All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கதை திரி

Status
Not open for further replies.

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!,

புதிதாய் ஒரு முயற்சியோடு ஐவர் கொண்ட அணியாய் (காருராம், மித்து, பொம்மு, அருணா வேணு, கிருநிசா) நாங்கள் வந்திருக்கிறோம்... முற்றிலும் மாறுபாடான கதை... எல்லோருக்கும் கொடுக்கும் ஆதரவை இதற்கும் தந்து ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்...

அன்புடன்,
ஸ்வராகினி :love:
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்,

நாங்க வந்துட்டோம், (நாங்கன்னா யாருன்னு நீங்க மைன்ட் வாய்ஸ்ல கழுவி ஊத்துறது நல்லா கேட்குது) ஹிஹி நாங்கன்னா நாங்க தான் பா ... கதை எழுதி உங்கள் நெஞ்சை கொள்ளை கொள்ள போகும் அந்த பஞ்ச வர்ண திருடிகள்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி கதையை கண்டுபிடின்னு உங்களை கதற விட்டு, கதை எழுத போற எங்களை கண்டுபிடின்னு கத்த விட்டு , விஷ்ணு கூட டூயட் பாடுன நம்ம அபிக்கு டீயாத்தி உங்க கிட்ட கட்டையால அடிவாங்குன இந்த ஸ்வராகினி செல்லங்களை நியாபகம் இருக்கா..

(உடனே இல்லைன்னுலாம் சொல்லி எங்களை அசிங்கப்படுத்தக் கூடாது, அப்பறம் அடுத்த டீயில அபிஷேக் கானை வச்சு உங்க காதை கடிச்சு வச்சுருவோம்.. Be careless)

ஓகே ஓகே நாங்க வந்த விஷயம் என்னான்னா ஆத்துன டீ ஆறிப்போச்சே , அப்போ முறையா ஃபுல் மீல்ஸ் போடுறதுதான நம்ம தமிழர் பண்பாடு அதான் யூடியோட வந்துட்டோம்..

நல்லா விருந்துல திருப்தியா குழம்பு குழம்பு(ஆக்ஷன்) ரசம் ரசம்(காதல் ரசம்) மோர் மோர்(மொக்கை ஜோக்கு ) எல்லாத்தையும் சாப்பிட்டுபுட்டு ஏப்பம் விட்டுட்டு மொய் வைக்காம யமகா வண்டியில எஸ்கேப் ஆகிப்புடலாம்னு நினைக்காதிங்க, நீங்க ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஏன்னா நாங்களே திருடிங்க தான எல்லா குறுக்கு சந்தையும் முட்டுச் சந்தாக்கிட்டோம்..

அதுனால மருவாதையா போய் சமத்து சக்கரைக்கட்டிகளா கமென்ட்ஸ் திரெட்ல நம்ம விருந்து எப்படி இருந்துச்சுன்னு சொல்லிப்போட்டுதான் போகனும் சொல்லிப்புட்டேன் ஆமா..

சரி சாப்பிட்டு மட்டும் மட்டையான போதுமா ஒரு கிலுகிலுப்பி ஜிலுஜிலுப்பு சாரி சாரி விறுவிறுப்பு வேணாமா??? சோ இங்கயும் நம்ம கொஞ்சம் விளையாடலாம்..

என்ன விளையாட்டுன்னு தான கேட்குறீக, வேற என்ன நமக்கு தெரிஞ்ச திருடன் போலீஸ்தேன்.. ஆனா கொஞ்சம் வேற மாதிரி..

என்னன்னு கேக்குறீகளா , நீங்க யூடியை படிச்சுப்போட்டு அதை எழுதி உங்க மனசை மஞ்சைப்பையில வச்சு திருடிப்போன அந்த திருடி (எழுத்தாளர்) யாருன்னு கண்டுபிடிக்கோணும்..

ஹம்ம் இது வழக்கமா நடக்குறதுதான இதுல என்ன வேற மாதிரின்னு கேட்குறது கேட்குது..

இதுல என்ன ஸ்பெஷல்னா எப்பயுமே திருடனை போலிஸ் கண்டுபிடிச்சா அந்த போலிஸ்க்கு அவங்களை விட பெரிய போலிஸ் தான பரிசு கொடுப்பாக, ஆனா இங்க உங்க கையில மாட்டுன அந்த திருடியே உங்களுக்கு வந்து பரிசு கொடுப்பாக.. அந்த திருடி யாருன்னு சேர்த்து என்ன பரிசுன்னும் நீங்கெல்லாம் யோசிச்சுகிட்டே போய் இப்போ நம்ம யூடியை படிச்சுப்போட்டு வாங்க..

அப்பறம் முக்கியமான சேதி என்னன்னா எங்க திருடிங்களுக்கு ரொம்ப தாரளமனசுனால ஒரு போலீஸ்க்கு மட்டும் இல்லை மொத கண்டுபிடிக்கிற மூனு போலீஸ்க்கு பரிசு காத்துக்கிட்டு கெடக்கு வெரசா கண்டுபிடிங்க போலீஸ்களே.. தமிழ்நாடு போலீஸ் மாதிரி எல்லாம் முடிஞ்ச பின்னாடி வந்து பரிசு எங்கன்னு பாவமா பார்த்தா சங்கம் பொருப்பில்லை..

ஹான் இன்னொரு விசயத்தை மறந்துபுட்டேனே.. இனி வாரா வாரம் திங்கள், புதன், வெள்ளி அன்னைக்கு விருந்து (யூடி) போட்டு, செவ்வாய், வியாழன், சனி அன்னைக்கு பரிசு கொடுப்போம்.. சண்டே மட்டும் தான் உங்களுக்கு லீவு சோ எல்லாரும் தீயா வேலை பாருங்க ஓடுங்க ஓடுங்க..

இம்புட்டு நேரம் எங்க தொல்லையை சகிச்சுகிட்டு இனி கதை முடியப்போற வரைக்கும் எங்கள் அலப்பறையை அனுபவிக்கப்போகும் அனைத்து நல்ல உள்ளங்களிடமிருந்து நன்றியுடன் விடைபெறுவது .

உங்கள்,

ஸ்வராகினி.
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 1:

காக்கா குருவிகள் கூட தங்கள் இணையோடு உறவாடிவிட்டு அகமகிழ்ந்து ஆழ்ந்த நித்திரையில் விழுந்து கிடந்த அந்த அர்த்த ஜாமத்தில் நான்கு விழிகள் மட்டும் உறங்காமல் எதற்காகவோ காத்துக் கொண்டிருந்தது.

‘இராம் நகர் 3வது குறுக்கு சந்து’ என்ற பெயர் பலகையின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த அந்த இரு ஜோடி விழிகளுக்கும் சொந்தக்காரர்கள் அந்த தெருவில் யாரேனும் வருகிறார்களா என நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்.

யாரும் வரவில்லை இது தான் சரியான சமயம் என நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டு திரும்பினாள் அவள் - பிக்பாக்கெட் பத்மா, நம் கதையின் நாயகி!
அப்போது அவள் முதுகு பக்கம் ஏதோ ஊர்வது போல் இருக்க, என்னவென்று திரும்பி பார்க்க அவள் முதுகில் அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து கோலம் போட்டுக் கொண்டிருந்தான் அவளின் கூட்டாளி.

“ச்சு என்ன டா குண்டா” என மிக மெல்லிய குரலில் அவள் கேட்டாலும், அதில் அப்பட்டமாக எரிச்சல் தெரிந்தது.

அவனோ தன் கையில் இருந்த சுவீங்கம்மை தெறி விஜய் போல் வாயில் போட்டு பிடிக்க முயற்சி செய்து கொண்டே, “என் பேர் குண்டன் இல்லை கான்!!! அபிஷேக்கான்னு எத்தனை முறை சொல்றது உனக்கு” என கேட்டுக்கொண்டே தவறி கீழே விழுந்த சுவீங்கத்தை எடுக்க அவன் குனிய,

கடுப்பில் பற்களை கடித்த பத்மா அவன் குனிந்த சமயம் அவன் முதுகில் தன் இடது புறங்கையை வைத்து குத்தியவள் அவன் கத்தாமல் இருக்க, அவன் பாக்கெட்டில் வைத்திருந்த பன்னை இன்னொரு கையால் எடுத்து அவன் வாயில் திணித்திருந்தாள்.

“இதான் இப்போ ரொம்ப முக்கியமா.. மரியாதையா வா.. இதான் கரெக்ட் டைம் எல்லாரும் குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புறப்படுத்து குறட்டை விட்டுன்னு இருப்பானுங்க.. நம்ம இப்போ போனா தான் கரெக்டா இருக்கும் அதுனால என் பின்னாலையே வா.. சொதப்புன கோண் ஊசியை எடுத்து பின்னாடி குத்திருவேன்..” என மெதுவாக அவனுக்கு ஆணையிட்டவள் பூனை நடையிட்டு அந்த பங்களாவின் பின்புற காம்பவுன்டிற்கு அருகில் வந்து நின்றாள்.

அவள் பின்னோடே பாப்கார்ன் பாக்கெட்டை பிரிக்க போராடிக் கொண்டே வந்த அபிஷேக் அவள் நின்று விட்டது தெரியாமல் அவள் மீது மோதிவிட, அதற்குள் கையிலிருந்து பிரித்த பாப்கார்ன் கீழே விழுந்து அந்த இடமெங்கும் சிதறி போக,
அதையே பார்த்தவன், “ஷ்!!! பாப்கார்ன் போச்சே” என வருந்த அவன் தலையிலே நங்கென கொட்டியவள், “பேசாம ஒழுங்கா என் பின்னாடி வா” என்றவள் அந்த காம்பவுன்டுக்கும் அங்கிருந்த மரத்துக்கும் உள்ள தூரத்தை கணக்கெடுத்துக் கொண்டாள்.

அவள் பார்வை சென்ற திசையைப் பார்த்த அபிஷேக்கிற்கு அவள் திட்டம் புரிந்துவிட பக்கென்று இருந்தது, “ஹேய் இதோ பாரு நீ ஏதோ கடவுள் புண்ணியத்துல ஒல்லியா பிறந்துட்டேன்ற திமிர்ல இப்படியெல்லாம் மரம் விட்டு மரம் தாவுற திட்டம் போடாத.. வீ ஆர் ஹியூமன்ஸ் நாட் மங்கிஸ்.. ஓகே.. ஒழுங்கா என் பாடி கண்டிசனுக்கு எது செட் ஆகுமோ அதை மட்டும் யோசி” என்று கூறியவன் ஸ்டைலாக தன் அரைக்கால் ட்ரவுசர் பாக்கெட்டுக்குள் கையை விட்டு நிற்க,
பத்மா மெதுவாக திரும்பி அவனை மேலும் கீழும் பார்த்து, பத்துமாத நிறைவயிருடன் இருக்கும் சிலிண்டர் போன்ற அவன் உருவத்தைக் கண்டு,

“உனக்கு ஏத்த மாதிரி நான் ப்ளான் பண்ணனும்னா ஒரு பாதாள சுரங்கம் தோண்டி உன்னை அது வழியா உருட்டி தான் விடனும்... இது ஒன்னும் ரொம்ப பெரிய காம்பவுன்ட் எல்லாம் இல்லை.. அதுனால மரியாதையா அந்த மரத்துல ஏறி வா.. அதோட கிளை இந்த வீட்டுக்குள்ள வரைக்கும் போகுது.. அப்படியே மெதுவா குதிச்சிரலாம்” என தன் யோசனையை கூற,
“ஓய் நான் என்ன வனமகன் ஜெயம்ரவியா அப்படியே ஏறி ஏறி குதிக்க?? உன்னை நம்பி வந்தேன் பாரு... மரியாதையா வேற ஐடியா சொல்லு” என அபிஷேக் கடுப்படித்தான்.

“நீ வந்தா வா வரலைன்னா கம்முனு இங்கனயே குந்தின்னு கெட.. ஆனா மவனே நான் அடிச்சுட்டு வந்த பின்னாடி சோத்துல கையை வச்ச அதை உடைச்சு அடுப்புல போட்டு எழும்பை எடுத்து நாய்க்கு போட்டிருவேன் ஜாக்கிரதை” என மிரட்டியவள் சடுதியில் அங்கிருந்த மரத்தில் விடுவிடுவென ஏற,
‘இவ குடும்பம் ஒருவேளை தென்னை மரத்துல ஏறி தேங்காய் பறிச்சுப்போடுற குடும்பமா இருக்குமோ, என்னாமா ஏறுறா?? சரி கான் நமக்கு சோறு தான் முக்கியம் அதுனால அவ பின்னாடியே ஏறிரு டா’ என தனக்குத் தானே கூறியவன் அங்கிருந்த மரத்தில் ஏற முனைந்தான்.

முன்னால் சென்றவள் இவன் எப்படியும் வருவான் என நினைத்து அங்கிருந்த ஒரு கிளையில் கயிறை கட்டியவள் அதை அவனிடம் தூக்கிப்போட,
மேலே அவளைப் பார்த்து ஒரு ப்ளையிங்க் கிஸ்ஸை பறக்க விட்டவன், “ஹா தேங்க் யூ யா” என கூறிவிட்டு கயிற்றின் துணையோடு மிகவும் சிரமத்திற்கு பின் மேலே ஏறினான்.

அதற்குள் தொப்பென்று உள்ளே குதித்த பத்மா, அடுத்து எவ்வழியாக உள்ளே நுழைவது என அந்த வீட்டை தன் லேசர் கண்களால் ஸ்கேன் செய்ய, அவளுக்கு பின்னாலே ஒருவழியாக தட்டுத் தடுமாறி குதித்த அபிஷேக் அவளின் ஆராய்ச்சி பார்வையைக் கண்டு அவள் அருகில் வந்தவன், “ஆமா நீ பெரிய விஜய் பாரு?? நீ பார்த்ததும் இந்த வீட்டோட ப்ளூ ப்ரின்ட் அப்படியே டொன்டொட டொன்டொடட டொன்டொடன்னு மியூசிக்கோட 3டில தெரிய.. ச்சீ கம்முனு வா பால்கனி வழியா தான எப்போவும் போவோம்” என அவளை கலாய்த்து விட்டு முன்னே நடந்தான்.
“டேய் குண்டா என் கடுப்பைக் கிளப்பாம ஒழுங்கா வந்து சேரு” என கூறியவள் முன்னே நடக்க, அவள் பின்னாலே அவனும் சென்றான்.
அவள் அங்கிருந்த பைப் வழியாக மேலே ஏறிச்செல்ல, அவன் பின்னால் வருகிறானா என திரும்பி பார்த்தாள்.

அவனோ அவளைப் பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டே தலையில் அடித்தவன் அங்கு கீழே கிடந்த ஏணியை எடுத்து வாகாக வைத்தவன் முட்டுக் கொடுக்க அங்கிருந்த பூந்தொட்டியை எடுத்து வந்து வைத்து அதன் மேலே ஏறினான் அதே நக்கல் புன்னகையோடு.

“பார்த்து டா.. பூசணிக்காய் கீழ விழுந்தா வெடிச்சு துண்டு துண்டா சிதறிருமாம்” என நக்கல் குரலில் கூறியவள்... கிடுகிடுவென மேலே ஏற,

ஒரு நிமிடம் அவள் சொன்னதை கேட்டு ஜெர்க் ஆனாலும், தன்னை சமாளித்துக் கொண்டு ஜாக்கிரதையாக அதில் ஏறினான்.

இருவரும் பால்கனிக்கு வந்து நிற்க, நல்லவேளையாக அது திறந்து வைக்கப்பட்டிருந்தது. அது மூடியே இருந்தாலும் அதை தன் சாமர்த்தியத்தால் பத்மா திறந்து விடுவாள் என்பது வேறு கதை.
இருவரும் பூனை நடையிட்டு அந்த பால்கனியை ஒட்டி இருந்த படுக்கையறைக்குள் நுழைய, அது காலியாக இருப்பதைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டு அங்கிருந்த பீரோவிற்கு அருகில் செல்ல,

“டேய் டேய் டேய் அவனுங்க வந்துட்டானுங்க டா” என சப்தமாக கேட்ட ஆண் குரலில் இருவரும் நடுங்கிப் போய் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்க்க,
அங்கே யாரும் இருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை.
இன்னும் பயம் தெளியாமலே ‘சீக்கிரம் இந்த கதவை தொற கிடைக்கிறதை அள்ளிட்டு போய்ருவோம் வேகமா’ என மெதுவாக அபிஷேக் கூற,

எப்பேற்பட்ட பூட்டையும் அசால்ட்டாக திறந்துவிடும் திறமை படைத்த பத்மாவும் அதை மெதுவாக தான் கொண்டு வந்திருந்த சிறிய கம்பி போன்ற ஒன்றை வைத்து திறக்க, சரியாக அதே சமயம், “டேய் துப்பாக்கி எடுத்து ஒரே போடா போட்டுத்தள்ளுடா அப்போ தான் இனிமேல் நம்ம இடத்துக்குள்ள வரமாட்டானுங்க” என முன்பை விட சப்தமாகவும் ஆங்காரமாகவும் கேட்ட குரலில் இருவருக்கும் சப்தமும் அடங்கியது.

மெதுவாக யார் அது என அந்த அறையில் தேட, அங்கு யாருமில்லாமல் போக, பயந்து கொண்டே அந்த கதவின் துவாரம் வழியாக பார்க்க, அங்கே வெளியே ஒரு வாலிபன் அமர்ந்து காதில் பெரிய ஹெட்போன் மாட்டிக் கொண்டு தன் போனை பார்த்து கத்திக் கொண்டிருந்தான்.

“அட சனியன் பிடிச்சவனே PUBG விளையாடுறதுக்கு தான் இந்த அக்கப்போறா... ஒரு நிமிஷம் எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல நீ..” என அபிஷேக் புலம்ப,

அவளோ அவனை கண்டுகொள்ளாமல் அங்கிருந்த பீரோவை திறந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சில நகைகளை எடுத்து தன் பைக்குள் நிரப்பியவள், பின் அங்கிருந்த சில ஐநூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்ப முற்பட, அவனோ அந்த அறையில் இருந்த ஆளுயர கண்ணாடியில் தன் அழகை இரசித்துக்கொண்டு அங்கிருந்த ஃபாரின் வாசனை திரவியத்தை தன் உடலெல்லாம் தெளித்துக் கொண்டிருந்தான்.

‘எனக்குன்னு வந்து வாய்க்கிது பாரு’ என சலித்துக் கொண்ட பத்மா அவன் சட்டையைப் பிடித்து தரதரவென்று பால்கனிக்கு இழுத்துச் சென்றாள்.
அவன் மறக்காமல் அந்த சென்ட் பாட்டிலை கையோடு எடுத்துக் கொண்டு வந்ததால் அவளை திட்டாமல் தான் வந்த வழியே இறங்க ஆரம்பித்தான்..

