All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கதை திரி

Status
Not open for further replies.

swaragini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 20:

பத்மா வெளியே ஓடியதும் தொடர் போல் நடந்த கூத்தில் தனக்குள் சிரித்து கொண்ட அதர்வா முகத்தை மட்டும் இறுக்கமாகவே வைத்து கொண்டு வெளியே வந்தான்...

மேலும் பத்மாவை பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு அவன் பாட்டிற்கு சென்று விட, ‘ஆமாம் பண்ணுறதெல்லாம் லொள்ளு வேல.. இதில் முறைப்பு வேறு..’ என்று முணுமுணுத்து கொண்டே அவளும் எழுந்து சென்றாள்..

ஒருவாறு அனைவரும் உடை எடுத்து முடித்து வீட்டிற்கு வந்து சேர அன்று இரவாகி விட அனைவரும் களைப்புடன் உறங்கி விட்டனர்..

மறுநாள் காலை உணவை முடித்து கொண்டு பின்புற தோட்டத்தில் வந்து அமர்ந்திருந்த பத்மாவின் மனம் முழுவதும் பல குழப்பங்கள்..

அவள் மனம் முழுவதும் முந்தைய நாள் அதர்வா ரோஷினி நடந்து கொண்ட முறையில் தான் சுற்றி கொண்டிருந்தது..

அவள் தான் அவனிடம் ஒட்டி கொண்டு சுற்றுகிறாள் என்றாள் இவனும் சேர்ந்து தன்னை வெறுப்பேத்த வேண்டுமா..

சும்மா சும்மா எவளோ ஒருத்தியை அவன் அம்முக்குட்டி அம்முக்குட்டி என கொஞ்சும் போதெல்லாம் அவளுக்கு உடம்பெல்லாம் பற்றி எரிவது போல் அத்தனை வெறுப்பாக இருந்தது..

அது அவளுக்கு மட்டுமேயான அவள் மாமனின் பிரத்யேக அழைப்பில்லையா..

‘உனக்கெல்லாம் யார் மாமா போலீஸ் வேலை கொடுத்தது..’ என்று அவள் அதர்வாவை மனதிற்குள் கரித்துக்கொட்டி கொண்டிருக்க

அவள் மனதை அப்படியே படித்தது போல் அதே கேள்வியை கேட்டு கொண்டு வந்து அவள் அருகில் அமர்ந்தான் அபிஷேக்..

“ஏன் பத்மா உன் புருஷனுக்கெல்லாம் யாரு போலீஸ் வேலை கொடுத்தாங்க..” என்று கேட்டுக்கொண்டே அவன் அமர, அவனை ஆச்சர்யமாக நிமிர்ந்து பார்த்தவள்

“நானும் அதே தான் தான் நினைத்து கொண்டிருந்தேன்.. நீ தான்டா என் உயிர் நண்பன்..” என்று பத்மா சிலாகித்துக்கொள்ள

“இப்போ ரொம்ப முக்கியம் பாரு..” என்று சலித்து கொண்டான் அபி.

“டேய் அந்த ரோஷினியை பார்க்கும் போதெல்லாம் அவளை அப்படியே கொலை பண்ணனும் போல வெறி வருதுடா..” ஆத்திரமாக பத்மா கத்த

“எனக்கும் அப்படி தான் பத்து தோனுது.. ஆனா களி திங்கறது ரொம்ப கஷ்டம்டி.. அதனால் உருப்படியா ஏதாவது யோசிப்போம்..” என்று அபி அவனது முக்கிய சாப்பாட்டு கவலையையும் சேர்த்து பேச, பத்மாவிற்குமே கொஞ்சம் ஒழுங்காக யோசிக்கலாம் என்று தான் தோன்றியது..

“அபி நம்ம வீட்டில் இருந்து யாரோ அந்த ரோஷினிக்கு உதவறாங்கடா.. அந்த செயின் விஷயம் உடை எல்லாம் பார்க்கும் போது நிச்சியம் யாரோ நம் சொந்தங்கள் தான்.. அது யாருனு முதலில் கண்டுபிடிக்கனும்டா..” என்றவள் தீவிரமாக யோசிக்க தொடங்கிவிட, அபிஷேக்கும் சேர்ந்து யோசித்தான்.

“டேய் எனக்கு என்னவோ அந்த ரஞ்சித் மேல தான்டா முக்கியமா சந்தேகமா இருக்கு..” என்று பத்மா கூற..

“எனக்கும் தான் டி.. அப்பறம் அவங்க அப்பா முழியும் சரி இல்ல.. அவரையும் கவனிக்கணும்..” என்றான் அபிஷேக்.

“ஆமாடா.. வேற..” என்று மீண்டும் பத்மா யோசிக்க தொடங்க..

“உன் மாமனார் பத்து..??” என்று கேள்வி குறியாக நிறுத்தினான் அபிஷேக்

“டேய் அவர் பெரிய மனிதர்டா..”

பத்மாவாள் ஏனோ அவரை சந்தேகிக்க முடியவில்லை; ஆனால் அபிஷேக்கோ வேறு சொன்னான்..

“இல்லை பத்து.. யாரையும் இப்போதைக்கு நம்பி விட வேண்டாம்.. சந்தேகம் தோன்றும் எல்லாரையுமே கண்காணிப்போம்.. இப்போதைக்கு அவரை நாமினேஷன் லிஸ்ட்ல வைக்கிறேன்.. அப்பறம் அவர் மேல தப்பில்லைனு தோணினா ஓட்டு போட்டு காப்பாத்திருவோம்..” என்று அபிஷேக் கூற..

“டேய் பிக்பாஸ் பார்க்காதேனு சொன்னா கேக்கறயா.. ஏன்டா இப்படி கழுத்தறுக்கற..”

அவன் பேசிய லட்சணத்தில் பத்மா கடுப்பாகி இருந்தாள்.. அதில், “ஹீ.. ஹீ..” என்று கேவலமாக சிரித்தவன்,

“சரி..சரி.. கோபப்படாதே பத்து.. அடுத்த நாமினேஷன் பிடிச்சுட்டேன்..” என்று அபிஷேக் பரபரப்பாக கூற...

“டேய்..” என அவனை முறைத்தாள் பத்மா.

“ப்ச் அதை விடு.. இப்போது உன் அப்பா மேலயும் ஒரு கண் வைக்கணும்டி..” என்று அபி தொடர்ந்து கூறி மீண்டும் அவளுக்கு ஒரு ஷாக் கொடுத்தான்..

“என்னடா.. அவருமா” என்று பத்மா அதிர்ந்து விழிக்க...

“ஆமாம்டி.. நீ கவனிக்கலயா உங்க அம்மா ரோஷினி மீது அன்பு காட்டும் அளவு அவர் காட்டிறதில்ல பத்து.. அவர்கிட்ட ஏதோ ஒரு ஒதுக்கம் தெரியுது.. அதனால் அவரையும் கவனிப்போம்..” என்றான் அபிஷேக்.

“சரிடா.. நான் ரஞ்சித்தையும் எங்க அப்பாவும் பாக்கறேன்.. மற்ற இருவரையும் நீ கவனி..” என்று முடித்து வைத்தாள் பத்மா.

அடுத்து வந்த நாட்களில் இருவரும் என்ன தான் மற்றவர்களை தொடர்ந்தும் அவர்களால் தெளிவாக எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

ரஞ்சித், ரோஷினி ராஜேந்திரனை சந்தித்து பேசுவதென்றால் வெளியில் எங்காவது யாருக்கும் தெரியாமலே சந்தித்து கொண்டதால் இவர்களால் எதையுமே கண்டுபிடிக்க முடியாமல் போனது..

அபிஷேக்கும், பத்மாவும் தேடித்தேடி சலித்துப்போன போது அனைவரையும் மீண்டும் உற்சாகமாக்குவது போல் வந்தது விஷ்ணு பிரியாவின் நிச்சியதார்த்த நாள்.!

******************

அன்றைய பொழுது அழகாய் விடிந்தது.. வீட்டில் வைத்தே நிச்சியத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததால் அன்று வீடே விழா கோலம் பூண்டிருந்தது..

காலையில் குளிக்க செல்வதற்கு முன் தனக்கான புடவை எடுக்க பத்மா வர, கப்போர்ட்டை திறந்ததும் அன்று உடை எடுக்க போனபோது அதர்வா அவளை ஏமாற்றி வாங்கி இருந்த அந்த சுமாரான புடவை தான் முதலில் இருந்தது..

அதை கையில் எடுத்தவள் ‘இதை போய் எப்படி கட்டுவது.. கேவலமாக இருக்குமே..’ என்று யோசித்து கொண்டே நின்றிருந்த போது அவள் கையில் இருந்து அந்த புடவை திடீர் என்று பறிக்கப்பட்டது..

இதை போய் யார் பிடுங்குவது என்ற சந்தேகத்துடன் அவள் திரும்பி பார்க்க, அங்கு ரோஷினி தான் அந்த புடவையை இறுக பற்றி கொண்டு நின்றிருந்தாள்..

அன்று கடையில் புடவை எடுக்கும் போது வைத்தீஸ்வரி அவளை இழுத்து போய் விட்டாலும் அவள் கண்கள் முழுவதும் அதர்வா மீது தான் இருந்தது..

பத்மா ஏதோ புடவை எடுப்பதும் அத்தை அதர்வா பில் போட அனுப்பிவதும் மட்டும் அவள் கண்களில் விழ அப்போதே அந்த புடவையை எப்படியாவது பறித்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தாள்..

இன்று எப்படியும் பத்மா அதை தான் கட்ட நினைப்பாள் அதை தடுக்க வேண்டும் என்று யோசித்து கொண்டே அவள் அவர்கள் அறை பக்கம் நடைபயின்று கொண்டு இருக்க, ஆதர்வா வெளியே போன அடுத்தநொடி அந்த அறைக்குள் நுழைந்து விட்டாள் ரோஷினி.

பழம் நழுவி பாலில் விழுந்தது போல் பத்மா அதே புடவையை கையில் வைத்து கொண்டிருக்க, அதை சட்டென பிடுங்கி விட்டாள்..

பொதுவாக ரோஷினிக்கு புடவை பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது.. அவள் எப்போதும் மாடர்ன் உடைகள் தான் அணிவது..

ஏதோ இங்கு நடிக்க வந்ததில் இருந்து தான் சுடிதாரே அணிந்து கொண்டிருந்தாள்.. அதனால் அந்த பட்டு புடவை டிசைன் பற்றி எல்லாம் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை.

பத்மாவிடம் இருந்து பிடுங்கியவள், “என் மாமா வாங்கி கொடுத்த புடவை நான் தான் கட்டிப்பேன்.. நீ வேற ஏதாவது கட்டிக்கோ..” என்று கூறி வெறுபேற்றுவது போல் பத்மாவை பார்க்க, பத்மாவிற்க்கோ அடக்கமாட்டாமல் சிரிப்பு தான் வந்தது..

ரோஷிணிக்காக தானே அவள் அந்த புடவையை தேர்ந்தெடுத்தது.. கடைசியில் கணவன் தடுத்தும் அது அவளிடமே சேர்ந்து விட்டதை நினைத்து வந்த சிரிப்பை மிகவும் முயன்று கட்டுப்படுத்தி கொண்டாள் பத்மா..

அவள் சிரித்து இவள் அந்த புடவையை எடுத்துக்கொள்ளாமல் போய்விட்டாள்.. அதனால் முயன்று முகத்தை சோகம் போல் வைத்துக்கொண்டாள்..

அவளது சோக முகத்தை நம்பிவிட்ட ரோஷினிக்கு உள்ளுக்குள் குதூகலமாக இருக்க, “இதை யாரிடமும் சொல்ல கூடாது.. ஜாக்கிரதை..” என்று மிரட்டிவிட்டு வேறு சென்றாள்..

அவள் அந்த பக்கம் போனதும் லேசாக வெளியில் எட்டி பார்த்த பத்மா அவள் சென்றுவிட்டதை உறுதிப்படுத்தி கொண்டு அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை கலகலவென சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்..

‘இதை நீ கட்டிட்டு வரும் கண்கொள்ளா காட்சியை பார்க்க வேண்டுமே..’ என்று நினைத்துநினைத்து சிரித்து ஓய்ந்தாள் பத்மா.

பின் ஒருவாறு தன் சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டவள் வேறு ஒரு புடவை எடுத்து கொண்டு குளிக்க செல்லலாம் என்று நகர்ந்தபோது சரியாக அவளை தேடி வந்தார் ராஜாத்தி..

“பத்மா இப்ப தான் குளிக்க போகிறாயாடா..” என்று கேட்டுக்கொண்டே அவர் வர...

“ஆமாம் அத்தை..” என்றாள் பத்மா.

“இந்த புடவை கட்டிக்கோ பத்மா.. உனக்காக நான் ஆசையாக எடுத்தது..” என்று ஒரு அழகிய பட்டு புடவையும் அதற்கு பொருந்துவது போல் அழகிய தங்க நகையும் ராஜாத்தி கொடுக்க, அதை சிறு தயக்கத்துடன் பார்த்தாள் பத்மா.

இதை எல்லாம் போட்டு கொண்டால் அதர்வா ஏதேனும் சொல்லுவானோ என்ற தயக்கம் தான் அவளுக்கு..

“பத்மா வாங்கிக்கோமா.. நீ இந்த வீட்டு மருமகள்டா.. இதுக்கெல்லாம் இனி யோசித்து கொண்டு இருக்கக்கூடாது..” என்று மென்மையாக ராஜாத்தி கூற... அவளுக்கும் அது சரி தான் தோன்றியது.

மருமகள் மட்டுமா அவள் அந்த வீட்டு பெண்ணும் அல்லவா..? தன் உரிமையை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று தோன்ற மலர்ந்த முகத்துடன் அதை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டாள் பத்மா..

அவள் குளித்துவிட்டு அந்த புடவையையும், நகையையும் அணிந்து கொண்டு சிறு ஒப்பனையுடன் கீழே இறங்கி வர, கீழே தோரணம் கட்டிக் கொண்டு நின்றிருந்த அதர்வா அதே நேரம் தற்செயலாக மேலே பார்த்தான்..

அழகிய சிவப்பு நிற பட்டுப்புடவையில் தேவதை போல் ஒயிலாக நடந்து வந்து பத்மாவை விட்டு அதற்கு மேல் அவனால் கண்களை அகற்ற முடியவில்லை.

பாதி படியில் இறங்கி வரும் போதே அவளும் தன்னவனை பார்த்து விட, அவனது கம்பீரத்தில் அவளும் ஸ்தமித்துதான் நின்றுவிட்டாள்..

இதுவரை அவன் போட்டுக் கொண்டு சுற்றும் சட்டை பாண்ட் இல்லாமல் அழகிய வெள்ளை நிற வேஷ்டி சட்டை அணிந்திருந்தவன், கையை முழங்கை வரை மடித்துவிட்டிருக்க அவன் கையில் இருந்த காப்பும் அவன் முழங்கைக்கு ஏறி இருந்தது..

நெற்றியில் லேசாக இருந்த சந்தனம் அவன் அழகை பல மடங்காக கூட்டி காட்ட, அவனிடம் இருந்து பார்வையை பத்மாவாள் சுத்தமாக விலக்க முடியவில்லை..

இருவருமே கண் சிமிட்ட கூட மறந்தவர்களாக ஒருவரை ஒருவர் பார்வையால் விழுங்கி கொண்டிருக்க, “மாமா..” என்று பத்மா பின்னால் இருந்து நாராசமாக ஒலித்த குரல் இருவரின் மோன நிலையையும் கலைத்தது...

அவள் பின்னால் ரோஷினி தான் வந்து கொண்டிருந்தாள்.. பத்மாவிடம் இருந்து பிடுங்கிய புடவையை வெகு நேர்த்தியாக சுமியின் உதவியுடன் உடுத்தி இருந்தாள்.. ஆனால் அந்த புடவை தான் அறுபது வயது கிழவிக்கு உடுத்துவது போல் இருந்தது.

அவளை திரும்பி பார்த்ததும் பத்மாவிற்கு மீண்டும் சிரிப்பு பீறிட்டு வர, அதை கட்டுப்படுத்தி கொண்டு வேகமாக இறங்கி வந்துவிட்டாள்..

பத்மா அவள் சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டு விட்டாளே ஒழிய கீழே நின்றிருந்த அபியால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை..

தான் நின்றிருந்த இடத்தில் இருந்த தூணை பிடித்து கொண்டு விழுந்துவிழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டான் அபிஷேக்.

அவனுடன் சேர்ந்து அங்கிருந்த அனைவருக்குமே ரோஷினியை பார்த்து லேசான முறுவல் தோன்றியது..

மகளின் கோலத்தை கண்டு வைத்தீஸ்வரிக்குமே சிரிப்பு வந்து விட, மகள் வருத்தப்பட போகிறாள் என்று அதை கட்டுப்படுத்தி கொண்டவர் அவள் அருகில் சென்று “ஆர்னா இது என்னடா..? ஏதோ பாட்டி புடவையை போய் கட்டி கொண்டு வந்து நிற்கிறாய்..?” என்று மெதுவாக கேட்க...

“ஏன் ம்மா இதற்கு என்ன குறை..? நல்லா தானே இருக்கு.. நான் இதில் தான் இருப்பேன் ம்மா..” என்று பிடிவாதமாக கூறிவிட்டாள் ரோஷினி.

அவளுக்கு பத்மாவிடம் தோற்று விடக்கூடாது என்பது மட்டும் தான் பிரதானமாக இருந்தது..

அதற்கு மேல் செல்ல மகளை வற்புறுத்த மனம் வராமல் அவர் விட்டுவிட, அதை பார்த்ததும் மேலும் பத்மாவிற்கு சிரிப்பு வந்தது..

அதை கட்டுப்படுத்திக் கொண்டே அவள் திரும்ப அங்கு அவளை உறுத்து விழித்து கொண்டு நின்றிருந்தான் அதர்வா.

அவன் பார்வையை பார்த்ததும் அவள் சிரிப்பு உள்ளேயே உறைந்து விட, ‘ஐயோ நம்ம மாட்டினால் மாமா நம்மை ஜூஸ் போற்றுவார்’ என்று நினைத்து கொண்டவள் நைசாக அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள்..

பெரியவர்களுக்கு விழாவிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்துக்கொண்டு பத்மா சுற்றிக் கொண்டிருக்க, அவளை படிகளுக்கு பின்புறம் இருந்த அறையில் இருந்து பூக்களை எடுத்து வர சொல்லி ராஜாத்தி சொல்ல அவளும் அந்த அறை நோக்கி சென்றாள்..

அங்கு சென்று பூக்கள் நிரம்பிய தட்டை எடுத்து கொண்டு பத்மா திரும்ப, கீழே யாரோ சிந்தி வைத்திருந்த எண்ணை அவள் காலை இடறிவிட்டது..

அதில் வழுக்கி விழ போனவள் பதறி பக்கத்தில் பிடிக்க ஏதாவது இருக்கா எனத் தேட, அவள் விழுந்து விடாமல் இரு வலுவான கைகள் அவளை தாங்கி கொண்டது.

அதர்வா தான் அவளை தாங்கி பிடித்திருந்தான்..!

தனது முகத்திற்கு வெகு அருகில் இருந்த பத்மாவின் முகத்தை உற்று பார்த்து கொண்டிருந்தவனுக்கு அவள் வெற்றிடையில் பதிந்திருந்த தன் கைகளை விலக்க மனம் வரவில்லை போல்..

அவன் அசையவே இல்லை; கணவனை வெகு அருகில் அதுவும் தன்னையே பார்க்கும் பார்வையுடன் கண்டதும், பத்மாவிற்கும் அவனிடம் இருந்து கண்களை விலக்க முடியவில்லை..

அவளை பிடித்த கைகளை தளர்த்தாமலேயே மெதுவாக அவளை நிமிர்த்தியவன், தன் பார்வையை மாற்றி கொள்ளாமல் மெதுவாக அவள் இதழ்களை சிறை செய்திருந்தான்..

அவனது ஆழ்ந்த முத்தத்தில் இருந்து விலக தோன்றாமல் பத்மாவும் அவனுக்கு ஒத்துழைத்து கொண்டு அப்படியே நின்றுவிட்டாள்..!

வெகுநேரம் நீடித்த அவர்கள் இதழ்யுத்தம் “பத்மா..” என்று அவளை தேடி கொண்டு வந்த ராஜாத்தியின் குரலில் தான் முடிவு பெற்றது..

அன்னையின் குரலிக் சட்டென விலகிவிட்ட அதர்வா உடனே தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தலையை அழுந்த கோதி முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டான்..

ஒருவாறு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு திரும்பியவன் இப்போது தெளிந்திருக்க, பத்மாவோ இன்னும் சிவந்திருந்த முகத்துடன் தலைகுனிந்து கொண்டு நின்றிருந்தாள்..

அவள் முகத்தை ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தியவன் அவள் கண்களை உற்று பார்த்து கொண்டே பேசினான்..

“என் அம்முக்குட்டிக்கு அந்த கேவலமான புடவையை கொடுத்தல்ல.. அதற்கான தண்டனை தான் இது..” என்றவன் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவன் சென்ற பின்பும் அவர் கூறிய வார்த்தையின் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் நின்றிருந்தாள் பத்மா!

‘எப்போ பாரு இவரே வந்து கிஸ் அடிக்க வேண்டியது.. பின் என்னை ஏதாவது குற்றம் சொல்ல வேண்டியது..’ என சலித்து கொண்டே வெளியே வந்து சேர்ந்தாள்..

**********

சிறிது நேரத்தில் நிச்சியதார்த்த விழா தொடங்க பிரியாவிற்கு எதிர் திசையில் அமர்ந்திருந்த விஷ்ணு அவளை கண்களாலேயே விழுங்கி கொண்டிருந்தான்..

பின் காலையில் இருந்து இவர்கள் அவனை தன்னவளை பார்க்கவே விடவில்லையே..

தேவதை போல் அழகாய் வளம் வந்தவளை பார்க்க விடாமல் வீடே சதி செய்தால் அவனும் என்ன தான் செய்வான்.

அதான் இப்போது சந்தர்ப்பம் கிடைத்ததும் கண் சிமிட்ட கூட மறந்து தன்னவளை அணுஅணுவாய் ரசித்து கொண்டிருந்தான் விஷ்ணு..

ப்ரியாவும் தலைகுனிந்து அமர்ந்திருந்தது போல் தெரிந்தாலும் ஓரக்கண்ணால் தன்னவனை ரசித்துக்கொள்ள தவறவில்லை.

சுற்றி இருந்தவர்கள் கேலி கிண்டலோ பெரியவர்கள் நிச்சய பேச்சோ எதுவுமே இருவர் காதிலும் விழுந்தது போல் தெரியவில்லை..

ஒரு கட்டத்தில் சுமி, ப்ரியாவை பலமாக இடிக்கவும் தான் அவளுக்கு சுய நினைவே வந்தது..

அவள் இடித்ததில் முகத்தை சுருக்கி கொண்டே, “என்னடி..?” என்று பிரியா எரிச்சலுடன் கேட்க...

“ம்ம்.. நிச்சயத்தை நிறுத்திட்டாங்க.. அதை கவனிக்காம மரம் மாதிரி உக்காந்திருக்க..” என்றாள் சுமி.

அவள் கூற்றில் ஒரு நொடி அதிர்ந்து விழித்த பிரியா பின் தான் அவள் உதட்டில் தவழ்ந்த குறும்பு புன்னகையை கவனித்தாள்..

“சுமி எதில் விளையாடுவதுனே இல்லையாடி.. ஒரு நிமிடம் பயமுறுத்திட்டாயே..” என்று சிணுங்க...

“பின்ன என்ன எவ்ளோ நேரமா கூப்பிடறாங்க.. அங்க பார் மோதிரம் மாத்த பெரியவங்க கூப்பிடுட்டு இருக்காங்க.. எழுந்திரு..” என்று சுமி எரிச்சலும், குறும்பும் கலந்து கூற, சிறு வெட்க சிரிப்புடன் எழுந்து கொண்டாள் பிரியா.

இங்கே இதேபோல் ஆதர்வாவும் விஷ்ணுவை ஓட்டி தான் எழுப்பிவிட்டான். இருவர் கைகளிலும் அழகிய மோதிரம் கொடுக்க பட, ப்ரியாவின் கைகளை பற்றிய விஷ்ணுவின் கைகளில் அதீத அழுத்தம் இருந்தது.. அந்த அழுத்தமே அவன் காதலுக்கு சாட்சியாய்..!

அவள் கண்களை பார்த்து கொண்டே மெதுவாக மோதிரத்தை அவள் கைகளில் மாட்டியவன், “ரொம்ப அழகா இருக்கடி.. இப்படி உன்னை தள்ளி வச்சு மனுசனை கொல்லுறாங்களே..” என்று மென்குரலில் புலம்ப, பெண்ணவளின் முகம் மேலும் வெட்கத்தில் சிவந்து போனது.

அடுத்து அவள் முறை என்பதால் அவன் கைகளை மென்மையாக பற்றி அவளும் குனிந்த தலை நிமிராமல் அவனுக்கு மோதிரம் அணிவித்தாள்.

தனது கைகளில் சிக்கி இருந்த பெண்ணவள் கைகளை மேலும் அழுந்த ஒரு முறை பிடித்துவிட்டு விடுவித்தான் விஷ்ணு.. அவள் கைகளை பிடித்து முத்தமிட உள்ளுக்குள் பேராவல் எழுந்தாலும் சுற்றி இருந்த பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து அவன் அமைதி காக்க வேண்டி இருந்தது.

நிச்சிய விழா தொடர்ந்து சிறப்பாக செல்ல இத்தனை நேரம் நிச்சியத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பத்மா கணவனை கண்களால் தேடினாள்.. அவனோ அவளுக்கு எதிரில் தான் நின்றிருந்தான். அவள் அவனை பார்த்த போது, அவன் கண்களும் அவளை சந்தித்தது..

இருவரும் ஒரு நொடி அப்படியே பார்த்து கொண்டிருக்க லேசாக பார்வையை திருப்பிய பத்மா கண்களில் அதர்வாவிற்கு மிக அருகில் நின்றிருந்த ரோஷினியை பார்த்ததும் இத்தனை நேரம் இருந்த இதம் மறைந்து எரிச்சல் வந்தது.

அவள் நிற்க வேண்டிய இடம் அல்லவா.. எவளோ ஒருத்தி உரிமையுடன் நின்றிருந்தாள் கோபம் வராமல் என்ன செய்யும்..?

அந்த எரிச்சலில் அவள் முகத்தை திருப்ப, ஒரு நக்கல் சிரிப்புடன் அதர்வாவும் திரும்பிவிட்டான். பத்மா என்ன தான் வேறு புறம் திரும்பி விட்டாலும் அவள் கண்கள் அவளறியாமலேயே அடிக்கடி அவர்கள் புறம் சென்று மீண்டு கொண்டு தான் இருந்தது..

ரோஷினி ஏதோ இளித்துஇளித்து பேசுவதும், அவளுக்கு அதற்கு மேல் இளித்து கணவன் பதில் சொல்வதும் அவள் பிபியை ஏகத்துக்கும் எகிற வைத்து கொண்டிருந்தது..

சிறிது நேரத்தில் எப்போதும் போல் அவள் கண்கள் அவர்கள் புறம் திரும்ப, அங்கு திடீரென்று ரோஷினியை காணவில்லை.

மனதில் ஒருபுறம் நிம்மதியாக இருந்தாலும் அவள் எங்கே என்று பத்மா தேட தூரத்துல ரஞ்சித் அவள் கைகளை இழுத்து கொண்டு செல்வது தெரிந்தது.. அதை பார்த்ததும் ஒரு நொடி அதிர்ந்துவிட்டாள் பத்மா..!

அவன் ஏதாவது அவளிடம் தவறாக நடந்துகொள்ள போகிறானோ என்று முதலில் பதறினாலும், பின்பு தான் ரோஷிணிக்கும், அவனுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமோ என்ற சந்தேகம் பத்மாவிற்கு வந்தது...

எதுவானாலும் இன்று கண்டுபிடித்து விட வேண்டியது தான் என்று நொடியில் முடிவு செய்து கொண்டவள் யார் கவனத்தையும் கவராதவாறு அவர்களை பின் தொடர்ந்தாள்..

அவர்கள் இருவருமே பக்கத்தில் இருந்த தோப்பு வீட்டிற்கு தான் சென்றனர்..

வீட்டிற்குள் நுழைந்த உடனேயே கதவை கூட சாத்தாமல் கத்த ஆரம்பித்துவிட்டான் ரஞ்சித்..

“ஹே ரோஷினி உன்னை எதற்கு கூட்டிட்டு வந்தால் என்ன வேலை பாக்குற. எதற்கு இப்போ அதர்வா பின்னாடி சுத்திட்டு இருக்க..” என்று அவன் கத்த வெளியில் மறைந்து நின்று அதை கேட்டுக்கொண்டிருந்த பத்மாவிற்க்கோ ஷாக் அடித்தது போல் இருந்தது..

கடைசில் இவன் தானா.. இவன் தான் இவளுக்கு கூட்டா.. ஆனால் ஏன் இப்படி செய்கிறார்கள்..?? என ஒன்றும் புரியாமல் பத்மா நிற்க, ரோஷினி தொடர்ந்து பேசினாள்..

“ஹீ... ஹீ.. அதெல்லாம் ஒன்னும் இல்லை ரஞ்சித்.. எனக்கு அவன் மாமா முறை இல்லையா.. இப்படி கிளோஸ்ஸா இருந்தா தானே யாருக்கும் சந்தேகம் வராது..” என்று கேவலமான சிரிப்புடன் அவள் கூற..


“ஹேய் உன் நடிப்பை என்கிட்டயே காட்டாதடி.. என்ன நீ தனியா அவனை கரெக்ட் பண்ணி மொத்த சொத்தையும் ஆட்டைய போடலாம்னு பாக்கறியா..?” அவளை பற்றி நன்கு தெரிந்தவனாக அவள் கைகளை அழுந்த பற்றி ரஞ்சித் கோபத்துடன் கேட்க, அவன் பிடித்திருந்த கைகள் வலித்ததில் முதலில் அதை விடுவிக்க போராடினாள் ரோஷினி.

அதே நேரத்தில் வெளியில் நின்றிருந்த பத்மா காலடியில் ஏதோ ஊர்வது போல் இருக்க அவள் அனிச்சை செயலாய் “ஸ்ஸ்..” என்று சத்தம் போட்டுவிட்டாள்.

சுற்றி யாரும் இல்லாத மயான அமைதியில் அவள் குரல் தெளிவாய் ரஞ்சித் காதில் விழுந்து விட, “ஹே யார் அது..” என்று கத்தி கொண்டே வெளியே வந்து விட்டான் ரஞ்சித்.

அப்போதுதான் சுதாரித்து ஓடிவிடலாம் என்று நினைத்து பத்மா நகர, அவளை எக்கி பிடித்துவிட்டான்.

பத்மாவின் வலது கை வசமாக ரஞ்சித்திடம் மாட்டிவிட, “டேய் விடுடா..” என்று கத்தி கொண்டே கையை விடுவிக்க போராடினாள் பத்மா..
அவனோ அவள் எதை கேட்டாலோ, என்ன செய்யபோகிறாளோ என்ற ஆத்திரத்தில், "இங்க எப்ப டி வந்த.. என்ன கேட்ட..? ஒழுங்கா சொல்லு.." என்று கத்திகொண்டே அவள் கையை மேலும் அழுந்த பற்றினான்..

அவன் அழுத்தியதில் கை வலி அதிகமாக பத்மாவால் எதுவுமே பேச முடியவில்லை..

அவள் வலியில் "ஐயோ.." என்று சத்தமாக கத்த

"சரியாக அதே நேரத்தில் தூரத்தில் ஆள் அரவம் கேட்டது.."

யாரோ வருவது போல் தெரியவும், அவளை கீழே தள்ளி விட்டு ரோஷினியை இழுத்து கொண்டு அந்த இடத்தில் இருந்து ஓடி விட்டான் ரஞ்சித்..

பத்மாவோ கை வலியிலும் மனதில் இருந்த குழப்பமும் தாங்காமல் அங்கேயே மயங்கி சரிந்தாள்..

