All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கதை திரி

Status
Not open for further replies.

swaragini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5

சுமியிடம் இருந்து எந்தப் பதிலும் வராததில் பதட்டமான பத்மா, படக்கெனக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்து போனவள், அடுத்த நொடியே வாய்விட்டு நகைக்கலானாள்...

ஏனெனில் அங்கு சுமி ஒரு ஆண் சர்ட்டில் கறுப்புப் பெயின்ட் கொண்டு ஆண் முகம் வரைந்திருக்க, அந்த சர்ட்டின் முதுக்குப் புறமாக இடது கையை வைத்து அதனைத் தாங்கி வலது கையால் அந்தச் சர்ட்டின் இடது கையை உயர்த்திப் பிடித்தபடி சோலோ நடனம் ஆடிக்கொண்டிருந்தாள்...

அவளின் தன்னை மறந்த அந்தச் செய்கையில் பத்மாவுக்கு மேலும் மேலும் சிரிப்பு வர, வயிற்றைப் பிடித்துக்கொண்டு நகைத்து முடித்தவள், தன் சிரிப்புச் சத்தத்தில் கூட தன்னிலையில் இருந்து வெளிவராமல் ஆடிக்கொண்டிருந்த சுமியின் அருகில் சென்று சர்ட்டைப் பிடித்து இழுக்க, அதில் தன் சுயநிலைக்கு வந்த சுமி, தன் முன்னே கேலியாகப் பார்த்தவாறு நின்றிருந்த பத்மாவைக் கண்டு அசடு வழித்தாள்...

“என்ன வேலை பண்ணிட்டிருக்க சுமி???” எனத் தன் கையில் இருந்த சர்ட்டைக் காட்டிக் கேட்க, முதலில் என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் முதலில் திரு திருத்துவிட்டு,

“அக்கா...!” என இழுக்க, “சும்மா சொல்லு, நான் ஒண்ணும் சொல்லமாட்டேன்” என ஊக்கப்படுத்த, முகம் எல்லாம் பளபளக்க, கால் பெருவிரலால் தரையில் கோலம் போட்டுக்கொண்டு கைகளை ஒன்றை ஒன்று கோர்த்தவாறு நெளிந்து வளைந்தபடி,

“இந்த சர்ட் ஆது மாமாவோடதுக்கா” எனக் கூற, அதுவரை அவளின் முஸ்தீபுகளை ஒருவித சுவாரசியத்துடன் பார்த்தபடி நின்றிருந்த பத்மாவுக்கு சுமி சொன்னதைக்கேட்டு திக்கென்று ஆனது... ஏனோ அதர்வாவை சுமி இந்தமாதிரி ரசிப்பதை அவள் நெஞ்சம் விரும்பவில்லை... அது ஏன் என்பதை அந்த நிமிடம் யோசிக்காமல் சுமியின் மனதை தெளியவைக்கவேண்டும் என மனது முரண்டு பிடிக்கவும் அவளிடத்தில் பேச்சுக் கொடுத்தாள்...

“இதுக்கு என்ன அர்த்தம் சுமி???” எனக் குரலில் எரிச்சல் என்பது வராமல் இருக்கப் பெரும்பாடுபட்டபடி சாதாரண குரலில் கேட்க,

“எனக்கு மாமாவை பிடிச்சிருக்கு அக்கா... அதோட கட்டிக்கிற உரிமையும் இருக்கு அக்கா!” எனக் குண்டைத் தூக்கிப்போட, வந்த கோபத்தை பல்லைக்கடித்து அடக்கியபடி சில கணங்கள் நின்றவள், பின்,

“ஆனால் உனக்கும் அவருக்கும் வயசு வித்தியாசம் ரொம்ப அதிகம்ல???” என யோசனைபோல் சொல்ல,

“கிராமங்களில இதெல்லாம் பார்க்கமாட்டாங்கக்கா... அதுமட்டுமில்லாமல் எனக்கு இந்த வயது வித்தியாசம் பற்றி எந்தக் கவலையும் இல்லை” என அலட்சியம் போல சொல்ல, இவளுக்குத்தான் மிளகாயை அரைத்து உடம்பில் தடவியது போல் இருந்தது...

“ஒஹ்... நீ உன்னைப்பற்றி மட்டுமே யோசிக்கிற சுமி... உன் மாமாக்கு இதில் விருப்பம் இருக்கான்னு யோசிச்சியா???”

“அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லைக்கா... வீட்டு பெரியவங்க சொன்னால் வேணாம்னா சொல்லப்போறார்” எனக் கூறியபடி பத்மாவின் கையில் இருந்த சர்ட்டை வாங்கி மீண்டும் கனவுலகத்திற்குள் செல்ல, இயலாமையுடன் சுமியை நோக்கிவிட்டு இதனை எப்படித் தடுப்பது என யோசித்தபடி கதவைத்திறந்துகொண்டு வெளியில் வந்தவள், எதிரில் ஃபோனில் பேசியபடி வந்த அதர்வாவுடன் மோதிக்கொண்டாள்...

வீடு தானே என்று தன் போலீஸ் கண்காணிப்புப் பார்வையைத் தவிர்த்து ஃபோனில் கவனமாக இருந்த அதர்வாவும் இவள் வந்து மோதியதில் சிறிது பின்னால் நகர்ந்து விழாமல் இருக்க ஒரு காலை நன்றாக நிலத்தில் ஊன்றியவாறே தள்ளாடிய பத்மாவின் இடையில் கையை வைத்துத் தன்னை நோக்கி இழுத்து அணைப்பதுபோல் பிடித்துக்கொண்டவன், எதிரில் இருந்தவரிடம் பிறகு பேசுவதாகச் சொல்லி ஃபோனைக் கட் பண்ணி சர்ட் பாக்கேட்டில் போட்டவன், அவளைத் தள்ளி நிறுத்திவிட்டு,

“கண்ணை என்ன பிரடியிலா வச்சிருக்க... எதிர்ல ஆள் வர்ரதுகூட தெரியாமல்” என எரிச்சலில் கடிய, சுமி பற்றிய யோசனையில் இருந்த பத்மாவும் அவனில் மோதியதால் உண்டான படபடப்பை மறைத்துக்கொண்டு,

“நீங்க மட்டும் என்ன செய்தீங்களாம்???” எனப் பதிலுக்கு எகிற,

“இது என் வீடு... நான் எப்படி வேணும்னாலும் வருவேன்... அப்புறம் வேலைக்கு போகாமல் இங்க என்ன செய்ற???” எனக் கேட்டவன், அவள் எதனையோ சொல்ல வருவதையும் பொருட்படுத்தாது,

“அது சரி... நீங்க இரண்டு பேரு வேலை பார்க்க வந்திருந்தா அதைப்பற்றிய அக்கறை இருக்கும்... நீங்கதான் இங்க வந்த நோக்கம் வேறயாச்சே!” என நக்கலாய் சொல்ல, ஏற்கனவே சுமியின் செயலில் இருந்த கடுப்பை அவன் தேவையில்லாமல் சொன்ன பழி அதிகரிக்கச் செய்ய,

“எனக்கு வேலை தந்தது உங்க அப்பா... அதுக்கான நேரத்தையும் அவர் சொல்லியிருக்காரு... அப்படி நான் வேலை செய்யலைன்னா அவர் என்னைக் கண்டிப்பார்... அதில் நீங்க தலையிடாதீங்க” எனக் கறாராகச் சொன்னதில் கோபம் வரப் பல்லைக் கட்டித்தவன்,

“ஏய்...!, யாரைத் தலையிடக்கூடாதுன்ன??? அப்பா மாதிரி கேள்வி கேட்க எனக்கும் உரிமை இருக்கு!... புரிஞ்சுதா???” எனக் குரலை உயர்த்த, அதில் பாதிக்கப்படாதவளாக,

“முதல்ல சின்னப்பொண்ணு உங்களைப் பார்த்து ஜொள்ளு விடுறதை மாதிரி நடந்துக்காமல் இருங்க... அதுக்கு அப்புறம் இந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கலாம்” என அலட்சியம் போல் கூறிவிட்டு அவன் அதிர்ந்து நிற்பதையும் பொருட்படுத்தாது அங்கிருந்து நகர்ந்தாள் பத்மா...

அவளின் அலட்சியம் அவனின் கோபத்திற்கு எரிகிற தீயில் எண்ணையை வார்க்க, பத்மாவை ஒன்றும் செய்யமுடியாத இயலாமையுடன் கையைக் காற்றில் வீசி, அதே கையால் பிடரி முடியைக் கோதிக்கொடுத்தவனின் மனது அவள் சொன்ன விஷயத்தையே நினைத்துக்கொண்டிருந்தது...

அவள் சொன்ன விஷத்தை எண்ணி முதலில் கோபம் வந்தாலும் அவள் முகத்தில் இருந்த உண்மையில் யோசனை கொண்டவன், அதனைப் பற்றி முதலில் பார்க்கவேண்டும் என முடிவெடுத்துக்கொண்டு அங்கிருந்து தனது ரூமிற்குச் சென்றான்...

*************

அதர்வாவிடம் தைரியமாக வெடுவெடுத்துவிட்டு வந்தாலும் இனி என்ன செய்வானோ என நெஞ்சம் படபடக்க அந்த வீட்டின் பின்பக்கத் தோட்டத்தில் நின்றிருந்தாள் பத்மா...

என்னவோ அதர்வாவிடம் சுமி உரிமையெடுத்து பழகுவதை அவளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை... இருப்பினும் அந்த உணர்வு ஏன் தோன்றுகிறது என்பதை என்ன முயன்றும் அவளால் கண்டுபிடிக்கமுடியவில்லை...

இதேவாறு தனக்குள் யோசித்துக்கொண்டிருந்த பத்மா, அபிஷேக் தன்னருகில் வந்ததையோ, தன்னைச் சுற்றிச்சுற்றி வந்து வானத்தைப் பார்ப்பதும் பூமியைப் பார்ப்பதுமாய் ஏதோ பெரிய ஆராட்சியாளன் போல் பிலிம் காட்டிக்கொண்டிருந்தததையோ அறியவில்லை...
நேரம் செல்லச்செல்ல அபிஷேக்கிற்கு பொறுமை பறந்து போனதில் தன் முகத்தை அவளின் முகத்திற்கு சில அடி தூரத்தில் வைத்துக்கொண்டு அவளையே முறைத்துப் பார்க்க, அவனின் மூச்சுக்காற்றுப் பட்டு தன்னிலைக்கு வந்தவள், தன் முன்னே இருந்த முகத்தைக் கண்டு பயந்துபோய் பின்னே நகர்ந்தவள்,

“ஏன்டா எருமை... உன் பன்னி மூஞ்சியை இப்படி கிட்டக் கொண்டுவர, பயமா இருக்கில்ல” எனத் தன் பதறிய நெஞ்சைக் கையால் வருடி ஆசுவாசப்படுத்தியவாறு பாய, தன் இடுப்பில் இரு கைகளையும் வைத்து அவளையே முறைத்துப் பார்த்து,

“ஆமா இவ பெரிய உலக அழகி... என் மூஞ்சிய கிண்டல் பண்ண வந்துட்டா... நீ சொன்னதை செய்திட்டு விபரம் சொல்லலாம்னு வந்தா என்னையவே வாருறியா... போ நான் சொல்லமாட்டேன்” எனப் பிகு செய்ய,

“டேய் டேய்... நான் சும்மா கிண்டல் பண்ணினேன்டா... நீ சொல்லவந்ததை சொல்லுடா” எனப் பரபரப்போடு அவனது கையைப் பிடித்துக்கொண்டு கேட்க, அவளது கையை உதறித் தன் கரத்தை விடுவித்துக்கொண்டு,

“தோட்டத்தில வேலை செய்றவங்களில எத்தனைபேர் பழைய வேலைக்காரங்கன்னு விசாரிக்கச்சொன்னியே???” எனவும்

“ஆமா... விசாரிச்சிட்டியா???” என மனதில் எழுந்த படபடப்போடு கேட்க,

“விசாரிச்சிட்டேன் பத்து... ஆனால் இதை தெரிஞ்சுக்கிறதுக்கே நான் தலையால தண்ணி குடிக்கவேண்டி இருந்திச்சு” எனவும்

“ஏன்டா???” எனக் கேட்ட பத்மாக்கு,

“இல்லை யாரோ இவங்களைப் பயமுறுத்தி வச்சிருக்காங்க போல, முதல்ல யாருமே வாயைத் திறக்கல... ஆனால் அங்க ஒரு ஓட்டை வாய் வேலை செய்யுது... அதுகிட்ட விஷயத்தை போட்டு வாங்கிட்டேன்” எனப் பெருமை போல் சொல்ல, அவனை ஒருமாதிரிப் பார்த்தாலும் அவனைக் கேலியாக எதனையும் கூறவில்லை... பின்னே அவனால் அவளுக்கு எவ்வளவு காரியம் ஆகவேண்டும்...

“நீ சொல்லுறதை வச்சுப் பார்த்தா, அந்த வேலைக்காரர்கள்கூட பட்டென உண்மை சொல்லமாட்டாங்க... அதை தெரிஞ்சுக்கிறதுக்கு வேற வழிதான் பார்க்கணும்” என யோசனையோடு சொல்லிவிட்டு,

“சரி நீ போ... எனக்கும் வேலை இருக்கு” எனக் கூறி அபிஷேக்கை அனுப்பிவிட்டு தானும் வீடு நோக்கிச் சென்றாள் பத்மா...

*******************

தன் ரூமில் காலேஜ் நோட்ஸ் எழுதிக்கொண்டிருந்த பிரியாவிடம் வந்த அவளின் அன்னை ராஜாத்தி,

“பிரியா நாளைக்கு காலேஜுக்கு லீவ் போடுமா” என்று கூறியவரை கேள்வியாக நோக்கி,

“எதுக்குமா?” எனக் கேட்டாள்...

“நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வறாங்கம்மா”என்று கூற... அவள் அன்னை சொன்ன விஷயம் கேட்டு மிரண்டு போனாள் ப்ரியா! அந்நேரம் ஏனோ விஷ்ணுவின் முகமே அவள் மனதிற்குள் நிழலாடி ஒருவித படபடப்பை ஏற்படுத்தியது...

“அம்மா இப்போ எதுக்கு எனக்கு கல்யாணம்? நான் இன்னும் படிச்சே முடிக்கலையே?”

“கல்யாணம்ன்னு யார் சொன்னா நாளைக்கு வரவங்க நாம ஊருக்கு பக்கத்துக்கு ஊர்க்காரங்க பெரிய மனுசங்க தான் அவங்களும் அவங்க பையனுக்கு கேட்கிறாங்க சரின்னு பார்த்துட்டு போங்கன்னு சொல்லியிருக்கோம்... எதுவா இருந்தாலும் நாளைக்கு முடிவு பண்ணிக்கலாம், உன் படிப்பை நிறுத்திட்டு கண்டிப்பா கல்யாணம் பண்ணமாட்டோம்” என்று கூறிவிட்டு சென்றுவிட இவளோ செய்வதறியாது தவித்தபடி நின்றிருந்தாள். அவள் மனதிலோ விஷ்ணு ஆழ பதிந்து போய் இருக்கிறான் அல்லவா... விஷ்ணு மனதில் ப்ரியா உள் நுழைந்தது போல பிரியா மனதிலும் அவன் மேல் ஈர்ப்பு இருந்த போதிலும் அவனை இங்கு கண்ட பொது அவன் கண்களில் தோன்றிய காதலில் அவளும் கட்டுண்டு போனது மறுக்க முடியாத உண்மை. அதனாலேயே, அவனை அண்ணா என்று வம்பிழுத்து வந்ததும் இரவு முழுதும் அவன் நினைவாகவே இருந்ததும் மனதில் வந்து போனது... இப்போது திடீரென்று திருமணம் என்றால் அவளும் என்ன தான் பண்ண முடியும். விஷ்ணுவை தவிர அவளால் வேற யாரையும் மனதால் ஏற்று கொள்ள முடியாது என்பதை உணர்ந்தவள் சொல்லாத காதலுக்கு கூட இவ்வளவு சக்தியா என்று ஒரு கணம் அதிர்ந்து போனாள் .


இதனை நிறுத்துவதற்காக யாரிடம் உதவி கேட்பது என்று யோசித்தவளுக்கு தன் தமையன் தான் சரியான ஆள் என்று நினைத்து அவனைத் தேடிச் சென்றாள்.

விஷ்ணு, அதர்வா இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டு வயலை வலம் வந்து கொண்டிருந்தனர்... பிரியா தன் தமையன் இருக்கும் இடத்தை அறிந்துக்கொண்டு நேரே வயலுக்கு வந்து அவர்களை துழவியவள், தன் தமயனுடன் விஷ்ணு இருப்பதை பார்த்து தயங்கியபடி நின்றிருந்தாள்... ஆனால் தூரத்தில் இவளை பார்த்த அதர்வா யோசனையுடன் அவளை நெருங்க, விஷ்ணுவும் கண்கள் ஒளிர அவளை நெருங்கினான்.

“என்ன பிரியா இங்க வந்திருக்க? ஏதாவது வேணுமா?” என்று கேட்க, அவளோ அவனை பார்க்காமல் விஷ்ணுவை தயங்கியபடி நோக்கிவிட்டு...

“உங்ககிட்ட தனியா பேசணும் அண்ணா” என்று கூற அதில் விஷ்ணு மனதிற்குள் பெருத்த அடிவாங்கினான்... அவள் மனதில் அவன் இருக்கிறான் என்று உணர்ந்துக் கொண்ட பின்பும் அவள் இப்படி பேசியதுதான் காரணம்... ஆனாலும் அவன் நம்பிக்கையை தளரவிடாது அவளை காதலுடனே பார்த்திருந்தான்.

“எதுவா இருந்தாலும் சொல்லு பிரியா இவன் என் நண்பன் தான் இவனுக்கு தெரியாம எதுவும் செய்யப் போறதில்லை சொல்லு பிரியா” என்று அவளை ஊக்குவித்தான்.

அதற்கு மேல் அவள் மறுக்க வழியில்லாமல் போக...“அது.. அது..”என்று திக்கிக் கொண்டே விஷ்ணுவை பார்க்க, அவன் பார்த்த காதல் பார்வையில் அவள் வார்த்தை வராது தடுமாறி நின்றாள்.

“பிரியா சொல்லு...” என்று மேலும் அதர்வா வினவியதில் தன் தொண்டையை செருமி சரிபடுத்திக் கொண்டவள் பேச ஆரம்பித்தாள்...

“அண்ணா அம்மா நாளைக்கு காலேஜ் லீவ் போட சொன்னாங்க, என்னை பெண் பார்க்க வராங்களாமே?” என்று கூறவிட்டிருக்க... அவளின் பேச்சில் விஷ்ணுவின் முகம் சடுதியில் மாறிப்போனது!... அதை ஓரக்கண்ணால் பார்த்த பிரியா அவனை எதிர்கொள்ள முடியாது தமயனிடம் திரும்பிவிட்டாள்.

“தெரியும்மா அம்மா சொன்னாங்க பொண்ணு தானே பார்க்க வராங்க கண்டிப்பா கல்யாணம் உடனே ஏற்பாடு பண்ணமாட்டோம் நாங்க எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான்ம்மா செய்வோம்”என்று கூறிவிட்டு அவளை கூர்ந்துப் பார்க்க அவள் முகத்தில் தெரிந்த படபடப்பில் அவன் யோசனையனான்... “ஏன் பிரியா உன் மனசுல யாராவது இருக்காங்களா?” என்று வினவினான் அதர்வா.

அவனின் கேள்வியில் விஷ்ணுவின் ஒளியிழந்த முகம் சட்டென்று ஒளிர்ந்தது... அவன் அவளையே ஆர்வமாக நோக்கிக் கொண்டிருக்க அவளோ அவனே எதிர்பாராத ஒன்றைத் தான் தமயன் மீதுள்ள பயத்தால் கூறினாள்.

“இல்லண்ணா, நான் அப்படி எல்லாம் பண்ணமாட்டேன்... நீங்க சொல்றதை தான் கேட்பேன்” என்று பணிவாக கூற, அவளின் பேச்சில் அதர்வா பெருமையாக நினைத்தான் என்றால்... விஷ்ணுவோ அவளை எரிக்கும் பார்வை பார்த்தான். அவன் மனதில் கோபம் தீயாய் கனன்று கொண்டிருந்தது.

“சரிம்மா நீ வீட்டுக்கு போ நாங்க வர்றோம்” என்றுவிட்டு அவன் திரும்பி நடக்க விஷ்ணு மெல்ல அவனுடன் நடந்தவன்...“டேய் அதர்வா நீ முன்னாடி போ நான் வரேன்”என்று கூற அவனும் சரி என்று கூறிவிட்டு முன்னால் சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் விஷ்ணு கோபப்பெருமூச்சுடன் ப்ரியாவை நோக்கி சென்றான்... வீடு நோக்கி வரப்பை கடந்து சென்று கொண்டிருந்தவளை கைநீட்டி தடுத்திருந்தான்.

“நில்லுடி” என்றவனின் வார்த்தையில் அவன் முகம் பார்த்தவளின் மனம் கிலியில் நடுங்கிவிட்டது... அவன் கண்கள் சிவந்திருக்க, நரம்புகள் புடைத்து கோபம் கொப்பளிக்க, நின்றிருந்தான்.

“நா..ன்.. நா..ன்.. வீட்டுக்கு போகணும்” என்று திக்கித்திணறி பயத்துடன் உளறியவளின் அச்சத்தை அவன் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை...

“என்னடி வீட்டுக்கு போய் நாளைக்கு வர்றவன் முன்னாடி ஷோகேஸ் பொம்மை மாதிரி நின்னு ஷோ காட்டப் போறியா? மவளே அப்படி எதுவும் பண்ணின அவன் உயிரோட திரும்பிப் போகமாட்டான்” என்று அவன் கர்ஜனையாக கூறியதில் அவள் முதுகுத் தண்டு சில்லிட்டுப்போனது...

அவள் அச்சத்துடன் அவனை மிரண்டு போய் பார்த்துக் கொண்டே இருக்க, மெல்ல தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்தவன்...“சொல்லு நிஜமா உன் மனசுல நான் இல்லையா?” என்ற மென்மையாக வினவ, அவனின் கேள்வி அவள் மனதை வருடிப் பிசைந்தாலும் அவள் குடும்பமே கண்முன் வர, “இல்லை” என்பது போல் தலையை இடமும் வலமும் ஆட்டினாள்.

அவளின் செயலில் பொறுமையிழந்தவன் அருகில் இருந்த வைக்கோல்போரின் ஓரம் அவளை தள்ளி நிறுத்தி விட்டு அவள் தாடையை அழுந்த பிடித்துக் கொண்டு முகத்தோடு முகம் நோக்கி கண்களை கலக்கவிட்டவாறு,

“இப்போ சொல்லுடி உன் மனசுல நான் இல்லைன்னு” என வினாவினான்...

அவனின் பேச்சில் அவள் கண்களில் கண்ணீர் கரை கட்டியது... ஆனாலும் மனதை கடவாளமிட்டு அடக்கியவள்...

