All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கதைத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
11935
(18)

தீவில்

ஆனந்தன் தன் ரோபாட் மூலம் செயற்கைக்கோளுக்கு தகவல் அனுப்பிய உடன் எல்லோரின் மனதிலும் சொல்லொணாத நிம்மதியும் மகிழ்ச்சியும் எழுந்தன. வார்த்தைகளால் அடக்கிவிட இயலாத உணர்வு அது. வெளி உலகை தொடர்புகொள்ள முடியாமல் தவித்து, திண்டாடி, சோர்ந்து, நம்பிக்கை தேய்ந்து போன வேளையில், சொந்த பந்தங்களுக்கு தாங்கள் இருக்கும் இடம் தெரியாமலேயே அழிந்து போய்விடுவோமோ என்ற அஞ்சிய தருவாயில், கடவுள் அனுப்பிய தூதுவன் போல தக்க சமயத்தில் உதவி செய்தது அந்த ரோபாட்.

அச்செய்தி கிடைத்திருக்கும்.. இன்னும் ஒரு நாளிலோ அல்லது இரண்டு நாட்களிலோ மீட்பு படையினர் தங்களை தேடி வருவார்கள்… என்ற நம்பிக்கை முளைவிட முன்தினம் நடந்த சோதனைகளில் விளைந்திருந்த மன துயர், சோர்வு ஓரளவு குறைந்து போனது. ஆனாலும், மழை விட்டும் தூவானம் விடாத குறையாய் பயம் மட்டும் மனத்தை அரித்துக்கொண்டிருந்தது.

இப்போது இங்கே அவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பது தெரிந்துபோயிற்று. ஒரு வேளை காலநிலை மாற்றம் வெள்ளம் வரும் என்று அறிந்துதான் இவ்விடத்தை விட்டு பழங்குடியினர்கள் ஒதுங்கியிருந்தார்கள் என்றால், எப்போதும் அவர்களைத் தாக்க முன்னேறலாம் என்கிற கிலி வேறு அனைவரையும் சற்று பீதி கொள்ள வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் இந்தப் பயணத்தில் அத்தனை ஜாம்பவான்களும் ஒரு உண்மையைக் கற்றுக்கொண்டனர். காலமும் விதியும் அவர்களின் கைகளில் இல்லை. அவற்றின் கைகளில் இவர்கள் தான் சிக்கியிருக்கிறார்கள்… ஏதேதோ எண்ணங்களில் ஆழ்ந்து போய், ஒவ்வொருவரும் எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, சிலர் மட்டும் சுரத்தேயில்லாமல் ஏதோ செய்து கொண்டிருக்க, ஆர்யன் அனைவரையும் ஒரு முறை பார்த்தான்.

“லிசின் டு மி கைய்ஸ்… நாம இப்போது அனுப்பியிருக்கிற செய்தி, எந்தளவு பிறரின் கவனத்தைத் திசைதிருப்பும்னு நம்மால சொல்ல முடியாது… சோ… நம்ம காப்பாத்த வருவாங்க என்கிற நம்பிக்கைல இங்கேயே காத்திருக்க முடியாது… எவ்வளவு விரைவா நாம இங்கிருந்து கௌம்பறமோ… அந்தளவுக்கு நாம சேஃப்…” என்றவன், நிமிர்ந்து அனைவரையும் ஒரு முறை அழுத்தமாகப் பார்த்தான்.

"இங்கே… நாமதான் நமக்குப் பாதுகாப்பு… நாமதான் நம்மைக் காப்பாத்திக்கனும்… சோ… எது செய்றதா இருந்தாலும். பலவாட்டி யோசிச்சு செய்ங்க.. யாரும் காட்டுக்குள்ளேயோ, தனியாவோ, அதிக தெலைவோ போகவேண்டாம்…” என்றவன் பின் தியாவை ஒரு முறை அழுத்தமாகப் பார்த்துவிட்டு,

“இதை மீறி யாராவது உங்கள் விருப்பப் படி போனீங்கன்னா… உங்களைக் காப்பாத்த நாங்க யாராவது வருவோம்னு நெனச்சுக்கிட்டு போகாதீங்க… ஏன்னா உங்க ஒருத்தருக்காக மத்தவங்க தங்களோட உயிரை பணயம் வைக்க முடியாது… ஐ ஹோப் யு ஆல் அன்டர்ஸ்டான்ட் தட்…” என்றதும் அனைவரும் பதில் கூறாது அவன் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவன் கூறியதில் இருந்த நியாயமும் அவர்களுக்குப் புரிந்தது.

“ஆனா நாம இங்கேயே இந்தக் கடற்கரை , வெறும் மணல் வெளில இருக்க முடியாதே கப்டன்… நம்ம அவஸ்தை நம்ம வயித்துக்குத் தெரியாதே…” என்று தியா சோர்வுடன் கூற அவளை இரக்கத்துடன் பார்த்தான் ஆர்யன்.

“நாம இங்கேயே அடைஞ்சு கிடக்கனும்னு சொல்லல… என்ன செய்றதா இருந்தாலும் கவனத்தோட பாதுகாப்பு பற்றி யோசிச்சு செய்ங்கன்னுதான் கேட்டுக்கிறேன்…” என்றவன் பின்,

“இப்போ தோணி கட்றதுக்கு நமக்கு மூங்கில் வேணும்… ப்ருத்வி… நீங்க அடிபட்டவங்க கூட இருங்க…” என்றவன் சூரஜைப் பார்த்து

“சூரஜ்…” இவங்களைப் பாதுகாக்கிற பொறுப்பு உங்களுடையது…” என்கிற உத்தரவுடன், நகர எத்தனிக்க,

“கேப்டன் எங்கே போறீங்க?” என்றாள் தியா.

“ போகும் போதே…." என்று எரிச்சலுடன் பார்த்தவன்.. அவளின் விழிகளின் பயம், அக்கறை கவனித்து குரலைத் தணித்து, " அதிக தூரமில்லை தியா… தோணி கட்ட மூங்கில் அறுக்கணும்… கூடவே உணவும் தேடனும்… சோ… மத்தவங்களைக் கூட்டிகிட்டு மூங்கில் காட்டுக்குப் போகிறேன்…” என்றதும் துள்ளி எழுந்தாள் தியா.

“நானும் வர்ரேன் கேப்டன்… "என்று அவன் அருகே வர எட்டெடுத்து வைக்க, அக்காலில் சுளீரென வலி எழுந்தது, முகம் கசங்க தன்னை மறந்து, “ஆ…” என்றவாறுஅக்காலை குனிந்து பற்ற, புரிந்துகொண்டவனாக, அவளைப் பார்த்தான் ஆர்யன்.

“உன்னால் முடியாது தியா… நீ ரெஸ்ட் எடு…” என்றவன், அங்கிருந்த வேலையாளைப் பார்த்து, டானியல், கம் வித் அஸ்…” என்றவாறு அங்கிருந்த பெண்களிடம்,

“நாங்க மூங்கில் அறுக்கிறப்போ…பழங்கள் ஏதும் கிடைக்குதான்னு பார்த்து சேகரிக்க நீங்க கூட வாங்க….” என்று வேண்ட அது வரை சோர்ந்து தரையில் அமர்ந்திருந்த பெண்கள், ‘அப்பாடா மனத்தை திசை திருப்ப இது நல்ல சந்தர்ப்பம்’ என்று எண்ணியவர்களாக ஆண்களுடன் செல்லத் தொடங்கினர்.

கிருஷ்ணாவுடன் தர்ஷன், அக்கண்யன், முன்னால் செல்ல நடுவில் கலை, அமிர்தவர்ஷினி, அம்ருதசாகரி, ஷாலினி, நாச்சி, ஜனனி, திகம்பரி சென்றுகொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் அகிலன், ஆதீரநந்தன்,காசி விஸ்வநாத ராயர், ப்ரவீன் சென்றார்கள்.

அவர்களது ஒவ்வொரு செல்லிலும் எச்சரிக்கை உணர்வு மிகுந்து போய் இருந்தது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனத்துடன் எடுத்து வைத்தார்கள். அவர்களின் புலன்கள் சுற்றுபுறத்தை ஆராய்ந்தபடியே இருந்தன.

மூங்கில் காட்டை நெருங்கியதும், அவரவர் வேலையில் கவனமாக, மூங்கில் ஒன்றை வெட்டி பின்னோக்கி இழுத்த ஆர்யனின் பின் தோளை ஏதோ ஒன்று ஆழமாகக் கீறத் துடித்துப்போனான் ஆர்யன். வலி தாங்க முடியாது திரும்பிப் பார்க்க கிட்டத்தட்ட மூன்று அங்குல நீளத்தில் இருந்த முட்களுடன் அவனைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தது ஒரு முள் மரம். அதைக் கண்டு எரிச்சலுடன் ஒதுங்கிப் போக நினைத்தவன், பின் என்ன நினைத்தானோ… நின்று அதை உற்றுப் பார்த்தான்.

பின் திரும்பி

“கிருஷ்ணா, அக்கண்யன்… உங்க ஷேர்ட்டைக் கழற்றித் தாங்க…” என்றவாறு தன் ஷேர்ட்டையும் கழற்றி மற்றைய ஷேர்ட்டோடு சேர்த்து முறுக்கி, அந்த முள் நிறைந்த மரத்தின் கிளைகளை ஒடிக்கத் தொடங்கினான்.

அதைக் கண்டு திகைத்த தர்ஷன்,

“என்ன செய்ரீங்க ஆர்யா?” .

“நம்மகிட்ட ஆயுதங்கள் எதுவும் கிடையாது… தற்போது இருக்கிற ஆயுதம்…” என்றவன் இன்னொரு கிளையை இழுத்து எடுத்தவாறு, “இதுதான்…” என்றதும், உடனே அவர்களுக்கு அந்த முட்கள் நிறைந்த மரத்தை ஒடிப்பது எதற்காக என்று புரிந்துபோயிற்று. பின்பு சற்றும் தாமதிக்காமல், தங்கள் ஆடைகளையும் கழற்றி, ஆர்யன் செய்வது போலவே கிளைகளை உடைக்கத் தொடங்கினர்.

உடைத்த கிளைகளை ஷேர்ட் கொண்டு சேர்த்து கட்டியவன், அதை ராயரிடம் தந்து, "இதை இழுத்துட்டு வாங்க…” என்று கூறியவாறு மூங்கில் மரம் பக்கம் திரும்பினான். பின் திரும்பி தன் பின்னால் நின்றவர்களைப் பார்த்து,

“எவ்வளவு வேகமா மூங்கிலை உடைக்கிறீங்களோ… அத்தனை வேகமாக உடையுங்க…” என்றவன், ஒரு மூங்கிலை உடைத்து இழுக்க, அது கூரான முனைகளுடன் அவன் கரங்களில் வந்து சேர்ந்தது. அந்தக் கூறான முனைகளைத் தூக்கிக் காட்டியவன்,

“இந்தக் கூர் முனைகளும் எதிரிகளைக் காயப்படுத்தும்…” என்றான். அதன் பின் கடகடவென்று மூங்கில்கள் வேண்டிய அளவு எடுக்கப்பட்டன. அதை சுமந்துகொண்டு, உணவைத் தேடிப் புறப்பட, பெண்களும் கிடைத்த பழங்களைத் திரட்டி எடுத்தவாற நடக்கத் தொடங்கினர்.

ராயரும் பிரவீனும், நாச்சியும் சுற்றிவர மரத்தில் படர்ந்திருந்த வலிமையான கொடிகளை இழுத்து எடுத்து பெரிய வளையமாக்கி தமது தோளில் போட்டவாறு நடக்கத் தொடங்கினர்

ஒரு கொடியைப் பற்றி இழுத்த நாச்சி ஏதோ அரவம் கேட்டு உற்றுப் பார்க்க, அங்கு தொட்டில் போல அமைப்பை கொண்ட கொடிபின்னலில் சுகமாக படுத்துக் கொண்டும் ஆடிக்கொண்டு பழங்களை உண்டவாறு இருந்த குரங்குக் கூட்டத்தைக் கண்டு.. நின்றாள். எதைக் கண்டு அசையாமல் நிற்கிறாள் இவள் என்று எட்டிப் பார்த்த பிரவீனுக்கு மெல்லிய நகைப்புத் தோன்றியது. மூங்கில்களை தோளில் வைத்தவாறு வந்து அவளின் தோளில் தட்டியவன்?

"ஓய்…. உன் சொந்தக்காரங்கள பார்த்து மயங்கி நின்னுட்டியா.. அப்புறமா நலம் விசாரிக்கலாம்.. இப்ப நட.." என.. உதட்டை இட்புறமாக இழுத்து சுழித்து அழகு காட்டியவள்,

"ச்சூ… எங்க ஆயா காலத்துல சொன்னதையெல்லாம் இன்னமும் சொல்லிக்கிட்டு திரியுற.. நானூ... இதுங்களுக்கு வந்த வாழ்வைப் பாக்குறேன்... அவனவன் என்ன மாதிரி கஷ்டத்துல இருக்கான்… இதுங்க எவ்வளவு ஜாலியா ஊஞ்சல் ஆடிகிட்டு இருக்குங்க.." என்று புலம்ப, அதைக் கேட்டு நகைத்தான் பிரவீன்.

முன்னால் ஒரு முள் கிளைகளை இழுத்துச் சென்றுகொண்டிருந்த கிருஷ்ணா, நாச்சியைத் திரும்பிப் பார்த்து,

"உன்மைதான் சிஸ்டர்… அதுங்களுக்கு கடந்த காலம் பத்தின கவலையுமில்ல.. எதிர்காலம் பத்தின பயமுமில்ல… பில் கட்டணும்கிற தேவையுமில்லை… நாம அப்படியா? ஓடனும்… உழைக்கனும்… உழைச்ச பணத்தை பில் கட்டியே தீர்க்கணும்… ஏதோ இந்த உலகமே நம்ம தலை மேல இருக்கிற மாதிரி கவலைப் படணும்…" என்றான் நடக்கும்போது எதிர்ப்பட்ட செடி கொடிகளை விலக்கி வழி ஏற்படுத்திக் கொடுத்தவாறு.

அவனின் பின்னால் சில பழங்களை மடியில் சேகரித்தவாறு சென்ற கலை, அவனுடைய முதுகில் மெல்லிய தட்டுத் தட்டியவாறு, "சுவாமி க்ருஷ்ணானந்தா… கீதோபதேசம்… தொடங்கியாச்சா… வீட்டில்தான் முடியல… இங்கேயுமா" என்று தன் கணவனைப் பார்த்துக் கிண்டலடிக்க, சென்றுகொண்டிருந்தவன், நின்று திரும்பித் தன் மனைவியைப் பார்த்து முறைத்தான்.

“ஏய்… உலகுக்கு முக்கியமான தத்துவத்தைச் சொல்லிட்டிருக்கேன்… உனக்கு கிண்டலா இருக்கா…” என்று கூற அவன் ஒரு கையை அபயம் போல் காட்டி, தலை உயர்த்தி கூறிய விதத்தில் அனைவரின் இறுக்கமும் ஒரு வகையில் தளர்ந்து தான் போனது.

குரங்குகள் நின்ற மரங்களிலிருந்து கிடைத்த, பெயர் தெரியாத பழத்தைப் பறித்து தின்றபோது, புளிப்பும் இனிப்புமாகச் சுவையாக இருந்தது. ஏதோ அரை வயிற்றை நிரப்பினாலே போதுமே என்கிற எண்ணத்தில் கிடைத்த பழங்களை பெண்கள் சேகரிக்கத் தொடங்கினர்.

ஒரு மரத்திலிருந்த பழங்கள் சற்று உயரத்தில் இருக்க, சற்றும் தாமதிக்காமல் கடகடவென்று மரத்தின் உச்சியை நோக்கி ஏறிய விதார்த் பழங்களைப் பறித்துக் கீழே போட்டுவிட்டு இறங்கும்போது, ஏற்கனவே உடைந்திருந்த கிளையொன்றின் கூரான பகுதி, அவனுடைய வலக்கையின் பின்புறத்தை நன்கு பதம்பார்த்தது.

சுளீர் என்று ஏற்பட்ட வலியில், “ஷ்… ஆ…” என்கிற முனங்கலுடன் கரத்தைத் தூக்கிப் பார்க்க சற்று ஆழமாக கிழித்ததில் ரத்தம் வழியத் தொடங்கியிருந்தது. அதைக் கண்ட அவனின் மனைவி மீரா “விதார்த் என்னாச்சு” என்று பதறியவாறு அவனுடைய கரத்தைப் பற்றி பார்த்தவளுக்கு இரத்தம் கண்டு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. அத்தனை நேரமாக இருந்த இலகுத்தன்மை மறைந்து போக, முகம் வெளிறத் துடித்த மனைவியைக் கண்ட விதார்த்திற்குத் தன் வலி மறந்து போனது.

“ஷ்… எதுக்குடி ஊரைக் கூட்டுறே… எனக்கொன்றுமில்லை…” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மீராவின் பதற்றத்தைக் கண்டு எல்லோரும் அங்கே கூடிவிட்டனர்.

வலியில் முகம் சுண்டி இருந்த விதார்த்தை கண்ட ராயர் கொஞ்சமும் யோசிக்காமல் கீழே குனிந்து தரையிலிருந்த மண்ணை அள்ளி அந்த காயத்தின் மீது வைத்து அழுத்த, ஓரளவு ரத்த போக்கு குறைந்தது.

“கையை கீழ தொங்க போடாதீங்க விதார்த். நாங்க வயகாட்டுல வேலை பார்க்கும் போது நிறைய இது மாதிரி அடி பட்டு இருக்கு. அப்போல்லாம் மண்ணை எடுத்துத்தான் பூசுவோம். ரத்தம் வழியறது மட்டுப்படும். ஆனா அது விவசாய மண்… ரத்தத்தை அப்படியே உறிஞ்சிக்கும்… தவிர அதில இருக்கிற கனிமங்கள் காயத்தை இலகுவா சுகப்படுத்திடும். இது மணல் என்கிறதால, சுலபத்தில ரத்தத்தைத் தேக்கி வச்சுக்காது… ஆனா இதில இருக்கிற உப்பு பக்டீரியாக்களை கொன்னுடும்னு நெனைக்கிறேன்… ” சுற்றிலும் எதையோ தேடினான்.

“என்ன வேணும்” என்று மீரா தவிப்புடன் கேட்க,

“ஏதாவது துண்டிருந்தா காயத்தைச் சுத்திக் கட்டிக்கலாம்… ஆனா…” என்று முடிக்கும் முன், அருகே நின்றிருந்த திகம்பரி, தான் அணிந்திருந்த மேல் துணியை நுனிப் பல்லினால் பற்றிக் கிழித்து நீட்ட.. அதைக் கொண்டு காயத்தைக் கட்டிவிட்டு நிமிர்ந்தான் ராயர்.

அதே நேரம் அந்தக் காயத்தையே பார்த்துக்கொண்டிருந்த ஜனனிக்கு ஏனோ நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. இன்னும் எத்தனை சிக்கல்களை அவர்கள் அனைவரும் சந்திக்கப்போகிறார்களோ…’ என்று தவிப்புடன் எண்ணிக்கொண்டிருக்கும் போதே, அவளருகே வந்த அக்கண்யன்,

“ பேபி, என்ன யோசிக்கிறே…” என்றான். விழிகளில் சற்றுக் கண்ணீர் மல்க நிமிர்ந்து பார்த்தவள்,

“ரொம்ப பயமா இருக்கு அத்தான்… நாம ஊருக்கு போய்டுவோம்ல… நம்ம குழந்தைகளைப் பாத்திடுவோம்ல… என்னவோ தெரியல… மனசு படபடக்குது… திரும்பிப் போகமாட்டோமோன்று தவிக்குது…” என்று குரல் கம்மக் கூறியவளை மறு கணம் இழுத்து அணைத்திருந்தான் அக்கண்யன். அவளுடைய கன்னங்களில் வழியத் துடித்த கண்ணீரை விரல்களால் தடுத்து துடைத்து விட்டவன்,

“ஏய் அசடு… எதுக்கு இப்போ கண் கலங்குறே… நிச்சயமா நாம சீக்கிரமாகவே ஊருக்கு போய்டுவோம்… நம்பு… அழாதே…” என்று கூறியபோதும், அவன் உள்ளத்திலும் மெல்லிய பதட்டம் ஏற்படவே செய்தது. அவர்களின் குழந்தைகள் அனாதைகளாகப் போய்விடுவார்களோ என்று யோசிக்கும் போதே அடிவயிற்றில் ஒரு வலி எழுந்தது. ஆனாலும் அதை ஜனனிக்குக் காட்டினானில்லை.

அதே நேரம், அவர்களருகே வந்த ஆதீரநந்தன்,

“ப்ரதர்… ரொமான்ஸ் பண்ணினது போதும்… மூங்கில் கட்டைத் தூக்கிட்டு வாங்க…” என்று கிண்டலாகக் கூறிவிட்டு முன்னே செல்ல, தன் மனைவியின் தோளை அழுத்திக் கொடுத்துவிட்டுக் கீழே போட்ட மூங்கில் கட்டை அநாயசமாய் தோளில் போட்டுக்கொண்டு நடக்கத் தொடங்க, அவனைப் பின் தொடர்ந்தாள் ஜனனி.

