All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இணையக் காதல்...

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்...11
################

வள்ளி அவன் பொய் தான் சொல்கிறான்...உண்மை இல்லை ...ஏதோ ஏதோ பேச்சை மாற்றுகிறான்..இனி லவ் பற்றி பேச மாட்டேன் சொன்னான்...பேசாமா இருப்பானா...திரும்ப இதைபற்றி பேசுவானா...லவ்வே அவனை பொறுத்தவரை காமெடியா..ச்சே...மண்டைக்குள்ளே..
இதே தான் ஓடிக்கிட்டு இருக்கு...தன்னையே மனசுகுள் திட்டிக் கொண்டாள்...தனியாக இருந்தாலே இ ்த சிந்தனை தான் வரும் போல...கோயிலுக்காவது போகலாம் அலைபேசியை வீட்டிலே வைத்துவிட்டு கிளிம்பினாள்...வள்ளி..

கோவிலுக்கு சென்று வந்தும் மனது ஒர்வித அமைதியாக இருப்பதாக உணர்ந்தவள் வீட்டினுள் நுழைந்து நைட் சாப்பிட எதாவது செய்யலாம்...உள்ளே போனாள்...அதுவரை அவளுக்கு அலைபேசி ஞாபகமே இல்லை ..சாப்பிட தட்டில் போட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்தாள்..அப்போது இருந்து மெசஸ்ஜ் வந்த ரிங்டோன் கேட்கவும்...வேக வேகமாக எழுந்து சென்றாள்...அவனா இருக்குமோ..என்று..

''ஹேய் குட்டிமா... ,என்ன பண்ணரே..,.சாப்பிட்டியா.''.முகுந்த கூப்பிட்டு இருந்தான்...

அதைப்பார்த்தவுடன் ரீப்ளை அனுப்பியவள்..அவனிடம் திரும்ப அதே கேள்வியை கேட்டாள்.....''நீ பொய் தானே சொன்ன...''

''என்ன பொய் சொன்னேன்...''.சொல்லு..

'லவ் ''பண்ணுகிறேன் பிடிச்சு இருக்கு சொன்னது பொய்யில்லையா...

''உண்மை சொன்னா கேட்டுக போறியா..''.இதை பற்றி இனி பேச மாட்டேன் சொன்னேன் ...திரும்ப திரும்ப அதையே பேசுகிறாய்...''நை நை'' என்று...கோப பட்டான்...முகுந்த்..

''இப்ப உனக்கு என்ன வேணும்...நான் தான் லவ் பண்ணுகிறேன் பிடிச்சு இருக்கு சொன்னேன்...இனி இதை பேச கூடாது சொன்ன....நீ மனத்தை போட்டு குழப்பி கொள்கிறாய்...இனி பேச மாட்டேன் சொல்லியாச்சு...திரும்ப திரும்ப இதே பேசற இரண்டு ..நாளா '''..சொன்னவன் நானே மறந்துவிட்டேன் ...ஆனால் ''நீ அதன் நினைச்சு கிட்டே இருக்க..அப்ப உனக்கு என்னை பிடிச்சு இருக்கு அப்படி தானே .''.கேட்டான் முகுந்த்..

அவளோ அய்யோ...இல்லை ..இல்லை..

''என்ன இல்லை...''வேண்டாம் சொல்லியும் திரும்ப அதுவே பேசறேனா உனக்கு இஷ்டம் தானே அர்த்தம்...வெளியே வேண்டாம் சொல்லிகிட்டு மனதினுள் அவன் ஆசை ,ஆமாம் சொல்லனும் நினைச்சுகிட்டு இருக்கே....

அப்படி எல்லாம் இல்லை ...நீயா எதாவது கற்பனை பண்ணாதே...வள்ளி சொல்ல...

ஷட்அப்...நான் பேசுவரை ''நீ ''இனி குறுக்கே பேசக் கூடாது...என்னை இது பேசனும் பேச கூடாது சொல்ல நீ யாரு..எத்தனை பேருகிட்ட பேசறோம் பழகறோம் ..ஆனால் நீ பேசும் போது இன்சென்ட் இருந்தது அது தான் உன்னை பிடிச்சு இருக்கு சொன்னேன்...ஆனால் நான் ஒரு தடவையோ இரண்டு தடவையோ தான் சொன்னேன்..ஆனால் நீ அதை பல்லாயிரம் தடவை சொல்லியாச்சு...வேண்டாம் சொன்னா திரும்ப'' ஏன் ''அதைப் பற்றிய பேசற...எனக்கு பிடித்து இருக்கு சொல்லிட்டேன் உனக்கு பிடிக்கவில்லை என்றால் எதுக்கு எனக்கு ரீப்ளை பண்ணுகிறாய்...சொல்லு..உன்னை பற்றி சொல்ல மாட்டேன் சொன்ன..சரி சொல்ல வேண்டாம் உனக்கோ எப்ப தோனதோ சொல்லட்டும் விட்டாச்சு...எந்தவித டீடெயலும் தெரியாமலே உன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்...உன் முகம் கூட பார்த்தில்லை குரல் கேட்டதில்லை..எத்தனை நாள் கெஞ்சி கேட்டு உன் நிழல் படத்தை அனுப்பினே.....உன்கிட்ட பேசினா மனதிற்குள் எனர்ஜிடிக்கா இருக்கே பேசினால் ஒரே விஷயத்தை பேசிகிட்டு இருக்கே....என்னையும் இதே பேசாதே ஆர்டர் போடுகிறாய்...எந்த உரிமையில் எனக்கு சொல்கிறாய்..சொல்லு....உனக்கு இஷ்டம் இருந்தா பேசு இல்லையா ரீப்ளை பண்ணாதே...''ஒக்கே ..பை..''.சொல்லிவிட்டு போய்விட்டான்...

வள்ளி திகைத்து போய் அமர்ந்திருந்தாள் ....



சசி ஜெகநாதன் ...
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல் ...12.
##################

முகுந்த் சில நொடி அமைதியாக மனதை நிலை நிறுத்தியவன் அவளிடம் கோபமாக பேசிவிட்டோம்...இப்பவும் அவள் என்னைப் பற்றிய சிந்தித்து கொண்டு இருப்பாள்....இணையத்தின் வாயிலாக கிடைத்த அற்பதமான பெண்யவள்...இனி அவளிடம் பேச வேண்டாம் ...நான் உண்மை சொல்கிறேன் கண்டு பிடித்தும் இனி இப்படி எல்லாம் பேசாதே...மட்டுமே சொல்கிறாள்...அவளுக்கும் என்னிடம் பேச வேண்டும் பழக வேண்டும் ஆசை...ஆனால் அவளுகுள் ஒரு லிமிட்டே வைத்துக் கொண்டு அதை தாண்டவும் முடியாமல் மனதை போட்டு குழப்பிக் கொள்கிறாள்..இரண்டு நாட்கள் பேசாமல் இருப்போம் அவள் என்ன செய்கிறாள் பார்க்கலாம் ..
நினைத்தவன் அவளுக்கு இரண்டு நாட்கள் மெசஸ்ஜ் அனுப்பவில்லை ...

வள்ளி அவன் திட்டிவிட்டு போய்விட்டானே...அவனுக்கு இவ்வளவு கோபம் வருமா...அவன் சொன்னதை தானே உண்மையா பொய்யா கேட்டேன்...எப்படி அவன் என்கிட்ட கோபம் படலாம்...அப்ப அவன் அக்கறையாக பேசியது எல்லாம் வேசம் போல ..எனக்கு ஆர்டர் போட ''நீ யார் கேட்கிறான்...''அப்ப அவன் யாரோ எண்ணி தான் என் கூட பேசி இருக்கிறான்.. அவனுக்கு நான் யாரோ தானே...அப்பறம் எதுக்கு என்கிட்ட லவ் சொன்னானா...அவனுக்கு தகுந்தபடி பேசினாள் பேசுவான் இல்லை என்றால் திட்டுவானா.. .. அவன் திட்டியதை மட்டுமே மனதில் வைத்து யோசித்து கொண்டிருந்தாள்...இனி பேசட்டும் அவனுக்கு இருக்கு.''..போடா நீ இனி பேசாதே..''சொல்லிவிடனும்..ஆமாம் ...''வள்ளி இனி அவன் மெசஸ்ஜ் வந்தாலோ பேசுவானா நினைச்சே இனி அவ்வளவு தான் என்ன செய்வேன் எனக்கே தெரியாது ..தனக்கு தானே சொல்லிக் கொண்டாள் வள்ளி..''

தம்முள் நினைத்தபடி இரண்டு நாட்களும் சோம்பலாக போயிற்று ....இருவருக்கும் ...வள்ளி அவன் ஆன்லைனல இருந்தாலும் தனக்கு மெசஸ்ஜ் அனுப்பவில்லையே...அப்ப பத்தோடு பதினொன்றாக பழகி இருப்பான் போல ...இப்படியே இருக்கட்டும் ...ம்ம்...மனதுகுள் பேசிக் கொண்டாள் வள்ளி...