“இல்லை; இல்லை; இல்லை; என் மனசுல நீங்க இல்லை” என்று வெறிப்பிடித்தவள் போல் கூறிவிட்டு அவனிடமிருந்து விலகிச் செல்ல பார்க்க, அவனிற்க்கோ அவளின் பேச்சில் கோபம் கரையுடைத்திருந்தது... வெறி பிடித்தது போல் அவளை இறுக்கிப் பிடித்தவன் பாவாடை தாவணி அணிந்திருந்தவளின் வெற்றிடை அவனிற்கு கை வசத்தில் சிக்கியிருக்க... அவள் தாடையை அழுந்தப் பற்றிக் கொண்டு அவள் இதழ்களை சிறைப் பிடித்திருந்தான் அழுத்தமாக!

அவனின் இதழணைப்பை எதிர்க்க நினைத்தாலும் அவள் காதல் கொண்ட மனம் அவன் அருகாமையை விரும்பியதில் அவள் உடல் அவனின் இதழணைப்பிற்கு தாமாக குழைந்தது... அவன் இதழணைப்பு இளமையின் தாபமாக மாறும் முன் இருக்கும் இடம் உணர்ந்து அவளை அவனிடமிருந்து பிரித்தெடுத்தவன் அவளை கோபத்தோடு வைகொல்போர்மீது தள்ளிவிட்டு அவன் எதிர்புறம் திரும்பி...“ச்சே” என்று கூறிக் கொண்டே பின்தலையைத் தட்டிக் கொண்டான். அவனின் இந்த செயலில் மௌனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் ப்ரியா!

தன்னை சிறிதளவு கட்டுப்படுத்திக் கொண்டே அவள் புறம் திரும்பியவன்...“இப்போ சொல்லுடி உன் மனசுல நான் இல்லைன்னு” என்றவனின் சொல்லுக்கு பதில் கூற முடியாது தலைக்குனிந்து நின்றாள்.

சில வினாடிகள் மௌனமே உருவாக அமர்ந்தவளை பார்த்து,

“என்னடி தொண்டைல எதுவும் சிக்கிருச்சா? பதில் சொல்லுடி நான் கேட்டதுக்கு” என்று சற்று அதட்டலாகவே கேட்டிருந்தான்.

“அதான் சொன்னேனே என் மன....” என்று பழைய பல்லவியை கூற ஆரம்பித்தவளின் குரல் அவனின் தீப்பார்வையில் அப்படியே உள்ளிழுபட்டுப் போனது...

“இங்க பாரு திரும்பத் திரும்ப புளுகுன என்னை மனுசனா பார்க்க மாட்ட” என்று பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்து துப்பினான்.

“எதை வச்சு நீங்க என் மனசுல இருக்கீங்கன்னு முடிவு பண்ணினீங்க?” என்று கண்ணீருடனே கேட்டாள்.

“ஹ்ம்ம்... நான் ஒண்ணு கேட்கிறேன் பதில் சொல்லு... இதே என்னை தவிர வேற எவனும் உன்னை இப்படி கட்டிபிடுச்சு கிஸ் அடிச்சிருந்தா என்ன பண்ணியிருப்ப?” என்றதும் தான் தாமதம்...

“செருப்பு பிஞ்சிருக்கும்” என்று அவளிடமிருந்து வேகமாக விழுந்த பதிலில் அவன் அவளையே கண்கள் மின்ன பார்த்திருந்தான். அவன் பார்வையில் தான் அவள் கூறிய வார்த்தையை உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டாள்.

“என்னடி புளுகுமூட்டை... ஏன்டி என்னை அடிக்காம விட்ட இதோ உன்கால்ல இருக்கு பாரு செருப்பு கழட்டி அடிக்க வேண்டியதுதானே?” என்று விஷமச் சிரிப்புடன் கூற... அவளோ அமர்ந்தவாக்கில் தன் கால்களை அவள் பாவடையினுள் இழுத்து மறைத்துக் கொண்டு அவள் உதடுகளை இடம்புறம் ஆட்டி அவனைப் போலி முறைப்போடு பார்த்தாள்... அதில் அவன் “ஹஹஹா” என்று வாய்விட்டு சிரித்தவன்...அவனும் அவள் அருகில் பொத்தென விழுந்தான் அதில் துள்ளி எழுந்து அவள் ஓடப்பார்க்க அவள் கரங்களை இவன் அழுந்தப் பிடித்துக் கொண்டான்.

“கையை விடுங்க நான் போகணும்”என்று வெட்கத்துடன் கூறினாள்.

“முடிஞ்சா தட்டிவிட்டுட்டு போடி” என்றதில் அவனை முறைத்துப் பார்த்தவளின் பார்வையை தங்கிக் கொண்டு அவளை வேகமாக இழுக்க, பிடிமானம் இல்லாது அவன் மேல் விழுந்தாள் ப்ரியா...

“என்னடி முறைப்பெல்லாம் பலமா இருக்கு?” என்றவனின் கரம் அவள் உடலை சுற்றிவளைக்க, இவளோ அவனை வேகமாக அடித்துவிட்டு அவன் அருகில் இடைவெளி விட்டு அமர்ந்துகொண்டாள்.

“ஹப்பா என்னடி....? ஏன்டி அடிச்ச?”

“ஹ்ம்ம் உங்களை கடிச்சுவச்சிருக்கணும் அடிச்சது தப்புதான்” என்றவளின் பேச்சை கேட்டு உதட்டை நாக்கால் வருடிக்கொண்டு அவளை ஒரு மார்கமாக பார்த்தவனின் பார்வையில் இருந்த விஷமம் சற்று முன்பு நடந்த நிகழ்வை காட்டியிருக்க வெட்கத்தில் கன்னம் சிவந்தாள்.

இருவரின் மௌனத்தையும் கலைத்தது அருகில் எங்கோ ஒலித்த பாடலின் குரல்...

சின்ன பொண்ணு தான் வெட்க படுது
அம்மா அம்மாடி
அவ கண்ணுக்குள்ள தான் மின்னல் அடிக்குது
சும்மா சும்மாடி

சின்ன பொண்ணு தான் வெட்க படுது
அம்மா அம்மாடி
அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

சாமத்து காத்தும் அடிச்சது
சாமந்தி பூவும் வெடிச்சது
ஆனந்த வாசம் மணக்குது
ஆசையில் மனசு கனக்குது
இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்

இருவரின் மௌனமும் அந்த பாடலின் ஒலியில் இலயித்திருக்க இருவரும் ஒருவரை ஒருவர் ஆழ்ந்து பார்த்துக் கொண்டனர்.

“ப்ரி....” என்றவனின் தீனமான அழைப்பிற்கு “ஹ்ம்ம்” என்று உள்ளே சென்ற குரலில் கூறினாள்.

“ஏன்டி உங்க அண்ணன் கிட்ட அப்படி சொன்ன, உன் மனசுல யாரும் இல்லைன்னு நிஜமா நான் உன் மனசுல இல்லையா சொல்லுடி” என்று தவிப்புடன் கேட்டிருக்க அவளோ அவனின் பேச்சிற்கு பதில் கூறமுடியாது வெட்கம் தடுத்ததில் அவன் மார்பில் ஒன்றி சாய்ந்துக் கொண்டாள்.

ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத காதலை அவளின் ஒரு அணைப்பு அவனிடம் எடுத்துக் கூறியது... இதற்குமேலும் அவனுக்கு என்ன வேண்டும்... எனவே தானும் சந்தோசமாக அவளை அணைத்து விடுவித்தவன்,

“நீ வீட்டுக்குப் போ!... நான் உன் அண்ணன் கிட்ட இதைப்பற்றி பேசிக்கிறேன்” என நம்பிக்கையளிக்கும் விதமாகக் கூறி பிரியாவை அனுப்பிவிட்டு அதர்வாவைத் தேடிச் சென்றான் விஷ்ணு...

அவன் ஒன்றை நினைத்துச் செல்ல, இனி நடக்கவிருப்பது அவர்களது வாழ்க்கையையே மாற்றப்போவதை அறிந்தால் என்ன ஆவார்களோ??? அது கடவுளுக்கே வெளிச்சம்...

தொடரும்..



ஹாய் செல்ல குட்டிஸ்,


மீண்டும் நாங்களே..

"திருடி சென்றாய் இதயத்தையே" அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டோம்..

போன udக்கு போட்ட அதே ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் தான் பேபீஸ் இதுக்கும்.. ஏற்கனவே கொடுத்த பரிசில் எல்லாரும் மெய்சிலிர்த்து போய் இருப்பீங்க.. (ஐயோ அடிக்க கூடாது)..

அதே போல் இந்த ud எழுதினவங்களையும் சரியா guess பண்ணுற முதல் மூவருக்கு தரமான பரிசுடன் அந்த எழுத்தாளர் நாளை வருவார்..

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கண்டிப்பா பகிர்ந்துக்கோங்க பேபீஸ்..

உங்கள் ஸ்வராகினி


 

swaragini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6

அன்றைய தினமும் எப்பொழுதும் போல அழகாகவே புலர்ந்தது... ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வேலையைப் பார்க்கச் செல்ல, பத்மா சில கணக்குகள் கொண்ட கோப்புகளை தோட்டத்தில் இருந்த சிறு மேசையில் வைத்து சிறு சிறு சந்தேகங்களை ஒரு காகிதத்தில் குறித்துக்கொண்டிருந்தாள்...

அவள் அங்கு வந்த நாட்களில் இருந்து அவளும் கணக்குகளில் சில தில்லு முல்லுகள் நடப்பதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள் தான்... அதிலும் தொடர்ந்து செய்யாமல் சில நாட்கள் இடைவெளி விட்டு நடந்திருக்கிறது... சமீபத்திய நாட்களில் சற்றுக் கூடுதலான தொகை கையாடப்பட்டிருக்கிறது... அது தொடர்பாக மாதேஸ்வரனிடம் கூறவேண்டும் என்ற முனைப்புடன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு முதுகில் வண்டு ஊர்வது போல் ஒருவித ஒவ்வாமையை உணர்ந்து படக்கென பின்னால் திரும்பிப் பார்த்தவள், தனக்கு மிக அருகில் நெருங்கி நின்ற ஆடவனைக் கண்டு பதறிப்போய் எழுந்து நின்றுகொண்டவள், முகத்தினில் கடினத்தைக் கொண்டுவந்து,

“யார் சார் நீங்க??? திடீர்ன்னு இப்படில்லாம் வரக்கூடாது???” எனச் சொல்ல, அவனோ அதற்கு பதில் சொல்லாமல் இளித்தபடி அவளை மேலிருந்து கீழாக ஒரு மேய்ச்சல் பார்வை பார்த்தபடி,

“என் வீட்டுல வந்து நின்றுகொண்டு என்னையே யார்ன்னு கேட்குற... பார்க்க அழகாத்தான் இருக்க” என வழிந்தபடி கூற, கேட்டிருந்தவளுக்கு திக்கென்று ஆகிப்போனது... அவன் இந்த வீட்டுப் பையனா??? கண்ணியமாய் இருக்கும் மற்றவர்களுக்கும் இவனுக்கும் என்ன சம்மந்தம்??? இவன் பார்வையே சரியில்லையே... அவன் கண்பட இங்கேயே இருக்கணுமா??? என தன் கவலையில் மூழ்கியிருந்தவளை வஞ்சனை இல்லாமல் விழிகளால் தின்றவனின் பார்வையே அவளுக்குள் ஒருவித எச்சரிக்கை உணர்வைக் கொடுக்க, தன் யோசனையில் இருந்து வெளிவந்தவள்,

“நீங்க தான் சின்னையா மகனா???” எனக் கேட்டாள்...

“பரவால்லையே, கரெக்டா கண்டுபிடிச்சிட்ட... ஆமா, நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலையே???” எனவும் புரியாது நோக்கி,
“எது சார்???” எனக் கேட்க,

“என்னை ரஞ்சித்ன்னே கூப்பிடு!... அதுதான் இங்க நீ என்ன பண்ணுறேன்னு கேட்டேனே???” என நினைவுபடுத்த, அதில் தெளிந்து, “பண்ணைக் கணக்கு வழக்குப் பார்க்க புதிதா வேலைக்குச் சேர்ந்திருக்கேன்” எனறவளுக்கு அவனின் பெயரைச் சொல்ல ஏனோ விருப்பம் இல்லாது போனது...

அவளது பதிலில் ரஞ்சித்தின் முகம் ஒருநொடி விகாரமாக மாறிப்போனது... ஆனால் பத்மா பார்க்கும் முன் பழையபடி ஜொள்ளு முகமாக மாற்றியவன்,

“ஆமா உன் பேர் என்ன???” எனக் கேட்க, வேண்டா வெறுப்பாகப் “பத்மா” என்றாள்...

“பேர் நல்லா இருக்கு... நீயும் நல்லா தான் இருக்க” என்றவனின் பேச்சில் வந்த கோபத்தைப் பல்லைக் கடித்து அடக்கியபடி அவள் நிற்க, அவள் நின்ற தோரணையை விரசமாக நோக்கிவிட்டு,

“இங்க தானே இருக்கப்போற, அப்புறம் கவனிச்சுக்கிறேன்” என உதடுகளை ஒருபக்கமாக இளித்தபடி சொல்லிவிட்டு அவன் வீடு நோக்கிச் செல்ல, ‘இதென்னடா வில்லங்கம்’ என அதிர்ந்துபோய் நின்றவளை நோக்கி வந்த சுமி, பத்மாவின் தோள்களைப் பிடித்து உலுக்கி,

“அக்கா...!” எனக் கத்தி அழைத்ததில் தன்னிலைக்கு வந்து,

“ஆங்... என்ன சுமி???” எனக் கேட்டவளின் குரல் சிறிது கலங்கி ஒலித்தது...

“அந்த பொறுக்கி என்ன சொல்லிட்டுப் போகுதுக்கா???” என அருவருத்த குரலில் உதடுகளைச் சுழித்துக்கொண்டு சுமி கேட்க, அதில் அதிர்ந்துபோய்,
“பொறுக்கியா???” எனக் கேட்டாள்...

“பொறுக்கியே தான்... எல்லாவித கெட்ட பழக்கமும் அதுகிட்ட இருக்கு... ஒரு வேலை வெட்டியும் இல்லாமல் வெட்டியா சுத்தி இந்த குடும்பத்துக்கு கெட்ட பேர் சேர்க்கிறதே இதுதான்”

“எனக்கு இதெல்லாம் தெரியாதே சுமி... ஆமா, நான் வந்ததுல இருந்து இந்தாளைக் காணலையே, எங்க போனான்???”

“வேற எங்க கழுதை கெட்டா குட்டிச்சுவர்... ஹோட்டல்ல ரூம் போட்டு கூத்தடிச்சுட்டு வருது” என வெறுத்த குரலில் சொல்ல,

“இவ்வளவு நல்ல அப்பா, அம்மாவுக்கு இப்படி ஒரு புள்ளையா???” என அவனைப் பெற்றவர்களுக்காகக் கவலைப்படுக்கொண்டு கேட்க, அவள் ஏதோ நகைச்சுவை சொன்னதுபோல் விழுந்து விழுந்து சிரித்தாள் சுமி...

ஒருநொடி பத்மாவிற்கு தாம் அப்படி என்ன சொல்லிவிட்டோம் என்று புரியவேயில்லை... ஆனால் இப்பொழுது முக்கியமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது இது என்ன விளையாட்டு என எரிச்சல் தோன்ற,

“என்னான்னு சொல்லிட்டு சிரி சுமி” என அதட்ட,

“பின்ன என்ன அக்கா, நீங்க காமெடி பண்ணினா நான் என்ன செய்றதாம்???” எனச் சிரிப்பினூடே கேட்டதில் பத்மாவின் முகம் போன போக்கைப் பார்த்து சுமி மேலும் பொங்கிச் சிரிக்க, கடுப்புடன் அவள் தலையில் ‘நங்’ என்று குட்டியவள்,

“பிச்சுருவேன் பிச்சு... ஒழுங்கா பதில் சொல்லு...!” என மிரட்ட, கொட்டுப்பட்ட தலையை பரபரவெனத் தேய்த்தவாறே,

“அக்கோவ்... இப்படியா கொட்டுவீங்க??? எப்படி வலிக்குது தெரியுமா???” என அழுதுவிடுபவள் போல் கூற,

“பின்ன... எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிக்கிட்டிருக்கோம் இடைல தேவையில்லாமல் பண்ணினா இப்படித்தான் பண்ணணும்... இன்னும் விளையாடினா அடிதான் கிடைக்கும்” எனக் கை ஓங்க, அவளது கைக்கு எட்டாத தூரம் போய் நின்றுகொண்டு,

“இல்லை... அந்த ரஞ்சித்தோட அப்பா, அம்மாவுக்கு இப்படி ஒரு பிள்ளையான்னு கேட்டிங்களே... அதுதான் சிரிப்பு வந்துடிச்சு” என்றாள் சுமி...

“கொஞ்சம் புரியுறமாதிரி சொல்லு!”

“அவன் அம்மாவைக்கூட பாவம் என்று ஏத்துக்கலாம்... ஆனால் என் சின்ன மாமாவை அப்படி எல்லாம் சொல்லமுடியாது” எனவும் எதுவோ புரிவதுபோல் இருந்தது பத்மாவுக்கு... இருந்தாலும் சுமியின் வாய்மொழியாக உண்மையை அறிந்துகொள்ள, “ஏன்???” எனக் கேட்டுவைத்தாள்...

“அவன் அப்பனுக்குத் தப்பாத வாரிசு எல்லாத்திலையும்... தாத்தா கொடுத்த சொத்தை எல்லாம் அப்பனும் மகனுமா ஊதாரித்தனம் பண்ணியே அழிச்சிட்டாங்க.... அதுமட்டும் இல்லாமல் பெரிய மாமா தன் சொந்த முயற்சியால் சேர்த்த சொத்துக்களை அடையமுடியுமான்னு கங்கணம் கட்டிக்கொண்டு அலையுறாங்க” என அப்பனையும் மகனையும் பற்றி விவரிக்க விவரிக்க பத்மாவோ எந்தப் புத்தில் எந்தப்பாம்பு இருக்கும் என அறியாத நிலையில் அதிர்ந்து நின்றாள்...

“அதுமட்டும் இல்லாமல் இந்தக் குடும்பத்து வாரிசு ஒண்ணு காணாமல் போயிருச்சு... அந்த வாரிசு மேல தாத்தா ஏதோ காரணத்துக்காக பரம்பரை சொத்துக்களை எழுதி வச்சிருந்தாரு...” எனவும் தனக்குத் தேவையான விஷயம் என்பதில் காதைக் கூர்மையாக்கியவள்,

“யார் அந்த வாரிசு??? சகோதர்கள் மூன்று பேருலையும் யாரோட பிள்ளை அது???” என ஆர்வம் தாங்காமல் கேட்க, அதுவரை மடைதிறந்த வெள்ளமாய் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருந்த சுமி, பத்மா கேட்ட கேள்வியில் சுதாரித்தவளாக,

“சாரிக்கா... அப்பனையும் மகனையும் பற்றி சொல்லுற ஆர்வத்துல இதையும் சொல்லிட்டேன்... ஆனால் நீங்க கேட்ட கேள்விக்கு என்னால பதில் சொல்ல இயலாது அக்கா” எனவும் புஸ்சென்று ஆகிப்போனது பத்மாவிற்கு...

“ஏன் சுமி???”

“இந்த விஷயத்தைப்பற்றி நாங்க யார்க்கிட்டையும் பேசக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டாங்க அக்கா... நான் ஒரு ஓட்டை வாய், உளறிட்டேன்” என அசட்டுச் சிரிப்புடன் சொல்லவும் முகத்தினில் ஏமாற்றம் பரவ,

“அது எதுக்காம்???” என உணர்வுகள் அற்ற குரலில் கேட்க,

“அவங்க பேருல நிறைய சொத்துக்கள் இருக்கிறதால் ஆபத்து வந்துடக்கூடாதுன்னு தான்” என்றவள், பேச்சை மாற்றும் முகமாக,

“சரிக்கா... அந்த ரஞ்சித் கிட்ட கவனமா இருந்துக்கோங்க... எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு... நான் வரேன்” எனக் கூறிவிட்டு எதிலிருந்தோ தப்புபவள் போல் உள்ளே விரைந்து செல்ல, அவள் சொன்னவற்றில் இருந்த பல முடிச்சுக்களை எவ்வாறு அவிழ்ப்பது என்ற குழப்பத்துடன் அவை பற்றி சிந்தித்துக்கொண்டிருக்க,
“திருட மட்டும் தான் தெரியும்னு நினைச்சேன்... இப்போ பார்த்தா வேற வேற வேலை எல்லாம் தெரியும் போல இருக்கே” என்ற நக்கல் குரலில் விதிர்விதிர்த்துப் போனவளாக திரும்பிப் பார்க்க, அங்கு பான்ட் பாக்கெட்களில் இரு கைகளையும் நுழைத்துக்கொண்டு முகத்தினில் கடுமையுடன் அதர்வா நின்றிருந்தான்...

அவனது திடீர் வரவில் திகைத்தவளின் தோற்றத்தில் கோபம் அதிகமாக,

“என்ன நான் சொன்னது புரியலையா???” எனக் கேட்டதற்கு மறுப்பாகத் தலையசைத்தவளை உற்று நோக்கிவிட்டு,

“இல்லை... திருடமட்டும் இல்லாமல் சொத்துக்காக ஆண்களை மயக்குற வேலையும் தெரியும் போல இருக்கே” என எள்ளலாய்ச் சொன்னவனின் பேச்சில் நெஞ்சில் சுருக்கென்று தைத்த வலியை விழிகளில் காட்டாமல் இருக்கப் பெரும்பாடு பட்டபடி,

“எதை வச்சு அப்படிச் சொல்லுறீங்க???” எனச் சற்று நிமிர்வாகவே கேட்டாள் பத்மா...

“அதுதான் சுமி கிட்ட இந்தக் குடும்பத்துல என்ன நடக்குது??? ஏது நடக்குதுன்னு கேட்டுக்கொண்டிருந்தியே... காரணம் இல்லாமலா அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாய்???” எனக் கேலியாகக் கேட்க, அதற்குப் பதில் சொல்லமுடியாமல் வாயடைத்துப்போய் நிற்கத்தான் முடிந்தது அவளால்...

அங்கு நடந்த விஷயங்களுக்கும் அவன் போட்ட பழிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது... ஆனால் அதனை இவனுக்கு எடுத்துக் கூறினால் நம்புவானா??? எனப் பெருத்த சந்தேகம் இருந்தது... இருப்பினும் அவனின் முகத்தைப் பார்க்கும்போதே தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற மனநிலையில் இருப்பது புரிய, மௌனமாக நின்றிருந்தாள் அவள்...