கிருஷ்ணன் சற்று எட்டி இருந்த மரத்தில் பழங்களை பறிப்பதற்காகக் கீழே இருந்த பள்ளத்தை கவனிக்காமல் முன் செல்ல, கலை சட்டென்று அவன் கரத்தைப் பற்றித் தடுத்து,

“கிருஷ்… பாத்து” என்று பள்ளத்தைச் சுட்டிக் காட்டிக் கூற, நன்றியுடன் நிமிர்ந்து பார்த்தவனுக்கு வெயிலில் வாடித் துவண்டிருந்த தன் மனைவியின் முகம் சற்றுச் சலனப் படுத்தியது. அவளை நெருங்கி,

“என்ன… கலை, ஜனனி கூறியதை நெனச்சுட்டு இருக்கியா?” என்றான் கனிவாக. அவள் ஆம் என்பதுபோலத் தலையை ஆட்ட, அவளுடைய தோளில் கரத்தைப் பதித்து அழுத்திக் கொடுத்தவன்,

“நீ வருந்துவதால் ஏதாவது மாறப்போகுதா… வாழ்க்கை என்கிறதே நிறைய ஆச்சர்யம் நிறைஞ்சதுதானே… இதையும் ஒரு அட்வெஞ்சரா நெனச்சுக்கோ… நமக்கு இப்போது தேவை தைரியம் மட்டும்தான் கலை…” என்றவன் திரும்பி தொலைவிலிருந்த கடலைக் காட்டி,

“எத்தனை அழகான காட்சி… இத்தனை அழகான இடத்தில் நாமளும் இருக்கோம்னு நெனச்சுக்கோ… மனசு லேசாயிடும்…” என்று கூறிவிட்டு அவளுடைய கன்னத்தை வருடியவாறு கவனமாகப் பள்ளத்தைத் தாண்டிச் செல்ல,

“ரொம்ப சரியாக சொன்னீங்க கிருஷ்ணா… கலை சிஸ்டர்… உங்க கணவர் சொல்றது போல, எதுவும் நம்ம கைல இல்ல.. நடக்க வேண்டியது நடந்துதான் தீரும்… என்ன… வரும் ஆபத்திலிருந்து எப்படி தப்பலாம் என்கிறத மட்டும்தான் நம்மால இப்போதைக்கு யோசிக்க முடியும்… கீதையில் சொன்னது போல… எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது… எது நடக்கிறதோ… அது… ” என்று அகிலன் கூறிக்கொண்டிருக்கும் போதே, அவனருகே நின்றிருந்த அமிர்தவர்ஷினி எதையோ தேடினாள்.

“ஏய்… என்னடி தேடுறே…” என்ற அகிலனுக்கு தெரிந்து இருந்தது.. வெகுவாக கலாய்க்க போகிறாள் என்று..

“இல்ல… புத்தர் போதி மரத்துக்குக் கீழே இருந்து ஞானம் பெற்றாராம்… என் புருஷன்… நீங்க எங்கேயிருந்து ஞானம் பெற்றீங்கன்னு பாக்கிறேன்…” என்றவள் நாடியில் கையை வைத்தவாறு தனக்கு அருகாமையிலிருந்த அந்த உயரமான மரத்தை மேலும் கீழும் பார்த்து,

“ஒரு வேளை இதுதான் போதிமரமோ?” என்றாள் கிண்டலாக. தன் இடையில் கரத்தைப் பதித்த அகிலன்,

“என்னடி நக்கலா…?” என்றான் எரிச்சலுடன்.

“பின்ன என்னங்க… அடுத்து என்ன நடக்குமோன்னு திக்கு திக்குங்குது… நீங்க என்னன்னா… கீதா உபதேசம் பண்ணிட்டிருக்கீங்க… இன்னும் மரத்தடில உக்கார்ந்து அபயக் கரம் காட்டி நல்லா உபதேசம் பண்ணுங்க… பழங்குடிகள் வந்து நீங்க சொல்றதை நிதானமா கேட்டுக்கட்டும்… எங்கள விடுங்க…” என்றவள், கலையைப் பார்த்து, “நீங்க வாங்க கலை…” என்றவாறு அவளுடைய கரத்தைப் பற்றியவாறு முன்னால் சென்றாள்.

“அடிப்பாவி… நல்லதுக்கு சொன்னா என்னைய தீவுல கழட்டி விட ப்ளான் பண்றியா..… ஊருக்குப் போய் இருக்குடி உனக்கு…” என்றவாறு அவன் அவர்கள் பின்னால் நடக்கத் தொடங்கினான்,

“என்ன அகிலன்… ஊருக்குப் போனால் மட்டும்… உங்க மனைவியை நிக்க வச்சு எதிர்த்துக் கேள்வி கேட்ருவீங்க போல இருக்கே…” என்று மூங்கில் கழியில் இருந்து நீர் சேகரித்துக் கொண்டு இருந்த ஆதீரநந்தன் சிரித்தவாறு கேட்க,

“நீங்க வேற … ஊருக்குப்போனா வேலைக்கிற பேர்ல எஸ் ஆயிரலாம்ல… இங்க எங்க தப்பிக்கிறது… அதுக்குத்தான் சொன்னேன்…” என்றவனிடம்,

“என்ன சொன்னீங்க…” என்று சற்றுத் தள்ளிக் கேட்ட அமிர்தவர்ஷினியின் குரலில் அதிர்ந்தவன்,

“ஒன்றுமில்லைமா… ஆதீரநந்தனுக்கு உதவி வேணுமாம்.. கூப்பிட்டாரு.. இதோ வர்றேன்.…” என்றவாறு தன் மனைவிக்குப் பின்னால் விழுந்தடித்துக்கொண்டு ஓட, அதைக் கண்ட ஆதீரநந்தன், " என்ன ப்ரோ இவவளவு தானா …" என்று கேட்டவாறு மெல்லியதாக நகைத்தான். அவனருகில் நின்று நீரை சேகரிக்க உதவிக் கொண்டிருந்த சாகரி,

“என்னங்க நீங்க சிரிக்கிறீங்க… ஜனனி பயந்தப்போ நா எதுவும் சொல்லல… ஆனா இப்போ பயமா இருக்கு…. நாம எல்லாரும் இந்த தீவு விட்டு தப்பி உயிரோட போக முடியுமா..” என்று பயத்துடன் கேட்ட தன் இனியவளை ஆதூரத்துடன் குனிந்து பார்த்தவன்

“நிச்சயமாடா.. இந்த சூழல் நமக்கு புதிது தான். ஆனா குலையாத நம்பிக்கை இருந்தாலே போதும். கூடவே நல்லதையே நினைப்போம்… அதுதான் பாஸிடிவ் எனர்ஜி…அது இருந்தாலே போதும் எப்பேர்பட்ட சிக்கல் இருந்தாலும் இலகுவா தப்பிச்சிரலாம்… நம்பிக்கையை மட்டும் விடாதே.” என்றவன், கலங்கிப்போயிருந்தவளை இழுத்துத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான், அவளின் தலை கோதியபடி

“நான் இருக்கேன்ல… எதுவும் தவறா ஆக விடமாட்டேன்.ட்ரஸ்ட் மீ…” என்று அவளுடைய உச்சந்தலையில் முத்தமிட, அவளுடைய முதுகை வருடிய அவனுடைய விரல்களும் அதை உறுதிப் படுத்துவது போல அழுத்தமாக மேலும் கீழும் வருடத் தொடங்கின.

அதே நேரம் ஷாலினி பொறுக்கிய பழங்களை கமீஸ் டாப்பின் முன்புறத்தில் பக்குவமாக சேர்த்து வைத்தவாறு நடந்துகொண்டிருக்க, அவள் வைத்திருந்த பழத்தின் நறுமணம் அங்கிருந்த குரங்கின் கவனத்தைத் திருப்பியது போலும.; எங்கிருந்தோ ஒரு குரங்கு, படு வேகமாக அவளை நோக்கி வந்து அவள் மீது பாய்ந்தது.

சத்தியமாக ஷாலினி இப்படி திடீர் என்று குரங்கு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. முதலில் அதிர்ந்தவள், பின் வைத்திருந்த பழங்களை சட்டென்று கைவிட்டவளாய் ,

“தர்ஷன்…” என்கிற அலறலுடன் ஓடத் தொடங்கினாள்.

தன் மனைவியின் அலறல் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்ப, ஒரு குரங்கு, ஷாலினி போட்ட சத்தத்தில் பயந்துபோய் மரத்தைக் கட்டிக்கொண்டு இவனுக்குப் பல்லைக் காட்டியது. உடனே என்ன நடந்திருக்கும் என்று ஊகித்தவன், மனைவியின் பின்னால் ஓடத் தொடங்கினான்.

ஷாலினியின் வேகத்திற்கு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கமே பெற்றிருக்கலாம். அவ்வளவு வேகம். எந்தப் பக்கம் போக வேண்டும் உணர்வு இல்லாமல் ஓட, அழளை விஞ்சிய வேகத்தில் ஓடிய தர்ஷன் ஷாலினியைப் பின்னிருந்து இருகைகளைப் பற்ற

முதலில் பயந்து அலறி விட்டாள். திரும்பியவள் தர்ஷனைக் கண்டு, விழிகள் கலங்க, உதடுகள் துடிக்க அவன் மார்பில் விழுந்து,

“கு… கு… குரங்கு… அது… என்னை… என்னை…”

“ரேப் பண்ண வந்துச்சா…» என்றான் தர்ஷன் கிண்டலாய்.

ஆத்திரத்துடன் நிமிர்ந்தவள், “நான் உயிரைக் கையில் பிடிச்சுக் கொண்டு ஓடிவந்திருக்கேன்… உங்களுக்கு கிண்டலா இருக்கா…” என்று அவனின் மார்பில் ஓங்கியடித்து.. மூக்கை உறிஞ்ச, " அம்மாஆஆ.." என்று நெஞ்சைத் தடவிக் கொண்டவன்..

“ஏய்… நீ கத்தின சத்தத்தில அது பாவம்.. பயந்து தலதெறிக்க ஓடி.. மரத்தில உச்சிக்கு ஏறிருச்சு ஷாலூ… கொஞ்சம் திரும்பிப் பார்த்திருந்தாலும் உனக்கு தெரிந்திருக்கும்…” என்றதும்தான், ஓரளவு நிம்மதியாக மூச்சு விட்டாள் ஷாலினி.

ஓடிய தர்ஷனும், ஷாலினியும் வந்துவிடுவார்கள் என்று எண்ணியவர்களாக, மற்றயவர்கள் தங்கள் நடையைக் கட்டத் தொடங்கினர்.

அப்போதுதான், அபிராம் அங்கே சற்று மாறுபட்ட வெண்மை நிறத்தில் நீண்ட பாறை ஒன்றைக் கண்டு வியந்தான்.

“அட… இந்த பாறையைப் பாரு… கிரிஸ்டல் போல ஷைனிங்கா இருக்கே…” என்று வியக்க, வேதியல் துறையில் அனுபவமுள்ள அவனின் துணைவி சுவர்ப்பனா அதனருகே வந்து வருடிப் பார்த்தாள். யோசனையில் புருவம் சுருங்க குனிந்து அந்தப் பாறையை முகர்ந்து பார்த்தாள். அப்படியும் நம்பிக்கை வராதவளாக, கீழே குனிந்து … ஒரு கருங்கல் எடுத்து ஓங்கி அந்தப் பாறையைக் குத்த, அது சிறு துண்டொன்று உடைந்து விழுந்தது. அதை எடுத்து முகர்ந்து பார்க்க, அவளுடைய முகம் மலர்ந்து போனது.

அதைத் தூக்கித் தன் பின்னால் நின்றிருந்தவர்களிடம் காட்டி," இது என்ன தெரியுமா? பொட்டாசியம் நைட்ரேட் உப்பு. இது பாறைகளாத்தான் கிடைக்கும். ஆரம்ப காலத்தில் சீனர்கள் இந்த உப்பை சமையலுக்கு பயன்படுத்திய போது தற்செயலாக நெருப்பில் விழ.. கண்டுபிடிக்கப் பட்டவை தான் பட்டாசுகள்.." என்று குதூகலத்துடன் கூற, அபிராமும் அதை வாங்கி முகர்ந்து பார்த்தான்.

“அட ஆமா… வித்யாசமா வாசம் வருது. ” என்று கூற, அவன் பின்னாலிருந்த ஆர்யன், ஆர்வத்துடன், அந்தக் கட்டியை வாங்கிப் பரிசோதித்து முகர்ந்து பார்த்தான்.

“அமேசிங்…அப்போ அதே யுக்தியைப் யூஸ் பண்ணி நாமும் மூங்கிலில் வெடிகள் செய்தால், பழங்குடியினரை பயமுறுத்தலாம்ல.!" என்று அகிலன் சொல்ல,

"யெஸ்.. பண்ணலாம்." என்று சொன்ன சுவர்ப்பனா, "என் கல்லூரியில் ஒரு ஸ்டூடன்ட் இதனை ப்ராஜெக்டாக செய்யலாமா என்று கேட்டான். அது ஆபத்தானது என்று நான் மறுத்துவிட்டேன். பட் வெடி செய்யனும்னா… காய்ந்த கடினமான மூங்கில்கள், கரித்தூள், திரி போல ஏதாவது வேணும்." என்று கூற,

“எல்லாமே நம்மகிட்ட இருக்கு… திரிக்குத்தான்…” என்று அவன் யோசிக்க,

“நோ வொரிஸ்… என்னுடைய பாவாடை பருத்தியாலானது… அதையே மெல்லியதா வெட்டி திரியாக்கிக்கலாம்… நாம பிடிச்ச மீன்களை சுடும் போது உருகி விழற கொழுப்பை சேகரிச்சு அதில பூசிக்கிட்டோம்னா… அது இலகுவா பத்திக்கும்… கரி ஏற்கெனவே நாம கேம்ப் ஃபயர் எரிச்ச இடத்தில இருக்கு” என்று கூற, அனைவரும் முடிந்தளவு அந்தப் பாறையை உடைத்து எடுத்து பான்ட் பாக்கட்டுகளிலும், பாவாடைகளில் சேகரித்தவாறும் நடையை தொடர்ந்தனர். ஆரியனும் தன் கரத்திலிருந்ததைப் பான்ட் பாக்கெட்டிற்குள் போட்டுவிட்டு நிமிர்ந்தபோதுதான் தர்ஷன், ஷாலினி மற்றும் டேனியல் அங்கில்லாதது உறைத்தது.

எங்கே போயிருப்பார்கள்? அதிர்ந்து போனவனாய்,

“தர்ஷன், ஷாலினி எங்கே… டேனியலையும் காணோம்…” என்று கூற, அப்போதுதான் மற்றவர்களுக்கும் அது உறைத்தது. வெளிச்சம் வேறு குறைவது போலத் தோன்ற.. உடனே அவர்களைத் தேடிக் கண்டு பிடிக்கவேண்டும் என்பது புரிய, ஆர்யன் திரும்பி தன்னோடு வந்தவர்களைப் பார்த்து,

“நீங்க கடற்கரைக்குப் போங்க… நான் வந்திடுறேன்…” என்று கூறியவாறு ஆர்யன் திரும்பினான்,

“எங்கே போறீங்க ஆர்யன்?” என்றான் கிருஷ்ணன்.

“அவங்கள நான் தேடிப் பார்த்துட்டு வர்ரேன்… நீங்க போங்க… என்று கூறியவாறு அவன் முன்னேறத் தொடங்க அதுவரையிருந்த சிறு நிம்மதியைத் தொலைத்தவர்களாய் அனைவரின் முகத்திலும் பயம் வந்து உட்கார்ந்து கொண்டது.

“நாங்களும் வர்றோம் ஆர்யா…" என்று அக்கண்யன் மற்றும் ராயர் அவனோடு இணைய முயல உடனே தடுத்தவன்,

“நோ… அது ரிஸ்க்…” என்றவன், ஆதீரநந்தனின் தோளில் கிடந்த மூங்கில் கட்டில் ஒன்றை இழுத்தெடுத்தான். பின் ராயனின் அருகே சென்று அவன் இழுத்து வந்த முற் கிளைகள் ஒன்றை கவனமாக சட்டைத் துணியில் பற்றி எடுக்க, கூரிய முட்கள் அவனுடைய கரத்தை பதம்பார்க்கவே செய்தன. கூடவே சுருக் என்ற வலியையும் கொடுக்கப் பல்லைக் கடித்து அடக்கியவன், அங்கே மரத்தில் படர்ந்திருந்த கொடியை இழுத்தெடுத்து, மூங்கிலில் அந்த முள் செடியை வைத்துச் சுற்றிக் கொடியால் கட்டத் தொடங்கினான். இப்போது திடமான முள் நிறைந்த மூங்கிலாயுதம் தயாரானது.

திருப்தி கொண்டதும் நிமிர்ந்து அங்கே நின்றவர்களைப் பார்த்து, "நீங்க போய், இதோ இப்படி நான் செஞ்சது போல ஆயுதங்களை செஞ்சு வைங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒன்னு இருந்தா நல்லது… அப்புறம் சுவர்ப்பனா சொன்னதுபோல வெடியையும் செய்து வைங்க… நான் போய் தர்ஷன், ஷாலினி, டேனியலை கூட்டிட்டு வர்ரேன்…” என்றவாறு கிளம்ப, வேறு வழியில்லாமல் அனைவரும் அடுத்து நிகழ இருக்கும் பேராபத்துப் பற்றித் தெரியாமல், கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/page-67#post-249118



வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியர்ஸ் 016 கதையோட 18 ஆம் அதிகாரம் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. சென்ற பதிவுக்காக கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.
 

sivanayani

விஜயமலர்
11955

(19)

மற்றவர்களை கடற்கரை நோக்கி அனுப்பிவிட்டு, சற்றே அடர்ந்த தீவின் காட்டுப் பகுதிக்குள் முன்னேறிய ஆர்யனுக்கு தர்ஷன்,டேனியல் அவர்களின் பெயரைச் சொல்லி சத்தம்போட்டு அழைக்கவும் பயமாக இருந்தது. அவனுடைய குரல், பழங்குடியினரை உசுப்பி விட்டு விட்டால்.. யோசனையுடன்

"எங்கே போனாங்க இவங்க.!?" என்று முணுமுணுத்தபடி , எல்லா பக்கமும் பார்வையை வீசித் தேட எங்கும் அவர்கள் சென்ற தடமோ தடயமோ கூட அகப்படவில்லை. நொடிகள் நிமிடங்களாக.. நிமிடங்களும் கரைந்து போக.. தேடியவாறு சென்று கொண்டே இருந்தவனுக்கு... அவர்கள் தென்படாது போக, அதுவரை மறைந்து இருந்த பயம் முளை விட தொடங்கியது...

இந்தக் காட்டில் எங்கே போய் அவர்களைத் தேடுவது? வழி மாறி எங்கிருந்தாலும் காத்துவிடலாம்… ஆனால் பழங்குடிகளிடம் சிக்கியிருந்தால்? நினைக்கும்போதே ஒரு வித நடுக்கம் அவனைப் பற்றிக்கொண்டது.

மேலும் உள்ளே செல்ல, அவனுடைய கூரிய காதுகளுக்கு யாரோ ஒருவர் முனங்கும் சத்தம் கேட்க, வேகமாக அந்த இடம் நோக்கிச் செல்லச் செல்ல, பொருளற்ற ஒலிகள் அதிகமாக வரத் தொடங்கின.
'கடவுளே… அப்படி இருக்கக் கூடாது… இருக்கக் கூடாது..' என்று மனதிற்குள் உருப்போட்டவாறு ஒலிகள் வந்த இடத்தை ஒலி எழுப்பாது நெருங்கியவன், மெதுவாக செடிகொடிகளை ஒதுக்கியவாறு எட்டிப் பார்த்தவனுக்கு அங்கே கண்ட காட்சியில் மூச்சே நின்றுவிடும் போன்ற அச்சம் எழுந்தது. அவனின் உயிர் வாய் வழியே வந்து வெளியே வந்து காற்றோடு கலந்துவிடுமோ ..? என்று பயமாக இருந்தது.

அங்கே ஒரு பிரமாண்டமான மரத்தின் அடியில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் தர்ஷனும், ஷாலினியும் கிடந்தனர் . அசைவற்றுக் கவிழ்ந்திருந்த ஷாலினியின் முகத்தைக் கண்டதுமே அவள் மயங்கி கிடக்கிறாள் என்று தெரிந்தது. தர்ஷனின் விழிகளிலோ இறுதிக் கட்டத்தை நெருங்கிய உணர்வு அப்பட்டமாகத் தெரிந்தது.

