All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ப்ரியா நிலாவின் “என் நிஜமே நீ தானடி” - கதை திரி

Status
Not open for further replies.

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 25


வானதியின் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை கீழே விழாமல் தன்னுடைய விரல்களால் பிடித்த ஆதி அவளின் கண்களை நேருக்கு நேராக பார்த்து, “ நீ என்னோட மனைவி இனி உன்னோட சுக துக்கம் எல்லாத்துலையும் எனக்கும் பங்கு உண்டு. உன் முகத்துல என்னைக்கும் நான் சந்தோஷத்தை மட்டும் தான் பாக்கணும்….. உன் கண்ணுல இருந்து கண்ணீர் வந்தா அதுக்காப்புறம் நான் உயிரோட வாழுறதுல எந்த அர்த்தமும் இல்லை. அதை எப்பவும் உன் நியாபகத்துல வெச்சிக்கோ “ என்று அவன் சற்று அழுத்தத்துடன் கூறியதை கேட்ட அடுத்த நொடி அவள் கண்ணில் வழிந்த கண்ணீர் அப்படியே நின்றது. அதன் பிறகு நடந்த அனைத்து சம்பிரதாயங்களும் அமைதியாகவே நடைபெற்றது. கால் விரலில் மெட்டி இடும் சடங்கின் போது வானதியின் பாதத்தை ஒரு மலரை ஏந்துவதை போல கையில் ஏந்தி ஒரு காலில் மெட்டி இட்ட ஆதி அடுத்து வலது காலை எடுத்து மெட்டி அணிவித்த பிறகும் விடாமல் பிடித்து இருப்பதை கண்ட வானதி அவனிடமிருந்து தன்னுடைய காலை விடுவிக்க முயற்சிசெய்தும் அவளால் முடியவில்லை. காரணம் அவனுடைய பிடி அவ்வளவு அழுத்தமாக இருந்தது.


ஆதியின் நெடு நாள் ஆசை வானதியின் காலில் இருந்த ஆறாவது விரலை ஒரு முறையாவது தொட வேண்டும் என்பது இன்று அந்த வாய்ப்பு அதுவும் உரிமையோடு கிடைத்திருக்கும் போது அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதை தொடுவதற்குள் அவள் காலை பின்னுக்கு இழுப்பதை உணர்ந்த ஆதி அவளின் காலை பிடித்து அந்த ஆறாவது விரலை ஆசையாக வருடினான். அந்த வருடலை ஆதியால் நிறுத்தவே முடியும் என்று தோன்றவில்லை காரணம் அதன் மென்மையில் தன்னையே தொலைத்து இருந்தான். வானதிக்கு அது ஒரு மாதிரியாக இருந்தது. அனைவரும் அங்கு இருந்ததால் அவளால் அவனிடம் கோவமாக எதுவும் கூறவும் முடியவில்லை. அவன் அசந்த நேரம் அவளுடைய காலை இழுத்து கொண்டாள். அதை கண்டவன் சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு எதுவும் கூறாமல் அமைதியாக எழுந்து கொண்டான்.


திருமணம் முடிந்த பிறகு நேராக அனைவரும் ரிஜீஸ்டர் ஆபீஸ் சென்று திருமணத்தை முறையாக பதிவு செய்தனர். அப்போது தான் ஆதிக்கு உண்மையிலேயே மிகவும் நிம்மதியாக இருந்தது. ஷக்தியும் ரிஷியும் ஆதியை அணைத்து தங்களுடைய வாழ்த்தை தெரிவித்தனர். மித்ராவும் வானதிக்கு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்தாள். அங்கு நடந்த எதுக்கும் அவள் எந்த உணர்வையும் காட்டாது அமைதியாகவே நின்று இருந்தாள். அவளுடைய உணர்வுகளை ஆதியும் கவனிக்க தவறவில்லை. அவள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருப்பதை புரிந்து கொண்டவன் அனைவரையும் தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து சென்றான்.


மீனாட்சி அம்மா மற்றும் கதிர், குடும்பத்தினரும் பாதி வழியிலேயே கிளம்பி விட்டனர். மீதி இருந்தவர்களை ஏற்றி கொண்டு அந்த பெரிய கார் பிரம்மாண்டமான வர்மா பேலஸ்க்குள் நுழைந்தது. மாளிகையின் அழகை கண்ட வானதியின் கண்கள் அங்கிருந்த அனைத்தையும் ரசனையுடன் அளவிட்டு கொண்டிருந்தது. முதன்முதலாக இப்படி ஒரு பெரிய அரண்மனை போன்ற வீட்டை பார்த்த மித்ராவும் ஆச்சரியத்துடன் பார்த்தாள். காரில் இருந்து இறங்கிய ஆதி வானதி இறங்குவதற்காக மறுபுறம் வந்து கதவை திறந்து அவளுடைய கையை பிடித்து அழைத்து கொண்டு வாசலில் நின்றான். ஷர்மிளாவும் மித்ராவும் இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர். தன்னுடைய மனங்கவர்ந்தவளை பல தடைகள் தாண்டி கரம் பிடித்து இன்று அவன் வாழும் வீட்டிற்குள் அழைத்து செல்லும் இந்த நொடி அவன் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


ஆதி தன்னுடைய கையை பிடித்ததும் வானதிக்கு அவன் பிடியில் இருந்து விடுவித்து கொள்ள தான் எண்ணினாள் ஆனால் அனைவரின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை கெடுக்க அவளுக்கு விருப்பம் இல்லை என்பதால் தனிமையில் அவனுடன் பேசும் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தாள். தன்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்க்கு சான்றாக ஆதியின் வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள். உள்ளே வந்தவர்களை இருக்கையில் அமர வைத்த ஷர்மிளா வானதியின் அருகில் அமர்ந்து, “ இன்னிக்கு எங்க எல்லார் முகத்திலும் இருக்க சந்தோஷத்துக்கு நீங்க தான் காரணம்..... என் அண்ணனோட வாழ்க்கையில மட்டும் இல்ல இந்த வீட்டுக்கே வெளிச்சமா வந்தவங்க நீங்க தான்.... உங்களுக்கு என் மேல எதாவது கோவமா அண்ணி.... நான் உங்கள அண்ணின்னு கூப்பிடலாமா “ என்று கண்ணில் ஆசையோடு வானதியின் கைகளை பிடித்துக் கொண்டு கேட்டவளின் கன்னத்தில் இன்னொரு கையை வைத்து, “ நீயும் எனக்கு மித்ரா மாதிரி ஒரு சிஸ்டர் தான்.... உனக்கு என்னை எப்படி கூப்பிடனும்ன்னு தோனுதோ அப்படியே கூப்பிடு.... அப்புறம் நான் ஏன் உன் மேல கோவப்படபோறேன் அப்படியெல்லாம் எதுவும் இல்லை “ என்றவளை பார்த்து முகத்தில் புன்னகையுடன் தலையசைத்தாள்.


ஷர்மீ, “ இல்ல நேத்துல இருந்து நீங்க என் கிட்ட பேசலையா அதான் உங்களுக்கு ஏன் மேல எதாவது கோவமோன்னு நினைச்சிட்டேன்....”.


வானதி, “ சாரி ஷர்மீ.... நான் வேற ஏதோ யோசனையில இருந்தேனா அதான்.... இனிமே அப்படி எதுவும் நடக்காது சரியா “.


ஷர்மீ, “ உங்க கிட்ட பேசினதுல நான் மறந்தே போய்ட்டேன்... நீங்க என் கூட வாங்க அண்ணி “ என்று கூறியப்படி அவளின் கையை பிடித்து அழைத்து சென்றாள். அவர்களை பின் தொடர்ந்து மித்ராவும் பின்னாலேயே சென்றாள். இதுவரை நடந்த அவர்களின் உரையாடலை கேட்டு கொண்டிருந்த ஆதி, ‘ கோவம் எல்லாம் நம்ம மேல தான் போலயே.... இவ கிட்ட தனியா சிக்னோம் அவ்வளவு தான்.... ஏற்கனவே கண்ணாலேயே எரிக்கற மாதிரி பாக்குறா ‘ என்று புலம்பி கொண்டிருந்தவன் அருகில் வந்த ஷக்தி, “ நீ எல்லாரையும் மண்டைய பிச்சிக்க வெச்சி தான் பாத்து இருக்கேன்.... இப்போ நீயே தனியா புலம்பறத பாக்கும் போது செம சிரிப்பா வருது ஆதி“ என்று வாயிற்றை பிடித்து சிரித்தவனை முறைத்தான் ஆதி.


ஷக்தி, “ ஜோக்ஸ் அபார்ட்.... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆதி... எங்க இப்படியே இருந்துடுவியோன்னு நான் பயந்துட்டேன்.... கூடிய சீக்கிரம் வானதி உன்னை புரிஞ்சிகிட்டு நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும் “ என்று கூறி ஆதியை அணைத்து கொண்டான் ஷக்தி. ஆதியும் பதிலுக்கு அவனை சிரிப்புடன் அணைத்து கொண்டான்.


வானதியை அழைத்து கொண்டு பூஜை அறைக்கு வந்த ஷர்மீ வானதியை விளக்கு ஏற்ற சொன்னாள். அவள் அன்புடன் கூறியதை தட்ட முடியாமல் வானதியும் விளக்கை ஏற்றி விட்டு நிமிர்ந்தவளிடம் பூஜை அறையின் வலது பக்க சுவற்றில் பெரிதாக மாட்டப்பட்டு இருந்த ஒரு படத்தை சுட்டிக்காட்டி, “ இவங்க தான் எங்களோட அம்மா அப்பா.... அதாவது உங்க மாமனார் மாமியார்.... நான் சின்ன குழந்தையா இருக்கும் போதே அம்மா இறந்துட்டாங்க.... எனக்கு எல்லாமே என் அப்பா தான் அவரும் மூணு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டார்.... இப்போ மட்டும் அவரு இருந்து இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார் “ என்று உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்தவளின் குரல் எதுவும் வானதியின் செவியில் விழவே இல்லை.


அந்த படத்தில் கம்பீரமாக சிரித்து கொண்டிருந்த கருணாகரன் மீதே இருந்தது. அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை தான் காண்பது கனவா இல்லை நனவா என்ற குழப்பத்துடன் பூஜை அறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தவள் காதில், ‘ உன்னை என்னோட மருமகளா ஆக்கிக்கனும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு மா... ஆனா நீயும் பிடிக்கொடுக்கவே மாட்டேங்கற.... உன்னை மாதிரி ஒரு பெண்ண மருமகளா அடைய நான் கொடுத்து வெச்சி இருக்கணும்.... இந்த விஷயத்துல நீயும் என் மகன் மாதிரி தான் ‘ என்று அவர் அவளிடம் ஆசையாக கூறிய வார்த்தைகளே ரீங்காரம் இட்டு கொண்டிருந்தது
வானதி, ‘ அப்படினா நான் யாருன்னு அருள்க்கு தெரியுமா தெரியாத.... எனக்கு ஒரே குழப்பமா இருக்கே. இதை தெளிவுபடுத்தனும்ன்னா அவர் கிட்ட இதை பத்தி கேட்டே ஆகனும் ‘ யோசித்து கொண்டிருந்தவள் அருகில் வந்த மித்ரா, “ ஆரூ... நான் எவ்வளவு நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன் அப்படி என்ன யோசனை... சரி நான் கிளம்புறேன் “ என்று அவள் கூறியதும், “ மித்ரா நீ எங்க கிளம்புற நீ எங்கையும் போக கூடாது.... உன்னை தனியா இருக்க என்னால அனுமதிக்க முடியாது.... நீ என் கூட தான் இருக்கணும் “.


மித்ரா, “ இல்ல வானதி.... அது சரியா வாராது. நான் அங்க நம்ம அபார்ட்மென்ட்ல இருக்கறது தான் நல்லது “ என்று அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தவளின் குரலில் இவர்கள் பக்கம் வந்த ஷக்தி, “ மித்ரா.... சிஸ்டர் சொல்றதும் சரி தானே. நீ அங்க தனியா இருந்து என்ன செய்ய போற “.


மித்ரா, “ இல்ல சார்.... நான் அங்க இருக்கறது தான் சரியா வரும்... “ என்று அவர்களிடம் என்ன சொல்லி சாமாளிப்பது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள். இதை கவனிக்காததை போல் அமர்ந்து இருந்தவனை கண்ட வானதி, ‘ இங்க என்ன நடந்துட்டு இருக்கு.... இவர் எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாதது மாதிரி ப்போனா பார்த்துட்டு இருக்காரு ‘ என்று அவள் மனதிற்குள் திட்டியதை கேட்டதை போல் இருக்கையில் இருந்து எழுந்து அவர்கள் அருகில் வந்தவன், “ மித்ராவுக்கு விருப்பம் இல்லாதத எதுக்கு செய்ய சொல்றீங்க...” என்றவன் மித்ராவிடம், “ மித்ரா இன்னும் ஒரு மாசத்துல உனக்கும் கதிருக்கும் கல்யாணம்... நான் அவங்க வீட்டுல பேசிட்டேன். அப்புறம் சுமதின்னு ஒரு அம்மா இனிமே உனக்கு துணையா இருப்பாங்க.... அவங்க ரொம்ப வருஷமா இங்க வேலை பாக்குறவங்க தான் சரியா இப்போ நீ கிளம்பு “ என்று அவன் அழுத்தமான குரலை கேட்ட மித்ராவிற்கு இதை நீ கேட்டே ஆக வேண்டும் என்ற கட்டளையிடுவதை போல் தோன்றியதால் அவளும் சரியென்று அவனிடம் ஆமொதித்தவள்.


மித்ரா, “ சார்.... அது.... நான் சொல்றேன்ன்னு தப்பா நினைச்சிக்காதீங்க..... எனக்கு எல்லாமே வானதி தான்.... அவளை கொஞ்சம் பத்திரமா பாத்துக்கொங்க “ என்று சற்று தயக்கத்துடன் கூறியவளை பார்த்த ஆதி , “ என்னோட பொண்டாட்டியா பாத்துக்க எனக்கு தெரியும்.... அதுவுமில்லாம அவ என்னோட சாம்ராஜ்யத்தோட மகாராணி “ என்று அவன் கூறியதை கேட்ட மித்ரா மகிழ்ச்சியுடனே அனைவரிடமும் விடைபெற்று கொண்டு வானதியிடம் பிறகு வந்து சந்திப்பதாக கூறி விட்டு சென்று விட்டாள்.


ஷக்தியும் ஷர்மியும் உள்ளே சென்றதும் இன்னும் வாசலையே பார்த்து கொண்டிருந்த வானதியின் அருகில் சென்று அவளின் தோள் மேல் கை வைத்த ஆதியின் கையை தட்டி விட்ட வானதி , “ உங்க மனசுல நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.... எல்லாரோட வாழக்கையையும் நீங்க தான் முடிவு எடுப்பீங்களா.... யார கேட்டு மித்ரா கிட்ட இப்படி பேசி அவள அனுப்பி வெச்சீங்க.... அதையும் ஒர்டெர் பண்ற மாதிரி பேசிறீங்க...... எனக்கு தெரியும் அவ உங்க கிட்ட வேலை பாக்குறவ இந்த வீட்ல இருந்தா உங்களுக்கு கௌவுரவ குறைச்சல் அதான.... “ என்று கோவமாக கத்திக் கொண்டிருந்தவள் அவன் அவளையே இமைக்காமல் பார்த்து சிரிப்பதை கண்டு, “ நான் கோவமா உங்கள திட்டிட்டு இருக்கேன்.... நீங்க சிரிச்சிட்டே இருக்கீங்க “ என்று எரிச்சலாக கேட்டாள்.


ஆதி, “ இப்போ நான் மித்ராக்கு கல்யாணம் ஏற்பாடு பன்னது தப்புன்னு சொல்றியா இல்ல.... உன் கிட்ட கேட்காம முடிவு பன்னது தப்புன்னு சொல்றியா “ என்று கைகளை கட்டிக் கொண்டு அவளிடம் கேட்டான். அதற்கு அவள் என்ன கூறுவது என்று தெரியாமல் அமைதியாக இருப்பதை கண்ட ஆதி ஒரு பெருமூச்சுடன், “ ஆருந்யா... இங்க என்ன பாரு “ என்று அவளின் முகத்தை தன்னுடைய முகத்தை நோக்கி நிமிர்த்தியவன், “ மித்ராக்கு இங்க இருக்கறதுக்கு அன்கம்போர்டபிள்ல இருக்கும்ன்னு எனக்கு முன்னாடியே தெரியும் அதை உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம தான் அவ யோசிச்சிட்டு இருந்தா.... அதுவும் இல்லாமா மித்ராவும் கதிரும் ரொம்ப நாளா லவ் பன்றாங்க.... நம்ம கல்யாணத்துக்காக தான் அவங்க காத்துட்டு இருந்தாங்க.... அதான் அதை தள்ளி போட வேண்டாம்ன்னு பேசி முடிச்சிட்டேன்.... இது உனக்கே புரியும் ஆனா என் மேல உனக்கு இருக்க கோவம் வேற எதையும் யோசிக்க விடாமா பன்னுது... இப்போ போய் நீ ரெஸ்ட் எடு. இது உன்னோட வீடு நீ உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கலாம் சரியா..... அப்புறம் இன்னொரு விஷயம் நான் யாருகிட்டயும் இதுவரைக்கும் இவ்வளவு பொறுமையா பேசினது இல்ல அதுக்கான அவசியமும் வந்தது இல்ல இதுல நீ மட்டும் தான் விதி விலக்கு “ என்றவன் அவளிடம் மென்மையாக கூறியவன் வேகமாக படியேறி சென்று விட்டான். அவன் பேசியதை பற்றி யோசித்து கொண்டிருந்தவள் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.


விஸ்வநாதன் இல்லம்


சாரா அவளின் அறையில் வலது கையில் கூர்மையான கத்தியை கொண்டு தன்னுடைய இடது கையை அழுதுகொண்டே வெட்டி கொள்ள கிட்டே எடுத்து செல்லும் போது எதர்ச்சையாக அந்த பக்கம் வந்த சந்திரிகா அவள் செய்ய போகும் காரியத்தை கண்டு பதட்டத்துடன் வந்து அவள் கையில் இருக்கும் கத்தியை தட்டி விட்டார். அந்த கத்தியும் பளிங்கு தரையில் நங்கென்ற சத்தத்துடன் கீழே விழுந்தது. வெளியே சென்று இருந்த சந்திரன் சாராவின் அறையில் கேட்ட சத்தத்தில் உள்ளே வந்தார். சாரா செய்ய இருந்த செயலில் கோவம் கொண்டு அவளை அரைய போகும் போது சந்திரன் வந்து பிடித்து என்ன நடந்தது என்று கேட்டார்.


சந்திரிகா, “ என்னை எதுக்கு ணா தடுத்தீங்க.... அவ என்ன காரியம் செய்ய இருந்தா தெரியுமா.... இவ இப்படி ஒரு முடிவு எடுக்கவா நான் இவ்வளவு பாசம் கொட்டி வளர்த்தேன்.... இதுவரைக்கும் இவ கேக்கரத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் கொண்டு வந்து குடுத்தேன் “ என்று அவர் சாராவை பார்த்து கோவமாக பேசினார்.


சாரா, “ நான் கேட்கரதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் குடுத்த நீங்க.... நான் ஆதி வேணும்ன்னு ஆசைப்பட்டேன் ஆனா அது நடக்காமா போய்டுச்சே அந்த வானதிகிட்ட நான் தோத்து போயிட்டேன்.... அவ யாரு ஒரு சாதாரண ஸ்கூல் டீச்சர்.... என்கிட்ட இல்லாதது எது அவகிட்ட இருக்கு... என்கிட்ட அழகு, பணம், படிப்பு, அந்தஸ்து இப்படியெல்லாத்துலையும் நான் ஒரு படி மேல தான் இருக்கேன்.... அப்படி இருந்தும் ஆதிக்கு ஏன் என்னை பிடிக்கல.... நான் ஆரம்பத்துல அவரோட ஸ்டேட்டஸ் பாத்து தான் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு விரும்பனேன். இப்போ உண்மையிலே அவர லவ் பன்றேன்... அவர் எனக்கு இல்லையென்றதே என்னால தாங்கிக்க முடியல “ என்று ஆவேசமாக கத்தியவளை பார்த்த மத்த இருவருக்கும் வேதனையாகவும் அதே சமயம் கோவமாகவும் இருந்தது.


சந்திரிகா, “ அப்படி அவன் மேல உனக்கு என்ன காதல்... அவன் நம்மள ஒரு பொருட்டா கூட மதிக்கறது இல்ல “.


சாரா, “ அவரோட அந்த திமிரும் கர்வமும் தான் அவர்கிட்ட எனக்கு பிடிச்சி இருக்கு “ என்று அழுதபடியே கூறினாள்.


சாராவை அங்கிருந்த கட்டிலில் அமர வைத்து பக்கத்தில் அமர்ந்த சந்திரன், “ நான் வாழுறதே உங்க சந்தோஷத்துக்காக தான் அப்படி இருக்கும் போது நீ இப்படி ஒரு முடிவு எடுக்கலாம.... நீ என்னைக்கும் சிரிச்சிட்டே இருக்கணும் அதுக்கு யாராவது தடையா வந்தா அவங்கள நான் அழிக்காமா விட மாட்டேன்.... இப்ப என்ன அந்த ஆதிய நீ கல்யாணம் பன்னிக்கனும் அவ்வளவு தான.... இனி நீ கவலப்படாத என்ன செஞ்சாவது நான் நீ ஆசைப்பட்டத நிறைவேத்துறேன் “ என்று அவர் கூறியதும் சற்று ஆசுவாசம் அடைந்தவளை சமாதானம் செய்து தூங்க வைத்து விட்டு வெளியே வந்த இருவருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.


சந்திரிகா, “ பாத்தியா அண்ணா.... அப்ப எனக்கு வந்த நிலைமை இப்ப என்னோட பெண்ணுக்கு வந்து இருக்கு... எல்லாத்துக்கும் அந்த வான்மதியோட பொண்ணு தான் காரணம்.... அவள கொல்ற எல்லா முயற்சியும் தோல்வியிலேயே முடிது “.


சந்திரன், “ அந்த ஆதி தான் அவகிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு பக்கவா எல்லா ப்ளானும் பண்ணி வெச்சி இருக்கான். அதுக்கு முன்னாடி நீ என்கிட்ட எதாவது ஒரு விஷயத்தை மறைக்கீறியா.... அப்படி எதாவது இருந்தா சொல்லு. சாராவோட விஷயம் நடக்கறதுக்கு முன்னாடியே வானதியா கொல்ல முடிவு எடுக்க காரணம் என்ன “ என்று அவர் கேட்டதும் இதற்கு மேல் உண்மையை மறைத்து பயன் இல்லை என்பதை புரிந்து கொண்ட சந்திரிகா, “ அது வந்து....என் மாமனார் இருக்கார்ல அவர் இந்த சொத்தை எல்லாத்தையும் அவரோட முதல் வாரிசான அந்த வானதி பெயர்ல தான் எழுதி வெச்சி இருக்காரு..... அதை அனுபவிக்கற உரிமை மட்டும் தான் எங்களுக்கு இருக்கு அதுவும் இல்லாமா அந்த உயிலொட ஒரிஜினல் பத்திரம் எங்க இருக்குன்னே தெரியல. எனக்கு என்ன பன்றதுனே தெரியலை.... அதனால தான் அவளை கொன்னுட்டா பிரச்சனை தீர்ந்திடும்ன்னு நினைச்சேன்.... இதை உங்ககிட்ட அப்பவே சொல்லனும்ன்னு தான் நினைச்சேன் ஆனா உங்களுக்கு திரும்பவும் தொந்தரவு குடுக்க மனசு வரல அதனால தான் சொல்லல அண்ணா “.


சந்திரன், “ என்னமா நீ இதை என்கிட்ட சொல்லி இருந்தா அப்பவே இந்த பிரச்சனைய முடிச்சிருக்கலாம்.... இப்ப பாத்தியா. நான் தான் தப்பு பன்னிட்டேன் அவங்கள தடையமே இல்லாம அழிச்சிட்டு இங்க இருந்து போய் இருக்கணும்.... இப்ப நாம கொஞ்சம் பொறுமையா தான் இருக்கணும்.... அந்த ஆதி ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது. அவன் அசந்த நேரமா பாத்து தான் நாம காரியத்த முடிக்கனும்..... சரி விடு பாத்துக்கலாம். நீ போய் சாராவோட இரு “ என்று அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தவர் முகம் பெரும் யோசனையில் மூழ்கியது.


வர்மா பேலஸ்


இரவு உணவை சாப்பிட்டு கொண்டிருந்த அனைவரின் மனதிலும் என்றும் இல்லாத நிம்மதியோடு என்றும் இல்லாத அளவுக்கு சற்று அதிகமாகவே உண்டனர் வானதியை தவிர. புது இடம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவள் மனதில் காலை பூஜை அறையில் கண்ட படத்திலேயே எண்ணம் இருந்தது. ஆதி அவளின் முகம் ஏதோ ஒரு யோசனையில் இருப்பதை கவனித்து கொண்டு தான் இருந்தான். ஆனால் எதுவும் கூறாமல் எழுந்து அறைக்கு சென்று விட்டான். அனைவரும் உண்டு முடித்தவுடன் ஷர்மீ வானதிக்கு அலங்காரம் செய்து ஆதியின் அறை முன்னால் அழைத்து சென்றவள், “ அண்ணி.... இது தான் அண்ணணோட ரூம் போங்க... உங்க திங்ஸ் எல்லாத்தையும் ஏற்கனவே ஷிப்ட் பன்னிட்டோம் “ என்றவள் அவளிடம் விடைபெற்று கொண்டு கீழே சென்று விட்டாள்.


