All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாணி கார்த்திகனின் 'கண்சிமிட்டும் தென்றலே (நீ வேண்டும் நான் வாழ பகுதி 2) கதைக்கான கதைத்திரி

Status
Not open for further replies.

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23619



கண்சிமிட்டும் தென்றலே




அத்தியாயம் 2





சந்திரன் விடை பெற்று மந்திரம் ஒலிக்கும் கதிரவன் வந்திடும் சுகமான காலை வேளையில் பணக்காரர்கள் வசிக்கும் அத்தெருவில் இது வீடா? இல்லை அரண்மனையா? என வியக்க வைக்கும் அளவிற்கு பல ஏக்கர்களை விழுங்கி கம்பீரமாக தலைநிமிர்ந்து நின்று இருந்தது அக் குட்டி மாடமாளிகை.


காலையில் அவ்வீட்டில் சுப்பிராதம் ஒலிக்க அங்கிருந்த பூஜை அறையில் கண்மூடி பூஜையில் இருந்தார் தங்கம். அவர் பெயரில் மட்டும் இல்லை குணத்திலும் தங்கமானவர். பூஜையை முடித்து நெற்றியில் குங்குமத்தை இட்டவர் பூஜையில் அறையில் இருந்து வெளியேற வாயிற்கதவு இருந்த திசையைப் பார்த்து தன் சாந்தமான புன்னகையைச் சிந்தினார்.


ஆறடி உயரத்தில் தொடர் உடற் பயிற்சிகளால் உருவான கட்டுடலுடன் அலையலையாய் வீசும் தன் கேசத்துடன், தனது இளஞ்சிவப்பு நிற இதழ்களைப் பிரித்து அழகாய் தன் மந்தகமாசமான புன்னகையைச் சிந்தி கம்பீரமாக நடந்து வந்தான் விஷ்ணு கிஷான் .


23620


எப்போதும் புன்னகை தவழும் வசீகரமான முகம், முகம் முழுவதும் ஷேவ் செய்யப்பட்டு இருந்தது. அகன்ற நெற்றி; அலையலையாய் அசையும் அடர் கேசம்; கூரிய நாசி; எதிரில் இருப்போரை கவரந்து இழுக்கும் கண்கள்; தன் முத்துப் பற்கள் தெரிய சிரிக்கும் போது வெண்ணிற வழுவழுப்பான கன்னத்தில் விழும் கன்னக்குழிகள் பேரழகு.


தங்கம், அமரநாத் தம்பதியினரின் சீமந்தப் புத்திரன். தமிழ்நாட்டில் உள்ள சைவ ஹோட்டல்களில் லக்ஷமி பாவானின் உரிமையாளர் அமரநாத். மகன் பெரியவன் ஆனதும் தொழிலைக் கையில் எடுப்பான் என்று அவர் எதிர்ப்பார்க்க அவனோ அவரின் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கி மருத்துவத் துறையை தேர்ந்தெடுத்தான்.


தற்போது மிகப் பிரபலமான தனியார் வைத்தியாசலையின் டீன் விஷ்ணு கிஷான். அது மட்டுமின்றி இந்தியாவின் மிகச் சிறந்த மகப்பேற்று மருத்துவத்தில் முதல் ஐந்து இடங்களில் மூன்றாவது இடத்தைப் பெற்ற பெருமைக்கு உரியவன். எவ்வாறான சிக்கலான வழக்காக இருந்தாலும் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்து இருக்கின்றான்.


அது மட்டுமின்றி அவன் கைராசியான வைத்தியர் என்று பலரினால் அழைக்கப்படுகின்றான். இத்தனைக்கும் அவன் பணிவுடன் வாழ்பவன். புகழ் அவனை உச்சத்திற்கு கொண்டு சென்றாலும், எப்போதும் அடக்கத்துடன் வாழ்பவன். அது மட்டுமின்றி அனைவரையும் ஒரே போன்று பார்ப்பான். அவனது புன்னகையே பல நோயாளிளுக்கு மருந்து.


