All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாணி கார்த்திகனின் 'கண்சிமிட்டும் தென்றலே (நீ வேண்டும் நான் வாழ பகுதி 2) கதைக்கான கதைத்திரி

Status
Not open for further replies.

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்சிமிட்டும் தென்றலே




அத்தியாயம் 3





செக்கச்சிவந்த வானம் ஜொலிக்க கதிரவன் கனிந்த புன்னகையுடன் வெளிவரும் வைகறை விடியலில் தனது தமக்கையின் வாழ்விற்காக அடுத்து என்ன செய்வது முடிவு எடுத்த வைஷூ, அதை இன்றே செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்து வேகமாக எழுந்து தயாரானாள்.


காலையிலேயே தந்தை ஜொகிங் சென்றதால் பயமின்றி, "அம்மா எனக்கு சாப்பாடு சீக்கிரமா எடுத்து வை; வேலை இருக்கு. சீக்கிரம் சீக்கிரம்" என்று கத்தி அவசரப்படுத்த, "சும்மா கத்தாத வைஷூ. அப்பா இல்லைன்னு எவளோ தைரியமா பேசுற. அப்பா இருக்கும் போது உன்னைப் போல ஒரு அமைதியான பொண்ணை தேடினாலும் கிடைக்காதுங்குற அளவு பொஃபர்மன்ஸ் போடு... இப்போ காட்டு கத்து கத்து. உன் நடிப்பு ஒஸ்காரை மிஞ்சிரும்.. அம்மம்மாமா" என்று வாயில் கை வைத்தார் அத்தாய்.


"ஹிஹிஹி" என்று அசட்டுச் சிரிப்பை சிந்தியவள், "அதெல்லாம் கண்டுக்கக் கூடாது" என்று தன் பொட்டை நெற்றியில் வைத்தாள். வசு, "உனக்கு எதுவும் முக்கிய கிளாசும் இல்லையே. எதுக்காக அவசரப்படுற?" என்று புருவம் சுருக்கி விசாரிக்க, "இன்னைக்கு நான் சனா வீட்டுக்கு போறேன் அக்கா. ஒரு சின்ன வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு சனா கூட கோலேஜூக்கு வந்துருவேன்" என்று உணவு மேசையில் அமர்ந்தாள்.


வசு,"அதென்ன முக்கியமான வேலை? எனக்குத் தெரியாமல்" என்று வினவ, "யக்கா, நீ என்ன இன்வெஸ்டிகேஷன் ஓஃபீசர் போல கேள்வி மேலே கேள்வி கேட்டுட்டு இருக்க?" என்று சலித்தவாறே தாய் வைத்த சூடான இட்லியை காரச் சட்னியோடு தொட்டு வாய்க்குள் நுழைத்துக் கொண்டாள்.


"ஏதோ பண்ணு. எங்க போறதுன்னாலும் அப்பா வர முன்னாடி போ. நான் சமாளிச்சிக்கிறேன்" என்று தங்கைக்கு ஆதரவு அளிக்க வைஷூ, "டன் டன்" என்று பெருவிரலைத் தூக்கிக் காட்டி மறுபடியும் உண்பதில் கவனமானாள்.


அவசரமாக சாப்பிட்டு தண்ணீரைக் குடித்து பையை எடுத்து வெளியாக அவளுடைய தந்தை உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. வைஷூ பாவமாக தமக்கையைப் பார்க்க, அவளோ கண்கள் மூடி நான் இருக்கிறேன் என்று கண்களால் மொழிந்தாள். சந்திரசேகர் வைஷூவை கேள்வியாகப் பார்க்க வைஷூ பரிதாபமாக வசுமதியைப் பார்த்தாள்.


வசுமதி, "சனா கிட்ட என்னோட முக்கியமான ஒரு நோட்டை கொடுத்தேன் அப்பா. அவ கொஞ்ச நாள் கோலேஜ் வர இல்லை. என் கிட்டயே நான் ஃபுக்ல மார்க் பண்ணி பசங்களுக்கு கொடுக்க ரெடி பண்ணி வச்சிருந்த ஷோர்ட் நோட்டை கொடுத்தேன்.


நான் இன்னைக்கு ஹாஃப்ல தான் போவேன். அவ கிட்ட புக்கை எடுக்க போக முடியாது. அதான் வைஷூவை அனுப்பி எடுத்துட்டு அப்படியே அவ கூடவே கோலேஜ் போக சொன்னேன்" என்று உப்புசப்பு இல்லாத காரணத்தை அவசரமாக தந்தைக்கு சந்தேகம் வராதவாறு ஏற்ற இறக்கத்துடன் கூறினாள்.