இருவருமே ஆன்லைன்ல இருந்தாலும் மெசஸ்ஜ் பண்ணாமல் இருந்தார்கள்....அவள் மனதிலோ...அவன் மெசஸ்ஜ் பண்ணுவானா மாட்டானா...அவனை நினைத்து கொண்டே இருந்தவள் ..இப்படி மெசஸ்ஜ் பண்ணாமலே இருந்தால் நான் அவனை பற்றி சிந்திப்பதே விட்டு விடுவேன் நினைக்கிறேன் ....ம்ம்...இ்ப்படியே இருக்கட்டும் ....அலைபேசி கையில் இருந்தால் தான் அவனை நினைக்க தோன்றுகிறது...இது இல்லை என்றால் நினைக்க மாட்டோம்...தூக்கி மேசையில் போட்டாள்...வள்ளி...அவளால் மனதை ஒருமுகப்படுத்தவே முடியவில்லை ...எதையோ தேடி அலைபாய்ந்து கொண்டே இருக்கு...தடுமாறி கொண்டே இருந்தாள் வள்ளி...

சிறிது நேரம் அங்கும் இங்கும் நடந்தவள்...ஒன்றும் செய்ய தோன்றாமல் மீண்டும் அமர்ந்தவள் கையில் அலைபேசி..இருந்தது...தொடக்கூடாது நினைத்தாலும் அதை தான் செய்ய தோன்றுகிறது...எடுத்தவள் அவனுடைய ஆரம்பத்தில் இருந்து பேசிய பழைய மெசஸ்ஜ்களை படிக்க ஆரம்பித்தாள்...அவன் மெசஸ்ஜ் படிக்க படிக்க...தினமும் அவன் எப்படி பேசிருக்கான் ..ஜாலியாக கிண்டல் கேலியாக. ...செல்லமா குட்டிமா பேர் வைத்து ..மனம் கலங்கிய வேளையிலும் ஆறுதலாக சிரிக்க வைத்தே பேசி கொண்டிருந்தானே...இப்படி இவன் பேசி கொண்டு இருந்தால் நன்றாக தான் இருக்கும்...நான் தான் அவனை கோபபடுத்திவிட்டேன்...பாவம் அவன்..இவ்வளவு நாள் அவன் கோபமேபடல.. ..அவன் பை சொல்லிவிட்டானே...அதனால் பேச மாட்டானா...பேசாமல் அவனுக்கு நாமே மெசஸ்ஜ் அனுப்பி விடலாமா...அது தான் சரி...அவனுக்கு மெசஸ்ஜ் அனுப்புவோம்...என்ன தான் செய்கிறான் பார்க்கலாம்...அனுப்பியவள் ரீப்ளை வருமா வராதா...ஸ்கீரினே விரல் நகத்தை கடித்துக் கொண்டே பார்த்து கொண்டு இருந்தாள் வள்ளி .....

சசி ஜெகநாதன் ..
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..13
#################

முகுந்த் அலைபேசியில் வள்ளி அழைத்திருப்பதை பார்த்தவன் மாலை வரை பதில் எதுவும் அனுப்பவில்லை ...
அவன் பார்த்தும் ரீப்ளை பண்ணவில்லையே...இனி அவன் பேச மாட்டான் ...மனதில் நினைத்து கொண்டு இருந்தாள்...வள்ளி...

மாலையில் என்ன வேண்டும் ..எதுக்கு கூப்பிட்ட...நான் இனி உன்னிடம் பேசவில்லை சொல்லிட்டேனே..ஏன் திரும்ப கூப்பிடுகிறாய்....இனி நான் பேசனும் நினைச்சா உன்னை பற்றி எல்லாம் சொல்லனும்..உன் பேர் தவிர எதுவும் தெரியாமல் இனி பேச போவதில்லை ...உன் குடும்பம்,போன் நம்பர்,உன் குடும்ப படம்.. இதை எல்லாம் சொல்லனும்...அப்படி சொல்வதாக இருந்தால் என் கூட பேசு இத்தனை நாள் பேசி இருக்கே...நம்பிக்கை இருந்தால் உன்னை பற்றி எல்லாம் சொல்லனும்......இன்னொன்று
நீ இப்படி தான் பேசனும் இது மாதிரி பேசக்கூடாது பேசுவதற்கு எல்லாம் ஆர்டர் போடக்கூடாது ...ஒக்கே...

அவனுடைய பதிலே பார்த்தவுடன் வள்ளிக்கு என்ன செய்வது என்றே தெரியல....அவன் கேட்டதை எல்லாம் சொல்ல முடியுமா...அப்படி சொன்னாலும் அவன் என்னைப் பற்றி தவறாக நினைத்து விட்டால் ...போன் நம்பர் கேட்கிறான் ...அதை கொடுத்தால் பிரச்சினை ஆகாதா....இப்படியே யோசித்துக் கொண்டிருந்தாள் வள்ளி...அவனுக்கு ரீப்ளை அனுப்பலாமா இல்லை இதோடு நிறுத்திவிடலாமா...பலவழிகளில் யோசனை பண்ணாலும் மனதில் ஓரத்தில் அவனிடம் பேசினால் தான் என்ன ...பேசுவோம் எவ்வளவு தூரம் போகிறது என்று தான் பார்க்கலாம்...நினைத்தவள் அவனுக்கு சரி என்னைப் பற்றி சொல்கிறேன்....அனுப்பினாள்...

சிறிது நேரம் அவனிடம் இருந்து எந்தவித. ரீப்ளையும் வரவில்லை .....சிறிது நேரம் கழித்து ...ம்...சொன்னவன்..நம்பர் தா அதில் பேசுவோம்...ஒக்கே...

அவளோ ம்ம்...என்றவள் நம்பரை கொடுத்தாள்...அடுத்த நொடியே அவனிடமிருந்து போன் கால்...அதைப் பார்த்தவள் ஆன் பண்ணி காதில் வைத்து ...ஹலோ...சொல்ல...

அவனும் ''ஹேய் குட்டிமா''...எப்படி இருக்கா...''குதுக்கலாமாக வந்தது...

அவன் குரலைக் கேட்ட அடுத்த சில நொடிகள் வள்ளி மௌனமாகவே இருந்தாள்..

அதுக்குள்ளேஅவன் பல தடவை ''ஹலோ..ஹலோ..''.இருக்கியா...பேசுடா.''.மௌனமா இருந்தா எப்படி எதாவது பேசு...கத்திக் கொண்டு இருக்க இவளோ டக்கென்று போனை வைத்து விட்டாள்...

திரும்ப திரும்ப போன் வர..எடுத்தவள்....''போன் பண்ணா பேசனும் இப்படி பேசாமா இருந்தா எப்படிடா....பேசு...எதாவது பேசு...சொல்ல...

''ம்ம்...''சொன்னவள் ''

பேச பயமா இருக்கா ..கேட்க..

அவளும் ..''ம்ம்..''சொல்ல..

இவ்வளவு நாள் மெசஸ்ஜ் பேசனோம் இப்ப போன்ல பேசறோம்...அவ்வளவு தான்...''என்ன பயம் உனக்கு ''...நான் உன் முகுந்த் தானே ...பயப்படாதே..ஒக்கே...சாப்பிட்டியா...வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா ...சொல்லுடா....

ம்ம்...என்றவள் தன்னைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள் வள்ளி...

சசி ஜெகநாதன் ...
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..14
#################

வள்ளி முகுந்திடம் நம்பர் கொடுத்தவுடன் அவன் அழைக்க எடுத்து பேசியவள்..''.பர்ஸ்ட அண்ட் லாஸ்ட் ..இனி போனில் பேச மாட்டேன்...ஒக்கே '' ..

''ஒக்கே குட்டிமா''...இனி கூப்பிடல...உன் குரல் கேட்கனும் பேசனும் மட்டும் தான் கேட்டேன்...உன்னை பற்றி தெரிந்து கொள்ளனும் இவ்வளவு நாட்களாக பேசுகிறோம் எதுவும் தெரியாமல் பேசினால் இருவருக்குமே நம்பிக்கை இல்லாத மாறி இருந்தது ..அது தான் இனி ''நீயே எப்ப கூப்பிட சொல்லிரியோ அப்ப தான் கூப்பிடுவேன்...ஒக்கே...''

''ம்ம்.''.சொன்னவள்..என்னைப் பற்றி என்ன தெரியனும் உனக்கு...

இப்படி கேட்டா'' எப்படிடா''...உன் பெயர் மட்டும் தெரியும் ...உன் குடும்பத்தைப் பற்றி எதுவும் சொன்னதில்லை ...

என் குடும்பத்தைப் அம்மா இல்லை..அப்பா ஜாப்...தங்கை காலேஜ்...அவ்வளவு தான் ...

''ஒஒ...சாரி மா...''

''எதுக்கு சாரி''...கேட்கிறிங்க...

அம்மா..இல்லை சொன்னேல குட்டிமா..அதை உனக்கு ஞாபக படுத்திவிட்டேனே ''சாரி ''கேட்டேன்..மா..

