All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஜோவின் "சுகமான புது ராகம்" - பாகம் 1 - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... இவர் நமது தளத்திற்கு தான் புதிது. ஆனால் எழுத்து துறைக்கு பரிச்சயமானவர். எனக்கு இவரது கதைகள் மிகவும் பிடிக்கும். ஷார்ட் & ஸ்வீட்டா எழுதுவாங்க. நீங்களும் படித்து பாருங்கள். எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு நட்புகளுக்கு,
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... இவர் நமது தளத்திற்கு தான் புதிது. ஆனால் எழுத்து துறைக்கு பரிச்சயமானவர். எனக்கு இவரது கதைகள் மிகவும் பிடிக்கும். ஷார்ட் & ஸ்வீட்டா எழுதுவாங்க. நீங்களும் படித்து பாருங்கள். எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... இவர் நமது தளத்திற்கு தான் புதிது. ஆனால் எழுத்து துறைக்கு பரிச்சயமானவர். எனக்கு இவரது கதைகள் மிகவும் பிடிக்கும். ஷார்ட் & ஸ்வீட்டா எழுதுவாங்க. நீங்களும் படித்து பாருங்கள். எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
அன்புள்ள சசி அக்கா,

நடை பழகும் குழந்தையின் கரம் பிடித்து நடக்க வைக்கும் குடும்பத்தினர் போல, நான் என் முதல் கதையுடன் களம் கண்டபோது, எனக்கு இந்த இணையதளம் அளித்த குடும்பத்தினரில் நீங்கள் பெரும்பங்காற்றியவர்.

உங்களுடைய வழிகாட்டுதலின் படியே எனது முதல் நூல் வெளியிடப்பட்டது.

இன்று உங்களுடைய பிரத்தியேக தளத்தில் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி!

சில காரணங்களால் என்னால் தொடர்ந்து எழுத முடியாமல், சிறு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. என்னைப் பொறுத்த வரையில் இது இத்துறையில் என்னுடைய இரண்டாவது பிரவேசம்.

உங்களுடைய அன்பும் ஆதரவும் எனக்கு கிடைத்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி.

என்னுடைய நிறை குறைகளை என்னிடம் சுட்டிக்காட்டி, தட்டிக்கொடுத்து ஊக்குவிக்க, உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

ஸ்ரீஜோ
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்புள்ள நட்புகளுக்கு,

சுகமான புது ராகம் - பாகம் - 1 ன் முதல் அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்.

அத்தியாயம் - 1

படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளவும்.

அன்புடன்,
ஸ்ரீஜோ
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்புள்ள நட்புகளுக்கு,

சுகமான புது ராகம் - பாகம் - 1 ன் இரண்டாம் அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்.

அத்தியாயம் - 2

படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளவும்.

அன்புடன்,
ஸ்ரீஜோ
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுகமான புது ராகம்!


அத்தியாயம் – 2

களை எடுக்கக்
கால் பதித்ததால்
கானகமே அழியுமோ?

எழில் கொஞ்சும்
இயற்கை அன்னை
பாலையாய் மாறுமோ?

சட்டமும், சாத்திரமும்
தாளோடு
முடங்கிடுமோ?

கை கொடுத்து
துணை நில்லாது
அடிமையாய் நின்று களிக்கும்
நிலை மாறுமோ?

என்று கிடைக்கும்
சுதந்திரம் எமக்கு?

அச்சமின்றி
அகிலம் வலம் வர!
என்று கிடைக்கும்
சுதந்திரம் எமக்கு?

மலர்ந்து மணம் வீசும்
பூக்களை,
மணத்தையும்
நிறத்தையும்
மறைக்கச் சொல்லும்
மனசாட்சிகளே!

சின்னஞ்சிறு மொட்டுக்கள்!
எத்தீங்கு இழைத்தன
இங்கு?

விடை இருக்கும் கேள்விகளுக்கு
விடை தேடாமல்
மனசாட்சியை
அடகு வைத்து நிற்பது
சரியா? பிழையா?

வீட்டின் உள்ளே இருவரும் நுழையும் போதே, சிவாவும், பவித்ராவும் அவர்களது அறையில் இருந்து ஹாலிற்கு வந்திருந்தனர்.

“பார்த்தியா? அவளே வந்துட்டா? நீ வீணா டென்ஷன் ஆகற?” என்று பவியைக் கேட்டவாறே சிவா அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார்.

“மாமா... நீங்க டின்னர் முடிச்சுட்டீங்களா?”

“இல்லைடாம்மா... நீயும் ரெப்ரெஷ் ஆகிட்டு வா... வெயிட் பண்றோம்”

“சரி மாமா... உங்ககிட்ட கொஞ்சம் பேசனும், இம்பார்டன்ட் அன்ட் எமர்ஜென்சி”

“பேசிட்டு கூட சாப்பிடலாம்”

“இல்லை மாமா, டின்னர் முடிச்சுட்டு பேசலாம்”

“சரி க்விக்... நீ சீக்கிரம் ரெபிரேஷ் ஆகு”

“ஓ.கே. மாமா” என்றவள் அவர்களது அறைக்குச் செல்ல, மான்வித்தும் அவள் பின்னேயே சென்றான்.

பவித்ரா இரவு உணவை எடுத்து வைக்க டைனிங் ஹாலுக்குச் செல்ல, சிவா போனை எடுத்துக் கொண்டு, அவரது அலுவலக அறைக்குள் நுழைந்து, ஹாஸ்பிட்டலில் உள்ள மேனேஜருக்கு அழைத்தார்.

இரவு உணவு எவ்வித பேச்சுக்களும் இன்றி அமைதியாகச் சென்றது. சிவாவின் இறுகிய முகத்தை வைத்தே, யாரும் எதுவும் பேசவில்லை. பவித்ராவும், மான்வித்தும் அவ்வப்போது சிவா முகத்தையும், மனிஷா முகத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டே உணவருந்தினர்.

இரவு உணவை விரைவிலேயே முடித்து எழுந்த சிவா, “மூனு பேரும் சாப்பிட்டு முடிச்சுட்டு ஆபிஸ் ரூம் வாங்க” என்று சொல்லிக்கொண்டே கை கழுவச் சென்றார்.

அவர் சொற்படி அடுத்த கால் மணி நேரத்தில் அனைவரும் அவரது ஆபிஸ் அறையில் ஆஜராகினர்.

அனைவரையும் ஒருமுறை அழுத்தமாகப் பார்த்தவர், மனிஷாவிடம் திரும்பி,

“சொல்லும்மா... என்ன நடந்துச்சு”

“மாமா... இந்த விஷயம் மே பீ உங்களை இந்நேரம் ரீச் ஆகி இருக்கலாம், பட் நான் தெளிவா சொல்லிடறேன்”

“ம்ம்....”

இருவரின் உரையாடலிலும் மற்ற இருவருக்கும் டென்ஷன் ஏற ஆரம்பித்தது.

முன் தின இரவு – மணி 2.

இரண்டு நாட்களாக இரவு வேலையுடன், பகலிலும் சில மணி நேரங்கள் மருத்துவமனையில் பணியாற்றியதன் பொருட்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனிஷாவின் போன் அலறியது.

அவளது போன் சத்தம் கேட்ட மானவ், கிளைன்ட்டுடன் பேசிக்கொண்டிருப்பதை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு, முன்னறையில் இருந்து எழுந்து வந்து படுத்திருந்த மனிஷாவை எழுப்பினான்.

“மனிஷா... மனிஷா...”

“என்ன விது?” என்று உறக்கம் கலைந்து அரைத்தூக்கத்தில் கேட்க,

“உன் போன் அடிக்குது”

அவனது பதிலில் மொத்த உறக்கமும் கலைந்து எழுந்து உட்கார்ந்தவள், போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.

அந்தப் பக்கம் ரிசெப்சனில் இருந்து அழைத்திருந்தனர்.

“எஸ்... ஸ்பீக்கிங்”

“மேம்... ஒரு எமெர்ஜென்சி கேஸ்...”

“அங்க டாக்டர் ராதா இருப்பாங்களே”

“மேம்... இது போலிஸ் கேஸ்... ஆறு வயசு பொண்ணு, ரேப் அட்டெம்ப்ட்” என்று எதிர்பக்கம் குரலடைக்க ஒரு பெண் பதில் சொல்ல, அடுத்த நொடி மனிஷா கிளம்ப ஆரம்பித்து இருந்தாள்.

“ஐம் ஆன் தி வே... ராதாவை அட்டென்ட் பண்ண சொல்லுங்க... நானும் வந்துடறேன்”

“பர்ஸ்ட் எய்ட் போய்கிட்டு இருக்கு மேம்... கொஞ்சம் சீக்கிரம் வாங்க பிளீஸ்”

மனிஷா உடை மாற்றி பரபரப்புடன் கிளம்பி, மான்வித்தை நோக்கி, “இம்பார்டன்ட் கேஸ்” என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

அவர்களது மருத்துவமனையே பரபரப்புடன் இருந்தது, காரைக் கொண்டு வந்து போர்டிகோவில் நிறுத்தியவள், அங்கிருந்த ஊழியரையே பார்க் செய்யச்சொல்லி விட்டு வேகமாக உள்ளே நுழைந்தாள்.

அவளை எதிர்நோக்கி வந்த நர்ஸ், “மேம், அந்த பேபி என்.ஐ.சி.யூ. ல இருக்கு” என்று சொல்லிக்கொண்டே அவள் பின்னால் ஓட,

நான்காவது மாடியில் இருந்து கீழ்நோக்கி வரும் லிப்ட்டில் ஏறக் கூட பொறுமை இல்லாமல், நேராக படிக்கட்டை நோக்கிச் சென்றாள்.

முதல் தளம் முழுக்க, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அவசரசிகிச்சைக்கு ஒதுக்கி இருந்தனர்.

நேராகச் சென்று அந்தப் பெண்ணைப் பார்த்தவள் நெஞ்சம் ஒரு நொடி நின்றே விட்டது.

சின்னஞ்சிறு கிளி, தோராயமாக ஆறு வயதிற்குள் தான் இருப்பாள், பால் நிற சருமம், சுருட்டை முடி, அவளது செர்ரிப்பழ நிற உதடு பாதி கிழிந்திருந்தது, அவளது குண்டுக்கன்னங்கள் பல் தடத்துடனும், ரத்தம் உறைந்தும் கிடந்தது.

உடல் முழுக்க பல் தடங்களும், நகக்கீறல்களும் இருக்க, ரத்தப்போக்கும் இருந்தது.

சுயநினைவு இல்லாமல் கிடந்த குழந்தைக்கு, உரிய முதலுதவி செய்துவிட்டு, வெளியே வந்தவளின் கண்கள் கலங்கியிருந்ததில் ஆச்சர்யம் இல்லை.

வெளியே வந்தவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து வாய்விட்டே அழ ஆரம்பிக்க, சுற்றி இருந்தவர்களின் கண்களிலும் கண்ணீர்...

சில நிமிடங்களுக்குப் பின் எழுந்தவள், அவளது அறைக்குச் சென்று முகத்தைக் கழுவிவிட்டு உட்கார்ந்தாள்.

அவள் பின்னாலேயே வந்திருந்த நர்ஸ், “மேம் இன்ஸ்பெக்டர் உங்களைப் பார்க்கணுமாம்”

“வரச்சொல்லுங்க”

“எக்ஸ்கியூஸ் மீ மேம்”

“ஹலோ அர்விந்த் சார்”

“ஹலோ மேம்”

“சொல்லுங்க சார்”

“அரை மணி நேரத்துக்கு முன்னாடி, நாங்க ******** ஏரியாப் பக்கம் ரவுண்ட்ஸ்ல இருந்தோம், அப்ப ரோட்டு நடுவுல தெரு நாய்ங்க கும்பலா நின்னு குலைச்சுக்கிட்டு இருந்துச்சு, சந்தேகம் வந்து வண்டிய ஸ்லொவ் பண்ணி பார்க்கும் போது இந்த பாப்பா ரோட்டு ஓரத்துல கிடந்துச்சு, இமீடியட்டா இங்க தூக்கிக்கிட்டு வந்துட்டோம்”

“-------------------------------------“

“நாய்க்கடிச்ச மாதிரி எங்களுக்குத் தெரில, நீங்க ஏதாவது சஸ்பக்ட் பண்றீங்களா?”

“உள்ள டிரீட் பண்ணும் போது, அந்த டாக்டரும் சொன்னாங்க, பட் நாய் கடிச்ச மாதிரி காயங்கள் எதுவும் இல்லை தென், அட்டென்ட் பண்ணதுல இருந்து பார்த்தா பேபி உடல்ல ஒரு துணி கூட இல்லை, பல் தடங்களும், நகக்கீறல்களும் உடம்பு முழுக்க இருக்கு... “

“--------------------------------------------“

“ஹெவி பிளட் லாஸ்... கூடவே அந்த பாப்பாவோட வெஜினா புல்லா டேமேஜ் ஆகி இருக்கு, உள்ள இருந்து சின்னதா ஒரு குச்சி ஒன்னு எடுத்து இருக்கோம். அதை புல்லா உள்ள இன்சர்ட் பண்ணி இருக்காங்க. எவிடென்ஸ் கலக்ட் பண்ணி இருக்காங்க நீங்க அதை வாங்கிக்கலாம். நிச்சயமா இது கேங் ரேப். அதுக்குண்டான எவிடென்ஸ் பிளஸ் ரிபோர்ட் இன்னொரு டென் மினிட்ஸ்ல வாங்கிக்கலாம். ”

“--------------------------------------------“

“முதுகுல, கத்தி, இல்லைனா கண்ணாடி மாதிரி ஏதோ ஒரு பொருளால கீறி இருக்காங்க... தலை முடியை அங்கங்க பிடுங்கி இருக்காங்க... இட்ஸ் ரியலி ப்ரூட்டல் ரேப்... பேபி பிழைக்கிறது சான்ஸ் கம்மி...”

