார். இது நாள் வரைக்கும் கஷ்டப்பட்டதுக்கு நீங்க அவள நல்லா பாத்துப்பீங்கன்னு நினைச்சேன். அவ கிட்ட நீங்க யாருன்னு உண்மையா மறைச்சதுக்கு என்ன காரணம்ன்னு எனக்கு தெரியும் சார்.... ஆனா நேத்து அவள கல்யாணம் பண்ண சொல்லி நிர்பந்தம் படுத்துனது தான் எனக்கு கஷ்டமா இருக்கு இதுக்கு மேலையும் என்னால இங்க வேலை செய்ய முடியும்ன்னு எனக்கு தோணல “ என்று அவள் கூறுவது அனைத்தையும் கேட்ட கதிருக்கு தன் பாஸ் ஒரு பெண்ணை காதலிப்பதை கேட்டு அதிர்ச்சியாக இருந்தது என்றால் அது வானதி என்பதிலும் நடந்த அனைத்தையும் கேட்ட பிறகு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.


ஆதி, “ நான் பண்ற எதையும் யாருக்கும் எஸ்ப்லைன் பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்லை ஆனா நீ என் ஆருந்யாவுக்கு ரொம்ப வேண்டியவ உனக்கு எல்லாத்தையும் சொல்ல வேண்டியது என் கடமை.... நானே உன் கிட்டயும் கதிர் கிட்டயும் பேசனும்ன்னு நினைச்சேன்..... இப்போ சொல்றதை முழுசா கேட்டுட்டு உன் முடிவ சொல்லு “ என்றவன் அவர்கள் சந்தித்தது முதல் நேற்று நடந்தது, அவள் உயிருக்கு ஏற்ப்பட்டு இருக்கும் ஆபத்து எதனால் இந்த அவசர திருமணம் என்பது வரை எல்லாவற்றையும் கூறினான். அந்த அறையில் அப்படி ஒரு அமைதி மித்ராவிற்கு அவன் கூறியதை ஜீரணிக்கவே சில நேரம் எடுத்தது.


மித்ரா, “ நீங்க சொல்றது உண்மையா சார்.... இப்போ என்ன சார் பன்றது .... அவ உயிருக்கு ஆபத்து இருக்குன்னு தெரியாம நான் அவள தனியா ஊருக்கு அனுப்பிச்சிட்டேனே.... “ என்று அவள் கூறியதை கேட்டதும் அதிர்ச்சியில் ஆதி அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்ததில் இருக்கை இரண்டு அடி பின்னால் நகர்ந்தது. அந்த சத்தத்தில் ரிஷியும் தன்னை அறியாமல் எழுந்து நின்றான்.


ஆதி, “ என்ன சொல்றீங்க மித்ரா.... வானதி இப்போ எங்க “ என்று அவளிடம் அவசரமாக கேட்டான்.


மித்ரா, “ சார் அது....அது வந்து எனக்கு மனசு சரியில்லை நான் நீலகிரி வரைக்கும் போய்ட்டு வரேன்ன்னு நேத்து நைட்டே கிளம்பி போய்ட்டா சார்.... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ப்போன் பன்னேன் லைன் கிடைக்கல..... நீங்க சொல்றத கேக்கும் போது இப்போ பயமா இருக்கு.... ப்ளீஸ் சார் எதாவது பண்ணுங்க “ என்று அவனிடம் கெஞ்சியவளிடம் என்ன கூறுவது என்றே அவனுக்கு தெரியவில்லை. குழப்பத்தில் இருந்தவன் சடாரென்று திரும்பி ரிஷியை பார்த்து, “ உன் கிட்ட நான் என்ன சொன்னேன் வானதிக்கு செக்யூரிட்டி டைட் பண்ண சொன்னேன்ல அப்புறம் உனக்கு தெரியாம எப்படி.... எப்படி அவ வெளிய போனா “ என்று கத்தியவனுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் முழித்து கொண்டிருந்தான்.

அவனுடைய உக்கிரமான பார்வையில் இருந்து காப்பாத்துவதை போல் அவனுடைய கைப்பேசி அழைத்தது. அதை எடுத்து காதில் வைத்தவன் அந்தப்பக்கம் கூறிய செய்தியில் அவனுக்கு முகமெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது.


கைப்பேசியை அணைத்து விட்டு ஆதிக்கு அருகில் வந்தவன், “ ஆதி..... ஒரு பெரிய பிரச்சனை... “.


ஆதி, “ ஏற்கனவே நான் டென்ஷன்ல இருக்கேன்.... மேற்க்கொண்டு வெறுப்பெத்துவது போல பேசாமா நேரடியா விஷயத்த சொல்லு “.


ரிஷி, “ ஆதி.... அந்த சந்திரிகா இருக்காங்கல அவங்களோட அண்ணன் சந்திரன் சென்னை வந்து இருக்கார்.... சந்திரிகா பின்னாடி இருந்து எல்லாம் பன்னதே அவன் தான். அவன் மும்பைல பிஸ்னஸ்ன்ற பெயர்ல நிறைய இல்லீகல் வேலையெல்லாம் பன்றவன்.... இப்போ அவன இங்க வர வெச்சிருக்காங்கன்னா எனக்கு என்னவோ தப்பா தெரியிது.... சிஸ்டர் வேற தனியா நீலகிரிக்கு போய் இருக்காங்க “ என்று அவன் கூறியதை முழுவதுமாக கேட்டான் ஆதி.


அவனுக்கு புரிந்தது ஒன்று தான் இப்போது நிதானமாக யோசிக்க வேண்டிய நேரம் அதனால தலை முடியை கையால் அழுத்த கோதியவன் மூச்சை இழுத்து விட்டு கொண்டு ரிஷியிடம், “ ரிஷி நாம இப்போவே நீலகிரி கிளம்புலாம் நின்று பேச நேரம் இல்லை “ என்றவன்.


ஆதி, “ கதிர்.... நீ கோயம்புத்தூர்க்கு மூணு ப்ளைட் டிக்கெட் புக் பண்ணூ.... ஷக்திக்கு கால் பன்னி நேரா ஏர்போர்ட் வர சொல்லு.... நாங்க வரவரைக்கும் ஆபீஸ் நீ பாத்துக்கோ... “ என்றவன் ரிஷியுடன் வாசலை நோக்கி நடந்தவன் தீடிரென திரும்பி மித்ரா முன் வந்தவன் , “ கவலப்படாத மித்ரா.... வானதிக்கு ஒன்னும் ஆகாது.... அவ என்னோட உயிர் அவளுக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன்.... இங்க திரும்ப வரும் போது அவளோட தான் வருவேன் “ என்றவன் வேகமாக அங்கிருந்து வெளியே கிளம்பினான்.


விஸ்வநாதன் இல்லம்....


காலையிலிருந்து ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து வாசலையே பார்த்து கொண்டிருந்த சந்திரிகா அருகில் வந்த சாரா, “ என்னாச்சு அம்மா... எதுக்கு இப்படி இங்கையும் அங்கையும் நடந்துட்டு இருக்கீங்க “ என்று கேட்டாள்.