தேடல் தொடரும்...


https://srikalatamilnovel.com/community/threads/ஸ்வராகினியின்-திருடி-சென்றாய்-இதயத்தையே-கருத்து-திரி.1023/
 
Last edited:

aishu

Bronze Winner
இதயம் 21:
ரஞ்சித் கையை முறுக்கி விட்டு ஓடியதும் பத்மா வலி தாங்கமுடியமல் மயங்கி சரியப்போக அங்கு வந்த அதர்வா அவளை இருகைகளால் தாங்கியிருந்தான்.
“பத்மா… ஏய்! பத்மா…” என்று அவளை பதட்டத்துடன் எழுப்பி நிறுத்தியவன்… சுற்றும்முற்றும் யாரும் தென்படுகிறார்களா என்று துழாவினான். ஆனால் யாரும் அங்கே நடமாட்டம் தெரியாததால் அவன் கரங்களில் அள்ளிக்கொண்டு மரத்தின் நிழலில் அமர வைத்தவன்... ஓடையில் சிறிது தண்ணீரை எடுத்து தெளித்தான் அதில் தெளிந்து எழுந்தவள் எதிரில் தன் கணவன் இருப்பதை பார்த்து முகம் மலர்ந்தாள்.
ஆனால் அவனோ கடுகடுப்பான முகத்தை வைத்துக் கொண்டான்.
“உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவே இருக்காதா? இப்படி யாருமே இல்லாம தனியா வந்து மாட்டிகிறதே உனக்கு பிழைப்பா போச்சா?” என்று அவளை சரமாரியாக கடிந்துக் கொண்டான்.
அவனின் பேச்சில் அவளும் கோபம் கொண்டாள்...
“ஆமாம் நான் இப்படி எங்கப் போனாலும் தனியா மாட்டிக்கனும்னு வேண்டுதலை வைத்திருக்கேன் பாருங்க”
“இனி இந்த மாதிரி எதிர்த்து பேசுறதை விட்டுட்டு ஜாக்கிரதையா இருக்கப்பாரு” என்று கோபமாக கடிந்துக்கொண்டாலும் அதில் வெகுவாக அவளின்மேல் அக்கறையே பொதிந்திருந்தது. ஆனாலும் அவனின் கோபத்தை மீறி அவளுக்கு அது தென்படாமல் போனது.
“ஆமாம்! ஆமாம்! இதெல்லாம் பெரிசா பேசுவாரு... ஆனா ஒரு போலீஸ்சா இருந்துட்டு யார் உண்மையான திருடங்கன்னு கூட கண்டு பிடிக்கமாட்டாரு” என்று கடிந்த பற்களுக்கிடையே சினத்துடன் கூறியிருக்க, அவளை சலனமில்லாத பார்வை மட்டுமே பார்த்தான். அவளின் பேச்சிற்கு எதிரொலி இருக்குமா என்று உற்று நோக்கி ஒன்றுமே தெரியவில்லை; சில நிமிடங்கள் கழித்து அவன் வாய்திறந்தவன்...
“எப்படி நான் சல்லடை போட்டாலும் உன்னை மிஞ்ச யாரும் கிடையாது... திருட்டு விசயத்துல!” என்றவனின் சொல் அம்புகளில் அவள் விக்கித்து நின்றாள். அவளின் அதிர்வை கண்டும் காணாமல் பார்த்தவன்...
“இங்கேயே நிற்காம ஒழுங்கா பத்திரமா வீடு போய் சேரு... இல்லனா; திரும்ப எங்காவது மயங்கி விழுந்து வைக்காத எல்லா இடத்துலையும் வந்து நானே காப்பாற்ற நான் இளிச்சவாயன் இல்லை” என்று கூறிவிட்டு விறுவிறுவென நடந்து சென்றுவிட்டிருந்தான்.
அவனின் வார்த்தைகளில் அடிபட்டுப் போனவளாக அவள் மனம் நைந்து கலங்கிய கண்களுடன் நின்றிருக்க அவளின் அருகில் நெருங்கினான் அபிஷேக்.
“பத்து உன்னை எங்கெல்லாமோ தேடுறேன் நீ இங்க என்ன பண்ணுற?” என்று சாதாரணமாக கேட்டுக்கொண்டு வந்த அபிஷேக் அவளின் கலங்கிய கண்களை பார்த்தான்...
“பத்து என்னாச்சு? எம்ப்டன் உன்னை ஏதும் சொன்னாரா?”
“ஆமாம்டா” என்பது போல் தலையசைத்தவள் ரஞ்சித் ரோஷினியை பற்றி கூறினாள்.
“அட மொள்ளமாறிங்களா போலீஸ்காரன் ஊட்டுலேயே திருடங்களா?” என்று அவன் வியப்பான கோபத்தில் கூறியிருந்தான்.
“நீ வேறடா... இந்த மாமனுக்கும் புத்திகித்தி கூறுகெட்டு போச்சா தெரியலடா? எப்போ பாரு மத்தவங்களை சொன்னா உங்களை விடவா ‘வெவ்ஹாவ.. வெஹ்வா..’ அப்படின்னு கிறுக்குத்தனமா உளறிட்டு இருக்காரு” என்று பலிப்புகாட்டியபடி கூறியவள்... “ஆனா ஒன்னு என்னைக்காவது அவங்க மாட்டுவாங்க அப்போ இருக்கு என் மாமனுக்கு” என்று கருவிக்கொண்டாள்.

**********************

ரஞ்சித் ரோஷினி இருவரும் தப்பித்து ஓடி வெட்டவெளிக்கு வந்து நின்றிருந்தார்கள்... இருவரும் மூச்சு வாங்க நிற்க ரஞ்சித் தான் சுதாரித்து சுற்றும்முற்றும் பார்த்தவன் துரிதமாக அவளிடம் பேசத் தொடங்கினான்.
“இங்க பாரு ரோஷினி நீ இங்க வந்திருக்கிறது எதுக்குன்னு நினைவுபடுத்திக்கோ காரியம் முடிஞ்சதும் உனக்கும் சொற்பமா நான் தரேன். அதை வாங்கிட்டு அமைதியா போற வழியை பாரு... அதை விட்டுட்டு அவன் பின்னாடி சுத்திட்டு இருந்தா எனக்கு கெட்ட கோபம் வரும் பார்த்துக்கோ” என்று கூறவும் ரோஷினிக்கு ஜிவுஜிவுவென கோபம் தலைதூக்கியது ஆனால் அதைவிடுத்து தன் கோபத்தை மறைத்தவளாக பேசினாள்.
“இருக்கட்டும் ரஞ்சித் அதை நான் பார்த்துக்குறேன்... அதுக்காக என்னால சுத்தமா தள்ளி நிற்க முடியாது அப்புறம் என்னை சந்தேகப்படுவங்க” என்று திக்கித்திணறி கூற, அவளின் பேச்சின் தடுமாற்றம் காட்டிக் கொடுத்துவிட்டது.
“ஒஹ்! அவனை ரூட் விட பார்க்கறியா? ஏன் இந்த வீட்டுலையே அவன் ஒருத்தன் தான் ஆம்பளையா என்னால பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?” என்றவனின் பேச்சில் பொதிந்திருந்த உள்ளர்த்தத்தை புரிந்துகொண்டுவிட்டாள் மாடர்ன் யுவதி ரோஷினி. எதிர்க்குஎதிரி நண்பன் என்றால் அவனின் எண்ணத்தை புரிந்துக் கொள்ளாமல் போய்விடுவார்களா?
“சரி ரஞ்சித் இனி நான் பார்த்து நடந்துக்குறேன் ஓகேயா இங்கயும் யாரும் வந்திரப் போறாங்க நீ கிளம்பு நான் சுத்தி பார்க்கிற மாதிரி பாவ்லா காட்டிட்டு மெதுவா வந்துடறேன்” என்றவளின் பதிலில் அவன் திரும்பி நடக்க அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவளின் பார்வை விகாரமாய் மாறியது!
“நீ எல்லாம் ஒரு ஆளு உனக்கு என்னை கேட்குதா?” என்று கருவியவள் மனதில் தோன்றிய ஒரு திட்டத்துடன் சென்றிருந்தாள்.
ரோஷினி யோசனையுடன் நடந்து சென்றுகொண்டிருக்க வழியில் பள்ளிச்சிறுவர்கள் ஒருவர்பின் ஒருவராக கூட்டமாக சென்றுகொண்டிருந்தனர். ரோஷினி யோசனையாக பார்த்தவள் வேகமாக சென்றுகொண்டிருந்த ஒரு சிறுவனை பிடித்து நிறுத்தி என்னவென்று விசாரித்தாள்.
“டேய் எங்கடா எல்லாரும் ஓடுறீங்க?”
“அதுவா இந்த ஊருல படம் எடுக்க போறாங்கலாம் அதான் நாங்க எல்லாம் அதை பார்க்கப்போறோம்”
“அது என்ன அதிசயமா?”
“அக்கோய் இது என்ன பட்டணமா? கிராமம்! இங்கெல்லாம் அது எங்களுக்கு அதிசயம் தான்” என்றவன் அடுத்த கேள்விக்கு விடையளிக்க முடியாது ஓடி சென்றுவிட்டான் ரோஷினி வேகநடையெடுத்து வீட்டை நோக்கி சென்றாள்.
**********************
“ஐயா வணக்கம்ங்க நம்ம பண்ணையார் இருக்காருங்களா?” என்று அதர்வாவிடம் வினவினார் பெரியவர் ஒருவர்.
“அவர் கொஞ்சம் டவுன் வரைக்கும் போயிருக்காரு என்ன விசயம்ன்னு சொல்லுங்க” என்று அவரை விசாரித்தான். அதேசமயம் அவர்கள் பின்னால் நின்றிருந்த இரண்டு பேர் வெளிநாட்டவர்களையும் யோசனையுடனே பார்த்தபடி கேட்டான்.

“ஐயா இவங்க பட்டணத்துல இருந்து வராங்களாம் ஏதோ குறும்படம் எடுக்கப்போறேன் விவசாயத்தை பத்தியும் விவசாய நிலத்தையும் பற்றியுமாம். அங்க பண்ணை வீடு மாதிரி ஷெட் போட்டு எடுக்கறாங்கலாம்” என்று கூறியதும் அந்த குழுவினரிடம் நேரே சென்று பேசினான் அவர்களிடம் பேசியவன் சிறிதுநேரம் யோசித்துவிட்டு அனுமதி அளித்திருந்தான்.
அனைவரும் கலைந்து சென்றிருக்க பத்மா யோசனையுடன் பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டிருந்தாள்.
நிச்சயதார்த்த விழா முடிந்து விஷ்ணு குடும்பத்தினர் அடுத்ததினம் இரவு கிளம்புவதாக திட்டமிட்டிருந்தனர். இன்று இரவு கிளம்பும் ஏற்பாட்டில் ஈடுபட்டுகொண்டிருக்க விஷ்ணு, ப்ரியாவை எப்படியும் சந்தித்துவிடும் வேகத்தில் இருந்தான். அவன் இங்கிருந்து சென்றுவிட்டால் இனி திருமணதிற்கு தான் அவனால் பார்க்க இயலும் என்பதால் இப்படி திட்டமிட்டான்.
இருவரும் வீட்டினரிடம் சாக்கு சொல்லிவிட்டு குளத்தின் படித்துறையில் அமர்ந்தார்கள். விஷ்ணு மேலே அமர்ந்திருக்க பிரியா அவனிற்கு கீழ் படிக்கட்டில் அவனை ஒட்டியவாறு அமர்ந்திருக்க, அவன் கரங்கள் அவளை சுற்றிவளைத்திருக்க தாடையை அவள் தலைமேல் பொருத்தியவாறு அமர்ந்திருந்தான் விஷ்ணு.
“ஃப்ரீ நான் ஊருக்கு கிளம்பனும்டி... இனி நம்ம கல்யாணத்துக்கு தாண்டி பார்க்க முடியும்”
“ஹ்ம்ம்...”
“அதுவரைக்கும் பேசக்கூட முடியுமோன்னு தெரியலைடி?”
“ஹ்ம்ம்”
“வேலை எல்லாம் கொஞ்சம் சீக்கிரம் முடிச்சா தான் கல்யாணத்துக்கு நான் ஃப்ரி ஆக முடியும்டி”
“ஹ்ம்ம்...”
அவன் சொல்வதற்கெல்லாம் ‘ஹ்ம்ம்’ என்ற ஒற்றை சொல்லை தவிர அவள் வேறு பேசாமல் இருக்க அவளின் தலையை திருப்பி தாடையை இறுக்கிப் பிடித்தவன்.
“ஏய்... என்னடி இது? நான் சொல்லிகிட்டே இருக்கேன் ‘ஹ்ம்ம்’ மட்டும் சொல்லுற உனக்கு கொஞ்சம் கூட என்னை பிரியறேன்னு வருத்தமே இல்லையா?”
“மச்... என்னங்க நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க? நானே உங்க கூட இருக்கப்போற இந்த நேரத்தை முடிஞ்சவரை சந்தோசமா செலவு பண்ணலாம்னு வந்தா நீங்க இப்படி சொல்லுறீங்க? உங்களுக்கு இந்த கொஞ்ச நாள் தான் கஷ்டம். அப்புறம் நான் உங்க கூடதானே காலம்பூரா இருக்கப்போறேன் நான் ஏன் பிறந்தவீட்டுல இருக்கிற சந்தோசத்தை இந்த இடைப்பட்ட காலத்துல அனுபவிச்சாதானே உண்டு” என்று அவனின் மடியில் கையூன்றி தலைசாய்த்துக் கொண்டே காதலுடன் கூறினாள். அவளின் பேச்சில் அவளின் கண்களை ஊடுருவி பார்த்தவன்...

“ஃப்ரீ” என்று தீனமாக அழைத்து அவளின் நெற்றி வகுட்டில் தன் உதடுகளை ஒற்றியெடுத்தான். மெல்ல அவன் உதடுகள் இமைகளிலும் முற்றுகையிட கீழிறங்கிய அவன் உதடுகள் அவளின் அதரங்களில் முற்றுகையிட்டன. வெகுநேரம் அவளின் இதழ்களில் தேன் சுவைத்தவன் மெல்ல அவளிடமிருந்து விலகினான்...
“கிளம்பறேன் ஃப்ரீ இனி கல்யாணம் வரைக்கும் இது தாங்கும்” என்றவன் அவளை தன் தோலில் சாய்த்துக் கொண்டான் அவனின் காதலில் கட்டுண்டவள் அவனின் தோலில் வாகாக சாய்ந்துக்கொண்டாள்.
******************
பத்மா, அபிஷேக் இருவரும் வரப்பில் நடந்து கொண்டிருக்க அங்கே கூட்டமாக நின்றிருந்தவர்களை பார்த்து யோசனையுடன் சென்றார்கள்... அங்கே சென்று பார்க்க அந்த படத்தின் குழுவினர்கள் காட்சியை படம் பிடித்து கொண்டிருந்தனர்.
“என்ன பத்து... இங்க ஷூட்டிங் எடுக்கறாங்களா? இந்த வரப்பட்டிகாட்டுலையா?” என்றவனை முறைத்துப் பார்த்தாள்.
“டேய் இனி நீ இந்த ஊரை பட்டிக்காடுன்னு சொன்ன உன்னை கைமா பண்ணிருவேன் பார்த்துகோ” என்று மிரட்ட...
“ஒஹ் எம்ப்டன் இந்த ஊருதானே அப்போ நீ சொல்லத்தானே செய்வ?” என்றவன் அமைதியாக திரும்பிக் கொண்டான்.
அது கிராமம் என்பதால் கூட்டம் அதிகமாக சூழ்ந்திருந்தது... சிறுவர்கள் முதல் இளம்குருத்து வரை அங்கே வட்டமிட்டிருந்தது.
“ஹேய் அங்க பாருடி உன்னை பார்த்து கண்வைச்ச ஆளு” என்று கூறினாள் பார்வதியின் தோழி.
“பண்ணிமூஞ்சு வாயன் இங்கயுமா நிற்கிறான்? கொஞ்சம் சும்மா இருடி பார்த்தா ஜொள்ளுவிட என்முன்னாடி வந்திருவான்” என்று கூறிவிட்டு திரும்ப அவன் பார்த்துவிட்டிருந்தான்.
“வாவ்... பாரு! என்னை பாரு...” என்று சந்தடி சாக்கில் அவன் எகனைமோனை அடிக்க, அவளோ அவள் தோழியை ஆனமட்டும் முறைத்து பார்த்தாள்.
“ஐயையோ முறைக்கிறாளே... முறைக்கிறாளே... ஹிஹிஹி” என்று வெள்ளையாக சிரித்தவள் எங்கம்மா கூப்புடுது போல நான் போறேன்” என்று தப்பித்து ஓட அவள் பின்னே பார்வதியும் ஓடினாள்...
“ஏய் நில்லுடி மவளே என்கிட்டே மாட்டுன அம்பிட்டு தான்” என்று கூறிக்கொண்டே ஓடினாள்.
அபிஷேக்கோ அவள் ஓடியதும் ஏமாற்றத்துடன் கூட்டத்தையே பார்வையால் சுழற்றினான் ச்சே ஓடிட்டாளே என்று உள்ளங்கையை குத்திக் கொள்ள அவள் அருகில் நின்றிருந்த பத்மா அவனை ஒரு மாதிரியாக பார்த்தாள்.
“என்னடா சைட்டா?” என்று உதட்டை வளைத்து ஒருமாதிரி குரலில் கேட்க...
“ஏன் நான் எல்லாம் சைட் அடிக்கக்கூடாதா?”
“ம்ம்ம்... சைட்டு...? எம்ப்டன் ஊரு இது அதை மனசுல வச்சுக்கோ”
“ஏன் எம்ப்டன் ஊர்ல ஒரு பொண்ண சம்மந்தம் இல்லாம தாலி கட்டலாம் நான் பொண்ண சைட் அடிக்க கூடாதா”
“போதும் அவர் என் மாமா... என் புருஷன்! இனி எம்ப்டன்னு சொல்லாத” என்று அவனுக்காக பரிந்துக் கொண்டு சிலிர்த்துக்கொண்டாள்.
“அப்போ நீ பாட்டுக்கு வீட்டுக்கு போ நான் என் பாருவை பார்த்துட்டு வரேன்” என்று கூறியவன் கூட்டத்துக்குள் நுழைய...
“எக்கேடோ கெட்டுப்போ” என்று கூறிவிட்டு அவள் நடையை கட்டியிருந்தாள்... அபிஷேக் கூட்டத்துக்குள் நுழைய கூட்டம் கலைய ஆரம்பித்தது.
“என்னடா இது நாம வந்ததும் எல்லாரும் கலைஞ்சு போறாங்க” என்று பார்க்க அன்றைய காட்சி படம் பிடிப்பு முடிந்து நகர ஆரம்பித்திருந்தார்கள்.
“ஹ்ம்ம்கும் ஷூட்டிங் முடிஞ்சு போறாங்களாம் சரி நாளைக்கு பார்த்துக்குவோம்” என்று தனக்குள் கூறிக் கொண்டு திரும்பி நடக்க எத்தனிக்க... அந்த படபிடிப்பில் இருந்த வெளிநாட்டு பெண்மணி புடவையை தூக்கி கையில் பிடித்துக் கொண்டு ஓடையில் கால் நனைத்துக் கொண்டிருந்தார் அந்த பெண்ணின் பக்கத்தில் பார்வதியும் அவள் தோழியும் நின்றிருக்க, அவளின் பக்கத்தில் செல்ல பார்த்து நகரந்தவன் அந்த வெள்ளைக்காரப் பெண் ஓடையில் இருந்த நீரை எடுத்து வாரி இறைக்க அது அவன் மேல் பட்டுவிட்டது. அதை கண்ட அந்த பெண் அவனருகில் ஓடிவந்தவள்...
“ஒஹ் நோ! சொரி... சொரி...” என்று கூறிக் கொண்டே அவன் சட்டையிலும், முகத்திலும் துளிர்த்திருந்த நீரை துடைக்க...
அந்த பெண்ணின் கரங்கள் அவன் மேல் பட்டதும் அபிஷேக்கிற்கு கேட்கவும் வேண்டுமா அவன் மெய்மறந்தவனாக காற்றில் மிதக்க ஆரம்பித்தான்.
“ஐயையோ என்னடி இந்தம்மா தெரியாத்தனமா அவன்மேல கைய வைக்குது” என்று பார்வதியின் தோழி கூற...
“விடுடி இன்னைக்கு அந்தம்மாவுக்கு நேரம் சரியில்லை போல... கருவாயன் என்கிட்டேயும் கடலை போட்டுட்டு அந்த வெள்ளைகாரி கையை தொட்டதுக்கும் மயங்கி நிற்கிறான்” என்று பொரிந்தாள்.
“ஹாஹா... என்னடி அந்த கருவாயன் மேல கண்ணா?” என்று கேலி செய்ய...
“கொஞ்சம் சும்மா இரு அவன்மேல கண்வைக்கிறேன் நானு? வைத்தெறிச்சல கிளப்பாத போ” என்று கூறிவிட்டு அவர்களை நோக்க அவனோ அவளின் கரங்களை பிடித்துக் கொண்டிருந்தான்.
“எதுக்கு இத்தனை மன்னிப்பு... நான் தப்பா நினைக்கவேயில்லையே” என்று கற்பனையில் காற்றில் மிதந்தபடியே கூறினான்.
“உங்களுக்கு ரொம்ப பெரிய மனது”
“யாரு எனக்கா?”
“உங்களுக்கு தான் சொல்லுறேன்... ஆமாம்! உங்க பெயர் என்ன?”
‘என் பேரா? ஹாஹா கிளி கேட்குதே பார்வதி பார்க்காம ஓவராஹ் பண்ணினாள அவளை விட்டுதள்ளிட்டு நீ இந்த வெள்ளைபுறா கூட ஜோடி போடுடா கான்’ என்று மானசீகமாக பேசிக் கொண்டவன் அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்தான்...
“உங்களுக்கு தமிழ் தெரியுமா?”
“ஆமாம் நான் படத்தில் நடிப்பதற்காக கற்றுக் கொண்டேன் உங்கள் பெயரை சொல்லுங்கள்”
“என் பேரு, கான்... அபிஷேக்கான்!” என்று நிறுத்தி நிதானமாக ஒருமாதிரி குரலில் கூற...
“வாவ் வெரி நைஸ் நேம்... ஐ லைக் இட்” எனக்கு இந்த ஊரை நீங்க சுற்றி காட்டுறீங்களா?”
“ஹான் ஸ்வீட் சாப்பிட கசக்குமா என்ன கண்டிப்பா சுத்தி காண்பிக்குறேன்”
“தேங்க் யூ கான்... உங்களை நான் செல்லமாக கான் என்று தான் கூப்பிடுவேன் ஒகேவா டாலு” என்று அவன் கன்னத்தில் தட்டி கூற அவனோ மயங்கி விழாத குறையாக நின்றிருந்தான்.
அந்த பெண் சென்றதும் பார்வதியும், தோழியும் அவன் அருகில் வந்தவவர்கள்...
“டேய் டோம்பர் தலையா அந்த பொண்ணு போய்ட்டா... அப்படியே காத்துல மிதக்கிற போல? பாவம் அந்த பிள்ள வெளிநாட்டுக்காரி அப்பாவி அவளை விட்டுவை” என்றாள் பார்வதி.
“உனக்கு பொறமை. நீ தான் என் லவ்வை ஏத்துகலை; என்னை திரும்பியும் பார்க்கமாட்டேன்னு சொல்லிடேல இன்னும் ரெண்டு நாளைல நான் அந்த பிள்ளைய லவ் சொல்ல வைப்பேன் பாரு” என்று கூற அவள் முகம் மாறிப்போனது!
“ஹஹஹா அதையும் நாங்க பார்க்கத்தானே போறோம் நீ வா பார்வதி போகலாம்” என்று அவள் தோழி அவளை இழுத்து சென்றிருக்க அபிஷேக் குதூகலமாக சென்றான்.
****************
அதர்வாவின் உடைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் பத்மா. அப்போதே வெளியில் வேலையை முடித்துக் கொண்டு திரும்பியிருந்த அதர்வா அவளை கதவின் புறம் நின்று அவளையே மையலாக பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கழுத்தில் அவன் கட்டிய தாலி மின்னலென ஜொலித்து கொண்டிருக்க நாக்கை கடைவாயில் துருத்தி கொண்டு தனக்குள்ளாக சிரித்துக் கொண்டான். அவனின் உரிமை அதில் தெரியவர அவளை சீண்ட நினைக்கும் நேரம் அவள் திரும்ப, இவன் பார்வையை சடுதியில் மாற்றிக் கொண்டவனாக அறைக்குள் அப்போதே நுழைபவன் போல உள்ளே நுழைந்தான். சரியாக அவன் உள்ளே நுழைந்து பத்மாவிடம் பேச முனையும் நேரம் “அத்தான்” என்று கூறிக்கொண்டு வந்தாள் ரோஷினி!
“வா அம்மு” என்று அன்பாக அழைக்க பத்மாவிற்க்கோ பற்றிக்கொண்டு வந்தது.
“ஹ்ம்ம் எங்கிருந்துதான் அவளுக்கு தெரியுமோ என் மாமா என்கூட பேசுறததா? கழுகுக்கு மூக்கு வேர்த்த மாதிரி வந்து நிற்ப்பா” என்று மனதிற்குள் கருவிக் கொண்டிருந்தாள்.
“அத்தான் எனக்கு டவுன் வரைக்கும் போகணும் பர்சேஸ் பண்ணனும்... என்னை கூட்டிட்டு போறீங்களா?” என்று கொஞ்சலாக வினவினாள்.
“கேட்கிறா பாரு... என்னமோ கட்டிகிட்ட புருஷன்கிட்டே கேட்கிற மாதிரி?” என்று தன் தீச்சுடர் விழிகளை நோக்கி அவளை சுட்டெரிக்க... அவளை கண்டுகொண்ட அதர்வா அவளை சீண்டிப் பார்க்க விழைந்தான்.
“அதுக்கென்ன அம்மு என்ன வேலையா இருந்தாலும் ஒதுக்கி வச்சுட்டு நான் கூட்டிட்டு போறேன்”
அவனின் பதிலில் மகிழ்ந்துப்போனவள்... “அப்போ இப்போவே போகலாமா அத்தான்?”
“போகலாம் அம்மு நீ கீழே வெயிட் பண்ணு... அத்தான் ஒரு காபி குடிச்சுட்டு வந்துடறேன்” என்று கூறியதும் அவள் அங்கிருந்து உற்சாகமாக நகர்ந்திருக்க அதர்வா பத்மாவிடம் திரும்பியவன்...
“என்ன அம்முகிட்ட சொன்னது காதில விழல? எனக்கு காபி வேணும் போய் எடுத்துட்டு வா” என்று அனுப்பிவைக்க முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்க மனதிற்குள் பொருமிக் கொண்டே சென்றாள்.
“உனக்கு அவ அம்முவா? அவ கூப்பிட்டதும் ஈன்னு பல்லை காட்டுற? சரின்னு உடனே கிளம்புற? நீயெல்லாம் போலீஸ்? என் முட்டாள் மாமா இருக்கு உனக்கு இன்னைக்கு...” என்று தனக்குத்தானே காபி போட்டு முடித்ததும் அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்ப்பொடியும், உப்பும் கலந்து எடுத்துச் சென்றாள். அதை வாங்கிப் பருகியவனுக்கும் சடுதியில் புரையேற அவள் செய்த திருகுத்தனம் புரிந்து சினம் பொங்க பார்த்தான்...
“என்னடி என் அம்முகூட போகவிடாம இருக்க சதி பண்ணுறியா?” என்றவன் அவள் எதிர்பாரதவிதமாக நெருங்க இந்த வேலையை செய்யும்போது பயப்படாத பத்மாவிற்கு இப்போது இதயம் எகிறி குதித்தது... அவள் தாடையை இறுக்கிபிடித்தவன் அவள் அதரங்களை கவ்வ அவன் வாயிலிருந்த மிளகாய்பொடியின் காரம் அவளின் உதட்டிற்கு இடம்பெயர்ந்தது... சிறிதுநொடிகள் கழித்து விடுவிக்க உதட்டில் தோன்றிய எரிச்சலில் கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள்.
“என்ன காரம் தூக்கலா இருக்கா... ஆனா எனக்கு ஸ்வீட்டா இருக்கே” என்று கண்சிமிட்டி கூறியவன் விருட்டென்று சென்றுவிட்டிருந்தான்.
“உனக்கு ஏதாவது சாக்கு கிடைச்சா போதும் முத்தம் கொடுக்கிறது? அப்புறம் தண்டனைன்னு சொல்லுறது... இருக்கட்டும். இனி இப்படி பண்ணு உதட்டை கடிச்சு வைக்கிறேன்” என்று கூறிக்கொண்டவள் வாஷ்பேசின் சென்று வாயை கழுவிக்கொண்டாள் அதுவும் அவன் உதட்டிலிருந்த மிளகாய் பொடியின் காரம் ஏறியதால் மட்டுமே தண்ணீர் அவள் உதட்டில் பட்டதும் எரிச்சல் மட்டுப்பட்டது.
“பத்மாக்கா உங்களை வைத்தீ ம்மா கூப்பிடுறாங்க” என்று பிரியா கூறியதும்...
“இதோ வரேன் ஃப்ரீ” என்று கூறிவிட்டு வைதீஸ்வரியை பார்க்கச் சென்றாள்.
*******************
“எனக்கு இங்க இருக்க ரொம்ப பிடிச்சிருக்கு கான்... இந்த ஊர் இந்த மக்கள் ஆல் சோ ஸ்வீட்”
“அப்போ நானு”
“நீங்கள் அவர்களை விட எனக்கு ஸ்பெஷல் கான்” என்று கன்னத்தை தட்ட அவன் வானத்தில் மிதந்தான்... அபிஷேக் அந்த வெள்ளைகார பெண்மணி ரோஷியுடன் தோட்டத்தை சுற்றிகாட்ட அழைத்து வந்திருந்தான். அவன் வரும் நேரத்தை அறிந்துக்கொண்டு பார்வதியும், அவள் தோழியும் அவர்களை நோட்டமிட பின்னாலேயே வந்து கொண்டிருந்தனர் அவர்களுக்கு தெரியாததுபோல்.
“என்னடி போறப்போக்க பார்த்தா கருவாயன் கரெக்ட் பண்ணிருவான் போல” என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
“ரோஸ் உனக்கு அப்போ இந்த ஊரை ரொம்ப பிடிச்சிருக்கா?”
“ஆமாம்! கான்... எனக்கு இந்த ஊரை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... நான் இந்த ஊருலேயே இருக்கணும் அதுக்கு ஐடியா சொல்லுங்க கான்!” என்றதும் இவன் மூலையில் மின்னல் அடிக்க கண்கள் பிரகாசிக்க...
“ரோஸ் அப்போ அழகான ஒருத்தனை நீ கல்யாணம் பண்ணிகிட்டேன்னா நீ இங்கேயே இருக்கலாம் ரோஸ்” என்றதும் அவனையே பார்த்தவள்...
“அப்போ என்னை நீங்க கலியானம் பண்ணிகறீங்களா?” என்றதும் அவனுக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது.
“ரோஸ் நிஜமாவா சொல்லுற?”
“ஆமாம் கான்! எனக்கு உங்களை பிடிச்சுருக்கு அண்ட் ஐ லவ் யூ கான்” என்றவள் அவனின் உள்ளங்கையை பிடித்து இதழ் ஒற்றி எடுக்க, அபிஷேக் சிறகடித்து பறந்தான்.
“ஐயோ...! ஐயோ...! என்னடி இந்த பொண்ணு... அவன் கையை பிடிச்சு முத்தம் கொடுக்குறா? ஐ லவ் யூ சொல்லுறா? ஐயோ நான் மோசம் போயிட்டேனே?” என்று பார்வதி புலம்ப ஆரம்பிக்க அவள் தோழி அவளை வித்தியாசமாக பார்த்தாள்.
“என்னடி ரூட் மாறுது...?” அவள் கண்டுகொண்டதை உணர்ந்தவள்...
“ஹிஹிஹி அவனெல்லாம் ஒரு ஆளுன்னு அந்த பிள்ள அவன்கிட்ட காதல சொல்லுதேன்னு அனுதாபம் தாண்டி வேற ஒண்ணுமில்லை” என்று சமாளித்துவிட்டு அவர்கள் புறம் திரும்பினாள்.
இங்கு அபிஷேக்கோ அவளின் காதல் கூற்றில் நம்பமுடியாது தன் கையையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.
“ரோஸ் எனக்கு தலையும் புரியல காலும் புரியல ரோஸ் ஐ டூ லவ் யூ ரோஸ்” என்றவன் டைட்டானிக் படத்தில் வருவது போல கையை விரிக்க அதில் நுழைந்துக் கொண்டாள் அதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்ட பார்வதியின் வயறு காந்தியது!
“ஆமாம் இவன் பெரிய டைட்டானிக் ஹீரோ அந்தம்மா டைட்டானிக் ஹீரோயினி ரெண்டு பெரும் ரொமான்ஸ் பண்ணுறாங்க”
“ஏய் அவங்க பண்றதை பார்த்தா எனக்கு அடக்கமாட்டாத சிரிப்பு தாண்டி வருது”
“வரும்.. வரும் உனக்கு...” என்று பொருமினாள் பார்வதி.
“ரோஸ் இனி நீயும் நானும் மூணு வேளை பார்த்துக்குறோம் ஆறு வேளை லவ் பண்ணுறோம்”
“ஓகே கான்”
“ரோஸ் என் நெஞ்க்குள்ள நீ தர அழகான போஸ்...
இனி நீ தான் என் பாஸ்...
உன்னால நான் ஆகுறேன் லூஸா...
எப்படி இருக்கு ரோஸ்” என் கவிதை?