“இந்த பாப்பாவோட பேரன்ட்ஸ் யார்ன்னு தெரில, எல்லா ஸ்டேசனுக்கும் தகவல் சொல்லி இருக்கோம். இப்போதைக்கு இதை பிரஸ்க்கு கொண்டு போக வேண்டாம் மேம்... பேரன்ட்ஸ் வந்துடட்டும்”

“ஓ.கே. சார்... பட் மை ஹம்பிள் ரெக்வஸ்ட், இதுக்கு காரணமான நாய்ங்களை சும்மா விடாதிங்க சார். ஒரு பொண்ணா, பெண் குழந்தையோட அம்மாவா சொல்றேன்”

“நிச்சயமா மேம், இதை ஒரு பொண்ணோட அண்ணனா சொல்றேன், ஐந்தறிவு இருக்கற நாய் கூட அந்த பொண்ணுக்கு உதவி கேட்டு ரோட்ல நின்னு குலைக்குது, இந்த மாதிரி ஜென்மங்களுக்கு என் கையால நிச்சயமா இருக்கு மேம்”

“தேங்க்ஸ் சார்”

அவர் விடைபெற்றதும், சிறிது நேரம் அந்த சிறுமியிடம் இருந்தவள், அதற்கு மேல் மனம் தாங்காமல், அவளுடைய பிரத்தியேக அறைக்குச் சென்று, அங்கிருந்த கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தாள்.

மறு நாள் முழுக்க அங்கேயே இருந்து அந்தச் சிறுமியை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டு இருந்தாள்.

அரவிந்தின் தீவிர விசாரணையில், அன்று மாலை அந்தச் சிறுமியின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

அவர்களது குடும்பமே அங்கு கூடி அழுத அழுகையில், மருத்துவமனையின் மொத்த கூட்டமும் அங்கு தான் இருந்தது.

அவர்களது வீடு, திருச்சியை அடுத்த முசிறியில் ஒரு அப்பார்ட்மென்ட்க்கு அருகில் இருக்கிறது. இந்த சிறுமி பெயர் லாவண்யா, அவள் அந்த அப்பார்ட்மென்ட்டில் டியுஷன் செல்கிறாள். அன்று வழக்கம் போல டியுஷன் சென்றவளை அவளது அன்னை அழைத்துவரச் சென்றிருக்கிறார்.

அப்பொழுதுதான் அவள் காணாமல் போனது தெரிய வந்தது.

பெற்றோர் மட்டுமில்லாமல் அக்கம் பக்கம் அனைவரும் தேடத்தொடங்கி, போலீசிலும் புகார் தந்திருந்தனர்.

முசிறி போலீஸ் ஏற்கனவே விசாரித்ததில், லாவண்யா டியுஷன் செல்லும் ஆசிரியையின் கணவரின் தம்பி ஆனந்த் மற்றும் அவனது நண்பர்கள் இரண்டு பேர் திருச்சியில் இருந்து அவர்கள் வீட்டிற்கு வந்து சென்றிருகின்றனர். அவர்கள் அன்று லாவண்யாவுடன் அதிக நேரம் விளையாடிக்கொண்டு இருந்தது தெரிய வந்திருக்கிறது, ஆனால் அவர்கள் டியுஷன் முடியும் முன்னரே கிளம்பிச்சென்று இருக்கின்றனர்.

அவர்களை சஸ்பக்ட் செய்த போலீசார், அவர்களை டிரேஸ் செய்ய முயல, இங்கு லாவண்யா பற்றிய செய்தி அவர்களுக்கு எட்டியுள்ளது.

இறுதியில் அரவிந்த்தின் தலைமையில் அவர்களை சந்தேகத்தின் பேரில் விசாரிக்க அழைத்து வந்து, போலீஸ் பாணியில் விசாரிக்க, உண்மை வெளிவர ஆரம்பித்தது.

அண்ணி வீட்டு வேலையில் இருக்க, அண்ணன் திருமண வரவேற்பிற்கு கிளம்பிக்கொண்டு இருந்திருக்கிறார்.

அழகுச்சிறுமியுடன் போனைத் தந்து விளையாடிக்கொண்டு இருந்தவர்கள், அண்ணன் மற்றும் அண்ணியிடம் விடை பெற்று திருச்சிக்கு கிளம்பி இருக்கின்றனர்.

காரில் ஏறியதும், முதல் வேலையாக அந்த சிறுமியைப் பற்றியே பேச ஆரம்பித்து இருகின்றனர். அது எல்லை தீண்டியும் இருந்துள்ளது.

அப்பொழுதுதான் ஆனந்த் அவனது போனை சார்ஜ் போட்டுவிட்டு போனை மறந்துவிட்டு வந்தது தெரிந்து இருக்கிறது. உடனே வண்டியை வீட்டை நோக்கித் திருப்பியுள்ளனர்.

வீட்டிற்குள் அவன் நுழையும் போது, அவனது அண்ணி பாத்ரூமில் இருக்க, அவசரத்தில் இவன் போனை எடுத்துக்கொண்டு சொல்லாமல் கிளம்பி இருக்கிறான்.

அவன் கிளம்பி வெளியே வரும்போது லாவண்யாவைப் பார்த்திருக்கிறான், செருப்பை மாட்டிக்கொண்டே லாவண்யாவை போனைக் காட்டி வெளியே அழைத்திருக்கிறான்.

அவளும் வெளியே வந்திருக்கிறாள், கீழ் தளத்தில், முதல் வீட்டில் குடியிருப்பதால், அவளை எளிதாகக் காருக்கு கூட்டி வந்தவன், அவளைக் காரில் ஏற்றிக்கொண்டுள்ளான்.

மற்றவர்கள் ஒரு நொடி பதறினாலும், அடுத்த நொடி சுதாகரித்து, அங்கிருந்து கிளம்பியிருக்கின்றனர்.

வண்டி செல்லச் செல்லச் சிறுமி பயந்து “அம்மாக்கிட்ட போகனும்” என்று அழ ஆரம்பிக்க,

“உங்க வீட்டுக்குத்தான் போறோம் செல்லம்... உனக்கு புது கேம் காட்டறேன் பாரு” என்று சொல்லி போனைத் தந்து மயக்கி ஆள் அரவமற்ற இடத்தில் வந்து நிறுத்தி இருக்கின்றனர்.

அங்கு ஏற்கனவே வாங்கி வைத்து இருந்த மதுபானத்தை குழந்தைக்கு ஊற்றிக் கொடுத்துள்ளனர்.

குழந்தை மறுக்கவே, அதனுடைய வாயில் கட்டாயப்படுத்தி ஊற்றி இருக்கின்றனர். அதில் குழந்தை மயக்கமடையவே, அவளை அப்படியே அவர்கள் தங்கி இருக்கும் அறைக்கு அழைத்து வந்திருகின்றனர்.

வழியிலேயே அவர்களது இச்சைகளையும் தீர்த்துக்கொண்டு வந்திருகின்றனர்.

இவர்கள், உடன் தங்கி இருக்கும் மற்றொருவனிடம் முன்னேற்பாடாக கதவைத் திறந்து வைக்கச் சொல்லிவிட்டு, வந்திருகின்றனர். புதிதாக உருவாகி இருக்கும் நகர் ஒன்றில் தனி வீடெடுத்து தங்கி இருக்க, அருகாமை வீடுகள் இல்லாமல் போனதும் அவர்களுக்கு வசதியாக இருந்திருக்கிறது.

அவள் காணாமல் போனதையும், அவனைப் பற்றி போலீஸ் விசாரித்ததையும் அவனுடைய அண்ணா அவனுக்கு சொல்ல, அடுத்த நிமிடம் அந்த மலரை அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கும், அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு இடத்தில், ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கும் தெருவில், கொண்டு வந்து அந்த சிறுமியை வீசிவிட்டு திரும்பிச் சென்று வீட்டிலும், காரிலும் இருந்த தடையங்களை அழித்துள்ளனர்.

ஆனால் விசாரணை அரவிந்தின் கைக்கு மாறியதும், அவரது விசாரிப்பில் மாட்டிக்கொண்டனர்.

லாவண்யாவின் பெற்றோரும், உறவினரும் கேஸ் கொடுத்து, மீடியாவிலும் சொல்லிவிட, விஷயம் பெரிதாகிவிட்டது.

அந்த நால்வரில் ஒருவன், கோவையின் பிரபல அரசியல் புள்ளியின் மகன். அவனது சார்பில் ஒரு கூட்டம் ஆஜராக, மனிஷாவே நேரடியாக களத்தில் இறங்கி, லாவண்யா பற்றிய ரிபோர்ட்டையும், இந்த நால்வரைப் பற்றியும் தெளிவாகச் சொல்லி, மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர், முழுத் தகவலும் அளிப்பதாக மீடியாவிடம் சொல்லிவிட, அங்கு ஆரம்பித்தது அவளுக்கு பிரச்சனை.

அவளைச் சந்தித்து பேரம் பேச முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால், மனிஷாவின் நேர்மை அவர்களிடம் எடுபடவில்லை.

பணிவு வேலைக்கு ஆகவில்லை என்றதும் மிரட்டலைக் கையில் எடுத்துள்ளனர்.

அன்று பணி முடிந்ததும் அவள் கிளம்பி வரும் வழியில், ஆள் நடமாட்டம் குறைந்த அந்த சாலையில் அவளது கார் எதன் மீதோ ஏறி இறங்கி உள்ளது. அதில் அவளது கார் பஞ்சராக, காரை ஒரு மரத்தடியில் நிறுத்தி இருக்கிறாள்.

அவள் பவித்ராவிற்கு அழைத்து, மான்வித்துடன் வருவதாக சொல்லிவிட்டு மான்வித்துக்கு அழைத்துள்ளாள்.

அவன் அழைப்பை துண்டிக்க,

பஸ்ஸிலோ, ஆட்டோவிலோ போய் விடலாம் என்று முடிவெடுத்துக்கொண்டு காருக்கு வெளியே பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

அன்று காலை அவளிடம் பேரம் பேசிய நால்வர் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

உடனே அவள் மீண்டும் மீண்டும் மான்வித்துக்கு முயற்சி செய்துகொண்டே இருந்திருக்கிறாள். அவனும் துண்டித்துக் கொண்டே இருக்க, அவர்கள் அவளது காரை நெருங்கி இருந்தனர்.

“என்ன டாக்டரம்மா? அந்த பக்கம் கவர்மென்ட் ஆஸ்பிட்டல் டாக்டரைக் கரக்ட் பண்ணிட்டோம், இந்த பக்கம் நீங்க என்ன சொல்றீங்க?”

“-----------------------------------------“

அவர்கள் உள்நோக்கம் புரிந்து கொண்டவள், போனையும், பையையும் எடுத்துக்கொண்டு, காரில் இருந்து இறங்கி தெரு முனையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அவளை மேற்கொண்டு நடக்க விடாமல், சுற்றி வளைத்த நால்வரும், ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டு,

“நாளைக்கு ரிபோர்ட்ல எங்க தம்பி பேரு வரக்கூடாது”

“நான் உயிரோட இருக்கற வரைக்கும், அவன் பண்ண இந்த அநியாயத்துக்கு அவனுக்கு தண்டனை வாங்கித்தராம நான் ஓய மாட்டேன்”

“உங்களுக்கு ரெண்டே சாய்ஸ் மேடம், ஒன்னு உயிரோட, நாங்க தர்ற பணத்தை வாங்கிட்டு செட்டில் ஆகிடுங்க, இல்லைன்னா உயிரை விட்டுடுங்க”

“என்னைப்பத்தி உங்களுக்கு தெரியாது”

“என்ன மேடம் தெரியாம? நீங்க ஈஸ்வர் குரூப் மருமகள்ன்னு தெரியும், உங்க மேல சின்ன கீறல் விழுந்தாலும் ஈஸ்வர் சார் எங்க வம்சத்தையே வேரோட அழிப்பார்ன்னு தெரியும்”

“தெரிஞ்சும் தைரியமா வந்து நிக்கறீங்க”

“மேடம், எங்க ஸ்டைலே வேற... நாங்களும் லோக்கல், எங்க ஐடியாவும் தர லோக்கலாத் தான் இருக்கும்.... ஆனா கடைசி வரை நாங்க மாட்டிக்க மாட்டோம்... பார்ப்போமா”

“உங்களால முடிஞ்சத பாருங்கடா... நானும் பார்க்கறேன்” என்றவளை விட்டு சிரிப்புடன் அவர்கள் விலகிச் செல்ல,

மனிஷாவும் தெருமுனையை நோக்கி நகர்ந்திருகிறாள், முன்னே செல்லச் செல்ல, ஆள் அரவமற்ற அந்த தெருவில், பின்பக்கம் வண்டி வரும் சத்தம் கேட்டு திரும்பியவள் சுதாகரிக்கும் முன்பே அவளை ஒருவர் இழுக்க, அவளை இடிக்க வந்த கார் அவளைக் கடந்து சென்றது.

ஒரு நொடி அதிர்சியில் தடுமாறிய மனிஷா, சுதாகரித்து நிமிர, அவளுக்கு பரிச்சியமான சம்யுக்தா நின்று கொண்டு இருந்தாள்.

அவளைப் பார்த்து புன்னகை செய்த மனிஷா,

“மேம் நீங்க எங்க இங்க?”

“எங்க வீடு இந்தப்பக்கம் தான், நான் வரும் போது ரோட்ல உங்களை சுத்தி நாலு பேர் நிற்கரதைப் பார்த்தேன், சோ சுலோ பண்ணி வண்டியை ஓரமா நிறுத்தச் சொன்னேன். அதுக்குள்ள, அவங்க நகரவும், நீங்க முன்னாடி வர, அப்பத்தான் நீங்கதான் அதுன்னே தெரிஞ்சுது, சேம் டைம் உங்க பின்னாடி வேகமா கார் வந்துது, சட்டுன்னு இறங்கி உங்களை இந்தப்பக்கம் இழுத்தேன்.”