"ம்ம்" என்றவர், "வெளியில சுத்தாமல் அவ கூடவே கோலேஜூக்கு போய் சேரு" என எப்போதும் போல் அழுத்தமாய் கூறி வரவேற்பரைக்குள் நுழைந்தார். வைஷூ, 'தப்பிச்சேன்டா சாமி' என்று அங்கிருந்து விரைந்து சென்றாள். ஒரு முச்சக்கரவண்டியில் ஏறி சாத்விக்கின் வீட்டை நோக்கிச் சென்றாள்.


சாத்விக் தலையில் துண்டைக் கட்டி தன் ஆரூயிர் மனைவி சனாவிற்காக காலை உணவை தயார் செய்துக் கொண்டு இருந்தான். "பேபி இன்னும் எவளோ நேரம் இருக்கு படிச்சி முடிக்க? நானும் சமைச்சிட்டேன். கோலேஜூக்கும் போக இருக்கு" என்றவாறு மசாலா தோசையை எடுத்து ஒரு தட்டில் வைத்தான்.


சனா, "இன்னும் கொஞ்ச நேரம் சவீன். இருங்க வரேன்" என்று மறுபடியும் புத்தகத்தை எடுத்து அங்குமிங்கும் நடக்க அவனும், 'இதுக்கு மேல முடியாது' என்று தட்டைக் கையிலேந்தி அவளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தான். "நானே சாப்பிட்டு இருப்பேனேங்க" என்று கவலையாய் கூற, "நீ எப்போ சாப்பிட்டு எப்போ கோலேஜூக்கு போக கிளம்புவ?" என்று ஊட்டி விட்டான்.


அவள் சாப்பிட்டு முடித்தவுடன் சாத்விக், "நான் கிளம்பினதுக்கு அப்புறமா சாப்பிடுறேன் ஜானு. நீ சீக்கிரம் படிச்சி முடிச்சிட்டு கோலேஜூக்கு கிளம்புற வழியைப் பாரு" என்று புன்னகைத்து அங்கிருந்து தனது அறைக்குள் நுழைந்தான். சாத்விக் சென்ற திசையைப் பார்த்த சனாவின் முகத்தில் புன்னகை பூத்திருந்தது.


முச்சக்கர வண்டியில் சாத்விக்கின் வீட்டை அடைந்த வைஷூ காவளாளியிடம், "நான் வைஷ்ணவி. சனாவைப் பார்க்கனும். அவளோட கோலேஜ் ஃபிரன்டு" என்று முதன் முறையாக சாத்விக்கின் வீட்டிற்கு வருகை தருவதால் மொழிய அவரும் வீட்டிற்குள் அழைத்துக் கேட்ட உடனேயே, சனா அவளை அழைத்துச் செல்ல வெளியே வந்தாள்.


"வா வைஷூ" என்று புன்னகை முகத்துடன் அன்பாக வரவேற்க, வைஷூவும் புன்னகையுடன் உள்ளே நுழைந்தாள். "என்ன மேடம் தனியா இந்த பக்கம் வந்திருக்கிங்க?" என்று வினவியவாறே தன்னுடைய புத்தகங்களை அடுக்கி வைத்தாள் சனா. வைஷூ, "அது... உன் கிட்ட கொஞ்சம் பேசனும் சனா" என்று தயங்க அவளுடைய முகத்தைப் பார்த்த சனா அவளை உணவு மேசை இருக்குமிடம் அழைத்துச் சென்றாள்.


சனா, "முதல்ல சாப்பிடு அப்புறமா பேசலாம்" என்று தட்டை எடுத்து வைக்க, "ஐயோ நான் வீட்ல சாப்பிட்டு வந்தேன். என் குட்டி டமிக்குள்ள இதுக்கு மேலே இடம் இல்லைடி" என்று வைஷூ வயிற்றைப் பிடித்துக் கொண்டாள்.


சனா, "ஒரு வாய் சாப்பிட்டா ஒன்னும் குறைஞ்சி போக மாட்டடி" என்று நொடிக்க, "சாத்விக் அண்ணாவோட பேபி, நீ அண்டாவோட செல்லமாச்சே. புரிஞ்சிப்பியாம். எனக்கு வயிறு ஃபுள்ளா இருக்கு பேபி" என்று நாடியைப் பிடித்துக் கொஞ்சினாள்.


