All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கதைத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
11528


பதிவு 4


கடலின் ஆதியும் அந்தமும் தேடும் தேடலில் அந்த உல்லாசக் கப்பலின் ரேடாரின் முன்னால் அமர்ந்தவாறு கடலையே வெறித்துக்கொண்டிருந்தாள் தியா. நீல வானும் நிறை நீர் கடலும் ஏதோ ஒரு புள்ளியில் சங்கமிப்பது போலத் தோன்றியது.

தோன்றுவதெல்லாம் உண்மையா என்ன? முதல் எது முடிவெது என வானத்தின் வரையறை கண்டவர் உண்டோ? கரைகள் இது தான் என நீருக்கு நிர்ணயிக்க முடியுமா என்ன? அது போகும் வழியெல்லாம் அதன் பாதைகள் தான்.

வாழ்க்கையும் அப்படித்தானே. நாம் போகும் பாதை எந்தளவு தூரம் என்பதும் நமக்குத் தெரியாது. அதன் முற்றுப்புள்ளி எங்கிருக்கிறது என்றும் புரியாது.

பன்னிரண்டு வயதில் அவளது தந்தை அவளுக்குப் பொன்னியின் செல்வன் நாவலை அறிமுகப் படுத்திய பொழுது அவள் நினைக்கவில்லை அந்த ஒற்றை புத்தகம் தன் வாழ்க்கையை மாற்றும் என. அதில் மிகவும் பிடித்த கதாபாத்திரம் எது என்றால் பளிச்சென சமுத்திர குமாரி அல்லது பூங்குழலி என்பாள் அந்த வயதிலே. சமுத்திரகுமாரி கடலில் பயணிப்பதைப் பல முறை படித்த பின் இந்த குமரிக்கும் சமுத்திரத்தை மிகவும் பிடித்துப் போய் விட்டது. கரையில்லா கடல் மீது கொண்ட காதலால் கன்னியவள் கப்பல் பற்றிய படிப்பைப் படித்துப் பணிக்கும் அமர்ந்து விட்டாள்.

இவளது குடும்பம் தென்னிந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களின் வரிசையில் உள்ளது தான். எனினும் அவள் ஆசைக்காக அவள் குடும்பம் அவள் விருப்பப்படி விட்டு விட்டது. மகள் உலகத்தை கற்றுக் கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில் மகளின் ஆசைக்குத் தடை விதிக்கவில்லை சிவப்ரகாஷ். தியாவும் தன் திறமையாலும் உழைப்பாலுமே முன்னேறினாள். என்ன ஒன்று அவளிடம் கொஞ்சமாய் இல்லாது அதிகமாகவே குறும்பு குணம் இருக்கும்.

சிலவேளைகளில் அது ரசிக்கும்படியாக இருக்கும் சிலவேளைகளில் அது சிறு சிக்கலில் கொண்டு சேர்க்கும். ஆனால் அவளுடைய திருவிளையாடல் கொண்டு சேர்க்காத பகுதியென்றால், அது ஆரியனிடம் மட்டும்தான்.

அவனை நினைத்ததும், அவள் உள்ளத்தில் இனம்புரியாத ஒரு உணர்வு வந்து அமர்ந்து கொண்டது. அவன் வாழ்க்கையை எதார்த்தமாகப் பார்ப்பான். இவளோ அதை விளையாட்டாகப் பார்ப்பாள். அவன் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதை எளிதில் கையாள்வான். ஆனால் இவளோ சற்றுத் திணறுவாள். அவன் அழுத்தம் நிறைந்தவன் என்றால், இவள் வெளிப்படையாகப் பேசுவாள்… இப்படி இருவரின் குணங்களும் எதிரும் புதிரும்தான்.

அதுவும் முன்தினம், ஒரு காப்பி கொட்டியதற்கு, அவன் நடந்து கொண்டது… இப்போது நினைத்தாலும் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது.

“அடேய் அப்டேட் ஆகாத அவதார் குட்டி… ஷாப்ட்ல மாட்டுன ஷார்ப் கணக்கா உன்ன மாத்தல நான் தியா இல்ல டா.. சுடுதண்ணி சுட வைக்கும் போது பொறந்தவனே… சுடுதண்ணி பாய்லர்... சுடுதண்ணி பாய்லர்..” என மனதிற்குள் ஆர்யனை தாளித்துக் கொண்டிருக்கும் பொழுது,

“மிஸ் தியா சிவபிரகாஷ்… வட் த ஹெல் ஆர் யு டூயிங் ஹியர்… உங்களை ரேடாரின் அருகே நிற்கச் சொன்னேன்…” என்று அவன் முடிக்கவில்லை, கப்பல் ஒரு முறை மேலெழுந்து கீழ் தாழ, திடீர் என்று கேட்ட ஆர்யனின் குரலில் பதறி எழுந்தவள், எழுந்த வேகத்தில்.. கப்பலின் அசைவில்.. சமநிலை தவறிப் போனவள் தன்னை சமப்படுத்துவதற்கு முன்னமே, அங்கிருந்த இருக்கை வேறு அவளுடைய கால்களைத் தடுக்கி விட தொப்பென்று தரையில் விழுந்தாள்.

அவமானத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தால், அவனோ, கால்களைச் சற்று அகட்டி, மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டி, அந்தக் கப்பலின் அசைவுக்குச் சற்றும் சமநிலை தவறாது இவளைக் கூர்மையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்யன்.

ஒரு கணம் அவன் மீது தீராத ஆத்திரம் வந்தது தியாவிற்கு. அவள்தான் விழுகிறாள். கொஞ்சம் உடம்பை வளைத்துப் பற்றி விழாது தடுத்தால், இவன் குடியா முழுகி விடும்? எரிச்சலுடன் எண்ணியவள், எழுந்து நிற்க.. அவனோ எழுந்தவளைக் கீழ்க்கண்ணால் பார்த்து,

“உங்களைத்தான் மிஸ் தியா… நான் என்ன சொன்னேன், நீங்க என்ன செய்திட்டிருக்கீங்க…” என்றான் கடுமையாக.

உடனே தன்னைச் சமாளித்தவள், “சாரி கேப்டன், திசை காட்டியில் நம்முடைய கப்பலின் திசை, பாய்ன்ட் ஃபைவ் டிகிரி திரும்பியது…. அதைச் சரிப்படுத்திக்கொண்டிருந்தேன்…” என்று அவள் கூற அவனுடைய புருவம் சற்றுச் சுருங்கி அவளை ஏறிட்டு,

“ஆர் யு ஷூர்… மிஸ் தியா… ஆட்டோ ஷிப்பில் இருக்கும் போது, எப்படி திசை மாறியிருக்கும்…” என்றவன் தன் கைக்கடிகாரத்தைத் தூக்கிப் பார்த்தான். அவனுடைய கைக்கடிகாரத்திலிருந்த காம்பசில் பாய்ன்ட் ஒன் டிகிரி மட்டுமே திசைதிரும்பியிருந்தது. யோசனையுடன் திரையைப் பார்த்தான்.

அவன் கைக்கடிகாரம் பொய் சொல்லவில்லை.

“குட் ஜாப்… தியா…” என்றவன், “ரேடாரை செக் பண்ணீங்களா மிஸ் தியா…” என்றவாறு இடது கரத்தை கன்ட்ரோல் பானலில் வைத்தவாறு மறு கரத்தால், அங்குள்ள பொத்தான்களில் எதை எதையோ தட்டிக் கப்பலின் நிலையைச் சரிபார்த்தான்.

எல்லாம் திருப்தியானதாகவே இருக்க,

“எல்லாமே நார்மலாகத்தான் இருக்கு….” என்கிற நிம்மதியுடன் திரும்ப அப்போதுதான் அவன் கவனித்தான்.ரேடாரின் நிலையை அறியும் அவசரத்தில், தியாவைக் கவனிக்காது, அவளைத் தன் கைவளைவில் வைத்தவாறு கப்பலின் நிலையைச் சரிபார்த்துக்கொண்டிருப்பதை. அவளும் ஒரு வித அவஸ்தையுடன் அவனைத்தான் நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் விழிகளுடன் தன் விழிகளைக் கலந்தவளுக்குச் சற்று நேரம் எடுத்தது சுய உணர்வுக்கு வருவதற்கு.

முதன் முறையாக ஒரு பெண்..அதுவும் அழகான பெண் அவனுடைய கையணைப்பில். ஒரு போதும் தோன்றாத ஒரு வித அவஸ்தையில் தடுமாறியவனின் விழிகள் ஒரு வித சங்கடத்துடன் அவள் விழிகளுடன் கலக்க, அவளுடைய காந்த விழிகளோ, அவ்விரும்பு விழிகளைத் தன்னை நோக்கிக் கவர்ந்து இழுத்தன.

ஆரியன். அவனுக்குப் பூர்வீகம் இலங்கை என்பது மட்டும் தெரியும். போர்க்கால சூழலில் அவனுடைய தாயும் தந்தையும் மரணமடைந்த போது காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக சென்ற வெள்ளை இனப்பெண்மணியின் பரிதாபத்தை பெற்றுக்கொண்டதால், அவனைத் தத்தெடுத்துக் கனடாக்கு அழைத்துவரப்பட்டான். அவர்களுக்கும் குழந்தை இல்லாததால் இவன் வரவை மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொண்டனர். அவனுக்கு பன்னிரண்டு வயதில் வளர்ப்பு தாயும் இறந்துவிட, அடுத்தவருடம் வளர்ப்புத்தந்தை இன்னொரு திருமணம் முடித்தால், அந்த வீட்டில் நேரத்திற்குச் சாப்பாடு, துணி மணி கிடைத்தாலும், உன்மையான பாசம் அவனுக்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.


பதினெட்டு வயதில் அவன் வீட்டை விட்டு வெளியேறவேண்டிய கட்டாயத்தில், அவனுடைய நண்பன் பிரதீபன், இவனை தன்னோடு அழைத்துச்சென்றான். பிரதீபன் அநேகாத்மனின் மனைவி சர்வமகியின் தம்பி. பதினோராம் வகுப்பு படிக்கும்போது நண்பனானவன். அவன் நண்பனாகக் கிடைத்தது, ஆரியன் செய்த புண்ணியம் என்றே சொல்லவேண்டும். அவனையும் அந்தக் குடும்பம் தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்ள, அநேகாத்மனின் வழிகாட்டலில்.. உதவியுடன் எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் முடித்த கையோடு மரின் என்ஜினியரிங்கில் ஆர்வம் வர, அதை எடுத்துப் படித்து அதில் முதுநிலைக் கல்வியை முடித்த கையோடு. அநேகாத்மன் தன்னுடைய அதி நவீன யாஞ்ச் என்னும் சுற்றுலாக் கப்பலை அவன் வசம் ஒப்படைத்து விட்டான்.

அவனுக்கு பயணிகள் கப்பலை ஓட்டிப் பழக்கம் என்பதால், அநேகாத்மனின் வேண்டுகோளுக்கேற்ப, அவன் நண்பர்களை தன் பாதுகாப்பில் அழைத்துவருவதாகப் புறப்பட்டும் விட்டான்.

ஆனால் அவனுடைய போதாத காலம், அநேகாத்மனின் குடும்ப நண்பரான சிவபிரகாஷின் மகளை அவன் தலையில் கட்டிவிட்டான். அதுவும் அவளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்படி வேண்டுதலோடு.

ஆரியனுடைய ரோல்மாடலே அநேகாத்மன்தான். அவன் சொல்லி எப்படி மறுப்பான். சரியென்று தலையாட்டிவிட்டான். ஆனால் அதைக் கடைப்பிடிக்கத்தான் பெரிதும் சிரமப்பட வேண்டியிருந்தது. அதுவும் அவள் அருகே வரும் போது, பெரிதும் தடுமாறித்தான் போகிறான்.

அவனுக்குப் பெண்களுடன் அத்தனை பழக்கமில்லை. அவன் பழக விரும்பியதும் இல்லை. ஆனால் இந்த தியா… ஏதோ ஒரு விதத்தில், தன் நடத்தையில் அவனுக்கு எரிச்சல் மூட்டினாலும், அதையும் தாண்டி உள்ளத்தின் ஒரு ஓரத்தில் சற்றுத் தடுமாற்றம் ஏற்படத்தான் செய்தது. எதையும் எளிதில் அடக்கி ஆளக்கூடியவனால், ஏனோ அவளை மட்டும் எதிர்கொள்ள முடியாது தவித்தான். அவளுடைய குறும்புச் சேட்டைகளும், துறுதுறுப்பும், சட்டென்று வரும் பிள்ளைக் கோபமும் மெல்ல மெல்ல அவனுடைய கடின உள்ளத்தைச் சற்று ஆட்டித்தான் பார்த்தது.

இதோ, இப்போது கூட அவனையும் அறியாது அவன் கை வளைவிற்குள் சிக்கிக் கொண்டவளிடமிருந்து தன்னை எப்படி விடுவிப்பது என்று தெரியாது அவன் திண்டாடிக் கொண்டிருக்க, அந்தப் பாவையோ அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

அதை உணர்ந்தவனாக, அவசரமாக அவளை விட்டு விலகியவன், தன் தவற்றை வெளிக்காட்டப் பிடிக்காதவனாக,

“ஆட்டோ செய்லிங்கிலிருந்து மேனுவலுக்கு மாற்றப்பட்டிருக்கிறது… எப்படி மாறியது என்று தெரியவில்லை… என்ஜின் ரூம் போய்… செக் பண்ணு தியா…” என்று அவளை அனுப்பி விட, அவனிடமிருந்து விடுபட்டால் போதும் என்கிற பரிதவிப்புடன் அவசரமாக கன்ட்ரோல் ரூமை விட்டு வெளியே ஓடினாள் தியா.

ஏனோ அவளுக்கு இதயம் படு வேகமாகத் துடித்தது. அவசரமாக ஆர்யன் சொன்னதுபோல, கீழ்த் தளத்திற்குச் சென்றவளுக்குப் புலன்கள் ஒரு கட்டுக்குள் இருக்கவில்லை. ஏதோ யோசனையுடன் படிகளில் இறங்கியவள், அப்போதுதான் மேலே வந்துகொண்டிருந்த ஒரு வேலையாளின் மீது பலமாக மோதிவிட, சுய நினைவு வந்தவளாகத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கே உணவு அறைக்கூட பரிமாறும் ஆளான அழகர் நின்றிருந்தான். இவளைக் கண்டதும்,

“சாரி மேடம்… கீழே ஏதோ சத்தம் கேட்டுச்சு… அதுதான்… என்னன்னு பார்க்க வந்தேன்…” என்று கூற,

“சத்தம் கேட்டதா?” என்று வியந்தவள், தன் வேகத்தைக் கூட்டிக் கீழே வந்தாள். சந்தேகப் படும்படி எதுவுமில்லை. ஆட்டே செய்லிங், மேனுவலாக மாற்றப்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்தாள். இல்லை… ஆட்டோ பைலட்டில்தான் இருந்தது. மற்றைய அனைத்தையும் சரிபார்த்துவிட்டுத் திருப்தியுடன் மேலே வந்தபோது, அபிராம் தன் அலைபேசியில், எதையோ சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தான். அவன் கைப்பேசியில் உரையாடியவாறே இவளைப் பார்த்து மெல்லியதாகத் தலையை ஆட்டி நகைக்க, இவனும் மென் நகை புரிந்தவாறு கன்ட்ரோல் கேபினுக்குள் நுழைந்தாள்.

இரு கரங்களையும் கௌன்டர் டாப்பில் அழுத்தி வைத்தவாறு ஆர்யன் எதையோ உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, இவள் வரும் அசைவை உணர்ந்து தலையை மட்டும் திருப்பிப் பார்த்தான்.

“எனி ப்ராப்ளம்…?” என்று கேட்க,

“இல்லை காப்டன்… எல்லாம் க்ளீனாக இருக்கிறது…” என்று இவள் கூற,

“ஓக்கே தென்… ஒரு வேளை திமிங்கிலத்தின் அசைவு கப்பலின் திசையை மாற்றியிருக்கும்… நவ்… இப்போது உன்னுடைய ஓய்வு நேரம்ல… கோ… கெட் சம் ரெஸ்ட்… " என்று அனுப்பிவிட்டு, மற்றைய வேலையில் கவனமாக, அவன் சொன்ன வேலையைச் செய்துவிட்டுத் தன் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தக் கிளம்பினாள் தியா.

வெளியே வந்தபோது, அபிராமின் கைப்பேசியின் தொடர்பு அறுந்து போயிருந்ததால், அவன் தன் நண்பனுடன் பேசுவதற்கு முயன்றுகொண்டிருந்தான். அதைக் கண்டதும்,

"வட் இஸ் இட்… மிஸ்டர் அபிராம்… இஸ் எவ்ரிதிங் ஓக்கே… " என்று கேட்க,

"நத்திங் கேப்டன்… என் நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தேன்… திடீர் என்று தொடர்பு தடைப்பட்டு விட்டது… "என்று மீண்டும் அழைக்க முயன்றவாறு கூற,

"ஓ…" என்றவள் தன் பான்டின் பின் பாக்கட்டில் செருகியிருந்த தன் கைப்பேசியை வெளியே எடுத்து, அதை அபிராமை நோக்கி நீட்டியவாறு,

"என்றுடைய கைப்பேசியில் முயன்று பாருங்கள் அபிராம்… " என்று கூற, நன்றியுடன் பெற்றுக் கொண்டவன், அதிலிருந்து தொடர்பு கொள்ள முயன்றான்.

தியாவின் கைப்பேசியும் தொடர்பை ஏற்படுத்த மக்கர் பண்ணியது. தன் உதட்டைப் பிதுக்கியவன், மீண்டும் அவளிடம் கைப்பேசியை ஒப்படைத்துவிட்டு,

"இதுவும் வேலை செய்யவில்லை காப்டன்…" என்றான் புன்னகையுடன். "சம்டைம்ஸ் இட்ஸ் ஹப்பன்ட்… வீ ஆர் இன் த மிடில் ஆஃப் ஓஷன்.. மேபி கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்…"என்று கூறிவிட்டு, மீண்டும் கைப்பேசியை பான்ட் பாக்கட்டில் செருகியவாறு தன் கேபின் நோக்கிச் சென்றாள் தியா.

உள்ளே நுழைந்ததும், தன் தொப்பியை அங்கிருந்த ஆணியில் கொளுவியவள், தன் சீருடையைக் கழற்றி ஓரமாக வைத்துவிட்டு கையில்லாத பனியனுடன் தன் கட்டிலில் பொத்தென்று அமர்ந்தாள்.

இது அவளுக்கான ஓய்வு நேரம். ஆனாலும் ஓய்வெடுக்கப் பிடிக்கவில்லை. மனதில் எப்படிக் கப்பலின் திசை மாறியிருக்கும் என்கிற குடைச்சல் எழுந்துகொண்டேயிருந்தது. கூடவே தொடர்பாடல் இல்லாததும் நினைவுக்கு வரக் கைப்பேசியை உயிர்ப்பித்துப் பார்த்தாள். இப்போதும் அழைப்பு வேலைசெய்யவில்லை. திசைமாறியதற்கும், இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? இதை உடனடியாக ஆர்யனின் காதிற்குச் சொல்லவேண்டும் என்கிற வேகத்தில் எழுந்தவள், உடனே தன் கேபினை விட்டு வெளியேறினாள்.

அவசரமாகப் படிகளின் மேல் ஏறிச் சென்றவள், கன்ட்ரோல் கபினை நோக்கிப் போக, அதே நேரம் ஆர்யனும் வெளிவே வர, திடீர் என்று அவன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவான் என்பதை எதிர்பார்க்காத தியா விலகும் முன்பே அவளுடைய மூக்கைக் கதவு பதம் பார்த்திருந்தது.

"அவுச்… " என்று அலறியவள், தடுமாறி முன்புறம் விழப்போக, நொடியில் அதை உணர்ந்து கொண்டவனாக, ஆர்யன் கீழே விழாது அவளது வயிற்றில் கை வைத்துப் பிடித்துக் கொண்டான்.

தாங்கிய வேகத்தில் அவளை நிமிர வைத்தவன், மூக்கை மூடியிருந்த கரத்தை அவசரமாக விலக்கிப் பார்த்தான். சிவந்திருந்தது மூக்கு. நல்லவேளை உள்ளே ஒன்றும் உடைந்து இரத்தம் கொட்டவில்லை. எரிச்சலுடன் அவளை ஏறிட்டவன்,

"உனக்குக் கண் என்ன பிடரியிலா இருக்கிறது… வரும்போது பார்த்து வரமாட்டாய்… ?"என்று சுள்ளென்று அவள் மீது அவன பாய, அதுவரையிருந்த அதிர்ச்சி இப்போது சுத்தமாகக் காணாமல் போனது தியாவிற்கு. கூடவே மூக்கில் அடிபட்ட வலியும், கோபமும் ஒன்று சேர,

‘இவன் ஒருத்தன் எப்ப பாத்தாலும் எரிமலை மேல ஏறி உக்காந்தவன் மாதிரி… வார்த்தைகளிலும் சூடு, செயல்களிலும் சூடு… கொஞ்சம் இளக்கமாகப் பேசினால் சொத்து குறைந்துவிடுமா என்ன… உம்மனாம் மூஞ்சி…. உம்மனாம் மூஞ்சி… இவனோடு கும்மியடிக்க வைத்த அநேகாத்மன் மாமாவைச் சொல்லவேண்டும்…’ என்று முணுமுணுத்தவள்,

"சாரி… கேப்டன்… வரும் போது கவனிக்கவில்லை…"என்றாள் ஒரளவு தன்னை நிலைப்படுத்தியவளாக. அப்போதும் அவன் இளகினானில்லை.

"நடை பாதை சறுக்கினால் தப்பில்லை… வரும் பாதை சறுக்காமல் பார்த்துக்கொள்… " என்று கடுப்புடன் அவன் சொல்ல, உடனே தன் வாயில் கரத்தை வைத்து, தலை குனிந்து

"சரிங்க கேப்டன்.. அப்படியே ஆகட்டும்…"என்று பணிவாகக் கூறினாலும் அந்தக் குரலில் இருந்த கிண்டலையும், நகைப்பையும் புரிந்துகொண்டவனாக அவளைப் பார்த்து முறைத்தான் ஆர்யன்.

"உனக்கு இப்போது ஓய்வு நேரம்ல… இங்கே என்ன பண்ணிட்டிருக்கே… இரவு டியூட்டியில் இருக்கும்போது இந்த ஓய்வு எத்தனை முக்கியம் என்பது உனக்குத் தெரியும்ல.. இரவு முழுவதும் வேறு கண் விழிக்கனும்… கோ.. கெட் சம் ரெஸ்ட்…" என்றான் அழுத்தமாக.

"ஐ நோ கேப்டன்.. பட் ஐ நீட் டு சே சம் திங்..” என்று அவள் எதையோ கூற முயல,

"எதுவாக இருந்தாலும் அப்புறம் சொல்லலாம்… இப்போது போ…" என்று அவளை விரட்ட முயன்றான் ஆர்யன்.

முடிந்தவரை அமைதியாக இருந்த தியாவிற்கு, மெது மெதுவாகப் பொறுமை காற்றில் பறக்கத் தொடங்கியது. எத்தனை முக்கியமான விஷயம் கூற வந்திருக்கிறாள்… ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல், என்று எதையோ சொல்ல வாய் எடுக்கும் போதே,

"கோ… தியா… போய் ஓய்வெடு.." என்று கூறிவிட்டு எஞ்சின் ரூம் நோக்கிப் போக, தியாவும் அவன் பின்னால் வேகமாக ஓடத் தொடங்கினாள்.

நின்று திரும்பி என்ன என்பது போலப் பார்க்க,

"கேப்டன்… ஐ நீட் டு டெல் யு சம்திங்…” என்றாள் சற்று அழுத்தமாக. இவனோ, என்ன என்பது போலப் பார்க்க, அவனைப் பார்த்துத் தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டியவள்

“கோ டு ஹெல்… எண்ணச்சட்டி.. பாய்லர்கெல்லாம் அங்கதான் வேலையிருக்கும்.. கேப்டன்… இதற்காக என்னை வேலையிலிருந்து தூக்க முடியாது… இப்போ நான் ஆஃப் ட்யூட்டி..ஒன்லி ட்ராவலர் … பாய்…” என்று தன் கரத்தைத் தூக்கி விரல்களை மட்டும் அசைத்துக் காட்டிவிட்டுத் திரும்பித் தன் கேபின் நோக்கிச் செல்ல, அதிர்ந்தவனாகச் சென்றுகொண்டிருந்தவளையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆர்யன்.

அந்த நேரம் அவள் தன் சந்தேகத்தை கூறி இருந்தால், பின்னால் வரும் விளைவுகளை தடுத்திருக்கலாமோ? விதி வலியது... அதற்கு மிகவும் போரடித்ததால்.. ஏதாவது விளையாடலாம் என்று எண்ணியதன் கண்களில் வாலன்டியராக வந்து சிக்கிக் கொண்டது நம் வாரியர்ஸ் 016.

அதற்கு பக்கப்பாட்டுப் பாடுவது போல, கப்பலின் அடியில் பெரிய திமிங்கிலம் ஒன்று ஓலம் எழுப்பியவாறு நீந்திக்கொண்டு மேல் எழ, பெரிய அலையொன்று இவர்களின் கப்பலை நோக்கிச் சீறியவாறு பாய்ந்து வரத் தொடங்கியது. இது பற்றி ஏதும் தெரியாமலே நமது ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் கப்பலில் பயணித்து கொண்டிருந்தனர்.. உற்சாகமும் கொண்டாட்டமுமாய்....


http://srikalatamilnovel.com/community/threads/வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/page-18

வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியார் 016 கதையோட 4ஆம் அதிகாரம் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள். சென்ற பதிவுக்காகக் கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்கள் எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி. இது பதினாறு பேருடைய கூட்டு முயற்சி. முடிந்தவரைச் சுவாரசியம் குன்றாத அளவுக்கு எழுதி இருக்கிறோம். நீங்கள் படித்துக் கூறும் கருத்தே எழுத்தாளர்களை மேலும் ஊக்கப்படுத்தும் என்பதைக் கூறிக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் தோழமைகளே.
 
Last edited by a moderator:

sivanayani

விஜயமலர்
11541

(5)

அலைமகளின் தாலாட்டுக்கு ஏற்றவாறு கடலன்னையின் மடியில் தனக்கு ஏற்படவிருக்கும் பேராபத்தை பற்றி சிறிதும் கவலையின்றி ஒய்யாரமாக அசைந்துக் கொண்டிருந்தது நம் எஸ் எம் எஸ் வாரியர்ஸ் 016.

அநேகத்மனின் தீவிற்குள் நுழைவதற்குள்... தங்களது சிரிப்பு, கேளிக்கைகள், கொண்டாட்டம், உல்லாசம் அனைத்தையும் முற்றிலும் இழக்க போகின்றோம் என்பதை அறிந்திடாத நம் நாயக, நாயகிகள் அனைவரும் தங்களது தனி உலகினில் உல்லாச மனநிலையில்...

ஒலிபெருக்கிகள் தற்காலிக டிஜேயான தர்ஷனின் கை வண்ணத்தில் பேரிரைச்சலுடன் ஒலிக்க.. ஆட்டத்தளத்தின் மின்விளக்குகள் கூட நடனமாடுவது போல ஒளிர, களைகட்டியிருந்தது கப்பலின் உள்ளேயிருந்த கேளிக்கைக்குரிய தளம்.

அனைவரின் முகத்திலும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. வயிற்றுப் பசிக்கு விருந்தும், கண்டு களிக்கக் கண்ணுக்கு விருந்து, கேட்டு மகிழக் காதுக்கு விருந்தும் எனத் தித்திப்பின் உச்சியில் பயணிகள் இருந்த நேரம் அது. தேவலோகமே தவறிப் பூலோகம்.. அதுவும் நடுக் கடலுக்கு வந்துவிட்டதோ என்ன?

தன் உதட்டில் பழரசத்தை வைத்தவாறு ஒரு ஓரமாக நின்று ஜெயவர்மன் இசையை ரசித்துக் கொண்டிருக்க, ஆதீரநந்தன், மெல்லிய நடன அசைவைப் போட்டவாறு, அவனை ஆட வரும்படி அழைத்தான், மெல்லிய புன்னகையுடன் அதற்கு இதமாகவே மறுத்துவிட்டுத் தனக்கருகே நின்றிருந்த, அகண்யனுடன் பேசிக் கொண்டு இருந்தான்.

காசிவிஸ்வநாதன் அவன் மனைவி திகம்பரி, மற்றும் ப்ருத்வியுடனும் உரத்து ஒலித்த இசையையும் மீறி.. சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தான். சற்றுத் தள்ளி, சூரஜ் அபிராமுடன் இணைந்து ஆடிக்கொண்டிருக்க, அவர்களுக்குப் போட்டியாக, அகிலனும் அமிர்தவர்ஷினியும் வேறு விதமாக அசைந்துகொண்டிருந்தனர்.

அவர்களின் ஆட்டத்தை, கிருஷ்னா - கலையும், சுவர்ப்பனா, நாச்சி - பிரவீன் அனைவரும் கைதட்டி நகைத்தவாறு குதூகலத்துடன் ரசித்துக் கொண்டிருக்க, மறு புறம், ஆனந்தன், ஆரோன், விதார்த் - மீரா, அங்கிருந்த மேசையொன்றில் அமர்ந்தவாறு எதையோ கொறித்தவாறு பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர்.

தூம் படத்தின் பிரபலமான பாடலான

"தூம் மசாலே………" துள்ளிசையாக அலற ஆரம்பித்தது..
"இஷ்க் இஷ்க் கர்ணா ஹை கர் லே,
இஷ்க் இஷ்க் மீ ஜீ லீ மார் லே
இஷ்க் இஷ்க் ஹை சப் சப் பியாரா
இஷ்க் இஷ்க் கர்ணா ஹை கர் லே, இஷ்க் இஷ்க் மீ ஜீ லீ மார் மார்
இஷ்க் இஷ்க் நா ஹோ டோபரா இஷ்க் ஹீ தோ ஜிஹ்தே ஹாய் இஷ்க் மீ குட் கோ பூலேக் ஜும்..
தூம் மச்சலே…..
தூம் மச்சலே தூம் ……."