அப்போது அறைக்குள் வந்த அந்த வாலிப இருவரையும் பார்த்துவிட்டு, “டாட் அந்த இரண்டு பேரையும் துப்பாக்கியை எடுத்து சுடுங்க” என கத்த,

“அட இவனுக்கு வேற வேலை இல்லை.. இப்போ அவங்க நைனா கூட சேர்ந்துகின்னு விளையாட ஆரம்பிச்சுட்டான் போல, கருமத்தை அவனுக்கு துப்பாக்கி குடுத்து ஒருத்தனையாச்சும் சுட சொல்லுங்க டா.. காதுக்குள்ளையே வந்து கத்திக்கின்னு கிடக்கான்” என அபிஷேக் சலித்துக் கொள்ள,
“யூ கல்ப்ரிட்ஸ்... ஐ அம் கோன்னா ஷூட் யூ” என நரைத்த தாடியுடன் வெள்ளை ஜிப்பா போட்ட ஒருவன் இவர்களை பார்த்து கையில் துப்பாக்கியுடன் கத்திக் கொண்டிருக்க,

‘ஆத்தி அப்போ இவன் நம்மளை தான் சுட சொன்னானா’ என அவன் பயத்தில் படியில் கால் வைக்காமல் கால் தவறி அப்படியே மல்லாக்க விழுந்துவிட,

அவனை முறைத்த பத்மா, சட்டென்று மேலிருப்பவன் சுதாரிக்கும் முன் அபிஷேக்கின் கையில் இருந்த சென்ட் பாட்டிலை பறித்து சரியாக குறிபார்த்து அந்த துப்பாக்கியை நோக்கி எரிய, அது அவரின் கைகளில் பட்டு அங்கிருந்த துப்பாக்கி கீழே ஓர் மூலையில் போய் விழுந்தது.

அவர்கள் தடுமாறிய அந்த சிறிய இடைவெளியில் அபிஷேக்கை இழுத்துக் கொண்டு அவள் வாசலுக்கு ஓட,

“ஏய் வாசல்ல வாட்ச் மேன் இருப்பான் என்ன பண்ற” என அவன் கேட்க,
ஓடிக்கொண்டே, “இப்போ காம்பவுண்டை நீ முக்கி முக்கி ஏறுறதுக்குள்ள அவனுங்க உன்னை கோழி அமுக்குற மாதிரி அமுக்கிறுவானுங்க.. ஒழுங்கா பேசாம என் கூட வா” என கூறிக்கொண்டே பத்மா வாயிலை நெருங்கிவிட,
அவனும் அவள் பின்னாலே ஓடினான்.

அதற்குள் அந்த ஜிப்பா போட்ட மனிதர், “ஹேய் வாட்ச்மேன் கேட்ச் தெம்” என சத்தம் போட, தூங்கி வழிந்து கொண்டிருந்த வாட்ச்மேன் அடித்து பிடித்து எழுந்து, “யெஸ் சார்” என சல்யூட் அடிக்க, இவர்கள் அதற்குள் கதவை திறந்து கொண்டிருந்தனர்.

அப்போது தான் இவர்களைக் கண்ட வாட்ச்மேன் தன் கையில் வைத்திருந்த பெரிய துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டி, “ஒழுங்கா இந்தப்பக்கம் வந்திருங்க இல்லை குருவி சுடுற மாதிரி சுட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருப்பேன்” என மிரட்டினார்.

பத்மாவோ சற்றும் அசராமல், “யோவ் பேன்ட் ஜிப்பை போடுயா முதல்ல” என கூற, “அய்யய்யோ பொம்பளை பிள்ளை முன்னாடி அசிங்கமா போச்சே” என அவர் குனிந்த சமயம் அபிஷேக்கை இழுத்துக் கொண்டு அவள் வெளியே ஓடி இருந்தாள்.

‘பேன்ட் ஜிப்பெல்லாம் போட்டு தான் இருக்கே’ என நிமிர்ந்தவர் அங்கு அவர்களை காணாமல் திகைக்க, தன் முன் வீராசாமியை போல் நின்றிருந்த தன் முதலாளியை பார்த்து அதிர்ந்தார்.

“யூ ப்ரையன்லெஸ் மங்கி...யூ ஆர் டிஸ்மிஸ்ட்.. கெட் அவுட் நவ்” என கத்தியவர் அங்கிருந்து சென்று அவர்கள் தென்படுகிறார்களா என தேட, ஆளவரமற்ற சாலையே அவரை வரவேற்றது.

“ஷிட்!!!!!” என தன் கால்களை ஓங்கி தரையில் உதைத்து அங்கேயே தலையை பிடித்திக்கொண்டு அமர்ந்து விட்டார் அந்த வெள்ளை ஜிப்பா.

***********************************
“பைய்யா பைய்யா!!!” என பின்னங்கால் பிடரியில் அடிக்க, அரக்கப்பறக்க அந்த குடோனுக்குள் ஓடி வந்தான் ஒருவன்.

“டேய் என்ன டா எதுக்கு இப்போ இப்படி ஓடி வர?? அப்படி என்ன தலை போற காரியம்??” என பீடாவை வாயில் திணித்துக் கொண்டே தலைவன் போல இருந்த ஒருவன் கேட்க,

“பைய்யா நி..நிஜமாவே இன்னும் க்..க்கொ..கொஞ்ச நேரத்துல நம்ம தலை எல்லாம் உ..ருள போகுது..அதர்வா நம்ம இருக்க இடத்தை கண்டுபிடிச்சுட்டான்.. இங்க தான் வந்துகிட்டு இருக்கான்” என மூச்சு வாங்க அவன் கூற,

‘அதர்வா’ என பெயரைக் கேட்டதுமே அங்கிருந்த அனைவருக்கும் சர்வமும் ஒடுங்கிப் போக, அந்த தலைவன் போல் இருந்தவன் “டேய் எல்லாரும் கிளம்புங்க டா அவன் வர்றதுக்குள்ள இங்க இருந்து எப்படியாச்சும் தப்பிச்சிருக்கனும்” என பயத்தை மறைத்துக் கொண்டு கூறியவன் அங்கிருந்து ஓடத் தொடங்கினான்,
அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் ஓட, அப்போது அவர்கள் வழியை மறைப்பது அங்கிருந்த மரக்கதவை உடைத்துக் கொண்டு வந்தது அந்த போலீஸ் ஜீப்.

எமதர்மராஜா அதர்வாவின் ரூபத்தில் மாருதி எர்டிகாவில் வந்திருப்பதை புரிந்துகொண்ட அந்த உளவாளி அவனிடமிருந்து தப்புவது கடினம் என எங்கே ஒளியலாம் என இடத்தை தேட ஆரம்பித்தான்.

அந்த எர்டிகாவில் இருந்து கதவை திறந்து ஒற்றைக் காலை அவன் வெளியில் வைக்கும் போதே இங்கிருந்த பலருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.

காரினுள் இருந்த ஆறடி உயரத்தில் கருநீல ஜீன்ஸ் அணிந்து, கருப்பு டீசர்ட் அந்த முறுக்கேறிய புஜங்களை இறுக்கி பிடித்திருக்க, கண்ணில் தீப்பொறியுடனும் உதட்டில் எள்ளல் புன்னகையோடும் கம்பீரத்தின் மொத்த உருவமாய் இறங்கினான் அதர்வநவ்தீபன் IPS நம் கதையின் நாயகன்.

இறங்கியவன் மிடுக்காக ஒற்றைக் காலை மடக்கி கதவில் சாய்ந்தவாறே அங்கிருந்தவர்களை ஒவ்வொருவராக நோட்டமிட, அவனின் துளைக்கும் பார்வையைக் கண்டு வெளிப்படையாகவே சிலர் நடுங்க ஆரம்பித்தனர்.

அந்த தலைவன் எப்படியாவது இவனிடமிருந்து தப்பித்து விடும் நோக்கோடு,
“இதோ பாரு அதர்வா எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்” என வெள்ளைக் கொடியை பறக்கவிட,

அவன் கண்களை நேராக பார்த்துக் கொண்டே தன் பேன்ட் பாக்கெட்டில் இருகைகளையும் நுழைத்துக் கொண்டு அழுத்தமான காலடியோடு அவனை நெருங்கினான் அதர்வா,
பயத்தில் அவனுக்கு வேர்த்துக் கொட்ட, உதட்டின் ஓரத்தில் தோன்றிய லேசான சிரிப்புடன், “எனக்கு எப்பவுமே தீர்த்துட்டு பேசுறது தான் வழக்கம்” என கூறியவனின் கண்களில் இருந்த வெறியைக் கண்டு அவர் இரண்டு அடி பின்னால் எட்டு வைக்க,

அப்போது தன் பின்னால் குத்த வந்த ஒரு தடியனை கையை மடக்கி முன்னால் இழுத்தவன், தன் முட்டியால் அவன் அடிவயிற்றில் பலமாக முட்டி அவனை சட்டையை பிடித்து அப்படியே தூக்கி அந்த தலைவனின் காலடியில் வீசினான் அதர்வா.

நொடிப்பொழுதில் நடந்துவிட்ட இந்த நிகழ்வை நம்பமுடியாமல் அனைவரும் திகைத்து நிற்க, கீழே விழுந்து கிடந்தவனின் முனகலில் நினைவிற்கு வந்து மீத மிருந்தவர்கள் அவனை தாக்கப்போக,

தன் கழுத்திற்கு மிக அருகே வந்து கொண்டிருந்த கத்தியைக் கண்டு தலையை பின்னால் சாய்த்து அதிலிருந்து தப்பித்த அதர்வா, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை சரியாக குறிபார்த்து சுட்டான்.

தன் கையைப் பிடித்துக் கொண்டு போராடிய இருவரையும் தன் ஒரு கை, மற்றும் கால்களை பயன்படுத்தி அடித்து துவம்சம் செய்தவன், இன்னொரு கையால் அங்கிருந்தவர்களை சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தான்.

பத்து நிமிடத்தில் அந்த இடமே இரத்த வெள்ளத்தில் காட்சி அளிக்க, மொத்தம் எத்தனை சடலங்கள் கிடக்கின்றன என கண்காளாலே எண்ணியவன், 14இல் ஒன்று குறைவது கண்டு தன் கண்களை சுழலவிட,

அதுவரையில் அங்கு நடப்பதை ஏதோ தெலுங்கு பட ஃபைட் சீன் போல் பார்த்துக் கொண்டிருந்த உளவாளி, அவன் தன்னைத் தான் தேடுகிறான் என்று புரிந்த அடுத்த நிமிடமே அவன் காலில் வந்து சாஷ்டாங்கமாக விழுந்திருந்தான்.

“சார் நான் பாவம் சார் என்னை விட்டிருங்க சார்.. நிஜமாவே நான் ஒன்னுமே பண்ணலை சார்.. இவங்களுக்கு வெளிய ஹடக்குறதை தெரிஞ்சுட்டு வந்து மட்டும் சொல்லுவேன் சார்.. இனிமேல் அது கூட சொல்ல மாட்டேன் சார்.. என்னை விட்டுருங்க சார்” என அவனின் காலைக் கட்டிக் கொண்டு கதற,
தன் காலை அவனிடமிருந்து பிரித்து எடுத்தவன், அவன் சட்டையை பிடித்து மேலே தூக்கி,

அவன் தோளில் கையைப் போட்டுக் கொண்டே நடந்தவன், “என்ன தம்பி நான் வரேன்னு உனக்கு முன்னாடியே நியூஸ் கொடுத்த அந்த இன்ஸ்பெக்டர், என்னோட என்கவுன்டர் லிஸ்ட்ல உன் பேர் தான் முதல்ல இருக்குன்னு சொல்லாம விட்டுட்டாரா.. ஹய்யோ பாவம்” என அவனுக்காக பரிதாபப்படுபவன் போல் நடித்தவன் அவனைச் சுற்றி போட்டிருந்த கையில் வைத்திருந்த துப்பாக்கியை அவன் இதயத்தில் வைத்து ட்ரிக்கரை அழுத்தியிருந்தான்.

இரத்தம் பீறிட திறந்த வாயுடன் அந்த உளவாளி அப்படியே மல்லாக்க சரிய, அனைவரையும் பார்த்து ஒரு திருப்தியான புன்னகையை சிந்தியவன்,

தன் பாக்கெட்டில் வைத்திருந்த கருப்பு கூலர்ஸை ஒற்றைக்கையில் ஸ்டைலாக எடுத்து மாட்டிக்கொண்டு அங்கிருந்து அகன்றான்.
அதர்வநவ்தீபன் நேர்மையான ஐபிஎஸ் ஆபிசர், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என மக்களால் செல்லப்பெயரோடு அழைக்கப்படுபவன்.. தன் வேலையில் சேர்ந்த இந்த் ஆறு வருடங்களில் 40 முறை ட்ரான்ஸ்ஃபர் வாங்கிய ஒரே அதிகாரி இவன் தான்.
இப்போது கூட மும்பையிலிருந்து நாளை சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி செல்ல இருப்பதற்கு முன் தன் கடைசி வேலையாக, தனக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கி கொடுத்தவர்களுக்கு பரிசாக ப்ரீயாக அவர்களை சொர்க்கத்துக்கு அனுப்பிவிட்டு தன் பயணத்தை தொடங்க கிளம்பிவிட்டான் அந்த ஆறடி ஆண்மகன்.

“பத்து என்ன நேத்து நைட் செம கலெக்ஷனாமே எங்களுக்கும் கொஞ்சம் பார்த்து செய்யுறது” என வாயில் ப்ரஷை வைத்துக் கொண்டே கோணலான சிரிப்புடன் கோபாலு கேட்க,

தன் கன்னத்தில் கையை முட்டுக் கொடுத்து சோகமாக உட்கார்ந்திருந்த பத்மா அருகே தன்னைக் கண்டு வாயை மூடிக்கொண்டு நகைத்துக் கொண்டிருந்த அபிஷேக்கின் தலையில் தட்டியவள், “இவனுக்கு எப்படி டா மேட்டர் தெரிஞ்சுச்சு.. உண்மையை சொல்லு நீ தான சொன்ன” என மிரட்ட,

“ஆமா ஏதோ தெலுங்கு படத்துல வர மாதிரி பில்ட் அப் குடுத்து என்னை மரம் ஏற விட்டு கூட்டிட்டு போய் கடைசில கவரிங்க் நகையை அடிச்சுட்டு வந்தா எரியுமா எரியாதா??? அதான் குடிச்சுட்டு இருக்கப்போ உளறிட்டேன்” என அபிஷேக் கூற,

அவளும் அதை நினைத்து தான் வருந்திக் கொண்டு இருந்ததால் வேறெதுவும் பேசாமல் இருக்க, மீண்டும் “இப்போ குடுப்பியா குடுக்க மாட்டியா பத்து.. எங்காத்தா வேற நாளைக்கு ஏதோ கல்யாணத்துக்கு போய் செயின் அறுக்க போவுது..நீ அடிச்சுட்டு வந்த செயினை கொடுத்தா அது கெத்தா போட்டுட்டு போய்ட்டு வரும்ல” என கோபாலு ராகம் பாட,

அங்கிருந்த கல்லை எடுத்து அவன் காலிலே எரிந்த பத்மா, “டேய் டோமர் தலையா... மரியாதையா ஓடிப்போயிறு என் கையால அடிவாங்கி சாவாத” என எச்சரிக்க,

“ஒரு நகையை ஒழுங்கா அடிக்க துப்பில்லை.. சும்மா என்னையை போட வந்துட்டா “என அவன் கிண்டல் செய்து கொண்டே அங்கிருந்து நகர, பத்மாவிற்கு அவமானமாக இருந்தது.
சரேலென்று எழுந்தவள்,

“டேய் குண்டா இங்க வா டா..இன்னைக்கு நான் ப்ளேட் போட்டு அந்த கோவாலோட ஆத்தா அந்த செயின் சரோஜாவை விட துட்டு அதிகமா அள்ளிட்டு வரலை என் பேர் பிக்பாக்கெட் பத்மா இல்லை... கெளம்பு டா” என சவாலிட்டவள் வேகமாக அங்கிருந்து நகர,

“இதுக்கு வேற வேலையே இல்லை.. இப்போ எந்த பிஞ்சு போன பர்ஸை அடிச்சுட்டு வரப் போறாளோ... எல்லாம் என் தலையெழுத்து இது கூட சுத்த வேண்டியதா இருக்கு” என புலம்பிக் கொண்டே அவள் பின்னால் சென்றான்.

இருவரும் நேராக சென்றது சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு, அங்கிருந்த கூட்ட நெரிசலைக் கண்டு இருவரும் சில்மிஷமான புன்னகையை பரிமாறிக் கொண்டனர்.

“டேய் நான் ஈசியா ப்ளேட் போட்டு அடிச்சுட்டு வந்துருவேன்... நீ குழந்தைங்க கையில இருக்க முட்டை பப்ஸை பிடுங்கி தின்னு எங்கேயும் மாட்டிக்காத ஓகே வா.. ஒன்னும் அடிக்க முடியலைனா ப்ளாட்பாரத்துல கம்முனு உட்கார்ந்திரு.. நான் சீக்கிரம் முடிச்சுட்டு வந்துருறேன்” என அவள் சீரியசாக கூற,

“வாட் ஆர் யூ டாக்கிங் நான்சென்ஸ்.. நான் உன்னை மாதிரி சில்லரை தனமாலாம் அடிக்க மாட்டேன்.. ஒன்லி பல்க் தான்.. இப்போ எப்படி முடிச்சுட்டு வரேன்னு வெய்ட் அன்ட் வாட்ச்” என ஸ்டைலாக கூறிய அபிஷேக், தன் கையில் இருந்த பத்து ரூபாய் கலர் கண்ணாடியை சுழற்றியபடியே விலகிச் செல்ல,

“எங்கேயும் அடி வாங்காம வந்தா சரி” என நினைத்தவள் அந்த கூட்டத்திற்குள் புகுந்து தன் வேலையை செவ்வனே செய்ய ஆரம்பித்தாள்.

பிக்பாக்கெட் அடிப்பதில் பெயர் போன பத்மாவிற்கு இது மிகவும் சுலபமாக இருக்க அரை மணி நேரத்தில் பதினைந்து பர்ஸ்களை அடித்துக் கொண்டு வந்தவள் அபிஷேக்கை தேட, அவன் ப்ளாட்பாரத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டு பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தான்.

‘இந்த லூசு என்ன பண்ணுது’ என அவன் அருகே சென்று தோளைத் தொட, “எவன் டா அவன் முதுகை சொரண்டுறது” என திரும்பி பார்க்க, பத்மாவைக் கண்டு, “ஓ நீயா என்ன எத்தனை கிழிஞ்ச பர்ஸ் பொறுக்கிட்டு வந்த” என எள்ளலாக கேட்டான்.

“நான் வரது இருக்கட்டும் நீ எதுக்கு இங்க அரகேற்றம் பண்ணிகிட்டு இருக்க?? வா கிளம்பலாம் லேட் ஆச்சு..அந்த சோத்துமூட்டைங்க(போலீஸ்) அப்பறம் மாமூல் கேட்க வந்துருவானுங்க” என அவனை இழுக்க,

“ஹேய் நான் ஒரு பெரிய பார்ட்டியை புடிச்சு வச்சிருக்கேன்... அவன் பெட்டியை ரொம்ப நேரமா பொத்தி பொத்தி வச்சுக்குன்னு இருக்கான் அதை அடிக்க தான் ப்ளான் போட்டுட்டு இருக்கேன் பொறு” என அவன் கூற,

கடுப்பான பத்மா, “ஆள் யாருனு சொல்லித்தொலை டா” என கேட்க, அவன் தூரத்தில் நல்ல வாட்ட சாட்டமாக இருந்த ஒரு சேட்டு பையனை நோக்கி அவன் கையைக் காண்பித்து,

“நல்லா பனைமரத்துல பாதி வளர்ந்து நிக்கிறான்ல அவன் தான்” என கூற,
அவளோ அவனுக்கு பின்னால் அவனை விட வாட்ட சாட்டமாக இருந்த அதர்வாவை தான் காண்பிக்கிறான் என தவறாக புரிந்து கொண்டு,

“சரி என் கூடவே வா.. நான் அப்படியே நைசா அடிச்சுட்டு வரேன்.. எஸ் ஆய்ரலாம்” என கூறியவள் அவனை நோக்கி முன்னேறினாள்.

