All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஹாணி கார்த்திகனின் 'கண்சிமிட்டும் தென்றலே (நீ வேண்டும் நான் வாழ பகுதி 2) கதைக்கான கதைத்திரி

Status
Not open for further replies.

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



கண்சிமிட்டும் தென்றலே



அத்தியாயம் 33



வசுமதி, விஷ்ணு இருவருமே அவளுடைய தோழியின் திருமணத்திற்காக ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்குச் செல்ல அவர்கள் இருவருமே நுழைந்தவுடன் வசு, "நாங்க உள்ள வரோம். நீங்க எங்கே இருக்கிங்க?" என்று மொபைல் மூலம் மற்ற தோழிகளுக்கு அழைத்து வினவ, அவர்களில் ஒருத்தி, "முதல்ல நாங்க சொல்ற ரூமுக்கு நீ உன் ஹஸ்பன்டை அழைச்சிட்டு வா" என்று உரைத்து கிளுக்கிச் சிரித்தனர் தோழிகள்.


இவளும் புரியாது விஷ்ணுவிடம், "203 ரூமூக்கு உங்களை அழைச்சிட்டு வர சொன்னாளுங்க. போலாமா?" என்று வினவ, "சரி" என்றவன் அவளோடு சேர்ந்து அவ் அறைக்குச் சென்றான். அவர்கள் இருவரும் அறைக்கதவைத் திறந்ததும், பலூன் வெடித்து இவர்கள் மேலே துகளாய் விழ, சிரிப்புடன் இருவரும் நுழைந்து அங்கே பார்த்ததில் அதிர்ந்து விழித்தனர்.


மித்ரன், வசுமதி என்ற பெயரை சுவரில் ஒட்டி அதற்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு, அவர்கள் இருவரது பெயரும் இடப்பட்ட கேக்கையும் எடுத்து வந்து வைத்தனர் முன்னால்.


அத்தோடு யாதவைப் பற்றி பேசும் போதும், யாதவ் என நினைத்து கல்லூரி காலங்களில் இவள் வாங்கிய டெடி என அனைத்தையும் தோழிகள் படம் பிடித்து வைத்திருந்ததை சுவரில் ஒட்டியதோடு வீடியோக்களையும் ஒளிர விட்டு இருந்தனர் இவள் யாதவைத் தான் திருமணம் செய்து இருக்கிறாள் என நினைத்து.


விஷ்ணுவிற்கு சுருக்கென்ற வலி தோன்ற அதை மறைத்து, வசுமதியை பார்த்தான் அவள் தன்னை அறிமுகப்படுத்துவாள் என. ஆனால் விழி நீர் தளும்ப அவற்றையே பார்த்தவள் அருகில் இருந்த விஷ்ணுவை மறந்து போனாள். விஷ்ணுவிற்கு ஏதோ போல் இருக்க அவனே தன்னை அறிமுகப்படுத்தலாம் என முன் வந்த போது தோழிகள் விடாமல் பேசினார்கள்.


"உங்களை ரொம்ப ரொம்ப காதலிச்சா சார். நீங்கன்னா ரொம்ப பிடிக்கும். அவளைப் போல உங்களை காதலிக்க யாருமே கிடைக்க மாட்டாங்க மித்ரன் சார். அவளும் உங்களை தவிர புருஷன் அப்படிங்குற இடத்துல யாரையுமே வைக்க மாட்டா. அவளே சொல்லி இருக்கா. ரொம்ப லகியான ஆள் மித்ரன் சார் நீங்க. உங்க இரண்டு பேரோட கல்யாணத்துக்கு நாங்க வரனும்னு நினைச்சோம்.


ஆனால் நாங்க வெளியூர்ல இருந்ததால வர முடியல்லை. மித்ரன் வசுவுக்கு நீங்க தான் உலகமே. அவளை காதலோட சந்தோஷமா பார்த்துக்கொங்க. மித்ரன் இல்லாமல் வசு இல்லை" என்று அவர்கள் சூழ்நிலையை அறியாது பேசிக்கொண்டே போக, ஒவ்வொரு சொல்லுமே அவன் இதயத்தை குறி வைத்துத்துத் தாக்கியது. சிறிதாவது தனக்காக பேசுவாள் என்று இறுதியாகப் பார்க்க அவளோ அதிர்வில் இருந்து மீண்டபாடு இல்லை.


தன்னை ஆழமூச்செடுத்து சமன்படுத்திக் கொண்டவன் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, "வசுமதி" என்று அழுத்தமாக அழைக்க, அப்போதே அதிர்வில் இருந்து மீண்டு அவனைப் பார்த்தாள். அவளையே சிறிது நேரம் அழுத்தமாகப் பார்த்தவன் மற்றவர்களைப் பார்த்து, "நான் யாதவ் மித்ரன் இல்லை" என்று உரைத்து எவரையும் பாராது அங்கிருந்து வெளியேறி விட்டான்.


அங்கே தோழிகள் மட்டுமின்றி அவர்களுடைய கணவன்கள் குழந்தைகள் என அனைவருமே வந்து இருக்க, அனைவரில் முன்னிலையிலும் அவமானப்பட்டதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனமும், உடலும் அவமானத்தால் கொதிக்க நேராக காரிற்கு வந்தான்.


எக் கணவன் தான் தன்னை மனைவி அவளுடைய கணவன் என்று தவறாக எண்ணியவர்களுக்கு அறிமுகப்படுத்ததாது இருக்க, மற்றவர்கள் இன்னொருவன் என நினைத்து பேசும் போது உருவாகும் அவமானத்தை தாங்குவான். முதன் முறையாக ஏனோ இத் திருமணம் தவறோ என்று யோசிக்க வைத்தது விஷ்ணுவுக்கு.


யாதவை மறந்தூ விட்டேன் எனக் கூறியவள் இன்று பழைய நினைவுகளைக் காண்பித்ததும் அனைவரின் முன்னிலையில் கணவனை அல்லவா மறந்து போனாள். அதன்பின்னாவது அறிமுகப்படுத்தலாமே என மனம் கேள்விக் கேட்க, அவன் மனதை அவனே காயப்படுத்திக் கொண்டான்.


"இவரு யாதவ் இல்லை. விஷ்ணுன்னு ஒரே ஒரு வார்த்தை உனக்கு சொல்ல முடியாது இல்லை? அந்த அளவுக்கு என்னை பிடிக்காது உனக்கு" என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டவன், "இந்த அவமானத்தை என்னிக்குமே மறக்க மாட்டேன். இது வரைக்கும் நான் இப்படி அவமானப்பட்டதே இல்லை" என்று பேசியவாறு வேகமாக தனது வீட்டை நோக்கிச் சென்று, அதே ஆடையோடு குளியலறைக்குள் சென்று நின்றுக் கொண்டான் ஷவரின் கீழே.


விஷ்ணுவின் பேச்சிற்குப் பிறகு அங்கிருந்தோர் அனைவரும் அதிர்ந்து வசுவைப் பார்த்து, "அவரு உன் மித்து மாமா இல்லையா?" என்று அதிர்வு மாறா குரலில் வினவ, "இல்லை மித்து மாமா வைஷூவை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. இவரு விஷ்ணு கிஷான் சர்ஜனா சொந்த ஹொஸ்பிடல்ள இருக்காரு" என்றாள் அழுகுரலோடு.


தோழியில் ஒருத்தி, "சொரிடி நாங்க உன் மித்து மாமான்னு நினைச்சு பேசிட்டோம்" என்று உரைக்க, "எங்க இரண்டு பேருக்குள்ள இப்போ தான் எல்லாம் சரியாகிட்டு இருக்கு. அதுக்குள்ள நீங்க ஒரு குண்டை தூக்கி போட்டுட்டிங்கடி. சப்ரைஸ் பண்ண முன்னாடி, உன் ஃபிரன்டோட வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு கூட சின்னதா விசாரிக்க மாட்டிங்களாடி?


நீங்க இப்படி பண்ணுவிங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை. அந்த அதிர்வுல இருந்து நான் மீள முன்னாடி மொத்தமா போயிருச்சு. அவரு இது வரைக்கும் என் விஷயத்துல இப்படி நடந்ததே இல்லை. என்னை எந்த இடத்துலேயுமே விட்டு கொடுத்தது இல்லை. இன்னிக்கு தான் முதல் முறை என் மேலே கோபப்பட்டு போயிருக்காரு" என்று அழ தோழிகளுக்கு சமாதானம் செய்வதைத் தவிர வேறு வழியும் தெரியவில்லை.


அதில் ஒருத்தி ஏடாகூடமாக, "சொந்த தங்கச்சியே அக்கா காதலிச்சவனை கைக்குள்ள போட்டுக்கிட்டாளா?" என்று கேட்க, சுள்ளென்று ஏறிய கோபத்தில் வசு, "ஃபிரன்சுன்னு சொல்லி எனக்கு ரொம்ப நல்லது பண்ணிட்டிங்க. உன்னைப் போல பேசி நான் இப்போ வைஷூவை இழந்துட்டு படுற பாடே போதும். தயவு பண்ணி என்னை விட்ருங்க. கல்யாணத்துக்கு வந்ததுக்கு ரொம்ப நல்லது பண்ணிட்டிங்க" என்று கூறி அங்கிருந்து சென்றாள்.


வசுமதிக்கு வீட்டிற்குச் செல்லவும் தோன்றவில்லை. அதனால் கோயிலிற்குச் சென்று மாலை வரை இருந்தவள், பின்னரே அவர்களது வீட்டை நோக்கிச் சென்றாள். அங்கே விஷ்ணு அறையில் கண்மூடி சாய்ந்திருக்க, வசுமதி உள்ளே நுழைந்தாள்.


வசுமதி, "விஷ்ணு" என்று அழைக்க, "இப்போ நான் உன் கூட பேசுற மூட்ல இல்லை வசுமதி. வீணா சண்டை போடா வைக்காத" என்று அமர்த்தலாக உரைக்க, "நான் சொல்றதை ஒரு முறை கேளுங்க விஷ்ணு" என்றாள். விஷ்ணு, "நீ என்ன காரணம் வேணூன்னாலும் வச்சிக்கோ, ஆனால் என்னால் இந்த அவமானத்தை ஜீரணிக்க முடியல்லை" என்றவனின் முகமுமே அவமானத்தால் கசங்கியது.


"நான் ஷாக்ல இருந்ததால தான் என்ன பேச முடியல்லை. என் ஃபிரன்ஸ் இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கவை இல்லை" என்று அழு குரலில் கூற, "சரி அப்புறமாவது என்னை நிறுத்தி இவரு என் புருஷன்னு சொல்ல இருந்ததே. அதை பண்ணவே இல்லையே நீ. யாதவைப் பத்தி பேசினதும் என்னை நீ அங்கே மறந்துட்ட. அதான் உண்மை" என்று எழுந்துக் கொண்டான்.


உச்சகட்ட கோபத்திலும், அவமானத்திலும் விஷ்ணு இருக்க அவள் அருகே வசு அழுதவாறு இருந்தாள். "விஷ்ணு" என்று அவள் பேச, "ஸ்டொப் இட் வசு" என்று கத்தி நகர, "என்னை மட்டும் இன்னொருத்தனை காதலிச்சன்னு சொல்லாதிங்க. நீங்களும் இன்னொரு பொண்ணை காதலிச்சிட்டு தனே என்னை ௧ல்யாணம் பண்ணிங்க?" என்று ஆத்திரத்தில் கத்தினாள்.


விஷ்ணு கோபத்துடன், "நான் காதலைப் பத்தி சொல்லிக் காட்ட இல்லை வசுமதி. யாதவோட பெயரை எடுத்ததும் என்னை மறந்துட்டன்னு தான் சொன்னேன். என்ட், நான் யாரை காதலிச்சேனோ, அவளை தான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.


அப்படியே வேறு ஒருத்தியை கல்யாணம் பண்ணி இருந்தாலும், எந்த இடத்திலேயுமே அவளை விட்டு கொடுத்து அவமானப்படுத்தி இருக்க மாட்டேன் உன்னைப் போல" என்று சொற்களை கடித்துத் துப்பி விட்டு வெளியே சென்றான்.


வசுவோ அவன் கூறிய வார்த்தைகளில் அதிர்ந்து விழித்து, அவன் கூறியவற்றை மீண்டும் கிரகித்துப் பார்க்க, 'ஆம். தன்னையே காதலித்தான் என்று அல்லவா மொழிந்தான்? நான் தான் அவ் டாலியா?' என்று தனக்குள் கேட்டவள் அவசரமாக கபோர்டை திறந்து அவனுடைய டயரியை வாசிக்க, இங்கே விஷ்ணுவும் வசுமதி அவனுக்கு டாலியான கதையை சிந்திக்க ஆரம்பித்தான்.


விஷ்ணு பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதி முடித்து, கோயிலுக்குச் சென்றநாள் அது. அன்று தன் பெற்றோரின் திருமண நாள் என்பதால் அவர்களோடு நேரத்தைக் கழிக்க, அவர்கள் செல்லும் இடம் எல்லாம் சென்றான். அப்போது பதினொரு வயதான ஒரு சிறுமி, ஏழு வயது சிறிய பெண்ணின் கைப் பிடித்தவாறு நடந்து கோயிலுக்குள் வந்தாள்.


அவளுடைய ஒற்றை நீண்ட ஜடையும், அதில் ஒருந்த மல்லிகைப் பூவும், நெற்றியில் கோபுரப் பொட்டு அவள் நாடியில் இருந்த கரிய மச்சம் என்று அவனை ஈர்க்க அவன் அறியாது அவளைப் பின் தொடர்ந்தான். தன் தங்கையை பார்த்துக் கொண்ட விதம், அவள் மீது கொண்ட அக்கறை, பாசம் என்பன அவனை மேலும் ஈர்த்தன.


அப்போது, ஒரு கர்பிணிப் பெண் மயங்கி விழ தன் தங்கையை ஓரிடத்தில் அமர வைத்தவள், அவசரமாக அப் பெண்ணிடம் ஓட விஷ்ணுவும் அவள் பின்னே ஓடினான். இது அப் பெண்ணிற்கு எட்டாம் மாதம் என்பதால் மயங்கி விழுந்ததில் அடிபட, பிரசவ வலியில் துடித்தாள் அப்பெண்.


அவளோடு எவரும் வராமல் இருக்க அச்சிறுமியை தேடி வந்த அவளது தாயும், தந்தையும் தங்கையை அழைத்துக் கொண்டு, அவளிடம் வந்து, "நீ பார்த்துக்கோ. நான் இப்போவே அம்பியூளன்சுக்கு போன் பண்றேன்" என்று உரைத்து அவளுடைய தந்தை அவசரமாக அம்பியூலன்சுக்கு அழைக்க அவளுடைய தாய் கர்பிணிப் பெண்ணுக்கு ஆறுதலை வழங்கிக் கொண்டு இருந்தார்.


அச்சிறுமிக்கு என்ன புரிந்ததோ, "அழாதிங்க ஆன்டி. சீக்கிரமா குட்டி பாப்பா வெளிய வந்துருவான். டாக்டர்ஸ் ரொம்ப நல்லவங்க. எனக்கும் டாக்ராகனும்னு தான் ஆசை. கண்டிப்பா நானே ஃபீரியா உங்களைப் போல ஆளுங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன். இல்லைன்னா, கடவுள் நல்லவங்களை டாக்டராக்கி சேவை பண்ண வைப்பாரு" என்று அவளுக்கு தோன்றியதெல்லாம் பேச, விஷ்ணுவின் மனதில் வைத்தியராக வேண்டும் என்ற எண்ணம் ஆழமாய் பதிந்து போனது.


அவளுடைய நாடியில் இருந்த மச்சம் அவனுடைய மனதில் ஆழமாய் பதிந்திருக்க, அவளுடைய பெயர் தெரியாமல் இருந்ததால் ஒரு டால் போன்று அவனுடைய கண்களுக்குத் தென்பட்டதால் 'டாலி' என்று பெயரிட்டான். அவளுக்காகவே பதினொராம் வகுப்பில் விஞ்ஞானப் பிரிவை தேரந்தெடுத்து, சிறந்த புள்ளிகளையும் பெற்று மருத்துவ கல்லூரிக்கும் தெரிவு செய்யப்படான்.


பெயர் தெரியா அவனுடைய டாலியின் கனவினை நனவாக்க இரவு பகல் பாராது அயலாது உழைக்க, அவள் மீது இருந்த ஈர்ப்பு நாட்கள் கடக்க காதலாக மாறியது. அவள் முன்னே ஒரு மகப்பேறு மருத்துவரான பின்பே சென்று நிற்க வேண்டும், அதன் பிறகே அவளைத் தேட வேண்டும் என்ற உறுதியோடு படித்தான்.


ஸ்பெஷலாக மகப்பேறு துறையை தெரிவு செய்தவன் முதல் வருடத்தை லண்டனில் முடித்து சென்னைக்கு வர எதிர்ப்பாராத விதமாக அவனுடைய டாலியை அவன் காண நேரந்தது. அவன் டாலியை, அவன் மனமே இவள் தான் என்று கூற, அவளுடைய நாடியின் மச்சம் அதை உறுதிப்படுத்தியது..


அவளோடு பேசாவிடினும், அவளைப் பின் தொடர அப்போதே அவள் தன்னுடைய மாமன் மகனை காதலிப்பதையும், இன்னும் இரண்டு வருடங்களில் திருமணத்தை முடித்து விடுவார்கள் என்று தோழிகளோடு பேசுவதைக் கேட்டவனுக்கு இதயமே நின்ற உணர்வு.


ஆனாலும் அவளுடைய சந்தோஷத்திற்காக இதன் பிறகு அவளைப் பார்கக் கூடாது என்று லண்டன் சென்றவன் மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்து தந்தை அவனுக்காக கட்டி இருந்த மருந்துவமனையின் பொறுப்பை ஏற்றான்.


டாலியின் ஞாபகம் வரும் போதெல்லாம் டயரி எழுத லண்டனில் வைத்தே பழக்கப்பட் ஐந்து வருடமாக எழுதிய டயரியே வசுமதியின் கைகளில் இருப்பது. டாலிக்கு திருமணம் முடிந்திருக்கும், குழந்தைகளோடு சந்தோஷமாக இருப்பாள் என்று கற்பனைக்குச் செல்பவன், தன் மனதை அவளிடம் இருந்து பிரிக்க எடுத்த முயற்சியில் பலன் பூச்சியமாக இருந்தது.


அதன் பிறகே அவளைத் தவிர வேறு ஒருவளை காதலிக்க முடியாது என்று புரிந்துக் கொண்டான். அவனைப் பொருத்த வரையில் டாலி அவனுடைய கனவுக் காதலி. அவனுக்கு மட்டுமே உரிமையானவள். கனவுகளில் அவன் டாலியோடு வாழ ஆரம்பித்தான். அதனாலேயே அவளை காதலிக்க, வேறு ஒருவரையும் அவன் திருமணம் செய்யவில்லை.


வைஷூவை சந்தித்ததும் அவளை சிறு குழந்தையாக பிடித்துப் போக அவளுடன் பாசமாக நடந்துக் கொண்டான். யாதவின் திருமணத்திற்கு அழைத்திருக்க, அங்கே வசுமதியை மணப்பெண்ணாக நிச்சயமாக அவன் எதிர்பார்க்கவில்லை.


அவளுக்கு வேறு ஒருவனுடன் திருமணம் முடிந்து இருக்கும் என்று நினைக்க, தன் உற்ற தோழனின் மணப்பெண்ணும், டாலி காதலித்த அவளுடைய மாமன் மகன் யாதவாக இருப்பான் என்று கனவிலும், நினைத்துப் பார்க்கவில்லை.


அவளைப் பார்தத்து முதல் அதிர்வு என்றால், அவள் வைஷூவைத் தவறாக பேசியது அடுத்த அதிர்வு. அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடந்தேற, இறுதியில் விஷ்ணுவையே திருமணம் செய்யுமாறு கூற அவனால் அதை முழு மனதுடன் ஏற்க முடியவில்லை..


அதற்கு இரு காரணங்கள் இருந்தன. முதலில் இவள் அவன் நினைத்ததைப் போன்று திருமணமாகதவளாக இருக்கிறாள், அதுவும் யாதவைக் உயிருக்குயிராக நேசித்த பெண் என்பதும், அடுத்த காரணம் அவனுடைய கற்பனை டாலிக்கும், வசுமதியிற்கும் மலையளவு வித்தியாசங்கள் இருந்தன.


திருமணத்திற்கு பின்னும் டாலி, வசுமதி இருவரும் ஒரே நபர் என்று அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில நேரங்களில் டாலியைப் போன்ற குணங்கள் வசுமதியிடம் தென்படும் போது சந்தோஷமாக உணர்வான். நாட்களும் கடக்க வசுமதியின் நற்குணம் அவனுடைய டாலியின் குணத்தை ஒத்திருக்க மெது மெதுவாக இருவரும் ஒருவரே என ஏற்றுக் கொள்ளத் தயாரானான்.


அதற்குள் வசுமதியின் வெட்கத்தை, பிடித்தமின்மை என்று தவறாக நினைத்து ஒதுங்க இன்று அது மிகப் பெரிய பிளவாக மாறியது. ஆனால் இதில் அதிசயம் என்ன என்றால் அவன் அறியாது டாலியை விட வசுமதியை அதிகமாக காதலித்ததையே ஆகும்.


டாலி அவனுடைய கற்பனை. அவனாகவே அவளுக்கான குணங்களை ஏற்படுத்தினான் அவளுடைய சிறு வயது குணத்தை வைத்து. வசுமதி வேறுபட்டவள். மிகப் பெரிய தவறு இழைத்த பின்பும் மன்னிப்புக கேட்டு, தன் தவறை திருத்தியவள், அவளுடைய அனைத்து சந்தோஷ துக்கங்களிலும் விஷ்ணு பங்கேற்று இருக்க, இன்று தன்னை கணவன் என்று அறிமுகப்படுத்தவில்லையே என்ற கோபமே அவளைக் காதலிப்பதை உணர்த்தியது அவனுக்கு.


அப்படி என்றால் அவளை மனைவியாக இவன் முழுமையாக ஏற்றுவிட்டான், அவளும் தன்னைக் கணவனாக அங்கீகரித்து இருக்க வேண்டுமே என்ற எதிர்ப்பார்ப்பு இன்று பொய்யாகியது அவனுக்கு வலிக்க அவன் தனியாக இருக்கும் போது அதைப் பற்றிச் சிந்தித்தான்.


அப்போதே நற்குணங்களையும் நிறைகளையும் மட்டுமே கொண்ட டாலியை விட, குறைகள், நிறைகள் இரண்டுமே இருக்கும் வசுமதி அவனது மனதை பாதித்து, டாலியை விட அதிகமாக காதலிக்க வைத்திருக்கிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டான்.


மனைவியைக் காதலிக்கும் கணவனாக, யாதவ் இன்னும் தன் மனைவியைப் பாதிக்கிறாள் என்ற இயல்பான பொறாமைக் குணம் தலைத் தூக்கியதே தற்போதைய சண்டைக்கான காரணம்.


வசுமதி, விஷ்ணு தன்னை பருவ வயதில் இருந்தே காதலித்து இருக்கிறான் என்பதை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. அவனுடைய காதலின் ஆழம் அவனுடைய எழுத்துக்கள் மூலம் தெரிய, கண்கள் கலங்க நின்றாள். தன்னை காதலிக்காதவனை உருகி உருகி காதலித்து தானே காயப்பட, தன்னை உருகி உருகி காதலித்தவனை தானே காயப்படுத்தி விட்டோமே என்று மனம் வெதும்பினாள்.


விஷ்ணு தன்னை இந்த அளவிற்கு காதலித்ததும், சிறுவயதில் அவளுடைய சிறு பிள்ளைத் தனமான பேச்சிற்கு இணங்கி இலட்சியத்தையே நிறுவி இருக்கிறானே என நினைக்கும் போது மலைப்பாக இருந்தது. இருந்தும் மனம் முழுவதும் ஏதோ ஒன்று நிறைவாய் உணர சந்தோஷத்துடன் குளியல் அறைக்குள் சென்று உடைமாற்றி வந்தாள்.


ஆனால் விஷ்ணுவை உண்மை அறிந்த பிறகு நேரடியாக சந்திக்க மனம் தடுக்க, அறையின் பல்கனியில் நின்று தோட்டத்தில் அமர்ந்து இருக்கும் விஷ்ணுவை உரிமையுடன் இரசிக்க, அவனோ அது தெரியாமல் தன்னை வந்து அவள் சமாதானம் செய்யவில்லையே. தன்னை அவளுக்கு பிடிக்கவில்லையே என்ற பலவாறான கற்பனைக் குதிரைகளை ஓட விட்டு இருந்தான்.


வைஷூவைப் பார்க்க வந்த இரு ஜோடிகளும் பரஸ்பர சுக விசாரிப்புகளிற்குப் பிறகு யாதவ் இருக்கும் போது சாத்விக்கே, நகுலனின் வீட்டில் நடந்தவற்றை மொழிந்தான். அபி, "ஒரு பிரச்சனை முடிய முடிய அடுத்தடுத்த பிரச்சனையா?" என்று சலிக்க, "இதுக்கு அப்புறமா தான் உண்மையான பிரச்சனையே ஆரம்பிக்க போகுது. வீட்டை விட்டு போன அஞ்சலி சும்மா இருக்க மாட்டாளே" என்று உரைத்தான் கார்திக்.


சாத்விக், "நாங்க நகுல் பிரோவுக்கு காஞ்சனா மேமை இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கோம். அதுக்கு நீங்க காஞ்சனா மேம் கிட்ட பேசனும்" என்று கூற மூன்று பெண்களுமே அதிர்ந்தனர். கார்த்திக் அமர்த்தலாக, "கண்டிப்பா அவருக்கு அவங்களை கல்யாணம் பண்ணி வச்சி, சந்தோஷமா அவரை வாழ வச்சி அந்த அஞ்சலியோட அகங்காரத்தை உடைக்கனும்" என்றான் கோபத்துடன்.


வைஷூ, "நாங்க எப்படி மேம் கிட்ட பேசலாம்?" என்று வினவ, "வாயால தான் நவி பேசனும்" என்ற பதில் யாதவிடம் இருந்து வந்தது. 'எப்போ இருந்து நீ மாறின?' என்ற ரீதியில் சாத்விக்கை தவிற மற்ற அனைவருமே கண்கள் விரிய பார்க்க சாத்விக் சிரிப்பை அடக்கி, "அவன் கரெக்டா தான் சொல்றான். உங்க பேச்சுத்திறமையில தான் நகுல் புரோவோட வாழ்கையே இருக்கு" என நிறுத்தினான்.


அவனே தொடர்ந்து, "இந்த டாஸ்கை கம்பிளீட் பண்ணிங்கன்னா, நீங்க என்ன கேட்டாலும் நாங்க பண்றோம்" என்று மற்ற இரு ஆண்களையும் பார்க்க, அவர்களும் இமை மூடி சம்மதத்தைத் தெரிவிக்க, மூன்று பெண்களும் தங்களுக்குள் பேசி சிறிது நேரத்திற்குப் பிறகு ஒத்துக் கொண்டனர்.


'எப்படியெல்லாம் பேசி கரரெக் பண்ண வேண்டி இருக்கு? மத்தவங்களை விரல் நுனியிலேயே ஆட்டி வைக்கிற எங்களை, இப்படி ஆக்கிட்டாளுங்களே' என்று மூன்று ஆண்களாலும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.


இரண்டு நாட்கள் இறக்கைக் கட்டிப் பறக்க, இன்று யாதவின் திட்டத்தின் படி சவிதாவை காப்பாற்றச் செல்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருந்தான். அத்தோடு கார்த்திக், சாதவவிக்கிற்கு தெரிந்த அன்டர் கிரவுன்ட் அடியாட்களை வைத்து திட்டத்தின் ஒரு பகுதியை முடிக்க தயாரானான்.


முதல் சரவணன் கூறிய காட்டுப் பகுதியிற்குள், சாத்விக், கார்திக்கின் அடியாட்கள் அனுப்பப்டனர்..அவர்கள் வீட்டை நெருங்கியது தகவல்களை வழங்க ஆரம்பித்தனர். இவர்களைப் போலவே அடியாட்களைக் கண்ட அவ்வீட்டின் காவலுக்கு இருந்தோர், "இங்கே எதுக்கு வந்திங்க?' என்று வினவ, "இது என் ஏரியா. நீங்க எப்பிடிடா என் அனுமதி இல்லாமல் வந்திங்க?" என்று சாத்விக்கின் அடியாளின் தலைவன் வினவினான்.


மற்றவனோ, "யாரு நீ?" என்று எகிற, "குருன்னு சொன்னாலே, சென்னை மொத்த ரௌடியுமே நடுங்கும். நீ என்னையே எதிர்த்து பேசுற" என்று ஓங்கி ஒன்று அரைய குருவின் அடி தாங்காது விழுந்தான் காவலுக்கு நின்று இருந்தவன். சத்தம் கேட்டு உள்ளே இருந்தவர்களும் வெளியே ஓடிவிர அங்கே கைகலப்பு ஒன்று ஆரம்பித்தது.


இவர்கள் இங்கே சண்டையிடுவதில் மும்முரமாக இருக்க, குருவின் அடியாள் ஒருவன், யாதவின் குழுவினருக்கு தகவலைத் தெரிவிக்க, யாதவின் குழு மொத்தமுமே அங்கே சுற்றி வளைத்தது. பொலிஸைப் பார்த்து அதிர்ந்த காவல் குழு, சிலர் உள்ளே ஓட சிலர் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.


ஜாமரை பொலிஸ் வரும் போதே பூட்டி இருந்ததால் இங்கே நடப்பவற்றை அவர்களது தலைவனுக்கு கூற முடியாமல் போனது. யாதவை நோக்கி ஒருவன் அடிக்க வர மூக்கில் ஒரு குத்தும், முழங்காலில் ஒரு அடியும் வைக்க அவ் அடியாள் வலி தாங்காது விழுநதான்.


கௌதமை ஒருவன் தாக்க வர, "புரோ எப்படியும் இரண்டு பேரும் அடிச்சிக்க மோறோம். ஒரு வார்ம் அப் பண்ணலாமே" என்று உரைக்க, அடியாள் புரியாமல் அவனைப் பார்த்தான். கௌதம் இரு கால்களையுமவ அகற்றி குனிந்து குனிந்து எழும்ப, 'இவன் சண்டை போட வந்துட்டு எதுக்கு சர்கஸ் காட்டுறான்?' என்று பாவமாய் பார்த்தான்.


இதை தூரத்தில் ஒருவனது வயிற்றுக்கு எட்டி உதைத்த யாதவ் பார்த்தவன், "இவனை" என்று பல்லைக்கடித்து, கௌதம் இருக்கும் இடம் வந்தவன், கௌதமின் சேட்டையைப் பார்த்தவனை யாதவ் ஓங்கி உதைத்து, கௌதமையும் உதைக்க இருவருமே விழுந்தனர்.


"எவன்டா டி.சி.பி மேலேயே கையை வைக்கிறது?" என்று கத்தியவாறே எழ, யாதவ் முறைத்துப் பார்த்ததில், "பார்த்துட்டானே சமாளிப்போம்" என்று மனதுள் நினைத்து, "சேர். நான்..." என்று பேச அதை இடைமறித்த யாதவ், "குரங்கு வித்தை காட்டுறவன் போல நடந்துக்காமல் ஒரு டி.சி.பி போல நடந்துக்கங்க.


உங்களுக்கான பனிஷ்மட் இங்க இருக்கிற அத்தனை பேரையும் கைமா பண்ணிட்டு தான் உள்ள வரனும். மத்தவங்க எல்லாருமே என் கூட உள்ள வருவாங்க" என்று ஆணையிட்டவன், "எல்லாரும் உள்ள போலாம்" என்று கத்தி கட்டடத்துக்குள் நுழைய, "டேய் டேய்" என்ற கௌதமின் கதறல் அவன் செவியை அடையவில்லை.


கௌதம் சண்டையிடுவதில் மிகக் கெட்டிக்காரன், ஆனால் அவனது சேட்டை அதிகமாக இருப்பதால் யாதவினால் கௌதமிற்கு இது போன்ற தண்டனைகள் அடிக்கடி வழங்கப்படும். யாதவின் மீது இருந்த கோபத்தையும் சேர்த்து அடியாட்களின் மீது காட்டி அனைவரையும் பிரட்டி எடுத்தான்.


அத்தோடு குருவின் அடியாட்கள் சிலர் பொலிஸோடு உள்ளே செல்ல, சிலர் வெளியே கௌதமோடு சண்டை இட்டனர். உள்ளே பொலிஸ் மற்றும் சவிதாவை கடத்தியவர்களுக்கு இடையில் மிகப் பெரிய சண்டை நிகழ சீறும் சிங்கமென யாதவ் வேட்டையாடி, சவிதாவை ஒவ்வொரு அறையாக தேட ஆரம்பித்தான்.


மூன்றாவது அறையில் இருந்து சவிதாவை கடத்திய குழுவின் தலைவன் அரை மயக்கத்தில் இருந்த சவிதாவின் தலையில் துப்பாக்கியை வைத்தவாறே வெளியே வந்து, "எங்களை போக விட இல்லை இவ தலையில குண்டு இறங்கும். எல்லாரும் பின்னாடி போங்க" என்று கத்தினான்.


பொலிஸாரும், குருவின் ஆட்களும் யாதவைப் பார்க்க, அவனுமே பின்னால் செல்லுமாறு கண்ணசைக்க, அவர்கள் பின்னேர, சவிதாவைக் கடத்தியவர்கள் சவிதாவோடு முன்னேறி கதவிற்கு வெளியே சென்றார்கள். தங்கள் வாகனம் நிறுத்திய இடத்திற்கு அருகே வர, "இவளுக்காக என்னை பிடிக்க முயற்சி பண்ணிங்களா சார்?" என்று சவிதாவை தள்ளி அவள் நெற்றியில் சுட டிரிகரை அழுத்த, பின்னிருந்து அவனை எவரோ உதைத்ததில் குண்டு அவளுடைய வயிற்றைத் துளைத்துச் சென்றது.


அனைவரும் யார் அவர் என்று பார்க்க அங்கே சாத்விக் கோபத்துடன் நின்று இருந்தான். உடனே சவிதை அங்கிருந்து அகற்ற முனைந்த சாத்விக்கை நோக்கி கீழே விழுந்தவன் துப்பாக்கியை எடுத்து சுட முனைய யாதவ் ஓடிச் சென்று அவனை பின்னிருந்து மறைத்ததால் யாதவின் நெஞ்சை ஒரு தோட்டாவும் வயிற்றை இரு தோட்டாக்களும் துளைத்துச் சென்றன.


கண்மூடி திறப்பதற்குள் நடந்து முடிய, யாதவ், சவிதா இருவரையும் சுட்டதில் கொதித்தெழுந்ந பொலிஸ் அங்கிருந்த அனைவரையுமே இரக்கம் பாராது கொடூரமாக தாக்க கௌதம் ஒருபடி மேலே சென்று யாதவைச் சுட்டவனின் நெற்றிப் பொட்டிலேயே தன் குண்டை இறக்கினான்.


யாதவ் கீழே விழ, சவிதாவை கௌதம் கையிலேந்தி ஓட, யாதவை தூக்கிக் கொண்டு வீதியின் அருகே நின்று இருக்கும் தனது காரை நோக்கி ஓடினான் சாத்விக். கார்திக் அங்கே காரில் காத்திருக்க, இவர்கள் இருவரும் இருவரை தூக்கி ஓடி வருவதைப் பார்த்தவன் அவசரமாக காரை இயக்கி செல்லத் தயாராகினான். நால்வருமே காரில் ஏறி விஷ்ணுவின் வைத்தியசாலையை நோக்கிப் பறந்தனர்.


பொலிஸாரின் அடியைத் தாங்காது அடியாட்கள் துவள, குருவின் அடியாட்கள் அனைவருமே மற்ற கிருமினல்களை தங்கள் கஸ்டடிக்கு அழைத்துச் செல்ல, பொலிஸார் அவசரமாக அவ்விடத்தை பழையது போன்றே சுத்தம் செய்து எதுவுமே நடவாதது போன்று மாற்றி வைத்தவர்கள் ஜாமரையும் எடுத்து யாதவைப் பார்க்கச் சென்றார்கள்.