அவர்களின் அருகே மிகவும் பளபளப்பான இரண்டடி ஓரடி அகலமான பச்சைக் கல் ஒன்று இருந்தது. அதன் பளபளப்பே அது விலை மதிப்புமிக்க நவரத்தினங்களில் ஒன்றான மரகதம் என்பதைப் பறைசாற்ற, அதன் மீது காட்டுப் பூக்கள் மாலையாகக் கோர்த்து போடப்பட்டிருந்தன. அதற்கு முன்னால் தீ எரிந்துகொண்டிருந்தது… அதைப் பார்த்ததுமே அது அவர்களின் தெய்வம் என்பதை ஊகிக்க முடிந்தது.

அதற்கு முன்னால் இருந்த ஒரு தட்டையான பாறையில் டேனியலைக் கண்ட ஆர்யனுக்கு அந்த நிலையிலும் குமட்டிக்கொண்டு வந்தது.

காரணம் கல்லொன்றில் படுக்கவைக்கப்பட்டிருந்த
அவன் உடல் முழுவதும் இரத்தம் அப்பிக் கிடந்தது. அவனைச் சுற்றி நின்றிருந்த பழங்குடியினர் தம் கரத்திலிருந்த கற்களாலும், தம் கரங்களால் செய்யப்பட்ட பெயர்தெரியா ஆயுதங்களாலும் அவனை அடித்து அடித்துக் காயப் படுத்திக்கொண்டு இருந்தார்கள்.

டேனியலின் நிலையைக் கண்டதுமே ஆர்யனுக்குப் புரிந்து போனது. அந்த பெரிய பளபளப்பான கல்லைக் கண்டதும், ஆர்வத்தில் அதை நெருங்கி இருக்கிறான் போலும். அதைப் பழங்குடிகள் கண்டிருக்கிறார்கள்…

"எத்தனை முறை சொன்னேன்… சே…" என்று பல்லைக் கடித்தவனுக்கு இனி டேனியலை பற்றி வருந்திப் பயனில்லை என்பது புரிந்தது.

அவனுடைய சிதைந்து கிடந்த நிலை அவனின் உடலில் உயிரில்லை என்பதை உணர்த்த இப்போது தர்ஷனையும், ஷாலினியையுமாவது இவர்களிடமிருந்து காக்கவேண்டுமே என உத்வேகம் கொண்டவனுக்கு.. எப்படி செய்வது என்று தான் தெரியவில்லை.


மூங்கில் தடியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டவனுக்கு, டானியல் இறந்துவிட்டது தெரிந்தால், அடுத்தது தர்ஷனையும் ஷாலினியையும்தான் நெருங்குவார்கள் என்பது புரிந்து போனதால், விரைவாக செயல்படவேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டான் ஆர்யன். தாமதிக்க நேரமில்லை. அங்கே இருப்பது நான்கு பழங்குடியினர்தான். அவர்கள் ஒலி எழுப்பி மற்றவர்களை வரச் செய்வதற்கு முன்னால் இவர்களைக் காத்துவிட வேண்டும்… எப்படி… எப்படி…? யோசித்தவனுக்கு பளிச்சென்று அது நினைவுக்கு வந்தது.

அவசரமாகத் தன் பான்ட் பாக்கட்டில் கைவிட்டு அதை எடுத்தான்… சற்று முன் சுவர்ப்பனாவிடமிருந்து வாங்கிப் பார்த்த பொட்டாசியம் நைட்ரேட்… இதை அந்தத் தீயில் போட்டால் என்ன? யோசித்தவன், சற்றும் தாமதிக்காமல், குனிந்தவாறே நெருப்பு எரிந்து கொண்டிருந்த இடத்தை நோக்கிப் பூனைப்பாதம வைத்துச் சென்றான்.

ஆழ மூச்செடுத்து விட்டவன், முடிந்தவரை அங்கிருந்த மரத்திற்கும், புதருக்கும் இடையில் மறைந்து கொண்டு, தலையை மட்டும் எட்டிப் பார்த்தான். தனக்கும், தீக்குமான தூரத்தைக் கணக்கெடுத்தவன், உள்ளங்கையளவு பெரிய கல்லை தன் பலம்கொண்டு உடைத்து நான்கு துண்டுகள் ஆக்கினான். அவற்றைத் தீயை நோக்கி விட்டெறிய, அவை கச்சிதமாக நெருப்பில் சென்று விழுந்தன.

ஒரு விநாடிதான் அமைதி காத்தன. மறு விநாடி சீறிக்கொண்டு புகையைக் கக்கி பொங்கி எரிந்து வெடிக்கத் தொடங்கின.

திடீர் என்று நெருப்பு இப்படிப் பொங்கியதும் அச்சத்துடன் அலறி தள்ளி ஒதுங்கி நின்ற பழங்குடியினர் , அதன் பின் அது வெடித்துப் பொங்கி எரிய, எதையோ உளறிக் கத்தியவாறு அந்த இடத்தை விட்டு ஓடத் தொடங்கினர்.

அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஆர்யன், சற்றும் தாமதிக்காமல் பாய்ந்து தர்ஷனை நெருங்கிக் கட்டை அவிழ்க்கத் தொடங்கினான்.

தர்ஷனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. எல்லாம் முடிந்தது உயிர் விடும் தருணம் என்று எண்ணிய நேரத்தில் தெய்வம் போல வந்த ஆர்யனைக் கண்டு பாய்ந்து இறுக அணைத்து விடுவிக்க,

“தர்ஷன்… நமக்கு நேரமில்லை சீக்கிரம்… ஷாலினியைத் தூக்கிட்டு வாங்க…” என்று எச்சரித்துவிட்டு வேகமாக தான் வந்த வழியில் வெளியேற, அடுத்த கணம் மயங்கிப்போயிருந்த ஷாலினி தர்ஷனின் தோளில் தொங்கிக்கொண்டிருந்தாள். எத்தனை வேகமாக ஓடினார்களோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்..

அப்போது… எங்கோ சங்கு ஒலிக்கும் சத்தம் கேட்க, அந்த ஒலியிலேயே அவர்கள் தங்களை கண்டு கொண்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டான் ஆர்யன்.

“மை காட்… அவங்க நம்மைக் கண்டுபிடிச்சிட்டாங்க… சீக்கிரம் வாங்க…” என்றவாறு முன்னேற தர்ஷனும் தன் வேகத்தைக் கூட்டினான். ஆயினும் ஷாலினியை சுமந்து கொண்டு ஓடிய அவனின் வேகம் மிதமாகவே இருந்தது கண்ட ஆர்யன் தானும் அவனைப் பற்றி இழுத்தவாறு ஓடினான். .
காலடி ஓசைகளும் ஏதோ யாரோ கத்தும் ஒலிகளும் கேட்க.. இருவரின் இதயங்களும் தாளம் தப்பித் துடிக்கத் தொடங்கின.

என்ன நடக்கிறது எந்தப் புறமாக செல்கிறோம் என்று யோசிக்க கூட இயலா நேரம். துரத்தி வரும் தூரத்தில் மிக பெரிய ஆபத்து. தொண்டை வறண்டு போய் எச்சிலை விழுங்க கூட முடியாத அளவு பயம்.

எந்த நொடி எப்படி போகுமோ? யாருக்கு என்ன நேருமோ ? தெரியாத பல கேள்விகள். உயிரை கையில் பிடித்துக்கொண்டு, புலியைக் கண்டு ஓடும் மானின் கடைசி கட்ட உயிர் போராட்டம் போல இருவரும் தலை சிதறி விடும் அளவு வேகமாக ஓடிக்கொண்டு இருந்தார்கள். இன்னுமொரு அரை மணி நேர ஓட்டம்.

ஒரு கட்டத்தில் தொலைவில் கடல் தெரிய, ஆர்யன் முடிந்தவரைக்கும் ஓங்கி விசில் அடித்தான் அது வரை தோணிகளைக் கட்டிக்கொண்டும், வெடிகள் தயாரித்துக்கொண்டும், முட்களை வைத்து ஆயுதம் செய்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஆர்யனின் எச்சரிக்கை ஒலி கேட்க அதிர்ந்து போய் தங்கள் வேலையை விட்டு நிமிர்ந்து பார்த்தனர்.

எங்கிருந்த ஒலி வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அது ஆர்யனிடமிருந்துதான் என்பதைத் தெரிந்துகொண்டவர்கள், சற்றும் தாமதிக்காமல் செய்து வைத்திருந்த முட்கள் கட்டிய மூங்கில்களை எடுத்துக்கொண்டு ஒலி வந்த திசை நோக்கிப் பாய முயன்ற விநாடி........

பின்னால் பழங்குடிகள் துரத்த, உயிர் போராட்டத்தின் கடைசி கட்டத்தில் இருப்பது போன்ற உணர்வில், அவர்களை விட அதிகமாக தங்களை காத்துக் கொள்ள ஓடினார்கள் தர்ஷனும் ஆர்யனும். அதுவும் தர்ஷனுக்கு ஷாலினியைத் தூக்கிக் கொண்டு ஓடுவது பெரும் சிரமமாகவே இருந்தது.பாதையின் சிறு பள்ளத்தில் இறங்கும் போது, தடுக்கி விழ இருந்து எப்படியோ அவளைக் கெட்டியாப் பிடித்துக் கொண்டு அருகிலிருந்த மரத்தைப் பற்றி, கீழே விழாது காத்து சமப்படுத்தி நேராகி ஓடும் போது, அவனுடைய வேகம் சற்று மட்டுப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த பகுதியே அவர்களின் காலடி ஓசைகளிலும் இரைக்கும் மூச்சின் ஒலியிலும், இதயம் துடிக்கும் சத்தத்திலும் நிறைந்திருந்தது. ஓடிய ஓட்டத்தின் வேகத்தில் காதுகளை அடைத்துக்கொண்டு வர, கல், மண், முள், குச்சி, வேர் எது காலை பதம் பார்க்கிறது என்று உணரக் கூட அவகாசம் இன்றி ஓடிக்கொண்டு இருந்தனர்.

ஒரு கட்டத்தில் கடற்கரையை அண்மித்த போதுதான், ஆர்யனும் தர்ஷனும் உணர்ந்துகொண்டார்கள் ஏற்கனவே கடற்கரையில் இருந்தவர்கள் பழங்குடிகளால் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதை.

உடனே தடை போட்டது போல நின்ற ஆர்யன், தர்ஷனைக் கைகாட்டி நிறுத்திவிட்டு மரங்களுக்கிடையிலிருந்து எட்டிப் பார்த்தான்.

அங்கே கிட்டத்தட்ட ஐம்பது பழங்குடிகளுக்கும் மேலானவர்கள் சுற்றி நின்றிருக்க, அத்தனை நாயக நாயகிகளும் அவர்களுக்கு நடுவே சிக்கியிருந்தனர்.
 

sivanayani

விஜயமலர்
கைகளில் பச்சிலை சாறு பூசிய கூர் ஈட்டி. கூடவே வில்லம்புகள். வெள்ளையும் கறுப்புமாகச் சாயம் பூசிய முகத்தில் கொலைவெறி. கூடவே ஆடையில்லாத நிர்வாண கோலம். அதைக் கண்டு அரண்டு போன பெண்கள், தமது கணவன்மார்களின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து மறைந்துகொள்ள, இதயங்களோ நின்றுவிடும் போலத் துடிக்கத் தொடங்கின. இது பயம் கொள்ளும் நேரமல்ல என்று புத்திக்குத் தெரிந்தது. ஆனால் இத்தகைய ஒரு ஆபத்தான் நிலையில் ஒருபோதும் சிக்கிக் கொள்ளாத அவர்களின் இதயங்களோ அதற்கு நேர்மாறாகத் தறிகெட்டு ஓடத் தொடங்கின.

பெண்களை உள்ளே விட்டு காயம் படாத அத்தனை ஆண்களும் கரம் கோர்த்து அவர்களுக்கு பாதுகாப்பு போல நின்று நொடியில் வியூகம் அமைத்து பழங்குடியினரை எதிர்க்க தயாராக நின்றுகொண்டனர்.

சற்றுத் தள்ளி, அழகரும், ஜெயவர்மனும், தியாவும் அமர்ந்திருக்க, அவர்கள் காயம் பட்டிருந்ததாலோ என்னவோ, அவர்களை நோக்கி ஒருவன் அம்பை உயர்த்திப்பிடித்து அசையவிடாது பார்த்துக்கொண்டு நின்றிருந்தானன்றி தீங்கெதுவும் விளைவிக்கவில்லை.

ஆனால், “ஈஈஈ....ஏஏஎ..கக்கோஒ...க்க்க்க்...அம்ம்ம்ம்ம்........உஉஉஉஉஊ........கியா......” என்று மற்றவர்களைப் பார்த்து சத்தம் எழுப்பியவாறு நெருங்கத் தொடங்க, அனைவரின் இதயமும் வாய்க்குள் வந்து துடிக்கத் தொடங்கின.

அடுத்த நொடி எந்த ஆயுதத்துக்கு பலியாவோம் என்ற எதிர் மறை எண்ணமும் எழுந்தது. அதை வளரவிட்டால் ஜெயிக்க முடியாது என்று அந்த எண்ணத்தை உதறி தள்ளிவிட்டு முட்கள் சேர்த்துக் கட்டியிருந்த மூங்கிலை இறுகப் பற்றியவாறு அவர்களோடு போரிட தயாரானார்கள் ஆண்கள்.

அவகாசம் சிறிதும் கொடுக்காமல் ஈட்டியுடன் அவர்கள் மீது பாய்ந்தார்கள் ஆதிவாசிகள்.
இனியும் தாமதிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட ஆர்யன்,

“தர்ஷன்… ஷாலினியைப் பாத்துக்கோங்க…” என்கிற உத்தரவுடன் இறங்க முயல,

“இல்லை ஆர்யன் நானும் வர்றேன்…” என்றவாறு ஷாலினியை ஒரு ஒதுக்குப் புறமாகக் கிடத்திவிட்டு, அவள் மீது இலை தழைகளைப் போட்டு மறைத்தவன், வேகமாக ஆர்யனைப் பின் தொடரத் தொடங்கினான்.

வேகமாகச் சென்ற ஆர்யன், தன் பெரிய குரலால்,

“ஹே…” என்று கத்த, ஒரு கணம் அமைதியான பழங்குடிகள் திரும்பிப் பார்த்தனர். அதில் நடு நிலமையில் இருந்த ஒருவன். அவன்தான் அந்தக் கூட்டத்தின் தலைவன் போலும். அவனுடைய அணிகலன்களே அதை எடுத்துக் காட்டியது. அவன் தன் கூட்டத்தைப் பிரிந்து ஆர்யனைத் திரும்பிப் பார்த்தான். அவனுடைய தலை இரண்டு பக்கமும் சரிந்து சரிந்து ஆர்யனை ஏறிட்டது.

“இஸ்த்தர…ந்னாப்யா…. க்ருக்யாசு…” என்று கூறியவாறு ஆர்யனை நெருங்கியவன் கண்ணிமைக்கும் நொடியில் தன் ஈட்டியை அவனை நோக்கிப் எறிய, அதை உணர்ந்துகொண்ட ஆர்யன், பின் பின்புறமாக நாற்பத்தைந்து பாகை சரிந்து விலகி தன்னைக் காத்துக் கொண்டு முன்னேறி, சற்றும் யோசிக்காமல் தன் கரத்திலிருந்த மூங்கில் தடியால் அந்தத் தலைவனை ஓங்கி அடிக்க, அதிலிருந்த முட்கள் அத் தலைவனின் மார்பைப் பயங்கரமாகக் கீறிச் சென்றது.

இது வரை அவன் தம்மிடம் சிறைபட்டு நின்ற நாகரீகவாசிகளிடம் இத்தகைய தாக்குதலை எதிர்பார்க்கவில்லை போலும். முதலில் அதிர்ந்தவன்,

“இஸ்க்யபுத்தா… க்ருயாம்யா…” என்று அலறியவாறு கையைச் சுழற்ற, அனைவரையும் கொல்லுமாறு கட்டளை வந்தது போலும்.. அடுத்து பழங்குடிகள் புயலானார்கள்.

அவர்களின் ஆக்ரோஷம் நிறைந்த தாக்குதலை திடகாத்திரமான ஆண்களாலே சமாளிக்க முடியவில்லை. ஒரு கணம் தடுமாறியவர்கள், அடுத்த நொடி சூறாவளியானாரகள்…

வலியும் ஆத்திரமும் சேர்ந்த ஆக்ரோஷமாக ஆர்யனை நோக்கிப் பாய்ந்த அந்தத் தலைவன், கண்ணிமைக்கும் நொடியில் அவனுடைய கழுத்தைப் பற்றி நெரிக்கத் தொடங்கினான். தன் கழுத்தை பற்றிய அவனின் விரல்களின் நண்டுப் பிடியில் இருந்து விடுவிக்க ஆர்யன் முயன்று முடியாமல் தடுமாறிய நேரம், பின்னால் வந்த தர்ஷன் பெரிய மூங்கில் தடியால் தலைவனின் மண்டையில் ஓங்கி அடிக்க வலி பொறுக்க முடியாமல் தன் கரத்தை விடுவித்த தலைவனின் கவனம் இப்போது தர்ஷனிடம் சென்றது.

அதே நேரம், பழங்குடிகளுக்கு ஈடாக நாயகர்கள் தாக்குதல் நடத்தத் தொடங்க, ராயர் ஒருத்தனே மூவரை அநாயசமாக கையாண்டு கொண்டிருந்தான். ஒருத்தன் அம்பை அவனை நோக்கி ஓங்க, தன் காலால் அவன் வயிற்றை எட்டி உதைத்துத் தனக்குப் பக்கத்திலிருந்தவனை இரு கரங்களாலும் தலைக்கு மேலே தூக்கி ஓங்கித் தரையில் எறிந்து பின்னால் நின்றிருந்தவனின் தலையோடு தன் தலையை மோதித் தரையில் வீழ்த்தியிருக்க, கிருஷ்ணா நின்றிருந்த ஒரு மாமிசமலையின் தோள்களில் பாய்ந்து ஏறி அமர்ந்து தன் முழங்கையை மடித்து அவன் தலையை ஓங்கிக் இடித்துக்கொண்டிருந்தான்.

சற்றுத் தள்ளி அகிலன் தன் கரத்தின் வளைவில் ஒருவனின் தலையைக் கிடுக்கி பிடியாகப் பிடித்து, அவனுடைய இடையில் ஓங்கிக் குத்திக்கொண்டிருக்க, ஆரோன் இரண்டு மூன்று பழங்குடியினை நோக்கித் தன் முள் நிறைந்த மூங்கில் தடியால் விளாசிக்கொண்டிருந்தான். அக்கண்யன் கூரான மூங்கில் தடியால் சிலம்பம் சுத்திக்கொண்டு ஒருவனையும் அருகே நெருங்கவிடாதவாறு கிடைத்த சந்தர்ப்பத்தில் அவர்களைத் தாறுமாறாக விளாசி அடித்துக்கொண்டிருந்தான்.

அக்கண்யனுக்குப் பின்னால் நின்றிருந்த பழங்குடி ஒருவன், அவன் முதுகை நோக்கித் தன் அம்பை வீச முயன்ற வினாடி அதைக் கண்டு கொண்ட விதார்த், தன் பிடியிலிருந்த பழங்குடியை ஓங்கி உதைத்து விட்டு, அக்கண்யன் மீது அம்பெய்ய முயன்ற பழங்குடியின் மீது பாய்ந்து அவனைக் காத்துக்கொண்டான்.

அதே நேரம் ப்ருத்வி, அபிராம், ஆனந்தன், பிரவீன் நால்வரையும் எட்டுப் பழங்குடிகள் சுற்றிவளைத்து அவர்களைத் தாக்க முயல, நடுவில் நின்றவாறே தம்மைக் காக்க முயன்று முடியாமல் தோற்றுக்கொண்டிருந்த தருணம்.. அவர்களின் தாக்குதலால் மேனியில் ஏற்பட்ட காயத்துடன் தளர்வுற்ற நேரம்.. திடீர் என்று எங்கிருந்தோ கூரான இரண்டு அம்புகள் சீறிப் பாய்ந்து வந்து இரு பழங்குடிகளின் முதுகில் துளைத்து நிற்க, அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தனர் அங்கிருந்தவர்கள்.

அங்கே ஜெயவர்மன், காயப்பட்ட காலை மடக்கி நின்றவாறு, ஒரு கட்டையைப் பற்றி எழுந்திருந்தான். அவன் கரங்களில் வில்லம்புகள் வீற்றிருந்தன.

அதிர்ச்சியுடன் அவர்களுக்குக் காவலுக்காக விட்டுச் சென்ற தமது ஆளைத் திரும்பிப் பார்க்க, அவன் தரையில் மல்லாக்காக விழுந்திருக்க, அவன் மேலிருந்து தியா எழுந்துகொண்டிருந்தாள்.

ஜெயவர்மனுக்குத் தியாவை எண்ணி ஆச்சரியமாக இருந்தது. சற்று முன் நடந்ததை எண்ணிப் பார்த்தான்.

பழங்குடிகளின் கரங்கள் ஓங்குவதைக் கண்ட ஜெயவர்மனுக்குத் தன் இயலாத நிலை மீது கடும் ஆத்திரம் வந்தது. அதே வேளை அவனுக்கு அருகாமையிலிருந்த தியா, திரும்பி ஜெயவர்மனைப் பார்க்க, அவள் விழிகள் சொன்னதைக் கேட்ட ஜெயவர்மனின் உதட்டில் மெல்லிய புன்னகை படர்ந்தது.

