All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கதைத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
"ஐய்யோ போச்சு, நீங்க கத்தின சத்தத்தில் என்னமோ, ஏதோனு அந்த டிரைவர் தம்பி இங்க ஓடி வருது. போச்சு... ஒண்ணுமில்லனு தெரிஞ்சா, கும்மி அடிச்சிடும் அந்த தம்பி... கத்தக் கூடாதுன்னு முன்னமே சொல்லி வச்சிருந்திச்சுல்ல... முதல்ல சிரிக்கறதை நிறுத்துங்க..." என்று நாச்சி பதற,

அதற்குள் அவர்களை நெருங்கி இருந்த ஆர்யனும், கிருஷ்ணாவும் வந்து சேர்ந்தனர்.


ஒரு அசட்டுச் சிரிப்பை சிந்தியவாறு,"சாரி , ஸ்பைடர் .. பெரிசா.. அது.. பார்த்து கொஞ்சம் பயந்திட்டோம் கேப்டன்.." என்று கலை சங்கடத்துடன் கூற, அவள் காட்டிய சிலந்தியைப் பார்த்த ஆரியனின் முகம் சற்றுச் சுருங்கியது.

"சிஸ்டர்,... இது மிக ஆபத்தானது தான்…. கடித்தால் பராலிஸிஸ் அட்டாக் வந்தது போல ஆகிவிடும்.. சில நேரம் உயிரே போய் விடலாம்…” என்றவன்,

“ கவனமாகவே இருங்க, எப்பவும் கையில ஒரு குச்சி தாயாராக வச்சுக்கோங்க, அப்புறம் எதுக்கும் பயப்படாதீங்க.. நாங்களாம் கூட இருக்கோம்ல… சரி சரி நீங்க எடுத்த வரைக்கும் போதும், எங்க கூட வாங்க" என ஆர்யன் முன்னோக்கி செல்ல, அது வரை அவர்கள் சேகரித்த தடிகளை கிருஷ்ணா கைகளில் அள்ளிக் கொள்ள, கண்களுக்குத் தெரிந்த மெல்லிய கொடிகளை இழுத்து எடுத்தவாறு ஆர்யன் முன் செல்ல, பெண்கள் கீழே கிடந்த தென்னை ஓலைகளை சேகரித்தவாறு அவர்களை பின் தொடர்ந்தனர்.

அதற்கிடையில் கரையிலிருந்த ஆண்கள் வேண்டியளவு குழி தோண்டி கம்புகளை நட்டு இருக்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் இரண்டு ஷெட் எளிமையாக அமைக்கப்ப்டன.

கயிற்றுக்குக் கொடிகளைப் பயன்படுத்தி, சூரிய கதிர் படாதிருக்கக் கரையோரமாக ஓலைகளையும், அகன்ற வாழையிலை போன்ற இலைகளையும் வைத்து கட்டப்பட எளிமையான அரண்கள் தயாரயின..

இதற்கிடையில் அங்கிருந்தவர்களைப் பார்த்த ஆர்யன்,

«யார்கிட்டயாவது செல்ஃபோன் இருக்கா? என் போன் கப்பலோட போயிடுச்சு.. » என்று கேட்க, அனைவரும் இல்லை என்பது போல தலையசைக்க, அவனருகே வந்த பிரவீன்,

«என்கிட்ட இருக்கு ஆர்யன்… ஆனா தண்ணி பட்டதாலவோ என்னவோ.. சுத்தமா வேலை செய்யல… சிக்னல் ஏதும் கிடைக்குதான்னு பார்க்கப் போறீங்களா..? ",

“ இல்ல.. இங்கே அதுக்கு சான்ஸ் இல்ல.. " என்று கூறியவாறே கைப்பேசியை பிரவீனிடமிருந்து பெற்றுக்கொண்டான். பின் அவனை நிமிர்ந்து பார்த்து,

«பிரவீன் இதை உடைத்தால் தப்பில்லையே…? » என்று கேட்க..

ஏதோ விளையாடுகிறான் என்று எண்ணி.. நோ நோ.. என்று சிரித்தவாறு தலையசைத்துக் கொண்டு இருக்கும் போதே. கரத்தால் கைப்பேசியை பார்ட் பார்ட்டாகப் பிரித்திருந்தான். ஆர்யன். அதிர்ந்துபோனான் பிரவீன்.

«ஆர்யன் என்ன பண்றீங்க…» என்று பதற,

«கவலைப் படாதீங்க… உங்களுக்கு புதுசா வாங்கித்தாரேன்… இப்போ இது முக்கியமா தேவைப்படுது ஸாரி.." என்றவாறு சிம் கார்டு பேட்டரி போன்றவற்றை அவனின் கையில் கொடுத்தவன்.. கவனமாக கைப்பேசியின் திரையைப் பிரித்தெடுத்து, அதன் பின் புறமாக அமைந்திருந்த முகம்பார்க்கும் கண்ணாடி போலிருந்த திரையை வெளியே இழுத்தெடுத்தான். அந்தக் கண்ணாடிபோன்ற சாதனத்தைத் தன் முகத்திற்கு நேராகப் பிடித்துப் பார்த்தான். இவனுடைய முகம் மிகத் தெளிவாகத் தெரிய திருப்தி கொண்டவனாக, அதைப் பிரவீனிடம் கொடுக்க, அரை லட்சம் பெறுமதி கொண்ட கைப்பேசி வெறும் கண்ணாடியாக உருமாறி அவன் கரத்திலிப்பதை கண்டு வாய் பிளந்து ஆரியனைப் பார்க்க, ஆரியனோ அதைக் கண்டு கொள்ளாது,

«ப்ரவீன்.. இந்த மிரரை பத்திரமா வச்சுக்கோங்க… இதுதான் நாம ஆபத்தில இருக்கோம்னு சிக்னல் கொடுக்கப் போறது…» என்றான். அவனைப் புரியாமல் ப்ரவீன் பார்க்க,

மீண்டும் மிரரைத் தன்னிடம் வாங்கிய ஆர்யன், இடது கரத்தைத் தூக்கி சுட்டுவிரலையும் நடுவிரலையும் V' போலப் பிடித்தவாறு, சூரியின் நிற்கும் திசைக்கேற்பத் திரும்பி அதன் வெளிச்சத்தில் அந்த கண்ணாடியைப் பிடிக்க, இரண்டாவது சூரியனென ஒளிர்ந்தது கண்ணாடி. வாவ் என சத்தமிட்டனர் சிலர்..

"இந்த வெளிச்சம் மிகத் தொலைவில் வரும் கப்பல்களுக்கும், ஆகாயத்திலிருந்து வரும் விமானங்களுக்கும் கூட தெரியும்.. நாம ஆபத்தில் இருக்கோம்னு எச்சரிக்கை செய்ய உதவும்… கண்ணாடியை பிடிக்கும் போது மேலும் கீழும் நீங்க ஆட்டனும், அப்போதான் அவங்க கவனம் நம்ம பக்கம் திரும்பும்… இந்த விரலை நான் ஏன் V போல பிடிச்சிருக்ககேன்னா, சூரிய ஒளி சரியாக இந்தக் கண்ணாடியில் படுமா என்கிறது நமக்குத் தெரியாது… இதோ பாருங்கள்… என்றவாறு கண்ணாடியைப் பிடிக்க, கண்ணாடியின் ஒளி அவனுடைய இரு விரல்களிலும் பட்டுத் தெறிக்க,

“பாத்தீங்கள்ள… விரல்களில் படும் போது, சூரிய ஒளி நேராக கண்ணாடியில் படும்கிறது நமக்குத் தெரியும்…" என்றுவிட்டு மீண்டும் அதைப் பிரவீனிடம் கொடுத்து, எங்காவது விமானங்களின் சத்தம், இல்லேன்னா, கப்பல்களின் ஹாரன் சத்தம் ஏதாச்சும் கேட்டுச்சுன்னா தாமதிக்காம நான் செஞ்சுகாட்டியது போல செய்ங்க… சுற்றிலும் மரங்கள் இருக்கிறதால, மேல இருந்து பார்க்கிறவங்களுக்கு நாம தெளிவா தெரியமாட்டோம்… எனவே இதுதான் நம் இடத்தை அறிவிக்கப் போற கலங்கரை விளக்கம்.." என்று கூற, உடைந்த தன் கைப்பேசியின் உதிரிப்பாகங்களை வெறித்துப் பார்த்தவாறே அதைப் பான்ட் பாக்கட்டிற்குள் செருகிக்கொண்டான் பிரவீன்..


அவனருகில் வந்த நாச்சி, "பல நாளா நா செய்ய நினச்சது. அந்தத் தங்கத் தம்பி செஞ்சிருச்சு.. அப்பாடி.. இனியாச்சும் எம் முகம் பாத்துப் பேசுவீங்க.." என, கடுப்புடன் அவளை முறைத்தான் அவன்.

குடிநீர், உணவுத் தேடலில் ஆளுக்கொரு வேலை செய்யத் தொடங்க, மீன்கள் நடமாட்டம் தெரிந்த இடத்தில் தம் பேண்ட்களை முட்டி வரை மடித்து விட்டவர்க்ளாக. உணவுக்காக பிடித்துக் கொண்டிருந்தனர் சிலர்.

"தொழிலில் எத்தனை பெரிய திமிங்கலங்களை எல்லாம் வலை வீசாமல், தூண்டில் போடாமல் வளைத்து பிடித்திருப்பேன், ஆனால் இன்னைக்கு என் நிலைமையை பாருங்க டாக்டர்.." என அங்கலாய்த்துக் கொண்டே தர்ஷன் தன் கைகளில் ஈட்டி போல முனை கூர் தீட்டப் பட்டிருந்த மூங்கில் கழியை குறிபார்த்துக் கடலில் இறக்கிவிட்டுத் தூக்க, அதில் ஒரு மீன் குத்தப்பட்டு துடிதுடித்துக்கொண்டிருக்க, அதைக் கண்ட ப்ருத்வி,

"வாவ், குறி கொஞ்சம் கூட தப்பலை… ஆனா ப்ரோ நான் டாக்டர்... எனக்குலாம் கையை பிடிச்சி நரம்பை தேடி தான் ஊசியே போட வரும். இதுல எங்க மீனைக் குத்திப் பிடிக்க…" என புலம்பியபடியே, தன் ஒற்றை கண்ணை மூடி குறி வைத்து சற்றுத் தள்ளி நின்றிருந்த மீனை நோக்கி வீச, ஈட்டி சரியாய் மீனையும் குத்தி, தரையையும் குத்தி நின்று ஆடியது.

"வாவ், கிரேட் ப்ருத்வி" என அக்கண்யன், தோளில் தட்டி பாராட்ட, மற்றைய ஆண்களுக்கும் அது ஒரு விளையாட்டாகப் போனது. ஆளுக்கு ஒரு மீனைக் குத்தியும், ஈட்டிபோல எறிந்தும், மீன் வரும் திசை உணர்ந்து பாய்ந்து கரங்களால் பிடித்தும், வித்தை காட்டத் தொடங்க, அப்போது அவர்களை நெருங்கிய ஆர்யன், தாராளமாகப் பிடிபட்டிருந்த மீன்களைக் கண்டு,

"ஒரு மீன் கூட்டத்தையே அழிச்சுட்டீங்க போலவே பிரதர்ஸ்" என சொல்ல, தம் ஈட்டிகளை உயர்த்தி இறக்கி அதனை ஆமோதித்துச் சிரித்தனர் அனைவரும்.

மீன்களைக் கவனமாகக் கழுவிவிட்டு, முன்னிரவு நெருப்பெரித்ததற்கு அருகாமையில் இலைகளைப் போட்டு அதில் மீன்களைக் கொட்ட, ஆனந்தன், அகிலன் இருவரும் மீன்களைச் சுடுவதற்காக நெருப்பெரிந்த இடத்தைச் சுற்றித் தடிகளை நட, பிரவீன் மற்றும் தர்ஷன் மீன்களை மூங்கில் தடிகளுக்குள் வரியாகக் குத்தி நட்டிருந்த தடியில் கொழுவத் தொடங்கினர். கொழுவிக்கொண்டிருக்கும் போதே தன் அருகே நின்றிருந்த ஆனந்தனைப் பார்த்த தர்ஷன்,

"டே மச்சான் நீ என்ன படிச்சிருக்கே?" என்று கேட்டான்.

"ஏன்டா புதுசா கேட்கிறே…ரோபாட்டிக் என்ஜினீயரிங்…" என்று ஆனந்தன் கூற, அதை செவிமடுத்த அகிலன், மெதுவாகச் சிரித்து,

"இல்ல… ரோபோட்டிக் எஞ்சினியரிங் முடித்துவிட்டு இப்போ கொத்தனார் வேலை பார்க்கிறீங்களே, அதத்தான் உங்க ஃப்ரன்ட் கேக்கிறார் போல… என்ன தர்ஷன் நான் சொல்றது சரிதானே" என்றான் கிண்டலுடன்.

ஆனந்தனோ கண்களை சுருக்கி தர்ஷனை முறைக்க, அதைக் கண்ட ப்ரவீன் தன்னை மறந்து பக்கென்று சிரித்துவிட்டான். அச்சிரிப்பு ஆனந்தனை மட்டும் அல்லாது கீழே நின்றிந்த பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரையும் தொற்றிக் கொண்டது.

அதே நேரம் சற்றுத் தொலைவிலிருந்து,

"வெற்றி, வெற்றி, கோழி, தண்ணீர், வாழை" என கலவையான குரல்கள் கேட்க, அனைவரும் தங்கள் வேலையை விட்டுத் திரும்பிப் பார்த்தனர். அங்கே ஜெயவர்மன், ஆதீர நந்தன், மற்றும் அபிராம் கப்பலின் வேலைக்காரர்கள் உடன் வந்து கொண்டிருந்தனர்.

ஜெயவர்மன் கைகளில், மூங்கில்கள் கழிகள் இருந்தன, அதை அவன் பிடித்திருந்த விதத்திலேயே அதில் தண்ணீர் நிறைந்திருப்பது தெரிந்தது.

அபிராமின் கைகளில் இரு கருங்கோழிகள் இருந்தன. அவை தலைகீழாக தொங்கி கொண்டிருக்க அவற்றின் கால்கள் ஏதோ ஒரு தாவரத்தின் கொடியை கயிறாக பயன்படுத்தி கட்டப்பட்டிருந்தன.

ஆதீரநந்தன் தன் கைகளில் இருந்த வாழைத் தாரை உயர்த்திக் காண்பிக்க, தியாவின் கண்கள் அதைப் பார்த்ததும் நிம்மதியுடன் பெரிதாக விரிந்தன.

"அப்பாடா, இந்த மீன், கோழி வறுவலிலிருந்து தப்பித்தேன்" என்று மனதில் சொல்லி, ஒரு பெருமூச்சை வெளியிட்டு ஆசுவாசமடைய,

"வெல் டன் கைஸ்" என்று அவர்கள் மூவரையும் மற்ற ஆண்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பாராட்டியவாறே கிடைத்தவற்றை வைத்து ஏதோ வாட்டி வதக்கி உணவு தயாரித்து உப்புப் புளிப்பு இல்லாத உணவை பசி தீர அனைவரும் ஒன்று கூடி உண்ணத் தொடங்கினர்.

தியா மட்டும் சுட்ட வாழைக் காயினை சாப்பிட்டுக் கொண்டிருக்க அதைக் கண்ட ஆர்யனுக்கு அவளை எண்ணிப் பரிதாபமாக இருந்தது. வெறும் வாழைக்காய் எந்தளவுக்குத் தாக்குப் பிடிக்கும்… எப்படியாவது கொஞ்சம் பழங்களாவது எடுத்து வந்து கொடுக்கவேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு வலுப்பெற்றது.

உண்டு முடித்து ஆனதும்.. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற நிலையில், ஆண்களும் பெண்களுமாக எஞ்சியிருந்த மூங்கில்தடிகளையும் ஓலைகளையும் கொண்டு இன்னொரு குடிலை அமைத்துக்கொள்ள முனைய.. நேரம் எப்படியோ போனது. அந்த வேளை, தெலைவில் விமானம் போகும் அறி குறியாக சத்தம் கேட்க, பிரவீன் பரபரப்பானான்.

சற்றும் தாமதிக்காது, தன் பான்ட் பாக்கட்டிலிருந்த கண்ணாடியை எடுத்தவன், ஆர்யன் சொன்னது போல சூரியனின் திசை அறிந்து வலது கரத்தால் கண்ணாடியைப் பிடித்து, இடது கரத்தால் விரல்களை ‘வி’ போலாக்கிப் பிடிக்க, சூரியனின் ஒளி அவன் விரலிடுக்கிற்குள்ளாக வெளியேறி வானத்தை சென்றடைந்தது.

அவன் முயற்சி பலித்ததா இல்லையா அது அந்த கடவுளுக்கே வெளிச்சம்…

அவர்களின் காத்திருப்பிற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. நேரம் சென்றதன்றி, காக்கும் கடவுள் மட்டும் அவர்களைத் தேடி வரவில்லை. மெல்ல மெல்ல சூரியன் தன் கடமையை முடித்தவனாகக் கடலில் மறையத் தொடங்க அதுவரையிருந்த உற்சாகம் மெல்ல மெல்ல அனைவரிடமுமிருந்து கரையத் தொடங்கியது.

அவர் அவர் தங்கள் ஜோடிகளுடன் அமர்ந்தவாறு கடலையே ஒரு வித வெறுமையுடன் பார்த்துக்கொண்டிருக்க, யாருக்கும் பேசவேண்டும் என்று தோன்றவில்லை. அந்த அமைதியே அவர்களுக்குப் போதுமானதாக இருந்ததோ?

ஆர்யனோ தீயின் முன் அமர்ந்து அதையே வெறித்துக் கொண்டிருந்தான். ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருந்தான். எத்தனை நாட்களுக்கு இந்தப் போராட்டம்? எப்போது அவர்களைக் கண்டு பிடிப்பார்கள்? இன்று? நாளை…? நாளை மறுநாள்…? எப்படியும் அநேகாத்மன் சார், நமக்கு ஏற்பட்ட ஆபத்துக்களைப் பற்றித் தெரிந்திருப்பார்… அப்படியே தெரிந்திருந்தாலும் தப்பியிருப்போமா.. எந்தத் தீவிற்கு வந்தோம் என்று அவர் எப்படிக் கண்டுபிடிப்பார்… எப்படியும் சற்று நாட்கள் எடுக்கும் என்று புரிய, சோர்வுடன் தன் தலை முடியை வாரிக்கொண்டான் ஆர்யன்.

அப்போது அவனருகே மெல்லிய அசைவு வரத் திரும்பிப் பார்த்தான். தியாதான் அவனருகே வந்துகொண்டிருந்தாள்.

அதுவரை சற்றுக் குனிந்திருந்தவன், அவளைக் கண்டதும் நிமிர்ந்தமர்ந்து, விழிகளாலேயே அவளிடம் என்ன என்று கேட்க, அவளோ பதில் கூறாது அவனுக்கு அருகியில் அமர்ந்தாள். அவனின் மோனநிலையை கலைப்பவளாய்

"கேப்டன், நமக்கு உதவி கிடைக்கும்னு நெனக்கிறீங்களா? என்றாள் யோசனையாக.

"தெரியலை தியா… இப்போதைக்கு அநேகாத்மன் சார் நம்ம பிரச்சனையை அறிந்திருப்பார்… எப்படியும் நம்ம காப்பாத்தாம விடமாட்டார்… அது வரை சமாளிப்போம்" என்று கூறி அவளின் கைகளை பற்றி அழுத்தி விட,

அச்சிறு அன்பு செய்கையில் தியா கவரப்பட்டு சட்டென்று நிமிர, இருவரின் கண்களும் ஒன்றையொன்று தழுவி கட்டுண்டிருந்தன.

அதே நேரம், அவர்களை பின்னிருந்து யாரோ கவனித்துக் கொண்டிருப்பதைப் போல சட்டென ஆர்யனுக்கு தோன்ற, திரும்பிப் பார்த்தவனுக்கு மங்கிய இருளில்.. அசைந்த இலைகளும் கிளைகளுமே மட்டுமே கண்களுக்குத் தெரிந்தன..



http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/


வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியார் 016 கதையோட 11ஆம் அதிகாரரும் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. சென்ற பதிவுக்காக கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி. அப்புறம் இன்றிலிருந்து திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே பதிவுகள் இடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
 

sivanayani

விஜயமலர்
View attachment 11671


(11)

எப்போது உறங்கினாள் என்றே அறியாது உறங்கியவள்.. கண்களுக்குள் விரிந்த ஆரஞ்சு நிற ஒளியில் துயில் கலைய.. கண்களை மலர்த்தியவள், பளீரென்று அடித்த பகலின் ஒளியில் கண்களை மூடிக் கொண்டு.. பின் மெதுவாக கண்களைச் சுருக்கியவாறு திறந்தாள் தியா.

ஏதேதோ சப்தங்கள்.. அலைகடலின் ஓசை.. பிறகுதான் தானிருக்கும் இடம் நினைவு வர... முதலில் குழம்பிப் பின் தெளிந்து சோர்வுடன் எழுந்தமர்ந்து.. சுற்றிப் பார்த்தாள். ஏற்கனவெ எழுந்தவர்கள் ஓரமாக நிழலில் குழுமி பேசிக்கொண்டிருந்தனர். அவள் படுத்திருந்த இடத்தில் வெயில் படாதவாறு தென்னை ஓலைகள் நட்டு வைக்கப் பட்டிருக்க 'யார் இதைச் செய்திருப்பர்!' என்கிற யோசனையுடன் மெதுவாக எழுந்தமர்ந்தவளுக்கு தோள் வலி பெரும்பாலும் மட்டுப்பட்டிருந்தது.

ஏனோ சூரியன் அதிகாலையிலேயே வேகம் கொண்டு இருந்தான் போல. அவன் வெம்மை அந்தக் காலை வேளைக்கு சற்று அதிகம்தான். லேசாக மோதிய கடற்காற்றிலும், குளிரென்றும் சொல்ல முடியாமல், வெக்கை என்றும் சொல்ல முடியாத ஒரு சீதோஷ்ண நிலையை உணர்ந்தவாறே எழுந்தாள்.

தெளிந்த கடல், நீல நிற வயலாகி அழகுற மிளிர்ந்து.. இவளை அலைக்கரங்கள் நீட்டி அழைப்பது போலத் தோன்ற மார்புக்கு குறுக்காகக் கரங்களைக் காட்டியவாறு கடலை ரசித்துக்கொண்டு அதன் கரை நோக்கி நடக்கத்தொடங்கினாள்

சற்றுத் தள்ளி இருந்த பாறையில் சம்மணமிட்டு அமர்ந்து.., ரம்மியமான அந்த காட்சியில் தன்னை மறந்து கண்களை அழுந்த மூடி மூச்சை உள்ளுக்குள் இழுத்து வெளியே விட்டு அந்த இயற்கையின் காற்றை சுவாசித்துக்கொண்டிருந்தாள் மீரா.. அவளின மூச்சின் ஒலியில் அமர்ந்த நிலையில் யோகக் கலையின் சாயல் தெரிய..

"ரொம்ப அழகான இடம் இல்ல இது, நாம் ப்ளான் பண்ணி போய் இருக்க வேண்டிய அநேகாத்மன் தீவை விட இது செமையா இருக்கு..." என்கிற குரல் பின்னாலிருந்து வரத் தன் தியானத்தை விடுத்துத் திரும்பிப் பார்த்தாள்.

கலைதான் ஜனனியுடன் பேசியவாறு வந்து கொண்டிருந்தாள்.

அப்பாறை மீது சாய்ந்து நின்ற ஜனனி,

"படங்கள்ல காமிக்கற ஆளில்லாத கடற்கரை போல எவ்வளவு அழகா இருக்கு இந்த கடற்கரை.. தெளிவான நீர்… கடலுக்கு அடியில் நீந்தற மீன்கள் முதற்கொண்டு எல்லாம் தெரியுது. வானமும் ஆகாயமும் ஒன்னா கலந்தது மாதிரி பரந்து விரிந்திருக்கு... கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியற நீல நிற நீர்… அதுக்கு மேச்சிங்கா பச்சை பசேல்னு அழகான மரக் கூட்டம்., பேரே தெரியாத செடி கொடிகளும், அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு லைட் போட்டதுபோல உதிக்கும் சூரியனும்… அப்பப்பா .. பார்க்கவே எவ்வளவு அழகா இருக்கு" என அதிசயிக்க,

"இங்க பாருங்களேன்.. விதவிதமான பூத்திருக்கிற, பூக்கள்.. இந்த மாதிரி கலர் காம்பினேஷன்ல நான் இதுவரை பார்த்ததே இல்ல.. அதுல அந்த கலர் பூக்கள் அட்ராக்ட் செஞ்சதால, அங்க பறந்திட்டிருக்க பட்டாம்பூச்சிகளை பாருங்க.. செம்ம கலர்புல்.. அந்த டிசைன்ஸ்.. ச்ச.. ஃபிகாசோ தோத்தார்.." என்றவாறுதன் கண்களை படபடத்த ஓவியக் கலை நிபுணியான கலையின் உற்சாகம் மற்றவரையும் தொற்ற, அவர்களும் ஏதேதோ சொல்லி வர்ணித்தவராய் இயற்கை அன்னையின் செல்லப் பிள்ளை போல மிடுக்கு காட்டி நின்ற தீவை ரசிக்கத் தொடங்கினர்.

சற்றுத் தள்ளி நின்று கேட்ட தியாவிற்கும் உதட்டில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது.

துன்பங்களுக்கு மத்தியில் துளி இன்பம் வந்தாலும் ரசித்து ருசித்துக் கொண்டாடுவது மனிதவாழ்வின் இயல்புதானே. எவன் துன்பத்தைக் கூட இன்ப மயமாக காண்கிறானோ, அவன்தான் வாழ்வில் வெற்றி பெற்றவன் ஆகிறான். வாழ்க்கை அடுத்த வினாடியை நமக்காக எப்படி செதுக்கியிருக்கிறது என்பது தெரியாது. நமக்கு தெரிந்த நொடி இந்தக் கணம் மட்டுமே. தெரிந்த நொடியை விடுத்துத் தெரியாத நொடிக்காக வருந்துவதை விட, தெரிந்த இந்தக் கணத்தை அனுபவித்துவிட்டு போவதுதான் புத்திசாலித்தனம்.

விழிகளை அழுந்தத் தேய்த்தவள் மேலும் நடந்தவாறே, தானும் அவ்விடத்தின் அழகை உணரத் தலைப்பட்டாள்.

மரங்களில் தாவும் சிறு அணில்களும், பல வண்ண பறவைகளின் கீச் கீச் சத்தங்களும், வண்டுகளின் ரீங்காரமும், அலைகளின் கரையோர சலசலப்புகளும், தென்னை மர ஓலைகளின் படபடப்பும், காய்ந்த சருகுகளின் மேல் உராய்ந்து அதை நர்த்தனமாட வைத்த காற்றும்… அதுவரை இருந்த அயர்வை கலக்கத்தை விரட்டியடிக்கத் தன்னை மறந்து கரங்களை விரித்துத் தலையை பின்னால் சரித்து விழிகளை மூடி நின்றாள்.

மூடிய விழிகளுக்குள் சூரியனின் ஒளியை உணர்ந்தாள். கடலலையின் கிசு கிசு பேச்சை காதிற்குள் உள்வாங்கினாள். கடல் காற்று அள்ளித்தந்த அந்த சூழ்நிலை சுகந்தத்தை ஆழ்ந்த மூச்சினால் உள்வாங்கி சுவாசப்பையை நிரப்பிக்கொண்டாள்... அவளுடைய ஐம்புலன்களும் ஒரு நிலையில் ஒரு மையப்புள்ளியில் நிலைத்திருக்க, அந்த தீவில் அவள் மட்டும் தனிமையில் ஏகாந்த இனிமையில் நின்றிருக்க திடீர் என்று ஒரு அழுத்தமான கரம் அவளை பற்றுகிறது... திடுக்கிட்டு விழிகளை திறந்து பார்க்கிறாள்... அவன்... கடல்வேந்தன்... அந்தக் கடல்வேந்தனாய் ஆர்யன்... கம்பீரமாய் அவள் கரத்தை பற்றி தன்னை நோக்கி இழுக்கிறான். விருப்புடன் அவன் இழுத்த இழுப்பில் அவன் மீது மோதுகிறாள்... அவனுடைய கரம் அவளை வளைத்துப் பிடிக்க திடுக்கிட்டு விழிகளைத் திறந்த தியாவிற்கு தன் கற்பனை சென்ற திறத்தைக் கண்டு கதிகலங்கிப்போனாள்.

