All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

“ஆதியின் நிலா” பாகம் 2 கதை திரி

Status
Not open for further replies.

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
‘ஆதியின் நிலா’ அத்தியாயம் 26 (1):



மணமேடையில் உட்கார்ந்திருந்த நித்திலா லேசாக பார்வையை திருப்பி அருகிலிருந்தவனை பார்த்தாள். பாறைபோல் இறுகிக் கறுத்த முகத்துடன் உட்கார்ந்திருந்தான். அதே நேரம் நிர்மலாவும் பேரனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.. ‘இந்த நேரத்துலயாவது முகத்தை கொஞ்சம் சிரிச்சா மாதிரி வெச்சிருக்கானா பாரு..’

தாலி கட்டும்போது கூட வேறு ஏதோ யோசனையில் இருப்பது போல கவனமேயில்லாமல் வேகவேகமாக கட்டி முடித்துவிட்டு எழப்போனவனை தடுத்த சாரதா, “ஆதி என்ன பண்ற.. உட்காரு..” என்க, மற்றவர்களும் விசித்திரமாக பார்க்க ஆரம்பிக்கவும் வேறு வழியில்லாமல் பல்லை கடித்துக்கொண்டு மீண்டும் உட்கார்ந்தான்.

ஆதி அவசரகதியிலும் நித்திலா நிதானமாகவும் ஒவ்வொரு சடங்காக செய்து முடிக்க அன்னையை அழைத்தவன் “அம்மா எனக்கொரு இம்பார்டன்ட் வொர்க் இருக்கு இதெல்லாம் எப்ப முடியும்..” என்று எரிச்சலுடன் கேட்க,

“ஆதி.. உனக்கு இன்னைக்கு கல்யாணம்... நீ ராத்திரி லேட்டா வந்து எல்லார் முன்னாடியும் என்னை சங்கடப்படுத்தின மாதிரி இப்பவும் எதையாவது பண்ணிடாதே பளீஸ்..”

சாரதாவின் கெஞ்சலில் சற்று நேரம் பொறுமையாக நின்றவன் அவனது ஃபோன் தொடர்ச்சியாக அதிர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்க அதற்குமேல் பொறுக்க முடியாமல் கிளம்பிவிடும் உத்தேசத்தில் முன்னேறப் பார்க்க அந்த நேரம் பார்த்து அவன் அருகில் வந்த சௌர்யா,

“என்னங்கண்ணா.. இவ்வளவு அவசரமா எங்கே போக போறீங்க..??” என்றான் கேள்வியாக “அதுவும் தாலி கட்டுன கையோட கிளம்பிட்டீங்க..”

“ஏய்... உன் வேலைய பார்த்துக்கிட்டு போடா..” வார்த்தைகளை கடித்து துப்பினான் ஆதி..

“நான் உங்களுக்கு விஷ் பண்ணலாம்னு வந்தேன்.. திட்டுறீங்க பார்த்தீங்களா... உங்கள புரிஞ்சிக்கவே முடியலைங்ண்ணா... நீங்க பல வருஷமா ஸ்கெட்ச் போட்டு, ப்ளான் பண்ணி பண்ணின கல்யாணம்... முகத்துல சந்தோசமே இல்லையே... ஏன் ப்ரோ என்னாச்சு.. உங்க ப்ளான்ல எங்கேயாவது ஓட்டை விழுந்துடுச்சா என்ன...” என்று யோசிப்பது போல் தாடையை தடவியவன் “அதெல்லாம் நீங்க பக்காவாத்தானே ப்ளான் பண்ணிருப்பீங்க... அப்புறம் எப்படி..??”

பாய்ந்து சௌர்யாவின் சட்டையை பிடித்தவன் “எங்கடா மித்ரா..??” அடக்கப்பட்ட குரலில் சீறினான் ஆதி.

“ஹப்பா... கப்புனு புடிச்சிட்டீங்க பார்த்தீங்களா.. க்ரேட் ண்ணா நீங்க.. ஆதிதேவ்னா சும்மாவா...” அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டே மற்றவர்களின் கவனத்தை கவராமல் தன் சட்டையிலிருந்து அவன் கரங்களை பிரித்துவிட்டவன் நிதானமாக ஆதியின் முகத்தை பார்வையிட்டான்.

விட்டால் சௌர்யாவை அங்கேயே கொன்று புதைத்துவிடும் வெறியுடன் ஆத்திரத்தில் முகம் சிவந்து தாடை விடைக்க கை முஷ்டியை இறுக்கிக் கொண்டு நின்றிருந்தான் ஆதி.. சௌர்யாவுக்கே அவனை பார்க்க சற்று பயமாகத்தான் இருந்தது..



உடனே “அப்படி பார்க்காதீங்கண்ணா.. உங்கள பகைச்சிக்கிற தைரியமெல்லாம் எனக்கு இல்லவே இல்ல..” என்று அப்பாவியாக கூறியவன் “இந்த கதைக்கு ஸ்க்ரீன் ப்ளே, டயலாக், டைரக்ஷன் எல்லாமே.............” என்று நிறுத்தி “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தாலி கட்டுனீங்களே மிஸஸ் ஆதிதேவ்... அவங்களேதான்.... அதனால நீங்க எது பண்றதா இருந்தாலும் உங்க பொண்டாட்டி கிட்டயே பண்ணிக்கங்க...” நக்கலாக கூறினான்..

சற்று தள்ளி சாரதாவுடன் நின்றிருந்த நித்திலாவின் பக்கம் பார்வையை திருப்பியவன் “நித்தும்மா... அண்ணன் தேடுறாரு பாரு.. இங்க வாடா செல்லம்..” என்று அழைக்க “என்ன அத்தான்..” என்று கேட்டுக்கொண்டு வந்தவளை பிடித்து ஆதியின் அருகில் நிறுத்தியவன் “தேகோ நித்தும்மா.. உன்ன நம்பித்தான் எங்க அண்ணன ஒப்படைச்சிருக்கேன்... இனிமேல் எங்கண்ணன் உன் பொறுப்புடா.. அவர நீதான் நல்லபடியா கவனிச்சுக்கனும் என்ன..” என்றான்.

“அதுக்கென்ன அத்தான்... தரமா கவனிச்சிடலாம்… அதுக்குத்தானே உங்க அண்ணன கல்யாணம் பண்ணியிருக்கேன்... நான் எப்படி கவனிக்கறேன்னு மட்டும் பாருங்க...” என்று சொன்னவளை கண்டு ஆதியின் இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது..

“பார்க்கத்தானேடா போறேன்... சரி சரி வா நித்து அண்ணா கூட செல்ஃபி எடுத்துக்கலாம்.” என்றபடி அவனும் அவர்கள் இருவருக்கும் அருகில் வந்து நின்று செல்ஃபி எடுக்க தயாரானவன் பின்பு “ம்ப்ச் பாரு நித்து... அண்ணா சிரிக்கவே மாட்டேங்கிறார்... உன் ஹப்பிய கொஞ்சம் சிரிக்க சொல்லுடா...”

“உங்க அண்ணா சிரிச்சா மட்டும் இந்த மூஞ்சி நல்லாவா இருக்க போகுது... விடுங்க அத்தான் நம்ம சிரிக்கலாம்..” அவர்கள் இஷ்டத்துக்கு அவனை கடுப்படித்துக் கொண்டிருந்தனர்.

ஆதியால் ஒற்றை வார்த்தை பேச முடியவில்லை.. அவனுக்கு மித்ராவைப் பற்றி தெரிந்தாக வேண்டியிருந்தது.. நேற்று மாலையிலிருந்து ஒரு பைத்தியக்காரனை போல மித்ராவை தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.. கடைசியில் இவர்களது வேலைதானா இது.. இருக்கும் இடத்தை மனதில் கொண்டு பொறுமையாக நின்றிருந்தான்.. உச்சக்கட்ட ஆத்திரத்தில் மூச்சு வாங்கியது அவனுக்கு...

“ஆதி, நித்து வாங்க.. பெரியவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்க...” என்று சாரதா இருவரையும் அழைத்தாள்..

விஸ்வநாதன், நிர்மலா தம்பதியர் காலில் விழுந்து வணங்கி எழுந்தனர் இருவரும்... “நல்லாயிரும்மா..” என்று பேத்தியின் கன்னத்தை வருடிக்கொண்டே கூறிய நிர்மலா “நல்லாயிருப்பா..” என்று ஆதியிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் சட்டென்று நகர்ந்துவிட நிர்மலாவுக்கு முகத்திலடித்தாற்போல் ஆகிவிட்டது..

ஒருசில நொடிகள் பேரனை வெறித்துப் பார்த்தவர் பின்பு தன் முகத்தை மாற்றிக்கொண்டு பேத்தியை பார்த்து சிரித்து வைத்தார்.. அவர் மனம் வலித்தது.. “இவனுக்கு நான் என்ன பாவம் பண்ணேன்..”




“இவ்வளவு நேரமாச்சே மச்சி... இவங்க மண்டபத்த விட்டு கிளம்புவாங்களா இல்லையா.... பேசாம உள்ளே போயிடலாமா..” ப்ரசாத்..

அர்ஜுனும் அவனது நன்பர்களும் மண்டபத்துக்கு வெளியில் காத்திருந்தனர்.

“டேய் தேவையில்லாத ரிஸ்க் எல்லாம் எடுக்க வேணாம்.. அவங்க வந்துடுவாங்க.. இன்னும் கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணி பார்க்கலாம்..” என்றான் சிவா..

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மண்டப வாசலில் சலசலப்பு ஏற்பட “எல்லாரும் வர்ராங்கனு நினைக்கிறேன்...” என்றபடி பார்த்தவன் “மச்சி.. இதுல சிஸ்டர எங்கடா கண்டுபிடிக்கிறது...” அவர்கள் குடும்பம் மொத்தமும் ஒரே நேரத்தில் வெளியேறுவதை கண்டு ப்ரசாத் கேட்க, “எனக்கு நிலா முகத்த மட்டுமாவது பார்த்தா போதும் மச்சி...” என்றான் அர்ஜுன் தவிப்புடன் நித்திலாவை கண்களால் துழாவியபடி...

சிவாதான் நித்திலாவை முதலில் கண்டு கொண்டவன் அதிர்ச்சியுடன் “டேய்.. கல்யாண பொண்ணுடா..” என்றான்.

“சிவா... கல்யாண பொண்ண பார்க்கவா நம்ம வந்திருக்கோம்.. சிஸ்டர் எங்கேனு பாருடா...”

“மச்சான்.. சிஸ்டர் தான்டா கல்யாண பொண்ணு...” கம்மிய குரலில் சிவா கூற அதன்பிறகுதான் அர்ஜுனும் ப்ரசாத்தும் மணமக்கள் பக்கம் பார்வையை திருப்பினர்.

ஒருபுறம் ஆதியின் கையை பற்றிக்கொண்டு மறுபக்கம் வந்து கொண்டிருந்த சௌர்யாவிடம் சிரித்து பேசியபடி மணப்பெண் அலங்காரத்தில் தேவதையென வந்து கொண்டிருந்தது சாட்சாத் நித்திலாவேதான்..

அவனது நிலா!!!

நம்பமுடியாத அதிர்ச்சி, திகைப்பு... மூச்சுவிடவும் மறந்தவனாய் ஸதம்பித்துப்போய் நின்றுவிட்டான் அர்ஜுன்..

‘இது எப்படி சாத்தியம்’ என்பது போல் அதிர்வுடன் பார்த்த ப்ரசாத்தின் கண்களில் அப்போதுதான் அங்கிருந்த நேம் போர்ட் பட்டது..

‘ஆதிதேவ் வெட்ஸ் நித்திலா’

மூவரும் இத்தனை நேரம் அங்குதான் நின்றிருந்தார்கள். ஒருவர்கூட அதனை கவனிக்கவில்லையே..


ப்ரசாத், சிவா இருவராலும் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நான்கு வருடங்களுக்கும் மேலாக நன்பனின் காதலை உடனிருந்து பார்த்தவர்கள் அல்லவா...

“அந்த பொண்ணு மட்டும் கிடைக்கலைனா இவன் செத்துடுவான்டா..” அவர்கள் இருவரும் அடிக்கடி பேசிக்கொள்ளும் வார்த்தைகள்.. இருவரது காதுகளிலும் இப்போது நாரசமாக ஒலித்தது... அவர்களது இதயமே பிளந்துவிடும் போல இருந்ததில் தங்களுக்கே இந்த நிலை என்றால்.... இருவரும் அர்ஜுனை திரும்பி பார்த்தனர்..

சிலையாக நின்றவனின் கண்கள் மட்டும் சிரித்தபடியே காரில் ஏறிக் கொண்டிருந்த நித்திலாவின் மீது நிலைகுத்தி நின்றது....





#######################





“இதுக்குத்தான்... இதுக்குத்தான் அப்பவே அந்த ஆதி பயல கொன்டுடலாம்னு சொன்னேன்... அரை உசிர்ல துடிச்சிக்கிட்டு இருந்தவன காப்பாத்தி விட்டீங்க... இப்போ அவன் நம்ம தலையிலயே கை வெச்சிட்டான்... எல்லாம் நாசமா போச்சு....” வீடே அதிரும்படி கத்திக் கொண்டிருந்தான் சந்திர ப்ரகாஷ்..

மகன் கத்துவதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் வேலைக்காரி கொண்டு வந்து கொடுத்த காபியை நிதானமாக பருகிக் கொண்டிருந்தார் சகுந்தலாதேவி...

“நீதான்டி ஓடிப்போய் அவன காப்பாத்தி விட்ட...” என்று சகோதரியான ரேணுகாவை பார்த்து அவன் கோபமாக கூற..

“இங்க பாரு.. நான் ஒன்னும் என் இஷ்டத்துக்கு எல்லாம் எதுவும் பண்ணல.. அம்மாதான் அவன் உயிருக்கு எதுவும் ஆக கூடாதுனு சொன்னாங்க.. அதனால காப்பாத்தினேன்.. இல்லைனா எனக்கென்ன தலைவிதியா அவன கொலை பண்ண திட்டமும் போட்டு காப்பாத்தியும் விடுறதுக்கு...” என்று பதிலுக்கு காய்ந்தாள் ரேணுகா “நீ எது கேக்குறதா இருந்தாலும் அம்மாகிட்டயே கேளு... என்கிட்ட சத்தம் போடுற வேலைய வெச்சிக்காதே...”

அவள் சொன்னது அத்தனையும் உண்மை என்பதால் அன்னையை திரும்பி முறைத்தவன், “ஏம்மா... ஏன் இதை நடக்க விட்டீங்க... நம்ம எத்தன வருஷமா இந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தோம்... இப்படி ஒரே நாள்ள...... எல்லாம் தலைகீழா போச்சே... சை... உங்க கிட்ட தான்மா கேக்குறேன்.. ஏதாவது பேசுங்க...” என்று அவன் மீண்டும் பொறுமையிழந்து சத்தம் போட ஆரம்பிக்க காபியை குடித்து முடித்து கப்பை வைத்தவர் அதே நிதானத்துடன் மகனை ஏறிட்டார் சகுந்தலாதேவி..

“ம்ம்ம்ம்... என்ன சொன்ன??.. அவன அப்பவே கொன்னுருக்கலாம்னு சொன்ன... அப்படித்தானே... அவன அன்னைக்கே கொன்னுருந்தா... அந்த ஜெயதேவ் நம்மதான் அவன் பேரன கொன்னோம்னு கண்டுபிடிச்சி, இந்நேரத்துக்கு நம்மள புதைச்ச இடத்துல ஆல மரமே முளைச்சிருக்கும்...”

“சரி.. அது அப்போ நடந்தது... நடந்து முடிஞ்சிடுச்சி... இப்போ இந்த கல்யாணத்த எதுக்கு நடத்த விட்டீங்க... சேது மாமா சொன்னப்பவே கிளம்பி போய் ரெண்டுல ஒன்னு பார்த்திருக்கலாமே... இப்படி பண்ணிட்டீங்களேம்மா... நான்தான் நேத்து ஊர்ல இல்லாம போயிட்டேன்... நீயாவது அம்மாகிட்ட சொல்லிருக்கலாமே...” என்று அன்னையிடம் ஆரம்பித்து சகோதரியிடம் முடித்தான்.

“ப்ரகாஷ்... நான் உன் அம்மாடா.. உனக்கே இவ்வளவு கொதிப்பா இருக்கும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும்.. எல்லாம் காரணமாத்தான்டா விட்டு வெச்சிருக்கேன்....” அவரது பிள்ளைகள் இருவரும் புரியாமல் பார்க்க, “அந்த விஸ்வநாதனுக்கு நெஞ்சுவலி வந்ததா சேது சொன்னான்.... இந்த மாதிரி சமயத்துல நம்ம பிடிவாதமா இருந்தாலோ, சண்டைக்கு போனாலோ நிர்மலா அந்த விஸ்வநாதன் பக்கம் சாய்ஞ்சிடுவா... அதுக்கு நம்ம இடம் கொடுக்க கூடாது...”

“அவ என்னை நம்பிக்கிட்டு இருக்கிற வரைக்கும் தான்டா நம்ம நினைக்கிறதெல்லாம் நடத்த முடியும்... இத்தனை நாள் நம்ம பாடுபட்டு காப்பாத்தி வெச்சிருந்த அந்த நம்பிக்கைய இந்த கல்யாணத்த நிறுத்தனும்கிற ஒரே காரணத்துக்காக கோட்டை விட்டுட எனக்கு இஷ்டமில்ல....” என்று கூறியவர், பின்பு ஒருவித குரூர சிரிப்புடன் “அவ என்னை முழுசா நம்பி என் பேச்சை கேட்டுகிட்டு இருக்கிற வரைக்கும் நம்ம எது வேணாலும் பண்ணலாம்... இப்பக்கூட அக்கா வருத்தப் படுவாங்களேன்னு என்னை பத்தி தான் யோசிச்சிக்கிட்டு இருப்பா...”


“இனிமேல் பண்ண என்ன இருக்கு.. அதான் அவன் நித்திலாவ கல்யாணம் பண்ணிக்கிட்டானே... இனிமேல் நம்மளால என்னத்த பண்ணி கிழிக்க முடியும்....”

“ஹா... ஹா... ஹா... ப்ரகாஷ் அங்கதான்டா நீ தப்பு பண்ற… ம்ம்ம்... அந்த மித்ரா இருக்காளே... ஆதி நிற்க சொன்னா நிப்பா,, உட்கார சொன்னா உட்காருவா... அவ அவன வேணாம்னு சொல்லிட்டு ஓடிப்போயிட்டாளாமா... இதெல்லாம் நடக்கிற காரியமாடா... நித்திலாவ கட்டிக்கிறதுக்காக அவன்தான் என்னமோ பண்ணிருக்கான்...” என்க அவரது பிள்ளைகள் இருவரும் ‘அப்படியும் இருக்குமோ..’ என்ற எண்ணத்தில் சகுந்தலாவின் பேச்சை ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தனர்...

“நம்ம ஆர்யாவுக்கு நித்திலாவ பொண்ணு கேட்டு போகப்போறது அவனுக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கு... அதனாலதான் அன்னைக்கே அவனும் சென்னைக்கு கிளம்பி வந்திருக்கான்.. மித்ராவ கட்டிக்கப்போறதா சொல்லி அத்தனை பேரையும் ஏமாத்தி கடைசி நேரத்துல அவள என்னமோ பண்ணிட்டு அந்த விஸ்வநாதன்கிட்ட நித்திலாவ கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்டிருப்பான்... பேரன் கேட்டா அந்த விஸ்வநாதன் மாட்டேன்னா சொல்லுவான்... அவனே எல்லார்கிட்டயும் பேசி சமாளிச்சி அவன் பேரனுக்கும் பேத்திக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிருக்கான்... இதுதான் நடந்திருக்கும்...”

“ம்மா!!!... எப்படிம்மா???” அவருடைய பிள்ளைகள் இருவரும் ஒரே நேரத்தில் ஆச்சரியத்துடன் கேட்க, அதற்கு சிரித்தவர் “அதான் சொன்னனே... நான் உங்க அம்மாடா...” என்றார்..

“ஆனா நித்திலாவும் உடனே சம்மதிச்சிட்டாளேம்மா...” ரேணுகா குழப்பத்துடன் கேட்டாள்.

“ம்ம்ம்... அதுதான் எனக்கும் புரியல.. ஒருவேள குடும்ப கௌரவத்த காப்பாத்தனும்னு பண்ணியிருக்கலாம்.. இல்லைன்னா அவளுக்கு அவன்மேல ஆசை இருந்திருக்கனும்... அவள தூக்கி வளர்த்ததே அவன்தானே...” சகுந்தலா..

“ஆமாமா... அவன்கிட்ட இருந்து அவள பிரிக்கிறதுக்கு நம்ம என்ன எல்லாம் பாடு பட வேண்டி இருந்துச்சு..” என்று எரிச்சலுடன் கூறியவள் “அப்பவே அவள தாங்கு தாங்குனு தாங்குவான்... இப்போ சொல்லவே வேணாம்.. அவன்கிட்ட இருந்து அவள பிரிக்கவே முடியாது....” என்றாள் ரேணுகா.

“முட்டாள்.. அவன் என்ன ஆசையா குடும்பம் நடத்த அவள கல்யாணம் பண்ணியிருக்கான்னு நினைக்கிறியா... நிர்மலாவ பழி வாங்க அவ பேத்திய கட்டியிருக்கான்... பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நம்ம கொழுத்தி போட்ட நெருப்பு இப்பத்தான் பத்திக்கிட்டு எரியுது... வருவா பாரு... இன்னும் கொஞ்ச நாள்ள.. அக்கா!! என் பேரன்கிட்ட (ஆதி) இருந்து என் பேத்திய (நித்திலா) காப்பாத்துங்க அக்கான்னு என்கிட்டயே கதறிக்கிட்டு வருவா அந்த நிர்மலா.. அப்ப ஆரம்பிக்கலாம் நம்ம ஆட்டத்த...” சகுந்தலாவின் குரலில் குரோதம் வழிந்தோடியது..




