All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாணி கார்த்திகனின் 'கண்சிமிட்டும் தென்றலே (நீ வேண்டும் நான் வாழ பகுதி 2) கதைக்கான கதைத்திரி

Status
Not open for further replies.

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரன்ஸ்,

என்னோட இரண்டாம் கதையான கண்சிமிட்டும் தென்றலே கதையோட வந்திருக்கேன். என் முதல் கதைக்கு கொடுத்த அதே ஆதரவை இதுக்கும் கொடுங்க.

வாரத்தில் மூன்று நாட்களுக்கு குறையாமல் பதிவிட முயற்சி பண்றேன்.

இப்படிக்கு உங்கள் தோழி
ஹாணி கார்திகன்
 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23492


கண்சிமிட்டும் தென்றலே முன்னோட்டம்


யாதவ் மித்ரன் வெட்ஸ் வசுமதி
என்று வாயிலில் பூக்களால் திருமண மண்டபத்தின் வாயிலில் பொறிக்கப்பட்டு இருந்தது. மங்கல வாத்தயங்கள் வாசிப்பவர்கள் அதிர்ச்சியாக பார்க்க,அதே போல் ஊர்மக்கள், யாதவின் குடும்பத்தினர் அனைவருமே அதிர்ச்சியாக பார்க்க கம்பீரமாக வேஷ்டி சட்டையில் நெஞ்சை நிமிர்த்தி யாதவ் நின்று இருக்க அருகே மஞ்சள் தாலி தழையத் தொங்க தலைக் குனிந்தவாறு நின்று இருந்தாள் வைஷ்ணவி.


யாதவின் தந்தை, "என்னை அவமானப்படுத்த வசுமதி கூட நான் ஏற்பாடு செஞ்ச கல்யாணத்தை நிறுத்திட்டு அவ தங்கச்சி கழுத்துல தாலி கட்டி வந்திருக்க?" என்று கோபமாய் வினவ, "ஐயோ இல்லை மாமா" என்று வைஷூ அவசரமாக மறுக்க, "வாயை மூடுடி" என்று யாதவ் கர்ஜித்ததில் அவள் மேனி வெளிப்படையாகவே நடுங்கியது.


"ஆமா அன்னைக்கு நீங்க மண்டபத்துல இருந்து அடிச்சி வெளியே துரத்தினிங்களே அதுக்காக உங்க அத்தனை பேரையும் பழிவாங்கவும், அவமானப்படுத்தவும் தான் இவளை இழுத்துட்டு போய் தாலி கட்டினேன்" என்று பல்லிடுக்கில் சொற்களைக் கடித்துத் துப்பினான். வைஷூவோ அவனை அதிர்ந்துப் பார்த்தாள்.


யாதவ், வைஷ்ணவி


23493




#########################


சாத்விக், "ஜானு பேபி" என்று நா குழற பேசியவாறே குடித்ததில் போதை ஏறியவாறே தடுமாற்றத்தில் விழ அவனைத் தாங்கிக் கொண்டான் யாதவ். "இடியட் உனக்கு தான் குடிச்சால உடம்புக்கு ஒத்துக்காதுன்னு தெரியும்ல என்ன ம***** குடிச்ச?" என்று எகிற, "ஐயோ வயிறு எரியுதே" என்று போதையில் வயிற்றைப் பிடித்தவன், "பழசு ஞாபகம் வந்துருச்சு. அதான் குடிச்சேன். நீ யாருடா என்னை கேட்க?" என்று அவன் கழுத்தோடு கையிட்டு வினவினான் சாத்விக்.


"உன் பொன்டாட்டி. ஏதாவது பேசின பல்லை உடச்சிடுவேன்" என்று கோபமாய் இரைந்த யாதவ், அவனைப் பிடித்துக் கொண்டான் விழாமல். சாத்விக்கை தேடி அங்கே வந்த கார்த்திக் அவர்களைப் பார்த்தான். சாத்விக், "ஏன் ஜானு பேபி உன் முகம் சொரசொரன்னு இருக்கு?" என்று யாதவின் கன்னத்தை வருடினான் சாத்விக். "ப்ரவீன்" என்று பல்லைக் கடித்து திரும்ப அங்கே இவர்களை பார்த்தவாறு நின்று இருந்தான் கார்த்திக்.


"அங்க ஏன் டா மசமசன்னு நின்னுட்டு இருக்க? அங்கே ஆகாஷ் இருக்கான். அவனை போய் கூட்டிட்டு வா. நான் இவனை இவன் ரூமுக்கு கூட்டிட்டு போறேன்" என்று சாத்விக்கை தூக்கியவாறே ஆகாஷை கண்களால் தேட அவனோ தன் மனைவி என்று நினைத்து தூணைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இருந்தான்.