காலையில் இருந்தே ஆதியின் அறைக்குள் செல்ல தயங்கி கொண்டே கீழே இருந்த அறையிலேயே தாங்கி கொண்டாள். அவனை அந்த அறையில் தனியாக சந்திக்க சிறிது தயக்கமாகவே இருந்தது. அந்த வீட்டை முழுதாக சுற்றி பார்க்கவே அவளுக்கு அந்த நாள் முழுவதும் சரியாக இருந்தது. உண்மையில் அந்த வீடு முழுவதும் அவ்வளவு அழகாக எல்லா ரசனைகளையும் கொட்டி கட்டியதை போல் இருந்தது. இப்படி ஒரு வீட்டை உருவாக்கியதற்காக அவள் மனதார ஆதியை பாராட்ட தான் செய்தாள். அந்த வீட்டில் அவள் பார்க்காத ஒரே இடம் ஆதியின் அறை மட்டும் தான். இதுவரை அவன் அறைக்குள் முழுதாக யாரையும் அவன் நுழைய விட்டதில்லை என்று ஷர்மிளா சொல்லியதை கேட்டவள் உள்ளே எவ்வாறு செல்வது என்று தெரியாமல் அங்கேயே நின்றவள். சிறிது நேரம் கழித்து ஒரு ஆழ்ந்த மூச்சை வெளிப்படுத்தி விட்டு ஆதியின் அறைக்குள் முதன்முதலாக நுழைந்தாள்.


சாப்பிட்டு விட்டு வேகமாக அறைக்குள் வந்த ஆதி வானதியின் வருகைக்காக ஆவலாக காத்திருந்தான். நேரம் செல்ல அவள் ஏன் இன்னும் வரவில்லை என்று டென்ஷனோடு இருந்தவன் அங்கிருந்த இருக்கையில் அமரும் போது கதவை திறந்து கொண்டு காலில் மெட்டியோடு சேர்ந்த கொலுசு சத்தத்துடன் ஒரு தேவதையாக உள்ளே நுழைந்தவளின் மீது இருந்து அவனால் பார்வையை எடுக்கவே முடியவில்லை. இதுவரை அவள் மீது கண்ணியமாக மட்டுமே பார்த்து கொண்டிருந்தவனின் பார்வை இன்று முதன்முறையாக ஆசையுடன் அவளை தழுவியது. அந்த அறைக்குள் நுழைந்ததில் இருந்து அவனிடம் என்ன கேட்க வேண்டும் என்பதை மனதில் எண்ணியபடியே உள்ளே வந்தவள் அப்போது தான் அங்கு ஆதி நின்று கொண்டு தன்னையே பார்ப்பதை கண்டாள். அவன் அருகில் சென்று நின்றும் கூட அவனிடம் எந்த அசைவும் இல்லை. கண்களை கூட இமைக்காமல் வானதியை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


வானதி, “ நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் “ என்றவளின் குரலில் தன்னுனர்வு அடைந்தவன் அவளிடம், “ எனக்கு ஒரு மெயில் செக் பண்ண வேண்டிய வேலை இருக்கு.... நீ ரூம்குள்ள போய் ரெஸ்ட் எடு நான் வந்துடுறேன் “ என்றவன் இடது புறம் இருந்த அலுவலக அறைக்குள் சென்று விட்டான். அவன் அந்த அறைக்குள் சென்ற பிறகு தான் அவள் அந்த முழு இடத்தையும் சுற்றி பார்த்தாள். அந்த வரவேற்பு அறையின் இடப்பக்கம் ஒரு அறை வலப்பக்கம் ஒரு அறை இருந்தது ஆனால் அது பூட்டப்பட்டு இருந்தது. அங்கிருந்த சுவற்றில் ஆதியின் ஆளுயர புகைபடம் பெரிதாக மாட்டப்பட்டு இருந்தது. அதில் இருந்த அவனுடைய கம்பீரம் மற்றவர்களை அவனிடம் மறுப்பேச்சு பேச முடியாத அளவுக்கு இருந்தது. பிறகு அவளுக்கு நேராக ஒரு அறை இருந்தது அது தான் படுக்கையறை ஆக இருக்கும் என்று எண்ணியப்படி அதை திறந்து உள்ளே சென்றாள். அந்த அறையில் இருந்து அனைத்தும் அவ்வளவு அழகாக இருந்தது. தன்னுடைய கண்களால் அனைத்தையும் சுற்றி பார்த்து கொண்டிருந்தவள் இடது புற சுவற்றில் இருந்ததை கண்டு ஆச்சர்யத்தில் அவள் கண்கள் பெரிதாக விரிந்தது. மூன்று ஆண்டுகள் முன்பு நீலகிரி காட்டில் ஒரு பெரிய நீர் ஓடையில் ஒரமாக இருந்த பாறையில் வானதி முகம் முழுவதும் புன்னகையுடன் அமர்ந்து இருக்க அவள் பின்னால் அருவி ஆர்ப்பரித்து கொட்டுவதை போல் மிகவும் அழகாக அந்த சுவர் முழுவதும் ஆக்கிரமித்து பெரிதாக மாட்டப்பட்டு இருந்தது அந்த ஓவியம்.


அவள் கண்களை அவளாலே நம்ப முடியவில்லை ஏன்னெனில் அதில் அவள் அவ்வளவு அழகாக இருந்தாள். அதன் அருகில் சென்று அவள் வருடி கொண்டிருந்த போது தன்னுடைய வேலையை முடித்து கொண்டு ஆதி அந்த அறைக்குள் வந்தான். வந்தவனின் கால்கள் அவனை அறியாமலே வானதியின் முன்னால் நின்றது. தனக்கு அருகில் தோன்றிய காலடி சத்தத்தில் திரும்பி பார்த்தவளின் முன்னால் ஆதி நிற்ப்பதை கண்டாள் ஆனால் அவன் பார்வை முழுவதும் அந்த ஓவியத்தின் மீது தான் இருந்தது.


வானதி, “ இந்த படத்தை வரைஞ்சது யாரு “ என்று கேட்டவளின் குரலில் அவளை பார்த்து, “ உன்னோட நிழல யாராவது தொட்டக்கூட என்னால பொறுத்துக்க முடியாது அப்படி இருக்கும் போது உன்னோட ஓவியத்தை வேற யாரையாவது வரைய விட்டுடுவேனா.... உண்மைய சொல்லனும்ன்னா இந்த படத்தை முடிக்கும் போது தான் நீ என் மனசுல எந்த அளவுக்கு நிறைஞ்சி இருக்கே அப்படின்றது எனக்கு தெறிஞ்சிது.... இப்படி நான் ரசிச்சி வரைஞ்ச நிழலுக்கு முன்னாடி நிஜமா நீ நிக்கற இந்த நொடிக்காக எத்தனை நாள் காத்திட்டு இருந்தேன் தெரியுமா.... இன்னிக்கு அது நடந்தும் கூட அந்த சந்தோஷத்தை முழுமையா அனுபவிக்க முடியலை “.


ஆரம்பத்தில் அவன் கூறுவதை அமைதியாக கேட்டு கொண்டிருந்தவள் கடைசியாக அவன் சொல்லியதை கேட்டவுடன், “ அதுக்கு காராணம் யாரு.... நீங்க தான. எல்லா தப்பையும் பண்ணிட்டு இப்போ அப்பாவியா ஏன் கிட்ட நடிக்கிறீங்களா “ என்று அவள் கேட்டவுடன் இதுவரை இருந்த அமைதியான நிலை மாறி அவனுக்குள் கோவம் ஏற ஆரம்பித்தது.


ஆதி, “ உனக்கு எவ்வளவு தைரியம் இருந்த நான் நடிக்கறேன்ன்னு சொல்லுவ.... என்னை பார்த்த நடிக்கறவன் மாதிரியா இருக்கு... உன்ன தவிர வேற யாராவது இதை சொல்லி இருந்தா அவன் உயிரோட இங்கயிருந்து போய் இருக்க மாட்டான். நீயா இருக்கறதுனால தான் “ என்றவன் முன்னால் வந்து நின்றவள் , “ நானா இருக்கறதுனால நீங்க ஒன்னும் பொறுமையா இருக்க தேவையில்லை.... இப்போ உங்களுக்கு என்னை அடிக்கனும்ன்னு தோணுச்சுன்னா அடிங்க “ என்றவளை உண்மையிலேயே அடிக்க கையை ஒங்கினான். அவன் கையை ஓங்கியதில் கண்ணை மூடிக் கொண்டவள் இன்னும் தன் மீது அவனுடைய கைப்படாததை உணர்ந்து கண்ணை திறந்தவள் முன்னால் கைகளை கட்டிக் கொண்டு அவளையே ஆழுந்து பார்த்து கொண்டிருந்தான் ஆதி.


ஆதி, “ பயந்துட்டியா.... உன் மேல சின்ன துரும்பு பட்டக்கூட என்னால தாங்கிக்க முடியாது அப்படி இருக்கும் போது நானே உன்னை அடிப்பேனா. உன்னை கஷ்டப்படுத்தினா அது உன்னவிட எனக்கு தான் அதிகமா வலிக்கும் “.


வானதி, “ இப்படி சொல்ற நீங்க தான் என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி இருக்கீங்க.... அது எனக்கு எவ்வளவு வலிய குடுக்கும்ன்னு உங்களுக்கு ஏன் புரியல.... அந்த இடத்துல தான் நீங்க உண்மையிலேயே என்னை காதலிக்கறீங்களான்னு எனக்கு சந்தேகம் வந்துச்சு... “.


ஆதி, “ நான் உன்னை எந்த அளவுக்கு காதலிக்கறேன் இப்போ சொன்னா புரிஞ்சிக்க கூடிய நிலமையில நீ இல்லை.... நான் உன் மேல எந்த அளவுக்கு ஆசை வெச்சி இருக்கேன்ன்னு காமிக்க எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது.... என்னோட ஆருந்யாவால இப்படி என்னோட மனசு நோகுற அளவுக்கு பேச முடியுமா.....சரி என்னை நீ கேள்வி கேக்குறியே.... நீ என்னை காதலிச்ச தான” என்று அவன் கேட்டதும் வானதியால் அதற்கு பதில் கூற முடியாமல் வேறுபுறம் திரும்பி கொண்டாள்.


அவள் முகத்தை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன் பிடிவாதமாக , “ எனக்கு இப்ப பதில் வேனும் சொல்லு... “ என்றவனின் கையை தட்டி விட்டவள், “ ஆமா நான் காதலிக்கறேன் ஆனா உங்கள இல்லை நான் காதலிச்ச அருள் நீங்க இல்ல.... அவருக்கு என்னை கஷ்டப்படுத்த தெரியாது “


அவள் தன்னை காதலிப்பதை கூறியதும் அவனுக்கு அப்படியே வானத்தில் மிதப்பதை போல் இருந்தது. நெருப்பாய் சுட்டவளே நீராய் குளிர வைத்தாள்.... இந்த விந்தை காதலில் மட்டுமே சாத்தியம். இதற்கு மேல் இவளை பேச விட்டால் இப்போது இருக்கும் சந்தோஷமான மனநிலையை அனுபவிக்க முடியாது என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது.


ஆதி, “ எப்படியோ நீ என்னை காதலிக்கறேன் சொன்னது அதுவும் முதலிரவு அன்னைக்கு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தெரியுமா செல்லம்... “ என்று கண்சிமிட்டி கூறியவனை பார்த்தவளின் மனதில், ‘ நான் என்ன சொன்னாலும் அவனுக்கு சாதகமா எடுத்துக்கறானே..... சும்மா இருந்தவன் கிட்ட நானே வாய குடுத்து மாட்டிக்கிட்டேனே.... இன்னைக்கு என்ன நாளுன்றதையே மறந்துட்டியே வானதி... எப்படியாவது தப்பிச்சிடு ‘ என நினைத்து கொண்டு நிமிர்ந்த போது அவளுக்கு மிக நெருக்கமாக அவன் நிர்ப்பதை கண்டு அதிர்ந்து பின்னாடி நகரும் போது புடவை தடுக்கி கீழே விழ இருந்தவளை இடுப்பில் கையை குடுத்து தூக்கி நிறுத்தினான் ஆதி.


அவள் மனதில் ஓடுவதை அவள் முகத்தில் வந்து போகும் பாவனைகளை வைத்தே கண்டு கொண்டவன் அவளிடம், “ எதுக்கு இவ்வளவு பதட்டம்... கல்யாணம் தான் உன் விருப்பம் இல்லாம நடந்துடுச்சு மத்தது எல்லாம் உன் விருப்பத்தோடு தான் நடக்கும்.... கவலப்படாத அதுக்காக என்னால உன்னை தொடாமா எல்லாம் இருக்க முடியாது சரியா.... இப்போ போய் தூங்கு மீதிய நாளைக்கு பேசலாம் “ என்று அவளின் உச்சந்தலையொடு முட்டி கூறியவனிடம் விட்டால் போதும் என்று ஓடியவள் கட்டிலின் ஒரு பக்கத்தில் சென்று படுத்து கொண்டாள்.
தன்னுடைய கை அவள் மீது பட்டதும் அவள் முகம் சிவப்பதை மறைப்பதற்க்கு அவனிடமிருந்து விட்டால் போதும் என்று ஓடியவளை நினைக்கும் போது அவனுக்கு சிரிப்பாக வந்தது. கட்டிலின் இன்னொரு பக்கம் சென்று படுத்தவனின் மனது பல நாட்கள் கழித்து நிம்மதியாக இருந்தது. பல பேர் தன்னை சுற்றி இருந்தும் தனிமையில் வாழ்ந்தவனின் வாழ்க்கை முழுவதும் துணையாக ஒருத்தி வந்து விட்டதால் ஏற்பட்ட நிம்மதி அது. அவள் தன்னருகில் இருக்கிறாள் என்ற மகிழ்ச்சியே அவனுடைய கண்களை உறக்கம் சீக்கிரமாக தழுவியது.


அவன் படுத்ததும் உறங்கியதை கண்டவளுக்கு எரிச்சலாக வந்தது. அவள் மனதில், ‘ என்னென்னமோ கேக்கனும்ன்னு வந்தேன் ஆனா எதையும் கேக்க முடியாம போயிடுச்சு.... நாளைக்கு காலையில இதை பத்தி கேட்டே ஆகனும்.... ஆமா அவ்வளவு கோவம் மனசுகுள்ள இருந்தும் அவர் தொட்டதும் ஏன் என்னால எதுவும் பேச முடியல ‘ என்ற யோசனையிலேயே இருந்தவளுக்கு புது இடம் என்பதாலும் தாமதமாகவே உறக்கம் வந்தது.


இருவருக்குள்ளும் இருக்கும் மெல்லிய திரை விலகி காதல் இவர்கள் வாழ்வில் மீண்டும் மலருமா.... என்பதை நாமும் பொறுத்திருந்து காண்போம்....


கோபம் கொள்ளும் நேரம் வானம்

எல்லாம் மேகம் காணாமலே

போகும் ஒரே நிலா

கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா

வானம் பௌர்ணமியாய் தோன்றும்

அதே நிலா இனி எதிரிகள்

என்றே எவருமில்லை பூக்களை

விரும்பா வேர்களில்லை நதியை

வீழ்த்தும் நாணல் இல்லையே இது

நீரின் தோளில் கைபோடும் ஒரு

சின்ன தீயின் கதையாகும்

திரைகள் இனிமேல்

தேவையில்லையே.....


நிஜத்தை தேடும்....


உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்
....
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 26


அடுத்த நாள் காலை பல வித எதிர்ப்பார்ப்புகளோடு ஆதித்யாவிற்கு விடிந்தது. தினமும் காலை விடியல் விடியும் போது வானதியின் முகத்தை பார்த்த பிறகுதான் அன்றைய தினம் தொடங்க வேண்டும் என்பது ஆதியின் ஆசைகளில் ஒன்று. அந்த ஆசை நிறைவேற போகும் எண்ணத்தோடு கண்களை திறந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் வானதி படுத்து இருந்த இடம் காலியாக இருந்தது அதை பார்த்தவன், “ இவ்வளவு சீக்கிரம் எழுந்து எங்க போனா.... இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா தான் என்ன... அதுக்குள்ள எங்க போனா “ என்று எண்ணியப்படி எழுந்து பாத்ரூம்க்குள் சென்று காலை கடன்களை முடித்து விட்டு வெளியே வந்தவன் பால்கனி கதவை திறந்து பார்த்தால் அவள் கீழே இருந்த தோட்டத்தில் ஷர்மீயுடன் நின்று கொண்டு இருப்பதை கண்டவன் வேகமாக இறங்கி சென்றான்.


காலை ஐந்து மணிக்கே எழும் பழக்கம் கொண்ட வானதி நேற்று தாமதமாக உறங்கியும் கூட எப்பொழுதும் போல அதே நேரத்திற்கு விழிப்பு வர கண்களை விழித்தவளுக்கு தான் எங்கு இருக்கிறோம் என்று புரிந்து கொள்ளவே சிறிது நேரம் எடுத்தது. இந்த மாற்றத்திற்கு காரணம் ஆனவனோ நிர்மலமான முகத்தோடு உறங்கி கொண்டிருந்தான். உறக்கத்தில் தான் ஒருவரின் உண்மையான முகம் வெளிப்படும் என்று சொல்வார்கள் அப்படி பார்த்தால் இவனின் முகத்தில் தெரிந்த அமைதியை பார்க்கும் போது ஒரு வேலை இவன் நல்லவனாக இருப்பானோ என்று சிந்தித்தவள். எழுந்த குளியலறைக்கு சென்று குளித்து முடித்து வந்தாள். பால்கனி சென்றவள் கீழே தெரிந்த தோட்டம் அவளை இரு கரம் நீட்டி அழைப்பதை போன்று தோன்ற கீழே சென்றவள் அப்படியே காலை பூஜைக்கு தேவையான பூக்களை பறிக்க ஆரம்பித்தாள்.


அங்கிருந்த பல வகையான பூக்களை அந்த காலை நேரத்தில் பார்க்கும் போது வானதியின் முகத்தில் தன்னையும் அறியாமல் ஒரு அழகான புன்முறுவல் தோன்றியது. அங்கிருந்த பூக்களை பறித்து கொண்டிருந்த போது , “ காலையிலேயே சீக்கிரம் எழுந்துடீங்களா அண்ணி “ என்ற ஷர்மிளாவின் குரலில் திரும்பிய வானதி, “ நான் எப்பவும் ஐந்து மணிக்கே எழுந்துடுவேன் ஷர்மீ.... எனக்கு காலைல பூஜை பண்ணி பழகிடுச்சு அதான் பூ பறிக்கலாம்ன்னு வந்தேன் “ என்றவள் திரும்பவும் பூக்களை பறிக்க தொடங்கினாள்.


ஷர்மீயும் அவளுக்கு உதவும் பொருட்டு பூக்களை இருவரும் பறித்து முடித்தவுடன் , “ அண்ணி உங்களுக்கு இந்த தோட்டம் பிடிச்சிருக்கா “ என ஷர்மீ கேட்கும் போது அங்கு வந்த ஆதி அதற்கு அவள் சொல்ல போகும் பதிலுக்காக அங்கேயே ஒரமாக நின்றான்.


வானதி, “ இப்படி ஒரு அழகான தோட்டத்தை யாருக்காவது பிடிக்காம போகுமா.... ஆனா இதுல இன்னும் ஒரு சில விஷயங்கள் இருந்தா எனக்கு இன்னும் சந்தோஷமா இருக்கும் “ என்றவளை புரியாமல் பார்த்த ஷர்மீ, “ என்ன அண்ணி சொல்லுங்க.... என்ன வேணும்ன்னு சொல்லுங்க உடனே மாத்திடலாம்....இது உங்க வீடு.... இங்க நீங்க என்னவும் செய்ய உரிமை இருக்கு “.

வானதி , “ எதுவும் மாத்த வேண்டாம்.... இங்க எல்லா பூவும் இருக்கு ஆனா ஜாதி மல்லி பூ மட்டும் இல்லை.... எனக்கு அந்த பூ ரொம்ப பிடிக்கும் அது மட்டுமில்லாம இங்க ஒரு ஊஞ்சல் இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்.... எனக்கு சின்ன வயசுல இருந்து இஷ்டம் “ என்று கண்ணில் ஆசையோடு கூறுவதை கண்ட ஆதி அமைதியாக அங்கிருந்து சென்று விட்டான்.


ஷர்மீ, “ நீங்க சொன்ன ரெண்டுமே இங்க இருந்துச்சு அண்ணி ஆனா “ என்று நிறுத்தியவளை புரியாமல் பார்த்தாள் வானதி. ஷர்மீ, “ அம்மாவுக்கும் நீங்க சொன்ன ரெண்டுமே ரொம்ப பிடிக்கும்... அம்மா நியாபகமா அப்பா இங்க செடியும் ஊஞ்சலையும் வெச்சார் அப்போ வெளியூர் போய்ட்டு வீட்டுக்கு வந்த அண்ணன் பாத்துட்டு கோவம் வந்து ரெண்டையும் அங்கயிருந்து எடுக்க சொல்லிட்டார் வேற வழியில்லாம அப்பாவும் எடுத்துட்டார் “ என்று சோகமாக சொன்னவளின் அருகில் சென்ற வானதி , “ ஏன் உன் அண்ணன் அப்படியெல்லாம் பண்ணாரு.... அவரு எப்பவும் இப்படி தான எல்லார்கிட்டயும் கோவப்பட்டுக்கிட்டே இருப்பார “.


ஷர்மீ, “ ஐயோ அண்ணி... அப்படியெல்லாம் இல்லை.... அண்ணா ரொம்ப நல்லவங்க காரணம் இல்லாம அவர் யார் மேலையும் கோவப்படமாட்டாரு... மனசுகுள்ள இருக்க உணர்வுகள அவ்வளவு சீக்கிரம் வெளிய காட்டவும் மாட்டார். அவர் இப்படி மாறுனத்துக்கு காரணம் எங்க அம்மவோட இறப்பு தான்... அம்மா மேல அண்ணனுக்கு ரொம்ப பாசம் அவங்க போனதுக்கு அப்புறம் தன்னை சுத்தி ஒரு வட்டத்தை போட்டுக்கிட்டு அதுக்குள்ள யாரையும் விடாம இருந்தார். அதனால அம்மாவ நியாபகப்படுத்துற எதையும் பாக்க முடியாம எல்லாத்தையும் எடுக்க சொல்லிட்டார்.... நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் அவர் பழைய மாதிரி மாற ஆரம்பிச்சிருக்கார்.... உங்களுக்கு அவர் மேல கோவம் இருந்தா என்ன தண்டனை வேணாலும் குடுங்க ஆனா அவர விட்டுட்டு மட்டும் போய்டாதீங்க.... இன்னொரு இழப்ப கண்டிப்பா அவரால தாங்கிக்க முடியாது “ என்று கண்கள் ரெண்டும் கலங்க வானதியின் கையை பிடித்து கொண்டு சொன்னவள் வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள். அவள் சென்ற பின்னும் அவள் கூறிய செய்தியின் தாக்கத்தில் சிறிது நேரம் அங்கேயே நின்றவள் பிறகு பூஜை செய்ய உள்ளே சென்றாள்.


பூஜை அறைக்குள் சென்று சாமி கும்மிட்டு விட்டு வெளியே வந்தவள் நேராக சமையலறைக்கு சென்று அனைவருக்கும் காபி தயாரித்து கொண்டு ஹாலில் அமர்ந்து இருந்த ஷக்திக்கும் ஷர்மீக்கும் குடுத்தாள். ஷர்மீ, “ எதுக்கு அண்ணி நீங்க இந்த வேலையெல்லாம் செய்றீங்க.... கொஞ்ச நேரத்துல வேலை செய்றவங்க வந்துடுவாங்க “ என்றவளை பார்த்து புன்னகை செய்து கொண்டே, “ நீ தானே சொன்ன உங்க விருப்பப்படி என்னவேணாலும் செய்யலாம்ன்னு எனக்கு பிடிச்சத நான் செய்றேன்.... அதுவுமில்லாம இன்னொரு விஷயம் வீட்ல எந்த வேலைக்கு வேணா நம்ம ஆள் வைக்கலாம் ஆனா சமைக்கறது மட்டும் நாம தான் சமைச்சு பரிமாறனும் அப்பதான் செய்றவங்களுக்கும் சரி சாப்பிடறவங்களுக்கும் சரி திருப்த்தியா இருக்கும் சரியா “ என்று கூறியவளை பார்த்த ஷக்திக்கு ஷர்மீக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஷக்தியின் மனதில் இருந்தது எல்லாம் ஒன்று தான் , ‘ தன்னுடைய நண்பனின் தேர்வு என்றும் தவறாகாது என்பது மீண்டும் நிரூபணம் ஆனது ‘ போல் தோன்றியது அந்த மகிழ்ச்சியுடன் அவள் கொடுத்த காபியை பருகிய இருவரும் அதன் சுவையில் தன்னை மறந்து இருந்தனர்.


வானதி, “ ஷர்மீ.... இந்த காபியை உன் அண்ணன் கிட்ட குடுத்துடு “.


ஷர்மீ, “ அண்ணி.... அண்ணன் காபி சாப்பிட மாட்டார்.... அவர் எப்போ வீட்டுக்கு வருவார் சாப்பிடுவார்ன்னு யாருக்கும் தெரியாது “ என்று அவள் கூறியதும், ‘ ஓ... சார்க்கு காபி பிடிக்காத அப்போ நாம இதை குடுத்தே ஆகனும்.... அப்படியே நேத்து கேக்க நினைச்சத இப்போவே கேட்க வேண்டியது தான் ‘ என்று நினைத்தவள் ஷர்மீ வேண்டாம் என்று தடுத்தும் கூட காபியை எடுத்து கொண்டு மேலே படியெறி சென்றாள்.


ஷர்மீ, “ இப்போ என்ன பன்றதுங்க.... அண்ணி வேற சொல்றத கேக்காம போய்ட்டாங்க அண்ணன் எதாவது கோவமா திட்ட போறார் “ என்றவளிடம், “ யாரு அவனா... அட நீ வேற அவன் மொத்தமா கவுந்துட்டான் உன் அண்ணிகிட்ட நீ அதலாம் கவலப்படாத.... வா நாம போலாம் “ என்று அவளை அழைத்து கொண்டு தங்கள் அறைக்குள் சென்று விட்டான்.