சாத்விக் தயாராகி அறையில் இருந்து வெளியேற, வரவேற்பரையில் அமர்ந்து இருந்த வைஷூவை புருவம் சுருக்கி பார்த்தவன், பின் சிறிய கீற்றுப் புன்னகையுடன் அவ்விடம் வந்தான். தன் கல்லூரியின் தற்போதைய நிர்வாகி, நண்பியின் கணவன் என்ற வகையிலும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள்.


சாத்விக், "உட்காரு வைஷூ. வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? வசு என்ன பண்றா?" என்று வினா தொடுக்க, "பொய் சொல்ல தோண இல்லை சேர். யாரும் நல்லா இல்லை. வசு அக்காவோட நிலமை நாளுக்கு நாள் மோசமாகிட்டே போகுது" என்று வருந்திய குரலில் மொழிய அங்கே அமைதி நிலவியது.


சனா, "அப்போ நீ வசு அண்ணியைப் பத்தி பேச வந்தியா?" என்க, வைஷூவும் ஆமென்று தலை அசைத்தாள். சாத்விக் சோஃபாவில் அமர அவன் அருகில் சனா அமர்ந்தாள். "சொரி உங்க இரண்டு பேரோட டைமையும் வேஸ்ட் பண்றேன்னு தெரியிது. இருந்தாலும் உங்களை தவிற வேற யாராலேயும் எனக்கு உதவ முடியாது. அதான் வந்துட்டேன்" என்று இருவரின் முகத்தையும் தயக்கத்தினூடே பார்த்தாள்.


சாத்விக், "அப்படி இல்லை டா. நீ முதல்ல என்ன விஷயம்னு சொல்லு" என்று ஊக்கப்படுத்த, வைஷூ "அக்கா அவளோட மித்து மாமாவை நினைச்சு நாளுக்கு நாள் ரொம்ப கஷ்டபடுறா. அவர் மேலே உயிரையே வச்சிருக்கிறா. ஆனால் அவளோட மித்து மாமா அவளை ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டேங்குறாரு" என்று நேற்று நடந்தவற்றை வசு கூறி அழுதது அனைத்தையுமே கூறினாள்.


சனா, "எதுக்காக மித்து அண்ணா இதெல்லாம் பண்றாரு?" என்று கவலையாய் வினவ, "அவனுக்கு மத்தவங்களை அழ வைக்குறதுல அம்புட்டு சந்தோஷம்" என்று பற்களைக் கடித்தான் சாத்விக்.
வைஷூ அமைதியாய் இருக்க சனா, "நீ ஏதாவது யோசணை பண்ணி இருக்கியா?" என்று வினவினாள்.


வைஷூ, "ஆமா சனா. அக்காவுக்கும் அவளோட மித்து மாமாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சா பிரச்சனை முடிஞ்சிரும். நாங்க யாரு சொன்னாலும் வீட்டுல கல்யாணத்தை பத்தி பேசமாட்டாங்க. நீ இரண்டு பக்கமும் பேசி, அக்காவோட மித்து மாமா கிட்டவும் பேசேன். உன் பேச்சை யாரும் கேட்காமல் இருக்கமாட்டாங்க. நீ மனசு வச்சால் இது நடக்கும்" என்று கடகட என கூறி முடித்தாள்.


சாத்விக்கும் யோசணை செய்வதற்கு அடையாளமாக அவனது புருவங்கள் இடுங்கி இருக்க சனாவும் அதே விஷயத்தில் சிந்தனையில் மூழ்கினாள். இவர்கள் இருவரையுமே வைஷூ தமக்கையின் வாழ்விற்காக தவிப்புடன் பார்த்தாள்.


சாத்விக், "சனா இரண்டு வீட்டிலும், மித்ரன் கூடவும் பேசுவாமா. மித்ரன், வசு கல்யாணத்தை ஏற்பாடு பண்ண வேண்டியது எங்க பொறுப்பு" என்று தீர்க்கமாக மொழிந்து சனாவைப் பார்க்க அவளும் நிறைவான புன்னகையுடன் அதை ஆமோதித்தாள்.


"தேங்கியூ சோ மச் சேர். இதை சப்ரைசா சொல்லுவோம்" என்று சிறு பிள்ளையென குதூகலிக்க அவளை புன் சிரிப்புடன் சாத்விக், சனா தம்பதிகள் பார்த்தனர்.