விஷ்ணுவிற்கு சாத்விக் தகவல் தெரிவித்து இருக்க வைத்தியசாலையின் வாசலிலேயே இரண்டு ஸ்ட்ரெச்சருகள் தயாராக நிற்க யாதவ் மற்றும் சவிதா இருவருமே ஒவ்வொரு ஸ்ரெச்சரில் வைக்கப்பட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர் ஆபரேஷன் தியடருக்கு.


இருவருக்கும் அவசரமாக அறுவை சிகிச்சை நடக்க வெளியே அனைவருமே கலங்கிப் போய் நின்றார்கள் அனைவரும். சாத்விக்கை சுட வரும் போது, யாதவ் இடையில் சென்று அவனைக் காப்பான் என்று யாருமே நினைக்கவில்லை. சாத்விக்கின் அருகில் வந்த கார்த்திக் அவனுடைய தோளில் கைவைக்க அவனுடைய முகத்தைப் பார்த்த சாத்விக்கின் கண்கள் கலங்கி இருந்தன.


அவனிடம் எதையும் கேட்கத் தோனாது கௌதமிடம் செல்ல, கௌதம் கார்திக்கை அணைத்து சிறு பிள்ளை என அழுதவாறு நடந்த அனைத்தையும் கூற, கார்திக்கிற்கும் யாதவின் செய்கை அதிர்ச்சியாகவே இருந்தது.


தகவலை வைஷூவிற்கும், யாதவின் குடும்பத்திற்கும், சவிதாவின் தந்தைக்கும் மட்டும் தெரிவிக்கப்பட வைஷூ அதைக் கேள்வியுற்று மயங்கியே விட்டாள்.


தொடரும்...


அடுத்த பதிவு புதன் கிழமை வரும்


கருத்துக்களைப் பகிர,











 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



கண்சிமிட்டும் தென்றலே


அத்தியாயம் 34



யாதவிற்கு அடிபட்டதை வைஷூவிற்குக் கூற அவள் மயங்கிச் சரிந்தாள். அவள் அருகில் எவரும் இல்லாததால் கமிஷனரும் அவரது, மனைவியும் உடனே யாதவின் வீட்டை நோக்கிச் சென்றனர். அங்கே வைஷூவோ மயங்கி கீழே விழுந்திருக்க கமிஷனரின் மனைவி அவளை மடி தாங்கிக் கொண்டார்.


கமிஷனர் அவசரமாகச் சென்று தண்ணீரை எடுத்து வந்து, மனைவியிடம் வழங்க, அவசரமாக அவர் தண்ணீரை எடுத்து வைஷூவின் முகததில் தெளிக்க வைஷூ கண்விழித்தாள். அவள் எழுந்து அமர்ந்தவுடன், "அம்மா அத்தானுக்கு அடிபட்டிருச்சாம்" என்று ஏங்கி ஏங்கி அழ, "நீ தைரியமா இருக்கனும் கண்ணமா. அவனுக்கு எதுவும் ஆகாது" என்று ஆறுதல் அளித்து வைஷூவை அழைத்துக் கொண்டு கணவரோடு வைத்தியசாலைக்குச் சென்றார்.


யாதவின் குடும்பத்தினர் உடனே ஊரில் இருந்து சென்னையை நோக்கி வர, வைஷூவின் பெற்றவர்கள் மட்டுமின்றி விஷ்ணுவின் குடும்பத்தினர், வசு, அபி, சனா என அனைவருமே வருகை தந்தனர். வைஷூ வருகை தந்தில் இருந்து கமிஷனரின் மனைவியின் மடியிலேயே படுத்திருந்தாள்.


அவளுடைய பெற்றவர்களின் வருகையையோ, தமக்கை, தோழிகள் என எவரின் வருகையையுமே உணரவில்லை. கமிஷனர் அங்குமிங்கும் நடந்தவர் கௌதமிடம், "அங்கே என்ன நடந்தது?" என்று வினவ, நடந்த அனைத்தையுமே ஒன்று விடாமல் தன் உயர் அதிகாரியிடம் ஒப்புவிக்க இடையில் அவன் செய்த வேலைக்கும் அவனை முறைக்கத் தவறவில்லை கமிஷனர்.


இதைக் கேட்ட மற்றவர்கள் சாத்விக்கை காக்க, யாதவ் தன் உயிரை இழக்கத் தயாரானான் எனக்கேட்டதும் அனைவருமே அதிர்ந்து சாத்விக்கைப் பார்க்க, வைஷூவோ எழுந்து அமர்ந்து சனாவைப் பார்த்தாள். எவருமே இந் நிகழ்வை எதிர்பார்க்கவில்லை என்பதை அதிர்ந்த முகங்களே காட்டிக் கொடுத்தன.


வைஷூவின் விழிகளில் நீர் தளும்பி வழிய அவள் அருகில் அமர்ந்த கமிஷனர் அவள் தலை வருடி, "அப்பா சொல்றேன்மா. அவனுக்கு எதுவுமே ஆகாது. யாருக்காக இல்லைன்னாலும் உனக்காக எமன் கூட போராடி வருவான்" என்க, சரி என்று தலை அசைத்தாள். கமிஷனரின் மனைவி அவளை தன் தோளில் சாய்த்துக் கொள்ள பார்க்கவே அழகாக இருந்தது அத்தருணம்.


இதைப் பார்த்த சந்திரசேகர், பானுமதியிற்கு பொறாமையாகவும், கவலையாகவும் இருந்தது. தான் பெற்ற மகள் தன்னை விட்டு வேறு ஒருவரை 'அப்பா, அம்மா' என்று அழைப்பதும், அவர்களோடு ஒட்டிக் கொள்வதும். ஆனால் அவர்கள் இழைத்த தவறுகளை அப்போதே மறந்து போனார்கள்.


துரையப்பன் இதை வரும் போதே கேட்க, சாத்விக்கிடம் வந்தவர் அவனுடைய கரங்களைப் பிடித்து, "ரொம்ப நன்றி தம்பி. எங்க குல சாமியை திருப்பி கொடுத்து இருக்கிங்க" என்று பெரிய மனிதர் என்பதையும் மறந்து கண்கள் கலங்க, "சார் விடுங்க. இது சின்ன விஷயம்" என்று ஆறுதல் அளித்தான்.


வெகு நேரம் அனைவரையும் காக்க வைத்து வெளியே வந்த வைத்தியர், "சவிதா உடம்புல குண்டை எடுத்துட்டோம். அவங்களை மயக்கத்துலேயே வச்சிருந்து இருக்காங்க. சோ பிளெட் பீலீட் ஆனதும், இன்னும் மயங்கிட்டாங்க. பயப்பட தேவையில்லை. அவங்க கண்விழிக்க எப்படி டூ டேஸ் ஆகும்" என்று உரைத்து அங்கிருந்து நகர்ந்தார்.


அத்துடன் அவருக்குப் பின்னே விஷ்ணுவோடு வருகைத் தந்த வைத்தியர் அனைவரையும் பார்த்து, "ஹி இஸ் அ ஃபைடர். பயப்பட தேவையில்லை. குண்டு அடிப்பட்ட போது, எந்தவித ஆர்கனுக்கும் டேமேஜ் இல்லை. சோ, பயமில்லாமல் குண்டை எடுத்துட்டோம். இன்னும் டென் அவர்சுல கண்விழிச்சிருவாரு" என்று உரைத்து விஷ்ணுவின் தோள் தட்டிச் சென்றார்.


அனைவருக்கும் அப்போதே நிம்மதியாக மூச்சு விட முடியுமாக இருந்தது. அழுது வடிந்து முகம் வீங்கி இருக்கும் வைஷூவிடம் வந்தவன், "உன்னை தனியா விட்டுட்டு அவன் எங்கேயும் போக மாட்டான் வாயாடி. நீ பண்ணுற சேட்டையை அடக்க அவன் தான் சரியான ஆள்" என்று தலை வருடி உரைத்தவன், சாத்விக்கைப் பார்த்து, "நீங்க அங்கே எப்படி போனிங்க?" என்று வினவினான்.


அதன் பிறகே அனைவருமே அதைப் பற்றி யோசிக்க, சாத்விக், "குரு எனக்கு தெரிஞ்சவன் தான். வைஷூவை கடத்த முயற்சி பண்ண போதே எனக்கு புரிஞ்சது அவனோட கேஸ் சின்னது இல்லைன்னு" என்று முடிக்கும் முன், அதை இடைப்புகுந்த விஷ்ணு, "வைஷூவை கடத்தப் பார்த்தாங்களா? ஏன்டா யாருமே என் கிட்ட சொல்லவே இல்லை" என்று எகிறினான்..


அங்கிருந்த அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது வைஷூவின் கடத்தல் முயற்சி. கௌதம்,"சேர் சூப்பர் மேன் போல வந்து காப்பாத்தி இருப்பிங்களோ. போவியா, யாதவ் பக்கா பிளேன் பண்ணி தான் எல்லாத்தையும் பண்ணான். கொஞ்சமா சொதப்பிருச்சி. அதை விடுங்க. முதல்ல சாத்விக் சார் சொல்ற கதையை கேட்கலாம்" என்றிட தலையில் அடித்துக் கொண்டார் கமிஷனர்.


சாத்விக்கே சிறு புன்னகையுடன் மேலே தொடர, "நான் குரு கிட்ட அங்கே போறது வரைக்கும் சொல்ல சொன்னேன். அப்போ தான் யாதவ் ஜாமர் பூட்ட சொன்னதா சொன்னான். கன்டெக்ட் பண்ண முடியாமல் போகும்னு, நான் கார்திக்கை அழைச்சிட்டு வந்தேன்.


கார்த்திக்கை அவசரத்துக்காக வெளியில நிறுத்திட்டு வன் அவருக்கு உள்ள நான் திரும்பி வர இல்லைன்னா, நீ உள்ள வான்னு சொல்லிட்டு வந்தேன். அப்போ தான் சவிதை சூட் பண்ண முயற்சி பண்ணதை பார்த்து, அடிச்சேன். நான் என்னை ஒழுங்கா பார்த்துகாததால மித்ரனுக்கு இப்படி ஆச்சு" என்று கம்பீரமாக ஆரம்பித்த குரல் இறுதியில் சற்று கலங்கியது.


அங்கிருந்தோருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில மணி நேரங்கள் அவ்வாறே கடக்க, அபி, சானா இருவருமே கர்பமாக இருப்பதால் கார்திக் அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான். அத்தோடு யாதவின் குடும்பத்தினரும் வைத்தியசாலையை அடைய அங்கே மொத்த பேரும் இருப்பதைப் பார்த்தனர்.


யார் யாருடன் பேசுவது எனத் தெரியாமல் விழிக்க நகுல் கமிஷனரின் மனைவியின் தோளில் சோக வடிவில் சாய்ந்து இருக்கும் வைஷ்ணவியைப் பார்த்தவன் அடுத்து, சாத்விக்கிடம் நேரடியாகச் சென்றான். நகுல், "என்னாச்சு சாத்விக்?" என்று வினவ அவனும் நடந்ததையும், வைத்தியர் கூறியதையும் உரைத்தான்.


யாதவின் குடும்பத்தினரும் இதைக் கேட்க அவர்களும் கலங்கிப் போயினர். முதல் மகனின் வாழ்வு இவ்வாறு என்றால், இரண்டாவது மகன் காயமடைந்து வைத்தியசாலையில் அல்லவா இருக்கிறான்?


அனைவரையும் காக்க வைத்து யாதவ் கண்விழிக்க தாதி வெளியே வந்தவர், "பேஷன்ட்டை நார்மல் வார்டுக்கு மாத்திடுவோம். அப்போ போய் பாருங்க" என்று கூறிச் செல்ல யாதவை நார்மல் வார்டிற்கு மாற்றிய பிறகு அவனை அனைவரும் காணச் சென்றனர்.


முதல் யார் போவது என்று தடுமாற்றத்தில் இருக்க சாத்விக் நேராக வைஷூவிடம் வந்தவன், "அவன் உன்னை நினைச்சு தான் ரொம்ப ஃபீல் பண்ணி இருப்பான். நீ போய் பாரு. அப்புறமா நாங்க வரோம்" என்று அனுப்பி வைக்க, அவள் யாதவின் பெற்றோரின் முகம் பார்க்க, அவர்களின் முகத்தில் எதுவுமே கண்டுபிடிக்க முடியவில்லை.


அவளே உள்ளே சென்று யாதவைப் பார்க்க இமை மூடு கட்டுகளுடன் படுத்திருக்க, கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள் யாதவின் நவி. அவன் அருகில் சென்று அவனுடைய கட்டுகளை விரலால் வருட, "இன்னுமா நீ அழுதுட்டு இருக்க நவி?" என்ற யாதவின் குரலில் அதிர்ந்து அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.


அவனைப் பார்த்ததும் இன்னும் அழுகை அதிகரிக்க, இதழ்கடித்து அதைக் கட்டுப்படுத்தினாள். யாதவ், "இங்க வா" என்று கை நீட்டி அழைக்க சிறு பிள்ளையென அவன் மென்மையான அணைப்பினுள் அடைக்கலமாகி, "நான் ரொம்ப பயந்துட்டேன் அத்தான்" என்றவாறு அவனோடு ஒன்றிக் கொள்ள யாதவ் ஆறுதலாக தன வலியைப் பொருத்துக் கொண்டு முதுகை வருடினான்.


சில நொடிகள் அங்கே மௌனம் ஆட்சி செய்ர அவனிடம் இருந்து பிரிந்தவள், "வெளியே எல்லோரும் உங்களை பார்க்க வெயிட் பண்றாங்க. வர சொல்றேன்" என்று கூறி வெளியே இருந்தவர்களை உள்ளே அழைத்தாள். அவர்களுமே உள்ளே வர, அங்கே அவனுடைய பெற்றோர்களை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனுடைய முகமே காட்டிக் கொடுத்தது.


யாதவ் ஏதும் பேசாது மௌனமாய் இருக்க சாத்விக், "எதுக்கு இந்த லூசுத்தனமான வேலையை பண்ண? யாரு உனக்கு என்னை காப்பாத்த சொன்னது?" என்று வினவ, "நான் ஒன்னும் உன்னை காப்பாத்த இல்லை. சவிதாவை காப்பாத்த பார்க்கும் போது இடையில் நீ இருந்த. அவளோ தான்" என்று உரைக்க, அங்கே இருந்த அனைவரின் முகங்களிலும் புன்னகை வந்து சென்றது.


விஷ்ணு டாக்டரோடு பேசி யாதவின் அறைக்குள் நுழைந்தவன், "இன்னும் டூ டேஸ்ல நீ வீட்டுக்கு போலாம். பயபடுறது போல ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாரு" என்றான் அவனுடைய ரிபோர்டுக்களைப் பார்த்தவாறு.


யாதவின் தந்தை, "உனக்கு குணமாகும் வரைக்கும் ஊருக்கு போலாம்" என்று எங்கோ பார்த்து கூற, "நவியோட ஃபைனல் எக்சேம் நடக்க போகுது. அதனால எங்கேயும் வர முடியாது" என்று மறுத்தான். யாதவின் தந்தை, 'இவளோ அடிப்பட்டும் இந்த திமிரு குறையுதான்னு பாரு' என நினைத்து அவனைப் பார்க்க, வைஷ்ணவி அவசரமாக, "நான் இங்கே இருக்கேன் அத்தான். நீங்க ஊருக்கு போங்க" என்றாள்.


யாதவ் முறைத்த முறைப்பில் அடுத்த வார்த்தை பேச முடியாது 'கப்சிப்' என வாயை மூடிக் கொள்ள, கமிஷனர், "நீ குணமாகும் வரைக்கும் கௌதம் கேசை பார்த்துப்பான். நீ வீட்ல இருந்தே இன்ஸ்ட்ரக்ஷன் கொடு.என்ட், அப்பா அம்மா கூட ஊருக்கு போ. வைஷூ எங்க கூட இருப்பா. என் பொண்ணோட பாதுகாப்புக்கு நான் பொறுப்பு" என்றார்.


யாதவ், 'ஆனால் சேர்" என்று எதிர்த்து பேச முனைய," அ னாவும் இல்லை, ஆ வன்னாவும் இல்லை. தெட்ஸ் மை ஆடர்" என்க, அவனுக்கு அதை மீற விருப்பம் இல்லை.


வைஷ்ணவியை திரும்பி அவன் பார்க்க அவளோ புன்னகையோடு நின்று இருந்தாள். அங்கே சந்திரசேகர், "உடம்பை பார்துகொங்க" என்று யாதவிடம் மொழிந்து விட்டு அவனுடைய தந்தையைப் பார்த்தவர் "வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுங்க. லன்சுக்கு ஏற்பாடு பண்றேன்" என்க மறுக்காமல் அவரோடு யாதவின் குடும்பம் சென்றது.


வசுமதி விஷ்ணுவைப் பார்க்க, அவனோ அவள் பக்கமாவது திரும்பவில்லை. மனச் சோர்வோடு தன் புகுந்த வீட்டு ஆட்களிடம் கூறி தன் தாய்க்கு உதவியாக அவர்களோடு சென்றாள். நகுல் யாதவோடு இருப்பதாகக் கூற, வைஷூ யாதவிற்காக உணவை சமைத்தெடுக்க வீட்டிற்கு கமிஷனர் மற்றும் அவரது மனைவியோடு சென்றாள்.


நகுல் அமர்ந்து இருக்க யாதவ், "எப்படி ஃபீல் பண்ற நீ?" என்று கேட்க, "நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ என் கிட்ட கேட்குற" என்றான் நகுல். யாதவ், "இதெல்லாம் பொலிஸ்காரனுக்கு சகஜம் அண்ணா. ஆமா, அஞ்சலி எந்த தொல்லையும் கொடுக்க இல்லையா?" என்று வினவ, "அதான் எனக்கும் புரியல்லை. அவ அமைதியாவே இருக்காளே" என்றான்.


யாதவ், "அவ நினைச்சது போல தானே நடக்குது" என யாதவ் ஆரம்பிக்க, நகுல் புரியாமல் அவளைப் பார்த்தான். "அவளுக்கு நல்லாவே தெரியும், நீ இப்படியே தான் சந்தோஷமா வாழாமல் இருப்பியே தவிற, நீ இனிமேல் உனக்காக வாழ மாட்ட. வேற பொண்ணை கல்யாணம் பண்ண மாட்ட. அதுவே அவ ஜெயிச்ச மாதிரி தானே?" என்று கொக்கிவிட்டான்.


நகுல், "நான் அவளை நினைச்சு ஃபீல் பண்ண இல்லை. நான் சந்தோஷமா தான் இருக்கேன்" என்று கூற, "உனக்கு தெரியிது. ஆனால் அஞ்சலியை பொறுத்த வரை உன்னை அவ மேலே பைத்தியமா காதலிக்க வச்சு, வேறு யாரையும் கல்யாணமும் பண்ணாத மாறி பண்ணிட்டா. நீயும் இனிமேல் கல்யாணம் வேணான்னு இருக்க போற. இதானே அவ எதிர்பார்த்தது? நீயே அவளுக்கு வெற்றியை தேடி கொடுத்துட்ட" என்றான்.


நகுல், "இப்போ என்னதான் பண்ணனும்னு சொல்ற?" என்று கடுப்புடன் கூற, "அவ நம்பிக்கையை உடைக்கிறது போல அவ முன்னாடி இன்னொரு கல்யாணம் பண்ணி, சந்தோஷமா அவங்க கூட வாழ்ந்து குழந்தையை பெத்துகாட்டு. அதுவே, அவளோட மூக்கை உடைக்கிற மாதிரி தான்" என நேரடியாக விடயத்திற்கு வந்தான் யாதவ்.


நகுல், "இந்த நிலமையில இது தேவையா உனக்கு? முதல்ல நீ குணமாகுற வழியைப் பாரு. அப்புறமா இதைப் பத்தி யோசிக்கலாம்" என்று கூற, "நாள் போக போக நான் குணமாகிருவேன். ஆனால் உன் நிலமை அப்படி கிடையாது. அஞ்சலிக்கு நாம யோசிக்கவோ, அவ நடவடிக்கை எடுக்க நேரம் கொடுத்தோம்னா அது நமக்கு தான் ஆபத்து.


அவளுக்கு மூச்செடுக்க கூட நேரம் கொடுக்காமல் அடுத்தடுத்த அடிகளை கொடுத்தால் தான் அவ எழவே நேரமாகும். அவ கிருமினலா யோசிக்க ஆரம்பிச்சால் உன் வாழ்க்கையை மட்டுமில்லை, நம்ம அத்தனை பேரோட வாழ்க்கையும் நாசம் பண்ணிருவா. எங்க எல்லோரோட வாழ்க்கையும் உன் கையில இருக்கு. நீயே முடிவெடு" என்றான்.


நகுல் தலையில் அடித்து, "நான் இன்னொரு கல்யாணம் பண்றதுக்கும், மத்தவங்க வாழ்க்கைக்கும் என்னடா சம்பந்தம்?" என்று புரியாமல் வினவ, "நீ அடுத்த கல்யாணம் பண்ணாலே அஞ்சலியோட நம்பிக்கை பாதி உடைஞ்சிடும். நம்ம கணக்கு தப்போன்னு யோசிக்க ஆரம்பிச்சிருவா. அதுவே நமளுக்கு பாதி வெற்றி. அவ தடுமாற்றத்துல தப்பு பண்ணுவா, அப்புறமா அவளை கப்புன்னு அமுக்கிடலாம்" என்றான் யாதவ்.


நகுல், "சரிடா. நான் யோசிச்சு சொல்றேன்" என்று அமைதியாக, யாதவிற்கு நிச்சயமாக நகுலனிடம் இருந்து சந்தோஷமான பதிலே கிடைக்கும் என அவனுடைய மனது கூறிற்று. மாலை நேரம் நகுல் வீட்டிற்குச் செல்ல வைஷ்ணவி, சாதவிக், சனா மூவருமே வைத்தியசாலைக்கு வருகை தந்தனர்.


சாத்விக்கைப் பார்த்த யாதவ், "அண்ணா கிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசிட்டேன். அவன் ஒகே சொல்லிருவான். நான் ஊருக்கு போக முன்னாடி இந்த கல்யாணத்தை உறுதிபிடுத்தனும். நீ கார்த்திக்க, அபி, விசாலாட்சி அம்மாவை கூப்பிட்டு காஞ்சனா மேமை பார்க்க போ. அவங்க ஃபேமிலியில பேசு.


எனக்கு இனிமேல் எல்லாமே நல்லதாவே நடக்கும்னு தோணுது. அஞ்சலி எழ முன்னாடி அடுத்த அடியா அண்ணாவோட கல்யாணத்தை கொடுக்கனும். அவளுக்கு யோசிக்க நேரத்தை கொடுக்கவே கூடாது" என்று கூற, "நான் அதைப் பார்த்துக்குறேன். நீ அதை முதல்ல பார்த்துக்க" என்று சிறிது நேரம் பேசிவிட்டு சென்றான்.


வைஷ்ணவி அன்றைய தினம் முழுவதும் யாதவைப் பார்த்துக் கொண்டே அங்கேயே படித்தாள். யாதவும் அவளை அதிகம் தொல்லை செய்யாது வைஷ்ணவி படிப்பதற்கான சந்தர்ப்பத்தையே வழங்கினான். விஷ்ணு இறுதியாய் யாதவைப் ஒரு முறைப் பரிசோதித்து விட்டு, தனது வீட்டை நோக்கிச் சென்றான்.


வைத்தியசாலையில் சவிதாவை கொல்வதற்காக ஏற்பாடு செய்தவன் சவிதாவின் அறையை நோக்கிச் சென்றான்.


தொடரும்...



கருத்துக்களைப் பகிர,




அடுத்த பதிவு ஞாயிறு வரும்
 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்




கண்சிமிட்டும் தென்றலே



அத்தியாயம் 35



சவிதாவின் அறையில் அவள் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் ஆழந்த மயக்கத்தில் இருக்க, அவளின் உயிரைப் பறிப்பதற்காக அங்கே எமனாய் வருகை தந்தான் ஒருவன். அவளது அறை இருக்கும் திசையில் மெது மெதுவாய் அடி வைத்து அங்கும் இங்கும் பார்த்தவாறு சென்று அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.


அவள் ஆழ்ந்த மயக்கத்தில் இருப்பதைப் பார்த்தவன் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து அவளை நோக்கி சுட ஆயுத்தமாக அவளைப் பரிசோதிப்பதற்காக அங்கே வந்தான் டாக்டர் ராம். அங்கே ஒருவன் துப்பாக்கியோடு நிற்பதைப் பார்த்தவனுக்கு கை, கால்கள் எல்லாம் நடுங்கினாலும், எங்கிருந்து அவன் கையில் இருந்த ஸ்டெதஸ்கோப்பை அவனது துப்பாக்கியை நோக்கி வீசினான்.


அதில் கொலை செய்ய வந்தவனின் துப்பாக்கி கீழே விழ, அவசரமாக யாரவன் என்று பார்கத் திரும்பினான் கொலையாளி. அதில் ராம் "கொலை கொலை காப்பாத்துங்க" என்று அவனை அறியாது கத்தியவன் சவிதாவின் அருகே செல்ல அடுத்த அறையில் இருந்த யாதவ் எழுந்து வேகமாக வரவும் சரியாக இருந்தது.


வைஷ்ணவியும் அவனைப் பின் தொடர்ந்து வர, அங்கே ஒருவன் முகத்தை மறைத்து இருப்பதைப் பார்த்து அவசரமாக, "கொலைகாரன்" என்று கத்த அத் தளம் முழுவதுமே அல்லோலப்பட்டுப் போனது வைஷூ, ராம் இருவரின் அட்டூழியத்தினால். இருவருமே "கொலைகாரன்" என்று கத்திக் கொண்டே இருந்தனர்.


யாதவ் அறைக்குள் நுழைந்து கொலையாளியையே அழுத்தமாகப் பார்க்க, கொலை செய்ய வந்தவனோ இனிமேல் கதவின் வழியாக வெளியேற முடியாது என புரிந்துக் கொண்டான்.


உடனே கதவின் அருகில் இருந்த கண்ணாடி ஒன்றை வேகமாக ஓடி உடைத்தவன் அதன் வழியே வெளியே பாய்ந்து அத்தளத்தின் வருவோரை இடித்துத் தள்ளி ஓடியவன் பல்கனி வழியாக சென்று பைப் வழியாக கீழிறங்கி அங்கிருந்துத் தப்பிச்சென்றான்.


ராம், "சார் இந்த பொண்ணை கொலைகாரன் கிட்ட இருந்து காப்பாத்திட்டேன்" என்று பெருமையாய் கூற, "முழு ஹாஸ்பிடலையும் நீங்க இரண்டு பேருமே கலவரப்படுத்திட்டிங்க. அவன் சும்மா தனேடா நின்னான். நான் கொஞ்சமா மிரட்டி இருந்தாலே அவன் வாயை மூடி அரெஸ்ட் ஆகி இருந்து இருப்பான்" என்று கூறி பெரு மூச்சை மட்டுமே அவனால் விட முடிந்தது.


வைஷ்ணவியும், ராமும் அப்பாவியாய் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்க கௌதமும் பொலிஸ் நிலையத்தில் இருந்து பதறி வந்தான் என்றால், வீட்டில் இருந்து விஷ்ணுவும் பதறி வந்தான். கௌதம் நடந்ததை யாதவ் மூலம் அறிந்தவன், "ஷப்பா!!! உங்க இரண்டு பேரையும் வச்சிக்கிட்டு ஒரு ஆணியுமே புடுங்க முடியாது" என்று ஆசுவசமாக அமர, விஷ்ணு அடித்துப் பிடித்து சவிதாவின் அறைக்கு வந்தான்.


விஷ்ணு, "எங்கே கொலைகாரன்?எங்க கொலைகாரன்?" என்று பதற, "நீ வரும் வரைக்கும் அவன் ஆர அமர பேச்சு வார்த்தையாடா நடத்திட்டு இருப்பான்? அவன் தப்பிச்சு போய் ரொம்ப நேரமாச்சு. எங்க இருந்து தான் எனக்குன்னு வந்து சேருவானுங்களோ" என்று யாதவ் தன் தலையில் அடித்து விட்டு நடக்க, வைஷூ பாவமாக முகத்தை வைத்து அவன் அறைக்குச் செல்ல உதவி செய்தாள்.


விஷ்ணு, "உஃப்" என்று பெருமூச்சை வெளியிட்டு, "உங்க கூட சேர்ந்த பாவத்துக்கு ஹார்ட் எடெக் வாரது உறுதி. ஒரு மனிஷன் நிம்மதியா சுச்சா போக கூட விடமாட்டானுங்க. பாத்ரூம்ல இருந்து பதறி வரேன்" என்று தலையயில் கை வைக்க, "ச்சீ!!! டாக்டர் நீங்க சுச்சா போய் இன்னும் கழுவ இல்லையா? முதல்ல போங்க" என்று முகம் சுளித்தான் ராம்.


விஷ்ணு அவன் அருகில் சென்று அவன் தலையில் ஓங்கிக் கொட்டி, "அதை கழுவிட்டு வந்துட்டேன். ஆனால் நீயும், வைஷூவும் என்னடா பண்ணி வச்சிருக்கிங்க? ஹாஸ்பிடலையே இரண்டா பிரட்டிட்டிங்க" என்று முறைக்க, "கொலைகாரனை பார்த்துட்டு கொஞ்சவா டாக்டர் முடியும்? கத்த தானே வேணூம்?" என்று பாவமாக வினவினான் ராம்.


கௌதம் இதைப் பார்த்து, "வைஷூ உன்னை போலி டாக்டர்னு சொன்னா. அது தப்பே இல்லை. நீயும் போலி டாக்டர், உன்னை சுத்தி உள்ளதுங்களும் போலி டாக்டர்" என்றிட, உடனே ராம், "இல்லை இல்லை. நான் கஷ்டபட்டு படிச்சி தான் டிகிரி வாங்கினேன்" என்றான். விஷ்ணு அதற்கு, "அப்போ நான் படிக்காமல் வாங்கினேனா?" என்று மிரட்டும் குரலில் வினவ, "நான் அப்படி சொல்லவே இல்லையே டாக்டர்" என்றான் அழுகுரலில்.


கௌதமிற்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருக்க, "நீ போ ராஜா. போய் வேலையைப் பாரு" என்று பாசமாக அனுப்பி வைக்க ராமும் அங்கிருந்து அகன்றான். விஷ்ணு சவிதாவை ஒரு முறைப் பரிசோதித்து விட்டு அங்கே விழுந்திருந்த துப்பாக்கியை கௌதமிற்கு காட்ட, கௌதம் அதை தன்னுடைய கைக்குட்டையைக் கொண்டு எடுத்தான்.


வெளியே இருந்த பொலிசை அழைத்து கைரேகை அழியாமல் வழங்க, அவருமே அதை ஒரு பொலித்தீனில் இட்டு எடுத்துச் சென்றார். விஷ்ணு, "சவிதா உயிருக்கு ஆபத்து இருக்கு. செகியூரிடியை டைட் பண்ணினால் நல்லா இருக்கும்" என்று கௌதமைப் பார்த்தான்.


கௌதம், "சவிதா உயிருக்கு ஆபத்து இல்லைன்னு நினைச்சோம். ஆனால் அவ உயிருக்கே ஆபத்து இருக்குன்னா...." என்று விஷ்ணுவைப் பார்க்க, "நீ இதை போய் யாதவ் கிட்ட சொல்லு. நான் வீட்டுக்கு போறேன்" என்று உரைத்து சிரித்தபடி அங்கிருந்து அகன்றான்.


வைஷ்ணவி அங்கே பாவமாய் அமர்ந்திருக்க, யாதவ், "நீ எதைப் பத்தியும் யோசிக்காமல் உன் படிப்பை மட்டும் பாரு. மத்ததை நான் பார்த்துக்குறேன்" என்று கட்டிலில் சாய்ந்துக் கொள்ள அவளும் சரியென்று தலை அசைத்தாள். கௌதம் அறைக்குள் நுழைய, "நான் வெளியே போய் படிக்கிறேன். அண்ணா அத்தானை பார்த்துகொங்க" என்று கூறி அவர்களுக்கு பேச இடமளித்து அங்கிருந்து சென்றாள்.


கௌதம், "நான் உன்னை காலையில ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி டிஸ்கஸ் பண்ணனும்னு வர இருந்தேன். ஆனால் இந்த நடுஜாமத்துல பேச வேண்டி இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை" என்று உரைக்க, அதைக் கேட்டு சிறு சிரிப்பை உதிர்த்தவன், "இத்தனை நாளா சவிதாவை கொல்லாதவன் இப்போ வந்திருக்கான்னா, நிச்சயமா அவளுக்கு ஏதோ ஒரு உண்மை தெரிஞ்சிருக்கு. அதை நம்ம கிட்ட சொல்லிருவாளோன்னு பயம் வந்திருக்கு" என்றான் யாதவ்.


கௌதம், "எக்ஸக்ட்லி. அப்போ சவிதாகிட்ட நமக்கு தேவையானது ஏதோ இருக்கு. அவ கண்ணை முழிக்கட்டும் பார்த்துக்கலாம். என்ட், நான் சொல்ல வந்தது என்னன்னா, ஜெனி இறந்தப்போ அன்னிக்கு ஷொபிங் மால்ல நடந்த புடேஜை எடுத்து செக் பண்ணேன்.


அந்த ஜெனி பொண்ணு ஷாபிங் மாலுக்குள்ள ஓடும் போது கையை இறுக்கமா பிடிச்சிருந்திச்சு. சாகும் போது கையை விரிச்சு வச்சிருந்தா. அந்த பொண்ணு இறந்தப்போ எடுத்த போடோஸ்ல இருந்து தெரிஞ்சது. என்ட், மோர் ஓவர் அவ லேடிஸ் பாத்ரூக்குள்ள போகும் போது அவ கை இறுக பிடிச்சி இருந்தது. ஆனால் வெளியே வரும் போது கையை கிளியரா பார்க்க முடியல்லை" என்று மொழிந்தான் கௌதம்.


யாதவ் யோசணையோடு அன்றைய தினத்தை கண்மூடி யோசித்துப் பார்க்க அன்று அவள் முகத்தை துப்பட்டாவால் மூடி கழியல் அறையில் இருந்து வெளியேறும் போது அவளுடைய விம்பம் கண் முன் தோன்ற அதையே யோசிக்க புருவ முடிச்சிகள் நெற்றியில் விழ ஆரம்பித்தன. சில நொடிகளில் அவசரமாக இமை திறந்தவன், "அவ கையில எதுவுமே இருக்க இல்லை" என்றான் உறுதியாக.


கௌதம், "அப்படின்னா அவ கையில இருந்தது மெமரி கார்ட். அப்போ கண்டிப்பா மெமரிகார்டை, அங்கே தான் வச்சிருப்பா. இல்லை வச்சால் ஈசியா எடுத்துருவாங்கன்னு அவளுக்கு தெரிஞ்சு இருக்குமே" என்று கூற யாதவ், "ஜெனி புத்திசாலிப் பொண்ணு. அதனால யாரும் மெமரி கார்டை எடுக்க முடியாத இடமா இருக்கிற இடத்துல வச்சிருப்பா. அங்க இருந்தால் கண்டிப்பா யார் கண்ணுலயாவது பட்டு இருக்குமே... சோ..." என்று மீண்டும் இமை மூட அவள் இறக்கும் போது அவனைப் பார்த்த பார்வை இன்னுமே மனதை துளைக்க, அதன் பிறகு நடந்த அனைத்துமே ஒன்றின் பின் ஒன்றாக கண் முன் படம் போல் ஓடியது.