“இவனைப் பார்த்துக்கொள்வாயா?” என்றான்.

“வை நாட் ?" என்றவள் ஜெயவர்மனின் பதிலைக் கூட எதிர் பார்க்காமல், ஸ்ப்ரிங் போல எழுந்தவள்
கண்ணிமைக்கும் நொடியில், தன் காயம் படாத காலைத் தரையில் ஊன்றிப் பாய்ந்து ஓங்கி காவலுக்கு நின்றவனின் மூக்கில் குத்திவிட்டுச் அதே கால் பலத்துடன் சுழன்று காயம் பட்ட காலினால், அதன் வலியையும் பொருட்படுத்தாது, அவன் கழுத்தில் ஓங்கி ஒரு வெட்டு வெட்ட, அடுத்த கணம் அவன் தரையில் விழுந்திருந்தான். விழுந்தவனின் மார்பில் பாய்ந்து முழங்கால் மடித்து விழ, நச்சென்று அவனுடைய மார்புக் கூடு உடைந்த சத்தம் ஜெயவர்மனுக்கே கேட்டது.

வியக்கக் கூட நேரமில்லாது, அவனைப் புரட்டி, முதுகில் தொங்கியிருந்த வில்லையும், அம்பையும் இழுத்து எடுத்து அதை ஜெயவர்மனை நோக்கி வீச, அதைக் கைப்பற்றிக் கொண்டவன், அமர்ந்தவாறே நொடிக்கும் குறைவான நேரத்தில் கூரான இரண்டு அம்புகளை பழங்குடிகளை நோக்கி எய்திருந்தான். இருவர் கீழே விழுந்ததும், பக்கத்திலிருந்த கட்டையைப் பற்றி எழுந்து நின்றவன், ஒற்றைக் காலில் நின்றவாறு இன்னொரு பழங்குடியைக் குறிபார்த்தான்.

இப்போது ப்ருத்வி, அபிராம், ஆனந்தன், பிரவீன் நால்வருக்கும் ஓரளவு இலகுவாகிப் போக, எஞ்சிய எதிரிகளை வீழ்த்த முயன்றுகொண்டிருந்தனர்.

சற்றுத் தள்ளி ஆரோனுக்கும், ஆதீரநந்தனுக்கும் மூச்சுக் கூட விட முடியவில்லை. அவர்கள் ஏற்கெனவே இரு பழங்குடிகளின் கைவளைவில் சிக்கியிருந்தனர். அவர்களின் பலம் பொருந்திய கரத்திலிருந்து தம்மை விடுவிக்க முயன்று தோற்றுப்போன நேரம், தமது தலையில் அவர்களின் முகத்தை அடித்தும் அவர்கள் தமது பிடியை விடவில்லை. ஆனால் திடீர் என்று இறுகிய பிடி தளர, கிடைத்த சந்தர்ப்பத்தை விடாது உதறிப் பிரிந்தவர்கள் திரும்பிப்பார்க்க, அங்கே, சூரஜும், ஆரோனும் ஆளுக்கொருவாராய் அவர்களைத் தம் கைப்பிடியில் இறுகப் பற்றிக்கொண்டிருக்க, ஆதீரநந்தன், இன்னொருவனைத் தரையில் வீழ்த்தி மாறி மாறி அவன் முகத்தில் குத்திக்கொண்டிருந்தான்.

என்னதான் எதிர்த்துப் போரிட்டாலும், பழங்குடியினரின் முரட்டு தாக்குதலில் மூச்சு முட்டி போனது.

ஆனால் இதில் அதிசயிக்க விதமாக ஒன்றும் நடந்தது. எந்தப் பழங்குடிகளும் பெண்களைத் தொடவேயில்லை… அவர்கள் அருகே நெருங்கவும் இல்லை. அதுவும், அங்கண்யனை ஒருவன் தாக்க வர, ஜனனி நடுவில் புகுந்து அவனைக் காக்க முயன்ற போது, அந்தப் பழங்குடி, ஜனனியைத் தாண்டி அகண்யனைப் பற்ற முயன்றானன்றி, ஜனனியைத் தொடவில்லை. இன்னொரு பக்கத்தில், அபிராமைத் தாக்க வந்த பழங்குடியை சுவர்ப்பனா தள்ளிவிட முயன்றபோது, அவன் எதிர்க்கவில்லை. இரண்டடி தள்ளி வைத்தவன், பின் சுவர்ப்பனாவைத் தாண்டிச் சென்று அபிராமைத் தாக்க முயன்றான். இதைப் புரிந்துகொண்ட ஆர்யன்,
 

sivanayani

விஜயமலர்
“லேடீஸ்… அவங்க பெண்களைத் தாக்க மாட்டாங்க போல இருக்கு… தயவு செய்து ஒரு ஓரமாகப் போய் நில்லுங்க…” என்று கத்த, அவர்களோ அதைக் கேட்கும் நிலையிலில்லை. தங்கள் துணைகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ ? என்று அஞ்சினர். முடிந்தவரை தம் இணைகளைக் காக்க முயன்றனர். அது ஓரளவுக்கு வெற்றியும் பெற்றது என்றுதான் சொல்லவேண்டும்.

ஆர்யன், தமது பயணிகள் சோர்ந்து போவது புரிபட, திடீரென்று நினைவு வந்தவனாய்திரும்பித் தியாவைப் பார்த்து,

“தியா… செய்து வச்சிருக்கிற மூங்கில் வெடிகளை கொளுத்தி இவங்களை நோக்கி வீசு…” என்று கத்த, தியாவின் முகம் மலர்ந்தது. உடனே பெண்களைத் திரும்பிப் பார்த்தவள்,

“லேடீஸ் என் கூட வாங்க…. நமக்குத் தப்பிக்க இப்ப இருக்கிற ஒரே வழி வெடிதான்…” என்றவாறு சற்றுத் தள்ளியிருந்த பாறை நோக்கிப் பாய்ந்தவள், செய்து வைத்திருந்த மூங்கில் வெடிகளையும் எடுத்துக்கொண்டு ஓடினாள். காய்ந்த இலை, சிறு குச்சிகளை திகம்பரி சேகரிக்க சுவர்ப்பனா கற்களை உரசி நெருப்பு மூட்ட முயன்றாள்.

இருந்த பதட்டத்திலும் பயத்திலும் கரங்கள் சரியாக உரச மறுத்தன.

“சீக்கிரம் சுவர்ப்பனா… பழங்குடிகளின் கரங்கள் ஓங்கிகிட்டிருக்கு… நம்மவர்கள் சோர்ந்து போகத் தொடங்கிட்டாங்க. யாருக்காச்சும் பயங்கரக் காயம் ஏற்பட்டா நாம இருக்கிற நிலைக்கு தாக்குப் பிடிக்க முடியாது… சீக்கிரம்…” என்று மீரா அவசரப்படுத்த, அதே நேரம் இவர்கள் ஏதோ தீங்கு செய்ய முயல்கிறார்கள் என்பதைப் புரிந்து அவர்களைத் தடுக்க ஒருவன் வேகமாக வந்தான்.

அதைக் கண்டு திகம்பரி நடுங்க, எழுந்த தியா, தன் கரத்திலிருந்த வெடிகளைக் கீழே போட்டுவிட்டு வலித்த காலையும் பொருட்படுத்தாமல் அந்தப் பழங்குடியை நோக்கி வேகமாக ஓடிச் சற்றும் தாமதிக்காமல், அவனை மோதிக் கீழே விழுத்தியவள், ஓங்கி அவன் முகத்தில் குத்த, அவன் எந்த எதிர்ப்பும் காட்டாமல் இவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அதே நேரம், சுவர்ப்பனாவின் பதற்றத்தைக் கண்ட அம்ருதசாகரி தானும் சில சிக்கிமுக்கிக் கற்களைக் கொண்டு நெருப்பை உண்டாக்கப் பார்த்து ஒரு பொறி காய்ந்த புற்களில் விழ, அது பற்றிக் கெண்டது.

அதே நேரம்.. அங்கே போராட்டத்தில் பல காயங்கள், உடலை கிழித்து செல்லும் கழிகள், கண் மண் தெரியாத தாக்குதல்கள், வரையறை இல்லா போர் முறைகள் என்று ஒரு வித வெறியில்.. இரு பக்கமும் எதிர்வினைகள் பயங்கரமாக இருக்க, காட்டு செடிகளின் செழிப்புக்கு முன் வீட்டு செடிகளின் செழிப்பு மட்டுப்படத் தொடங்கியது.

"அவ்வளவு தானா?, வீழ்ந்து விடுவோமா..?" என்கிற நிலையில் அவர்கள் மனம் தளர்ந்த விநாடி அவர்களை நோக்கிப் புகை கக்கும் கட்டையான மூங்கில்கள் பறந்து வந்து தரையில் விழுந்து படீரென்று வெடிக்கத் தொடங்கின.

இதைப் பழங்குடிகள் எதிர்பார்க்கவில்லை. அவ்வொலியில் அதிர்ந்து நின்ற ஆதிவாசிகள், தொடர்ந்து வந்து விழுந்து வெடித்த மூங்கில்களைக் கண்டு மிரண்டார்கள். மறு கணம், தியாவின் பிடியிலிருந்த ஆதிவாசி அவளை உதறி வேகமாக ஓடத் தொடங்க, மற்றைய பழங்குடிகளும் தம் உயிரைக் கையில் பிடித்தவாறு அவர்களை விட்டுவிட்டு ஓடத் தொடங்கினர்.

மூச்சு வாங்கியது அனைவருக்கும். கால்கள் எல்லாம் நடுங்க, நெஞ்சம் எல்லாம் எரிய, கண்கள் எல்லாம் புழுதி பட்டு கலங்கி போய் இருக்க, மூக்கில் மூச்சு விட முடியாமல் வாயை திறந்து மூச்சு வாங்கி, நின்ற இடத்திலேயே தொப்பென்று அமர்ந்தனர்.

சிலர் மல்லாந்து விழுந்து நீல வானத்தை வெறிக்க, சிலரோ சம்மணம் கட்டியமர்ந்தவாறு தங்கள் கரத்தால் தலையைப் பற்றிக் கொண்டனர். யாருக்கும் எதுவும் பேச முடியவில்லை.

அப்போதுதான் தர்ஷனுக்கு ஷாலினியின் நினைவு வர, பதறியவாறு அவளைக் கிடத்திய இடத்தை நோக்கி ஓடினான். அவள் இன்னும் மயக்கம் தெளியாமல் கிடத்தியது போலவே படுத்திருந்தாள்.

மீண்டும் சிரமப்பட்டுத் தன் கரங்களில் தூக்கியவன், கடற்கரையில் கிடத்த, ஷாலினியின் நிலையறிந்து, கலை ஓடிச்சென்று தண்ணீர் கொண்டு வந்தாள்.

அவள் முகத்தில் தெளிக்க மெதுவாக மயக்கம் தெளிந்து எழுந்தவளுக்கு இரத்தம் சொட்டச் சொட்ட அடிவாங்கிய டானியல் கண் முன்னே வர, “வீல் .." என்று கத்தியவாறு தர்ஷனை இறுக அணைத்துக்கொண்டாள்.

தன்னவளை இறுக அணைத்துக் கொடுத்துத் தட்டிக் கொடுத்தவன்,

“ஒன்னுமில்ல… ஒன்னுமில்ல….” என்று கூறியவாறு தண்ணீரைப் புகட்ட நடுங்கியவாறே குடித்தவளுக்கு அந்தக் கணமே அந்த இடத்தை விட்டுப் போய்விடவேண்டும் என்கிற வெறி வந்தது.

“போய்டலாம் தர்ஷண்… என்னால் இங்க ஒரு விநாடியும் தங்க முடியாது… ப்ளீஸ்… போய்டலாம்… ப்ளீஸ் போய்டலாம்…” என்று நடுங்கித் தவிக்க,

“போய்டலாம்மா… கொஞ்சம் பொறுத்துக்கோ… தோணி கட்டியதும் போய்டலாம்…” என்று கூற,

“நோ… .நோ… முடியாது… இப்பவே… இந்தக் கணமே நாம புறப்படனும்… கிளம்புங்க… என்று சொன்னவள், திடீரென ஏதோ பித்துப்பிடித்தவள் போல, எழுந்து கடலை நோக்கி ஓடத் தொடங்க, பின்னால் சென்று அவள் கரத்தைப் பற்றிய தர்ஷன்,

“ஷாலினி… உன்னைத் திடப்படுத்திக் கொள்… நம்மால போக முடியும்னா எப்பவோ போயிருப்போம்… ஆனால்… முடியாது… இதோ பார்… நீ அதிர்ச்சில இருக்கே… எனக்குப் புரியுது…” என்றவன் அவள் முகத்தைப் பற்றித் தன்னை நோக்கித் திரும்பி,

“நீ என்னை நம்பிறேல்ல…” என்றான் அழுத்தமாக. அவள் ஆம் என்று தலையாட்ட,

“உனக்கு எதுவும் ஆகாது… ஆக விடவும் மாட்டேன்… தயவு செய்து உன்னைத் திடப்படுத்திக் கொள்…” என்று அவன் அழுத்தமாக்க கூற, அதற்கு மேல் தாங்க முடியாதவளாக இறுகி அவனைக் கட்டிக்கொண்டாள் ஷாலினி… அவளை அணைத்துக்கொண்டவனுக்கு, நல்லவேளை சற்று முன் நடந்ததை அவள் பார்க்கவில்லை என்கிற நிம்மதி எழுந்தது. பார்த்திருந்தால், நிச்சயமாகப் பயத்தில் உயிரை விட்டிருப்பாள்.

அவர்களை நெருங்கிய ஆர்யன்,

"ஷாலினி… தயவு செய்து உங்களை திடப்படுத்திக்கங்க… நாம நம்ம வீட்டுக்குப் போகனுமா இல்லையா? " என்றான். அவள் தர்ஷனின் மார்பில் சாய்ந்தவாறு ஆம் என்று தலையை ஆட்ட, "அப்போ நீங்களும் எங்களுக்கு ஹெல்ப் பண்ணனும் " என்றவன் திரும்பி அனைவரையும் காட்ட அப்போதுதான் அங்கே நின்றிருந்தவர்களின் நிலையைப் புரிந்துகொண்டாள் ஷாலினி. நிமிர்ந்து தன் கணவனைப் பார்க்க, அவன் உடலிலும் இரத்தக் கறை. அதைப் பதற்றத்துடன் வருடிக் கொடுத்தவள்,

"எ… என்னாச்சு?" என்று கேட்க, தர்ஷன் நடந்ததை இலகுவாக்கிக் கூற அதிர்ந்துபோனாள் அவள். அடுத்த கணம் உதவி செய்யும் பெண்களுடன் தானும் ஒருத்தியானாள்.

ஆர்யன் அனைவரையும் ஆசுவாசப்படுத்த, பெண்களோ ஓடிச் சென்று குடிக்க நீரை முகந்து கொண்டு வந்து கொடுத்தனர்.

"காய்ஸ்… யு டிட் எ கிரேட் ஜாப்…” என்று பாராட்டியவன் திரும்பி தியாவைப் பார்த்தான். அவன் விழிகளில் தெரிந்த பாராட்டைக் கண்ட தியாவிற்கு உடல் வலியும் வேதனையும் காணாமல் போக, அவன் பாராட்டை ஏற்றுக்கொண்டதைக் கூறும் முகமாகத் தன் தலையை மேலும் கீழும் ஆட்ட, அதை விழிகளாலேயே புரிந்துகொண்டதாகக் காட்டியவன் இதழ்களின் ஓரத்தில் சிறு புன்னகை..

திரும்பி,
“இனியும் காத்திருக்க முடியாது… நாம இப்போ டேஞ்சர் ஸோன்ல இருக்கோம்… எவ்வளவு முடியுமோ… அத்தனை சீக்கிரமா கிளம்பணும்…” என்ற ஆர்யன் திரும்பி கடலின் பக்கமாய் இருந்த தோணிகளைப் பார்த்தான்.

இரண்டாவது தோணியில் இன்னும் வேலைகள் இருந்தன. அதை முடிக்காமல் கடலில் இறக்க முடியாது.

“எத்தனை நேரம் அவர்கள் அடங்கியிருப்பார்களோ தெரியல… அதற்குள் இந்த தோணியைக் கட்டி முடிக்கனும்…" என்று கூற, வேறு பேச்சில்லாமல் அனைவரும், வேக வேகமாய் இருக்கும் கொடிகளை வைத்து மூங்கிலைக் கட்டத் தொடங்க பெண்களோ, மிச்சமிருந்த வெடிமருந்தைக் கொண்டு வெடியைத் தயாரிக்கத் தொடங்கினர்.

அதே நேரம் அபிராமை நொண்டியவாறு நெருங்கிய ஜெயவர்மன், அவன் செய்து வைத்திருந்த நான்கு வெடிகளை எடுத்தவாறு ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த தீயை நோக்கிச் சென்று அதில் மேலும் காய்ந்த கிளைகள், இலை தழைகளைப் போட்டுச் சிரமப்பட்டுத் தரையில் அமர்ந்தவன், ஆர்யனைப் பார்த்து,

“நா இங்கே காவலுக்கு இருக்கேன்… யாராவது வரும் சத்தம் கேட்டா இந்த வெடியை கொழுத்திப் போடுறேன்… நீங்க பயப்படாம தோணியைக் கட்டுங்க…” என்றுவிட்டுத் தன் புலன்களைக் கூர்மையாக்கித் சுற்றிலும் பார்த்தவாறு அமர்ந்து இருந்தான்.

கிட்டத்தட்ட எந்த சத்தமும் இல்லாது அமைதியாக இருந்தது இடம்… பழங்குடியினர் ஓடிய பாதைக்கு சற்றுத் தள்ளி ஏதோ சலசலப்பு கேட்க, அதை உணர்ந்துகொண்ட ஜெயவர்மன், சத்தம் வந்த திசை நோக்கி வெடியை வீச, அது வெடித்தவுடன் கேட்ட சத்தத்தில் யாரோ ஓடும் அரவம் கேட்டது..

ஆபத்து இன்னும் தம்மை விட்டு விலகவில்லை என்பதை அவைரும் புரிந்துகொண்டனர்...

http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/page-72#post-250320



வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியர்ஸ் 016 கதையோட 19 ஆம் அதிகாரம் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. இன்னும் மூன்று நான்கு அதிகாரங்களில் கதை நிறைவடைந்துவிடும் என்பதையும் கூறிக்கொள்கிறோம். அதனால் படிப்பவர்கள் இப்போதே படிக்க ஆரம்பித்து விடுங்கள். அத்தோடு சென்ற பதிவுக்காக கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.
 
Last edited:

sivanayani

விஜயமலர்
12003
20
மூங்கில் வெடி வெடித்ததும் ஓடிய கால்களின் ஒலி சொல்லியது.. தாம் ஆபத்தின் நடுவே கூடுகட்டி அமர்ந்திருக்கிறோம் என்பதை.. அனைவரும் போர் புரிந்த களைப்பில் இருக்க.. சூழ்நிலையோ.. "தயாராகு.. தயாராக்கு.." எனக் கட்டளையிட்டது.. ஓய்விற்கு கெஞ்சும் உடலினை.. மயங்கி விழ வைக்கக் காத்திருந்த அச்சத்தை.. வெல்ல முயன்றவராய் தோணிகளின் அருகே செல்ல, காயம் பட்டிருந்தவர்களுக்கு மருத்துவமும் செய்ய வழியில்லா நிலை.. பின்னே.. எடுக்க எடுக்க வந்து கொண்டேயிருக்க அந்த முதலுதவிப் பெட்டி ஒன்றும் அமுதசுரபி இல்லையே.. மருந்துகள் தீர்ந்த் போய் இருந்தன. இருக்கும் சக்தியை ஒன்று திரட்டி சிலர் தோணி கட்டமைப்பில் இறங்க, மற்றவர் உதவ என.. தீவு விட்டுக் கிளம்பும் அவசரம் அனைவருக்கும்.

இவர்களின் அவசரம் புரியாமல் காலமும் மெது மெதுவாக கரையத் தொடங்கியிருந்து. சூரியனின் ஒளியும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.

பயணிகளின் மனதின் வேகத்திற்குக் கரங்களும் செயல்களும் இசைந்தால் அல்லவோ? தடுமாறுவதும் நடுக்கம் சேர்ந்து தோணியைக் கட்ட முயல்வதும் என்று முடிந்தவரைத் தைரியத்தை இழுத்துப் பிடித்துத் தோணிகளைக் கட்டிக்கொண்டிருந்த நேரம், தொலைவில் கண்ணெட்டாத் தொலைவில் இருந்து வந்த “பட பட பட….” என்கிற ஓசை இவர்களின் கவனத்தைத் திசை திருப்பியது.

