All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஜோவின் "சுகமான புது ராகம்" - பாகம் 1 - கதைத் திரி

Status
Not open for further replies.

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்டேஷனில் வேலையை முடித்துவிட்டு, மூவரும் வெளியில் வந்தனர்.

“ஜாக்கிரதையா இரும்மா”

“எனக்கென்ன அங்கிள்... அதான் சேப்டி ஆகியாச்சே”

“இன்னும் கொஞ்ச நாளைக்கு செக்யூரிட்டி இல்லாம எங்கேயும் போகாதே”

“கண்டிப்பா அங்கிள்...”

“சரிம்மா ஒரு நாள் வீட்டுக்கு வா...”

“அவர் வரட்டும் அங்கிள்... அவர் கூட வரேன்...”

“ஏன் தனியா வந்தா உள்ள விட மாட்டோமா?”

“அப்படி இல்லை அங்கிள்... ஒரு நாள் கண்டிப்பா வரேன்.”

“ஓகேம்மா...”

“மாமா போலாமா?”

“போலாம்மா...”

“ஓகே மிஸ்டர் சிவா... மறுபடியும் சந்திக்கலாம்...” என்று பரத் கை நீட்ட, சிவாவும் “ஓகே பரத்” என்று அவரது கரம் பற்றிக்குலுக்கினார்.

அவரிடம் இருந்து விடைபெற்று இருவரும் அவர்களது காரை நோக்கிச் சென்றனர்.

“மாமா என்ன சொன்னார் உங்க பிள்ளை?”

“உன்னை ஸ்கூட்டி எடுக்காதைன்னு சொன்னேனே கேட்டியா?”

“அதான் மறுபடியும் வாங்கி வைச்சுட்டிங்களே”

“உன்னை உன் புருஷன் போன் பண்ணச் சொன்னான்... ஒழுங்கா போன் பண்ணி பேசிடு... அவன் பண்ணப்ப நீ எடுக்கலையாம்.. அதுக்கும் சேர்த்து குதிக்கறான்”

“வாங்க மாமா... பார்த்துக்கலாம்...”

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு செல்வதையேப் பார்த்திருந்த சிவாவின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தோன்றியது.

அதே புன்னகையுடன் அவன் வீட்டிற்குச் செல்ல, வீட்டிற்குள் நுழைந்ததுமே அந்த புன்னகை துணி கொண்டு துடைத்தார்ப் போல மறைந்து போனது.

மானவ் மகளுடன் ஓடி பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தான், பவித்ரா மனிஷாவுடன் இருக்க, நித்யா இரவு உணவு ஆயத்தத்தில் இருந்தார்.

“தாத்தா....” என்று தனு அவரிடம் தாவ,

“என் செல்லக்குட்டி...” என்று அவளைத் தூக்கிகொண்டார்.

“மானவ்... மனிஷா எங்க? எப்படி இருக்கா?” என்ற அவரது குரலில் கோபமும் கலந்து வந்தது...

“தூங்கிக்கிட்டு இருந்தாப்பா... எழுந்துட்டாளான்னு தெரியலை...”

“மேல அவ கூட யார் இருக்கா?”

“அம்மாப்பா”

“அண்ணா... வந்துட்டீங்களா? டிரெஸ் மாத்திட்டு வாங்கண்ணா... பவியை அனுப்பறேன்”

“மனிஷா எப்படி இருக்காம்மா?”

“எழுந்துட்டாண்ணா... தலை பாரமா இருக்குன்னா... உடம்பெல்லாம் வலிக்கற மாதிரி இருக்குன்னா... அதான் சுடு தண்ணீரில குளிக்க வைச்சு படுக்க வைச்சிருக்கோம்... இன்னும் அந்த ஊசியோட பவர் குறையல... தலையெல்லாம் சுத்தற மாதிரி இருக்காம்... அவளுக்குத்தான் இட்லியும், காபியும் கொண்டு போறேன்”

“ஏம்மா? ரொம்ப சோர்வா இருக்காளே, உடம்புக்கு வேற ஏதாவதான்னு விசாரிச்சிங்களா? தனுவை உண்டாகி இருக்கும் போது கூட இப்படித்தான் இருந்தா” என்று நித்யாவைக் கேட்டுக்கொண்டே மகனைப் பார்த்தார்.

அவரது கேள்வியில் மானவ் சட்டென்று அவரை நிமிர்ந்து பார்க்க, தன் பார்வையைத் திருப்பிக்கொண்டு நித்யாவைப் பார்த்தார்.

“இல்லைன்னா... இன்னும் விசாரிக்கலை... எனக்குமே அந்த சந்தேகம் இருக்கு... டிபன் சாப்பிட்டதும் கேட்கலாமேன்னு இருந்தேன்...”

“ஏன்டா உனக்கு ஏதாவது தெரியுமா?”

“இல்லைப்பா... அப்படியெல்லாம் எதுவும் இல்லை... அடுத்த குழந்தை இப்போதைக்கு வேண்டாம்ன்னு தள்ளிப்போட்டு இருக்கோம்”

“சரி நீ போயிட்டு அம்மாவை வரச்சொல்லு, நித்யா இதை அவன்கிட்ட குடுத்துவிட்டுட்டு எனக்கு ஒரு காபி ஸ்டிராங்கா போட்டுட்டு வாயேன்...”

“சரிங்கண்ணா...” என்றவர் “மானவ் அப்படியே அவளுக்கு ஊட்டி விட்டுடுப்பா... சாப்பாடே வேண்டாம்ன்னு சொன்னா... உட்கார கூட முடியலை” என்று சொல்லியவர் தட்டை அவன் கையில் தந்துவிட்டு சமையலறைக்குள் செல்ல, சிவா அவனைப் பார்த்துக்கொண்டே அவரது அறைக்குள் நுழைந்தார்.

மானவ் தட்டை எடுத்துக்கொண்டு அவர்களது அறைக்குச் சென்றான்.

“அம்மா...”

“ஏம்பா?”

“அப்பா வந்துட்டாங்க... உங்களை வரச்சொன்னாங்க”

“ம்ம்..”

“மனிஷா... டிபன் சாபிட்டுட்டு தூங்கு... பாப்பாவை நாங்க பார்த்துக்கறோம்”

“பிளீஸ் அத்தை... கூட்டிக்கிட்டு வந்து காமிச்சுட்டு கூட்டிக்கிட்டு போங்களேன்... பிளீஸ்....”

“சரி நீ சாப்பிடு... எப்படியும் மாமா மேல வருவார்... தூக்கிட்டு வரச் சொல்றேன்... இன்னிக்கு பாப்பா எங்க கூட படுத்துக்கிட்டும்”

“ம்ம்... சரிங்கத்தை...”

அவர் வெளியேற, மானவ் தட்டை எடுத்துக்கொண்டு அவளருகே சென்று அமர்ந்தான்.

அவள் தட்டுத்தடுமாறி மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். அவன் உதவி செய்ய முயல, அதை மறுத்துவிட்டு தானே அமர்ந்து கொண்டாள்.

அவனிடம் இருந்து தட்டை வாங்கியவள், மெல்ல உண்ணத்தொடங்க, அவன் போனை எடுத்துக்கொண்டு பால்கனிக்குச் சென்றுவிட்டான்.

ஓரிரு வாய்க்கு மேல் உணவை விழுங்க முடியாமல் சிரமப்பட்டவள், தட்டை அப்படியே வைத்துவிட்டு, காபியை இரண்டு மடங்கு குடித்துவிட்டுப் படுத்துக்கொண்டாள்.

“என்னங்க? கூப்பிட்டீங்களா?”

“உட்கார்... நான் டிரெஸ் சேஞ் பண்ணிட்டு கூப்பிடறேன், ரெண்டு பேரும் நம்ம ரூமுக்கு வாங்க”

“சரிங்க”

“இந்தா பாப்பா”

“தனு பாட்டிக்கிட்ட வா”

“மாத்தேன்... தாத்தாத்த...”

“தனு... தாத்தா போன் பேசிட்டு வந்ததும் போலாம்... சரியா? பாட்டியும் நீயும் பில்டிங் கட்டலாமா?” என்று பேத்தியை கீழே உட்கார வைத்துவிட்டு, அவரும் அமர்ந்து அங்கிருந்த பில்டிங் பிளாக்குகளை கையில் எடுக்க, அவளும் அமர்ந்து கொண்டாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் சிவாவே பவித்ராவை அழைக்க, இருவரும் குழந்தையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

“என்னங்க? ஏதாவது பிரச்சனையா?”

“ஆமா பவி...”

“மனிஷாக்கு பாதுக்காப்பு ஒழுங்கா ஏற்பாடு பண்ணியாச்சா?”

“பிரச்சனை மனிஷாக்கு தான்... ஆனா காரணம் வேற?”

“என்னங்க?”

“மனிஷாக்கும், மானவ்க்கும் ஏதோ பிரச்சனை”

“அண்ணா... நானே உங்ககிட்ட இதைப்பற்றி பேசனும்ன்னு இருந்தேன்”

“அப்ப உனக்கும் முன்னாடியே தெரிஞ்சு இருக்கு”

“மானவ்வை நான் சின்ன வயசுல இருந்தே பார்த்திருக்கேன், என்னால அவன் மேல குறை கண்டுபிடிக்க முடியலை, அதுவும் இல்லமா அவன் உங்க பையன், அவனை இந்த விசயத்துல என்னால சந்தேகப்படற அளவுக்கு நினைக்க கூட முடியலை”

“பவி... உனக்கு ஏதாவது தெரியுமா?”
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ரெண்டு பேருக்கும் இடைல அப்பப்ப சின்ன சின்ன சண்டை வரும், அதுக்கு அப்புறம் நல்லாத்தான் இருப்பாங்க, என்னால எதுவும் யூகிக்க முடியலைங்க”

“நித்யா உனக்கு தெரிஞ்சதை சொல்லு”

“மனிஷா வீட்டுக்கு வர்றப்ப எல்லாம் நான் பார்த்துருக்கேன், ஒரு தடவை கூட ரெண்டு பேரும் போன் பேசிக்கிட்டதே இல்லை, ரெண்டாவது மானவ் வர்றப்ப இவ ரூம்ல இருப்பா, கூப்பிட்டா தான் வருவா, சில நேரம் நைட் தான் மானவே வருவான், அதே மாதிரி மானவ் வந்தாலும் தனு கூட மட்டும் தான் பேசுவான், விளையாடுவான், எங்க மனிஷான்னு கேட்கவே மாட்டான்”

“இதெல்லாம் எப்ப இருந்து இருக்கு?”

“கல்யாணம் ஆனதுல இருந்து”

“நீ மனிஷாட்ட விசாரிச்சியா?”

“விசாரிச்சேன்.... இது தான் எங்க நேச்சர்... எப்பயும் கட்டிபிடிச்சுக்கிட்டு, கொஞ்சிக்கிட்டே இருக்க முடியுமா? அப்படின்னு கேட்டா... கூடவே இந்த மாதிரி பேசறமாதிரி இருந்தா நான் இனி இங்க வரவே மாட்டன்னு பிளாக்மெயில் வேற...”

“என்ன நித்யா நீ? இவ்ளோ நடந்திருக்கு எனக்கு கொஞ்சம் சொல்லி இருக்கலாம்ல? என்னை வெறும் சம்பந்தியா தான் பார்க்கறியா?”

“அப்படில்லாம் இல்லை பவி... அதான் சொன்னேனே... சில நேரம் ரெண்டு பேரும் நல்லா இருப்பாங்க... என்னன்னு சொல்ல?”

“சரி இப்ப என்ன நடந்துச்சு?”

சம்யுக்தாவிடம் தான் பேசியவற்றை தெளிவாக இருவருக்கும் சிவா சொன்னார்.

மற்ற இருவரும் யோசனையில் ஆழ்ந்துவிட,

“நம்ம வாழ்க்கையை நான் சரி பண்ண மாதிரி, அவங்களுக்குள்ள எந்த பிரச்சனை இருந்தாலும் அவன் தான் சரி பண்ணனும்”

“அவன்கிட்ட பேசப்போறீங்களா?”

“இல்லை...”

“அப்புறம்?”

“இன்னும் ஒரு வாரத்திற்கு மனிஷாக்கு லீவ்...”

“சரிங்க...”

“ரெண்டு பேரையும் சம்யுக்தா சொன்ன மாதிரி கொடைக்கானல் அனுப்பி வைப்போம், நீ என்ன பண்ணு குலதெய்வம் கோவிலுக்கு போகச்சொல்லி, வேண்டுதல், பிரார்த்தனைன்னு ஏதாவது சொல்லி வை”

“அதெல்லாம் சரி... அங்க போயி உங்க பையன் எஸ்ட்டுக்கு போயிட்டா?”