கீழே அவர்கள் பேசுவதை கேட்டு விட்டு யோசனையுடன் அறைக்கு வந்தவன் ஒரு முடிவுடன் குளிக்க சென்றான். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து சட்டையை மாட்டி கொண்டு தலையை வாரிக் கொண்டு இருக்கும் போது சரியாக வானதி கையில் காபியுடன் வந்து பின்னால் நிற்ப்பதை கண்ணாடியில் கண்ட ஆதி சீப்பை டேபிளில் வைத்து விட்டு வேகமாக திரும்பியவன் அவளையும் அவள் கையில் இருப்பதையும் கண்டவன் சிரிப்புடன் , “ பார்டா.... என்னோட பொண்டாட்டி எனக்காக முதன் முதலாக காபி போட்டு எடுத்துட்டு வந்து இருக்கா போல ... வாசம் இங்க வரைக்கும் வருது... முதல்ல அதை. குடு “ என்றவன் அவள் கையில் இருப்பதை வாங்கி அவளை பார்த்து கொண்டே ரசித்து குடிப்பதை கண்டு வானதிக்கு மிகவும் குழப்பமாக இருந்தது, ‘ என்ன இது பிடிக்காதத கொண்டு வந்தேன்னு என்னை திட்டுவார்ன்னு பாத்தா இங்க எல்லாம் தலைகீழா இருக்கு ஒரு வேல ஷர்மீக்கு சரியா தெரியாதோ ‘ என்று தனக்குள் பேசிக் கொண்டிருப்பவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவனுக்கு சிரிப்பாக இருந்தது. அவள் கையில் காபியை கண்டவன் நிச்சயம் ஷர்மீ தனக்கு பிடிக்காது என்று கூறியிறுப்பாள் பிறகும் அவள் கொண்டு வந்தவளின் எண்ணத்தை புரிந்து கொண்டான் ஆதி. உண்மையில் அவனுக்கு காபி பிடிக்காமல் எல்லாம் இல்லை ஆனால் அவனின் அன்னையின் கையால் குடித்த பிறகு அதை குடிப்பதையே நிறுத்தி கொண்டான். இப்போது வானதி கொண்டு வந்ததும் வேண்டாம் என்று கூற அவனுக்கு மனசு வரவில்லை.


பல வருடங்கள் கழித்து தன் மனைவியின் கையால் குடித்தது அவனின் அம்மாவையே அவனுக்கு நியாபகப்படுத்தியது. ஓவ்வொரு துளியையும் ரசித்து குடித்தவன், “ எனக்கு பிடிச்ச மாதிரி காபி போட்ட இந்த கைக்கு எதாவது கிப்ட் குடுக்கனும் போல இருக்கு “ என்றவன் அவளை சீண்டுவதற்காக அவளை நெருங்கி கிட்டே நடந்து சென்றான். அவன் கூறியதை கேட்டு அதிர்ந்தவள் அடுத்து அவன் உதட்டில் சிரிப்புடன் நெருங்கி வருவதை கண்டவள் கால்கள் தன்னால் பின்னாடி சென்றது. ஆனால் சுவர் அவளை மேலும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியது. இடது பக்கம் நகர்ந்து வெளியே செல்ல இருந்தவளை இரு பக்கமும் கையை வைத்து தடுத்து நிறுத்தினான் ஆதி. இருவருக்கும் இடையில் நூல் அளவு இடைவெளி தான் இருந்தது அவளை சீண்டுவதற்காக தான் நெருங்கி வந்தான் ஆனால் இவ்வளவு நெருக்கத்தில் அவளை காணும் போது அவனால் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. அவளின் அதிர்ந்த பார்வை வேறு அவனுக்குள் இம்சையை குடுத்தது.


ஆதி, “ என்னோட அனுமதி இல்லாம என்னை விட்டு போக முடியும்ன்னு நினைக்கிறியா.... அது உன்னால முடியாது செல்லம் “ என்று கூறியவனை கண்டவள் அவனை வேகமாக தன்னிடமிருந்து தள்ளி விட்டாள். அவள் தள்ளியதில் இரண்டு அடி பின்னால் சென்றவன் சிரித்து கொண்டே அவளை பார்த்து கண் அடித்தான். அதை கண்டு கடுப்பானவள், “ எப்பவும் நான் சொல்ல வருவதை சொல்ல விடாம திசை திருப்புவதே உங்க வேலையா “ என்று கேட்டவளை பார்த்து கொண்டே கட்டிலில் அமர்ந்தவன், “ நான் உன்னை எதாவது சொல்ல வேண்டாம்ன்னு சொன்னேனா... உண்மையா சொல்லனும்னா நீ என்கிட்ட பேச மாட்டியான்னு தான் நானும் காத்திட்டு இருக்கேன்... சொல்லு “.


வானதி, “ பூஜையறையில உங்க அம்மா அப்பா படத்தை பாத்தேன்.... நீங்க கருணாகரன் சாரோட பையன்னா நான் யாருன்னு உங்களுக்கு முன்னாடியே தெரியும் அப்படி தான.... இன்னும் என்னலாம் என்கிட்ட மறைச்சிருக்கீங்க.... நான் யாருன்னு உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு.... மொத்தமா எல்லாமே பொய் “ என்று கோவமாக கேட்டாள்.


முதலில் அவள் அந்த படத்தை பார்த்தேன் என்று ஆரம்பிக்கும் போதே தெரிந்து விட்டது அவள் இப்படி தான் எதாவது தவறாக யோசிப்பாள் என்று அதே போல் அவள் கேட்டவுடன் , “ எதுவா இருந்தாலும் நிதானமா யோசிச்சி தான் முடிவெடுக்கனும் அத விட்டுட்டு இப்படி அவசரப்பட்டா எப்படி... ஆமா நான் உன்கிட்ட உண்மைய மறைச்சேன் தான் ஆனா அது எதுக்குன்னு நான் உன்கிட்ட தெளிவா சொல்லிட்டேன் திரும்பவும் நான் சொல்றது எல்லாம்ன்னு பொய்ன்னு சொன்னா நான் என்ன பன்றது.... நாம சென்னையில சந்திச்சதுக்கு அப்புறம் தான் நீ நம்ம எஸ்டேட்ல தான் இருந்தான்றதே தெரிஞ்சது.... அப்படியே பாத்தா உனக்கு கூட தான் என்னோட அப்பாவ தெரியும்... அப்போ நீயும் என்கிட்ட பொய்யா நடந்துகிட்டன்னு நான் கூட சொல்லாமே “ என்று அவன் கூறியதும் அவனை கோபத்துடன் முறைத்து பார்த்தாள் வானதி.


ஆதி, “ ஆனா நான் அப்படி சொல்ல மாட்டேன் ஏன் தெரியுமா.... நான் உன்னை அந்த அளவுக்கு நம்புறேன்.... உனக்கு ஏன் என்மேல அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லாம போய்டுச்சு.... விட்டு குடுக்கறது மட்டும் தான் காதலா..... “ என்றவன் அவளுடைய கண்களுக்குள் ஊடுருவியப்படி , “ விட்டு குடுக்காம இருக்கறதும் காதல் தான்... நான் என்னோட காதல என்கிட்ட தக்க வெச்சிகறதுக்காக தான் எல்லாமே பன்னேன்.... இதுக்கு மேல என்னால எக்ஸ்ப்ளானஷேன் குடுக்க முடியாது.... இனிமே நீயே என்னை பத்தி தெறிஞ்சிக்கோ “ என்று அவன் கூறியதை கேட்கும் போது இந்த விஷயத்துல தேவையில்லாம தப்பா நினைச்சிட்டோமா என அவளுக்கு தோன்றியது.


தப்பை புரிந்து கொண்டவள் அவனை தயக்கத்துடன் பார்த்தவாறு, “ சாரி... நான் தான் தேவையில்லாம இந்த விஷயத்துல தப்பா நினைச்சிட்டேன்.... அதுக்கு காரணம் கருணாகரன் சார் தான்.... நான் அவர சின்ன வயசுல இருந்தே பார்த்துட்டு இருக்கேன்.... எங்களுக்கு ஒரு நல்ல பாதுகாப்பான வாழ்க்கையை குடுத்ததே அவர் தான்..... அவருக்கு என் அம்மா மேல ஒரு தனி பிரியம் காரணம் அவரோட தங்கையும் என் அம்மா மாதிரி வாய் பேச முடியாதவங்க.... என்னோட அம்மா போனதுக்காப்புறம் கூட என் கூட சென்னைக்கு வர சொல்லி சொன்னார் ஆனா அவரோட அந்த அன்ப அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாதுன்னு நான் வரலன்னு சொல்லிட்டேன்.... ஆனா அவர் என்கிட்ட ஒரு விஷயத்தப்பத்தி கேட்டுட்டே இருந்தார்.... நீ என்னோட மருமகளா வந்து என் கூடவே இருந்தா இந்த உலகத்துல என்னை விட அதிகமா சந்தோஷப்படறவங்க யாருமே இருக்க மாட்டாங்க அப்படின்னு “ என்று அவள் கூறிய அடுத்த நிமிடம் அவன் அடைந்த ஆனந்ததிற்கு அளவே இல்லையென்றே சொல்லலாம். தான் மனதில் நினைத்தவளையே தான் அவரும் தனக்கு மனைவியாக தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று அதை அவளிடமும் கேட்டான்.


ஆதி, “ நீ சொல்றது உண்மையா ஆருந்யா “ என்று கேட்டான்.


வானதி , “ ஆமாம்... அப்போ அவர் கிட்ட வேண்டாம்ன்னு சொன்னேன் ஆனா அவர் நாங்க கடைசியா சந்திக்கும் போது நான் இருந்தாலும் இல்லனாலும் வான்மதிக்கு நான் குடுத்த வாக்க நான் காப்பாத்துவேன்... எதாவது ஒரு வகையில என்னோட அன்பும் பாசமும் உனக்கு பாதுகாப்பு அரணா இருக்கும்.... எது நடக்கனுமோ அது கண்டிப்பா நடக்கும் அப்படின்னு சொன்னார்... சொன்னப்படியும் செஞ்சிட்டாரு இதை பாக்க அவர் தான் இல்லாம போய்ட்டார் “ என்று கண்களில் கண்ணீரோடு கூறியவளின் அருகில் சென்ற ஆதி அவளின் கண்ணீரை கீழே விழாமல் தாங்கி விட்டு , “ அப்பா எப்பவும் நம்ம கூட தான் இருக்காரு அதனால தான் அவர் ஆசைப்பட்ட மாதிரி உன்னையே மருமகளா கொண்டு வந்துட்டார்.... சரி நாளைக்கு நமக்கு ரிசப்ஷன் அதுக்கு யாரையாவது இன்வைட் பன்னனும்ன்னா பண்ணிடு.... உனக்கு வேற என்ன வேனும்னாலும் என்கிட்ட இல்லனா ஷர்மீகிட்ட கேளு ஓகே வா “ என்று கூறி அவளுடைய கன்னத்தை தட்டினான்.


அவனின் தொடுகையில் தன்னுனர்வு அடைந்தவள் அவனை முறைத்தபடியே , “ எனக்கு தெரிஞ்சவங்க எல்லாரையும் ஏற்கனவே இன்வைட் பண்ணியிருப்பீங்க அப்புறம் எதுக்கு என்னை கேட்க்கிறீங்க “ என்று கூறி விட்டு வெளியே செல்ல திரும்பியவள் திரும்பவும் அவன் அருகில் வந்து, “ நீங்க ஒருத்தர எனக்காக இன்வைட் பன்னணும் “.


ஆதி, “ நீ சொல்லி நான் செய்யாம இருப்பேனா... சொல்லு “.


வானதி, “ மிஸ்டர். விஷ்வநாதன் அவரையும் அவர் குடும்பத்துல இருக்க எல்லாரையும் நீங்க கண்டிப்பா வர சொல்லனும் “ என்று அவள் கூறியதும் அவளை ஆராயும் பார்வை பார்த்த ஆதி சரியென்று கூறி தலையசைத்தவன் முகம் யோசனையில் மூழ்கியது. அவளை பற்றி சில விஷயங்களை அவள் மூலமாகவே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே மேற்கொண்டு ஆராயாமல் விட்டு விட்டான். ஏதுவாக இருந்தாலும் அவளே சொல்லட்டும் என்று நினைத்தவன் கதிருக்கு அழைத்து விஸ்வநாதன் குடும்பத்தில் அனைவரையும் அழைக்க சொல்லி கட்டளையிட்டான். பிறகு வெளியே செல்வதற்காக கிளம்பி கீழே வரும் போது, “ ஆதி நில்லு “ என்ற ஷக்தியின் குரல் டைனிங் டேபிள் பக்கம் இருந்து கேட்டது. அந்த பக்கம் பார்த்த போது ஷக்தியும் ஷர்மீயும் சாப்பிட்டு கொண்டு இருக்க வானதி பரிமாறிக் கொண்டு இருந்தாள்.


ஷக்தி, “ ஆதி.... இன்னிக்கு வானதி சமையல் தான் சூப்பர இருக்கு.... நீயும் வா ஆதி “ என்று அவன் கூப்பிட்டவுடன் ஆதியின் பதிலுக்காக மற்ற இருவரும் அவனையே பார்த்தனர். வானதி தான் சமைத்தாள் என்று கேட்டவுடன் ஆதி அவளை தான் பார்த்தான். அவளும் அவனையே பார்ப்பதை கண்டவன் அமைதியாக வந்து சாப்பிட அமர்ந்து நிமிர்ந்து பார்த்தான். சாப்பிடும் இடத்தில் தன்னுடைய கோவத்தை காட்டக்கூடாது என்பதால் அவளும் அவனுக்கு காலை உணவை பரிமாறினாள். அதை கண்ட ஷக்தியும் ஷர்மீயும் சிரித்து விட்டு அமைதியாக அங்கிருந்து எழுந்து சென்றனர். ஆதியும் பொறுமையாக அவள் வைத்ததை சாப்பிட்டு விட்டு எழுந்து கையை கழுவி விட்டு வந்தவன் அங்கு நின்று கொண்டிருந்தவளின் புடவை முந்தானையை இழுத்தான். பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தவளின் புடவை இழுப்பதை உணர்ந்து திரும்பியவள் அங்கு அவளை பார்த்து கொண்டே அதில் கையை துடைத்தவனிடம் இருந்து முந்தானையை இழுத்து கொண்டு அவனை பார்த்து முறைத்தவள், “ நானும் போன போகுதுன்னு அமைதியா இருக்கேன் தேவையில்லாம என்னை வம்பிழுக்குற வேலையெல்லாம் வேண்டாம் சொல்லிட்டேன் “ என்று அவன் முன்னால் ஆள் காட்டி விரலை நீட்டி மிரட்டினாள்.


தன் முகத்தின் முன்னால் நீட்டிய விரலை பிடித்தவன், “ நீ கோவப்படும் போது ரொம்ப அழகா இருக்கீயே நான் என்ன பன்றது.... நீ இந்த மாதிரி பாசமா பரிமாறினா..... நான் எங்கையும் போகாம வீட்லையே இருந்துடுவேன் போல..... உன்னை அறியாமலேயே என்னை மொத்தமா மாத்திட்டு இருக்க இது உனக்கு நல்லது இல்லை.... சீக்கிரம் நீயும் சாப்பிடு “ என்றவன் அவளுடைய முகத்தை பிடித்து இழுத்து கன்னத்தில் அழுத்தமாக தன்னுடைய முதல் முத்தத்தை பதித்தவன். அவள் அதில் தன்னை மறந்து நிற்பதை கண்டவன் அதில் இருந்து அவள் தெளிந்து திட்டுவதற்குள் அங்கிருந்து ஓடி ள் விட்டான். அவன் தீடிரென இவ்வாறு முத்தம் இட்ட பிறகு அவளால் அது தந்த தாக்கத்தில் இருந்து மீளவே சிறிது நேரம் பிடித்தது. கோவமாக திட்டுவதற்குள் அவன் சென்றதை கன்டவளுக்கு அவளின் மீதே கோவமாக இருந்தது. அவன் தொட்டாலே ஏன் தன்னுடைய மனம் இவ்வாறு கட்டுப்பாட்டை இழக்கிறது அப்படியென்றால் அவன் செய்ததை நான் மன்னித்து..... இந்த பந்தத்தை ஏற்று கொண்டு விட்டேனா என்று அன்றைய நாள் முழுவதும் யோசனையிலே இருந்தாள் வானதி. அவளுக்கே தெரியவில்லை அவன் மேல் அவளுக்கு இருக்கும் காதல் இன்னும் மறையாமல் இருப்பதே அதற்கு காரணம் என்று.


நேரம் யாருக்கும் காத்திராமல் வேகமாக சென்று அடுத்த நாள் மாலை ரிசப்ஷன் செல்லும் நேரமும் வந்தது. ஆதியையும் வானதியையும் தவிர அனைவரும் முதலிலேயே நிகழ்ச்சி நடக்கும் அவர்களின் ஹோட்டலுக்கு சென்று விட்டனர். வானதி கீழே இருந்த ஒரு அறையில் தயாராகி கொண்டு இருந்தாள். மேலே தங்களின் அறையில் அவனுடைய நிறத்தை எடுத்து காட்டுவதை போல் கறுப்பு நிற கோட் சூட்டில் தயாராகி விட்டு கீழே இறங்கி வந்த ஆதி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அவளுக்காக காத்திருந்தான். அவனை வேகு நேரம் காக்க வைக்காமல் அறைக்குள் இருந்த வெளியே வந்தாள். தனக்கு அருகில் கேட்ட கொலுசொலியில் நிமிர்ந்து பார்த்தவன் தங்க நிறத்திலான டிசைனர் புடவையில் அதற்கான அணிகலன்கள் அணிந்து தேவதையாக நடந்து வந்தவளை கண்டவுடன் அவனை அறியாமலேயே எழுந்து அவள் அருகில் சென்று தலை முதல் பாதம் வரை அவனின் கண்கள் ஆராய்ந்தது. அவனது பார்வை தந்த தாக்கத்தில் தலை குனிந்தவளின் கையை பிடித்து அங்கிருந்த பூஜையறைக்கு அழைத்து சென்றான். எதற்க்காக இங்கு அழைத்து வந்தான் என்று புரியாமல் அவனை நிமிர்ந்து பார்க்கும் போது சாமி படத்தின் அருகில் இருந்த குங்குமசிமிழை கையில் எடுத்து திறந்து அதில் இருந்த குங்குமத்தை எடுத்து அவளுடைய கண்களை பார்த்து கொண்டே அவளின் உச்சந்தலையில் சற்று அழுத்ததுடன் வைத்தான்.


பின் அவளை முழுவதுமாக பார்த்தவன் மீண்டும் ஏதோ தீவிரமாக யோசித்து விட்டு அவளின் கண்களின் ஒரத்தில் இருந்த மையை தன்னுடைய விரலால் சிறிது எடுத்தவன் வானதியின் காதுக்கு கீழ் திருஷ்டி பொட்டு வைத்து விட்டு , “ இப்போ தான் இன்னும் சூப்பரா இருக்கு..... இன்னிக்கு நீ ரொம்ப அழகா வேற இருக்கீயா யார் கண்ணும் உன் மேல பட்டுட கூடாதுல அதுக்கு தான் இந்த பொட்டு.... இப்போ போலாமா “ என்றவனை பார்க்கும் போது உண்மையில் அந்த நிமிடம் தன் மீது அவனுக்கு இருக்கும் காதலே மேலோங்கி தெரிந்தது. அவனை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தவளால் அதை செயல்படுத்த முடியுமா என்ற சிந்தனையுடனே அவனுடன் காரில் அமர்ந்தாள்.


காரை ஓட்டி கொண்டிருந்தத ஆதி அவள் முகத்தில் தோன்றிய கவலையை கண்டவன் வண்டியை ஒரமாக நிறுத்தி விட்டு அவள் புறமாக திரும்பி அமர்ந்தான். வண்டி வெகு நேரமாக நகராமல் இருப்பதை உணர்ந்தவள் அவனை திரும்பி பார்த்தாள். அவள் தன்னை பார்ப்பதை கண்டவன் அவளுடைய கையை எடுத்து தன்னுடைய கையில் பொத்தி வைத்து, “ ஆருந்யா.... எனக்கு உன்னோட நிலைமை நல்லாவே புரிது.... கோவத்துக்கும் காதலுக்கும் நடுவுல அல்லாடிட்டு எந்த பக்கம் போறதுன்னு தெரியாம நீ குழம்பிட்டு இருக்கன்னு புரிது..... சில புதிருக்கு பதில காலத்துகிட்ட விட்டுடனும்... இந்த நொடி என்ன நடக்குத்தோ அதை சந்தோஷமா ஏத்துக்கோ இல்லனா அது உன்னோட நிம்மதிய மட்டும் இல்ல உன்னை சுத்தி இருக்கறவங்க நிம்மதியையும் சேர்த்தே அழிச்சிடும்..... நீ இப்படி இருக்கறத பார்க்க எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா.... உன்னை இந்த உலகத்துக்கு முன்னாடி என்னோட மனைவியா அறிவிக்க போற இந்த நாளுக்காக நான் எத்தனை நாள் காத்திட்டு இருந்தேன் தெரியுமா.... என்னோட சந்தோஷத்தை நீ அழிக்கனும்ன்னு நீ நினைச்ச்சீனா இப்படியே இரு..... நாம ரெண்டு பேர் வாழ்க்கையிலும் இந்த நாள் முக்கியமான நாளுன்னு நினைச்சா உன் முகத்துல சிரிப்பு மட்டுமே இருக்கணும் “ என்று அவளிடம் உருக்கமாக கூறினான்.


அவன் பேச ஆரம்பிக்கும் போது அமைதியாக இருந்தவள் அவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவன் கூறுவதை உன்னிப்பாக கேட்க வைத்தது அது ஒரு வகையில சரியாகவே பட்டது அதனால் இந்த நொடியில் நடப்பதை ஏற்று கொள்ள முடிவு செய்தவள் அவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். அதை பார்த்தவன் நிம்மதியுடன் வண்டியை எடுத்தான். சிறிது நேரம் பயணத்திற்கு பிறகு ஒரு பெரிய ஹோட்டல் முன்பு கார் நின்றது. ஹோட்டல் வாசலில் இருவரின் பெயரும் அங்கு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் விலக்கின் ஒளியில் அழகாக பிரதிபலிப்பதை வானதி ஆர்வமாக பார்க்கும் போது அவள் புறம் வந்து கதவை திறந்தான். அவளும் வெளியே வந்து அவனுக்கு அருகில் நின்றவுடன் இருவரையும் கேமிரா தன் கண்களை சிமிட்டி உள்வாங்கி கொண்டது. திடீரென்று எழுந்த ஒளி வெளிச்சத்தில் தடுமாறியவள் பிடிமானத்திற்காக ஆதியின் கரங்களை பிடித்து கொண்டாள். அவள் பிடித்த கையை இறுக்கமாக பிடித்தவன் சுற்றி இருந்தவர்களை பார்த்த பார்வையில் அனைவரும் கேமிராக்களை கீழே இறக்கினர்.


இருவரும் உள்ளே செல்ல ஆரம்பித்தனர் , அவன் கைகளை பிடித்தபடியே ஹோட்டலை பார்க்க அதன் பிரம்மாண்டம் அவளை மிரட்ட செய்ய , கொஞ்சம் கலக்கமாய் உள்ளே நுழைந்தாள். பார்ட்டி ஹாலில் வானதியின் கையை பிடித்து கொண்டு அவனுக்கே உரிய கம்பிரமான நடையில் உள்ளே நுழைந்தான் ஆதித்ய அருள்மொழி வர்மன். எல்லோரும் எழுந்து நிற்க , அவளுடன் மேடை ஏறினான் ஆதி. அதன் பிறகு சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் , தொழில்துறை சேர்ந்தவர்கள் மற்றும் அவனின் நண்பர்கள் என அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் வானதியை அறிமுகப்படுத்தி விட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். ஏனோ அந்த சூழ்நிலையை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை. அதனோடு தன்னை பொறுத்தி பார்க்க முடியாமல் அவள் மனம் தவித்தது.


அவளின் தவிப்பை உணர்ந்தவன் போன்று அவளை திரும்பி பார்த்தவன் தன் மெல்லிய குரலில் , “ ஆருந்யா “ என்று அழைக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள். “ அங்கு பாரு செல்லம் “ எனக் கூற , ‘ அங்கே என்ன ‘ என்பதை போல் பார்க்க அங்கு மித்ராவும் மீனாட்சி அம்மாவும் ஆசிரம பசங்கள் அனைவரையும் அழைத்து வந்து இருந்தனர். அவர்களை பார்த்தவுடன் அவனிடமிருந்து தன்னுடைய கையை விடுவித்து கொண்டு விரைந்தாள்.


‘ ப்ச்.... இவளோட இதே வேலையா போச்சு.... எப்பவும் என்னை விட்டு போறதிலேயே குறியா இருக்கா ‘ என சலித்து கொண்டவன் , ஒரு பார்வையை அவள் மேல் வைத்து கொண்டே வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.


அதே நேரம் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தனர் விஸ்வநாதனும் அவருடைய குடும்பமும். ஓரே தொழிலில் இருப்பதாலும் அவனுடைய அழைப்பை தவிர்க்க முடியாததாலும் தன்னுடைய குடும்பத்துடன் வந்தார். சந்திரிகாவும் சாராவும் வருவதால் சந்திரனும் அவர்களுக்கு துணையாக வந்தார். நாதனை வானதியை சந்திக்க விடாமல் தடுப்பதற்காக அவர்கள் எவ்வளவோ முயன்றும் அவரை தடுக்க முடியாததால் அவர்களும் உடன் வந்தனர். அவர்களின் வரவேற்பிற்காக செய்து இருந்த ஏற்பாட்டை பார்த்த சாராவிற்கு அவளின் இழப்பே பெரிதாக தெரிந்தது. அதை கண்டவளுக்குள் கோவம் என்ற நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக எரிமலையாக வெடிக்க ஆரம்பித்தது.


அப்பொழுது ஆதியின் நண்பர்களுடன் வந்த ரிஷி அவனை பாடுமாறு வற்புறுத்தினர். அவன் பாடுவதை கேட்டு சில வருடங்கள் ஆனதால் இதையே ஒரு சாக்காக வைத்து கொண்டு ஷர்மீயும் ஷக்தியும் கூட அவனை பாட சொல்லி கையில் மைக்கை கொடுத்தனர். இதை அனைத்தையும் கண்ட வானதியும் அவனை சுவர்சியமாக பார்த்து கொண்டிருந்தாள். அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்தவன் தன்னுடைய மனதில் இருப்பதை பாடலாக பாட ஆரம்பித்தான்.


புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா....

என்றவனின் கனீர் குரல் அந்த அரங்கம் முழுவதும் ஒலித்தது. அதில் மற்ற அனைத்து சத்தங்களும் அடங்கி அவனின் குரலே கானமாக ஒலிக்க தொடங்கியது.


புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன்
என் பாஷை சொல்லவா


இதயம் திறந்து கேட்கிறேன்
என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சிகுள்ளே என்னென்னவோ
நினைத்தேன் நித்தம் நித்தம்
கற்பனைகள் வளர்த்தேன்
தவித்தேன்....


என்றவனின் பார்வை முழுவதும் தன்னவளின் மீதே இருந்தது. அவனின் பார்வையும் அந்த பாடலும் அவளின் மனதை சிறிது அசைத்து பார்த்தது என்னவோ உண்மைதான். அங்கிருந்த அனைவருக்கும் ஆதியின் இந்த புதிய பரிமாணம் ஆச்சர்யத்தையே குடுத்தது. இரும்பு மனிதனாக இருந்தவன் அவன் காதலித்தான் என்பதையே நம்ப முடியாமல் இருக்கும் போது அதற்கு சான்றாக இன்று மனைவிக்காக உருகி உருகி பாடியதை பார்க்கும் போது அவனின் காதல் தெள்ள தெளிவாக அதில் தெரிந்தது.


செல்லக்கிளி என்னை
குளிப்பிக்க வேண்டும் சேலை
தலைப்பில் துவட்டிட வேண்டும்


கல்லு சிலை போலே நீ
நிற்க வேண்டும் கண்கள்
பார்த்து தலைவார வேண்டும்



என்று மனதில் இருப்பதை பாடலின் வரிகலாக அவளுக்கு நேராக நின்று கண்களில் வழியும் காதலோடு அவளை பார்த்து கொண்டே மீதி வரிகளை பாடினான்.


நீ வந்து இலை போட வேண்டும்
நான் வந்து பரிமாற வேண்டும்


என் இமை உன் விழி
மூட வேண்டும் இருவரும்
ஒரு சுவரம் பாட வேண்டும்
உன்னில் என்னை தேட வேண்டும்....

புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா


அவர்களை சுற்றி இருந்த மற்ற வெளிச்சங்கள் எல்லாம் மறைந்து அவர்கள் இருவர் மேல் மட்டும் ஒளி படர்ந்து கொண்டிருந்தது.


கன்னி உந்தன் மடி
சாய வேண்டும் கம்பன் வரிகள்
நீ சொல்ல வேண்டும்


உன்னை கட்டிக் கொண்டு
தூங்க வேண்டும் உந்தன்
விரல் தலை கோத வேண்டும்


கண்ணோடு இதம் காண
வேண்டும் கண்ணீரில்
குளிர் காய வேண்டும்


அவனின் பார்வையின் தாக்கத்தை தாங்க முடியாமல் அவனை விட்டு அவள் நகர்ந்த போது ஆதி அவளின் கையை பிடித்து இழுத்ததில் அவள் அவனின் மீதே மோதி சாய்ந்து நின்றவளை பார்த்து


உதட்டுக்கும் உதட்டுக்கும்
தூரம் வேண்டும் உயிருக்குள்
உயிர் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்


புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன்
என் பாஷை சொல்லவா


இதயம் திறந்து கேட்கிறேன்
என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சிகுள்ளே என்னென்னவோ
நினைத்தேன் நித்தம் நித்தம்
கற்பனைகள் வளர்த்தேன்
தவித்தேன்....



என்று அவன் பாடி முடித்தும் கூட அங்கிருந்த யாராலும் அந்த பாடல் தந்த உணர்வில் இருந்து வெளியில் வர முடியாமல் இருந்தது. பிறகு அனைவரின் கைத்தட்டலும் அந்த அரங்கத்தையே அதிர செய்தது. அந்த சத்தத்தில் தான் ஆதியும் வானதியும் தன்னிலை அடைந்தனர். உண்மையில் ஆதி இவ்வளவு அழகாக பாடியதை வானதியால் நம்பவே முடியவில்லை. அந்த பாடல் முழுவதும் அவர்களுக்குள் இருந்த அனைத்து நிகழ்வுகளும் அசைவுகளும் கேமிராவில் அழகாக பதிவாகி கொண்டு இருந்தது. ஷக்தியும் ரிஷியும் வந்து ஆதியை அணைத்து கொண்டனர். வானதியை மித்ராவும் ஷர்மீயும் அணைத்து கொண்டனர்.


அவர்களின் அந்த மகிழ்ச்சியை கண்ட சாராவிற்கு இன்னும் அவள் கோவத்தையே வளர்த்தது. அதே நேரம் வானதியின் முகத்தை பார்த்த விஸ்வநாதனுக்கு அதிர்ச்சியில் வார்த்தையே வரவில்லை.... இவர்களின் வருகையில் அடுத்து நிகழ போவது என்ன... என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்....



இதே நாள் இதே நாள் என்

வாழ்வில் தொடர்ந்திட வேண்டும்

இதே போல் இதே போல்

உன்னோடு நடந்திட வேண்டும்

நீ வாங்கும் காற்றோடு

நான் காற்றாக உயிர்

சேர்ந்திட வேண்டும் நீ

தூங்கும் வீட்டோடு ஒரு சுவராகி

உன்னை பார்த்திட வேண்டும்

இதுவும் கடந்து போகுமா

இதயம் கடத்தி போகுமா

உருகுதே உருகுதே மனம்....


நிஜத்தை தேடும்...


உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்....

 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 27


ஆதியின் பாடல் மற்றும் குரல் ரெண்டும் வானதியின் மனதை தொட்டது என்னவோ உண்மை தான். அந்த நேரம் அவன் அவள் விரும்பிய அருளாகவே அவள் கண்களுக்கு தெரிந்தான். அதே சிந்தனையில் தன்னுடைய பார்வையை திருப்பியவள் கண்களில் பல வருடங்கள் கழித்து விஸ்வநாதன் மற்றும் அவருடைய குடும்பத்தையும் கண்டாள். அவர்கள் மீது அவளுக்கு இருக்கும் கோவம் வெளிவர நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்தது. அவள் மீது கவனத்தை வைத்து இருந்த ஆதிக்கு அவளின் பார்வையில் தெரிந்த மாற்றத்தில் வாசலை திரும்பி பார்த்தான்.


பல வருடங்கள் கழித்து ஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமா என்று ஏங்கிய முகத்தை இன்று கண்ட நாதனால் இதை நம்பவே முடியவில்லை. தன்னுடைய மனைவி வான்மதியின் பிரதிபிம்பமாக அப்படியே இருப்பவளை பார்க்கும் போதே அவருக்கு ஓர் அளவுக்கு புரிந்து விட்டது. இது தன் மகள் வானதியாக தான் இருக்க வேண்டும் என்று அவர் மனதில் தோன்றிய அந்த நிமிடம் அவருக்கு கடந்த காலம் அனைத்தும் நினைவுக்கு வந்ததில் அவர் உடல் தன்னால் தள்ளாடியது. சாராவும் சந்திரிகாவும் முன்னால் செல்ல விஸ்வநாதன் பின்னால் வந்து கொண்டிருந்த சந்திரன் அவர் தள்ளாடுவதை கண்டு அவரை தாங்கி பிடித்து நிற்க வைத்தார்.


சந்திரன், “ என்ன.... நாதன் ரொம்ப வருஷம் கழிச்சி பெண்ணா பார்த்த உடனே அதை தாங்கிக்க முடியல போல “ என்று அவர் கூறிய அடுத்த நொடி அதிர்வுடன் நிமிர்ந்து பார்த்த நாதன் , “ நீ சொல்றது எல்லாம் உண்மையா.... அவ என்னோட மக வானதி தான “ என்று கண்ணில் ஆர்வத்துடன் கேட்டார்.


அவரை சற்று ஒரமாக அழைத்து சென்ற சந்திரன் , “ அவ தான் அந்த வான்மதியோட முகத்தை அப்படியே அச்சுல வார்த்தா மாதிரி இருக்காளே அது ஒன்னு போதாதா.... அன்னிக்கே அவளோட கதையை முடிச்சு இருந்தா இன்னிக்கு என் தங்கச்சி மக வாழ்க்கையில குறுக்க வந்து இருக்க மாட்டா “ என்று அவர் கூறியதும் கோவம் கொண்டவர் இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு, “ இன்னொரு தடவை என் பெண்ணா பத்தி இப்படி என் கிட்ட பேசுனா இந்த முறை நான் சும்மா இருப்பேன்னு மட்டும் நினைக்காத.... புரிஞ்சிதா “ என்று கோவமாக மிரட்டியவர் மேடைக்கு அருகில் சென்று கொண்டிருந்த சந்திரிகாவுடன் பல வருடங்கள் கழித்து தன்னுடைய மகளின் முகத்தை பார்த்து கொண்டே அவரும் உடன் சென்றார்.


மேடைக்கு வந்தவர்கள் கடமையே என்று தங்களின் வாழ்த்தை தெரிவித்து விட்டு செல்ல இருந்தவர்களை நிறுத்தி புகைபடம் எடுத்தபின்பு தான் அனுப்பி வைத்தாள். கீழே இறங்கிய சாரா மேடையில் இருந்தவர்களை பார்த்து முறைத்து கொண்டு நிற்பதை கண்ட வானதி ஆதியிடம் ஐந்து நிமிடத்தில் வந்து விடுவதாக கூறிவிட்டு அங்கு நின்று கொண்டிருந்த விஸ்வநாதன் குடும்பத்தின் அருகில் சென்றாள். தங்கள் அருகில் வரும் மகளையே கண்ணில் கண்ணீரோடு பார்த்தார் நாதன். அவளிடம் பாசமாக பேச வேண்டும் என்று அவருக்கு ஆசையாக இருந்தது ஆனால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேச முடியும். அவர்களின் அனைத்து கஷ்டங்களுக்கும் மூலக்காரணமே அவர் தானே. அதை காலம் கடந்து தான் அவரே புரிந்து கொண்டார். இனி என்ன பேசுவது என்று தெரியாததால் அவளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தார்.


வானதி, “ மிஸ்டர் அண்ட் மிஸ்செஸ் விஸ்வநாதன் எப்படி இருக்கீங்க.... அட நான் ஒறுத்தி புரியாம கேக்கரேன்.... உங்களுக்கு என்ன நீங்க நல்லா தான் இருப்பீங்க.... “ என்று நக்கலாக கேட்டாள்.


சாரா, “ என்ன நக்கலா.... உனக்கு எல்லாம் என்ன தகுதி இருக்குன்னு என்னோட ஆதியா கல்யாணம் பண்ணியிருக்க.... அவர நான் காதலிச்சேன் எங்கயிருந்தோ வந்த நீ என்கிட்ட இருந்து அவர தட்டி பறிச்சிட்டல... உன்னை நான் சும்மா விட மாட்டேன் “ என்று ஆதங்கமாக கூறியதை கேட்டவள், “ என்ன பன்றது எல்லா தகுதியும் இருக்க உன்னை அவருக்கு பிடிக்கலையே.... என்னத்தான அவர் கல்யாணம் பண்ணியிருக்கார்” என்று அவளின் கண்களை பார்த்து நிதானமாக கூறினாள்.


சாரா, “ நீ மட்டும் குறுக்க வராம இருந்திருந்த எல்லாமே நான் நினைச்ச மாதிரி நடந்து இருக்கும். நான் வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்து கிட்டு என்கிட்டயே திமிரா பேசறல “ என்று ஆவேசமாக கத்தினாள். இவர்கள் அனைவரும் ஹாலின் ஒரு ஒரத்தில் நின்று கொண்டிருந்ததால் யாருக்கும் எதுவும் கேட்கவில்லை.


வானதி,” யார் வாழ்க்கையை யாரு வாழ்ந்துட்டு இருக்கான்னு உன்னோட அம்மாக்கிட்ட கேளு.... இல்ல நான் தெரியாம தான் கேக்கரேன்.... உங்க குடும்பமே இப்படி தானா. எப்பவும் அடுத்தவங்க வாழ்க்கை மேல தான் ஆசைப்படுவீங்களா “ என்று அவள் கேட்டதும் கோவம் கொண்ட சந்திரனை அடக்கிய சந்திரிகா, “ என்னடி பழசையெல்லாம் மறந்துட்ட போல இருக்கு “.


அவரின் முன் நிமிர்ந்து நின்றவள், “ எதையும் மறக்காததால தான் உங்கள இந்த பங்ஷனுக்கு வர சொன்னேன்... எதுக்குன்னு பாக்குறீங்களா.... நீங்க கைய விட்டுட்டா எங்களுக்கு வாழ்க்கையே இல்லன்னு நினைச்சிட கூடாது இல்லையா அதுக்கு தான். என்னைக்கும் குடுத்தவங்க மறந்துடலாம் ஆனா வாங்குனவங்க எதையும் மறக்க மாட்டாங்க.... “.



சந்திரிகா, “ இப்போ என்ன எங்கள பழி வாங்க போறீயா “ என்று அவர் கூறியதை கேட்டு சத்தமாக சிரித்தவள், “ நான் பழி வாங்கனும்ன்னு நினைச்சி இருந்த எப்பவோ அதை செஞ்சி இருப்பேன்.... என் அம்மாவோட சாவுக்கு நீங்க தான் காரணம்ன்னு எனக்கு தெரியும் இருந்தும் ஏன் அமைதியா இருந்தேன் தெரியுமா.... இப்போ நீங்க வாழ்ந்துட்டு இருக்க வாழ்க்கை என்னோட அம்மா விட்டு குடுத்தது. அதை அழிக்க எனக்கு மனசு வரல அப்படியே நான் எதாவது பன்னாலும் அப்புறம் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போய்டும் பாருங்க “.


வான்மதி இப்போது உயிரோடு இல்லை என்பதை அறிந்த விஸ்வநாதனால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கை அழிவதற்கு தானே காரணம் ஆகி விட்டேனே என்ற குற்ற உணர்வை அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை. சந்திரிகா, “ அன்னிக்கு உன்னோட அம்மா எனக்கு குறுக்க வந்தா இப்போ நீ என்னோட பெண்ணுக்கு எதிரியா வந்து இருக்க.... விடமாட்டேன். உன்னை ஆழிச்சாவது என் மக ஆசைப்பட்டத அவளுக்கு குடுப்பேன் “.


வானதி, “ எப்பவுமே நீங்க ஆசைப்பட்டதே நடக்க நீங்க என்ன கடவுளா அது மட்டுமில்லாம நான் ஒன்னும் வான்மதி இல்ல தன்னோட வாழ்க்கையை விட்டு குடுக்க அதே மாதிரி என் புருஷன் விஸ்வநாதனும் இல்ல அடுத்தவங்க பேச்ச கேட்டு ஆடுறதுக்கு.... நான் அமைதியா தான் இருக்கேன் தேவையில்லாம என்னோட வாழ்க்கைக்கு குறுக்க வந்தா நான் வேற மாதிரி முடிவெடுக்க வேண்டியது வரும் “ என்று அவர்களை எச்சரித்து விட்டு அங்கிருந்து சென்றாள்.


வானதி பேசி சென்ற வார்த்தைகள் அனைத்தும் சாட்டையடியாக இருந்தது விஸ்வநாதனுக்கு அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியே சென்று விட்டார். இதுவரை எது தெரியக்கூடாது என்று நினைத்தாரோ அது அவருக்கு தெரிந்ததில் சற்று நாதனை நினைத்து பயமாகவே இருந்தது. இதில் அவர் சென்றதை கண்ட சந்திரிகாவும் அடுத்து வீட்டிற்கு சென்றால் என்ன நடக்குமோ என்று சிந்தித்தபடியே மகளை அழைத்து கொண்டு பின்னாலேயே சென்றார். அங்கு நடந்த அனைத்தையும் சந்திரனால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது காரணம் தூரத்தில் இருந்தாலும் ஆதியின் பார்வை மொத்தமும் வானதியை சுற்றியே இருந்தது. தேவையில்லாமல் இவர் எதாவது செய்ய போய் தவறாக முடிந்து விட்டால் அது ஆதியின் கோவத்தை அதிகரிக்க செய்து விடும் அபாயம் உள்ளதால் சந்திரன் அமைதியாகவே இருந்தார். நேரம் பார்த்து தான் காரியத்தை முடிக்க வேண்டும் அதுவரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை அறிந்தவர் தன் தங்கையின் பின்னாலே வீட்டிற்கு சென்றார்.


அவர்கள் சென்ற திசையை பார்த்து கொண்டு நின்று இருந்தவள் அருகில் வந்த ஆதி, “ என்னாச்சு மா.... எதுவும் பிரச்சனை இல்லையே வேணும்ன்னா வீட்டுக்கு போலாமா “ என்றவனின் குரலில் தெரிந்த அக்கறையில் அவனை பார்த்து, “ இல்லை அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.... பங்ஷன் முடிஞ்ச உடனேயே போலாம் “ என்றவளின் முகத்தை பார்த்தவன் வேறு எதுவும் கூறாமல் மேடைக்கு அழைத்து சென்றான். அதன் பிறகு நடந்த அனைத்தும் வேகமாக நடந்தது. சாப்பிட சென்ற போதும் அவள் அவ்வளவாக உண்ணாமல் சிறிது மட்டுமே உண்டு விட்டு அமர்ந்து விட்டாள். அவளை கட்டாயப்படுத்தி உண்ண வைக்கவும் முடியாததால் ஆதியும் சீக்கிரமாக சாப்பிட்டு விட்டு வந்தவன் ஷர்மீயிடமும் ஷக்தியிடமும் வானதி மிகவும் சோர்வாக உள்ளதால் வீட்டிற்கு அழைத்து செல்வதாகவும் மற்ற அனைத்தையும் முடித்து விட்டு சீக்கிரமாக வருமாறு கூறி விட்டு வானதியை அழைத்து கொண்டு காரில் ஏறி அமர்ந்தான்.


காரில் ஏறி அமர்ந்திருந்த வானதியின் எண்ணம் முழுவதும் இன்று அவர்களிடம் பேசியவற்றையிலேயே இருந்தது. அவர்களை காயப்படுத்த வேண்டும் என்பது அவளுடைய நோக்கம் அல்ல ஆனால் அவர்கள் தனக்கு செய்த தவறை கொஞ்சமாவது உணர வேண்டும் என்பதற்காக தான் அவள் அவ்வாறு பேசினாள். கடைசியாக சாரா ஆதியை காதலித்ததாக கூறியதை கேட்ட உடன் அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தன்னுடைய அன்னையின் வாழ்க்கையில் நடந்த அதே நிகழ்வு. இது ஆதிக்கு தெரியுமா தெரியாத என்ற குழப்பத்திலேயே இருந்தவளை தன்னை அறியாமல் உறக்கம் இழுத்து கொண்டது. நேற்று சரியாக தூங்காதது இன்று வேகு நேரம் நின்றது என எல்லாமே அவளை ஆழுந்த நித்திரைக்கு சென்றது. விஸ்வநாதன் குடும்பம் வந்ததில் இருந்து அங்கு நடந்தவையை ஆதியும் கவனித்து கொண்டு தான் இருந்தான். ஆனால் அதை பற்றி கேட்டு அவளை கஷ்டப்படுத்த கூடாது என்பதற்காகவே அவனும் அமைதியாக வந்தான். அந்த சிந்தனையிலேயே வண்டியை ஓட்டி கொண்டிருக்கும் போது அவன் தோளின் மீது அவள் சரிந்ததை அதிர்ச்சி உடன் திரும்பி பார்த்தான்.


அவள் தூக்கத்தில் தன்னை அறியாமல் தன் மீது தலை சாய்த்து இருப்பதை கண்டு அவனுக்கு சிரிப்பாக வந்தது. ஒரு கையால் வண்டியை ஓட்டி கொண்டே இன்னொரு கையால் சரிய இருந்தவள் தலையை சரியாக வைத்து கொண்டே உல்லாசமான மனநிலை உடன் வண்டியை செலுத்தி கொண்டிருந்தான். எவ்வளவு தான் வேகத்தை குறைக்க முயன்றாலும் விரைவாகவே வீடு வந்து சேர்ந்ததில் அவனுக்குள் வருத்தமாகவே இருந்தது. காரை போர்ட்டிகோவில் நிறுத்தி விட்டு அவள் விழிப்பதற்காக காத்திருந்தான். ஆனால் நேரம் சென்று கொண்டிருந்ததே தவிர அவள் எழுவது போல தெரியாததால் வேறு வழியில்லாமல் அவளை சிறிது அசைத்து பார்த்தான் ஆனால் அவளோ அவனுடைய கையை இன்னும் இறுக்கமாக அணைத்து கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள். அந்த நிமிடத்தை இழக்க உண்மையில் அவனுக்கு விருப்பம் இல்லை. அவள் முகத்தில் விழுந்த முடியை காதோரமாக ஒதுக்கியவன் விரல்கள் தன்னை அறியாமல் அவளுடைய கன்னத்தை வருடியது. அதன் மென்மையில் தன்னை தொலைத்தவன் குனிந்து அவளின் நெற்றியில் அழுத்தமாக தன்னுடைய முத்திரையை பதித்தான். தோள் சாய்ந்தவள் மீது உதடு குவித்து ஊத அவன் மூச்சு காற்றில் முடி அசைந்ததே தவிர அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் போனது இதற்கு மேல் இங்கு இருந்தால் நடக்க இருக்கும் விபரீதத்தை தடுக்க முடியாது என்பதை உணர்ந்தவன். அவளை கைகளில் ஏந்தி கொண்டு காரை விட்டு இறங்கியவன். மலரென அவளை தாங்கியப்படி படியேறியவன் தங்கள் அறைக்குள் நுழைந்து அவளின் தூக்கம் கலையா வண்ணம் கட்டிலில் படுக்க வைத்து விட்டு அதே மனநிலையோடு உடை மாற்றி கொண்டு வந்து அருகில் படுத்து கொண்டான்.


விடிவிளக்கின் ஒளியில் தேவதையாக அவன் கண்களுக்கு தெரிந்தாள். ஆசையாக தன் பார்வையால் வருடியவனின் விரல்கள் மெல்ல அவன் கன்னம் வருட முகத்தில் தானாக ஒரு கீற்று புன்னகை தோன்றி மறைந்தது. தூக்கத்தில் அவன் தொடுகையை உணர்ந்ததை போல் கன்னம் வருடிய கையை கெட்டியாக பிடித்து கொள்ள ஒரு வேலை முழித்து விட்டாளோ என்று பயந்தவன் அடுத்து அவள் செய்த செயலில் அவன் உள்ளம் மகிழ்ச்சி அடைந்தது. அவன் கரத்தை பிடித்து உள்ளங்கையில் முகத்தை வைத்து கொண்டு நிம்மதியாக தன்னுடைய தூக்கத்தை தொடர்ந்தவளிடமிருந்து கரத்தை விடுவிக்க மனமின்றி அவளை ரசித்தபடியே படுத்து இருந்தவன் எப்போது உறங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.


பொழுதும் அழகாக விடிந்தது , முதலில் கண் விழித்தது என்னவோ வானதி தான். சற்று சோம்பலாக விழி திறந்தவளுக்கு , ‘ நாம எப்போ இங்க வந்தோம்..... இந்த தலையணை ஏன் இப்படி கரடு முரடா இருக்கு ‘ என்று அவள் எழ போக அவளை ஒரு கரம் இறுக்கமாக அணைத்து இருந்தது. அப்போது தான் அவன் மார்ப்பை தலையணையாக்கி உறங்கி இருக்கிறோம் என்பதே வானதிக்கு புரிந்தது. பிறகு அவன் கைகளை விலக்கி விட்டு எழுந்து அமர்ந்தாள். வானதி எழும் போதே ஆதியும் விழித்திருந்தான். அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்காகவே அமைதியாக கண் மூடி படுத்திருந்தான். ஆனால் விழி அசைவிலே அவன் முழித்து கொண்டிருப்பதை அறிந்தவள் வேகமாக கட்டிலில் இருந்து இறங்கி, “ நீங்க முழிச்சிட்டு தான் இருக்கீங்கன்னு எனக்கு தெரியும் “ என்றவளின் சூடான பேச்சில் கண்களை திறந்து அவளை பார்த்து சிரித்தவன் , “ குட் மோர்னிங் பொண்டாட்டி “ என்று கூறியவனை கொலைவெறியோடு பார்த்தாள் வானதி.


வானதி, “ நேத்து நான் கார்ல தான இருந்தேன்.... இங்க எப்படி வந்தேன் “ அவன் தான் இதற்கு காரணமாக இருப்பான் என்று தெரிந்தும் அவனிடமே கேட்டாள்.


ஆதி, “ இது என்ன கேள்வி.... என்னை தவிர உன்னை இப்படி தூக்கிட்டு வர வேற யாருக்கு உரிமை இருக்கு “ என்றவன் தன் இரு கைகளையும் தூக்கி சோம்பல் முறித்தவன். கட்டிலில் இருந்து இறங்கி அவள் அருகில் வந்து , “ இப்போ உனக்கு என்ன பிரச்சனை ஆருந்யா “ என்றவனை முறைத்தவள், “ என்ன எழுப்பி இருக்க வேண்டியது தான.... நீங்க நான் தூக்கத்துல இருக்கறத அட்வான்டேஜ் எடுத்து இருக்கீங்க அப்படிதான..... கடைசியில நீங்களும் எல்லார் மாதிரி தான “ என்று அவள் கூறியதும் கோவம் கொண்டவன் அருகில் இருந்த மேஜையை தள்ளி விட்டிருந்தான். வானதி அந்த சத்ததில் விதிர்த்து போய் பார்த்தாள். அதில் சற்று நிதானம் அடைந்தவன், “ என்னோட மனசுல நிறைஞ்சி இருந்த சந்தோஷத்த ஒரே நிமிஷத்துல அழிச்சிட்ட.... நான் உனக்காக ஒரு பரிசு குடுக்கனும்ன்னு தான் உன்னை ஆசையா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் ஆனா நீ அசந்து தூங்குனா உன்னை எழுப்ப எனக்கு மனசு வரல.... அது மட்டும் இல்லாம நீ என்னோட பொண்டாட்டி உன்னை நான் கட்டிபிடிச்சிட்டு தூங்குனதுல என்ன தப்பு இருக்கு.... அதை நீ அட்வான்டேஜா எடுத்துக்கிட்டா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது “ என்றவன் வேகமாக குளியலறைகுள் நுழைந்து கொண்டான்.