“என்ன பதில் சொல்ல முடியலையா??? நடந்தது அதுதான் எனும்போது எப்படி பதில் வரும்??? அதுமட்டும் இல்லாமல் அவன் அந்தப் பார்வை பார்த்தும் அப்படியே நிக்கிற... அதுசரி... அவன் மூலமா சொத்து வரும்னு எதிர்பார்த்தியாக்கும்... ஐயோ பாவம்... அவன் கிட்ட சொந்தமா எந்த சொத்தும் இல்லை... வீனாகப்போய் வம்பில மாட்டிக்காத” எனப் போலி அக்கறையுடன் கூற, அவன் சொல்லச்சொல்ல உலைக்களமாகக் கொதித்தெழுந்த மனதை அடக்கியபடி நின்றிருந்த பத்மா, நேரம் செல்லச்செல்ல அவன் சொன்ன பொய்யான குற்றச்சாட்டில் சிலிர்த்தெழுந்தவள்,

“போதும் நிறுத்துறீங்களா???” எனக் கத்த,

“நான் எதுக்கு நிறுத்தணும்???” எனக் கேட்டுவைக்க, அவனை உறுத்து விழித்தபடி,

“முட்டாள்தனமா பேசினா நிறுத்தத்தான் சொல்லணும்” என இளக்காரமாக அவள் சொன்னதில் கண்களில் கனல் அப்பட்டமாக மின்ன,

“யாரைப் பார்த்து முட்டாள் என்றாய்???” என எகிற, அதில் பாதிக்கப்படாதவளாக அவன் கண்களை நோக்கி,

“சாட்சாத் உங்களையே தான்” என்றவள், அவனின் உடல் இறுகுவதைக் கண்டும் காணாதது போல்,

“உங்க செல்லத் தும்பியை தேடி நான் வரலை... அவனாகத்தான் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த இடத்தக்கு வந்தான்... வேற வழியில்லாமல் அவனின் பேச்சை சகிச்சுக்கிட்டு அவன் போகும்வரை நின்றேன்... அவன் போறதைப் பார்த்து அவன்கிட்ட ஜாக்கிரதையா இருக்க சொல்லி சுமி சொன்னாள்... எதுக்குன்னு கேட்டா, அவனையும் அவன் அப்பாவையும் பற்றி கதை கதையா சொன்னா... அதுக்குப்பிறகு அவளாவே சொத்து பற்றியும் இங்க இருக்கிற பிரச்சனையும் பற்றி சொன்னா... இதுல எங்க என் தப்பைக் கண்டீங்க??? தமிழ்ல ஒரு பழமொழி சொல்வாங்க... கண்ணால் காண்பதும் பொய்... காதால் கேட்பதும் போய்... தீர விசாரிப்பதே மெய்ன்னு... முதல் இரண்டையும் பார்த்து மொத்தமாக் கவுத்திட்டீங்க... நீங்க எல்லாம் எப்படித்தான் போலிஸ் ஆபீசர் ஆனீர்களோ???” எனப் படபட பட்டாசாய் வெடித்துவிட்டு, மேசையில் இருந்த கோப்புக்களை கைகளில் அள்ளிக்கொண்டு அவனை அலட்சியம் செய்துவிட்டு அங்கிருந்து வீட்டை நோக்கி நடந்தாள் அவள்...

**********************************

நாட்கள் அதன் போக்கில் நகர பத்மாக்கு அந்த ஊரும் பண்ணையார் வீடும் வேலையும் நாளடைவில் பழகிப்போக, அந்த வீட்டில் இருந்தவர்களும் அவளுடன் வீட்டுப் பிள்ளைபோல் பழகினர்...

அவர்களில் ராஜேந்திரன் நீ இருந்தால் இரு, இல்லைன்னாலும் எனக்கு ஒன்றும் இல்லை என விட்டேறியாக நினைத்தபடி இருக்க, அதர்வா மட்டும் அவளை எப்போதும் சந்தேகத்துடன் கண்ணில் விளக்கெண்ணை விட்டபடி சுற்றிகொண்டிருந்தான்..

அன்றைய தினம் சமையல் அறையில் வேலை செய்துகொண்டிருந்த கோமளவள்ளியின் முகம் வேதனையைச் சுமந்திருக்க, அவரின் வாய் இடைவிடாது புலம்பிகொண்டே இருந்தது...

"இன்று மட்டும் வைத்தியை யாராலும் சமாளிக்கமுடிவதில்லை.. எவ்ளோ கூப்பிட்டாலும் சாப்பிட வரமாட்டேன்னு அடம்பிடிக்கறாங்க.." எனவும்

"அது தெரிந்த விஷயம் தானே வள்ளி... வருடாவருடம் இந்த நாளில் அவளை சமாளித்து சாப்பிடவைப்பதற்குள் போதும் போதுமென்றாகிறது... அவள் கஷ்டமும் பெருசுதானே... கொஞ்சவேலை முடிச்சுட்டு நான் போய் சாப்பிடக் கூப்புடுறேன் இரு!" என்று வள்ளிக்கும் தனக்கும் சேர்த்தே சமாதானம் சொல்லிகொண்ட ராஜாத்தியின் முகமும் அதிகளவில் வாடியிருந்தது...

தோட்டத்து இருக்கையில் அமர்ந்து எங்கேயோ வெறித்துகொண்டிருந்த வைத்தீஸ்வரியின் மனம் ஊமையாக அழுதுகொண்டிருந்தது...

இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் அவரின் மனதில் இருந்த ரணம் மட்டும் ஆறவே இல்லை... கொஞ்சமும் குறையாமல் ஒவ்வொரு வருடமும் இந்நாளில் தோன்றும் மனதைப் பிழியும் வலியை அடக்கமுடியாமல் போராடிகொண்டிருந்தார் அவர்... ஆரம்பத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தவருக்கு நாட்கள் செல்லச்செல்ல அந்த நம்பிக்கையும் கரைந்தே போனது...

அவர் தன் நினைவுகளில் மூழ்கி இருக்க, "டேய் மரியாதையா நில்லுடா..." என்ற குரல் அவர் காதுகளில் விழுந்து நினைவுகளைக் கலைத்து இவ்வுலகிற்கு மீட்டுவர, சத்தம் எங்கிருந்து வருகிறது எனச் சுற்றும் முற்றும் பார்த்தவரின் கண்களில் அபிஷேக்கை பத்மா, எதனையோ கத்தியபடி துரத்திகொண்டு வந்த காட்சி விழுந்தது...

அவனும் சரியாக வைத்தீஸ்வரி அமர்ந்திருந்த நாற்காலி அருகில் வந்து நின்றவாறு "கொடுக்கமாட்டேன்போ.." என்று கேலியாகச் சிரித்துகொண்டு அவளுக்கு போக்குக் காட்டிகொண்டிருந்தான்...

அவன் பதிலில் எரிச்சலடைந்து வைத்தீஸ்வரி அருகில் வந்தவள் "ஒழுங்கு மரியாதையா கொடுடா... அது என்னோட பர்சனல் டைரி... யாரும் படிக்ககூடாது... அதை மட்டும் திறந்து அதில் இருக்கிறதைப் படிச்ச, உன்னைக் கொன்னுருவேன்..." என்று விரல் நீட்டி மிரட்டினாள் பத்மா...

அவனோ அவள் கைகளில் அகப்படாமல் அந்த நாற்காலியைச் சுற்றி ஓட பத்மாவும் அவனை சுற்றி சுற்றி துரத்திகொண்டிருந்தாள்...

காலையில் பத்மாவைத் தேடி அபிஷேக் அவள் அறைக்குச் சென்ற போது அந்த டைரியில் ஏதோ எழுதிகொண்டிருந்தவளது முகம் அத்தனை கலக்கத்தைச் சுமந்திருந்தது... அதில் இருந்து அவளை மீட்கத் தான் அபிஷேக் அந்த டைரியை எடுத்துக்கொண்டு ஓடிவந்திருந்தான்... அவன் எதிர்பார்த்தது போலவே பத்மாவும் தன் கலக்கத்தை மறந்து அவனைத் துரத்த ஆரம்பித்துவிட்டாள்...

இருவரும் சிறிது நேரம் வைத்தீஸ்வரியைச் சுற்றி ஓடிகொண்டிருக்க, ஓடிக்களைத்த பத்மா, 'இவனைப் பிடிக்கமுடியலையே, என்ன செய்யலாம்???' என்று யோசித்தவளுக்கு சட்டென யோசனை தோன்றியவளாக நின்றுவிட்டாள்...

அவள் நின்றுவிட்டதைப் பார்த்து அபிஷேக்கும் நின்று குழப்பத்துடன் அவளைப் பார்க்க, அவளோ ஆழ்ந்து மூச்செடுச்சு எதையோ முகர்ந்தாள்... அவளது செய்கையில் அபிஷேக்கின் ஆர்வம் அதிகரிக்க "என்னடி பண்ணுற...???" என ஆர்வத்துடன் கேட்க,

"ஏதோ பக்கோடா போடறாங்க போலடா... உனக்கு வாசனை வரல...???" என்று மேலும் மூச்சை இழுத்துகொண்டு அவனை ஓரக்கண்ணால் பார்த்துகொண்டே பத்மா கேட்க, அதில் தானும் அவள் சொன்ன வாசனையினை முகர முயற்சித்தவன்,

"ஆமா... ஆமா... அப்படித்தான் பத்து தெரியுது... நான் போறேன்..." என்றுவிட்டு இனி எனக்கு இது எதற்கு என்பது போல் டைரியை அங்கேயே போட்டுவிட்டு ஓடிய அபிஷேக்கைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டவள்,

"ச்சை... உன்னைப்பத்தி நல்லா தெரிஞ்சும் தேவையில்லாம ஓடி என் எனர்ஜியை வேஸ்ட் பண்ணிட்டேனே..." என்று சலித்துக் கொண்டு தானும் உள்ளே செல்லத் திரும்பியவள், அப்போது தான் வைத்தீஸ்வரி அமர்ந்திருப்பதைக் கவனித்தவள், தங்கள் செயலை பார்த்து அவர் புன்னகைத்துகொண்டிருப்பதைப் பார்த்தவள், சங்கடத்துடன் சிரித்தபடியே அவர் அருகில் வந்து அமர்ந்தாள்...

"சாரிமா... இந்த அபிஷேக் பய இப்படித்தான் ஏதாவது வம்பு பண்ணுவான்... உங்களை தொந்தரவு பண்ணிடோமா" லேசாக அசடு வழிந்துகொண்டே பத்மா கேட்க அதில் அவர் புன்னகை மேலும் விரிய,

"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைடா..." என்று அவர் மென்மையாக பத்மாவின் தலையைக் கோதிக்கொடுக்க, அதில் மனம் நெகிழ்ந்துபோய் சிரித்தவள்,

"நீங்க சாப்பிடீங்களாமா..." என்று மென்மையாகக் கேட்டதற்கு மறுப்பாகத் தலை அசைத்தார் வைத்தீஸ்வரி...

"அச்சோ...! இன்னும் நீங்க சாப்பிடலையா...??? வாங்கமா போய்ச் சாப்பிடலாம்...” என்று பத்மா அன்பாக அழைக்க , ஏனோ அவருக்கு அவ்வழைப்பை மறுக்கத் தோன்றவில்லை...

பொதுவாக இந்த நாளில் யாருடனும் பெரிதாக பேசாமல் சுற்றுபவர் மனம் ஏனோ இன்று அந்தச் சிறுபெண்ணின் பேச்சைத் தட்டமுடியாமல்போக, அவளுடன் அவரும் எழுந்துகொள்ள, ஏதோ தொண தொணத்துக்கொண்டே அவரை அழைத்து வந்து உணவு மேசையில் அமரவைத்தாள் பத்மா...

பேசிக்கொண்டே அவள் அவருக்கு உணவு பரிமாற, அவரும் அவள் பேச்சில் மெல்லிய புன்னகையுடன் உண்டுகொண்டிருந்தார்... இதை தற்செயலாகப் பார்த்த கோமளவல்லிக்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை..

நன்றாகக் கண்களைக் கசக்கிவிட்டுகொண்டு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துவது போல் பார்த்தவர், வேகமாக உள்ளே சென்று ராஜாத்தியையும் அழைத்துவந்து காட்ட, அந்த காட்சியைப் பார்த்த அவருக்கும் ஆச்சர்யமே..!

இன்று வைத்தீஸ்வரி உண்பதே பெரிதென்றால் அதிலும் அவர் மெல்லிய புன்னகையுடன் அமர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து அவருக்கு சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது...

இங்கு நடந்த அனைத்தையும் மேலே நின்று அதர்வாவும் பார்த்துகொண்டிருந்தான்...

தன் அத்தை அருகில் நின்று அவருடன் சிரித்துப் பேசிகொண்டே அவரை உண்ணவைத்துக்கொண்டிருந்த பத்மாவைப் பார்த்தவனுக்கு முதல் முறையாக அவள் வேறுமாதிரி தெரிந்தாள்... திருடி என்பதெல்லாம் தாண்டி அவன் மனதில் குழந்தை குணம் கொண்ட ஒரு அழகிய மங்கையாகத் தன் தடத்தைப் பதித்தாள் அம்மங்கையவள்,

சிறிது நேரம் நின்று அவளையே பார்த்துகொண்டிருந்தவன், சில நொடிகளில் ஏதோ பெரிய தப்புச் செய்தவன் போல் பதறி அவளிடம் இருந்து பார்வையைப் பிரித்தெடுத்துக்கொண்டு அங்கு நிற்க முடியாமல் விறு விறுவென்று நடந்து உள்ளே வந்து தன் அறையில் கண்மூடி அமர்ந்துவனது கண்முன் இத்தனை வருடமாக இந்தக் குடும்பம் மறக்கப் போராடும் மறக்க முடியாத விஷயங்களோடு சேர்ந்து அவனது கண்களிள் இருந்து அவன் அறியாமலேயே இரண்டு சொட்டுக் கண்ணீர் சிந்த, கடந்த காலக் காட்சிகள் கண்முன்னே படமாக விரிந்தது...
 

swaragini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்,

திருடிஸ் வந்தாச்சு:love::love:

யூடியை படிச்சுட்டு உங்க இதயத்தை நாங்க திருடுறதுக்கு முன்னாடி நீங்களே வந்து சமத்தா கமென்ட் பாக்ஸ்ல சரண்டர் ஆகிறுங்க செல்லங்களா..

இதுவரை ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.. இனிமேலும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த பிஞ்சு நெஞ்சங்களை பஞ்சர் ஆக்காமல் வந்து கமென்ட்ஸ் சொல்லிட்டு போங்கோ

https://srikalatamilnovel.com/community/threads/ஸ்வராகினியின்-திருடி-சென்றாய்-இதயத்தையே-கருத்து-திரி.1023/
 

swaragini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7


கஷ்டப்பட்டு நினைவுகளை கட்டுப்படுத்திய அதர்வா கட்டிலில் இருந்து எழுந்து சென்று அலுமாரியை திறந்தான். அதில் தனது ஷார்ட்களின் நடுவே இருக்கும் புகைப்படத்தை எடுத்து பார்த்து மென்மையாக வருடினான். அந்த வருடலிலேயே மனதில் இருக்கும் பாரம் குறைய அந்த புகைப்படத்துக்கு கூட இவ்வளவு சக்தியா என்று அதிர்ந்தவன் மனதில் சிறு நம்பிக்கை உதித்து அவன் இதழ்கள் தானாக விரிந்தன.

பெரு மூச்சுடன் புகைப்படத்தை இருந்த இடத்திலேயே வைத்தவன் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.

நாட்கள் இவ்வாறே நகர ரஞ்சித் வந்ததில் இருந்தே வீட்டினருக்கு ஒரு வித பயம் உருவாகி இருந்தது. ரஞ்சித்தும் அதர்வாவும் இவ்வாறு ஒரே நேரத்தில் வீட்டில் இருப்பது அபூர்வம். அந்த அதிசயம் இப்போது நிகழ்ந்தாலும் அது யாருக்கும் சந்தோஷத்தை தரவில்லை. ரஞ்சித்தும் அதர்வாவும் எதிர் எதிர் துருவங்கள் என்று அறிந்த குடும்பத்தினர் எப்போது பிரளயம் வெடிக்கும் என்று நடுங்கியபடி இருந்தனர்.

அதுவரை ஒருவருடன் ஒருவர் சந்திப்பை தவிர்த்ததால் வீட்டில் இருந்த அமைதி ரஞ்சிதால் அன்று தகர்க்கப்பட்டது.

வந்ததில் இருந்தே பத்மா மேல் கண்ணை வைத்து இருந்தவன் சில நாட்கள் நோட்டம் விட்டதில் பத்மாவின் நெருங்கிய தோழன் அபிஷேக் என்று அறிந்து கொண்டான்.

உச்சி வெயில் நேரம் கீழே நெற்களை பரப்பி கொண்டு இருந்த அபிஷேக்கை கவனித்த ரஞ்சித் அவன் அருகே நெருங்கி வந்து காதருகில் குனிந்து " என்ன பண்ற? "என்று கேட்டான்.

பதட்டத்தில் பதறியவன் நெற்குவியலின் மேல் விழுந்தபடி திரும்பி பார்த்தான். அங்கே வாய் நிறைய பல்லாகநின்ற ரஞ்சித்தை பார்த்து அதிர்ந்தவன் " இந்த பண்டா , எதுக்கு இவ்வளவு கிளோஸ் அப் ல நிற்கிறான் " என்று நினைத்தபடி " நெல்லு காய வைக்கிறேன் ஐயா " என்றான்.

" அப்புறம் காய வைச்சுக்கலாம், இப்போ என் கூட வா.. உன் கூட கொஞ்சம் தனியா பேசணும் ரொம்ப அவசரம் . " என்று அழைத்தவன் அவனை எழுப்பி விட கையை நீட்ட அபிஷேக்கோ அவனை வெறித்து பார்த்தபடி " என் கூட என்ன பேச போறான்??? அதுவும் தனியா?? இவன் பொண்ணுஙக விஷயத்துல தான் மோசம்னு சொன்னாங்க ஒரு வேளை என்னை போல பைனுங்களையும் விட்டு வைக்க மாட்டானா?? " என்று நினைத்தவன் ஒரு கணம் அதிர்ந்து " ஆடி ஆத்தி .. இதென்ன வம்பா போச்சு " என்று நினைத்தபடி இருக்க " என்னடா கீழே இருந்த போல கனவு காணுறியா??? எந்திரிடா " என்று ரஞ்சித் கடின குரலில் கூறினான். அதில் ஒரு கணம் ஆடி போனவன் வேறு வழி இல்லாமல் அவன் கையை பிடித்து எழுந்த சமயம் இன்று தனக்கு பத்மா சொந்தமாக போகிறாள் என்ற பூரிப்பில் ரஞ்சித்தின் கண்கள் கக்கிய மயக்கத்தை பார்த்து பயந்த அபிஷேக் மனதுக்குள் " பகவானே என்னை நீதான் காப்பாத்தணும் " என்றபடி எழுந்து அவன் பின்னால் சென்றான்.

அங்கிருந்த தோப்பு வீட்டுக்குள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு முன்னால் ரஞ்சித் செல்ல பின்னால் அபிஷேக் சென்றான். அதை தூரத்தில் இருந்து பார்த்த அதர்வாவுக்கு ஏதோ உறுத்தலாக இருக்க தோப்பில் இருந்த கதிரையில் கால் மேல் கால் போட்டு இருந்து நடப்பதை உன்னிப்பாக கவனித்தான். ரஞ்சித் கண்ணுக்கு அதர்வா படாததால் அவன் தனது வேலையை இங்கேயே முடிக்க தீர்மானித்தான்.

உள்ளே சென்ற அபிஷேக் பின்னால் நிற்க அவன் முன்னால் முதுகு காட்டி நின்ற ரஞ்சித் " என்னால கன்ட்ரோல் பண்ண முடியலடா " என்று பத்மாவை நினைத்து கூறினான். அதை கேட்டு நெஞ்சில் கை வைத்து "ஆ " என்று ஏங்கியவன் " ஐயோ நான் அப்படி பட்ட பையன் இல்ல.. என்னை விட்ருங்க " என்றான். உடனே புருவ முடிச்சுடன் திரும்பிய ரஞ்சித் " எப்படி பட்ட பையன் இல்ல? " என்று கேட்க " நீங்க நினைக்கிற போல ஆள் நான் இல்ல ஐயா.. நான் போயிடுறேன்... " என்று பதறியவனை பார்த்து " என்ன உளறுற ? " என்றவன் அவனை நோக்கி வர " ஐயா இதெல்லாம் நல்லா இல்ல " என்றவன் ரெண்டடி பின்னால் சென்றான்.

" இவன் என்ன நினைச்சிட்டு பேசுறான் " என்று குழம்பிய ரஞ்சித் " என்னடா ஆச்சு??? வாய துறந்து சொல்லு " என்றதும் " உங்களுக்கு என் மேல ஒரு கண் தானே " என்றான். அதை கேட்ட ரஞ்சித்துக்கு கொலை வெறி எழும்ப எட்டி அவன் ட்ஷிர்டை பிடித்தவன் தலையில் பட பட வென இரண்டு அடி போட்டு " முளைச்சு மூணு இலை விடல உனக்கு இப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா. என்னை பார்த்தா எப்படி டா தெரியுது?? " என்று அவன் முதுகில் அடித்து பின்னி விட்டான்.

அதை வலியுடன் வாங்கியவன் " விடுங்க ஐயா " என்று அலறியும் அவன் விட்ட பாடு இல்லை. பொறுமை இழந்த அபிஷேக் அவனை தள்ளி விட்டு " அப்போ எதுக்கு ஐயா என்னை கூட்டி வந்தீங்க ?? " என்று கேட்க அப்போது தான் பத்மாவுக்காக கூட்டி வந்தது நினைவு வர மானசீகமாக நெற்றியில் அடித்தவன் " இவன் பண்ணின அக்கபோரில எதுக்கு வந்தோம்ன்னே மறந்திடுச்சு " என்று நினைத்தபடி தனது செல்போனை நீட்டி " பத்மாவுக்கு இதுல இருந்து கால் பண்ணி இங்க வர சொல்லு. " என்றான்.

அவன் பெண்கள் பழக்கம் அறிந்த அபிஷேக்கும் சந்தேகமாக அவனை பார்த்தப்படி " எதுக்கு ஐயா? " என்று கேட்க அங்கு கீழே கிடந்த அரிவாளை தூக்கி அபிஷேக் கழுத்தில் வைத்தவன் " கேள்வி கேட்காம சொல்றத செய் " என்றான். அபிஷேக் தான் உயிருக்கு பயந்தவன் ஆச்சே " சொல்லுறேன் ஐயா "என்றவன் கால்கள் நடுங்க கத்தி முனையில் பத்மாவுக்கு அழைத்தான்.

கணக்கு வேலையில் ஈடுபட்டிருந்த பத்மாவின் கை தொலைபேசி அலற அதை எடுத்து பார்த்தவள் "புது நம்பரா இருக்கே , யாரா இருக்கும்?" என்று நினைத்தபடி அதை அழுத்தி காதில் வைத்தாள். மறுமுனையில் அபிஷேக் "பத்மா, நான் அபிஷேக் பேசுறேன், கொஞ்சம் அவசரமா தோப்பு வீட்டுக்கு வா" என்றபடி வைத்து விட "இப்போவா?" என்று கேட்கும் போதே மறுமுனையில் போன் கட் ஆகி இருந்தது.

"எதுக்கு வர சொல்றான்?" என்று நினைத்தவளுக்கு அவன் குரலில் தெரிந்த பேதம் அவனை தேடி போக சொல்லி தூண்ட தனக்கு ஏற்பட போகும் ஆபத்தை அறியாதவள் தோப்பு வீட்டை நோக்கி சென்றாள். தோப்பு ஆள் அரவம் இல்லாமல் வெறிச்சோடி போய் இருக்க அவள் சுற்றும் முற்றும் பார்த்தபடி தோப்பு வீட்டை நோக்கி சென்றாள். அவள் கண்ணுக்கோ மரம் மறைவில் இருந்த அதர்வா தெரியவில்லை. ஆனால் அவனுக்கோ அவள் செல்வது தெளிவாக தெரிந்தது.

"இவ எங்க இங்க போறா? ஒரு வேளை மூணு பேரும் கூட்டு களவாணிங்களோ?" என்று அதர்வா நினைத்தபடி நடப்பதை வேடிக்கை பார்த்தான். போலீஸ் புத்தியாச்சே அனைத்தையும் சந்தேக கண்ணோடு பார்த்து அவனுக்கும் பழகி விட்டது.