அன்று தான் சென்னைக்கு மாற்றலாகி வந்திருந்தவன் அப்போது வந்திருந்த ட்ரையினிலிருந்து இறங்கி சென்னையில் உள்ள தன் நண்பன் விஷ்ணுவிற்கு அழைத்து தான் வந்ததை தெரிவித்து விட்டு அவன் எங்கே என விசாரித்துக் கொண்டிருந்தான் அதர்வா.

என்ன தான் போனில் உரையாடிக் கொண்டிருந்தாலும் கண்கள் நாலா பக்கமும் சுழன்று ஆராய்ச்சி பார்வையை வீசிக் கொண்டிருக்க, தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த பத்மாவையும், அவள் பின்னால் வந்து கொண்டிருந்த அபிஷேக்கையும் கண்டு அவன் புருவ மத்தியில் முடிச்சுகள் விழுந்தது.

இதற்கு முன் அவர்களை எங்கோ பார்த்தது போல் தோன்ற எங்கே என தன் நினைவடுக்குகளில் தேட ஆரம்பித்தான்.

அந்த சேட் பையனை பத்மா தாண்டி நடக்க, “ஹேய் நான் சொன்னது இந்த வீங்கிப் போன மூஞ்சிக்காரனை.. நீ எங்க டி தாண்டி போற” என அபிஷேக் கத்தி விட,

அதற்குள் அதர்வாவின் அருகில் நெருங்கியிருந்த பத்மா நொடி நேரத்தில் அவன் கைகளில் தன் கையில் வைத்திருந்த ப்ளேடை வைத்து கோடு போட முயற்சித்த சமயம் சுதாகரித்த அவன் அவள் கையை எட்டி பிடித்தான். அவளோ பயத்தில் பிளேடை கீழே போட்டு விட்டு கையை உதற முன்னமே அவளது கையை அவன் விட்டிருந்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று அவள் ஓட, அவள் பின்னால் வேறு வழியில்லாமல் அபிஷேக்கும் ஓடினான்.

அவள் கையை பிடிக்கும் போது உண்டான இனம் புரியாத சிலிர்ப்பை உணர்ந்தவன் ஒரு கணம் அதிர்ந்து தான் போனான். “என்னாச்சு எனக்கு?” என்று தன்னை தானே கேட்டபடி தலையை உலுக்கி தன்னை சமநிலைப்படுத்தியவனுக்கு, இவர்கள் இருவரையும் சென்னைக்கு வந்த போது விஷ்ணுவின் ஸ்டேஷனில் உள்ள குற்றவாளி பட்டியலில் பார்த்தது நினைவு வந்து விட, தனது கவலையீனத்தை நினைத்து தன் மேல் கொண்ட கோபம் அவர்கள் இருவர் மேலும் திரும்ப அவனுக்கு கை முஷ்டிகள் இறுகியது.
வேகமாக அவன் அவளை பின் தொடர்ந்து போய், அந்த கூட்ட நெரிசலுக்குள் ஒரு வழியாக அவளை நெருங்கியவன் அவள் கழுத்தில் இருந்த செயினைப் பற்றி இழுக்க, அது கையோடு வந்துவிட்டது.

ஒரு நொடி நின்று அவனை திரும்பி பார்த்தவள், பின் இப்போது அவனிடம் இருந்து தப்பிச் செல்வதே முக்கியமாக பட, அவ்விடம் விட்டு மின்னலென அந்த கூட்டத்திற்குள் புகுந்து மறைந்திருந்தாள்.
அதன் பின் அதர்வா எங்கு தேடியும் அவள் கிடைக்காமல் போக, தன் கையில் இருந்த அவளின் செயினை வெறித்து பார்த்தான்.

தேடல் தொடங்கும்!!!
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

கதைக்கான கருத்தை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள் மா..


 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் ஹாய்,

நான் தான் அந்த திருடி .. பரவாயில்லையே நம்ம பிள்ளைங்க ஒரிஜினில் போலீஸ் மாதிரி இல்லாம ரொம்ப அறிவாளியா இருக்காங்களே.. வாவ் சூப்பர்.. இந்த திருடியை கண்டுபிடிச்ச அந்த முதல் மூன்று அறிவாளிகளுக்கு நான் பரிசு கொடுக்கனும்ல, இந்தா வரேன்..

ஃபர்ஸ்ட் யார் அந்த மூன்று பேர்னு சொல்லனும்ல,

இந்த கள்ளியைக் கண்டுபிடி போட்டியில் சரியான பதிலைச் சொல்லி திருடியின் மனதையே கொள்ளையடித்து முதல் பரிசை தட்டிச் செல்பவர் என்னுடைய செல்லக்குட்டி ஃபாத்தி என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

சந்தேகத்தோடையே சுவேகுட்டியா எனக்கேட்டு செகன்ட் பரிசை சைக்கிளில் வாங்கிச் செல்லப் போகிறது என்னுடைய தானைத் தலைவி புனிதா அக்கா என்பதை தெரிவித்துக் கொள்ளுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..

கடைசியா வந்தாலும் கரெக்டா சொல்லி கள்ளியை கண்டுபிடிச்ச நம்ம கடைக்குட்டு வாசு பாப்பூ மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்..

ஹேய் எல்லாரும் ஜோரா கை தட்டுங்க..

ஓகே ஓகே அந்த மூனு பேரும் எங்க எங்களோட பரிசுன்னு மொறைச்சுப் பார்க்குறாங்க...

உங்களுக்கு பரிசா ஜல்லிக்கட்டுல காளையை அடக்குனவங்களுக்கு கட்டில் மெத்தை பீரோன்னு அள்ளி அள்ளி தருவாங்களே அந்த மாதிரி அள்ளி தர மனசு எனக்கு இருந்தாலும் என்னுடைய பர்சுல சல்லி பைசா இல்லாத காரணத்தால் விலைமதிப்பில்லாத என்னோட அன்பையே உங்களுக்கு பரிசா வழங்க போறேன்...

ஹேய் என்ன இது பேசிக்கிட்டு இருக்கப்போவே கட்டையை தூக்குறது.. வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்.. இதையா நம்ம பெரிய பெரிய L.K.G எல்லாம் போய் படிச்சுட்டு வந்திருக்கோம்.. பேச்சு பேச்சாத் தான் இருக்கணும் நோ வெப்பன்ஸ்.

ஓகே ஓகே உங்க வழிக்கே வரேன்..

பர்ஸ்ட் , ஃபாத்திமா இங்க வாம்மா உனக்கு ட்ரீட் தான வேணும் என் சொத்தை வித்தாச்சும் ஸ்ரீலங்கா வந்து உனக்கு ட்ரீட் வச்சிடுறேன்..
இப்போதைக்கு உன் அம்முக்குட்டி உனக்காக எழுதுன இந்த பாட்டை வச்சு அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ

"ட்ரீட்டு கேக்கும் ஸ்வீட்டு உன் பேரு என்னமா
அப்படிக் கேளு வீட்டு(wheat) என் பேரு ஃபாத்திமா

நீ தேடி தவிக்கிற
தினம் தேம்ப துடிக்கிற
ட்ரீட்டை மட்டும் நெனைக்கிற
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்

ட்ரீட்டு கேக்கும் ஸ்வீட்டு உன் பேரு என்னமா
அப்படிக் கேளு வீட்டு(wheat) என் பேரு ஃபாத்திமா

McDonald's பக்கம் மார்னிங்க் போகும் போது
மனம் ட்ரீட்டு ட்ரீட்டுன்னு பாட்டுப் பாடும் பாரு
Kfc பக்கம் காத்து வாங்கும் போது
கோழிக்காலை பார்த்து கண்ணு வேர்க்கும் அது பேஜாரு"

இதுக்கு மேல என்னால சிரிக்க முடியலை சோ போதும் பேபி நிப்பாட்டிக்கலாம்..

அடுத்து நம்ம புனிதாக்கா வாங்க வாங்க.. மேல இருக்க பாட்டைப் பார்த்து அப்படியே பின்பக்கமா ஓடக்கூடாது உங்களுக்கு நோ பாட்டு ஒன்லி கவிதை..கவிதையான்னு நீங்க கண்ணீர் விட்டு கதறுனாலும், கட்டையைத் தூக்கி அடிச்சாலும் நான் உங்களுக்கு பரிசு கொடுக்காம போக மாட்டேன்..

இதோ உங்களுக்கான கவிதை..

" பிக்பாஸ்ல இருக்கு வில்லி வனிதா!!
எங்க பாஸ் என்றுமே மணம் வீசும் மல்லி புனிதா!!
ஹோசூரு மைசூரு பெங்களூரு!!!
உங்களுக்கு என்ன வேணும்னாலும் போகனும் ஹரூரு!!
கார் ரேஸ்ல ஃபர்ஸ்ட் வந்தா அது நம்ம தல!!!
கதை படிக்கிற ரேஸ்ல ஃபர்ஸ்ட் வந்த அது எங்க தலைவி!!
Last but not the least u r the best thala"

ஓகே என்னையை என்ன செய்யனும்னு நீங்க நினைச்சாலும் தனியா வாங்க பேசி தீர்த்துக்கலாம் இது பப்ளிக் ஓகேவா கா...

கடைசியா நம்ம பாப்புக்குட்டி வாசு.. உனக்கு என்ன பண்ணலாம்?? பாட்டு பாடியாச்சு, கவிதை கூறியாச்சு, உனக்கு எதை வச்சு செய்யலாம்??? பரிசைத் தான் சொன்னேன் டா பதறாத..

சரி உன்னையை ஹீரோயினா போட்டு ஒரு குட்டிக் கதை சொல்றேன் கேழு ..கேட்டுட்டு அக்காவை அடிக்கலாம் வரக்கூடாது இப்பவே சொல்லிட்டேன்..


ஒரு ஊர்ல ஒரு அழகான பொண்ணு இருந்துச்சாம்...அந்த பொண்ணு பேரு தான் வாசுகியாம் உடனே வள்ளுவர் பொண்டாட்டி வாசுகியான்னு யாரும் கேட்க கூடாது.. இது நம்ம சைட் வாசுகி..

ஒருநாள்...

.
.
.
.
.
.
She lived happily ever after!!!

சுபம்!!

என்னடா இப்படி மொறைக்குற, நான் தான் முன்னாடியே சொன்னேன்ல இது குட்டிக்கதைன்னு .. இதென்ன நம்ம சரவணன் மீனாட்சி சீரியலா இழுத்துகிட்டே போக, இது ஷார்ட் ஸ்டோரி டா சட்டுன்னு முடிச்சிறனும் ஓகே வா.. இப்போ போய் சமத்தா சாப்பிட்டிட்டு சின்சான் பாரு போ போ பாப்பூ!!!

என்னப்பா எல்லாருக்கும் கிஃப்ட் வந்துருச்சா அப்பறம் அது விட்டுப்போச்சு இது விட்டுப்போச்சுன்னு சண்டைக்கு வரப்புடாது சொல்லிட்டேன்...

ஓகே மக்களே எங்க கதையை படிச்சு நான் தான்னு கண்டுபிடிச்ச அதை பட்டுன்னு பானையை கவுத்தி தண்ணியை கொட்டுன மாதிரி கமென்ட்ஸ்ல சொன்ன செல்லங்களுக்கும், சிப்பிக்குள்ள முத்து மாதிரி மனசுக்குள்ள மித்துதான்னு என்னையை கண்டுபிடிச்ச அனைத்து கம்முனு வாசிப்போர் அதாங்க நம்ம சைலன்ட் ரீடர்ஸ்க்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்..

சரி சரி அடியேன் இதோட உத்தரவு வாங்கிக்கிறேன்.. அடிக்கனும்னு ஆசைப்படுறவுக www.mithu.com மெயில் அனுப்புங்க வந்து வாங்கிக்கிடுதேன்... சரிதான ..

ஓகே மக்கள்ஸ் டாட்டா சி யூ ..
 

swaragini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2:

பெருமூச்சு விட்டவன் செயினை தனது பாக்கெட்டில் போட்டு விட்டு தன் நண்பன் விஷ்ணுவை தேடிச் சென்றான்.

பெட்டியை தூக்கி கொண்டு வந்த அதர்வாவை கண்ட விஷ்ணு அவனை அணைத்து "டேய் மச்சான். வாடா வாடா... இங்க எத்தனை நாளைக்கு இருக்கிறதா உத்தேசம்.. ?" என்று நக்கலாக கேட்க சிரித்தபடி அவன் வயிற்றில் குத்திய அதர்வா

" ரொம்ப பசிக்குது வாடா" என்று அழைத்து கொண்டு ஜீப்பில் ஏறினான்.
அவர்கள் ஜீப் நேரே சாப்பாட்டு கடையை உயர் வேகத்தில் அடைந்து நின்றது. இருவரையும் கண்டதும் அங்கு வேலை செய்பவர்கள் "வாங்க சார்" என்று பவ்வியமாக அழைக்க வெறும் தலையசைப்பை மட்டுமே கொடுத்த இருவரும் அங்கிருந்த இருக்கையில் இருந்து சாப்பாட்டை ஓடர் பண்ணி விட்டு அரட்டையை தொடர்ந்தனர்.

அந்நேரம் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்த அதர்வாவுக்கு பத்மாவின் செயின் தட்டுப்பட உடனே அவள் நினைவு வந்தவனாக "ஏண்டா உன்னால அந்த பிக்போக்கெட் பொண்ணையும் அந்த தடியனையும் இன்னும் புடிக்க முடியலையா? அந்த ரெண்டும் இன்னைக்கு என் பர்ஸிலேயே கை வைக்க பாத்திச்சுங்க " என்றான் கோபமும் வெறுப்புமாக.

"என்னது உன் பர்சிலையா ? "நீ சும்மாவா விட்ட?" என்று கேட்டான்.

உடனே அவன் "அவ பிடிக்க முதல் தப்பி ஓடிட்டா ... இப்போ நீ சொல்லு.. ஏன் இப்போவும் ரெண்டும் வெளிய சுத்துதுங்க?" என்று கேட்க பெருமூச்சு விட்ட விஷ்ணு " நம்ம ஸ்டேஷன்ல இருக்கிறவங்க மாமூல் வாங்கிட்டு அவளை வெளிய விட்ருவாங்க. அத மீறி பிடிக்க யோசிச்சா கூட அவளோட அப்பா ஏதும் கோக்கு மாக்கு பண்ணி வெளிய கொண்டு வந்திடுவார், எவிடென்சும் ஒழுங்கா கிடைக்கிறதில்ல, கம்பளைண்ட் பண்றவன் கூட ரெண்டு நாளில அவங்க அப்பாவோட அடாவடியை பார்த்து கம்பளைண்ட் எல்லாம் வாபஸ் வாங்கிடுவாங்க.

இப்போ அவங்க அப்பாக்கு உடம்பு சரி இல்ல,, அதனால கொஞ்சம் அடக்கமா இருக்கா" என்றான்.

அவன் கூறுவதை எரிச்சலாக பார்த்த அதர்வா "நீ எல்லாம் போலீஸ் என்று வெளிய சொல்லிட்டு திரியாத " என்று அவர்களின் சாப்பாடு வந்து விட இருவரும் அதை ஒரு பிடி பிடித்தனர். சாப்பிட்டு முடிந்ததும் அதர்வாவை அவன் குவாட்டர்ஸ் இல் விட்டவன் தனது வீட்டை நோக்கி புறப்பட்டான்.

வீட்டுக்குள் நுழைந்த போதே அவன் கட்டளைக்கு இணங்க அது நேர்த்தியாக வேலையாட்களால் சுத்தமாக பட்டு இருந்தது. அவனும் குளியல் போட்டு விட்டு வந்து படுத்தவன் அப்படியே கண்ணயர்ந்து போனான்.

அதே சமயம் பத்மாவோ கொட்ட கொட்ட முழித்து கொண்டிருந்தாள்.

மனம் கேட்காமல் அபிஷேக் தொலைபேசிக்கு அழைக்க அவனோ "எஸ்,,, கான் ஸ்பீக்கிங்" என்றான் அரை நித்திரையில்.

"ரொம்ப முக்கியம்" என்று மனதுக்குள் திட்டியவள்

"டேய்,, என்னோட செயினை அந்த நெட்டையன் திருடிட்டான், நீ நிம்மதியா தூங்குற ?" என்று கேட்க

அவனோ "... உன் செயின் யு பீல் வை மீ?" என்று கேட்டான். "உன் இங்கிலிஷ் ல தீய வைக்க,,.சின்ன வயசில இருந்து என் கழுத்துல கிடந்த செயின் டா" என்று கவலையாக உரைத்தாள்.

"ஐயோ.... இப்போ எதுக்கு பீல் பண்ற.. செயின் தானே.. நாளைக்கு பத்து பேர்ட்ட ஆட்டைய போட்ரலாம். இப்போ நீ தூங்கு.. என்னையும் தூங்க விடு" என்றவன் போனை அணைக்க முதல்

"டேய் தடியா , எனக்கு அந்த செயின் தாண்டா வேணும்" என்றாள்.

"உன் கூட பெரிய ரோதனையா போச்சு. " என்றவன் "நாளைக்கு அவன் details ஓட வரேன். நீ இப்போ என்னை தூங்க விடு" என்றபடி தொலைபேசியை அணைத்திருந்தான்.

அவளுக்கோ அந்த இரவு தூங்கா இரவாகி போனது.

அடுத்த நாள் அவளிடம் மாலையில் படபடப்பாக வந்த அபிஷேக் "ஏய் நீ நேத்து யார் கிட்ட ஆட்டைய போட்ட தெரியுமா? நம்ம ஊருக்கு வந்திருக்கிற புது போலீஸ் கிட்டடி. " என்றான்.

அவளோ அதிர்ந்து "போலீசா? அதெப்பிடிடா உனக்கு தெரியும்?" என்று கேட்க

"நம்ம கான்ஸ்ட்ரபுள் கண்ணாயிரம் தான் சொன்னான். விஷ்ணு சார் சொன்னாராம். அதோட அந்த புது போலீஸ் என்கவுண்டர் எல்லாம் பூந்தி சாப்பிடுற கேப் ல பண்ணுவானாம். போச்சு போச்சு.. எனக்கு ஆயுசு கம்மி தான் " என்று புலம்ப

"கொஞ்சம் நிறுத்திருயா ?" என்று சீறியவள்

"அவன் எங்க தங்கி இருக்கான்?" என்று கேட்டாள்.

"நான் என்ன பேசுறேன் ? நீ என்ன பேசுற?" என்று அபிஷேக் எகிற "சொல்லுடா" என்றாள் பத்மா.