ஒ...அம்மா நான் டென்த் படிக்கும்போது இறந்துவிட்டாங்க...அதுக்கு அப்பறம் நான் அப்பா தங்கை மூன்று பேர் தான் ...தங்கை ஹாஸ்டல் தங்கி படிக்கிறா...நான் வீட்டில் ....அப்பாவை தனியாக விட்டு படிக்க விரும்பல...அது தான் கரஸ்ல படிக்கிறேன்.. நான் வீட்டில் தனிமையில் இருப்பதால் என் தங்கை தான் ஓபன் பண்ணிக் கொடுத்தால் முகநூலை..அக்கா சும்மா இருப்பதற்கு இதுல உனக்கு பிடித்த தோழிகளோடு பேசு சொன்னாள்...ஆனாலும் கொஞ்சம் கவனமா இருக்கனும்..சொன்னாள்.. உன் கூட பேசவதை இன்னும் அவளிடம் சொல்லவில்லை ...லீவுக்கு வந்தால் சொல்லனும் அவளிடம்..

அப்பறம்'' நீ குட்டிமா ''கூப்பிடுவது என் அம்மா அப்படி தான் கூப்பிடுவாங்க அது தான் நீ கூப்பிடவும் நான் ஒன்றும் சொல்லவில்லை ......மடை திறந்த வெள்ளம் போல எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள் வள்ளி...

முகுந்தும் அவள் பேசியதை எல்லாம் கேட்டவன் ம்ம்...சொல்லி நாளைக்கு பேசலாம் வைக்கிறேன் சொல்லி போனை கட் பண்ணினான்....

தன்னைப் பற்றிய சொல்லியவள் ...அவனைப் பற்றி எதுவும் கேட்கவில்லை ..தோன்றவும் இல்லை ...எப்பவும் தனியாக இருப்பதாலே என்னவோ மனதில் உள்ளதை யாரிடமாவது சொல்ல தோன்றும் போல..காலையில் வேலைக்கு செல்லும் அப்பாவிற்கு மகளோடு அமர்ந்து பேச நேரமில்லை ..
ஹாஸ்டலில் இருக்கும் தங்கைக்கோ தினமும் போன் பண்ணினாலும்..கேஷ்வலாக இரண்டு வார்த்தை பேசிவிட்டு கட் பண்ணிவிடுகிறாள்.... தனியாக இருப்பதாலோ முகநூலுக்கு வந்தவள் அவளிடம் அன்பாக பேசும் முகுந்திடம்
நமக்காக பேச ஒருத்தர் இருக்கிறார்..என்பதை அவளுடைய தனிமை பாதி குறைகிறது ..அதனால் தான் அவளுடைய தனிமை ஏக்கத்தை மறக்க வழி செய்கிறது என்றே பேசினாலும் உள் மனமோ அலசி ஆராய்கிறது நாம் செய்வது சரியா.....தவறா..முகம் தெரியாத ஒருத்தரிடம் நம் குடும்பத்தைப் பற்றி எல்லாமே சொல்லிவிட்டோமே...அதனால எதும் பிரச்சினை வருமா...நம்பர் வேறு கொடுத்திருக்கிறோம்...அதை வைத்து தினமும் போன் பண்ணவனா...ஆயிரம் சந்தேகம் ...எதுவும் சொல்வதற்கு முன் யோசிப்பதில்லை...பாசமாக பேச ஆராம்பித்தாலே..முகம் தெரிந்தவர்களாக இருந்தாலும் தெரியாதவர்களாக இருந்தாலும்...நாம் பேசவதை கேட்கவும் ஒரு செவி இருக்கிறது ஒப்பித்துவிடுகிறோம் அதன் பின் விளைவுகளை யோசிக்காமல்......இப்படி எல்லாம் சிந்தித்து கொண்டிருந்தாள் வள்ளி.....திடீரென்று ஞாபகம் வந்தது அவளுக்கு அவன் லவ்,பிடிச்சிருக்கு சொன்னானே...அதைப் பற்றி அவனிடம் இனி இது மாதிரி பேசக் கூடாது சொல்லவில்லையே ..திரும்ப அதைப் பற்றி பேசினால் கோபபடுவானா...அன்றே கோபம் வந்துருச்சு...எனக்கு அந்த மாதிரி எண்ணங்கள் எதுவும் இல்லை ..சொல்லனும் அவனிடம் ...தன் தனிமையை போக்க அவனை ஒரு கேடயமாக பயன்படுத்துகிறாள் வள்ளி...

வள்ளிடம் பேசிவிட்டு வைத்த முகுந்த் அவள் சொன்னதை யோசித்துக் கொண்டிருந்தான்...இவளை சீக்கிரம் நம் வலையில் விழ வைத்துவிடலாம் பாசவார்த்தைகளால்....இனி அவளுக்கு எப்படி பேசினால் நம் வழிக்கு வருவாள் அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்...''லவ் பிடிச்சிருக்கு'' சொல்வதைவிட வேறு வழியில் யோசிக்கனும் ...நாளைக்கு அவளிடம் ''என்ன பேசலாம் எப்படி பழகலாம் ...முகுந்த் சிந்திக்க ஆரம்பித்தான் ....

முகுந்திடம் சிக்குவாளா? வள்ளி...பார்க்கலாம்...

சசி ஜெகநாதன்...
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..15
################

வள்ளி முகந்திடம் பேசியதை தங்கையிடம் சொல்லாமா.வேண்டாமா....சொன்னால் திட்டுவாளா..நான் ஒன்றும் அவனிடம் தப்பாக எதுவும் பேசவில்லையே .. அவன் பிடிச்சிருக்கு சொன்னதை கூட சொல்ல கூடாது சொல்லவும் சரி என்று சொல்லிவிட்டானே..

நண்பர்களாக பேசிக் கொண்டிருக்கிறோம்....இதில் என்ன தப்பிருக்கு....தப்பான ஆள் போல தெரியலே...தப்பாக இருந்தால் தேவையில்லாத விஷயங்களை பேசிருப்பான் ...அது மாதிரியாக பேசவில்லை ....எத்தனை கதைகள் பேப்பரல வருது...அதில் வருவது போல இவன் பேசல ..அன்பா தான் பேசுகிறான்..

எனக்கு அவனிடம் பேசவது என் தனிமையை விரட்டுகிறது....மனதில் தோன்றும்
யாருமற்ற தனிமை இப்ப இல்லாத போல இருக்கு...அவனால் எந்த பிரச்சினை வராது ....வந்தால் பார்த்துக்கலாம்...ஒருவித அசட்டு துணிச்சலாக முடிவு எடுத்தாள் வள்ளி...

" ஹாய் குட்டிமா...."

அவன் அழைப்பை பார்த்தவள்

'' ஹாய்..''

'' சாப்பிட்டியா...''

'௸ ம்ம்...''

'உன்கிட்ட பேசினது ரொம்ப சந்தோஷமாக இருக்கு..உன் குரல் சாப்ட்டா குழந்தைகள் குரல் போலவே இருக்கு...''ஐ லைக் யூர் வாய்ஸ்....''

'' ஒஒ...தேங்கயூ..''

'' நீ கர்னாடக சங்கீதம் கத்துகிட்டியாடா...''

'' ஏய். .''ஆமாம் எப்படி தெரியும்...

'' நீ பேசும்போது கண்டுப்பிடிச்சேன்....''

'' ஒஒ...''அம்மா இருக்கும்போது கற்றுக்கொண்டது.....அப்ப தினமும் மாலை கிளாஸ் அனுப்புவாங்க சிறு வயதில் போய்யிட்டு வந்ததும் அம்மாகிட்ட பாடுவேன்...சொல்லிக் கொடுத்தை....இப்ப எல்லாம் பாடுவதில்லை ...

''ம்ம் ''..உனக்கு பிடிச்சதை ''நீ பண்ணுமா..வீட்டில் இருக்கும்போது பாடு...உனக்கு மனதிற்கு மகிழ்ச்சியா இருக்கும்....''

''ம்ம்...பாடலாம்'' ...கேட்க ஆள் வேண்டும் அல்லவா...சுவற்றைப் பார்த்தா பாட முடியும்...அதுமில்லாமல் பாடினால் எனக்கு அம்மா ஞாபகம் அதிகம் வரும் அதனால் பாடுவதில்லை ...

இனி நீ பாடுவதை ஆடியோ பண்ணி எனக்கு அனுப்பு நான் கேட்கிறேன் .''..ஒக்கே'' ...

''வேண்டாம், வேண்டாம் ...''

'' என்ன வேண்டாம் ..''

''ஆடியோ அனுப்ப மாட்டேன்...''

''ஹேய் லூசு''...உன் முகம் அதுல தெரியாது ...வாய்ஸ் மட்டும் எனக்கு உன் வாய்ஸல பாடுவதை கேட்க ஆசைடா...குட்டிமா...''

அவளுக்கு பிடித்த குட்டிமா வார்த்தை அவளை சரி சொல்ல தலையாட்டியது...