“நல்லா இருக்கு கான்... உங்க கவிதை கூட உங்களை போலவே அழகா இருக்கு”
“ஒஹ்! ரோசு.. ரோசு.. அழகான ரோசு நீ...” அவன் பாட அவனுக்கு முரண்பாட ஒரு குரல் ஒலித்தது
“போட போட புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு” என்று பாடிவிட்டு தென்னைமரத்தின் பின்னால் ஒளிந்துக்கொண்டனர் பார்வதியும் அவள் தோழியும்.
“என்னது என் பாட்டுக்கு எதிரா ஒரு பாட்டு? எவனோ நான் லவ் பண்ணுறதை பார்த்து வயறு எரியுறான்?”
“என்னாச்சு கான்!” என்று ரோஸ் கேட்க அவன் அவள் புறம் திரும்பியவன்...
“ஹிஹி ஒண்ணுமில்லை ரோஸ் நீ என்னை லவ் பண்ணுறதை என்னால நம்பவே முடியலை ரோஸ்... இந்த உலகத்துலையே இன்னைக்கு நான்தான் சந்தோசமா இருக்கேன் அதுவும் உன்னால” என்றவனின் சொல்லில்...
“ச்சீ... போங்க கான். எனக்கு வெட்கம் வர்து” என்று முகத்தை உள்ளங்கையால் மூடிக்கொள்ள...
“ரோஸ் நீ வெட்கபடும் போது அழகா இருக்க” என்று கூறிமுடிக்க அவன் மேல் ஒரு கல் விழுந்தது.
“ஸ்ஹ்ஹா... எவண்டா அவன் கல் எடுத்து எறியறவன்?” என்றதும்...
“ஹெஈ செத்துப்போன உங்க ஆயா” என்று குரல் வந்தது... குரல் வந்த திசையை பார்க்க அங்கே யாரும் இல்லை.
“ரோஸ் நம்ம லவ் பண்ணுறதை பார்த்து பலருக்கும் பொறமை வரும் சோ இன்னைக்கே கருப்பு சாமி கோயில் பூசாரிகிட்ட சொல்லி உனக்கும் எனக்கும் சுத்தி போட சொல்லணும்”
“ஆமாம்! ஆமாம்! அமாவாசையும், பௌர்ணமியும் மாதிரி இருந்துட்டு பொறமை வேறையா இதுல?”
“யாருடா அது முதுகுக்கு பின்னாடி நின்னு வாய்ஸ் கொடுக்கறது எவனா இருந்தாலும் என் முன்னாடி வாங்கடா” என்று கூறிவிட்டு அவன் ரோஸ் புறமே திரும்பினான்.
“ரோஸ் நீ தென்னமரம்ன்னா நான் தேங்காய்”
“வாவ்!!”
“நீ பூரின்னா நான் கிழங்கு”
“எக்சலன்ட்!!”
“நீ இட்லின்னா நான் சாம்பார்”
“மார்வலஸ்!!”
“நீ கப்ன்னா நான் சாசர்”
“பியுட்டி!!”
“கான் நான் ஒன்னு சொல்லவா?”
“சொல்லு ரோஸ்”
“நீ நான் ரெண்டு பெரும் தனித்தனியா இருந்தா கார்பன்மோனாக்சைட்....
ரெண்டு பெரும் சேர்ந்தா கார்பன்டைஒக்சைட்”
“என் நெஞ்சில ஜிங்ஜர் டீ குடிச்ச மாதிரி சுர்ருன்னு இறங்கிட்ட ரோஸ்”
“நீங்க மட்டும் சும்மா இல்லை கான்... நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சுக்குள்ள பச்சா குத்திருச்சு... உங்களுக்குள்ள இப்படி ஒரு கவிஞர் ஒளிஞ்சிருக்காருன்னு எதிர்பார்க்கவேலை”
“ஆமாம்! ஆமாம்! கருவாயன் சொன்னதெல்லாம் கவிதையா? திங்கறதுல இருந்து எல்லாத்தையும் சேர்த்து சொல்லிக்கிட்டு இருக்கான் இது அவன் சொன்னதெல்லாம் கவித மாதிரி மயங்கி நிற்குது? ஆனா சும்மா சொல்லக்கூடாது பாரு உன் ஆளு உனக்கு சொன்ன கவிதையை விட அந்த வெள்ளைகாரிக்கு சொன்னது தான் பயங்கரம்” என்றவள்... வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
“ஐயோ! ஐயோ! ஒரு மொலநீல கயிறு இருந்தா இங்கனயே நான் தொங்கிருவேன் சாவடிக்குராங்களே” என்று பார்வதி அழுகாத குறையாக புலம்பினாள்.
சிறிது நேரத்தில ஆள் அரவம் கேட்க...
“கான் எனக்கு நேரம் ஆகிருச்சு நாளைக்கு நாம இதே இடத்துல சந்திக்கலாம் பை” என்று சுற்றும்முற்றும் பார்த்தவள் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு சென்றிருந்தாள்.
***********************
அதர்வா ரோஷினியை அழைத்துக் கொண்டு டவுனுக்கு சென்றவன் அங்கே துணிக் கடையில் அவளை இறக்கிவிட்டு...
“ரோஷினி நீ டிரஸ் எடுத்துட்டு இரு நான் இங்க ஒருத்தரை பார்க்கணும் பார்த்துட்டு வந்துடறேன்”
“சரி அத்தான்” என்று கூறிவிட்டு செல்ல துணிக்கடையில் மாடர்ன்டிரஸ் செக்சனில் நின்று துணிகளை எடுத்துக் கொண்டிருக்க... “ரோஷினி!” என்ற அழைப்பில் திரும்பியவள் அங்கே நின்றிருந்தவனை பார்த்து அதிர்ந்து போனாள்.

தேடல் தொடரும்...

https://srikalatamilnovel.com/community/threads/ஸ்வராகினியின்-திருடி-சென்றாய்-இதயத்தையே-கருத்து-திரி.1023/





 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 22

தன் பெயரைச் சொல்லி அழைத்த குரலைக் கேட்டு வெடுக்கென திரும்பிய ரோஷினி, அங்கு நின்றிருந்த ரஞ்சித்தை கண்டு பிடிபட்ட உணர்வில் முதலில் அதிர்ந்தாலும் அடுத்த நொடியே ‘இவனை பார்த்து எதற்கு பயப்பட வேண்டும்’ என்ற எண்ணம் தோன்றியதுமே அவளின் பயம் காணாமல் போக, அவனை சமாளித்து விடலாம் என்ற இறுமாப்புடன் முகத்தில் ஒட்ட வைத்த புன்னகையோடு அவன் அருகில் சென்று,

“இங்கே என்ன பண்ணுற ரஞ்சித்???” என கேட்டவளை நன்கு முறைத்தபடி,

“அதை நான் தான் உன்கிட்ட கேட்கணும்... உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா??? எதுக்கு அவன் கூட தனியா இங்க வந்த??? நீ நினைக்கிற எதுவுமே நடக்காது... முதல்ல எதுக்காக வந்தாயோ அதை மட்டும் பண்ணு!” என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கடுகடுத்தவனை கண்டு மனது பற்றி எரிந்தாலும் இப்பொழுது இவனிடத்தில் கோபம் கொண்டால் தான் நினைத்த காரியங்கள் கை கூடாமல் போய்விடும் என்ற ஜாக்கிரதை உணர்வோடு கோபத்தை முடிந்தளவு கட்டுப்படுத்திக் கொண்டவள்,

“நீ நினைக்கிற மாதிரி நான் எதுவும் பண்ணல ரஞ்சித்... நான் இப்படி அதர்வாவும் கூட வரலைன்னா வீட்டிலுள்ளவங்க சந்தேகப்படுவாங்க... அவங்க யார் மனதிலாவது துளி சந்தேகம் வந்தாலும் நாம் நினைச்ச காரியங்கள் கெட்டு போய்டும்... அதனால தான் இவன் கூட வெளியில வந்தேன்” என சரளமாக பொய்யுரைத்தவளை நம்பலாமா??? வேண்டாமா??? என்ற ரீதியில் ரஞ்சித் பார்த்துக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ அவர்களின் அருகில் வந்த அதர்வா, தன் லேசர் விழிகளால் அவர்களை நோக்கியபடி,

“இங்க என்ன பண்ணுற ரஞ்சித்???” என கேட்க அதுவரை ரோஷினியின் செயலால் உண்டான கோபத்தில் சுழித்திருந்த அவன் முகம் அதர்வாவை கண்டதும் முதலில் அதிர்ந்தவன், மனதில் எழுந்த பயத்தோடு,
”ஒண்ணும் இல்லைண்ணா... இங்கே என் ஃப்ரெண்ட் ஒருத்தனை மீட் பண்ண வந்தேன்... அவன் கூட பேசிட்டு வீட்டுக்கு போகலாம்ன்னு கிளம்பினப்போ ஆர்னா இங்க தனியா நிற்கிறது தெரிஞ்சது... நான் பார்த்தப்போ நீங்க பக்கத்துல இல்லை... அதுதான் விசாரிக்க வந்தேன்... ஒருவேளை வேற யார் கூடவாவது வந்திருந்தா அவங்களோட அனுப்பலாம் இல்லன்னா நான் கூட்டிட்டு போகலாம்னு நினைச்சு கேட்டுக்கிட்டிருந்தேன்” என வாய் அதர்வாவுக்கு பதில் சொன்னாலும் கண்களும் ரோஷினியை ‘இப்படி என்னை இவன் கிட்ட மாட்ட வைத்து விட்டாயே’ எனும் வகையில் முறைத்துக் கொண்டிருந்தது...

ரஞ்சித்தின் பதிலிலை கேட்டவனுக்கு ரஞ்சித் ரோஷினியை முறைப்பது தெரிந்தாலும் அதனை கண்டும் காணாமல் விட்டவன்,

“நம்ம வீட்டு பொண்ணை இவ்வளவு தூரம் தனியா நம்ம வீட்டுல அனுப்ப மாட்டாங்கன்னு உனக்கு தெரியாதா???” என அவனை கூர் பார்வையால் வருடியபடி கேட்க, அதர்வாவின் அந்த பார்வையில் இதயம் தொண்டைக்குழியில் வந்து துடிப்பது போன்ற உணர்வை அடக்கும் வகை அறியாது முழித்தவன், அதர்வா தன் பதிலுக்காக காத்திருப்பது புரிய, அவனது விழிகளை நோக்காது,

“அது தெரியும்ண்ணா... இருந்தாலும் நம்ம வீட்டு பொண்ணு தனியா நின்னப்போ அப்படியே விட்டிட்டு போக மனசில்லை” என இளித்தபடி கூறியவனை மேலிருந்து கீழாக நோக்கிவிட்டு,

“பரவால்லையே! உனக்கு கூட பொறுப்பு வந்திருச்சு” என போலியாக வியந்த அதர்வா,

“சரி நீ கிளம்பு... நாங்க பர்ச்சேஸ் முடிச்சுக்கொண்டு வர்றோம்” என கட்டளை போல் கூற, அதர்வா வந்ததில் இருந்து அது ஜன நடமாட்டம் கொண்ட இடம் என்பதையோ ரஞ்சித்தின் கோபத்திற்கு ஆளாவோம் என்பதையோ பற்றி கவலைப்படாது அங்கு தானும் அதர்வாவும் மட்டும் நிற்பது போன்ற எண்ணத்தில் அவனையே விழிகளால் கபளீகரம் செய்து கொண்டிருந்த ரோஷினியை கண்டிக்க முடியாது சூழ்நிலை தடுத்ததோடு அதர்வாவின் மேலிருந்த பயத்தினால் அவனது பேச்சினையும் மீற முடியாது ரோஷினியை முறைத்துவிட்டு,
“சரிண்ணா... நான் கிளம்புறேன்” என கூறிவிட்டு அங்கிருந்து சென்றவனை யோசனையாக பார்த்துவிட்டு ரோஷினி பக்கம் திரும்பி,

“உனக்கு தேவையானது எடுத்துட்டியா???” என கேட்க, அவனைப் பார்த்து ஜொள்ளு வடித்தவாறே

“இல்லைத்தான்! இன்னும் எடுத்து முடியலை... எதை செலக்ட் பண்றதுன்னு தெரியல” என மறைமுகமாக அவனை எடுத்து தருமாறு தூண்டில் போட, அவனோ விடாக்கண்டனாக,

“ஓ அப்படியா எனக்கும் சரியா செலக்ட் பண்ண தெரியாது... அது நான் அன்னிக்கு எடுத்து கொடுத்த சாரின்ர விசித்திரத்துலையே உனக்கு தெரியும் தானே” என நயமாக சொல்ல, அவளுக்கு திக்கென்று ஆனது...

‘ஐயையோ இவன் மேல இருக்குற ஆசையில் இவனை செலெக்ட் பண்ண சொல்லி, எல்லா டிரெஷ்ஷும் சிங்கிச்சா சிங்கிச்சா பச்ச கலரு சிங்கிச்சா மஞ்சள் கலரு சின்கிச்சான்னு எடுக்க வச்சு எனக்கு நானே ஆப்பு வைக்கவா??? நல்ல வேளை அவனே சரிவராது என்றிட்டான்’ என காலம் கடக்கும் முன் எழுந்த ஞானோதயத்தால் மேலும் அவனை வற்புறுத்தாமல் பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டி,

“சரித்தான் நானே எடுக்கிறேன்” என சொல்லி விட்டு உடைகளை செலக்ட் பண்ண தொடங்க, அதர்வா சற்று தள்ளி நின்று தனது போனை நோண்டிக் கொண்டிருந்தான்...

சில நிமிடங்களின் பின்னர் செலக்ட் பண்ணி முடித்த ரோஷினி அவன் பக்கம் திரும்பி,

“அத்தான் நான் எடுத்து விட்டேன்” என சொல்ல, போனில் இருந்து தன் பார்வையை உயர்த்தி,

“அப்படியா சரி... பில் பே பண்ணிட்டு வா கிளம்புவோம்” என்று சொல்ல, அவனது பேச்சை கேட்டு அதிர்ந்து போய்,
“ஏன், நீங்க எனக்காக பே பண்ண மாட்டீங்களா???” என கேட்க,

“அப்படி இல்ல... நீ கூப்பிட்ட அவசரத்துல என் கார்ட்ட எடுக்க மறந்துட்டேன்... அதனால என்கிட்ட இப்ப காசு இல்ல... நீ பே பண்ணிட்டு வா, நான் உனக்கு வீட்டில் வைத்து தரேன்” என சொன்னவனை மலர்ந்த முகத்தோடு நோக்கி,

“ஓ அப்படியா??? நான் கூட எனக்கு செலவளிக்க மனசில்லையோன்னு ஒரு நிமிடம் தப்பா நினைச்சிட்டேன்” என கூறி நிம்மதிப் பெருமூச்சு விட்டவளை பார்த்து புன்னகைத்தாவன்,

“அதை எப்படி நான் உனக்கு வாங்கி தராமல் போவேன்... நீ என் அத்தை பொண்ணுல்ல எனச் சொன்னவனை பார்த்து,

“அத்தை பொண்ணு மட்டும்தானா???” என பொடி வைத்து நயமாக கேட்டவளின் கேள்வியின் அர்த்தத்தில் திகைத்தாலும் முகத்தில் இருக்கும் சிரிப்பு மாறாது,

“இந்த ஜென்மத்துல அது மட்டும் தானே???” என கூறி கண்ணடித்தவனை கண்டு இப்படி சொல்பவனை எப்படியாவது தன் வழிக்கு கொண்டு வரலாம் என மனதுக்குள் கணக்குப் போட்டு பொங்கி எழுந்த சந்தோஷத்தோடு கலகலவென நகைத்தவளை அழைத்து கொண்டு பில் கவுண்டருக்கு சென்று பில் கட்டி விட்டு வெளியில் வந்து காரை நோக்கி சென்றவாறே,

“அத்தான் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு போகலாமா???” என கேட்க, தன் கை கடிகாரத்தை திரும்பி பார்த்துவிட்டு,

“ம்ம்ம்... போகலாம்” என சொல்லி கொண்டு அருகிலிருந்த உணவகத்திற்கு ரோஷினியுடன் நுழைந்து கொண்டான் அதர்வா...

******************

காலையில் இருந்து அவ்விருவரையும் தொடர்ந்துகொண்டிருந்த பார்வதிக்கு ஒரு பக்கம் அவர்கள் மேல் கோபம் என்றால் இன்னொரு பக்கம் தான் அவர்களை தொடர்வதை யாரும் பார்த்துவிடுவார்களோ என அஞ்சியபடி சுற்றும் முற்றும் விழிகளால் நோக்கியபடி சில அடிகள் தூரத்தில் அவர்களை தொடர்ந்துகொண்டிருந்தாள்...

அவளின் தோழி அவளுடன் வராதது பார்வதிக்கு மிகவும் வசதியாக போய்விட்டது... இல்லாவிடில் ‘உனக்கு அவன் மேல் கண்ணா???’ என கேட்டு தொல்லை படுத்திக்கொண்டிருப்பாள்... நேற்றைய தினமே சொந்தக்காரர் வீட்டு கல்யாணத்திற்காக செல்வது பற்றி அவள் சொன்ன போது பார்வதிக்கு அப்பாடி என்றிருந்தது... இப்போதைக்கு தன் மனதில் இருப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்ற எண்ணம் அவளுக்கு... எனவே காலையிலேயே இங்கு வந்தவளுக்கு நேரம் செல்ல செல்ல அபி மற்றும் ரோஷியின் செயல்களில் கோபம் அலை அலையாகக் கிளம்ப, அதனை அடக்கும் வகை அறியாது அவர்களை தொடர்ந்தவளுக்கு கடைசியாக அவர்கள் செய்த செயலை கண்டு மனது திக்கென்று அதிர, அந்த இடத்திலேயே தொய்ந்து சரிந்து அமர்ந்தவளது கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்ட, அவர்கள் நுழைந்து கதவடைத்த குடிலை வெறித்தவளுக்கு அதன்னுள் இருந்து வந்த “என்ன அபி அங்க எல்லாம் தொடுறீங்க???” என்ற ரோஷினியின் வெட்கம் கலந்த குரலும் “நீ மட்டும் என்னை தொடாமலா இருந்தாய்???” என்ற அபியின் குறும்பு குரலும் அவளுள் அமிலத்தை பாய்ச்சியது போல் இருக்க, முகத்தை மூடிக்கொண்டு கதறி அழலானாள்...

சில நிமிடங்களின் பின்னர் தன் முன்னே கேட்ட கனத்த காலடியோசை சத்தத்தில் யாரோ வந்து நிற்பதை உணர்ந்து கண்ணீர் படிந்த கன்னத்தோடு நிமிர்ந்து நோக்கியவள், அடுத்த நொடியே “அடி ஆத்தி” என அலறியவாறு எகிறி சில அடி தூரம் பின்னால் தள்ளிப்போய் விழுந்தாள்... அவள் அப்படி எகிறி போய் விழ காரணமான அபிஷேக், பார்வதிக்கு மிக அருகில் வந்து நின்று,

“ஓ... இதுதான் அழகுல மயங்கிறதா??? நான் கூட அழகுல மயங்கி விழுறதுன்னா நினைவிழந்து விழுவாங்கன்னு நினைச்சேன்... ஆனால் இப்படி எல்லாம் எகிறி போய் விழுவாங்கன்னு நினைக்கல... நான் என்ன அம்புட்டு அழகாவா இருக்கேன்???” என தன் முகத்தை அப்படியும் இப்படியும் தடவி பார்த்து இளித்தபடி கேட்க, அவன் திடீரென தன் முன்னே வந்து நின்றபோது அபிஷேக்கின் பெரிதான வயிறு மட்டுமே அவள் நிமிர்ந்து பார்த்தபோது தெரிந்தது... அதில் பதறியடித்து விழுந்தவளுக்கு அவன் மேலிருந்த கோபத்துக்கு அவனின் பேச்சு எரிகிற தீயில் எண்ணெய்யை வார்ப்பது போல் இருந்ததில் தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள், படக்கென எழுந்து தன் உடைகளை ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி கொண்டவள், அவனின் சட்டை காலரை பிடித்து,

“அறிவு கெட்ட முண்டம் இப்படியா திடீரென வந்து பயமுறுத்துவ??? நீ எல்லாம் ஜூல இருக்கவேண்டிய ஆளு... உன்னை ஊருக்குள்ள நடமாட விட்டதே பெரிய விஷயம்... இதுல நான் உன்னை பார்த்து மயங்குற மாதிரி பேசுற” என வார்த்தைகளை கடித்து துப்ப, அவனோ அவளின் திட்டுகளை தன் மீது பூ மழை பொழிவது போல் அனுபவித்தபடி அவளையே அள்ளி பருகுவது போல் பார்த்தபடி நிற்க, அதில் மேலும் காண்டான பார்வதி, “பளார்” என அவன் கன்னத்தில் ஓங்கி ஒன்று கொடுத்தாள்... அதில் தன்னிலைக்கு வந்து அடிபட்ட கன்னத்தை ஒரு கையால் பற்றிக்கொண்டு,

“ஏன் என்னை அடிச்ச???” என பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்டதில் அவளுக்கு மேலும் பற்றி கொண்டு வர தன் நெற்றியில் கடுப்போடு தட்டியவள்,

“நான் உன்னை திட்டிகிட்டு இருக்கேன்... நீ என்னடான்னா நான் ஏதோ அவார்டு கொடுக்கிறது மாதிரி மூஞ்சிய வச்சிருக்க... உனக்கு இந்த வெட்கம், மானம், சூடு, சொரணை என்றது கிடையாதா???” என நக்கலாக கேட்க, அதற்கு அவனும்

“காதல் என்று வந்து விட்டால் அந்த வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாம் செத்துப் போய் அந்த இடத்தில புல்லு, பூண்டு எல்லாம் முளைச்சிடும்” என சொன்னவனை பார்த்து,

“யாருக்கு யார் மேல காதல்???” என அசுவாரசியம் போல் கேட்டவளை நெருங்கி நின்று,

“எனக்கு உன் மேலும் உனக்கு என் மேலும் தான் காதல்” என சொன்னவனை முறைத்தவள்,

“பகல் கனவு காண கூடாதுடா தகர டப்பா மூஞ்சி” என எகத்தாளமாய் பேச அவனுக்கு கடுப்பாகி போனது... எனினும் வேண்டுமென்று

“அப்போ உனக்கு என் மேல காதல் இல்லை???” எனக் கேட்க அவளும் வீண்புக்கு,

“எனக்கு உன் மேல காதல் இல்லை” என சொல்ல,
“அப்போ எதுக்கு நானும் ரோஷியும் குடிலுக்குள்ளே போனதும் அழுத???” என அவளை கண்டுகொண்ட பாவனையோடு கேட்க, பிடிபட்ட உணர்வுடன் முதலில் திகைத்தபின் பார்வையை எங்கோ பதித்து,

“அது கண்ணு வேர்த்திச்சு” என சொல்ல, அவள் தன்னை நேராக பார்க்காததிலேயே அவள் சொன்னது பொய் என்பதை உணர்ந்து கொண்ட அபிஷேக், வேண்டுமென்றே,

“அப்போ சரி... உனக்கு என் மேல காதல் இல்லை, நான் ரோஷி கிட்ட போறேன்” என கூறிவிட்டு திரும்ப, அதில் பதறிப் போனவளாய்,

“டேய் குருவி கூட்டு மண்டையா... நில்லுடா, எனக்கு உன் மேல தான் காதல்” எனச் சொன்னவள்,

“நான் இல்லைன்னு சொன்னா நீ அவள் பின்னாடி போய்டுவியா???” என முறைத்தபடி கேட்க,

“ஐயையோ நான் அந்த அளவிற்கு வொர்த்தான ஆள் கிடையாதுடி... சும்மா அவளை நடிக்கச் சொல்லி கேட்டேன்... அவளும் ஒத்துக்கிட்டா அவ்வளவுதான்... இப்ப ஷூட்டிங் முடிஞ்சு அவளும் இங்கிருந்து கிளம்ப போறாள்... அதோட அவள் சேப்டர் முடிஞ்சது... சோ உனக்கு எந்த பயமும் வேண்டாம், இந்த மாமன் உனக்கு தான்” என கண் சிமிட்டி சொல்ல,

“அட பாவி” என அதிர்ந்து வாயை மூடிக்கொண்டவள், “நல்லாத்தான் நடிக்கிற” என சிலாகித்து சொன்னவள்,

“சரி எனக்கு நேரம் ஆகுது... நான் வீட்டுக்கு போகணும்... இல்லனா வீட்ல இருந்து தேடி வந்துடுவாங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்லத் தொடங்க,

“அப்போ அவ்வளவு தானா???” என கேட்டான் அபிஷேக்... அதில் அவள் அவன் பக்கம் திரும்பி,
“என்ன அவ்வளவு தானா???” என்று கேட்க, அவனோ கட்டைவிரலால் நிலத்தில் கோடு போட்டு கொண்டு வெட்கம் எனும் போர்வையில் எதனையோ செய்துகொண்டு,

“அது வந்து...” என மெல்ல இழுக்க, அவனை மேலிருந்து கீழாக நோக்கியவள், சிறு சிரிப்புடன்,

“நான் பண்ண வேண்டியதெல்லாம் நீ பண்ணிக்கிட்டு இருக்க... யாராவது பார்த்தா அவனா நீன்னு கேட்க போறாங்க” என நக்கல் அடித்தவள்,

“முதல்ல வெட்கப்படுறதை நிறுத்திட்டு கேட்க வந்ததை சொல்லு!” என எச்சரிக்கையுடன் அவள் கேட்க, அந்த எச்சரிக்கை அவசியமற்றது என்பது போல,

“வேற ஒண்ணும் இல்லை... எனக்கு உன் கையால வெங்காய பஜ்ஜி செய்து தரியா???” என கேட்க, எதை எதையோ நினைத்தபடி நின்றிருந்த பார்வதி, அவன் கேட்ட கேள்வியில் “பே” என முழித்தவள்,

“அட சரியான தின்னி பண்டாரமா இருக்கியே... நான் கூட என்னென்னமோ நினைத்தேன்” என வாயை விட, அவனோ

“அப்படி என்ன நெனச்ச???” என அப்பாவியாய் கேட்க,

“ஒண்ணும் இல்லை... நான் உனக்கு நாளைக்கு வெங்காய பஜ்ஜி செய்து தரேன்” என சொல்லிவிட்டு அங்கிருந்து ஓட்டம் எடுக்க, அவளின் அந்த அவசரம் ஏன் என்பது புரியாது முழித்துக்கொண்டு நின்றிருந்தான் அபிஷேக்...

******************

அதர்வாவும் ரோஷினியும் வெளியில் சென்றதிலிருந்து நெருப்பின் மேல் நிற்பது போல் ஒரு இடம் என்று இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தவள், நிமிடத்துக்கு ஒருமுறை கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்... நேரம் செல்லச் செல்ல அவர்கள் வராததில் என்னாகுமோ என்ற ஒருவித உணர்வு அவளின் உள்ளத்தை கூறு போட்டுக் கொண்டிருந்தது... எனினும் அதனை வெளியில் காட்டாது மற்றவர்களுடன் சிரித்துப் பேசியவாறு திரிந்து கொண்டிருந்தவள், நேரம் ஆக ஆக அதனை கூட செய்யமுடியாது தோட்டத்தில் தஞ்சம் புகுந்து கொண்டாள்...

அங்கும் சில நிமிடங்கள் கடந்தும் அவர்கள் வராமல் போனதில் மனதில் எழுந்த கோபத்தோடு குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருக்க, இருவரும்ம் ஒருவாறு வந்து சேர்ந்தனர்... காரைவிட்டு இறங்கிய அதர்வா, தங்களை முறைத்து பார்த்தபடி நின்றிருந்த தன் மனைவியை பார்த்து கேலியாக நகைத்து விட்டுச் செல்ல, ரோஷினியோ அவனை பின் தொடராது பத்மா இருக்குமிடம் சென்று,

“என்ன நாங்க வெளியில சேர்ந்து போனதை ஏத்துக்க முடியலையா???” என நக்கலாக கேட்டவள், “இதுக்கே இப்படின்னா...” என்றவள், அதற்கு மேலும் சில வார்த்தைகளை உதிர்க்க, அதனைக் கேட்ட பத்மாவோ உடலில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்ந்து நின்று விட்டாள்...

தொடரும்...

ஹாய் செல்ல குட்டீஸ்,

"திருடி சென்றாய் இதயத்தையே " அடுத்த பதிவு போட்டாச்சு பேபீஸ்...

 

aishu

Bronze Winner
இதயம் 23

ரோஷினி கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் "கொஞ்சம் நிறுத்து" என்று சீறிய பத்மா இதுக்கு மேல் பொறுமை இல்லை என்ற ரீதியில் அவளை அனல் தெறிக்க நோக்கி விட்டு தனது அறைக்குள் நுழைந்தான். அங்கே அதர்வாவோ வாயில் பாடல் ஒன்றை ஹம் பண்ணியவாறு ஷெர்ட்டின் பட்டன்களை கழட்டிக் கொண்டு இருக்க அவன் முன்னே வந்து நின்றவள் "நான் கேள்வி பட்டது உண்மையா?" என்று கேட்டாள். அதை கேட்டு அவளை சாவகாசமாக பார்த்தவன் "என்ன கேள்வி பட்ட?" என்று கேட்டபடி மேலும் "ஒரே டயர்ட் ஆஹ் இருக்கு" என்றான்.



அது அவளுக்கோ தூக்கி வாரிப் போட அவனை அனல் தெறிக்க பார்த்தவள் விழிகளில் இருந்து இரு சொட்டு கண்ணீர் கட்டுப்படுத்த முடியாமல் உருண்டு விழுந்தது. அவன் முன்னே கண்ணீர் விடுவது அவமானமாக ஒரு பக்கம் இருக்க பேசினால் அவள் குரலே வலியை காட்டிக் கொடுத்து விடும் என்ற எண்ணம் வேறு அவளை பேச முடியாமல் தடுத்து வைத்தது. அவள் கண்ணீர் அவனை என்னவோ பண்ண, அதற்கு மேல் அவளிடம் கடுமை காட்ட விரும்பாதவன் "கடைக்கு போனதுல செம களைப்பா இருக்கு.ரோடு வேற ரொம்ப கரடு முரடா இருந்திச்சு.. ப்ளீஸ் ஒரு டீ கிடைக்குமா?" என்று பெருமூச்சு விட்டபடி ஷேர்ட்டை கழட்டியவன் அவள் மனதில் இருந்த சந்தேகத்தையும் ஒரே வார்த்தையில் அழித்து விட்டான் அல்லவா? அவனுக்கு தான் ரோஷினி என்ன கூறி இருப்பாள் என்றும் தெரியும் அதே நேரம் வார்த்தைகள் உணர்த்தா விட்டாலும் அவனுக்கு அவள் கண்ணீர் உணர்த்தியது "நீ என் உடமை மட்டுமே" என்று கூக்குரலிடும் அவள் மனதை.



அவன் வார்த்தைகளோ அவள் மனதில் பாலை வார்த்தை அவள் இதழ்கள் தன்னை மறந்து புன்னகைக்க அவளை அழுத்தமாக பார்த்தவன் "இப்படியே பார்த்துட்டு நின்னா நான் ட்ரெஸ் பண்ண வேணாமா?" என்று புருவம் உயர்த்தி கேலியாக கேட்க சடுதியான மற்றைய பக்கம் திரும்பியவள் "ச்ச இப்படியா பார்த்து வைப்ப ?" என்று தன்னை தானே கடிந்தபடி அவன் கேட்ட டீயை போட்டுக் கொடுக்க விறு விறுவென வெளியேறினாள்.

