All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஜோவின் "சுகமான புது ராகம்" - பாகம் 1 - கதைத் திரி

Status
Not open for further replies.

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளோ மனிஷாவை விட்டு இம்மியும் நகர மறுத்துவிட்டாள்.

“என்னாச்சு நிஷா? பேபிக்கு என்ன கோபம்?”

“நான் கிளம்பினதும் என் கூட வர்றேன்னு ஒரே அடம், சரின்னு கூட்டிட்டு வந்தேன், இங்க காரை விட்டு இறங்கினதுல இருந்து அடம், மறுபடியும் கார்ல ரைட் போகனுமாம்”

“தனு... நீ அப்பாட்ட வருவியாம், நான் உன்னை கார்ல கூட்டிட்டு போவேனாம்”

அவனுடைய வார்த்தைகளில், மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்த தனுவின் கண்கள் அழுகையில் சிவந்து வீங்கி இருந்தது.

“அச்சோ... என் செல்ல குட்டில்ல.. அழக்கூடாது... பாருங்க என் பட்டு குட்டி கண்ணெல்லாம் எப்படி சிவந்து போயி இருக்கு, நீங்க அப்பாட்ட வாங்க, நாம ஜாலியா கார்ல சுத்தலாம்” என்று கை நீட்ட,

குழந்தை திரும்பி மனிஷாவைப் பார்த்தது.

“அப்பா கார்ல ரைட் கூட்டிட்டு போவாங்க... நான் இங்க தான் இருப்பேன்... உனக்கு ரைட் வேணும்ன்னா அப்பாட்ட போ... இல்லையா அம்மாட்ட இரு...” என்று அவளும் சொல்ல,

அடுத்த நொடி மானவிடம் தாவி இருந்தது.

அவன் குழந்தையை வாங்கி முத்தமிட்டுக் கொஞ்ச ஆரம்பிக்க, மனிஷா உணவை எடுத்துக்கொண்டு உள்ளிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

அவள் அவனுக்கு தட்டில் உணவை எடுத்து வைக்க, மானவ் மகளுடன் உள்ளே நுழைந்தான்.

“நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?”

“ம்ம். நீங்க உட்காருங்க” என்றவள், “தனு அம்மாட்ட வா”

“ம்ஹும்..” என்பதாய் குழந்தை தலையசைத்துவிட்டு மானவை இறுக்கிக் கட்டிக்கொண்டது.

“அப்பா சாப்பிட்டதும், நாம கார்ல போகலாம்”

“ம்ஹும்..” என்று தலையசைத்துவிட்டு,

மானவ்வின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவனை இறுகக்கட்டிகொண்டது.

“அவ இப்போதைக்கு என்னை விட மாட்டா, பேசாம நீயே ஊட்டிவிடு” என்று கண்கள் மின்ன மானவ் சொல்ல,

“என்ன... நானா?” என்று அதிர்சியுடன் மனிஷா கேள்வி எழுப்பினாள்.

“பின்ன? இதுக்கு வேற யாரையாவதையா கூப்பிட முடியும்? நீ தான ஊட்டிவிடனும், எனக்குப் பயங்கர பசி, சீக்கிரம் ஊட்டிவிடு...”

வேறு வழியில்லாமல் அவளே ஊட்டி விட ஆரம்பிக்க, இருவரையும் கண்டு குழந்தைக்குப் பொறுமை பறக்க ஆரம்பித்தது.

பொறுமை குறைய குறைய அழுகை பெரிதாக ஆரம்பித்தது. அதனை சமாதானம் செய்யும் பொருட்டு மனிஷா கதை சொல்ல ஆரம்பித்தாள்.

“தனு இப்ப வெளிய பெரிய யானை வந்து அட்டகாசம் பண்ணுதாம், டோலக்பூர்ல இருந்து பீம் வந்து அந்த யானையை சங்கிலி போட்டு கட்டி வைச்சதுக்கு அப்புறம் தான் நாம வெளிய போக முடியும்”

“இப்ப போனா?”

“இப்ப போனா அந்த யானை நம்மல அதோட தும்பிக்கைலத் தூக்கி அப்படியே வீசிடும்”

“அச்சுச்சோ...”

“அப்பா சாப்பிட்டதும், நாம போகலாம்? சரியா?”

“பீம் கூட போத்தோ எடுக்காமா?”

“பீம் சண்டை போட்டு முடிச்சுட்டு பிரியா இருந்தா எடுக்கலாம்”

“ஐ... ஜாலி”

“நீ பிஸ்கட் சாப்பிடறியா?”

“வேணாம்...”

“சரி நீ என்ன பண்ணு, அப்பாவோட கைல இருக்கற வாட்சை கழட்டுவியாம், நாம எடுத்துட்டு போவோமாம்”

“ஏக்கு?”

“அப்பா கைல வாட்ச் இல்லைன்னா தாத்தா அப்பாவை அடிப்பாங்கள்ல”

“ப்பா பாவ்ம்”

“அப்பா நேத்து பாப்பா கூட விளையாடலைல்ல?

“ம்ம்”

“அதுக்கு பனிஷ்மென்ட்”

“ச்சேரி... பாப்பா கலட்டேன்”

அவள் வாட்சில் கவனமாக, மானவ் இருவரையும் ரசனையுடன் பார்த்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.

இடையிடையில் தனு வாட்சைக் கழட்ட முடியாமல் அழ ஆரம்பிக்க, மனிஷா மீண்டும் பீம் கதையைச் சொல்லி சமாளித்துக்கொண்டே அவனுக்கு உணவை ஊட்டி முடித்திருந்தாள்.

பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு, தட்டைக் கழுவி வைத்துவிட்டு வந்தவள், “சரி நாங்க கிளம்பறோம்” என்றவாறே பைகளை எடுத்துக்கொண்டு நகரப் போக,

“ஏய் இரு... இரு... இப்படியே எங்கப் போற?”

அவனுடைய பதட்டத்தில் அவள் புரியாமல் அவனைப் பார்க்க,

“பர்ஸ்ட் அதெல்லாத்தையும் கீழ வைச்சிட்டு அப்படியே உள்ள கண்ணாடில போயிப் பாரு”

அவள் குழம்பியவளாக, பைகளை கீழே வைத்துவிட்டு, பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.

அங்கிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள், நொடியில் பதறிப்போய் உடையைச் சரி செய்ய ஆரம்பித்தாள்.

“ப்ச் எப்ப இருந்து இப்படி இருக்கேன்னு தெரியலையே, எத்தனை பேரை கடந்து வந்தேன், போச்சு... என் மானமே போச்சு...” என்று கண்கள் கலங்க புலம்பிக்கொண்டே அவனுக்கு அருகில் வந்து தலையில் கைவைத்து அமர்ந்தவளைப் பார்த்தவன்,

அவளுடைய தோளில் கைபோட்டு அவன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டே, “ரிலாக்ஸ், நீ இந்த ரூம்க்குள்ள வர்ற வரைக்கும் நல்லாதான் இருந்த”

“அப்படின்னா?”

“உன் பொண்ணு பார்த்த வேலை இது... நான் அவளை வாங்க முயற்சி பண்றப்ப அவ தான் கலைச்சு விட்டா”

“ஷ்.. பயந்தே போயிட்டேன்... சரி அவ கலைக்கும் போது பார்த்தீங்கள்ல, இதை முதல்லையே சொல்ல வேண்டியதுதானே”

“சைட்டடிக்க சான்ஸ் கிடைக்கிறதே என்னிக்காவது ஒரு நாளைக்கு, அதை விடச் சொல்றியா?”

அவனது பதிலில் முகம் மாறியவள், பதில் பேசாமல், பைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மவுனமாக வெளியேறினாள்.

அவள் பின்னாலேயே எழுந்து வந்த மானவ், இன்டர்காமில் ரகுவையும், அவனது செக்கரட்டரியையும் அழைத்தான்.

உள்ளே நுழைந்த செக்கரட்டரியிடம் வேலைகளைத் தந்தவன், ரகுவிடமும் சில விஷயங்களைப் பேசிவிட்டு மகளுடன் அவனது இருக்கையில் இருந்து எழுந்தான்.

“நாங்க கிளம்பறோம்” என்று மனிஷா எழுந்துகொள்ள,“மூனு பேரும் தான் கிளம்பறோம். வா போகலாம்”

“எனக்கு ஹாஸ்பிட்டல்ல வொர்க் இருக்கு”

“சரி...”

“நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போயிடுங்க, நான் ஹாஸ்பிட்டல் கிளம்பறேன்”

“நான் இப்ப வீட்டுக்கு போறேன்னு சொன்னேனா?”

“அப்புறம்?”

“உன் வொர்க்கை முடிச்சுட்டு, மூனு பேரும் இன்னிக்கு ஜாலியா ஊரை சுத்தப் போறோம்”

“எனக்கு வேலை இருக்கு, நீங்க ரெண்டு பேரும் போங்க”

“இந்த பிகு பண்ற வேலையெல்லாம் வைச்சுக்காத, என்னைப்பத்தி உனக்குத் தெரியும், மூனு பேரும் இன்னிக்கு ஊர் சுத்தப் போறோம்” என்றவன்,

“வா போகலாம்” என்று சொல்லிக்கொண்டே அவனது அறையில் இருந்த விளக்குகள், ஏசி முதலியவற்றை அணைத்துவிட்டு, கோட்டையும், டையையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேற, மனிஷாவும் அவனைப் பின் தொடர்ந்தாள்.

ரிசெப்ஷனிஸ்ட்டிடம் சென்றவன், “நிஷா உன் கார் கீ தா” என்று அவளது கார் கீயை வாங்கி அவளிடம் தந்தவன்,

“டிரைவர் மாதேஷை வரச்சொல்லி, நிஷா காரை வீட்ல விடச் சொல்லுங்க”

“ஓகே சார்”

“இப்ப வா போகலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு அவனது காரை நோக்கிச் சென்றான்.

“என்னை ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க?”

“ஜாலியா ஊரை சுத்த கூட்டிக்கிட்டு போறது உனக்கு பனிஷ்மென்ட் மாதிரி இருக்கா?”

“திடீர்ன்னு என்ன? எல்லாத்தையும் ஒரே நாள்ல மாத்தறிங்க?”

“எல்லாமே மனசுக்குள்ள இருக்கு, வெளிய வர இவ்ளோ நாள் தேவைப்பட்டு இருக்கு”

“இப்ப மட்டும் வெளிய வர வேண்டிய தேவை என்ன? மாமா, அத்தை ஏதாவது சொன்னாங்களா?”

“அவங்க ஏதாவது சொன்னா, நானே உன்கிட்ட சொல்லி இருப்பேனே, ஏன் இப்படி மறைச்சு கூட்டிக்கிட்டு போறேன்”
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“-------------------------------------------------“

“இங்க பாரு இப்படி முகத்தை தூக்கி வைச்சுக்காம, சந்தோசமா வா, எனக்குத் தெரிஞ்சு நம்ம கல்யாணத்துக்கு அப்புறம், இன்னிக்குத்தான் நாம முதன் முதலா, நம்ம டெசிஷன்ல வெளிய போறோம், தயவு செய்து முகத்தை இப்படி வைச்சுக்காத”

“ப்பா... பீம் எங்க?”