அவன் அவ்வாறு கோவமாக நடந்து கொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை அது மிகவும் அதிர்ச்சியாகவே இருந்தது. அந்த அறையில் மூச்சு முட்டுவது போல் இருந்ததால் பால்கனிக்கு சென்றாள். அங்கு இருப்பதை கண்டவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. அதற்கு காரணம் அந்த பெரிய பால்கனியில் ஒரு அழகிய வேலைபாடுகள் நிறைந்த பெரிய ஊஞ்சல் மாட்டப்பட்டு இருந்தது. அதன் அருகில் சென்று அதை கையால் ஆசையாக தொட்டு பார்த்து கொண்டே திரும்பியவள் கண்களில் கீழே தோட்டத்தில் நேற்று காலை அவள் நின்று கொண்டிருந்த இடத்திலும் ஒரு ஊஞ்சலும் அதன் பக்கத்தில் சிறிது இடைவெளி விட்டு ஒரு மல்லிகை பந்தல் போடப்பட்டு இருந்தது. அதை கண்டவள் வேகமாக கீழே இறங்கி சென்ற போது தான் தெரிந்தது அது அவளுக்கு பிடித்த ஜாதி மல்லிகை பூ நடப்பட்டு அது வளர்வதற்காக அமைக்கப்பட்ட பந்தல் என்று. அவையனைத்தையும் பார்க்கும் போது அவளால் நம்பவே முடியவில்லை. அந்த ஊஞ்சலில் அவள் அமர்ந்த போது உண்மையில் மனது மிகவும் லேசாக உணர்வதை போல் இருந்தது. அவள் கண்கள் ரெண்டும் மூடி சாய்ந்து அமர்ந்திருந்த போது தீடிரென ஊஞ்சல் ஆடியதில் கண்களை திறந்து திரும்பி பார்க்கும் போது அங்கு ஆதி தான் ஆட்டி கொண்டிருந்தான்.


அவனை கண்டவுடன் என்ன கூறுவது என்று தெரியாமல் எழுந்து சற்று தள்ளி நின்றவள், “ சாரி.... காலையில எழுந்த உடனே..... நாம அப்படி இருந்த..... அத பாத்த உடனே கோவத்துல அப்படி பேசிட்டேன் “ என்று திக்கி திக்கி பேசியவளின் முன் வந்த ஆதி , “ நானும் உன் கிட்ட அப்படி நடந்து இருக்க கூடாது.... நான் உனக்காக தான் இது எல்லாத்தையும் பன்னேன்.... நீ அப்படி பேசின உடனே கோவம் வந்துடுச்சு.... சரி சொல்லு உனக்கு பிடிச்சு இருக்கா “ என்று கேட்டவனை பார்க்கும் போது வானதிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தான் எவ்வளவு கோவப்பட்டாலும் அவனுக்கு தன் மீது இருக்கும் காதல் குறையாமல் இருப்பதை கண்டு அவளுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. எங்கே அவன் பக்கம் முழுவதுமாக தன் மனம் சாய்ந்து விடுமோ என்று அதனால் அவனை நேரடியாக சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று எண்ணியவள். அவனிடம் ஆமாம் என்பதை போல் தலையாட்டியவள் அங்கிருந்து சென்று விட்டாள். அவள் சென்றதும் சிரித்து கொண்டே திரும்பியவன் பின்னால் நின்று கொண்டிருந்த ஷர்மீயையும் ஷக்தியும் கண்டான்.


அவர்கள் முகத்தை பார்க்கும் போதே இங்கு நடந்த அனைத்தையும் பார்த்து விட்டார்கள் என்று புரிந்து கொண்ட ஆதி இதற்கு மேல் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று எண்ணியவன். ப்போனை காதில் வைத்து கொண்டே வேகமாக அங்கிருந்து கிளம்பி ஆபீஸ் சென்று விட்டான். அதை கண்ட இருவருக்கும் சிரிப்பாக இருந்தது. அவர்கள் இருவருக்கும் ஆதியின் மாற்றம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்த சிரிப்பு அவன் முகத்தில் நிலைக்க வேண்டும் என்பதே இவர்களின் வேண்டுதலாகவும் விருப்பமாகவும் இருந்தது.


அந்த சம்பவத்திற்கு பிறகு வானதி அவன் முன்னால் வருவதையே பெரும்பாலும் தவிர்த்து கொண்டிருந்தாள். ஒரு வேளை பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தாலும் அவன் முகத்தை பார்க்காமல் அவனுக்கு வேண்டிய பதிலை கொடுத்து விட்டு நகர்ந்து விடுவாள். எங்கே இப்படியே சென்றால் அவன் மீது தனக்கு இருக்கும் கோவம் மறைந்து விடுமோ என்ற அச்சம் அவளை இவ்வாறு செய்ய வைத்தது. வானதியின் இந்த விலகல் ஆதியின் கோவத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவே செய்து கொண்டிருந்தது. காலை அவன் எழும் முன்னரே அவள் எழுவதும் ஆபீஸ் செல்லும் வரை அவன் முன்னால் கண்ணாமூச்சி ஆடுவதும் இரவு அவன் வருவதற்கு முன்னாலே தூங்கி விடுவதுமாக இருந்தது. கம்பனியில் இப்போது வேலை சற்று அதிகமாக இருந்ததால் அவனால் எங்கையும் நகர முடியாமல் இருந்தது. அப்படியே அவளை சந்தித்தாலும் ஆதியின் முகத்தை பார்க்காமலே பதில் அளித்து செல்பவளை பார்க்கும் போது அவளின் கையை பிடித்து தன்னுடனே வைத்து கொண்டு நீ என்னுடன் பேச வேண்டும் என்னையே பார்க்க வேண்டும் என்று கத்தி சொல்ல வேண்டும் என்பதை போல் வெறியாக இருந்தது.


இப்படியே ஒரு வாரம் கடந்தது, வானதி ஆதியை தவிர மற்ற அனைவரிடமும் சிரித்து கொண்டே பேசுவதை பார்க்கும் போது அவனுக்கு பொறாமையாக இருந்தது. இப்போது வேலை பளு சற்று குறைந்து இருந்ததால் இதற்கு என்ன வழி என்று ஆபீஸ் அறையில் அமர்ந்து தீவிரமாக சிந்தித்து கொண்டு இருந்தவனுக்கு ஒரு வழி கிடைத்தது. அதை உடனே செயல்ப்படுத்துவதற்காக ஷக்தியை அழைத்தான். அறைக்குள் வந்தவனிடம் தன் மனதில் தோன்றிய திட்டத்தை விவரமாக கூறினான் ஆதி. அதை கேட்ட ஷக்திக்கு தான் தலையெல்லாம் சுற்றியது.


ஷக்தி, “ ஆதி.... இது எல்லாம் தேவையா.... வானதி ரொம்ப கோவப்படுவா “.


ஆதி, “ நான் இதை செய்யலனா மட்டும் அவ கோவப்பட மாட்டாளா... இங்க எல்லாருக்கு கூடவும் இருக்க வரைக்கும் அவ என்னை கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டா.... அதனால தான் இந்த திட்டம். எனக்கு அவ கூட டைம் ஸ்பென்ட் பன்னனும் ஷக்தி. ஒரு வாரமா என் கூட சரியா பேசவே மாட்றா.... நீ என்னோட இடத்துல இருந்து யோசிச்சு பாரு “ என்று வருத்தமாக கூறியவனை பார்த்த ஷக்தி அவன் அருகில் சென்று, “ஓகே ஆதி.... நான் இதை பன்றேன்.... ஷர்மீ கிட்டயும் ப்ளான் பத்தி சொல்லிடுரேன்.... நீ கவலப்படாத “ என்றவன் ஆதியின் தோளை தட்டி கொடுத்து விட்டு சென்று விட்டான். அவன் சென்றதும் அந்த டேபிள் மேலே இருந்த வானதியின் படத்தை கையில் எடுத்த ஆதி , “ இனி நீ என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது பேபி.... பாக்கலாம் இப்போ நீ என்ன பன்றன்னு “ என்று நினைத்தவன் முகத்தில் சின்னதாக புன்முறுவல் தோன்றி மறைந்தது.


இரவு வீட்டிற்கு வந்த ஷக்தி ஷர்மீயிடம் ஆதி சொன்னதை கூறினான். அதை கேட்ட ஷர்மீ, “ என்ன சொல்றீங்க.... இது எப்படி நான் பன்றது. எனக்கு பயமா இருக்கு ஷக்தி. அண்ணிக்கு தெரிஞ்ச அவ்வளவு தான் “ என்று பயத்துடன் கூறியவளிடம் ஆதியின் பக்கத்தை கூறி அவளை ஒருவாறு சமாதானம் செய்து அவளை செய்ய வைத்தான்.


நேரம் கடந்து தாமதமாக வந்த ஆதிக்காக வரவேற்பரையில் இருவரும் காத்திருந்தனர். அவர்கள் இருவரின் பக்கத்தில் வந்த ஆதியிடம், “ நீ சொன்ன மாதிரி எல்லாத்தையும் செஞ்சிட்டேன்.... “ என்று ஷக்தி கூறினான்.


ஷர்மிளா, “ ஆமா அண்ணா.... நீங்க சொன்ன மாதிரி அண்ணியை தூங்க வெச்சிட்டேன்.... இப்போதைக்கு எழுந்துக்க மாட்டாங்க ஆனாலும் கொஞ்சம் பயமா தான் இருக்கு.... எதுக்கு ணா இந்த ரிஸ்க் “ என்று கேட்டவளை தீர்க்கமாக பார்த்த ஆதி, “ அப்ப நான் அவ கிட்ட சொன்னதை தான் இப்பவும் சொல்றேன்.... அவள நான் அவ கிட்ட கூட விட்டு குடுக்க மாட்டேன்.... நான் வரவரைக்கும் எல்லாத்தையும் பாத்துக்கோ ஷக்தி. நான் எங்க இருந்தாலும் இங்க என்ன நடக்குதுன்னு கண்காணிச்சுட்டு தான் இருப்பேன். சரி நான் போய் ஆருந்யாவ கூட்டிட்டு வரேன். நீ எங்கள ட்ரொப் பண்ணிட்டு வந்துடு “ என்று ஷர்மீயிடம் ஆரம்பித்து ஷக்தியிடம் முடித்தவன் படியேறி மேலே சென்று விட்டான்.


அறைக்குள் நுழைந்த ஆதி உறங்கி கொண்டிருந்த வானதியை பார்த்து கொண்டே குளியலறைக்குள் நுழைந்து வேறு உடையில் வெளியே செல்ல தயாராகி வந்தவன் வானதி பக்கம் வந்து குனிந்து அமர்ந்து அவளை இமைக்காமல் பார்த்தவன், “ இந்த முகத்தை நேரடியாக பார்க்க.... உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண என்ன எல்லாம் செய்ய வேண்டியது இருக்கு.... நாளைக்கு நீ எழுந்த உடனே உன்னை எப்படி சமாளிக்க போறேன்னு தெரில இருந்தாலும் பரவாயில்லை. சண்டை போட்டாலும் நீ என் கூட தான் இருக்கணும்.... அதுக்காக நான் உன்கிட்ட கொஞ்சம் ஆதித்யாவ நடந்துக்க வேண்டியது இருக்கு.... இனி உன்னை யாராலும் என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது.... நம்ம ரெண்டு பேர் மட்டும் இருக்க இடத்துக்கு நம்ம போலாம்.... நீ என்னை புரிஞ்சிகறதுக்காக தான் இப்படி பன்றேன் “ என்று அவளின் முகத்தை பார்த்து பேசியவன் அவளை கையில் தூக்கி கொண்டு கீழே இறங்கி சென்றான்.


வர்மா குரூப் அலுவலகத்திற்கு சொந்தமான காலியான இடத்திற்கு வந்து காரை நிறுத்தினான் ஷக்தி. அங்கு அவனுக்கான சார்ட்டர் காத்திருந்தது. ஆதி அங்கு நின்று கொண்டிருந்த நபர் அருகில் சென்று, “ டேவிட்.... கிளைமேட் எப்படி இருக்கு எல்லாம் ஓகே தான “ . டேவிட் ஆதியின் சார்ட்டர் ஹெலிகாப்டர் இயக்கும் விமானி.


டேவிட், “ எல்லாம் ஓகே தான் பாஸ்.... நாம கிளம்பலாம். உங்களுக்கு தேவையான எல்லாமே அங்க தயார இருக்கு “ என்று அவனிடம் பணிவாக கூறியவன். ஹெலிகாப்டரை இயக்க தயாராக அமர்ந்தான்.


காரின் உள் இருந்த வானதியை ஒரு பூவை போல் கைகளில் ஏந்தி கொண்டு வந்த ஆதியை பார்த்த ஷக்தி, “ நீங்க திரும்பி வரும் போது ஒற்றுமையா தான் வரனும் ஆதி.... “ என்றவனுக்கு சிரிப்பையே பதிலாக குடுத்தவன். அவனிடம் தன்னுடைய தலையை அசைத்து விடைபெற்று கொண்டு வானதியை தூக்கி கொண்டு உள்ளே சென்று அமர்ந்தான். அவன் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர வைத்து தோளோடு அணைத்து கொண்டு சாய்ந்து அமர்ந்து கொண்டான்.


ஹெலிகாப்டர் மேலே சென்றதை பார்த்த பின்பு ஷக்தியும் சென்று விட்டான். சிறிது தூரம் சென்ற பிறகு தன் கைகளுக்குள் இருப்பவளை பார்த்த ஆதி, “ யாருமே இல்லாத இடத்துல நீயும் நானும் இருக்க போறதுன்றது என்னோட கனவு இப்போ நிறைவேற போகுது.... இனி உனக்கும் எனக்கும் நடுவுல யாரும் வர முடியாது “ என்றவன் அவளின் முகத்தையே காதலோடு பார்த்து கொண்டிருந்தான். அவனின் திட்டம் எல்லாம் ஒன்று தான் இனியும் அவளை விட்டு விட்டால் அவள் தன்னை விட்டு பிரிவதை பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவாள் அதனால் தான் இந்த முடிவு. அவள் இரவு குடிக்கும் பாலில் ஒரு தூக்க மாத்திரை கலந்து தூங்க வைத்து விட்டு அழைத்து செல்வது தான் ஆதியின் திட்டம். வானதி விழித்து இருக்கும் போது இதை பற்றி கூறினால் அவனுடன் வராமல் இருப்பதற்காக அனைத்து வழியையும் அவள் முயற்சி செய்வாள் அதனால் வேறு வழியில்லாமல் இந்த வழியை தேர்ந்தெடுக்க வேண்டியதாக உள்ளதை நினைக்கும் போது உண்மையில் ஆதிக்கு வருத்தமாகவே இருந்தது. இப்படியே மதியம் நடந்ததை பற்றி நினைத்து கொண்டு இருந்தான்.


பல மணி நேரங்கள் கடக்க , இமைகளை கடினப்பட்டு பிரித்து விலக்கி விழிகளை திறந்தாள் வானதி. கண்ணை சுழற்றி இருக்கும் இடத்தை நோட்டம் விட்டாள். அந்த அறை புதிதாக தெரிந்ததால் அவள் மனதில் , ‘ இது என்ன புது இடமா இருக்கு ஒரு வேலை நாம இன்னும் கனவு காண்றோமோ ‘ என்று கண்களை கசக்கி கொண்டு பார்க்கும் போது எதிரில் இருந்த சுவரில் இருவரின் புகைப்படமும் பெரிதாக மாட்டப்பட்டு இருந்தது. அதை பார்த்து விட்டு கட்டிலில் இருந்து எழுந்து ஒன்றும் புரியாமல் சுற்றி இருந்தவற்றை காணும் போது கதவை திறந்து கொண்டு ஆதி உள்ளே நுழைந்தான்.


ஆதி, “ ஹாய்.... பொண்டாட்டி ஒரு வழியா எழுந்திட்டியா. போ சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா.... சாப்பிடலாம் எனக்கு ரொம்ப பசிக்குது “ என்று அவன் எதுவும் நடக்காததை போல் கூறியதும் அவன் அருகில் வந்தவள், “ இது என்ன இடம் நான் எப்படி இங்க வந்தேன்.... “ என்று குழப்பத்துடன் கேட்டாள் வானதி.


அவள் முகத்தில் விழுந்த முடியை காதோரமாக ஒதுக்கியவன் , “ நீ கேட்ட எல்லா கேள்விக்கும் நான் பதில் குடுக்கறேன் ஆனா அதுக்கு முன்னாடி ரெடி ஆயிட்டு வா. இப்போவே மதியம் ஆக போகுது நேத்துல இருந்து நான் சாப்பிடவே இல்லை உனக்காக தான் காத்திட்டு இருக்கேன்.... அப்புறம் அந்த பெரிய கப்பொர்ட் முழுக்க உனக்கு வேண்டிய எல்லா பொருளும் இருக்கு.... “ என்று அவன் கூறியதை கேட்டவளுக்கு ஒன்றும் புரியவில்லை முதலில் குளித்து விட்டு வருவோம் என்று எண்ணியவள் அமைதியாக உள்ளே சென்று விட்டாள்.


சிறிது நேரம் கழித்து குளித்து முடித்து தயாராகி அறையை விட்டு வெளியே வந்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. அது வீடு என்று சொல்வதை விட பல அடுக்குகள் கொண்ட பெரிய அரண்மனை என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். பணத்தின் செழுமை கொட்டி கிடந்தது, சென்னையில் அவள் இருந்த வீட்டை விட இது மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதை சுற்றி பார்த்து கொண்டே வரவேற்பறைக்கு வந்தவளுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. ரிசப்ஷன் அன்று எடுக்கப்பட்ட அவளின் ஆளுயர புகைப்படம் பெரிதாக மாட்டப்பட்டு இருந்தது. அதன் அருகில் சென்று அண்ணாந்து பார்த்து கொண்டிருந்த போது ஆதி அவளை பின்னால் இருந்து அணைத்து வானதியின் தோளில் தன்னுடைய தாடையை பதித்து கொண்டு , “ ரொம்ப அழகா இருக்குல அதனால தான் இங்க மாட்ட சொன்னேன்.... “ என்றான்.


ஆதி அணைத்தவுடன் அவளால் அவன் கைகளுக்குள் நிற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் நின்று கொண்டிருந்தாள். அவளின் அவஸ்தை புரிந்து கொண்ட ஆதியும் அவளை விடுவித்து விட்டு டைனிங் டேபிள் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான். அவன் எதற்கு இங்கு அழைத்து வந்தான் என்று புரிந்து கொண்ட வானதி, “ எனக்கு சாப்பாடு வேண்டாம் “ என்றவளை புரியாமல் பார்த்தவன், “ ஏன் பசிக்கலையா “.


வானதி, “ இப்போ சாப்பிடறது தான் முக்கியமா.... நான் கேட்ட எந்த கேள்விக்கும் நீங்க இன்னும் பதில் சொல்லல.... அதுக்கு பதில் கிடைக்காமல் நான் சாப்பிட மாட்டேன்.... என்னை எல்லா விஷயத்துலையும் உங்க விருப்பத்துக்கு ஆட்டு விக்கலாம்ன்னு நினைக்காதீங்க “ என்று கோவமாக கூறியவளை அமைதியாக பார்த்தவன், “ சரி இப்போ என்ன நாம எங்க இருக்கோம்ன்னு உனக்கு தெரியனும் அவ்வளவுதான சரி அப்ப என் கூட வா “ என்றவன் அவளின் கையை பிடித்து வெளியில் அழைத்து சென்றான்.


வெளியே வந்தவன் வாசலில் இருந்த ஜீப்பில் அவளை அமர வைத்து விட்டு மறுப்பக்கம் வந்து அமர்ந்தான். வண்டி நகர ஆரம்பித்ததும் சுற்றி இருக்கும் இடத்தை பார்த்து கொண்டிருந்தாள். அந்த இடமும் சூழ்நிலையும் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அந்த வீட்டை சுற்றி தோட்டம் இருந்தது அதை தாண்டி சில அடி தூரத்தில் காடாகவே தெரிந்தது. நடுவில் இருந்த பாதையில் வண்டி சென்று கொண்டிருந்தது. அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அங்கு வேறு எந்த வீடும் மனிதர்களும் இருக்கதற்கான அறிகுறியே தெரியவில்லை. அதை புரிந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதிற்குள் பயம் சூழ ஆரம்பித்தது. சில நிமிடங்களுக்கு பின்பு ஜீப் நின்றதும் அந்த சத்தத்தில் நிகழ்காலத்திற்கு வந்தவள் அருகில் வந்த ஆதி அவளை கீழே இறங்குமாறு கூறினான்.


இன்றைய நாள் உண்மையில் அவளுக்கு அதிர்ச்சிகள் நிறைந்த நாளாக தான் இருக்க வேண்டும் போல தான் தோன்றியது அதற்கு சான்றாக அவள் கண் முன்னால் இருந்த காட்சியை கண்டதும் அதிர்ச்சியில் தலையெல்லாம் சுற்றுவதை போல் இருந்தது.


அவள் அதிர்ச்சி அடையும் அளவிற்கு அங்கு அவள் கண்டது என்ன.... இனி இவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் நிகழ போகும் மாற்றங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள நாமும் காத்திருக்க தான் வேண்டும்....



என் மேலே பாட்டு எழுது

உயிர் காதல் சொல் எடுத்து

நம் உயிரை தேர்ந்தெடுத்து

அவன் போட்டான் கையெழுத்து

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

என்னுயிர் என்றும் உனை சேரும்

எத்தனை காலம் வாழ்ந்தாலும்

என்னுயிர் சுவாசம் உனதாகும்.....


நிஜத்தை தேடும்....


உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்....

 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 28


ஜீப்பை நிறுத்திய ஆதி வானதியின் கையை பிடித்து அழைத்து கொண்டு வந்து எதிரில் தெரிந்த காட்சியை கைகளால் காண்பித்தான். அதை கண்ட வானதியின் கண்கள் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் விரிந்தது. காரணம் அவள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடலை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. சிறிது தூரம் தள்ளி சென்று அனைத்து திசைகளையும் பார்த்த போதும் அங்கேயும் கடலுக்கு எல்லை என்பதே இல்லை என்பதை நிருப்பிபதை போல இருந்தது. அதை பார்க்கும் போது உண்மையில் அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அப்போது பின்னால் இருந்த ஆதி வானதிக்கு அருகில் வந்து அவளின் தோளின் மீது தன் தாடையை வைத்து, “ நம்ம இருக்க இந்த இடத்தை சுற்றி நாலாப்புறமும் கடல் தான் செல்லம்.... கண்ணுக்கு எட்டுற வரைக்கும் கடல் தான்..... எப்படி இருக்கு வியூ ரொம்ப சூப்பரா இருக்கு இல்ல.... சரி வாங்க மேடம் வீட்டுக்கு போய் பேசலாம் “ என்று அவன் கூறியதும் மனதிற்குள் ஆயிரம் கேள்வி இருந்தாலும் பதிலுக்கு எதுவும் பேசாமல் அமைதியாகவே அவனுடன் சென்றாள்.


வீட்டிற்குள் நுழைந்த உடனே, “ இது....இது இந்த இடம் எங்க.....இருக்கு “ என்று கேட்டாள் வானதி. அவள் சொன்னதை கேட்டு சிரித்து கொண்டே, “ நாம இப்போ சவுத் பசிபிக் பெருங்கடல்ல இருக்க ஒரு அழகான தீவுல இருக்கோம்..... இந்த இடத்துக்கு வரனும்னா அதுக்கு ரெண்டே வழி தான் “ என்றவன் அவளின் முகத்துக்கு நேராக நின்று கண்களை பார்த்து கொண்டே, “ ஒன்னு ஆகாய மார்க்கமா வரனும் இல்லனா கடல் வழியா வரனும்.... இந்த தீவுக்குள்ள என்னோட அனுமதி இல்லாமா யாராலும் உள்ள வரவும் முடியாது வெளிய போகவும் முடியாது.... இந்த இடம் முழுக்க சிசிடிவி பிக்ஸ் பண்ணி இருக்கேன். அது எங்க இருக்குன்னு என்னை தவிர வேற யாருக்கும் தெரியாது “ என்றான்.


வானதி, “ நீங்க என்கிட்ட முன்னாடியே இதப்பத்தி சொல்லி இருக்கலாம் இல்ல “ என்று கேட்டவளை பார்த்து நக்கலாக சிரித்த ஆதி , “ நாம ரெண்டு பேரும் வெளிய போலாம்ன்னு சொன்ன உடனே நீ கிளம்பி இருப்பியா “ என அவன் சொன்ன உடன் அதற்கு பதில் அளிக்க முடியாமல் முகத்தை வேறு புறம் திருப்பியவளின் முன் சென்ற ஆதி, “ இதுக்கு உன்னால பதில் சொல்ல முடியாது..... என் கூட வாராம இருக்க என்னயெல்லாம் பண்ண முடியுமோ அது எல்லாம் நீ செய்வ.... அதனால தான் உனக்கு தெரியாம இங்க கூட்டிட்டு வந்தேன் “.
வானதி, “ இப்படி இங்க அவசரமா வர வேண்டிய அவசியம் என்ன “.


ஆதி, “ அதுக்கு காரணம் நீ தான்.... நீ மட்டும் தான்” என்று கத்தியவனை அதிர்ச்ச்சியுடன் கண்ட வானதி, “ நான் என்ன பன்னேன் “ என்று கேட்டவளை கொலைவெறியுடன் பார்த்தான் ஆதி.


ஆதி, “ மேடம்க்கு என்ன பன்னீங்கன்னு தெரியல... நான் உன்கிட்ட என்ன சொன்னேன் இது ஒன்னும் பொம்மை கல்யாணம் இல்லை... இது ஒரு உண்மையான கல்யாணம் மனைவியா உன்னோட கடமைய நீ செய்யணும்ன்னு சொன்னேன். அதுக்கு நீயும் சரின்னு சொன்னயில.... ஆனா நீ இந்த ஒரு வாரம என்கிட்ட பேசவே இல்ல... என்னை விட்டு விலகி போறதுலேயே குறியா இருந்த நான் வேற என்னதான் பன்றது.... எனக்கு இந்த அடுத்த ஜெனமத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல.... ஆசைப்பட்ட வாழ்க்கையை இந்த ஜென்மத்துலேயே வாழ்ந்து பாக்கணும் அதுனால தான் உன்னை இப்படி கூட்டிட்டு வர வேண்டியதா போச்சு “ என்றவன் அவள் குழப்பத்துடன் பார்ப்பதை கண்டு , “ நீ என் கூட இருக்கணும்... யாரோட தொந்தரவும் இல்லாம நீயும் நானும் மட்டும் ஒரு இடத்துல இருக்கணும்ன்றது என்னோட கனவு அதனால தான்.... நீ கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் கிடைச்சிடுச்சுன்னா சாப்பிட போலாமா... நேத்து நைட்ல இருந்து நான் சாப்பிடல வா ஆருந்யா “ என்று கூறி விட்டு எதுவும் நடக்காததை போல் முன்னால் நடந்தவன் வானதியின் குரலில் திரும்பினான்.