சந்திரிகா, “ என்ன விஷயமா.... என் அண்ணன் வீட்டுக்கு வந்துட்டு இருக்கார் சாரா “ என்று அவர் சந்தோஷமாக கூறிக்கொண்டிருக்கும் போதே ஒருவர் அந்த வீட்டிற்குள் நுழைந்தார். அவரை கண்ட சந்திரிகா, “ அண்ணா.... வாங்க வாங்க “ என்று உபசரிக்க சாரவோ அவரை வரவேற்கும் விதமாக அணைத்து கொண்டாள். அனைத்து வரவேற்ப்பையும் ஏற்றவர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, “ சந்திரிகா... எப்படி மா இருக்க.... மாப்பிள்ளை எங்க... “ என்று பாசமாக கேட்டார்.


சந்திரிகா, “ அவர் ஆபீஸ் போய் இருக்கார் அண்ணா.... நான் இதுவரைக்கும் நல்லா தான் இருந்தேன் ஆனா இப்போ இல்ல.... அதையெல்லாம் விடு முதல்ல நீ ரெஸ்ட் எடு அப்புறம் பேசலாம் “.


சந்திரன், “ இப்போ அது முக்கியம் இல்லை.... நீ முதல்ல எல்லா விஷயத்தையும் சொல்லு நான் உங்க ரெண்டு பேருக்கும் ஒரு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன் “.


அதை கேட்ட சாராவுக்கு அப்படி ஒரு சந்தோஷம் உடனே தன் மனதில் இருப்பதை எல்லாம் கூறிவிட்டு தன்னுடைய அன்னையை கூறுமாறு பார்த்தாள். பிறகு சந்திரிகா, “ முடிஞ்சி போச்சுன்னு நினைச்சா அத்தியாயம் மறுபடியும் ஆரம்பிச்சுருக்கு ணா.... என் வாழ்க்கையில் இருந்த பிரச்சனையா இருந்த வான்மதியோட மக இப்போ என் பொண்ணூக்கு இடைஞ்சல வந்து இருக்கா.... நானும் அவ கதையா முடிக்க எவ்வளவோ முயற்சி பண்ணேன் ஆனா முடியல ணா “ என்றவர் அனைத்தையும் கூறி முடித்தார்.


அதை கேட்டவர் நிதானமாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, “ இனி நீங்க வருத்தப்பட தேவையே இல்ல.... அந்த பொண்ணு இப்போ தனியா சிக்கி இருக்கா.... அவள முடிக்க ஆளா அனுப்பிட்டு தான் வந்து இருக்கேன்..... நீங்க கஷ்டப்பட நான் விடுவேனா “ என்று அவர் கூறியதும் சாரா அவரை அணைத்துக் கொண்டு, “ இது தான் உங்க சர்ப்ரைஸா சூப்பர் மாமா.... நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... அம்மா நான் என் ப்ரெண்ட்ஸ் கூட வெளிய போய்ட்டு வரேன்..... “ என்று சிரித்தப்படியே வெளியே சென்று விட்டாள்.


சந்திரிகா, “ நீ உண்மையாவா அண்ணன் சொல்ற.... அந்த ஆதி “ என்று ஆரம்பித்தவரை இடைமறித்த சந்திரன், “ இனிமே எல்லாத்தையும் நான் பாத்துக்கரேன் மா.... நீயும் சந்தோஷமா இரு அதான் அண்ணன் வந்துட்டேன்ல.... என்னோட பழைய கணக்கு ஒன்னு பாக்கி இருக்கு அதை தீர்க்காமா இந்த முறை நான் போக மாட்டேன் “ என்றவர் தன்னுடைய முகத்தில் கன்னத்தில் இருந்த பெரிய தழும்பை வருடியது.


கோயம்புத்தூர் வந்து இறங்கிய மூவரும் அங்கு தங்களுக்காக காத்து கொண்டிருந்த காரில் ஏறி எவ்வளவு வேகமாக நீலகிரி வந்து சேர முடியுமோ அவ்வளவு வேகமாக வந்து சேர்ந்தனர். ஆதி முதலில் வானதி தங்கியிருந்த தன்னுடைய எஸ்டேட்க்கு சென்று விசாரித்தான். அங்கிருந்தவர்கள் காலையில் வானதி இங்கு வந்து அவள் அன்னையுடன் இருந்த வீட்டில் சிறிது நேரம் இருந்து குளித்து முடித்து விட்டு கொஞ்ச நேரத்திற்கு முன்னால் தான் வெளியே கிளம்பி சென்றதாக கூறினார்கள்.


ஷக்தி, “ இப்போ.... வானதி எங்க போய் இருப்பா ஆதி “ என்று அவசரமாக கேட்டவனிடம், “ அவ எங்க போய் இருப்பான்னு எனக்கு தெரியும்.... அவ அந்த காட்டுக்குள்ள இருக்க அவ தம்பி கணேசனா பார்க்க தான் போய் இருப்பா.... அந்த இடத்த தவிர வேற எங்கையும் போக சான்ஸ் இல்ல “ என்றான் ஆதி.


ரிஷி, “ சிஸ்டர்க்கு தம்பி இருக்கானா.... அதுவும் காட்டுக்குள்ள எனக்கு தெரியாமா போச்சே “ என்று யோசித்து கொண்டிருந்தவன் அருகில் வந்த ஷக்தி, “ நீ கவலப்படாத அவர சந்திக்காம இங்க இருந்து நாம போக மாட்டோம்.... இப்போ நாம போலனா அவன் நம்மள விட்டுட்டு போய்டுவான்.... ஏற்க்கனவே கொலைக்காண்டுல சுத்திட்டு இருக்கான் பாத்துக்கோ “ என்று அவன் கூறியதும் ஆதியை திரும்பி பார்த்த ரிஷிக்கு பயமாக இருந்தது. கண்கள் இரண்டும் சிவந்து போய் அடக்க முடியாத கோவத்தை அடக்கி கொண்டு காரில் அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்து உரும விட்டப்படி அமர்ந்தவனை பார்க்கும் போது உண்மையில் அவனுக்கு பயமாகவே இருந்தது. வேகமாக ஓடி சென்று இருவரும் அதில் ஏறிக் கொண்டதும் அந்த கார் காட்டை நோக்கி சீறிப் பாய்ந்தது. அதில் அமர்ந்த இருவருக்கும் எந்த காயமும் இல்லாமல் நல்லபடியாக உயிரோடு சென்னை சென்று சேருவோமா என்ற யோசனை மேலோங்கி இருந்தது.


ஒரு பக்கம் அவளை காக்க ஒருவன் வேகமாக வர இன்னொரு பக்கம் அவளை கொல்ல சில பேர் வேகமாக அதே இடத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். இதற்கு நடுவில் அந்த காட்டிற்குள் இருக்கும் ஒரு பழைய கோவிலுக்குள் கண்களை மூடி அமர்ந்து பிராத்தித்து கொண்டிருந்தாள் வானதி. இறுதியில் நிகழ போவது என்ன என்பதை நாமும் பொறுத்திருந்து காண்போம்.....