“தேங்க்ஸ் மேம்... என் உயிரையே காப்பாத்தி இருக்கீங்க?”

“இட்ஸ் ஓகே... இங்க நிக்கறது சேப் இல்லை... வாங்க போகலாம்”

இருவரும் காரில் ஏறி அமர,

“என்னாச்சு? யார் இவங்க?”

“இன்னிக்கு நியூஸ் பார்த்தீங்களா?”

“எஸ்... உங்க ஹாஸ்பிட்டல் நியூஸ் தான் டாப்”

“எஸ் மேம்... அந்த அரசியல்வாதி பையனோட ஆளுங்க இவங்க, பணம் தர்றோம், எங்க பையனுக்கு எதிரா ரிபோர்ட் தான்னு ஒரே ரகளை, இப்பவும் மிரட்டினாங்க... நான் முடியாதுன்னு வந்துட்டேன்... அதுக்குத்தான், என்னைப் போட்டுத்தள்ள பிளான்”

“நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க”

“தேங்க்ஸ் மேம்... நான் மாமாக்கிட்ட சொல்லி உடனே இதுக்கு முடிவு கட்டறேன், என்னை அந்த ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் இறக்கி விட்டுடுங்க”

“நோ வே... ஆபத்து வரப்போகுதுன்னு கன்பார்ம் ஆனதுக்கு அப்புறம், எப்ப? எந்தப்பக்கம் வருதுன்னு சொல்ல முடியாது”

“பட் உங்களுக்கு ஏதாவது பிராப்ளம் வந்தா?”

“பேஸ் பண்ணிக்கலாம்”

“ரிஸ்க் வேண்டாம் மேம், பிளீஸ்...”

“நான் பார்க்காத ரிஸ்க்கா... வாங்க... வீட்ல தான் டிராப் பண்ணுவேன்...” என்றவள்,
“அண்ணா இவங்ககிட்ட வழி கேட்டுக்கோங்க...” என்று டிரைவரிடம் சொல்ல,

“சரிங்கம்மா....” என்றவர் வழி கேட்டுக்கொண்டே அவர்கள் வீட்டை நோக்கி காரைச் செலுத்தினார்.

அனைத்தையும் சொல்லி முடித்தவள்,

“இது தான் மாமா நடந்துச்சு... நெக்ஸ்ட் என்ன பண்றதுன்னு நீங்க தான் சொல்லனும்”

பவித்ரா அழுது முடித்திருக்க, மானவ் கோபத்தில் உட்கார்ந்திருந்தான். சிவாவோ எவ்வித உணர்வையும் காட்டாது, மருமகளுக்கு தெளிவாக பதில் சொல்ல ஆரம்பித்தார்.

“நாளைக்கு காலைல நித்யாவும், பாப்பாவும் இங்க இருப்பாங்க, அவங்களை சேப்டி பண்ணிட்டேன், தென் நீ நாளைக்கு கண்டிப்பா போயி உன் சைட் இருக்கற ரிபோர்ட்டை மீடியாவுக்கு குடுக்கற.”

“சாரி மாமா... நான் அவங்களைப் பத்தி யோசிக்காம விட்டுட்டேன் மாமா...”

“இதுக்கு ஏன் நீ இவ்ளோ டென்ஷன் ஆகற? நல்ல வேளை, நீ ஆட்டோல வராம போனது”

“ஏன் மாமா?”

“என்னை பத்தி தெரிஞ்சும் உன்னை கொல்லத் திட்டம் போட்டவங்க, உன்கிட்டையே க்ளூ குடுத்து இருக்காங்க, அதாவது, உன்னை அவங்க தான் கொன்னாங்கன்னு எனக்கு தெரியாம பார்த்துக்க முயற்சி பண்றதை உன்கிட்டையே சொல்லி இருக்காங்க... சோ நீ வீட்டுக்கு வராம இருக்கத்தான் முயற்சி செஞ்சு இருப்பாங்க”

“ஓகே மாமா... இப்ப எனக்கு ஒரு குழப்பம், அந்த அரவிந்த் நேர்மையான இன்ஸ்பெக்டர்... இப்ப அவரை இந்த கேஸ்ல எப்படி ஹேண்டில் பண்ணுவாங்கன்னு தெரிலையே?”

“நான் பார்த்துக்கறேன் மனிஷா... நீ போயி தூங்கு”

“ஏங்க உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்ட பவித்ராவை நோக்கிய சிவா,

“இன்னிக்கு எனக்கு இருந்த வொர்க்ல, நான் நியூஸ் பார்க்கல, தென் ஹாஸ்பிட்டல் மேனேஜர் என்னை கான்டாக்ட் பண்ணி இருக்கார், பட் எனக்கு பேச டைம் இல்லை. எப்பயுமே போலீஸ் கேஸ் வந்தா இன்பார்ம் பண்ண சொல்லி இருந்தேன், சோ அஸ் யூஸ்வல் ஆக்சிடென்ட் போலன்னு இருந்துட்டேன்... சாரிடா மனிஷா...”

“இட்ஸ் ஓகே மாமா... நானே இன்பார்ம் பண்ணி இருக்கனும், பட் இன்னிக்கு எனக்கு இருந்த மூட்ல என்னால யோசிக்கவே முடில, தென் டென்ஷன், அந்த பேபிய காப்பாத்த ரொம்ப முயற்சி பண்ணேன், அந்த டென்ஷன் வேற”

“இப்ப அந்த குழந்தை எப்படி இருக்கு மனிஷா?”

“கிரிட்டில்கல் தான் அத்தை... பிழைக்க வாய்ப்பு கம்மி”

“மானவ்... உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன், வீட்ல இருந்து போன் பண்ணினா அட்டென்ட் பண்ணுன்னு, ஒரு எமர்ஜென்சிக்கு உன்னை கூப்பிட்டா நீ என்ன பண்ணி வைச்சிருக்க?”

“சாரிப்பா... வொர்க் டென்சன்ல”

“நீ சம்பாதிக்கறதே இவளுக்காகத்தான்... அவ போன் பண்ணினா உன்னால அட்டென்ட் பண்ண முடியாதா?”

“சாரிப்பா”

“நான் எவ்ளோ வொர்க் இருந்தாலும், அம்மா கால் பண்ணினா அட்டென்ட் பண்ணி, வொர்க் இருக்குமா, கூப்பிடறேன், இம்பார்ட்டென்ட்ன்னா சொல்லுன்னு கேட்கிறேன்ல... இதை உன் கிட்ட பல தடவை சொல்லிட்டேன்... இன்னும் நீ கேட்க மாட்டீங்கற”

“மாமா... பிளீஸ் விடுங்க...”

“சப்போஸ் அந்த டாக்டர் உன்னை காப்பாத்தலைன்னு வை, இந்நேரம் நீ என்ன ஆகி இருப்ப? அவன் கால் அட்டென்ட் பண்ணி இருந்தா, அடுத்த அஞ்சு நிமிசத்துல அங்க இருந்திருப்பான், நீயும் அவன் வருவான்னு தைரியமா இருந்திருப்ப”

“மாமா... நடந்ததை பேச வேண்டாம்... இனி நடக்கறதை பேசுவோமே...”

“இப்ப போயி தூங்கு... நாலஞ்சு நாளா உனக்கு சரியான தூக்கமே இல்லை... பவி... நாளைக்கு ரிப்போர்ட் சப்மிட் பண்ணிட்டு அவ வந்ததும், அவளை தூங்க விடுங்க... புரிஞ்சுதா”

“சரிங்க...”

“சரி எல்லாரும் போயி தூங்குங்க... நான் நித்யாவையும், தனுவையும் இங்க வர்ற வரைக்கும் பாலோ பண்ணனும்...”

“அப்பா... நீங்க போயி தூங்குங்க... நான் பாலோ பண்றேன்... ஏற்கனவே இன்னிக்கு பயங்கர டென்ஷன் பிளஸ் வொர்க்”

“என்னாச்சு மானவ்? காலைல நல்லாத்தானே போனீங்க”

“ஒன்னும் இல்லை ம்மா... அந்த டென்டர் பிளஸ் கான்டிராக்ட் நம்ம கையை விட்டு போயிடுச்சு”

“நிஜமாவா? அப்படி எதுவும் இதுவரை நடத்ததில்லையே... சரி விடுங்க... அதுவும் நல்லதுக்கு தான்... நீங்க ரெண்டு பேரும் வீட்ல இருக்கற நேரத்தையும் அது சாப்பிட்டு இருக்கும்”

“என்னம்மா இவ்ளோ ஈசியா சொல்றீங்க?”

“பணத்தை சம்பாதிச்சு சம்பாதிச்சு, உங்க அப்பா வாழ்க்கைல ஒரு என்டர்டையின்மென்ட் கூட உருப்படியா பண்ணதில்லை”

“ஏம்மா பொய் சொல்றீங்க? அடிக்கடி டூர் போவோம், ரிசார்ட் போவோம், பாரின் டிரிப்ஸ் போவோம்...”

“உங்கப்பா அங்க வந்து குடும்பத்தோட மட்டும் என்ஜாய் பண்ணாரா? இல்லை அங்கேயும் பிஸினஸ் பண்ணாரா?”

“அது.........”

“அதைத்தான் சொல்றேன்... அவராவது ஓகே... நீ இவளை எங்கையாவது கூட்டிக்கிட்டு போறியா? அப்படியே போனாலும் ரெண்டே நாள்ல அவ ஓடி வருவா, இல்லை நீ ஓடி வருவ”

“அம்மா...”

“இப்போதைக்கு தேவையில்லாம என்ன பேச்சு? போயி தூங்குங்க... மானவ்... இந்தா... இதுல நான் ரெண்டு பேருக்கும் அரேஞ் பண்ண செக்யுரிட்டி நம்பர் இருக்கு... பாலோ பண்ணு... ஒரு வேலை நீ தூங்கற மாதிரி இருந்தா, என்னை எழுப்பு”

“ஓகேப்பா”

அனைவரும் அவரவர் அறைக்குச் செல்ல,

“சாரி மனிஷா...”

“எதுக்கு?”

“நான் கால் அட்டென்ட் பண்ணாததுக்கு”

“நான் பீல் பண்ணவே இல்லை... ஆக்சுவலி நான் அந்த நேரத்துல மாமாக்கு கால் பண்ண முடியலை, அவங்களுக்கு தெரியாம இருக்கனும், சோ என்னால கால் பண்ண முடிஞ்சது லாஸ்ட் கால் பண்ண உங்களுக்குத் தான், கட் பண்ணாலும் வேற வழி இல்லை... இல்லைனா நான் மாமாக்குத்தான் கால் பண்ணி இருப்பேன். அதுக்கு கீழே இருந்த அஞ்சு காலும் வெவ்வேற ஊர்ல இருக்கற டாக்டர்ஸ், பேசன்ட்ஸ்... சோ ஐ கான்ட்.” என்றவள் அவன முகத்தைக் கூட ஏறிடாது ரெப்ரெஷ் ஆகிவிட்டு வந்து ஒரு தூக்க மாத்திரையையும் போட்டுக்கொண்டு படுத்துவிட்டாள்.

மானவ் லைட்டை அணைத்துவிட்டு, மாடியில் இருந்த ஹாலில் வந்து உட்கார்ந்து கொண்டே மகளையும், மாமியாரையும் பத்திரமாக வீடு கொண்டு வந்து சேர்க்கும் பணியைத் துவங்கினான்.

“ஏங்க? மான்வி போன் பண்ணா... நீங்க போனை எடுக்கலைன்னு சொன்னா, உங்களை வந்ததும் போன் பண்ண சொன்னா”

“இப்ப இருக்கற மன நிலைல சான்ஸ் இல்லை பவி... மார்னிங் தான்... மே பீ கால் பண்ணா விவரம் சொல்லிடு”

“சரிங்க... மானு போன் பண்ணா... விசா விவரம் சொன்னா... மாப்பிள்ளை வரலையாம், கூட்டிக்கிட்டு போக மட்டும் வருவாராம்”

“சரிம்மா...”

“என்ன சிவா நீங்க? ஏன் இவ்ளோ டென்ஷன்? உங்களை மீறி இங்க எதுவும் நடக்காது”

“தெரியும் பவி... ஆனாலும் என்னமோ தெரில... மனசே சரி இல்லை...”

“சிவா... ஒன்னு சொல்லவா? இந்த மாதிரி எத்தனை மிரட்டலை நீங்க பார்த்திருப்பீங்க? அவ்ளோ ஏன் மனிஷாவே எத்தனை சந்திச்சு இருக்கா?”

“பட் ஒரு செகன்ட் இல்லைன்னா, அந்த கார் அவளை அடிச்சு தூக்கி இருக்கும் இல்லையா?”

“சரி இப்ப என்ன பண்ண போறோம்?”

“நாளைக்கு ரிட்டர்ன் கம்ப்ளைன்ட் ஒன்னு தரப் போறேன், சேம் கோர்ட்ல கேட்டு மனிஷாவுக்கு பாதுகாப்பு அரேஞ் பண்ணனும்”

“சரி... இப்ப தூங்குங்க... உங்க மைன்ட் ரிலாக்ஸா இருந்தாத்தான், நாளைக்கு உங்களால தெளிவா யோசிச்சு வேலை செய்ய முடியும்.”

“சரி தான்...”