நாளைக்கு அனுப்பறேன்...''ஒக்கே...''

'' குட் கேர்ள்...''உனக்கு வேற என்ன தெரியும் ..

இப்படி பொதுவாக பேசிய விஷயங்களை விட்டுவிட்டு தங்களுடைய விசயங்களை பேச ஆரம்பித்தனர்...அவளும் தனக்கு பிடித்தது பிடிக்காது எல்லாம் சொல்ல அவனும் தனக்கு பிடித்தது பிடிக்காது ஆளுக்கு ஒர் லிஸ்ட் போட்டு பேசிக் கொண்டிருந்தனர் நேரம் போவதே தெரியாமல்....

தனிமை சிறையில் இருப்பதாக எண்ணிக் கொண்ட வள்ளியின் மனம் அவனிடம் பேச பேச தன் தனிமை மறைவதாகவும், தனக்காக ஒருத்தர் நம்மை மதித்து நம் எண்ணங்களை பாராட்டி சீராட்டி பேசவதை மகிந்தவள் மனம் வானில் சிறு பறவை சிறகடித்து பறப்பதைப் போல உணர்ந்தாள்...இருட்டுக்கு வெளிச்சம் தரும் விட்டல் பூச்சியாக வீழ்ந்து கொண்டிருந்தால் மனளவில்...

பொதுவாக பெண்களின் மனம் சின்ன விசயமாக இருந்தாலும் தீர்க்க ஆராய்ந்து முடிவு எடுக்கும் பட்சத்தில் சில சுட்சமங்கள் உணர்வதை அறிய அருகில் சொல்லி தர அம்மா இருப்பார்கள் ....

டீன் ஏஜ்ஜில் அடி எடுத்து வைக்கும்போது பல விசயங்களை வெளி உலகில் இருக்கும் நன்மை தீமையும்,தன் உடல் சார்ந்த விசயங்கள் புதியதாக தோன்றும் உணர்வுகளுக்கு பகிர பல பேருக்கு அம்மா சிறந்த தோழியாக இருப்பார்கள் ..

எதிர்பார்லர் தோன்றும் ஈர்ப்பு,அன்பா, பாசமா ,வேசமா ,காதலா,அறிய தெரியாமல்
போகிறது சில பேருக்கு அதில் ஒருத்தியாக வள்ளி டின்ஏஜ்ஜில் அடி எடுத்து வைக்கும்போது அம்மாவை இழந்து தன் சிறு வயதிலிருந்து எல்லாம் அம்மாவிடம் மட்டுமே பகிரந்து வந்தவளுக்கு அவர் இல்லாமல் தன் உணர்வுகளை பகிரவும் சொல்லவும் வழி இல்லாமல் தானாகவே தன் மனதிற்கு பூட்டை போட்டுக் கொண்டாள்...

அதனாலே முகுந்த் அவளிடம் பேசுவது அவள் சொல்வதை கேட்பது அவளுக்கு பிடித்தை செய்ய தூண்டுவது...அவளுக்கு அவனை ரொம்ப பிடிக்க ஆரம்பித்து விட்டது ...

அவனுக்கு தினமும் பாட்டு பாடி ஆடியோ அனுப்பவும் அவன் அதை கேட்டு பாராட்டவும் ..பல புதிய பாடல்களை பாடு பல பாட்டுகளை அவளுக்கு சொல்ல அவளும் அதை பிராக்டீஸ் பண்ணி பாடி அனுப்பினாள்....

அதை அவன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட வள்ளியோ பயந்து போனாள்...

சசி ஜெகநாதன் ...
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்...16..
###############

வள்ளி பாடிய அனுப்பிய ஆடியோவை..தன்னுடைய விதவிதமான ஸ்டைலான படங்களின் வீடியோவின் பின்னோட்டமாக அவள் குரலை சேர்த்து அதை முகநூலில் பதிவு செய்தான்..முகுந்த்..அவள் பாடிய பாட்டு அவன் படத்திற்காகவே பாடியது போலவே இருந்தது...முகுந்த் அதை தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்யதை பார்த்த வள்ளி திடுக்கிட்டாள்...

வள்ளி சிறிது நேரம் என்ன செய்வது என்றே தெரியவில்லை .....அந்த வீடியோவில் வருவது தன் குரல் தானே ...இல்லையா ..புரியாமலும் அதற்கு வரும் கருத்திடுகளை கவனித்தவள்...ரொம்பவே டென்ஷன் ஆனாள் வள்ளி..

இனி போன் பண்ணக் கூடாது தான் அவனிடம் சொல்லிருந்தாலும் வீடியோவை பார்த்த அடுத்த நிமிடங்களிலே அவனுக்கு போன் பண்ணினாள் வள்ளி ..

போன் ரிங் ரிங் ஆகி கட் ஆகிக் கொண்டே இருந்தது ....அச்சோ போன்னை எடு ...எடு. மனதிற்குள் கூறிக் கொண்டே இருந்தாலும் முகுந்த் போன் அட்டென்ட் செய்யவே இல்லை ....

வள்ளியோ நிமிடம் கடந்து கொண்டே போகிறதே..இவன் போன் எடுக்க மாட்டேன்கிறானே ..எடுடா...பயங்கர கோபத்தில் சத்தமிட்டவள் சுற்றி பார்த்துவிட்டு தனியாக இருந்தால் நான் கோபத்தில் சொல்லியதை யாரும் கேட்கவில்லை ...அதற்கும் டென்ஷன் ஆக...அவனோ போன் எடுக்கவேயில்லை...உடனே மெசஸ்ஜ் பண்ணி போன் பண்ணு குவிக் அர்ஜெண்ட் சொல்லி அனுப்ப அதுக்கும் எந்தவித ரெஸ்பான்ஸ் இல்லை அவனிடம் ...

வீட்டிற்குள் இங்கிட்டும் அங்கிட்டும் நடந்துக் கொண்டே போன் பண்ணுகிறானா...மெசஸ்ஜ் வந்திருக்கா...நொடிக்கு நொடி பார்க்க...வரவில்லை கோபம் அதிகமாகி கொண்டே இருந்தது வள்ளிக்கு...

தான் செய்தது சரியா...அவன் கேட்டான் என்று தானே பாடி அனுப்பினேன்....அதை மற்றவர்களுக்கு அனுப்பக் கூடாது சொல்லியும் அவன் இப்படி பண்ணிருக்கான்....அதுவும் அவனுடைய படங்களை பார்த்து நான் ரசித்து பாடியதைப் போலவே செட் பண்ணிருக்கான்...அதில் மியூசிக் இல்லாமல் தன் குரல் மட்டுமே இருப்பதாலே நான் தான் தெரிந்துவிட்டது...இவன் ஏன் இப்படி பண்ணினான் ...அதில் வரும் கமெண்ட்ல எல்லாம் பார்க்கும்போது எனக்கு எவ்வளவு டென்ஷன் கவலையாக பயமா இருக்கிறது ...

அதிலும் அவன் நண்பன்...யாருடையதுடா இந்த குரல்...செம்மயா இருக்கு ஆளும் அப்படி தான் இருப்பாளோ ..பண்ணிருக்கான்...அதற்கு இவனும் ரிப்ளை பண்ணிருக்கான்...குரலும் ஆளும் செம என்று இதுப் போல பல கமெண்ட். மச்சி...குயில் வாய்ஸ்...ஆள் குயிலா மயிலா..என்று......அவன் கேட்டதாலே தானே பாடி அனுப்பினேன்...இப்படி செய்திருக்கிறேனே ...அழுகை வந்துவிட்டது வள்ளிக்கு....என்ன பண்ணவது என்று தெரியாமல் ...பயத்தில்...

அன்று முழுவதும் அவன் அவளுக்கு மெசஸ்ஜ் பண்ணவில்லை போனும் பண்ணவில்லை ...இவளோ பயங்கர டென்ஷனில் அழுக தலைவலி அதிகமாகிவிட்டது வள்ளிக்கு....தலைவலி அதிகமாக மாத்திரை போட்டாள் அதுக்கும் கேட்கமால் ரொம்ப தலை வலி வந்துவிட்டது ....

வள்ளிக்கு சிறு வயதிலிருந்தே டென்ஷன் அதிகமானால் தலை வலி வந்துவிடும் ...அப்போ அவங்க அம்மா இதமாக பேசி மருந்து கொடுத்து தலை அமக்கி விடுவார்கள்...அவர் இறந்தபின் தலைவலி அதிகமானால் டாக்டரிடம் போய் விட்டு வந்தால் தான் சரியாகும்...ஆனால் இப்ப உள்ள மனளைச்சலில் வள்ளிக்கு டாக்டரிடம் போகவும் முடியாமல் மாத்திரை மட்டும் போட்டாள்....நேரம் ஆக ஆக அவளுக்கு தலைவலியும் குறையவில்லை ..அவனிடமிருந்து மெசஸ்ஜ் வரவில்லை ...