கதவு சாத்தி இருக்க திறந்து கொண்டு உள்ளே சென்றவள் அங்கு கண்ட காட்சியை கண்டு அதிர்ந்து போனாள். கதிரையில் ரஞ்சித் அரிவாளை அபிஷேக் கழுத்தில் வைத்தவாறு இருக்க முன்னால் மண்டியிட்டவாறு அபிஷேக் கண்களில் கண்ணீரோடு கீழே இருந்தான். "அபிஷேக் என்னாச்சு?" என்று பதறியவள் ரஞ்சித்தை பார்க்க அவளை மேலிருந்து கீழ் காம பார்வை வீசியதில் அவள் உடல் கூசி போனது. ஆனால் உயிர் நண்பனை எவ்வாறு விட்டு வருவது என்று தவித்தவள் "அவனை விடுங்க ப்ளீஸ்" என்று வாய் விட்டு ரஞ்சித்திடம் கெஞ்சினாள்.

ஹா ஹா என்று பலமாக சிரித்தவன் "இவனை வச்சு நான் என்ன பண்ண முடியும்? எனக்கு இவன் தேவையே இல்லை" என்றவன் காம கண்கள் எனக்கு நீ தான் வேணும் என்று அப்பட்டமாக கூறியது. "பொறுக்கி " என்று அவன் பார்வையில் கூசி முணு முணுத்தவள் அப்படியே நிற்க அபிஷேக் கழுத்தில் இருந்து கத்தியை எடுத்தவன் "நீ போ" என்றான். அவனுக்கோ நண்பியை இந்த கயவனிடம் விட்டு போவது நெருடலாய் இருக்க "ஐயா வேணாம், நான் பத்மாவையும் கூட்டி போறேன்" என்று கெஞ்சினான். அவனுக்கோ அவள் தன்னால் இந்த கயவனிடம் மாட்டி விட்டாள் என்ற குற்ற உணர்வு அதிகமாகவே இருந்தது. ரஞ்சித்துக்கு தான் பொறுமை என்பது கொஞ்சமும் கிடையாதே. அவன் இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்தது பெரிய விடயம். அதுவும் கண் முன்னே அவன் தேடி வந்த பொக்கிஷம் இருக்கும் போது பொறுமை எங்கனம் வரும்? கதிரையை காலால் உதைத்தபடி எழுந்தவன் அவன் கழுத்தை பிடித்து எதிர்பார்க்காத நேரத்தில் அவன் நெற்றியை சுவற்றில் அடிக்க அவனோ"அம்மா" என்று வலியில் அலறினான். அவன் பலவீனமான சமயத்தை பயன்படுத்தியவன் ஒரே எட்டில் வெளியே அவனை தள்ள பின்னால் "அபிஷேக் " என்றபடி பத்மா பின்னால் ஓடி வந்தாள். உடனே அவளை ஒரு கையால் வளைத்து பிடித்தவன் அதே கையால் கதவை தாழிட கீழே விழுந்த அபிஷேக் ரத்த வெள்ளத்திலும் நண்பியை காக்க கஷ்டப்பட்டு எழுந்து நின்றான்.

எழுந்தவன் கதவை பலம் கொண்ட மட்டும் தட்டினாலும் அதை திறக்க முடியவில்லை. அவனுக்கோ நண்பியின் கற்பை காப்பாற்ற வெளி ஆட்களை அழைப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை. அசம்பாவிதம் நடக்க முதல் தடுக்க வேண்டும் என்று நினைத்தவன் பண்ணையார் வீட்டை நோக்கி ஓடினான். உள்ளே ரஞ்சித் கையில் அகப்பட்ட பத்மா "என்னை விடு "என்று அலறியபடி பலம் கொண்ட மட்டும் அவனை தள்ள முற்பட்டாள். அவன் பலம் முன்னே அவளால் கொஞ்சமும் அசைய முடியவில்லை.

அவனில் இருந்து விடுபடுவதற்காக அவன் காலை பலம் கொண்ட மட்டும் மிதித்தவள் வலியில் அவன் பிடி தளர அவனில் இருந்து விடுபட்டு ஓட தொடங்கினாள். வலியையும் பொருட்படுத்தாத ரஞ்சித் கோபத்தில் ஆவேசமாக அவள் தாவணியை இழுக்க அது கிழிந்து அவன் கையுடன் பாதி வந்தது.

ஒரு ஆண் மகன் முன்னே தாவணி இன்றி நிற்கும் நிலை வந்ததை நினைத்து கண்களில் கண்ணீர் வழிய "என்னை விடுங்க" என்று கெஞ்சியபடி தனது மானத்தை கைகளால் மறைத்தபடி ஓட முற்பட்டாள். திருட்டு தொழிலில் கூட தைரியமாக அனைவரையும் துவம்சம்செய்பவளுக்கு மானம் என்ற நிலை வரும் போது ஒட்டு மொத்த சக்தியும் உடலில் இருந்து வடிந்தது போல உணர்ந்தாள்.

ரஞ்சித்தும் விடாமல் அவளை பிடிக்க போக ஒரு வலிய ஆண் கரம் அவன் கையை பிடித்து முறுக்கியது. வலி தாங்க முடியாமல் ரஞ்சித் அலற அப்போது தான் பத்மா திரும்பி பார்த்தாள். அங்கே ஆறடி உயரத்தில் மீசை துடிக்க கோபத்துடன் அதர்வா தான் ரஞ்சித்தின் கையை முறுக்கியபடி நின்றான். அபிஷேக் ரத்தத்துடன் பண்ணை வீட்டை நோக்கி ஓடியதை பார்த்தவன் ஏதோ விபரிதம் என்று அறிந்து தொப்பு வீட்டை நோக்கி ஓடிய சமயம் அங்கு பத்மா ரஞ்சித்திடம் கெஞ்சியது அதர்வா காதில் தெளிவாக விழுந்தது.

உடனே ஒரே அடியில் கதவை உடைத்து உள்ளே நுழைந்தவன் பத்மாவை மானபங்க படுத்த போன ரஞ்சித்தின் கையை எட்டி பிடித்து முறுக்கி இருந்தான். அதர்வாவை பத்மா கண்டதும் அவள் மனதில் இனம் புரியாத நிம்மதி உருவாக தைரியமாக திரும்பி நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்கினாள். அதர்வாவும் ரஞ்சித்திடம் "நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன். பொண்ணுங்க மேல கை வைக்காத, வைக்காதன்னு. நீ எல்லாம் திருந்தவே மாட்டியாடா" என்று பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்து துப்பியவன் அவன் கையை மேலும் முறுக்க அவன் வலியில் அலறினான். அப்போதும் கோபம் தீராதவன் அவன் தலையை பிடித்து பலம் கொண்ட மட்டும் சுவற்றில் மொத ரத்தம் பீறிட்டு வழிந்தது. ரஞ்சித்தும் வலி தாங்க முடியாமல் சுருண்டு விழ ஓங்கி அவன் உயிர் நாடியில் அடித்த சமயம் "சூப்பர் ஷாட்" என்று சந்தோஷத்தில் பத்மா கை தட்டினாள்.

அப்போது தான் நிமிர்ந்து அவளை பார்த்தான் அவளோ தான் நிற்கும் நிலை மறந்து கை தட்டி கொண்டு இருந்தாள். "இவ இப்படி நின்னா எனக்கே ஒரு மாதிரி இருக்கு, இவ எல்லாம் என்ன டிசைனோ?" என்று நினைத்து மானசீகமாக நெற்றியில் அடித்தவன் அவளை முறைத்து பார்த்து "அவன் மட்டும் ஆம்பிள இல்ல நானும் தான்" என்று ஆத்திரத்தில் சீறினான். அப்போது தான் நிற்கும் நிலை அறிந்தவள் கைகளால் தன்னை மறைத்தவாறு மற்றயப்பக்கம் திரும்பி நின்றாள்.

அவள் திரும்பியதும் தான் அவனுக்கு மூச்சு சீராக வந்தது. அந்நேரம் வெளியில் ஆட்கள் வரும் அரவம் கேட்க தனது ஷிர்ட்டை கழட்டியவன் அவள் முன்னே பின்னால் நின்றவாறு நீட்டினான். அவளும் வேறு வழி இல்லாமல் பெற்று கொண்டவள் அதை அணிந்த போது அவள் உடல் சிலிர்த்து அடங்கியது. விரல் நுனி கூட படாமல் அவளை சிலிர்க்க வைக்க கூடியவன் அவன் ஒருவனே என்பது அந்த கணத்தில் இருவரும் அறியாமல் போனது இருவருக்கும் பெரிய துரதிஷ்டமாகி போனது.

வெளியே வெற்று மார்புடன் அவன் வெளியேற ஆட்களுடன் வந்த அபிஷேக்கோ "இவர் எங்கே இங்க?அதுவும் இந்த கோலத்தில் " என்று நினைத்த சமயம் அவன் ஷிர்ட்டை அணிந்தவாறு அவள் வெளியே வந்தாள். இருவர் நிலையையும் பார்த்த ஊர் சனம் தங்களுக்கு விரும்பியபடி கிசு கிசுக்க தொடங்கினர். இந்த ரணகளத்தில் அனைத்துக்கும் காரணமான ரஞ்சித்தை மறந்து தங்களுக்கு விரும்பியபடி கண் காது மூக்கு வைத்து பேச தொடங்கினார்கள். அப்போது கூட்டத்தில் ஒருத்தி "வந்த கொஞ்ச நாளிலேயே பெரிய ஐயா பையன மயக்கிட்டா, ஜெக ஜால கில்லாடி தான் " என்று கூற அதுவரை சாதாரணமாக இருந்த பத்மாவுக்கு தூக்கி வாரி போட்டது. அதர்வாவுக்கு அந்த பேச்சு சகிக்கவில்லை போலும் அவன் திரும்பி அனல் தெறிக்க அந்த பெண்ணை பார்த்ததில் அந்த பெண் கூட்டத்துக்குள் பயத்தில் ஒளிந்து கொண்டாள். ஒருவர் வாயை அடைக்க முடியும் அனைவர் வாயையும் அடைக்க முடியுமா?

அப்போது அங்கிருந்த பெரிசு ஒருத்தர் "பட்டணத்து பையன் வர்றத பார்த்தா உள்ளே ஏதோ பெரிய சம்பவம் நடந்து இருக்கும் போல, இப்போ பூசி மெழுகிருவாங்க ,போலீஸ் ஆச்சே, அந்த பொண்ணு தான் பாவம், இனி யாரை அவ கட்டிப்பா?" என்று கேட்க அவனோ மனதுக்குள் "இவங்க என்ன நடந்தது என்று கொஞ்சமும் விசாரிக்க மாட்டாங்களா? அவங்க இஷ்டத்துக்கு பேசுறாங்க" என்று ஆதங்க பட்டான். அதே ஆதங்கத்தை பத்மா கண்ணீருடன் தலையை குனிந்து வெளிப்படுத்த திரும்பி கண்ணீருடன் நின்றவளை பார்த்த அதர்வாவுக்கு மனம் பாரமேறி போனது. இவர்கள் கதையை கேட்ட அபிஷேக்கோ "இதுங்கள கூட்டி வந்ததுக்கு நான் சும்மா இருந்திருக்கலாம் " என்று நினைத்து கொண்டான்.

அந்நேரம் பிரச்சனையை பற்றி கேள்விப்பட்டு அங்கு வந்த அதர்வாவின் அப்பாவுக்கு நடந்தது என்ன என்று தெளிவாக தெரிந்தது. ஆனாலும் ஊர் மக்கள் வாயை அடைக்க நினைத்தவர் "பஞ்சாயத்தை கூட்டுங்க , அங்க வச்சு விசாரிச்சு பேசிக்கலாம், இங்க யாரும் எதுவும் பேச தேவல" என்றவர் தனது கையாட்களிடம் "உள்ளே ரஞ்சித் அடிபட்டு இருப்பான் , தூக்கிட்டு வாங்க" என்றார். தன்னை புரிந்து வைத்துள்ள தனது தந்தையை நினைத்து அதர்வாவும் நெகிழ்ந்து தான் போனான். அவரை நன்றியுடன் அதர்வா பார்க்க அவரும் கண்களை திறந்து மூடி பெண் மானம் காத்ததற்காக தனது நன்றியை தெரிவித்தார்.

தொடரும்...


https://srikalatamilnovel.com/community/threads/ஸ்வராகினியின்-திருடி-சென்றாய்-இதயத்தையே-கருத்து-திரி.1023/
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8



பெரிய பெரிய விழுதுகளை கொண்ட அந்த பழமையான ஆலமரத்தின் அடியில் அங்குமிங்குமாய் ஆண்கள் பெண்கள் முதற்கொண்டு அந்த ஊரில் உள்ள நண்டு சிண்டுகள் கூட அங்கு நின்றுகொண்டு தங்களுக்குள் குசுகுசுவென ஏதோ பேசிக் கொண்டிருக்க,




ஆலமரத்திடலில் ஒரு பெரிய ஜமுக்காளம் விரித்து அதில் மாதேஸ்வரனும் அவரின் அருகில் ஊர் பெரிய தலைக்கட்டுகளும் வெள்ளை வேட்டி சகிதம் அமர்ந்து அந்த நரைத்து போன மீசையை நீவி விட்டுக்கொண்டே 'நான் ரொம்ப கோவக்காரனாக்கும்' என்பது போல் லுக் விட்டுக் கொண்டு இருந்தனர்.



இவை அனைத்தையும் சுவாரசியமாய் இரு கண்கள் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது..



அந்த கண்களுக்கு சொந்தக்காரன் சாட்சாத் நம் அபிஷேக்கே தான்.



அனைத்தையும் பார்த்தவன் மனதிற்குள் ," அடப்பாவிங்களா நாப்பது வருஷத்துக்கு முன்னாடி வந்த நாட்டாமை படத்துல இருந்து இவங்க இன்னும் வெளியவே வரலியா டா...செட்டப் எல்லாம் அப்படியே இருக்கு..டேய் அதுல நடிச்ச சரத்குமாரே அப்க்ரேட் ஆகி குஷ்பூவை தூக்கி குழிதோண்டி புதைச்சுட்டு ஓவியா கூட ஓய்யாரமா ஆடிகிட்டு இருக்காரு இவனுங்க இன்னும் அப்படியே இருக்கானுங்களே கன்ட்ரி ஃபூல்ஸ்" என நினைத்துக்கொண்டு கடைசி வரியை மட்டும் சப்தமாய் கூறிவிட,



அவன் அருகில் இருந்த ஒரு மீசைக்காரன் தனது நெற்றிக்கண்ணை திறந்து அவனை முறைக்க, அவனைக் கண்ட அபிஷேக் ,"யப்பா எம்மாந்தண்டி மீசை டா..இதுக்கு என்ன ஷாம்பூ போடுவ..எனக்கு வேற கொஞ்ச நாளா ஹேர் ஃபால் ஜாஸ்தியா இருக்கு"என தன் பரட்டை தலையில் கையை விட்டுக்கொண்டே கேட்க,



அந்த மீசைக்காரன் மீண்டும் முறைக்கவும் ,"டேய் நான் என்ன உன் முறைப்பொண்ணா இப்படி வெறிச்சு பார்த்ததும் வெட்கப்பட, போய் முதல்ல சொம்பை தூக்கிட்டு வந்து அந்த வெள்ளை வேட்டிக்காரனுங்ககிட்ட கொடுங்க டா..சீக்கிரம் பஞ்சாயத்தை ஆரம்பிக்கட்டும் எவ்ளோ நேரம் தான் இந்த இத்துப்போன மூஞ்சிகளயே பார்த்துட்டு இருக்கது" என கூறிய அபிஷேக் அந்தப்பக்கம் திரும்ப, ரஞ்சித் அவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.



அதர்வா அடித்து துவைத்து போட்டதில் உள்ளே இரத்தம் வழியக் கிடந்த ரஞ்சித்தை ராஜேந்திரனின் உத்தரவுப்படி அவனை தூக்கிக்கொண்டு வைத்தியம் பார்த்து விட்டு வீட்டில் விட போக, இந்த அபிஷேக் அவன் மீது பிராது கொடுத்திருப்பதால் வேறு வழியில்லாமல் அவனையும் கைத்தாங்கலாக அழைத்து வந்திருந்தனர். அதனால் தான் அபிஷேக்கை பாசப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.



உடனே முகத்தை திருப்பிக் கொண்ட அபிஷேக், "ச்சை எங்குட்டு திரும்புனாலும் எல்லாவனும் நம்மளை சாப்பிட்டு ஏப்பம் விடுற மாதிரியே பார்த்து வைக்கிறானுங்க..முதல்ல இந்த பஞ்சாயத்து முடிஞ்சதும் பத்துவை கூட்டிட்டு நம்ம ஏரியாக்கே எஸ்கேப் ஆயிரனும்" என கூறிக்கொண்டவனுக்கு அப்போது தெரியவில்லை சற்று நேரத்தில் அவனே பத்மா இங்கு நிரந்தரமாக தங்குவதற்கு காரணம் ஆகப்போவதை.



ஒருவழியாக ,"க்கும் க்கும்" என ஊர்த்தலைவரும் அதர்வாவின் தந்தையுமான பெரிய பண்ணையார் செருமி அனைவரின் கவனத்தையும் திருப்ப,



தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த அனைவரும் பேச்சை நிறுத்திவிட்டு அடுத்த என்ன நடக்கப்போகிறது என ஆவலாக கவனிக்கலானர்.



என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்து அனைத்தும் கைபேசிக்குள்ளே அடங்கினாலும் அடுத்த வீட்டின் கதவை திறந்து அவர்களின் பிரச்சனையை பார்த்து அதில் குளிர்காயும் மக்களின் மனோபாவம் இன்றளவும் மாறாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமே.



தன் உதிரத்தில் உருவான மகனின் மீதே பிராது கொடுத்திருப்பதால் அடுத்து என்ன பேச என மாதேஸ்வரன் தயங்க, அவரின் நிலையை புரிந்து கொண்ட அருகிலிருந்த அவரின் நண்பர் அவரே பேச தொடங்கினார், "அதாவது பிராது என்னான்னா இந்தா பண்ணையார் வீட்டுக்கு கணக்கெழுத வந்துருக்கே இந்த புள்ளை" என பத்மாவை நோக்கி கைகாட்டியவர் தொடர்ந்து ,"அந்த பொண்ணும், நம்ம பஞ்சாயத்து தலைவரும் பெரிய பண்ணையாரோட மகனுமான அதர்வாவும் அந்த புள்ளையோட சேர்ந்து இன்னைக்கு தோப்பு வீட்டுல இருந்து ஒன்னா வெளிய வந்ததுனால ஊர்க்காரங்க அனைவரும் அவங்களுக்குள்ள தப்பு நடந்திருச்சுன்னு சந்தேகப்படுறாங்க..இது உண்மையா இல்லையான்னு விசாரிக்க தான் இப்ப பஞ்சாயத்து கூடிருக்கு" என நாலு பேருக்கு தெரிந்த விஷயத்தை ஊருக்கே அவர் பரைசாற்ற,



அதர்வாவோ இவர்களின் இந்த முட்டாள்தனமான செயலில் இறுகிப் போய் நின்றிருந்தான்.



அவனின் நிலையே இப்படியிருக்க பெண்ணான பத்மாவிற்கோ, இப்படி அனைவரின் முன் காட்சிப்பொருளாக நிற்கிறோமே என கூனிக் குறுகிப் போனவள் அவளையும் அறியாமல் தான் போட்டிருந்த அதர்வாவின் சட்டையை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டாள், ஏதோ அதுதான் அவளை அனைத்திலிருந்தும் காப்பது போல்.



அவளை திரும்பி பார்த்த அதர்வாவிற்கு, அவளின் தோற்றத்தைக் கண்டு ரஞ்சித்தையும் இந்த மூடர்களையும் அடித்து துவம்சம் செய்துவிடம் அளவிற்கு ஆத்திரம் எழுந்தது முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான், அது ஏனென்று அவன் ஆராய்ந்திருந்தால் பின்னாளில் நடக்கப்போகும் பல சம்பவங்களை தடுத்திருக்கலாம் ..விதி யாரை விட்டது!!!!



அவர் கூறியதும் கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட, அவர்களை அதட்டி அமைதி படுத்தியவர் அதர்வாவின் புறம் திரும்பி ,"தம்பி நீங்க தான் இதுல நேரடியா சம்பந்தப்படுத்த பட்டிருக்கீங்க.அதுனால என்ன நடந்துச்சுன்னு உன் தரப்பு விளக்கத்தை நீதான் கொடுக்கனும்..அந்த புள்ளை கெட்டுப்போச்சா இல்லையா?" என கூச்சமே இல்லாமல் ஒரு பெண்ணின் மானத்தை ஏலம் விட,



அதர்வாவின் கோபம் எல்லையைக் கடந்தது, இருந்தும் தந்தையின் முகத்திற்காக கண்களை மூடி தன்னை சமன்படுத்தியவன்,ஆயிரம் தான் திருடியாய் இருந்தாலும் ஒரு பெண்ணின் கற்பைப் பற்றி சபையில் வைத்து அலசுவது சரியில்லை என அவனின் நியாய மனம் குரல் கொடுக்க, " அங்க எங்களுக்குள்ள ஒன்னும் நடக்கலை..அவளுக்கும் ஒன்னும் ஆகலை..இது எனக்கும் அவளுக்கும் தெரியும்..இதுக்கு மேல இதை பத்தி நீங்க யாரும் விசாரிக்க வேணாம்" என இறுகிய குரலில் முடித்தான்.



அவனின் குரலிலே அடுத்து இதைப்பற்றி யாரும் பேசக்கூடாது என மறைமுக கட்டளை பொதிந்திருந்தது.



இதைக் கேட்டு அவனைப் பற்றி அறிந்த சிலர், "சின்னய்யா சொன்னா சரியா தான் இருக்கும்" என அவனுக்கு ஆதரவாக பேச, வம்பை தேடி அலையும் கூட்டத்திற்கோ இந்த விஷயம் வாயில் கிடைத்த அவலாகிப்போக, "தப்பையும் பண்ணிட்டு எப்படி தெனாவெட்டா பேசுறான்னு பாரு, எல்லாம் போலிஸ்காரன்ற திமிரு..இவங்களுக்குள்ள ஒன்னுமே நடக்காம தான் இவன் சட்டையை அவ போத்திக்கிட்டு வந்தாளாக்கும் நல்லா இருக்குதே இவங்க நியாயம்..நம்மளாம் என்ன காதுல பூவை சுத்திக்கிட்டு உட்காந்திருக்கோம்னு நினைச்சுகிட்டு இருக்கான..க்கும்" என சிலர் கழுத்தை நெடித்துக் கொண்டனர்.



சற்று நேரம் அனைவரும் தங்களுக்குள் பேசி சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, அங்கு வந்து சேர்ந்தார் அந்த ஊரில் பேர் சொல்லக் கூடிய பணக்காரர்களில் ஒருவரும், பண்ணையாரின் பரம எதிரியுமான சிங்கபெருமாள்.



பண்ணையாரின் குடும்பத்துக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையையும் கண்டு பொறாமை கொண்டு கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் அவர்களை அசிங்கப்படுத்த காத்திருக்கும் குள்ளநரிக் கூட்டம் தான் சிங்கபெருமாளின் குடும்பம்.இது இன்று நேற்றல்ல சிங்கபெருமாளின் தாத்தா காலத்திலிருந்த இந்த பகை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.