தன் சிந்தனை சென்ற திசை பார்த்துத் தன்னையே திட்டிக்கொண்டவள், அந்த சூழல் அவளை அவ்வாறு என்ன வைக்கிறது என்று சமதனப்படுத்தியவள், தன்னையும் மீறி விழிகளால் ஆர்யனை தேடினாள். அவன் எங்கிருந்தோ இவர்களை நோக்கித்தான் வந்துகொண்டிருந்தான்.

'ஒரு இடத்தை இருக்கானா பாரு பயபுள்ள... பம்பரம் போல அங்கிட்டும் இங்கிட்டும் சுத்தி திரியிறதே வேலையா போச்சு...' என்று மனசுக்குள் புலம்பிக்கொண்டிருக்க,

“ஹாய் காய்ஸ்…” என்று விட்டு, சுற்றிலும் பார்க்க, அவனையே வெறித்து நோக்கியிருந்த தியாவைக் கண்டதும் புருவம் சுருங்க, என்ன என்பது போலத் தலையை ஆட்டினான். அப்போதுதான் அவனை வெறித்துக்கொண்டிருப்பது புரிய சங்கடத்துடன் நெளிந்தவள், அவசரமாக ஒன்றுமில்லை என்பது போலத் தலையை ஆட்டிவிட்டு திரும்ப அனைவரும் ஆரியனை நோக்கி வந்தனர்.

“லிசின்… இப்போ சர்வைவல பத்தி நாம யோசிக்க வேண்டிய நேரம். நமக்கு உதவி வரும் வரைக்கும் நமக்கு வேண்டியத நாமதான் சேகரிச்சாகனும்.” என்றவன் சுற்றி வரப் பார்த்துவிட்டு, அனைவரின் கவனமும் தன் பேச்சில் குவிந்ததை உணர்ந்து..

“நமக்கு இப்போ தண்ணி ரொம்ப அவசியம்… உடம்பு தண்ணீர் இல்லாம குறைந்தப்பட்சம் 8 மணி நேரம் தாக்குப்பிடிக்கும்… அதிகப்பட்சம் மூணு நாள், நம்மகிட்ட தண்ணி ஏதும் இல்ல.. இங்கே பறவைகள் இருக்கு… சோ நல்ல தண்ணியும் எங்கேயாச்சும் பக்கத்தில இருக்கும்…” என்று ஆர்யன் சொல்லும்போதே குறுக்கிட்ட ஜெயவர்மன்,

"நேத்து நாம கிழங்கு பறிச்சுட்டு வர்றப்போ தூரத்தில மூங்கில் காடு பாத்தோம்ல… மூங்கில்கள் எப்பவும் மழைத் தண்ணீரைத் தேக்கி வச்சிருக்கும், நாம அந்த கணுக்களை கரெக்டா வெட்டி எடுத்து பார்த்து.. உள்ள இருக்க தண்ணீரை அப்படியே குடிக்கலாம்.. முப்பது பேருக்கு போதுமான்னு தெரியல..." என்றவாறு அண்ணாந்து பார்க்க, அவன் பார்வை உயர்ந்து இருந்த தென்னை மரங்களின் மீது விழுந்தது.. "அல்லெங்கில் இந்தக் காய்களை பறிக்க வேணும்.." என சொல்லிய நேரம்.. அந்த உயரமான தென்னைமரத்தில் ஏறி எப்படித் தேங்காய் பறிப்பது என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

“அடேங்கப்பா… இத்தனை உயரமா இருக்கே… இருபது இருபத்தஞ்சு அடிக்கு மேலே இருக்கும் போல இருக்கே… இதில் ஏறி யாரு காய் பறிக்க?” என்று அதிர்ந்தவாறு ஷாலினி கேட்க, அதைப் புரிந்துகொண்டவராக, அந்த கப்பலில் சமையல் வேலை செய்யும் டானியல்,

"பேடிக்கண்டா.. ஞான் மரமேறியானோ.. நிங்களுக்கு எளம் தென்னங்காயோ, ஓலைகளோ ஞான் பறிச்சு தறாம்." என்று சொல்ல,

நாச்சி குதூகலத்துடன், "தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்ல, இளநீரே பறிச்சு தரேங்கறான், யாரு பெத்த பிள்ளையோ, நல்லா இருப்பா.." என்று சொல்ல, அவளின் பேச்சுப் பாணியில் கொல்லென சிரிப்பொலி கிளம்பியது..

"நல்ல தண்ணீர் ஊற்றுக்கு... கரையில் இருந்து ஒரு நாப்பது அல்லது ஐம்பது அடியில் தோண்டினா நிச்சயம் கிடைக்கும்.. அதுவும் தென்னை மரத்துக்கு பக்கத்தில் தோண்டினா, நிச்சயம் ஊற்று கிடைக்கும்.. அதை எடுத்து கொதிக்க வச்சு வடிகட்டி குடிக்கலாம்" என கேப்டன் ஆர்யன் சொல்ல, "தென்னை மரத்திற்கு அருகாமைல வேர்கள் அதிகமா இருக்கும்.." என ராயர் சொல்ல,.

அருகாமைன்னா பத்தடி தள்ளி.. என.. " சரிதான்.. ஆனா அதுக்கு தோண்ட பொருட்கள்.. கொதிக்க வைக்க பாத்திரம் வேண்டாமா " என திகம்பரி கேள்வியாக நிறுத்தினாள்.

"மூங்கில் வெட்டுவோம் இல்ல, அதுவே கடப்பாறை போல.. பாத்திரம் போலத்தான். அதில பிரியாணியே சமைக்கிறப்ப, நாம தண்ணி சுட வைக்கவோ மீனை வாட்டவோ உபயோகப்படுத்தலாம் " என்று முடித்தான் ராயர்.

"தண்ணீர் பத்தலைன்னா சின்ன ஓடைகளை தேடி தீவிற்கு உள்ள போக வேண்டியிருக்கும்.. ஏதாவது நீர் ஊற்று இருக்கா தெரியலை… தேடனும்.. ஆனா அதை கடைசி முயற்சியா வச்சுக்கலாம், ரிஸ்க் ஜாஸ்தி.. அடர்ந்த காட்டுக்குள்ள போறதுங்கிறது.." என்று அக்கண்யன் சொல்ல,

"உணவுக்கு இங்க கிடைக்கற மீன், நண்டுகள், தேங்காய், எதாவது சின்ன மிருகங்கள் தென்பட்டா அதுங்கள வாட்டலாம் நெருப்பில்…" ஆர்யன் சொல்லும் போதே,

"ஹேய்.... நான் வெஜிட்டேரியன்" என்று தியா அலற, கேட்ட ஆர்யன் இதழ்கள் வளைய,

"அதுக்கு என்னப் பண்றது, உயிர் பிழைக்க சாப்பிடறப்ப.. எதுவானாலும் சாப்பிட்டுத்தான் ஆகணும்… ஒன்னுமே இல்லைன்னா… கிடைக்கிற பூச்சிங்கதான் நம்மோட சாப்பாடாகிடும்… அதனால இங்க கிடைக்கிறதை வச்சு சாப்பிடு… உனக்குத்தான் சுத்தி வர பச்சைப் பசேல்னு இருக்கே… எதையாச்சும் பிடுங்கி சாப்பிடலாம்… நமக்குத்தான் சாப்பாட்டிற்கு அலையனும்… உனக்கு அந்த சிரமமும் இல்லை." என்று கிண்டல் குரலில் ஆர்யன் கூற, அவனை உர் என்று முறைத்துவிட்டுத் தலையைத் திருப்பிக்கொண்டாள் தியா.

அங்கே அழகரும் முறுவலித்தவாறு அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.. அழகருக்கு இரத்தப் போக்கு நின்றிருந்தது. அதிசயமாகக் காயம் வேறு ஓரளவு காய்ந்துபோயிருந்தது. ஒரு வேளை அந்த முள் மருத்துவ குணமுடையதாக இருக்கலாம்..

சூரிய கதிர்கள் பலமாக விழத் தொடங்க, சூடு அதிகமாக இருப்பது போலத் தோன்ற, அனைவருக்கும் நிழலின் அருமை புரியத் தொடங்கியது. இப்போது ஓரளவு தாங்கிக்கொண்டாலும், மதியம் கடற்கரை வெய்யிலின் அகோரத்தைத் தாங்க முடியாது. அதைப் புரிந்துகொண்டவர்களாக ஆளாளுக்கு அவசரமாக கூடம் அமைப்பதற்காகப் பொருட்களைச் சேகரிப்பதற்காக ஆண்களுடன் அடர்ந்த மரங்கள் உள்ள இடத்தை நோக்கிச் சென்றனர்.

ப்ருத்வி அழகருக்கு அருகே அமர்ந்திருக்க, மற்றையவர்கள் கூடாரத்திற்கு வேண்டிய பொருட்களை சேகரிக்கத் தொடங்கினர்.

நீளமான தடிகளையும் கொடிகளையும் தேடிப், பார்வையை ஓட்டியபடியே,

"ஜனனி அதோ பாருங்க… உங்களுக்கு வலது புறமா ஒரு பெரிய தடி முறிஞ்சிருக்கு… அதை எடுங்க" என்று ஷாலினி கூற, அவள் கூறிய திசையைப் பார்த்த ஜனனி, அதைக் கண்டு கொண்டு.. பற்றி இழுக்க, இழுத்த வேக்தில் தடுமாறி விழப்போக, அவள் பின்னாலிருந்த அமிர்தவர்ஷினி அவளைத் தாங்கிப் பற்றி,

"பார்த்து ஜனனி… நீங்களும் அடிபட்டுக்காதீங்க…" என்று அக்கறையுடன் கூறியவாறு ஜனனிக்கு அந்தத் தடியை இழுத்தெடுக்க உதவினாள். அதே நேரம்,

"அச்சோ இங்க பாருங்க கேர்ள்ஸ், ஏதோ குட்டி, குட்டி பழங்கள் இருக்கு, அதுவும் செடி முழுக்க பழங்கள் தான்" என்ற கலை சொன்னதோடு நிறுத்தாமல் அதனருகில் சென்று பழங்களை பறிக்கத் தொடங்க, கலையை தொடர்ந்து மீரா, திகம்பரி மற்றும் நாச்சியும் அதில் இணைந்து கொண்டனர்.

"இந்த பழம் வெள்ளையா இருக்குங்க கலை, இட் கேன் பி பாய்சனஸ், இதை பறிக்க வேண்டாம் என எனக்குப் படுது" என அமிர்தவர்ஷினி கூற, அதை தலையசைத்து ஆமோதித்தாள் சுவர்ப்பனா. உடனே விரைந்து சென்று அதில் ஒரு பழத்தை எடுத்துக் கரத்தில் நசுக்கி மூக்கில் வைத்து நுகர்ந்து பார்த்தவளின் இமைகள் சுருங்கின. அங்கிருந்தவர்களைப் பார்த்து,

"கொஞ்சம் ஆல்மண்ட் வாசம் இருக்கு, பொதுவாக பழத்தில், அப்படி வாசம் இருந்தா அது விஷத்தன்மை கொண்டதா இருக்கும்னு சொல்லுவாங்க…" என்றதும் அதற்கு மேல் அதைக் கீழே போடு என்று சொல்லவேண்டிய அவசியமே அவர்களுக்கு இருக்கவில்லை.

‘வடை போச்சே…’ என்பது போலக் கீழே போட்ட பழத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போதே,

" அம்மாஆஆஆஆஆஆ..." என்கிற அலறல் ஷாலினியிடமிருந்த வந்தது. அவளருகே நின்றிருந்த ஜனனியும் தன்னை மறந்து ஷாலினியுடன் சேர்ந்து கத்தத் தொடங்கினாள்.

"உஸ்ஸ், கத்தாதீங்க" எனப் பதட்டத்துடன் கூறிய சுவர்ப்பணாவும் திரும்பிப் பார்த்துவிட்டுத் தானும் சேர்ந்து கத்தத் தொடங்கினாள்.

அதே நேரம் சற்று உள்ளே சென்று கண்களுக்குத் தெரிந்த மூங்கில் தடிகளை வெட்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆர்யனும், கிருஷ்ணாவும், பெண்களின் சத்தம் காதில் கேட்டதும், செய்துகொண்டிருந்த வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டுத் தலை தெறிக்க ஓடிவரத் தொடங்கினர்

"என்னாச்சு என்னாச்சு" என்று நெருங்கி வந்த நாச்சியும், கலையும் கேட்கக் கண்களில் பயத்தை தேக்கி பார்வையை மட்டும் "அங்கே" என்பதாய் செய்கை காட்டினாள் ஷாலினி.

பெண்கள் அனைவரும் ஒரு நொடி பதறி ஷாலினியின் பார்வை சென்ற இடத்தை நோக்கி அண்ணாந்து பார்க்க அங்கே மிகப் பெரிய, உள்ளங்கை அளவிலான கருநிற சிலந்தி ஒன்று தன் வலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

அதன் அசைவற்ற நிலை கண்டதும்.. ஒருவாறு தன்னை சமப்படுத்திய ஷாலினி, ஆழ மூச்சு விட்டு.. தடதடத்த மனதைக் கையால் அழுத்திய படி நின்றாள்.. அவள் வீட்டில்.. பல்லி, கரப்பான் பூச்சி, சிறிய எட்டுக் கால் பூச்சிக்கே அலறி ஊரைக் கூட்டுபவள். கையகலப் பூச்சி கண்டு அலறாமல் இருப்பாளா.. எனினும்.. சமாளிப்பவளாய்,

"சாரி கேர்ள்ஸ், நான் பயப்பட்டது மட்டுமில்லாம, உங்களையும் சேர்த்து பயப்பட வச்சுட்டேன்,.. ஆனாலும் எங்க அத்தான் பக்கத்தில வரும் போது மட்டும் தான் இதயம் இப்படி தாறுமாறாக துடிக்கும்ன்னு இத்தனை நாள் நினைச்சேன் ஆனா இன்னைக்கு..." என்று ஷாலினி பார்வையை மறுபடியும் சிலந்தியின் பக்கம் ஓட்ட, அவள் சொன்னதின் அர்த்தம் புரிந்த மற்ற பெண்களும் பதட்டம் குறைந்து கிளுக்கி சிரிக்க ஆரம்பித்தனர்.

அதே நேரம் பின்னால் சற்றுத் தள்ளி ஒரு சலசலப்புத் தோன்றத் திரும்பிப் பார்த்த நாச்சிக்கு அவளையும் அறியாது கைகால்கள் நடுங்கத் தொடங்கின..

"ஐய்யோ போச்சு, நீங்க கத்தின சத்தத்தில் என்னமோ, ஏதோனு அந்த டிரைவர் தம்பி இங்க ஓடி வருது. போச்சு... ஒண்ணுமில்லனு தெரிஞ்சா, கும்மி அடிச்சிடும் அந்த தம்பி... கத்தக் கூடாதுன்னு முன்னமே சொல்லி வச்சிருந்திச்சுல்ல... முதல்ல சிரிக்கறதை நிறுத்துங்க..." என்று நாச்சி பதற,

அதற்குள் அவர்களை நெருங்கி இருந்த ஆர்யனும், கிருஷ்ணாவும் வந்து சேர்ந்தனர்.


ஒரு அசட்டுச் சிரிப்பை சிந்தியவாறு,"சாரி , ஸ்பைடர் .. பெரிசா.. அது.. பார்த்து கொஞ்சம் பயந்திட்டோம் கேப்டன்.." என்று கலை சங்கடத்துடன் கூற, அவள் காட்டிய சிலந்தியைப் பார்த்த ஆரியனின் முகம் சற்றுச் சுருங்கியது.

"சிஸ்டர்,... இது மிக ஆபத்தானது தான்…. கடித்தால் பராலிஸிஸ் அட்டாக் வந்தது போல ஆகிவிடும்.. சில நேரம் உயிரே போய் விடலாம்…” என்றவன்,

“ கவனமாகவே இருங்க, எப்பவும் கையில ஒரு குச்சி தாயாராக வச்சுக்கோங்க, அப்புறம் எதுக்கும் பயப்படாதீங்க.. நாங்களாம் கூட இருக்கோம்ல… சரி சரி நீங்க எடுத்த வரைக்கும் போதும், எங்க கூட வாங்க" என ஆர்யன் முன்னோக்கி செல்ல, அது வரை அவர்கள் சேகரித்த தடிகளை கிருஷ்ணா கைகளில் அள்ளிக் கொள்ள, கண்களுக்குத் தெரிந்த மெல்லிய கொடிகளை இழுத்து எடுத்தவாறு ஆர்யன் முன் செல்ல, பெண்கள் கீழே கிடந்த தென்னை ஓலைகளை சேகரித்தவாறு அவர்களை பின் தொடர்ந்தனர்.

அதற்கிடையில் கரையிலிருந்த ஆண்கள் வேண்டியளவு குழி தோண்டி கம்புகளை நட்டு இருக்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் இரண்டு ஷெட் எளிமையாக அமைக்கப்ப்டன.

கயிற்றுக்குக் கொடிகளைப் பயன்படுத்தி, சூரிய கதிர் படாதிருக்கக் கரையோரமாக ஓலைகளையும், அகன்ற வாழையிலை போன்ற இலைகளையும் வைத்து கட்டப்பட எளிமையான அரண்கள் தயாரயின..

இதற்கிடையில் அங்கிருந்தவர்களைப் பார்த்த ஆர்யன்,

«யார்கிட்டயாவது செல்ஃபோன் இருக்கா? என் போன் கப்பலோட போயிடுச்சு.. » என்று கேட்க, அனைவரும் இல்லை என்பது போல தலையசைக்க, அவனருகே வந்த பிரவீன்,

«என்கிட்ட இருக்கு ஆர்யன்… ஆனா தண்ணி பட்டதாலவோ என்னவோ.. சுத்தமா வேலை செய்யல… சிக்னல் ஏதும் கிடைக்குதான்னு பார்க்கப் போறீங்களா..? ",

“ இல்ல.. இங்கே அதுக்கு சான்ஸ் இல்ல.. " என்று கூறியவாறே கைப்பேசியை பிரவீனிடமிருந்து பெற்றுக்கொண்டான். பின் அவனை நிமிர்ந்து பார்த்து,

«பிரவீன் இதை உடைத்தால் தப்பில்லையே…? » என்று கேட்க..

ஏதோ விளையாடுகிறான் என்று எண்ணி.. நோ நோ.. என்று சிரித்தவாறு தலையசைத்துக் கொண்டு இருக்கும் போதே. கரத்தால் கைப்பேசியை பார்ட் பார்ட்டாகப் பிரித்திருந்தான். ஆர்யன். அதிர்ந்துபோனான் பிரவீன்.

«ஆர்யன் என்ன பண்றீங்க…» என்று பதற,

«கவலைப் படாதீங்க… உங்களுக்கு புதுசா வாங்கித்தாரேன்… இப்போ இது முக்கியமா தேவைப்படுது ஸாரி.." என்றவாறு சிம் கார்டு பேட்டரி போன்றவற்றை அவனின் கையில் கொடுத்தவன்.. கவனமாக கைப்பேசியின் திரையைப் பிரித்தெடுத்து, அதன் பின் புறமாக அமைந்திருந்த முகம்பார்க்கும் கண்ணாடி போலிருந்த திரையை வெளியே இழுத்தெடுத்தான். அந்தக் கண்ணாடிபோன்ற சாதனத்தைத் தன் முகத்திற்கு நேராகப் பிடித்துப் பார்த்தான். இவனுடைய முகம் மிகத் தெளிவாகத் தெரிய திருப்தி கொண்டவனாக, அதைப் பிரவீனிடம் கொடுக்க, அரை லட்சம் பெறுமதி கொண்ட கைப்பேசி வெறும் கண்ணாடியாக உருமாறி அவன் கரத்திலிப்பதை கண்டு வாய் பிளந்து ஆரியனைப் பார்க்க, ஆரியனோ அதைக் கண்டு கொள்ளாது,

«ப்ரவீன்.. இந்த மிரரை பத்திரமா வச்சுக்கோங்க… இதுதான் நாம ஆபத்தில இருக்கோம்னு சிக்னல் கொடுக்கப் போறது…» என்றான். அவனைப் புரியாமல் ப்ரவீன் பார்க்க,

மீண்டும் மிரரைத் தன்னிடம் வாங்கிய ஆர்யன், இடது கரத்தைத் தூக்கி சுட்டுவிரலையும் நடுவிரலையும் V' போலப் பிடித்தவாறு, சூரியின் நிற்கும் திசைக்கேற்பத் திரும்பி அதன் வெளிச்சத்தில் அந்த கண்ணாடியைப் பிடிக்க, இரண்டாவது சூரியனென ஒளிர்ந்தது கண்ணாடி. வாவ் என சத்தமிட்டனர் சிலர்..

"இந்த வெளிச்சம் மிகத் தொலைவில் வரும் கப்பல்களுக்கும், ஆகாயத்திலிருந்து வரும் விமானங்களுக்கும் கூட தெரியும்.. நாம ஆபத்தில் இருக்கோம்னு எச்சரிக்கை செய்ய உதவும்… கண்ணாடியை பிடிக்கும் போது மேலும் கீழும் நீங்க ஆட்டனும், அப்போதான் அவங்க கவனம் நம்ம பக்கம் திரும்பும்… இந்த விரலை நான் ஏன் V போல பிடிச்சிருக்ககேன்னா, சூரிய ஒளி சரியாக இந்தக் கண்ணாடியில் படுமா என்கிறது நமக்குத் தெரியாது… இதோ பாருங்கள்… என்றவாறு கண்ணாடியைப் பிடிக்க, கண்ணாடியின் ஒளி அவனுடைய இரு விரல்களிலும் பட்டுத் தெறிக்க,

“பாத்தீங்கள்ள… விரல்களில் படும் போது, சூரிய ஒளி நேராக கண்ணாடியில் படும்கிறது நமக்குத் தெரியும்…" என்றுவிட்டு மீண்டும் அதைப் பிரவீனிடம் கொடுத்து, எங்காவது விமானங்களின் சத்தம், இல்லேன்னா, கப்பல்களின் ஹாரன் சத்தம் ஏதாச்சும் கேட்டுச்சுன்னா தாமதிக்காம நான் செஞ்சுகாட்டியது போல செய்ங்க… சுற்றிலும் மரங்கள் இருக்கிறதால, மேல இருந்து பார்க்கிறவங்களுக்கு நாம தெளிவா தெரியமாட்டோம்… எனவே இதுதான் நம் இடத்தை அறிவிக்கப் போற கலங்கரை விளக்கம்.." என்று கூற, உடைந்த தன் கைப்பேசியின் உதிரிப்பாகங்களை வெறித்துப் பார்த்தவாறே அதைப் பான்ட் பாக்கட்டிற்குள் செருகிக்கொண்டான் பிரவீன்..


அவனருகில் வந்த நாச்சி, "பல நாளா நா செய்ய நினச்சது. அந்தத் தங்கத் தம்பி செஞ்சிருச்சு.. அப்பாடி.. இனியாச்சும் எம் முகம் பாத்துப் பேசுவீங்க.." என, கடுப்புடன் அவளை முறைத்தான் அவன்.

குடிநீர், உணவுத் தேடலில் ஆளுக்கொரு வேலை செய்யத் தொடங்க, மீன்கள் நடமாட்டம் தெரிந்த இடத்தில் தம் பேண்ட்களை முட்டி வரை மடித்து விட்டவர்க்ளாக. உணவுக்காக பிடித்துக் கொண்டிருந்தனர் சிலர்.

"தொழிலில் எத்தனை பெரிய திமிங்கலங்களை எல்லாம் வலை வீசாமல், தூண்டில் போடாமல் வளைத்து பிடித்திருப்பேன், ஆனால் இன்னைக்கு என் நிலைமையை பாருங்க டாக்டர்.." என அங்கலாய்த்துக் கொண்டே தர்ஷன் தன் கைகளில் ஈட்டி போல முனை கூர் தீட்டப் பட்டிருந்த மூங்கில் கழியை குறிபார்த்துக் கடலில் இறக்கிவிட்டுத் தூக்க, அதில் ஒரு மீன் குத்தப்பட்டு துடிதுடித்துக்கொண்டிருக்க, அதைக் கண்ட ப்ருத்வி,

"வாவ், குறி கொஞ்சம் கூட தப்பலை… ஆனா ப்ரோ நான் டாக்டர்... எனக்குலாம் கையை பிடிச்சி நரம்பை தேடி தான் ஊசியே போட வரும். இதுல எங்க மீனைக் குத்திப் பிடிக்க…" என புலம்பியபடியே, தன் ஒற்றை கண்ணை மூடி குறி வைத்து சற்றுத் தள்ளி நின்றிருந்த மீனை நோக்கி வீச, ஈட்டி சரியாய் மீனையும் குத்தி, தரையையும் குத்தி நின்று ஆடியது.

"வாவ், கிரேட் ப்ருத்வி" என அக்கண்யன், தோளில் தட்டி பாராட்ட, மற்றைய ஆண்களுக்கும் அது ஒரு விளையாட்டாகப் போனது. ஆளுக்கு ஒரு மீனைக் குத்தியும், ஈட்டிபோல எறிந்தும், மீன் வரும் திசை உணர்ந்து பாய்ந்து கரங்களால் பிடித்தும், வித்தை காட்டத் தொடங்க, அப்போது அவர்களை நெருங்கிய ஆர்யன், தாராளமாகப் பிடிபட்டிருந்த மீன்களைக் கண்டு,

"ஒரு மீன் கூட்டத்தையே அழிச்சுட்டீங்க போலவே பிரதர்ஸ்" என சொல்ல, தம் ஈட்டிகளை உயர்த்தி இறக்கி அதனை ஆமோதித்துச் சிரித்தனர் அனைவரும்.

மீன்களைக் கவனமாகக் கழுவிவிட்டு, முன்னிரவு நெருப்பெரித்ததற்கு அருகாமையில் இலைகளைப் போட்டு அதில் மீன்களைக் கொட்ட, ஆனந்தன், அகிலன் இருவரும் மீன்களைச் சுடுவதற்காக நெருப்பெரிந்த இடத்தைச் சுற்றித் தடிகளை நட, பிரவீன் மற்றும் தர்ஷன் மீன்களை மூங்கில் தடிகளுக்குள் வரியாகக் குத்தி நட்டிருந்த தடியில் கொழுவத் தொடங்கினர். கொழுவிக்கொண்டிருக்கும் போதே தன் அருகே நின்றிருந்த ஆனந்தனைப் பார்த்த தர்ஷன்,

"டே மச்சான் நீ என்ன படிச்சிருக்கே?" என்று கேட்டான்.

"ஏன்டா புதுசா கேட்கிறே…ரோபாட்டிக் என்ஜினீயரிங்…" என்று ஆனந்தன் கூற, அதை செவிமடுத்த அகிலன், மெதுவாகச் சிரித்து,

"இல்ல… ரோபோட்டிக் எஞ்சினியரிங் முடித்துவிட்டு இப்போ கொத்தனார் வேலை பார்க்கிறீங்களே, அதத்தான் உங்க ஃப்ரன்ட் கேக்கிறார் போல… என்ன தர்ஷன் நான் சொல்றது சரிதானே" என்றான் கிண்டலுடன்.

ஆனந்தனோ கண்களை சுருக்கி தர்ஷனை முறைக்க, அதைக் கண்ட ப்ரவீன் தன்னை மறந்து பக்கென்று சிரித்துவிட்டான். அச்சிரிப்பு ஆனந்தனை மட்டும் அல்லாது கீழே நின்றிந்த பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரையும் தொற்றிக் கொண்டது.

அதே நேரம் சற்றுத் தொலைவிலிருந்து,

"வெற்றி, வெற்றி, கோழி, தண்ணீர், வாழை" என கலவையான குரல்கள் கேட்க, அனைவரும் தங்கள் வேலையை விட்டுத் திரும்பிப் பார்த்தனர். அங்கே ஜெயவர்மன், ஆதீர நந்தன், மற்றும் அபிராம் கப்பலின் வேலைக்காரர்கள் உடன் வந்து கொண்டிருந்தனர்.

ஜெயவர்மன் கைகளில், மூங்கில்கள் கழிகள் இருந்தன, அதை அவன் பிடித்திருந்த விதத்திலேயே அதில் தண்ணீர் நிறைந்திருப்பது தெரிந்தது.

அபிராமின் கைகளில் இரு கருங்கோழிகள் இருந்தன. அவை தலைகீழாக தொங்கி கொண்டிருக்க அவற்றின் கால்கள் ஏதோ ஒரு தாவரத்தின் கொடியை கயிறாக பயன்படுத்தி கட்டப்பட்டிருந்தன.