தங்கையிடம் பேசலாமா...இதைப் பற்றி அப்படியாவது தலைவலி குறையதா பார்க்கலாம்...எண்ணியவள்...அவள் கண்டு பிடித்துவிடுவாளே ''ஏன் எதற்கு டென்ஷன் உனக்கு...என்னாச்சு..''.ஆயிரம் கேள்வி கேட்பாள் அவளிடம் சொல்லவும் பயமா இருக்கு...சொன்னாள் முதலே ஏன் சொல்வில்லை என்று கேட்பாளே ...அதற்கும் கவலை பட...மனளவில் பயங்கர பாதிக்கப்பட்டாள் வள்ளி ...

.குரல் தானே யார் கண்டு பிடிக்க போறாங்க. ....இப்படி எல்லாம் சிந்திக்கலாம் ஆனால்...அதற்கு வரும் கமெண்ட் படிக்கும்போது மனதிற்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது...வள்ளிக்கு ..இவனை நம்பியது தவறா...முதல் முறையாக சிந்திக்க ஆரம்பித்தாள்....

.முகம் தெரியாத ஒருத்தரிடம் பேசவதும் பழகவதும்...எத்தனை கடினமாக இருக்கிறது ...இங்கு ஊர் பெயர் உண்மையா பொய்யா என்றே தெரியாமல் நாம் பல விசயங்களை பேசிகிறோம் ... .அது எவ்வளவு பெரிய மனவுளைச்சலை கொடுத்து விடுகிறது ...வள்ளிக்கு..அவளுடைய தனிமை அவளை எங்கு கொண்டு நிறுத்தப் போகிறோதோ ...அதற்காக அவள் இன்னும் எவ்வளவு பாதிக்கப் பட போகிறாளோ தெரியவில்லை ...


சசி ஜெகநாதன் ...
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதலத..17
##################

வள்ளி மனதிலோ....முகுந்த் போன் பண்ணா எடுக்கவுமில்லை..மெசஸ்ஜ் பார்த்தும் ரீப்ளை பண்ணவில்லை...அவன் ஏன் இப்படி பணதணுகிறான்...இதை யோசித்து யோசித்து மண்டை வலி அதிகமானதே..மிச்சம்....அப்படியே தூங்கிவிட்டாள் ....

நடு இரவில் மெசஸ்ஜ் டோன் கேட்கவும் ..வேகமாக எழுந்து பார்த்தாள் அவன் தான் ..
''ஹாய் குட்டி பேபி...''

அதை பார்த்தவள் இப்ப இவனிடம் பேசலமா வேண்டமா ஒரு நொடி நினைத்தவள்....உடனே ''என்ன'' குட்டி பேபி ..போன் பண்ணினால் எடுக்கல மெசஸ்ஜ் பண்ணாலும் எடுக்கல...என்ன நினைச்சிட்டு இருக்க...நடு ராத்தியில் கூப்பிற...போன் பண்ணாதவள் பண்ணிருக்காளே.''.என்ன..பிரச்சினையோ'' கேட்க வேண்டாமா ....வாயில் வருவதை எல்லாம் எழுத்தில் அனுப்பினாள்...

அவனோ..அதைப் பார்த்துவிட்டு...''கூல் பேபி..''எதுக்கு இவ்வளவு டென்ஷன் ''...நான் கொஞ்சம் பிஸியாக இருந்தேன்..அது தான்...இப்ப பீரியானதும் உனக்கு கூப்பிட்டேன்..''.ஆமாம் ஏன் எனக்கு போன் பண்ணே ''....எதுக்கு பண்ணே எனக்கும் தெரியும்...கொஞ்சம் கோபம் குறையட்டும்...நாம் வேலை முடிப்போம் என்று தான் எடுக்கல....உன் குரலை என் பக்கத்தில் பதிவு பண்ணினேன் அதுக்கு தானே கூப்பிட்ட....உன்கிட்ட சொல்லாமல் செய்து தப்பு தான் ''சாரிடா...குட்டிமா...''

''என்ன சாரி கேட்ட சரியா போச்சா..''.உன்னை யாரு பண்ண சொன்னா...உன் படத்திற்கு லவ் சாங்ஸ் பாடின மாதிரி எடிட் பண்ணிருக்க...அதுக்கு எவ்வளவு கேவலமான கமெண்ட்ஸ்...இது எல்லாம் எனக்கு தேவையா...உடனே அதை டெலிட் பண்ணு...உன்னால் காலையிலிருந்து எனக்கு பிரச்சினை மனதில்..தலைவலி வந்து கஷ்டபட்டு இருக்கேன்....இனி நான் உன்கூட பேச மாட்டேன்...நான் உனக்கு அனுப்பிய எல்லா ஆடியோவும் டெலிட் பண்ணு..இனி'' நீ ''என்கூட பேசக்கூடாது ...அனுப்பினாள்...

அதை படித்தவன்..ஒரு நொடி யோசித்துவிட்டு...''சாரிடா...''உன் வாய்ஸ் என் படத்திற்கு வரும் பாடினால் எப்படி இருக்கும் பண்ணிப் பார்த்தேன்...நல்ல இருக்கவும் உடனே பதிவு பண்ணேன்...

அதுக்கு வரும் கமெண்ட்ஸ் சும்மாடா ...பொதுவாக நண்பர்கள் சேர்ந்தால் பேசுவது தான் ..பெண்கள் நீங்கள் ஒன்று சேர்ந்தால் எப்படி எல்லாம் கமெண்ட்ஸ் பண்ணுவிங்க ஆண்களை பற்றி..அது மாதிரி தான் இதுவும்....அதிலும் இவர்கள் எல்லாம் முகமறியா நண்பர்கள் உன்னை பற்றி அவர்களுக்கு தெரியாது.''.நீ பயப்படாதே..''நான் அவர்களுக்கு ரீப்ளை பண்ணியது ஜஸ்ட் ஜோக் தான் ...உன்னை நினைத்து அல்ல...கோபடாதே..குட்டி...நான் போஸ்ட் டெலிட் பண்ணிவிடுகிறேன்.. ஒக்கே...இப்ப தலைவலி பரவயில்லையா.. என்னாலே தானே ...இதுக்கு எனக்கு நீ பனீஸ்மென்ட் கொடுத்துவிடு....இனி இப்படி பண்ண மாட்டேன் நம்பு குட்டிமா ..நான் உன் டியரஸ்ட் ப்ரண்டு தானே ஒரு தரம் மன்னித்துவிடு ...பிளீஸ்யா. மீ பாவம்...பிளீஸ் பிளீஸ் ...கெஞ்சினான்...

அவன் கெஞ்சியதை பார்த்தவள் பயி எதுவும் அனுப்பாமல் போன் சுவிட்ச் ஆப் பண்ணிவிட்டு படுத்துவிட்டாள்....முகுந்தோ விடிய விடிய..அவளுக்கு மெசஸ்ஜ் அனுப்பிக் கொண்டிருந்தான்....

அடுத்தநாள் காலையில் போனை ஆன் பண்ணே அடுத்த நொடி ஆயிரம் மெசஸ்ஜ் அவனிடமிருந்து ..சாரி சாரி....அதைப் பார்த்துவிட்டு ரீப்ளை பண்ணாமல் தன் வேலை பார்க்க ஆரம்பித்தாள் வள்ளி....

முகுந்தும் அவள் மெசஸ்ஜ் பண்ணுவாள் மதியம் வரை பார்த்தவன்...பண்ணாதால் உடனே போன் கால் பண்ணினாள்..ரிங் போய் கொண்டே இருந்தது ....ஆனால் வள்ளி போனை அட்டென்ட் பண்ணவேயில்லை....எத்தனை கோபம் இருந்தாலும் உடனே போன் எடுப்பாளே..கைப்பிள்ளை போல கையிலே வைத்திருப்பாளே....என் மேல் இன்னும் கோபம் குறையவில்லையா...இல்லை தலைவலி அதிகமாயிற்றா..நேற்று நாம் போன் எடுக்காதாலே...இன்று இவள் எடுக்கவில்லையோ...அச்சோ போனை எடுடி....தனக்கு தானே பேசினான்....

அவளோ போனை சைலண்ட் போட்டுவிட்டு அன்று முழுவதும் போனை தொடவில்லை ...இவனிடம் இனி பேசக்கூடாது ....நினைத்தவள் ...அவனுக்கு ரீப்ளை பண்ணவில்லை...

அவனும் மாற்றி மாற்றி வேற நம்பர்லிருந்தும் கூப்பிட்டான்...எந்த போன்காலையும் அவள் அட்டென்ட் பண்ணவில்லை..ஒருநாள் முழுவதும் அவளுக்கு மெசஸ்ஜ் அனிப்பியவன்...அதுக்கு அப்பறம் அவளுக்கு மெச்ஸ்ஜ் அனுப்பவில்லை ...இனி அவளுக்கு அனுப்பக்கூடாது....அவளே என்னை கண்டிப்பா கூப்பிடுவாள்...இனி அவளா,நானா பார்த்துவிடுவோம். .

சசி ஜெகநாதன் ..
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்...18..