நடந்த சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபட, இமை திறந்து கௌதமைப் பார்த்தான். யாதவிடம் ஏதோ ஒன்று அவனுக்கு தகவலைக் கூறியது போல் இருக்க, "என்னாச்சுடா?" என்று வினவினான். யாதவ், "அந்த சிப் நம்ம கிட்ட தான் இருக்கு" என்று கூற,"என்னடா சொல்ற?" என்று புரியாமல் குழம்பி அவனைப் பார்த்தான்.


யாதவ் எப்போதுமே சிந்தும் அக்மார்க் கர்வப் புன்னகையை சிந்தி, "நான் சொல்றதை மட்டும் பண்ணு. நவி எங்க வீட்டுக்கு எக்சேம் முடிஞ்சி வந்திருவா. நீ எங்க வீட்டுல ஒரு இடம் விடாமல் தேடு. கண்டிப்பா சிக்கும்" என்று கட்டளையாய் கூற, கௌதமும் அவன் விளக்கம் கூறாமலேயே அவனுடைய இறுதிக் கூற்றைக் கொண்டு ஒவ்வொன்றாய் தொடர்புபடுத்தி புரிந்துக் கொண்டான்.


இவ்வாறு இருநாட்கள் நகர, நகுலும் தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவை எடுத்திருக்க, யாதவும் விஷ்ணுவோடு பேசி சில முடிவுகளை எடுத்து இருந்தான். அந்த வகையில் வைஷூவை ஊரிற்கு அழைத்து வரும் போது நிச்சயமாக அவளுடன் வசுமதி, விஷ்ணு இருவரும் வர வேண்டும் என்று உரைத்து இருந்தான்.


சாத்விக், கார்திக் மற்றும் அவர்களது மனைவிகளுமே இவ் இரு நாட்களுக்கு இடையில் யாதவைப் பார்த்துச் சென்று இருந்ததோடு அவ்விரு நாட்களுமே வசுமதி அவளின் வீட்டில் யாதவின் குடும்பத்தினரோடு இருந்தாள். பழைய ஒட்டுதல் இரு குடும்பங்களுக்கு இடையில் இல்லாது இருந்தாலும், இருவருமே ஒருவரை மற்றவர் வெறுக்காது, மனம் நோகாது நடந்துக் கொண்டனர்.


யாதவின் பெற்றோரும், வைஷூவின் பெற்றோரும் அவர்களை முழுமையாக ஏற்காவிட்டாலும் மனம் ரணமாகும் வகையில் எதுவுமே நடக்கவில்லை. நகுல் இரு குடும்பங்களுமே யாதவை பார்க்க வந்திருந்த நேரத்தில், "நான் உங்க எல்லோர் கிட்டவும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்" என்றான்.


யாதவ் அமைதியாக வேடிக்கைப் பார்க்௧, "நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" என்று தன் முடிவைக் கூற பெற்றவர்களுக்கு அவனது வார்த்தைகள் வயிற்றில் பாலாய் வார்த்தன. அவன் இவ்வாறே இருந்து விடுவானோ என்று பயந்த குடும்பத்தினருக்கு, அடை மழை பெய்தது போன்று இருந்தது.


நகுல் சிறு சிரிப்புடன், "ஆனால் பொண்ணு பார்க்க வேண்டியது நீங்க இல்லை" என்று நிறுத்த அனைவருமே ஒரு வித கலக்கத்துடனேயே பார்க்க, அவனோ சாவகாசமாக, "மித்து, வைஷூ யாரை சொல்றாங்களோ அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றான்.


யாதவ் இதைக் கூறுவான் என்று எதிர்பார்ததால் அவன் முகத்தில் எவ்வித அதிர்ச்சியுமே இருக்கவில்லை. ஆனால் வைஷூ கையில் வைத்திருந்த உணவுத௲ தட்டை அதிர்ச்சியில் கீழே விட்டு கண்களை அகல விரித்து நகுல்; குடும்பத்தினர்; யாதவ் என்று மாறி மாறி பார்த்தாள்.


யாதவ், "இதே ரியெக்ஷன்" என்று பெருமூச்சை வெளியிட்டவன், "விஷ்ணு உன் வாயாடியை கொஞ்சமா உலுக்கு. இல்லைன்னா இதே ரியக்ஷனை சலிப்பே இல்லாமல் நாள் முழுக்க கொடுப்பா" என்று உரைக்க, அங்கே மௌனமாய் சிரிப்பலை ஒன்று பரவ விஷ்ணு சிரித்தபடி, "வாயாடி" என்று உழுக்கினான்.


"ஹாங்" என்று சிறு குழந்தையென விழிக்க, "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்து சீனை லைவா பார்க்கமால் இருந்தால் சரி" என்று சத்தமாகவே முணுமுணுத்தவன், "இது சரிபட்டு வராது" என்று நினைத்து, "நவி" என்று அழுத்தமாக அழைத்தான். அதிலேயே சுய நினைவை அடைந்தாள் வைஷ்ணவி.


விஷ்ணு சத்தமாகவே சிரிக்க வைஷூ அவனை அடித்து, "என்னை கலாய்க்குறதுல உனக்கு என்ன அவளோ சந்தோஷம்?" என்று சண்டைக்குச் செல்ல, "அதை ஏன் என் கிட்ட கேட்குற? உன் புருஷன் கிட்ட கேட்க வேண்டியது தனே?" என்றான் விஷ்ணு. "அந்த ஆளுக்கும் அறிவில்லை. உனக்கும் அறிவில்லை" என்று கோபமாய் முறைத்து கைகட்டி நின்றாள்.


அனைவரும் யாதவ் அவளை திட்டுவான் என்று நினைக்க சிறு புன்னகையை உதிர்த்து நகுலைப் பார்த்தான். நகுல் அதைப் புரிந்து, "வைஷூ பொண்ணு ரெடி தனே?" என்று வினவ, "ஏன் மாமா என் பி.பியை எகிற வக்கிறிங்க?" என்று பாவமாக வினவினாள்.


நகுல், "உன் புருஷன் என் கிட்ட இரண்டாவது கல்யாணத்தைப் பத்தி பேசும் போதே எனக்கு தெரிஞ்சிருச்சு. அவன் பொண்ணை பார்த்து வச்சிட்டு தான் என் கிட்ட பேசுறான்னு. அவனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். என்ட், இதை உன் கிட்ட சொல்லாமல் இருக்க மாட்டான்னும் தெரியும். என் யூகம் சரின்னா, சாத்விக், கார்த்திக்கும் இது தெரிஞ்சி இருக்கனும்.


அந்த பொண்ணை ரெகமன்ட் பண்ணது சாத்விக்கா தான் இருக்கனும். ஏன்னா என் வாழ்க்கை இப்படி போக அவனோட பழிவாங்கும் படலமும் ஒரு காரணம்னு அவனுக்கு குற்ற உணர்ச்சி வந்திருக்கனும். அதனால யோசிச்சு இதை பண்ணி இருக்கான். அவன் ஒரு பொண்ணு நல்லவன்னு சொல்றான்னா, கண்டிப்பா நல்லவளா இருக்கனும்" என்று நான் யாதவின் தமையன் என்பதை நிரூபித்தான் நகுல்.


யாதவ் எழுந்து நின்றவன், "உண்மை தான். இப்போ நாங்க பார்த்து வச்சிருக்கிற பொண்ணு யாருன்னு சொல்லனும் அதானே? நவி அதை சொல்லுவா" என்று கூறி இதழுக்குள் சிரிப்பை அடக்க, "ஏது? நானா?" என்று அதர்ந்து யாதவைப் பார்த்தவள், 'இருடா மகனே ஒரு நாளைக்கு உன்னை பார்த்துக்குறேன்' என மனதில் கருவியவாறே "என்னோட புரொஃப் காஞ்சனா" என்றாள்.


அடுத்து யாதவே, காஞ்சானாவைப் பற்றிய முழுவிவரத்தைக் கூறி தன்னுடைய மொபைலில் இருந்த புகைப்படத்தையும் அனைவருக்கும் காட்ட அனைவருக்குமே பிடித்துப் போனது அவளைப் பார்த்ததுமே. வைஷ்ணவி, "காஞ்சனா மேம் கல்யாணம் பண்ண மாட்டேன்னு உறுதியா இருக்காங்க" என்று ஒரு குண்டை தூக்கி இட, யாதவ், "அவங்களை சம்மதிக்க வைக்கிற பொறுப்பை நவி, சனா, அபி ஏத்துகிட்டு இருக்காங்க" என்பதை வைஷூவிற்கு ஞாபகப்படுத்தினான்.


நகுல், "இப்போ பண்ணலாம்னு நீயே சொல்லு" என்று வினவ, "காஞ்சனா மேமை மீட் பண்ண அவங்க வீட்டுக்கு அபி, சனா, வைஷூ இப்போ போவாங்க. சாத்விக் அவங்க அத்தை, மாமா கூட பேச வேணூன்னு கோயிலுக்கு வர சொல்லிட்டான். நீங்க அங்கே போய் எல்லாரும் பார்த்து பேசுங்க. நான், அண்ணா, கார்திக்குக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரோம்" என்றான்.


விஷ்ணு, "உடம்பு முடியாமல் எங்க போற நீ?" என்று நண்பனாகவும், டாக்டராகவும் கடிந்துக் கொள்ள, "சரி அப்போ நீயும் எங்க கூட வா" என்று இழுத்துச் சென்றான். யாதவ் கூறிய திட்டத்தின் படி அனைத்துமே நடக்க, சவிதாவைப் பார்த்துக் கொள்வதற்கான பொறுப்பை விஷ்ணு ராமிற்கு வழங்கியதோடு யாதவினால் பாதுகாப்பும் வைத்தியசாலைக்கு பலப்படுத்தப்பட்டது.


காஞ்சனா வீட்டில் இருக்கும் போது அபி, சனா, வைஷூ மூவருமே வருகைத் தர, அவர்களை சந்தோஷமாக வரவேற்றாள் காஞ்சனா. "என்ன வீடு தேடி வந்திருக்கிங்க? ஏதாவது எக்சேமுல டவுட் இருக்கா?" என்று காஞ்சனா வினவ, அபி, "மேம் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றாள்.


காஞ்சனா, "என்னமா?" என்று வினவ, "நீங்க எங்களை ஸ்டூடன்ஸா மட்டும் தான் பார்க்குறிங்களா?" என்று கொக்கியை விட்டாள் சனா. காஞ்சனா சிரிப்புடன், "நீங்க மூனு பேருமே எனக்கு கூட பிறக்காத தங்கச்சி மாதிரி" என்றிட, சனா, "அப்போ நாங்க ஏதாவது பேசினால், எங்களை தப்பா எடுக்க மாட்டிங்களே" என்று அழகாய் தூண்டிலை நீருக்குள் விட்டாள் மீன் பிடிபடுவதற்காக.


காஞ்சனா, "இல்லைமா" என்றிட, வைஷூ உடனேயே, "ஏன் அக்கா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?" என்று சென்டிமன்டாக பேச, அவளது இக் கேள்வியை எதிர்பார்க்கவே இல்லை என்பதை காஞ்சனாவின் அதிர்ந்த முகமே காட்டிக் கொடுத்தது.


வைஷூ, "அக்கா" என்று பாசத்துடன் அழைக்க, சனாவும், அபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். காஞ்சனா தன்னை சமாளித்து, "என் புருஷன் இடத்துல வேற யாரையும் வச்சு பார்க்க முடியல்லைடா" என்றார். "நீங்க உங்க புருஷனை உயிருக்கு உயிரா காதலிக்கிறிங்கன்னு புரியிது. ஆனால் நீங்க இப்படி இருக்கிறதை மேலே இருந்து பார்க்குற உங்க புருஷன் சந்தோஷப்படுவாறா?" என்று எதிர்கேள்வி கேட்டாள் அபி.


காஞ்சனா, "என்ன இருந்தாலும் என்னால முடியாது" என்று கண்களும், குரலும் கலங்க மொழிய, "நீங்க சந்தோஷமா இருந்தால் தான் அவரும் சந்தோஷமா இருப்பாரு. நீங்க இப்படி இருக்கிறதைப் பார்த்து, இவ வாழ்க்கையே நானே கெடுத்துட்டேனோன்னு உங்க புருஷன் நினைக்குறது உங்களுக்கு எப்படி இருக்கும்?" என்று சனா வினவினாள்.


காஞ்சனா அழுகுரலில், "உங்களுக்கு என் வலி புரிய இல்லை" என்றிட, "உங்களை விட அதிகமான வலியை அனுபவிக்கிறவங்களும் இருக்காங்க அக்கா" என்று வைஷூ நகுலின் கதை முழுவதையும் கூறி முடித்து, "உங்க இரண்டு பேருக்கும் இடையில இருந்து உண்மையான காதல். ஆனால் என் மாமா மனசார காதலிச்சதை தவிர என்ன பாவம் பண்ணாரு? எதுக்காக அவருக்கு இந்த தண்டனை?


உங்களுக்கு உங்க புருஷன் கூட அழகான மெமரீஸ் இருக்கு. ஆனால் என் மாமாக்கு எல்லாமே கானல் நீர். குழந்தை பெத்துக்கனும்னு எவளோ ஆசையா இருந்தாரு தெரியுமா? ஆனால் அதுக்கு பின்னாடி இவளோ சதித்திட்டம் இருக்கும்னு நினைச்சு கூட பார்க்க இல்லை. காதலோட வாழ்ந்த அத்தனை வருஷங்களுமே பொய், போலின்னு சொன்னால் ஒரு மனிஷனால எப்படி தாங்க முடியும்?


இப்போ சொல்லுங்க அக்கா. உங்க வலியைப் போல வலி தானே அவருக்கும்? சந்தோஷமா தன் மனைவி, குழந்தைன்னு வாழ நினைச்சவரோட வாழ்க்கை எதுக்கு இப்படி போகனும்? உங்களுக்கு எங்க நகுல் மாமாவை தான் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சோம். வலியை அனுபவிச்ச ஒரு ஆளுக்கு தான் மத்தவங்களோட வலி புரியும்.


என் மாமாவை உங்களால சந்தோஷமா பார்த்துக்க முடியும்னு நான் நினைக்கிறேன் அக்கா. நீங்க இரண்டாவது கல்யாணம் பண்றது உங்க முதல் புருஷனுக்கு பண்ற துரோகமா நினைக்காதிங்க. அவரை திருப்பி நீங்க பார்க்கலாம்" என்று காஞ்சனாவின் முகம் பார்த்த வைஷூ அவள் விழிகளில் இருந்து வழியும் கண்ணீரைத் துடைத்து விட்டு, "உங்க குழந்தையா. நீங்க காட்ட நினைக்கிற மொத்த பாசத்தையும் உங்க குழந்தைக்கு காட்டுங்க" என்று புன்னகைத்தாள்.


சனா, "வைஷூ சொன்னது எல்லாமே உண்மை. உங்க கையில தான் உங்க புது வாழ்க்கை இருக்கு. எங்களுக்கு மேமா இருக்கிறவங்களை எங்க குடும்பத்து மகாலக்ஷமியா பார்க்க ஆசைபடுறோம்" என்று கூற, அபி, "நீங்க நல்ல முடிவு எடுத்தால் முதல்ல சந்தோஷபட போறது உங்க புருஷன் தான். ஏன்னா சீக்கிரமா குழந்தையா உங்க கையில தவழ ஆசைப்படுவாறே" என்றாள்.


வைஷூ, "எங்க மாமாவோட வாழ்க்கைக்கு தேவதையா; எனக்கும் அத்தானுக்கும் இன்னொரு அம்மாவா; எங்க மொத்த குடும்பத்தோட அஷ்டலக்ஷமியா உங்களை பார்க்க ஆசைபடுறேன் அக்கா. எந்த முடிவு எடுத்தாலும் யோசிச்சு முடிவு எடுங்க" என்று அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு அங்கிருந்து வெளியேறினார்கள் மூவரும்.


காஞ்சனா விழி நீர் தளும்ப கணவனின் புகைப்படத்தையே பார்த்தாள். சாத்விக் காஞ்சனாவின் புகுந்த வீடு, பிறந்த வீடு இருவரையும் அழைத்து வந்து யாதவின் குடும்பத்தை அறிமுகப்படுத்தி வைத்து தன்னுடைய எண்ணத்தையும் போட்டு உடைத்தான்.


பின்னர் நகுலின் பெற்றோர் நகுலின் கதையை மறைக்காது கூறி நகுலிற்காக காஞ்சனாவை பெண் கேட்க, முதலில் தயங்கியவர்கள் பின்னர் ஒருவரோடு ஒருவர் கலந்தாலோசித்து தங்களுக்கு இதில் விருப்பம் எனவும், காஞ்சனாவின் முடிவே இறுதி முடிவு எனவும் கூறி விட்டனர்.


அதனை அடுத்து காஞ்சனா நல்ல முடிவையே கூற வேண்டும் என்று கடவுளிடம் பிரார்தித்து அனைவரும் தத்தமது வீட்டை நோக்கிச் சென்றனர்.


யாதவ், கார்திக், நகுல், விஷ்ணு நால்வரும் அமர்ந்து இருக்க, யாதவ், "அஞ்சலியோட குடும்பத்தைப் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சதா?" என்று கார்திக்கைப் பார்த்து கேட்க, "இன்னும் இல்லை. அந்த டிடெக்டிவ் இன்னும் என்னை கன்டெக்ட் பண்ணவே இல்லை" என்றான்.


யாதவ், "சீக்கிரமா தேடுங்க. அண்ணா கல்யாணத்துல அஞ்சலி மூலமா எந்த பிரச்சனையுமே வரக் கூடாது" என்று யோசணையுடன் உரைக்க, "அவ சும்மா இருப்பான்னு எனக்கு தோண இல்லை" என்றான் நகுல். விஷ்ணு ஆழ்ந்த யோசணையின் பின், "கல்யாணத்தை லேட் பண்ணாமல் சீக்கிரமா வைக்கிறது நல்லது" என்றான்.


மற்றவர்களுமே அதை ஆமோதிக்க, சிறிது நேர உரையாடல்களுக்குப் பிறகு, அங்கிருந்து தங்களது வீட்டை நோக்கிச் சென்றனர் நால்வரும். யாதவ் தன்னுடைய வீட்டிற்குச் செல்ல அங்கே அவனுடைய குடும்பம், வைஷ்ணவியின் குடும்பம், கமிஷனரின் குடும்பமும் அவனுக்காக காத்திருந்தது.


யாதவ், "ஒரு பத்து நிமிஷத்துல கிளம்பலாம்" என்று அனைவரையும் பார்த்து மொழிந்தவன், "நவி வா" என்று அவளை அறைக்கு அழைத்துச் சென்றான். திருமணத்திற்குப் பிறகு இதுவே இருவரும் முதன் முறையாக பிரிந்து இருக்கப் போகின்றனர் என்பதனால் இருவருக்குமே மனது வலித்தது.


ஏதோ ஒன்றை இழப்பது போன்ற உணர்வு இருவருக்கும். வைஷூவை இறுக அணைத்து சில நொடிகள் நின்றவன் அவள் இதழில் தன் இதழைப் பொருத்தினான். வெகு நேரத்திற்குப் பிறகு அவளை விடுவித்து நெற்றியில் இதழ் பதித்தவன், "பார்த்து பத்துரமா இரு என்ன? என்ன பிரச்சனைன்னாலும் கமிஷனர் கிட்ட சொல்லு. ஒகேவா? அவரு பார்துப்பாரு" என்று கலங்கிய குரலுடன் உரைத்தான்.


முதன் முறையாக யாதவின் கண்களுமே கலங்கிவிட, அவள் கரம் கோர்த்து அழைத்து கமிஷனரிடமும், அவர் மனைவியிடமும் வந்தவன், "என் பொன்டாட்டியை உங்க கிட்ட ஒப்படைக்கிறேன். பத்துரமா பார்த்துகொங்க" என்றிட கமிஷனர், "அவ என் பொண்ணுடா" என்று சிரித்து அணைத்தது விடுவித்தார்.


மற்றவர்களுமே ஒருவரிடம் ஒருவர் கூறி விடைப் பெற்றுச் செல்ல யாதவ் இறுதியாக அவள் நெற்றியில் இதழ்பதித்து தலை வருடி, "பத்துரமா இரு. டேய்லி போன் பேசு" என்று காரில் ஏறினான். அத்தோடு அங்கிருந்து வாகனங்களும் நகர வைஷ்ணவியும் வீட்டை சுத்தம் செய்து வீட்டைப் பூட்டி தனக்குத் தேவையான பொருட்களோடு கமிஷனரின் வீட்டிற்குச் சென்றாள்.


இவ்வாறு ஒரு கிழமையும் பறந்தோட வைஷூவின் பரீட்சையும் ஆரம்பித்தது. தினமும், வைஷூ யாதவ் இருவருமே உரையாடி ஒருவரின் இழப்பை மற்றவர் குறைத்துக் கொள்ள முயன்றனர். வைஷூஷிற்கு நல்ல பாதுகாப்பையும், அவருடைய வீட்டை அவளுடைய வீடாகவே உணரவும் வைத்தனர் கமிஷனர் மற்றும் அவரது மனைவி.


இப்படியே நாட்களும் நகர காஞ்சனாவும் சிந்தித்து நகுலனனோடு திருமணத்திற்கு சம்மதம் கூற அனைவருக்குமே இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்க வைஷூவின் படிப்பு முடிந்து ஆறு நாட்களில் காஞ்சனா- நகுல் திருமணம் நடைப் பெறும் என்று பெரியவர்களால் முடிவெடுக்கப்பட்டது.


அதே நேரத்திலேயே வைஷூ - யாதவின் திருமண உண்மைகளும் தெரிய இருக்கின்றன.


தொடரும்....




கருத்துக்களைப் பகிர,




இன்னொரு பதிவும் உண்டு
 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



கண்சிமிட்டும் தென்றலே



அத்தியாயம் 36



யாதவ் ஊரிற்குச் சென்றாலும், வைத்தியசாலையிற்கான பாதுகாப்பையும் பலப்படுத்தியே சென்று இருந்தான். இதில் சிறு கவலையான விடயம் யாதெனில், சவிதா இருநாட்களைக் கடந்துமே இன்னுமே கண்விழிக்காது இருக்க அதைக் குடும்பத்தினரிடம் கூறிய பொழுது பெரும் கவலையடைந்தனர் அவர்கள்.


வைஷ்ணவியின் பரீட்சைகளுமே முடிய, அன்று இரவே அவளை அழைத்துக் கொண்டு விஷ்ணு, வசுமதியும் ஊரிற்குச் செல்ல யாதவின் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் நகுலனின் திருமணத்திற்கு இன்னும் ஆறு நாளே இருப்பதால், மற்ற ஜோடிகளுமே அவர்களோடு ஊரிற்குச் சென்றனர்.


சாத்விக், தனக்கு முக்கியமான வேலை இருப்பதாகக் கூறி அவன் நாளை வருவதாகவும் சனாவை கார்திக், அபி ஜோடியுடன் அனுப்பி வைத்தான். வைஷூ இங்கிருந்து வெளியாக முன் அவளுக்கு அழைத்த யாதவ், "நீ, ஷாபிங் மால்ல ஒரு பொண்ணு சூசைட் பண்ணப்போ எடுத்துட்டு போன பர்கை வீட்டிலேயே வச்சிட்டு வா" என்று உரைக்க, அவளும், "என்ன ஆச்சு அத்தான்?" என்றாள்.


யாதவ், "நான் சொல்றேன் நீ அதை வச்சிட்டு வா" என்றிட, அவளும் மறுப்பேதும் தெரிவிக்காது, அதை வைத்து விட்டு விஷ்ணுவோடு தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்து ஊரிற்கு புறப்பட்டாள்.


விஷ்ணு, வசுமதி இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காத போது மற்றவரை கண்களுக்குள் நிரப்பிக் கொண்டு கண்ணாமூச்சு வாழ்க்கையை விளையாட அனைத்திற்குமே முற்றுப் புள்ளியை வைப்பதற்காகவே ஊரில் பல சம்பவங்கள் நடந்தேறக் காத்து இருந்தன.


வைஷூ அங்கிருந்து வெளியேறிய அரை மணி நேரத்தில் யாதவின் வீட்டை கௌதம் தலைமையிலான குழு முற்றுகை இட்டு சோதனை செய்ய ஆரம்பிக்க கௌதம் வைஷூவின் பொருட்கள் ஒவ்வொன்றாக ஆராய்ந்தான். அதில் சில புத்தகங்கள் அடுக்கடுக்காக அங்கே ஒரு அலுமாரியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.


அதில் ஒவ்வொன்றாக எடுத்து எடுத்துப் பார்க்க, ஒரு புத்தகத்தின் அடியில் டயரி ஒன்று அகப்பட்டது. அது அவளது டயரியாக இருக்கும் என்று நினைத்து, வைக்க முனைய, என்ன நினைத்தானோ அதை தன்னோடு எடுத்துச் செல்ல வைத்துக் கொண்டான். அடுத்தடுத்து ஒவ்வொரு இடமாக தேடியவன் வைஷூ அன்று எடுத்துச் சென்ற பையைப் பிரித்து பொருட்களைக் கொட்ட அதில் எதுவுமே கிடைக்கவில்லை.


கௌதம், "இதுல இருக்கும்னு சொன்னானே? இல்லையே" என்று யோசணை செய்தவன், அங்கிருக்கும் மற்ற பைகளையும் ஆராய அதிலுமே எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்தவன் கட்டிலில் அமர்ந்தான்.


வெகு நேரம் கழித்து யாதவின் வீட்டை அடைந்தனர் அனைவருமே. வைஷூவை மருமகளைப் போன்று வரவேற்காது, விருந்தினராய் அழைக்க அவளுக்கு மனம் வலித்தாலும் சிறு புன்னகையோடு அதை கடந்து போனாள்.


யாதவிற்கு இதைப் பார்த்து கோபம் வந்தாலும் அமைதியைக் கடைப் பிடித்தவன், அவளை தனது அறைக்கு அழைத்துச் சென்றான். அவள் நுழைந்ததுமே அணைத்துக் கொண்டவன், "எக்சாம் எப்படி பண்ண?" என்று வினவ, "நல்லா பண்ணேன் அத்தான். உங்க உடம்பு எப்படி இருக்கு?" என்று வினவினாள்.


யாதவ், "இப்போ நல்லா இருக்கேன். நீ போய் பிரஷ்ஷாகி வா. சாப்பிடலாம்" என்று கூற அவளுமே குளித்து வெளியே வந்தாள். அவள் தன் கூந்தலை கண்ணாடியைப் பார்த்து துவட்ட, யாதவ், "நீ இங்கே கடைசியா எப்போ வந்த?" என்று கேட்க, "உங்களுக்கும் வசு அக்காவுக்கும் நிச்சயம் நடந்த நாள். ஆனால் நிச்சயத்தை என்னால பார்க்க முடியல்லை. கடவுள் அதை அன்னிக்கு தடுத்து நிறுத்தி இருந்தாரு" என்றாள்.


யாதவ், "ஏன் நிச்சயத்தை நீ பார்க்க இல்லை?" என்று புருவம் சுருக்கி வினவியவாறே, அவள் பின்னே வந்து நிற்க, "நான் இங்கே வரவே லேட் ஆச்சு. அன்னிக்கு நான் இங்கே வர பஸ் ஸ்டேஷனுக்கு போனேன். அப்போ ஒரு பொண்ணு ஓடி வந்தா. அவளைப் பார்க்கும் போது யாரோ அவளை துரத்திட்டு வந்த மாதிரி இருந்தது.


அவ ஓடி வந்து ரோட் குரோஸ் பண்ணும் போது ஒரு வேன் பிரேக் பிடிக்க முடியாமல் அந்த பொண்ணை இடிச்சிருச்சு. அந்த பொண்ணு தூர வீசி விழுந்துட்டா. நான் அந்த பொண்ணை பார்க்க போனப்போ, என்னைப் போலவே இன்னொரு பொண்ணும் அக்சிடன்ட் ஆன பொண்ணை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண முயற்சி பண்ணி அவளை ஹாஸ்பிடலுக்கும் கூட்டிட்டு போனோம்.


அக்சிடன்ட் ஆன பொண்ணு ஏதோ சொல்ல வந்தா அத்தான். எனக்குப் புரியல்லை. மத்த பொண்ணுக்குமே ஒன்னும் புரியல்லை. அவ ஆபரேஷன் ரூமுக்கு போகாமல் எதையோ சொல்ல அடம்பிடிச்சா. மூச்சு வாங்க ரொம்ப கஷ்டபட்டா. அதே நேரம் நர்ஸ் கூப்பிடவும் நான் போயிட்டேன். அக்சிடன்ட் ஆன பொண்ணு கூட மத்த பொண்ணு தான் இருந்தா.


நான் நர்சை பார்த்துட்டு, அக்சிடன் ஆன பொண்ணோட பர்கை மத்த பொண்ணு கிட்ட கொடுத்ததும், எனக்கு அம்மா போன் பண்ணாங்க. அப்புறமா இரண்டு பேர் கிட்டவும் சொல்லிட்டு நான் அவசரமா இங்கே வந்துட்டேன். நான் சென்னைக்கு திரும்ப போனதும் அந்த அக்சிடன்ட் ஆன பொண்ணு இறந்து போயிட்டான்னு கேள்வி பட்டிச்சு" என்று கூற யாதவின் நெற்றியில் சிந்தனை முடிச்சுகள் விழ ஆரம்பித்தன.


அறையில் அங்குமிங்கும் அவன் நடக்க, வைஷூ தன் சிகையை வாரி அலங்கரித்து முடித்தாள். யாதவ் சிந்தனையோடு அறையை அளப்பதைப்பதைப் பார்த்தவள், "என்னாச்சு அத்தான்?" என்று வினவ, "ஒரு நிமிஷம் நவி" என்று நெற்றியை ஒரு விரலால் நீவி விட்டவன் இமை மூடி சிந்தித்து அவசரமாக தனது மொபைலை எடுத்து அவளிடம் வந்தான்.


அதில் இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து வைஷூவிடம் காட்டி, "இந்த பொண்ணு தான், உன் கூட ஆக்சிடன்ட் ஆன பொண்ணுக்கு உதவி பண்ணவளா?" என்றிட, "ஆமா அத்தான். இதே பொண்ணு தான். உங்களுக்கு இவங்களை தெரியுமா?" என்று எதிர்கேள்வி கேட்டாள். யாதவ் இறுகிய முகத்துடன், "ஆமா. இந்த பொண்ணு பேரு ஜெனி. அன்னிக்கு ஷாபிங் மோலுல வச்சு சூசைட் பண்ண பொண்ணு இவ தான்" என்றான்.


வைஷூ அதிர்ந்து, "என்ன?" என்று வினவ, அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் யாதவ். அதே நேரம் கௌதமிடமிருந்து அழைப்பு வர, "ஒரு நிமிஷம் இரு நவி வரேன். எதையும் யோசி்காமல் ரிலேக்சா இரு" என்று கூறி சற்று தள்ளிச் சென்று அழைப்பை ஏற்றான்.


அதில் கௌதம் கூறியதைக் கேட்டவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அனைத்திலுமே வைஷ்ணவி அவளறியாமலேயே அதற்குள் நுழைந்து ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தப்பட்டு இருக்கிறாள் என்பது அவனுக்குத் தெளிவாகப் புரிய சில விடயங்களைப் பேசி அழைப்பைத் துண்டித்தான்.


வைஷ்ணவி, "ஏதாவது பிரச்சனையா அத்தான்?" என்று பாவமாய் கேட்டிட, "ஒன்னும் இல்லை. எங்க கேஸ் விஷயமா பேசிட்டு இருந்தோம். வா சாப்பிடலாம்" என்று அவளை அழைத்துச் சென்று அவளோடு சாப்பிட்டான். அன்றைய தினம் அவனது வீட்டில் அமைதியாக நாள் கழிய அடுத்த நாள் சாத்விக்கும் புன் சிரிப்போடு யாதவின் வீட்டை வந்தடைந்தான்.


அவனை அனைவருமே சந்தோஷமாக வரவேற்க, யாதவும், நகுலும் அவனை ஆரத்தழுவி வரவேற்றனர். அனைவருமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது சாத்விக், "வைஷூ, உனக்கு மேலே மேலே படிக்கிற ஐடியா இருக்கா?" என திடீரென கேள்வியை எழுப்ப, அவள் பதில் கூறும் முன்னே அவளுடைய தாய் பானுமதி, "இவளோ படிக்க வச்சதால தான் இப்படி போயிட்டா. இன்னும் படிச்சால் என்ன எல்லாம் பண்ணுவாளோ" என்றார் மகள் தன்னை விட்டு சென்று விட்டாளே என்ற கோபத்தோடு.


இதைக் கேட்ட வைஷூவின் கண்களில் முணுக்கென்று கண்ணீர் விழ, யாதவ் கோபத்தில் எழுந்து நின்று, "சரி அவ என்ன தப்பு பண்ணிட்டா?" என்றான் அழுத்தமாக. யாதவின் தாயும், "ஏன் உனக்கு தெரியாதா?" என்று கேட்க, யாதவ் பதில் அளிக்கும் முன் இடைப் புகுந்தான் சாத்விக்.


சாத்விக், "அவ தப்பு பண்ணவே இல்லை ஆன்டி. அவளுக்கும், மித்ரனுக்கும் கல்யாணம் நடக்க காரணமே வசுமதி தான்" என்று உரைக்க அங்கிருந்தோருக்கு ஒன்றுமே புரியவில்லை. கார்திக், "இனிமேலும் உன் வரட்டு பிடிவாதத்தை விடு மித்ரன். நீ உண்மை சொல்லாமல் மறைக்கிறது வைஷூவை தான் காயப்படுத்தும்" என்றான்.


யாதவும் வைஷூவின் அருகில் சென்று அவளின் கரத்தோடு கரம் கோர்த்துக் கொண்டவன் அன்று நடந்ததைக் கூற ஆரம்பித்தான்.


"அன்னிக்கு நைட் ராத்திரி ஒரு மணி போல கௌதம் கூட கடைசியா பேசிட்டு என் ரூமுக்கு போனேன். எனக்கு தூக்கம் வரவே இல்லை. அதனால மொட்ட மாடிக்கு போய் வானத்தை இரசிச்சிட்டு இருந்தேன். நேரம் போனதே எனக்கு தெரியல்லை. அப்போ தான் நவி சாரில நகையையும் போட்டுகிட்டு தனியா யாரும் பார்க்காத போல பயந்து பயந்து நடந்து போறதை பார்த்தேன்.


அவ முகத்துல அப்பாட்டமான பயம் தெரிஞ்சது. எனக்கு ஏதோ சரியில்லைன்னு தோணூச்சு. நவியன ஃபோலோ பண்ண சொல்லி கௌதம் கிட்ட சொல்ல தோண இல்லை. ஏன்னா நான் இங்கே வந்ததால அவன் தான் முழு வேலையையும் பார்த்துக்க வேண்டியதா இருந்தது. அவன் நேரம் கழிச்சு தான் தூங்கி இருப்பான்னு நான் அவளை ஃபோலோ பண்ணேன்.


அப்போ டைம் ஒரு நாலு முப்பது இருக்கும். வைஷூ அந்த வழியா வந்த ஒரு ஆட்டோல ஏறுரதை பார்த்ததும் நான் என் காரை எடுத்துட்டு அந்த ஆட்டோவை ஃபோலோ பண்ணி போனேன். அந்த ஆட்டோ ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு முன்னாடி நின்னிச்சு. அவ இறங்கி உள்ள போகவும் நானும் தூரமாவே அவளை பாரத்துட்டு ஃபோலோ பண்ணேன்.


அவ ஒரு ரூமுக்குள்ள போறதையும் பார்த்தேன். அவளை கண்காணிக்க அங்க ஒருத்தன் வெளியில நிற்கிறதையும் பார்த்தேன். எனக்கு ரொம்ப பெரிய தப்பு நடக்க போகுதுன்னு பொலிஸ் புத்தி சொல்லவும் எதையும் பார்க்காமல் வைஷூ போன ரூமுக்கே நானும் போனேன். நான் உள்ள போனதை வெளியே இருக்கவன் பார்க்கவே இல்லை..