கார்த்திக், "குடிச்சால் தூணுக்கும், பொண்ணுக்கும் வித்தியாசத்தை மறந்திருவிங்களாடா?" என்று முணகியவாறே ஆகாஷை இழுத்து வர அவன் முணிகயதைக் கேட்ட யாதவ், "இவனை விட அவன் பெடர். இவன் பொண்ணுக்கும், பையனுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கான்" என்று வெளிப்படையாகவே தலையிலிடித்து சிறிது தூரம் நடக்க நால்வரின் மனைவிகளும் அவனை வெட்டவா குத்தவா என்று அவர்களை முறைத்து நின்று இருந்தனர்.


சாத்விக், சனா


23494







கார்த்திக், அபி



23495






#######################


யாதவ், "நான் நல்லவன் இல்லை. ரொம்ப ரொம்ப கெட்டவன். இதுக்கு மேலே என்னைப் பத்தி தேட நினைக்காத. என் வாயால நான் எதையும் சொல்ல மாட்டேன். என்னை மிருகமா மாத்ததாத" என்று கர்ஜித்தவன் போத்தலில் இருந்த முழு சரக்கையும் மடமட என குடித்து அறையில் இருந்து வெளியேற குடித்ததினாலா? இல்லை அவன் மனதில் இருக்கும் இரகசித்தியத்தினாலோ கண்கள் சிவந்து கண்ணீரைச் சுரந்து இருந்தன.


வைவஷூவோ பயத்தில் சுவரோடு ஒட்டி நின்று இருந்தாள். அவன் கோபத்தைப் பார்த்து இவளுடைய இயல்பான தைரியக்குணம் அங்கிருந்து பறந்து இருந்து.


########################


வைத்தியாசாலையின் ஒரு அறையில் கட்டிலில் டிரிப்ஸை ஏற்றியவாறே படுத்துக் கொண்டு இருந்தாள் வைஷ்ணவி. "வைஷூ, யாதவ் வந்துட்டான்" என்று அவசரமாக நுழைந்து கௌதம் கூற, "ஐயோ நான் மயங்கிட்டேன்" என்று கண்களை இறுக மூடிக் கொண்டாள்.


யாதவ் கோபமாக கதவைத் திறந்து கௌதம், வைஷூவை மாறி மாறிப் பார்த்தவன் "மரியாதையா உன் தங்கச்சை கண்ணை திறக்க சொல்லு. இல்லை எனக்கு இருக்கிற கோபத்துக்கு நான் என்ன வேணூன்னாலும் பண்ணிருவேன்" என்ற அவனது கர்ஜனையில், வைஷூ நடுங்கியபடியே எழுந்து அமர அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.


#########################



அஞ்சலியை நெருங்கிய சாத்விக், "கெட் ரெடி அஞ்சலி" என்று எள்ளலாய் மொழிந்தவன், அவள் கையில் சிலபத்திரங்களைக் காட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் அஞ்சலி. சாத்விக், "இன்னொரு விஷயம் தெரியுமா அஞ்சலி? உன்னோட புருஷன் சொரி சொரி எக்ஸ் புருஷனுக்கு இன்னும் இரண்டு நாளில் வேற ஒரு பொண்ணு கூட கல்யாணம் நடக்க போகுது. மறக்காமல் வந்திரு" என்று இளக்காரமாய் கூறி வெளியேறினான்.


இத்தனை நேரமாக அதிர்ச்சியில் இருந்த அஞ்சலியின் முகம் குரூரமாய் மாறி, 'என்னைப் பத்தி உனக்கு முழுசா தெரியாது எஸ்.பி. பார்க்கலாம்' என்று இகழ்ச்சியில் உதடு சுளித்தாள்.


அடுத்து அத்தியாயங்களுடன் சந்திக்கின்றேன்.


நாயகன்கள் :

1.யாதவ்
2.சாத்விக்
3.கார்த்திக்


நாயகிகள்

1.வைஷ்ணவி
2.திசன்ஜனா
3.அபிநயா.

ஜனவரி ஒன்றுமுதல் வாரத்தில் மூன்று நாட்களில் பதிவிடுவேன்.
 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23572



கண்சிமிட்டும் தென்றலே



அத்தியாயம் 1





வானமோ மழைமேகத்தை தன்னுடன் அழைத்து மக்களின் வெப்பத்தைக் குறைக்க, மழைத் துளிகளை தூற வைக்க, மரங்களும்; புற்களும் அவற்றை ஆசையோடும், ஆர்வத்தோடும் தன்னைத் தீண்ட அனுமதித்தன. காற்றோ குளிரை தன்னோடு தத்தெடுத்துக் கொண்டு சாலையில் நடப்போரை மென்மையாய் தீண்டியது. இவ் அழகான சூழலலை இரசிக்காமல் வெளியே பார்வையை விட்டு எங்கோ வெறித்துக் கொண்டு இருந்தான் அவன்.