“அங்க எல்லாமே கிளியரா இருக்கு... போனாலும் ரெண்டு மணி நேரம் தான் வேலை இருக்கும், அதிகபட்சம் ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து இருந்தாலும் ஆறு மணிக்கு வீட்டுக்கு போய் தான் ஆகனும்”

“உன் பையன் முன்னாடி, பாப்பாக்கு குல்லா, ஸ்வெட்டர்ன்னு லிஸ்ட் போட்டு குடு, கூடவே மத்த வாண்டுகளுக்கும் போட்டு குடுத்துவிடு... எப்படியும் நீ தந்த லிஸ்ட்டை வாங்க ரெண்டு நாள் ரெண்டு பேரும் அலையனும், அப்பத்தான் எஸ்ட்டேட் போகாமா அவ கூட சுத்துவான்...”

“டிரைவரை கட் பண்ணி விடுங்க... அதே மாதிரி அங்க போய் மனிஷா டிரைவரை கூட்டிக்கிட்டு போகக்கூடாது”

“அவனோட காரை எடுத்துகிட்டு போகச்சொல்லு”

“நல்ல ஐடியா”

“அப்பப்ப எங்க இருக்காங்கன்னு கேட்டு போட்டோ அனுப்ப சொல்லு...”

“அதை நாங்க பார்த்துக்கறோம்”

“எப்படியும் உன் மருமகள் சாப்பிட்டு இருக்க மாட்டா... நீங்க இங்க இருங்க... நான் போய் பார்த்துட்டு வரேன்...”

“இந்த விஷயத்தை தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதிங்க”

“நான் பார்த்துக்கறேன்...”

“பாப்பாவை கூட்டிக்கிட்டு போங்க, இன்னும் அவ பார்க்கலை”

“தனு... அம்மாவை பார்க்க போலாமா?” என்று பேத்தியிடம் கை நீட்ட,

“ம்ம்ம்மா...” என்று அவளும் அவரிடம் தாவிக்கொண்டாள்.

மானவ் அறைக்கதவு திறந்தே இருக்க, உள்ளே நுழைந்தவர் முதலில் பார்வையிட்டது உணவுத்தட்டைதான்.

மனிஷாவைக் கண்ட தனு உடனே, “ம்மா” என்று சிவாவின் கையில் இருந்து இறங்கி உறங்கிக்கொண்டு இருந்த மனிஷாவிடம் ஓடியது.

மகளின் குரல் கேட்டு பால்கனியில் இருந்து மானவ் வெளியே வந்தான்.

“அப்பா....”

மனிஷா மகளின் செயலில் எழுந்திருக்க, மெல்லக் கண்கள் மலர்த்தி மகளை ஆசை தீரப் பார்த்தவள், அவளைக் கொஞ்சிக்கொண்டு இருந்தாள். மானவ்வின் அழைப்பில் தான் சிவா வந்ததை அறிந்தவள், எழுந்து உட்கார முயற்சி செய்தாள்.

“படும்மா... சாப்ட்டியா?” என்று கேட்டுக்கொண்டே தட்டைப் பார்த்தவர், மானவ்விடம் திரும்பி,

“உன் பொண்டாட்டிக்கு ஊட்டி விடறதை விட போன் காலோ, பிசினஸோ முக்கியமில்லை மானவ்... ஒழுங்கா அவளுக்கு ஊட்டிவிடு”

“சரிப்பா...”

“இல்லை மாமா... நான் தான் போதும்ன்னு சொல்லிட்டேன்”

“ரெண்டு வாய் கூட சாப்பிடலை... ஒழுங்கா சாப்பிடு...”

மானவ் தட்டை எடுத்துக்கொண்டு அவள் அருகில் வர,

“இரு... இதெல்லாம் காஞ்சே போச்சு... போய் சூடா வேற கொண்டு வா”

“சரிப்பா...”

“மனிஷா... எல்லா பிராப்ளமும் சால்வ்ட்... கேஸ் ஸ்டிராங்கா போட்டாச்சு... நம்ம சைட் வக்கீல் ரெடி பண்ணி, நம்ம டிரஸ்ட் மூலமா கேஸ் டேக் ஓவர் பண்ணியாச்சு... இனி நீ கவலையே பட வேண்டாம், அவங்க பேரன்ட்ஸ் புல் போர்சா இருக்காங்க, தண்டனை கிடைக்காம ஓய மாட்டாங்க”

“தேங்க்ஸ் மாமா”

“நீ கவலை படாம ரெஸ்ட் எடு சரியா?”

“சரிங்க மாமா”

“நானும் தனுவும் கீழ போறோம்... நீ சாப்பிட்டுட்டு தூங்கு...”

“சரிங்க மாமா”

கீழே சென்ற மானவோ,

“அம்மா...”

“ஏன்டா?”

“அம்மா வேற டிபன் தாங்க”

“ஏன்டா அவ சாப்பிடலையா? ஏதாவது சொல்லி ஊட்டி விட வேண்டியாதானே”

“அதுக்குள்ள ஒரு போன்... இது காய்ஞ்சு போச்சு”

“எப்ப பாரு போன், சரி இரு வேற தரேன்...” என்று கைகளில் இருந்த தண்ணீர் ஜக்கை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு அவனை நோக்கி வந்தார்.

“அம்மா... அப்படியே அவளுக்கு ஊட்டிவிட்டுட்டு வரீங்களா? எனக்கு ஒரு கால் பேசனும்”

“டேய்... எனக்கு ஒரே டென்ஷன் இன்னிக்கு... உன் பொண்ணு சரி சேட்டை... மனிஷாக்கு தலை வாரி விட வரேன்னு சொன்னேன், அதை மட்டும் செஞ்சுட்டு வந்து படுக்கனும்... நீயே உன் பொண்டாட்டிக்கு ஊட்டி விடு, நீ அதுக்கப்புறம் விடிய விடிய போன் பேசு” என்றவர், தட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார்.

புது தட்டைக் கொண்டு வந்து கொடுத்தவர், “நீ போ... நான் வரேன்...” என்று சொல்லிவிட்டு, அனைவருக்கும் இரவு உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைத்தார்.

அவர் தந்த தட்டை வாங்கிக்கொண்டு மானவ் மேலே ஏற, சிவா குழந்தையுடன் கீழே வந்தார்.

“நித்யா நீ பாப்பாக்கு ஊட்டிவிட்டுட்டே உன் அண்ணனுக்கு பரிமாறு. நான் போய் மனிஷாக்கு தலை வாரிவிட்டுட்டு வரேன்”

“சரி பவி... நீ போ... நான் இங்க பார்த்துக்கறேன்”

“என்னங்க நீங்க சாப்பிட்டுட்டு இருங்க நான் வந்துடறேன்”

“சரிம்மா... நீ பொறுமையா வா...” என்றவர் நித்யாவிடம் குழந்தையைக் குடுத்துவிட்டு கைகழுவிவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தார்.

மானவ் தட்டை எடுத்துக்கொண்டு மனிஷாவின் அருகில் சென்று அமர்ந்தான்.

அவன் அமரவும், பவித்ரா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

“மனிஷா எழுந்து உட்கார்... டேய் அப்படியே அவளுக்கு ஹெல்ப் பண்ணு” என்று சொல்லிக்கொண்டே அவளுடைய சீப்பை எடுக்கச் சென்றார்.

அவனும் அவளுக்கு உதவி செய்ய, மெல்ல எழுந்து உட்கார்ந்தவளின் அருகே வந்து நின்றவர், “மனிஷா கொஞ்சம் திரும்பி உட்கார்” என்று அவளை சற்று இடம் மாற்றி உட்கார வைத்தவர், “டேய் நீ ஊட்டிவிடு”

“அத்தை வேண்டாம்... வாயெல்லாம் ஒரு மாதிரி இருக்கு...”

“காலைல இருந்து ஒன்னுமே சாப்பிடலைன்னா அப்படித்தான் இருக்கும், நீயே ஒரு டாக்டர்... உனக்கு நான் சொல்லித்தரனுமா? ஒழுங்கா சாப்பிடு, டேய் நீ உன் பொண்டாட்டி முகத்தை அப்புறம் விடிய விடிய பார்த்துக்கிட்டே உட்கார்ந்து இரு, இப்ப ஒழுங்கா ஊட்டிவிடு”

அவருடைய அதட்டலில் மானவ் ஊட்டிவிட, மனிஷா உண்ண ஆரம்பித்தாள்.

பவித்ரா தலை சீவி முடித்துவிட்டு, “சரிடா... தட்டை கீழ கொண்டு வந்துடு” என்று மானவுக்கு கட்டளையிட்டவர், “மனிஷா நீ ஒழுங்கா சாய்ந்து உட்கார்” என்று சொல்லி, அவளைக் கட்டிலில் சாய்ந்து உட்கார வைத்துவிட்டு கிளம்ப எத்தனிக்க,

“அத்தை ஒரு நிமிஷம்”

“என்னடா?”

“எனக்கு பாத்ரூம் போகனும், தலை பயங்கரமா சுத்துது... கொஞ்சம் இருங்களேன், சாப்பிட்டதும் போங்களேன்...”

“அதான் மானவ் இருக்கான்ல... அவனைக்கூட்டிக்கிட்டு போ” என்றவர், அவனிடம் திரும்பி, “டேய் அப்பா டைனிங் டேபிள்ல உட்கார்ந்து இருக்கார். பாவம் நித்யா, பாப்பாக்கும் ஊட்டிவிடனும், அவருக்கும் பரிமாறனும், நான் கீழ போறேன்... நீ அவளை பாத்ரூம் கூட்டிட்டு போயிட்டு, படுக்க வைச்சுட்டு வா” என்றவர் இருவரின் பதிலையும் கேட்காமல் கீழே செல்ல ஆரம்பித்தார்.

அவர் வெளியேறியதும் மானவிடம் கையை நீட்டியவள், “குடுங்க நானே சாப்பிட்டுக்கறேன்” என்று சொல்ல, அவனோ அதை சட்டை செய்யாமல், தட்டில் இருந்த உணவை எடுத்து அவள் வாயருகே கொண்டு சென்றான்.

அவனது செயலில், அவன் முகத்தில் பார்வையை நிலைக்கவிட்டவளின் கண்களைப் பார்த்தவன், “வாயைத் திற” என்று சொல்ல, அந்த குரலில் தானாக அவளது செவ்விதழ்கள் திறந்து கொண்டன.

முழு உணவையும் அவனே ஊட்டி முடித்து, வாயயையும் துடைத்துவிட்டு, தண்ணீரும் புகட்டிவிட்டான்.

பாத்ரூம் செல்ல, போர்வையை விலக்கித், தட்டுத்தடுமாறி எழுந்து நின்றவளின் அருகில் வந்தவன், அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

சட்டென்று விலகியவளை, “நானே கூட்டிட்டு போறேன், வா, அப்புறம் கீழ விழுந்து வைச்ச, என்னால பதில் சொல்ல முடியாது” என்று சொல்லி மீண்டும் தோளோடு அணைத்துக்கொண்டே பாத்ரூமை நோக்கி நகர்ந்தான்.

இதே திருச்சியின் மற்றொரு மூலையில், சம்யுக்தா கணவனுடன் போனில் உரையாடிக்கொண்டு இருந்தாள்.

ராகம் இசைக்கும்....
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 5


சம்யுக்தா போனில் உரையாடிக்கொண்டு இருந்தாள் என்பதை விடத் திட்டு வாங்கிக்கொண்டு இருந்தாள் என்பதே மிகச் சரியாக இருக்கும்.

“உனக்கு போன் பண்ணா எடுக்கத் தெரியாதா?”

“என்னமோ தினமும் போன் பண்ற மாதிரி குதிக்கறிங்க?”

“நீ பண்ண தப்புக்கு நான் போன் பண்ணுவேன்னு உனக்கு நினைப்பா?

“நான் அப்படி என்ன தப்பு பண்ணேன்?”

“என் பேச்சை மீறி அங்க போனது தப்பில்லாம வேற என்ன?”

“நான் எதுக்கு இங்க வந்தேன்னு உங்களுக்கேத் தெரியும், தெரிஞ்சும் என்னையேக் குற்றம் சொல்லறீங்க?”