பனி சிந்தும் சூரியன்

அது உந்தன் பார்வையோ

பூக்களின் ராணுவம் அது

உந்தன் மேனியோ கண்ணே

உன் நெஞ்சமோ கடல்

கொண்டா ஆழமோ நம்

சொந்தம் கூடுமோ ஒளியின்

நிழல் ஆகுமோ....

காதல் மழை பொழியுமோ

கண்ணீரில் நிரம்புமோ அது

காலத்தின் முடிவல்லவோ ஓ

தாளத்தில் நீ சேரவா ஓ

தாளிசை நான் பாடவா....


நிஜத்தை தேடும்....


உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்
....
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
த்தியாயம் 24


அந்த நீலகிரி மலைத்தொடரில் காரை அசுர வேகத்தில் செலுத்தி கொண்டிருந்தான் ஆதி. அதன் உள்ளே அமர்ந்து இருந்த மற்ற இருவரும் உண்மையில் மரண பீதியில் உயிரை கையில் பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தனர். காரை காட்டுப் பகுதிக்கு அருகில் இருந்த சாலையில் நிறுத்தி விட்டு வேகமாக இறங்கியவன் அங்கு கண்ட காட்சியில் அப்படியே நின்று விட்டான். அவன் பின்னாலேயே இறங்கிய இருவரும் அவன் அங்கேயே நிற்பதை கண்டு அவன் பார்வை சென்ற திசையை பார்த்தவர்கள் ஏற்கனவே ஒரு கார் நிற்பதை பார்த்து விட்டு ஆதியின் அருகில் வந்தனர்.


ஷக்தி, “ ஆதி.... நமக்கு முன்னாடியே அந்த சந்திரனோட ஆட்கள் வந்துட்டாங்க போல.... இப்போ என்ன பன்றது.... இவ்வளவு பெரிய காட்டுக்குள்ள வானதிய எங்க போய் தேட்டுறது “ என்று பதட்டத்துடன் கேட்டான்.


ஆதி, “ நமக்கு வேற வழியில்ல நாம போய் தேடியாகனும்.... என்ன ஆனாலும் சரி அவ இல்லாம இங்கயிருந்து நான் வர மாட்டேன்.... இப்போ நின்னு பேச நேரம் இல்லை வாங்க போலாம் “ என்றவன் வேகமாக காட்டிற்குள் நுழைந்தான்.


வேகமாக மூவரும் நாலா திசையிலும் தன்னுடைய கண்களை படற விட்டுக் கொண்டு மேலும் காட்டுக்குள் முன்னேறி கொண்டிருந்தனர். மூன்று வருடங்கள் முன்பு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஆதியின் கண் முன்னால் விரிந்தது. இன்றும் பசுமையாக அவன் மனதில் பதிந்திருக்கிறது. தான் அவளிடம் செல்வதற்குள் அவளுக்கு ஒன்றும் நேர்ந்து இருக்க கூடாது என்று மனதிற்குள் நூறாவது முறையாக ஜபித்தப்படியே தேடிக் கொண்டிருந்தான். வானதி என்ற அவளின் பெயரை கத்தி கூப்பிட்டுக் கொண்டே சென்றனர். நேரம் ஆக ஆக ஆதியின் மன தைரியம் குறைய தொடங்கியது. காட்டிற்குள் வெகு தொலைவு வந்தும் கூட இன்னும் அவள் இருக்கும் இடம் தெரியவில்லையே என்று கவலையுடன் அங்கிருந்த மரத்தின் மீது சாய்ந்து கண்கள் மூடி நின்று விட்டான்.


பின்னாடியே வந்து கொண்டிருந்த மற்ற இருவருக்கும் அவனுடைய நிலையை எண்ணி கவலையாக இருந்தது. அவனுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் நின்று இருந்தவர்கள் மனதில் இருந்தது எல்லாம் ஒன்று தான், ‘ வானதியை எப்படியாவது எங்கள் கண்களில் காட்டி விடு ஆண்டவா..... இதற்கு மேல் ஆதியால் தாக்கு பிடிக்க முடியும் என்று தோன்றவில்லையே ‘ என்று நினைத்து கொண்டு இருவரும் ஆதியின் இருப்பக்கமும் சென்று தோளில் கையை ஆதரவாக வைத்தனர். அந்த ஸ்பரிசத்தில் கண்ணை திறந்தவன் கண்கள் இரண்டும் சிவந்து இருப்பதை கண்டு பதறிய ஷக்தி, “ எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் தைரியமா இருக்க நீயே இப்படி உடைஞ்சி போகலாமா ஆதி..... கவலப்படாத ஆதி சிஸ்டர்க்கு ஒன்னும் ஆகாது கண்டு பிடிச்சிடலாம் “ என்று அவன் கூறிய எந்த வார்த்தையும் அவன் காதுக்குள் சென்ற மாதிரியே தெரியவில்லை.


ரிஷி, “ நீ உன் காதல் மேல நம்பிக்கை வை.... அது கண்டிப்பா உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கும்.... நேரம் ஆகுது வா ஆதி “ என்று அவன் சொல்லியதை கேட்டு நிமிர்ந்து பார்த்த ஆதி தன்னுடைய முகத்தை அழுத்த துடைத்து கொண்டவன் மீண்டும் தேட தொடங்கினர். சிறிது தூரம் சென்ற பிறகு ஏதோ சண்டையிடும் சத்ததையும் பிறகு ஒரு குரல் சத்தமாக ஒலித்ததை கேட்ட மூவரும் உடனே அங்கேயே நின்று விட்டனர். பிறகு சத்தம் வந்த திசையை நோக்கி பதட்டத்துடன் ஆதி வேகமாக ஓட தொடங்கினான். அவனை தொடர்ந்து இருவரும் ஓடினார்கள். அந்த சத்தம் அங்கு பாழடைந்த கோவிலிருந்து வருவதை கண்டு சென்றவர்கள் அங்கு கண்ட காட்சியில் உறைந்து நின்றனர்.


சிறிது நேரத்திற்கு முன்பு, நீலகிரி வந்தடைந்தவள் நேராக எஸ்டேட்டில் அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று குளித்து முடித்து விட்டு சிறிது நேரம் அங்கேயே இருந்தாள். பிறகு அங்கிருந்து கிளம்பி காட்டிற்குள் இருக்கும் கோவிலுக்கு சென்ற பிறகு கணேசனை சந்திக்க வேண்டும் என்று நினைத்தப்படியே முதலில் அந்த பழைய அம்மன் கோவிலை வந்தடைந்தாள். அவளின் சிறு வயதிலிருந்தே வானதியின் அம்மா அவளை அடிக்கடி இங்கே அழைத்து வருவார்கள். தன்னுடைய வாழ்க்கையில் நடக்க இருக்கும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்று கொள்ள முடியாமல் அந்த பாரத்தை இறக்கி வைக்க அங்கு வந்தவள் அங்கு கண்கள் இரண்டையும் மூடி அந்த அம்மனை பிராத்தித்து கொண்டிருந்த போது அருகில் யாரோ வரும் அரவத்தை உணர்ந்தாள்.