"சேர்" என்று ஒருவன் அவன் பின் இருந்து அழைக்க தன் நினைவுகளில் இருந்து மீண்டவன், "சொல்லுங்க கௌதம்" என்றான் தன் கம்பீரக் குரலில். "அந்த பொண்ணு வீட்டுல விசாரிச்சிட்டேன் சேர். எந்தவித காதலோ இல்லை வேற பிரச்சனையோ இல்லைன்னு அவங்க அடிச்சி சொல்றாங்க" என்றான் அவன் விசாரித்ததைக் கொண்டு.


தன் அலைப்பாயும் கேசத்தை ஒரு முறைக் கோதியவன், "நான் இதை எதிர்பார்த்தது தான் கௌதம். அவ கோலேஜூல போய் எதுக்கு சூசைட் பண்ணனுங்குறது தான் என் கேள்விடா" என்று உயர் அதிகாரியின் பதவியில் இருந்து இறங்கி நண்பனாய் மாறி கௌதமுடன் பேசினான் யாதவ் மித்ரன் ஏ.ஐ.ஜி.


கௌதம், "நானும் அதான் யோசிக்கிறேன் டா. சூசைட் பண்ண வேணூன்னா அவ வீட்டுலேயே பண்ணி இருக்கலாமே. அதை விட்டுட்டு பிரேக் டைம் கோலேஜ்ல இருந்து சூசைட் பண்ண வேண்டிய அவசியம் இல்லையே" என்றான் அவனும் யோசணையுடன். "ஹ்ம்ம். இது சம்பந்தமா ப்ரவீன் சேர் கூட பேசனும். வா போலாம்" என்று தன் தொப்பியை அணிந்த யாதவ் மிடுக்ககுடன் நடக்க எப்போதும் அவனை இரசித்தவாறே பின் தொடர்ந்தான் டி.சி.பி கௌதமன்.


யாதவ் மித்ரன் சென்னையின் தற்போதைய ஏ.ஐ.ஜி. நேர்மையான கைச்சுத்தமானவன்; அவனது முறுகேறிய தசைகளும் உடல் கட்டமைப்பும் அவனது தொடர் உடற்பயிற்சியினளவைக் குறிக்கும். அவன் உடலை இறுக்கிப்பிடித்த அவனது காக்கிச்சட்டை அவனது கட்டுமஸ்தான உடலின் வடிவை கச்சிதமாக வெளிக்காட்டியது. அலையலையாய் இருக்கும் கேசம்; அகன்ற நெற்றி, சற்று அடர் புருவம்; எதிரியை வேட்டையாடும் கூரிய கழுகுக் கண்கள்.


கூரிய நாசி; அழுத்தமான சிரிக்கவே தெரியாதா என்று நினைக்க வைக்கும் உதடுகள்; அதன் வெளிர் நிறம் எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை என்பதை தெளிவாக் காட்டியது. ஆறடி உயரத்தில் மாநிறத்தில் கன்னிகளைக் கட்டியிழுக்கும் காளையவன். அவனது அக்கினிக் கண்களின் ஒரு பார்வை அனைவரையும் ஓரடி சற்று தள்ளியே நிற்க வைக்கும்; எதிரிகளையோ நடுநடுங்க வைக்கும்.


கௌதமன் யாதவைப் போலவே ஆறடி உயரத்தில் தேக்குமரத்தின் உறுதியுடன் அழகானாக இருப்பவன். யாதவின் தற்போதைய நெருங்கிய தோழன் இவன் ஒருவனே. அவனை பொலிஸ் டிரெயினிங்கின் போதிலிருந்தே அறிவான். அனைவரிடமும் ஒதுங்கி தனியாகவும் அழுத்தமாக இருக்கும் இச்சிறுத்தையை பார்த்த உடனேயே கௌதமிற்குப் பிடித்துப் போனது.


ஆரம்பத்தில் யாதவ் அவனை தவிர்த்தாலும் அவனுடைய குறும்பும், சேட்டையும் அவன் பால் ஈர்த்தது. யாதவின் வாழ்க்கையில் இருக்கும் பல இரகிசியங்களை அறியாவிடினும் வீட்டில் இருந்து அவனை ஒதுக்கி வைத்து விட்டனர் என்பதை அறிந்து இருந்ததோடு அதற்கான காரணத்தையும் அறிந்தே இருந்தான். அதைப் பற்றி பேச கௌதமன் விரும்பவில்லை.