“ஆமா தப்பு தான்... இப்ப நீங்க அங்க போயி உட்கார்ந்து இருக்கறது ரொம்பப் பெரிய தப்பு”

“இப்ப உங்களுக்கு தப்பா தெரியலாம், பின்னாடி உங்களுக்கு சரியாப்படும். பாருங்க”

“நீ இப்படியே பேச்சை மாத்தாத, லைசென்ஸ் கூட இல்லை, அப்புறம் எதுக்கு நீ வண்டியை எடுத்த?”

“இன்னிக்கு ஒரு சர்ஜரி இருந்துது”

“நிறுத்துடி.... ரிலாக்ஸா போக நினைச்சு நீ வண்டியை எடுத்தது சரி, ஒரு லைசென்ஸ் இல்லை, இன்னும் உனக்கு அங்க டிரைவிங் ரூல்ஸ் புரிஞ்சு இருக்காது...இதெல்லாம் யோசிக்க வேண்டாமா, இப்ப பாரு எவ்ளோ பெரிய ரிஸ்க்.. நீ என்ன சொல்லிட்டு அங்க போன?”

“அதான் தப்பிசுட்டேனே...”

“வந்தேன், வாய்ல ஒரு பல்லு இருக்காது...”

“நான் பல் செட் கட்டிக்குவேனே.....”

“வாயாடாம சொல்றதை மட்டும் செய், ஒழுங்கா கார்ல போ... கார்ல வா... நீ கேட்ட கணக்குல இன்னும் ஐஞ்சு மாசம் தான் பாக்கி, இப்படியே நீ இருந்தா, அடுத்த பிளைட்டுக்கு டிக்கெட் புக் பண்ணிடுவேன்”

“முடியாது... நாளைக்கும் நான் ஸ்கூட்டி தான் எடுப்பேன்...”

“இருந்தாதானே முதல்ல எடுப்ப”

“ஏன்? வீட்டு முன்னாடி தான் இருந்துச்சு, நான் பார்த்தேன்”

“இருந்துச்சுன்னு நீயே சொல்லிட்டயே”

“இங்க பாருங்க... நாளைக்கு ஸ்கூட்டி இல்லாட்டி நான் சாப்பிடவே மாட்டேன்”

“பட்டினி கெட”

“அப்ப நான் உங்களுக்கு முக்கியமே இல்லையா?”

“நீ தான்டி, என்னை விட வேற வேலை முக்கியம்ன்னு அங்க போயி உட்கார்ந்து இருக்கற”

“இன்னும் கொஞ்ச நாள், நாங்க வந்துடுவோம்”

“கொஞ்சமும் கிடையாது, நஞ்சமும் கிடையாது.... ஸ்கூட்டில கையை வைச்ச அவ்ளோதான், உனக்கு அதிகபட்சம் ஒரு மாசம் டைம், ஒழுங்கா கிளம்பி வர்ற”

“எடுத்த காரியம் முடியும் வரை சம்யுக்தா வர மாட்டா...” என்று நாடக பாணியில் அவள் சொன்னாலும்,

அதுவரை, கோபத்தில் மட்டுமே வெளிப்பட்டுக்கொண்டு இருந்த பவித்ரனின் குரல் நலிந்து சற்று ஆற்றாமையுடன் சேர்ந்து ஆழ் மனதில் இருந்து ஒலித்தது,

“உனக்கு என்னை விட நிறையா விஷயம் முக்கியமா போய்டுச்சு, இல்லையா யுக்தா?” என்று.

அவனது குரலில் கண்கள் கலங்கிவிட,

“உங்களுக்கேத் தெரியும் எனக்கு யார் முக்கியம்ன்னு?”

“தெரிஞ்சும் நீ என்னை விட்டு விலகி இருக்கற? இல்லையா?”

“உங்களை விட்டு இந்த உடல் வேணா விலகி இருக்காலம், ஆனா என் உயிர் உங்களை மட்டுமே சுத்தி வரும்”

“செண்டிமெண்ட் டயலாக் அடிக்காதடி...”

“என் செல்லம்ல, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஐஞ்சு மாசம் முடிஞ்சு தான் உங்ககிட்ட ஓடி வந்துடுவேன்னு இல்லை, என் வேலை எப்ப முடியுதோ அப்பவே உங்ககிட்ட வந்துடுவேன்”

“உனக்கு ஒரு மாசம் தான் டைம், நீ கிளம்பி வர்ற”

“அதுக்குள்ள முடிக்க முயற்சி பண்றேன்... சரி நீங்க சாப்பிட்டீங்களா?”

“சாப்பிடாம அத்தை விடுவாங்களா?”

“மாமாவை ரொம்ப திட்டினீங்களா?”

“பின்ன? ஸ்கூட்டி வாங்கிக்குடுத்து உன்னை கெடுத்து வைச்சா, திட்டாம கொஞ்சுவாங்களா?”

“பாவம் அவர்... நான் தான் கம்பல் பண்ணி, ஐஸ் வைச்சு வாங்கினேன்”

“எங்கிட்ட கேட்க வேண்டியதுதானே? கேட்காம ஏன் வாங்கித்தந்தார்?”

“இங்க பாருங்க, நான் ஆக்சிடென்ட் பண்ணியா இப்படி ஆச்சு? நான் ஒழுங்கா தானே டிரைவ் பண்ணேன்?”

“இங்க பாரு யுக்தா நடந்தத விடு, போயி சாப்பிட்டுட்டு தூங்கு”

“என்கிட்ட போன் பேசக் கூட இஷ்டம் இல்லையா?”

“நீ என்கிட்ட வந்து சேர், விடிய விடிய நேர்லையே பேசறேன்”

“போடா... நான் ரொம்பக் கோபமா இருக்கேன்”

“கோவிச்சுக்கோ... உன்னை விட நான் தான் அதி பயங்கர கோபத்துல இருக்கேன்”

“நேர்ல வந்து உன்கிட்ட பேசாம ஒரு வருஷம் ஓட்டலை? நான் சம்யுக்தா இல்லைடா”

“ஒரு வருஷம்லாம் வேண்டாம், நீ நேர்ல என்கிட்ட ஒரு நிமிஷம் பேசாம ஓட்டிடு... உனக்கு ஒரு டைமன்ட் நெக்லஸ், இல்ல இல்ல, பத்து டைமன்ட் நெக்லஸ் வாங்கித்தரேன்”

“யாருக்கு வேணும் உங்க டையமண்ட் நெக்லஸ்?”

“அப்ப நல்லதா போச்சு... அந்த காசுல ஏதாவது பிசினஸ் ஆரம்பிச்சுடுவேன்”

“ஹல்லோ... என்னையவா சீண்டறீங்க? பாருங்க, பத்து நெக்லசையும் உங்ககிட்ட இருந்து நான் வாங்காம விடமாட்டேன்”

“அப்ப சரி... ஒரு பந்தயம், நீ மட்டும் ஜெயிச்சா உனக்கு நான் பத்து நெக்லஸ் வாங்கித்தரேன், ஒரு வேளை நான் ஜெயிச்சா?”

“பத்து நெக்லஸ்லாம் வாங்கித்தர முடியாது, என்ன பண்ணலாம், ஆங்.. பத்து முத்தம் வேணாத் தரேன்...”

“ஏன்டி? உன் புருஷன் கோடிக்கணக்குல பணம் போட்டு உனக்கு நெக்லஸ் வாங்கித்தரனும், நீ மட்டும் பத்து கிஸ்ல மேட்டரை முடிச்சுகிட்டு போயிகிட்டே இருப்ப? என்னடி உன் லாஜிக்?”

“ஒரு காலத்துல, ஒரு கிஸ்க்கு நாயா பேயா அலைஞ்ச மனுஷன் தான நீங்க! அதை மறந்துடாதிங்க”

“இங்க பாரு இந்த பத்து கிஸ்லாம் வேண்டாம், ஜாலியா ஒரு ஹனி மூன் டிரிப் போயிட்டு வரலாம்... என்ன டீல் ஓகேவ்வா?”

“அடப்பாவி? என்னடா புலி பதுங்குதேன்னு பார்த்தேன்!”

“புலி பதுங்கறது எதுக்குன்னு உனக்குத் தெரியாது?”

“ஐயா சாமி, ஒழுங்கா சண்டை போட்டுக்கிட்டு போனை வைங்க, அப்புறம் நான் விடிய விடிய அழ ஆரம்பிச்சுடுவேன்”

“அவ்ளோ அன்பு வைச்சு இருக்கறவ எதுக்குடி போன? சரி சரி, பாய்ண்டுக்கு வரேன், ஒழுங்கா கார்ல போ... அடுத்த மாசம் டிக்கெட் புக் பண்றேன்”

“நீங்க சரியா ஐஞ்சு மாசம் கழிச்சு புக் பண்ணிடுங்க, அன்னிக்கு கண்டிப்பா நான் வருவேன்”

“சரி சரி... அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம், இப்ப போய் தூங்கு...”

“எனக்கு போனை வைக்க மனசு வரலை, வழக்கம் போல பாடுங்க தூங்கறேன்”

“எந்த சிங்கர் வீட்டுலையும் இந்த கொடுமை இருக்காது”

“உங்க சிங்கர்ஸ் சர்கிள்ல கேட்டு பார்த்துட்டு சொல்லுங்க... ஒரு நிமிஷம், படுக்க ரெடியாகிக்கறேன்”

ஓரிரு நிமிடங்களுக்குப் பின்,

சுட்டும் விழிச் சுடர் தான்
கண்ணம்மா சூரிய சந்திரரோ...
வட்டக் கரிய விழி கண்ணம்மா
வானக்கருமை கொலோ...
பட்டுக் கருநீலப் புடவை பதிந்த
நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத்திரங்களடீ...

என்று சம்யுக்தாவின் காதில் மாட்டி இருந்த இயர் போன் வழியாக பாட்டு கசிந்து கொண்டிருக்க,

அந்த காந்தக் குரலில் தன்னை மறந்து சம்யுக்தா உறக்கத்தைத் தழுவத் தயாரானாள்.

விடியல் பொக்கிஷமாய் காத்திருக்க,

ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்தில் கண் விழித்தனர்.

வாக்கிங் போய்விட்டு வந்த பரத் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து அன்றைய தினசரியைப் புரட்டிக்கொண்டே காபி குடிக்க, அவர் எதிரில் காபிக்கோப்பையுடன் வந்து சம்யுக்தா அமர்ந்தாள்.

“குட் மார்னிங் மாமா”

“குட் மார்னிங்மா”

“இன்னிக்கு உங்களுக்கு என்ன ப்ரோக்ராம்?”

“நத்திங்.... நேத்து என் பையன் என்ன சொன்னான்?”

“சரி டோஸ்... அப்புறம் பேசிப்பேசி கொஞ்சம் கரைச்சு வைச்சிருக்கேன், டிக்கெட் புக் பண்ணறேன்னு சொன்னார்... என்ன பண்ணப்போறார்ன்னு தெரியலை?”

“எப்ப கிளம்பனும்?”

“ஐஞ்சு மாசம் கழிச்சுன்னு நான் சொன்னேன், அவர் ஒரு மாசம் சொன்னார்...”

“சோ உனக்கு இன்னும் ஒரு மாசம் தான் டைம்”

“மே பீ... அதுக்குள்ள பேசிப்பேசி கவுத்துட மாட்டேன்...”

“இன்னிக்கு உனக்கு என்ன பிளான்?”

“ரெகுலர் தான் மாமா”

“சரி அந்த மனிஷா எப்படி இருக்கான்னு கேளு?”

“இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும் மாமா...”

“மறக்காம கேளு...”

“ம்ம்.. மாமா நேத்து ஒரு கேஸ் பத்தி கேள்விப்பட்டேன், உங்களுக்கு மெயில் பண்ணி இருக்கேன், அதை பார்த்தீங்களா?”

“பார்த்துட்டேன் மா”

“என்னோட பேஷன்ட் தான் அந்த பொண்ணோட அப்பா... அந்த பொண்ணுக்கு நாம ஏதாவது உதவ முடியுமா?”

“கண்டிப்பா சம்யு... நீ உன் புருஷன்கிட்ட சொல்லி, அவன் டிரஸ்ட் மூலமா பேப்பர்ஸ் மூவ் பண்ண சொல்லு, நானே நம்ப ஹாஸ்பிட்டல்லையே ஆபரேசன் பண்றேன்”

“ஆனா ஆபரேட் பண்ணா அந்த பொண்ணு கோமாக்கு போகவும் வாய்ப்பு இருக்கறதா ரிபோர்ட்ல இருக்கு”

“கண்டிப்பா... இங்க அந்த மாதிரி ஆபரேஷன் ரொம்ப கம்மி... சோ சொல்லி இருக்காங்க, சான்ஸ் இருக்கு, பட் நினைவு திரும்பி எழுந்து நடமாடவும் வாய்ப்பு இருக்கு”

“சரி மாமா நான் அந்த பேஷண்டை இன்னிக்கு வரச் சொல்லறேன், நீங்க ஒரு தடவை பார்த்துடுங்க”

“சரிம்மா...”