வெளியேறியவள் முதுகை பார்த்த அதர்வாவின் இதழ்கள் "ஐ லவ் யூ அம்மு" என்று மெதுவாக முணு முணுத்தன. ஆம் அனைத்தையும் அறியும் அவன் திறமைக்கு முன்னால் தனது அம்முவை அறிய முடியாதவனா அவன்?

குளிக்க குளியலறைக்குள் நுழைந்தவன் சுவரில் கை குற்றி நிற்க ஷவரில் இருந்து வழிந்த நீரானது அவன் முறுக்கேறிய புஜங்களில் பட்டு கீழே விழுந்தது. அதே சமயம் அவன் மனமோ சென்னைக்கு புறப்பட்டு போன சமயம் நடந்த நிகழ்வுகளை மீட்டிக் கொண்டு இருந்தது.



*********************************************************************************



சென்னைக்கு சென்றவன் முதலில் இறங்கியது பத்மாவை பற்றி அறிந்து கொள்வதற்காகவே. வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக இருந்தால் கண்டுக்காமல் விட்டிருப்பான். இப்போது அவனில் சரி பாதி அல்லவா அவள்? அவளை மனம் நாடுவது அவனால் தவிர்க்க முடியவில்லை. ஒரு பெண் பின்னால் இப்படி மனம் அலை பாய்வது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அதுவும் அவன் அம்முவை மறந்து விட்டு அவள் பின்னால் மனம் தன்னை மீறி செல்வதை முற்றாக வெறுத்தான்.அவளுடன் இதழ் அணைக்க மனம் அவா கொள்வதும் , கோபத்தை காரணம் காட்டி அவளை தீண்டியதும் நினைவு வர அவளிடம் ஏதோ ஒரு பந்தம் இருப்பதாக அவன் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.

நேரே பத்மாவின் குடியிருப்புக்கு சென்றவன் அவன் விசாரணைகளை மெதுவாக ஆரம்பித்தான். விஷ்ணு உதவியால் உண்மையை அறிந்து கொள்வது ஒன்றும் அவனுக்கு பெரிய விடயமாக இருக்கவில்லை. விசாரித்ததில் பத்மாவின் தந்தையின் திடீர் குழந்தை தான் இந்த பத்மா என்று அறிந்து அதிர்ந்தே விட்டான். அனைத்தையும் அவனுக்கு கூறியது வெளியூரில் இருந்து அதிஷ்ட வசமாக அபிஷேக் வீட்டுக்கு வந்திருந்த அபிஷேக்கின் பெரியப்பாவும் பத்மாவின் வளர்ப்பு தந்தையின் தோழரும் ஆகும். கடத்தல் கொள்ளை கலவு என்று ஈடுபட்டு இருந்த அவள் வளர்ப்பு தந்தை ஒரு நாள் பத்மாவுடன் வந்து இறங்கி விட்டார். சில நாட்களுக்கு முன்னால் அவர் வேலை செய்த கடத்தல் காரனின் உத்தரவுக்கு அமைய பத்மாவின் ஊருக்கு வந்தவர் ரஞ்சனின் அப்பாவின் கட்டளைக்கு அமைய வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தவளை வேலையாள் வேஷம் போட்டு கடத்திக் கொண்டு ரயில் ஏறி விட்டார். பத்மாவை கொல்ல தான் ரஞ்சனின் தந்தை பணித்து இருந்தாலும் அந்த பிஞ்சு குழந்தையை கொல்ல மனமும் ஒப்பவில்லை அதே சமயம் அவர் தனிமையும் விடவில்லை. உடனே அவளுக்கு பத்மா என்று பெயரிட்டு தனது மகளாக வளர்க்க தொடங்கி விட்டார். ஆரம்பத்தில் தாய் தந்தையை தேடி அழுத பத்மாவும் சில நாட்கள் கழிய அவருடன் ஒட்டிக் கொள்ள முழுமையாக அவர் குழந்தையாகவே அவள் வளர்க்கப்பட்டாள். தனது அனைத்து ரகசியத்தையும் அபிஷேக்கின் பெரியப்பாவிடம் கூடியவர் அதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சத்தியம் வேறு வாங்கிக் கொண்டார்.



அபிஷேக்கின் பெரியப்பாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்பதால் நண்பர் இறப்புக்கு கூட வர முடியவில்லை. அப்படி வந்து இருந்தால் கூட பத்மாவுக்கு முழு உண்மைகள் தெரிந்து இருக்குமோ என்னவோ. சாட்சிக்கு அவரை அழைத்துக் கொண்டு போய் உண்மையை நிரூபித்து இருக்கலாமோ என்னவோ. ஆனால் அவள் நல்ல நேரத்துக்கு இப்போது அவர் அதர்வாவிடம் சிக்கி விட அனைத்து உண்மைகளையும் கூறி விட்டார். அதை கேட்டவனுக்கு பத்மா தான் ஆர்னா, தன்னுடைய அம்மு என்றதும் உடல் சிலிர்க்க, எ[அப்போது தான் ஏன் அவன் மனம் பத்மாவை நாடியது என்ற உண்மையும் அவனுக்கு புலப்பட்டது. மறுபுறம் தனது சித்தப்பாவின் சூழ்ச்சியை அறிந்தவன் நரம்புகள் கோபத்தில் விடைத்தன. உண்மையை அறிந்ததும் வீட்டுக்கு சென்று அனைவரிடமும் உண்மையை கூறி பத்மாவை அணைக்க வேண்டும் என்று அவாவும் சித்தப்பாவை அடித்து நொறுக்க வேண்டுமென ஆத்திரமும் வந்தது. நேரே வீட்டுக்கு விஷ்ணுவிடம் மட்டும் உண்மையை கூறிவிட்டு புறப்பட்டவனுக்கு அதிர்ச்சியாக அங்கு ஆர்னா என்ற பெயரில் ரோஷினி இருந்தாள்.



அப்போதே உண்மையை கூறி விடுவது அவனுக்கு பெரிய விஷயமல்ல, ஆனால் ரோஷினி பின்னால் இருப்பவர்களை அறிய வேண்டும் எனவும், ஆர்னாவை கடத்த உண்மையான காரணத்தையும் அறியவும், மற்றும் தன்னவளுடன் கொஞ்சம் விளையாடவும் நினைத்தவன் நடந்து கொண்டு இருந்த நாடகங்களை நம்பிய போல அவனும் ஒரு நாடகம் போட்டான்.

****************************************************

அனைத்தையும் நினைத்து முடித்து இடுப்பில் டவலுடன் வெளியே வந்தவன் கண்ணாடி முன்னே நின்று அவன் சந் கிளாசை போட்டு பார்த்து கொண்டு இருந்த பத்மாவை கண்டு தனக்குள் சிரித்தவன் வேணுமென்றே முகத்தை கடினமாக்கியபடி "அதையும் ஆட்டைய போடலாம்னு பார்க்கியா?" என்று கேட்க பதறி திரும்பியவள் கையில் இருந்து கண்ணாடி கீழே விழுந்தது. அதை பார்த்து அவளை அவன் அனல் தெறிக்க பார்க்க "ஐயோ,

பத்மா, இப்போ இருக்கிற நிலையில இது தேவையா?" என்று தனக்கு தானே கடிந்தபடி "ஐயோ முறைக்கிறாரே" என்று முணு முணுத்துக் கொண்டே கீழே விழுந்த கண்ணாடியை எடுத்து "ஹி ஹி சாரி" என்று வலுக்கட்டாயமாக புன்னகைத்தபடி அவனிடம் நீட்டினாள். அவனோ மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு நின்றவன் கண்களால் கண்ணாடியை மேசையில் வைக்கும் படி சைகை செய்தான். அவளும் மற்றைய பக்கம் திரும்பி மேசையில் வைத்து விட்டு திரும்ப அவள் அருகே நூலளவு இடைவெளியில் நின்ற அதர்வாவை பார்த்து அவளுக்கு மூச்சடைத்தது. வெற்று மார்புடன் அவன் நிற்க அவனை பார்க்க சங்கடப்பட்டு கொண்டு முகத்தை மற்றைய பக்கம் திருப்பியவளை பார்த்தவாறே எட்டி அவள் பின்னால் இருந்த டீ கப்பை எடுத்ததும் தான் அவளுக்கு மூச்சு வந்தது. டீ கப்பை எடுத்தவன் அவளை பார்த்தபடியே டீயை குடிக்க அவளுக்கு தான் சங்கடமாக போனது. பின்னால் மேசை இருக்க அந்த பக்கமும் போக முடியாது. இரு பக்கமும் நகர நினைத்தாலும் எக்கணமும் அவள் மேனி அவனுடன் உரசி விடும் தூரம். தவித்து போனாள் பாவையவள்.



மெதுவான குரலில் "நான் போகணும்" என்று அவனை பார்க்காமலே கூறியவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தவன் "ம்ம் போ " என்றானே தவிர ஒரு இன்ச் கூட நகரவில்லை.

பொறுமை இழந்தவள் மனதுக்குள் "என் கூட வம்பிழுக்கிறதே வேலையா போச்சு "என்று முணு முணுத்து விட்டு வலப் பக்கத்தால் நகர முற்பட அவளை மேலும் நெருங்கி அதே பக்கத்தில் நின்றான். "என் கூட விளையாடுறாரா?" என்று நினைத்தவளுக்கு போலி கோபம் வந்தாலும் அவளையும் மீறி அவன் அருகாமையை அவள் மனம் விரும்பியது என்னவோ உண்மை தான். ஆனால் பெண்களுக்கு உண்டான இயல்பான கூச்சமும் அவன் தனது காதலை கூறாததுமே அவள் சங்கடத்துக்கு காரணம்.

அவ்வளவு நேரமும் அவனை பார்க்காமல் தவிர்த்தவள் நிமிர்ந்து அவனை அழுத்தமாக பார்த்தாள். அவள் பார்வைக்கே காத்துக் கொண்டு இருந்தவன் "சுகர் கொஞ்சம் அதிகம்" என்றபடி டீ கப்பை எட்டி மேசையில் வைக்க புடவையுடு தெரிந்த அவள் வெற்று இடையில் தாராளமாக அவன் கை பட அவளுக்கு தான் தூக்கி வாரிப் போட்டது. அதிர்ந்து அவனை ஏறிட்டு பார்க்க "என்னாச்சு?" என்று வேணுமென்றே ஹஸ்கி குரலில் கேட்டான்.

"ஒண்ணுமில்லை " என்று உரைத்தவள் அவன் தீண்டலில் உண்டான தனது உணர்ச்சிகளை கட்டுப் படுத்த பெரும் பாடு பட்டுப் போனாள்.

அவனோ அதற்கும் மேலாக நெருங்க அவன் தாப பார்வை அவளை என்னவோ செய்தது. வேறு வழி இன்றி தனது கரங்களை அவன் மார்பில் வைத்து தள்ள முனைய அவளது இரு கைகளையும் தனது கைகள் கொண்டு அழுத்தியவன் அவளை மேலும் மூச்சு காற்று படுமளவுக்கு நெருங்கி அவள் நெற்றியில் தனது முத்திரையை பதிக்க அவன் ட்ரிம் செய்யப்பட்ட தாடியும் மீசையும் தந்த குறு குறுப்பில் அவள் கண்கள் தாமாக மூடிக் கொண்டன. எப்போதும் அதிரடியாக இதழ் அணைக்கும் அவனது இந்த மேன்மை அவளுக்கு புதிது. அப்படியே இறங்கிய அவன் அதரங்கள் அவள் கன்ன கதுப்புகளை தீண்ட அவன் கையோ அவள் கையில் இருந்து இறங்கி அவள் வெற்றிடையை பற்றிக் கொண்டது. அவள் கைகளோ அவன் தோளுக்கு இடம் மாற அவள் நக கண்கள் அவன் தோள்களில் அழுதமாக பதிந்தன. அவனுக்கோ அது வலிக்காமல் இதமாக இருக்க அவன் தனது இதழ்களை அவளது அடுத்த கன்னத்தில் அழுத்தமாக பதித்தான். அவளும் அதே மோன நிலையில் அப்படியே இருக்க அவனுக்கோ தனது தொடுகையில் உருகி குழையும் தன்னவளை பார்த்து கர்வம் மேலோங்க அவன் இதழ்கள் அவளது நாசியை தீண்டியது. அவளோ அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் அவன் வெற்று தோளில் அழுத்தத்தை கொடுக்க ஒரு கையால் அவள் கன்னத்தை தாங்கி தன்னை நோக்கி அவள் முகத்தை நிமிர்த்தினான்.



விழிகள் மூடி இருந்த அவள் பால் வண்ண முகத்தை மூச்சு காற்று படுமளவுக்கு நெருங்கி நின்று பார்த்தவனுக்கு இப்பொது சின்ன வயதில் பார்த்த ஆர்னாவின் முக சாயல் அப்படியே தெரிந்தது. அதற்கு மேலும் பொறுப்பானா அவன் "அம்மு " என்று காற்றுக்கும் வலிக்காத குரலில் மென்மையாக அழைக்க அவள் விழிகள் மெதுவாக திறந்து கொண்டன. அதற்காகவே காத்திருந்தவன் "ஐ லவ் யு அம்மு " என்று உரைக்க அவள் விழிகள் விரிய அதிர்ச்சியாக அவனை பார்த்தாள். ஆனால் அவனோ அவளை யோசிக்க கூட அனுமதிக்காது அவள் இதழ்களை அழுத்தமாக கவ்விக் கொண்டான்.

அவன் இதழ் செய்யும் சாகசத்தை தாங்க முடியாமல் அவள் விழிகள் மீண்டும் உணர்ச்சியின் பிடியில் மூடிக் கொள்ள அவனோ அவள் இதழ் தேனை மேலும் மேலும் அருந்தும் வெறியில் இருந்தான். நீண்ட நெடிய ஆழமான முத்தத்தை தாங்காமல் அவள் அவன் மீதே சரிந்து விழ அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டவன் மூச்சு காற்றுக்காக விடுதலை அளித்த பின் மீண்டும் அவள் இதழ்களை அழுத்தமாக கவ்விக் கொண்டான். அவள் கைகள் அவன் முதுகில் கோலம் போட அவளை அப்படியே முத்தமிட்டபடி மஞ்சத்தில் சரித்தவன் இதழ்களும் கைகளும் அவள் மேனியில் அத்து மீற அங்கு அழகான இல்லறம் மலர்ந்தது. சின்ன வயதில் இருந்து தன்னவள் மேல் சேமித்து வைத்திருந்த காதல் உடைப்பெடுக்க அவனோ அவளை விடுதலை செய்யும் எண்ணமே இல்லாமல் தனக்குள் அடக்கிக் கொண்டான். அவன் மீண்டும் மீண்டும் அவளை நாடியதில் அவள் தான் களைத்துப் போனாள். ஒரு கட்டத்தில் அவள் களைப்பை உணர்ந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு அவளை விட்டு விலகி படுக்க அந்த விலகலை விரும்பாதவள் அவனை நெருங்கி அணைத்து அவன் மார்பில் தலை வைத்து தூங்கி போனாள். இருவருக்குமான மன நிறைவான நாள் அது. அவனுக்கோ காதல் வென்று விட்ட உணர்வு. அவளுக்கோ தன்னவன் தன்னை ஏற்றுக் கொண்ட உணர்வு.

அடுத்த நாள் காலையில் எழுந்தவள் அருகில் அவன் இல்லாமல் இருக்க "ஹப்பா நல்ல வேளை அவர் இல்லை" என்று முணு முணுத்து விட்டு எழுந்து குளிக்க சென்றாள். குளித்து முடித்தவள் அழகான புடவை கட்டி நெற்றியில் குங்குமம் வைத்து வெளியே வந்த போது முன்னறையில் பத்திரிகை படித்துக் கொண்டு இருந்த அதர்வாவின் கண்கள் நேற்று அவன் செய்த சாகசத்தால் தடித்து சிவத்த அவள் இதழ்களில் பதிந்து மீண்டது. அவளோ அவன் பார்வை வீச்சு தாங்காமல் முகத்தை குனிந்து கொள்ள அவனோ அந்த பார்வையை மட்டும் வீசி விட்டு அவளை கடுப்பேத்தவென்ற கண்டு கொள்ளாமல் இருந்தான். வெளியே வெளியே வந்த போது அவன் பார்வையை பார்த்து வெட்கப்பட்டவள், அவன் அலட்சிய போக்கை பார்த்து அவன் பார்வைக்காக ஏங்க தொடங்கினாள்.



அவனோ நேற்று நடந்த சம்பவத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்ற தோரணையில் இருக்க பொறுமை இழந்தவள் சாப்பிட்டு விட்டு கை கழுவ போனவன் பின்னாலேயே வந்து நின்றாள். கை கழுவி விட்டு திரும்பியவன் இதழ்களுக்குள் அடக்கப்பட்ட சிரிப்புடன் "என்ன ?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க "அது, நேற்று " என்று தடுமாறியவள் வார்த்தை வராமல் திணறி போனாள். "என்ன நேற்று?" என்றவன் மேலும் "நேற்று எதையாவது திருடிட்டியா?" என்று கேட்க அவளோ அதிர்ந்து அவனை பார்த்தாள். "நிஜமா இவருக்கு மறந்து போச்சா? இல்லை நான் ஏதும் கனவு கண்டேனா?" என்று நினைத்தவளுக்கு தலை சுற்றுவது போன்ற உணர்வு. அவள் கலங்கிய முகத்தை பார்த்து வந்த சிரிப்பை கட்டுப் படுத்தியவன் "கொஞ்சம் தள்ளு ஆர்னா கூட அவுட்டிங் போகணும்" என்றுரைக்க அவள் கண்களோ இப்பொது கோபத்தில் சிவந்தன. சும்மாவே அவனை விட்டு கொடுக்க விரும்பத்தவள் நேற்று நடந்த சம்பவத்துக்கு பிறகு விரும்புவாளா என்ன?



"அதென்ன அவுட்டிங்? நானும் வரேன்" என்று கூற அவளை அழுத்தமாக பார்த்தவன் "எதுக்கு நீ இடையில நந்தி போல?" என்று வேணுமென்றே கேட்க அவளுக்கு தான் அவமானமாக போய் விட்டது. "நேற்று நடந்து கொண்டவனுக்கும் இப்போது பேசுபவனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது " என்று நினைத்தவள் "நீங்க நடத்துகிறது சரி இல்லை" என்றாள். அவனோ "என்ன சரி இல்லை?" என்று அவன் மேலும் கேட்க அதற்கு மேல் விளக்கம் கொடுக்க அவளுக்கே சங்கடமாக இருந்தது. "ஒன்றுமில்லை" என்று கூறிவிட்டு விலகி நின்று அவனை அனல் தெறிக்க பார்க்க அவளை அழுத்தமாக பார்த்தவன் அடக்கப்பட்ட சிரிப்புடன் அங்கிருந்து அகன்றான்.

தொடரும்

 

swaragini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 24:

“கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்லை ஓடிப்போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா?”

என்று உல்லாசமாக தன்னவளை நினைத்துப் பாடிக்கொண்டு கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டே அங்கு வந்து கொண்டிருந்த அபிஷேக், அங்கு நின்றிருந்த பத்மாவை கவனியாமல் அவள் மேல் மோதி விட, திடீரென ஒரு மாமிசமலை தன் மேல் மோதும் என எதிர்பார்க்காத பத்மா பொத்தென கீழே விழுந்தாள்.

அவள் விழுந்த சப்தத்தில் நினைவுக்கு வந்த அபி, பத்மாவைப் பார்த்து கெக்க பக்க என்று சிரித்து வேறு வைக்க அவன் மேல் கொலை வெறியானாள் பத்மா.

“டேய் தடிமாடு தள்ளி விட்டுட்டு என்ன இழிப்பு வேண்டி கெடக்கு முதல்ல தூக்கி விடுடா எருமை” என பத்மா முறைத்துக் கொண்டே கூற,

அவள் சொன்னவுடன் சிரிப்பை நிறுத்தி விட்டால் அது நம் அபிஷேக் கான் இல்லையே, அவன் மீண்டும் தன் சிரிப்பை சில நிமிடங்கள் தொடர்ந்து விட்டு பின் போனால் போகிறதென்று கை கொடுக்க எத்தனிக்க, சரியாக அதேசமயம் அவள் முன் நீண்டது ஒரு வலிய கரம்.

'அது யாருடா அது நமக்கு போட்டியா கை கொடுக்குறது??' என தன் பார்வையை உயர்த்திய அபிஷேக்கின் கண்களுக்கு விருந்தாக அதர்வாவின் அகன்ற தோள்கள் அமைந்தன.

எப்போதும் போல் இன்றும் அவனின் புஜங்களைக் கண்டு இவன் சொக்கி நிற்க, பத்மாவோ சற்று முன் ஒன்றும் தெரியாததைப் போல நடந்து கொண்டு இப்போது வந்து கை கொடுக்கும் கணவனை கண்களால் பொசுக்கினாள்.

அவளின் முறைப்பை இரசனையுடன் பார்த்த அதர்வா, அவள் நீட்டிய தன் கைகளைப் பற்றாமல் இருப்பதைக் கண்டு ஓர் விஷமப் புன்னகையுடன் குனிந்து அவள் இடையில் கை விட்டு மேலே தூக்கினான்.

அவனின் அதிரடியில் பெண்ணவளின் தேகத்தில் புது இரத்தம் பாய்வது போலிருக்க, அவனின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்று அவள் போராட, அதற்கு அவசியமே இல்லாமல் அதர்வாவே அவளை விட்டு விலகி நின்றவன் ஓர் கள்ளச்சிரிப்புடன் அவளை நோக்கி, “நீ இத்தனை வருஷமா என்னென்ன திருடுனன்னு ஒன்னுவிடாம கண்டுபிடிச்சுட்டேன்.. நைட் தண்டனைக்கு ரெடியா இரு.. வர்ட்டா பொண்டாட்டி!!!!” எனக் கூறி கண்ணடித்தவன் அவள் அதிர்ந்து நிற்பதை உற்சாகமாகப் பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.

அவன் கூற்றிற்கும் முகத்திலிருந்த மகிழ்ச்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததால் பத்மா குழம்பிப் போய் நிற்க அபி அவள் தோளைச் சுரண்டினான்..

“ம்ப்ச்.. என்னடா எதுக்கு என்னை சுரண்டுற??” என பத்மா கடுப்புடன் கேட்க,

“அடியே பத்து என்னடி உன் முறை மாமன் இப்படி நம்ம திருடுன லிஸ்ட் எல்லாம் எடுத்து வச்சுருக்கேன்னு சொல்லிட்டு போறாரு.. நைட் நம்மளை பிடிக்க தனிப்படை எதுவும் ஏற்பாடு பண்ணிருக்காரோ.. உனக்காச்சும் கல்யாணம்னு பேருக்கு ஒன்னு ஆய்ருச்சு, ஆனா நான் இப்ப தான் டி உருண்டு பொரண்டு என் பாருக்கு ப்ராக்கெட் போட்டு என்னை பார்க்கவே வச்சிருக்கேன்.... அதுல மண்ணள்ளி போட்டுறாதிங்க நீயும் உன் மாமனும்.. அப்பறம் இந்த கன்னிப்பையன் சாபம் உங்களை சும்மா விடாது சொல்லிட்டேன்” என பயத்தில் வாய்க்கு வந்ததை அபிஷேக் உளறித் தள்ளினான்.

பத்மாவே நேற்று இரவில் இருந்து அதர்வாவின் இந்த முன்னிற்குப் பின் முரண்பாடான செய்கையில் குழம்பித் தவித்துக்கொண்டிருப்பதால் அபியின் இந்த பொலம்பல் அவளுக்கு மேலும் எரிச்சலைக் கிளப்பியது, பின்னே எங்கு அவன் தன் குற்றங்கள் அத்தனையும் கண்டுபிடித்து தன்னை ஜெயிலுக்குள் தள்ளி விட்டு அந்த ரோஷினியை கட்டிக்கொள்வானோ என்று அவளின் உள்மனது வேறு அவளுக்கு பயம் காட்டிக் கொண்டிருக்கும் போது அபி வேறு சேர்த்து எண்ணெய் ஊற்றினால் பாவம் பெண்ணவள் என்ன தான் செய்வாள்.

அப்போது அவள் மூளையில் மின்னல் வெட்டியதைப் போல் நேற்று கணவன் தன்னை நெருங்கும் போது அவனின் “ஐ லவ் யூ அம்மு” என்ற குரலும், சற்று முன் அவன் கண்ணடித்துச் சென்ற போது நொடி நேரத்தில் அவன் முகத்தில் மின்னி மறைந்த காதலும் அவளுக்கு நினைவு வர, 'ஒருவேளை மாமாவுக்கு உண்மை தெரிஞ்சு தான் நம்ம கூட விளையாடிப் பார்க்கிறாரோ' என அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அபி, அவள் முகத்தில் வந்து போன வர்ணஜாலத்தைக் கண்டு குழம்பிப் போய் , “மாமன் கையால அரெஸ்ட் ஆகப்போறோம்னு நினைச்சு இந்த அரைலூசு முழுலூசாய்ருச்சோ” என சப்தமாக முனுமுனுத்தவன் அவளைப் பிடித்து உலுக்கி 'என்னாச்சு உனக்கு?' என வினவினான்.

என்னதான் உயிர் நண்பனாய் இருந்தாலும் அவனிடம் எப்படி உண்மையைக் கூற எனக் குழம்பியவள் , “அது... அது ... வந்து” எனத் தயங்க,

“ 'அந்தாண்ட இருக்கது டீப்பா(ய்)
பக்கத்து வூட்ல இருக்குது பாப்பா
என் உயிரை வாங்குற நீ ஒரு பீப்பா ' அதுவா இப்போ முக்கியம் இப்போ விஷயத்தைச் சொல்லப் போறியா இல்லையா நீ??” என அபிஷேக் எகிற,

மனதிற்குள் அவனை சபித்துக்கொண்டே , “ அது வந்து அதர்வா... அதான் என் மாமா அவர் வந்து நேத்து என்னை அம்முன்னு கூப்பிட்டாரு டா.. அப்போ அவருக்கு உண்மை தெரிஞ்சிடுச்சுன்னு தான அர்த்தம்” எனப் பாதி உண்மையை மற்றும் கூற,

அபியோ எதுவும் பேசாமல் தன் நாடியில் கைவைத்துக் கொண்டு அவளை சுற்றி சுற்றி வந்து யோசனை செய்வது போல் பாசாங்கு செய்ய, கடுப்பான பத்மா, “நான் என்ன திருமலை நாயக்கர் மஹாலா எதுக்குடா இப்படி சுத்தி சுத்தி பார்த்துட்டு இருக்க பன்னி!!” என அவனைப் பிடித்து நிறுத்தினாள்.

“நீ திருமலை நாயக்கர் மஹாலெல்லாம் இல்லை..... ஆனா மூளையை திருடு கொடுத்தவ மாதிரி பேசிகிட்டு இருக்கியே நீ நெஜமாவே பத்மாவா இல்லையான்னு பார்த்தேன்...” என கூறியவன் அவள் முறைப்பதை டீலில் விட்டுவிட்டு , “ஏன் பத்து அந்தாளு தான் அந்தாளு போலிஸ் என்றதையே மறந்து போலிஸ் ட்ரெஸோட சேர்த்து அவர் மூளையையும் கழட்டி வச்சிட்டு அந்த இத்துப் போன தகரடப்பா ரோஷினி பின்னாடியே எந்நேரமும் அம்முகுட்டி அஞ்சரைபெட்டின்னு சுத்திகிட்டு திரியுறாரே ... அவர் போய் உன்னை அம்முன்னு கூப்பிட்டுட்டாலும்... வேணும்னா அவ பேரை சொல்லி உன்னை கடுப்பேத்திருப்பாரு.. அது புரியாம அவருக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு உப்புக்கருவாடு காஞ்சிருச்சுன்னு உளறிகிட்டு இருக்காம நைட்டு அந்தாளுகிட்ட இருந்து எப்படி எஸ்கேப் ஆகுறதுன்னு யோசிச்சு வை நான் போய் என்னோட பாரு டார்லிங்கை பார்த்துட்டு வரேன் டாட்டா” எனக் கூறியவன் பத்மாவை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து உருண்டு சாரி சாரி நகர்ந்து சென்றான்.

அதுவரையில் அதர்வாவிற்கு உண்மை தெரிந்து விட்டதோ என நினைத்து உல்லாச வானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த பத்மாவின் மனம், அபியின் கூற்றில் பொத்தென்று கீழே விழுந்தது.

'ஒருவேளை அபி சொன்ன மாதிரி நம்மளை வெறுப்பேத்த தான் அந்த எருமையை அம்முன்னு நினைச்சிட்டு நேத்து நைட் நம்மளை....' என அவள் மனம் எங்கெங்கோ பயணிக்க, அது வந்து நின்ற இடத்தில் பட்டென்று தன் மனக்குதிரையை கடிவாளமிட்டு அடக்கியவள் இதற்கு மேல் இதைப்பற்றி சிந்திப்பது நல்லதல்ல என நினைத்து தன் மனதை திசை திருப்ப வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டவள் சிறிது நேரத்தில் அதில் வெற்றியும் கண்டாள்...


*************************

“எனக்கு என்னமோ நடக்குறது எதுவும் சரியாப்படலை ரஞ்சித்” என தன் பெரிய மீசையை நீவி விட்டுக்கொண்டே ராஜேந்திரன் கூற,

“ம்ப்ச்.. இப்போ என்ன சரியா நடக்கலை..எல்லாம் நம்ம ப்ளான் படி தான போய்கிட்டு இருக்கு” என ரஞ்சித்தின் வாய் அவருக்கு பதிலளித்தாலும் அவன் மனதிலும் அவர் சொன்னது தான் ஓடிக்கொண்டிருந்தது.

“நீ கூட்டிட்டு வந்த பொண்ணு நமக்கு வேலை பார்க்குதா இல்லை அந்த அதர்வாவுக்கா?? எப்போ பாரு அவன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கு .. இதோ பாரு ரஞ்சித் உன்மேல உள்ள நம்பிக்கையால தான் அந்த பொண்ணை இங்க வரவைக்க சம்மதிச்சேன் ஆனா நிலமை நம்ம கையை மீறி போய்கிட்டு இருக்குன்னு எனக்கு தோணுது” என தன் குறுக்கு புத்தி அவருக்கு எச்சரிக்கை விடுத்ததை மகனுக்கு அவர் அறிவுருத்த,

அவனோ , “இந்தா பாரு உன்னை விட எனக்கு அந்த அதர்வா மேல கொலைவெறியும் இந்த சொத்துமேல ஆசையும் அள்ளிபோய் கெடக்கு.. அதுனால எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்... அந்த ரோஷினி நமக்கு நல்லவளா இருக்க வரைக்கும் தான் என்னோட தோழி.. எப்போ இந்த ரஞ்சித்தயே அவ ஏமாத்தனும்னு நினைக்கிறான்னு எனக்கு தெரிய வருதோ அப்போவே அவ உயிர் என் கையால தான் போகும்.. அதுனால நீ தேவை இல்லாம குழப்பிக்காம போய் இந்த வீணாப்போனவனுங்க அந்த ப்ரியா கல்யாணத்துலயே மொத்த சொத்தையும் கரைச்சுராம கவனி போ” என அவரை விரட்டினான்.

“என்னமோ நீ சொல்ற நானும் கேக்குறேன்.. ஆனா சொத்துன்னு வந்துட்டா பெத்த புள்ளைன்னு கூட பார்க்க மாட்டேன் ரஞ்சித்... அதுனால என்னை ஏமாத்த எந்த திட்டம் வச்சிருந்தாலும் அதை இப்போவே அழிச்சிரு” என மிரட்டல் தொனியில் கூறியவர் அங்கிருந்து அகன்றார்.

ரஞ்சித்தின் மனம் அவர் கூறிச் சென்றதை நினைத்து அவரை மெச்சிக் கொண்டது..

'பரவாயில்லையே கெழம் ரொம்ப வெவரமா தான் இருக்கு.. நாம இந்தாளையும் போட்டுத் தள்ளிட்டு மொத்த சொத்தையும் அமுக்க திட்டம் போட்டதை கண்டுபிடிச்சிருச்சே.. அதனால தான எனக்கு அப்பனா இருக்க.. ஆனாலும் நான் நீ நினைக்கிறதெல்லாம் விட மோசமானவன்னு கூடிய சீக்கிரம் புரிஞ்சுப்ப தகப்பா' என மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் வெளியில் வில்லன் சிரிப்பு சிரித்து வைத்தான்.