இவர்கள் என்னதான் தேடித் தேடி போய் சண்டையிழுத்தாலும் பண்ணையார் குடும்பமோ அவர்களை ஒரு பொருட்டாக என்றுமே மதித்ததில்லை. அதில் மேலும் அவர்களின் மேல் சிங்கபெருமாள் குடும்பம் வன்மத்தை வளர்த்துக் கொண்டது.



இதுமட்டுமல்லாமல் மும்பையில் உள்ள சிங்கபெருமாளின் மகன் மதன் அவனுக்கு கீழ் பணிபுரியும் பெண்ணிடம் தவறாக நடக்க , அதர்வா சிங்கபெருமாள் எவ்வளவு கேட்டுக்கொண்டும் விடாமல் அவனை ஜெயிலில் தள்ளி விளாசி எடுத்துவிட்டான்.



அதற்கு பழிவாங்க காத்துக்கொண்டிருந்தவருக்கு லட்டு போல் இந்த விஷயம் வந்து மாட்ட , அதர்வாவை அசிங்கப்படுத்த கண்களில் வேட்டை நாயின் பசியோடு அங்கு வந்து சேர்ந்தார் அவர்.



அவர் வந்ததும் பண்ணையார் மேலும் நொந்து கொள்ள, கள்ளச்சிரிப்போடு அனைவரையும் பார்த்த சிங்கபெருமாள், "என்னப்பா சிலர் ஊருக்கெல்லாம் மட்டும் தான் உபதேசம் பண்ணுவாங்க போல, சொந்தப்புள்ளையை எப்படி வளர்க்கனும்னு கூட தெரியலையே .. ஏதோ நாங்க தான் நீதி தேவர்கள் மாதிரி ஊரையே இவங்க தான் காப்பாத்துற மாதிரி அப்பனும் புள்ளையும் ஆடுனானுங்க ஆனா இப்போ பார்த்தியா குட்டு வெளி வந்துருச்சு..எவ்வளவு நாள் தான் பகல் வேசம் போட முடியும் என்னைக்காவது ஒரு நாள் வெளிவந்து தானே ஆகனும் என்ன நான் சொல்றது" என நாக்கில் நரம்பில்லாமல் பேசியவர் இடிச்சிரிப்பு சிரிக்க,



பெரிய பண்ணையாருக்கு முகம் கடுகடுத்தது, இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு அவர் அமைதி காக்க, அதை மேலும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிங்கபெருமாள் ,"உண்மையை பேசுனதும் பதில் கூட சொல்ல முடியாம வாயடைச்சு போய் அப்பனும் மவனும் நிக்குறானுங்க பாரு.. சரி அதான் இந்த சீமத்துரை தான் வீட்டுக்கு கணக்கெழுத வந்த புள்ளையை கணக்கு பண்ணி இன்னைக்கு கெடுத்துப்புட்டது ஊருக்கே தெரிஞ்சுடுச்சே இன்னும் என்ன விசாரணை அந்த பொண்ணு கழுத்துல தாலியைக் கட்டி அவளுக்கு நியாயம் பண்ண சொல்லுங்க" என அனைவர் தலையிலும் ஒரு இடியை இறக்கினார்.



அவர் இப்படி சொன்னதற்கு முக்கிய காரணம், அவர் மகனிற்கு பெரிய பெரிய இடங்களில் பெண் பார்க்க, அனைவரும் சொல்லி வைத்தது போல், அதர்வாவைத்தான் தங்கள் மகளுக்கு மணமுடிக்க காத்திருக்கிறோம் அவர் வேண்டாமெனும் பட்சத்தில் உங்கள் மகனைப்பற்றி ஆலோசிக்கிறோம் என அவர் முகத்தில் கரியைப் பூசிவிட, அதன் விளைவாகவே ஒன்றும் இல்லாத அநாதைப் பெண்ணான பத்மாவை அவனுக்கு திருமணம் செய்து வைத்து அசிங்கப்படுத்த நினைத்து தன் திட்டத்தை செயல்படுத்தினார்.



இதைக்கேட்டு அதர்வா, பத்மா , மாதேஸ்வரன் அதிர்ந்ததை விட அபிஷேக்கும் ,ரஞ்சித்தும் தான் பேரதிர்ச்சி அடைந்தனர்.



அபிஷேக்கோ ,"அட நாசமாப்போன சொட்டை மண்டையா, இதெல்லாம் எப்பையோ இழுத்து மூடுன டெக்னிக்யா..காலம் எங்க போய்கிட்டு இருக்கு , டின்டர்ல பொண்ணை பார்த்தியா ஊர் சுத்தி மேட்டரை முடிச்சியா டாட்டா சொல்லிட்டு அடுத்த ஆளை கரெக்ட் பண்ணியான்னு காலம் போய்கிட்டு இருக்கு, இவன் என்னாடான்னா சட்டையை போட்டதுக்கு கல்யாணம் பண்ணனும்னு சொல்றான்...அதுவும் அந்த போலிஸ்காரங்கூட..யோவ் அப்பறம் அவ கூட சேர்ந்து நான் எப்படியா தொழில் பண்றது..அவளை நம்பி தான் என் வயிறே இருக்கு இவன் வேற என் சோத்துல மண்ணள்ளி போடுறான்..ப்ளடி பனியார மண்டையா" என தன் தொப்பையைத் தடவிக் கொண்டே அவன் வருந்தினான்.



ரஞ்சித் அவ்வளவு நேரம் அதர்வாவைப் பற்றி அனைவரும் தவறாக பேசியதை குரூரப் புன்னகையோடு இரசித்துக் கொண்டிருந்தவன், கடைசியாக பத்மாவை அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொன்னதும் ஆடிப்போய்விட்டான்.



இதுவரை எத்தனை பெண்களை புசித்திருந்தாலும் , அவனுக்கு பத்மாவின் அழகு அவனுக்கு தெளிய முடியா போதையை அளித்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.



அவளை கைவிடக்கூடாது அதுவும் அந்த அதர்வாவிடம் இதில் நான் தோற்றுப்போகவே கூடாது என முடிவெடுத்தவன் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தான்.



அவனுக்கு இதை தான்தான் செய்தேன் என ஒப்புக்கொண்டு அதர்வாவை காப்பாற்றவும் மனம் வரவில்லை அதே சமயம் பத்மாவையும் அவனிடம் விட்டுக்கொடுக்க முடியாமல் இருதலைக்கொல்லியாய் தவித்துக் கொண்டிருந்தான்.



பழமையிலே ஊறிப்போன அந்த மக்களுக்கும் இந்த முடிவே சரியென்று பட, அவர்களும் இதை செய்யுமாறு பண்ணையாரிடம் வற்புருத்த,



பத்மாவிற்கு நெருப்பில் நிற்பதைப் போல் இருந்தது." தான் எதற்கு இங்கு வந்தோம் ஆனால் இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது" என தன் நிலமையை நினைத்து அவள் கண்ணீர் சிந்த,



ஏற்கனவே அவர்கள் சொன்னதைக் கேட்டு கடுப்பில் இருந்த அதர்வாவிற்கு அவளின் அழுகை இப்போது பரிதாபத்திற்கு பதில் எரிச்சலையே கிளப்பியது.



பண்ணையாரின் நிலையை புரிந்து கொண்ட அவரின் நண்பர் கடைசி முயற்சியாய், ஊர் மக்களை அங்கு திரட்டி வந்த அந்த புண்ணியவான் அபிஷேக்கை பார்த்து, "டேய் தம்பி நீதான ஊர்ல எல்லாரையும் கூட்டிட்டு அங்க போன ?? எதுக்கு அங்க கூட்டிட்டு போன அங்க அதர்வா தம்பி அந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிட்டாரா?? உண்மையை சொல்லு" என மிரட்டினார்.



அவர் இப்படி கேட்டதற்கு காரணம் அபிஷேக்,பதட்டத்தில் மொட்டையாக" பண்ணையார் வீட்டு மகன் பத்மாகிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணுறான் வந்து காப்பாத்துங்க " என்று கூறி தான் அனைவரையும் அழைத்து வந்திருந்தான்.



எனவே அவர் அவன் உண்மையைக் கூறுவான் என அவனை அழைக்க, அவனோ 'என்னடா பாலை என் பக்கம் இப்படி டக்குனு திருப்பிவிட்டுட்டீங்க..எனக்கு பக்குனு இருக்கே இப்போ என்ன பண்றது' என யோசித்தவன், உண்மையை சொல்லிவிடலாமா என ரஞ்சித்தை திரும்பி பார்க்க, அவன் பத்மா இனி தனக்குத்தான் என அவளை பார்வையாலையே விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.



'ச்சை கருமம் பிடிச்சவனே கண்ணால பார்த்தே அவளை கர்ப்பம் ஆக்கிருவான் போல, ம்ஹூம் நம்ம இப்போ உண்மையை சொன்னா இந்த லூசுப்பயலுக பத்மாவை இந்த பன்னாடைக்கே கட்டி வச்சுருவாங்க...இந்த காமப்பிசாசுக்கு அந்த காக்கி சட்டையே பரவாயில்லை' என நினைத்தவன்,



விவரமாக அதர்வாவின் கூர்பார்வையை தவிர்த்துவிட்டு அவரை பார்த்து ,"இவர் தாங்க பத்மா உள்ள போனதும் பின்னாடியே போனாரு..உள்ள கதவை மூடிட்டதுனால பயத்துல நான் வந்து கத்திட்டேன் ஆனா உள்ள என்ன நடந்துச்சுன்னு எனக்கு மதர் ப்ராமிஸா தெரியாது மீசை அங்கிள்" என கூறி அதர்வாவையும் பத்மாவையும் அதிர வைத்தான்.



"படுபாவி இப்படி பொய் சொல்றானே எல்லாம் இவனால தான் இவனை காப்பாத்த வந்து முதல்ல அந்த காண்டாமிருகத்துக்கிட்ட மாட்டி விட்டான் இப்போ இந்த கடுவன் பூனை கூட கோர்த்து விடுறான்..கடவுளே என்னை காப்பாத்து..வீட்டுக்கு போனதும் அவனுக்கு சோத்துல விசத்தை வச்சு கொன்னு அவனை வெட்டி அதை உனக்கு படையல் போடுறேன்" என பத்மா அபிஷேக்கிற்கு பால் ஊத்த ப்ளான் போட,



அதர்வாவோ அவனை பார்வையால் சுட்டெரித்துக் கொண்டிருந்தான்.



அவன் பக்கம் அபிஷேக் திரும்பினால் தானே அது அவனுக்கு தெரியப்போகிறது, அவன் தான் முன்ஜாக்கிரதையாக இருவர் பக்கமும் திரும்பாமல் அந்த மீசைக்காரரின் மூக்கையே முறைத்து முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.



அதர்வாவைப் பற்றி தெரிந்தவர்கள் அவன் கூற்றை நம்பாமல், "அப்பறம் எதுக்கு சின்ன பண்ணையார் மகன் ரஞ்சித் மேல பிராது கொடுத்த தம்பி, அவனுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் அவனுக்கு எப்படி அடிபட்டுச்சு?? உண்மையை மட்டும் சொல்லலை ஆலமரத்துல தலைகீழா கட்டி தொங்க விட்டு தோல உரிச்சிருவானுங்க நம்ப பயலுக.. ஒழுங்கா உண்மையை சொல்லு" என சரியாக பாய்ன்ட்டைப் பிடித்து,



'மாட்டிக்கிட்டியாடா என் மங்கூஸ் மண்டையா' என பத்மா மனதில் கறுவிக் கொண்டு அவனை ஏறிட , அவனோ மனதிற்குள் ,"டேய் நான் என்ன பேட் மேனோட பெரியம்மா பையனா டா தலைகீழா தொங்குறதுக்கு ..மூனு வேலை சோத்துக்கு ஆசைப்பட்டு இந்த பத்து பேச்சை கேட்டுட்டு இங்க வந்ததுக்கு இவனுங்க என்னை உரிச்சு ஊறுகாய் போட்டு சரக்குக்கு சைட் டிஷ் ஆக்கிருவானுங்க போல, சை எல்லாம் இந்த காமக்காட்டான் ரஞ்சித்தால வந்தது ..இப்போ இதை வேற சமாளிக்கனுமா?? ஷப்பா இந்த முட்டாப்பயலுகளையும் முரட்டுப்பயலுகளையும் சமாளிக்கவே நான் நாலு வேளை எக்ஸ்ட்ரா சோறு சாப்பிடனும் போல முடியலைடா சாமி' என நினைத்துக்கொண்டு ,



"அது வந்து அங்கிள்.." என ஏதோ ஆரம்பிக்க,



"அங்குலு மங்குலு எல்லாம் வேண்டாம் மருவாதையா ஐயான்னு கூப்பிடு" என ஒரு பெருசு கூட்டத்தில் இருந்து எகிறியது,



"ஐஞ்சுகேட்டட்(uneducated அபி வெர்ஷன்) பூல்ஸ் ஒரு மனுஷனை ஃப்லோவா சொல்ல விடுறானுங்களா நொய் நொய்ன்னு" என சலித்துக் கொண்டவன்,



அனைவரும் முறைப்பதைக் கண்டு ,"ஹிஹி சாரி பட்டீஸ் , அது வந்து ஐயா, உங்களுக்கே தெரியும் சின்னய்யா ரஞ்சித்தை பத்தி, மோனாலிசா படத்தைக் கூட வெறிச்சு வெறிச்சு பார்த்து வெனின்சுலாக்கே ஓட வச்சிருவாரு..அப்படி இருக்கப்போ எங்க பத்துவை மட்டும் சும்மாவா விடுவாரு..அவளை கரெக்ட் பண்ண ப்ராக்கெட் போட்டு எல்லாம் பெயில் ஆய்ருச்சு...இன்னைக்கு அவரும் பெரியய்யா ரூம்க்குள்ள போனதும் இவரும் உள்ள போக முயற்சி செஞ்சாரு...நான் வரப்போ கதவு உடைச்சிருந்துச்சு அதுனால இவர் உள்ள போய் எதாவது பண்ணி அதர்வா சார் கிட்ட நல்லா வாங்கிருப்பாருன்னு நினைக்கிறேனுங்க ஐயா" என கோர்வையாக பொய்யை அள்ளி வீசியவன் தன்னை கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்த அதர்வாவையும் ரஞ்சித்தையும் கண்டுகொள்ளவே இல்லை.



பின்னே அவர்களைக் கண்டு பார்வையிலே பஸ்பமாக அபிஷேக்கிற்கு என்ன தலையெழுத்தா??



அவன் சொன்னதை நம்ப முடியாமல் ஊர் மக்கள் சந்தேகமாக பார்க்க, இவர்கள் தெளிந்தால் தன் திட்டம் பலிக்காது என்றுணர்ந்த சிங்கபெருமாள்,"இன்னும் என்னப்பா அதான் சாட்சியே தெளிவா சொல்லிப்புட்டானே... அந்த ரஞ்சித் தம்பி அவளைக் காப்பாத்தக் கூட போய்ருக்கலாம் தன் திட்டம் பலிக்காம போய்ருமேன்னு இந்தத் தம்பியை போட்டு அடிச்சிருக்கலாம் இன்னும் என்ன மசமசன்னு நின்னுக்கிட்டு இருக்கீங்க அந்த பிள்ளைக்கு நியாயத்தை கேளுங்க பா..இன்னும் அந்த பெரிய மனுஷர் வாயைத் தொறக்காம இருந்தா என்ன அர்த்தம்..இதே வேற யாராச்சும் பண்ணிருந்தா இந்நேரம் தண்டனை கொடுத்துருப்பாருல, அவரு இரத்தம்னதும் குத்துதோ..ஊருக்கு ஒரு நியாயம் வீட்டுக்கு ஒரு நியாயமா இதென்னடா அநியாயமா இருக்கு" என அவர் மாதேஸ்வரனை உசுப்பிவிட,



ஊர்மக்களுக்கும் ரஞ்சித்தை பற்றி தெரிந்ததால் சிங்கபெருமாளின் கூற்றை நம்பவில்லை என்றாலும் அவர்களுக்கும் பெரிய வீட்டு சமாச்சாரம் சுவாரசியத்தை மேலும் அதிகரிக்க, அடுத்து என்ன நடக்கப் போகிறது என ஆவலாக காத்திருந்தனர்.



அதுவரை அமைதியாக இருந்த மாதேஸ்வரன்,போதும் என கையை காண்பித்தவர் எழுந்து ,"டேய் முத்து போய் கோவில் பூசாரிகிட்ட நான் சொன்னேன்னு தாலியை வாங்கிட்டு வா..இப்போவே என் பையனுக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் நடக்கும்..எனக்கு எல்லாருமே ஒன்னு தான்" என கடைசி வரியை அழுத்திச் சொன்னார்.



அவருக்கு தன் மகன் மீது தவறில்லை என்பது நூறு சதவிகிதம் தெரிந்தாலும், ஊர் மக்களின் முன் தான் நியாயம் தவறிவிட்டோம் என்ற பெயரை எடுத்து தலை குனிய நேருமோ என் பயந்து போய் தான் தன் மகன் தன்னை புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்திருந்தார்.



அவர் சொன்னதைக் கேட்டு அதர்வா அதிர்ந்து போய் ,"அப்பா!!!" என கண்டிப்பான குரலில் அழைக்க,



அவனைத் திரும்பி பார்த்த மாதேஸ்வரன் கண்ணில் என்ன கண்டானோ, உடனே அமைதியாகிவிட்டான், ஆனால் அவன் மனம் உள்ளே கொதித்துக் கொண்டிருந்தது.



உள்ளே ஒருத்தியை மனம் முழுக்க சுமந்து கொண்டு இன்னொருத்திக்கு தாலி கட்டுவதை அவனால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.



பத்மாவின் நிலையோ அதைவிட மோசமாக இருந்தது.



'கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பிய கதையாய் இது என்ன புது பிரச்சனை..இவனைப் போய் நான் எப்படி திருமணம் செய்து கொள்வது ..இது எப்படி சாத்தியமாகும் ?? ' என பலவாறு சிந்தித்து குழம்பியவளின் மனம் வேறு ஓவர் டைம் டியூட்டி பார்த்து புதிதாய் வேறு ஒரு பெரிய பூகம்பத்தை(சந்தேகத்தை) கிளப்பியது.



இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி தன் மானம் போனாலும் பரவாயில்லை என உண்மையை கூறுவது தான் என புரிந்தாலும் அதை செய்தால் இந்த முட்டாள் மக்கள் அந்த ரஞ்சித்தை தன் தலையில் கட்டிவிடுவார்கள் என மேலும் பயந்தவள் என்ன செய்ய என புரியாமல் கைகளை பிசைந்துகொண்டு நின்றிருந்தாள்.



அதற்குள் முத்து வந்து மாதேஸ்வரன் கையில் தாலியைக் கொடுத்திருக்க, அதை எடுத்துக் கொண்டு அதர்வாவை நெருங்கியவர் அவன் கையில் அதைக் கொடுத்து,"கண்ணா நீ தப்பு பண்ணலைன்னு எனக்கு தெரியும்..ஆனா இந்த ஊர் வாயை என்னால அடைக்க முடியலைப்பா என்னை மன்னிச்சிரு..எனக்கு வேற வழி தெரியலை..இப்போ என் மரியாதையே உன் கையில தான் இருக்கு அப்பாக்காக இதை செய்வியா" என இறைஞ்சுதலுடன் கேட்க,



எப்பேர்ப்பட்ட கம்பீரமான மனிதர் இன்று தன் முன் தலை குனிவதை தாள முடியாத அதர்வா ஒரு முடிவோடு அவர் கைகளில் இருந்து தாலியை வாங்கியவன் அதை பத்மாவின் கழுத்து அருகில் கொண்டு போனான்.



அவள் பதறிப்போய் அவனை நிமிர்ந்து பார்க்க, அவளின் அந்த பார்வை அவன் மனதில் அழியா ஓவியமாய் பதிந்து போனதை அவனும் உணரவில்லை அவளும் உணரவில்லை.



கண்களை மூடி தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவன் , மனதிற்குள்ளே 'என்னை மன்னிச்சிரு அம்முகுட்டி' என கூறிக்கொண்டு ஒரு இறுக்கமான முகத்துடன் அவள் கழுத்தில் முதல் முடிச்சைப் போட்டிருந்தான்.



நடப்பது கனவா நனவா என பிரித்தரிய முடியாமல் பத்மா உறைந்து போய் நின்றிருக்க,அவன் அவளை கண்டுகொள்ளாமலே மீதம் இருந்த இரண்டு முடிச்சுகளையும் இயந்திரத்தனமாக போட்டுவிட்டு யாரின் பேச்சையும் கேளாமல் அங்கிருந்து விறுவிறுவென கிளம்பிச் சென்றிருந்தான்.



தொடரும்...

 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபிஸ்,

இதோ அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டோம்... இந்த அத்தியாயம் எழுதிய அந்த திருடி யார் என கண்டுபிடியுங்க செல்லங்களா...

சென்ற பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்...

என்றும் அன்புடன்,
ஸ்வராகினி...
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9



அவன் சென்ற பின்னும் அவள் நடந்து போனதை நம்ப முடியாமல் அப்படியே கால்கள் வேரூன்றியதைப் போல் பத்மா நின்றிருக்க, அபிஷேக் தான் அதர்வா போய் விட்ட தைரியத்தில் அவள் அருகில் வந்து அவள் தோளைத் தொட்டு உலுக்கினான்.




"ஹான்!!" என கனவில் இருந்து விழிப்பது போல் முழித்தவள் , தன் முன்னால் ஒரு கையை இடுப்பிலும் இன்னொரு கையை தன் 10 ரூபாய் கலர் கண்ணாடியிலும் வைத்துக் கொண்டு ஸ்டைலாய் போஸ் கொடுத்துக்கொண்டு நின்ற அபிஷேக்க்கை கண்டதும் நடந்தது அனைத்தும் நினைவில் வர, அவன் மண்டையிலே நங்கென்று கொட்டினாள்.



அவனை அடித்து வெளுத்துக்கட்டும் அளவிற்கு ஆத்திரம் இருந்தாலும் சுற்றுப்புறத்தை கருத்தில் கொண்டே ஒரு கொட்டோடு நிறுத்திக் கொண்டாள்.