“பீம் அந்த யானையை டோலக்பூர் கூட்டிகிட்டு போய்ட்டான்”

“அங்க எக்கு?”

“அங்க பெரிய பாரெஸ்ட் இருக்குல்ல, அதுல கூட மங்கள் சிங் இருப்பனே”

“ம்ம்...”

“அந்த காட்ல கொண்டு போயி விடப் போயிட்டான்”

“ச்சேரி”

முதலில் ஹாஸ்பிட்டல் நோக்கி சென்றவன், மனிஷா ஹாஸ்பிட்டலில் இருந்த சில வேலைகளை முடித்துவிட்டு வரும் வரை காத்திருந்து, அவளையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

கார் கடை வீதி பக்கம் செல்லாமல், ஊருக்கு வெளியே திசை மாறிச் செல்வதைப் பார்த்தவள்,

“இப்ப எங்க போறோம்?”

“நம்ம தீம் பார்க்குக்கு”

“இதே டிரெஸ்லையா?” என்று அவளுடைய புடவையை ஒரு முறை குனிந்து பார்த்துக்கொண்டாள்.

“இன்னிக்கு மெயின்டனன்ஸ் டே... கவலைப்படாம வா, உள்ள நாம தான் இருப்போம், லேடி ஆப்பரேட்டர் இருக்காங்க, அவங்களை கூப்பிட்டுக்குவோம்”

“சரி... டிரெஸ் சேஞ் பண்ண என்ன பண்ணுவீங்க?”

“சொல்றேன்” என்றவன், நித்யாவுக்கு கால் செய்தான்,

“அத்தை, நானும் நிஷாவும் தீம் பார்க் போறோம், நீங்க எங்க ரெண்டு பேருக்கும் டிரெஸ் எடுத்து வைங்க, நிஷா காரை டிரைவர் கொண்டு வந்து விடுவார், அவர்கிட்ட குடுத்துவிடுங்க, அவரை ஆட்டோ பிடிச்சு வரச்சொல்லுங்க”

“சரிப்பா” என்று போனை அணைத்தவர் உள்ளத்தில் மகிழ்ச்சி துளிர் விட ஆரம்பித்தது.

அதே போல் மாதேஷிடமும் சொல்லியவன்,

“இப்ப உன் பிராப்ளம் சால்வ்ட்டா?”

“ம்ம்”

இருவரும் புதுவித மனநிலையுடன் தீம் பார்க்கிற்கு செல்ல, இன்னொரு பக்கம், பேரக்குழந்தைகளைப் பார்த்த மகிழ்ச்சியில் சிவாவும் பவித்ராவும் வீடு திரும்பினர்.

“என்னங்க வீடே அமைதியா இருக்கு? பாப்பா தூங்கறாளா?”

“அப்படித்தான் இருக்கும்”

“உள்ளே நுழைந்தவர் சத்தமில்லாமல் பைகளை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, ஹாலுக்கு வர,

மாடியில் காய்ந்திருந்த துணிகளை எடுத்துக்கொண்டு நித்யா கீழே வந்தார்.

“என்ன நித்யா, பாப்பாவை தனியா விட்டுட்டு போயிட்ட?”

“பாப்பா எங்க இங்க இருக்கா?”

“வேற எங்க இருக்கா? மனிஷா கீது வெளிய கூட்டிக்கிட்டு போய்ட்டாளா? அவ கார் இருக்கு”

“இன்னிக்கு வீட்ல ஒரு அதிசயமே நடந்து இருக்கு”

“என்ன அதிசயம் நித்யா?”

“இன்னிக்கு காலைல மானவுக்கு சாப்பாடு கொண்டு போன மனிஷா ஹாஸ்பிட்டல் போகாம வீட்டுக்கு ரிட்டர்ன் ஆகிட்டா, என்னன்னு கேட்டா, ஒன்னுமில்லைன்னு சமாளிச்சுட்டா, மதியம் அவளே சாப்பாடு எடுத்துக்கிட்டு போனா, காலைலயே நம்ம குட்டி அவ கூட போறேன்னு அடம், மதியம் அதுக்கு மேல சரி அடம், அவ அழுகை தாங்காமல், அவளையும் கூட்டிக்கிட்டுப் போனா, போறப்ப ஹாஸ்பிட்டல்ல வொர்க் இருக்கு, முடிச்சிட்டு வர்றேன்னு சொன்னா, அப்புறம் மானவ் போன் பண்ணி, மூனு பேரும் தீம் பார்க் போறோம், டிரெஸ் குடுத்து விடுங்கன்னு சொன்னான். டிரைவர் வந்தார், குடுத்துவிட்டு இருக்கேன்”

“எப்படியோ ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தா சரி, ஆமா காலைல சிசேரியன் இருக்குன்னு சொன்னா”

“வேற டாக்டரை மாத்திவிட்டுட்டா, அதை விடு நீங்க போன வேலை என்னாச்சு? ஏன் மதியம் சாப்பாடு உங்களுக்கு மட்டும் குடுத்துவிட சொன்ன?”

“நம்ம பேரன் இருக்கானே, ஒரே பிடிவாதம், உங்கண்ணனையும், என்னையும் சேர்த்தா கூட அவன் அளவுக்கு வர முடியாது”

“அப்படி என்ன பண்ணினான்?”

பவித்ரா நடந்ததை சொல்ல,

“பேத்தி பேச ஆரம்பிச்சு இருக்காள்ல, போகப்போக பார்த்துக்கலாம்”

“இப்போதைக்கு அது தான் ஆறுதல்”

“போகப் போக சரி ஆகிடும் பவி...”

“எனக்கு இப்பக் கவலையே, சர்வாவை நினைச்சுத்தான், அவன் வீட்ல ஏதாவது சொல்லி, சம்யுக்தா யோசிக்க ஆரம்பிச்சா?”

“இங்க பாரு, என்னிக்கு இருந்தாலும், அவளுக்கு தெரிய வேண்டியது தானே, உனக்கு வயசாகிடுச்சு, தேவை இல்லாத டென்ஷனை கிளப்பி, உடம்பை கெடுத்துக்காதே”

“நித்யா, இன்னிக்கு மீட்டிங் நல்ல படியா போச்ச்சாம், உன் மருமகன் கலக்கிட்டானாம்”

“அண்ணா, உங்க பையன் வேற எப்படி இருப்பான்... ரகு சொன்னாரா? எனக்கு காலைல இருந்து அந்த டென்சன் ஒரு பக்கம், சரி மதியாம கேட்டுக்கலாம்ன்னு நினைச்சேன், மானவ் போன் பண்ணி தீம் பார்க் போறதை சொன்னதும், அதை கேட்க வேண்டாம்ன்னு விட்டுட்டேன்”

“ஆமாம்மா, ரகு தான் சொன்னான், கூடவே நான் கூட இத்தனை வருசத்துல இந்தளவுக்கு சிறப்பா மீட்டிங் நடத்தி, எல்லா தவறையும் சரி செஞ்சது இல்லையாம், ஆபிஸ் முழுக்க உன் மருமகன் மேல கண்ணு வைச்சு இருக்காங்களாம், சுத்தி போடச் சொல்லி சொன்னான்”

“இன்னிக்கு ரெண்டு பேரும் அவங்களா ஊர் சுத்த கிளம்பினதுக்கு, என் கண்ணே அதிகம், வந்ததும் அது தான் முதல் வேலை, சரி நீங்க போயி ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க, காபி தரேன்”

“நித்யா நீயும் கிளம்பு, இன்னிக்கு பாப்பா வேற இல்லை, நாம ரெண்டு பேரும் போயி வெள்ளிக்கிழமை பூஜைக்கு வேண்டிய பொருளெல்லாம் வாங்கிட்டு வந்துருவோம்”

“ஐயர் யாகத்துக்கு வேண்டிய மத்ததெல்லாம் வாங்கிட்டு வந்துடுவாரா?”

“ம்ம்.. அவரையே வாங்கிட்டு வரச் சொல்லிட்டேன், அப்புறம், மனிஷாக்கும், சம்யுக்தாவுக்கும் அன்னிக்கு வைச்சு குடுக்க புடவை எடுத்துடுவோம், தனுக்கும், ஜுவாலாக்கும் பட்டுப்பாவாடை எடுத்துடுவோம், சர்வாக்குத்தான் என்ன டிரெஸ் வாங்கறதுன்னு தெரியலை”

“உன் பையனுக்கு என்ன வாங்கப்போற?”

“அவனுக்கு வழக்கம் போல வேட்டி, சட்டை தான் சிவா”

“அதையே அவனுக்கும் வாங்கிடு”

“உங்க ஐடியா ஓகே, இப்ப சர்வா அப்பாக்கு என்ன வாங்கறது?”

“வேட்டி சட்டை தான்”

“சட்டை சைஸ்? சம்யுக்தாகிட்ட கேட்டா சொல்ல மாட்டா, வேண்டாம்ன்னு சொல்லுவா, சபைல வைச்சு குடுக்கும் போது மறுக்க முடியாதுல்ல”

“ஒன்னு பண்ணு, நீ மூனு பேருக்கும் வாங்கிடு, சர்வா அப்பாக்கு நாளைக்கு ஜுவாலாகிட்ட சைஸ் கேட்டு வாங்கிக்கலாம்”

“நீங்க சொல்றதும் சரி தான்”

“நித்யாக்கும் வாங்கிடுங்க”

“நீங்க சொல்லலைனாலும் வாங்கிடுவேன், பொண்ணுங்களுக்கு மட்டும் வாங்கலை”

“ஏன் பவி, அவங்களுக்கும் வாங்கிட்டு வந்துடு”

“பூஜை முடிச்சு தர்றது, பூஜைல கலந்துக்கறவங்களுக்கு மட்டும் தான் டிரெஸ், அவங்க தான் இன்னும் ரெண்டு வாரத்துல வந்துடுவாங்களே, வந்ததும் வாங்கித் தரலாம்”

“சரி கிளம்புங்க, தனு வந்தா, அவளைப் பார்க்கனும், உன் பையன் இன்னிக்குத்தான் அவனா ரெண்டு பேரையும் வெளில
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கூட்டிக்கிட்டு போயிருக்கான், அவங்க வந்ததும் தனுவை கீழ படுக்க வைச்சிக்கோங்க”

“ஆக மொத்தம் பையனும் அப்பாக்குத் தப்பாம பிறந்து இருக்கான், இந்த தீம் பார்க்கை விட்டா, உங்க பரம்பரைக்கே வேற எதுவும் தெரியாது போலியே”

“உன்னை எங்கேயும் நான் கூட்டிக்கிட்டு போனதில்ல? நீயே சொல்லு பார்க்கலாம்”

“அண்ணா... பவி... இப்ப ரெண்டு பேரும் ஒழுங்கா போயி ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க... இல்லை நாளைக்கு உங்க கூட உங்க சின்ன பேத்தியையும் பேக் பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பி வைச்சிடுவேன், உங்க பேரப்பசங்க கூட இப்படி அடம் பண்ணாதுங்க”

“நல்ல பனிஷ்மென்ட்...” என்று சிவா சிரித்துக்கொண்டே அவரது அறைக்குச் சென்றார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், பெண்கள் இருவரும் கிளம்பி கடைவீதிக்குச் சென்றனர்.