"வெளியூர் னா கண்டிப்பா குவார்ட்டர்ஸ் ல தான் தங்கி இருப்பார்" என்று சொல்ல "ரைட்டு " என்று கண்ணடித்தவள்

"இப்போ நீ அவன் வீட்டில இல்லாம இருக்கிற டைம், நம்ம பசங்க கிட்ட கேட்டு எடுத்துட்டு .வா. மிச்சத்தை நாம பார்த்துக்கலாம்" என்றாள்.

"லூசா நீ? இவன் மற்றவங்க போல இல்ல... சுட்டுருவான் " என்று அவன் மிரட்சியுடன் கூற அவன் தோளில் கை வைத்தவள்

"யாமிருக்க பயமேன்?" என்றாள்.

"நீ இருப்ப நான் இருப்பனோ தெரியல" என்று புலம்பியவன் அவள் சொன்னதை செய்ய சென்றான்.

சிறிது நேரத்தில் அவளை தேடி வந்த அபிஷேக் "இன்னைக்கு தான் டியூட்டி ஜொயின் பண்ணினானாம். நைட்டுக்கு ரவுண்ட்ஸ் போகலாம் என்று சொல்லி இருக்கானாம். அதனால இன்னைக்கு இரவு நிற்க மாட்டான்" என்று சொல்ல அவள் கண்கள் மின்னியது.

"அப்போ நமக்கும் இன்னைக்கு நமக்கு வேலை இருக்கு, நீ ரெடி ஆகு" என்றவள் உள்ளே செல்ல எத்தனிக்க

"நல்லா யோசிச்சு தான் சொல்றியா? நான் என் அம்மாக்கு ஒத்த புள்ள" என்றான்.

அவன் புலம்பல் எரிச்சலை கூட்ட "இங்க பாரு அபிஷேக், நான் இருக்கேன்ல, அதனால பயப்படாம வாய மூடிட்டு கிளம்பு " என்று கடின குரலில் உரைத்தாள்.

பகலவன் மறைந்து இருள் சூழும் நேரம் பத்மாவும் அபிஷேக்கும் அதர்வாவின் வீட்டின் முன்புறம் நின்றார்கள்.

யாருக்கும் சந்தேகம் வராதபடி சிறிது நேரம் அவ்வழியால் நடந்து திரிந்தவர்கள் ஆள் அரவம் அடங்கியதும் மதிலேறி பாய முடிவெடுத்தனர்.

மதிலேற போன பத்மாவிடம் "நல்லா யோசிச்சுக்கோ பத்மா" என்று அபிஷேக் சொல்ல,

"அதெல்லாம் யோசிச்சுக்கலாம் வாடா" என்றவள் ஒரே தாவில் மதில் உயரத்தை அடைந்தாள்.

அதை பார்த்தவன் "இந்த சர்க்கஸ் எல்லாம் நமக்கு வராதப்பா " என்று முணு முணுத்த நேரம் கேட் லாக் பண்ணாமல் இருப்பதை கண்டான்.

"இந்த மங்கி ஏன் இப்படி ரிஸ்க் எடுக்குது?" என்றபடி கதவை திறந்து உள்ளே நுழையவும் மதிலேறி பத்மா பாய்ந்து கீழே விழுந்தவள் களைப்புடன் எழுந்து நிற்கவும் நேரம் சரியாக இருந்தது.

சாவகாசமாக விசிலடித்தபடி உள்ளே வந்த அபிஷேக்கை பார்த்து அதிர்ந்தவள் "எப்படிடா?" என்று கேட்டாள்.

"இதுக்கு தான் கொஞ்சம் ப்ரைன் யூஸ் பண்ணனும் என்றது" என்றவன் கண்களால் கேட்டை காட்ட அதை பார்த்து பெருமூச்சு விட்டவள் "சரி வா" என்றபடி வீட்டை நோக்கி நடந்தனர். வாசலை அடைந்ததும் தலையில் இருந்த கிளிப்பை கழட்டியவள் சாவி துவாரத்தின் ஊடு விட்ட சமயம் கதவில் சாய்ந்து நின்ற அபிஷேக் கைப்பிடியில் அழுத்தத்தை தற்செயலாக கொடுக்க கதவு தானாக திறந்து கொண்டது.

அதை அதிர்ச்சியுடன் பத்மா பார்க்க அவளை நோக்கி ஒரு பெருமித சிரிப்பை சிந்தியவன் "ப்ளாடி பகர்... போல்லவ் மீ"என்றபடி முன்னே சென்றான்.

"யு ஆர் கிரேட் டா" என்றபடி பத்மாவும் பின்னால் சென்றாள்.

"என்னடி ஒரே இருட்டா இருக்கு?" என்று கதவை தாளிட்டபடி அபிஷேக் கேட்க

"லயிட்டை போடுடா" என்றவள் யாருமில்லை என்ற தைரியத்தில் விறு விறு வென்று அந்த இருட்டில் தடவியபடி அங்கிருந்த சோபாவில் இருந்தாள்.

"ரொம்ப களைப்பா இருக்கு,, பிரிட்ஜுக்குள் ஏதும் இருக்கும், எடுத்து குடிப்போம். நீ இப்போ லயிட்டை போடேண்டா, அந்த பக்கி என் செயினை எங்க வச்சு இருக்கானோ தெரியல,,,, எனர்ஜி ஏத்திட்டு அத வேற தேடணும் " என்று புலம்ப அதில் எரிச்சலடைந்த அபிஷேக்

"கொஞ்சம் பொறு,, இது என்ன என் வீடா? லைட் எங்க இருக்கு என்று தேட வேணமா?" என்றவன் தட்டி தடவி ஸ்விட்சை போட்டான்.

போட்டதும் தாமதம் "கண்டு பிடிச்சுட்டேன்" என்று சந்தோஷமாக கத்தியபடி பத்மா பக்கம் திரும்பியவன் "ஆஅ" என்று ஏங்கியபடி அப்படியே வாயை திறந்தபடி நின்றான். உடனே பத்மா "என்னடா அப்படி பார்க்கிற?" என்று புருவம் உயர்த்தியவள்

"வீடு சூப்பரா தான் இருக்கு" என்றபடி வீட்டை நோட்டமிட்டாள். லைட்டை போட்டதில் இருந்து அதிர்ந்து நின்ற அபிஷேக்

" ஸ்ஸ் ஸ் " என்று பத்மாவை அழைக்க " என்னடா ஸ்ஸ்ஸ் " என்று புருவம் உயர்த்தி கேட்டாள் பத்மா.

உடனே அவன் பக்கத்தில் பார்க்கும்படி கண்களால் சைகை காட்ட திரும்பி பார்த்தவள் ஏங்கியபடி வாயை பொத்தியவாறு பாய்ந்து எழுந்து நின்றாள்.

அங்கு சோபாவில் அவள் இருந்ததற்கு ஒரு இருக்கை விட்டு கறுப்பு நிற இறுக்கமான ட்ஷிர்டும் கறுப்பு நிற ஜீன்சும் அணிந்து கால் மேல் கால் போட்டவாறு ஒருகையை மார்புக்கு குறுக்கே கட்டியவாறும் மறு கையில் உள்ள பிஸ்டலை தலையில் மெதுவாக தட்டியவாறும் கம்பீரமாக இருவரையும் மாறி மாறி பார்த்தபடி அமர்ந்திருந்தான் அதர்வா.

குளித்து உடை மாற்ற வந்தவன் விளக்கை அணைத்து வெளியேற போன சமயம் இருவரும் வீட்டினுள் நுழைவதை கண்டு அவர்களை பிடிப்பதற்காக அப்படியே அமர்ந்து விட்டான்.

அதர்வாவை பார்த்த அபிஷேக்குக்கு பயத்தில் கண்ணீர் வழிய பத்மாவோ கால்கள் நடுங்க வாயை பொத்தியவாறு நின்றிருந்தாள்.

அபிஷேக்கை துப்பாக்கியால் வர சொல்லி சைகை செய்ய அவனோ " எதுவா இருந்தாலும் அவள சுடுங்க சார்...அவ தான் எல்லாத்துக்கும் காரணம் " என்று புலம்பியவாறே வந்து பத்மா அருகில் நின்றான்.

அவன் புலம்பியதை கேட்ட பத்மா வாயில் இருந்து கையை எடுத்து விட்டு " துரோகி " என அபிஷேக்கை பார்த்து வாயசைத்தாள். உடனே இரு கைகளையும் காலில் குற்றி எழுந்தவன் அவர்கள் அருகில் வர அபிஷேக்கோ பயத்தில் பத்மா பின்னாடி ஒளிந்தான்.

கையை நீட்டி அவன் சுருண்ட முடியை பிடித்து முன்னே இழுத்தவன் அவன் முகத்தை துப்பாக்கியால் சுட்டி காட்டி "இவன நம்பியா நீ திருட வந்த?" என்று கேட்க அவளோ பயத்தில்

"சிரித்தாவது சமாளிப்போம்" என்று நினித்தபடி "ஹி ஹி" என்றாள்.

"அசிங்கமா சிரிக்காதடி, நீங்க வரும் போது போட்டிருந்த லைட் ஆஃ ஆச்சே அத கவனிச்சியா? கேட் கதவு திறந்திருந்திச்சே அத கவனிச்சியா? எல்லாத்துக்கும் மேல தெரு முனையிலே என் ஜீப் இருந்திச்சே அத கவனிச்சியா? நீயெல்லாம் ஒரு திருடி, இவன் உனக்கு தோஸ்த் வேற " என்றவன் அபிஷேக் தலையில் இருந்து கையை எடுத்து நெற்றியை நீவியவறே "உங்க ரெண்டு பேரையும் அர்ரெஸ்ட் பண்ணி டைம் வேஸ்ட் பண்ண முடியாது" என்றான் .

உடனே அபிஷேக் "அதுக்காக சுடாதீங்க சார்" என்றபடி காலில் விழ "ஏய் எழுந்திரு" என்று உறுமியவன் மேலும் "இந்த பிஸ்டல் ஆல் சாகிற அளவுக்கு நீயெல்லாம் worth இல்ல" என்றபடி பத்மாவை பார்க்க அவளோ பயத்தில் ஒடுங்கி போய் நின்றபடி அவனை பார்த்தாள்.

உடனே அதர்வா "நீயெல்லாம் இப்படி பயப்படுற ஆள் இல்லையே,... துப்பாக்கியை பார்த்ததும் பம்முற ?" என்று கேட்க "எப்படி கண்டு பிடிச்சான்" என்று நினைத்தவள் அமைதியாகவே நின்றாள்.

"சரி விடு, உங்க ரெண்டு பேரும் இங்க இருக்கிற வேலை எல்லாம் செய்யணும்.. எனக்கும் தனியா இருந்து போர் அடிக்குது. என்டேர்டைன்மெண்ட் வேணாமா?" என்று கேட்க பக்கத்தில் நின்ற அபிஷேக் "நீங்க தெய்வம் சார்" என்றான்.

உடனே "நல்லா நடிக்கிற மேன் " என்றவன்

"ரெண்டுபேரும் போங்க " என்று துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்ட அவர்களும் அவன் காட்டிய திசையில் சென்றனர்.

இருவரையும் தனி தனி அறையில் அடைத்தவன் "யாராவது தப்பிக்க நினச்சா , காணுற இடத்துல சுடுவன் " என்றவன் முக்கிய வேலைக்காக வெளியேறி இருந்தான்.

தனி தனி அறையில் எட்டி எட்டி பார்த்தவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசவும் முடியாமல் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து போனார்கள்.

வெளியே வந்தவன் நேரே ஒரு பாழடைந்த வீட்டுக்குள் நுழைந்தான்.

அங்கு கதிரையில் கட்டப்பட்ட படி ஒருத்தன் வாயால் ரத்தம் வழிய இருக்க அவன் அருகே வந்தவன் அங்கிருந்த மற்றைய போலீஸ் காரர்களிடம் "இன்னும் முடிக்கலயா?" என்று கேட்டான்.

உடனே அங்கிருந்த வயதான போலீசுக்காரர் "இல்ல சார் கோர்ட்டே நிரபராதி என்று சொல்லிடுச்சு.

அதோட பெரிய இடம் வேற" என்று இழுக்க "ஆஹான் " என்றவன் "சார் உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கா,. அவளையும் ஒருத்தன் இப்படி ரேப் பண்ணி கொன்னா இப்படி தான் இழுப்பீங்களா?" என்று கேட்க அவரோ தலையை குனிந்தபடி இல்லை என்று தலையாட்டினார்.

"அதே போல எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா, இப்போ இறந்த பொண்ணையும் என் தங்கச்சியா தான் பார்க்கிறேன் " என்றவன் அந்த வயதானவரை பார்த்தவாறே ஒற்றை கையால் சுட கட்டப்பட்டிருந்தவன் உயிர் அவ்விடமே பிரிந்தது.

பெருமூச்சு விட்டவன் துப்பாக்கியை முதுகில் சொருகியவாறு "லெட்ஸ் கோ" என்று முன்னால் செல்ல மற்றயவர்களும் பின்னால் மற்றவர்களும் சென்றார்கள். அங்கிருந்த அனைத்து இடங்களையும் அலசியவர்கள் விபச்சாரம் கஞ்சா போதை என பல கைதுகளை அன்றே முடித்தனர்.

அவனின் அதிரடியை பார்த்து மலைத்த ஒரு போலீஸ் "என்னடா வந்து ஒரே நாளில இவ்வளவு அர்ரெஸ்ட்" என்று கேட்க அது அவன் காதில் விழுந்தது.

உடனே திரும்பி அவனை பார்த்து சிரித்தவன் "ஐ நீட் எ ரெஸ்ட் மேன் . நாளைக்கு இங்கே இருக்க மாட்டேன் , ஒரு ஆறு மாசம் கழிச்சு வரேன்" என்றான். அவன் கூறியது அப்போது யாருக்கும் புரியவில்லை.

தாமதமாகி வீட்டுக்கு வந்தவனுக்கு அப்போது தான் இருவரை அடைத்து வைத்திருக்கும் எண்ணம் வர கதவுகளை திறந்து விட்டான்.

வெளியே வந்த பத்மா அவனை முறைத்தவாறு நிக்க அவனோ புருவம் உயர்த்தி என்ன என்று கேட்டான்.

உடனே அவள் ஒற்றை விரலை தூக்கி காட்ட "ஓ ஐ அம் சாரி" என்றான் உண்மையான மனவருத்தத்துடன். அங்கிருந்த குளியலறையை காட்ட அவளோ அதற்குள் புகுந்து கொண்டாள்.

அப்போது தான் கெட்ட வாடை வர அபிஷேக் அறைக்குள் எட்டி பார்த்தான். உடனே அபிஷேக்கின் கால்கள் பயத்தில் நடுங்க தொடங்கின.

அறையை பார்த்ததும் அபிஷேக் செய்திருந்த அசிங்கம் புரிய "அடேய் அசிங்கம் புடிச்சவனே" என்று திட்ட தொடங்கியவன் "இப்போ இந்த ரூமை கழுவி வை" என்றான்.

உடனே அவனும் "இந்த நேரத்திலயா ?" என்று கேட்க திரும்பி உறுத்து விழித்தவன்
ஹாலில் சென்று அமர்ந்தான்.

அந்நேரம் குளியலறயில் இருந்து வெளியே வந்த பத்மாவை பார்த்தவன் சமையலறையை கை காட்டி "ஏதும் சமைச்சு வை சாப்பிடுறதுக்கு " என்று சொல்லி விட்டு டீவியை போட்டான்.

"இரு இரு சமைச்சு வைக்கேன்" என்று கோபத்தில் முணு முணுத்தவள் தட்டு தடுமாறி பொருட்களை தேடி பிடித்து சமைக்க தொடங்கினாள்.

அபிஷேக்கோ அறையை கழுவி கொண்டிருந்தான். சமைத்து முடித்த பத்மா "சார் சாப்பாடு ரெடி " என்று சொல்ல "நான் வெளிய சாப்பிட்டேன், அது உங்களுக்கு தான் ரெண்டுபேரும் சாப்பிடுங்க" என்றவன் டீவியை பார்க்க அதிர்ந்து போனாள் பத்மா.

அவனுக்கு என்ற நினைப்பில் உப்பு காரம் அதிகம் சேர்த்து சமைத்து இருந்தவள் "அத எப்படி சாப்பிடுறது?" என்று நினைத்தபடி "எனக்கு பசிக்கல " என்றாள்.

உடனே எல்லாம் கழுவி விட்டு வந்த அபிஷேக் "எனக்கு பசிக்குது சார்" என்று பாவமாக சொல்ல "எல்லாத்தையும் அவனுக்கே போடு" என்ற அதர்வா டிவி யில் கவனம் செலுத்தினான்.

பத்மா கண்களால் காட்டிய சைகையை கவனிக்காமல் சாப்பாட்டு மேசையில் இருந்த சாப்பாட்டை தட்டு நிறைய எடுத்தவன் சாப்பிட தொடங்க சத்தமாக சிரித்த அதர்வா "என்னடா காரத்துல சாப்பாடு கம்மியா?" என்று கேட்டான்.

அதை கேட்டு சமைத்த பத்மாவும் அதிர கஷ்டப்பட்டு பயத்தில் சாப்பாட்டை விழுங்கி கொண்டிருந்த அபிஷேக்கும் அதிர்ந்து போனான். உடனே எழுந்து பக்கத்தில் இருந்த பார்சலை சாப்பாட்டு மேசையில் வைத்தவன் "ரெண்டு பேரும் சாப்பிடுங்க" என்று சொல்லிவிட்டு மீண்டும் டிவியில் மூழ்க கொலை பசியில் இருந்த இருவரும் பார்சலை விரித்து சாப்பிட தொடங்கினர்.

சாப்பிட்ட பின் குளியலறையுடன் கூடிய அறைக்குள் பத்மாவை வைத்து பூட்டியவன் "நீ என் கூட படுத்துக்கோ" என்றபடி அபிஷேக்கை இழுத்து கொண்டு சென்றான்.

அடுத்த நாள் காலையில் எழுந்தவன் "ரெண்டு பேரையும் நம்பி ரூம்ல அடைக்காம போறேன். தப்பிச்சு போக நினைச்சாலே நடக்கிறது வேற. நான் சொல்ற படி நடந்தா சீக்கிரமே விடுவேன்" என்று எச்சரிக்க அவர்களும் அவனுக்கு பயத்தில் சொல்ற படி நடக்க முடிவெடுத்தனர்.

வாசல் கதவை அடைத்து விட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்றவன் மேசையில் இருந்த கடிதத்தை பார்த்து சிரித்தபடி பிரித்தான். அவன் எதிர் பார்த்தபடி கமிசனர் அலுவலகத்தில் இருந்து விசாரணை கடிதம் வந்திருந்தது.

அதில் குறிப்பிட்டு இருந்தவாறு நேரே கமிசனர் அலுவலகத்துக்கு சென்றான். அங்கு மூன்று பேர் கொண்ட குழு அவனிடம் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுக்க அவனும் நிதானமாக அனைத்துக்கும் பதிலளித்தவன் நேற்று நடந்த கொலை தன்னால் தான் நிகழ்த்தப்பட்டது என்று ஒத்து கொண்டான்.

அவன் மன தைரியத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் கூட அதிர்ந்து போனார்கள்.

"மிஸ்டர் அதர்வநவ்தீபன் நீங்க இங்க வந்து ஒரு நாளில பண்ணின இந்த காரியத்தை எங்களால ஏற்றுக்கொள்ள முடியாது, சோ யு ஆர் சஸ்பெண்டெட் போர் சிக்ஸ் months " என்று சொல்ல அதை அவன் எதிர்பார்த்த போலவே "thank யு சார்" என்றபடி எழுந்து வெளியே வந்தான்.