மூங்கிலொன்றை வைத்துக் கொடியால் இறுக்கிக்கொண்டிருந்த ஆர்யனுக்கு அந்த "பட பட" சத்தம் கேட்டதும் கேட்காதது போல இருக்க.. தான் செய்துக் கொண்டிருந்த வேலையை விடுத்து உற்றுக் கேட்க முயன்றான். அவன் சந்தேகம் சரிதான். அவசரமாக.. தான் செய்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டுப் பாய்ந்து, அங்கிருந்த மூங்கில் குவியலை ஓரெட்டில் தாண்டி வந்து வானத்தை அண்ணாந்துப் பார்த்தான்.

மீண்டும் அதே பட பட பட பட சத்தம் காற்றில் மிதந்துவர, முகம் மலர்ந்தான்.

“கைய்ஸ்… அது ஹெலிக்காப்டர் போல இருக்கு…” என்று கத்தியவன் பெரும் மகிழ்ச்சியுடன் தரையைப் பார்த்தான். முன்தினம் கடல் மண்ணில் செய்து வைத்த ஈ SOS எழுத்துக்கள், சற்று முன் நடந்த போராட்டத்தில் கலைந்துபோய் சிதைந்திருந்தன. ஒரு இடத்தைத் தவிர நெருப்புகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன. உள்ளம் சோர்ந்து போனான்.

அப்போது தான் அவனுக்கு அன்று பிரவீனிடம் கொடுத்த கண்ணாடி நினைவுக்கு வர பரபரப்பானான். திரும்பி பிரவீனைப் பார்த்தவன்,

“ப்ரவீன்… உங்க கிட்ட கொடுத்த அந்த கண்ணாடியை எடுங்க…” என்று கத்த, உடனே பிரவீன் தன் பான்ட் பாக்கெட்டில் கைவிட்டு சதுர வடிவக் கண்ணாடியை எடுத்து, கிடைத்த சூரிய வெளிச்சத்தில் பிடிக்க முயன்றான். அவன் நின்றிருந்த கோணத்தில் சரியாகச் சூரிய வெளிச்சம் படவில்லை.

அதே நேரம் அந்த படபட சத்தம் சற்று அருகே வரத் தொடங்க,

“க்விக்…” என்று அவன் கத்தும்போதே பல கோணங்களில் திரும்பி நின்றும், அவன் நின்ற இடத்திலிருந்து கண்ணாடியில் வெளிச்சத்தை விழவைக்க முடியவில்லை. பதட்டம் வேறு மூளையை மழுங்கச் செய்துகொண்டிருந்தது.

“என்னங்க செய்றீங்க… சரியா பிடிங்க…” என்று நாச்சிமுத்து கத்த, அவனுக்கு அருகேயிருந்த சூரஜின் கண்கள், நான்கடி உயரமான பாறையொன்றின் மீது சூரிய வெளிச்சம் படுவதைக் கண்டன.
உடனே,

“இங்கே கொடுங்க பிரவீன்….” என்று கூறியவாறு கிட்டத்தட்ட அதைப் பறித்தவன், அந்த பாறை நோக்கி ஓட, இப்போது ஹெலிக்காப்டரின் உருவம் அனைவரின் கண்களுக்கும் புள்ளியாகத் தெரிந்தது.

அனைவரும் தாங்கள் செய்துக் கொண்டிருந்த வேலையை விட்டு ஓடி வந்து, ஏதோ கடவுளைக் கண்ட மகிழ்ச்சியில், கரங்களைக் கூப்பி, "இங்கே பார்.. இங்கே பார்…” என்று வாய்க்குள் முணுமுணுக்க, திகம்பரி, வர்ஷினி, சாகரி, அகிலன், கலை ஆகிய ஐவரும், தமது கரங்களை ஆட்டி அதன் கவனத்தைத் தம் பக்கம் திசைதிருப்ப முயன்றவாறு கடலை நோக்கி ஓடினர்.

அதே நேரம், சூரஜ், ஒரே தாவலில் அந்தப் பாறையைப் பற்றி ஏறிக் கண்ணாடியைத் தூக்கிப் பிடித்தவாறு சூரிய ஒளியின் பிம்பத்தைக் கண்ணாடியில் விழ வைக்க முயன்றுக் கொண்டிருந்த தருணம்,

“விஷ்க்….” என்கிற சத்தத்துடன் எங்கிருந்தோ பாய்ந்து வந்த அம்பொன்று அவனுடைய இடது பக்கத்து முதுகைத் துளைத்து, இதயத்திற்குள் நுழைந்து மார்பின் வெளியே வந்து நின்றது.

தன்னை அம்பு துளைத்தது என்பதைக் கூட சூரஜ் முதலில் உணர்ந்து கொண்டானில்லை. கண்ணாடியை உயர்த்திப் பிடிக்க முயன்றவனுக்குக் கரம் செயற்படவில்லை. தொடர்ந்து சுளீர் என்கிற புரிந்து கொள்ள முடியாத ஒரு வலி மூளையில் அடிக்க.. தொடர்ந்து மார்பில் ஏற்பட்ட வலியுடன் தலையைக் குனிந்து பார்த்தான்.

இடது மார்பில் இரத்தத்தைப் பூசியவாறு வெளியே தலைகாட்டி நின்றிருந்த அம்பைக் கண்டவனுக்குக் கண்களை மங்கிக்கொண்டு வந்தது. தன்னை அம்பு குத்திவிட்டது என்பதை உணர்ந்தவனுக்கு அடுத்த விநாடி நினைவு தப்பிப் போகத் தொப்பென்று முன்புறம் சரிந்து கடலில் விழுந்தான்.

அனைவரின் கவனமும், ஹெலிக்காப்டரில் இருந்ததால், சூரஜை அம்பு தாக்கியதை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. 'தொப்'பென்று எதுவோ விழத்தான், சூரஜிற்கு சற்று அருகாமையில் நின்றிருந்த, ஆரோன் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

அங்கே பாறையிலேறிய சூரஜைக் காணாது திகைத்தவன், குழப்பத்துடன் “சூரஜ்…” என்று அழைத்துப் பார்த்தான். சத்தம் வராது போக, எதுவோ அவனை உறுத்த, அவசரமாக கிட்டத்தட்ட ஆறடி விட்டமுள்ள பாறையைச் சுற்றிச் சென்றவன், அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்து போய் நின்றான்.

அங்கே அவன் எதிரியாகப் பல காலம் இருந்தவன், உயிர்பயத்தைச் சந்தித்தபின் நண்பனானவன் மார்பில் அம்பு ஏறியிருக்கக் குப்புற விழுந்துகிடந்தான்.

அவனைத் தொட்டுவிட்டுச் சென்ற கடல் அலை, அவன் தானமாகக் கொடுத்த இரத்தத்தை மெல்ல மெல்ல பெற்றுக்கொண்டு செல்வதைக் கண்டதும் ஓரளவு சுயநினைவு பெற்றவன், பதறி அடித்தவனாக,

“ சூரஜ்..…” என்று அலறியவாறு சூரஜை நோக்கிப் பாய்ந்தான். தரையில் கிடந்தவனை நிமிர்த்திக் கிடத்தும் போதே அவன் உயிர் அவனைவிட்டுப் போய்விட்டது என்பதைப் புரிந்து கொண்டான் ஆரோன்.

ஆரோனுடைய அலறலைக் கேட்டு, தற்காலிகமாக ஹெலிக்காப்டரை மறந்து ஓடி வந்த ஆர்யன் அங்கே கண்ட காட்சியில் ஒரு கணம் மூச்செடுப்பதையும் மறந்தவனாய்,

“ப்ருத்வி … இங்கே வாங்க..” என்று கத்தியவாறு அவர்களை நெருங்கினான்.

சூரஜின் கழுத்தில் கைவைத்து இதயத் துடிப்பைப் பரிசோதித்தவனுக்குப் புரிந்து போயிற்று, அவன் உயிர் பிரிந்த கதை.

“ஓ… காட்…” என்று முனங்கியவன், தொப்பென்று தரையில் அமர்ந்து இரண்டு கரங்களாலும் தலையைப் பற்றிக் கொண்டவனுக்குச் சற்று நேரம் எடுத்தது, சுயத்திற்கு வர.

ஆர்யனின் காத்தல் கேட்டு ஓடிவந்த அனைவருக்கும் சூரஜைக் கண்டதும் உயிர் உறைந்த நிலையில் அப்படியே நின்றிருந்தனர். அமிர்தசாகரி, அங்கே தரையில் கிடந்த சூரஜை பார்த்து மயங்கும் நிலைக்கே சென்று விட்டிருந்தாள்.

"நந்தன்... எ… என்னாச்சு..." என்று தவிப்புடன் கேட்க, தன் மனைவியின் நிலை புரிந்தவனாக ஓடிவந்து அவள் முகத்தைத் தன் மார்பில் பதித்து இறுக்கிக் கொண்ட ஆதீரநந்தன்

"கண்ட்ரோல் யுவர் செல்ஃப்..." என்று சமாதானப்படுத்தினாலும், அவனுடைய இதயமும் படுவேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

ஒரு மாத்திரைப் பொழுதில், இந்த அவலம் நடந்துவிட்டிருந்தது.

இப்போது இருந்தான்… சென்ற விநாடி வரை அவர்களுடன் நின்றவன், இப்படித் தைத்த அம்பின் வேகத்தில் தன் உயிரைப் பலி கொடுப்பான் என்று யாரும் எண்ணியிருக்கவில்லை.

அதிர்ச்சியில் உறைந்திருந்த நேரம், யாருக்கும் மூச்சு எடுக்க முடியாத தவிப்புடன் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருக்க, அக்கண்யனுக்கோ சூரஜின் மரணத்தை ஏற்கவே முடியவில்லை.

"இப்போதுதானே பகையை மறந்து அவனை நண்பனாகப் போற்றினான்… அதற்குள் அவனை மரணம் வந்து தழுவிக்கொண்டதே… இது வரை நேரமும் நம்முள் ஒருவனாக இருந்தவன், இனி இல்லையென்றாகிவிட்டானே … கடவுளே…" என்று அவன் துடிக்க, தன் கணவனின் நிலையைப் புரிந்துகொண்ட ஜனனி அவனை நெருங்கி அவன் தோள்களில் தன் கரத்தைப் பதிக்க, வலியுடன் நிமிர்ந்து தன் மனைவியைப் பார்த்தான் அக்கண்யன்.

"அத்தான்… ப்ளீஸ்… அழாதீங்க…" என்று கண்ணீர் சொரிந்தவாறே சமாதானப் படுத்த முயல, மெதுவாக சூரஜை விட்டு விலகிய அக்கண்யனுக்கு அந்தக் கணம் உலகே கசப்பானது.

இத்தனை போராட்டத்தில் தப்பி வந்துவிட்டுக் கடைசி நேரத்தில் பழங்குடியினர்களின் அம்புக்குப் பலியாகிவிட்டானே… என்று எண்ணும் போதே அவனுக்கு ஓவென்று வந்தது.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்தில் நின்றிருந்த நேரம், இன்னொரு அம்பு, ‘விஷ்க்….’ என்கிற வேகத்துடன் அவர்கள் நின்றிருந்த பக்கம் வந்தாலும், அது குறி தப்பி, சற்றுத் தள்ளி நின்று ஒரு பாறையில் மோதிக் கீழே விழ, சூரஜை மறந்து அனைவரும் பதறிப் போனார்கள்.

அடுத்து இன்னொரு அம்பு காற்றைக் கிழித்துக்கொண்டு வந்து, அனைவருக்கும் பின்னால் நின்றிருந்த வேலையாள் பார்த்திபனின் பின் மண்டைக்கூடாகத் தைத்து நெற்றியின் வழி வெளி வர, அதைக் கூட உணராமல், அவன் அப்படியே முன்புறம் சரிந்தான்.

அடுத்து இன்னொரு அம்பு, அதே வேகத்துடன், சற்றுத் தள்ளி நின்றிருந்த ராயரின் கை சதையைக் கிழித்துக்கொண்டு போக, அவனுக்கு அருகேயிருந்த திகம்பரி அதிர்ந்து போனாள்.

“அத்தான்…” என்று துடித்தவள், அவன் பக்கமாக ஓடிவர, இப்போது அம்பு எந்தப் பக்கமிருந்து வருகிறது என்பது புரியாமல் எல்லாத்திசையிலிருந்தும் பறந்து வர, தன் மனைவியைக் காக்க வேண்டும் என்கிற வேகத்துடன் தன் கரத்தைக் கிழித்துச் சென்ற அம்பைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாது அவளை இழுத்துக்கொண்டு தரையில் சரிந்தான் ராயர்.

அப்போதுதான் பயணிகளுக்கு இனித் தாம் சந்திக்கப் போகிற ஆபத்தின் தீவிரம் புரிந்தது.
 
Last edited:

sivanayani

விஜயமலர்
உள்ளே சென்ற பழங்குடியினர், மீண்டும் வந்துவிட்டனர். அதுவும் மறைந்து நின்று தாக்குகிறார்கள். நேராக நின்று தாக்கும் போதே அவர்களால் தம்மைக் காப்பது சிரமமாக இருந்தது. இந்த நிலையில் மறைந்திருந்து தாக்கினால்…! அந்த நினைவே உயிரைக் குடித்துவிடும் அச்சத்தைக் கொடுக்க,

“எல்லாரும் கிடைக்கிற இடத்தில மறைஞ்சு நில்லுங்க… க்விக்…” என்று ஆர்யன் கத்திய மறு விநாடி, செயலற்று கத்தக் கூட முடியாது விறைத்துப்போயிருந்த பயணிகள் அவன் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தவர்களாக, அந்த நேரம் மேலே பறந்து வந்த ஹெலிக்காப்டரின் கவனத்தைத் திசை திருப்பக் கூட அவகாசமில்லாது, உயிரைக் காக்கும் வேகத்துடன், கிடைத்த இடங்களில் மறைந்து கொண்டனர்.

ஒரு பாறையின் பின்னால் திகம்பரியுடன் மறைந்திருந்த ராயரோ, வலியில் பல்லைக் கடித்தவாறு, தன் கரத்தைக் குத்தியிருந்த அம்பை இழுத்து எடுத்துத் தூக்கிப் பார்த்தான்.

அதைக் கண்டதும் பழங்குடிகளைக் கண்ட துண்டமாக வெட்டும் ஆத்திரம் வர, யாரும் சொல்ல முடியாத, கேட்க முடியாத வார்த்தைகளில் திட்டியவன் அதைத் தூக்கி எறிந்துவிட்டு இரத்தம் வடிந்த காயத்தை இறுகப் பற்றிப் பல்லைக் கடித்து வலியை அடக்க முயன்றான். திகம்பரியோ, பதறித் துடித்தவளாக,

“கடவுளே… நான் என்ன செய்யட்டும்… கொஞ்சம் பொறுங்க…” என்று தன் பாவாடையைக் கிழிக்க முயல,

“ஏய்… என்ன செய்றே…” என்றான் பல்லை இறுகக் கடித்தவாறு.

“இரத்தம் வருதே… காயத்திற்கு கட்டுப்போடனும்…” என்று அழுகையில் உதடு துடிக்கச் சொன்ன மனைவியை எரிச்சலுடன் பார்த்தவன்,

“சே… அழுகையை நிறுத்து முதல்ல… நான் செத்தா போய்ட்டேன்… உயிரோட இருக்கேன்ல…” என்று வலியும், எரிச்சலும், இயலாமையும் போட்டிப்போடச் சீறியவன் பின் பல்லைக் கடித்தவாறு பாறையிலிருந்து எட்டிப் பார்த்தான்.

அங்கே தன்னைப் பாதுகாக்க ஓட முயன்று கொண்டிருந்த தியா, முடியாது தடுமாறிக் குப்புற விழுந்திருந்தாள்.

அந்த நிலையிலும், அவளைக் காக்கும் வேகம் கொண்டு ஆர்யன் மறைவை விட்டு வெளியேற முயன்ற விநாடி, அம்பொன்று, அவளைத் தாண்டிச் சென்று விழுந்தது. அதை ஜெயவர்மனும் கண்டான் போலும்,

“தியா… தவழ்ந்து இந்த பக்கமா வா…” என்று கத்த, ஆர்யனோ, தியாவின் நிலை அறிந்து உயிர் துடித்தவனாகச் சற்றும் தாமதிக்காது, தன்னை மறந்து “தியா…” என்று அலறியவாறு, அவளை நோக்கிப் பாய்ந்தான்.

அவனுடைய தலை தெரிந்ததுதான் தாமதம், மீண்டும் அம்புகள் பொழியத் தொடங்க, தரையில் விழுந்தவன், உருண்டு சுழன்றவாறு தியாவைச் சென்றடைந்த நேரத்தில், ஒரு அம்பு கச்சிதமாக அவனுடைய காலணியைத் துளைத்தவாறு பாதத்தையும் துளைத்துத் தரையோடு செருகி நின்றது.

“ம்… ஹா…” என்று முனங்கியவன், தன் காலைத் தூக்கிப் பார்த்தான்.

“டாமிட்…” என்று கத்தியவன், எழுந்தால் மீண்டும் அம்பு தம்மை நோக்கி வரும் என்பதைப் புரிந்து கொண்டவனாகத் தன் பலம் அனைத்தையும் சேர்த்துக் காலை இழுத்து நகர்ந்து உயிர்போகும் வலியிலும் அதைப்பற்றி கவலை கொள்ளாது, தியாவைச் சென்றடைந்தான்.
அவளைத் தன் கை வளைவுக்குள் இழுத்து எடுத்துத் தன்னோடு இறுகப் பிடித்துக் கொண்டவனாக, அப்படியே சுழன்று ஜெயவர்மன் மறைந்திருந்த பாறைக்கருகே சென்றதும் விடுவிக்காமலே,

“தியா… ஆர் யு ஓக்கே…” என்றான் பெரும் பதட்டத்துடன்.

அவள் கீழும் அவன் மேலும் இருந்திருந்ததால் அவளுக்கு மூச்சுகூட விட முடியாது அவன் பாரம் அழுத்தியது. அவனிடமிருந்து விடு பட முயன்றவளாக அவனைத் தள்ள முயன்றவாறு ‘ஆம்’ என்று தலையை ஆட்டினாள். நிம்மதி மூச்சுடன் அவளை விட்டு விலகியவன் பாறையில் சாய்ந்தமர்ந்தவாறு அம்பு குத்திய காலைத் தூக்கிப் பார்த்தான்.

இரண்டு பக்கமும் இழுத்தெடுக்க முடியாது காலை மடித்துத் தொடையில் வைத்தவன் சற்றும் தாமதிக்காமல் அம்பின் முனைப்பகுதியை முறித்தவன், அதன்பின் பின் பக்கமாகக் கரத்தை வைத்துப் பல்லைக் கடித்து கழுத்து நரம்புகள் புடைக்க, வெடிக்க இருந்த தன் கதறலை அடக்கியவாறு ஒரு இழுவையில் இழுக்க அம்பு அவன் காலை விட்டு வெளியேறியது.

அதைத் தூக்கி எறிந்தவனுக்குச் சற்று நேரம் எடுத்தது பழைய நிலைக்கு வர.

ஏதோ பெரும் கற்பாறையே விலகிய உணர்வுடன் ஒழுங்காக அமர்ந்தவனுக்கு எல்லாத் திசையிலும் அம்புகள் பாய்வதைக் கண்டு, தன்னையும் அறியாமல் தியாவை இழுத்துத் தன் கைவளைவிற்குள் வைத்துக்கொண்டான் ஆர்யா.

சற்று நேரத்தில் அனைத்தும் ஓய்ந்தது. எங்கும் அமைதி… சிறு இலை விழுந்தாலும் பெரும் பொருள் விழுந்த ஓசை கேட்கும் அளவுக்கு நிசப்தம். வியர்த்துக் கொட்ட உள்ளம் துடிக்க அச்சத்தின் உச்சியில் நின்று இயங்கிக்கொண்டவர்களின் இதயத்தின் ஒலி கூட டமாரம் அடிப்பது போலக் கேட்டது. அந்த மயான அமைதி கூட பெரும் கிலியைக் கொடுத்தது. சூரஜிற்கு நடந்தது தமக்கும் நடந்துவிடுமோ என்கிற அச்சம், அவர்களைச் சுலபத்தில் சுவாசிக்க விடும்போலத் தெரியவில்லை.

அத்தனை பயணிகளுக்கும் மரணம் மிக அருகிலிருக்கிறது என்பது புரிந்து போனது. கூடவே, தம்மைக் காக்கும் வழி இருந்தும் அதைச் செயலாற்ற முடியாது போன அவல நிலையை நினைத்து அழுவதா, இல்லை, தற்போது இருக்கும் ஆபத்திலிருந்து தம்மைக் காப்பாற்ற முடியுமா என்று யோசிக்கவா என்பது புரியாமல் சிலையென நின்றிருந்தனர்.

மீண்டும் காட்டுப் பகுதியிலிருந்து மெல்லிய சலசலப்பு கேட்டது.