நல்லவனுக்கு நான் நல்லவன். கெட்டவனுக்கு நான் கெட்டவன் என்ற ரகத்தைச் சேர்ந்தவன் (சேர்க்கை அப்படி). அவன் எதற்காக மருத்துவத்துறையை தேர்ந்து எடுத்தான் என்பதை அவன் மட்டுமே அறிவான். இவ்வாறு தன் வசீகரப் புன்னகையைச் சிந்தி நடைப் பயிற்சியை முடித்து விட்டு உள்ளே நுழைவதையே கண்களில் கனிவுடன் பார்த்தார் தங்கம்மா.


அமரநாத் ஹோட்டல் ஆரம்பித்த புதிதில் வழமயான வாடிக்கையாளராக இருந்தார் தங்கமும்வும் அவளது தோழிகளும். அமரநாத்திற்கு தங்கத்தை முதன் முறை பார்த்த போதே காதல் அவர் மனதில் நுழைந்து விட்டது. தங்கத்திடம் ஒரு முறை தன் மனதில் இருந்த காதலை மறைக்காது கூற அவரோ மறுத்து விட்டார்.


தன் பெற்றோர் கூறுபவனையே திருமணம் செய்வேன் என்று கூறியதும் அமரநாத் தன் பெற்றோரிடம் தங்கத்தைப் பற்றிக் கூறி அவளுடைய பெற்றோரிடம் பெண் கேட்குமாறு கூற முதலில் தயங்கியவர்கள் தங்கத்தைப் பற்றி விசாரித்த போது அவருடைய நல்ல குணம் தெரிய வந்தது. உடனே அவர்களும் மறுக்காமல் தங்கத்தின் பெற்றோரிடம் பெண் கேட்டுச் சென்றனர்.


தங்கத்தை விட அப்போது அமரநாத் வசதியானவராக இருந்தார். அதனாலேயே தங்கத்தின் பெற்றோர் மறுக்க அமரநாத்தே நேரடியாக அவளது பெற்றோரிடம் பேசி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்தார். அதன் பின் தங்கமும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள ஒரு நல்ல நாளில் தங்கம், அமரநாத் திருமணம் நடந்தேறியது.


அவர்களின் காதலுக்கு பரிசாகக் கிடைத்தவனே விஷ்ணு கிஷான். ஒழுக்கம் தவறாது, அன்பு உடையவனாகவே அவனை வளர்த்தனர் இத்தம்பதிகள். அவனுக்கும் தன் தாய், தந்தையைப் போன்று காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.


விஷ்ணு, "என்ன அம்மா அப்படி பார்க்குறிங்க?" என்று தன் ஷூவை கழற்றியவாறு உள் நுழைந்து சோஃபாவில் அமர்ந்தான். "ரொம்ப வளர்ந்துட்ட விஷ்ணு. பேரழகனா இருக்க" என்று கண்களில் அன்பைத் தேக்கி நெட்டி முறித்தார் தங்கம்.


"ஹா ஹா ஹா.. அப்போ யாரும் உங்க பையனை கொத்திட்டு போகாமல் இருந்தால் சரி" என்று கிண்டலடிக்க, "என் பையனை பத்தி எனக்கு தெரியும். அவன் சொயிஸ் கண்டிப்பா தப்பா இருக்காது" என்று கூறி அவனுக்கு காபி எடுத்து வர சமையலறைக்குள் நுழைந்துக் கொண்டார்.


விஷ்ணு கண்களை மூட ஒரு பூமுகம் அவன் கண் முன்னே அழகாய் சிரிக்க,"ஆமா அம்மா. அந்த பொண்ணு தப்பானவ இல்லை. ஆனால் நான் காதலிச்சது....." என்று அதற்கு மேல் யோசிக்க முடியாமல் வலியில் முகம் கசங்க வலியுடன் சேர்த்து விரக்தியாக சிரித்து வைத்தான்.