"ஹேய் இப்போ எதுக்கு டி என்னையை கொட்டுற நான் உனக்கு நல்லதுதான பண்ணேன்" என அவன் பரட்டைத் தலைக்குள் ஒளிந்து கொண்டிருந்த மண்டையைத் தேடி அவன் தேய்த்துக் கொண்டே கூற,



"டேய் சோத்து குண்டா உன்னால தான் டா இவ்ளோ பிரச்சனையும்..நீயெதுக்கு டா அந்த ரஞ்சித் பய சொன்னான்னு எனக்கு கால் பண்ணி அங்க வர சொன்ன..எல்லாம் உன்னால தான் ..கொஞ்சமாச்சும் அறிவிருக்கா..அது பத்தாதுன்னு இங்க வேற அந்த அதர்வா தான் பண்ணான்னு பொய் வேற் சொல்லி கல்யாணம் பண்ணி வச்சிருக்க, அவன் திருடியா இருந்தப்போவே ஏதோ அவன் பொண்டாட்டி மாதிரி அவ்வளவு வேலை வாங்குவான், இப்போ இருக்க கடுப்புல அவங்க தாத்தாவோட கோமணத்தை கூட துவைக்க சொன்னாலும் சொல்லுவான்" என பத்மா அவல் பாட்டிற்கு புலம்பிக் கொண்டிருக்க



கைநீட்டி ,"ஸ்டாப் இட்" என கத்திய அபிஷேக், "சும்மா என்னையே குத்தம் சொல்லாத கழுத்துல அம்மாந்தண்டி கத்தியை வச்சு உனக்கு போன் பண்ணுனு சொன்னா நீ பண்ணாம அவனை கொஞ்சிகிட்டா இருப்ப..ஒரு பயத்துல நானும் போன் பண்ணிட்டேன்..ஆனா அடுத்தே ஊர்காரங்கள உன்னை காப்பாத்த கஷ்டப்பட்டு ஒலிம்பிக்ல ஓடுன மாதிரி ஓடிப்போய் கூட்டிட்டு வந்தேனா இல்லையா" என அவன் கேட்க,



மேலும் அவனை முறைத்த பத்மா,"பக்கி பக்கி நீ கூட்டிட்டு வந்ததுனால தான் இவ்ளோ பிரச்சனை உன்னை யார் இந்த அதிகப்பிரசங்கிதன வேலையெல்லாம் பண்ண சொன்னது..உன் மூலைக்கு என்ன வருமோ அதை மட்டும் பண்ணி தொலைய வேண்டிதான?" என பத்து அவனிடம் காய,



"சும்மா என்னையே குத்தம் சொல்லாத, நீ நினைச்சிருந்தா நான் சொன்னது பொய்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்திருக்கலாம்ல, நீ ஏன் பண்ணலை ?? அந்த ரஞ்சித்தை கட்டி வச்சிருவாங்கன்னு பயந்து தான அதுக்கு தான் நானும் பொய் சொன்னேன் சும்மா நல்லது பண்ணவனயே திட்டிக்கிட்டு நான்சென்ஸ்" என அபிஷேக் முறுக்கிக் கொண்டான்.



அவன் சொல்வதும் உண்மை தான் என்பதால் பத்மா வேறெதுவும் பேசாமல் மீண்டும் தன் சிந்தனைக்குள் மூழ்கிப் போனாள்.



படம் முடிந்ததும் அனைவரும் கிளம்புவதைப் போல, அதர்வா கிளம்பியதுமே தாங்கள் வந்த வேலை முடிந்து விட்டது என மக்கள் கலையத் தொடங்கியிருக்க, எஞ்சியிருந்த பண்ணையாரிடம் வந்த சிங்க பெருமாள் ஒரு கோணல் சிரிப்புடன் ," என்ன பண்ணையாரே சௌக்கியமா??? மகனுக்கு கல்யாணத்தை இப்படி முடிச்சுப்புட்டீங்க விருந்து எதுவும் இல்லையா?" என நக்கல் குரலில் கேட்க,



அவரை முறைத்த மாதேஸ்வரன்,"வேண்டாம் பெருமாள் , எனக்கிருக்க கோவத்துக்கு எதாவது பண்ணிர போறேன்..என் கண்ணுலயே படாம கிளம்பி போயிரு" என குரலில் அடக்கப்பட்ட சீற்றத்துடன் கூறினார்.



"அதுக்குள்ள போய்ருவேன்னு நினைச்சீங்களா..இப்போ தான என் ஆட்டம் ஆரம்பிச்சிருக்கு..நான் உங்க காலை சுத்துன பாம்பு அவ்வளவு சீக்கிரம் போக மாட்டேன்..இனிமேல் வீட்டுல அடுத்தடுத்து பிரச்சனை வெடிக்கும் பார்த்து சூதானமா இருங்க பண்ணையாரே வரேன்" என வன்மமான குரலில் கூறிய சிங்கபெருமாள் அங்கிருந்து கிளம்பினார்.



அவர் போனதும் ஒரு பெருமூச்சோடு அங்கிருந்து கிளம்பி பத்மாவின் அருகில் வந்தவர் , குற்றவுணர்ச்சியோடு அவளை ஏறிட்டவர் ,"என்னை மன்னிச்சிரு மா" என கூற,



பதறிப்போன பத்மா,"அய்யோ என்ன சார் இது நீங்க போய் என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு விடுங்க சார்" என கூற,



"இல்லைம்மா என்னோட மானம் மரியாதை போகக் கூடாதுன்னு உன்னோட வாழ்க்கையை உன் சம்மதம் இல்லாம நானே முடிவு பண்ணிட்டேன். உன் பெத்தவங்க இருந்தா உனக்கு இப்படிலாம் நடக்க விட்டுருப்பாங்களான்னு நீ வருத்தப் படுறது எனக்கு புரியது..ஆனா நான் உனக்கு வாக்கு தரேன் நீ இந்த வீட்டு மருமகளானாலும் எங்களுக்கு ப்ரியா சுமி போல நீயும் ஒரு மக தான்..அதர்வா கொஞ்சம் கோவக்காரன் தான் ஆனா ரொம்ப நல்லவன் மா..உன்னை நாங்க பத்திரமா பார்த்துக்குறோம் எங்களை நம்பி எங்க வீட்டுக்கு உனக்கு வர சம்மதமா மா" என அவர் தன்மையாக கேட்க,



அவர் பேச்சில் மனதிற்குள் கரைந்து போனவள் கண்கள் கலங்க தலை தானாக ஆமாமென ஆடியது.



"அப்பறம் இனிமேல் இந்த சார் மோரெல்லாம் வேண்டாம் அழகா மாமான்னு கூப்பிடனும் சரியா மா" என அவர் சிரித்துக் கொண்டே கூற,



அவளுக்கு இது அனலின் மேல் நிற்பதைப் போல் இருந்தது, முயன்று முகத்தை சாதரணமாக வைத்தவள் ,"சரி" என்பது போல் பொத்தாம் பொதுவாக மண்டையை மட்டும் ஆட்டி வைத்தாள்.



இந்த திடீர் மாற்றத்தால் அவளின் நிலையை சரியாக புரிந்து கொண்டவர் மேலும் அவளை சோதிக்காமல் முத்துவிடம் திரும்பி ,"டேய் முத்து வூட்டுக்கு போய் அம்மா கிட்ட மருமவளுக்கு ஆராத்தி கரைச்சு வைக்க சொல்லு டா வெரசா.. நான் புள்ளையை கூட்டிட்டு வண்டில வரேன்" என உத்தரவிட்டவர்,



பின் அங்கே பவ்யமாய் பயந்தவன் போல் நின்று கொண்டிருந்த அபிஷேக்கை பார்த்து ,"அட என்ன தம்பி அங்க நின்னுகிட்டு சீக்கிரம் போய் வண்டில ஏறுங்க.. அட எதுக்கு தயங்குறீங்க.. நீங்க சொன்னது பொய்னு எல்லாருக்கும் தெரியும் உங்க தோழி வாழ்க்கையை காப்பாத்த தான் நீங்க இப்படி பண்ணீங்கன்னும் தெரியும் அதுல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை அதுனால பயப்படாம போய் வண்டில ஏறுங்க" என அபிஷேக்கின் தயக்கத்தை உணர்ந்து ஆதரவாக அவர் பேச,



முகம் மலர்ந்த அபிஷேக் ,"தேங்க் யூ சோ மச் அங்கிள் நீங்க தான் இந்த ஊர்லயே மூளையோட பேசுறீங்க மத்தவங்களுக்கெல்லாம் அப்படி ஒன்னு இருக்கான்னே டவுட்டா இருக்கு " என கிண்டல் செய்தவன் அவர்கள் அடிக்க வருவதிற்குள் காருக்குள் சென்று மறைந்தான்.



அவனின் செயலைக் கண்டு சிரித்த பண்ணையாரும் பத்மாவும் அவனைத் தொடர்ந்து காருக்குள் சென்று அமர்ந்ததும், அவர்களின் பயணம் இனிதே இல்லத்தை நோக்கி தொடங்கியது.



சோசியல் மீடியாவை விட சக்தி வாய்ந்தது கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அமைந்துள்ள திண்ணையில் அமர்ந்து காதில் பெரிய தந்தட்டியுடனும் வாயில் வெற்றிலையுடனும் இருக்கும் கிழவிகளின் வாய்.



ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கும் வல்லமை படைத்த அந்த கிழவிகளின் புண்ணியத்தில் அதர்வா-பத்மா விஷயம் காட்டுத்தீ போல் பரவி பண்ணையாரின் குடும்பத்தினரையும் அடைந்திருந்தது.



இராமமூர்த்தி அலுவல் காரணமாக வெளியூர் போயிருக்க, சுமி பள்ளிக்கூடம் போயிருந்ததால் இவர்களைத் தவிர வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த விஷயம் பேரிடியாய் இறங்கியது.



அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என சரியாக தெரியாவிடினும் அதர்வாவைப் பற்றியும், வந்து கொஞ்ச நாட்களே ஆனாலும் பத்மாவைப் பற்றியும் தெரியுமாதலால் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கும் இருவரின் மீதும் தவறிருக்காது என முழுமையாக நம்பினர்.



அவர்களுக்கு இந்த விஷயத்தை ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் யாரும் பத்மாவை மருமகளாக ஏற்த்துக்கொள்ள தயங்கவில்லை.



வைத்தீஸ்வரிக்கு அவள் வந்ததிலிருந்தே அவள் மீது ஏனென்றே அறியாமலே தனி பிரியம் தோன்றியிருந்தமையால், அவள் இந்த வீட்டிற்கு மூத்த மருமகளாய் வந்தது அவருக்கு நிரம்ப மகிழ்ச்சியை கொடுத்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.



சுமியின் ஆசையைப் பற்றி அவருக்கு தெரிந்திருந்தாலும், சுமியை விட பத்மாவே அதர்வாவிற்கு ஏத்த மனைவி என நம்பியவர், மகளையும் சமாளிக்க வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டார்.



என்னதான் பத்மாவை பிடித்தாலும் ப்ரியாவிற்கு சுமியல்லவா உயிர்த்தோழி,சுமியை நினைத்து வருந்தியவள் இந்த விடயம் மட்டும் சுமிக்கு தெரிந்தால் அவள் என்ன ஆகப்போகிறாளோ என்ற பயத்திலே சுற்றிக் கொண்டிருந்ததவள் அங்கு வந்த விஷ்ணுவை கவனிக்கவில்லை.



அவளை சுவாரசியமாக பார்த்துக் கொண்டே அவள் வழியை மறைப்பது போல் வந்து நின்றான் விஷ்ணு.



அவனை மோதுவது போல் வந்தவள் பின் சுதாரித்து விலக, அவளை விலக விடாமல் தன் கையோடு சேர்த்தணைத்த விஷ்ணு அவளை அப்படியே தள்ளிக் கொண்டு அருகில் இருந்த அறைக்குள் நுழைந்தான்.



"ஐய்யோ என்ன பண்றீங்க விடுங்க யாராச்சும் பார்த்துற போறாங்க" என அவன் அணைப்பில் இருந்து திமிறியபடி ப்ரியா அலற,



படக்கென்று அவள் வாயில் கையை வைத்தவன் ,"ஷ்!!! சும்மா இரு டி நீ கத்தியே ஊரை கூட்டிருவ போல" என ஹஸ்கி குரலில் கூறியவன், சுற்றும் முற்றும் யாரும் இல்லை என்பதை உறுதி படுத்திக்கொண்டு அவள் அருகில் நெருங்கி வர, அவள் பயத்தில் ,"எ..என்ன ப்..பண்..றீங்க.." என அவளுக்கே கேட்காத குரலில் கூறினாள்.



அவன் கண்களில் ஒட்டுமொத்த காதலையும் தேக்கி வைத்து அவள் கண்களை பார்த்துக் கொண்டே மேலும் முன்னேற, அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமல் அவள் இமைகள் தானக தாழ்ந்துகொள்ள, அதைக் கண்டு விஷ்ணு மயக்கும் புன்னகையை சிந்தினான்.



அவனுக்கும் அவளுக்கும் நூலளவு இடைவெளியே இருக்க, அவள் இதயம் பந்தயக்குதிரை போல் ஓடிக் கொண்டிருந்தது.



இப்போது விஷ்ணுவின் மூச்சுக்காற்று அவள் மேனியில் பட்டு அவளை சிலிர்க்க வைக்க, சுற்றுப்புரத்தை மறந்த அந்த பேதை அப்படியே மயங்கிப் போய் கண்களை மூடி நின்றாள்.



இரண்டு நிமிடத்திற்கு மேலாகியும் ஒன்றும் நடக்காததால் ஏமாற்றத்தோடு கண்களை திறந்தவள் தன் முன் நின்றிருந்த விஷ்ணுவின் கோலத்தைக் கண்டு பதறி நான்கு அடி பின்னே சென்றாள்.



அவள் பதட்டத்தைப் பார்த்து குறும்பாக புன்னகைத்த விஷ்ணு ,"ஹேய் ஏன் டி பேயை பார்த்த மாதிரி இப்படி பதறுர நான் உனக்கு புருஷன் ஆகப்போறவன் தான" என சீரியசான குரலில் கூறினாலும் அவன் கண்களில் குறும்பு கொப்பளித்தது.



"ச்சீ என்ன இது கோலம் முதல்ல சட்டையை போடுங்க இங்க என்ன வ்ரெஸ்லிங்கா நடக்குது முண்டா பனியனோட போஸ் குடுத்து நின்னுட்டு இருக்கீங்க? ச்சை கருமம் கருமம்" என அவனின் கோலத்தை பார்த்து ப்ரியா தலையில் அடித்துக் கொள்ள,



"ஹேய் என்ன டி இதை வச்சு தான் மாமன் நம்ம கல்யாணத்தை நடத்த ப்ளான் போட்டுருக்கேன் கருமம் கருமம்னு சொல்ற" என அவன் வருத்தப்படுவது போல் கூற,



புரியாமல் குழம்பிய ப்ரியா,"தெளிவா சொல்றீங்களா ஒன்னும் புரியலை..நீங்க முண்டா பனியனோட நிக்கிறதுக்கும் நம்ம நிக்காஹ்க்கும் என்ன சம்பந்தம்?" என அவள் கேட்க,



"ரைமிங்கு!!" என அவள் மண்டையில் செல்லமாக கொட்டியவன் ,"அடியே மக்கு பொண்டாட்டி உங்க ஊர்க்காரங்க தான் மக்குன்னு நினைச்சா நீ அதைவிட இருக்கியே உன்னை வச்சு நான் என்ன பண்ண போறேனோ?" என விஷ்ணு கிண்டலில் இறங்க,



அவனை முறைத்த ப்ரியா, "இப்போ நீங்க என்ன விஷயம்னு சொல்ல போறீங்களா இல்லை அண்ணான்னு கூப்பிடவா??" என அவனை மிரட்ட,



"அடிப்பாவி நல்லா முள்ளங்கிக்கு கை கால் முளைச்ச மாதிரி இருந்துட்டு என்னையவே மிரட்டுறயா எல்லாம் என் நேரம்..சரி சரி மொறைக்காத சொல்றேன்.. நான் கூட கிராமத்து பொண்ணை காதலிச்சுருக்குமே கல்யாணம் பண்ண காளையை அடக்கணும் இளவட்டக் கல்லை தூக்கணும்னு பெரிய ரூல்ஸ் இருக்கும்னு அதுக்கு தனியா க்ளாஸ் போலாம்னு நினைச்சேன் நல்லவேளை உங்க ஊர்ல போட்டிருக்க் சட்டையை தானம் பண்ணாலே கல்யாணம் பண்ணூவாங்கன்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுது...அதான் இரண்டாயிரம் ரூபாய் சட்டையா இருந்தாலும் கழுதையை போனா போகுன்னு கொடுத்துட்டு உன்னை கட்டிக்கலாம்னு முடிவெடுத்துட்டேன்" என சிரியாமல் கூறினான் விஷ்ணு.



முதலில் அவன் சொன்னது புரியாமல் முழித்தவள், பின்பே அவன் தன் அண்ணனுக்கும் பத்மாவுக்கும் நடந்த அந்த திடீர் திருமணத்தை வைத்து தன்னை கிண்டல் செய்கிறான் என புத்தியில் உரைக்க, உக்கிரமாக அவனை முறைத்தவள் ,"நானே இப்படி ஆய்ருச்சே இன்னும் சுமியை எப்படி சமாளிக்கன்னு பயத்துல இருந்தா நீங்க என்னை வச்சு காமெடி பண்ணிட்டு இருக்கீங்களா??" என கேட்டாள்.



"ஹேய் ஹேய் கூல் செல்லம் எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுற?? சுமிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் " என இப்போது அவன் புரியாமல் விழிக்க,



ப்ரியா சுமிக்கு அதர்வாவின் மேலிருக்கும் காதலை அவனிடம் விளக்கினாள்.



அதைக் கேட்ட விஷ்ணுவின் புருவம் சுருங்க ,"இது வேறயா ஏற்கனவே உன் அண்ணன் பிடிக்காத அந்த திருடியை கட்டிக்கிட்டு என்ன பாடு படப்போறானோ இதுல சக்காளத்தி சண்டை வேறயா.. செமயா என்ஜாய் பண்ண போறான் மாப்ள!!" என மனதிற்குள் நினைத்தவன், வெளியே அதைக்கூறி அவளிடம் அடிவாங்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக,"விடு ப்ரீ குட்டி!! அவ சின்ன பொண்ணு தான சொன்னா புரிஞ்சுப்பா..உன் அண்ணனுக்கு பத்மான்னு தான் எழுதியிருந்தா யார் மாத்த முடியும்..நீ இப்படி குழம்பாம போய் மாமனை எப்படி சந்தோஷமா வச்சிருக்கலாம்னு மட்டும் யோசி சரியா" என பேச,



"கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியை தூக்கி மனையில வைன்னு சொல்ற மாதிரி உங்களுக்கு உங்க காரியம் ஆகனும்.. அதெல்லாம் முடியாது போடாஆஆ அண்ணாஆஆ!!!" என அவனை வெறுப்பேற்ற கூறியவள் அவன் கைக்கு சிக்காமல் சிட்டாக பறந்திருந்தாள்.



"அடி கிறுக்குப் பய புள்ளை!!" என முதல் மரியாதை சிவாஜி ஸ்டைலில் கூறிவிட்டு சிரித்தவன், அவள் போனதும் தன் நண்பனை பற்றி சிந்திக்க ஆரம்பித்தான்.



அவன் இன்று அருகில் உள்ள போலிஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரான தன் பால்ய நண்பனை பார்க்க சென்றுவிட்டு இப்போது தான் வந்திருந்தான்.



வந்த பின்பே அவனுக்கு அனைத்தும் தெரிய வர, இந்த ஊர்மக்கள் மீதும், அபிஷேக் , ரஞ்சித்தின் மீதும் கோபம் கொப்பளித்தது.



தன் நண்பனின் மனநிலை இப்போது எப்படி இருக்கும் என ஓரளவிற்கு யூகித்திருந்தவனால் அவனை இப்போது தொந்தரவு செய்யாமல் இருப்பதே சிறந்தது என நினைத்து அவன் வந்ததும் பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்தவன் அங்கிருந்து கிளம்பினான்.



சற்று நேரத்திற்க்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டிருந்தது பண்ணையாரின் கார்.



கார் வாசலில் நுழைந்ததுமே பரபரப்பான ராஜாத்தியும் வைத்தீஸ்வரியும் ஆரத்தி தட்டை ஏந்திக் கொண்டு வெளியில் வரவும் காரில் இருந்து அவர்கள் இறங்குவதற்கும் சரியாய் இருந்தது.



கோமளவள்ளிக்கு என்னதான் பத்மாவை பிடித்திருந்தாலும் அதர்வா ரஞ்சித்தை அடித்து விட்ட கோபத்தில் மனைவியிடம் அவர்களிடம் ஒதுங்கியே இருக்க சொல்லிவிட்டு ராஜேந்திரன் சென்றிருந்ததால் அவர் வெளியே வராமல் சமையல்கட்டிலே தேங்கினார்.



ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தவர்கள் அவள் மனநிலையை புரிந்து கொண்டு அதைப் பற்றி ஏதும் தோண்டித் துருவாமல் அவள் அறைக்கு அனுப்பி வைத்தனர்.



அதன் பின் தங்களுக்குள் பேசிக்கொண்டவர்கள் சுமியைக் கருத்தில் கொண்டு , இன்று இரவு அவள் ஸ்பெஷல் க்ளாஸ் முடித்து வருவதற்குள்ளே பத்மாவை அதர்வாவின் அறைக்கு அனுப்பி வைத்து விட்டு பின் பொறுமையாக அவளிடம் விஷயத்தைக் கொஓறலாம் என முடிவெடுத்துவிட்டு அவர்கள் வேலையை கவனிக்க சென்றனர்.



அதர்வா பஞ்சாயத்திலிருந்து கிளம்பியவன் நேரே சென்றது அந்த ஊரில் உள்ள மலைக் கோவிலுக்கு.



அங்கு சென்று தனியாக அந்த பாறை மீது வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் அமர்ந்தவன், சூரியன் மறைந்த பின்பு கூட அதை விட்டு அசையவில்லை.



அவன் மனம் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கித் தவிக்க, தன் மனதிற்கினியவளுக்கு துரோகம் பண்ணிவிட்டோமே என குற்றவுணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தான்.



முத்து வந்து அவனை ஐயா அழைத்து வர சொன்னார் என கூறும் வரையிலும் தன் நினைவிலே இருந்தவன் , பின் தன் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குச் சென்றான்.



வீட்டிற்குள் வந்தவன் யாரிடமும் பேசாமல் தன் அறைக்குள் சென்று முடங்கிவிட, அவனை நினைத்து அனைவருக்கும் கவலையாய் இருந்தது.



அதைவிட , இப்போது பத்மாவை அந்த சிங்கத்தின் குகைக்குள் அனுப்பி வைக்க, அவர்களுக்கு மேலும் பயமாக இருக்க, முதலில் பத்மாவிடம் சென்றவர்கள் எப்படியோ பேசி சமாளித்து உள்ளே அனுப்பியவர்கள் அவன் சாப்பிடவில்லையென கையில் பால் சொம்பையும் கொடுத்து அனுப்பினர்.



இதை தூரத்தில் இருந்து பார்த்த அபிஷேக் ,"அடப்பாவிங்களா இந்த கல்யாணத்துக்கு ஃபர்ஸ்ட் நைட் ஒன்னு தான் கொரைச்சல் பாரு..நானே அந்த எரிமலை எப்போ வெடிக்கும்னு பயந்துகிட்டு இருக்கேன்..இதுல சாந்தி முகூர்த்தத்துக்கு அவனுக்கு பால் குடுத்து வேற அனுப்பி கடைசில அவன் எனக்கு பால் ஊத்த போறான்..எதுக்கும் நம்ம சேஃபா மாட்டுக் கொட்டத்துல்ல போய் நம்ம ஹன்சிகாவை(எருமை மாடு) கட்டிப்பிடிச்சு தூங்கிருவோம் அதுக்கும் நம்மளுக்கும் இருட்டுல வித்தியாசம் தெரியாது" என கூறிக் கொண்டவன் அங்கிருந்து ஓடிச் சென்றிருந்தான்.



தயங்கிக் கொண்டே உள்ளே நுழைந்த பத்மா அறையில் அவனை காணாமல் சுற்றி முற்றி தேடினாள்.