அப்போது சரியாக அங்கு வந்து சேர்ந்தான் சிங்கபெருமாளின் மூத்த மகனும் அதர்வாவின் உபயத்தால் ஜெயிலில் களி தின்றுவிட்டு வெளியே வந்திருக்கும் மதன்.

ரஞ்சித்திற்கும் மதனிற்கும் எண்ணங்கள் ஒத்துப்போவதால் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் , மேலும் அதர்வாவின் மேல் இருவருக்கும் உள்ள கோபம் அவர்களின் நட்பை மேலும் வலிமையாக்கியது.

“என்னடா மாப்பிள்ளை இங்க தனியா என்ன பண்ணிகிட்டு இருக்க” என ரஞ்சித்தின் தோளில் கைபோட்டு அவன் அருகே அமர்ந்தான் மதன்.

“சும்மா தான் மச்சான்.. ஆமா நீ என்ன இந்தப்பக்கம்.. எப்போ வெளிநாட்டுல இருந்து வந்த?? அந்த அதர்வா உன்னை ஜெயில்ல தள்ளுன பொறவு இந்த ஊர்ப்பக்கமே வரமாட்டேன்னு வெளிநாட்டுலயே தவமிருந்த” என ரஞ்சித் வினவ,

மதனின் முகம் அவமானத்தில் கறுத்து பின் அடுத்த நிமிடமே பழிவெறியில் பளபளத்தது..

பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப் போல் நண்பனின் முகத்தை வைத்தே அவன் மனதைப் படித்த ரஞ்சித், “என்ன மச்சான் அப்போ ஏதோ பெரிய திட்டத்தோட தான் வந்திருக்க போலயே” என போட்டு வாங்க,

ஓர் விஷமப் புன்னகையுடன் , “நான் எதுக்கு மாப்பிள்ளை வீணாத் திட்டம் போட நீதான் ரோஷினின்னு ஒரு விஷப்பாம்பை அந்த குடும்பத்தையே அழிக்க அங்க உலாத்த விட்டிருக்கியே அது போதாதா” என உன் திட்டத்தை நான் அறிவேன் என்பதைப் போல் மதன் புட்டு புட்டு வைத்தான்.

முதலில் அதிர்ந்த ரஞ்சித், பின் சிங்கபெருமாளுக்கு தங்கள் குடும்பத்தின் மீதிருக்கும் பகையும் அவரின் குறுக்கு புத்தியையும் அறிந்ததால் அவர் மூலம் மதனிற்கு தெரிந்திருக்கும் என நினைத்தவன் 'தன் நண்பன் தானே' என தன் அனைத்து திட்டங்களையும் அவனிடம் விவரித்தான்.

அனைத்தையும் கேட்டு முடித்த மதன் ஒரு மெச்சுதல் பார்வையை ரஞ்சித்திடம் வீசினான்.

“ப்ளான் எல்லாம் நல்லா இருக்கு மாப்ளை ஆனா இதுனால உங்க குடும்பம் நடுத்தெருவுக்கு வரும்.. ஆனா அந்த அதர்வாக்கு அது மட்டும் போதாது.. அவன் நமக்கு பண்ணதுக்கெல்லாம் சேர்த்து அவனை வலிக்க வலிக்க அடிக்கனும் அப்போ தான் என் வெறி அடங்கும்” என்ற மதனின் கண்கள் கோபத்தில் மின்னின..

“நானும் அதான் மச்சான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் ஆனா என்ன பண்ணன்னு தான் புரியலை..” என ரஞ்சித் யோசிக்க,

“ப்ளானை நான் சொல்றேன்... ப்ரச்சனை வராம நீ பார்த்துக்கோ” என மதன் கூற, ரஞ்சித்தின் கண்களோ 'அப்போ எல்லாத்தையும் திட்டம் போட்டுட்டு தான் இங்க வந்திருக்க போல பேஷ் பேஷ்' என அவனை மெச்சியது.

அவனின் பாராட்டை ஓர் புன்னகையில் ஏற்றவன் தன் திட்டத்தை விவரிக்க, ரஞ்சித்தின் விழிகள் சந்தோஷத்தில் விரிந்தன..

மதன் முடிக்கும் முன்னே அவனைக் கட்டிக்கொண்ட ரஞ்சித் ,”ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் மச்சான்.. இந்த திட்டம் மட்டும் நடந்துச்சு இந்த அடில இருந்து அவனால எழுந்துக்கவே முடியாது..ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மச்சி” என அவன் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தான்.

அவனை அடக்கிய மதன், பின் தங்கள் சதித் திட்டத்தை எப்படி மாட்டிக்கொள்ளாமல் செய்வது என தீர சிந்தித்து ஆலோசித்துவிட்டு ஓர் துள்ளலுடன் அங்கிருந்து கிளம்பினர்.

எதேச்சியாக அந்தப்பக்கம் வந்த சிங்கபெருமாளின் இரண்டாம் மகனான வேந்தனின் காதில் அவர்கள் பேசியது விழ, அவன் அதிர்ச்சியில் சிலையாகி நின்றான்.

*************************

“ஏய் இப்போ எதுக்கு உன் கழுத்துல கெடந்த செயினை அத்துட்டு போனவனை இட்டுன்னு போற மாதிரி இப்படி என்னை கூட்டிட்டு போற??” என அபி பாருவின் பஞ்சுக் கைகளுக்குள் அகப்பட்டிருந்த அவனுடைய பஞ்சரான கைகளை விடுவிக்கப் போராடிக் கொண்டே கேட்க,

பார்வதியோ அவனை திரும்பி ஒரு பாசப்பார்வை பார்த்து விட்டு எதுவும் பேசாமல் இன்னும் வேகமாக அவனை இழுத்துக் கொண்டு நடந்தாள்.

“அப்படி எங்க இழுத்துட்டுப் போறா!!! ஒருவேளை அந்த எம்டன்(அதர்வா) இவகிட்ட நம்ம திருட்டுத்தொழிலைப் பத்தி போட்டு விட்டுட்டானோ... போலிஸ் ஸ்டேஷனுக்குக் தான் இப்படி பலி கொடுக்கப்போற ஆட்டை இழுத்துட்டு போற மாதிரி கூட்டிட்டுப் போறாளோ.. அய்யோ கடவுளே!!” என அவன் ஏதேதோ சிந்தித்து பயந்தவன், அவள் கையில் இருந்து தன் கையை உருவிக்கொண்டு ஓட எத்தனித்த சமயம் பார்வதி ஒரு ஓட்டு வீட்டின் முன் நின்றிருந்தாள்.

அது காவல் நிலையம் இல்லை என்பதை உணர்ந்த பின்பே அபிக்கு போன உயிர் பாயின்ட் டூ பாயின்ட் பஸ் வழியாக அவனிடம் விரைவாக வந்து சேர்ந்தது.

“ஓய் பாரு இங்க என்னையை பாரு.. யாரு வீடு இது எதுக்கு இங்க என்னை ஏதோ உன் செயினை திருடிட்டு போனவன் மாதிரி அப்படி இழுத்துட்டு வந்த??” என அபி கேட்க,

அவள் அவனுக்கு பதிலளிக்காமல் அந்த வீட்டின் முன் போடப்பட்டிருந்த திண்ணையில் அவனை அமர வைத்துவிட்டு உள்நோக்கி ,”பாட்டிஈஈஈ பாட்டி இங்க வா” என குரல் கொடுத்தாள்.

'அடச்சீ கெழவியை பார்க்கத்தான் இவ்ளோ பில்ட்அப்பா' என அபி நொந்துகொள்ள, பாருவோ அவன் காதுக்கு அருகில் குனிந்து மிக மெல்லிய குரலில்,”யோவ் எப்பயும் போல கோக்கு மாக்கா என் பாட்டிகிட்ட பேசி தொலைச்சிராத சரியா... எனக்கிருக்க ஒரே சொந்தம் என் பாட்டி தான்.. அது ஒத்துக்கிட்டா தான் நம்ம கல்யாணம் நடக்கும் அதை மனசுல வச்சுக்கிட்டு மரியாதையா பேசித்தொலை என்ன புரிஞ்சதா??” என அவள் கூறிவிட்டு அவன் பதிலுக்காக அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க,

அவனோ அந்த லோகத்தில் இருந்தால் தானே, பாருவின் அருகாமையில் அவன் மனம் பரலோகத்திற்கு பறந்து போய் டூயட் பாடிக்கொண்டிருக்க அவன் மண்டையிலே நங்கென கொட்டி அவன் கனவைக் கலைத்தாள்.

சரியாக அப்போது உள்ளிருந்து ஒரு வயதான பெண்மனி வர, அபிஷேக் சடாரென்று அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.

அவன் செய்கையில் பதறிப்போன பாட்டிக்கு நெஞ்சம் படபடவென வர, நெஞ்சைப் பிடித்துக் கொண்டே ஓர் அடி பின்னே நகர்ந்தவர் பின் தன் பேத்தியை நோக்கி, “ அடியாத்தி யாருடி இது!!! நம்ம மாரியாத்தா கோயிலு உண்டியலு மாதிரி உருண்டையா வந்து காலுல விழவும் ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு டி” என அவர் புலம்ப,

அபியோ,”அடியே கெழவி உன் பேத்தியை கட்டிக்கிட்ட பின்னாடி உன்னை வச்சுக்கிறேன் நானா உண்டியலு” என மனதில் கறுவிக் கொண்டே எழ முயன்றான்.

“ஷ்!! சும்மா இரு பாட்டி.. இவர் தான் அவரு... நான் நேத்து சொன்னேன்ல எனக்கு ஒருத்தரை பிடிச்சிருக்கு அவக கூட நம்ம பெரியைய்யா(பண்ணையார்) வூட்ல வேலை செய்யிறாங்கன்னு அவக தான் இவங்க” என அவன் வெட்கத்தோடு முடித்தாள்.

“ஓஹ் அப்படி யாரு இந்த சீமையில இல்லாதவனை நீ பிடிச்சிட்டன்னு நானும் பார்க்குறேன்.. கீழே உருண்டு தரையை மொழுகுனது போதும் துரையை மூஞ்சியைக் காட்டச்சொல்லு... ஒரு முழு பேன்ட் வாங்கக்கூட காசில்லாம அரை டவுசரை போட்டுக்கிட்டு திரியுற இந்த வெறும்பயலுக்காகத்தேன் நான் ராஜாவாட்டாம் கொண்டு வந்த மாப்பிள்ளையெல்லாம் வேணம்னு சொன்னியோ க்கும்” என அவன் ஷார்ட்ஸைப் பார்த்து கிழவி நொடித்துக் கொண்டே கூற, அபிக்கு கொலைவெறியானது.

“யோவ் எழுந்திரிய்யா இவ்ளோ நேரமா என்னத்தை பண்ணிகிட்டு இருக்க” என அபியிடம் பாரு முனுமுனுக்க,

'அடியே ஏதோ ஒரு வேகத்துல விழுந்துட்டு எழுந்துக்க முடியாம நானே போராடிகிட்டு இருக்கேன் இதுல பாட்டிக்கும் பேத்திக்கும் பேச்சைப் பாரு.. எழுந்து உங்க ரெண்டு பேரையும் வச்சுக்கிறேன் ப்ளடி பக்கர்ஸ்' என மனதில் புலம்பிய அபி கஷ்டப்பட்டு ஐந்து நிமிடம் கழித்து ஒரு வழியாக எழுந்து நின்று ஓர் மந்தகாசப் புன்னகையுடன் பாட்டியை ஏறிட்ட சமயம்,

“நீயாஆஆஆஆஆஆஆ!!!!!!” என இருவரும் ஒருமித்த குரலில் அலறினர்....


*************************

“பத்மா நம்ம ப்ரியாகுட்டியை பார்த்தியா பட்டணத்துல இருந்து நகை டிசைன் கொண்டு வந்திருக்காங்க டா... அவ வந்தா அவளுக்கு பிடிச்ச மாதிரி செய்ய சொல்லிரலாம் நானும் தேடிகிட்டே இருக்கேன் ஆளையே காணோம் இவளை” என ராஜாத்தி பத்மாவிடம் புலம்ப,

“அத்தை கொஞ்சம் பொறுமையா உட்காருங்க.. காலுல சக்கரத்தை கட்டுன மாதிரி ஓடிகிட்டே இருக்காதிங்க.. நான் போய் ப்ரியாவை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வரேன் நீங்க முதல்ல உட்கார்ந்து ரெஸ்ட் எடுங்க” என அவரை அங்கிருந்த கதிரையில் அமர வைத்தவள் அவருக்கு தண்ணீர் கொண்டு வந்து குடிக்க வைத்து விட்டு அங்கிருந்து நகரப்போக,

அவள் கைபிடித்து தடுத்த ராஜாத்தி அவளின் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார்.

“என் தங்கம்... நீ நம்ம வீட்டுக்கு வந்த மகாலக்ஷ்மியே தான் டா.. சரி சரி ப்ரியாவை கூட்டிட்டு வந்து நீயும் உனக்கு பிடிச்ச டிசைனெல்லாம் ஆர்டர் கொடுக்கனும் புரிஞ்சுதா அவளுக்குத் தானே கல்யாணம்னு நீ எடுக்காம இருந்துராத...” என செல்ல மிரட்டல் விடுத்தவர் வைத்தீஸ்வரி அழைக்கவும் அங்கிருந்து நகன்றார்.

'ம்க்கும் உங்க புள்ளை சும்மாவே திருடி திருடின்னு தையத்தக்கான்னு குதிப்பாரு இதுல இன்னைக்கு நைட்டு வேற தண்டனைக்கு ரெடியா இருன்னு கொளுத்தி போட்டுட்டு போனாரு இந்த லட்சணத்துல நகைக்கு மட்டும் நான் ஆர்டர் கொடுத்தா என்னை திகார் ஜெயில்ல கையோட போய் போட்டுட்டு வந்து தான் அடுத்த வேலையே பார்ப்பாரு.. நீங்க வேற ஏன் அத்தை இப்படி ' என மனதிற்குள் தன் மன்னவனை நினைத்து சலித்துக் கொண்டவள் பின் பிரியாவைத் தேடி அவள் அறைக்குச் சென்றாள்,

அந்த அறையில் அவள் இல்லாமல் போக, 'எங்க போனா இவ?? நிச்சயம் ஆனதுல இருந்து போன்லயே குடும்பம் நடத்திகிட்டு இருக்கா.. ஹம்ம் இந்த போனைத் தூக்கிட்டு இப்போ எங்க உலாத்திகிட்டு இருக்கான்னு தெரியலையே' என செல்லமாக தன் நாத்தனாரை மனதிற்குள் கிண்டலடித்த பத்மா அவளை வீட்டின் ஒவ்வொரு இடமாகத் தேடினாள்.

வீட்டினுள் ப்ரியாவைக் காணாமல் போக, 'இருட்டிருச்சு இப்போ எங்க போய் தொலைஞ்சா இவ' என லேசாக பயம் வர ,வீட்டின் பின் பக்கத்திலுள்ள தோட்டத்தில் பத்மா தேட நினைத்து அங்கு விரைந்தாள்.

அவள் தோட்டத்தை அடைந்த நொடி மின்சாரம் சட்டென்று போக, அந்த இடமே இருளில் மூழ்கியது.

பத்மாவிற்கு திருட்டு தொழிலில் இருந்ததால் இந்த இருட்டு அவளுக்கு பழக்கமானதென்றாலும் ப்ரியாவை நினைத்து அவள் மனம் திக் திக் என அடித்துக் கொண்டது.

அங்கிருந்த மயான அமைதி வேறு அவள் வயிற்றில் புளியைக் கரைக்க, “ப்ரியா ப்ரியா!!!” என குரல் கொடுத்துக்கொண்டே முன்னேறினாள்.

அந்த இருளில் அவள் காலடிச் சத்தத்தோடு பின்னால் யாரோ தன்னை தொடர்வது போல் சருகு மிதிபடும் சப்தம் அவள் காதில் வந்து விழ, பத்மாவிற்கு ஏதோ தவறாகப்பட்டது.

“யாரது????” என அவள் குரல் கொடுக்க, இப்போது மீண்டும் மயான அமைதி,

இதற்கு மேல் இங்கிருப்பது ஆபத்து என மூளை அவளுக்கு அச்சுறுத்த அங்கிருந்து அவள் நகர காலை முன்னே வைத்த சமயம் அவள் நாசியில் யாரோ துணியை வைத்து பொத்தியிருந்தனர்.

அவள் கத்துவதற்கு முற்பட, அதை உணர்ந்து கொண்ட அந்த உருவம் அவள் வாயை தன் கரம் கொண்டு மூடியது.

அந்த உருவத்திடம் போராட முடியாமல் அவள் நாசி நுகர்ந்த மயக்க மருந்து அதன் வேலையைக் காட்டத்துவங்க, அந்த உருவத்தின் கைகளிலே மயங்கிச் சரிந்தாள் பெண்ணவள்..

ப்ரியாவைத் தேடி வந்த பத்மா யாரென்று தெரியாத ஒருவனால்/ஒருத்தியால் அங்கு கடத்தப்பட்டாள்!!!!!!!!!!!



-தேடல் தொடரும்.

ஹாய் தோழிஸ்

"திருடி சென்றாய் இதயத்தையே" கருத்துகளை இங்கே பகிரவும்.


ஸ்வராகினி.
 

swaragini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 25:

எங்கோ கேட்ட ‘கிரீச்’ என்ற சத்தத்தில் படக்கென கண்விழித்த பத்மாவுக்கு முதலில் எதுவும் புரியவில்லை... தாம் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய பார்வையைச் சுழல விட்டவளுக்கு எங்கு பார்த்தாலும் இருட்டு மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது...

அதிலும் தான் ஒரு இருக்கையில் அமர வைக்கப்பட்டு இருப்பதை அவளால் உணர முடிந்தது... கிறு கிறுத்த தலையை உதறி தன் மயக்க நிலையை போக்கியவாறு என்ன நடந்தது என்று யோசித்தவளுக்கு ராசாத்தி சொன்னதன் பேரில் பிரியாவை வீட்டுக்குள் எங்கு தேடியும் காணாது தோட்டத்துக்கு தேடிச் சென்றது, மின்சாரம் தடைபட்டது, தன் பின்னால் யாரோ வருவதை உணர்ந்து திரும்பி திரும்பி பார்த்தது, இருட்டுக்குள் தன் மூக்கில் எதையோ வைத்து அழுத்தியது வரை நினைவிற்கு வந்ததும் இப்பொழுது தான் இருக்கும் நிலையையும் சேர்த்து யோசித்து பார்த்தவள், மயக்க மருந்தை உபயோகித்து தன்னை யாரோ கடத்தி இருக்கிறார்கள் என்பதை கண்டு கொண்டவளின் மனதில் பயம் என்பது சிறிது கூட ஏற்படவில்லை...

ஏனெனில் அன்றைய அவர்களின் முதல் கூடலுக்கு முன்பு அதர்வா தன்னை பார்த்து ‘ஐ லவ் யூ அம்மு’ என்று சொன்னது அவளில் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்தது... அதை அபிஷேக்கிடம் கூறி அவன் ஏதோ காரணம் சொல்லி அவளை குழப்பி விட்டு இருந்தாலும் ஏனோ தன் மன்னவன் தன்னை உணர்ந்து கொண்டான் என்பதை அவனது செய்கைகளிலும் பார்வையிலும் அன்றைய நாளுக்கு பின் அவள் கண்டு கொண்டிருந்தாள்... எனவே அவன் தன்னை எப்படியாவது காப்பாற்ற வருவான் என்ற நம்பிக்கை அவள் நெஞ்சு முழுக்க நிரம்பிக் கிடந்தது...

அது மட்டும் அல்லாது இன்றைய நாளுக்கு பின்பு எல்லா உண்மையும் தன் குடும்பத்துக்கு தெரிய வந்துவிடும் என மனசு கூறிக்கொண்டு இருந்ததில் தன்னிடம் அப்படி என்ன இருக்கிறது என விளையாடி பார்க்கிறார்கள் என கடத்தியவர்களை எண்ணி சிரிப்பு தோன்ற அடக்க முடியாது வாய்விட்டு நகைக்க தொடங்கினாள்...

அவளின் அந்த சிரிப்பு சத்தம் வெளியில் நின்றிருந்தவர்களை உள்ளே அழைத்து போல், படக்கென கதவைத் திறந்து உள்ளே வந்து மின் விளக்கை ஒளிர விட்டு அவளுக்கு முன்னால் போய் நின்றவர்களை கண்டு ‘உங்களை தான் நான் எதிர்பார்த்தேன்’ என்பது போல் முகத்தில் அதிர்ச்சியோ பயமோ போன்ற எந்த உணர்ச்சியும் இல்லாமல் சிரித்தபடி இருந்த பத்மாவை கண்டு எரிச்சலான ரோஷினி,

“ஏய் நிறுத்துடி... எங்க கிட்ட பிடிபட்டு இருக்க என்ற பயம் கூட இல்லாம சிரிச்சிட்டு இருக்க... சரி உனக்கு தான் உன்னைக் கடத்தியது பற்றி எந்த பயமும் இல்லை... ஆனால் பக்கத்துல ஒருத்தி இருக்கிறாள், அவளை பற்றி கூடவா கவலை இல்லை” என நக்கலா சொல்ல, அவள் சொன்னதும் தான் தான் மட்டுமில்லாமல் இன்னொருத்தியும் அந்த அறையில் அடைக்கப்பட்டு இருந்தது புரிய, படக்கென சிறிது தள்ளி அமர வைக்கப்பட்டு இருந்தவளின் முகத்தை கண்ட பத்மாவுக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தாலும் அதனை மற்றவர்களுக்கு காட்டாது மறைத்து கொண்டவள்,

“ப்ரியாவை கூட நீங்க தான் கடத்தினீங்களா... என்னடா ரொம்ப நேரமா ஆளையே காணோம்னு என் மாமியார் என்னை இவளை கூப்பிட்டு வான்னு அனுப்பி வெச்சாங்க... பார்த்தா நீங்க இவளையும் கடத்தி வச்சிருக்கீங்க... எங்க ரெண்டு பேரையும் காணோம்னு இவ்வளவு நேரம் தேட ஆரம்பிச்சுருப்பாங்க... நீங்க தான் கடத்தி வைத்திருக்கிறது தெரிஞ்சுது, உங்க எல்லாருக்கும் சங்குதான்” என ரோஷினியுடன் நின்ற ரஞ்சித்தையும் அவனது தந்தையையும் பார்த்து கேலியாக அவள் கூறிவிட்டு நகைக்க, அவளின் நகைப்பு சத்தத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த பிரியா, பார்வையை சுழல விட்டு தன் எதிரில் நின்றிருந்தவர்களையும் தன்னையும் பத்மாவையும் கட்டி வைத்திருப்பதையும் கண்டு அதிர்ந்து விழிக்க, பத்மாவை முறைத்தபடி நின்றிருந்தவர்களுக்கு தங்கள் காரியம் நிறைவேறுவதற்கு பிரியாவை பகடையாக்கினால் என்ன என தோன்றும் அளவிற்கு அவளது கண்களில் அப்பட்டமான பயம் தெரிந்தது...

அதில் அவர்களது முகம் மலர, பத்மாவை திமிராக பார்த்தபடி,

“இப்போ நாங்க சொல்றதை நீ பண்ணல, பிரியாவை ஏதாவது பண்ணிடுவோம்... எப்படி வசதி???” என கடுமையாய் ரஞ்சித் கேட்க, அவனை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு பிரியாவின் பக்கம் பார்வையை திருப்பி விழிகளால் அவளுக்கு தைரியத்தை கொடுத்தவள்,
“இதுக்கு பதிலை நான் முன்னமே சொல்லிட்டேனே” என கேலியாக சொல்ல,

“எது, உங்களை காப்பாத்த வருவாங்க என்றதை தானே???” என்ற ரோஷினி, ஏதோ ஹாசியத்தை சொன்னது போல் விழுந்து விழுந்து சிரிக்க, மற்ற இருவரும் அவளோடு இணைந்துகொண்டதை கண்டு அவர்களை பரிதாபமாக நோக்கியவள்,

“இங்க என்ன காமெடி ஷோவா நடக்குது... பார்க்கப்போனா நாங்கதான் உங்களை பார்த்து சிரிக்கணும்” என பிரியாவை பார்த்து கண்ணடித்தவளின் அந்த தைரியமான செய்கை பிரியாவிற்கு நம்பிக்கையை தோற்றுவிக்க, தன் அண்ணியை பார்த்து புன்னகைத்தாள்...

பத்மாவின் பேச்சோடு பிரியாவின் பயம் அற்ற தன்மையையும் கண்டவர்களுக்கு எரிச்சலாக வர பல்லை கடித்தவர்கள்,

“ரொம்ப தைரியமா பேசுறதா நினைப்பா... பொட்ட கழுதைங்க நீங்க ரெண்டு பேரும் இப்ப எங்க கிட்ட மாட்டி இருக்கீங்க... இந்த இடம் கூட யாருக்கும் தெரியாத இடம் தான்... எப்படி நீங்க இங்க இருந்து தப்பிக்க போறீங்க, உங்களை யார் வந்து காப்பாத்துவாங்கன்னு நாங்களும் பார்க்கிறோம்” என கர்ஜித்த ராஜேந்திரன், ரோஷினியை பார்த்து,

“அவ கைக்கட்டை அவுத்து விடு... அவகிட்ட சைன் வாங்கணும்” என அதட்ட, தன் காரியம் முழுவதும் முடியாத நிலையில் அமைதியாக இருப்பது நல்லது என முடிவெடுத்தவள், மறு பேச்சில்லாமல் பத்மாவின் அருகில் சென்று அவளது கை கட்டுகளை அவிழ்த்து விட்டாள்...

நீண்ட நேரமாக கட்டப்பட்டிருந்த கைகளில் ஏற்பட்டிருந்த விறைப்பை போக்குவதற்காக இரு கைகளையும் உதறிவிட்டு அப்படியே தலைக்கு பின்னால் கொண்டு சென்று சோம்பல் முறித்தபடி வசதியாக அதே இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு,
“இப்ப சொல்லுங்க, நான் என்ன பண்ணணும்???” என புருவத்தை உயர்த்தி கேட்டவளை ஆராய்ச்சியாய் பார்த்தவர்களுக்கு ‘என்னடா இது, இவ்வளவு சீக்கிரம் இவள் தங்கள் வழிக்கு வந்து விட்டாளா???’ என நினைக்கத் தோன்றியது... இருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் அவள் ஒத்துக் கொள்ள மாட்டாள் என்ற சந்தேகமும் இருந்ததால் ஜாக்கிரதையாகவே சில பாத்திரங்களை எடுத்துக் கொடுத்து,

“இதில் கையெழுத்துப் போடணும்... கையெழுத்துப் போட்டா உங்க ரெண்டு பேரையும் விட்டு விடுவோம்” என சொல்ல பத்திரங்களை வாங்கி பார்வையை ஓட்டியவள், “பென்” எனக் கேட்க, ரஞ்சித் தன் சட்டை பாக்கெட்டில் இருந்து பென்னை எடுத்து அவளிடம் கொடுத்தான்... அதனை வாங்கி இவர்களைப் பார்த்தவாறே ஒவ்வொரு பக்கமாக கையெழுத்திட்டவள், மொத்தமாக மடித்து அவர்களிடம் கொடுக்க, அதனை வாங்கி பாதுகாப்பாக வைத்துவிட்டு பயங்கரமாக சிரித்த ராஜேந்திரன்,

“இப்படி ஏமாந்துட்டியேமா... அவ்வளவு சீக்கிரம் உங்களை விட்டுடுவேனா??? நீதான் இந்த வீட்டு வாரிசு என்றது எங்களுக்கும் உன் தோஸ்த்துக்கும் மட்டும் தான் தெரியும்... அவனை நாங்க எப்படியாவது போட்டு தள்ளிடுவோம்... இனிமேல் எந்த சாமியும் உங்களை காப்பாத்த முடியாது” என கத்திவிட்டு விகாரமாக சிரிக்க, அந்த நொடி மிகப்பெரிய உண்மையை தெரிந்து கொண்ட பிரியாவுக்கு பிரளையம் நடந்தது போல் தலையெல்லாம் சுற்றியது...

‘இவங்க தான் ஆர்னா அண்ணியா??? அப்போ இவ்வளவு நாளும் இங்க இருந்தது இவங்க ஆளா??? ஏற்கனவே சித்தப்பாவும் இந்த ரஞ்சித்தும் சரியில்லாதவங்கன்னு தெரியும்... ஆனால் இவ்வளவு தூரம் போவாங்கன்னு நினைக்கலையே... அத்தை உங்க பொண்ணு உங்க பக்கத்துல இருந்தும் பாம்புக்கு பால் வாத்திருக்கீங்களே... இவங்களோட இந்த குள்ளநரி தனத்தை யாரும் கண்டுக்காமல் விட்டுட்டாங்களா???’ என மனதுக்குள் புலம்பியவளுக்கு எதிரில் நிற்பவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி வந்தது... இருந்தாலும் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்யாமல் நிதானமாக இருக்க வேண்டும் என மூளை அறிவுறுத்தியதும் அமைதியாக நடப்பவற்றை கவனித்தவளின் நெஞ்சம், வீட்டில் இருப்பவர்களில் யாராவது வந்துவிட்ட வேண்டும் என உருப்போட்டபடி இருந்தது...

தன்னிடம் சைன் வாங்கியபின் ராஜேந்திரனின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தையும் அவரின் கொடூர சிரிப்பை பற்றியும் கவலைப்படாமல் இதை தான் எதிர் பார்த்தேன் என்பது போல் எந்த வித பதட்டமோ அதிர்ச்சியோ இல்லாது தன் சுண்டு விரலை இடது பக்க காதுக்குள் விட்டுக் குடைந்தவளின் உதட்டின் ஓரம் துடிக்க,

“ஸ்ஸ்...ஸ்... எதுக்கு இப்ப இந்த சத்தம்??? ஆனாலும் நீங்க இவ்வளவு ஏமாளியா, ச்சீ... நல்லவங்களா இருக்கக்கூடாது... ச்சு ச்சு” என சொல்லி பரிதாபப்பட்டவளை பார்த்து ஒன்றும் புரியாமல் விழிக்க, அவர்களின் பாவனையை வைத்தே அவர்களது மனநிலையை கண்டு கொண்டவள்,

“என்ன நான் சொல்றது புரியலையா??? அவ்வளவு சீக்கிரம் இந்த குடும்பத்தோட சொத்தை உங்க கைல தாரை வார்த்து நாசமா போக நான் விடுவேனா... முதல்ல அந்த பத்திரத்தில் என்ன பண்ணி இருக்கேன்னு பாருங்க” என நக்கலாய் சொல்ல, அதன் பிறகே தாங்கள் செய்த முட்டாள்தனம் நினைவுக்கு வர, தலையில் அடித்து கொண்டபடி பத்திரத்தை மீண்டும் எடுத்து அதில் கையெழுத்து போடும் இடத்யை பார்க்க, அதில் இருந்த ‘அம்மு’ என்ற சொல் அவர்களை கேலி செய்வது போல் இருந்தது...

அந்த வார்த்தையில் அவர்களின் விழிகள் நிலைகுத்தி படர, அதிர்ந்து நின்றிருந்தவர்களின் காதோரம்,

“என்ன தெரிகிறது???” என்ற வடிவேலுவின் மாடுலேஷனில் வந்த குரலில் திடுக்கிட்டு பார்வையை திருப்ப, அங்கு அபிஷேக் தன் இடுப்பில் கைகளை வைத்து ராஜேந்திரனின் கையில் இருந்த பத்திரத்தில் பார்வையை பதித்தவாறு நின்றிருந்தவனை கண்டு மேலும் அதிர்ந்து நின்றிருந்தவர்களை கண்டு நக்கலாக சிரித்த பத்மா,

“டேய்... அங்க என்ன பார்வை... மாமாக்கு இந்த இடத்தின் லொக்கேஷன் அனுப்பிட்டியா???” என அபிஷேக்கை கேட்க, அவனும் பார்வையை உயர்த்தி ஆமோதிப்பாய் தலையசைத்தான்...