'என் கிட்ட அவளோட நினைவுகள் மட்டும் தான் இருக்கு அம்மா. இப்போ அவளுக்கு கல்யாணம் ஆகி இருக்கும். அவளை இன்னொருத்தர் மனைவியா பார்க்குற சக்தி எனக்கு இல்லை. அதான் அவளை விட்டும், அவ தொடர்பான எல்லாத்தையும் விட்டு ரொம்ப தூரம் வந்துட்டேன்.


அவளை எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும். குழந்தை மனசு அவளுக்கு. மனசு மட்டுமில்லை. குணமும் அப்படி தான். இப்போ இந்த நொடி கூட அவளை தவிற வேற யாரையும் என் காதலி; மனைவி இடத்துல வச்சி பார்க்க முடியல்லை. நான் இன்னும் அவளை காதலிக்கிறேன். அடுத்தவன் மனைவிய இல்லை. என் காதலியை மட்டும் காதலிக்கிறேன்.


அவளோட நினைவுகளே எனக்கு கடைசி மூச்சு வரைக்கும் போதும். உன்னை ஒரு முறை பார்க்கனும்னு போல இருக்கு டோலி. வேணாம்.. நான் உன்னை பார்க்க மாட்டேன். உன சம்பந்தப்பட்டவங்களையும் பார்க்க மாட்டேன்' என்று தனக்குள்ளே பேசியவன் தாயின் குரலில் தன்னிலை அடைந்தான்.


தங்கம், "உனக்கும் இருபத்தி ஒன்பது வயசு ஆகுது விஷ்ணு. காலாகாலத்துக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சிட்டா எனக்கும் நிம்மதியா இருக்கும்" என்று சந்தோஷமாகக் கூற, தன் தாயை வருந்த வைக்க முடியாமல், "அதை அப்போ பார்த்துக்கலாம், இப்போ காபியை குடிச்சிட்டு ஹொஸ்பிடலுக்கு போக ரெடியாகுறேன்" என்று தாயின் கைப்க்குவத்தில் தயாரான காபியை இரசித்துக் குடித்தான்.


"அம்மாவும், பையனும் கொஞ்சி முடிச்சிட்டிங்கன்னா, எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா?" என்று பாவமாய் நடைப் பயிற்சியை முடித்துவிட்டு அமர்ந்தார் அமரநாத். "அம்மா எனக்கு பசிக்குது. அப்புறமா உன் புருஷனுக்கு காபி கொடு" என்று அரைக் கண்ணால் தந்தையைப் பார்த்தவாறே வம்பிழுத்தான்.


"போடா நீயும் உன் அம்மாவும். என் மருமக வீட்டுக்கு வரட்டும். நான் அவ கூட சேரந்து உனக்கு ஆப்பு வைக்குறேன்" என்று கடுப்புடன் கூறி மனைவி, மகன் இருவரையுமே முறைத்தார். "ஹா ஹா ஹா" என்று சிரித்தவன், "உங்க புருஷன் காண்டாகிட்டாரு அம்மா" என்று தந்தைப் பார்த்து கண்ணடித்து விட்டு மாடிப் படிகளில் நாலுதாவல்களில் ஏறினான்.


தங்கம், "உங்களை வம்பிழுக்க இல்லைன்னா அவனுக்கு தூக்கம் வந்ததே இல்லை. உங்களுக்கும் அந்த நாளே விடியாது. என்னமோ பண்ணுங்க" என்று நொடித்துக் கொண்டு கணவனுக்கு காபி எடுக்க சமையலறைக்குள் நுழைந்தார் அவர் சகதர்மினி.


அமரநாத் சத்தமாக சிரித்தவர், "அவன் என் பையன்டி" என்று கூறி மனைவி எடுத்து வந்த காபியை கையில் வாங்கி தன்னருகில் தங்கத்தை அமர வைத்தார். "ஏதோ மனசுல போட்டு குழப்பிக்கிற போல இருக்கே?" என மனைவியை அறிந்தவராய் வினவினார்.