இவர்கள் இங்கு பேசிக்கொண்டு இருக்க, இன்னொரு வீட்டில்,

“சிவா... இந்தாங்க காபி” என்று பவித்ரா காபியுடன் வந்தார்,

“தனு எங்கம்மா?”

“ஷ்.. மெதுவா பேசுங்க.. தூங்கறா...”

“நித்யா காபி குடிச்சாளா?”

“குடிச்சுட்டா.. தனுக்கிட்ட உட்கார்ந்து இருக்கா...”

“எங்க உன் பையன்?”

“ரெண்டு பேருமே இன்னும் வரலை”

“எனக்கு டிபனுக்கு சப்பாத்தி வேணும்மா... சைட் டிஷ் ஜாம் போதும்”

“சப்பாத்தி தான் இன்னிக்கு, ஜாம் வேண்டாம் குருமாவே வைச்சு இருக்கேன், சரி இன்னிக்கு நீங்க என்ன பிளான் வைச்சு இருக்கீங்க?”

“ஆபிஸ் தான், நீ எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் கொடைக்கானல் அனுப்பி வை”
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“சரிங்க... மனிஷா பத்திக் கவலை இல்லை, உங்க பையனை தான் சமாளிக்கனும்”

“நான் ஹெல்ப் பண்றேன், அப்புறம் மானு போன் பண்ணினா, ரெண்டு மாசம் கழிச்சு வர்றா, பெரிய மாப்பிள்ளை கூட்டிக்கிட்டு போக மட்டும் வருவார், மான்வியும் அவ வரும்போது வந்துடுவா, சின்ன மாப்பிள்ளையும் கூட்டிக்கிட்டு போகத்தான் வருவார், மானு நேரா மும்பை போயி அங்க இருந்து தான் வருவா, ரெண்டு பேரும் ஒன்னா வர்றாங்களாம்.”

“சரிங்க... நீங்க காபி குடிச்சுட்டுக் கிளம்புங்க, நான் பார்த்துக்கறேன்...”

“குட் மார்னிங் மா... குட் மார்னிங் பா” என்ற மானவ்வின் குரலில் இருவரும் அவன் பக்கம் பார்த்தனர்,

“மனிஷா எப்படிப்பா இருக்கா?”

“எழுந்துட்டாம்மா... குளிச்சுக்கிட்டு இருக்கா”

“அவளை அப்படியே விட்டுட்டு வந்துட்ட, திடீர்ன்னு தலை சுத்தி விழுந்துடப்போறா”

“ஷீ இஸ் பர்பெக்ட்லி ஆல்ரைட்... ஸ்டெடியா இருக்கா, எழுந்து வழக்கம் போல யோகா முடிச்சுட்டா”

“சரி வா காபி தரேன்”

“அப்பா இன்னிக்கு நான் அந்த கன்ஸ்ட்ரக்ஷன் சைட் விசிட் முடிச்சுட்டு வந்துடறேன்... நீங்க கிளம்புங்க”

“இல்லை மானவ்... இன்னிக்கு அம்மா உனக்கு ஒரு முக்கியமான வேலை வைச்சு இருக்கா?”

“என்னம்மா வேலை?” என்று காபி கொண்டு வந்த அன்னையைப் பார்த்துக் கேட்டான்.

“குல தெய்வம் கோயிலுக்கு போய் ரெண்டு வருஷம் ஆகிடுச்சு, என்னால டிராவல் பண்ண முடியாது, இன்னிக்கு நீயும் மனிஷாவும் போய்ட்டு வாங்க”

“அம்மா... ஏற்கனவே தொழில்ல போட்டி சரியா போய்க்கிட்டு இருக்கு, இதுல என்னால இங்க இருந்து கொஞ்சம் கூட மூவ் பண்ண முடியாது”

“டேய்... உங்கப்பா பிஸினஸ் ஜாம்பவான், அவரால எல்லாமே முடியும், நீ நான் சொல்றதை செய்”

“மானவ் கண்ணா, அதான் அம்மா சொல்றாங்கல்ல, போயி மனிஷாட்ட சொல்லிட்டுக் கிளம்பு”

“இன்னிக்கு ஒரு நாள் தான், இனிமே ஏதாவது வேண்டுதல் இருந்தா, கோவிலுக்கு போகனும்ன்னா, என்னைக் கேட்டு முடிவு பண்ணுங்க”

“டேய், அப்படியே நம்ம எஸ்டேட்டைப் போயி ஒரு தடவை பார்த்துட்டு வா”

“இப்பதானப்பா போய்ட்டு வந்தேன்”

“இன்னொரு தடவை போறதுல தப்பு இல்ல... புரிஞ்சுதா...”

“சரிப்பா...”

“மனிஷா வேற ரொம்ப டிப்ரஸ்ட்டா இருக்கா, ஒரு சின்ன டிரிப் மாதிரி போய்ட்டு வா.. போயி மனிஷாவை ஒன் வீக்க்கு டிரெஸ் எடுத்து வைக்கச் சொல்லு”

“என்னது ஒன் வீக்கா?”

“என்னடா சும்மா குதிக்கற? ஒழுங்கா போயிட்டு வா... இவன் தான் இந்த பிசினஸ் எல்லாத்தையும் கைக்காசைப் போட்டு ஆரம்பிச்சவன் மாதிரி பேசறான், எல்லாத்தையும் என் புருஷன் பார்த்துப்பார், நீ ஒழுங்கா போய்ட்டு வா”

“அம்மா.. என்னதான் எங்கப்பா பிஸினசா இருந்தாலும், இப்ப பாதி பிஸினஸ் நான் மட்டும் தான் மேனேஜ் பண்றேன்... நியாபகத்துல வைங்க”

“அதெல்லாம் என் புருஷன் பார்த்துப்பார்... நீ கிளம்பு... மனிஷாவை பேக்கிங் முடிச்சுட்டு வரச் சொல்லு...”

“சரி பாப்பா எங்க?”

“அவ தூங்கற... அப்புறம் இந்த டிரிப் நீங்க ரெண்டு பேரும் தான் போறீங்க, அவ வரலை”

“அம்மா... ஏம்மா? அவ வந்தா அவளுக்கும் டூர் போன மாதிரி இருக்கும்ல”

“உங்கக்காவும் தங்கச்சியும் வந்ததும் போகலாம்... அப்ப அவளைக் கூட்டிக்கிட்டு போ... இந்த கிளைமேட் எப்படியும் பாப்பாக்கு ஒத்துக்காது... இரு மனிஷாக்கு ஹார்லிக்ஸ் தரேன், அதையும் கொண்டு போயி குடுத்துடு”

“அம்மா நீங்க சொல்ற எதை வேண்ணா ஒத்துக்கறேன், மான்வி எனக்குத் தங்கைன்னு சொல்லாதிங்க”

“டேய்.. அவளை உனக்கு அப்புறம் தான் எடுத்தாங்க... சோ தங்கை தான்”

“அப்பா... மறுபடியும் அவளுக்கு சப்போர்ட் ஆரம்பிக்காதிங்க, நான் கிளம்பிட்டேன்...”

“இது நல்ல பையனுக்கு அழகு”

“சரிப்பா எனி எமர்ஜென்சி, கால் பண்ணுங்க...”

“சரிப்பா...”

ஒரு பக்கம், மனிஷாவும், மான்வித்தும் கொடைக்கானல் கிளம்ப, பிரித்வி அசுர வேகத்தோட தொழில் போர் புரிய தன் பயணத்தை தமிழகத்தை நோக்கி ஆரம்பித்து இருந்தான்.

இதற்கிடையில் மனிஷாவிடம் சம்யுக்தாவும் பேசி இருந்தாள். லாவண்யாவின் புயல் சற்று ஓய்ந்திருக்க ஆரம்பிக்க, சிவாவின் குடும்பம் சற்று இயல்புக்குத் திரும்பிக்கொண்டு இருந்தது.

கொடைக்கானல் சென்று வந்த பின்னர் கூட, மனிஷாவுக்கும், மான்வித்துக்கும் இடையில் இடைவெளி இருக்கத்தான் செய்தது. அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் அதிகம் தவித்துப்போனது பெரியவர்கள் தான்.

நாட்கள் அதன் போக்கில் மாதங்களாக நகர ஆரம்பித்து இருக்க, மானஷாவும், மான்வியும் வரும் நாட்களும் தள்ளிப்போய் இருந்தது. மானஷாவின் மாமியாருக்கு உடல் நலமில்லாமல் போக, அவள் ஒரு மாதம் கழித்து வருவதாக சொல்லிவிட, மான்வியும் அவள் வரும் போது வருவதாக சொல்லிவிட்டாள்.

இதற்கிடைப்பட்ட நாட்களில் பிரித்வி தொழிலில் அசுர வளர்ச்சி அடைந்திருந்தான், அவனது அறிவுத்திறமையில் சிவாவின் பல்வேறு தொழில்களுக்கு போட்டியாக அமர்ந்து, சிவாவின் தொழில்களையும் ஒரு வழியாக்கி இருந்தான்.

முகம் காணாத பிரித்வியின் மேல், சிவாவுக்கு ஒருவித கோபம் உருவாகி இருக்க, மான்வித்துக்கோ வன்மம் உருவாகி இருந்தது.

இரு ஜாம்பவான்கள் மோதினாலும், உலகளவில் பெரிய தொழிலதிபரான பிரித்வியுடன் மோதிப் பார்க்க சிவாவிற்கும் போதிய பொருளாதார அடிப்படை இல்லாமல் போய்விட சிவா பொறுமை காக்க ஆரம்பித்து இருந்தார்.

இதற்கிடைப்பட்ட நாட்களில் சம்யுக்தாவும் மனிஷாவிடம் ஓரளவு நெருங்கி இருந்தாள்.

மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு மாலைப் பொழுதில்,

சிவாவின் வீடே இரண்டாகிக்கொண்டு இருந்தது,

மானவ் தொழில் வேலையாக ஒரு பக்கம் டெல்லி கிளம்பிக்கொண்டு இருக்க, மனிஷா ஒரு கான்பிரன்ஸ் விசயமாக பெங்களூர் கிளம்பிக்கொண்டு இருந்தாள்.

இது ஒரு பக்கம் இருக்க, பவித்ராவின் பள்ளியில் ஆண்டு விழா நடக்க, அதற்கு மற்ற நால்வரும் கிளம்பிக்கொண்டு இருந்தனர்.

“பவி பாப்பாக்கு எல்லாம் எடுத்து வைச்சுட்டேன், நீ ரெடியா?”

“நான் ரெடி நித்யா”

“சரி நான் பாப்பாவை ரெடி பண்றேன், நீ போயி வேற வேலை இருந்தா பாரு”

“அவளும் ரெடி நித்யா, வா போகலாம்”

இருவரும் வெளியே வர, மனிஷா எதிர்பட்டாள்.

“அத்தை நான் கிளம்பறேன், போய்ட்டு போன் பண்றேன்”

“மானவ் எங்க?”

“மேல இருக்கார்”

“உன்னை யார் கொண்டு போயி விடறாங்க?”

“டிரைவர்”

“சரி கிளம்பு... பத்திரம்... நடந்த விசயத்துனால ஜாக்கிரதையா இரு”

“சரிங்கத்தை... பை ம்மா”

“பத்திரம்மா”

“ஓகேம்மா”

மனிஷா கிளம்பிச் செல்ல,

“நீ கார்ல உட்கார் நித்யா, நான் உங்கண்ணனை கூட்டிகிட்டு வரேன்” என்று சொல்லியவாறே பவித்ரா சிவாவைக் காணச் சென்றார்.

“சிவா கிளம்பலாமா?”

“ஏம்மா பங்கசனே ஆறு மணிக்குத்தான், நீ இப்பயே பறக்கற”

“நம்ம ஸ்கூல் பங்கசன், என்ன தான் நான் சேர்மன்னாலும் முன்னாடியே போகனும்”

“சரி கிளம்பிட்டேன்... நித்யாவும் தனுவும் கிளம்பிட்டாங்களா?”

“அவங்க காருக்கே போய்ட்டாங்க... சீக்கிரம் வாங்க... உங்க பேத்தி காரை எடுக்கலை ரகளை பண்ணுவா”

“வா.. வா.. போகலாம்... மனிஷா கிளம்பிட்டாளா?”