“என்ன ஆட்டத்த ஆரம்பிக்க போறீங்க...” என்று கேட்டபடி அங்கு வந்து சேர்ந்தாள் சந்திர ப்ரகாஷின் ஒரே மகள் ஷிவானி... “என்ன அந்த ஆதி, நித்திலா கல்யாண மேட்டர் பேசிக்கிட்டு இருக்கீங்களா... அதான் அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க இல்ல.. இனிமேல் என் ரூட் கிளியர்.. சட்டுபுட்டுனு எனக்கும் ஆர்யா மாமாக்கும் கல்யாணம் பண்ணுற வழிய பாருங்க..”

“என் செல்லம்..” என்று பேத்தியை அணைத்துக் கொண்டவர் “உன் ஆர்யா மாமா உனக்குத்தான் கண்ணு.. ஆனா அதுக்கு முன்னாடி அந்த நித்திலாவ வெச்சி நமக்கு ஒருசில காரியம் ஆகவேண்டி இருக்கு... அதெல்லாம் முடிஞ்சிடட்டும்... அப்புறம் அவள இருந்த இடமே தெரியாம பண்ணிட்டு உனக்கும் ஆர்யாவுக்கும் கல்யாணம் பண்ணிடலாம்.. என்ன...” என்றார்.

“என்னமோ போங்க பாட்டி.. அன்னைக்கு என் மாமா அவளுக்கு மோதிரம் போட்டுட்டு வந்ததையே என்னால தாங்கிக்க முடியல... நான் எவ்வளவு அழுதேன் தெரியுமா....” என்று உதட்டை பிதுக்கிக் கொண்டு அழுவதை போல் கூறியவள் “அவளோட அந்த கைய துண்டு துண்டா வெட்டி எடுக்கனும் மாதிரி இருக்கு...” என்றாள் வெறுப்புடன்.

“அதுக்கென்ன கண்ணு.. முடிஞ்சா அதையும் பண்ணிடுவோம்...”

“பாட்டினா பாட்டிதான்...” என்று சகுந்தலாவை முத்தமிட்டு விட்டு சென்றது வெறும் இருபதே வயது நிரம்பிய அந்த விஷச்செடி..

கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் வீட்டு டிரைவர் கனகவேல் கையில் ஒரு பெட்டியுடன் வந்து நின்றான். அவன் சகுந்தலாவின் தூரத்து உறவுக்காரன்..

“என்னடா.. நான் சொன்னத வாங்கிட்டியா...” சகுந்தலா கேட்க “ஆமாக்கா... வாங்கிட்டேன்...” என்று பவ்யமாக பதிலளித்தான்.

“என்னம்மா.. கனகு கிட்ட என்ன வாங்க சொன்னீங்க???” என்று ரேணுகா புரியாமல் கேட்க, “கல்யாணப் பரிசு..” என்று மட்டும் கூறிய சகுந்தலா கனகவேலை பார்த்து “போ... இதை கொண்டு போய் கல்யாணப் பொண்ணுக்கு என்னோடைய பரிசுனு சொல்லி நிர்மலா வீட்டுல கொடுத்துட்டு வா...” என்றார்..

“சரிங்கக்கா...” என்று தலையாட்டியவன் “நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிர்ரேன்...” என்றுவிட்டு விஸ்வநாதன் வீட்டை நோக்கி புறப்பட்டான்.



தொடரும்.........


‘ஆதியின் நிலா’ அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் செல்லக்குட்டீஸ்....

 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 26 (2):


“வா... வா கனகவேல்.....” திடீரென்று கனகவேலை பார்த்ததும் நிர்மலாவுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை..

“நல்லா இருக்கீங்களா அக்கா..” என்றான் கனகவேல்..

“ம்ம்ம்.. இருக்கேன்ப்பா... அக்கா.. அக்கா எப்படி இருக்காங்க..”

“இருக்காங்க.. கல்யாண பொண்ணுக்கு பரிசா இதை கொடுத்துட்டு வர சொன்னாங்க...” என்று தன் கையிலிருந்த சிறிய பெட்டியை கொடுத்தான்..

“நிஜமாவா சொல்ற.. அக்காவா கொடுத்தாங்க..” என்றபடி ஆச்சர்யத்துடன் முகம் மலர அதனை வாங்கிக் கொண்டவர் “எனக்கு தெரியும்.. அக்காவுக்கு இந்த கல்யாணம் நடந்ததுல மனசு வருத்தமா இருந்தாலும் அவங்க நித்து மேல உயிரே வெச்சிருக்காங்க..” என்றபடி பிரித்துப் பார்க்க உள்ளே அழகிய வைர நெக்லஸ்..

அதை எடுத்துக் கொண்டு நித்திலாவிடம் விரைந்தவர் அவளுக்கு அதை அணிவிக்கப்போக, “என்ன பாட்டி.. யாரோடது??” என்றாள் கேள்வியாக..

“என் அக்கா உனக்காக கொடுத்துவிட்டது நித்துமா...” என்று கூறியபடி அந்த நெக்லஸை போட்டுவிட்டவர் “இப்போத்தான் அழகா இருக்க...” என்று கூற அதைக்கேட்டு பல்லைக் கடித்தார் விஸ்வநாதன் “இவங்க அக்கா கொடுத்த நகைய போட்டுத்தான் என் பேத்தி அழகா இருக்காளாமா..”

பாட்டியையும் நித்திலாவையும் பார்த்துக் கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான் ஆதி.. அவனை கண்டும் காணாத்து போல் “நல்லா இருக்கு பாட்டி.. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு..” என்று பாட்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் நித்திலா..

ஆதியை கண்டதும் அவனிடம் ஓடிச்சென்ற கனகவேல் “சின்ன முதலாளி... நல்லாயிருக்கீங்களா...?” என்றான் பணிவுடன்..

“ம்ம்ம்ம்..” என்றவன் அவனுடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு தாத்தாவை நோக்கி சென்றான்..

“என்ன தாத்தா.. பாட்டியவே பார்த்துட்டு இருக்கீங்க....” என்று சௌர்யா கிண்டலாக கேட்க அவனை முறைத்த விஸ்வநாதன் “அவங்க அக்கா அனுப்பிச்ச நெக்லேஸ் போட்டதனாலதான் என் பேத்தி அழகா இருக்கிறதா உன் பாட்டி சொல்றாங்க.. அதான் பார்க்கிறேன்..” என்றார்..

அதில் ஆதி நித்திலாவை ஒரு மார்க்கமாக பார்த்து வைக்க இப்போது பல்லை கடிப்பது சௌர்யாவின் முறையாயிற்று “பண்றதெல்லாம் வில்லத்தனம்... இதுல உனக்கு சைட் ஒரு கேடு...”

சௌர்யா கனன்று கொண்டிருக்கும்போதே நித்திலா எதேர்ச்சையாக ஆதியின் பார்வையை கண்டவள் முகத்தை சுளித்துக் கொண்டு வெடுக்கென திரும்பிக் கொள்ள அதை கண்டு “என் செல்லக்குட்டி..” என்று நினைத்தபடி மீண்டும் ஆதியின் பக்கம் பார்வையை செலுத்தினான் சௌர்யா..

அவன் முகம் கடு கடுவென மாறிக் கொண்டிருந்தது... ஏதோ தோன்ற சௌர்யாவை திரும்பி பார்த்தான் ஆதி.. அவனும் ஆதியை தான் நக்கலாக பார்த்துக் கொண்டிருந்தான்.. அதில் ஆத்திரம் தலைக்கேற கோபமாக எழுந்தவன் எதுவும் பேசாமல் வெளியே சென்றுவிட்டான்.. “போடா போ.. எரியுதா உனக்கு... சாவுடா...” அவன் முதுகை பார்த்து முணுமுணுத்தான் சௌர்யா..

“என்னது சாவுடாவா?? யாரை சொல்ற..” என்று விஸ்வநாதன் ஒரு மாதிரி குரலில் கேட்க, “ஹி ஹி.. அது என் ஃப்ரென்ட் ஒருத்தன நினைச்சி சொன்னேன் தாத்தா..” என்றவன் விஸ்வநாதன் மீண்டும் எதையோ கேட்க தொடங்க தன் ஃபோனை எடுத்து காதில் வைத்துக் கொண்டு அங்கிருந்து நழுவி சென்றான்.

தாத்தாவிடமிருந்து தப்பித்து வெளியே வந்த சௌர்யாவின் கண்களில் முதலில் பட்டது கனகவேலுவிடம் பேசிக் கொண்டிருந்த ஆதியை தான்..




தன் பர்சிலிருந்து பணத்தை எடுத்து அவனுக்கு கொடுத்தபடி எதையோ சொல்லிக் கொண்டிருந்தான்.. கனகவேலுவும் பயபக்தியுடன் அவன் சொல்வதற்கு தலையை தலையை ஆட்டிக்கொண்டு நின்றிருந்தான்..

அவர்கள் இருவரையும் யோசனையுடன் பார்த்தான் சௌர்யா.. கனகவேல் அவர்களது பாட்டியின் உறவுக்காரன் என்பதால் மூன்று குடும்பத்துடனும் அவனுக்கு தொடர்பு இருந்தது.. ஒரு காலத்தில் விஸ்வநாதன் வீட்டில் வேலை பார்த்தான்.. பின்பு மும்பையில் ஜெயதேவிடம் வேலை செய்தான்.. இப்போது சகுந்தலா வீட்டில் டிரைவராக இருக்கிறான்..

ஆனால் ஆதியிடம் அவனுக்கு அதிக அக்கரை இருப்பது சௌர்யாவுக்கு நன்றாக தெரியும்.. சில பல வருடங்களுக்கு முன்பாகவே சகுந்தலா வீட்டுக்கு வேலைக்கு சென்றிருந்தாலும் ஆதியை கண்டால் சின்ன முதலாளி என்று தேடி வந்து பேசிவிட்டு தான் செல்வான்..


அவர்கள் இருவரும் தூரமாக நின்றிருந்ததால் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது சௌர்யாவுக்கு புரியவில்லை.. இந்த கனகவேல் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்துக் கொண்டான்..



#############################



தன்னுடைய அறை பால்கனியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ஆதி.. நித்திலாவை நினைத்து பயங்கர ஆத்திரத்தில் இருந்தான்.. அவனையே பைத்தியகாரனை போல் அலைய வைத்துவிட்டாள்.. போதாதைக்கு அந்த சௌர்யாவுடன் சேர்ந்து கொண்டு நக்கல் பேச்சும் சிரிப்பும்...

முதல் நாள் நடந்ததை நினைக்க நினைக்க அவனுக்கு வெறியே வந்துவிட்டது.. நேற்று மாலை மண்டபத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தவனுக்கு ஜோ எனப்படும் ஜெகனிடமிருந்து அழைப்பு வர என்னவென்று கேட்டால் திடீரென மித்ரா காணாமல் போய்விட்டதாக கூறினான்..

இவன் அடித்துப் பிடித்துக் கொண்டு அவன் சொன்ன இடத்திற்கு செல்ல ஆதியைக் கண்டதும் “தேவ் பாய்..” என்றபடி ஓடி வந்தவன்.. “ஒரு முக்கியமான விஷயமா ஒருத்தர மீட் பண்ண போயிருந்தேன்.. திரும்பி வந்து பார்த்தா.. மேடமையும் காணோம்,, பசங்களையும் காணோம்..” என்றான்..

“அவனுங்களுக்கு கால் பண்ணி பார்த்தியா.. என்னாச்சுனு..”

“அப்பவே கால் பண்ணி பார்த்தேன் பாய்.. எல்லாரோட ஃபோனும் ஆஃப்ல இருக்கு..

“அவனுங்க சர்க்கில்ல விசாரிச்சியா...”

“இ... இல்ல பாய்... இவங்க புது பசங்க.. உங்க மேட்டர் என்றதால வேற எந்த இஸ்யூ வந்துட கூடாதுனு வழக்கமான ஆளுங்கள கூப்பிடாம இவனுங்கள நார்த்ல இருந்து வரவழைச்சேன்...”

“டாமிட்... உன்ன யாரு புது ஆளுங்கள கூப்பிட சொன்னது... அதுவும் நார்த்ல இருந்து... அறிவில்ல உனக்கு...”

அதன் பிறகு இருவரும் எங்கெங்கெல்லாமோ மித்ராவை தேடி அலைந்தனர்.. யார் யாரிடமோ பேசி.. அங்கே, இங்கே என்று மூன்று மணி நேரமாக அலைந்தும் எந்த தகவலும் கிடைக்காமல் ஓய்ந்து போய் இருந்தவனிடம் ஜெகனின் மற்றொரு நன்பன்.. “பணத்துக்கு ஆசை பட்டு தூக்கியிருந்தா கேட்குற பணத்த கொடுத்துடலாம்.. ஆனா பொண்ணு அழகான பொண்ணுனு வேற சொல்றீங்க.. ஒருவேள வேற மோடிவ்ல பண்ணியிருந்தா..” என்க,

“ஷட் அப்.... யூ ********* “ அலறிவிட்டான் ஆதி..

அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.. தன்னுடைய சுயநலத்துக்காக மித்ராவை பலியாக்கி விட்டோமே என்று துடித்துப் போய்விட்டான்..

அவனது அம்மாவுக்கு அடுத்ததாக அவன்மேல் உயிரையே வைத்திருப்பவள் மித்ரா.. அவள் அவனை நம்பும் அளவுக்கு யாரையும் நம்பியதுமில்லை.. அப்படிப்பட்டவளை ஏமாற்றி இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டோமே என்று கலங்கிக் கொண்டிருந்தவனை ஜோ தான் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்..,


“பாய் நீங்க மண்டபம் போயிடுங்க.. இதுக்காக உங்க கல்யாணம் நின்னு போயிட கூடாது.. இது ஒருவேள அந்த முகேஷ் வேலையா கூட இருக்கலாம்.. நீங்க இப்போ போகலைன்னா அப்புறம் ஏதாவது சொல்லி உங்க பாட்டியே கல்யாணத்த நிறுத்திடுவாங்க... ப்ளீஸ் பாய்...” அவன் காலில் விழாத குறையாக கூறி அனுப்பி வைத்தான்..

மண்டபத்துக்கு திரும்பியும் கூட இரவெல்லாம் பொட்டு கண் மூடாமல் நடுத்தெருவில் நின்றுகொண்டு அலைப்பேசியில் மித்ராவை பற்றி ஒவ்வொருவரிடமும் விசாரிப்பது அவனுக்கு சந்தேகமான நபர்களை ஆள் வைத்து கண்காணிக்க சொல்வதுமாக ஒரே இரவில் அவனுக்கு நரகத்தையே காட்டி விட்டாள்..

“நித்திலா...” வெறுப்புடன் அவள் பெயரை உச்சரித்தான்.. “நீ இந்த ரூம்க்கு வந்துதானே ஆகனும்... வாடி வா...” என்று அவளுக்காக காத்திருந்தான். ஆனாலும் நேற்று இருந்ததைப் போல் இல்லாமல் அவன் மனம் சற்று இலகுவாக இருந்தது என்பதுதான் உண்மை..

மித்ராவுக்கு என்ன ஆனதோ என்ற தவிப்பு நீங்கி சௌர்யாவும் நித்திலாவும் அவளை துன்புறுத்தியிருக்க வாய்ப்பில்லை என்று புரிந்ததால் வந்த நிம்மதி அது..




##########################



முதலிரவுக்காக தயாராகிக் கொண்டிருந்தாள் நித்திலா.. கட்டிலில் உட்கார்ந்தபடி பேத்தியை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் நிர்மலா.. அவருக்கு இதையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை..

மித்ராவுக்கும் ஆதிக்கும் திருமண ஏற்பாடு செய்தார்கள்.. திடீரென்று மித்ரா காணாமல் போய்விட்டாள்.. ஆதி என்னடாவென்றால் காணாமல் போன மித்ராவை பற்றி கொஞ்சமும் கவலை படாமல் நித்திலாவை திருமணம் செய்து வைக்க சொல்கிறான்... நித்திலா என்னடாவென்றால் அவன் மித்ராவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தவன் என்பதையும் மறந்து ஆதிக்கு கழுத்தை நீட்ட உடனே சம்மதிக்கிறாள்... கேட்டால் காதல் என்கிறாள்.. பேசாத பேச்செல்லாம் பேசுகிறாள்..

“கடவுளே..” என்றிருந்தது நிர்மலாவுக்கு... இங்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை அவருக்கு..

“என்னடி இது.. அவ பாட்டுக்கு மேக்கப் பண்ணிக்கிட்டு இருக்கா.. விட்டா இப்பவே அவன் ரூமுக்கு ஓடிருவா போல..” விஜயாவின் காதை கடித்தார் நிர்மலா..

“அத்தை இந்த காலத்து பசங்கெல்லாம் அப்படித்தான்.. நாமதன் கண்டும் காணாத மாதிரி இருந்துக்கனும்..” என்றாள் விஜயா..

“அதுவும் சரிதான்..” என்றவர் ஒரு பெருமூச்சுடன் “ஹ்ம்ம்... நம்ம இவளுக்கு எப்படியெல்லாம் கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு ஆசை பட்டோம்... கடைசில இப்படி ஆகிடுச்சு..” என்க..

“நடந்து முடிஞ்சதெல்லாம் விட்டுடுங்க அத்தை.. ஆதியும் உங்க பேரன்தான்.. என்ன கொஞ்சம் சிடுமூஞ்சி, திமிர் அவ்வளவுதான்.. நித்து எல்லாத்தையும் மாத்திடுவா அத்தை.. எனக்கு நம்பிக்கை இருக்கு... நீங்க வேணும்னா பாருங்க.. இன்னும் கொஞ்ச நாள்ள அஜய், சௌர்யா மாதிரி ஆதியும் உங்ககிட்ட சிரிச்சி சந்தோசமா பேசத்தான் போறான்...”

“யாரு... அவனா... அவன் என்கிட்ட எல்லாம் பேசிட்டா அவன் மானம், மரியாதை, கவுரவம்லாம் காணாம போயிடாது.. இத்தன வருஷமா பேசாதவன் இனிமேல் வந்து பேச போறானாக்கும்..” என்று கூறியவர் கோபமாக எழுந்து சென்றுவிட்டார்.

விஜயா வழக்கம்போல மாமியாரை பரிதாபமாக பார்த்தாள்.. நிர்மலாவின் ஆதங்கம் அவளுக்கு புரியாமலில்லை..

அவளுக்கும் இந்த திருமணம் நடந்ததில் இஷ்டமில்லைதான்.. ஆனால் என்ன செய்வது.. கடவுள் அப்படித்தானே விதித்திருக்கிறார்.. அனைத்தையும் மீறி திருமணம் நல்லபடியாகவே நடந்து முடிந்து விட்டது.. இதற்கு மேலும் முறுக்கிக் கொண்டிருப்பதால் யாருக்கு என்ன பயன்..


கொஞ்ச நேரத்திலே சாரதா நித்திலாவிடம் பாலை கொடுத்து ஆதியின் அறைக்கு அழைத்து செல்லவர,

“அத்தை.. பால் என்ன இவ்வளவு சூடா இருக்கு..??” என்றாள்..

“சூடா இருந்தா ஆற வெச்சிட்டு குடிங்க...” என்று அவளுக்கு பதில் கூறிய சௌர்யா “எல்லாத்தையும் சொல்லனுமா உனக்கு.. போ.. அண்ணா வெய்ட் பண்ணிட்டு இருப்பார்.. அவர்கிட்டயே போய் என்ன பண்ணலாம்னு கேளு..” என்று அவள் தலையில் கொட்ட மற்றவர்கள் சிரித்தனர்.






பின்பு நித்திலாவின் பக்கம் குனிந்தவன் “நடக்காத ஃபர்ஸ்ட் நைட்டுக்கு பால் சுட்டா என்ன.. சுடலேன்னா என்ன நித்தும்மா..” என்று அவள் காதுக்குள் கூற அவனை முறைத்தவள் தன் முழங்கையால் அவன் வயிற்றில் குத்திவிட்டு ஆதியின் அறையை நோக்கி சென்றாள்..


பால்கனியில் நின்றிருந்தவன் அறைக்கதவு திறக்கப்படும் சப்தத்தில் நித்திலா வந்திருப்பதை உணர்ந்தவன் விருட்டென அறைக்குள் நுழைந்து வேகமாக அவளை நெருங்கினான்..

கதவை தாழிட்டுவிட்டு திரும்பியவள் அவன் வந்த வேகத்தில் ஆதியின் மீதே மோதி நிற்க அவளது தாடையை பற்றி கதவின் மீது தள்ளியவன் “எங்கேடி என் மித்ரா..” என்று உறுமினான்.

அவனிடம் சிக்கியிருந்த அவளது தாடைப்பகுதி பயங்கரமாக வலித்ததில் முகத்தை சுளித்தபடி அவனை ஒரு பார்வை பார்த்தவள் அடுத்த நொடியே கையில் வைத்திருந்த சூடான பாலை அவன் முகத்திலியே விசிறியடித்தாள்.. (ஆத்தாடி 😳😳 இதத்தான் பால் ஊத்துறதுனு சொல்லுவாய்ங்களோ.. என்னடா ஆதி நோக்கு வந்த ஜோதனை 😭)




தொடரும்.......



கொஞ்சம் குட்டி யூடிதான் பேபிஸ்... அடுத்த எபி நல்ல பெரிசா கொடுத்துர்ரேன் 😊

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்...

 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hello babies...

Next week குட்டீஸ்க்கு exam start aahuthu..😭😭 அதனால me கொஞ்சம் busy.. 🙈🙈🙈 அதுக்காக ud போடமாட்டேன்னு சொல்ல வரலை.. ud varum.. but கொஞ்சம் முன்ன பின்ன ஆகலாம்... இப்ப மட்டும் நீ சொல்ற time ku ud போட்டுகிட்டா இருக்கேன்னு நீங்க எல்லாரும் என்னைய கேவலமா பார்க்கிறது புரியுது 🙈🙈🙈 இருந்தாலும் நேக்கு வேற வழி தெரியலை.. 😭😭 எப்படியும் monday குள்ள next ud போட்டுர்ரேன்.. இந்த பச்ச பிள்ளைக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க மக்களே... 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 27:


குளிர்ந்த நீரை முகத்தில் அடித்து கழுவிக் கொண்டிருந்தான் ஆதி.. அவன் முகமெல்லாம் எரிந்தது.. அவனுக்கு நெருப்பு, சூடு என்றாலே சுத்தமாக ஆகாது. அவள் இப்படி சூடான பாலை முகத்தில் ஊற்றிவிடுவாள் என்று அவன் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை “ராட்சஷி..” என்று முணுமுணுத்தன அவன் உதடுகள்..