தங்கம், "ஆமாங்க. இவனுக்கு வயசாகிட்டே போகுது. ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க ஆசைபடுறேன். இவன் பிடி கொடுக்க மாட்டேங்குறான்" எனக் கவலையாய் கூற, "விடு தங்கம். அவனுக்கு ஏதாவது ஒரு பொண்ணை பிடிச்சா எங்க கிட்டேயே வந்து சொல்லுவான். அவ கூடவே கல்யாணத்தை கிரேன்டா பண்ணலாம்" என்று கனவுகள் மின்ன மொழிந்தார்.


அவருமே எதிர்பார்க்காத தருணத்தில் தன் புதல்வனின் திருமணம் நடக்கும் என்பதை அறியவில்லை. அதை விஷ்ணுவும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. வாழ்வில் நாம் எதிர்பார்க்கும் சம்பவங்கள் நடப்பதில் இருக்கும் நன்மைகளை விட எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களில் கிடைக்கும் நன்மைகள் அதிகம் என்பதை அநேகர் உணர்வதில்லை.


உணராது இருந்து காலம் கடந்து அதை உணரும் போது, நம்மை மீறி சூழ்நிலை இருக்கும். விஷ்ணு, யாதவ், வைஷூ, வசுமதி வாழ்க்கை நிச்சயமாக அவர்கள் எதிர்பார்த்தது போன்று அமையப் போவது இல்லை. நால்வரும் அதை உடனே ஏற்றுக் கொள்வார்களா? இல்லை கைமீறி சென்ற பின் அதன் பெறுமதியை உணர்ந்துக் கொள்வார்களா? என்பதற்கு பதிலை காலமே வைத்திருக்கிறது.


விஷ்ணு குளித்து தயாராகி வந்தவன் நேரடியாக உணவு மேசையில் அமர தங்கம் அவனுக்கு உணவைப் பரிமாறினான். அதை சாப்பிட்டவன், "எப்போவும் போல அசத்திட்ட அம்மா" என்று கன்னத்தில் இதழ்பதித்து வர, பொறாமையில் வயிறு எரிய கண்களால் மகனை முறைத்தார் அமரநாத். "லவ் யூ அப்பா. உங்க ஆளுக்கு மட்டுமில்லை உங்களுக்கும் முத்தம் கொடுப்பேன்" என்று கண் சிமிட்டி விட்டு வெளியேறினான்.


இன்று அவன் வாழ்க்கையில் முக்கியமான ஒருவரை சந்திக்கப் போகிறோம் என்று அறியாமல் அங்கிருந்து பறந்தான்.


சாத்விக் காலையில் எழுந்து அலுவலகத்திற்குச் செல்ல தயாராக சனாவும் அவசரமாக கல்லூரிக்குச் செல்ல தயாராகி உணவுத் தட்டை எடுத்து அவர்களது அறைக்கே வந்தாள். இட்லியை, சட்னியுடன் தொட்டு சாத்விக்கின் வாயினருகே கொண்டு செல்ல அவனும் தலையை சீவிக் கொண்டே வாங்கினான்.


சனா, "நேத்து மித்து அண்ணாவைப் பார்த்தேன். நம்ம கோலேஜூக்கு வந்தாங்களா?" என்று நேற்று கல்லூரியில் வைத்து அவனைப் பார்த்ததைக் கூற சாத்விக்கிற்கும் நேற்று அவனை சந்தித்த நினைவலைகள் மோதின..


சாத்விக் ஒற்றைப் புருவம் உயர்த்தி நக்கலாக சிங்கம் என புன்னகைக்க, நானும் உனக்கு சளைத்தவன் இல்லை என கால்மேல் கால் இட்டு காக்கிச்சட்டை அணிந்த சிறுத்தையாக அவனைப் பார்த்தான் யாதவ்.