“அட... மனிஷாட்ட காரைப் பத்தி கேட்க நினைச்சேன், மறந்துட்டேன்... எப்படியும் மெக்கானிக்கு சொல்லி இருப்பா”

“நான் அர்விந்த்க்கு கால் பண்ணி சொல்லி இருக்கேன், மர்டர் அட்டெம்ப்ட் சோ அங்க எவிடென்ஸ் தேட சொல்லி இருக்கேன், தென் மனிஷா என்கிட்டே பேசனும்ன்னு சொல்லும் போதே நான் அங்க கால் பண்ணி நடவடிக்கை எடுக்கப் பேசிட்டேன், நீ கவலைப்படாம இரு...”

“சரிங்க.. தூங்குங்க...”

இருவரும் உறங்க ஆரம்பிக்க,

இன்னொரு பக்கம்,

மனதிலுறுதி வேண்டும்
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்

தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்

பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்

என்று காந்தக் குரலில் பாட்டு ஓடிக்கொண்டு இருக்க, அதைக் கேட்டுக்கொண்டு கண் மூடி அமர்ந்திருந்தாள் சம்யுக்தா...

அன்றைய நாளின் சுக துக்கங்கள் அனைத்தையும் கழுவி, அவளுடைய மனதை தெளிவாக்கிக்கிகொண்டிருந்தது அந்த கர்நாடக இசையும், பாடலின் வரிகளும்...


ராகம் இசைக்கும்....
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 3
ஓடிக்கொண்டிருந்த பாடலை நிறுத்தி விட்டு,

“சம்யு” என்றழைத்த பரத்தைக் கண் திறந்து பார்த்த சம்யுக்தா,

“மாமா”

“நேரம் என்ன? இன்னும் தூங்காம இருந்தா எப்படி?”

“இல்லை மாமா... தூக்கமே வரலை”

“மனசு தெளிவா இருக்கனும்ன்னு தான் பாட்டு கேட்டுகிட்டு இருக்க? அதையும் மீறி மனசுல என்ன குழப்பம்?”

“அவரைப் பத்தித்தான் மாமா...”

“அவனால உன்னையும், பசங்களையும் விட்டு பிரிஞ்சு இருக்க முடியாது. கண்டிப்பா வந்துடுவான் பாரு”

“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு மாமா... ஆனா இதுவரைக்கும் எனக்கு ஒரு போன் கூட பண்ணலையே...”

“இந்நேரம், நீ அவனை நினைச்சு கவலையோட இருக்கன்னு அவனுக்கேத் தெரிஞ்சிருக்கும், உன் மேலக் கரை காணாத காதல் வைச்சிருக்கறவன், அவன் உயிர் உன்னை தான் சுத்திக்கிட்டு இருக்கும்... நிம்மதியா போயி தூங்கும்மா... இங்க பாரு நாம எவ்ளோ தூரத்துல இருந்தாலும், நம்ம காதலிக்கறவங்ககிட்ட தான் நம்ம மனசும், உயிரும் இருக்கும்... நிம்மதியா தூங்கு...”

“குட் நைட் மாமா” என்றவள் அவளது அறைக்குச் செல்ல, பரத் அவரது அறைக்குச் சென்றார்.

இன்றும் அவரது அறையில் இடம் பிடித்திருக்கும் பவித்ராவின் புகைப்படத்தின் முன் நின்றவர், வழக்கம் போல அன்றைய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.
அனைவரும் உறக்கத்தில் இருக்க, மானவ் உறங்காமல் மகள் மற்றும் மாமியாரின் வருகைக்காகக் காத்திருந்தான்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புது விதமான நாளை சுமந்து கொண்டு மெல்ல விடியல் ஆரம்பித்தது.

முன் தின இரவில் போட்ட தூக்க மாத்திரையின் உதவியால் மனிஷா நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

வழக்கம் போல அதிகாலையில் எழுந்த சிவாவும், பவித்ராவும் அவர்களது நாளை ஆரம்பித்தனர்.

“மானவ்” என்ற தந்தையின் அழைப்பில் அவரை மேலிருந்து எட்டிப்பார்த்தான்.

“மானவ் ரெண்டு பேரும் எங்க இருக்காங்க?”

“இப்ப தான் அவங்க நாமக்கல் தாண்டி வந்துக்கிட்டு இருக்காங்க?”

“ஏன் லேட்? நான் தந்த பிளான் படி அவங்க இந்நேரம் இங்க இருந்து இருக்கனுமே?”

“ஆமாப்பா... இமீடியட்டா சொல்லவும், அத்தை ஜுவல்ஸ், கேஷ், டிரெஸ் எல்லாத்தையும் பேக் பண்ண லேட் ஆகிடுச்சு போல, தென் வீட்டை ஒழுங்கு பண்ணி, தோட்டகாரரை வரச்சொல்லி அவர்கிட்ட பேசிட்டு, சிலிண்டரை பக்கத்து வீட்ல ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு கிளம்ப லேட் ஆகிருச்சு...”

“அதெல்லாம் அப்படியே விட்டுட்டு வர வேண்டியது தானே”

“இல்லைப்பா... நான் அத்தையை இங்கேயே ஒரு மூனு நாலு மாசம் இருக்கற மாதிரி வரச் சொல்லி இருக்கேன், அப்புறம் மெல்லப் பேசி இங்கேயே பெர்மனென்ட் பண்ணிடற ஐடியால இருக்கேன்”

“சரி நீ போயி தூங்கு... நான் பார்த்துக்கறேன்”

“சரிப்பா... நான் மதியமா கம்பெனிக்கு வரேன்”

“நோ... நீ இன்னிக்கு முழுக்க மனிஷா கூட இரு... லாயர் வருவார்... ஏற்கனவே நான் ஓரலா மர்டர் அட்டெம்ப்ட் கம்ப்ளைன்ட் தந்து இருக்கேன், நீ போயி அதை ரிட்டர்ன் கம்ப்ளைன்ட் பண்ணிட்டு, கோர்ட்ல மூவ் பண்ணி அவளுக்கு ப்ரோடெட்க்சன் வாங்க ஏற்பாடு பண்ணு.”

“ஓகேப்பா...”

“சரி போயி தூங்கு... மனிஷா எழுந்தாச்சா பாரு?”

“இல்லைப்பா... நேத்து சிலீப்பிங் டோஸ் போட்டுகிட்டு தூங்குனா... எழுப்பிப் பார்க்கிறேன்”

“அப்ப எழுப்பாத விடு... ஒரு எட்டு மணிக்கு எழுப்பினா சரியா இருக்கும்... நீ இன்னிக்கு ஒரு நாள் கொஞ்சம் தூக்கத்தை தியாகம் பண்ணு”

“நத்திங் இஸ்யூப்பா... நைட் அப்பப்ப கொஞ்சம் கண்ணசந்துக்கிட்டேன்...”

“வெல்... நீ போ”

இருவரின் உரையாடலையும் கேட்டுக்கொண்டே பவித்ரா வேலையாட்களிடம், பேத்தியின் விளையாட்டு அறையை சுத்தம் செய்யச்சொல்லிவிட்டு அனைவருக்கும் காலை உணவைத் தயாரிக்கச் சொல்லிவிட்டு, பூஜை செய்ய பூஜையறைக்குள் நுழைந்தார்.

சிவா நித்யாவுக்கு அழைத்து பேச ஆரம்பித்தார்.

அறைக்கதவைத் தாளிட்டு உள்ளே நுழைந்த மானவ், மனிஷாவின் அருகில் சென்று படுத்தான். மாத்திரையின் மீதி இருந்த வீரியத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் முகத்தையே இமைக்காது பார்த்திருந்தான். நேரம் செல்லச் செல்ல அவளைப் பார்த்துக்கொண்டே உறக்கத்தை தழுவ ஆரம்பித்தான்.


இன்னொரு பக்கம் சம்யுக்தா அன்றைய நாளை பரபரப்பாக ஆரம்பித்து இருந்தாள்.
அன்றைய காலை அவள் ஒரு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டி இருந்தது. அதற்காகத் தன்னை தயார்படுத்திக்கொண்டு கிளம்பிக்கொண்டு இருந்தாள்.
பரத் அப்பொழுதுதான் வாக்கிங் போய்விட்டு வீடு திரும்பினார்.

பரபரப்புடன் கீழே வந்த சம்யுக்தாவைப் பார்த்தவர்,

“ஏதாவது சாப்பிட்டியாமா?”

“இல்லை மாமா... அங்க போயி பார்த்துக்கறேன்”

“இந்தக் கதையே வேண்டாம்... ஒழுங்கா உட்கார்... பால் குடிச்சுட்டுத் தான் கிளம்பற”
“பிளீஸ் மாமா... அப்புறம் லேட் ஆகிடும்...”

“கார்ல போறதுக்கு எதுக்கு லேட் ஆகுது?” என்று அவளிடம் சொல்லிக்கொண்டே பின்னால் இருந்த வேலையாளிடம் கண் ஜாடை காட்டினார்.

“யார் சொன்னது நான் கார்ல போறேன்னு... நான் ஸ்கூட்டில போறேன்” என்று சொல்லிக்கொண்டே கைப்பையை ஆராய்ந்து கொண்டே அவருக்கு பதில் சொன்னாள்.

“இங்க உனக்கு ரூல்ஸ் தெரியாது, லைசென்ஸ் வேணும்...”

“அது உங்க பிராப்ளம் மாமா... சீக்கிரமா எனக்கு லைசென்ஸ் வாங்க ஏற்பாடு பண்ணுங்க... என்னால ரிலாக்ஸா இருக்க முடில... சோ இன்னிக்கு ஸ்கூட்டி தான்... சர்ஜரி வேற இருக்கு...”

அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, பாலும், பிஸ்கட்டும் எடுத்துக்கொண்டு அந்த வேலையாள் வந்தார்.

“இதை முதல்ல குடி” என்று பாலை எடுத்து அவள் கைகளில் தந்தார்.

“மாமா பிளீஸ்....”

“நீ குடிக்கல உன் புருஷனுக்கு நியூஸ் அனுப்பிடுவேன்”

“அவர் தான் போன் எடுக்க மாட்டாரே...”

“அவனுக்கு நியூஸ் சொல்லத்தான் எனக்கு ஆள் இருக்காங்களே...”

“ம்ஹும்...” என்று சிணுங்கியவாறே, கைகளில் இருந்த பாலை அருந்த ஆரம்பித்தாள்.

“நீ ஸ்கூட்டில போறது தெரிஞ்சது, உன் புருஷனுக்கு யார் பதில் சொல்லறது”?

“நான் தான்... நீங்க தான்.... நாம தான்...”

“உன்னைக் கெடுக்கறதே நான் தான்ன்னு திட்டுவான்”

“எனக்காக நீங்க வாங்காத திட்டா? மறுபடியும் அதேதான் நடக்கும்? “என்னப்பா நீங்க? அவ தான் விளையாட்டுத்தனமா இருக்கான்னா, நீங்களும் அவ கூட சேர்ந்துகிட்டு ஆடறிங்க? ஒழுங்கா கண்டிச்சு வையுங்க... அதை விட்டுட்டு அவளுக்கு சப்போர்ட் பண்ணி அவளை இன்னும் கெடுக்காதிங்க...” ஷ்.. இதைதான சொல்லப்போறார்... விடுங்க மாமா...”

என்றவாறே கையில் இருந்த காலி டம்ளரை அவரது கைகளிலேயேக் கொடுத்துவிட்டு, வண்டியை நோக்கிச் சென்றாள்.

“சம்யு...” என்ற அவரின் குரல் அவளது வண்டிச்சத்தத்தோடு சேர்ந்து தேய்ந்து மறைந்தது.

“வண்டி வாங்கித்தந்தது தப்பா போச்சு... அவனுக்கு தெரிஞ்சா குதி குதின்னு குதிப்பான்... கடவுளே... நீ தான் அவளுக்கு துணை நிற்கனும்... பத்திரமா போயிட்டு பத்திரமா வரனும்...” என்று புலம்பியவர்,
கிட்செனை நோக்கி, “முருகா... காபி கொண்டா... ” என்று சொல்லிக்கொண்டே ஹாலில் அமர்ந்து பேப்பர் படிக்க ஆரம்பித்தார்.

ஸ்கூட்டியில், எளிய சில்க்காட்டன் புடவையில், இடை வரை நீண்டிருந்த கூந்தலை சுருட்டி சிறு கொண்டை போலப் போட்டு, அது அவிழா வண்ணம் பின் செய்து கொண்டிருந்தவள், அந்தக் காலை வேளையில் சிறகடித்துப் பறக்கும் பறவையென சாலையில் பறந்து கொண்டிருந்தாள்...

அவளைப் பின் தொடர்ந்து ஒரு சில்வர் கிரே இன்னோவா அவளது வேகத்திற்கு ஈடாகச் சென்று கொண்டு இருந்தது.

தன்னைப் பின் தொடரும் வண்டியைப் பற்றி அறியாத சம்யுக்தா சாலையில் கருத்தாகச் சென்று கொண்டு இருந்தாள்.

எதிர்பாரா நேரத்தில், வேகமெடுத்து அவளை அடித்துத் தூக்க வந்த காருக்கும், அவளது வண்டிக்கும் இடையே வேகமாக ஒரு கார் வந்து நிற்க, அந்த இன்னோவா வந்த வேகத்துக்கு அந்த காரில் மோதி நிலை தடுமாறி, பாதை மாறி சாலையின் பக்கம் இருந்த சரிவில் சரிந்து விழ ஆரம்பித்தது.

இடையில் இருந்த காரும் அடிபட்ட வேகத்தில் கீழே சரிந்து பாதி நசுங்கி இருந்தது.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பின்னால் நடந்த களேபரத்தில் எழுந்த ஒலியில் கண்ணாடியில் பார்த்த சம்யுக்தா ஒரு நொடி அதிர்ந்து போனாள். உடனே சுதாகரித்து, வண்டியை சற்று தள்ளி ஓரமாக நிறுத்திவிட்டு அவள் இறங்கிப் பார்ப்பதற்குள் சில நொடிகளில் அனைத்தும் நடந்து முடித்திருந்தது.