அவன் கண்ணுல படாமல் உள்ள போனால் வைஷ்ணவி பயத்துல நின்னுட்டு இருந்தா. நான் அவளை கூப்பிடதும் அவ என்னைப் பார்த்து ரொம்ப ஷாக் ஆனா. இங்கே என்ன நடக்குதுன்னு கேட்கவும், முதல்ல சொல்லாதவ அடுத்ததா சொல்லும் போது தான் யாரோ ஒருத்தன் கதவை திறந்துட்டு போதையோட உள்ள வரதைப் பார்த்தேன். அது மட்டுமில்லாமல் கதவை வெளியே இருந்து லாக் பண்ற சத்தமும் கேட்டது.


நான் சுவர் பக்கம் நின்னுட்டு இருந்ததாலேயும், போதையில இருந்ததாலேயும் என்னை அவன் கவனிக்க இல்லை. அவன் வைஷூ கிட்ட தப்பா நடக்க பார்த்ததும் நான் அடிச்ச ஒரு அடியிலேயே மயங்கிட்டான். நவி கிட்ட மறுபடியும் சத்தம் போட்டு கேட்கவும் தான் உண்மையை சொன்னா.


வசுமதியையும், அவன் கிளாஸ் பொண்ணுங்களையும் மினிஸ்டரோட பையன் ரொம்ப அசிங்கமா வர்ணிச்சு இருக்கான். அதுக்கு வசுமதி அவனை தண்டிக்கிறேங்குற பேருல கிளாஸ்ல அவனை எழுப்பி முன்னாடி கூப்பிட்டு எல்லோர் முன்னாடியும் அரைஞ்சிருக்கா.


அவன் வசுமதியால அவமானப்பட்டதால அவளை பழிவாங்க நேரம் பார்த்து இருந்து இருக்கான். அவளுக்கு கல்யாணம்னு கேள்வி பட்டதும், அவளோட மொபைலுக்கு நாலு மணி போல போன் பண்ண அந்த நேரம் வசுமதி பாத்ரூமுக்குள்ள இருக்க, போனை நவி ஆன்சர் பண்ணி இருக்கா.


அந்த போனை பண்ணது மினிஸ்டரோட பையன் தான். உன்னோட ஒரு வீடியோ இருக்கிறதாவும், அது வேணூன்னா இப்போவே ஹோட்டலுக்கு யாருக்கும் தெரியாமல் வரனும்னும், இல்லைன்னா நாளைக்கு காலையில இதை நெட்டுல போடுவேன்னும் சொல்லி போனை கட் பண்ணிருக்கான்.


இந்த மேடமும் அக்கா வாழ்க்கைக்காக எதையுமே யோசிக்காமல், யார் கிட்டேயும் சொல்லாமல் அந்த ஹோட்டலுக்கு வந்திருக்கா. அது மட்டும் இல்லாமல் ஐந்து முப்பதை போல பொலிஸ் ஹோட்டலுக்கு வர ஆரம்பிச்சது, அது மட்டுமில்லாமல் மீடியாவுமே வெளியே இருந்தது. கமிஷனரும் வாரதைப் பார்த்து நான் உடனே அவருக்கு போன் பண்ணேன்.


அப்போ அவரு சொன்னது, இந்த ஹோட்டல்ல பிராத்தல் நடக்குறதா நியூஸ் வந்திருக்கு. பெரிய தலங்களும் இருக்கிறதால, நானே வர வேண்டியதா போச்சுன்னு சொன்னாரு. அப்போ தான் மினிஸ்டர் பையனோட பிளேனே எனக்கு புரிஞ்சது. வசுமதியை ஒரு விபச்சாரின்னு உலகத்துக்கு காட்டனும்னு நினைச்சு இருக்கான்.


ஆனால் இதுல மாட்டினது என்னமோ வைஷ்ணவி தான். இந்த ரூமுக்கு பொலிஸ் வந்தால் நிச்சயமா வைஷ்ணவியை பிராத்தல் கேஸ்ல அரெஸ்ட் பண்ணுவாங்கன்னு எனக்கு தெரியும். மயங்கி இருக்கிறவனை அங்கே இருக்கிற பெட்டுக்கு கீழே ஒளிச்சிட்டு நான் அடுத்து என்ன பண்ணனும்னு யோசிச்சேன்.


அப்போ தான் என் பர்சுக்குள்ள இருக்கிற தாலி நினைவு வந்தது. வைஷ்ணவியை இந்த கேஸ்ல இருந்து காப்பாத்தனும், அவளோட கௌரவத்தையும், மரியாதையையும் காப்பாத்த நான் அவளுக்கு தாலி கட்றதை தவிர வேற வழி இல்லைன்னு புரிஞ்சிது.


அவ கிட்ட இதை சொல்லவும், முடியவே முடியாதுன்னு சொன்னா. அக்காவுக்கு துரோகம் பண்ண மாட்டேன்னு சொன்னா. இப்போ நான் இவளுக்கு தாலி கட்டினால் மட்டும் தான் காப்பாத்த முடியும். வசுமதியைப் பத்தி யோசிச்சேன், நான் இல்லைன்னா இன்னொரு நல்ல வாழ்க்கை அவளுக்கு கிடைக்கும். ஆனால் வைஷ்ணவிக்கு இந்த பேரோட உலகத்துல வாழ முடியாது.


சோ அவளுக்கு தாலி கட்றதுன்னு முடிவெடுத்து, அவ கெஞ்சியும் நான் கேட்காமல் தாலியை கட்டினேன். அவ அழவும், கொஞ்ச நேரத்துலேயே பொலிஸ் ரூமை தாறந்து வர வைஷ்ணவியும் நானும் ரூம்ல இருந்ததைப் பார்த்து ஷாக் ஆகிட்டாங்க..கமிஷனருக்கும் ஷாக் தான்.


அவங்களை சமாளிக்க நான், எனக்கு வசுமதியை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னும், வைஷ்ணவியும் நானும் காதலிக்கிறோம். அதனால வீட்டை விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இவ வீட்டு ஆளுங்களை நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்கான்னும் சொன்னேன்.


முதல்ல நம்பாதவங்க அவ கழுத்துல இருந்த தாலியைப் பார்த்ததும் நம்பினாங்க. கமிஷனருக்கு நான் சொன்னது பொய்னு தெரியும். அங்கே உண்மையாவே நடந்த பிராத்தல் கேஸ்ல மாட்டி பட்டவங்களை அரெஸ்ட் பண்ணாங்க. உடனே நான் இதைப் பத்தின எந்த நியூசுமே வெளிய கசியகூடாதுன்னு எங்க ஆளுங்களுக்கு இன்ஃபொர்ம் பண்ணேன்.


கமிஷனர் எங்க ரூமுக்கு வந்து என்ன நடந்துன்னு கேட்கவும், நானும் எல்லா உண்மையை சொன்னேன்..அவரோட உதவியோட தான் அந்த ரூம்ல இருந்தவன் யாருக்கும் தெரியாமல் வெளியே போனான்; நாங்க இரண்டு பேரும் மீடியாவுக்கு தெரியாமல் அங்கிருந்து வெளியேறினோம்.


நவி மண்டபத்துக்கு வார வழி எல்லாமே, என்னை விட்ருங்க நான் எங்கேயாவது போறேன், நீங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்கொங்கன்னு அழுதா. ஆனால் என் வாழ்க்கையில ஒரு கல்யாணம் தான் அது நவி கூட நடக்க இருக்கனும்னு இருக்கு. சோ நடந்து முடிஞ்சிருச்சு.


இதை நாங்க மண்டபத்துல சொல்ல வரும் போது யாருமே கேட்க இல்லை. உங்க பாட்டுக்கு பேசிட்டே போறிங்க. நான் எதுக்கு பதில் சொல்லனும்னு அமைதியா இருந்தேன்" என்றான்.


வைஷ்ணவியிற்கு அன்றைய நாளின் தாக்கத்தினால் பயத்தில் இன்னுமே அவள் உடல் நடுங்க, தன் தோளோடு சேர்த்து யாதவ் அவளை அணைத்துக் கொள்ள இதைக் கேட்ட மற்றவர்கள் அதிர்ச்சியில் இமைக்க மறந்து சிலையானார்கள் என்றால், வசுமதியோ தன்னுடைய மிகப் பெரிய மடத்தனத்தை எண்ணி கீழே அமர்ந்தாள்.


விஷ்ணு ஆதரவாக அவளை தன்னோடு சாய்த்துக் கொள்ள யாதவின் பெற்றோர்களின் கண்ணில் இருந்தும், வைஷூவின் பெற்றவர்களின் கண்ணில் இருந்தும் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தன. தன் பிள்ளைகளை நம்பாது என்ன எல்லாம் பேசிவிட்டார்கள்? எத்தனை கொடுஞ் சொற்கள்? எத்தனை சாபங்கள்? என நினைக்கும் போதே மனம் கணத்தது அவர்களுக்கு.


வெகுநேரம் அழுதவர்கள் இருவரிடமும் மன்னிப்பை வேண்ட வைஷூ, "உங்களை மன்னிக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. என்னை விட வயசுல பெரியவங்க நீங்க. எனக்கு உங்க மேலே கோபம் இல்லை; வருத்தம் இருக்கு. இத்தனை வருஷம் என்னை வளர்த்தவங்களுக்கு துளியளவும் நம்பிக்கை இல்லையேன்னு.


பழைய மாதிரி என்னால இருக்க முடியுமான்னு கேட்டால் பதில் எனக்கு தெரியாது. ஆனால் நான் மாற முயற்சி பண்றேன். அது வரைக்கும் வற்புறுத்தாதிங்க" என்று உரைத்து ஏங்கி ஏங்கி அழ யாதவ் அவளை அணைத்துக் கொண்டான். யாதவ், "நான் சொல்ல வேண்டியதை நவியே சொல்லிட்டா. எங்களை மாறுங்கன்னு வற்புறுத்தாதிங்க" என்றான்.


விழிகளில் தளும்பி வழியும் நீரைத் துடைத்த வசுமதி, "என் மேலே அதிகமான பிழை இருக்கு. மன்னிப்புன்னு ஒரு வார்த்தை போதுமான்னு தெரியல்லை. அதை தவிர எனக்கு என்ன சொல்றதுன்னும் தெரியல்லை வைஷூ. என்னை மன்னிச்சிரு" என்று அழ அவளை அணைத்துக் கொண்டான் விஷ்ணு.


சாத்விக், "இந்த இடத்துலேயே எதுக்காக என்னை பழிவாங்கனும்னு நினைச்சன்னும், ஜெகனுக்கும் உனக்கும் என்ன
தொடர்புன்னும் மறைக்காமல் சொல்லு. இதான் உன்னை பத்தி தெரிஞ்சுக்க சரியான நேரம்" என்று உரைக்க, "உனக்கு எப்படி ஜெகனைப் பத்தி தெரியும்?" என்று வினவினான்.


சாத்விக், "நான் எஸ்.கே டா. என் கிட்ட இருந்து மறைக்கிறது ரொம்ப கஷ்டம்" என்று கண்சிமிட்டி சிறு புன்னகையைச் சிந்த, "நீ ராமைப் பத்தி என்ன நினைக்குற?" என்று சம்பந்தமே இல்லாத கேள்வியைக் கேட்டான். சாத்விக், "ரொம்ப சொஃப்டான பையன். சூது வாது எதுவுமே தெரியாத இனசனட் சோல்" என்றான்.


யாதவ், "அப்படி ஒருத்தனை பிளேன் பண்ணி, சூசைட் பண்ண வச்சால் என்ன பண்ணுவ?" என்றவனின் குரல் இறுகி கார்த்திக், "அப்போ..." என்று அதிர்வுடன் அவனுடைய முகத்தைப் பார்த்தான். "ராமைப் போல சேம் கரெக்டர் தான் ஜெகன். ரொம்ப அப்பாவி. அவனை பிளேன் பண்ணி சூசைட் பண்ண வச்சிட்டா அந்த ராட்சசி" என்றான் முகம் கங்கியபடி.


தனக்கும், ஜெகன், ஜெனி மூவருக்கும் இடையிலான நட்பை மொழிந்த யாதவ் பின், "நான் எங்க ஊருக்கு வந்ததும் அவன் காலேஜ்ல ஒரு பொண்ணு அவனை லவ் பண்றதா பின்னாடி சுத்திட்டு இருந்து இருக்கா. அவ பேரு தமன்னா. அவ ரொம்ப,அழகா இருப்பாளாம். அவனுக்கும் கொஞ்ச நாள் கழிச்சு அவளை புடிச்சு போய் டேட் பண்ண ஆரம்பிச்சாங்க.


ஈவன் அவ பூசுற நெயில் பொலிஷ் கூட அவன் செல்வு தான். அவ வீட்டுல பணப் பிரச்சனைன்னு சொல்லும் போதெல்லாம் பணத்தை அள்ளி கொடுத்தான். அவளுக்கு கண்ணுல தூசி விழுந்தால் கூட இவன் துடிச்சி போயிடுவான். லிசா அழுதாளே அவனுக்கு தாங்க முடியாது. என் கிட்ட போன் பண்ணி அழுவான்.


ஜெகனுக்கு லிசா இல்லாமல் வாழவே முடியாதுங்குற நிலமையில இருந்தான். கொஞ்ச நாளா அவன் ஒழுங்கா பேசவே இல்லை. நான் கூட காதல்ல பிசாயா இருக்கானோன்னு விட்டுட்டேன். அப்போ ஒரு நாள் இராத்தி ஒரு மணி இருக்கும். நான் படிச்சு முடிச்சிட்டு பல்கனியில இருந்தப்போ ஜெகன் வீடியோ கால் பண்ணான்.


அவளோ சொஃப்டா இருக்கிறவன் முகம் அழுதழுது வீங்கி போய் இருந்திச்சு. என்னடான்ன்னு கேட்டேன்; என்னை வேணான்னு சொல்லிட்டாடா. நான் அவளுக்கு வேணாமாம். என்னை செத்துப் போக சொல்லிட்டாடா. எனக்கு உயிரோட வாழவே விருப்பம் இல்லை.


என்னால தாங்க முடியல்லை மித்து, ரொம்ப ரொம்ப வலிக்குதடான்னு சொல்லி அழுதுட்டே என் கண்ணு முன்னாடியே நரம்பை அறுத்துட்டான்டா. அவனால சின்ன கீறலை கூட தாங்க முடியாது. அப்படிப்பட்டவன் இன்னிக்கு என் கண்ணு முன்னாடியே கையை கட் பண்ணிட்டு செத்து போயிட்டான். எனக்கு எப்படி இருந்திருக்கும்னு சொல்லு. ரொம்ப ரொம்ப வலிச்சது.


கண் முன்னாடி இரத்த வெள்ளத்துல மிதந்தது துடிதுடிச்சி உயிரை விட்டான். ஆனால் அவனோட உயிர் நண்பனா இருந்தும் என்னால எதுவுமே பண்ண முடியல்லை" என்றவனுக்கு துக்கம் தொண்டையை அடைக்க, சிறிது நேரம் அமைதி காத்தான்.


"அப்புறமா தான் அவன் சாவுக்கு ஞாயத்தை வாங்கா கொடுத்துட்டு தான் ஜெகன், ஜெனியை பார்க்க போகனும்னு நினைச்சேன். அதனால அவன் படிச்ச அதே காலேஜூக்கு சேர்ந்தேன். அங்கே என்ன நடந்ததுன்னு விசாரிக்கும் போது தான், லிசா அவளோட அழகை வச்சு பல பணக்கார பசங்களை ஏமாத்தி பணம் பறிக்கிறதாவும், அழகான பசங்களை காதலிச்சு ஏமாத்துறதாவும் தெரிய வந்தது.


அவ கண்ணுல படுறது போல நான் நடமாட, நான எதிர்பார்த்தது போலவே அவ என் பின்னாடி சுத்த ஆரம்பிச்சா. எனக்கு எரிச்சலா இருந்தாலும், எனக்கு பிடிச்சிருக்குன்னு காட்டிகிட்டேன். அவளைப் பத்தின சரியான எவிடன்சை எடுத்து பொலிஸ்ல பிடிச்சி கொடுக்கனும்னு நான் முன்னாடியே முடிவெடுத்து இருந்தேன்.


அவளும் ஒரு நாள் என் கிட்ட நெருக்கமா வர, எனக்கு ஜெகன் தான் கண்ணு முன்னாடி வந்தான். அந்த கோபத்துல தான், அவ கையை முறுக்கி ஜெகனைப் பத்தி சொல்லி அவ வாயால உண்மையை வர வைக்க முயற்சி பண்ணேன். அதே நேரம் அவ௲பேசுறதை ரெகோர்ட் பண்ண மொபைலையும் ஆன் பண்ணி பாகெட்டுல வச்சிருந்தேன்.


அப்போ அவளுக்கு பயம் வந்து, கத்த ஆரம்பிச்சா. நான் வாயை மூட அவளை என் பக்கம் இழுக்கும் போது, அதே நேரத்துக்கு நீ வந்த. நான் அவ கிட்ட தப்பா நடக்கப் பார்த்தன்னு அத்தனை பேரு முன்னாடியும் அடிச்ச. அவளும் அதுக்கு அப்புறமா ஆளே காணாமல் போயிட்டா.


அதை விட அவ வாயால வர இருந்த உண்மை உன்னால தான் வர இல்லைங்குற கோபம், என் ஜெகனுக்கு ஞாயத்தை கொடுக்க முடியல்லைங்குற வெறி உன்னை பழிவாங்க முடிவெடுக்க வச்சிது. உன்னை அடிச்சி விரட்டும் போது உனக்கு வலிச்சுதோ இல்லையோ ஆனால் எனக்கு வலிச்சதுடா. நீ இரத்தம் வடிய வடிய நடந்து போகும் போது என் ஜெகன் கண்ணு முன்னாடி வந்தான்.


உனக்கெரா நான் என்ன தான் பண்ணாலும், எனக்கு சில நேரங்களில் உன்னோட வழி பெரிசா தெரிஞ்சிருக்கு. உனக்கும், ஜெகனுக்கும் எந்தவித ஒற்றுமையோ, சம்பந்தமோ இல்லை ஆனால் நீ ஒவ்வொரு இடத்துலேயும் அவனை தான் ஞாபகப்படுத்துவ.


அன்னிக்கு இருந்து நான் லிசாவை தேடுறேன் கண்டுபிடிக்கவே முடியல்லை. அவளைத் தேடி ஆதாரம் எடுத்தாலும் அவ தப்பிக்க இதைப் போல இன்னொரு சிடுவேஷன் வராதுன்னு என்ன ஷூயர்? அதான் நானே பொலிஸாகனும்னு முடிவு எடுத்தேன். அவனுக்கு ஜஸ்டிஸ்சை தேடிக்கொடுக்கனும்னு இன்னிக்கு வரைக்கும் தேடுறேன் அவ எங்க இருக்கான்னே தெரியல்லை.


நீ மட்டும் வராமல் இருந்தால் அவளை நான் ஆதாரத்தோட பிடிச்சி இருப்பேன். என் ஜெகனுக்கு ஞாயத்தை வாங்கி கொடுத்து இருப்பேன்" என்றவனின் குரில் அன்றைய நாளில் இருந்த அதே கோபமும் வெறியும் நன்றாகவே தென்டபட்டது.


அங்கியுந்தோருக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. சாதவிக்கிடமும் பதில் இல்லை. அன்று என்ன நடந்தது என்றாவது கேட்டு இருக்காலாமே என இன்று தோன்ற, கார்திக் செய்த அதே தவறை தான் நீ மிதர்னிற்கு இழைத்துள்ளாய் என்று மனசாட்சி அடித்துக் கூற ஏதும் போச முடியாது மௌனம் காத்தான்.


கார்திக், "உன் இழப்பு புரியிது மித்ரன். ஆனால் நீ அவனை பழிவாங்க சனாவை உள்ள இழுத்து விட்டது தப்பு தான்" என்று கறாராகக் கூற, "அது உண்மை தான். என் மேலேயும் தப்பு இருக்கு. பழி வாங்கனும்ங்குற வெறி என்னை மறச்சிருச்சு. இப்போ யோசிக்கும் போது இதுக்கு ஒரு பழிவாங்கும் படலம் தேவையே இல்லையோன்னு தோண வைக்கிது" என்ற யாதவ் அனைவரின் முன்னிலையிலும் சனா, கார்திக், சாத்விக்கிடம் பகிரங்கமாக தலை தாழ்த்தி மன்னிப்பு வேண்டினான்.


சாத்விக்கும் அன்றைய நாளின் தவரிற்காக யாதவிடம் மன்னிப்புக் கேட்க இருபது நிமிடங்களாக அங்கே மன்னிப்புக் கேட்கும் படலமே நடந்தேறின. அதன் பின் இரகசியங்கள் உடைக்கப்பட நிலையில் அனைவரின் மனதுமே தெளிவானதாக இருந்தது.


அப்போதே யாதவ் வசுமதியைப் பார்த்து, "நான் உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும் வசு" என்று அழைக்க குடும்பத்தினர் அனைவருமே அவர்களை புரியாது பார்க்க யாதவ், வசுமதி இருவருமே மொட்டை மாடிக்குச் சென்றனர்.


வசுமதி, "என்ன பேசனும் மித்து மா..." என்று நிறுத்த, யாதவ் சிரிப்புடன், "என்னை மித்து மாமான்னே கூப்பிடு" என்றான். அவளுமே புன்னகைத்து, "சொல்லுங்க மித்து மாமா" என்று உரைக்க, "வசுமதி நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புறேன்" என்று மொழிந்தவன் தெளிவாய் இருக்கும் ஆகாயத்தைப் பார்த்தான்.


வசுமதி அவன் முகம் பார்க்க, "நான் எதுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்டேன் தெரியுமா? நான் வளர்த்த பொண்ணு, என்னை நல்லா புரிஞ்சி வாழுவான்னு தான். ஆனால் அது பொய்னு நீ நிரூபிச்ச நிச்சயம் அன்னிக்கு. அத்தனை பேருமே என்னை தப்பு சொல்லும் போது, 'என் மித்து மாமா அப்படி பண்ணால் ஒரு காரணம் இருக்கும்னு நீ சொல்லுவன்னு' உன்னையே பார்த்தேன்.


ஆனால் நீ, மத்தவங்க சொல்றது உண்மை தானுங்குற வகையில என்னை குற்றவாளி போல பார்த்த. அதை இல்லைன்னு சொல்லாத. ஒரு பொலிஸ்காரன் பார்வையை வச்சே அதோட அர்தத்தை கண்டு பிடிச்சிருவான். எனக்கு அப்போவே நமக்கு பேசின கல்யாணத்துல விருப்பம் இல்லாமல் போயிருச்சு.


சின்ன வயசுல இருந்தே உன்னை எனக்கு பிடிக்கும். என் அத்தை பொண்ணா. ஆனால் நிச்சயத்துக்கு பிறகு என்னால என் வாழ்க்கையில ஒரு அங்கமா உன்னை பார்க்க முடியல்லை. அதுக்கு அப்புறமா எனக்கும், உனக்கும் கல்யாணம்னு சொன்னாலே ஒரு எரிச்சல்; ஒரு இறுக்கம் இருந்தது.


நம்ம கல்யாணத்தை பத்தி எல்லாரையும் வச்சு மறுபடியும் பேசும் போது வைஷ்ணவி என் மேலே ஏதாவது ஞாயம் இருக்கலாம்னு பேசினா. அவ பேசினது எனக்கே ஆச்சரியமா இருந்தது. அவ என் பக்கத்துல கூட வரமாட்டா. ஆனால் என் மேலே அவளுக்கு நம்பிக்கை இருந்து இருக்கு.


வீட்டுல உள்ள ஆளுங்க சொன்னாதால மட்டும் தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன். என் மனசுல ஒரு தடுமாற்றம் இருந்துட்டே இருந்தது. ஆனால் வைஷ்ணவிக்கு தாலி கட்டும் என் மனசு ரொம்ப அயைதியா, தெளிவா இருந்தது. உனக்கே தெரியும் வைஷ்ணவியை சின்ன வயசுல இருந்து எனக்கு பிடிக்கும்னு.


ஆனால் அவ என்னை பார்த்தாலே பயப்படுவா. எனக்கு அதை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது. மறுபடியும் அவ என் வாழ்க்கையில் என் மனைவியா வந்தப்போ என்னை அறியாமல் என் மனசு ரொம்ப சந்தோஷப்பட்டு இருக்கு. போகப் போக அவளை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது.


இப்போ என்னை விட அதிகமா நான் அவளை காதலிக்கிறேன். அவ இல்லைன்னா என் வாழ்க்கை உயிரில்லாத ஜடம் மாதிரி தான். உன்னை கல்யாணம் பண்ணி இருந்தால் நான் இயந்திர வாழ்க்கை வாழ்ந்திருப்பேனே தவிர உயிர்ப்பான வாழ்க்கையை வாழ்ந்து இருக்க மாட்டேன். உன் மேலே காதல் வந்திருக்காதுன்னு உறுதியா தெரியும்" என்று உரைத்து முடித்தான்.


முன்னைய வசுமதியாக இருந்தால் இவனுடைய பேச்சில் கலங்கிப் போயிருப்பாள். ஆனால் இங்கே இருப்பது விஷ்ணுவின் மனைவியும், காதலியுமான டாலி ஆயிற்றே!!! அதனால் அவன் கூறியதை ஏற்று வசுமதி பேச ஆரம்பித்தாள்.


வசுமதி, "நீங்க சொல்றது புரியிது மித்து மாமா. நமக்கு கல்யாணம் நடந்து இருந்தால் கிஷான் கூட வாழுற இந்த அழகான வாழ்க்கையை, என்னை ரொம்ப வருஷமா காதலிக்கிறவரை இழந்திருப்பேன்" என்று உணர்வுப் பூர்வமாக கூறியவள் விஷ்ணுவின் காதலை முழுவதையும் கூறினாள்.


"கடவுளுக்கு தெரியும் நமக்கு எது பெஸ்டுன்னு? அவரு எதை பண்ணாலும் ஒரு நல்லது இருக்கும்" என்று யாதவ் மொழிந்து, "எனிவேஸ், உன் லைஃபை பழசை மறந்துட்டு விஷ்ணு கூட சந்தோஷமா வாழு" என்று மனதார வாழ்த்தினான்.


வசுமதி சிரித்தவள், "நீங்களும் தான்" என்று கூறி, "உங்க பொன்டாட்டி கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு. நீங்களும் பக்கத்துல இருந்தால் நல்லா இருக்கும்" என்று கூற அவனுமே வசுமதியோடு கீழே சென்றான்.


வரவேற்பரையில் அனைவருமே இவர்களுக்காக காத்திருக்க வைஷ்ணவி மாத்திரம் அறைக்கு சென்று இருந்தாள். இருவரின் முகத்திலும் இருந்த தெளிவைப் பார்த்த அனைவருமே சந்தோஷமடைய, வந்த இருவருமே நேரடியாக வைஷ்ணவி இருந்த அறைக்குள் நுழைந்துக் கொண்டனர்.


அவள் யன்னலின் வெளியே பார்வையைப் பதித்து இருக்க, உள்ளே வந்த வசுமதி, "வைஷ்ணவி" என்று அழைத்தாள். வைஷூவும் திரும்பிப் பார்க்க, "நேரா விஷயத்துக்கு வரேன். சின்ன வயசுல இருந்து மித்து மாமாவை எனக்கு பிடிக்கும். நீ பிறந்த அப்புறமா மித்து மாமா என்னை விட்டு போயிருவாறோங்குற பயத்துல தான் மித்து மாமாவை வச்சு உன்னை பயமுறுத்துவேன்.


அப்போ தானே நீ அவர் கிட்ட போக மாட்ட, மித்து மாமாவும் என் மேலே மட்டும் பாசத்தைக் காட்டுவாருன்னு நான் பண்ண முட்டாள் தனமான வேலைகள் தான் மித்து மாமான்னு சொன்னாலே உன்னை பயமுறுத்த வச்சது. ஆனால் உனக்கு தான் மித்து மாமான்னு கடவுள் எழுதி இருக்காரு போல.


அதான் உனக்கே உனக்கு சொந்தமா உன் புருஷனாவே உன் கிட்ட வந்து சேர்ந்துட்டாரு. நான் பண்ண வேலைகளுக்கு என்னை மன்னிச்சிரு. என்ட், நான் மித்து மாமான்னு கூப்பிடுறதை மாத்த மாட்டேன். அவரு எனக்கு எப்போவுமே மித்து மாமா தான். நீ அவரோட பொன்டாட்டி தான்; விஷ்ணு என் புருஷன் தான். இதுல எந்தவித மாற்றமுமே இல்லை" என்று உரைத்து சிரிப்புடன் வெளியேறினாள் வசுமதி.


வைஷ்ணவி விழிநீர் தளும்ப யாதவைப் பார்க்க, அவனும் கண்கள் கலங்க அவளைத்தான் பார்த்தான். அவள் அதற்கு மேல் தாமதியாது ஓடி வந்தவள், அவனை அணைத்துக் கொள்ள யாதவுமே அவளை இறுக அணைத்துக் கொண்டான்..


காஞ்சனா - நகுல் திருமணமன்று அவர்களின் திருமணத்தை நிறுத்துவதற்காக அஞ்சலியால் சனா கடத்தப்பட்டாள்.


தொடரும்...

உங்க கமென்சுக்கு ரிப்ளை பண்ணவே முடியவே இல்லை. சொரி். அடுத்த அப்டேட்டை நான் ஞாயிறு போடுறேன். இன்னும் மூன்று பகுதியோட கதை இனிதே நிறைவடையும்.


கருத்துக்களைப் பகிர,



 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்சிமிட்டும் தென்றலே pre final


அத்தியாயம் 37



வைஷூ ஓடி வந்து யாதவை அணைத்துக் கொள்ள, அவனுமே வைஷூவை இறுக அணைத்துக் கொண்டான். இருவரின் கண்களுமே கரித்து கண்ணீரை வெளியேற்றின.


வெகுநேரம் ஒருவரின் அணைப்பில் ஒருவர் இருக்க, "சாரி அத்தான். அக்கா சொன்னதுக்காக இல்லாமல், நானாவது ஒழுங்கா பேசி இருக்கனும். உங்களை பார்த்து நான் பயந்தது கஷ்டமா இருந்திச்சா?" என்று அவள் நாடியை அவன் மார்பில் பதித்து வினவ, "கஷ்டமா தான் இருந்திச்சு" என்று நெற்றியில் முத்தமிட்டு பேச ஆரம்பித்தான்.


"சின்ன வயசுல இருந்து உன்னை எனக்கு பிடிக்கும். ஆனால் நீ என்னை பார்த்து பயப்படும் போது ரொம்ப ரொம்ப வலிக்கும் நவி. நீ அண௲ணா கூட பாசமா இருக்கிறதைப் பார்த்து எனக்கே பொறாமையா இருக்கும். அதே போல என் கூடவும் பேச மாட்டியான்னு?


நீ என்னை பார்த்து பயபடுறது, தூரமா போனது எல்லாமே எனக்கு உன் மேலே கோபத்தை கொடுக்கும். அதான் நீ என்னை பார்த்து பயப்படும் போதெல்லாம் உன்னை திட்டுவேன். அது உனக்கு வலிக்குதோ இல்லையோ எனக்கு ரொம்ப வலிக்கும்" என்று இரு கன்னங்களிலும் இதழ் பதித்து மேலும் தொடர்ந்தான்.


யாதவ், "உனக்கு ஆசையா நான் நவின்னு செல்ல பேர் வச்சிக்கிட்டேன். அதான் கல்யாணத்துக்கு அப்புறமா அந்த பேருல உன்னை கூப்பிட ஆரம்பிச்சேன். உன் கழுத்துல தாலி கட்டினதுக்கு எனக்கு எந்த வித கில்டி ஃபீலிங்கும் இருக்க இல்லை. மனசு நிம்மதியா உணர்ந்திச்சு.


இதை நான் கௌதம் கிட்ட சொன்னப்போ அவன், 'நீ இழந்த நவியோட பாசத்தை கடவுள் உன் மனைவியா வர வச்சி வாழ்க்கை பூரா அனுபவிக்க அவளை உனக்கு கொடுத்துருக்காரு' அப்படின்னு சொன்னான்..அது உண்மை தான் போல நான் ஆசைப்பட்ட பாசத்தை ஒரு மனைவியா நீ எனக்கு கொடுக்குற" எனும் போதே கம்பீரமான அவனுடைய குரலும், விழிகளும் கலங்கிற்று.


வைஷூ, "சாரி அத்தான். எனக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது. சின்ன வயசுல இருந்தே உங்களை பார்த்தால் பயம். அது அப்படியே வளர வளர என் கூடவே வந்திருச்சு. அக்கா கல்யாணத்தப்போ கூட நீங்க இருக்கிற இடத்துல இருக்கவே கூடாதுன்னு நினைச்சி இருக்கேன்.


ஆனால், உங்களையே கல்யாணம் பண்ணுவேன்னு நான் நினைச்சு கூட பார்த்தது இல்லை. நீங்க தாலி கட்டினப்போ என் வாழ்க்கையை நினைச்சு பயமா இருந்தது. ஆனால் நான் பயப்படவே தேவை இல்லைன்னு ஒரு நல்ல புருஷனா நீங்க ஒவ்வொரு இடத்துலேயுமே நிரூபிச்சி நான் தப்புன்னு புரிய வச்சிங்க.


ஆனால் என்ன பண்ணாலும் உங்க மேலே இருந்த பயம் போக இல்லை. நான் சூசைட் அடெம்பட் பண்ணப்போ நீங்க துடிச்சி போயிட்டிங்கன்னு சொல்லும் போது தான் நான் எவளோ உங்களுக்கு முக்கியம்னு புரிஞ்சிது. அன்னிக்கு இருந்து ஏதோ ஒரு உரிமை உணர்வு உங்க மேலே.


அப்புறமா நிறைய நடந்தது. அத்தனனை சூழலையும் ஒரு தாய் பறவை கோழி குஞ்சை பாதுகாக்குறது போல என்னை உங்க சிறகுக்குள்ள மூடி வச்சிங்க. எனக்கு அது ஒவ்வொன்னுமே என் மனசுல சின்ன சின்ன தாக்கங்களை கொடுத்தது. அன்னிக்கு என்னை கடத்த வந்ததும் உங்க அணைப்புக்காக தான் ஏங்கினேன். உங்களை பார்க்க முடியாமல் போகுமோன்னு ரொம்ப பயந்துட்டேன் அத்தான்.


உங்க குரலே கேட்டதும் தான், எனக்கு ஏதோ சாதிச்சது போல இருந்தது..அந்த கத்தி வீசினதுல பட்ட காயம் எனக்கு வலிக்க இல்லை.உங்க கைக்குள்ள சேரனும்னு நான் தவிச்சப்போ என்னை பிடிச்சிங்களே அப்போ தான் நீங்க என் வாழ்க்கைக்கு எவளோ முக்கியம்னு எனக்கு புரிஞ்சது.


உங்களுக்கு அடிப்படிருச்சுன்னு சொன்னப்போ என் உயிரே போயிருச்சு. நீங்க இல்லாமல் என்னால ஒரு நிமிஷம் கூட என்னால வாழ முடியாதுன்னு என் புத்தி எனக்கு ஆணி அடிச்சி சொல்லிச்சு. ஆனால் அதை சொல்ல நீங்க இல்லையே. நான் உங்களை காதலிக்கிறேன்னு சொல்ல பக்கத்துல நீங்க இல்லை.


உங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா நானும் உங்க கூட வந்துருவேன்னு தான் முடிவு எடுத்து இருந்தேன். ஆனால் நாம சேர்ந்து வாழனும்னு கடவுளே முடிவு எடுத்து இருந்தாரு போல. என் கிட்டவே திருப்பி வந்து சேர்ந்திங்க. உங்க கிட்ட என் மனசை சொல்லனும்னு நினைச்சாலே எனக்கு ஏதோ ஒரு பயம் இருந்தது.