உடனே மெதுவாக கண்களை திறந்து பார்த்தவளுக்கு தனக்கு பின்னால் யாரோ நெருங்கி வருவதை தெரிந்து கொண்டாள். கண்களை நாலாப்புறமும் எதாவது கிடைக்குமா என்று தேடும் போது அங்கு அந்த கோவில் தூணுக்கு அருகில் ஒரு பெரிய கம்பு இருப்பதை கண்டவள் அங்கு சென்று அந்த கம்பை எடுத்து கொண்டு திரும்பவும் அவளை ஒருவன் நெருங்கி கத்தியால் குத்த வரவும் சரியாக இருந்தது. நடக்க போவதை யூகித்தவள் கம்பால் அவன் கத்தியை தட்டி விட்டு அவனுடைய மண்டையில் ஓங்கி ஒன்று வைத்தாள். அந்த அடியை எதிர்பாராதவன் மண்டையில் கை வைத்தப்படி மயங்கி சரிந்தான். அவன் கீழே சரிவதை கண்ட அவனுடன் வந்த மற்ற இருவரும் அதிர்ச்சியுடன் நின்று விட்டனர்.


தன்னுடைய புடவை முந்தானையை சண்டைக்கு ஏற்றவாரு தூக்கி சொறுகியவள் மற்ற இருவருடன் சண்டையிட தயாராக அவர்கள் அருகில் சென்றாள். ஆதிர்ச்சியில் இருந்த மற்ற இருவரும் கோவத்துடன் அவளை தாக்க சென்றனர். சிலம்பம் நன்கு தெரிந்ததால் அதை அனைத்தையும் எளிதாக தன்னுடைய கம்பால் தடுத்து அவர்களை எழுந்து கொள்ளாதவாறு தாக்கி கொண்டிருந்த போது தான் சரியாக ஆதியும் மற்றும் ரிஷி, ஷக்தி என மூவரும் அங்கு நடப்பதை கண்டு விழிகள் விரிய பார்த்து கொண்டிருந்தனர்.


ஆதியின் அருகில் சென்ற ரிஷி , “ ஆதி.... சிஸ்டர்க்கு இந்த அளவுக்கு சண்டை போட வரும்ன்னு சொல்லவே இல்லையே டா “ என்று கேட்டவனின் குரல் எதுவும் அவன் காதில் விழுந்ததை போலவே தெரியவில்லை. அதை கண்ட ஷக்தி, “ நீ என்ன சொன்னாலும் அவன் உனக்கு பதில் குடுக்க மாட்டான்.... கொஞ்சம் வாய மூடிட்டு என்ன நடக்குதுன்னு பாரு “ என்று ரிஷியிடம் கூறினான்.


தன்னவள் சன்டையிடும் அழகை முகத்தில் சிறு புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தான் ஆதி. இவ்வளவு நேரம் மனதில் இருந்த பதட்டம் மறைந்து அங்கு காதல் ஆட்க்கொண்டது. அங்கு நடப்பதை அமைதியாக பார்க்க ஆரம்பித்தான். மூவரையும் வீழ்த்தியவள் ஒரு பெருமூச்சோடு அங்கிருந்த தூணில் சாய்ந்து நின்றவள் “ கணேசா “ என்று கத்தினாள். அந்த சத்தம் அந்த காடு முழுவதும் எதிரொலித்தது.


ரிஷி, “ ஆமா எதுக்குடா.... வானதி அவ தம்பிய கூப்பிடுற பாவம் சின்ன பையன் இங்க வந்து என்னடா பன்னுவான் “ என்று கேட்டவனை பார்த்த மற்ற இருவருக்கும் சிரிப்பு தான் வந்தது. அவர்கள் சிரிப்பதை கண்ட ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை சரி நடப்பதை பார்ப்போம் என்று வானதியை பார்த்து கொண்டிருந்தான். அடி வாங்கிய மூவரும் இவள் மறுபடியும் அடிக்க யாரையோ கூப்பிடுகிறாள் என்று எண்ணியவர்கள். அவளிடம், “ அம்மா.... அதான் எங்களை அடிச்சு துவைச்சிட்டியே அப்புறம் வேற யாரமா கூப்பிடுற “ என்று புலம்பிக் கொண்டே தள்ளாடி எழுந்து நின்றவர்களை தன்னுடைய ரெண்டு கைகளையும் கட்டிக் கொண்டு இமைக்காமல் பார்த்தவள், “ உங்களை யாரு இங்க அனுப்பினதுன்னு சொல்லுங்க “ என்று கேட்டாள்.


அவள் கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லாமல் தப்பி செல்வதற்காக திரும்பியவர்கள் அங்கு தங்கள் முன்னால் ஒரு பெரிய யானை நின்று கொண்டு சத்தமாக பிளிறியதை கேட்ட மூவரும் பயத்தில் மீண்டும் கீழே விழுந்தனர். யானையை கண்ட ரிஷி பயத்தில் இருவரின் கையையும் பிடித்து கொண்டே, “ ஐயோ யானை.... வாங்க இங்க இருந்து ஒடிடலாம் “ என்றவன் அப்போது வானதி அசையாமல் அங்கு நிற்பதை கண்டு ஆதியிடம், “ கொஞ்ச தூரத்துல இருந்து பாக்குற எனக்கே பயமா இருக்கே... அந்த பொண்ணு என்னடான்னா அங்கேயே நிக்குது..... போ ஆதி போய் கூட்டிட்டு வா “ என்று புலம்பியவனை பார்த்து முறைத்த ஆதி, “ கொஞ்சம் அடங்குறியா.... அவ கூப்பிட்ட கணேசன்றதே அந்த யானையை தான் “ என்றவன் அவளை நெருங்கி செல்ல தொடங்கினான்.


ரிஷி, “ இவன் என்னடா…. சொல்றான் “ என்று மண்டையை பியித்து கொண்டு இருந்தவனிடம், “ வானதி அவ தம்பின்னு சொன்னது இந்த யானையை தான். இவரோட பெயர் தான் கணேசன்…. புரிஞ்சிதா வா போலாம் “ என்ற ஷக்தி ரிஷியை அழைத்து கொண்டு ஆதியின் பின்னால் சென்றான்.


யானையை கண்டவுடன் ரெண்டு அடி பின்னால் நகர்ந்து கீழே விழுந்தவர்களை மிதிக்க கால்களை தூக்கிய கணேசன் அருகில் வந்த வானதி, “ வேண்டாம்…. கணேசா… நான் சொல்ற வரைக்கும் இவங்கள ஒன்னும் பண்ணாத “ என்று கூறிய அடுத்த நொடி காலை கீழே இறக்கி விட்டு வானதியின் பின்னால் நின்று கொண்டான் கணேசன். அதை கண்ட அனைவருக்கும் இது ஆச்சர்யமாக இருந்தது. அப்போது தான் அங்கு வந்த ஆதியையும் அவன் நண்பர்களையும் கண்டவள் பார்வை ஒரு நிமிடம் அவனிடம் நிலைத்து பின் அந்த ரவுடிகள் மீது திரும்பியது. அவளின் பார்வையை உணர்ந்த ஆதி எதுவும் கூறாமல் அங்கிருந்த மரத்தின் மீது சாய்ந்து நின்று நடப்பதை காண ஆரம்பித்தான்.