வள்ளி ஒரு வாரமாக முகநூல் பக்கமே போகவில்லை ..தலைவலி அதிகமானதால் ஹாஸ்பிட்டல்...மாத்திரை மருந்து சாப்பிட்டு தூங்கி கொண்டே இருந்தாள் ...

முகுந்தோ..இரண்டு நாட்கள் அவளுக்கு மெசஸ்ஜ் அனுப்பியவன்..அவளிடமிருந்து எந்தவித ரெஸ்பான்ஸ் இல்லாமல் இருக்கவும் அவனும் திரும்ப மெசஸ்ஜ் அனுப்பவில்லை....ஆனால் முகநூலுக்கு வரும்போது எல்லாம் அவள் ஆன்லைன் வருவதில்லை பார்த்து பார்த்து ஏன் வரவில்லை...என்னால தான் வரவில்லையோ...என்ன காரணம்....நாம் அனுப்பிய மெசஸ்ஜ் பார்க்கவும் இல்லை ..போன் பண்ணினால் சுவிட்ச் ஆப் வருது ...ம்ம்...பார்ப்போம் எப்ப வருகிறாள் ...நினைத்துகொண்டிருந்தான் முகுந்த்...இப்படியே பத்து நாட்கள் நகர்ந்து போயின....

உடல்நிலை சரியில்லாத நேரத்தில் வள்ளிக்கு பல சிந்தனைகள் மனதினுள் ஓடின....ஒருவோடு பேசினால் நம் தனிமை போய்விடுமா...எத்தனை வழிகள் இருக்கிறது ...இதற்கு முன் அவனிடம் பேசிக்கொண்டா இருந்தோம்...முகநூலுக்கு போனாலும் அவனிடம் பேசக் கூடாது...தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்...ஆனாலும் மனதினுள் அவன் தானே பாட்டு பிடிக்கும் சொன்னதும்..பல பாடல்களை எடுத்து பாடு...உன் அம்மா இல்லை என்ன அவர்கள் படத்திற்கு முன் பாடு அவர்கள் ரசிப்பார்கள்...சொன்னான்..அப்படி பாடும்போது எனக்கும் மனதில் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது ...அம்மா முன்னாடியே பாடுகிறேன் ரசிக்கிறார்கள் தோன்றியது ....அவனுக்கு அதை அனுப்பு சொன்னதை கேட்டு அனுப்பியது தான் ...அனுப்ப மாட்டேன் சொல்லிருந்தால் அவனும் உன் விருப்பம் ..விட்டுருப்பான்...செய்வது எல்லாம் நான் அவனை திட்டிக் கொண்டு இருக்கிறேன் ...இருபக்கமும் குழப்பமாகவே யோசிக்கிறாள்....பத்துநாள் போனை தொடவில்லை அவன் எனக்கு மெசஸ்ஜ அனுப்பிருப்பானா...போன் பண்ணிருப்பானா ...இல்லை இதுவும் பத்தோடு பதினொன்று விட்டுருப்பானா... நினைத்தைப்படி போனை ஆன் பண்ணினாள் வள்ளி...

ஆன் பண்ணி அடுத்தநிமிடமே அவனிடமிருந்து மெசஸ்ஜ் ஹாய்...சாரி,சாரி..பல...உடம்பு சரியில்லையா..கேள்வி...ஏன் உன்னை காணாம் இந்த பக்கமே...போன் பண்ணினாலும் சுவிட்ச் ஆப்...என்னாச்சு குட்டிமா...பல...ஒன்றன் பின் ஒன்றாக பல மெசஸ்ஜ் வந்து கொண்டே இருக்கும்போதே..அவனிடமிருந்து போன் கால்....

வள்ளியோ அவனிடம் பேசலாமா...வேண்டாமா கட் பண்ணிவிடலாமா யோசிக்க..கையோ போனை ஆன் பண்ணி காதில் வைத்தவள்..அவனோ...ஹலோ..ஹலோ...குட்டிமா...லைன் இருக்கியா...ஹலோ..பல தடவை கத்திக்கொண்டிருந்தான்...இவள் பதில் பேசாமலே இருக்க...அவன் சாரி மா ரொம்ப சாரி..அந்த பதிவை நான் டெலிட் பண்ணிட்டேன்....இனி உன்னை கேட்காமல் எதுவும் செய்வும் மாட்டேன் டா ..பேசுமா...இந்த பத்து நாட்களாக உன் நினைப்பாகவே இருந்தது ..என்னாச்சு தெரியாமல் ..பிளீஸ்யா..பேசு டா...கெஞ்சிக் கொண்டிருந்தான் ...அவன் சொன்னதை கேட்டும் பதில் சொல்லாமல் பேசாமல் போனை கட் பண்ணினாள் வள்ளி ...

திரும்ப திரும்ப அவனிடமிருந்து போன் கால் மெசஸ்ஜ்...அவளோ..இத்தனை நாட்கள் ஆகியும் அவன் என்கிட்ட பேசனும் துடிக்கிறானே ...இரண்டு நாட்கள் முகநூல் பக்கம் வரவில்லை என்றால் வேறு நண்பர்களை தேடிப்போய்விடுவார்கள்...ஆனால் இவன் போனை ஆன் பண்ண அடுத்தவினாடியே பேசுகிறான். போஸ்ட் டெலிட் பண்ணிட்டான்..செக் பண்ணியதில் தெரிகிறது ....எனக்கும் அவனுடன் பேச வேண்டும் தோன்றுகிறது ... அந்த பதிவுக்கு அத்தனை சாரி கேட்கிறான் .....நல்லவனாக தான் இருப்பான் போல...முகநூலில் நீ இல்லை என்றால் என்ன...ஓட்டு மேலே சோறை போட்டா ஆயிரம் காக்கா வரும்...பல பேர் இருக்கிறார்கள் ...ஆனால் இவன் அப்படி இல்லை போல...கமெண்டில் பேசியது கூட இப்ப உள்ளவர்கள் பேசுவது போல தானே ...இப்படி பல சிந்தனையில் உழன்று கொண்டிருந்தாள் வள்ளி... என்னிடம் நல்ல நண்பனாக பழகு அப்படி என்றால் உன்னிடம் பேசுகிறேன் .இல்லை என்றால் இனி எப்பவும் என்னிடம் பேசக் கூடாது சொல்லிவிடலாம்....என்ன சொல்கிறான் பார்க்கலாம்...எண்ணியவள்
போன்காலை அட்டென்ட் பண்ணினாள்...

ஹாய்டா..என்னாச்சு பேச மாட்டேன்கிற...தலைவலி சரியாகிவிட்டதா..என்னாலே தானே ...உனக்கு இவ்வளவு டென்ஷன் ...சாரிமா...இனி இப்படி பண்ண மாட்டேன் ...உன்னுடன் பேசாமல் இருந்தால் எனக்கு மனசே சரியில்லை ...என்னவோபோவே இருந்து தெரியுமா...நான் செய்தது தவறு தான் என்னாலே தான் குட்டிமாவுக்கு தலைவலி ...என்னையே நான் எத்தனை தடவை திட்டிக் கொண்டிருந்தேன் ..பிளீஸ்யா பேசு. எதாவது சொல்லு இல்லை திட்டு. எதுவும் பேசாமல் இருக்காதே ...

ம்ம் சொல்லியவள்...நான் ஒன்று சொல்வேன் ..அதைக் கேட்டு நீ என்ன பதில் சொல்கிறாய் ..அதை வைத்து தான் உன்னிடம் இனி பிரச்சினை இல்லாமல் பேசலாமா வேண்டாமா முடிவு பண்ணனும்...ஒக்கே ...

ம்ம்..சரிமா...நீ என்ன சொன்னாலும் நான் ஒத்துக்கிறேன்..சொல்ல...