அன்று அவனை மண்டபத்தில் இருந்து விரட்டிய பிறகு யாதவ் நேரடியாக சென்னைக்கே வந்தான். அவனுக்கு குடும்பத்தைப் பற்றி யோசிக்க சிறு நாழிகையேனும் கிடைக்கவில்லை. இளம் பெண்கள் மர்மமான முறையில் காணாமல் செல்வதும், தற்கொலைகள் செய்துக் கொள்வதும் அனைவருக்கும் விசித்திரத்தை ஏற்படுத்தியது. அத்தோடு இளம் யுவதிகளின் பெற்றோர்களின் மனதில் அச்சத்தையும் விதைத்து இருந்தது.


அவ்வழக்கு சம்பந்தமாக அலைந்து திரிந்துக் கொண்டு இருக்க நான்கு நாட்களுக்கு முன் சாத்விக்கின் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் ஒரு மாணவி கல்லூரியின் ஒரு கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்துக் கொண்டாள். அது அனைவருக்கும் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த யாதவே நேரடியாக அவ்வழக்கை எடுத்துக் கொண்டான்.


வீட்டு நினைவுகள் அவனைத் தாக்கும் போது சனாவிற்கு செய்த அநியாயத்திற்கு இதை தண்டனையாகவே ஏற்றுக் கொண்டான். ஆனால் இந்நிமிடம் வரை கார்த்திக், சாத்விக் இருவரையும் பழிவாங்கியதில் அவனுக்குத் துளிக் கவலையேனும் இல்லை. சனாவைப் பார்க்கும் போதே அவனுக்குக் குற்ற உணர்ச்சியாக இருக்கும். ஆனால் அவள் சந்தோஷமாக சாத்விக்குடன் தற்போது வாழ்வதைப் பார்த்து ஓரளவு நிம்மதியடைவான்.


யாதவ், கௌதம் இருவருமே சாத்விக்கின் கல்லூரியை நோக்கிச் சென்றனர். அப்போது கல்லூரி மாணவர்களுக்கு இடைவேளை வழங்கி இருப்பதால் மாணவ, மாணவிகள் ஆங்காங்கே நின்றுக் கொண்டு இருந்தனர். சிலர் கதையளக்க; சிலர் சாப்பிட்டனர். ஆனால் நம் நாயகி வைஷ்ணவியோ தன் முன்னே அமர்ந்து இருந்த அபி, சனா இருவரின் முகத்தையும் தீவிரமாக ஆராய்ச்சி செய்தாள்.


வைஷ்ணவி ஐந்தடி உயரத்தில் இருக்கும் பெண்ணவள். பிறை நெற்றி; மலைமுகடு வடிவ இரண்டு புருவங்கள்; அதற்கு நடுவே சிறிய கோபுரப் பொட்டு; இதயத்தை ஊடுருவக் கூடிய வேல்விழிகள் இரண்டு; சிறிய செதுக்கி வைத்தது போன்ற மூக்கு; மென்மையான காதுகள்; இளஞ்சிவப்பு நிற செப்பு இதழ்கள்; பஞ்சுக் கண்ணங்கள்;


மொத்தத்தில் செதுக்கி வைத்த சிற்பம் அவள். அளவான உடலுடன், இடை தாண்டிய கருங் கூந்தலை விரித்து சிறிய கிளிப்பில் அடக்கி வைத்த மஞ்சள் நிறத்து அழகி. பார்ப்போரை இன்னொரு முறை பார்க்கத் தோன்றும் மாசுமறுவற்ற மதி முகம் அவளது. அவள் முகமே சிறு குழந்தையென அனைவருக்கும் காட்டிக் கொடுக்கும். அனைவரையும் ஈர்க்கும் அவள் உதட்டு மச்சம் வெகுவாய் அனைவரையுமே கவரும்.


சனா ஒரு நிலைக்கு மேல் பொறுக்காமல், "இப்போ எதுக்கு உத்து உத்து பார்த்துட்டு இருக்க?" என்று வினவ அபியும் அதே கேள்வியோடு வைஷூவைப் பார்த்தாள். ஆனால் அவளோ பதில் அளிக்காமல் தீவிரமாக தன் வேலையைப் பார்த்தாள். அபியிற்கு காண்டாக தன் அருகில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து அவள் தலையில் ஓங்கி அடித்தாள்.


வைஷூ, "ஆஆஆ" என்றவள் தலையைத் தேய்த்தவாறே, "எதுக்கு இப்போ அடிச்ச அபி?" என்றாள் தன் தேன் குரலில். சனா புன்சிரிப்புடன், "அதான் நாங்களும் கேட்குறோம் வைஷூ? எதுக்கு பார்த்துட்டு இருக்க?" என்று வினவினாள். வைஷூ, "இல்லை, எஸ்.பி சேரோட கோலேஜூல ஒரு பொண்ணு சூசைட் பண்ணி இருக்கா. நீ அவரோட வைஃப், அபி அவரோட தங்கச்சி இரண்டு பேருமே ஒன்னுமே நடக்காதது போல இருக்கிங்க. ஏதாவது டென்ஷன் இருக்கான்னு முகத்தை உத்து உத்து பார்த்தேன்" என்றாள் தன் மனதில் உள்ளதை.