என்று பாடல் கதற அங்கிருந்தவர்கள் அனைவரும் தம்மை மறந்து படத்திலே ஆடிய ஆட்டத்திற்கு சற்றும் மாற்றுக் குறையாத வேகத்தில் ஆட்டத்தில் கலந்து கொள்ள, கப்பலே ஒரு கணம் அதிர்ந்து ஆடியது.

ஆடியவாறு சுழன்று வந்த விதார்த் அகன்யன் மீது முட்டுப்பட, அங்கே அதிர்ந்த பாடலின் ஓசையை மீறி முட்டுப்பட்ட இருவரின் சத்தமும், அவர்களின் சீற்றமும் அந்தக் கப்பலையே ஆட வைத்தது.
போதாதற்கு ஒருவரை ஒருவர் முறைத்தவாறு ஆடிய நாயகர்களின் மத்தியில் சுற்றியவாறு நிற்க, இருவரின் கோப நிலையையும் கண்ட அவர் அவர் ஜோடிகள் பயத்துடன் அவர்களைப் பிரிக்க வரவும் பாடல் முடியவும் நேரம் சரியாக இருந்தது. அடுத்த பாடல் இன்னமும் வேககதியான நடனத்திற்கான இசை..

தங்களைப் பிடித்த மனைவியரை ஒரு உதறலில் தள்ளிப் போகச் செய்தவாறு ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, கால்கள் மட்டும் இசைக்கேற்ப தாளம் போட்டன. அடுத்து இசையின் வேகமும் கூட இருவருக்குமிடையில் நடனப் போட்டி கேட்காமலே ஆரம்பமாகியது. ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போலப் போட்டி போட்டுக்கொண்டு பெரும் வேகத்துடன் ஆட, யார் வென்றார் யார் தோற்றார் என்று தெரியாத நிலையில், இறுதி முடியவில் வேக அசைவுடன் ஒருவரை ஒருவர் முட்டித் தள்ளுவது போல முன்னேற, அப்போதுதான் அது நடந்தது.

சீராகச் சென்றுகொண்டிருந்த கப்பலில் ஆட்டம் சற்றுத் தடுமாறிப் பின் வேகமாக மேலேறிக் கீழ் விழுந்து சரிவது போல அசைய, அவர் அவர் நிற்க முடியாது சமநிலை தவறி விழுவது போல ஆட, அந்தக் கணம், பகைமை என்பது மாயமாக, தன் முன்னால் நின்றிருந்த விதார்த் சற்றுத் தடுமாறி விழ இருந்த வினாடி, அவனுடைய புஜத்தை இறுகப் பற்றி நிலை நிறுத்தினான் அகன்யன். நான்கு விழிகளும் ஒரு கணம் முட்டிக்கொண்டன. பின், வேகமாக அகன்யனின் கரத்திலிருந்த தன் கரத்தை விடுவித்த விதார்த்,

“தாங்ஸ்…" என்கிற முணுமுணுப்புடன் சற்றுத் தள்ளிச் சென்றான். எதிராளிக்கு பார்வையாலே பயத்தை ஏற்படுத்தும் நம் நாயகர்கள் அனைவருமே அந்நொடி.. அச்சம் என்பதை உணர்ந்தனர். மேஜை நாற்காலிகள் கூட இடம் மாறி , கோப்பைகள் பாட்டில்கள் சில விழுந்து உடைந்து கிடந்தன.

பாடல் கூட நிறுத்தப் பட்டிருக்க, எந்த சத்தமும் எழாது கப்பல் மயான அமைதியானது. என்ன நடந்தது. ஏதற்கான அதிர்வு? புரியாமலே தடுமாறி நின்ற நாயகர்களுக்கு அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கே அச்சமாக இருந்தது.

கப்பலின் நடுக்கத்தால் பயணிகளிடையே எப்படிப்பட்ட பயம் மற்றும் எதிர்வினைகள் ஏற்படுமென்று அறிந்திருந்த ஆர்யன், தன் அசாத்தியமான உயரத்திற்கு ஏற்றவாறு நீண்ட எட்டுக்களை எடுத்து வைத்து வேகமாக அத்தளத்திற்குள் நுழைந்தான்.

அங்கு நிலவிய அமைதியே அனைவரின் பயத்தையும் எடுத்துக்காட்ட, கையை உயர்த்தி..

“சாரி காய்ஸ்… கப்பலுக்கு கீழே திமிங்கலம் ஒன்று கப்பலின் ஒட்டத்திற்கேற்றவாறு நீந்திக்கொண்டிருப்பதால் ஆட்டம் காண்கிறது சோ டோன்ட் பானிக்.” என்று அறிவுருத்த அனைவரும் நிம்மதி மூச்சு விட்டனர்.

நாச்சியோ, அவனின் முன்னால் வந்து நின்று,

“அட போப்பா.... நீ வேற, பெரிய சைஸ் மீனு போச்சுன்னு சொல்லிட்டு இருக்க... கொஞ்ச நேரத்துல என் உசுரு எங்கிட்ட இல்லை தெரியுமா...” என்றவள்,

“ஆமாம் மெய்யாலுமே உனக்கு கப்பலு ஓட்ட தெரியுமா தெரியாதா???? வெள்ளந்தியாக அவள் கேட்ட கேள்வியில் ஆரியன் சிறு புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்து தனது கேபின் சென்றான்

என்ன தான் வெளியில் திடமாக அவன் காட்டிக்கொண்டாலும்.... இயற்கை செய்யும் சதியை எப்படி முறியடிக்க போகிறேன் என்ற பயம் அவனுள் பூதாகரமாக எழுந்தது... அதற்குக் காரணம், சற்று நேரத்திற்கு முன் அவனறிந்த செய்தி. அது அவ்வளவு உவப்பானதாக இல்லை.

முடிந்தளவு எந்தவொரு சேதாரமுமின்றி கப்பலை கரை சேர்க்க வேண்டும்... எப்படி???.. என்கிற யோசனை அவனை ஆட்டிப் படைக்க நெற்றியைப் பெரு விரலாலும், சுண்டு விரலாலும் அழுத்தி விட்டுக்கொண்டிருக்கும் போதே, ஓய்வு நேரம் முடிந்து தியா உள்ளே நுழைந்தாள்.

ஆர்யனின் முகத்தில் காணப்பட்ட சிந்தனை கோடுகளை வைத்து எதையோ யூகித்தவளாய்....

“சர், எவேரிதிங் இஸ் ஓகே ஹியர்…?” என்றவளின் குரலிலும் மெல்லிய கவலை எட்டிப்பார்க்கத்தான் செய்தது. திமிங்கிலத்தின் சதியைவிட, வேறு ஏதோ ஒன்றிருக்கிறதென்று அவளுக்குத் தெரியாதா என்ன?

தியாவை ஆழ்ந்து நோக்கியவன்... தனக்கருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு தியாவை அமருமாறு கை கட்டினான்.

சிறிது நேரத்தில் தான் கேட்க போகும் செய்தி தனக்கு பயத்தை ஏற்படுத்த போகிறதென்பது தெரியாமல்.. ஆர்யனின் அமைதியையும், அவன் தனக்கு இருக்கையை இழுத்து போட்டதையும் ஆச்சரியமாக பார்த்தவள் அவனின் வார்த்தைகளை செவி நுழைக்க கவனமாகினாள்.
ஒரு கணம் அமைதி காத்தவன் பின்,

“வி ஆர் கோய்ங் டு ஃபேஸ் எ பிக் ப்ராப்ளம்…” என்றதும் பயத்துடன் ஆர்யனை ஏறிட்டாள் தியா.

“சார்… என்ன சொல்கிறீர்கள்?” என்று இதயம் தொண்டைக் குழிக்குள் வந்து துடிக்கக் கேட்க,

“யெஸ்… பர்ஸ்ட் ஒன்... கப்பல் திசை மாறியிருக்கு, அதற்கான ரீசன் ப்ளூவேல் மூவிங்... அப்படி நினைப்பது முற்றிலும் தவறானது…” என்றதும், அதிர்ச்சியில் விழிகள் விரிய,

“காப்டன்…” என்றாள் காற்றாகிவிட்ட குரலில்.

“செகண்ட் அன்ட் அபாயமான செய்தி, கப்பலில் செயல்படும் ஒவ்வொரு எலக்ட்ரானிக் டிவைசும் தனது செயல்பாட்டினை இழந்துக் கொண்டிருக்கிறது. தற்போது மொபைலின் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது…” என்றதும் முகம் வெளிறினாள் தியா.

அவளுக்கு ஆரம்பத்திலேயே அந்த சந்தேகம் ஏற்பட்டிருந்தது. இப்போது அது உண்மையென்று நிரூபணம் ஆனதும், அவளை மீறிய பயம் அவளை ஆட்டுவிக்க,

“அப்படியானல் ஏற்கெனவே அறிவித்தது போல சூரிய மின்காந்தப் புயல் ((Geomagnetic Storm)) தாக்கத் தொடங்கிவிட்டதா காப்டன்…” என்றாள் தொண்டைக்குள் எதையோ விழுங்கியவாறு. அவன் ஆம் என்று தலையாட்ட, அவளுடைய தளிர் மேனியில் மெல்லிய நடுக்கம்.

"பூமின் சில பாகங்களில் தான் அதோட பாதிப்பு இருக்கும். அன்ஃபார்ச்சுனேட்லி அந்த தாக்கம் இருக்கும் இடத்தில் தான் நாம் சிக்கி இருக்கோம்.."

கேட்டவளின் இதயம் பந்தயக் குதிரையின் வேகத்தில் துடிக்க ஆரம்பிக்க, தன் உதறலை வெளிகாட்டாதவளாய் கேட்டாள்,

“அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம் காப்டன்… ஏன் என்றால், சூரிய புயலில் நாம் அடையப்போகும் பாதிப்புக்கள் அதிகமாயிற்றே…” என்றதும்,

“எஸ்.... இதன் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில்.. செயற்கை கோள்களுடனான நம் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு விடும். நம்மைப் போல நடுக்கடலில் நிற்பவர்களுக்கு பெரும் சிக்கல்தான்." என்றதும், அடுத்து என்ன கேட்பது என்று குழம்பினாள் தியா.

சூரியப்புயல் ஒன்றும் அவள் அறியாததல்ல. கற்கும் போதே அதற்காக ஒரு முழு நாள் விரிவுரையே நடந்தது. ஆனால் இது வரை அவள் அனுபவரீதியாகக் கண்டதில்லை. இதுதான் முதன் முறை.. சூரியப்புயலின் தாக்கத்தைப் பார்ப்பதும் பார்க்க இருப்பதும். அதுவும் நடுக் கடலில்… நினைக்கும் பொதே, பதறியது. அதனால் தன்னையும் மறந்து,

மின் காந்தப் புயலால் பாதிப்புகள் அதிகம் என்பது உண்மைதான்… ஆனால் அந்தளவு எக்ஸ்ட்ரீமை இதுவரை யாரும் சந்திக்கவில்லை…?” என்று அவள் கூற, அவளை ஆழப் பார்த்தவன்,

“அதை நாம் சந்திக்கப்போகிறோம்…” என்றான் அமைதியாக. இவளோ அதிர்ச்சியுடன்,

“கப்டன்…” என்று திணற,

“யெஸ்… வி ஆர் கோய்ங் டு… அதற்கான முதல் அறிகுறிதான் எலக்ட்ரானிக்சின் செயலிழப்பு… தவிர… இந்த நிலையில் கப்பலின் மோட்டார் செயல்பாட்டைக் குறைப்பது நல்லது…” என்றவன், இருக்கையை விட்டு எழுந்து, கப்பலின் ஜன்னல் புறமாகச் சென்றான். முதுகுப் புறமாகக் கரத்தைக் கட்டி நின்றவன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். பின், கரத்தை விடுவித்துக் வானத்தை நோக்கிக் கரத்தை நீட்டி, ஆரம்பிக்கும் சூரிய மின்காந்த புயலின் அறிகுறியாக நீல மற்றும் பச்சை வர்ண கதிர் வீச்சினைச் சுட்டிக் காட்டியவாறு தியாவைப் பார்த்து,

“அங்கே பார்…” என்றான். இவளும் எழுந்து வந்து அவன் காட்டிய திசையைப் பார்த்தவளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. வாணம் இருட்டாக இருந்ததால் சூரியப்புயலின் வர்ணங்கள் தெள்ளத் தெளிவாகவே தெரிந்தன.

“அடுத்து நாம என்ன செய்யப்போகிறோம் காப்டன்?” என்று இவள் கேட்க,

“நாம பயணிகளைத் தயார் படுத்தனும் தியா…” என்று அழுத்தமாகக் கூறிக்கொண்டிருக்கும்போதே கப்பல் ஆட்டம் கண்டது. பதறியவனாக ஓடிப்போய் திரையைப் பார்க்கத் தன்னையும் மறந்து
 
Last edited:

sivanayani

விஜயமலர்
“ஷிட்…” என்றான்.

« என்னாச்சு கப்டன்… » என்று இவள் கேட்க,

« எஞ்சினின் முக்கிய பாகம் செயலிழந்துடுச்சு… » என்றவன் பதறியவாறு எதை எதையோ தட்டி செய்லை(Sail) செயல்படுத்த முயன்றான். அது மறுத்தது. குறிப்பாக எங்கே பிரச்சனை என்பதைக் கண்டறிந்தவன், மனித முயற்சியாக நகர்வதாக கப்பலை மாற்ற வேண்டிய அவசியத்தைப் புரிந்தவனாக வெளியே வந்தான்.

அதே நேரம் அத்தனை நேரம் மகிழ்ச்சியாக இருந்த பயணிகள், சூழ்நிலை மாறுபட்ட நிலையில் கப்பலுக்கு வெளியே வந்து, நிறம் மாறத்தொடங்கிய வானத்தைத்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப முயன்றவனாக,

“அட்டன்டன்ஸ்…. ப்ளீஸ்…” எனத் தன் கம்பீரமான குரலில் கூற, பயணிகள், அனைவரும் திரும்பி ஆர்யனை ஏறிட்டனர்.

“யெஸ் பேஸஞ்சர்ஸ்.. ஸாரி.. வி ஆர் கோய்ங் டு ஃபேஸ் எ பிக் ப்ராப்லம்…" என்றவன் வானத்தின் புறமாய் கைகாட்டினான்..

" நாம சூரிய மின்காந்தப் புயலின் விளைவுகளை தான் பார்த்திட்டு இருக்கிறோம். நிறம் மாறும் வானம்.. அப்புறம் நம்முடைய தொலைத் தொடர்பாடல் அனைத்தும் செயலிழந்திருக்கு… சூரியனை பற்றி… நமக்கு தெரிந்தது.. சூரியன் ஒளிரும் விண்மீன். எப்பொழுதும் சூரியன் எரிந்துக் கொண்டிருப்பதால் தான் நமக்கு பகலில் வெளிச்சம் கிடைக்கிறது. ஆனா... இதன் வெப்பத்தின் அளவு அதிகரித்தால் அதனை சூரிய புயல் என்கிறோம். இப்படி சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் போது, ஒரு கட்டத்தில் சூரியனில் மின் காந்த சக்தி அதிகமாகும். இந்நிகழ்வு சாதாரணமாக 22 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட்டாலும் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதன் பாதிப்பு பூமியில் தாக்கம் ஏற்படுத்தும். சூரியனில் மின்காந்த சக்தி அதிகமாவது சூரிய மின்காந்த புயல்ன்னு சொல்றோம். இத்தகைய புயல் ஏற்படும் போது நம் பயன்பாட்டிற்காக செயல்படும் அனைத்து தகவல் தொழில்நுட்ப காரணிகளும் சாட்டிலைட்ஸ் போன்றவை முடங்கிவிடும். முக்கியமானது செயற்கைக்கோள்களின் செயல்பாடு. இதனால் அனைத்து தகவல் தொடர்புகளும் செயலற்று போகும். கைப்பேசி முதலான எந்தத் தொடர்பாடல் சாதனமும் வேலை செய்யாது… நம்முடைய போதாத நேரம், இப்போது அந்த சூரிய புயல் தொடங்கிவிட்டது. அதுவும் இதுவரை இல்லாத அளவு பலமானதாய்…”

“மை காட்… ஹெள லாங் காப்டன்…” என்று தர்ஷன் கேட்க,

“தெரியவில்லை… அதனுடைய தாக்கத்தைப் பொருத்து… குறைந்தது இரண்டு மணி நேரங்கள்… அதி கூடியது எட்டு மணி நேரங்கள்… பட்… நம்மைத் தாக்கிய புயலிலிருந்து நாம் வெளியேற எட்டு மணி நேரங்களிருந்து ஏழு நாட்கள் வரைக்கும் ஆகலாம். சரியா சொல்ல முடியாது.…” என்று பெருமூச்சை விட்டவன்," அதனால், நாம் தற்காலிகமாக கரை ஒதுங்கப் போகிறோம்…” என்றான்.

‘தொடர்பாடல் மட்டும்தானே துண்டிக்கப்படும்… அதற்கு எதற்குக் கரை ஒதுங்கவேண்டும்?” என்று கவிலயா கேட்க,

“தொடர்பாடல் மட்டுமல்ல, இந்த சூரிய மின்காந்தப் புயலால், கடல் வாழ் உயிரினங்களிடமும் மாற்றம் ஏற்படும்… அவை தம் நிலை இழந்து மேலே வந்தால், அதன் பிறகு எல்லாமே கைமீறிச் சென்றுவிடும். அதை விடப் பாதுகாப்பாகக் கரை ஒதுங்குவது பெட்டர்…” என்று கூற,

“நடுக் கடலில் இருக்கிறோம்… தரை ஒதுங்கக் காலம் போதுமா... கிருஷ்ணா சிறு பயத்துடன் வினவினான்.

“கடல் இருந்தால் தரை ஒன்று இருக்கும்.… நிச்சயமாக அருகிலேயே ஏதாவது கரை தென்படும்… அதனால், ஒவ்வொருவரும் ஏதாவதொரு வகையில் எனக்கு உதவுங்கள். நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட்டு நடக்கவிருக்கும் ஆபத்திலிருந்து மீள்வோம்." என்ற ஆரியன் சில திட்டங்களை வகுத்தான்.

அருகில் நின்று கொண்டிருந்தவிதார்த் மற்றும் அக்கண்யன்புறம் திரும்பி, “செய்ல் ஏற்றவேண்டும். அதனால் முதன்மைப் பாயையும், (மெய்ன் செய்ல்) முக்கோனப் பாயையும் (ஜிக் செய்ல்) இரண்டையும் ஏற்றுங்கள்.” என்று கூறியவன், எப்படி அதை ஏற்றவேண்டும் என்று சொல்ல, சரியென்று தலையசைத்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நின்றனர்.

அவர்களின் முறைப்பினைக் கண்ட ப்ருத்வி...

“உங்கள் போட்டியை நிலத்தில் வைத்துக்கொள்ளலாம்.. ப்ரெண்ட்ஸ்.. இங்கு நம் அனைவரின் உயிரும் காக்கப்பட வேண்டும். இதிலாவது போட்டியில்லாமல் செயல்படுங்கள்” என்க, இருவரும் தங்களது நண்பனின் கூற்றை ஏற்றுக் கொண்டது போல அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.

“அண்ட் ஒன்மோர் ப்ராப்ளம்.. அது மட்டுமல்ல, கப்பலின் மெய்ன் மோட்டாரின் ஒரு பக்கம் சேதமடைந்திருக்கிறது… சோ, கிருஷ்ணா மற்றும் ஜெயவர்மன் நீங்கள் நமது கப்பலின் உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே தளத்தில் ஒன்றாக இணைத்து, வைத்திருங்கள்…." என்ற ஆர்யன் திரும்பி தியாவைப் பார்த்து,

"தியா வரைபடத்தைப் போய்ப் பார்த்து அருகில் ஏதாவது தீவு இருந்தால், எந்த திசையில் எத்தனை பாகையில்(digree) என்று சொல்..." என்ற கட்டளையிட, அதை நிறைவேற்ற உள்ளே ஓடினாள் தியா.

இவனோ பதட்டமாக எஞ்சின் அறைக்குள் நுழைந்தான். முக்கியமான பாகங்களைப் பரிசோதித்தான். அதில் முக்கிய இணைப்புகள் வெட்டுப்பட்டிருந்தன. எப்படி வெட்டுப் பட்டன என்று குழம்பியவன், அவசரமாக அந்த வயர்களை இணைத்தான். பின் அங்கிருந்த பொத்தானை அழுத்த, அப்போதும் மோட்டார் வேலை செய்யவில்லை. அது வேலை செய்யவில்லை என்றால், கப்பலை உந்தித்தள்ளும் துடுப்பு வேலை செய்யாது. அது வேலை செய்யவில்லை என்றால் கப்பல் முன்னேறிச் செல்லாது… அவசரமாக உடனே அதற்குரிய பகுதிக்குச் சென்றவன், கழற்றிப் பார்த்தான்.

முக்கிய பாகம் எரிந்துபோயிருந்தது. ஒரு வேளை ஷோர்ட் சர்க்யூட் ஆகி எரிந்திருக்கலாம். ஆனால் இப்போதைக்கு அதை சீர் செய்ய முடியாது என்பது புரிந்தது. கூடவே கப்பல் வேகமாக ஆட, அவசரமாக எழுந்தவன் மேலே வந்தான்.

சூரிய மின்காந்த புயலின் தாக்கம் நிச்சயம் தான் எதிர்பார்த்ததைவிட மிக மோசமாக இருக்குமென்று கீழே சென்று மேலே வரத் துடித்த திமிங்கிலத்தின் வேகத்தை வைத்து உணர்ந்து கொண்டவனுக்குப் பலமாக அடித்த காற்றை நினைத்தும் கவலையாக வந்தது.

விதார்த்தும் அகண்யனும், தர்ஷன் அதீரநந்தன் கூட இருந்து உதவி செய்யக் கயிற்றைப் பற்றி இழுத்து செய்லை மேலே ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அருகில் சென்றவன், கூறிய படி அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட, பாய்மரம் எனப்படும் செய்ல் மேலே ஏறியது. அது வரை அங்கும் இங்கும் ஆடிய கப்பல் பாய்மரம் மேலே ஏறியதும் சற்று நிதானத்திற்கு வந்தது. கூடவே காற்றின் திசைக்கேற்ப அது செல்லத் தொடங்கியது.

அதே நேரம் ஆர்யனைத் தேடி வந்த தியா,

"கப்டன்… வலது புறத்தில் சற்றுத் தொலைவில் ஒரு தீவிருக்கிறது... பட், அங்கு அவ்வளவு எளிதில் போக முடியாது போலிருக்கே. பெயரில்லா அத்தீவில்.. மனித நடமாட்டமே அங்கிருப்பதைப்போன்று தெரியவில்லை.. . " என்றாள் யோசனையுடன். அவளோடு உள்ளே சென்றவன், அவள் மேப்பில் காட்டிய தீவை உற்றுப் பார்த்தான். எந்தப் பாகைக்குக் கப்பலைத் திருப்பவேண்டும் என்பதைக் கணக்கிட்டான்.

சிறிது யோசித்த ஆர்யன்... ".. வேற வழியில்லையெனும் பட்சத்தில் அத்தீவில் தான் தஞ்சம் புக வேண்டும். ஆளில்லாத தீவு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.…ஆனால் அதை யோசிக்கும் நிலையில் நம் கப்பல் இல்லை..." என்று கூறிக்கொண்டிருக்கும் போதே திசைகாட்டும் கருவியின் முள் தாறு மாறாகச் சுழலத் தொடங்கியது. கூடவே மானிடரில் தெரிந்த திரை ஓடத் தொடங்கி அதில் குறுக்கும் நெடுக்குமாய் கோடுகள் விழத் தொடங்கியது. ரேடார் திரை மின்னி மின்னி ஒளிரத் தொடங்கியது.

“புயலின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக தன் வேலையைக் காட்டுகிறது. திசை காட்டும் கருவி இன்னும் சில நிமிடங்களில் செயலிழக்கவிருக்கிறது. இப்போதிருக்கும் நிலையில், காம்பசை நம்பமுடியாது… அந்தத் தீவை நோக்கிக் கப்பலை விடவேண்டியதுதான். வேறு வழியில்லை அங்கே சென்ற பிறகு கப்பலை சரி செய்ய முயற்சிக்கலாம்.." என்றவாறு திருப்ப, தியா எதையோ யோசித்தவளாக அவசரமாக எஞ்சின் அறை நோக்கிக் கீழே ஓடினாள்.

அதே நேரம் சோணாரும் ரேடாரும் (sonar and Radar. சொனார் - கடலின் கீழ் உள்ள பாறைகளையும், ரேடார் - தரிப்பிடம், திசை, வேகம் போன்றவற்றைக் கணிக்கும் கருவித் தொகுதி ) வேலை செய்யாத நிலையில் ஒரு மதியதோடு கப்பலை செய்ல் நிமிர்ந்திருந்த திசைக்கேற்ப, முடிந்தளவு பலமாகத் திருப்பினான். இப்போது காற்றின் திசைக்கேற்ப கப்பல் அசையத் தொடங்கியது.

இங்கு கப்பலை ஆர்யன் திசை திருப்பிக் கொண்டிருக்க, கடலின் கீழேயிருந்த மிகப்பெரும் பாறை ஒன்றின் கூரிய முனை, கப்பலின் அடிப்பகுதியைப் பலமாக மோத கப்பல் பலமாக குலுங்கி நின்றது. த

அதை உணர்ந்த ஆர்யன்,

“ஷிட்…” என்று கத்தியாவறு முயன்றவரை கப்பலினை முழுவதும் வலது பக்கம் திருப்ப முயல, அது திரும்ப மாட்டேன் என்று அடம்பிடித்தது... எப்படியோ ஸ்டியரிங் வீலைக் கொண்டு அங்கும் இங்கும் திருப்பி கியரை மாற்றி மாற்றி... கப்பலை இயங்க வைக்க, ஒரு மாதிரி பாறையை விட்டு வெளியேறவும் திசைகாட்டும் கருவி முற்றிலும் செயலிழக்கவும் நேரம் சரியாக இருந்தது.

கப்பல் பாறையில் மோதியதால், அதில் மெல்லிய பிளவு ஏற்பட, அடுத்த கணம், கடல் நீர் உட்புறம் புகத் தொடங்கியது.

அதே நேரம் கீழ்த்தளத்தைப் பரிசோதிக்கச் சென்ற தியா அதிர்ந்துபோய் நின்றாள். அடுத்து வரவிருக்கும் ஆபத்தை உணர்ந்தவளுக்கு சர்வமும் நடுங்கியது. பதறியவாறு ஆர்யனைத் தேடி வர, அங்கே அவன் கப்பலைத் திருப்பும் முயற்சியில் இறங்கிக்கொண்டிருந்தான்.

வானில் கதிர்வீச்சு நிறங்களின் தாக்கம் அதிகரிப்பதை உணர்ந்தவனுக்கு மெல்லிய பதற்றமும் தொற்றிக் கொண்டது. புயலின் வீச்சு அதிகரிக்க அதிகரிக்க... உப்புக் காற்றின் சுழற்சி தீவிரமாகும். இதனால் , ஆக்சிஜன் செயல் திறன் குறையும்.. அதனால் சுவாசிப்பதற்கே மிகவும் சிரமமாக இருக்கும். அந்த எல்லையை தாண்ட முதல் கரை சேர்ந்துவிட வேண்டும்.

ஆர்யன் மீண்டும் கன்ட்ரோல் அறைக்குச் செல்ல, அங்கே தியா பதறியவாறு நிற்பதைக் கண்டான்.

“வாட் இஸ் இட் தியா.....” என்று கேட்க,

“கேப்டன், கப்பலில் டீசல் வெளியேறத் தொடங்கிவிட்டது.” என்றாள். அதைக் கேட்டதும் மேலும் அதிர்ந்தான் ஆர்யன்.

“வாட்….?.” என்றவன், வேகமாக ரடரைச் சுழற்றியவாறு அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினான். ஒன்று சீர் செய்ய நினைக்க இன்னொரு பிரச்சனை வருகிறதே… என்ன செய்வது.

ஒரு பக்கம் சூரிய மின்காந்த புயல்... இன்னொரு பக்கம் ஆக்சிஜன் பற்றாக்குறை... இப்போ டீசல் கசிவு… என்ன செய்வது… எதை சமாளித்தாலும் டீசல் கசிவை என்ன செய்வது… நெருப்பு பற்றிக்கொண்டால் அணைக்க முடியாது… ஓ காட்… எந்த நேரத்திலும் கப்பலில் தீப்பிடிக்கலாம்.

அதை நினைத்ததும், எதற்கும் அஞ்சாத ஆர்யன் முதன் முறையாக அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ந்து நின்றான். பாறையில் மோதியதால் டீசல் கசிந்திருக்கிறது. இதை அறிந்த தியாவிற்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

அன்று அவள் தெலைத்தொடர்பு நின்றது பற்றிக் கூற முயன்றபோது, அவன் கேட்காது மறுத்தது நினைவுக்கு வர எல்லையில்லா கோபம் கொழுந்து விட்டெரிந்தது. அதுவரையிருந்த பொறுமை காற்றில் பறக்க,

“உங்களால்தான் மிஸ்டர் ஆர்யன்… உங்களால்தான் இப்போது நமக்கு இந்த நிலமை. நேற்று நான் கம்யூனிகேஷன் பாதிப்பு பற்றி சொல்ல வந்ததையும் நீங்க கேட்கலை .. அவசரம்.. அகங்காரம்.. தான் சொல்வதே நடக்கனும்னு.. கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாமல், கப்பலைத் திருப்பி... பாறையில் இடிக்க வைத்திருக்கின்றீர்கள்... இதனால்தான் டீசல் கசிவு ஏற்பட்டிருக்கிறது… இப்போது கப்பல் தீப்பிடிக்கப் போகிறது. உங்களால்தான் நாங்கள் அனைவரும் சாகப் போகிறோம்… ஐயோ… எனக்கொன்று நடந்தால் என்னுடைய அப்பா… சித்தப்பா… சித்தி… துடித்துப் போவார்களே… உங்களுக்கென்ன, சொந்தமா பந்தமா எண்ணிக் கவலைப் பட… ஓசியில் அநேகாத்மன் மாமா வீட்டில் வளர்ந்தவர் தானே… உறவுகளைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று தியா தன்னை மறந்து நிலை மறந்து கத்த ஆரம்பிக்க, அது வரை பதற்றத்துடன் இருந்த ஆர்யன், சீற்றத்துடன் தியாவைப் பார்த்தான்.