அடுத்து எக்சாம் பிசி, நீங்க ஊருக்கு வந்ததால எனக்கு எதுவும் பேச முடியல்லை. இங்கே வந்ததும் பிரச்சனை, சரி அப்புறமா சொல்லனும்னு பார்த்தால் எல்லா உண்மையும் தெரிஞ்சது. நீங்க அக்கா கூட பேசனும்னு சொன்னப்போ, எங்க அக்கா மறுபடியும் உங்களை கேட்டுருவாளோன்னு பயத்துல தான் நான் ரூமுக்கு வந்தேன்.


அவ அப்படி கேட்டால், அவ கால்ல விழுந்தாவது உங்களை எனக்கு விட்டுக் கொடுன்னு கேட்டிருப்பேன். என்னால் உங்களை இன்னொருத்தருக்கு விட்டுக் கொடுக்கவோ; உங்களை இழக்கவோ முடியாது அத்தான்" என்று மொழிந்து ஏங்கி ஏங்கி அழ, அவளது செவ்வரளி இதழ்களை தன் முரட்டு இதழ்களால் மூடி அவளை ஆறுதல்படுத்தினான்.


வெகு நேரம் அம்முத்தம் நீடிக்க, அவள் மூச்சுக்கு திணறுவதை உணர்ந்து அவளிடம் இருந்து பிரிந்த யாதவ், "லூசுப் பொன்டாட்டி. நான் உன் புருஷன் டி. இன்னொருத்தி கிட்ட நீ எதுக்காக கெஞ்சனும்?" என்று உரைத்து மூக்கோடு மூக்கை உரசினான்.


அப்போதும் அவள் விழிகளில் இருந்து, நீர் தளும்பி வழிய அதை இதழ்களாலேயே துடைத்து, "உன்னைப் போல தான் நானும். உன்னை எப்போ இருந்து காதலிக்கிறேன்னு எனக்கு தெரியாது" என்று தான் காதலை உணர்ந்து கொண்ட தருணத்தை கூறி முடித்தான்.


வைஷூ அழகாய் இதழ்விரியப் புன்னகைக்க, அவளது மதி முகத்தையே சிறிது நேரம் இரசித்தவன் அவளை தன்னோடு மேலும் இறுக்கி அவள் முகத்தில் முத்த ஊர்வலத்தை ஆரம்பித்தவன் அவள் இதழில் முடித்தான்.


யாதவ், "என் நவி எனக்கு இப்போவே வேணூம்" என்று அவள் விழிகளைப் பார்த்து உரைக்க, வெட்கம் மேலிட்ட வைஷூ கீழே குனிந்து, "ஆனால்..." என்க, "எனக்கு தேவையான பதில் ஒகேவா இல்லையா?" என்று வினவ கன்னங்கள் சிவக்க அவன் மார்பிலேயே முகம் புதைத்து தன் சம்மதத்தை தெரிவித்தாள்.


அதில் கர்வம் கொண்ட ஆணவன் அடைத்து இருந்த கதவிற்கு தாழ்ப்பாளை இட்டு பெண்ணவளை கட்டிலில் கிடத்தி, "நான் இழந்த குட்டி வைஷூவோட பாசம் எனக்கு திரும்ப வேணூம். அதுக்கு ஒரு குட்டி வைஷூவை எனக்கு கொடு" என்று அவள் செவிகளில் மீசை உரச கிசுகிசுக்க அப்பேதையோ தவித்துப் போனாள். அதன் பிறகு அங்கே பேச்சிற்கே இடம் இருக்கவில்லை.


இன்று ஆரம்பித்த அவர்களுடைய நல்வாழ்வு இறுதி வரை சிறப்பாக இருக்கட்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.


(ரொமேன்ஸ் கேட்டவங்களே? இது போதுமா? 🤭😉)


யாதவ், வைஷூவின் அறைக் கதவு மூடி இருந்ததால் அங்கிருந்தோர் எவருமே அவர்களைத் தொல்லைச் செய்யவில்லை. குடும்பத்தினரும், தோழர்களுமே அனைத்துமே நன்றாக நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டனர்.


வசுமதி வைஷூவோடு பேசி விட்டு சிரித்த முகத்தோடு வெளியே வர விஷ்ணு தடதடக்கும் இதயத்தோடு அவளைப் பார்த்தான். எங்கே உண்மை தெரிந்த பிறகு மித்ரனிடம் செல்ல தன்னிடம் விவாகரத்து கேட்பாளோ என்ற பயமே அவனுடைய நெஞ்சைக் கவ்வி இருந்தது.


வந்தவள் விஷ்ணுவைப் பார்த்து ஒற்றைக் கண் சிமிட்டி விட்டு இரவு உணவைத் தயாரிக்க சமையலறைக்குள் புகுந்து, "இன்னும் கொஞ்ச நேரம் தான் கிஷான் பையா" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். விஷ்ணுவோ அவளது நடவடிக்கையில், 'லூசாகிட்டாளா?' என்று பார்த்து தன்னை ஒரு முறை உதரி விட்டு அங்கிருந்து சென்றான் தனது அறைக்கு.


மற்ற ஜோடிகளுமே தங்களது அறைக்கு ஓய்வெடுக்கச் செல்ல பெரியவர்களோ, காஞ்சனாவை திருமணம் பேசிய பிறகே குடும்பத்தில் அனைத்துமே நல்லதாக நடக்கின்றன என்று அவளை தங்கள் வீட்டு மகாலக்ஷமியாகவே கருத ஆரம்பித்தனர்.


அன்று இரவு உணவாற்கு அனைவருமே ஒன்று கூட, யாதவும் வைஷூவுமே கலந்துக் கொண்டனர். சிறியவர்கள் மறைமுகமாக அவர்களை கலாய்க்க யாதவ் எப்போதும் போல் தன் உணர்வுகளை மறைத்து இருந்தாலும் இடையிடையே சிறு புன்னகை வந்து செல்ல, வைஷூ செம்மையுறும் தன் கன்னங்களை மறைக்கப்படாதபாடு பட்டாள்.


இவ்வாறு சிறியவர்களின் கலகலப்போடு இரவு உணவு முடிய யாதவிற்கு கௌதமிடமிருந்து அழைப்பு வர சிறிது நேரம் பேசியவன் அழைப்பைத் துண்டித்தான். பின்னர் யாதவ், சாத்விக்,கார்திக், நகுல், விஷ்ணு அனைவருமே மொட்டை மாடியில் ஒன்று கூடினர்.


அனைவருமே சில விடயங்களைப் பற்றி விவாதித்து, திருமண ஏற்பாடுகளையும் கவனிக்கத் திட்டமிடடனர். அதனையடுத்து சிறிது நேரம் வளவளத்து விட்டு இரவு பன்னிரெண்டை நெருங்கும் போது அவரவர்கள் தங்களது அறைக்குச் சென்றனர்.


விஷ்ணு தனது அறைக்குள் நுழைய வசுமதி குளியலறையில் குளிக்கும் சத்தம் கேட்டது. அமைதியாக வந்தவன் கட்டிலில் சாய்ந்து, 'இந்த நேரத்துல எதுக்கு குளிக்குறா?' என நினைக்க, 'நமக்கேது வம்பு!' என மறுபுறம் திரும்பி இமை மூடினான். வசுமதியும் குளித்து வந்தவள் விஷ்ணுவிற்கு அருகில் இருக்கும் இடத்தில் படுத்தவாறே தன் மொபைலை நோண்டினாள்.


விஷ்ணுவும் அதைக் கவனித்தாலும் இமை திறக்காது இருக்க, மொபைல் சில நிமிடங்களில் நேரம் இரவு பன்னிரெண்டு என்பதைக் காட்ட, ஒரு சிரிப்புடன் படுத்தவள் விஷ்ணுவை பின்னிருந்து அணைத்தாள். தண்மை பொருந்திய கரங்கள் தன் வயிற்றுப் பகுதியை அணைத்ததில் சில்லென்று உணர்ந்தவன் இமை திறக்க, வசுமதி அவனை அணைத்திருப்பதைப் பார்த்து அதிரந்தான்.


"மதி.." என்பதைத் தவிர அவனுக்கு வார்த்தைகள் பேச நா எழவில்லை. புன்னகையோடு அவன் காதில் தன் இதழ் உரச, "ஹேப்பி பர்த் டே மை டியர் கிஷான் புருஷா" என்று கிசுகிசுக்க விஷ்ணுவிற்கோ ஒரு புறம் இன்ப அதிர்ச்சியாகவும், இன்னொரு புறம் அவஸ்தையாகவும் இருந்தது.


அப்போதுமே அவனிடம் இருந்து "மதி" என்ற வார்த்தையை தவிர வேறேதும் இருக்கவில்லை. அவனை எழுப்பி அமர வைத்தவள் விளக்கை ஒளிர்விக்க, விஷ்ணு இவளிற்காக ஆசையாக வாங்கி வைத்திருந்த மாம்பழ நிற ஷிபான் சேலை அணிந்து கழுத்தில் அவன் அணிவித்த மாங்கல்யம் மட்டுமே இருக்க, நெற்றியில் குங்கும், பொட்டு, விரலில் மோதிரம், கால்களில் கொழுசு அணிந்து தேவதையாக இருந்தாள்.


விஷ்ணு பேச்சற்று அவளையே பிரம்மித்துப் பார்க்க அவன் முன்னேயே அலுமாரியைத் திறந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தாள். அதை எடுத்து திறந்தவள் ஒற்றைக் காலை மடக்கி கீழே அமர்ந்து அப் பெட்டியை நீட்டியவாறு, "நான் நீங்க நினைச்ச டாலி இல்லை. ஆனால் நான் உங்க டாலி தான். இந்த டாலி நிறைய தப்பு பண்ணவ. பர்ஃபெக்ட் ஆனவ இல்லை.


இன்னொருத்தரை காதலிச்சவ தான். ஆனால் இப்போ அவளை உயிருக்குயிரா காதலிக்கிற அவ புருஷனை மட்டுமே மட்டும் நெஞ்சில சுமந்துட்டு இருக்கா. அவளோட காதலை ஏத்துப்பிங்களா?" என்று காதலில் கசிந்துருகி வினவ, கண்கள் கலங்க அவளைப் பார்த்த விஷ்ணு வசுவை இறுக அணைத்துக் கொண்டான்.


"நீ என் உயிருடி. என் வாழ்க்கையே நீ தான். உன் காதலை எப்படி ஏத்துக்காமல் இருப்பேன். ஐ லவ் யூ சோ மச் மதி... இல்லை என் டாலி" என்று உரைத்து நெற்றியில் இதழ்பதிக்க, "லவ் யூ சோ மச் கிஷான்" என்று அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.


காதலோடு சிறிது நேரம் அணைத்து இருந்தவர்கள் பின் விலகி வசு வழங்கிய அச்சிறிய பெட்டியில் உள்ள மோதிரங்களில் ஆணுக்குரியதை வசு அணிவிக்க, பெண்ணுக்குரியதை விஷ்ணு அவளுக்கு அணிவித்தான்.


இருவருமே ஓருவரை ஒருவர் பார்க்க விஷ்ணு தேவதையாய் இருக்கும் தன் டாலியின் இதழில் மூழ்க் அவளுமே அவனோடு ஒன்றிக் கொண்டாள். தூய காதலோடு இருக்கும் இருமனங்கள் காமம் எனும் பாடத்தைக் கற்று அழகான முறையில் தங்கள் வாழ்க்கையில் அடுத்த பாகத்தில் காலை எடுத்து வைத்தனர்.


அடுத்தநாளுமே அழகாய் புலர்ந்தன. அன்றைய நாளில் கௌதம், காவ்யா இருவருமே நகுல், காஞ்சனாவின் திருமணத்தைப் பார்க்க வந்தனர். அத்தோடு அனைத்து ஜோடிகளின் முகத்திலுமே மற்றைய நாட்களை விட தேஜஸ் நன்றாகவே தெரிந்தது. அனைவருமே மும்முரமாக நகுலின் திருமண வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர்.


காவ்யா, கௌதமை முழுக் குடும்பமுமே வரவேற்க, வைஷூ ஓடிச் சென்று காவ்யாவை "அண்ணி" என்று அணைத்துக் கொள்ள, "எப்படி இருக்கடா வைஷூ?" என்று ஆதூரமாய் தலைவருடிக் கேட்டாள். வைஷூ, "சூப்பரா இருக்கேன் அண்ணி. உள்ளவாங்க..அண்ணா உள்ள வாங்க" என்று சிறு பிள்ளையின் குதூகலத்தோடு அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள்.


யாதவ், "கமிஷனர் வர இல்லையா?" என்று வினவ, "அவரு கல்யாணத்துக்கு முன்னாடி நாள் வரன்னு சொன்னாரு" என்றான் கௌதம். அதன் பிறகு அனைவருமே கதை அளந்து சந்தோஷமாக இருக்க, சாத்விக்கிற்கு அன்றைய தினம் மொபைலுடனேயே கழிய கார்த்திக்கும் தொழிலை மொபைல் மூலமாகவே நடத்தினான். அவர்கள் இருவரையும் மற்றவர்கள் பெரும்பாலும் தொல்லை செய்யவில்லை.


இரண்டு நாட்களில் காஞ்சனாவை அழைத்துக் கொண்டு குடும்பத்தினர் வருகை தர இருப்பதால் சாத்விக், கார்திக், யாதவ் மூவருமே அவர்களுக்காக பாதுகாப்பை அதிகப்படுத்தி இருந்தனர். அன்றைய தினம் சந்தோஷத்தோடு முடிவடைய காலை நேரமும் வெய்யோனின் ஆசிர்வாதத்தோடு விடிந்தது.


நாளையே காஞ்சானவிற்கும், நகுலிற்குமான நிச்சயமும் அவளின் வருகையும் இருப்பதனால் வீட்டில் அனைவருமே சிறு சிறு கலாட்டாக்களுடனும், குதூகலத்துடனும் வேலை செய்ய அபி, சனா இருவருமே கர்பமாக இருப்பதால் சிறு சிறு உதவிகளைச் செய்ய ஆண்களுமே தீவிரமாக வேலையில் ஈடுப்பட்டனர்.


இதில் மினிஸ்டர் சத்தியமூர்த்தியும் அவரது குடும்பமும் இவர்களது திருமணமத்திற்கு முன்னைய யாதவின் ஊரில் உள்ள மிகப் பெரிய கோயிலுக்கு பூஜை செய்ய வருவதாகவும், அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற செய்தி கிடைக்க யாதவும், கௌதமும் அதன் வேலைகளிலுமே இருந்தனர்.


அஞ்சலி அன்று காலையில் வங்கிக்குச் சென்று வீட்டுத் தேவைக்காக பணம் எடுக்க முயன்ற போதே, அவளுடைய ஏ.டி.எம் கார்ட் தொழிற்பாட்டில் இல்லை என்று வர உடனடியாக வங்கியாளரை சந்திக்கச் சென்றாள். அஞ்சலி, "சார் என் கார்ட் எதுக்கு ஃபிரீஸ் ஆகி இருக்கு?" என்று வினவ, "ஒரு நிமிஷம்" என்று பார்த்தான்.


பின், "ஆமா மேம். உங்க கார்ட்டை ஃபீரிஸ் பண்ணி இருக்காங்க. ரீசனை கொடுக்க மறந்துட்டாங்க போல. நான் ஹயர் ஆபிசரை கன்டெக்ட் பண்ணி விசாரிக்கிறேன்" என்று உயர் அதிகாரிக்கு அழைத்து வினவினாலும், அவரிடம் இருந்தும் சரியான பதில் இல்லாது போக இது சாத்விக்கின் வேலை என்று நன்றாகவே புரிந்தது.


கோபமாக வெளியே வந்தவள் நடந்து ஆட்டோ ஒன்றை எடுக்கச் செல்ல, அப்போது ஓடி வந்த சிறுவன் அவள் கையிலிருந்த பர்ஸை பறித்து அங்கிருந்து ஓடி மறைந்தான். "திருடன் பிடிங்க" என்று அவள் கத்தியும், அங்கிருந்தோர் துரத்தியுமே அவர்களால் அத்திருடனைப் பிடிக்க முடியவில்லை.


ஆட்டாவிலும் போகவதற்கு காசு இன்மையால் நடந்தே வீட்டிற்கு வந்து சேர்ந்தவள், உடனே கிஷோரிற்கு அழைத்து, "அந்த ப்ரவீன் என் ஏ.டி.எம் கார்டை ஃபிரீஸ் பண்ணிடான்" என்று கத்த, "சும்மா கத்தாத அஞ்சலி. உன் ஏ.டி.எம் கார்டை தான் ஃபீரீஸ் பண்ணி இருக்கான். ஆனால் ,அவன் என் பாஸ்போர்டையே புளொக் பண்ணி இருக்கான்" என்றான் குமறும் கோபத்துடன்.


அஞ்சலி, "அவனுக்கு உண்மை தெரிஞ்சு இருக்குமா?" என்று வினவ, "தெரியாது. இப்போ நான் வேற வழி ஏதாவது இருக்கான்னு பார்க்குறேன். இப்போ போனை வை" என்று அழைப்பைத் துண்டித்தான் கிஷோர். அஞ்சலியோ சாத்விக்கின் மீது கொலை வெறியில் அமர்ந்நு இருந்தாள்.


சாத்விக் மாலை நேரம் தன்னுடைய வேலையை முடித்து அவ் வூரிலேயே இருந்த அஞ்சலியைப் பார்க்கச் சென்றான். அஞ்சலியின் வீட்டிற்குச் சென்றவன் இளக்காரமான சிரிப்போடு, தான் அணிந்த செருப்பைக் கூட கழற்றாது தன் கூலரை கழற்றியவாறு அவள் வீட்டிற்குள் செல்ல, அஞ்சலியோ இந் நேரத்நில் அவனை எதிர்பார்கவில்லை என்பதை அவளுடைய முகமே கூறிற்று.


சாத்விக், "என்னாச்சு அஞ்சலி ரொம்ப இளச்சி போயிட்டியே? கையில காசு இல்லையா? நான் வேணூன.னா தரட்டுமா?" என்று எள்ளலாய் வினவ, "ஏய்" என்கிறினாள் அஞ்சலி. சாத்விக், "உனக்கெல்லாம் இனி இந்த சீன் இல்லை. அடங்கி தான் இருக்கனும்" என்று வன்மத்துடன் கூறியவன் நொடியில் தன் முகப் பாவனையை மாற்றிக் கொண்டான்.


"உன் கார்டை ஃபிரீஸ் பண்ணிட்டாங்களாம்; உன் அண்ணா பாஸ்போர்ட்டை புளொக் பண்ணிட்டாங்களாம்; அதுக்கும் மேலே இன்னிக்கு நயா பைசா கையில காசு இல்லாமல், ஆட்டோவும் பிடிக்காமல் நடு ரோட்டுல தனியா நடந்து வீட்டுக்கு வந்தியாமே" என்று அங்கங்காரத்துடன் உரைத்தவாறு சோஃபாவில் அமர்ந்து கால் மேல் கால் இட்டான்.


அஞ்சலி அதிர்வுடன், "அப்போ இதெல்லாம்...." என்க, "அப்சலியூட்லி யூ ஆர் ரைட் அத்தனையும் என் வேலை தான்" என்று கண்சிமிட்டிச் சிரித்தவன் எழுந்து அஞ்சலியை நெருங்கி சாத்விக், "கெட் ரெடி அஞ்சலி" என்று எள்ளலாய் மொழிந்தவன், அவள் கையில் சிலபத்திரங்களைக் காட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் அஞ்சலி.


அது எதுவெனில் நகுலனின் விவாகரத்தூப் பத்திரத்தோடு சில பத்திரங்களை சாத்விக்கின் ஆள் எடுத்துச் சென்ற அதே பத்திரங்கள். அதில் நகுல் வாங்கிய நிலம் அவன் பெயரிலேயே இருப்பதற்கான உண்மையான சான்றுப் பத்திரம். அன்று அஞ்சலியிடம் வழங்கியது போலிப் பத்திரமாகும்.


சாத்விக், "இன்னொரு விஷயம் தெரியுமா அஞ்சலி? உன்னோட புருஷன் சொரி சொரி எக்ஸ் புருஷனுக்கு இன்னும் இரண்டு நாளில் வேற ஒரு பொண்ணு கூட கல்யாணம் நடக்க போகுது. மறக்காமல் வந்திரு" என்று இளக்காரமாய் கூறி அவள் கையிலிருந்த பத்திரங்களை பறித்து எடுத்து, கூலரை மாட்டியவாறு வெளியேறினான்.


இத்தனை நேரமாக அதிர்ச்சியில் இருந்த அஞ்சலியின் முகம் குரூரமாய் மாறி, 'என்னைப் பத்தி உனக்கு முழுசா தெரியாது எஸ்.பி. பார்க்கலாம்' என்று இகழ்ச்சியில் உதடு சுளித்தாள்.


அடுத்த நாள் காஞ்சனாவின் வீட்டினர் அங்கிருந்து அதிகாலையிலேயே வருகை தர, வரும் வழியில் அவர்களின் காரைப் பின் தொடர்ந்தது இரு கார்கள். ஆம் அவர்களைக் கடத்துவதற்காக அஞ்சலி, கிஷோரினால் அனுப்பப்பட்ட ஆட்களே அவர்கள்.


சரியான நேரம் பார்த்து அவர்களைக் கடக்கக் காத்து இருந்து பின் தொடர, காஞ்சனாவின் வீட்டுக்காரிற்கும், கிஷோரின் ஆட்களின் காரிற்கும் இடையில் நுழைந்தது ஒரு கறுப்பு நிற பென்ஸ் கார். காஞ்சனாவின் குடும்பத்தினரை பத்திரமாக தங்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் அனுப்பிய அக்கார் மீண்டும் ரிவர்ஸ் எடுத்து கிஷோரின் ஆட்களின் காரிடம் செல்ல இதை எதிர்பார்க்காத கிஷோரின் ஆட்கள் ஸ்தம்பித்து நின்றனர்.


அதிலிருந்து ஸ்டைலாக இறங்கிய யாதவும், கார்திக்கும் அவர்களிடம் சென்று, "இந்த மாதிரி மொக்கையா ஏதும் பண்ணாமல் மாஸா ஏதாவது பண்ண சொல்லு" என்று சாத்விக் உரைக்க, "எங்க கை திறமையை நாங்களும் காட்டனும்ல?" என்றான் யாதவ்.


வந்திருந்தவர்களுக்கு யாதவ், சாத்விக்கின் தோரணையே எச்சிலை விழுங்க வைக்க யாதவ் அங்கிருந்தோர் அனைவரையுமே ஒரு முறை அழுத்தமாகப் பார்த்தவன், சாத்விக்கிடம், "நிச்சய வேலைகள் இருக்கு. அதை பார்க்க போலாம் ப்ரவீன்" என்று அவனை அழைத்துச் சென்றான்.


அதன் பின் 'மலமல' என நிச்சய வேலைகளும் நடந்தேற மாலை நேரம் அவர்களின் பெரிய கோயிலில் வைத்து இறுக்கப்பட்ட பாதுகாப்புடன் இனிதே நிச்சயத்தை முடித்து வைத்தனர். அதன் பின்னே காஞ்சனாவின் குடும்பத்தினர் அனைவருமே அங்கிருந்த ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட அவர்களுக்கு அவர்கள் அறியாமலேயே பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.


அன்றைய தினம் இவ்வாறு கழிய அடுத்த நாள் மினிஸ்டர் சத்திய மூர்த்தியும், அவரது குடும்பத்தினரும் வருகை தர இருந்ததால் யாதவ், கௌதம் இருவருமே அவர்களுக்கான வேலையில் இருந்தனர். அவர்களும் காலையில் பூஜையை முடித்து விட்டு, நாளை மாலை இங்கிருந்து செல்வதாக உரைக்க அது வரையிலும் இருக்கும் பாதுகாப்பு இவர்களுக்குப் பொறுப்பானது.


இருந்தும் நாளை நகுல் காஞ்சனாவின் திருமணம் என்பதால், ஒரு தம்பியாகவும் யாதவ் தன் கடமையை ஆற்ற மறக்கவில்லை. அதற்குள் நகுலனுக்கும், அஞ்சலிக்கும் மாலை வேளை மஞ்சள் பூச அப்போதே நேரடியாக ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


முதல் பார்வையில் ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகைக்க அந் நிகழ்வு முடிந்தவுடன் இருவரையும் தனியாகப் பேச அனுப்பி வைத்தனர் பெரியவர்கள். நகுல், "என்னைப் பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்" என்று கூற, "ஆமா. வைஷூ சொன்னா. உங்களுக்குமே என்னைப் பத்தி தெரிஞ்சிருக்கும்" என்றாள் காஞ்சனா.


நகுல், "நான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாலும், உங்களை ஏத்துக்க எனக்கு டைம் வேணூம்" என்று தன் மனதை மறையாது கூற, "நான் சொல்லனும்னு நினைச்சதை நீங்களே சொல்லிட்டிங்க. இரண்டு பேரோட எண்ணமும் ஒரே போல தான் இருக்கு" என்று அழகாய் சிரித்த காஞ்சனா, "நாம ஒருத்தரை ஒருத்தர் ஏத்துக்கும் வரைக்கும் ஃபிரன்சா இருக்கலாமே" என்று கரம் நீட்டினாள்.


அவனுமே சிரித்து, "ஃபிரன்ஸ்.. நோ மோர் ஃபொர்மலிடீஸ். நீங்க என்னை பேர் சொல்லியே கூப்பிடுறேன். நானும் உங்களை அப்பிடியே கூப்பிடுறேன்...." என்றவன், "உங்களை இல்லை உன்னை" என்று சிரிக்க காஞ்சனாவிற்கு அவனுடைய சாதாரண நட்புடன் கூடிய பேச்சும், குணமுமே பிடித்தது.


அதன் பிறகு இருவருமே சிறிது நேரம் தங்கள் வாழ்க்கையின் அனுபவங்களைப் பற்றியும், விருப்பு, வெறுப்புக்கள், ஆசைகள் என்பவற்றை நட்புடன் பேசி முடிய திருமணம் முடியும் வரையில் மீண்டும் இருவரும் பார்த்து, பேசக் கூடாது என்று கூறியதால் இருவருமே தனித் தனி வீட்டில் தங்க வைக்கப்பட்டனர்.


அடுத்த நாளுமே யாரிற்காகவும் நிற்காமல் விடிய நகுல் - காஞ்சனா வாழ்விற்கான முக்கிய நாளாக விடிந்தது அந்நாள். கமிஷனரும் அவரது குடும்பத்தோடு நேற்றைய இரவில் வந்து சேர் அனைவருக்கும் குதூகலமாக இருந்தது.


கோயிலில் வைத்தே திருமணம் என்பதனால் அங்கே திருமண ஏற்பாடுகளும் அதிகாலையில் இருந்தே மும்முரமாக நடந்தேற காஞ்சனாவும், நகுலும் மணக் கோலத்தில் தயாராகி கோயிலை அடைந்தனர். அனைத்து ஆண்களுமே வேஷ்டி, சட்டையில் கம்பீரமாக இருக்க பெண்களோ, பட்டுச் சேலையில் தேவதைகளாக வலம் வந்தனர்.


சனாவிற்கு களைப்பு அதிகமாக இருந்ததால் அவள் கோயிலின் குளக்கரையின் அருகே சாத்விக்கிடம் கூறி விட்டு ஓய்வாக அமர, வைஷூ அவளிடம் வந்தவள், "குடிக்க ஏதாவது கொடுக்கட்டுமா?" என்று வினவ, "சரிடா. தாகமா தான் இருக்கு" என்றாள்.


வைஷூ சென்று தண்ணீரை எடுத்து வந்து பார்க்க அங்கே சனா இருக்கவில்லை. தூரத்தில் எவரோ சனாவை தூக்கிச் செல்வது கண்ணில் பட அவர்களை துரத்தி ஓட ஒரு நிலையில் கால் இடறி கீழே விழுந்தாள். இவை அனைத்துமே கோயிலின் பின்புறம் நடந்தேறியதால் எவருக்கும் இது தெரியவில்லை.


சில நிமிடங்களில் சாத்விக் நகுலோடு பேசும் போது, அவனுக்கு அழைப்பு வர, அஞ்சலியின் இலக்கத்தைப் பார்த்து புருவம் சுருக்கி அழைப்பை ஏற்றான். "எஸ்.பி நீ பெரிய பிஸ்தாவாச்சே. உன் பொன்டாட்டியை தேடி பாரு அங்கே" என்று உரைக்க, உடனே சாத்விக்கும் தேட அங்கே சனா இருக்கவில்லை.


அஞ்சலி, "நீ எவளோ தேடினாலும் கிடைக்கமாட்டா. ஏன்னா, அவ இப்போ என் கையில இருக்கா. ஒழுங்கு மரியாதையா நகுலை அங்கிருந்து கூட்டிகிட்டு நீயும், அந்த யாதவும், கார்திக்கும் வந்து சேருங்க. நான் சொல்ற இடத்துக்கு. இல்லை, உன் பொன்டாட்டி, குழந்தை இரண்டு பேரும் உயிரோட இருக்க மாட்டாங்க ஜாக்கிரதை" என்று உரைத்து அழைப்பைத் துண்டித்தாள்.


சாத்விக் ஒன்றும் பேசாது அமைதியானவன், சிறிது நேரத்தில் நாயகன்களிடம் விடயத்தைக் கூற யாதவ், சாத்விக் , நகுல் மூவரும் புறப்படத் தயாரானார்கள். குடும்பமே கலங்கி நிற்க, யாதவ், "விஷ்ணு நீ இவிங்களைப் பார்த்துக்கோ" என்று உரைத்து நவியைத் தேடினான். அவள் வசுவோடு பத்துரமாகவே இருப்பாள் என நினைத்து அங்கிருந்து காரிற்குச் சென்றான்.


நகுல் குடும்பத்திடம் ஆறுதலைக் கூறியவன், கண்கள் கலங்க நிற்கும் கு காஞ்சனாவின் அருகில் வந்து, "இன்னிக்கு உனக்கும், எனக்கும் கல்யாணம் நடக்குறதை யாராலேயும் மாத்த முடியாது. தைரியமா இரு" என்று கூறி அங்கிருந்து சென்றான். கார்திக்கும் அபியையும், விசாலாட்சியையும் சமாதானம் செய்து அவர்களோடு சென்றான்.


மூவருமே அஞ்சலி கூறிய இடத்திற்கு வர, அங்கே இருபதுக்கும் மேற்பட்ட அடியாட்களோடு கிஷோரும், அஞ்சலியும், அவர்களோடு ஒரு வாலிபனும் இருந்தான். யாதவிற்கு அவனைப் பார்த்ததும் அடையாளம் தெரிய, இகழ்ச்சியாய் உதட்டைச் சுழித்துக் கொண்டான்.


அஞ்சலி, "இப்போ நீ என் கன்ட்ரோலுக்குள்ள சாத்விக். நான் சொல்றதை மட்டும் தான் நீ செய்யனும். இல்லை உன் பொன்டாட்டி உன் கண்ணு முன்னாடி செத்துருவா" என்று கொக்கரிக்க, சாத்விக் அமைதியாகவும், அழுத்தத்துடனும் அஞ்சலியையே பார்த்தான்.


யாதவ் தன்னைச் சுற்றி உள்ள ஆட்களைப் பார்க்க, கார்திக்கோ தங்ககையைப் பணயம் வைத்து விளையாடும் துரோகியுமான கிஷோரை கொலை வெறியில் முறைத்தான். கிஷோர், "என்னடா முறைக்கிற? நண்பன் துரோகியாகிட்டானேன்னா? நான் எப்போவுமே உனக்கு நண்பனா இருக்கவே இல்லை. துரோகியா தான் இருந்தேன்" என்று சிரித்தான்.


யாதவ், "இப்போ எல்லாரும் வில்லன் டயலோக் பேசிட்டாங்க. நீ ஏன் இன்னும் என்னைப் பார்த்து வில்லன் டயலோக் எதுவுமே பேச இல்லை. ஏன் பயமா?" என்று எள்ளல் சிரிப்புடன் வினவ, "யாருக்கு பயம்? எனக்கா?" என்று கேட்டவனின் குரல் யாதவின் அழுத்தமான பார்வை தாங்காது நடுங்கியது.


யாதவ் சிரித்து, "யம்மா அஞ்சலி இந்தா பாரு நகுலும் வந்திருக்கான். சாத்விக் என்ன பண்ணனும்னு சொல்லிட்டால், விஷயத்தை முடிச்சிட்டு நாங்களும் கிளம்புவோம்ல. ரொம்ப டயர்டா வேற இருக்கு டியூடி பார்த்து" என்று கையைத் தூக்கி நெட்டி முறிக்க நாயகன்களின் முகத்தில் புன்னகை இழையோடியது.


அஞ்சலி, "உங்க எல்லாருக்குமே முக்கியமானவ என் கையில மாட்டியும், உனக்கிருக்கிற கொழுப்பை பார்த்தியா?" என்று கத்தியவள், "ஒன்னும் வேணாம் சனா உயிரோட வேணூன்னா, கார்திக்கை சாத்விக் கொன்னுட்டு, அவனை அவனே சுட்டுக்கனும். அவங்க சவம் முன்னாடி நகுல் எனக்கு தாலி கட்டனும்" என்றாள் அகங்காரமாய். நகுலோ அவளை அருவெருப்புடன் பார்த்தான்.


கிஷோர், "அஞ்சலி சொல்றதை செய்யாமல் இருந்தால் உன் கண்ணு முன்னாடியே சனாவை கொன்றுவேன்" என்று சனாவை நோக்கிச் செல்ல, "தைரியமான ஆளா இருந்தால் அவ மேலே கையை வச்சிக் காட்டுடா" என சாத்விக்கிடமிருந்து ஒவ்வொரு வார்த்தைகளும், அழுத்தம் திருத்தமாக வெளிவந்தன.


ஏனோ அவனுடைய பேச்சை மீறி ஒரு அடி வைக்கவும் கிஷோருக்கு துணிவு இருக்கவில்லை. சாத்விக், "நீ எழுந்து என் பக்கம் வா பேபி. நானும் பார்க்குறேன் எவன் என்ன பண்றான்னு?" என்று உரைத்து சாத்விக் தன்னுடைய வேஷ்டியைக் கட்ட, சனா எழுந்து நடக்க ஆரம்பிக்க மற்ற எவருக்கும் துணிவு இல்லாத போதும், அஞ்சலி வெறியில் சனாவை அடிக்க வர சாத்விக் வேகமாக ஓடி வந்தவன் சனாவை தன் புறம் இழுத்து விட்டு அஞ்சலியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.


அஞ்சலி சுருண்டு விழ கிஷோர் முதல், அடியாட்களும் அவ்வாலிபனும். இவர்களைத் தாக்க வர, நாயகன்கள் நால்வருமே வேஷ்டியை தூக்கிக் கட்டி பந்தாட ஆரம்பித்தனர். யாதவ் தன்னை தாக்க வந்த இருவரின் கையை முறுக்கி வயிற்றிலேயே உதைய அவர்களின் வாயிலிருந்து இரத்தம் குபீரென வெளிவந்து.


சாத்விக், சனாவை ஒரு கையால் பாதுகாத்தவாறு, மற்றைய கையால் தன்னை நோக்கி வந்த ஒருவனின் முகத்திலேயே ஒரு குத்தை விட, அவனுடைய மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தது. கார்திக்கும், நகுலனும் உங்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று சண்டையிடும் வகையில் கிஷோரையும் மற்றவர்களையும் வெளுத்து வாங்க அஞ்சலி ஒரு கட்டையை எடுத்து வந்து சாத்விக்கின் பின் தலையிலேயே அடிக்க வர அழகாய் அதைத் தடுத்தான் அங்கே வந்த கௌதம்.


கௌதம், "என்ன அஞ்சலி முதுகுல குத்துற? அடிச்சால் முகத்துக்கு நேரா அடிக்கனும்" என்று ஓங்கி கன்னத்தில் அடிக்க அவள் விழவும் கிஷோர் வெறி கொண்டு எழுந்தவன் அவன் அருகில் சண்டையிட்ட கார்திக்கின் தலையில் தன் துப்பாக்கியை வைத்து, "எவனாவது அசைஞ்சாலும் இவனை கொன்னுடுவேன்" என்று கர்ஜித்தான்.