ஆதீரநந்தன் தன் கைகளில் இருந்த வாழைத் தாரை உயர்த்திக் காண்பிக்க, தியாவின் கண்கள் அதைப் பார்த்ததும் நிம்மதியுடன் பெரிதாக விரிந்தன.

"அப்பாடா, இந்த மீன், கோழி வறுவலிலிருந்து தப்பித்தேன்" என்று மனதில் சொல்லி, ஒரு பெருமூச்சை வெளியிட்டு ஆசுவாசமடைய,

"வெல் டன் கைஸ்" என்று அவர்கள் மூவரையும் மற்ற ஆண்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பாராட்டியவாறே கிடைத்தவற்றை வைத்து ஏதோ வாட்டி வதக்கி உணவு தயாரித்து உப்புப் புளிப்பு இல்லாத உணவை பசி தீர அனைவரும் ஒன்று கூடி உண்ணத் தொடங்கினர்.

தியா மட்டும் சுட்ட வாழைக் காயினை சாப்பிட்டுக் கொண்டிருக்க அதைக் கண்ட ஆர்யனுக்கு அவளை எண்ணிப் பரிதாபமாக இருந்தது. வெறும் வாழைக்காய் எந்தளவுக்குத் தாக்குப் பிடிக்கும்… எப்படியாவது கொஞ்சம் பழங்களாவது எடுத்து வந்து கொடுக்கவேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு வலுப்பெற்றது.

உண்டு முடித்து ஆனதும்.. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற நிலையில், ஆண்களும் பெண்களுமாக எஞ்சியிருந்த மூங்கில்தடிகளையும் ஓலைகளையும் கொண்டு இன்னொரு குடிலை அமைத்துக்கொள்ள முனைய.. நேரம் எப்படியோ போனது. அந்த வேளை, தெலைவில் விமானம் போகும் அறி குறியாக சத்தம் கேட்க, பிரவீன் பரபரப்பானான்.

சற்றும் தாமதிக்காது, தன் பான்ட் பாக்கட்டிலிருந்த கண்ணாடியை எடுத்தவன், ஆர்யன் சொன்னது போல சூரியனின் திசை அறிந்து வலது கரத்தால் கண்ணாடியைப் பிடித்து, இடது கரத்தால் விரல்களை ‘வி’ போலாக்கிப் பிடிக்க, சூரியனின் ஒளி அவன் விரலிடுக்கிற்குள்ளாக வெளியேறி வானத்தை சென்றடைந்தது.

அவன் முயற்சி பலித்ததா இல்லையா அது அந்த கடவுளுக்கே வெளிச்சம்…

அவர்களின் காத்திருப்பிற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. நேரம் சென்றதன்றி, காக்கும் கடவுள் மட்டும் அவர்களைத் தேடி வரவில்லை. மெல்ல மெல்ல சூரியன் தன் கடமையை முடித்தவனாகக் கடலில் மறையத் தொடங்க அதுவரையிருந்த உற்சாகம் மெல்ல மெல்ல அனைவரிடமுமிருந்து கரையத் தொடங்கியது.

அவர் அவர் தங்கள் ஜோடிகளுடன் அமர்ந்தவாறு கடலையே ஒரு வித வெறுமையுடன் பார்த்துக்கொண்டிருக்க, யாருக்கும் பேசவேண்டும் என்று தோன்றவில்லை. அந்த அமைதியே அவர்களுக்குப் போதுமானதாக இருந்ததோ?

ஆர்யனோ தீயின் முன் அமர்ந்து அதையே வெறித்துக் கொண்டிருந்தான். ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருந்தான். எத்தனை நாட்களுக்கு இந்தப் போராட்டம்? எப்போது அவர்களைக் கண்டு பிடிப்பார்கள்? இன்று? நாளை…? நாளை மறுநாள்…? எப்படியும் அநேகாத்மன் சார், நமக்கு ஏற்பட்ட ஆபத்துக்களைப் பற்றித் தெரிந்திருப்பார்… அப்படியே தெரிந்திருந்தாலும் தப்பியிருப்போமா.. எந்தத் தீவிற்கு வந்தோம் என்று அவர் எப்படிக் கண்டுபிடிப்பார்… எப்படியும் சற்று நாட்கள் எடுக்கும் என்று புரிய, சோர்வுடன் தன் தலை முடியை வாரிக்கொண்டான் ஆர்யன்.

அப்போது அவனருகே மெல்லிய அசைவு வரத் திரும்பிப் பார்த்தான். தியாதான் அவனருகே வந்துகொண்டிருந்தாள்.

அதுவரை சற்றுக் குனிந்திருந்தவன், அவளைக் கண்டதும் நிமிர்ந்தமர்ந்து, விழிகளாலேயே அவளிடம் என்ன என்று கேட்க, அவளோ பதில் கூறாது அவனுக்கு அருகியில் அமர்ந்தாள். அவனின் மோனநிலையை கலைப்பவளாய்

"கேப்டன், நமக்கு உதவி கிடைக்கும்னு நெனக்கிறீங்களா? என்றாள் யோசனையாக.

"தெரியலை தியா… இப்போதைக்கு அநேகாத்மன் சார் நம்ம பிரச்சனையை அறிந்திருப்பார்… எப்படியும் நம்ம காப்பாத்தாம விடமாட்டார்… அது வரை சமாளிப்போம்" என்று கூறி அவளின் கைகளை பற்றி அழுத்தி விட,

அச்சிறு அன்பு செய்கையில் தியா கவரப்பட்டு சட்டென்று நிமிர, இருவரின் கண்களும் ஒன்றையொன்று தழுவி கட்டுண்டிருந்தன.

அதே நேரம், அவர்களை பின்னிருந்து யாரோ கவனித்துக் கொண்டிருப்பதைப் போல சட்டென ஆர்யனுக்கு தோன்ற, திரும்பிப் பார்த்தவனுக்கு மங்கிய இருளில்.. அசைந்த இலைகளும் கிளைகளுமே மட்டுமே கண்களுக்குத் தெரிந்தன..




http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/
 

sivanayani

விஜயமலர்
11713

12

இருளின் மடியில் நெருப்பின் கதகதப்பில் அமர்ந்திருந்த இருவரும் தம் தமது உள்ளங்களின் இசையை மொழிபெயர்க்க முயற்சித்துக் கொண்டிருந்தனரோ..

மீண்டும் இருவருக்குமிடையில் காலம் நின்று போன கணத்தின் அமைதி… எதுவும் பேசவேண்டுமென்று தோன்றவில்லை. எத்தனை நேரம் மௌனத்தின் பிடியில் கொழுந்துவிட்டெரிந்த நெருப்பைப் பார்த்துக்கொண்டிருந்தார்களோ அவர்களுக்கே தெரியாது, மீண்டும் ஆர்யன் தனக்குப் பின்னால் மெல்லிய சலசலப்பு கேட்க, கூடவே யாரோ தங்களை உற்றுப் பார்க்கிறார்கள் என்கிற உள்ளுணர்வு தோன்ற, சடார் என்று தலையைத் திருப்பிப் பார்த்தான்.

இப்போதும் அங்கே எதுவுமில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்ற,

“தியா… டைம் ஆச்சு… போ… போய்ப் படு…” என்கிற உத்தரவுடன் எழுந்தவன், இலைகள் சலசலத்த இடம் அருகே சென்று கூர்ந்து பார்த்தான். கடல் காற்று மேலும் மேலும் அவற்றை அசைத்து விளையாடிக் கொண்டிருந்தது.. கவனத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தான்.


சற்றுத் தள்ளி, விதார்த்தும், அகிலனும் எளிமையான தோணிகள் கட்டும் வேலையில் இறங்கியிருந்தனர். அவர்களின் உயிர் காத்த ஒரு லைஃப் போட்டின் அடிப்பாகம் பெரிய மீன்களின் அட்டூழியத்தாலோ, கரைக்கு அருகில் வந்த போது அடியில் இருந்த பாறையின் கூர்மை பட்டோ, பலமாக பாதிப்படைந்து விட்டிருந்தது. அதனை நம்பி மீண்டும் கடலில் இறங்குவது புத்திசாலித்தனமில்லை. மற்றொன்றோ தானாகவே காற்றை உறிஞ்சி உப்பும் அமைப்பில் ஏதோ பழுது ஏற்பட்டு, ஏற்கனவே காத்து இறங்கிவிட்டிருந்தது. அதனாலேயே புதிய தோணி அமைக்கும் எண்ணம் அனைவரு்க்கும் தோன்றியது. ஆம், யாரோ காப்பாற்ற வருவார்கள் என்று காத்திருப்பதை விட, தோணிகளை உருவாக்கி தேவையான உணவு, குடிநீர் எடுத்துக் கொண்டு அவர்களாகவே அந்தத் தீவை விட்டுப் புறப்படுவது புத்திசாலித்தனம் என்று தோன்ற உடனே அதற்குரிய ஆயத்தத்தை தொடங்கிவிட்டிருந்தனர் நாயகர்கள்.


அனைவரின் கரங்களும் சேர்ந்ததன் பலனாகவும், ஆர்யனின் அறிவுறுத்தலின் படியும், அபிராம், ஆனந்தனின் வடிவமைப்பாலும், மற்றவர்களின் கலந்துரையாடலாலும், மூங்கில் தடிகளும், கட்டுவதற்காகக் கொடிகளும் எடுத்து வந்து குவிக்கப்பட்டன. அவற்றைக் கொண்டு இரண்டு குழுக்களாகப் பிரிந்து இரு தோணிகளை ஒன்றரை நாட்களுக்குள் ஓரளவு கட்டியிருந்தனர் நாயக நாயகிகள்.

அனைவருமே பல துறைகளில் பொறியியல் வல்லுனர்கள்தான். எனவே இந்தத் தோணி கட்டும் பணி புதுமையானதாகவும், சுவாரசியம் நிறைந்ததாகவும் இருந்தது. போதாதற்கு எப்போதும் வேலை, வேலை என்று காலில் சக்கரம் கட்டித் திரிந்தவர்களுக்கு அமைதியாக இருக்க இயலவில்லை. எனவே அந்தத் தோணி கட்டும் பணி கூட ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அது அவர்களின் உள்ளாற்றலை வெளிப்படுத்தியதோடு, புத்திசாலித்தனத்தினத்திற்கும், திறமைக்குமான சவாலாகவும் இருக்க, ஒரு வித வேகத்துடனும், பெரும் சுறுசுறுப்புடனும் தோணியைக் கட்டி இந்த நிலைக்குக் கொண்டுவந்திருந்தனர்.

அவர்களின் திறமையை எண்ணி வியந்தவனாக அகிலனுக்கும், விதார்த்துக்கும் உதவும் பொருட்டு மூங்கில் தடியை வரிசையாக வைத்து அவற்றைக் கொடியால், இறுகக் கட்டிய போது மீண்டும் தன் பின்னால் அசைவு தெரியத் திரும்பிப் பார்த்தான். தியாதான், அவனின் பின்னால் வந்திருந்தாள். அதைக் கண்டதும் கோபம் கொண்டவனாக,

“ப்ச்… சொன்னேன்ல தூங்கச்சொல்லி… போய்ப் படு…” என்றான் அழுத்தமாக. அவளோ,

“நீங்க படுக்கலையா கே…ப்டன்…” என்று தயங்கியவாறே கேட்க,

“இல்லை… இன்று நான் அவங்களோட காவலுக்கிருக்கனும்… நீ போ.. ” என்றவன் மீண்டும் தன் வேலையில் கவனமாக, ' எப்படி விரட்டுறான் பாரு.. சரிதான்.. பாய்லர் சுடுதண்ணி என்னிக்கு கொதிக்கிறத நிறுத்திருக்கு.. நீ வாழ்க்க முழுசும்.. முரட்டு சிங்கிள் தான்டா..' என்று முனங்கி விட்டு சற்றுத் தள்ளிப்போய் படுத்துக் கொண்டாலும் தியாவின் விழிகள் என்னவோ ஆர்யனையே மொய்த்துக்கொண்டிருந்தன.

ஆர்யன், அங்கிருந்த கொடியை எடுத்துக் கொடுத்து, இறுகக் கட்டி என விதார்த்துடன் இணைந்து உதவி செய்யத் தொடங்க, படுக்கச் சென்ற தியாவிற்கோ, உறக்கம் சற்றும் அண்டுவதாக இல்லை.

ஏனோ அவளுடைய விழிகள், ஆர்யனையே வட்டமடித்துக்கொண்டிருந்தன. எத்தனை நேரம் அப்படியே கிடந்தாளோ, விழிகள் அவள் அனுமதியையும் கேட்காது, மூடிக்கொண்டன.

திடீர் என்று திடுக்கிட்டு விழித்தவள், தோணியை வடிவமைத்து கொண்டிருந்தவர்களிடம் கண் பதிக்க, அங்கே ஆர்யன் இல்லை. எங்கே போனான்? குழப்பத்துடன் எழாமலே தலையை மட்டும் சற்று உயர்த்தி, அசைத்து அங்கும் இங்கும் பார்த்தாள். ஒரு வேளை ஓரமாக எங்காவது உறங்கிவிட்டானா என்றும் பார்த்தாள். ம்கூம் அவன் அங்கிருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை. ஏனோ பயம் வர.. எழுந்தவள், நேராக விதார்த்திடம் சென்று,

“ஆர்யன் எங்கே?” என்றாள். அப்போதுதான் விதார்த்திற்கு ஆர்யனின் நினைவே வந்தது போலும், தானும் விழிகளால் சுற்றிலும் பார்த்துவிட்டு,

“தெரியலையே தியா… இத்தனை நேரம் இங்கேதான் இருந்தார்… இதோ வர்ரேன்னு என்று அந்தப் பக்கமாகப் போனார்… ஒரு அஞ்சு நிமிஷமிருக்கும்…” என்று விட்டுத் தன் காரியத்தில் கண்ணாக,

‘ எங்கே போனான் தனியாக ...? அதுவும் இந்த நேரத்தில்!!’ என்று குழம்பியவளுக்கு எனக்கென்ன.. என்று சும்மா இருக்க முடியவில்லை. விதார்த் காட்டிய திசை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினாள் தியா. சில நிமிஷ வேக நடையில் நிலவின் வெளிச்சத்தில் தூரத்தில் அவனைக் கண்டு கொண்டு, அவனை நோக்கி செல்ல,

ஆர்யனோ, தியா தன் பின்னால் வருவது கூடத் தெரியாது, இருட்டில் அடர்ந்த மரங்களுக்கிடையில் நுழைந்தும், பாய்ந்தும் சென்று கொண்டு இருந்தான். தியாவோ அவன் சென்ற பாதையிலேயே பாய்ந்து செல்ல முற்பட, இருட்டில் மேடு பள்ளம்.. வேர்களில் தடுக்கி விழுந்தெழுந்து எனினும் பார்வையால் அவனைப் பற்றியவளாய் தொடரந்தாள்.

எத்தனை நேரம் ஆர்யன் நடந்துகொண்டிருந்தானோ கடவுளுக்குத்தான் வெளிச்சம், சற்று தூரம் போனதும், சிறிய குளம் ஒன்று கண்ணில் பட ,அவனுக்கு மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க வேண்டும் போலிருந்தது.

இருக்கும் தண்ணீர் எத்தனை நாட்களுக்குப் போதுமோ என்று அவன் கவலைப்பட்டு கொண்டிருந்த நேரத்தில், தண்ணீர்க் குளத்தையே கண்டு விட்டானே… முழங்கால் மண்ணில் பட மடித்து அமர்ந்தவன், ஒற்றைக் கரத்தால் தண்ணீரை அள்ளிப் பார்த்தான். படு சுத்தமாக இருந்தது தண்ணீர். ஆர்வத்துடன், எடுத்துக் குடித்துப் பார்த்தான். இளநீராய் இனித்தது தண்ணீர்.

தாகம் தீர அள்ளிக் குடித்தவன், எழுந்து இடையில் கை வைத்து சுற்றிலும் பார்த்தான். எங்கு பார்த்தாலும் மரங்கள்… அந்தக் குளத்திற்குச் சற்றுத் தள்ளி மெல்லிய பாதையொன்று தெரிய, அதைப் பிடித்துக்கொண்டு நடக்கத் தொடங்க, அவனுக்குப் பின்னாலிருந்து பெரிய அலறல் ஒன்று கேட்டது.

நடந்து கொண்டிருந்தவன், சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு நின்றான். மீண்டும் அலறல் கேட்கப் பதறியடித்துக்கொண்டு குரல் வந்த திசையை நோக்கி ஓடினான் ஆர்யா. ஓடியவன் அங்கே கண்ட காட்சியில் ‘இவள் எங்கே இங்கே’ என்று முதலில் குழம்பிப் பின் அதிர்ந்து போய் நின்றான்.

அங்கே, தியா தரையில் விழுந்து கிடந்தவாறு வாயைக் கரங்களால் பொத்தி, எங்கோ ஒரு இடத்தை மிரட்சியுடன் பார்த்தவாறு இருப்பதைக் கண்டதும் அவள் கண்கள் வெறித்திருந்த திசையைக் கண்டு, அவனும் திரும்பிப் பார்க்க, அந்த நிலவின் ஒளியில் பளபளவென்று தெரிந்தது தடித்து நீண்டு கிடந்த பாம்பொன்று… அது எழும்பி நின்றிருந்த விதத்தைக் கண்டதுமே, அதன் ஆவேசம் புரிந்தது. கூடவே அதன் நிறமும், நிலவில் கருமை பளபளக்க இடைஇடையே தோன்றும் வெண்ணிற கோடுகளுமும் அது ராஜ நாகம் என உறுதிபடுத்தியது. அதன் கொடிய விஷமும் அது நிகழ்த்தக் கூடிய விளைவுகளும் நினைவில் வர இவனுக்கு சர்வமும் நடுங்கிப் போனது. திரும்பி தியாவைப் பார்த்தான்.

அவளும் அப்போதுதான் ஆர்யாவையும் கண்டாள். முகம் அச்சத்தில் வெளிற, உடல் நடுங்க, விழிகள் கண்ணீரைச் சொரிய, வாயிலிருந்து கரங்களை விலக்கி,

“ஆ… ஆர்…” என்று எதையோ கூற முயல,

“டோன்ட் மூவ் தியா…” என்ற போதே பாம்பு, தியாவின் அசைவு தெரிந்து கொத்துவது போல வந்தது. அது வந்த வேகத்தில் அதுதான் தன் கடைசி நிமிடம் என்று தியா உணர்ந்து கொள்ள, விரைந்து அவளை நெருங்கிய ஆர்யன்,

“இஷ்க்…” என்கிற ஒலியுடன் அதனருகில் சென்று, அதன் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயல, சடார் என்று ஆர்யனின் புறமாகத் திரும்பிய அதன் வேகத்தைக் கண்டு ஆர்யன் அதிர்ந்தே போனான். பாம்பிடம் அத்தகைய வேகத்தை ஆர்யன் இதுவரை கண்டதில்லை. திரும்பிய பாம்பு அவனை நோக்கிப் படமெடுத்தவாறு நிமிர்ந்து நின்று கொத்தத் தயாராக, மிக மெதுவாகப் பாம்பைப் பார்த்தவாறு அதன் முன்பு ஒற்றைக் கால் மடித்து மண்டியிட்டு அமர்ந்தான்.

எந்த விலங்கினங்களும், சும்மா தீண்டுவதில்லை. தனக்கொரு ஆபத்து என்பதை எப்போது அது அறிந்து கொள்கிறதோ, அப்போதுதான் அது தன் வேகத்தைக் காட்டி எதிரியைக் கொல்ல முயலும். தன் முன்னால் இருப்பது ஆபத்தானது அல்ல என்பதை அந்த மிருகங்கள் புரிந்து கொண்டால், அவை ஆபத்தை விளைவிக்காது விலகிச் செல்லும்.

பாம்புகள் அசைவின் மூலமாக.. மற்றும் நாக்கின் உணர் அரும்புகள் மூலமாக எதிரில் நிற்பது எதிரியா இரையா எனத் தீர்மானிக்கும். அசைவுகளே அதன் கவனம் ஈர்க்கும் வழி... அதே தந்திரத்தைத்தான் ஆர்யன் பாம்பிடம் காட்ட முயன்றான்.

தன் கரத்தை மெதுவாக, மிக மிக மெதுவாக அதன் முன்னால் கொண்டு செல்ல முதலில் அமைதி காத்த பாம்பு, பின் என்ன நினைத்ததோ, வேகமாக எழும்பி, அவனைக் கொத்துவதற்காகப் பாய, வேகமாக பின்நோக்கி இரண்டடி பாய்ந்து நின்றான் ஆர்யா. அதைக் கண்ட தியா மீண்டும் வாய் விட்டு அலற, இப்போது பாம்பு தியாவின் பக்கம் தன் கவனத்தைச் செலுத்தியது.

சரி இத்தோடு தன் கதை முடிந்தது என்று எண்ணியவளாக, நடுங்கிக்கொண்டவளாகத் தன் விழிகளை இறுக மூட, ஆர்யனோ பாம்பின் கவனம் திரும்பிய சந்தர்பத்தை பயன்படுத்துபவனாய், சற்றும் தாமதிக்காது நீளமான கனம் பொருந்திய வாலைப் பற்றி ஒரு இழுவை இழுக்க… சீற்றத்துடன் திரும்பிய பாம்பு மீண்டும் அவனைக் கொத்த முயன்றது. அதனிடமிருந்து தப்புவதற்காகச் சரிந்து விழுந்து முழங்கால் மடித்து எழுந்தமர, அந்தப் பாம்போ சற்றும் தாமதிக்காது அவனை நோக்கிப் பாய்ந்தது. இருந்த வாக்கிலேயே இரண்டடி பின்னால் சென்று எழுந்து நின்றவன், சற்று நிதானித்தான்.

ஆர்யன் அதன் தாக்குதலிலிருந்து தப்புவதற்கு ஏதுவாக ஒரு காலை முன்பும் மறு காலைப் பின்னாலும் வைத்திருந்தவன்... ஆடாது அசையாது தரையில் அமர, எழுந்திருந்த பாம்பு அவன் அமர்ந்திருந்தற்கு தக்கவாகத் தன் உயரத்தைக் குறைத்துக் கொண்டது. ஆனாலும் அதன் கவனம் ஆர்யனை விட்டு அகலவில்லை.

இப்போது பாம்பை நோக்கி மெதுவாக ஆர்யன் முன்னேற, உடனே பாம்பு தன் உயரத்தைக் கூட்டி முன்னே பாய்ந்து அவனைக் கொத்தத் தயாரானது. அதன் வேகமும், அசுரத்தனமும், பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்க, தியாவிற்கு உயிரே போய்விடும் போலத் தோன்றியது.

அவனை அங்கிருந்து சென்று விடும்படி சொல்வதற்காக வாயை எடுத்தவளுக்குக் குரலுக்குப் பதில் வெறும் சத்தம் தான் வந்தது.

மெதுவாக அங்கிருந்த மரத்தின்மீது சாய்ந்தவாறே அவள் எழ, இப்போது பாம்பு சடார் என்று அவள் பக்கமாகத் திரும்பி பார்த்தது.. அதனுடைய நாக்கு ஒரு முறை வெளியே வந்து உள்ளே செல்ல, பாம்புகள் நாக்கின் மூலமே ஆட்களின் இருப்பை உணரந்து கொள்ளும் என்று எப்போதோ படித்தது நினைவில் வர.. தியாவின் இதயத்தின் வேகம் பன்மடங்கானது.

பாம்பின் கவனம் தியா பக்கம் சென்றது ஆர்யனுக்கு சற்று வசதியாகவே போனது. ஆனாலும் அவளை அது கொத்திவிடுமோ என்று அஞ்சியவனாக,

“தியா… ப்ளீஸ்… டோன்ட் மூவ்… » என்றவன், அடுத்து சற்றும் தாமதிக்காது பாம்பை நோக்கிப் பாய்ந்தான்.

பாய்ந்தவன் ஏதோ மிகவும் பயிற்சி பெற்றவன் போல, அதன் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டான் சரியான இடத்தைப் பற்றி இருந்தததால், கடிக்க வழியின்றி.. சினத்துடன்,. அவனிடமிருந்து விடுபடப் போராடிய பாம்பு அவன் கரங்களை வளைத்துக்கொண்டது.

இருகைகளால் இறுகப் பற்றியவாறு, எழுந்து

தாமதிக்காது அடர்ந்த மரங்களுக்கருகே சென்றவன், வலக் கையில் சுருண்ட அதனை இடக்கையால் விலக்கியவன், தன் கரத்தை விடுவித்துக் கொண்டு, இருகைகளாலும் கவனமாக பாம்பை விசிறி தூக்கிப் போட்டான். விடுபட்ட அது.. தலை தப்பியது புண்ணியம் என்று எண்ணியது போல சரசரவென்று ஊர்ந்து அவர்கள் நின்றிருந்த திசைக்கு எதிர்புறமாக சென்று ஒரு பொந்திற்குள் புகுந்து கொண்டது..

அது வரை தன் உயிரைக் கரங்களில் பிடித்திருந்த தியா, ஓடிவந்து ஆர்யாவை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவளுக்கு இன்னும் தான் உயிரோடு இருக்கிறோம் என்பதையே நம்ப முடியவில்லை.

அவனைத் தேடிக்கொண்டு வந்தவள், மேலிருந்து தொப்பென்று எதுவோ முன்னால் விழ, அந்த மயான அமைதியில் நிலவின் ஒளியில், தன்னையும் மறந்து கத்தி விட்டிருந்தாள். பின்புதான் விழுந்தது என்னவென்று பார்த்தால், பயங்கர நீளமான பாம்பு.

அதைக் கண்டதுமே அவளுக்கு சுயம் தொலைந்து போனது. இவள் அதைக் கண்ட பயப்பட, அதுவோ இவளைக் கண்டு பயந்து கொத்துவதற்குத் தயாராக நின்றிருந்தது.

வாழ்வில் முதன் முறையாக இத்தகைய பெரிய பாம்பைக் கண்ணுக்கு முன்னால் பார்த்தவளுக்கு, என்ன செய்வது என்றே தெரியவில்லை. எல்லாம் மரத்த நிலையிலிருந்தவளுக்கு ஆர்யன் முன்னால் வந்து நிற்கவும், அந்த நேரத்தில் தன்னைக் காக்க வந்த கடவுளாகவே தோன்றியது. பாம்பை அவன் அகற்றியதும். அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாதவளாக, ஓடிச்சென்று அவனை இறுக அணைத்துவிட்டிருந்தாள் தியா.

“தா… தாங்க்… தாங்க் யு… ஐ தோட்… ஐ ஆம்… கோய்ங் டு டை.. நீ… நீங்கள் வரவில்லையென்றால்… நான்.. என்னுடைய நிலை…” என்று அவன் பரந்த மார்பில் விழுந்து அவள் கேவ, ஆர்யனுக்கு முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை.
 

sivanayani

விஜயமலர்
இறுக அணைத்து ஆறுதல் சொல்வதா, இல்லை அழட்டும் என்று விட்டு வைப்பதா? இல்லை அவளைத் தள்ளிவிடுவதா என்று சற்றுத் தயங்கியவன், பின் அவள் உடல் நடுங்குவதையும் கண்களில் நீர் சொரிவதையும் கண்டு.. அச்சம் கொண்ட பெண்மையின் நிலையை நன்கு உணர்ந்தவனாக அவளைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு இறுக்கிக் கொண்டான். உடல் மேலும் நடுங்குவதை உணர்ந்து கொண்டவனுக்கு கரங்களை உடனே விலக்கவேண்டும் என்றும் தோன்றவில்லை.

மெதுவாக அவள் முதுகை வருடிக் கொடுத்தவன்,

"ஷ்… இட்ஸ்… ஓக்கே… அதுதான்… பாம்பு போய்விட்டதே… பிறகு என்ன…" என்று சமாதானப் படுத்த முயல, அவளோ அவன் சட்டையை விடுவதாயில்லை. சுருக்கித் தன் கரங்களுக்குள் பிடித்துக் கொண்டவள்,

"ரொ… ரொம்ப பயந்துட்டேன்…. ஆர்யா… இத்தனை நீ… நீளத்தில் நான்… பாம்பைப் பார்த்ததில்லை…" என்று கூறியவளுக்கு அப்போதுதான், அவன் லாவகமாகப் பாம்பைப் பிடித்து எறிந்தது நினைவுக்கு வந்தது. டப்பென்று தன் அழுகையை நிறுத்தியவள், நிமிர்ந்து ஆர்யாவைப் பார்த்து,

"எப்படி அத்தனை பெரிய பாம்பை பிடிச்சீங்க.. …. பத்தடிக்கும் மேலிருக்கும்… உங்களுக்குப் பயமா இல்லையா?" என்று கேட்க,

"எதுக்குப் பயப்படனும்? அதுவே நம்மக் கண்டு பயப்படல… நாம ஏன் பயப்படனும்? " என்றவன் பின் மெல்லிய கோபத்துடன்,

"உன்னை யார் இதுக்குள்ள வரச்சொன்னா… உன்னை உறங்கச்சொல்லிச் சொன்ன ஞாபகம்… " என்றான் கோபமாக.