சனா திருமணம் செய்துக் கொண்டாள் என்பதை மாணவர்கள் அறிந்தாலும் அவள் யாரை திருமணம் செய்துக் கொண்டாள் என்பதை ஒருவருக்கும் அறிவிக்கவில்லை. சனா சாத்விக் இருவருமே அடுத்த விடுமுறையில் ரிசப்ஷனை வைத்து அனைவருக்கும் அறிவிக்கலாம் என்று முடிவு செய்யதனர். சனா, அபி, வைஷூ மூவருமே யாதவ் - வசுமதி நிச்சயத்திற்குப் பிறகு அவர்களுடைய நட்பு இன்னும் இறுகியது.


அன்று யாதவ் சென்ற பிறகும் வசுமதியின் அழுகை நிற்கவில்லை. எதற்காக அழுகிறோம் என்று தெரியாமலேயே அழுதாள். சிறுவயதில் இருந்தே காதலித்தவன் தவறானவன் என்பதற்கு அழுவதா? இல்லை தன் காதல் அந்தரத்தில் தொங்குவதை நினைத்து அழுவதா என்று தெரியாமல் அழுதாள்.


வசுமதியின் தந்தை சந்திரசேகர். ஓயவுப் பெற்ற ஒரு அரச அதிகாரி. தாய் பானுமதி வீட்டின் அரசி. சந்திரசேகரின் அக்காவையே நகுலனின் தந்தை மணமுடித்தார். சந்திரசேகர், பானுமதி தம்பதியினருக்கு இரு பிள்ளைச் செல்வங்கள். மூத்தவள் வசுமதி. தற்போது வைஷ்ணவி பயிலும் அதே கல்லூரியில் பேராசியராக பணியாற்றுகிறாள்.


பெண்கள், முதல் ஆண்கள் வரை ஒரு திருமிப்பிப் பார்க்க வைக்கும் அழகியவள். பால் வண்ண நிறத்தில் அனைவரின் கண்களை ஒரு முறையிலேயே ஈர்த்து விடும் ஐந்தரை அடி பாவையவள். அதே போலேயே அவளது குணமும். அனைவருடனும் அன்புடன் பழகுவாள். மாணவ, மாணவிகளுக்கு பிடித்த பேராசிரியர்களுள் இவளும் ஒருவள்.


சிறு வயது முதலே யாதவின் மீது வசுமதியிற்கு ஈடுபாடு இருந்தது. வருடங்கள் கடக்க எப்போது அவ் ஈர்ப்பு காதலாக மாறியது என்று அவளே அறியாள். அவளுக்கும், யாதவிற்கும் அவள் பருவ வயதினை எய்ததில் இருந்தே திருமணம் பேசி வைத்து விட்டனர். அன்றிலிருந்து அவளின் மனதை ஆட்சிசெய்யும் அரசனாக மாறி விட்டான் யாதவ்.


அவள் ஆசையாக இருவரின் நிச்சயத்திற்கு காத்திருக்க சந்தோஷமாகவே நிச்சயம் நடந்தது. ஆனால் அவள் தலையில் பேரிடியாக விழுந்தது மித்ரனின் கடந்த ஏழு வருட செய்கைகள். அதில் சனாவிற்கு அதிக பாதிப்பு என்பதை அறிந்தவளுக்கு அவனது செய்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது. அத்தோடு அவனை குடும்பத்தை விட்டு ஒதுக்கியதும் ஆறாத வடுவாக இருந்தது.


வசுமதி அழ வைஷூ என்ன நடந்தது என்றே புரியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தைப் போல் விழித்துக் கொண்டு இருந்தாள். அபி, "உனக்கு அடி ஏதாவது பட்டிருக்கா வைஷூ?" என்று பேசவே யாதவின் செல்கையைப் பார்த்தவர்கள் தன்னிலை அடைந்தனர். வைஷூ, "இல்லை அபி" என்றவள் தந்தையின் புறம் திரும்பினாள்.


அவளது தந்தை வீட்டில் அதிகமாகவே கட்டுப்பாட்டுடன் அவர்களை வளர்த்தார். அதனால் எப்போதும் வைஷூவிற்கு தந்தையின் மீது மரியாதை கலந்த பயம் உண்டு. வசுமதியைப் போன்று அதிகம் யாரிடமும் உரையாடமாட்டாள். மென்மையான மனம் படைத்தவள்.