அது ஒரு விபத்து என்று அவளது உள்ளே உறங்கிக்கொண்டு இருந்த டாக்டர் எழுந்து கொள்ள, வேகமாக அந்த இடத்தை நோக்கி ஓட ஆரம்பித்தவளின் கையைப்பற்றி யாரோ இழுக்க, இழுத்த இழுப்பில் இழுத்தவரின் மேலேயே சென்று மோதியிருந்தாள்.

அதற்குள் அங்கு ஓரிருவர் கூடிவிட, அவர்களை நோக்கி சிலர் ஓடி வந்தனர்.
“சார்... அந்த கார்ல இருந்த நாலு பேரும் ஹெவி இஞ்சூர்...”

“கால் ஆம்புலன்ஸ் இமீடியட்லி”
“ஓகே சார்...”

“மர்டர் அட்டெம்ட்ன்னு போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணுங்க, இந்த மேடம தான் அவங்க கொல்லப் பார்த்தாங்க அதையும் சொல்லிடுங்க”

”ஓகே சார்.. உங்களுக்கு பிளைட்க்கு லேட் ஆச்சு...”

“எஸ்... நம்ம கார் ஓட்டின டிரைவர் சேப் தானே”

“எஸ் சார்... அவர் முன்னாடியேக் கீழ குதிச்சதால நோ பிராப்ளம்”

இழுத்தவரின் மேலே சென்று மோதியவள், அவனது பிடியில் இருந்து விலகி நின்று, அவன் சொன்னவற்றை உள்வாங்கிக்கொண்டு மீண்டும் திரும்பி விபத்து நிகழ்ந்த இடத்தையேப் பார்த்துக்கொண்டு இருந்தாள்”

“ஓகே பிரபு... நீங்க இந்த வொர்க் பாருங்க... நான் ஏர்போர்ட் கிளம்பறேன்...”

“ஓகே சார்...”

சம்யுக்தா பக்கம் திரும்பியவன், அவன் மீது மோதியதில், அவனது சட்டை பட்டனில் மாட்டி, அவள் விலகியதும் கலைந்து சரிந்திருந்த கூந்தல் அவள் முகத்தை பாதி மறைத்திருக்கக் கண்டான்.

“ஹலோ... மிஸ்... ஆர்... மிசர்ஸ்.... மே ஐ நொவ் யூர் நேம் பிளீஸ்?”

அவனது கேள்வியில் அவன் பக்கமாகத் திரும்பி, மறைத்திருந்த கூந்தலை பின் பக்கமாக இழுத்துவிட்டு, மீண்டும் கொண்டையிட்டவாறே,
மிசர்ஸ். சம்யுக்தா” என்று பதில் சொன்னாள்.

“ஐம் பிரித்விராஜ்....”

அவன் சொல்லும் போதே, அருகில் இருந்த பிரபு,
“பிரித்வி க்ரூப் ஆப் கம்பெனிஸ் சேர்மேன்... கேள்விப்பட்டு இருப்பீங்களே?” என்று அவன் ஆரம்பிக்க,

“நாட் யட்...” என்று அவனுக்கு அலட்சியமாக சம்யுக்தா பதில் சொன்னாள்.
அவளது பதிலில் பிரபுவின் முகம் வாடிவிட,

“பிரபு... டூ யுவர் வொர்க் ஒன்லி... யூ மே கோ நவ்....” என்று சொல்ல,

“சாரி சார்...” என்று அங்கிருந்து நகர்ந்தான்.

“நைஸ் டூ மீட் யூ சம்யுக்தா....” என்று கைக்குலுக்க கை நீட்டியவனின் கரத்தைப் பற்றி கைகுலுக்கியவள், “தேங்க்ஸ்” என்று சொல்ல,

அவன் ஒரு புன்சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்து அவனது காரை நோக்கிச் சென்றான்.
அங்கிருந்தே பரத்திற்கு அழைத்து விசயத்தைச் சொன்னவள், அவர் வரும் வரை காத்திருந்தாள்.

அடுத்த பத்தாவது நிமிடம் அவர் அங்கிருக்க, கேஸ் நடவடிக்கையை அவரிடம் தந்துவிட்டு, சம்யுக்தா ஹாஸ்பிட்டல் நோக்கிப் பயணமானாள்.

அலாரத்தின் ஓசையில் மெல்லக் கண்விழித்த மனிஷா, எழுந்து உட்கார்ந்து தலையைப் பற்றிக்கொண்டாள். மணி எட்டைக் கடந்திருந்தது. அருகில் மானவ் உறங்கிக்கொண்டு இருந்தான்.

மெல்ல எழுந்தவள், குளித்துத் தயாராகி கீழேச் சென்றாள்.

“அத்தை... மாமா....”

“மனிஷா....” என்று கிட்செனில் இருந்து பவித்ரா அழைத்தார்.

“அத்தை அம்மாவும், பாப்பாவும் வந்துட்டாங்களா?”

“வந்துகிட்டே இருகாங்கம்மா.... இன்னும் ஒரு ஐஞ்சு நிமிசத்துல வந்துடுவாங்க”

“மாமா எங்க?”

“மாமா ஆபிஸ் ரூம்ல”

“ஓகே அத்தை... எனக்கு என்ன வொர்க் இருக்கு?”

“மானவ் எங்க?”

“தூங்கறார் அத்தை”

“போயி அவனை எழுப்பு... சீக்கிரம் ஆஸ்பிட்டல் கிளம்புங்க...”

“சரிங்கத்தை....” என்று அவள் மேலே செல்லப் போக, அவளுடைய போன் அடித்தது. அதை அட்டென்ட் செய்து காதில் வைத்துக்கொண்டே மேலே ஏறியவாறே பேச ஆரம்பித்தாள்.

“ஹலோ...”

“ஹலோ ஐம் டாக்டர் பரத்... டாக்டர் சம்யுக்தா பாதர் இன் லா”

“எஸ் டாக்டர்... ஐம் மனிஷா...”

“இன்னிக்கு மார்னிங் ஒரு நாலு பேர் கொண்ட க்ரூப் சம்யுதாவை கொல்லப் பார்த்தாங்க...”

“வாட்...” என்று அவள் அதிர்ந்து நிற்க,

அவளது சத்தத்தில் கிட்செனில் இருந்து வெளியே வந்த பவித்ரா படிக்கட்டுகளுக்கு அருகில் நின்று கொண்டே அவளைப் பார்த்தார்.

“நத்திங் ஹேப்பன்ட் ம்மா... ஐம் இன் ஸ்டேசன் ஒன்லி... அந்த நாலு பேர் நேத்து உங்களை மிரட்டின ஆளான்னு தெரியனும்... காஸ் சம்யுக்தா இங்க வந்து சிக்ஸ் மந்த்ஸ் தான் ஆகுது, இங்க எங்களுக்கு எதிரிங்க யாரும் இல்லை... சோ மே பீ உங்களை அட்டாக் பண்ண ஆளான்னு தெரிஞ்சா வீ வில் டேக் நெக்ஸ்ட் ஸ்டேப் பேஸ்ட் ஆன் இட்.... காஸ் நேத்து உங்களை ரெஸ்கியூ பண்ண கோபத்துல கூட சம்யுக்தாவை குறி வைச்சு இருக்கலாம்”

“மே பீ டாக்டர்... ஐ வில் பீ தேர் வித்தின் டுவண்டி மினிட்ஸ்...”

“யூ ஜஸ்ட் கம் டூ கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டல்ம்மா... நானும், இன்ஸ்பெக்டர் அரவிந்தும் அங்க வந்துடறோம்”

“பைன் டாக்டர்...”

“ஓகே மா... பைன்...”

அவர் அணைத்துவிட, வேகமாக படியிறங்கி, “அத்தை என் கூட வாங்களேன்...” என்று சொல்லிக்கொண்டே நேராக சிவாவிடம் சென்றாள்.

“மாமா....”

“என்னம்மா....? ஏன் இவ்ளோ டென்ஷன்?”

“மாமா நேத்து எனக்கு ஹெல்ப் பண்ண டாக்டர் சம்யுக்தாவை இன்னிக்கு கொல்ல முயற்சி பண்ணி இருக்காங்க?”

“யாரு?”

“தெரிலை மாமா... யாரோ நாலு பேராம்... அவங்க இப்ப ஜி.ஹெச்ல இருக்காங்க... நேத்து என்னை தாக்கின அந்த நாலு பேரான்னு அடையாளம் காட்ட வரச்சொல்லி இருக்காங்க”

“உனக்கு யாரு கால் பண்ணா?”

“டாக்டர் பரத்... சம்யுக்தாவோட பாதர் இன் லா”

“டாக்டர் பரத்....”

“எஸ் மாமா...”

“ஓகே வா போகலாம்....”

“ம்ம்... மானவ் எங்க?”

“அவர் தூங்கறார் மாமா...”

“பவி... நீ மானவை உடனே எழுப்பு, கிளம்பிட்டு எனக்கு கால் பண்ண சொல்லு... நான் எங்க வரதுன்னு சொல்றேன்...”

“சரிங்க...”

“மனிஷா... நீ காரை எடு, நான் வரேன்... தென் வெளில செக்யூரிட்டி அரேஞ் பண்ணி இருக்கு, அவங்களுக்கும் இன்பார்ம் பண்ணு. யாரவது ரோட்ல சந்தேகப்படற மாதிரி இருந்தா பார்க்க சொல்லு.”

“ஓகே மாமா...”

“பவி... இரு எனக்கு டிரெஸ் எடுத்து குடு, நீ மேல ஏறாத, வேற யாரையாவது போகச் சொல்லு”

“சரிங்க... நீங்க முதல்ல கிளம்புங்க....”

ஒருவாறாக இருவரும் கிளம்பி ஜி.ஹெச்சை நோக்கிச் சென்றனர்.
வேலையாள் சென்று மானவின் அறைக்கதவைத் தட்ட, மானவ் எழுந்து வந்தான்.

“சின்னையா... உங்களை பெரியம்மா கீழ வரச் சொன்னாங்க”

“வரேன்... பாப்பா வந்துட்டாளா?”

“இல்லைங்கைய்யா..... வந்துடுவாங்கன்னு பெரியம்மா வாசல்ல நிற்கறாங்க”

“மனிஷாட்ட சொல்லி, எனக்கு காபி கொண்டு வர சொல்லுங்க”

“ஐயா... சின்னம்மாக்கு ஏதோ போன் வந்துச்சு, உடனே அவங்களும், பெரியய்யாவும் கிளம்பி போயிட்டாங்க”

“சரி... நீங்க போங்க நான் வரேன்...” என்றவன், “என்னாச்சு? எங்க போயிருக்காங்க?”

“ஐயா... ரொம்ப பதட்டமா, அவசரமா போனாங்க.... என்னன்னு தெரிலங்க...”

“சரி, நான் கீழ வரேன்... எனக்கு காபி எடுத்து வைங்க”

“சரிங்கையா...”

வேலையாள் போவதை வேடிக்கை பார்த்துக்கொண்டே மானவ் கதவைச் சாத்தினான்.

அவன் கீழே வரும் போது, நித்யாவும், தனுவும் வந்திருந்தனர். தனு பவித்ராவின் கையில் இருந்தாள்.

“வாங்கத்தை...” என்று சொல்லிக்கொண்டே படியில் இறங்கி வந்தவன், தனுவை கைகளில் வாங்கிக்கொண்டான்.

“தனு குட்டி.... எங்க போயிருந்தீங்க?”

அவனது கேள்வியில் குழந்தை கிளுக்கிச் சிரித்தது. அவளது சிரிப்பில் மயங்கியவன், அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.

“மானவ் கண்ணா... நீ நல்லா இருக்கியா?”
“எனக்கென்ன அத்தை.... சூப்பரா இருக்கேன்?”
“பாப்பு... மம்மம் சாப்டீங்களா?”

“ம்ஹும்...” என்று சொல்லிக்கொண்டே தலையசைத்தது...

“ஆனாலும் பவி... இவ அப்படியே மனிஷா தான்... திருப்பியும் அவளை குழந்தைல இருந்து பார்க்கற மாதிரியே இருக்கு”

“எனக்குமே சில நேரம் அப்படித்தான் தோணும்”

“இவ அம்மாக்கிட்ட இருந்து தப்பிச்ச பொருள் அத்தனையும் இவகிட்ட மாட்டி உடைஞ்சிடுச்சு” என்று நித்யா சிரிக்க,

“குழந்தைல தான் மனிஷா பிடிவாதம் பிடிப்பா.... இப்ப பாரு...”

“அவங்கப்பா இறந்ததுக்கு அப்புறம் மாறினவ தான்... இன்னும் அப்படியே இருக்கா? ரொம்ப மாறிட்டா பவி... வளவளன்னு பேசுவா, துருதுருன்னு இருப்பா,ஆனா இப்ப போன் பேசினா ஏன்? என்ன? அவ்ளோதான்... பொறுமை அதிகமா இருக்கு... நிதானமா யோசிச்சு முடிவு செய்யறா... சில விசயத்தை நினைச்சா சிரிக்கவா? அழவான்னு தெரில?” என்று கண் கலங்க, மானவிற்கும் மனதை பிசைந்தது.

“நித்யா? நான் மட்டும் எப்படி இருந்தேன்? மனிஷா இப்ப இருக்கற மாதிரி தான் இருந்தேன், அப்புறம் மாறலையா? நாளாக நாளாக மாறிக்குவா, நீ அவளை நினைச்சுக் கலங்கறதை நிறுத்து”

“நீயும் அண்ணனும் இருக்கற வரைக்கும் எனக்கு என்ன கவலை? சரி வா, டிபன் எடுத்து வை, மானவ் கிளம்பட்டும்”

“இல்லத்தை... நான் முதல்ல கிளம்பறேன்... நேத்துல இருந்து மனசே சரி இல்லை... இந்த விஷயத்தை முதல்ல முடிக்கனும். நீங்க சாப்பிடுங்க... அம்மா இந்தாங்க பாப்பா” என்று நித்யாவிடம் சொல்லிக்கொண்டே பவியிடம் பாப்பாவை நீட்ட, பவித்ரா வாங்கிக்கொண்டார்.