அவன் கோபத்தைக் கண்ட விலகியவள்,

"நீங்கள் பாட்டுக்குத் தனியாக வந்துவிட்டீர்கள்… அதுவும் பாதுகாப்பில்லாம… ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா… அதுதான் உங்களுக்குத் துணையாக நான் மட்டும் வந்தேன்…" என்றவளைக் கிண்டலாகப் பார்த்தவன்,

"பாதுகாப்பு… எனக்கு… அதுவும் நீ… முதலில் உன்னைப் பாதுகாக்கக் கத்துக்க… அதுக்கப்புறம் மத்தவங்களை எப்படிக் காப்பாத்துறதுன்னு யோசிக்கலாம்…" என்று கறாராகக் கூறியவன், அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்தவாறு முன்னே செல்ல, அவனுடைய கையின் வெம்மை கொடுத்த தைரியத்தில் அவன் இழுத்த இழுப்புக்கு ஏற்ப வேகமாக நடக்கத் தொடங்கினாள் தியா.

வந்த பாதையில் வேகமாக நடக்கத் தொடங்கியவர்களுக்கு நீண்ட நேரமாக நடந்தும், தாம் உள்ளே வந்த பாதை தெரியவில்லை.

‘இந்த வழியாகத்தானே வந்தோம்?’ என்று குழம்பிய ஆர்யன், தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். அதில் பதித்திருந்த திசை அறியும் கருவி காட்டியதில், தான் வந்த திசை தவறாக இருக்க,

"ஷிட்… " என்கின்ற முனங்கலுடன், தியாவின் கரத்தை விடாமலே மறுபக்கமாக நடக்கத் தொடங்கினான்.

சற்றுத் தூரம் நடந்ததும் ஒரு வித உள்ளுணர்வு அவனை எச்சரிக்க நின்றவன், தியாவின் கரத்தை விட்டுவிட்டு அடர்ந்த மரங்களுக்கிடையேயாக எட்டிப் பார்த்தான். மெல்லிய வெளிச்சமொன்று அவனைக் கவர, தியாவைப் பார்த்து தன்னைப் பின்தொடருமாறு சைகையால் காட்டிவிட்டு அந்த விளக்கு வந்த திசை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

சத்தம் எழுப்பாது, மெது மெதுவாக நடந்தவன், குறிப்பிட்ட இடம் வந்ததும் நின்று விழிகளை மறைத்த இலைகளை விலக்கி எட்டிப் பார்த்தவன் அதிர்ந்து போனான்.

நடுவில் நெருப்பு எரிந்துகொண்டிருக்க, சுற்றிலும் சிறு குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருவன் ஏதோ ஆயுதம் ஏந்தியவாறு நெருப்புக்குப் பக்கத்தில் நின்றிருந்தான். முழுவதும் நிர்வாண கோலம். இடையிலும் தலையிலும் சிவந்த நிறத்தில் ஏதோ ஒரு மரத்தின் கொடியை இறுகக் கட்டியிருந்தான். அது தவிர அவன் உடலில் பொட்டு மறைப்பில்லை.

அதைக் கண்டதும் தியா தன்னையும் மீறி,

«சீ… » என்றவாறு தன் விழிகளை மூட, அவள் எதற்கு மூடுகிறாள் என்பதைப் புரிந்துகொண்டவனாக அவளைப் பார்த்து முறைத்தவன்,

«எதற்கு சீ என்கிறாய்… ஆணுடைய நிர்வாண கோலத்தைப் பாத்தா… அவங்க இயற்கையோடு இணைந்து வாழறவங்க… தம் உடலினைப் பற்றி எந்தவித கர்வமோ கூச்சமோ அவங்களுக்கு கிடையாது… நாம நாகரீகம் என்கிற பேரில் உடைகள் எதற்கென்றே விளங்காதவராய்.. அநாகரிகமா வாழ்ந்திட்டிருக்கிறோம்…» என்றவன் மெதுவாக எழுந்தவனாக,

«கிளம்பு தியா… இங்கே அதிக நேரம் இருப்பது ஆபத்து…» என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, தியா பின்னால் நகர, நகர்ந்த வேகத்தில் அவளுடைய கால் அங்கிருந்த மர வேர் ஒன்றில் தட்டுப்பட, தட்டுப்பட்ட வேகத்தில் «அவுச்…» என்றவாறு தொப்பென்று கீழே விழுந்த அந்த சத்தத்திற்குக் கவரப்பட்டான் அந்தக் காவலன்.

சத்தம் வந்த திசையை நோக்கி வேகமாக வந்தவன், சடார் என்று இலை தழைகளை விலக்கிப் பார்க்க, அங்கே வெறும் தரையும் காற்றும்தான் அவனுடைய கண்களுக்கு புலப்பட்டன. வலம் இடமாகத் தலையைத் திரப்பிப் பார்த்தான் எங்கும் எந்த அசைவும் தெரியவில்லை. ஆனாலும் அவனுடைய சந்தேகம் குறையவில்லையோ, வெளியே வந்தவன் வலப்புறமாக நடக்கத் தொடங்கினான்.

தியாவின் சத்தத்தில் அடுத்தது என்ன நடக்கும் என்பதை ஆர்யன் முதலே புரிந்து கொண்டதால், சற்றும் தாமதிக்காது கண்ணிமைக்கும் நொடியில் தியாவைப் பற்றி இழுத்தவன், அருகாமையிலிருந்த பெரிய மரத்தின் பின்னே அவளுடன் மறைந்துகொண்டான்.

மீண்டும் அலறிவிடுவாளோ என்று அஞ்சியவனாக, அவளுடைய வாயைத் தன் கரத்தால் பொத்தினான். அச்சத்தில் விழிகள் பிதுங்க நின்றிருந்தவள், பொத்தியிருந்த அவன் கரத்தைப் பற்றியவாறு அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்கிற அச்சத்தில், தளிருடல் நடுங்க, ஆர்யனின் இறுகிய அணைப்பில் தன்னிலை கெட்டு நின்றிருந்தாள். அவள்.

சற்று நேரம் அப்படியே நின்றிருந்த ஆர்யன், எங்கும் அசைவு இல்லை என்பதை உறுதி செய்து, அவளைத் தன்னிடமிருந்து விடுவித்து, இனி அங்கிருப்பது பெரும் ஆபத்து என்பதைப் புரிந்துகொண்டவனாக,

«வா கிளம்பலாம்…» என்றவாறு தியாவின் கரத்தைப் பற்றி, மறு பக்கமாக ஓடத் தொடங்கினான்;.

அதே நேரம், அவர்கள் வந்த திசையின் ஒரு புறமாகச் சங்கு ஊதுவது போன்ற ஒரு சத்தம் கேட்க, தடைபோட்டவாறு நிற்றான் ஆர்யன். எங்கிருந்து வருகிறது என்று திரும்பிப் பார்த்தான். அவர்களுக்குப் பின்னாலிருந்துதான் வந்துகொண்டிருந்தது. கூடவே சில தீப்பந்தங்கள் மெல்ல மெல்லத் தோன்றத் தொடங்க, தங்கள் வருகையை அந்தப் பழங்குடியினர் அறிந்துவிட்டனர் என்பதைப் புரிந்துகொண்டான்.

«ஷிட்… ஷிட்… ஷிட்…» என்ற முணுமுணுத்தவன், தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். அவர்கள் செல்லவேண்டிய இடத்திற்கு வேறு புறமாகத்தான் வந்துவிட்டிருந்தான். பல்லைக் கடித்து எதையோ சொன்னவாறு மீண்டும் ஓடத் தொடங்க,

«விஷ்க்… » என்கிற சத்தத்துடன் அவனை நோக்கி ஒரு அம்பு பாய்ந்த வந்து, அவனுக்கு மிக அருகாமையிலிருந்த மரமொன்றில் குத்திட்டு நிற்க, அதைக் கண்ட தியாவிற்கு மயக்கமே வரும்போலத் தோன்றியது.

«ஓ மை காட்… ஆர்யா… அவர்களுக்கு நம்மைத் தெரிந்துவிட்டது…» என்று பதற,

«ஆமாம்… சீக்கிரம் வா… அவங்க யுத்த முறை எப்படியிருக்கும்னு நமக்குத் தெரியாது … தவிர அவங்க கூட எதிர்த்து நிற்க முடியுமா என்கிறது கூட நமக்குத் தெரியல… பெட்டர்… தப்பிக்கிறதுதான்… வேகமா வா… » என்றவாறு மரங்களுக்கிடையேயாகப் பாய்ந்து ஓட, அவனுக்குப் பின்னாலும் பல பழங்குடியினர் ஓடி வந்துகொண்டிருந்தனர். எப்படித் தப்பிப்பது என்று புரியாமல் தயங்கியவனுக்குச் சற்றுத் தள்ளி மரத்திலிருந்த பொந்தொன்று தென்பட, வேகமாக அதை நோக்கி தியாவை இழுத்துக் கொண்டு ஓடினான்.

அவளையும் இழுத்துக்கொண்டு. அந்தப் பொந்துக்குள் நுழைந்து கொள்ள, அடுத்த கணம், அவிழ்த்து விட்ட குதிரைகள் பாய்ந்து ஓடுவது போன்ற சத்தம் கேட்டது. மெதுவாகத் தலையை மட்டும் வெளியே எடுத்து எட்டிப் பார்த்தான்.

பார்த்தவன், அதிர்ந்து போனான். கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட பழங்குடியினர்கள் மிக வேகமாக ஓடிக்கொண்டிருந்தனர். ஆர்யனோ, அவர்களின் வேகத்தைக் கண்டு திகைத்துப் போனான். காட்டில் பாயும் குதிரை கூட அவர்கள் ஓடிய வேகத்திற்குப் பிச்சை எடுக்க வேண்டும். தடையாக வந்த பாறைகளை அவர்கள் தாண்டி ஓடிய விதம், ஒலிம்பிக்கில் தடைபாயும் வீரர்கள் எல்லாம், இவர்களுக்கு ஈடாக மாட்டார்கள் என்று புரிந்தது. கூடவே சிலர் சரசரவென மரமேறி கிளையில் அமர்ந்து நோட்டம் பார்த்த விதத்தைக் கண்டு, இத்தகைய நவீனக் காலத்திலும் இப்படி மரமேறும் இயந்திரத்தைக் கண்டு பிடிப்பது சுலபமல்ல என்பதும் புரிந்தது. அதுவும் அந்த மங்கிய நிலா வெளிச்சத்தில், நிச்சயமாக, அத்தனை தெளிவாக ஓடுகின்றார்கள் என்றால், அந்தத் தீவின் மூலை முடுக்கெல்லாம் சென்று பழக்கப்பட்டவர்கள் என்பது புரிந்தது.

அவர்களுடைய கால்களின் அழுத்தமும், அவர்கள் ஓடும் வேகமும், பார்க்கும் போதே ஒரு வித அதிர்வலைகளை அவனுக்குள் ஏற்படுத்தத்தான் செய்தன. பார்த்தால் மெலிந்த உருவங்கள்தான். ஆனாலும், உருவத்திற்கும் வேகத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை அன்றுதான் ஆர்யன் தெளிவாகப் புரிந்துகொண்டான்.

இப்போதைக்கு அங்கிருந்து வெளியேற முடியாது என்பதும் நன்கு புரிந்தது.

அவர்களுக்குப் பழக்கமான இடம், அதனால் சுலபத்தில் இடங்களைக் கடந்து செல்கிறார்கள். இவர்களால் அப்படி முடியாதே. அதுவும் அவர்கள் எல்லா இடமும் பரவி இருக்கும் இந்த நேரத்தில் இவர்கள் வெளியேறுவது என்பது நடக்கக் கூடிய காரியமில்லை.

திரும்பி தியாவைப் பார்த்தவன்,

«இப்போத வெளியேறுவது ஆபத்து தியா… சோ… வெளிச்சம் வரும்வரைக்கும் இங்கேதான் இருக்கணும்… » என்றவன் அப்போதுதான் பார்த்தான். தியாவின் முகத்திலும் கரத்திலும் பல கீறல்கள். கீழே விழுந்த போது ஏற்பட்டிருக்க வேண்டும். அவனையும் மீறி உள்ளம் பதறத் தன் கரத்தால், அவளுடைய காயங்களைப் பரிசோதித்தான். பெரிய ஆழமானது அல்ல. ஆனாலும் வலியைக் கொடுக்கும் என்பது தெரிந்தது.

தன்னையும் மறந்து,

«வலிக்குதா தியா…? » என்று கிசுகிசுப்பாக கேட்க, ஏனோ அவனுடைய குரலில், உருகிப்போனாள் தியா. இல்லை என்று மறுப்பாகக் கூறியபோதுதான் இருவருக்குமே தாங்கள் அமர்ந்திருந்த நிலை புரிந்தது. அவன் கால்களின் இடுக்கில் அவள் அமர்ந்திருந்தாள். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் விலக முடியாத நிலை. ஏன் எனில் அது இருவருக்கான பெரிய பொந்து அல்ல. அவனே சிரமப்பட்டுத்தான் அதற்குள் பொருந்தியிருந்தான். இதில் இவள் எங்கமர்வது!!

அவனுக்கு எப்படியோ, தியாவிற்கு அத்தனை வலியும் மறந்து போனது. இதயம் படபடக்க, தம்மைச் சூழ்ந்திருந்த ஆபத்து கூட மறந்து போக, ஆர்யனை அண்ணாந்து நிமிர்ந்து பார்த்தாள். இப்போது அவனுடைய முகம் அவனுக்கு மிக மிக அருகாமையில். ஒரு வித படபப்புடன் எதிர்பார்ப்புடன் ஏதோ ஏக்கமுமாய் அவனைப் பார்க்க, அவனும் அதே உணர்வுடன்தான் அவளைப் பார்த்திருந்தான்.

அந்த நீண்ட நயனங்கள், அவனை முழுதாகக் கவ்வி இழுக்க, அவனுக்கும் உலகம் மறந்து போனது. அவன் யார், அவனுடைய சூழ்நிலை என்ன, எத்தகைய நிலையில் சிக்கியிருக்கிறோம் என்பது அனைத்தும் அவனுக்கு மறந்து போனது. இப்போது அவன் கவனத்திலிருந்தது முழுவதும் அந்த நீண்ட விழிகளும், துடிக்கும் உதடுகளும்தான்.

தன்னையும் மீறித் தடைகளைத் தாண்டி அவள் உதடுகள் நோக்கிக் குனியத் தொடங்கினான் ஆர்யன்.

அதே நேரம் திடீர் என்று அது வரை வெளிச்சத்தைக் கொடுத்த சந்திரனைக் கரிய மேகங்கள் மறைத்துக் கொண்டன. அடிவானில்.. மின்னல் வெட்ட, பெரும் இடியோசை கேட்கத் தொடங்கியது.


http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/

வணக்கம் கண்ணுகளா இதோ "எஸ் எம் எஸ் வாரியர்ஸ் 016" கதையோட 12ஆம் அதிகாரம் பதிந்து விட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள். சென்ற பதிவுக்காகக் கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்கள் எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.
 

sivanayani

விஜயமலர்
11781

13

சென்னையின் தலைமை காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனக்கான அறையில் அமர்ந்து தனது வழக்கமான அலுவல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரத்னவேல் பாண்டியன், அறைக்குள் நுழைந்த விக்ரமைக் கேள்வியாகப் பார்த்தான்.

தன் கையிலிருந்த கோப்பினை அவனின் முன் வைத்த விக்ரம்,

“சார் நீங்க விசாரிக்க சொன்னதன் படி எல்லாத்தையும் விசாரிச்சுட்டேன்.. இது சென்னை ஹார்பர்ல இருந்து நமக்கு வந்து ஃபேக்ஸ் பேப்பர்ஸ். கனடாவச் சேர்ந்த தமிழரும்.. உலகத்தின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான லாயர் ப்ளஸ் கேப்பிடலிஸ்ட் அனேகாத்மன்… அவருக்கு சொந்தமான யாட்' எஸ் எம் எஸ் வாரியர்ஸ் 016’. இரண்டு நாளுக்கு முன்னே ஸ்ரீலங்கா அண்ட் தமிழ்நாட்டின் பல பிரபலங்களை ஏற்றிக் கொண்டு கிளம்பி இருக்கு. யார் யார் போயிருக்காங்க… அவங்களுக்கும் அநேகாத்மனுக்குமான தொடர்புகள் என்ன என்கிற எல்லா டீடெய்ல்சும் இந்த ஃபைல்ல இருக்கு…" எனவும் இரத்னவேல் பாண்டியன் அதனை எடுத்துப் பார்த்தான்.

“குட்… கப்பல்ல வேலை செய்த வொர்க்கர்ஸ் லிஸ்ட் எடுத்தீங்களா விக்ரம்…”

“யெஸ் சார்…” என்றவன் அதைத் தனியாகப் பிரித்து அவனிடம் நீட்ட, அதையும் உற்றுப் பார்த்தான் பாண்டியன். விக்ரம்,

"பட் சார்… அந்த லிஸ்டில் நாம தேடுற குற்றவாளி பெயர் இல்லை…” என்று விக்ரம் கூற, பட்டியலில் தன் கவனத்தைச் செலுத்தியவாறே,

“சோ… ஏதேனும் போலி டாகுமெண்ட்ஸ் கொடுத்தோ அல்லது ஏற்கனவே வேலையில் இருந்தவனை சத்தமில்லாம காலி பண்ணிட்டோ இவன் அந்த பேரில உள்ளே நுழைஞ்சிருக்கனும்." என்றான் பாண்டியன்.

பின் விக்ரமை நிமிர்ந்து பார்த்து, “ஹரிஷோட ஃப்ரெண்ட் ஆதீரநந்தனோட கூட பேச முடியல போல.. ஹரிஷ் பல முறை ட்ரை பண்ணிப்பார்த்திட்டான்…" என்று கூற, இருக்கையை விட்டு எழுந்த பாண்டியன், அத்தனை தாள்களையும் தள்ளி வைத்து விட்டு அந்த ஃபைலில் அடங்கியிருந்த ஒரு தாளை மட்டும் உருவியெடுத்து, அதிலிருந்த இலக்கத்தைத் தன் அலைபேசியில் இருந்து தொடர்பு கொள்ள முயன்றான். ஆனால் பதில் தான் கிடைக்கவில்லை.

“ இரண்டு நாட்களாச்சு… கேப்டனோட சாட்டிலைட் ஃபோன் கூட கிடைக்கலைன்னா... சம்திங் ஃபிஷி…” என்று நெற்றியைப் பெருவிரலால் வருடியவாறு பாண்டியன் கூற,

"சார் அன்று ஹரீஷ் ஃபோன்ல இருந்து நாம பேசினோமே.. அதற்கு அப்புறமா உலகின் சில இடங்களுக்கான தொலைதொடர்பு துண்டிக்கப் பட்டிருக்கு. அதற்கு இரு நாள் முன்னே வந்த சூரிய காந்தப் புயல்கூடக் காரணமா இருக்கலாம்… தட் ஸோலார் ஸ்டார்ம்னாலே சில சாட்டிலைட்ஸ் செயலிழந்து போச்சுன்னு ந்யூஸ்ல வந்தது.. மே பி.. அந்தக் கப்பல், நின்றிருந்த பகுதி அந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கலாம்… " என்றான் விக்ரம்.

"டாமிட்… அப்போ கப்பல் கூட எப்படித் தொடர்பு கொள்றது ...? உள்ளே இருக்கறவன் மிகப் பயங்கரமானவன்… அவனால் ஏதாவது ப்ரச்சனை வந்திருக்குமோ.. ஸீ ஃபோர்ஸ்ட்ட இன்ஃபார்ம் பண்ணலாமா..? " என்ற இரத்னவேல் பாண்டியனிடம்,

"அது சம்பந்தமாகத்தான் நான் விசாரிச்சிட்டுருக்கேன் சார்… நம்ம கடற்படை அதிகாரிகளுக்கு இத இன்ஃபார்ம் பண்ணினாலும் பயனிருக்காது… ஏன்னா… யாட் தொலைந்த இடம் மியான்மர்க்கு பக்கத்தில… அந்த எல்லையைத் தாண்டி நம்ம இண்டியன் ஸீ ஃபோர்ஸ் போக முடியாது… ஆனாலும் National Oceanic and Atmospheric Administration (NOAA) தேசீய கடல் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை குழுகிட்ட இருந்து சில அறிக்கைகளை பெற முடிஞ்சுது… அதில.. அவங்களால கூட அந்த இடத்தில இருந்த யாஞ்ச் பற்றி எந்தத் தகவல்களும் பெற முடியலன்னு சொல்லி இருக்காங்க "

"எப்படி.. எப்படி இப்படி இருக்கும் விக்ரம்... ப்ரச்சனைன்னு ஒன்னு இருந்தா.. அதுக்கு சொல்யூஷன்னு ஒன்னு இருந்துதான் ஆகனும்.. ஏதாவது இருக்கும் விக்ரம்.. தேடுவோம்." என்றவாறு தன் முன்னே இருந்த கணிப்பொறியை பார்க்க.. ஹோம் மினிஸ்ட்ரியிலிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. அதனை திறக்கப் போகும் வேளையில் மேஜையின் மீது இருந்த தொலைபேசி ஒலித்தது..

விக்ரம் அதனை எடுத்து காதில் வைத்ததும், ஒலித்த தகவலைக் கேட்டு முடித்து வைத்தவன்..

"சர் எம்பஸில இருந்து ஒரு இன்ஃபர்மேஷன். யாட் ஓனர் அநேகாத்மன் தனது யாட்டை கான்டாக்ட் பண்ண முடியலைன்னு சென்ட்ரல் மினிஸ்டர்கிட்ட புகார் கொடுத்திருக்காராம்… இந்திய நேரப்படி நேற்று முன்தினம் மாலை நான்கு மணி வரை கப்பலின் கேப்டன் அவரோட பேசிட்டு இருந்திருக்கிறார்.

நமக்கு ஒரு க்ளூ கிடைச்சிருக்கு.. அந்த கப்பலில் யெல்லோ ப்ரிக் ட்ராக்கர் அப்படின்னு ஒரு எக்யூப்மெண்ட் பொருத்தப் பட்டிருக்கிறது… அது மூலமா அவர் கடைசியா யாட் நின்ன இடத்தை தெரிஞ்சுட்டு இருக்கார். அதை மேப்ல் மார்க் பண்ணி கொடுத்திருக்கார்.. கப்பல் கடைசியாக இந்தியப் பெருங் கடலின் சர்வதேச கடல் பகுதியில் இருக்கிறதா காட்டியிருக்கு… அதுக்கப்புறமா அதனோட சிக்னல் கிடைக்கல... அந்த டிவைஸ ட்ராக் பண்ணவும் முடியலயாம். …” என்று விக்ரம் கூற,

“ அல்ரெடி மெயில் பண்ணிருக்காங்க.. " என்றவாறு திரையில் விரிந்த மேப்பைக் காட்டியவன், கூகுளில் சில தேடுதல்களை செய்துவிட்டு, " சம்திங் இஸ் ராங் விக்ரம்..… யெல்லோ ப்ரிக் ட்ரக்கர், சூரிய காந்த புயலால் கூட பாதிக்கப்படாது… எந்த சூழ்நிலையிலும் அது இயங்கக் கூடியது அப்படின்னு போட்ருக்கு.. அவரால.. அதனையும் ட்ராக் பண்ண முடியலைன்னா.. நாம நினைப்பது போல சாதாரணமான பிரச்சனை போல எனக்குத் தோணலை… விக்ரம்… வி ஹாவ் டு மூவ் க்விக்லி…” என்றவன் விரைந்து சென்று காவல்துறைத் தொப்பியை எடுத்துத் தலையில் போட, அவன் வெளியே செல்லப்போகிறான் என்பதைப் புரிந்துகொண்ட விக்ரம், உடன் நடந்தவாறே,

“அந்த குற்றவாளியோட சம்பந்தமுள்ள அனைவரையும் கொண்டு வரச் சொல்லி உத்தரவு போட்டிருக்கேன்.. அவனுடைய நண்பர்கள், உறவினர்கள்னு அவனொட தொடர்பில இருந்தவங்க எல்லாரும் இன்னும் அரை மணி நேரத்தில வந்திடுவாங்க…” என்று பாண்டியனின் வேக நடைக்கு ஈடு கொடுத்தவாறு விக்ரம் கூற,

“குட்… யாரையும் விடாதீங்க… இப்போ நாம கடலில் இறங்கித் தேட முடியாது… சென்ட்ரல் மினிஸ்டருக்கு செய்தி போயிருக்குன்னா நிச்சயமா இது UNCLOS கண்ட்ரோல்க்கு போகும்… கடலில் தொலைந்தவர்களைத் தேடுறதுக்கு அவங்கதான் பொறுப்பா இருப்பாங்க.. நாம அதுல ஒரு ஆணி கூடப் புடுங்க முடியாது” என்றவன்.. நின்று திரும்பி விக்ரமைப் பார்த்து, “அதற்கிடையில் நாம நம்மால் திரட்ட முடிஞ்ச தகவல்களைத் திரட்டிடனும்… காணாமப் போனவங்க சாதாராணமானவங்க இல்ல… இந்தியாவிற்கே புகழ் வாங்கிக் கொடுத்தவங்க.. இனியும் பல பெருமைகளை வாங்கிக் கொடுக்கப் போறவங்க.. அத்தனை சுலபத்தில் அவங்களை இழக்க இந்திய அரசு சம்மதிக்காது…” என்றவன் மீண்டும் நடந்தவாறு, “எதற்கும் நம்முடைய அறிக்கையைத் தயாரித்து டெல்லி ஹெட் குவார்ட்டர்சுக்கும் ஃபேக்ஸ் பண்ணுங்க… அதற்கு முன்னாடி, அந்த கப்பலுடன் தொடர்பு கொள்ள ஏதாவது வழி இருக்குதா ன்னு பார்க்கச் சொல்லுங்க… நமக்கு இருக்கிற ஒரே வழி, யெல்லோ ப்ரிக்தான்… அது எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடித்தால் இடத்தை அடைந்துவிடலாம்னு நினைக்கிறேன்…” என்று பாண்டியன் கூற,

“சார்... ஒரு வேளை கப்பலில் இருப்பது பெரும் புள்ளிகள் என்பதால், கடத்தப்பட்டிருக்க வாய்ப்பிருக்கில்லையா…? அதுல இருக்கிறவங்க எல்லோரும்.. இந்தியாவின் பெரிய பணக்காரர்கள்.. தலைசிறந்த இரு ஆராய்ச்சி வல்லுனர்களும் கூட இருக்காங்க. ரோபாடிக்ஸ் மற்றும் இயற்பியல் துறைகள்ல டாக்டரேட்ஸ் வாங்கினவங்க.. அவர்கள் யாரையாவது குறிவைத்துக் கூட அந்த தீவிரவாதி கப்பலுக்குப் போயிருக்கலாம்…” என்றான் விக்ரம் யோசனையாக.

“யெஸ்… இட்ஸ் பாசிபிள். என் சந்தேகமும் அதான்.… பட்… கப்பல் கடத்தப்பட்டிருந்தாலும். யெல்லோ பிரிக் ட்ராக்கர் வேலை செய்யாததற்கு என்ன காரணம்? ஒரு வேளை கடத்தல்காரர்கள் அதை அழித்திருந்தாலும், இப்படி பிளாக்கவுட் ஆவது போல முழுசா தொடர்பு இல்லாம போயிருக்குன்னா அந்தக் கோணத்திலும் யோசிக்க வேண்டியதா இருக்கு… எது எப்படியாக இருந்தாலும், இனி நாம லேட் பண்ற ஒவ்வொரு நிமிடமும்.. அந்த பிரபலங்களுக்கு ஆபத்தாவும்.. நமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகத் தான் ஆகும்... உடனே என்ன பண்ணலாம்னு ஹையர் அஃபிஷியல்ஸ் கூட கலந்து பேசனும்.." என்றவாறே படிகளில் வேகமாக இறங்க, அந்த நேரம் அவனுடைய பர்ஸனல் அலைபேசி ஒலியெழுப்பியது..

எடுத்துப்பார்த்தால், டெல்லியிலிருந்து மினிஸ்டர் யஷ்வந்த் திவாரி தான் அழைத்திருந்தார்.