சனா, "அது இருக்கட்டும்! அதென்ன அக்காவோட மித்து மாமா? உனக்கு யாரு மித்து அண்ணா?" என்று சீண்ட, "அவங்க கூட நான் பேசினது ரொம்ப குறைவு. அவங்க இருக்கிற திசையில கூட கால் பதிக்கமாட்டேன். சோ அவங்களை கூப்பிட்டு பழகினது இல்லை. அதனாலேயே அக்காவோட மித்து மாமான்னு சொல்லி பழகிறிச்சு" என்றாள் வைஷ்ணவி.


சாத்விக், "ஜானு நான் சாப்பிட போறேன். நீ கிளம்பினா உங்க இரண்டு பேரையும் கோலேஜ்ல டிரொப் பண்ணிட்டு கம்பனிக்கு போவேன்" என்று அவசரப்படுத்த சனாவும் எழுந்து அறைக்குச் செல்ல சாத்விக் உணவு உண்ண அமர்ந்தான்.


இருவரும் தங்கள் வேலைகளை முடித்து வர காரில் மூவரும் கல்லூரியை நோக்கி பயணித்தனர். சாத்விக், "இன்னும் இரண்டு நாளில் மித்ரன் குடும்பத்தை எங்க வீட்டுக்கு வர வைக்குறேன். உன்னோட அப்பா, அம்மாவை நீ எங்க வீட்டுக்கு வர வைக்க வேண்டியது உன் பொறுப்பு வைஷூ" என்க, "ஒகே சேர். நான் அதை பார்த்துக்குறேன்" என்றாள் அவசரமாக.


கல்லூரிக்குச் சென்றதும் இவ் சந்தோஷமான விஷயத்தை முதலில் அபியிடம் கூறியவர்கள் வசுவிடம் நேரம் வரும் போது கூறி ஆச்சர்யப்படுத்தலாம் என்று மூவரும் முடிவெடுத்தனர். இவ்வாறு ஒருவித சந்தோஷத்துடனேயே நேரத்தைக் கடத்தினாள் வைஷூ.


வசுவுடன் சென்றால் அவளிடம் இவ்விடயத்தைப் பற்றி உளறிவிடலாம் என்று நினைத்து தனியாகவே வீட்டிற்குச் சென்றாள். அதே சந்தோஷத்தில் மாலை நேரம் கல்லூரி முடிந்த பிறகு வெளியேறும் போது சுற்றும் முற்றும் கவனிக்காமல் நடக்க பாதையில் ஒரு கார் அவளோடு மோதியது.


அவ்விடத்தில் ஆள்நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அதனால் அவர்களை யாரும் கவனிக்கவில்லை. காரும் அதிவேகத்தில் வராமல் இருந்ததில் அவளுக்கு பெரியளவில் காயத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் காலில் பிசகு வர காலைப் பிடித்துக் கொண்டு எழமுடியாமல் கண்ணீர் வடித்தாள் வைஷூ.


காரில் இருந்து அவசரமாக இறங்கியவன், "சொரிங்க. உங்களுக்கு எங்க அடிபட்டது?" என்று அருகில் வந்தான். "எந்திரிக்க முடியல்லை சேர். கால் வலிக்குது" என்று காலைப் பிடிக்க, "நான் ஒரு டாக்டர் தான். நானே டிரீட்மன்ட் பார்க்குறேன். வாங்க ஹொஸ்பிடல் போலாம்" என்று உரைக்க மிரண்டு அவனைப் பார்த்தாள்.


"நான் எப்படி உங்களை டாக்டர்னு நம்புறது? நீங்க என்னை கடத்த மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்? ஹொஸ்பிடலுக்கு தான் போவிங்கன்னு என்ன உறுதி? நான் உங்களை நம்பி வருவேன்னு நீங்க எப்படி எதிர்பார்க்கலாம்?" என்று அவ்வலியிலும் பெண்மைக்கே உரிய எச்சரிக்கையில் பல வினாக்களைத் தொடுத்தாள்.


"உஃப்" என்று தன் பெருமூச்சை வெளியிட்டவன், நமட்டுப் புன்னகையுடன் தனது வைத்தியருக்கான பிரத்யோக அட்டையை தனது பர்சிலிருந்து எடுத்துக் காட்டினான். அதில் 'விஷ்ணு கிஷான்' என்று இருந்தது.


உடனே தனது மொபைலில் இருந்து தன் தாயிற்கு அழைக்க, "என்ன விஷ்ணு இன்னைக்கு அதிசயமா நைட் டியூட்டிக்கு போகும் போதே போன் பண்ணி இருக்க? ஏதாவது பிரச்சனையா?" என்று தங்கம் அப்புறம் பதறினார். விஷ்ணு வைஷூவின் அருகில் தரையில் அமர்ந்து அவளைப் பார்த்தவாறே விசமப் புன்னகையுடன் பேசினான்.