அறைக்குள் இருந்த நித்திலா குளியலறை கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பி பார்க்க ஆக்ரோஷமாக அவளை நோக்கி வந்தவன் “எவ்ளோ தைரியம் இருந்தா என்மேலயே பால கொட்டி விடுவ.. உன்ன.....” என்றபடி அவள் கையை பற்றி இழுக்க “அத்தை....” என்று அவள் கத்தியதில் அதை எதிர்பார்க்காதவன் அப்படியே நின்றுவிட அடுத்த நொடியே படார் படாரென அறைக்கதவு தட்டப்பட்டது..

நித்திலா சென்று கதவை திறக்க வெளியே சாரதா, நிர்மலா, விஜயா ஆகியோர் பதற்றத்துடன் நின்றிருந்தனர் கூடவே சௌர்யாவும்..

“என்னாச்சு நித்தும்மா எதுக்கு கத்துன..” என்று சாரதா கேட்க நிர்மலா பேத்தியை மேலிருந்து கீழாக ஆராய்ச்சியுடன் பார்வையிட்டார்.

அதைக் கண்டு ஆதிக்கு கொலைவெறியே வந்துவிட்டது..

“அ.. அது வந்து... அத்தான் கைய புடிச்சாரா நான் பயத்துல கத்திட்டேன்.. சாரி அத்தை..” என்று நித்திலா திக்கித்திணறி சொன்னதை கேட்டு சௌர்யா குபீரென சிரித்துவிட பெரியவர்கள் மூவரும் “என்னடா இது..” என்பதுபோல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு விழுத்தனர்..

“ப்ரோ என்ன ப்ரோ இது.. இப்படியா பயமுறுத்துவீங்க...” உள்ளே நின்றிருந்த ஆதியை எட்டி பார்த்து சௌர்யா கேட்க நிர்மலாவும் அதானே என்பதுபோல் பேரனை பார்த்து வைத்தார்.

உடனே “சௌர்யா நீ பேசாம போ..” என்று அவனை விரட்டி விட்ட சாரதா “ஆதி.. அவ சின்ன பொண்ணு.. ஏதோ தெரியாம..” அதற்குமேல் என்ன பேசுவதென்று தெரியாமல் மகனை சங்கடத்துடன் பார்த்தவள் நித்திலாவின் புறம் திரும்பி “நித்தும்மா.. உள்ள போடா..” என்று அவளை அனுப்பிவிட்டு மூவரும் திரும்பி சென்றனர்...

“என்னடி இது.. அவன் கைய புடிச்சதுக்கே இந்த கத்து கத்துறா.. விளங்கிடும்..” என்றுவிட்டு நிர்மலா நடக்க விஜயா சத்தமாக சிரித்துவிட்டாள்.

சாரதாவுக்குத்தான் பயமாக இருந்தது.. மகனது கோபம் அவள் அறிந்த ஒன்றுதான்.. நித்திலா சிறுபிள்ளைத்தனமாக எதையாவது செய்யப்போய் ஆதிக்கு கோபம் வந்துவிட்டால் மருமகளை சத்தம் போட்டுவிடுவான் என்று பயந்தாள். நித்திலா வேறு சிறுபெண். இவனது கோபத்தில் அரண்டுவிடுவாளே..

சாரதா நினைத்ததற்கு மாற்றமாக கைகளை முன்னால் கட்டியபடி மூடப்பட்ட கதவின் மேல் சாய்ந்து நின்று அவனை வெற்றிப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா..

“பார்த்தீங்கல்ல மிஸ்டர் ஆதிதேவ்.. நான் கொஞ்சம் சத்தம் போட்டா கூட அத்தன பேரும் உங்க ரூம் கதவை உடைச்சிக்கிட்டு உள்ள வந்துடுவாங்க.. அதனால இந்த கைய புடிக்கிறது, கழுத்த புடிக்கிறது.. இதெல்லாம் என்கிட்ட வெச்சிக்காதீங்க.. புரியுதா..”

கை முஷ்டிகளை இறுக்கிக் கொண்டு அவளை நோக்கி நிதானமாக வந்தவன் “மித்ரா எங்கே??” என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்தவனாக..

“இருக்காங்க.. என்ன அவசரம் அத்தான்.. நம்ம பேச வேண்டியதெல்லாம் இன்னும் எவ்வளவோ இருக்கே.. எல்லாம் பேசி முடிச்சிட்டு அப்புறமா மித்ரா அக்காவ என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்..” என்றதில் பல்லை கடித்தான்,

“உன்கிட்ட எல்லாம் பேசுறதுக்கு ஒரு மண்ணும் இல்ல...” வார்த்தைகளை கடித்து துப்பியவன் .. “மரியாதையா மித்ரா எங்கேன்னு சொல்லு..”

“என்னது.. என்கிட்ட பேச உங்களுக்கு ஒன்னும் இல்லையா.. அதெப்படி அத்தான் இல்லாம போகும்.. நம்மள பத்தி பேசலாம்,, நம்ம கல்யாணத்த பத்தி பேசலாம்,, இல்லேன்னா உங்க முதல் கல்யாணத்த பத்தி கூட பேசலாம்.. என்ன புரியலையா?? அதான் நீங்களே பண்ணிக்கிட்டீங்களே உங்க முதல் கல்யாணம்..” என்றதும் பார்வை கூர்மையடைய “என்ன உளர்ர..” என்றான்..

“உளர்ரேனா.. நானா.. நான் எதுக்கு உளரனும் மிஸ்டர் ஆதிதேவ்.. உங்களுக்குத்தான் மறந்துடுச்சு போல...” என்றவள் “வயசாகிடுச்சில்ல.. நியாபக மறதி வர்ரது சகஜம்தான்.. ஆனாலும் சொந்த கல்யாணத்தையே மறக்கிற அளவுக்கு மறதின்னா..” என்று அவனை அவனை மேலும் கீழும் பார்வையிட்டாள்.

பின்பு “சரி விடுங்க.. இப்போ நியாபகப்படுத்திடலாம்..” என்றபடி அவனை தாண்டிச் சென்றாள்..
சாரதா ஏற்கனவே கொண்டுவந்து வைத்திருந்த அவளது பொருட்கள் அடங்கிய சூட்கேஸை திறந்து அதற்குள்ளிருந்த ஐ பேடை எடுத்துக்கொண்டு மீண்டும் அவனை நோக்கி வந்தவள்,,

“என்கிட்ட உங்க கல்யாண வீடியோவே இருக்கு.. இதை பார்த்தா அத்தனையும் நியாபகம் வரும்..” என்றாள்..

அவன் முகம் எந்தவித உணர்வுகளையும் பிரதிபலிக்காது இறுகிப்போய் காணப்பட்டது..

தானே அதனை ஆன் செய்தவள் அவன் கைகளில் திணித்து “இப்போ பாருங்க...” என்க அவன் அப்படியே நிற்கவும்,,

“பாருங்க அத்தான்..” என்று அந்த வீடியோவை ப்ளே செய்து விட்டாள்.

அதை பார்த்ததும் அவன் முகத்தில் நொடிக்கும் குறைவாக தோன்றி மறைந்த மெல்லிய அதிர்வை கண்டு கொண்டவள் “உங்களுக்கு அப்போ ஒரு பதினாறு, பதினேழு வயசு இருக்குமா???” என்றாள் குரலில் ஆச்சரியத்தை காட்டி..

“அந்த வயசுலயே இத்தனை தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்ணிருக்கீங்க.. ஐ மீன் கல்யாணம் வரைக்கும் போயிருக்கீங்களே இது மட்டும் என் அத்தைக்கு.. அதான் உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா சாகுற வரைக்கும் உங்க முகத்துலயே முழிக்க மாட்டாங்களே அத்தான்...” என்றாள் அவனை பாவமாக நோக்கி..



“உங்க அம்மாவுக்கு தெரியக் கூடாதுனு தானே ஒன்னொன்னும் பார்த்து பார்த்து பண்றீங்க... இந்த ஒரு வீடியோ போதும்.. உங்கள அவங்க பையனே இல்லைன்னு சொல்லிடுவாங்க என் அத்தை..”

“ஏய்..” ஒற்றை விரல் நீட்டி கர்ஜித்தவன் அவள் கையை பற்றி திருகி இழுக்க அவன் மார்பில் மோதி நின்றாள் நித்திலா.. தலை முடியை கொத்தாக பற்றி அவள் முகத்தை நிமிர்த்தியவன் “இதையெல்லாம் அந்த சௌர்யாவோட வெச்சிக்க.. என்கிட்ட வேண்டாம்.. இதுக்கெல்லாம் பயப்படுவேன்னு கனவுல கூட நினைக்காதே.. நான் உன் கால சுத்தின பாம்புடீ.. உன்னால முடிஞ்சத பார்...” மிரட்டும் தொனியில் அவன் கூற கட கடவென சிரித்தாள் நித்திலா.


“என்னது பாம்பா... ஹா..ஹா... யோவ் எந்த காலத்துலயா இருக்க நீனு.. பாம்பு, பல்லின்னுட்டு.. அப்பவே பாட்டி சொன்னாங்க... அவனுக்கு உன்னவிட வயசு அதிகம்.. அவன கல்யாணம் பண்ணிக்காதேன்னு... நான்தான் அவசரப்பட்டு தாத்தாகிட்ட ஓகே சொல்லிட்டேன்.. ஏதோ நம்ம அத்தை பையன்.. கட்டிக்க வேண்டிய பொண்ணு ஓடி போயிட்டான்னு வெளிய தெரிஞ்சா ஊர் சிரிக்குமேன்னு பாவப்பட்டு வாழ்க்கை கொடுத்தா இப்போ இந்த மாதிரி ஆதிகாலத்து டயலாக்லாம் கேட்க வேண்டி இருக்கு... எல்லாம் என் நேரம்...” என்றாள் அவனது முகம் கோபத்தில் சிவப்பதை ரசித்துக் கொண்டே.


பின்பு வன்மத்துடன் அவனை நோக்கி “நான் தான் இந்த பாம்போட பல்ல புடுங்கிட்டேனே.. இனிமேல் கால சுத்தினா என்ன.. கழுத்த சுத்தினா எனக்கென்ன... இந்த வீடியோ என் அத்தைகிட்ட போறதும் போகாததும் உங்க கைல தான் இருக்கு.. உங்க அம்மாவுக்கு எதுவும் தெரிய கூடாதுன்னா மூடிக்கிட்டு இருக்கனும்...” வாயின்மேல் நான்கு விரல்களை வைத்து காட்டியவள் “அப்புறம் உங்க பேபி.. ஹையோ பாவம்.. ஏற்கனவே நீங்க டேமேஜ் பண்ணி விட்டது போக இதெல்லாம் வேற தனா பெரியப்பாவுக்கு தெரிஞ்சதுனா மித்ரா அக்காவ மூட்டை கட்டி பரலோகத்துக்கே அனுப்பிடுவார்..” என்று ஏகத்துக்கும் பரிதாபப்பட்டாள்..

“நித்திலா தேவையில்லாம என்னை சீண்டி பார்க்காத.. அப்புறம் தாங்கமாட்ட...”

“நான் சீண்டுறது இருக்கட்டும்... முதல்ல நீங்க எதுக்கு என்ன கட்டி புடிச்சிட்டு இருக்கீங்க..” அவர்கள் இருவரும் நின்றிருக்கும் நிலையை கண்களால் காட்டியபடி கேட்டாள் “அவ்வளவு ஆசையா என்மேல..”

அவன் கோபத்தில் பற்றியிருந்ததை அவள் ஆசையாக கட்டி பிடித்ததாக கூற பட்டென்று அவளை கட்டிலில் தள்ளி விட்டவன் “இப்போ என்னதான்டீ வேணும் உனக்கு..” என்றான் எரிச்சலுடன்..

“இப்போதைக்கு எனக்கு நல்லா தூங்கனும்... அதனால நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ணாம இந்த சோபாலயோ இல்ல தரையிலயோ தூங்கிக்கங்க... இல்ல பால்கனில தூங்கிறதுன்னா கூட தூங்கலாம்.. எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..” என்று கடுப்படித்துவிட்டு வாகாக போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டாள்..

சற்று நேரம் தூங்கும் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான். இப்போது அவள் அருகில் சென்று அணைத்துக் கொண்டு உறங்கினால் இவள் என்ன செய்வாள் என்ற வீம்பு எழுந்தது.

அவளை சீண்டிப்பார்க்கும் மனநிலை சுத்தமாக அவனுக்கு இல்லாததால் ஒன்றும் பேசாமல் பால்கனிக்கு சென்றுவிட்டான். அவனுக்கு நிறைய யோசிக்க வேண்டியிருந்தது.. இப்படியொரு வீடியோ அதுவும் இவள் கையில் சிக்குமென்று அவன் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை..

“ஷிட்..” சுவற்றில் கையை ஓங்கி குத்தினான்..

ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து அவனை பார்த்தவள் மெல்லிய புன்னகை ஒன்றுடன் உறங்கிப்போனாள் நித்திலா..



#####################



“என்னால சத்தியமா இதை தாங்கிக்கவே முடியலைங்க.. அந்த பொண்ணுதான் நம்ம வீட்டுக்கு மருமகளா வருவான்னு எவ்வளவு ஆசையோட இருந்தேன்.. இப்படி ஆகிடுச்சே..” அழுது கொண்டிருந்தாள் சரஸ்வதி..

வரதராஜனும் அதே நிலையில்தான் இருந்தார்.. நித்திலாவை அவரது மகனுக்கு கேட்டவுடனே தூக்கி கொடுத்து விடுவார்கள் என்றெல்லாம் அவர் ஒருபோதும் எண்ணியதில்லை.. நித்திலாவின் குடும்பத்தினரிடமிருந்து எந்த விதமான எதிர்ப்பு தோண்றினாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று இறுமாப்புடன் இருந்தவர் அவளது இந்த திடீர் திருமணத்தை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை..

அலைப்பேசி ஒலிக்க சுய நினைவுக்கு வந்தவர் சிவா அழைப்பதை கண்டதும் “சொல்லு....” என்றார்.

மறுபுறம் அவன் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்து போனவர் அருகில் மனைவி இருப்பதை உணர்ந்து எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் “நான் இப்ப வந்திர்ரேன்....” பேசியபடியே அவசரமாக கிளம்ப போக,,

“இந்த நேரத்துல எங்க கிளம்பிட்டீங்க.. உங்க முகம் வேற சரியில்ல.. அர்ஜுனுக்கு என்னங்க ஆச்சு...” இடைமறித்து கேட்ட மனைவியிடம் “ஒன்னுமில்லம்மா.. ரொம்ப குடிச்சிருக்கானாம் பசங்களால அவன கன்ட்ரோல் பண்ணவே முடியல.. என்ன வர சொல்றாங்க.. நான் போய் கூட்டிட்டு வந்துர்ரேன்..” என்று அவள் நம்பும்படியாக கூறி சமாளித்தவர் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்..

கடற்கரை சாலையில் அக்கம் பக்கம் பார்த்தபடியே சென்று கொண்டிருந்தவர் தூரத்தில் சிவா நிற்பது தெரியவும் வேகமாக அவ்விடத்தை அடைந்து இறங்கியவர் “எங்கேடா என் மகன்..” என்று கேட்டுக் கொண்டே சிவாவின் பின்னால் சென்றார்..

அவன் அழைத்துச் சென்று நிறுத்திய இடத்தில் அவர் முதலில் கண்டது உடல், உடை, தலை முடியென ஈரத்துடன் தலையை குனிந்தவாறு மணலில் உட்கார்ந்திருந்த அர்ஜுனைத்தான்..

பதறிப்போய் மகனை நெருங்கியவர் “அர்ஜூன்..” என்று அவனை அணைத்துக் கொண்டார்..

“எப்படிடா இப்படி ஒரு காரியத்த பண்ண உனக்கு மனசு வந்தது.. ஒரு நிமிஷமாவது என்னையும் உங்க அம்மாவையும் பத்தி நினைச்சி பார்த்தியா..” அவனது தோள்பட்டையை பிடித்து உலுக்கியபடி கேட்டார்.. “யாரோ ஒரு பொண்ணு உனக்கு கிடைக்கலைங்கிறதுக்காக இத்தன வருஷம் உன்ன பெத்து வளர்த்த எங்கள தவிக்க விட்டுட்டு போயிடலாம்னு முடிவு பண்ணிட்ட இல்ல.. என்ன விடுடா.. உன் அம்மாவ பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா.. அவ என்னடா பாவம் பண்ணினா.. பெத்தவ இல்லாத குறை தெரியாம உன்னை வளர்த்தாளே.. அவளுக்குனு குழந்தைங்க பிறந்துட்டா எங்க உன்மேல இருக்கிற பாசம் குறைஞ்சிடுமோன்னு குழந்தையே பெத்துக்காம உனக்காக வாழ்ந்துக்கிட்டு இருக்கிறவ.. உனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவ உயிரையே விட்டுடுவாடா..”

சுற்றி நின்றிருந்த மகனது சிநேகிதர்களை திரும்பி பார்த்தவர் “இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் இந்த காதல் கருமாந்திரமெல்லாம் நமக்கு வேண்டாம்னு.. யாரு என் பேச்ச கேட்டீங்க..” என்றார் கோபமாக..


பின்பு ஒரு முடிவுடன் எழுந்தவர் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு மகனை நோக்கி “உனக்கு இப்ப சாகனும் அவ்வளவுதானே... போ.. போய் சாவு.. வீட்டுக்கு போய் உன் அம்மாவுக்கும் விஷத்த கொடுத்துட்டு நானும் குடிச்சிர்ரேன்.. குடும்பத்தோட செத்து போயிடலாம்... நீ இல்லாம நாங்க மட்டும் இருந்து என்ன பண்றது..” என்றுவிட்டு திரும்பி நடக்கப்போக,,

“அப்பா...” என்றபடி அவரது காலை கட்டிக்கொண்டவன் “என்னால முடியலப்பா..” என்று கதறியழுதான்..

“அந்தப் பொண்ணு.. அவ.. அவ என் உயிர்ப்பா... அவ இல்லாம நான் எப்படிப்பா இருப்பேன்..” ஒரு சிறுவனைப்போல அழுது கொண்டே கூறியவனை கண்டு துடித்துப் போய் “அர்ஜுன்..” என்றபடி குனிந்து அவனை அணைத்துக் கொண்டார் வரதராஜன்..

அவர் தோளிலும் மாரிலும் போட்டு பாசத்தை ஊட்டி வளர்த்த பிள்ளை.. கஷ்டம், கவலை என்றால் என்னவென்றே அவனுக்கு தெரியாது. சின்ன தோல்வியை கூட தாங்கிக் கொள்ள முடியாதவன் இந்த தோல்வியை எப்படி தாங்கிக் கொள்ள போகிறான்.. மகனது வேதனையை உணர்ந்தவராய் அவரது விழிகளும் கலங்கி வழிய “அழாதேடா மகனே..” என்று அழுது கொண்டே கூறினார் அந்த அன்பான தந்தை..



########################



நித்திலா காலையில் கண்விழிக்கும்போதே ஆதி அறையில் இல்லை.. நிம்மதிப் பெருமூச்சுடன் எழுந்தவள் குளியறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் குளித்து தயாராகி அறையிலிருந்து வெளியேறும்போது சிரித்துக் கொண்டே எதிரில் வந்தான் சௌர்யா..

“குட் மார்னிங் அத்தான்..” என்றவளுக்கு தானும் பதில் கூறியவன் “அப்புறம் நைட் பாலாபிஷேகம்லாம் நல்லபடியா முடிஞ்சுதோ..” என்றான் கிண்டலாக..


முதலில் புரியாமல் பார்த்தவள் பின்பு “அத்தான்..” என்றாள் கோபமாக “அதுக்குத்தான் சூடா பால் கொடுத்துவிட்டீங்களா.. இதுல நான் கேட்டப்போ கிண்டல் வேற..”

“பின்னே அவன்கிட்ட உன்னை எப்படிம்மா எந்த வெபன்ஸ் இல்லாம தனியா அனுப்புறது... நீ உள்ள போனதும் முதல் வேலையா கழுத்த புடிச்சிருப்பானே..”

அதில் குபீரென சிரித்தவள் “பாவம் அத்தான்.. முகமெல்லாம் ரொம்ப எரிச்சலா இருந்திருக்கும்..” என்க,

“அக்கறை ம்ம்ம்..” என்றான் அவளை ஒரு மாதிரியாக பார்த்தபடி “எரிச்சலாத்தான் இருந்திருக்கும்.. அவனுக்கு சின்ன வயசுல இருந்தே நெருப்பு, சூடு இதெல்லாம் ரொம்ப பயம்..”

“ஆமால்ல.. ஏதோ ஃபயர் ஆக்ஸிடென்ட்னு சொன்னீங்க..”

“ஆமாடா... அதுக்காக எல்லாம் உன் புருஷனுக்கு பாவம் பார்த்துடாதே நித்தும்மா.. அவனுக்கு பாவம் பார்க்கிறதும் ஒன்னுதான் பாம்புக்கு பாலை வார்க்கிறதும் ஒன்னுதான்..”

“ஹா.. ஹா.. உங்க அண்ணனும் இதேதான் சொன்னார்..”

“என்ன சொன்னான்??”

“அவர் ஒரு பாம்புனு...”

“அதுசரி.. அவனுக்கே தெரிஞ்சிருக்கு பார்த்தியா.....”

“ஆமா இப்போ எங்க அந்த பாம்பு?? ரூம்ல காணோம்??”

“கீழ காபி குடிச்சிட்டு இருக்கு...” என்றவன் “போம்மா.. போய் உன் ஆத்துக்காரர கவனி..” என்றான்..

“கவனிச்சிடலாமே..”

கீழே சென்றவள் ஆதியின் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு உட்கார்ந்தாள்.

மருமகளை கண்டதும் நித்திலாவுக்கும் காபி கொண்டுவந்து கொடுத்தாள் சாரதா. காபியை எடுத்துக் கொண்டவள் ஆதியிடம் மெல்லிய குரலில் “உங்க வீட்டுல நம்பி காபி குடிக்கலாம்ல அத்தான்??” என்றாள் கேள்வியாக.