சாத்விக், "என்ன சேர் இந்த பக்கம்?" என்று புருவமுயர்த்த, "எல்லாம் கேஸ் விஷயமாக பேச சேர்" என்று பதில் கொடுத்தான் யாதவ். சாத்விக், "என்னை பழவாங்க உனக்கு நல்ல வாய்ப்பாச்சே இது. இருந்தும் நீ என்னை மாட்ட வைக்க எதுவுமே பண்றது போல எனக்கு தெரியல்லியே" என்று ஒற்றை விரலால் தன் நெற்றியை நீவியவாறே வினவினான்.


ஏளனமாக அவனைப் பார்த்த யாதவ், "நீ என் பேர்சனல் எதிரி மேன். இது ஓஃபீசியல். என் காக்கிச் சட்டைக்கு எப்போவுமே துரோகம் பண்ணவோ கரைபடியவோ விடமாட்டேன். உன் மேலே இருக்கிற பழிவெறி இன்னும் இருக்கு. ஆனால் உன்னை பழிவாங்கனும்னு நினைக்கும் போதெல்லாம் சனா என் கண்ணு முன்னாடி வரா. நான் என்ன பண்ணட்டும்?" என்றான் பல்லைக் கடித்து.


சாத்விக் அதே கோபத்துடன், "என் ஜானு கஷ்டபட்டதுக்கு காரணம் நீன்னு நினைக்கும் போது உன்னை வெட்டிக் கொல்லி போடனும்னு வெறி இருக்கு. பட் என் ஜானு தான் அதுக்கும் தடையா இருக்கா. இல்லோ உன்னை உருத்தெரியாமல் அழிச்சு இருப்பேன்" என்று உறும, " ஹா ஹா ஹா" என இடியென சிரித்தான் யாதவ்.


யாதவ், "உன்னால ஒரு மயிரை கூட பிடுங்க முடியாது ப்ரவீன். அன்னைக்கு நான் நினைச்சதால தான் என் ஆள் உன் மச்சான் கிட்ட மாட்டினான். அதுவும் சனாவுக்காக மட்டும். இல்லை இத்தனை வருஷமா எப்படி மறைஞ்சி இருந்து காய் நகரத்திட்டு இருந்தேனோ அப்படியே இருந்து இருப்பேன்" என்று மொழிந்தவன் கேலியாய் உதட்டைச் சுழித்தான்.


சாத்விக், "நிச்சயமா உன்னை கண்டுபிடிச்சி இருப்பேன் மித்ரன். என்னால முடியாமல் இருந்து இருக்காது" என்று எகத்தாளமாய் மொழிந்து சுழல் நாற்காலியில் சுழன்று ஒற்றைப் புருவம் உயர்த்தி யாதவைப் பார்க்க, "அப்படியா?" என்றான். அதில் எந்த அளவிற்கு நக்கல் பொதிந்தது வார்த்தை அது என்று எதிரில் இருந்தவன் நன்கறிவான்.


உக்கிரமாக யாதவை சாத்விக் முறைக்க யாதவ், "உன் கிட்ட சண்டை போட நான் வர இல்லை. எனக்கு அதுக்கு நேரமும் இல்லை. அந்த பொண்ணு இறந்த புளொக்கிற்கு யாரும் போக கூடாது. மீறி போனால் நான் நடிவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும். ஸ்டூடன்சை வோர்ன் பண்ணு. என்ட், உனக்கு கெட்ட பெயர் வரவழைக்கக் கூட இதை பண்ணி இருக்கலாம். சோ யார் மேலேயாவது டவுட் இருந்தால் மறக்காமல் சொல்லு" என்று எழுந்தான்.