வேலையாள் அவனுக்கு காபி கொண்டு வந்து தந்தார். அதை அவன் வாங்கிப் பருக ஆரம்பிக்க, பவித்ரா நடந்ததைக் கூற ஆரம்பித்தாள்.

“மானவ் நேத்து நைட் நம்ம மனிஷாவை டிராப் பண்ண டாக்டர் பொண்ணை யாரோ கொல்ல பார்த்தாங்களாம், அந்த பொண்ணுக்கு ஒன்னும் இல்லையாம், கொல்லப்பார்த்தவங்க தான் அதுல அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்காங்களாம். அவங்க தான் நம்ம மனிஷாவை நேத்து தொந்தரவு தந்தவங்களான்னு அடையாளம் காட்ட வரச்சொல்லி இருந்தாங்க... அங்கதான் அப்பாவும், மனிஷாவும் போய் இருக்காங்க”
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“சரிம்மா. நான் பார்த்துக்கறேன்” என்றவன் மனதில் சம்யுக்தாவின் முகம் தோன்றியது.

அவனது சிந்தனை படிந்த முகக்தைப் பார்த்துக்கொண்டே,

“மானவ் உன்னை அப்பா போன் பண்ண சொன்னார்” என்று பவித்ரா சொல்ல,

“சரிம்மா” என்றவன் காலி கோப்பையை அன்னையிடம் தந்துவிட்டு உடனே செல்லை எடுத்து சிவாக்கு அழைத்தான்.

அப்பொழுதுதான் சிவாவும் மனிஷாவும் ஜி.ஹெச்சில் எமெர்ஜென்சி வார்டை நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர்.

செல் அடிக்கவும் அதை எடுத்து அட்டென்ட் செய்த சிவா, “சொல்லு மானவ்”

“எங்கப்பா இருக்கீங்க?”

“ஜி.ஹெச் ல”

“நானும் வரேன், அங்கேயே வெயிட் பண்ணுங்க.”

“சரி வா”

போனை அணைத்துவிட்டு அவர் உள்ளே செல்ல, அவர்களை அரவிந்த் எதிர்கொண்டான்.

“ஹலோ சார்” என்று சிவாவிடம் கை குலுக்கினான்.

“ஹலோ அரவிந்த்”

“சார் நேத்து நைட் கார் இருந்த இடம், அதைச் சுத்தி இன்வெஸ்டிகேட் பண்ணதுல சில சிசிடிவி பூட்டேஜ் கிடைச்சுது. சோ அதுல இருக்கறதும், டாக்டர் சம்யுக்தாவைக் கொல்ல முயற்சி செய்ததும் இவங்க தான்.”

“அவங்களை எதுக்கு கொல்ல டிரை பண்ணாங்க?”

“அவங்க சரியான நேரத்துல, மனிஷா மேடத்தை காப்பாத்தி இருக்காங்க, சோ அவங்க பிளான் சொதப்பவும், ஒரு கோபத்துல இந்த முடிவை எடுத்து இருக்காங்க அப்படிங்கறது எங்க கெஸ். அவங்ககிட்ட பிராப்பரா இன்வெஸ்டிகேட் பண்ணினாதான் மெயின் ரீசன் தெரியும் ”

“ஓகே. அவங்களைப் பார்க்கலாமா?”

“உள்ள டிரீட்மென்ட் போய்க்கிட்டு இருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பிளீஸ்”

“ஸ்யூர்...” என்ற சிவா, “வாம்மா அங்க வெயிட் பண்ணுவோம் என்று அங்கிருந்த மர பெஞ்சை நோக்கி நகர்ந்தார்.

பத்து நிமிட காத்திருப்புக்கு பின்பு, அவர்கள் இருந்த அறையில் இருந்து சில மருத்துவர்கள் வெளியே வந்தனர்.

அதே நேரம் செல்லில் மானவுக்கு வழி சொல்லிக்கொண்டு இருந்த சிவா, அவர்களுடன் வெளியே வந்த பரத்தைக் கவனிக்கவில்லை.

அவர்களை எதிர்கொண்ட அரவிந்திடம், அங்கிருந்த மருத்துவர் ஒருவர், “மூனு பேர் பிரைன் டெட், இன்னொருத்தர் ரொம்ப கிரிடிக்கல் ஸ்டேஜ் தான், நீங்க மரண வாக்குமூலம் வாங்கிக்கறது பெட்டர். பல்ஸ் குறைஞ்சிடுச்சு. எப்ப வேண்ணாலும் அவர் உயிர் பிரியறது உறுதி”

“ஓகே சார்” என்று மருத்துவருக்கு நன்றி சொல்லிய அரவிந்த்

“தேங்க்யு டாக்டர் பரத்” என்று பரத்திற்கும் நன்றி சொன்னார்.

“இட்ஸ் மை டியூட்டி” என்று புன்னகையுடன் பரத் சொல்ல மற்றவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.

பரத் என்ற பெயரில் தானாக சிவா பரத்தின் பக்கம் திரும்பி இருந்தார்.

“மனிஷா மேம் நீங்க மட்டும் உள்ள வாங்க பிளீஸ்” என்று அரவிந்த் அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.

அரவிந்த், மனிஷா இருவரும் உள்ளே செல்ல, சிவாவைக் கண்ட பரத் தானாக சிவாவை நோக்கிச் சென்றார்.

“ஹவ் ஆர் யூ சிவா?” என்று புன்னகையுடன் கேட்ட பரத்தை நோக்கிய சிவா,

“ம்ம்... பைன்...” என்று மட்டும் சொன்னார். அவர் மனதில் கடந்த கால நினைவுகள் மெல்ல ஊர்வலம் போக ஆரம்பித்தது.

அதை பரத் உணர்ந்து கொண்டாலும்,

“பவித்ரா எப்படி இருக்காங்க?” என்று கேட்டுவைக்க,

“என் வைப் ரொம்ப ரொம்ப நல்லா இருக்காங்க” என்று என் வைப் என்பதில் அதிக அழுத்தம் தந்து சிவா பதில் சொன்னார்.

அதற்கு பரத் மெல்லிய புன்னகையைப் பரிசாக அளித்தார். அதற்கு பின் உள்ள வலியை அவர் மட்டுமே அறிவார்.

அதே நேரம் அங்கு வந்த மானவ்,

“அப்பா... என்னாச்சு?”

அப்பொழுதுதான் மனிஷாவைத் தேடிக் கண்களை சிவா அலையவிட்டார்.

“உள்ள அடையாளம் காட்ட மனிஷாவை கூட்டிக்கிட்டு போயிருக்காங்க” என்று இருவருக்கும் பொதுவாக பரத் சொல்ல,

“ஹோ... பை தி வே நீங்க?”

“ஐம் டாக்டர் பரத், நியுரோ சர்ஜன், பரத் மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டல் என்னுடையது தான்”

“ஹலோ சார்... டாக்டர் சம்யுக்தா நல்லா இருக்காங்களா? ஒன்னும் பிராப்ளம் இல்லையே?” என்றவன் கேள்வி வெறும் சம்பிரதாயம் நிறைந்த ஒன்று என்பதை பெரியவர்கள் இருவருமே உணர்ந்தனர்.

“நத்திங்... சீ இஸ் ஸேப்...” என்று பரத் சொன்னாலும், அதை மானவ் சரியாகக் கூட கேட்காமல் பேச்சை மாற்றினான்.

“உங்க ஹாஸ்பிட்டல்ல வொர்க் பண்றதா சொன்னாங்க, எங்க அவங்க?”

அவன் பதிலில் சிரித்த பரத்,

“சம்யு என்னோட மருமகள், இன்னிக்கு பரத் மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டல் நிர்வாகி அவங்கதான்... ரொம்ப காம்ப்ளிகேட் கேஸ் மட்டும் தான் நான் அட்டென்ட் பண்றேன். ரெஸ்ட் எடுக்கச் சொல்லி என் சன்னோட கண்டிஷன்... சோ புல்லா அவங்கதான் பார்த்துக்கறாங்க... அவங்களுக்கு இன்னிக்கு ஒரு பைபாஸ் சர்ஜரி... வழில இப்படி நடக்கவும், எனக்கு தகவல் சொல்லிட்டு அவங்க அங்க போயிட்டாங்க”

“பைன் டாக்டர்...” என்று பரத்திடம் சொன்னவன்,

“அப்பா நீங்க என்ன பண்ணறீங்க? கிளம்பறிங்களா? இருக்கறீங்களா?”

“வெயிட் பண்ணு... மனிஷா வரட்டும், தென் சொல்றேன்”

“ஓகேப்பா”

ஒரு கால் மணி நேரத்திற்கு பின்பு அரவிந்தும், மனிஷாவும் வெளியே வந்தனர்.

“மாமா இவங்களே தான்... பட் மூனு பேர் பிரைன் டெட், ஒருத்தர் இறந்துட்டார்... நல்ல வேலையா அந்த அரசியல்வாதிக்கு எதிரா வாக்குமூலம் வாங்கியாச்சு”

“சரிம்மா...” என்றவர் அரவிந்திடம், “நீங்க ஸ்டேஷன் எப்ப போவீங்க சார்?” என்று கேட்டார்.

“எனக்கு இன்னும் கொஞ்சம் வொர்க் இருக்கு சார். எப்படியும் மதியம் தான் போவேன்”

“ஓகே... மனிஷா நீ முதல்ல உன் சைட் தர வேண்டிய ரிபோர்ட் ரெடி பண்ணி குடுத்துடு, அந்த வொர்க்கை முடிச்சுட்டு நீ நேரடியா ஸ்டேஷன் வந்துடு. மானவ் நீ மனிஷா கூட போ, நான் லாயரை மீட் பண்ணிட்டு அவரோட ஹாஸ்பிட்டல் வரேன்”

“ஓகேப்பா”

“ஓகே மாமா”

இருவரும் மூவரிடமும் விடை பெற்றுச் செல்ல, அரவிந்த் மருத்துவர்களைக் காண மற்ற இருவரிடமும் விடை பெற்றுச் சென்றான்.

“ஓகே மிஸ்டர் பரத்... மறுபடியும் சந்தர்பம் இருந்தா மீட் பண்ணலாம்”

“நல்லது மிஸ்டர் சிவா... பவித்ராவைக் கேட்டேன்னு சொல்லுங்க”

ஒரு மெல்லிய புன்னகையுடன் சிவா விடை பெற்று நகரந்தாலும், அந்த புன்னகைக்குள் அடக்கப்பட்ட எரிமலை ஒன்று கனன்று கொண்டு தான் இருந்தது. வயோதிகம் ஆனாலும் மனைவி மீது கொண்ட காதல் அவருக்குள் இன்னும் பொறாமையைத் தூண்டிவிட்டுக்கொண்டு இருந்தது...

“மிஸ்டர் சிவா” என்ற பரத்தின் குரல் கேட்டு சிவா திரும்பி பரத்தைப் பார்த்தார்.

சிவாவின் அருகில் வந்த பரத்,

“நீங்க உங்க பவித்ரா மேல உயிரையே வைச்சு இருந்தீங்க. அப்படிப்பார்த்தா உங்க பையன், உங்க வளர்ப்பு, உங்க மருமக மேல எவ்ளோ உயிரா இருக்கனும்? அப்படி எதுவுமே இல்லையே? ஏன்? பிசினஸ்ஸை மட்டும் பார்க்காம வீட்டையும் பாருங்க” என்று சொல்லிவிட்டு நகர அடியெடுத்து வைக்க,

“என் பையன் என் மருமகள் மேல உயிரா இல்லைன்னு எதை வைச்சு சொல்றீங்க பரத்?” என்ற சிவாவின் கேள்வியில் அடக்கப்பட்ட கோபம் வெளியே சிதறித் தெரித்தது.

“என் மனைவி மேல லேசா கீறல் போட்டாலே அவனை நான் உயிரோட கொன்னு புதைச்சிடுவேன்... நீங்களும் அப்படித்தான்... உங்க பையன் கொலை முயற்சி பண்ணவங்களை எட்டிக் கூடப் பார்க்கலை... அதையும் விடுங்க, என்ன பிரச்சனை இருந்தாலும், கணவன் பக்கத்துல இருந்தா, மனைவியோட முகம் அப்படியே மாறிடும், தன்னம்பிக்கையும் தைரியமும் அதுல நிரம்பி வழியும், சிலர் கணவரோட கையைக்கூட பிடிச்சுக்குவாங்க. பவித்ராவும் இதையெல்லாம் பண்ணி இருக்காங்க. இங்க ரெண்டு பேரும் விலகி தான் இருந்தாங்க... ஏன்? எல்லாத்துக்கும் மேல, நேத்து என் மருமக என் கிட்ட சொன்னது,

“மாமா, வைப் காணோம்ன்னு வெளிய வந்து பார்த்தவர், அவங்களைப் பார்த்ததும் ஜஸ்ட் ரிலாக்ஸா இருக்கார்... அவங்க மேல உண்மையான அன்பு இருந்தா என்ன பண்ணி இருக்கனும், வந்து அட்லீஸ்ட் கையையாவது பிடிச்சு, ரெண்டு திட்டு திட்டி, தோள்ல கை போட்டாவது கூட்டிக்கிட்டு போயிருக்கனும், அதுவும் இல்லை, ஏதோ மிஸ்ஸிங் மாமா”,

கொஞ்சம் அவங்க மேலேயும் கவனம் வைங்க”

“------------------------------------------------------“

“ஏன்னா என் பையன் என் மருமகளை அவனே பிக்கப், டிராப் பண்ணுவான், எந்நேரம் போன் பண்ணாலும் அட்டென்ட் பண்ணிடுவான், சப்போஸ் லேட் ஆனா, தேடிக்கிளம்பிடுவான், சில நேரம் வீட்டு வாசல்லையே நிற்பான், அவ முகத்தைப் பார்த்தே அவ மனக்கஷ்டத்தை சால்வ் பண்ணுவான், அவளுக்கு ஒண்ணுன்னா சுத்தி யார் இருக்கா, என்னன்னே பார்க்க மாட்டான்”

“என் மகனும் என் மருமக மேல உயிரா தான் இருக்கான்... நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு பேசறீங்க”

“பைன்... நீங்க சொல்ற மாதிரி இருந்தா நல்லது, எதுக்கும் நான் சொன்னதையும் யோசிச்சு பாருங்க, குறிப்பா அவங்களை கவனிச்சு பாருங்க... உங்களுக்கே புரியும். வரேன்” என்று பரத் அங்கிருந்து நகர,

சிவா யோசனையுடன் நின்று கொண்டார்.