அவன் அவள் பக்கமே பார்வையை திருப்பாமல் கரும்மே கண்ணாக காபியை குடித்துக் கொண்டிருந்தான்.

அவள் அவனை விடுவதாக இல்லை போல.. “இல்ல.. இந்த காபில தூக்க மாத்திரை ஏதாவது போட்டு விட்டுருப்பீங்களோன்னு கேட்டேன்..” என்று தானே விளக்கமும் சொன்னாள்..

“தூக்க மாத்திரையா... என்னது நித்தும்மா..” அவள் பேசியது அரைகுறையாக சாரதாவின் காதுகளில் விழுந்துவிட என்னவென்று வினவினாள்..

“அதுவா.. அதை ஏன் அத்தை கேக்குறீங்க...” என்று ஆரம்பித்தாள் நித்திலா.

அவளது கணவனுக்கு காபி தொண்டையிலே சிக்கிக் கொண்டது.. ஏதோ வில்லங்கமாக சொல்லி வைக்கப்போகிறாள் என்பதை உணர்ந்து நித்திலாவை திரும்பி பார்த்தான்..

அவள் அவனை கண்டு கொள்ளாமல் “ஒருத்தன் காபில தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ஒரு சின்ன பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க பார்த்திருக்கான் அத்தை..” என்றாள்.

“என்னடா சொல்ற...” சாரதா..

“ஆமா அத்தை.. நேத்து நியூஸ்ல பார்த்தேன்.. அதை பார்த்ததுல இருந்து எனக்கு மனசே சரியில்ல.. அதைத்தான் அத்தான்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்..” என்றாள் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு..

மருமகள் வருந்துவதை பொறுக்க முடியாத சாரதா “நீ எதுக்குடா வருத்தப்படுற.. இந்த மாதிரி நாய்கள் அங்கங்க இருக்கத்தான் செய்யுது.. நம்ம என்ன பண்ண முடியும்..” என்றாள்.

“இத்தனைக்கும் சொந்த மாமா பையனாம் அத்தை.. அந்த பொண்ணோட பேரன்ட்ஸ் அவன நம்பி வீட்டுக்குள்ள சேர்த்திருக்காங்க.. கடைசியில அவங்க பொண்ணுகிட்டயே...” என்று பெருமூச்சு விட்டவள் “என்னத்த சொல்ல.. காலம் ரொம்ப கெட்டுப்போச்சு..”

“சை.. சொந்த அத்தை பொண்ணுகிட்டயே தப்பா நடந்திருக்கான்... அவன இன்னுமா உயிரோட விட்டு வெச்சிருக்காங்க... இவனுங்கள எல்லாம் நடுத்தெருவுல நிற்க வெச்சி அடிச்சே கொல்லனும்..” என்றாள் சாரதா வெறுப்புடன்..

“ஆமா அத்தை.. அவன உயிரோட விட்டா இன்னும் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கைய நாசம் பண்ணுவானோ தெரியல.. பொண்ணுக்கு வெறும் பதினாறு வயசுதான் ஆகுதாம்.. அந்த தடி மாட்டுக்கு இருபத்தஞ்சு இருபத்தாறு வயசு இருக்குமாம்.. அவன்கிட்ட மாட்டிக்கிட்டு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா.. நினைச்சாலே என் மனசு பதறுது..”

திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களில் ஒரு பெண்மணி இந்த கதையை கேட்டு பொங்கி விட்டார்.. “வெட்கங்கெட்டவன்,,, மானம் கெட்டவன்,, புறம்போக்கு அந்த பொறுக்கி நாய் மட்டும் என் கைல சிக்கினான்னா அவன துண்டா துண்டா அறுத்து போட்டுடுவேன்..”

வயது பெண்ணை வைத்திருக்கும் அன்னையாக அவர் தன் கோபத்தை வெளிப்படுத்த அவரை தொடர்ந்து கூடவே இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டு ஆளாளுக்கு அந்த முகம் தெரியாத பொறுக்கி பையனை கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டுக் கொண்டிருந்தனர்..

நித்திலா வேறு அவ்வப்போது ஆதியை திரும்பி திரும்பி பார்ப்பதும் அந்த பெண்களை மேலும் எதையாவது சொல்லி ஏற்றி விடுவதுமாக அவனது பொறுமையை பயங்கரமாக சோதித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் சட்டென்று எழுந்துவிட்டான் ஆதி..

மகன் எழுவதை கண்ட சாரதா “என்னப்பா.. எங்கே கிளம்பிட்டே..” என்றாள்..

அவள் கேட்டது காதிலேயே விழாதது போல வேகமாக வெளியேறப் போனவன் எதிரில் மூச்சிரைக்க ஓடி வந்த சுஜிதாவை கண்டு “என்னாச்சு.. எதுக்கு இப்படி ஓடி வர்ர..” என்றான் கடுகடுப்பாக...

அங்கிருந்த மற்றவர்களும் என்னவென்பது போல் திரும்பி பார்க்க “மித்ரா.. மித்ரா அக்கா வந்திருக்காங்க...” என்றாள் அவள்..

“மித்ரா??..” என்றபடி ஆதி விஸ்வநாதன் வீட்டை நோக்கி விரைய மற்றவர்களும் பின்னால் சென்றனர்..

குடும்பத்தினர் அனைவரும் சூழ்ந்திருக்க மெலிந்து, கலைந்த தலைமுடியும், கசங்கிய ஆடையுடனும் சந்திரலேகாவின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தவளை பார்த்ததும் மனம் துடிக்க “பேபி..” என்றபடி அவளை நெருங்கினான்..

ஆதியின் குரல் செவிகளில் விழ அவனை நிமிர்ந்து பார்த்தவள் மேலும் அதிகரித்த அழுகையுடன் “தேவ்..” என்றபடி பாய்ந்து சென்று அவனை கட்டிக் கொண்டாள்..

நடு ஹாலில் அத்தனை பேர் முன்னிலையில் இவர்கள் இருவரும் கட்டிப்பிடுத்துக் கொண்டு நின்றிருப்பதை பெரியவர்கள் சங்கடத்துடன் பார்த்திருக்க நித்திலாவும் சௌர்யாவும் உணர்வு துடைத்த முகத்துடன் நின்றிருந்தனர்..



தொடரும்...



‘ஆதியின் நிலா’ அத்தியாயம் 27 படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் மக்களே...

 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காடு, மலை, புல், பூண்டு, ஆறு, குளம், வாய்க்கால், வரப்பு எல்லாம் தாண்டி நான் வந்துட்டேன் பேபிஸ்...

நெக்ஸ்ட் எபில இருந்து ஒரு குட்டி டீ....


“அதான் கல்யாணம்தான் நடந்துடுச்சே.. அப்புறம் உன்னை வெச்சிக்கிட்டு அவனுங்க என்ன பண்றது..” என்றாள் சந்திரலேகா எரிச்சலுடன்..

அன்னை கூறியதை கேட்டு புரியாமல் பார்த்தவள் பின்பு எதுவோ தோன்ற சட்டென்று நித்திலாவின் புறம் திரும்பினாள்..

நித்திலாவின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை அதிர்வுடன் பார்த்தவள் நம்பமுடியாமல் ஆதியை நோக்கினாள்.


###################


“ஆமா.. சஞ்சனா எங்கேஜ்மென்டுக்கு கூட வராத நீ இப்போ எதுக்கு ஓடி வந்திருக்க.. ம்ம்ம் என்ன லவ்வா..” என்றான்.


“முன்னாடில்லாம் உன்கூட தானேடா சுத்திக்கிட்டு இருப்பா.. அப்பவே அவள கரெக்ட் பண்ணி மேட்டர முடிச்சிருந்தேன்னா இப்போ இப்படி சோகமா உட்கார்ந்திருக்க வேண்டியதில்ல.. உனக்கு விவரம் பத்தாதுடா சஞ்சய்..” என்றான்.


“எவ்வளோ தைரியம் இருந்தா என் பொண்டாட்டிய பத்தி பேசுவ...” கேட்டுக்கொண்டே அவன் தலையை உடையும் வரை அங்கிருந்த மரத்தில் மோதி மோதி அடித்தான் ஆதி.


“சஞ்சய்!!!!.”கிரீச்சிட்டாள் நித்திலா.. “இன்னொரு தடவை என் புருஷன மரியாதை இல்லாம பேசின அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்...” என்றாள்.
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 28:


“என்னது!!!! முகேஷா???” ஒரே நேரத்தில் அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் மித்ராவை பார்த்தனர்...

அவள் சொன்னதை குடும்பத்தினரால் நம்பாமல் இருக்க முடியவில்லை.. அவளது கண்களிலோ வார்த்தையிலோ துளிக்கூட பொய் இல்லை.. இப்போதும் அவளது உடல் பயத்தில் வெடவெடத்துக் கொண்டிருந்தது...

“ஆமா முகேஷ்தான்... அவனுங்க ஹிந்தில பேசிக்கிட்டாங்க.. எனக்கு சரியா தெரியல.. ஆனா அடிக்கடி முகேஷ் பெயர் என் காதுல தெளிவாவே கேட்டுச்சு...” ஆதியின் தோளில் சாய்ந்தபடி சொல்லிக் கொண்டிருந்தாள் மித்ரா..

அவள் சொன்னதை கேட்டு கண்களில் தீப்பொறி பறக்க நித்திலாவையும் சௌர்யாவையும் திரும்பி பார்த்தான் ஆதி..

அவர்கள் தேவையில்லாமல் இந்த விடயத்தில் முகேஷை இழுத்துவிட்டதற்காக அல்ல.. அவனுமே அதைத்தான் செய்ய நினைத்திருந்தான். தான் போட்டு வைத்திருந்த திட்டம் வரைக்கும் அத்தனையும் தெரிந்து வைத்திருக்கிறார்களே என்று அவனுக்கு வெறியே வந்து விட்டது..

“பார்த்தீங்களா அப்பா... அந்த முகேஷ் பண்ணியிருக்க காரியத்தை... அவன சும்மா விடவே கூடாதுப்பா...” தனஞ்செயன் ஆத்திரத்துடன் எகிறினார். தானே தன் மகளை தவறாக நினைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்வு அவருக்கு.

“அவன நா பார்த்துக்கிறேன் மாமா...” என்றான் ஆதி.. “இதுக்கெல்லாம் கண்டிப்பா அவன் பதில் சொல்லியே ஆகனும்...” (அடப்பாவி 🤭)

“ஆனா அவன் எதுக்கு சம்மந்தமே இல்லாம மித்ராவ கிட்னாப் பண்ணனும்..” என்றாள் கல்பனா புரியாமல்..

“எங்க கல்யாணத்தை நடக்கவிடாம பண்ணிட்டு அந்த ஜீவிகாவ ஆதிக்கு கட்டி வைக்கிறதுக்காகத்தான் இத்தனையும் பண்ணியிருக்கான்.. அதுக்காகத்தான் என்னை மிரட்டி அந்த வீடியோ கூட எடுத்தாங்க..” தனக்கு தெரிந்ததை கூறினாள் மித்ரா.. “அப்புறம் என்னாச்சுனே தெரியல.. அவனுங்களே ஆள் இல்லாத ஒரு ப்ளேஸ்ல என்னை இறக்கி விட்டுட்டு போயிட்டாங்க..”

“அதான் கல்யாணம்தான் நடந்துடுச்சே.. அப்புறம் உன்னை வெச்சிக்கிட்டு அவனுங்க என்ன பண்றது..” என்றாள் சந்திரலேகா எரிச்சலுடன். அவளுக்கு மகள் திரும்பி வந்துவிட்டாள் என்ற சந்தோசத்தை விட திருமணம் நடக்காமல் பொய்விட்டதே என்ற கவலைதான் அதிகமாக இருந்தது.

அன்னை கூறியதை கேட்டு புரியாமல் பார்த்தவள் பின்பு எதுவோ தோன்ற சட்டென்று நித்திலாவின் புறம் திரும்பினாள்..

நித்திலாவின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை அதிர்வுடன் பார்த்தவள் நம்பமுடியாமல் ஆதியை நோக்க அவளது அந்த பார்வையை எதிர்கொள்ள தயங்கி வேறு பக்கம் தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

அந்த செய்கையே அவளுக்கு நடந்த அனைத்தையும் உணர்த்திவிட கண்களை இறுக மூடி அதனை ஜீரணித்துக் கொள்ள முயன்றவள் பின்பு “தேவ்.. நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்..” என்றாள்.


சுற்றியிருந்த குடும்பத்தினரை நோக்கிவிட்டு தொண்டையை செருமியவன் “சரி பேசலாம்.. ஆனா இங்க வேண்டாம்.. ஈவ்னிங் நம்ம வெளியே போய் பேசலாம் பேபி..” என்றான்.


“இல்ல.. இப்பவே பேசனும்..” என்றாள் உறுதியான குரலில்.

அவளது குரலில் இருந்த பிடிவாதத்தை உணர்ந்தவன் சிறு பெருமூச்சுடன் “ஓகே.. நீ ரெடியாகிட்டு வா.. நான் கார்ல வெய்ட் பண்றேன்..” என்க.

அவன் முகம் பார்க்காமல் “ம்ம்ம்...” என்றவள் பசித்த வயிறையும் களைப்பில் உறங்க கெஞ்சிய உடலையும் கூட பொருட்படுத்தாது தன் அறைக்குள் சென்று கிளம்ப தயரானாள். அவளுக்கு ஆதியுடன் பேசியே ஆக வேண்டி இருந்தது..

அத்தனை நேரம் இறுகிய முகத்துடன் மித்ராவை வெறித்துக் கொண்டிருந்த சௌர்யா நித்திலா தன்னை பார்ப்பதை உணர்ந்து “உன் புருஷன் கடைசி வரைக்கும் அவள யோசிக்கவே விடமாட்டான்...” கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான். நித்திலாவுக்கு சௌர்யாவை பார்க்க பாவமாக இருந்தது..

அத்தனைக்கும் காரணம் கணவன்தான் என்ற நினைவில் அவளது ஒட்டுமொத்த கோபமும் ஆதியின்பால் திரும்ப அவனை நினைத்து பல்லைக் கடித்தாள்.

சௌர்யா சொன்னதுபோல்தான் நடந்தது.. போகும்போது எதையோ பறிகொடுத்துவிட்டது போல் தவிப்புடன் சென்ற மித்ரா திரும்பி வரும்போது தெளிந்த முகமும் விழிகளில் ஒருவித கர்வத்துடனும் வந்து சேர்ந்தாள்..



##############################




“நான் என்ன பாடு பட்டேன்... யாரு என் பேச்சை கேட்டீங்க.. எல்லாரும் சேர்ந்து ஆதிக்கு அவள கட்டி வெச்சிட்டீங்க.. இப்போ என் பொண்ணுக்கு என்ன பதிலை சொல்லப்போறீங்க..” மாடியில் சந்திரலேகா தனஞ்செயனிடம் கத்திக் கொண்டிருப்பது கீழே ஹால் வரை கேட்டது..

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவள் கத்துவதை கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார் நிர்மலா.. சந்திராவின் இந்த அளப்பறையில் மாமியாரை தேடி வந்த விஜயா “என்ன அத்தை இது.. வீட்டுல சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க.. இவ இப்படி கத்தி மானத்தை வாங்கிட்டு இருக்கா..” என்றாள் கவலையுடன்.

“ம்ம்ம்... இவ என்னைக்குத்தான் நம்ம மானத்த வாங்காம இருந்திருக்கா.. இப்போ அவ பொண்ணு வேற ஏதேதோ கதை சொல்லிக்கிட்டு வந்து சேர்ந்திருக்கா.. இன்னும் என்ன என்னல்லாம் நடக்கப்போகுதோ தெரியல..”

“ஏன் அத்தை இப்படி சொல்றீங்க.. எனக்கென்னமோ மித்ரா சொன்னதெல்லாம் உண்மைன்னு தான் தோணுது..”

“உண்மையோ, பொய்யோ எந்த கருமத்தையாவது சொல்லி தொலைக்கட்டும்.. அதென்ன ஆதீஈஈஈன்னு ஓடிப்போய் கட்டிப்புடிக்கிறது.. சை அத்தனை பேர் முன்னாடி.. என்னால நித்து முகத்தையே பார்க்க முடியல.. என் தங்கத்துக்கு எவ்வளவு சங்கடமா இருந்திருக்கும்.. இதுல தனியா பேசனும்னு ரெண்டு பேரும் ஜோடி போட்டுகிட்டு போறாங்க.. சிவசிவா...” என்று தலையை பிடித்துக் கொண்டவர் “இதையெல்லாம் பார்க்கனும்னு என் தலையில விதிச்சிருக்கு...”

நிர்மலா கூறுவது போல அதில் எந்தவிதமான தவறு இருப்பதாக விஜயாவுக்கு தோன்றவில்லை.. மித்ராவுக்கும் ஆதிக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்க பட்டிருந்தது.. யாரோ செய்த சதியால் அந்த திருமணம் நடக்காமல் போய் ஆதிக்கு நித்திலாவை திருமணம் செய்து வைத்து விட்டார்கள்..

பாதிக்கப்பட்ட மித்ரா திரும்பி வந்து கேட்கும்போது அவளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைப்பது ஆதியின் கடமை. அதைத்தான் அவன் செய்திருக்கிறான். இந்த நியாயத்தை மாமியாரிடம் கூறினால் அவர் எப்படியும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்பதை அறிந்தவள் ஒன்றும் பேசாமலே நின்றுவிட்டாள்.

அதே சமயம் போர்டிகோவில் கார் ஒன்று வந்து நிற்பதை கண்டு யார் என்று பார்க்க காரிலிருந்து பெட்டி, படுக்கையோடு இறங்கிக் கொண்டிருந்தான் சஞ்சய்..

அவனை கண்டுவிட்ட சஞ்சனா “சஞ்சய்!!!” என்று ஆர்ப்பரிக்க மற்றவர்கள் அனைவரும் அங்கு கூடிவிட்டனர்.. இத்தனை நாட்கள் கழித்து குடும்பத்தினரை பார்க்கும் மகிழ்ச்சி துளிக்கூட இல்லாதவனாக உள்ளே நுழைந்தவன் வந்ததும் வராததுமாக சுற்றிலும் கண்களால் துலாவி தான் தேடிய நபரை காணாது சஞ்சனாவிடம் “சஞ்சி நித்து எங்கே???” என்று வினவினான்.

“நித்து அவங்க வீட்டுலடா..” என்றாள் அவள் பதிலுக்கு.

“ஓஹ்..” என்றான் சஞ்சய்..

“டேய் என்னடா இது.. இப்படி சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்து நிற்கிற.. அப்பாவுக்கு தெரிஞ்சதுன்னா அவ்வளவுதான்..” என்றாள் சஞ்சனா பதற்றமாக..

அவன் அவளுக்கு பதில் சொல்லாமல் தன்னுடைய பயண உடமைகள் அனைத்தையும் எடுத்துச் சென்று அறையில் வைத்துவிட்டு வந்தவன் யாருடமும் எதுவும் பேசாமல் நேராக சாரதாவின் வீட்டை நோக்கி சென்றான்..

“நித்து கல்யாணத்தை பற்றி அவன்கிட்ட எதுவும் சொல்லலைன்னு ரொம்ப கோபமா இருக்கான் போல..” என்றாள் விஜயா மாமியாரிடம்.


சௌர்யா, அருணா மற்றும் சாரதாவுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்த நித்திலா திடிரென்று சஞ்சய் வருவதை கண்டதும் அவளது சிரிப்பு அப்படியே மறைந்து காணாமல் போக அவளது முக மாற்றத்தை கவனித்துக் கொண்டே அந்த வீட்டினுள் நுழைந்தான் சஞ்சய்.




#########################




தனது அறையில் விட்டத்தை வெறித்துக் கொண்டு படுத்திருந்தான் அர்ஜுன்.. மகன் விழித்திருப்பதை கண்ட சரஸ்வதி வேகமாக சென்று அவனுக்கு காபி கலந்து கொண்டு வந்தாள்.. இரவு அப்பாவும் மகனும் வீடு திரும்ப வெகு நேரமாகிவிட்டது..

“அர்ஜுன்...” என்று அவள் நான்கைந்து முறை அழைத்த பிறகே திரும்பி பார்த்தவன் “என்னம்மா..” என்றான்.

“காபிடா..” என்றவள் அவன் குரல் மிகவும் பலவீனமாக இருப்பதை உணர்ந்து “என்னடா அர்ஜுன் ஒரு மாதிரி பேசுற..” என்றபடி நெற்றியில் கை வைத்து பார்க்க அனலாக கொதித்தது..

அதில் பயந்து போனவள் கணவரிடம் சென்று விடயத்தை கூற அதன்பின் வரதராஜன் மருத்துவரை வரவழைத்து பரிசோதித்து அவர் சாதாரண காய்ச்சல்தான் என்று கூறிய பிறகுதான் அவர்களுக்கு சற்று நிம்மதியாக இருந்தது..

தன் மகனை இப்படியொரு நிலையில் வைத்துப் பார்க்கவே வரதராஜனால் முடியவில்லை.. பிரம்மை பிடித்தவன் போல இருந்தான். நேற்றைய சம்பவம் வேறு அவர் கண்முன்னே தோன்றி அரற்றியது..

நித்திலாவின் திருமணத்தை அறிந்து அவனது நண்பர்கள் அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. அர்ஜுனை எப்படி சமாதானப்படுத்துவது என்று யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவனும் யாரிடமும் ஒற்றை வார்த்தை பேசவும் இல்லை. அவனை அணுகவும் அவர்களுக்கு பயமாக இருந்தது.


அவன் போக்கிலேயே விட்டுவிடலாம்,, யாரும் எதுவும் சொல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் அவனே முடிவெடுக்கட்டும் என்று சிவா கூறிவிட மற்றவர்களும் அவனை தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டனர். ஆனால் அவனை கண்காணிக்க தவறவுமில்லை.

இரவு நேரம் கடற்கரையில் உட்கார்ந்து ஆதியை பற்றியும் அவனது குடும்பத்தை பற்றியும் அவரவர் விசாரித்து அறிந்தவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தனர்.. அப்போது சற்று தள்ளி உட்கார்ந்திருந்த அர்ஜுனை திரும்பி பார்த்த ப்ரசாத் அந்த இடத்தில் அவனை காணாமல் பதற்றத்துடன் எழுந்தவன் “அர்ஜுன்..” என்று கத்தினான்.