அங்கு அவனுக்காக காத்திருந்த நண்பன் விஷ்ணு "ஏண்டா வந்து முதல் நாளே" என்று கேட்க "அத விடு மச்சான். ஐ நீட் ரெஸ்ட் டா.. அம்மா அப்பா பிரியா மாமா மாமி மச்சினி எல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன், சோ ஒரு லோங் ஹாலிடேய என்ஜோய் பண்ணலாம் என்று இருக்கேன்" என்றவன் தொப்பியை கழட்டி விட்டு ஷர்டை வெளியே இழுத்து விட்டான். ப்ரியா என்று அவன் தங்கச்சி பெயர் சொன்னதும் விஷ்ணு கண்கள் தானாக மின்னின.

"அப்போ நானும் லீவ் போட்டு வரவா?" என்று கேட்க "எஸ் sure , எல்லாத்துக்கும் மேல எனக்கு ரெண்டு அடிமை சிக்கி இருக்கு, ஒரு ரெண்டு நாள் வச்சு செஞ்சிட்டு அப்படியே ஊருக்கு கிளம்பனும்" என்றவன் ஜீப்பை அங்கேயே விட்டு விட்டு ஆட்டோவில் வீட்டுக்கு கிளம்பினான்.

உள்ளே நுழைந்ததும் அங்கு அபிஷேக்கும் பத்மாவும் தம்மை மறந்து கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்தனர். உடனே கீழே கிடந்த பந்தை எடுத்து அபிஷேக்கை நோக்கி ஏறிய அவனோ பாய்ந்து எழுந்தான்.

அதை பார்த்து பத்மாவும் எழ "என்ன குளிர் விட்டு போச்சா?" என்றபடி உள்ளே வந்தவன் சாப்பாட்டை நீட்டி "சாப்பிட்டுட்டு வீட்டை ரெண்டு பேரும் துடைச்சு வைக்கணும்" என்றபடி தனது அறைக்குள் புகுந்தான்.

சாப்பாட்டை சாப்பிட்ட பத்மா "எல்லாம் உன்னால தான். இப்போ பாரு," என்று முணு முணுக்க "இல்லை உன்னால தான்" என்றான் அபிஷேக். சாப்பிட்டு முடிந்ததும் வாளியில் தண்ணீரை எடுத்து வந்த பத்மா நிலத்தை துடைக்க தொடங்க அபிஷேக்கும் அவளுடன் துடைத்தான்.

அந்நேரம் அறைக்குள் இருந்த அதர்வா மும்பையில் இருந்தே கழுவாமல் எடுத்து வந்த உடைகளை சேர்த்து எடுத்தவன் அதை அப்படியே அள்ளியபடி ஹாலுக்குள் வந்தான்.

அங்கு நிலத்தை துடைத்து கொண்டிருந்த பத்மாவை நோக்கி வந்தவன் தனது அனைத்து உடைகளையும் அவள் மேல் போட்டு விட்டு " இதெல்லாம் கையால துவைச்சு போடு " என்றபடி அங்கிருந்த சோபாவில் கால் நீட்டி கண் மூடி இருந்தான்.

பல நாள் ஈரத்துடன் கிடப்பில் கிடந்த உடைகள் நாற தொடங்க " கருமம் கருமம் " என்று மெதுவாக முணு முணுத்தபடி மூக்கை பொத்தியவள் அந்த சில உடைகளை தனது தலையில் இருந்து இரு விரல்களால் தூக்கி தள்ளி போட்டு விட்டு " டேய் இந்த கருமம் எல்லாம் நான் தான் துவைக்கணுமா?? " என்று ரகசியமாக அபிஷேக்கிடம் கேட்டாள்.

அவனோ நிலத்தை துடைத்தபடி " உன் கிட்ட தந்தா நீ தான் துவைக்கணும் " என்று சொல்லி சத்தமாக சிரிக்க அது அதர்வா காதில் தெளிவாக விழுந்தது. உடனே அவனை " டேய் தடியா இங்கே வா " என்று அழைக்க அவனோ " நமக்கு என்னவோ " என்றபடி அவ்விடம் சென்றான்.

அவளோ அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் " போ போ .. மாட்டினியா " என்று சொல்லி சிரித்தாள். அப்போது ஷிர்ட்டை கழட்டியவன் "நேற்று ஒருத்தனுக்கு அறஞ்சதுல இந்த கை வலிக்குது கொஞ்சம் மசாஜ் பண்ணி விடு " என்றபடி கண் மூடி இருக்க அவனோ அதர்வாவின் முறுக்கேறிய புஜங்களை பார்த்து மலைத்து போய் நின்றான்.

சிறிது நேரம் அரவம் இல்லாமல் இருக்க கண் திறந்தவன் மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்ப்பது போல் மலைத்து போய் பார்த்து கொண்டிருக்கும் அபிஷேக்கை பார்த்து "என்னடா?" என்று கேட்க "என்னா body சார் உங்களுக்கு?நான் மட்டும் பொண்ணா இருந்தா " என்றவன் அந்த ஏக்க பார்வையுடனும் பெருமூச்சுடனும் அவன் கையை பிடித்து அமுக்க தொடங்கினான்.

உடனே அதர்வா அவனை புருவம் சுருக்கி பார்த்து "உன் பார்வையே சரி இல்ல, தள்ளி போ" என்றவன் ஷிர்ட்டை அணிந்து கொண்டு பத்மாவை பார்க்க அவளோ நிலத்தினுள் புதைந்து விடுமளவுக்கு குனிந்தவாறு அவனை பார்க்க சங்கடப்பட்டு கொண்டு நிலத்தை துடைத்து கொண்டிருந்தாள். அதை பார்த்து அதர்வா தனக்குள் சிரித்து கொண்டான்.
 

swaragini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

மீண்டும் நாங்களே..

"திருடி சென்றாய் இதயத்தையே" அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டோம்..

போன udக்கு போட்ட அதே ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் தான் பேபீஸ் இதுக்கும்.. ஏற்கனவே கொடுத்த பரிசில் எல்லாரும் மெய்சிலிர்த்து போய் இருப்பீங்க.. (ஐயோ அடிக்க கூடாது)..

அதே போல் இந்த ud எழுதினவங்களையும் சரியா guess பண்ணுற முதல் மூவருக்கு தரமான பரிசுடன் அந்த எழுத்தாளர் நாளை வருவார்..

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கண்டிப்பா பகிர்ந்துக்கோங்க பேபீஸ்..

உங்கள் ஸ்வராகினி

 

swaragini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3:

பத்மாவிடம் கொடுத்த துணிகளை அள்ளி கொண்டு போனவள் அதை துணி துவைக்கும் மேடையில் போட்டுவிட்டு...

“இந்த ஆணழகனுக்கு நான் துணி துவைக்கணுமா? இவனை சும்மா விடக்கூடாதே?” என்றவளின் வார்த்தையை உணர்ந்து தனக்கு தானே வெட்கப்பட்டு கொண்டு தன் பின்னந்தலையில் அவள் கையை கொண்டே அடித்துக் கொண்டாள்! அடுத்து அதை துவைப்பதற்கான வேலையை ஆரம்பித்தாள் அந்நேரம் பார்த்து அபிஷேக் பின்பக்கம் வர அவனை கவனித்துவிட்டவள்...

“டேய் அரைடிரௌசர் இங்க வாடா” என்றழைக்க, அவன் சுற்றும் முற்றும் பார்த்தவன் பின்பு அவள் அவனையும் தான் அழைத்திருக்கிறாள் என்றதள் கோபம் கொண்டவன் அவள் முன் தான் கால்களை அகட்டி வைத்து இடுப்பில் கைவைத்து முறைத்தவாரு நின்றிருந்தான்.

“கேர்ள் இனிமே இப்படி கூப்பிட்ட நான் உன்கூட வச்சிருக்கிற பார்ட்னர்ஷிப்பை முறிச்சுக்குவேன்” என்று கோபமாக கூறினான் அபிஷேக்.

“ஆமா நான் பெரிய டாடா பிர்லா... தமிழ்நாட்டுல பாதியை வளைச்சு போட்டு கம்பெனி உருவாக்கி வச்சிருக்கேன் பாரு அதுல இருந்து சார் பாட்னர்சிப்பை உடைக்க போறாராம் சும்மா காமெடி பண்ணிட்டு... பண்றது களவாணித்தனம் இதுல பாட்னர்ஷிப் வேற!” என்று உதட்டை வளைத்து அவனிடம் நக்கலாக கூறினாள்.

“ஸ்டாப் இட்! இப்போ உனக்கு என்ன வேணும்?”

“துணி துவைக்கணும் வா வந்து ஹெல்ப் பண்ணு”

“சார் உன்னை தான் துணி துவைக்க சொன்னாரு... என்னை இல்ல; சோ நீ தான் துவைக்கணும்” என்று அவன் அவளிடமே பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவன் அதிலிருந்து கழண்டுகொள்ள பார்க்க அவளோ அவனின் பேச்சில் கோபம் கொண்டு...

“டேய் கோமுட்டி தலையா இப்போ மட்டும் எனக்கு ஹெல்ப் பண்ணலை; உன்னை அப்படியே அந்த அண்டர்கிரௌண்ட் டேன்க்ல உருட்டிவிட்ருவேன் பார்த்துக்கோ” என்று ஒற்றை கையை இடுப்பிலும், மற்றொரு கைவிரலை அவனை நோக்கியவாறு நீட்டியும் எச்சரித்தாள். அவளின் கூற்றில் சற்றே அந்த தண்ணீர் சேமிக்கும் டான்க்கை பார்த்தவன் பயந்துவிட்டான். ‘இவ செஞ்சாலும் செய்வா எதுக்கு வம்பு’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் அடுத்த நிமிடம் அவளுடன் சேர்ந்து துணிகளை அலசதுவங்கினான்.

இருவரும் சிறுசிறு சண்டைகளுடனே துணியை துவைத்துக் கொண்டிருக்க... அதர்வா அவன் அறையில் இருந்த பால்கனியில் நின்று இருவரின் சேஷ்டைகளையும் உதட்டில் மலர்ந்த சன்னசிரிப்புடன் பார்த்திருந்தான். அப்போது பார்த்து அவன் சட்டைப்பையில் இருந்த அவளுடைய செயின் தட்டுபட அதை தொடும் போதே ஏற்பட்ட வித்தியாசமான உணர்வில் யோசனையானான். அப்போது அவளின் கையை பிடித்த போது ஏற்பட்ட மாற்றம் இப்போதும் நிகழ்ந்தது ஆனால் காரணம் தெரியாமல் குழம்பினான்.

இங்கே இவன் இதை பற்றி யோசித்துக் கொண்டிருக்க கீழே துணி துவைக்க பத்மாவிற்கு உதவி செய்துக் கொண்டிருந்த அபிஷேக் சட்டென்று வேலையை நிறுத்திவிட்டு அவனின் சட்டையை அடித்து துவைத்துக் கொண்டிருந்தவளை அவன் பேச்சில் இடையிட்டு நிறுத்தினான்...

“பத்து நீ சூர்யவம்சம் படம் பார்த்திருக்கியா?” என்று வினவியதில் யோசனையானவள்... ‘இதை எதுக்கு இப்போ சம்மந்தமே இல்லாம கேட்கிறான்?’ என்று மனதிற்குள் நினைத்துவிட்டு... “பார்த்திருக்கேன் இப்போ எதுக்கு சம்மந்தம் இல்லாம கேட்கிற?” என்று வினவினாள்.

“எல்லாம் சம்மந்தம் இருக்கு நாம அவரை பலி வாங்க ஒரு பெரிய ஐடியா வச்சிருக்கேன் இதனால நாம சீக்கிரம் இந்த இடத்தை விட்டு போகலாம்” என்றவன் அதில் வரும் காட்சியை கூறி அதே போல் செய்யலாம் என்று கூற இருவரும் அவனின் சட்டை பேன்ட் இரண்டையும் ஆனமட்டும் அடித்து துவைத்து கிழித்தனர்!
“டேய் அரைட்ரௌவ்சர் வாழ்க்கையிலையே உருப்படியான ஐடியா இப்போதான் கொடுத்திருக்க” என்று பாராட்டிவிட்டு இருவரும் செவ்வனே திரும்பினர்.

அடுத்ததினம் காய்ந்த துணிகளை சோபாவில் போட அதர்வ வேலை முடித்து அதை எடுத்துச் சென்று வார்டுரோபில் அடுக்க பார்க்க... அப்போதுதான் அனைத்து துணிகளும் கிழிந்திருந்ததை பார்த்தான். அதில் கோபம் கொண்டவன் இருவரையும் கிலிகிலியென பேச்சால் கிழித்து தொங்கவிட்டவன் இருவருக்குமான அவன் இல்லத்தின் சிறைவாசத்தின் கெடுவை நீட்டித்திருந்தான்!

“இனி ரெண்டு பேருக்கும் இன்னும் ஒருமாசம் இங்க தான் ஞாபகம் வச்சுகோங்க” என்று கூறிவிட்டு சென்றுவிட்டிருந்தான்.

அவன் கூறிவிட்டு இந்த புறம் நகர்ந்ததும் பத்மா அவனை எரிக்கும் பார்வை பார்க்க அபிஷேக் உசாரானான்... ‘ஆஹா இப்போவே எரிக்கற மாதிரி பார்க்கிறாளே நம்ம கதை கந்தல் தான் இனி” என்று மனதுக்குள் நினைத்தவன் இருந்தவாக்கில் அப்படியே பின்னாடி மெதுவாக நகர ஆரம்பிக்க மெல்ல வேகமெடுத்து அவன் வீட்டை சுத்தியே ஓடலானான்...
இவளோ... “டேய் நில்லுடா! மவனே நீ என்கைல கிடைச்ச சட்னி தான்” என்று கூறிக் கொண்டே அவனை துரத்திக் கொண்டு ஓடினாள்.

***********************************

இரண்டு நாட்கள் எந்த மாற்றமும் இல்லாமல் சென்றிருக்க... அன்று அதரவா அவனின் சொந்த ஊரான திருச்சி மாவட்டம் வயலூர் செல்ல வேண்டி அதற்கான ஏற்பாட்டில் இறங்கலானான்! அதன் முயற்சியாக அவன் பயணசீட்டு பதிவு செய்துவிட்டு வேண்டியவற்றை எடுத்துவைக்க மற்ற இருவரையும் என்ன செய்ய என்பதை பற்றிய யோசனையுடனே வேலையை செய்துக் கொண்டிருந்தான். அவன் அனைத்தையும் முடித்துவிட்டு இருவரையும் தேடி வர... பத்மாவும், அபிஷேக்கும் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர். இருவரையும் நோக்கிச் செல்ல தூரத்திலிருந்தே அவனை பார்த்துவிட்ட அபிஷேக்...

“பத்து கேப்டன் நம்மளை பார்த்து தான் வறாரு கெட் ரெடி! இன்னைக்கு உன்னை அவரோட பெட்ஷீட், ஜமக்காளம் எல்லாம் துவைக்க சொல்ல வாய்ப்பிருக்கு” என்று அவளை கலாய்க்க அவளோ இவனை முறைத்துப் பார்த்தாள்.

“வாயை மூடு அவனுக்கே தோணலைன்னாலும் நீயே ஐடியா கொடுத்துருவ போல இருக்கு அவன் வெறும் கையை வீசிட்டு தான் வறான் பாரு” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினாள்... இவர்கள் பேசி முடிக்கவும் அவன் அருகில் வந்திருக்கவும் சரியாக இருந்தது.

“என்ன ரெண்டு பெரும் தீவிரமா பேசிகிட்டு இருக்கிறதை பார்த்தா பெரிய பிளான்னா இருக்கும் போல இருக்கு?” என்று இருகைகளையும் மார்பில் கட்டிக் கொண்டு ஒற்றை புருவம் உயர்த்தி அர்த்தபுஷ்டியுடன் கேட்டிருந்தான்.

அவனின் கேள்விக்கு இருவரும் ஒருவரை ஒருவர் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே... ‘வாஸ்தவம் தான் இந்நேரம் வெளிய இருந்தா எங்க பிசினஸ் பத்தி பேசியிருப்போம்... உன்கூட இருந்துட்டு அதெல்லாம் முடியுமா ராசா?” என்று அபிஷேக் முனுமுனுக்க அவன் அதை கவனித்துவிட்டான்... அனால் அதை கண்டுகொள்ளது பேசலானான்...

“ரெண்டு பெரும் இப்படி கூட்டம் கூடி வெட்டியா பேசிட்டு இருக்காம வீட்டுல வேலையை பாருங்க... நீ போய் காபி போட்டு எடுத்துட்டு வா எனக்கு நல்லா ஸ்ட்ராங்கா இருக்கனும் என்று அவளிடம் கூறியவன்... அபிஷேக் புறம் திரும்பி நீ போய் தோட்டத்துக்கு தண்ணிபாய்ச்சு” என்று கூற எதிர்ப்பு கூற இயலாது அவனும் செல்லலானான். அந்நேரம் அவன் கைபேசி ஒலியெழுப்ப அவன் நண்பன் விஷ்ணு தான் அழைத்திருந்தான்!

எதிர்புறம் என்ன கூறினானோ அதற்கு இவன்... “இதோ பத்து நிமிசத்துல வரேண்டா” என்று கூறிவிட்டு அவன் இருவரிடமும் தகவல் கூட கூறாமல் சென்றுவிட்டான்.

பத்மா, அபிஷேக் இருவரும் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தனர்...

“டேய் எங்கடா எம்படனா காணோம்?” என்று கேட்க அவனோ அவன் சட்டை பைக்குள் கண்களை விட்டு துழவ ஆரம்பித்தான்! அவனின் செயலை புரியாது பார்த்துக் கொண்டே... “டேய் அங்க என்னடா தேடுற?” என்று வினவ...

“ஹ்ம்ம்... இப்போதான் பாக்கெட்குள்ள வச்சிருந்த எடுத்து போட்டேன் போவியா அங்கிட்டு.... என்னமோ என்கிட்டே சொலிட்டு போன மாதிரி” என்று அவன் சலித்துக் கொள்வது போல் பேசிக்கொண்டிருக்க பத்மாவின் மூலையில் மின்னலடித்தது! நொடியும் யோசிக்காது அவன் புறம் திரும்ப அந்நேரம் அவனிற்கும் அதே யோசனையுடன் திரும்பினான்... இருவரின் பார்வையும் ஒளிர “எஸ்கேப்” என்று ஒன்று சேர்ந்த குரலில் கூறிவிட்டு அங்கிருந்தது தாமதிக்காது இருவரும் தப்பித்து சென்றனர்.

செல்லும் வழியில் அபிசேக் அமைதியாக வராமல்... “அடுத்த டார்கெட் எங்க?” என்று சர்வ சாதாரணமாக வினவ அவளோ அவனை எரிக்கும் பார்வை பார்த்திருந்தாள்.

“என்ன இப்போதான் அந்த எம்படன் கிட்ட இருந்து தப்பிசுருக்க மறந்திருச்சா கொஞ்சம் அடங்கியிருப்போம்... ஒரு ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு பார்ப்போம்” என்று கூறிக்கொண்டிருக்க...