அனைவருமே அதே இடத்தில் நிற்க, "உங்க இரண்டு பேரோட குடும்பத்தால தான் என் சித்தி செத்தாங்க" என்று கத்தியதில் இடை வெட்டினான் நகுலன். "நானே உன் பழிவாங்குற படலத்துக்கான காரணத்தை சொல்றேன். உங்க அம்மாவோட தங்கிச்சி கலா, சாத்விக்கோட அப்பா, சனாவோட அப்பா எல்லாருமே ஒரு காலேஜூல படிச்சவங்க. அதுவும் உங்க சித்தி பேரழகு.


உங்க சித்தியை பல பேர் காதலிச்சாலும் உங்க சித்தி காதலிச்சது சாத்விக்கோட அப்பாவை. ஆனால் சாத்விக்கோட அப்பா சாத்விக்கோட அம்மாவை பல வருஷமா காதலிக்க உங்க சித்தியோட காதலை ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.


இவங்க தொடர்து வற்புறுத்தி சாத்விக்கோட வீட்டுல போய் பேசுற லெவலுக்கு உங்க குடும்பம் போயிருச்சு. அப்போவும் முடியாதுன்னு சொல்லவும் உங்க சித்தி நான் தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டி இருக்காங்க..இதை தன்னோட நண்பனான சனாவோட அப்பா கிட்ட சொல்லவும், அவரும் சனாவோட அம்மாவும் சேர்ந்து, சாத்விக்கோட அப்பா, அம்மாக்கு கல்யாணம் பண்ணி வச்சு வேர ஊருக்கு அனுப்பிட்டாங்க. இவங்களும் வேற ஊர் போயிட்டாங்க.


இதைக் கேள்விபட்ட உன் சித்தி தூக்குப்போட்டு செத்திருச்சு. அதுல கோபமான உங்க ஃபெமிலி அவங்களை பழிவாங்க காத்து இருந்திங்க.." என்றிட இடைப் புகுந்தான் யாதவ். "நான் அப்புறமா என்ன நடந்திச்சுன்னு சொல்றேன்" என்றான்.


யாதவ், "அவங்களை பழிவாங்க தேடினாலும் அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல்லை. சில வருஷம் கழிச்சு நீங்க சாத்விக்கோட அப்பாவைப் பார்த்தால் அவரு சமூகத்துல ஒரு பெரிய இடத்துல இருக்காரு, சனாவோட அப்பாவும் அதே போல இருக்காரு. நாங்க கஷ்டபட சந்தோஷமா இருக்கிங்ளான்னு உங்களை கொலை பண்ண நினைக்கிறாங்க உங்க ஃபெமிலி.


அப்போ தான் ஒரு மெயின் வில்லனோட உதவி கிடைக்குது. அவன் யாருன்னா, ஒரு அரசியல்வாதிக்கு பினாமியா இருக்கவன். சுருக்கமா சொல்லப் போனால் போதைப் பொருள் கடத்தி அந்த காசுல வாழுறவன். அவனுக்கு கீழே பல பேரு. அவனுக்கு உங்க அப்பாவைப் பத்தி கேள்விபட்டு அவருக்கு இந்த கொலையை அவனே பண்றேன். அதுக்கு பதிலா போதைப் பொருளை வித்துக் கொடுக்கனும்னு சொல்றான்.


அவரும் ஒத்துக்க சாத்விக்கோட அப்பா, சனாவோட அப்பாவை அக்சிடன்டுலேயே கொன்னுடுறாங்க. சனாவோட அம்மா அதைக் கேட்டு இறந்து போக, சாத்விக்கோட அம்மா தைரியமானவங்களா இருந்ததால எல்லா தடைகளையும் மீறி முன்னாடி வராங்க.


அப்புறமா அந்த விஷத்தையே உங்களுக்கும் ஊட்டி வளர்க்க, அந்த பினாமியோட வலது கையா உங்க குடும்பம் மாறிட்டிங்க. அந்த ஆளும்....." என்ற யாதவ் தன்னருகில் இருந்த வாலிபனை கழுத்தோடு நசுக்கி, "இப்போ மினிஸ்டரா இருக்கான். அவன் பேரு சத்திய மூர்த்தி. யோவ் மினிஸ்டரு இப்போ நீ வெளியில வர இல்லை, உன் பையனவ நவீன இங்கேயே செத்துருவான்" என்று கத்தினான்.


அதைக்கேட்டு உள்ளே இருந்த மினிஸ்டர் சத்தியமூர்த்தி ஓடி வர, "உள்ள ஒளிஞ்சால் எப்படி இன்னும் கதை இருக்குல்ல? அதை கேட்க வேணாமா?" என்று ஒற்றைக் கண்ணைச் சிமிட்டினான். அஞ்சலி தலைவிரி கோலமாக, "அப்போ இதெல்லாம் தெரிஞ்சிருக்குன்னா எல்லாமே பிளேனோட தான் இங்கே நடக்குதா?" என்று கத்த, "ஆஃப் கோர்ஸ் அஞ்சலி. இன்னும் இருக்கு அதை கேளு" என்றாள் சனா.


யாதவ், "அப்புறமா நீயும், உன் அண்ணனுமே ஒன்னுக்குமே இல்லாமல் செத்த உன் சித்திக்காக, கார்திக், சனா, சாத்விக்கை பழிவாங்கனும்னு நினைச்சிங்க. அதே நேரம் மினிஸ்டரும் இன்னும் எதிர்பார்க்காத தில்லுமுல்லு வேலைகளை பாரக்க ஆரம்பிச்சாரு. இதுல அன்டர் கிரவுன்டுல வேலை பார்க்குறது உன் குடும்பம்னு யாருக்குமே தெரியாது. அதுல ஒன்னு தான் இல்லீகலா ஆர்கன் கடத்துறது.


அதை விட்டுட்டு இங்கே வருவோம். அப்புறமா இவங்க படிக்கிற கோலேஜூலேயே நீங்க இரண்டு பேருமே சேர்ந்திங்க. கிஷோர் சாத்விக், கார்திக்கு கிடையில பிரச்சனைகளை மூட்டிவிட ஆரம்பிச்சான். அதுல ஒரு விஷயம் சாத்விக் என்னை அடிச்சதால என்னை தூண்டி விட்டு அவனை பழிவாங்க என்னை ஒரு கருவியா யூஸ் பண்ணிகிட்டிங்க.


என்னை வச்சே இரண்டு பேரையுமே பழிவாங்க என் அப்பாவுக்கு கடல்கரைபக்கம் பவர் அதிகம்னும் என் மூலமா தெரிஞ்சிகிட்டிங்க. இல்லீகலா கடத்த கடல் பயணம் லேசுன்னு, இந்த பவரை யூஸ் பண்ண என் அண்ணாவை அஞ்சலி கல்யாணம் பண்ணிகிட்டா. அது மட்டுமா பொண்ணுங்களை பணம் கொடுத்து உங்க வழிக்கு கொண்டு வந்து உங்களுக்கு உதவி பண்ண வச்சிங்க.


ஃபொரின்ல பிஸ்னஸை கவனிக்க கிஷோர் அங்கே போக அப்போ தான் அவனுக்கு வாடகைத் தாயைப் பத்தி தெரிஞ்சது. அது மட்டும் இல்லாமல் கர்பிணிப் பொண்ணுங்களை பொலிஸ் கூட அதிகமா செக் பண்ணமாட்டாங்கன்னு அவன் ஒரு முறை கண்ணால் பார்த்து தெரிஞ்சு கிட்டான். ஏன் அதை வச்சி பணம் சம்பாதிக்கக் கூடாதுன்னு யோசிச்சான்.


அப்படியே வருஷங்கள் போக மினிஸ்டர் பையன் நவீன் படிக்க காலேஜ்ல சேர்ந்தான். அவன் கிட்ட இதை சொல்லவும், அவனும் இதுக்கு ஹெல்ப் பண்றதா சொன்னான். கடைசியில நீங்க பண்ணது என்னன்னா, ஒரு பொண்ணை ஹிப்னடிசம் பண்ணி அவளை உங்க கண்ட்ரோலுக்குள்ள கொண்டு வந்து அவளை வாடகைத் தாயாக மாத்துரிங்க.


கர்பிணிப் பொண்ணுங்களோட முதுகுல மாணிக்கம், வைரக்கல்லை வச்சு அதுக்கு மேலால பொய் தோல் ஒட்ட வச்சு அதை அவங்களோட முதுக்கு மாதிரியே பார்க்குறவங்களை நம்ப வைக்கிற அளவுக்கு அவங்களை ரெடி பண்ணி தேவையான இடத்துக்கு அவங்களை அனுப்பி கடத்தல் வேலை பண்றிங்க. இதுல பராதாபமான விஷயம் என்னன்னா அவங்களுக்கு தான் கர்பமா இருக்கிறதோ, தன்னை கடத்தலுக்காக ஒரு பொண்ணை யூஸ் பண்றாங்கன்னோ அவங்களுக்கு தெரியாது.


(அன்று பொலிஸார் பார்த்த கர்பிணிப் பெண்ணும் இவர்களுள் ஒருவரே)


ஹிப்னடிசம் பண்ண சிலெக் பண்ண ஆள் தான் சரவணன். அவனை சிலெக்ட் பண்ணது கிஷோர். இந்த வேலை பூரா உன் தலைமைக்கு கீழே தான் நடக்குது. அந்த பொண்ணுங்களை அவதானிச்சு யாரை கடத்தனும்னு சொல்றது நவீன். அஞ்சலி கிஷோர் இல்லாதப்போ ஃபொரின் கிளைன்சை டீல் பண்ணுவா.


இதுல அவங்க குழந்தையை பெத்து கொடுத்துக்கு அப்புறமா சில பேர் செத்துப் போறாங்க. அழகு குறையாதவங்களை ஃபொரினுக்கு விற்குரிங்க. அதுக்கு அப்புறமா சுயநினைவுக்கு வந்தாலும் அந்த இடத்துல இருந்து தப்பிக்க முடியாதே.


இன்னொரு விஷயம் என்னன்னா பிரசவத்தின் போது வெளியாகுற சூல்வித்தகத்தை பெக் பண்ணி ஃபொரினுக்கு காசுக்கு விற்கிறிங்க. ஏன் தெரியுமா? அந்த சூல் வித்தகங்கள் பொண்ணுங்க யூஸ் பண்ணுற ஃபெயார்னஸ் கிரீம் தயாரிக்க பயன்படுது.


இடையிலேயே சுயநினைவுக்கு வார பொண்ணுங்களை நீங்களே சூசைட் பண்ண வைக்கிறிங்க. இத்தனைக்குமே ஆதாரம் எங்க கிட்ட இருக்கு. நான் நினைச்சால் உங்களை என்ன வேணூன்னாலும் பண்ண முடியும்" என்று கூறி அவர்களைப் பார்க்க, "நீ எதுவுமே பண்ண மாட்ட யாதவ். உன் பொன்டாட்டி என் கையில" என்று வைஷ்ணவியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்தவாறு வந்தார் அந்நபர்.


தொடரும்....





தகவல் தேடிய இடங்கள்...



Placenta using in cream produts


You Probably Shouldn't Be Using Products With Placenta in Them



About Ivf


https://www.verywellfamily.com/what-does-in-vitro-mean-1960211#:~:text="Test tube baby" is a,fertilized in a petri dish.


குழந்தையும் பிரசவமும்


https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/baabbfbb0b9abb5baebc1baebcd-b95bc1bb4ba8bcdba4bc8bafbbfba9bcd-bb5bb3bb0bcdb9abcdb9abbfbafbc1baebcd-b9abbfb9abc7bb0bbfbafba9bcd-baebc1bb1bc8-baabbfbb0b9abb5baebc1baebcd




கருத்துக்களைப் பகிர,


 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்சிமிட்டும் தென்றலே

அத்தியாயம் 38

வைஷ்ணவியின் தலையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு அங்கிருந்தோரை மிரட்டினார் அந்நபர். "என்னை எதிர்பார்த்தே இருக்க மாட்டியே யாதவ்" என்று வில்லனாய் சிரிக்கின்றேன் என சிரிக்க வைஷூ தன் காதில் இருவிரல்களை வைத்து அடைத்துக் கொண்டாள் சத்தம் கேட்காதவாறு.


கௌதம், "யோவ் நீ என்ன எக்ஸ்பிரஷன் குயீன் ராஷ்மிகா மந்தனாவா உன்னை நாங்க எதிர்பார்க்க? சும்மா கடுப்பேத்திட்டு" என்று அச்சட்டையுடன் மொழிய கார்திக், "அந்த பொண்ணு நீ சிரிக்கிறன்னு பேருல பண்ணுற அக்கிரமத்துல தன் தலையில துப்பாக்கி வச்சிருக்கிறதையும் மறந்து காதைப் பொத்திருக்கா பாரு. குழந்தையை பயமுறுத்தாத பெருசு" என்றான் அமர்த்தலாக.


கிஷோர், "டேய் யாதவோட பொன்டாட்டி தலையில துப்பாக்கியை வச்சுமா உங்களுக்கு பயம் வர இல்லை?" என்று அதிர்வுடன் மொழிந்து, யாதவைப் பார்த்து, "உன் பொன்டாட்டி தலையில தான்டா அவன் கன்னை வச்சிருக்கான்" என்று ஞாபகப்படுத்தினான்.


அங்கிருந்த அடியாட்களுக்கு இங்கே யார் யாரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார்கள் என்றே புரியாது தலையைச் சொறிய, அருகில் இருந்த கௌதம், "டேய் எத்தனை நாள்டா நீங்க குளிச்சு? இப்படி போய் தலை சொறியிறிங்க. பேன் நிறைஞ்சு இருக்கும் போல இருக்கே" என்று அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்த அங்கே நின்று இருந்த வில்லன்களே குழம்பிப் போயினர் இவர்களின் சாவகாசமான நடவடிக்கைகளைப் பார்த்து.


யாதவ் "உஃப்" என்று பெருமூச்சை வெளியிட்டவன் சாத்விக்கை பார்த்து, "நான் உன் கிட்ட முன்னாடியே சொன்னேனேடா, உன் தங்கச்சி எப்போ எந்த பிரச்சனையில மாட்டுவான்னே தெரியாது. நான் போய் அவளை காப்பாத்துறதே எனக்கு வேலையா போச்சுன்னு" என்று தலையிலடித்து வைஷூவைப் பார்த்தான்.


"நவி, நீ எப்படி இவிங்க கிட்ட மாட்டிகிட்ட?" என்று வினவ, வைஷூ, "சனாவை கடத்தி கொண்டு போறதைப் பார்த்து பின்னாடியே கொஞ்ச தூரம் ஓடினேன். அப்போ நான் வழுக்கி கீழே விழுந்ததும் என்னை அங்கிருந்தவங்க கடத்திட்டாங்க" என்று அப்பாவியாய் மொழிந்தாள்.


யாதவ், "உனக்கென்ன ஜான்சி ராணின்னு நினைப்பா? இல்லை லேடி ஜேம்ஸ் பொன்டுன்னு நினைப்பா? ஒரு கரப்பான் பூச்சியை பார்த்தால் பத்தாயிரம் கிலோமிடருக்கு ஓடிப் போவ. இந்த லட்சணத்துல இவங்க சனாவை காப்பாத்த பின்னாடியே ஓடி இருக்காங்க" என்று கடுப்புடன் உரைக்க, "அவன் சொல்றதும் ஞாயம் தான் வைஷூ. எதுக்காக நீ எங்க யாரையுமே கூப்பிட இல்லை?" என்று அன்புடன் கேட்டான் சாத்விக்.


வைஷூ, "எனக்கு அது அப்போ தோணவே இல்லை அண்ணா" என்று பாவமாய் கூற, "ஆமா, ஆமா இதெல்லாம் தோணாதே. இவங்க சோஷியல் சார்விஸ் பண்ணி அன்னை திரேசா ஆக போறாங்க" என்று அதே கடுப்பு மாறாமல் உரைக்க, "டேய் அவளுக்கு உன் கூட கல்யாணம் ஆச்சு" என்று கௌதமும், "எனக்கு உங்க கூட கல்யாணம் ஆகிருச்சு அத்தான்" என்று வைஷூவும் ஒரே நேரத்தில் கூறினர்.


யாதவ் இருவரையும் முறைத்து, "ரொம்ப முக்கியம்" என்க, கார்திக், "இது முக்கியமானது இல்லையா?" என்று எதிர் கேள்வியை எழுப்பினான். இத்தனை வாய் வார்த்தை கலோபரங்கள் நடக்க அங்கே இருந்த வில்லன்கள் மற்றும் அடியாட்கள் யார் பேசுகின்றனரோ அவரின் பக்கமே ஒரு சேர திரும்பிப் பார்த்தனர்.


இதில் நகுலன் அங்கிருந்து மெதுவாக வெளியேறிச் சென்றதை எவருமே பார்க்கவில்லை. ஆனால் அஞ்சலியின் கண்களுக்கு அது தப்பவில்லை எனினும் இரு பலம் பொருந்தயவர்களிடம் வாங்கிய அரையில் சுருண்டு விழுந்ததால் மிக மிகச் சோர்வாக, அண்ணளவாக மயக்கம் அவளை தழுவும் நிலையில் இருக்க இதையும் கூட எவரும் பார்கவில்லை.


யாதவ் அதற்கு பதில் கூற வரும் போது வைஷூவின் தலையில் துப்பாக்கி வைத்திருந்த நபர், "டேய் நிறுத்துங்கடா. நான் இங்க வில்லனா இருக்கேன். கொஞ்சமாச்சும் எனக்கு மரியாதை கொடுக்குறிங்களா? என்னை பார்த்து ஷாக் ஆகவும் இல்லை. அதை விட முக்கியமா ஏதோ பராளுமன்றத்துல உட்கார்ந்து கதை பேசுறது போல பேசுறிங்க? என்னடா நினைச்சிட்டு இருக்கிங்க?" என்று எகிற, கிஷோர், "வைஷ்ணவி எங்க கையில இருக்கான்னு மறக்காதிங்க" என்றான்.


சாத்விக், "உன்னை பார்த்து நாங்க ஷாக் ஆக இல்லைன்னா, நீ இதுல சம்பந்தப்பட்டு இருப்பன்னு எங்களுக்கு முன்னாடியே தெரியும்னு உனக்கே புரிஞ்சிருக்கனும் வெண்ணெய்" என்றவன் சனாவைப் பார்த்து, "பேபி உனக்கு கால் வலிச்சா உட்காரு. நான் இவங்களை டீல் பண்ணிக்குறேன்" என்று நெற்றியில் இதழ்பதித்தான்.


சனா, "வேணாம் சவீன். நீங்க என் கூட இருங்க. மத்தவங்க இவங்களை பார்த்துப்பாங்க" என று அவனுடைய சட்டை பட்டனை திருகியவாறு கொஞ்சலுடன் மொழிய, "டேய் இது என்ன உங்க பெட்ரூம்னு நினைப்பா உனக்கு?" என்று யாதவ் கோபத்தில் எகிறினான்.


கௌதம், "உங்க எல்லாருக்கும் முன்னாடி கமிடட் ஆனவன் டா நான். ஆனால் இன்னும் கன்னிப்பையனாவே சுத்துறேன். கல்யாணம் காச்சின்னு என் வாழ்க்கையில எதுவுமே நடக்க இல்லை. நீங்க கல்யாணமும் பண்ணி ஃபர்ஸ்ட் நைட்டும் கொண்டாடிட்டு, இப்போ இந்த கன்னிப் பையன் முன்னாடி ரொமேன்ஸா? இதெல்லாம் உங்களுக்கே அடுக்குமாடா?" என்றான் வராத கண்ணீரைத் துடைத்து.


வைஷ்ணவி, "அடச்சீ நிறுத்துங்கடா. நானும் பார்த்துட்டே இருக்கேன். என்னை காப்பாத்துற ஐடியாவே உங்களுக்கு இல்லை" என்று அனைவரையும் பார்த்து கத்தியவள், "யோவ் அத்தான், இப்போ மட்டும் என்னை இந்த பெரிசு கிட்ட இருந்து நீ கூட்டிட்டு போக இல்லை, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்றாள் கடுப்புடன்.


யாதவ், "நவி கொஞ்சம் பொறுமையா இரூடா தங்கம்" என்று பொட்டிப் பாம்பாய் அடங்க, "டேய் நீயாடா இது? வீரம் பொருந்திய யாதவ் மித்ரன் எங்கே? எவருக்குமே அடங்காத சீறிப்பாயும் சிறுத்தை எங்கே?எங்கே?" என்று கௌதம் பழந்தமிழில் வினவ, "இங்கே தான்டா இருக்கேன். பொன்டாட்டி கைக்கு எல்லா புருஷனூமே கைக்குட்டதான்டா" என்றான் காதல் பொங்கும் குரலில்.


கௌதம், "நீயா பேசியது? என் நண்பா நீயா பேசியது?" என்று அவனுடைய குரலில் கேவலமாகப் பாட, "இப்போ நிறுத்திறுங்களா இல்லையா? பாட்டுக்கச்சேரி, பட்டிமன்றம் விட்டால் விஜய் டீவி ரியாலிடி ஷோ மிஸ்டய் அன்ட் மிஸஸ் சின்னத்திரையையே நடத்திருவிங்க போல இருக்கே" என்று மினிஸ்டர் கர்ஜித்ததில் அனைவருமே அவனை அற்பப் புழுவைப் பார்பதைப் போன்று பார்த்தனர்.


யாதவ், "இவனுங்களும் அப்போ இருந்து வில்லனுங்க வில்லனுங்கன்னு சொல்லிட்டே இருக்கானுங்க. வில்லனுக்கு ஸ்பெலிங் கூட இவனுங்களுக்கு தெரியாது. இதுல நாங்க பயப்படனுமாம்" என்று உரைக்க, "சும்மா பேசும் இடையில நுழைஞ்சு டிஸ்டர்ப் பண்ணி எரிச்சல் படுத்தக் கூடாது. இப்போ என்னை உங்களுக்கு என்ன நடக்குதுன்னு தெரியனும் அதானே?" என்று வினவினான் சாத்விக்.


வில்லன்களும் ஆம் என்று தலையாட்ட, வைஷூ, "அண்ணா இன்னொரு கதை சொல்ல ரெடியாகுறிங்கன்னு தெரியிது. எனக்கும் ரொம்ப நேரமா நின்னுட்டே இருந்து கால் வலிக்குது. என் பக்கத்துல இருக்கிற பெருசுங்களுக்கும் ஷூகர், பிஷரும் இருக்கும். பேசாமல் எல்லோரும் அதே இடத்துல கீழே உட்கார்ந்து பேச்சு வார்த்தையை நடத்தலாமே" என்றாள்.


அருகில் இருந்த நபர், "என்ன கிண்டலா?" என்று வினவ, "உனக்கும் சேர்த்து தனே பெருசு பேசுறேன்?சும்மா காதுல கத்திகிட்டு. அடச்சீ உட்காரு" என்று மரியாதையின்றி பேசியவள், அமர முனைய வேறு வழியில்லாது அவருமே அமரப் போக இதுவே சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய, வைஷூ திரும்பி அவனது கையை கடித்து விட்டு யாதவை நோக்கி ஓட யாதவும் அவளே தன் கைக்குள் கொண்டு வந்தான்.


இவை அனைத்துமே கண்மூடித் திறப்பதற்குள் நடந்துமுடிய இவற்றை எதிர்பார்க்கவில்லை என்பதை இவர்களின் அதிர்ந்த முகமே கூறிற்று. அந்நபர் அவள் கடித்த கையை உதறியவாறு, "ஏய் சிறுக்கி மவ, என்னையே ஏமாத்திட்டல்ல? என்னை மீறி எப்படி நீ இங்கிருந்து உயிரோட போவன்னு நானும் பார்க்குறேன்" என்று கொக்கரிக்க, "அதுக்கு முதல்ல உன் கையில விஷம் ஏறி இருக்கான்னு பாரு. கடிச்சது வைஷ்ணவி" என்றான் கௌதம்.


வைஷூ அவனை கண்களாலேயே எரிக்க, கௌதம், "மச்சான் கதையை சொல்ல ஆரம்பிடா" என்று கூறிய பின் அவள் இருந்த திசைக்கும் திரும்பவில்லை. சாத்விக், "கதையை சொல்லி முடிச்சால் அத்தனை பேரும் பொலிசோட கன்ட்ரோல்ல இருப்பானுங்க. சில பேர் செத்துப்போயும் இருப்பானுங்க. அதான் கொஞ்ச நேரம் இவனுங்க உயிரோட இருக்கிறதைப் பார்த்து இரசிக்கலாமேன்னு பொறுமையா இருக்கோம்" என்றான்.


நவீன், "என்ன பயமுறுத்திறிங்களா? எங்களுக்கு ஒன்னுன்னா காப்பாத்த ஃபொரின்ல இருந்து பிரஷர் வரும்" என்று இளக்காரமாய் உரைத்தவனைப் பார்த்து, நம் நாயகர்கள் அனைவருமே சிரித்தனர். யாதவ், "என்ன லக்ஷமி கருத்தரிப்பு மையத்தோட ஓனர் மைக்கில் வில்லியம்ஸ் காப்பாத்துவான்னு நினைக்கிறிங்களா? அவன் மேல் லோகத்துக்கு போய் இரண்டு நாள் ஆச்சு" என்று உரைத்ததுமே அங்கிருந்தோர் எவருக்குமே முகத்தில் ஈ ஆடவில்லை.


மயக்கத்தை தழுவ இருந்த அஞ்சலியுமே அதிர்ந்து விழிக்க, "இவளோ நேரமா உங்க முடிச்சுவிக்க முள்ளமாரித்தனத்தைப் பத்தி பேசியாச்சு. இப்போ எங்க பிளேனிங்கைப் பத்தியும், நீங்க எப்படி மாட்டினிங்க அப்படின்றதையும் பத்தி பேசலாமா?" என்றான் சாத்விக்.


யாதவ், "எங்கிருந்து ஆரம்பிக்கலாம்?" என்று கேட்க, வெளியில் இருந்து வருகை தந்த நகுலனோ, "முதல்ல இவங்க எல்லாருமே சிலரை மீட் பண்ண இருக்கு. அவங்களை பார்க்கட்டும்" என்று உரைத்து நடந்து வந்தான் எள்ளல் சிரிப்போடு. 'யாரை?' என்று அனைவருமே பார்க்க எவரையும் காக்க வைக்காது, அங்கே ஒருவனை இழுத்து வந்தனர் சிலர்.


அவனை ஊன்றி கவனிக்கும் போதே அவன் சரவணன் என்று தெரிய,விழி விரித்து அதிர்வுடன் அவனைப் பார்த்தனர் தீயவர்கள். "இதுக்கே லசித் மலிங்க சிக்ஸர் அடிச்சது போல கொட்ட கொட்ட முழிக்கிறிங்களே? அடுத்து வர போற ஆளை பார்த்து என்ன பண்ணுவிங்க?" என்று தனது வேஷ்டியை தூக்கியவாறு உள்ளே வந்தான் விஷ்ணு.


மினிஸ்டர், "இது என்ன சத்திரமா ஆளுக்காள் உள்ள வாரிங்க? மொத்த பேரும் சேர்ந்து சாகலாம்னு முடிவெடுத்திட்டிங்களா?" என்று சீற, யாதவும், சாத்விக்கும் பார்த்த பார்வையில் அவர் வாய் தானாக மூடிக் கொண்டது.


விஷ்ணு, "ராம்" என்று அழைக்க சவிதாவைத் தாங்கியவாறு அழைத்து வந்தான் ராம். அங்கே இருந்தோரின் கண்கள் வெளியே தெறித்துவிடும் அளவிற்கு அகல விரிய, சவிதா, "என்ன பெரியப்பா, என்னை கொல்ல ஆள் அனுப்பினிங்க, கொல்ல முடியல்லை. நான் கண்ணு முழிக்காததால கோமாக்கு போயிட்டேன்னு தப்பு கணக்கு போட்டிங்களா?


நான் கண்ணு விழிச்சால் தானே உண்மையை சொல்லுவேன்? கண்ணு விழிக்காமல் இருந்தால் உங்களுக்கு பிரச்சனையில்லன்னு தானே நினைச்சிங்க? ஹம்... யாதவ் சேர் ஹாஸ்பிடலை விட்டு வெளியே போன அன்னிக்கே நான் கண்ணு விழிச்சிட்டேன். என் உயிருக்கு ஆபத்து வரக் கூடாதுன்னு தான் என் கிட்ட கோமால இருக்கிறது போல நடிக்க சொன்னாரு" என்றாள் சற்று முன்னே வைஷூவின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய நபரான துரையப்பனின் அண்ணன் காசியப்பன்.


அனைத்துமே சாத்விக், யாதவின் திட்டப்படியே நடந்து உள்ளது என்பது அங்கிருந்த அனைவருக்குமே தெளிவாய்ப் புரிந்தது. அதன்பிறகே யாதவ் முதலில் இருந்து நடந்ததைக் கூற ஆரம்பித்தான்.


"சுருக்கமா சொல்லனும்னா இந்த கேஸ்ல இறந்தவங்க, கேசுக்குள்ள வந்தவங்க எல்லாருமே ஒரு சங்கிலித் தொடரா தான் நுழைஞ்சு இருக்காங்க. கொஞ்ச நாளாவே பொண்ணுங்க காணாமல் போற கேஸ் சின்சியரா போகும் போது தான் என்னை அன்டர் கிரவுன்ட் ஆபரேஷனுக்கு என்னை ஆபய்ன்ட் பண்ணாங்க. அப்போ இருந்த காணாமல் போன பொண்ணு பேரு தான் நிஷா (பொலிஸாரால் பார்க்கப்பட்ட பெண்).


அவளோட பேரன்ஸ் கம்பிளைன் கொடுத்ததுக்கு அப்புறமா, இவளைப் போல நிறைய பொண்ணுங்க காணாமல் போக ஆரம்பிச்சாங்க. நாங்க கேசை விசாரிக்க ஆரம்பிச்சோம். காணாமல் போன நிஷாவை அவளோட தங்கச்சி அதாவது சித்தி பொண்ணு தன்னோட ஃபிரன்டோட மதுரை வீட்டுக்கு போனப்போ ரோட்டுல கண்டு இருக்கா.


அதுவும் நான்குமாச கர்பமா. நிஷாவுக்கு அவளோட தங்கச்சி சுகன்யாவையோ, அவளோட தங்கச்சி ஃபிரன்டு கிருதிகாவையோ அடையாளம் தெரியல்லை. சைகொலொஜி படிச்ச சுகன்யாவுக்கு தன் அக்கா கூட பேசும் போதே தெரிஞ்சிருச்சு அவளை ஹிப்னடிசம் பண்ணி இருக்காங்க. அவளை வெளியில கொண்டு வரது கஷ்டம்னு.


அப்போ சுகன்யா கிருதிகா கிட்ட தன்னோட அக்காவுக்கு என்ன நடந்ததுன்னு கண்டுபிடிக்க போறேன்னு சொல்லவும் முதல்ல எதிர்த்த சுகன்யா, அவ அக்கா மேலே வச்சிருக்கிற பாசத்தைக் கண்டு அவளுமே இதுக்கு உதவுறதா சொல்லி இருக்கா. அப்போ சுகன்யா அவ அக்கா போற இடம் எல்லாமே ஃபோலோ பண்ணி போனா.


கிருதிகா சென்னையில சாத்விக் காலேஜூல படிக்கிற பொண்ணு. அவ அக்கா என்ன என்ன பண்றான்னு உடனுக்குடனே போன் பண்ணி கிருதிகிட்ட சொல்ல கிருதியும் பாதுகாப்பா இருக்க சொல்லி இருக்கா. ஆனால் கிருதிக்கா கிட்ட இருந்த ஒரு பழக்கம் தான் டயரி எழுதுறது.


சுகன்யா சொல்லுற ஒவ்வொரு விஷயத்தையுமே அவ எவிடன்ஸா அவளறியாமலேயே டயரியா எழுத ஆரம்பிச்சா. இப்படியே போகும் போது தான் சுகன்யா அவளாவே போய் சரவணன் கிட்ட மாட்ட அவளையும் ஹிப்னடிசம் பண்ணினான். அதாவது அவ தான் ஹிப்னடிசம் பண்ணப்பட்டு இருக்கிறதா எக்சேக்டா நடிச்சா.


அவ ஒரு சைக்கோலஜி ஸ்டூடன்டு அதனால தன்னோட மைன்டை எப்படி கட்டுபடித்திக்கனும், ஹிப்னடிசம் பண்ணப்பட்ட ஆளா எப்படி நடந்துக்கனும்னு அவளுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. அதுக்கு அப்புறமா கிஷோரும் அவனோட ஆளுங்களும் அவளை ஐ.வி.எஃப்க்கு யூஸ் பண்ண நினைச்சு அதைப் பத்தி பேசும் போது தான் இவளுக்கே இந்த கேஸோட தீவிரம் புரிஞ்சி இருக்கு.


அப்போ தான் அவளுக்கு மாணிக்கம், ரத்தினம் கடத்தல், ஃபெயார்னஸ் கிரீமுக்காக சூல்வித்தகத்தை ஃபொரினுக்கு அனுப்பி காசாக்குறது எல்லாமே தெரியவும் ஷாக்கானவ தன்னோட ஃபிரன்டு கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி இருக்கா. அவளும் அதை டயரில எழுத, ஒரு நாள் சுகன்யா, கிருத்திகாகிட்ட போன் பேசும் போது கிஷோரோட ஆளுங்க கிட்ட மாட்டிகிட்டா.


எப்படியோ அங்கிருந்து தப்பிச்சு, கிருத்திகாவை பார்க்க போய் இருக்கா. அவளை பாதுகாப்பா இருக்க சொல்லிட்டு அவ டயரியை எடுத்துட்டு ஓடும் போது தான் சுகன்யாவுக்கு அக்சிடன்ட் நடக்க, வைஷூ, ஜெனி இரண்டு பேருமே அவளை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் இருக்காங்க.


சுகன்யா தான் கிட்ட இருக்க, டயரியை பொலிசுக்கு கொடுக்க சொல்ல அது ஜெனி, வைஷூ இரண்டு பேருக்குமே புரியல்லை. ஆனால் அவளோட பர்கை வைஷூ கொடுத்துட்டு போன் பேச போக அந்த டயரியை ஜெனி கையில கொடுத்து இருக்கா. அவ புரியாமல் முதல் பக்கம் திருப்பும் போதே அங்கே இருந்தது லிசா போடோ.


ஏன்னா, லிசா தான் நிஷாவை அவளோட வழிக்குள்ள எடுத்து சரவணனை வச்சு ஹிப்னடிசம் பண்ணி இருக்கா. அதை சுகன்யா நிஷாவை ஃபோலோ பண்ணும் போது கண்டுபிடிச்ச விஷயம் என்ட் அதை கிஷோருமே உறுதி பண்ணி இருக்கான் மத்தவங்க கூட இதைப் பத்தி பேசும் போது.


லிசாவால அண்ணா இறந்து போனான்னு ஜெனிக்குமே தெரியும். ஜெகன் லிசாவை காதலிச்சது எனக்கும், ஜெனிக்கும் மட்டும் தான் தெரியும். அவ அதைப் பார்த்து ஷாக்காக, சுகன்யாவை கொலை பண்ண ஹாஸ்பிடலுக்கே ஆள் வரதை பார்த்தவ உடனே அங்கிருந்து போக வைஷூ அப்போ தான் இவங்க கிட்ட சொல்றதுக்காக திரும்பி வந்திருக்கா.


இரண்டு பொண்ணுங்க சுகன்யாக்கு பக்கத்துல இருக்கும் போது அவளை கொல்ல மாட்டாங்கன்னு புரிஞ்ச ஜெனி தன் கையில இருக்கிற டயரியை கிஷோரோட ஆளுங்க பார்க்க முன்னாடி மேசையில வச்சிருந்த வைஷூவோட பர்குக்குள்ள அவளுக்கு தெரியாமலேயே போட்டுட்டா.