அவளோ அப்போதும் தன்னிலையில்தான் இருந்தாளன்றி, வேறு எதையும் சிந்திக்கும் நிலையில் இருக்கவில்லை. அதனால் அவளுடைய வார்த்தைகள் எல்லை மீறின... அதன் தாக்கம் தாங்காது, கோபத்தின் உச்சிக்கு சென்றவன்... ,

“என்னடி, ரொம்ப ஓவரா பேசுற... ஆமா… நான் அநாதைதான்… அதற்காக உறவுகளின் அருமை தெரியாதவன் என்றா நினைத்தாய்… எனக்கு அண்ணனுன்னு அநேகாத்மன் இருக்கிறார்… ஒரு சகோதரியாய் தாயாய் சர்வமகி இருக்காங்க…. ஏன் என் தோழனாய் பிரதீபன் இருக்கான்… இதை விட எனக்கெதற்கு உறவு?” என்று தன்னை மறந்து சீறியவன், ஓங்கி சுவரில் பலமாக அடித்துத் தன் கோபத்தைத் தணிக்க முயன்றவன், முடியாமல்,

" கேப்டனிற்கு தன்னோட உயிரைவிட, கப்பலும், அதில பயணம் செய்ற பயணிகளும் முக்கியம்... அதைத்தான் நான் கடைபிடிச்சுக்கிட்டிருக்கேன்... அந்த நேரத்துக்கு எது சரியோ... அதைத்தான் பண்ணிட்டிருக்கேன்... அட் எனி கோஸ்ட் இந்த கப்பல் தரையை அடைஞ்சே ஆகணும்... அதுக்குதான் நா முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன்... செய்வேன்..." என்று கொந்தளித்தவன், தாடை இறுக, பற்களைக் கடித்து, வேக மூச்செடுத்து..கண்மூடி கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தான்.

“அநாதையென்றால் அத்தனை கேவலமாகப் போய்விட்டதா?" என்று வலியுடன் கேட்டவன்”
"ப்ளீஸ் தியா.. இப்போது என் கண்முன்னே நிக்கதே... போ... போய் பயணிகளை பத்திரமா இருக்க சொல்லு..." என்று விட்டுத் தன் கடமையில் மூழ்க, எதிர்பாராது ஏற்பட்ட அதிர்ச்சியிலும், பயத்திலும் பைத்தியம் போல உளறியது அப்போதுதான் அவளுக்கு புரிந்தது.

என்னவெல்லாம் பேசிவிட்டாள். நரம்பில்லாத நாக்கு நாளா திசையும் திரும்பிவிட்டதே... சே... பெரும் வலியுடன் அவனை ஏறிட்டு,

“சா… சாரி… கப்டன்…” என்றவாறு கண்களில் கண்ணீர் முட்ட... எதோ கூற வர,

"போ... தியா... இப்போ நம்முடைய பிரச்னையைப் பற்றி சிந்திக்க எனக்கு நேரமில்லை... பாதுகாப்பாக கப்பலை கரை ஒதுக்கணும்..." என்று என்கோ பார்த்தவாறு அவன் கூற,

தியா கலக்கத்துடன் வெளியே செல்ல, ஆர்யனோ, அப்போதைக்கு அவளை மறந்தவனாக, எப்படியாவது பயணிகள் அனைவரையும் நலமுடன் கரை சேர்த்திட வேண்டுமென்கிற வேகத்துடன் யோசித்தவாறே செயல்படத் தொடங்கினான்..

http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/page-21#post-240478


வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியார் 016 கதையோட 5ஆம் அதிகாரம் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள். சென்ற பதிவுக்காகக் கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்கள் எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி. இது பதினாறு பேருடைய கூட்டு முயற்சி. முடிந்தவரைச் சுவாரசியம் குன்றாத அளவுக்கு எழுதி இருக்கிறோம். நீங்கள் படித்துக் கூறும் கருத்தே எழுத்தாளர்களை மேலும் ஊக்கப்படுத்தும் என்பதைக் கூறிக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் தோழமைகளே.
 
Last edited:

sivanayani

விஜயமலர்
11548

அத்தியாயம் 6

ஆர்யனுக்கு மனது உலைக்களமாக எரிந்து கொண்டிருந்தது. எத்தனை தைரியமிருந்தால், அவனின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எடுத்தெறிந்து பேசுவாள்… 'திமிர்… அத்தனையும்... திமிர்…’ என்று மனதிற்குள் சினந்து கொண்டிருக்கும் போதே கப்பலில் ஒரு வித அதிர்வு ஆரம்பமானது. அதை உணர்ந்தவனுக்குத் தாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்தென்பது புரிந்தது. அதனால் தன் நினைவுகளை ஒதுக்கி வைத்து விட்டு, தன்னால் முடிந்தவரைக் கப்பலைத் திசை திருப்பி, பக்கத்துத் தீவை அடையும் முயற்சியில் இறங்கினான்.

தியாவிற்கோ தன்னை எண்ணியே ஆத்திரம் வந்தது. ‘கோபம் வந்தால் எதை வேண்டுமானாலும் பேசலாமா… அவனுக்கு எப்படி வலித்திருக்கும்…’ என்று எண்ணும் போதே குற்ற உணர்ச்சி அவளை ஆட்கொண்டது. கண்கள் குளமாக, வேகமாக நடந்தவளுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது… அவசரமாகக் கண்களை மறைத்துக்கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்தெடுத்தவள் பெரும் பயத்துடன் அதைக் கண்டாள்.

அவளும் ஆர்யனும் என்ன நடந்து விடக் கூடாது என்று பயந்தார்களோ அது நடக்கத் தொடங்கியிருந்தது. கப்பலின் பின்புறமாக இருந்து கரிய புகை வரத்தொடங்கியிருந்தது. கூடவே, கப்பல் பாறையில் உரசியதில் ஏற்பட்ட பிளவினால், கப்பலினுள் நீர் கசிய ஆரம்பித்திருந்ததால் கனம் கூடி பின்புறமாக இறங்கத் தொடங்கியிருந்தது.

அதைக் கண்ட தியா "ஓ காட்.." எனப் பதட்டத்துடன் தலையில் அடித்துக் கொண்டவள் அதுவரை இருந்த குற்ற உணர்ச்சியும் கோபமும் மாயமாக மறைந்து போக, வேகமாக ஆர்யனை நோக்கி ஓடினாள்.

சென்ற வேகத்தில் திரும்பி வந்துகொண்டிருந்த தியாவின் முகத்தில் தெரிந்த பதற்றத்தைக் கண்டு, எது நடக்கக் கூடாதோ அது நடந்துவிட்டது என்பதைப் தெரிந்துகொண்டான் ஆர்யன்.

மூச்சு வாங்க, "தண்ணீர்... யாட்டின் உள்ளே வருது போல கப்டன்.. கப்பல் ஒரு பக்கமா தாழுது.. தவிர" என்றவள் எச்சிலை விழுங்கி,

“புகை… புகை வரத் தொடங்கியிருக்கிறது…” என்றதும்,

“வாட்…?” என்றவாறு வெளியே பாய்ந்தான். பார்த்தவனுக்கு சர்வமும் நடுங்கியது. மின்கசிவினாலோ... கப்பலின் கீழ்த்தளத்தில் ஏற்பட்ட வெடிப்பில் உட்புகுந்த உப்பு நீர்.. சேமிப்பு மின்கலத்தின் எலெக்ட்ரோடில் பட்டதாலோ.. தீப்பொறி உருவாகி வெடிப்பினால் கசிந்திருந்த டீசலில் பட்டு நெருப்பு எரியத் தொடங்கியிருக்கலாம். இப்போது மெல்லியதாகப் புகை கக்கும் தீ, இனி அதி வேகமாகப் பரவும். தவிர கடலில் நீரில் மிதந்து பரவும் டீசலும் பற்றி எரியத் தொடங்கும்…


கடல் நீரில் பரவிக் கிடக்கும் டீசலைப் பார்த்தவன், இந்த டீசலினால் கெட்டதிலும் ஒரு நல்லதாக திமிங்கலம் விலகிச் செல்வதைக் கண்டான்.

அவனது இத்தனை வருட அனுபவத்தில் எத்தனையோ பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறான் தான்.. ஆனால் இப்படி எல்லா வழிகளும் அடைபடுவதும்.. தீர்க்கவே இயலாதது போல மலைத்து நிற்பதும் அவன் இது வரை அறியாத ஒன்று… சில வினாடிகளில் மீண்டும் சுறுசுறுப்பு அடைந்தவனாய் சிந்திக்க தலைப்பட்டான். பெரிய கப்பலென்றால், தீ முன்புறமடைய சற்று நேரம் எடுக்கும். அவர்கள் பயணிப்பதோ யாஞ்ச் எனப்படும் சிறு கப்பல். தீயின் வேகம் அதிகமாக இருக்கும் தப்புவதற்கான கால நேரமும் குறைவு. தவிர, வெடித்துச் சிதறவும் வாய்ப்புண்டு.

நொடிப் பொழுது கண்களை மூடி யோசித்தவனுக்கு உடனடியாக பயணிக்கும் அனைவரையும் கப்பலை விட்டு வெளியேற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொண்டவனாக,

"தியா.. இங்க இருக்கும் ஒர்க்கர்ஸ் எல்லாரையும் வெளியே வர சொல்லு.. லைஃப் சேவிங் எக்யூப்மெண்ட்ஸ் எடுக்கனும்.. போட்ஸ் தண்ணில இறக்கனும்.... ரைட் நவ்.. க்விக்.." என்று விட்டுக் கப்பலைத் திருப்ப முயன்ற முயற்சியைக் கை விட்டு, அதை நிலை நிறுத்த நங்கூரத்தை இறக்குமாறு கட்டளை பிறப்பித்து விட்டு வேகமாகப் பயணிகளை நோக்கிச் சென்ற போதே, அவர்கள், கப்பலிலிருந்து எழுந்த புகையைக் கண்டு வெளியே வரத்தொடங்கியிருந்தனர்.

அதே நேரம் கப்பலின் ஒரு பக்கத்திலிருந்து லேசாகக் கசிய ஆரம்பித்திருந்த புகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்க,கரும் சாம்பல் நிறத்தில் வெளியேறத் தொடங்கிய புகையை அனைவருமே ஒரு வித பயத்துடன் பார்த்துக் கொண்டு நின்றனர்..

அவர்களின் முகத்திலும் இருந்த பயத்தைப் பார்த்த ஆர்யனுக்கு அவர்களிடம் எதைக் கூறி சமாதானப் படுத்துவது என்று புரியவில்லை.

"கைஸ்... லிசென் ப்ளீஸ்.." என்று ஆர்யன் தொடங்கும் போதே தியாவும், வேலையாட்களும் கப்பலிலிருந்து லைஃப் ஜாக்கட்டுகளை சுமந்தவாறு வந்து சேர்ந்தனர்.

"ஐ எம் ரியலி வெரி சாரி டு செ திஸ்.. நாம் பெரிய ஆபத்தில் இருக்கோம்.. கப்பல் எந்த நேரமும் வெடிக்கவோ இல்லை மூழ்கவோ செய்யலாம்.. இப்போது வெளியில் உதவி கேட்கவும் வழி இல்லை.. சோ கப்பலிலிருந்து உடனடியாக எல்லாரும் வெளியேறனும்.. எல்லாரும் கொஞ்சம் ஒத்துழைங்க ப்ளீஸ்.. லைஃப் போட்ஸ் எடுத்து முதலில் கடலில் இறக்கி விட்டு எல்லாரும் குதிக்கனும்.. தியா லைஃப் ஜக்கெட்டை அவங்க கிட்ட கொடு… எல்லாரும் ஜாக்கட்டைப் போட்டுக்கங்க… ஃபாஸ்ட்.. நமக்கு டைம் இல்ல.." என்று ஆர்யன் பேசி கொண்டிருக்கும் போதே கீழே ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் பயந்தவர்களின் அலறலில்.. அனைவருக்கும் மரண பயம் தொற்றிக் கொண்டது…

அதுவும் பெண்களின் நிலை சொல்லவே வேண்டியதில்லை. அவர்களின் நடுக்கத்தையும் அச்சத்தையும் கண்டு நாயகர்களின் உயிர் உறையத் தொடங்கியது. அவர்களைச் சமாதானப் படுத்துவதா, இல்லை இக்கட்டான நிலையிலிருந்து மீள செயலில் இறங்கவா என்று புரியாமல் குழம்ப, மேலும் கேட்ட வெடிப்பு சத்தத்தில், இறுதி நேரத்து மரண பயம் அவர்களை காத்துக் கொள்ள சொல்லி உந்தித் தள்ள, சிலையாக இருந்தவர்கள்.. துடிப்புடன் செயல்படத் தொடங்கினர். அடுத்து அனைத்தும் மின்னல் விரைவுதான்.

தியாவின் அறிவுறுத்தலின் படி, ஆண்களின் உதவியோடு இருந்த இரு லைஃப் போட்களையும் கடலில் இறக்கினர்.

கீழே இறக்கியதும் அவற்றிலிருந்த லாக்கை திறந்ததும், வேகமாக வெளியிருந்த காற்றை உள்வாங்கி அவை ஊதி விரிந்து கொண்டன.

"யாராவது ஜென்ஸ் முதலில் இறங்குங்க.. அப்போ தான் இறங்கும் லேடீஸ்க்கு ஹெல்ப் பண்ண முடியும்.." என்று கூறிக்கொண்டே பயணிகள் இறங்குவதற்காக இரண்டு கயிறுகள் கப்பலுக்கு வெளியே இறக்கிக் கொண்டிருந்தான் ஆர்யன்..

அவன் கூறிய பின்பும் யாரும் இறங்காமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே தான் நின்றனர்..

யாருக்கும் மற்றவர்களை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல மனம் வரவில்லை போலும்.

இதில் மனைவிமார்கள் அனைவருமே கணவர்களை இறுகப் பற்றிக் கொண்டு நின்றிருந்தனர்..

ஆனால் ஆரோனும் சூரஜும் சற்றும் தாமதிக்கவில்லை. யாருடைய அனுமதியையும் வேண்டவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அங்கிருக்கும் அனைவரும் காப்பாற்றப் படவேண்டும். தயங்கி.. பயந்து உள்ளேயிருந்தால், அது இயலாது… கூடவே யோசிக்கவும் நேரமில்லை. அதனால் ஆர்யன் கட்டி இருந்த கயிறுகளை ஆளுக்கொருவராய் பிடித்துக்கொண்டு லாவகமாக கீழே மடமடவென , ஒவ்வொரு படகிலும் இறங்கி விட்டனர்.

லைஃப் போட்டில் ஒரு முனையில் வாகாக அமர்ந்து கொண்டு, மற்றவர்களைப் பிடிக்கத் தயாராக இருந்தனர் இருவரும்.

"லேடீஸ் எல்லாரையும் அனுப்புங்க.." என்று ஆர்யன் குரல் கொடுக்க அங்கிருந்து கணவர்களை விட்டு எந்த பெண்களும் நகரவில்லை

விதார்த் கைகளை இறுக பற்றி கொண்டிருந்த மீரா, "நீங்களும் வாங்க விது ப்ளீஸ்.." என்று கெஞ்ச

"பேபி.. நான் வந்துவிடுவேன் முதலில் நீ போ.. அடம் பிடிக்கும் நேரம் இல்லை இது.." என்றவன் அவளை அழுத்தமாக பிடித்து கொண்டு ஆர்யனிடம் வந்தான்

அதே போல் தான் ஜனனியும், நாச்சி, திகம்பரி, சுவர்ப்ணா ,கலை, ஷாலினி அனைவருமே அடம் பிடித்துக் கொண்டிருந்தனர்..

"நான் போக மாட்டேன் பிரவீன்.. இந்த கப்பல் வெடிச்சுருமா..? ஐயோ எல்லாருக்கும் முங்கிப் போயிடுவோமா ?" என்று, எல்லாரும் மனதிற்குள் வைத்திருந்த பயத்தை நாச்சி வாய் விட்டே கேட்டுவிட, சரியாக அதே நேரம் அதிகமாக உள்புகத் தொடங்கி இருந்த தண்ணீரால் கப்பல் ஒரு முறை பலமாக ஆடியது..

அதில் அனைவருமே ஒரு முறை நிலை தடுமாற, ஜனனி,ஷாலினி போன்ற மெல்லிய மனப் பெண்கள்.. கண்ணீருடன் அலறினர்.

"நாச்சி ஒன்னும் ஆகாது.. நீ தைரியமானவ தானே... பேசாமல் போட்டுக்குப் போ.. கப்பலில் இருந்தாத் தான் டேஞ்சர்.. ஆர்யன் சொல்றார்ல புரிஞ்சுக்கோ.. " என்று அவளைப் பிடித்து முன்னால் தள்ளினான் பிரவீன்..

"நானும் போக மாட்டேன்.." என்று அடம் பிடித்துக் கொண்டிருந்த ஜனனி ,கலை, வர்ஷினி, திகம்பரி, ஷாலினி அனைவரையும் அவரவர் கணவர்கள் மிரட்டி தான் அழைத்து வர வேண்டியதாக இருந்தது.

முதலில் ராயர் உதவியோடு திகம்பரி தான் இறங்கினாள்..

இறங்குவதற்கு முன்பே "நீங்களும் வாங்க ப்ளீஸ்.." என்றவள் கண்களில் பயத்துடனும் கண்ணீருடனுமே இறங்கினாள்..

அவள் பாதி தூரம் சென்றதுமே மீரா மறு கயிற்றை பிடித்துக்கொண்டு இறங்க, பின்னாடியே ஒவ்வொருவராய் இறங்க..

கீழே நின்ற ஆரோனும் சூரஜும் இறங்கிய பெண்களை தாம் நின்றிருந்த போட்டில் பிடித்து இறக்க தொடங்கினர்.

கடைசியாக வர்ஷினியும் கலையும் இறங்க முற்படும் போது தற்செயலாகக் கலை திரும்பிப் பார்க்க, படு வேகமாக புகை பரவ துவங்கி இருப்பதும், கப்பலின் ஒரு பாகத்தையே அது மறைப்பதையும் கண்டு பயந்து கிருஷ்ணாவின் சட்டையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டாள்..

அவள் நிலை புரிந்தவனும் "சீக்கிரம் இறங்கு மா..யோசிக்க நேரமில்ல.... எல்லாரும் வந்துருவோம்.. போ.." என்று அவளை யோசிக்க விடாமல் இறங்க வைத்தான்.

அடுத்து வர்ஷினி இறங்க, அவள் பாதி வழியில் இறங்கிக் கொண்டிருந்த போதே கப்பல் லேசாகத் தடுமாறியது...
 

sivanayani

விஜயமலர்
அதில் கயிறு ஊசலாட, அவள் விழுவது போல் சென்றுவிட "பார்த்து மா.." என்று சத்தமிட்ட அகிலனின் பதற்றக் குரலைத் தொடர்ந்து

"கயிறை கெட்டியா பிடிங்க..." என்ற சூரஜின் குரலும் ஒலித்தது..

ஒருவாறு சுதாரித்து அவள் கயிற்றை இறுகப் பற்றி கீழே இறங்கினாலும் அவளுடைய கரம் வழுக்கி விட, அப்படியே கீழே விழுந்தவளை, சூரஜ் தன் கரங்களில் தாங்கிக் கொண்டான்..

ஒரு கணம் ஆடிப்போனாள் வர்ஷினி. அவள் மட்டுமல்ல. அகிலனும்தான். சூரஜ் அவள் விழாமல் தாங்கிக்கொண்டதும், பெரும் நிம்மதியுடன், தன் அருகே நின்றிருந்த சுலோச்சனா இறங்க உதவி செய்தான்.

அனைத்துப் பெண்களும் இரு படகுகளிலும் ஏற்றியபின், ஆண்களை இறங்குமாறு ஆரோன் குரல்கொடுத்தான்.

பெண்கள் அனைவரும் இறங்கி முடித்தும் வேகமாகக் கண்களைச் சுழற்றிய ஆர்யன்.. தியாவைத் தேட, அவளோ.. நின்றிருந்த ஆண்களை இறங்குமாறு பணித்துக்கொண்டிருந்தாள் . "தியா.." என்ற ஆர்யனின் கோபமான குரலில் பதறியடித்துக் கொண்டு அவள் அவனை நோக்கி வர,

"பெண்களைத் தானே முதலில் இறக்கிட்டு இருக்கோம்.. நீயும் இறங்கு.. கமான்.." என்று அவசரமாகக் கத்தினான் ஆர்யன்..

ஆனால் தியாவோ அசையாமல் நின்றாள்..

"நான்... இப்போ… கோ கேப்டன்.. அந்த பொறுப்பு தான் முதல்.. கடமையை விட்டுவிட்டு ஓட சொல்றீங்களா.. நெவெர்.." என்று உறுதியாக கூறியவள்.. தான் செய்து கொண்டிருந்த வேலைக்கு திரும்ப, அதற்குள் வெறும் புகையாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்த இடம் இப்போது மஞ்சள் நெருப்பால் சூழ்ந்திருந்தது..

ஒரு பக்கம் கப்பல் எரிய ஆரம்பித்திருக்க, மேலே நின்றிருந்த ஆண்களுக்கு லேசான மூச்சு திணறல் வேறு ஏற்பட இரும ஆரம்பித்தனர்.

டாக்டரான ப்ருத்வி அபாயம் புரிந்தவனாய் "கேப்டன் சீக்கிரம் இங்கிருந்து வெளியேறனும்.." என்றான் லேசாக இருமி கொண்டே

"கம் ஆன்.. எல்லாரும் இறங்குங்க.. அண்ட் உடனே இந்த இடத்தை விட்டு தள்ளி போய்டுங்க.. கப்பல் பக்கத்தில போட்ஸ் இருக்க கூடாது.. எனி டைம் கப்பல் வெடிக்கலாம்.. மூழ்கலாம்.. அது... போட்ஸ கவிழச் செய்திடலாம்.." என்று ஆர்யன் அழுத்தமாகக் கூற அனைவரும் வேகமாக இறங்க தொடங்கினர்

அதற்குள் முதல் போட் பக்கம் வந்த ஆர்யன், "ஆரோன்.. சூரஜ் எல்லாரும் இறங்கினதும் போட்டை நகர்த்துங்க .. முடிஞ்ச வரை வேகமா தள்ளி போங்க.. சீக்கிரம்.." என்று கத்தினான்

“முதல்ல எல்லாரும் இறங்குங்க” என்று சூரஜ் கத்த,

விதார்த், அக்கண்யன், ராயர், கிருஷ்ணா, பிரவீன், தர்ஷன் அனைவரும் கயிறுகளைப் பிடித்துக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக இறங்க, அனைவரும் இரு போட்டிலும் ஏற்றப்பட்டனர்.

அதே நேரம் ஜெயவர்மன், வேகமாகக் கப்பலின் உள்ளே ஓட, அதைக் கண்ட ஆர்யன் அதிர்ந்தவனாக,

“வர்மன்… என்ன செய்ரீங்க… முதலில் கீழே இறங்குங்க… " என்று சத்தமிட,

"டோன்ட் வொரி கப்டன்… யாராவது உள்ளேயே இருக்காங்களான்னு பாத்துட்டு வரேன்… நீங்க இவங்களைப் பாருங்க…" என்று அவனுடைய மறுப்பைக் கருத்தில் வாங்காது வேகமாக உள்ளே நுழைய, ஜெயவர்மனைத் தடுப்பதா, இல்லை இறங்கும் பயணிகளை பார்த்து உதவி செய்யவா என்று குழம்பிய ஆர்யனுக்கு, ஜெயவர்மனின் மீதிருந்த நம்பிக்கையால், அவ்விடம் விட்டு நகர்ந்து, அவர்களின் காக்பிட்டிலிருந்த எமேர்ஜன்சி கிட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

அதில் முதலுதவிப் பெட்டி, கயிறு எமெர்ஜென்ஸி விளக்கு, லைட்டர், சிறு கத்தி போன்றவை இருக்கும். அதனையும் கைக்குக் கிடைத்த உணவுப் பொருட்களையும் பையில் திணித்தான். வெளியே வந்தவன், இறங்கிக் கொண்டிருந்த ப்ரவீனின் கையில் கொடுத்தான். பின் மற்ற பயணிகள் இறங்குவதற்கு உதவி செய்யத் தலைப்பட்டான்.

தர்ஷன் இறங்கும் பொது உள்ளுக்குள் புகுந்திருந்த அதிகப்படி தண்ணீரால் கப்பலின் பின்புறம் அமிழத் தொடங்கி இருக்க, ஒரு புறமாய் சரியத் தொடங்கியது..

அதில் அபிராம் தடுமாறி ஒருபக்கமாக சரிய, "அபிராம் பார்த்து.." என்று கத்தி கொண்டே அவனைப் பிடித்தான் ஆதீரநந்தன்

இப்போது கடைசியாகக் கப்பலில் ஆனந்தன், அபிராம், ஆதீரநந்தன், ப்ருத்வி, மற்றும் சில வேலையாட்களுடன் ஆர்யன், தியா மட்டுமே இருந்தனர்..

கப்பல் நிலை இல்லாமல் சாய ஆரம்பித்திருக்க, நெருப்பும் வேகமாகப் பரவ ஆரம்பித்தது..

எந்த நொடி வேண்டுமானாலும் கப்பல் வெடித்து விடும் என்ற அபாயம் நெருங்க "ஜம்ப் எவரிபடி.." என்று கத்தினான் ஆர்யன்

அதில் அனைவரும் திகைத்து விழிக்க, "குதிங்க ப்ளீஸ்.. கப்பல் எந்த நொடி வேண்டுமானாலும் வெடிக்கலாம்.. ஜம்ப் ஐ சே.." என்று கத்தியவன் கீழே பார்த்து

"விதார்த், கிருஷ்ணா மூவ் தேட் போட்.. சீக்கிரம்.." என்று கத்தினான்.

அதே நேரம் உள்ளே சென்ற ஜெயவர்மன், கப்பல் சரிய, சரிந்த வேகத்திற்கு இழுபட்டுக் குட்டிக்கரணம் அடித்துச் சுருண்டு சுழன்று உருண்டு விழுந்தவன், அங்கே நடுவிலிருந்த தூண் ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டான். நெற்றியில் அடிபட்டு இரத்தம் வேறு கசியத் தொடங்க, விழிகளோ, யாரேனும் தென்படுகின்றரா எனத் தேடியது.

ஒரு ஓரமாக இன்னொரு தூணைப் பிடித்துக்கொண்டிருந்தான் ஒரு ஆரஞ்சு உடையணிந்திருந்த வேலையாள்.. அவனின் கையில் முதலுதவிப் பெட்டி.. ஓ அதை எடுக்க சென்று இருந்தான் போலும் என்று புரிந்து கொண்டாலும், பின்னால் அவனுக்கு அருகாமையில் வந்துவிட்ட தீயைக் கண்டு பதறியவனாக,

“இதோ பார்… உனக்கருகே தீ வந்துவிட்டது… உன் கையை விடு… நான் பிடித்துக் கொள்கிறேன்…” என்று இவன் கத்த, அவனோ பயந்தவனாய் மாட்டேன் என்று மறுத்தான்.

“லிசென்… நீ சாவுக்குப் பயந்து சாவுக்குப் பக்கத்திலேயே இருக்கிறாய்… பின்னால் நெருப்பு, கையை விடு…” என்று கத்த, அப்போதுதான் திரும்பிப் பார்த்த அவன், பற்றியெரியும் தீயைக் கண்டு மிரண்டு.. தன்னை மறந்து கையை விட, வேகமாகச் சரியத் தொடங்கிய கப்பலின் ஈர்ப்பு விசைக்கேற்ப, கீழே செல்லத் தொடங்க…. அவனை எட்டிப் பற்றினான் ஜெயவர்மன். அதே நேரம் மீண்டும் கப்பல் சமநிலைக்கு வர, இருவரும் தங்கள் அருகிலிருந்த இரும்புத் தூணைப் பற்றி நின்றனர்.

நிற்க முடியாது தள்ளாடிய வேலையாளைக் கண்டதும், அவனைப் பற்றிப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தவனின் காலில் மோதியது நகர்ந்து வந்திருந்த ஒரு பெட்டி.. குனிந்து பார்த்தவனுக்கு, யாருடையது என்று தெரிந்தது.

அது ஆனந்தனுடையது. அவனுடைய பல வருட முயற்சியின் விளைவால் கண்டுபிடிக்கப்பட்ட ரோபோ இருக்கும் பெட்டி… தொலைத் தொடர்பிற்கு உதவும் என முன்தினம் அதன் டெமோவில் ஆனந்தன் சொல்லியது நினைவு வர... இத்தகைய இக்கட்டான நிலையில் அது எப்படியும் உதவும் என்பது புரிய, அதையும் எடுத்துக்கொண்டு, வெளியே வந்தான்.

அதே நேரம் அதற்குள் கப்பலிலிருந்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வேகமாக நீரில் பாய, அவர்களைப் பற்றி.. படகுகளில் தூக்கி விட்டனர் மற்றவர்கள்.