சாத்விக், "நான் தான் கோலேஜ் ஓனர்னு இந்த தற்கொலைக்கு முன்னாடி யாருக்கும் தெரியாது. இப்போ தான் தெரியும். அதனால என்னை பழிவாங்க இதை பண்ண சான்ஸ் இல்லை. வேற ஏதோ காரணம் இருக்கும். நீயும் பாரு. நானும் பார்க்குறேன்" என்றான் யோசணையுடன்.


கௌதமன் இருவரையுமே மாறி மாறி பார்த்தான். "கௌதம்" என்ற யாதவின் அழுத்தமான குரலில் எழுந்த கௌதம், "நீங்க இரண்டு பேருமே மூவில நடிச்சி இருந்திங்கன்னா இப்போ விசிலும், கிளெப்சும் காதை கிழிச்சு இருக்கும். மூவில இருக்க மாஸ் சீன் போல இருந்தது; இரண்டு பேரோட பேச்சும்" என்று தனக்கு தோன்றியதைக் கூறினான்.


"கௌதம்" என மீண்டும் அவன் பல்லைக் கடிக்க, "என் காது கேட்காது" என்றவன் வெளியே ஓடிவிட்டான். யாதவ் கோபத்தில் பல்லைக் கடிப்பதைப் பார்த்து, "ரொம்ப பல்லைக் கடிக்காத. பல்லு உடைஞ்சிற போகுது. அப்புறமா வசு பொக்க வாயனை கல்யாணம் பண்ணான்னு சொல்லுற நிலமை வர கூடாதுன்னு அக்கறையில சொல்றேன் கேட்டுக்கோ" என்று கிண்டலடிக்க அவன் முகமோ இறுகியது.


அதையும் சாத்விக் கவனித்தான். யாதவ், "என் மேலே இருக்கிற அக்கறைக்கு ரொம்ப நன்றி. உனக்கு ஒரு ஃபரீ அட்வைஸ் கொடுக்குறேன் கேட்டுக்கோ. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். இந்த பழமொழி கேள்வி பட்டு இருக்கியா? அதை ஞாபகம் வச்சிக்கோ. இப்போ நீயும் இதே முட்டாள் தனத்தை பண்ற" என்று ஒவ்வொரு சொல்லையும் அழுத்தம் திருத்தமாகக் கூறி தீர்க்கமான பார்வையை செலுத்தி நகர்ந்தான்.


சாத்விக், 'இவன் என்ன சம்பந்தமே இல்லாமல் பேசுறான்' என்று குழம்பியவன் தோளை உழுக்கி தன் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பிக்க யாதவோ, 'உனக்கு ஒரு குளூ கொடுத்து இருக்கேன் ப்ரவீன் முடிஞ்சா மித்ரனுங்குற விடுகதைக்கு பதிலை தேடு' என மானசீகமாக சாவால் விட்டான்.


அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது நமக்கு முன்னோர்கள் மொழிந்த பழமொழி. நம் மனதில் ஆழமாய் ஒரு விடயத்தைப் பற்றி பதிந்து வைத்தோமானால் அந்தக் கோணத்திலேயே அனைத்தையுமே பார்ப்போம். அனைவருமே மறந்து போகின்ற ஒரு விடயம் நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை. அதை நினைவில் வைத்தால் நம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளிகளை வைக்கலாம்.


யாதவ் அங்கிருந்து அப் பெண் இறந்த இடத்திற்கு வர கௌதமோ அவன் முகத்தைப் பார்க்காமல் ஆறாவது முறை பார்த்த அதே இடத்தை மீண்டும் புதிதாக பார்ப்பதைப் போல் பார்க்க யாதவ் மார்பிற்கு குறுக்காக கைகளைக் கட்டி, "இங்கே வந்து எவளோ நேரமாச்சு?" என வினவ, "நாம வந்து வன் அவர் இருக்கும் சேர்" என்றான் பவ்யமாக.