வானதி, “ சொல்லுங்க…. உங்கள அனுப்புனது யாரு “ என்று கேட்டவளிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மூவரும் ஒறுத்தர் முகத்தை இன்னொருவர் பார்த்துக் கொண்டு எப்படி தப்பிக்கலாம் என்று யோசித்தவர்களின் எண்ணத்தை உணர்ந்த வானதி , “ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம உங்களால இங்கயிருந்து உயிரோட போக முடியாது…. இவன் என்னோட தம்பி பெயர் கணேசன்…. என் மேல இவனுக்கு ரொம்ப பாசம். நான் என்ன சொன்னாலும் கேப்பான். நீங்க மட்டும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லல அப்படின்னா இவனுக்கு இன்னைக்கு மதிய சாப்பாடு நீங்க தான். இங்க இவன் மட்டும் இருக்கான்ன்னு தப்பா நினைக்காதீங்க இவனோட சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க பாக்குறியா “ என்றவள் திரும்பி கணேசனிடம் குரல் குடுக்க சொன்னாள். அவள் கூறிய அடுத்த நொடி கணேசனின் பிளிறல் கேட்டவுடன் அவர்களை சுற்றி நாலாப்புறமும் சற்று தொலைவில் பிளிறல் சத்தம் கேட்க தொடங்கியது. இதை பார்த்து கொண்டிருந்த ரிஷிக்கும் ஷக்திக்கும் கூட பயமாக இருந்தது. அவர்கள் திரும்பி ஆதியை பார்த்தனர். அவனோ வானதியின் தைரியத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அதை கண்ட இருவரும் தலையில் அடித்துக் கொண்டு அங்கு நடப்பதை பார்க்க ஆரம்பித்தனர்.


அந்த சத்தத்தை கேட்ட அந்த மூவருக்கும் இதயம் வாய் வழியாக வந்து விடுமோ என்று எண்ணும் அளவுக்கு வேகமாக துடித்தது. பயத்தில் உடல் முழுவதும் வேர்த்து கொட்டியது. மூவரில் ஒருவன், “ நான் சொல்லிடுறேன் மேடம் “ என்று கூறியவனை தன் கைகள் ரெண்டையும் கட்டிக் கொண்டு கூர்மையாக அவனை பார்த்து சொல்லுமாறு கூறியவளிடம், “ அது…. அது வந்து சந்திரன் அண்ணன் தான் உங்கள கொல்ல சொல்லி எங்களை அனுப்புனாரு “ என்றான்.


அதை கேட்டு கொண்டிருந்த ஆதிக்கு இது முன்னமே தெரியும் என்பதால் இதற்கு வானதியின் பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொல்வதற்காக அவளையே கூர்மையாக பார்த்து கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து, “ அவர் தான் இப்போ சென்னையில இல்லையே அப்புறம் “ என்றவளிடம் இன்னொருவன், “ அவர் காலையில தான் சென்னை வந்தார் ஆனா நேத்துல இருந்து உங்கள கண்காணிக்க சொன்னார்….. நீங்க தனியா நீலகிரி கிளம்புனது தெரிஞ்ச உடனே உங்கள கொல்ல சொல்லி எங்களை அனுப்புனாரு… எங்களுக்கு வேற எதுவும் தெரியாது… எங்களை விட்டுங்க….” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அவனின் கைப்பேசி ஒலிக்க ஆரம்பித்தது. அதை எடுத்து பார்த்தவன் அவளிடம் சந்திரன் அழைப்பதாக பயத்துடன் கூறினான். அவளும் அதை எடுத்து ஸ்பீக்கரில் போடும்படி கூறினாள்.


அவனும் அதன் படியே செய்து அட்டென்ட் பன்னவுடன் அந்த பக்கம் இருந்த சந்திரன், “ என்ன்டா…. போன காரியம் என்ன ஆச்சு…. அவ கதையை முடிச்சீடிங்களா “ என்று அவன் சொல்லியதை கேட்டவுடன் ஆதிக்கு மறைந்திருந்த கோவம் மீண்டும் ஏற தொடங்கியது. அவன் மட்டும் எதிரில் இருந்தால் அவனை கொல்லும் அளவுக்கு அவனுக்கு ஆத்திரமாக இருந்தவனை கண்ட ஷக்தி ஆதியின் கையை பிடித்து அவனை அமைதிப்படுத்தினார்கள்.
இங்கே வானதி, “ அவ்வளவு சுலபமா என்னை கொல்ல முடியும்ன்னு நினைக்குறீங்களா “ என்றவளின் குரலில் சந்திரனுக்கு முதலில் ஒன்றும் புரியாமல் , “ யார் அது “ என்று கேட்டார்.


வானதி , “ நான் யாருன்னு தெரிலையா... ஒரு வேலை சின்ன வயசுல கேட்ட குரல்.... நான் இப்போ வளர்ந்துட்டேன்ல அதான் அடையாளம் தெரியலை போல. வயசு ஆயிடுச்சு வேற..... சரி நானே சொல்றேன் நான் வானதி.... வான்மதியோட மக வானதி “ என்றவளின் கம்பீரமான குரலில் சந்திரனுக்கு என்ன கூறுவது என்றே தெரியாமல் நின்றவர்.


சந்திரன், “ ஏய்.... நீ எப்படி உயிரோட. இந்த ப்போன் எப்படி உன் கிட்ட “.


வானதி , “ நீங்க என்ன நினைச்ச்சீங்க உங்க ஆளுங்கனால என்னை அவ்வளவு சீக்கிரம் கொல்ல முடியும்ன்னா.... நீங்க சொன்ன உடனே வெட்டி சாய்க்க என்னை என்ன நீங்க வளர்த்த மரம்ன்னு நினைச்ச்சீங்கலா.... நான் தானா வளர்ந்த காட்டு மரம் அவ்வளவு சுலபமா என்னை சாய்க்க முடியாது “ என்று பெண் சிங்கம் என கர்ஜித்தவளின் பதிலில் ஒரு நிமிடம் சந்திரனுக்கே மனதில் குளிர் பரவ தொடங்கியது.


சந்திரன், “ நீ யார் கிட்ட பேசுரன்னு தெரியாம பேசிட்டு இருக்க.... இப்போ மட்டும் நான் உன் முன்னாடி இருந்தா உன் உயிரை நானே எடுத்து இருப்பேன் “ என்றவர் கூறியதை கேட்ட வானதி சிரித்துக் கொண்டே, “ ஒரு வேலை உங்க கையால தான் என் உயிர் போகணும்ன்னு விதி இருந்தா அதை மாத்த யாராலையும் முடியாது ஆனா என்னோட உயிர் போறதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி உன் தங்கச்சியையும் அவங்க பெண்ணையும் நடு ரோட்டுல நிக்க வெச்சிட்டு தான் போவேன் அதை நியாபகம் வெச்சிக்கொங்க”.