இவளோ..நான் உன்னிடம் மட்டும் தான் பேசுகிறேன்...இந்த முகமே தெரியாத உண்மை என்பதே இல்லாத முகநூலில் எந்த நம்பிக்கையில் உன்னிடம் பேசிகிறேன் தெரியல...உன்னால் தான் எனக்கு பயங்கர தலைவலி மருந்து மாத்திரை ..இந்த பத்து நாட்கள் சென்றன...உன்கூட பேசவே கூடாது நினைக்கிறேன்....ஆனால் என்னை என்னாலே கன்ரோல் பண்ண முடியவில்லை ...உன் பரிவான எழுத்துகள் உன் குரல் வழியாகவே நீ கேட்ட மன்னிப்பு..இதை எல்லாம் பார்க்கும்போது எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பயமா இருக்கு .ஆனாலும் ஒரு தோழன் எனக்கு இந்த முகநூலில் கிடைத்தது ...அவனை பற்றி முழுவதாக எதுவும் தெரியவில்லை என்றாலும் என் தனிமை போக்க வழி சொன்னவன். எனக்கு என்ன பிடிக்கும் தெரிந்து ..நல்ல பாட்டு பாடி என் மனதை திசை திருப்பி எந்த நேரமும் மனதில் மகிழ்ச்சியும் சந்தோஷத்தை ஏற்படுத்தி கொடுத்தான்...இதற்கு உனக்கு நன்றி தான் சொல்லனும்..நீ செய்தது தவறு தான் ...ஆனால் நல்ல தோழனாக நான் நினைப்பதால் தான் உன் தவறை மன்னிக்கச் சொல்கிறது.....ஆனால் இன்னொரு மனமோ..எதிலாவது மாட்டிக் கொள்ளாதே..பிரச்சினை ஆகிவிடும் ..இதுடன் முடித்துக் கொள் சொல்கிறது ...உன்னுடன் பேசலாமா வேண்டாமா..நீ சொல்லும் பதில் தான்....நீ என்னுடன் பழக நினைப்பது...நல்ல தோழானாகவா...இல்லை முகநூல் லவ் ...ஏமாற்றி செல்வதா...எதையும் ஒளிவு மறைவின்றி சொல்லிவிடு...இன்னொரு முறை இந்த மாதிரி என் மனதை கஷ்டபடுத்த முடியாது ...நீ சொல்வதில் தான் இருக்கு உன்னுடன் பேசலாமா,இல்லை பிளாக் பண்ணிவிட்டு போய்விடலாமா ...சொல்லிய வள்ளி முகுந்தின் பதிலுக்கு காத்திருந்தாள்...

சசி ஜெகநாதன் ..
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..19
###############

வள்ளி தன் மனதில் தோன்றியதை எல்லாம் கேட்டு கொண்டே இருந்தாள்..பொய்யான ஒரு விடயத்தில் உண்மையை எதிர்பார்க்கும் அறியாமை என்னவென்று சொல்வது ...முகமும் பொய்யாக இருக்கும் ஒரு பக்கத்தில் உண்மை தேடி தானும் அதில் தொலைவதும் மட்டுமே ...நேரில் பழகும் பல பேருடைய உண்மை முகம் கண்டறியவே வருடங்கள் பல ஆகும் இதில் எங்கோ இருந்துக்கொண்டு அவன் உண்மை மட்டுமே சொல்வான் நம்பும் மடமையை வள்ளியின் பலவீனம்....அவனிடம் எதை எதிர்பார்க்கிறாள்....லவ்,தோழனா...அவன் சொல்லும் அந்த ஒற்றை வார்த்தை உண்மையாகவே இருக்குமா..கடைசிவரை..
எண்ணிக் கொண்டே அவனை பதில் சொல்லு...கேட்டுக் கொண்டிருந்தாள்..

வள்ளியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லாம்....இந்த முகநூலில் எத்தனையோ பேர்கூட பழகுறேன்..பேசறேன் ...இவள் மட்டுமே என்னை இத்தனை கேள்வி சந்தேகம் ...படுகிறாள்...இதில் பழகவதும் பேசுவதும் தங்கள் வாழ்க்கை முடிவு செய்ய முடியுமா...ஒரு பொழுதுபோக்காக பழகினால் அதுவே நிரந்தரமாகாது முகநூலில் நிதர்சனம்..இதில் இன்று பேசியவர்கள் நாளை வேறு ஒருவருடன் பேசி கொண்டு இருப்பார்கள் புதிது புதிதாக நண்பர்கள் தேடுவது தினமும் சாதாரணமாக நடப்பது..இதிலே இன்றைய சந்தோஷமாக நாளை கடப்பது மட்டுமே ...இவளிடம் என்ன சொல்லாம்...யோசித்தவன்...

குட்டிமா..நான் பேசுவது பழகுவதும் உனக்கு எந்த மாதிரி தோன்றுகிறது...லவ்வா,தோழனா...சரியா நீயே சொல்...அதுக்குரிய பதிலை அவளிடம் சொல்ல சொல்லி விட்டான் முகுந்த் .

வள்ளியோ உன்னிடம் கேட்டால் நீ என்னிடம் கேட்கிறாய் ....நீதான் சொல்லனும்...நான் இதற்கு என்ன சொல்ல...

முகுந்த் நீ உன் மனதில் தோன்றியதை சொல்...இவ்வளவு நாளாக பேசறேன்..உன்னிடம் அளவுக்கு மீறி பேசியில்லை...இந்த பத்து நாளாகவும் உனக்கு என்னாச்சு யோசித்துக் கொண்டு இருந்தேன்...உன்னிடம் பேசுவது உன இன்சென்டனா பேச்சும்,உன் குரல்,எல்லாமே எனக்கு பிடிக்கும்...உனக்கு எப்படி நீ சொன்னால் அதற்குரிய பதிலே நான் சொல்கிறேன்...

வள்ளிக்கு இவனிடம் கேள்வி கேட்டால் அதை எனக்கே திருப்பி விடுகிறான்...இதற்கு என்ன பதில் சொல்வதை விட இதை இன்றே ஒரு முடிவு பண்ணிவிட வேண்டும் ..இல்லையேல் இது எனக்கு தான் மனவுளைச்சலை அதிகமவ தருகிறது ....உண்மை சொல்லறானோ,பொய் சொல்றானோ..பார்க்கலாம்...நினைத்தவள்...
எனக்கு என்ன சொல்வது எப்படி சொல்வது புரியவில்லை ...உண்மையாக நான் சொல்லிவிடுகிறேன்...எனக்கு உன்னிடம் பேசினால் என் தனிமை..குறைந்து தான் ...என்றோ விட்டு போன பாடல்களை ஞாபகபடுத்தி இப்ப பாடச் சொல்லி ..என் மனதில் உற்சாகத்துடன் இருக்க செய்தது உன்னுடன் பேசிய பிறகு தான் ..ஆனால் ..நீ நான் பாடிதை உன் பக்கத்தில் போடாமல் இருந்திருந்தால் எனக்கு இந்த மாதிரி மனவுளைச்சல் இருந்திருக்காது..இப்ப எனக்கே ஒரு பயம்...எங்கு உன்னிடம் பேசினால் நீ சொல்வதை எல்லாம் திரும்ப கேட்டு நடந்துவிடுவனோ என்று...கடைசியில் நீ தோழனா,லவ்வரா..எனக்கே சந்தேகம் வந்துவிடும் ...இனி உன்னுடன் பேசாமல் இப்படி நிறுத்திக் கொள்ளலாம் தோன்றுகிறது ....ஒருபக்கம்...இன்னொரு பக்கமோ....உன் கூட பேசலாம்...நல்லவனாக தான் இருக்கிறான்...தோன்றுகிறது..பல கன்பயூசன் மனதில்..நான் செய்வது சரியா தவறா..என்று..எதையும் நம்ப முடியாமல் யாரிடமும் சொல்லி அதற்கு அவர்களுடைய அட்வைஸ் கேட்கவும் பயந்து கொண்டு இருக்கிறேன் ...இதற்கு உன்னிடமே கேட்டு விடலாம் ...நீ என்னிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுகிறாயா..நானே தெரிந்து கொள்ளலாம்...நீயே சொல்...என்னிடம் எவ்விதம் பழகுகிறாய்...தோழனாகவா,லவ்ராகவா..சொல்லிவிட்டால் நான் ஒரு சரியான முடிவை எடுத்துவிடுவேன் நினைக்கிறேன் ...அவள் மனதில் தோன்றிய அத்தனையும் அவனிடமே சொல்லி தீர்வை தேடுகிறாள்...

முகுந்த் வள்ளி சொல்லியதை கேட்டவன்...உன்னிடம் நான் எப்படி பேச வேண்டும் எதிர்பார்க்கிறாய்..நண்பனாக பேசினால் பிடிக்குமா,காதலனாக பேசினால் பிடிக்குமா ..எப்படி பேசுவது நீ சொல் அதன்படியே பேசுகிறேன் ....இல்லை என்றால் சொல் ஒருமுறை நேரில் பார்க்கலாம் அப்ப உனக்கு என்ன தோன்றுகிறது சொல்..அதன்படி முடிவு செய்யலாம்.....எனக்கும் உன்னை நேரில் சந்தித்து பேச ஆசை தான் ..எங்கு பார்க்கலாம் ...நீ வரச் சொல்லும் இடத்திற்கு வருகிறேன்...பயப்படாமல் வா...அங்கு நேரடியாக பேசினால் உனக்கு ஒரு தெளவு கிடைக்கும்...மெசஸ்ஜ்ல, போன்லையும் பேசுவதால் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை பேசுகிறோம் சந்தேகபடிகிறோம் ..சொல்லு எங்கே சந்திக்கலாம் ..கேட்டான் முகுந்த் ..

வள்ளியோ மனதிற்குள் என்ன நேரில் சந்திப்பதா...அவனை...நேரில் பார்த்து அவனிடம் சொல்லிவிடலாம்..
நல்ல தோழனாக பேசினால் பேசுவோம் இல்லையேல் இதுடன் முடித்துக் கொள்ளலாம் ...சொல்லிவிடலாமா ....அது தான் சரி நேரில் பேசினால் அவன் முகபாவம் வைத்து உண்மையா பொய்யா கண்டு பிடித்து விடலாம் போனில் பேசினால் அவன் உண்மை சொல்வானா பொய் சொல்வானா சந்தேகப்பட்டு இருப்பதைவிட நேரிலே சந்தித்து பேசி முடித்துவிடலாம் ...எண்ணியவள்..அவனிடம் சந்திக்கலாம் வா...ஒரு பொதுவான இடத்தை சொல்லி அவனை வரச் சொன்னாள் வள்ளி...