“பத்மா க்கா... பத்மா க்கா...” என்று அவளை அழைத்துக் கொண்டே தலைதெறிக்க ஓடிவந்தான் ஒருவன். அவன் வேறுயாருமில்ல அவளின் பக்கத்துக்கு வீட்டில் குடியிருக்கும் நபரின் பையன்.

“என்னடா என்னாச்சு? ஏன் இப்படி தலைதெறிக்க ஓடி வர?”

“உங்க அப்பாக்கு ரொம்ப உடம்பு முடியல எங்க அம்மாதான் உங்களை சீக்கிரமா கூப்டுட்டு வர சொல்லிச்சு” என்று மூச்சு வாங்க கூற அவள் ஒரு நிமிடம் அவன் பேச்சை கேட்டு அதிர்ந்தவள் மறுநிமிடம் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை போல் வீட்டை நோக்கி ஓடினாள்... அபிஷேக் அந்த சிறியவனுடன் சேர்ந்து அவளை பின்தொடர்ந்து சென்றான்.

வீட்டை அடைந்ததும் “அப்பா.. ப்பா..” என்று கூறிக் கொண்டே கண்ணீருடன் அவர் முன் அமர்ந்தாள். ஆனால் அவரோ நிதானமாக அவளை நோக்கியவர்...

அவளிடம் கையில் ஒரு சிறிய பெட்டியை அவளிடம் நீட்டினார்... அவளோ யோசனையுடன் அதை பெற்றுக் கொண்டுவிட்டு அவரை கேள்வியுடன் பார்க்க...

“என..க்க..ப்பு..றம்.. இ..து.. உன..க்கு.. உத..வும்..ம்மா..” என்று ஒவ்வொரு வார்த்தையையும் சிரமப்பட்டு கூறியவர் தன் இறுதிமூச்சை அத்துடன் நிறுத்திவிட்டிருந்தார்... அவளோ அவரின் இறப்பை கண்டு வேதனையடைந்து அழுகையில் கரைந்தாள்! ஒருவாறு அனைவரும் ஒருவின் பின் ஒருவர் வந்து அவளுக்கு வேண்டிய உதவிகளை செய்து அவரின் ஈம காரியங்களை முடிந்திருந்தாள்.

இரண்டு நாட்கள் அப்படியே கழிய மூன்றாம் நாள் தான் அவளுக்கு அவர் கொடுத்த பெட்டி நினைவு வந்து அதை திறந்து பார்க்க நினைத்து எடுத்தவள் அதிர்ந்துப் போனாள். அதில் இருந்த சில விஷயங்கள் அவளின் சில ரகசியத்தை கட்டுடைதிருந்தன.

வெகுநேரம் யோசித்துக் கொண்டே இருந்தவள் சட்டென்று மூலையில் மின்னலடிக்க உடனே அதில் குறிப்பிடிருந்த ஒரு ஊருக்கு பயணம் செய்ய திட்டமிட்டாள். அதற்கு உதவியாக அவள் அபிஷேக்கிடம் உதவி கூறினாள்.

“நிஜமவ சொல்லுற பத்து... அதெல்லாம் உண்மையா?” அவனும் வியப்புடன் கேட்டிருந்தான்.

“ஆமாடா நாம உடனே அங்க போகணும் அப்போதான் இன்னும் முழுசா தெரியவரும்”

“வரலன்னு சொன்னா விடவாப்போற வா போவோம்” என்று அவளுடன் பயணிக்க ஆயத்தமானான்.

இருவரும் அன்று இரவு புறப்பட்டு திருச்சி நோக்கி புறப்பட்டு அங்கிருந்து வயலூர் நோக்கி சென்றனர். அங்கு இவர்களுக்கு காத்திருக்கும் பல திருப்பங்களை அறியாதவர்கள்!!!

***********************************

அன்று தன் நண்பனை பார்த்துவிட்டு வீடு திரும்பிய அதர்வா பத்மா, அபிஷேக் இருவரையும் அங்கே கானாது தேடினான். இறுதியாக அவர்கள் தப்பிதுவிட்டதை உணர்ந்தவன்... ‘ஒஹ் ரெண்டு பெரும் தப்பிச்சு ஓடிட்டீங்களா? என்கிட்டே சிக்காமையா போயிருவீங்க பார்த்துக்கிறேன்’ என்று மனதிற்குள் கறுவிக் கொண்டுவிட்டு அவன் நண்பனுக்கு அழைத்தான்.

“டேய் விஷ்ணு அவங்க ரெண்டு பெரும் தப்பிச்சுட்டாங்கடா இப்போ சஸ்பென்ஸ்ல வேற இருக்கேன் அதனால ஒன்னும் பண்ண முடியாது நான் ஊருக்கு கிளம்பறேன்” என்று கூறியிருக்க இங்கு விஷ்ணுவின் கண்கள் ஒளிர்ந்தது.

“சரிடா நானும் உன்கூட ஊருக்கு வரவா?”

“நான் தான் வேலை இல்லாம போறேன் நீ ஸ்டேஷன் போயாகணுமே டா?”

“டேய் அதுக்கில்ல; ஒரே வேலை வேலைன்னு ஓடி ஓடி மண்டையெல்லாம் சூடாகி இருக்கு... உங்க ஊருக்கு வந்தா கண்ணனுக்கு குளிர்ச்சியா பச்சை பசேல்ன்னு இருக்கிற தோட்டம்துறவு எல்லாம் சுத்தி பார்க்கலாமே?” என்று கூறினான்... ஆனால் இதை கூறும்போது அவனுக்கு தோட்டம் நினைவு வராது அவன் தங்கை பிரியாவே அவன் கண்களுக்குள் நின்றாள். இவன் கண்மூடி அதை ரசித்துக் கொண்டிருக்க...

“அப்போ சரிடா நீ கிளம்பி புறப்பட்டு வா நானும் ரெடி ஆகி வந்துறேன்” என்று கூற கனவில் மிதந்து கொண்டிருந்தவன் சட்டென்று சுதாரித்து...

“இதோ டென்மினிட்ஸ் இருப்பேன்” என்று உற்சாகமாக புறப்பட்டான் விஷ்ணு!

இருவரும் பேருந்து நிலையத்தில் சந்தித்துகொண்டு திருச்சி நோக்கி பயணப்பட்டனர்.

********************************
இங்கு வயலூர் வந்துவிட்டிருந்த பத்மா, அபிஷேக் இருவரும் அத்துவான காட்டில் நுழைந்துவிட்டதை போல் திருதிருத்து நின்றனர்... காரணம் அவளிடம் உள்ள குறிப்பில் ஊர், பெயர் அனைத்தும் இருந்தது தான் ஆனால்... அவளிடம் நிரூபிக்க எந்த தடயமும் இல்லாததை நினைத்து கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. இருந்த ஒரு தடயத்தையும் அதர்வா எடுத்துக் கொண்டானே அதை எடுக்காததை நினைத்து இப்போது வருந்திக் கொண்டிருந்தாள்.

“பத்து நான் சொல்றதை கேளு எப்படியும் இங்க நாம எந்த ஆதாரமும் இல்லாம போக முடியாது அதனால வா நாம சென்னைக்கே திரும்பிருவோம்” என்று கூற அவளோ அவனை ஆனமட்டும் முறைத்து பார்த்துவிட்டு...

“இங்க பாருடா நீ போறதுன்னா போ... அதை விட்டுட்டு என்னை உன்கூட இழுக்காத நான் முன் வச்ச காலை பின் வைக்கறதா இல்லை; இனி என் ஊர் இதுதான் என்னால கண்டுபிடிக்க முடியாட்டியும் நான் இந்த ஊர்ல எதாவது ஒரு மூலைல இருந்துட்டு போறேன்” என்றவளின் கண்கள் கலங்க ஆரம்பித்தது அவளின் கலங்கிய கண்களை பார்த்தவன் அவளை மாற்றவேண்டி...

“பத்து உனக்கு இந்த செண்டிமெண்ட் செட் ஆகவேல நான் ஒரு கவிதை சொல்லுறேன் கேளு...
இங்க பாரு பத்து...
நம்மகிட்ட இல்லாம இருக்கலாம் சொத்து...
என்னைக்கும் நமக்கு கைகொடுக்கும் நம்ம கெத்து...
வாழ தெரிஞ்சவன் பிஸ்தா... வாழத் தெரியாதவன் முந்திரி!
ஹேய் டண்டனக்கா.. டனக்குனக்கா..” என்று டி.ராஜேந்தரை போல் கைகளை தலையில் வைத்துக் கொண்டு ஆடிக்காட்ட இப்போது அவள் அவனை அடிக்க அருகில் ஏதேனும் இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தாள்... அவன் நினைத்தது போலவே அவள் வருத்தத்தில் இருந்து வெளியே வந்து அவனை அடிக்க ஆயுதம் தேடினாள்.

“எப்படி பத்து என் கவிதை?”

“ஹ்ம்ம் செயல்ல காட்றேன்?” என்றவள் கல்லை தூக்கி அவன் மேல் எறியப்பார்க்க... அவனோ பதறிக் கொண்டு ஓட இவளும் ஓடியவள் ஒரு இடத்தில் அவள் கால்கள் சுவிட்ச் போட்டார் போல் நின்றிருந்தது. அதில் இருந்ததும் இதுதான்... ‘வேலைக்கு ஆட்கள் தேவை’ என்ற வாசகத்துடன் ஒரு கைபேசி எண்ணும் இருக்க அதை பார்த்த மாத்திரத்தில் அவள் மூலையில் மின்னல் வெட்டியது ஒரு யோசனை! இவள் நின்றதை பார்த்தவன் இவள் அருகில் வந்து அவளின் யோசனையை கலைக்க அழைத்துப் பார்க்க அவளிடம் எதிரொலி இல்லை; ‘என்னாச்சு ஒருவேள கரன்ட் ஷாக் அடிச்சிருச்சோ?’ என்று மானசீகமாக நினைத்தவன்... அவள் முன் சென்று இரு கையை ஆட்டினான் அதில் யோசனையில் இருந்து மீண்டவள்...

“ஹான்...” என்றதுடன் அவள் தலையை சிலுப்பிக் கொண்டு அந்த யோசனையை அவனிடம் சொல்லலானாள்.

“டேய் அபி நான் சொல்ருதை கேளு நாம ஏன் பண்ணையார் வீட்டுக்கு வேலை கேட்டுப் போககூடாது”

“ம்க்கும்... வேலை! அதுவும் நீயும்... நானும்..? வெளங்கிரும்; நாம என்ன டிகிரியா படிச்சிருக்கோம் போனா என்னை வேலை கூட்டி பெருக்கற வேலை கூட தரமாட்டாங்க”

“ஏன்டா இப்படி சொல்லுற? நான் படிக்கலை தான்... ஆனா கணக்கு நல்லா தான் போடுவேன்... இதை வச்சு கேட்போம். உனக்கு கண்டிப்பா மாட்டுத்தொளுவம் இருந்த அங்கேயே உனக்கும் வேலை வாங்கி தர” என்க... அவன் இருக்கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அவளை மேலும் கீழும் முறைத்துக் கொண்டே பார்த்தவன்...

“என் இமேஜ்லையே கைவைக்கிற பார்த்தியா? நான் ஒன்னும் உன்கூட வரமுடியாது நீ வேணா போ” என்று கூறிவிட்டு திரும்பிக் கொண்டான்.

“சந்தோஷம் நான் போறேன்... நீ ஊர் போனாலும் சரி... இல்லை; இங்கயே இருந்தாலும் சரி” என்று கூறிவிட்டு அவள் வேகமாக் நடக்க இவனோ... ‘ஐயோ நெசமாவே போறாளே? நமக்கு வேற ஒன்னும் தெரியாதே இவ பின்னாடியே போவோம் நடக்கறது நடக்கட்டும்’ என்று தனக்கு தானே பேசிக் கொண்டவன்...

“ஹேய் பத்து... பத்து... நில்லு! நில்லு!” என்று கத்திக் கொண்டு ஓடி அவளுடன் சமரசம் செய்துவிட்டு சென்றான். கையில் இருந்த முகவரியை வைத்து அவள் வீட்டை நோக்கிச் சென்றார்கள்.

************************

செல்லகண்ணு இல்லம்...

“டேய் ராசமுத்து அந்த தேங்காமட்டை எல்லாம் எடுத்து லோட் அனுப்பி வச்சுரு கணக்கு எழுத கணக்குபிள்ளையை கூட்டிட்டு வா” என்று கூறிக் கொண்டிருந்தார் அந்த வீட்டின் மூத்த பண்ணையாரின் மனைவி ராஜாத்தி!

“நம்ம கணக்குபிள்ளைக்கு வரவர உடம்பு சுகம் இல்லாம போகுதாமா அவர் பொண்ணு வெளிநாட்டுக்கு கூப்பிட்டுகிட்டே இருக்காளாம் இவரும் போகத்தான் கேட்டுட்டு இருக்கார் நாம தான் அக்கா நிறுத்தி வச்சிருக்கோம்” என்று கூறினார்... அந்த வீட்டின் இளைய பண்ணையாரின் மனைவி கோமளவல்லி.

“ஆமாம் நீங்க சொல்றதும் சரிதான் நம்ம மூத்தவன் வந்ததும் கேட்டு சீக்கிரமா வேலைக்கு ஆள் ஏற்பாடு பண்ணனும்” என்று பேசிக் கொண்டிருந்தனர்.

பத்மா, அபிஷேக் இருவரும் வீட்டிற்குள் நுழைய தாழ்வாரத்தில் பேசிக் கொண்டிருந்த இருவரையும் நோக்கி... “மேடம்!” என்றழைத்தாள் பத்மா. இருவரும் குரல் வந்த திசையில் திரும்பிப் பார்க்க அங்கே நின்றிருந்தவளை புருவம் முடிச்சிட பார்த்தனர்.

“யாரம்மா நீ?” என்று ராஜாத்தி வினவினார்.

“மேடம் என் பேர் பத்மா” என்று கூற இடை புகுந்த கோமளவல்லி...

“உன்னை இந்த ஊர்ல பார்த்த மாதிரியே தெரியலையேமா?” என்றார்.

“ஆமாம் மேடம்... நான் இந்த ஊர் இல்லை தான்; சென்னைல இருந்து வரேன் இங்க எதாவது வேலை கிடைக்குமா?”

“வேலையா நீ படிச்சிருக்கியாமா?” என்று வினவினார் ராஜாத்தி.

“இல்லை மேடம் படிக்கலை; ஆனா நான் கணக்கு நல்ல போடுவேன்” என்றதில் அவர் யோசனையானார் ராஜாத்தி.

“என்ன அக்கா இப்படி யோசிக்கறீங்க? நாம நம்ம பசங்க கிட்ட கேட்டு சொல்லுவோம் இப்போதைக்கு அவளை அனுப்பி வைப்போம்” என்க அவருக்கும் அந்த யோசனை சரியாகபட்டதில்...

“சரிம்மா நாங்க வீட்டுல பேசிட்டு சொல்லுறோம்” என்று கூறிவிட்டு அவளை அனுப்பிவைக்க பார்த்தனர்.

“இல்லை மேடம் நாங்க சென்னைல இருந்து வந்ததே வேலை தேடித்தான்... இப்போ எங்களுக்கு எங்கயும் போகமுடியாது இவன் நீங்க சொல்ற எந்த வேலைனாலும் செய்வான்... நானும் வேலை பார்க்கிறேன் பிடிக்கலைன்னா அப்புறமா சொல்லுங்க மேடம் ப்ளீஸ்” என்று மன்றாட இருவரும் அவளின் மன்றாடளில் உருகினாலும் வீட்டில் முடிவெடுக்காது பேச முடியாதே என்று நினைத்து...

“இல்லம்மா நாங்க தனிச்சையா முடிவெடுக்க முடியாதும்மா” என்று கூறிவிட்டு திரும்பி நடக்க எத்தனிக்க...

“அக்கா ஒரு நிமிஷம்” என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர்... அங்கே பத்மாவிற்கு பின்னால் வைத்தீஸ்வரி நின்றிருந்தார். பண்ணையார் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு இரண்டு ஆண்களுக்கு மத்தியில் பிறந்த பெண் தான் இவர். அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நின்றவர்கள்.

“என்ன வைத்தீ கோவிலுக்கு போயிட்டு சீக்கிரம் வந்துட்ட?” போல என்று வினவினார் ராஜாத்தி.

“ஆமாம் அக்கா நாளைக்கு மூத்தவன் வரான்ல அதான் கடைக்கு போகணுமேன்னு சீக்கிரம் வந்தேன் நான் முன்னவே வந்துட்டேன் ஆனா இந்த பொண்ணு பேசிட்டு இருந்ததை பார்த்து நின்னுட்டேன் அக்கா நான் சொல்வேன் தப்பா நினைக்கமாட்டீங்களே?” என்று தயக்கத்துடன் வினவினார்.

“நீ சொல்லு வைத்தி எங்ககிட்ட என்ன தயக்கம்? நம்ம வீட்டு ஆம்பிளைங்ககுள்ள ஆயிரம் இருக்கும் அதுக்காக நாம தனியா இருக்கும் பொது தயக்கம் வேண்டாம். நாம எல்லாம் இந்த வீட்டுல ஒன்னா ஒற்றுமையா இருக்கவேணும்” என்று கபடத்து கூறினார் கோமளவல்லி.

“கோமளம் சொல்றது சரிதான் வைத்தி நீ சொல்லு” என்று ராஜாத்தியும் உந்த அவர் பத்மா அருகில் நின்றவர்...

“ஏம்மா நீ ஏன் தனியா வந்திருக்க?”

“இல்லைம்மா... எனக்கு அப்பம்மா யாரும் இல்லை; இவன் பக்கத்துக்கு வீட்டு பையன் சின்னதுல இருந்து பழக்கம்” என்று கூற பெண்ணை பெற்ற தாய் மனம் அவளிர்க்காக உருகியது.

“அக்கா இந்த பொண்ணு சொல்றாப்புல நாம வேலை கொடுத்து தங்க வைப்போம் மேற்கொண்டு எதாவது பிரச்சனைன்னா மட்டும் பேசிக்குவோமே” என்று வைத்தீஸ்வரி ஆலோசனை கேட்க...

“நீ சொல்றதெல்லாம் சரிதான் வைத்தீஸ்வரி இந்த வீட்டுல ரெண்டு ஆம்பள பசங்க அதுல ஒருத்தனை பத்தி கவலை இல்லை; ஆனா இன்னொன்னு நான் பெத்தது இருக்கே என்னதான் இருந்தாலும் அது வாழவேண்டிய வயசுப் பொண்ணு நாளைக்கு எதாவது ஒண்ணுன்னா அந்த பொண்ணு வாழ்க்கை என்னாகிறதுப் நம்ம வீட்டுலயும் ரெண்டு பொண்ணுங்க இருக்கே” என்று ஆதங்கத்தோடு கூறினார்.

“எல்லாம் சரிதான் க்கா நாம மூணு பேர் சுமித்ரா, பிரியா இத்தனை பேர் இந்த வீட்டுல இருக்கோம்... எப்பவும் இவளை நம்ம கண்பார்வைல வச்சுகுவோம் இல்லாட்டி நம்ம பசங்களை பார்வைக்கு கொண்டு வருவோம் நம்மளால முடியததா? அதுக்காக ஒரு வயசுப் பொண்ண தவிக்க விடமுடியுமா?”