சந்திரன், “ உங்க அம்மவாலயே எதுவும் பண்ண முடியலை உன்னால என்ன முடியும்.... நான் இருக்க வரைக்கும் உன்னால ஒன்னும் பண்ண முடியாது “.


வானதி, “ நான் நினைச்சி இருந்த உங்க தங்கச்சி வாழ்க்கைக்கு அங்கீகாரம் கிடைக்க முடியாம பண்ண முடியும் ஆனா எங்க அம்மா குடுத்த வாழ்க்கை அது.... குடுத்தத திரும்பி வாங்கற பழக்கம் எனக்கு இல்ல. ஆனா நீங்க என்னை சீண்டி விட்டீங்கன்னா இப்படியே அமைதியா இருப்பேன்ன்னு நினைக்காதீங்க.... உங்க தங்கச்சி குடும்பத்தையே எப்படி நடு ரோட்ல நிக்க வைக்கனும்ன்னு எனக்கு தெரியும்.... புரியாலைன்னா போய் உங்க அருமை தங்கச்சி கிட்ட கேளுங்க அப்போ தெரியும் “ என்றவள் அந்த கைப்பேசியை அணைத்து விட்டு கோவத்தில் அந்த ரவுடியிடமே தூக்கி எறிந்தாள்.


அவள் கோவத்தில் தூக்கி எறிந்ததை கண்ட ஆதி அந்த மூன்று ரவுடிகளையும் செல்லுமாறு செய்கை செய்தான். அதை கண்டவுடன் விட்டால் போதும் என்று அவர்கள் தலை தெறிக்க அங்கிருந்து ஓடி விட்டனர். அங்கிருந்த திட்டில் அமைதியாக அமர்ந்து இருந்த வானதியின் அருகில் சென்ற ஆதி, “ நான் உன் மேல பயங்கரமான கோவத்துல வந்தேன் ஆனா அது இப்போ அப்படியே காணாம போய்டுச்சு..... ஒரு பக்கம் என்னை கோவத்தோட உச்சத்துக்கு கொண்டு போறதும் நீ தான்..... மறுபக்கம் காதலோட எல்லைக்கு கொண்டு போறதும் நீ தான் “ என்று கூறியவனின் குரலில் அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள், “ முதல்ல உங்களை யாரு இங்க வர சொன்னது “.


ஆதி, “ நீ எதுக்கு என்கிட்ட சொல்லாம இங்க வந்த... நான் எவ்வளவு டென்ஷன் ஆயிட்டேன் தெரியுமா “.


வானதி, “ நான் என்ன உங்க அடிமையா.... எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டு தான் செய்யணுமா “ என்று கூறியவள் அங்கிருந்து எழுந்து கணேசன் அருகில் சென்று அவனை பார்த்து சிரித்தபடி தும்பிக்கையை அணைத்து கொண்டாள்.


ஆதி, “ ஆருந்யா.... நீ அடிமை இல்ல என்னோட மனைவி. என்கிட்ட சொல்லிட்டு தான் செய்யணும்ன்னு இல்ல ஆனா நீ பன்றது எனக்கு சொல்லனும்ல. இங்க நடந்தது எல்லாம் பாத்தல “.


அவனை பார்த்து முறைத்தவள், “ என்னை பாத்துக்க எனக்கு தெரியும்.... அப்புறம் இன்னும் நமக்கு கல்யாணம் ஆகல.... அதை நியாபகம் வச்சிக்கொங்க “ என்று அவள் கூறியதை கேட்டதும் கோவம் கொண்டவன் அவளின் கையை பிடித்து தனக்கு நெருக்கத்தில் நிற்க வைத்து, “ உன்னை நான் என்னைக்கு முதன் முதல்லா பாத்தனோ அன்னையில் இருந்து நீ என்னோட மனைவி தான் அதை நீ உன் மனசுல நல்லா பதிய வெச்சிக்கோ “ என்று அழுத்தமான குரலில் கூறியவனை இமைக்காமல் பார்த்தவளின் பார்வையில் விரும்பியே சரண்டைந்தவன் , “ இந்த கண்ணு தான் என்னை மொத்தமா உன் கிட்ட விழ வெச்சிது..... சும்மா சொல்ல கூடாது கோவப்படும் போது கூட நீ ரொம்ப அழகா இருக்க.... உன்னை நான் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் நீ என்னை ஏதோ ஒரு வகையில ஆச்சர்யப்படுத்திட்டே தான் இருக்க.... இந்த ஆதித்ய அருள்மொழி வர்மனுக்கு மனைவியா வரத்துக்கு இந்த ஆருந்யாவுக்கு மட்டும் தான் முழு உரிமையும் தகுதியும் இருக்கு “ என்றவனின் பார்வையில் சிக்கி கொண்டிருந்தவள் கணேசனின் சத்தத்தில் சுயநினைவுக்கு வந்தவள் கணேசனின் அருகில் சென்று பேச சென்றாள்.


அவள் தள்ளி சென்றதை பார்த்த ஆதி திரும்பி ரிஷியையும் ஷக்தியையும் பார்த்தான். அவர்கள் பயத்தோடு அங்கேயே நிற்பதை கண்டு அவனுக்கு சிரிப்பாக வந்தது. அவர்களை அருகில் அழைத்தான் ஆனால் அவர்கள் வர மாட்டேன் என்று கூறியவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கணேசனின் முன் நின்றான். அப்போது தான் அவர்கள் கண்ணில் பீதியோடு நிற்பதை கண்டவள் , “ கணேசா.... இவங்க நமக்கு தெரிஞ்சவாங்க தான் கைய கொடு “ என்று அவள் கூறியதும் தன்னுடைய தும்பிக்கையை அவர்கள் இருவரையும் நோக்கி நீட்டியதை பார்த்து அவர்களும் நடுங்கியபடியே கையை நீட்டினர். அவர்கள் கையை தன் தும்பிக்கையால் மோப்பம் பிடிப்பதை கண்டு ரிஷியும் ஷக்தியும் தங்கள் பயத்தை மறந்து சிரித்தனர்.


வானதி, “ நீங்க பயப்பட தேவையில்ல..... கணேசன் உங்களை ஒன்னும் பண்ண மாட்டான். உண்மைய சொல்லனும்ன்னா மனிஷங்க தான் ஒறுத்தர் மேல ஒறுத்தர் வன்மத்தோட இருப்பாங்க ஆனா இவங்க அப்படி இல்லை “ என்றவள் கொண்டு வந்த பழங்களை அவனுக்கு கொடுத்து கொண்டே, “ என்னோட வாழ்க்கையில ஒரு பெரிய மாற்றம் வரப்போகுது அதுக்கு முன்னாடி உன்னை பாக்கணும் போல இருந்துச்சு “ .