வானதி, “ எல்லாமே உங்க இஷ்டம் தான... கல்யாணம் பன்றதுல இருந்து இப்பவரைக்கும் உங்க விருப்பப்படி என்னை ஆட்டு விக்கிறீங்க.... எனக்குன்னு ஒரு மனசு இருக்குன்னு ஏன் உங்களுக்கு தோணல.... “ என்று கோவமாக ஆதியை பார்த்து கத்தியவள் வேகமாக கீழே இருந்த அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள்.


அவள் சாப்பிடாமல் சென்றதை கண்டு கதவருகில் நின்று, “ என் மேல கோவம் இருந்தா அதை என் மேல காட்டு அதை விட்டுட்டு சாப்பாடு மேல காமிக்க கூடாது... வந்து சாப்பிடு ஆருந்யா “ என்று அவன் கூறிய எதற்கும் உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லாததால் அங்கிருந்து சென்று விட்டான். உள்ளே சென்ற வானதிக்கு கோவமாக வந்தது, ‘ நீங்க சாப்பிட சொன்னா சாப்பிடனுமா என்னால முடியாது... செஞ்ச தப்புக்கு ஒரு சாரியாவது சொன்னாரா அதுவும் இல்ல எல்லாம் திமிர் ‘ என்று மனசுக்குள் திட்டி கொண்டிருந்தாள். நேரம் செல்ல செல்ல அவளுக்கும் பயங்கரமாக பசிக்க ஆரம்பித்தது. வெளியே செல்லாமா வேண்டாம என்று சிந்தித்து கொண்டிருந்தவள் இதற்கு மேல் தாங்காது என்று நினைத்தவள் எழுந்து சென்று கதவை திறந்து பார்த்தால் ஆதி அங்கு நடு ஹாலில் ஒரு நாற்காலியில் அமர்ந்து இருந்தான்.


‘ என்ன இவர் வேற இங்கேயே உக்காந்து இருக்கார்... நாம எப்படி போய் சாப்பிட போறது.... கோவமா பேசிட்டு போய்டோம்....இப்போ பசிக்குதே... அவர் தான் சாப்பிட்டு இருப்பாருல அதனால நாம போய் சாப்பிடுவோம் ‘ என்று எண்ணியவள் அவனை கடந்து சென்று டைனிங் டேபிளில் அமர்ந்து அங்கிருந்த பாத்திரங்களை திறந்து பார்த்தால் அதில் எதுவும் எடுக்கப்படாமல் அப்படியே இருந்தது. அதை கண்டவள், ‘ இவர் இன்னும் சாப்பிடல போல இருக்கே.... இப்போ என்ன பன்றது. அவருக்கு வேனும்ன்னா அவரே சாப்பிடுவாறு ‘ என்று நினைத்தப்படி தட்டில் உணவை பறிமாறி விட்டு அவனை பார்த்தாள். அறையை விட்டு வந்ததில் இருந்து அவள் செய்வதையே அசையாமல் பார்த்து கொண்டிருந்தான் ஆதி.


அவன் அவளையே பார்ப்பதால் அவளால் உண்ண முடியவில்லை. நேற்றில் இருந்து சாப்பிட வில்லை என்று சொன்னவன் இப்போது பசியோடு அமர்ந்து இருக்கும் போது உண்ண அவள் மனம் இடம் கொடுக்க வில்லை. அதனால் எழுந்து அவள் அருகில் வந்து, “ வந்து.... சாப்பிட வாங்க “ என்று அழைத்தாள்.


அவள் அருகில் வருவதை கண்டவன் அதற்கான காரணத்தை அறிந்து கொண்டான். எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருப்பதை கண்டவள் சிறிது கடுப்புடன் , “ கோவப்பட வேண்டியவளே நான் தான்.... நீங்க ஏன் இப்படி உக்காந்து இருக்கீங்க. வாங்க வந்து சாப்பிடுங்க “.
ஆதி, “ நான் கூப்பிடும் போது நீ வந்தியா.... நான் மட்டும் நீ சொன்ன உடனே வரனுமா முடியாது “ என்று முகத்தை திருப்பியவனை பார்க்கும் போது இவனை ஏன் தான் அழைத்தோம் என்று வானதிக்கு கடுப்பாக இருந்தது. இருந்தாலும் அவனை விட்டு உண்ணவும் மனம் வரவில்லை.


வானதி, “ இப்போ உங்களுக்கு என்ன தான் வேணும் “ என்று சலிப்பாக கேட்டாள்.


ஆதி, “ சரி நான் சாப்பிடனும்ன்னா நீ எனக்கு ஊட்டி விடனும் இல்லனா எவ்வளவு நாள் ஆனாலும் இப்படியே பட்னியா இருப்பேன் “ என்று கூறியவனின் குரலில் இருந்த உறுதியை கண்டு அதிர்ந்தாள்.


அவனின் பிடிவாதத்தை பற்றி தெரிந்ததால் வேறு வழி இல்லாமல் தட்டை எடுக்க சென்றாள். எப்படியும் இவள் ஊட்டி விட மாட்டாள் என்று நினைத்தவன் சோர்வாக முகத்தை திருப்பும் போது அவன் முன்னால் ஒரு கை உணவை நீட்டி கொண்டு இருந்ததை கண்டு இனிமையாக அதிர்ந்தவன். மகிழ்ச்சியோடு அவளை நிமிர்ந்து பார்த்து கொண்டே அதை வாங்கியவனுக்கு உண்மையில் மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. அவள் கோவமாக பேசி விட்டு சென்ற பின் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தவனுக்கு இவளை சிறிது மிரட்டி தான் வழிக்கு கொண்டு வர வேண்டுமோ என்ற எண்ணம் தோன்றியது.


அவளை அழைத்து கொண்டு டைனிங் டேபிளில் இருந்த இருக்கையில் அமர வைத்து அவளுக்கு எதிராக அவள் ஊட்டுவதற்கு வசதியாக அமர்ந்தான். அவள் கடமையே கண்ணாக அவனுக்கு ஊட்டி கொண்டிருந்தாள். ஆனால் அவனோ உணவோடு சேர்த்து அவளையும் தன்னுடைய கண்களால் அளவெடுத்து கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு அவள் கையை தடுத்து விட்டு உணவை எடுத்து அவள் வாயருகே நீட்டினான். ஆதியின் கையையும் அவனையும் கண்டவள் மனதிற்குள் சொல்ல முடியாத உணர்வு எழுந்தது. வெகு நேரமாக அவன் நீட்டிக் கொண்டிருப்பதால் அவளும் அதை வாங்கி கொண்டாள். ஆதியும் சந்தோஷத்தோடு அவளுக்கு ஆசையாக உணவை கொடுத்தான். இருவரும் உண்டு முடிப்பதற்கும் நேரம் இரவை தொடுவதற்க்கும் சரியாக இருந்தது.


அறைக்குள் நுழைந்த வானதி எப்போதும் போல் ஒரு பக்கமாக படுத்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து அவளை ஒரு வலிய கரம் ஒன்று பின் பக்கமாக இழுத்தவுடன் அதிர்ந்தவள் வேகமாக எழுந்து அமர்ந்து ஆதியை முறைத்தாள். அவள் முறைப்பதை கண்ட ஆதிக்கு சிரிப்பாக வந்தது. அவள் சிரிப்பதை பார்த்த வானதி, “ எதுக்கு இப்படி பன்றீங்க “ என்று கேட்டாள்.


ஆதி, “ எப்படி பன்றேன்.... நான் ஒன்னுமே பன்னலையே “ என்று அவளை பார்த்து கண்ணடித்து கொண்டே பதிலளித்தான். அதை கண்டு பதட்டம் அடைந்தவள் அவனிடம் என்ன பதில் சொல்வது என்று சிந்தித்தவளை கண்ட ஆதி அவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன், “ இங்க பாரு ஆருந்யா.... நான் ஜஸ்ட் உன்னை கட்டிப்பிடிச்சிட்டு தான் தூங்க போறேன்... நீ சும்மா எல்லாத்துக்கும் தடை சொல்லிட்டு இருந்தா அப்புறம் நீ எது நடந்துடுமோன்னு நினைக்கிறியோ அது நடந்துடும்.... பாத்துக்கோ. நான் எதுக்கும் பொறுப்பாக மாட்டேன் “ என்று அவன் கூறியதும் அவசரமாக படுத்து கண்ணை இறுக்கமாக மூடி கொண்டு படுத்தவளின் வேகத்தை கண்டு சிரித்தவன் அவளை பின் பக்கமாக அணைத்து கொண்டான். முதலில் அவனின் ஸ்பரிசத்தில் ஒன்ற முடியாமல் நெளிந்தவள் பிறகு தன்னை அறியாமல் தூக்கத்தை தழுவினாள். ஆதியும் அவளின் ஸ்பரிசத்தில் தன்னை மறந்து உறங்க ஆரம்பித்தான்.


அன்று ஆதியின் ரிசப்ஷன் சென்று வீட்டிற்குள் நுழைந்த உடனே விஸ்வநாதன் அவரது மனைவி மற்றும் சந்திரிகாவின் அண்ணனையும் ஒய்வு எடுக்க உள்ளே செல்ல விடாமல் நிறுத்தி கேள்விகளால் தூளைத்து கொண்டிருந்தார். அவர் முக்கியமாக கேட்டது வான்மதி இருக்கும் இடம் முதலிலே தெரியுமா மற்றும் அவர் இறந்தது உங்களுக்கு தெரியுமா என்பது தான். நாதன் இப்படி நேரடியாக கேட்பார் என்று தெரியாததால் என்ன சொல்லி சாமாளிப்பது என புரியாமல் நின்று இருந்தனர். அதை வைத்தே இது அனைத்துக்கும் இவர்கள் தான் காரணமாக இருப்பார்கள் என்பது அவருக்கு தெளிவாக புரிந்தது. அவர்கள் இருவரின் அருகில் சென்று, “ உங்களை பத்தி எனக்கு நல்லவே தெரியும்.... ஆனா ஒன்னு வான்மதியோட இறப்புக்கு நீங்க தான் காரணமா இருப்பீங்களோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு அது மட்டும் உண்மையா இருந்துச்சுனா..... நான் எப்பவும் போல உங்கள மன்னிப்பேன்ன்னு நினைக்காதீங்க “ என்று எச்சரித்தவர் மீண்டும் அவர்களை கோவமாக பார்த்து , “ இன்னொரு முக்கியமான விஷயம் வானதியோட வாழ்க்கையில எதுவும் பிரச்சனையை உருவாக்கலாம்ன்னு உங்களுக்கு எண்ணம் இருந்தா அதை இப்பவே அழிச்சிடுங்க.... இல்ல நான் அப்படி தான் செய்வேன் நீங்க நினைச்சா எப்படியும் ஆதி சும்மா விடமாட்டான்....அவன பத்தி எனக்கு நல்லவே தெரியும்..... இந்த முறை நான் அமைதியா இருப்பேன்னு நினைக்காதீங்க அவனுக்கு முன்னாடியே உங்க உயிர நான் எடுத்துடுவேன் அதை உங்க மண்டையில ஏத்திக்கொங்க “ என்று அவர் கர்ஜித்ததை கேட்ட அங்கிருந்த அனைவருக்கும் மனதில் ஒரு நிமிடம் பயம் உருவாக தான் செய்தது.


கோவமாக கத்தி விட்டு தன்னுடைய அறைக்குள் சென்று அவர் கதவடைத்த சத்தத்தில் சுயநினைவுக்கு வந்தவர்கள் அவரவர் அறைகுள் சென்று முடங்கி விட்டனர். மிகவும் குழப்பத்தில் இருந்தது சாரா மட்டும் தான். அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இதுவரை சந்திரிகா கோவப்பட்டு தான் பார்த்திருக்கிறாள். என்ன நடந்தாலும் நாதன் அமைதியாகவே சென்று விடுவார். தான் அவரை பலமுறை மதிக்காமல் நடந்து கொண்டாலும் அவர் அவள் ஆசைப்பட்டது அனைத்தையும் செய்து இருக்கிறார். அப்படிப்பட்டவர் இன்று யாரோ ஒரு பெண்ணிற்கு பரிந்து பேசியது அவளுக்கு மிகவும் கோவத்தை ஏற்ப்படுத்தியது. அதுவும் இல்லாமல் இன்று அவர் கோவமாக பேசியது ஒரு பக்கம் இருந்தாலும் அதற்கு தன்னுடைய அம்மாவும் மாமாவும் எதுவும் பேசாமல் இருந்தது வேறு அவளுக்கு குழப்பத்தை உண்டாக்கியது. இதை பற்றி தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று உறுதியாக நினைத்து கொண்ட பின்பு தூங்க சென்றாள். அந்த உண்மையை தெரிந்து கொண்ட பின்பு சாராவின் மனநிலையில் மாற்றம் ஏற்படுமா......


அடுத்த நாள் காலை எப்போதும் போல் விடிந்தது, காலை எழுந்ததில் இருந்து வானதியை ஒரு வேலை கூட செய்ய விடாமல் எல்லாவற்றையும் ஆதியே செய்தான். வானதியும் எதுவும் பேசாமல் அமைதியாகவே சாப்பிட்டு முடித்து எழுந்தவளிடம் தீவை சுற்றி பார்க்க செல்லலாமா என்று அழைத்தான். இங்கேயே இருப்பதற்கு வெளியில் சென்று வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால் சரியென்று தலையசைத்தவளை கண்ட ஆதி மகிழ்ச்சியுடன் வெளியே நின்று கொண்டிருந்த ஜீப்பில் அமர வைத்து அழைத்து சென்றான். சிறிது நேரத்தில் வண்டி நின்றதும் எதிரில் இருந்த காட்சி அவளின் முகத்தில் உற்சாகத்தை ஏற்ப்படுத்தியது என்று கூறினால் மிகையாகாது. அவள் அருகில் சென்ற ஆதி அவளின் கையை பிடித்து கொண்டு முன்னால் நடந்து கொண்டே, “ இது நானே உருவாக்குன தோட்டம்... இல்ல இல்ல நந்தவனம்ன்னு கூட சொல்லலாம். எப்படி இருக்கு “.


தன் கண் எட்டும் தூரம் வரை பல வகையான மலர்களை பார்த்து, “ ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.... உங்களுக்குள்ள இப்படி ஒரு ரசனை இருக்கும்ன்னு என்னால நம்பவே முடியல... இந்த பூவெல்லாம் வித்தியாசமா இருக்கு பெயர் என்ன “ என்று கேட்டாள்.


அவளை அழைத்து கொண்டு ஒவ்வொரு மலர்களாக காண்பித்து அதை பற்றி கூறினான். அவளும் பொறுமையாக அதை கேட்டு கொண்டிருந்தாள்.


( பூக்கள் பூமியில் சொர்க்கத்தின் எச்சங்கள். இந்த அற்புதமான தாவரங்கள் தான் நம் உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை நமக்கு நினைவுபடுத்திகிறது.


ரெயின்போ ரோஸ் பீட்டர் வான் டி வெர்கன்


images (26).jpeg

இயற்கையாகவே எந்த சந்தர்ப்பத்திலும் நம்மால் ரோஜாவை புறக்கணிக்க முடியாது. இது ஒரு வானவில் ரோஜா. டச்சு மலர் எஜமானர்களின் முயற்சியால் இந்த வகை பெறப்பட்டது அதன் படைப்பாலரின் பெயரையே இந்த மலருக்கு சூட்டப்பட்டது. இந்த பூவில் வானவில்லின் அனைத்து வண்ணங்களும் உள்ளன.


ஜிப்ரால்டர் பிசின்


images (27).jpeg


images (28).jpeg


ஸ்மோலெவ்கா மிகவும் அரிதான வற்றாதது , முக்கியமாக வனப்பகுதிகளில் சுமார் 40 செ. மீ உயரம் கொண்டது. அதன் நிறம் இளஞ்சிவப்பு முதல் வெளிர் ஊதா வரை இருக்கும்.


ஸ்ட்ராங்கிலோடோன்
மேக்ரோபோட்ரிஸ்


download (5).jpeg

பச்சை- நீல பூக்கள் இருப்பதால் அதற்கு ஜேட் வைன் என்று பெயர் வந்தது. இவை மிகவும் அழகான மற்றும் நேர்த்தியான வெப்பமண்டல ஏறும் தாவரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஓவ்வொரு தாவரமும் 20 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது மற்றும் 90க்கும் மேற்ப்பட்ட பூக்களை கொண்டிருக்கும்.


டூலிப்ஸ்



images (29).jpeg


இந்த தாவரத்தில் ஊதா நிற பூக்கள் கொண்ட பல வகைகள் இல்லை என்றாலும் அவை மிகவும் ஈர்க்க கூடியவை. பூக்கள் பெரும்பாலும் வெள்ளை விளிம்புடன் இருக்கும். )



இன்னும் நிறைய வகையான பூக்கள் அங்கு இருந்தது. பல வகையான ரோஜாக்கள் இருந்தது. அதற்கு நடுவில் நின்று இருந்த வானதியிடம் ஆதி, “ மூணு வருஷத்துக்கு முன்னாடி உன்னை சந்திச்சதுக்கு அப்புறம் தான் இந்த தீவ வாங்கினேன்.... இங்க இருந்த காடையும் மலையையும் பார்த்த போது உன் முகம் தான் என் கண்ணுக்கு தெரிஞ்சது.... அதனாலேயே இந்த இடம் என்னோட மனசுக்கு ரொம்ப நெருக்கமான இடமா மாறுச்சி.... இந்த பூக்கள் எல்லாமே உனக்காக தான் வெச்சேன்.... நீ இயற்கையை எந்த அளவுக்கு ரசிக்கிறன்னு எனக்கு தெரியும் அதனால இதை உனக்கு சப்ரைஸா காமிக்கனும்ன்னு நினைச்சேன்.... இந்த தீவு மொத்தமும் உன்னோட நினைவா உனக்காக நான் உருவாக்குனது.... நீ தான் இந்த தீவோட ராணி அதனால தான் இந்த இடத்துக்கு குயின் ஆஃப் ஐலேண்ட் அப்படின்னு பெயர் வெச்சேன் “ என்று அவன் கூற கூற இப்படி ஒருவனால் காதலிக்க முடியுமா தான் எவ்வளவு கோவப்பட்டாலும் அவன் ஒரு நாள் கூட தன்னுடைய மனசு நோக்கும் படி நடந்து கொண்டது இல்லை. அவன் மீது கோவம் இருந்தாலும் நானும் அல்லவா அவனை காதலித்தேன் பிறகு ஏன் இவ்வாறு நடந்து கொண்டேன் என்று நினைத்து கொண்டு இருந்தாள். இப்படி நிறைய குழப்பம் இருந்தாலும் அவன் கூறியதையும் அந்த மலர்களையும் பார்க்கும் போது உண்மையில் மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது.


அந்த தோட்டத்திற்குள் சென்று ஆசையாக அங்கிருந்த பூக்களை வருடிக்கொண்டிருந்ததையும் அவள் முகத்தில் தோன்றும் பாவனைகளையும் தன்னுடைய கைப்பேசியில் படம் பிடித்தி கொண்டிருந்தான். பல நாட்கள் கழித்து அவள் மனம் அமைதி அடைந்ததை போல் வானதிக்கு தோன்றியது. இதற்கு காரணமான ஆதியின் அருகில் சென்று , “ ரொம்ப தேங்க்ஸ்.... நிறைய நாளுக்கு அப்புறம் எனக்கு சந்தோஷமா இருக்கு “ என்று கூறியவளின் கையை பிடித்து, “ உன்னோட இந்த சந்தோஷத்திற்காக நான் என்னவும் செய்வேன் “.


வானதி, “ உங்களுக்கு என் மேல கோவமோ வருத்தமோ வராதா “.


ஆதி, “ நான் உன் மேல கோவப்படவே மாட்டேன்னு என்னால சொல்ல முடியாது ஆனா அது கொஞ்ச நேரம் தான்.... என்னை பொறுத்தவரை நீயும் நானும் வேற வேற இல்லை.... நீ தான் நான்.... நான் தான் நீ “ என்றவன் அவளின் நெற்றியோடு நெற்றி சிரித்து கொண்டு முட்டியவன், “ உனக்கு என் மேல கோவம் வருத்தம் எல்லாம் இருக்குன்னு எனக்கு தெரியும்.... அதுக்கு காரணம் நான் தான்னும் தெரியும்.... இதுவரைக்கும் இந்த ஆதித்ய அருள்மொழி வர்மன் யார்கிட்டயும் கேட்காதது உன்கிட்ட கேட்கிறேன்.... இதை நான் சொல்றதுனால உனக்கு நிம்மதி கிடைச்சி நீ பழைய மாதிரி மாறுவனா நான் கேட்கிறேன் “ என்று கூறியவன் அவள் முன்னால் மண்டியிட்டு அங்கிருந்த மலர்களின் சாட்சியாக, “ என்னை மன்னிச்சிடு... ரியலி சாரி ஆருந்யா. “ என்று அவன் சொன்னதும் அவசரமாக அவன் தோள்களை பற்றி எழுப்ப முயன்றாள் ஆனால் அவனோ விடப்பிடியாக முட்டி போட்டு, “ நான் பேசறத தடுக்காத.... நான் செஞ்சது என்னை பொறுத்தவரை தப்பு இல்லனாலும் அது உன் மனசை காயப்படுத்திடுச்சு.... நான் என்ன செஞ்சாலும் அது உன் மேல இருக்க காதல்ல செஞ்சது தான். என் மேல கோவம் இருந்த என்னை திட்டு அடி ஆனா என்னோட பழைய ஆருந்யாவா என்கிட்ட வந்துடு. என்னோட வாழ்க்கையில எனக்குன்னு ஆசைப்பட்டது உன்னை மட்டும் தான். உன்கிட்ட மன்னிப்பு கேட்கறதுல எனக்கு எந்த ஈகோவும் இல்லை..... இதுக்கு மேல எனக்கு என்ன பன்றதுன்னும் தெரியலை “ என்றவன் எழுந்து தனக்கு முன்னால் இருந்த மலர்களை பார்த்து கொண்டே, “ காதல் அப்படின்றது அடிக்கடி சொல்லிட்டு இருக்கறது இல்லை என்னை பொறுத்தவரை உணரனும்.... இதுக்கு மேலையும் உனக்கு என் கூட வாழப்பிடிக்கலனா சொல்லிடு.... நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் ஆனா கடைசிவரை நீ என்னோட பொண்டாட்டியா தான் இருக்கணும் அதுல எந்த மாற்றமும் இல்லை.... ஒரு வேலை இந்த ஜென்மத்துல எனக்கு சந்தோஷமான வாழ்க்கை இல்லன்னு நினைச்சிகிறேன் “ என்று வருத்தமாக கூறினான்.


முதலில் அவன் தன் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதையே அவளால் நம்ப முடியவில்லை. திமிரும் கர்வமும் ஒருங்கே கொண்டவன் அப்படிப்பட்டவன் இன்று தன்னிடம் மன்னிப்பு கேட்டவுடன் அவளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவளுக்கு அவன் மீது பயங்கர கோவம் இருந்தது சிறிது நாட்கள் கழித்து பிரிந்து விடலாம் என்ற எண்ணத்தொடு தான் திருமணம் செய்து கொண்டாள். ஆனால் அதன் பிற்கு அவள் மீதான அவனின் அன்பும் அக்கறையும் அவள் அடி ஆழ்மனதில் இருந்த காதலை தட்டி எழுப்பிவிட்டது. நாளுக்கு நாள் அவன் மீது இருந்த கோவம் வருத்தமாக மாறியது தன்னிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லையே என்று அதுவுமில்லாமல் தான் அவ்வளவு பலவீனமானவளா என்ற எண்ணம் ஒரு புறம் இருந்தது. ஆனால் இந்த நிமிடம் அவன் பேசியதை கேட்டவுடன் தன்னை உயிராக காதலிக்க தனக்காக எதுவும் செய்ய ஒருவர் இருக்கிறார் என்பதை அவள் புரிந்து கொண்டாள். அவன் கடைசியாக கூறி வருத்தப்படுவதை கேட்டவள் கண்களில் கண்ணீருடன் அவனை பின்னிருந்து அணைத்து கொண்டாள்.


தான் இவ்வளவு சொல்லியும் அவள் தன்னை புரிந்து கொள்ளவில்லையே தன்னுடைய அன்பை வெளிப்படுத்துவதில் எங்கு தவறு செய்தோம் என்று அவன் நினைக்கும் போது அவளாக முதன் முறையாக அணைத்ததும் அவனுக்கு முதலில் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றது ஒரு நிமிடம் தான் பிறகு அவளை முன்னால் இழுத்து தன் முன்னால் நிறுத்தி அவள் கண்களை பார்த்தவனுக்கு கண்ணீரோடு அவன் மீது உள்ள காதலும் தெரிந்த போது அவன் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை இருந்தாலும் அவள் விழிநீரை துடைத்தவன், “ உன் கண்ணுல கண்ணீர பாக்குற ஒவ்வொரு நிமிஷமும் நான் வாழ்றதுல அர்த்தமே இல்லன்னு சொல்லாம சொல்றது மாதிரி இருக்கு “ என்றவனின் கையை பிடித்த வானதி, “ யாரோட மனசையும் காயப்படுத்த கூடாதுன்னு நினைச்ச நானே உங்கள ரொம்ப காயப்படுத்திட்டேன்..... என்னை மன்னிச்சிடுங்க. நான் கொஞ்சம் நிதானமா யோசிச்சி இருக்கணும் ஆனா எனக்கு யார் மேலையோ இருந்த கோவத்தை உங்க மேல காட்டிட்டேன்.... எங்க என் அம்மாவோட வாழ்க்கை மாதிரி ஆயிடுமோன்னு பயந்துட்டேன்..... இப்போ உங்களை நம்புறேன் “ என்று கூறியவளை தன்னுடைய மார்ப்போடு இறுக்கமாக அணைத்து கொண்டான் ஆதி. வானதியும் காதலோடு அவனை அணைத்து கொண்டாள்.