“கிளம்பிட்டாங்க... மானவ் இன்னும் கிளம்பலை”

“ஏன் அவனும் போறது ஏர்போர்ட்டுக்கு, ஒன்னா போனா என்ன?”

“அவனுக்கு பிளைட் பத்து மணிக்கு, இப்பவே போயி என்ன பண்ணப் போறான்?”

“இங்க அவ்ளோ நேரம் என்ன பண்ண போறான்?”

“ஏற்கனவே அவனுக்கு டென்ஷன்... ஒன்னும் பேச முடியலை... நீங்க எதுவும் பேசாம, இப்ப வாங்க... அப்புறம் இதைப்பத்தி பேசலாம்”

இருவரும் வந்து காரில் ஏற, கார் அவர்களின் பள்ளியை நோக்கிச் சென்றது.

பள்ளியை விட்டு இறங்கியதுமே நித்யா சொல்லிவிட்டாள்,

“பவி... இந்த இடமே எவ்ளோ மாறிடுச்சு”

“இன்னும் அப்படியே இருக்கனும்ன்னு சொல்றியா?”

“நீ மரம் நடு, செடி நடுன்னு பேசுவ, இப்ப என்னடான்னா, முன்னாடி இருந்த பாதி மரத்தைக் காணோம்”

“என்ன பண்ண நித்யா? பசங்க புதுப்புது கேம் கேட்கறாங்க, அதான் பாஸ்கட் பால் ஸ்டேடியம், புட்பால் ஸ்டேடியம் ரெண்டு கட்டிருக்கு, கூடவே பசங்களுக்கு கராத்தேக்கு ஷெட், அந்தப்பக்கம் ஸ்கேட்டிங்க்கு தனி ஷெட் போட்டு இருக்கோம்... இதுல கிரிக்கெட் பிராக்டீஸ் வேற இருக்கு...”

“பக்கத்து லேண்ட் வாங்கினதா சொன்னீங்களே?”

“இந்த ஒரு கேம்பஸ்ல மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.சி மூனும் இருக்கு, தனித்தனி பில்டிங். ஹாஸ்டலுக்கும், ஆடிடோரியத்துக்குமே வாங்கின இடம் சரியாகிடுச்சு.”

“பழைய ஆடிட்டோரியம் என்ன ஆச்சு?”

“அங்க இன்டோர் கேம்ஸ் போட்டாச்சு, இன்டோர் கேம்ஸ் இருந்த இடத்தை லைப்ரரி கூட எக்ஸ்டென் பண்ணியாச்சு. இதனால இது மெயின் லைப்ரரி, மூனு ஸ்கூல் ஸ்டுடென்ட்சும் இந்த மெயின் லைப்ரரில புக் எடுக்கலாம்.”
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ம்ம்.. ஒரே பில்டிங் மயமா இருக்கு, கொஞ்சம் மரம் இருந்தா நல்லா இருக்கும்”

“அங்க பார்த்தியா? ஒவ்வொரு ப்ளோரை சுத்தி ஒரு மினி கார்டன் இருக்கு, பசங்க தடுமாறிக் கீழ விழாம இருக்க, சுத்தியும் கம்பி நட்டு, ஸ்டீல் வலை போட்டு இருக்கு.”

“இந்த ஐடியா சூப்பர் பவி”

“இதனால பசங்களுக்கு பொல்யுசன்ல இருந்து கொஞ்சம் விடுதலை, கூடவே இயற்கையோட சேர்ந்த படிப்பும்”

“இந்த கார்டன் வொர்க்கு மெயிண்டனன்ஸ் அதிகமாத் தேவைப்படும், எப்படி சமாளிக்கறிங்க?”

“இதுக்கு பசுமை இயக்கம்ன்னு நம்ம ஸ்கூல ஒரு டீம் இருக்காங்க, இவங்க இந்த கார்டன் வொர்க், மரம் நடறது, புதுச்செடி வைக்கிறதுன்னு எல்லாமே பார்த்துப்பாங்க. சுத்தி இருக்கற நிலம் விலைக்கு கேட்டுக்கிட்டு இருக்கோம், கிடைச்சா, முழுக்க தோட்டம் தான் போடற ஐடியா”

இவர்கள் பேசிக்கொண்டே நடக்க, மூன்று பள்ளிகளின் பிரின்சிபால் மற்றும் சில ஆசிரியர்கள் எதிரில் வந்து அனைவரையும் வரவேற்றனர்.

அனைவர்க்கும் தலையசைத்துக்கொண்டே ஆடிட்டோரியம் நோக்கி மூவரும் சென்றனர்.

பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு, ஆட்டிடோரியம் வண்ணமயமாகக் காட்சி அளித்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என பெருங்கூட்டமே அங்கு திரண்டிருந்தது.

விழா ஆரம்பிக்க நேரம் இருக்க, பவித்ரா விழா ஏற்பாட்டினை ஒரு முறை சரி பார்த்து விட்டு, வந்திருந்த சிறப்பு விருந்தினருடன் பேச ஆரம்பித்துவிட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பிக்க, அனைவரும் விழாவில் ஒன்றிப்போக ஆரம்பித்தனர்.

பவித்ரா, மூன்று பள்ளிகளின் பிரின்சிபால் மற்றும் அன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் விளக்கேற்ற விழா ஆரம்பமானது.

பொன்னாடை போர்த்துதல் மற்றும் நினைவுப் பரிசு வழங்குதல் முடிந்ததும், மேலிருந்த அனைவரும் முதல் வரிசைக்கு வந்து அமர, கலை நிகழ்ச்சிகள் தோன்றியது.

சின்னஞ்சிறு சிறுமி ஒருத்தி மேடையில் தோன்றி,

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

என்று அழகாக வீணை வாசிப்புடன் பாட அரங்கமே அந்தக் குரலில் லயித்து அமைதியாக இருந்தது. அவளுடைய தளிர் கரங்கள் மீட்டிய வீணையின் இசையில் சில முதியவர்கள் கண் கலங்கி அமர்ந்திருந்தனர்.

அடுத்ததாக சில மாணவிகள் ராமாயண காவியத்தை, பரதத்தில் அழகாக மேடையில் அரங்கேற்றினர்.

தமிழர் மறந்து போன கரகத்தையும், பொய்க்கால் குதிரையையும் மேடையில் ஏற்றி இருந்தனர், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களோ பறையிசையில் அரங்கை அதிர வைத்து இருந்தனர்.

திடீரென மூன்று மாணவர்கள் முக மூடிகள் போட்டுக்கொண்டு, மேடையில் தோன்றி, படம் வரைய ஆரம்பித்தனர்.

ஒரு மாணவன் அந்த அரங்கில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த சிறு குழந்தையைப் பார்த்து வரைந்து அசத்தினான்.

ஒரு மாணவன் பவித்ரா மற்றும் சிவாவின் படத்தை அவர்கள் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து வரைந்து அசத்தினான்.

இன்னொரு மாணவன் எதிரில் அவனை போகஸ் செய்துகொண்டு இருந்த வீடியோகிராபரை வரைந்து அசத்தினான்.

மூவருமே சிறப்பாக வரைந்திருந்தனர். அச்சு அசலாக வரைந்திருந்தனர். அதுவும் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே...

ஒரு மாணவி கையில் வாளெடுத்து ஜான்சி ராணியாக நிற்க, மற்றொரு மாணவி வேலு நாச்சியாராக வந்து நின்றாள்.

ஒரு மாணவன் பகத்சிங்காக முழங்க, மற்றொரு மாணவன் வீர பாண்டிய கட்ட பொம்மனாக வந்து நின்றான். இன்னொரு மாணவன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸாக வந்து நிற்க, அனைவரும் அரங்கில் இருந்தவரின் மனதில் அந்த கதாப்பாத்திரமாகவே உறுமாறினர்.

மாணவர்களின் இந்தத் திறமைகள், அனைவரையும் பொறுமையாக காத்திருந்து பார்க்கத் தூண்டியது.

எவ்வித சோர்வும் யாரையும் ஆட்டிப்படைக்கவில்லை. எட்டு மணி தாண்டியும் பிள்ளைகள் புத்துணர்வுடன் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

ஒரு மாணவி, காதலன் பட பாணியில் மேடையில் கலர் பொடிகளைத் தூவி அதில் பள்ளியின் லோகோவை நடனத்தில் ஆடி வரைந்திருந்தாள்.

நவீன கல்வி முறை பற்றி சில மாணவர்கள் நாடகம் நடத்திக் காட்டினர்.

பிற மாநிலங்களின் பாரம்பரிய நடனங்களும், நாடகங்களும் மேடையேறின.

தமிழ் நாடகம், ஆங்கில நாடகம், இந்தி மொழியில் ஒரு நாடகம் என திறமையுடன் நடித்துக்கொண்டு இருந்தனர்.

ஒவ்வொரு பள்ளியிலும், பரிசளிப்பு முதலிலும், கலை நிகழ்ச்சிகள் இறுதியிலும் நடைபெறும், இவர்களோ முதலில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, பின்னர் பரிசு வழங்குவதை வழக்கமாகச் செய்து வந்தனர்.

அதன் படி கலை நிகழ்சிகள் முடிவடைந்த நிலையில், விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரபல எழுத்தாளர் அவரது சிறப்புரையாற்றினார்.

குழந்தைகளின் எண்ணங்கள், அவர்களின் செயல்பாடுகள் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் அனைவரையும் அவரின் சொற்களில் கட்டிப்போட்டன.

அவரையடுத்து பவித்ரா பேசி முடிக்க, மூன்று பள்ளிகளின் பிரின்சிபாலும் அடுத்தடுத்து மேடையேறி பள்ளியின் ஆண்டறிக்கையை சமர்பித்தனர்.

அதன் பின்னர் ஒவ்வொரு வகுப்பு வாரியாக பரிசுகள் வழங்கப்பட்டன.

அதற்கு முன்பு மேடையில் பேசிய பவித்ரா,

“எல்லா பள்ளிகளிலும் பெரும்பாலும் பரிசுகள் தான் முதலில் வழங்கப்படும், அதன் பின்னர் தான் கலை நிகழ்சிகள் ஆரம்பமாகும். எங்கள் பள்ளியில் முதலில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு காரணம், நேரம் செல்லச் செல்ல பிள்ளைகள் அனைவரும் சோர்ந்து விடுவார்கள், குறிப்பிட்ட நேரத்தில், அனைத்து பிள்ளைகளும் அவர்கள் திறமையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் வேறு உள்ளது, எங்கள் பிள்ளைகளின் திறமை எங்களுக்குத் தெரிந்தாலும், உங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த ஆண்டு விழா நடைபெறுகிறது. மேலும் சிலர் பரிசுகள் பெற்றவுடன் கிளம்பி விடுவதால், எங்கள் செல்வங்களின் திறமையை அவர்கள் காண முடியாமல் போய் விடுகிறது.”

“அதற்காகவே இந்த விழாவில் இப்படி ஒரு மாற்றம் செய்து, ஒவ்வொரு முறையும் நடத்திக்கொண்டு இருகின்றோம், கூடவே எங்கள் பிள்ளைகள் வீடு திரும்பும் போது கண்டிப்பாக ஒரு வெற்றியாளராக, மகிழ்ச்சியுடன் திரும்பவே நாங்கள் விரும்புகின்றோம். நம் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு பரிசு காத்திருக்கிறது. எங்களுக்கு அனைவருமே சமம். அதிகமாக எங்களை நோக்கி நம்பிக்கையுடன் வரும் சிறுவர்கள் ஓரிரு பரிசுகள் அதிகம் வாங்கிச் செல்வார்கள்...”

“மாணவக் கண்மணிகளே, உங்கள் தன்னம்பிக்கையின் அளவே உங்கள் கைகளில் உள்ள பரிசுகளின் அளவாகும். பரிசு குறைவாக உள்ளதே என்று வருந்தாமல், உங்கள் தன்னம்பிக்கையை அதிகரியுங்கள், அடுத்த வருட ஆண்டு விழாவில் உங்கள் கையில் நிச்சயம் பரிசும் அதிகமாகும்”

என்று சொல்ல மாணவர்கள் முதல் பெற்றோர் வரை அனைவரும் கரகோஷம் எழுப்பி அவர்கள் ஆதரவினைத் தெரிவித்தனர்.