நடந்தததைக் கூறியவன், "பயப்படாதிங்க அம்மா. ஒன்னும் இல்லை. ஒரு குட்டி பொண்ணு என் பக்கத்துல இருக்கா. அவளுக்கு என்னைப் பார்தால் பயமா இருக்காம். என் மேலே நம்பிக்கை வர இல்லையாம். நான் உண்மையாவே டாக்டரான்னு சந்தேகப்படுறா" என்று ஸ்பீகரில் போட்டான்.


"என் பையன் நல்லவன் தான் மா. அவன் முகத்தை பார்த்தே அதை கண்டு பிடிக்கலாம். ஆனாலும் ஒரு பொண்ணா எச்சரிக்கையா இருந்த பார்த்தியா? அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்று தங்கம் சிலாகிக்க, "ஐயோ ஆன்டி இது புகழ்ற நேரம் இல்லை. எனக்கு கால் வலிக்குது. உங்க புள்ளைக்கு ஏதாவது பண்ண சொல்லுங்க" என்று அவனை முறைத்தபடி இதழ்கடித்து வலியைப் பொறுத்தாள்.


"நான் டீரீட்மன்ட் பண்ண மாட்டேன்னு சொன்னது போல நீ பிளேட்ட மாத்துற" என்று விஷ்ணு சண்டைக்குச் செல்ல, "யோவ் முதல்ல என்னை ஹொஸ்பிடலுக்கு கூட்டிட்டு போ பா. என்னால வலி தாங்க முடியல்லை" என்று எகிறினாள் வைஷூ.


அவனும் வீதியென்று பாராமல் சண்டைக்குச் செல்ல, "விஷ்ணு முதல்ல அவளைப் பாரு. அப்புறமா சண்டைக்கு போ" என்று தங்கம் அழுத்தமாய் கூற, அவனைப் பார்த்து நக்கலாய் சிரித்தாள் வைஷூ. இவர்கள் இருவரின் இயல்பு இது அல்ல. ஆனால் இருவருக்குமே மற்றவரோடு சண்டைப் பிடிப்பது பிடித்தே இருந்தது.


அவளை நெருங்கியவன் அவளைக் கையிலேந்தி தனது காரில் அமர வைத்து, தனது வைத்தியசாலையை நோக்கி காரைச் செலுத்தினான். "போலி டோக்டர். உங்க சர்டிஃபிகேட்டை எந்த கடையில வாங்கினிங்க?" என்று வைஷூ அவனை சீண்ட, "நான் லண்டனுக்கு போய் படிச்சு வாங்கின சர்டிஃபிகேட் உனக்கு கடையில வாங்கினது போல இருக்கா?" என்று விஷ்ணு கடுப்பாகிவிட்டான்.


"இல்லையா? ரோட்ல போற பொண்ணை இடிச்சிட்டு தன்னோட அம்மா கிட்ட போன் பண்ணி நான் நல்லவன் வல்லவன்னு சொல்ல சொன்னால் நான் உண்மையான டாக்டர்னு எப்படி நம்புறது?" என்று வலியைப் பல்லைக் கடித்து பொறுத்துக்கொண்டே வம்பிழுக்க, "உனக்கு டீரீட்மன்ட் பார்த்தத்துக்கு அப்புறமா பதில் சொல்றேன். இப்போ அமைதியா இரு" என்று கண்டிப்புடன் மொழிந்தான்.


காரை அதன் தரிப்பிடத்தில் நிறுத்தியவன் அவளைக் கையிலேந்திச் செல்ல வைத்தியசாலையின் டீன் ஒரு பெண்ணை கையிலேந்தி வேகமாக உள்ளே வருவதைப் பார்த்த ஊழியர்கள் அவனுக்கு உதவும் பொருட்டு வீல்செயாரை கொண்டு வர அதில் அவளை அமர வைத்து, "என் ரூமுக்கு இவங்களை கூட்டிட்டு வாங்க" என்று வேகமாக முன்னே செல்ல இவர்களது நடவடிக்கையை விழிவிரியப் பார்த்தாள் வைஷ்ணவி.