பழங்குடியினர் பின்வாங்கி விட்டனரோ? அங்கேயிருந்த பாறையொன்றின் பின்னால் தனியாக மறைந்திருந்த,பணிப்பெண்ணான சுலோசனா, தனிமையில் மறைந்திருந்ததால் அச்சம் ஏற்பட, அங்கிருந்த மற்றைய பயணிகளுடன் இணைந்துகொள்ளலாம் என்கிற எண்ணத்தில், பாறையின் மறைவிலிருந்து விழிகளை மட்டும் வெளிக்காட்டி எட்டிப் பார்த்தாள்.

அந்த இடமே வெற்றிடமாய் இருந்தது. ஆனால் எந்த அசம்பாவிதமும் நிகழும் போலில்லை. ஓரளவு பயம் தெளிந்து, எழுந்தவள், சற்றுத் தள்ளியிருந்த பாறையை நோக்கி விரைந்து போக முயன்ற விநாடி, சற்றும் தாமதிக்காது அவளை நோக்கிப் பாய்ந்து வந்த அம்பு, அவள் உயிரைக் குடிக்க, மறு கணம், பாறையின் மறைவில் பெரும் கிலியுடன் அகிலனின் கரத்தை இறுகப்பற்றியிருந்த அமிர்தவர்ஷினியின் மீது தொப்பென்று விழுந்தாள்.

தன் மீது அந்தப் பெண் உயிரிழந்த சடலமாய் விழுவாள் என்று அமிர்தவர்ஷினி சற்றும் எதிர்பார்க்கவில்லை.

தன்னை மறந்து, கிறீச்சிட்டவளாக அகிலனை விட்டுக் கரத்தை எடுத்துத் தன் உடல், கரம், கால்களை உதறி தள்ளிவிட்டு என்ன செய்கிறோம் என்பதை உணராமலே எழ முயல, மறு கணம் அவளை நோக்கி இன்னொரு அம்பு பாய்ந்து வந்தது.

அம்பு வர முதலே அமிர்தவர்ஷினியின் நிலை புரிந்ததால் சற்றும் தாமதிக்காது “அமிர்தா...” என்று அலறியவனாகப் பிடித்து இழுக்க, இழுத்த வேகத்தில் சுழன்று அவன் மீது விழுந்த அமிர்தவர்ஷினியின் நீண்ட குழல் சுழல, பாய்ந்து வந்த அம்பு அவளுடைய காதின் ஓரமாகத் தேய்த்துக் கொண்டு சற்றுத் தள்ளியிருந்த பாறையில் முட்டி முறிந்து கீழே விழுந்தது.

அந்த அதிர்ச்சியை உணரக் கூட முடியாத வகையில், அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவது போல் ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்க இதயத்தைக் கரத்தில் பிடித்தவாறு விதிர் விதிர்த்துப் போயினர் அனைவரும்.

அதைத் தொடர்ந்து சலசல வென பலருடைய காலடி சத்தம் கேட்க அந்த சத்தத்தில் அனைவருமே முகத்தில் உயிர் பயத்துடன் ஒரு நிமிடம் உறைந்து நின்றனர். அம்புகள் வந்த வேகத்தில் தப்பவேண்டும் என்று நினைத்தவர்களுக்குப் பாதுகாப்பு ஆயுதத்தை எடுத்து வரவேண்டும் என்கிற யோசனை தோன்றவேயில்லை.

இப்போது இதிலிருந்து எப்படித் தப்புவது என்றும் அவர்களுக்குப் புரியவில்லை. அந்த நேரத்திலும், ஆர்யன் தம்மைப் பாதுகாக்க என்ன இருக்கிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தான். ஜெயவர்மன் எடுத்த வைத்திருந்த வெடிகள் சிதறியிருந்தன.

ஒரு கண மகிழ்ச்சியுடன், சற்றும் யோசிக்காது வெடிகளை நோக்கிப் பாய்ந்தவன், அவற்றை மண்ணோடு அள்ளிப் பொறுக்கி எடுத்துத் தவழ்ந்தவாறு சென்று எரிந்து கொண்டிருந்த நெருப்பை அடைந்தவன், அதில் பிடித்து, சத்தம் வந்த திசையை நோக்கி எறிந்தான்.

அது வெடித்த மறு கணம் ஏழெட்டு அம்புகள் இவர்கள் பக்கமாகச் சீறி வர, அது சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான் என்கிற கதையாயிற்று.

பாய்ந்து வந்த அம்புகளைப் பார்த்து, தியா தன்னை மறந்து “ஆர்யா…” என்று கத்தினாள். அவனோ அவளுடைய அலறலைச் சற்றும் மதித்தானில்லை. இன்னொரு வெடியை அம்புகள் வந்த திசை நோக்கிக் கொளுத்திப் போட்டான். முன்பு வெடிக்குப் பயந்து ஓடியவர்கள், இப்போது அதற்கும் எதிர்த்து நிற்கத் துணிந்து விட்டார்கள் என்பது புரிந்தபோது அடுத்து என்ன செய்வது என்று யாருக்கும் புரியவில்லை.

மீண்டும் வானில் ஹெலிக்காப்டரின் சத்தம் கேட்டது. தலையை நீட்டினால் உயிருக்கு உத்தரவாதமில்லை. நீட்டாவிட்டால் இருக்கும் ஒரே நம்பிக்கையும் தொலைந்துபோகும். என்ன செய்வது? புரியாத குழப்பத்தில் அனைவரும் ஸ்தம்பித்திருந்த அந்தக் கணம், ஆனந்தன் எதையோ சுற்றிலும் தேடினான்.

பாறைக்கு முதுகு கொடுத்தவாறு தன் மனைவியை அணைத்திருந்த அபிராம் திரும்பி, " என்ன தேடுறீங்க ஆனந்தன்?” என்று கேட்க,

“என்னோட ரோபோ.. அபிராம்… மேலே போகும் ஹெலிகாப்டருக்கு என்னுடைய ரோபோவால் ரேடியோ ட்ரான்ஸ்மீட்டர் மூலம் மோஸ்கோட் அனுப்பமுடியும்... ஓ காட்… அது எங்கே போச்சுன்னு தெரியல அபிராம்…” என்று கிடைத்த வாய்ப்பும் நழுவிப்போய்க்கொண்டிருக்கிறதே என்கிற வலியுடன் கூற, அபிராமும் வேகமாய் சுற்றிலும் பார்த்தான்.

அவனுக்கு வலது புறத்தில் இருபதடி தள்ளி மண்ணுக்குள் புதைந்தவாறு மின்னிக்கொண்டிருந்தது அந்த ரோபோ.

தற்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி… அந்த ரோபோதான்… ஒரு கணம் ஆழ மூச்சை எடுத்தவன் திரும்பித் தன் கையணைப்பிலிருந்த சுவர்ப்பனாவை பார்த்தான். அவளை ஒரு கணம் இறுக அணைத்துக் கொண்டவன், மெதுவாக விடுவிக்க, அவள் நிமிர்ந்து பார்த்தாள். அவனுடைய விழிகள் சொன்ன மொழியைப் புரிந்துகொண்டவள் அதிர்ந்து விலகி அவனை உற்றுப் பார்த்தாள்.

அவன் பேச வேண்டியதை அவன் விழிகள் பேசத் தன்னை மறந்து உதடுகள் துடிக்க, சத்தம் வெளி வராதவாறு,

“நோ…” என்றாள். அவனோ அவளைக் கனிவுடன் பார்த்து,

“வேறு வழியில்லை கண்ணம்மா… ஐ ஹாவ் டு கோ…” என்று சமாதானப் படுத்த, அவனுடைய சட்டையை இறுகப் பற்றிக் கொண்டவள்,

“நான் விடமாட்டேன் அபிராம்… முட்டாள்தனமாக எதையும் செய்யாதீர்கள்… உங்கள் தலை தெரிந்தாலே அவர்கள் அம்பெய்வார்கள்…” என்று மறுக்க, அவளுடைய தலையை வருடிக் கொடுத்தவன்,

“சுவர்ப்பனா… நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே வழி அந்த ரோபோதான்… இப்படியே இருந்தால், அவர்களின் கரங்களில் சிக்குப் பட்டு நாம் சாவது உறுதி… எப்படியும் இறக்கப்போகிறோம் என்கிற நிலையில், கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தாது இருப்பது முட்டாள்தனம்,” என்று அவன் உறுதியாகக் கூற, ஆனந்தனனோ,

“அபிராம்… உங்க கண்ணுக்குத் தெரியுதா?” என்றான் பரபரப்புடன். அதே நேரம் ஹெலிக்காப்டரின் சத்தம் இப்போது மெல்ல மெல்ல நெருங்கத் தொடங்க,

“அதோ அங்கே இருக்கு ஆனந்தன்…” என்று கூற சற்றும் யோசிக்காமல் ஆனந்தன் எழுந்த விநாடி "விஷ்க்... விஷ்க்…" என்று இரண்டு அம்புகள் ஒன்று மார்பிலும், மற்றையது அவனுடைய நெற்றியிலும் பாய மறு கணம் விழித்த கண்களை மூடாமலே தரையில் சரிய, அதைக் கண்ட சுவர்ப்பணா தன்னை மறந்து "வீல்" என்று கத்தினாள்.

மரணம்… அதுவும் கண்ணுக்கு முன்னால்… கண்ணிமைக்கும் நொடியில்… இதுதானா வாழ்க்கை.. அனைவரும் உறைந்திருந்தது ஒரு சில கணங்களே.

இப்போது ஹெலிக்காப்டரின் சத்தம் அவர்களின் தலைக்கு மேலாகக் கேட்கத் தொடங்க, அடர்ந்த மரங்களுக்கிடையேயாக இவர்களைக் கண்டுபிடிப்பது அத்தனை சுலபமில்லை என்பதைப் புரிந்து கொண்ட அபிராம், இதை விட்டால், அத்தனை பயணிகளும் மரணத்தைத் தழுவுவார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டவனாக, அடுத்து சற்றும் யோசிக்காது, வெட்ட வெளியில் மினுங்கிக்கொண்டிருந்த ஆனந்தனின் ரோபோவைப் பார்த்து, சுவர்ப்பனாவை உதறிவிட்டு, ரோபோவை நோக்கி ஓட, மறு கணம், அவனை நோக்கிப் பாய்ந்தன அம்புகள்.

என்னதான் அபிராம் வேகமாக ஓடினாலும். கச்சிதமாக ஒரு அம்பு அவனுடைய தொடையிலும், மற்றையது, அவனுடைய முதுகிலும் இன்னொன்று மார்பிலும் பாய்ந்ததை யாராலும் தடுக்க முடியவில்லை.

பலரைக் காக்க ஒருவன் உயிரிழந்தால் தப்பில்லை, அந்தத் தாரக மந்திரத்துடன் பாய்ந்தவன் உடல் வலியை ஒரு பொருட்டாகவே அவன் மதிக்கவில்லை. அதை மதித்தால் உடல் சோர்வடையும், உடல் சோர்ந்தால் மயக்கம் வரும். மரணத்தைத் தழுவப் போவதை புத்தி உணரும் முதல் செயல் பட்டுவிட வேண்டும். ஒரே பாய்ச்சலுடன் ரோபோவை எடுத்தவன், அப்படியே திரும்பிய வேகத்தில் அதை இன்னொரு பாறையில் மறைந்திருந்த ஆர்யனை நோக்கி வீசியவாறு மல்லாந்து விழுந்தான்.

அபிராமின் மீது அம்பு பாய்ந்த போதே தன்னை மறந்து,

“அபிராம்… நோ….” என்று அலறியவாறு தன் கணவனை நோக்கிப் பாய்ந்த சுவர்ப்பனாவின் உடலிலும் பல அம்புகள் தைக்க, அடுத்த நொடி தரையில் விழுந்தவளின் வாயிலிருந்து இரத்தம் வெளிவரத் தொடங்கியது.

மெல்ல மெல்ல வலியை உணர முயன்ற விநாடி,

“அ… அபிராம்…” என்று தன் கரத்தை நீட்ட, இறுதி மூச்சை இழுத்து விட்டுக்கொண்டிருந்த அபிராமின் முகத்திலும் தன் மனைவி தன் கூடவே வருகிறாள் என்கிற மகிழ்ச்சி தோன்றியதோ? மெல்லியதாய் புன்னகையைச் சிந்த, அவன் புன்னகை முகத்தையே வெறித்துப் பார்த்தாள் சுவர்ப்பனா. பார்த்தவளின் விழிகள் அப்படியே குத்திட்டு நிற்க, அதன் வழியாக வெளியேறிய ஆத்மாவை, அபிராமின் ஆத்மாவும் இறுகத் தழுவிக்கொண்டது.

அநாதைகளாகத் தோன்றி, அநாதைகளாய் வளர்ந்து, இருவரும் கண்டு, காதல் கொண்டு, இணைந்த குடும்பமாகி, அவளுக்கு அவனும், அவனுக்கு அவளுமாய் வாழ்ந்த அந்த இனிமையான நாட்கள் சரித்திரமாய் மாறிப் போக, வாழ்வில் சேர்ந்த கரங்கள் மரணத்திலும் ஒன்றிணைந்து வானை நோக்கிப் பயணித்தன அந்த அன்றில் பறவைகள்..


http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/page-76#post-251241

வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியர்ஸ் 016 கதையோட 20ஆம் அதிகாரம் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. இன்னும் மூன்று நான்கு அதிகாரங்களில் கதை நிறைவடைந்துவிடும் என்பதையும் கூறிக்கொள்கிறோம். அதனால் படிப்பவர்கள் இப்போதே படிக்க ஆரம்பித்து விடுங்கள். அத்தோடு சென்ற பதிவுக்காக கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.
 
Last edited:

sivanayani

விஜயமலர்
12030

(21)

அனைவரும் உறைந்திருந்த நேரம் அது. கண் முன்னால் நடந்த மரணத்திற்கு பதில் சொல்ல முடியாது, நின்றிருந்த வினாடிகள் சொற்பமே… ஹெலிக்காப்டர் அவர்களைக் கடந்து செல்ல, அப்போதுதான் ஆர்யன் சுய நினைவுக்கு வந்தான்.

தம்மைக் காக்க மரணித்தவர்களைச் சென்று அணைத்துக் கதற யாருக்கும் நேரமில்லை. உணர்வுகளை விட, புத்திசாலித்தனத்திற்கான நேரமிது.

ஆர்யன் விழிகள் கலங்க, நடுங்கிய தன் கரத்திலிருந்த ரோபோவைத் தூக்கிப் பார்த்தான். பாகங்கள் கழன்று தொங்கிக்கொண்டிருந்தன. அதைக் கண்டதும், அதற்காக ஆனந்தன் எத்தனை சிரமப்பட்டிருப்பான் என்று அந்த நிலையிலும் தோன்ற, கூடவே அதற்காக உயிரை விட்ட அவன் உருவமும் மனக்கண்களின் முன் தோன்ற உள்ளுக்குள்ளேயே உடைந்துபோனான் ஆர்யன்.

ஆனாலும் நிலைமை உணர்ந்தவனாகத் தன் தலையைக் குலுக்கிக் கொண்டவன், குறிப்பிட்ட தொலைவுக்குப் போக முதலில் அதிலிருந்து தொலைத்தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன், அவசரமாக நடுங்கும் கரங்கள் கொண்டு அதை உயிர்ப்பிக்க, அது விழிக்கமாட்டேன் என்று அடம் பிடித்தது.

பல முறை அழுத்தி அழுத்திப் பார்த்தும் அது உயிர் பெறவில்லை. வானத்தில் தொலைவில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டரையும், தன் கையிலிருந்த ரோபோவையும் மாறி மாறிப் பார்த்தவனுக்குக் கரங்கள் நடுங்கத் தொடங்கின.

“ப்ளீஸ்.. ப்ளீஸ்… ப்ளீஸ்.. வேக் அப்…” என்று கெஞ்சியவன் மீண்டும் மீண்டும் எதையோ அழுத்தத் தொடங்க, அவனுடைய கண்களில் கண்ணீர் நிறையத் தொடங்கியது. அவனைச் சுற்றியிருந்த பயணிகளும் உயிரைக் கையில் பிடித்தவாறு அவன் கரத்திலிருந்த ரோபோவைத்தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

உயிரைக் கையில் பிடித்திருந்த இரண்டு நிமிடங்களின் பின்னர், சிவப்பு திரையுடன் கரகரப்புடன் உயிர்த்தெழுந்தது அந்த ரோபோ. அனைவரின் முகத்திலும் எல்லையில்லா மகிழ்ச்சி தோன்ற, சற்றும் தாமதிக்காமல் மேலே சென்று மறைந்து கொண்டிருந்த ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர் மூலம் தொடர்பேற்படுத்தப் பார்த்தான். முடியவில்லை. மோஸ் கோட் மூலம் ஹெல்ப் என்று இரண்டு முறை அனுப்ப முயன்ற விநாடி, அது சென்றதா இல்லையா என்பதை அறிவதற்கு முதலே அந்த ரோபோ உயிரை இழந்தது.

ஆர்யனால் அதை நம்பக் கூட முடியவில்லை. மூவர் உயிரிழந்து பெற்ற அந்த ரோபோ பயனில்லாது போய்விட்டதா? இறந்த அவர்களின் மரணத்திற்கு அர்த்தமேயில்லையா? அப்படியானால் அவர்கள் தப்புவதற்கு வாய்ப்பேயில்லையா…?. கடவுளே… என்று அவன் அரற்றிக் கொண்டிருந்த விநாடி, பெரும் கூச்சலுடன் அந்தப் பழங்குடிகள், காட்டிலிருந்தும் மரத்திலிருந்தும் இவர்களை நோக்கிப் பாய்ந்து ஓடி வரத் தொடங்கினர்.

ஏற்கெனவே தோல்வியின் விரக்தியிலிருந்த அனைவருக்கும் அதுவரையிருந்த பயம் மாயமாக மறைந்து போனது. இறுதிக்கணத்தின் யுத்தம்… மரணமோ, வெற்றியோ, ஒரு கை பார்த்துவிடுவது என்பது போல காட்டத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்

பயம், மரணத்தை விடப் பயங்கரமானது. அதுவும் தமிழ்க்குடியில் பிறந்துவிட்டு, இப்படி மறைந்து வீழ்வதா?? வாழ்ந்தால் வீரராய் வாழ்வோம்… வீழ்ந்தால், வெற்றியோடு வீழ்வோம் என்பது போல ஆர்யன் தன் இரு கரங்களையும் தன் அருகே இருந்தவர்களை நோக்கி விரித்துப் பிடிக்க, ஆர்யனின் உணர்வைப் புரிந்து கொண்டவர்களாக, அவன் கரங்களில் தமது கரங்களை வைத்த விநாடி, அனைவரும் புயலென மறைவை விட்டு எழுந்தனர்.

தம்மை நோக்கி வந்த பழங்குடிகளை ஆரோன், அக்கண்யன், ப்ருத்வி, விதார்த் அனைவரும் தம் முன்னால் வந்த பழங்குடிகளைத் தூக்கி எறிந்தும், கரங்களுக்குள் வைத்து நசுக்கியும், முஷ்டியால் குத்தியும், தள்ளி வீழ்த்தியவாறு முன்னேற, பெண்களும் தங்கள் பயத்தை ஒதுக்கி வைத்துப் போராட ஆரம்பித்தார்கள். கால்களில் சிக்குப்பட்ட தடிகளைக் கொண்டும், செவ்விளனிகளை எறிந்தும், கிடைத்த மூங்கில் கட்டைகளை வைத்தும் எதிர்த் தாக்குதல் நடத்தினார்கள்.

முன்பு பெண்களைத் தாக்காது அமைதி காத்தவர்கள், இப்போது பெண் ஆண் பேதமில்லாது அடித்து நொறுக்கினர் பழங்குடியினர். எங்கிருந்தோ வந்த ஈட்டி, மீராவின் மேல் பாய முயன்ற விநாடி, அவளருகே நின்றிருந்த நாச்சி அவளைத் தள்ளிவிட்டுத் தானும் தரையில் விழ, அந்த ஈட்டி சற்றுத் தள்ளிப்போய் மணலில் குத்தி நின்றது. அதை இழுத்து எடுத்த நாச்சி, சற்றுத் தள்ளிப் பிரவீனைத் தாக்கிக் கொண்டிருந்தவனை நோக்கி வீசி எறிய, அது குறி தப்பாமல் அவனுடைய முதுகைத் துளைத்து நின்றது.

அப்போது எதிர்பாரமல் அக்கண்யன் பின்னாலிருந்து ஒருவன் குத்த வர அதைக் கண்ட தர்ஷன் "அக்கண்யன்... பின்னாடி பாருங்க…" என்று கத்தியவாறு தன் முன்னால் நின்றிருந்தவனின் மார்பில் ஓங்கி உதைக்க, அவனைப் பிடித்துத் தள்ளிவிட்ட நேரம், தர்ஷனின் சத்தம் கேட்டுத் திரும்பிய வினாடி, அந்தப் பழங்குடி ஓங்கிய ஈட்டியை அக்கண்யனின் மார்பை நோக்கி இறக்கிவிட்டிருந்தான்

எதிர்பாராத தாக்குதல். ஆனாலும் இடது மார்பில் பாயவேண்டியது சற்று மேலேறி வலது மார்பின் மேல் புறம் நுழைந்து குத்திட்டு நின்றது.