வேலையாளுடன் வந்த ஜெயவர்மனைக் கண்டு, ஆர்யன்

“ஓ மை காட்.. இவர் உள்ளே இருந்தாரா..” என்று கூறியவன், உடனே அவனை இறங்குமாறு பணிக்க, மறு கணம், அந்த வேலையாளைக் கைவிடாமலே கடலுக்குள் குதித்தான் ஜெயவர்மன்.

' எல்லோரும் கப்பலை விட்டு லைஃப் போட்டுகளில் ஏறிவிட்டனர்' என்ற நிம்மதியுடன் ஆர்யன் திரும்பிப் பார்க்க, தியாவும் அதே நிம்மதியுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அப்போது தான் தியா இன்னும் கீழே குதிக்காமல் அங்கேயே இருப்பதை ஆர்யன் புரிந்துகொண்டான்.

அவளைப் பார்த்ததும் அவன் கோபம் ஏகத்திற்கும் எகிற, "ஏய் முட்டாள் இன்னும் என்ன பண்ணுற.. குதி.. கம்.." என்றவன் கீழிருந்த லைப் ஜாக்கெட் ஒன்றை எடுத்து அவள் கைகளில் திணித்தான்..

"போட்டுட்டு குதி தியா.. ஃபாஸ்ட்.."

ஆர்யன் படபடப்புடன் கத்த அவளும் லைஃப் ஜாக்கெட் வேகமாக அணிந்து கொண்டவள் , "வாங்க கேப்டன் சேர்ந்தே குதிப்போம்.." என்று அவனையும் பிடித்து இழுத்தாள்

ஆர்யனோ, "ப்ச்.. நீ குதி.. நான் ஒரு முறை உள்ளே பார்த்து விட்டு வருகிறேன்.." என்று கூறி கொண்டே உள்ளே போகத் திரும்ப

"அப்ப நானும் பார்க்க வரேன் சார்.." என்ற தியாவின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவன்

"ஆர் யூ க்ரேஸீ... ஜம்ப்.." என்றான் கோபமாக,

அவளோ " நோ சார்… உள்ளே போய் பார்க்க இது நேரமில்லை. கப்பலின் அரைவாசிப் பகுதி தீ பற்றிக்கொண்டது… நீங்களும் வாங்க குதிக்கலாம்…" என்று அவள் பிடிவாதமாகக் கூற ஆர்யனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றில் பறக்கத் தொடங்கியது.

அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று மூளை மட்டும் வேலை செய்ய, தியா விஷயத்தில் மட்டும் அவனுடைய மனது அச்சத்தில் வேகமாகத் துடித்தது.

இனியும் தாமதிக்க முடியாது என்கிற நிலையில், சற்றும் தாமதிக்காது அவளைத் தன் கரங்களில் ஏந்தியவன், ஒரு கணம் அவளை உற்றுப் பார்த்தான். பின் குனிந்து,

"ஆனந்தன் கெட் ஹர்.." என்று கீழே பார்த்து குரல் கொடுத்துக் கொண்டே அவளைத் தூக்கிக் கடலில் வீச, அவன் வீசிய வேகத்தில் கடலுக்குள் மூழ்கி லைஃப் ஜாக்கட்டின் உதவியுடன் மேலே வந்த தியா, கோபத்துடன் ஆர்யனை தேட.. அபிராம் அவளை இழுத்துக் படகில் போட.. ஆனந்த் துடுப்பை அசைத்து சற்றுத் தூரம் செல்லும் போதே.. கப்பலின் நெருப்பு எரிந்து கொண்டிருந்த பகுதி ஒரு பெரிய சத்தத்துடன் வெடித்தது.

வெடித்த வேகத்தில் கப்பலின் பாகங்கள் எல்லாம் ஒவ்வோர் புறம் பறக்க, பெரிய பாகம் ஒன்று அவர்களைத் தாண்டிச் சென்று விழுந்தது.

அது வரை கப்பலிலேயே தன் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்த தியா, கப்பல் வெடித்ததைக் கண்டதும், செயலிழந்து போனாள். அதுவும், ஆர்யன் வெளியே வராததை உணர்ந்த தியா,

"ஆர்யன்.." என்று கதற அங்கிருந்த அனைவருமே ஆர்யனின் நிலை உணர்ந்து உறைந்தே விட்டனர்..

தங்கள் அனைவரையும் அத்தனை வேகமாகக் காப்பாற்றிய ஒரு செயல் வீரனின் அத்தியாயம் இத்தனை எளிதில் முடிந்துவிடுமா என்ன..? அதை எண்ணி, அனைவர் மனங்களும் கதறின.

"ஆர்யன்.. ஆர்யன்.." என்று தியா கத்தி கண்ணீருடன் அழைத்துக் கொண்டிருக்க, அவளின் அலறலைக் காற்று உள்வாங்கி கடலெங்கும் ஒலிக்கச் செய்ய.. தீயோ அகோர பசியுடன் தன் நாவில் அகப்பட்ட கப்பலின் பாகங்களைப் புசிக்கத் தொடங்கியது...


http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/


வணக்கம் மக்களே புதிதாக ஒரு முயற்சியில் பதினாறு எழுத்தாளர்கள் இணைந்து எஸ் எம் எஸ் வாரியர்ஸ் 016 என்கிற கதையை எழுதி இருக்கிறோம். இந்த கதை எஸ் எம் எஸ் தளத்தில் உள்ள பதினாறு எழுத்தாளர்களின் கூட்டுமுயற்சியில், ரிலே கதை போலல்லாது ஒவ்வொரு அதிகாரங்களும், 16 எழுத்தாளர்களின் கூட்டு முயற்சியுடன் எழுதி இருக்கிறோம். இக்கதையில், எழுதிய ஆசிரியர்களின் நாவலில் வந்த நாயக நாயகிகளை இணைத்து, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு விறுவிறுப்பாக, திகிலூட்டும் வகையில் எழுத முயற்சி செய்திருக்கிறோம். படித்து உங்கள் கருத்தை கூறுங்கள்.
 

sivanayani

விஜயமலர்
11576


(7)

அனைவரும் கப்பலிலிருந்து குதித்ததும் தீயானது, வானைத் தொடும் வேகத்தில் எரியத் தொடங்கியது. பளுவான கப்பலின் பாகங்களைக் கடல்நீர் ஆவலுடன் விழுங்கிக் கொள்ள... எஞ்சியதை நெருப்பு ஆவேசத்துடன் புசிக்கத் தொடங்கியது.

அவர்களின் உயிர்காத்த ஆபத்பாந்தவன், கேப்டன் ஆர்யனின் தடயம் மட்டும் யாருக்கும் தென்படவில்லை. இந்தத் தீயின் அசுர ஆட்டத்தில் அவன் தப்பி இருப்பானா? இல்லை தப்பிக்கத்தான் முடியுமா? நினைக்கும் போதே உயிர் மடிந்து போனது தியாவிற்கு.

தன்னையும் மறந்து "ஆர்யா... ஆர்யா..." என்று கத்தி அழைத்தவள்.. திடுமென்று... கடலில் குதிக்க முயன்ற விநாடி, அவளைப் பாய்ந்து பற்றிக்கொண்டான் அபிராம்.

“சிஸ்டர்… என்ன செய்றீங்க… உங்க சாகசத்தைக் காட்ட இது நேரமில்லை... தண்ணீரில் டீஸல் கலந்திருக்கு…. சுற்றிலும் தீ வேற... உங்க மேல பட்டா போதும்... அவ்வளவுதான்... ப்ளீஸ்… கன்ட்ரோல் யுவர் செல்ஃப்… கேப்டனுக்கு எதுவுமாகாது.. அவர் எப்படியும் தன்னைக் காத்துக்கொள்வார்…” என்று முடிக்கவில்லை, பெரும் சீற்றத்துடன் திரும்பி அவனை முறைத்துப் பார்த்தாள் தியா,

“நோ…லீவ் மீ... ஐ ஹாவ் டு கோ… அவரை தேடி நா போகணும்...…ஒரு வேளை புகையினால் மயங்கி இருந்தால்.. ப்ளீஸ் லெட் மி கோ…” என்று கைப்பிடியினின்று விடுபட முயல, அந்நொடியில் எரிந்து கொண்டிருந்த கப்பலின் ஒரு பெரும் பகுதி பலமாக வெடித்துச் சிதறியது. சிதறிய பாகங்கள் அவர்களை நோக்கித் தெறிக்க, தம்மைத் தாக்காத வண்ணம், அனிச்சை செயலாய் குனிந்து குப்புறப் படுத்துக் கொண்டனர் அனைவரும்.

காதைப் பொத்தி மடிந்து அமர்ந்த தியாவிற்கோ அனைத்தும் மரத்துப் போன உணர்வு. நிமிர்ந்து பார்க்க.. தீ… ஊழித் தீ மட்டுமே புலப்பட்டது.. உடலெங்கும் தகிப்பது போன்ற உணர்வு..

ஆர்யன், குடும்பம் இல்லாதவன் என்று, சொல்லும் பொழுது எழாத வலி, இப்படி நடுக் கடலில் உண்மையாகவே.. யாருமற்ற அநாதையாகவே... அவன் உடல் சிதறிவிட்டதோ என்று எண்ணியபோது, நெஞ்சே பிளந்தாற் போல வலியில் துடித்துப் போனாள்.

“ஆர்யா…ஆர்யா.....” என்று புலம்பியவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிய.. விம்மல் வெடிக்க "ஆ...ர்யா… ஐம் ஸாரி… ஆர்யா… ப்ளீஸ் கம் பக் டு அஸ்... " எனக் கதற..... அவளுடைய கதறலைக் காற்று தன்னோடு அழைத்துச் சென்றதோ, சற்றுத் தள்ளி.. எரிந்து கொண்டிருந்த ஒரு கப்பல் பகுதியின் பின்னால், கடல்நீரில் சிறிய வளையம் ஒன்று பிறந்தது. அது பின் பல சிறிய மற்றும் பெரிய வளையங்களாக மாறத் தொடங்கியது… அவற்றின் நடுவில் இருந்து.. துள்ளி எழும் சுறாவென நீரைக் கிழித்தவாறு எம்பி வந்தான் வெள்ளுடைக் கடல் வேந்தன் ஆர்யன் அறிவுடை நம்பி...

நெற்றி மறைத்த கேசமானது.. கண்களைத் திறக்க இயலாத அளவு தண்ணீரை வழியச் செய்ய, தலையைச் சிலுப்பி நீரை வெளியேற்றியவன், ஆழ மூச்செடுத்து, கைகளால் நீரைத் துழாவி தன்னை நிலைப் படுத்திக் கொண்டு, கூரிய சிவந்த விழிகளால் சுற்றிலும் தேடினான். கண்னுக்கு எட்டிய தூரம் வரை கரும் புகைமண்டலமாக இருந்தது. கூடவே செந்நிறத் தீயும் தன் கரம் நீட்டி இவனை அழைப்பது போலத் தோன்ற, ஆக்ரோஷமாக எரியும் தீயின் வேட்கைக்கு… உயிர் காக்கும் படகுகள் தப்பியிருக்குமா.. தன் பயணிகளுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று எண்ணியவனின் மனம் பதறிப்போனது.

விழிகளை அழுந்த மூடியவனின் மனக்கண்ணில் தியாவின் முகம் வந்து போனது...

அந்த இக்கட்டான நிலையிலும் தன்னைப் பற்றி யோசிக்காது, அவனையும், பயணிகளையும், பற்றி அக்கறையுடன் யோசித்த தியாவிற்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்கிற அச்சம் அவனைப் பற்றிக் கொண்டது. லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்தவளை கவனமாகத்தான் தூக்கி வீசினான்.. ஆனாலும் ஏடாகூடமாக... அதற்கு மேல் எதையும் சிந்திக்க திரணியற்றவனாக நீந்தத் தொடங்கினான். டீசல் கடலில் மிதந்துகொண்டிருந்ததால், சாதாரண நீச்சல் அடிக்க முடியாமல் உள்நீச்சல் அடிக்கத் தொடங்கியவனுக்கு அடிக்கடி எழுப்பி பிராணவாயு எடுக்கவேண்டித்தான் இருந்தது.

அவனுக்குத் தன்னைப் பற்றிய பயமோ கவலையோ இல்லை. அநாதையாக உலகத்தில் வாழ்ந்தவன், அனாதையாகவே மரணிப்பதில் அவனுக்கொன்றும் வருத்தம் கிடையாது. ஆனால், அவனை நம்பி வந்த பயணிகள்… அவர்களுக்கு ஒரு சின்னக் கீறல் விழுந்தாலே பதறிப்போவான்… ஆனால், இன்று, இத்தகைய ஒரு இக்கட்டான நிலை. யாரும் எண்ணிப் பார்க்க முடியாத ஒரு அவலம்…. அது அவன் இருக்கும் போதே... அவனின் பொறுப்பில் இருந்த பயணிகள் சந்திக்கவேண்டியதாகிவிட்டதே என்று எண்ணும் போதுதான் அவனால் தாள முடியவில்லை.

அதே நேரத்தில், படகுகளில் அமர்ந்திருந்த அனைவரின் முகங்களிலும் ஈயாடவில்லை. அங்கிருந்தவர்கள் அனைவரும், குறிப்பாக ஆண்கள், தொழில் வட்டாரத்தில், தங்களுக்கெனத் தனி முத்திரை பதித்தவர்கள்… இக்கட்டான நிலைகளைக் கூட உறுதியுடன் தாண்டிச் சென்றவர்கள். இதுவரை எதிரிகளை அச்சத்தின் உச்சியில் நிலை நிறுத்தியவர்கள், முதன் முறையாக அச்சத்தைக் கண்ணில் தேக்கியிருந்தனர். உயிரைக் காக்கும் முயற்சியில் பரந்த கடலின் மத்தியில் அதன் நீரோட்டத்தை எதிர்த்துப் பயணித்துக் கொண்டு இருந்தவர்கள், அடுத்து என்ன.. செய்ய வேண்டும் என்பதை சிந்திக்கவும் திரணியற்றவர்களாக, அமர்ந்திருந்தனர். நான்கு பேர் மட்டும் படகுகளைச் செலுத்த, கரித்தூசி படிந்த முகத்துடன், எதுவும் பேசாத் திராணியற்று, எரிந்து கொண்டிருந்த கப்பலின் பகுதிகளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர் மற்றவர்கள்.

பல கோடிப் பெறுமதி மிக்க, அரிய கலைப் பொருட்களைக் கொண்ட கப்பல்.. சில மணித்துளிகளில் கரிக்கட்டையாக, ஒன்றுமில்லாததாகப் போய்விட்டதே… இதுதானே உலக நியதி… ஒரு கணத்தில் அழிந்து போகக் கூடிய பொருட்களுக்காக எத்தனை ஆசைகள்.. போராட்டங்கள்… எத்தனை சிக்கல்கள்…கசப்புகள்… நிலையில்லா வாழ்வுக்காக எவ்வளவு ஆர்பாட்டம். கொஞ்சம் தாமதித்தாலும், அந்தக் கப்பலோடு தம் உடலும் வெடித்துச் சிதறி கடலில் கரைந்து இருப்பார்கள்.… இதை ஒரு செய்தியாக்கி ஒரு நாள் பேசுவார்கள்… இருநாள் பேசுவார்கள்… ஒரு நாள் அழுவார்களாக இருக்கும்.. அதன் பின்… அவர்களைச் சுலபத்தில் இந்த உலகம் மறந்து போகும்… அத்தகைய ஒரு மாயையின் பிடியில் சிக்கியிருக்கும் மனிதனுக்குள் எத்தனை சண்டைகள்.. போட்டிகள்.. பொறாமைகள்.… எண்ணிய ஆரோனின் விழிகள் சூரஜின் முகத்தைச் சங்கடத்துடன் பார்க்க, சூரஜூம் அதே உணர்வுடன்தான் அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

இருவரின் எண்ணங்களும் ஒன்றாகவே பயணிக்க, அந்தக் கணம் தாம் செய்த தவறுகளை உணர்ந்தவர்களாகத் தமது தலையை மெதுவாக ஆட்டி மன்னிப்பு வேண்ட .. அங்கே வார்த்தைகள் வேண்டியிருக்கவில்லை.

அந்த இரு ஜாம்பவான்களும், கண்ணுக்கு முன்னால் நடந்த அவலத்தில், நிமிடங்களில் நொடிகளில் நிலை மாறும் மனித வாழ்வின் தன்மை புரிந்தவர்களாக.. தம் பகைமையை அக்கணமே மறந்து போயினர். அதே நேரம், விதார்த்தும் அகண்யனும் கூட வாழ்வின் தத்துவம் புரிந்தவர்களாக, கொழுந்துவிட்டெரியும் தீயையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தனர்.

அமர்ந்தவாறு படகின் தரையை வெறித்துக் கொண்டிருந்த ப்ருத்வி தன் காலின் அருகில் உதிரம் வடிந்து வருவதைக் கண்டான். பதற்றமாக நிமிர்ந்து பார்க்க, ஓரிருவருக்குக் கப்பலின் ஒரு சிறிய பாகங்கள் கீறிவிட்டுச் சென்றிருந்தாலும், இரத்தம் ஆறாக ஓடும் அளவிற்குக் கீறவில்லை… அப்படியானால் எங்கிருந்து இந்த உதிரம் வருகிறது? யோசித்தவனாக உதிரம் வந்த வழியினை அறிந்து பின்னால் திரும்பிப் பார்க்க.. கப்பலில் வேலை செய்த பணியாளான அழகரின் இடையில் இருந்து இரத்தம் வடிந்துகொண்டிருப்பதை அப்போதுதான் கண்டான்.

பதறியவனாக, எழுந்து அந்த அழகரை நெருங்க, அழகரும் அப்போதுதான் தனது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட வலியை உணர்ந்தான் போலும். முகம் சுருங்க வலித்த இடத்தைக் குனிந்து பார்த்தான். அங்கே கொப்பளித்தவாறு வெளிவந்த இரத்தத்தைக் கண்டு, அலறிப்போனான். கரத்தால் அந்த இடத்தில்.. அழுத்த முயன்றபோதுதான், அங்கே கடினமான பொருள் ஒன்று இருப்பது தட்டுப் பட்டது.

அவன் அருகே நின்றிருந்த, தர்ஷன், அவசரமாக அழகரின் லைஃப் ஜாக்கட்டைக் கழற்ற, ஒரு சாண் அளவில், கப்பலின் கூரிய பகுதியொன்று துளைத்தவாறு நின்றிருந்தது.

ஓ காட்… முதலில் இந்த இரத்தத்தை நிறுத்தவேண்டும். இல்லாவிடில் உயிருக்கே ஆபத்து.. பதறியவனாக ப்ருத்வி அவனருகே சென்றான்.

அனைவரின் முகத்திலும் இரத்தம் கண்டு அதிர்ச்சி தோன்றியது. அது வரை தைரியமாக இருந்த அழகர், தன் வயிற்றில் ஏறியிருந்த கூரிய பாகத்தைக் கைகளில் பட்ட இரத்தத்தைக் கண்டதும், அதுவரையிருந்த திடம் காணாமல் போக, கண் மயங்கி கடல் புறமாகச் சரியத் தொடங்கினான். அதைக் கண்ட அகிலன் சற்றும் தாமதிக்காது, அவனைப் பற்றி அணைத்து.. உள்ளே இழுத்து படகின் தரையில் படுக்க வைக்க, கடல்நோக்கி சரிந்த வேளையில் அழகரின் கையில் இருந்து இரத்தத் துளிகள் நீரில் விழுந்து கடலோடு கலந்து போனதை யாரும் கவனிக்கவில்லை.

மண்டியிட்டு அமர்ந்த ப்ருத்வி, அவனுடைய வயிற்றைத் துளைத்திருந்த கூரிய பகுதியை மெது மெதுவாக வெளியே எடுக்க, உயிர் போகும் வலியில் கத்தினான் அழகர். கொப்பளித்து வெளிவந்த குருதி கண்ட ப்ருத்வி, முகம் கறுக்க நின்றான். இரத்தமோ கட்டுக்கடங்காமல் வர, உடனடியாகத் தையல் தேவை என்பது புரிந்தது. ஆனால் அதற்கு நேரமில்லை. தன் கரம் கொண்டு அழுத்தி, இரத்தபோக்கைத் தடுக்க முயல, அதைக் கண்ட ஆனந்தன் தன் சட்டையைக் கழற்றிப் பிருத்வியிடம் நீட்ட, அதை வாங்கிக் கொண்ட பிருத்துவி காயத்தின் மீது வைத்து அழுத்தினான். எனினும் சில நொடிகளில் சட்டையையும் மீறி இரத்தம் வெளிவருவதைக் கண்டவனிற்கு.. காயத்தின் தன்மை புரிபட..

" முடிந்தளவு விரைவா தையல் போடணும்... வேகமா படகைக் கரை நோக்கி செலுத்துங்க.” என்று ஒரு மருத்துவனாய் கட்டளையிட, விதார்த் உடனே துடுப்பை எடுத்துப் படகை நகர்த்தத் தொடங்கினான். அவனுக்கு உதவியாக காசி விஷ்வநாத ராயரும் வேகமாக துடுப்பை வீசத் தொடங்கினான். போட் விரைவாக நகரத் தொடங்கியது.

மறு போட்டில் ஆரோன் ஒரு துடுப்பைத் தானெடுத்து மறு துடுப்பைத் தனக்கு முன்னால் நின்றிருந்த சூரஜை நோக்கி எறிய, கைப்பற்றிக்கொண்ட சூரஜ் நிமிர்ந்து ஆரோனைப் பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த நட்பைக் கண்டு, தன் பகை மறந்து மெல்லியதாகச் சிரித்துத் தலையை ஆட்டித் துடுப்பை அசைக்கத் தொடங்கினான்.

அதுதான் சற்று முன்பு நல்ல பாடம் கற்றுக்கொண்டனரே அனைவரும்.

படகுகள் வேகமாக நகர.. அந்த நேரத்திலும் ஆர்யனின் தலை எங்காவது தென்படுகிறதா என்று தியா தேட, ப்ருத்வியோ அந்த காயம் பட்டிருந்த வேலையாளுக்குத் தன்னால் முடிந்த முதலுதவியைச் செய்துகொண்டிருந்தான். இரத்தம் கட்டுக்கடங்காமல் வர, தன் சட்டையையும் கழற்றியவாறு வந்த அகிலன் அதைச் சுருட்டிப்பிடித்தவாறு

“ப்ருத்வி, நான் அழுத்திப் பிடிக்கிறேன், நீங்கள் சென்று மற்றவர்களின் காயத்தைக் கவனியுங்கள்…” என்று கூறிவிட்டு சுருட்டிப்பிடித்திருந்த தன் ஷேர்ட்டை இரத்தம் தோய்ந்த ஷேர்ட்டின் மீது வைத்து முயன்ற அளவு இரத்தம் வராதவாறு, அழுத்திப் பிடித்தான். கிருஷ்ணாவும் பிரவீனும் ப்ருத்விக்கு உதவியாக தங்களால் முடிந்ததைச் செய்யத் தொடங்கினர். மருந்திடுவது கட்டுப் போடுவது போன்றவை செய்ய உதவி தேவைப்படவே செய்தது..

அந்த இக்கட்டான நிலையிலும் அனைவரின் விழிகளும் ஆரியனைத் தேடுவதை நிறுத்தவில்லை. தங்களைக் காப்பாற்றிய ஆர்யனின் வருகைக்கான எந்த அறிகுறியுமில்லாது இருந்ததைக் கண்டு என்ன செய்வது என்று தெரியாது உள்ளூர வருந்தினர்.

ஆர்யனோ, அங்கு தன் கைகள், கால்களைத் துடுப்பாகக் கொண்டு, வேக நீச்சலில், அசுரன் போல் முன்னேறத் தொடங்கினான்.

அவனுக்குப் பயணிகள் எந்தப் பக்கமாகப் பயணிக்கிறார்களோ என்கிற அச்சம் வேறு எழுந்தது. இது ஆழ் கடல், நினைக்க முடியாத பல கொடிய உயிரினங்கள் சுற்றித் திரியும் இடம். திசை தெரியாமல் எந்தத் திக்கில் நகர்கிறார்களோ..

கடல் வாழ் உயிரினங்களைப் பற்றியும், ஆழ் கடலைப் பற்றியும் அறிந்த அறிஞர்களுக்குக் கூட, இந்த நடுக்கடல் சிறு அச்சத்தைக் கொடுக்கும். அவர்களாலேயே, இலகுவாக அந்தக் கொடிய உயிரினங்களிடமிருந்து தப்ப முடியாது.

அப்படிப் பட்ட நிலையில், தரையில் மட்டும் கோலோச்சிய வீரர்களுக்குக் கடலைப் பற்றிய நுணுக்கம் எப்படித் தெரியப் போகிறது? அதை எண்ணும் போதே அவனுக்கு அடி வயிற்றைக் கலக்கியது. அவர்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில், தன் வேகத்தைக் கூட்டினான் ஆர்யன்.

கப்பலின் நெருப்பின் தாக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு மூன்று கிலோ மீட்டர் வரைக்கும் எந்த கொடிய உயிரினங்களும் அருகே வராது. ஆனால், அதற்கப்பால் அவர்கள் சந்திக்கவேண்டிய ஆபத்துக்கள் மிக மிக அதிகம்.

எலக்ட்ரிக் ஈல், அட்லான்டிக் மன்ட்லா, சுறா, பிரன்ஹா, கான்ட்ரு, ஜெலிஃபிஷ், டைகர்பிஷ், என கொடிய வகை மீன்கள் சுதந்திரமாக வாழக்கூடிய பகுதி.

குறிப்பாகச் சுறா, அது சுலபத்தில் இரையைக் கண்டு கொள்ள ஒரு துளி இரத்தம் போதும்… பயணிகள் எவருக்காவது காயம் ஏற்பட்டு, அவர்களின் உதிரம் கடலில் சிந்தினால், இரத்த வாடைக்குக் கூட்டமாக வந்து சேரும்..சிறு படகுகள் அவற்றின் தாக்குதலுக்கு உள்ளானால்… அது எவ்வளவு ஆபத்து.. அப்போதும்.. அவன் சிந்தனையில் தன் பயணிகளைப் பற்றிய கவலையே இருந்ததன்றி, தன்னைப் பற்றி அவன் எள் அளவும் யோசிக்கவில்லை.. நீரில் மூழ்கியவனின் காதுகளில் துடுப்பு அசையும் ஓசை கேட்க.. சிறு மகிழ்வுடன்.. அந்தப் புறமாக திரும்பி.. தண்ணீருக்குள்ளாகவே உள் நீச்சலாக வேகமாக சென்றான்.

அதே நேரம், படகுகள் முயன்றவரை வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்தன. பின்புறம் ஏதோ சத்தம் கேட்க திரும்பிய மீரா.. ஒரு இடத்தில் மெல்லிய அலைகளாய் அசைவினைக் கண்டதும் பதற்றம் தொற்றிக்கொண்டது. என்ன அது என்று உற்றுப் பார்த்தவளுக்கு, அது என்ன என்று அனுமானிக்க முடியவில்லை. ஆனாலும் ஒரு வித பீதி அவளை ஆட்கொண்டது. அவசரமாகத் தன்னருகே நின்றிருந்த, திகம்பரியையும் கலையையும் பார்த்து, அச்சத்துடன்,

“எதுவோ நம்மை நோக்கி வந்திட்டிருக்கு… அங்கே பாருங்க…” என்று அச்சத்தின் வெளிப்பாடாகக் கூவியவாறு அந்த இடத்தைச் சுட்டிக் காட்ட, அவளுடைய பதட்டம் நிறைந்த குரலில் அனைவரும் அவள் காட்டிய திசையை உற்றுப் பார்த்தனர். அவர்களின் கண்ணுக்கு வெறும் அமைதியான கடல் மட்டுமே தெரிந்தது. தன் உதடுகளைப் பிதுக்கிய, அமிர்தவர்ஷினி,

“ஒன்னும் தெரியலையே மீரா…” என்றாள் குழப்பமாக. அப்போது மீண்டும் ஒரு அசைவு வர, அதைக் கண்ட, சுவர்ப்பனா,

“ஐயோ… ஆமா… எதுவோ நம்மை நோக்கி வருது…” என்று பதற,

“அடி ஆத்தி… ஆமா… ஆமா… ஐயையோ… மாமா..டீப் ப்ளூ சீன்னு..... அந்த படத்தில பாத்தமே..…சுறா... அதுதான் இப்படி வரும்… மாமா….” என்று நாச்சி அலற, அவள் அலறலைக் கேட்டுப் பயந்த, கவிலயாவும் ஜனனியும், முகம் வெளுக்க, அவர்களையும் அவளின் அலறல் பயமுறுத்துவதை பார்த்த ப்ரவீன், “ஷ்… நாச்சி… சத்தம் போடாத… நீயே கத்தி கடலுக்குள்ள தூங்கிட்டு இருக்கிற சுறாவைக் கூட எழுப்பி விட்டு.. அழைச்சுட்டு வந்திருவே போல இருக்கு… பேசாம இருடி…” என்று அவளின் வாய் பொத்தி அடக்க முயன்ற வினாடி,

“அதோ.. அங்கே பாருங்க… ஏதோ கறுப்பாகத் தெரியுது…” என்று சுட்டிக் காட்டிக் கத்தினாள் ஷாலினி.

உள் நீச்சலில் வந்து கொண்டு இருந்த ஆர்யன், தூரத்தில் படகு சிறு புள்ளியாகச் செல்வதைக் கண்டு கொண்டவன், அவர்களை நோக்கி வேகமாக முன்னேறித் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள அவ்வப்பொழுது வெளியில் எழும் பொழுது.. அந்த இடம் சிறு சலசலப்பாக அளவுக்கு அதிகமாகவே அசைந்தது.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல.. பெண்களின் கதறல்.. அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்த.. ஆண்களும் துடிப்பை அதிகரித்த இதயங்களை அமைதிப் படுத்த முயன்றவாறு.. அவர்கள் காட்டிய திசையை உற்றுப் பார்த்தனர்.