அவனது குரலில் மற்றவர்களும் பதற்றத்துடன் திரும்பி பார்க்க “மச்சான்.. கடலுக்குள்ள போறான்டா..” என்று இன்னொருவன் கத்த அத்தனை பேரும் அர்ஜுனை நோக்கி ஓடினார்கள்.


ஒருவழியாக அவனை மீட்டு வரதராஜனுக்கு விடயத்தை தெரிவிக்க அவரும் அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடினார். அப்போதைக்கு ஏதேதோ சமாதானம் கூறி மகனை அழைத்து வந்திருந்தாலும் அவன் இன்னும் தெளியவில்லை. இதில் காய்ச்சல் வேறு. அவனது எதிர்காலத்தை நினைத்து அவருக்கு கவலையாக இருந்தது.

ஹார்பரில் சரக்கு ஏற்றுவதை மேற்பார்வை பார்க்க வந்தவர் மனம் மிகுந்த சஞ்சலத்தில் இருந்ததால் உடன் வந்த அவரது உதவியாளரிடம் பார்க்கச் சொல்லிவிட்டு வேறு பக்கமாக வந்திருந்தார்.

மகனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிப் போய் நடந்து கொண்டிருந்தவர் தன்னைப் பின் தொடர்ந்து இருவர் வந்து கொண்டிருப்பதை கவனிக்கத் தவறிவிட்டார்.

நீண்ட நேரத்திற்கு பிறகுதான் வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்து திரும்ப நினைத்தபோது சட்டென்று அவர் எதிரில் தோன்றினான் ஒருவன். அவனைக் கண்டதும் லேசான திடுக்கிடலுடன் “நீ... நீயா???” என்றவர் துணைக்கு ஆளில்லாமல் இதுபோன்ற ஒரு இடத்தில் தனித்து வந்து மாட்டிக்கொண்ட தன் மடத்தனத்தை உணருமுன்பே பின்னால் நின்ற மற்றொருவன் அவரது கைகள் இரண்டையும் பின்பக்கமாக இழுத்து ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறு கையை அவரது மார்புக்கு குறுக்காக போட்டு கழுத்தோடு சேர்த்தாற்போல் அழுத்தி பிடித்து நகர முடியாமல் செய்ய முன்னால் நின்றவன் பழிவெறியில் மின்னிய விழிகளுடன் தன் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து அவரது அடி வயிற்றிலேயே சொருகினான்..

“சதக்.. சதக்..” என்று முகமெல்லாம் இரத்தம் தெறிக்க வரதராஜனை மீண்டும் மீண்டும் குத்தி நிலத்தில் குப்புற தள்ளிவிட்டவர்கள் அடுத்த நொடியே கண்டெய்னர் சந்துகளுக்குள் புகுந்து மறைந்தனர். இத்தனையும் வெறும் இரண்டே நிமிடங்களில் நடந்து முடிந்திருந்தது..



###############################




“என்னாச்சு வருண்.....”

“.....................”

“ம்ம்ம்... நான் இன்னும் டூ டேய்ஸ்ல கிளம்பிடுவேன்... நீ கமிஷனர் கிட்ட பேசிடு.... நித்திலா பெயரோ, சௌர்யா பெயரோ இதுல வரவே கூடாது.. புரியுதா..” அழைப்பை துண்டித்துவிட்டு மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ஆதி..

அவனுக்கு நித்திலாவையும் சௌர்யாவையும் நினைத்து வெறி வெறியாக வந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அவன் ஜீவிகாவை அடித்து துரத்தி விட்ட பிறகு அவனுக்கும் முகேஷுக்கும் இடையில் பெரும் பனிப்போரே ஆரம்பமாகி இருந்தது.

அத்தனை காலமாக பம்மிக்கொண்டு திரிந்தவன் அதன்பிறகு மெல்ல மெல்ல அவனது சுயரூபத்தை காட்ட தொடங்கிவிட்டான். ஆதியின் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு தொழிலில் ஏதாவது குழறுபடிகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்..

பெரிதாக அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும் சிறிய சிறிய தொல்லைகள் அவனாலும் அவனது கூட்டாளிகளாலும் எப்போதும் வந்தவண்ணமே இருந்தன. அவர்களைவிட பெரும் பெரும் எதிரிகள் ஆயிரம் பேரை தொழிலில் கடந்து வந்திருந்தவன் அவர்களை கண்டு கொள்ளவும் இல்லை.. ஒரு பொருட்டாக நினைக்கவும் இல்லை.

அவர்களால் ஏற்படும் சிக்கல்களை அந்தந்த இடத்திலேயே சமாளித்து அதைவிட பல மடங்கு பதிலடியும் கொடுத்து விட்டு தன்னுடைய வழியில் சென்று கொண்டிருந்தான்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக சகுந்தலாதேவி அவரது பேரன் ஆத்ரேயாவிற்கு நித்திலாவை பெண் கேட்டு போகப்போவதாக தகவல் கிடைக்க உடனே சென்னை கிளம்பி விட்டான்.

ஏர்போட்டில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் நான்கைந்து கார்கள் அவனுடைய காரை பின்தொடர்ந்து வர அவனுடைய சிந்தனை அனைத்தும் நித்திலாவை சுற்றியே இருந்ததால் வேறு எதையும் அவன் கண்டுகொள்ளவில்லை.

ஆள் அரவமில்லாத ஒரு சாலையில் அந்த கார்களில் ஒன்று அவனுடைய காரை பின்பக்கமாக இடுத்து தள்ளிவிட எதிர்பாராத இந்த தாக்குதலில் அவனது நெற்றியில் அடிபட்டு கார் கட்டுப்பாட்டை இழக்கத்தொடங்க உடனே சுதாரித்தவன் சடுதியில் காரை யூடர்ன் அடித்து திருப்பி நிறுத்தினான்.

காரிலிருந்து இறங்கி நிற்க அவர்களும் காரை நிறுத்திவிட்டு இறங்கி அவனை நோக்கி வந்தனர். ஐந்து பேரும் அவன் மீது பாயத்தயாராக வர க்ரவ் மகா போன்ற தற்காப்பு கலைகளை சிறுவயதிலிருந்தே கற்றுத்தேர்ந்தவன் ஐந்து பேரையும் ஒற்றை ஆளாக அடித்து வீழ்த்திவிட்டு அதில் ஒருவனை நோக்கி குனிந்து அனுப்பியது யார் என்று ரௌத்திரத்துடன் கேட்க வலியில் துடித்துக் கொண்டு கிடந்தவன் “ரன்வீர்” என்றான் பயந்து நடுங்கிய குரலில்.

ரன்வீர் முகேஷின் உதவியாளன்.

மும்பையில் அவனை நெருங்க முடியாது என்பதால் சென்னைக்கு வருவதை தெரிந்து கொண்டு அடியாட்களை அனுப்பியிருக்கிறான்.

அப்போதே முகேஷுக்கு கட்டம் கட்டிவிட்டான் ஆதி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று அவன் திட்டம் போட்டால் இந்த நித்திலாவும் சௌர்யாவும் நடுவில் புகுந்து குட்டையை குழப்பி விட்டார்கள். எப்படியோ அவர்களது பெயர் வெளிவராமல் மித்ராவை கடத்தியது முகேஷ்தான் என்று பழியை அவன்மீது திருப்பிவிட்டான்.

அவன் நினைப்பது, செய்வது எதுவுமே யாருக்கும் தெரியாமல் கவனமாக இருப்பவன், இவர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்று யோசித்து அவனுக்கு தலையை வலித்தது.

இருக்கும் தலைவலி போதாதென்று இப்போது சஞ்சய் வேறு வந்திருக்கிறான். நித்திலாவும் சௌர்யாவும் மற்றவர்கள் அறியாமல்தான் அவனிடம் வாலாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். சஞ்சய் வெளிப்படையாகவே முறைத்துக் கொண்டு திரிகிறான். சஞ்சய் எல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே கிடையாது. ஆனால் தன் அம்மாவுக்கு எந்த சந்தேகமும் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தான். அடுத்து மித்ரா.. அவளுக்கு மனக்கஷ்டம் தரும் வகையில் எதுவும் நடக்க விடக்கூடாது.

ஒவ்வொன்றாக நினைத்துக் கொண்டு வந்தவனின் எண்ணமெல்லாம் இறுதியில் நித்திலாவிடம் வந்து நிலைத்தது. பிள்ளைப் பூச்சிக்கு கொடுக்கு முளைத்தது போல் சௌர்யாவுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறாள். முதலில் அவர்கள் இருவரையும் பிரிக்க வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்தான்.

சஞ்சயும் தோட்டத்தில் உட்கார்ந்து நித்திலாவை பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். காலையில் அவனைக் கண்டதும் அவள் முகம் அப்படியே பேயறைந்ததைப் போல ஆகிவிட்டது.

யாரோ போல பொதுவாக அவனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு எழுந்து சென்றுவிட்டாள். அதன்பிறகு அவன் அவளுடன் பேச வேண்டும் என்று தேடும் போதெல்லாம் அவன் கண்ணிலேயே படாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள்.

அவனும் இத்தனை நேரம் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்துவிட்டு ஒன்றும் முடியாமல் போக தோட்டத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறான்.

“என்னாச்சு சஞ்சய்.. உன் முகமே சரியில்லையே..” சௌர்யாவின் தம்பி சூரஜ் அவன் அருகில் வந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

குடித்திருப்பான் போல அவனது குரல் லேசாக குழறியது. சஞ்சய்க்கு அவனை கண்டாலே பிடிக்காது. அவனைப் பொறுத்தவரை அவர்களுடைய குடும்பத்தில் இரண்டே இரண்டு கேடுகெட்டவர்கள். ஒன்று ஆதி.. இன்னொன்று இந்த சூரஜ்.. கடைந்தெடுத்த பொறுக்கி...


“ஆமா.. சஞ்சனா எங்கேஜ்மென்டுக்கு கூட வராத நீ இப்போ எதுக்கு ஓடி வந்திருக்க.. ம்ம்ம் என்ன லவ்வா..” என்றான்.

சஞ்சய்க்கு பற்றிக்கொண்டு வந்தது. காது கேட்காதவன் போல கண்டு கொள்ளாமல் உட்கார்ந்திருந்தான். இவனுக்கெல்லாம் பதிலளித்து வீண் ரசாபாசத்தை உருவாக்கிக் கொள்ள அவன் விரும்பவில்லை.

“நான்கூட சின்ன வயசுல லூசு மாதிரி சுத்திக்கிட்டு இருப்பாளே.. இப்பவும் அப்படித்தான் இருப்பான்னு நினைச்சிட்டு வந்தேன்.. சும்மா சொல்லக்கூடாதுடா.. சான்ஸே இல்ல.. நித்து செம்ம ஃபிகர்..”

எதிரில் இருந்தவனின் கை முஷ்டிகள் இறுகுவதை உணராமல் தன் பாட்டுக்கு பேசிக்கொண்டே போனான் சூரஜ்.

“சௌர்யா கூட எப்பவும் நித்திலா நித்திலான்னு பேசிக்கிட்டே இருப்பான். நான் தான் மிஸ் பண்ணிட்டேன்..” என்று மிகவும் வருத்தப்பட்டான். “எனக்கே இப்படி இருக்குன்னா.. உனக்கு எப்படி இருக்கும்.. ப்ச் முன்னாடில்லாம் உன்கூட தானேடா சுத்திக்கிட்டு இருப்பா.. அப்பவே அவள கரெக்ட் பண்ணி மேட்டர முடிச்சிருந்தேன்னா இப்போ இப்படி சோகமா உட்கார்ந்திருக்க வேண்டியதில்ல.. உனக்கு விவரம் பத்தாதுடா சஞ்சய்..” என்று அறிவுரை வேறு வழங்கினான்.

அவ்வளவுதான் சஞ்சயின் பொறுமை பறந்து விட்டது. அவனை அடித்து துவம்சம் செய்துவிடும் வெறியில் அவன் இருந்த இடத்திலிருந்து எழும்ப அதே நேரம் சூரஜ் உட்கார்ந்திருந்த நாற்காலியுடன் சேர்த்து சஞ்சயின் காலடியில் வந்து விழுந்தான்.

ஒரு வினாடி புரியாமல் பார்த்த சஞ்சய் அங்கு ஆக்ரோஷமாக நின்றிருந்தவனை கண்டதும் நடப்பது நடக்கட்டும் என்பது போல மீண்டும் உட்கார்ந்து விட்டான்.

கீழே கிடந்த சூரஜை பின் கழுத்தை பிடித்து தூக்கியவன் “எவ்வளோ தைரியம் இருந்தா என் பொண்டாட்டிய பத்தி இந்த மாதிரி பேசுவ...” கேட்டுக்கொண்டே அவன் தலையை உடையும் வரை அங்கிருந்த மரத்தில் மோதி மோதி அடித்தான் ஆதி.

ஒருவழியாக அந்த மரத்தை சூரஜின் இரத்தத்தால் குளிப்பாட்டி விட்டவன் “இனிமேல் நான் உன்ன இந்த பக்கமே பார்க்கக்கூடாது.. கொன்னுடுவேன்...” என்றான் விழிகள் சிவக்க..

அவனை அந்த மரத்தின் மீதே தள்ளிவிட்டு விட்டு சஞ்சயை திரும்பி முறைத்தான் ஆதி ‘அவனை பேச விட்டுவிட்டு என்னத்தை பார்த்துக் கொண்டிருந்தாய்..’ என்றது அந்தப் பார்வை.

‘உன்னைவிட அவன் எவ்வளவோ தேவலை..’ என்பது போல் பதில் பார்வை பார்த்து வைத்தான் சஞ்சய்.

அதில் கடுப்பானவன் மீண்டும் சிலமுறை சூரஜை உதைத்து தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றான். செல்லும் ஆதியின் முதுகை வெறுப்புடன் பார்த்து நின்ற சஞ்சய் அவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்புவதை கண்டதும் வேகமாக வீட்டுக்குள் நுழைந்தான்.

அடித்துப் போட்ட ஆதி ஒருபக்கம் சென்றுவிட சஞ்சயும் தன்னை கண்டு கொள்ளாமல் வீட்டுக்குள் செல்வதை கண்டு நொந்து போன சூரஜ் வலியில் துடித்தவனாக அந்த மரத்தை பற்றிக்கொண்டு எழும்ப முயற்சிக்க அவனை நோக்கி நீண்டது ஒரு கரம்..




#############################





அவளுக்கும் ஆதிக்குமான அறையில் இருந்த குளோசட்டில் தன்னுடைய உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள் நித்திலா. அவன் இருக்கும் போது அவள் அந்த பக்கமே வருவதில்லை. இப்போது அவன் வெளியே செல்லவும் தான் வந்திருக்கிறாள்.

முதுகை துளைப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட ஒருவேளை ஆதிதான் திரும்பி வந்து விட்டானோ என நினைத்து அவள் திரும்பி பார்க்க அங்கு சஞ்சயை கண்டதும் என்ன பேசுவதென்று தெரியாமல் ஒரு கணம் விழித்தவள் “வா.. வா சஞ்சய்..” என்றாள்.

அவள் முகத்தை பார்த்துக் கொண்டே அவன் நெருங்க அவனுடைய அந்த குற்றம் சாட்டும் பார்வையில் அவளது தலை தானாக கவிழ்ந்து கொண்டது.

“உனக்கு வெட்கமாயில்ல..” என்றான் அவன். “உன்கிட்ட எத்தனை தடவை சொன்னேன் பெங்களூர் போயிடுன்னு.. பாட்டி தப்பா நினைப்பாங்க,, பாட்டியோட பேரன் தப்பா நினைப்பாங்கன்னு கதை விட்டதெல்லாம் இதுக்குத்தானா.. சை..”

“சஞ்சய் என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாதே.. மித்ரா அக்கா....” என அவள் எதையோ சொல்லவர “அடச்சீ நிறுத்துடீ..” அவளது பேச்சை இடைமறித்தவன் “மித்ராவ அவனே ஆள் வெச்சி தூக்கிட்டு உன்ன கல்யாணம் பண்ணியிருக்கான்.. இதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா..” கோபமாக கேட்டான்.

“இது ஒரு கல்யாணம்..” என்று அந்த அறையை சுற்றி பார்வையை ஓடவிட்டான் “இவன கட்டிக்கிறதுக்கு நீ ஒரு தெருநாய கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம் *********”

அவன் ஏதேதோ சொல்லி ஆதியை திட்ட அதில் கோபமுற்றவள் “சஞ்சய்..” என்று கிரீச்சிட்டாள் நித்திலா.. போதும் என்பது போல் கையை உயர்த்தி காட்டி “விட்டா உன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே போற... இன்னொரு தடவை என் புருஷன மரியாதை இல்லாம பேசின அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்... அவ்வளவு தான் உனக்கு மரியாதை.. வெளியே போ முதல்ல..” என்றாள்.

கோபத்தில் முகம் சிவந்து மூச்சு வாங்க நின்றவளை நம்ப முடியாமல் பார்த்தான் சஞ்சய்.

“நித்து.. அவன் உன்ன என்ன எல்லாம் பண்ணினான்னு மறந்துட்டியா.. நீ ஊரை விட்டு போனதே அவனாலதானேடீ.. எவ்வளவு கஷ்டப்பட்ட.. எவ்வளவு அழுத.. உன்ன எப்படியெல்லாம் அடிச்சான், திட்டுனான்... அப்புறம்... அப்புறம் உன்ன...” அதற்குமேல் பேச அவனுக்கு வாய் வரவில்லை... இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவனுக்கு எல்லாமே இப்போதுதான் நடந்தது போல் உடல் குலுங்கியது.. விழிகளில் நீர் திரண்டு வழிய சற்று நேரம் அந்த நாளுடைய நினைவின் தாக்கத்தில் நின்றிருந்தவன் பின் கண்ணீரை துடைத்துவிட்டு அழுத்தமான பார்வையுடன் அவளை நோக்கினான்...

“எல்லாமே மறந்து போச்சா.. இல்ல அவன கூடவே இருந்து பழிவாங்குறதுக்காக கல்யாணம் பண்ணியிருக்கியா.. அப்படி மட்டும் பண்ணியிருந்தேன்னா உன்னை மாதிரி முட்டாள் யாருமே கிடையாது..”

“ஸ்டாப் இட் சஞ்சய்... உன்னை நான் வெளியே போக சொன்னேன்..” என்று கதவுப்பக்கமாக அவள் கையை நீட்ட ஒரு நொடி அவளை வெறித்துப் பார்த்தவன் “போறேன்டீ போறேன்.. ஆனா ஒன்னு மட்டும் மனசுல வெச்சிக்க.. என்னைக்கு இருந்தாலும் அந்த ஆதிதேவ்க்கு இந்த சஞ்சய் கையாலதான் சாவு....”

அதில் நித்திலா திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்க்க கோபமாக கூறிவிட்டு அவளது அறையை விட்டு வெளியே வந்தவன் அதிர்ந்து போனவனாக “ப... பாட்டி...” என்றான்.

கண்ணீருடன் அவன் எதிரே நின்றிருந்தார் நிர்மலாதேவி.. அவரது அந்த கண்ணீரே சொல்லாமல் சொல்லியது அவர்கள் பேசியதை அவர் கேட்டுவிட்டார் என்று.

சஞ்சய் சென்றதும் தொப்பென்று கட்டிலில் உட்கார்ந்தாள் நித்திலா.. அவனுடைய கோபம் அவளை அந்தளவு பாதித்திருந்தது. அவனை எதிர்கொள்ள முடியாமல்தான் காலையில் இருந்து அவன் கண்ணிலேயே படாமல் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தாள்.

தன் மீது அவ்வளவு அன்பு வைத்திருப்பவனை காயப்படுத்தும் நிலையில் இருக்கிறோமே என்று நொந்து போனாள். அவள் மீதிருந்த அக்கறையினால் தான் அவன் அத்தனையும் பேசினான். ஆனால் அவனிடம் சொல்லமுடியாத நிறைய விடயங்கள் அவளிடம் இருந்தன..

அதே சமயம் அவன் ஆதியை பேசியதையும் அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

அழுதாள்..

வெகுநேரம் கழித்து வீடு திரும்பிய ஆதி தன்னுடைய அறைக்குள் நுழைந்ததும் முதலில் கண்டது கட்டிலில் சுருண்டு படுத்திருந்த மனைவியத்தான்.. மெல்ல கட்டிலை நெருங்கியவன் உறங்கும் அவளது முகத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

அழுது அழுது ஓய்ந்து எப்போது தூங்கினோம் என்பதே தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தவள் தன் முகத்தில் யாரோ கோலம் போடுவது போன்ற உணர்வு ஏற்பட்டதில் சிரமப்பட்டு இமைகளை பிரித்து பார்க்க அப்படி யாரையும் காணவில்லை.

தூக்க கலக்கத்தில் இருந்தவள் ஏதோ பிரம்மை என நினைத்து திரும்ப கட்டிலின் மறுமுனையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஆதி. அவளுக்கு இருந்த மன அழுத்தத்தினாலோ அல்லது சஞ்சய் பேசிய பேச்சுக்களின் தாக்கத்தினாலோ எதுவோ ஒன்று உந்த மெல்ல அவனை நெருங்கி அணைத்து அவன் மார்பில் தலைவைத்து மீண்டும் உறங்கிப்போனாள். அவள் உறங்கிய மறுநொடியே அவனது கரங்கள் அவளை தன்னுடன் சேர்த்து இறுக்கிக் கொண்டன.

அதே நேரம் நிர்மலாதேவி தன் பேத்திக்கு நடந்த அத்தனை கொடுமைகளையும் அறிந்தவராக இரவு முழுக்க பூஜையறையில் உட்கார்ந்து அழுது கரைந்து கொண்டிருந்தவர் விடியற்காலையில் யாரும் எழுந்து கொள்வதற்கு முன்னாலேயே ஒரு முடிவுடன் எழுந்து தயாரானவர் தன் அக்காவின் வீட்டை நோக்கி பயணமானார்..



தொடரும்.........



‘ஆதியின் நிலா’ அத்தியாயம் 28 பதிந்துவிட்டேன் மக்களே... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்..