சசி ஜெகநாதன் ...
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..20
#################

வள்ளி முகுந்தை சந்திக்க முடிவு செய்தை என்னவென்று சொல்வது...அவளோட மனபக்குவம் இல்லதாவளா..நிழல் புகைப்படத்தில் அறிமுகமான ஒருவனை நம்பி அவனை தனியாக சந்திக்கும் அளவுக்கு கொண்டு செல்வது அவளுடைய அறியாமையா...எத்தனை தொலைக்காட்சியில் பேப்பரில் மூகநூலால் பல பெண்கள் பிரச்சினையில் மாட்டி முழிப்பதும் தற்கொலை செய்வதையும் பார்த்தவள்..தனக்கு எதையும் யோசிக்க தோன்றுவதில்லை ...எங்கோ யாரோ..அவர்கள் பற்றி செய்தி அந்த நிமிடங்கள் மட்டுமே மனதில் பதியவாகும் போல...எல்லாரும் தவறான ஆட்களாக இருப்பதில்லை ..ஏதோ ஒன்று இரண்டு பேர் தான் இப்படி இருப்பார்கள் எண்ணிக் கொள்வது தான் அதிகம்...தன் மனளவில் எந்தவித தவறுகள் தன்னை மீறி நடக்காது எதையும் எதிர்கொள்ளும் தைரியம் தனக்கு இருக்கிறது ஓவர் கான்பிடன்ஸ்...மனதினுள்...வீட்டில் உள்ளவர்களுக்கு அவனை பற்றிய எதையும் பகிராமல் தானே முடிவு செய்து அவனை சந்திக்க போகிறாள்...வள்ளி...
தனக்கு லீவு கிடைத்தவுடன் சந்திக்க வருவதாக சொன்ன முகுந்தை....அவளுடைய முட்டாள் தனமான முடிவு அவளுக்கு பாடம் சொல்லுமா இல்லை முகுந்துக்கு பாடம் சொல்லி தருவாளா...

முகுந்த் அவளை சந்திக்க ஊரிலிருந்து வருவதாகவும் அங்குள்ள பார்க்கில் சந்திக்கலாம் வா மெசஸ்ஜ் அனுப்ப அவளும் சரி வருகிறேன் ...அனுப்பினாள்...

வள்ளி அவன் சொன்ன நேரத்திற்கு அங்கு செல்ல அவனும் காத்திருந்தான்....பார்க்கில் உள்ளே சென்றவள் அவன் எங்கு இருக்கிறான் விழியால் அங்குமிங்கும் அலைபாய..அவன் இருக்குமிடம் தெரியாமல் ஒரு பெஞ்சில் அமர்ந்தாள்...புகைப்படத்தில் மட்டுமே பார்த்தாலே அவனை அடையாளம் தெரியாமல் அமர்ந்திருந்தாள் வள்ளி...

வள்ளி உள்ளே வந்தது முதல் அவள் பெஞ்சில் அமரும் வரை அவளை அடையாளம் கண்ட முகுந்த் மறைவாக நின்றிருந்தான்...தன் நண்பனோடு...கூட வந்தவன் நீ சொன்ன பெண் வந்துவிட்டாளா கேட்க அவனும் வந்துவிட்டாள் ...அங்கு பாரு அமர்ந்திருக்கிறவளை கைக்காட்ட..அவனும்..ஹோய்..சூப்பரா இருக்காடா...என்னையும் அறிமுகபடுத்துடா...ஆளைப் பாரு அப்படியே தக்காளிப்பழம் போல பளபளப்பாக இருக்கா...அவளை கமெண்ட் பண்ண அருகிருந்த முகுந்த்..
வாயை மூடு...அவளை பற்றி தப்பாக பேசாதே ..சரியா...உன்னை கூட்டிவந்தது எனக்கு துணையாக...ஒவரா எதாவது பேசி அவள் போய்விடுவாள்...அப்பறம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடும் ...புரிந்தா. .நானே..அவளை பேச வைக்க எத்தனை நாட்கள் சிரமம் பட்டேன் தெரியுமா ....அவளை என் வழிக்கு கொண்டு வர எத்தனைவித பேசினேன்...ஆனால் அவளை நேரில் பார்த்ததும் எனக்கு அவள் மேல் என்னவென்று சொல்ல தெரியல...அவளைப் பார்க்க பாவமா இருக்கு...ஆனால் பாவத்தைப் பார்த்தாள் அவளை நான் நினைத்தமாதிரி நடக்க வைக்க முடியாது...அதனால் அமைதியாக இங்கே இரு ..
நான் போய் அவளை பார்க்கிறேன் ..நண்பன் தேவ்விடம் ..சொல்லிவிட்டு அவள் இருக்கும் இடத்திற்கு சென்றான் முகுந்த்...

வள்ளி பார்க்கின் வாயிலை பார்க்கவும் சுற்றி சுற்றி அவன் வந்துவிட்டானா தேடியவள்...யாருமில்லாத இந்த நேரத்தில் வரச் சொல்லிருக்கான் நானும் வந்து இருக்கேனே..மனதிற்குள் பயந்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தாள்..வாயிலை...

நேரம் போய்க் கொண்டே இருக்க இனி அவன் வரமாட்டான் ..எண்ணியவள் பெஞ்சின் மறுபக்கம் யாரோ அமரவது போல தெரிய விருவிருத்தவள் டக்கென்று திரும்பி பார்த்தாள்...

அந்த பக்கம் அமர்ந்த முகுந்த்..ஹாய்..குட்டிமா...அழைக்க

அவளோ திருதிருவென்று முழித்தவள் ....ஹாய் ஹாய்..மெதுவாக சொன்னாள் வள்ளி..

வள்ளி தானே...போட்டோவில் பார்த்தைவிட நேரில் இன்னும் நல்ல இருக்கடா..

வள்ளியும் ம்ம்....சொல்லி..ஏன் இவ்வளவு நேரம்..கேட்க கொஞ்சம் லேட்டாகிவிட்டது சாரிமா...சொன்னவன்...
சாப்பிட்டியா..இந்த உனக்கு பிடித்த ஸ்வீட் என்றோ சொல்லிய மைசூர்பாகு டப்பாவை கொடுத்தான்...அவளுக்கு அதை வாங்கலாமா வேண்டாமா யோசிக்க அவன் ஹேய்..என்னாச்சு..வாங்கிக்கோ..கொடுக்க..மெதுவாக கை நீட்டி வாங்கி தன்ருகில் வைத்தாள் ..தேங்கஸ் சொல்ல...

இதுக்கு எதற்கு தேங்கஸ் சொல்லற குட்டி ...ம்ம்..எப்படி இருக்க வீட்டில் அப்பா தங்கை நல்ல இருக்காங்களா..கேட்டான் முகுந்த்...

வள்ளியும் நல்ல இருக்காங்க சொல்லியவள்...நேரில் பார்த்தாள் கொஞ்சம் தடுமாறி போனாள்..மனதில் கொஞ்சம் பயமாகவும் இருந்தது..யாருவது பார்த்துவிட்டால் அப்பாவிடம் சொல்லிவிடுவார்கள் ...சீக்கிரம் கிளம்ப வேண்டும் எண்ணியவள்...முகுந்திடம் சீக்கிரம் சொல்லுங்கள் நான் போகனும்...சொல்ல ..ஏய்..இப்பதானே வந்தே அதுக்குள்ளெ போகனும் சொல்லறே .உனக்காக எங்கிருந்து கிளம்பி வந்தேன் ..உடனே போகனும் சொன்னா எப்படிடா ..கொஞ்சம் நேரம்
பேசிக் கொண்டிருக்கலாம் அப்பறம் போகலாம் சரியா...சொன்னவன்....
அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் ..

வள்ளி தடுமாறி 'ஏன்' இப்படி பார்க்கிறிங்க...

இல்லமா சும்மா தான் ..சரி சொல்லு என்னை பார்த்து எதோ கேட்கனும் சொன்னில சொல்லு..அவளுக்கு ஞாபக படுத்தினான் ...

அவனை நேரில் பார்த்தும் கேட்க நினைத்து எதுமே ஞாபகம் வரவில்லை வள்ளிக்கு...அவளுள் ஏற்பட்ட பயம்,ஏதோ தப்பு செய்கிற உணர்வு,வீட்டிற்கு தெரியாமல் வந்தது ...யாரவது பார்த்துவிடுவார்களோ எண்ணம்..இப்படி பலவகையில் மனதில் அலைபாய விழிகள் அங்குமிங்கும் சுற்றியது...

சசி ஜெகநாதன்...
 
Top