நிமிர்ந்து விக்ரமை பார்த்து, "மினிஸ்டர் பேசறார்... நான் பேசுகிறேன். நீங்க போய் சொன்ன வேலைய பாருங்க... எதுவா இருந்தாலும் எந்த நேரமா இருந்தாலும், உடனே எனக்கு தகவல் கொடுங்க…” என்றுவிட்டு கைப்பேசியை உயிர்ப்பித்து காதில் வைக்க, விக்ரம் வெளியேறினான்.

"வணக்கம் சார்..." என்று ரத்னவேல் பாண்டியன் நிமிர்வோடு கூற,

“வணக்கம் இரத்னவேல் பாண்டியன் கனடால இருந்து மிஸ்டர் அநேகாத்மன் அழைத்தார்.… அவருடைய யாட் காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காரு… ஏற்கெனவே கப்பலைக் காணலைன்னதும் ரெஸ்கியூ கோர்டினேஷன் சென்டர்க்கு இன்ஃபோர்ம் பண்ணியிருக்கார்… அது தமிழ்நாட்ல இருந்து புறப்பட்டதால, ஹார்பர்ல இருந்து ஃபுல் டீட்டேய்ல்சும் கேக்கிறாங்க. அதை எனக்கு ஃபேக்ஸ் பண்ணிவிடுங்க… இது ரொம்ப முக்கியம்.. அண்ட் எமெர்ஜென்சி. அதான் நானே பேசுறேன். உடனே நான் கேட்டதைப் பண்ணுங்க.. " என்று உத்தரவிட,

“ஷூயர் சார்…என் கவனத்திற்கு இந்த பிரச்சனை வந்து இரண்டு நாள் ஆகிடுச்சு. நீங்க கேட்ட டீட்டெயில்ஸ் ஏற்கனவே தயாரா இருக்கு.. அண்ட்... இதில் ஒரு சிக்கலும் இருக்கு சார்…”

“என்ன அது…”

“அந்த யாட்ல் எங்களால் தேடப் படும் ஒரு குற்றவாளி ஒருத்தனும் இருக்கிறான்… ஐ மீன் இருந்தான்.. எனக்கு எவிடென்ஸ் கிடைச்சது..." எனவும், மினிஸ்டர் பதறிப் போய்,

“என்ன சொல்றீங்க நீங்க?..அவன்.. எப்படி அந்தக் கப்பலில…ஏன் போனான்..? ”

“அதுதான் தெரியல சார்… ஆனா அவனோட பெயர் அந்தக் கப்பல் வொர்க்கர் லிஸ்ட்ல இல்ல… சோ வேறு யாரோ ஒருத்தன் பேர்லதான் உள்ளே நுழைஞ்சிருக்கனும்…” என்று கூற,

“அப்போ நீங்க உடனடியா அதைப் பற்றி விசாரணை பண்ணுங்க.. முழுத் தகவல்களையும் எனக்கு இமிடியட்டா அனுப்புங்க… அதை நான் ரெஸ்கியூ கோர்டினேஷன் சென்டர்… ( rescue coordination centre – RCC) க்கு அனுப்பிடுறேன்… அதுக்கப்புறமாக அவங்க அலர்ட் ஆகிடுவாங்க.… வேகமா தேடுவாங்க.. உடனே அனுப்புங்க பாண்டியன்." என்று அவர் கூற

“ஷூயர் சார்…” என்றவாறு கைப்பேசியை அணைத்தவனுக்குப் பெரும் நிம்மதியாயிற்று. RCC க்கு செய்தி போனால் அவர்கள் உடனேயே களத்தில் இறங்கி விடுவார்கள். அதுவும் அரசு மூலம் செய்தி போகிறதென்றால் சற்றும் தாமதிக்க மாட்டார்கள்.

விரைவாக, சென்னையின் பெரும் புள்ளிகள் கண்டுபிடிக்கப் பட்டு விடுவார்கள் என்கிற உத்வேகத்துடன் தன் கையிலிருந்த தகவல்களை மினிஸ்டருக்கு அனுப்பியவன், மீண்டும் தன் அலைபேசி ஒலிப்பதைக் கண்டு எடுத்துப் பார்த்தவன், சிட்டி கமிஷனரின் எண்ணைக் கண்டு அவசரமாக தொடர்பை இணைத்துக் காதில் வைத்தான்.

"சர்.." என்ற அவனின் குரலுக்கு மறுமொழியாக,

" பாண்டியன்! டூ டேய்ஸ் முன்னாடி சென்னைல இருந்து கிளம்பிப் போன கப்பலில் இருந்தவர்களோட உறவினர்கள் அவங்களோட தொடர்பு கொள்ள முடியலைன்னு நேரடியா என் ஆஃபீஸ்ல வந்து கம்ப்ளைன்ட் பண்ணிருந்தாங்க.. அதப்பத்தி விசாரித்த போது அது ஏற்கனவே உங்க தலைமைல விசாரணைல இருக்குன்னு சொன்னாங்க.. என்ன.. ஏதாவது விபரம் தெரிஞ்சுச்சா?" எனவும் சுருக்கமாக அதை விவரித்தவன் தீவிரவாதி பற்றி சொன்னதும் அவரும் அதிர்ந்து போனார்.

"பாண்டியன் நீங்க சொல்றது பார்த்தா திட்டமிட்டு கடத்தியது போல தோனுது. விஷயம் மீடியாக்கு லீக் ஆச்சுன்னா பெரிய சென்ஸேஷன் ஆகிடும். அந்தக் கப்பலைத் தொடர்பு கொள்ள வேறு ஏதேனும் வழியிருக்கான்னு டெக்னிகல் டீமை கேட்டுப் பாருங்க. " என்றுவிட்டு அழைப்பைத் துண்டிக்க,

பாண்டியன் மிகுந்த யோசனையுடன் விக்ரமைத் தொலைபேசியில் அழைக்க அடுத்த கணம் பாண்டியின் அழைப்பை ஏற்றவன்...

“ஹலோ சார்… நான் உங்களைக் கூப்பிடலாம்னு இருந்தேன் நீங்களே கூப்பிட்டுருக்கீங்க. இப்போ தான் ஹரீஷ் பேசினார்.. உங்க நம்பர் ரொம்ப நேரமா கிடைக்கலையாம்.. அவரோட நண்பர் ஆனந்தன் கிட்ட ஒரு ரோபோ இருக்காம்.. அது தொலைத் தொடர்புக்காக உருவாக்கப் பட்டதாம். அதனால் சிக்னல்களை அனுப்பவும் பெறவும் முடியுமாம். ஈவன்.. அது.. நீரில் மூழ்கியிருந்தால் கூட அதனை கண்டுபிடிக்க முடியுமாம். அதை அநேகாத்மனுக்குப் பரிசாகக் கொடுக்க, கெட்டுகெதருக்கு எடுத்துச் சென்றதா ஹரிஷ் சொல்றார்…” என்று விக்ரம் பரபரப்புடன் கூற,

“தட் இஸ் வொன்டர்ஃபுல் நியூஸ்… அதனோடு உடனே தொடர்பு கொள்ள எக்ஸ் ஒய் கம்பெனி ஓனர் அதீந்திரனால முடியும்."

“அமேசிங் ஐடியா சார்… போன சைபர் க்ரைம் கேஸ்ல அவர் தானே உதவி செஞ்சார்… அவரால நிச்சயம் சுலபத்தில அந்த ரோபோவை கண்டு பிடிக்க முடியும்…” என்று கூற,

“யெஸ்… அதுக்கு முன், ஆனந்தன் லேப் அஸிஸ்டண்ட்ஸ் இல்லேன்னா ஃபேமிலி மெம்பர்ஸ்ட்ட அந்த ரோபாட் பற்றி விசாரிக்கனும். நாம் சேகரிக்கும் அந்த தகவல் நமது கணிப்பொறிப் புலி அதீந்திரனின் வேலையை சுலபமாக்கும்… அதனால்… நீங்க அவங்களை விசாரிச்சு ஒரு அறிக்கையை தயாரிச்சுடுங்க. அந்த ரோபோவை மட்டும் நாம கண்டு பிடிச்சிட்டோம்னா, அவங்க இருக்கிற இடம் தெரிஞ்சுரும்.ரெஸ்கியூ டீம் சுலபத்தில் அவங்களைக் காப்பாத்திடுவாங்க…” என்று கூற,

“பட்… சார்… ஆனந்தனுக்கு உறவுன்னு சொல்ல யாரும் இல்லைனு ஹரீஷ் சொன்னார் . அவர் ஆர்ஃபனேஜ்ல வளர்ந்தவர்னு சொன்ன ஞாபகம்.” என்று தயக்கமாகக் கூற,

“தென் அவரோட வேலை செஞ்சவங்கள விசாரிங்க விக்ரம்… ஹோப் ஃபோர் த பெஸ்ட்... எந்த ஒரு சிறிய சாவியும் பெரும் கதவு மற்றும் வழிக்கான திறவுகோலா இருக்கலாம். இப்போதைய நிலையில் நாம் எதையும் முயன்று பார்க்காம விடமுடியாது. அந்த கப்பல்.. ம்.. அவங்களுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்றே கடவுளை வேண்டுவோம்…” என்று சொன்னவன்,

“ஓகே... அந்த யாட்டில் வேலைக்கு சென்ற டானியேல், பாரத், சுலோசனா… அப்புறம் அழகர்… இந்த வேலையாட்களின் வீட்டிற்கு நேராக சென்று விசாரிச்சீங்களா?” என்று கேட்க,

“இப்போதுதான் சார் எல்லா வீட்டுக்கும் சென்று விசாரிச்சேன்… அவங்களப் பொருத்தவரை எல்லாருமே அந்த யாட்டில் வேலைக்கு சென்றிருக்காங்க… அவங்களைப் பற்றிய விவரங்களும் ஜெனூனாத்தான் இருக்கு சார்… ஆனா ஒரு ஆள் பற்றி விசாரிச்சப்போ இரண்டு வருஷமா அந்த அட்ரஸ்ல இருக்கிற வீடு பூட்டியிருக்குன்னு சொன்னாங்க… ” என்று பதில் கூற, நிமிர்ந்தமர்ந்த இரத்னவேல் பாண்டியன்,

“அந்த அட்ரஸ் கொடுத்த வேலையாளோட பேர் என்ன?” என்று பரபரப்போடு கேட்க,

“அழகர் சார்” என்றான் விக்ரம்...



http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/page-54#post-245470

வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியர் 016 கதையோட 13ஆம் அதிகாரரும் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. சென்ற பதிவுக்காக கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.
 

sivanayani

விஜயமலர்
11838

அத்தியாயம் 14

அங்கே அந்தத் தீவின் காட்டின் மத்தியில், மரத்தின் பொந்தினுள், இடிக்கும் மழைக்குப் பயந்து தாயின் சிறகினுள் பதுங்கித் தம்மைக் காக்க முயலும் பறவைக் குஞ்சு போல அவனுடைய மடியில்.. கை அரவணைப்பில் கிடந்தாள் தியா.

இளமையின் உணர்வுக்கு இடம், பொருள், காலம், நேரம், சூழ்நிலை என்பது ஏது? ஒவ்வாத சூழ்நிலைதான் அது… அச்சத்தின் விளிம்பில் இருந்தாலும் கூட, அந்தக் கணம், அழகிய தருணமாகத் தோன்றியது தியாவிற்கு.

நிச்சயமாக இப்படி ஒரு சூழ்நிலையில், இது போன்றதொரு நெருக்கத்தில், இணைக்கப்பட்டு இருப்போம் என கனவிலும் நினைக்கவே இல்லை.. ஆலமரத்தைப் பற்றுதலாகப் படரும் முல்லைக் கொடி போல்.. ஆர்யன் என்னும் ஆலமரத்தில், தியா என்னும் முல்லைக் கொடி முழுவதும் படர்ந்து, மணம் வீச முயன்றுகொண்டிருந்த தருணம் அது. நடப்பை நம்ப முடியாதவளாகத் தன்னை உடலுடன் இறுகப் பிணைத்திருந்தவனை அண்ணாந்து பார்த்தாள் அந்தக் காரிகை.

ஆனால் அவனோ, இவள் மீது சற்றும் கவர்ந்து இழுக்கப்பட்டவனாகத் தெரியவில்லை. மாறாக அவனுடைய கவனம் முழுவதும் சூழ இருந்த ஆபத்திலும், அதிலிருந்து எப்படித் தப்பிச் செல்வது என்கிற யோசனையிலுமே இருந்தது போலும்.. விழிகள் எங்கோ துழாவிக் கொண்டிருந்தன.. உடல் எஃகாக இறுகியிருந்தது… காதுகள் கூர்மையாய் வெளியே கேட்கும் ஓசைகளை உன்னிப்பாக உள்வாங்கிக்கொண்டிருந்தன.

திடீர் என்று இவர்களுக்கு அருகாமையில் யாரோ நெருங்கும் அரவமும் காலடி ஓசையும் கேட்க, ஆர்யன் தன் கரத்திலிருந்தவளை மேலும் தன்னோடு இறுக்கியவனாக, அவளை எதிலிருந்தோ காப்பவன் போல ஒடுங்கிப்போய் அமர்ந்திருக்க, அவர்களைத் தாண்டிச் சென்றன, இரண்டு கரிய கால்கள்.

நடுங்கிப்போனாள் தியா. ஓடுபவன் சற்றுக் குனிந்தாலும், இவர்கள் இருக்கும் இடம் தெரிந்து போகும். இருவரும் மூச்சு கூட விடப் பயந்து பதுங்கியிருந்தது எத்தனை நேரமோ, எங்கிருந்தோ, ஊளையிடும் ஓசை கேட்க, அந்த இரு கால்களும் அந்த இடத்தை விட்டு ஓசை வந்த திசையை நோக்கிப் பாய்ந்து ஓடத் தொடங்கின.

அந்தக் கால்கள் சென்ற பிறகும் இருவரும் சுயத்திற்கு வந்தார்களில்லை. இதயம் படு வேகமாகத் துடித்தது. இதயத்துடிப்பு தன்னிலை வர, சற்று நேரம் எடுத்தது. அப்போதுதான் தியாவும் ஆர்யனும் தாங்கள் அமர்ந்திருக்கும் நிலையை உணர்ந்து கொண்டனர்.

அவளின் முதுகுப்புறம், அவன் முன்னுடலோடு பசை போட்டாற் போல ஒட்டியிருக்க, அவனுடைய வலிய கரங்கள், அவளுடைய வயிற்றினூடாக ஊடுருவிச் சென்று தன்னோடு இறுக்கியிருக்க, அவளின் கரங்களோ.., நடந்து கொண்டிருக்கும் களேபரத்தினால் ஏற்பட்ட அச்சத்தின் வெளிப்பாடாக, வயிற்றை அணைத்திருந்த அவனுடைய கரங்களை இறுகப் பற்றியிருந்தன. கூடவே இருவரின் மூச்சும் இணைந்து கலந்து அந்தப் பொந்தை நிறைத்துக்கொள்ள, அவர்களின் மூச்சின் மெலிதான ஓசை, அது கூட ஒரு வித பயத்தின் ஒலியாகவே இருவருக்கும் கேட்டது.

அங்கே ஓடும் பழங்குடியினர்களின் சத்தம் ஓரளவிற்கு நின்றதும் தியா தன் உடலை மெதுவாக அசைக்க, தன் தலையைச் சற்றுக் குனிந்து தன் மடியில் கிடந்தவளைப் பார்த்தான் ஆர்யன்.

அவளும் சூரியனுக்காய் ஏங்கும் தாமரையென அவனைத்தான் அண்ணாந்து பார்த்திருந்தாள். இரு ஜோடி விழிகளும் கலந்து நின்ற வேளையில்.. ஜீவாத்மா பரமாத்மாவை அடைந்த நொடி போல ஜோதிப் பெருவெள்ளம். அவ்வொளியில்.. அந்த உலகில் அவனும் அவளும் மட்டுமான உயிரினங்களாயினர். பிறப்பும் இறப்பும் தொலைந்து போனது… நான் நீ என்னும் அகம்பாவம் மறைந்து போனது… ஏதோ ஒரு மாய வலையில் இருவருமே சிக்கிக் கொண்ட அந்த நொடி., அவளுடைய தளிர் கரங்கள் அவளையும் மீறி தன் முகம் பார்த்ததிருந்த அந்த கடிய முகத்தை மென்மையாகப் பற்றிக்கொண்டன.

பேச வேண்டும் என்று புத்தி சொன்னது.. பேசாதே என்று அவளுடைய மனம் சண்டித்தனம் செய்தது. இது தப்பு என்று அவனுடைய உள்ளுணர்வு சொன்னது… தப்பென்றால் எதுவும் தப்பென்றது அவள் ஸ்பரிசத்தால் சிலிர்த்த மனம்.. இரண்டு எதிர்மறைகளுக்கு மத்தியில் நடந்த கலவரத்தை எப்படி அவன் வெல்வான்? எப்படி அவள் தோற்க வைப்பாள்? அவள் இடையோடு பதிந்திருந்த அவன் கரம் மேலே எழும்பி, தன் கன்னத்தைப் பற்றியிருந்த அவள் வலது கரத்தைப் பற்றிக்கொண்டது. பற்றியவாறே தன் முகத்தைச் சற்றுத் திசை திருப்ப, அத் தளிர்க் கரத்தின் உள்ளங்கையின் மென்மை, அவன் உதடுகளின் மீது உரசிக் கொண்டது. அந்த மென்மை போதாதென்று அந்த ஆண் உதடுகள் நினைத்ததோ, மேலும் தன் உதடுகளை அந்த உள்ளங்கரத்திற்குள் புதைக்க முயல, அதைக் கண்ட வானம் கோபம் கொண்டதோ? எந்த நேரத்தில் என்ன காரியம் செய்தாய் என்று எண்ணியதோ? திரண்ட கரிய மேகமென்னும் படையை அவர்களை நோக்கி அனுப்ப எண்ணியதாய் தன் காற்றுக் கரங்கள் கொண்டு, அத்தனை மேகங்களையும் கண்ணிமைக்கும் நொடியில் திரட்ட, நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் வானமே இருண்டு போனது.

அது கூடப் புரியாமல், அவளும் அவனுமாய் வேறு உலகில் சஞ்சரிக்க முயன்று கொண்டிருந்தனர். ஆர்யனின் உள்ளம் கரங்களில் ஏற்பட்ட உதட்டின் உரசலில் விரகம் கண்டதோ…? அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாது… படபடத்த மென் உதடுகளை நோக்கிக் குனிய, அவளும் அதைப் புரிந்துகொண்டவள் போல அவன் உதடுகளை வரவேற்கத் தயார் என்பது போல, உதடுகளைத் தன் நாவால் ஈரப்படுத்திக் கொண்டாள்.

இரு அதரங்களுக்கும்… நெருங்கிச் சிக்கி முக்கி உரசும் தருணம் பளீரென்ற ஒளி மின்னலுடன் உலகமே கிடுகிடுக்கும் வகையில் காதைப் பிளந்துகொண்டு இடியின் ஓசையும் கேட்க, அதன் அதிர்ச்சியில் இருவரும் பதறிப் போய் விலகிக் கொண்டனர்.

அவர்களுக்குச் சற்று நேரம் எடுத்தது தம் நினைவுக்கு வர. மீண்டும் பலத்த இடியோசை அந்த இடத்தையே கிடுகிடுக்க வைக்க, அதன் சத்தத்தில், தன்னை மறந்து, “அம்மா..” என்று அலறினாள் தியா. கூடவே அவளுடைய கரங்கள் ஆர்யனை இறுக அணைத்துக் கொண்டன. முகமோ அவனுக்குள் புதைந்து விடும் வேகத்தில் அவன் மார்பில் பதிந்து கொண்டது. மெல்லிய உடலோ அச்சத்தில் நடுங்கியது.

தியா இடிக்கொன்றும் புதியவள் அல்ல. அவளுக்கு இடி மழை எல்லாம் ஒன்றுதான். ஆனால் இந்த இடி சத்தம் மிக மிகப் புதிது. இத்தனை, கர்ணகொடூரமாய் காதைப் பிளப்பது போல கேட்பது இதுதான் புதிது. அந்த ஒலி… இது வரை கேட்காத ஒலி.

ஏன் ஆர்யனின் உடல் கூட அந்த ஓசையில் ஒரு முறை உதறி அடங்கியது.

காட்டின் நடுவே.. இடி விழும் போது… அது மிக அதிகமாக எதிரொலித்து..

நொடி நேரத்தில்.. அவளை தன்னிடம் இருந்து பிரித்து எடுத்தவன்.. இடியும், மின்னலும் மரங்களைத் தாக்கும் என்பதை உணர்ந்தவனாக, இப்படி மரப் பொந்தில் அமர்ந்திருப்பது சரியல்ல எனத் தோன்ற,

“தியா… இங்கிருக்கிறது அத்தனை பாதுகாப்பில்லை… . இப்பவே இங்கிருந்து கிளம்பனும்… எழுந்திரு... சீக்கிரம்..” என்று கூறினான். அவன் கூறியதில் உள்ள உண்மை புரிய, தர்க்கம் புரியாது, அங்கிருந்து சென்று தான் ஆக வேண்டும் என்கிற நிலையில்.. மரப்பொந்தினுள் இருந்து வெளியேற முயன்றாள் தியா.

அவள் வெளியேறும் போதே, என்ன நினைத்தானோ… மீண்டும் அவளைத் தன்னை நோக்கி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது மோதுப்பட்டவள், புரியாமல் என்ன என்பது போலப் பார்க்க, அடுத்துக் கண்ணைக் கூசும் ஒளி வர அதனைத் தொடர்ந்து பெரும் இடியோசை கேட்டது… அடுத்த கணம், பெரும் அலை வருவது போன்ற சத்தம் கேட்க, அந்த சத்தத்தைக் கேட்ட தியாவின் உடல் நடுங்கியது.

ஒரு வேளை கடல் கொந்தளித்துவிட்டதோ? ஆழிப் பேரலை வருகிறதோ.. அப்படியானால் அவர்கள் சாகப் போகிறார்களோ… ஐயோ… இவ்வளவு தானா அவர்களின் வாழ்க்கை… எத்தனை ஆபத்தைக் கடந்து வந்தார்கள். கடைசியாக… இப்படி மரப்பொந்திற்குள் சாகப் போகிறார்களா? யார் கண்டார்? இன்னும் மூவாயிரம் வருடங்களுக்குப் பிறகு, தொல்லியல் ஆய்வு என்று இவர்களின் எலும்புக் கூடுகளைக் கண்டு பிடித்துக் காட்சிப்பொருளாக வைப்பார்களோ… ஆராய்ச்சி என்கிற பெயரில், இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் இவர்கள் என்று முத்திரை குத்துவார்களோ… கடவுளே… இனி அம்மா அப்பாவைக் காண முடியாதா… சித்தப்பா… உங்களைக் காணாமலே சாகப் போகிறேனா…” என்று எதை எதையோ எண்ணிக் கலங்கியவளுக்கு அப்போதுதான் குதிரைகள் ஓடுவது போலத் தடக் தடக் என்கிற பெரும் ஓசை கேட்கது.

என்ன அது என்று புரியாமல், குழப்பத்துடன் எட்டிப் பார்க்க முயல,

“ஈஈஈஈஈஈயாஆஆஆஆஆஆகுஉஉஉஉஉவாஆஆஆஆஆஆஆ ஆஆஆஆத்த்த்த்த்துஊஊஊஊஊ தேஏஏஏஏஏவோஓஓஓஓஓஓ” என்கிற அலறலுடன், எத்தனை வேகமாக அந்தப் பழங்குடியினர் முன்னர் எவ்வளவு வேகத்துடன் ஓடினரோ, அதை விட அதிக வேகத்துடன் சிலர் திரும்பி ஓடி வந்து கொண்டிருந்தனர்.

அவர்களின் காலடி ஓசையைக் கேட்டுத்தான், அவளை உள்ளே மீண்டும் இழுத்திருந்தான் போலும்.

நன்றியுடன் திரும்பி ஆர்யனைப் பார்த்தவள், சற்று நேரம் எதுவும் பேசாது குனிந்து கொள்ள, அவளின் மனமோ புரியாத பாஷையில் ஏதேதோ பேசியது..

கொஞ்ச நேரத்தில் அந்த இடமே அமைதியானதும், ஆர்யன் மெதுவாக தியாவைப் பார்த்து,
 

sivanayani

விஜயமலர்
“எந்த சத்தமும் போடாமல் வெளியேறு….” என்று கிசுகிசுக்க, சரி என்று தலையாட்டியவாறு அந்தப் பொந்தை விட்டு வெளியே வந்ததும், ஆர்யனும் அவளைப் பின் தொடர்ந்து வெளியேறினான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், அந்த சிறிய இடத்திற்குள் கூனிக் குறுகி அமர்ந்திருந்ததால் முதுகு வலித்தது.

முதலில் எழுந்து நின்று கைகால்களை உதறி, தன்னை சமப்படுத்தியவன், ஏதோ யோசனை வர, மெதுவாக இருளின் மறைவில் நகர்ந்து.. பருத்த மரத்தின் மறைவில் இருந்தவாறு.. நோட்டமிட, அவர்கள் அங்கே எரிந்துகொண்டிருந்த நெருப்பைச் சுற்றி அமர்ந்தவாறு தரையில் மண்டியிட்டமர்ந்து வணங்குவது போலப் பெரும் ஒலியை எழுப்பியவாறு தலையைத் தரையில் தொட்டுத் தொட்டு எடுத்துக் கரங்களை விரித்துக் காட்டி எதையோ ஓதிக்கொண்டிருந்தனர்.

ஏதோ பேராபத்து தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று எண்ணுபவர்கள் போன்ற கலவரமான முகங்களுடன் இறைவனிடம் மண்டியிட்டு வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.. இந்த இடிமின்னல் போன்ற இயற்கையின் சீற்றத்திற்கு அவர்கள் பயப்படுகிறார்கள் போலும் என்பதை ஆர்யன் புரிந்துகொண்டான். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் தப்பிப் போக முடியாது என்பதைப் புரிந்தவனாக, தியாவின் கரத்தைப் பற்றியவாறு எதிர் பக்கமாக ஓடத் தொடங்கினான்.

அவனுடைய வேகத்திற்குத் தியாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. உடலின் அனைத்து சக்தியும் வடிந்து போன உணர்வில் தள்ளாட, அதைப் புரிந்து கொண்டவனாக,

“சீக்கிரம் தியா… சென்ற பழங்குடியினர்களை விடத் திரும்பிய பழங்குடியினரின் எண்ணிக்கை ரொம்பக் கம்மி… சோ… இன்னும் நம்மத்தான் தேடிக்கிட்டிருப்பாங்க… நேரமில்லை… வா…” என்று கூற, அதிலிருந்த உண்மையைப் புரிந்துகொண்டவளாக மேலும் தன் வேகத்தைக் கூட்டினாள் தியா.

ஓடினர் ஓடினர்… ஓடிக் கொண்டே இருந்தனர்… ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், தடைபோட்டவன் போல நின்றான் ஆர்யன்.

சற்றுத் தொலைவில், சில பழங்குடியினர் தங்கள் கரத்திலிருந்த நீண்ட அம்பைத் தரையில் குத்தியவாறு எதையோ ஓலமிட்டுப் பாடியவாறு அங்கும் இங்கும் நடந்துகொண்டிருக்க, அதே வேகத்தில், ஆர்யன் தியாவின் கரத்தைப் பற்றி வலப்புறமாக திரும்பி ஓடத் தொடங்கினான்.

அவர்கள் ஓடிச் செல்லும் போது காலடியில்.. ஒரு காய்ந்த மரக்கிளை மீது.. பட.. படக் எனும் ஒலி கிளம்பியது.. பழங்குடியினரின் கூரிய செவிகளில் விழ, அது வரை எதையோ பாடிக்கொண்டிருந்தவர்கள், தங்கள் பாடலையும் நடனத்தையும் விட்டுவிட்டு கவனமாக மிக உன்னிப்பாக அவதானித்தனர்.

அந்த அமைதியில், இவர்களின் காலடி ஓசைகள் பழங்குடியினருக்குத் துல்லியமாக கேட்டது.

உடனே அதில் தலையில் கிரீடம் போல ஏதோ மிருகத்தின் கொம்பினை அணிந்திருந்த ஒருவன், அங்கிருந்தவர்களைப் பார்த்து, எதையோ கூற, உடனே ஒரு சிலர், சரியாக அவர்கள் செல்லும் பாதையைக் கணித்துத் துரத்தத் தொடங்கினர்.

தம் பின்னால், பழங்குடியினரும் தொடர்ந்து வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட ஆர்யனும் , தியாவும் தங்கள் சக்தியெல்லாம் திரட்டிக் கண் மண் தெரியாமல் ஓடத் தொடங்கினர்.