தேவையில்லாமல் குரலை உயர்த்தவோ அதிர்ந்து பேசவோமாட்டாள். வசுமதியைப் போன்றே குணம் இருந்தாலும் தந்தை இல்லாத நேரத்தில் தாய், மகள் இருவரும் வீட்டை ஒருவழி செய்துவிடுவர். பானுமதியும் கணவனின் பேச்சே கடவுள் வாக்கு என்று கணவனிற்கு அடங்கி வாழும் ரகமுடையவர்.


வசுமதி தப்பு என்றால் தட்டிக் கேட்கும் ரகம். அதுவும் ஒருவரையும் புண்படுத்தாது அனைத்தையும் செய்துவிடுவாள். எப்போதும் அனைவரின் மத்தியிலும் நல்ல பெயர் அவளுக்கு உண்டு. அவள் மற்ற விடயங்களில் தைரியமாகவும், துணிச்சலாகவும் இருந்தாலும் யாதவின் விடயத்தில் எப்போதும் மென்மையானவள். அவளுடைய பலவீனம் யாதவ் என்றே கூறலாம். பெண்கள் தைரியாக வாழ வேண்டும் என்று கொள்கையானவள்.


வைஷூ சூழ்நிலைக்குத் தகுந்தவாறே நடந்துக் கொள்வாள். அதிகமான நேரங்களில் அமைதியாக அவதானிப்புடன் இருந்தாலும் எப்போவாவது ஒரு முறை அவள் பேசினாலும் ஆணி அடித்து நிற்கும் அளவிற்கு யாரையும் காயப்படுத்தாதவாறு தன் கருத்தை தெரிவித்துவிடுவாள். அதற்காக அவள் எதற்கும் துணிந்தவளும் அல்ல. பயந்த சுபாவம் கொண்டவளும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்ட ரகம்.


யாதவின் விடயத்தில் வசுமதி மென்மையானவள் என்றால், யாதவின் பெயரைக் கேட்டாலே அங்கிருந்து பயந்தே ஓடுபவள் வைஷ்ணவி. ஏனென்றே தெரியாமல் சிறுவயதில் இருந்தே அவன் மீது ஒரு பயம் இருக்கின்றது வைஷூவிற்கு. இத்தனை வருடங்களில் வைஷ்ணவி யாதவுடன் பேசிய சொற்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.


அது எவ்வாறாக இருந்தாலும் அக்காவின் மீது அதீத அன்பு கொண்டவள். அவளுடைய பலவீனம் அவள் குடும்பத்தில் மீது வைத்துள்ள எல்லையில்லா அன்பு. அதுவும் தனக்கு இன்னொரு தாயகாவும் , தந்தையாகவுமே எப்போதும் வைஷ்ணவி, வசுமதியைப் பார்ப்பாள். வசுமதியை, யாதவ் திருமணம் செய்வதில் அவளுக்கு பெருத்த அளவு விரும்பம் இல்லை.


வைஷ்ணவி தனக்கு கிடைக்கும் மாமா; இன்னொரு தந்தையாகவும், தோழனாகவும், அண்ணனாகவும் பழகுபவனாக இருக்க வேண்டும் என்று நினைக்க அவளது கனவில் வானவளவு மண்ணை அள்ளிப்போட்டார் அவள் தந்தை சந்திரசேகர் யாதவே மாப்பிள்ளை என்று.


அவன் பெயரைக் கேட்டாலே அவ்விடம் விட்டு ஓடுபவள் தமக்கையின் கணவன் என்றால் அவன் இருக்கும் போது வீட்டிற்கே வரக்கூடாது என்று முடிவெடுத்து இருந்தாள்.


அவனே தன் வாழ்வின் இறுதிவரை கைக்கோர்த்து கணவனாக வரப்போகின்றன் என்பதை அறியாமல் சிறுபிள்ளைத் தனமாக பல முடிவுகளை எடுத்துக் கொண்டாள்.


தமக்கையின் கணவனாக இருக்கவே விரும்பாதவள், தன்னுடைய கணவனாக அவனை ஏற்றுக் கொள்வாளா? இது அல்லவா விதியின் விளையாட்டு.


சந்திரசேகரைப் பார்த்தவள் தயங்கியவாறே, "என்னாச்சு அப்பா?" என்று வினவ, "என்ன சொல்லனும்னு நினைக்குற? நான் என் பொண்ணுக்கு பார்த்தவன் கெட்டவன்னு சொல்லட்டா? இல்லை அவன் கெட்டவன்னு நிச்சயம் முடிஞ்சதுக்கு அப்புறமா தான் தெரிய வந்ததுன்னு சொல்லட்டுமா?" என்று கமறிய குரலில் வினாவை எழுப்பினார்.


வைஷூ அதிர்வுடன் தமக்கையைப் பார்க்க அவள் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது. புருவ முடிச்சுடன் யாதவைப் பற்றியே யோசிக்க, சனாவும், அபியும் அவளை தோள் தொட்டு நினைவிற்கு அழைத்து வந்தனர்.