வைஷூ எதுவுமே தெரியாமல் என் நிச்சயத்துக்காக ஊருக்கு வர ஜெனி, வைஷூ போன அப்புறமா அதே ஹாஸ்பிடல்ல ஒளிஞ்சி இருக்க அவ கண்ணு முன்னாடியே சுகன்யாவை கொன்னுட்டாங்க. எதையோ இழந்த போல வந்த ஜெனி, ஜெகனோட சாவுக்கு காரணமானவங்களையும், சுகன்யா சாவுக்கு காரணமானவங்களையும் கண்டு பிடிக்கனும்னு முடிவு எடுத்து இருக்கா.


இதே நேரம் சுகன்யாவோட ஃபிரன்டு கிருதிகா தான்னு கண்டு பிடிச்ச நவீன் அவளை கடத்தி சரவணன் கிட்ட அழைச்சிட்டு போய் அவளை ஹிப்னடிசம் பண்ணி யாருக்கும் சந்தேகம் வரக் கூடாதுங்குறதுக்காக சாத்விக்கோட காலேஜ் பில்டிங்குல இருந்தே தற்கொலை பண்ண வச்சிருக்கான்.


கிஷோருக்கோ இல்லை வேற யாருக்குமே கிருதிக்காவுக்கு டயரி எழுதுற பழக்கம் இருக்குன்னோ, அது இப்போ வைஷ்ணவிக்கிட்ட இருக்குன்னோ தெரியாது. ஏன் இது நவிக்கு கூட தெரியாது. இங்கே ஜெனி அன்னிக்கு ரீட் பண்ண கொஞ்சம் விஷயங்களை வச்சு உங்களைப் பத்தி தேட ஆரம்பிச்சு இருக்கா.


அப்போ தான் இவளுக்கும் இதே விஷயங்கள் கிடைக்க சுகன்யாவோட கொலையில இருந்து நடந்ததை எல்லாத்தையும் ஒரு வீடியோவா ரெகோர்ட் பண்ணி அவ சேகரிச்ச ஆதாரங்களை தன்னோட போன் மெமரி கார்டுல போட்டு இருக்கா. அவளுக்கு கிருதிகாவை பத்தி எதுவுமே தெரியாது. அந்த டயரி கூட சுகன்யாவோடதுன்னு நினைச்சு இருக்கா. ஜெனி ஆதாரம் சேகரிச்சது உங்களுக்கு தெரிய அவளை கொலை பண்ண ஆள் அனுப்பி இருக்கிங்க.


அவ உங்க கிட்ட இருந்து தப்பிச்சு வார வழியில தான் அந்த ஷாபிங் மாலுக்கு ஓடி வந்திருக்கா. அங்கே மறுபடியுமே வைஷூவை பார்ப்பான்னோ, நான் அவளோட புருஷனா இருப்பேன்னோ அவ எதிர்பார்க்க இல்லை ஜெனி.


இந்த மெமரி கார்ட் வைஷூ மூலமா என் கிட்ட கிடைக்கனும்னு அவ அதை வைஷூ பர்குக்குள்ள போட்டு, என் கிட்ட ஆதாரத்தை கொடுத்த நிம்யதியிலேயும், அவளை இனிமேல்உயிரடவோ நாசமாக்காம விடமாட்டாங்கன்னு தெரிஞ்சு என் கண்ணு முன்னாடியே சூசைட் பண்ணா. அவளோட சாவு உங்களை கண்டுபிடிக்கிற வெறியை அதிகப்படுத்தும்னு தெரிஞ்சுமே செத்திருக்கா" என்றதும், "அந்த மெமரி கார்ட் உங்களுக்குமே கிடைக்க இல்லைன்னு சொன்னாங்க" என்று அவனைப் பார்த்தான் கிஷோர்.


கௌதம் சிரித்து, "உண்மை தான் எனக்கு ஆரம்பத்துல கிடைக்க இல்லை தான். அப்போ தான் நான் ஒரு விஷயத்தை கவனிச்சேன் எங்க டீமுக்குள்ள ஒரு கறுப்பாடு இருக்கிறதை" என்று அன்று நடந்ததைக் கூற ஆரம்பித்தான்.


அங்கிருக்கும் மற்ற பைகளையும் ஆராய அதிலுமே எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்தவன் கட்டிலில் அமர, அப்போதே தான் தேடுவதை அவர்கள் குழுவில் ஒருவன் தன்னை வேவு பார்ப்பதை உடனே கௌதம், யாதவிற்கு மொபைலில் பேசுவதைப் போன்று பாவனை செய்தவன், மெமரி கார்ட் கிடைக்கவில்லை என்று பொய்யாய் கூறினான்.


அதை உண்மை என்று நம்பிய கிஷோருக்கு விலைச் சென்ற அக் கறுப்பாடு கிஷோரிடம் தகவலைத் தெரிவிக்க யாதவின் வீட்டிலிருந்தே வெளியே சென்றான். ஏனெனில் அவன் வீடு முழு்துமே யாதவின் விசுவாசிகள் அல்லவா இருக்கின்றனர்? இவனைக் கண்டு கொண்டால் நாரு நாராக கிழித்து விட மாட்டார்களா? அப் பயத்திலேயே வெளியே சென்றது.


அதை உடனே கவனித்து யாதவிற்கு தகவலை தெரிவிக்க மொபைலை எடுக்க அதே நேரம் காவ்யா அவனிற்கு அழைத்தாள்.


அழைப்பை ஏற்ற கௌதம் உயிர்ப்பே இல்லாத குரலில், "சொல்லுடி" என்க, காவ்யா, "எதுக்கு வாழ்க்கையே வெறுத்து போனது போல பேசுற?" என்றாள். "நாங்க ரொம்ப நாளா தேடுற பொருள் எங்க கிட்ட இருக்குன்னு நினைச்சோம். இப்போ பார்த்தால் அது அங்கே இல்லைடி" என்று சோர்வுடன் உரைக்க, "நீ எக்சைட்மன்டோட தேடுறதால உன்னால ஒழுங்கா தேடுற வேலையில கன்சன்ட்ரேஷன் இல்லாமல் போய் இருக்கும். அதான் உன் கைக்கு கிடைக்கவே இல்லை. பொறுமையா முழு மனசோட தேடு" என்றாள் சிரிப்புடன்.


"ஒகேடி. நான் மறுபடியும் தேடி பார்த்து உனக்கு கால் பண்றேன்" என்று உரைத்து அழைப்பைத் துண்டித்து யாதவ் கூறிய பையை நிதானமாக பரிசோதிக்க ஆரம்பித்தான். அவனது நிதானம் பொய்பிக்கப்படாமல் அவளது பர்கின் அடியில் நூலோடு சிக்கி இருந்தது அவ் மெமரி கார்ட். அதனாலேயே பொருட்களை கீழே கொட்டும் போது அவன் கைகளுக்கு அகப்படவில்லை.


அதை எடுத்துப் பார்த்தவன் "ஹூரே!!!" என்று சத்தமாகக் கத்தி, உடனே காவ்யாவிற்கு அழைப்பை ஏற்படுத்தினான். அவள் அழைப்பை ஏற்றதும், "லவ் யூ டி செல்லம். லவ் யூடி உம்மா" என்றான். காவ்யா சிரிப்போடு, "சேர் தேடின பொருள் கிடைச்சிருக்கு போல" என்று உரைக்க, "ஆமாடி கிடைச்சிருச்சு" என்றான் துளிக்குதித்தவாறே.


காவ்யா, "நாம நகுல் அண்ணா கல்யாணத்துக்கு போகனுமான்னு கேட்க தான் போன் பண்ணேன்" என்று கூற, "கண்டிப்பா போகனும். சென்னைக்கு வா. இப்போ நான் பிசியா இருக்கேன்டி தங்கம். அப்புறமா பேசுறேன்" என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.


'ஒரு தேவைன்னா பாவமா முகத்தை வைக்க வேண்டியது; ஐடியா கொடுத்து சக்ஸஸ் ஆனால் தங்கம், செல்லம், லவ்யூன்னு சொல்லி கட் பண்ண வேண்டியது. இருடா எனக்குன்னு ஒரு காலம் வரும் இல்லை அப்போ உன்னை ஒரு வழி பண்ணுறேன்' என்று காவ்யா மனதுக்குள் கௌதமிற்கு திட்டித் தீர்த்தாள் சிறிது நேரமாவது அவளோடு பேசாது அழைப்பை துண்டித்ததிற்காக.


உடனே யாதவிற்கு தகவலைத் தெரிவிக்க அவனுமே மெமரி கார்டில் உள்ளவற்றை தனக்கு மெயிலில் அனுப்புமாறு கூறி அழைப்பைத் துண்டித்தான். அப்போதே நவி தலை சீவ யாதவ் பேசினான்.


கௌதம் கூறி முடித்து, "அந்த கறுப்பாடு தோலை உரிச்சு தொங்க போட்டு இருக்கோம். மீதி கதையை அவனே சொல்லுவான் கேளுங்க" என்றான்.


யாதவ் மேலும் தொடர்ந்து, "சவிதாவை கடத்தி சரவணனை ஒளிய சொன்னப்போவே அவன் அறிவாளித்தனமா பண்றேங்குற பேருல சொதப்பி என் கிட்ட மாட்டினான். அவனுக்கு நம்ம ட்ரீட்மன்டை கொடுத்து அவனுக்கு தெரிஞ்ச உண்மையை வர வச்சோம். அதுக்கு அப்புறமா கொடுத்த ட்ரீட்மன்ட்டை தாங்க முடியாமல் இப்படி நொந்து நூடுல்ஸ் ஆகிட்டான்.


நான் ஹாஸ்பிடல்ல இருந்தப்போ சவிதாவை அடேக் பண்ண வந்த போதே நான் புரிஞ்சிக்கிட்டேன் அவளுக்கு ஏதோ உண்மை தெரிஞ்சிருக்குன்னு. அதனால விஷ்ணு கிட்ட பேசி அவ கண்ணு விழிச்சாலும் யார் கிட்டேயும் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்.


அதே போல சவிதா கண் விழிச்சி முதல்ல என் கிட்ட தான் பேசுனா. காசியப்பன் தான் உங்களோட ஒரு பார்ட்னர்னு அவளுக்கு தெரிஞ்சிருச்சு. அவ காசியப்பனை வார்ன் பண்ணவும் அவரு பயந்துட்டாரு. அதான் சரவணனை வச்சி அவளை ஹிப்னடிசம் பண்ணி அவளை கிஷோரோட ஆட்கள் மூலமா கடத்தி அடைக்க வச்சாரு.


என்ன இருந்தாலும் அவரோட இரத்தம் இல்லையா? அதான் அவளை கொலை பண்ண இல்லை. ஆனால் அவரே எதிர்பார்க்காத ஒன்னு நாங்க அவளை தேடி போய் காப்பாத்துவோம்னு.


கமிஷனர் இராத்திரி நேரம் இங்கே வந்ததுக்கு காரணமே, சவிதாவை யாருக்கும் தெரியாமல் ஊருக்கு அழைச்சிட்டு வர தான். முக்கியமா காசியப்பனுக்கு தெரிய கூடாதுன்னு தான். அவருக்கு தெரிஞ்சால் எங்க பிளேன் ஃபெயிலாக சான்ஸ் இருக்கு.


அதே நேரம் நவியை கடத்த முயற்சி பண்ணப்போவே புரிஞ்சிது உங்களுக்கு தேவையானது அவ கிட்ட இருக்குன்னு. சி.சி.டி.வி புடேஜை வச்சி எடுத்துட்டோம். அவன் எனக்கு இன்ஃபோர்ம் பண்ணி அன்னிக்கே அந்த டயரியையும் அவன் ரீட் பண்ணி என் கிட்ட கதையை சொல்லும் போது தான் நவியும் நிச்சயத்தன்னைக்கு அவ லேட்டா வீட்டுக்கு வந்ததை சொன்னா.


அப்போ தான் எனக்கு டோடலா புரிஞ்சது என்ன நடக்குதுன்னு. அதுல அஞ்சலியோட லொக் லிஸ்டை எடுத்து செக் பண்ணும் போது தான் அந்த மைக்கல் வில்லியம்சை பத்தி தெரிஞ்சது. அவன் தான் உங்க ஃபொரின் கிளைனட். நீங்க பண்ற இல்லீகள் வேலைகளை லீகலா பண்றதுக்கு உங்களுக்கு ஒரு இடம் தேவைப்பட்டது.


அதனால நீங்க உருவாக்கின இடம் தான் லக்ஷிமி கருதரிப்பு மையம். அதோட ஓனர் மைக்கல் வில்லியம்ஸ். அவுஸ்திரேலியாவுல மிகப் பெரிய பிஸ்னஸ் மேன். உங்களுக்கான பண உதவியில இருந்து, சட்டம் வளைஞ்சு கொடுக்குற வரைக்குமே நீங்க யூஸ் பண்றது அந்த ஆளோட பவரை.


அஞ்சலிக்கு கொடுத்த கருத்தடை மாத்திரை கூட அவன் ஹாஸ்பிடல்ல இருந்து அனுப்புறது தான். யாருக்கும் சந்தேகம் வர கூடாதுன்னு, அதை அவன் கிஷோருக்கு அனுப்ப கிஷோர் அவன் பேர்ல உனக்கு நோர்மால அனுப்புவான்.


இது சாத்விக்குக்கும், எனக்கும் தெரிஞ்சதுமே இரண்டுபேருமே பிளேன் போட்டு அவனை இங்க இருந்தே தூக்கினோம். யெஸ் அவனை சாத்விக், அவனோட ஃபிரன்டு முகேஷோட (part 1 ல் வந்த சாத்விக்கின் தோழன்) பவரை யூஸ் பண்ணி பக்காவா பிளேன் போட்டு தூக்கினோம்.


அவனை ஆதாரத்தோட பொலிஸ் கிட்ட கொடுக்க அவனை ஜெயிலுக்கு கொண்டு போற இடைவெளியில நம்ம ஆளுங்களே போட்டுத் தள்ளிட்டாங்க. அது மட்டுமில்ல லகஷ்மி கருத்தரிப்பு மையம் இப்போ சீல் வைக்கப்பட்டிருச்சு. அது மட்டும் இல்லை அவன் பாதுகாப்புல வச்சிருந்த நிறைய பொண்ணுங்களை பொலிஸ் விடுவிச்சு, ஹாஸ்பிடல்ல ட்ரீட்மன்டுல இருக்காங்க.


அவன் பண்ற இல்லீகள் வேலைகளுக்கு பல அரசியல்வாதி சபோர்ட் இருக்கிறதால எங்க அவங்க பெயர் வெளியில வந்துருமோன்னு பயந்து அவங்களே போட்டுத் தள்ளிட்டதா நியூசை பரப்பினோம். இது எதுவுமே உங்களுக்கு தெரிய கூடாதூ தெரிஞ்சா உஷாராகிருவிங்கன்னு, கிஷோரோட பாஸ்போர்டை புளொக் பண்ணி அவனை டிஸ்ட்ரெக் பண்ணி சாத்விக்கை பத்தி மட்டுமே நினைக்க வச்சோம்.


சேம் திங் அஞ்சலிக்கும். அவளோட ஏ.டி.எம் கார்டை ஃபரீஸ் பண்ணதுல இருந்து, அவளோ பர்சை திருட வச்சு, நகுலோட கல்யாணத்தை பத்தி சொல்லி மைக்கலை பத்தி உங்களுக்கு துளியளவு கூட ஞாபகம் வராத மாதிரி பண்ணோம்.


இதுல அன்னிக்கு நவி மேலே கத்தியை வீசினவனை நான் காஞ்சனா அண்ணி ஃபேமிலியை கடத்த அனுப்பினப்போவே துண்டு துண்டா வெட்டுற கோபம் இருந்தது. ஆனால் இந்த நேரத்துக்காக காத்துட்டு இருந்தேன்" என்று அங்கு நின்ற அடியாளைப் பார்க்க அவனுக்கு பயத்தில் வயிறே கலங்கியது.


கௌதம், "யோவ் மினிஸ்டர் கொஞ்சமாச்சும் உனக்கு அறிவு இருக்கா இல்லையா? உனக்கு நாங்க தான் பாதுகாப்பு கொடுக்குறோம். உன்னோட சின்ன சின்ன அசைவு கூட எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்ச கூமுட்டை நீ தான். உன் காருல இருக்கிற ஜீ.பீ.எஸ் ஸை நாங்க மோனிடர் பண்ணும் போது நீ இங்கே வந்த போதே உன்னை மாதிரி ஒரு அடி தர முட்டாள் இங்கே இல்லைன்னு புரிஞ்சது" என்று கூறி வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டான்.


சாத்விக், "ஒவ்வொரு விஷயத்தையுமே பார்த்து பார்த்து பண்ண நான், என் பொன்டாட்டி விஷயத்துல கோட்டை விடுவேன்னு எப்படி நினைச்ச? அதுவும் யாதவ் இருக்கும் போது கூட நாங்க இவிகங்களை பார்க்க மாட்டோம்னு எந்த கஸ்மாலம் சொன்னான்?" என்று 'அட லூசே' என்று பார்த்தவாறு கேட்டான்.


அவர்கள் அதிர்ச்சியில் இருப்பதை பொருட்படுத்தாது நகுல், "நாங்க தேடின எவிடன்சை விட சொலிடா நீங்க எல்லாரும் கல்பா மாட்ட, அப்படியே அமுக்கனும்னு வெயிட் பண்ணி தான் சனாவை குளக்கரைக்கு அனுப்பி வைச்சோம். நாங்க எதிர்பார்த்தது போலவே அவளை நீங்க கடத்தி மிரட்டினிங்க. நாங்களும் வந்தோம்.


விஷ்ணு, கௌதம் ராம், சவிதா மூனு பேருமே நாங்க இங்கே வரும் போது எங்களை ஃபோலோ பண்ணி வந்து வெளியே இருந்தாங்க. சரியா நேரத்துக்கு ஒவ்வொருத்தரா என்ட்ரி கொடுத்தாங்க. எங்களை மீறி இங்கே உங்களால ஒரு மயிருமே பிடுங்க முடியாது" என்றான்.


கார்திக், "என்னையும் ப்ரவீன், சனாவை கொன்னால் அவங்களோட பழிவாங்கும் படலம் முடிஞ்சிரும். யாதவை இங்கே கொன்னால் கேஸ் விஷயம் யாருக்கும் தெரியாது. நகுலை கல்யாணம் பண்ணி தினம் தினம் அந்த குடும்பத்துக்கு நரகத்தை காட்டனும்னு எங்களை வர வச்சிங்க. இதனே உங்க ரொம்ப ரொம்ப மொக்கையான பிளேன்?" என்றான் சலிப்பாக.


யாதவ் இறுகிய குரலில், "நான் பொலிஸ் ஆக காரணமே என் ஃபிரன்டு ஜெகன் தான். அவன் கிட்ட இருந்து பணம் பறிக்க வந்தவ தான் லிசா. இப்போ சொல்லு அஞ்சலி லிசா எங்கே?" என்று வினவினான்.


அஞ்சலி, "சொல்ல மாட்டேன். அவ எங்க இருக்கான்னு உயிரே போனாலும் சொல்ல மாட்டேன்" என்று பைத்தியக்காரியைப் போல் கத்த, "இப்போவே இங்கேயே கண்டு பிடிச்சி காட்டுறேன்" என்றவன் மினிஸ்டரையும் அவனது மகன் நவீனையும் நோக்கி, "இதுக்கு முன்னாடியே நான் சொன்னேன். என் விஷயத்துல தலைப் போட்டால் அழிச்சிருவேன்னு. இன்னிக்கு நீங்க பண்ண பாவங்களுக்கு தண்டனை அனுபவிக்க போறிங்கடா" என்று கர்ஜித்தான்.


நரம்புகள் புடைக்க, கண்கள் கோவைப் பழமென சிவந்து இருக்க முறுக்கேறிய உடலுடன் தன வேஷ்டியை இழுத்து மடித்துக் கட்டியவன், "என் ஜெகனை கொன்னவளுக்கு நீங்க பாதுகாப்பு கொடுத்தது முதல் தப்பு, என் அண்ணன் வாழ்க்கையை நாசம் பண்ண பார்த்தது இரண்டாவது தப்பு. இரண்டு பேரோட வாழ்க்கையை அழிக்க என்னை கருவியா யூஸ் பண்ணது மூனாவது தப்பு" என்று உரைக்கும் போதே குரல் நன்றாக உயர்ந்தது.


ருத்ரமூர்த்தியின் அவதாரத்தில் நின்று குரலை உயர்த்த, அங்கே மயான அமைதி நிலவ தீயவர்களுக்கு முதுகுத் தண்டு சில்லிட ஆரம்பித்தது.


"ஜெனியை கொன்னது நாலாவது தப்பு. பல அப்பாவி பொண்ணுங்க வாழ்க்கையோட விளையாடினது நாலாவது தப்பு. என் கண்ணு முன்னடியே என் பொன்டாட்டியை இரத்தம் வர அளவுக்கு காயப்படுத்தி அவளை துடிக்க வச்சது அடுத்த தப்புடா" என்று கர்ஜித்தவாறே அங்கே நின்று இருந்த வைஷூவைக் காயப்படுத்தியவின் கன்னத்தில் ஓங்கிக் குத்த அவன் இரத்தம் வழிய விழுந்தான்.


விழுந்தவன் மீது ஓங்கி நெஞ்சில் மிதிக்க, வாயிலிருந்து குருதி குபீரென வெளியேறியவாறே இறந்து போனான் அவன். யாதவின் இவ் அவதாரத்தில் அங்கிருந்தோருக்கு குளிர் காய்ச்சலே வர பயத்தில் மினிஸ்டர் முதல் காசியப்பன், கிஷோர் நவீன் என அனைவருமே "ஒருத்தனையுமே உயிரோட விடாதிங்கடா" என்று கத்தினர்.


கௌதம், "இன்னிக்கு நாம கத்து கிட்ட மொத்த வித்தையை இறக்க வேண்டியது தான்" என்று வேஷ்டியை தூக்கிக் கட்டியவன், "டேய் வாங்கடா. கௌதமா கொக்கா?" என்று அவனை அடிக்க வந்தவனின் வயிற்றில் உதைத்தவன் அவன் மேலே ஏறி அவனின் கையை முறித்தான்.


அடுத்து ஒருவரும் வர அவனையுமே அதே போல் தாக்க, கார்திக் அவனை அடிக்க வந்தவனின் காலிலேயே அடித்தவன் அவனைத் தூக்கி கீழே வீசியவன் காலை முறித்தான். நகுலும் நானும் சளைத்தவன் இல்லை என்று பந்தாட, விஷ்ணுவும் அங்கே வந்திருப்போருக்கு தன் தற்காப்புக் கலையைக் காட்டினான்.


சாத்விக், வைஷூ, சனா, சவிதா மூவரையும் ராமோடு விட்டுச் செல்ல, ராம், "சார் என்னை காப்பாத்தவே ஆள் இல்லை. இதுக்குள்ள நான் எப்படி இவங்களை காப்பாத்துவேன்? எனக்கு பயமா இருக்கு சார். என்னை விட்டு போகாதிங்க சார்" என்று அழ, சவிதா, "நீங்க போங்க அண்ணா நான் இவரை பார்த்துக்குறேன்" என்றவள், "டேய் நீ இப்போ அழுத. உன்னை கொன்னுடுவேன்" என்று மிரட்டினாள்.


ராம் அவசரமாக கண்ணீரைத் துடைத்து, "நான் அழ மாட்டேன். நான் அழ மாட்டேன்" என்றான். சவிதா, "குட்" என்றவள், "நாங்க நாலு பேரும் எங்களையே காப்பாத்திப்போம்" என்ற நால்வருமே ஒருவரின் கரத்தோடு மற்றவரின் கரத்தை இறுகப் பற்றி நின்றனர். ராமின் கைகள் நடுங்க சவிதா அவனைத் திரும்பிப் பார்க்க அவனின் விழிகளோ பயத்துடன் அங்குமிங்கும் அலைப் பாய்ந்தன.


அதைப் பார்த்து புன்சிரிப்பை சிந்தியவள், இவர்களை நோக்கி அடிக்க வரும் ஒருவனைப் பார்க்க "நானும், சனாவும் அவனை பிடிச்சிக்குறோம்.வைஷூ, ராம் நீங்க இரண்டு பேரும் பக்கத்துல இருக்கிற கட்டையாலேயே அடிங்க" என்றாள் சவிதா.


அவர்களும் அதே போல் செய்ய வந்தவனை ராம் முதலில் அடிக்க பயந்தாலும் பின்னர் நன்றாகவே அடித்தான். இவற்றைப் பார்த்த அஞ்சலி கோபத்திலும், வெறியிலும் அங்கிருந்த கத்தியை எடுத்து சனாவை நோக்கிச் செல்ல இதைக் கவனித்த கார்திக் அவளிடம் ஓடி வந்து அவளின் கன்னத்தில் அடிக்க அதே போல் சுருண்டு விழுந்தாள். உடனேயே கார்திக் அங்கிருந்த கயிறை எடுத்து யன்னலோடு சேர்த்து அவளைக் கட்டினான்.


சனாவை குத்தச் சென்ற கோபத்தில், அங்கிருந்த மினிஸ்டரை நோக்கிச் சென்றவன், "என் அப்பா, அம்மா இரண்டு பேரோட சாவுக்கும் நீயும், இந்த அஞ்சலி குடும்பமும் தான்டா காரணம்" என்றவன் முகத்திலேயே குத்த அடி தாங்காமல் பின்னே செல்ல, "அப்பா" என்று ஓடி வந்து சாத்விக்கை தாக்க வந்தான் நவீன்.


நவீனின் வயிற்றில் ஒரு உதை விட அதுவே அவனை சுருள வைத்தது. சாத்விக், "இந்த கை தனேடா எங்க அப்பாவை கொன்னது?" என்று சிங்கமென கர்ஜித்து மினிஸ்டரின் இருகைகளையுமே முறிக்க, அவரின், "அம்மா" என்ற ஓலம் அவ்விடம் எங்குமே கேட்டது. அதோடு விடாது அவரின் ஒரு காலையும் முறித்து வயிற்றில் ஒரு உதை விட 'பொல பொல' என வாயிலிருந்து குருதி வழிய ஆரம்பித்தன.


நவீன சாத்விக் அடித்து பிரித்து மேய்த்து நாரு நாராக ஒரு ஓரத்தில் வீச, கார்திக்கும், நகுலனும் காசியப்பனை நோக்கிச் செல்ல, யாதவ் துளியளவும் குறையாத கோபத்தோடு, கிஷோரை நோக்கிச் சென்றான். கிஷோருக்கு பயத்தில் கை, கால்கள் நடுங்க அவனை இழுத்து கையை முறுக்கியவாறே அஞ்சலியிடம் இழுத்து வந்தான்.


விஷ்ணுவோ ஒருவனோடு சண்டைப் பிடிக்க அச் சண்டையின் போது கௌதமும் அவனோடு இணைந்து தாக்க, அப்போது ஒரு அடியாளினால் விஷ்ணுவின் வேஷ்டி கழன்று அடியாளின் கரத்திற்கு வந்து விட்டது. விஷ்ணு, "டேய் டேய் சண்டை போடுறது நானு. எதுக்குடா என் வேஷ்டியை எடுத்த? மத்தவங்க பார்க்க முன்னாடி கொடுடா" என்று உரைக்க கௌதமும் அதைப் பார்த்து விட்டான்.


கௌதம், "அடக் கருமாந்தம் பிடிச்சவனே, என்ன கோலம்டா இது?முதல்ல வேஷ்டியை போடு. கண்ணு கூசுது" என்று மறுபுறம் திரும்ப, "ஏதோ நான் வேணூன்னு கழட்டி வச்சிட்டு ஷோ காட்டுறது போல பேசுற?அவன் தான்டா கழட்டி எடுத்தான்" என்று அடிப்பதை நிறுத்தி முறையிட்டான்.


கௌதம் வேஷ்டியை கழற்றியவனிடம், "நீ எதுக்குடா அவன் வேஷ்டியை கழட்டின?" என்று கேள்வி எழுப்ப இவர்களோட சண்டையிட்ட அடியாட்களுக்கும் இப்போது அடிப்பதா? இல்லை, இவர்களோடு வாய்ச்சண்டை இடுவதா என குழம்பிப் போய் பார்க்க, விஷ்ணு அவனின் வேஷ்டியை அடியாளிடம் இருந்து அதைப் பறித்து அணிந்துக் கொண்டவன், ஒழுங்காக கட்டிக் கொண்டான்.


அதன் பின் விஷ்ணு, கௌதம் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, "இது என் வேஷ்டியை கழட்டினதுக்கு" என்று உதை விட சுவரில் மோதி ஒருவன் கீழே விழ, கௌதம், "இவன் வேஷ்டியை கழட்டி என்னை டிஸ்ட்ரெக் பண்ணவன் கூட நீ ஃபிரன்டா இருந்ததுக்கு" என்று மற்றையவனுக்கு அடித்தான்.


விஷ்ணு உடனடியாகத் திரும்பி கௌதமிடம், "இதுல லொஜிக்கே இல்லையே" என்று கூற, "அடிக்குறதுக்கு லொஜிக் பார்த்தால் அடிக்க முடியுமா?" என்று கௌதம் தோளை உலுக்க, இவனும், "கரெக்ட்" என்று தோளை உலுக்கி அங்கிருந்து நகர்ந்தான்.


அங்கிருந்த அடியாட்கள் அனைவருமே காலியாகி இருக்க சாத்விக்கும், நகுலும் காசியப்பனை மாறி மாறி வெளுத்து வாங்கி கிழிந்த துண்டாக போட்டிருக்க, யாதவ் அஞ்சலியின் முன் சென்று நின்று தன் வலது கரத்தினால் கிஷோரின் கழுத்தை நசுக்கி, இடது கையால் அவன் முகத்திற்கு விடாமல் குத்தினான்.


இதனால் முகம் முழுவதும் இரத்தம் வழிய, அஞ்சலி அதனை பார்க்க முடியாமல் வேறு புறம் திரும்ப, "லிசா எங்கே?" என்று அடித்தவாறே வினவ, "மாட்டேன்" என்று தலையாட்ட விடாமல் கிஷோரின் முகத்தில் குத்தினான் யாதவ். "லிசா எங்கேன்னு நீ சொல்ல இல்லை அன்னிக்கு மகாபாரதத்துல பீமன் துரியோதனனோட தொடையை மட்டும் தான் பிளந்தான். அதே போல ஒரு காட்சியை ஆனால உன் அண்ணோட முழு உடம்பையும் பிரச்சிருவேன்" என்று கர்ஜித்தில் அஞ்சலியின் உடல் தூக்கிப் போட்டது.


அஞ்சலி பயந்த குரலில், "சொல்லிடுறேன். அவ வில்லியம்சுக்கு உதவி பண்ண அவுஸ்திரேலியா போனா. அப்போ அவனுக்கு லஸ்டுக்கு அவ அழகு யூசாக, அவனை ஏமாத்தி பணம் பறிக்க முயற்சி பண்ணா. இதை தெரிஞ்ச வில்லியம்ஸ் அவளை கொன்னுட்டான்" என்று கூறி முடிக்க, "ஒரு கெட்டவன் கையால அவளுக்கு தகுந்த தண்டனை கிடைச்சிருச்சு" என்று மன நிறைவுடன் உரைத்த யாதவ் கிஷோரை விட தெம்பின்றி கீழே விழுந்தான்.


கௌதம், "மச்சான் அத்தனை பேரையும் எவிடன்சோட அரெஸ்ட் பண்ணலாம்டா இங்கேயே" என்று கூற, "வேணாம். அத்தனை பேரோட கதையை இங்கேயே முடிச்சிருங்க. இவங்களை சென்னைக்கு கூட்டிட்டு போற வழியில சில மர்மநபர்களால் கொல்லப்பட்டாங்கன்னு கேசை குளோஸ் பண்ணிடு" என்றவன் சாத்விக்கைப் பார்த்தான்.


சாத்விக், "அஞ்சலி உன் கண்ணு முன்னாடி தான் அத்தனை பேரையும் கொல்ல போறோம். எங்களுக்கு சொந்தமானவங்களை இழக்குற வலி, அவமானம்னா என்னன்னு உனக்கு தெரிய வேணாமா? இன்னும் கொஞ்ச நேரத்துல நகுல், காஞ்சனா கல்யாணம் நடக்கும் அதையும் பாரு" என்று உரைத்து அங்கிருந்து செல்ல யாதவின் குழு உறுப்பினர்கள் அங்கே வருகை தந்தனர்.


யாதவ், சாத்விக்கின் கட்டளைப்படி அவர்கள் அனைவருமே அஞ்சலியின் கண் முன்னேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். கடத்தப்பட்ட இடத்திற்கு சென்றவர்கள் அனைவரும் தங்களைச் சுத்தப்படுத்திய பிறகே கோயிலிற்குச் செல்ல, கமிஷனர் யாதவைப் பார்க்க அவனும் அவரைப் பார்த்து ஒற்றைக் கண்ணைச் சிமிட்டினான்.


அவர்கள் பாதுகாப்பாக திரும்பி வந்ததைப் பார்த்த பெரியவர்கள் இறைவனுக்கு நன்றி கூறி நகுல் காஞ்சனா திருமணத்திற்கு தயாரானார்கள். அதன் படி அனைவரின் ஆசிர்வாதத்துடன், முக்கோடி தேவர்களின் ஆசிர்வாதத்துடனும் மஞ்சள் தாலியை காஞ்சனாவிற்கு கட்டி அவளை தன் சரிபாதியாக்கிக் கொண்லான் நகுல்.


அவளுடைய கட்டுகள் அனைத்தும் அவிழ்க்கப்பட்டு இவை அனைத்தும் வீடியோ கால் மூலமாக அஞ்சலியிற்கு காட்டப்பட அவள் அனைத்தையுமே இழந்து, தோற்றுப் போனதை ஏற்க முடியாமல் அங்கே இருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தை தானே அறுத்து உயிரை விட்டாள் அஞ்சலி.
 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒவ்வொரு ஜோடிகளுமே தங்கள் ஜோடியின் கரம் கோர்த்து நிற்க ராமின் அருகில் நின்ற சவிதா அவனுடைய கையை தன் கரத்தோடு கோர்த்துக் கொள்ள மின்சாரம் தாக்கிய அதிர்வில் நின்றான் ராம். இதைப் பார்த்த அனைவருமே சிரிக்க அனைவருமே வீட்டை நோக்கிச் சென்றனர்.


நகுல்-வசுமதியை ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்க,
யாதவ் - வைஷ்ணவியை நிற்க வைத்த யாதவின் தாய் அவர்களையும் முறையாக வரவேற்க அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது இது. முழு மனதுடன் இருவருமே கைக்கோர்த்து உள்ளே நுழைந்தனர்.


அதன் பிறகு அடுத்தடுத்த சடங்குகள் நகுலன்-காஞ்சனாவிற்கு மட்டுமின்றி யாதவ்-வைஷ்ணவியிற்குமே நடந்தேறியது. நேரமும் இரவைத் தொட, அடுத்த திருமணம் கௌதம்-காவ்யாவிற்கு என்பதால் அனைவருமே அவர்களைக் கலாய்க்க, ராமும் சவிதாவும் ஒருவரை ஒருவர் மற்றவறியாது பார்த்துக் கொண்டனர்.


இரவில் அனைத்து ஜோடிகளும் தத்தமது அறைகளுக்கும், மற்றவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளுக்குச் சென்றனர். அன்றைய இரவு மற்ற ஜோடிகள் சந்தோஷமாக கழிக்க சாத்விக்-சனா, யாதவ்-வைஷ்ணவி இவர்களுக்கு தங்கள் கணவன்களை சமாதானம் செய்து உறங்க வைப்பதிலேயே சென்றது.


சாத்விக், சனாவை தன் நெஞ்சில் சாய்த்தபடி, "என் அம்மா, அப்பா ஆத்மா இப்போ சாந்தி அடைஞ்சிருக்கும் இல்லையா?" என்று அவள் கூந்தலை வருடியவாறு வினவ, "கண்டிப்பாங்க. இன்னியோட நமளுக்கு உள்ள அத்தனை பிரச்சனைகளுமே முடிஞ்சிருச்சு. நீங்க நிம்மதியா தூங்குங்க சவீன்" என்று நெற்றியில் இதழ்பதித்தாள்.