ஆனாலும் பழங்குடியினரின் வேகத்திற்குத் தங்களால் ஈடு கொடுக்க முடியாது என்பது மட்டும் நன்கு புரிந்துபோனது. தற்போது அவர்களுக்கிருக்கும் துணை அந்த இருட்டும், அடர் மரங்களும் மட்டுமே. அதனால், அங்கிருந்த மரங்களுக்குள் நுழைந்து வேகம் எடுத்தனர். அந்த நிலையில் கொடிய விஷம் உள்ள பாம்புகள், ஜந்துக்கள், பூச்சிகள் ஏதாவது இருக்கும் என்று அவர்கள் சிந்திக்கும் நிலையில் இருக்கவில்லை.

கூடவே வானத்தைப் பிளந்து கொண்டு ஊடுருவிச் சென்ற.., மின்னலும், காதையே பிளக்கும் இடியும் அவர்களை அரள வைத்தாலும், உயிர்பயம் அதை அலட்சியமாக்கி ஓட வைத்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் இருவராலும் முடியவில்லை. பழங்குடியினருக்கும் இவர்களுக்குமான இடைவெளி மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. அதே நேரம், வான் மகளும் வஞ்சகம் செய்பவள் போல மழையைப் பொழிவிக்கத் தொடங்க, பாதையும் கண்ணுக்கு மறையத் தொடங்கியது. கூடவே தியாவின் தைரியமும் மெல்ல மெல்லக் குறையத் தொடங்க, அது அவள் வேகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

ஒரு கட்டத்தில், முன்னால் சென்றிருந்த ஆர்யனைக் கூடக் கருத்தில் எடுக்காது, அப்படியே முழங்கால் மடித்துத் தரையில் அமர்ந்தவள், தரையில் கரங்களைப் பதித்து, குனிந்து நின்று நீண்ட மூச்சுக்களை எடுத்து விட்டவாறு,

“ஆர்….யன்…. ஐ… ஐ… கான்ட்… என்.. னால்… சுத்தமா… முடில…,ரொம்பவே மூச்சு.. வாங்குது…” என்றவாறு சரிந்து கைகளை ஊன்றி குனிந்து மூச்சு வாங்க, அவனுக்குத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. கூடவே பழங்குடியினரின் காலடிச் சத்தம் இவர்களை நெருங்குவதாகத் தோன்ற..

“தியா.. ட்ரை டூ அன்டர்ஸ்டான்ட்… இன்னும் கொஞ்சத் தூரம்தான்… சீக்கிரம் வா.. அவங்க கிட்ட வந்துட்டாங்க… ப்ளீஸ்… எழுந்திரு.…” என்றவாறு அவளிடம் திரும்பி வந்து தூக்கிவிட முயல, அவன் கரங்களைத் தட்டிவிட்டவள்,

“முடியல ஆர்யா… சத்தியமா என்னால முடியல…” என்று முகத்தில் வடிந்த நீரைத் துடைத்துவிட்டவாறு அழ, சற்றுத் தெலைவில் ஒருவன் எதையோ கூறிக் கத்தும் சத்தம் கேட்டது.

அது வரை சோர்ந்திருந்தவள், அந்தக் குரலைக் கேட்டதும், மீண்டும் பயம் தொத்திக் கொள்ள, அது சோர்வை விரட்டி அடிக்க, அவனின் தோள் பற்றி எழும்பியவள், ஓட முயன்றாள்.

ஆனால் இப்பொழுது ஓடினால்.., அவர்கள் கையினில் அகப்படுவது நிச்சயம்.. அதுமட்டுமில்லாமல்.., வெகு தூரம் ஓடி வந்ததன் காரணமாக அவர்களின் சக்தி மொத்தமும் வடிந்து விட்டது.., இனி அவளால் வேகமாக ஓடவும் முடியாது என்பதை உணர்ந்த ஆர்யன்.., சுற்றும் முற்றும் பார்க்க.., அங்கே அவன் கண்களுக்கு ஒரு பெரிய பாறை தென்பட்டது…

உடனே அவளை இழுத்துக் கொண்டு அந்த பாறையின் பின் பக்கமாகச் செல்ல முயன்றான், மழையின் காரணமாக சரியாக பாதையும் தெரியாமல் இருக்க.., பின்னால் கண் மறைத்த நீரை விலக்க முயன்றவாறே.. அவன் கைப்பற்றி ஓடி வந்த தியா.., பாதையிலிருந்த கல் ஒன்றில் தடுக்க.. பாதை விட்டு சரிவில் கால் பதிய.. மழையால் கொழகொழக்க தொடங்கிருந்த மண் சரிந்து.. பக்கவாட்டில் விழுந்தாள். அவள் விழுந்த வேகத்தில் ஆர்யாவும் இழுபட்டுச் சரி..ய இருவருமே அந்த இடத்திலிருந்து கீழ் நோக்கி உருள ஆரம்பித்தனர்.

அலறக் கூட இருவருக்கும் நேரம் கிடைக்கவில்லை. வேகமாக உருண்டவள்.. ஒரு மரத்தின் மீது மோதி நிற்க, அவள் பின்னால் உருண்டு வந்த ஆர்யன், தியாவோடு மோதுப்பட்டு நின்றான். இருவருக்குமே பலத்த அடி. ஒருவாறு தன்னை சுதாரித்த ஆர்யன், சிரமப்பட்டு எழுந்து.. மண்டியிட்டு அமர்ந்தவாறு தனக்கு முன்னால் குப்புற விழுந்திருந்த தியாவின் பக்கமாகக் குனிந்து,

«தியா.. தியா…» என்றான்.

அந்த மயான அமைதியில், அந்த மெல்லிய அழைப்பு கூட பேரொலியாகக் கேட்க, ஒரு வித அச்சத்துடன் சுற்றிலும் பார்த்தான் ஆர்யா. அவனுக்கோ உடலுடன் உள்ளமும் சேர்ந்து நடுங்கியது. அவர்கள் சந்திக்க இருக்கும் ஆபத்து மிகப் பயங்கரமானது என்று நன்கு புரிந்தது.

மீண்டும் தியாவின் முன்பாகக் குனிந்தவன், அவள் கன்னத்தைத் தட்டி,

“தியா… வேக்கப்… வி ஆர் சேஃப் நவ்… வேக்கப் தியா…” என்று அவள் கன்னத்தில் தட்ட, அவளோ இன்னும் விழிக்காது அப்படியே கிடந்தாள்.

பதறியவனாக அவளுடைய கழுத்தில் தன் கரம் வைத்து நாடித் துடிப்பைப் பார்த்தான். அது மெல்லியதாகத் துடித்துக்கொண்டிருக்க, அப்போதுதான் அவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.

“தியா.., உனக்கொன்றுமில்லை… தயவு செய்து கண்ணை முழிச்சு பாரு…” என்று கிசுகிசுத்தவனின் கண்களில் கலவரம்..

“ஓ காட்… ஐ பெக் யு… ப்ளீஸ்… சேவ் ஹர்…” என்று மனதார இறைவனிடம் வேண்டியவன், அவள் கன்னத்தைத் தட்டி மேலும் மேலும் அழைக்க, எப்படியோ அவனுடைய குரல் அவள் மூளையை எட்ட, மெல்ல .. மெல்ல சுய நினைவு வந்து அவள் இமைகள் பிரிந்தன. பிரிந்த விழிகள், ஆர்யனைக் கண்டு முதல் திகைத்துப் பின் அதிர்ந்து பின் பயத்தில் விரிய, வாயோ, அவளையும் மீறிப் பலமாக வீறிட்டுக் கத்தத் தொடங்கியது.

எதற்காகக் கத்துகிறாள் என்று ஆர்யனுக்கு முதலில் புரியவில்லை. பின்புதான் அவனுடைய ஆறாம் அறிவு அவனுக்குப் பின்னால் தெரிந்த மிக மெல்லிய அசைவை அவனுக்கு உணர்த்தியது.

உடலில் எந்த அசைவையும் வெளிக்காட்டாது, விழிகளை மட்டும் பக்கமாக அசைத்துப் பார்த்தான். அவனுக்கு இரண்டடி தள்ளி, நான்கைந்து கரிய கால்கள் சற்று அகன்றவாறு நின்றிருந்தன.

‘எப்போது வந்தார்கள்…? மெல்லிய அசைவு கூடவா அவனுக்குக் கேட்கவில்லை. இனி அடுத்து என்ன? எப்படித் தப்புவது… தப்ப முடியுமா… இல்லை அன்று பார்த்த எலும்புக் கூடுகளின் மத்தியில் இவர்களுடைய உடலும் போடப் படுமா… ஓ காட்…!' என்று மனதிற்குள் தவித்தவனுக்கு மேலும் பலர் பின்னால் ஓடி வரும் ஓசை கேட்டது.

நிச்சயமாக அங்கிருந்து தப்ப முடியாது என்று புரிந்து கொண்டவனுக்கு இதிலிருந்து எப்படி வெளியேறுவது என்று மட்டும் புரியவில்லை. இயலாமையுடன் தியாவைப் பார்க்க அவளும் அவனைத்தான் செயலாற்ற முடியா நிலையில் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அடுத்து, அவர்களைச் சுற்றியிருந்த பழங்குடியினரின் ஈட்டிகளும்.., கூர் முனை அரிவாள்களும் அவர்களை நோக்கி நீண்டன. அதைக் கண்டதும் இருவரும் நிலைகுலைந்து போயினர்.

அவ்வளவு தானா வாழ்க்கை… ஒரு நொடியில் உயிர் போகப் போகிறதா… அவன் மட்டுமா சாகப் போகிறான்… ' இதோ… எனக்காக வந்த இவளுமல்லவா மடியப் போகிறாள்… கடவுளே… இவளை எப்படிக் காக்கப் போகிறேன்… என்னை நம்பி இன்னமும் நாம் அனைவரும் வீடு போய்ச் சேருவோம் என்ற நம்பிக்கையில் உள்ள மக்களை எப்படிக் காக்கப் போகிறேன்…' நினைக்கும் போதே உலகமே தலைகீழாய் சுற்றியது அவனுக்கு…

இப்போது நிராயுதபாணியாக நிற்கும் அவனைக் காக்க வல்லவர்கள் யார்…? கடவுளா வரப்போகிறது காக்க? கடவுள் என்று ஒன்று உண்மையாக இருக்கிறதா என்ன? இருந்தாலும் அவர்களைக் காக்குமா? தன்னையும் மீறி விழிகளை மூடியவன்,

"கடவுளே… ஒரே ஒரு முறை… ஒரே ஒரு முறை எங்களைக் காத்துவிடு… எனக்காக இல்லாவிட்டாலும், என்னை நம்பியிருக்கும் பயணிகளுக்காக எங்களைக் காத்துவிடு… நீ இருப்பது உன்மையானால் எங்களைக் காத்து விடு…!" என்று தன்னை மறந்து உள்ளம் உருகி வேண்ட, அந்த ஆதிவாசிகளின் காலடிகள் இருவரையும் மேலும் நெருங்கின.

முடிந்தது.., இதோடு முடிந்தது…, என அவன் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையிலேயே... திடீர் என்று வானத்தைக் கிழித்துக் கொண்டு ஒரு மின்னல்.. சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து சீறிப் பாய்ந்த பேரொளிக்கீற்றாய், அவர்கள் இருக்கும் திசையை நோக்கி வேகமாய் வந்து.. சுற்றி இருந்த பழங்குடியினர் நடுவே ஊடுருவிச் சென்று.. ஓங்கி உயர்ந்து ஈரமாய் இருந்த மரத்தில் விழ.., அந்த மரம் பக்கென்று நெருப்பைப் பற்றிக்கொண்டது.

இதைக் கண்ட பழங்குடியினர் கண் முன்.. எரியும் மரத்தைப் பெரும் அச்சத்துடன் பார்த்தனர். பின் தம் மார்பைப் பலமாக அடித்து எதையோ ஊளையிட்டுக் கத்தினர். அடுத்துத் தலை தெறிக்க அந்த இடத்தை விட்டு ஓடத் தொடங்க, அந்த ஓட்டத்திலிருந்தே அவர்கள் அந்த நெருப்பைக் கண்டு அஞ்சி ஓடுகின்றனர் என்பதை ஆர்யன் தெளிவாகப் புரிந்துகொண்டான். அந்த நேரத்திலும் அவனையும் மீறி உதடுகள் பெரும் நிம்மதி சிரிப்பொன்றை வெளியிட்டது.

ஆர்யனுக்கு எப்போதோ பழங்குடியினர் பற்றிப் படித்தது நினைவுக்கு வந்தது. இயற்கையோடு சேர்ந்து வாழும் அவர்கள், பயங்கரமான இடி மின்னலுக்கு மிகவும் பயப்படுவார்கள். அதுவும் மின்னலால் மரங்கள் ஏதாவது தீப்பற்றி எரிந்தால், அது தங்களின் கடவுளின் கோபத்தால் விளைந்த எதிர்வினை என்று நம்புவார்கள்… அவர்கள் வழக்கப்படி அது ஒரு கெடுதலான விஷயம்.. அதனாலேயே எதிரிகளாக எண்ணிய தங்களைக் கூட விட்டுவிட்டு ஓடுகிறார்கள் என்று புரிய...

வானத்தை அண்ணாந்து பார்த்த ஆர்யனுக்கு அந்த மின்னலே கடவுள் போல தோன்றியது. தன்னை மறந்து விழிகளை மூடித் நன்றியை மனப்பூர்வமாகக் கூறிவிட்டுத் தியாவைத் திரும்பிப் பார்த்தான். அவளும் நடந்ததை நம்ப மாட்டாதவளாக நெருப்பையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"கடவுள் இருக்கார்…தியா !" என்று முணுமுணுத்தவன், அவளை எழுப்ப முயற்சிக்க.. அவனின் தோள் பற்றி எழுந்தவள்.. காலை ஊன்ற முடியாமல் தடுமாற, அவள் நிலை புரிந்தவனாக சற்றும் தாமதிக்காது அவளைத் தூக்கித் தன தோளில் போட்டவன், கைக்கடிகாரத்தின் உதவியுடன் கொட்டும் மழையைக் கிழித்துக்கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினான்..

http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/



வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியர்ஸ் 016 கதையோட14ஆம் அதிகாரம் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. சென்ற பதிவுக்காக கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.
 
Last edited:

sivanayani

விஜயமலர்
1186911870

(15)

அதிகாலை ஐந்து மணிக்கே ரத்னவேல்பாண்டியனின் கைப்பேசி அடிக்கத் தூக்கம் கலைந்து விழித்தான். தன் கழுத்து வளைவில் முகம் பதித்து உறங்கிக்கொண்டிருந்த மனைவி தமிழரசியின் தலையை, அவளது உறக்கம் கலையாதவாறு தலையணைக்கு நகர்த்திவிட்டு எழுந்தவன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தால் விக்ரம் தான் அழைத்துக்கொண்டிருந்தான். .

எடுத்துக் காதில் பொருத்தியவன், அடுத்து கேட்ட செய்தியில் அதிர்ந்தவனாய், அவசரமாகக் கிடைத்த சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே வந்து வண்டியை எடுத்துக் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றான்.

அந்த இடம் பாழடைந்திருந்தது. அடிக்கடி வந்து போகும் இடம் போல … வேகமாக வந்தவன், எட்டடி உயரமான கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தால், அங்கே பத்துப் பேர் கட்டிவைக்கப்பட்டிருந்தனர்.

இவனைக் கண்டு சல்யூட் அடித்த விக்ரம்

“சார் இவங்க எல்லாரும் அழகரோட கூட்டாளிங்க. இவங்கள விசாரிச்சதில சில உண்மைகள் தெரிய வந்துச்சு…” என்றவாறு அவனிடம் ஒரு தாளைக் கொடுக்க, எடுத்துப் பார்த்தான். பார்க்கப் பார்க்க இவன் முகம் அதிர்ச்சியில் விரிந்துகொண்டே போனது.

“டாமிட்…” என்று முனங்கியவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
மீண்டும் படித்துப் பார்த்தான் பாண்டியன். இப்போது முதன் முறையாக மெல்லிய பயம் வந்து உட்கார்ந்து கொண்டது.

“சார் இதன் படி பார்த்தால் அத்தனை பயணிகளையும் இவர்கள்…” கூறி முடிக்கும் முன்பு தன் கரத்தை நீட்டித் தடுத்த இரத்னவேல்பாண்டியன்,

“நோ… நோ… அப்படி எதுவும் நடக்காது… நடக்கவும் கூடாது…” என்று கத்தியவன் திரும்பி அங்கே கட்டிவைக்கப்பட்டிருந்தவர்களை நெருங்கி அதில் ஒருவனின் முகத்தில் ஓங்கிக் குத்தினான்
“சே… ஏன்டா… ஏன்டா இப்படி இருக்கீங்க… மனித உயிர் உங்களுக்கு வெறும் பணமா போச்சா…” என்று கத்தியவன், விக்ரமைப் பார்த்து,

“உடனடியாக நாம முதலமைச்சரைப் பார்க்கனும் கிளம்புங்க…” என்றவன் வீட்டுக்குச் சென்றான். காவல்துறை ஆடைக்கு மாறியவன், விக்ரமையும் அழைத்துக் கொண்டு முதலமைச்சர் வீட்டிற்குச் சென்றான்.
ஏற்கெனவே இவன் வருவது தெரிந்ததால், யாரும் இவர்களைத் தடுக்கவில்லை.

உள்ளே சென்று விறைப்பாக நின்று சல்யூட் அடிக்க, காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் தன் கீழ்க்கண்ணால் இவர்களைப் பார்த்துவிட்டு,

“என்ன பாண்டியன், அதிகாலையிலேயே பார்க்க வந்திருக்கீங்க… எதுவும் அவசரமா? தொலைஞ்சு போன பயணிகளைப்பத்தின தகவல்கள் ஏதாவது கிடைச்சிருக்கா…?” என்று கேட்டவாறு எழுந்தவர்.. கரத்தைக் கழுவிவிட்டு இவர்களைப் பார்க்க,

“சார்… அதைப் பற்றித்தான் பேச வந்திருக்கோம்…” என்றவன் அவரிடம் தன் கரத்திலிருந்த ஃபைலை நீட்ட, அதைப் பார்த்த முதலமைச்சர், புரியாமல்

“என்ன இது?” என்றார் குழப்பத்துடன்.

“சார்… இதில இருக்கிற, ஆதீரநந்தன், ஆனந்தன், ஆரோன், விதார்த், அக்கண்யன்,தர்ஷன் இந்த ஆறு பேரும், தலா பத்து மில்லியன் டாலர்களுக்கு ஆயுட் காப்புறுதி எடுத்திருக்காங்க…”

"ம்.. அதை ஏன் என்கிட்ட சொல்லுறீங்க?”

“இந்த ஆறு பேரும் ஒரே கம்பெனிலதான் காப்புறுதி எடுத்திருக்காங்க…”

“அதுக்கும் இவங்க தொலைஞ்சதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று முதலமைச்சர் எரிச்சலுடன் கேட்க,

“இருக்கு சார்… இவங்க எடுத்துக் கொண்ட காப்புறுதிப் பணம் இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் ஆக்டிவ் ஆகும். இரண்டு வருடங்களுக்கு மாதம் ஒரு லட்சம் இந்திய ரூபாய்கள் கட்டிக்கிட்டு வரணும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவங்க தொழில் இடங்களுக்கோ இல்லை அவங்களுக்கோ ஏதாவது விபத்து நடந்தாலோ.., இல்லை இயற்கையாக இறப்பு நேர்ந்தாலோ பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குப் பெறுமதியான இந்திய ரூபாய்களை இவங்க நாமினீஸ்கு கிடைக்கும்… ஒரு வேளை, இரண்டு வருடங்களுக்கு முன்பே இவங்க இறந்துட்டாங்கன்னா… ஐந்து பைசா இவங்க குடும்பத்திற்குக் கொடுக்க வேண்டியதில்லை…” என்றதும் முதலமைச்சர் அதிர்ச்சியாக ரத்னவேல் பாண்டியனை ஏறிட்டு,

"என்ன பாண்டியன் இது புதுசா இருக்கு...?" என்று முதலமைச்சர் கேட்க,

"புதுசு தான் சார்... இதுவரை இவங்களை போல சர்வதேச அளவில் இவ்வளவு தொகைக்கு யாரும் காப்புறுதி எடுத்ததில்லை. உலகத்தில் எந்த இடத்திலும் தேவைப்படும்போது பணத்தை இவங்களால எடுத்துக்க முடியும். அதனாலதான் இவங்க காப்புறுதி ஆக்டிவ் ஆக 2 வருஷம் எடுத்திருக்கு சார்.

“அப்படின்னா… இது அந்த பணத்துக்காக நடந்த சதியா இருக்கும்னு நெனைக்கிறிங்களா…” என்றார்.

“யெஸ் சார்… சந்தேகமேயில்லை… இது சதிதான்… ஏன்னா… இன்னும் மூன்று வாரங்களில் காப்புறுதி ஆக்டிவாகுது… இது வரை மட்டும் இந்த ஆறு பேரும், ஃபோட்டின் மில்லியன் அன்ட் ஃபோர்ஹன்ட்ரட் தவுசன்ட் இந்திய ரூபாய்கள் அந்த ஆயுட் காப்புறுதி நிறுவனத்திற்குக் கட்டியிருக்காங்க. அது ஆக்டிவாகறதுக்கு முன்னே இவங்க இறந்திட்டா, இந்தப் பணம் முழுதும் கம்பெனிக்குப் போகும்… அதனால அந்தக் கப்பலை விபத்துக்குள்ளாக்கி அவங்களை கொல்றதுக்கு இந்த கம்பனி திட்டமிட்டிருக்கு சார்…”

“மை காட்… அப்போ இன்னும் எதுக்கு பாத்துட்டிருக்கீங்க… போங்க… போய் அந்தக் கம்பெனிய மூடுங்க… அதுக்கு யார் சொந்தக்காரனோ அவனை கைது செய்து தூக்கில போடுங்க…” என்று அவர் கர்ஜிக்க, முகம் மலர்ந்த ரத்னவேல் பாண்டியன்.

“நன்றி சார்… ஆனால் இதில ஒரு சிக்கல் இருக்கு…” என்று இழுக்க,

“சொல்லுங்க… என்ன சிக்கல் வந்தாலும் நான் பாத்துக்கிறேன்…” என்று உறுதியுடன் கூற,

“இந்த காப்புறுதி நிறுவனத்தை வச்சிருக்கிறதே… உங்க மனைவியோட தம்பிசார்…” என்று கூறியவாறு தன் தொப்பியை மாட்ட, அதிர்ச்சியுடன் தொப்பென்று இருக்கையில் அமர்ந்தார் முதலமைச்சர்.

“நீ… நீங்க என்ன சொல்றீங்க பாண்டியன்… எ… என் மனைவியோட தம்பியா…” என்று அதிர,

அதற்கான ஆதாரங்கள் எல்லாம் பக்காவா இருக்கு சார்… என்ன செய்யட்டும்… அது மட்டுமில்லாம அவருக்கு சென்ட்ரல் கவர்மென்ட் வரைக்கும் செல்வாக்கிருக்கு. தவிர இன்னும் கொஞ்ச நேரத்தில அவரோட கம்பனி செய்த ஊழலும், சதியும் நமக்கு தெரிஞ்சுடுச்சுன்னு அவருக்கு செய்தி போய்டும். எந்நேரமும் அவர் நாட்டை விட்டு தப்பிச்சிடலாம்.” என்று கூற அவனை நிமிர்ந்து பார்த்த முதலமைச்சரின் முகத்தில் உறுதி வந்து சேர்ந்தது.

“நியாயம் என்று வரும்போது… சொந்தம் பந்தம் எல்லாம் பார்க்கக் கூடாது… நான் சொல்றேன்… என் தம்பியா இருந்தாலும் சரி, என் மனைவி தம்பியா இருந்தாலும் சரி தப்புன்னா தப்புதான்… உடனே அவங்களை கைது செய்யுங்க… பாஸ்போர்ட்டை முடக்குங்க. தப்பிக்க எந்த வழியும் இல்லாத மாதிரி பண்ணுங்க.

தாங்கள் ஈடுபட்டிருக்கும் துறையில் சாதித்து.. நம் நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்களை தன்னோட சுயநலத்துக்காகக் கொல்ல முயன்றவன், இந்த நாட்டுக்கும் தேவையில்லை… என் வீட்டுக்கும் தேவையில்லை… போங்க… இனி ஒரு நொடியும் தாமதிக்கக் கூடாது… மாநிலத்தின் முதலமைச்சர் கட்டளையிடுறேன்… அவனை உடனடியா கைது செய்ங்க… தேவைப்பட்டா சுட்டு கொல்லுங்க…” என்று கர்ஜித்த அவரைப் பாத்து மனதில் மரியாதை எழ விரைப்பாக நின்று சல்யூட் அடித்த பாண்டியன்.. முதலமைச்சர் கட்டளையை நிறைவேற்ற காற்றினும் விரைவாக புறப்பட்டான்.
******************

தீவில்...
வைகறைப் பொழுதின் இளம் வெளிச்சம் எங்கும் பரவத் தொடங்க, இரவெல்லாம் பெய்த மழையில் தூக்கமின்றி அரை விழிப்பு நிலையில் இருந்த நம் நாயகர்களும், நாயகிகளும் எழுந்து ஒரு வித தவிப்புடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..

நேற்று இரவு பலத்த இடிச் சத்தமும், கடும் மழையும் பெய்தபோது, பதற்றத்துடன் எழுந்து மழைக்கு ஒடுங்கி.. கிடைத்த இடத்தில் சுருண்டு அமர்ந்த போது தான் ஆர்யனையும் தியாவையும் காணாதது அவர்களுக்கு உறைத்தது. எங்கே போனார்கள் என்கிற குழப்பத்துடன் கிடைத்த இடத்திலெல்லாம் தேடிப்பார்த்தவர்களுக்கு அந்த அடர்ந்த காட்டிற்குள் சென்று தேட அச்சமாக இருந்தது.

ஏற்கெனவே ஆர்யன் அங்கே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்திருந்தான். அதையும் மீறி எப்படிச் செல்வது? பட்ட துன்பங்கள் எல்லாம் போதாதென்று, அவன் எச்சரிக்கை மீறிச் சென்று, தேவையில்லாத வினையைக் கைதட்டி அழைக்கவும் அவர்கள் தயாராக இல்லை. எதுவாக இருந்தாலும் காலை ஒளி நன்கு பரவிய பின்பு தான் அவர்களைத் தேட முடியும் என்பதும் புரிய, சுத்தமாக கலைந்து போன தூக்கத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தனர் அனைவரும்.

அதுவும் திடீர் என்று அருகே விழுந்த இடியும், மின்னலின் ஒளியும், அனைவரையும் தூக்கிவாரிப் போடச் செய்தாலும், தொலைவில் திடீர் என்று ஒரு மரத்தில் தீ பற்றிக்கொள்ள, அனைவரின் முகத்திலும் ஈயாடவில்லை.

காட்டுத்தீ பற்றி அறியாதவர்களா அவர்கள். ஒரு மரத்தில் பற்றிக்கொண்டால், அது வஞ்சகம் பார்க்காது அனைத்து இடத்தையும் பற்றிக்கொள்ளுமே… கடவுளே… அத் தீயிலிருந்து எப்படித் தப்பப் போகிறார்கள். ஒரு வேளை ஆர்யனும் தியாவும் காட்டிற்குள் சென்றிருந்தால்…? பயத்தில் பெய்த மழையையும் பொருட்படுத்தாது பற்றி எரியத் தொடங்கிய தீயையே.. கையறு நிலையில் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.

ஆர்யன் அவர்களுக்குப் பெரிய தூண்போல, கப்பலும் அவன்தான் துடுப்பும் அவன்தான்… அவனில்லையென்றால், நிச்சயமாக அவர்களால் அந்தத் தீவை விட்டுச் செல்ல முடியாது… ஏனோ அந்த எரியும் நெருப்பு அவர்களுக்குக் கடைசி நேர உயிர்ப்போராட்டமாகத் தோன்ற, ஒருவரின் கரத்தை ஒருவர் பற்றியவாறு அந்த நெருப்பையே பார்த்துக்கொண்டிருந்தனர். அது நீண்ட நாள் பசியில் கிடந்தது போலக் கைக்குக் கிடைத்ததையெல்லாம் வாய்க்குள் போட்டு மென்று முழுங்கிக்கொண்டு இவர்களை நோக்கி வருவது போலத் தோன்றியது.