கல்வி என்பதையும் தாண்டி, ஒழுக்கம், நேர்மை, அவர்களின் தனிப்பட்ட திறமைகள் என ஒவ்வொன்றிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் இறுதியில், மேடையில் தோன்றிய தொகுப்பாளர்,

“இன்றைய நாள் எங்கள் பள்ளியின் வரலாற்றியில் செதுக்கப்பட்ட அடுத்த ஒரு மைல்கல். ஒவ்வொரு வருடமும் எங்கள் பள்ளி ஒவ்வொரு வகையிலும் முன்னேறிக்கொண்டு இருக்கிறது, அரை நூற்றாண்டை நோக்கிச் செல்லும் எங்கள் பள்ளி புரிந்த சாதனைகள் பலவற்றை எங்க பள்ளிகளின் முதல்வர்கள் சொல்லிக் கேட்டிருப்பீர்கள், அடுத்ததாக, இதுவரை பல்வேறு பரிசுகள் வழங்கி இருக்கின்றோம், ஆனால் இப்பொழுது இரண்டு நபர்களுக்கு பரிசு வழங்க இருகின்றோம். என்னடா இரண்டு நபர்களுக்கு பரிசு வழங்குவதற்கு இவ்வளவு பெருமையா என்று நீங்கள் கேட்கலாம், இவர்களுக்கு வழங்குவதில் எங்களுக்கு நிச்சயம் பெருமையே...”

“ஒவ்வொரு மாணவரிடமும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கும், சிலர் பாடுவார்கள், ஆடுவார்கள், நன்றாகப் படிப்பார்கள்; சிலர் நன்றாகப் படிப்பார்கள், விளையாடுவார்கள்; சிலர் படிக்கவே மாட்டார்கள், விளையாட்டிலோ, கலைத்துறையிலோ சாதிப்பார்கள்; சிலர் நன்றாக எழுதுவார்கள்; சிலர் நன்றாக நடிப்பார்கள்; சிலர் நன்றாக படம் வரைவார்கள்; ஆனால் நாங்கள் இங்கு பரிசு வழங்க மேடைக்கு அழைக்கும் நபர்கள் இருவரும் அனைத்துப் போட்டிகளிலும் முதல் பரிசு வாங்கியவர்கள். மூன்று பள்ளிகளிலும் பெயர் பெற்றவர்கள் இவர்களின் பெயரைச் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதே உண்மை”

“அந்த இரண்டு மாணவச் செல்வங்களையும் மேடைக்கு அன்புடன் அழைக்கின்றோம், அவர்களின் பெற்றோரையும் உடன் அழைக்கின்றோம்.”

சில நிமிடங்களில் ஒரு சிறுமியும், ஒரு சிறுவனும் மேடை ஏறினர்.

இரட்டை ஜடைப்பின்னலில், இரண்டு பக்கமும் குஞ்சம் வைத்துப்பின்னி, மல்லிகை மலர்ச்சரம் சூடி, அழகிய மயில் தோகை விரிந்தது போன்ற பாடுப்பாவாடையில், குட்டி தேவதையென வந்து நின்ற பெண்ணைப் பார்த்ததும் சிவாவின் முகம் யோசனைக்குச் சென்றது.

மேடை ஏறியதும், அங்கிருந்த பெரியவர்களைப் பார்த்து கை கூப்பி அவள் வணக்கம் சொல்ல, பவித்ரா ஒரு நொடி நெகிழ்ந்தே விட்டார். அவள் பாடும் போதே, அவளுடைய குரலில் தன்னைத் தொலைத்திருந்தவர், அவளது செயலில் மேலும் மனம் குளிர்ந்து போனார்.

அவள் பின்னே வந்த சிறுவனைக் கண்ட பவித்ராவும், சிவாவும் ஒரு நொடி அதிர்ந்தே நின்றுவிட்டனர். அவர்களைச் சுற்றி உலகம் ஒரு நொடி தன் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.



ராகம் இசைக்கும்...
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு நட்புக்களே,

வெள்ளியன்று அத்தியாயம் போட முடியவியல்லை. இன்று இரண்டு அத்தியாயங்களாக பதிவிட்டுள்ளேன்.

உங்களுடைய கருத்துக்களை தவறாமல் பகிர்ந்துகொள்ளவும்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு நட்புக்களே,

சென்ற வாரம் அத்தியாயம் எதுவும் போட முடியவியல்லை. இன்று மூன்று அத்தியாயங்களாக பதிவிட்டுள்ளேன்.

உங்களுடைய கருத்துக்களை தவறாமல் பகிர்ந்துகொள்ளவும்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுகமான புது ராகம்!



அத்தியாயம் – 6

சிறு பிராயத்தில் இருந்த சிவாவை, அச்சில் வார்த்தது போல, சிவாவின் சாடையைக் கொண்டிருந்த பையனைக் கண்ட இருவரும் அதிர்சியுடன் ஒருவர் முகத்தை, ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

சிவாவின் குழந்தைப் படத்தை நேரில் பார்த்தது போல இருவருக்கும் தோன்ற, கீழிருந்து பார்த்த நித்தியாவுமே ஒரு நொடி அதிர்ந்தது உண்மை. சிவாவின் பெற்றோர் அறையில் இருந்த சிவாவின் குழந்தைப்படம் அவள் கண்ணில் நிழலாடியது.

வந்த சிறுவனோ, நிமிர்ந்த நடையுடன், சற்று கர்வத்துடன் மேலே வந்து நின்றான்.

இந்த அதிர்ச்சியை விட, சிவா சந்தித்த மிகப்பெரிய அடுத்த அதிர்ச்சி, அந்த மேடையில் வந்து நின்ற அடுத்த நபர்கள் தான்.

அந்த சிறுமி மற்றும் சிறுவனின் பின்னே, சம்யுக்தாவும், பரத்தும் மேடையில் ஏறி இருந்தனர்.

சிவா சம்யுக்தாவின் சாயலை அந்த சிறுமியிடம் நொடியில் கண்டு கொண்டார், ஆனால் அந்த சிறுவன் தான் அவர் மண்டையைக் குடைய ஆரம்பித்தான்.

ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொன்றாக இருக்க,

தொகுப்பாளர் அவரது கடமையைச் செய்ய ஆரம்பித்தார்,

“அனைவரும் மதி மயங்கிக் கேட்ட “குறை ஒன்றும் இல்லை” என்ற இறைப்பாடலைப் பாடியவர் இந்த மாணவி தான். இந்த ஆண்டில் மூன்றாம் வகுப்பிற்கான மற்றும் ஐந்தாவது வகுப்பிற்கான பாட்டு, பரதம், மேற்கத்திய நடனம், மாறுவேடப்போட்டி, தமிழ், ஆங்கில வழிக் கட்டுரைப்போட்டி, இந்தி கட்டுரைப்போட்டி, மும்மொழியிலும் கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி என அனைத்து போட்டிகளிலும் முதல் பரிசு பெற்ற மாணவி மற்றும் மாணவன் இவர்கள் தான். இது தவிர இந்த வருடம் நடந்த அனைத்து மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவிலான போட்டிகளிலும் முதல் பரிசு பெற்றுள்ளனர்... ஒவ்வொரு போட்டிக்குமான முதல் பரிசு மற்றும் ஏற்கனவே பெற்ற பரிசுகளுக்கு, வழக்கமாக நம் பள்ளியில் நாம் தரும் கவுரவப் பரிசு இரண்டுடனும், பள்ளியில் படிப்பில், ஒழுக்கத்தில், நேர்மையில், நேரம் தவறாமையில், ஒரு குழுத் தலைவரின் செயல்பாட்டில் என அனைத்திலும் முதலாக வந்ததற்கும், சில சிறப்பு பரிசுகளும் இப்பொழுது வழங்கப்படுகின்றன. இந்த பரிசுகளை வழங்க, பவித்ரா மேடம், ஈஸ்வர் சார் மற்றும் மாண்புமிகு சிறப்பு விருந்தினர் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்”

“இன்றைய இந்த மாகா விழாவின் வேள்வியில் உதித்த ஜுவாலை தான் இந்த ஜுவாலா. பரிசுகளை மாணவி ஜுவாலாவுடன் சேர்ந்து வாங்க அவர்களது அன்னை மற்றும் தாத்தாவை உடன் அழைக்கின்றோம்”

அதிர்ச்சியில் உறைந்து கிடந்த இருவரின் அருகே பரிசு நீட்டப்பட, ஜுவாலா வெற்றி பெற்ற ஒவ்வொரு போட்டியாக தொகுப்பாளர் அறிவிக்க, மூவரும் அவளுக்கு பரிசுகள் வழங்கினர். ஜுவாலா வாங்க மற்ற மூவரும் உடன் இருந்தனர், அவள் ஒவ்வொன்றாக வாங்கிக்கொண்டு அருகில் நின்ற அவளுடைய சகோதரனிடம் தர, அவன் அன்னையிடம் தந்து கொண்டிருந்தான். கழுத்தில் விழுந்த மெடலைக் கூட அடுத்த நொடி கழட்டி, தன் அண்ணனின் கழுத்தில் தான் போட்டாள் அந்த சிறுமி.

அவளுடைய சுற்று முடிந்ததும் சிறுவனின் சுற்று ஆரம்பமானது.

“ஜுவாலாவைப் போலவே அவளுடைய அண்ணன் சர்வேஷ்வரும் பரிசுகளை அள்ளிக்கொண்டு செல்லப்போகிறார். இவர்தான் சற்று முன்னர் முகமூடி அணிந்து கொண்டு படம் வரைந்த மூன்று சிறுவர்களில் ஒருவர், நமது பவித்ரா மேடம் மற்றும் சிவா சாரை வரைந்தது இவர் தான். இவரிடம் உள்ள ஒரு தனிச்சிறப்பு, வண்ணங்கள் இன்றி, வெறும் பென்சிலைக் கொண்டே அழகிய ஓவியங்களை வரையும் திறமை. இவர் பரிசு வாங்குவதற்கு முன்னர், இவர் வரைந்த ஓவியத்தை நம்முடைய பவித்ரா மேடம் மற்றும் சிவா சாருக்கு பரிசாக வழங்கப்போகிறார்.” என்று அவர் சொல்லி முடிக்க, சர்வேஷ் வரைந்த ஓவியத்தைச் சுருட்டி, ஒரு கலர் ரிப்பனில் கட்டி, ஒரு தட்டில் வைத்து அதைக்கொண்டுவந்து அவனிடம் நீட்டினர், அவன் அந்த ஓவியத்தை இருவருக்கும் வழங்க, பவித்ரா கண்களில் நீர் மல்க அந்த சிறுவனின் கன்னத்தை வருட, சிவா கை குலுக்கினார்.

அடுத்ததாக, அவன் பரிசுகள் ஒவ்வொன்றாக வாங்கி அன்னையிடம் சேர்த்தான். மேடையில் இருந்து கீழிறங்கும் முன்னரே, அனைத்து மெடல்களும் சம்யுக்தாவின் கழுத்தில் தான் கிடந்தன. கேடயங்களும், கப்புகளும் பாதி சம்யுக்தாவின் கையிலயும், பரத்தின் கையிலும் என்றால் மீதியை ஆசிரியர் ஒருவர் வாங்கி ஒரு கவரில் போட்டுக்கொண்டு இருந்தார், இவற்றுடன் சான்றிதழ்கள் வேறு இருந்தது.

“மேடம், உங்களுடைய குழந்தைகளின் சாதனையைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் எங்களுடன் பேச உங்களை அன்புடன் அழைக்கின்றோம்”

கண்களில் நிறைந்த நீரைத் துடைத்துவிட்டு, கைகளில் இருந்த பரிசுக்கோப்பைகளை அருகில் இருந்த ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு நேராக மைக்கை நோக்கிச் சென்றவள்,

“அனைவருக்கும் வணக்கம், என்னோட பசங்க இன்னிக்கு இவ்ளோ சாதிச்சு இருக்கறதை நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோசம், இவர்கள் வளர்ந்த சூழலே வேறு, இருவரும் இந்தியா வந்து ஒரு பத்து மாதங்களுக்குள்ளாகத் தான் இருக்கும். எனக்கு இங்கு வரும் போது ரொம்ப கவலையா இருந்துச்சு. அங்க இருந்த சூழல் வேற, இங்க இருக்கற சூழல் வேற, எப்படி எடுத்துப்பாங்களோன்னு ஒரு தயக்கம் இருந்தது. ஆனா இவங்க ரெண்டு பேரும் அந்த சூழலை அப்படியே இங்க உருவாகிக்கிட்டாங்க.”