அழகும், கம்பீரமும் ஒருங்கே அமைந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருந்து உறையூர் வெட்காளியம்மனின் சன்னதியில் அமர்ந்து மன நிம்மதியைத் தேடிக்கொண்டு இருந்தாள் சம்யுக்தா.

காலையில் பிரித்வி கிளம்பியதும் கிளம்பி வீட்டிற்கு சென்றவள், மன நிம்மதி கிடைக்காமல் மாலையில் கிளம்பி கோவிலுக்கு வந்துவிட்டிருந்தாள்.

அம்பாளின் முகத்தில் தெரிந்த தேஜஸில், அவளின் மனக்குழப்பங்கள் மறைந்து மனதும், முகமும் தெளிவடைய ஆரம்பித்தது.

குழம்பிய மனதுடன் வந்தவள், தெளிந்த மனதுடன் புறப்பட எண்ணி எழுந்திருக்க முயற்சி செய்ய, அவளருகே பிரித்வி வந்து அமர்ந்து, அவள் கையைப் பற்றி அவளையும் அமர வைத்தான்.

“என்ன மேடம் சாமி கும்பிட்டாச்சா? என்ன வேண்டிக்கிட்ட?”

“என் புருஷன், என் குழந்தைங்க நல்லா இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டேன்” என்றவள் எழுந்திருக்க மீண்டும் முயற்சி செய்ய,

“ஷ்.. ஒழுங்கா உட்கார், கோவிலுன்னு பார்க்கிறேன், இல்லைன்னா என் மடில இழுத்து உட்கார வைச்சிருப்பேன்”

“என் பசங்க எனக்காக வெயிட் பண்ணுவாங்க, நான் போகனும், உங்க கதையெல்லாம் எனக்கு வேண்டாம், அது எனக்குத் தேவையும் இல்லை, தென் நானும் இது கோவில்ன்னு பார்க்கிறேன், இல்லன்னா இந்நேரம் என் கைதான் பேசிருக்கும், எல்லா நேரமும் அமைதியா இருப்பேன்னு நினைக்க வேண்டாம்”

“உன் கை பேசினாலும் எனக்கு சந்தோசம் தான்... காலைல நீ மூட் அப்செட் ஆனதைப் பார்த்ததுல இருந்து எனக்கு மனசே சரி இல்லை, பட் இப்ப, இங்க வந்து உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம், எனக்கும் மனசு கிளியர் ஆகிடுச்சு”

“இன்னும் ரெண்டு வாரம், அப்புறம் இருக்கு உனக்கு கச்சேரி”

“எந்த கச்சேரியா இருந்தாலும், நான் பார்த்துப்பேன், நீ என்ன பண்ற, நீ எனக்கு சொன்ன அதே டூ வீக்ஸ் டைம்மை நான் உனக்குத் தர்றேன், அதுக்குள்ள நீ என் வீடு, சாரி நம்ம வீட்டுக்கு வரனும், இல்லை வர்ற”

“உன் வீட்டுக்கு நான் எதுக்கு வரனும்?”

“நீ தான சொன்ன, டூ வீக்ஸ்ல இங்க இருந்து கிளம்பறேன்னு, அதான் உனக்கு டிரீட் தரப் போறேன்”

“உலகமே அழிஞ்சு போனாலும் சரி, உன் வீட்டுக்கு நான் வர மாட்டேன்”

“நீ வருவ... நீ கண்டிப்பா வருவ, உன்னை வர வைப்பேன்...”

“உலகமே அழிஞ்சு, உன் வீட்ல வந்து நுழைஞ்சா நான் பிழைக்கலாம்ன்னு ஒரு சூழ்நிலை வந்தா கூட உன் வீட்டுக்கு நான் வர மாட்டேன்”

“நீ உறுதியா என் வீட்டுக்கு வருவ, உன்னை வர வைப்பேன்”

“என்னை வர வைக்கிற அளவுக்கு உங்கிட்ட என் வீக்கன்ஸ் பாயின்ட் எதுவும் இல்லை”

“இருக்கு... ஒன்னுக்கு ரெண்டு இருக்கு”

“--------------------------------------------“

“புரியலையா? பாயின்ட் நம்பர் ஒன். சர்வேஷ்வர், பாயின்ட் நம்பர் டூ, ஜுவாலா”

“பசங்களை வைச்சு பிளாக் மெயிலா? முடிஞ்சா டிரை பண்ணி பாருங்க மிஸ்டர் பிரித்விராஜ்”

“என்கிட்டேயே சவாலா? இதுவரை என்கிட்டே சவால் விட்டு ஜெயிச்சவங்க யாருமே இல்லை”

“மே பீ பர்ஸ்ட் பெர்சன் நானா தான் இருப்பேன், வெயிட் பண்ணி பாருங்க”

“ஸ்வீட் சேலேஞ் மிசர்ஸ் சம்யுக்தா”

“ராஸ்கல்” என்று முணகிக்கொண்டே சம்யுக்தா அங்கிருந்து எழுந்து பிரகாரத்தை விட்டு வெளியேறினாள்.

அவள் செல்வதையே புன்னகையுடன் பார்த்தவன், மெல்ல அருகில் இருந்த பிரசாதப் பையை எடுத்துக்கொண்டு பிரகாரத்தை விட்டு வெளியேறினான்.

அதே நேரம் மறந்துவிட்டிருந்த பிரசாதப் பையை எடுக்கத் திரும்பிய சம்யுக்தா அவனது கைகளில் பையைக் கண்டதும், மீண்டும் திரும்பி காரை நோக்கிச் சென்றாள்.

அவளது காரை நெருங்கியவன், திறந்திருந்த கண்ணாடியின் வழியே பையை அவளது மடியில் வைத்துவிட்டு, அதிலிருந்த தேங்காய் மூடியில் இருந்த திருநீரை எடுத்து தனது நெற்றியில் வைத்துக்கொண்டான்.

“பசங்க பேர்ல அர்ச்சனை பண்ணி இருப்ப, எடுத்துட்டு போயி அவங்களுக்கு வைச்சுவிடு... பை...” என்று சொல்லிவிட்டு, அவனது காரை நோக்கிச் சென்றான்.

சம்யுக்தா புறப்பட, அவளது காரை அவன் பின் தொடர்ந்து சென்றான்.

அவளது கார் வீட்டிற்குள் நுழைந்து, அவள் அதிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைந்த பின்னரே அங்கிருந்து பிரித்வி அகன்றான்.

“சர்வா.. ஜுவா... ஹோம் வொர்க் முடிச்சாச்சா?”

“முடிசுட்டோம்மா...”

“குட்” என்று சொல்லிக்கொண்டே இருவருக்கும் அவள் திருநீறும், குங்குமமும் வைத்துவிட,

“மா... டுடே தட் கிரான்ட் பேரன்ட்ஸ் கால்ட் அஸ் செப்பரேட்லி”

“விட்ச் கிரான்ட் பேரெண்ட்ஸ்?”

“அவர் கரஸ்பாண்டேன்ட் அன்ட் ஹெர் ஹஸ்பென்ட்”

“அவங்க கிரான்ட்பேரெண்ட்ஸ் ன்னு உங்களுக்கு யார் சொன்னா?”

“தே ஒன்லி ஆஸ்க் அஸ் டூ கால் தெம் லைக் திஸ்”

“அவங்க சொன்னா நீங்க கூப்பிடுவீங்களா?”

“ஐ டோல்ட் தெம்ம்மா, ஆனா அவங்க கான்பிடென்ட்டா சொன்னாங்க, தென் அவங்க உங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சும் இருக்கலாம் இல்லன்னா தெரியாமையும் இருக்கலாம்னு சொன்னாங்க”

“நீ ஒன்னு தமிழ்ல பேசு, இல்லை இங்க்லீஷ்ல பேசு, இப்படி கலந்து பேசாத”

“டன் ம்மா”

“வேற என்ன சொன்னாங்க?”

“தே என்குயரி எபவுட் அஸ், ம்மா ரியலி தே ஆர் அவர் கிரான்ட் பேரெண்ட்ஸ்?”

“தே ஆர் அவர் ரிலேஷன்ஸ் மே பீ, பட் வீ டோன்ட் ரெடி டூ கீப் எனி ரிலேஷன்ஷிப் வித் தெம்...”

“அம்மா அந்த பாட்டி இன்னிக்கு பிரேக் பாஸ்ட் கொண்டு வந்தாங்க” என்று இருவருக்கும் இடையில் ஜுவாலா ஆரம்பித்தாள்.

“ப்ரேக் பாஸ்ட்டா?”

“ஆமாம்மா... நல்லா இருந்துச்சு... ஊட்டி விடறேன்னு சொன்னாங்க, நாங்க வேண்டாம்ன்னு சொல்லிட்டோம்”

“சர்வா நீங்க சாப்பிட்டீங்களா?” என்று சம்யுக்தா கோபமும் அதிர்ச்சியும் கலந்து கேட்க,

“மாம், இட்ஸ் ஜஸ்ட் பார் சம் கர்ட்ஸி, பட் ஐ ஸ்டிரிக்ட்லி டோல்ட் தெம் தட் வித்தவுட் அவர் பேரெண்ட்ஸ் பெர்மிஷன் வீ போத் டோன்ட் லைக் டூ கீப் எனி ரிலேஷன்ஷிப் வித் தெம்”

“பைன்... ரெண்டு பேரும் ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோங்க, நமக்கும் அவங்களுக்கும் உறவு இருக்கு, பட் நாம அதை புதுப்பிக்க இங்க வரலை, ஜஸ்ட் அவங்களை பார்க்க வந்தோம், பார்த்துட்டோம், பட் எப்படியோ அவங்களுக்கும் உங்களை பத்தி தெரிஞ்சுடுச்சு, தட்ஸ் இட்... நாம இன்னும் ரெண்டு வாரத்துல இங்கிருந்து கிளம்பறோம், அதுக்கு அப்புறம் நாம இங்க வர்றது எப்பைன்னு நமக்குத் தெரியாது”

“புரியுதும்மா”

“குட்... தேவை இல்லாம அவங்க மனசில எந்த ஆசையையும் வளர்த்து விடாதிங்க, தென் எனக்கும், அப்பாக்கும் அவங்க நமக்கு ரிலேசன்னு தெரியும்ன்னு அவங்களுக்கு இதுவரைக்கும் தெரியாது, நீங்களும் எங்களுக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிக்கக்கூடாது, புரியுதா?”

“ஓகே ம்மா”

“ஓகே, இப்ப இந்த விசயத்துக்கு அப்பா என்ன சொல்லப் போறார்ன்னு தெரியலை?”

“ஐ அல்ரெடி டோல்ட் ஹிம் ம்மா... ஹி ஆஸ்க் யூ டூ கால் ஹிம்”

“ஓகே ஐ வில் டாக் வித் ஹிம், நீங்க இனி அவங்ககிட்ட பேசக்கூடாது, புரியுதா?”