நல்லவேளை இவர்கள் இருப்பது கடற்கரை என்பதால் உயிருக்கு சேதாரமில்லை. ஆனால் அந்தத் தீவு… கண்ணிமைக்கும் நொடியில் சாம்பலாகப் போய்விடுமே. அந்த நேரம், கண்ணுக்குத் தெரியாத கடவுள் கூட, கண்ணுக்குத் தெரிந்தான். அவர்களையும் மீறி, அந்தத் தீவை காக்கும் படி இறைவனிடம் மன்றாட அது அவன் செவியில் விழுந்ததோ, திடீர் என்று மழை ஆவேசமாய் பொழியத் தொடங்கி சீறிட்டு எழுந்த நெருப்புடன் யுத்தம் செய்யத் தொடங்கியது.

இயற்கையின் குழந்தைகள்.. இருவருக்குமான போராட்டம் அது. யார் வெல்வர் யார் தோற்பர் என்று புரியாத தருணம் அது… போதாதற்கு மிகக் கடுமையாக அரை மணிநேரம் பெய்த மழை எங்கோயிருந்த ஏரியை நிறைத்திருக்கவேண்டும். அது வேறு பொங்கிப் ப்ரவாகித்து இவர்கள் பக்கமாகச் சீறியடித்துக் கடலை நோக்கி வரத் தொடங்கியது.

அதைக் கண்ட, ப்ரவீன்,

“எல்லாரும் அந்த மேட்டுப் பக்கமா ஒதுங்கி நில்லுங்க…" என்று கை காட்டி கத்த, உடனே அங்கிருந்த சிலர், அழகரையும் தூக்கிக்கொண்டு தண்ணீர் வராத பக்கமாக ஓட, அதற்குள் வெள்ளத்தின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.

இயற்கைக்கு இத்தனை சீற்றம் வருமா என்ன? சற்று முன் வெறும் மணலாக இருந்த இடம், மழைத் தண்ணீரால் ஆறோடும் இடமாகி, ஓரடி இரண்டடி நான்கடி என்கிற அகலத்துடன் பெருகத் தொடங்கியது. கூடவே பேயாக அடித்த காற்றுக்கு மரங்கள் வேறு முறிந்துவிடுவோம் என்பது போல அங்கும் இங்கும் பலமாக ஆடத் தொடங்கின. அனைவரும் சேர்ந்து சிரமப்பட்டு செய்த தோணிகள் அந்த வெள்ளத்தோடு அடித்துச் செல்லத் தொடங்க அனைவரும் பதறிப்போனார்கள். நீண்ட நெடிய கடின உழைப்பின் பலன்கள்.. கண்ணிமைக்கும் நொடியில் காணாமல் போவதா.?!

பதறிய ஆண்கள் அனைவரும் துடித்துப் பதைத்து தோணியின் அருகே போக முயல, வெள்ளத்தின் வேகம் கூடியது. கூடவே கடல் வேறு பொங்கத் தொடங்கியது. அலைகளின் குதியாட்டம், வெள்ளம் இழுத்துச் சென்ற தோணியைக் கைப்பற்ற முயலுவது போலத் தன் கரங்களை நீட்டி நீட்டித் தன் பக்கமாக இழுக்கத் தொடங்க, வெள்ளத்தின் வேகத்திற்கும், அலையின் அசுரத்தனமான வேகத்திற்கும் சாதாரண மனிதர்களால் ஈடு கொடுக்க முடியுமா என்ன?

அதைக் காக்கும் பொருட்டு, ஜெயவர்மன் அங்கிருந்த பாறையொன்றில் ஏறி, ஒரு தோணியைக் கைப்பற்ற முயலும் வேளையில் .. மற்றொரு தோணியும் வெள்ளத்தோடு செல்லத் தொடங்க, அதை நோக்கிப் பாய்ந்தான் ஜெயவர்மன். அவனின் கரத்தில் தோணியின் கட்டை ஒன்று தட்டுப்பட, இறுகப் பற்றியவன்.. அதிகரித்த வெள்ள வேகத்தில் காலூன்றி நிற்க முடியாமல்.. தடுமாறினான்.

ஜெயவர்மன் என்ன செய்ய விளைகிறான் என்பதைப் புரிந்துகொண்ட சூரஜ்.. உடனே பாய்ந்து அவனின் கரத்தை அழுந்தப் பற்றிக்கொண்டான்.

நிமிர்ந்து பார்த்த ஜெயவர்மனைக் கண்டு தன் விழிகளை மூடி நான் உதவுகிறேன் என்பதுபோலத் தலையை ஆட்டிவிட்டுத் தோணியை கடலிலிருந்து தரை நோக்கி இழுக்க முயல, தன் நன்றியைப் பார்வையாலேயே அவசரமாகத் தெரிவித்து விட்டு.. தோணியை அழுத்தமாகப் பற்றி சூரஜூடன் சேர்ந்து இழுக்கத் தொடங்கினான். ஆனால் கடலின் அலைகளின் வேகத்துடன் சேர்ந்து இழுபட, இருவருமே வெள்ளத்திற்குள் விழும் நிலையில், சூரஜின் கரத்தை இன்னொரு கரம் அழுத்தமாகப் பற்றிக்கொண்டது. திரும்பிப் பார்க்க, ஆரோன் நின்றிருந்தான்.

“ஹோல்ட் இட்…கைய்ஸ்” என்றவாறு இறுகப் பற்றிக்கொள்ள, மூன்று ஆண்களின் பலத்துடனும்… சரிந்த ஜெயவர்மன்.. எப்படியோ தோணியைப் பற்றி இழுக்க முயன்ற விநாடி, கை வழுக்கிவிட, தோணி அவன் பிடியை விட்டு நழுவத் தொடங்கியது. கூடவே சூரஜின் காலை பாறையொன்று வழுக்கிவிட கரங்களின் தொடர்பு அறுபட்டவன் அந்த வெள்ளத்திற்குள் விழுந்து அதன் வேகத்திற்கு எதிர்நீச்சல் போட முடியாமல் கடலோடு கலக்க முயன்ற விநாடி, அவனைத் தன்னுள் இழுத்துப் புதைக்க முயன்றதாய் பெரிய அலையொன்று பாய்ந்து வர, அதைக் கண்ட ஆரோன் சற்றும் யோசிக்காமல்,

“சூரஜ்…” என்று அலறியவனாகப் பாய்ந்து தண்ணீருக்குள் விழுந்து அவன் காலைப் பற்றிக்கொண்டு அங்கிருந்த பாறையை ஒரு கரத்தால் இறுகப் பற்றி அணைத்தவாறு; இருவரையும் இழுக்க முயன்ற கொந்தளிக்கும் வெள்ளத்திற்குப் போட்டியாகத் தன் பலம் முழுவதையும் திரட்டி எதிர்த்து நிற்க, அதைக் கண்ட மற்ற ஆண்கள் ஓடிப்போய் சேகரித்து வைத்திருந்த கொடிகளை எடுத்து வந்து ஒன்றை ஆரோனை நோக்கியும் மற்றையதை சூரஜையும் நோக்கி எறிய, இருவருமே அதை இறுகப் பற்றிக்கொண்ட விநாடி, அனைவரின் பலத்துடனும் இருவரும் கரைக்கு இழுக்கப்பட்டனர்.

சற்று நேரம் எடுத்தது அனைவருக்கும் ஓரளவு சுய நினைக்கு வருவதற்கு. கொஞ்சம் தாமதித்திருந்தாலும் சூரஜ் கடலோடு சென்றிருப்பான். முன் பகையைத் தூக்கி எறிந்துவிட்டு.. தன்னைக் காக்க அவன் உயிரைக் கொடுக்க முயன்றானே ஆரோன்… எண்ணும்போதே உள்ளம் சிலிர்த்தது சூரஜிற்கு. நன்றிப்பெருக்குடன் ஆரோனை நோக்கிப் பாய்ந்தவன் அவனை இறுகக் கட்டிக்கொண்டு,

“ரொம்ப நன்றி ஆரோன்… ரொம்ப நன்றி…” என்றபோது அவனுடைய குரல் ஏனோ கம்மிப்போயிருந்தது. .

“ஹே… மை டியர் எனிமி..… ஸ்டாப் இட்… உனக்கேதாச்சும் நடந்தா எனக்கு எதிரியே இல்லாம போய்டுவானே.. அதுக்காக தான் உன்னை காப்பாத்தினேன்... அன்பெல்லாம் இல்லப்பா... இது பக்கா சுயநலம்.. …” என்று அவன் கிண்டலுடன் கூற, மெல்லியதாக சிரித்த சூரஜ் ஓங்கி அவனுடைய வயிற்றில் குத்திவிட்டு,

“ஓ காத்திரு மச்சான்… நம்ம இடத்திற்குப் போன அப்புறம் இந்த சூரஜின் இன்னொரு முகத்தைப் பார்ப்பாய்… இனி ஒவ்வொரு டீலிலும் உன்னை ஜெயிக்கிறேனா இல்லையா பார்…” என்று அவன் தோளில் கரம் போட்டவாறு கூற,

“யாரு… நீ… என்னை ஜெயிக்கப் போகிறாய்… பார்க்கலாம் அதையும்…” என்று கிண்டலுடன் கூறிவிட்டுத் திரும்பிப் பார்க்க, இப்போது வெள்ளத்தின் வேகம் படு பயங்கரமாக இருந்தது.

இதற்குள் உயிரைப் பணயம் வைத்தும் தோணிகளைக் காப்பாற்ற முடியாது.. பெரும் வலியுடன் கடலுக்குள் இழுபட்டுச் சென்றுகொண்டிருந்த தோணியையே அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க, மண்ணின் அரிப்பினாலும் பலமாக வீசிய காற்றின் வேகத்திலும் பெரிய தென்னை மரம் ஒன்று இவர்கள் பக்கமாக விழத் தொடங்கியது.

கண்ணிமைக்கும் நொடியில் வீழ்ந்த அதனைக் கண்ணுற்று தம்மைக் காக்கும் பொருட்டு, அனைவரும் விலகிவிட.. வெள்ளதினின்று மீண்டு வந்து கொண்டிருந்த ஜெயவர்மனின் காலை கடல் மணல் வாரிவிட, சமாளிக்க முயன்று முடியாமல் பின்புறமாகச் சரிந்தவனின் மேல் அந்த பெரிய மரம் சரிந்து விழுந்தது. சில நொடிகளில் நடந்த அசம்பாவிதம் அனைவரையும் உறையச் செய்ய.. உணர்வு வந்த அடுத்த நொடி.. பதறியடித்தவாறு ஜெயவர்மனை நோக்கி ஓடினர் அனைவரும்.

அங்கே ஜெயவர்மன் மல்லாக்க கிடக்க.. அவனுடைய காலுக்கு மேல் விழுந்திருந்த மரத்தைக் கண்டு, ஒரு கணம் அனைவரும் ஆடிப்போயினர். ஓரளவு சுதாரித்தவர்கள்,

“ஜெய்… வர்மா..” என்று பதறியபடி.. அவனை வெளியே எடுக்க முயல, ராட்சஷனின் கை போல் நீண்டு கிடந்த மரத்தை அவர்களால் அசைக்கவே முடியவில்லை.

ஆண்கள் அனைவரும் இணைந்து பலம் காட்டி மரத்தைத் தூக்க முயல.. அது அசைந்து கொடுப்பேனா பார் என்றது. ஜெயவர்மனோ பல்லைக் கடித்து வலியை அடக்க முயன்று, ஒரு கட்டத்திற்கு மேல், முடியாமல், மெல்லியதாக, மிக மெல்லியதாக “ம்ஹா…” என்று கூற, அந்த ஒற்றை ஒலியே அவனுடைய வலியின் அளவை அப்பட்டமாக எடுத்துக் காட்ட அனைவரின் இதயங்களும் ஒரு கணம் துடிப்பை நிறுத்திக்கொண்டது.

வாழ்க்கையில் அடிபடும்போது தானே உறவுகளினதும் நட்பினதும் பலமும் தேவையும் நமக்குப் புரிகிறது. அவனுடைய சிறு முனகலே அவர்களை உந்தித் தள்ள, சற்றும் யோசிக்காமல் அனைவரும் சேர்ந்து நரம்பு புடைக்கத் தம் பலம் முழுவதையும் திரட்டி மரத்தைத் தூக்க, இரண்டு இஞ்ச் அளவு மேலே உயர்ந்ததும்.. ஜெயவர்மனின் பின்னால் நின்றிருந்த ப்ருத்வி, வேகமாக செயல்பட்டு ஜெயவர்மனின் இரு கைக்கூட்டிற்குள் கைகொடுத்து இழுக்க, முழுதாக வெளியே வந்தான் ஜெயவர்மன்..

வெளியே இழுத்தபோதே வலியினால் ஏற்பட்ட அவனின் முனங்கல் அனைவரின் இதயத்தையும் பிசைய, தென்னை மரத்தை அப்படியே போட்டுவிட்டு வேகமாக வந்து ஜெயவர்மனை தோளணைத்து அருகில் அமர்ந்து நாங்கள் இருக்கிறோம் என்று ஆற்றுப் படுத்த முனைந்தனர்.

காலைத் தடவி பரிசோதித்துப் பார்த்த ப்ருத்வியின் புருவங்கள் சுழித்தன. விழுந்த வேகத்தில் வலது காலில் பலத்த அடி பட்டிருந்தது. எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை கால் திரும்பியிருந்த நிலையையும் கணுக்காலின் வீக்கத்தையும் வைத்தே கண்டுகொண்டான் ப்ருத்வி. . அந்த கடும் வலியை ஜெயவர்மன் தாங்கிய விதத்தைக் கண்டு ப்ருத்வி அதிர்ந்துதான் போனான்.

ப்ருத்வியின் முகத்தைக் கண்ட ஜெயவர்மனுக்குத் தன் நிலை புரிந்து போனது. எதையோ எண்ணி கண்களை இறுக மூடித் தன் பற்களைக் கடித்தவன், சில நொடிகளில் திடம் பெற்று.. விழி திறந்து.. ப்ருத்வியைப் பார்த்து,

"டோன்ட் வொரி ப்ருத்வி… அடுத்து என்ன பண்ணலாம்னு பாருங்க. " என்று கூற.. உடனே எழுந்த பிருத்வி ஓடிச் சென்று நான்கைந்து சிறிய ஆனால் உறுதியான மூங்கில்களை எடுத்து வந்து, ஜெயவர்மனின் காலில் வைத்துக் கொடிகளால் இறுகக் கட்டிவிட்டவாறு,

“நடக்கவோ,நகரவோ முயற்சிக்காதீங்க ஜெய்..” என்கிற அறிவுறுத்தலுடன் விலக, வலியில் முகம் கசங்க அப்படியே அமர்ந்திருந்தான் ஜெயவர்மன்..

அவனின் நிலை கண்ட அனைவருக்கும் பெரும் கலக்கம் சூழ்ந்தது. மழை வேறு கொட்டிக் கொண்டே இருக்க.. இந்த தீவை விட்டு செல்லும் முன் என்னென்ன நேரப் போகிறதோ.. என்கிற திகிலில் இதயம் பயங்கரமாகத் துடிக்க, படபடவென பேசும் பெண்களும் பேசா மடந்தைகளாய்மாறி.. அமைதியாய்க் கிடைத்த இடங்களில் ஒடுங்கி அமர.. மழை சிறிது சிறிதாக குறையத் தொடங்கியது.. எனினும் .. ஆர்ப்பரித்த கடலும்.. அதிகரித்த பூச்சிகளின் ஒலியும்.. அனைவருக்கும் ஒரு வித கிலியைக் கொடுக்க.... அவர்களின் கண்கள் உறங்க மறுத்தன.

சிறு சத்தமும்.. எதோ பெரும் இடியோசை போல அவர்களுக்குக் கேட்டு நெஞ்சத்தை அதிர செய்தது

அதுவரை அழகாய் தெரிந்த தீவு, இப்போது உயிர் பலி கேட்கும் இடமாய் அவர்கள் கண்களுக்குத் தோன்ற மிக நீண்ட இரவாகிப் போனது அவர்களுக்கு… விடியல் அவர்களின் அச்சங்களுக்கு விடை
தருமா..


http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/

வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியர்ஸ் 016 கதையோட15ஆம் அதிகாரம் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. சென்ற பதிவுக்காக கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.
 
Last edited:

sivanayani

விஜயமலர்

11909


(16)

மழை விட்டிருந்தது…மேகமின்றி இருந்த வானம் வெளுக்கத் தொடங்கியிருந்த அதிகாலை வேளை. முன்தினம் பட்ட அனுபவத்தின் பாதிப்பு சற்றும் குறையாது..இருள் சூழ்ந்த முகத்துடன்.. அவரவர் இருந்த நிலையிலேயே மாறாமல்.. எழக் கூட சக்தியற்றவர்களாக அமர்ந்திருந்தனர் அனைவரும்.

இரவு முழுவதும் திரும்பி வராத, ஆர்யனும் தியாவும் எங்கே போனார்கள்.?! நேற்றைய பேய் மழையில், என்ன ஆபத்தில் மாட்டிக் கொண்டார்களோ.!? என்கிற யோசனை வேறு அவர்களை அதிகம் சோர்வுக்கு உள்ளாக்கியது.

கெட்டதிலும் நல்லதாக.. நேற்றுப் பெய்த பெரு மழையில்.. இடியினால் உருவாக்கப்பட்டு பரவிய தீ அணைந்து விட்டிருந்தது. இரவில் சீறிப்பாய்ந்த மழை வெள்ளத்தின் அளவும் மட்டுப்பட்டிருந்தது. ஆனாலும் நீர் இன்னும் ஊற்றாகக் பெருகி கடலை நோக்கிச் சென்றுகொண்டுதான் இருந்தது.

அதையே வெறித்துப் பார்த்தவர்களுக்கு இன்னும் இரவில் நடந்தவற்றை நம்பவே முடியவில்லை. அதுவும் நேற்றைய சம்பவத்தில் ஜெயவர்மன், ஆரோன், சூரஜின் போராட்டங்கள் நினைக்கும்போதே உடல் சிலிர்த்தது. ஜெயவர்மன்.. பெரும் வலியை பிறருக்கு காட்டாமல் அவன் தனக்குள் புதைத்துக்கொள்ளும் பாங்கு கண்டு, அவன் மேல் புதிதாக ஒரு மரியாதையே தோன்றியிருந்தது.. முறிவு ஏற்பட்டிருந்த காலினை சற்றும் அசைக்காமல் அவனைத் தூக்கி , ஈரம் அதிகம் இல்லாத ஒரு மேடான இடத்தில் அமர வைத்த பின்னரும், தாம் கடந்து வந்த ஆபத்துக்களில் கலங்கியவராய் படபடப்பு சற்றும்குறையாமல் இருந்தனர் .

இந்த நிலையில் ஈர உடலும்… இரவின் குளிரும்.. அதனால் ஏற்பட்ட நடுக்கம் எதுவும் உறைக்கவில்லை. அனைவரின் உள்ளத்திலும் அதுவரையிருந்த தைரியம் மறைந்துபோய், ஒரு வித விரக்தியும், இயலாமையும் குடிகொண்டன.. முடியாதோ என அஞ்சிய நீண்ட இரவும் முடிந்து போய், இதோ ஆரஞ்சு நிறப் பந்தின் நுனி அடிவானில் தெரிந்த போதும் யாருக்கும் எழுந்து கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை.

அடுத்து காலமும் நேரமும் அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறதோ என்கிற ஒரு வித நடுக்கத்துடன் விரியும் ஒளியினையே பார்த்தவாறு இருந்த வேளையில் , மயங்கிய தியாவைக் கையில் ஏந்தியவாறு பெரும் சோர்வுடனும் தள்ளாட்டத்துடனும் ஆர்யன் வந்துகொண்டிருந்தான்.

அவனை முதலில் கண்ட ஷாலினி தன்னை மறந்து,

“ஆர்யன்…” என்று குதூகலிக்க அனைவரும் நம்ப முடியா தன்மையுடன் திரும்பிப் பார்த்தனர். அவர்கள் இருவரின் நிலை கண்டு அனைவரும் திகைக்க.. ஆர்யன் அவர்களின் பக்கம் திரும்பாமல் பெண்கள் படுப்பதற்காக தயார் செய்யப் பட்டிருந்த மறைப்பு பகுதியை பார்த்தான். அனைத்தும் சிதைந்திருந்தன. நேற்றைய அடைமழையிலும், பேயாய் வீசிய காற்றிலும் அனைத்தும் சிதிலடைந்திருக்க வேண்டும் என்பது புரிந்தது.

இப்போதைக்கு எதையும் சிந்திக்கும் நிலையில் அவனில்லை. எனவே ஓரமாக அவளைப் படுக்க வைக்க, தியாவின் நிலையறிந்து ப்ருத்வி முதலுதவிப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடி வந்து பரிசோதனை செய்தான். நல்லவேளை ஆங்காங்கே சிராய்ப்புக்கள் தான். எலும்பு முறிவு எதுவும் இருக்கவில்லை. நிம்மதியுடன், காயங்களுக்கு மருந்திட்டு ஆர்யனைப் பார்க்க, தொப்பென்று தரையில் அமர்ந்தவன், சோர்வுடன் தலையை அங்கும் இங்கும் அசைத்து நெட்டி முறித்தவனாக,

“ஐ ஆம் ஓக்கே டாக்டர்… ஐ நீட் சம் ரெஸ்ட்…” என்று கூறிவிட்டு, அங்கிருந்தவர்களை ஒரு கணம் பார்த்தான். காலில் மூங்கில்கள் வைத்துக் கட்டியிருந்த ஜெயவர்மனைக் கண்டவன், புருவம் நெறிய..

“ஜெயவர்மன் உங்களுக்கு என்னாச்சு…” என்றான் தன் வலி மறந்தவனாக. ப்ரவீன் நடந்ததைக் கூற,

“ஓ மை காட்… ” என்று பெருமூச்சு விட்டவன்,

"ரொம்ப பலமான அடியா டாக்டர்...?" என்று வருத்தத்துடன் கேட்க,

முழங்காலுக்கும் கணுக்காலுக்கு இடைப்பட்ட பகுதியைச் சுட்டிக் காட்டிய ஜெயவர்மன் "இங்கதான் அடிபட்டிருக்கு... டாக்டர் மூங்கில் கொண்டு பலமான கட்டு போட்டிருக்காரு... இந்த காலிலினை ஊன்றாம எனிக்கு நடக்க முடியும்னு நினைக்கிறேன் .. ஒரு பலமான தடி இருந்தா மதி… இங்கன களிமண் இருந்தா அதை குழைத்து இறுக்கமா இதில் மாவுக்கட்டு போல போட்டிருக்கலாம்... ஆனால் இது மணல் பிரதேசமாச்சே... " என்று ஜெயவர்மன் கூற சற்று நேரம் அமைதி காத்தான் ஆர்யன்.

அதன் பின் அங்கிருந்தவர்களை ஒரு கணம் ஆழப் பார்த்துவிட்டு,

“நாம இங்கிருந்து சீக்கிரமாகக் கிளம்பனும்… இந்தத் தீவில் நாம எதிர்பார்க்கிற எதுவும்.. முக்கியமா பாதுகாப்பு.. நிச்சயமா கிடைக்காது…” என்றவன், தாங்கள் கட்டிய தோணிகளைத் தேடினான். காணவில்லை. புருவம் சுருங்க நிமிர்ந்து தர்ஷனைப் பார்க்க,

“நேற்று மழை வெள்ளம் தோணிகள அடிச்சுகிட்டுப் போச்சு… அதை கைப்பற்ற தான் எவ்வளவோ முயற்சி செய்தோம்..…அதிலதான் ஜெய்க்கு அடிபட்டது.. சூரஜை வெள்ளம் கடலுக்குள் இழுத்துப் போகப் பார்த்தது… எவ்வளவோ போராடினோம்.. ப்ச் முடியல..” என்று வருத்தத்துடன் சொல்ல,

“ஓ காட்…” என்றவாறு தலையைப் பற்றிக்கொண்டு தரையில் சரிந்தான் ஆர்யன். மீண்டும் மூங்கில் அறுத்துத் தோணி கட்டுவதை நினைத்தாலே நெஞ்சுக் கூடு காலியானது போலத் தோன்றியது.

நிச்சயமாக இந்தத் தீவில் அதிக நாள் இருக்க முடியாது என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அந்த பழங்குடியினர்களுக்கு புதிய மனிதர்களின் வரவு தெரிந்து விட்டது மட்டுமன்றி அவர்களுக்கு வெளியாட்களை சிறிதும் பிடிக்கவில்லை என்பது திட்டவட்டமாகப் புரிந்து போனது. எந்த நேரமும் அவர்களிடமிருந்து எதிர்ப்பு தாக்குதல் வரலாம்.

இந்தப் பழங்குடிகள் எந்த வகையினர் என்று கூடத் தெரியவில்லை. ஆனால் அன்று பார்த்த எலும்புக்கூடுகள், அவர்களின் கொடூர குணத்தைத் திட்டவட்டமாகத் தெரியப்படுத்தியதால், நிச்சயமாக அவர்களுக்குப் பிடிக்காததை அழித்துவிடுவார்கள் என்று புரிந்தது. தங்கள் குடியை யார் குலைத்தாலும் அவர்களைக் கொல்லாமல் விட மாட்டார்கள். அவர்களாகக் கோபம் கொண்டு இவர்களைத் தேடி வருவதற்கு முன்பு எப்படியாவது தப்பி விட வேண்டும்… எப்படி…?' என்று எண்ணியவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. அவர்கள் நினைத்தது போல அவர்களைக் காப்பாற்ற யாரும் வருவார்களா என்று கூடத் தெரியவில்லை.

யோசனையுடன் கண்மூடிப் படுத்துக் கிடந்தவனுக்கு இனியும் அங்கிருப்பவர்களிடம் உண்மையை மறைக்க முடியாது என்பது தெரிந்து போனது. சற்று நேரம் அப்படியே கிடந்தவன் பின் மெதுவாக எழுந்தமர்ந்தான். ஒவ்வொருவரையும் ஆழமாகப் பார்த்தவன்,

“நான் உங்க கிட்ட ஒரு உண்மையை சொல்லனும்…” என்றவன், தான் கண்ட எலும்பு கூடுகள் பற்றியும், முன்னிரவு அவனும் தியாவும் அத்தீவின் பழங்குடியினரிடம் சிக்கிக் கொள்ள இருந்தது பற்றியும், ஒன்று விடாமல் கூற, அதைக் கேட்டதும், திகம்பரியும். மீராவும், நாச்சியும், ஜனனியும் பயத்துடன் தியாவை அணைத்துக் கொண்டனர்,

“அப்படின்னா நாம இங்கிருக்கிறது அவங்களுக்குத் தெரியுமா?” என்று கலை கேட்க, “அப்போ நாம தீவுக்குள் எங்குமே போக முடியாதா?” என்று பயத்துடன் ஜனனி கேட்டாள்.

“எனக்கு தெரிந்து, நாம் அவர்களின் எல்லைக்குள் போனால் நம்மை எதிரிகளாக எண்ணி தாக்குவார்கள் என்று நினைக்கிறேன்.. பெட்டர்… இங்கேயே கரைக்கு அருகில் இருப்பதுதான்… ஆனா மழை பெய்தா வெள்ளம் வர்றதுனாலே இந்த இடம் வேண்டாம்.. சற்றுத் தள்ளி போய் இருக்கலாம்..” என்ற ஆரியனிடம்

“அப்படின்னா நாம தீவில இருந்து கிளம்ப தோணி திரும்பக் கட்டனும்ல…” என்று பிரவீன் கூற,

“யெஸ் பிரவீன்… கட்டியே ஆகனும்… இத்தனை பேர் இருக்கோம்… கட்டிட மாட்டோமா?” என்று கேட்க,

"நாம கடற்கரை விட்டுப் போனா நம்மள தேடி இங்க யாராவது வந்தா அவங்களுக்கு நாம இருக்கற இடம் எப்படி தெரியும்! " என்றான் ராயர்.

"நாம இப்ப போட்டருக்க மூனு கேம்ப் ஃபயருக்கு உள்ள இடைவெளி நூறு அடி.. இதுல கொஞ்சம் பச்சை விறக போட்டு இன்னும் கொஞ்சம் புகைய வைச்சா அது ஒரு இன்டர் நேஷனல் ரெஸ்க்யூ சிம்பல் தான்" என்ற தியாவை ஆமோதித்த ஆர்யன்

"‘சேவ் அவர் சோல்… என்பதைக் குறிக்கும் எஸ் ஓ எஸ் எனும் மூன்று எழுத்துகளை ஹெலிகாப்டரில் இருந்து பார்த்தாலும் தெரியும்படி கற்கள், கட்டைகளை கொண்டு எழுதனும். பிறகு நாம் செல்லும் திசையை குறிக்க அம்புகுறி இட்டோம்னா நம்மைத் தேடி வர்றவங்களுக்கு நாம போன திசை தெரியும்…” என்றதும்,

“பெஸ்ட் ஐடியா…” என்ற க்ருஷ்ணாவின் விழிகள் முன்தினம் விழுந்திருந்த தென்னைமரத்திலிருந்த செவ்விளநீர் குலைகள் கண்ணில் பட அவன் முகம் மலர்ந்தது.