இரவில் அந்த மாளிகையின் மொட்டை மாடியில் இருந்த ஒரு ஊஞ்சலில் அமர்ந்திருந்த வானதி காலையில் நடந்ததை பற்றிய சிந்தனையில் இருந்தாள். அவன் மேல் உள்ள கோவத்தை தள்ளி வைத்து இருந்தாலும் இன்னும் அவனிடம் மனைவியாக நெருங்க ஏதோ ஒன்று தடையாக இருந்தது. அந்த எண்ணமே அவனிடம் சரியாக பேச விடாமல் தடுத்தது. இப்படி சிந்தனையில் இருந்தவளின் அருகில் அமர்ந்த ஆதி இரவின் அழகில் அந்த இடம் முழுவதும் பல வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டு இருந்ததையும் அதை விட இந்த ரசனைகளின் நடுவே தன்னுடைய தேவதையின் இருப்பு தான் இன்னும் அழகை கூட்டுவதை போல் இருந்தது. அவள் என்ன யோசனையில் இருப்பாள் என்பதை ஆதி ஒர் அளவுக்கு புரிந்து வைத்து இருந்தான். ஆருந்யா என்ற ஆதியின் மென்மையான குரலில் திரும்பினாள் வானதி.


ஆதி, “ நீ இன்னும் பாக்காத ஒன்னு இருக்கு வா காட்றேன் “ என்று எழுந்தவன் அவள் முன்னால் கையை நீட்டினான். அவன் எதற்கு அழைகிறான் என்று தெரியவில்லை என்றாலும் அவனின் கை மீது தன்னுடைய கையை வைத்தாள். அதை கெட்டியாக பிடித்து கொண்ட ஆதி அவளை அந்த மொட்டை மாடியின் இன்னொரு பக்கத்திற்கு அழைத்து சென்றான். அங்கு இருந்த மரத்தில் இருந்த மலர்கள் அந்த இருட்டில் கூட அவ்வளவு அழகாக மலர்ந்து இருந்தது. அந்த அழகிய மலரின் பெயர் கடுபுல்.


கடுபுல்


download (3).jpeg

images (24).jpeg


கடுபுல் இரவு ராணி என்றும் சந்திரனுக்கு கீழே உள்ள அழகு என்றும் அவரது தாயகத்தில், இலங்கையில் -சொர்க்கத்தில் இருந்து வரும் மலர் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை கற்றாழை தனித்துவமானது. இது ஒரு முறை மற்றும் மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டும் பூக்கும் - நள்ளிரவு முதல் விடியல் வரை. இந்த மலர் விலைமதிப்பற்றதாகவும் தனித்துவமானதாகவும் கருதப்படுகிறது.


ஆதி, “ இந்த பூ ரொம்ப அழகா இருக்குல “ என்றவனின் கேள்விக்கு அதை வருடியபடியே ஆமாம் என்று பதிலளித்தாள் வானதி. அவள் அந்த மலரை ரசிக்க இவன் அவளை ரசித்து கொண்டு இருந்தான். அவனின் பார்வையை கண்டு கொண்ட வானதி அதன் தாக்கத்தில் அவனை பார்க்க முடியாமல் தலைகுனிந்தாள். அவளின் முகத்தை தன்னை நோக்கி உயர்த்தியவன், “ உன் மனசுல என்ன ஓடுதுன்னு எனக்கு புரிது. நீ இதுல கவலைப்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லை செல்லம்..... எப்போ என்னை உன்னோட கணவனா உன் மனசு முழுமையா ஏத்துக்குதோ அப்போ மத்தது எல்லாம் தன்னால நடக்கட்டும்... அதுவரைக்கும் நாம சந்தோஷமா காதலிக்கலாம்.... என்ன உனக்கு அதுல எந்த கஷ்டமும் இல்லையே “ என்று கண்ணில் காதலோடு கேட்டவனை பார்க்கும் போது வானதிக்கு பிரம்மிப்பாக இருந்தது. எதை பற்றி அவனிடம் எப்படி பேசுவது என்று யோசித்து கொண்டு இருந்தாளோ அதற்கு எந்த அவசியமும் இல்லை என்பதை போல் பேசியவனை பார்த்து இல்லை என்றவள். அவன் உயர்த்திற்கு எம்பி அவன் கன்னத்தில் தன்னுடைய முத்தத்தை பட்டும் படாமல் அளித்தவள் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெட்கத்தோடு கீழே ஓடி விட்டாள்.


அவள் இவ்வாறு செய்வாள் என்று எதிர்பார்க்காத ஆதி முதலில் அதிர்ந்து அவளை பார்ப்பதற்குள் ஒடியவளின் கொலுசு சத்தத்தில் சிரித்தவன் பிறகு கன்னத்தில் கை வைத்து அதன் மென்மையை கண்ணை மூடி ரசித்தவன் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தவனின் எண்ணம் முழுவதும் அவனின் மனைவியே நிறைந்திருந்தாள். இனி அவர்களின் வாழ்வில் நிகழ போவது என்ன என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.....



( இந்த தீவு முழுவதும் என்னுடைய கற்பனைகளால் உருவானது).


அடி உன்னோடு வாழும்

ஒவ்வொரு நாளும்

இறகை போல பறக்கிறேன்

நான் உன்னோடு வாழும்

நொடியில் ஏனோ மீண்டும்

முதல் முறை பிறக்கிறேன்

உன் பார்வை என்னை கொல்ல

சாய்ந்தேனே நானும் மெல்ல

நீதான் என் மன்னவா

நீதான் என் மன்னவா....


நிஜத்தை தேடும்....


உங்களின் கருத்துக்களை

“ என் நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்....
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
த்தியாயம் 29


அன்றைய நாளுக்கு பிறகு வந்த நாட்களும் எவ்வாறு சென்றது என்று கேட்டால் இருவருக்கும் தெரியாது. ஆதி எதை எல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டானோ அது எல்லாம் வானதியின் மூலம் நிறைவேறிக் கொண்டிருந்தது. காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை வானதி உடனே தன்னுடைய முழு நேரத்தையும் சந்தோஷமாக கழித்தான். அவன் தன் சீண்டல்களாலும் குறும்புகளாலும் அவளை சிவக்க வைக்கவும் மறக்கவில்லை. வானதியின் மனம் மாறுவதற்காக அந்த ஒரு விஷயத்தில் மட்டும் எல்லை மீறாமல் விலகியே இருந்தான். ஆதி செய்யும் ஒவ்வொரு செயலிலும் வானதியின் மேல் வைத்து இருக்கும் காதலையும் பாசத்தையும் பறைசாற்றியது.


காலையில் தூங்கி எழுவதில் இருந்து குளிப்பதற்காக டவள் எடுத்து குடுத்து, அவன் அணிவதற்காக உடைகளை தேர்ந்தெடுத்து எடுத்து வைத்து, தலையை துவட்டி விட்டு, உணவை ஊட்டி விட்டு என அது நீண்டு கொண்டே சென்றது. இரவு அவளின் மடியில் படுத்து கொண்டு பல கதைகள் , அவனின் சிறு வயதிலிருந்து நடந்ததை கூறுவதும் அதற்கு வானதி அவனின் தலையை கோதிக் கொண்டே ரசித்து கேட்கும்போது அவளின் விரல்கள் தந்த சுகத்தில் நிம்மதியாக உறங்குவான். இப்படியே அவனின் நாட்கள் அழகாக கழிந்தது. குழந்தைக்கு தாய் எவ்வளவு இன்றியமையாதவறோ அதே போல் வானதியையும் தனக்கு மிகவும் இன்றியமையாதவளாக மாற்றி கொண்டான். வானதியின் அனைத்து தேவைகளையும் அவளின் கண்களை பார்த்தே தெரிந்து கொண்டு அவள் கூறுவதற்கு முன்பே செய்து தன்னையும் அவனுக்கு இன்றியமையாதவனாக செய்து கொண்டான்.


யாரும் அற்ற அந்த அழகிய தீவில் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆதியின் காதலை வாங்கி கொண்டு அவன் மேல் தனக்கு இருக்கும் காதலை கொடுத்து என மிகவும் மகிழ்ச்ச்சியாகவே இருந்தாள். இதற்கு முன் அவன் மீது இருந்த கோவத்தோடு திருமணம் செய்து கொண்டு ஆதியை விட்டு பிரிந்து செல்ல தயாராக இருந்தவள் இவள் தானா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அவளிடம் நிறைய மாற்றங்கள் இருந்தது. அதை வானதியும் அறிந்து இருந்தாள் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவளுக்கும் இந்த மாற்றம் மிகவும் பிடித்து இருந்தது. தன் மீது அளவு கடந்த அன்பை வைத்து தனக்காகவே வாழும் ஒருத்தருக்காக தன்னுடைய கோவத்தையும் பிடிவாதத்தையும் மாற்றி கொள்வதில் தவறு எதுவும் இருப்பதாக அவளுக்கு தெரியவில்லை. அவனின் அனைத்து செயலிலும் வானதிக்கு அவன் மீது இருக்கும் காதல் அதிகரிக்கவே செய்தது.


அப்படி ஒரு நாள் பௌர்ணமி இரவில் மொட்டை மாடியில் இருந்த ஊஞ்சலில் இருவரும் அமர்ந்து அந்த ஏகாந்த வேலையை ரசித்து கொண்டு இருந்த போது ஆதி வானதியிடம் ஒரு பாடல் பாட சொல்லி கேட்டான். அதை கேட்ட வானதி வெக்கத்துடன் முடியாது என்பதை போல் தலையசைத்தாள். அதை கண்ட ஆதி அவள் பக்கமாக திரும்பி அமர்ந்து, “ நீ ரொம்ப நல்லா பாடுவன்னு எனக்கு தெரியும் பேபி “ என்று கூறினான்.


வானதி, “ உங்களுக்கு எப்படி தெரியும் நான் பாடி கேட்டு இருக்கீங்களா “.


ஆதி, “ மூணு வருஷத்துக்கு முன்னாடியே அந்த காட்டுகுள்ள நீ ஒரு பாட்டு பாடுனியே அப்பவே கேட்டேன் “ என்றவனை ஆச்சரியமாக பார்த்தவள் உடனே முகத்தை கோவமாக வைத்து கொண்டு, “ இன்னும் எனக்கு தெரியாம என்ன எல்லாம் தெறிஞ்சி வெச்சி இருக்கீங்க “ என்றவளை பார்த்து சிரித்தான் ஆதி.


ஆதி, “ அதை நான் பொறுமையா சொல்றேன்.... இப்போ எனக்காக ஒரு பாட்டு பாடு செல்லம் ப்ளீஸ் “ என்று அவளின் தாடையை பிடித்து கொஞ்சியவனின் வேண்டுகோலை வானதியால் புறக்கணிக்க முடியவில்லை. கண்ணை மூடி ஒரு நிமிடம் என்ன பாடுவது என்று சிந்தித்தவள் மனதில் தோன்றிய பாடலை முகத்தில் புன்ன்கையுடன் பாட ஆரம்பித்தாள். கன்னத்தில் கையை வைத்து கொண்டு அவள் பாட போகும் பாடலை கேட்க ஆவலாக காத்திருந்தான் ஆதி.


தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா



என்று அவனை பார்த்து ஆசையாக பாடியவளை காதலோடு பார்த்தான் ஆதி.


தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா

வருவாயோ…. வாராயோ….

ஓ நெஞ்சமே…. ஓ நெஞ்சமே….

என் நெஞ்சமே…. உன் தஞ்சமே….

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா



அவளின் குரலில் மெய்மறந்து ரசித்து கொண்டு இருந்தவனுக்கு அது வெறும் பாடல் வரிகளாக தெரியவில்லை இருந்தும் அவளையே இமைக்காமல் அவளையே பார்த்தான் ஆதி. ஆதியின் இரு கன்னங்களையும் தன்னுடைய இரு கைகளால் தாங்கி அவனின் காதல் பார்வைக்கு பதில் பார்வை பார்த்தப்படி அடுத்த வரிகளை பாடினாள்.


எப்பொழுதும் உன் சொப்பனங்கள்

முப்பொழுதும் உன் கற்பனைகள்

சிந்தனையில் நம் சங்கமங்கள்

ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்

காலை நான் பாடும்

காதல் பூபாளம் காதில்

கேட்காதோ கண்ணா எந்நாளும்

ஆசையில் நாள்தோறும்

நான் தொழும்

ஆலயம் நீயல்லவா....


அந்த வரிகள் அனைத்தும் தனக்கானவை என்பதை புரிந்து கொண்ட ஆதி கன்னத்தில் இருந்த கையை எடுத்து இறுக்கமாக தன்னுடைய ஒரு கரத்தால் சிறைபிடித்து கொண்டான்.


தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா

வருவாயோ…. வாராயோ….

ஓ நெஞ்சமே…. ஓ நெஞ்சமே….

என் நெஞ்சமே…. உன் தஞ்சமே….

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா



பாடி முடித்த பின்பு அவனை பார்க்க முடியாமல் வெட்கத்துடன் தலைகுனிந்தவளின் முகத்தை நிமிர்த்தி அவளின் உச்சந்தலையில் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்து விட்டு அவளை இறுக்கமாக அனைத்து கொண்டான். சிறிது நேரம் அங்கு மௌனமே ஆட்சி செய்தது. காதலில் மௌனம் கூட அழகு தான்.


ஆதி, “ பேசாம நம்ம ரெண்டு பேரும் இங்கையே இருந்துடுவோம “ என்று கேட்டவனின் அணைப்பில் இருந்து எழுந்து கேள்வியாக பார்த்தவளின் பார்வையை புரிந்து கொண்டவன், “ இங்க இருக்கும் போது தான் நீ என்னோட ஆருந்யாவா இருக்க.... அங்க போனதுக்கு அப்புறம் மறுபடியும் நீ மாறிட்டனா அதான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு “ என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு அவளின் சுடிதார் துப்பட்டாவை பிடித்து கொண்டு கேட்டவனை பார்க்கும் போது அவள் கண்ணுக்கு அவன் அடம்பிடிக்கும் குழந்தையாகவே தெரிந்தான்.


வானதி, “ அருள்.... நீங்க சொன்னது மாதிரி தான் நான் உங்க மேல கோவப்பட மாட்டேன்னு எல்லாம் என்னால சொல்ல முடியாது ஆனா.... நமக்குள்ள என்ன பிரச்சனை வந்தாலும் நான் உங்கள விட்டு போக மாட்டேன்.... இது என் மேல சத்தியம் “ என்றவள் முதலில் பல நாட்கள் கழித்து அருள் என்று அவள் கூறியதுமே உருகியவன் பிறகு அவளின் தலையின் மீது கையையை கொண்டு போனவளை தடுத்தவன் அந்த கையை அவனின் தலையில் வைத்து சத்தியம் செய்யுமாறு கூறினான். அவனின் அவசரத்தை கண்டு சிரித்தவள், “ என்ன நடந்தாலும் எத்தனை பிரச்சனை வந்தாலும் நான் உங்களை விட்டு போக மாட்டேன் எப்பவும் உங்க கூட தான் இருப்பேன்.... இது உங்க மேல சத்தியம் போதுமா.... “ என்றவள் அவன் தலையில் இருந்து கையை எடுத்து விட்டு, “ இந்த வானதி குடுத்த சத்தியத்தை மீற மாட்டா இது உங்களுக்கு தெரியும்ல “ என்றவளின் கூற்றை ஆமொதித்தவன் ஊஞ்சலில் இருந்து எழுந்தான்.


ஆதி, “ இந்த நிமிஷம் இந்த உலகத்திலேயே சந்தோஷமானவன் நான் தான்..... இந்த தருணத்தை எனக்கு குடுத்தது மட்டும் இல்லாம எனக்காக அருமையான பாட்டு பாடுன என்னோட செல்ல பொண்டாட்டிக்கு ஒரு கிப்ட் குடுக்கனும்.... அதுவும் இப்பவே “ என்றவன் தன்னுடைய பான்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கறுப்பு துணியை எடுத்து அவனையே பார்த்து கொண்டிருந்தவளின் கண்களை கட்டினான். திடீரென்று கண்ணை கட்டியதும் என்னவென்று யோசிப்பதற்குள் ஆதி வானதியை சிறு குழந்தை என கைகளில் எந்தினான். அதில் சற்று பயந்தவள் ஆதியின் கழுத்தை இறுக்கமாக பிடித்து கொண்டாள் அதை கண்டு சிரித்தவன் அவளை அழைத்து கொண்டு ஜீப்பில் ஏறியவன். அங்கு இருந்து இறங்கி மீண்டும் அவளை தூக்கி கொண்டு அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த பெரிய போட்க்குள் ஏறி அதன் மேல்தளத்திற்கு சென்ற பிறகே அவளை கீழே இறக்கினான். இருந்தும் கண் கட்டை அவிழ்க்க விடாமல் அவளின் கைகளை தடுத்தான்.


வானதி, “ நாம இப்போ எங்க இருக்கோம்.... துணியை கழட்டுங்க “ என்று கேட்டவளை பார்த்து சிறிது நேரம் கழித்து துணியை எடுத்தான். கண்ணை கசக்கி கொண்டே திறந்தவளை அந்த பக்கம் பார்க்குமாறு கையை நீட்டினான். அந்த பக்கம் பார்த்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. அவர்கள் இருந்த கப்பலை தீவிற்கு சிறிது தூரத்தில் நின்று இருந்தது. அந்த இருட்டில் அந்த தீவு முழுவதும் மின்மினி பூச்சிகளால் ஜொலித்து கொண்டிருந்தது. அது மட்டுமில்லாமல் கீழே இருந்த கடலும் ஒரு வித ஜெல்லி மீன்களால் மின்னி கொண்டு இருந்தது.


download (7).jpeg



images (33).jpeg


அந்த காட்சியை காண இரு கண்கள் பத்தாது என்பதை போல் இருந்தது வானதியின் நிலை. அவள் முகத்தில் தோன்றும் பாவனைகளை கைகளை கட்டி கொண்டு பார்த்து கொண்டிருந்தான் ஆதி.


அப்போது திடீரென்று வானத்தில் தோன்றிய சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் கண்ணீரோடு ஆதியை சென்று அணைத்து கொண்டாள்.
வானத்தில் பல வான வேடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருந்தது அதில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்ற எழுத்தோடு பட்டாசு வெடித்தது. தன்னை அணைத்து இருந்தவளை பிரித்து அவளின் கண்ணீரை துடைத்தவன். ஆதி, “ என்னுடைய செல்ல பொண்டாட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.... “ என்று அவன் கூறியதும் வானதிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை மீண்டும் கண்கள் கண்ணீரால் நிறைந்தது. அதை கண்ட ஆதி அது கீழே விழுவதற்கு முன்பே தன்னுடைய விரலால் தடுத்து, “ நான் தான் சொன்னேனே உன் கண்ணுல இருந்து கண்ணீர் வந்தா அதுக்கு அப்புறம் நான் வாழுறதுல அர்த்தமே இல்லை புரிஞ்சிதா “.


வானதி, “ இது சந்தோஷத்துல வரது..... நானே இந்த நாள மறந்துட்டேன் ஆனா உங்களுக்கு எப்படி தெரியும்.... “ என்று கூறியவளிடம், “ உன்னை பத்தினா எந்த விஷயமும் எனக்கு தெரியாம இருக்காது.... “


சிரித்து கொண்டு இருந்தவள் முகம் திடீரென்று வாடியது. அவன் பக்கத்தில் இருந்து சற்று நகர்ந்து, “ நான் பிறந்த நாள கொண்டாடுறது இல்ல “ என்றவளின் அருகில் சென்ற ஆதி, “ இதுவரைக்கும் நீ கொன்டாடாமா இருந்து இருக்கலாம்.... ஆனா இனிமே அப்படி இருக்க கூடாது என்னோட பொண்டாட்டிக்கு இந்த உலகத்துல இருக்க எல்லா சந்தோஷமும் கிடைக்கனும்.... நீ ஏன் இப்படி சொல்றேன்னு எனக்கு தெரியாது..... இது நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் வர முதல் பிறந்த நாள் அதனால எனக்காக நீ இதை செய்யணும் “ என்றவன் அங்கிருந்த மேஜையின் அருகில் அழைத்து கொண்டு சென்றவன் அதில் இருந்த கேக்கை வெட்டுவதற்காகா கத்தியை நீட்டினான்.


அவனுடைய அந்த ஆர்வத்தை பார்த்த வானதியின் கை அவளறியாமல் அந்த கத்தியை வாங்கியது. பின்பு அந்த கத்தியால் கேக்கை வெட்டி ஒரு துண்டை எடுத்து ஆதிக்கு ஊட்டினாள். அவளின் முகத்தை பார்த்து கொண்டே அந்த கேக்கை வாங்கியவன். அவளுக்கும் ஊடினான். அந்த சூழலை சுற்றி பார்த்தப்படி அங்கிருந்த போட்டின் கைபிடியை பிடித்து கொண்டு நின்றவள் தன் முன்னால் இருந்த வெளிச்சத்துடன் இருக்கும் கடலை பார்த்து கொண்டிருந்தாள். இது போன்ற அழகிய இரவு தன்னுடைய வாழ்வில் வரும் என்று ஆதி இதுவரை நினைத்து பார்த்தது இல்லை. ஓவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவள் அருகில் சென்றவன் பின்னால் இருந்து அவளை இறுக்கமாக அணைத்தான். எப்போதும் போல் இப்போதும் அவனுடைய அணைப்பில் சிலிர்த்து தான் போனாள். அவளுடைய காதருகில் குனிந்து, “ கேக் வெட்டினா போதுமா செல்லம்.... கிப்ட் வேணாமா “ என்றவனின் குரலில் தன்னை மறந்து நின்றவள் அவனிடம் இருந்து விடுவித்து கொண்டு கீழே அமர்ந்து, “ இதுக்கு மேலையும் நீங்க கிப்ட் குடுக்கனுமா..... “ என்று அவள் கூறியதை கேட்டு கொண்டே அவளுக்கு எதிரில் அமர்ந்தான். அதை கண்டவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை அவன் இது போல் கீழே அமர்ந்து கண்டதே இல்லை இன்று தனக்காக அவன் அமர்ந்ததை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.


ஆதி, “ என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு.... என் பொண்டாட்டிக்கு நான் எத்தனை கிப்ட் வேணாலும் குடுப்பேன் “ என்றவன் தன் கையில் வைத்து இருந்த கொலுசை அவள் முன்னால் நீட்டினான். அதை வாங்கி திருப்பி திருப்பி நன்றாக பார்த்தவள், “ இது வெள்ளி கொலுசு மாதிரி தெரியலையே “ என்றவளை பார்த்து சிரித்தவன் அதை அவளிடம் இருந்து வாங்கி அவளுடைய இரண்டு கால்களையும் தன்னுடைய மடியில் வைத்து கொண்டான். அதிர்ந்து அவனிடமிருந்து தன்னுடைய காலை இழுக்க பார்க்க ஆதி வானதியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன் அவள் கால்களில் அந்த கொலுசை அணிவித்து அதன் அழகை ஆசையாக கண்டு ரசித்து கொண்டிருப்பதை கண்ட வானதிக்கு என்னவென்று சொல்ல முடியாத உணர்வு அவள் மனதை ஆட்கொண்டிருந்தது.


ஆதி, “ இது ப்ளாட்டினம் கொலுசு.... உனக்காக நானே டிசைன் பன்னது.... கல்யாணத்துக்கு கொலுசு போட்ட அதுக்கு அப்புறம் கழட்டிட்ட..... அது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. நீ எப்பவும் என் கூடவே இருக்கணும்.... அப்படி இல்லனாலும் உன்னோட இருப்ப நான் உணர்ந்துட்டே இருக்கணும் அதுக்கு தான் இந்த கொலுசு “ என்றவன் அந்த சலங்கையை ஆட்டி பார்த்தான்.


வானதி, “ ஆனாலும் இது ரொம்ப விலை அதிகமா இருக்கும் “ என்று தயங்கியவளிடம், “ உன் காலுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் இந்த கொலுசுக்கே மதிப்பு அது மட்டும் இல்லாம என்னோட மனைவிக்கு கிடைக்கிறது எல்லாம் ஸ்பெஷலா தான் இருக்கணும் மிஸ்செஸ். ஆதித்ய அருள்மொழி வர்மன் “ என்றவனை காணும் போது அவனுக்கு தன் மீது இருக்கும் காதலை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருந்தது.


காலை அவனிடமிருந்து இழுத்து கொண்டவள், “ இதை விட எனக்கு கிடைச்ச மிகப் பெரிய கிப்ட் நீங்க தான்..... நீங்க உங்களை பத்தி எல்லாத்தையும் சொன்னிங்க ஆனா நான் எதையுமே சொன்னது இல்லை.... இப்போ என் மனசுகுள்ள இருக்கறத உங்ககிட்ட சொல்லனும் போல தோனுது “ என்றவள் பின்னாடி சாய்ந்து அமர்ந்தாள்.


ஆதி, “ நான் உன்கிட்ட எதுவும் கேக்கலையே ஆருந்யா “.


வானதி, “ நீங்க கேக்கல ஆனா நான் சொல்லனும்.... இதை யாருகிட்டயும் நான் சொன்னது இல்லை இப்போ உங்ககிட்ட சொல்லனும்... உங்க கிட்ட எதையும் மறைக்க எனக்கு விருப்பம் இல்லை “.


ஆதி, “ இதை சொல்றதுனால உனக்கு நிம்மதி கிடைக்கும்னா சொல் “ என்றான்.


அதே சமயம் சென்னையில் விஸ்வநாதன் அறையில் அவர் முன்பு ஒரு கேள்வியோடு அமர்ந்திருந்தாள் சாரா. அன்று ஆதியின் ரிசப்ஷன் சென்று வந்ததில் இருந்து இந்த வீட்டில் அனைவரிடமும் ஏற்ப்பட்டு இருக்கும் மாற்றங்களை கவனித்து கொண்டு தான் இருந்தாள். இதுநாள் ஏதோ ஒரு வகையில் நன்றாக பேசிக் கொண்டிருந்த விஸ்வநாதன் இப்போது சந்திரிகாவிடம் முற்றிலுமாக பேசுவதை நிறுத்தி விட்டார். சந்திரிகா முதலில் அதை பெரிதாக கண்டு கொல்லாமல் இருந்தவர் நாட்கள் செல்ல அவரால் தாங்கி கொள்ள முடியாமல் அவரிடம் சென்று பேசினால் இருவருக்கும் சண்டை பெரிதாக வெடிக்க ஆரம்பித்தது. கடைசியில் அவர்கள் வந்து நிற்கும் இடம் வானதியாக இருந்தது. யார் அந்த வானதி அவள் ஏன் தங்களுடைய வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்துகிறாள் என்பதை தெரிந்து கொள்ள அவளின் அன்னையிடம் சென்று கேட்டால் அவர் அதற்கு பதிலளிக்காமல் சமாளித்து சென்று விடுவார். சந்திரன் சில நாட்களாக வீட்டிலேயே தங்குவது இல்லை என்று கூட சொல்லலாம். இப்படி சிந்தித்து கொண்டே நாட்கள் செல்ல இன்று ஒரு முடிவோடு தன் தந்தை இடம் கேட்பதற்காக அவர் அறைக்கு வந்தாள்.