அதுவரை திகைத்து நின்றிருந்த மூவருக்கும் அவர்களின் பேச்சை கேட்ட பின்பு காலம் தாழ்த்துவது சரியில்லை என்பது புரிபட, ராஜேந்திரன் கண்ணை காட்டியதும் ரஞ்சித் அபிஷேக்கையும் ரோஷினி பத்மாவையும் அமுக்கி பிடிக்க, பத்மாவின் முகத்தில் அந்த பத்திரங்களை விசிறியடித்த ராஜேந்திரன், பிடிபட்ட பின்பும் அவளின் முகத்தில் இருந்த கேலி சிரிப்பில் வெறி கொண்டவராக,

“உங்களை தீர்த்துக்கட்ட முன்னாடியே பிளான் பண்ணி இந்த அபிஷேக் பையல் மட்டும் மாட்டாம இருந்தான்... இப்போ அவன் தானாகவே வந்து பொறியில மாட்டின எலி போல மாட்டிக்கிட்டான்... உண்மை தெரிஞ்ச நீங்க மூன்று பேரும் இனிமேல் உயிரோட இருக்கிறதுல அர்த்தமே இல்லை... எங்க கிட்ட ஏன்டா பகைச்சுக்கிட்டோம்ன்னு உங்களுக்கு கொடுக்குற தண்டனைலயே நீங்க உணருவீர்கள்” என கூறி வில்லன் சிரிப்பு சிரிக்க,

“எங்களுக்கு உண்மை தெரிஞ்சுடிச்சு... அப்போ எங்களை என்ன செய்யப் போறீங்க” என வாசல் பக்கம் இருந்து வந்த இரு வேறு குரல்களில் அதிர்ந்தவர்களுக்கு அந்த குரல்கள் யாரினுடையது என்பதை இனம் கண்டதும் இதயம் தொண்டை குழியில் வந்து துள்ள, கண்கள் வெளியில் தெறித்து விடுவது போல் விரிய, கை, கால்கள் வெடவெடக்க பயத்தோடு வாசல் பக்கம் திரும்பியவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என புரியவில்லை...

அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என விழிகளில் பயத்தோடு திகைத்து நிற்க, ரோஷினியின் பிடியில் இருந்து விடுபட்டதும் பத்மா சென்று கட்டப்பட்டிருந்த பிரியாவின் கட்டுகளை அவிழ்த்து விட, இருக்கையில் இருந்து எழுந்து ‘அண்ணி’ என கூவியவாறு அணைத்துக் கொள்ள, முகம் கொள்ளா சிரிப்புடன் தானும் பிரியாவை தன் கைகளால் இறுக்கி கொண்டாள்...

அணைத்தபடி நின்ற இருவரையும் புதிதாய் வந்திருந்த ஒரு குரலுக்கு சொந்தக்காரரான மாதேஸ்வரன் கையில் துப்பாக்கியோடு மனம் கனிய பார்த்திருக்க, அடுத்த குரலுக்கு சொந்தக்காரியான சுமி, அவர்களை பார்த்தவாறு அருகில் வந்து பிரியாவின் முதுகை தட்டி,

“கொஞ்சினது போதும்... விலகு” என அதட்டியதில் ப்ரியாவும் பத்மாவின் அணைப்பிலிருந்து விலகி நின்றதும் பத்மா சுமியை கேள்வியாக நோக்க, அவளும் அந்த பார்வையை ஏற்று நின்றவள், அடுத்த நொடியே, “அக்காஆஆஆஆ” என பாய்ந்து அணைத்து கொண்டு கதறி அழ, அவளின் செயலில் முதலில் திகைத்த பத்மாவும் தங்கையின் அழுகையை தாங்க முடியாது அவளது தலையை வருடி கொடுத்தவளின் கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, அந்த உணர்ச்சி சங்கமத்தை மற்றவர்கள் பார்த்திருந்த வேளை, ரோஷினி மெல்ல நழுவி அங்கிருந்து செல்ல பார்த்தவள், வாசலை ஒட்டி நின்றிருந்த மாதேஸ்வரனிடம் மாட்டிக்கொண்டாள்...

“எங்க ஓடுற, இவ்வளவும் பண்ணின உங்களை இந்த துப்பாக்கியால சுடணும்னு வெறி வருது... ஆனால் நான் சட்டத்தை கைல எடுக்க விரும்பல” என துப்பாக்கியால் அவளை தடுத்து அவர் மிரட்டியதில் மற்றவர்களின் பார்வை இவர்கள் பக்கம் செல்ல, சுமியை தன்னிடமிருந்து பிரித்த பத்மா, அவளது கண்களை துடைத்துவிட்டு,

“கொஞ்சம் பொறு” என்றவள், மாதேஸ்வரனுக்கு அருகில் சென்று,

“நீங்களும் சுமியும் இங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல மாமா... எப்படியும் மாமா வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்துச்சு... ஆனாலும் உங்களுக்கு உண்மை தெரிஞ்சதில் எனக்கு சந்தோசம் மாமா” என நிறைவாய் சொன்னவளை ஆதூரமாய் பார்த்து,

“இந்த உண்மை இன்னைக்கு எனக்கு தெரியலைமா... ரஞ்சித் உன் கையை முறுக்கினானே அப்போதான் எனக்கு எல்லாம் தெரிஞ்சிச்சு... இத்தனை வருஷமா பாம்புக்கு பால் வார்த்திட்டு இருக்கேன்கிறது அப்போ தான் புரிஞ்சிச்சு... ஆனா இவங்களை கையும் களவுமா பிடிக்கணும்ன்னு பொறுமையா இருந்தேன்... எனக்கு உண்மை தெரியும்ங்றது தெரியாமல் இவங்க பிளான் போட்டாங்க” என்றவர், வெறுப்பும் வேதனையுமாய் தன் தம்பியையும் தம்பி மகனையும் முறைத்தவர், மீண்டும் எதையோ சொல்ல வந்த வேளை, அதிரடியாய் கையில் துப்பாக்கியுடன் நுழைந்தான் அதர்வா...

அவனைக் கண்டு ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ‘வர இவ்வளவு நேரமா???’ என்ற கோபத்தில்,

“கடைசில சிரிப்பு போலீஸ் வந்துடிச்சு” என பக்கத்தில் நின்றிருந்த அபிஷேக்கின் காதில் முணுமுணுக்க, அது அட்சரம் பிசகாமல் அதர்வாவின் காதிலும் விழுந்து வைத்தது... அதனைக் கேட்டு பத்மாவை முறைக்க, அவளோ வெடுக்கென மூஞ்சியை திருப்பிக் கொண்டாள்... அதில் சிரிப்பு வந்தாலும் மனைவி எதற்காக மூஞ்சியை திருப்பினாள் என உணர்ந்து கொண்டவன், அவளை பிறகு சமாளித்துக் கொள்ளலாம் என்ற முடிவு எடுத்துக்கொண்டு ரஞ்சித்தின் முன்னால் சென்று அவனைப் பளாரென்று அறைந்தவன், சிறிய தந்தையை விழிகளில் கனலோடு நோக்கியவன்,

“அப்பாகூட பிறந்திட்டீங்க என்றதுக்காக மட்டும் தான் உங்களை அறையாமல் விட்டேன்... எவ்வளவு தைரியம் இருந்தா என் அம்முவையே கடத்தி இருப்பீங்க... இதுல பிரியாவையும் நீங்க விட்டு வைக்கலை... இனி உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது” என கர்ஜித்தவன், வாயைக் குவித்து விசில் அடித்ததும் வெளியிலிருந்து ஒரு போலீஸ் படை உள்ளே நுழைந்தது...

அவர்களிடம் மூன்று பேரையும் அரெஸ்ட் பண்ணுமாறு கண்ணை காட்ட, அவர்களும் மூன்று பேரின் கைகளில் விலங்கு மாட்டி அங்கிருந்து இழுத்துச் சென்றது...

தேடல் தொடரும்......

 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 26:

“அப்பா நீங்க இவங்களை எல்லாம் கூட்டிட்டு வீட்டுக்கு போங்க...நான் ஸ்டேசன் போய் பார்மாலிடீஸ் முடிச்சுட்டு வரேன்” என்று அதர்வா கூற, மாதேஸ்வரன் அவனை தயக்கத்துடன் பார்க்க ஒரு அதிகாரியாக அவரின் கண்ணில் தெரிந்த தயக்கம் என்னவென்று உணர்ந்திருந்தான்.

“அப்பா இந்த விசயத்துல நான் குடும்பத்துல இருக்கிறவங்களுக்காக போகலை குற்றவாளிங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கத்தான் போகிறேன் மீதியை நான் வேலையை முடிச்சுட்டு வந்து சொல்லுறேன்” என்று கூறிவிட்டு அதர்வா சென்றிருக்க மாதேஸ்வரன் மனதில் கவலை தோயிந்தது... என்ன இருந்தாலும் இத்தனை நாள் குடும்பத்தில் இருந்தவர் அல்லவா ஆனாலும் அவரின் நேர்மை குணம் சட்டத்திற்கு கட்டுப்பட்டு செல்லவே நினைக்க யோசனைகளை கைவிட்டு பத்மா, பிரியா, சுமி, அபிஷேக் எல்லோரையும் அழைத்துக் கொண்டு மனைக்கு சென்றிருந்தார்.

அவர்கள் வீட்டை அடைந்ததும் வைத்தீஸ்வரி, ராசாத்தி,கோமளவல்லி மூவரும் பத்மாவை ஓடி வந்து பாசத்துடன் அணைத்துக் கொண்டனர்...

“அம்மாடி உன்னை காணோம்னு நாங்க எல்லாம் தவிச்சு போயிட்டோம்டா ராசாத்திகண்ணு” என்றுமனதார கூறினார் கோமளவல்லி.

அவரின் இந்த கள்ளம்கபடமற்ற பாசத்தில்பத்மாவிற்கு மனதில் வேதனை சூழ்ந்தது... ஏனோ அவள் மேல் பாசம் இருந்தாலும் இத்தனை நாட்கள் இல்லாத தனி கொஞ்சல் மொழிகள்அவர் மகன் கணவர் தப்பு செய்த இன்றா காண்பிக்க வேண்டும் என்று மனம் வருந்தினாள்.

“சரிசரிஎப்படியோ நல்லபடியா வந்துட்டா ஆமாம்நம்ம ரஞ்சித், அவங்க அப்பா,அதர்வா, நம்மஆர்னா எல்லாரும் எங்கங்க” என்று ராஜாத்தி தன் கணவர் மாதேஷ்வரனிடம் வினவ... அவரோ சுற்றி உள்ள அனைவரையும் சங்கடத்துடன் பார்த்துவிட்டு முதலில் சொல்ல தயங்கி நிற்க பத்மாவோ அவரின் சங்கடத்தை புரிந்து அவளே பேச ஆரம்பித்தாள்...

“அது வந்து அத்...” என்று ஆரம்பித்தவளை இடைவெட்டியது மதேஸ்வரனின்...“ஆர்னா!” என்று அவர் அழைத்த பெயரில் அனைவரும் மின்சாரம் தாக்கியது போல் பார்த்திருக்க, சுமித்ரா மட்டும் அவரின் பேச்சில் அதிராமல் சாதாரணமாக நின்றிருந்தாள்.

“எ...என்..என்ன...என்னன்னா சொல்..றீங்க... ஆர்னா இவ..ளா...?” என்று அதிர்ச்சியில் வார்த்தைகள் தந்தியடிக்க வைத்தீஸ்வரி கேட்க ராமமூர்த்தி அதிர்ச்சி இருந்தாலும் அதை வெளிகாட்டது அடுத்த வார்த்தைக்காக காத்திருந்தார்.

“ஆமாம்இவ தான் நாம சின்ன வயசில தொலைச்ச ஆர்னா நம்ம வீட்டு வாரிசு அந்த ரோஷினி உன் ரஞ்சித் கூட்டிட்டு வந்து நடிக்க வச்ச எவளோ ஒருத்தி!”என்றதில்இரண்டாம் கட்ட அதிர்ச்சியை பிரதிபலிக்க ராமமூர்த்தி முகத்தில் அலாதியான நிம்மதி பரவியது.

“நான் நினைச்சேன் இப்படி தான் ஏதாவது இருக்கும்ன்னு ஆனா நிச்சயமா தெரியாததால தான் நான் அமைதியா இருந்தேன்” என்றதும் இப்போது வைத்தீஸ்வரி கண்களில் தேங்கிய கண்ணீருடன் தன் கணவரை பார்த்தவர்...

“என்னங்க சொல்றீங்க...பத்மா தான் நம்ம பொண்ணு ஆர்னான்னு தெரிஞ்சு ஏன் சும்மா இருந்தீங்க யாரோ ஒருத்தியை நம்ம வீட்டு பிள்ளைன்னு நம்பி இத்தனை பேர் ஏமாந்துட்டோமே”

“வைத்தீ நீ கேட்கிறது சரிதான்... ஆனா பாரு இது ஆள்மாறாட்டம் விஷயம். அதுக்கு அந்த பொண்ணு மட்டும்தான் காரணம்ன்னா நாம என்ன ஏதுன்னு அப்போவே விசாரிச்சு இருக்கலாம்... இதுல நம்ம வீட்டாளுங்களுக்கும் பங்கு இருக்குன்னா எப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு முடிவு எடுக்கிறது அதனால தான் அதுவும் இல்லாம இன்னைக்கு நடந்த இந்த கடத்தல் அன்னைக்கே நடந்திருக்கவும் வாய்ப்பிருக்கு” என்றதில் மூன்றாவதாக அதிர்ச்சி தாக்க அனைவருமே ஸ்தம்பித்தனர்.

“அய்யோ! சத்தியமா எனக்கு என்ன நடக்குதுன்னே தெரியலைங்க மாமா கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்” என்று கோமளவல்லி கண்ணீருடனே வினவினார்.

“சொல்லுறேன் கேட்டுகோங்க... நம்ம ஆர்னாவை கடத்தினது நம்ம ரஞ்சிதும், ரோஷினியும் தான்” என்றவரின் வார்த்தைகளில் கோபம் இழையோட முகம் இறுகியது.

“அய்யோ!” என்று கூறிய கோமளவல்லி வாய்பொத்தி கொண்டு கதற ஆரம்பித்தார்... “பாவி மகனே உன்னை நான்தானே பெற்றுடுதேன் இருந்திருந்து உன் புத்தி இப்படியா போகணும்” என்று வயிற்றிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு கதற அவரின் நிலையை கண்ட அனைவருக்குமே பரிதாபமாக இருந்தது.

“இரு கோமளம் இதுக்கே நீ இப்படி பதறினா எப்படி இன்னும் இருக்கு இதுக்கெல்லாம் உடந்தை உன் புருஷனும் தான் அவனை மட்டும் சொல்லி என்ன செய்ய”

“நான் கட்டினவரு பணத்துக்கு ஆசைபடுற பேராசைக்காறருன்னு தெரிஞ்சுதான் குடும்பம் நடத்திட்டு இருந்தேன்... ஆனால் பெத்த மகனும் இப்படியே இருப்பான்னு நினைக்கலையே”

“நினைச்சு இருக்கணும்... நினைச்சு பார்த்திருக்கணும் கோமளம்... உன் புருஷன் புத்தி தெரிஞ்சும் நீ குடும்பதுகாகன்னு சகிச்சுட்டு வாழ்ந்த. ஆனா...அப்பனுக்கு மகன் சளைச்சவன் இல்லைன்னு அவன் நிருபிச்சுட்டான். இப்போ அடிசுகிட்டு அழுதா மட்டும் அவங்க பண்ணினது தப்பு இல்லைன்னு ஆகிருமா? ஏதோநம்ம நல்லகாலம் நம்ம தொலைச்ச குழந்தை நமக்கே கிடைச்சுட்ட ஆனா அதையும் உன் பையன்அழிக்கப் பார்த்தானா அவனை சும்மா விட்டுறமுடியுமா?”

“இல்லை மாமா கண்டிப்பா விடவேண்டாம் இனி அவனையும் அவன் அப்பாவையும் விட்டா இன்னொரு பொண்ணோட வாழ்க்கையும் சேர்ந்து பாழ்போகும் நிச்சயம்அவங்களுக்கு தண்டனை கிடைக்கணும்” என்றவர்ஆர்னாவைநெருங்கிநின்றவர்... “அவங்க பண்ணின தப்புக்கு இந்த அத்தையை மன்னிசிருடி தங்கம்” என்று கைகூப்பி மன்னிப்பை மன்றாட அதுவரை மதேஷ்வரனுக்கு எப்படி உண்மை எல்லாம் தெரியும் என்ற குழப்பத்தில் நின்றிருந்தவள் அதிர்ச்சியைஓரம்கட்டி விட்டு வாய்திறந்தாள்.

“அச்சோ அத்தை என்ன இதெல்லாம்? அவங்க செஞ்ச தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?”

“ஆரு குட்டிமா!” என்று பாசத்துடன் கூறிய வைத்தீஸ்வரி அவளை அணைத்துக் கொண்டார் அனைவரும் பாசத்தில் நெகிழ்ந்து கொண்டிருக்க ஆர்னா மாதேஸ்வரனை கேள்வியுடன் நோக்கினாள்...

“என்னடா ம்மாஎனக்கெப்படி இந்த உண்மை எல்லாம் தெரியும்ன்னு கேட்கிறாயா?” என்று அவள் மனதை படித்ததை போல் கூற அவளோ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினாள்...

“அன்னைக்கு ரஞ்சித் உன் கையை முறிக்க பார்த்தானே அந்தநாள் தான் நீஇந்த வீட்டு பொண்ணுன்னு எனக்கு தெரிய வந்தது”அவரின்பேச்சில் அனைவரும் இதுவேறையா என்பது போல் பார்க்க...

“ஐயோ! என் தங்கத்தோட கையை கூட முறுக்கினானா ஏதும் இல்லையேம்மா...” என்றுவைத்தீஸ்வரி பதறியவராக கேட்க,மதேஷ்வரனே அதற்கும் பதில் கூறினார்.

“கவலைப்படாத வைத்தி... உன் பொண்ணுக்கு ஒண்ணும் ஆகலை மயக்கம் போட்டு மட்டும் விழுந்தா நல்லகாலம் நம்ம அதர்வா காப்பாதிட்டான்” என்றவர் ஆர்னாவின் தெளியாத முகத்தை கண்டு அன்று நடந்தை கூறினார்...

பத்மா, ரஞ்சித் பேசியதை ஒட்டு கேட்டுக் கொண்டிருந்த அதேசமயம் மாதேஸ்வரனும் அதை பார்க்க நேர்ந்து அவரும் ஒரு புறம் ஒட்டுக்கேட்டிருந்தார்... அதர்வா அவளை காப்பாற்ற வந்தமையால் தான் அவர் இடையில் நுழையாமல் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வீடு திரும்பிவிட்டார்.

“அவனை எல்லாம் சும்மாவே விடக்கூடாது உள்ள தள்ளி கொஞ்ச நாள் களிதின்ன வைச்சாதான் சரிவரும்” என்று வைத்தீஸ்வரி தூற்ற... ராஜாத்தி, கோமளவல்லி இருவரும் துக்கப்பட்டனர். என்ன இருந்தாலும்ரஞ்சித் அவர்கள் வீட்டு மகன் தானே ஒருவார் வளர்த்த பாசத்திலும் மற்றொருவர் பெற்ற பாசத்திலும் வேதனையில் ஆழ்ந்தனர்... ஆனால் அவர்கள் செய்த காரியம் மெச்சிகொள்ளும் காரியம் இல்லாததால் தங்களை தானே தேற்றிக் கொண்டு பேசினார்கள்.

“கண்டிப்பா தண்டனை அனுபவிப்பாங்க வைத்தி... நீ கவலைப்படாத” என்று இருவருமே ஒன்று சேர்ந்த குரலில் கூறியதும்... வைத்தீஸ்வரி மனம் ஆறுதல் அடைந்தது. ஆனால்அதனை தொடர்ந்து வைதீஸ்வரிக்கு அதர்வா நினைவு வர...

“ஆமாம் நமக்கெல்லாம் உண்மை தெரிஞ்சுருச்சு...அதர்வா பாவம் அந்த ஆள்மாறாட்டக்காறியை அல்லஆர்னா நினைச்சிருந்தா...அவன் பொண்டாட்டி தான் அவன் அம்முகுட்டின்னுதெரிஞ்சா அவனும் ரொம்ப சந்தோசப்படுவானே” என்று கூறிக் கொண்டிருக்கும் தருணம்...

“அதுக்கு அவசியமே இல்லை என் பொண்டாட்டி தான் அம்முகுட்டின்னு உங்க எல்லாருக்கும் முன்னாடியே எனக்கு தெரியும்” என்று தன் காந்தகுரலில் கூற அந்த குரலுக்கு சொந்தக்காரனான அதர்வாவே நின்றிருந்தான். அதர்வாவை அனைவரும் அதிர்ந்துப்பார்க்க அவனோ கைகள மார்பின் குறுக்கே கட்டியபடி ஆர்னாவையேபார்வையால் துளைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

*******************

அந்நேரம் வரை தொலைந்து போன அதிர்ச்சிஅதர்வாவின் பேச்சில்அனைவரிடமும் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டிருக்க அவனையே பார்த்திருந்தனர்...

“அதிர்ச்சி ஆகவேண்டாம்நான் சொல்லுறதை கேட்டு உண்மை என்னனு கண்டுபிடிக்க இருந்த காரணத்தால நானும் நடிக்க வேண்டியதா போச்சு... நான் ஒரு போலிஸ்காரன் என் வீட்டுகுல்லேயே அதுவும் எனக்கு தெரியாமலேயே ஆள்மாறாட்டம் நடக்க விடுற அளவுக்கு நான் சம்பளத்துக்கு கடமையேன்னுவேலைபார்க்கிற போலீஸ் இல்லை” என்றவன் ஆர்னாவை ஒருமுறை ஆழ்ந்துபார்க்க அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல்தரையை பார்த்தவாறு தலைதாழ்த்திக்நின்றாள் பெண்ணவள்.

அவளின் செய்கையில் அலைபாய்ந்த அவன் மனதை கலவரத்துடன் பார்த்திருந்தவர்களை கருத்தில் கொண்டு கட்டுபடுத்திக் கொண்டு பேசலானான்.

“தாலிகோர்க்கிற விஷேசம் முடிஞ்சு நான் சென்னை கிளம்பிப்போனது பத்மாவா இருந்த இவளை பற்றி விசாரிக்க தான்...அவளை வளர்த்திய தாத்தா அவகிட்ட ஒரு பெட்டியை கொடுத்து அதில நம்ம குடும்பத்தை பற்றியும் அவ இந்த வீட்டு பொண்ணுன்னு விவரத்தையும் சொல்லியிருக்கிறாருஅதை தெரிஞ்சுகிட்டு தான் நம்ம ஊருக்கு வந்தாபத்மாவா இருந்த ஆர்னா...” என்றவன் அவளை நோக்கி... “என்ன உன்னை பத்தி தானே சொல்லிக்கிட்டு இருக்கேன் ஆமாவா இல்லையா சொல்லு” என்று அதர்வா அதட்ட அவனின் சென்னை பேச்சில் அவள் மனதில் தோன்றிய கிலியுடன் நின்றிருந்தாள்...எங்கே அவள் அங்கு செய்து கொண்டிருந்த திருட்டு தொழிலை அவர்களின் முன்பு வெளிச்சம் போட்டு காட்டி விடுவானோ என்ற பயத்தில் தான் அவள் நடுக்கத்துடன் நின்றிருந்தாள்! அதர்வா வீட்டில் உள்ளவர்களுக்கு உண்மையை புரியவைத்துக் கொண்டிருந்தாலும் கூட அவனின் ஓரப்பார்வை தன்னவளின் மேலும் நிலை கொண்டு தான் இருந்தன... அவன் சென்னை என்றதும் அவள் உடல் ஒரு நொடி அதிர்ந்தை அவனின் கழுகு கண்களுக்கு தென்பட்டுவிட்டிருந்தது... அதன் காரணமாகவே அவளை பயத்தில் இருந்து வெளிக்கொணரும் முயற்சி தான் அவளை அவன் பேச்சில் இழுத்துவிட்டது இதை அறியாத பத்மாவோ அச்சம் குறையாதவளாக...

“ஆ...ஆ...ஆ...மா...!” என்று திக்கித்திணறி கூறிவிட்டிருந்தாள்... அதற்கு மேல் அவளை தொல்லை செய்யாமல் அவனின் பேச்சை தொடர்ந்தான்.

“அதற்கப்புறம்தான் நான் சின்ன வயசுல நடந்த சில சம்பவங்களை நினைவுப்படுத்தி பார்த்தேன்... அப்புறம் அவ கழுத்துல இருந்த செயினை கொண்டு தான்இவ நம்ம வீட்டு பொண்ணு ஆர்னான்னு உறுதியானேன்.எல்லாமே தீர விசாரிச்சு நான் வயலூர் வந்தா இங்க ஆர்னான்னு சொல்லிக்கிட்டுரோஷினின்னு எவளோ ஒருத்தி நிற்கிறா... நீங்களும் அவளை நம்பிடீங்கன்னு புரிஞ்சுது... காரணம், நான் எதை வச்சு இவ நம்ம வீட்டு பொண்ணுன்னு உறுதியானேனோ அதே செயின் அவ கையில இருந்தது.நிச்சயம் இதுல ஏதோ சதி நடந்திருக்குன்னு புரிஞ்சுது. அப்போ எனக்கு முதல்ல சந்தேகம் வந்தது ரஞ்சித் மேல தான் அவனை நான் நோட்டம் விட்டதுல எனக்கு எல்லாமே புரிய வந்திருச்சு... சரி எவ்ளோ தூரம் தான் போறாங்கன்னு பார்ப்போமேன்னு நான் அவங்களை நம்பின மாதிரியே நடிச்சேன்... ஆனா அதே நேரத்துல என் பொண்டாட்டியான அம்முகுட்டியையும் என் கண்பார்வையில தான் வச்சிருந்தேன்” என்று கூறியவன் சடாரென்று அவனின் கண்களை சந்தித்த ஆர்னாவை பார்த்து கண்ணடிக்க அவனின் கண்சிமிட்டலில் வெடுக்கென்று தலையை திருப்பிக்கொண்டாள்.

“இந்த வீட்டுல இத்தனை பேர் இருந்தும் நம்ம கண்ணுலையே விரல் விட்டு ஆட்டிருகாங்க” என்று வருத்ததுடன் கூறினார் மாதேஸ்வரன்.

“இது அப்படி இல்லைப்பா எனக்கு உண்மை தெரிஞ்சதும் அதை அப்போவே உடைச்சிருப்பேன்... நான்தான் பொறுத்து பார்க்கலாம்ன்னு விட்டு வச்சேன்... அதுவும் அவங்களை கையும்களவுமா மாட்ட வைக்க நான் சரியான நேரம் பார்த்திட்டு இருந்தேன்... ஆனா துருதிர்ஷ்டவசமா அவங்களுக்கு அவங்களே சூனியம் வச்சு நம்ம கிட்ட மாட்டிகிட்டாங்க” என்று கூறிமுடிக்க அனைவருக்கும் ஏதோ வேறுலகத்திலிருந்து சஞ்சரித்து வந்தது போல் இருந்தது. அவர்களை சுற்றி பெரிய சூழ்ச்சியே நடந்திருக்க அவன் ஒருவன் மட்டும் அதை எவ்வளவு புத்திசாலித்தனமாக சமாளித்திருக்கிறான் அதுவும் இடையில் பத்மாவின் மனநிலை எப்படி இருக்கும் என்றெண்ணி அவளின் மேல் கரிசனம் தோன்றியதுவைத்தீஸ்வரிக்கு.

“பாவம் என் பொண்ணு! அந்த வீணாப்போன எவளோ ஒருத்தியால எத்தனை நாளா தூங்காம வேதனையோட இருந்தாலோ?” என்று மகளை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தார். அனைவரும் உணர்ச்சி வசப்பட்டிருக்க அடுத்து என்னவென்று தெரியாமல் அனைவரும் பாசத்திலும், நெகிழ்ச்சியிலும் மௌனமாக இருந்தனர்... அந்த மௌனத்தை கலைத்தது அதர்வாவின் குரல்...

“நம்ம ராஜேந்திரன் சித்தப்பாவையும், ரஞ்சித், ரோஷினி மூணு பேர் மேலையும் கேஸ் பைல் பண்ண சொல்லிட்டேன்.நீங்க வேண்டாம்ன்னு நினைச்ச கொஞ்ச நாள் விட்டுபெயில்ல எடுத்துறலாம்” என்று முடிக்க தான் தாமதம் கோமளவள்ளி இடையிட்டார்...

“அதெல்லாம்ஒன்னும் தேவை இல்லை தம்பி... அவங்களுக்கு இனி அதுதான் தண்டனை இந்த தண்டனையை வேண்டாம்ன்னு நினைச்சா நாளைக்கு என்ன செய்யவும் துணிவாங்க.எனக்காக நீங்கெல்லாம் இருக்கும் போது நான் சுயநலமா யோசிக்க முடியாது” என்று உறுதியான குரலில் கோமளவள்ளி கூறியிருக்க...அனைவரும் அதை ஆட்சேபிக்காமல் ஆமோதித்தனர்.

“ஆமாம் நம்மவள்ளி சொல்லுறதும் சரிதான் அவங்களை இப்படியே விட்டா நாளைக்கு எதுவும் செய்யவாங்க. இனி நடக்க வேண்டியதை நீ பாரு அதர்வா” என்று மாதேஸ்வரன் கூறியிருந்தார்.

அந்நேரம் வரை அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுமித்ரா...“அக்கா” என்று அழைத்தாள்... அவளின் அழைப்பில் அனைவரும் அவள் பக்கம் திரும்பியிருக்க அவளோ உணர்ச்சிபெருக்கில் பத்மாவை இறுக அணைத்துக் கொண்டு... “என்னை மன்னிச்சிரு அக்கா” என்று கூறிக் கொண்டே கண்களில் கண்ணீரை உகுத்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய் சுமி என்னாச்சு டா... எதுக்கு அழுகுற மத்தவங்க மாதிரிதானே நீயும் இருந்த பாவம் நீயும் என்ன பண்ணுவ”என்றதும்... அவளை நிமிர்ந்து பார்த்தவள் விழிகளில்வலி தெரிந்தது.

“இல்லை க்கா கண்டிப்பா நானும் மத்தவங்களும் ஒண்ணில்லை; எனக்கும் உண்மை முன்னாடியே தெரியும் ஆனா நானும் உங்ககிட்ட சொல்லாம மறைச்சதும் இல்லாம உங்ககிட்ட கோபமாவும், வெறுப்பாவும் நடந்துகிட்டேன்” என்றதும் அவள் அதிர்ந்தாலும் சிறியவள் அதுவும் தன் உடன் பிறந்தவள் என்ற சொந்தத்திலும் மென்னகை பூத்திருந்தாள்.

“இருக்கட்டும் டா யார் என்கிட்டே கோபப்பட்டது என் தங்கச்சி தானே உனக்கில்லாத உரிமையா” என்று மெய்யான பாசத்துடன் கூறினாள்பத்மா.

“ஆமாஉனக்கு எப்போ இந்த உண்மை தெரிஞ்சுது?” என்று புருவம் சுருங்க யோசனையுடன் வினவினான் அதர்வா.

“பத்மாக்காவும், அபிஷேக் அண்ணாவும் பேசிகிட்டு இருந்ததை கேட்டேன்... அப்போவே தெரியும் ஆனா நீங்களே அதை மறுத்துட்டீங்க ஒருவேளை அது உண்மை இல்லையோ அப்படின்ற சந்தேகத்துல தான் நான் எதையும் வெளிகாட்டிகலை”

“ஹ்ம்ம்... நல்ல பொண்ணுங்க! நல்ல பசங்க! இப்படி ஒருவீட்டுகுள்ள எத்தனை நடந்திருக்கு அதை யாரும் யாருக்கும் தெரியாம இருக்கஎன்னெல்லாம் பாடுபட்டீங்களோ” என்று கலங்கிய கண்களுடன் மெய் வருத்ததுடன் கூறினார் ராஜாத்தி.

“சரிசரி பேசினது போதும் எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்ப்போம்... அதர்வா நம்ம ஆர்னாபயந்து போயிருப்பாஅவளைரூம்க்கு கூட்டிட்டு போய் சமாதானம் படுத்து” என்று கூறிவிட்டு செல்ல அவரை தொடர்ந்து அனைவரும் சென்றிருக்க, வைத்தீஸ்வரி ராமமூர்த்தி இருவரும் அங்கேயே நின்றனர்.அதர்வா அழைத்துச் செல்ல அவள் கைபிடிக்க வரும் முன் இருவரும் மகளை அணுகினார்கள்...

“அம்மாடி இனிமேலாவது நீ சந்தோசமா இருக்கனும்டா” என்று மனம் நெகிழ ராமமூர்த்தி கூற வைத்தீஸ்வரி அதை ஆமோதிப்பது போல் அவர் நெற்றியில் இதழ் பதித்தார்.