அனல் கக்கும் விழிகளை வைத்து கௌதமை முறைத்தவன், "நீ இந்த புளொக்கு வந்து எவளோ நேரம்?" என்று அழுத்தமாய் கேட்க, "பதினஞ்சு நிமிஷம் இருக்கும்" என்று பாவமாய் அவனைப் பார்க்க, "இவளோ நேரமா இந்த நாலடியை தான் பார்த்துட்டு இருக்க" என்று பல்லைக் கடிக்க, "சொரி சேர்" என்று மன்னிப்புக் கேட்க பதில் கூறாமல் ஒரு முறை கட்டடத்தை ஆராய்ந்தவன் வெளியேறினான்.


"நடந்தே ஸ்டேஷனுக்கு வா" என்று கூறி விறுவிறு என அங்கிருந்து நகர பரிதாபமாய் செல்பவனைப் பார்த்தான் கௌதம். யாதவிற்கு வேலையில் இருக்கும் போது எப்போதும் முழு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் முழுமனதுடன் கௌதம் ஈடுபடாததால் இவ்வாறு தண்டனையை வழங்கி விட்டுச் சென்றான்.


கௌதம் இது போன்று தண்டனைகள் அனுபவிப்பது புதிதல்ல. அதனால் பெருமூச்சை வெளியிட்டு தனது காதலி காவ்யாவிற்கு அழைத்தான். காவ்யா கௌதமின் அத்தை மகள். இருவருமே சிறு வயதில் இருந்து காதலிப்பதால் சென்ற வருடமே இவர்களின் நிச்சயத்தை வீட்டினர் முடித்து வைத்தனர். இருவரின் ஜோடிப் பொருத்தத்தை ஊரே மெச்சியது.


காவ்யா ஒரு வைத்தியர் அதே போன்று அழகான குணத்தையும் உடைய பேரழகானவள். அவள் கோயமுத்தூரில் ஒரு வைத்தியசாலையில் பணி புரிகிறாள். கௌதம் நேரத்தைப் பார்க்க இப்போது காவ்யாவிற்கும் ஓய்வு நேரம் என்பதால் அழைப்பை ஏற்படுத்தி கடலை போட ஆரம்பித்தான்.


பெண்களின் வழக்கை எடுத்ததில் இருந்து அவளுடன் பேசுவதற்கு நேரமே கிடைக்கவில்லை என்பதால் யாதவ் தண்டனை கொடுத்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டான் இவ் அதி புத்திசாலி.


யாதவிடம் ஒரு முறை காவ்யா அழைத்து தன்னுடன் அவன் பேசவில்லை என்று கௌதம் மீது குற்றப் பத்திரிகை வாசித்தாள். அவனுக்கும் இவ்வழக்கின் ஆழத்தைப் பற்றி அறிந்து இருந்தமையால் கௌதமின் நேரமின்மையை உணர்ந்துக் கொண்டான்.


அதனாலேயே இன்று அவளுடன் காலையில் பேசிவிட்டு அவனுக்கு நேரத்தைப் பார்த்து விட்டு சுகமான தண்டனையை வழங்கி விட்டு அவனுக்கு தனிமையை வழங்கி யாதவ் அங்கிருந்து சென்றான். இதை அறியாத கௌதமனோ காதலியுடன் பேச ஆரம்பித்தான்.


யாதவ் அங்கிருந்து செல்லும் போதே சனா யன்னல் வழியாகப் பார்த்தாள். அதையே இன்று சாத்விக்கிடம் கேட்டாள். சாத்விக், "ஆமா ஜானு. கேஸ் விஷயமா பார்க்க வந்தான்" என்றவன் உணவை முடித்து விட்டு கைகளைக் கழுவி வந்து சனா கூந்தலைப் பின்னும் வரையில் அவளுக்கு உணவை ஊட்டி விட ஆரம்பித்து இருவரும் கதை பேசியே உண்டனர்.