அதே நேரம், சற்றுத் தொலைவில் நின்றிருந்த ஒரு பழங்குடியின் மார்பின் மீது முழங்கால் வைத்து அமர்ந்து அவன் முகத்தில் ஓங்கிக் குத்திக்கொண்டிருந்த, விதார்த், அதைக் கண்டு அதிர்ந்தவனாய் எழுந்து, பாய்ந்து தன் தலையால் அக்கண்யனைக் காயப்படுத்தியவனின் மண்டையில் ஓங்கி அடித்து வீழ்த்திவிட்டு அக்கண்யனை நோக்கிப் பாய்ந்தான்.

அவனோ, மார்பில் ஏறிய ஈட்டியுடன் முழங்கால் மடித்துத் தரையில் விழுந்து, முன்புறமாகச் சரியத் தொடங்க, பாய்ந்து வந்த விதார்த் உடனே தாங்கிக்கொண்டான்.

“அக்கண்யன்… அக்கண்யன்…” என்று அழைத்துப் பார்த்தான். அதே நேரம், அக்கண்யனின் கட்டளைக்குப் பணிந்து, ஒரு பாறையின் மறைவில் நின்று உயிரைக் கையில் பிடித்தவாறு, மீராவுடனும் திகம்பரியுடனும் அமர்ந்திருந்த ஜனனி தன் கணவன் மண்ணில் சாய்வதைக் கண்டாள்.

கண்டவளுக்கு சர்வ நாடியும் அடங்கிப் போனது. அவன் இன்றி அவள் ஏது? அவன் அசைவின்றி இவள் அசைவேது? தன்னை மறந்து

“அத்தான்…” என்று அலறியவள், புயல்வேகத்தில் தன் கணவனை நோக்கி ஓடிவர, அந்த நேரம் விதார்த்திடம் அடிவாங்கித் தரையில் கிடந்தவன் ஓடிவந்த ஜனனியின் காலைப் பற்றி இழுக்கத் தரையில் விழுந்தவள், விழுந்த வேகத்தில் அத்தனை ஆத்திரமும் சேர்ந்து தன் காலால் அவன் முகத்தில் ஓங்கி உதைத்து விட்டு உள்ளம் துடிக்க உயிர் பிரியும் அவஸ்தையுடன் அக்கண்யனை நோக்கித் தவழ்ந்தவாறு பாய்ந்தாள்.
 
Last edited:

sivanayani

விஜயமலர்
சுயநினைவின்றி விதார்த்தின் மடியில் வீழ்ந்திருந்த அக்கண்யனை கண்டு ஒரு கணம் உடல் நடுங்க நின்றவள், அடுத்த கணம் பாய்ந்து விதார்த்தின் பிடியிலிருந்தவனை இழுத்துத் தன்மீது போட்டுக் கொண்டவள் அவனை மார்போடு அணைத்தவாறு,

“அ… அத்தான்…” என்று அழைத்துப் பார்த்தாள்… அவனுடைய விழிகள் மூடியிருந்தன. விரல்கள் நடுங்க, அவனுடைய கன்னத்தை வருடிப் பார்த்தாள். அவன் சுவாசிக்கிறானா இல்லையா? அதை எண்ணியவளுக்கு, அவளுடைய மூச்சு மெல்ல மெல்லத் தடைப்பட்டது. அதையும் மீறி,

“அ…. அத்தான்…” என்றாள். இப்போது குரல் சற்று உயர்ந்திருந்தது. தன்னவனின் நிலை கண்டவளுக்கு உலகமே தன் அசைவை நிறுத்திய உணர்வு. மீண்டும் மீண்டும் அவன் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. தான் உயிரோடு இருப்பது உண்மையென்றால், அக்கண்யனும் உயிரோடு இருக்கிறான். அதை மட்டும் உறுதியாக நம்பியவள், கன்னத்தில் வடிந்த கண்ணீரை அழுந்தத் துடைத்தவாறு, அவன் முகத்தை வருடி,

“இதோ பாருங்கத்தான்… மரியாதையா இப்போ நீங்க எழுந்திருக்கப்போறீங்க… இப்படி கண் மூடி என்னைப் பயமுறுத்தக் கூடாது… புரிந்ததா… எழுந்திரிங்க… அத்தான்… இதோ பாருங்க… ப்ளீஸ்… ப்ளீஸ்… எழுந்திரிங்கத்தான்… உங்களுக்கு ஏதாச்சும் நடந்துச்சு… சத்தியமா உங்களை மன்னிக்க மாட்டேன்… ப்ளீஸ்… எழுந்திரிங்கத்தான்…” என்று அவனை உலுப்ப, அவள் உலுப்பிய வேகத்தில், திடீர் என்று ஆழ மூச்செடுத்தவன் அடுத்து இருமினான்.

அதைக் கண்டு அவனை இழுத்து இறுக அணைத்துக் கொண்டவள்,

“ஓ காட்… ஓ… காட்… அத்தான்… அத்தான்… உங்களுக்கு ஒன்னுமில்ல…” என்று அவன் முகமெங்கும் ஆவேசமாக முத்தமிட்டுக் கொண்டிருந்தவளை சற்றுத் தொலைவில் நின்றவாறு பார்த்த ஆர்யனுக்கு பெரும் நிம்மதி எழுந்தது.

ஏற்கெனவே, ஒரு திடகாத்திரமான பழங்குடியின் கரத்தைப் பற்றி முறுக்கிப் பின்புறமாகக் கொண்டு சென்று, கிடுக்குப் பிடி போட்டவாறு தள்ளிச் சென்று, பாறையோடு மோதச் செய்து, அவன் மண்டையைப் பிளக்கச் செய்தவன், அக்கண்யனை அம்பு துளைப்பதைக் கண்டதும் பதறிப் போனான்.

அவன் தரையில் விழுவதற்கு முதலே, ப்ருத்வியைத் தேட, ப்ருத்வி ஒரு பழங்குடியின் கைப்பிடியில் சிக்கியிருந்தான்.

உடனே, பாறையில் மோதுப்பட்டவன் கீழே போட்டிருந்த ஈட்டியை எடுத்து குறிபார்த்துப் ப்ருத்வியைப் பற்றியிருந்த எதிரி மீது விட்டெறிய, அது அவனுடைய, நெற்றியின் கரையோரமாகத் துளைத்து, மறுபக்கம் வெளிவந்து நிற்கப் பிடியைத் தளர்த்தினான்.

மண்ணில் குப்பிற விழுந்த ப்ருத்வி, இருமியவாறு ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்த முயல, அவன் எடுத்த மூச்சில் மணல் பறந்தது. தன் கழுத்தைப் பற்றியவாறு எழுந்தவனை நோக்கி, ஆர்யன் எதையோ சொல்ல முயல, இரு பழங்குடியினர் ஈட்டியை உயர்த்திப் பிடித்தவாறு அவனை நோக்கி வந்தனர்.

அதைக்கண்டு தாமதிக்காமல் அவர்களை நோக்கிப் பாய்ந்தவன், ஒற்றைக்கால் மடித்துப்பாய்ந்து சுழன்று மறு காலால் ஒருவனுடைய தலையைப் பலமாக உதைத்து, உதைத்த கால் தரையில் விழ, மறுகாலை மேலே தூக்கி மற்றயவனின் மார்பில் உதைத்து, கீழே விழுந்து எழுந்தவனைத் தன் கையிடுக்கில் வைத்து நசித்தவாறு,

“ப்ருத்வி…அக்கண்யனுக்கு காயம் பட்டிருக்கு….” என்றவன், மறு கரத்தின் முழங்கையால் ஓங்கி அவன் மண்டையில் அடித்தவாறு “அவரை முதலில் போய் பாருங்க…” என்று கத்திக்கொண்டு தன் கரத்தில் இருந்தவர்களைத் துவசம் செய்யும்போதே, ஒருவன் தியாவின் தலை முடியைப் பற்றி இழுத்துச் செல்வதைக் கண்டான்.

அவளை நோக்கி ஓடும்போதே இடையில் வந்தவனை அவனுடைய வலுவான கரங்கள் தாக்கித் தரையில் வீழ்த்த தயங்கவில்லை.

தியாவைப் பற்றியிருந்தவனை நெருங்கிய ஆர்யன், ஓங்கி அவன் முதுகில் உதைக்க, தியாவுடன் சேர்ந்து அவனும் குப்புற விழுந்த கணத்தில், அவள் தலையிலிருந்து தன் கரத்தை விலக்கிக்கொண்ட பழங்குடி ஆக்ரோஷமாக ஆர்யனைத் தாக்குவதற்காக எழுந்தான்.

அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட தியா, சற்றுத் தள்ளி ஒருவன், இரு கரங்களாலும் திகம்பரியையும் கலையையும் இழுத்துச் செல்வதைக் கண்டாள். கிட்டத்தட்ட ஏழடி இருப்பான் போல… இரண்டு பெண்களும் அவனிடமிருந்த தங்களை விடுவிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்த நேரம்.

தம் மனைவியரைக் காக்க வர முடியாத நிலையில் ராயரும், கிருஷ்ணாவும் இருப்பதைக் கண்டு. சற்றும் யோசிக்காது, புயலென அவனை நோக்கி ஓடினாள்.

ஓடியவள், அவன் பின்புறமாகச் சென்று, எதிரியின் முதுகில் பாய்ந்தவள், அவன் இடையைச் சுற்றித் தன் கால்களைப் போட்டு இறுக்கிக் கொண்டு இரு கையிடுக்கிற்குள்ளாகவும் கரங்களைச் செலுத்தி, பின் புறக் கழுத்தை இறுக்கிப் பிடித்து நெரிக்க, அவன் விடுபட முயன்று முடியாமல் மூவருடனும் சேர்ந்து தரையில் விழுந்தான்.

தியாவிற்கு மேல் அந்த ராட்சஷனும், ராட்சஷனுக்கு மேல் இரு பெண்களுமாக விழுந்திருந்தனர்.

ஆனாலும் தியா அசைந்தாளில்லை. தன் பிடியை விட்டாளில்லை. தன் பிடியை மேலும் மேலும் இறுக்கிக்கொண்டு செல்ல, அதில் கலை, அந்த ராட்சஷனின் கைச் சதையில் முடிந்தவரைப் பற்களால் கடிக்க, அவன் வலி தாங்காது கரத்தை விட்டான். விடுபட்ட கலை, மறு கரத்திலிருந்த திகம்பரியை விடுவிக்க முயல, அவனோ இன்னும் தன் பிடியை இறுக்கிக்கொண்டிருந்தான்.
அவன் விடவில்லை என்றதும், சற்றுச் சரிந்த தியா, அவனுடைய கரிய காதைப் பற்றி இறுகக் கடிக்க, அவன் வலி பொறுக்காது மறு கரத்தையும் விட்ட கணம் கிருஷ்ணா அங்கே ஓடிவந்திருந்தான். மறு கணம் நால்வருமாகச் சேர்ந்து, அவனை விழுத்துவது ஒன்றும் அத்தனை சிரமமாக இருக்கவில்லை.

அதே நேரம், ப்ருத்வி, ஆர்யனின் கட்டளைக்கு இணங்க, அக்கண்யனை நோக்கி ஓடிய வேகத்தில், சற்றுத் தொலைவில் நின்றிருந்த பழங்குடியொருவன், அம்பை இழுத்து சற்றுத் தள்ளியிருந்த ஆரோனை நோக்கி விட, அது புரியாமல் ப்ருத்வி குறுக்கே பாய, வேகமாக வந்த அம்பு ப்ருத்வியைத் தாக்க நெருங்கிய தருணத்தில், தரையில் வீழ்ந்திருந்த பழங்குடி ஒருவன், ப்ருத்வியைத் தாக்குவதற்காக எழ, அந்த அம்பு பழங்குடியின் கழுத்தில் ஏறி நின்றது.

கடவுள் தம் பக்கம் இருக்கிறான் என்பதை உணரக் கூட முடியாமல் இருவருக்கும் சூழ்நிலை அமைந்துபோனது.

விதார்த், ஒருவனைத் தாக்கிவிட்டுத் திரும்பிய நேரத்தில், அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு கரிய கரம் இவன் கழுத்தைப் பற்றியது.

அந்தப் பலமான பிடியிலிருந்து தன்னை விடுவிக்க முயன்ற நேரம், அந்தக் கரிய உருவத்தின் கழுத்தை இன்னொரு கரம் இறுகப் பற்றியது.

திடீர் என்று தன் கழுத்தை ஒரு கரம் இறுகப் பற்றியதும், விதார்த்தை விடாமலே தன்னை விடுவிக்க முயன்ற அந்த எதிரி, முடியாமல் விதார்த்தை விடுவித்துவிட்டுத் தன்னைப் பற்றிய உருவத்தைப் பிடிப்பதற்காகத் தன் இரு கரங்களையும் பின்னால் கொண்டு சென்று அடிக்க முயன்றான்.
 
Last edited:

sivanayani

விஜயமலர்
எதிரியிடமிருந்து தன்னை விடுவித்த விதார்த் திரும்பிப் பார்த்தால், அங்கே ராயர் தன் பிடியின் அழுத்தத்தைக் கூட்டியவாறு நின்றிருந்தான். நன்றியுடன் அவனைப் பார்த்த விதார்த் மீண்டும் தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த எதிரிகளை அடித்து வீழ்த்தத் தொடங்கினான்.

ராயரோ, தன் கரத்திலிருந்த எதிரியின் கழுத்தைச் சற்றும் விலக்காது, அவன் கரத்திலிருந்த கூரான கத்தியை இழுத்தெடுத்து, எதிரியின் கழுத்தில் பதித்துச் சற்றும் தாமதிக்காமல் ஒரு இழுவை இழுக்கக் குரல்வளை வெட்டுப்பட்டு, குருதி கசியத் தரையில் சரிந்தான் அந்தப் பழங்குடி .

தன்னை எத்தகைய நிலையில் வைத்துக் கடவுள் காத்தான் என்பது கூடத் தெரியாத ப்ருத்வி, அக்கண்யனை நோக்கி ஓட, அந்த நேரம், எங்கிருந்தோ பாய்ந்து வந்த அம்பு ப்ருத்வியின் தொடையில் வேகமாகக் குத்த, அதை எதிர்பார்க்காத ப்ருத்வி குப்புற விழுந்து திரும்பிப் படுத்தவாறு காயம்பட்ட காலை வலியில் உண்டான முனங்கலுடன் இறுகப் பற்றிக்கொண்டவனுக்கு உயிரே போய்விடும் போல இருந்தது.

எப்படியோ தன்னை சமாளித்தவன், காலில் ஏறிய அம்பை இழுத்து எடுத்து எறிந்துவிட்டுத் தவழ்ந்தவாறே அக்கண்யனை நெருங்க, அங்கே ஜனனி அக்கண்யனை அணைத்தவாறு, தன் இறுதி மூச்சைப் பிடித்து வைத்திருப்பது போல நின்றிருந்தாள்.

நெருங்கிய ப்ருத்வி,

“ஜனனி… அக்கண்யனைக் கீழே விடுங்க…” என்று உத்தரவிட்டவாறு தன் கால் வலியைப் பல்லைக் கடித்து, சமாளித்துக்கொண்டே அக்கண்யனைப் பரிசோதித்தான். பின் அவன் தலைக்கு மேலாக ஒரு அம்பு போக ஜனனியின் தலையைப் பற்றிக் குனிய வைத்துத் தானும் குனிந்தவன், அந்த இடம் பாதுகாப்பில்லை என்பதால், நிமிர்ந்து விதார்த்தைப் பார்த்து,

“விதார்த்… அக்கண்யனை அதோ ஜெயவர்மனுக்கு அருகாமையிலிருக்கும் பாறைக்கு எடுத்துச் செல்லலாம்…” என்று கூற, விதார்த் உடனே அக்கண்யனின் இரண்டு கரங்களுக்குள்ளாகக் கரத்தைக் கொண்டு படுத்தவாறே இழுத்துச் செல்ல முயல, ஜனனியும் மறுப்புச் சொல்லாமல் பின்னால் இழுபட்டுச் சென்றாள்.

அவன் இழுக்க, அக்கண்யனோ, வலியில் முனங்க, அதைக் கண்ட ஜனனிக்கு இதயமே வெடித்துவிடும் போலத் தோன்றியது.

ஓரளவு பாதுகாப்பான இடத்திற்கு வந்ததும், அம்பின் ஆழத்தைப் பார்த்தான். அதை இழுத்தால் இரத்த இழப்பு ஏற்படும். அதை விட, இப்படியே இருப்பது பாதுகாப்பு. யோசித்துக் கொண்டிருக்கும்போதே உயிரைக் கையில் பிடித்தவளாக,

“ப்ருத்வி… அத்தானுக்கு எப்படி.. அவர்.. அவருக்கு…” என்று முடிக்க முடியாமல் நடுங்க,

அதே நேரம், எப்படியோ அவர்களுக்கு அருகே வந்த ஆர்யன்,

“ப்ருத்வி… அக்கண்யனுக்கு என்னாச்சு…” என்று அக்கண்யனைப் பார்த்தவாறு கேட்க,

“இப்போதைக்கு ஆபத்தில்லை… ஏறிய அம்பு மார்பின் வலது பக்கமாகத்தான் ஏறியிருக்கு… அதனால் பயப்பட எதுவுமில்லை. ஆனால் மருத்துவச் சிகிச்சை ரொம்ப அவசியம். இவங்க வீசின அம்பில் ஏதாவது நஞ்சு கலந்திருக்கா தெரியல. அதை இப்போது கண்டுபிடிக்கவும் முடியாது…” என்றவன் வேதனையுடன் திரும்பி நண்பர்களைப் பார்த்தான்.

அனைவரும் சோர்வடையத் தொடங்கியது புரிந்தது. வலியுடன் ஆர்யனைப் பார்த்து,

“நம்மால் தாக்குப் பிடிக்க முடியுமா தெரியல ஆர்யன்… மெல்ல மெல்ல இழந்துகொண்டிருக்கிறோம்… நம் திடத்தையும், உயிரையும்…” என்று பெருமூச்சுடன் கூறிக்கொண்டிருக்க, அது உண்மை என்பதைப் புரிந்து கொண்டவனாக ஆர்யனும் வலியுடன் பழங்குடிகளின் கரங்களில் சிக்கியிருந்தவர்களைப் பார்த்தான்.

ஒருவன் தர்ஷனை நீண்ட கத்திபோன்ற ஆயுதத்தால் தாக்கவரா, அதிலிருந்து தன்னைக் காக்க முயன்றவனுக்கு கரத்தில் பெரும் வெட்டு விழுந்தது. அதைக் கண்டு ஷாலினி தன் முன்னால் நின்றிருந்தவர்களைத் தள்ளிவிட்டு, தர்ஷனை நோக்கிப் பாய்ந்து அவனைத் தாங்கிக் கொள்ள, தர்ஷனோ கரத்தில் வெட்டு விழுந்தாலும் அதைப் பற்றி அக்கறை கொள்ளாது, காயம் பட்ட கரத்தாலேயே ஷாலினியைப் பற்றிக்கொண்டு வெட்டவந்தவனின் கழுத்தை இறுகப் பற்றி நெறித்தவாறு தள்ளிச் சென்று பாறையோடு இறுக மோதித் தள்ளினான்.

சற்றுத் தள்ளி, கிருஷ்ணா ஒருவனைப் பலமாகக் குத்திக்கொண்டிருக்க அதைக் கண்ட பழங்குடி ஒருவன் கிருஷ்ணாவைத் தாக்குவதற்காகப் பின்புறமாக வந்தான். அது வரை, மீராவோடு நின்றவாறு ஒருவனைச் சரமாரியாகத் தாக்கிக் கொண்டிருந்த கலை, தன் கணவனின் பின்னால் ஒருவன் வேகமாகச் செல்வதைக் கண்டு,

“என்னங்க…” என்று அலறியவாறு கிருஷ்ணாவிற்குக் குறுக்காக நின்று ஓங்கிய ஈட்டியைத் தன் மார்பில் ஏந்தத் தயாரான நேரத்தில், ஈட்டியை ஓங்கியிருந்த பழங்குடி மனிதன், அதை இறக்காது கலையை ஒரு கணம் ஆழமாகப் பார்த்தான். பின் என்ன நினைத்தானோ, அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துத் தள்ளிவிட்டவன், மீண்டும் ஈட்டியை கிருஷ்ணாவை நோக்கி ஓங்க இதைப் பார்த்துக்கொண்டிருந்த மீரா, சற்றும் தாமதிக்காது காலில் தட்டுப்பட்ட செவ்விளநீரை எடுத்து அவன் மண்டையை நோக்கிப் பலம் முழுவதையும் திரட்டி வீச, அது அவன் தலையில் பட்டு கீழே விழுந்தது.