எழும்பி எழும்பி விழுந்த அலைவினூடே எதைக் கண்டாளோ.. , தியா.. " ஆர்யன்.. அது... ஆர்யனா இருக்கும்.." என சொல்ல, அனைவரின் முகத்திலும் எல்லையில்லாமல் மகிழ்ச்சி தோன்றியது.

வந்துகொண்டிருப்பது ஆர்யனாகத்தான் இருக்கவேண்டும் என்கிற வேண்டுதலுடன் தங்கள் துடுப்பிடுவதை நிறுத்தி இருந்தனர் இரு படகினரும்.

கண்களில் கண்ணீர் குளம் கட்ட, தன் உயிரைக் கையில் பிடித்தவாறு ஆழ்கடலையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் தியா. அவளையும் மீறி, கரங்கள் இறைவனை வேண்டிக் குவிந்து வணங்கின. .

இதோ… அந்த அசைவு மிக மிக நெருங்கிவிட்டது… அனைவரும் ஒரு வித பதற்றத்துடன், வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, இதோ பத்தடியில் … அவர்களை நோக்கி... வந்தது… ஆர்யனா… இல்லை அவர்களைக் கூண்டோடு கவிழ்க்கப் போகும் உயிரினமா..!!??


http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/

வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியார் 016 கதையோட 7ஆம் அதிகாரம் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. சென்ற பதிவுக்காக கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.
 
Last edited:

sivanayani

விஜயமலர்
11623

(8)

‘கடலின் நீருக்குள்ளே தெரிந்த அசைவின் காரணம்.. ஆர்யனாய்தான் இருக்க வேண்டும் கடவுளே’ என்கிற வேண்டுதலுடன் அனைவரும் இருந்தாலும் கூடவே அது சுறாவோ, திமிங்கலமோ என்ற பயமும் பதட்டமும் இருக்கத்தான் செய்தது.

குறையத் தொடங்கி இருந்த சூரிய வெளிச்சத்தில்.. வருவது என்ன என்பது கூடத் தெளிவாகத் தெரியவில்லை. கூடவே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தால் தோன்றிய புகை வேறு அந்த கடல் பரப்பளவில் நிறைந்து.. சற்றே மறைத்திருக்க, எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

நாச்சியோ பதறவே தொடங்கி விட்டாள்.

“அய்யோ என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இந்நேரத்தில மீனா மனுசனான்னு உத்துப் பாக்குறீக... எனக்கு பயமா இருக்கு…. கிளப்புங்க.. போய்டலாம்… படக நிறுத்தாதீக. … இந்த பக்கமா திரும்பிப் போகலாம்… இருக்கிறது ஒத்த உசுருங்க… அது போனா வருமா?” என அலற, பிரவீன் தன் மனைவியின் உச்ச ஸ்தாயி குரல் கேட்டு பதறிப்போனான்.

" நாச்சி... இப்போ எதுக்கு இவ்ளோ ஆர்பாட்டம் ? நேரம் காலம் இல்லையா உனக்கு… வர்றது ஆர்யனா கூட இருக்கலாம்.. படகுக்குள்ள இருக்கிற உனக்கு என்ன பிரச்சனை.. வாய மூடு.. இல்ல… உன்னையும் கடலில் தள்ளி விட்டுடுவேன்…” என்று விட்டு கடலை உற்றுப் பார்த்தான்.. கணவனின் அதட்டலில் வாயைப் பொத்தி அமர்ந்தாலும் அவள் விழிகள் மிரட்சியை விடவில்லை.

படகில் உள்ள அனைவரது பார்வையும் கடலில் அசைந்து வரும் அந்த உருவத்தின் மேலேயே நிலைத்திருந்தது.

அதே நேரம் கடலில் நீந்தி வந்து கொண்டிருந்த ஆரியன் மூச்சுக்காக மேலே எழுந்த போது, தொலை தூரத்தில் இரண்டு லைஃப் போட்களும் பயணிப்பதைக் கண்டு பெரும் நிம்மதியடைந்தான். அப்பாடா.. கப்பலிலிருந்து தப்பிய யாருக்கும் ஆபத்தில்லை என்பதைப் புரிந்துகொண்டவனுக்கு, அது வரை இருந்த அழுத்தம் மெல்லமாக மறைந்து போனது.

தனது பயணிகள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள், இன்னும் சற்று நேரத்தில் அவர்களை அடையப்போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் நீச்சலடித்து படகை நெருங்கத் தொடங்கினான்.

படகிலிருந்த தியாவோ, வருவது ஆரியன் தான் என்று பெரும் உவகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். மனம் முழுவதும், ‘அவன் மடிந்து போகக்கூடியவன் அல்லன். நெருப்பில் வீழ்ந்தாலும்.. சாம்பலாகிப் போனாலும் மீண்டும் எழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவையின் சக்தி அவனுக்கு உண்டு. இல்லையென்றால், வாழ்க்கையில் தனியாக போராடி இப்படி ஒரு நிலைக்கு உயர்ந்திருக்க மாட்டான். ஆம் அவனும் ஒரு போராளிதான்… தன் வாழ்க்கையோடு போராடி ஜெயித்தவன்… தனியொருவனாய் அவ்வளவு பேரையும் மதி நுட்பத்துடன் கப்பலை விட்டு வெளியேற்றிக் காப்பாற்றினானே.. அவன் உயிரை அவ்வளவு எளிதாய் விட்டு விடுவானா.. மாட்டான்.. போராடுவான்… நிச்சயமாகப் போராடுவான்… அதோ நம்மை நோக்கி வந்துகொண்டிருப்பது ஆர்யனேதான்… நிச்சயமாக அவனே தான் அது... வா.. வா.. இன்னும் கொஞ்சம் தூரம்தான் கேப்டன்… இன்னும் சில நிமிடங்களில் உன் கரங்களைப் பற்றி இந்த படகின் மேல் தூக்கப்போகிறோம்.. வா.. சீக்கிரம் வா.. .’ என்று மந்திரம்போல ஜெபித்தவள், அவன் வந்தால் உடனே பற்றித் தூக்க வசதியாக.. முழந்தாளிட்டு அமர்ந்தவள், தனது தீர்க்கமான பார்வையினை அந்த தண்ணீர் சலனத்தின் மீதே பதித்திருந்தாள்.

நீரின் மேலே அசைவும் சலசலப்பும் தெரிந்த அந்த இடம் இப்போது அமைதியாகிப் போனது. அது வரை இருந்த சலனம் காணாமல் போக, பயணிகள் அனைவரும் ஒரு கணம் குழம்பிப் போயினர்.

அவர்களை நோக்கி வந்த அசைவுக்கு என்னவாகிவிட்டது? குழப்பத்துடன் அனைவரும் அந்த இடத்தைக் குனிந்து பார்க்க, அதுவரை அமைதியாக இருந்த கடல் நீர்.. திடீர் என்று அசைந்தது. மறு கணம், அதைக் கிழித்துக்கொண்டு வாயைப் பிளந்தவாறு…. பெரிய சுறா ஒன்று மேலே எழ... அனைவரின் சப்த நாடிகளும் நின்று போயின… படகின் சுவற்றில் சாய்ந்து.. கையை நீட்டியிருந்த தியா எதிர்பாராத அதிர்ச்சியில் அலறி… மல்லாக்க சாய்ந்தவள், அந்த சுறாவிடமிருந்து தப்புவது போல உட்கார்ந்தவாறே காலை உதைத்து பின்னால் நகர்ந்தாள்..

கண்ணிமைக்கும் நொடி தான் அனைவரும் உறைந்து நின்றனர்.. அடுத்த நொடி, பெண்கள் தங்களை மீறி அலறியவாறு படகின் பின் புறமாக ஒதுங்க, பாரம் தாங்காமல் படகு பின்புறமாகச் சாயத் தொடங்கியது. இன்னும் கொஞ்சம் சரிந்தால் போதும்… படகு கவிழ்ந்து விடும்..

திடீர் என்று எதிர்பாராது ஏற்படும் ஆபத்தை மூளையின் ஒரு பகுதி உடனே உணர்ந்து.. அதற்கேற்ப எதிர் செயலாற்றும் என்பதை உறுதிப் படுத்துவது போல சுயத்துக்கு வந்த ஆண்கள், உடனே முன்புறம் பாய்ந்து படகை சமநிலைப் படுத்த முயல, படகு சற்றே ஆடினாலும்.. நிலை கொள்ள, இரையைத் தவற விட்ட சுறாவானது நீரினுள் வீழ்ந்தது.

ஆபத்து முடியவில்லை. இப்போதுதான் தொடங்கியிருக்கிறது… கீழே சென்ற சுறா மீண்டும் விட்ட இரையைப் பிடிக்க வரலாம்.. வரும்… இதைப் புரிந்து கொண்ட விதார்த், மீண்டும் மேலே சுறா வந்தால் அதை சம்ஹாரம் செய்யத் தயார் என்பது போலத் தன் துடுப்பைத் தயாராகப் பிடித்துக்கொண்டிருக்க, அவன் எதிர்பார்ப்பைப் பொய்ப்பிக்காமல், மீண்டும் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு சுறா மேலே எழுந்தது.

ஏற்கெனவே விதார்த் எதிர்பார்த்திருந்தாலும், அதன் பிளந்த வாயில் இருந்த கத்தி போன்ற கூரிய பற்களைக் கண்டதும் இதயம் வாய்க்குள் வந்து துடிக்கத்தான் செய்தது. ஆனாலும் தன்னைச் சமாளித்தவனாகத் தன் பலம் முழுவதையும் திரட்டிச் சற்றும் தாமதிக்காமல், ஓங்கி அதன் கழுத்துப் புறத்தில் குத்த, அவன் குத்திய வேகத்தில் துடுப்பின் பின்புறம் அதன் கழுத்தைக் குத்திக்கொண்டு உள்ளே செல்ல, ஆரோனும் சற்றும் தாமதிக்காது தன் பலமெல்லாவற்றையும் திரட்டிக் கரத்திலிருந்த துடுப்பால் ஓங்கி அதன் மண்டையில் அடித்தான்.

சுறாவோ இரத்தம் பீறிட, ‘க்றீச்…’ என்கிற அலறலுடன் கழுத்தில் குத்திய துடுப்பையும் தன்னோடு இழுத்துக்கொண்டு கடலில் விழுந்து துடித்து நீந்தியவாறு செல்ல, அதனுடைய வேகத்திற்கு ஏற்ப அதன் இரத்தமும் கடலில் விழுந்து நீரை செந்நிறமாக்கியபடி சென்றது.

அப்போது மற்றொரு படகின் இடது புறமிருந்து இன்னொரு சுறா மேலே வர முயல, அதை பார்த்து விட்ட ஆனந்தன், ஒரு பக்கமாகப் போடப்பட்டிருந்த துடுப்பின் பின் புறத்தைப் பற்றி இரண்டு கரங்களாலும் ஓங்கிக் கடலுக்குள் இறக்க, சுறா பாய்ந்து மேலே வரும் முன்னரே, பலமாகத் தாக்கப்பட்டதால் ஒரு கணம் தன் தலையையும் உடலையும் உதறியவாறு மறுபக்கமாக துள்ளி விழுந்து நீந்தி படகை விட்டு விலகி சென்றது...

பெரும் நிம்மதியுடன், மூச்சு விட.. படகு ஆடிய ஆட்டத்தில் அவர்களின் எமேர்ஜன்சி பொருட்கள் இருந்த பெரிய பை கடலில் விழுந்து அமிழத் தொடங்கியிருந்தது.

“மை காட்… எமேர்ஜன்சி பாக்…” என்ற அகிலன் சற்றும் யோசிக்காமல் பாய்ந்து கடலுக்குள் கரத்தை விட்டு அதைப் பற்றி மேலே எடுத்த நேரம், ஆழ்கடலிலிருந்து மேலே வந்த சுறா இவன் கரத்தைப் பற்றப் பாய்ந்தது.

அலறிப்போனான் அகிலன். இதோ அவனுடைய கரம் துண்டாகிவிட்டது… இதோ அவனை இழுக்கிறது… இதோ கடலோடு கடலாக அவன் கலக்கப் போகிறான்… இதோ சாகப்போகிறான் என்று… அவன் அலறித்துடித்த நேரத்தில், அவன் மனைவி அமிர்தவர்ஷினி அவன் மீது கொண்ட காதலின் ஆழமோ, இல்லை அவன் தாய் தந்தை செய்த புண்ணியமோ, அவனுடைய கையைப் பற்ற பாய்ந்த சுறாவின் வாயில் எமெர்ஜன்சி பை சிக்கிக்கொண்டது.

பையை கடித்த சுறா... தனக்கு இரை கிடைத்துவிட்டது என்று நம்பி இழுக்க, அது இழுத்த வேகத்தில் கடலுக்குள் விழ இருந்த அகிலனைப் பாய்ந்து ஆதீரநந்தனும் சூரஜும் பிடித்துக்கொண்டனர்.

சுறா பையை இழுக்க அதிர்ச்சியில் உறைந்தவனாய், கையை விடாமல் பையையே இறுக்கப்பிடித்தவாறு அகிலன் இருக்க,

"அகிலன்... கையை விடுங்க..." என்று ஆதீரநந்தன் கத்தவும், திடுக்கிட்டு விழித்த அகிலன், மைக்ரோ நொடிக்குள் நிலைமை உணர்ந்து கரத்தை பின்னால் இழுத்து விடவும், சுறாவானது எமர்ஜன்சி பையைக் கவ்விக்கொண்டு மீண்டும் கடலுக்குள் சென்றது. பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பயத்தில் எகிறித் துடித்த இதயம் பழைய நிலைக்கு வரச் சற்று நேரம் எடுத்தது.

அகிலனால் இன்னும் தான் உயிரோடு இருக்கிறோம் என்று நம்ப முடியவில்லை. அவனுக்கு மட்டுமல்ல… அனைவருக்கும்தான்.. கண் சிமிட்டும் நிமிடத்தில் மரணம் அருகே வந்து தட்டி விட்டுச் சென்றிருக்கிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து யாரும் விடுபடாதவர்களாக வெளிறிப்போன முகத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சுயநினைவு பெற்ற அமிர்தவர்ஷினி அவனை நோக்கிப் பாய்ந்து அவனின் மார்பில் ஓங்கியடித்துத் தன் கோபத்தை வெளிப்படுத்தியவள், அதற்கு எதிர்மாறாக, கண்களில் நீர் சொரிய கதறியவாறு அவனுடைய மார்பில் விழுந்தாள்.

" ஹே... இட்ஸ் ஓக்கேமா... ஐ ஆம் ஃபைன்..." என்று அகிலன் தட்டிக்கொடுக்க,

இனியும் அங்கேயே நிற்க முடியாது என்கிற உண்மை நிலை அனைவருக்கும் புரிய, "வி ஹாவ் டு மூவ் க்விக்… சுறாக்கள் அடுத்தடுத்து நம்மைத் தேடி வருகின்றன. இனியும் தாமதிக்க முடியாது… விரைந்து துடுப்பை அசைங்க… முதல்ல பாதுகாப்பாக எங்காச்சும் இறங்கனும்.. " என்று அபிராம் சத்தமாகச் சொல்லவும்,

"யெஸ்.. அபிராம் இஸ் ரைட்… நமக்கு நேரமில்லை… முதலில் இங்கிருந்து கிளம்பனும்… ஆரோன் துடுப்பை போடுங்க… நமக்கு டைம் ரொம்ப கம்மியா இருக்கு…" என்று ஆமோதித்தவாறு அகிலனும் துடுப்பை எடுக்க, உடனே அதற்குக் கட்டுப்பட்டவர்களாக அவர் அவர் தங்கள் கரங்களில் துடுப்பை எடுத்தனர்.

அந்த லைஃப் போட்டில் நான்கு துடுப்புகளும், ஒரு பிரத்தியேக துடுப்பும் இருந்ததால், ஒரு துடுப்பு சுறாவோடு போன நிலையில் நல்லவேளை துடுப்புப் பற்றாக்குறை எழவில்லை. இல்லையென்றால் அந்த போட்டை அசைத்துச் செல்வது சிரமமாக இருந்திருக்கும்.

படகுகள் வேகமாக நகரத் தொடங்கியதும் பதறினாள் தியா.

"நோ…. நோ… வி கான்ட்.. ஆர்யன் வராமல் நாம் இங்கிருந்து அசைய முடியாது… நிச்சயமாக முடியாது… அதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்…” என்று உரத்த குரலில் சொல்ல,

“நோ தியா… இதற்கு மேல் நம்மால் காத்திருக்க முடியாது.. பாத்தீங்கல்ல… ஒரு விநாடி தாமதிச்சிருந்தாலும், நாம எல்லோரும் ஆபத்தில சிக்கிருப்போம்.. படகு கவிழ்ந்து சுறாக்களுக்கு இரையாகிப் போயிருப்போம். இனியும் காத்திருக்க முடியது… ஆர்யனுக்காக இத்தனை பேரையும் பலியிட முடியாது…’ என்று ஆனந்தன் மறுக்க, அவனை ஆத்திரத்துடன் பார்த்தாள் தியா.

“ஹெள டெயர் யு… இங்க நான்தான் கேப்டன்.. நான் சொல்வது போலத்தான் நீங்க எல்லாரும் கேக்கனும்… ஆர்யன் வராமல் நாம இங்கிருந்து போக முடியாது…” என்று கடுமையாக மறுத்தாள் தியா.

“ஆர் யு கிரேசி… இது ஒன்னும் உங்க ஷிப் இல்ல தியா.. கேப்டன்ன்னு நீங்க உத்தரவு போட… ஆர்யன்.. அவர் ஒருத்தருக்கா இத்தனை பேரின் உயிரைப் பணயம் வைக்கச் சொல்றிங்களா…அவர்… இருக்காரா இல்லையா என்கிறது கூட நமக்குத் தெரியாது… இந்த நேரத்தில்… நாம சுறாக்களுக்கு நடுவில காத்திருக்கனும்னு சொல்றது முட்டாள் தனம்…” என்று கவிலயா குரலை உயர்த்த,

“ஆமா கவி சொல்வதுதான் சரி… நாம இங்கிருக்கிது அத்தனை உசிதமில்லை… ப்ளீஸ்… தியா கிளம்பலாம்…” என்றாள் வர்ஷினி.

“அவங்கதான் சொல்றாங்களே.. ஆர்யனுக்காக கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாமே…” என்று மெல்லிய குரலில் ஜனனி கேட்க,

“ஜனனி புரிந்துதான் பேசுறீங்களா… ப்ளட் கடலோட கலந்திருக்கு… இப்போது இரண்டு சுறா வந்தது.. காட்ஸ் க்ரேஸ் நாம தப்பிச்சுட்டோம்… இதுவே கூட்டமா வந்தா… படகுகளை மொத்தமா கவிழ்த்து போட்ரும்.. ” என்றாள் அமிர்தவர்ஷினி. இன்னும் அவளால் அகிலன் சந்திக்க இருந்த ஆபத்தை மறக்க முடியவில்லை.

“யெஸ் ஷி இஸ் ரைட்… நாம எல்லாரும் ஒன்னா மரணிக்கிறதை விட, வரும் விபரீதத்தை தடுக்கிறது பெட்டர்…” என்றாள் திகம்பரி.

“இன்னும் ஒரு ஐந்து நிமிடம் காத்திருக்கலாமே…” என்று கலை கேட்க,

“எதற்கு, போன சுறா.. மிச்ச சுறாக்களையும் அழைத்து வரவா…?” என்று அந்த நேரப் படபடப்பில் சுவர்ப்பனா கேட்க,

“ப்ளீஸ் நாம கௌம்பிடலாம்… ஏற்கெனவே பெரிய ஆபத்தில் இருந்து தப்பிச்சிருக்கிறோம்.. இப்போ இன்னொரு ஆபத்து… அதில இருந்தும் தப்பிச்சிட்டோம்… அடுத்த ஆபத்திலிருந்து தப்பிப்போமா என்கிற கேரண்டி கிடையாது…” என்று மீரா முடிக்கும் முன்,

“யெஸ்… பெட்டர் மூவ் ஆன்…” என்று அதை ஆமோதித்தாள் அம்ருத சாகரி.

ஆர்யனுக்கு என்ன நடந்தது என்று புரியாமல் தவித்தாலும், நீண்ட நேரம் அந்தக் கடலில் இப்படியே நிலைத்திருக்க முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொண்டதனால், அங்கிருந்து போய்விடவே அனைவரும் விரும்பினர்.

அவர்களின் கண்களுக்குள் மீண்டும் மீண்டும் பற்களைக் காட்டியவாறு வாயைப் பிளந்து பாய முயன்ற சுறாவே நினைவில் நிற்க, அதுவரையிருந்த நம்பிக்கை மெல்ல மெல்ல விட்டுக் கரையத் தொடங்கியது.

தியாவின் நிலையோ மிகப் பரிதாபமாக இருந்தது. வந்து கொண்டிருப்பது ஆரியன்தான் என்கிற மகிழ்ச்சியில் திளைத்திருந்தவளுக்குப் படு பயங்கரமான சுறாவின் உருவத்தைக் கண்டதும் முற்று முழுதாகச் சிந்திக்கும் ஆற்றலை இழந்திருந்தாள்.

‘ஆரியன் தப்பியிருப்பானா… இல்லையேல் சுறாக்களுக்கு விருந்தாகியிருப்பானா? இந்த சுறாக்களின் மத்தியில் அவனால் எப்படித் தப்பியிருக்க முடியும்… ' நினைக்கும் போதே, உடல் நடுங்கியது… ' அவனுடைய சரித்திரம் முடிந்து விட்டதா என்ன? இவர்கள் சொல்வது போல இங்கிருந்து விலகிச் சென்று விடுவதா? நோ… நோ… அவனில்லாமல் எங்கும் போக முடியாது.. போகவும் கூடாது… ஆர்யா.. எங்கே இருக்கீங்க… ப்ளீஸ்… ப்ளீஸ்… வந்திடுங்க’ என்று மனதிற்குள் உளமாற வேண்டிக்கொண்டிருந்த வேளையில் நீரினுள் மீண்டும் சலனம்.. தோன்றியது.

அதைக் கண்டதும், அனைவரின் இதயங்களும் வாய்க்குள் வந்து துடிக்கத் தொடங்கின. நாச்சிமுத்து கிட்டத்தட்ட மயங்கும் நிலைக்குப் போயிருந்தாள். கவிலயாவின் நிலையோ மிகப் பயங்கரமாக இருந்தது. அவள் அச்சத்துடன் திரும்பித் தன் கணவனைப் பார்க்க, அவனும் அச்சலனத்தை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

வருவது எதுவென்று தெரியவில்லை. ஆனாலும் தயாராக தங்கள் துடுப்பை உயர்த்திப் பிடித்துக்கொண்டார்கள்.

முடிவோ, முதலோ வருவதை ஒரு கை பார்த்துவிடுவது என்கிற உறுதி அவர்களிடம் தெரிய, நீரைக் கிழித்து மேல் வந்தது அவ்வுயிரினம்.

ஓங்கிய துடுப்பை வேகத்துடன் அதை நோக்கி இறக்க முயன்றவர்கள்.. அதிர்ந்து திகைத்து நின்றது சில விநாடிகளே…

உள்நீச்சல் அடித்து நீண்ட வீச்சில் வந்துகொண்டிருந்த ஆரியன், செம்மஞ்சள் நிறத்திலிருந்த லைஃப் போட்டைக் கண்டதும், ஒரே பாய்ச்சலாக அவன் மேலெழ, அவனை நோக்கி நான்கைந்து உருவங்கள் துடுப்பை ஓங்கி அடிப்பதற்குத் தயாராவதைக் கண்டதும், அதிர்ந்து

“ஹே…” என்று கத்தியவாறு பின் புறமாகத் தண்ணீரில் விழுந்தான். முதலில் அது ஆர்யன் என்பதைப் புரிந்துகொள்ளவே அனைவருக்கும் சற்று நேரம் எடுத்தது. கூடவே அது ஆர்யன்தான் என்று நம்பவே அனைவரும் பயந்தனர். மனிதக் குரல் கேட்டதும்... அவன்தான் என்று புரிந்துகொண்ட பின், பெரும் மகிழ்ச்சியில்,

“கேப்டன்…” என்று கத்த, அவசரமாக அவனை நோக்கித் தன் கரத்தை நீட்டினான் காசி விஷ்வநாதன்.

“மை காட்.… யு கைய்ஸ் ட்ரைடு டு கில் மீ?” என்று கேட்டவன், விஷ்வநாதனின் கரத்தைப் பற்றி மேலெழ, ராயரின் பலமான பிடியில் ஒரே இழுவையில் உள்ளே வந்து விழுந்தான் ஆர்யன்.

விழுந்தவனின் விழிகள் ஆவலுடன் அனைவரையும் பார்த்துத் தியாவிடம் நிலைத்தது. பின் நிம்மதி மலர.. பெரு மூச்சு விட்டவாறு தன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்.

தியாவின் நிலையோ சொல்லவும் வேண்டியிருக்கவில்லை. கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைய, நடுங்கிய உதடுகளை மறைக்க முயன்றவளாகத் தன் விரல்களால் பொத்தியவாறு, அவனையே வெறிக்கப் பார்த்தவாறு நின்றிருந்தாள்.

ஆர்யனை நெருங்கிய ப்ருத்வி ஒரு மருத்துவனாக அவனைப் பரிசோதிக்கத் தொடங்க, தடுத்த ஆர்யன்,

“ஐ ஆம் ஓக்கே டாக்டர்… ரொம்ப நேரம் உள்நீச்சல் அடித்து வந்தது.. ஜெஸ்ட் ஃபீலிங் டயர்ட்…” என்றவாறு எழுந்தமர்ந்தவன் சுற்றிவர அனைவரையும் பார்த்தான். அனைவரும் பாதுகாப்பாக இருப்பது புரிய பெரும் நிம்மதியுடன்,

“ஓ காட்… உங்கள் அனைவரையும் நினைத்துத்தான் ரொம்ப கலங்கினேன்… இப்போதான் நிம்மதியாக இருக்கு…” என்றவாறு எழுந்தவன் கலைந்திருந்த தலை முடியை நன்றாக இழுத்துப் பின்னால் விட்டவாறு, தியாவைப் பார்த்தான்.

“ஆர் யு ஓக்கே…” என்று கேட்க, அதற்கு பதில் கூற முடியாது தலையை மட்டும் ஆட்டி ஆம் என்றவளைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துத் திரும்பியவன் கண்களில், இரத்தம் வடிய மயங்கிக்கிடந்த வேலையாள் பட்டதும் அதிர்ந்து போனான். விரைந்து அவனை நெருங்கிக் கால் மடித்து அமர்ந்தவாறு பரிசோதிக்கத் தொடங்க,

ப்ருத்வி, “தையல் போடவேண்டும் கேப்டன்… காயம் சற்று ஆழம்தான்… விரைவாகச் சிகிச்சை கொடுப்பது அவசியம்… இன்ஃபெக்ஷன் ஆகிவிடாமல் கவனமாக செய்ய வேண்டும்.. அசைந்து கொண்டிருக்கும் படகில் எதுவும் முடியவில்லை.. சீக்கிரம் கரையை அடைந்தால் நல்லது ..” என்று கூற,

எழுந்த ஆர்யன்.. பகலவனாய் இருந்து செம்மையாக மாறத் தொடங்கிய கதிரவனின் நிலையையும் வானத்தையும் பார்த்தான். செல்ல வேண்டிய திசையை சற்றே அனுமானித்தவனாய்.. ஒரு புறமாக கை காட்டி , “ மேப்ல பார்த்தபடி நாம போக வேண்டிய திசை இதுதான்.. முடிந்த வரை வேகமாகத் துடுப்பை அசையுங்கள்… இருட்டும் முன் கரைக்கு போயிட்டா நல்லது.. கண்ணுக்கு எங்கு மரங்கள் தெரிந்தாலும் அதை நோக்கிப் போகனும்.. உற்று கவனிப்போம்…” என்று விட்டு, எழுந்தவன், தானும் ஒரு துடுப்பை எடுத்து கடலுக்குள் போட்டு வலிக்கத் தொடங்க, இரண்டு லைஃப் போட்களும் அடுத்துச் சந்திக்க இருக்கும் ஆபத்து பற்றி அறியாது அவன் காட்டிய வழியில் நகரத் தொடங்கின..

http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/page-31


வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியார் 016 கதையோட 8 அதிகாரம் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. இந்த கதை வெள்ளி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய 4 நாட்களும் பதியப்படும் என்பதை கூறிக்கொள்கிறோம். உங்கள் கருத்துக்கள் ஒருவரை அல்ல 16 பேரை குஷிப்படுத்தும் என்பதால், மறக்காமல் கருத்துக்களை பதிவிடுங்க.
 

sivanayani

விஜயமலர்
11645


(9)

படகுகள் இரண்டும் ஆர்யன் சுட்டிக் காட்டிய திசையில் முடிந்த அளவு விரைவாக நகர்ந்து கொண்டிருந்தன. அவனின் கைக்கடிகாரத்தில் இருந்த காந்தமுள் காட்டிய திசையினை வைத்தும்.. மெதுவாக மேல்திசையில் இறங்கிக் கொண்டு இருந்த கதிரவனின் நிலை கண்டும் திசையை அனுமானித்து இருந்தான் ஆர்யன்.

கப்பலில் வைத்து பார்த்த மேப்பை நினைவில் கொண்டு வந்தவனாய், ஆர்யன் காட்டிய திசையில், தீவுக் கூட்டங்கள் இருக்கலாம் என்ற தேடலில், படகுகள் விரைந்து கொண்டிருந்தன.

இருபடகுகளிலும் இருந்த ஆண்மகன்கள் வலிமை மிகுந்தவர்கள். உடற்பயிற்சி செய்து உடலினை வலிமையானதாக வைத்திருந்தாலும், பழக்கமில்லாத துடுப்பாடலில் சற்றுத் தடுமாறத்தான் செய்தனர்.