“அங்க சிறு வயது முதலே பிள்ளைகள் அவர்களுடைய தனித்திறமையை வளர்த்துக்கும் சூழல் இருக்கு, அது இவங்களுக்கு பேருதவியா இருந்தது, கூடவே நாங்க எங்க பசங்க இதைதான் செய்யனும், இப்படித்தான் செய்யனும்னு சொன்னதே இல்லை. அவங்களா விருப்பப்பட்டுக் கேட்டா, அந்த கோச்சிங்ல சேர்த்து விடுவோம். அவங்க திறமைகளுக்கு உறுதுணையா நின்றோம், சாதிச்சது அவங்க தான்.”

“இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல், இவன் மகன் என்நோற்றான் கொல் எனும் சொல் அப்படின்னு சொல்லறதுக்கு ஏத்த மாதிரி பெற்றோராகிய நாங்களும் இவங்களுக்கு பெருமை சேர்த்து இருக்கோம், இவங்களும் எங்களுக்கு பெருமை சேர்த்து இருக்காங்க.”

“எங்களுக்கு அப்புறம் எங்க பொண்ணை அதிகம் பார்த்துகிட்டதுங்கறத விட வளர்த்தது எங்க மகன் சர்வேஷ் தான். ஒவ்வொரு நாளும் அவன் கிளாஸ் முடிஞ்சதும் நேரா அவளைப் பார்த்து கூட்டிக்கிட்டுத் வருவான், சில நேரம் வெயிட் பண்ணி கூட்டிகிட்டு வருவான், அந்த பொறுப்பு இங்கயும் இருக்கறதை நினைக்கிறப்ப சந்தோசமா இருக்கு, இன்னிக்கு அவ வாங்கின பரிசு, மெடல் எல்லாமே அவளுக்கு கிடைக்க உறுதுணையா இருந்த சரிவேஷ்க்கு அவ உடனே குடுத்தது, அவளோட அன்பின் வெளிப்பாடு.”

“ஆக மொத்தம் எங்க மகனோட வெற்றிக்கு அவனே முழு பொறுப்பு, நாங்க வெறும் கருவி தான், எங்க மகளோட வெற்றிக்கு அவள் மட்டுமே பொறுப்பு, எங்கள் கூட, என் மகனும் அதுக்கு ஒரு கருவி தான்”

“பசங்க குறும்பு பண்ணுவாங்க, ஆனா உங்க பசங்க குறும்பு பண்ணி இங்க நாங்க பார்த்தது இல்லை, வீட்ல எப்படி மேடம்?”

“பொதுவா குழந்தைங்க குறும்பு பண்ணக் காரணமே, நாம அவங்களை கவனிக்கனும்ன்னு தான். எங்க வீட்ல எப்பவுமே யாராவது ஒருத்தர் பசங்களை கவனிச்சுக்கிட்டேயிருப்போம், ஒவ்வொரு நாளும் அவங்களுக்கு நாங்க ஒதுக்கற நேரம் எந்த காரணத்தை முன்னிட்டும் இதுவரை மாறினது இல்லை. ஆரம்பத்துல இருந்தே பொறுப்புகள் தந்து தான் குழந்தைகளை வளர்த்தினோம்.”
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“இன்பாக்ட் ஜுவாலா பிறக்கும் போது சர்வேஷ் இரண்டு வயது பையன். ஆனா அவன் எதையும் மிஸ் பண்ணது இல்லை, நாங்களும் அவனைக் கவனிக்காம விட்டது இல்லை. நாளாக நாளாக அவனுக்கு ஜுவாலாவோட பொறுப்பைக் குடுக்க ஆரம்பித்தோம். லைக், அழுதா தொட்டில் ஆட்டறது, பொம்மை எடுத்து தர்றது, சாப்பாடு ஊட்டி விடறது, தலை வாரி விடறது, குளிக்க வைக்கிறது, இந்த மாதிரி அவ வளர வளர பொறுப்புகளும் சர்வாக்கு அதிகமாச்சு... அப்படியே அந்த அக்கறை முழுசா அவள் மேல படிப்படியா அவனுக்கு வந்துடுச்சு.”

“சோ எங்க வீட்ல குறும்பு கிடையாது, ரெண்டு பேருக்கும் பொறுப்பு தான் இருக்கு, அதே நேரம் எல்லா கலாட்டாவும் நடக்கும், சில நேரங்கள்ல ரூமா இதுன்னு கேட்கத் தோன்றும், பட் அடுத்த அஞ்சு நிமிசத்துல அது கிளீன் ஆகிடும், இதுவரை குறும்புன்னு எங்களுக்கு பெரிசா தெரியலை..., இந்த வயசுக்கு உண்டான விளையாட்டு, சில கலாட்டாக்கள் இருக்கும்.”

“இவங்க அப்பா இந்த நேரம் இங்க இருந்தா என்ன சொல்லி இருப்பார்?”

“இங்க தான் இருக்கார், ஐ மீன், அவர் உயிரும் உள்ளமும் இந்த நிமிஷம் எங்களைச் சுத்திதான் இருக்கு. கண்டிப்பா அவர் ரொம்ப சந்தோசப்பட்டு இருப்பார்.”

“அவர் “டியர் பிரின்ஸ் அன்ட் டாலி, ஒன்ஸ் அகைன் யூ ராக்ட்... ஐம் ரியலி ப்ரவுட் போத் ஆப் யூ கிட்ஸ்” அப்படின்னு சொல்லி இருப்பார். கூடவே அவங்க வெற்றிக்கு எங்க சார்பா என்ன கிப்ட் வேணும்ன்னு கேட்டு இருப்பார்?”

“அதுக்கு இவங்க ரெண்டு பேரும் என்ன சொல்வாங்க மேம்?”

அதுக்கு உடனே “அப்பா ஷல் வீ கோ எ டிரிப்?” ன்னு கோரஸ் பாடி இருப்பாங்க. காஸ் ரெண்டு பேருக்கும் வித்தியாசமான கல்ச்சர், வித விதமான மனிதர்கள், மொழிகள், உணவு வகைகள், பூக்கள், கைவினைப்பொருட்கள் இந்த மாதிரி விசயங்கள்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட்”

“கேட்கறதுக்கே இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கு, இப்ப கேட்க நேரம் அதிகம் இல்லை, உங்களை ஒரு நாள் தனியா மீட் பண்ணி கேட்டுக்கிறேன், தேங்க்ஸ் மேம்... தேங்க்ஸ் சார்...”

“தேங்க்ஸ் மேம்” என்று சொல்லிவிட்டு அனைவரும் கீழிறங்கிச் செல்ல முயற்சிக்க, பவித்ரா,

“குட்டிம்மா” என்று ஜுவாலாவை அழைத்தாள்.

“சொல்லுங்க மேம்”

“நீ அழகா பாடின இல்லையா, அதான் உனக்கு ஒரு சின்ன கிப்ட்” என்றவர் அவரது கழுத்தில் கிடந்த டாலர் செயின் ஒன்றைக் கழட்டி அவளின் கழுத்தில் போட்டுவிட்டார்.

“அம்மா...” என்று சம்யுக்தாவை திரும்பிப்பார்த்த மகளை,

“ஆன்ட்டி? எதுக்கு இதெல்லாம்?”

“இருக்கட்டும்மா... அவளோட குரல் அந்த மாதிரி”

“இருக்கட்டும் சம்யுக்தா, பாப்பாவோட குரல் அவ்ளோ இனிமையா இருந்துச்சு.”

“சிவா இது நம்ம மனிஷாவைக் காப்பாத்தின பொண்ணா?”

“ஆமாம் பவி”

“ரொம்ப நன்றிம்மா” என்று அவளுடையக் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

“இருக்கட்டும் ஆன்ட்டி, உயிரைக் காப்பாத்தறது டாக்டரோட கடமை”

“இன்னிக்கு எங்க வீட்டு பொண்ணு உயிரோட இருக்கக் காரணமே நீ தானேம்மா”

“இட்ஸ் ஓகே ஆன்ட்டி... ஓகே அங்கிள் பை...” என்றவள் கீழிறங்க, ஜுவாலாவின் கையைப் பிடித்துக்கொண்டே சர்வேஷ் கீழிறங்கினான். அவனது தோளில் கைபோட்டுக்கொண்டே சம்யுக்தா இறங்கினாள். தங்கை இறங்கியதும் அன்னை இறங்குவதற்கு கை நீட்டிய சர்வேஷை அனைத்து கண்களும் கண்டு ரசித்தன.

அனைவரையும் விட கீழிறங்கிச் சென்ற சர்வேஷிடமே பவித்ரா மற்றும் சிவா இருவரின் கண்களும் நிலைத்து நிற்க, சுற்றி இருந்த ஆசிரியர்கள் தான் அவர்களைக் கலைத்தனர்.

தமிழில் தேசிய கீதம் ஒளிபரப்பாக அனைவரும் எழுந்து நின்றனர்.

“அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் உணவருந்திவிட்டு செல்லுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்” என்று தொகுப்பாளர் முடிக்க,

நேராக கீழே பள்ளியின் பிரத்தியேக போட்டோகிராபரிடம் சென்ற சிவா, “எனக்கு அந்த சர்வேஷ் போட்டோ வேணும், உடனே,எனக்கு வாட்சப் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு உணவருந்தச் சென்றார்.

உணவருந்தும் இடத்தில், பப்பே முறையில் வட்ட வட்ட டேபிள்களும், நீண்ட டேபிள்களும் போடப்பட்டு இருந்தன. தேவைக்கு ஏற்ப அனைவரும் அந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டு உணவருந்த ஆரம்பித்தனர்.

ஒரு வட்ட டேபிளில் பரத் குடும்பத்துடன், கார் டிரைவர் அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிர் டேபிளில் தான் சிவா குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர்.

சர்வேஷ், “அம்மா... இட்ஸ் வெறி ஹாட் ட்டுடே...” என்று சொல்லிக்கொண்டே அவனுடைய பிளேசரைக் கழட்டினான். அவன் டையை லூஸ் செய்து கழட்டுவதைக் கண்ட சிவாவும் பவித்ராவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“கூட்டம் அதிகம்ல கண்ணா, ஏர் சர்க்குலேஷன் இல்லை”

“அம்மா வாட் அபவ்ட் திஸ் வகேசன்?”

“யூ ஜஸ்ட் புட் எ பிளான், மீ அன்ட் டேட் வில் டிஸ்கஸ் இட்”

“அம்மா... இந்த தடவை நாம கேரளா போலாம்மா” என்று இருவரின் பேச்சிற்குள் ஜுவாலா இடையிட்டாள்.

“ஜுவா நாம இந்த தடவை ராஜஸ்தான் போகலாம்”

“அங்க ஒரே டெசர்ட்... நோ வே”

“அங்க நிறையா கல்சுரல் திங்க்ஸ் இருக்கும்... எனக்கு ரொம்ப யூஸ் ஆகும்”

“ஷ்... நீயும் அப்பா மாதிரியே இருக்க, ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணி, பிளான் ரெடி பண்ணி எனக்கும் அப்பாக்கும் மெயில் பண்ணுங்க, நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றோம்”

“சர்வா... சாப்பிட்டு கிளம்பனும், நாளைக்கு லீவ் தான, நாளைக்கு நீ அப்பாவை கூப்பிட்டு பேசு, வகேஷன் ஆரம்பிக்க டேஸ் இருக்கு”

“ஓகே தாத்தா, வீ ஹேவ் நோ டைம், டிக்கெட் புக் பண்ணனும், ஹோட்டல் அரேன்ஜ் பண்ணனும்...”

“சர்வா... அப்பா அதெல்லாம் ரெடி பண்ணிடுவாங்க... உனக்கு எதுக்கு டென்ஷன்? ஒழுங்கா சாப்பிடு”

“ஓகே ம்மா”

“மாமா உங்களுக்கு வேற என்ன வேணும்?”

“போதும்மா... உனக்கு என்ன வேணும்?”

“எனக்கு ரெண்டு சப்பாத்தி அண்ட் குருமா”

“சர்வா உனக்கு என்ன வேணும்?”

“நான் போறேன்ம்மா”

“வா போகலாம்”

“நீங்க இருங்கம்மா, நான் போறேன், ஜுவா உனக்கு என்ன வேணும்?”

“நானும் வரேன்ண்ணா”

“ரெண்டு பேரும் பத்திரமா போங்க? டிரைவர் அண்ணா... உங்களுக்கு என்ன வேணும்?”