ஆனால் அந்த பழங்குடியோ, பெரும் சீற்றத்துடன் திரும்பி முறைத்தவாறு மீராவை நெருங்க, அவளுக்குச் சர்வமும் நடுங்கியது. கலையோ அதிர்ச்சியுடன் எழுந்து என்ன செய்வது என்று தெரியாது சுற்றிலும் பார்த்தாள். சற்றுத் தள்ளி, ஒரு அம்பு அநாதையாகக் கிடக்க, அதை எடுத்துக்கொண்டு பழங்குடியின் முதுகைக் குத்துவதற்காக நெருங்க, அவனோ, எந்த சிக்கலும் இல்லாது மீராவின் காலுக்கு முன்னால் மயங்கிச் சரிந்தான்.

திடீர் என்று அந்தக் காட்டுக்குள் இருந்து பறை அடிப்பது போன்ற ஒலி கேட்டது. அடுத்த கணம் திகு திகு என்று காட்டிற்குள்ளிருந்து நூறு பேருக்கும் மேற்பட்டவர்கள் ஓடிவந்து அனைவரையும் சுற்றிவளைத்து நின்று கொண்டனர். அதனைத் தொடர்ந்து சங்குபோல எதுவோ ஊதப்பட்டது. திடீர் என்று ஏழு பேர் குழுமியிருக்க, நடுவில் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர், பறவைகளின் இறக்கையிலான கிரீடம் போல ஒன்றைத் தன் தலையில் அணிந்தவாறு முகம் முழுவதும் கறுப்பும் வெள்ளையும் சிவப்பும் நிறத்திலான வர்ணம் பூசி கரத்திலும் கால்களிலும் இனந்தெரியாத கற்களால் ஆன ஆபரணங்களை அணிந்தவாறு அவர்களை நோக்கி வரத் தொடங்க, அதுவரை நாயக நாயகர்களைத் தாக்கிக்கொண்டிருந்த, அத்தனை பழங்குடிகளும் சடார் என்று முழங்காலிட்டு அமர்ந்து கொண்டனர். அதைக் கண்டதும், அந்தப் பழங்குடியினரின் தலைவர் அவர்தான் என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர்.

அந்தத் தலைவர் ஒரு முறை அவ்விடத்தை சுற்றிலும் பார்த்தார். ஆங்காங்கே தமது வீரர்கள் தரையில் மடிந்திருப்பதைக் கண்டதும் அவர் முகத்தில் பெரும் சினம் வந்து உட்கார்ந்து கொள்ளத் தன் கரத்தை நீட்டிச் சுண்டுவிரலைக் காட்டி,

“இதிமா….க்யுமா….ஸ்பரா…” என்றதுதான் தாமதம், முழங்காலில் நின்றிருந்த அத்தனை வீரர்களும் எழுந்து, அடுத்து என்ன செய்வது என்று தெரியாது விழித்துக்கொண்டிருந்த பயணிகளின் பின்னால் சென்று அவர்களின் கரங்களைப் பற்றி, தரையில் கிடந்த கொடிகளைக் கொண்டு கட்டினர்.

எழ முடியாதிருந்த அழகரும், அக்கண்யனும் ஜெயவர்மனும் மட்டும் சற்றுத் தள்ளிப் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். அழகர் ஏற்கெனவே உடலில் ஏற்பட்ட காயத்தாலும், முன்தினம் பெய்த மழையால் ஏற்பட்ட தொற்று நோயாலும், சுயநினைவை இழந்திருக்க, அக்கண்யனோ, அம்பு எய்த காயத்தின் வலியிலிருந்து வெளி வரமுடியாதவனாகப் பல்லைக் கடித்தவாறு அப்படியே படுத்திருந்தான்.

அடுத்து காயம் பட்டவர்கள் அனைவரும் வரிசையாக முழங்காலில் அமர்த்தப் பட்டனர்.

அந்தத் தலைவன், பெரும் சீற்றத்துடன் படுத்திருந்த அக்கண்யனையும், அழகரையும் பார்த்துவிட்டு, அலட்சியமாகச் சிரித்தவர், பின், பின்னால் கரங்களைக் கட்டி, உடல் முழுவதும் காயங்களுடன் நின்றிருந்த நாயக நாயகர்கள் ஒவ்வொருவராக முறைத்துப் பார்த்துக்கொண்டு வந்தார்.

ஆர்யனருகே வந்ததும், அவனுடைய தலைமுடியைப் பற்றிப் பின்னால் சரித்துப் பார்த்தார். அதைக் கண்ட தியா நடுங்கியவாறு ஆர்யனைப் பார்க்க இப்போது அவனுக்குப் பக்கத்திலிருந்த தியாவின் மீது அந்தத் தலைவனின் கவனம் சென்றது. என்ன நினைத்தாரோ அவளை நெருங்கியவர், அவளுடைய கழுத்தைப் பற்றி மேலே தூக்க அந்தப் பலத்திலிருந்து விலக முடியாதவளாக, அவள் திமிற, அதைக் கண்ட ஆரியன் துடித்துப்போனான். என்ன செய்வது என்று தெரியாது பரிதாபத்துடன் தியாவைப் பார்க்க, அவளோ தன்னை விடுவிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள். அடுத்து அந்தத் தலைவன் என்ன நினைத்தானோ தன் கரத்தை விட, தியா தொப்பென்று தரையில் விழுந்தாள். பின் தன் வீரர்களைப் பார்த்து,

“மாதுமா மக்ராப்ரிக்காத்மா….” என்று கூற, உடனே பெண்கள் தனியாகப் பிரித்து வைக்கப்பட்டனர். எதற்கு ஏன் என்கிற பதில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தம் இணைகளைக் காப்பதற்காக ஆண்கள் பதறி எழுந்த வினாடி, பலமாக முதுகில் தாக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு அமர்த்தப்பட்டனர்.

பெண்களோ துடித்துப் போனவர்களாகத் தங்கள் துணைகளை நெருங்க முயன்ற நேரம்,

“ம்… சுவேதாப்ரமோ….” என்று கட்டளையிட்டார் அந்தத் தலைவர். மறு கணம், மூவர் தம் கரத்தில் இரும்பாலான நீண்ட வாளுடன் அவர்களை நெருங்கித் தலையை வெட்டும் ஆவேசத்துடன் வாளை ஓங்கினர்...


http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/



வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியர்ஸ் 016 கதையோட 21ஆம் அதிகாரம் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. இன்னும் மூன்று அதிகாரங்களில் கதை நிறைவடைந்துவிடும் என்பதையும் கூறிக்கொள்கிறோம். அதனால் படிப்பவர்கள் இப்போதே படிக்க ஆரம்பித்து விடுங்கள். அத்தோடு சென்ற பதிவுக்காக கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.
 

sivanayani

விஜயமலர்
12044

22


இதோ இறுதிநேர தருணமிது... காற்றுக்கும், அவர்கள் விடும் மூச்சுக்குமான தொடர்பு இந்தக் கணத்தோடு அறுந்து போகிறது... அவர்களின் உயிர், உடலைவிட்டுப் பிரிந்து இறுதியாகக் காற்றோடு கலந்துவிடப் போகிறது... அடுத்து வாள் கழுத்தை நெருங்கும் நேரத்துக்காக காத்திருக்க,


முழந்தாளிட்டு வரிசையாக அமர வைக்கப் பட்டிருந்த நாயகர்களுக்கு தங்களின் ஆயுள் காலம் மிக மிகச் சொற்பம் என்பது புரிந்துபோனது. நாயகர்களின் தலையைத் துண்டிக்க பழங்குடிகள் நீண்ட வாளைக் கரங்களில் ஏந்தித் தயாராக நின்றிருந்தனர். தனியாக விடப்பட்ட பெண்களோ, கதறியவாறு தங்கள் கணவர்களை நெருங்க முயல, அவர்களை முன்னேற விடாது, சில பழங்குடிகள் வேலியாக நின்றிருந்தனர்.


“ப்ளீஸ்… அவங்கள விட்டுடுங்க…” என்கிற அவலம் நிறைந்த ஓலம் அந்தத் தீவையே நிறைத்தது. ஆனாலும் அவர்கள் சற்றும் இரங்கவில்லை.


தலைவர் போன்று இருந்தவர் தன் கரத்தைத் தூக்கி மேலும் கீழுமாக ஆட்ட, நீண்ட வாள்போன்ற ஆயுதம் ஓங்கப்பட்டது. வலது புறத்தில் முதலாவதாக ஆதீரநந்தனும், இடது புறமாக அகிலனும் அமர்ந்திருந்ததால், முதலாவது தலை வெட்டு அவர்களுக்குத்தான்.


முடிந்தது… அத்தனை பேருடைய சகாப்தம் இன்றோடு முடிந்தது. இறுதி நிமிடம்… எதற்கும் தயார் என்பது போலத் தங்கள் விழிகளை மூடிய நாயகர்கள், காற்றோடு இறுதியாகக் கலக்கும் மூச்சுக்காகத் உள்ளிழுத்து.. மார்பு துடிக்கும் ஓசை …. சாவுப் பறை ஒலி போல காதில் கேட்க… வியர்த்த முகமும்.. மடித்து அழுந்திய உதடுகளுமாய்.. இறுதி நொடிகளை எண்ணும் நேரத்தில்.. ஓங்கிய வாள் … வேகத்துடன் கழுத்தை நோக்கிக் கீழ் இறங்க…


“பட பட பட பட பட பட…” என்கிற பெரும் ஓசையுடன் ஹெலிக்காப்டர் அந்த இடத்தை நோக்கி வந்தது. அதற்குப் பின்னால், இன்னும் மூன்று ஹெலிக்காப்டர்கள் சீறிக்கொண்டு வருவது திரும்பிப் பார்த்தவர் கண்களுக்குப் புலப்பட்டது.


ஓசையை அலட்சியம் செய்து வாளை ஓங்கியவன், ஆதீரநந்தனின் கழுத்தை நோக்கி இறக்க முயன்ற விநாடி, ஹெலிக்காப்டரிலிருந்து வந்த துப்பாக்கிக் குண்டு வாளை ஏந்தியவனின் பின் மண்டையினூடாக நுழைந்து நெற்றியின் வழியாக வெளி வர, வாள் நழுவி ஆதீரநந்தனின் தோள் மீது பட்டு கீழே விழ, தொடர்ந்து அந்தப் பழங்குடி ஆதீரநந்தன் மீதே விழுந்தான்.


அது கூட ஆதீரநந்தனுக்கு உறைக்கவில்லை. அந்தப் பழங்குடி விழுந்த போதே, வாள்தான் கழுத்தை வெட்டிவிட்டது என்கிற அச்சத்துடன் மார்பு துடிப்பு நின்று போக அவன் நெற்றியினூடாக எதுவோ வழிந்து செல்வது தெரிந்தது. எங்கே விழிகளைத் திறந்தால் தன்னை விட்டுப் பிரியும் ஆவியைக் கண்டு விட வேண்டி வந்து விடுமோ என்கிற அச்சத்துடன். மேலும் இறுகக் கண்களை மூடியவனுக்கு அப்போதுதான் ஒன்று உறைத்தது. கழுத்து வலிக்கவில்லை. கழுத்தில் எதுவோ வடிந்து செல்ல, அதன் வாடையில் தெரிந்தது அது இரத்தம் என்று. ஆனாலும் வலிக்கவில்லை. மரணம் கூட அத்தனை சுகமானதாகவா இருக்கும்? இது தெரியாமலா இறப்பைக் கண்டு பயப்படுகிறோம்? தனக்குள் எண்ணிச் சிரித்தவனுக்கு அப்போதுதான் அவன் உயிரான மனைவியின் நினைவு வந்தது.


'ஐயோ… அவளைத் தனியே இந்த உலகில் விட்டுவிட்டு போகப்போறேனா… நானில்லாமல் தவித்துப் போவாளே… என் மரணத்தை எப்படித் தாங்குவாள்? விண்ணுலகைத் தொடும் முன், ஒரு முறையாவது அவள் முகத்தைப் பார்த்துவிட்டுச் செல்வோமா… இன்னொரு பிறப்பிருக்குமானால், அவளுக்காகக் காத்திருப்பதாக மட்டும் சொல்லிவிட்டு செல்வோமோ?' தவிப்புடன் தன் விழிகளைத் திறந்த ஆதிரநந்தன் அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்து போனான்.


அவன் விழிகள் மூடியபோது எப்படி காட்சி இருந்ததோ, அட்சரம் பிசகாது காட்சிகள் அப்படியே இருந்தன. என்ன, முன்னம் கதறித் துடித்த பயணிகளிடம் இப்போது அதிர்ச்சி தெரிந்தது. அவனுடைய மனைவியும் தன்னை மறந்து ஏதோ வேற்றுலகில் இருப்பதுபோல அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.


என்னவாகிவிட்டது என்று இவன் புரியாமல் விழிக்க அப்போதுதான் அவன் கழுத்திலிருந்து இன்னும் இரத்தம் வழிவதை உணர்ந்தான். கூடவே ஒரு மூட்டைப் பாரமும் அவனை உறுத்த மெல்ல மெல்ல சுயநினைவுக்கு வந்தவன் தலையைத் திருப்பிப் பார்த்தான். அவன் தோள் வளைவில் அந்தப் பழங்குடியின் விழிகள் திறந்த முகம் விழுந்து கிடக்க அதிர்ந்தவனாய் ஒரு உதறு உதறிவிட்டுத் எழ முயல, பிணம் சரிந்து கீழே விழுந்தது.


அப்போது தான்... அவனுக்குத் தான் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்பதே புரிந்தது. ஆனாலும் நம்ப முடியவில்லை. திரும்பித் தன் சக நண்பர்களைப் பார்த்தான். அவர்களும் அதே அதிர்ச்சியுடன்தான் இவனையும் பின் திரும்பி அகிலனையும் பார்க்க, இவன் சற்று எட்டி அகிலனைப் பார்த்தான். அவனும் அதே உணர்ச்சியுடன் திரு திரு என்று விழித்துக் கொண்டிருந்தான்.


அப்படியானால் அவர்கள் தப்பிவிட்டார்களா… ஓ மை காட்… தப்பிவிட்டானா… அவனைக் கொல்லவில்லையா… இன்னும் உயிரோடுதான் இருக்கிறானா? இப்போது அந்த அதிர்ச்சி மெல்ல மெல்ல வடியத் தாங்க முடியாத மகிழ்ச்சி முகத்தில் பூத்தது. அவனையும் மீறி அவன் உதடுகள் சிரிப்பில் மலர்ந்தன. பின் அது பெரிதாக,


“நா… நான் உயிரோடு இருக்கேன்… ஓ மை காட் நான்… இன்னும் உயிரோடு இருக்கேன்… அம்ருதா… நா சாகலை… உயிரோடு இருக்கேன்…” என்று தன்னை மறந்து வீறிட, அந்த சத்தம் அந்த சூழ்நிலைக்குச் சற்றும் ஒத்துப் போகவில்லை.


திடீர் என்று குண்டு பாய்ந்து தமது ஆள் இறப்பான் என்று பழங்குடிகள் நினைக்கவில்லை. வாட்களை ஏந்தியிருந்த மற்றைய பழங்குடியினரும், தமது உயிருக்கு வர இருக்கிற ஆபத்தை உணர்ந்து பதறித் துடித்து வாட்களைக் கீழே போட்டு விலகி நிற்க, மற்றைய பழங்குடிகள் பயந்து போய் ஒரு ஓரமாக ஒடுங்கி நின்ற நேரம், இவனுடைய குதூகலம் அவர்களின் சினத்தை அதிகரிக்கச் செய்தது.


இப்போது அத்தனை பேரும் ஆவேசத்துடன் இவர்களை நெருங்க முயல, அந்த ஹெலிக்காப்டர், படு வேகமாக, இவர்கள் இருந்த கரைப்பகுதிக்கு அருகே வந்து..


தரையிறங்காமல்.. அந்தரத்தில் மூன்றடி உயரத்தில் நிலையாக நிற்க.. அதிலிருந்து எறும்புகள் போலக் கிட்டத்தட்ட இருபது இருபத்திரண்டு இராணுவ வீரர்கள் நவீனரகத் துப்பாக்கியை மார்பில் ஏந்தியவாறு குதிக்கத் தொடங்கினர்.


குதித்ததோடு மட்டுமல்லாது, மார்பில் தொங்கிய ஆயுதங்களை எடுத்துப் பழங்குடிகளைக் குறிவைத்தவாறு முன்னேறத் தொடங்க, இராணுவ வீரர்களையும் அவர்களின் கரங்களிலிருந்த ஆயுதங்களையும் கண்ட பழங்குடிகள் , அச்சத்தின் நிமித்தம் பின்னேறியவாறு ஒன்றாகக் குவிய, மறு கணம் அனைவரும் சுற்றி வளைக்கப்பட்டனர்.


கொடிகளால் கை கால்கள் பிணைக்கப் பட்டிருந்த நாயகர்கள் நாயகிகள் விடுவிக்கப்பட்டனர்.


விடுவிக்கப்பட்டதுதான் தாமதம் பெண்கள் ஓடிச்சென்று தம் இணைகளை இறுக அணைத்து விம்மலுடன் மார்பில் புதைய, அவர்களும் தங்கள் நாயகிகளை சேர்த்து அணைத்து கண் கலங்க இறுக்கிக் கொண்டனர். பின் நண்பர்கள் ஒருவரை ஒருவர் அணைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்த நேரம், ஹெலிக்காப்டர்கள் அனைத்தும் தரையிறங்கின.


மேலே உள்ள ரோட்டார் சுத்திய வேகத்தில் புயற்காற்று பலமாக வீசியதுபோல மரங்கள் முறிந்துவிடும் அளவுக்கு அசையத் தொடங்கியது. பின் ஒரு ஹெலிகாப்டரின் கதவு திறந்தது.


அதிலிருந்து ஒரு மெல்லிய கரிய கால்கள் முதலில் வெளியே வந்தன. அதன் சொந்தக்காரியான கறுப்பு இளம் பெண் கீழே குதித்தாள்.


குதித்தவளின் விழிகளிலும் முகத்திலும் ஆயிரம் மின் குமிழ் விளக்குகள் பூட்டிய வெளிச்சம். ஏதோ கிடைத்தற்கரிய பொருளைப் பெற்ற மகிழ்ச்சியுடன் அங்கிருந்த பழங்குடியினத்தவர்களைப் பார்த்தாள்.


அந்தப் பழங்குடியினத்தவரின் சாயலில்.. கறுத்த உடலுடன் மேற்கத்திய நாகரீக உடையணிந்து இருந்த அந்த பதின்ம வயதுகளில் இருந்த பெண்ணை.. நம் நாயக நாயகியர்.. குழப்பத்துடன் பார்க்க… அவளின் விழிகளோ.. தேடலில்...


அங்கே நின்றிருந்த பழங்குடித் தலைவனைக் கண்டதும், தன்னை மறந்து,


“ஐயை…” என்றவாறு அவரை நோக்கி ஓடியதுதான் தாமதம், அத்தனை வீரர்களும் தங்கள் கரத்திலிருந்த ஆயுதத்தைத் தரையில் போட்டுவிட்டு முட்டிக்கால் போட்டமர்ந்து, தரையில் விழுந்து வணங்க, அந்த இளம்பெண்ணோ அதைப் பற்றி அக்கறை கொள்ளாது தலைவனின் முன்னால் சென்று முழங்காலிட்டமர்ந்து தலையைக் குனிய, அந்தத் தலைவரின் முகத்தில் மாபெரும் அதிர்ச்சி. பின் அந்த அதிர்ச்சி வேதனையாய் மாறி, கண்களில் கண்ணீர் சொரிய, விரைந்து அந்தப் பெண்ணை நெருங்கியவர், அவள் தலையில் கரத்தைப் பதித்து, விழிகளை மூடி எதையோ முணுமுணுத்துவிட்டு பின் விழிகளைத் திறந்து,


“யாசி…” என்றார். பின் அவர் முகம் மலர உதடுகள் புன்னகையில் மலர்ந்தன. பின் கர்வமாய் நிமிர்ந்து நின்றவர் திரும்பித் தன் வீரர்களைப் பார்த்து,


“யாசி… என்னன்னா… யாசி… என்னன்னா…” என்று இரு கரங்களையும் மேலே தூக்கிக் கத்தியவர், பின் அங்கிருந்த வீரன் ஒருவனைப் பார்த்து,


“போக்கியாத் அன்னா… ஆதுவா...” என்று கூற மறு கணம் அந்த வீரன் காட்டிற்குள் புயலாய் சென்றான். அடுத்த ஐந்தாவது நிமிடம், வெற்று மார்புடன்.. ஏதோ ஒரு மரப்பட்டையைத் தும்புபோலாக்கி இடையில் கட்டியவாறு சங்குகளையும், ஏதோ ஒரு விலங்கினத்தின் பற்களையும் மாலையாக அணிந்தவாறு சில பெண்கள் ஓடி வந்தனர். அதில் முப்பதுகளில் இருக்கக் கூடிய ஒரு பெண், தலைவரின் அணைப்பில் இருந்த பெண்ணைக் கண்டு,


“யாசி…” என்று கத்தத் தன் தலையை நிமிர்த்திப் பார்த்தாள் அந்தப் பெண்.



றி.
 
Last edited:
Status
Not open for further replies.
Top