எனினும் உயிர் காக்கும் போராட்டத்தில், சூழ்நிலையை வெல்லும் வேகமே குறியாக இருந்ததால் அவர்களின் எண்ணத்தின் திண்மையில், மனபலமும் ஓங்கியிருக்க, விரைவிலேயே படகு அவர்களின் வசப்பட்டு.. செலுத்தும் திசையில் சென்று கொண்டிருந்தது.

அந்த கப்பலில் பயணிக்கும் நாயக்கர்கள் சிந்தனையில் மட்டுமல்ல, அவர்களின் செயலிலும் தீரம் இருக்கும். அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள். அடுத்து என்ன நடக்குமோ என்று மனதின் ஓரத்தில் ஒருவித அச்சம் இருந்தாலும், புதியதாக சந்திக்கப்போகும் சாகசத்தை வரவேற்கவும் அவர்கள் தயாராகத்தான் இருந்தார்கள். அதனால் துடுப்பை அதற்கேற்ப வேகமாகவே வலிக்கத்தொடங்கினர். இதில் ஆண்கள் மாறி மாறி நான்கு நான்கு பேராக இணைந்து துடுப்பை வலித்ததால், அனைவர்க்கும் பெரிய உடல் சோர்விருக்கவில்லை. மாறாக பழக்கமில்லா வேலையால், கரங்களின் தோல் வளன்று போகுமளவுக்கு சிவந்துபோனது. அவர்களுடைய துணைகளுக்கோ தமது நாயகர்கள் சிரமப்படுவதைக் கண்டு இரத்தக்கண்ணீரே வந்தது.

அவர்களை தேடி வந்த இன்னல்களிலிருந்து சாதுர்யமாகத் தப்பித்து சோர்வை சிறிதும் நெருங்க விடாமல்.. மனபலத்ததுடன், பத்து மணி நேர இடைவிடாமல் துடுப்பை வலிக்க, இரவு முடிந்து பகலும் பிறக்கத் தொடங்கியது. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் வெளிச்சம் பிறந்துவிடும். இதற்குள் பசி வேறு வயிற்றைப் பிறாண்டியது. நடுக் கடலில் உணவு குடி தண்ணீருக்கு எங்கே போவது.. அதனால் பசியை தற்காலிகமாக அடக்கிவிட்டு, பயணித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு தமது நிலையை நினைத்து சிரிப்பாக வேறு இருந்தது. இருக்காதா, விரல் சொடுக்கினால் காலடியில் வந்து நிற்க வேலையாட்கள். இதுவரை பசி என்கிற உணர்வை அவர்கள் அறிந்ததேயில்லை... ஆனால் இப்போது எங்கு போகிறோம் என்பது கூட தெரியாது, நடுக்கடலில், வானமும் கடலும் மட்டும் துணையாய்... அந்த பயணத்துக்கு முடிவு இருக்கிறதா, இல்லையா என்று தெரியாமல், எதோ ஒரு நம்பிக்கையை பிடித்துக்கொண்டு ஆர்யன் காட்டிய திசையில் போய்க்கொண்டிருந்தனர்.

இந்தப்பயணம் முடியவே முடியாதோ.. கரையென்று ஒன்று இருப்பது கண்ணிலேயே படாதோ.. என்று மறுகித் தவித்த நேரத்தில், அவர்களின் கண்களுக்கு.. தொலைவினில் ஓங்கி வளர்ந்த மரங்கள் தெரிய அனைவரின் முகங்களும் மலர்ந்து போயின.. எல்லையில்லா நிம்மதியில் உள்ளம் துள்ளக் குதூகலம் அடைந்தனர் அனைவரும்.

“அதோ.. அங்கே மரங்கள் தெரிகின்றன… நாம் ஏதோ ஒரு கரையை நெருங்கி விட்டோம்…” என்று தியா தன்னை மறந்து சத்தமிட்டு குதூகலத்துடன் கூற, அதை ஆமோதித்தது போல அனைவரின் முகத்திலும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஏதோ ஒரு புள்ளியைத் தொட்டுவிட்டார்கள்.

கரையைக் கண்டதும், அதுவரை சோர்ந்திருந்தவர்களுக்கு இரத்தம் படு வேகமாக உடலில் பாய, தங்கள் வேகத்தை இன்னும் கூட்டத் தொடங்கினர். தற்போது ஒரு படகில் துடுப்பை வீசிக்கொண்டிருந்த தர்ஷன், அகிலன், கிருஷ்ணா, ராயர் தங்கள் வேகத்தைச் சற்றுக் கூட்டியதால் சிறிது முன்னேற, அதைப் பிடிப்பதற்காக மறு படகை இயக்கிக்கொண்டிருந்த அபிராம், கௌதம், அக்கண்யன், ப்ரவீன் தங்கள் வேகத்தைக் கூட்டினர்… அதைக் கண்டு சிரித்த மறு படகில் அமர்ந்திருந்தவர்கள், உற்சாகமாக

“கமான்… ஃபாஸ்டர்… ஃபாஸ்டர்…” என்று கத்தி துடுப்பை வீசியவர்களை ஊக்கப்படுத்த, இவர்களும் தமது வேகத்தைக் கூட்ட இப்போது இந்தப் படகு இரண்டடி முன்னேறியிருந்தது. அதற்குப் போட்டியாக மறு படகும் வேகத்துடன் முன்னேறியது. ஆதலால் இரு படகுகளும் மெல்ல மெல்ல அந்த தீவை நெருங்கத் தொடங்கினர்.

அவர்களின் படகு முன்னேறி அந்த தீவின் திட்டினை நெருங்க சில நூறடிகள் இருந்த நிலையில்… படகு நெருங்க இருந்த மணல்திட்டினைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஜெயவர்மன் எழுந்து நின்று எச்சரிக்கையாக கைகளை உயர்த்தி, " ஸ்டாப் ரோயிங் கைஸ்.." என ஆணையிடும் தோரணையில் சொல்ல, திடுமென ஒலித்த அவனின் குரலில் இரு படகில் இருந்தவர்களும் திகைத்தாலும், துடுப்புக்களின் அசைவுகள் நின்று போயிருந்தன.

கேள்வியாய் தன்னைப் பார்த்தவர்களை விட்டு விட்டு.. கேப்டனை திரும்பி நோக்கிய ஜெயவர்மன்,

"ஆர்யன்… இந்த மணல் திட்டை நெருங்க வேண்டாம்.. அதனை சுற்றிக் கொண்டு நகர சொல்லுங்கள். அதோ தொலைவில் சிறு பச்சை நிறம் தெரியுது அல்லே. அங்கே சென்று விடலாம்.." என்றான் எதையோ யோசித்தவாறு.

அவனின் தொனியில் சிறு கோபம் கொண்ட டாக்டர் ப்ருத்வி,

"ஏன் அப்படி சொல்றீங்க ஜெய்? சுற்றிப் போவதாக இருந்தால் இன்னும் நேரம் ஆகுமே… இந்த பேஷன்ட்டின் உயிர் ஆபத்தில் இருக்கு.. ப்ளட் லாஸ் ஆகிட்டே இருக்கு. கிட்டத்தட்ட எட்டு மணி நேரமா அவருக்கு எந்த சிகிச்சையும் கொடுக்கல… அவர் மயக்க நிலைக்கு போய்கிட்டு இருக்கார். ஒரு ஸ்டேபிளான இடம் சென்றுவிட்டால் தான் என்னால் அவருக்கு ஏதாவது செய்து.. இரத்தப் போக்கை நிறுத்த முடியும். அந்த இடம் மிக தூரத்தில் இருக்கு.. நாம் கடத்தும் ஒவ்வொரு நிமிடமும் இவருக்கு உயிராபத்தை தந்துவிடலாம் " என்று படபடப்பாகக் கூற, அவனைக், கண்களைச் சுருக்கி பார்த்த ஜெயவர்மன், அந்த வேலையாளின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டு படகில் கிடந்த கூரிய மரத் துண்டைக் கையில் எடுத்தான்.

'என்ன கேட்க, என்ன செய்கிறான் இவன்?' என்று எல்லோரும் எரிச்சலுடன் பார்க்க ஜெயவர்மனோ, அவர்களைக் கண்டு கொள்ளாமல்.. கரத்திலிருந்த மரத்துண்டை, திட்டை நோக்கி குறி பார்த்து மிக வேகமாக வீசி எறிந்தான்.

இரத்தம் தோய்ந்து இருந்த அந்த மரத்துண்டு, ஒரு புறம் கூர்மையாக இருந்த காரணத்தால், காற்றில் ஒரு ராக்கெட்டைப் போல பயணித்து அலையடித்துக் கொண்டிருந்த ஒரு பாறை மீது விழ.. என்னே ஆச்சரியம்!! அப்பாறை நகரத் தொடங்கியது…. அதன் அருகிலிருந்த மற்றொரு பாறையும்..

அதைக் கண்ட அபிராம் அலறினான்.

"ஓ மை காட்.. அவை பாறைகளில்லை... சால்ட் வாட்டர் க்ரொகடைல்ஸ்… முதலைகள்.. மிக பயங்கரமானவை…." எனவும் அனைவரும் அதிர்ந்து போயினர். அதுவரையிருந்த உற்சாகம் காற்றில் கரைந்து போகத் திகிலுடன் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

உற்றுப் பார்த்த ப்ரவீனும்.." அங்கே இருப்பவை அனைத்தும் முதலைகள் தான். குறைந்தது இருபது இருக்கும்.." என்றான் திகில் நிரம்பிய குரலில்.

“அம்மாடியோவ்… இங்கிருந்து பார்த்தாலே இத்தனை பெரிசா தெரியுதே… கிட்டப் போனா?”என்று மீரா விதார்த்தின் கரத்தை இறுகப் பற்றியவாறு கேட்க,

“முதலை வகைகளில் மிகப் பயங்கரமானவை இவைதான்… கிட்டத்தட்ட இருபது அடிகள் வரை வளரக்கூடியவை… முழுதாக ஒரு மனிதனை ஒரு விநாடியில் விழுங்கிவிடும் வல்லமை கொண்டவை… இதைக் கடல் முதலைகள், மரைன் முதலைகள், இன்டோ பசிபிக் முதலைகள் என்றெல்லாம் சொல்லுவாங்க.. நா நா ஜூல பார்த்திருக்கேன். மிக ஆபத்துன்னு அதுல போட்ருந்தது…” என்று பயத்தால் நடுங்கும் குரலில் சுவர்ப்பனா சொல்ல,

"இன்னும் என்னென்ன பார்க்கப் போறோம்.. தண்ணிக்குள்ளேயும் இருக்க முடியல.. கரைக்கும் போக முடியாம அய்யோ.. என்ன செய்யப் போறோம்.. உயிர் பிழைப்போமான்னு பயமா இருக்கே.. " என அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஜனனி கண்கள் கலங்க சொல்ல, அவளை இரக்கத்துடன் திரும்பிப் பார்த்த ஆர்யன்,

"நம்பிக்கை இழக்காதீங்க மேம்.. எவ்வளவு பெரிய ஆபத்தில இருந்த நாம பெரிய சேதம் இல்லாம மீண்டது போல இதையும் கடந்து போகணும்.. மனதை தளர விடாதீங்க.. சூரஜ்… உப்புநீர் முதலைகள் ஆபத்தானவை. நாம் துடுப்பிடும் ஓசை கூட அவற்றை ஈர்த்து விடலாம்.. திட்டை ஒட்டியும் முதலைகள் நீந்திக் கொண்டு இருக்கலாம்.. மெதுவாக துடுப்பைத் துழாவி இடப்புறம் செலுத்தி திட்டினை சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும்.. வேறு வழியில்லை நமக்கு.. அதோ… அங்கே தூரமாய் தெரியும் அந்த பச்சை நிற தீவு நோக்கிபடகுகளை செலுத்த வேண்டும்.." என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது , பளீரென்ற மின்னல் வெட்டுவது போல் வானில் ஒளி தோன்றியது.

அனைவரும் பயத்துடன் வானத்தைப் பார்க்க வானில் நீலமும் பச்சையும் கலந்த ஒளி மின்னல்கள் தோன்றின.

அது என்னென்று அறிந்தவர்கள் அதனை வெறித்தவர்களாய் இருக்க.. அறியாதவர்கள் குழம்பிப் போயினர்.

கலை , "மேகமே இல்லாமல் என்ன இது!! மின்னல் வெட்டுது!!" என்று அதிசயமாய் கேட்க..

தியா மெதுவாக சொன்னாள், " ஸோலார் மேக்னடிக் ஸ்டார்ம் எஃபக்ட்… நேற்று ஒரு வெடிப்பு நடந்தது.. இப்போ அடுத்தது நடக்கிறது போல.. "எனவும்,

திகம்பரி " இதனால நமக்கு ஆபத்தா?" என நடுக்கத்துடன் கேட்க ,

"இல்லை…." என்று தியா சொல்லிக் கொண்டு இருக்கும் போது அவர்கள் படகுகள் கிடுகிடுவென ஆடின..

அனைவரும் அலறி அருகிலிருந்தவர்களை பற்றிக் கொள்ள அவர்களுக்கு மிக அருகில் கடந்து சென்றது பெரிய மீன் கூட்டம்.. உற்றுப் பார்த்த திகம்பரி கூச்சலிட்டாள்.. "டால்பின்ஸ்….."

பத்துக்கும் மேலான எண்ணிக்கையில் இருந்த அவை.. நேராகச் சென்று முதலைகள் நிறைந்த மணல்திட்டை மோதுவதையும், பின் துடித்து புரண்டு திரும்பி வழிமாற்றி நீந்தத் தலைபட்டதையும் கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். அவைகள் திடுமென்று வந்ததும் கரையோர முதலைகள் அவற்றை பற்ற முயல.. அலையலையென நீர்மட்டம் கலங்க ஆர்ம்பித்தது..

பார்த்துக் கொண்டு இருந்த நாச்சி, " என்ன கிறுக்கு புடிச்சி போச்சா அந்த மீனுங்களுக்கு.. கண்ணு தெரியாதா.. நேரா முதல வாயில போயி விழுதுங்க.." என விழிகளை விரித்து வினவ..

"டால்ஃபின்களின் கண் பார்வை மிகக் கூர்மையானது.. ஆனால் அவை ஒலி எழுப்பி அதன் எதிரொலி வைத்தே பாதையை தெரிவு செய்யும்.. தனக்கு முன் உள்ள பொருளை தூரத்திலேயே கண்டு கொள்ளும்.. இப்படி போய் மோதுவது, சூரிய மின்காந்தப் புயல் எஃபக்டினால் இருக்கலாம். அந்த பாதிப்பினால் இவைகளின் ஒலி அலைவரிசையிலும் குளறுபடி வருது போல..." என்றான் அறிவியலில் இயற்பியல் வல்லுனனான அபிராம் தாடையைத் தடவியவாறே..

அப்போது பெரிய டால்பின் ஒன்று நிலையில்லாமல் அவர்களின் படகிற்கு மிக அருகில் வந்து, வேகமாகத் திரும்ப, அதன் பெரிய வால், படகை ஓங்கி அடிக்க, அது அடித்த வேகத்தில் விழுவது போல மறுபக்கம் சரிந்தது படகு. அந்தப் படகிலிருந்தவர்கள் அலறி அடித்து அருகேயிருந்தவர்களை அழுந்தப்பிடித்து நிலைப்படுத்த முயன்றனர். திடீர் என்று ஏற்பட்ட நிகழ்வால், படகின் ஓரமாக நின்று வானில் நிகழும் மாற்றங்களை அவதானித்து கொண்டிருந்த தியா, தடுமாறி நீரினுள் வீழ்ந்தாள்.

அனைவரும் இதைக் கண்டு பதற, நீச்சல் அறிந்தவளான அவள் சமாளித்துக் கொள்வாள் என்கிற எண்ணம் இருந்தாலும், முதலைகள் பற்றிய அச்சத்தில் வேகமாக வந்த ஆர்யன்,

" தியா.. ஹோல்ட்.. மை ஹேண்ட்.." என்று சத்தமிட்டு தன் கரத்தை நீட்ட, நீரினுள் மூழ்கி மேலே வந்தவளின் ஒரு கை மட்டுமே அசைவதும், சில முயற்சிகளுக்குப் பின் கண்மயங்கிய நிலையில் அவள் மீண்டும் அமிழத் தொடங்கியதையும் கண்டதும் அதிர்ந்தான். ஏதோ விபரீதம் என்பதைப் புரிந்துகொண்டவனாக, அடுத்த நொடியில் நீரினுள் பாய்ந்திருந்தான்.

திடுமென நிகழ்ந்த அசம்பாவிதத்தில்… படகிலிருந்தவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. "ஓ மை கோஷ்.." "ஆர்யன்" "தியா" என்று சத்தமிட்டவாறு அவர்கள் விழுந்த இடத்தைப் பார்த்தனர்.

அதே நேரம் தியா விழுந்த அசைவில் கவரப்பட்டாற் போல சில முதலைகள் கடலுக்குள் இறங்கி இந்தப் பக்கமாக வரத்தொடங்க அனைவரும் பதறிப்போனார். அச்சத்தில் இதயம் வாய்வழியே வந்துவிடுமோ என்று பயந்தவர்களாக கீழே பாய்ந்த ஆர்யன் மேலே வருவதற்காக உயிரைக் கையில் பிடித்தவாறு நின்றிருந்தனர் நாயக நாயகிகள்.

இருவருமே கண்ணுக்கு புலப்படாமல் போக, தண்ணீர் அலைகள் மட்டுமே வளைய வளையமாய் விரிந்து அவர்கள் இருக்கும் இடம் பற்றிய அனுமானத்தைத் தர, ஆனந்தன் படகை மெதுவாக அந்த இடம் நோக்கி நகர்த்தினான்.

அதே வேளைக் ஆர்யனின் விழிகளில் வேர் அறுந்த வெண் அல்லியாய் துவண்டு நீரினுள் கீழே கீழே போய்க்கொண்டிருந்த தியா தெரிய, அவனின் உயிரே ஆடிப்போனது. சற்றும் தாமதிக்காது, குத்தீட்டிபோல அவளை நோக்கி சென்றவன் தண்ணீரில் அலைந்த அவளுடைய கற்றை முடியைத் தன் கரங்களால் சுழற்றிப் பிடித்தது... ஏவுகணை போலத் தண்ணீருக்கு மேலாக எழத் தொடங்கினான்.

எல்லோரும் பதறியது சில நொடிகளாக இருக்கலாம். தியாவின் தலைமுடியை இறுகப் பற்றி இழுத்தவாறு மேலே வந்தவன், மயங்கிய நிலையிலிருந்த அவளின் இடையினை ஒரு கைவளைவில் அடக்கி, தங்களை நெருங்கியிருந்த படகினை மறு கரத்தால் பற்றிக்கொண்டான்.

உடனே மீராவும் நாச்சியும் ஓடிவந்து கை நீட்டி தியாவைப் பலம் கொண்ட மட்டும் இழுக்க, அவர்கள் இழுத்த வேகத்தில், மெல்லியலாளான தியா படகினுள் வந்து விழுந்தாள்.

அதற்குள் துடுப்பினை விட்டு ஓடிவந்த தர்ஷனும் கை கொடுக்க ஆர்யன் ஒரே தாவலில் படகினுள் வந்தவன், பிருத்வியைத் தேட, அவனோ மறுபடகில் நின்றிருந்தான். உடனே தாமதிக்காமல் அவளை நெருங்கியவன், அவள் கன்னத்தை தட்டி, "தியா, தியா..." என்று சுயநினைவு திரும்பச் செய்ய முயற்சிதான். அவளோ எந்த அசைவும் இல்லாமல் இருக்க,

சற்றும் யோசிக்காமல், குனிந்து, தியாவின் கழுத்தை நெருக்கிய சீருடையை வேகமாக நெகிழ்த்தியவன், அவளுடைய சுவாசப் பைக்குள் சென்றிருந்த தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் அவளுடைய மார்புக் குழியில் தன் உள்ளங்கைகளை ஒன்றன் மீது ஒன்றை வைத்துப் பலமாகவும் வேகமாகவும் அழுத்தத் தொடங்கினான்... ஆனாலும் அவளிடமிருந்து எந்த எதிர் வினையும் வரவில்லை என்றதும், கிலி பிடிக்க, அவளுடைய தலையைப் பின்னால் சரித்து, வாயைப் பிளந்து தன் வலிய உதடுகளை பொருத்தி உயிர்க்காற்றை அவளுக்குச் செலுத்தி விட்டு, மீண்டும் மார்பை ஒரு நிமிடத்திற்கு நூறு முறை என்று பலமாக அழுத்தத் தொடங்கினான்.

அதை கண்டா நாச்சி வாயை பிளந்து, விழிகளைத் தன் கரத்தால் மூடி,

"அடி ஆத்தி... கருமம் கருமம்... முத்தம் கொடுக்கிறதுக்கு இதுவா நேரம்... சே... அதுவும் இம்புட்டு பேரு பாத்திட்டிருக்கிறபோது…அய்யய்யோ கண்ட இடத்தில எல்லாம் கை வைக்கிறானே... ஏன்னு கேக்காம எல்லாரும் பாத்துக்கிட்டிருக்கீங்க... " என்று உச்சப்பட்ட வெட்கம் மற்றும் பதட்டத்தில் அவள் கூறினாலும், அந்த நிலையிலும் கை இடுக்கிற்குள்ளாக, அந்த மருத்துவ முத்தத்தை கண்டு ரசிக்கவும் தவறவில்லை.

"நாச்சி.... என்ன பேசுறே... இது சிபிஆர்.. கார்டியாக் பல்மோனரி ரீஸசியேஷன்... நின்ற இதயத்தை செயல்படுத்த முக்கிய முதலுதவியா பண்றது... இத எல்லாரும் பண்ண முடியாது... அதுக்கு முறையா ட்ரைனிங் எடுத்திருக்கணும்…அது புரியாம லூசு மாதிரி பேசாதே " என்று ப்ரவீன் அவளைக் கடிந்துவிட்டு, தியா எழுந்துவிடவேண்டும் என்கிற வேண்டுதலுடன் பார்த்துக்கொண்டிருக்க, ஆர்யனோ இது எதை பற்றியும் கவலைப் படாது மின்னல் விரைவுடன் செயல்பட்டுக்கொண்டிருந்தான்.

அங்கிருந்தவர்களுக்கு இதயம் ஒரு நிலையிலில்லாமல் தாறுமாறாக அடிக்கத்தொடங்கியது. தியாவிற்கு ஏதாவது நடந்தால்... நினைக்கும்போதே அடிவயிறு கலங்கியது. ஆனால் ஆர்யனோ தன் கரங்களில் சுயநினைவற்றிருந்தவளை எழுப்பிவிடும் ஆவேசத்தில் இருந்தான். அவளுக்கு ஒன்று நடந்தால், அனேகதமனுக்கும், அவள் தந்தைக்கும் என்ன பதிலை கூறுவான். அது மட்டுமா... என்று எண்ணியவன், கரங்கள் நடுங்க,

"டாமிட்... வேக்கப் தியா..." என்று சீறியவாறு மீண்டும் இதயத்தை செயல்படுத்த முயன்றான்.

அவளிடமிருந்து அசைவு வரவில்லை. மேலும் பதறியவனாக மீண்டும் ஒரு முறை உயிர் மூச்சைக் கொடுத்தவன்.. திரும்பவும் அழுத்தத் தொடங்க, இப்போது அவளுடைய வாயிலிருந்து ஹக்.. எனும் ஒலியுடன் நீர் வெளியேறத் தொடங்கியது.. அவளிடம் லேசான அசைவு தெரிந்ததும் பெரும் நிம்மதி கொண்டவனாக, சரித்து படுக்க வைத்து தண்ணீர் வெளியேற உதவினான் ஆர்யன்.

சுவாசப் பைக்குள் சென்றிருந்த நீர் இருமலுடன் வெளியேற அவளுடைய முதுகை வருடி, தட்டிக் கொடுத்து.. முற்றிலும் நீர் வெளியேற உதவியவன், அவளின் மூடிய இமைகளுக்குள் கண்மணிகள் உருளுவதைக் கண்டு அவள் காதருகே குனிந்து,

"தியா.. தியா…. வேக்கப்.. யூ ஆர் ஓக்கே…. கேன் யூ ஹியர் மீ.. கண்ணைத் திற.." என்று கன்னத்தில் தட்டியவன் அவள் முனங்கியவாறு இடக்கையினால் வலது தோளை தொட முயற்சித்ததும் தான் கவனித்தான் முகத்தின் வலதுபுறம் சிவந்து கிடந்தது. நெற்றியில் லேசான வீக்கம் வேறு புடைக்கத்தொடங்கியது. அதை வருடிக் கொடுத்தவன், “ஓ… அடிபட்டுருக்கா.…” என்று சொல்லியவாறு கவலையுடன் பார்த்தவன்… திரும்பி மற்றைய படகை பார்த்தான்.

டால்பின்களின் அலைகழிப்பினால் அந்தப் படகு கட்டுப்பாட்டையும் மீறிப் சற்றுத் தூரம் தள்ளிச் சென்றிருந்தது. அதே நேரம் படகின் ஆட்டத்தில் தர்ஷனும் அகிலனும் வேறு தமது துடுப்பைக் கைவிட்டிருந்ததால் அது கடலில் விழுந்து நீரின் திசைக்கு அதுபாட்டிற்குப் விலகி மிதந்து நகர்ந்து கொண்டிருக்க இரண்டு துடுப்புகள் தொலைந்த நிலையில் எஞ்சிய இரு துடுப்பை வைத்து துழாவும் நிலையில்.. அது நேர்கோட்டில் சொல்லது அங்கும் இங்கும் வளைந்து சுழன்று செல்லத் தொடங்கியது. அதனால் இரு படகுகளும்.. வேறுபுறமாய் திரும்பி வேறு வேறு திசையில் நகர்ந்துகொண்டிருந்தன.

தாறுமாறாக திரும்பிய படகை நிலைப்படுத்த முயன்றவாறு,

"ஆர்யன்.. ஆர் யூ ஓகே.." என வாயில் இருகைகளையும் குவித்து வைத்தவாறு கிருஷ்ணா கேட்க, இவன் கையைத் தூக்கி சைகையால், பிரச்னை இல்லை என்று அறிவிக்க, தங்கள் கரங்களையே துடுப்பாக்கி.. ஆடிய போட்டை நிலைப்படுத்த முயன்றுகொண்டிருந்தனர் அதில் இருந்தவர்கள்.

சில நொடிகளில் தியா விழிகளைத் திறந்தபோது முதலில் கண்டது இறுகிய முகத்துடன் அருகில் இருந்த ஆர்யனைத் தான். அவள் சிரமப்பட்டு எழ முயல, அவளை தாங்கி பற்றி...

“ஈசி.. ஈசி…” என்றவாறு அமர உதவியவன், “ஆர் யு ஓக்கே நவ்… எங்கேயெல்லாம் வலிக்கிறது தியா.." என இறுகிய குரலில் விசாரித்தாலும், அவனையும் மீறி அவனுடைய வலது கரம் அவள் தலையை வருடிக் கொடுத்தது. கூடவே சற்றுக் கீழிறங்கி கழுத்து வளைவில் தங்கி கன்னத்துக்கும் கழுத்துக்கும் இடைப்பட்ட இடைப்பட்ட பகுதியில் ஒரு மெல்லியதாய் வருடிக் கொடுக்க. தியாவோ அந்த மென்மையை உணரும் நிலையில் இருக்கவில்லை.

விழிகளை இறுக மூடித் திறந்தவள், தன் உதடுகளைக் கடித்து வலியை அடக்க முயன்றவளாக, சற்று நேரம் அப்படியே இருந்தாள். அவள் முகத்தைக் கண்டதும் ஆர்யனுக்குப் புரிந்து போனது அவள் வலியின் எல்லையை.கூடவே சற்று முன் நடந்த ஆபத்தை எண்ணி அச்சத்தில் உடல் பயங்கரமாக நடுங்கத்தொடங்க, அதை உணர்ந்தவனாக அவளை ஆறுதல் படுத்த வேண்டியோ, இல்லை தான் இருக்கிறேன் என்பதை அறிவுறுத்தும் எண்ணத்திலோ, அவளை இழுத்து அனைத்தவன்,

"ஷ்... இட்ஸ் ஓகே... இட்ஸ் ஓகே..." என்று அவளுடைய முதுகை வருடிக் கொடுத்து சமாதான படுத்த ன்றான். அவளுடைய கன்னம் கச்சிதமாக அவனுடைய இடதுபுற மார்பில் பதிந்தது. வழமைக்கு மாறாக வேகமாக துடிக்கும் அவன் இதயத்தின் ஓசையை உணரும்போதே, அவளை விடுவித்தவன்,

“என்னம்மா… ரொம்ப வலிக்கிறதா? எங்கே வலிக்கிறது?” என்றான் மிக மிருதுவாக ... அக் குரலில் ஏதோ உணர்ந்தவளாய்.. தன்னுள் இதம் பரவ, தலையை லேசாக உயர்த்தி அவனின் விழிகளையே பார்த்தவள், தன் வலது தோளையும் வலது நெற்றியையும் சுட்டிக் காட்டினாள்.

தன் கரத்தால் அவளுடைய புடைத்த நெற்றியை வருடிக் கொடுத்து.. தளர்த்தியிருந்த அவள் மேலாடையை விலக்கித் தோளைப் பரிசோதித்தவனுக்கு... அங்கே ஏற்பட்டிருந்த காயத்தைக் கண்டதும் உண்மை புரிந்து போனது.

"படகோட தடுப்போ.. துடுப்பின் துழாவும் பகுதியோ அடிச்சுருக்கு." என்று முணுமுணுக்க, அதைக் கேட்டவளுக்கு தன் முகத்திற்கு நேராக வந்து நின்ற டால்ஃபினின் முகம் நினைவு வந்தது..

“தண்ணில விழுறப்போ துடுப்பு நெத்தில அடிச்சிடுச்சு… தண்ணிக்குள்ள போனப்போ டால்ஃபின் என் தோள்ல மோதிருச்சு.." என்று வலியில் முனங்கியவாறு சிறு பிள்ளை போல கூறியவளிற்கு, அவனின் அருகாமையும்.. முகத்தில் மோதிய மூச்சுக் காற்றும் ஏதோ செய்ய, மெதுவாக விலகி எழ முயன்றாள்..