 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாருக்கெல்லாம் சூடா டீ வேணும்... இந்த எபி இன்னும் சில பல எபிக்கள் தாண்டித்தான் வரும்.. இப்போ சும்மா படிச்சு என்ஜாய் பண்ணுங்க 😉


“ஏய் நிறுத்துடி... இன்னொரு தடவ அத்தான் ஆட்டுக்குட்டினு சொல்லி எனக்கு கால் பண்ணின நடக்கிறதே வேற... இனிமேல் உனக்கும் எனக்கும் நடுவுல ஒன்னுமே கிடையாது.. உன் வாழ்க்கைய நீ பாரு.. என் லைஃப நான் பார்த்துக்கிறேன்.. உன்னையெல்லாம் நம்பவே கூடாதுனு எப்பவோ முடிவெடுத்தவன்டி நான்.. என் கெட்ட நேரம் உன்ன நம்பி தொலைச்சிட்டேன்...”

“இப்போ நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படியெல்லாம் பேசுறீங்க...” அழுகை குரலில் கேட்டாள் நித்திலா..

“நீயே தப்புதான்டீ.. உன்கிட்ட ஒன்னு ஒன்னா சொல்லி புரிய வைக்கனும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது.. இத்தோட எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்.. அப்படியே உன் பாட்டி வீட்டுலயே இருந்துக்க... மும்பை பக்கம் உன்ன பார்த்தேன் கொலை பண்ண கூட யோசிக்கமாட்டேன்... வைடி ஃபோனை..”




#############################



“நிலா பேபி பழசையெல்லாம் நம்ம மறந்திடலாம்.. நமக்கு யாருமே வேண்டாம்.. இந்த ஆதி,,, மீரா இவங்க யாருமே இல்லாத ஒரு இடத்துக்கு போயிடலாம்டா... அங்க உனக்கு நான் எனக்கு நீன்னு நம்ம ரெண்டு பேரும் மட்டும் சாகுற வரைக்கும் ஒன்னா சந்தோசமா வாழலாம்...”

“அர்ஜுன் ப்ளீஸ்... நான் சொல்றத கேளு...”

“வேணாம் நிலா.. நீ எதுவும் சொல்லாதே ப்ளீஸ்.. நீ இல்லைன்னா நான் செத்துடுவேன் பேபி.. உன்மேல உயிரே வெச்சிருக்கேன்..” அவளது கன்னத்தை இரு கரங்களால் தாங்கி கொண்டவன் “மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதே பளீஸ்... நம்ம யார் கண்ணுலயும் படாம எங்கேயாவது போயிடலாம் பேபி...”




🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 29:




“என்ன சித்தி சொல்றீங்க.. ஆதியா இப்படியெல்லாம் பண்ணினான்... அதுவும் நித்துக்குட்டிய... கடவுளே!!!! என்னால நம்பவே முடியலையே...” கண்ணீருடன் கேட்டாள் ரேணுகா. “நான் ஆர்யாவுக்கு நித்துவ கட்டி வெச்சி எப்படியெல்லாம் பார்த்துக்கனும்னு ஆசைப்பட்டேன்... கடைசியில இப்படியா ஆகனும்...”

ரேணுகா அழுவதை கண்ட ஷிவானிக்கு சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வந்தது.. எங்கே நிர்மலாவின் முன்னால் சிரித்து தொலைத்துவிடுவோம் என்ற பயத்தில் தன் அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள்.

“இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல நிர்மலா.. ஆதி இப்படி பண்ணுவான்னு.. சை.. எங்கயிருந்து வந்தது உன் பேரனுக்கு இந்த மாதிரி ஒரு கேடுகெட்ட புத்தி.. அவன் யாருக்கிட்ட இந்த மாதிரி நடந்திருந்தாலும் நான் கவலைபட்டிருக்க மாட்டேன்.. என் அரவிந்தனோட பொண்ணுகிட்ட தப்பா நடந்திருக்கானே.. அதைத்தான் என்னால தாங்கிக்கவே முடியல..” சகுந்தலாதேவி..

“அரவிந்தன்” என்ற ஒற்றை வார்த்தையில் நிர்மலாவின் அழுகை மீண்டும் அதிகரிக்க அதை ஒருநொடி குரூரமாக பார்த்த சகுந்தலா, பின்பு தன் பார்வையை மாற்றிக்கொண்டு கண்களில் கருணை வழிய “நீ எதுக்குமா அழுற.. நீ என்னோட தங்கை.. நீ எதுக்காகவும் அழக்கூடாது.. நீ அழுதா அதை என்னால தாங்கிக்க முடியுமா சொல்லு..” என்று தங்கையை சமாதானப்படுத்த,

“என்னால முடியலக்கா.. அவ ஒரு குழந்தை.. ஐயோ!! இந்தப்படுபாவி என் தங்கத்தை இந்த மாதிரி பண்ணுவான்னு தெரிஞ்சிருந்தா அவள அவன் பக்கமே போக விடாம என் கண்ணுக்குள்ள வெச்சி பார்த்திருந்திருப்பேனே.. எனக்கு எதுவுமே தெரியாம போச்சே..” உடைந்து அழுதார் நிர்மலா.

அவரால் சஞ்சய் கூறிய விடயத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.

இரவு நித்திலாவுடன் பேசுவதற்காக அவளை தேடி சென்றவர் உள்ளே சஞ்சயும் நித்திலா ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்து அவர்கள் பேசுவதை கவனிக்க தொடங்க அவரது காதில் இடியாக வந்து விழுந்தது சஞ்சய் கூறிய வார்த்தைகள்.

“உன்னை எப்படியெல்லாம் அடிச்சான்... திட்டினான்.. நீ ஊரை விட்டு போனதே அவனாலதானே...” போன்ற வார்த்தைகளை கேட்டு அதிர்ந்து போய் அப்படியே சிலையென நின்றுவிட்டார்.

அதன்பிறகுதான் சஞ்சய் வெளியே வந்ததும் பாட்டியை கண்டு திகைத்து நிற்க வாயில் விரல் வைத்து அவனை சத்தம் போடாமல் வா என்று தனியாக அழைத்துச் சென்று என்ன நடந்ததென்று விசாரிக்க முதலில் தயங்கியவன் பின்பு அவரது வற்புறுத்தலில் வேறு வழியில்லாமல் அனைத்தையும் கூறிவிட்டான்.

நித்திலாவுக்கு நடந்த கொடுமைகள் ஒரு புறமென்றால் அத்தனையும் விஸ்வநாதனுக்கு தெரிந்திருக்கிறது.. யாரிடமும் ஒற்றை வார்த்தை சொல்லாமல் பேரனின் கௌரவத்தை காப்பாற்றி விட்டிருக்கிறார் என்று அதை நிர்மலாவினால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

இதை விடவே கூடாது.. இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும் என்பதற்காக கணவரை தேடிச்சென்றார். ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக விஸ்வநாதனுக்கு ஆதி அவளை அடித்ததை தவிர வேறு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. “படிக்கிற வயசுல இந்த மாதிரி பண்ணிட்டாளேங்கிற கோபத்துல அடிச்சதா சொன்னான்.. என்கிட்ட ரொம்ப வருத்தப்பட்டான்மா நித்துவ அடிச்சதுக்கு...” என்றார் அவர்.

வெறுத்துப்போய் விட்டது நிர்மலாவுக்கு.. எவ்வளவு சாமர்த்தியமாக மற்றதை மறைத்து அவன் அடித்ததை மட்டும் கூறி அத்தனை பழியையும் நித்திலாவின் மேல் திருப்பி விட்டிருக்கிறான்.. அதற்குமேல் அவர் விஸ்வநாதனிடம் எதுவும் பேசவில்லை. அவரிடம் சொல்லியும் இனி ஒன்றும் ஆகப்போவதில்லை.

இரவு முழுக்க பொட்டுக் கண் மூடவில்லை நிர்மலா.. பூஜையறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அதன்பிறகுதான் தன் அக்காவை தேடி வந்திருக்கிறார்.

“நான் கடைசி வரைக்கும் இந்த கல்யாணத்தை நடக்க விட்டிருக்கவே மாட்டேன் நிர்மலா... ஆனா உன் வீட்டுக்காரருக்கு நெஞ்சுவலி வந்ததா சேது சொன்னான்.. அதனாலதான் உன்னோட தாலிக்கு எந்த ஆபத்தும் வந்துட கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் என் வீட்டுக்கு மருமகளா வர வேண்டிய நித்திலாவ உன் பேரனுக்கு விட்டுக் கொடுத்தேன்... கடைசியில அத்தனையும் உன் பேரன் திட்டம் போட்டு இல்ல நடத்தியிருக்கான்...” வேதனையுடன் கூறினார் சகுந்தலா..

“ஐயோ!!!! என் மனசு கிடந்து பதறுதே சித்தி.. சின்ன வயசுல இருந்தே ஆதிக்கு நித்துவ கண்டாலே பிடிக்காதே.. இத்தனையும் பண்ணினவன் இப்போ அவள கல்யாணம் பண்ணி இன்னும் என்ன கொடுமையெல்லாம் பண்ண போறானோ...” எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றிவிட்டாள் ரேணுகா..

“அவன் ஏதாவது பண்ற வரைக்கும் நம்ம எல்லாம் கைய கட்டி வேடிக்கை பார்ரத்துக்கிட்டு இருப்போமா.. அவ என் அரவிந்தனோட பொண்ணு.. அவளுக்கு ஏதாவது ஒன்னுனா நான் கொலை பண்ண கூட தயங்கமாட்டேன்..” என்றவர் “ரேணுகா... ஆர்யாவுக்கு ஃபோனை போட்டு சீக்கிரமா வீட்டுக்கு வர சொல்லு..” மகளுக்கு கட்டளையிட்டார்.




###########################




உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்கும் நேரம் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு வீடு திரும்பினாள் மீரா.. அவள் வருவதை கண்டதும் ஓடி வந்த புவனா “வா மீராம்மா... அப்பாவுக்கு இப்பதான் சாப்பாடு கொடுத்தேன்... சாப்டு தூங்குறாங்க.. நீ பார்த்துக்கம்மா நான் கிளம்புறேன்... நேரமாச்சு..” என்க, “அக்கா ஒரு நிமிஷம்...” என்றவள் தன்னுடைய ஹேன்ட் பேக்கிலிருந்து பணத்தை எடுத்து “வெச்சிக்கங்க கா..” என புவனாவிடம் நீட்ட சற்று தயங்கினாலும் அவள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு நன்றி கூறி விடைபெற்றாள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக குணசேகரினின் தாய் அன்னம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அவரது மகள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டனர். மீராவும் அப்போதுதான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த புதிது. படுத்த படுக்கையாக கிடக்கும் தந்தையையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டாள்.

அந்த சமயத்தில்தான் மீராவை சந்தித்த புவனா குணசேகரனை தான் கவனித்துக் கொள்வதாகவும் மாதாமதம் ஒரு சிறு தொகையை கொடுத்தால் போதும் என்றும் கூறிவிட உடனே சம்மதம் கூறிவிட்டாள். மீராவுக்கு அவளை நன்றாகவே தெரியும். அன்னம்மாள் இருக்கும்போது கூட புவனாவுக்கு அவ்வப்போது பணம் ஏதாவது கொடுத்து உதவி செய்வார். அவளது கணவன் ஒரு குடிகாரன். அடிதடி, திருட்டு என்று அடிக்கடி சிறைக்கு சென்று வருவான். இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு வீட்டு வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வருகிறாள்.

தந்தையின் அறைக்கு சென்று பார்த்தவள் மகள் வந்திருப்பதை உணர்ந்து குணசேகரன் கண்விழித்து பார்க்க “என்னப்பா தூங்கலையா..?” என்றாள் கேள்வியாக.

இல்லையென்பது போல் தலையாட்டியவர் “என்னமோம்மா மனசே சரியில்ல.. கண்ணை மூடினாலே ஏதோ தப்பா நடக்கப்போற மாதிரி ஏதேதோ நினைப்பெல்லாம் வருது... வரதனுக்கு கால் பண்ணினா அவன் ஃபோன் ஆப்ல இருக்கு.. அர்ஜுன் வேற எடுத்து பேசமாட்டேங்கிறான்..” என்றார்.

மீரா ஒன்றும் சொல்லவில்லை.. உதட்டை கடித்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தாள். பொதுவாக அர்ஜுனை பற்றியோ வரதராஜனை பற்றியோ குணசேகரன் எதை பேசினாலும் மீரா இப்படித்தான் உட்கார்ந்திருப்பாள்.


மீரா ரோஷக்காரி. என்றைக்கு நடுத்தெருவில் அத்தனை பேர் முன்னிலையில் அர்ஜுன் அவளை கேவலமாகப் பேசினானோ அன்றிலிருந்து அவன் கண்ணெதிரில் கூட சென்றதில்லை அவள். அவன் ஒரு தெருவில் நின்றால் அடுத்த தெருவால் சுற்றிக்கொண்டு தான் வீட்டுக்கு செல்வாள். சிவாவிடம் கூட பேசுவதை தவிர்த்து விட்டிருந்தாள்.

அதற்காக அர்ஜுனை மறந்துவிட்டாளா என்றால் அதுவும் இல்லை. அவள் மனதில் அவன் மட்டும் தான் இருக்கிறான். இன்னொருத்தியை காதலிப்பவன் என்று தெரிந்தும் கூட அவளால் அவனை மறக்க முடியவில்லை. அவளுடைய தந்தையே மகளது மனம் தெரியாமல் அவ்வப்போது அர்ஜுனை பற்றி ஏதையாவது பேசி வைப்பார். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்துவிட்டு பின்பு தனிமையில் அவன் நினைவில் அழுது கரைவாள் மீரா.

தன்னுடைய நினைவுகளில் மூழ்கியிருந்தவள் வாசற்கதவு தட்டப்படும் ஓசையில் சென்று கதவை திறக்க வெளியே கலைந்த தலை முடியும் சிவந்த கண்களுமாக நின்றிருந்தான் சிவா. அவனை அந்தக்கோலத்தில் பார்த்ததும் பதற்றத்துடன் “என்னாச்சு சிவாண்ணா..” என்றாள்.

“அப்பா.. அப்பாவ பார்க்கணும் மீராம்மா..” என்றான் அவன் அவளை விடவும் பதற்றமாக.

மேலப்பாளையத்தில் அமைந்துள்ள அந்த பெரிய வீட்டின் முன்னால் இருவர் வந்து நின்றனர். அவர்களை கண்டதும் பெரிய மனிதர் போல் தோன்றிய ஒருவர் வேகமாக அவர்களை நோக்கி வந்தவர் “என்னலே இங்க நின்னுட்டு இருக்கிய.. உள்ள போங்க... உங்களுக்காகத்தான் வேதா காத்துக்கிட்டு இருக்கு” என்றார்.


அவர்கள் இருவரும் வீட்டுக்குள் சென்று கையை கட்டிக் கொண்டு பவ்யமாக நின்றிருக்க அவர்கள் முன் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த பெண்மணி அவர்களை மெச்சுலதான பார்வையுடன் பார்த்திருந்தாள்.

நாற்பத்தைந்து நாற்பத்தாறு வயதிருக்கும் அந்த பெண்ணுக்கு. மாநிறத்தில் களையான முகமும் நெற்றியில் வட்ட வடிவில் பெரிதாக பொட்டும் பட்டுப்புடவை உடுத்தி தலைமுடியை கொண்டையிட்டு மரியாதையான ஒரு தோற்றத்தில் இருந்தாலும் அவளது கண்கள் இரண்டும் பார்ப்பவரை அரண்டு விடச்செய்யும் குரூரம் நிறைந்த விழிகள்.

“ஏலே குமரா..” என்று அவள் போட்ட சத்தத்தில் அடுத்த நொடியே அங்கு ஆஜராகியிருந்தான் அவளது தம்பி குமரேசன்.

“அக்கா...” என்ற குமரனின் குரலில் “இவனுங்க கேக்குறத குடுத்து அனுப்புலே..” என்றவள் அந்த இருவரையும் பார்த்து “என்ன வேணுமோ கேட்டு வாங்கிட்டு போங்க..” என்றாள்.

அவர்கள் சென்றதும் அவளை நோக்கி வந்த அந்த பெரிய மனிதர் “இன்னைக்குள்ள அவன் சோலி முடிஞ்சிடும் தாயி..” என்றார்.

அவரை பார்த்து சிரித்தவள் “நாளைக்கு எங்கண்ணன் ஜெயில்ல இருந்து வரும்போது அவன் காதுல விழுற முதல் சேதி அந்த வரதராஜன் சாவாத்தான் இருக்கனும்...” என்றாள் விழிகள் மின்ன.. அந்தப்பெண் வேறு யாருமில்லை மீராவை பத்து மாதம் சுமந்து பெற்ற அவளது தாய்.




#####################




ஆத்திரத்தில் விழிகள் சிவக்க உட்கார்ந்திருந்தான் ஆத்ரேயா..

“என்னப்பா ஆர்யா எதுவுமே பேசாம உட்கார்ந்திருக்க..” என்றாள் ரேணுகா மகனிடம்.

“என்ன பேச சொல்றீங்க... ஒன்னும் தெரியாத சின்ன பொண்ண அடிச்சி, ரேப் பண்ணி ஊரை விட்டே அனுப்பியிருக்கான்.. இப்ப அவனுக்கே அந்த பொண்ண கல்யாணமும் பண்ணி கொடுத்திட்டு என்கிட்ட வந்து பேசு பேசுனு சொன்னா என்ன பேச...” என்றான் கோபமாக..

பேரனை நோக்கிய சகுந்தலாதேவி “ஆர்யா... அவன் அவகிட்ட தப்பா நடந்துக்கிட்டது யாருக்கும் தெரியாதேப்பா.. சஞ்சயும் நித்துவும் சின்ன பசங்க.. பெரியவங்ககிட்ட சொல்ல பயந்துகிட்டு எல்லாத்தையும் மறைச்சிட்டாங்க.. அதுக்காக நம்ம இதை இப்படியே விட்டுட முடியுமா...” சொல்லிக்கொண்டே அங்கிருந்த ஜன்னல் பக்கம் சென்றவர் ஒரு நொடி தன் பேச்சை நிறுத்தியவிட்டு சட்டென்று மூடியிருந்த ஜன்னலை திறக்க அந்தப்பக்கமாக கனகவேல் நின்று கொண்டிருந்தான்.

“கனகவேல்....” என்று அந்த வீடே அதிரும் அளவு சத்தம் போட்டவர் “இங்கே என்ன பண்ணிட்டு இருக்கே..” என்றார் அவனை தீப்பார்வை பார்த்தபடி.

அங்கிருந்த பூச்சாடியை சுட்டிக்காட்டியவன் “அழுக்கா இருந்ததுக்கா.. அதான் துடைச்சிட்டு இருந்தேன்..” என்றான். கையில் ஒரு துடைக்கும் துணியும் வைத்திருந்தான். அதில் சற்று சமாதானமடைந்த சகுந்தலா “சரி.. சரி... உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு.. இதெல்லாம் பார்த்துக்கிறதுக்கு இங்க நிறைய பேர் இருக்காங்க.. போ முதல்ல இங்கேயிருந்து..” என்று கூறியவர் அவன் சென்று மறைந்ததும் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தன் பேச்சை தொடர்ந்தார்.

“இத்தனையும் செஞ்சவன் இன்னும் அந்த பொண்ண என்ன என்ன கொடுமையெல்லாம் பண்ண காத்திருக்கானோ தெரியாது.. நித்திலா நம்ம வீட்டு பொண்ணு.. உன் அரவிந்த மாமாவோட பொண்ணு... அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுனா இந்த பாட்டிய நீ உயிரோடவே பார்க்க முடியாது..” என்றார்..

“பாட்டி..” “அக்கா..” “அம்மா..” என்று அங்கிருந்தவர்கள் ஆளாளுக்கு பதறிப்போய் அழைக்க அவற்றை கண்டு கொள்ளாமல் பேரனிடம் வந்தவர் “இதோ பாரு ஆர்யா.. நித்துவ ஒரு தடவை நம்ம விட்டுக்கொடுத்தது போதும்.. இனிமேல் அவள யாருக்காகவும் எதுக்காகவும் நம்ம விட்டுட கூடாது.. அது அவ உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிடும்.. அதனால நித்திலாவ நீ கல்யாணம் பண்ணிக்கனும்..” என்க அங்கிருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் அவரை நோக்க நிர்மலா ஒருபடி மேலே போய் சகுந்தலாவின் காலிலேயே விழுந்து விட்டார்.

அவரது பாதத்தில் பணிந்திருந்த நிர்மலாவின் தலையை குரூரமாக பார்த்தவர் “ஐயோ!!! என்னம்மா இது கால்ல எல்லாம் விழுந்துகிட்டு... அக்கா உனக்காக இதைக்கூட பண்ண மாட்டேனா... எழுந்திரு முதல்ல..” என்று நிர்மலாவை தோளை பிடித்து எழுப்பி விட்டவர் பின்பு யோசனையுடன் பேரனை நோக்கி “என்னப்பா நித்திலாவ கட்டிக்குவ இல்ல...” என்றார் கேள்வியாக “இல்ல இன்னொருத்தனுக்கு மனைவியா இருக்கிறவள நம்ம ஏன் கல்யாணம் பண்ணிக்கனும்னு யோசிக்கிறயா...”

உடனே “அதெல்லாம் இல்ல பாட்டி...” என்றான் பேரன் “நீங்க சொல்லி நான் எதை செய்யாம விட்டுருக்கேன்.. ஆனா இந்த ஆதிய நினைச்சாத்தான்... அவன் அவ்வளவு ஈஸியா நித்திலாவ விட்டுடுவான்னு எனக்கு தோணல...” என்றான்.

“அதை பற்றி நீ கவல படாதப்பா... ஆதிகிட்ட இருந்து நித்தலாவ பிரிச்சி உனக்கு கட்டி வைக்க வேண்டியது என் பொறுப்பு...”

“என்னம்மா சொல்றீங்க... நீங்கதான் சித்தி வீட்டு பக்கமே போறதில்லையே... அப்புறம் எப்படி... என்ன பண்ணி அவங்க ரெண்டு பேரையும் பிரிக்க போறீங்க..” புரியாமல் கேட்டாள் ரேணுகா.