அப்போது பாத்ரூம் கதவு திறக்க, ஈர உடலில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு நீர் சொட்டச் சொட்ட நின்றிருந்தான் அவளின் ஆருயிர் கணவன்.



ஆறடி உயரத்தில் முறுக்கேறிய புஜங்கள் அவள் கண்களுக்கு விருந்தளிக்க, பரந்து விரிந்திருந்த அவனின் வெற்று மார்பு அவளை அதில் தஞ்சமடையச் சொல்லி அழைப்பு விடுத்தது.



தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு சான்றாய் சிக்ஸ் பாக்குடன் கனக் கச்சிதமாய் இருந்த அந்த ஆறடி ஆணழகனின் அழகில் அந்த மாதுவும் மயங்கித் தான் போனாள்.



அப்போது தான் உள்ளே அவள் இருப்பதை கவனித்தனின் முகம் பாறை போல் இறுக, "என்ன உன் திட்டம் நிறைவேறிருச்சு போல" என குத்தலாக வினவினான்.



அவன் குரலில் தன் கனவில் இருந்து கலைந்தவள், "ஹான்... எ..என்ன கேட்டீங்க" என பத்மா கேட்க,



"ஹும்ம் அதான் ரஞ்சித்தும் நீயும் அப்பறம் உன் கூடவே சுத்திட்டு இருப்பானே அந்த வீணாப்போனவனும் சேர்ந்து இத்தனை நாளா ப்ளான் போட்டது நடந்திருச்சான்னு கேட்டேன்" என சாதரணமாக கேட்டாலும் அவன் கண்களோ அவள் மீது அழுத்தமாக பதிந்திருந்தது..



அவ சொன்னதும் கோவம் தலைதூக்க,"நாங்க ஒன்னும் ப்ளான் போடலை..சும்மா வாய் இருக்கு எதாவது பேசாதீங்க" என அவள் எகிற,



ஏற்கனவே தன் அப்பாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இவளுக்கு தாலிகட்டு தன்னவளுக்கு திரோகம் செய்துவிட்டு அந்த கோபத்தைக் கூட தந்தையிடம் காட்ட முடியாமல் தான் இவளை வார்த்தைகளால் வதைத்தான்.



இப்போது அவளின் கோபம் அவனின் கோபத்திற்கு மேலும் தூபம் போட சிந்திக்காமல் வார்த்தைகளை சிதறவிட்டான், அதன் பின்விளைவுகளை அறியாமல்.



"ரொம்ப உத்தமி மாதிரி சீன் போடாத.. நீ அந்த ரஞ்சித் கூட சேர்ந்து ப்ளான் போட்டு என்னை இப்படி மாட்டிவிட தான இதெல்லாம் பண்ணீங்க.. திருடியா இருந்தா கொஞ்சம் தான் அடிக்கலாம் மருமகளா இருந்தா சொத்து மொத்தத்தையும் அபகரிச்சுரலாம்னு நினைச்சு தான் இதை பண்ணன்னு எனக்கு தெரியும்.. ஆனா அப்படி நடக்கும்னு கனவு காணாத.. ஏதோ உங்க டிராமவை பார்த்து ஒரு முறை ஏமாந்துட்டேன்.. ஆனா அதே தப்பை திரும்பவும் பண்ண மாட்டேன்.. என் ரூம்க்குள வேணா நீ வந்திருக்கலாம் ஆனா ஒரு நாளும் என் மனசுக்குள்ள நீ வர முடியாது.. அன்ட் இன்னொரு விஷயம் என்னை உன் அழகை காமிச்சு மயக்கிரலாம்னு நினைக்காத.. நீ தலை கீழா நின்னாலும் அது நடக்காது... ஏன்னா என் மனசு முழுக்க என் அம்முகுட்டி தான் இருக்கா.. இன்னும் கொஞ்ச நாள்ல உன்னையும் அந்த குண்டனையும் இந்த வீட்டை விட்டு அனுப்ப போறேன் ரெடியா இரு" என கடுமையான குரலில் கூறியவன், பின் அந்த அறையை ஒட்டியுள்ள இன்னொரு அறைக்குள் புகுந்து கொண்டான்.



ஆனால் அந்த அமில வார்த்தைகளை கேட்ட பத்மா தான் ஸ்தம்பித்து போய் நின்றிருந்தாள்.



"என்ன வார்த்தை சொல்லி விட்டான் காசுக்காக என் மானத்தை விற்று டிராமா போட்டேன் என அவ்வளவு சுலபமாக கூறிச் செல்கிறான் திருடியாகவே இருந்தாலும் நானும் ஒரு பெண் எனக்கும் ஒரு மனது இருக்குமென்பதை புரியாமல் எப்படி இவ்வாறு அவன் பேசிச்சென்றான்??" என அவள் உறைந்து போய் நின்றவள் பின் கதவை யாரோ பலமாக தட்டும் ஓசையில் தான் தன்னிலை அடைந்து போய் கதவைத் திறக்க, வெளியில் நின்றிருந்தவளை பார்த்து மேலும் அதிர்ந்தாள்!!!!



தொடரும்.....
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபிஸ்,

இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்துவிட்டோம்... உங்களின் ஆதரவை பார்த்து நெஞ்சம் நெகிழ்ந்து போச்சு... அதுக்கு மிக பெரிய நன்றிகள்...

அன்புடன்,
ஸ்வராகினி...
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10:



அதர்வாவின் கடுமையான வார்த்தைகளையே தாங்கிக் கொள்ளமுடியாது நின்றிருந்த பத்மா அங்கே காளி அவதாரம் எடுக்காத குறையாத ஆக்ரோசமாக நின்றிருந்த சுமித்ராவை கண்டாள்... அவளின் பார்வை அவளை தீயாய் எரித்துக் கொண்டிருந்தது. அவளின் கோபப் பார்வைக்கு அர்த்தம் தெரியாது சில நொடிகளே தடுமாறி நின்றவள் மறுநொடியே அவளின் கோபத்திற்கான காரணம் தெரியவர செய்வதறியாது நின்றுவிட்டிருந்தாள்.



“சுமி அது வந்து...” என்று பத்மா பேச ஆரம்பிக்க...“ம்ம்.. போதும் நிறுத்து” என்று அவள் கையை இடைமறிப்பது போல் வைத்து பேச்சை நிறுத்தினாள். அவளின் இந்த அழுத்தமானகோபப் பேச்சில் பத்மா அடுத்து என்ன பேசுவது என்று தெரியாதவளாக வாய் மூடி மௌனியானாள்.



“ச்சீ.. உன்னை என் சகோதரியா நினைச்சதுக்கு நீ எவ்ளோ பெரிய துரோகம் பண்ணிட்ட கண்டிப்பா உன்னை என் மாமா கிட்ட இருந்து பிரிக்காம விடமாட்டேன்” என்று முதலில் கோபமாக ஆரம்பவித்தவள் இறுதியில் அழுகையுடன் முடித்தாள்.அவள் முன்பு அழுகை வெடிப்பதற்க்கு முன் விருட்டென்று சென்றுவிட்டாள் சுமித்ரா.



அழுகையுடன் செல்லும் சுமித்ராவை பார்த்த பத்மாவுக்கும் தூக்கம் பொங்கியது. பத்மாவை பொறுத்தவரை சுமித்ரா வளர்ந்த குழந்தை தான். ஆனால் எதிர்பாராத திருமணத்தில் அவளே இன்னும் மீண்டு வராத போது அவளை எப்படி சமாதானப்படுத்த என்ற யோசனையுடன் படுக்கைக்கு சென்றாள். ஒருபுறம் அதர்வாவின் பேச்சு, மறுபுறம் சுமித்ராவின் கோபம் என வேதனையுடன் தத்தளித்து கொண்டிருந்ததாள். நித்திராதேவி அவள் அருகில் கூட வரவில்லை என்பதால் அவள் தூக்கத்தை தொலைத்தாள். இங்கு அதர்வாவும் தூக்கத்தை தொலைத்தவனாக தான் இருந்தான் அவனின் நினைவில் நின்றதெல்லாம் அவனுடைய அம்முக்குட்டியின் நினைவுகளே!



விடிந்ததும் ராஜாத்தி, வைத்தீஸ்வரி, கோமளவல்லி மூவரும் சேர்ந்து பத்மாவை அழைத்து பேசினார்கள்.



“என்னமா ராத்திரி சந்தோசமா இருந்தியா?” என்று வைத்தீஸ்வரி கேட்டிருக்க அவர்கள் எதை பற்றி கேட்கிறார்கள் என்று தெரிந்துக்கொண்ட பத்மா திடுக்கிட்டுப் போனாள். ஆனால் நான்கு சுவற்றிற்குள் நடந்ததை வெளியே கொண்டுவந்து அதனால் குழப்பம் ஏற்பட்டு மேலும் அவர்களின் நிம்மதியை அழிக்க வேண்டாம் என்று நினைத்தவள் அவர்களின் கேள்விக்கு வெட்கத்தையே விடையாய் தந்தாள்.



அவளின் வெட்கத்தில் கன்னங்கள் சிவந்ததை வைத்து அவர்கள் நிம்மதி அடைந்தார்கள்... ஆனால் அவள் இங்கு வெட்கப்பட்டு கொண்டே நிமிர்ந்து பார்க்க எதிரில் அவளை சுட்டெரிக்கும் பார்வையுடன் நின்றிருந்தான் அதர்வா. அவன் பார்வை வீச்சை தாங்கிக்கொள்ளமுடியாது அவள் தலை தானாக கவிழ்ந்தது. அதை எல்லாம் அறியாது மூவரும் நின்றிருக்க, ராஜாத்தி தான் மேலும் பேசலானார்...



“அம்மாடி பத்மா நீயும் அவனும் ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வந்திருங்கம்மா” என்றதும் அவள் உடல் அதிர்ந்து தலை நிமிர்ந்து அதர்வாவை நோக்கினாள்...அவனோ பார்வையை மாற்றிக்கொள்ளும் உத்தேசம் எனக்கில்லை என்பது போல் அவளை எரித்துக் கொண்டிருந்தான்... சரி சமாளிக்கலாம் என்று திரும்பும் சமயம் அதே தீப்பார்வை விழிகளுடன் நின்றிருந்தாள் சுமித்ரா.பத்மா இருவரின் பார்வையையும் கண்டு சுதாரித்தவளாக பேசலானாள்.



“அதில்லை அத்தை நான் இன்னைக்கு கோவிலுக்கு போகக்கூடாது” என்று கூறிவிட்டிருந்தால்.



“ஏன்மா தலைக்கு குளிச்சியா?” என்றதும் சிறிது நேரம் திருதிருவென விழித்தவள் பின்பு ஆமாம் என்பது போல் தலை அசைத்தாள்.



“சரிம்மா அடுத்த வாரம் எல்லாருமே சேர்ந்து போய்க்கலாம்” என்றுவிட்டு சென்றிருக்க பத்மா அப்போதுதான் ஆசுவாசமாக மூச்சைவிட்டவள் அவள்பணியை செய்யச் சென்றிருந்தாள்.



********************************



காற்றின் வேகத்திற்கு தென்னை மரங்கள் தங்கள் கிளைகளை சலசலத்து கொண்டிருந்தன... உச்சிவேளையில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் மதிய உணவுக்கு வீடு சென்றிருக்க பிரியா, விஷ்ணு இருவரும் தங்களின்காதலைபகிர்ந்துக் கொண்டிருந்தனர்.



“பிரியா!!”என்று விஷ்ணு ஹஸ்க்கி குரலில் அழைக்க அவனின் அழைப்பில் மதி மயங்கிப் போனவளாக நின்றிருந்தாள்.



“ஹ்ம்ம்” என்று முனகல் மட்டுமே அவளிடம் இருந்து வெளிவந்தது...



“கிட்ட வா ப்ரியா” என்று அவன் காதலை வெளிபடுத்த அவளை அருகில் அழைத்தான் விஷ்ணு.ஆனால் பிரியா அங்கிருந்த தென்னை மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டே அவனின் பேச்சிற்கு வெட்கி சிவந்து கொண்டிருந்தாள். அவளின் செய்கையை பார்த்து அதுவரை கட்டிக் காத்துக் கொண்டிருந்த பொறுமையை கைவிட்டவன்...



“ஏய் உனக்கு நான் புருஷனா? இல்லை; தென்னமரமா? அதை போய் இப்படி கட்டிப் பிடிச்சு நிற்கிற?” என்றவன் அவளை நெருங்கி அவனும் எதிர்புறத்தில் தென்னை மரத்தை கட்டிக்கொள்ள அவள் சிதறவிட்ட சில்லறை போன்ற சிரிப்பை சிந்திவிட்டு வேறு மரத்திற்கு சென்றாள்.இவர்களின் இந்த தென்னைமர கட்டிப்பிடி விளையாட்டு காதலுடன் தொடர அந்நேரம் தன் குண்டான உடல் வாகை தூக்கி சுமக்க சிரமப்பட்டு வரும் சின்ன யானை போன்று உடம்பை அசைந்தாடி வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்து வந்துக் கொண்டிருந்தான் அபிஷேக். ராஜாத்தி அவனிடம் தோட்ட வீட்டில் இருக்கும்இளநீர் குலையில் இருந்துமூன்று இளநீர் வீட்டிற்கு எடுத்து வர சொல்லி இருக்கவே அவன் அங்குசென்ற அந்நேரம் இவர்கள் காதல் கண்ணாமூச்சி ஆட்டத்தை பார்த்திருந்தான் அபிஷேக். ஆனால் அவன் என்ன கண்டான் இவர்கள் காதலர்கள் என்று?



“என்ன இது ரெண்டு பேர் மட்டும் தனியா கண்ணாமூச்சி விளையாடுறாங்க நாமளும் போய் சேர்ந்துக்கலாமா?”என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டு அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.



“பிரியா ப்ளீஸ்டி ஒன்னே ஒன்னு” என்று கேட்டுக் கொண்டே அவன் அவள் அருகில் செல்ல அவளோ அவனை விட்டு விலகி ஓடி போக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.



ஒரு கட்டத்தில்விளையாட்டை கைவிட்டவன்...“பிரியா ப்ளீஸ்! ஒரு ஹக் இல்லன்னா ஒரு கிஸ்” என்று ஐந்து மரங்கள் தாண்டி இருபவளுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக சற்று உறக்கவே கேட்டிருந்தான். அவன் கேட்டது அபிஷேக் காதிலும் விழுந்திருக்க அவனோ அவன் கேட்டதில் அதிர்ச்சியுற்றான்.



“இவன் என்னடா காபிஇல்லன டீ குடு மாதிரி முத்தத்தை கேட்கிறான். அதுவும் பண்ணையார் பிள்ளை கிட்ட ஒஹ் இவனுக்கும் லவ் ஸ்டார்ட்டா அதுசரிஇந்த லவ்வு யாருக்கு எங்க எப்போ எப்படி பத்திகுதுன்னே தெரியலைப்பா?” என்று கூறிக் கொண்டவன் அவர்களை சுவாரசியமாக கவனித்தான்.



இருவரும் ஒருவர் பின் ஒருவர் துரத்திக் கொண்டே ஓட ஒருகட்டத்தில் அவன் இவளை பிடித்துவிட்டிருந்தான்.



“ஏய் ப்ளீஸ்டி ப்ரி ரொம்ப ஏங்கிப் போய் இருக்கேண்டி” என்றவனின் வார்த்தையில்சற்றே மனமுருகியவள்...



“சரி நீங்க கண்ணை மூடிக்கோங்க”என்றாள்.



“ஏய் கண்ணை மூடவா? போடி... நீ கண்ணை மூடிக்கோ நான் பார்த்துக்கிறேன்” என்றவன் அவள் அருகில் நெருங்கி வர ஆரம்பித்தான்.



“முடியாது; முடியாது; நீங்க கண்ணை மூடுங்க” என்று பின்னால் நகர ஆரம்பித்தாள் பிரியா. அந்நேரம் பார்த்து இவர்களை சுவாரசியமாக பார்த்துக் கொண்டே வந்த அபிஷேக்ப்ரியாவின் பின்னாலில் இருந்தமரத்தை ஒட்டி நிற்க விஷ்ணு அவளின் வெட்கத்தை நினைத்து சிரித்துக் கொண்டே கண்களை மூடினான்.“சீக்கிரம் கொடுடி”என்றுகூற அந்த கண நேரத்தில் இவள் கிடைத்த இடைவெளியில் புகுந்து வெளியே செல்லப் பார்க்க அவளின் நடையின் ஓசையை கண்டு அவள் கைபிடித்து இழுக்க முயல எதிர்பாராத விதமாகஅவன் கைகளில் சிக்கியவன் அபிஷேக்தான்!விஷ்ணு தன்னவள் இல்லை என்று கூட அறியாது சடுதியில் அவனை அணைத்து அவனின் இதழ்களையும் சிறைபிடிதிருந்தான். அவனின் இந்த செயலில் ஸ்தம்பித்து நின்றாள் பிரியா! ஆனால் மறுநொடியேஅதிர்வு மறைந்து சிரிப்பு பீறிட்டு கொண்டு வர வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். விஷ்ணுவின் கரங்கள் அபிஷேக்கின் மேனியில் மேலும் அழுத்தமாக பதிய அப்போதுதான் அவன் அந்த வித்தியாசத்தை உணர்ந்து கண்களை திறவாமலே இலாதல்களை பிரித்தெடுத்தவன்...



“என்னடி ஆச்சு? இன்னைக்கு நீ சும்மா கிண்ணுனு இருக்க?” என்று வினவியதும்...



“நான்பிறந்ததுல இருந்தே இப்படிதான் இருக்கேனாம்...எங்க அம்மா சொல்லிச்சு” என்று சிரியாமல் சீரியசாக அபிஷேக் கூறியதும் தான் தாமதம்... பிரியா கண்களில் கண்ணீர் வர சிரித்துக் கொண்டிருந்தாள் என்றால்... விஷ்ணு அவனில் இருந்து வேகமாக தன்னை விளக்கியவன் அதே போல் அவனை வேகமாக தள்ளியும் விட்டான்.அவனின் செயலில் அவன் முகம் விளக்கெண்ணையை குடித்தது போல் ஆகியிருந்தது.



“அடப்பாவி கிஸ் அடிச்சுட்டு இப்படி தள்ளி விடறான் பாரு”என்றுகூறியவன்...



“ஏன் பாஸ் கட்டி பிடிச்சது நீங்க... கிஸ் அடிச்சது நீங்க... ஆனா, இப்போ தள்ளி விடுறீங்க சும்மா சொல்லகூடாது பாஸ் உங்க பிடிசும்மா இரும்பு பிடிதான்”என்று கண்களை சுருக்கி ஒரு மார்க்கமாக கூற... விஷ்ணு அவன் சொன்ன பாவனையில் கோபம் வந்து அருகில் இருந்த கல்லை தூக்கி அவன் மேல் எரிந்தான். அதற்குமேல் அங்கு நிற்க அவனுக்கு பைத்தியமாஎன்ன? ஒரே ஓட்டமாக ஓடிவிட்டிருந்தான்.இப்படிஅவன் காரியம் தடைபட்டு சொதப்பலாக போனதில் கோபம் கொண்டவன் அப்போதுதான் தூரத்தில் இருந்த ப்ரியாவை பார்க்க அவளோ அவன் செய்த செயலை நினைத்து அப்போதும் சிரிப்பை நிறுத்தாது தொடர்ந்து கொண்டிருந்தாள்... அவனின் ஆசை நிறைவேறாத கோபத்தில் அவள் மேல் கோபம் கொண்டு வெடுக்கென்று திரும்பி நடக்கலானான்... அவனின் வேக நடையில் தான் அவனின் கோபத்தை புரிந்து கொண்டுசுதாரித்தவள் சிரிப்பை நிறுத்திவிட்டு தீவிரமாக மாறினாள்.



“விஷ்...”என்று ஆரம்பித்தவள் அவனை பெயரை கூப்பிட்டு அழைப்பதில் உடன்பாடில்லாதவளாக நாக்கை கடித்துக் கொண்டு...“ஏங்....” என்று ஆரம்பிக்க அதுவும் தோதுபடாததில் அவனிடம் பேச்சில் அழைக்கிறது சரிவராது என்று நினைத்து அவன் அருகில் விரைந்து ஓடலானாள்.



“நில்லுங்க கோபமா என் மேல?” என்றதும் அவளை ஆன மட்டும் முறைத்து பார்த்தவன் அதற்குமேல் எதுவும் பேசாது கண்டுகொள்ளாது வேகமாக செல்லலானான்.



“அச்சோ கோபமா போறார் போலவே? எப்படி சமாதானப்படுத்துவேன்” என்று கையை பிசைந்துக் கொண்டு அறியாது நின்றாள். ஆனால் சிறிது தூரம் சென்றதும் அவலின்பதட்டம் எதனால் என்று அறிந்து அவன் முகம் சிரிப்பில் மலர்ந்தது...“மகளே என்னையவே ஏமாத்த பார்க்கறியா?நீயேஎன்னைத் தேடி வருவ பாரு” என்று அவளை வரவைக்க இவன் திட்டமிட்டத்தை அவள் அறியவில்லை.



அபிஷேக் அதன்பிறகு விஷ்ணு முன் நிற்ப்பதென்றால் சிறு எச்சரிக்கை உணர்வுடனே நிற்பான்.



*******************



சுமித்ரா அதன்பிறகு பத்மாவிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை; அவள் மேல் உள்ள கோபம் தணியாது தடம் பதிந்துகொண்டே இருந்தது... வீட்டின் முன்பு சோகச் சித்திரமாக அமர்ந்திருந்தவளின் முன்பு ப்ரசன்னமானாள் பத்மா.



“சுமி” என்றழைக்க அவளோ அவளின் குரல் காதில் செவி மடுக்காதது போலவே அமர்ந்திருந்தாள்.



அவளின் இந்த மௌனம் கோபத்தின் வெளிப்பாடு என்று அறிந்தாலும் அவளின் அறியாத ஏமாற்றமும் பத்மாவை பின்வாங்க விடாமல் அவளிடம் பொறுமையை கடைபிடித்து பேசவைத்தது.



“சுமி நான் சொல்றதை கேளு நீ நினைக்கிற மாதிரி நான் பிளான் பண்ணி கல்யாணம் பண்ணலை; உண்மையை சொல்லனும்னா எனக்கே இது விருப்பம் இல்லாத கல்யாணம் தான்... சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் காரணம். இதுக்காக என்னை வெறுக்காத சுமி ப்ளீஸ்” என்று கெஞ்சுதலுடனே கூறினாள் பத்மா. அவளின் பேச்சை கேட்ட சுமித்ரா மனதுக்குள் கொதித்துப் போனாள் செய்வதெல்லாம் செய்துவிட்டு இப்போது தன்னிலை விளக்கம் கொடுத்தால் அனைத்தும் சரி ஆகிவிடுமா என்று நினைத்து அவளை தீபார்வை பார்த்தாள் ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தது தாங்கிக் கொண்டு நின்றாள் பத்மா.




“இங்க பாரு இந்த சமாளிப்பெல்லாம் என்கிட்டே வேண்டாம். என் முன்னாடி நிற்கிறது தவிர்கிறது உனக்கு நல்லது” என்று கூறிவிட்டு வெடுக்கென்று திரும்பி நடக்க முயல பத்மா அவளின் கை பிடித்து தடுத்து விட்டிருந்தாள்.



“கையை விடு” என்று கனல் வீசும் பார்வையுடன் கூறியிருக்க... அவளோ அவளின் கையை விடும் உத்தேசம் இல்லாது இறுகப்பட்றி இருந்தாள்.