“அது சரிதான் இவளை எங்க தங்க வைப்ப வைத்தி?” என்று வினவினர் ராஜாத்தி.

“நம்ம சுமித்ரா கூடவே தங்க வைப்போம் இந்த பையன நம்ம தோட்டத்து வீட்டுல... இல்லன; பக்கதுல எங்காவது வீடு பார்த்து தங்க வச்சுப்போம்”

“அதுசரி நம்ம சுமித்ரா ஒதுக்குவாளா?” என்று கேட்கயிலே...

“எனக்கு டபுள் ஒகே என்று கூறிக் கொண்டே தாவணி பாவாடையுடன் துள்ளி குதித்து வந்தாள் சுமித்ரா மேல்நிலை பள்ளி செல்லும் பருவப்பெண்.

“இதோ சுமித்ராவே சொல்லிட்டாளே இனி என்ன வேணும் சுமி நீ கூட்டிட்டு போ” என்று கூறிவிட அன்னையின் பேச்சிற்கு மதிப்பளித்து அவளும் மகிழ்வுடன் கூட்டிச் சென்றாள்... ராஜாத்தி, கோமளம் இருவரும் உள்ளே சென்றிருக்க... அபிஷேக்கை கடைக்கு அனுப்பிவைத்தனர் சில பொருள்களை வாங்கி வர சொல்லி.

இங்கு வைத்தீஸ்வரி யோசனையுடன் நின்றிருந்தார்... அவருக்கோ பத்மாவை பார்த்து பிறகு உள்ளடங்கிய ஒரு சிலிர்ப்பு எழுந்ததே அது எதனால் என்பதற்கான காரணம் புரியாது நின்றிருந்தார்.

“என்ன வைத்தி இங்கயே நின்னுட்ட?” என்று கேட்டுக்கொண்டே வந்தார் அவரின் கணவர் ராமமூர்த்தி.

“இப்போ தாங்க கோவில்ல இருந்து வந்தேன்... அதுக்குள்ள...” என்று ஆரம்பித்தவர் பத்மா வந்ததை கூறிவிட்டிருந்தார்.

“அப்படியா அது சரிதான்... இருக்கட்டும் வைத்தி நீ போய் மூத்தவன் வரான்ல அதுக்கான ஏற்பாடு பண்ணு”

“ஆமாம் நான் போய் அதுக்கான வேலையை பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு சுமித்ராவை அழைத்தார்.

“சுமி...” என்றழைப்பை கேட்டு...

“அக்கா நீங்க போய் குளிச்சுட்டு ரெடி ஆகுங்க உங்களை நான் வயலுக்கு கூட்டிட்டு போறேன்... இது உங்க வீடு மாதிரி நான் உங்க தங்கை மாதிரி சரியா” என்று அன்போடு கூறிவிட்டு அவள் அன்னையை தேடிச் சென்றாள்.

பத்மா அவர்களின் அன்பில் கரைந்திருந்தால் அதன் எதிரொலியாக அங்க சிரத்தையாக வேலை பார்க்க வேண்டும் என்று தனக்கு தானே சபதம் எடுத்துக் கொண்டாள்.

“சுமி நாளைக்கு மாமா வரான் சென்னைல இருந்து... போய் நம்ம அலுமேலு அக்காவை கூட்டிட்டு வா பலகாரம் செய்யணும்” என்று கூற, அவளுக்கு சந்தோஷத்தில் வானில் பறப்பது போல் இருந்தாள். கால்கள் இரண்டும் தரையில் பாவவில்லை.


“இதோ இப்போவே போறேன்ம்மா” என்று கூறிவிட்டு அவள் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு சிட்டாக பறந்தாள்.

விசயத்தை அலுமேளுவிடம் கூறிவிட்டு வீடு திரும்பும் சமயம் அவள் பள்ளிதொளிகளை கண்டால் இருவரும் தோப்பில் பும்ப்செடில் துணிகளை துவைத்து விட்டு குளித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் அங்கே துள்ளளுடம் வரும் இவளை பார்த்தவர்கள் அவளின் மிதிவண்டியை மரித்தார் போல் நிற்க எங்கோ பரக் பார்த்துக் கொண்டு மாமனின் நினைவில் வந்தவள் அருகில் குமிதிருந்த மணலில் விழுந்துவிட்டால் நல்ல காலம் மணல் என்பதால் அடிபடவில்லை ஆனாலும் அவள் கனவு மட்டும் கலையாமல் இருக்க வனத்தை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவளை கண்டு இருவரும் புரியாது பார்த்துக் கொண்டனர்.

“என்னடி ஆச்சு இவளுக்கு? கீழ விழுந்தவளை பார்த்து நாம பதறினா இவ லூசு மாதிரி சிரிக்கிறா?”

“அதாண்டி தெரியலை?” என்று கூறிய மற்றொருவள் அவளிடம் பேச முனைந்தாள்...

“ஏய் சுமித்ரா என்னடி ஆச்சு உனக்கு இப்படி சிரிக்கிற?” என்றவர்களின் கேள்விக்கு... சிரித்துக் கொண்டே பார்த்திருந்தாள். அதற்கு மேல் பொறுமை இழந்தவர்கள்...

“ஹேய் ஒழுங்கா என்னனு சொல்லிட்டு சிரி... இல்லன்னா இப்போவே பைத்தியகார ஆஸ்பித்திரிக்கு போன் பன்னிருவோம்” என்று மிரட்ட அப்போதும் சிரிப்பை நிறுத்தாமல்...

“ஹைய்யோ நான் எப்படி சொல்லுவேன்... எனக்கு வெட்க வெட்கமா வருதே” என்று வெட்கத்தில் அவள் கரங்களைக் கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள்.

“ஏய் நான் நினைக்கறேன் அவளுடைய மூத்த மாமா போலிசா இருக்கார்ல அவர் நாளைக்கு வருவாரா இருக்கும் அவர் வந்தா மட்டும் தான் இவ பூமிலையே இருக்க மட்டா பேயா மாறி வானத்துல பறப்பா”

“இருக்கும்டி எதுக்கும் கேட்போம்”

“ஏய் சுமித்ரா என்ன நாளைக்கு உங்க மாமா வராறா?” என்று கேட்டிருக்க... மூடிய கைகளை விலக்காமல் இரு விரல்களை மட்டும் நகர்த்தி பார்த்தவளின் வெட்கம் ஆமாம் என்றதை உரைத்திருக்க...

“அதுசரி இனி அவங்க மாமா ஊருக்கு கிளம்பற வரைக்கும் இவளை கைல பிடிக்க முடியாதுடி... இங்க நின்னா நமக்கும் பைத்தியகார பட்டம் வாங்கிக் கொடுத்திருவா நாம போவோம் வா” என்று கூறிவிட்டு இருவரும் செல்ல இவளோ வெட்கத்தை விடாமல் சிரித்துக் கொண்டே பயணித்தாள் வீடு நோக்கி.

*****************************

திருச்சி வந்தடைந்த அதர்வா, விஷ்ணு இருவரும் வயலூர் செல்லும் உள்ளூர் பேருந்து ஒன்றில் ஏறி பயணித்தனர்... வேலைக்கு செல்பவர்களும், பள்ளி சிறுவர், சிறுமியர் அனைவரும் அப்பேருந்தில் தான் பயணித்தனர். அதர்வநவ்தீபன் பண்ணையார் குடும்பம் என்பதால் அவன் வீட்டிற்கு ஒரு அழைப்பு விடுத்திருந்தாலே அவனுக்காக கார் ஒன்றை அவனை தேடி அனுப்பி வைத்திருப்பர்கள். ஆனால் அதர்வா, விஷ்ணு இருவரும் தான் சுற்றி இருக்கும் வயல் வரப்புகளை ரசிக்க வேண்டும் என்று கூறி... அந்த பேருந்து பயணத்தை தேர்ந்தெடுத்தனர். அவன் அவ்வூர் மக்கள் அனைவருக்கும் நன்கு பரிட்சியம் பார்ப்போர்கள் அனைவரும் அவனுக்கு வணக்கம் வைக்காமல், சிரிக்காமல் நலம் விசாரிக்காமல் செல்லவில்லை; அப்படிதான் ஒரு வயதான பெண்மணி...

“ஏன் பெரிய ஊட்டு போலீஸ் ராசா பஸ்ல வாரியே உன் ஐயனுக்கு ச்செல்லுபோனுல கூப்பிட்டுருந்தா கார் எடுத்துட்டு வந்திருப்பானே? இந்த கூட்டத்துகுள்ள ஏன் ராசா வாறா?” என்று அக்கறையுடனும், பாசத்துடனும் மரியாதையுடனும் விசாரித்தார்.

“என்ன பாட்டி இபப்டி சொல்லிடீங்க? ஐயா கார் அனுப்புவாங்க தான் ஆனா இந்த மாதிரி உங்களை எல்லாம் பார்த்துட்டு சந்தோசமா போக முடியாதே” என்று சன்ன சிரிப்புடன் கூறினான். அவனின் பேச்சில் மகிழ்ந்து போனவர்...

“என் ராசான்னா... ராசாதான்! அப்படியே உங்க அப்புச்சி மாதிரியே இருக்கய்யா நீயு உன்ற சித்தபார் மவனும் இருக்கானே ஒவ்வொரு வீட்டுலயும் ஒவ்வொரு அகராதி இருக்கு ராசா” என்று அங்கலாய்பாக கூறிவிட்டு அவர் இறங்கும் நிறுத்தம் வர... “சரி ராசா நான் வாறன்” என்று கூறிவிட்டு இறங்கிவிட்டார்.

“டேய் என்னடா அந்த பாட்டி உன்னை புகழ்ந்துட்டு இப்படி ஆதங்கப்படுதே? யாரைடா சொல்லிட்டுபோகுது” என்று புரியாது வினவினான்.

“அவனை பத்தி சொல்ற அளவுக்கு பெரிய ஆள் இல்லை; உனக்கு தெரிஞ்சவந்தான் கொஞ்சம் ஞாபகம் படுத்திபாருடா”

‘ஹான்! யாரா இருக்கும்?’ என்று கூறிக்கொண்டே யோசைனையில் ஆழ்ந்தவன் சட்டென்று அவன் மூலையில் மின்னல் வெட்டியது... “டேய் உங்க சித்தப்பா பையன் ரஞ்சித்தாடா?”

“அவனே தான்” என்றுவிட்டு அதற்குமேல் பேசாமல் அவன் வயல்வெளியை பார்க்க தொடங்கிவிட்டான் இருவரும் ஒருவாறு வீடு வந்து சேர்ந்தனர்.
இருவரையும் அனைவரும் அன்பாக வரவேற்று அவனை பாசம் கொண்டாடினார்கள்... அந்நேரம் வயலில் இருந்து மாதேஸ்வரன் பெரிய பண்ணையார், ராஜேந்திரன் சின்ன பண்ணையார் இருவரும் வந்தனர். அவர்கள் வந்ததும் அனைவரும் வேலை பார்க்கச் சென்றுவிட இருவரும் இவனிடம் உரையாட ஆரம்பித்தார்கள். ராஜேந்திரன் மட்டும் அவனிடம் பொதுவான நலம் விசாரிப்பிற்கு பிறகு கழண்டு கொண்டார். அது இன்று, நேற்று அல்ல எப்போதும் அவன் வந்தாலும் இதுதான் நடக்கும்.

விஷ்ணுவின் கண்கள் அவன் நாயகியையே தேடிக் கொண்டிருந்தது... சரியாக அவள் கல்லூரியில் இருந்து வர... “அண்ணா” என்று ஓடிவந்து பாசத்துடன் அணைத்துக் கொண்டாள்.

“ஹேய் பிரியா! சீக்கிரம் வந்துட்ட போல?”

“ஆமாம் அண்ணா நீங்க வரீங்கன்னு தான் சீக்கிரம் வந்தேன்... ஆமா இது யார் அண்ணா?” என்று அவள் விஷ்ணுவை பார்த்து வினவ... அந்நேரம் வரை அண்ணன், தங்கை பாசப்பிணைப்பில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லையே என்று ஏக்கப்பட்டு கொண்டிருந்தவன் முகம் ஒளிர்ந்தது. ஆனால் அடுத்து அவள் கூறிய வார்த்தையில் அவன் இதயம் சுக்கு நூறாக உடைந்தது.

“இவன் விஷ்ணு என்கூட வேலை செய்றான் பிரியா” என்று அறிமுகப்படுத்த...

“எப்படி இருக்கீங்க அண்ணா” என்றவளின் வார்த்தையில் அவன் முகம் விளகெண்ணையை குடித்தது போல் ஆகியது... அவன் மன வீடு உடைவது போலவே சித்தப்ரம்மையில் எழுந்தது... என்ன செய்ய அந்நேரம் அனைவரின் முன்னிலையிலும் ஏதும் பேச முடியாத காரணத்தால் அவன் அடக்கியே வாசித்து சாதாரணமாக பதில் கூறி அனுப்பினான். அந்நேரம் இவன் ஒன்றை மறந்து தான் போனான்... அது ப்ரியாவை இவனுக்கு தான் தெரியும் என்றும்; அவள் இப்போதுதான் இவனை பார்க்கிறாள் என்பதையும் மறந்தான்.

அனைவரும் அவனிடம் நலம் விசாரித்து சாதாரணமாக பேசினார்களே தவிர பத்மாவை வேலைக்கு என்று சேர்த்திருப்பதை கூறியிருக்கவில்லை; அனைவரிடமும் பேசிவிட்டு தன் நண்பனுடன் அறைக்கு திரும்பினான்.

“டேய் விஷ்ணு நீ மேல மாடில ரெண்டாவது ரூம்க்கு போ... நான் கீழ போய் இன்னொரு பேகை எடுத்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு கீழே சென்று மற்றொரு பேகையும் எடுத்துக் கொண்டே மேலே வரலானான். சரியாக அவன் படி ஏறி திரும்பும் சமயம் அங்கிருந்த முதல் அறையில் இருந்து பத்மாவும் வெளிவர இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு திடுக்கிட்டு நின்றனர்!!!

தொடரும்...
 

swaragini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

மீண்டும் நாங்களே..

"திருடி சென்றாய் இதயத்தையே" அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டோம்..

போன udக்கு போட்ட அதே ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் தான் பேபீஸ் இதுக்கும்.. ஏற்கனவே கொடுத்த பரிசில் எல்லாரும் மெய்சிலிர்த்து போய் இருப்பீங்க.. (ஐயோ அடிக்க கூடாது)..

அதே போல் இந்த ud எழுதினவங்களையும் சரியா guess பண்ணுற முதல் மூவருக்கு தரமான பரிசுடன் அந்த எழுத்தாளர் நாளை வருவார்..

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கண்டிப்பா பகிர்ந்துக்கோங்க பேபீஸ்..

உங்கள் ஸ்வராகினி

 

swaragini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4

தனது அறையில் இருந்து பத்மா வெளிய வர, சரியாக அதே நேரம் தன் ரூம் நோக்கி சென்று கொண்டிருந்த அதர்வா பத்மாவை கவனித்துவிட்டான்..

ஒரு நொடி அவளை உற்று பார்த்தவன் அவன் நினைத்ததை உறுதி செய்து கொள்ள “ஏய்..” என்று சத்தமாக கத்திவிட்டான்..

அவன் எதிர்பாராமல் கத்தியதில் படி அருகில் சென்றிருந்த பத்மா தடுமாறி படியில் விழ போக, அதர்வாவின் வலிய கரங்கள் அவள் சிற்றிடையை வளைத்து பிடித்து கொண்டது..

ஒற்றை கையால் அவள் இடையை முழுவதும் சுற்றி அவன் அவளை இறுக பற்றி இருக்க ,அவன் கைகளில் பயத்துடன் சாய்ந்திருந்தவள் கண்கள் மிரட்சியுடன் அவன் கண்களை சந்தித்தது..

அதே நேரம் அதர்வாவும் அவள் கண்களை பார்க்க இருவருக்கும் அந்த நொடி சுற்றி இருந்த உலகமே மறந்து போயிற்று..

இரு கண்களும் ஒன்றுடன் ஒன்று கட்டுண்டு லயித்திருக்க, எத்தனை நேரம் அப்படியே இருந்தனரோ “மாமா..” என்ற சுமிதார்வின் ஆர்ப்பாட்டமான குரலில் தான் இருவருமே மீண்டனர்..

அவள் குரலில் நொடி பொழுதில் சுதாரித்துவிட்ட அதர்வாவின் முகம் மீண்டும் கோபத்தை தத்தெடுத்திருந்தது..

பத்மாவை அழுத்தமாக பிடித்து நிறுத்தியவன் அவளை எரித்துவிடுவது போல் பார்த்துக்கொண்டே “இவள் இங்க என்ன செய்கிறாள் சுமித்ரா..?” என்றான்

சுமித்ராவோ “மாமா உங்களுக்கு இவங்களை ஏற்கனவே தெரியுமா..” என்று குதித்துக்கொண்டே கேட்க

அதில் ஒரு நொடி அவன் புருவம் குழப்பத்தில் சுருங்கியது..

சுமித்ரா பேசியதில் இருந்து பத்மாவை அவளுக்கு தெரிந்திருக்கிறது என்பது புரிய நொடி பொழுதில் தன்னை சுதாரித்திருந்தவன் “இல்லை யாரு புதுசா இருக்காங்களேன்னு கேட்ட வந்தேன் டா..” என்று மெல்லிய சிரிப்புடன் அதர்வா கூற

அவன் எதிர்பார்த்தது போலவே அவன் சிரிப்பில் அனைத்தையும் மறந்துவிட்ட சுமித்ராவும், “இங்க கணக்கு எழுத வந்திருக்காங்க மாமா.. எனக்கு இவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு..” என்று பத்மாவின் தோளை பற்றி கொண்டாள்..

அதில் பத்மா வேறு வழி இல்லாமல் சிரித்துவைக்க, அதர்வாவோ சுமித்ரா அறியாமல் அவளை முறைத்து கொண்டிருந்தான்..

“ஆது கண்ணா விஷ்ணு கூட்டிட்டு சாப்பிட வா டா.. சுமி நீயும் பத்மா கூட்டிட்டு வா மா..” என்று கீழிருந்து ராஜாத்தி குரல் கொடுக்க அவர் குரலில் அனைவருமே அங்கிருந்து கலைந்தனர்..

பத்மா கீழே வந்த போது அங்கு உணவு மேசையில் வீட்டு தலைவர் மாதேஸ்வரன், அவர் தம்பி ராஜேந்திரன் , வைத்தீஸ்வரி கணவர் ராமமூர்த்தி அனைவரும் அமர்ந்திருந்தனர்..

அவர்களுடன் அபிஷேக்கும் அமர்ந்திருக்க அங்கு வந்த பத்மா தயக்கத்துடன் நின்றாள்..

அவளை கவனித்து விட்ட வைத்தீஸ்வரி, “நீயும் உட்காரு மா சாப்பிடலாம்..” என்று பாசமாக கூற

“இல்லை மா எல்லாரும் சாப்பிடட்டும்.. நான் அப்புறம் சாப்பிடறேன்...” என்று சங்கடத்துடன் கூறினாள் பத்மா..