அங்கு லாவண்யாவை கடவுள் அழைத்துக்கொள்ள, மனிஷா ரிபோர்ட்டை மீடியா முன்னிலையில் வெளியிட்டு அந்த சிறுமியின் இறுதி முடிவை உலகறியச் செய்தாள்.

அந்த அரசியல் செல்வாக்கு நிறைந்த பிரபலத்தின் அச்சுறுத்தல் மற்றும் அவர்களது சட்ட விரோத நடவடிக்கை குறித்து ஏற்கனவே மீடியாவில் ஆதாரத்துடன் அரவிந்த் நிரூபித்து இருக்க, அவரும் கைது செய்யப்பட்டார்.

பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு அன்றைய நாள் திருச்சியையே பரபரபாக்கிக்கொண்டு இருக்க, எவ்வித பரபரப்பும் இல்லாமல் ஒரு ஜீவன் ஏரோப்பிளேனில் பறந்து கொண்டு இருந்தது.

பிரித்வி அமைதியாக கையில் இருந்த மேகஸின் ஒன்றைப் படித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். பிளைட் இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எழுந்தவன், தனது பிளேசரை எடுத்துக்கொண்டு நேராக ரெஸ்ட் ரூம் சென்று உபயோகித்துவிட்டு, மேலே பிளேசரைப் போட்டுக்கொண்டு தன்னுடைய உடையை சரி செய்ய ஆரம்பித்தான்.

அப்பொழுதுதான் அவனது கண்களில் அவனது சட்டை பட்டனில் மாட்டிகொண்டு இருந்த அந்த முடி கண்ணில் பட்டது.

நீண்ட அந்த கருப்பு நிற முடியைக் கையில் எடுத்தவனின் உள்ளம் தானாக சம்யுக்தாவை நினைக்க, அவனது இதழ்களில் புன்னகை பூத்தது.

அந்தப் புன்னகையின் ஊடாக முகமெங்கும் மலர்ச்சி பொங்க, அந்த முடியை அழகாகச் சுற்றி தனது வாலெட்டில் வைத்துக்கொண்டு அவனது சீட்டிற்கு விரைந்தான்.

சீட்டில் வந்தமர்ந்தவனின் இதழ்கள் தானாக முனுமுனுத்துக் கொண்டன, “என்னிக்குமே இந்த பிரித்வியின் சம்யுக்தா நீ தாண்டி... நீ மட்டும் தாண்டி...”



ராகம் இசைக்கும்....
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 4




அன்று மாலை சிவா லாயருடன் ஸ்டேஷனில் ஆஜராக, மானவ் அழுது களைத்திருந்த மனிஷாவுடன் ஸ்டேஷனுக்கு வந்தான். பரத் சம்யுக்தாவுடன் வந்திருந்தார்.

பரத் சொன்னதை மனதில் வைத்திருந்த சிவா, மானவையும் மனிஷாவையும் கவனிக்கத் தவறவில்லை. அவர் இருவரையும் கண்காணிப்பதை பரத் கவனிக்கத் தவறவில்லை.

மனிஷாவைப் பார்த்ததும், சம்யுக்தாவின் கால்கள் தானாக அவளிடம் தான் சென்றது, ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த மரத்தடியில் இருந்த சிமென்ட் பெஞ்சில் மானவ்வின் அருகில் அமர்ந்திருந்த மனிஷாவிடம் சம்யுக்தா சென்ற அடுத்த நொடி, மனிஷா அவளையும் அறியாமல் எழுந்து சம்யுக்தாவை அணைத்துக்கொண்டு தேம்பி அழ ஆரம்பித்து இருந்தாள்.

“மனிஷா... பிளீஸ் கண்ட்ரோல் யுவர் ஸெல்ப்...”

“முடியலை மேடம்... எத்தனையோ ரேப் கேஸ் பார்த்திருக்கேன். பட் இது... ரியலி ஐ கான்ட்...”

“நீங்க அழறதால போன உயிர் திரும்பி வராது, தென் அப்படியே அந்த பொண்ணு பிழைச்சு வந்தாலும் டேக் இட் ஈசின்னு போக இங்க உயர்ந்த உள்ளங்களும் இல்லை, தப்பு செஞ்ச அந்த பொறுக்கிங்களை விட அந்த ஜீவன் தான் அதிகமா துயரம் அனுபவிச்சுக்கிட்டு இருக்கும். கூடவே உடல் உபாதைகளும் இருந்து இருக்கும்”

“புரியுது மேம், எனக்கு அந்த பாப்பாவை பார்க்கும் போது, தனு நியாபகம் தான் வருது”

“லிசன் எனக்கும் உங்க நிலமை புரியுது, பட் இப்ப நீங்க ரொம்ப எமோஷனலா இருக்கீங்க, பீ ரிலாக்ஸ் அண்ட் கண்ட்ரோல் யுவர்செல்ப்”

மெல்ல அழுகையைக் குறைத்தாலும், “நான் எவ்வளோ காப்பாத்த டிரை பண்ணேன் மேடம், எவ்வளோ போராடினேன், முடியலை” என்று புலம்ப ஆரம்பித்த மனிஷாவின் கண்ணீரைத் துடைத்து அவளது அருகே அமர்ந்து அவளை மடியில் சாய்த்துக்கொண்டாள்.

மெல்ல ஹேன்ட் பேகை எடுத்து அதில் இருந்து ஒரு நோட் பேடை எடுத்தவள், அதில் தூக்கம் வருவதற்கு உண்டான ஊசி மருந்தை எழுதியவள், அருகில் இருந்த மானவ்விடம் தந்து, வாங்கி வருமாறு சைகை செய்தாள்.

“மாமா கார்ல பீபி அப்பாரெட்டஸ் இருக்கும், கொஞ்சம் எடுங்களேன்”

பரத்தும் எடுத்து வர,

“மனிஷா ஜஸ்ட் பி.பி. செக் பண்ணிக்கலாம்” என்று சொல்லிக்கொண்டே பரத்திடம் பி.பி. செக் செய்யச் சைகை செய்தாள்.

மானவ்வும் அதே நேரம் அருகில் இருந்த மெடிக்கலில் மருந்து வாங்கி வந்து தர,

பிபி பரிசோத்தித்து முடித்திருந்த பரத், அதை வாங்கிக்கொண்டு ஊசி போட ஆயத்தமானார்.

ஊசி போட அவள் அருகில் குனிந்தவர், பின் யோசனையாக நிமிர்ந்து சிவா அருகில் சென்றார்,

“மனிஷா ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க, இப்போதைக்கு தூங்க இன்ஜக்சன் போடறது நல்லது, பி.பி ஹையா இருக்கு, இன்ஜெக்சன் போட்ட கொஞ்ச நேரத்தில தூங்கிடுவாங்க, அவங்களை வீட்டுக்கு அனுப்பி வைச்சிடுங்க, மத்ததை அப்புறம் பேஸ் பண்ணிக்கலாம்.” என்று சொல்லிவிட்டு மனிஷாவின் கையில் ஊசி போட வந்தவர், மெல்லத் திரும்பி சிவாவைப் பார்த்தார். அந்த பார்வையில் ஊசி போடவா என்ற கேள்வி இருந்தது.

சிவாவின் தலை அவர் ஊசி போடுவதற்கு சம்மதமாக ஆடியது.

சம்யுக்தா மெல்ல அவளைத் தட்டிக்கொடுக்க, ஊசி போட்டது கூடத் தெரியாமல் மனிஷா புலம்பிக்கொண்டே இருந்தாள்.

ஊசி போட்டதும், “மனிஷா வாங்க கார்ல உட்கார்ந்துக்கலாம்” என்று சொல்லி அவளைக் காருக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து, அவளும் அருகில் உட்கார்ந்து, அவளைத் தன் மடியில் சாய்த்துக்கொண்டாள்.

அடுத்த சில நிமிடங்களில் மனிஷா உறங்கிவிட, சம்யுக்தா கீழே இறங்கி மானவ்விடம் வந்தாள்.

“அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க, ஏனோ தெரில இந்த சம்பவம் ரொம்ப அவங்களை பாதிச்சு இருக்கு, மே பீ இதுக்கு முன்னாடி இருந்த ஸ்ட்ரெஸ் எல்லாம் ஒன்னு சேர்ந்து கூட இப்படி ஆகி இருக்கலாம். சோ இப்போதைக்கு அவங்களுக்கு ரெஸ்ட் ரொம்ப முக்கியம், நல்லா தூங்கட்டும், ஒரு வாரத்துக்கு வீட்ல இருக்கற டைம் அதிகமா இருந்தா பெட்டர்.”

“ஓகே மேடம்”

“டாக்டர் சம்யுக்தா, ஒரு நிமிஷம்” என்று சிவா இடையிட்டார்.

“சொல்லுங்க சார்”

“ஐ வான்ட் டூ டால்க் வித் யூ பெர்சனலி”

“யா ஸ்யூர்”

“மானவ் நீ சம்யுக்தாவை வீட்டுக்கு கூட்டிட்டு போ, தென் நீ கூட இருந்து பார்த்துக்கோ, அம்மாவையும், அத்தையையும் பாப்பாவை பார்த்துக்கச் சொல்லு”

“சரிப்பா...”

மானவ் கிளம்ப,

சிவா சம்யுக்தாவின் அருகில் வந்தார்.

“உட்காருங்க சார்” என்று அவரை அமரச் சொல்லிவிட்டு அருகில் அமர, பரத், “சம்யு நான் போயி உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன், அண்ட் சிவா? உங்களுக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்?”

“எனக்கு எதுவும் வேண்டாம்...”

“என் மருமக நீங்க சாப்பிடலைன்னா ஒன்னும் சாப்பிட மாட்டா, என் பையன் இவ எதுவும் சாப்பிடலைன்னு தெரிஞ்சா என்னை ஒரு வழியாக்கிடுவான், சோ உங்களுக்கு என்ன வேணும்?”

“எஸ் சார்... நீங்க எனக்கு கம்பெனி குடுத்தே ஆகனும்”

“சம்யுக்தாக்கு வாங்கறதே எனக்கும்”

அவர் சொல்லி முடிக்க, மற்ற இருவரும் சிரித்தனர்.

“அவளுக்கு வாங்கறதை நாம சாப்பிட முடியாது”

“ஏன்?”

“பிட்ஸா, சான்விட்ச், பர்கர் இதைத்தான் மேடம் சாப்பிடுவாங்க, இது பக்கம் எட்டிப்பார்க்ககூடாதுன்னு என் பையன் ஆர்டர்... அவன் இங்க இல்லைன்னு இந்த ஆட்டம், அவன் வந்தா சரியாகிடும்”

“சரி நீங்க ஏன் வாங்கித்தறீங்க?”

“மருமகள் மட்டும் இல்லை மகளும் இவள் தான், செல்லமா கேட்கும் போது மனசு எங்க கேட்குது, உடனே சரின்னு சொல்லிடறேன், உங்க மானஷா மாதிரி தான் இந்த மேடம் எனக்கு”

“மாமா... எனக்குப் பசிக்குது... போயி சீக்கிரம் ஏதாவது வாங்கிட்டு வாங்க”

“நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் உங்களுக்கு ஸ்நேக்ஸ் மாதிரி வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிக்கொண்டே பரத் விடை பெற,

“நாம கார்ல உட்கார்ந்து பேசுவோமாம்மா?”

“ஸ்யூர் சார்”

இருவரும் சிவாவின் காரில் ஏறினர்,

“சொல்லுங்க சார் என்ன விஷயம்?”

“மனிஷா பத்தி பேசனும்”

“சொல்லுங்க சார்”

“ஏன் இந்த மாதிரி பீகேவ் பண்ணா? இதுக்கு முன்னாடி கூட அவ ரேப் கேஸ் பார்த்து இருக்கா, பட் அப்ப இந்தளவுக்கு அவ ஸ்ட்ரெஸ் ஆனது இல்லை, ஆனா இப்ப ஏன் இப்படி?”

“இந்த ஒரு கேசுக்கு மட்டும் இப்படி இருக்காங்களா?”

“ஆமாம் மேடம்...”

“மேடம் வேண்டாமே சார்... நீங்க என்னை சம்யுக்தான்னே கூப்பிடுங்க, தென் நீங்க வாங்கல்லாம் வேண்டாம்... மனிஷா எனக்கு நல்ல பிரண்ட்... சோ என்னையும் அப்படியே டிரீட் பண்ணுங்களேன்...”

“சம்யுக்தா என்னை சார்ன்னு கூப்பிடாத வரைக்கும் ஓகே”

“ஸ்யூர் அங்கிள்...”