"நெற்றில அடிபட்டிருக்கு.. ட்ரௌசி ஃபீல் இருக்கும். ஸோ படுத்தே இரு.." என்றவன், அவளைப் படுக்க வைத்துவிட்டு அவன் விலக்கியதால் தோளில் வழிந்திருந்த ஆடையை இழுத்துச் சரிப்படுத்த, அவள் குழந்தையாய் முகத்தை சுளிப்பது கண்டு,

"யு வில் பி ஓகே?" என்றான் முகத்தை மறைத்திருந்த ஈர முடியை ஒதுக்கிவிட்டவாறு.

"ம்…" என்றதும், ஏனோ இவன் மிகவும் கலங்கிப்போனான்.

அவனின் கூர்மையான விழிகள் சிவந்து சோர்ந்து கிடந்த அவளின் முகத்தை துளைத்துவிட்டு நிமிர அவர்களையே பார்த்தவாறு இருந்த பெண்களிடம்," தோள்ல பெரிதா அடிச்சிருக்கு.. அதனாலே தான் அவளால் நீந்த முடியல.. நீங்க கொஞ்சம் இவளைப் பாருங்க." என்று விட்டு, துடுப்பு செலுத்திக் கொண்டிருந்த ஜெயவர்மன் அருகில் சென்றவன், அவனிடமிருந்து துடுப்பினை வாங்கி தான் செலுத்தலானான்…

ஈரமாய் இருந்த சீருடை.. கை அசைவுகளை தடை செய்ய.. துடுப்பை நிறுத்தி வைத்து விட்டு சட்டையை கழற்றி... இடையில் இறுக்கி கட்டிக் கொண்டவனிற்கு விரைந்து கரையை அடைய வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற, மிகுந்த வேகத்துடன் துடுப்பை அசைக்கலானான்.

தூரத்துப் பச்சையாய் தெரிந்த தீவினையும்.. முன்னால் விரைந்து சென்ற டால்பின்கள் அந்தத் தீவினை நெருங்காமல் திசைமாற்றிக் கொண்டு விலகி செல்வதையும் கண்ணுற்றவனிற்கு.. ஏனோ அந்த தீவு அச்சத்தைத் தருவதாய்….

இந்தியப் பெருங்கடலின் பல தீவுகளின் மர்மங்கள்.. ஒளிந்திருக்கும் ஆபத்துக்களை அவன் அறிவான்..

ஆழ்கடலின் அலைகழிக்கும் புயலை எதிர்த்து கப்பலைத் தீரத்துடன் செலுத்தும் அவன், அமைதியாய் கரும்பச்சையாய் விரிந்து கொண்டே வந்த அந்த தீவினை வெறித்து பார்த்தவாறே வேகத்துடன் தன் பணியைத் தொடர்ந்தான்.

ஆர்யன், மற்றைய படகை பார்க்க, அவர்கள் சற்றே பின் தங்கி மெதுவாக வந்து கொண்டிருந்தனர்..

சில நிமிடங்களில்.. ஆர்யன் செலுத்திக் கொண்டிருந்த படகு முதலில் தீவை நெருங்க படகிலிருந்து குதித்து இறங்கியவன்.. படகு அசையாதவாறு பற்றி நிறுத்தி.. கரை அருகில் இழுத்தான்.

அவனைப் பின்பற்றி குதித்து தரையில் இறங்கிய ஆண்கள், மிதந்த படகிலிருந்து பெண்கள் இறங்க உதவினர்.

படகு நின்றதை உணர்ந்து எழுந்த தியா.. தானாக குதித்து இறங்குவதைக் கண்ட ஆர்யனுக்கு.. லேசான முறுவல் வந்து செல்ல, பார்வையைத் திருப்பினான்.

சூரியனின் ஆரம்பக் கிரணங்கள் பூமியைத் தழுவ ஆரம்பித்திருந்த நேரம்.

மஞ்சளாய் வெளிச்சம் பரவ.. அவ்வழகிய காலையில் தென்னைமரங்கள் அடர்ந்த அந்தத் தீவினைப் பார்த்த ஆர்யன் மனதில்…

'அழகாய் தெரியும் இந்த இடம் .. என்னென்ன அனுபவங்களை தரப் போகின்றதோ..' எனும் கேள்வி ஒலித்தது..

அவனின் இதயத் துடிப்பினைப் போலவே சற்றுத் தொலைவில் மேளம் அடிப்பது போன்ற ஒலி…..

மரங்களுக்குள்ளிருந்து கசிந்து வருவது போல உணர்ந்தவனுக்கு அது உண்மையா அல்லது பிரமையா என்று குழம்பியவனாகத் தன் காதைக் கூர்மையாக்கினான்… ஆர்யன்.

http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/
வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியார் 016 கதையோட9ஆம் அதிகாரரும் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. சென்ற பதிவுக்காக கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.
 

sivanayani

விஜயமலர்
11655

(10)

அதிகாலை வேளையின் குளுமையான காற்று வருடிச் செல்ல.. உதயவனின் மென்கதிர் கரங்கள் தாய்மை அணைப்பின் வெம்மை தர.. பெயர் தெரியா பறவைகளின் ஒலிகள் வேறு..

வாவ்.. என்ன அழகான தீவு.. பலரின் கண்கள் ரசனையும்.. சிலரின் கண்கள் கவனமுமாய் அத்தீவின் அழகை உள்வாங்கின.. பத்து மணிநேர உளைச்சலும் பயணமும் உடலை வருத்த கடற்கரையில் கால்நீட்டி அமரவும்.. மல்லாக்க படுத்து கண்மூடி.. பூமி அன்னையின் மடியில் இளைப்பாறவும் தலைப்பட்டனர்.

படகில் இருந்து குதித்து இறங்கிய தியா மெதுவாக நடந்து.. சென்று கொண்டிருந்தவள் சற்றுத் தடுமாற, அதை எப்படியோ உணர்ந்துகொண்ட ஆர்யன் அடுத்த கணம் அவளருகே நின்றிருந்தான்.. சற்றும் யோசிக்காமல் அவளைத் தன் கரங்களில் ஏந்தியவன், அவளின் திகைத்த விழிகளுக்கு பதிலாக..

“அதுதான் உன்னால் முடியவில்லையல்லவா… பிறகு எதற்கு இந்த வீராப்பு…” என்று கடிந்தவாறு முன்னே நடந்து.. ஒரு பாறையின் மேலே அமர வைத்தான்.

ஆதீரநந்தன் காயம் பட்டு இருந்த வேலையாளை.. தாங்கி இறக்க முயல.. அக்கண்யன் அவனுக்கு உதவ.. இருவருமாக இறக்கியதும்.. தூக்கி வந்து ஈரம் இல்லாத மணல்பரப்பில் மெதுவாக படுக்க வைத்தனர்.

அந்தத் தீவைப் பார்த்ததும், அதுவரை அழுத்தியிருந்த பயமும் பாரமும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்ல, அந்தத் தீவின் எழில் அந்த மங்கிய காலை வெளிச்சத்திலும் புலப்பட்டு அவர்களை கவர்ந்து இழுத்தது..

“வாவ்… இந்த தீவு ரொம்ப அழகா இருக்கில்ல… இயற்கை அழகு அப்படியே கொள்ளை கொள்ளுது…” என்ற திகம்பரியைத் திரும்பிப் பார்த்த காசிவிஷ்வநாதன் கடின இதழ்களில் சிறு புன்னகையோடு.. ஆமோதித்தவன்.. சுவாரஸ்யத்துடன் சுற்றிலும் நோட்டமிடத் தொடங்கினான்.

அனைவரும் வாய்ப்பூட்டு கழண்டவர்களாக.. தம் கண்களில் பட்ட காட்சிகளை பற்றி பேசத் தலைப்பட.. ஆர்யன் அனைவரையும் திரும்பிப் பார்த்து வாய் மீது ஒற்றை விரல் வைத்து ,

“ஷ்… கொஞ்சம் அமைதியா வாங்க…” என்று மெல்லியதானாலும் அனைவரையும் எச்சரிக்கும் குரலில் கூறிவிட்டுத் தியாவை ஒரு கணம் அழுத்தமாகப் பார்த்தான். பின் அனைவரையும் ஏறிட்டு,

"நான் முதல்ல இந்த இடம் நாம் தங்குவதற்கு ஏத்த இடம் தானான்னு பாத்து வர்ற வரைக்கும் யாரும் முன்னேற வேண்டாம்," என சொல்லி மெல்ல தூய்மையான வெண்மணல் துகள்களால் பரந்து விரிந்திருக்கும் தரையில் கால் பதித்து நடக்க ஆரம்பித்தான் ஆர்யன்.

அவனுக்கு தீவில் இறங்கிய போது கேட்ட ஒலி பழங்கால தாள வாத்தியங்களின் ஒலி போலத் தோன்றி மனதை குடையத் தொடங்கியது… அது கற்பனையா… உண்மையா என்ற குழப்பம் வேறு. தீவினைப் பற்றி சற்று ஆராய்ந்தால் தேவலாம் என்று தோன்றியது..

அத்தனை பேரும் ஒரே நேரத்தில், மொத்தமாக ஏதேனும் ஆபத்தில் மாட்டிக் கொள்வதை விட, தான் ஒருவனாக சென்று ஆராய்ந்து வருவது சுலபம் என்று அவன் எண்ணினான். அப்படியே பிரச்சனை இருந்தாலும், அவனாக மட்டுமிருந்தால் சுலபத்தில் தப்பிவிட முடியும்.. அதுவே பலபேர் என்றால் சிரமம்.

கப்பலின் கேப்டன் என்பதால், ஓரளவு புவியியல் பற்றிய அறிவு கைகொடுக்க, தரையில், மணலில் கால் புதைகிறதா எனப்பார்த்து கவனமாக கால்களை நகர்த்தி சென்றான். பத்தடிகள் கடந்ததும் ஒற்றைக் கால் மடித்து அமர்ந்தவன். கைகளால் மணலை கலைத்து அடி மணலை அள்ளி ஒரிரு துளிகள் வாயில் வைத்து உப்பின் சுவையை உணர முயன்றான். அது சற்றுக் குறைந்திருப்பதாகத் தோன்றியது. சுற்றிலும் கவனமாக தேடித் தேடிப் பார்த்ததில் விலங்குகளின் காலடித் தடம் எதுவும் பதியவில்லை என்பதும் அவனுக்கு சற்று ஆறுதலை தந்தது.

நத்தைகள் ஊறிய தடமும், நண்டுகளின் வளைகளும் கரையிலிருக்க, கடற்கரையில் கண்ணுக்கு எட்டிய தூரத்திற்கு, முதலைகள் தேய்ந்து சென்ற தடங்கள் எதுவுமில்லை. ஆனாலும் மனதில் யாரோ கண்காணிப்பது போன்ற உணர்வு மட்டும் மாறவில்லை. கூடவே முரசு அடிப்பது போன்ற ஓசை வேறு அவனை பெரிதும் இம்சித்தது.

இத்தனை பயணிகளின் உயிரை காப்பாற்ற வேண்டுமே என்கிற பதட்டத்தில் இதயம் சற்று கூடுதலான ஓசையுடன் துடித்ததால் அது தாளவாத்தியம் போலத் தனக்கே பிரம்மாண்டமாக கேட்டதோ? என்று எண்ணியும் குழம்பினான். யோசனையுடன் எழுந்தவன், மீண்டும் ஒரு முறை சுற்றிலும் பார்த்தான்.

சுற்று வட்டாரமெங்கும் இயற்கையின் தடங்களாக முற்றி உதிர்ந்த இலைகளும், சருகுகளும், சுள்ளிகளும், கிடைத்தனவே தவிர, மனிதன் விட்டுப்போன எந்த எச்சங்களும் அவன் கண்களுக்கு காணக் கிடைக்கவே இல்லை. மரங்கள் வரை சென்றவன்.. கவனத்துடன் நாலாபுறமும் பார்த்தவாறு.. இன்னும் சற்று உள்ளே சென்று பார்த்தான். கடற்கரையில் வளரக் கூடிய அடர்ந்த மரங்கள்தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் இருந்தன. சற்றே வளைந்து இருந்த ஒரு தென்னை மரத்தில் கடகடவென்று லாவகமாக ஏறியவன், கீழே குனிந்து பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் மரங்கள்தான் தெரிந்தன. ஆனால் மனிதன் நடமாடியதற்கான பாதைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் அப்போதுதான் உதிக்கத்தொடங்கிய வெளிச்சத்தில் தெளிவாகத் தெரியவில்லை. தன் காதைக் கூர்மையாக்கி எங்காவது ஏதாவது ஒலி கேட்கிறதா என்று உற்றுக் கேட்டான். ம்கூம்… இனந்தெரியாத பூச்சிகளின் சத்தங்கள் மட்டும்தான் கேட்டன.

கீழே இறங்கியவன், மிக கவனமாக அவதானித்தபடி தரைப்பகுதி எங்கிலும் சுற்றும் முற்றும் பார்த்தான்.

நாகரீக மனிதன் கால் பதிக்காதவரை எந்த இடமும் சொர்க்கம் தான். அவன் கால் பதித்து விட்டால் தன் சுயநலத்திற்காய் அதை முடிந்தவரையில் நரகமாக மாற்றிவிட்டுத்தான் அங்கிருந்து அகலுவான். அதுவும் குப்பைகளைப் போட்டு அந்த இடத்தையே நாசமாக்கிவிடுவான்… இந்த இடம் இன்னும் சொர்க்கமாகவே இருப்பதால் இன்னும் நாகரீக மனிதனின் கண்பார்வைகளுக்கு அந்தத் தீவு தட்டுப்படவில்லை என்பது மட்டும் நன்கு புரிந்தது.

தற்போது தங்குவதில் எதுவும் பிரச்சினையில்லை என்று மனம் சமாதானம் ஆகிய பின் கட கடவென்ற மரத்திலிருந்து இறங்கியவன், வெளியே வந்து, அனைவரையும் பார்த்து வருமாறு கைகளை ஆட்டினான்.

முதலில் ஆண்களும் பின் பெண்களுமாக ஒருவர் பின் ஒருவராக நடந்து வர தொடங்கினர். ஷாலினி கவனமாகத் தியாவைத் தாங்கி வந்துகொண்டிருந்தாள்.

ஆழ்கடலில் லைஃப் போட்டில் தத்தளித்த போது, தங்கள் உயிர் தங்கள் வசமில்லை என்பது அனைவருக்குமே தெரிந்து இனி அடுத்து என்ன என்று கலங்கிப்போயிருந்தவர்களுக்கு அந்த இடம் பெரும் சொர்க்கமாகவே தெரிந்தது.

"நான் பார்த்த வரைக்கும் மனித நடமாட்டம் இருப்பதுபோலத் தெரியல… பாதுகாப்பான இடமாத்தான் இருக்கு. எதுக்கும் ரொம்ப சத்தம் போடறதோ, தனித்தனியா போறதையோ அவாய்ட் பண்ணுங்க, ஒரு சிறு குழுவாக எப்போவும் இருங்க, இங்க இருந்து தப்பிக்க என்ன பண்ணலாம்னு அப்புறம் பார்க்கலாம்" என ஆர்யன் சொல்லும்போதே, காயம் பட்ட வேலையாளின் வசதி முக்கியமென்பதை அறிந்த சூரஜ் சுற்றுமுற்றும் பார்த்தான். சற்றுத் தள்ளிச் சென்று நீண்ட வாழையிலை போன்ற இலைகளைக் கண்டதும் விரைந்து சென்று பறித்துவந்து தரையில் போட, ராயரின் உதவியோடு ஆதீரநந்தன் காயப்பட்ட வேலையாளை அந்த இலையில் கிடத்தினான்.

அதே வேளை கிருஷ்ணா, அந்த யாட்சிலிருந்து குதிக்கும்போது ஆர்யன் எடுத்துப் போட்ட பெட்டிகளுடன் வர, அதிலிருந்து முதலுதவிப் பெட்டியை எடுத்துக்கொண்டு ப்ருத்வியை நெருங்கினான்.

கிருஷ்ணா தன் கரத்திலிருந்த மற்றைய பெட்டிகளை ஓரமாக வைத்துவிட்டுத் தன் மனைவியிடம் விரைந்தான்.

அதே நேரம், ப்ருத்துவியை நெருங்கியிருந்த ஆர்யன்,

“ப்ருத்வி… இதில் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்கு…” என்றவாறு பெட்டியை எடுத்து நீட்ட, அதைத் திறந்து பார்த்த ப்ருத்வியின் உதடுகள் பிதுங்கின.

"ஆர்யன், இவருக்கு பெயின் கில்லரோ, இல்லை அனஸ்தீஷியாவோ கொடுத்து ஸ்டிச்சஸ் போட முடியாது, சூட்டியர் த்ரெட் எதுவும் இதில இல்ல…” என்றவாறு சுற்று முற்றும் பார்த்த ப்ருத்விக்கு அங்கிருந்த ஒரு முள் மரம் கண்ணில் பட்டது. விரைந்து சென்றவன் கவனமாக அதிலிருந்த ஓரிரண்டு தண்டுகளை உடைத்தெடுத்தவன் அங்கிருந்த ஜனனியிடம் நீட்டி,

“இத உப்புத்தண்ணில கழுவிட்டு வாங்க…” என்று விட்டு ப்ரவீனைப் பார்த்து

“இவருக்கு காயம் துடைக்க ஒரு காட்டன் துணி வேணும்.…” என்று கேட்டான். தாமதிக்காது தூய பருத்தியால் ஆன தனது சட்டையைக் கழற்றிக்கொடுத்தான் பிரவீன். கண்களில் நன்றியுடன் அதை வாங்கியவன் கவிலயாவிடம் நீட்டி,

“இதையும் நனச்சுட்டு வாங்க…” என்றுவிட்டு மீண்டும் அந்த வேலையாளிடம் சென்றான்.

அவன் முனங்கிக்கொண்டிருக்க, அவன் கன்னத்தில் தட்டி, “அழகர்… உனக்கொன்றுமில்லை… புரிந்ததா?” என்றவாறு அவன் காயத்தில் அழுத்தியிருந்த ஆடையை விலக்கிப் பார்த்தான். காயம் வாயைப் பிளந்திரந்தது.

அதற்கிடையில் ஜனனி கழுவியதைக் கொண்டு வந்து நீட்ட நன்றியுடன் பெற்றுக்கொண்ட ப்ருத்துவி முதலுதவிப் பெட்டியிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து, சுமார் இரண்டங்குலம் நீளமாக இருந்த முட்களை பிரித்து எடுத்தான்.

பின் நிமிர்ந்து அவர்களைச் சுற்றியிருந்தவர்களைப் பார்த்து, இங்க இவ்ளோ பேர் கூட வேணாம். ப்ரவீனும் காசிவிஷ்வநாதனும் போதும்… பேஷண்ட் வேற இவ்ளோ வூண்ட்ஸ் அன்ட் ப்ளட் லாஸை பாத்தா பயம் அதிகமாக சான்ஸ் இருக்கு, ஸ்டிச் போடற வலி வேற இருக்கும்.. அதிகமா கத்துவார்…" என சொல்லிவிட்டு உப்புத்தண்ணீரால் நனைத்து எடுத்துவந்த ஷேர்ட்டால் காயத்தை சுற்றி நன்கு துடைத்தான். பின் தனது கைக்குட்டை எடுத்து.. உருளை போல உருட்டிப் பிடித்தவன். நோயாளியைப் பார்த்து,

“லிசின் அழகர்… இப்போது உன் காயத்தைத் தைக்கப் போகிறேன்… வலிக்கும்… அதனால் உன் வாயில் இந்தத் துணியை அடைக்கப் போகிறேன்… இந்தத் தீவில் என்னென்ன இருக்குன்னு யாருக்கும் தெரியாது… உன் அலறலில் வேண்டாத உயிரினங்களின் கவனத்தைத் திசைதிருப்பாதிருக்க இந்த துணி கொண்டு அடைக்கப்போறேன்… முடிந்த வரை சத்தம் வெளி வராதவாறு இருக்க முயற்சி செய்… புரிந்ததா?” என்று கேட்க அழகரோ பயத்துடன் தன் தலையை மேலும் கீழும் ஆட்டி சம்மதம் கூற, அந்த துணி உருண்டையை அழகரின் வாயில் வைத்து அடைத்தான் பிருத்வி.

பின்பு ப்ருத்வியின் கட்டளைப்படி பிரவீன் அழகரின் காலைப் பற்றிக் கொள்ள, காசிவிஷ்வநாதன் கரங்களையும் தோள்களையும் அழுந்தப் பற்றிக்கொண்டான். அடுத்து கூரான முட்களை எடுத்த பிருத்வி, இடையில் ஏற்பட்ட காயத்தை இணைப்பதற்காக, தோலையும் சதையையும் பற்றி ஒன்றிணைத்து ஒவ்வொரு அரை இஞ்சிக்கும் முற்களால் குத்தி சதைகளை இணைக்கத் தொடங்க, தாங்க முடியாத வலியில் அழகர் அலற, அவனுடைய அலறலின் ஒலி வெளியே வராதவாறு வாயில் அடைத்திருந்த இருந்த துணி வடிகட்டிக்கொண்டது.

முட்களை சொருகியபின்,

“அவ்வளவுதான்…” என்றவாறு அழகரின் வாயிலிருந்து துணியை விலக்கியவன், முதலுதவிப் பெட்டியின் காயத்திற்கு கட்டுப் போடும் பேண்டேஜ் துணியினின்று.. மெல்லிய தடித்த நூல் போலக் கிழித்தெடுத்தவன்.. முட்களை வைத்து ‘சிக்சாக்’காகப் பின்னிப் பிளந்த காயம் மீண்டும் விரியாதிருக்க ஆவன செய்துவிட்டு ஆன்ட்டிசெப்டிக் மருந்தை அதன்மேல் சிறிதளவு ஊற்றினான். கையைத் துடைத்து எழுந்த போது, மற்றவர்கள் அனைவரும்.. கிடைத்த இடங்களில் விழுந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர்.

அதைப் பார்க்கும் போதே ஒருபக்கம் பரிதாபமாக இருந்தாலும் மறுபக்கம் நகைப்பாகவும் இருந்தது. பஞ்சு மெத்தையில் ஏசி குளிரில் உறங்கிப் பழக்கப்பட்டவர்கள், வெறும் மணல்தரையில், சிப்பிகள் குத்துவது கூடத் தெரியாமல் படுத்திருக்கின்றனர்.

ஜெயவர்மன் மட்டும் கடலுக்கு அருகாமையிலிருந்த பாறையில் அமர்ந்தவாறு எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆண்களுக்கோ கைகள் எல்லாம் மரத்துவிட்ட உணர்வு. தாங்க முடியாத வலி. உள்ளங்கைகளிலோ கொப்பளங்கள் தோன்றிவிட்டிருந்தன. கூடவே பசி வேறு அவர்களை சற்று சோர்வடையச் செய்தது.

அன்று முழுவதும் அவர்கள் ஒன்றும் உண்ணவில்லை. போட்டிலிருந்தபோது இருந்த உணவை உண்டதுதான்.இனி உணவைத் தேடிப் பெற்றால்தான் உண்டு. அதுவரை பசியை அடக்கித்தான் ஆகவேண்டும்.

பசிவந்தால் பத்தும் பறந்திடும் என்பது எத்தனை பெரிய உண்மை... உயிர்போகும் அளவு வதைக்கிறதே.. இதுவரை பசி என்பதையே தெரிந்திராதவர்களுக்கு, எஞ்சிய உணவை அலட்சியமாக குப்பைத் தொட்டியில் போட்டுப் பழக்கப்பட்டவர்களுக்கு, ஒரு பருக்கை சோறாவது கிடைக்காதா என்று தவிக்கத் தொடங்கினர்.

அனைவரும் கரையில் அமர்ந்தவாறு கடலை வெறித்துக்கொண்டிருக்க, நீண்ட மணி நேர உழைப்பினாலும், களைப்பினாலும், அனைவரின் விழிகளும் சொக்கத் தொடங்க, மெல்ல மெல்ல உறக்கத்தின் வசமானார்கள் நாயக நாயகிகள்.

எத்தனை மணி நேர உறக்கமோ கடவுளுக்குத்தான் தெரியும் அவர்கள் விழித்தபோது, பகலவன் மாலை வேளையை நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருந்தான். ஆனாலும் அந்த இடத்தை விட்டு எழுந்துகொள்ளாமல் அப்படியே கிடந்தனர். காரணம் பசி..

சோர்வுடன் எழுந்தமர்ந்த கலைக்கு அங்கும் இங்குமாக இருந்த அழகிய கிளிஞ்சல்களைக் கண்டதும் பசி மயக்கம் பறந்து போனது. ஓடிச்சென்று அங்கு இருந்த வண்ணக் கிளிஞ்சல்களையும், நத்தை ஓட்டினை போன்ற கூடுகளையும் எடுக்க துவங்க, அதைக் கண்டு பதறிய தியா

"இதெல்லாம் தொடாதீங்க, எது உயிரோடு இருக்கு, எது செத்திருக்கு அண்ட் எது பாய்சனஸ்னு நம்மளால சொல்லவே முடியாது சோ பீ கேர்புல் சிஸ்டர்ஸ்" என்று சொல்ல, மனமே வராமல் எடுத்தவற்றை கீழே கொட்டிவிட்டுப் பரிதாபமாகத் தியாவைப் பார்த்தாள் கலை.

அதே நேரம் தன் கரங்களைத் தட்டி அழைத்த ஆர்யன்,

"ஹாய் கைய்ஸ், ஓரளவு சேஃப்பான இடமா பார்த்து இறங்கியிருக்கோம்.. நாம் இங்க இருக்கறது யாருக்கும் இப்ப வேணா தெரியாம இருக்கலாம்.. கூடிய சீக்கிரம் நமக்கான உதவிகள் வந்து சேரும்.. நம்ம யாட்ச் கடைசியாக இருந்த இடம், அந்த பகுதியை கண்காணிக்கற எல்லை பகுதி கடற்படையினரின் ரேடாரில் பதிவாகியிருக்கும்.. சப்போஸ் அது சர்வதேச எல்லை பகுதியாக இருந்தா அந்த எல்லையை பங்கு பிரிக்கற நாடுகளோட ரேடார்ல பதிவாகும். அதுவும் தீப்பிடிச்சு எரிஞ்சதால நிச்சயம் அவங்க கவனத்துக்கு போயிருக்கும்..

நமக்கு இந்த டூரை அரேஞ்ச் செய்த அநேகாத்மன் சார் என்னோட கான்டாக்ட்லயே இருந்தார். நாம் அவரை தொடர்பு கொள்ளலன்னா கண்டிப்பா நாம ஏதோ ஆபத்துல இருக்கோம்னு தெரிஞ்சு நம்மளை கண்டுபிடிக்கற வேலையில் இறங்கியிருப்பார். சோ, நம்பிக்கையை இழக்காம இருங்க… முக்கியமானது... இப்போ மாலையாயிடுச்சு… சீக்கிரம் இருண்டிடும்… அதுக்குள்ள ஏதாது சாப்பிட கிடைக்குமான்னு பாக்கலாம்… அப்புறம் இரவானதும்தான் நாம கொஞ்சம் கவனமா இருக்கணும்… இதில ஆண்கள் இருவர் இருவரா மாறி மாறிக் காவல் காக்கணும்… ஏன்னா நாம தூங்கிறப்போ இங்க இருக்கிற மிருகங்கள் நம்மை அண்டாம பாத்துக்கனும்… அதோட நெருப்பையும் அணையாம பாத்துக்கனும்.. அப்புறம் முக்கியமா இரவானதும் குளிரத் தொடங்கும்… அதனால சுள்ளிங்கள எடுத்து வந்தா, அதில் நெருப்பை கொளுத்திக்கலாம்… அது மிருகங்க கிட்டயிருந்து நம்ம காப்பாத்தும்…” என்றதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் சோர்வைக் களைந்து விட்டு எழுந்தனர். ஆளாளுக்கு கண்களுக்குத் தெரிந்த குச்சிகள், தடிகள் காய்ந்த சருகுகள் என்று எடுத்து வந்து ஒரு பக்கம் குவிக்கத் தொடங்கினர், மெல்ல மெல்ல இருளத் தொடங்கியது.

சிறு குச்சிகளை உடைத்து அவைகளை முதலில் அடுக்கி அதன் நடுவில் காய்ந்த சருகுகளை இட்டு, தீப்பெட்டி எங்கே என்று கேட்க அப்போதுதான் அனைவரும் விழித்தனர். அய்யய்யோ.. அதுதான் எமெர்ஜென்ஸி பையுடன் சேர்ந்து, சுறாவோடு போய்விட்டதே... என்று பெண்கள் விழிக்க

“வெரி குட்…” என்று சினந்த அகிலன், இப்போது என்ன செய்வது என்பது போல மற்றவர்களைப் பார்க்க, அவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.

இவர்களின் நிலையறிந்து ஆர்யன் வேகமாக போட்டை நோக்கிச் சென்றான். அதிலிருந்து எதையோ எடுத்துக்கொண்டு இவர்களை நோக்கி வரும்போதே தரையிலிருந்து ஒரு கல்லையும் எடுத்துக்கொண்டு வந்தான்.

தும்பு போல இருந்த சருகுகளுக்குகளைத்த தேடிப்பிடித்து எடுத்தவன் அதை எடுத்துவந்த கல்லின் மீது வைத்து அதை பெருவிரலால் பற்றி போட்டிலிருந்து எடுத்துவந்த சிறிய இரும்புத்துண்டைக் கொண்டு வேகமாக அதுவும் பலமாகக் கல்லில் உராயத் தொடங்கினான். ஒரு சில வினாடிகளில் அந்தத் தும்பு புகைக்கத் தொடங்க உடனே ஊதத்தொடங்கினான் ஆர்யன். இப்போது செந்தணல் உருவாகத் தொடங்கியது.