"கற்கள்.. கட்டைகளுடன், இதோ, இந்த செவ்விளநீர் காய்களையும் பயன்படுத்தலாம். அதன் ஆரஞ்சு நிறம் எளிதில் கண்களை கவரும் " என்ற கிருஷ்ணனின் யோசனைப்படி எஸ் ஓ எஸ் என்ற எழுத்துகளை கிடைத்த தடிகளையும், செவ்விளனிகளையும் கற்களையும் வைத்துப் பெண்கள் பெரிதாக எழுதத் தொடங்கினர். ஆண்கள் மீண்டும் ஒரு தோணியைக் கட்டத் தொடங்கினர்.

அப்போது கட்டைகள் சுமந்தவாறு வந்த மீராவின் காலில் ஏதோ ஒன்று தட்டுப்பட, பொதேர் என்று தரையில் விழுந்தாள், தன்னை மறந்து “ஆ…” என்று கத்த, அவளுடைய குரல் கேட்டுப் பதறியடித்து ஓடிவந்தான் விதார்த்.. அவளின் அருகே மண்டியிட்டு அமர்ந்து மீரா எழ உதவியவாறு..

“ஆர் யு ஓக்கே கண்ணம்மா…” என்று பதைப்புடன் கேட்க, ஆமென்று தலையசைத்தவள், தன் காலை இடறிவிட்டது என்னவென்று குனிந்து பார்த்தாள். அது ஒரு கரிய நிறப் பெட்டி. நேற்றைய கடும் மழையிலும் காற்றிலும் உருண்டு வந்து விழுந்திருக்க வேண்டும். யோசனையுடன் தன் கணவனின் பிடியிலிருந்து தன் கையை விடுவித்தவள், பெட்டியை எடுத்துப் பார்த்தாள். கிட்டத்தட்ட ஓரடி நீளம், ஓரடி அகலமான பெட்டி.

புருவம் சுழிக்க, "ஆனந்தன் அண்ணா? இது உங்களோடது தானே?" என்றதும், அது வரை மரத்தின் மீது சாய்வாக அமர்ந்தவாறு எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தன் திரும்பிப் பார்த்தான். மீராவின் கரத்திலிருந்த அந்தக் கரிய பெட்டியைக் கண்டதும் அவனுடைய முகத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி.. அதுவரையிருந்த சோர்வை உதறித் தள்ளியவன், பாய்ந்து வந்து அதைத் தன் கரங்களில் எடுத்துக்கொண்டான்.

“ஓ மை காட்… இது.. எப்படி .. இங்கே.." என்று குதூகலித்தவன், அவசரமாக அதன் பூட்டில் சில எண்களை அழுத்தவும் படக் என்று திறந்து கொண்டது அந்தப் பெட்டி. திறந்தவன் உள்ளே பார்க்க ஒரு துளி நீரும் உள் செல்லாது, எந்த வித சேதாரமும் இன்றி ஐ பாட் போல 8" 6' அங்குலம் அளவில் ஒரு ஒளித்திரை இருந்தது.. அதைச் சுற்றி இன்னதென்று வரையறுக்க முடியாத வகையில் சில்வர் நிறத்திலும் நீல நிறத்திலும் சில உதிரிப் பாகங்கள் கிடக்க,

“என்ன ஆனந்தன் இது…?” என்றான் விதார்த். ஆனந்தனின் உற்சாகம் கண்ட அனைவரும் பெட்டிக்குள் இருக்கும் பொருளைக் காண ஆவலுடன் ஒன்று கூட,

“இது…” என்றவன் அவசரமாகத் தன் ஷேர்ட்டைக் கழற்றி அதைத் தரையில் விரித்து ஒவ்வொரு உதிரிப்பாகங்களையும் கவனமாக வெளியே எடுத்து, தன் சட்டைக்கு மேல் வைத்தவன், தன் முன்னால் ஆவலாக நின்றிருந்தவர்களைப் பார்த்தவாறு,

“சொன்னேனே… நான் ஒரு ரோபோ கண்டு பிடித்திருக்கிறேன் என்று…” என்றவன், அதை ஒவ்வொன்றாக இணைத்தவாறே, “இந்த ரோபோ சாட்டிலைட் கனெக்டர்… எந்த இடத்தில் இருந்தாலும் இதனால் சட்டிலைட்டுடன் தொடர்பு கொள்ள முடியும்… இதில் நாம என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்… ஆகாயத்தில கூட பறக்க விடலாம்… பட் இத கன்ட்ரோல் பண்ற லேப்டாப் கப்பலோட மூழ்கிடுச்சு… சோ… நம்மால அதிகமா இதை வச்சு ஒன்னும் செய்ய முடியாது… பட்… சட்டிலைட்டுக்கு ஹெல்ப் என்கிற சிம்பலுடன் ரெட் அலர்ட் என்னோட லேப் சிஸ்டத்திற்கு அனுப்ப முடியும்…” என்றவன் பரபரப்புடன் அனைத்தையும் ஒன்றிணைத்தவாறே,

“அநேகாத்மனுக்கு கிஃப்டா தர வச்சிருந்தேன், இப்போ… இதுதான் நமக்கு உதவப்போகுது…” என்றான் பெரும் குதூகலத்துடன்.

அதுவரை பெரும் சோர்விலிருந்த ஆர்யன்,

“அப்படியானால் இதன் மூலம் செய்தி அனுப்பி.. நமக்கு உதவி கிடைக்கும்ல…” என்றான் கண்கள் மின்ன.. உதடு புன்னகையில் விரிய..

“நிச்சயமாக ஆர்யன்…” என்றவனின் வார்த்தையில் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியின் சாயல்.

"இதுல சார்ஜ் எவ்வளவு நேரம் நிக்கும்?" என்ற அக்கண்யனின் கேள்விக்கு

"இரண்டு மணி நேரம்…இருக்கும்.. தவிர, இது சூர்ய ஒளியிலிருந்து தன்னையே சார்ஜ் பண்ணிக்கும்... பார்க்கலாம்." என்றவன் அதை இணைத்து உருவாக்கி நிமிர, 8'6" அங்குல நீள அகலத்தில், 10 அங்குலத் திரையுடன் அதற்குப் பின்னால் ஏதோ ஏரியல் போல நீண்டிருக்க, சிறிய அளவிலான கணிப்பொறி போன்ற ஒரு பொருள் ஆனந்தனின் கரத்தில் வீற்றிருந்தது.

அதன் தலை மீது.. ஒரு பொத்தான் இருக்க, அதை ஆனந்தன் அழுத்தினதும்.., திரையில் மெல்லிய சலனம் ஒன்று தோன்றி சில விநாடிகளில் மறைந்தது. மீண்டும் அந்த பொத்தானை அழுத்த எந்த இயக்கமும் இல்லாது இருந்தது அந்த ரோபோ. மீண்டும் மீண்டும் அழுத்திப் பார்த்தான். ஆனந்தனின் முகம் குழப்பமும் நிராசையுமாக மாற, அதைக் கண்டதும் அனைவர் மனதிலும் முளைவிட்டு இருந்த நம்பிக்கையும் தொலைந்து போனது. ஆனந்தனுக்கோ.. பெரும் ஆத்திரம் வந்தது.. எரிச்சலுடன் அதை மீண்டும் மீண்டும் உயிரூட்ட முயற்சிக்க.. அதுவோ எந்த சலனமும் அதிர்வும் இன்றி இருந்தது. கோபத்தில் அறிவை இழந்தவனாய்..அதனை தரை மீது பொத்தென்று போட்டவன், பெரும் ஏமாற்றம் கொண்டவனாய், நெற்றியை இரு கைகளால் பற்றியவாறு தரையில் கால்மடித்து அமர்ந்து விட்டான் .

அவனுக்கு ஓவென்று வந்தது. இருந்த ஒரே நம்பிக்கையும் தொலைந்து போனதே…பிறவிக் குருடன் ஒரு நிமிடம் பார்வை பெற்று இழந்தாற் போல.. நம்பிக்கை ஒளி மின்னிய கணத்தில் அணைந்து போய்.. இருள் மேலும் அடர்வாய்ப் போன உணர்வு.. ஹோவென்று காதை அடைத்தது.

கடவுளே அவர்களை இனி யார் தேடி வரப்போகிறார்கள்… இனி என்ன செய்யப்போகிறார்கள்… அவர்களின் வாழ்வின் முடிவு இங்கேதானோ…' என்று சோர்வுடன் எண்ணியவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

எல்லோரும் தொய்ந்து விழுவது போல நிற்பது கண்டு எழுந்த ஆர்யன்,

“ஓக்கே கய்ஸ்… நாம நம்முடைய நம்பிக்கையை விடவேண்டாம்… டெக்னோலஜி எல்லாம் இன்னிக்கு வந்தது… அதுக்கு முதலே தமிழன் எந்த வித உதவியுமில்லாம தன்னோட தடத்தை உலகம் முழுக்கவும் பதிச்சிருக்கான்… அவனோட பூட்டப்பிள்ளைங்க நாம… நம்மால முடியாதா… சோர்ந்திடாதீங்க… நாம புறப்படலாம்… இன்னும் ஒரே ஒரு தோணி மட்டும் செஞ்சோம்னா… இந்தத் தீவை விட்டுப் புறப்பட்றலாம்…” என்று கூற, அனைவரும் ஆர்யனை சோர்வுடன் பார்த்தனர்.

“முடியுமா ஆர்யன்…!” என்றான் அகிலன்.

“ஏன் முடியாது… நிச்சயம் முடியும். ஒன்றுபட்டால் எதையும் சாதிக்கலாம். நமக்கு வேண்டியது இன்னும் ஒரே ஒரு தோணி மட்டும்தான்… அதை மட்டும் உருவாக்கிட்டோம்னா… நாம எல்லாரும் புறப்பட்டுடலாம்…” என்றான் ஆர்யன் அழுத்தமும் உறுதியுமாய்.

அதே நேரம், ஆனந்தன் தூரப்போட்டிருந்த அந்த ரோபோ மீது சூரிய கதிர்கள் நேரடியாகப் பட, சற்று நேரத்தில் அதன் திரையில் "கீங் கீங்.." என மெல்லிய ஒலி வரத் தொடங்கியது. முதலில் அதை யாரும் கவனிக்கவில்லை. அவர்கள் தங்கள் வேலையில் கவனமாக இருக்க, அந்த நேரம் செவ்விளநீரை எடுக்க வந்த, நாச்சி அந்த சத்தத்தைக் கேட்டுக் குழப்பத்துடன் திரும்பிப் பார்த்தாள். ஆனந்தன் வீசிய அந்த ஒளித்திரையானது.. சூரியஒளியில் தனக்கான ஆற்றலை புதுப்பித்ததாய்.. அந்தத் திரையில் பல வர்ணங்கள் தோன்றி மறைந்து குழம்பி தெளிந்து ஓடி என்று வர்ணஜாலம் காட்ட... தன் கரத்திலிருந்த செவ்விளனியைக் கீழே போட்டாள்.

“ஆனந்தன்… ஆனந்தன்… இங்க ஓடி வாங்க… உங்க மிஷினு வேலை செய்யுது…” என்று கத்த, தன் கையில் இருந்தவற்றை தூக்கி அடித்துவிட்டு.. பாய்ந்து ஓடிவந்தான் ஆனந்தன்.

பாய்ந்து வந்தவன், வந்த வேகத்திலேயெ தரையில் கால் முட்டி தேய அமர்ந்தவனாகத் நாச்சியிடமிருந்து அந்த ரோபோவைப் பறித்துப் பார்த்தான்.

அது அப்போதுதான் வேலை செய்யத் தொடங்கியிருந்தது போலும். அதைக் கண்டதும் இவனுடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

“ஓ மை காட்… ஹி இஸ் அலைவ்…” என்றவன், எதை எதையோ அழுத்தினான். அழுத்த அழுத்த அந்த ரோபோவிடம் மெல்லிய அதிர்வு தோன்றியது. அனைவரும் பயத்துடன் அவனையும் ரோபோவையும் மாறி மாறிப் பார்க்க,

“ஹி ரீ செட்டிங் ஹிம் செல்ஃப்…” என்றவன் கண்ணீர் பொங்கிய கண்ணைத் துடைத்தவாறு, இன்னொரு பொத்தானை அழுத்த, இப்போது நீலத் திரை தெரிந்தது. அதில் இரு கண்களும், வட்டமாய் ஒரு மூக்கும், சிரித்த வாயும் தோன்றி,

"ஹாய் ஐ ஆம் வினோ… ஹப்பி டு சீ யு ஆனந்த். " என இயந்திரக் குரலில் சொல்லவும் அனைவரின் முகத்திலும் அத்தனை கவலையும் மறந்து புன்னகை தவழ்ந்தது.

“வினோ வா..… அடி ஆத்தி… இது பேசுதே.. ” என்று நாச்சிமுத்து வியக்க,

ஆனந்தன்.. சிறு துளையாக தெரிந்த அதன் மைக் பகுதியை நெருங்கி,

“வினோ, சென்ட் அலேர்ட் மெசேஜ் டு இஸ்ரோ 047 சட்டலைட்…” என்றதும், எதையோ லோட் பண்ணுவது போல சிறு வட்டம் சுழல, பின் "message Sent.." என்கிற குறிப்பு வந்தது. அதைக் கண்டதும் மகிழ்ச்சி மிக “யெஸ் யெஸ்.. யெஸ்…” என்று தன்னை மறந்து துள்ளிக் குதித்துக் கத்தினான் ஆனந்தன்...
 

sivanayani

விஜயமலர்
(17)

அதே நேரம் சென்னையில்.. முதலமைச்சரின் மைத்துனர் கைதுசெய்ததைத் தொடர்ந்து, அது பெரும் பேசுபொருளாக இந்தியாவையே அதிரவைக்க, அதை பற்றி யோசிக்கக் கூட நேரமில்லாமல் இரத்னவேல் பாண்டியனும் விக்ரமும், மறைந்து போன கப்பலினையும் தொலைந்த பயணிகள் பற்றிய விசாரிப்பில் இறங்கியிருந்தனர்.


தீவிரவாதியை பற்றி அறிய அவனது தொலைபேசி உரையாடல்களை மீள் கேட்க சைபர் க்ரைம் மென் கணிப்பொறியாளர் ஒருவருடன் பாண்டியனும் விக்ரமும் இருக்க, அவன் தங்கியிருந்த இடத்தை மீண்டும் ஒரு முறை பார்த்து அது தொடர்பான தகவல்களை திரட்டவும் ஒரு துடிப்பான காவல்துறை அலுவலரை அனுப்பிய ரத்னவேல் பாண்டியன் அந்த கணினி கண்காணிப்பு அறையில் இருப்பு கொள்ளாமல் நடைபயின்று கொண்டிருந்தான்.

அதே நேரம், கதவை திறந்து ஓட்டமும் நடையுமாக உள்ளே காவலர் ஒருவர்,

"சார் Rescue coordination centre ல இருந்து அழைப்பு வந்திருக்கு சார்…» என்று கூறப் பரபரப்புடன் விரைந்தவன் அங்கிருந்த தெலைபேசி வாங்கியை எடுத்துக் காதில் பொருத்தி,

“இரத்னவேல் பாண்டியன் ஹியர்…” என்றதும், மறுபக்கம் கூறிய செய்தியைக் கேட்டதும் எதுவும் பேச முடியாமல் தொப்பென்று இருக்கையில் அமர்ந்தான் பாண்டியன். சற்று நேரம் என்ன பேசுவது என்ன செய்வது என்று எதுவும் அவனுக்குத் தெரியவில்லை. இத்தகைய அதிர்ச்சியான தகவலை அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

கடவுளே, இந்த செய்தியை எப்படி அவன் கப்பல் பயணிகளின் உறவினர்களுக்கு சொல்லப் போகிறான்… நம்ப முடியாமலிருந்தவன், ஒருவாறாக தன்னைத் தேற்றி.

“பயணிகள் பற்றி…” என்றான் தன் எச்சிலை விழுங்கியவாறு.

“அவர்கள் தப்பியதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. அவர்களின் உடல் சிதைந்ததற்கான அறிகுறியோ, இல்லை எந்த பிணமோ கடலில் மிதக்கவில்லை என்பதால், அவர்கள் தப்பியிருக்கலாம் என்ற நம்புகிறோம்…” என்று அவர்கள் ஆங்கிலத்தில் கூற, ரத்னவேல் பாண்டியனுக்கு நம்பிக்கை ..அவநம்பிக்கை இரண்டிற்கும் நடுவில் நிறுத்தும் நிலை எண்ணி எரிச்சல் வந்தது.

அவர்கள் பேசி முடித்து வைத்ததும், சற்று நேரம் அவனுக்கு எதுவும் தோன்றவில்லை. அதே நேரம் உள்ளே வந்த விக்ரம், அங்கே சோர்வுடன் நின்றிருந்த ரத்னவேல் பாண்டியனைக் கண்டு,

“என்னாச்சு சார்…?” என்றான். பாண்டியன் செய்தியைக் கூற,

“ஷிட்…” என்று முணுமுணுத்த விக்ரமுக்கு இருந்த நம்பிக்கையும் தொலைந்துபோன சோர்வு.

அப்போது அவனின் அலைபேசி அடிக்க எடுத்துப் பார்த்தபோது வித்தியாசமான புதிய எண் ஒன்று வந்தது.

குழப்பத்துடன் பார்த்து இணைத்துக் காதில் வைக்க,

"சார் நான் பிரபாகர் பேசுகிறென்… ஆனந்தன் சாரோட அசிஸ்டன்ட்… இப்போ அவர் லேப்ல இருந்து பேசுறேன்…"

"எஸ்.. சொல்லுங்க.."

"ஆனந்தன் சார் புதுசா ஒரு ரோபோ கண்டுபிடிச்சிருந்தார் சார்… அவர் போகும் போது, அதையும் எடுத்துட்டுத்தான் போயிருந்தார்… தட் ரோபோ கேன் ட்ரான்ஸ்மிட்… அன்ட் கேன் ஸெண்ட் மெஸேஜ் டூ சாட்டிலைட்… அது ஸாட்டிலைட் மொபைல் போன் அட்டாச்ட். இப்போ பத்து நிமிஷம் முன்னாடி எங்க லேப் மெயிலுக்கு ஒரு ரெட் அலர்ட் மெஸேஜ் அந்த ரோபாட் ஐசி கோட் நம்பர்ல இருந்து வந்திருக்கு…" என்று கூற பதட்டத்துடன் எழுந்த பாண்டியன்,

"என்ன… சொல்ரீங்க" என்றான் நம்பிக்கைக்கு உயிர் வந்தவனாக.

"யேஸ் சார்… அந்த ரோபோவில் இருந்து ஆனந்தன் சாரைத் தவிர வேற யாராலும் செய்தி அனுப்பியிருக்க முடியாது… அவரோட வாய்ஸ்க்கு மட்டும் அது ரெஸ்பான்ஸ் பண்ணும்…"

"ஓ… தாங்க் காட்… அப்போ அவங்க உயிரோடதான் இருக்காங்க… அதை ட்ரேக் பண்ணினா அவங்க இடத்தை கண்டுபிடிச்சிடலாம்ல…" என்று பாண்டியன் பரபரப்புடன் கேட்க,

"அதை ட்ரேக் பண்ணனும்னா அதோட கோர்ட் வேர்ட் தெரியனும் சார்… அது அத்தனை சுலபமில்லை… அந்த பாஸ்வேர்ட் ஆனந்தன் சார்கிட்ட மட்டும்தான் இருக்கு… அவருடைய லேப்டாப் எல்லாம் அவர் கிட்டதான் இருக்கு… ஆனா சட்டலைட்ட ட்ரேக் பண்ணி, அதை ஹேக் பண்ணினா அந்த ரோபோ இருக்கிற இடத்தை கண்டு பிடிச்சிடலாம்ன்னு நெனைக்கிறேன்… பட் தட்ஸ் நாட் பாசிபிள்…அதோட செக்யூரிட்டி லெவல் வெரி ஹை.." என்றதும் மெல்லியதாக சிரித்த பாண்டியன்,

"அதை நாங்க பாத்துக்கிறோம்" என்ற பாண்டியன், எழுந்து தொப்பியை மாட்டியவாறு திரும்பி விக்ரமைப் பார்த்து,

" தே ஆர் அலைவ் விக்ரம்…" என்று குதூகலத்துடன் கூறி விபரத்தைக் கூற,

"வெரி குட் ந்யூஸ்.. சோ இப்போ எங்கே போகிறோம் சார்…"என்றான்.

"வேற எங்கே… XY நிறுவனத்தின் CEO அதீந்திரனைச் சந்திக்கத்தான்…" என்றதும் விக்ரமின் முகம் மலர்ந்து போனது.

அதீந்திரன் பல முறை அவர்களின் சைபர் க்ரைம் கேஸஸ் தீர்க்க உதவி செய்தவன். கூகிளுக்கே தண்ணி காட்டியவன். அவனுடைய நுண்ணறிவுத் திறன் இருநூறிற்கும் மேல். வலைத்தளம் அவனுடைய விரல் நுனியில். அதனால் பல உலக நாட்டு நிறுவனங்கள் அவனைத் தங்களுக்கு வேலை செய்ய அழைப்பு விடுத்தாலும் அவற்றை புறம் தள்ளி விட்டுத் தனக்கென்று ஒரு நிறுவனத்தை அமைத்துக் கொண்டவன். அதற்குக் காரணம் அவனிடம் இருந்த குறைபாடு. ஆம் 'அஸ்பெர்ஜர்ஸ் சிண்ட்ரோம்" என்பதன் பிடியில் சிக்கியிருந்ததால் பிறரின் போக்கிற்கு வளைந்துகொடுக்கத் தெரியாதவன். அவனால் யாருடனும் இணைந்து பேச முடியாது. மற்றவர்களின் உணர்வுகளையோ, உணர்ச்சிகளையோ, எண்ணங்களையோ அவனால் ஊகிக்க முடியாது. ஒருவருடைய முககுறிப்பையோ தேவையையோ அவனால் அவனால் எளிதில் புரிந்து கொள்ள இயலாது. குறிப்பாக சொல்லவேண்டுமானால், சமூகத்தோடு ஒன்றி அவனால் வாழவும் முடியாது, அதைப் புரிந்தும் இவனால் நடக்கவும் முடியாது. பிறரின் நிலையில் தன்னை வைத்து பார்க்கும் (empathy) நிலை அவனுக்கு குறைவு என்பதால், அவனைப்பற்றி அறியாதவர்களுக்கு அவன் செய்வது.. தம்மை அவமரியாதை செய்து விட்டான் என்றே எண்ணத் தோன்றும். அதனால் பெரும்பாலனவர்கள் அவனைக்கண்டால் சற்று தள்ளியே நின்று கொள்வார்கள். ஆக மொத்தத்தில் அவனுடைய உலகம் வேறு.

இது நோயல்ல… ஒரு வகைக் குறைபாடுதான். காலப்போக்கில் சரியாவதற்கும் வாய்ப்புண்டு. அதீந்திரனின் மூளையின் அதீத திறமையானது அத்தனை குறைபாடுகளையும் ஓரம் கட்டிவிடும்.

அத்தகையவனைத்தான் உதவி கேட்கப் போகிறார்கள். இவர்கள் அழைத்தால் அவன் வரமாட்டான். இவர்கள்தான் அவனைத் தேடிச் செல்லவேண்டும்.

அடுத்த அரை மணி நேரத்தில் அதீந்திரன் வீட்டை இருவரும் அடைந்ததுவிட்டிருந்தனர். விக்ரம் காலிங் பெல்லை அடிக்க, அடுத்த இரண்டு நிமிடங்களில் கதவைத் திறந்தான் அதீந்திரன்,

கதவைத் திறந்தவன் இரத்னவேல் பாண்டியனை ஆழப் பார்த்தான். தெரிந்ததாகவும் காட்டிக்கொள்ளவில்லை. தெரியாதவனாகவும் காட்டிக்கொள்ளவில்லை. எதுவும் பேசவில்லை. வெறுமனே பார்த்திருந்தான்.

"ஷல் வீ கம் இன் சைட்?” என்றதும் விலகத் தோன்றாமல் அப்படியே நின்றான்.

"மிஸ்டர் அதீந்திரன்… வீ நீட் யுவர் ஹெல்ப்… ஏன்னா இது பல உயிர்கள் சம்பந்தப்பட்டது…" எனவும், இது போல உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத அதீந்திரன், வெறுமையாக இருவரையும் பார்த்து.

"சோ…" என்றான்.

இதற்கு என்ன பதிலைக் கூறுவது என்று புரியாமல் திகைத்த விக்ரம்,

" ஒரு கப்பலில் ட்ராவல் பண்ண நாற்பத்தி மூனு பேர் மிஸ்ஸிங். ஒரு சாட்டிலைட் போன் மூலமா சிக்னல் கிடைச்சுருக்கு.. அதை ட்ரேக் செய்து.. நீங்கதான் அவங்களைக் கண்டுபிடிச்சுக் கொடுக்கனும் மிஸ்டர் அதீந்திரன்…" என்றதும் என்ன நினைத்தானோ, அவர்களுக்கு வழியைவிட, இருவரும் உள்ளே நுழைந்தனர்.

அதீந்திரனோ அவர்களை உட்கார் என்று கூடச் சொல்லவில்லை… தனது இடத்தில் சென்று அமர்ந்து தனது அலைபேசியில் கண் பதித்து எதையோ தட்டத்தொடங்கினானன்றி இவர்களை நோக்கவில்லை.

அவனைப் பற்றி நன்கு தெரிந்ததால் இவர்களும் அதை எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு முன்னாலிருந்த இருக்கையில் அமர்ந்தவர்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு, எப்படி தொடங்குவது என தயங்கினர். பாண்டியன் விக்ரமைப் பார்த்துக் கண்காட்டத் தன் தொண்டையைச் செருமிக்கொண்ட விக்ரம், தங்களை ஏறெடுத்தும் பார்க்காத அதீந்தரனிடம் எல்லாவற்றையும் கூறினான். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தவன், எழுந்தான்.

அவர்களைப் பார்த்து வா என்று கூட அழைக்கவில்லை, ஒரு அறையை நோக்கிச் செல்ல, இவர்களும் அவன் அழைத்ததாக எண்ணிக்கொண்டு அவனைப் பின் தொடர, அந்த அறை முழுவதும் பல திரைகளுடன் கணினிகள் இயங்கிக்கொண்டிருந்தன. குறிப்பிட்ட கணனிக்கு முன்னால் வந்தமர்ந்தவன்,

"பில்டிங் அட்ரஸ்…"என்றான். இவர்கள் புரியாமல் விழிக்க,

"பில்டிங் அட்ரஸ்…" என்றான் மீண்டும்.

"எந்த பில்டிங் அட்ரஸ் அதீந்திரன்…?” என்று விக்ரம் கேட்க, நிமிர்ந்து விக்ரமை ஏறிட்டவன்,

"சிக்னல் வந்த லேப்டாப் இருக்கும் பில்டிங்…” என்றதும், உடனே அந்த இடத்தைக் கூற, அதிலிருந்து எதை எதையோ தட்டினான் அதீந்திரன்.

சாட்டிலைட் வ்யூவில் சென்னை மாநகர விரிந்தது. அதில் அவன் விக்ரம் சொன்ன முகவரியை தட்டச்சு செய்ய.. அதன் நீலப் புள்ளி ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டியது.. அதில் பல பச்சைப் புள்ளிடள் இருக்க, அவற்றின் மீது சரியாக ஒரு புள்ளியின் மீது வைத்தவன்..

அந்த கட்டடத்திற்கு இன்டர் நெட் ப்ரவைடர் (INP) யார் என்பதை முதலில் தெரிந்து கொண்டான். அதிலிருந்து IP அட்ரசைக் கண்டுகொண்டவனின் கரங்கள் படு வேகமாக எதை எதையோ அடிக்கத் தொடங்க, அவனின் முன்னிருந்த கரிய நிறத் திரையில் பச்சை வர்ணத்தில் எழுத்துக்கள் கடகடவென்று ஓடத் தொடங்க, அந்த எழுத்துக்களை உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கிய அதீந்திரனின் உலகம் இன்னும் சுருங்கிப்போனது..




http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/page-66#post-248554

வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியர்ஸ் 016 கதையோட16/17ஆம் அதிகாரங்கள் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. சென்ற பதிவுக்காக கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.
 
Status
Not open for further replies.
Top