“நான் போறதில்ல தான்... ஆனா என் தங்கச்சி அங்கே தானே இருப்பா...” என்று பதிலளித்தவர் “அம்மாடி நிர்மலா உன் பேத்திக்காக நீ இதை பண்ண மாட்டியா..” நிர்மலாவை பார்த்து கேட்க “அக்கா நான் வாழுறதே அவளுக்காகத்தான்.. நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க.. என் பேத்தி வாழ்க்கைக்காக என் உயிரையும் கொடுப்பேன்...” என்று சொல்ல தன் அறையிலிருந்து இவர்களது சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டிருந்த ஷிவானி,

“ஐயோ கிழவி... உன் வாய்ல இருந்து இந்த வார்த்தைய வர வைக்கத்தான் என் பாட்டி அவ்ளோ சீன் போட்டுச்சு.. இது தெரியாம இப்படி சொந்த செலவுலயே சூனியம் வெச்சிக்கிறியே...” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

அதே சமயம் வேகமாக வீட்டுக்குள் நுழைந்த கனகவேல் “அக்கா.. சேது அண்ணா வந்துக்கிட்டு இருக்கார்...” என்று சொல்ல “சேதுவா!! இந்த நேரத்துல எதுக்கு வர்ரான்...” என்றவர் கனகவேலை நோக்கி “ம்ம்ம்.. சரி.. நீ போ..” அவனை விரட்டிவிட்டு மற்றவர்களிடம் “சேதுவுக்கு இதெல்லாம் எதுவும் தெரிய வேண்டாம்.. புரியுதா.. அப்புறம் நித்திலாவுக்கு நல்லது பண்றேன்னு சொல்லி இந்த விஷயத்த எல்லார்கிட்டயும் போட்டு உடைச்சிடுவான்..” என்றவர் அத்துடன் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேறு விடயங்களை பேச ஆரம்பித்தார்.

சேதுபதி நிர்மலாவை அங்கே கண்டதும் ஆச்சரியமாக “என்ன நிர்மலா.. உங்க வீட்டுல கல்யாணம் அத்தனை பேர் இருக்கும் போது இப்படி அக்கா வீட்டுல வந்து உட்கார்ந்திருக்க..” என்றார்.

“அதெல்லாம் ஒன்னுமில்லடா.. நான் கோபமா இருப்பேனோன்னு என்னை சமாதானம் படுத்த வந்திருக்கா.. நான் எதுக்கு கோபப்படனும்.. ஆதியும் என் பேரன் மாதிரி தான்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்..” என்றார் சகுந்தலா.

அதன்பிறகு வெகுநேரம் அங்கு பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பிய சேதுபதி தானும் நிர்மலா வீட்டிற்கு தான் செல்வதாக கூறி நிர்மலாவையும் கையோடு அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

செல்லும் வழியில் “என்னாச்சு நிர்மலா.. உன் முகமே சரியில்லையே.. என்ன விஷயம்..” என்றார் சாலையில் கவனத்தை பதித்தவராக.

“அதெல்லாம் ஒன்னுமில்லையே.. அக்கா கோபமா இருப்பாங்களோன்னு நினைச்சேன்.. உனக்கே தெரியும்தானே சின்ன வயசுல இருந்து நித்துவ ஆர்யாவுக்கு தான்னு சொல்லிட்டு இருந்தாங்க.. அதான் அவங்ககிட்ட பேசி சமாதானம் பண்ணலாம்னு வந்தேன்...” என்று சமாளிக்க,

“அவ்வளவு தானே.. வேற ஒன்னும் பிரச்சினை இல்லையே.. எதுவா இருந்தாலும் என்கிட்ட மறைக்காம சொல்லு நிர்மலா..” என்றார் சேதுபதி மீண்டும்.

“சே.. சே... வேற ஒன்னும் இல்லடா.. ஏதாவதுன்னா உன்கிட்ட சொல்லாம இருப்பேனா..”

ஒருவேளை அப்பொழுதே நிர்மலா சேதுபதியிடம் உண்மையை கூறியிருந்தால் பின்னால் ஏற்படப்போகும் நிறைய விபரீதங்களை தவிர்த்திருக்கலாமோ... விதி யாரை விட்டது... 😏





##########################





“இப்போ ஓகேவா..” நித்திலா..

“ம்ஹூம்... ரைட் சைட்ல இன்னும் பெய்ன் இருக்கு..” என்றான் ஆதி.

அவள் மீண்டும் வலது பக்கம் நகர்ந்து வந்து அவனது தோள் பட்டையை பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். இவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் சௌர்யா.

நித்திலாவுக்கு தன்னுடைய கூரான நகங்களால் அவனது தோளில் கோடு போட வேண்டும் போல வெறி வெறியாக வந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவளை இப்படியே கொடுமை படுத்திக் கொண்டிருக்கிறான்.

அவள் பாட்டுக்கு சாரதாவுக்கு உதவியாக சமையலறையில் காய்கறி வெட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த நேரம் அங்கு வந்து நின்றவன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு “அம்மா ரொம்ப தலைவலியா இருக்குமா.. ஒரு காபி..” என்றான்.

மகன் தலைவலி என்றதும் பதறிப்போன சாரதா “என்னப்பா.. என்னாச்சு..” என்க, “தெரியல மா.. காலைல எழுந்ததுல இருந்தே தலைவலியா இருக்கு.. சோல்டர், நெக் வேற பயங்கர பெயின்..” பின் கழுத்தை கைகளால் தடவி விட்ட படியே கூறினான்.

அதில் உருகிப்போன சாரதா “இருப்பா அம்மா இப்ப காபி போட்டு கொடுக்குறேன்..” என்றவள் கப்போர்டில் இருந்த ஒரு ஜெல்லை எடுத்து நித்திலாவின் கையில் திணித்து “நித்தும்மா ஆதிக்கு இதை போட்டு விடுடா.. பாவம் கழுத்து வலிக்குதாம்.. நான் காபி போட்டு கொண்டு வரேன்..” என்க வேறு வழியில்லாமல் அந்த ஜெல்லை அவனுக்கு போட்டு விட ஆரம்பித்தாள் நித்திலா.

இப்பொழுது அவளுக்கு கைகள் இரண்டும் விண் விண்ணென்று தெறிக்க ஆரம்பித்து விட்டது. அந்த அளவுக்கு அவளை இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று பாடாய் படுத்தி எடுத்துவிட்டான்.

அந்த நேரம் அங்கு வந்த மித்ரா அவர்கள் இருவரையும் பார்வையால் துளைத்தபடி நெருங்கியவள் ஆதியிடம் என்னவென்று கேட்க அவன் கழுத்து வலி என்றதும் நித்திலாவின் பக்கமாக வந்தவள் “உனக்கு ஒரு மசாஜ் கூட ஒழுங்கா பண்ணி விட தெரியாதா.. தள்ளு..” என்று நித்திலாவை ஓரம்கட்டிவிட்டு அவள் பிடித்துவிட ஆரம்பித்தாள்.

“நீ வந்து உட்காரு பேபி... அவ எதுக்கு இருக்கா... அவளே பண்ணட்டும்...” என்றான் ஆதி..

“கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா தேவ்..• ஆதியை பார்த்து கூறினாள் மித்ரா. நித்திலாவிடம் திரும்பி “இங்க என்ன பார்த்துட்டு இருக்க.. கிட்சன்ல போய் அத்தைக்கு ஹெல்ப் பண்ணு போ.. ஆதிய நான் பார்த்துக்கறேன்...” என்றாள்.

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கடுப்புடன் அவளை வெறித்துப் பார்த்தாள் நித்திலா.. சௌர்யாவும் மித்ராவை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். வந்ததும் வராததுமாக நித்திலாவை மட்டம்தட்டி பேசிய அவளது செயலில் கோபமுற்றவன் ஏதோ சொல்லப்போக,

“அடடே எல்லாரும் இங்கதான் இருக்கீங்களா..” என்ற சேதுபதியின் குரலில் வாய் வரை வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்.

“வாங்க தாத்தா..” என்றான் ஆதி அவரை கண்டதும்.

“என்ன மித்ரா.. ஆதி கழுத்த நெறிச்சிக்கிட்டு இருக்க... அப்படி என்ன கோபம் உனக்கு ஆதி மேல..” என்று கேட்டுக் கொண்டு வந்தார் சேதுபதி “என்னம்மா உங்க அக்கா உன் புருஷன் கழுத்த புடிச்சிக்கிட்டு நிக்குது.. நீ பார்த்துக்கிட்டு சும்மா நிற்கிற... தப்பும்மா நித்திலா இனிமேல் அவன் கழுத்த நீதான் புடிக்கனும்..” நித்திலாவை பார்த்து கிண்டலாக கூறினார்.

அதற்கு “ஆமா தாத்தா.. நான்தான் கழுத்த புடிச்சிருக்கனும் தப்பு பண்ணிட்டேன்..” ஆதியை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே பதிலளித்தாள் நித்திலா.

சற்று நேரம் இந்த ரீதியில் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஆதியை தனியாக அழைத்துச் சென்றவர் “ம்ம்ம்... எப்போ மும்பை கிளம்புற ஆதி??” என்றார் சேதுபதி கேள்வியாக.

“நான் நாளைக்கு கிளம்புறேன் தாத்தா.. மத்தவங்க எல்லாம் இன்னும் டூ வீக்ஸ்ல ரிசப்ஷன்க்கு வந்திடுவாங்க..”

வேண்டாம் என்றார் பெரியவர் “நீ போறப்போ உன் கூடவே உன் அம்மாவையும் நித்திலாவையும் கூட்டிட்டு போயிடு ஆதி..”

புருவங்கள் முடிச்சிட அவரை நோக்கியவன் “என்னாச்சு தாத்தா..” என்றான் கூர்மையான பார்வையுடன்.

“கேள்வி கேட்காம சொல்றதை செய்.. நித்திலாவ இங்கே தனியா விட்டுட்டு போக வேண்டாம்..”

மறுநாளே நித்திலாவையையும் சாரதாவையுடன் தன்னுடன் அழைத்துக் கொண்டு மும்பை சென்றுவிட்டான் ஆதி..

அதே நேரம் பிரபல மருத்துவமனை அறை ஒன்றில் உலகில் உள்ள ஒட்டுமொத்த வெறுப்பையும் தன் கண்களில் தேக்கி அவளை பார்த்தபடி மனமேயில்லாமல் மீராவின் கழுத்தில் தாலி கட்டிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.




தொடரும்............




‘ஆதியின் நிலா’ அத்தியாயம் 29 பதிந்துவிட்டேன்.... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்


 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மீரா அம்மா, அர்ஜுன் அப்பா இவங்க flashback எல்லாம் அர்ஜுன், மீரா story ல வரும்... இந்த கதையில அவங்களுக்கு intro மட்டும் கொடுத்திருக்கேன்...

அப்புறம் இனிமேல் ஆதியின் நிலா ஒவ்வொரு திங்கட்கிழமையும் பதிவிடப்படும் என்று கூறிக்கொண்டு 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 30:




தன் அருகில் ஏதேதோ சொல்லி முணகியபடி புரண்டு கொண்டிருந்தவனை தூக்கம் கலைந்து திரும்பி பார்த்தாள் நித்திலா. ஏதோ கனவு கண்டிருப்பான் போல அவன் உடம்பெல்லாம் வியர்த்து லேசாக தூக்கி தூக்கி போட்டது.

அவனை நெருங்கியவள் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள். திருமணமான இந்த மூன்று வாரங்களில் நான்கு, ஐந்து முறை இதுபோல நடந்து விட்டிருக்கிறது.

அவன் தலை, தோள் என்று மென்மையாக வருடி “ஒன்னுமில்ல அத்தான்.. தூங்குங்க..” அவள் மீண்டும் மீண்டும் கூற அந்த குரலிலும் அவளது அரவணைப்பிலும் அவன் உடலின் நடுக்கம் சற்று குறைந்து உறங்க ஆரம்பித்தான் ஆதி.

தன் கழுத்துப் பகுதியில் ஈரத்தை உணர்ந்தவள் மெல்ல அவன் முகத்தை விலக்கி பார்க்க மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அழுகிறானா.. அதுவும் தன்னை மறந்த நிலையில்.. தூக்கத்தில் இப்படி அழும் அளவுக்கு இவனுக்கு அப்படி என்னதான் நடந்திருக்கும்.

என்னதான் அவன்மேல் பயங்கர கோபமும் வெறுப்பும் அவளுக்கு இருந்தாலும் இப்படி அவன் கஷ்டப்படுவதை அவளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. இயல்பிலேயே உண்டான தாய்மை உணர்வு மேலோங்க அவனை அணைத்துக் கொண்டு வெகு நேரம் உறங்காமல் விழித்திருப்பாள் நித்திலா. இது எதையும் அறியாமல் அவள் மடியில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பான் ஆதி.


அன்று அவர்களது திருமண வரவேற்பு என்பதால் நித்திலாவை தயார் செய்து கொண்டிருந்தார்கள். அவளது ஒப்பனைகளுக்காக பிரபல மேக்கப் ஆர்டிஸ்டை வரவழைத்திருந்தான்.

இத்தாலி நாட்டில் வடிவமைக்கப்பட்ட பிங்க் மற்றும் தங்க நிறத்திலான விலையுயர்ந்த கவுன் தரையில் வழிய கையில் சிவப்பு, பிங்க் நிற பூக்களிலான சிறிய பொக்கே ஒன்றுடன் வெண்ணிற ரோல்ஸ் ராய்ஸில் நித்திலா வந்திறங்க அதே நேரம் கருநிற புகாட்டி சிரோனில் இருந்து இறங்கியவன் தன் கம்பீர நடையுடன் அவளை நெருங்கினான்.

அவனுக்கென்றே உருவாக்கப்பட்ட சாம்பல் வண்ண டாம் ஃபோர்ட் சூட்டில் விட்டால் அவளை கடித்து தின்றுவிடுபவன் போல பார்த்துக் கொண்டு வருபவனை கண்டு பழைய நித்திலாவாக இருந்தால் மயங்கியே விழுந்திருப்பாள்.

இந்த நித்திலா கல்லையும் மண்ணையும் பார்ப்பது அவனை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். இருந்தாலும் மனதின் ஓரத்தில் மத்தளம் கொட்டுவது போன்ற ஒரு உணர்வு தோன்றுவதை அவளால் தடுக்கவும் முடியவில்லை. தன்னை மீறி தோன்றிய அந்த உணர்வில் அவள் உடல் இறுகியது.

அவன் அருகில் வந்ததும் அவளை நோக்கி கை நீட்ட அவனது இடது கை மீது தனது வலது கையை வைத்து அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.

சிகப்பு கம்பளம் விரிக்கப் பட்டிருந்த பாதையில் இருவரும் கைகோர்த்து நடக்க மேலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பூக்களை தூவிக் கொண்டிருந்தனர்.

இவர்கள் உள்ளே சென்றதும் ஒரே நிறத்தில் உடை அணிந்த இளம்பெண்கள் நடனமாடி இருவரையும் வரவேற்றனர். அலங்கரிக்கப்பட்ட மேசை, மற்றும் இருக்கைகளில் விருந்தினர்கள் அமர்ந்திருக்க அவர்களை தாண்டி மணமக்கள் இருவரையும் அவர்களுக்கென அமைக்கப்பட்டிருந்த வெட்டிங் த்ரோனை நோக்கி நடனமாடிய படியே அழைத்துச் சென்றனர்.

அவனது தொழில்முறை நண்பர்கள், அரசியல்வாதிகள் , செல்வந்தர்கள் முதல் சினிமா நடிகர்கள் வரை அத்தனை பேரும் வருகை தந்திருந்தனர். விஸ்வநாதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அத்தனை பெருமையாக இருந்தது. திருமணத்தை மிகவும் சாதாரணமாக பெரும் குழப்பத்துக்கு மத்தியில் நடந்ததால் அதிருப்தியில் இருந்தவர்கள் இந்த வரவேற்பின் பிரம்மாண்டத்தில் அவர்கள் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச குறையும் மறைந்து காணாமல் போனது.

சந்திரலேகாவுக்கு மட்டும் எதையும் ஜீரணிக்க முடியாமல் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள். நிர்மலாதேவி அவர் மனதில் என்ன இருக்கிறது என்று கணிக்க முடியாத அளவுக்கு இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டிருந்தார்.

அதன்பிறகு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று அவர்களது திருமண வரவேற்பு களை கட்டியது. விக்ரம், அஜய், சஞ்சனா அனைவரும் நடனமாடி ஆரப்பரித்துக் கொண்டிருக்க சஞ்சயும், சௌர்யாவும் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சகுந்தலா தேவியின் குடும்பத்திலிருந்து ஆர்யா மட்டும் வந்திருந்தான்.


ஆதி அத்தனை நேரம் நித்திலாவின் கையை விடாமல் பற்றிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தவன் மித்ரா வந்து அழைக்கவும் அவளுடன் சென்றுவிட்டான்.

இருவரும் டேங்கோ ஆடினார்கள். விருந்தினர்கள் அத்தனை பேரும் அவர்களது நடனத்தை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நித்திலா கூட சற்று நேரம் வாயை பிளந்து பார்த்தபடி நின்றிருந்தாள். அவ்வளவு அற்புதமாக இருந்தது அவர்களது நடனம்.

ஆதியுடன் ஒட்டி, உரசி, வளைந்து, நெளிந்து ஆடிக் கொண்டிருந்த மித்ராவை இறுகிய முகத்துடன் பார்த்திருந்தான் சௌர்யா.

நித்திலாவின் அருகில் வந்த ஆர்யா அவளை நோக்கி கை நீட்ட முதலில் மறுக்க நினைத்தவள் பின்பு ஆதி, மித்ரா இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனுடன் இணைந்து கொண்டாள். அதைக்கண்டு இறுக்கத்துடன் அமர்ந்திருந்த நிர்மலாவின் முகம் மெல்ல மலர்ந்தது.

நித்திலா ஆர்யாவுடன் ஆடிக் கொண்டிருப்பதை கண்டதும் கண்கள் இடுங்க மித்ராவுடன் ஆடியபடியே அவர்களை நெருங்கியவன் சடுதியில் நித்திலாவின் இடுப்பை வளைத்து அவளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு மித்ராவை பிடித்து ஆர்யாவின் மேல் தள்ளிவிட இரண்டு பெண்களுமே அவனை முறைத்தனர்.

ஆதி அதனை கண்டு கொள்ளாமல் ஆடுவதில் முனைப்பாக இருக்க அவனிடமிருந்து விலகி மற்றவர்களின் பார்வைக்கு தீனி போட வேண்டாம் என நினைத்தவள் அவனுடன் ஆட்டத்தை தொடர அவனும் வீண் சேட்டைகள் எதுவும் செய்யாமல் நாகரீகமான முறையில் ஆடிக் கொண்டிருந்தது அவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

ஆளாளுக்கு ஒவ்வொரு ஜோடியுடன் ஆடிக் கொண்டிருக்க சௌர்யா மட்டும் உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்த படியே மித்ராவை தன் பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான்.

ஆர்யாவுக்கு மித்ராவுடன் ஆடுவது அவ்வளவு உவப்பாக இல்லாததால் பாதியில் அவளை விட்டுவிட்டு சென்றுவிட்டான். ஆதியை திரும்பி பார்த்தாள் மித்ரா. அவன் மித்ராவின் பக்கமே திரும்பாமல் நித்திலாவுடன் ஆடிக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் அவனை வெறித்துப் பார்த்தவள் திரும்பிச்செல்ல நினைக்க அவள் எதிரில் வழியை மறித்தாற் போல் வந்து நின்றான் சௌர்யா.. அவள் அவனை முறைக்க ஒரு நக்கல் சிரிப்பை உதிர்த்தவன் “நல்லா ஆடுறீங்க மிசஸ் ஆதி..” என்றுவிட்டு அவளை கடந்து சென்றான்.

அதில் ஒரு கணம் திடுக்கிட்டவள் அவன் பேசியதை யார் காதிலாவது விழுந்திருக்குமோ என்று சுற்றுமுற்றும் பார்க்க யாரும் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்து ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

நடன நிகழ்வுகள் முடிந்ததும் அடுத்து விருந்து ஆரம்பமானது பஃபே முறையில் அவரவருக்கு வேண்டிய உணவுகளை எடுத்துக் கொண்டு உண்ண ஆரம்பிக்க நித்திலாவும் தனக்கான உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க அவளது காலை யாரோ சுரண்டுவது போல் தோன்றவும் கீழே பார்த்தாள்.

அது ஒரு சிறுமி. நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும். றோஜா நிறத்தில் குண்டு கன்னங்களுடன் புசுபுசுவென்று இருந்தாள்.

இவள் பார்த்ததும் தன்னை தூக்க சொல்வது போல இவளை நோக்கி இரு கைகளையும் விரித்து காண்பித்தாள். அதில் சிரிப்பு வர அழகிய அந்த குழந்தையின் செயலில் ஈர்க்கப்பட்டவள் உணவு ப்ளேட்டை அப்படியே வைத்துவிட்டு அவளை தூக்கிக் கொண்டாள் நித்திலா.

“நீங்கதான் ஆதி அங்கிளோட ஆன்ட்டியா..” என்று கேட்டாள் நித்திலாவிடம்.

“ஆமா.. நீங்க யாரு?? உங்க பெயர் என்ன??” என்று பதிலுக்கு கேட்டாள் நித்திலா.

“நிலா..” என்றாள் குழந்தை “ஆதி அங்கிள் அப்டித்தான் கூப்பிடுவாங்க..”

“ஓஹ்...” என்றாள் நித்திலா..

அதே நேரம் அங்கு வந்த ஒரு இளம்பெண் “நித்திலா உன்னை எங்கெல்லாம் தேடுறது..” என்று அந்த சிறுமியை பார்த்து கூறியவள் “அம்மா கிட்ட வா...” என்றாள்.

பின்பு நித்திலாவிடம் திரும்பி “உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டா போல.. சாரிங்க...” என்க “இட்ஸ் ஓகே..” என்றவள் அந்த குழந்தையின் கன்னத்தை தொட்டு முத்தம் வைத்தாள் நித்திலா.



###########################




“உள்ளே வாம்மா...” அர்ஜுனின் அறைக்குள் வர தயங்கியபடி நின்றிருந்த மீராவை அழைத்தாள் சரஸ்வதி.