“இனி நீ சந்தோசமா இருக்கனும் குட்டிம்மா” என்று கூறிவிட்டு விலக பத்மாவின் நெகிழ்ந்த நிலையை கண்டு சற்றுபொறுத்து பார்க்க எண்ணி அதர்வா நின்றிருக்க அங்கே அபிஷேக் வராத கண்ணீரை வரவழைக்க பிரம்மபிராயத்தனப்படுவதை எண்ணி அவன் முன்னால் சென்றவன்...

“டேய் சிலின்டர்என்னச்சு”

“எ..ன்..னன்..னா..” என்று உதடுகளைஉணர்ச்சிவசத்தில் மடக்கியவாறு திக்கி திணறினான்...

“பீலிங்க்ஸ் ஓப் இந்தியாவா?”

“ஆமாம் அப்படி நினைச்சுதான் ட்ரை பண்ணினேன்” என்றவன் சட்டேன்று இயல்புக்கு மாறி... “ஆனா வரலை” என்று அசட்டையாக கூறியவனை கண்டு கைமுஷ்டிகளை மடக்க அவனோ தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியேவிட்டான்.

வீட்டில் உள்ள அனைவருமே சென்றிருக்க எஞ்சி இருந்தது இவர்கள் இருவர் மட்டுமே...இருவரின் பார்வையும் மோதிக் கொள்ள அந்நேரம் வரை பதட்டத்தில் இருந்த பத்மாவிற்குஅவன் அவள் என்று தெரிந்தும் தெரியாதது போல் காட்டிக் கொண்டு வளைய வந்தது மனதில் வேதனையை தைக்க அவன் மேல் கோபம் கொண்டவளாக அவனை கடந்து அறைக்கு செல்ல முற்பட அவள் கைபிடித்து தடுக்கமுயன்றான் ஆனால் அதை எளிதாக முறியடித்தவள் அவனை கடந்து சென்றிருந்தாள்... தன்னவளின் கோபம் புரிந்தவன் இதழ்கள் புன்னகையில் மிதந்தது!

******************

அதர்வாதன் மனைவியை தேடி அறைக்கு வர, அவளோ அங்கே குத்துகாலிட்டு அமர்ந்தவாறு விட்டத்தை வெறித்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தாள்...தன்னவன்தன்னையாரென்றுஅறிந்தபிறகேஅவளைமனைவிஎன்றஉறவையும்,உரிமையையும்கொடுத்ததுஒருபுறம்நிம்மதியாகஇருந்தாலும்...அதைஅவன்அவளிடமிருந்துமறைத்ததுமட்டுமின்றி,அதன்காரணமாகஒவ்வொருமுறையும்அவளைவதைத்தது தான்மனதில்வலியைஉண்டாக்கியது.எத்தனைநேரம்தன்யோசனையில்ஆழ்ந்தவாறேஅப்படியேஅமர்ந்திருந்தாளோஅறைக்குவந்தஅதர்வாகைகளைகட்டிக்கொண்டுஅவளையேபார்த்தவாறுநின்றிருந்தவன்பின்புதாமதப்படுத்தாதுஅறைக்கதவைதாழிட்டான்...அவன்தாழிட்டசப்தத்தில்வெடுக்கென்றுஎழுந்துவிட்டிருந்தாள் பத்மா (எ) ஆர்னா!

“எதுக்குஇப்போகாதவைஅடைக்கறீங்க?எனக்குஇங்கிருக்கபிடிக்கலைநான்வெளியேபோகணும்கதவைதிறங்க”என்றுகோபத்தில்என்னபேசுகிறாள்என்றுஅவள்அறியாமலேசீறினாள்...அவளின்சீரலைகண்டுக்கொள்ளாதவன்நிதானமாகஅவளைபார்த்தான்...அவன்பார்வையோஅவளிடம்காதலால் கசிந்துக் கொண்டிருந்ததுஅவன்மேல்பித்தாகஇருந்தவள்மனம்அவன்பார்வையைஉணராதாஎன்ன?‘ஆமாம்இதுக்கொன்னும்குறைச்சல்இல்லை’என்றுஉதடுகளைமுணுமுணுக்க...

“வேறேதுக்குகுறைச்சலாம்?”என்றுகாதோரம்கேட்டரகசியகுரலில்திடுக்கிட்டுவிலகப்பார்க்க...ஆனால் அவள் விலகமுடியாமல் அவனின்கரங்கள்அவளின்இடையைஅழுத்தமாய்பற்றியிருந்தது.கண்கள் உரசியவாறு நின்றவர்கள் காதல் தீ பற்றிக் கொள்ள அவனின்காந்தஇதழ்கள்செவ்விதழ்களைசிறைபிடித்திருந்தது...ஒருவரைஒருவர்அன்றுவரைஅறியதபுதுவிதசுகத்தில்மூழ்கினர்.நீண்டநேரஇதழ்அணைப்பிற்குபின்அவளைவிடுவித்தான்அவனின்கைகளில்இருந்துபிரிந்ததும்ஒதுங்கியிருந்தகோபம்மீண்டும் வந்துஒட்டிக்கொள்ளஎதுவும்செய்யமுடியாதஇயலாமையில்கண்ணீர்வடித்தாள்தன்னவளின்கண்ணீரைபொறுக்காதவன்...

“அம்முக்குட்டிஏண்டாஅழற?”என்றதும்தான்தாமதம்...

“ச்சீ...போடாமாமாஎன்கூடபேசாத”என்றுஅவனைதன்பூங்கரங்களால்மார்பில்தாக்கிக்கொண்டேகண்ணீருடன்கூற,அவளின்அழுகைக்குகாரணம்புரிந்தவன்அவள்திமிரத்திமிரஅலேக்காகதூக்கிமஞ்சத்தில்வீழ்த்தி அவளைஇறுக்கிஅணைத்தான்.

“அம்முபோதும்என்னன்னுசொல்லு”

“ஏன்மாமாஎன்னைகஷ்டப்படுத்தினநான்தான்உன்அம்முகுட்டின்னுதெரிஞ்சப்புறம்அதுவும்என்னைவார்த்தைக்குவார்த்தைதிருடின்னுவேறசொல்லிஅவமானப்படுத்தினஎனக்குஎவ்ளோகஷ்டமாஇருந்ததுதெரியுமா... அதுவும்நீங்கசென்னைன்னுசொன்னதும்எனக்குஎப்படிமனசெல்லாம்பதறுச்சுதெரியுமா”

“இப்போவும்நீதிருடிதான்”என்றதும்...மேற்கொண்டுஎதுவும்பேசாமல்வெடுக்கென்றுஎழுந்துசெல்லபார்த்தவள்அவனின்வலியகரம்தடுத்திருந்தது...

“நானேதிருடிஇந்ததிருடிகையைஏன்பிடிக்கணும்விடுங்க”என்றுமுறுக்கிகொண்டவளைகண்டுஅவன்சிரிப்பைஅடக்கவெகுவாகசிரமப்பட்டான்.

“ஆமாம்டிதிருடியைவெளியேவிட்டநான்உயிரோடஇருக்கவேணாமா?”என்றதும்அவனைசரேலென்றுதிரும்பிபார்க்க...

“இந்ததிருடிகிட்டஎன்இதயம்இருக்குஎன்இதயத்தைதிருடினஎனக்கேஎனக்கானகாதல்திருடி”என்றதும்அவனின்வார்த்தையைபுரிந்தவள்அவனைதாக்கப்போகஅவளைஎளிதாகதடுத்துநிறுத்தியவன்...

“என்னஎன்னைஅடிக்கமுயற்சிபண்ணுறியா?நெவர்இந்ததிருடிக்குஇந்தபோலீஸ்காரன்தண்டனைஎப்படிஇருக்கும்ன்னுகாட்டவேண்டாம்”என்றவன்அவளைகட்டிலில்புரட்டிப்போட்டுஅவள்மேல்வீழ்ந்தவன்அவன்இதழ்கள்நெற்றியிலிருந்துதன்ஊர்வலத்தைஆரம்பித்தது...“மாமா...மாமா...”என்றுசிணுங்கினாலும்அந்தகாவல்காரனின்தண்டனையைசுகமாகபெற்றுக்கொண்டாள்அவன்இதயத்தைகளவாடியகாதல்பேதை!போதும்போதும்என்றுஎண்ணுமளவுக்குஇருவரும்காதல்கடலில்மூழ்கிமுத்தெடுக்கநடுநிசியில்தான்இருவரும்சற்றேஆசுவாசமாகபிரிந்தனர்...அவளின்நெற்றியில்மென்மையாகஇதழ்பதித்துவிட்டுவிலகஅவளோஅந்நேரம்பேசஆரம்பித்தாள்...

“நான்ரொம்பபயந்துபோய்ட்டேன்மாமாஎங்கநீவீட்டுலஎல்லார்கிட்டயும்திருடின்னுசொல்லிருவியோன்னு”

“நான்எதுக்குஅம்முஅதைசொல்லபோறேன்...நீஎன்பொண்டாட்டிடிகல்யாணத்துக்குமுன்னநீஎப்படிவேணாஇருந்திருக்கலாம்ஆனாஅதெல்லாம்அப்போஇப்போநீஎன்பொண்டாட்டிஎன்செல்லஅம்முக்குட்டிஉன்னைதாழ்த்துறஎந்தவிஷயத்தையும்நான்சொல்லமாட்டேன்...”என்றவனைஇப்போதுஇதழைமுற்றுகையிடுவதுஅவளின்முறையானது.அவன்கொடுத்ததண்டனையைஇப்போதுஅவள்கொடுக்கஅவனும்சுகமாய்பெற்றுக்கொண்டான்...விடியும்வேலையில்தான்இருவரும்உறக்கத்தைதழுவியிருந்தார்கள்.... விடியலில்கதவுபடபடவென்றுதட்டும்சப்தத்தில்இருவரும்கண்விழித்திருக்கதடாலென்றுஎழுந்தவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் கேள்வியுடன் பார்க்க அவர்களுக்கு சிந்திக்க அவகாசம் இல்லாமல் மேலும் கதவு தட்டப்படும் சப்தத்தில் பத்மா வேகமாக எழப் போக...

“இரு நான் போய் பார்க்கிறேன்”என்று அதர்வா அவளை தடுத்து நிறுத்தியவன், அவனே கதவை திறக்க... அங்கே பதட்டத்துடன் ராஜாத்தி, கோமளா இருவரும் நின்றிருந்தனர்!!



தேடல் தொடரும்...









 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 27:

தங்கள் அறை வாசலில் பதட்டத்துடன் நின்றிருந்த ராஜாத்தியையும் கோமளவல்லியையும் பார்த்த அதர்வா, “என்ன ஆச்சு மா..?” என்று புருவ முடிச்சுடன் கேட்க
“கீழே.. கீழே..” என்று திணறினர் ராஜாத்தி
“ப்ச் என்ன மா எதுக்கு எவ்வளவு பதட்டம்.. சொல்லுங்க..?” என்று அதர்வா ராஜாத்தி கைகளை ஆறுதலாக பிடித்து கொள்ள, அதில் சற்று நிம்மதி அடைந்தவர்…
“கீழே சிங்கப்பெருமாள் குடும்பத்தில் இருந்து நம்ம சுமியை பொண்ணு கேட்டு வந்திருக்காங்க பா.. உங்க அப்பா வைத்தீஸ்வரி எல்லாரும் கீழ தான் இருக்காங்க.. நீயும் கொஞ்சம் வா பா..”

ஒருவாறு ராஜாத்தி விஷயத்தை கூறி முடிக்க, அவர்கள் கூறிய அனைத்தையும் கேட்ட பத்மாவும் அதர்வாவுடன் இறங்கி வந்தாள்..
அவர்கள் கீழே இறங்கி வரும் போதே அங்கு கண்ட காட்சி அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியாக இருந்தது… ஆம்! சிங்கப்பெருமாள் மாதேஸ்வரனின் கைகளை பிடித்து மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தார்..
“என்னை மன்னிச்சுருங்க மாதேஸ்வரன்.. என்றோ நடந்த பகைகளை எல்லாம் மனதில் வைத்து கொண்டு இத்தனை நாள் உங்களுக்கு எதிரா நின்னுட்டேன்.. இப்போது பூவரசன் தான் எனக்கு எல்லாமே புரிய வச்சான்.. இந்த பாழாய் போன பகைகளை சுமந்து கொண்டு வாழ்க்கையில் எந்த நல்லதும் நடக்காது என்று புரிந்து கொண்டேன்.. பூவரசனுக்கு சுமியை ரொம்ப பிடிச்சிருக்காம் சுமியை எங்க பொண்ணு மாதிரி பார்த்துப்போம்.. அவளை எங்க வீட்டுக்கு மருமகளா அனுப்பி வைப்பீங்களா..?” என்று சிங்கப்பெருமாள் கேட்க, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார் மாதேஸ்வரன்.. அதற்குள் அங்கு மொத்த குடும்பமும் கூடி இருந்தது.. சிங்கப்பெருமாள் பொய் உரைக்கவில்லை என்று அனைவருக்குமே புரிந்தது.. அதிலும் பூவரசன் முகத்தில் இருந்த தெளிவு அனைவர் மனதிலும் நம்பிக்கையை விதைத்தது..
மாதேஸ்வரன் திரும்பி மகனை மட்டும் ஒரு முறை பார்க்க, சிங்கபெருமலையும் பூவரசனையும் அதற்குள் ஆராய்ந்து முடித்திருந்த அதர்வா கண்களாலேயே மாதேஸ்வரனுக்கு சம்மதம் கூறினான்..
அடுத்து அவர் பார்வை ராமமூர்த்தி புறம் திரும்ப, அவரும் ‘உங்கள் விருப்பம் தான் என்பது போல் மாதேஸ்வரனை’ பார்த்து வைத்தார்..
அதற்கு மேல் மறுக்க தோன்றாமல் சிங்கப்பெருமாள் கைகளை தானும் ஆறுதலாக பற்றி கொண்ட மாதேஸ்வரன், “மன்னிப்பெல்லாம் வேண்டாம் சிங்கம்.. நீங்க உணர்ந்ததே போதும்.. இனி எந்த பகையும் இல்லாமல் ஒரே குடும்பமா சந்தோசமா இருப்போம். ஆனால் அதற்கு முன்..!” என்று அவர் நிறுத்த, அனைவரும் அவரை யோசனையுடன் பார்த்தனர்.
“எங்க வீட்டு பெண் சம்மதம் முக்கியம்..” என்றவர் சுமியை பார்க்க, ஏற்கனவே பூவரசனின் பார்வையில் உள்ளுக்குள் ஏதேதோ உணர்வாள் கன்னங்கள் சிவந்து நின்றிருந்தவள், பதில் கூறாமல் பத்மாவின் பின் ஒளிந்து கொண்டாள்..
பின்னால் இருந்த தங்கையின் காதுப்புறம் குனிந்த பத்மா, “என்ன சுமி இப்படி பின்னாடி வந்துட்ட.. உனக்கு இஷ்டமில்லையா.. நான் சொல்லிடறேன்..” என்று நமட்டு சிரிப்புடன் கூறிக்கொண்டே நிமிர, அவள் வாயை வேகமாக மூடிய சுமி வெட்கத்துடன் “எனக்கு சம்மதம்..” என்று மெதுவாக பத்மா காதருகில் கூற, புன்னகையுடன் நிமிர்ந்த பத்மா,
“சுமிக்கு சம்மதம் மாமா..” என்றாள் சத்தமாக.. அதில் பூவரசனின் பார்வை காதலுடன் தன்னவள் மீது படிந்தது..

*********************
நாட்கள் வெகுவேகமாய் ஓட, அன்றைய நாள் மிக அழகாய் விடிந்தது..
அன்று விடியற்காலை மூன்று மணிக்கே அறையில் விளக்கெரிய, லேசாக கண்களை திறந்து பார்த்த அதர்வாவிற்கு ஆர்னாவின் வரி வடிவம் தான் தெரிந்தது..
அதை பார்த்ததும் மீண்டும் கண்களை அழுந்த மூடி கொண்டவன்... “இந்த நேரத்துக்கு லைட் போட்டுட்டு என்ன டி பண்ணிட்டு இருக்க..?” என்று கண்திறக்காமலே கேட்க..
“என்னது...! என்ன பண்ணிட்டு இருக்கேனா.. இன்னிக்கு கல்யாண நாள் மாமா.. ஞாபகம் இல்லையா.. ஒண்ணுக்கு மூணு கல்யாணம்.. அதான் எந்த புடவை கட்டுறதுனு பாத்துட்டு இருக்கேன்..” என்றாள் ஆர்னா.
“ம்ம் மூணு கல்யாணமும் ஒரே நேரத்தில் தானே டி நடக்க போகுது.. பத்து புடவையா கட்டுவ.. இதை கட்டு..” என்று கண்களை திறக்கமலேயே அதர்வா அவளை நோக்கி எடுத்து வைத்த புடவை இருப்பதிலேயே கிராண்டான பட்டு புடவை..
அவள் பரப்பி வைத்திருந்த நான்குமே அதர்வா அவளுக்காக ஆசை ஆசையாக வாங்கி கொடுத்த புடவைகள் தான்..
அதிலும் இருப்பதிலேயே அழகானதை தான் இப்போது அவன் தேர்ந்தெடுத்து கொடுத்தது..
சிவப்பு நிற புடவையில் தங்க நிற ஜரிகை உடல் முழுவதும் இழையோட, அழகிய பட்டு புடவை அது..
அதை பார்த்ததும் புன்னகையுடன் அதை கைகளில் எடுத்து கொண்டவள், “மாமா நீங்களும் எழுந்திரிங்க.. குளிச்சுட்டு வேலையை பாக்கணும்..” என்று பத்மா அவனை உலுக்க, அதில் நேராக படுத்திருந்தவன் திரும்பி குப்புற படுத்து கொண்டான்.

“ஒன்பது மணி கல்யாணத்துக்கு நடுராத்திரி கிளம்புவதெல்லாம் உன் வேலை அம்முக்குட்டி.. நீ போ.. நான் காலையில் வரேன்..” என்று அவளை நக்கல் அடித்து கொண்டே அவன் தலையணையில் முகம் புதைத்துக்கொள்ள , அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி போட்ட ஆர்னா...
“மாமா ஆயிரத்தெட்டு வேலை இருக்கு.. நான் குளிச்சுட்டு வரும் வரை தான் உங்களுக்கு டைம்.. அதுக்கு அப்புறம் எழுதுடனும்..” என்று மிரட்டி விட்டு அவள் குளியல் அறைநோக்கி செல்ல...
“கொலைகாரி...” என்று புலம்பி கொண்டே சிறு சிரிப்புடன் தன் தூக்கத்தை தொடர்ந்தான் அதர்வா..
நன்றாக தூங்கி கொண்டிருந்தவன் தன் முகத்தில் ஏதோ தண்ணீர் படுவது போல் இருக்க, அதை கைகளால் துடைத்து கொண்டே மீண்டும் உறங்கினான்..
அடுத்த முறை பலமாக தண்ணீர் முகத்தில் விழ கண்களை திறக்கமலே அது யார் வேலை என்று கண்டுகொண்டவன் “அடங்க மாட்டியா டி நீ..” என்று என்று கேட்டுக்கொண்டே ஆர்னா கைகளை சரியாக பிடித்து இழுக்க, அவன் மீதே விழுந்தாள் ஆர்னா..
புடவையை வேறு குளித்துவிட்டு அரைகுறையாக சுற்றி வந்திருந்தவள், வேகமாக அவனிடம் இருந்து திமிர “எங்கயும் போக முடியாது அம்மு குட்டி..” என்றான் அதர்வா அவள் காதருகில் கிசுகிசுப்பாக..
“மாமா நேரம் ஆச்சு மாமா.. ப்ளீஸ்..”
“ஆகட்டும் டி.. நமக்கா கல்யாணம்.. எல்லாம் பொறுமையா போகலாம்..” என்றவன் ஆர்னாவின் முகம் பார்க்க, அதில் மெலிதாக ஒரு கலக்கம்..
ஆனால் அதை கண்டுகொண்டது போல் காண்பித்து கொள்ளாதவன், “லவ் யு அம்முகுட்டி..” என்று மெதுவாக கூற, அவள் கண்களில் இருந்து சிறு கலக்கம் கூட மறைந்து விட்டது..
அதில் நிம்மதி அடைந்தவன் இப்போது தன் மீது படுத்திருந்த மனைவியை பார்க்க, புத்தம் புது மலர் போல் இருந்தவளை பார்த்ததும் அவன் பார்வை கணவன் பார்வையாக மாறியது..
“அம்மு குட்டி..” என்றவன் குரல் மேலும் கிறக்கமாக ஒலிக்க, அவன் எண்ணத்தை புரிந்துகொண்ட பெண்ணவளும் வெட்கத்துடன் அவன் மார்பிலே முகம் புதைத்து கொண்டாள்.. ஆனால் அவன் விட்டால் அல்லவா..? தன்னவள் முகத்தை பிடித்து நிமிர்த்தியவன் “குனிந்தால் என் காரியம் எப்படி நடக்கும் அம்மு..” என்று கிறக்கமாக கேட்டுக்கொண்டே அவள் இதழ்களை சிறை செய்திருந்தான்..
இருவரின் காதலுடன் சில நிமிடங்கள் அவர்கள் இதழ் யுத்தம் நீடிக்க, சற்று நேரத்தில் தானே விலகி விட்ட அதர்வா “யாரோ இன்னிக்கு கல்யாணம் சீக்கிரம் கிளம்பணும்ன்னு சொன்னாங்க. யாரு தெரியுமா அம்முக்குட்டி..!” என வேண்டுமென்றே கேட்க...
அதில் சுயநினைவுக்கு மீண்டவள், “பிராடு மாமா.. எல்லாம் உங்களால் தான்..” என்று அவனை நாலு மொத்து மொத்திவிட்டே எழுந்தாள்.
அதில் தானும் சிரித்து கொண்டே எழுந்துவிட்டவன், “ரெடி ஆகு அம்மு.. நானும் கிளப்பி வந்துறேன்..” என்றுவிட்டு மீண்டும் அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்துவிட்டே சென்றான்.
கணவனின் செயலில் வெட்கத்துடன் நகர்ந்தவள் தானும் வேகமாக கிளம்ப தொடங்கினாள்..
சற்று நேரத்தில் இருவரும் தயார் ஆகி கீழே வர, அங்கு அமைத்திருந்த மேடைகளை பார்த்து ஒரு நொடி அதிர்ந்து நின்றுவிட்டாள் ஆர்னா..!
அவளுக்கு பின்னால் நின்றிருந்த அதர்வா மனைவியின் தலையை வாஞ்சையுடன் கோதி கொடுத்து அவளை அணைத்து கொண்டான்..
“மாமா.. நா.. நா.. நாலு மேடை இருக்கே..”
தான் நினைக்கும் விஷயம் உண்மை தானா என்ற தவிப்புடன் ஆர்னா கேட்க, “எஸ் அம்மு இன்னிக்கு நமக்கும் தான் கல்யாணம்.. உன்னை ரெடி பண்ண ஆளுங்க வைட்டிங்.. அந்த அறைக்கு போ டா..” என்று ஏற்கனவே பிரியா தயார் ஆகி கொண்டிருந்த அறையை அதர்வா காட்ட, அதில் ஆர்னாவுற்கு கண்கள் கலங்கிவிட்டது.
தன் சொந்தபந்தம் அனைவர் முன்பும் தனக்கு திருமணம் நடக்கவில்லையே என்ற குறை அவளுக்கு மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது..
அதை கணவன் இன்று தீர்த்து வைத்ததும் அவளுக்கு மகிழ்ச்சியில் கண்ணீர் தான் வந்தது..

“தேங்க்ஸ் மாமா..” என்று ஆர்னா அதர்வாவை அணைத்துக்கொள்ள, அவனும் அவள் நெற்றியில் இதழ் பதித்து...
“போ டா அம்மு.. நேரம் ஆகுது..” என்று மென்மையாக கூறி மனைவியை அனுப்பி வைத்தான்..
பின்பு மேடையில் அமர்ந்திருந்த ஐயரிடம் எதனையோ சொல்லிக்கொண்டிருந்த தந்தையின் அருகில் சென்ற அதர்வா,
“அப்பா” என அழைத்தான்... மகன் அழைப்பில் திரும்பி பார்த்த மாதேஸ்வரன்,
“ஒரு நிமிஷம்ப்பா” என மகனிடம் கூறிவிட்டு, ஐயரிடம் திரும்பி,
“நான் சொன்னதை பார்த்து பண்ணுங்க ஐயரே!” என மீண்டும் அவரிடம் வலியுறுத்திவிட்டு அதர்வாவின் அருகில் வந்தவர்,

“இப்போ சொல்லுப்பா, என்ன விஷயம்???” என கேட்டார்...
“இன்னுமொரு மனை போட சொல்லுங்கப்பா” என சொன்ன மகனை யோசனையாக பார்த்து,
“யாருக்குப்பா அது???” என கேட்டவரை பார்த்து சிரித்தவன்,
“வேற யாருக்கும் இல்லைபா... ரஞ்சித்துக்கும் ரோஷினிக்கும் தான்” எனச் சொல்ல, அதில் அதிர்ந்துபோன மாதேஸ்வரன்,
“அப்போ அன்னைக்கு அவங்களை அரெஸ்ட் பண்ணலையா???” என கேட்டதும்
“அரெஸ்ட் பண்ணினாங்கபா... ஆனா நான் என்னோட பேரைச் சொல்லி அவங்களை ஒரு நாள் மட்டும் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டேன்” என குரல் இறுகச் சொன்னவனை புரியாது நோக்கிய மாதேஸ்வரன்,
“எப்படி பார்த்தாலும் இது சட்டத்தை மீறிய செயல் தானேப்பா... ஏன் அப்படி பண்ணின???” என கேட்டார்...
“அவங்க பண்ணின தப்புக்கு ஜெயிலுக்குள்ள தள்ளியிருக்கணும் தான்... ஆனால் சித்தி பாவம் தானேப்பா... அவங்களுக்காக தான் போனால் போகுதுன்னு விட்டேன்... ஆனால் நம்ம ஊருல அவங்களுக்கான தண்டனை இருக்குப்பா” என முதலில் கோபமாக ஆரம்பித்தவன், கடைசியாக கேலியில் முடிக்க, அப்படி என்ன தண்டனையாக இருக்கும் என்ற ஆர்வத்தை அடக்க முடியாது அதர்வாவிடம் கேட்டு வைத்தார் மாதேஸ்வரன்...
“ரஞ்சித்துக்கும் ரோஷினிக்கும் இந்த கல்யாணமே பெரிய தண்டனை தான்... அது மட்டும் இல்லாமல் வேற ஒரு தண்டனையும் யோசிச்சு வச்சிருக்கேன்... அப்புறம், சித்தப்பாவுக்கு கலெக்டர் வேலை ரெடி பண்ணியிருக்கேன்” என கேலியாய் கூறி, அது என்ன வேலை என சொல்லவும் முதலில் அதிர்ந்து பின்பு வாய்விட்டு நகைத்தவரோடு தானும் இணைந்து கொண்டான் அதர்வா...
சிறிது நேரம் சென்ற பின்பு அதர்வா, விஷ்ணு, பூவரசன், அபிஷேக் ஆகியோர் மணமகனுக்குரிய அத்தனை லட்சணங்களுடன் ஐயர் சொல்லிக்கொடுக்கும் மந்திரத்தை பயபக்தியோடு சொல்லிக்கொண்டிருந்தாலும் பார்வையோ அவர்கள் ஜோடிகள் தயாராகிக்கொண்டிருக்கும் அறையின் வாசலையே மொய்த்துக்கொண்டிருந்தது...