இது வழமையாக நடக்கும் சம்பவமே. இருவரும் தயாராகி நின்றவுடன், "ஜானு ஈவீனிங் நானே உன்னை கூட்டிட்டு போக வரேன். டிரைவர் வர மாட்டான்" என்று தன் கைக் கடிகாரத்தைக் கட்டியாவாறு சனாவைப் பார்க்க அவளோ குங்குமச் சிமிழில் இருந்து குங்குமத்தை எடுக்க முனைய சாத்விக் புன்னகையுடன் அவள் கையில் இருந்து எடுத்து அவனே குங்குமத்தை வைத்து விட்டான்.


சாத்விக், "ரொம்ப அழகா இருக்க ஜானு" என்று கண்ணாடியில் தெரிந்த இருவரின் விம்பத்தைப் பார்த்து காதலுடன் கூற, "என் காட்டுப் பையனும் ரொம்ப அழகா இருக்கான்" என்று விம்பத்திற்கு இதழ் குவித்து பறக்கும் முத்தத்தை வழங்கினாள்.


"உன் காட்டுப் பையன் இங்கே இருக்கும் போது அங்கே எதுக்கு முத்தம் கொடுக்குற?" என்று அவள் செப்பு இதழ்களை கவ்வி புசிக்க ஆரம்பித்தான். அவன் தேவையை முடித்து விட்டே விலக, நாணத்துடன் அவன் மார்பில் "வர வர பேட் போய் ஆகிட்ட காட்டுப் பையா" என முகத்தைப் புதைத்தாள்.


கார்த்திக் காலையிலேயே அவனுடைய சேட்டைகளை ஆரம்பிக்க, "அச்சோ மாமா. நான் தான் இன்னைக்கு லேட். கொஞ்ச நேரம் அமைதியா இருங்களேன்" என்று கூந்தலைப் பின்ன அவளை பின்னிருந்து அணைத்து இருந்த கார்த்திக், "நீ இப்போ என்னை கவனிச்சுக்குறதே இல்லை செல்லம்மா" என்று குற்றம் சாட்டினான்.


அபி, "வாயைத் திறந்தால் பொய். கோலேஜ் விட்டு வந்ததில் இருந்து ஒரு குழந்தைக்கு பண்றது போல எல்லாம் பண்ணுவேன். இப்போ என்னடான்னா நான் எதுவும் பண்ண இல்லையா?" என்று தன் பலம் முழுவதையும் பயன்படுத்தி தள்ளி விட்டு இடுப்பில் கைவைத்து முறைத்தாள். "அதை பண்ற. புருஷனை கவனிக்க இல்லையே" என்று தாபத்துடன் அவளிடம் நெருங்கினான்.


அபி, "மாமா. உங்க கேடி வேலை எனக்கு தெரியும்.ஒழுங்கா ரெடியாகி என்னை கோலேஜ்ல விட வாங்க. நான் கீழே போறேன்" என அவசரமாய் கார்த்திக்கின் கன்னத்தில் இதழ்பதித்து விட்டு மின்னலென அங்கிருந்து மறைந்தாள் அபி.


வசுமதி நேற்று கார்த்திக்கின் வெளிப்படையான தவிர்ப்பில் காயமடைந்து இருக்க வைஷூவே அவளை சமாதானப்படுத்தி வசுமதியின் வாழ்க்கைக்கு ஒரு முடிவை எடுத்து அதை நடக்க வைக்க அடுத்து என்ன செய்ய வேண்டும் என திட்டமிட்டுக் கொண்டாள்.


அன்று மாலை நேரம் யாதவ் தனது நண்பனைப் பார்க்க வைத்தியசாலைக்கு வர அங்கு அவன் கண்ட காட்சி விஷ்ணுவின் கைகளைப் பிடித்தவாறு நொண்டி நடக்கும் வைஷூவையே. அவளும் யாதவைப் பார்த்து அதிர வைஷூவின் முகமோ பயத்தில் வெளிறியது....


வசுமதி


23621


கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்


 
Status
Not open for further replies.
Top