“ஸ்யூர் ம்மா”

சம்யுக்தா பவித்ரனுடன் போன் பேசச்செல்ல, இன்னொரு பக்கம் பரத், பவித்ராவும், நித்யாவும் உடையெடுத்துக்கொண்டு இருந்த அதே கடைக்குள் நுழைந்தார்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“எனக்கு இந்த டிசைன் பிடிச்சு இருக்கு நித்யா”

“அதை விட இந்த மெரூன் நல்லா இருக்கு பவி”

“கரை ரொம்ப பெரிசு, இப்ப யாரு இப்படி கட்டறாங்க?”

“ஒன்னு பண்ணு, இந்த கிரீன் எடுத்துக்கலாம், ரெண்டு பேருக்கும் சூட் ஆகும், சேம் டைம் ஒரே மாதிரியும் இருக்கும்”

“சரி இதே எடுக்கலாம்”

“தம்பி அப்படியே எட்டு வயசு பொண்ணுக்கு ரெடி மேட் பட்டுப்பாவாடை காட்டுப்பா”

“அந்த பக்கம் வாங்கம்மா” என்று கடை ஊழியர் முன்னே செல்ல, இருவரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

“ஏய் பவி அது சம்யுக்தா மாமனார் தானே”

“ஆமா நித்யா”

“அவர்கிட்ட பேசுவோமா?”

“வேண்டாம்...”

இருவரும் சென்று மற்றொரு பக்கத்தில் அமர,

அவர்களுக்கு நேர் பின் பக்கம் கடை நிறுவனருடன் பேசிக்கொண்டே பரத் வந்து நின்றார்.

“என்னப்பா? இந்த பக்கம்? என்ன விசேஷம்?”

“மருமகளுக்கு பர்சேஸ் பண்ணத்தான்”

“உன் பையன் எப்படி இருக்கான்? மருமக நல்லா இருக்காளா? பேரப்பசங்க எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க”

“எங்க மருமகளைக் காணலை?”

“மேடம் பிசி, அதான் என்னை அனுப்பி இருக்காங்க”

“சரி யாருக்கு டிரெஸ், உனக்கா? மகன் மருமகளுக்கா? ”

“எல்லாருக்குமே, மருமகளுக்கு சாரி, பேத்திக்கு பாவாடை சட்டை, மகனுக்கும், பேரனுக்கும் வேட்டி சட்டை”

“உனக்கு?”

“அது பையன் வரனும், நான் வாங்கினா சண்டைக்கு வந்திடுவான்”

“என்ன விசேஷம்? ஊருக்கு கொண்டு போகவா இல்லை யாருக்காவது பிறந்தநாளா?”

“ஊருக்கு போக, மருமக வந்து எடுப்பா, பிரைடே ஒரு பங்கசன், அதுக்கு கட்டிட்டு போக புது புடவை வாங்கனுமாம், அப்புறம் அவ பிறந்த நாளுக்கு இன்னும் மூனு மாசம் இருக்கு, இந்த முறை அவ பிறந்த நாளுக்கு பவுர்ணமி வருது, அதனால வழக்கம் போல ஸ்பெசல் சேரி ஆர்டர் தரச் சொல்லி இருக்கா, அது விஷயமாவும் வந்து இருக்கேன், எப்பவும் போல இந்த வருஷமும் அவ தர்ற டிசைன்ல வேணும்”

“பண்ணிக்கலாம், இந்த பவுர்ணமி இல்லாம அடுத்த பவுர்ணமி இல்லாம அதுக்கு அடுத்த பவுர்ணமி தான, இடைல இன்னும் ரெண்டு பவுர்ணமி இருக்கு”

“நாங்க இன்னும் இருபது நாள்ல ஊருக்கு கிளம்பறோம், டிக்கெட் வந்தாச்சு, அதுக்குள்ள வேணும்”

“வாங்கிக்கலாம், இல்லாட்டி எப்பவும் போல அனுப்பி வச்சிடறேன்”

“டிசைன் உனக்கு மெயில் பண்றேன் பார்த்துக்கோ, பையன் நேரடியா காஞ்சிபுரத்துல குடுக்கறேன்னு சொன்னானாம், மருமகளுக்கு இங்கத்தான் ராசி, கல்யாணப் புடவைல இருந்து எல்லாமே இங்க தானே வாங்கறா, அதான் பிடிவாதமா இங்கேயே தரச் சொல்லி அனுப்பி வைச்சிட்டா...”

“அதான் நாங்க போட்டோ அனுப்பின உடனே மருமக கிட்ட இருந்து ஆர்டர் வந்துடுமே... வொர்க்கர்ஸ் கூட கேட்பாங்க... இந்த மந்த் கனடா ஆர்டர் இருக்கான்னு?”

“அங்க மேடம் டிரடிஸ்னல் டிரெஸ் தான் பாலோ பண்ணுவாங்க, என் பையன் கைத்தறி புடவை கட்டச்சொல்லுவான், அவளுக்கு பட்டுன்னா இஷ்டம், அவன் சொன்னதுக்கு ஒரு நாளைக்கு கட்டுவா, அப்புறம் கேட்டா, பட்டுப்புடவையும் கைத்தறிப் புடவைன்னு அவன்கிட்ட ஏட்டிக்கு போட்டி பேசி காரியம் சாதிச்சுக்குவா, அங்க டெய்லி வியரே பட்டு சேரி தான்”

“சம்யுக்தா மாதிரி ஆளுங்களால தான் எங்க பிழைப்பே ஓடுது, உன் பையனை ஒரு டெக்ஸ்டைல்ஸ் ஆரம்பிக்கச் சொல்லு, சரியாகிடும்”

“இப்ப அவன் பார்க்கிற வேலைக்கே, என் மருமக அவனை வறுத்து எடுப்பா, இன்னும் புதுசுன்னு ஐடியா தந்தா, என்னை அடிக்காம விட மாட்டா” என்று பரத் சிரிக்க,

“சரி வா... முதல்ல உன் பையனுக்கு பார்க்கலாம்” என்று அவரும் சிரித்துக்கொண்டே பரத்தை அழைத்துச் சென்றார்.

“பவி, மானவ் பிறந்த நாளும், சம்யுக்தா பிறந்த நாளும் ஒரே நாள்” என்று போனை ஆராய்ந்து கொண்டிருந்த நித்யா சந்தோஷத்துடன் ஆர்பரிக்க,

பவியும் போனை வாங்கி ஆராய்ந்து பார்த்தார்.

“கடவுளே, அப்ப சம்யுக்தா என் பொண்ணா?”

“ஆமா பவி... சரி நீ இங்க பாப்பாக்கு எடு, நான் போயி உன் மருமகனோட சட்டை சைஸ் பார்த்துட்டு வரேன்”

“சரி” என்ற பவித்ரா மகிழ்ச்சியுடன் பேத்திகளுக்கு உடை எடுக்க,

நித்யா இன்னொரு பக்கத்தில் பரத் மூலமாக பவித்ரனின் சட்டை அளவை தெரிந்து கொண்டு அவனுக்கும், மானவுக்கும் உடை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

பரத் சம்யுக்தாவுக்கு மட்டுமில்லாமல் பவித்ராவுக்கும் சேர்த்தே புடவை எடுத்துக்கொண்டு, மகனுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் வாங்கிக்கொண்டு கிளம்பினார்.

பவித்ராவும், நித்யாவும், அனைத்து உடைகளையும் இறுதியாக தேர்வு செய்து வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினர்.

வீட்டிற்குள் நுழைந்த பவித்ரா, சிவாவைத் தேடி அவரது அலுவல் அறைக்குள் வேகமாக நுழைந்தார்.

“சிவா....”

“என்ன பவி? ஏன் இப்படி ஓடி வர்ற?”

“நம்ம குழந்தை யாருன்னு கண்டுபிடிச்சுட்டேன்”

“சம்யுக்தா தானே”

“எப்படி சிவா? சரியா சொல்றீங்க?”

“இப்பத்தான் சம்யுக்தாவோட டேட் ஆப் பர்த் என் கைக்கு வந்துச்சு, சரி உனக்கு எப்படித் தெரியும்”

“இன்னிக்கு சம்யுக்தா மாமனார் அவ பிறந்த நாளுக்கு புடவை ஆர்டர் குடுக்க வந்தார், நம்ம நித்யா தான் அவர் பேசறதைக் கேட்டு, கண்டு பிடிச்சா”

“நீங்க அவரைப் பார்த்து பேசுனீங்களா?”

“இல்லை சிவா, நித்யா பேசுவோமான்னு கேட்டா, நான் தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்”

“சோ இப்ப சம்யுக்தா நம்ம பொண்ணு”

“ஆமா சிவா, டிக்கெட் வந்துடுச்சாம், இருபது நாள்ல கிளம்பிடுவாங்களாம், அதுக்குள்ள புடவை வேணும்ன்னு ஆர்டர் பண்ணி இருக்காங்க”

“விடு பேசிக்கலாம், இப்ப நம்ம ரெண்டு பொண்ணும் கல்யாணம் ஆகி அவங்க புகுந்த வீட்ல இருக்கறது இல்லையா?”

“அவளுக்கு இன்னும் நாலு புடவை சேர்த்து வாங்கி இருக்கேன், நாளைக்கு நகைக்கடைல போயி அவளுக்கு நகை வாங்கனும், என்ன நகை வைச்சு இருக்காளோ தெரியலை?”

“அதெல்லாம் அப்புறம், நீ குடுத்தா அவ வாங்கிக்குவாளா? ஒரு புடவை தந்து பாரு, அதை வாங்கிட்டா அதிசயம், முதல்ல நம்ம பொண்ணு நம்ம வீட்டுக்கு வரட்டும், அவளுக்கு வேண்டிய எல்லாமே வாங்கித்தருவோம், இப்ப நீ போயி பால் பாயாசம் வை, இன்னிக்கு எல்லாமே நல்லதா நடந்திருக்கு”

“சரிங்க” என்றவர் கிட்செனை நோக்கிச் செல்ல,

இன்னொரு பக்கம்,

“வருஷாவருஷம் லட்சக்கணக்கா பணம் செலவு பண்ணி பட்டுப்புடவை வாங்கறியே அதை ஒரு தடவைக்கு மேல கட்டி இருக்கியா?”

“என் புருஷன் வாங்கித்தர்றார், கட்டிக்கறேன், பிறந்த நாள் அன்னிக்கு பளிச்சுன்னு இருக்க வேண்டாமா, பார்ட்டி கிராண்டா இருக்கும் போது, நான் மட்டும் டல்லா இருந்தா நல்லா இருக்குமா? நீங்களும் என்னை மாதிரியே வாங்கிப் போடுங்க, யார் வேண்டாம்ன்னு சொன்னது?”