எப்போதும் போல் அவர் ஏதோ ஒரு சிந்தனையிலேயே அமர்ந்து இருந்தவர் சாரா உள்ளே நுழைந்ததும் அவளை கண்களில் கேள்வியோடு கண்டார். அவரின் பார்வை புரிந்து கொண்டவள் அறையின் கதவை சாத்தி விட்டு அவர் அருகில் வந்து அமர்ந்து, “ அப்பா உங்ககிட்ட ரொம்ப நாளா ஒரு விஷயம் கேட்கனும்ன்னு தோனுது..... இப்ப அதை பத்தி கேட்க தான் வந்தேன் “ என்றவளை கேள்வியாக பார்த்தார் விஸ்வநாதன்.


சாரா, “ அந்த வானதி யார் ? அவளுக்கும் நம்ம குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்.... உங்க பொண்ணு என்னை விட அவ உங்களுக்கும் அவ்வளவு முக்கியமா இருக்க என்ன காரணம் “.


நாதன், “ இதை நீ தெரிஞ்சிகிட்டு நீ என்ன மா செய்ய போற “


சாரா, “ கண்டிப்பா நான் தெரிஞ்சிகனும்.... நான் வாழ வேண்டிய வாழ்க்கையை அவ வாழ்ந்துட்டு இருக்கா ஆனா நீங்க அவ நல்ல இருக்கணும்ன்னு அம்மாகிட்ட சண்டை போட்டுட்டு இருக்கீங்க.... இன்னிக்கு எனக்கு பதில் தெரிஞ்சே ஆகனும்.... அம்மாகிட்ட கேட்டா எதுவும் சொல்ல மாட்றாங்க “


நாதன், “ உன் வாழ்க்கையை அவ வாழல மா அவ வாழ வேண்டிய வாழ்க்கையை தான் நீ வாழ்ந்துட்டு இருக்க.... இதுக்கு எல்லாம் காரணமே உன் அம்மா தான் அப்படி இருக்கும் போது அவ எப்படி உன் கேள்விக்கு பதில் சொல்லுவா “


சாரா, “ அப்படி என்னதான் நடந்தது.... சொல்லுங்க அப்பா “ என்று கோவமாக அழுத்தி கேட்டவளிடம் கூறுவதை தவிர வேறு வழியும் தெரியவில்லை. சாராவும் இதை பற்றி தெரிந்து கொள்வதும் நல்லது தான் என்று எண்ணியவர். அவருடைய நினைவுகள் கடந்த காலத்திற்கு பின்னோக்கி சென்றது....


உடன் வருவேனா

உயிர் தொடுவேனா

இலை நுனியில ஒரு துளியென

தவிக்கிறேன் சரிதானா

நினைக்கும் நொடி எல்லாம்

அருகில் இருக்கணும்

அருகில் இருக்க நீ

இறுக்கி பிடிக்கனும்....

உனக்காய் மறுகணமும்

எனக்குள் உருகணும் உயிரே..


உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்...

 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொஞ்சம் உடம்பு சரியில்லாத காரணத்தால என்னால ud குடுக்க முடியல கூடிய சீக்கிரம் நான் குடுக்கறேன் அதுவரை பொறுத்திருக்குமாறு கேட்டு கொள்கிறேன்
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 30


இருவரின் நினைவுகளூம் கடந்த காலத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.


விஸ்வநாதனும் சந்திரிகாவும் ஒன்றாக கல்லூரியில் படித்தவர்கள். அப்போதிலிருந்தே சந்திரிகா விஸ்வநாதனை ஒருதலையாக காதலித்து வந்தார். சந்திரிகாவிற்கு சிறு வயதிலிருந்தே தான் நினைத்தத்தை அடைந்தே பழக்க பட்டவர். அதற்கு முக்கிய காரணம் அவருடைய அண்ணன் சந்திரன் தான். தாய் தந்தை இருவரும் இல்லாமல் தன்னுடைய தங்கையை மொத்த பாசத்தையும் கொட்டி வளர்த்தார். அவள் எதை ஆசைபட்டாலும் அதை உடனே நிறைவேறிவிடும். சந்திரிகாவின் ஆசைகளுக்கு ஒரு எல்லை என்பதே இல்லாமல் இருந்தது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று விஸ்வநாதன் மீது அவர் கொண்ட காதல். அதை காதல் என்று கூறுவதை விட ஒருவகையான பிடிவாதம் என்று கூறலாம். விஸ்வநாதனுடைய அழகு, அறிவு அனைத்திலும் முதலாவதாக வரும் அவருடைய திறமை முக்கியாக அவருடைய அந்தஸ்து. அவரை அடைவதன் மூலம் தான் ராணியாக வாழலாம் என்ற எண்ணமும் இருந்தது.
விஸ்வநாதன் தன்னுடைய படிப்பை முடித்ததும் தந்தையின் வழிகாட்டுதலோடு குடும்ப தொழிலை நடத்தி வந்தார். அவருடைய ஒரே பலவீனம் தனக்கு பிடித்தவர்கள் எதை கூறினாலும் அதை உடனே நம்பி விடுவார். விஸ்வநாதனுடைய தந்தையும் வான்மதியின் தந்தையும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். வான்மதியின் வாழ்க்கையும் மிகவும் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. பேச முடியாத குறையை தவிர அவரிடம் குறை என்று கூறும் அளவிற்கு எதுவுமே கிடையாது. அழகு அறிவு முக்கியமாக பொறுமையை அதிகமாக கொண்டவர். அமைதியாக சென்று கொண்டிருந்த மதியின் வாழ்க்கையில் அவருடைய தந்தையின் இழப்பு பெரிய இடியாக அமைந்தது. அடுத்து என்ன செய்வது இருக்கும் ஒரே பெண்ணின் வாழ்க்கையை எப்படி அமைத்து கொடுக்க போகிறோம் என்று மிகவும் கவலையாக இருந்த மதியின் தாயிக்கு நாதனின் தந்தை வான்மதியை தன்னுடைய மருமகளாக ஏற்றுகொள்கிறேன் என்று ஆறுதல் கூறி. இது நான் என்னுடைய நண்பனுக்கு செய்யும் கைம்மாறாக இருக்கும் என்று வாக்கு கொடுத்தார்.


வாக்கு கொடுத்ததை போல் தன் மகனிடம் சென்று திருமணத்தை பற்றிய பேச்சை துவக்கினார். அப்பொழுது தான் தொழிலுக்குள் காலடி எடுத்து வைத்திருந்த நாதன் வேண்டாம் என்று எவ்வளவு மறுத்தும் அவரது தந்தை பிடிவாதமாக நின்று வான்மதியை விஸ்வநாதனுக்கு திருமணம் செய்து வைத்தார். தந்தையின் அந்த பிடிவாதம் தான் நாதனுக்கு மதியின் மீது கோவத்தை ஏற்படுத்தியது. அவர்களின் திருமண வாழ்க்கை கோவத்திலும் வெறுப்பிலும் துவங்கப்பட்டது. ஆனால் வான்மதியின் பொறுமையான குணம் அனைத்தையும் தாங்கி கொண்டு விட்டு குடுக்கும் குணமும் விஸ்வநாதனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி திருமண வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவியாக இருந்தது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று இவர்களின் திருமணத்தின் போது சந்திரிகா மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்று இருந்தார். அவரை தொடர்பு கொள்ள முடியாததால் விஸ்வநாதனாலும் அழைக்க முடியவில்லை.


நாட்கள் மாதங்களாக ஒடியது.....

வான்மதிக்கும் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது இரண்டு வருடங்கள் ஆனது. அதே சமயம் தான் நாதனின் கல்யாணத்தை பற்றிய விஷயம் அறிந்த சந்திரிகாவினால் உடனடியாக அங்கிருந்து வர முடியவில்லை. அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு இங்கு வந்த போது காலம் கைமீறி சென்று விட்டதை உணர்ந்து மிகவும் உடைந்து போய் தன்னை அழித்து கொல்லும் நிலைக்கு ஆளானார். அதை சரியான நேரத்தில் தடுத்த சந்திரன் அவர் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்து கொடுப்பதாக வாக்கு கொடுத்தார். நிலைமை கைமீறி சென்று விட்டதாக கூறிய தங்கையை சமாதானபடுத்திய சந்திரன் எப்படியும் இதை நடத்தி காட்டியே தீருவேன் என்று கூறினார்.


அவரிடம் கூறியதை போலவே முதலில் விஸ்வநாதனை தொழிலில் தோற்கடிக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கினார். அதன் பலனாக தந்தை மகனுக்குள் சண்டை எழுந்தது. இழப்பை சரி செய்யாமல் இந்த கம்பனி பக்கமே வரக்கூடாது என்று கூறிய தந்தை உடன் சண்டை வலுப்பெற்றது. அவர்களை சமாதானபடுத்த சென்ற வான்மதி மீதும் விஸ்வநாதனின் கோவம் திரும்பியது. இப்படி ஆரம்பித்த கருத்துவேறுபாடுகள் தினமும் சண்டையாக தொடர்ந்தது. இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு சந்திரனும் சந்திரிகாவும் உதவிகரம் நீட்டுவதை போல் அவரை தங்கள் பக்கம் இழுத்தனர். இழப்பை சரி செய்த பிறகும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வராததை கண்டு வான்மதிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இவர்கள் இருவருக்குள் இருந்த விரிசலை பெரிதாக மாற்ற என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் சந்திரிகா செய்தார். அவரின் பணத்திற்கும் அந்தஸ்திற்கும் ஆசைப்பட்டு தான் உங்களை திருமணம் செய்து கொண்டதாகவும் மதியால் உங்களுக்கு எந்தவிதமான நல்லதும் நடக்காது என்றும் உங்களின் தகுதிக்கு வாய் பேச முடியாத ஒறுத்தி மனைவியாக வர தகுதியே இல்லை என்று கூறி அவரின் மூளையை சலவை செய்தார்.


நாளுக்கு நாள் ஏற்பட்ட பிரச்சனைகளால் விஸ்வநாதன் விவாகரத்து செய்ய போவதாக கூறினார். இதை கேட்ட வான்மதிக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நாதனின் தந்தையும் எவ்வளவோ கூறிப்பார்த்தார். ஆனால் இதுவரை உங்களின் பேச்சை கேட்டு பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்தேன் இனி எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ போவதாக கூறியவரை பார்க்கும் போது வான்மதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. விவாகரத்து குடுக்க கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார். அதற்கு காரணம் சந்திரிகா என்பதை அறிவார். சந்திரிகா நாதனை காண வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவரின் நடவடிக்கைகளை வைத்து அவர்களின் எண்ணத்தை தெரிந்து கொண்டார்.


இவ்வாறே நாட்கள் செல்ல வான்மதியிடம் மிரட்டி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்குவதற்காக விஸ்வநாதன் வீட்டில் இல்லாத போது சந்திரன் அங்கு சென்றார். சிறு குழந்தையாக இருந்த வானதியை கொலை செய்து விடுவதாக மிரட்டி விவாகரத்துக்கு சம்மதம் கூறி கையெழுத்து போட சொல்லி மிரட்டினார். அவரிடமிருந்து தன் மகளை காப்பாற்றுவதற்கு தன்னால் ஆன முயற்சியை மேற்கொண்டார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியாததால் சம்மதம் கூறி கையெழுத்து போடுவதற்காக மேஜை மேல் இருந்த பத்திரத்தை எடுத்த சமயம் சிறு குழந்தையாக இருந்த வானதி சந்திரன் தன்னுடைய அன்னையை அழ வைப்பதை கண்டு கோவம் கொண்டு அவரின் கையில் இருந்து நழுவி அருகில் இருந்த ஒரு கண்ணாடி பொருளை எடுத்து அவரின் முகத்தை நோக்கி தூக்கி எறிந்தாள். அது சந்திரனின் முகத்தை நன்றாக பதம் பார்த்தது அந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு வான்மதி தன் மகளை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வேகமாக சென்று விட்டார்.


கோவம் கொண்ட சந்திரன் அவர்களை வெறி பிடித்து தேடி கொண்டிருந்தார். அதற்குள் வான்மதி தன்னுடைய அன்னையையும் அழைத்து கொண்டு ஊரை விட்டே சென்று விட்டார். அந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட சந்திரிகா அவள் சொத்துக்காக உங்களுடன் இருந்தாள் இப்போது நீங்கள் அவளை வேண்டாம் என்று கூறிய உடன் வேறு ஒருவரை தேடி சென்று விட்டாள் என்று தவறாக கூறியது மட்டும் இல்லாமல் வான்மதி எழுதியதை போல ஒரு கடிதத்தை தயாரித்து விஸ்வநாதனை நம்ப வைத்தனர். வான்மதி இவ்வாறு தன்னை ஏமாற்றியதை கண்டு கோவம் கொண்ட நாதன் தந்தையை கூட அவர்களை தேட வேண்டும் என்று அழுத்தமாக எச்சரித்தார். பிறகு சில நாட்களுக்கு பிறகு நாதனை தன் வலையில் முழுவதுமாக இழுத்து திருமணமும் செய்து கொண்டார் சந்திரிகா.


நிகழ்காலம்


அந்த பெரிய கப்பலில் ஆதியின் அருகில் அமர்ந்து கொண்டிருந்த வானதி, “ அதுக்கு அப்புறம் எங்க போறதுனே தெரியாம எங்கஎங்கயோ சுத்தி கடைசியா தான் நீலகிரி வந்து சேர்ந்தோம். அங்க தான் உங்க அப்பாவ சந்திச்சோம்..... அவர் தான் எங்களுக்கு உதவி செஞ்சி நாங்க வாழ்றதுக்கான வழியை காட்டுனாரு.... அப்படியே வருஷங்களும் ஓடுச்சு.... அப்போ தீடீர்ன்னு ஒரு நாள் நாங்க இருக்க இடத்தை தேடி தாத்தா வந்தார்..... அங்க இருந்து வந்ததுக்கு அப்புறம் நடந்தது எல்லாத்தையும் சொல்லி எங்களை வீட்டுக்கு கூப்பிட்டார். ஆனா அம்மா மறுத்துட்டாங்க அவரும் வேற வழியில்லாம என்னை தனியா கூப்பிட்டு ஒரு பத்திரத்தை கொடுத்து நீ வளர்ந்ததுக்கு அப்புறம் இதை பிரிச்சி பாருன்னு சொல்லிட்டு போய்ட்டார். அப்புறம் தான் தெறிஞ்சிது அது ஒரு உயில் பத்திரம்ன்னு...... தாத்தா மொத்த சொத்தையும் அவரோட பேத்தியான என்னோட பேர்ல எழுதி வெச்சிட்டார்.... அதுக்கு எங்க அம்மாவ கார்டியனா போட்டுருந்தார்.... அதை அனுபவிக்கறதுக்கு மட்டும் தான் மத்தவங்களுக்கு உரிமை இருக்குன்னு இருந்தது..... அவர் எங்க நல்லதுக்கு தான் செஞ்சார் ஆனா அதுவே எங்க அம்மாவோட உயிர எடுக்க காரணமாகவும் அமைஞ்சது... “ என்று அழுது கொண்டே கூறியவளை தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டான் ஆதித்யா.


அந்த நிமிடம் ஆதியின் மனதில் கோவம் எரிமலையாக எரிந்து கொண்டிருந்தது. அவளை இனி எந்த துன்பமும் நெருங்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று உறுதி கொண்டான். தன் உயிரானவளை வாழ விடாமல் இந்த அளவு கஷ்டபடுத்தியவர்களுக்கு தண்டனை அளித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் இன்னும் ஆழமாக எழுந்தது. இப்போது அவளை சமாதானம் செய்வதே முக்கியம் என்பதால் அவளின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன் , “ அப்ப சொன்னது தான் எப்பவும் இந்த ஆதித்யாவோட பொண்டாட்டி எதுக்காகவும் அழ கூடாது.... “ என்று கூறி அவளின் கண்ணீரை துடைத்த கையை பிடித்தவள் , “ எந்த தப்பும் செய்யாமல் எங்க அம்மா கஷ்டப்பட்டத பாத்ததால தான் ஆண்கள்னாலே எனக்கு ஒரு கோவம்..... அதுவும் பணம் இருந்த என்ன வேணா பன்னலாம்ன்னு நினைக்கிற பணக்காறங்கள பார்க்கும் போது வெறுப்பு..... இது எல்லாம் சேர்த்து தான் நீங்க என் மேல வெச்ச பாசத்தை புரிஞ்சிக்காம கஷ்டபடுத்திட்டேன்.... என்னை மன்னிச்சிடுங்க அருள்.... “ என்று கூறியவளின் முகத்தை கையில் ஏந்தி நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்தான்.


ஆதி, “ நீ எந்த தப்பும் செய்யல மா.... உண்மைய சொல்லனும்ன்னா நான் தான் தப்பு செஞ்சேன்.... அந்த சந்திரன் கிட்ட இருந்து உன்னை காப்பத்திரத்துக்காக தான் அவசரமா கல்யாணம் பண்ண வேண்டியத போயிடுச்சு “ என்றவன் அன்று நடந்ததை கூறியவனை இமைக்காமல் பார்த்தாள் வானதி.


வானதி, “ நான் பட்ட எல்லா கஷ்டத்துக்கும் அந்த கடவுள் குடுத்த மிகப் பெரிய வரம் நீங்க தான்.... இதுக்கு நான் என்ன கைம்மாறு பண்ண போறேன்ன்னு எனக்கு தெரியல “.


அவளை அந்த கனமான சூழலில் இருந்து கொண்டு வருவதற்காக வானதியை பார்த்து கண்ணடித்த ஆதி, “ அதுக்கு ஒரு வழி இருக்கு “ என்றவனை ஆர்வமாக பார்த்தாள் வானதி. அவளை இன்னும் தன்னோடு இறுக்கியவன், “ இந்த வானதி அப்படின்ற நதி ஆதித்யன்ற கடல வந்து சேர்ந்தா போதும் “ என்றவனின் காதல் நிறைந்த பார்வையை கண்ட வானதிக்கு அவன் கூறுவது முழுவதுமாக புரிந்ததில் வெட்கம் அவளை ஆட்கொண்டது. உடனே தன்னுடைய முகத்தை இருகைகளால் மூடி கொண்டவளை கண்டவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அந்த நிமிடம் மனதிற்குள் இருந்ததை இறக்கி வைத்தால் வானதியின் மனது மிகவும் நிம்மதியுடன் லேசாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் தன் முன்னால் அமர்ந்து அனைத்து உரிமைகளும் இருந்தும் அவளுக்காக எல்லாவற்றையும் விட்டு கொடுத்து கண்களில் காதலோடு அவளின் அனுமதியை எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பவனை பார்க்கும் போது இவனுக்காக என்னவேணாலும் செய்யாலாம் என்றே வானதிக்கு தோன்றியது.


முகத்தை மூடி இருக்கும் கைகளை விலக்கி அவள் முகத்தை பார்த்த போது அவன் எதிர்பார்க்காதவாரு ஆதியின் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்து விட்டு அவன் அதை உணரும் முன்பே அங்கிருந்து எழுந்து ஓடி சற்று தொலைவில் நின்றுகொண்டாள். அவளாக குடுத்த முத்ததை அவன் கண்களை மூடி ரசித்து திறந்து பார்த்து விட்டு எழுந்து பொறுமையாக அவளை நோக்கி கால்களை எடுத்து வைத்தான். அவன் தன்னை நோக்கி வருவதை காலடி சத்தத்தில் அறிந்தவளின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.


அவளை நெருங்கியயவன் பின்னிருந்து வானதியை அணைத்து கொண்டான். அந்த அணைப்பு அவளுக்குள் ஒரு விதமான சிலிர்ப்பை ஏற்ப்படுத்தியது. அந்த ஏகாந்த சூழ்நிலையில் அந்த நிலவின் வெளிச்சத்தில் மட்டும் இல்லாமல் அந்த இடமே ஒளி வெளிச்சத்தில் சூழ்ந்து இருந்தாலும் யாரில்லாமல் தன்னுடைய வாழ்வே இல்லை என்று நினைத்தானோ இன்று அவள் தன் கைகலுக்குள் இருப்பதை நினைக்கும் போது அவனால் நம்பவே முடியவில்லை.


நொடிக்கு நொடி அவனுடைய அணைப்பு இறுகுவதை உணர்ந்த வானதியால் அதற்கு மேல் முடியாது என்பதை போல் அவனுடைய கைகளை விலக்கி விட்டு நகர்ந்தவளின் சேலை முந்தானையை பிடித்து இழுத்ததில் மீண்டும் பூச்சென்டாக ஆதியின் மார்ப்பில் சாய்ந்தவளின் கண்களோடு அவனுடைய கண்களை உறவாட விட்டான். அதில் தெரிந்த காதலில் தன்னை தொலைத்தவன் வானதியை கைகளில் ஏந்தி கொண்டு அந்த கப்பலில் இருந்த பிரம்மாண்டமான அறைக்குள் நுழைத்தான்.


அவனின் எண்ணத்தை புரிந்து கொண்டவள் அவன் கைகளில் இருந்து வேகமாக இறங்கி அவனை விட்டு தள்ளி நின்றவளின் முகத்தில் ஒரு புறம் வெட்கம் இருந்தாலும் இன்னொரு புறம் பதட்டம் இருந்தது. அப்போது அவளுக்கு பின்னால் கேட்ட ஆதியின் குரலில் திரும்பினாள் வானதி.


நூற்றாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நான் அல்லவா



என்றவனின் மென்மையான குரலில் தன்னை மறந்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவளின் பார்வைக்கு பதில் பார்வையை பார்த்து கொண்டே அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக வைத்து கொண்டே அவள் அருகில் வந்தான்.


இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து
வாழவா....



தன் முன்னால் நிற்பவன் எதற்கும் அடிபணியாதவன் ஆசைப்பட்டதை உடனே அடைந்து பழக்கபட்டவன் ஆனால் இன்று கண்களில் காதலை தேக்கி அவளோடு வாழ போகும் அந்த அழகிய வாழ்விற்காக சம்மதம் வேண்டி நிற்பவனை பார்க்கும் போது உண்மையில் அவன் மேல் இருக்கும் காதல் பெருக தான் செய்தது.


நூற்றாண்டுக்கு ஒரு முறை
பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம்
செய்பவன் நீ அல்லவா



அவனோடு வாழுந்து பார்த்தால் தான் என்ன என்ற ஆசை அவளுகுள்ளும் எழுந்தது. அவளின் சம்மதத்தை பாடலின் அடுத்த வரிகளை பாடி அவனுக்கு தெரிவித்தாள். அவள் கூறிய மறைமுகமான சம்மதத்தை கேட்டு நம்ப முடியாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான் ஆதி. அவனின் அந்த அதிர்ச்சியை கண்டவள் அவனின் முகத்தை தன் இரு கைகளால் ஏந்தி கொண்டு


கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே என்னை
கண்டேன்....



அவளின் அந்த கையை தன்னுடைய கன்னத்தில் அழுத்தி கொண்டே....


கண் மூடினாள் கண் மூடினாள்
அந்நேரமும் உன்னை கண்டேன்



பாடிக்கொண்டே அவனின் விரல்கள் அவளுடைய முகத்தில் நெற்றியில் இருந்து வருட ஆரம்பித்தது.


ஒரு விரல் என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா



அவனின் வருடலில் கூச்சம் கொண்டவள் அவனை விட்டு சிரித்து கொண்டே நகர்ந்து நின்றாள். அவள் தள்ளி சென்றதை கண்டவன்....


மறுவிரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா



அவளை பின்னிருந்து அணைத்து கொண்ட ஆதியை பார்த்து கொண்டே


உயிர் கொண்டு வாழும்
நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும்
மன்னவா....



அவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பினான் ஆதி. அதன் பிறகு நடந்த அனைத்தும் எல்லை மீறல்களுக்கு அப்பாற்பட்டது. தடைகள் பல வந்தாலும் நதி கடலை வந்து அடைவதை போல இங்கு வானதியும் ஆதித்யா என்ற கடலில் ஒன்றோடு ஒன்றாக கலந்தது. இதுவரை நிழலாக இருந்தவன் தன்னுடைய நிஜத்தை அவளிடம் தேடி கண்டு கொண்டான். அவர்களின் காதலுக்கு சாட்சியாக வானத்தில் இருந்த நிலவும் பிரகாசமாக ஒளிர்ந்தது.


நான் உன்னால் தான்

சுவாசிக்கிறேன்

நான் உன் பேர் தினம்

வாசிக்கிறேன்

உயிரை விடவும் உன்னை

நேசிக்கிறேன்.....

கடவுள் நிலையை நம்

கண்ணில் காட்டிடும் காதல்....


நிஜத்தை தேடும்....


உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்.....


 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத வேலையில் நான் மாட்டி கொண்ட காரணத்தால் என்னால் சரியாக ud தர முடியவில்லை ஆனால் கூடிய விரைவில் அடுத்த அத்தியாயத்தோடு வருகிறேன் தோழமைகளே.... அதுவரை என்னை மன்னிக்கவும்... முடிந்தவரை விரைவாக வருகிறேன்.....
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ ஃப்ரெண்ட்ஸ், இதோ வரேன் சொல்லிட்டு நான் ரொம்ப நாள் காணாம போய்ட்டேன்.... அதுல நீங்க எல்லாரும் கோவமா இருப்பீங்கன்னு எனக்கு தெரியும்... அதுக்கு முதல்ல என்னோட சாரி..... அடுத்த வாரத்தில இருந்து நான் கதைய தொடர்ந்து குடுக்க முயற்சி பண்றேன்
 
Status
Not open for further replies.
Top