அவள் மெல்லிய குரலில் கூறினாலும் அதை கவனித்துவிட்ட மாதேஸ்வரன் “உட்காரு மா.. இது உன் வீடு மாதிரி தான்.. இங்கு தயங்க கூடாது..” என்று அன்பாக கூற, அதற்கு மேல் மறுக்க கூடாது என்று பேசாமல் அபிஷேக் பக்கம் அமர்ந்துவிட்டாள் பத்மா..

அவள் உட்கார்ந்ததும் சுமித்ரா, அதர்வா , விஷ்ணு அனைவரும் வந்து அமர, வைத்தீஸ்வரியும் ராஜாத்தியும் அனைவருக்கும் பரிமாறினார்..

உண்டு கொண்டே “என்ன மா வீடெல்லாம் வசதியா இருக்கா..” என்று ராமமூர்த்தி கேட்க

“இருக்கு சார்..” என்று மெதுவாக கூறினாள் பத்மா..

அவள் காதருகில் குனிந்த அபிஷேக் “என்ன பத்து ரொம்ப அமைதி மாதிரி சீன் போடற.. உனக்கு செட்டே ஆகல..” என்று கிசுகிசுக்க , அப்போது தான் அவளும் அதை உணர்ந்தாள்..

காலையில் அதர்வாவை பார்த்த அதிர்ச்சியில் இருந்தே தான் இன்னும் மீளவில்லை என்பதை உணர்ந்தவள், இத்தனை நேரம் சாப்பாட்டில் தலையை விட்டு கொண்டிருந்த அபிஷேக்கும் அந்த ஓரத்தில் அமர்ந்திருந்த அதர்வாவை பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தாள்..

“டேய் சோத்து மூட்ட கொஞ்சம் சாப்பாட்டில் இருந்து கண்ணை எடுத்து அந்த ஓரத்தில் யார் உட்காந்திருக்கானு பாரு..” என்று அவன் காதருகில் எரிச்சலுடன் கூற

“யாரு...” என்று சாவகாசமாக கேட்டுக்கொண்டே திரும்பி பார்த்த அபிஷேக் ஷாக் அடித்தது போல் அதிர்ந்துவிட்டான்..

“ஐயோ போலீசு..” என்று பத்மாவை பார்த்து பயத்துடன் அவன் கூற

“ஆமா டா.. அவரும் இந்த வீட்டு பையன் போல.. செமயா மாட்டிகிட்டோம் டா..” என்று தானும் பயத்துடனே கூறினாள் பத்மா

அதற்கு பின் இருவருமே வேகமாக உண்டு முடித்தவர்கள் எழுந்து வேகமாக சென்றும் விட்டனர்..

அனைவரிடமும் பேசிக்கொண்டு உண்டுகொண்டிருந்த அதர்வாவின் விழிகளும் இவர்களை தான் சந்தேகத்துடன் பார்த்து கொண்டிருந்தது..

பத்மா அபிஷேக் இருவரும் யாருமில்லாத பின்புற தோட்டத்திற்கு வர பத்மா பயத்தில் கையை பிசைந்துகொண்டு நின்றிருந்தாள்..

“ஏய் பத்து பேசாம நாமளே கிளம்பி போயிருவோம் டி. இல்லாட்டி இந்த போலீஸ் நம்மை அடித்து தொரத்திடுவான்..” என்று அபிஷேக் தீவிரமாக கூற

“அதெல்லாம் நான் எங்கயும் வர மாட்டேன் டா..” என்று உறுதியாக மறுத்தாள் பத்மா..

அவனோ அவள் உறுதியை கவனிக்காமல் தொடர்ந்து பேசினான்..

“பத்து அடம் பிடிக்காத நல்ல பெரிய வீடா இருக்கு.. பேசாமா கிடைச்ச வரைக்கும் லாபம்னு சுருட்டிட்டு ஓடிருவோம் டி..”

அபிஷேக்கின் பேச்சில் “டேய்..” என்று பத்மா கோபத்துடன் திரும்ப

“வாவ் செம பிளான்..” என்ற குரலில் இருவரும் திடுக்கிட்டு திரும்பினர்..

அதர்வா தான் கைகளை தட்டிக்கொண்டு நின்றிருந்தான்..

அவனை பார்த்து இருவருமே திருதிருவென விழிக்க நிதானமாக அவர்களை நெருங்கி வந்தான் அதர்வா..

இருவருக்கும் வெகு அருகில் வந்தவன் “சோ சென்னையில் திருடியது பத்தாதுன்னு இங்க கிடைச்சதை சுருட்டலாம்னு வந்திருக்கீங்க.. இதில் வேலைக்கு வந்ததாக ட்ராமா வேற.. “ பத்மாவை உறுத்து விழித்துக்கொண்டு அவன் கேட்க , நைசாக சைடில் நழுவ பார்த்தான் அபிஷேக்..

அவன் ஒரு அடி எடுத்துவைப்பதற்குள் தன் வலது கையால் அவன் கைகளை அழுத்தமாக பிடித்த அதர்வா பிடித்த வேகத்தில் அவனை இழுக்க அங்கிருந்த தோட்டத்து நாற்காலியில் பொத்தென விழுந்தான் அபிஷேக்.

“என்ன எது கிடைத்தாலும் திருடலாம்னு வந்தீங்களா.. இல்லை குறிப்பிட்டு ஏதாவது சுருட்ட வந்தீங்களா..” என்று மேலும் கார்ஜனையாக அவன் குரல் ஒலிக்க, அதில் பயந்து ஒரு அடி பின்னால் நகர்ந்த பத்மா உதவிக்காக அபிஷேக்கை பார்த்தாள்.

அவனோ இத்தனை பெரிய தன் உருவத்தை ஒரே இழுப்பில் தள்ளி விட்டுவிட அதர்வாவின் பலமேறிய புஜங்களை ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்தான்..

அவனை பார்த்ததும் 'இவன் வேறு...' என்று பத்மா மனதிற்குள் சலித்துக்கொள்ள, அவள் பார்வையை தொடர்ந்து தானும் அவனை பார்த்த அதர்வா,

அவன் கண்களில் இருந்த உணர்ச்சியை பார்த்து “டேய்..” என்று சத்தமாக கத்திவிட்டான்..

அதில் அபிஷேக் திருதிருவென விழிக்க “மவனே இனி ஒரு முறை என்னை இப்படி வெறிச்சு வெறிச்சு பாத்த கண்ணை நொண்டி கையில் கொடுத்தருவேன்.. ராஸ்கல்..” என்று கத்திவிட்டான் அதர்வா

அதற்குள் அங்கு பத்மாவை தேடி சுமித்ரா வந்துவிட இவர்கள் பேச்சுவார்த்தை தடை பட்டது..

“பத்து கா வாங்க.. உங்களுக்கு நம்ம வயல் பண்ணை எல்லாம் சுத்தி காமிக்கறேன்..” என்று சுமித்ரா அழைக்க பத்மாவும் விட்டால் போதுமென

“இதோ வரேன் சுமி.” என்று அவளுடன் கிளம்பிவிட்டாள்..

சுமித்ரா குதித்துக்கொண்டே முன்னால் சென்று விட அவளை பின்தொடர்ந்துகொண்டிருந்த பத்மாவை வீட்டிற்குள் நுழைவதற்கு முன் அழுத்தமாக பிடித்து நிறுத்திய அதர்வா, “உங்க திருட்டு வேலை ஏதாவது இங்க காமிக்கலாம்னு நினைச்சீங்க தோளை உரிச்சுருவேன் ஜாக்கிரதை..” என்று அவள் காதருகில் கர்ஜனையாக கூறிவிட்டு வேகமாக அனைவரையும் கடந்து சென்று விட்டான் ..


வேகமாக அதர்வா தன் அறைக்கு வர, அங்கு பால்கனியில் நின்றிருந்த விஷ்ணுவோ ப்ரியாவை எப்படி சரிக்கட்டுவது என்று தீவிரமாக யோசித்து கொண்டிருந்தான்..

அதர்வா வந்ததை விஷ்ணு கவனிக்காமல் இருக்க அதர்வாவும் விஷ்ணுவை கவனிக்கும் நிலையில் இல்லை..

அவன் மனம் முழுவதும் கோபத்தில் கொதித்து கொண்டிருந்தது..

'ஒரு திருடி தன் நடு வீட்டில் வந்து அமர்ந்து கொண்டிருக்கிறாள்.. இதில் குடும்பவே அவளுக்கு ஆதரவு வேறு..'

அந்த நினைவே அவனுக்கு எரிச்சலாக இருக்க “ச்சை..” என்று கத்திகொண்டே டேபிள் மேல் இருந்த பெண் ஸ்டாண்டை தட்டி விட்டான்..

அந்த சத்தத்தில் விஷ்ணுவும் தன் நினைவுகள் களைந்து உள்ளே வர அதர்வா செய்து வைத்திருந்த காரியத்தில் இருந்தே அவன் கோபத்தை உணர்ந்து கொண்டவன் “என்ன ஆச்சு ஆது..” என்றான்

அதில் அதர்வா நடந்த அனைத்தையும் கோபத்துடன் நண்பனிடம் கொட்ட, அவன் கூறியதை கேட்டு விஷ்ணுவும் அதிர்ந்து தான் விட்டான்..

“என்ன டா சொல்லுற.. திருட்டு பயலுங்க என்று தெரிந்தால் விரட்டி விட வேண்டியது தானே.. ஏன் டா இன்னும் விட்டுவைத்திருக்கிறாய்..” என்று விஷ்ணு அதிர்ச்சியுடன் கேட்க, இப்போது தான் அதர்வாவும் அதை பற்றி யோசித்தான்..

அவன் துரத்தி விட்டால் அதை தடுப்பார் யாரும் இல்லை தான்..

ஆனால் ஏன் தனக்கு மனம் வர மாட்டேன் என்கிறது என்று அவன் யோசிக்க, ஒரு வேலை திருந்தி வந்திருந்தால் அதை கெடுக்க கூடாது என்ற எண்ணமாக இருக்கும் என்று அவன் மனசாட்சி சப்பை கட்டுக்கட்டியது..

அதையே அவன் விஷ்ணுவிடமும் கூற சிறிது நேரம் யோசித்த விஷ்ணுவும் “சரி விடு டா.. திருந்தி வேலை பார்த்தாள் சரி தான்.. இல்லாட்டி நாம் இருக்கும் வீட்டில் அவளால் ஒன்றும் திருடி விட முடியாது.. இதற்காக எல்லாம் டென்ஷன் ஆகாமல் லீவ்வை என்ஜாய் பண்ணு டா..” நண்பனின் தோள் தட்டி விஷ்ணு கூற அதில் அதர்வாவும் கொஞ்சம் தெளிந்து விட்டான்..

*******************

அன்று மாலை விஷ்ணு பொழுது போகாமல் ப்ரியாவையும் காணாமல் சும்மா ஊர் சுற்றி கொண்டிருக்க அவனிடமே பர்ஸை பறிக்க நினைத்தான் ஒரு திருடன்..

திருடன் அவன் பாக்கெட் அருகில் கைகளை கொண்டு வரும்போதே கணித்துவிட்ட விஷ்ணு அவன் கைகளை முறுக்கி அவனை நன்றாக முதுகில் மொத்த சரியாக அதே நேரம் கல்லூரி முடித்து வந்து கொண்டிருந்தாள் ப்ரியா..

விஷ்ணு ஒருவனை அடித்துக்கொண்டிருப்பதை பார்த்ததும் அங்கு விரைந்து வந்தவள் “அச்சோ என்ன ஆச்சு அண்ணா..?” என்று பதட்டத்துடன் கேட்க, கண்களில் எரிச்சலுடன் அவள் புறம் திரும்பிய விஷ்ணுவிற்கு இப்போது அந்த திருடனை விட பிரியா மேல் கோபம் வந்தது..

'முதலில் இந்த அழைப்பை நிறுத்த வேண்டும்..' என்று நினைத்துக்கொண்டவன் அந்த திருடனிடம் திரும்பி

“ஏய் இது உனக்கு கடைசி எச்சரிக்கை.. இனி ஒரு முறை என் கையில் மாட்டினால் இந்த கை உன்னிடம் இருக்காது.. பாத்துக்கோ..” என்று எச்சரித்து அவனை மேலும் இரண்டு சாத்து சாத்தி அனுப்பி வைத்தான்

பின் அதே கோபத்துடன் பிரியா புறம் திரும்பியவன் “உனக்கு நான் அண்ணாவா...?” என்றான் எரிச்சலுடன்

அவன் எரிச்சல் ஏன் என்று புரியாமல் விழித்த பிரியா, “நீங்க அண்ணா பிரண்ட் தானே..” என்று தயக்கத்துடன் கூற

“அண்ணா பிரண்ட் தான்.. அதுக்காக என்னை அண்ணா என்று தான் கூப்பிட வேண்டும் என்றில்லை.. இனி அண்ணா நொண்ணனு கூப்பிட்ட அறைஞ்சுருவேன் பாத்துக்கோ..” என்று விஷ்ணு கைகளை முறுக்க, அவன் செயலில் ஒரு நொடி பிரியா பயந்து தான் விட்டாள்..

ஆனால் அடுத்த நொடியே அந்த வயதிற்குரிய துடுக்கு தனம் தலை தூக்க “சரி.. சரி.. இனிமே உங்களை பிராணநாதா என்றே கூப்பிடறேன்..” என்று கூறியவள் கிண்டலாக சிரித்துவிட்டு வேகமாக ஓடிவிட்டாள்..

முதலில் அவள் கூறியதில் புரியாமல் விழித்தவன் பின்பு ஒரு வாறு அவள் வார்த்தைக்களின் அர்த்தம் புரிய அவன் முகம் மெதுவாக கோபத்தை விடுத்தது சிரிப்பிற்கு மாறியது..

“நீ அப்படி கூப்பிட்டா எனக்கு ஓகே தான் பப்ளிமாஸ்..” என்று மென்மையாக கூறிக்கொண்டவன் தானும் வீட்டிற்கு கிளம்பினான்..

***********

சுமித்ராவுடன் வெளியே சென்று விட்டு பத்மா வீடு திரும்பும் போது கிட்டத்தட்ட இரவாகி விட்டது..

அவள் தன் அறைக்கு போகும் முன் அவளிடம் வந்த அபிஷேக் வியர்த்து வழிந்தான்..

அவனை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு மேலிட “டேய் உனக்கு இவ்ளோ வியர்த்து இத்தனை வருடத்தில் நான் இப்போது தான் டா பார்க்கிறேன் “ என்று பத்மா சிரிப்புடன் கூற

“சிரிச்ச உன்னை கொன்னுருவேன்.. என்ன டி ஆளுங்க இவங்க.. ஏதாவது சின்ன வேலை கொடுப்பாங்கனு பார்த்த மூட்டை தூக்கற வேலை கொடுத்துட்டாங்க.. எவ்ளோ மூட்டை தெரியுமா. முடியல போ டி..” என்று தன் பெரிய உடம்பை சுமக்க முடியாமல் புலம்பிக்கொண்டே அவன் அமர்ந்து விட , பத்மாக்கு மேலும் சிரிப்பு தான் வந்தது..

“டேய் வாழ்க்கைலயே முதல் முறையா சாப்பிட்ட சாப்பாட்டிற்கு ஏத்த வேலை இன்னிக்கு தான் டா நீ பாத்திருக்க.. கொஞ்சமாவது இந்த பூசினிக்கா உடம்பு குறையட்டுமே..”

நக்கலாக ஒலித்த பத்மாவின் குரலில் அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தவன் “உனக்கு என்ன.. ஜாலியா ஊர் சுத்திட்டு தான வர.. நீ இதுவும் பேசுவ இன்னுமும் பேசுவ.. எல்லாம் கால கொடுமை.. உனக்காக நானும் பட வேண்டி இருக்கு..” என்று புலம்பினான் அபிஷேக்

அவன் புலம்பியதுல் கடுப்பான பத்மாவோ “அப்படி ஒன்னும் நீ கஷ்ட்டப்பட வேண்டாம் டா.. முடியலைன்னா நீ போ.. நான் பாத்துக்கறேன்..” என்று முறுக்கிக்கொள்ள

“ஐய்யோ..” என்று அலறிவிட்டான் அபிஷேக்

பின் இது போல் வகை வகையான உணவுக்கு அவன் எங்கே போவது..

காலை மதியம் இரு வேலையும் இலை நிறைய வகை வகையாக இருந்த உணவு வகைகள் அவன் கண் முன் தோன்றி மறைய, அதை விட்டுவிட்டு எங்கேயும் போக முடியாது என்று அவன் வயிறு அழுத்தமாக எடுத்துரைத்தது..

வயிறு தான் முக்கியம் என்ற முடிவிற்கு வந்தவன் பத்மாக்கு ஐஸ் வைக்க தொடங்கினான்..

“பத்து பத்து இப்படி எல்லாம் சொல்ல கூடாது.. உனக்காக நான் இது கூட தாங்க மாட்டேனா.. நாம அப்படியா பழகறோம்..” என்று அவன் ஒரேடியாக குழைய

“சோத்துக்காக என்ன ட்ராமாலாம் போடற டா நீ..” என்று சரியா பாயிண்ட்டை பிடித்துவிட்டாள் பத்மா

அதில் அவன் “ஹி.. ஹி..” என்று சிரித்துவைக்க

“சிரிச்சு தொலையாத டா.. கேவலமா இருக்கு.. போய் கொட்டிக்கொ..” என்றுவிட்டு நகர்ந்துவிட்டாள் பத்மா

அவள் சென்றதும் தான் அபிஷேக்கால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது..

“ஹாப்பா ஒரு நிமிசத்துல பயமுறுத்திட்டா..” என்று புலம்பி கொண்டே மீண்டும் சமையல் அறை நோக்கி படை எடுத்தான் அபிஷேக்..

அவனை திட்டிவிட்டு அங்கிருந்து அகன்ற பத்மா இன்று காலை முதல் நடந்ததை மனதில் அசை போட்டுக் கொண்டே வந்தாலும் கால்கள் தன்னிச்சையாக சுமித்ராவின் அறை முன் வந்து நிற்க, தன் நினைவில் இருந்து கலைந்தவள் அறைக்கதவை லேசாக தட்டினாள்.

உள்ளிருந்து பதிலேதும் வராமல் போக குழம்பியவள், இந்த முறை கொஞ்சம் சத்தமாகவே கதவைத் தட்டினாள்.

அப்போதும் எந்தவொரு எதிரொலியும் இல்லாமல் போக, பதற்றமடைந்த பத்மா கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைய, அங்கு கண்ட காட்சியில் அப்படியே அதிர்ந்து நின்றாள்!!!!

தொடரும்...





ஹாய் செல்ல குட்டிஸ்,

மீண்டும் நாங்களே..

"திருடி சென்றாய் இதயத்தையே" அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டோம்..

போன udக்கு போட்ட அதே ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் தான் பேபீஸ் இதுக்கும்.. ஏற்கனவே கொடுத்த பரிசில் எல்லாரும் மெய்சிலிர்த்து போய் இருப்பீங்க.. (ஐயோ அடிக்க கூடாது)..

அதே போல் இந்த ud எழுதினவங்களையும் சரியா guess பண்ணுற முதல் மூவருக்கு தரமான பரிசுடன் அந்த எழுத்தாளர் நாளை வருவார்..

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கண்டிப்பா பகிர்ந்துக்கோங்க பேபீஸ்..

உங்கள் ஸ்வராகினி

 
Status
Not open for further replies.
Top