“எது? நானும் உன்னை மாதிரி? ரெண்டு பேரு பிறந்த நாளும் ஒரே நாள், ஒரே நேரம், என்ன இந்த உலகத்தோட ஒரு மூலைல நீ பிறந்த, இன்னொரு மூலைல நான் பிறந்ததேன். உன் புடவை ஜொலிப்புக்கு பக்கத்தில் என் டிரெஸ் எடுக்குமா? இல்லை என்னிக்காவது எடுத்திருக்கா? அதுவும் தள்ளி நிற்கறியா? என்னை பாதி மறைச்சு தான் நிற்ப, மீதியை என் பசங்க மறைச்சுக்குவாங்க, இதை விட டாப் மேட்டர் என்னன்னா, நீ பட்டுப்புடவை கட்ட, நான் பட்டு வேஷ்டி, பட்டு சட்டை தான் போட்டாகனும்...”

“அது தான் விதி... பிறந்த நாள் மட்டும் இல்லை, நம்ம இறந்த நாள், நேரம் எல்லாமே ஒட்டுக்காத்தான் இருக்கும், உங்களை ஒவ்வொரு ஜென்மத்திலேயும் நான் துரத்திக்கிட்டே வந்து, உங்ககிட்ட சேர்ந்திடுவேன்”

என்று சம்யுக்தா பவித்ரனுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.

ராகம் இசைக்கும்...
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு நட்புகளே!

சுகமான புது ராகம் பாகம் ஒன்றின் அத்தியாம் ஒன்பதினை பதிவிட்டுள்ளேன்!

படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்!

:)
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு நட்புக்களே!

சுகமான புது ராகம் - பாகம் 1 - அத்தியாயம் 10, 11 பதிவிட்டுள்ளேன்!
படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்!
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 10



இரவு பத்து மணி,

வாசலில் கார் சத்தம் கேட்டு, பவித்ரா கதவைத் திறக்கச் சென்றார்.

அங்கு மானவ் காரில் இருந்து இறங்கி, உறங்கிக்கொண்டு இருந்த தனுவை மனிஷாவின் மடியில் இருந்து அழகாகத் தூக்கிக்கொண்டு கதவை நோக்கி வந்தான்.

மனிஷா காரை லாக் செய்துவிட்டு, சாவியையும், பைகளையும் எடுத்துக்கொண்டு பின்னாலேயே வந்தாள்.

“பாப்பாவை அத்தை ரூம்ல படுக்க வைப்பா”

“இருக்கட்டும்மா, மேல படுக்க வைச்சுக்கிறேன்”

“நீ ரெண்டு நாளா மீட்டிங்க்கு பட்ட கஷ்டம் எனக்குத் தெரியும், ஒழுங்கா போயித் தூங்கு, இவ உன் தூக்கத்தைக் கெடுப்பா” என்றவர், நித்யாவின் அறைக்கதவைத் திறந்து விட்டார்.

நித்யா உறங்கிக்கொண்டு இருக்க, அவரது அருகில் தனுவை படுக்க வைத்துவிட்டு, மானவ் வெளியேறினான்.

பவித்ரா அறைக்கதவை சாத்திவிட்டு தனுவின் அருகில் சென்று படுத்தார்.

மனிஷா கொண்டு வந்திருந்த பைகளை ஒழுங்கு செய்துவிட்டு, ஈர உடைகளை கொண்டு சென்று மொட்டை மாடிக்கு செல்லும் மாடிப்படியில் வைத்துவிட்டு, மானவின் கோட் மற்றும் டையை எடுத்துக்கொண்டு அவர்களது அறைக்குள் நுழைந்தாள்.

மானவ் உடை மாற்றிக் கொண்டு இருக்க, தனக்கான மாற்றுடை மற்றும் டவலை எடுத்துக்கொண்டு மனிஷா குளியலறைக்குள் நுழைந்தாள்.

அவள் குளித்து முடித்து வர, மானவ் உறங்காமல் அவளுக்காக காத்திருந்தான்.

“எவ்ளோ நேரம் குளிப்ப?”

“சாரி, நீங்க ரெஸ்ட் ரூம் போயி இருப்பீங்கன்னு நினைச்சேன்”

“நான் உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்?”

“எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம், எனக்குத் தூக்கம் வருது”

“காலைல பேச நான் ரெடி, பட் வீட்ல ஆளுங்க இருக்கறது உனக்கு பிராப்ளம் இல்லைனா சரி”

அவனது பேச்சு மாற்றத்தை உணர்ந்தவள், படுக்கையில் இருந்த தலையணையையும். பெட்சீட்டையும் எடுத்துக்கொண்டு, அவர்களது அறைக்குள் முன் பக்கம் இருந்த சிறு ஹாலை நோக்கிச் சென்றாள்.

மானவும் அவள் பின்னாலேயே எழுந்து சென்று அவளது கைகளில் இருந்த தலையணையையும், பெட்சீட்டையும் பிடுங்கி கட்டிலின் மேல் எறிந்துவிட்டு, அவளது கரம் பற்றி கட்டிலை நோக்கி இழுத்து வந்தான்.

“இங்க பாரு, நான் பொறுமையா இருக்கேன், என்னை சீண்டிப் பார்க்காத”

“நான் பாட்டுக்கு இருக்கேன், நீங்க தான் இப்ப பிரச்சனை பண்ணறீங்க?”

“என்னடி பிரச்சனை பண்ணேன்? குடிச்சுட்டு வந்து உன்னை அடிச்சேனா? இல்லை பணம் காசு வாங்கி வரச் சொல்லி உங்கம்மா வீட்டுக்கு அனுப்பினேனா?”

“சம்பந்தம் இல்லாம என்ன பேசறீங்க? நாம எப்பயும் போல இருப்போம், அது தான் நமக்கு நல்லது” என்று அவனது கையில் இருந்த கரத்தை உருவ முயற்சித்தாள்.

“என்ன எப்பயும் போல, அப்ப காலைல என்னை பிடிச்சு தள்ளி விட வேண்டியது தானே, எதுக்கு என்கிட்ட உருகி நின்ன”?”

“அது....”

“சொல்லு... எதுக்கு உருகின?”

“------------------------------------------------“

“என் மேல கோபம் இருந்தாலும், காதல் இருக்கப்போய் தானே நீ உருகி நின்ன?”

“இன்னிக்கு நீங்க ஏன் அப்படி நடந்துகிட்டீங்க?”

“அது....”

“இத்தனை நாளா, இதே ரூம்ல இருக்கிறோம், உங்க விரல் நகம் கூட என் மேல படாது, அதே ரூம்க்கு எத்தனை தடவை சாப்பாடு கொண்டு வந்து இருக்கிறேன், அப்ப நடக்காதது, இன்னிக்கு மட்டும் எப்படி நடந்துச்சு?”

“இன்னிக்கு உன்னை பார்த்ததும் தோணிச்சு”

“அப்ப நீங்க என்னை என்ன லவ் பண்ணியா அப்படி நடந்துகிட்டீங்க? இல்லைல, திடீர்ன்னு உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளுக்கு வடிகாலா என்னை யூஸ் பண்ணிக்கிட்டீங்க, நானும் மனுசி தான, எனக்கும் உணர்வுகள் இருக்கும்ல, அதை நீங்க தூண்டி குளிர் காய்ஞ்சுகிட்டிங்க, அவ்ளோதான்...” என்று கண்களில் நீர் வர கூறியவள்,

கண்களைத் துடைத்துக்கொண்டே,

“இதுவரை நான் உங்களால அனுபவிச்சதே போதும், மறுபடியும் ஏதாவது பண்ணி நான் தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு என்னை தூண்டி விடாதிங்க”

“நிஷா....”

“கோபம் வருதா? நியாயமா நான் தான் கோபப்படனும், இன்னிக்கு என் பேர்லயும் தப்பு இருக்கப்போயி அமைதியா இருக்கேன்”

“சரிடி.. உனக்கு என் மேல எந்த அன்பும் இல்லை... நீ சொல்ற மாதிரி வைச்சுப்போம், என் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, நீ என்ன பண்ணி இருப்ப? என்கிட்ட இருந்த மாதிரி அவன்கிட்டேயும் உருகி நின்னு இருப்பியா? காஸ் உனக்கும் உணர்வுகள் இருக்கு, நீயும் மனுஷி தான”

அவனது கேள்வியில் கண்கள் சிவந்தவள், அடுத்த நொடி அவனது கன்னத்தில் தனது கரத்தைப் பாய்ச்சி இருந்தாள்.

பிடித்திருந்த அவளது கரத்தை விட்டவன், அவளை வேகமாக இறுக்கி அணைத்தான்.

“பார்த்தியா? ஒரு வார்த்தைக்கு கூட நீ அடுத்தவங்கிட்ட சலனப்பட மாட்டன்னு உனக்கே தெரியும், அப்படின்னா என் மேல உனக்கு லவ் இருக்குங்கறது உண்மை, கூடவே நீ என் தவறை மன்னிச்சுட்டங்கறதும் உண்மை... உன் மனசு மாறிடுச்சு, ஆனா நீ இன்னும் புரிஞ்சுக்கலை”

“சரி, நீங்க சொல்ற மாதிரி எனக்கு உங்க மேல லவ் இருக்குன்னு வைச்சுக்குவோம், நீங்க இன்னிக்கு என்கிட்டே நடந்துகிட்டதுக்கு என்ன காரணம்? லவ்வா? இல்லை லஸ்ட்டா?”

“லவ்வோ, லஸ்ட்டோ, பொண்டாட்டிக்கிட்ட வந்தா தப்பில்லை”

“அதை நான் சொல்லனும், என் விருப்பம் இல்லாம உங்க விருப்பத்தை நீங்க சாதிக்கப்போயி, அதுக்கு சாட்சியா இன்னிக்கு தனு இருக்கா, இன்னொரு குழந்தையையும் அப்படி சுமக்க எனக்கு விருப்பம் இல்லை”

“ஏய்... இத்தனை வருஷமா பேசாம இருந்த பிரச்னையை பேசித் தீர்க்கத்தான் உன்னை இங்க பிடிச்சு வைச்சிருக்கேன், ஒரு முறை உன்னை தொட்டு, நான் இதுவரைக்கும் அனுபவிக்கற வேதனை எனக்கு மட்டும் தான் தெரியும்...”

“---------------------------------------------------------“

“இனிமே நான் சொல்றதைக் கேளு, எனக்கு காலைல காபி இங்க வரனும், நீயே போட்டு கொண்டு வரனும், தென் காலைல பிரேக் பாஸ்ட் பரிமாற, மதியம் லஞ்ச் பரிமாற நீ இருக்கனும், தென் எவ்ரி சாட்டர்டே அன்ட் சண்டே நீயும் நானும் வெளிய எங்கேயாவது போறோம், சினிமா, கோவில், தீம் பார்க், ஹோட்டல், ஷாப்பிங் இந்த மாதிரி... இதுவரை இழந்த நாளுக்கும் சேர்த்து, இனிமே வாழனும், ஒரு டிபிக்கல் பொண்டாட்டி புருசனுக்கு என்ன செய்வாளோ, அதை நீ செய்யற, சேம் அதையே நானும் பாலோ பண்றேன், தென் உன்னை டச் பண்ணுவேன், கிஸ் பண்ணுவேன், வேணும்னா நீயும் பண்ணிக்கோ, அப்புறம் தூங்கறது என் பக்கத்துல தாங்கறத மறந்திடாத...”