“சுமி என்னை நம்பு நான் சொல்றது உண்மை” என்று இப்போது முன்னைவிட கூடுதல் அழுத்தமாக கூறியிருந்தாள். அவளின் பேச்சை நம்பாது அவளையே பார்த்தவளின் விழிகளில் தட்டுப்பட்டது அவள் கழுத்தில் பளீரென மின்னிய மஞ்சள் கயறு. அவள் மூலையில் மின்னலடிக்க அதை அவளிடம் கூறினாள்...



“சரி உன்னை நம்புறேன் ஆனா உன் கழுத்துல இருக்கிற தாலியை கழட்டி கொடு இப்போவே நம்புறேன்” என்றதும் பத்மா அதிர்ந்து விட்டாள்!! அவள் கைகள் தானாக அவளின் மஞ்சள் கயிட்றை இறுக பற்றிக் கொண்டது அவளின் செயலில் அவள் உதட்டை வளைத்து சிரித்தவள்...



“என்ன முடியலையா? முடியாது உன்னால... ஏன்னா நீ துரோகி” என்று கூறியதில் அவள் கண்கள் கலங்கிவிட்டது.



“சுமி ப்ளீஸ் என்னை வார்த்தையால கொல்லாத. என்னால இதை தான் செய்ய முடியல ஆனா நிச்சயம் நான் இந்த வீட்டை விட்டே போறேன் அதுவும் எனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்... இல்...”என்றவளின் பேச்சு குரல் எழும்பவில்லை தொண்டையை அடைத்துக் கொண்டது போல் இருந்தது. அதற்கு மேல் அந்த வார்த்தையை அவளால் சொல்ல முடியாது துக்கம் தொண்டையை அடைத்தது ஆனால்... அவள் இப்போதைய நிலைமையில் சொல்லாமல் முடியாதே என்ற வேதனையில் தன்னையே கட்டுப்படுத்தியவளாக கூறலானாள்...



“இல்லைன்னு ஆக்கிட்டு போயிடுறேன் இது சத்தியம்” என்றவளின் பேச்சில் வலி அப்பட்டமாய் வெளிப்பட்டது. ஆனால் அதை எல்லாம் உணரவோ புரிந்துகொள்ளவோ தான் சுமியின் வயதும் மனநிலையும் இல்லை.



“அது நடக்கும் போது உன்னை நம்ப முயற்சி பண்றேன்” என்று பட்டுக்கத்தரித்தார் போல கூறிவிட்டு சென்றுவிட்டாள் சுமித்ரா. பத்மா கலங்கிய கண்களுடன் செல்லும் அவளையே இயலாமையுடன் பார்த்திருந்தாள்.



தூரத்தில் நின்று இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த அதர்வா புருவங்கள் முடிச்சிட ஆரம்பித்தது சுமியின் பேச்சில் யோசனையாக பார்த்தான் என்றால்... பத்மாவின் பேச்சை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். தாலியை இறுக்கி பிடித்துக்கொள்ளும் போது அவனிற்கு ஏற்பட்ட நிம்மதி அவளின் இறுதி பேச்சில் சுத்தமாக வடிந்து விட்டிருந்தது. ஏனோ அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதாக கூறியது அவன் தான். ஆனால் அதை அவள் வாய்மொழியாக கேட்டும்போது அவன் நிம்மதி தொலைந்த காரணம் அறியாது தடுமாறி நின்றான் அந்த ஆறடி ஆண்மகன்!



*****************************



இரண்டு நாட்கள் அமைதியாக கழிந்திருக்க பத்மா கணக்கு வழக்கு பார்க்க என்று பண்ணைக்கு சென்றாள்... அங்கே ஆட்கள் வேலை செய்யும் விபரமும் அதற்காக அவர்களுக்கு தரும் கூலியையும் கணக்கெடுத்து கொண்டிருந்தாள் அப்போது...



“நான் வரலாங்களா?” என்று அந்த திறந்தவெளி கொட்டகையில் அனுமதி கேட்டான் சிங்கப்பெருமாளின் மூத்த புதல்வன் பூவரசன்! சிங்க பெருமாளின் பொறாமை குணத்திற்கு நேர்மாறாக பிறந்தவன் அவர்கள் குடும்பத்தில் தப்பி பிறந்த நேர்மையாளன் அவன் ஒருவன் தான்.



“நீ..ங்..க...?” என்று தினறிக் கொண்டே கேட்டாள் பத்மா.



“நான் பூவரசன் சிங்கப்பெருமாள் மூத்த மகன்” என்றதும் அவளிற்கு மனதிற்குள் கிலி பிடித்தது. அவளுக்கு முழுதும் தெரியாவிடினும் பஞ்சாயத்தில் அவளுக்கு எதிராக பேசியவர் அவரே. ஆனால் அது அவள் மேல் கொண்டுள்ள கோபம் அல்ல பண்ணையார் வீட்டின் மேல் கொண்டுள்ள பொறாமை என்று அறிந்து கொண்டாள்... அதனால் அவனை அங்கே கண்டதும் பேசவும் அழைக்கவும் தயங்கி தடுமாறிக் கொண்டிருந்தாள். அவளின் அச்சத்தையும், தடுமாற்றத்தையும் உணர்ந்து கொண்டவன்...



“என்ன என்னை கண்டா பயமா இருக்கா?” என்றதும் அவள் ஆம் என்று கூற இயலாது உதட்டை கடித்துக் கொண்டிருந்தாள்.



“நான் அந்த ரஞ்சித் போல பொம்பளை பொறுக்கி இல்லை; அதுவும் நீங்க இப்போ அதர்வா மனைவி என்னை நம்புங்க” என்றதும் அவள் மனம் சற்றே லேசானது.அதுவும் அவன் கூறிய அதர்வா மனைவி என்ற சொல் அவள் மனதிற்குள் ஆயிரம் கூடை பூக்களை ஒன்றாக கொட்டியது போல் மனதுக்குள் மென்மையாக உணர்ந்தாள். அதர்வாவின்மனைவி என்ற சொல்லை நினைத்து பூமாரி பொழிந்துக் கொண்டிருந்தது.



ஆனால் எதிரில் நிற்பவனை நினைவில் கொண்டு வந்துஇயல்பானபுன்னகையை உதிர்த்திருந்தாள்.அவளின் புன்னகைக்க்கு பிறகு அவனும்சகஜமாக பேச ஆரம்பித்தான்.



“ரஞ்சித் விஷயம் கேள்விப்பட்டேன்... அவனாலதான் இந்த திடீர் கல்யாணமும் கூட இல்லயா?” என்றதும் அவள் ஆச்சர்யத்தில் விழி விரித்தாள்.



“என்ன இதெல்லாம் எனக்கெப்படி தெரிஞ்சதுன்னு நினைக்கறீங்களா?” என்று கேள்வியையும் அவனே கேட்டவன் “அதர்வா” என்று ஒற்றை வார்த்தையில் விடையையும் கூறினான்.



“அதர்வா தான் காரணம்...அவனைப் பற்றி ஊருக்கே தெரியும் அதே போல ரஞ்சித்தையும் தெரியும்” என்றதில் அவள் புரிந்துக் கொண்டாள். இருவரும் அதன் பிறகு சகஜமாக சிரித்துப் பேச ஆரம்பித்தனர். பத்மாவை தேடி வந்த அதர்வா அங்கே அவள் ஒரு ஆண்மகனுடன் பேசிகிட்டு கொண்டிருந்ததை பார்த்து அவன் மனதில் அவன் வீட்டிற்கு எதிரானவர்கள் குடும்பத்தினரிடம் பேசிக்கொண்டிருந்தது ஒருபுறம் யோசனையை விளைவித்தது என்றால்... அவள் தனியாக ஒரு ஆண்மகனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து அவன் கோபத்தை உச்சியில் கொண்டு சென்று அவன் மனதில் பொறாமை தீ கொழுந்து விட்டுயெறிந்தது. அவளை பொசுக்கும் பார்வை பார்த்துக் கொண்டே இருந்தவனின் கைகளை இறுக மடக்கி கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டிருந்தான். அந்தோ பரிதாபம் அவன் அறியவில்லை காதலின் முதல் அறிகுறி பொறாமை தான் என்று!!



வெகு நேரம் சிரித்துபேசிவிட்டு பூவரசன் சென்றுவிட பத்மாவும் திரும்பி நடக்க எத்தணிக்கையில் கோபத்துடன் நிற்கும் அதர்வாவை கண்டாள். ஆனால் அவன் கோபத்திற்கான காரணம் புரியாது அவள் போக்கில் செல்லப் போக அதர்வா தடுத்தான்.



“ஏய் நில்லுடி!” என்று டி சொல்லி அழைத்தவனை யோசனையாக பார்த்தாள் பத்மா. அவன் அவளை திட்டி உள்ளான் தான்... அதே போல் அவள் மேல் எதிர்மறை எண்ணம் உள்ளவன் தான்... ஆனால் இந்த அழைப்பு ஏனோ அவளுக்கு வித்தியாசமாக இருந்தது. ஆனால் இதை எல்லாம் அவளை மேலும் சிந்திக்கவிடாது அவன் அடுத்தடுத்து வார்த்தைகளை நெருப்பாய் வீசலானான்.



“என்ன அவன்கூட நின்னு கடலை போட்டுட்டு இருக்கிற? என்ன நான் தேறமாட்டேன்னு அடுத்து அவனை வளைக்க பிளான் பண்றியா? மவளே அப்படி எதுவும் பண்ணின உன்னை கொன்னு புதைச்சுருவேன் ஜாக்கிரதை. ஆமாம் என்ன எப்போ வீட்டை விட்டுட்டு ஓடுறத ஐடியா வச்சிருக்க?” என்று அடுத்தடுத்து கேள்விக்கணைகளை தாக்க பத்மா உறைந்து நின்றாள். அவன் பேசிய வார்த்தைகளின் வீரியம் பெண்ணாக அவள் ஆள் மனதை ஊடுருவி தாக்கியது... ஆனால் அவன் கேட்டதற்கு பதிலாக கூறவில்லை என்றால் எங்கே அவன் சொன்னது உண்மை ஆகிவிடுமோ என்று கருதி பேசலானாள்.



“என்ன பேசறீங்க நீங்க? எப்போ பாரு என்னை காயப்படுத்திட்டே இருப்பீர்களா? அதான் நீங்களே என்னை வெளிய அனுப்பறேன்னு சொன்னீங்களே? நான் போனா உங்களுக்கு என்ன?அதுதான் உங்க வீட்டுலையே ஒருத்தி காத்துகிட்டு இருக்காளே?” என்றதும் அவன் கோபம் கரை உடைத்திருந்தது... அவள் என்னவோ அவன் சொன்னதை வைத்துதான் அந்த வார்த்தைகளை கூறினாள். அதுவும் அவளை வீட்டை விட்டு அனுப்பிவிட்டால் வெளியே எங்கேனும் வேலை பார்த்து கொள்ளலாம் என்ற நினைவில் அவள் கூறியதுதான் ஆனால் அவன் கோபம் கொண்ட மனதிற்கு அது மேலும் தூபம் போட்டிருந்ததது.



“ஏய் என்கிட்டயே ட்ராமா பண்ணி தாலி வாங்கிட்டு என்கிட்டயே இப்படி பேசற? என்ன திமிரு இருக்கனும் உனக்கு உன்னை....” என்றவன் அவள் எதிர்பாராத விதமாக அவளை இறுக்கி அணைத்து அவள் இதழில் இவன் இதழ்களை கொண்டு அணைத்திருந்தான்.



அவளே எதிர்பாராத இந்த இதழ் யுத்தத்தில் ஸ்தம்பித்துதான் போனாள். சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டவள் தன் முழு பலத்தையும் திரட்டி அவனை அவளிடமிருந்து பிரிக்க போராட, அந்தோ பரிதாபம் அந்த ஆறடி ஆண்மகனின் வலிமைக்கு முன் மெல்லியவள் தோற்று தான் போனாள். தன் இயலாமையும் அவனின் இந்த இதழொற்றலினால் தோன்றிய அறுவெருப்பும் சேர்ந்து பெண்ணவளின் கண்களில் இருந்து நீரைப் பொழிய, அது வழிந்து அதர்வா சுவைத்துக் கொண்டிருந்த இதழ்தேனோடு கலந்து உவர்ப்பாக மாறியது. அவள் கண்ணீரை உணர்ந்த அதர்வாவிற்க்கு அதன் பின்னே தான் செய்த செயல் நினைவில் வர அடுத்த க்ஷணமே தீச்சுட்டார் போல் அவளிடம் இருந்து விலகினான்.

அவனை எதிர்த்து போராடியதில் துவண்டு போய் இருந்தவள் அவன் விலகியதும் மொத்த பலத்தையும் இழந்து அப்படியே கீழே சரிந்தாள்.

அவளின் நிலை கண்டு அவனுக்கு அவனின் மீதே கோபம் வர , சாரி என சொல்ல நினைத்து அவளை நோக்க, அவளோ உடலில் உள்ள சக்தி அனைத்தும் கரைந்த போதும் அவன் முத்தம் கொடுத்த இதழ்களை தன் பலம் கொண்ட மட்டும் துப்பட்டாவை வைத்து துடைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் பால் சற்றே இளகத் தொடங்கியிருந்த மனம் இப்போது அவளின் செயலில் கற்பாறையை விட இறுகி விட, இங்கிருந்தால் இருக்கும் கோபத்தில் தரம் தாழ்ந்து பேசிவிடுவோம் என்றுணர்ந்து மனதில் மூண்ட கோபத்துடன் வேகமாக அவ்விடம் விட்டு அகன்றான்.

அவன் போவதையே கண்டு கொண்டிருந்தவளுக்கு துக்கம் ஒரு பக்கம், குழப்பம் மறுபக்கம் என சிக்கித் தவித்தவள், கூடிய விரைவில் தான் இங்கு வந்த வேலையை முடிக்க வேண்டும் என மனதில் தீர்மாணித்துக் கொண்டாள்.







******************



அபிஷேக் அங்கே தோப்பிலிருந்து நான்கு ஐந்து மட்டை தேங்காயை சுமந்துக் கொண்டு வந்துகொண்டிருந்தான் சோகச் சித்திரமாக வந்த பத்மாவை கண்டவன் முகம் யோசனையை தத்தெடுத்தது...“என்னாச்சு?”என்று யோசனையனவன் அருகில் வந்த பெண்ணை கவனியாது அவள் மேல் மோதி அவன் கீழே விழும் சமயம் அந்த பெண் அபிஷேக்கைகைகளில் தாங்கி இருந்தாள். இருவரின் விழிகளும் மோதிக் கொண்டு நிற்க நொடிகள் தான் இருக்கும் அபிஷேக்கின் மனதுக்குள் மத்தாப்பு ஒளிர அவன் மனதுக்குள் பாடலும் ஒலித்தது...



பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே
உணர்ந்தேன் காட்சிப் பிழை போலே

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே



அவன் முகம் போன போக்கை உணர்ந்து கொண்ட அந்த பெண் முகம் விளகெண்ணையை குடித்தது போல் ஆனது...



பார்வதிஎன்று எங்கிருந்தோ வந்த அழைப்பில் சுதரித்தவள் அவனைப் பார்த்து...



“டேய் பூசணிக்க மண்டையா இப்போ மட்டும் நீ எழுந்திரிகளை அப்படியே விட்டுட்டுபோயிருவேன் பார்த்துக்கோ” என்று அவள் மிரட்டவும்...



சரேலென்று அவளிடமிருந்து விலகினான்...அவனை முறைக்க ஆரம்பித்தாள் அவள்.ஆனால் அபிஷேக்கோ அதெல்லாம் கண்டுகொள்ளாது அவளை காதல் பார்வையாக பார்த்திருந்தான். அதை தாங்கமுடியாதவள் அவனின் தலையில் அருகில் இருந்த தென்னங்குசியில் நங்கென்று கொட்டு வைத்தாள்...“ஆஆ” என்று அலறியவன் நிகழ்வுக்கு திரும்பினான்...



“என்னரொமான்ஸ்ஸா?”



“ஏன் வரக்கூடாதா?” என்று அசராது கேட்டான்.



“டேய் பன்னிகுட்டி வாயா உன் மூஞ்சியை நீ கண்ணாடியில பார்த்திருக்கியா?”



“ஓய் நாட்? நான் தினமும் என் முகத்தை பார்த்து தான் விழிப்பேன்”



“அது சரி கழுதை மூஞ்சில முளிச்சா நல்லதா நடக்குமாம் ஆனா உன் மூஞ்சு பன்னிகுட்டி மாதிரி அல்ல இருக்கு?”



“ஹேய் கேர்ள் ஸ்டாப் இட். என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? என்னை மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிக்காது... பார்க்கப்பார்க்க தான் பிடிக்கும்” என்று அவன் அவள் அருகில் எக்கி கரங்களை தலையில் கோதியவாறு ஒயிலாய் கூறினான்.



“ஹையோ!” என்று நெற்றியில் அறைந்துக் கொண்டவள்...“நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்” என்றுகூறிவிட்டு நகரப் பார்க்க...



“பாரு இன்னைக்கு நீ என்னை வேண்டான்னு சொல்லிட்டு போற...ஆனா அதே வாயால ஒரு நாள் அபிஷேக் நீங்க இல்லாம நான் இல்லை அபப்டின்னு சொல்லிட்டு வருவ நான் அதுவரை காத்திருப்பேன்” என்றதில் அவள் முகம்அஷ்டகோணலாக செல்லஅவள்அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்றுஓடியேவிட்டிருந்தாள்.தூரத்தில் இருந்து இந்த காட்சிகளை பார்த்த பத்மா அதுவரை கட்டுப் படுத்திக் கொண்டிருந்த சிரிப்பை வெளிபடுதலானாள்.



இவளின் சிரிப்பை பார்த்து அவள் அருகில் ஆவேசமாக வந்தவன்....



“என்ன என்னை பார்த்தா சிரிப்பா இருக்கா?சிரி சிரி ஆனால் ஒருநாள் என் காதல் கிளி... பச்சை கிளி என்னை தேடி வருவா அன்னைக்கு பார்த்துக்கிறேன் உன்னையை”என்று அவளிடம் கூறிவிட்டு. அவனின் விரல்களை அவன் முகத்தை நோக்கி நீட்டியவாறு சுட்டியவன்...



“அபிஷேக் நீ இன்னைல இருந்து மூணு வேலை குளிக்கற, அஞ்சு வேலை பவுடர் போடுற, டெய்லி ஒரு மணி நேரம் ஜிம்முக்கு போகிற உன் பச்ச கிளியை மயக்குற.அதை பார்த்து மத்தவங்களை வயிறு எரிய வைக்கிற” என்று தனக்கு தானே சபதமிட்டுக் கொண்டு சென்றான். பத்மா அதர்வாவின் விஷயத்தை மறந்தவாளாக புன்னகை முகத்துடன் நின்றிருந்தாள்.அதன் பிறகு எந்தவொரு மாற்றமும் இல்லாது ஒருவாரம் கடந்திருந்தது.



விஷ்ணு, ப்ரியாவிடம் முகம் கொடுத்து பேசாது இறுக்கமான முகத்துடனே வளைய வந்தான்.கடந்த ஒருவாரமாக அவனிடம் பேசமுயன்றும் அவன் பிடிகொடுக்காமல் சென்றுகொண்டிருந்தான் விஷ்னு. அதற்கு மேல் பிரியா தாங்க இயலாதவளாக எல்லாரும்தோட்டத்திற்கு அறுவடை செய்ய சென்றிருந்த நேரம் பார்த்து விஷ்ணுவை அவன் அறை பால்கனியில் வைத்து சந்தித்தாள்.



“வி... வி...” என்றவளின் வார்த்தை வெளியே வர அவ்வளவு தயங்கியது ஒருவாறு தன்னை தேற்றிக் கொண்டவள்...“ஏங்க” என்று மரியாதையுடன் அழைத்திருந்தாள். அவளின் அழைப்பிற்கு வேகமாக திரும்பியவன் அவளை முறைத்துப் பார்த்துவிட்டு திரும்பிவிட்டான்.



“உங்க கோபம் புரியுது அதுக்காக என்னை மான்னிக்கமாடீங்களா ப்ளீஸ் நீங்க பேசாம இருந்தா எனக்கு அழுகையா வருது” என்றவளின் குரல் கரகரத்தது ஆனாலும் அவன் கல்லைப்போன்ற கடினத்துடனே இறுகி நின்றிருந்தான் விஷ்ணு.



“நான் என்ன செய்தா நீங்க என்னை மன்னிபீங்கன்னு சொல்லுங்க செய்யுறேன்”என்றதும் விஷ்ணுவின் மனம் குத்தாட்டம் போட்டது அவளிடம் இருந்து இந்த வார்த்தைக்காக தானே காத்திருந்தான்.



“நான்என்ன சொன்னாலும் செய்வியா?” என்றவனின் குரல் சாதாரணமாக இருந்தாலும் அவன் கண்கள் சிரித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவள் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவன் பேசினால் போதும் என்ற எண்ணத்துடன்...“கண்டிப்பா செய்றேன் சொல்லுங்க” என்றதும்...‘வாடி என் பொண்டாட்டி வசமா மாட்டினியா?’ என்று மானசீகமாக பேசிக்கொண்டவன்...



“அப்போஎன்னை கட்டிபிடிச்சு கிஸ் பண்ணு நம்புறேன்”என்றதும் அவள் தயங்கிக் கொண்டு திடுக்கிட்டு நின்றாள். இவளின் பாவனை அவன் நன்கு அறிந்துவைத்தவன்...



“என்ன முடியாதுள்ள அப்போ போ பேசாம என்முன்னடி நிற்காத” என்று வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் கூறினான் ஆனால் அதில் பயந்த பிரியா...



“அச்சச்சோ! அப்படி எல்லாம் இல்லை; கண்டிப்பா நீங்க சொன்னதை செய்யுறேன்”என்றவள் அவளின் தயக்கத்தை துறந்து அவன் அருகில் மெல்ல அடியெடுத்து வைத்துச் சென்றாள்... அவள் அருகில் வரவர அவன் பார்வையும் மாறியது மெல்ல தன் கரங்களை அவன் மேனியில் பட்டும்படாமல் வைத்து அணைத்தவள், கண்களை இறுகமூடிக் கொண்டு அவன் உதட்டில் ஒத்தடம் வைப்பது போல் நச்சென்று இதழ் பதித்துவிட்டு வேகமாக விலகப் பார்க்க விஷ்ணு விடாது இறுகப் பற்றியவன்...



“என்னடி திரும்பவும் ஓடப் பார்க்கிறாயா?”என்றவன் அவளின் செயலை இவனின் செயளாக மாற்றிக் கொண்டான். இருவரும் தங்களை மறந்தவர்களாக ஒருவருள் ஒருவர் இதழ் யுத்தத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேலை "ஐயோ!” என்ற உரக்க அலறிய குரலில் இருவரும் வேகமாக விலகி திரும்பிப் பார்க்க அதிர்ந்து நின்றனர்!!!



தொடரும்...










 
Last edited:

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபிஸ்,

இதோ அடுத்த அத்தியாயம் போட்டாச்சு... இதில் மிக முக்கியமான சீன் இருக்கு... படித்துவிட்டு எப்படி இருக்கிறது எனச் சொல்லுங்கள்...

அன்புடன்,
ஸ்வராகினி...
 
Status
Not open for further replies.
Top