அவர்களின் காத்திருப்பு வீண்போகாது சில நிமிடங்களிலேயே சொர்க்க வாசல் போல் அந்த ரூமின் கதவு திறக்க, ஒருவர் பின் ஒருவராக பதுமையென அன்னநடையோடு வந்த, தங்கள் மனதுக்கு இனியவர்களின் மேல் படிந்த காளையர்களின் பார்வை, அச்சடித்தது போல அவர்கள் மேல் படிய, சொல்லிக்கொண்டிருந்த மந்திரங்கள் அதற்குமேல் வாயைவிட்டு வராது தொண்டைக்குளியோடு அடங்கிப்போனது...
ஐயரும் அவர்களை மந்திரத்தை சொல்ல வைக்க பெரும் முயற்சி எடுத்தும் அவர் நினைத்தது நடவாது போகவும் உச்சுக்கொட்டிவிட்டு தானே மந்திரத்தை சொல்லி முடித்தார்...
தன்னருக்கில் வந்து அமர்ந்த ஆர்னாவை பார்வையால் அதர்வா விழுங்க, அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாது வெட்கம் தடுக்க தலையை குனிந்தபடியே அமர்ந்துகொண்டாள்...
இவ்வாறே பூவரசனும் விஷ்ணுவும் தங்கள் துணையோடு விழிகளால் கதை பேச, தலை குனிந்தபடி வந்த பார்வதியை யோசனையாக பார்த்த அபிஷேக், அவள் தன்னருகில் அமர்ந்ததும்...
“என்ன எதையாவது தொலைச்சிட்டியா??? தேடிட்டே வந்த போல” என அதி முக்கிய கேள்வியை கேட்க, அந்த கேள்வியில் கடுப்பான பார்வதி, தங்களை சுற்றியிருந்த கூட்டத்தினால் அவனை திட்டமுடியாததால் மாலை மறைவில் அவனது தொடையில் நன்கு கிள்ளிவிட, அது கொடுத்த வலியில் அலற வாய் திறந்த அபிஷேக், பார்வதியின் விழிகளில் இருந்த கொலைவெறியில் அவ்வலறலை அப்படியே முழுங்கியவன், கூட்டத்தில் கேட்ட சலசலப்பில் மற்றது மறந்து போக, நிமிர்ந்து நோக்கியவன், அங்கு வந்தவர்களை கண்டதும்

“இந்த விளக்கெண்ணைங்க எதுக்கு இங்க வந்துச்சுங்க???” என முணுமுணுத்தபடி ஆர்னாவை எட்டி நோக்க, அவளும் அதிர்ந்து போய் அதர்வாவை பார்க்க, அவன் தன்னவளுக்கு கண்ணால் சமாதானம் சொன்னவன், ரஞ்சித், ரோஷினி, ராஜேந்திரனுக்கு காவலாக வந்தவர்களுக்கு கண்ணை காட்ட, இருவர் ராஜேந்திரனை கவனிக்க, மற்ற நால்வர், ரஞ்சித்தையும் ரோஷினியையும் மணமேடைக்கு அழைத்து செல்ல, அவர்களும் தங்கள் விதியை நொந்தவாறே பலியாடுபோல் சென்று மேடையில் அமர்ந்து கொண்டனர்...
அவர்கள் வந்ததை குடும்பத்தார் கவனித்தாலும் அருகில் செல்ல நினைக்கவில்லை... அதிலும் கோமளவள்ளி தங்களை வெறுப்புடன் பார்த்துவிட்டு முகத்தை வெடுக்கென திரும்பிக்கொண்டது ராஜேந்திரனுக்கும் ரஞ்சித்துக்கும் செருப்படியாக இருந்தது...
அடுத்த சில நிமிடங்களில் ஐயர் தாலி எடுத்து கொடுக்க, ஆண்கள் ஐவரும் தங்கள் துணைக்கு பெரியோர்கள் அர்ச்சனை தூவி ஆசீர்வதிக்க தாலியை அணிவித்தனர்... அதிலும் ஆர்னாவுக்கு தன் கழுத்தில் முதல் முதலாக அதர்வா தாலி கட்டிய சூழ்நிலை நினைவுக்கு வந்தாலும் அதனை நினைத்து வருந்த அவளது பக்குவப்பட்ட மனது இடம் கொடுக்கவில்லை... எனவே இந்த நொடி நிஜம், இதுவே வாழ்க்கை எங்கும் தொடரும் என்பது போல் ஆழ்ந்து அனுபவித்தவளின் உதடுகள் அழகிய புன்னகையை சிந்த, விழிகள் எல்லையில்லா காதலோடு அதர்வாவை நோக்கியது...
அவனும் அதே நேரம் அவளை தான் விழிகளால் கொள்ளையிட்டு கொண்டிருந்தான்... அதில் கன்னங்கள் நாணத்தால் சிவக்க தலை குனிந்த அம்முவை கண்டு அவனுக்கு நிறைவாக இருந்தது...
பின்பு எல்லா ஜோடிகளும் பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி முடிந்ததும், அதர்வா சற்று முன்னால் வந்து,
“எங்க எல்லாரோட கல்யாணத்துக்கு வந்த உங்க எல்லோருக்கும் நன்றி... இப்போ உங்க எல்லார் முன்னாடியும் சில முடிவுகளை எடுக்க நான் கடமை பட்டிருக்கேன்... அதிலும் எங்க குடும்பம் தான் வழிவழியா நாட்டாமை பண்ணிட்டு வருது... அவங்க குடும்ப உறுப்பினர் தப்பு பண்ணினாலும் தண்டனை கொடுப்பாங்க... அப்படி இருக்கும் போது குற்றம் செய்தவர்களை தண்டிக்காமல் விட்டதா யாரும் சொல்லிரக்கூடாது” என பீடிகையுடன் தொடங்கியவனை எல்லோரும் புரியாது கேள்வியுடன் நோக்க, அதர்வா மேலும் தன் பேச்சை தொடர்ந்தான்...
“என் தங்கை பிரியாவையும் என் மனைவி ஆர்னாவையும் இவங்க மூணு பேரும் கடத்தினது உங்களுக்கு தெரியும்... என்னடா போலீஸ் ஸ்டேசன் போனவங்க இப்போ திரும்பி வந்துட்டாங்களான்னும் அவங்களை மன்னிச்சு விட்டிட்டாங்களோன்னும் இப்போ உங்களுக்குள்ள ஆயிரம் கேள்விகள் இருக்கும்... இது எங்க குடும்ப விஷயம்னாலும் தப்புன்னு வரும்போது எல்லாரும் பொதுதான்... அதனால நம்ம கண் பார்வையில் இவங்களுக்கான தண்டனையை நான் கொடுக்க போகிறேன்... இதில உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கா???” என கூட்டத்தை பார்த்து கேட்க, ஒரே குரலாய் “இல்லை” என பதில் வந்தது...
“ரொம்ப சந்தோசம்... இன்னைல இருந்து ரஞ்சித் மற்றும் ரோஷினிக்கு ஊர் எல்லைல இருக்கிற ஒரு ஏக்கரா நிலத்துல நெல் விதைச்சு அவங்க பிழைப்பை பார்க்கணும்... அவங்க தங்கிக்க அந்த வயலில் ஒரு குடிசையும் தயாரா இருக்கு... அப்புறம் என்னோட சித்தப்பாக்கு எங்க வீட்டு மாடுகள் போடுற சாணியை எடுத்து வரட்டி தட்டுறது தான் அவர் வேலை” என சொல்லவும் கூட்டத்தினரிடையே கொல்லென்ற சிரிப்போடு,
“இவங்க ஆடின ஆட்டத்துக்கு நல்லா வேணும்” என சில கறுவிய குரல்களும் கேட்டது... அதில் புன்னகையோடு,
“இவங்க இந்த தண்டனைல இருந்து தப்பிக்கவே முடியாது... ரஞ்சித், ரோஷினியை இரண்டு பேர் எப்பொழுதும் கண்காணிச்சிட்டே இருப்பாங்க... சித்தப்பாவை அபிஷேக் பார்த்துப்பான்” என சொல்லவும் ஜெர்க்காகி நின்ற அபிஷேக்கை பார்த்த அதர்வா,
“என்ன நான் சொன்னதை செய்வ தானே அபிஷேக்???” என கேலியாக கேட்க, உடலை ஒருமுறை சிலிர்த்து நெஞ்சை நிமிர்த்தியவன்,
“செமையா செஞ்சுருவோம்” என நம்பியார் போல கையை பிசைந்தபடி சொல்ல, ராஜேந்திரனுக்கு இப்போதே அடிவயிறு கலங்குவது போல் இருந்தது... அதனை புன்னகையோடு பார்த்துவிட்டு கூட்டத்தினரிடம் திரும்பியவன்,
“என் பேச்சை கேட்ட எல்லோருக்கும் நன்றி... இப்போ எல்லோரும் போய் சாபிடுங்க” என சொல்ல, கூட்டம் கலையலானது... அதில் நின்றிருந்த பெரியவர் ஒருவர் அதர்வாவுக்கு அருகில் வந்து அவனது தலையில் கை வைத்தவர்,
“நீதிமானோட பிள்ளைன்னு நிரூபிச்சிட்டப்பா... நல்லா இரு” என ஆசீர்வதித்து செல்ல, தன் மீசையை முறுக்கிய மாதேஸ்வரனுக்கு மகனை நினைத்து அவ்வளவு பெருமையாக இருந்தது...
பின் குடும்பத்தாரை பார்த்து, “இனி அடுத்து என்ன செய்யணும்???” என கேட்க, அதுவரை அவனின் பேச்சிலும் செயலிலும் பெருமிதம் கொண்டு நின்றிருந்தவர்கள், அவன் கேட்டதும்...
“ஆங்... ஓடிப்பிடிச்சு விளையாடணும்” என ராசாத்தி நக்கலடிக்க,
“விளையாடிட்டா போச்சு” என பதில் சொன்னாலும் எப்படி விளையாடுவது என்று கண்களால் அருகில் நின்றிருந்த தன் அம்முவுக்கு சுற்றுப்புறத்தை மறந்து பாடமெடுக்க, அவனது விழிவழியே வந்த கணைகளால் வெட்கம் வந்து முகாமிட, தலையை முடிந்தமட்டும் தாழ்த்தி கொண்டாள்...
முதலிரவு அறைக்குள் அமர்ந்து இருந்த அபிஷேக் கானுக்கு ஒரே படபடப்பாக இருந்தது. அவனோ மனதுக்குள் “முதல் தடவைனு சொன்னதால ஒரே டென்சன் ஆஹ் இருக்கு,, ஆனா அவ கிட்ட பயப்படுற போல காட்டிக்க கூடாது” என்று நினைத்தபடி குட்டி போட்ட பூனை போல அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான். அப்போது கையில் பால் செம்புடன் உள்ளே தலையைக் குனிந்தபடி நுழைந்தாள் பார்வதி. அவளைக் கண்டதும் அவனுக்கு வியர்த்து வழிய கால் வேறு நடுங்க தொடங்கியது.
“ஐயோ பில்டிங் ஸ்ட்ரோங் ஆஹ் இருந்தாலும் பேஸ்மெண்ட் வீக் ஆஹ் இருக்கே, இவ வேற கீழயே பாக்கிறாளே, அபி அலெர்ட் ஆகிக்கோ” என்று நினைத்தவன் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து விட்டான். அவளும் மெதுவாக அவனை நோக்கி வந்து பால் செம்பை நீட்ட அவளிடம் இருந்து செம்பை வாங்கியபடி “பாரு என்னைப் பாரு” என்றான். அவளோ “எனக்கு வெட்கமா இருக்கு மாமா” என்று சொல்ல “வெட்கமா?” என்று கேட்டபடி பாலை முழுதாக குடித்து விட்டு செம்பை அவளிடம் கொடுத்தான். செம்பை வாங்கியவள் அதிர்ந்து போய் அவனைப் பார்த்து “எனக்கு இல்லையா?” என்று கேட்க “ஐயோ அவசரப்பட்டு எல்லாத்தையும் குடிச்சுட்டேனே, சரி சமாளிப்போம்”என்று நினைத்தவன் “நான் குடிச்சா என்ன? நீ குடிச்சா என்ன ? எல்லாம் ஒன்னு தானே” என்றவன் அவள் கையைப் பிடித்து “இங்க இரு” என்று அருகில் அமர வைத்தான். அவளும் குனிந்தபடியே அமர அவள் முகத்தை நிமிர்த்தியவன் “சூப்பர்” என்று சொல்ல அவளோ “நீங்களும் வேட்டி சட்டையில் குட்டி செந்தில் போல இருக்கீங்க” என்று சொன்னாள்.
“ஹ்ம்ம், அஜித் விஜய்ன்னு சொல்லாம செந்தில்ன்னு சொல்றா” என்று மனதுக்குள் அவளுக்கு திட்டியவன் “சரி சரி நம்ம பொண்டாட்டி தானே சொல்றா சொல்லிட்டு போகட்டும்” என்று மனதுக்குள் முணு முணுத்து விட்டு அவளை அணைக்க அவன் தொப்பை இடித்தது. “முதலில் இத குறைக்கணும்” என்று அவன் நினைத்த போது அவளோ “லைட்டை அணைங்க மாமா” என்றாள். “சரி சரி” என்றவன் லைட்டை எழுந்து சென்று அணைக்க அவர்கள் வாழ்க்கை இனிதாக ஆரம்பமானது.


அதே சமயம் விஷ்ணு தனது அறைக்குள் குட்டி போட்ட பூனை போல நடந்து கொண்டு இருந்தான். “எவ்வளவு நேரம் ஆச்சு, என்ன பண்ணுறா இவ்வளவு நேரம்?” என்று நினைத்தபடி கதவை திறந்து எட்டிப் பார்க்க பிரியாவை அழைத்து வந்த அவள் தோழிகள் “இங்க பாருங்கடி மாப்பிளைக்கு அவசரத்தை” என்று சொல்லி சிரிக்க “விஷ்ணு உன் மானம் போச்சு” என்று நினைத்தவன் கதவை சாத்திவிட்டு கட்டிலில் ஓடி வந்து அமர்ந்து கொண்டான். ப்ரியாவோ தன்னவனை நினைத்து மனதுக்குள் சிரித்தபடி கதவைத் திறந்து கொண்டு முதலிரவு அறைக்குள் நுழைந்தாள். அவனோ “இவ்வளவு நேரம் என்ன பண்ணின?” என்று கேட்க “அலங்காரம் பண்ண நேரம் ஆயிடுச்சு” என்றபடி பால் செம்பை அவனிடம் நீட்ட “எதுக்குடி இந்த, அலங்காரம்? இதெல்லாம் கலைக்கவே எனக்கு நேரம் ஆய்டும், எனக்கு பொறுமை வேற இல்லை” என்றவன் பால் செம்பை வாங்கி அங்கிருந்த மேசையில் வைத்தான். பிரியாவோ “ஐயோ ஏன் இப்படி வெளிப்படையா பேசுறார்?” என்று நினைத்து வெட்கப்பட அவள் கையை பிடித்து இழுத்தவன் அவளை அணைத்தபடியே மஞ்சத்தில் சரிந்தான், அவளோ “என்ன இவ்வளவு அவசரம்?” என்று கேட்டு முடிக்கவில்லை மேலும் பேச அவன் அவளது இதழ்களை சுதந்திரமாக விடவில்லை. அவள் இதழ்களில் ஆரம்பித்த முத்தம் மேலும் முன்னேறி அங்கு இல்லறம் அழகாகாக மலர்ந்தது.
அதே சமயம் பூவரசன் அறையில்... கையில் பால் செம்புடன் மெதுவாக அறைக்குள் நுழைந்தாள் சுமி, அவள் அழகை உச்சியில் இருந்து கால் வரை ஆராய்ந்தபடி அவளை நெருங்கிய பூவரசன் பால் செம்பை வாங்கி அவளை பார்த்தபடியே பருக அவன் பார்வையில் அவள் தான் சங்கடப்பட்டு போனாள். அவனோ பருகி விட்டு மீதியைக் கொடுக்க அதை வாங்கியவள் மெதுவாக பருகி முடித்ததும் அவள் நெற்றியில் தனது முதல் முத்தத்ததை பதித்தான் . அவன் ஸ்பரிசத்தில் அவள் மேனி சிலிர்க்க அவனோ நாசி கன்னம் என்று முன்னேறி இதழ்களை நெருங்கிய சமயம் அவன் தொடுகையில் உருகியவாறே “கொஞ்சம் பேசி பழகிட்டு அப்புறம்” என்று அவள் ஆரம்பிக்க “சரி பேசு” என்றபடி அவன் விலகி நின்றான். அவன் திடீர் விலகல் அவளுக்கு ஏமாற்றமாகி போக அவள் முகம் அதனை அப்பட்டமாக காட்டியது.அதனைக் கண்டு கொண்டவன் ரகசியமாக சிரித்தபடி அடுத்த கணமே அவள் இதழ்களை ஆழ்ந்து சிறை செய்தான். மஞ்சள் கயிறின் மாயத்தில் அவளும் அவனுடன் ஒன்றிப்போக அவர்கள் வாழ்க்கை இன்பமாக ஆரம்பமானது.
ரோஷிணியோ நிலத்தில் அமர்ந்தபடி “எப்படி வாழ வேண்டிய பொண்ணு நான். இந்த ரஞ்சித்தை கட்டிக்கிட்டு இப்படி வாழ வேண்டி இருக்கே” என்று வெளிப்படையாக புலம்பியபடி தனக்கு கடித்த கொசுவை அடித்தாள். அப்போது உள்ளே நுழைந்த ரஞ்சித்தோ “என்னடி புருஷனை அடிக்க முடியலன்னு கொசுவை அடிக்கியா?” என்று கேட்க “ஆமா பொல்லாத புருஷன், இந்த கொசுக்கடியில என்னை வச்சு இருக்கிற நீ எல்லாம் எதுக்குயா என்னை கல்யாணம் பண்ணின ?” என்று ஆக்ரோஷமாக கேட்க “நானா பண்ணினேன், அவன் தான் பண்ணி வச்சான். அவனை நான் சும்மா விட மாட்டேன்” என்று சீற “எதுக்கு இந்த குடிசையும் இல்லாம ரோட்டில நிற்கவா? நான் திருந்திட்டேன் நீ திருந்து” என்று சொல்ல ரஞ்சித்தின் பார்வை அவள் மேனியில் படிந்தது. அவனோ “சரி திருத்துறேன், ஆனா அதுக்கு முதல்” என்றவன் பார்வையே அவன் மனதை உணர்த்த “கிட்ட வந்தா உன்னை கொல்லுவேன்” என்றதும் அவன் முகம் கூம்பி போனது. முதலிருந்த ரஞ்சித் என்றால் அவளை பலாத்காரம் கூட பண்ணி இருப்பான். ஆனால் அவன் மனதில் உண்டான மாற்றம் என்னவோ அவனை தள்ளி இருக்க சொல்ல அங்கு இருந்த தலையணையை எடுத்துக் கொண்டு வெளியே படுக்க போனான். உடனே அவள் “வெளியே எல்லாம் படுக்க தேவல. நான் சும்மா தான் சொன்னேன்” என்று சொல்ல அவன் முகம் மலர “நிஜமாவா?” என்றபடி அவளை நெருங்கி தனது தேவையை பூர்த்தி செய்து கொண்டான்.
அதே சமயம், அதர்வா அறையில் நுழைந்த பத்மா “எனக்கு தூக்கம் வருது” என்றபடி பால் செம்பை வைத்து விட்டு தூங்க போக “அடிப்பாவி இன்னைக்கு நமக்கு முதல் இரவு” என்றான் அதர்வா. “நல்லா யோசிச்சு சொல்லுங்க முதல் இரவா ?” என்று கேட்க “முதல் இரவோ இல்லையோ, நீ புது பொண்ணு நான் புது மாப்பிள்ளை தான்” என்றவன் படுத்திருந்தவள் மேலே படர “எனக்கு களைப்பா” என்று ஆரம்பித்தவளை மேலும் களைக்க வைத்து விட்டே விலகிக் கொண்டான்.



பத்து வருடங்களுக்கு பிறகு...
“டேய் என்னடா இவன் இம்புட்டு நேரமா யோசிக்கிறான் அதுவும் ஏதோ கொலையாளியை தாக்க போற மாதிரி” என்று சஜீவன் வேணுவிடம் கூற.... தினேஷ், இளங்கோ இருவரும் அவர்களை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.


“டேய் மாப்ள இளங்கோ இவனுங்க மட்டும் இன்னைக்கு ஜெயிச்சானுங்க உன் தங்கிச்சியும் என் தொங்கச்சிங்களும் ஓட்டியே சாவடிப்பாளுங்க டா” என்று தினேஷ் பற்களுக்குள் வார்த்தைகள் சிதறி கொண்டிருந்தான்.


“இரு! இரு! அவன் ஜெயிக்கிற மாதிரி இருந்தா நாம ஆட்டத்தை கலைச்சிற மாட்டோம்” என்றவன் மற்றவர்களை உற்று பார்க்க இளங்கோ தொடங்க, தினேஷ் தாய கட்டையை உருட்ட அது சரியாக மூன்று என்று விழவும்.... “ஐயோ போச்சே” என்று தலையில் கைவைத்த படி இளங்கோவும்.... “ஹேய்ய்ய்ய்ய் நாம ஜெயிச்சுட்டோம்” என்று வேணு சஜீவன் கைகளை தட்டிக்கொள்ள தினேஷ் கொலைவெறியுடன் தாக்க என்று அந்த இடமே ரணகளமாகியது! இவர்களின் கூச்சலும், சண்டையையும் தூரத்திலிருந்து கோபமாக பார்த்துக் கொண்டிருந்தவன் அவர்களை நெருங்கி....


“சைலென்ஸ்ஸ்ஸ்ஸ்!” என்று உச்சஸ்தாயில் காத்த... அனைவரும் சுவிட்ச் போட்டார் போல் நின்றனர்... அவர்களின் பார்வை மிரட்சியுடன் எதிரில் இருந்தவனையே பார்த்துக் கொண்டிருந்தது... கிருபாகரன் கண்களில் நெருப்பு பறக்க அவர்களை பார்த்தவன் அனைவரையும் தோப்புக்கரணம் போட சொல்லிவிட்டு இவன் கைகட்டி நின்றுவிட்டிருந்தான்.


பத்து வருடங்கள் கடந்த நிலையில் திருமணமான அனைத்து தமபதிகளுக்கும் குழந்தைகள் இருந்தன... கிருபாகரன் - சஜீவன் இருவரும் ஆர்னாஅதர்வநவதீபன் தம்பதிகளின் இரண்டு ஆண்மகன்கள், வீனா, வேணுராம் இருவரும் பிரியாவிஷ்ணு தம்பதியின் வாரிசு, பிந்து, சிந்து, தினேஷ் பார்வதிஅபிஷேக் வாரிசுகள் முதல் இரண்டு இரட்டைபெண்கள், சாத்விகா, இளங்கோ ரஞ்சித்ரோஷினி தம்பதியின் வாரிசுகள் என அனைவரும் இன்புற்று வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர்.


இவர்களின் இந்த செயலை வாய்பொத்தி சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள் வீணா, பிந்து, சிந்து, சாத்விகா நால்வரும்... இவர்களின் செயலை அந்த பக்கம் வேளை செய்துகொண்டிருந்த ஆர்னா, பிரியா கண்களில் பட இருவரும் மகள்களிடம் வினவினர்.


“ஏய் வீனா என்னடி ஆச்சு? அப்படி என்ன எட்டி பார்த்துட்டு இருக்கீங்க? “ என்று பிரியா வினவ...


சாத்விகா வாய் திறந்தால்... “அத்தை கொஞ்சம் அக்கா சூடுங்க” என்று கைகாட்ட அங்கே பார்த்த காட்சியை கண்டு இருவரும் என்ன கொடுமை என்பது போல் வாயில் கை வைத்து புதியவர்கள் அவர்களை நெருங்கினர்.


“டேய் கிருபா என்னடா இதெல்லாம் எதுக்கு அவங்களை தோப்புக்கரணம் போட சொல்லிட்டு இருக்க?” என்று ஆர்னா அதட்டலாக கேட்க கிருபாகரன் அதற்கெல்லாம் அசராமல் அவன் அன்னையை பார்த்திருந்தான்.


“என்னடா கேட்டுகிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு பார்த்துட்டே இருந்தா என்ன அர்த்தம்? சொல்லு டா.... எதுக்கு இப்போ அவங்களுக்கு தண்டனை?” என்று இப்போது சற்று அதட்டலாகவே ஆர்னா கேட்டிருந்தாள்.


“என்ன ம்மா நீங்க இவங்க தான் வீடுன்னு நினைக்காம கூச்சல்குழப்பம் உண்டு பண்ணி சண்டை போட்டுட்டு இருந்தாங்க அதான் நான் இவங்களை இப்படி பண்ணினேன் இப்போ அதுக்கு என்னங்கறீங்க? “


“என்ன வாயி அதுக்காக அவங்க எல்லாம் யாரு உன் தம்பிங்க?”


“நான் மட்டும் பக்கத்து வீட்டுகாரங்கண்ணா சொன்னேன்... அவங்களா இருந்தா என் தண்டனை இன்னும் வேற மாதிரி இருந்திருக்கும்” சற்று கடுமையாகவே கூறியதும் பிரியா, ஆர்னா இருவரும் திடுக்கிட்டு பார்த்துக் கொண்டனர்.


கிருபாகரன் தன் வேலை முடிந்தது என்பது போல் நடையை கட்ட மற்றவர்கள் அவன் சென்றதை உறுதிப்படுத்தி கொண்டு சத்தமில்லாமல் நகர்ந்தனர்... “அண்ணி இவன் அண்ணனை விட ரெண்டு மடங்கு அதிகமாகவே கோபகாரனா இருக்கிறான்” என்று பிரியா கூறிக்கொண்டிருக்கும் வேளை... “பிரியா, அம்மு இங்க இருக்கீங்களா நான் உங்களை அங்க தேடிட்டு இருக்கேன்” என்று கேட்டபடி அதர்வா வர அவளை பொய் கோபத்துடன் முறைத்துக்கொண்டிருந்தாள் அவன் அம்முக்குட்டி அவளை யோசனையுடன் பார்க்க ஆரம்பிக்க இவர்களின் பார்வை பரிபாஷை புரிந்துக்கொண்ட பிரியா அந்த இடத்தை விட்டு நகர்ந்திருந்தாள்.... தங்கை சென்றதும் அதர்வா மனைவி புறம் திரும்பியவன்

“அம்மு என்னடி ஆச்சு மாமாவை முறைச்சுமுறைச்சு பார்க்கிற?”


“ஹ்ம்ம்... நீங்க தான் ஒரு லிட்டர் கஞ்சியை குடிச்ச மாதிரி ரொம்ப விறைப்பா இருக்கீங்கன்னு பார்த்தா உங்க பையன் உங்களுக்கு மேல ரெண்டு மடங்கு இருக்கிறான்” என்று கோபத்துடன் சிலிர்த்துக் கொள்ள அவளின் கோபத்தில் அவன் சில்லென்று உணர்த்தவனுக்கு வெகு நாட்களுக்கு பிறகு அவளை சீண்டி பார்க்கும் ஆசை வந்தது... “அம்மு கவலைபடாத எனக்கொரு தங்கச்சி இருக்கிற மாதிரி அவனுக்கு ஒரு தங்கச்சி பாப்பா வந்தா சரியாகிரும் என்ன ட்ரை பண்ணலாமா என்று கண்ணடித்து கேட்க ஆர்னா அவனை ஆனா மட்டும் முறைத்து பார்க்க “அம்மு அப்படி பார்க்க பார்க்க எனக்கு வேற என்னனமோ தோணுது என்ன பொண்ணுக்கு அடி போடலாமா” என்று கேட்க அவளோ இப்பொது கலி அவதாரமே எடுத்திருக்க விட்டுவிடுவான அவன் காதல் கணவன் அவளை இறுக்கி அணைத்தவன் இதழில் கவிதை எழுதினான்.
“ரஞ்சித் இன்னைக்கு சாயங்கலாம் உர மூட்டை லோட் வருதாம்” என்று கூறினால் ரோஷினி... இழுத்து வாரிய தலைமுடியும் நெற்றியில் வட்டவடிவில் ஒருபொட்டும் என சாதரணமாக இருந்தாள்... வெள்ளை வேஷ்டியை இழுத்து கட்டிய ரஞ்சித்
“சரி ரோஷினி நான் வயலுக்கு போறேன் நீ மதியம் சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வந்திரு” என்றவனிடம் தன்மையும், முதிர்ச்சியும் தெரிந்தது... அதர்வா அவனுக்கு கொடுத்த தண்டனையை நினைத்து வருத்தமும், கோபமும் இருந்தாலும் நாளடைவில் அவன் மனம் தன் தவறை உணர்ந்து அவனை திருத்தியிருந்தது தான் உண்மை!
வெளியில் சுவற்றை பார்த்து சாணியை உருட்டி வரட்டி தட்டிக் கொண்டிருந்த ராஜேந்திரன் மகன் செல்வதை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்... ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பதற்கேற்ப அவர்களின் வாழ்வையும் இப்படி அவர்களின் வினை சூழ்ந்துகொண்டதை எண்ணியெண்ணி வருந்துவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தார்... அவ்வபோது எழும் கோபத்தையும் ரோஷினி ரஞ்சிதின் கடுமையிலும், அறிவுரையிலும் அவரை அடக்கி கொள்ளவேண்டியதை தவிர வேறு வழி இருந்ததில்லை.
பிரியா கிளம்பிட்டியா என்று வினவினான் விஷ்ணு இருவரும் திபாவளி பண்டிகைக்காக அனைவருக்கும் புத்தாடைகள் வாங்க கடை வீதி கிளம்பிக் கொண்டிருந்தனர் ஆர்னாவின் பொறுப்பில் இருந்த குடும்பத்தை விட்டு வர முடியாததால் இரு வர மட்டும் போக முடிவெடுத்து கிளம்பியிருக்க பிந்து, சிந்து இருவரும் “மாமா நாங்களும் தான் வருவோம்” என்று முன்னால் நிற்க... “மாமா நான் முன்னாடி தான் உட்கார்ந்து வருவேன்” என்று சாத்விகா முன்னால் இருக்கையில் ஏறியே அமர்ந்திருக்க அவர்களின் மகள் வீனா சண்டைக்கே வந்துவிட்டாள்...
“ஏய் இறங்குடி நான் தான் முன்னாடி உட்கார்ந்து வருவேன்” என்று வீனா சண்டையிட ஆரம்பிக்க விஷ்ணுவிர்க்கோ தலையை பியித்து கொள்ளலாம் போல் இருந்தது பிரியாவிற்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது... குழந்தைகள் வந்த பிறகு தன்னவளுடன் வெளியே செல்ல முடியாமல் போயிருக்க கிடைத்த சந்தர்பத்தை விடாமல் வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டு வந்தால் இப்படி பிள்ளைகள் வந்து அவர்களை தடுத்து விட்டார்கள் என்றால் எப்படி இருக்கும்?
“எதுக்குடி சிரிக்கிற என்னுடைய ஆசையெல்லாம் அவ்ளோதான்” என்று நெற்றியில் அடித்துக் கொண்டான்..
“மாமோய் ஓடுங்க ஓடுங்க நான் தான் அப்போவே சொன்னேன் நீங்க கேட்டீங்களா” என்று பிரியா அவனை வார பிள்ளைகள் முன் எதுவும் காட்டிக்கொள்ள முடியாதவன் பற்களை நறநறக்க... “இருடி மகளே நைட் கவனிச்சுகறேன்” என்று பொருமிக் கொண்டே வாகனத்தை எடுத்திருந்தான்.
நாட்கள் காலசக்கரத்தில் சிக்கி உருண்டோட அன்றைய தினம் தீபாவளி திருநாள் அழகாக விடிந்தது... ஆர்னா, அதர்வா, விஷ்ணு, பிரியா அனைவரும் ஒன்று கூடி நின்று சுமித்ரா-பூவரசன், ரஞ்சித்-ரோஷினி, அபிஷேக்-பார்வதி அனைவரையும் வரவேற்றனர்... சுமித்ரா வெகு நாட்கள் கழித்து இப்பொது தான் கருத்தரித்து இருந்தால் தாய்மையின் பொலிவுடன் கணவன் கைத்தாங்கலாக கவனமாக வந்தவளை ஆர்னா, வைத்தீஸ்வரி இருவரும் அணைத்துக் கொண்டனர்...
“எப்படி சுமி இருக்கிற?” என்று கண்கள் கலங்க வினவினார் வைத்தீஸ்வரி.. குழந்தை பேற்றுக்காக அவள் கோவில்கோவிலாக அலைந்ததும் பலரிடம் வாங்கிய ஏச்சுகளுக்கும் முடிவு வந்தது நினைத்து கண்கள் கலங்க பார்த்திருந்தார்.
“அம்மா அவ கர்ப்பமா இருக்கிறா இந்த நேரத்துல அழலாமா அது குழந்தைக்கும் அவ உடம்புக்கும் ஆகாது அவளை சந்தோஷப்படுத்துங்க” என்று ஆர்னா அதட்ட தமக்கையின் அன்பில் கரைந்து கொண்டே புன்னகையுடன் பேசினாள் ஆர்னா.
“நீ வா சுமித்ரா உடம்பு நல்ல இருக்குது தானே? நல்லா ரெஸ்ட் எடுக்கறியா?”
“அதெல்லாம் அக்கா என்னை இவர் ஒரு வேலை செய்ய விடுறதில்லை” என்று கணவனின் அன்பை கூற அனைவருக்கும் மனம் நிம்மதியடைந்தது.
அபிஷேக்-பார்வதி இருவரும் உள்ளே நுழையும் சமயம்... “பார்த்துபார்த்து வீடு இடிஞ்சிற போகுது” என்று விஷ்ணு வார... அனைவரும் கொல்லென்று சிரித்தனர்...
“எனக்கே அல்வா கொடுகுறீங்க பார்த்தீங்களா?” என்றான் அபிஷேக்.
ரஞ்சிதா-ரோஷினி இருவரும் தயக்கத்துடனே வீட்டில் நுழைந்தனர்... அவர்களை வீட்டில் யாரும் சேர்க்க மனம் ஒப்பவில்லை தான் ஆனாலும் திருந்தியவனுக்கு மேலும் தண்டனை கொடுக்க கூடாதே என்று பண்டிகை விசேஷம் போன்ற தினங்களில் அவனை வரவேற்று குடும்பத்துடன் உபசரிப்பார்கள்... ராஜேந்திரன் மட்டும் இவர்களுடன் வர ஒப்புக்கொள்ளவில்லை; கோமளவல்லி மகனை அன்புடன் வரவேற்றார் கணவரை பற்றிய கவலை மனதை அழுத்தினாலும் குடும்பத்தின் நலனுக்காகவும், அவர் செய்த தவறையும் முன்னிறுத்தி தன்னை தேற்றிக் கொண்டார்.
அனைவரும் காலை உணவை குடும்பம் சகிதமா முடித்தவர்கள் மகிழ்ச்சியுடன் நாளை கழிக்க முடிவு அனைவரும் வெட்டவெளி இடத்திற்கு சென்று பட்டாசு வெடிக்க துவங்கினார்கள்... இதை கண்ட பெரியோர்கள் அனைவருக்கும் கண்களில் ஆனந்தத்தில் நீர் நிறைந்து கொண்டது...! இறுதியாக அனைவரும் ஏதேனும் விளையாடலாம் என்று திட்டமிட ஆர்னா, சுமித்ரா, பிரியா, பார்வதி, ரோஷினி ஒரு கூட்டமாகவும்... அதர்வா, விஷ்ணு, அபிஷேக், ரஞ்சித், பூவரசன் ஒரு கூட்டணியாக பிரிந்து நின்று இருவருக்கும் ஒரு பெட்டியை கையில் கொடுத்து யார் முதலில் அந்த பெட்டியில் உள்ள எல்லா பட்டாசுகளையும் வெடிக்க போகிறார்கள் என்ற போட்டி வைக்க பெண்கள் புடைவையை தூக்கி சொருகிக் கொண்டு களத்தில் இறங்க, ஆண்கள் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் குதித்தனர் சிறியவர்கள் ஒன்று கூடி இரு கூட்டனியையும் உற்சாகப்படுத்துவதில் ஆர்வமாக இடமே களைகட்டியது... பெரியவர்களும் மன மகிழ்வுடன் கண்டு களித்தனர்... கர்பஸ்திறியான சுமித்ராவை பாதுகாப்புடனே மற்றவர்கள் போட்டியில் அழைத்துக் கொண்டாலும் மனைவியின் மேல் பார்வையை வைத்துக் கொண்டே கூட்டனியை கோட்டை விட்ட பூவரசனால் அனைவரும் தோற்று போயினர் இறுதியாக பெண்கள் ஜெய்க்க ஆண்கள் அனைவரும் பூவரசனை கோபமாக உறுத்து விழிக்க அவனோ “ஹிஹிஹி” என்று இளித்து வைத்து சமாளித்தவன் அங்கிருந்து மெல்ல நகர அனைவரும் அவனை பிடிக்க ஓடினர் இந்த காட்சியை கண்ட மற்றைய குடும்பத்தவர்கள் கலகலத்து சிரித்தனர்!!!

சுபம்!!!
 
Status
Not open for further replies.
Top