“என்னால முடியாது...”

“செய்யற... இல்லை செய்ய வைப்பேன்....”

“---------------------------------------------------------“

“நீ தெனாவெட்டா இருக்கும் போது எவ்ளோ அழகா இருக்க தெரியுமா?”

“எனக்குத் தூக்கம் வருது, கொஞ்சம் என்னை விடுங்க”

“முக்கியமான ஒரு விஷயம் சொல்லனுமே”

“சொல்லித்தொலைங்க...”

“எனக்கு என்னை மாதிரி ஒரு பையன் வேணும், வீட்ல ஒரே பொண்ணுங்களா இருக்காங்க, போர் அடிக்குது... எப்ப பெத்து தர்ற?”

“என்..னது... பை...யனா?” என்று அவள் திடீர் அதிர்ச்சியில் திக்கித்திக்கி கேட்க,

“யெஸ் பேபி... உனக்கு இன்னும் ரெண்டு மாசம் டைம், நீ பெத்து தரலை நான் உங்கம்மாட்ட போயி கேட்பேன்”

“டேய் என்னடா ஒளர்ற?”

“ஏய்... ச்சீ... கேட்பேன்னா, நியாயம் கேட்பேன்... அத்தை உங்க பொண்ணு எனக்கு இன்னும் பையன் பெத்து தரலை, கேட்டா வேண்டாம்ன்னு சொல்றான்னு சொல்லுவேன்”

“ரெண்டு மாசத்துல, குழந்தை? போயி சொல்லுங்க... சிரிப்பாங்க”

“குழந்தை பிறக்க பத்து மாசம் வேணும், பட் நீ வாந்தி எடுக்க ஒரு மாசமே அதிகம் தானே, நீயே டாக்டர், உனக்கேத் தெரியும்...”

“---------------------------------------------------“

கோபம் மேலெழ, அவள் பேசாமல் அமைதியாக இருந்தாள், அவளுடைய நெற்றியில் மெல்ல முத்தமிட்டவன், “ஐ லவ் யூ நிஷா... குட் நைட்” என்று சொல்ல,

அவள் கண்களில் இருந்து கண்ணீர் கோடு மெல்ல வழிந்தது.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதனையும் துடைத்துவிட்டவன், அவளை அணைத்தவாறே நடத்தி சென்று கட்டிலில் படுக்க வைத்து, அவளை இறுக்கி அணைத்துக்கொண்டே படுத்தான்.

அடுத்த சில நிமிடங்களில் அவன் உறங்கி விட, மனிஷா தான் உறக்கம் பிடிக்காமல் அலை பாய்ந்த மனதுடன் விழித்துக் கிடந்தாள்.

மற்றொரு பக்கம் கணவனுடன் அளவளாவிக்கொண்டிருந்த சம்யுக்தா உறங்கிக்கொண்டு இருக்க, அவளுடைய விருப்பமான பாடலான “சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா”வை பவித்ரன் ஊனுருக பாடிக்கொண்டு இருந்தான்.

பாடல் முடிந்ததும், செல் போன் திரையில் தெரிந்த அவளது உருவத்தில் முத்தமிட்டவன், “குட் நைட் டி என் செல்ல பொண்டாட்டி” என்று சொல்லிவிட்டுக் காலை கட் செய்தவன், படுக்கை அறைக்குள் நுழைந்தான்.

படுக்கையில் கிடந்த சம்யுக்தாவின் ஸ்டோலை எடுத்தவன், அதை தன் கழுத்தைச் சுற்றி போட்டுக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

இன்னொரு பக்கம் பரத், பவித்ராவுக்கு வாங்கிய புடவையைக் கையில் வைத்துக்கொண்டு அதையேக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தார்.

பவித்ராவுக்கென்று அவர் வாங்கிய முதல் புடவை அதுவல்ல, ஆனாலும் அது பவித்ராவின் கரத்தைச் சென்று சேரும் என்ற காரணத்தினால், அவர் கரத்தை விட்டு இறங்க மறுத்தது.

அதே நேரம் சிவா, சம்யுக்தாவை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தார். பவித்ரா இருந்திருந்தால், அவரை அதட்டி உருட்டி உறங்க வைத்திருப்பார், அவரும் இல்லாத காரணத்தினால், அவர் எண்ணம் சம்யுக்தாவை சுற்றியே இருந்தது.

பரத்தையும் சம்யுக்தாவையும் இணைத்து அவர் மனம் பல்வேறு கோணங்களில் யோசிக்க, புத்தி அவ்வப்போது எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தது.

பல்வேறு உணர்வுப் போராட்டங்களுக்கு மத்தியில், தனது செல்லில் இருந்து, “நீட் கம்ப்ளீட் டீட்டைல்ஸ் அபவுட் டாக்டர் சம்யுக்தா பரத் மல்ட்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டல், த்ரூ டிடெக்டிவ் ஏஜென்சி,” என்று ரகுவிற்கு மெசேஜ் அனுப்பியவர் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தார்.

வெள்ளிக்கிழமையை நோக்கி நாட்கள் நகர ஆரம்பிக்க, ஒவ்வொரு நாளும் பேத்திக்கு உணவு கொண்டு செல்வதில் பவித்ரா பிஸியாகிவிட, மனைவியுடன் சென்று பேரனையும், பேத்தியையும் காணும் வேலையில் சிவா பிஸியாகிவிட, மானவுக்கும், மனிஷாவுக்கும் இடையில் பஞ்சாயத்து செய்வதில் நித்யா பிஸியாகி இருந்தார்.

இவர்கள் இப்படி இருக்க, சம்யுக்தாவும், பரத்தும் தங்கள் உடமைகளை பேக்கிங் செய்வதில் பிஸியாக இருந்தனர்.

ஒருவாறாக வெள்ளிக்கிழமை மாலையும் வர,

சிவாவும், பவித்ராவும் சம்யுக்தாவின் வருகைக்கு ஆவலுடன் காத்திருந்தனர்.

பவித்ராவோ அடிக்கடி வாசல் வரை சென்று வந்து கொண்டு இருந்தார்.

நித்யாவும் கூட அதிக எதிர்பார்ப்போடு சம்யுக்தாவிற்க்காக காத்திருந்தார்.

அனைவரின் முகத்தையும் கண்ட மனிஷாவிற்கும், மானவிற்கும் மனதில் குழப்பம் வந்து அமர்ந்து கொண்டது.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல்,

“என்னத்தை? வாசலிலேயே இருக்கீங்க? என்ன விஷயம்?” என்று மனிஷா வாய் விட்டேக் கேட்டுவிட்டாள்.

“ஒன்னும் இல்லைம்மா... இன்னும் அந்த சம்யுக்தாவை காணோம், அதான்”

“அவங்க சரியா ஆறு மணிக்கு இங்க இருப்பாங்க... சொன்னா சொன்ன படி வந்துடுவாங்க... இப்ப மணி ஐந்து தானே ஆகுது”

“சீக்கிரம் வரச் சொல்லி இருந்தேன்”

“வந்துடுவாங்க... நீங்க வாங்க....”

“என்னம்மா? திடீர்ன்னு அந்த டாக்டர் மேல இவ்ளோ பாசம்?”

“ஏன்டா, இன்னும் ஆளைக் காணோமேன்னு பார்த்தேன், பூஜைக்கு வேற டைம் ஆகுது, அதுல உனக்கென்ன பிரச்சனை?”

“இல்ல... நீங்க யாரையுமே இப்படி கூப்பிட மாட்டீங்க, தென் இன்னிக்கு கூப்பிட்டதோட மட்டும் இல்லாம வாசலே கதின்னு இருக்கீங்க, அது பத்தாதுன்னு அத்தை ஒரு பக்கம் கண்ணாலேயே வாசலுக்கு காவல் இருக்காங்க, கூடவே அப்பா வேற... அதான் கேட்டேன்....”

“மனிஷாவை காப்பாத்தின அந்த பெண்ணை பார்க்கத்தான் மானவ் இவ்ளோ ஆர்வம், அந்த பொண்ணு கையை பிடிச்சி நன்றி சொல்லனும்... அதுக்குத்தான் வாசலையே பார்த்துக்கிட்டு இருக்கேன்”

“அத்தை ஆனாலும் நீங்க மூனு பேரும் பண்றது ரொம்ப ஓவர்”

“மானவ்.... நீ போயி பாப்பா கூட இரு, எங்களுக்கு வேலை இருக்கு” என்று நித்யாவின் கையில் இருந்த குழந்தையை வாங்கி மானவின் கையில் தந்துவிட்டு நித்யாவை இழுத்துக்கொண்டு பவித்ரா சமையலறைக்குள் நுழைந்தார்.

சரியாக மணி ஆறாக, சம்யுக்தாவின் கார் சிவாவின் வீட்டிற்குள் நுழைந்தது.

“பவித்ரா கார் வந்தாச்சு... சீக்கிரம் வா” என்ற நித்யாவின் அழைப்பில், நித்யா வாசலுக்கு விரைந்தார்.

டிரைவர், கார் கதவைத் திறந்து விட, காரில் இருந்து இறங்கிய சம்யுக்தாவின் பின் பெரியவர்கள் கண்கள் இடம் பெயர, சம்யுக்தாவுடன், ஜுவாலா மட்டும் இறங்கினாள்.

பேரனைக் காணாது பெரியவர்கள் மூவரின் கண்களும் ஏமாற்றமடைய, அதை சம்யுக்தா புரிந்து கொண்டாள்.

“வாம்மா...” என்று பெரியவர்கள் அழைக்க, பவித்ராவிற்கு வாங்கிய உடையுடனும், பழங்கள் மற்றும் பொம்மைகள் சகிதம், சம்யுக்தாவும், ஜுவாலாவும் புன்னகை முகமாக அவர்களை நோக்கி வந்தனர்.

“ஒரு நிமிஷம் இரும்மா” என்ற பவித்ரா,

முன்னேற்பாடாக அங்கு கரைத்து வைத்திருந்த ஆலத்தி தட்டை எடுத்து வந்து இருவருக்கும் சுற்ற ஆரம்பித்தார்.

இதை எதிர்பார்க்காத சம்யுக்தாவின் முகம் புன்னகையை தொலைத்து குழப்பத்தை எடுக்க,

“என்னிக்கு நீ மனிஷாவை காப்பாத்தினியோ, அப்ப இருந்து நீயும் இந்த வீட்டு பொண்ணு தான். அதனால தான், முதல் முறை வர்ற இல்லையா, அம்மா ஆலம் சுத்தறாங்க” என்று சிவா சொல்ல,

அவர் பதில் சரியான பதில் இல்லை என்று உணர்ந்த சம்யுக்தா சிறு புன்னகை ஒன்று உதிர்த்தாள்.

அதற்குள் ஆலம் சுற்றி இருந்த பவித்ரா, இருவருக்கும் பொட்டு வைத்துவிட்டு, “வலது காலை வைத்து உள்ள போங்கம்மா” என்று சொல்லிவிட்டு, கையில் இருந்த ஆலத்தை மனிஷாவிடம் தந்து வெளியே கொட்டச் சொன்னார்.