“நான் பார்த்துக்கறேன் மேடம்”

“மாமா... எனக்கு ரொம்ப ஹெட் ஹேக்க்கா இருக்கு... போனதும் படுத்துக்குவேன்... அவர் போன் பண்ணா சொல்லிடுங்க”

“சரிம்மா... நீ வாய்ஸ் மெசேஜ் ஒன்னு போட்டுடு”

“சரி மாமா”

உணவு வாங்கிக்கொண்டு வந்து, அன்னைக்குத் தந்துவிட்டு, முழுக்கைச் சட்டையை முழங்கை வரை மடித்து மேலேற்றிவிட்டுக் கொண்டான்.

அவன் சாப்பிட்ட விதத்தையும், அவன் கண்கள் அவ்வப்போது சுற்றிலும் நோட்டம் விட்டதையும் கண்ட பவித்ராவும் சிவாவும் அவ்வப்போது ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். நித்யாவும் இதைத்தான் செய்தார்.

கிளம்பும் நேரம் கூட, அனைவருக்கும் முன்பாக டிரைவருடன் நேராக காருக்குச் சென்றவன், காரைச் சுற்றி ஒரு பார்வையை ஓட விட்டான். அதன் பின்னர் கார் கதவைத் திறந்துவிட்டு தாத்தாவை ஏறச் சொன்னவன், அவருக்கு கதவைச் சாத்திவிட்டு, பின் பக்க கார் கதவை அன்னைக்குத் திறந்துவிட்டான். சம்யுக்தா ஏறி முடித்ததும் ஜுவாலாவை எற்றிவிட்டவன், காருக்குள் ஏறும் முன் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டுத்தான் உள்ளே ஏறினான்.

அவனது செய்கையைப் பார்த்த இருவரும் ஒருவகை அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடனேயே நித்யாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர்.

அவர்களின் மனமெங்கும் பல்வேறு குழப்பங்கள் இருக்க, சிவாவின் கைப்பேசிக்கு சர்வாவின் போட்டோ வந்து சேர்ந்தது.

காரை விட்டு இறங்கியதுமே, சிவா செய்த முதல் வேலை, அவனது செல்லை எடுத்துக்கொண்டு, அவனது பெற்றோர் அறைக்குச் சென்றதுதான். யாரும் பயன்படுத்தாமல் இருந்த அறையை, சுத்தம் செய்து, அதில் அனைவரின் புகைப்படங்களும் சிறு வயது முதல் மாட்டப்பட்டு இருந்தது. அன்னையின் மடியில் படுக்க விரும்பும் நேரங்களில் சிவா அந்த கட்டிலில் சில நிமிடங்கள் படுத்து எழுந்து வருவார்.

அங்கு மாட்டப்பட்டு இருந்த சிவாவின் போட்டோ முன் நின்றவர், சர்வாவின் போட்டோவை அதன் அருகில் வைத்துப் பார்க்க முயற்சிக்க, இரண்டும் ஒன்றே என்ற உண்மை அவருடைய பொட்டில் அறைந்தது போல இருந்தது.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சர்வாவை வேறு யாருடன் பார்த்து இருந்தாலும் அவர் சந்தேகித்து இருக்க மாட்டார், பரத்துடன் பார்த்த நொடி எதுவோ ஒன்று அவருக்கு இடித்தாலும், அது கண்டிப்பாக அவருடைய பேரன் என்று முழு மனதாக நம்பினார்.

அவர் பின்னே வந்து நின்ற இருவருக்குமே, இரண்டு போட்டோக்களைப் பார்த்து அதிர்ச்சிதான் ஏற்பட்டது.

“சிவா? என்ன இது?”

“கண்டிப்பா சர்வா நம்ம பேரன்”

“எப்படிங்க? அந்த பையனுக்கு பத்து வயசு இருக்கும்”

“இல்ல பவி... எப்பையோ எங்கையோ ஏதோ தப்பு இருக்கு?”

“எங்க என்ன தப்பு இருக்கப்போகுது? அப்படின்னா அந்த சம்யுக்தா நம்ம பொண்ணா? இல்லை அவ புருஷன் நம்ம பையனா?”

“தெரியலை பவி...”

“அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்”

“சொல்லும்மா”

“ஒரு வேளை உங்களுக்கு அண்ணா, தம்பி யாராவது இருந்தா?”

“இல்லைம்மா... எனக்கு நூறு சதவிகிதம் நிச்சயம், சர்வா எங்க பேரன்... அது எப்படின்னு தான் இனி கண்டு பிடிக்கனும்”

“எனக்கு தலையே சுத்துதுங்க, அவன் நடந்து வர்றது, சாப்பிடறது, அந்த சர்ட்டை முழங்கை வரை மடிச்சுவிட்டு அவன் உட்கார்ந்திருந்த விதம், அவன் பிளேசர் கழட்டிய விதம், கடைசியா கார்ல ஏறிப்போனது... எனக்கு மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு”

“நீ வீணா டென்ஷன் ஆகாத, என்னை நம்பி விட்டுடு... நான் பார்த்துக்கறேன்... அதுவரை இந்த விஷயம் நம்ம மூனு பேருக்குள்ள மட்டும் இருக்கட்டும். இந்த போட்டோவை எடுத்து எங்கையாவது ஒளிச்சு வை”

“ஏங்க? இதை ஏன் மறைச்சு வைக்கனும்?”

“நம்ம பேரன்னு தெரிஞ்சிடுச்சு, இனி நம்மகிட்ட கூட்டிக்கிட்டு வர்ற வேலையைப் பார்க்கனும். இந்த ரூம்க்கு அதிகமா நம்மதான் வருவோம், பசங்க வந்ததில்லை, எங்கையாவது நம்ம சர்வாவை பார்த்தா, இந்த போட்டோவை வந்து கண்டிப்பா பார்ப்பாங்க, என்னதான் இங்க வர்றதில்லைன்னாலும் கண்டிப்பா அவங்களுக்கு சந்தேகம் வரும்”

“சரிங்க, இப்பதான் உங்களுக்கு வயசாகிடுசுல்ல, இந்த போட்டோவை பார்த்தா மட்டும் தான் சந்தேகம் வரும், அதுக்கு நான் போட்டோவை ஒளிச்சு வைக்கிறேன், இங்க அண்ணாவோட சின்ன வயசு போட்டோ இதே வயசுக்கு கிடைச்சா அதை எடுத்து இந்த மாதிரி ரெடி பண்ணி வைக்கிறேன்”

“குட்... நான் நம்ம பேரனையும், நம்ம பசங்களையும் இங்க வரவைக்க முயற்சி பண்றேன்... நீ நிம்மதியா இரு, உன் ஹெல்த் ரொம்ப முக்கியம்”

“சரிங்க... அப்ப அந்த குட்டி பொண்ணு? அது நம்ம பேத்தியா இருக்குமா?”

“என் கணிப்புப்படி உறுதியா அவ நம்ம பேத்தியா தான் இருப்பா”

“எனக்கு அந்த நொடி என்ன செய்யறதுன்னு தெரியலை, செயினைக்கழட்டி அவ கழுத்தில் போடத்தான் தோணுச்சு”

“இரத்த பாசம் பவி, அதுதான் உன்னைத் தூண்டி இருக்கு, நீ போய் வேலையைப் பார், நான் மத்ததை பார்த்துக்கறேன்”

“சரிங்க... நீங்க வாங்க, நாங்க போயி பாப்பாவை தூங்க வைக்கிறோம், நீங்க நேரமா தூங்குங்க”

அன்றைய இரவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனக்குழப்பத்தில் கழிய, துக்கம், சந்தோசம் இரண்டும் கலந்த மன நிலையில் பரத் இருந்தார்.

ஜுவாலாவின் கழுத்தில் இருந்த பவியின் செயினை, சம்யுக்தா பரத்திடம் கொண்டு வந்து தந்திருந்தாள். அதை நினைவு கூர்ந்து அமர்ந்திருந்தார்.

“இந்தாங்க மாமா அத்தையோட செயின்”

“எதுக்குமா என்கிட்டே தர்ற?”

“வைச்சு இருங்க மாமா, அப்புறமா வாங்கிக்கறேன், என்னோட நகையோட மிக்ஸ் ஆகிடும்” என்று சொன்னவள், அவருடைய கையில் அதை வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறப் போனாள்.

வெளியேறும் முன் திரும்பி நின்று அவரைப் பார்த்தவள்,

“மாமனார் மருமகளுக்கு, இது உங்க அத்தையோடதுன்னு நகை ஏதாவது ஏதாவது ஒரு சந்தர்பத்துல தருவாங்க, நீங்க இதுவரை எனக்கு எதுவுமே தர முடியலை, இந்த ஒன்னையாவது எனக்கு வைச்சிட்டு போங்க மாமா” என்றவள் பிசிறடித்த குரலுடன் அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.

பேரப்பிள்ளைகளுக்கு தெரியாமல் அறையில் மறைத்து வைத்திருந்த பவித்ராவின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தவர் அந்த செயினை கையில் வைத்துக்கொண்டு கண்கள் கலங்க ஆரம்பித்தார்.

“ஏன் பவி... உனக்கு என்னை கொஞ்சம் கூட நினைவுக்கு வரலியா?” என்று மனமுருகி கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தார்.

அதே இரவில்,

மானவ் டெல்லியை நோக்கிப் பயணமாக, பிரித்வி திருச்சி நோக்கி வந்து கொண்டு இருந்தான். இன்னொரு பக்கம் சோகமே உருவாக ஹோட்டல் அறையின் பால்கனியில் அமர்ந்து வெளியே ரோட்டில் செல்லும் வாகனங்களை மனிஷா பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

மறுநாள் காலை அழகாகப் பொழுது புலர,

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அன்றைய ஓட்டத்திற்கு தயாராக,

தனது தினசரி ஓட்டத்தை தவிர்த்துவிட்டு, யோசனையுடன் ஹாலில் அமர்ந்திருந்தார் சிவா. அவரது யோசனை படிந்த முகத்தைக் கண்ட பவி,

“என்னங்க யோசிக்கறீங்க?” என்று அவரது அருகில் வந்து அமர்ந்தாள்.

“சம்யுக்தாவை எப்படி வீட்டுக்கு வர வைக்கிறதுன்னு யோசிக்கறேன்”

“புரியலைங்க”

“சம்யுக்தாவையும், பசங்களையும் இங்க வர வைக்கனும், அதுதான் எப்படின்னு யோசிக்கறேன்”

“வரவைச்சு?”

“பவி தொடர்ந்து சில மணி நேரங்கள் அவ நம்ம கூட இருந்தா, அவகிட்ட அவளோட அப்பா, அம்மா பத்தி, பரத், பரத் மனைவி பற்றி, சம்யுக்தா புருசனைப் பத்தி கொஞ்சம் கொஞ்சமா விசாரிச்சா இந்த சிக்கலோட நூல் நுனி தெரிஞ்சுடும்.

“இதுதான் பிரச்சனையா? நெக்ஸ்ட் பிரைடே வீட்ல ஹோமம் ஏற்பாடு பண்ணி இருக்கேன், அப்ப வரச் சொல்லி இன்வைட் பண்ணுவோம், ஆனா எனக்கு சர்வாவை நேர்ல பார்க்கனும் போல இருக்கு, இன்னிக்கு நேர்ல போயி இன்வைட் பண்ணிட்டு வருவோமா?”

“நீ வேண்டாம் நான் மட்டும் போறேன்”

“இல்லைங்க நானும் வரேன்... பிளீஸ்ங்க”

“சரி கிளம்பி ரெடியாகு, போய் கூப்பிட்டுட்டு வரலாம்”

“சரிங்க, நீங்க முதல்ல போன் பண்ணி வரலாமான்னு கேட்டுக்கோங்க”

சிவா போனை எடுத்து சம்யுக்தாவை அழைத்தார்.

ஹாலில் காபி குடித்துகொண்டு இருந்த சம்யுக்தா போன் அழைக்கவும், அதை எடுத்து பார்த்தது திகைத்தாள்.

“மாமா சிவா அங்கிள் கால் பண்றார், ஏதாவது பிராப்ளமா இருக்குமா?”

“பேசுவார்ன்னு நினைச்சேன்... பேசு”

அவரது பதிலில் புருவம் சுருக்கியவள்,

“பேசுவார்ன்னு நினைச்சிங்களா?”

“ம்ம்... நீ முதல்ல பேசு. அப்புறம் நான் சொல்றேன்”

போனை அட்டென்ட் செய்தவள்,

“குட் மார்னிங் அங்கிள்... சொல்லுங்க...”

“குட் மார்னிங்ம்மா... நீ பிரீயா இருக்கியா?”

“எஸ் அங்கிள் சொல்லுங்க...”
 
Status
Not open for further replies.
Top