அவனது அறைக்கு வைஷூ அழைத்து வரப்பட்டவுடன் அவனே அவளை அங்கிருந்த பெட்டில் அமர வைத்து காலைப் பரிசோதிக்க ஆரம்பித்தான். அங்கே வருகை தந்த இன்னொரு மருத்துவர், "இந்த கேசை நாங்களே பார்க்கட்டுமா சேர்?" என்று பவ்யமாய் வினவ, "பரவால்லை டாக்டர் நானே இவளை பார்க்குறேன். நீங்க ரவுன்ஸ் போங்க. நான் இடையில ஜொயின் பண்ணிக்கிறேன்" என்றான் அவளுடைய காலின் வீக்கத்தை ஆராய்ந்தவாறே.


"ஒகே டாக்டர்" என்று அவர் வெளியேற, "உங்களுக்கு மரியதை பலமா கிடைக்குதே போலி டாக்கடர். அது எ.....?" என்ற சொற்கள் "ஆஆஆ" என்று கத்தியதில் மாறியது. அவன் கால் வீக்கத்தில் விரால் அழுத்திப் பரிசோதித்ததில் கத்திவிட்டாள். "வெட்டி வீராப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. ஒரு சின்னதா அழுத்தம் கொடுத்ததை உன்னால தாங்க முடியல்லை" என்று சீண்டி விட்டு ஓயின்மன்ட்டை தேய்த்து விட "அம்மா" என்று அலறினாள் வைஷூ.


"ஏய் கத்தாத வாயாடி. பக்கத்து ரூமல் இருக்கிற பேஷன்ஸ் பயந்துற போறாங்க" என்று கடுப்பாகி, கையில் ஏற்பட்டு இருந்த சிராய்ப்பிற்கு மருந்திட ஆரம்பித்தான். "நீங்க என்னை பழிவாங்க காயத்துல ரொம்ப அழுத்துறிங்க" என்று உதடுபிதுக்கி அழ ஆரம்பிக்க, "ஆமா நீ ஹீரோயின். நான் ஆன்டி ஹீரோ. உன்னை பழவாங்க நான் காயத்தை இன்னும் காயப்படுத்துறேன். அட போ வாயாடி" என்று அலுத்தவாறே டிரெசிங் செய்ய ஆரம்பித்தான்.


"நீங்க என்னை இடிச்சிருக்காட்டி நான் நல்லா இருந்து இருப்பேன். எனக்கு என்னமோ உங்க லைசன்சும் போலின்னு தோணுது" என்று அவனது டிரைவிங்கை குறைக்கூற, கடுப்பானவன், "எடு இன்ஜெக்ஷனை.." என்று ஊசியைத் தேட கப்சிப்பென வாயை மூடிக் கொண்டாள்.


"யாரு நான் வொலன்டியரா வந்து உன்னை இடிச்சேனா? நாலு, ஐந்து தடவைக்கு மேலே ஹார்ன் அடிச்சும் மேடம் என்னமோ கனவு உலகத்துல இருந்து வராமல் என் வண்டியில மோதித்திட்டு, இப்போ என் மேலே தப்பு சொல்ற?" என்று கோபமாய் இரைந்தான் விஷ்ணு.


'ஆத்தி நாம தான் சந்தோஷத்துல தலைகால் புரியாமல் நடந்து இருக்கோமா? ரொம்ப ஓவரா போறோமோ? போவோம். போயிப் பார்ப்போம்' என்று வடிவேலுப் பாணியில் முடித்தவள், "நான் தப்பா வந்தாலும் நீங்க என்னை இடிக்காமல் டிரைவ் பண்ணி இருக்கனும்" என கெத்தை விடாமல் வாதிட்டாள்.


"உன்னை பெத்த மகராசன் என் கையில கிடைச்சான் அப்படியே பத்து ஊசி போட்டு இருப்பேன். இம்சை, நான் உனக்கு போலி டாக்டரா?" என்று அவனும் விடாமல் சண்டைக்குச் செல்ல, "ஆமா. அம்மா கிட்ட யாராவது என்னை நல்லவன்னு சொல்ல சொல்லி போன் பண்ணுவாங்களா?" என்று வாய் மூடி கிளுக்கென சிரிக்க, "வாயாடி" என்று கூந்தலைக் கலைத்து விட்டான்.


"இதை உங்க ஹொஸ்பிடலா?" என்று ஆராய்ச்சியுடன் வினவ, "அதையே மேடம் இப்போ தான் கண்டு பிடிச்சிங்களா?" என்று கிண்டலடித்தான். அவளது காலில் பென்டேஜைச் சுற்றியவன், "காலை அசைக்காத. அப்படியே இரண்டு நாள் இருக்கட்டும். வலி குறைய டேப்ளட்ஸ் கொடுக்குறேன்" என்று மருந்துகளை வழங்கினான்.