அவரது சொல் படி சம்யுக்தா மகளுடன் உள்ளே நுழைய, அங்கு மானவ் எடை போடும் பார்வையுடன் அவளைக் கூர்ந்திருந்தான்.

“உட்காரும்மா” என்று ஹாலின் ஓரத்தில் போடப்பட்டு இருந்த சோபாவை சிவா காட்ட, இருவரும் சென்று அங்கு அமர்ந்தனர்.

அவர்களுக்கு எதிரில் இருந்த சோபாவில் அவர் அமர்ந்து கொள்ள, பவித்ரா குடிக்க நீர் கொண்டு வந்து தந்தார்.

அதை பெற்றுக் கொண்டவள்,

“தேங்க்ஸ் ஆண்ட்டி” என்று சொல்ல,

“பரவால்ல... அம்மான்னே சொல்லும்மா...”

“அம்மாக்கு அவங்களைத் தவிர யாரையும் அம்மான்னு கூப்பிட்டா பிடிக்காது, சோ உங்களை பவிம்மான்னு கூப்பிடவா?”

“அப்படியே கூப்பிடு”

“இந்தாங்க பவிம்மா....” என்று புடவை பார்சலையும் பழங்களையும் அவரிடம் தந்தவள், “ஜுவா... பாப்பாக்கு டாய்ஸ் கொண்டு போயி குடு” என்று சொல்ல,

“ஹாய்... பேபி...” என்று சொல்லிக்கொண்டே கைகளில் இருந்த பொம்மைகள் பையை குழந்தையிடம் அவள் நீட்ட,

தனுவும் அதை எட்டி வாங்க முயற்சிக்க, மானவ் குழந்தையை கீழே இறக்கிவிட்டான்.

அடுத்த சில நொடிகளில் இருவரும் ஒன்றாகிவிட,

மானவ் சம்யுக்தாவை நோக்கி வந்தான்.

“வாங்க டாக்டர்... எப்படி இருக்கீங்க? உங்க ஹஸ்பென்ட் வரலையா?”

“பைன் சார்... நெக்ஸ்ட் வீக் என்ட் வந்துடுவார்”

“எதுக்கு மேம் இவ்ளோ டாய்ஸ்?” என்று மனிஷா கேட்க,

“அது தனு குட்டிக்காக, ஜுவா அவங்க அப்பாகிட்ட கேட்டு கனடால இருந்து வர வைச்சது, எனக்கே சஸ்பென்ஸ்...”

“ஹோ... பைன்... அவளுக்கு எப்படி தனுவை தெரியும்?”

“அன்னிக்கு ஸ்கூல் பங்க்சன்ல பார்த்தோம், தென் அடிக்கடி பவிம்மா அவளை ஸ்கூல் கூட்டிகிட்டு வருவாங்களாமே...”

“எஸ்... எஸ்...”

“சரி சரி எல்லாரும் பேசி முடிச்சுட்டீங்களா? பூஜையை முடிச்சுட்டு அப்புறம் பேசிக்கலாம்... வாங்க...” என்று நித்யா அழைக்க,

“இவங்க தானே உங்கம்மா...”

“ஆமாம் மேடம்...”
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“மனிஷா... பிளீஸ் மை ஹம்பிள் ரெக்வஸ்ட்... டோன்ட் மைன்ட் மீ யா”

“சொல்லுங்க மேடம்”

“கனடால டாக்டர்ன்னு சொல்லுவாங்க, இங்க அடிக்கடி மேடம் மேடம்ன்னு சொல்லி, ஒரே ஹாஸ்பிட்டல் அட்மாஸ்பியரா இருக்கு, சோ இந்த மேடமை விட்டுடேன் பிளீஸ்...”

“உங்களை வேற எப்படி கூப்பிடறது?”

“நேம் சொல்லி கூப்பிடு”

“அச்சோ.. நீங்க ஏஜ்ல சீனியர்... உங்களை அக்கான்னு கூப்பிடவா?”

“பைன்... எனக்கும் சிஸ்டர் இல்லை... டீல்”

“என்னம்மா? இன்னும் ரெண்டு பேரும் பேசி முடிக்கலையா?” என்று பவித்ரா குரல் எழுப்ப,

“பேசி முடிச்சுட்டோம் அத்தை...” என்று சொல்லிக்கொண்டே மனிஷா சம்யுக்தாவின் கரம் பற்றி ஹாலிற்கு அழைத்துச்சென்றாள்.

குழந்தைகள் இருவரும் சோபாவில் அமர்ந்து விளையாட, சிவா இருவருக்கும் அருகில் சென்று அமர்ந்து கொண்டார்.

பூஜை ஆரம்பமாக,

“குத்துவிளக்கை ஏத்தி வைச்சிடுங்கோம்மா” என்று ஐயர் சொல்ல,

“மனிஷா, நீ ஒரு குத்து விளக்கை ஏத்து, சம்யுக்தா நீ ஒரு குத்து விளக்கை ஏத்தும்மா?”

“நானா?”

“சுமங்கலிப் பொண்ணுங்க குத்துவிளக்கு ஏத்தறது நல்லது, ஏத்து”

இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் விளக்கேற்றி வைக்க, அனைத்தும் மானவின் லேசர் கண்களில் படமாகிக்கொண்டு இருந்தது.

பூஜை ஆரம்பிக்க,

சிவாவும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அங்கு வந்துவிட்டிருந்தார்.

பூஜையின் இடையில்,

“முக்கியமான கால், பேசிட்டு வந்துடறேன், அதுவரை யாரேனும் சாமி பாட்டு பாடுங்கோ” என்று ஐயர் சொல்ல,

“ஜுவா குட்டி, நீ தான் சூப்பரா பாடுவில்ல, இந்த மாமாவும், அத்தையும் உன் பாட்டை கேட்டதே இல்லை, கொஞ்சம் பாடேன்” என்று நித்யா சொல்ல,

ஜுவாலா அன்னையை நோக்கினாள்.

“பாட்டி கேட்கறாங்கள்ல நீ பாடு” என்று சம்யுக்தா சொல்ல,

அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா....

தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!

தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?

குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு

அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா



என்று உணர்ச்சி பொங்க ஜுவாலா பாடி முடிக்க, அவளது குரலில், அந்த வீட்டின் வேலையாட்கள் உட்பட அனைவரும் அங்கு கூடி இருந்தனர்.

போன் பேசப்போன ஐயர் கூட, காலை கட் செய்துவிட்டு வந்துவிட்டிருந்தார்.

மானவும், மனிஷாவும் கூட அதிசயத்து நின்றிருந்தனர். தனுவோ ஒரு படி மேலே சென்று, ஜுவாலாவின் கன்னத்தில் முத்தமிட்டது.

“என்ன ஒரு குரல் வளம் குழந்தை உனக்கு... ரொம்ப அருமையா பாடற”

“தேங்க்ஸ் அங்கிள்”

“யாருகிட்ட கத்துண்டுட்ட?”

“என் அப்பாக்கிட்ட”

“உன் தோப்பனார் பாடுவாரோ”

“அவர் பெரிய கர்நாட்டிக் சிங்கர்... எங்க நாட்ல”

“உங்க நாடா?”

“ம்ம்... எங்க நாடு கனடா...”

“அங்கிருந்து இங்க வந்திருக்கேளா?”

“ம்ம்... அவ்ளோதான், அடுத்த வாரம் கிளம்பிடுவோம்...”

“நல்லது...”

“என்ன சாமி போன் பேசிட்டீங்களா?” என்று பவித்ரா இடையிட்டார்.

“இன்னும் இல்லைம்மா, குழந்தை பாடுனதுல அப்படியே வந்துட்டேன்”

“சரி போன் பண்ணுங்க.... முக்கியமான கால்ன்னு வேற சொன்னிங்க”

“இதோம்மா” என்று அவர் நகர,

“பாட்டி, கேன் ஐ ஹேவ் சம் வாட்டர் பிளீஸ்?” என்று ஜுவாலா, பவித்ராவைக் கேட்டாள்.

“வாடித்தங்கம்...” என்று பவித்ரா ஜுவாலாவை அழைத்துச் செல்ல,

ஐயர் பதட்டத்தோடு வந்தார்.

“என் பெண்ணுக்கு வலி எடுத்து ஆஸ்பிட்டல் அழைச்சிண்டு போயிருக்கா, அதைச் சொல்லத்தான் என் ஆம்படையா அழைச்சிருக்கா”

“எந்த ஹாஸ்பிட்டல் சாமி”

“நம்ம ஆஸ்பிட்டல் தான்ம்மா... செக்கப் போயிண்டு இருக்காம்”

“அச்சுச்சோ... இன்னிக்கு டாக்டர்ஸ் லீவ், நான் மட்டும் தான் அவைலபிள், மே பீ ஹெட் நர்ஸ் பார்த்துகிட்டு இருப்பாங்க, நீங்க கொஞ்சம் சீக்கிரம் பூஜை பண்ணுங்க சாமி” என்று ஐயரிடம் உரைத்த மனிஷா,

“அம்மா, நான் போயி டிரெஸ் சேன்ஜ் பண்ணி, கிளம்பத்தயார் ஆகிறேன்” என்று நித்யாவிடம் சொல்லிக்கொண்டே மாடிப்படியை நோக்கி ஓடினாள்.

அவள் மேலே ஏற ஏற, கீழே லேன்ட் லைன் அடித்தது.

அதை அட்டென்ட் செய்து பேசிய மானவ், மனிஷாவின் வருகையை தெரிவித்துவிட்டு அணைத்தான்.

“ஹாஸ்பிட்டல்ல இருந்துதான் கால்... நான் இன்பார்ம் பண்ணிட்டேன்” என்று ஐயரிடம் சொல்ல,

அவர் முகம் கலவரத்தை பூசிக்கொண்டது.

“சாமி பயப்படாதிங்க... நர்ஸ் பார்த்துப்பாங்க, கூடவே இப்ப மனிஷாவும் கிளம்பிடுவா...” என்று சம்யுக்தா அறுதல் சொல்ல ஆரம்பித்தாள்.

“பயமா இருக்கும்மா... சின்ன பொண்ணு வேற”

“எங்க காட்டறீங்க? இந்த மாதிரி கேஸ் இருந்தா அவ்ளோ சீக்கிரம் டாக்டர் லீவ்ல போக மாட்டாங்களே?”

“அவ ஆத்துக்காரர் வீடு, தஞ்சாவூர், ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் வளைகாப்பு பண்ணி அழைச்சிண்டு வந்தோம்மா... ”

“எத்தனை மாசம் ஆகுது?”

“ஒன்பது தான் ஆரம்பிச்சு இருக்கும்மா, ஏழாம் மாசத்துல பண்ணலாம்ன்னு பார்த்தா, அவ ஆத்துல ஒன்பதுல பண்ணிக்க சொல்லிட்டா”

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, மனிஷா கீழே இறங்கி வந்தாள்.

“வா நான் டிராப் பண்றேன்” என்று சொல்லிக்கொண்டே மானவ் செல்ல,

“பை சம்யுக்கா... கால் பண்றேன்...” என்று சொல்லிக்கொண்டே வாசலை நோக்கி ஓடினாள்.