அவள் கூறுவதை கேட்ட ஆதி அவள் கையில் இருந்த பழத்தை வாங்கி, “ கணேசா.... நான் உன்னோட அக்காவ கல்யாணம் பண்ணிக்க போறேன்.... இதுல உனக்கு சம்மதமா “ என்று அவன் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் கணேசன் என்ன செய்து தன்னுடைய சம்மததை கூறுவான் என்று ஆர்வமாக பார்த்தனர். இருவரையும் மாறி மாறி பார்த்த கணேசன் தன் தும்பிக்கையால் வானதியை ஆதிக்கு அருகில் தள்ளி விட்டு விட்டு அவர்கள் தலையில் ஆசிர்வாதம் செய்தான். அதை புரிந்து கொண்ட ஆதி கண்ணில் சிரிப்போடு வானதியை பார்த்தான் அதே நேரம் அவளும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.

அதன் பிறகு அனைவரும் கணேசனிடம் விடைப்பெற்று கொண்டு சென்றனர்.கணேசனும் அவர்களுக்கு விடைக்கொடுத்து விட்டு தன்னுடைய இடத்தை நோக்கி சென்று விட்டான். ரிஷிக்கும் ஷக்திக்கும் வானதியின் இந்த பிணைப்பு மிகவும் ஆச்சர்யத்தை கொடுத்தது. நால்வரும் காரில் சென்னைக்கு செல்லலாம் என்று ஆதி கூறியதால் அதற்கு மறுப்பு கூறாமல் சம்மதம் தெரிவித்தனர். ஷக்தியும் ரிஷியும் முன்னால் அமர்ந்து கொள்ள ஆதியும் வானதியும் பின்னால் அமர்ந்து இருந்தனர். அந்த பயணம் உண்மையில் மறக்க முடியாததாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை முதன் முதலாக அவளுடன் செய்யும் இந்த பயணம் முடிவு இல்லாமல் சென்று கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆதியின் மனதில் ஆழமாக தோன்றி கொண்டு இருந்தது. ஆதியின் பக்கம் திரும்ப கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்த வானதி அவனை தவிர்ப்பதற்க்காகவே ஜன்னல் வழியாக வெளியில் பார்ப்பதை போல் அமர்ந்து கொண்டாள்.


என்னத்தான் அவனை பார்க்க கூடாது என்று நினைத்தாலும் அவள் எண்ணம் முழுவதும் ஆதியை சுற்றியே இருந்தது. அவன் மேல் உள்ள கோவத்தில் அவனை காயப்படுத்த வேண்டும் என்று அவள் முயற்சி செய்தாலும் அவளை அதை செய்ய விடாமல் மனம் தடுப்பதை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை. தான் நினைப்பது ஒன்று ஆனால் நடப்பது வேறாக இருக்கிறதே என்று அவள் மீது அவளுக்கே கோவமாக இருந்தது. இனி தன்னுடைய வாழ்க்கையில் நடப்பதை எப்படி எதிர் கொள்வது என்று அவள் சிந்தித்து கொண்டிருந்தாள். அப்போது எவ்வளவு நேரம் காரில் அமைதியாக வருவது என்று பாட்டை ஒலிக்க செய்தான் ரிஷி. அவரவர் சிந்தனையில் இருந்தவர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டது அந்த பாடல் என்று சொல்லலாம்.


நெடுங்காலமாய் புழங்காமலே

எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே

உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெரிக்கின்றதே


என்ற வரியை கேட்கும் போது ஆதியால் வானதியை பார்க்காமல் இருக்க முடியவில்லை.


தரிசான என் நெஞ்சில்

விழுந்தாயே விதையாக நீ அன்பாய்

பார்க்கும் பார்வையிலே என் ஜீவன்

வாழுதடி நீ ஆதரவாக தோள்

சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி....


என்ற வரியில் அவளை அறியாமல் வானதியின் கண்கள் ஆதியை பார்ப்பதை தடுக்க முடியவில்லை. அப்போது ஆதியின் கண்களில் தெரிந்த காதலில் வானதியால் வேறுபுறம் திருப்ப முடியவில்லை. அந்த நிமிடம் அவன் மீது இருந்த கோவம் கூட பின்னுக்கு சென்றதை போல் இருந்தது. ஆதியும் அவள் கண்களில் தெரிந்த காதலில் மனதில் எழுந்த சந்தோஷத்தோடு அவள் கண்களில் விரும்பியே விழுந்தான். அவன் மனதில் இருந்த அனைத்தும் பாடல் வரிகளாக வருவதை கேட்டு அவன் தன்னையே மறந்தான்.


கண்ணுக்குள்ளே உன்னை

வைத்தேன் கண்ணம்மா நான்

கண்கள் மூட மாட்டேனடி

செல்லம்மா....

அடி நீ தான் என் சந்தோசம்

பூவெல்லாம் உன் வாசம்

நீ பேசும் பேச்சேல்லாம்

நான் கேட்கும் சங்கீதம்

உன் புன்னகை நான்

சேமிக்கின்ற செல்வமடி

நீ இல்லையென்றால்

நானும் இங்கு ஏழையடி....


அந்த பாடல் முடிந்தும் அவர்களால் அதில் இருந்து மீள முடியாமல் போனது. இந்த சுழலில் இருந்து முதலில் மீண்டது வானதி தான். உடனே தன்னுடைய பார்வையை வேறுபுறம் திருப்பி கொண்டாள். அவள் தன் முகத்தை திருப்பி கொண்டாலும் அவள் கண்களில் கசிந்த காதலில் கூடிய விரைவில் அவளின் கோவம் மறைந்து இருவரும் மகிழ்ச்சியான ஒரு வாழ்வை வாழ்வோம் என்ற நம்பிக்கை அவனுள் எழுந்தது.


இவ்வாறு சிந்தித்தப்படியே அனைவரும் சென்னை வந்து அடைந்தனர். நேரமும் காலமும் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்பதை நிருப்பிப்பதை போல் வெள்ளி கிழமை காலை வேகமாக விடிந்தது. இடைப்பட்ட ஒரு நாளில் திருமணத்திற்கு தேவையான எல்லா வேலைகளும் சிறப்பாக முடிந்தது. வானதிக்கு தேவையான அனைத்தையும் ஆதியே முன்னின்று வாங்கினான். அவள் எதிலும் அவ்வளவாக ஆர்வம் காட்டாததால் ஆதியே செய்ய வேண்டியதாக இருந்தது. அதில் அவனுக்கு சிறிதாக வருத்தம் இருந்தாலும் எதையும் வெளியில் காட்டி கொள்ளாமல் இறுக்கமாகவே இருந்தான்.


திருமண நாள் என்பது எல்லோர் வாழ்க்கையிலும் நிகழும் ஒரு அழகான நிகழ்வு. இதுவரை வாழ்ந்த வாழ்க்கை இதன் பிறகு முற்றிலும் மாற்றப்படும் நிகழ்வு அது. மாற்றம் என்பது தான் என்றும் மாறாதது என்பதை போல் இந்த மாற்றத்தையும் முழு மனதோடு மகிழ்ச்சியான மனநிலையில் தான் அனைவரும் ஏற்று கொள்கின்றனர். இதில் காதல் திருமணம் என்றால் அது இன்னும் சிறப்பு தன்மை வாய்ந்தது. இவன் தன் கணவனாக வர மாட்டானா அல்லது இவள் தன்னுடைய மனைவியாக வர மாட்டாளா என்று ஏங்கி கனவு கண்ட அந்த தருணம் உண்மையில் நடக்கும் போது கிடைக்கும் மனநிறைவுக்கு எதுவுமே ஈடாகாது. அப்படி ஒரு மனநிலையில் தான் இன்று ஆதியும் இருந்தான்.