வரதராஜன் இறந்து அன்றோடு பதினாறு நாட்கள்.. அர்ஜுன் மீராவின் கழுத்தில் தாலி கட்டி ஒருசில நிமிடங்களிலே அவர் உயிர் மண்ணை விட்டு பிரிந்திருந்தது. இத்தனை நாட்களும் அவள் சரஸ்வதியின் அறையில்தான் தங்கியிருந்தாள்.

இதற்கு மேலும் அவளை தன் அறையிலேயே வைத்திருப்பது முறையில்லை என்று நினைத்த சரஸ்வதி மீராவின் உடமைகளை அர்ஜுனின் அறைக்கு மாற்றம் செய்துவிட்டு அவளையும் அவன் அறைக்கு அழைத்து வந்திருந்தார்.

மீராவுக்கு அவனது அறைக்குள் செல்லவே மிகவும் தயக்கமாக இருந்தது. அன்று தாலி கட்டியதோடு சரி,, இந்த பதினாறு நாட்களில் அவள் அவனை பார்த்ததே ஒரு சில தடவைகள் தான். அதிலும் அவன் ஒரு முறை கூட மீராவின் முகத்தை ஏறிட்டும் பார்த்ததில்லை.

“என்னம்மா அப்படியே பார்த்துக்கிட்டு நிற்கிற... உள்ள வா...” என்று சரஸ்வதி மீண்டும் அழைக்கவும் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள் மீரா. நுழையும்போதே அவள் உடலில் மெல்லிய சிலிர்ப்பு ஓடி மறைந்தது.

“இனிமேல் நீ அர்ஜுன் ரூம்லயே தங்கிக்கம்மா...” என்றவள் அதற்குமேல் அவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் வெளியே சென்றுவிட்டாள்.

சரஸ்வதிக்கு மகனது மனம் தெரியும்.. அவன் ஒன்றும் உடனே மீராவுடன் கூடிக்குலாவி ஆனந்தமாக வாழ்ந்து விடுவான் என்றெல்லாம் அவள் எதிர்பார்க்கவில்லை. தெரிந்தோ தெரியாமலோ இந்தப் பெண்ணுடன்தான் அவனது வாழ்க்கை என்றாகிவிட்டது. நடந்து முடிந்ததை நினைத்து இருக்கும் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாமல் தனக்கான வாழ்க்கையை ஆரம்பிக்கட்டும் என்று நினைத்தாள்.


தயக்கம், பயம், எதிர்பார்ப்பு, தவிப்பு என்று கலவையான உணர்வுகளுடன் அந்த அறையில் காத்திருந்தாள் மீரா. அர்ஜுன் இன்னும் வந்து சேரவில்லை. அவன் இரவுகளில் மிகவும் தாமதமாக வீடு திரும்புவதை இங்கு வந்த இத்தனை நாட்களில் அறிந்திருந்தாள்.

ஒருவழியாக மணி இரண்டை நெருங்கும் வேளையில் வந்து சேர்ந்தான் அர்ஜுன்.. ஆனால் அவனது மனநிலைதான் மிகவும் மோசமாக இருந்தது. குடித்திருந்தான்.

அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியவன் அதன்பிறகு தான் கட்டிலில் உட்கார்ந்திருந்த மீராவை கண்டான். போதையில் ஒரு நிமிடம் எதுவும் புரியாமல் அவளை பார்த்தவன் அது மீரா என்பதை உணர்ந்ததும் “சிவாஆஆஆஆ.....” என்ற அவனது குரலில் வீடே அதிர்ந்தது.

அர்ஜுனை வீட்டில் விட்டுவிட்டு அப்போதுதான் கிளம்பிக் கொண்டிருந்த சிவாவும் ப்ரசாத்தும் அவனது அலறலில் ஓடி வந்து பார்க்கவும் அறை வாசலில் விழிகள் சிவக்க ஆக்ரோஷமாக நின்றிருந்தான் அர்ஜுன்.

“என்னடா... எதுக்கு கத்தின...” என்க,

“இவள யாருடா என் ரூம் உள்ள விட்டது..” என்றான் கோபமாக.

அதன்பிறகு தான் கவனித்தான் சிவா.. மிரட்சியுடன் அந்த அறைக்குள் நின்றிருந்தாள் மீரா.. அவனுக்கும் யார் அவளை இவன் அறைக்குள் அனுப்பி வைத்தார்கள் என்று புரியவில்லை.

வெறுப்புடன் அவளை நோக்கியவன் “ஏய் வெளிய போடி..” என்றான் அர்ஜுன்.

அவள் பயத்தில் அசையாமல் நடுங்கிக் கொண்டு நிற்க, “சொல்றது காதுல விழல்ல... வெளிய போ முதல்ல..” என்றவன் அவளை நெருங்கி தரதரவென இழுத்துச்சென்று அறைக்கு வெளியே தள்ளி விட்டான்.

அதில் கோபமடைந்த சிவா,, “டேய் என்னடா பண்ற..” என்று அதட்ட மீரா கீழே விழப்போனவள் எதிரில் வந்த சரஸ்வதியின் மேல் மோதி நின்றாள்.

சரஸ்வதி அர்ஜுனை அமைதியாக பார்த்தார்... “நான் தான் அவள உன் ரூம்ல தங்கிக்க சொன்னேன்...” என்க “மா.. என்னம்மா இதெல்லாம்...” என் மனநிலை தெரிந்திருந்தும் இப்படி செய்திருக்கிறாய் என்பதுபோல் அவளை நோக்கினான்.

அவனது குற்றம் சாட்டும் பார்வையில் ஒரு நொடி தயங்கியவள் “அர்ஜுன் இதுக்கு மேலயும் இவ என்கூட தங்கிட்டு இருந்தா நாலுபேர் நாலு விதமா பேசுவாங்க.. உன் பாட்டி வேற அந்த பொண்ண பார்க்கிற நேரமெல்லாம் எதையாவது சொல்லி திட்டிக்கிட்டே இருக்காங்க..”

“அதுக்கு...” என்றான் கோபமாக.

“தயவு செஞ்சு எனக்காக அவள உன் ரூம்ல தங்க வெச்சிக்கப்பா..” கெஞ்சும் குரலில் சரஸ்வதி கேட்டுக்கொள்ள ஆற்றாமையோடு “அம்மா...” என்றான் அர்ஜுன்.

அவனால் சரஸ்வதியை எதிர்த்து பேசவும் முடியவில்லை.. அதேசமயம் மீராவை அவன் அறைக்குள் அனுமதிக்கவும் இஷ்டமில்லை.

“அவ ஒரு ஓரமா இருந்துட்டு போகட்டும்பா... உன்ன தொந்தரவு பண்ணமாட்டா..” என்றாள் சரஸ்வதி..

சிவாவும் தன் பங்குக்கு “ஆமா அர்ஜுன்.. எனக்கும் அம்மா சொல்றதுதான் சரியா படுது..” என்றான்.

தாயின் முகத்தை ஏறிட்டவன் கண்களில் மன்றாடலுடன் சரஸ்வதி அவனை பார்த்திருக்க கை முஷ்டியை சுவற்றில் ஓங்கி குத்தியவன் “எதையாவது பண்ணி தொலைங்க..” என்றுவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டான்.

கலங்கிய விழிகளுடன் நின்றிருந்தவளை பார்த்த சரஸ்வதி “எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்மா... போக போக எல்லாம் சரியாகிடும்...” என்றார் “உள்ள போம்மா...”

சிவா ப்ரசாத்தை அழைத்துக் கொண்டு கிளம்ப அமைதியாக வந்தவனை பார்த்து “என்ன ப்ரசாத் எதுவும் பேசாம வர்ர...” என்க,

“நான் என்ன பேசனும்னு எதிர்பார்க்கிற.. அவன் இப்படி கஷ்ட படுறத என்னால சகிச்சுக்கவே முடியல..” என்றான்.

“எல்லாம் மாறிடும்டா ப்ரசாத்... கண்டிப்பா ஒருநாள் அர்ஜுன் மீராவ ஏத்துக்குவான்.. அவங்க ரெண்டு பேரும் சந்தோசமா வாழத்தான் போறாங்க..” உறுதியுடன் கூறினான் சிவா.

“ம்ம்ம்... நடந்தா பார்க்கலாம்...” என்றான் ப்ரசாத் அது ஒருபோதும் நடக்காது என்ற உறுதியுடன்.

பயத்தில் மெல்ல மெல்ல அடியெடுத்து உள்ளே வந்தவளை விழிகளில் தீப்பொறி பறக்க ஏறிட்டவன் “என் அம்மா சொன்னதுக்காகத்தான் உன்ன என் ரூம்க்குள்ள வர விட்டிருக்கேன்.. நான் காலையில எழுந்துக்கிறதுக்கு முன்னாடியே நீ வெளிய போயிருக்கனும்.. தப்பித்தவறி என் கண் முன்னாடி வந்து நின்ன நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்...” என்றுவிட்டு போர்வையை எடுத்து தரையில் வீசினான்.

அவன் கட்டிலில் படுத்துக்கொள்ள அவள் தரையில் உறங்கினாள்.. போர்வையை தூக்கி போட்டவன் கூடவே ஒரு தலையணையும் போட்டிருக்கலாம்..

தன் கைகளையே தலையணையாக்கி மௌனமாக கண்ணீர் வடித்துக்கொண்டு படுத்திருந்தாள் மீரா.


அர்ஜுன் அவளை உடனே எல்லாம் ஏற்றுக் கொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லைதான்.. அதற்காக இப்படி அவளை அவமதித்து வெளியே தள்ளி விட்டதையும் எடுத்தெறிந்து பேசியதையும் மீராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..


அவளுக்கு தந்தையின் நியாபகம் வந்தது. அவளது திருமண நாள் அதாவது வரதராஜன் இறந்த தினத்திலிருந்து பேச்சுமூச்சில்லாமல் மருத்துவமனையில் கிடக்கிறார். தன்னுடைய அன்பு மகள் கணவன் வீட்டில் தரையில் சுருண்டு படுத்திருக்கிறாள் என்பதை அறிந்தால் அந்த மனிதர் எவ்வளவு வருத்தப்படுவார்.

எதிர்காலம் அவளை அச்சுறுத்தியது.

அர்ஜுனின் நிலை அவளைவிட பரிதாபகரமாக இருந்தது. இத்தனைநாள் தந்தையின் பிரிவால் வாடியிருந்தவன் அன்று நித்திலாவின் ரிசப்ஷன் என்பதை அறிந்து பயங்கர மன உளைச்சலில் சுற்றிக் கொண்டிருந்தான். விக்ரமின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆதி, நித்திலா இருவரும் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் காட்சி லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட அதை பார்த்து அவனுக்கு பைத்தியமே பிடித்துவிட்டது.

அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே குடித்தான். எவ்வளவு குடித்தும் அவன் மனம் ஆறவில்லை. இதயத்தை கீறி பிளந்து பிய்த்து எடுப்பதைப்போல் வலித்தது.

அவனால் தூங்க முடியவில்லை.. கண்ணை மூடினால் நித்திலாவின் முகம்தான் தெரிந்தது.

எழுந்துவிட்டான்..

சத்தமாக கதறி அழ வேண்டும் போல இருந்தது. ஓரக்கண்ணில் மீரா தூங்கிக் கொண்டிருப்பது பட தனக்கு அழ கூட சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது போல உணர்ந்தான். அந்த அறையில் இருப்பதே மூச்சு முட்டுவது போல் தோன்ற உடனே எழுந்தவன் மொட்டை மாடிக்குச் சென்றுவிட்டான்.

வானில் முழு நிலவு பவனி வந்து கொண்டிருந்தது. அதை வெறித்து பார்த்தான். அவனுடைய நிலா இப்போது இன்னொருவனுக்கு சொந்தமாகி விட்டாள் என்ற நினைவில் அவன் விழிகளிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. கூடவே தந்தையின் நினைவும் சேர்ந்து வந்தது. தன் இறுதி ஆசை என்ற பெயரில் அவனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் பறித்துவிட்டு சென்றுவிட்டார்.

“அப்பா.... இதுக்கு நீ உன் கையாலயே என்னை கொன்னுட்டு போயிருக்கலாம்பா...” கேட்க முடியாத தூரத்துக்கு சென்றுவிட்டவரிடம் கூறி அழுதான்.





##########################





விடைபெறுமுகமாக ஒரு சிலர் நித்திலாவிடம் வந்து பேசிக்கொண்டிருக்க கண்களால் ஆதியை துலாவியவள் அவன் சற்று தூரத்தில் குட்டி நித்திலாவை தூக்கி வைத்துக் கொண்டு அவளிடம் எதையோ சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான்.

இவள் பார்ப்பதை உணர்ந்து இவள் புறம் பார்வையை திருப்பினான்.

இருவரின் பார்வைகளும் சந்தித்துக் கொண்டன. அவன் பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்றில் உடல் சிலிர்க்க வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் நித்திலா.

அதன்பிறகு விருந்தினர்கள் ஒவ்வொருவராக விடை பெற்று கிளம்பிவிட குடும்பத்தினர் மட்டுமே எஞ்சியிருந்தனர். சாரதாவை விஸ்வநாதன் காரில் அனுப்பிவிட்டு நித்திலாவை தன்னுடைய காரில் அழைத்துச் சென்றான் ஆதி.

வந்த வழியில் செல்லாமல் அவன் கார் வேறு புறம் திரும்பவும் புருவம் சுருக்கி அவனை பார்த்தாள் நித்திலா.

“இந்த பக்கம் ஒரு சின்ன வொர்க் இருக்கு.. முடிச்சிட்டு போயிடலாம்..” என்றான் சாலையில் கவனத்தை பதித்தவனாக.

‘இந்த நேரத்தில் என்ன வொர்க்’ என்று நினைத்தாலும் அவனிடம் எதையும் கேட்க மனமில்லாமல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

கடற்கரை சாலையில் சென்று காரை நிறுத்தி இறங்கியவன் அவள் புறம் கதவை திறந்து இறங்க சொல்ல “இல்ல... நான் கார்லயே இருக்கேன்.. நீங்க போயிட்டு வாங்க...” என்றாள்.

அந்த இடத்தை சுற்றி பார்வையை ஓடவிட்டவன் “இங்க நீ தனியா இருக்க வேண்டாம்... கம் வித் மீ...” என்றபடி அவளது கையை பிடித்து காரிலிருந்து இறக்கி விட்டவன் தன்னுடன் அழைத்து சென்றான்.

அவன் சொன்ன தொனியில் அவளுக்குமே இங்கு தனியாக இருப்பது தவறோ என்று தோன்றிவிட வேறு வழியில்லாமல் அவனுடன் சென்றாள். நடந்து செல்ல அவளது உடை தடையாக இருக்க தரையில் வழிந்த அந்த கவுனை இரு கரங்களால் லேசாக தூக்கி பிடித்தபடி சென்று கொண்டிருந்தாள்.

உள்ளே சிறிது தூரம் சென்றதும் மெரின் போன்ற இடத்தில் லக்சுரி யாக்ட் ஒன்று நின்றிருந்தது. இவர்கள் படகை நெருங்கியதும் அதிலிருந்து இறங்கி வந்தான் ஜெகன்.

ஆதியை கண்டதும் “தேவ் பாய்..” என்றான்.

“எல்லாம் ஓகே தான...” என்று ஆதி அவனிடம் கேட்க “பக்கா..” என்றவன் நித்திலாவை பார்த்து ஒரு மாதிரி சிரித்து வைத்தான் ஜெகன்.

ஆதி நித்திலாவின் கையை பற்றிக் கொண்டு படகில் ஏற்றிவிட்டவன் “உள்ள போய் வெய்ட் பண்ணு.... நான் வந்திர்ரேன்...” என்க சரியென்று தலையாட்டியவள் அவனை தவறாக நினைக்கவில்லை.

அவன் வந்த வேலையை முடித்துவிட்டு வரட்டும் என நினைத்துக் கொண்டு அந்த உல்லாச படகை சுற்றிப்பார்த்தாள்.

பின்பு டெக் பகுதியில் வந்து நின்றவள் குளிர் காற்று உடலை தழுவிச்செல்ல கடலில் தெரிந்த நிலவின் பிம்பத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவ்வளவு ரம்மியமாக இருந்தது. நிலவை பார்த்ததும் அவளுக்கு அர்ஜுன் நியாபகம் வந்தது. அடிக்கடி அவளை நிலவோடு ஒப்பிட்டு எதையாவது பேசிக் கொண்டிருப்பான்.. அவள் மனம் கனிந்தது. அவனுக்குத்தான் அவள் மீது எவ்வளவு பாசம்.

தன் திருமணத்தை கூட அவனிடம் சொல்லவில்லை என்பது நினைவுக்கு வர நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக அவனை அழைத்துப் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

எவ்வளவு நேரம் நின்றிருந்தாளோ யோசனையில் இருந்தவள் திடீரென படகு நகர ஆரம்பிக்கவும் புரியாமல் தடுமாறி திரும்பி பார்க்க அழுத்தமான நடையுடன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் ஆதி.

அவன் விழிகளில் தெரிந்த வேட்கையில் அவளது உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்து நடுங்கியது.. இதே பார்வையைத்தான் முதலிலும் பார்த்து வைத்தான்.


அவள் அதிர்வுடன் நின்றிருந்த கோலத்தை ரசித்துக் கொண்டே அவளை நெருங்கியவன் இடது கையால் அவள் பின்னால் இருந்த டாஃப்ரைலை பிடித்துக் கொண்டு அவள் மீது பட்டும் படாமல் நின்றபடி ஒற்றை புருவம் உயர்த்தி அவள் முகம் பார்த்தான்.

“ஃபைனலி யு ஆர் ஹியர்...” வலது புறங்கையால் அவள் கன்னத்தை வருடிக் கொண்டே அவன் கூற கொதித்துப் போனாள் நித்திலா.

அவனது கையை தட்டி விட்டவள் “இதுக்குத்தான் என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்களா..” கோபமாக கேட்டாள்.

“ஹாஹாஹா....” அவன் சிரித்தான்.

“உங்களுக்கு வெட்கமாயில்ல... என்கிட்ட இந்த மாதிரி நடந்துக்க..”

“இல்லையே...” என்றான் அவன் “என் பொண்டாட்டி கிட்ட இந்த மாதிரி நடந்துக்க நான் எதுக்கு பேபி வெட்கப்படனும்..”

அவனிடமிருந்து விலகி ஓட முயன்றவளை அடக்கி பிடித்தபடி
அவள் உதடுகளை இரு விரல்களால் பற்றி இழுத்தவன் “இப்போலாம் இந்த வாய் ரொம்ப பேசுதில்ல... பனிஷ் பண்ணனுமே...” கூறிக்கொண்டே அவள் முகமெங்கும் முத்தமிட ஆரம்பித்தான்.

தன் முகத்துக்கும் அவனது வாய்க்கும் இடையில் தடுப்பாக தன் உள்ளங்கையை வைத்தவள் வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டு “ஏன்... இந்த வீரத்தை உங்க வீட்டுல வெச்சி காட்டியிருக்கலாமே..” திமிறினாள்.

“உன்கிட்ட எங்க,, எப்போ,, எப்படி என் வீரத்தை காட்டனும்னு எனக்கு நல்லாவே தெரியும்...” என்றவன் அவள் திமிறத் திமிற தூக்கிக் கொண்டு அங்கிருந்த கேபினுக்குள் நுழைந்தான்.

கட்டிலில் அவளை கிடத்தியவன் அவள் மீது பரவிப் படர்ந்து ஆட்கொள்ள துவங்க பலவாறு போராடி பார்த்தவள் உடல் பலத்தால் அவனை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து “அத்தான் ப்ளீஸ்...” கெஞ்ச ஆரம்பித்தாள்.

அவன் அதற்கெல்லாம் அசைந்து கொடுப்பவனா....

“ஐ நீட் யூ வெரி பேட்லி நித்திலா...” அவள் காதோரமாக தாபத்துடன் ஒலித்தது அவன் குரல்.

அவளது உடலும் அவன் கைகளுக்கு தாராளமாக ஒத்துழைப்பு வழங்கியதில் அவனிடமிருந்தும் தன்னிடமிருந்துமே தப்பிக்கும் வழி தெரியாமல் அவள் திணற அவளிடம் நெகிழ்வை உணர்ந்த அவன் வேகம் அதிகரித்தது.

துடிக்கும் அவளது அதரங்களை தன் இதழ்களால் சிறை செய்தவன் ஆவேசமாக முத்தமிட்டுக் கொண்டே அவன் அணிந்திருந்த சட்டையின் பட்டன்களை ஒவ்வொன்றாக கழற்ற அவனது பிடி தளர்ந்திருந்த அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன் உடலின் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி அவனை உதறித்தள்ளியவள் எதிலிருந்தோ தப்பிப்பது போல் வேகமாக ஓடினாள்....

என்ன ஓடி என்ன பயன்??? முன்னால் கடல் பின்னால் ஆதி.. எங்கு சென்று தப்பிப்பது??....

படகின் முனைவரை வந்துவிட்டவள் இவனிடம் சிக்கியிருப்பது கடலுக்குள் என்பது அப்போதுதான் உறைக்க ஓய்ந்து போய் திரும்பி பார்த்தாள்.

நக்கல் சிரிப்புடன் கேபின் வாசலில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான் ஆதி.

விழிகளால் கெஞ்சியபடி பரிதாபகரமான தோற்றத்துடன் தன் முன்னால் நின்று கொண்டிருந்தவளை பார்த்து அவனுக்கு பாவம் வருவதற்கு பதிலாக ஆசைதான் வந்ததோ?.

அசராமல் பார்த்தவன் இதற்குமேல் அவளால் எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்புடன் எஞ்சியிருந்த மற்ற இரண்டு பட்டன்களையும் கழற்றிக்கொண்டே அவன் முன்னேற அவனிடம் மீண்டும் ஒருமுறை தோற்று விடப்போகிறோம் என்பதை உணர்ந்து விழிகளில் நீர் திரையிட அவனை பார்த்தவள் அடுத்த நொடியே கடலுக்குள் குதித்திருந்தாள்.




தொடரும்......



‘ஆதியின் நிலா’ அத்தியாயம் 30 போட்டாச்சு மக்களே... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்....


 
Status
Not open for further replies.
Top