"நான் உங்க அம்மா கூட பேசனும்" என்று உரைக்க, "எதுக்காம்?" என்றவாறே அவள் நாற்காலியில் அமர உதவி செய்தான். "இப்போ போன் பண்ணி தர முடியுமா? முடியாதா?" என்று கடுகடுக்க, "நீ ரொம்ப அதிகாரம் பண்ற வாயாடி. முதன் முறையா பார்க்குறவங்க கிட்ட இப்படி பேசுவியா?" என்று சீண்ட அவன் கூறியதில் அமைதியாகி விட்டாள் வைஷ்ணவி.


அவள் அமைதி விஷ்ணுவை வருத்த, "ஹே!! வாயாடி, நான் சும்மா சொன்னேன். நான் இப்படி யார் கூடவும் சண்டைப் போட்டது இல்லை. நீ என் கூட உரிமையா சண்டை போடுறதும் எனக்கு பிடிச்சிருக்கு. நீ இதே போலவே இரு" என்று தாயிற்கு அழைத்துக் கொடுக்க சில நிமிடங்களிலேயே வைஷூவும், தங்கமும் நண்பர்களாகிவிட்டனர்.


இருவரும் தங்கள் தொலைப்பேசி எண்களை மாற்றும் அளவிற்கு நெருங்கி விட இருவர் பேசுவதையும் மேசையில் கைவைத்து அதில் முகத்தை தாங்கியவாறு பொய்ச் சலிப்புடன் பார்த்தான் விஷ்ணு.


"ஆன்டி உங்க பையன் போலி டாக்டர் மட்டுமில்லை ஒரு தயிர்சாதம். இப்படியே தயிர் சாதமாவே உங்க பையன் இருந்தான் உங்க வீட்டுக்கு மருமகள் வரது சந்தேகம்!!! அப்படியே இவரு கல்யாணம் பண்ணாலும் நீங்க பேரப்புள்ளைங்களை பார்க்குறது அடுத்த சந்தேகம். அம்பியாவே இருக்காரு ஆன்டி. ரெமோவா மாற சொல்லுங்க. அப்போ தான் இந்த காலத்து பொண்ணுங்களுக்கு பிடிக்கும்" என்று தங்கத்திடம் கூறுவது போல விஷ்ணுவிற்கு அறிவுரைக் கூறினாள் பெரிய மனிஷிப் போல்.


"ஒருத்தன் அரைமணி நேரமா சும்மா உட்கார்ந்து இருக்கானேன்னு பார்க்காமல் அரைட்டை அடிக்கிறிங்க! இனி ஒரு வார்த்தை பேசினிங்க அந்நியனா மாறிடுவேன்" என்று மொபைலைப் பறித்து தாயிடமும், வைஷூவிடமும் கத்த, இருவரும் அவனை அலட்சியப்படுத்தி தங்கம்,"நான் உனக்கு நைட்டுக்கு போன் பண்றேன் வைஷூ. அவ கிடக்குறான் தயிர்சாதம்" என்று அழைப்பைத் துண்டித்தார்.


விஷ்ணுவால், "அம்மா" என்று பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது. அவனை நமட்டுப் புன்னகையுடன் ஏறிட்டவள், "உங்களை தயார்சாதம்னு கூப்பிடுற அளவுக்கு நான் கெட்டவள் இல்லை. நான் போலி டாக்டர்னே கூப்பிடுறேன்" என்று பெரியமனதுடன் கூற "எடு ஊசியை.." என்க, "ஐயோ கால் வலிக்குதே" என்று காலைப் பிடித்தாள் வைஷூ.


விஷ்ணு பதறி, "வாயாடி என்னாச்சு?" என்று காலைப் பார்க்க, "சும்மா உலுல்லாய்க்கு" என்று சிரிக்க அதற்கு மேலும் அவனால் பொய்க் கோப முகமூடியை போட முடியாமல் சிரித்துவிட்டான். "நானே உன்னை கொண்டு போய் வீட்டுல விட்றேன். தனியா அனுப்பிட்டு டென்ஷன் ஆக முடியாது" என்று அவள் கைபிடித்து வெளியே அழைத்துச் செல்ல அப்போதே அங்கு யாதவ் வருகை தந்தான்.