"அக்கா" என்று அவளை அணைத்துக் கொள்ள, "மித்து மாமா இப்படி பண்ணுவாருன்னு நினைக்கவே இல்லைடி. ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று கதற, "அழாத அக்கா. எனக்கும் அழுகை வருது" என்று முதுகை வருடி சமாதானப்படுத்தினாள் வைஷ்ணவி. யாதவின் பிரச்சனையில் அனைவருமே வைஷூவின் தாமத வருகையை மறந்து விட்டனர்.


அவள் யாதவை எவ்வளவு ஆழமாக காதலித்தாள் என்பதை அறிவாளே. ஒரு முறை விளையாட்டாக, "நான் உன் மித்து மாமாவை கல்யாணம் பண்ணிக்குறேன் அக்கா" என்று சீண்ட அன்றைய தினம் முழுவதும் அழுதே கரைத்தாள். அடுத்த இரண்டு நாட்களும் முகத்தை தூக்கி வைத்தே இருக்க வைஷூவோடு, வசுமதி பேசவே இல்லை. பல முறைக் கெஞ்சியும் பயனில்லை. வெகு கடினப்பட்டே அவளை மலை இறக்கினாள் வைஷ்ணவி.


அன்று விளையாட்டிற்கு உனக்கு யாதவ் இல்லை என்று கூறியதையே இவளால் தாங்க முடியவில்லை. இதன் பிறகு நிச்சயமாக அவனை அவள் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை. இதை எண்ணும் போது அவள் மனம் எவ்வளவு காயப்படும் என்பதை உணர்ந்த தங்கை அவளுக்காக தன் கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டாள்.


அன்று அவளை கடினப்பட்டே உறங்க வைத்தனர். யாதவ் அவளையே திருமணம் செய்வேன் என்று கூறாமல் அங்கிருந்து தனது வேலையைப் பார்க்கச் சென்றதும் வசுமதியிற்கு வெகுவாக காயத்தை ஏற்படுத்தி இருந்தது. வைஷூவின் மடியிலேயே தேம்பியவாறே உறங்கிவிட்டாள். வைஷூவின் எண்ணம் முழுவதையும் யாதவே வியாபித்து இருந்தான்.


அபி, கார்த்திக் வசுமதியை எண்ணி கவலையுடன் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் செல்ல சனாவை யோசணையுடன் அழைத்துக் கொண்டு சாத்விக் தங்கள் அறைக்குச் சென்றான். அறைக்குள் நுழைந்த உடனேயே சனாவை கட்டிலில் அமர வைத்து மடியில் படுத்து கண்களை மூடிக் கொண்டான்.


சனா, "என்னாச்சு சவீன்?" என்று வினவ, "மித்ரன் இப்படி பண்ணுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. அவன் மனசுல இவளோ பழி வெறி இருக்கும்னு எனக்கு தெரியாது ஜானு" என்று சோர்ந்த குரலில் மொழிய, "புரியிதுங்க. மித்ரன் அண்ணா என் கிட்ட சொரி கேட்கும் போது அவரு உணர்ந்து சொரி கேட்டார். அவரோட கண்ணே எனக்கு அதை காட்டி கொடுத்தது" என்று பேசியவாறே சாத்விக்கின் கேசத்தை வருடிக் கொடுத்தாள்.


சாத்விக், "அதை நானும் பார்த்தேன் பேபி. எல்லாமே குழப்பமா இருக்கு" என்று புலம்பியவாறே வெகு நாட்களிற்குப் பிறகு நிம்மதியாக சனாவின் மடியில் கண்ணயர, அபியின் அறையிலும் கார்த்திக்கும் வெகுநேரம் புலம்பிய பின்னரே உறங்கானான். அபியும் அவனுக்குக் ஆறுதல் கூறி தன் மடிதாங்கிக் கொண்டாள்.


அடுத்த நாள் யாரிற்கும் நிற்காமல் விடிய, வசுமதியின் பெற்றோர் அவளையும், வைஷ்ணவியையும் அழைத்துக் கொண்டு சென்னைக்குச் செல்ல, சாத்விக், கார்த்திக், சனா, அபி, விசாலாட்சி ஐவருமே நகுலனிற்கும் அவன் பெற்றோருக்கும் ஆறுதல் கூறியே விடைப் பெற்றனர்.


வசுமதியிற்கு அடுத்து வந்த நாட்கள் அழுகையில் செல்ல வைஷூவிற்கோ அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் சென்றது. யார் யாரை சமாதானம் செய்வது என்று அறியாமல் நாட்களும் நகர சனா, அபி, வைஷூ, வசுமதி மூவருடைய விடுமுறையும் முடிய அனைவருமே கல்லூரிக்கு வந்தனர். கல்லூரி திறந்து பத்து நாட்களில் அப்பெண்ணின் தற்கொலையும் நடந்தது.