சாத்விக், "ஹம், எனக்கு என் அப்பா அம்மாவை பார்க்கனும் போல இருக்கு. அவங்களை எனக்கு பெத்துகொடுக்குறியா? அவங்களை பத்துரமா எனக்குள்ள பொத்தி வச்சு பார்துப்பேன்" என்று ஆசையாக வினவ, "பெத்து தந்துட்டா போச்சு" என்று அவன் இதழில் சிரிப்புடன் முத்தமிட அவளுடைய வயிற்றில் தன் சிசுவுக்கு முத்தமிட்டு தன்னோடு அவளை இறுக அணைத்துக் கொண்டு இமை மூட சனாவும் இமை மூடினாள்.


யாதவ் அறைக்கு வந்தவன் குளித்து கட்டிலில் சாய்ந்து இருக்க வைஷூ குளித்து அவள் அருகில் வந்து அமர்ந்து, "என்னாச்சு அத்தான்?" என்று அவன் கேசத்தைக் கோதியபடி வினவ, பதில் பேசாது அவளுடைய நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் அவள் ஆடையையும் மீறி அவளை ஈரம் நனைக்க அப்போதே அவன் அழுகிறான் என்பதை புரிந்துக் கொண்டாள் வைஷ்ணவி.


அவனை தடுக்காது அவனுடைய கேசத்தைக் கோதிக் கொடுக்க, வெகு நேரம் தன் மனக் கவலை தீரும் வரை அழுதவன், "ஜெகன், ஜெனி நினைப்பு வந்திருச்சு நவி" என்று சிறு குழந்தையென உரைக்க, "அதான் அவங்களுக்காக நியாயத்தை கொடுத்துட்டிங்களே" என்றாள் சிகை கோதியவாறே.


"ம்ம்" என்றவன் அவள் நெஞ்சில் சாய்ந்துக்கொள்ள, "உங்க கேசும் முடிஞ்சிது. எங்க பிரச்சனைகளும் முடிஞ்சது. நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அத்தான்" என்று அவனை அணைத்துக் கொண்டாள் வைஷ்ணவி.


யாதவ் அதே நிலையில், "அன்னிக்கு சாத்விக் கேட்ட கேள்வியையே கேட்குறேன். உனக்கு மேலே மேலே படிக்க ஆசையா இருக்கா?" என்று வினவ, "அது..." என்று வைஷூ தடுமாற, "நீ மத்தவங்களைப் பத்தி யோசிக்காத. உனக்கு படிக்கனுமா? வேணாமா?" என்றான். "எனக்கு ஐ.ஏ.ஏஸ் ஆபிசராகனும்னு ரொம்ப ஆசை அத்தான்" என்று கண்கள் மின்ன உரைக்க, "அப்புறம் என்ன படிச்சிட்டா போச்சு" என்றான் அவள் முகத்தைப் பார்த்து.


"நெஜமாவா?" என்று வினவ, "ஆமா" என்றான் சிரிப்புடன் யாதவ். அவள் சந்தோஷத்தில் அவன் கன்னத்தில் இதழ்பதிக்க, "நீ எனக்கு கிஃப்ட் கொடுக்க தேவையில்லை. நானே எடுத்துக்குறேன்" என்று அவளோடு மஞ்சத்தில் சரிந்து மனைவி எனும் ஆழ்கடலில் மூழ்க ஆரம்பித்தான் யாதவ் மித்ரன்.


அடுத்த நாளும் அழகாய் விடிய, அங்கே வருகை தந்தனர், சவிதாவின் குடும்பத்தினரும்; ஜெகனின் குடும்பத்தினரும். நகுலே இவர்களை வரவழைக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தான்.


ஜெகனின் பெற்றோரிடம் சென்ற யாதவ், "என்னால அவங்களை காப்பாத்த முடியல்லை அப்பா, அம்மா. ஆனால் அவங்க இந்த உலகத்தை விட்டு போறதுக்கு காரணமானவங்களுக்கு தண்டனையை கொடுத்துட்டேன்" என்று கண்கள் கலங்கிட மொழிய கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டனர்.


இதே நிலையே சவிதாவின் குடும்பத்தினரிற்கும். காசியப்பன் இத்தனை கொடூரமானவர் என்று அவர்கள் நினைத்தும் பார்க்கவில்லை. இறுதியில் அவருக்கு தக்க தண்டனை கிடைத்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சியே. அதே போல் சவிதாவை காப்பாற்றியதற்காக அனைவருக்கும் நன்றி கூறினர் சவிதாவின் குடும்பத்தினர்.


மாலையில் வீட்டில் பூஜை நடக்க ஒவ்வொரு நாயகன்களுமே தங்கள் துணைகளோடு அதில் பங்கேற்க ஜோடி, ஜோடியாக நின்ற அனைவரையும் கண்குளிரப் பார்த்த பெரியவர்கள் இதே போல் இவர்கள் சந்தோஷமாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள அவர்களின் வேண்டுதலும் இதுவாகவே இருந்தது.


இறைவனும் ஆமோதித்தைப் போன்று அவன் படத்திற்கு சூடியிருந்த ஒரு பூவை விழ வைத்து அவர்களுக்கு ஆசிர்வதித்தான்...


முற்றும்..






கருத்துக்களைப் பகிர,







 

Haani karthigan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Epilogue



அன்று சென்னையில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் காவல்துறைக்கான மாதாந்த சந்திப்பு துணை மாவட்ட ஆட்சியாளரின் தலைமையில் நடந்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கே இருந்த உதவியாளரின் காதில் கிளார்க் ஒருவன் காதில் ஏதோ சொல்ல அவசரமாக அங்கிருந்து வெளியே விறுவிறுக்க ஓடி வந்தான்.


நுழை வாயிலின் அருகே காரில் இருந்து இறங்கினாள் அவள். கூந்தலை போனிலேட் இட்டு, கறுப்புநிற முக்கால் கைச் சட்டை அணிந்து, சாம்பல் நிற காட்டன் புடவை, நெற்றி வகுட்டில் குங்குமம்; நெற்றியில் கறுப்பு நிற வட்டப் பொட்டு, இடது கையில் கறுப்பு நிற பிரேன்டட் கைக்கடிகாரம், வலது கையில் தங்க பிரேஸ்லட் என்று இருந்தாள்.


ஓடி வந்தவனோ, "குட் மோர்னிங் மேம். நாளைக்கு தானே சார்ஜ் எடுக்குறதா சொன்னீங்க?" என்று பவ்யத்துடன் வினவ, "ஏன்? நாளைக்கு சார்ஜ் எடுக்குறதுன்னா இன்னிக்கு வர கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?" என்று அழுத்தமான வார்த்தைகள் அமர்த்தலாகவே வெளிவர நெற்றியில் பூத்த வியர்வைப் பூக்களைத் துடைத்துக் கொண்டான்.


அவசரமாக, "அப்படி கிடையாது மேடம், சும்மா தான் கேட்டேன். நீங்க உள்ள வாங்க" என்று அழைக்க, தன் மூன்று மாத கருவை சுமந்தவாறு கம்பீரத்துடன் நடந்து வந்தான் சென்னை நகரின் புதிய மாவட்ட ஆட்சியாளரான வைஷ்ணவி யாதவ் மித்ரன். மூன்று மாத கருவை சுமந்து இருந்தாலும் இரட்டைக் குழந்தைகளை சுமந்து இருப்பதால் ஐந்து மாதமாகவே அவளைக் காட்டியது அனைவருக்கும்..


அவளுடைய ஆசையை நிறை வேற்றும் வகையில் அவளைப் படிக்க வைத்து, பயிற்சிக்காக அனுப்பி அவள் முழுமையான மாவட்ட ஆட்சியாளராக மாற ஐந்து வருடங்கள் எடுத்தன. ஆனால் முதல் பணியே உதய்பூரில் கிடைக்க அங்கே மூன்று வருடங்கள் பணயாற்றி தற்போது சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கிறாள்.


நாளையே பதவி ஏற்பதாக இருக்க இன்றே அவளுடைய திடீர் வருகையை எவருமே எதிர்பார்க்கவில்லை. உதய்பூரில் இருந்த போது பல சவாலான பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வெற்றியைப் பெற்ற நேரம்மைக்கும் கண்ணியத்திற்கும் பெயர் பெற்றவள். அவளுடைய ஆளுமையான பேச்சும், கம்பீரத் தோற்றமுமே அவளைப் பார்த்தாலே மரியாதையாக நடத்த வைக்கும்.


இவை அனைத்தையுமே அவள் கற்றுக் கொண்டது அவளுடைய ஆரூயிர் கணவன் யாதவ் மித்ரனிடம் இருந்தே. அவள் முதல் குழந்தையை பிரசிவித்த போதுமே ஒரு தாயாய் இருந்து அவளைப் பார்த்துக் கொண்டது மட்டுமின்றி அவளுக்கு அனைத்து வகையிலுமே உதவிகளைச் செய்தான்.


உள்ளே செல்ல மரியாதை நிமித்தமாக அனைவருமே அவளுக்கு மரியாதை செலுத்த கீற்றுப் புன்னகை சிந்தி சிறு தலை அசைப்புடன் அதை ஏற்றுக் கொண்டு உள்ளே நடக்க சந்திப்பு நடக்கும் இடத்திற்கு அவளை அழைத்துச் சென்றார் அவர். அவள் நுழைந்ததுமே அங்கிருந்த பொலிஸ் அதிகாரி முதல் துணை மாவட்ட ஆட்சியாளர் வரை அவளுக்கு மரியாதை செலுத்த தலையசைத்து ஏற்றுக் கொண்டாள்.


அங்கே கமிஷனர், யாதவ், கௌதம் மற்றும் உயர் பதவிகளில் இருக்கும் பொலிஸாரும் இருக்க டிபியூடி கலெக்டர், "மேம் ஷெல் ஐ கன்டினியூ?" என்று வினவ, " யா ஷூயர்" என்று கூறி கரம் அசைத்து அங்கே நடப்பவற்றை அவதானித்தாள்.


மீடிங்கும் முடிய அமைதியாக இருந்த வைஷூ, "நான் இங்கே இன்னிக்கு வந்ததுக்கு காரணம் வரவேற்குறங்குர பேருல தயவு பண்ணி எதுவும் பண்ணாதிங்கன்னு சொல்லவும், நான் சார்ஜ் எடுக்க முன்னாடி சும்மா எல்லலோரையும் பார்க்க தோணுச்சு அதான்" என்று கம்பீரமாய் மொழிந்து விட்டு வெளியேற அவளின் ஒவ்வொரு செய்கையையும் இரசித்தான் யாதவ்.


கௌதம், "டேய் இப்போ அவ உன் பொன்டாட்டி இல்லைடா. நம்ம கலெக்டர்" என்று காதுக்குள் கிசுகிசுக்க, "அவ எனக்கு எப்போவுமே என் நவிடா" என்றான் சிறிதளவும் குறையாத காதலோடு. கௌதம், "எட்டு வருஷமாகியுமே உன் கண்ணுக்கு அவ இன்னுமே அதே நவியா தான௲ தெரியுறா. அப்படியே புல்லரிக்குது" என்று கூற, "அப்போ காவ்யா உனக்கு அப்படி தெரியில்லை. இருடா அவ கிட்டயே சொல்லுறேன்" என்று உரைத்து முன்னே நடந்தான் யாதவ்.


கௌதம், "டேய் டேய்" என்று கத்தி ஓட யாதவ் வைஷ்ணவியின் அருகில் சென்று இருந்தான். வைஷ்ணவி, "வேலை முடிஞ்சிருச்சா அத்தான்?" என்று அவனுடைய நவியாக மாறி வினவ, "ஆமா டா. நான் மாமாவையும் கூட்டி கிட்டு அப்பா வீட்டுக்கு வரேன். நீ மஹியையும், அத்தையையும் அழைச்சிட்டு வா. சாத்விக், விஷ்ணு வரேன்னு சொன்னாங்க" என்றான்.


அவளும், 'சரி' என்று தலையாட்ட கமிஷனர் அங்கே வருகை தந்தார். கமிஷனர், "எனக்கு யாதவுக்கும் வேலை இருக்குமா. நீ அம்மா கூட போ" என்று தலை வருடிக் கூற, "சரிபா நான் பத்துரமா போறேன்" என்று கூறி விடைப் பெற்றுச் சென்றாள் வைஷ்ணவி.


கௌதம், ஓடி வந்தவன், "நல்லா இருக்கிற குடும்பத்துல சங்கு ஊதி கெடுத்து விட்டுறாதே" என்று கையெடுத்து கும்பிட, "சரிடா வா போலாம்" என்று சிரித்தான். கமிஷனர், "காவ்யாவும், குழந்தைகளும் பாட்டி வீட்டுக்கு போய் இன்னுமே வர இல்லையா?" என்று வினவ, "அந்த கொடுமையை ஏன் கேட்குறிங்க சார்? பசங்களுக்கு பாட்டி வீட்டுக்கு போனால் எதுவுமே தேவைபடாது. அப்பாவையே மறந்துருவாங்கன்னா பாருங்க" என்று உரைத்து அலுத்துக் கொண்டான்.


கௌதம், காவ்யாவிற்கு திருமணம் முடிந்து அவர்களுக்கு மூன்று குழந்தைகளை அருட்கொடையாக கடவுள் வழங்கி இருந்தான். முதாலவது பெண் குழந்தை, ஆறே வயதான ஆரோஹி. இரண்டாவது நான்கே வயதான மகன் ஆயுஷ்மான். மூன்றாவது அஷானி எனும் இரண்டு வயதான பெண்குழந்தை.


திருமணத்திற்குப் பிறகு காவ்யா சென்னைக்கே வந்து விட விஷ்ணுவின் வைத்தியசாலையில் ஒரு வைத்தியராக தொழில் புரிகிறாள். இருவருக்கிடையில் சிறு சிறு சண்டைகள் வந்தாலும் அவர்களுடைய காதல் அதனால் அதிகரித்ததே தவிர குறையவில்லை.


சவிதாவிற்கு ராமே தன்னைக் வைத்தியசாலையில் கொல்ல முனைந்த போது காப்பாற்றினான் என்று தெரிந்த போதே அவன் மீது ஈர்ப்பு ஏற்பட, அவ் ஈர்ப்பு சவிதாவை விஷ்ணு ஊரிற்கு அழைத்துச் செல்லும் வரையில் அவனே, அவளை பாசமாக பார்த்துக் கொண்டதில் ஆரம்பக்கட்ட காதலாக மாறியது.


அவனுடைய அப்பாவிக் குணமும், அனைவரோடு பாசமாக இருக்கும் நற்குணமும் இன்னும் அவளை ஈர்க்க யாதவின் ஊரிலிருந்து சென்னை சென்ற உடனேயே ராமைப் பற்றி முழுமையாக குடும்பத்திடம் கூறி அவனைக் காதலிப்பதாகக் கூறிவிட்டாள்.


துரையப்பனும் அவனைப் பற்றி விசாரிக்க அனைவருமே அவன் நன்நடத்தையைக் கூற அவளுடைய காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார். அதன் பின் ராமிடம் சவிதா தன் காதலைக்கூற அவனுடைய அக்மார்க் பாவனையான அதிர்ச்சியை வெளியிட்டவன் பின் பயத்தில் முடியாது என்று விட்டான்.


இவனிடம் பேசினால் காரியத்தை நடத்த முடியாது என்று புரிந்துக் கொண்ட சவிதா விஷ்ணுவிடம் கூற அவனே ராமின் குடும்பத்திடம் பேசி, ராமின் அண்ணனாக முன் நின்று திருமணத்தை முடித்து வைத்தான். தற்போது சிறிதளவு அவன் அச்சங்களில் இருந்து வெளியே வந்திருக்க, அவனுள்ளும் சில மாற்றங்கள் வந்திருந்தன சவிதாவினால்.


ராம் மேற்படிப்பு படிக்க அமேரிக்கா செல்ல அவனை விட்டு இருக்க முடியாது என்று சவிதாவும், அவளோடு ராமின் பெற்றோரையும் அழைத்துக் கொண்டே அமேரிக்காவிற்கு பறந்து விட்டாள். அங்கேயே அவனுக்கு நல்லதொரு வேலை கிடைக்கவும். அங்கேயே தங்கி விட்டான்.


சவிதா-ராம் தம்பதிகளுக்கு நான்கு வயதான மகள் ஜோதிகாவும் தற்போது சவிதா மூன்று மாதக் குழந்தையை சுமந்துக் கொண்டு இருக்கிறாள். அவர்கள் இங்கே தீபாவளி, விசேட நிகழ்வுகளுக்கு மறக்காமல் வந்து கலந்துக் கொள்வர் எவ்வருடமுமே.


வைஷ்ணவி தன் பெற்றவர்களோடும், யாதவின் பெற்றோருடனும் நன்றாகப் பேசினாலும் சென்னையில் உள்ளோர் வைஷ்ணவியை கமிஷனரின் மகளாகவே பார்க்க வைஷூ- யாதவின் தவப் புத்திரியும் கமிஷனரின் பேத்தியாகவே அடையாளம் காணப்பட்டாள். இதில் ஆரம்பத்தில் சந்திரசேகர் பானுமதிக்கு வருத்தமாக இருந்தாலும் இவர்களுடைய மகள், பேத்தி என்பது மாற முடியாத உண்மை எனப் புரிந்துக் கொண்டு அதையும் ஏற்றுக் கொண்டனர்.


அது மட்டுமில்லாது கமிஷனர் மற்றும் அவரது மனைவி யாதவின் வீட்டிலேயே வைஷ்ணவி யாதவிற்கு உதவியாக அவள் முதல் பிரசவத்தில் இருந்து தங்க அதன்பிறகு அனைவருமே ஒரே வீட்டில் அதுவும் யாதவ் கட்டிய வீட்டில் தங்கினர். ஜெகனின் பெற௲றோரை யாதவ் அவனுடைய பெற்றோரைப் போன்றே பார்க்க, வாரம் ஒரு முறை பிள்ளைகள் இல்லாக் குறைகளை நீக்கவே அங்கே அனைவரும் ஒன்று கூடுவர்.


அதே போல் இன்றும் அங்கே செல்லவே யாதவின் குடும்பத்தினரும் தயாராகினர். வைஷ்ணவி வீட்டிற்குச் செல்ல, "ம்மா" என்று தத்தி தத்தி மழை மொழியில் பேசியவாறு ஜீன்ஸ், டீசர்டில் ஓடிவந்தாள் மூன்றே வயதான யாதவின் குட்டி வைஷூ மஹீஷா.


அவன் ஏங்கிய பாசத்தை விடவும் பல மடங்கு தன் தந்தைக்கு பாசத்தை அள்ளி வழங்கும் தேவதை இவள். அவளை அள்ளி அணைத்து முத்தமிட அவள் பின்னே தயாராகி வந்தார் கமிஷனரின் மனைவி. வைஷூவின் முகத்தினில் சோர்வை கண்டு கொண்டவர், "ஒரு பத்து நிமிஷம் இருந்துட்டு போலாம் வைஷூ" என்று, "சரிமா" என்று தன் மகளைக் கையிலேந்தி சோஃபாவில் அமர்ந்தாள்.


கமிஷனரின் மனைவி, "நீ டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டி வரியாடா? சாரி கசகசன்னு இருக்குமே" என்று தண்ணீர் குவளையை எடுத்து வந்து கொடுக்க, அதை எடுத்து மிடறு மிடறாக பருகியவள், "வேணாம் அம்மா. மறுபடியும் சேன்ஜ் பண்ண முடியாது" என்று சலிப்பாக உரைத்து, "வாங்க போலாம்" என்றாள்.


"ம்மா நானு" என்று பாவமாக உரைத்து உதடடை மஹி பிதுக்க, "அம்மா பாவம்ல? பிரின்சசை நான் தூக்கிக்கிறேன்" என்று கமிஷனரின் மனைவி அவளை தூக்கிக் கொள்ள சமத்தாக அவரோடு ஒட்டிக் கொண்டாள். மூவருமே காரில் ஜெகனின் பெற்றோரின் வீட்டிற்குச் செல்ல அவர்களுக்கு முன்னேயே சாத்விக்கின் குடும்பமும் விஷ்ணுவின் குடும்பமும் வந்திருந்தது.


கார்திக் தனது தொழின் முறை வேலைக்காக லண்டன் செல்ல அவனோடு அபியும் அவனுடைய பிள்ளைச் செல்வங்களும் தாங்களும் வருவோம் என்று அடம்பிடித்ததால் வேறு வழியின்றி அவர்களையும் அழைத்துச் சென்று இருந்தான்.


அபி-_கார்திக் தம்பதிகளுக்கு இரு கண்களென இரு பெண் பிள்ளைகள் அவர்களுடைய காதலுக்கு பரிசாகப் பெற்று எடுத்தனர். எட்டு வயதான ஹரிதாவும், நான்கே வயதான இமேஷாவுமே அவர்களுடைய புத்திரிகள்.


சாத்விக், ஜெகனின் தந்தை, விஷ்ணு மூவருமே அமர்ந்திருக்க வைஷூவின் கார் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது. சனா, வசுமதி இருவருமே சமையலறையில் ஜெகனின் தாய்க்கு உதவி செய்தவர்கள் வைஷூவை வரவேற்கச் செல்ல அவர்கள் அனைவருக்கும் முன்னே ஓடிச் சென்றான் எட்டு வயது சிறுவன் ஒருவன்.


ஆம், சாத்விக் சனாவின் மூத்த மகன் ஆதிஷ். சாத்விக்கின் தந்தையை உரிந்து வைத்துப் பிறந்து இருக்க, குணத்திலோ சாத்விக்கையே மிஞ்சுபவனாக இருந்தான். வெளியே சென்று, "அம்மு" என்று அழைத்ததுமே பாட்டியின் கையிலிருந்து பாய்ந்து இறங்கிய மஹி தத்தித் தத்தி அவனை நோக்கி ஓடினாள்.


ஆதிஷூம் அவளை ஓட வைக்காது வேகமாகச் சென்றவன் மஹியைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டவுடன் எப்போதும் போல் உதட்டிற்கு நேர் கீழே நாடியில் இருந்த அவள் மச்சத்தில் முத்தமிட்டான். இதை சாத்விக், சனா, வைஷூ மூவருமே பார்த்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


அவனுக்கு பின்னே ஓடி வந்த சாத்விக் சனாவின் ஐந்து வயதான இரண்டாவது மகன் சதீஷ், "மஹி" என்று தன் அண்ணனையும் சேர்த்தே அணைத்துக் கொண்டான். இரு சகோதரர்களும் மஹீஷாவைக் கொஞ்ச, உள்ளிருந்து "நாங்களும்" என்று ஓடி வந்தர் இரு குட்டி வாண்டுகள்.


விஷ்ணு-வசுமதி தம்பதியினரின் ஏழு வயதுடைய மூத்த மகனான கிருஷ் மற்றும் நான்கே வயதான இரண்டாவது மகள் சந்தினி. அவனுடைய எட்டு மாத குழந்தை மிதுனை கையில் ஏந்தியவாறு இவர்களை வேடிக்கைப் பார்த்துச் சிரித்தான் விஷ்ணு.


சிறியவர்கள் ஒன்றாக தோட்டத்தில் விளையாட, பெரியவர்கள் அனைவருமே ஒன்று கூடினர். அதற்குள் யாதவ், கமிஷனரும் வருகை தர இருவரும் சுத்தமாகியதுடன் யாதவ் முதலில் பார்க்க சென்றது தன் புதல்வியையே.


வைஷூ பெரு மூச்சை வெளியிட்டு, "இன்னும் பத்து செக்கனுக்குள்ள 'டேய் ப்ரவீன்னு' கூப்பிடுவாரு அண்ணா. போக ரெடியா இருங்க" என்று கூற, இது தினமுமே நடை பெறூவதால் அனைவருமே சிரித்துக் கொண்டனர்.


அதே போல் யாதவ், "டேய் ப்ரவீன்" என்று கத்த, "இவங்களுக்கு நடுவுல என்ன எதுக்குடா இவன் இழுக்குறான்?" என்று முணகி வெளியே செல்ல மற்ற அனைவருமே அவன் பின்னேயே சென்றனர்.


அங்கே யாதவும், ஆதீஷூம் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தவாறு இடுப்பில் கை வைத்து நின்று இருக்க மஹீ சதீஷின் மடியில் அமர்ந்து இருவரையும் கொட்ட கொட்ட விழித்து மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


சாத்விக், "ஆதீஷ், மஹீ அவன் பொண்ணுடா. அவளை அவன் தூக்கக் கூடாதுன்னு சொல்றதுல என்னடா ஞாயம்?" என்று பாவமாய் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இதே கேள்வியை கேட்டு இருக்க, "அவ என் அம்மு டேட். என் கூட எப்போவாவது தானே இருக்கா? மத்த நேரங்களில் அவரு கூட தானே இருக்கா. என் கூட அவ இருக்கும் போது இவரு தூக்க கூடாது" என்று அழுத்தமாக அவனிடமிருந்து அதே பதில் மீண்டும் வந்தது.


யாதவ், "பார்த்தியா? பார்தியா என் பொண்ணை தூக்கக் கூடாதுன்னு அவனே எப்படி அடிடீயூடா சொல்றான். ஒழுங்கு மரியாதையா உன் பையனுக்கு என் பொண்ணை என் கிட்ட கொடுக்க சொல்லு" என்று சாத்விக்கிடம் சண்டையிட, "இங்கே பேசுறது நான் தானே? எதுக்கு டேட்டை இதுகுள்ள இழுக்குறிங்க? சின்ன குழந்தைங்க மாதிரி கம்பளைன் பண்ணாதிங்க" என்றான் அமர்த்தலாக.


அங்கிருந்தோருக்கு இதைக் கேட்டு சிரிப்பு வந்தாலும் இதழுக்குள்ளேயே அடக்க, யாதவ் ஏதோ பதில் கூற முன் விஷ்ணு , "டேய் சின்னப் பையன் கிட்ட போய் சண்டை போடுற. வாடா உள்ள" என்று அழைக்க, ஆதீஷை முறைத்து விட்டு மஹியிற்கு ஐரு முத்தம் வழங்கிய பின்னே உள்ளே சென்றான்.


இவர்களுக்கு இடையில் ஆரம்பித்த போர் இன்று நேற்று அல்ல. மஹீஷா பிறந்ததில் இருந்தே இது நடைப் பெறுகின்றது. ஏனோ ஆதீஷிற்கு மஹீ பிறந்ததில் இருந்தே அவள் மீது ஓர் உரிமை உணர்உ தோன்ற இன்று வரை அவளை யாரிற்கும் விட்டுக் கொடுக்க முடியாது அனைவரிடமும் சண்டைக்குச் செல்ல, முக்கியமாக யாதவிடமே முட்டிக் கொள்வான்.


மஹீஷாவிற்கும் ஆதிஷ் என்றால் அலாதிப் பிரியமே. அவன் இருக்கும் போதெல்லாம் அவனுடனேயே சுற்றித் திரிய இருவருக்குள்ளும் ஆழமாக அன்பு வளர்ந்தது. யாதவ் உள்ளே நுழைந்தவுடன் சாத்விக்கைப் பார்க்க, அவனுமே யாதவின் அருகில் வந்தமர்ந்தான்.


மஹீஷா வைஷ்ணவியை உரித்து வைத்துப் பிறந்து இருந்தாலும் அவளுடைய நாடியில் இருக்கும் மச்சம், சாத்விக்கின் தாயின் நாடியில் இருக்கும் மச்சத்தை ஒத்து இருந்தது. இதை மற்றவர்கள் பெரிதாக எடுக்காவிடினும் யாதவும், சாத்விக்கும் எப்போதுமே அதைப் பார்த்து யோசணைக்கு உள்ளாவார்கள்.


விஷ்ணு, "ஆதீஷ் சின்ன பையன்டா" என்று உரைக்க வசு, "அவன் கிட்ட போய் உங்க பொசிசிவ்னசை காட்டலாமா மித்து மாமா?" என்று சிரித்தாள். யாதவ், "அதெப்படி விட முடியும்? அவ என் பொண்ணு" என்று முறுக்கிக் கொள்ள, "அத்தான், மஹி உங்க பொண்ணு தான். அவ உங்க கைக்குள்ள மட்டுமே வளர முடியாதே. மத்தவங்க கூட வளரும் போது நிறைய விஷயங்களை கத்துப்பா" என்றாள் பொறுமையாக.


யாதவ் அமைதியாக இருக்க ஜெகனின் தாய், "சரி அதை விடுங்க. முதல்ல சாப்பிடலாம். மத்ததை அப்புறமா பேசலாம்" என்று அழைத்துச் செல்ல சனா குழந்தைகளுக்கு உணவு ஊட்டச் சென்றாள். அவளுக்கு உதவியாக வசுவும் செல்ல வைஷ்ணவி ஓய்வாக அமர்ந்தாள்.


ஆண்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பெண்களும் சாப்பிட கார்திக்கின் குடும்பத்தினர் மற்றும் நகுலின் குடும்பத்தினரும் வீடியோ காலில் இவர்களோடு இணைந்துக் கொண்டனர். அதில் காஞ்சனா முகத்தை தூக்கி வைத்து அமர்ந்து இருக்க யாதவ், "என்னாச்சு அண்ணி?" என்று வினவ, "எல்லாம் உங்க அண்ணனாலேயும், அவரு பொண்ணாலேயும் தான்" என்றாள் கோபமாக.


அனைவருமே சுவரசியமாக அதைப் பார்க்க, சாத்விக், "என்ன பண்ணிங்க புரோ?" என்று சிரிப்புடன் வினவ, "தக்ஷிகா இன்னிக்கு விளையாடும் போது அர்ஜூனை ஒரு பையன் தள்ளி விட்டுட்டாங்கன்னு செம்மையா அடிச்சிருக்கா. அந்த பையனோட அம்மா வீட்டுக்கு வந்து சத்தம் போட்டாங்க. அதனால தான்" என்று கூற, "அப்போ உங்க பொண்ணு பண்ணது தப்பு இல்லை?" என்று எகிறினாள் காஞ்சனா.


அவளுக்கு அருகில் இருந்த யாதவின் பெற்றோர்களும், வசுவின் பெற்றோரும், "விடும்மா சின்ன குழந்தை தானே?" என்றனர். "நீங்களே இப்படி சொன்னில் எப்படி அத்தை?" என்று ஒரு தாயாய் கவலையுற, "சும்மா சும்மா நீ கத்தாத அம்மா. என் தம்பியை தள்ளி விட்டவனை பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றியா? என்னால அப்படி இருக்க முடியாது" என்று அங்கே வந்தாள் தன்ஷிகா.


அர்ஜூன் தமக்கையின் கரம்பிடித்து வர, "பார்திங்களா? இந்த ஆறு வயசுலேயே என்னமா வாயடிக்கிறா?" என்று கோபத்தில் எழ, நகுல், "உங்க அம்மாவை இப்போ தான் பேசிப் பேசி மலை இறக்கினேன். நீ மறுபடியும் மலை ஏத்தினால் அப்பா பாவம்ல?" என்றான் நகுல் பரிதாபமாக.


காஞ்சனா கோபம் குறையாது, "எல்லாம் இவங்க அப்பாவும், தாத்தா பாட்டியும் கொடுக்குற செல்லம் தான்" என்று புலம்ப வைஷூ, "அக்கா விடுங்க. தன்ஷூ இனிமேல் முதல்ல வைலன்சுல இறங்க கூடாது ஒகேயா? என்ன நடந்ததுன்னு விசாரிச்சிட்டு அப்பா அம்மா கிட்ட வந்து சொல்லனும்" என்று பாசத்துடன் உரைக்க, "ஒகே சித்தி" என்றாள் அவசரமாக.


காஞ்சனாவும், மற்றவர்களும் சிரிக்க அபி, சனா இருவரும், "கூலா இருக்கிற காஞ்சனா மேமோட பி.பியை எகிற வைக்கவே அர்ஜூன், தன்ஷிகான்னு கடவுள் இரண்டு பேரை கொடுத்து இருக்காங்க" என்று சிரிக்க மற்றவர்களுமே அவர்களோடு சேர்ந்து சிரித்தனர்.


காஞ்சனா -நகுல் நண்பர்களாக திருமண வாழ்வை ஆரம்பித்து இருந்தாலும் நாட்கள் கடக்க இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு சாதாரண தம்பதிகளாக வாழ ஆரம்பித்து இருந்தனர். இருவரினதும் காயத்தை ஆற்றவும், சந்தோஷத்தை நிரப்பவும் காஞ்சனாவின் மணி வயிற்றில் உதித்தவள் தன்ஷிகா.


ஆறே வயதான தன்ஷிகா குடும்பத்திற்கே பிரியமானவள். அதே போல் அவளையடுத்து இரண்டு வருடங்கள் கழித்து பிறந்தவனே அர்ஜூன். கடினமான வலிகள் காயங்களை அனுபவித்தவர்களுக்கு சந்தோஷத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தான் இறைவன்.


அதன் பின் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்துப் பேசி மகிழ, இதே போல் என்றுமே ஒற்றுமையுடனும் சந்தோஷமாகவும் அவர்கள் இறுதி வரை வாழட்டும் என்று இறைவனிடம் நாமும் பிரார்தித்து விடைபெறுவோம்.



சுபம்...


ஒரு வழியா இந்த கதையை முடிச்சிட்டேன்.உங்களுக்கு ரிலீஃபோ இல்லையோ எனக்கு கொஞ்சம் ரிலீஃபா இருக்கு. ஜனவரியில ஆரம்பிச்ச கதை கடைசியா செப்டெம்பர்ல முடிச்சிட்டேன் 🤭.


இந்த கதை எனக்கு ரொம்ப ஸ்பெஷல் அதிகமான ரீடர்சை தேடிக் கொடுத்திச்சு இந்த கதை. இந்த அளவுக்கு சபோர்ட் கொடுப்பிங்கன்னு எதிர்பார்க்க இல்லை. ரியலி ரியலி தேங்ஸ்்


உங்க ஆதரவு இல்லைன்னா, நான் இல்லை. இதே போல என்னோட அடுத்தடுத்த கதைகளுக்கும் சபோர்ட் கொடுப்பிங்கன்னு எதிர்பார்குறேன்.


ஆமா அடுத்த கதை "அரிமாவின் தகிக்கும் அணங்கிவள்" முதல் அத்தியாயம் போட்டுட்டேன் ரொம்ப நாளைக்கு முன்னாடியே...


அடுத்த எபி நவம்பருல தான் வரும். பட் டேட் தெரியாது. ஆனால் வாரத்துக்கு 2 யூ.டி வரும். புதன், ஞாயிறு தான் பிளேன் பண்ணி இருக்கேன். எனிவேஸ் அடுத்த கதையில உங்களை சந்திக்கிறேன்.


ஒகே வன்ஸ் எகேய்ன் தேங்கியூ சோ மச் காய்ஸ்..மறக்கமாமல் கதை எப்படி இருக்குன்னு சொல்லுங்க. சயிலன்ட் ரீடர்ஸ் இது கடைசி எபி. இப்போவாவது கமென்ட் பண்ணலாமே. உங்க கமென்ஸ் தான் என் பூஸ்ட்.



லேட அப்டேட் கொடுத்ததுக்கு இப்போவும் சாரி கேட்குறேன் பா. ரியலி சொரி. சின்ன பொண்ணை பெரிய மனசு பண்ணி மன்னிச்சிருங்க.


நீ வேண்டும் நான் வாழ, கண்சிமிட்டும் தென்றலே 2 கதையுமே அடுத்த கதை ஆரம்பிக்கும் வரையில் மட்டுமே தளத்தில் இருக்கும். அதன் பிறகு நீக்கப்படும்.


பாய்.


இப்படிக்கு,
ஹாணி கார்திகன்


கருத்துக்களைப் பகிர,


 
Status
Not open for further replies.
Top