“இந்த கேஸ்ல மட்டும் தான் இஸ்யூ, ஆனா இன்னொரு விஷயம் இருக்கு, எந்த கேசா இருந்தாலும், எந்நேரமா இருந்தாலும் ஓடுவா, வகேசன் போனாக் கூட எமெர்ஜென்சி கேஸ் இருக்குன்னு வந்துடுவா, அந்தளவுக்கு அவ டியூட்டில இன்வால்வ்மென்ட் இருக்கு, ஆனா அதாலையே இப்பெல்லாம் வர வர ஒரு ரோபோ மாதிரி இருக்கறதா எனக்கு ஒரு பீல்...”

“அங்கிள்... எனக்கு என் ஹஸ்பன்ட் வகேசன் கூட்டிகிட்டு போனா, நான் வகேசன் முடியும் வரை டாக்டர் போஸ்ட்டை மறந்துடுவேன், ஈவன் எனக்கு பெஸ்ட் டாக்டர் அவார்ட் கிடைச்சிருக்கு, எனக்கும் இந்த தொழில் உயிர் மூச்சு தான்... அவரும் அப்படித்தான், ஆனா நானும் சரி, என் கணவரும் சரி எந்த வொர்க் இருந்தாலும் எங்களுக்குன்னு ஒதுக்கற நேரத்தை என்ஜாய் தான் பண்ணுவோம், அதை எந்த காரணத்தை முன்னிட்டும் மிஸ் பண்ண மாட்டோம், கூடவே எங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் முன்னேற்பாடும் செஞ்சு வைச்சு இருப்போம்”

“---------------------------------------------“

“மனதளவில் ரொம்ப நாளா மனிஷாக்கு எதோ பிராப்ளம் இருக்கு, எனக்கு அவங்களை முதல் முறை பார்க்கும் போதே தோணிச்சு, அவங்க பேசறப்ப கூட ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தாங்க. எப்பவுமே, எதிலையுமே இன்டிரெஸ்ட் காட்டமாட்டாங்க, அவங்களுக்கு ஹெல்த் இஸ்யூ ஏதாவது இருக்கலாம், மே பீ இப்ப ப்ரெக்னன்ட்டா இருந்தாலும் இந்த மாதிரி மூட் சேஞ் ஆக வாய்ப்பு இருக்கு.”

“ப்ரெக்னன்ட்டா இருக்கற மாதிரி எனக்கு தெரியலை. வீட்ல தெரிஞ்சு இருந்தா சொல்லி இருப்பாங்க”

“மே பீ ஆன்ட்டிக்கே தெரியாம இருக்காலம், ஏன் மனிஷாவே இன்னும் ஐடென்டி பண்ணாம இருக்கலாம். தென் உங்க பையன் அவங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணுவாரா? ஐ மீன் ஷாப்பிங் போறது, ஜஸ்ட் டின்னர்க்கு போறது, உடம்பு சரி இல்லைன்னா கேர் பண்ணிக்கறது, குழந்தைக்கு உடம்பு சரி இல்லைன்னா பார்த்துக்கறது இந்த மாதிரி?”

“எனக்கு தெரிஞ்சு பண்ணி இருக்கான், ஆனா...” என்று யோசிக்க ஆரம்பித்த சிவாவை இடையிட்டவள்,

“ஆனா? ஆனா என்ன அங்கிள்?”

“பாப்பாவைக் கேர் எடுத்து பார்த்துக்குவான்... அந்தளவுக்கு மனிஷாக்கு பண்ணி இருக்கானான்னு எனக்குத் தெரில”

“----------------------------------------------“

“மோஸ்ட்லி ஆன்ட்டி தான் பார்த்துப்பாங்க, இல்லையா மனிஷா அம்மா வந்து பார்த்துப்பாங்க... இவன் பிசினஸ் பின்னாடி தான் சுத்துவான், அது அவளுக்கும் தெரியும், அவ்ளோ ஏன் டெலிவரிக்கு கூட மனிஷா அவனைத் தேடவே இல்லையே”

“என்ன அங்கிள் சொல்றீங்க?”

“ஆமாம்மா... நார்மல் டெலிவரி தான், அவ டியுட்டீல இருக்கும் போதே பெய்ன் வந்துடுச்சு... பட் குழந்தை பிறக்கும் வரை மானவ் பத்தி கேட்கவே இல்லை... அதுக்கு அப்புறம் ஒரு தடவை கேட்டா, அந்த நேரத்துல மானவ் மும்பைல இருந்தான்... விஷயம் கேள்விப்பட்ட உடனேயே வந்துட்டான்.”

“அந்த நிலைமைல கூட டியூட்டி பார்த்தாங்களா?”

“வீட்ல போர் அடிக்குதுன்னு போனாம்மா... அதுவும் இல்லாம அவளுக்கு டியூ டேட் வேற இருந்துச்சு...”

“மானவ்க்கு எப்ப இன்பார்ம் பண்ணீங்க?”

“பெய்ன் வந்ததுமே அவ அங்க வொர்க் பண்ற டாக்டர்கிட்ட போயிட்டா, தென் அவங்க உடனே எனக்கு சொல்ல, நான் மானவுக்கு சொன்னேன். அவனுக்கு அன்னிக்கு ஈவ்னிங் தான் பிளைட், அதுல கிளம்பி வர மிட் நைட் ஆகிடுச்சு”

“ஏன் அங்கிள், மே பீ ஆன்ட்டிக்கு லேபர் பெய்ன்ன்னு நான் போன் பண்ணி இருந்தா, நீங்க அந்த சூழ்நிலைல என்ன பண்ணி இருப்பீங்க?”

“உடனே கிளம்பி, இருக்கற பிளைட் பிடிச்சோ, இல்லை சாட்டர் பிளைட் புடிச்சோ வந்துருப்பேன்”

“அதை ஏன் மானவ் செய்யலை?”

இந்த கேள்வியில் சிவா புருவம் இடுங்க யோசனையில் ஆழ்ந்தார்.

“ஒரு அசோசியேசன் மீட்டிங்க்ல நான் மனிஷாவை மீட் பண்ணேன், தென் அடிக்கடி வெளிய மீட் பண்ணி இருக்கோம், ஏதாவது பங்கசன், கேஸ் விஷயமா, மெடிக்கல் கேம்ப் இந்த மாதிரி, சில நேரங்கள்ல ஷாப்பிங் பண்ணும்போது கூட மீட் பண்ணி இருக்கோம்... அவங்கக்கிட்ட எனக்கு எதுவோ மிஸ் ஆகற மாதிரி இருந்தது, கடமையேன்னு இருந்தாங்க, ஒரு சாரி எடுக்கக் கூட கைக்கு வந்ததை செலக்ட் பண்ணி எடுத்தாங்க, அப்புறம் ஓவ்வொரு தடவையும் அவங்களை கவனிச்சு பார்க்கும் போது தான் எனக்கு சந்தேகம் வந்துச்சு...”

“இதை நீ முன்னாடியே எனக்கு சொல்லி இருக்கலாமேம்மா?”

“இது ஒரு யூகம் தான் அங்கிள், கூடவே நான் உங்க பேமிலிக்கு தேர்ட் பெர்சன், என்னதான் மனிஷாக்கு அறிமுகமானாலும் அவங்க பெர்சனல் லைப்ல இன்வால்வ் ஆகற அளவுக்கு நெருக்கம் இல்லை, அஸ் வெல் அஸ் உங்களுடைய அறிமுகமும் எனக்கு இல்லை”

“இப்ப என்ன பண்ணலாம்? நாமளே பேசிப்பார்ப்போமா? இல்லை சைக்கார்டிஸ்ட் டிரை பண்ணலாமா?”

“உங்க பொண்ணு கூட டாக்டர்ன்னு கேள்விப்பட்டேன், அவங்களை இங்க வரச்சொல்லுங்க, உங்க இன்னொரு பொண்ணையும் வரச் சொல்லுங்க அவங்களோட டைம் ஸ்பென்ட் பண்ண விடுங்க, மனதளவில் ரிலாக்ஸ் ஆக வாய்ப்பு இருக்கு, கண்டிப்பா கணவன் மனைவிக்குள்ள ஏதோ பிராப்ளம், அது என்னன்னு தெரியனும், அதுக்கு அப்புறம் தான் எதுவா இருந்தாலும் யோசிக்க முடியும்... அவங்க உங்க பொண்ணுங்ககிட்ட ரிலாக்ஸா பேசற மாதிரி என்கிட்ட பேச முடியாது, பேமிலி பிராப்ளம் இருக்கலாம், அவங்க டிஸ்டர்ப்டா இருக்கறது இப்போதைக்கு மத்த டாக்டர்ஸ்க்கும் தெரிய வேண்டாம்.”

“ரெண்டு பேரும் வர்ற ஐடியால தான் இருக்காங்க”

“ஓகே அங்கிள்... பல வகையான ஸ்டிரெஸ் அவங்களுக்குள்ள இருந்திருக்கு, கூடவே இந்த டென்ஷன் வேற... ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடுவாங்க, இது என் கணிப்பு”

“அவ அப்பா சாகறதுக்கு முன்னாடி வரைக்கும் நல்லா இருந்தாம்மா... இப்பத்தான் இப்படி இருக்கா... அவர் சாவு அவளை மாத்திடுச்சு... ஸ்கூல் லைப்போடையே அவ துறுதுறுப்பு மறைஞ்சிடுச்சு”

“சோ டீன் ஏஜ்ல நடந்த அதிர்ச்சி தான் மெய்ன் காரணமா இருக்கும்”

“புரியுதும்மா... இந்த நாலு நாளா ஒழுங்கா தூக்கம் இல்லை, வேலை வேலைன்னு ஹாஸ்பிட்டலே கதின்னு இருக்கா, கூடவே சமபந்தமே இல்லாம கரஸ்ல தமிழ் லிட்டரேச்சர் படிக்கறா, இப்ப பாப்பா ஊருக்கு போனதால, பாதி நேரம் லைப்ரரில, மீதி நேரம் ஹாஸ்பிட்டல்ல”

“ஒன்னு பண்ணுங்க அங்கிள், அவங்களை சார் கூட ஒரு ஒன் வீக் டூர் அனுப்பி வைங்க... சரியாகிடுவாங்க”

“தேங்க்ஸ் ம்மா... நீ மனிஷா பத்தி பரத்கிட்ட சொன்னதை பரத் சொன்னார், அதான் உன்கிட்டே பேசுவோம்ன்னு முடிவு பண்ணேன்”

“நான் அவர்கிட்ட எல்லாமே ஷேர் பண்ணிக்குவேன்... நான் மட்டும் இல்லை என் ஹஸ்பன்ட் கூட அப்படித்தான்... அவரைப் பார்த்து நானும் பழகிக்கிட்டேன்... இப்ப எதுக்கு அவர் போனார் தெரியுமா? நீங்களும் நானும் பேசும் போது டிஸ்டர்ப் இருக்கக்கூடாதுன்னு தான். நீங்க பெர்ஸ்னலின்னு சொன்னதும் கிளம்பிட்டார்... இப்ப நானா நம்ம பேசினதைச் சொன்னா உண்டு, இல்லன்னா அவர் என்கிட்ட கேட்கவே மாட்டார்.”

“சரிம்மா... நீ சொன்னதை முயற்சி பண்றேன்... உன் நம்பர் தரியா?”

“நோட் பண்ணிக்கோங்க அங்கிள்”

அவள் சொல்லச் சொல்ல சிவா நோட் செய்து கொண்டார்.

வீட்டிலோ மனிஷாவை மானவ் தூக்கி வருவதைக் கண்ட அடுத்த நொடி நித்யாவும், பவித்ராவும் பயந்துவிட்டனர்.

“என்னப்பா? என்னாச்சு?”

“ஒன்னும் இல்லை பயப்படாதிங்க...” என்றவன் மேலே அவர்களது அறைக்குச் செல்ல, பின்னாலேயே சென்ற இருவரும் அறைக்கதவைத் திறந்துவிட்டனர்.

உள்ளே கட்டிலில் அவளைப் படுக்க வைத்து, ஏசியை ஆன் செய்தவன், அவளுக்கு ஒரு போர்வையைப் போர்த்திவிட்டு, இருவரையும் அழைத்துக்கொண்டு, கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தான்.

“என்னப்பா? என்னாச்சு அவளுக்கு?”

“ஒன்னுமில்லை... பயப்படாதிங்க... அந்த பாப்பா இறந்ததை அவளால தாங்க முடியலை. ரொம்ப ஸ்டிரெஸா இருந்தா, பி.பி வேற ஹை ஆகிடுச்சு, அதுதான் தூங்க ஊசி போட்டு இருக்கு, நல்லா தூங்கட்டும், காலைல இருந்து எதுவும் சாப்பிடலை, வெறும் காப்பியை குடிச்சே ஓட்டிட்டா... எழுந்ததும் சாப்பிட ஏதாவது குடுப்போம்... இப்ப தூங்கட்டும்...”

“சரிப்பா... பயந்துட்டோம்...”

“பாப்பா எங்க?”

“கீழ பிளே ரூம்ல இருக்கா...”

“சரி மனிஷாட்ட ஒருத்தர் உட்காருங்க... நான் பாப்பாவைப் போய் பார்த்துவிட்டு வரேன், நான் வந்ததுக்கு அப்புறம் நீங்க கீழ போகலாம்...” என்று அவன் கீழேச் சென்றான்.

“டேய் கை கால் கழுவிட்டு தூக்கனும்... டிரெஸ்ஸ மாத்து...”

“உங்க ரூம் யூஸ் பண்ணிக்கறேன்ம்மா... மேல இருந்து என் டிரெஸ் எடுத்து போடுங்க...”

மானவ் கை கால் கழுவிவிட்டு, உடை மாற்றிக்கொண்டு மகளுடன் விளையாட அமர்ந்துவிட்டான்.

நித்யா மகளுடன் இருந்து கொள்ள, பவித்ரா மற்ற வேலையைப் பார்க்கப்போய்விட்டார்.
 
Status
Not open for further replies.
Top