“சாமி என் பொண்ணு கிளம்பிட்டாள்ல, தைரியமா பூஜையை ஆரம்பிங்க, கூடவே உங்க பொண்ணுக்கும் சேர்த்து பண்ணுங்க” என்று நித்யா சொல்ல,
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐயர் பூஜையை ஆரம்பித்தார்.

அந்த சூழலிலும், பூஜையை சிறப்பாக முடித்துவிட்டு ஐயர் கிளம்ப,

“இருங்க சாமி, டிரைவரை அனுப்பறேன், கார்ல போயிடுங்க, நாளைக்கு வந்து வண்டியை எடுத்துக்கோங்க, இந்த பதட்டத்துல போக வேண்டாம்” என்ற சிவா டிரைவரை அழைத்து அவரை கொண்டுவிடச் சொன்னார்.

“சரிம்மா... வாங்க சாப்பிடலாம்...” என்று பவித்ரா இருவரையும் அழைத்துக்கொண்டு டைனிங் டேபிளை நோக்கிச் சென்றார்.

“டிரைவர்?” என்று சம்யுக்தா தயங்க,

“அவருக்கும் மத்த வேலையாட்களுக்கும் வெளிய உணவு பரிமாற ஏற்பாடு பண்ணி இருக்கும்மா”

இருவரும் டைனிங் ஹாலை நோக்கிச் சென்றனர்.

“சர்வேஷ் வரலையாம்மா?”

“வரலை பவிம்மா... படிக்கனுமாம்... இவளையும் அனுப்ப மாட்டேன்னு அடம், நாளைக்கு டெஸ்ட் இருக்குன்னு, மேடம் அவங்க அப்பாக்கு கால் பண்ணி ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி இருக்காங்க”

“என் செல்லம்டி...” என்று பவித்ரா ஜுவாலாவைக் கொஞ்ச, சம்யுக்தா இருவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்தாள்.

அவளையே பார்த்துக்கொண்டு இருந்த சிவா, சம்யுக்தாவின் பார்வை மாற்றத்தில் சட்டென்று சுதாகரித்துக்கொண்டு,

“பவி, எனக்கு கொஞ்சம் வெஜ் ரைஸ் வை” என்று சொல்ல,

பவித்ரா பேத்தியிடம் இருந்து நகர்ந்தார்.

“பவி... சாப்பிட்டதும், பாப்பாவையும், சம்யுக்தாவையும் அழைச்சிட்டு போயி வீட்டை சுத்திக்காட்டு”

“இல்ல அங்கிள், அல்ரெடி லேட் ஆகிடுச்சு... இன்னொரு நாள் கண்டிப்பா வர்றோம்”

“அதென்னமா... எங்க பவி உனக்கு அம்மா, என் அண்ணன் உனக்கு அங்கிளா?” என்று நித்யா கேட்க,

“சரி... அங்கிளுக்கு ஆட்சேபனை இல்லைன்னா, சிவாப்பா ஓகேவா?”

“டபுள் ஓகே” என்று பவித்ரா சொன்னார்.

அனைவரும் மெலிதாக சிரிக்க,

“நெக்ஸ்ட் வீக்கே கிளம்பனுமாம்மா? இன்னும் ஒரு பிப்டீன் டேஸ் இருந்தா, ஊர்ல இருந்து மானசாவும், மான்வியும் வருவாங்க... உன்னை பார்க்கனும்ன்னு சொன்னாங்க”

“இல்லப்பா விசா முடியப்போகுது, இனி இங்க இருக்க முடியாது. நீங்க எல்லாம் ஒரு நாளைக்கு கண்டிப்பா கனடா வரனும், அதாவது என் வீட்டுக்கு”

“கண்டிப்பா வர்றோம்”

“அப்புறம் வாக்கு மாறக்கூடாது...”

“கண்டிப்பா இல்லை, பேமிலி டிரிப் அடிச்சுட்டா போச்சு”

அனைவரும் நகைக்க,

“எங்கப்பா பேமிலி டிரிப்?” என்று கேட்டுக்கொண்டே மானவ் உள்ளே வந்தான்.

“கனடாக்கு... நீ ஏன் இவ்ளோ லேட்?”

“வழில ஒரு பிரண்டை பார்த்தேன், அதான் லேட்”

“சரி உட்கார்... சாப்பிடலாம்...”

அனைவரும் சாப்பிட்டு எழ, நித்யா குழந்தைகள் இருவரையும் விளையாட்டு அறைக்குள் அழைத்துச் சென்றார்.

பவித்ரா, சம்யுக்தாவிடம், பூஜையில் இருந்த உடைகள் அடங்கிய தாம்பாளத்தை எடுத்து வந்து குடுத்தார்.

அதை வாங்காமல்,

“எதுக்கு பவிம்மா இதெல்லாம்?”

“இது தான் என் வழக்கம், பூஜைல இருந்தது, வேண்டாம்ன்னு சொல்லக்கூடாது”

“ஆனா பார்சல் இதுல அதிகமா இருக்கே, இவ்ளோ வேண்டாம், ஒன்னு மட்டும் தாங்க”

“நீ இப்ப வாங்கிக்கல, நீ எனக்கு தந்த கிப்டை, அப்படியே உனக்கு தந்துடுவேன்”

அவரது பதிலில் அதிர்ந்தவள்,

“சரி... சரி... வாங்கிக்கறேன்... பவிம்மா, சிவாப்பா ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க” என்று சொல்ல,

இருவரும் சேர்ந்து நின்று குடுக்க,

இருவரிடமும் ஆசிகள் பெற்றுக்கொண்டு, அந்த தாம்பாளத்தைப் பெற்றுக்கொண்டாள்.

“உன் ஹஸ்பென்ட் சைஸ் தெரில, குத்துமதிப்பா எடுத்து இருக்கேன், சரியா இருக்குமான்னு பாரு”

அதைப் பிரித்து பார்த்தவள்,

“பெர்பெக்ட்ம்மா... எல்லாருக்கும் கரெக்ட் சைஸ்... பட் அவரோட சைஸ் எப்படி கண்டுபிடிச்சீங்க?”

“ஒரு கெஸ் தான்...”

“சரிம்மா... கிளம்பறோம்...” என்று சம்யுக்தா சொல்ல,

“இரும்மா” என்ற பவித்ரா, பூஜையில் இருந்த திருநீறு மற்றும் குங்குமத்தை எடுத்து வந்து வைத்து விட்டார்.

“தேங்க்ஸ்ம்மா”

“ஜுவா....” என்று சம்யுக்தா அழைக்க,

“இரும்மா நான் போயி கூட்டிட்டு வரேன்” என்று பவித்ரா உள்ளே நுழைந்தார்.

“செல்லம்...”

“பாட்டி”

“நாளைக்கு என்ன ஸ்பெஷல்?”

“காலைல குழிப்பணியாரம் வேணும், மதியத்துக்கு கோலா உருண்டைக் குழம்பு”

“டன்... டன்... இப்ப உன் அம்மா கூப்பிடறாங்க, போகலாமா?”

“போகலாம் பாட்டி”

இருவரும் வெளியே வர, ஜுவா அன்னையிடம் சென்று நின்று கொண்டாள்.

“மானவ் தட்டை வாங்கி அவங்க கார்ல வை”

“இட்ஸ் ஓகேப்பா... நான் எடுத்துக்கறேன், எனக்கு ஒரு பேக் மட்டும் தாங்க”

“படிக்கட்டு இறங்க சிரமமா இருக்கும்மா... புடவை வேற கட்டி இருக்கற” என்று சம்யுக்தாவின் கையில் இருந்து வாங்கியவர், அதை மானவிடம் தந்தார்.

“பவி.... பூஜைல இருக்கற பழம், இனிப்பெல்லாம் பேக் பண்ணிட்டியா?”

“ஆச்சுங்க...” என்றவர் மேலும் இரண்டு பைகளுடன் வந்தார்,

“என்னமா இதெல்லாம்?”

“கொண்டு போயி நீ சாப்பிடு, பசங்களுக்கு குடு, அப்புறம் இந்தா, ஒரே தாம்பாளமா குடுக்கக்கூடாது, இதுல ரெண்டு இருக்கு, மூன்றா கொண்டு போ” என்று சொல்ல, அவரிடம் இருந்து சிவா பைகளை வாங்கிக்கொண்டார்.

“அதுக்கு வெள்ளி தாம்பாளமா? இது ஓவர்?”

“பரவால்ல... கொண்டு போ”

இருவரையும் கார் வரை வந்து அனைவரும் வழியனுப்பி வைக்க, மனநிறைவுடன் சம்யுக்தாவும் ஜுவாலாவும் அங்கிருந்து கிளம்பினர்.

அவர்களை அனுப்பி விட்டு, உள்ளே நுழைந்த தந்தையிடம், மானவ் பொரிய ஆரம்பித்து இருந்தான்.

“என்னப்பா நடக்குது இங்க?”

“ஏன்ப்பா?”

“எதுக்கு அந்த டாக்டருக்கு இவ்ளோ சலுகை நம்ம வீட்ல?”

“நல்ல பொண்ணு, தெரிஞ்ச பொண்ணு...”

“ஆமாம்மா... நல்ல பொண்ணு... அந்த பொண்ணு லட்சணம் ஊரே நாறிக்கிடக்கு தெரியுமா?”

“என்ன லட்சணம்?”

“அவளுக்கு ஊர்ல, புருஷன் இருக்கறது, இருக்கட்டும், இங்க, இந்த ஊர்ல இன்னொரு புருஷன் இருக்கான், ஹாஸ்பிட்டல், கோவில்ன்னு அவங்கூட கூத்தடிக்கிறவளை இங்க கூட்டிக்கிட்டு வந்து நடு வீட்ல விருந்து வைச்சு அனுப்பறிங்க? அவ யார் கூட சுத்தறான்னு தெரியுமா? அந்த பிரித்வி கூட... கோவில்ல அவன்கிட்ட அழுது கெஞ்சிக்கிட்டு நின்னாளாம்...ஊருக்கு ஒருத்தனை வைச்சிட்டு இருக்கறவளைப் போயி ஆலம் கரைச்சு வீட்டுக்குள்ள விடறீங்க...சரியான தே....” என்று மானவ் பேசிக்கொண்டே செல்ல, சிவாவின் கரம் மானவின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது.

“யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற? அவ யாருன்னு தெரியுமா? தெரியுமா?”

“என்னங்க....” என்று பவித்ராவும்,

“அண்ணா” என்று நித்யாவும் அழ ஆரம்பிக்க,

“என் போன் மிஸ் பண்ணிட்டேன்... கொஞ்சம் எடுத்து தரீங்களா?” என்ற சம்யுக்தாவின் குரல் கேட்டு அனைவரும் வாசலைப் பார்த்து அதிர்ந்தனர்.

கண்களில் நீர் வழிய, கையில் சிலம்பில்லாத கண்ணகியென கோபத்தில் சிவந்த கண்களும், முகமுமாய் ரவுத்திரமாக சம்யுக்தா நின்று கொண்டு இருந்தாள்.

ராகம் இசைக்கும்...
 
Status
Not open for further replies.
Top