பட்டு வேட்டி சட்டையில் ஆளை அசரடிக்கும் அழகோடு கம்பீரமும் சேர கல்யாண மாப்பிள்ளைக்கு உள்ள அனைத்து லட்சணத்தோடும் கழுத்தில் மாலையோடு அமர்ந்து இருந்தான். கோவிலில் நடக்கும் திருமணம் ஆகையால் மாப்பிள்ளை பக்கம் ஷக்தி, ஷர்மிளா மற்றும் ரிஷி, ரிஷியின் குடும்பத்தார்கள் வந்து இருந்தனர். பெண் வீட்டு சார்பாக மித்ரா, கதிர் மற்றும் கதிரின் குடும்பத்தார் முக்கியமாக மீனாட்சி அம்மா வந்து இருந்தார். மனையில் அமர்ந்து இருந்த ஆதியின் எண்ணம் முழுவதும் வானதியை பற்றியதாகவே இருந்தது. காதலித்தவளை கரம் பிடிக்க போகும் அந்த கர்வமும் சேர்ந்து அவன் முகத்தில் அழகு சற்று கூடுதலாக தெரிந்ததை போல் அனைவருக்கும் தோன்றியது. மற்ற ஏற்பாடுகள் சரியாக உள்ளதா என்று ஷக்தியிடம் விசாரித்து கொண்டிருந்தவன் காதில் தீடிரென கேட்ட கொலுசொலியில் நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. அவன் அவளுக்காக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த சிவப்பு நிறத்தில் தங்க ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்த புடவையும் அதற்கு ஏற்றது போல் நகைகள் அணிந்து கழுத்தில் மாலையோடு விண்ணில் இருந்து இறங்கி வந்த தேவதையோ என்று என்னும் அளவிற்கு அழகோடு நடந்து வந்தவளை பார்த்தவனுக்கு அங்கிருந்த அனைத்தும் மறைந்து வானதி மட்டுமே நிறைந்திருந்தாள்.


அவள் நடந்து வந்து அருகில் அமர்ந்தும் கூட அவள் மேல் இருந்து கண்களை அவனால் அகற்ற முடியவில்லை. ஐயர் கூறியதை செய்தாலும் அவனுக்கு இன்னும் அவள் நிமிர்ந்து தன்னை பார்க்காதது மனதில் ஒரு ஒரத்தில் ஏமாற்றமாக இருந்தது. அந்த ஏமாற்றமே அவள் மீது கோவமாக மாறி அவளை எப்படியாவது தன்னை பார்க்க செய்ய வேண்டும் என்ற வெறியே மனதிற்குள் எழுந்தது. தூரத்தில் வரும் போதே வானதி ஆதியே பார்த்து விட்டாள். அவள் அறியாமலேயே அவளின் கண்கள் அவன் மீது ரசனையாக படிந்தது ஆனால் அடுத்த நிமிடம் அவன் கட்டாயப்படுத்தியது நினைவுக்கு வந்ததால் இனி அவனை நிமிர்ந்து பார்க்கவே கூடாது என்று எண்ணிக் கொண்டே வந்தவள் ஐயர் கூறியதை அமைதியாக செய்து கொண்டிருந்தாள். தான் மனதில் நினைத்தவளையே மனைவியாக கடவுள் சாட்சியாக ஏற்று கொள்ள போகும் அந்த தருணம் ஐயர் கெட்டிமேளம் என்று கூறி தாலியை கையில் கொடுத்தவுடன் அதை கையில் வாங்கி விட்டு அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் ஆதி. தாலி கட்டுவதற்காக தலையை குனிந்து அமர்ந்து இருந்தவள் இன்னும் எதுவும் நடக்கவில்லையே என்று நிமிர்ந்து ஆதியை பார்த்தவள் அவன் கண்ணில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை அவனையே பார்க்க வைத்தது.


அவள் பார்ப்பதை உணர்ந்தவன் காதலோடு அவளை கண்டான். அந்த நிமிடம் அவன் மீது இருந்த கோவம் மறைந்து பதிலுக்கு அவளும் சளைக்காமல் காதல் பார்வை பார்த்தாள். அவளை நிமிர்ந்து பார்க்க வைத்த சந்தோஷத்தோடு அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்து சிரித்து கொண்டே அவளின் கழுத்தில் தாலியை கட்டினான். சுற்றி இருந்த அனைவரும் அட்சதை தூவ அந்த காட்சி அழகாக புகைப்படமாக பதிவாகியது. மூன்றாவது முடிச்சு போட வந்த ஷர்மியை கண்களால் தடுத்து மூன்று முடிச்சையும் அவனே கட்டி அவளை தன்னுடைய சரிப்பாதியாக ஆக்கிக் கொண்டான். தாலி ஏறியதை கண்ட அங்கிருந்த அனைவருக்கும் மனது மிகவும் நிறைவாக இருந்தது. ஷர்மீயால் அந்த மகிழ்ச்சியை தாங்கி கொள்ள முடியாமல் கண்ணில் கண்ணீரோடு தன் அண்ணனை பார்த்து கொண்டிருந்தாள். அடுத்து குங்குமத்தை அவள் தாலியில் வைத்து விட்டு அவள் நெற்றியில் இனி உனக்கு எல்லாமுமாக நானே இருப்பேன் என்று உணர்த்துவதற்காக சற்று அழுத்தத்தோடு அவள் நெற்றியில் வைத்தான். அந்த அழுத்தத்தில் தன்னை அறியாமல் அவள் கண்ணில் இருந்து ஒரு தூளி கண்ணீர் வெளி வந்து கீழே சிதறுவதற்கு முன் அதை தன் விரல்களால் தாங்கிய ஆதி கூறிய வார்த்தையில் அடுத்து விழ தயாராக இருந்த கண்ணீர் கூட அப்படியே நின்றது. அதன் தாக்கத்தில் வானதியின் கண்கள் அதிர்ச்சியோடு ஆதியையே பார்த்தது.


வானதிக்கு அவன் மீது மனம் நிறைய கோவம் இருந்தாலும் அதை விட காதலும் அதிகமாகவே இருந்தது. இதில் வெல்ல போவது எது..... அவள் மனதில் இருக்கும் காதலை வெளிக்கொண்டு வருவானா ஆதி... இவையனைத்தையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்....


காத்தா அலைஞ்சாலும் கடலாக

நீ இருந்தாலும் ஆகாசமா ஆன

போதிலும் என்ன உரு எடுத்த

போதிலும் சேர்ந்தே தான்

பொறக்கனும் இருக்கணும்

கலக்கணும்....

உன்னை விட இந்த உலகத்தில்

உசந்தது ஒண்ணும் இல்லை

ஒண்ணும் இல்லை....


நிஜத்தை தேடும்....


உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்....

 
Status
Not open for further replies.
Top