சட்டென்று மண்டியிட்டு சருகுகளுக்கு இடையில் புகைந்து கொண்டிருந்த தும்பை செலுத்தி, மேலும் ஊத தொடங்கினான் ஆர்யன்.

மறுபக்கம் கிருஷ்ணாவும் சேர்ந்து கொள்ள, சில நிமிட அவர்களின் போராட்டத்திற்கு பின், நெருப்பு குப்பென்று பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்தது.

"ஹூ ர்ர்ர்ர்ர்ரேஏஏஏ. . ஆர்யன் யூ ஆர் க்ரேட். " என்று பெண்கள் சத்தமாய் கத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, சிறு முறுவலுடன் தலை தாழ்த்தி அவர்களின் பாராட்டினை ஏற்றுக் கொண்டான் ஆர்யன்.

"ஒன் மோர் ரெக்வெஸ்ட் .. இந்த மாதிரி ரொம்ப கத்தி நாமளே தேவையில்லாத விருந்தாளிகளை இங்க வரவழைச்சிட வேண்டாம்.. அமைதியா சந்தோஷத்தை கொண்டாடுவோம்" என சொன்னதும், கத்தியவர்கள் சட்டெனத் தங்கள் வாயை மூடிக்கொண்டனர்.

தீ நன்றாக எரியத் தொடங்கியதும், எழுந்த ஆர்யன்,

"ஓக்கே… நான் சாப்பிட ஏதாச்சும் கிடைக்குதான்னு பாத்த்திட்டு வர்ரேன்… அதுவரை இந்த இடத்தை விட்டு எங்கும் போகாதீங்க…" என்கிற உத்தரவுடன் புறப்பட,

"நானும் வர்ரேன் கப்டன்…" என்றவாறு ஜெயவர்மனும் அவனுடன் புறப்பட, இருவரும் அடர்ந்த மரப்பிரதேசம் நோக்கிச் சென்றனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடக்க, இருவரும் கரங்களில் பெரிய கிழங்குகளைச் சுமந்துகொண்டு வந்து சேர்ந்தனர்.

«என்ன கப்டன் இது? » என்று வியந்தவாறு ஆதீரந்தன் கேட்க,

«இது யாம்… வகையைச் சேர்ந்த கிழங்கு… நம்ம பாஷைல சொல்லனும்னா சேனைக்கிழங்குன்னு சொல்லலாம். நெருப்பில் சுட்டுச் சாப்பிடலாம். இப்போதைக்கு இதுதான் கிடைச்சுது… அதிகம் உள்ளே போய் பாக்க முடியல. வெளிச்சம் போதாது…» என்று கூற, உடனே அந்தக் கிழங்குகள் ராயரிடமிருந்த பேனாக்கதியால் வெட்டப்பட்டு நெருப்பில் போட்டுப் புதைக்கப்பட்டு, சுடப்பட்டு அனைவரின் பசிக்கு சிறு உணவாகியது. யானைப் பசிக்கு சோளப் பொறிதான்,

அதன் சுவை, எதுவும் அறியும் நிலையில் அவர்களின் பசி விட்டுவைக்கவில்லை. ஓரளவு அரை வயிறு நிரம்பியதும்தான் அனைவருக்கும் எதையும் ஒழுங்காக சிந்திக்க முடிந்தது. அடுத்து உறங்குவதற்காக, ஆளாளுக்கு ஓடிச்சென்று அந்தப் பெரிய இலையை ஒடித்து வந்து தரையில் போட பெண்கள் ஒரு புறமாகவும், ஆண்கள் மறு புறமாகவும் படுத்துக் கொண்டனர். ஆர்யனும், கிருஷ்னாவும், அகிலனும் காவலுக்கு நிற்க, விழிகளை மூடிக்கொண்டாலும் தூக்கம் வரவில்லை. ஏற்கெனவே உறங்கிவிட்டதால் தூக்கம் வர மறுத்தது. கூடவே காலம் அடுத்து என்ன உணர்த்தக் காத்திருக்கிறதோ என்கிற அச்சமும் அவர்களைக் கண்ணயர விடவில்லை.

பெண்கள் மெதுவாகத் தமக்குள் எதையோ பேசி முணுமுணுத்துக்கொண்டிருக்க, ஆண்களோ, சற்று முன் கடலில் நடந்த சாகசத்தைப் பற்றிப் பேசி அதில் யார் யார் எப்படிப் பயந்தார்கள் என்று ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்து காலைவாரியவாறு நடந்த சாகசத்தில் சந்தித்த ஆபத்துக்களுக்கும், தமது தொழில் துறையில் சந்தித்த ஆபத்துக்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றிப் பேசிச் சத்தம் பெரும்பாலும் வெளியே வராதவாறு சிரித்துக் கொண்டிருந்தனர்.

தியாவோ தோள்பட்டையில் ஏற்பட்ட வலியில் உறங்க முடியாது தோள்களைப் பற்றிக் கொள்ள அதைக் கண்ட ஆர்யாவுக்குப் பரிதாபமாக இருந்தது.

அவளை நெருங்கியவன்,

“ஆர் யு ஓக்கே…?” என்றான் சற்று மென்மையுடன்.

திடீர் என்று ஆரியனின் குரல் கேட்டதும் பதறி எழுந்தவள்,

“யெஸ் காப்டன்…” என்றாள். ஆனால் அவனோ அவளையும் அவள் அழுத்திக்கொண்டிருந்த தோள் பட்டையையும் கண்டு, தோள்பட்டையைப் பற்றிக்கொண்டிருந்த கரத்தை விலக்கியவன், பெருவிரலாலும் சுட்டுவிரலாலும் நீவிவிட்டு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இரு பெரு விரல்களாலும் அழுத்திப் கொடுக்க, தியாவிற்கு சொர்க்கமே தெரிந்தது.

தன் விழிகளை மூடி அவனுடைய மசாஜை ரசித்தவள், ஒரு கட்டத்தில் அவன் அவளுடைய கரத்தைப் பற்றி ஒரு இழுவை இழுக்க, அதவரை தெரிந்த சொர்க்கம் படார் என்று நரகமாகிக் கத்துவதற்கு வாயைத் திறக்க, அவசரமாக அந்த வாய்க்குள் தன் வலது கரத்தைச் செலுத்தி அலறலைத் தடுத்தவன்,

“ஷ்… இட்ஸ் ஓக்கே… இப்போது படு” என்று விட்டு அவளிடமிருந்து விலக, அப்போதுதான் கவனித்தாள் அவளுடைய வலி பெரும்பாலும் மட்டுப்பட்டிருந்தது. நம்ப முடியாதவளாகத் தோள் மூட்டை சுழற்றி சுழற்றிப் பார்த்தாள்… ம்ஹூம் வலிக்கவேயில்லை. ஏதாவது மந்திரம் கற்று வைத்திருக்கிறானா என்ன? என்று ஆச்சரியமாக எண்ணியவள் அப்படியே தொப்பென்று விழ, நம்ப முடியாது படுத்தவாறே கரத்தை அசைத்துப் பார்த்து, வியந்தவாறே நட்ச்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு உறக்கம் மெல்ல மெல்லமாகத் தழுவத் தொடங்கியது.

http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/page-43#post-243525


வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியார் 016 கதையோட 10ஆம் அதிகாரம் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள். சென்ற பதிவுக்காகக் கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்கள் எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.
 

sivanayani

விஜயமலர்
11671


(11)

எப்போது உறங்கினாள் என்றே அறியாது உறங்கியவள்.. கண்களுக்குள் விரிந்த ஆரஞ்சு நிற ஒளியில் துயில் கலைய.. கண்களை மலர்த்தியவள், பளீரென்று அடித்த பகலின் ஒளியில் கண்களை மூடிக் கொண்டு.. பின் மெதுவாக கண்களைச் சுருக்கியவாறு திறந்தாள் தியா.

ஏதேதோ சப்தங்கள்.. அலைகடலின் ஓசை.. பிறகுதான் தானிருக்கும் இடம் நினைவு வர... முதலில் குழம்பிப் பின் தெளிந்து சோர்வுடன் எழுந்தமர்ந்து.. சுற்றிப் பார்த்தாள். ஏற்கனவெ எழுந்தவர்கள் ஓரமாக நிழலில் குழுமி பேசிக்கொண்டிருந்தனர். அவள் படுத்திருந்த இடத்தில் வெயில் படாதவாறு தென்னை ஓலைகள் நட்டு வைக்கப் பட்டிருக்க 'யார் இதைச் செய்திருப்பர்!' என்கிற யோசனையுடன் மெதுவாக எழுந்தமர்ந்தவளுக்கு தோள் வலி பெரும்பாலும் மட்டுப்பட்டிருந்தது.

ஏனோ சூரியன் அதிகாலையிலேயே வேகம் கொண்டு இருந்தான் போல. அவன் வெம்மை அந்தக் காலை வேளைக்கு சற்று அதிகம்தான். லேசாக மோதிய கடற்காற்றிலும், குளிரென்றும் சொல்ல முடியாமல், வெக்கை என்றும் சொல்ல முடியாத ஒரு சீதோஷ்ண நிலையை உணர்ந்தவாறே எழுந்தாள்.

தெளிந்த கடல், நீல நிற வயலாகி அழகுற மிளிர்ந்து.. இவளை அலைக்கரங்கள் நீட்டி அழைப்பது போலத் தோன்ற மார்புக்கு குறுக்காகக் கரங்களைக் காட்டியவாறு கடலை ரசித்துக்கொண்டு அதன் கரை நோக்கி நடக்கத்தொடங்கினாள்

சற்றுத் தள்ளி இருந்த பாறையில் சம்மணமிட்டு அமர்ந்து.., ரம்மியமான அந்த காட்சியில் தன்னை மறந்து கண்களை அழுந்த மூடி மூச்சை உள்ளுக்குள் இழுத்து வெளியே விட்டு அந்த இயற்கையின் காற்றை சுவாசித்துக்கொண்டிருந்தாள் மீரா.. அவளின மூச்சின் ஒலியில் அமர்ந்த நிலையில் யோகக் கலையின் சாயல் தெரிய..

"ரொம்ப அழகான இடம் இல்ல இது, நாம் ப்ளான் பண்ணி போய் இருக்க வேண்டிய அநேகாத்மன் தீவை விட இது செமையா இருக்கு..." என்கிற குரல் பின்னாலிருந்து வரத் தன் தியானத்தை விடுத்துத் திரும்பிப் பார்த்தாள்.

கலைதான் ஜனனியுடன் பேசியவாறு வந்து கொண்டிருந்தாள்.

அப்பாறை மீது சாய்ந்து நின்ற ஜனனி,

"படங்கள்ல காமிக்கற ஆளில்லாத கடற்கரை போல எவ்வளவு அழகா இருக்கு இந்த கடற்கரை.. தெளிவான நீர்… கடலுக்கு அடியில் நீந்தற மீன்கள் முதற்கொண்டு எல்லாம் தெரியுது. வானமும் ஆகாயமும் ஒன்னா கலந்தது மாதிரி பரந்து விரிந்திருக்கு... கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியற நீல நிற நீர்… அதுக்கு மேச்சிங்கா பச்சை பசேல்னு அழகான மரக் கூட்டம்., பேரே தெரியாத செடி கொடிகளும், அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு லைட் போட்டதுபோல உதிக்கும் சூரியனும்… அப்பப்பா .. பார்க்கவே எவ்வளவு அழகா இருக்கு" என அதிசயிக்க,

"இங்க பாருங்களேன்.. விதவிதமான பூத்திருக்கிற, பூக்கள்.. இந்த மாதிரி கலர் காம்பினேஷன்ல நான் இதுவரை பார்த்ததே இல்ல.. அதுல அந்த கலர் பூக்கள் அட்ராக்ட் செஞ்சதால, அங்க பறந்திட்டிருக்க பட்டாம்பூச்சிகளை பாருங்க.. செம்ம கலர்புல்.. அந்த டிசைன்ஸ்.. ச்ச.. ஃபிகாசோ தோத்தார்.." என்றவாறுதன் கண்களை படபடத்த ஓவியக் கலை நிபுணியான கலையின் உற்சாகம் மற்றவரையும் தொற்ற, அவர்களும் ஏதேதோ சொல்லி வர்ணித்தவராய் இயற்கை அன்னையின் செல்லப் பிள்ளை போல மிடுக்கு காட்டி நின்ற தீவை ரசிக்கத் தொடங்கினர்.

சற்றுத் தள்ளி நின்று கேட்ட தியாவிற்கும் உதட்டில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது.

துன்பங்களுக்கு மத்தியில் துளி இன்பம் வந்தாலும் ரசித்து ருசித்துக் கொண்டாடுவது மனிதவாழ்வின் இயல்புதானே. எவன் துன்பத்தைக் கூட இன்ப மயமாக காண்கிறானோ, அவன்தான் வாழ்வில் வெற்றி பெற்றவன் ஆகிறான். வாழ்க்கை அடுத்த வினாடியை நமக்காக எப்படி செதுக்கியிருக்கிறது என்பது தெரியாது. நமக்கு தெரிந்த நொடி இந்தக் கணம் மட்டுமே. தெரிந்த நொடியை விடுத்துத் தெரியாத நொடிக்காக வருந்துவதை விட, தெரிந்த இந்தக் கணத்தை அனுபவித்துவிட்டு போவதுதான் புத்திசாலித்தனம்.

விழிகளை அழுந்தத் தேய்த்தவள் மேலும் நடந்தவாறே, தானும் அவ்விடத்தின் அழகை உணரத் தலைப்பட்டாள்.

மரங்களில் தாவும் சிறு அணில்களும், பல வண்ண பறவைகளின் கீச் கீச் சத்தங்களும், வண்டுகளின் ரீங்காரமும், அலைகளின் கரையோர சலசலப்புகளும், தென்னை மர ஓலைகளின் படபடப்பும், காய்ந்த சருகுகளின் மேல் உராய்ந்து அதை நர்த்தனமாட வைத்த காற்றும்… அதுவரை இருந்த அயர்வை கலக்கத்தை விரட்டியடிக்கத் தன்னை மறந்து கரங்களை விரித்துத் தலையை பின்னால் சரித்து விழிகளை மூடி நின்றாள்.

மூடிய விழிகளுக்குள் சூரியனின் ஒளியை உணர்ந்தாள். கடலலையின் கிசு கிசு பேச்சை காதிற்குள் உள்வாங்கினாள். கடல் காற்று அள்ளித்தந்த அந்த சூழ்நிலை சுகந்தத்தை ஆழ்ந்த மூச்சினால் உள்வாங்கி சுவாசப்பையை நிரப்பிக்கொண்டாள்... அவளுடைய ஐம்புலன்களும் ஒரு நிலையில் ஒரு மையப்புள்ளியில் நிலைத்திருக்க, அந்த தீவில் அவள் மட்டும் தனிமையில் ஏகாந்த இனிமையில் நின்றிருக்க திடீர் என்று ஒரு அழுத்தமான கரம் அவளை பற்றுகிறது... திடுக்கிட்டு விழிகளை திறந்து பார்க்கிறாள்... அவன்... கடல்வேந்தன்... அந்தக் கடல்வேந்தனாய் ஆர்யன்... கம்பீரமாய் அவள் கரத்தை பற்றி தன்னை நோக்கி இழுக்கிறான். விருப்புடன் அவன் இழுத்த இழுப்பில் அவன் மீது மோதுகிறாள்... அவனுடைய கரம் அவளை வளைத்துப் பிடிக்க திடுக்கிட்டு விழிகளைத் திறந்த தியாவிற்கு தன் கற்பனை சென்ற திறத்தைக் கண்டு கதிகலங்கிப்போனாள்.

தன் சிந்தனை சென்ற திசை பார்த்துத் தன்னையே திட்டிக்கொண்டவள், அந்த சூழல் அவளை அவ்வாறு என்ன வைக்கிறது என்று சமதனப்படுத்தியவள், தன்னையும் மீறி விழிகளால் ஆர்யனை தேடினாள். அவன் எங்கிருந்தோ இவர்களை நோக்கித்தான் வந்துகொண்டிருந்தான்.

'ஒரு இடத்தை இருக்கானா பாரு பயபுள்ள... பம்பரம் போல அங்கிட்டும் இங்கிட்டும் சுத்தி திரியிறதே வேலையா போச்சு...' என்று மனசுக்குள் புலம்பிக்கொண்டிருக்க,

“ஹாய் காய்ஸ்…” என்று விட்டு, சுற்றிலும் பார்க்க, அவனையே வெறித்து நோக்கியிருந்த தியாவைக் கண்டதும் புருவம் சுருங்க, என்ன என்பது போலத் தலையை ஆட்டினான். அப்போதுதான் அவனை வெறித்துக்கொண்டிருப்பது புரிய சங்கடத்துடன் நெளிந்தவள், அவசரமாக ஒன்றுமில்லை என்பது போலத் தலையை ஆட்டிவிட்டு திரும்ப அனைவரும் ஆரியனை நோக்கி வந்தனர்.

“லிசின்… இப்போ சர்வைவல பத்தி நாம யோசிக்க வேண்டிய நேரம். நமக்கு உதவி வரும் வரைக்கும் நமக்கு வேண்டியத நாமதான் சேகரிச்சாகனும்.” என்றவன் சுற்றி வரப் பார்த்துவிட்டு, அனைவரின் கவனமும் தன் பேச்சில் குவிந்ததை உணர்ந்து..

“நமக்கு இப்போ தண்ணி ரொம்ப அவசியம்… உடம்பு தண்ணீர் இல்லாம குறைந்தப்பட்சம் 8 மணி நேரம் தாக்குப்பிடிக்கும்… அதிகப்பட்சம் மூணு நாள், நம்மகிட்ட தண்ணி ஏதும் இல்ல.. இங்கே பறவைகள் இருக்கு… சோ நல்ல தண்ணியும் எங்கேயாச்சும் பக்கத்தில இருக்கும்…” என்று ஆர்யன் சொல்லும்போதே குறுக்கிட்ட ஜெயவர்மன்,

"நேத்து நாம கிழங்கு பறிச்சுட்டு வர்றப்போ தூரத்தில மூங்கில் காடு பாத்தோம்ல… மூங்கில்கள் எப்பவும் மழைத் தண்ணீரைத் தேக்கி வச்சிருக்கும், நாம அந்த கணுக்களை கரெக்டா வெட்டி எடுத்து பார்த்து.. உள்ள இருக்க தண்ணீரை அப்படியே குடிக்கலாம்.. முப்பது பேருக்கு போதுமான்னு தெரியல..." என்றவாறு அண்ணாந்து பார்க்க, அவன் பார்வை உயர்ந்து இருந்த தென்னை மரங்களின் மீது விழுந்தது.. "அல்லெங்கில் இந்தக் காய்களை பறிக்க வேணும்.." என சொல்லிய நேரம்.. அந்த உயரமான தென்னைமரத்தில் ஏறி எப்படித் தேங்காய் பறிப்பது என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

“அடேங்கப்பா… இத்தனை உயரமா இருக்கே… இருபது இருபத்தஞ்சு அடிக்கு மேலே இருக்கும் போல இருக்கே… இதில் ஏறி யாரு காய் பறிக்க?” என்று அதிர்ந்தவாறு ஷாலினி கேட்க, அதைப் புரிந்துகொண்டவராக, அந்த கப்பலில் சமையல் வேலை செய்யும் டானியல்,

"பேடிக்கண்டா.. ஞான் மரமேறியானோ.. நிங்களுக்கு எளம் தென்னங்காயோ, ஓலைகளோ ஞான் பறிச்சு தறாம்." என்று சொல்ல,

நாச்சி குதூகலத்துடன், "தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்ல, இளநீரே பறிச்சு தரேங்கறான், யாரு பெத்த பிள்ளையோ, நல்லா இருப்பா.." என்று சொல்ல, அவளின் பேச்சுப் பாணியில் கொல்லென சிரிப்பொலி கிளம்பியது..

"நல்ல தண்ணீர் ஊற்றுக்கு... கரையில் இருந்து ஒரு நாப்பது அல்லது ஐம்பது அடியில் தோண்டினா நிச்சயம் கிடைக்கும்.. அதுவும் தென்னை மரத்துக்கு பக்கத்தில் தோண்டினா, நிச்சயம் ஊற்று கிடைக்கும்.. அதை எடுத்து கொதிக்க வச்சு வடிகட்டி குடிக்கலாம்" என கேப்டன் ஆர்யன் சொல்ல, "தென்னை மரத்திற்கு அருகாமைல வேர்கள் அதிகமா இருக்கும்.." என ராயர் சொல்ல,.

அருகாமைன்னா பத்தடி தள்ளி.. என.. " சரிதான்.. ஆனா அதுக்கு தோண்ட பொருட்கள்.. கொதிக்க வைக்க பாத்திரம் வேண்டாமா " என திகம்பரி கேள்வியாக நிறுத்தினாள்.

"மூங்கில் வெட்டுவோம் இல்ல, அதுவே கடப்பாறை போல.. பாத்திரம் போலத்தான். அதில பிரியாணியே சமைக்கிறப்ப, நாம தண்ணி சுட வைக்கவோ மீனை வாட்டவோ உபயோகப்படுத்தலாம் " என்று முடித்தான் ராயர்.

"தண்ணீர் பத்தலைன்னா சின்ன ஓடைகளை தேடி தீவிற்கு உள்ள போக வேண்டியிருக்கும்.. ஏதாவது நீர் ஊற்று இருக்கா தெரியலை… தேடனும்.. ஆனா அதை கடைசி முயற்சியா வச்சுக்கலாம், ரிஸ்க் ஜாஸ்தி.. அடர்ந்த காட்டுக்குள்ள போறதுங்கிறது.." என்று அக்கண்யன் சொல்ல,

"உணவுக்கு இங்க கிடைக்கற மீன், நண்டுகள், தேங்காய், எதாவது சின்ன மிருகங்கள் தென்பட்டா அதுங்கள வாட்டலாம் நெருப்பில்…" ஆர்யன் சொல்லும் போதே,

"ஹேய்.... நான் வெஜிட்டேரியன்" என்று தியா அலற, கேட்ட ஆர்யன் இதழ்கள் வளைய,

"அதுக்கு என்னப் பண்றது, உயிர் பிழைக்க சாப்பிடறப்ப.. எதுவானாலும் சாப்பிட்டுத்தான் ஆகணும்… ஒன்னுமே இல்லைன்னா… கிடைக்கிற பூச்சிங்கதான் நம்மோட சாப்பாடாகிடும்… அதனால இங்க கிடைக்கிறதை வச்சு சாப்பிடு… உனக்குத்தான் சுத்தி வர பச்சைப் பசேல்னு இருக்கே… எதையாச்சும் பிடுங்கி சாப்பிடலாம்… நமக்குத்தான் சாப்பாட்டிற்கு அலையனும்… உனக்கு அந்த சிரமமும் இல்லை." என்று கிண்டல் குரலில் ஆர்யன் கூற, அவனை உர் என்று முறைத்துவிட்டுத் தலையைத் திருப்பிக்கொண்டாள் தியா.

அங்கே அழகரும் முறுவலித்தவாறு அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.. அழகருக்கு இரத்தப் போக்கு நின்றிருந்தது. அதிசயமாகக் காயம் வேறு ஓரளவு காய்ந்துபோயிருந்தது. ஒரு வேளை அந்த முள் மருத்துவ குணமுடையதாக இருக்கலாம்..

சூரிய கதிர்கள் பலமாக விழத் தொடங்க, சூடு அதிகமாக இருப்பது போலத் தோன்ற, அனைவருக்கும் நிழலின் அருமை புரியத் தொடங்கியது. இப்போது ஓரளவு தாங்கிக்கொண்டாலும், மதியம் கடற்கரை வெய்யிலின் அகோரத்தைத் தாங்க முடியாது. அதைப் புரிந்துகொண்டவர்களாக ஆளாளுக்கு அவசரமாக கூடம் அமைப்பதற்காகப் பொருட்களைச் சேகரிப்பதற்காக ஆண்களுடன் அடர்ந்த மரங்கள் உள்ள இடத்தை நோக்கிச் சென்றனர்.

ப்ருத்வி அழகருக்கு அருகே அமர்ந்திருக்க, மற்றையவர்கள் கூடாரத்திற்கு வேண்டிய பொருட்களை சேகரிக்கத் தொடங்கினர்.

நீளமான தடிகளையும் கொடிகளையும் தேடிப், பார்வையை ஓட்டியபடியே,

"ஜனனி அதோ பாருங்க… உங்களுக்கு வலது புறமா ஒரு பெரிய தடி முறிஞ்சிருக்கு… அதை எடுங்க" என்று ஷாலினி கூற, அவள் கூறிய திசையைப் பார்த்த ஜனனி, அதைக் கண்டு கொண்டு.. பற்றி இழுக்க, இழுத்த வேக்தில் தடுமாறி விழப்போக, அவள் பின்னாலிருந்த அமிர்தவர்ஷினி அவளைத் தாங்கிப் பற்றி,

"பார்த்து ஜனனி… நீங்களும் அடிபட்டுக்காதீங்க…" என்று அக்கறையுடன் கூறியவாறு ஜனனிக்கு அந்தத் தடியை இழுத்தெடுக்க உதவினாள். அதே நேரம்,

"அச்சோ இங்க பாருங்க கேர்ள்ஸ், ஏதோ குட்டி, குட்டி பழங்கள் இருக்கு, அதுவும் செடி முழுக்க பழங்கள் தான்" என்ற கலை சொன்னதோடு நிறுத்தாமல் அதனருகில் சென்று பழங்களை பறிக்கத் தொடங்க, கலையை தொடர்ந்து மீரா, திகம்பரி மற்றும் நாச்சியும் அதில் இணைந்து கொண்டனர்.

"இந்த பழம் வெள்ளையா இருக்குங்க கலை, இட் கேன் பி பாய்சனஸ், இதை பறிக்க வேண்டாம் என எனக்குப் படுது" என அமிர்தவர்ஷினி கூற, அதை தலையசைத்து ஆமோதித்தாள் சுவர்ப்பனா. உடனே விரைந்து சென்று அதில் ஒரு பழத்தை எடுத்துக் கரத்தில் நசுக்கி மூக்கில் வைத்து நுகர்ந்து பார்த்தவளின் இமைகள் சுருங்கின. அங்கிருந்தவர்களைப் பார்த்து,

"கொஞ்சம் ஆல்மண்ட் வாசம் இருக்கு, பொதுவாக பழத்தில், அப்படி வாசம் இருந்தா அது விஷத்தன்மை கொண்டதா இருக்கும்னு சொல்லுவாங்க…" என்றதும் அதற்கு மேல் அதைக் கீழே போடு என்று சொல்லவேண்டிய அவசியமே அவர்களுக்கு இருக்கவில்லை.

‘வடை போச்சே…’ என்பது போலக் கீழே போட்ட பழத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போதே,

" அம்மாஆஆஆஆஆஆ..." என்கிற அலறல் ஷாலினியிடமிருந்த வந்தது. அவளருகே நின்றிருந்த ஜனனியும் தன்னை மறந்து ஷாலினியுடன் சேர்ந்து கத்தத் தொடங்கினாள்.

"உஸ்ஸ், கத்தாதீங்க" எனப் பதட்டத்துடன் கூறிய சுவர்ப்பணாவும் திரும்பிப் பார்த்துவிட்டுத் தானும் சேர்ந்து கத்தத் தொடங்கினாள்.

அதே நேரம் சற்று உள்ளே சென்று கண்களுக்குத் தெரிந்த மூங்கில் தடிகளை வெட்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆர்யனும், கிருஷ்ணாவும், பெண்களின் சத்தம் காதில் கேட்டதும், செய்துகொண்டிருந்த வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டுத் தலை தெறிக்க ஓடிவரத் தொடங்கினர்

"என்னாச்சு என்னாச்சு" என்று நெருங்கி வந்த நாச்சியும், கலையும் கேட்கக் கண்களில் பயத்தை தேக்கி பார்வையை மட்டும் "அங்கே" என்பதாய் செய்கை காட்டினாள் ஷாலினி.

பெண்கள் அனைவரும் ஒரு நொடி பதறி ஷாலினியின் பார்வை சென்ற இடத்தை நோக்கி அண்ணாந்து பார்க்க அங்கே மிகப் பெரிய, உள்ளங்கை அளவிலான கருநிற சிலந்தி ஒன்று தன் வலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

அதன் அசைவற்ற நிலை கண்டதும்.. ஒருவாறு தன்னை சமப்படுத்திய ஷாலினி, ஆழ மூச்சு விட்டு.. தடதடத்த மனதைக் கையால் அழுத்திய படி நின்றாள்.. அவள் வீட்டில்.. பல்லி, கரப்பான் பூச்சி, சிறிய எட்டுக் கால் பூச்சிக்கே அலறி ஊரைக் கூட்டுபவள். கையகலப் பூச்சி கண்டு அலறாமல் இருப்பாளா.. எனினும்.. சமாளிப்பவளாய்,

"சாரி கேர்ள்ஸ், நான் பயப்பட்டது மட்டுமில்லாம, உங்களையும் சேர்த்து பயப்பட வச்சுட்டேன்,.. ஆனாலும் எங்க அத்தான் பக்கத்தில வரும் போது மட்டும் தான் இதயம் இப்படி தாறுமாறாக துடிக்கும்ன்னு இத்தனை நாள் நினைச்சேன் ஆனா இன்னைக்கு..." என்று ஷாலினி பார்வையை மறுபடியும் சிலந்தியின் பக்கம் ஓட்ட, அவள் சொன்னதின் அர்த்தம் புரிந்த மற்ற பெண்களும் பதட்டம் குறைந்து கிளுக்கி சிரிக்க ஆரம்பித்தனர்.

அதே நேரம் பின்னால் சற்றுத் தள்ளி ஒரு சலசலப்புத் தோன்றத் திரும்பிப் பார்த்த நாச்சிக்கு அவளையும் அறியாது கைகால்கள் நடுங்கத் தொடங்கின..
 
Status
Not open for further replies.
Top