விஷ்ணுவின் கையைப் பிடித்து அவள் நொண்டி நொண்டி நடக்க எதிரில் யாதவ் நிற்பதைப் பார்த்து அதிர்ந்தவள் பயத்தில் வெளிறிய முகத்துடன் அவனைப் பார்க்க, விஷ்ணுவும் வைஷூவின் மாற்றத்தில் அவள் யாரைப் பார்க்கிறாள் என்று பார்த்தால் அங்கே யாதவ் நின்று இருந்தான்.


அவனை அங்கே விஷ்ணுவோ, வைஷூவோ எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்களின் அதிர்ந்த முகங்களே யாதவிற்குக் காட்டிக் கொடுக்க யாதவ் அவர்களை நெருங்கினான்.


விஷ்ணு இன்ப அதிர்ச்சியுடன், "மச்சான் நீ எப்படிடா இங்கே?" என்று வினவ, 'ஐயோ!! போலி டாக்டர் அயர்ன் மேனோட ஃபிரன்டா? கிருஷ்ணா!! அயர்ன் மேனை சமாளிக்க எனக்கு உதவி பண்ணுப் பா' என்று அவசரமாக ஒரு மனுவை கிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தாள்.


யாதவ், "நீ டெல்லியில இருந்து வந்துட்டன்னு சொன்னாங்க. அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தால் நீ மேடம் கூட வெளியில நிற்குற" என்று வைஷூவின் முகத்தில் பார்வையை பதித்தவாறே விஷ்ணுவிற்கு பதில் அளித்தான். வைஷூ குனிந்த தலை நிமிரவே இல்லை.


பயத்தில் அவளுடைய கை, கால்கள் நடுங்கிச் சில்லிட அவளை புரியாத பார்வை பார்த்தான் விஷ்ணு.
'இத்தனை நேரமாக தன்னுடன் வார்த்தை யுத்தம் செய்தவளா இவள்?' என்று வியப்புடன் பார்த்தான்.


அதன் பின்பே அவளுடைய உடலியல் மாற்றங்களை உணர யாதவின் முகத்தையும் ஒரு முறைப் பார்த்து விட்டு, 'ஓஓஓ மேடம் இவனைப் பார்த்து பயப்படுறாங்க. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான்னு சொல்லுறதுக்கு அர்த்தத்தை உணர்ந்துட்டேன்' என்று தனக்குள் சிரித்துக் கொண்டான்.


"உனக்கு இவளை தெரியுமா மித்ரன்?" என்று புன்சிரிப்புடன் வினவ, "என் அத்தை பெத்த இரண்டாவது இரத்தினம் மேடம் தான்" என்றவனின் குரலில் நக்கல் தெரித்தது. 'உன்னை யாரும் கேட்க சொன்னாங்களா போலிடாக்டர்' என்று அவனை முறைத்து மனதுக்குள் வறுத்தெடுத்தாள்.


யாதவ், "என்னாச்சு?" என்று அவளுடைய கை, காலைப் பார்த்த பின் விஷ்ணுவிடம் கேட்க, விஷ்ணு கூற வாயெடுக்க அவன் கையை அழுத்திப்பிடித்த வைஷூ, "ரோட்ல கால் தவறி விழுந்துட்டேன்" என்றாள் அவசரமாக விஷ்ணுவை முறைத்துக் கொண்டே.


யாதவ் 'உண்மையா?' என்று விஷ்ணுவைப் பார்க்க, விஷ்ணு வைஷ்ணவியைப் பார்த்தான். 'மவேனே ஏதாவது சொன்ன போட்டுத் தள்ளிருவேன்' என்று கண்களாலேயே மிரட்ட விஷ்ணு சிரிப்புடன் ஆம் என தலை அசைத்தான்.


யாதவ், "அறிவிருக்கா இடியட்? முன்னாடி என்ன இருக்குன்னு பார்க்க மாட்டியா? கண்ணை பிரடிலயா வச்சிருக்க? ஸ்டுப்பிட். நீயெல்லாம் திருந்த மாட்ட" என்று எப்போதும் கூறும் அதே வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.


அவளுக்கு அவன் திட்டியதில் கண்கள் கலங்க யாதவ் அவளை முறைத்தவாறே, "நான் உன்னை இன்னொருநாள் மீட் பண்றேன் மச்சி. இவளை வீட்டுல விட்றேன்" என்று அவளை அலேக்காக கையிலேந்தி தனது காரில் அமர வைத்து இறுகிய முகத்துடன் வாகனத்தைக் கிளப்ப யோசணையுடன் அவர்கள் சென்ற திசையைப் பார்த்தான் விஷ்ணு கிஷான்.







கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்




 
Status
Not open for further replies.
Top