சனா, "என்ன பண்ண சொல்ற? இந்த விஷயத்துல நான் தலையிடக் கூடாதுன்னும் அவரு பார்த்துக்குறதாவும் சொல்லிட்டாரு. இதுக்கு மேலே நான் என்ன பண்றதாம்?" என்று பெருமூச்சை வெளியிட்டவாறு கேட்க, "அண்ணா சொல்றதும் கரெக்ட் தான். நாம ஸ்டூடன்சாவே இருக்கலாம். கேஸ் விஷயத்துல தலையிடாமல் இருக்கிறது நல்லது" என்று புன்னகையுடன் கூறி எழுந்தாள்.


அபி, "எங்கே வைஷூ போக போற?" என்று கேட்க, "அக்கா சாப்பிட்டாளான்னு பார்த்துட்டு வரேன். சாப்பிடாமல் உட்கார்ந்துட்டு இருப்பா. இன்னும் கொஞ்ச நேரத்துல பெல் அடிக்கும். நீங்க கிளாசுக்கு போங்க. நான் அவளை பார்த்துட்டு நேரடியாக கிளாசுக்கே வரேன்" என்று தனது புத்தகப் பையை எடுத்து கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே நடக்க எதிரே இருந்த இரும்புக் கட்டையில் மோதினாள்.


"அம்மா" என்று வாய்க்குள்ளேயே முணகியவள், "எவன்டா இங்கே இரும்பை வச்சது?" என்று சற்று சத்தமாக புலம்பியே கழுத்தை உயர்த்திப் பார்க்க, கண்கள் சிவக்க கோபத்துடன் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டி வைஷூவை உறுத்து விழித்துக் கொண்டு இருந்தான் யாதவ். கௌதமோ அவள் புலம்பியதைப் பார்த்து சிரிப்பை இதழ்களுக்குள் அடக்கி இருவரையும் பார்த்தான்.


எத்தனையோ வருடங்களிற்குப் பிறகு அவனது முகத்தை நேருக்கு நேர் பார்க்கிறாள் வைஷூ. ஒரு நிமிடத்தில் அவள் இதயம் பயத்தில் நின்று வேகமாக துடிக்க ஆரம்பித்தது. 'ஆத்தி இந்த அயர்ன் மேன் மேலேயே மோதனும்? முகம் தான் இரும்பை விழுங்கினது போல இருக்கும்னா பொடியும் இரும்பால செஞ்சது போல இருக்கு. அவன் மேலே இடிச்சு எனக்கு தான் காயம் வந்திருக்கும். முதல்ல போய் மருந்து போடனும்' என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டாள்.


யாதவ், "அறிவிருக்கா இடியட்? முன்னாடி எவன் வரான்னு பார்க்க மாட்டியா? கண்ணை பிரடிலயா வச்சிருக்க? ஸ்டுப்பிட்... நீயெல்லாம் திருந்த மாட்ட" என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன், "கெட் லொஸ்ட்" என்று அடிக்குரலில் சீறிவிட்டு நகர வைஷூவின் கண்கள் கலங்கி விட அதை வெளிக்காட்டாது தலைக்குனிந்து இமைகளை தாழ்த்திக் கொண்டாள்.


அதே நேரம் ஓய்வறையில் இருந்து வெளியே வந்தாள் வசுமதி. முதலில் யாதவைப் பார்த்து இன்பமாக அதிர்ந்தவள் அவனைப் பார்த்து ஏக்கத்துடன் புன்னகைக்க அவளை ஒரு பொருட்டாகவே மதிக்காது வேறு புறம் திரும்பி சாத்விக்கின் அறையை நோக்கிச் சென்றான் யாதவ் மித்ரன். வசுமதியின் கண்களில் அடிபட்ட வலி அப்பாட்டமாகத் தெரிய யாதவ் என்ன நினைக்கிறான் என்று தெரியாமல் வசுமதியோடு பேச கௌதமிற்கு தயக்கமாய் இருந்தது.


சாத்விக்கின் அறைக்குள் அவன் அனுமதியோடு நுழைய அவனைப் பார்த்து சாத்விக் சிறு சிரிப்புடன் புருவமுயர்த்த யாதவும் அவனுக்கு சளைக்காது அவன் முன்னேயே கால் மேல் கால் இட்டு அவனை தீர்க்கமாகப் பார்த்தான். சிங்கமும், சிறுத்தையும் ஒன்றையொன்று கடித்துக் குதறும் வெறியோடு பார்ப்பதைப் போன்று இருந்தது இருவரின் பார்வையும்.




கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்


 
Last edited:
Status
Not open for further replies.
Top